கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தசஷ்டி கவசத்திரட்டு

Page 1


Page 2

2. கணபதிதுணை
அருள்மிகு புற்றளை சித்திவிநாயகர் ஆலயம்
புற்றளை சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை
Board of Administration of
PUTTALA STHY WINAYAGARTEMPLE
Puttali, Puloly South, Puloly Sri Lanka.

Page 3
Geogie GhoilsiltíG
Φ60)6υυ,
கந்தசஷ்டி கவசத்திரட்டு - ஆறு கவசங்களும் ஒரு நூல் வடிவில்
பதிப்பு
ஐப்பசி 2005
வெளியீடு புற்றளை சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை புற்றளை, புலோலி தெற்கு, புலோலி இலங்கை.
வடிவமைப்பும் அச்சும்
குமரன் அச்சகம் 361 -1/2, டாம் வீதி, கொழும்பு 12. தொலைபேசி/தொலைநகல்ஹ 2421388
Title
Kandasasdi Kavasathiraddu
Edition
October 2005
Published by
Board of Administration of PUTTALA SITHYVINAYAGAR TEMPLE Puttalai, Puloly South, puloly
Sri Lanka
Designed & Printed by
Kumaran Press (Pvt) Ltd. 361-1/2, Dam Street, Colombo - 12.
Tet/Fax: 242388

அனுசரணை
அமரர் தாமோதரம்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் நினைவோடு திருமதி பரமேஸ்வரி சுப்பிரமணியம் அவர்களும், அவர் தம் குடும்பத்தினரும் இந்த கவசத்திரட்டின் வெளியீட்டுக்கு தமது அனுசரணையை வழங்கியுள்ளர்.

Page 4
பொருளடக்கம்
முன்னுரை
காரிய சித்திமாலை - விநாயகர்
திருப்பரங்குன்றுறை திரன்
திருச்செந்தூர்
திருவாவினன்குடி
திருவேரகம்
திருத்தணி
பழமுதிர் சோலை
பஞ்சபுராணம்
9C)
23
靈9
3s

முன்னுரை
“பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து நேசத்தால் ஈசனைத்தேடு'
- ஒளவையார்
அருள்மிகு புற்றளைச் சித்தி விநாயகப் பெருமான் அருள் பாதங் களைப் பணித்து பரிபாலன சபையினராகிய நாம் இவ் கந்தசஷ்டி கவசத்திரட்டினை இக் கந்தசஷ்டி விரத காலத்தில் அடியார்களின் கரங்களில் தவழவிடுகின்றோம். 、ベー
இறைவனை அடைவதற்கான, நம்மை நாமே அறிவதற்கான நமது பயணத்தில் பக்திமார்க்கம் மகத்தான இடத்தை வகிக்கிறது. இறைவனை பாடிப் பணிந்து அவன் மயமாகி நிற்பது அதன் முதற் படி எனலாம். இக்கவசத்திரட்டில் எம்பிரானை எக்காலத்திலும் பாடிப்பணிந்திட ஏற்றவகையில் தொகுக்கப்பட்டுள்ளது. மகத்தான இறைபணியாற்றிட நீங்கள் தந்த ஆணையினை ஏற்று எம்பிரானின் அருளோடு நமது ஆன்மீகப் பணியின் மற்றுமோர் அங்கமாக இந்நூலை வெளியிடுகின்றோம்.
இப்பணியில் எமக்குத் துணை வந்த திருமதி. பரமேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கட்கும் அவர்தம் குடும்பத்தினர், மற்றும் வடி வேலு யசிந்தன் அவர்கட்கும் எமது உளப் பூர்வமான நன்றிகள் குறு கிய காலத்தில் இந்நூலை வடிவமைத்து அச்சேற்றித் தந்த குமரன் நிறுவனத்தினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின் றோம்.
ந.கணேலிசங்கம் கெளரவ செயலாளர் 14.1O.2OO5

Page 5

స్క్రికే E 《རུ་》ས་པས་ཁྱེ
〔あ
காரியசித்தி மாலை
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் யானை முகத்தானைக் காதலால் கூப்புவர் தம் கை.
சகல காரியங்களிலும் சித்திபெற யானைமுகத்
தானைத் துதித்து இந்தப் பாடலைப் பாடினால் ஒருவர் தான் எடுத்த காரியம் எளிதில் நிறைவேறும்
பந்தம் அகற்றும் அநந்த குணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ சந்த மறை ஆகமங்கலைகள்
அனைத்தும் எவன்பால்தக வருமோ அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.
உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ் வுலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளியாவன்? உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டுங் களைகண் எவன் அந்த உலக முதலாம் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.

Page 6
இடர்கள் முழுவதும் எவனருளால் எரிவீழும்பஞ் செனமாயும் தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர் வாழ் பதியும் உறச் செய்யும் கடவுள் முதலோர்க் கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத் தடவு மருப்புக் கணபதிபொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.
மூர்த்தி யாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம் ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன் அப் போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப் பொருள் யாவன் ஐயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன் உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்த பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய 6
விகிர்தன் யாவன் விழுத்தகைய வேதமுடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விறங்குவர நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன் எண்குணன் எவன் அப் போத முதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
மண்ணில் ஒர்ஜங் குணமாகி 7
வதிவான் எவன்நீர் இடைநான்காய் நண்ணி அமர்வான் எவன் தீயின்
மூன்றாய் நவில்வான் எவன் வளியின் எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன்வான் இடை ஒன்றாம் அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.
பாச அறிவில் பசுஅறிவில் 8
பற்றக் கரிய பரன்யாவன்? பாச அறிவில் பசு அறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்? பாச அறிவும் பசு அறிவும்
பாற்றி மேலாம் அறிவான தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.
இந்தக் காயசித்தி மாலையைக் காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் விநாயகரை எண்ணி எட்டு நாட்கள் பாடுபவர்கள் நினைத்த காரியம் சித்திக்கும். சதுர்த்தி விரத தினத்தன்று எட்டுமுறை பாடினால் எட்டுச் சித்திகளும் கைகூ டும்.

Page 7
9) கந்த சஷ்டி கவசம்
முதலாவது கவசம்
திருப்பரங்குன்றுறை தீரன்
öfILIL அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும் நிட்டையுங் கைகூடும் நிமலர் அருள் கந்தர் சட்டி கவசந் தனை.
திருப்பரங் குன்றுறை தீரனே குகனே மரும்பிலாப் பொருளே! வள்ளி மனோகரா குறுக்குத் துறையுறை குமரனே! அரனே இருக்குள் குருபரா ஏரகப் பொருளே! வையா புரியில் மகிழ்ந்துவாழ் பவனே! ஒய்யார மயில்மேல் உகந்தாய் நமோ நமோ, ஐயா! குமரா! அருளே நமோ நமோ, மெய்யாய் விளங்கும் வேலா! நமோ நமோ, பழனியங் கிரிவாழ் பகவா நமோ நமோ, மழுவுடை முதல்வன் மதலாய் ! நமோ நமோ, விராலி மலையுறை விமலா நமோநமோ மராமரம் துளைத்தோன் மருகா நமோநமோ
 

சூரசம் காரா துரையே நமோநமோ வீரவே லேந்தும் வேளே நமோநமோ கண்களி ராறுடைக் கந்தா நமோநமோ கோழிக் கொடியுடைக் கோவே நமோநமோ ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோநமோ
சசச சசச ஒம் ரீம்
ரரர ரரர ரீம்
வவவ வவவ ஆம் ஹோம் ணணண ணணண வாம் ஹோம் பபப பபப சாம் சூம் வவவ வவவ கெளம் ஓம் லல லிலி லுலு நாட்டிய அட்சரம் கக கக கக கந்தனே வருக இக இக இக ஈசனே வருக தக தக தக சற்குரு வருக பக பக பக பரந்தாமா வருக வருக வருகவென் வள்ளலே வருக வருக வருகநிஷ் களங்கனே வருக தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச் சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே அல்லும் பகலும் அனுதினம் என்னை எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை வல்ல விடங்கள் வராமல் தடுத்து நல்ல மனத்துடன் ஞான குருஉனை வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள் இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும் கந்தா கடம்பா கார்த்தி கேயா நந்தன் மருகா நாரணி சேயே எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை தண்ணளி அளிக்கும் சாமி நாதா சிவகிரி கயிலை திருப்பதி வேளூர் தவக்கதிர் காமம் சார்திரு வேரகம் கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர் விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்

Page 8
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு சன்னிதி யாய்வளர் சரவண பவனே அகத்திய முனிவனுக்(கு) அன்புடன் தமிழைச் செகத்தோர் அறியச் செப்பிய கோவே சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம் நர்த்தனம் புரியும் நாற்பத்தெண்கோணம் வித்தாய் நின்ற மெய்ப்பொரு ளோனே உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே வெற்றிக் கொடியுடை வேளே போற்றி பக்திசெய் தேவர் பயனே போற்றி சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி அத்தன் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி அத்தன் அரியயன் அம்பிகை லட்சுமி வாணி யுடனே வரையுமாக் கலைகளும் தானே நானென்று சண்முக மாகத் தாரணி யுள்ளோர் சகலரும் போற்றப் பூரண கிருபை புரிபவா போற்றி பூதலத்துள்ள புண்ணிய தீர்த் தங்கள் ஒதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில் எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய் பண்ணும் நிட்டைகள் பலபல வெல்லாம் கள்வம் அபசாரம் கர்த்தனே எல்லாம் எள்ளினுள் எண்ணெய்போல் எழிலுடை உன்னை அல்லும் பகலும் ஆசா ரத்துடன் சல்லாப மாய் உன்னைத் தானுறச் செய்தால் எல்லா வல்லமை இமைப்பினில் ஆருளி பல்லா யிரநூல் பகர்ந்தருள் வாயே செந்தில் நகர்உறை தெய்வானை வள்ளி சந்த தம் மகிழும் தயாபர குகனே அரன் மகிழ் புதல்வா அறுமுகாசரணம் சரணம் சரணம் சரணம் சரவண பவஒம் சரணம் சரணம் சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்

2இரண்டாவது கவசம்
திருச்செந்துார் (திருச்சீரலைவாய்)
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மைய னடனஞ்செயும் மயில்வா கனனார் கையில் வேலாலெனைக் காக்கவென்றுவந்து வர வர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக ரஹண பவசரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி

Page 9
விணபவ சரஹ வீரா நமோ நம நிபவ சரஹண நிறநிற நிறென வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளு மிளையோன் கையில் பன்னிடண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயுங் கிலியும் அடையுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்றினம் வருக ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடையழகும் இணைமுழந்தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககன செககன செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக் நகென டிகுகுன டிகுடிகு டிகுகுன டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர ሰበሰበሰበሰበ fበሰበñበfበ fiሰበሰበሰበ ሰበሰበሰበ (ତ (ତ (ତ (ତ (ତ (ତ (ତ (ତ (ତ (ତ (ତ (ତ (ତ (ତ (ତ டிகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்த துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென் றுன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் என்றலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டு கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டு வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல்முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க

Page 10
10
நானாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத் தொடையிரண்டும் பருகவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிர லடியினை அருள் வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் பின்னவ ளரிருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா னாடியை முனைவேல் காக்க எப்பொழுது தும்மெனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகேவ வந்து கனகவேல் காக்க வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க அரையிரு டன்னில் அணையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமத நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியி னோக்க தாக்க தாக்க தடையறத்தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற்படுத்தும் அடங்கா முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்ப்படு மண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்

1
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளங்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழந்தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகளென்பும் நகமு மயிரும் நீண்முடி மண்டையும் பாவை களுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுவஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வனங்கிட காலதூ தானெனைக் கண்டாற் கலங்கி அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதி கெட்டோட படியினில் முட்ட பாசக் கயிற்றால் கட்டுடனங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கால்கை முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதிற் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க

Page 11
12
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைஷயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடவிப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரேழுலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் மெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்றிரு நாமம் சரஹண பவநே சையொளிபவனே திரிபுர பவனே திகழொழி பவனே பரிபுர பவனே பவமொழி பவனே அரிதிரு மருகா அமரபதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனிய வேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமக ணன்றாய் என்னா விருக்க யானுனைப்பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினே னாடினேன் பரவசமாக ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை

13
நேச முடன் யான் நெற்றியி லணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெவே உன்னரு ளாக அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும் மெத்தமெத் தாக வேலாயுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்தால் பெற்றவ நீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவன் குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துட னாளும் ஆசாரத்துடன் அங்கந் துலக்கி நேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்துநீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடு

Page 12
14
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாக சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினிலிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோர் அரசே மயினட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சரணஞ் சரஹண பவலும் சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்

2மூன்றாவது கவசம்
திருவாவினன்குடி (பழநி)
திருவா வினன்குடி சிறக்கும் முருகா குருபரா குமரா குழந்தைவே லாயுதா சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா ஏழைபங் காளா பரமேசு வரிக்குப் பாலா தயாபரா வரமேளக்(கு) அருள்வாய் வாமனன் மருகா இரண்டா யிரம் வெள்ளம் யோகம் படைத்தவா திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன் பட்சத் துடனே பராசக்தி வேலதாய் வீர வாகு மிகுதள கர்த்தனாய் சூரசம் காரா துஷ்டநிஷ் டூரா கயிலாய மேவும் கனகசிம் மாசனா மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா சுகத்திரு முருகாற்றுப்படை சொல்லிய நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்

Page 13
6
கைக்கீழ் வைக்கும் கனமிசைக் குதவா திருவருணகிரி திருப்புகழ் பாட இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா ஆயிரத் தெட்டாம் அருள்சிவ தலத்தில் பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா எண்ணா யிரம்சமண் எதிர்கழு வேற்றி விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா குருவாம் பிரமனைக் கொடுஞ்சிறை வைத்து உறுபொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன் கருதிமெய் யோகம் சொல்லிய(து) ஒரு முகம் அருள்பெறு மயில் மீ(து) அமர்ந்த(து) ஒருமுகம் வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம் தெள்ளுநான் முகன்போல் சிருட்டிப்ப(து) ஒருமுகம் சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம் ஆரணம் ஒதும் அருமறை யடியார் தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம் ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி திருப்பரங் கிரிவாழ் தேவா நமோநம பொருட்செந்தில் அம்பதி புரப்பாய் நமோநம ஏரகம் தனில்வாழ் இறைவா நமோநம கூரகம் ஆவினன் குடியாய் நமோநம சர்வுசங் கரிக்குத் தனயா நமோநம உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோநம சல்லாப மாக சண்முகத் துடனே எல்லாக் கிரிக்கும் இறைவா நமோநம எல்லாத் தலமும் இனிதெழுந் தருளி உல்லா சத்துறும் ஓங்கார வடிவே மூலவட்டத்தில் முளைத்தெழும் சோதியை சால முக்கோணத் தந்தமுச் சக்தியை வேலாயுதமுடன் விளங்கிடும் குகனைச் சீலமார் வயலூர்ச் சேந்தனைத் தேவனை கைலாச மேருவா காசத்தில் கண்டு

17
பைலாம் பூமியும் பங்கய பார்வதி மேலும் பகலும் விண்ணுரு வேத்தி நாற் கோணத்தில் நளினமாய் அர்ச்சனை கங்கை யீசன் கருதிய நீர்ப்புரை செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன் முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி வாய்அறு கோணம் மகேஸ்வரன் மகேசுவரி ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல் ஆசை வட்டத்(து) அமர்ந்த சதாசிவன் பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி மிக்காய்க் கருநெல்லி வெண்சாரை உண்பவர் பாகமாய் ரதமும் பகல்வழி யாவர் சாகா வகையும் தன்னை அறிந்து ஐந்து சீவனுடன் ஐயஞ்சு கல்பம் விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி சந்திர சூரியர் தம்முடன் அக்கினி அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச் சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை மந்திர அர்ச்சனை வாசிவா என்று தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில் ஆறு முகமாய் அகத்துளே நின்று வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து யோசனை ஐங்கரன் உடன்விளையாடி மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு வாலைக் குழந்தை வடிவையும் காட்டி நரை திரை மாற்றி நாலையும் காட்டி உரைசிவ யோகம் உபதேசம் செப்பி மனத்தில் பிரியா வங்கண மாக

Page 14
18
நினைத்த படிஎன் நெஞ்சத் திருந்து அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி மதியருள் வேலும் மயிலுடன் வந்து நனே நீயெனும் லட்சணத் துடனே தேனே என்னுளம் சிவகிரி எனவே ஆறாதாரத்(து) ஆறு முகமும் மாறா திருக்கும் வடிவையும் காட்டிக் கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்கத் தனெதனவந்து தயவுடன் இரங்கிச் சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம் எங்கு நினைத்தாலும் என்முன்னேவந்து அஷ்டாவ தானம் அறிந்துடன் சொல்லத் தட்டாத வாக்கும் சர்வா பரணமும் இலக்கணம் இலக்கியம் இசையறிந்துரைக்கத் துலக்கிய காவியம் சொற்பிர பந்தம் எழுத்துச் சொற்பொருள் யாப்பலங் காரம் வாழ்த்தும் என் நாவில் வந்தினி திருந்தே அமுத வாக்குடன் அடியாக்கும் வாக்கும் சமுசார சாரமும் தானே நிசமேன வச்சிர சரீரம் மந்திர வசீகரம் அட்சரம் யாவும் அடியேனுக்(கு) உதவி வல்லமை யோகம் வசீகர சக்தி நல்லஉன் பாதமும் நாடிய பொருளும் சகலகலை ஞானமும் தானெனக் கருளி செகதல வசீகரம் திருவருள் செய்து வந்த கயபிணி வல்வினை மாற்றி இந்திரன் தோகை எழில்மயில் ஏற்றிக் கிட்டவே வந்து கிருபை பாலிக்க அட்டதுட் டமுடன் அனேக மூர்க்கமாய் துட்டதே வதையும் துட்டப் பிசாசும் வெட்டுண்டபேயும் விரிசடைப் பூதமும் வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை

19
பேதாளம் துர்க்கை பிடாரி நடுநடுங்க பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி உதைத்து மிதித்தங்(கு) உருட்டி நொருக்கிச் சூலத்தாற் குத்தித் தூளுது ஞருவி வேலா யுதத்தால் வீசிப் பருகி மழுவிட் டேவி வடாவாக் கினிபோல் தழுவி அக் கினியாய்த் தானே எரித்துச் சிதம்பர சக்கரம் தேவி சக்கரம் மதம்பெறும் காளி வல்ல சக்கரம் மதியணி சம்பு சதாசிவ சக்கரம் பதிகர்ம வீர பத்திரன் சக்கரம் திருவை குண்டம் திருமால் சக்கரம் அருள்பெருந் திகிரி அக்கினி சக்கரம் சண்முக சக்கரம் தண்டாயுதத்தால் விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும் ஏக ரூபமாய் என்முனே நின்று வாகனத் துடன்என் மனத்துள் இருந்து தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம் இம்பமா கருடணம் மேவுமுச் சாடனம் வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம் உம்பர்கள் ஏந்தும் உயர்வித் வேடணம் தந்திரம் மந்திரம் தருமணி அட்சரம் உந்தன் வீயூதி யுடனே சபித்து கந்தநின் தோத்திரம் கவசமாய்க் காக்க எந்தன் மனத்துள் ஏதுவேண் டியதும் தந்துரட்சித்தருள் தயாபரா சரணம் சந்தம் எனக்கருள் சண்முகா சரணம் சரணம் சரணம் சட்கோண இறைவா சரணம் சரணம் சத்துரு சம்காரா சரணம் சரணம் சரண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் ,

Page 15
20
2நான்காவது கவசம்
鞑 Y.
"స్టో
திருவேரகம் (சுவாமி மலை)
ஒமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார் காமுற உதித்த கனமறைப் பொருளே ஓங்கார மாக உதயத் தெழுந்தே ஆங்கார மான அரக்கர் குலத்தை வேரறக் களைந்த வேலவா போற்றி தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய் வேலா யுதத்தால் வீசி அறுத்த பாலா போற்றி பழநியின் கோவே நான்கு மறைகள் நாடியே தேடும் மான்மரு கோனே வள்ளி மணாளனே நானெனும் ஆண்மை நண்ணிடா(து) என்னைக் காணநீ வந்து காப்பதுன் கடனே காளி கூளி கங்காளி ஓங்காரி சூலி கபாலி துர்க்கை யேமாளி போற்றும் முதல்வா புனித குமாரா சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி ஏகாட் சரமாய் எங்கும் தானாகி வாகாய் நின்ற மறைமுதற் பொருளே
 
 

21
துதியட் சரத்தால் தொல்லு (கு) எல்லா அதிசயமாக அமைந்தவா போற்றி திரியாட் சரத்தால் சிவனயன் மாலும் விரிபா ருலகில் மேன்மை யுற்றவனே சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம் மதுரமாய் அளிக்கும் மயில்வா கனனே பஞ்சாட் சரத்தால் பரமன் உருவதாய்த் தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென் நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம் அஞ்சலி செய்த அமரரைக் காக்கும் ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி ஆறு சிரமும் அழகிய முகமும் ஆறு செவியும் அமர்ந்த மார்பும் ஆறிரு கண்ணும் அற்புத வடிவும் சரவணை வந்த சடாட்சரப் பொருளே அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா கரங்கள்பன் னிரண்டில் கதிரும் ஆயுதத்தால் தரங்குலைத்(து) ஒடத் தாரகா சுரன்முதல் வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய் சீர்திருச் செந்தூர்த் தேவசே னாதிப அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி இஷ்டசித் திகளளுள் ஈசன் புதல்வா துட்டசம் காரா சுப்பிர மண்யா மட்டிலா வடிவே வையாபுரித் துரையே எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன் கண்கொளாக் காட்சி காட்டிய சடாட்சர சைவம் வைணவம் சமரச மாக தைவமாய் விளங்கம் சரவண பவனே சரியை கிரியை சார்ந்தநல் யோகம் இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக் கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்

Page 16
22
தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான் அருச்சனை செய்ய அனுக்கரம் அருள்வாய் பில்லிவல் வினையும் பீனிச மேகம் வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க அல்லலைப் போக்கிநின் அன்பரோ(டு) என்னைச் சல்லாப மாகச் சகலரும் போற்ற கண்டு களிப்புறக் கருணை அருள்வாய் அண்டர் நாயகனே அருமறைப் பொருளே குட்டிச் சாத்தான் குணமிலா மாடன் தண்டிலா இருளன் சண்டிபே தாளம் சண்டமா முனியும் தக்கராக் கதரும் மண்டை வலியொடு வாதமும் குன்மமும் சூலைகா மாலை சொக்கலும் சயமும் மூல ரோகங்கள் முடக்குள் வலிப்பு திட்டு முறைகள் தெய்வத சாபம் குட்டம் சோம்மபல் கொடிய வாந்தியும் கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும் உன்னுடை நாமம் ஒதியே நீறிடக் கன்னலொன் றதனில் களைத்திடக் கருணை செய்வதுன் கடனே செந்தில் நாயகனே தெய்வ நாயகனே தீரனே சரணம் சரணம் சரணம் சரவணபவஒம் சரணம் சரணம் சண்முகா சரணம்.
 

23
2d ஐந்தாவது கவசம்
திருத்தணி (குன்றுதோறாடல்)
கணபதி துணைவா கங்காதரன் புதல்வன் குணபதி உமையாள் குமரா குருபரா வள்ளி தெய்வானை மருவிய நாயகா துள்ளி மயிலேறும் சுப்பிர மணியா அழகொளிப் பிரபை அருள்வடி வேலா பழநி நகரில் பதியநு கூலா திருவா வினன்குடி சிறக்கும் முருகா அருள்சேர் சிவகிரி ஆறு முகவா சண்முக நலியும் சராபன்றி மலையும் பன்முகம் நிறைந்த பழநிக்கு இறைவா ஆராறு நூற்று அட்டமங் களமும் வீரவை யாபுரி விளங்கும் தயாபரா ஈராறு பழநி எங்கும் தழைக்கப் பாராறு சண்முகம் பகரும் முதல்வா ஆறு சிரமும் ஆறு முகமும் ஆறிரு புயமும் ஆறிரு காதும் வடிவம் சிறந்த மகரகுண்டலமும்

Page 17
24
தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்துரமும் திருவெண் ணிறணி திருநுதல் அழகும் கருணை பொழியும் கண்ணான்கு மூன்றும் குனித்த புருவமும் கூரிய மூக்கும் கனித்த மதுரித்த கனிவாய் இதழும் வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும் எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும் காரிகை உமையாள் களித்தே இனிதெனச் சீர்தரும்,வள்ளி தெய்வநாயகியாள் பார்த்தழ கென்னப் பரிந்த சுபோலமும் வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும் முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க மறுக்கம் சூரர்மேல் வாதுகள் ஆட ஈஸ்வரன் பார்வதி எடுத்து முத்தாடி ஈஸ்வரன் வடிவை மிகக்கண்ட தனுதினம் கையால் எடுத்துக் கனமார்(பு) அணைத்தே ஐயா குமரா! அப்பனே! என்று மார்பினம் தோளினும் மடியினும் வைத்துக் கார்த்தி கேயாஎனக் கருணையால் கொஞ்சி முன்னே கொட்டி முருகா வருகவென்(று) அந்நேரம் வட்டமிட் டாடி விளையாடித் தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக் கூவிய மயிலேறும் குருபரா வருக தாவிய தகரேறு சண்முகா வருக ஏவிய வேலேந்தும் இறைவா வருக கூவிய சேவற் கொடியாய் வருக பாவலர்க் கருள் சிவபாலனே வருக அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக பொன்போற் சரவணைப் புண்ணியா வருக அழகிற் சிவனொளி அய்யனே வருக களபம் அணியுமென் கந்தனே வருக

25
மருமலர்க் கடம்பணி மார்பா வருக மருவுமோர் மலரணி மணியே வருக திரிபுர பவனென்னும் தேவே வருக பரிபுர பவனெனும் பவனே வருக சிவகிரி வாழ்தெய்வ சிகாமணி வருக காலில் தண்டை கலீர் கலீரென சேலிற் சதங்கை சிலம்பு கலீரென இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும் அடும்பல வினைகளை அகற்றிய பாதமும் சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும் நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும் தங்கரை ஞானும் சாதிரை மாமணி பொங்குமாந் தளிர்சேர் பொற்பீதாம் பரமும் சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும் மந்திர வாளும் வங்கிச் சரிகையும் அருணோதயம்போல் அவிர்வன் கச்சையும் ஒருகோடி சூரியன் உதித்த பிரபைபோல் கணையால் அன்பரைக் காத்திடும் அழகும் இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும் ஆயிரம் பணாமுடி அணியுமா பரணமும் வாயில்நன் மொழியாய் வாஞ்கிய சொல்லும் நாபிக் கமலம் நவரோம பந்தியும் மார்பில் சவ்வாது வாடை குபிரென புழுகு பரிமளம் பொருந்திய புயமும் ஒழுகிய சந்தனம் உயர்கந் துரியும் வலம்புரிச் சங்கொளி மணியணி மிடறும் நலஞ்சேர் உருத்திர அக்க மாலையும் மாணிக்கம் முத்து மரகதம் நீலம் ஆணிவை டூரியும் ஆணிவைரம் பச்சை பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும் நவமணிப் பிரபைபோல் நாற்கோடி சூரியன்

Page 18
26
அருணோ தயமெனச் சிவந்த மேனியும் கருணை பொழியும் கடாட்சவீட் சணமும் கவசம் தரித்தருள் காரண வடிவும் நவவீரர் தம்முடன் நற்காட்சி யான ஒருகை வேலாயுதம் ஒருகை சூலாயுதம் ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயும் ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்பு ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு ஒருகை மேற்குடை ஒருகை தண்டாயுதம் ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம் அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப் பங்கயக் கமலப் பன்னிரு தோளு முருக்கம் சிறக்கும் முருகா சரவணை இருக்கும் குருபரா ஏழை பங்காளா வானவர் முனிவர் மகிழ்ந்து கொண்டாடத் தானவர் அடியவர் சகலரும் பணியப் பத்திர காளி பரிவது செய்யச் சக்திகள் எல்லாம் தாண்டவ மாடத் அஷ்ட பயிரவர் ஆனந்தமாடத் துஷ்ட மிகுஞ்சூளிகள் சூழ்திசை காக்கச் சத்த ரிஷிகள் சாந்தக மென்னச் சித்தர்கள் நின்று சிவசிவா என்னத் தும்புரு நாரதர் சூரிய சந்திரர் குடும்பமா முனியும் குளிர்ந்ததா ரகையும் அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள் நயமுடன் நின்று நாவால் துதிக்க அஷ்ட லட்சுமி அம்பிகை பார்வதி கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த இடும்பா யுதன்நின் இணையடி பணிய ஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்க தேவ கணங்கள் செயசெய என்ன

27
ஏவற் கணங்கள் இந்திரர் போற்ற கந்தருவர் பாடிக் கவரிகள் வீசிச் சார்ந்தனம் என்னச் சார்வரும் அனேக பூதம் அடிபணிந் தேத்த வேதாளம் பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட அரசு என்றடியர் ஆலவட்டம் பிடிக்க குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்கக் குடையும் சேவலின் கொடியும் சூழ இடைவிடாமல் உன் ஏவலர் போற்றச் சிவனடி யார்கள் திருப்பாத மேந்த நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம் உருத்திர வீணை நாதசுர மேளம் தித்திமி என்று தேவர்கள் ஆடச் சங்கீத மேளம் தாளம் துலங்க மங்கள மாக வைபவம் இலங்க தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம் சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க நந்திக்கே சுவரன் மீது ஏறிய நயமும் வந்தனம் செய்ய வானவர் முனிவர் எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன் வீர மயிலேறு வெற்றிவேல் எடுத்துச் சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச் சிங்கமுகா சுரன் சிரமது உருள துங்கக் கயமுகன் சூரனும் மாள அடலற்ற குழந்தை அறுத்துச் சயித்து விடவே லாயுதம் வீசிக் கொக்கரித்துத் தம்ப மெனும்சமயத் தம்பம் நாட்டி அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத் திருப்பரங் குன்றம் சீர்ப்பதி செந்தூர் திருவாவினன்குடி திருவே ரகமும்

Page 19
28
துய்ய பழநி சுப்பிர மணியன் மெய்யாய் விளங்கும் விராலி மலைமுதல் அண்ணா மலையும் அருள்மேவும் கயிலை கண்ணிய மாவூற்றுக் கழுகுமா மலையும் முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும் நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும் கதிர்காமம் செங்கோடு கதிரிவேங் கடமும் பதினா லுலகத்திலும் பக்தர் மனத்திலும் எங்கும் தானவ னாயிருந்(து) அடியர்தம் பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க கேட்ட வரமும் கிருபைப் படியே தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா நாட்டு சிவயோகம் நாடிய பொருளும் தாட்டிக மாய்எனக்(கு) அருள்சண் முகனே சரணம் சரணம் சரவண பவலும் சரணம் சரணம் சண்முகா சரணம்.
 

29
9) ஆறாவது கவசம்
பழமுதிர் சோலை
சங்கரன் மகனே சரவண பவனே ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே பழநிமா மலையுறும் பன்னிரு கரத்தனே அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம் சரவண பவனே சட்கோணத் துள்ளுறை அரனருள் சுதனே அய்யனே சரணம் சயிலொளி பவனே சடாட்சரத் தோனே மயில்வா கனனே வள்ளலே சரணம் திரிபுர பவனே தேவசேனாபதி குறமகள் மகிழும் குமரனே சரணம் தகமொழி பவனே சேவற் கொடியாய் நகமா யுதமுடை நாதனே சரணம் பரிபுர பவனே பன்னிரு கையனே தருணமுவ் வேளை தற்காத் தருளே சவ்வும் ணவவுமாய் விளங்கிய குகனே

Page 20
30
பவ்வும் ணவ்வுமாய் பழமுதிர் சோலையில் தவ்வியே ஆடும் சரவண பவனே குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய் தஞ்சமென்றுன்னைச் சரணம் அடைந்தேன் கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங்(கு) அஞ்சலி செய்தவள் அமுதம் உண்டு கார்த்திகை மாதர் கனமார்(பு) அமுதமும் பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத் தவமுடை வீர வாகுவோ(டு) ஒன்பான் தம்பிமா ராகத் தாணையைக் கொண்ட சம்பிர தாயா சண்முகா வேலா நவ்வீரர் தம்முடன் நவகோடி வீரரும் கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப் பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய் ஒதிடச் செய்ய உடன் அவ்வேதனை ஒமெனும் பிரணவத் துண்மை நீ கேட்கத் தாமே யோசித்த சதுர்முகன் தன்னை அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே மமதையாய் அயனை வன்சிறை யிட்டாய் விமலனும் கேட்டு வேகம தாக உமையுடன் வந்தினி துவந்து பரிந்து அயனைச் சிறைவிடென்(று) அன்பாய் உரைக்க நயமுடன் விடுத்த ஞானபண்டி தனே திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும் கெளரி லட்சுமி கலைமகளுடனே அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல ஆறு முகத்துடன் அவதரித் தோனே சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன் பங்கமே செய்யும் பானு கோபனும் சூரனோ டௌத்த துட்டர்களோடு வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்

31
ஆறிடச் செய்த வமர்கள் தமக்குச் சேனா பதியாய் தெய்வீக பட்டமும் தானாய்ப் பெற்ற தாட்டி கப்பெருமானே திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய் சிறப்புற பழனி திருவே ராகமுதல் எண்ணிலாத் தலங்களில் இருந்தாடும் குகனே விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே தஞ்சமென்(று) ஒதினர் சமயம் அறிந்தங்(கு) இன்பம் கொடுக்கும் ஏழைபங்காள கும்பமா முனிக்குக் குருதே சிகனே தேன்பொழில் பழநித் தேவ குமாரா கண்பார்த்(து) எனையாள் கார்த்திகே யாளன் கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி அஷ்டலட்சுமிவாழ் அருளெனக்(கு) உதவி இஷ்டமாய் என்முன் னிருந்து விளையாடத் திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே அருண கிரிதனக்(கு) அருளிய தமிழ்போல் கருணையால் எனக்குக் கடாட்சித் தருள்வாய் தேவ ராயன் செப்பிய கவசம் பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட சஷ்டி கவசம் தான்செபிப் போரைச் சிட்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா வந்ததென் நாவில் மகிழ்வுடன் இருந்து சங்கத் தமிழ்த்திறம் தந்தருள்வோனே சரணம் சரணம் சரவண பவஒம் சரணம் சரணம் தமிழ்த்தரும் அரசே சரணம் சரணம் சங்கரன் சுதனே சரணம் சரணம் சண்முகா சரணம்
பாலன் தேவராய சுவாமிகள்
முற்றும்

Page 21
32
பஞ்சபுராணம்
:? i.
திருச்சிற்றம்பலம் தேவாரம் தாயினும் நல்ல தலைவர் என்று அடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியும் தொழிலர் பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலர் கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோண மாமலை அமர்ந்தாரே.
திருவாசகம்
வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன் மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
* அதுவும் உன்றன் விருப்பன்றே.
 

33
திருவிசைப்பா
சுருதிவா னவனாந் திருநெடு மாலாஞ்
சுந்தர விசும்பு னித்திரனாம் பருதிவா னவனாம் படர்சடை முக்கட் பகவனா மகவுயிர்க் கமுதாம் எருது வாகனனாம் மெயில்கண்மூன் றெரித்த ஏறுசே வகனுமாம் பின்னும் கருதுவார் கருது முருவமாங் கங்கை
கொண்டசோ றேச்சரத் தானே.
திருப்பல்லாண்டு
சொல்லாண்டு சுருதிப் பொருள் சோதித்த
தூண்மனக் தொண்டருள்னிர் சில்லாண்டிற் சிதையுஞ் சிலதேவர்
சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத் திரண்மேரு
விடங்கன் விடைப்பாகன் பல்லாண்டென்னும் பதங்கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
மண்ணுலகத்தினிற் பிறவிமாசற
எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக்
கண்ணுதலுடைய தோர் களிற்றுமாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.

Page 22
புற்றளையான் ஆலயம் - புற்றளை மக்களின்
புனிதச்சின்னம்


Page 23
۔