கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதிர்காமத்துக் கந்தன் பாடல்கள்

Page 1

துக் கந்தன்
கள்
IITEDIT

Page 2
மாகாணக் கல்வித் திணைக்களம்
மேல்மாகாணம்
இல; மேமாகத'கல்'அபி மேல்மாகாணத்திலுள்ள சகல 76. ஆனந்தகுமாரசுவாமி தமிழ்மொழி மூலப் பாடசாலை மாவத்தை. அதிபர்களுக்கும். (கிறீன்பாத்) கொழும்பு-07.
கதிர்காமத்து ஐயன் பாமாலை திரு. க. பே. வரதராஜா பாடியது
மேற்படி பாமாலை சைவநெறி கற்கும் மாணவர்களுக்குப் பயனுடையதாகும். இப்பாமாலையில் சொல்வளம். பொருள்வளம், இசைநயம் ஆகியவை மிளிர்ந்து காணப்படுகின்றன.
சைவநெறி ஆசிரியர்கள் இதனைப் பொருத்தமான முறையில் மாணவர்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதை அறியத் தருகிறேன்.
மேல்மாகாணக் கல்விப்பனிப்பாளருக்காக
எஸ். நல்லையா. (LS &. L. (Sio. LIT)
வீரகேசரி ஞாயிறு 2-7-1995
நூல் அறிமுகம் நூல் ; கதிர்காமத்து ஐயன்பாமாலை ஆக்கியோன் : க. பே. வரதராஜா வெளியீடு : கதிர்காமத்தையன் பிரசுரம், கொழும்பு-04. விலை 20 ரூபா
முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் முருகன் மேல் பக்திகொண்டு இங்கிருக்கும் கதிர்காமத்தானைத் துதித்துப் பாடிய பாமாலை இது.
பிள்ளையார் காப்புடன் ஆரம்பமாகும் கந்தன்பாமாலை. முருகனைப் பல்வேறு திருநாமங்களாலும் விழித்துப்பாடுவதாக உள்ளது.
மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தத் தக்க விதத்தில் சந்தம் அமைத்து எழுதப்பட்டிருக்கும் இப்பாமாலை கதிர்காம யாத்திரை, கோயில் வலம் வருதல் ஆகியவற்றுக்கு மிகவும் ஏற்றதாக. பக்திப்பரவசம் ஊட்டுவதாக உள்ளது.
பாமாலையின் இறுதியில் கதிர்காமத்தையன் பாமாலை பாடியது எப்படி? என ஆசிரியர் கூறியிருக்கிறார். அதில் ஒவ்வொரு பாட்டும் எப்படி தனக்குக் கிடைத்ததென்று விளக்கியுள்ளார். ஒவ்வொரு பாட்டும் எவற்றை எவற்றையெல்லாம் உணர்த்துகின்றன என்பதையும் ஆசிரியர் குறித்துள்ளார்.
இத்தகைய கதிர்காமத்து ஐயன் பாமாலை சிறந்த பக்தி இன்பத்தைத் தரும் என்பதில் ஐயம் இல்லை.
எம். ரி

கதிர்காமத்து ஐயன் துணை
ళ ?
கதிர்காமத்து கந்தன்
JTDT6)6O
க. பே. வரதராஜா
UTIqulugbl
கதிர்காமத்தையன் பிரசுராலயம் கொழும்பு - 04.
இலங்கை விலை ரூபா 20/-
பிற வெளிநாடுகளுக்கு விலை 1$

Page 3
கதிர்காமத்து ஐயன் பாமாலை :
Devotional Songs in Tamil in praise of God Kataragama
வெளியீடு : கதிர்காமத்தையன் பிரசுராலயம். L 12, 2 ஆம் மாடி, அரச தொடர்மாடி மனைகள். கொழும்பு - 04.
முதற் பதிப்பு ஜூலை 1994
இரண்டாம் பதிப்பு தை 1995
மூன்றாம் பதிப்பு 1995
நான்காம் பதிப்பு மார்கழி 1998
பதிப்புரிமை ஆக்கியோனுக்கே.

கதிர்காமத்து 35535Gór LIIILDITGOD60
க.பே. வரதராஜா பாடித் தொகுத்த 'கதிர்காமத்து கந்தன் பாமாலை’ நான்காவது பதிப்பாக வெளிவந்துள்ளது.
இந்நூலில் வரதராஜா முருகனைப் பற்றிப் பாடிய நான்கு வரிக் கந்தன் கவிதைகள் நூறு பக்திப் பாமாலையாகிப் பக்தர்களைப் பக்திப்பரவசத்திலாழ்த்துகின்றன.
இப்பாமாலையில் அருணகிரிநாதரின் திருப்புகழ்களும், யோகர் சுவாமிகளின் பாடல்களும், முருகதாஸ் சுவாமிகளின் பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
முருக பக்தர்கள் விரும்பிப் படிக்கும் அருமையான பாடல்கள் நிறைந்த ‘கந்தன் பாமாலை”யில் பக்தி மணம் கமழ்கிறது.
வீரகேசரி ஞாயிறு 03-09-2000 வார மலரில் வெளிவந்தது

Page 4
falLDLIIỀ
யோகர்சுவாமி பாடல்
நாமாவளிகள்
மரகத மயில் மேல் வருமுருகா அரகர சிவசிவ அறுமுகவா சரவண பவனே சண்முகனே
வரந்தர வாவா என்முன்னே அரவணி சிவனா ரருள்பாலா
பரவ வரமருள் பரமதயாளா
கதிர்காமக் கந்தன்
நாமாவளிகள்
தேவனே, தேவனே, தேவனே தேவர் வேந்தனே வேலனே, வேலனே, வேலனே, வடிவேல் முருகனே பாலனே, பாலனே, பாலனே பாலகுமரனே காந்தனே, காந்தனே, காந்தனே கதிர்காமக்கந்தனே

கதிர்காமத்து ஐயன் துணை
கதிர்காமத்து ஐயன் பாமாலை
பிள்ளையார் காப்பு
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலே அரச மர நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார் கூறுமடியார்கள் வினைதீர்க்கும் எங்கள் பிள்ளையார் நாறுமாலை அணியும் எங்கள் நந்திமகனே பிள்ளையார் நல்லவரம் அளித்தருள்வாய் கதிர்காம மாணிக்கப் பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலே அரசமர நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
கந்தன் பாமாலை
01. கருணாமூர்த்தியே கதிர்காமக் கந்தா
கவலையை நீக்குவாய் உமையாள் மைந்தா வேண்டிய வரங்கள் ஈவாய் வேந்தா கதிர்காம சோதியாய் நின்றாய் ஆனந்தா
02. கண்கண்ட தெய்வமே கதிர்காமக் கந்தா
கலியுக வரதனே உமையாள் மைந்தா சரவண பவனே சண்முக நாதா சஞ்சலம் தீர்ப்பாய் சச்சிதா னந்தா
3

Page 5
O5.
தீராத வினைகளைத் தீர்க்கும் கந்தா தீர்க்க தரிசனம் அருள்வாய் முருகா சோதியின் மைந்தனே சண்முக நாதா சோதித்து எனையாள் கதிர்காம நாதா
கதிவேறில் லைகதிர் காமக் கந்தா சதிசெய்யும் சண்டாளரை சரணடையச் செய்வாய் கந்தா விதி செய்யும் விளைவுகளை விலக்கி விடுவாய் வேந்தா துதிசெய்யும் அடியவர்க்கு துணைநீயே கதிர்காமத் தையா
அகிலாண்ட ஈஸ்வரனே சுப்பிர மணியநாதனே அற்புத வேலனே சத்தியின் பாலனே
அடியார்க்கு எளியனே அன்பருக்கு அன்பனே ஆண்டருளும் அப்பனே கதிர்காமத் தையனே
அப்பனே கதிர்காமத் தையனே சண்முகனே சுப்பனே சுடர் வேலனே சுந்தரனே சிற்பனே சிங்கார வேலனே சிவபாலனே கற்பூர சோதியனே கருணை வேலனே கதிர்காமனே
கற்பூர சோதியனே கதிர்காமக் கந்தனே அற்புத நாதனே ஆறுமுக வேலனே தற்போது என்னையாட் கொண்ட கதிர் காமனே சற்குரு நாதனே கதிர்காமத் தையனே
சக்தியுமை பாலனே சரவண பவனே சித்தி விநாயகருக் கிளையவனே சண்முகனே பக்திசெய்யும் அடியவர்க்கு நேசமாய் இருப்பவனே முக்திநல்கும் முருகனே கதிர்காமனே
மூவடியளந்த மாயோன் மருகா முருகா பூவடி சரணம் சண்முகா குமரா திருவடிக் கபயம் குகனே சிவனார் மகனே காவடிக் கந்தனே காத்தருள் கதிர்காமனே
4.

10.
11.
12.
13.
14.
5.
16.
சரவண பவனே சண்முக குகனே சஞ்சலங்கள் தீர்த்தருள்வாய் சச்சிதா னந்தனே வரம் அருள்பவனே வணங்கும் என்குருவே கருணையின் உருவே கதிர்காமத் தரசே
சரவண பவகுக சண்முக நாதா வருவினை கெடவரம் அருள் தர வாவா வருந்தி அழைத்தால் வடிவேலா வருத்தங்கள் தீர்ப்பாய் கதிர்காமா
சோதி வடிவா னவனே கதிர்வேலனே சோதித்தெனை யாள்பவனே வடிவேலனே சாதி சமய பேதமற்ற சண்முகனே சாந்தி என்றும் அருள்பவனே கதிர்காமனே
ஐயா முருகா அரகர முருகா மெய்யாய் உன்பதம் பாடிப் பணிந்தேன் வையா புரிவாழ் விமலன் புதல்வா தாயாய் எனக்கு அருள்வாய் கதிர்காமா
ஈசனே நேசனே கதிர்காம வாசனே சீலனே பாலனே சத்தியின் வேலனே வீரனே சூரனே சூரனின் காலனே லோலனே வள்ளியின் லோலனே கதிர்காமனே
சுந்தரனே குமரனே சுப்பிரமணிய சுவாமியே சண்முகனே வீரனே சக்திவடி வேலனே சரவணனே குகனே சக்தியுமை பாலனே கதிர்காமனே வேலனே காத்தருளும் நாதனே
சண்முக நாதனே சத்தியின் வேலனே சஞ்சலங்கள் தீர்த்தருள்வாய் சச்சிதா னந்தனே சண்டையில் வீரனே சத்தியசீலனே சரவணபாலனே சமரசதீரனே எனையாண்ட கதிர்காம வேலனே
5

Page 6
22.
23.
ஆறுமுகனே அரனார் திருமகனே மாறுபடு சூரனை வதைத்த வீரனே வேறு தெய்வம் உண்டோ உன்போல் கதிர்காமனே ஆறுதல் அளிப்பாய் ஆனந்த நாதனே
ஆறுமுகா வேலவா சக்தியுமை பாலகா கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் சிவபாலகா மாறுபடு சூரனை வதைத்த வடிவேலவா ஆறுதல் அளித்திடுவாய் கதிர்காம நாயகா
ஆறுமுகம் கொண்டவனே ஆறுதலைத் தருபவனே ஆனைமுகன் தம்பியனே ஆனந்தத்தைக் கொடுப்பவனே ஆறுபடை வீட்டினிலே அமர்ந்திருக்கும் வேலவனே ஆறுதலை அளித்திடுவாய் கதிர்காமத்துப் பாலகனே
பன்னிருகை வேலவனே பார்வதியாள் பாலகனே பச்சைமயில் வாகனனே பரமசிவன் பாலகனே பக்தர்களின் ரட்சகனே பழனிமலைப் பாலகனே பன்னிருகண் கொண்டவனே கதிர்காமத்துப் பாலகனே
பொன்னே மணியே புகழ்இலங்கும் கதிர்காமனே மன்னே மயில் ஏறிய வள்ளி மணாளனே என்னே விதியின் கொடுமைத் துயரம் என்முன்னே வருவாய் அருள்வாய் குகனே
சங்கரன் புதல்வனே சக்தி வடிவேலனே ஐங்கரனுக் கிளையவனே ஆறுமுக வேலனே பன்னிரு கரனே அமரர் இடர் தீர்த்தவனே கருணா கரனே கதிர்காமக் கந்தனே
கந்தா முருகா கதிர்காமா காத்தருள் புரிவாய் வடிவேலா தோத்திரம் செய்துனை ஏற்றிடவே திருவருள் புரிவதும் கதிர்காமனே

24.
25.
26.
27.
28.
29.
30.
சங்கர நாதனே சண்முக வேலனே
சஞ்சலந் தீர்ப்பாய் சச்சிதா னந்தனே சரவண பாலனே சத்தியின் வேலனே சாந்தி அளிப்பாய் கதிர்காம நாதனே
மரகதமயில் மீதுவேல் தாங்கும் முருகா மால்அயன் காணாத சோதியின் பாலகா மாறாத கருணை எனக்கருள் கதிர்காமக்கந்தா மகிழ்ந்து வரம்தர ஓடிஷா முருகா
சாந்த சொரூபனே சண்முக நாதனே சரவண பவகுக சிங்கார வேலனே சச்சிதா னந்தனே சத்தியின் வேலனே சாந்தி அளிப்பாய் கதிர்காம நாதனே
காக்கும் எம்காவலனே கதிர்காம கந்தனே காண்பரிய பேரொளியே உமையாளின் மைந்தனே ஆதியும் அந்தமும் இல்லாத சோதியனே அடியார்க் கெளியனே கதிர்காமத் தையனே
மாசற்ற சோதியனே மன்றாடி மைந்தனே வீசுபுகழ் கதிர்காமம் வீற்றிருக்கும் வேந்தனே பூசுவெண் ணிறு பூண்பவர் தாயளனே பேசும் தெய்வம் நீயல்லவோ கதிர்காமத்தையனே
ஈர்த்தென்னையாட் கொண்ட கதிர்காமப் பெருமானே பார்த்தும் பாராமுகம் இருப்பதுவும் முறைதானோ கூர்த்த மெஞ்ஞானிகளின் உணர்வினிலே உறைபவனே முகூர்த்த நேரமதில் காத்தருள்வாய் கதிர்காமா
நடராஜன் மைந்தனான கதிர்காம நாதனே
நல்லவரம் தந்தருள்வாய் எந்தன் குரு நாதனே
நம்பிய அடியவர்க்கு நலம் கொடுக்கும் நாதனே நயவஞ்சகரைப் பஞ்சாக்கும் கதிர்காம நாதனே
7 :

Page 7
32.
33.
34.
35.
36.
37.
என்அருமைத் தெய்வமே கதிர்காமத் தெய்வமே பன்னிருகை வேலுடனே வந்தருள்வாய் குமரனே கன்னி இருவருடன் காட்சி தரும் முருகனே
புன்முறுவல் பூத்தருளும் கதிர்காமத்தையனே
வேலாயுதனே சரவணபவனே கோலாகலனே சண்முக குகனே சீலாசலனே சிவகுரு நாதனே-காலனைக் காலால் உதைத்த கடவுளின் மைந்தனே கதிர்காமனே
வடிவேல் முருகா பழனியப்பா
வந்தருள் புரிவாய் குமரப்பா கதிர்காமம் வாழும் கந்தப்பா கனிவுடன் அருள்வாய் கதிர்காம வேலப்பா
சக்தியுமை பாலனே சங்கரன் புதல்வனே பக்தியோடு உன்னை நானும் வணங்கி வந்தேனே சித்திபல காட்டியே கதிர்காமா என் சிந்தையைக் கவருவாய் முத்தி நல்கும் கதிர்காமனே வந்தருள் புரிவான்
சண்முக வடிவேலனே பார்வதியாள் பாலனே தண்முகவ்டி வேலனே தரணி புகழ் சீலனே பண்முகவடி வேலனே பழனிமலை வீரனே பன்னிரு கண்முக வடிவேலனே காத்தருளும் கதிர்காம தெய்வமே
சுப்பிரமணியனே கார்த்திகேயனே கதிர்வேலனே சிவபாலனே அற்புதமணியனே ஆதிவேலனே அருளும்நாதனே சத்தியின் பாலனே சற்குருமணியனே சரவணபாலனே சண்முகவேலனே சமரசதீரனே
கதிர்காம மணியனே கதிரமலை நாதனே கயிலைமலை நாதனுக்குகந்த
கதிர்காம வேலனே குமரா குகனே குஞ்சரி மணவாளா அமராவதி வாழ் அயில்வேல் அரசே சமரா சலனே சண்முகநாதா நமராயவனே நலனே கதிர்க்ாம நாதா

38.
39.
40.
41.
42.
43.
44.
குமரகுருபரனே எங்ககுருநாதனே அமரகுருபரனே ஆறுமுகநாதனே சற்குருபரனே சண்முகநாதனே கருணை குருபரனே கதிர்காம நாதனே
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தாயாய்க் காத்தருளும் பெருமானே பாயிற் கிடந்து பரிதவியாமல் - உன் கோயில் கதியென அருள்வாய் கதிர்காமா
பரஞ்சோதி நாதனே பார்வதியின் பாலனே அரஞ்சோதி நாதனே ஆறுமுக வேலனே சிவசோதி நாதனே சிங்கார வேலனே கதிர்காம சோதிநாதனே காத்தருளும் தெய்வமே
உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் துச்சமெனவே துயர்துடைக்க கதிர்காமன் வந்தருள்வான் நச்சுப் பாம்பு மீதிலே நடனமாடும் மாயோனின் மருகனேமுருகனே பேச்சுமூச்சற்ற முத்திநிலை தந்தருள்வான் கதிர்காமத்தையனே
கதிர்காம கந்தனே உமையாளின் மைந்தனே வள்ளி மணவாளனே வடிவேல் முருகனே சரவண பவனே சண்முக குகனே
சஞ்சலங்கள் தீர்த்தருள்வாய் சச்சிதா னந்தனே
கந்தன் என்று சொந்தமுடன் வந்தேன் அப்பா முருகா என்னைக் கைவிடாமல் காத்தருள வேணுமப்பா முருகா கதிரமலை யில்வாழும் எங்கள் அப்பனே சண்முகா-என்னை கருணையுடன் ஆட்கொள்ள வேணு மப்பா முருகா
குகனே குகனே குகனே குருபரனே குன்றிலாடும் குமரனே சரவணனே சண்முகனே சக்திவடி வேலனே ஆனைமுகன் தம்பியனே ஆறுமுகம் கொண்டவனே
9

Page 8
45.
46.
48.
49.
ஆறுதலைத் தருபவனே ஆனந்தம் கொடுப்பவனே.
குகனே - குகனே
குகனே குருபரனே குன்றிலாடும குமரனே சரவணனே சண்முகனே சக்திவடி வேலனே கதிர்காமத்தில் இருப்பவனே கவலை எல்லாம் தீர்ப்பவனே
குகனே - குகனே குகனே குருபரனே குன்றிலாடும் குமரனே
சரவணனே சண்முகனே சக்தி வடிவேலனே
வேல்முருகா, வேல்முருகா, வேல்முருகா திருமால் மருகா கந்தா கடம்பா வேல்முருகா - கதிர்காம சுவாமியாரே வேல்முருகா காத்திருந்தோமே வேல்முருகா கருணை செய்வாய் கதிர்காமா வேல்முருகா, வேல்முருகா, வேல்முருகா, திருமால் மருகா
சிங்கார வேலனே சிவசக்தி பாலனே எனையாண்ட கதிர்காம வேலனே சோதிவடிவாக வந்தவனே சோதி, சோதி, சோதி, சோதி, சோதி, சோதி, சோதி, சோதி கதிர்காம சோதி வேல்முருகா
குன்றிலாடும் குமரா எங்கள் குறைகள் திரவருவாய் மன்றிலாடும் பரமன் மகனே மனமகிழ்ந்து வருவாய் பன்றி உருவம் கொண்ட பரமன் பாலகா நன்றி உனக்கு சொல்ல நல்ல வரமளிப்பாய்
கோயில் மணி அடித்ததனால் குழந்தைகளும் எழுந்தார்கள் பாயில்கிடந்து வருந்தாமல் பட்டினியும் இல்லாமல் நோயும் நொடியும் இல்லாமல் துன்பம் எதுவும் இல்லாமல் காத்தருள தாயினிற் சிறந்த தாயாக வந்தான் எங்கள் கதிர்காமன்
வள்ளி மோகனா புள்ளிமயில்வாகன ஆறுமுககந்தனே சுந்தரவதனா மாறுபடு சூரனை வதைத்த வேலவா முருகா அரிமருகா
சிவசக்திபாலகா கதிர்காமத்தில் இருக்கும் எங்கள் வடிவேலவா கருணைமழை பொழிந்திடுவாய் கருணை வேலவா
10

50.
51.
52.
53.
54.
55.
56.
வேலைத்துக்கி விளையாடும் தெய்வமே என் காலைக் காத்தருள்வாய் மாலை மாலையாக உனக்கு பாமாலை ஏற்றுவேன்-நீ எனக்கு நற்தேக சுகத்தை தந்தருள்வாய் கதிர்காமத்தையா
ஏறுமயில் வாகனா பழனிமலைப் பாலகா மாறுபடு சூரனை வதைத்த வடிவேலவா ஆறுமுகம் கொண்டவனே ஆறுதலைத்தருபவனே நீறணிந்தார் வினை போக்கும் கதிர்காமக் கடவுளே
பேரும் புகழும் தந்தருளும் சண்முக சிவசுப்பிரமணியனே நாளும் கோளும் என்செய்யும் வினைதான் என்செய்யும் தூயவடிவேலால் காத்தருளும் பெருமானே அடியார்க்கு முத்தி தந்தருளும் கதிர்காம வேலா
ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைகளைத் தீர்க்கும் பாராளும் நாயகனே பக்தற்கு அருள்பவனே சீராக சிறப்பாக வீற்றிருக்கும் கதிர்காமத்தையனே
குருபரனே குமரனே சச்சிதானந்தனே அருவமும் உருவமு மாகிய ஆனந்த சோதியனே
மருகனே மாயோனின் முருகனே மரகத மயிலோனே
கருணைக் கடலே காத்தருளும் கதிர்காம (36)6)6) (860T
போக்கும் வரவும் புணர்வுமிலா குருநாதா காக்கும் எம் காவலனாய் வந்தாயே சிவகுருநாதா பார்க்கும் இடமெல்லாம் உன்தரிசனத்தை தந்தருள்வாய் குமரகுருநாதா வாக்கும் மனமும், காயமும் உன்பால் ஈர்த்தருள்வாய் கதிர்காம குருநாதா
சோதியனே வேலனே பார்வதியாள் பாலனே ஆதியனே அந்தமிலா சிவனாரின் மைந்தனே வேதியனே விண்ணோர் சிறைமீட்ட சூரசம்காரனே கார்த்திகேயனே கருணை வேலனே காத்தருளும் கதிர்காமனே
*

Page 9
57.
58.
59.
60.
61.
62.
63.
திரிபுரம் எரித்தவன் மைந்தனே சண்முகனே
ஒருவரம் அருள்வாய் பழனி வேலனே
மாவிட்டபுரம் தலத்தினில் தவறிய அடையாள அட்டையைத்தந்த கந்தனே கற்பூரம் கற்பூரமாக நறுமணம் வீசும் கதிர்காமத்தையனே
வ்ைகைநதிமுடி மீது அணிந்தவன் மைந்தனே சண்முகனே பொய்கை சரவணத்தில் உதித்த சரவணபவனே பன்னிருகை வேலனே பார்வதியாள் பாலனே-எனக்குக் கை கொடுக்கும் தெய்வமே கதிர்காம தெய்வமே
பத்திசெய் அடியார் பயன்பெற அருள்வாய் (மன) சுத்திசெய் அடியார் சுகம்பெற அருள்வாய் சத்தி பணிசெய் அடியார் சரணாகதி அருள்வாய் முத்தி தரும் முருகன் கதிர்காமன் அருள்வான்
முருகா குமரா வள்ளி மணாளா உருகா மனமும் உருகச்செய்வாய் மருகா மாயோனின் மனதிற் குகந்தவா கருகா செஞ்சுடர்வேல் கதிர்காமத்தையா
சிவன் மகனே சண்முகனே சரவணனே அவன் அருளின்றி ஓர் அணுவும் அசையாத என் கதிர்காமனே இவன் அண்ணனோ பார் புகழும் கணேஸ்வரனே எவன் வெறுத்தாலும் என்னை அன்புடனே காத்தருளும் கதிர்காமனே
சிவன்மகன் கதிர்காமன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி குகன் அருளாலே குறைவின்றி வாழ கதிர்காமன் எனக்கு அருள்புரிவானே
குகன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஏகன் அனேகன் ஆகிய முருகேசன் தேவர்களைக் காத்தருள கதிர்காமக் கடவுளாக வந்தான் ஆறுமுகன்
12

9).
gLD
கந்தன் திரு நீறணிந்தால் வந்த வினை களைந்திடுவான், எந்தன் குறை தீர்த்தருளி ஆட்கொண்டு அருள் புரிவான், உந்தன் விழிப் பார்வை ஒன்றே போதும் ஐயா நான் மகிழ நந்தன் போற்றும் சிவன் மைந்தனே கதிர்காம கந்தனே
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே நற்பணி என்றாலும் நற்துணை என்றாலும் நாயகா உனை மறவேனே சற்குரு என்றாலும் சற்குணன் என்றாலும் சண்முகா உனை மறவேனே சொற்குரு என்றாலும் செற்குணன் என்றாலும்
கதிர்காம கந்தனே உனை மறவேனே.

Page 10
No. -- ---- 「 s. s.
 


Page 11
9)
69LD
வள்ளி மணவாளனே புள்ளிமயில் வாகனா, துள்ளி வரும் வினைகளை தள்ளிவிடும் வேலனே, எள்ளி நகையாடுவாரை அடக்கி ஆண்டு அருள் வாயே, அள்ளி அள்ளி அருள்வானே கதிர்காம கந்தனே,
வண்ண மயில்வாகன் வரமளிக்கும் வடிவேல் முருகன், எண்ணி எண்ணி மகிழ எழில் வேல் முருகன், பண் ணிசையில் மகிழும் பழனிவேல் முருகன்,
கண்ணியமாய்க் காப்பான் கதிர்காம கதிர்வேல் முருகன்,
வடிவேல் முருகா, திருமால் மருகா, எட்டுக்குடிவேல் முருகா, ஏறுமயில் வாகனா, பழனி வடிவேல் முருகா, பக்தர்களின் இரட்கூடிகா, கருணை வடிவேல் முருகா கதிர்காம fbft եւ 1&II,
அரனாருக் குபதேசித்த குறவள்ளிக் குமரா,
அர்வணைத் தருள்வாயே அமரரின் அமரா, சரவணத் துதித்த சண்முகத் துருவே, சரணம் ஐயாவே கதிர்காமக் குருவே

64.
65.
66.
67.
68.
69.
மாணிக்கப் பிள்ளையாரின் தம்பியே கதிர்காமனே மாணிக்க கங்கை முடிமீது அணிந்த கதிர்காம மூர்த்தியே மாணிக்கம் பெற்றவர் உன்தலமதனில் நேர்த்திக்கடன் செலுத்திவரும
கதிர்காமத்தையனே மாணிக்கத்திலும் சிறந்த மாணிக்கமாய் விளங்குகின்றாய் கதிர்காம
முருகையா
கங்கை நதிமுடிமீது அணிந்தவன் மைந்தனே சரவணபவனே
மங்கை வள்ளி மணாளனாய் வந்தாயே சண்முகனே
வேங்கை மரமாய் நின்றாயே குமரகுருபரனே மாணிக்க கங்கைமுடி மீது அணிந்தவனே என்னைக் காத்தருளும் கதிர்காமத்தையனே
ஆண்டருளும் சோதியனே அற்புதம் அருள்பவனே வேண்டும் அடியவர்க்கு வரமருளிக் காப்பவனே மீண்டும் மீண்டும் உன்நாமத்தை மனமுருகி உரைப்பவர்க்கு ஓடிவந்தருள் புரியும் கதிர்காம வேலவனே
பாராளும் நாயகனே பக்தற்கு அருள்பவனே சேராத பகைவனையும் சமரசமாய் சேர்த்து வைக்கும் சமரசதிரனே ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்டே தீராத நோய்களைத் தீர்த்தருளும் கதிர்காமத்தையனே
அனாதைக்கு அருள்பவனே ஆபத்தைக் காப்பவனே வினோத வேலவனே வீறுமயில் வாகனனே வானோர் புகழ் சண்முகனே சரவணப் பொய்கையில் உதித்தவனே கனிவுடனே காத்தருள்வாய் கதிர்காம வேலவனே
வேலா பாலா பார்வதி பாலா
கோலாகலனே பழனிப்பாலா
லோலா வள்ளியின் லோலா சீலாசலனே கதிர்காம நாதா
13

Page 12
70.
71.
72.
73.
74.
75.
வடிவேலனே சிவபாலனே வந்தெனையாளும் முருகேசனே எட்டுக்குடி வேலனே ஏறுமயில் வாகனனே - ஒளவைக்கு ஞானவடிவேலனாய் வந்து சுட்டபழம் கொடுத்தவனே கதிர்காமவடிவேலனே கற்பூர சோதியனே காத்தருளும்
கதிர்காமத்தெய்வமே
ஐயனே மெய்யனே பன்னிரு கையனே
வேலையனே சீலையனே முருகையனே குமரையனே ஏழிலையனே சண்முகத்தையனே கதிர்காமத்தையனே அற்புத மெய்யனே கதிர்காம வேலையனே
அப்ப்ய்பா முருகப்பா
பன்னிருகை வேலப்பா தன்னிரு கைகூப்பி சண்முகனை வணங்கினாலப்பா கதிர்காமத்தப்பனும் அருள் புரிவானப்பா அப்பய்பா முருகப்பா
பன்னிருகை வேலப்பா
வருகவருக வடிவேலையா எனை வந்தாளும் சரவண முருகையா பருகபருக பசுந்தேனையா பழனிமலை ஆண்டவனே முருகையா உருகஉருக என்மனம் ஐயா உள்ஒளியைக் காட்டிடுவாய் முருகையா கருககருக என்கவலை ஐயா கண்இமைபோல் காத்தருள்வாய்
கதிர்காம ԱՔdb6Օ&եւ III
பாசமாம் புற்றறுத்துப் பாரிக்கும் சங்கரநாதனே நேசமாய் வந்தெனை ஆட்கொண்டருள்வாயே சிவகுருநாதனே மோசமாயிருந்த அருணகிரியை ஆட்கொண்டருளினாயே சற்குருநாதனே & LOIJ3b ೩೧ುನೀಗಿಸು நிலவ அருள்வாயே கதிர்காமநாதனே
குகபரனே சண்முகனே சரவணனே அகபரனே ஆறுமுகனே அற்புதனே சுகபரனே சுந்தரனே சுப்பிரமணியனே ஏகபரனே எனையாண்ட கதிர்காமனே
14

76.
77.
78.
79.
80.
81.
முருகா மால்மருகா வந்தருள்வாய் சண்முகா சிவபாலகா சக்தியுமைபாலகா வந்தருள்வாய் வேலாயுதா பழனிப்பாலகா சிவகுருநாதா வந்தருள்வாய் ஞானவடிவேலாயுதா பக்தரட்சகா பார்புகழ் ஈசா வந்தருள்வாய் கதிர்காம ஈசா
பரிபூரணானந்தனே பக்தர்களின் ரட்சகனே
அரி அயனுக்கு மேலான தத்துவ சீலனே விரிசடை முடி நெற்றிக்கண்ணனின் மைந்தனே சண்முகனே கரிமுகன் தம்பியே கலியுகவரதனே கதிர்காமனே
நோயைக் கொடுத்து துயருற வைத்தாயே கதிர்காமா-என்னை நாயைப்போலே அலையவைத்தாயே - உன்னை
மாயை உலகில் நம்பியிருந்தேன், நீயோ அருள்புரியாமல்
உன்னை வெறுத்து மறக்க வைத்தாயே - எனக்கு நோயை மாற்றும் மருந்தாக விஷபேதி அருளி காத்தருளினாயே
கதிர்காமத்தையா
சோதியே சுடரே சுடர் ஒளி விளக்கே
பாதியே உமையவள் பாகமாய்க் கொண்டவனே நாதி வேறில்லை தில்லை நடராஜனே வீதி ஒன்று அருள்வாய் விதிவினை விலகவே
குன்றிலாடும் குமரையா எனைவந்து கொஞ்சம் பாரும் ஐயா கன்று ஈன்ற பசுவின் கருணை என்மேல் காட்டும் ஐயா மன்றிலாடும் பரமன் மகனே மனமகிழ்ந்து வாரும் ஐயா ஒன்றும் அறியாய் பாவி எனை ஆட்கொண்டருள்வாய் கதிர்காமத்தையா
கண்கண்ட தெய்வமே மூளாயில் கதிர்காம ஐயனாரப்பா
கலியுக வரதனே எங்கள் மெய்யனாரப்பா
ஒருகைமுகன் தம்பியே இனிய கதிர்காம வேலனுக்குகந்த நம்பியே
உன்னை நம்பிக் கை தொழுவேன் நல்வரமருள்வாய் மூளாயில்
கதிர்காமஐயனாரப்பா
。15

Page 13
82.
83.
84.
85.
86.
87.
சிவமும் சத்தியும் ஒன்று என்றறிகிலர் சிவமும் சத்தியும் ஒன்று என்றறிந்தபின் சிவசத்தியுடன் ஒன்றியிருப்பரே
சரவணா சண்முகா சக்திவடிவேலவா குருபராகுமரா குஞ்சரி மணாளா ஆனைமுகன் தம்பியனே ஆறுமுகம் கொண்டவனே ஆறுதலைத் தருபவனே ஆனந்தம் கொடுப்பவனே கதிர்காமத்தில் இருப்பவனே கவலையெல்லாம் தீர்ப்பவனே சரவணா சண்முகா சக்திவடிவேலவா குருபரா குமரா குஞ்சரி மணாளா
அற்புதம் அருள்பவனே ஆண்டருளும் ஆறுமுகனே சொற்பதம் கடந்த ஞானநிலை அடியார்க்கு வழங்கும் ஞானவடிவேலனே பொற்பதம் தந்தருள வந்தருளும் மாயோனின் மருகனே முருகனே நற்பதம் நல்கும் கதிர்காமத்தையனே
மாற்றமாம் வையகத்தில் நிலையான முருகப்பெருமானே தோற்றம் அருவமும் உருவமுமாகிய ஆறுமுகசோதிப் பெருமானே நாற்றம் நறுமணம் இரண்டிலும் இயற்கையின் வடிவமாய் இருக்கும்
சண்முகப்பெருமானே ஏற்றம் இறக்கம் இல்லா நிறைவான வாழ்க்கையை கொடுக்கும்
கதிர்காமப்பெருமானே
ஞானச்சுடர் ஒளிவிளக்காய் இருப்பாயே குமரகுருபரனே ஊனமுற்றவருக்கு உறுதுணையாய் இருப்பாயே சிவகுருபரனே ஈணஇரக்கமற்றவரை அடக்கி ஆண்டருள்வாயே சற்குருபரனே வானவர்க்கும் முருகபக்தற்கும் நற்கதி அருளும் கதிர்காம குருபரனே
ஏறுமயில்வாகன் எங்கள் குறை தீர்க்கும் ஈசன் ஏகன் அனேகன் சரவணத்துதித்த ஆறுமுகன் வீறுமயில்வாகன் வினைதீர்க்கும் வேலன் ஆனைமுகன் தம்பி ஆறுமுகன் எங்கள் கதிர்காமன்
16

88.
89.
90.
91.
92.
ஆற்று இன்ப வெள்ளமே அனாதி ஆனவனே மாற்றமாம் வையகத்தில் நிலையான கதிர்காமப் பெருமானே வேற்றுவேற்று சிந்தனையால் அலையும் மனத்தை மாற்றி முத்தி அருள்வாய் கதிர்காமத்தையனே
சரணம் சரணம் கதிர்காமத்தையா சற்று என்னை வந்து கொஞ்சம் பாரும் ஐயா சக்திமயில் ஏறி சண்முகனாய் வருவாய் சஞ்சலங்கள் போக்கி சந்தோஷத்தைக் கொடுப்பாய் புள்ளிமயில் ஏறி வள்ளி தெய்வானையுடன் வருவாய் சரணம் சரணம் கதிர்காமத்தையா சற்று என்னை வந்து கொஞ்சம் பாரும் ஐயா
ஆறுமணமே ஆறு ஆண்டவன் கட்டளை ஆறு கூறு மனமே கூறு குமரன் வரக்கூறு மாறு மனமே மாறு பற்று மற்று மாறு தேறு மனமே தேறு கதிர்காமன் உன்னுள் எனத் தேறு உரை - பற்றுமற்று-பற்று இல்லாமல். பந்தபாச(உலகப்பற்று) இவைகளுக்கு ஏதுவாக இருப்பது காம, குரோத, லோப், மோக, மதமாச்சாரியங்களிலிருந்து ஆன்மா விடுபடல் (விடுதலை) ஆகிய ஆறு கட்டளை. ஆன்மாவிற்கு மனம், புத்தி, சித்தம், இவைகள் ஆணவத்தையே கொடுக்கும். உன் உள் உள்ளது ஆன்மா. ஆன்மாவை அறிந்தால் கடவுள் உன்னுள் இருப்பார். உண்மை = உள் + மெய் ( உருவம்)
அருள் புரிவாய் கருணைக் கடலே
மருள் நீக்கி மனக்கவலை நீக்குவாயே
பொருள் இருந் தென்ன பொன் இருந்தென்ன
பாருள் எனக்கு உன்அருள் இருந்தால் போதுமே கதிர்காமத்தெய்வமே
(ஆணவ) வேகம் கெடுத்தாண்ட வடிவேல் முருகா தாகம் உன்மீதே திருமால் மருகா (ஞான) யோகம் எனக்கருள்வாய் பழனிவேல் முருகா விவேகம் நீ தானப்பா கதிர்காம வேல்முருகா
17

Page 14
ノ3.
94.
ኴ5.
96.
ஆறுமுகன் அருளில் நல்ல அறிமுகம் உண்டாகும் ஆனைமுகன் தம்பி எங்கள் ஞானகுருபரன் வீரமுகன் எங்கள் ஆறுமுகன் வினைகள் வேரறுப்பான் கருணைமுகன் கதிர்காமன் காத்தருள்வான் நித்தமே
தீனதயாளா கதிர்காமநாதா தீர்க்க தரிசனம் அருள்வாய் வேலா சோதி யின்மைந்தனே சண்முகநாதா சோதித் தெனையாள் கதிர்காமவேலா
பார் புகழும் ஈசனே கதிர்காம வாசனே பார்வதி யின்பாலனே பழனிமலை வீரனே கூர்வடிவேலனே குறைகள் தீர்க்கும் நேசனே கார்முகில் வண்ணன் மருகனே கதிர்காம நாதனே
மங்களம் மங்களம் கதிர்காமக்கந்தனுக்கு மங்களம் மங்களம் மங்களம் ஜெயமங்களம் மங்களம் ஜெயமங்களம் காத்தருளும் தெய்வத்திற்கு மங்களம் மங்களம் அண்டினோரை ஆதரிப்பவருக்கு மங்களம் மங்களம் ஆறுமுக வேலனுக்கு மங்களம் மங்களம் இன்பமய சோதியனுக்கு மங்களம் மங்களம் ஈசன்உமைபாலனுக்கு மங்களம் மங்களம் உலகநாதன் மருகனுக்கு மங்களம் மங்களம் ஊமைக்கு அருள்புரிந்தவனுக்கு மங்களம் மங்களம் எட்டுக்குடி வேலனுக்கு மங்களம் மங்களம் ஏறுமயில் வாகனனுக்கு மங்களம் மங்களம் ஐங்கரனுக்கிளையவனுக்கு மங்களம் மங்களம் ஒற்றுமையைக் காப்பவனுக்கு மங்களம் மங்களம் ஓம்காரத் தத்துவனுக்கு மங்களம் மங்களம் ஒளவைக்கு உபதேசித்தவனுக்கு மங்களம் மங்களம் திருப்பரங் கிரித் தீரனுக்கு மங்களம் மங்களம் திருச்செந்தூர் தேவனுக்கு மங்களம் மங்களம் குன்றிலாடும் குமரனுக்கு மங்களம் மங்களம் திருப்பழனிச் செல்வனுக்கு மங்களம் மங்களம்
18

97.
98.
99.
100.
திருத்தணிகை முருகனுக்கு மங்களம் மங்களம் சுவாமிமலை முருகனுக்கு மங்களம் மங்களம் பழமுதிர்ச்சோலை வேலனுக்கு மங்களம் மங்களம் மங்களம் மங்களம் கதிர்காமக்கந்தனுக்கு மங்களம் மங்களம் மங்களம் ஜெயமங்களம் மங்களம் ஜெயமங்களம் காத்தருளும் தெய்வத்திற்கு மங்களம் மங்களம்
வானம் இடிந்து தலையில் வீழ்கின்ற வம்பு வந்தாலும் - என்னை அந்த கதிர்காம கந்தசுவாமியார் திருவருள் கைவிட மாட்டாதே
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் உண்டு குறைவு இல்லை கதிர்காமக் கந்தன் உண்டு கவலை இல்லை
குருவே குமரா குஞ்சரி மணாளா அருவே உருவே அயில்வேல் அரசே மருவே மலரே மயிலுர் மணியே கருவே கனலே கதிர்காம புனலாதிபனே
சிவகுமாரா வள்ளிமணாளா கலியுகவரதனே சிவகுருநாதா பவவினையேனை ஆட்கொண்டருள்வாயே சற்குருநாதா தவமுறை தியானம் அருள்வாயே குமரகுருநாதா
அவனியில் நிறைவான வாழ்வை அருள்வாயே கதிர்காமகுருநாதா.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
19

Page 15
திருப்புகழ்
ராகம் : பூரிகல்யாணி தாளம் : ஆதி
எதிரி லாத பக்தி தனைமேவி இனிய தாணி னைப்பை யிருபோதும் இதய வாரி திக்கு ளுறவாகி
எனது ளேசி றக்க அருள்வாயே கதிர காம வெற்பி லுறைவோனே கனக மேரு வொத்த புயவீரா
மதுர வாணி யுற்ற கழலோனே வழுதி கூனி மிர்த்த பெருமாளே
ராகம் : ஸஹானா (அ) ஸாவேரி தாளம் : ஆதி
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே
சோதிஞானப் பெருமாளே
தானதன தானத் தனதான தானதன தானத் தனதான
மாதர்வச மர்யுற் றுழல்வாரும் மாதவமெணாமற் றிரிவாரும் தீதகல வோதிப் பணியாரும் தீநரக மீதிற் றிகழ்வாரே நாதவொளி யேநற் குணசீலா நாரியிரு வோரைப் புணர்வேலா சோதிசிவ ஞானக் குமரேசா தோமில்கதிர் காமப் பெருமாளே
20

ராகம் : ஹரிகாம்போஜி தாளம் : ஆதி
திருமக ளுலாவு மிருபுய முராரி திருமருக நாமப் பெருமாள் காண் ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல் தெரிதரு குமாரப் பெருமாள் காண் மருவுமடி யார்கள் மனதில் விளையாடு LDU855 மயூரப் பெருமாள்காண் மனிதரளம் வீசி யணியருவி சூழ மருவுகதிர் காமப் பெருமாள் காண் அருவரைகள் நீறு பட அசுரர் மாள அமர் பொருத வீரப் பெருமாள்காண் அரவுபிறை வாரி விரவுசடை வேணி அமலர்குரு நாதப் பெருமாள் காண் இருவினையி லாத தருவினை விடாத இமையவர்கு லேசப் பெருமாள் காண் இலகுசிலை வேடர் கொடியினதி பார இருதனவி நோதப் பெருமாளே
ராகம் : கமாஸ் தாளம் : ஆதி அகரமு மாகி அதிபனு LDTÊ அதிகமு மாகி அகமாகி
eduQ60T60T வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்
இகரமு மாகி எவைகளு DÍé இனிமையு மாகி வருவோனே
இருநில மீதில் எளியனும் வாழ எனதுமு னோடி வரவேனும்
LDöbljg5) யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறை வேட னருளிய Ꮏl,60ᎠᏑ மகிழ்கதிர் காம முடையோனே
ᎶéᏠᏯᏂéᏏ600I சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே
திருமலி வான பழமுதிர் ᎶᏭfᎢ 60Ꭷ6u
ഥങ്ങബിഞ്ഞ് மேவு பெருமாளே
21

Page 16
ராகம் யதுகுலகாம்போஜி தாளம் : மிசிரம்
பல்லவி வேலைத் தூக்கிவிளை யாடுந் தெய்வமே - யென் வினைப்பகைதீர் தெய்வமே (வேலை)
அனுபல்லவி
காலைத்துக்கி யாடும் கண்ணுதல் தந்த கதிர்காமத் தையனே கழலடி நம்பி வந்தேன் (வேலை)
சரணம் எங்கெங்குந் திருமுகம் எங்கெங்குந் திருவிழி எங்கெங்குந் திருச்செவி எங்கெங்குந் திருக்கரம் எங்கெங்குந் திருவடி எங்கேநீ அங்கே நான் ஈசனே கதிர்காம வாசனே முருகேசா (வேலை)
பூனி யோகர் சுவாமிகள்
வாழ்த்து அரகரோகரா அரகரோகரா அரகரோகரா சுவாமி அரகரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கும் அரகரோகரா
திருத்தணிகை வேலனுக்கும் அரகரோகரா (அர) பழனிமலை பாலனுக்கும் அரகரோகரா பரமசிவன் மைந்தனுக்கும் அரகரோகரா )9ع[|]j( கதிர்காம வேலனுக்கும் அரகரோகரா கந்தசுவாமி கடவுளுக்கும் அரகரோகரா (அர) கலியுக வரதனுக்கும் அரகரோகரா கண்கண்ட தேவனுக்கும் அரகரோகரா )9هـ}IJ ( வெள்ளிமலை வேலனுக்கும் அரகரோகரா வள்ளிமண வாளனுக்கும் அரகரோகரா )9عIJ( அபிஷேகப் பிரியனுக்கும் அரகரோகரா ஆனந்த வடிவனுக்கும் அரகரோகரா (அர)
22

ாகம் : தேசிகதோடி
கந்தா கடம்பா கார்த்திகேயா கலியுக வரதா கதிர்காமா
தேவர்கள் துயர்தனை தீர்த்திடவே திரு அவதாரம் செய்தாயே சங்கரன் மைந்தனாய் வந்துதித்தே சரவணப்பொய்கையில் வாழ்ந்தாயே
சூரபத்மனை சம்கரித்த வீரா தீரா வெற்றிவேலா வள்ளிப் பெண்ணைத் தினைப்புனத்தில் கொள்ளைகொண்ட கள்வனானாய்
அருணகிரியுன் சரணெனவே கருணை யுடனே ஆண்டுவந்தாய் நக்கீரனுக்கே அருள் புரிந்தே பக்தி யோடுனைப் பாடவைத்தாய்
முருகா முருகா என்றிடவே முருக னாய்வந் தருள்புரிவாய் கதிர்கா மந்தனில் எழுந்தருளி காந்தம் போலே கவருகின்றாய்.
முருகதாஸ் சுவாமிகள்
23
தாளம் : ஆதி
(கந்தா)
(கந்தா)
(கந்தா)
(கந்தா)
(கந்தா)

Page 17
கதிர்காமத்தையன் பாமாலை பாடியது எப்படி?
கதிர்காமம் ஒருமுறை போகும் போது, பஸ் வணி டி புறக்கோட்டையிலிருந்து வெளிக்கிடும்போது, “சுந்தரன், குமரன்” என்று சொல்லித்தந்த கதிர்காமக்கடவுள் கதிர்காமத்தை அடைவதற்கு முன்பே முழுப்பாட்டையும் சொல்லித்தந்தார். கதிர்காமத்தில் கற்பூர சோதியைக் காட்டி ** கற்பூரசோதியனே’ என்னும் பாட்டைச் சொல்லித்தந்தார் கதிர்காமக்கடவுள். உலகத்தை மூன்று அடிகளால் அளந்த திருமாலை ஞாபகப்படுத்தி ‘மூவடியளந்த மாயோன்” என்னும் பாட்டைச் சொல்லித்தந்தார். காலஞ்சென்ற வினாசித்தம்பி உபாத்தியார் Saint Thomas College, Mount Lavania Lu6i6ńluî6ò Luiọůîgög56 f. ஒருநாள் ‘ஈசனே நேசனே கதிர்காமவாசனே’ என்று சொல்ல கதிர்காமத்தான் மிச்சப்பாட்டைச் சொல்லித்தந்தார். ‘மாசற்ற சோதியனே’ என்னும் பாட்டில் கதிர்காமத்தானுடன் நேருக்கு நேராக நாங்கள் கதைக்கமுடியும் என்பதற்காக பேசும் தெய்வம் என்று சொல்லித்தந்தார். “உச்சிமீது” என்னும் பாட்டில் பேச்சுமூச்சற்ற முத்திநிலை என்பதன் கருத்து (சீவன் முத்தர்) எல்லா ஞானிகளும் சீவன் முத்தர் அதாவது உயிர் உடலை விட்டுப் பிரியுமுன்பே முத்தியடைந்தவர்கள். கதிர்காம மண்-கதிர்காமன் திருநீறு அணிந்தால் வினை அற்றுப்போகும். “பேரும் புகழும்’ தேடிப்போகாமல் கதிர்காமனே பேரும் புகழும் தருவான். பேரும் புகழும் கிடைத்தவுடன் அதில் மயங்கி கடவுள் கதிர்காமனை மறக்கக் கூடாது. அடையாள அட்டை மாவிட்டபுரக் கோவிலில் தொலைந்து பின் கிடைத்தது. ‘திரிபுரம் எரித்தவன் மைந்தனே’ என்னும் பாட்டை பின் சொல்லிக்கொடுத்தார் கதிர்காமன். நாங்கள் அனாதைகள் அல்ல என்பதை கதிர்காமன் பாட்டின்மூலம் சொல்லித்தந்திருக்கிறார்.
“பரிபூரணானந்தனே’ என்னும் பாட்டின் ஏற்ற கடைசிவரி கிடைக்காதபோது Text Book Department இல் ஆசிரியராக இருக்கும் திரு. க. கனகரத்தினம் மாஸ்ரர் சொல்லித்தந்தார். அவருக்கும் அச்சிாளர் திரு. ரா. கனகரத்தினம் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இப்படிக்கு, க. பே. வரதராசா.
24

க. பே. வரதராஜா பாடித்தொகுத்த கதிர்காமத்துக் கந்தன் பாமாலை
தமிழர்களின் கண்கண்ட தெய்வம் முருகன். முருகன் எழுந்தருளிய ஆறு படைவீடுகள் தமிழ் நாட்டில் பிரபலமானவை. இலங்கையிலும் நல்லூர் மாவிட்டபுரம் மண்டுர் கதிர்காமம் ஆகிய இடங்களிலுள்ள முருகன் ஆலயங்கள் பழமையும் புதுமையும் அருளும் நிறைந்தன. கதிகாமத்தில் எழுந்தருளிய கந்தன் பெளத்தர்களினதும் இந்துக்களினதும் வழிபடுதெய்வமாக விளங்குகின்றான். இலங்கையின் தென்பாகத்தில் அமைந்துள்ள கதிர்காமத்தலம் திருப்புகழ்ப்பாடல் பெற்ற திருத்தலமாகம்ெ விளங்குகிறது. யோகர்சுவாமி. முருகதாஸ் சுவாமிகள் போன்ற பக்தர்களும் கதிர்காமக் கந்தன்மேல் பக்திப்பாடல்கள் பாடியுள்ளனர். பாடிய பக்தர்கள் கந்தன் அருளும் பெற்றுள்ளனர்.
க. பே. வரதராஜா இளமை தொட்டே ஒரு முருகபக்தன். தேஸ்டன் கல்லுரியில் எம்மிடம்படிக்கும் காலத்திலும் சைவ சமயத்தில் மிக்க ஈடுபாடுள்ளவர். ஆலயங்களிலும் பக்திப் பாடல்களை அன்புருகப்பாடி ஆனந்தம் கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தவர். விசேடமாகக் கதிர்காமக்கந்தனிடம் அளவிறந்த பக்தியுள்ளவர். திருப்புகழ், தேவாரம் போன்ற பக்திப் பாடல்களைப் பாடிப் பரவி வந்தவர். தாமும் புதிய பக்திப்பாடல்களை இயற்றிப் பாடவேண்டுமென விருப்பங்கொண்டார். ஓசையும் சந்தமும் எளிமையும் அமைந்த பாடல்களை இயற்றிப்பாடி முருகனை மகிழ்வித்து வந்தார். இவ்வாறு முருகன் அருளால் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவ்வாறு 100 பாடல்களைப் பாடியதோடு அமைவாது அவற்றை நூலுருவிலும் படைத்துள்ளார். பாடசாலை மாணவர்களும் மற்றும் முருகபக்தர்களும் பயன்பெறும் வகையில் கதிர்காமக்த்துக் கந்தன் பாமாலையைச் செய்துள்ளார். அவரது பாடல்களில் வரும் அடிகள் சிலவற்றை முன்பு எங்கோ கேட்ட பிரமை கூடப் பக்தர்களுக்கு ஏற்படலாம். பாடல்களின் பரிச்சயத்துக்கு அதுவும் ஒரு சான்றாகும். அழகான முறையில் கையடக்க நூலாக அவரது கதிர்காமத்துக்கந்தன்; பாமாலை வெளிவந்திருக்கிறது. பாடல்கள் ஓசை நயம் உள்ளவை. பாடசாலை மாணவர்களுக்கும் ஏற்றவனாக இருக்கின்றன. இதனை மேல் மாகானக்கல்விப் பணிப்பாளர் திரு. எஸ் நல்லையா அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார். முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவன் முருகன் அல்லவா? எனவே, பக்தன் வரதராஜாவின் பாடல்களைப் பாடுவோருக்கும் நிச்சயம் அருள் தருவான். பக்தர் சொன்னவை பன்னப்படுவதில்லை . பிழைபடுவதில்லை என்பர் புலவர்,
வரதராஜாவின் கதிர்காமத்துக்கந்தன் பாமாலை குறுகிய காலத்தில் நான்கு பதிப்புக்களைக் கண்டுளது. இதுவொன்றே அவரது பாமாலைக்குள்ள வரவேற்பைத் தெளிவுபடுத்துகின்றது அன்றோ!
இப்பாமாலையில் அருணகிரிநாதரின் திருப்புகழ்களும், யோகர் சுவாமிகளின் பாடல்களும், முருகதாஸ் சுவாமிகளின் பாட ஸ்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை நூலுக்கு மேலும் அழகு செய்வனவாக, பக்திப் பிரவாகத்தை பூட்டுவனவாக விளங்குகின்றன. பக்தர்கள் இசையுடன் பாடிப் பரவசமாகி அருள்பெற இவை பயன்தரும் என எதிர்பார்ப்போமாக.
கந்தன் பாமாலையைப் பிள்ளையார் காப்புடன் வரதராஜா செய்துள்ளார். முருகதாஸ் கவாமிகளின் பாடல்கள் நிறைவு பெறுகின்றன. அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும் எப்படிப் பாடினரோ? என்று அதிசயப்படுகின்றோம். வரதராஜா கதிர்காமத்தையன் பாமாலையை எப்படிப் பாடினர் என்பதையும் நூலின் முடிவில் கண்டு அறிந்து கொள்ளலாம். எல்லாவற்றையும் அறிந்து முருகன் அருள்பெறக் கதிர்காமத்துக் கந்தன் பாமாலையின் பிரதியொன்று உங்கள் கையில் தவழ அவனருள் பாலிப்பதாக.
அவனருளாலே அவன்தாள் வணங்கி அமைதி பெறுவோமாக. அல்லற்பட்டு அகதிகளாக வாழும் தமிழ் மக்கள் காலையம் மாலையும் ஓதிக் கலியுக வரதன் . கந்தன் அருள்பெற இப்பாடல்களைக் கொண்ட கதிர்காமத்துக்கந்தன் பாமாலை உதவுவதாக,
utawi lalu uusi uyokwi - - bwf bu hrávrti

Page 18
பஜ்ரசமயில் வாகனன், பக் அச்சம் அகற்றும் அயில்வேலன் கொண்டு அவன் அடியவரான தி பாக்கள் இவை. முத்தமிழால் முருகனுக்கு திரு. வரதராஜனின்
முறுகிய முருக பக்தர்களா சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், முருகப்பெருமானைப் படியே பர பக்திப் பரவசப் பாடல்கள் கொண்டு பக்தி செய்து உய்தி பெறுவோமா
j?
"கதிர்காமத்து கந்தன் பா அனைத்தும் அதிவேகமாக வி அன்புக் கட்டளைக்கிணங்க இ அருணகிரிநாத சுவாமிகளின் தி பாடல் ஒன்றும் திரு. வரதராஜ சேர்க்கப்பட்டுள்ளன. பாடிப்பரவி

,"◌"
முருகா
iன்னிரண்டு திண்தோழன், பரமன் திருமகன்,
, கதிர்காமக்கந்தன் மீது பக்திப் பரவசம்
நிரு. க. பே. வரதராஜா அவர்கள் பாடிய வைதாரையும் வாழவைக்கும் எங்கள் இசைப்படையல் இது.
ன அருணகிரிநாத சுவாமிகள், குமரகுருபர நக்கீரப்பெருமான் இவர்கள் அனைவரும் விரன்றோ. திரு. வரதராஜா அவர்களின் டு கதிர்காமத்தைபனை நாமும் பாடிப்பரவிப்
円。
வெளியீட்டாளர்கள்.
ர்கார் பதிப்பு
ாடல்கள்” முதல் மூன்று பதிப்புப் பிரதிகள் ற்பனையாகி போயின. பக்தர்கள் பலரின் ந்த நான்காம் பதிப்பு வெளியாகின்றது. ருெப்புகழ்ப்பாக்களும் யோகர் சுவாமிகள் ாவினது புதிய பாடல்களும் இப்பதிப்பிற்
பரவசமாகுங்கள்.
வெளியீட்டானர்களர்
745