கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாணிக்க மாலை

Page 1
*
 


Page 2


Page 3

பகவான் பூரீ சத்ய சாயி பாபா மகளிருக்கருளிய
மாணிக்க மாலை
மகளிரைப் பற்றி பகவான் பூரீ சத்ய சாயி பாபா வழங்கிய அருளுரைகளில் இருந்து தொகுத்தவை
வெளியீடு : சாயீஸ்வரம் 22, வித்தியாலயம் வீதி, திருக்கோணமலை, இலங்கை.

Page 4
முதலாம் பதிப்பு: நவம்பர் 1996
ஒளி அச்சுக் கோர்வை : பேஜ் செற்றர்ஸ்,
17. கோட்டடி வீதி, கொழும்பு - 12,
வடிவமைப்பும், அச்சுப் பதிப்பும் »ܬܠܵA
advertising serviu: * « slavab« »

iii
iii
jiV
பொருளடக்கம்
முன்னுரை
முகவுரை அணிந்துரை
பதிப்புரை
ஸ்திரீ தர்மம்
மாணவிகளுக்கு
குடும்பப் பெண்களுக்கு சமூகப் பெண்களுக்கு
அன்னையருக்கு ஆன்மீக சாதனையில் ஈடுபடும் பெண்களுக்கு பகவான் பாபா மகளிர் தினத்தில் ஆற்றிய
அருளுரையில் இருந்து சில பகுதிகள்

Page 5
ஓம் பூரீ சாயிராம்
முன்னுரை
பகவான் பூரீ சத்ய சாயி பாபா நவம்பர் மாதம் 19ம் திகதியை மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என எமக்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். அதன்படி எல்லா சாயி நிறுவனங்களும் மகளிர் தினத்தைக் கொண்டாட முற்படும் இவ்வேளையில் பகவான் பாபாவின் பல்வேறு அருளுரைகளிலிருந்தும், மகளிருக்குரிய பகுதிகளைத் தொகுத்து, ஒருங்கிணைத்து, ஒரு புத்தகமாக வெளியிடுவது மிகவும் தேவையானதும், பொருத்தமானதுமான ஓர் செயலாகும்.
திருக்கோணமலை, பகவான் பூரீ சத்ய சாயி சேவா சமித்தி (சாயீஸ் வரம்) இத் தேவையை உணர்ந்து, பகவானின் அருளுரைகளிலிருந்து மகளிருக்குரிய செய்திகளை இயலுமானவரை தொகுத்து வெளியிடுவது மிகவும் மகிழச்சிக்குரியதே.
பகவானின் அருள் சுரக்கும் , பக்திபூர்வமான இந்நற்சிந்தனைகள் எமது ஆன்மீக மறுமலர்ச்சிக்கு நிச்சயம் தூண்டுகோலாக இருக்கும் என பூரணமாக நம்புகின்றோம்.
சாயிசேவையில் செ. சிவஞானம் மத்திய இணைப்பாளர் இலங்கை (பிராந்தியம் 15)

ஓம் பூரீ சாயிராம்
முகவுரை
திருக்கோணமலை பகவான் பூரீ சத்ய சாயி சேவா சமித்தி (சாயீஸ்வரம்) மகளிர் தினத்தைக் கொண்டாடும்போது பகவானின் பாதக் கமலங்கள்ல் சமர்ப்பிக்கவென, உருவாகிய “மாணிக்க மாலை’ பகவானின் அருளுரைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்றது.
பகவான் பல்வேறு இடங்களில் ஆற்றிய அருளுரைகளில் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து, மகளிருக்கு மாணிக்க மாலையாகத் தொகுத்து இப்புத்தகம் மூலம் வழங்குவது மகிழ்ச்சிக்குரியதே.
பகவானின் அருளுரைகள் பக்திப் பிரவாகமாக, சுடர் விட்டுப் பிரகாசித்து உலகின் எல்லாப்பகுதிகளுக்கும் சென்று ஆங்காங்கே புனித எண்ணங்களையும், தூய சிந்தனைகளையும் உருவாக்க ஏதுவாக இருக்கும் என்பதில் எமக்கு முழுமையான நம்பிக்கையுண்டு.
மகளிர் எல்லோரும் மாணிக்க மாலையை முழுவதாகப்
படித்து அதன்படி நடக்க முயல்வதன் மூலம் இன்றைய ஆன்மீகச்
சூழலில் ஓர் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நாம் திடமாக நம்புகின்றோம்.
Goggi Fruito
சாயிசேவையில் மு. வன்னிய சேகரம் தலைவர் மத்திய சபை இலங்கை

Page 6
ஓம் பூரீ சாயிராம்
அணிந்துரை
ஒவ்வோர் வருடமும் நவம்பர் மாதம் 19ம் திகதியன்று மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென்று பகவான் பூரீ சத்ய சாயி பாபா பிரகடனப்படுத்தியுள்ளார்.
சுவாமி பல அருளுரைகளில் சாயி நிறுவனங்களின் சேவைகளைக் கூடிய பக்தியுடனும், சிரத்தையுடனும் செய்பவர்கள் பெண்களே எனக் கூறியுள்ளார். ‘ஒரு குடும்பத்தின் ஒற்றுமையையும், கட்டுக்கோப்புத் தன்மையையும் பெண்ணானவள் மகள், மனைவி, தாய், மருமகள், மாமி, பேத்தியார் என்ற பல நிலைகளில் மனத்திடம், பொறுமை, அன்பு ஆகியவற்றுடன் செயலாற்றுகிறாள். அவளே வீட்டின் ஒற்றுமையும், உலக சமாதானமும் நிலைக்கக் காரணியாகிறாள்' என சுவாமி மேலும் வற்புறுத்திக் கூறியுள்ளார்.
இத்தகைய நல்ல அருளுரைகளைக் கொண்ட இம் "மாணிக்க மாலை மகளிர் எல்லோருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.
இந்நூலைத் தொகுத்து வெளியிடும் திருக்கோணமலை பகவான் பூரீ சத்ய சாயி சேவா சமித்தியினருக்கு என் அன்பைத் தெரிவிப்பதோடு, மகளிர் எல்லோரும் இந்நூலை நன்கு படித்துப் பயன்படுத்தினால் சாயி நிறுவனங்கள் எல்லாம் நல்ல பயனைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
சாயிசேவையில் அ. சிவஞானம் தலைவர் கிழக்குப் பிராந்திய இணைப்புக்குழு

ஓம் பூரீ சாயிராம்
பதிப்புரை
பகவான் பூரீ சத்ய சாயி பாபா நவம்பர் மாதம் 19ம் திகதியை மகளிர் தினமாக கொண்டாடப்பட வேண்டுமென்று, தனது எழுபதாவது ஜெயந்தி தின விழா நிகழ்ச்சிகளின் போது பிரகடனப்படுத்தியுள்ளார். எனவே, மகளிர் தினத்தைக் கொண்டாட முற்படும் எல்லோருக்கும் பயன்படும் வகையில் பகவானின் அருளுரைகளிலிருந்து கிடைத்தவற்றைத் தொகுத்து, மகளிருக்குரிய மாணிக்க மாலையாக்கி, பகவானின் புனித கமலங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
இந்த மாணிக்க மாலையை உருவாக்க பலவகையிலும் எமக்குதவிய சாயி அடியார்கள் எல்லோருக்கும் பகவான் அருள் புரிய வேண்டுமென்று உளமாரப் பிரார்த்திக்கின்றோம்.
சாயிசேவையில் . நா. புவனேந்திரன் சாயீஸ்வரம் தலைவர் 22, வித்தியாலயம் வீதி பகவான் பூரீ சத்ய சாயி சேவா சமித்தி
திருக்கோணமலை திருக்கோணமலை

Page 7

1. ஸ்திரீ தர்மம்
பெண்களைக் கடவுளின் சக்தி என்பார்கள். அதுவே மாயையுங் கூட. இந்த இரண்டின் (சக்தி, மாயை) உருவமே பெண், இதனாலேயே பெண்ணை பராசக்தியின் வடிவம் என்று சொல்லுகிறார்கள். பெண், மனிதனின் நம்பிக்கைக்குரிய தோழி; வாழ்க்கையின் அருஞ்செல்வம்; இறைவனின் சங்கல்பத்தின் பருப்பொருள்: இயற்கையின் விசித்திரம்: இயற்கையின் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம்: பெண் வீட்டுக்கு அரசி: சக்தியின் பிரதிநிதி. வீட்டுக்கு லக்ஷ்மி போன்றவள் பெண்ணே: மனிதனுக்கு இனிமையான துணைவி. சக்தி ஸ்வரூபிகளான பெண்கள், ஆண்களைக் காட்டிலும் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்லர். இயற்கையாகவே அவர்கள் பொறுமை, சகிப்புத்தன்மை,
பக்தி, பிரேமை ஆகியவை நிரம்பியவர்கள்.
- தர்ம வாஹினி
நற்குணங்கள் அனைத்துக்கும் இருப்பிடமானவர்கள் பெண்கள். அவர்களுக்கு உள்ள அளவு மனக்கட்டுப்பாடு ஆண்களுக்கு இருப்பதில்லை. அத்யாத்மிகப் பாதையில் முன் மாதிரியாகத் திகழ்பவர்கள் பெண்களே. தன்னலமற்ற, பரிசுத்தமான பிரேமை பெண்களின் பிறப்புரிமை. அறிவும், அன்பும், அறநோக்கும், பண்பும் நிறைந்த பெண்கள் வீட்டுக்குத் திருவைப் (லக்ஷ்மி) போன்றவர்கள். எந்த வீட்டில் கணவனும் மனைவியும் பவித்திரமான பிரேமையில் கட்டுண்டிருப்பார்களோ, எங்கே தம்பதிகள் ஒன்று சேர்ந்து ஆன்மீக நூல்களைப் படித்துப் பாராயணம் செய்வார்களோ, எங்கே இரு வரும் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்து கொண்டிருப்பார்களோ அந்த வீடே வைகுண்டம். கணவனுடன் அன்பால் பிணைக்கப்பட்ட மனைவி, அருமையான மணம் பரப்பும் மலர். நற்குணங்கள் நிரம்பிய மனைவி கணவனுக்குச் சூடாமணி ஒளி வீசும் ரத்தினம்.
பெண்களுக்குப் பதிவிரதா தர்மமே லட்சிழம். அந்த நற்பண்பின் சக்தியைக் கொண்டு அவர்கள் எஒதtழி)சாதிக்கும்

Page 8
வலிமை பெறுகிறார்கள். அந்த மகத்தான சக்தியைக் கொண்டு தான் சாவித்திரி இறந்த கணவனின் உயிரை மீட்டாள். அத்திரி முனிவரின் மனைவியும், தத்தாத்ரேயரின் தாயுமான அநுசூயா தேவியின் கற்பின் சக்தி உலகறிந்த விஷயமே. அத்தச் சக்தியைக் கொண்டு திரிமூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றினாள். நளாயினி, தொழுநோய் பிடித்த தன் கணவரின் உயிரைக் காப்பதற்குக் கதிரவனின் சஞ்சாரத்தையே தடை செய்தாள்.
- தர்ம வாஹினி
கற்பே பெண்ணுக்கு சிறந்த தலையணி (கீரிடம்) போன்றது. கற்புடைய பெண்ணை உலகமே போற்றிப் புகழும். இந்தப் பண்புடைய பெண்ணின் சக்தியை விரித்துரைப்பது இயலாத காரியம். எவ்வளவு பெரிய துன்பம் நேர்ந்தாலும், இந்தக் கற்பின் சக்தியே அவன்ளக் காத்து இரட்சிக்கும். கற்பே பெண்ணின் உயிர்மூச்சு. கற்பின் மகிமையால் பெண் தன்னைத் தானே காத்துக் கொள்வது மட்டுமின்றி, வானுலகையும் (சுவர்க்கத்தையும்) அடைவாள், இதில் சந்தேகமே இல்லை. தன்னைக் கெட்ட நினைவோடு நெருங்கவந்த வேடனை ஒரேயொரு சொல்லின் மூலம் சாம்பலாக்கினாள் தமயந்தி. அரசனான நளன், நாடு நகரம் அனைத்தையும் இழந்து, உடுத்திய, உடையோடு காட்டுக்குச் சென்றேபாது, தமயந்தி மகிழ்வோடு கணவனைப் பின் தொடர்ந்து
சென்று அவனுடைய துன்பத்தில் பங்கேற்றாள்.
- தர்ம வாஹினி
பெண்ணுக்கு நாணம் (லஜ்ஜை) அணிகலன் போன்றது. அதன் எல்லையைத் தாண்டுவது பெண் தர்மத்துக்கே மாறான செயல். தர்ம விரோதமான செயல் மட்டுமல்ல, அதனால் பெண் அநேக அபாயங்களுக்கும் உள்ளாக நேரிடும்; பெண்மையே ஒளி இழந்துவிடும். அழகும் நாகரிகமும் உள்ளவளாக இருந்த போதிலும், நாணம் இல்லை என்றால், அது பெண்ணை வெறுமையாகத் தோற்றுவிக்கும். எளிமை, பணிவு, சுறுசுறுப்பு, இனிய சுபாவம், உயர்ந்த தத்துவங்களின் மேல் பற்றுதல், அடக்கம் ஆகியவைகளின் கூட்டுக்கலையே நாணம். நாணம் என்பது பெண்ணுக்கு மாசற்ற அணிகலன். நாணமுடைய பெண் இயற்கையாகவே எல்லையை
2

மீறிப் போக மாட்டாள். நாணம் அவளைப் போகவிடாது. அவள் எப்பொழுதும் நற்செயல்களில் ஈடுபடுவாள். உண்மையிலேயே ஒரு பெண் உயர்ந்தவள் என்பதற்கு நாணமே அடையாளம். நாண மற் ற பெண் தன் பெண் ணரினத் திற் கே துரோகமிழைத்தவளாவாள். அவள் மணமற்ற மலர். சமூகத்தில் அவளுக்கு எந்தவிதமான கெளரவமும் கிடைக்காது. எத்தனை நற்பண்புகளுக்கு இருப்பிடமாக இருந்தாலும் நாணம் ஒன்று மட்டும் இல்லையென்றால் அவள் வாழ்வே வெறுமைதான்.
- தர்ம வாஹினி
நாணம், பெண்ணைத் தெய்வநிலைக்கு உயர்த்துகிறது. நாணமுடைய பெண், வீட்டிலும், வெளியிலும், ஏன் உலகமுழுவதிலும் நன்மதிப்பைப் பெற்று உயர்வாள். "நாணம் என்பதையே மறந்து திரியும் பெண்களைத்தான் இன்றைக்கு உலகம் கெளரவிக்கிறது" என்று சிலர் சொல்லலாம். இன்றைய நடவடிக்கைகளை நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதில் தலையிட நான் விரும்பவில்லை. அவர்களை சிலர் கெளரவிக்கலாம்; மரியாதை செலுத்தலாம். அவைகள் உண்மையான கெளரவம் அல்ல, கெளரவத்துக்கு அருகதையற்ற அவர்களுக்குத் தரும் மரியாதையை, அவமரியாதையாகவே கொள்ள வேண்டும். அவைகளை உண்மையான கெளரவம் என்று பாவிப்பதுகூடத் துரோகம். அவைகள் வெறும் முகஸ்துதியே. அந்த வீண்புகழ்
கழிவுப் பொருளுக்குச் சமமானது.
- தர்ம வாஹினி
நாணமுடைய பெண் கெளரவத்துக்கோ, பெயருக்கும் புகழுக்குமோ ஆசைப்படமாட்டாள். தன்னுடைய நிலையை நன்றாக உணர்ந்து, தன் நடவடிக்கைகளை ஒரு வரையறைக்குள் வைத்துக்கொள்வாள். அவளுக்குத் தெரியாமலேயே கெளரவம் அவளைச் சென்று அடையும். மலர்களில், தாமரையில் உள்ள தேன், வண்டுகளை வருந்தியழைப்பதில்லை; தேனீக்களை வரவேற்பதில்லை. தேனைச் சுவைக்க அவைகளே அந்த மலர்களைத் தேடிக்கொண்டு வந்து கூடுகின்றன. தேனுக்கும், வண்டுக்கும் உள்ள தொடர்பே அதற்கு காரணம். நாணமுடைய பெண்ணுக்கும்
3

Page 9
அவளைத் தேடிவரும் கெளரவத்துக்கும் உள்ள தொடர்பும் இதைப் போன்றதே. பவித்திரமான பெண் கெளரவத்துக்கோ புகழுக்கோ ஆசைப்படமாட்டாள்; அது அவளுடைய ஆத்ம தர்மம்.
- தர்ம வாஹினி
நாணமற்ற பெண்ணை, பெண் என்று சொல்வதைக்கூட ஆத்ம தர்மம் ஒப்புக்கொள்வதில்லை. ஆத்ம தர்மத்துக்கு மாறான கெளரவம், இறந்த உடலை அலங்கரிப்பது போன்றதே. வெறும் சடலத்துக்கு எவ்வளவு அலங்காரங்கள் செய்த போதிலும், அந்த உடலைவிட்டு வெளியேறிய உயிர் அவைகளை அனுபவிப்பதில்லை, அல்லவா? உண்மை நிலையைப் புரிந்து கொண்டவர்களுக்குக் கீர்த்தி, கெளரவம் என்னும் சிறப்பை யார் அளிக்கிறார்கள்? இந்த அர்த்தமற்ற மரியாதைக்கு ஆசைப்படாமல், ஆத்ம தர்மத்துக்கே தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். இதுவே நாணமுடைய பெண்ணின் இயல்பு. அந்த இயல்புடைய குடும்பத் தலைவியை
கிருஹ லக்ஷ்மி என்று அழைக்கிறார்கள்.
- தர்ம வாஹினி
ஏராளமாகப் படித்து, பட்டம் பெற்று, சமூக உயர்வும் தகுதியும் பெற்ற கணவன் கிடைத்திருந்தாலும், அல்லது தானே நிறையப் படித்து, பட்டம் பெற்று உயர்ந்திருந்தாலும், நற்குணமே தன் செளகரியமாக, சீலமே உயிர்மூச்சாக நாணமே ஜீவனாக சத்தியத்தை உள்ளடக்கிய செயல்களைத் தன் அன்றாடக் கடமைகளாகக் கொண்டு, பாவபயம், தெய்வபயம் என்னும் முளைகளை இதயத்தில் நட்டு வளர்த்து, பெண்ணின் பெருமையை நினைவு கூர்ந்து, பெண் தர்மத்திலிருந்து பிறழாமல் வாழ வேண்டும். மதம், ஒழுக்கம், பெளதிக நெறி ஆகியவைகளிலும் நினைவு, சொல், செயல் ஆகியவைகளிலும் சத்தியத்தை, தர்மத்தை அநுசரித்து, சகல கலைகளின் சாரமும் அதுவே என்று கொண்டு, தன் கெளரவத்துக்கு ஊறு நேராமல், கற்பு நெறி பிறழாமல் வாழ்வதே பெண்ணின் கடமை. பெண் தர்மமே பெண்ணின்
பிறப்புரிமை இதை பெண் ஒரு நாளும் மறக்கக்கூடாது.
- தர்ம வாஹினி

2. மாணவிகளுக்கு
அடுத்த தலைமுறையையாவது காப்பாற்றுவதற்காக பெண்களுக்கு நல்ல திட்டமிட்ட முறையில் கல்வி அளிக்கப்பட வேண்டும். தங்களுக்குள்ள பாரியபொறுப்புக்களைத் தாங்கும் பொருட்டு, அவர்கள் அறிவுத்திறனும் மனோபலமும், திட
நம்பிக்கையும் பெற்றிருக்க வேண்டும்.
- சாயி அவதாரம்
பட்டம் அல்லது டிப்ளோமா (பட்டயம்) பெறுவதுடன் கல்வி முடிவடையக் கூடாது. ஒருவருடைய கல்வித் தகுதிக்கு அது உண்மையான சான்றல்ல, கல்வி அப்படியொரு இயந்திரகதியான செயற்பாடல்ல. மரத்துப் போன மனிதருக்குக்கூட அது உள்ளெழுச்சி தரவேண்டும். பெருமைக்கோ, பகட்டுக்கோ பொறாமைக்கோ அங்கே இடமில்லை. கல்வியானது ஞானத்தை எல்லோரோடும் பகிர்ந்து கொள்கிறது. ஜடமான இரும்புத்துண்டை காந்தம் செயற்பட வைக்கின்றது. நீங்கள் இங்கே பெற்றுக் கொண்ட வித்தை அல்லது உயர் கல்வி எல்லோரையும் உன்னத செயற்பாட்டுக்கும், சிந்தனைக்கும் இட்டுச் செல்ல வேண்டும். அது உள்ளொளி பிறப்பிக்க வேண்டும். பெற்றோருக்கு இன்பமூட்ட வேண்டும். மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும். சொந்த
வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாக அமைய வேண்டும்.
- அனந்தப்பூர், 1-12-82
இந்தக் கல்லூரி உங்களை வெறுமனே பட்டதாரிகளாக்குவதற்கு மாத்திரம் நிறுவப்பட்டதல்ல. ஆன்மீக அறிவையும், ஆத்ம விசுவாசத்தையும் வளர்க்க உதவுவதே முக்கிய நோக்கமாகும். அதன் பயனாக ஒவ்வொருவரும் தன்னலத் தியாகத்தைக் கற்றறிந்து ஆத்மானுபவம் பெறமுடியும். கலாசாலைக்குரிய பாடத் திட்டங்களின் படி கற்பித்து உங்களைப் பட்டதாரி களாக்குவதற்கு தயார் செய்வது ஓர் இடைநிலையேயாகும். இறுதி நோக்கம் ஆன்மீக ஈடேற்றம், தன்னையறிதல், அன்போடும் பற்றின்மையோடும் சமூக சேவை செய்தல் என்பதாகும். எங்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால், ஆத்மீக விழிப்புணர்வினாலும்
5

Page 10
அதன் அனுகூலங்களினாலும் உங்கள் வாழ்வானது சமூகத்துக்கும் தனி நபருக்கும் ஒளிமிகுந்த உதாரணமாக விளங்க வேண்டும் என்பதே.
- அனந்தப்பூர், ஆகஸ்ட் 74
அன்பேயுருவான யுவதிகளான நீங்கள் வருங்காலத்தில் அன்னையர்களாகப் போகின்றீர்கள். உங்களின் நடவடிக்கைகளே வருங்காலத்துக்கு வித்துக்கள். நமது குழந்தைகள் வருங்காலத்தில் நன்னலத்தோடும், பாதுகாப்போடும், அமைதியாகவும் வாழ வேண்டுமானால் இன்று நாம் கட்டுப்பாட்டுடன், நிபந்தனைகளைக் கடைப்பிடித்து நன்னடத்தையுடையவர்களாக நம்மை நாம் ஆயத்தஞ் செய்து கொள்ள வேண்டும். இலெளகீகமான கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கும் நீங்கள் அவற்றோடு சற்றுச் சாதாரண ஞானத்தையும் கூட சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
- சனாதன சாரதி, டிசம்பர் - 1978
பெண்களுக்குத் தகுந்த கல்வியைக் கற்பிக்க வேண்டும். பண்பாடுகள் நிறைந்த பெண்கள் உலகுக்கே தர்ம தேவதைகள். பெண்களைத் தர்ம தேவதைகளாக மாற்றும் நல்ல கல்வியைத் தர பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களில் சுதந்திரம் தருவது பெண்களுக்கு தீமை செய்வதாகும். சர்வநாசத்தைத் தேடித்தரும். அப்படிப்பட்ட வித்தையைப் பெண்களுக்குக் கற்பிப்பதை நான் ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டேன். உயர்ந்த நோக்கங்கள் உடையவர்களாக மாற்றும் வித்தையை, கலாச்சாரத்தையே கற்பிக்க வேண்டும். பரிபூரண சுதந்திரம் தர்மத்தையே நாசமாக்க வல்லது. அப்படிப்பட்ட சுதந்திரத்தால் பெண்கள் தம்மைத் தாமே பாழ்படுத்திக் கொள்ளுவார்கள். வித்தியாசமின்றி கலந்து பழகுவது, சீராக்கமுடியாத நிலைக்குப் பெண்ணைத் தாழ்த்திவிடும்.
- தர்மவாஹினி
பழங்காலத்தில்கூட கல்வி கற்ற பெண்கள் ஏராளமானவர்கள் இருந்தனர். அவர்கள் தம்முடைய அறத்திலிருந்து பிறழாமல், ஆத்மானந்தத்தை அநுபவித்து வந்தனர். கல்வி புத்திசாலித்தனத்தை வளர்க்க வேண்டும். சாவித்திரி, அநுசூயா, நளாயினி போன்ற
6

கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தபோதிலும், மனைவி அவனை மகிழ்வித்து, மெதுவாகப் பொறுமையைக் கையாண்டு அவனை நல்வழியில் திருப்பி, இறைவனின் அருளுக்குப் பாத்திரமாகும்படி மாற்ற வேண்டும். கணவன் எப்படிப்போனால் என்ன, தான் மட்டும் இறையருளுக்குப் பாத்திரமானால் போதும் என்ற நினைவே அறத்துக்கு மாறானது. இது பெண்ணின் இயல்பே அல்ல. கணவனின் நலன், மகிழ்ச்சி, அவனுடைய விருப்பம் ஆகியவைக்ளைத் தன்னுடையதாகவும், கணவன் நற்கதியடைந்தால் அதுவே தனக்குப் பாதுகாப்பு என்றும் கருத வேண்டும். அப்படிப்பட்ட பெண்ணுக்கு இறைவனின் கருணை முயற்சியின்றியே கிட்டும்; இறையருள் மழையாகப் பொழியும். அந்தப் பெண்ணுக்கு இறைவன் சகல காரியங்களிலும் உறுதுணையாய் நின்று, நிறைந்த கருணையைச் சொரிவார். அந்தப் பெண் மட்டுமன்றி, அவளுடைய கணவனும்கூட
நற்கதியடைவான்.
- தர்மவாஹினி
எந்த வீட்டில் கணவனும் மனைவியும் உயர்ந்த நோக்கங்களின் நிழலில் வாழ்கிறார்களோ, எந்த இல்லத்தில் ஹரி நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டு நற்செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்களோ, சத்தியத்தை கடைப்பிடித்து, அன்பும் அருளும் கொண்டு, சாந்தி நிறைந்தவர்களாய், தர்ம நூல்களைப் படித்து; புலன்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு, சகல உயிரினங்களிடத்தும், சம நோக்கோடு அன்பு செலுத்துகிறார்களோ அந்த வீட்டில் லக்கூழ்மி வாசம் செய்வாள். அந்த இல்லம் அமரர் வாழும் உலகமாக இருக்கும். - தர்மவாஹினி
உன்னதமான பண்புகள் நிறைந்தவளே, மனைவி என்ற பெயருக்குத் தகுதியுடையவள். கணவனிடம் உண்மையான அன்பு பூண்ட மனைவியே கிருஹலகூழ்மி, தர்மபத்தினி. அறம், பொருள் இன்பம் என்னும் மூவகை அறங்களைப் பெற உதவுபவள் பெண்ணே. கணவனின் மனமறிந்து இனிமையாகப் பேசும் மனைவி அவனுக்கு மனைவி மட்டுமல்ல, அற வழியைக் காட்டும் போது அவளே தந்தை, நோயுற்றுத் தவிக்கும் போது அவளே
தாய்.
- தர்மவாஹினி
19

Page 11
மதமும், குடும்பமும் நிலைத்து நிற்பதற்கும், அழிந்துபடுவதற்கும் பெண்ணே காரணம். பெண்களுக்கு இயல்பாகவே மதம், ஆன்மிகம் ஆகியவைகளில் நம்பிக்கை மிகுதி. பக்தி, விசுவாசம், பணிவு ஆகியவை கொண்ட பெண்கள், தங்கள் கணவர்களைக் கூட இறைவழியில் இட்டுச் செல்லவும், ஆசார தர்மங்களில் விருப்பம் கொள்ளவும் செய்ய வல்லவர்கள். குடும்பத் தலைவி விடியற் காலையிலேயே எழுந்துவிடுவாள். வீட்டைச் சுத்தம் செய்து, தானும் குளித்து, தன்னைப் புனிதப்படுத்திக் கொண்டு; பின்னர் தியானம், வழிபாடு இவைகளில் ஈடுபடுவாள். பிரார்த்தனைக்காகத் தங்கள் வீட்டில் ஒரு சிறிய அறையைப் பூஜை அறையாக ஏற்படுத்திக் கொள்ளுவாள். அந்த அறையில் கடவுளின் படங்கள், விக்கிரகங்கள், பக்தர்கள், மகான்கள், ஞானிகள், வழிகாட்டிகள் ஆகியவர்களின் படங்களை வைத்து அலங்கரிப்பாள். அந்த அறையைப் புனிதமான கோயிலாகவே பாவித்து, காலையிலும், மாலையிலும் வழிபாடியற்றுவாள். பண்டிகை போன்ற முக்கியமான நாட்களில் பிரார்த்தனை, பஜனை, ஆரத்தி முதலியவைகளைச் சிறப்பாகச் செய்வாள். அப்படிப்பட்ட பெண், தன் - பொறுமையாலும், விடாமுயற்சியாலும், இறை நம்பிக்கை இல்லாத தன் கணவனைக் கூட - அவன் பிராத்தனைகளில் ஈடுபடாவிட்டாலும் சமூகத்துக்கு உபகாரமான நற்செயல்களில் ஈடுபட்டு, அவைகளையே தெய்வ சமர்ப்பணமாகச் செய்யும்படி
மாற்றி விடுவாள்.
-தர்மவாஹினி
20

4. சமூகப் பெண்களுக்கு
பெண்களைப் பலவீனர் என்கின்றனர். அதை நம்பவேண்டாம். உங்கள் பக்கம் சில சிறப்புத்தன்மைகள் உள. அவையாவன புத்திக்கூர்மை, கட்டுப்பாடு, ஆத்மசக்தி, மற்றவர்களின் மேன்மைகளை உணரும் ஞானம், ஒருத்தரின் குறைகளைப் பற்றிய விளக்கம், உங்களை திருத்தம் செய்வதில் ஆர்வம், இப்படி இருக்கையில் உங்களைப் பலவீனர் என்றழைப்பது எப்படி? நீங்கள் தலைவர்களே! - மகாராணி பெண்கள் கல்லூரி
மைசூர் 12-9-1963
பெண்கள் பலர் சமூகமளித்திருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு நான் இதைச் சொல்ல வேண்டும். அவர்களிடம் நம்பிக்கையும், பக்தியும் இருந்த போதிலும், தங்களது மனோபாவங்களாலும், நடத்தையினாலும் அசாந்தியை அவர்கள் அதிகரிக்கச் செய்கின்றனர். அவர்களிடம் பாரிய பொறுப்பு ஒன்றிருக்கின்றது. அதை அவர்கள் அசட்டை செய்துவிட்டனர். மக்கள் கட்டுப்பாட்டோடு வாழ்க்கை வாழ்வதற்குப் பயிற்சி தரும் ஒழுக்க விதிகளை அவர்கள் அலட்சியம் செய்து விட்டதனால் சஞ்சலமும் கவலையும் வீட்டிலும், நாட்டிலும் அதிகரிக்கின்றன. அவர்கள் ஒரு சினிமா கொட்டகைக்கும், ஒரு சந்தைக்கும், ஒரு கண்காட்சிக்குமிடையில் வேறுபாடு காட்டுவதில்லை. கோயிலிலும் சரி, புனிதமான மக்கள் கூட்டத்திலும் சரி, எங்குமே அரட்டையில் ஈடுபடுகின்றார்கள். வளவளவென்று கதைக்கின்றார்கள். பிள்ளைகள் இவர்களைப் பார்த்துப் பழகி, வளர்ந்தபின், அவர்களும் மூத்தோரிடத்தும், புனிதத் தலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய பயபக்தியை இழந்து விடுகின்றார்கள். மரியாதைப் பண்பின்றி, ஓயாமல் சத்தமிட்டுக் கதைத்து, அசாந்தியை குறைப்பதற்கு பதிலாக கூட்டுகின்றார்கள். அவர்கள் ஒரு காலத்தில் தர்மத்தின் தூண்களாயிருந்தவர்கள். இன்று அதன் அர்த்தம் புரியாமலும், நாளாந்த வாழ்க்கையில் அதைக் கடைப்பிடிக்கும் ஒழுங்கு முறை
தெரியாமலும் இருக்கின்றார்கள்.
- வெங்கடகிரி பிரசாந்தி வித்துவ மகாசபா, 13-12-1994
21

Page 12
சமாதானமும், சந்தோசமும் நிறைந்த உலகத்தை பெண்மை என்ற அடித்தளத்தில் கட்டியெழுப்ப வேண்டும். பெண்கள் உண்மையும் தீரமும், கனிவும், கருணையும், பண்பும், பக்தியும் உள்ளவர்களாயிருந்தால் அமைதியும் ஆனந்தமுமான ஒரு சகாப்தம் உலகில் ஏற்படும்.
ஒரு பெண் தன் வரம்பு எல்லைகளை அறிந்திருக்க வேண்டும். தன்னுடைய போக்குவாக்குகளில் அளவிற்கு மிஞ்சிய சுதந்திரத்தை நாடியலையக் கூடாது. இந்த ஆசையினால் உந்தப்படும்போது அவர்கள் அதிகளவு துன்பப்படுகின்றனர். அவள் சட்டங்களையெல்லாம் மீறி, சுதந்திரத்தை நாடி, கடிவாளமற்று ஒடும் போது, பெற்றோர், மாமன்மாமியார் ஆகிய இருதரப்பினருடைய குடும்பங்களின் நற்பெயருக்கும், புகழுக்கும்
ஆபத்தை விளைவிப்பவளாகிறாள்.
- சாயி சந்தன. 23-11-1985
மகாராணியார், அரசமாளிகையிலுள்ள தங்களுடைய அந்தப் புரங் களில் இருந் தவாறே, சுவர் களிலுள்ள து வாரங்களினூடாகவும், அடைப்புக்களின் வழியாகவும் வெளிஉலகத்தைப் பார்க்கமுடியும். அவர்கள் மற்றவர் பார்வைக்குப் படாமல் பத்திரமாக இருப்பர். சாஸ்திரங்களில் குறித்து வைக்கப்பட்டுள்ள ஸ்திரீ தர்மத்தில் அதிசிறந்த தர்மம் இதுவாகும். நீங்கள் பார்வைக்கும், பேச்சுக்கும் ஆளாகக் கூடாது. பொது மக்களின் கழுகுப்பார்வைக்கு அகப்படாமல் எட்டியிருக்க வேண்டும். நா காத்து தோன்றாத்துணையாயிருக்க வேண்டும். அத்தோடு ஊக்கமூட்டுபவர்களும், ஆலோசனை கூறும் குருமாரும் நீங்களே. - மகாராணி பெண்கள் கல்லூரி, மைசூர் 12-9-1963
வீட்டையும், நாட்டையும், உலகத்தையும் உருவாக்குபவர்கள்
பெண்கள். சந்ததியை வளர்தெடுத்து உருவாக்கித்தரும் தாய்மார்
நீங்களே. ஆகவே அன்பையும், உள்ளொளியையும், அறிவையும்,
ஆனந்தத்தையும் நாடும் ஆத்மீக வேட்கையை உங்கள் இதயங்களில் கொலுவிருத்துங்கள்.
- பூரீ சத்திசாயி பெண்கள் கல்லூரி
அனந்தப்பூர் 5-2-1981
22

பெண்ணானவள் ஆணை மிஞ்சியவளாகக் கருதப்படவில்லை. ஆணின் காலடியில் மிதிக்கப்படுவளாகவும் இல்லை. அவனுக்குச் சரிசமமாக அவள் நிற்க வேண்டும். சும்மா அவனைப் போஷித்துப் பராமரிப்பதோடு அமையாது, தோழியாக இருந்து அவனுடைய இன்பதுன்பங்களை எதிர்கொள்ள வேண்டும்.
a TT
இல்லற தர்மத்தை இயற்றும் போது செல்வத்தின் அதிதேவதையினுடைய பாத்திரத்தை இல்லக் கிழத்தியே ஏற்க வேண்டும். கணவனுடைய சம்பாத்தியத்தின் காவலனாக உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அவள், பணத்தை முன்யோசனையோடும் அறிவு பூர்வமாகவும் செலவு செய்ய வேண்டும்.
- TIT
உங்களுடைய விருப்பு, வெறுப்புகளை மற்றவர்களின் விருப்பு வெறுப்புகளோடு சரிசெய்து கொள்ளுங்கள். தியாகம், சேவை செய்யும் பான்மையையும், லாவகத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் மாமியா ருக்கு எதிராக ஆத் திர மடையும் போது முன் னெச் சாரிக் கையாய் இரு ங் கள் . அவர் களுடைய அபிப்பிராயங்களைப் பாராட்ட முற்படுங்கள். அவர்கள் உங்களைக் காட்டிலும் மேலான முன்யோசனையும், மேலான அனுபவமும், மேலான பொறுப்புணர்வும் உள்ளவர்களாக இருக்கலாம். மனிதர்களையும் விஷயங்களையும் பற்றிக் கூடத் தெரிந்து வைத் திருக்கலாம் நீங்கள் அவர்கள் வீட்டில் புதிதாக நுழைபவர்தானே! திருமணத்தின் மூலம் நீங்கள் புகுகின்ற கணவனின் குடும்பம் உங்களுக்கு நல்லதோர் பயிற்சிக்களமாகும்.
அது ஒரு சாதனா-ஷேத்திரம்.
- மகாராணி பெண்கள் கல்லூரி, மைசூர், 12-9-1993
மீண்டும் நான் வலியுறுத்துவது என்ன வென்றால், படித்த
பெண் குடும்பத்தை தானே நடத்த வேண்டும், குடும்பத்தவர்களைப்
பராமரித்துப் போஷிக்கும் சுமையை எல்லாம் தானே தாங்கவேண்டும்
என்பதே. தன்னலங்கருதாது, பல்பக்கங்களிலும் அன்பைச்
செலுத்துவதால் பெறப்படும் ஆனந்தமானது, அரியதோர் விழுமிய
15

Page 13
நிலைக்கு உயர்த்தும் அனுபவமாகும். அது மதிப்பு மிக்கதொரு சாதனையாகும். மூன்றாவதாக வேண்டப்படுவது என்னவென்றால், சேவை புரியும் ஆர்வத்தைத் தேடிக்கொள்வது மட்டுமே சேவையின் இலட்சியம் என்று நின்று விடாமல், உதவிக் கரங்களை நீட்டும் வழிகளில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்பதுமாகும்.
- அவதாரத்தின் குரல்
திருமணத்தின் போது புரோகிதர் மணப்பெண்ணை ஒரு மந்திரம் சொல்லச் சொல்கிறார். அந்த மந்திரத்தின் மூலம் மணப்பெண் தன் கணவனைத் தனக்கு மூன்று வரங்களைத் தருமாறு வேண்டுகிறார்.
(1) தர்மேசா : உங்கள் இல்லத்தையும் குடும்ப கெளரவத்தையும் சிறந்த முறையில் காப்பாற்ற எனக்கு அனுமதி அளியுங்கள்.
(2) அர்த்தேசா: உங்கள் இல்லத்து செல்வங்களைக் கட்டிக் காப்பாற்ற, நன்கு நிர்வகிக்க எனக்கு அனுமதி தாருங்கள்.
(3) காமேசா : உங்கள் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்ற எனக்கு அனுமதி தாருங்கள்.
இந்த மூன்று வரங்களிலும் தனக்காக அவள் எதையும் வேண்டுவதில்லை, எல்லாம் தன் கணவனுக்காகத்தான் கேட்கிறாள். - கோடைக்கானல் அருளுரை, ஏப்பிரல் 1993
ஒரு மதச்சடங்கைப் புரியும்போதோ, கடவுளைச் சடங்கின் மூலம் வழிபடும் போதோ, மனைவி கணவனின் பக்கத்தில் அமரவேண்டும். இல்லாவிடில் அந்தச் சடங்கு பயனற்றதாகிவிடும். எந்தத் தான தர்மமும் மனைவியின் சம்மதமில்லாமல் அளிக்கப்பட்டால் அது ஏற்புடையதாகாது. பெண்கள் சடங்குகளை நேராகச் செய்வதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை. ஆகவே அவள் அபலை என்றழைக்கப்பட்டாள். அதாவது மதச்சடங்குகள் இயற்றப் பலமில்லாதவள் என்பது பொருளாகும். இது தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு பெண்கள் தாங்கள் அடிப்படையாகவே எல்லாத் துறைகளிலும் பலவீனமானவர்கள் என்று நம்பத்
6

தொடங்கினார்கள். இது பெரும் தவறாகும். ஒரு மனைவி
வீட்டினை ஒரு கோவிலாக, ஒரு பள்ளியாக, ஒரு ஆலோசனைக்
கூடமாக, ஒரு ஆசிரமமாக மாற்ற வல்லவள்.
- சத்தியசாயியின் அருளுரைகள், பாகம் -10
LDysarfir புஷ்கரத்துக்குப் போய் சேவை செய்யவில்லையே, சத்சங்கத்துக்குப் போகவில்லையே என்று வருத்தப்பட வேண்டியதில்லை. தங்கள் இல்லங்களை நன்றாக தூய்மையுடன் வைத்திருத்தல் அவர்களின் முக்கியகடமை. வீட்டைச் சுத்தஞ் செய்யும் போது இதயத்தைப் பரிசுத்தப்படுத்துவதாக கருதிச் செய்யுங்கள். பூரி, சப்பாத்தி செய்யும்போது இது என் தலைவிதி, வெளியில் சென்று வேலை செய்ய முடியவில்லையே என்று ஏங்க வேண்டாம். இதயத்தை விசாலப்படுத்துவதாக கருதுங்கள். காய் கறி நறுக்கி சமையல் செய்யும் போது "அந்தோ இந்தச் சமையல் வேலை என் தலையில் கட்டுப்பட்டு விட்டதே' என்று வருத்தத்துடன் செய்யவேண்டாம். காய்கறி நறுக்கும்போது உங்கள் தீய குணங்களை ஞானம் எனும் கத் தியினால் நறுக் கி விடுவதாக நினைத்துக்கொள்ளுங்கள்.
- சனாதன சாரதி, செப்டம்பர் - 9
வீட்டில் சமைப்பதற்கு அரிசியை எடுத்து அதில் கல், உமி, முதலியவற்றைப் பொறுக்கி எடுத்துச் சுத்தம் செய்யும்போது கூட இது ஏதோ வீட்டு வேலை என்று நொந்து கொள்ள வேண்டாம். அரிசியிலிருந்து மற்ற வேண் டாத பொருட்களைப் பிரித்தெடுப்பதையும் ஒரு யோகமாகக் கருதுங்கள். தீய குணங்களை விலக்கி நற்குணங்களையே கொள்வது தான் இந்த யோகமென்ற பாவனையில் இப்பணியில் ஈடுபடலாம். இப்படிப் புனிதமான சிந்தனையுடன் வீட்டு வேலை செய்வதும் ஒரு சேவையே ஆகும்.
- சனாதன சாரதி, செப்டம்பர் - 91
வெளியில் போய்ச் சேவை செய்து கொண்டு வீட்டையும் வீட்டிலுள்ளோரையும் புறக்கணிப்பது சரியல்ல. முதலில் வீட்டிலுள்ளோருடன் சுமுகமாகப் பழகி தேவையானவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்து வீட்டில் நல்லவரெனப் பெயரெடுத்தால்
தான் வெளியில் சென்று சேவை செய்யமுடியும்.
- சனாதன சாரதி, செப்டம்பர் - 91
17

Page 14
உங்கள் குழந்தைக்கு நடக்கப் பயிற்சி அளிக்கும் போது வீட்டுக்குள்ளேயே தான் கையைப்பிடித்து நடக்கச் செய்து பழக்குகிறீர்கள் அல்லவா? எடுத்த உடன் நடுவீதியில் சென்று நடக்க வைத்தால் வாகனங்கள் போக்குவரத்தினால் விபத்து நேரலாம். நன்றாகப் பழகிய பின்னரே வெளியில் நடத்தி அழைத்துச் செல்வீர்கள். அதேபோல் வீட்டில் முதலில் நன்றாகப் பணிகளைச் செய்தபிறகே வெளியில் சென்று சேவை செய்தல் வேண்டும். வீட்டு வேலையையும் பொறுப்பையும் விட்டுவிட்டு வெளியில் சேவைக்குச் செல்வதை சாயி ஒப்புக்கொள்ளமாட்டார்.
- சனாதன சாரதி, செப்டம்பர் - 91
முதலில் Self பிறகு மற்றவர்க்கு சேவை. இதுவே கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை. Self Confidence" என்ற தன்னம்பிக்கையே அத்திவாரம். இதற்கு மேல்தான் Self Satistaction என்ற சுவர்கள் எழும்பவேண்டும். அதன் மீதே Self Sacrifice என்ற கூரை போட வேண்டும். அப்போது தான் Self realisation கிட்டும். அதாவது வீட்டில் வாழ்க்கை நடத்த முடியும். இதுவே Life Principle - வாழ்க்கையின் தத்துவம். இதுவே
வாழ்க்கையைப் பூரணமாக்கும் வழி.
- சனாதன சாரதி, செப்டெம்பர் 91.
கணவனுடைய விருப்பம், ஏவல், சேவை ஆகியவைகளையே நித்திய வழிபாடாக ஏற்று, அவைகளையே நிறைவேற்றி, அதன் பின்னரே அவள் இறைவழிபாட்டைக் கவனிக்க வேண்டும். கணவனைத் திருப்திப்படுத்தாமல், தெய்வ ஆராதனை மூலமாக மட்டும் ஆத்மானந்தத்தை அடைய முடியாது. கணவனிடத்தில் இறைவனைக் கண்டு, கணவனுக்குச் செய்யும் சேவையையே இறைவனுக்குச் செய்யும் தொண்டாகப் பாவித்துச் செய்யும் மனைவி, பெண்தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றியவளாவாள். செய்யும் செயல்களை எல்லாம் ஆத்மாவுக்கு செய்யும் சேவையாக எண்ணிச் செய்தால், அவை பரம்பொருளுக்குச் சேவை செய்த
பலனைத் தரும். '
- தர்மவாஹினி
18

இல்லம் எல்லாக் கலைகளுக்கும் இருப்பிட மெனலாம். அதற்கு சமமான வீடு உலகில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லலாம். “கணவன் வீடே பெண்ணுக்கு பல்கலைக்கழகம், தேவாலயம், விளையாட்டுத் திடல், அரசியல் அரங்கம், தியாகபலிபீடம், ஏகாந்த ஆசிரமம்” என்று சிறந்த பக்தர் ஒருவர் பாடியுள்ளார். - தர்மவாஹினி
படித்த பெண்கள் தங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கும், சமுதாயத்துக்கும், தம்முடைய சக்தி, திறமை, நோக்கம், விருப்பம், மனப்போக்கு, இயல்பு, படிப்பின் தகுதி, வாழ்க்கை, வசதி, ஒழுக்கம், பாண்டித்தியம் இவைகளுக்குத் தகுந்தபடி, தம்மேல் மாசுபடாமல், முடிந்த அளவு சேவை செய்யலாம். தனக்கோ, தன் குடும்பத்துக்கோ, தன்தாய் தந்தையர்களுக்கோ, தன் சீலத்துக்கோ எந்த விதமான அபகீர்த்தியோ, அவமரியாதையோ நேராவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். சீலமற்ற பெண்கள் உயிரோடிருந்தாலும், இறந்தவர்களுக்குச் சமம்.
- தர்மவாஹினி
பெண்கள் வெளியுலகில் நடமாடும் போது, மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆண்களோடு அதிகமாகப் பேசுதல், கலந்து பழகுதல் ஆகியவைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். கணவனின் கெளரவத்துக்கும், புகழுக்கும், பெயருக்கும் களங்கம் நேராமல் பழகுவதே படிப்பின் பயன். "நன்னடத்தையே படிப்பின் பலன்” என்று மகான்கள் சொல்லியிருக்கிறார்கள்.
- தர்மவாஹினி
பெண்கள் இக்காலக் கல்வியையே கற்றுக்கொள்ளக் கூடாதென்றும், சமுதாயத்தோடு கலந்து பழகக் கூடாதென்றும் நான் கூறுவதாக எடுத்துக்கொள்ளகூடாது. கல்வி முறை எப்படியிருந்த போதிலும், சமுதாயத்தோடு கலந்து பழக வேண்டிநேர்ந்த போதிலும், நற்பண்புகளும், நற் செயல்களும் உடையவர்களாய், சீலம் நிரம்பியவர்களாய், நம் சனாதன தர்மங்களில் நம்பிக்கை உடையவர்களாய் இருந்தால் போதும். அவர்களை இக்காலப் படிப்போ, சமுதாயமோ எதுவும்
செய்யமுடியாது.
- தர்மவாஹினி
11

Page 15
3. குடும்பப் பெண்களுக்கு
ஆணுக்கு வீடு ஒன்றுதான் உண்டு. ஆனால் பெண்ணுக்கோ இரண்டு வீடுகள் உள்ளன. அவள் பிறந்தவீடு, புகுந்தவீடு இரண்டையுமே கெட் ட பெயரிலிருந்து காப்பாற் ற வேண்டியவளாகின்றாள். பெண்ணானவள் எல்லா நியதிகளையும் மீறி கடிவாளமற்ற சுதந்திரத்தை நாடி ஓடும்போது பெற்றோர் குடும்பம், மாமன், மாமியார் குடும்பம் ஆகிய இரண்டின் நற்பெயருக்கும் கெடுதி உண்டுபண்ணக் கூடியவளாகின்றாள். இந்தியப் பண்பாடும், ஆத்மீக பாரம்பரியங்களும் எப்போதும் பெண்ணுக்கு உயர் இடத்தை அளித்துள்ளன. ஏனெனில் கணவனின் பலம் அவளிடமே தங்கியுள்ளது. தனது பிள்ளைகளின் ஆரம்ப ஆசிரியையும் அவளாகின்றாள். அவர் களின் சமூகக் கண்ணோட்டங்களுக்கு உதாரணமாகவும் பேச்சுப் பழக்கத்துக்கு மாதிரியாகவும் விளங்குகிறாள். பிள்ளைகளின் உடல்நலம், உளநலம், ஆகியவற்றின் பாதுகாவலனும் அவளே. கணவனின் பாதி அங்கமென அவள் அழைக்கப்படுகிறாள். ஆண் பாதி, பெண்பாதியாக இறைவனை அர்த்த நாரீஸ்வர முகூர்த்தத்தில் வழிபடும் கோயில்கள் பல உண்டு. ஒரு நாட்டின் மேன்மையும்,
புகழும் பெண்ணின் கரங்களிலேயே தங்கியுள்ளது.
Tuff, 9-6-1978
பெண் ணானவள் பண் டைய புராணங் களிலும் , இலக்கியங்களிலும் கிரு கலகூழ்மி என்று போற்றப்படுகிறாள். அத்தோடு மணவாழ்க்கை நடத்தும் குடும்பத்தலைவனுக்குரிய கடமைகளிலும், உரிமைகளிலும் துணைநிற்பதால் அவள் தர்மபத்தினி எனவும் அழைக்கப்படுகிறாள். மனையியலைப் படிக்கும்போதே நீங்கள் வீட்டிலே மகிழ்ச்சியும், இணக்கமும், ஆரோக்கியமும் நிறைந்து விளங்கச் செய்யும் வித்தையையும் கற்றுக் கொள்வீர்கள். அத்தோடு உள்ளத்து அமைதிக்குச் செல்லும் பாதையிலே வரும் தடைகளான வெறுப்பு, குரோதம், பேராசை, சினம், கவலை, கர்வம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டுச் செல்வது எப்படி என்பதையும் கற்றறிய வேண்டும். குடும்ப வரவு செலவைச் சமன் செய்வது
12

மட்டும் போதாது. மனைவி அல்லது தாயானவள் வாழ்க்கையைச் சமநோக்கோடு பார்க்கும் கலையையும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது பெருங்களிப்போ, இக்கட்டோ, இலாபமோ, நஷ்டமோ, வெற்றியோ, தோல்வியோ உங்களைப் பாதிக்காது. இந்தச் சமநிலை கடவுளைச் சார்ந்து நிற்பதிலும், உள்ளுறையும் கடவுளின் மேல் நம்பிக்கை வைப்பதிலுமே கைகூடுவதாகும்.
- அவதாரத்தின் குரல்
படித்த பெண்கள் பலர் வீட்டை ஒரு விடுதியாக்கி விட்டார்கள். சமையல் காரன் என்ன, வேலையாட்கள் என்ன, ஆயா என்ன, கையாள் என்ன, காரோட்டி என்ன இப்படி இந்த ஆட்கள் வீடு முழுவதும் கூச்சல் போட்டுத் திரிகிறார்கள். எஜமானியோ மின்னும் வண்ணப் பொம்மையைப்போல் அறைக்கு அறை உள்ளும் புறமுமாகத் தாவித் திரிகிறாள். கணவன்கழுத்திலே கட்டி விட்ட அம்மிக்கல்லு போல அவனுக்கு முன்னின்று காரியம் நடத்தி அதிகாரம் பண்ணி பெருந் தொல்லைப்படுத்துகிறாள். சமூகப் பகட்டைக் காப்பதற்கு மனம் சபலப்படும் பொருட்களை நாடி கடைகளுக்குச் சென்று பணத்தை விரயஞ் செய்கிறாள். சோம்பித்திரிந்து, வெட்டிப் பொழுதைக் கழித்து, நோய் நோடிகளைக் கற்பனை செய்து, உடம்பை மருந்து மயமாக்குகின்றாள். இவ்விதம் தன் பிள்ளைகளுக்கும், வாழ்க்கை துணைக்கும் அவள் சுமையேயாகிறாள்.
- மனையியல் கல்லூரி பங்களுர் 26-7-69
பெண்களுக்கு புரிந்துணர்வு இல்லாததால்தான் குடும்பத்தில் அமைதி ஏற்படுவதில்லை. தவறாகப் புரிந்து கொள்வதுதான் குழப்பத்திற்கு காரணம். பெண்கள் தவறாக எண்ணக்கூடாது, என் கணவன் நல்லவன் என்ற எண்ணம் இருந்தால், அவன் இரவு பத்து மணிக்கு வந்தாலும் அவனுக்காகக் கவலையுடன் காத்திருப்பாள். எங்கே போனாரோ, என்ன ஆயிற்றோ, சாப்பிட்டாரோ, இல்லையோ என்றெல்லாம் மிகவும் மனம் வருந்துவாள். அவனைச் சரியாகப் புரிந்து கொண்டதனால், அவனைப்பற்றிய நினைவுகளில் அன்பு பிணைந்து இருக்கிறது. அதுவே அந்தப் பெண்மணி கணவனைப் பற்றித் தவறாக
13

Page 16
எண்ணிக் கொண்டிருந்தால், ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் எங்கே போயிருந்தீர்கள் என்று கோபப்படுவாள். வெறுப்பு வந்துவிடும். இதற்குக் காரணம் புரிந்துணர்வு இல்லாமையே. புரிந்துணர்வு அன்பை வளர்க்கிறது.
- சனாதன சாரதி, ஜனவரி 1996
விசுவாசமான மனைவியாகவும், அன்பு கனியும் தாயாகவும் உள்ள சதிஸ்தானமே பெண்களின் இலட்சியமாகும். தர்மம் மிகவும் போற்றுதற்குரியது. பூரணத்துவமான திருமணம் குறித்து இந்தியக் கோட்பாடு கருதுவது என்னவென்றால் ஒரு உடம்பின் இரு பாகங்களாகக் கணவனும், மனைவியும் இருக்கிறார்கள் என்பதாகும். வலது பாகம் கணவன், இடதுபாகம் மனைவி. பதியும் சதியும் ஒன்றை ஒன்று பூரணப்படுத்தும் ஒன்றுதான், இரண்டல்ல.
- அனந்தப்பூர் அடிப்படைப்பயிற்சிப் பெண்கள் கல்லூரி 18-4-1996
A பெண்மைத் தத்துவத்தை அவதானிக்கும்போது கவனத்தில் எடுக்க வேண்டிய ஓர் உன்னத பண்பு உண்டு அதைக் கருணை என்று விவரிக்கலாம். நாங்கள் கவனிக்க வேண்டிய அடுத்த பண்பு: தியாகம் செய்யும் ஆற்றல்; பெண்ணின் சுபாவம் அப்படி: அவள் குற்றங்கள் எத்தனை செய்தாலும் பாதுகாப்பளிக்கவே செய்வாள். அவளை ஒரு கல்விநிறுவனத்துக்கு ஒப்பிடலாம். படிப்பவருக்கு படிக்க மனமில்லாவிட்டாலும் கூட ஒரு நல்ல ஆசான் செய்வதைப் போல, பொறுமையோடு சொல்லிக் கொடுப்பாள். மகிழ்ச்சி ததும்பும் இல்லமும் அவளே. தனது அசெளகரியத்தைச் சிந்தை செய்யாள், மற்றைய ஒவ்வொன்றையும் சரிசெய்து சீர்ப்படுத்துவாள். அயன், ஹரி, ஹரன் அல்லது ஈசன் ஆகிய மும்மூர்த்திகளையுமே குழந்தைகளாக்கி, தன் முன் விளையாடவைக்கும் அளவுக்கு ஆத்மசக்தி பெற்றவள் பெண், என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவளைக் கருணையும், தியாகமும் நிறைந்தவளாகவும் வர்ணிக்கலாம். மனையாளின் இல்லம் ஒரு பள்ளிக்கூடம். அங்கே கணவன் அனைத்தையும் கற்றறியலாம்.
- கோடைகாலச் சொற்பொழிவுகள்
14

பதிவிரதைகள், மீராவைப் போன்ற பக்தர்கள், சூடாவைப் போன்ற யோகிகள் நம் நாட்டில் பிறந்து அறத்தையும், அறக் கல்வியையும் நிலைநாட்டினர். சுலபா என்ற பெண் தன் வித்தை (கல்வி) யின் சக்தியால், ஆத்ம விசாரணை குறித்து சொற் பொழிவாற்றும்போது ஜனகரைப் போன்ற சக்கரவர்த்திகள் கூட வியப்புக்கடலில் மூழ்கிவிடுவர். மேன்மையும், புனிதமும் நிரம்பிய அப்படிப்பட்ட பெண்மணிகள், புனிதமும், பக்தியும், ஞானமும் கூடிய நன்னடத்தையால் இன்றைக்கும் கூடப் பாரதப் பெண்களின் இதயத்தில் இடம் பெற்றிருக்கின்றனர். அவர்களால்தான் இந்நாட்டுப் பெண்களின் இதயத்தில் இன்றைக்கும் சிறிதளவாவது தெய்வீகம் நிழலாடுகிறது. இந் நாளில் கூடத் தெய்வீகம் நிரம்பியவர்களும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
- தர்மவாஹினி
இன்று இக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள் நாளைய தாய்மார்களாவர். ஆகவே தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு வேண்டிய பண்பு, படிப்பு, அறிவு ஆகிய அனைத்திலும் தங்களைத் தயார் படுத்தி வைத்திருக்க வேண்டியது அவர்களுக்கு அவசியமாகும். இந்தியாவில் பெண்களுக்கு விசேட ஸ்தானம் கொடுத்து மதிக்கிறோம். ஆகவே இங்கு கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் ஓர் இந்தியப் பெண்ணுக்குரிய இலட்சியங்களுக்கும்; அபிலாஷைகளுக்கும் ஈடாக வாழ்வதற்குப் பயிற்சித்துக் கொள்ள வேண்டும். கிருகலக்ஷ்மி, தர்மபத்தினி எனப் பெண்களைக் கருதுகிறோம். ஒரு பெண் தன் இல்லத்தை நிர்வகிக்க வேண்டும் அவள் இல்லத்தரசி மாத்திரமல்ல, தேசம் முழுவதின் பெருமையும் அவள் மேல்தான் சார்ந்துள்ளது. அதனாலேயே இந்த நாட்டை எமது தாய்நாடு என்கிறோம். அதே பாவத்தோடு எங்கள் நாட்டை
பாரத மாதா என்றும் குறிப்பிடுகின்றோம்.
- அவதாரத்தின் குரல்
நாயகர்களோடு பெண்களை இணைத்துப் பார்க்கும் போது
பெண்களுக்கே முதலிடம் கொடுப்பதைக் காணக் கூடியதாக
இருக்கின்றது. சீதா-ராமன், லக்ஷ்மி-நாராயணன், இராதா
கிருஷ்ணன், பார்வதி- பரமேஸ்வரன் இவ்விதமாக எமது நாட்டில்
பெண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முன்னிடத்தை நிலை கொள்ளச் 7

Page 17
செய்வதற்காகவும், இளம் பெண் பிள்ளைகளுக்கு அதே வழியில் பயிற்சி அளிப்பதற்காகவும், இது போன்று கல்லூரிகளைத் திறக்கும் பணிகளை மேற்கொண்டோம்.
இந்தக் கல்லூரியில் கல்வி பயிலும் இளம் பெண் பிள்ளைகள் தங்கள் பிறந்த வீடுகளுக்கும், புகுந்த வீடுகளுக்கும் புகழ் ஈட்டும் விதமாக நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதையே நான் எதிர்பார்க்கின்றேன்.
- அவதாரத்தின் குரல்
பெரும்பாலான இளம் பெண் பிள்ளைகளிடம் இன்று காணப்படும் கெட்ட பழக்கங்களும், கீழ்த்தரமான நடத்தைகளும் இக்கல்லூரி மாணவிகளைப் பற்றிக் கொள்ளக் கூடாது. சத்திய சாயி கல்லூரி மாணவிகள் இந்த நிறுவனத்தின் இலட்சியங்களைப் பேண வேண்டும். வீட்டின் கெளரவத்தையும், சமூக, பண்பாட்டுச் சிறப்புகளையும் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் இக் கல்லூரியை நிறுவியதன் நோக்கம் நிறைவேறியதாகும்.
ஆன்மீகத் துறையில் ஆண் பிள்ளைகளைப் போல், பெண்பிள்ளைகளும் துணிந்து சுதந்திரமாக ஈடுபடமுடியாது. இருந்தாலும் ஆன்மீக நியதிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அவர்களாலும் இயலும். ஒய்வு நேரங்களைப் புனித பணிகளுக்காகப் பயன்படுத்துங்கள். கருணை நிறைந்த சேவையில் நம்பிக்கையை வளர்த்தீர்களானால் அது சமூக மேம்பாட்டுக்கு வழிகோலும் மதிப்பு மிக்கதோர் காரணியாகும்.
- பூரீ சத்திய சாயி பெண்கள் கல்லூரி அனந்தப்பூர், 5-2-81
பெண் பிள்ளைகள் கிராமம் கிராமமாகத் தத்தெடுத்து, தாங்கள் மேற்கொள்ளும் கல்வி, சுகாதார நடவடிக்கைகளுக்குரிய தேந்திர நிலையங்களாக அவற்றை ஆக்குகின்றார்கள். அவர்கள் வீட்டுச் சுவர்களைக் கட்டி எழுப்புகின்றார்கள்; முகடுகளை அமைக்கின்றார்கள்; கூரைகளை வேய்கின்றார்கள். இவ்விதமாக வீடற்றோருக்கு வதிவிட வசதி ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள். பெண்பிள்ளைகளிடம் தென்படும் உற்சாகத்தையும் செயற்திறனையும்
8

கண்டு கிராமத்தார் வியந்து பாராட்டுகின்றனர். சேரிகளுக்குச் சென்று, குடிசை வாழ் மக்களின் ஒத்துழைப்புடன், அவ்விடங்களைச் சுத்தம் செய்கின்றனர். கடைத் தெருக்களுக்கும், சந்தைகளுக்கும் விஜயம் செய்து, சந்துக்களையும் கழிவு நீர்க் கால்வாய்களையும் சுத்திகரித்து, அதில் பெறும் இன்பத்தில் பங்கு கொள்ளும்படி ஏனையோரையும் தூண்டுகின்றனர். கதிரவன் மறைந்ததும் இருட்டில் மூழ்கும் கிராமங்களுக்கு மின்னொளி வழங்க முயற்சி மேற்கொள்கின்றார்கள்.
- பூரணச் சந்திரா கேட்போர் கூடம், 22-11-81
மாணவியரும், ஆசிரியைகளும் தங்கள் உடை, போக்கு, உல்லாசச் சிரிப்பு அல்லது நடத்தை மூலம் இளைஞர்களின் பார்வையையும், பேச்சையும், ஈர்க்காமல் என்றும் விழிப்பாக இருக்க வேண்டும். காலத்தோடு போகாமல் சற்றுப் பின்தங்கி நில்லுங்கள்; பாதகமில்லை; ஏனெனில் நாகரிக மோஸ்தர்களைப் பின்பற்றப்போய், இந்த நாட்டின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், பாரம்பரியத்தையும் சீர்குலைப்பதிலும் அதுவே சிறந்ததாகும். உங்கள் பெற்றோருக்கு அவமரியாதையை உண்டுபண்ணவோ, அல்லது அவர்கள் உங்கள் சார்பாகக் கொண்டுள்ள பிரியமான திட்டங்களுக்கு விரோதமாக நடந்து, அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தவோ வேண்டாம்.
- பூரீ சத்திய சாயி பெண்கள் கல்லூரி அனந்தப்பூர், 25-7-75
இன்றைய பெண்கள் அக்காலப் பெண்மணிகளிடமிருந்து உற்சாகம் பெற வேண்டும். அவர்கள் நடத்திய வாழ்க்கை முறையை இவர்களும் பின்பற்ற வேண்டும். இந்துப் பெண்கள் எப்பொழுதும் தார்மிக, ஆன்மிகத் தத்துவங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எவ்வளவுதான் புதுமைக்கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஆத்ம தத்துவத்தை மறக்காமல், உள் நோக்கை, உள்ளொளியை வளர்க்கும்; வேதாந்தத் தத்துவங்களைக் கற்பிக்கும் நூல்களையும் படிக்க வேண்டும். இப்படிப்பட்ட கல்வியைக் கற்காத பெண் ஆதாரமில்லாத (சிறிது அசைத்தாலும் விழுந்து நாசத்தை ஏற்படுத்தும்) பாறை போன்றவளே. வேதாந்தத்
9

Page 18
தத்துவங்களைக் கற்று, பிரம்ம வித்தையில் தேர்ச்சி பெற்ற சுலபாவைப் போன்ற பெண்ரத்தினங்களைத் தோற்றுவித்த நாடு பாரதம். அந்தக் காலத்தில் இந்தப் பெண் ரத்தினங்களிடம் உபதேசமும் உற்சாகமும் பெறப் பெரிய பண்டிதர்களும், வித்வான்களும் கூட வருவது வழக்கமாக இருந்தது.
- தர்மவாஹினி
அனைத்தும் எதை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது தெரியுமா? நாட்டின் முன்னேற்றமும், சமுதாயத்தின் முன்னேற்றமும் முறையான பெண் கல்வியையே ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. பெண்களுடைய ஆத்ம தத்துவத்தைப் பற்றிய ஞானமே (கல்வி) நம் நாட்டுக்கு, அதன் பழம் பெருமையை, சிறப்பை மீண்டும் அளிக்கவல்லது. பெண்களுக்கு சீலத்தையும், சிறந்த பண்புகளையும் வளர்க்கும் கல்வியைக் கற்பிக்கும் பெற்றோர்கள் நாட்டுக்கு
நலத்தையும், சாந்தியையும் அளித்தவர்கள் ஆவார்கள்.
- தர்மவாஹினி
இன்றைய பெண்களின் தன்னிச்சையான போக்கினால் தர்மம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. கற்ற கல்வியை விவேகத்தோடு நற்செயல்களில் ஈடுபடுத்தாமல், நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளாமல், கேவலமான உலக சுகங்களே முக்கிய மென்று கருதி தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்ளுகிறார்கள் பெண்கள். இன்றைய பெண்குலம், பட்டம் பெறுதல், பதவி வகித்தல், முன்பின் யோசிக்காமல் அனைவரோடும் கலந்து பழகுதல் இவைகளையே பிரதானமாகக் கொண்டிருக்கிறது. பெரியவர்களிடம் பணிவோ, பாவச் செயல்களைச் செய்வதில் பயமோ துளியும் இல்லை. இறை நம்பிக்கை இன்மை, கணவனை பொம்மையாக ஆட்டிப் படைத்தல், தன் இச்சைப்படி எல்லாவற்றையும் அநுபவித்தல் , செய்த தவறுக் குப் பச்சாதாபமின்மை ஆகியவைகளா படிப்பின் இயல்புகள்? இல்லை; ஒரு நாளும் இல்லை. சரியான படிப்பின்மை, அறியாமை ஆகியவைகளின் விபரீத உருவங்களே இவைகள். இந்த நிலைமை கல்விக்கு கெட்ட பெயரைத் தேடித்தருகிறது. கணவன் வீட்டைத் தெய்வீகம் நிரம்பிய தேவாலயமாகக் கருதும் பெண், வாழும்
10

கிராமப்புறப் பெண்களுக்கு குழந்தையின் சுகாதாரம், பராமரிப்பு, குழந்தையைப் பழக்கும் முறை பற்றிய அடிப்படை உண்மைகளைப் போதியுங்கள். ஆரோக்கியம் கெடும்போது மக்கள் மனம் தளர்கிறார்கள், ஏன? மனம் குலைந்தும் போகின்றார்கள். ஆரோக்கியம் இருக்கும் போது வீரியமானது உடலிலும் மனதிலும் பரவி நிற்கின்றது. அன்பு கனிந்து சேவைப் பணிகளில் நீங்கள் ஈடுபடுவதனால் மகிழ்ச்சியை ஓங்கச் செய்கின்றீர்கள். எந்தச்
சேவை முயற்சியையும் இழிவுடையதாகக் கருதக்கூடாது.
- அனந்தப்பூர் 1-12-1982
தனிநபர் முன்னேற்றத்திற்கோ, சமூக முன்னேற்றத்திற்கோ, பெண்களின் பங்கு தீர்க்கமானது. எனவே பெண்பிள்ளைகளுக்கு அமெரிக்க, அவுஸ்திரேலிய அல்லது ஜேர்மனியின் பூகோள விபரங்களைப் படிக்கும்படி சுமையேற்ற மாட்டேன். அவர்கள் மனச்சாந்தி, சமூக ஒற்றுமை, பொதுத்தொண்டு, பொருளாதார நிறைவு ஆகியவற்றின் நுட்பத்தை அறிந்து கொள்வதையே விரும்புவேன். இறை அச்சத்திலும் பார்க்க மிக முக்கியமானது பொய் அச்சமும், அறநெறி தவறும் அச்சமுமாகும். அதனை அவர்கள் வளர்க்க வேண்டும். சேவையில் தோன்றும் அனுதாபத்தினாலே விளையும் நன்மைகளை கருதாது அவலமுற்றோருக்கு ஆற்றும் சேவை தரும் ஆனந்தத்தைப் பற்றி அவர்கள் சிறிதளவேனும் தெரிந்திருக்க வேண்டும். அகங்காரத்தை விலக்க கற்றிருக்க வேண்டும். இந்தத் துறையில் பட்டுப்பழுத்த அனுபவ சாலிகளின் சேவையைக் கூட அகங்காரம் நச்சுப்படுத்தி விடுகின்றது. வறியோருக்கும், அங்கவீனர்களுக்கும் சேவை செய்யத் தொடங்கிய ஆரம்பகர்த்தாக்கள் தாங்கள் தான் என்றும், அதை முன்னெடுத்துச் சொல்பவர்கள் தாங்களே என்றும் தற்பெருமை பேசித் திரிகின்றார்கள். சேவையில் ஆனந்தம், அகங்காரத்தை
விலக்குவதல்லாமல், அதை பெருக்குவதல்ல.
-- If IT
23

Page 19
5. அன்னையருக்கு
தாய்மை என்பது இறைவனால் அருளப்பெற்ற அரும்பெருங் கொடையாகும். ஒரு தேசத்திற்கு வளத்தையோ அல்லது கேட்டையோ உண்டுபண்ணுபவர்கள் தாய்மார்களே. பாவத்தில் பயம், சீலத்தில் நாட்டம் ஆகிய இரு பாடங்களையும் அவர்கள் புகட்ட வேண்டும். அனைத்தையும் உள்ளிருந்து ஊக்குவிக்கும் கடவுள் மேல் உள்ள நம்பிக்கையே, இந்த இரண்டு பாடங்களுக்கும் ஆதாரமாகும். ஒரு நாடு எப்படி முன்னேறியுள்ளது என்பதை அறிய விரும்பினால் தாய்மாரை ஆராய்ந்து பாருங்கள். அவர்கள் அச்சமும் கவலையும் அற்றிருக்கின்றார்களா? எல்லோரிடத்திலும் அன்பு கலந்து பழகுகின்றார்களா? மனவலிமை, குணப்பண்பு ஆகியவற்றில் பண்பட்டவர்களா? ஒரு பண்பாட்டின் மேன்மையைக் கிரகித்துக் கொள்ள விரும்பினால், தாய்மார் தொட்டிலாட்டுவதையும், உணவூட்டுவதையும், குழந்தைகளைப் பேணுவதையும், கல்வி புகட்டுவதையும், குழந்தைகளைக் கொஞ்சிச் சீராட்டுவதையும் அவதானியுங்கள்.
- சத்திய சாயி பெண்கள் கல்லூரி அனந்தப்பூர் 5-9-1968
தாயின் கருவிலிருக்கும் போதே அபிமன்யு (யுத்த தந்திரமான) பத்மவியூகத்தின் சூட்சுமங்களை அறிந்து கொண்டான். அந்தச் சங்கதியானது எமது புராணங்களில் தாயின் வயிற்றிலிருக்கும் போதே சிசுக்கள் அறிவைக் கிரகிப்பதாக கூறப்படும் சம்பவங்களில் இன்னொன்றாகும். இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களை மிகப் பெரும், பிரயாசையோடு பராமரிப்பது அந்தக்காலத்து வழக்கமாக இருந்தது. அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கச் செய்தார்கள். புனித வரலாறுகளையும், புனிதமான விஷயங்களையும் மட்டுமே செவிமடுக்க அவர்கள் அனுமதிக்கப் பட்டனர். நல்ல செய்திகளே அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த முறையில் க்ருவிலிரு க்கும் சிசு சந்தோசமான நிலமைகளையே அனுபவித்துக் கொண்டிருக்கும். அதன் பயனாக ஓர் இனிய மனிதனாக அது பரிணமிக்கும். ஆனால் இன்று கருவுற்றிருக்கும்
24

பெண்கள் கர்ப்பகாலத்தில் பல்வேறு சினிமாப் படங்களைப் பார்க்கின்றார்கள். இந்தப் போக்கில் குழந்தைகளும் தாயின் கருவிலிருக்கும் போதிலிருந்தே கெட்ட உள சாயல்களை உருவாக்குகின்றார்கள். அப்புறம் பிறந்ததும் பாவ வழியில் நாடுகின்றனர். இவ்விதமாக ஒரு குழந்தையின் முழு எதிர்காலமும், கருவில் சிசு வளரும் ஒரு தாயின் பழக்கத்தையும், நடத்தையையுமே சார்ந்திருக்கின்றது. இன்று நாங்கள் தூய வழிகளைக் கைக்கொண்டு, நியாயமான செயலைச் செய்தோமானால், எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் கீர்த்தி பெற்று, புண் ணிய செயல்களை கைக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.
- கோடைக் காலச் சொற்பொழிவுகள், 1994
தாய்மாராகும் பெண்களின் கடமையை புராணங்களும், சாஸ்திரங்களும் வலியுறுத்திக் கூறுகின்றன. நாட்டுக் குழந்தைகள் மனதிலே உயர் இலட்சியங்களை ஊட்டிய தாய்மாரை அவை போற்றுகின்றன. வேதங்கள் மைத்திரேயி, கார்க்கி ஆகியோரை மகாபண்டிதைகள் என்றும், ஆத்மீக வித்தகிகள் என்றும் எடுத்துப் பேசுகின்றன. ஆத்ம தரிசனத்திற்கான ஞானயாத்திரையின் உயர்நிலைகளிலுள்ள புதிர்களை முற்றுணர்ந்த புலமைக்காக கார்க்கிக்கு வேதபண்டிதர்கள் சபையிலே உயர்மதிப்பு உண்டு. சரித்திர காலத்து சிவாஜியின் தாயாரைப் பார்ப்போம். அவர் மகனுக்கு இதிகாசங்களையும், புராணங்களையும் ஊட்டி வளர்த்தார். சிவாஜியை இந்து தர்மத்திலுள்ள தலையாய பண்புகளின் தீரமிக்க பிரதிநிதியாக்கினார்.
- tufflint, 7- - 69
வீட்டையும், சமூகத்தையும், நாட்டையும், மனித இனத்தையும் தாங்கும் தூண் தாயாவாள். மன அமைதி, உளச்சாந்தி, ஆத்மவலிமை, செல்வத்தில் சிறந்த செல்வமான திருப்தி, நிலையான இன்பம் தரும் ஆத்மீக சாதனை இவற்றின் சூட்சுமத்தை தாய்மார் அறிந்திருக்க வேண்டும்.
- எம்பெருமானின் போதனைகள்
25

Page 20
தாய் தனது எடுத்துக்காட்டின் மூலமாக வழிபாட்டு இடத்தை குடும்பத்தின் இதயத்தானமாக்க வேண்டும். உடற்துரய்மை, அடக்கம், உபசாரப்பண்பு, பழகும் முறைகள், பரோபகாரச்செயல்கள், இவற்றில் பிள்ளைகளை கண்டிப்போடு பழக்கப்படுத்த வேண்டும். போதனையாலும், செய்கையாலும் மூத்தோரை கனம் பண்ணவும், காலை மாலை வேளைகளில் பிரார்த்தனை செய்வதற்கும், அமைதியாக தியானம் செய்வதற்கு கொஞ்ச நேரத்தை ஒதுக்கவும்
ஊக்குவிக்க வேண்டும்.
- அவதாரத்தின் குரல்
சிறு பிராயத்தில் பிள்ளைகளைத் தாய்மாரே பராமரிக்க வேண்டும். வேலையாட்கள், செவிலித்தாய்மார், பொறுப்பில் பிள்ளையை ஒப்படைத்தால் அவர்களின் வாழ்க் கைப் பழக்கங்களையும், பேச்சு முறைகளையும் பிள்ளைகள் கற்றுக் கொள்வர். அவர்கள் இறக்கும் போது பிள்ளைகள் கண்ணிர்
விடுவர், தாய் காலமாகும் போதல்ல.
- அவதாரத்தின் குரல்
நிலம் ஒன்றுதான். அதில் வேப்பம் விதைகளை வித்திட்டால் கசப்பான பழங்கள் தான் கிடைக்கும். இனிய மாவிதைகளை விதைத்தால், அதன் விளைவும் இனிப்பான மாம்பழங்களாகத் தான் இருக்கும். பூமி இவற்றினிடையே எந்த வேறுபாடும் காட்டுவதில்லை. ஒரு தாயின் கருப்பையும் பூமித்தாயின் கருப்பையைப் போலத் தான். கரு ஏற்படும் போது உண்டாகும்
எண்ணமே பிறக்கும் குழந்தையிலும் காணப்படுகிறது.
- சனாதன சாரதி, ஆடி 1993
தாய் ஆர்யாம்பாளின் பக்தியும், புனிதமான விரதங்களும் தான் இந்த உலகில் ஆசாரியானாக ஆதிசங்கரர் அவதாரம் செய்ய காரணமாக இருந்தன. விவேகானந்தர் உலகம் முழுவதும் அறியப்பட்டு, புகழப்பட்டார் என்றால் அதற்குக் காரணம்
அவரது தாயின் தூய பழக்கங்கள்தான்.
- சனாதன சாரதி, ஆடி 1993
26

முந்தைய காலத்திலிருந்து தாய்க்கும் குழந்தைகளுக்குமிடையே புனிதமான அன்பும், உயர்ந்த எண்ணங்களும் கலந்த உறவு நிலவி வந்தது. உறவு முழுவதும் அன்பாலும், பரஸ்பர மதிப்பு, ஆழ்ந்த பக்தி அம்ருதத்தைப் போன்ற இனிமை உடையதாயிருந்தது. குழந்தைகளுக்கு தாயிடம் நிறைந்த அன்பு மிகுந்திருந்தது. இன்றைய குழந்தைகளுக்கு தாயிடம் மதிப்பு இல்லை, தாய்க்கும் குழந்தைகளிடம் பரிவு இல்லை, இதன் காரணமாக கலியுகம் கலகயுகமாக மாறிவிட்டது. யார் இந்த நிலைக்குப் பொறுப்பு? தாய்மார்கள் தான் இதற்கு முக்கிய காரணம். அளவிற்கு அதிகமாக குழந்தைகளுக்கு சுதந்திரம் தருவது தான் அவர்கள் வழி புரள்வதற்கு காரணம்.
இந்த நாட்டிற்கு சிறந்த குணமுள்ள சீலமான வாழ்க்கை நடாத்தும் தாய்மார்கள் தேவை. பாரத கலாச்சாரம் அவர்களது வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும். பிறகு அந்தக் கலாச்சாரம் அவர்களது குழந்தைகளுக்குப் பரவும். முன் நாட்களில் பல பெரியவர்கள் அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளை வளர்த்து, பாரதத்தின் பெயரையும் பெருமையையும் விளங்கச் செய்திருக்கின்றார்கள்.
- சனாதன சாரதி, ஆடி 1993
ஒரு முறை பூரீ ராமரும், சீதையும் சித்தர கூட பர்வதத்தில் தங்கியிருந்த போது இராமர் சொன்னார், “ சிலருக்கே தெய்வதத்துவத்தை புரிந்து கொள்ள சக்தியிருப்பதால், மக்கள் தங்கள் பெற்றோர்களை கண்ணுக்கு தெரியும் கடவுளாகப் போற்ற வேண்டும்."
நல்ல தாய்மார்களும் நல்ல மகன்களும் நிறைந்திருந்தால் தான் நாடு கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறும்.
நாட்டிற்கு இன்று அத்தியாவசிய தேவை பொருளாதார வளர்ச்சியும், உயர் கல்வியுமல்ல. நல்ல குணமுள்ள ஆண்களும் பெண்களுமே ஆவார்.
- சனாதன சாரதி, ஆடி 1993 27

Page 21
தெய்வீகத்தை புரிந்து கொள்ள நீ முதலில் உனது தாயிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். தாய் படைக்கின்றாள். தாய் தான் நம் எல்லோரையும் படைத்தவள். அதனால் தான் 'மாத்ரூ தேவோ பவ' என்று சொல்கிறார்கள். ஆகையால் தாய்க்கு பிரமன் என்கின்ற அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும். சேவை செய்ய வேண்டும். அவளின் மேல் முழு நம்பிக்கை வைக்கப்பட வேண்டும். - சனாதன சாரதி, மார்கழி 1995
சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட கல்வியைப் பெண்ணுக்குத் தர வேண்டும் . நாட்டின் நிலமை, அதன் தேவை ஆகியவைகளைப்புரிந்து கொள்ளக்கூடிய திறமையை வளர்க்க வேண்டும். பெண்கள் தன் நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் தன்னால் இயன்றளவு வரையறையை மீறாமல் உதவி, சேவை செய்யலாம். எந்த நாடாக இருந்தாலும் சரியே, பெண்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகிய அளவு கோல்களின் துணையைக் கொண்டே, அது நிர்மாணிக்கப்படுகிறது. வருங்காலத் தலைமுறை, நிகழ்காலத் தாய்மார்களையே ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறை சென்ற தலைமுறையில் வாழ்ந்த தாய்மார்களைப் பின்பற்றாததே இன்றைய அதர்ம அக்கிரம அநியாயங்களுக்குக் காரணம். நடந்தது நடந்து விட்டது, அது போகட்டும். இனி வருங்கால சந்ததியினரையாவது நாம் காப்பாற்ற வேண்டும். அதற்குப் பெண்கள், பழங்காலப் பெண்மணிகளை முன்மாதிரியாகக்
கொண்டு வாழவேண்டும்.
- தர்ம வாஹினி
எந்தக் காலத்திலும் பெண்களே நாட்டுக்கு முதுகெலும்பு போன்றவர்கள், இதயம் போன்றவர்கள், உயிர் மூச்சு போன்றவர்கள். இந்தப் பிரபஞ்ச நாடகத்தில், முக்கியமான, பவித்திரமான பாகத்தை ஏற்றிருப்பவர்கள் தாய்மார்களே. நீதியை, நேர்மையை நிர்மாணிக்கத் தாய்மார்கள் உறுதி பூண வேண்டும். பிரபஞ்சத்தின் வருங்கால சந்ததியினரான தம் குழந்தைகளுக்கு நீதியை, ஆன்மீகத் தத்துவங்களைப் போதிக்க வேண்டும். தாய் அறவழியை மேற்கொண்டால் குழந்தைகளும் தாயைப் பின்பற்றி நடப்பார்கள். தாய் நீதி, நேர்மை, ஒழுக்க விதிகள் ஆகியவைகளை மேற்கொண்டால்,
28

குழந்தைகளும் அவைகளைக் கற்றுக்கொள்ளும். ஆக, நாட்டின் வளர்ச்சிக்கும் சரி, வீழ்ச்சிக்கும் சரி தாய்க்குலமே காரணம்; அவர்களின் படிப்பு, பாண்டித்தியம், செயல் திறன் ஆகியவைகளே காரணம்.
- தர்ம வாஹினி
இன்றைய நிலைமைக்கு வீட்டுப் பெரியவர்களான தாய் தந்தையர்தான் மூல காரணம். இன்றைய மாணவர்களிடம் நம் நாட்டுப் பண்பாட்டின் சாயலைக்கூடக் காணமுடியவில்லை. ஆத்ம தத்துவம் அவர்களுக்கு நகைப்புக்குரிய செய்தியாகத் தோன்றுகிறது. அயல் மொழிகளைக் கற்றுக் கொள்ளுதல்; உடையலங்காரத்தை மாற்றிக் கொள்ளுதல், சிகையலங்காரத்தை மாற்றிக்கொள்ளுதல் ஆகியவைகளே பாரதநாட்டுக் கலாச்சாரம் என்பது போல் மாறிவிட்டது. இது நம் நாட்டுக் கலாசாரமல்ல, இன்றைய படித்த பெண்களுக்கு வீட்டு வேலைகளில் பழக்கம் இல்லை. வீடு என்பதை உணவு விடுதி போலப் பாவிக்கத்
தொடங்கிவிட்டனர்.
- தர்ம வாஹினி
29

Page 22
6. ஆன்மீக சாதனையில் ஈடுபடும் பெண்களுக்கு
பிரணவ மந்திரத்தை பெண்கள் பாராயணம் செய்யும் உரிமையைச் சிலர் மறுக்கிறார்கள். இது சுத்தமான ஒரு பக்கநிலைப்பாடாகும். சாஸ்திரங்களில் அப்படிக் குறித்து வைக்கப்படவில்லை. தனிப்பெரும்பொருளான பிரம்மத்தின் குறியீடே ஓம் என்னும் பிரணவம் என்பதையும், அந்தத்தனிப் பொருளே பல்கிப் பெருகியுள்ள படைப்பனைத்திலும் உள்ளுறைந்துள்ளது என்பதையும், ஒர்ந்துணர்ந்த பெரும் மக்களினாலேயே சாஸ்திரங்கள் இயற்றப்பட்டன. அவர்கள் ஜாதி, பால், பேதங்களைக் கடந்தவர்கள். ஆண்கள், பெண்கள், அசைகின்ற, அசையாத சிருஷ்டிகள் அனைத் தினதும் முன்னேற்றத்தையும் விடுதலையையும் வேண்டிநிற்பவர்கள். அப்பேர்ப்பட்ட மகாத்மாக்கள் ஞான, யோக மார்க்கங்களின் கருவியான இந்த மந்திரத்தினின்றும் பெண்களை எப்படி விலக்கி வைப்பார்கள்? எல்லோரும் கையாள உரித்துடைய இந்த பிரணவ உபாசனை ஆத்ம சித்திக்குரிய இராஜபாட்டையாகும். - பிரசாந்தி நிலையம், 23-11-1966
சீதை, சாவித்திரி, அனுசூயா, தமயந்தி போன்ற மேன்மைசால் பெண்கள் பலரை இந்தியா பெற்றிருந்தது. அவர்களின் சீலமும், அறிவுடைமையும் நூற்றாண்டுகளாகப் போற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான மக்கள் அவர்களை தங்கள் இதயங்களில் ஏற்றி வைத்துப் பூஜிக்கின்றார்கள். அனர்த்தம் அல்லது நெருக்கடியை எதிர் கொள்ளும் போது அவர் களிடமிருந்தே ஊக்கம் பெறுகின்றார்கள். துன்பப்படும் அனைவரிடத்தும் மாசு மறுவற்ற அன்பைப் பொழிந்தார்கள். வறியோர்க்கும் அவலப்படுபவர்களுக்கும் சேவை செய்ய ஆயத்தமாயிருந்தார்கள். ஆண்டவன் மேலுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையினால் அதிமோசமான துன்பங்களையும், துயரங்களையும் அவன் சங்கற்பத்திற்குப் பணிந்து மகிழ்ச்சியோடு தாங்கிக் கொண்டார்கள்
- அனந்தப்பூர் அடிப்படைப் பயிற்சிப் பெண்கள் பாடசாலை 18-4-1986
30

இல்லத்தரசியானவள், மதிய உணவு அல்லது இரவு உணவைத் தயாரிப்பதற்கு அரிசியை அளந்து எடுக்கும் போது ஒரு பிடி அரிசியை எடுத்து "ஈஸ்வரார்ப்பணம்’ என்று உச்சரித்து புறம்பாக ஒரு கலையத்தில் போட்டு வைக்கட்டும். அந்த வார இறுதியில் அரிசியின் அளவு எவ்வளவோ, அனைத்தையும் வறிய மக்களுக்குக் கொடுத்து விட்டால், நாளாந்தம் செய்யும் புனித
அர்ப்பணமான சேவையாக அது அமையும்.
- பிரசாந்தி நிலையம், 23-11-1966
இந்தியப் பண்பாட்டில் பாசம் ததும்பப் போற்றப்படும் பொருளாக தாயானவள் உயர்த்தப்பட்டுள்ளாள். அவள் இல்லத்திற்கு அரசி, குழந்தையின் ஆரம்ப ஆசான், இந்தப் புராதன நாட்டு வாரிசுகள் குழந்தைகளே. வளரும் பராயத்திலே நாட்டின் பண்பாட்டினை பிரியத்தோடு அவர்கள் உள்ளத்தில் பரிமாற்றம் செய்யும் நபர் தாயே ஆவாள். தாய் தந்தையரைப் பார்த்து, அவர்களை உதாரணங்களாகக் கொண்டு பிள்ளைகள் சமூகப்பழக்கங்களை பழகிக் கொள்கின்றார்கள். அவர்கள் பக்தியும், பரம்பொருளைப் போற்றி சரணடையும் பிரார்த்தனையும் கற்பிக்கின்றனர். அவதானிப்பும், அதன் பயனாக பழக்கமும் பழகும் குழந்தையின் கண்களுக்கு, தாய் தந்தையரே சாந்தி, பிரேமை ஆகியவற்றின் உருவங்களாகத் தென்படுகின்றனர். எனவே ஆத்மீக விளிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள பணியில் பங்கு கொள்ள அவர்களுக்கும் உள்ளுக்கம் ஊட்டப்படவேண்டும். தாய்மார் மத்தியில் ஆத்மீக சாதனையை ஊக்கப்படுத்துவதன் மூலம் வளர்ந்துவரும் தலைமுறையினரிடம் சகிப்பு தன்மையும், அடக்கமும் விருத்தி பெறச் செய்ய வேண்டும். விதைகளை முளைக்கச் செய்து திடமான கன்றுகளாகவும், விருட்சங்களாகவும் வளர்த்துவிடும் பூமாதேவியே தாய். உவர்மண் வளர்ச்சியை தடுத்து பயிர்களுக்கு தீங்கை உண்டு பண்ணும். ஊனுடம்பிற்கும், உயிர்வாழ்விற்கும் மூலாதாரமாக ஒவ்வொருவருக்கும் ஒரு தாய் இருக்கின்றாள். ஆகவே தாயானவள் உடலாலும், மனதாலும் வலிமை பெற்றிருக்க வேண்டும். குணத்திலும் பண்பிலும் பண்பட்டிருக்க வேண்டும். தெய்வீக சிந்தனைகளால் புனிதப்பட்டவளாய் அன்பிலும் சுய
31

Page 23
அர்ப்பணிப்பிலும், ஊறிப்போனவளாய் இருக்க வேண்டும். நல்ல தாய்மாரே நல்ல தேசமக்களை உருவாக்குகின்றார்கள். தியாகம், யோகம், பக்தி ஆகியவற்றின் இருப்பிடங்களாக தாய்மார் திகழ வேண்டும். அத்தோடு நடுநிலை (பற்றின்மை) ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவையும் சேர அவர்களுடைய செய்கைகளுக்கு அம் மூன்றும் ஆதாரமாக அமைய வேண்டும்.
-
தேகத்தைப் போஷிப்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் குணத்தைப் போஷிப்பதுமாகும். உடம்பின் ஒவ்வொரு துணிக்கையையும் அலங்கார உடைகளினால் நிரப்பிக் கொண்டும், புத்தகக்கட்டுக்களை காவிக்கொண்டும் திரிகின்றீர்கள். நான் உங்களுக்குச் சொல்வது என்ன வென்றால், பெண்களுக்குரிய அதியுயர்ந்த அழகுசாதனம் சீலம் என்பதே. நிஷ்டைக்கும், ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுங்கள். நாஷ்டை (காலையுணவு) க்கு அல்ல. காலையுணவை நீங்கள் தவறவிடலாம், ஆனால் நிஷ்டையை தவறவிடலாகாது. சீரான கட்டுப்பாட்டையுடைய ஒரு வாழ்க்கையை இப்போதிருந்தே வாழுங்கள். அதை ஒரு பழக்கமாக்குங்கள், உங்களை அது தீங்கிலிருந்து பாதுகாக்கும் படைக்கலமாகும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட கொஞ்ச நேரத்திற்கு இறைவனை பிரார்த்தித்து அவன் நாமத்தை உச்சரியுங்கள், அல்லது அவன் மகிமையை தியானியுங்கள். அளப்பரிய பலன் கிடைப்பதனை கண்டுபிடிப்பீர்கள். பலனை முதலில் ருசித்து விட்டு அப்புறம் சாதனையில் நான் ஈடுபடுவேன் என்று சொல்ல வேண்டாம். பயிற்சி செய்யுங்கள். அனுபவம் பின்னே வரும், வரவேண்டும். al
- மகாராணி பெண்கள் கல்லூரி, 12-9-63
கேள்வி :- சுவாமி! நாங்கள் (பெண்கள்) எல்லோரும் பாவம் செய்தவர்கள் எங்களால் சுவாமியின் அருகில் 'அமர முடியாது. சுவாமியுடன் பயணம் செய்ய முடியாது. பல ஆண் பக்தர்களைப் போல் சுவாமியுடன் சேர்ந்து உணவு அருந்த முடியாது, பாதசேவை செய்யமுடியாது.
32

சுவாமியின்
அன்பான
பதில் -
பெண்கள் எல்லோரும் பாவம் செய்தவர்கள் என்று சொல்வது தவறு. பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டே பெண்கள் தான். ஒரு ஆடவன் ஞானத்திற்கு உருவமாக திகழ்ந்தால், பெண்கள் பக்திக்கு உருவம். கடவுளுடைய அருளைப் பெறுவதற்கு இரண்டுமே அவசியம். ஒரு பெண்மணிதான் தன் கணவன், குழந்தைகள் எல்லாரையும் இறைவனுடைய தாமரைப் பாதங்களுக்கு அருகில் அழைத்து வர முடியும். அதனால் தான் சொல்கின்றேன், பெண்கள் புனிதமானவர்கள். பெண்கள் மட்டுமே எப்போதும் கடவுளைப் பற்றிய சிந்தனையில் வாழ்கின்றார்கள். குடும்பத்தில் ஏதாவது நல்லது நடந்தால் இது கடவுளின் அருளால் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
- கோடைக்கானல் அருளுரை கார்த்திகை 1993
: 33

Page 24
7. பகவான் பாபா 1995 ம் ஆண்டு , நவம்பர் மாதம் 19ம் திகதி மகளிர் தினத்தில் ஆற்றிய அருளுரையிலிருந்து சில பகுதிகள்
பண்டைக்காலம் தொட்டே தாய்மார்கள் தான் தம் குழந்தைகளுக்கு சத்தியத்தைப் பற்றியும், தர்மத்தைப் பற்றியும், அன்பைப் பற்றியும் போதித்து வந்தார்கள். தாயே குழந்தைக்கு முதல் குரு. அதனால்தான் பாரத கலாசாரம் தாய், தந்தை, குரு, தெய்வம், இவர்களது பெருமையையும், முக்கியத்துவத்தைப் பற்றியும் போதித்து வந்திருக்கிறது.
O
முக்கியத்துவ வரிசையிலும்கூட முதலில் வருவது தாய்தான். ஏனெனில் அவளே குழந்தையைத் தன் கருப்பையில் ஒன்பது மாதங்களுக்கு மேல் சுமந்து, எத்தனையோ இடர்களைச் சந்தித்து, தன் மகவை அன்புடன் போஷித்து, வளர்த்து வந்திருக்கிறாள். அவளை மதித்து முன்னிலைப்படுத்துவது மிக முக்கியம். அதனாலேயே முதலில் வருவது "மாத்ரு தேவோ பவ - உன் தாயை கடவுளுக்குச் சமமாக மதித்து வாழ்க்கையை நடத்து.'
பெண்களின் இயல்பில் எது இனிமையானது? தியாக மனப்பான்மைதான். குழந்தைகளுக்காகத் தாய் எத்தனையோ தியாகம் செய்யத் தயாராய் இருக்கின்றாள்! இத்தகைய தியாக பாவம் பெண்களிடம் தான் காணப்படுகின்றது.
மிக மோசமான நோயினால் குழந்தை துயருறும்போது, தந்தை வேண்டுமானால், "இப்படி அவதிப்படுவதைவிட குழந்தை இறந்தாலும் பரவாயில்லை” எனக் கூறலாம். ஆனால் தாய் கடைசிவரை போராடிக் குழந்தையைக் காப்பாற்றவே முயல்வாள். இத்தகைய தியாக மனப்பான்மையால்தான் பெண்ணை தியாக மூர்த்தி, அதாவது தியாகத்தின் வடிவம் என அழைக்கின்றார்கள்.
: 34

காந்தி ஏன் மகாத்மா என அழைக்கப்படுகின்றார்? அவர் குழந்தையாய் இருந்தபோது, அவரது தாயார் ஒரு விரதம் அனுஷ்டித்தார்! குயிலின் குரலைக் கேட்ட பிறகே முதல் கவளம் உணவு உண்பது என்று! ஒரு நாள் நடுப்பகலாகியும் குயிலின் குரலைக் கேட்காததால் அவள் உண்ணாமல் இருந்தாள் காந்தி இதைப் பார்த்தார். மனம் வருந்தி வீட்டின் பின்பகுதிக்குச்சென்று தானே குயில்போலக் கூவினார்! பிறகு சிறிது நேரம் கழித்து வந்து தாயை உணவு உண்ணும்படி வற்புறுத்தினார். வெளியே வந்த தாயார் உண்மையில் குயில் கூவவில்லை என்பதும், அப்படிக் கத்தியது காந்திதான் என்பதும் தெரிந்து கொண்டாள். அவள் காந்தியின் காதைப் பிடித்துத் திருகி, "எனக்கு ஒரு பொய்யன் மகனாகப் பிறந்ததைக் கண்டு வெட்கப்படுகிறேன். உன்னை என் மகன் என அழைப்பதும் பாவம் என நினைக்கின்றேன். மனிதன் என்பவன் உண்மையின் வடிவம். எந்தச் சூழ்நிலையிலும் அவன் பொய் மட்டும் பேசக் கூடாது" என்றாள். தாய் மிகவும் வருந்துவதைக் காந்தி உணர்ந்தார். கூரிய அம்புபோல் அவளது வார்த்தைகள் அவரது இதயத்தை துளைத்தன. அன்றிலிருந்து அவர் உண்மையைத் தவிர வேறெதையும் பேசவில்லை.
O. O. O.
இன்று நாம் பெண்கள் தினமாகக் கொண்டாடுவதால், இன்றே ஒரு தீர்மானம் எடுத்துக் கொள்ளுங்கள். நாளை முதல் பேச்சைக் குறைப்பது என்று.
ரஷ்யர்கள் கூட இந்த உண்மையை உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு டிசம்பர் மாதம் 8ம் திகதியும் ரஷ்யாவில் பெண்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. அன்று பெண்களுக்கு முழுச் சுதந்திரம். ஆண்கள் சமையலறையைக் கவனிக்க, பெண்கள் அன்று முழுவதும் சமுதாய சேவையில் நாளைக் கழிக்கின்றார்கள். மருத்துவமனைக்குச் சென்று சேவை செய்கின்றார்கள் மகளிர் சேவை செய்யும் போதுதான் உண்மையான தியாகபாவம் வெளிப்படுகின்றது. ஒரு தாய் க்கு யார் துயரப்பட்டாலும் கண்கள் கசிகின்றன. பெண்களுக்கு அந்த அளவுக்கு கனிவு நிறைந்த மனம்.
O. O. O.
35

Page 25
பெண்களைப் பிரக்ருதி தேவி எனப் பெயரிட்டு அழைக்கின்றார்கள். எல்லா வேதங்களுக்கும் ஆதாரம் காயத்ரீ தேவி. காயத்ரியைப் பெண்மை வடிவமாகத்தான் சித்தரித்து இருக்கின்றார்கள். வேதங்களைக் கூட வேதமாதா என்று தான் மதித்து வணங்குகிறார்கள். இதிலிருந்தே பெண்களை இவ்வுலகம் பண்டைக் காலத்திலிருந்தே எத்தகைய உயர் நிலையில் வைத்துப் போற்றுகின்றது என உணர்ந்து கொள்ளலாம். வேதங்களின் பிரார்தனைகளில், வழிபாட்டு முறைகளில், பாரம்பரியச் செயல்பாடுகளில் பெண்களுக்கு முக்கியமான பங்கு அளிக்கப்பட்டு வந்திருக்கின்றது. வேதங்களை வைத்து வழிபடும்போது அவற்றை சத்யவதி, அன்யவதி, அங்கவதி மற்றும் நிதானவதி என்று பெயரிட்டு அழைக்கின்றார்கள்.
சத்யவதி ;-
சத்யவதி என்ற பெயர் சுட்டிக் காட்டும் ஒரு மகத்தான உண்மை. பாலினுள் வெண்ணெய் போல் இப்பிரபஞ்சம் முழுவதும் இறைவன் நிறைந்திருக்கின்ற்ான் என்பதே! இறைவன் இயற்கையைத் தவிர வேறானவன் இல்லை. தெய்வீகம் என்பது புருஷ மற்றும் பிரக்ருதியின் இணைந்த வடிவம் என்பதைத் தவிர வேறில்லை.
அன்யவதி ;-
அன்யவதி என்றால் இந்த் இயற்கை முழுவதும் பஞ்ச பூதங்கள் நிறைந்திருக்கின்றன என்று பொருள். வேதங்கள் இந்தப் பஞ்ச பூதங்களையே இறைவனின் வடிவங்களாக வர்ணிக்கின்றன.
அங்கவதி ;-
அங்கவதி என்ற பெயர், சில குறியீடுகள் இறைவனின் சில வெளிப்பாடுகளை உணர்த்துகின்றன என்பதைக் குறிப்பிடுகிறது. சிவனைத் திரிசூலதாரியாகவும் , முக்கண்ணனாகவும் விஷ்ணுவை சங்கு, சக்கர, கதை பத்மம் இவற்றைக் கரங்களில் தாங்குபவராகச் சித்தரிப்பதும் அங்கவதி என்ற அடைமொழிக்குள் அடங்கக்கூடியது.
36

நிதானவதி ;-
இது இறைவனை அடைய பல மார்க்கங்கள் இருப்பதை
அறிவிக்கிறது. ஒன்பது வகையான மார்க்கங்கள் இருக்கின்றன. சிரவணம், கீர்த்தனம், விஷ்ணு ஸ்மரணம், பாத சேவனம், வந்தனம், அர்ச்சனம், தாஸ்யம், ஸ்நேகம், ஆத்ம நிவேதனம்! இந்த ஒன்பது வகையான வழிகளிலும்கூட ஒருவனால் இறைவனை அடைய முடியும் என வேதங்கள் அறிவிக்கின்றன.
சத்யவதி, அன்யவதி, அங்கவதி, நிதானவதி என்ற பெயர்களில் உள்ள பெண்மை வேதங்களுடன் இணைத்துப் பேசப்படுகிறது. பெயர்கள் வேறுவேறானாலும் அடையும் இடம் மட்டும் ஒன்றுதான்! ஆகையால் பெண்மைத் தத்துவத்தை ஏதோ சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது! காலம் காலமாக இந்தப் பெண்மைத் தத்துவம் பலப்பல வடிவங்களில் வழிபடப்பட்டு வந்திருக்கிறது!
O. O. O.
வீட்டில் பெண்கள் கிரஹலட்சுமியாக மதிக்கப்படுகிறார்கள். அவளே தர்ம பத்தினி, அவளே அர்தாங்கி (ஆணில் பாதி). பெண்ணில்லாத ஒரு வீடு காட்டுக்குச் சமம். பெண்ணுக்குரிய மதிப்பைக் கொடுப்பதும், அவர்களை கண்ணிர் சிந்த விடாமல் நடந்து கொள்வதும் ஆண்களின் முக்கியமான பொறுப்பு. பெண் கண்ணிர் சிந்தும் இல்லம் நிச்சயமாக அழிந்து விடும்.
O. O. O.
ஆண்கள் பெண்களைப் புரிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பெண்களும் ஆண்களைப் புரிந்துக் கொள்ள முயல வேண்டும். இந்த, ஒற்றுமை, அமைதி அத்துடன் ஒருவருக்கொருவர் செலுத்தும் மதிப்பும் அன்பும் தான் குடும்பத்தில் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரும்.
O. O. O.
37

Page 26
O
தெய்வத்துவம்
எங்கெல்லாம் பெண்மை போற்றப்படுகின்றதோ, எங்கெல்லாம் பெண்களுக்கு அவர்களுக்குரிய உயரிய இடம் அளிக்கப்படுகின்றதோ, அங்கு பல்வகைப் பெருமைகளோடும் தெய்வத்துவம் மிளிர்கின்றதென வேதங்கள் முழங்குகின்றன.
{ } {
38


Page 27
மகளி
மகளிர் தினம் கரமான நேரத்தில், உறுதியை எடுத்துக்ெ மட்டு மல் ல எ ங் செல்லுகின்றீர்களோ ஏற்பட வேண்டும். ஏற். சென்றாலும் உங்கள் து புனிதமான செயல்களி பிரதிபலிக்க வேண்டுL
பெண்கள் நல் தெடுத்தால்தான் ஆண் தெரிவு செய்வார்கள் (கணவனின் சரிப்ாதி வழிகாட்டியாகச் செய தியாகம், இரக்கம் பே வளர்த்தெடுத்துக் கெ
ஒவ்வொரு நவம்ப தினமாகக் கொண்டா புனித எண்ணங்கள் : செய்யப்பட வேண்டும்.

iர் தினம்
என்கின்ற இந்த மங்கள பெண்கள் மாறுவதற்கான காள்ள வேண்டும். இங்கு கெல் லாம் நீங்கள் அங்கெல்லாம் இந்த மாற்றம் பட்டே தீரும். நீங்கள் எங்கு Tய்மையான எண்னங்களில், ல் இந்த மாற்றம் நிச்சயம் в,
ல் பாதையைத் தேர்ந் களும் சரியான பாதையைத் பெண்தான் அர்த்தாங்கி கி) அவள் தான் நல்ல பல்பட வேண்டும். அன்பு, ான்ற குணங்களை அவள் ாள்ள வேண்டும்.
Iர் 19ம் திகதியையும் மகளிர் டும் பொழுது இத்தகைய
உலகம் முழுவதும் பரவச்
-பகவான் பாபா
*