கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாருதப்புரவல்லி கப்பற் பாட்டு

Page 1

லர்ச்சிப் பாதையில்
ா கலைகள் 1
به آنها.
நதப்புரவல்லி
ட்டு

Page 2

மறுமலர்ச்சிப் பாதையில் மக்கள் கலைகள் !
மாருதப்புரவல்லி கப்பற் பாட் (り
த சண்முகசுந்தரம்
அருள் வெளியீட்டகம் மாவை கந்தசுவாமி கோவிலடி
தெல்லிப்பழை
இலங்கை, - 20 1 0.8 விஃப் : 4 00
さ °3

Page 3
Makkal Kalaikal
Maruthapuravalli Kapalpattu
Folk Literature ln the path of Revival Maruthapura valli Sailors' Song
by
T. San mugasuntharam, B. A., (cey)
Dip - in . Ed. (Cey,
Publishers Arul Velliettu Alkan, Mavai Kanthasamy Kovilady, Tellippalai,
Sri lanka.
Printers : Kugan Press. Tellippalai.
PRICE Rs. 4. ... O O All Rights Reserved

பதிப்புரை
ሩ மக்கள் கலைமீது எனக்குப் பெரும் ஈடுபாட்டை ஏற்படுத்தியவர் என்னருமைத் தந்தையார் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலைமை ஆசிரியராக இருந்த ஆ. தம்புச் சட்டம்பியார். பல்கலைக் கழகத் தில் நான் கற்கும் போது, மக்கள் கலையை மேலைத் தேயப் புலமை என்னும் கண்ணுடி மூலம் நோக்க வைத்தவர் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரா சிரியர் கலையருவி க. கணபதிப்பிள்ளை. இவர் எனக்கு வழிகாட்டியாக இருந்த மை என் பெரும்பேறு.
பட்டப் படிப்பிற்குப் பின்னர் என்னைக் கலைத் துறையில் ஈடுபடும்படி செய்தவர் யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்துத் துணைவேந்தர் சு. வித்தியானந்தன். இவர் இலங்கைக் கலைக்கழகத்துத் தமிழ் நாடகக் குழுவின் தலைமைப் பொறுப்பை 1956இல் ஏற்ருர் . ஏற்று இவர் நாடகக் கலைக்கும், மக்கள் கலைக்கும் ஆற்றிய தொண்டு நாடறியும். இந்தக் குழுவிலே சேர்ந்து உழைக்க வேண்டும் என இவர் அன்புடன் பணித்தார். இந்தப் பணிப்பு என்னை மேலும் துரண் டியது : மக்கள் கலையில் ஈடுபட வைத்தது, மக்கள் கலை பற்றிய விபரங்களைத் திரட்டுவதில் ஈடுபடுவேன். இவர் என்னை மேலும் ஊக்குவிப்பார் ; நல்ல குறிப்பு களை வழங்குவார். இவரிடம் இருந்து நான் கற்றவை பல . ஏன் வீட்டிற்கே வந்து என் இலக்கிய முயற்சி களைக் கேட்டு யோசனை தருவார். இப்பெரியாருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ள்ேன், அது சொல் வில் அடங்காது.
வித்தியானந்தனுடன் பேராசிரி யர் கார்த்திகேசு சிவத் தம்பி, கூத்துக் கலைஞர் முது மாணி சி. மெளனகுரு போன்றவர்களும் கடமை புரிந் தனர். ஆகஒே மேலும் நல்ல கருத்துக்களையும் இவ்

Page 4
iv
விருவரிடமும் பெற்றேன். பின்னைநாளில் பேராசிரியர் சிவத்தம்பி, நாடகக் குழுவின் தலைமைப் பதவியை ஏற்ருர் (1970) என்னையும் அக்குழுவில் பணிபுரியும் படி அழைத்தார். மக்கள் கலை பற்றி என்னுடன் கலந்துரையாடுவார். தனக்குரிய தனி ஆர்வத்துடன் என்னை ஊக்குவிப்பார்.
நான் திரட்டுகின்ற மக்கள் கலை விபரங்களைப் பற்றிக் கர்லத்துக்குக் காலம் பேராசிரியர் க. கைலா சபதி வினவுவார். மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து அவ்வப்போது ஆலோசனை வழங்குவார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணி யா ள ர |ா க இருந்த என் இனிய நண்பன் திரு. சி. வி. இராச சுந்தரம் பி. ஏ. என் முயற்சிகளுக்கு எப்போதும் ஊக்கமளிப்பர். .
பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத் தம்பி, ஒலிபரப்புப் பணிப்பாளர் திரு. சி. வி. இராச சுந்தரம் ஆகியோரின் பணிப்புப் படி ** மக்கள் கலை யும் மறுமலர்ச்சிப் பாதையும் ' என்னும் பொருள் பற்றி இலங்கை வானெலியில் பேசினேன். இதனல் இதுபற்றி மேலும் ஆராய வேண்டும் என்ற ஆசை மேலும் வளர்ந்தது. யாழ்ப்பாணத்து வரலாற்று விளக்கம் பலவற்றையும் பல்கலைக் கழகத்து வர லாற்றுப் பேராசிரியர் கார்த்திகேசு இந்திர பாலா, தமிழ் தலைமை விரிவுரையாளர் கலாநிதி அ. சண்முக தாஸ், வரலாற்று விரிவுரையாளர் திரு. வி. சிவ சாமி எம். ஏ. ஆகியோரிடமிருந்து பெற்றேன். இதே பல்கலைக்கழகத்தின் துணைநூலகர் நண்பன் ஆ. சிவ நேசச் செல்வன் எனக்குச் செய்த உதவி இம்மட்டன்று. திரு. மு. சண்முகத்தின் வாழ்க்கைக் குறிப்பை எழு தித் தந்த 'அன்பன் பாலனுக்கும்" என் நன்றி.
என் சக ஆசிரியர் பண்டிதர் செ. நடராசா எனக்கு எல்லா உதவிகளையும் உளம் உவந்து செய்

氧7
தார் ; நான் கே61ாமலே உதவுவார் ; ஆலோசனை வழங்குவார் ,
இவர்கள் எல்லோருக்கும் என் உள்ளம் கனிந்த
தன்றி உரித்தாகுக. இவர்களின் உதவியை நான்
மேலும் நாடி நிற்கிறேன் என்பதைப் பெருமையுடன் கூற விரும்புகிறேன்.
'மறுமலர்ச்சிப் பாதையில் மக்கள் கலைகள்" என்னும் தொடரிலே மேல் வருவன இடம்பெறும் :-
1. மாருதப்புரவல்லி -கப்பற்பாட்டு
குருநாதர் மான்மியம் காகப் பிள்ளையார் மான்மியம் நாய்ச்சிமார் மான் மியம் வெற்றிலை மான்மியம் காவடிப் பாட்டு கண்ணகை அம்மன் குளிர்ச்சிப் பாட்டு
என் நண்பர்களான இருவர் என் முயற்சியைப் பாராட்டி உரை வழங்கியுள்ளனர். என் இலக்கிய வாழ்க்கைக்கு உறுதுணையாக அ  ைம ந் து ஸ் ள வர் *" குகன் அச்சகம் * முகாமையாளர் திரு. சி. நவ ரத்தினம். இவர்களுக்கும் என் நன்றி:
கந்தசாமி கோவிலடி த. சண்முகசுந்தரம் மாவிட்டபுரம் 2 0 -م I 0( - 8 0{ தெல்லிப்பழை

Page 5
மக்கள் கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்த முருகர் சண்முகம்
இலங்கையின் வடபாகத்தில் காங்கேசன்துறை வீரமாணிக்கன்தேவன் துறை, ஜம்புநாவல்துறை , உசு மன்துறை போன்ற பல துறைமுகங்கள் இருந்தன. சோழப் படையெடுப்பின் பின் இத் துறைமுகங்கள் பண்டமாற்று வணிகத்துக்கு உதவியதோடு சிறந்த படைக்கலப் பயிற்சி முகாங்களாகவும், பாதுகாப்பு அரண்களாகவும் சோழப் பேரரசர்களினல் மாற்றப் பட்டன. இத் துறைமுகங்களின் நிர்வாகம் சோழப் படைத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப் படைத் தலைவனும் அவனது குடிகளும் இவ்வாறு இலங்கையின் வடபகுதியில் குடியேறித் திரைகட லோடித் திரவியம் தேடி வணிகம், கடற்ருெழில், சற்று உட்பகுதியில் கமத்தொழிலுஞ் செய்து வந்த னர். இவர்களது வழித்தோன்றல்களில் ஒரு வ ரே காங்கேசன்துறையில் பிறந்து தமது ஒப்பற்ற சேவை யினலும் தொண்டினுலும் ஆளுமைத் திறனுலும் இப் பகுதி மக்களின் நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்று அவர்களது தலைவராக விளங்கிய திரு. முரு கர் சண்முகம் அவர்களாவார் .
திரு. சண்முகம் அவர்கள் தாம் பிறந்த குடிமர புக் கொப்பத் தமது மகளை இன்னுேர் துறைத் தலை வனும் நாவாய்கள் கட்டிக் காங்கேசன் துறைமுகத் தில் ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டு அரும் பொருள் தேடிய திரு. அருணுசலம் என்பவ ரின் மகன் துரைச் சாமிக்கு மணம் முடித்து வைத் தார். தமது தந்தையாரின் துறைமுக வணிகத்திலேயே திரு. அருணசலம் துரைச் சாமியும் ஈடுபட்டார். திரு. சண்முகம் அவர்கள் தமது மகன் கனகசபையும் காங் கேசன்துறைமுக ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டுச் செல்வம் சேர்க்கும் பணியைக் கண்டு

wii
இன்புற்றர். இப்பொழுது இத்துற்ைழ்க் வீசிகத்தல. திரு. சண்முகம் கனகசபை அவர்களின் இரண்டா வது மகன் ஜெயபாலசிங்கம் ஈடுபட்டுப் பொருள் சம்பாதித்துத் தமது குடிப் பெருமையையும் குலப் பெருமையையும் உயர்த்திப் புகழ் ஈட்டி வருகின்றர்.
இவ்வாறு குடிப்பெருமை யைப் போற்றிக் காத்து வளர்த்து வந்த திரு. சண்முகம் அவர்கள் அரச மருத்துவ மனையில் மருந்தாளராகக் கடமை யாற் றிய தமது ஆற்றல் அனுபவத்தைக் கொண்டு மக்க ளுக்கு இலவச மருத்துவ சேவை செய்வதில் தமது ஓய்வு காலத்தின் ஒரு பகுதியைச் செலவிட்டார். தமது முன்னேரின் வாகடங்கள், ஏடுகள் முதலிய வற்றில் கண்ட மருந்து முறைகளை நன்கு அறிந்து கொண்ட திரு. சண்முகம் அவர்களை நாடி மக்கள் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற ஏராளமாக வருவார்கள். இவரிடம் நாவாய் நூல் கப்பற் பாட்டுப் போன்ற ஏடுகளும் இருந்தன.
திரு. சண்முகம் அவர்களின் பெயரைச் சொன்ன வுடன் மாவிட்டபுரக் கோயில் காத்திகைத் திருவிழா நினைவு அவரைத் தெரிந்த பலருக்கு வந்துவிடும். திரு சண்முகம் அவர்கள் சமயத் திருப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்தவர். தமது மக்களின் சமய மறுமலர்ச்சிக்கும் வித்திட்டவர் அவரே. இவர்களே யும் தம்மோடு சேர்த்து சமயப் பணியில் ஈடுபடுத்தி ஞர். காங்கேசன்துறை யைப் பல உப துறைகளாகபெரிய துறை, குரக்கன்துறை, தாழையடித்துறை, மலைக் குடாத்துறை எனப் பிரித்து, ஒவ்வொரு உப துறைக்கும் ஒவ்வொரு உப தலைவனை நியமித்தார். துறைத் தலைவர்கள் அத்துறை மக்களிடமிருந்து பணம் பெற்று சமயப் பணிகளுக்கும் பிற சமூக, பொரு ளாதார நடவடிக்கைகளுக்கும் எனத் தலைவர் திரு. சண்முகமிடம் ஒப்படைப்பார்கள். காங்கேசன்துறை வெளிச்ச வீட்டுக்கு அருகில் உள்ள கடற்கரையில்

Page 6
பொதுக்கூட்டம் நடைபெறும். சமய சமூக, பொரு ளாதார பிரச்சனைகள் இங்குதான் ஆராயப்படும்; முடி வுகள் எடுக்கப்படும். திரு. சண்முகம் அவர்கள் தலைவ ராகவும் ஏனைய துறைத் தலைவர்கள் உறுப்பினர்களுமா கக்கொண்டு இயங்கும் ஒருவகைமானிய முறைச் சமு தாய அயைப்பு அங்கு காணப்பட்டது. இப்பகுதி வாழ் மக்கள் மாவைக் கந்தனுக்குக் கார்த்திகை விழா எடுப்பதோடு காங்கேசன்துறையில் இருக்கும் நர
சிங்க வயிரவர் கோயில் நிர்வாக பராமரிப்பு வேலை யிலும் ஈடுபட்டு வருவதற்கு ஊன்றுகோலாக விளங் கியவர் திரு. சண்முகம் அவர்களே! சிதைந்த நிலை யில் இருந்த காங்கேசன்துறை நரசிங்க வயிரவர்
கோயிலைப் புதுப்பித்து மக்கள் ஆதரவுடன் குட முழுக்கு வைபவமுஞ் செய்து வைத்தார் திரு. சண் (Lpis tID
இவ்வாறு தாம் பிறந்த மண்ணுக்கும் மக்களுக் கும் அரிய தொண்டாற்றிய திரு. சண்முகம் அவர் களின் புகழ் குன்றின் மேலிட்ட தீபம் போல் எஞ் ஞான்றும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்பது திண்ணம் ,
* அன்பன் பாலன் "

வாழ்ந்துரை
என் வாழ்நர்ளில் பெரும்பகுதியை அம்பிகையின் புகழ் பாடுவதிலேயே செலவு செய்து வருகின்றேன். என்பெருமதிப்பிற்குரிய அறிஞர் த. சண்முகசுந்தரம் எனக்கு பலவகையிலும் உதவியவர். இவர் " மறு மலர்ச்சிப்பாதையில் மக்கள் கலை என்னும் பொருள் பற்றித் தொடர்ச்சியாக நூல்களை எழுதி வருகிருர் என்பதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பேர் றிஞர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் மூலம் இலங்கை பல்கலைக்கழக கூத்துகளுக்கு பின் னணி இசை வாசிக்க ஒழுங்கு செய்தவர் திரு. த. சண்முகசுந்தரம் . பேராசிரியர் வித்தியானந்தன் இலங்கைக் கலைக் கழகத்து தமிழ் நாடகக் குழுவிற்கு தலைவராக இருந்தபொழுது கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவரும் இவரே. இவர் எமுதிய ' கலையும் மரபும் ' என்ற நூலிலே எனக்கும் ஒர் இடம் கொடுக்கப்பட்டது. ஆகவே திரு.சண்முகசுந்தரத்தின் முயற்சி வெற்றிபெற வேண்டுமென அம்பிகையை கையெடுத்து கும்பிடு
கின்றேன்.
அம்பனை, சிவநாதக் கலை மணி தெல்லிப்பழை, சி. சிதம்பரப்பிள்ளை
I O - 1 0 - 1980.

Page 7
வாழ்த்துரை
மக்கள் கலையில் நீண்டகால ஈடுபாடுடைய அறி ஞர் த. சண்முகசுந்தரம் ' மறுமலர்ச்சிப் பாதையில் மக்கள் கலைகள் " எ ன் னு ம் பொருள் பற்றித் தொடர்ச்சியாக நூல்களை வெளியிடுகிரு ர். முப்பது ஆண்டுகளாக இவர் மக்கள் கலைஞர் தரம் உயர வேண்டுமென உழைத்துவருகிருர். என்னைப் பொறுத்த வரையில் இவரின் அரிய முயற்சியையிட்டு இரட்டிப் பான பெருமை அடைகின்றேன். இவரும் நானும் ஒன்ருகக் கற்ருேம். எங்கள் பெருமதிப்பிற்குரிய பேரா சிரியர் சு. வித்தியானந்தன் மூலம் என்னை இலங்கைக் கலைக் கழகத்து தமிழ் நாடகக் குழுவிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் கலைஞர் த. சண்முகசுந்தரம். இவரின் அரிய முயற்சியினலேயே எனது 'அரிச்சந்திர மயானகாண்டம்' தோன்றியது. இவரின் இந்த ஒப் பற்ற ஆராய்ச்சி முயற்சி சிறந்தோங்க வேண்டுமென கசாத்துறைப் பிள்ளையாரை நான் கைதொழுது நிற் கின்றேன்.
வசந்த காணசபை, நடிகமணி
காங்கேசன்துறை. வி. வி. வை த் 1 0-10-1980. ரமுத து

மறுமலர்ச்சிப் பாதையில் மக்கள்கலை 1 தமிழில் மக்கள் இசை - கப்பற்பாட்டு
ஆசிய ஆபிரிக்க நாடுகள் பலவும் இன்று அரசி யல் சுதந்திரம் பெற்றுவிட்டன. பொருளாதாரச் சுதந்திரம் பெற இவை பெரிதும் முயலுகின்றன. இந்தச் சுதந்திரத்துடன் கலைச் சுதந்திரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கலைத் துறையில் தனித் தன் மை யைப் பேணி அந்தத் தனித்துவம் மூலம் பிறநாட்டு ஆதிக்கம் இல்லாத சுதந்திரமான கலைப் பாதையை ஒரு நாடு பின்பற்ற வேண்டும். இதுவே கலைச் சுதந்திரம் என்பதன் பொருளாகும். அரசியல் சுதந்திரம் பெற்ற ஒரு நாடு தன் கலையின் பழ மை யை மறக்கக் கூடாது. பழமையில் நம்பிக்கை யும் புதுமையில் ஈடுபாடும் கொண்ட ஒரு நாட்டிலே தான் கலை விழிப்புணர்ச்சி தோன்ற முடியும் . அப் படியான விழிப்புணர்ச்சி தான் நாட்டின் எதிர் காலத்தை வளம்படச் செய்யும். ஆபிரிக்க மக்க ளுடைய " யாசு " இசையிலும் பார்க்கப் பழமை யும் இனிமையும் நிறைந்த தமிழ் இசை இன்று முடங்கிக் கிடக்கின்றது. ஏன் இந்த முடக்கம் ?
தமிழ் இசை என்றதும், இந்திய சாத்திரீய இசை என்ற கருத்தை உயர்ந்தோர் மட்டத்தில் ஒரு சாரார் பரப்பி வருகின்றனர். மக்கள் இசைதான் மெருகு பெற்றுச் சாத்திரீய இசையானது என்பதை இந்த உயர்ந்தோர் குழாத்தினம் மறந்து விட்டனர்; அல் லது அந்த உண்மையை மறைக்கப் பார்க்கின்றனர். சாத்திரீய இசைக்கு மெருகு கொடுக் கிருேம் என்ற போர்வையில் இந்த உயர்ந்தோர் குழாத்தினர் இசையைக் கொலை செய்கின்றனர். இன்று இசை யரங்குகளில் என்ன நடக்கின்றது ? இவர்களுடைய இசை நிகழ்ச்சிகளில் வெறும் உடலைத் தான் காண்

Page 8
سس۔ 2 سے
கின்ருேம்; உயிரைக்காண முடியவில்லே. இதனல் இந்த உயர்ந்தோர் குழாத் தினரின் இசைக்கும் பொதுமக்களுக்கும் உள்ள இடைவெளி கூடிக் கொண்டு வருகின்றது. இந்த நிலை நீடிக்கக்கூடாது. இன்றைய இளைஞர் சாத்திரிய இசையைப் புறக் கணித்து விட்டுப் பொப்பிசையை நாடுகின்றனர். இந்த அவல நிலையை நீடிக்கவிடக்கூடாது. தமிழ் கூறும் நல்லுலகத்து மக்களின் இசைக்கு மறுமலர்ச் சிப் பாதை ஒன்றை வகுக்க வேண்டும்.
மக்கள் கலை மறுமலர்ச்சிப் பா  ைத ஒன்றை வகுக்க வேண்டும்.
மக்கள் கலையின் மறுமலர்ச்சிப் பாதை என்றதும் இந்த உயர்ந்தோர் குழாத்தினர் மிரண்டு விரண்டு எழுகின்றனர்; கூக்குரல் எழுப்பி ஒலமிடுகின்றனர். மக்கள் கலை என்றதும் ஏதோ பேயோ பூதமோ என்று அஞ்சுகின்றனர். மக்கள் இசை வெறும் குப்பை என்ற கருத்தைப் பரப்புகின்றனர். தமிழைப் பொறுத்தவரையில் மக்கள் கலைக்கு என்றுமே முத லிடம் கொடுக்கப் பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப்பாட்டுக்களே இதற்குத் தக்க சான்று. தமிழ் இசையின் உச்ச நிலை திருமுறைகளில் காணப் படுகின்ற பண், பொருளை உணர்ந்து எல்லோரும் கேட்டு மகிழ வேண்டும் என்பதற்காகவே பண் முறை எழுந்தது. திருமுறைப்பாடல்கள் என்றும் அழியாது இருப்பதற்கு இதுவே காரணம். அதனலே தான் திருமுறைகள் என்றுமே மக்கள் இசையாக, மக்களை மகிழ வைக்கும் கலைப் பெட்டகமாகத் திகழ் கின்றன. சிலப்பதிகாரத்தில், திருமுறையில் உள்ள இசைக்கு முதலிடம் கொடுங்கள் என்று வலியுறுத்தி ஞல் என்ன ? இதில் ஏதும் பிழையும் உண்டோ ? மக்கள் இசை என்ற பெரும் பரப்பில் கப்பற் பாட்டு, குறவஞ்சி, தெம்மாங்கு, காவடிப் பாட்டு, கும்மி என்பவை அடங்கும். இவை இன்றும் பொது மக்

-س- 3 --
கள மகிழ வைக்கின்றன; மகிழ்வித்துக் கொண்டே இருக்கின்றன.
நிற்க, இன்றைய சாத்திரிய இசையை நோக்கு வோம். சாத்திரிய இசையில் தமிழ்ப் பாட்டிற்கு முதலிடம் இல்லை. பிறமொழிப் பாடல்களே இசை அரங்கில் இடம்பெறுகின்றன. விளங்க முடியாத பிறமொழிப் பாடல்களுக்கு மணிக்கணக்காகச் சுரம் பாடுகின்றனர். சுரம் பிடித்தவர் போலவே இந்த இசை வல்லார் படும் வேதனை தான் எத்தனை ? நடுங்கு கிருர்கள்; முறைக்கின்ருர்கள்; ஆவேசம் வந்து ஆடு கின்ருர்கள். இந்நிலையில் எமது இளந் தலைமுறையினர் பொப் இசையை நாடுகின்றனர். காலத்திற்கு ஏற்ப மரபை விட்டுக் கொடுக்காமல் சாத்திரீய இசையைச் சற்று " இலகு * செய்யுங்கள் என்று இந்த இசைப் புலிகளைக் கேட்டால், " அணுச்சாரம், அபத்தம், அ. பரமேசுவரா !” என்று வசை பாடுகின்றனர், இந்த இசை வல்லார். நல்லது. சாத் தி ரிய இசையைப் பொதுமக்கள் மீது வானெலி, இசை அரங்கு மூலம் திணிக்க முயலும் போதுதான் பெரும் ஏமாற்றம் ஏற்படுகின்றது. பொதுமக்கள், குறிப்பாக இளைஞர் சாத்திரிய இசையை வாய்ப்பாட்டில் வெறுக்கின் றனர். இந்த வெறுப்பு நிலையை ஆாாய்ந்து ஆவன செய்யப்படவேண்டும்.
ஏழு சுரங்களைக் கவனிப்போம். இந்த ஏழு சுரங் களும் வீணை, நாதசுரம், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளில் பேசுகின்ற சுகத்தை வாய்ப்பாட் டிலே காணமுடியவில்லையே 1 மணிக்கணக்காக இர விரவாக நாதசுர இ  ைச  ைய த் தமிழ் இளை ஞர் கேட்டு மகிழ்கின்றனர். தவில் நிகழ்ச்சி இளை ஞரைப் பெரிதும் கவர்ந்துள்ளது. காரணம் என்ன? இசைக்கருவிகளுக்குப் பாட்டும் பொருளும் முக்கியம் இல்லை. மெட்டுத்தான் முக்கியம். இதனுலேதான் இசைக்கருவிகளில் பிறமொழிப் பாடல்கள் பேசுகின்ற

Page 9
- 4 -
சுகத்தை வாய்ப்பாட்டிலே காணமுடியவில்லே. பாட கர்களுக்குப் பிறமொழிப் பாடல்கள் விளங்குவதில்லை. இசை வல்லார்க்கு இந்தக்கதி. இதனுலேதான் இசை அரங்கங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. நாதசுரக் கச்சேரியின் போது மக்கள் கூட்டம் பொங்கி வழி கின்றது; ஆரவாரம் கரைபுரண்டோடுகின்றது. தவில் கச்சேரியின்போது மக்களின் மகிழ்ச்சி வெள்ளப் பெருக்கா கி விடுகின்றது. இதனுல் வாய்ப்பாட்டு வல் லார் இசைக்கருவி விற்பன்னர்கள் மீது வஞ்சம் தீர்க்க முற்படுகின்றனர். தமிழ் இசையை நசுக்கப் பார்க்கின்றனர். எத்தனை காலத்திற்கு இந்தநிலை நீடிக்கும்? பிறமொழிப் பாடல்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்தின் மீது திணிக்கின்ற இசை வல்லார் ஒரே பாடல், ஒரே இராகம் ஒரே பாணி என்று செக்கிழுக்கின்ற மாடுபோலச் சுழன்று அவலப்படு கின்றனர். அது மட்டுமன்று ! தமிழ் இசை உலகத் தையும் அவலப்படுத்துகின்றனர். இவர்களின் இசை யரங்கு என்பது உயிரற்ற உடம்பிற்கு ஆடை அணிகள் இட்டு மகிழ்வது போல இருக்கின்றது. இந்த நிலை யிலே ' தமிழ் இசையை வளர்க்க வேண்டும்; முன் னேற்ற வேண்டும். பொதுமக்களுக்கு அதனை விளங் கக்கூடியதாகச் செய்ய வேண்டும்.’’ என்று குரல் எழுப்புவதில் பிழையும் உண்டோ ?
விளங்காத மொழியிலே ' ராமா நீசமான ' என்று பாடுகிருர் பாகவதர் . அதன் பின்னர், தேவை இல்லாத சங்கதிகளில் இறங்கித் தானும் துன்பப் படுத்துகின்றர். விளங்கக் கூடிய தமிழ் மொழியில் தேவாரம் திருவாசகம், திருப்புகழ், நந் தன் கீர்த்தனை, இராம நாடகக் கீர்த்தனை போன்ற வற்றை இசை வல்லார் ஒருவர் உள்ளம் உருகிப் பாடுகின்றர். பாடல் தேனகப் பாய்கின்றது. இப் படியான பாடல்களுக்கும் ஏனைய தமிழ்ப் பாடல் களுக்குமுரிய இடம் மறுக்கப்படுகின்றது. விளங்காத மொழியில் இராமன் புகழ் பாடினல், ஆபாசம்

- 5 -
ரி 1றந்த வடமொழிப் பாடல் பாடினல், அது இசை, .1ங்கக் கூடிய மொழியில் சிவனை, உமையை, நெடுமாலை, முருகனைப் பாடினல் "அது இசையில்லை' என்கின்றனர். அதுமட்டுமா ! " இது இசையில்லை கொ%ல, வசை," என்று கூடச் சொல்லுகின்றனர். முருகஃனப் பாடினல் ** இலகு சங்கீதம் ' என்கின் றனர் ஒரு சாரார். நல்லது. இலகு சங்கீதம் என் ரல் அல்லது மெல்லிசை என்ருல் கடின சங்கீதம் அல்லது வல்லிசை என்ற ஒன்று இருக்கத் தானே வேண்டும். விளங்காத பிறமொழி இசையும், கருங் கல்லே உளி வைத்துப் பொழிவது போலச் சுரம் பாடுவதும் கடின இசை, வல்லிசை என்ற பரப் பிலே அடங்கும். இந் த ப் ப ர ப் பு உயர்ந்தோர் ' மட்ட ' இசை யென்று சொல்லி இச்சாரார்
அமைதி கொள்ளட்டும் !
பிறமொழிச் சாத்திரிய இசைக்குத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் எத்தனை வரவேற்பு இருந்திருக்கின்றது என்பதற்கு இதோ இரண்டு கதை, நகைச்சுவைக் கதை. இக்காலக் கதையை முதலிலே பார்க்கலாம். பொது மக்கள் பெருந்திரளாகக் கூடிக் காவல் நிலை யத்தில் பெரும் ஆர்ப்பாட்டஞ் செய்கின்றனர்; கற் கஃ வீசுகின்றனர். உடனே காவற்காரர் ஒருவர் பாகவதர் வீட்டிற்கு ஓடிப்போகின்ருர் . பாகவதர் முன்பாகச் சென்று வணக்கம் தெரிவிக்கின்ருர். " ஐயா ! பாகவதரே ! எம்மைக் காப்பாற்றுங்கள். காவல் நிலையத்தின் முன்பாக மக்கள் கூடி ஆர்ப் பாட்டஞ் செய்கின்றனர். நீங்கள் வந்து இரண்டு பாட்டுப் பாடுங்கள். கூட்டம் அப்படியே கலைந்து போகும். தடியடி, கண்ணிர்ப்புகை, துப்பாக்கிச் கேடு எதுவும் தேவைப்படாது ' என்றுஇரந்து நின் yt . இது இக்கால நகைச்சு வைக் கதை. அக்கா லத்து நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு. செல் வந்தர் வீட்டுக் கலியாணத்திலே பாகவதரின் இசை நிகழ்ச்சி நடந்தது. பாகவதர் சுரம் பாடத் தொடங்

Page 10
- 6 -
கிஞர். இதனைக் கேட்டுக்கொண்டு நின்ற குடியான வன் ஒருவன் அழத் தொடங்கினன். பாகவதரின் சீடன் ஒருவன் குடியானவனிடம் போனன். "அப்பா! நீ பெரிய இரசிகன் போல இருக்கின்றது," என்று சீடன் பாராட்டினன், " எனக்கு இராகம் சுரம் ஏதும் தெரியாது. பாகவதர் கத்துவது போலத் தான், என் கறுப்பி ஆடு மழையிலே நனைந்து சன்னி வந்து கத்திக் கத்தி இறந்தது. நான் செல்ல மா வளர்த்த ஆடு ', என்று சொல்லிக் குடியானவன் மேலும் அழுதான்.
தமிழில் தேசிய இசை மறுமலர்ச்சியை மக்கள் இசை மூலம் தான் ஏற்படுத்தலாம். மறுமலர்ச்சி என்ருல் அது மக்களுக்கு விளங்க வேண்டும். வாய்ப்
பாட்டில் "* வாதாபி கணபதி ' என்ருல் யாருக்கு விளங்குகின்றது ? " ஞான விநாயகனே ? அல்லது ** அருள்புரிவாய் கருணைக்கடலே ' என்ருல் மக்கள்
விளங்குகின்றனர். இராகம், தாளம் விளங்காவிட் டாலும் பொருளை உணர்ந்து விளங்கிச் சுவைத்து இசையில் ஈடுபடுகின்றனர். மெருகு செய்யப்பட்ட இசையே சாத்திரிய இசை. பாம்பாட்டியின் இசை தான் சாத்திரிய இசையில் பின்னர் இடம்பிடித்துக் கொண்டது. பண்ணிசையும் அப்படியேதான். பண் ணிசைதான் தமிழ் இசையின் வேர். மக்கள் இசையை, இசை வல்லார் ஒருவர் கொலை செய்வ தற்கு ஓர் எடுத்துக்காட்டு -
*" காடு டைய சுட லைப் பொடி பூசி "
எனப்பாடகர் பாடுகின்ருர் . அப்பொழுது பண் னிசை தன்னுயிரை இழக்கின்றது. மக்கள் இசை தான் வேர். வேர் இல்லாமல் மரம் இல்லை. வேரைப் புறக்கணித்து விட்டு இன்றைய இசை வல்லார் மரத் திலே ஏறி இருக்கின்றனர். மக்கள் இசைக்குப் பல முனையிலும் எதிர்ப்பு இருக்கின்றது. சாத்திரிய இசை வல்லாரின் எதிர்ப்பு ஒரு புறம். மெத்தப் படித்தவர்

ܚ 7 ܤܩܗ
ாலத் தம்மைத்தாமே கூறிக் கொள்பவரின் எதிர்ப்பு மhருெரு புறம்: ஈழத்திலே ஐரே ரா ப் பி ய ஆட்சி ஒழிந்த பின்னரும் அவரின் எச்சத்தார் இன்னும் 1) க்கள் இசையை எதிர்க்கின்றனர். மக்கள் இசை வேர்போன்றது. நல்ல நிலம் அருங்கோடைப் போது 1ா?ல போலக் காட்சி தருகின்றது. மழைக்காக உழ வர் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். கால் நடைகள் புல்தேடி அலைகின்றன. அறுகம் புல்லின் தழையைக் கூடக் காணமுடியவில்லை. கரு மேகம் ஒன்று கையள வில் வடகோடியில் தோன்றுகின்றது. இருந்தாற் போலக் கால மழை பொழிகின்றது. நிலத்தின் அடி யில் மழையின் வருகைக்காக ஏங்கிக் கிடந்த அறுகம் புல்லின் வேர் தொழிற்படுகின்றது, பாலை போன்ற நிலம் மாறிவிட்டது. அது பசும் புல் நிரம்பிய தரை யாக மாறிவிட்டது. பழைய நிலம் புதிய நிலமாகிய காட்சியைக் காணக் கூடியதாக இருக்கின்றது. வரட் வியை எதிர்த்து நிற்கக் கூடிய வலிமை அறுகம் புல் லின் வேருக்கு உண்டு. அதே போன்று, இசைவல் லார், மெத்தப்படித்தவர், ஐரோப்பிய ஆட்சியாளர், அவரின் எச்சங்கள் ஆகியோரின் எதிர்ப்பு என்னும் கோடையை, மக்கள் இசை என்னும் வேர் எதிர்த்து நின்றது; நிற்கிறது. மக்கள் இசையின் வேர் சாக வில்லை. சுதந்திரம் என்ற மழையின் பின்னர் மக்கள் கலை என்னும் வேர் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகின் றது. இந்தமறுமலர்ச்சியைத் துரிதப்படுத்துவது Fr) g 5ävu Tuu 5–60) LD.
மக்கள் இசை இனிமை நிரம்பியது: பொருள் நிரம்பியது. நாதசுர இசை வல்லார் ஒருவர் இருந் தார். இவரின் வாத்தியத்திலிருந்து புன்னுகவராளி காவடிப் பாட்டு, கப்பற் பாட்டு, தேவாரம், திருவா சகம், திருப்புகழ் எட்டிக்குடி ஏசல் போன்றவை பாகாகக் கரைந்து ஒடும். இவரின் இசை பொது மக்களை அந்தக் காலத்தில் பெரிதுங் கவர்ந்தது. அத் து.ன் சாத்திரிய இசை அரங்குகளில் இவரின் வாத்

Page 11
-- 8 -س--
தியம் விறுக்காகப் பேசும். இதல்ை பொழுமையுற்ற ஏனைய வித்துவான்கள் இவரைப் ' பாம்பாட்டிப் பயல் ' எனத் தமக்குள் எள்ளி நகையாடுவதும் உண்டு; ஆனல் அவர் என்றுமே மக்கள் கலைஞனுகவே திகழ்ந்தார்.
மக்கள் கலையின் பெருமையை உணராத மெத் தப்படித்தவர் ஒருவர், நாட்டார் பாட்டை எப்படி அணுகினர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. நாட் டார் பாடல் என்ருல் “ குப்பை " என்பது இவ ரின் கருத்து. இப்படியானவர், மேல்வரும் பாட் டைப் பேராசிரியர் கலையருவி கணபதிப்பிள்ளையின் " ச ங் கி லி ** நாடகத்திலே காண்கின்றர். இது ** இழிசனர் வழக்கு ' என மெத்தப் படித்தவர் எள்ளிநகையாடுகிருர் . இந்தப் பாட்டைக் கட்டிய கலைஞரின் பெருமையை இந்த மெத்தப் படித்தவர் உணரவில்லை சரி. அவருக்கு இப்பாடலில் பொலிந் துள்ள பொருளை விளக்கலாம்.
* சுன்னுகச் சந்தையிலே - பறங்கி
சுங்கானைப் போட்டுவிட்டான் பார்த்துக் கொடுப்பவர்க்குப் - பறங்கி பாதிச் சுங்கான் கொடுப்பான்."
பாடலின் பொருள் இதோ :- பறங்கியரின் ஆட் சியை ஈழத்துத் தமிழ் மக்கள் எதிர்த்தனர். அந்த எதிர்ப்பை அவர் மக்கள் பாட்டு மூலம் உணர்த்து கின்ருர், பறங்கி ஏன் இந்த நாட்டிற்கு வந்தான்? மக்களேச் சுரண்டவே வந்தான்; சந்தைக்கு வந்து மக்கள் கொண்டுவந்த பொருளைத் தான் நினைத்த விலையில் பறங்கி வாங்குகிருன். மக்கள் இவனின் கட்டளையை எதிர்க்கவும் முடியாது. மதுமயக்கத் திலே பறங்கி சந்தைக்கு வந்தான். மக்களின் உழைப்பை உறிஞ்சுகின்ற அவனுக்கு மதுவும் புகை யிலையும் பொழுது போக்கு வெறியில் பறங்கி சுங்

ــسد 9 حسب
காஃனத் தொலைத்துவிட்டான். பாடுபட்டுப் பார்த்து 61(த்ெதுக் கொடுத்தால் பறங்கி பாதிச் சுங்கான் தாக் கொடுப்பான். சுங்கானில் இரண்டு பகுதி டி கண்டு. ஒன்று புகையிஃல அடைத்து நெருப்பு மூட்டு வகம்குரிய பகுதி; மற்றது காம்புப் பகுதி. வாயில் வைத்துக் காம்பு மூலம் புகையை இழுக்க வேண்டும். பாதிச் சுங்கானைத்தான் பறங்கி பரிசாகக் கொடுப் பாடின் . முழுவதையும் கொடுக்க மாட்டான். அதா Gł gł பறங்கி தானும் வாழ மாட்டான். மற்ற வரை யும் வாழவிடமாட்டான். மெத்தப்படித்த வருக்கு இப்பொழுதுதான் மக்கள் கலையின் பெருமை விளங்கு கின்றது.
மா மூ  ைட க ளே க் கிட்டங்கிகளிலிருந்து வண்டி வில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் தொழிலாளர். அவர்கள் பஞ்ச இலக்கணம் படித்தார்களோ இல் ஃலயோ தெரியாது; ஆனல், எந்த நேரமும் பாட்டு அவர்கள் வாயில் இருந்து வரும் . அப்பொழுது அர சில் நிதியமைச்சராக இருந்த யு. பி. வன்னிநாயக் க வரவு செலவுத் திட்டத்தில் வரி குறைப்பதாகச் சொல்லியிருந்தார். அதனை வைத்துக்கொண்டு மக்கள் இலக்கியத் திற்கு ஏற்ப நான்கு அடிகளை அந்தத் கொழிலாளி இசைத்துப் பாடினர். நான் கேட்டு மகிழ்ந்தேன்.
" வன்னி நாயக்கர் என்ன சொன்னுர் ?
வரிகுறைப் பேன் என்று சொன்னுர் பின்னர் எங்களுக்கு என்ன குறை சரிபிடியடா மாவை மச்சான் "
ஆகவே, மக்கள் கலையின் பெருமையைத் தனித் தன்மையை, இனிமையை, எமது நாட்டவர் உணர வேண்டும். மறுமலர்ச்சிப் பாதைக்கு மக்கள் கலை வழிகோலும் .

Page 12
سس۔ 0! --------
மாருதப்புரவல்லிக் கப்பற்பாட்டு
கடலிலே தொழில் புரிகின்ற மக்களின் வாழ்க் கையை எடுத்துக் காட்டுகின்ற நாடகம் ஒன்று அண்மையில் அரங்கேறியது. உள்ளத்தைத் தொடு கின்ற கப்பற்பாட்டு அந்நாடகத்தில் இடம்பெற்ற மை  ெப ா ரு ந் து ம். அத் து ட ன் கப்பற் பாட்டு 1 மெட்டை வேறு ஒரு தேவைக்கும் அந்த நாடக ஆசி ரியர் கையாண்டுள்ளார். கடலிலே தொழில் புரி கின்ற மக்களின் வாழ்க்கையைச் சுரண்டுகின்ற முத லாளியைத் தொழிலாளர் மடக்கிப் பிடித்து விட்ட னர். மடக்கிப் பிடித்த முதலாளியைத் தொழிலாளர் பலர் கயிற்றிலே கட்டி இழுத்து வருகின்றனர். இப் படியான முதலாளியை இழுத்து வருகின்றபோது, கப்பற்பாட்டு மெட்டைத் தொழிலாளிகள் பயன் படுத்துகின்றனர். சுரண்டி வாழுகின்ற முதலாளியை இலகுவாக மடக்க முடியாது என்பது புதிய கருத்து. இந்தப் புதிய கருத்தை உணர்த்தப் புதிய மெட்டு இந்தப் பாட்டிற்குப் பயன் படுத்தப்படுகின்றது பழைய கப்பற் பாட்டு மெட்டு. பழைய கலை வடி வங்களுக்குப் புதிய சமுதாயத்தில் இடம் உண்டு. இது எதிர்காலத்திற்குரிய நல்ல அறிகுறி.
மக்கள் இசை என்ற உயிர்த்துடிப்புள்ள பெரிய பரப்பில் கப்பற்பாட்டு அடங்கும். அன்று தொடக் கம் இந்தக் கப்பற்பாட்டு பொதுமக்களின் கலைவாழ் வில் பல வகையிலும் பயன்பட்டு வ ரு கி ன் ற து. * பூதத்தம்பி விலாசம் 2 ‘ *" சகல குணசம்பன் னன் 3 ' நாடகம் போன்றவற்றில் கப்பற் பாட்டு இடம்பெற்றுள்ளது. வசந்தன் ஆட்டத்திலும் 4 இது கையாளப்படுகின்றது. ஆட்டக் காவடி நிகழ்ச்சி யிலும் இந்த மெட்டு விரும்பிக் கையாளப்பட்டு வரு கின்றது. பொதுமக்களுடைய பெரும் ஆதரவை இந்த மெட்டு இன்னும் இழக்காமலிருக்கின்றது :

- I -
இறக்காத கலையாக - வாழும் கலையாக இது திசழ் கின்றது. நாடகங்களிலே இந்தக் க ப் ப ற் பா ட் டு கானடா, புன்னக வராளி போன்ற இராகங்களில் பாடப்படுகின்றது. இந்தப் பாடலுக்குத் தேவையில் லாத சங்கதிகளை வைத்துப் பாடினுல் என்ன நடக் கும் ? அது தன் உயிர்த் துடிப்பையும் இனிமையையும் இழந்துவிடும் : உயிரற்ற உடலாகிவிடும்.
மக்கள் கலை, காலத்தை  ெவ ல் லு ம் தன்மை உடையது. மக்கள் கலையில் தனித்தன்மை யையும் அதனைப் போலி அறிஞர் பரம்பரையில் வந்த ஒரு சாரார் எதிர்த்தது பற்றியும் " கலையும் மரபும் ' என்ற நூலின் முகவுரையில் கூறப்பட்டுள்ளது 5. மக் கள் கலையாம் நந்தன் கீர்த்தனையை இயற்றி இறவாத புகழ் படைத்தவர் கோபாலகிருட்டின பாரதியார் .இவ ரைப் பெரியவர் இருவர் மதித்தது பற்றிப் பார்ப்பது மிகவும் பொருந்தும் . யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறு முகநாவலர் அருட்செல்வர் ; அறிவுக் கடல் : பெரும் கலைஞர். கோபாலகிருட்டின பாரதியாரின் பாட்டைக் கேட்டு நாவலர் பெருமான் ஒருநாள் மகிழ்ந்தார். மறுநாள் பாரதியார் கேளாமலே, நாவலர் பொருள் வழங்கித் தன் மகிழ்ச்சியைப் பாரதியாருக்குத் தெரி வித்தார். 6 கேளாமலே உரிய இடத்து மரியாதை செய்வது நாவலரின் உயர்ந்த பண்பு. பார்தியாரு டன் தொடர்பு கொண்ட மற்றவர் அறிஞர் மீனுட்சி சுந்தரம் பிள்ளை, இல்லை பார்க்கப்போனுல் அவரிடம் பாரதியார் வலிந்து தொடர்பு வைக்க விரும்பினுர் . பிள்ளையவரின் கருத்துப் படி நத்தன் கீர்த்தனையில் பல வகைப் பிழைகளும் இருந்தன . ஆகவே பாயிரம் பாடித்தரப் பிள்ளைவாள் மறுத்தார். பின்னர் பாரதி யாரின் வாயினுலே அந்த இசைப் பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார் இப்பிள்ளைவாள் : கேட்டு உள் ள ம் மகிழ்ந்து, பாயிரம் பாடிக் கொடுத்தார். 7 மக்கள் கலைக்கு நாவலர் பெருமான் காட்டிய ஆ த ர வும் பிள்ளைவாள் காட்டிய எதிர்ப்பும் இன்றும் இருச் கின்றன.

Page 13
- 2 -
மற்றப் பாரதியாராகிய சுப் பிரமணிய பாரதியா ருக்குத் தொடக்கத்தில் எதிர்ப்பு இருந்தது. இன்று சுப்பிரமணிய பாரதியார் பெரும்புலவரின் வரிசை யில் இடம் பிடித்துவிட்டார். சாதாரண புலவர் பாட்டைப் படைக்கின்ருர் . பெரும்புலவர் தன்பாட்டு மூலம் புதுயுகம் ஒன்றையே படைக்கின்ருர் . பாரதி யார் யுகம் ஒன்றையே படைத்துள்ளார். " செந் தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே ' எனப் பாடினர் சுப்பிரமணிய பாரதியார் . " பாயுது ' என்பதில் இலக்கண வழு வுண்டெனக் கற்ருேர் குற்றம் கண்டனர். காதினிலே தேன் பாய்ந்தால் காது செவிடாகி விடும் என நலன் ஆய்வுப் புலவர் குறைகூறுகின்றனர் : ஆனல் சுப்பிர மணிய பாரதியார் இறவாத புகழ் பெற்றுள்ளார். ** தில்லை வெளியில் கலந்துவிட்டாலவர் திரும்பியும் வருவாரோ ?' என்று கோபாலகிருட்டின பாரதி யார் பாடி மங்காத புகழ் பெற்றர். ' வீர சுதந்தி ரம் வேண்டி நின்ருர் ' எனச் சுப்பிரமணிய பாரதி யார் பாடிப் புதுயுகம் கண்டார். இப் பாரதியார் களை எதிர்த்தவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று கேட்குமளவிற்கு மறைந்துவிட்டனர். உயிர்த்துடிப் புள்ள செய்யுள் எப்போதும் காலத்தை வென்று நிற்கும். இந்த வகையில் பார்க்கப்போனுல் கப்பற் பாட்டும் அதன் இனிய மெட்டும் காலத்தை வென்று நிற்கின்றன. இப்படியான பாட்டு நாடகங்களிலும் வாத்தியங்களிலும், வானெலியிலும் மக்களை மகிழ் விக்கின்றது; தொடர் ந் தும் மகிழ்விக்கும்; இதில் ஐயமில்லை.
மாற்றம்
கப்பற்பாட்டுத் தனது களத்தில் - அதாவது கட லில் தொழில் நடக்கும் இடத்தில் - இன்று அருகிக்
கொண்டு வருகின்றது. இப்படி அருகுவதற்குப் பல காரணங்கள் உண்டு. நெய்தல் நில மக்களுக்குரியது

- 13 .
கப்பற்பாட்டு. துடுப்பு வலிக்கின்ற படகிற்குப் பத் ாக இன்று யந்திரப் படகு வந்துவிட்டது. பாய்க் கப்பலுக்குப் பதிலாக இன்று யந்திரக்கப்பல் வந்துள் ளது. பொழுது போக்கிற்காக இன்று கப்பல் தொழி லாளர் பாட்டுப் பாடுவது குறைவு. வானெலிப் பட்டை, ஒலிப்பதிவு நாடாக்களை கேட்டு மகிழ்கின் றனர். கடல் வீரர்களின் களைப்பைப் போக்க இன்று திரைப்படப் பாடலின் ஒலிப்பதிவுத் தட்டுக்கள் வந்து விட்டன. மாற்றம் தவிர்க்கமுடியாதது. இந்தச் சூழ் நிலையில் பழையகலை வடிவங்களுக்குப் புதிய களத்தை அமைக்கவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. இப்படி யான புதுப்பாதை அமைப்பைக் கலைஞர்கள் ஏற்று நடக்கவேண்டும். புதுப்பாதை அமைப்பதற்குப் பயன் படும் என்ற நம்பிக்கையிலேயே இந்த மாருதப்புர வல்லிக் கப்பற் பாட்டின் ஒரு பகுதி வெளியிடப்படு திமன்றது. இந்தக் கப்பற் பாட்டில் சில ஏற்கனவே ' வாழ்வு பெற்ற வல்லி " ஐ நாடகத்தில் வெளி வந் தவை. ஈழத்துத் தமிழ்பேசும் மக்களிடம் கலை ஆர் வம் மேலும் வளரவேண்டும் என்ற நம்பிக்கையிலே இப்பாடல் அச்சேறுகின்றது
பழந் தமிழகத்தில் கெய்தல்நில மக்கள்
தமிழ் மக்களுடைய தொழிலாகப் பண்டைக் காலந் தொட்டுத் திரைகடல் ஒடுவது இருந்து வருகி றது. நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்து அதற்கு இலக்கியமும் இலக்கணமும் கண்ட பெருமை தமிழ் b க்களுக்கே உரியது. ஒவ்வொரு நிலத்திற்கும் பண் இருந்தது. குறிஞ்சிப் பண் போன்றவை பின்னர் சாத் திரிய இசையில் இடம் பெற்றன. பண்டைய தமிழ் இலக்கியத்தில் பொதுமக்களின் வாழ்க்கையே பெரி தும் இடம் பெற்றது. பொதுமக்களின் வாழ்க்கை யைச் சங்கத்துச் சான்றேர் அழகுறப் படம் பிடித் துக் காட்டினர். கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலம். இப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் கட

Page 14
- 4 -
லுடன் நம் வாழ்வைப் பிணித்துள்ளனர். இந்த வாழ்க் கையை நெய்தல் நிலம் பற்றிய இலக்கியம் எடுத்துக் கூறுகின்றது.
பண்டைய தமிழ்மக்களின் சமுதாய அமைப்பில் மக்கள் குழாங்கள் இருந்தன. இந்தக் குழாங்களுக் குத் தலைவர் இருந்தனர். இந்தக் குழாத் தலைவர் பின் னர் படிப்படியாகக் குறுநில மன்னராயினர். குறுநில மன்னருக்குப் பின்னர் பெருநில மன்னர் தோன்றி னர். சேர, சோழ, பாண்டிய, பல்லவ பேரரசு அமைப்புக்களில் கடல் கடந்த படையெடுப்புக்கள் இடம் பெற்றன. கடல் தொழிலிலும், கலத்தில் பண் டம் ஏற்றிச் செல்வதிலும் ஈடுபட்ட நெய்தல்நில மக்களிடம் படைகளே ஏற்றிச் செல்லும் பொறுப்பும், கரையோரப் பகுதிப் பாதுகாப்பும், பகைவரைக் கட லில் எதிர்த்துப் போர் செய்கின்ற கடமையும் வழங் கப்பட்டன. மன்னனின் கடற்படையில் நெய்தல்நில மக்களே இடம் பெற்றனர். தொடக்கத்தில் ஐந்துநில மக்களும் சமுதாயத்தில் ஒத்த நிலையையே பெற்ற னர். ஆரியருடைய சாதிக் கட்டுக்கோப்புப் படிப்படி யாகத் தமிழ்நாட்டில் இடம்பெறத் தொடங்கியது. இதனுல் நெய்தல்நில மக்கள் தமது உயர்நிலையை இழந்தனர். ஆரியர்களின் வாழ்க்கையில் கடற்படை முக்கியமான இடத்தைப் பெறவில்லை. நிலப்படையே முக்கியமான இடத்தைப் பெற்றது, ஆரியரின் போர் நிலத்திலேயே நடந்தது. ஆற்றை ஆரியர் கடந்த னர் கடலைக் கடந்தனர் என்று கூறமுடியாது. ஆரிய ரிடம் வலிமை மிக்க கடற்படை இருந்திருக்குமாயின் " நாவாய் சத்திரியர் ’ என்ற ஒரு பிரிவு தோன்றி யிருந்தாலும் இருக்கும். தமிழ்நாட்டில் இருந்த கடற் படைவீரர் ' கடல் மள்ளர் ' என்ற பெயரைப் பெற் றிருந்தனர் என்பது இந்தக் கப்பல் பாட்டின் மூலம்  ெத ரி கி ன் ற து. மள்ளர் என்போர் வீரர். 9. இந்தக் கடல் மள்ளர் கப்பல் கட்டுந் தொழிலிலும்,

- 5 -
திரை கடல் ஒடும் முயற்சியிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். சோழப் பேரரசின் கடல் கடந்த முயற் சிக்குக் கடல் மள்ளரே உறுதுணையாய் இருந்தனர். 10 கடலுடன் வாழ்க்கையைப் பிணைத்துள்ள இந்த வீர ரியன் மரபிலே பின்னர் தாழ்வுநிலை ஏற்பட்டது. இந் கக் காலத்திலேதான் வடஇந்தியாவிலிருந்து வந்த ' குருகுலத்தார் ' தான் கடல் மள்ளர் என்ற கருத்து வலுப்பெற்றது போலும் . சங்க காலம் தொடக்கம் தமிழ்நாட்டிலே வாழ்ந்த நெய்தல்நில மக்களே இவர் எனக் கொள்வதே பொருந்தும்.
ஈழத்தில் கெய்தல்நில மக்கள் தொன்றுதொட்டு ஈழத்தில் நெய்தல் நில மக்கள்
வாழ்ந்து வருகின்றனர். " , வங்கம் மலிந்தனவாக ' வடஇலங்கைத் துறைமுகங்கள் இருந்தன. நாவாந் துறை என்பதே ' யம்பு கொலம் ' என்ற பெயரைப்
பெற்றது போலும் . நாவாந்துறைதான் பெளத்தம் இலங்கைக்கு வர முன்னர் வாழ்ந்த நாக மக்களின் துறைமுகமாக இருந்ததென ஆராய்ச்சியாளர் கருது வர். இங்குதான் பெளத்தர் வெள்ளரச மரக் கிளை கஃக்கொண்டுவந்து இறக்கினர். மேலும் 11 வடஇலங் கையில் வாழ்ந்த கடல் மள்ளரின் உதவியைச் சிங்கள மன்னர் காலத்துக்குக் காலம் நாடினர் இலங்கை யின் வடபகுதியில் உள்ள துறைமுகங்களின் பெயர் கள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. மேலும் தென்இலங்கையிலும், களுத்துறை, பாணந்துறை போன்ற இடப்பெயர் பலவும் இருக்கின்றன. யாழ்ப் பானைத்தின் கடற்படை பற்றி யாத்திரிகர் இபன் பட் (டுட்டா வியந்து எழுதியுள்ளார். 12. கடல் மள்ள பின் வீரத்தையும் அவர் போர்த்துக்கேயரை எதிர்த் துப் போராடிய திறமையையும் குவருே சு சுவாமிகள் மிகவும் விபரமாகக் குறிப்பிட்டுள்ளார். 13. கடல் பள்ளரின் தலைவன் குருகுலத் தலைவன் என்ற பெய
od 1 பெற்றிருந்தான்/புகுருகுலத் தலைவன் என்ற சிறப்

Page 15
புப் பெயரும் இவருக்கிருந்தது. குருகுல மக்கள் கடல் ஒடுவதுடன் மற்போர், வாள் வீச்சு, ஈட்டி எறிதல்' கவுண் எறிதல், யானையேற்றம், குதிரையேற்றம் என் பவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
** கல்லெறிதல் கவுண்கட்டுதல் பொல்லாத குருகுலத்தார் செயல் ’’
என்ற கூற்று இதனல் எழுந்தது போலும்.
வடபகுதித் துறைமுகங்களின் வீழ்ச்சி
வடபகுதித் துறைமுகங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தன. ஊர்காவற்றுறை, காங்கேசந்துறை தொண்டமனற்றுத்துறை, வல்லு வெட்டித்துறை, பருத்தித்துறை என்ற பெயர்கொண்டு முடிகின்ற, இடப்பெயர் பலவும் இருக்கின்றன. திருகோணமலே " திருக்கேதீசுவரம் போன்ற துறைமுகங்கள் மிகவும் உன்னதமான நிலையில் இருந்தன என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. சோழப் பேரரசுக் காலத் திலும் அதற்குப் பின்னரும் இத் துறைமுகங்கள் நல்ல நிலையில் இருந்தன. 15. போர்த்துக்கேயர் யாழ்ப் பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் யாழ்ப்பாணத் திலே நடந்த விடுதலைப் போராட்டத்தின்போது தென் னிந்தியப் படைகள் வடபகுதித் துறைமுகங்களில் வந்து இறங்கின. தொண்டைமான நு, பருத்தித் துறை போன்ற இடங்களின் பெயர்களை குவருே சு சுவாமிகள் மிகவும் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார். 16. ஊர் காவற்றுறையில் கடற்கோட்டையைக் கட் டிய ஒல்லாந்தர் காங்கேசந்துறையிலும் கோட்டை யொன்றைக் கட்ட முயற்சி செய்தனர். அடித்தளம் கட்டிய நிலையிலேயே இது கைவிடப்பட்டது. ஆங்கி லேயரின் ஆட்சித் தொடக்கத்திலும் வடபகுதித் துறை மூகங்கள் நன்கு செயற்பட்டன. பின்னர் இத்துறை முகங்கள் படிப்படியாகத் தமது உயர்நிலையை இழந் தன, கொழும்புத் துறைமுக அபிவிருத்தி, ஆங்கிலப்

سے 17 سے
ப்ேரரசின் குடியேற்றக் கொள்கை வடபகுதித் துறை முகங்களைப் பெரிதும் பாதித்தன.
கடல் சார்ந்த வாழ்க்கை :
கடல்மேலே செல்வது ஆபத்து நிறைந்த தொழில். *ஆகவே கடலைத் தமது வாழ்க்கையுடன் பிணைத் துள்ள மக்களிடம் தொன்றுதொட்டுக் கடவுள் நம் பிக்கை சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. பழந் தமிழ் இலக்கியம் இதற்குச் சான்று பகரும், நெய்தல் நில மக்களின் வழிபாட்டிலே கடவுளர் இடம் பெற் றனர். 17. கடலிலே நெய்தல் நில மக்கள் சிறப்பான வழிபாட்டுடன் இறங்குவர். கரை சேர்ந்தபின்னரும் நன்றிக்கடன் தெரிவிக்கும் முகமாக வழிபாடு செய் வர். நிலத்திலே தொழில் புரிகின்ற உழவர் நிலத்தை நிலமடந்தை, நிலமெனும் நல்லாள், பூமாதேவி என்ற சிறப்பான பெயரைச் சூட்டி வழிபட்டனர். நிலத் தைப் பெண் மைக்கடவுளாக்கினர். மொகஞ்சதாரோ. அரப்பா மக்கள் என்பதற்குச் சான்றுகள் உண்டு. 18 அதே போன்று கடலிலே தொழில் புரிகின்ற மக்கள் * கடல் அணங்கு " " கடல் தாய் சமுத்திர தேவி " போன்ற பெயர்களைக் கடலுக்குக் கொடுத்தமை இத குலேதான். இக்கடற் பாட்டிலும் கடல் மடந்தைக் காப்பு இடம்பெற்றுள்ளது. துறைமுகங்களை அடுத் துப் பல கோவில்கள் இருந்தன. இக் கோவில்களில் பலவும் கிராமியக் கடவுளர் வழிபாட்டு நிலையங்களாகவே இருந்தன. இக்கோவில்களில் பொங்கல், படையல் மடை என்பனவற்றுடன் கூத்து, பாட்டு, கும் மியாட் டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இப்படியாகப் பழக்கப்படுகின்ற பாடல்கள் கடலிலே தொழில் புரியும்போதும் பாடப்பட்டன. கடலிலே செல்கின்றபோது ஏற்படுகின்ற களைப்பைப் போக்கக் கடல் மள்ளர் கப்பற் பாட்டைப் பயன்படுத்தினர்.
ஆழ்கடலிலே ஆபத்து ஏற்படுகின்ற வேளையில் கடல்

Page 16
س- l8 --
மள்ளர் தமது குலதெய்வத்தை வேண்டிப் பாட்டு மூலம் வழிபாடு செய்தனர். இப்பாடல்களுக்குப் பல விதமான மெட்டுகளும் பயன்பட்டன. இந்த மெட் டுகள் மிகவும் இலகுவானவை; எல்லோருஞ் சேர்ந்து பாடக்கூடியவை; பொருளும் மிகவும் இலகுவானது. கப்பற் பாட்டு மக்கள் கலை. இந்த மெட்டே மெருகு ஊட்டப்பட்டுப் பின்னர் சாத்திரீய இசையிலும் இடம் பெற்றது.
கடவுளர் வழிபாட்டுடன் மட்டும் இந்தப் பாடல் கள் நின்றுவிடவில்லை. கடலிலே தொழில் புரிகின்ற மக்களின் வாழ்க்கைமுறையையும் சிக்கல்களையும் இப் பாடல்கள் மையமாகக் கொண்டிருக்கும்.
கப்பற்பாட்டுச் சிறியதாகவும் பெரியதாகவும் அமையும் . துடுப்பு வலித்தல், பாய் விரித்தல், பாய் இறக்குதல் போன்ற வேலை நடைபெறும்போது சிறிய பாடல்களைக் கடல் தொழிலாளர் பாடுவர். காற்றின் உதவியோடு கப்பல், படகு, சீராகச் செல்லும்போது கடல்மள்ளருக்கு அதிகம் வேலை இருக்காது. அப்பொ ழுது கதையை எடுத்துரைக்கின்ற பெரும் பாடல் களைப் பாடுவர். இதற்கு மத்தளம், உடுக்கு, கடம், தாளம் போன்ற கருவிகளும் இசைக்கப்பட்டன. பாட்டு ஒருவர் கூறிருக அமைந்தால் மள்ளர் ஒருமித் துப் பாடுவர். இருவர் அல்லது மூவர் கூற்ருக அமைந் தால் மள்ளர் குழுக்களாகப் பிரித்து நின்று பாடுவர். இம்மட்டன் று: கரையிலே கப்பல் கட்டும் வேலை, பழுது பார்க்கும் வேலை போன்றவை நடைபெறும் போதும் வேலைத் தளத்திலும் தொழிலாளர் இப் பாடல்களைப் பாடித் தமது களைப்பைப் போக்குவர். இப்படியான பாடல்கள் பெரும்பாலும் செவி வழியா கவே வந்துள்ளன. நெடுங்க தைப் பாடல் சில ஏட் டிலே பொறிக்கப்பட்டும் இருக்கின்றன. ஏடு குருகுலத் தலைவனின் வீட்டிலே பேணிப் பாதுகாக்கப்படும். இந்த ஏடுகள் இன்று அழிந்துபோயின.

- 19 -
மாருதப்புரவல்லி கதை :
இங்கு இடம்பெறுகின்ற கப்பம் பாட்டு ஒரு பகுதி மாருதப்புரவல்லியைப் பாட்டுடைத் தலைவி யாகக் கொண்டது. மாருதப்புர வல்லியின் கதையை * யாழ்பாண வைபவ மாலை ' விவரமாகக் கூறுகின் றது. 19. கப்பற்பாட்டிலே இந்தக் கதை சில மாற் றங்களைப் பெற்றுள்ளது. இப்பாட்டிலே நான்கு பகுதி உண்டு. அவையாவன : -
(1) மாருதப்புரவல்லியின் தந்தை திசையுக்கிர சோழன் தன் மகளின் நோயை நினைந்து, உணவை, தன் கடமையை, இசையை. ஏனைய அரண்மனைச் சுகங்களை மறந்து வாழ்கிறன் .
(i) இப்படித் துன்பத்தில் ஆழ்ந்து இருக்கின்றவனே துறவி சாந்தலிங்கன் கண்டு கேற்றி ஈழத்திற்குத் தீர்த்தயாத்திரை செய்யும் படி பணிக்கின்றன்.
(i) மாருதப்புரவல்லியைத் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றிவரும் கப்பல் புயலில் அகப்பட்டுத் தத்தளித்துக் கரை சேருகின்றது. வல்லியார் நகுலமுனிவரைக் கண்டு வணங்கி ஆசிபெற்றுத் தன் நோயைத் தீர்த்த மாடித் தீர்க்கின்றர்.
(tw) மாருதப்புரவல்லி, கோயிற் கடவைப் பூசாரி யார் சடையனுரைக் கண்டு தி ரு ப் பணி வேலை தொடங்க உத்தரவு பெறுகின்றர். இது நடந்து கொண்டிருக்கும் போது வல்லியாரின் திருமணம் நடைபெறுகின்றது. வல்லியாரின் பரிவாரம் தாய் நாடு திரும்பி இந்த நற்செய்தியை சொல்கிறது.
கோயிற் கடவை என்னும் இடத்தில் சடையனர் என்ற வேளாண் மரபுப் பூசாரியார் வெள்ளி வேல் ஒன்றை வைத்து வணங்கிஞர். இதுவே தமிழ் மக்க ளின் பண்டைய முருக வழிபாடு, இதனை உணர்த் தவே இன்றும் வெள்ளிவேல் ஒன்று மாவை மூல

Page 17
-س- 20 خش
மூர்த்திக்கு அருகில் வழிபாட்டிற்காக  ைவ க் க ப் பட்டுள்ளது,
மாருதப்புரவல்லி செவிவழிவந்த கதை :
வேல்முருகன் கட்டளைப்படி எழுந்த கந்தசாமி கோவில் :
ஒரு நாட்டிலே வழக்கத்திலிருக்கும் கதைகள் அந்த நாட்டின் வரலாற்றைச் சீரிய மு  ைற யி ல் அமைப்பதற்கு ஒரு வழியில் உதவும். ஈழத்தில் உள்ள மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் எழுந்த வரலாறு யாழ்ப்பாண வைபவ மாலையில் இடம்பெறுகின்றது. "நோய் நீங்கிய மாருதப்புரவல்லியார் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலைக் கட்டுவித்தார். மாருதப்புர வல்லி தனக்குக் குதிரை முகம் நீங்கின காரணத்தினுற் கோயிற் கடவை யென்னுங் குறிச்சிக்கு மாவிட்ட புரம் எனப் பெயர் சூட்டி அவ்விடத்திலே கோயிலைக் கட்டுவிக்க ஆரம்பித்து.'' என யாழ்ப்பாண வைபவ மாலே கூறும்.
*" கோயிற் கடவை ** என்பது இப்போதைய மாவிட்டபுரத்தின் பழைய பெயர் என்பது இதனுல் வெளியாகின்றது. இந்தக் கோயிற் கடவை பற்றிச் செவிவழி வந்துள்ள கதையை இங்கு ஆராய்தல் சாலவும் பொருந்தும். கோயில் இருந்தபடியாலேயே இதற்குக் கோயிற் கடவை என்னும் பெயர் வந்தது. யாழ்ப்பாண வைபவ மாலே குறிப்பிடத் தவறிய கதை இன்னும் இப்பகுதியில் வழக்கிலிருந்து வருகின்றது.
நோய் நீங்கிய வல்லியார் நகுலமுனிவரைப் பார்த்துக் கோயில் அமைக்க வேண்டும். எனத் தன் உள்ளத்தில் உள்ள விருப்பத்தைத் தெரிவித்தார். நகுலமுனிவர் வல்லியாரைப் பார்த்து ** மகளே "" இங்கு உள்ள காசிலிங்கப் பெருமானுக்குக் கோயில் வேண்டாம். கோயிற் கடவைப் பக்கம் உன் கவனத்

- 21 -
தைத் திருப்பு எனப் பணித்தார். கோயிற் கடவை என்ற குறிச்சியிலே பெரியதோர் மாமரம் பரந்து வளர்ந்து நின்றது. அதன் கீழ் வெள்ளி வேல் ஒன்றை நட்டு வழிபட்டு வந்தார்கள். அதன் அப்போதைய பூசாரியாகச் சடையர் என்னும் முதுபெரும் கிழவர் இருந்தார். அவர் நோன் பிற் சிறந்தவர். ஒரு நாள் மாலைப் பொழுதிலே விளக்கு வைத்துவிட்டுச் சடை யனுர் திரும்பினர். அவர் திரும்ப முன்னர் நெய்ப் பந்தத்தை யாரோ கையால் அவித்து வி டு வ து போலத் தெரிந்தது. கிழவனர் ஊன்றிக் கவனித்தார். மாமரத்தில் வழமையாக இருந்த இராசநாகம் விளக் கிலே சுற்றிக்கொண்டிருந்தது.
கோயிற் பா ம் பு த ரா னே? நல்ல பாம்பு. நான் பாலுTற்றி வளர்த்த பாம்பு என எண்ணிக் கிழவனுர் விளக்குக்குக் கிட்டச் சென்ருர் . என்றுமில்லாத வகை யில் அந்த நல்ல பாம்பு சீறிப் பாய்ந்து படமெடுத் தாடியது. மனம் உடைந்த கிழவனர் வீடு திரும்பி ஞர். இரவு உணவை அவர் கையாலும் தொடவில்லை. புரண்டு புரண்டு பாயிற் படுத்தார். நித்திரை வர வில்லை. ஈற்றிலே சற்றுக் கண்ணயர்ந்தார். கனவு கண்டார். அவர் வணங்கும் வேல் அவரின் தலைமேல் வந்திருந்தது. வேலைப் பிடித்த குழந்தை முருகன் தன் மறை உபதேசம் செய்த வாயைத் திறந்து பேசி ஞர். "" அப்பா ! சடையனரே !! நீங்கள் பரம்பரை யாக எம்மை வழிபடுகின்றீர்கள். அதன் பயன் வீண் போகவில்லை. எனக்கு இந்த மாமரம் போதாது. இனி நீங்கள் யோசித்துச் செய்யலாம் ". வேலும் மறைந்தது. முருகனும் மறைந்தார். கிழவனர் கண் ணைத் திறந்து பார்த்தார். தான் விளக்கு வைத்ததைத் தடுத்த நாகம் முருகன் கட்டளைப்படி வந்ததாக எண்ணி மனம் ஆறுதலடைந்தார்.
அடுத்தநாள் சடையனுர் சற்றுத் தயக்கத்துடன் கோயிற் கடவை வேலன் சந்நிதிக்கு வந்தார், பாம்பு

Page 18
ート22ー
மேல் மரத்திலுள்ள கிளையில் வளைய மிட்டு இருந்தது.
கோயிலில் உள்ள பெண் மான்குட்டி வந்து நின்றது.
முற்றின செந்தினை காற்றிலே கல கலத்தது. கரும்புச் சோலை காற்றிலே மெல்லிய ஒலியைக் கிளப்பிற் று. அந்த இடத்தில் ஏதோவொரு புதுமை இருப்பதைக் கிழவனர் உணர்ந்தார். பத்தி சி ரத்  ைத யு ட என் விளக்கை ஏற்றிஞர். சோழப் பேரரசின் வீரனுெரு வன் சடையனுர் முன்பு வத்து மரியாதையாக நின்றன் .
"வல்லியார் சற்று உங்களுடன் பேச விரும்புகி ரூர். உத்தரவு கிடைத்தால் உடனே அழைத்து வரு
வோம்’ என்ருன் அந்த வீரன். ' தவத்தாலுயர்ந்த வல்லியாரைக் காண என்ன தவம் செய்தேளுே தெரி ாது. உடனே அழைத்து வாருங்கள் ‘’ என்ருர்
சடையனர் . வாழ்வு பெற்ற வல்லியார் சடையன ரைக் கண்டதும் நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். சடை ய்ணுரும் வல்லியார் வணங்க முன்னரே நிலத்தில் விழுந்து வணங்கினுர் . 'நகுலமுனிவர் கட்டளைப்படி' இவ்விடம் வந்தேன். நீங்கள் வேலை வைத்து வணங் கும் இடத்தில் முருகனுக்கு ஓர் ஆலயம் எடுக்கலாம் என்பது என் எண்ணம். தங்கள் உத்தர வைக் கோரு கின்றேன் ' என வல்லியார் தாழ்மையுடன் கூறிஞர். ** நீங்கள் கேட்க முன்னரே எம்பெருமான் எனக்குக் கட்டளை பிறப்பித்துள்ளார். நான் நேற்று விளக்கு வைப்பதற்குக் கோயில் நாகம் இடந்தரவில்லே, கன விலே முருகன் தோன்றி எனக்கு மாமரம் போதாது என்று கூறினர் " எனச் சடையனர் சொன்னர். * என்னே முருகப் பெருமானின் பெருமை. நானும் நேற்றுக் கனவு கண்டேன். கோயிற் கடவையில் கோயில் கட்டி எழுப்பு. சடையனருடைய மாமர மும் வெள்ளி வேலுந்தான் எனக்கு உகந்தவை. எனினும் உன் விருப்பத்திற்கும் இடம் தருவேன். மாமரமும் வேலும் பழையபடி இருக்க வேண்டும். சடையனுர் எனக்கு வ ழ  ைம போல விளக்கு
 

-- 23 -س-
வைக்க வேண்டும். அருகில் நீ கட்டியெழுப்பும் கோயில் வான் முகட்டைத் தொட்டாலும் தொடும்" எனப் புத்தொளி வீசும் வேல் எனக்குக் கனவிலே பணித்தது ' எனத் தான் கண்ட கனவைக் கூறினர்.
இருவரும் முருகப் பெருமானின் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்தனர். பின்னர் வல்லியாரின் கட்டளைப் படி மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் திருப்பணி வேலை முடிந்தது. கோவில் கும்பா அபிடேகம் இனிது நடைபெற்றது. 20.
இந்தக் கதை, யாழ்ப்பாண வைபவமாலை கூருது விடுத்த ஒரு பகுதியை இங்கு தருகின்றது. மாவிட்ட புரம் கந்தசாமி கோயில் இரண்டாம் வீதியில் இப் பொழுதும் பெரியதோர் மாமரமும் நிற்கின்றது. பழைய கதையை வலியுறுத்தும் வகையில் இந்த மாமரம் பரந்து வளர்ந்து நிற்கின்றது எனக் கொள் வாரும் உளர். இதுவே தலவிருட்சம்,
காங்கேசன்துறையில் வாழுகின்ற மக்கள் சிறந்த முருகனடியார்கள். இவர்களே மாவிட்டபுரம் கந்த சாமி கோயில் கார்த்திகைத் திருவிழாவின் உபய் காரர். மாருதப்புர வல்லியாரின் கட்டளைப்படி காங் கேயனின் திருவுருவச் சிலை கயாத்துறையில் வந்தி றங்கியது. இதனைத் தெரிவிக்கின்ற கப்பல் திருவிழா வையும் இப்பகுதி மக்களே சிறப்பாகச் செய்து வரு கின்றனர்.
கப்பற்பாட்டு ஏடு :
இந்தக் கப்பற்பாட்டை எழுதிய புலவர் யாரெனத் தெரியவில்லை. இதன் ஏட்டுப் பிரதி யொன்று காங் கேசன்துறையைச் சேர்ந்த சைவத்திரு. மு. சண்மூ கத்திடம் இருந்தது. இவர் அரசினர் வைத்தியசாலை யில் மருந்தாளராகக் கடமையாற்றியவர் சிறந்த

Page 19
-- 24 سس
முருகனடியார். மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் கார்த்திகைத் திருவிழாவைச் செய்கின்ற முருகனடி. பார் குழாத்தை வழி நடத்துகின்ற பொறுப்பையும் இவரே ஏற்றுவந்தார். இந்த ஏட்டைத் தவிர இவரி டம் நாவாய் நூல்போன்ற வேறுபல ஏடுகளும் இருந் தன. இவரின் மறைவிற்குப் பின்னர் இந்த ஏடுகள் யாவும் காலதேவனின் தாக்குதலுக்கு இரையாகின போலும். •
கன்றி:
இப்பாடலை எனக்குப் பிரதியாக்கித் தந்தவர் என்னருமைத் தந்தையார் மூ வாாய் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலைமையாசிரியர் திரு. ஆ. தம்புச் சட்டம்பியார். 21. இதற்குரிய விளக்கத்தையும் இவரே தந்தார். சில விபரங்களைத் தெளிவுபடுத்திய வர் மாவை ஆதீன கருத்தர் அருமறையாளர், அந்தணர் திலகம் சு. துரைசாமிக்குருக்கள். இவ்விரு வருக்கும் எனது வணக்கம். w
இந்தப் பாட்டு, மக்கள் இலக்கியமாகவே திகழ் கின்றது. அந்தக் காலத்தில் மாவை ஆதீனத்தின் நாதசுவர வித்துவான்களாக இருந்து பெரும் புகழ் ஈட்டியவர் எஸ். சோமாஸ்கந்தர், சு. க. குழந்தை வேலு, நா. சோ. பக்கிரிசாமி என்போர் இந்தப் பாடலுக்குச் சாத்திரிய இசை வடிவம் கொடுத்துக் காவடி ஆட்டம், வடக்கு வீதி இசை நிகழ்ச்சி என்ப வற்றில் வா சி த் து வ ந் த ன ர்; வாசித்து மக் களின் பெரும் பாராட்டையும் இவர்கள் பெற்றனர். இந்தப் பாராட்டுக்குரிய இசை அமைப்பைப் பற்றி ஆலோசனை கூறி உதவியவர் நாதசுரப் பெரும் புல வர் நா. சோ, உருத்திராவதி. இவர் முன்னர் குறிப் பிட்ட பக்கிரிசாமிப் பிள்ளையின் தம்பியார். மாவை ஆதீனத்தைச் சேர்ந்த நாதசுர வித்துவான் இன் னிசைப் பேராசான் எஸ். கே. இராசாவும் விளக்

- 25 -
கக் குறிப்புகளைத் தந்துதவினர். இவர் முன்னர் குறிப் பிட்ட குழந்தைவேலுவின் தம்பியார்.
கப்பற்பாட்டுப் பற்றிக் காங்கேசன்துறை, மயி லிட்டி போன்ற இடங்களுக்குச் சென்று முதியவர் பலருடனும் உரையாடி விவரங்களைச் சேகரித்தேன். இவர்கள் எல்லோருக்கும் என் உளப்பூர்வமான நன்றி.
எனக்குப் பலவகையிலும் உதவியாக இருந்தவர் யூலரியன் கல்லூரி ஆசிரியர் புலவர் க. நாகலிங்கம். இவரின் ஆர்வத்தினல் இந்நூல் விரைந்து உருவாகி யது. இவரே கட்டுவன் வீரபத்திர வசந்தன் நூலை யும் பதிப்பித்துள்ளார். எனக்குப் பல வகையிலும் உதவியாக இருந்து ஆலோசனை வழங்கி ஊக்குவித் தவர் அறிஞர் நா. இராமலிங்கம். இவர்கள் எல்லோ ருக்கும் என் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவிப் பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந் நூலை அச்சிட்டுத் தந்தி குகன் அச்சகத்தாருக்கும் என் அன்பு கலந்த நன்றி. த. சண்முகசுந்தரம் .
1. " செல்வானத்தில் ஒரு ' சித்திரவேல் (1977) அச்சில் வராதது, தேசிய நாடக விழாவில்
இடம்பெற்றது. 2. " பூதத் தம்பி விலாசம் ' பதிப்பு கந்தையா
பிள்ளை (1924) பக். 89, 3. " " சகல குணசம் பன்னன் ‘* பாவலர் துரை
யப்பாபிள்ளை - சிந்தனைச் சோலை - தொகுப்பு நூல் பக்கம் 222. (1960)
4. " மட்டக்களப்பு வ ச ந் தன் கவித்திரட்டு ' தி. சதாசிவ ஐயர் பதிப்பு (1940) பக். 110. 5. ' கலையும் மரபும் ** த. சண்முகசுந்தரம்.
(1974) 6. ** கோபாலகிருட்டின பாரதியார் ** உ. வே.
சாமிநாத ஐயர். பக். 49. (1941)

Page 20
I 0. ll.
2.
l3.
1 4.
5.
6.
17.
8.
19.
20.
21.
- 26.--
அதே நூல் - பக். 45. *" வாழ்வு பெற்ற வல்லி " மாருதப்புரவல்லி நாடகம். த. சண்முகசுந்தரம் . (1962) ** Lo ait 6m fit 67 Jr si ** The Madras Lexion Page 3116 - Vol. 5. தென்இந்திய வரலாறு ஏ. கே. பிள்ளை பக். 168 '' Tamil Culture in Ceylon ' M. D. Ragavan. t_1.38 - 138 . * சங்கிலி நாடகம் ** பேராசிரியர் க. கண பதிப்பிள்ளை, முன்னுரை பக். XXwi (1956) ' The Spirituab and femporal Conquest of Ceylon ” Rev. Fr. Queyroz Rev. Fr. Perera’s Edition Page 633. Вk IV. “ Tamil Culture in Ceylon ' M. D Ragavar. Page 138
: Ibid' Page 138 '' Queyroz " - Same - Page 636 & 642 *" யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் "" பேரா 6)ílu i 5. 5600Tu6)ů9)airčar. Mahajana College Carnival souvenir. (1954) Page 39. * தமிழர் சால்பு " டேராசிரியர் சு. வித்தி யானந்தன். (1954) பக். 113, 132, " சிந்துவெளி நாகரிகம் ' இராசமாணிக்க ணுர் . * யாழ்ப்பாண வைபவமாலை ' குல. சபா நாதன் பதிப்பு. (1953) பக். 19 பக். 23: ** வேல் முருகனின் கட்டளைப்படி எழுந்த கந்தசாமி கோவில் "* த. சண்முகசுந்தரம். ** தினகரன் " 27-8-1964. *" கோயிற் கடவை ** இரா. சுந்தரசர்மா tuis. 24. (1965) * வாழ்வு பெற்ற வல்லி ** மாருதப்புரவல்லி நாடகம் . த . சண்முகசுந்தரம் , கப்பற்பாட்டு பக், 21, 24, 28.

- 27 -
மாருதப்புரவல்லி கப்பற்பாட்டு
பிள்ளையார் காப்பு
" க்தமியாம் மாருதப்புரவல்லிக் கப்பற் பாட்டை பெரித்த வழ காகவிங் குரைக்கவே நாம் வந்தோம்
க்தி விநாயகனே யுன்சீரான வருள் தந்து
2 க்தமமாய்ப் பாடி முடிக்கவுத வுமையா.
சிவன் காப்பு
(nருகனின் தந்தை யேயுமை பாகனே
அருமை சேர் மாருதப் புரவல்லிக் காதையை
.ொருமைசேர் கப்பற் பாட்டாய் இசைக்கநாம் உருகியே யும தருளை வேண்டின மேயையா.
முருகன் காப்பு
பேரழகி வள்ளி மணவாளா கார்முகில் வண்ணன் முருகோனே போர்கு ரருடன் புரிந்தவா நீமன முருகி யருளுமை யா.
நாமகள் காப்பு
நாமகளே நல்ல பூமகளே வாணி
11 மகளே மாருதப் புரவல்லி காதை 1ாமமுறு கப்பற் பாட்டாய்ப் பாடவருள் ாமமுறத் தந்தெம்மை யாளுவாய் ஏந்திழையே.
கடல் மடந்தைக் காப்பு மன்னன் மகள் வல்லியாரின் காதை தன்னை இங்கு இன் தமிழில் பாடவுந்தன் கண்பார்வை வேண்டும் ".ன்மடியிற் தவழுமுனது சிறுகுழந்தை நாமே அன்புடன் உன்கழல்கள் தொழுது பணிந்தோமே :

Page 21
* میس، 28 سس۔
வசனம்
தமிழ் நாட்டிலிருந்து வல்லியாரை ஏற்றி வரு கின்ற மரக்கலம் கடல் நடுவே சுழல் காற்றிலே சிக்கு கிறது. அப்பொழுது கடல் மள்ளர் அவலப்பட்டுத் தொழில் செய்யும் போது பாடுகின்றனர்.
கடல் மள்ளர்
ஏலையல்லோ ஏல வல்லி ஏலையல்லோ ஏல வல்லி
அந்தோ !
காற்றடிக் குதே அண்ணே கடல் குமுறுதே அண்ணே நாற்றிசையும் நடுங்குதே அண்ணே மேற்புறமும் மின்னுதே அண்ணே.
இனி, செல்லாய்ச்சிக் கப்பல் - எங்கள் செல்லாய்ச் சிக்கப்பல் பொல்லாத பாறையிலே - சிக்கி அல்லற்படுமே அண்ணே.
தளபதி விக்கிரமன்
சுழல் காற் றடித்தாலுமென்ன நீர்ச்
சுழிகள் பிரிந்தாலுமென்ன கைவிட மாட்டாரே தம்பி - நம்
கசாத்துறை விநாயகர் எம்மை காப்பாரே நீயிதை நம்பு - என்றும்
கசாத்துறை விநாயகரை நம்பி சேர்வோமே சோராதே திடமாய் - தம்பி நேராக நாமிரண்டு நாழிகையிற்ருவி போவோமே கசாத்துறையை இன்னே - தம்பி
போதாச்சு அஞ்சாதே விநாயகனைப் போற்று.

~سے 29 حس۔ .
கடல் மள்ளர்
கசாத்துறையிற் பிள்ளையாரே நாமே கைதொழுது நின்றேமே ஐயா பாங்கான கரையோரம் நீரே திங்கின்றிச் சேர்த்திடு வீரே அப்பமொடு அவலும் தருவோமே ஐயா அன்போடு மோதகமும் தருவோமே ஐயா.
விக்கிரமன்
ஆதலால்,
கசமுகனைக் கைதொழுது கப்பியை இழு சுக்கானைச் சுறுசுறுப்பாய்த் திருப்பியே பிடி தப்பாமல் துறை சேர்வோம் இப்போதே அடு
கடல் மள்ளர்
வசனம்
கடல் எனும் தாயே அன்பான மடந்தையே எங்களை வாழ வைக்கும் தாயே ! எங்களைக்
35 IT [T ii i D. FT ஆறிவாடி தாயே - தாயே ஆறிவாடி தாயே சீறிப் பாயும் தாயே - அணங்கே சினங் குறைந்து அருளுவாயே மன்னர் பெற்ற திருமகளே நாவாய் மாண்பு கொள்ள ஏற்றி கடலென்னு மாரணங்கே உன்னைக் கடியதா நீந்தி மிகத் தாண்டி தொலைவிலுள்ள புண்ணியஞ்சேர் தீர்த்தம் தோய்ந்து சேர்ந்த வினையினைக் கொல்லவும் அழகு இலாக் குதிரை முகம் நீங்கியே - நல்ல அழகுசேர் முகமரசி கொள்ளவும் அக்கரை தனைச் சேர முயல்கின்ருேமே.

Page 22
30
ஆதலால்,
ஆறிவாடி தாயே - தாயே ஆறிவாடி தாயே றிேப்பாயும் தாயே ட அணங்கே சினங்குறைதல் வேண்டும் ஏலையல்லோ ஏல வல்லி ஏலையல்லோ ஏலவல்லி.
தளபதி Gas GF 627 h
என் மள்ளரே ! கரையோர வாடை என் மூக்கில் அடிக்கிறது. கரை தெரியுதோ என உற்று நோக்கு விரே,
கடல் மள்ளர்
சுக்கானித் துரையாரே கேளும் துணையாக இருக்கின்ற யாபேரும் கேளும் கரையும் தெரியுதே - அண்ணே பருந்தும் பறக்குதே அண்ணே ஆதலால் நாம் கரையோரம் விரைந்து செல்வோம் அண்ணே.
கடல் மள்ளர் ஆட்டப் பாட்டு
காற்றடித்துக் கடல் குமுறி நாங்கள் மாற்ரு னின் கொடுங்கரத்தே பட்டே ஆற்ருது வாடுபவர் போலே நேற்று மிக வாடியிருந்தோமே நேற்றுப்பட்ட பாடதனைப் போக்கி ஏற்றமுடன் வாழ வழி செய்தார் ஆற்றல் மிகு ஐங்கரனுர் தாமே சீரான சிவன மர்ந்த செல்வன் பேராள கணபதியை இன்றே நேராகக் கரையேறிச் சென்றே நெஞ்சாரத் தொழு திடுவோம் நாமே.

--سس 3l سم
ஆதலால்,
பம்பரம்போல் அந்தரமாய்ப் பாடியாடி இம்மென்னும் பொழுதினிலே வேலையெல்லாம் தம் பிடித்துத் துடிதுடிப்பாய்ச் செய்துமுடிப்பீரே நங்கூரந் தனேநன்ரு ய் தாவ விடு அண்ணே தீங்குயாதும் தலைப்படாது தீரஞ்செய்து பாங்காகப் பணிபுரிந்து பயன்தாரு மண்ணே.
su। ଏf ଜst tr;
கசாத்துறையிற் பிள்ளையார் இனி ஒருபொழுதும் எம்மைக் கைவிடமாட்டார். வீச்சாக வேலையெல் லாம் செய்வீரே.
தளபதி வெண்முகிலே ஒத்தபெரும் பாயைப் பண்ணுக இப்போதே மெல்ல விடுவீரே வண்ணத் திரை தன்னை விரித்தே மன்னர் மகளிருக் கைதன்னை மாண்பாக மூடி மறைத் திடுவீரே.
கடல் மள்ளர்
ஏலேயல்லோ ஏலவல்லி ஏலையல்லோ ஏல வல்லி செல்லாச்சிக் கப்பல் - எங்கள் செல்லாச்சிக் கப்பல் பொல் லாங்கு இல்லாமல் நல்லாய் மிதக் குதே - துறை நில்லாது வந்ததுவே. ஆதலால்,
அண்ணன் மாரே தம் பிமாரே கேளும் விண்னென்று வேலைசெய்தல் வேண்டும்
சுக்கானியாரின் ஆணையை நீரே பக்கென்று செய்து முடிப்பீரே.

Page 23
- 32 -
கோமாளி
ஏலையல்லோ ஏல வல்லி ஏலையல்லோ ஏல வல்லி - எங்கள் சோற்றுக்கப்பல் நன்றே நேற்றுக் கரை வந்தே அலைமேலே அலைவந்து மோதி அதனுலே பெருங்கப்பல் தானுமேயாட தலையோடு தலே மோதுப் பட்டே வலைவலையாய் சக்தி வாயாலே விட்டேன்; ஆதலால்,
கற்பக விநாய கரே உம்மைக் கைதொழுது நின்றேனே நானே கசாத்துன்றயின் பிள்ளையாரே ஐயா கடுமையான பசியெனக்கு ஐயா அப்பமொடு அவலும் தாருமை யா அன்பான மோதகமும் தானே.
தளபதி
எண்டிசையும் மண்டலமும் கண்டறியாப் பண்டு டைய அண்டமெலாம் தெண்டமிடும் மண்டலமும் எண்டிசையும் கொண்ட மன்னன் நீடூழி வாழியவே.
அத்துடன்
ரேமுடன் போர்புரியும் வீரசிங்கம் நானே - மண்ணில் நேராக நின்று என் முன் சோராமல் வாள் பிடிக்க யாராயினு முளரோ சீரான செம்மலெங்கள் பாராளு மன்னன் மகள் பேரான தீர்த்தமதில்

- 33 -
நீராடு மாவலுடன் ஊரான எங்கள் நல்ல ஊரைவிட்டு வந்தாரே.
ஆதலால்,
மள்ளர்களே விரைந்து கரைக்குச் டுசல்வோம் -வாரீர். இருட்டுகின்றது, ஆதலால் விரைந்து தொழில்
செய்வீரே.
கோமாளி
எண்டிசையும் மண்டலமும் கண்டு குலுங்கிடவே பெண்டிலுக்குப் பயந்த கோமாளி நான்தானே தலைவாழை இலைபோட்டு மலைபோலச் சோறு குவித் து அலைஅலேயாய் ஆணம் விட்டு தலைகுலையக் குலையக் குனிந்து உண்ணும் வீரன் நானே.
ஆதலால்,
வீரர்களே மடைப்பள்ளித் தீரர்களே எழு மின்கள் அறுசுவை மிக்கவுணவை வாரீரே ஆக்கியுண்போம் மஜலபோலச் சோறுகுவித்து அலையாக ஆணம் விட்டு நிலைத்திருந்து உண்ண நான் பெரிதும் விரும்பினனே.
மள்ளர் ஆட்டம் கத்துபுனல் தாண்டியே - எங்கள் மெத்தப் பெருங்கப்பலே இத் துறைக்கு வந்ததே விரைந் தெழுங்கள் வீரரே போர் விளைக் குந் தீரரே

Page 24
- 3i -
வார்சிஃல வளைத் துமே கூர் மையம் யு வீசவே இருளை முற்றும் போக்கவே எரியும் பந்தம் எய்கவே ஏலையல்லோ ஏல வல்லி ஏலையல்லோ ஏல வல்லி செல்லாச்சிக் கப்பல் - எங்கள் செல்லாச் சிக் கப்பல் - எங்கள் செல்லாச் சிக் கப்பல் பொல்லாங்கு இல்லாமல் - என்றும் நல்லாய் மிதந்ததே - துறை நில்லாது வந்ததே.
ஆதலால்,
செல்லாச்சிக் கப்பலை நல்லா யொதுக்கிக் கட்டுவீரே.
தளபதி ஏழுல கும் புகழ்ந்தேத்தும் பண் பினணுப் அறமென்னும் இன் கோலேந்தி வாழுகின்ற பெருவீரன் சோழர் தம் குலத் த்லைவன் மகிழ்ந்து பெற்ற யாழ் நிகர்க்கும் குரல் மாது வருகின்ரு ஸ் நோய் தீர்க்க யாரும் போற்றும் ஈழமென்னும் மணி நாட்டீர் - எவ்விடமும் அணிசெய்வீர் இனிது நீரே.
கடல் மள்ளர்
கரைசேர்ந்த வல்லியாரை நிரை யாகச் சேடியர் வந்து முறை யாக உபசரித்து நிறைவாக வணங்கினரே வல்லியாரும் தானும் மெல்லமாகச் சோர்வு நீங்கி நல்லாக நாட்டுவளம் கேட்டு மகிழ்ந்திருந்தார்.

- 35 -
அப்போது,
கோழிப்பெண்கள் பாபேரும் வ1ழிய வாழிய என்றேத் தி வளமான கோயிற் கடவை வரலாறு கூறினரே நகுல முனி வாழுகின்ற நகுலாசலம் பற்றி விவரமாகக் கூறி விளங்க வைத்தனரே அருமைசேர் கீர்த் தத்தின் பெருமையைச் சொன்னுரே. புதுமைசேர் சிவலிங்கம் இருக்கின்ற இடம் பற்றி இனிதாக எடுத்துரைத்தார் கோயிற் கடவையில் வேலனை வணங்கும் சீலனம் சடையன் பெருமைதனைச் செப்பினர் இப்பெருமை தன்னை விரித்துரைக்கும் படி வல்லியாரும் வேண்டி நின்றனரே !
தோழிகள் மாதரசே மாதர சே தீதில்லாச் சடையர் ஆதரிக்கும் வேலவனுர் வீசு புகழ் நிறைந்தவர் பேரானை மாமரத்தின் கீழிருந்து மேனேக்கும் சீரான வரந்தருவார் கேட்டதெல்லாம் கொடுப்பார் கேட்டைப் போக்குவார் தணியாத பெரும் பிணியை விரைந்து நீக்குவார் கோயிலு மென்ருற் சிறிது கீர்த்தியென்ருலோ பெரிது மெய்யன்புடனே வழங்கும் திவ்வியமான படையலைக் கோயிலிலே எழுந்தருளும் வேலனுர் அன்புடனே ஏற்று உயர்வளிப்பார் !
(ஏனைய பாடல்கள் கிடைக்கவில்லை }

Page 25


Page 26