கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முருக வழிபாடும் கதிர்காமம் பாதயாத்திரையும்

Page 1


Page 2
எழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்த தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுதே உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்.
அடியேன் உடலும் விழும் போதம்
வேலும் மயிலும் என்பேன்
செந்தில் வேலவனே

355fast Dii) பாதயாத்திரையும்
ஆக்கம் திரு. க. கணபதிப்பிள்ளை
வெளியீடு பெரியதம்பி கந்தக்குட்டி (அரசரெட்ணம்)
78, லோவர் அன்றுஸ் பிளேஸ், முகத்துவாரம் கொழும்பு-15.

Page 3

நூற்பெயர்
ஆசிரியர்
பதிப்புரிமை
ஆசிரியர் முகவரி
பிரதிகள்
முதலாம் பதிப்பு
அச்சுப்பதிப்பு
முருக வழிபாடும் கதிர்காமப் பாதயாத்திரையும்
திரு. கே. கணபதிப்பிள்ளை
பெ. கந்தகுட்டி (அரசரெட்ணம்)
திரு. கே. கணபதிப்பிள்ளை B26/6, N. H. S. காக்காதீவு, கொழும்பு-15. தொலைபேசி : 523570
1000
O2-07-2000
யுனிலங்காஸ் 32, புனித அந்தோனியார் மாவத்தை, கொழும்பு-13. தொலைபேசி : 074-614438
*- f- eburt
முருக வழியாரும் கதிர்காமப் பாதயாத்திரைப் புத்தகத்தின் மூலம் வருகின்ற இலாபங்கள் அனைத்தும் மட்டக்களப்பு கழுதாவளை களுவாஞ்சிக்குடி முகவரியைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் குருகுலத்தை
சிசண்நடையும்
- வெளியீட்டாளர் -

Page 4
RAMAKRISHNAMISSION
CEYLON BRANCH 40, Ramakrishna Road, Colombo-6. Tel: 588253, 075-513805 E-mail : rkmGeureka.lk
வாழ்த்துரை
பக்தி சாதனையில் தீர்த்த யாத்திரை அல்லது ஸ்தல யாத்திரையும் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. பல நாட்கள் விரதம் இருந்து அதன் மூலம் மனதையும், புலன்களையும் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பின்னர் அந்த யாத்திரையை மேற்கொள்ளும் போது, யாத்திரையின் சிரமங்களை இலகுவில் ஏற்றுக்கொள்ள முடிவதோடு, அந்த யாத்திரையின் நிறைவாக அமையும். இறைவழிபாட்டின் பயனாகிய பக்தியையும், தூய்மையையும், அமைதியையும் உணர முடிகின்றது. இத்தகைய யாத்திரையை அடிக்கடி மேற்கொள்வதன் மூலம் மனதில் பக்தி வேரூன்றும்.
'முருக வழிபாடும் கதிர்காமப் பாதயாத்திரையும் என்னும் இச்சிறு நூலில் இரு முருக பக்தர்கள் தங்கள் யாத்திரையின் அனுபவங்களை விவரித்துள்ளனர். முருகபக்தர்கள் இதை வாசித்து யாத்திரையின் பயனை உணரலாம். தினசரிப் பிரார்த்தனைக்காகப் பல பாடல்களையும், தோத்திரங்களையும் இதில் இணைத்துள்ளதால், இந்நூல் இன்னும் பயனுடையதாக அமைகிறது.
 

@_ ஓம் முருகா
முன்னுரை முருகபக்தர்களே! கதிர்காம முருகன் மீது எனக்கு ஒரு அலாதியான பக்தி என்பதை விட ஆசை என்றே கூறவேண்டும். முருகனின் புகழ் உலகெலாம் பரவவேண்டுமென்ற ஆவல் கொண்டவன். 1951ம் ஆண்டில் முதல் முறையாக என்னை ஈன்ற தாயாருடன் எங்கள் கிராமமான பெரிய கல்லாற்றில் இருந்து கிராமம் கிராமமாக பிச்சை வாங்கி கால்நடையாகக் கதிர்காமம் சென்றோம். இது எங்களுக்கு உணவு கஷ்டம் காரணமாய் செய்யவில்லை. என் தாய் செய்து கொண்ட நேர்கடன் ஆகும்.
அந்த வருடம் உகந்தைக் கடற்கரையில் சுவாமி வந்திறங்கிய தோணியும் கொல்லாவிசாளுடன் சுமார் 60 அடி நீளம் இருக்கும். வேடன் நாய் கோடரி ஆகியவைகள் கிடந்தன. இத்தோணி மீது நான் ஏறி ஓடி விசாள்களால் மெல்ல மெல்ல நடந்து கொல்லாவால் ஓடி விளையாடியவன். இன்று இவ்வரிய காட்சி மறைந்து விட்டது. இது நமது பகுதியின் ஆலயதர்மகர்த்தாக்களின் கரிசனை அற்ற தன்மையே. இவைகள் இன்று பூமியுள்ளே புதையுண்டுள்ளன நமது பண்பாடும் சமயமும் பேணப்பட வேண்டும் என்ற ஆவல் கொண்டவன் நான் ஆனால் கொட்டவால் நாய் போன்றவன்.
இருந்தாலும் வருடம் தோறும் யாத்திரை செய்யும் போது நான் ஒரு சிலரை என் செலவில் அழைத்துச் செல்வேன். இது இப்பாத யாத்திரையின் மகிமையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற பேரவாவாகும். சென்ற வருடம் எனது கிராமத்தைச் சேர்ந்த எனது தோழனுமான பெரியதம்பி கந்தக்குட்டி (அரசரெட்ணம்) அவர்கள் தற்போது கொழும்பிலே வசிக்கிறார். நான் அவரை, நீங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டுமென வேண்டியதற்கிணங்க மாத்தளையில் இருந்து அடியார்களுடன் வருகிறேன். நீங்கள் கொழும்பிலிருந்து நேரே திருக்கோவில் வாருங்கள் என்றேன். அவரும் அவ்வாறே திருக்கோவில் வந்து சேர்ந்தார். ஆயினும் இவர் உருத்திராக்கமாலை கொண்டு வர மறந்து விட்டார்.
திருக்கோயிலில் எடுக்கவும் மறந்து விட்டோம். மறு நாள் நாங்கள்

Page 5
உகந்தை சென்று விட்டோம். உகந்தையில் நான் மாலை எடுத்துத் தரலாம் என கூறியிருந்தேன். உகந்தையில் பாணமையால் கடைவைப்பவர். அவர் மாலை விற்பது வழமையாகும் சென்றமுறை அவர்களது கடையுமில்லை, மாலையுமில்லை. நாங்கள் முருகனைக் கும்பிட்ட பின், மாலை இல்லாத மன வேதனையுடன் இவர் காணப்பட்டார். இவரது துயரைக் கண்ட எனது வாயில் இருந்து அரசி! நீ கவலைப்படாதே முருகன் மாலை தருவார் என்றேன். அன்று பிற்பகல் நாங்கள் கடற்கரை சென்றோம். கடற்கரை சிறுமலைக்குன்றில் அவரும் நவநீதன் என்ற என்னுடன் வந்தவரும் ரணசிங்க என்ற மாத்தளை பையனும் அமர்ந்திருந்தனர். மலையில் இருந்தவருக்கு பக்கத்தில் ஓர் உருத்திராக்கமாலை அப்படியே கும்பமாகக் குவித்திருந்தது. மாலையை எடுத்து என்னிடம் காண்பித்தார்.
முருகன் மாலை கொடுத்துவிட்டார் என்று இது இவருக்கு நடைபெற்ற சோதனையும் முருகனின் கருணையும், ஆட்கொள்ளுதலும் ஆகும்.
இதைவிட இவர் பொத்துவில் கிராமத்தில் மூன்று சிதம்பர எலுமிச்சம் பழம் வாங்கி தனது உடுப்பு பேக்கில் வைத்திருந்தார். எங்களுடன் வந்த மணிசாமியும் இவரும் தண்ணிர்த் தட்டுப்பாடான இடங்களில் உப்பு நீருடன் இதைப்பிழிந்து குடிக்கலாம் என வைத்துவிட்டனர்.
தண்ணிர் குடிக்க வேண்டிய இடத்தில் இவர் தேசிக்காயை வெட்டினார். தேசிக்காய் நாரத்தம்பழமாகக் காட்சியளித்தது. எல்லோரும் ஆச்சரியமடைந்தோம். இவருக்கு நடந்த அற்புதத்தை நினைவு கூர்ந்த அவர் முருகனின் பெருமையையும் பாதயாத்திரையின் பலாபலனும் பற்றித் தான் நூல்வெளியிட வேண்டு மென்று ஆசைப்பட்டார். இதற்கான செலவை அவரே பொறுப்பேற்று என்னை முடிந்தவரையில் எழுதித் தரக்கேட்டதற்கிணங்க இந்நூலை எழுதி வெளியிடும் பணியையும் அவரிடமே ஒப்புவித்து அவருக்கும் குடும்பத்துக்கும் யாத்திரிகர்கட்கும் முருகன் அருள் நிறைவாக கிடைக்க வேண்டுமென வேண்டிச் சமர்ப்பிக்கின்றேன்.
இங்ங்ணம் க. கணபதிப்பிள்ளை (இராசதுரை) முருகனடியான்

அணிந்துரை
எனது சொந்த ஊர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய கல்லாறு என்னும் கிராமம். நான் பரம்பரையில் பொற்தொழிலாளர் குலத்தைச் சேர்ந்தவன். நான் பெரிதாகப் படிக்கவில்லை. சாதாரண தரம் வரைதான் படித்தேன். குடும்பத்தின் வறுமை காரணமாகவும், மனோநிலையும் உயர்கல்வியை பெறமுடியாது செய்தது. இயல்பில் நாத்திகம் என்னை ஈர்த்தது. எமர்ஜன், கால்மாக்ஸ் டால்ஸ்டாய், ஈ. வெ. ரா. அண்ணா, மாக்சிய வெல்லி ஆகியோர் என்னை ஈர்த்தார்கள். அப்பொழுது எனது வயது இருபதுக்குள்.
மேற்குறிப்பிட்டவர்களின் கருத்துக்களைப் படிக்கப் படிக்க அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற கேள்விகள் என்னுள் எழுந்தன. ஈற்றில் மாயாவாதம் தான் நான் படித்தவை என்பதைப் புரிந்து கொண்டேன். ஒரு கட்டமைப்புக்குள் சகலமும் இயங்குகின்றன என்பதைப் காலம் தாழ்த்தி புரிந்து கொண்டேன். ஏன்? எப்படி? எங்கே? என்ற வார்த்தைகளைத் துருவிக் கொண்டிருந்தால் என் முடிவுக்கு யாரும் வருவர் என நினைக்கின்றேன்.
எமது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட பின் இடம் பெயர்ந்து வாழ்பவர்களில் நானும் ஒருவன். திரு. கணபதிப்பிள்ளை (ஒய்வு பெற்ற கிராம சேவகர்) அவர்களை நான் சுமார் நாற்பது ஆண்டுகளாகத் தெரிந்தவன். இவருடன் நான் பொதுத் தொண்டு சம்பந்தமாக வாக்குவாதங்களில் ஈடுபட்டவன். ஆனால் நண்பர்களாகவே இருந்துள்ளோம்.
திரு. கணபதிப்பிள்ளை (வேல்சாமி) அவர்களும் சூழ்நிலையால் கொழும்புக்கு இடம்பெயர்ந்தவர். நானும் இடம் பெயர்ந்தவனே. அவர் அரச சேவையில் ஒய்வு பெற்றார். நான் இன்னும் பொற்றொழிலையே செய்து வருகிறேன். எங்களுக்குள் ஆன்மீகம் சம்பந்தமாக கருத்துப் பரிமாற்றங்கள் அடிக்கடி நிகழும். ஆக இறைவன் சம்பந்தமாக எங்களுக்குள் ஒத்த கருத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் கதிர் காமப் பாத யாத்திரைகள் சம்பந்தமாக பேசிய போது “ஏன் நீர் எம்முடன் வரக்கூடாது என அடிக்கடி கேட்பார்”

Page 6
காலமும் நேரமும் வந்தால் கைகூடும் என்பேன். சுமார் எட்டு வருடங்களாக இது தொடர்ந்தது. சென்ற (1999ஆம் வருடம்) வருடம் நானாகவே “நானும் உங்களுடன் வருகிறேன்’ என்றபடி நான் பாத யாத்திரை குழுவில் திருக்கோவில் சென்று இடம் பிடித்துக் கொண்டேன். உருத்திராக்க மாலைகள் வீட்டில் நிறைய இருக்கிறது. எடுத்துக் கொள்ள ஞாபகம் வரவில்லை. சில சின்னங்கள் சில விசயங்களை கோடிட்டுக் காட்டும். உருத்திராக்கமும் யாத்திரிகர்களுக்கு அப்படியே!
திருக்கோவிலிலும் மாலை கிடைக்கவில்லை. பொத்துவில் பாணமையிலும் மாலை கிடைக்கவில்லை. முருகதலமான உகந்தை சென்றடைந்தோம். வேல்சாமியார் சொன்னார் இரவு உகந்தை முருகன் பூசைக்குப் பின் முருகனுக்கு எனது பூசை நடக்கும் என்று அவர் சொன்னதன் பின் தான் உகந்தையில் மாலை போட்டுத்தான் நடப்பேன் என்ற என் நிலை ஞாபகம் வந்தது. உகந்தையில் ஒரு பொருளும் வாங்க முடியாது. சிவசின்னங்கள் விற்பவர் யாருமிலர். எனவே மன வேதனையுடன் நானும் இரு நண்பர்களும் ஒருவர் மாத்தளையைச் சோந்த ரணசிங்க, மற்றவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நவநீதன் என்பவர். இவர்களிடம் மாலை இல்லாத வேதனையைச் சொல்லி கடற்கரையை நோக்கிச் சென்ற வேளை கடல் அருகே ஒரு சிறிய குன்றில் உருத்திராக்க மாலை ஒன்று குவித்து வைக்கப்பட்டிருந்தது. நான் முதலிலும் மற்றையோர் பின்பும் கண்டு குதூகலித்து அம்மாலையை எடுத்து கண்களில் ஒற்றி பின் இரவுப் பூசையில் நான் வேல்சாமியார் கையால் அந்த மாலையை அணிந்து எமது பிரயாணத்தை தொடர்ந்தோம். எனக்கு மாலை கிடைத்தது பெரும் அற்புதம் என்றே சொல்வேன்.
அடுத்து பாதயாத்திரைக் குழுவைச் சேர்ந்த மணி என்பவர் (கொழும்பைச் சேர்ந்தவர்) பொத்துவிலில் உணவுப் பொருட்கள் வாங்கும் போது சொன்னார் ‘பிரயாணத்தில் தண்ணிர் தாகம் எடுக்கக்கூடிய இடங்கள் உண்டு” என்று நான் கொடித்தோடை இனத்தைச் சேர்ந்த மூன்று எலுமிச்சை பழங்களை வாங்கி பிரயாணப் பெட்டியில் வைத்தேன். நாம் உகந்தை கடந்து தொலையாப்புல, நாவலடி மேடு போன்ற பல

இடங்களை பல நாட்களாக கடந்த பின் ஒருநாள் மாலை நாலு மணி இருக்கும். நான் மணிசாமி சேகர் சாமி மூவரும் மிகவும் களைத்து நடந்து கொண்டிருந்தோம். எங்களுக்குக் கொஞ்சம் தண்ணிர் குடித்தால் தேவலை போல் இருந்தது. என்னிடம் எலுமிச்சம்பழமும் சீனியும் இருந்தது. சேகர் சாமியிடம் தண்ணிர் மற்றும் பாத்திரம் இருந்தது. எனவே எங்களுடன் வந்த மற்றைய யாத்திரிகளை முன் போகச் சொல்லி விட்டு நாங்கள் மூவரும் தங்கி எங்கள் பாரங்களை இறக்கி வைத்து விட்டு எலுமிச்சம்பழம் கரைத்துக் குடிக்க ஆயத்தமாகி ஒன்றையெடுத்து வெட்டினேன். அது உடனே நாரத்தங்காயாக மாறி பூவாக உதிர்ந்தது. மற்றதை வெட்டினேன். அதுவும் பூவாக உதிர்ந்தது.
மற்றவர்களை விட்டு விட்டு நாங்கள் மூவரும் செய்தது பாவ காரியம் என்பதை உணர்ந்து வியாளைக்காட்டில் எல்லோரும் அந்த நாரத்தங்காயை பகிர்ந்துண்டோம். இதை என்னவென்று சொல்லலாம். முதல் முறையிலேயே முருகன் எனக்கு இவ்வளவு அற்புதம் காட்ட நான் என்ன தவம் செய்தேன். நான் ஓர் சாதாரண ஆசாபாசமுள்ள மனிதன்தான். நான் இன்னும் முழுமனிதனாகவில்லை. மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன். அவன் அருளை என்றும் எப்போதும் யாசிக்கின்றேன். இப்படியான இப் புண்ணிய யாத்திரையைப் பற்றி இந்துக்கள் அறிய வேண்டும். நான் விளங்கிக் கொண்ட அளவில் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட மதம் இந்து மதம். அதன் தொன்மை விஞ்ஞானத்தால் அறிய முடியாததொன்று ஆராய ஆராய பிரபஞ்சம் போல் விரிந்து கொண்டே செல்லும். குறுகிய கால இந்தப் பூலோக வாழ்க்கையில் இந்துக்களாக பிறந்தது பெரும்பேறு. எனவே அதன் வழி நின்று மதக்கடமைகளையும் முருகவழிபாட்டு அநுட்டான உண்மைகளையும்
தெளிந்து பிறப்பற்றுப் பிறவா பெருவாழ்வை அடைய முயற்சிப்போமாக!
அன்புடன், பெ. கந்தக்குட்டி (அரசி) (முருக பக்தன்)

Page 7
爱_ பூரீமுருகாநம
கலியுகத்திலே விஞ்ஞான வளர்ச்சி முன்னேறி மனித சமுதாயம் தினசரி புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வருகின்ற போதிலும் மானிட ஜென் மத்தால் தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வரும் மாற்றமடையாத ஓர் விடயம் இறை வணக்கம் ஒன்றே ஆகும். இந்த வகையிலே மிகவும் பழமை வாய்ந்த சமயமென்றால் அதுவும் இந்து மதமேயாகும்.
மனிதன் தனது அன்றாட தேவைக்கேற்ப நிகழ்வுகளை மாற்றி அமைத்துக் கொள்கின்றான். ஆயினும் இந்துமத தத்துவப்படி மனிதனுக்கு பிறப்பும் இறப்பும், இறப்பும் பிறப்பும் குறிப்பிட்ட சிலரைத்தவிர மற்றையோர்க்கு மாற்றமடையாமலே நடைபெறும் நிகழ்வேயாகும். இதில் இந்துக்கள் எதுவித சந்தேகமும் இன்றி அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
விதி என்பது என்ன?
பக்தர்களே நமது இந்து மதத்தினர் சிலர் தமது கையாலாகாத் தனத்தையும் சோம்பேறித்தனத்தையும் மூடிமறைக்க தமது கூற்றை ஆதாரப்படுத்த விதியைத் துணைக்கு அழைக்கின்றனர். எதையும் விதி என்று கூறிச் சமாதானம் அடைகின்றனர். இதற்கு ஒரு மூட நம்பிக்கையான ஆதாரக் கருத்தையும் கூறுகின்றனர். அது என்னவென்றால் அன்றெழுதும் (கர்த்தன்) இறைவன் அவன். அழித்தெழுதப் போவதில்லை என்பதாகும். அதாவது பிரம்மனால் நம் தலைமீது எழுதப்பட்ட எழுத்துப்படியே நடக்கும். அந்தப் பிரமனால் கூட அதை மாற்ற முடியாது என்பதாகும்.
நமது மதத்தோடு சம்மந்தப்பட்ட புராணங்களிலே கூறப்படுகின்ற சம்பவங்களின்படி பார்த்தால் இவைகள் அனைத்தும் விதியன்று. உதாரணமாக இவையாவும் இராம இராவண யுத்தம், மகாபாரதம் சூரசங்காரம் போன்றவை. அனைத்தும் விதி என்பதை விட மதி கெட்டமையால் வந்த விளைவுகள் என்று கூடக் கூறிவிடலாம். விதியை மதியால் வுென்ற வரலாறு நிறைய உண்டு என்பதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலனாகும். விதியின்படிதான் ஒரு மனிதனின் வாழ்க்கை அமைகின்றதென்றால் இந்த விதியை நமக்கு அளிப்பவர் இறைவன் தானே. (இது அன்றெழுதும் (கர்த்தன்) இறைவன் அழித்ததெழுதப் போவதில்லை என்பதை உண்மையாக்கும்.)

பிறப்பும் இறப்புமில்லாத இறைவன் நமக்குப் பிறப்பையும் இறப்பையும் மட்டுமே கொடுக்கின்றார் என்பது உண்மையாகும். எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையுமான இறைவன் மனித சமுதாயத்தை மட்டும் ஏன் ஏற்றத் தாழ்வுடன் படைக்க வேண்டும். உதாரணமாக ஏழை, பணக்காரன், போகி, ரோகி, அறிஞன், மூடன் என்றும் ஒளவையார் கூறுவது போன்று அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதிலும் கூன், குருடு, நொண்டி, முடம், ஊமை, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்கின்றார். இவர் கூறுவது போன்று ஏன் பேதமாகப் படைக்கின்றார். இறைவன் நீதியற்ற படைப்பைப் படைக்கின்றாரா? படைப்பிலே பாரபட்சம் காட்டுகின்றாரா? என்ற கேள்வி நம்மிடையே தோன்றுகின்றதல்லவா?
ஆகவே நாம் இப்பிறப்பில் செய்யும் நன்மை தீமைகளுக்கு அமையவே நமக்கு மறுபிறப்பும் வாழ்வும் வளமும் அமைந்து விடுகின்றது என்பதே உண்மையாகும். முற்பிறப்பில் நாம் விதைத்தது எள்ளானால் எள்ளையும் கொள்ளானால் கொள்ளையும், இப்பிறப்பில் நாம் அறுவடை செய்கின்றோம். ஆன்மாக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பிறப்பிறப்பு மீண்டும் மீண்டும் நம்மைப் பற்றி நிற்கையில் இதற்கு இறைவன் பொறுப்பாளி அல்லவே. நமது கர்ம வினையே காரணமாகும். பிறப்பையும் இறப்பையும் நமக்குக் கொடுத்த இறைவன் நமக்குப் பகுத்தறிவையும் தந்து நம்மை நாமே முக்தி நிலைக்கு இட்டுச் சென்றால் மோட்சம் என்ற வீடுபேறை அடையலாம் என்பதையும் உபதேசித்து விட்டு அவர் ஓய்ந்து விட்டார். அவர் மீண்டும் செயல்பட வேண்டியில்லையே. நாம் வினைவிதைத்தால் வினையைத்தான் அறுப்போம். அன்றி வினை விதைத்து தினையை அறுக்க முடியுமா? விதியின் பிரகாரமே சகல ஆன்மாக்களும் கஷ்ட நஷ்டங்களையும், இன்ப துன்பங்களையும் அனுபவிப்பன என வைத்துக் கொண்டால் பின் நாம் ஏன்? கடவுளை வணங்க வேண்டும். பூசை புனைக்காரம் என்றும் தேர், திருவிழா எனவும் தீர்த்த யாத்திரை, தானம், தருமம், எனறெலலாம் செய்ய வேண்டும். ஏன் உழைக்க வேண்டும். எல்லாம் விதிப்படியே நடக்குமென விட்டுவிடலாமல்லவா! நாம் ஏன் நம் குழந்தைகளுக்காக கல்வி புகட்ட வேண்டும். கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். விதியின் பிரகாரம் அவர்கள் தானே வளர்ந்து தானே படித்து விலங்குகள் பறவைகள் போன்று உணவு தேடி உண்டு வளரலாமல்லவா? இச்சந்தர்ப்பத்தில்தான் நாம் முற்பிறப்பில் செய்த நன்மை தீமைகளின் பலாபலனை அனுபவிக்கின்றோம். அதன் பலாபலனே நமக்கு இவைகள் கைகூடிவருகின்றன. எனவே விதியை நாமே உருவாக்குகின்றோம். அதாவது வாலிபத்தில் உழைக்கும் ஒரு
2

Page 8
மனிதன் தன் வயோதிப காலத்தில் கஷ்டமின்றி வாழ மற்றவர்களிடம் கையேந்தி வாழாது உண்ண உடுக்க உறங்க வேண்டுமானால் அவன் தன் உழைப்பில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து வைத்தால் கஷ்டமின்றி வாழ முடியும். இது அவனது பகுத்தறிவின் திறமையாகும்.
இதே போன்று இப்பிறப்பில் நல்ல காரியங்களைச் செய்து புண்ணியபலனைச் சேமித்து வைப்பவர்கள் மறு பிறப்பில் நல்ல வசதியும் வாய்ப்பும் அமையப் பெற்ற பிறப்பை எய்தி வாழ்கின்றனர். இதை விதி என அழைத்தால் பொருத்தமானதாகும். ஆகவே இவ்விதியை உருவாக்கும் திறமை நமது கையில்தான் உண்டு என்றால் சாலவும் பொருத்தமானதே. இந்த விதியையும் மதிகொண்டு மாற்றி விடலாம் என்பது இந்து மதக்கோட்பாட்டின் உயர்ந்த தத்துவமாகும். இவ்விதி என்னும் பாவச் செயலால் ஏற்படும் கஷ்டங்களையும் துன்பங்களையும் போக்க வல்லது இறைவழிபாடேயாகும். இறைவழிபாடு மூலம் விதியை மாற்றி அமைக்க முடியும் என்பதற்கு நான் பின்வரும் சான்றைக்கூற விரும்பி அதுபற்றிய விளக்கத்தையும் தங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
அருணகிரி நாதரும் வரலாறும்
திருப்புகழ் பாடியவர் அருணகிரிநாதர் என்பது நாம் அறிந்த உண்மையாகும். ஆயினும் அவர் வரலாறு பற்றி விரிவாக அறியாத நிலையிலேயே நாம் அவர் பாடிய திருப்புகழைப் பாடுகின்றோம். அருணகிரியார் ஓர் சாதாரண முருகபக்தர். இளமைப்பருவத்திலே பல தீய பழக்கங்களைப் பழகி வாலிபத்தில் வனிதையர் வசமாகி மேக நோயால் பீடிக்கப்பட்டு நோய் தீர்க்க முடியாமல் மரணமே தனக்கு நிம்மதி தருமென எண்ணி திருவருணை என்னும் ஊரில் உள்ள வல்லாள மன்னனின் அரண்மனையில் தெற்கு வாசலில் அமைந்திருந்த முருகப் பெருமானது சன்னிதானம் சென்று கோபுரத்தின் மீது ஏறி எம் பெருமான் முன்னிலையில் தற்கொலை செய்யப் பாய்ந்தார். முருகப் பெருமானே உடனே மயில் மீது பறந்து வந்து அந்தரத்திலே அருணகிரியைத் தாங்கி பூமியில் இறக்கிவிட்டு சும்மா இரு சொல்லற எனக்கூறி மறைந்தார். அருணகிரியாரின் நோய் அக்கணமே நீங்கப் பெற்றது நக்கீரன் அருளிய திருமுருகாற்றுப்படைப் பாடலைப்பாடி,
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரை யான் பின் செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடிய வினை தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வாழ்வே.

என்று பாடிய அக்கணமே விராலி மலை சென்று தவம் இருக்கலானார். ஆயினும் முருகவேற் பெருமான் அவரையணுகி அருணகிரி சும்மா இரு சொல்லற என்றேன். நீ இங்கே வந்திருக்கின்றாயா நீ வயலூருக்கு வருக எனக்கூறி மறைந்தார். அருணகிரியாரும் அங்கிருந்து வயலூர் சென்றார். முருகனோ அருணகிரியாரை அழைத்து என்னைப் பாடுக என்றதும் அருணகிரியார் ஐயனே! கல்வியறிவு அற்ற நான் தேவர்க்கும் மேலான தேவனை எப்படிப் பாடுவேன் என்று அழுதார். உடனே முருகவேற் பெருமான் தன் கைவேலால் நிலத்தினைக் குத்தியதும் தண்ணிர் வெளிப்பட்டது. அந்த நீரிலே அருணகிரியாரை தோயச் செய்து அவர் நாவிலே சரஸ்வதி வாலை அட்சரம்தாவி “முத்ததைத்தரு பக்தித் திருநகை” என அடியெடுத்துக் கொடுத்தார். அருணகிரியாரின் நாவிலே திருப்புகழ் கரைபுரண்டோடியது. இப்படி அருணகிரியார் தொடர்ச்சியாக ஒவ்வோர் முருகன் கோயில்களிலும் சென்று பாடத் தொடங்கினார். அன்று தொட்டு அருணகிரியார் பின்னே மக்கள் ஆதரவு பெருகத் தொடங்கியது.
மனித வாழ்க்கையிலே ஒரு மனிதன் கெட்டுப் போவதைப் பார்த்து யாரும் வேதனைப்படமாட்டார்கள். பெற்றோர், உற்றாரைத் தவிர, யாராவது முன்னேற்றமடைந்தால் அதைப் பார்த்துப் பொறாமைப்பட ஆயிரம்பேர் தோன்றுவார்கள். அருணகிரியார் வாழ்க்கையிலும் இது நிகழ்ந்தது. பிரபுடதேவன் என்னும் ஓர் அரசனின் மந்திரி சம்பந்தாண்டான் என்பவன் அருணகிரியாரின் பின்னே மக்கள் கூட்டம் திரளுவதைக் கண்டு அவன் பொறாமை கொண்டான். தனது புகழ் மங்கி வருவதை உணர்ந்தான். அரசனின் மனதை திசை திருப்ப வல்லவன், உடனே அரசனிடம் சென்று அரசே! யாரோ அருணகிரியாம் அவன் பின்னே பல பெண்கள், கூட்டம் கூட்டமாய் போகின்றனர்.
அவன் ஏற்கனவே பெரிய காமுகன் என்றும் இவர் முன்பு நோய்வாய்ப்பட்டிருந்த வரலாற்றையும் அரசனுக்குக் கூறிவிட்டான். அரசனும் மந்திரியும் சேர்ந்து அருணகிரியாரை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர். மறுநாள் மன்னன் அருணகிரியாரை அழைத்து நீர் நாட்டுக்கும் மக்களுக்கும் கெடுதல் செய்கின்றாய் இங்கு நீர் இருக்கக்கூடாது என் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றான் மன்னன். அருணகிரியாரோ செய்வதறியாது திகைத்து, மன்னா நான் முன்னர் ஒருகால் தவறு விட்டவன்தான். தவறு விட்டவன் திருத்திக் கொண்டால் சமூகம் அவனை ஏன் ஏற்றுக் கொள்வதில்லை. நான் தற்கொலை செய்ய முயன்றேன். அவ்வேளை முருகனே மயிலில் வந்து என்னை தாங்கிப் பாதுகாத்தார். ஜெபமாலையும் தந்தார் என்று கூறினார்.

Page 9
அருணகிரியாரை பழிவாங்கத் திட்டமிட்ட மந்திரி மன்னனை அணுகி மன்னா! நான் காளி உபாசகன். என்னால் காளியம்மனை வரவழைத்துக் காண்பிக்க முடியும். இவரால் முடியுமானால் இவரது புழுகுவார்த்தைகளைக் கைவிட்டுவிட்டு முருகனை அழைத்துக் காண்பிக்க முடியுமா? எனக் கேளுங்கள் அரசே என்றான். அரசனும் அருணகிரியாருக்கு ஆணையிட்டான் நாளை சபை கூடும்வேளை நீர் உன் முருகனை வரவழைத்து காட்ட வேண்டும். இல்லையேல் என் மந்திரிக்கு அடிமை ஆகவேண்டும். இது அரசன் ஆணை எனக்கூறிச் சென்றுவிட்டான். மந்திரியும் மிக்க மகிழ்ச்சியடைந்தான். அன்றிரவு அருணகிரியார் உலகமாதாவான காளியம்மனைத் தியானம் செய்து ஆணவம் கொண்ட மந்திரி சம்பந்தாண்டானின் அழைப்புக்குத் தாயே நீர் போகக்கூடாது என்று வேண்டினார். தாயாரும் பிள்ளையின் புகழ்பாடும் பக்தனின் பணிவான வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதி கூறி மறைந்தாள். -
மறுநாள் காலை 7.00 மணி சபை கூடியது. சம்பந்தாண்டான் காளியை வரவழைத்தான். காளித்தாயோ வரவில்லை. ஆயினும் அவன் நான் போட்டியில் வெல்ல வேண்டிய அவசியம் இல்லையே அருணகிரியல்லவோ வெற்றிபெற வேண்டும் என்ற தோரணையில் மன்னனைத் தூண்டிவிட்டான்.
மன்னன்! மறுகணமே அருணகிரி நீர் செயல்படும் என்றார். அருணகிரியாரோ அழுதார். முருகா! எனக்கு உன்னைத் தவிர எதுவும்" தெரியாது. என்னைக் காக்க திருவருள் செய்ய வேண்டும் என்று வேண்டி பின்வரும் திருப்புழைப் பாடலானார்.
அதலசேடனாராட அகில மேருமீதாட அபினகாளி தானாட - அவளாட அதிரவீசி வாதாடும் விடையில் ஏறுவோர் ஆட அருகுபத வேதாளம் அவையாட
மதுரவாணி தானாடமலரில் வேதனாராட மருவு வாணுலோர் ஆட - மதியாட வசனமாமி யாராட நெடியமாமனாராட மயிலும் ஆடி நீயாடி வரவேணும். கதை விடாத தோள்வீமன் னெதிர் கொள் வாளியால் நீடு கருதலார்கள் மாசேனை - பொடியாகக் கதறுகாளி போர்மீள விஜயனேறு தேர்மீது கனக வேத கோடுதி அலைமோதும்
5

உதித மீதிலே சாயும் உலகமீடு சீர்பாத உவனமூர்த்தி மாமாயோன் - மருகோனே உதயதாம மார்பாண ப்ரபுடதேவமாராஜ உளமுமாட வாழ்தேவர் - பெருமாளே.
மேற்கூறப்பட்ட திருப்புகழைப் பாடியதும், முருகன் ஆறு வயதுச் சிறுவனைப் போல் தோற்றத்துடன் ஆறு தூண்களிலும் இருந்து முருகன் சபையோரை நோக்கி வந்து காட்சி கொடுத்து மறைந்தார்.
அரசனும் அவையோரும் அருணகிரியால் அளவிட முடியாத அப்பனைக் கண்டு ஆனந்தக் கடலில் மூழ்கினர். இச்சம்பவத்தையடுத்து அருணகிரியாரின் பின்னே மக்கள் கூட்டம் மென்மேலும் பெருகத் தொடங்கியது. இதைக் கண்ணுற்ற மந்திரிக்கு இன்னும் பொறாமை வளரத் தொடங்கியது. காலம் செல்ல பிரஷ்டமகாராசன் தன் பார்வையை இழந்து விட்டான். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த சம்பந்தாண்டான் அரசனை அணுகி அரசனிடம் மகாராஜா! பாரிசாதமலரைக் கொண்டு வந்து தங்கள் கண்களில் ஒற்றினால் கண்பார்வை மீண்டும் வந்து விடும் எனப் பலவைத்தியர்கள் கூறுகின்றனர். ஆயினும் இம்மலரைக் கொண்டு வரக்கூடிய திறமை அருணகிரியிடமே உண்டு என்று அருண்கிரியாரை மாட்டி வைத்தான்.
அருணகிரியாவது பாரிசாத புஷ்பமாவது இவரால் கொண்டுவர முடியாது. அரசன் அவரைக் கொன்று விடுவான் என்று சம்பந்தாண்டான் கற்பனை கனவு கண்டான். மந்திரியின் கபடமறியாத மன்னன் அருணகிரியாரை அழைத்து தன் கண்பார்வையை மீட்டுத் தந்தால் நீர் இந்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய நன்மை புரிந்ததாகக் கருதப்படும் என வேண்டினான். அருணகிரியாரும் திருவருனைக் கோயில் சென்று முருகன் கோயிலில் கோபுரத்தின் பின் சென்று முருகனை நினைந்து வணங்கி அவர் சக்தி துணை கொண்டு தம் உடலில் இருந்து ஆன்மாவை வெளியேற்றி கிளிரூபமெடுத்துப் பறந்து சென்று பாரிசாதமலர் கொண்டுவந்தார். இந்த இடைவேளை நாட்களுள், சம்பந்தாண்டான் அருணகிரியாரின் உயிரற்ற உடலை கல்லறைக்குள் வைத்துக் கட்டி அடக்கம் செய்துவிட்டான்.
அருணகிரியார் என்னும் கிளி பாரிசாத மலருடன் வந்தது மகாராஜன் மட்டுமல்ல. அவ்வூரில் உள்ள கண்பார்வையை இந்த அனைவருக்கும் பார்வை திரும்பியதாம். ஆயினும், அரசனும் மக்களும் மந்திரியால் அருணகிரியாரின் உடலுக்கு நடந்த கதிகண்டு துயருற்றனர். அருணகிரியாரோ அரசனை அணுகி சம்பந்தாண்டானை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டார். பின் கிளியான அருணகிரியார் இலங்கையை
6

Page 10
நோக்கிப் பறந்து வந்து, முதல் முதலில் திருகோணமலையை அடைந்து கோணேஸ்வரக் கோயிலில் (இது கி. மு. 12000 ஆயிரம் ஆண்டுக்கு முன் கோகர்ணம் அல்லது தென்கைலாயம் என் அழைக்கப்பட்ட தலமாகும்.) இங்கு கல் ஆலவிருட்சத்தின் கீழ் நிஷடையில் இருக்கும் சிவன் முன் பார்வதி பாலனை நினைந்து,
(திருப்புகழ் இல. 431-பக்கம் 291)
விலைக்கு மேனியில் அணிக் கோவை, மேகலை தரித்த வாடையும் மணிப்பணுமாகவே மினுக்கு மாதர் களிடக்காம மூழ்கியே - மயலூறி
மிகுத்தகாமியனெப் பாருளோ ரெதிர் நகைக்கவே யுடல் எடுத்தே வியாகுல வெறுப்பதாகியெ யுழைத்தே விடாய் படு - கொடியேனைக்
கலக்கமாகவே மலக் கூடிலே மிகு பிணிக்குளாகியே தவிக்காமலே யுனை கவிக்குளாய் சொலி கடைத்தேறவே செயு - மொருவாழ்வே
கதிக்கு நாதனியுனைத் தேடியே புக ழுரைக்கு நாயெனை யருட்பார்வையாகவே கழற்குளாகவே சிறப்பானதாய் அருள் - தரவேணும்
மலைக்கு நாயக சிவகாமி நாயகர் திருக்குமாரனென முகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவையாள் மகிழ்தருவேளே வசிட்டர் காசியர் தவுத்தான யோகியர் அகத்யமாமுனி இடைக்காடர் கீரனும் வகுத்தபாவினில் பொருட் கோலமாய்வரு - முருகோனே நிலைக்கு நான் மறை மகத்தான பசுரர் திருக்கோணாமலை தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூ தியில் - வருவோனே நிகழ்ந்து மேழ்பவ கடற்சூறையாகவே
யெடுத்த வேல் கொடு பொடித்துளதா எறி நினைத்தகாரிய மனுகூலமே புரி - பெருமாளே.
7

என்று மனவேதனையுடன் நான் இனியும் இந்த மாயைக்குள் வீழாமல் நினைத்த காரியம் கை கூடவே அருள்புரியப்பா எனப் பாடியருளினார். −
முக்கிய விளக்கம் என்னவெனில் திருகோணமலையில் கோணேசப் பெருமானின் திருவிழாவின் போது ஒரு நாள் தெப்பத்திருவிழா வாகும் சுவாமியை பாதைகள் இணைத்து அதாவது பெரிய இயந்திரம் பூட்டிய படகுகளை இணைத்து கடல் உள்ளே சென்று மலையை வளைத்து வந்து, ஒரு பூசை நடைபெறும் இது கடலினுள் செய்வது இந்த இடத்தை திருமலை மக்கள் கிளிப்பாடு என்று இன்னும் அழைக்கின்றனர்.
இங்கு இப்படிப் பாடிவிட்டு ததீசி முனிவர் சிகண்டி முனிவர் போன்றோரும் அகஸ்தியர் போகர் போன்றோர் வதியும் பகுதி எனப்படும் உகந்த மலையை நோக்கிப் பறந்து சென்று இவ்வாலயத்தின் சிறப்புப் பற்றி பின்னர் குறிப்பிடுகின்றேன். இவ்வாலயத்தை ‘நாவலம் பதி திருநாவலூர்’ என அழைப்பதுண்டு. இங்கு சென்று பின்வரும் திருப்புகழைப் பாடினார்.
(திருப்புகழ் இல. 431-பக்கம் 291)
கோலமறை யொத்த மால்தனிலுற்ற கோரமதன் விட்ட - கருணையாலே கோதில் தருக்கள் மேவு பொழிலுற்ற கோகிலம் மிகுத்த - குரலாலே ஆலமென விட்டு வீசு கலைபற்றி ஆரழலிறைக்கும் - நிலவாலே ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த மாசை கொடனைக்க - வரவேணும் நாலுமறை கற்ற நான் முகனுதித்த நாரணனும் மெச்சும் - மருகோனே நாவலர் மதிக்க வேல்தனை யெடுத்து நாக மற விட்ட - மயில்வீரா சேல் எனும் விழிச்சி வேடுவச் சிறுக்கி சீரணி தனத்தில் - அணைவோனே சீதவயல் சுற்று நாவல் தனிலுற்ற தேவர் சிறை மீட்ட - பெருமாளே.

Page 11
என்று பாடிவிட்டு பின் கதிர்காமம் சென்றார். உகந்தை மலை முருகன் கோயிலின் சிறப்பை அருணகிரியார் எப்படிக் கூறுகின்றார் என்று நோக்குவது நமது கடமையாகும். காரணம் இற்றைவரை இப்படி ஒரு திருப்புகழ் பாடப்பட்டிருப்பதை பலர் மட்டுமென்ன, சிலர் கூட இதுவரை அறியவில்லை என்று திடமாகக் கூறுவேன். நான்கு வேதங்களையும் குறிப்பிட வல்ல மாலையணிந்து சூரன் விட்ட நாகபாணங்களை அழிக்க மாயாசக்தியை அழிக்க கிரெளஞ்சத்தை அழைத்ததும் ஆன வேல் உகந்து எடுத்த இடமான (கோதில தருக்கள்) முதலைகளும் உடும்புகளும் நிறைந்து காணப்படும் மரங்கள் நிறைந்த (கோகில மிகுத்த குரல்) ஏராளமான குயில்களின் ஒசை கேட்கும் சீதவயல் சுற்று சுற்றிவர குழுமை நிறைந்த வயல் வெளிகளைக் கொண்டதுமான கானகத்தே கல்லுமலையை (ஆரழலிறைக்கும்) ஒளி பொருந்திய வேலினால் ஆழமாகத் துளைத்ததுமான வேல் உருவாக வந்து நாவல்மரம் மீது வேலாகக்குடி கொண்ட பெருமானே! இப்பகுதியில் வேடுவச் சிறுக்கியின் தனம் மீது அணைவோனே. நான்முகனின் உற்பத்தியின் மூலப் பொருளான நாராயணமூர்த்தி மகிழும் மயில்வாகனப் பெருமானே என் உடல் இழந்து எனதாவி தளர்வுற்றுத் தவிக்கும் என்னை ஆசை கொண்டு அணைக்க வருவாய் அப்பா என்று உகந்தை மலை முருகனை அழைத்து வழிபட்டுவிட்டு கதிர்காமம் சென்றார்.
கதிர் காமத்திலே எம்பெருமான் முன்னிலையில் (13) பதின்மூன்று திருப்புகழ் பாடிவிட்டு அதாவது
1. திருமகளுலாவும் இருபுயமுராரி என்று முதலாவது பாட்டும் 2. அகிலன் மாறு மாறாத கலதி பூத வேதாளி என தொடங்கி
(பதின்மூன்றாவது பாட்டாக வருபவை) ஒலை கொண்டு யமனுடைய தூரரென்றும் பாடிவிட்டு நேராக திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானின் திருநடனமும் கணிடு களித்துவிட்டு திருவண்ணமலை சென்று நடாப்பிறப்பும் முடியாதோ என்ற திருப்புகழைப் பாடி கிளிரூபம் விட்டு ஜோதி வடிவமாகி எம்பெருமானின் இதயத்தில் சென்று சங்கமமானார்.
நாடாப்பிறப்பும் முடியாதோ எனக்கருதி நாயேனரற்றும் மொழி - வினையானால் நாதா திருச்சபையில் நான் ஏறாதுசித்தமென நாலா திசைக்கும் உன - தருள் பேசி
9

வாடாமலர் பதவி தாதா எனக்குழறி வாய்பாறி நிற்கு மெனை - அருள்கூர வாராய் மனக்கவலை தீராய் எனத்தொழுது வாரேன் எனக் கெதிர் முன் - வரவேணும்
சூடாமணிப் பிரவை ரூபா கனத்தஅரி தோலாசனத்தி உமை அருள்பாலா தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமி தோழா கடப்பமலர் - அணிவோனே ஏடார் குழற் சுருபி ஞானாதனத்திமிகு மேராள் குறத்தி திரு - மணவாளா ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரத்திரதளை ஈடேற வைத்த புகழ் - பெருமானே.
அடியார்களே இது கற்பனைக் கதையல்ல. இது 1642ம் ஆண்டளவில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களாகும். நமது இளைஞர்களுக்கு இவை பற்றிய விளக்கங்கள் முறையே கிடைக்காமையினால் இவர்கள் இது பற்றி அறியாமல் இருப்பது. நியாயமானதே இப்படியாக அருணகிரியார் தான் கூறுகின்றார். விதியையும் மதியால் மாற்ற முடியும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். விதி எப்படி மாறும் என்பதை (கந்தரலங்காரம் பாட்டு இல. 40 ஐ பாருங்கள்)
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேன்கடம்பின் மால்பட் டழிந்தது பங்கொடியார் மனம் - மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் - அவன் கால்பட் டழிந்தது என் தலைமேல் அயன்கை யெழுத்தே.
என்று மிகவும் அழகாகக் கூறுகின்றார். ஒரு மனிதன் என்ன பிழைகள் விட்டிருந்தாலும் அப்பிழைக்காக மனம் வருந்தி உண்மையில் தூயவனாகி உளத்தூய்மையுடனும் பக்தியுடனும் எம்பெருமான் முருகனிடம் தன்னை ஒப்புவித்து அவன் பாதங்களில் தன் சிரசை ஒப்புவித்து சரணடைந்து வழிபட்டு வாழ்வானாகில் அவன் தலை மீது பிரமனால் எழுதப்பட்ட பிரம்மனின் கையெழுத்தும் மாறிவிடும் என்று கூறுகின்றார். ஆகவே விதியை நாம் நமது இடையறாத பக்தி வழிபாடு என்பன மூலம் மாற்றி அமைக்க முடியும் என உணரவேண்டும்.
10

Page 12
முருகப் பெருமான் கந்த சாயுச்சியம் என்னும் முக்திப் பேற்றை அளிக்க வல்லவர். அவரை வணங்குவோர் பிறப்பு என்னும் மாயை நீங்கப் பெற்று பிறவாத உன்னத நிலையை அடைவார்கள் என்பதற்கு இன்னுமொரு சான்று கீழே தருகின்றேன். முருகனை முறையே வழிபடுவோருக்கு பிறப்பு இறப்பு இல்லை என்கின்றார். கந்தபுராண ஆசிரியரான கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்கள்.
கந்தபுராணத்திலே சிவபெருமானே தேவர்களிடம் கூறுவதாக கூறுகின்றார் கச்சிரியப்பர் அவர்கள்.
ஆதலின் நமது சக்தி அறுமுகன் அவனும் யானும் பேதகமன்றல் நம்போற் பிரிவிலன் யாண்டும் நின்றான் ஏதமில் குழவி போல் வான் யாவையும் உணர்ந்தான் சீரும் போதமில் அழிவும் வீடும் போற்றினார்கருள வல்லான்
என்று கூறுகின்றார். தேவர்களே ஆறுமுகன் வேறு யாரும் இல்லை. நானும் அவனும் ஒன்றேதான் எங்களுள் பேதமில்லை. நானோ பஞ்சாட்சரத்தான் அவனோ சடாட்சத்தான் பன்னெடுங்காலமாக உள்ளவன் பார்க்கையில் சிறுகுழந்தையைப் போல் இருப்பான். யாவையும் அறிந்தவன் எனக்கே பிரணவப் பொருளுரைத்தோன். வல்லோன் தன்னை வழிபட்டுப் போற்றுவோர்க்கு வீடு பேறு என்னும் பிறவாத நிலையை அளிக்க வல்லவன் என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ் விலங்கை மாநகரம் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். ஆயினும், இவ்விலங்காபுரியின் வரலாறு வேறு எங்கேயோ உள்ளது. இடைச்சங்க கால நூலாகிய பட்டினப்பாலையில் 'ஈழத்துணவும் காழகத் தாக்கமும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இராவணன் பதினெட்டு அண்டங்களையும் அரசாண்டவன். இந்தச் சின்னம் சிறிய இலங்கையை மட்டுமா ஆண்டிருப்பான். இவ்விடயத்தை இந்நூல் மூலம் விளக்க முடியாமைக்கு வருந்துகின்றேன். ஆயினும் இலங்கையில் கி. மு. 18,000-12,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால எல்லையில் பொத்துவில் பகுதியில் அதாவது பொதியில் பொதிகை + இல்லம் மூன்றாவது தமிழ்ப் பேரவை இருந்ததாகவும் இத்தமிழ் சங்கத்தின் தலைவராக முருகப்பெருமானே இருந்துள்ளார்.
இப்பேரவை சித்த வைத்திய நூல்களை வெளியிட்டுள்ளது. இத்தமிழ் பேரவைத் தலைவரான முருகப் பெருமானால் முருகாசலம் என்னும் வைத்திய நூல் எழுதப்பட்டதாக சித்த வைத்திய ஆய்வுகளின்படி
11

காணமுடிகின்றது. இச்சங்கத்தின் தலைமைப் புலவராக அகஸ்திய மா மகரிஷி இருந்ததாகவும் அவரால் அகஸ்தியம் 21,000 ஆயிரம் என்னும் வைத்தியரத்தனச் சுருக்கம் எழுதப்பட்டதாகும். ஆதாரம் சித்த வைத்தியர்கள் ஆராய்ச்சி மன்றத்தின் தவிசாளர் திரு. க. பாலசுப்ரமணியம் அவர்கள் 22-09-96இல் வீரகேசரியில் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையாகும்.
கந்தபுராணமும் பலாபலனும்
கச்சியப்ப சிவச்சாரியார் அவர்கள் கந்தபுராணத்தை எழுதிய வேளை அவர் ஒவ்வோர் நாளும் எழுதி முடிந்தவற்றை முருகனின் திருவடிகளில் கொண்டு வைப்பாராம். முருகப்பெருமான் அவைகளில் திருத்தம் செய்து வைப் பாராம் . இப்படி முருகப்பெருமானின் கண்காணிப்புடன் எழுதப்பட்டதே கந்தபுராணமாகும். பாடுவோர் கேட்போர் அனைவரையும் காக்கும் திறனுடையதாம் கந்தபுராணம்.
பலர் கந்தசஷ்டி விருதமிருப்பார்கள். சோறு, கறி சமைத்து வைத்து விட்டு ஆலயம் வருவார்கள். சுமார் 2.00 மணியாகும் போது பல பெண்கள் பூசகர் பூசையை முடிக்கவில்லையே என புறுபுறுப்பார்கள். யாரும் கந்தபுராணத்தைப் பாடிப் பயன் சொல்ல முனைந்தால் இதெல்லாம் கேட்க நேரமில்லை. அவர் பேசினால் பேசட்டும், மைக்கை ஒவ் பண்ணிவிட்டுப் பூசையை முடியுங்கள் என்று பசி மேலிட்டால் எலி போன்று கற கற புறு என்பார்கள். இப்படியான ஓர் நிகழ்வு எனக்கே எனது கிராமத்தில் நிகழ்ந்ததென்றால் வேறு கூறவும் வேண்டுமா?
கந்தபுராணப் பாடல்களையும் பயனையும் அதாவது கருத்தையும் ஒரு மனிதன் மனனம் செய்து தெரிந்து கொண்டால் அவர் இந்து மதத்தின் 1/10 பகுதியை ஒரளவு அறிந்தவர் எனப்பொருள்படும். ஏனெனில் இந்து சமய புராண வரலாறு நிறைய அதில் உண்டு. விரதம் அனுஷ்டிப்பவர்கள் இனியாவது திருந்துவார்கள் என்று நினைக்கின்றேன். பசித்து, நினைத்து விழித்திருப்பதே விரதமாகும். கந்தபுராணப்படி சூரனுக்கும் சுவாமிக்கும் ஒருநாள் இருநாள் போரா நாம் அனுஷ்டிப்பது 6 நாள் மட்டுமே தேவர்களது ஒருநாள் மானிடர்களாகி நமக்கு 60 வருடமாகும். இப்படிப் பார்த்தால் தன் மகன் போரில் வெற்றி பெற்று வரவேண்டுமென 60 வருடமாகும். இப்படிப் பார்த்தால் தன் மகன் போரில் வெற்றி பெற்று வரவேண்டுமென 60 நாட்கள் உண்ணாமல் உறங்காமல் இருந்தாவாம் உமை அம்மையார். இதன்படி பார்த்தால் மானிட வருடம் 60x60 ஆகும். சுவாமி காலையில் போருக்குப் புறப்படும்
12

Page 13
போது யாரும் கட்டுச் சோறு கட்டிக் கொடுத்தனுப்பவில்லையே. பிற்பகல் இருட்டியதும் சுவாமியும் படையும் ஏம கூடம் திரும்புவார்கள். அதன் பின்தான் அவர்களுக்கு பசி இருந்திருந்தால் கூட புசித்திருப்பார்கள்.
நாமோ நமது உள்ளத்துள் உள்ள சூரனுடன் கெட்ட குணங்களுடன் போர் செய்யும் போது புராணம் படித்து சுவாமிக்குப் போர் முடியும் வேளை வந்ததும் அபிஷேகம் செய்து அதன்பின் தான் களை போக்க வேண்டும். ஆனால் இந்த விடயத்தில் தான் பக்தர்களே சுவாமிக்குப் போரில் வெற்றி கிட்டிய மாதிரி நீங்கள் வெற்றியடையாமல் வருடாவருடம் தோல்வியே அடைந்து வருகின்றீர்கள் என்றே கூறலாம். நானறிந்த வரையில் தம்பிலுவில் என்னும் ஊரில் ஒரு பெரியார் அவர் பெயர் சங்கமன் போடி இவர் கந்தபுராணப் பாடலை முறையே பாடி அதற்கு அழகாக கருத்தும் கூறுவார் அவ்வளவு பாட்டையும் மனப்பாடம் செய்து கொண்ட பாக்கியவான் புத்தகம் இன்றியே பாடுவார். இவர் தனக்குப்பின் இத்துறை மங்கி ஆலயங்களில் பாடும் பணி நின்று விடாதிருக்க தன்முயற்சியினால் பல சீடர்களை உருவாக்கியுள்ளார். ஏறக்குறைய பத்து பேருக்கு மேற்பட்ட திறமைசாலிகளை உருவாக்கி யுள்ளார். இவர்கள் ஒவ்வொருவரும் பத்து பேரை உருவாக்க வேண்டு மென நான் ஆசைப்படுவதனுடன் முருகன் அவர்களை நல்ல சீரும் சிறப்புடனும வாழ வைப் பார் வைக க வேண டுமெனவும் பிரார்த்திக்கின்றேன்.
இந்த பெரியாரது குடும்பத்தை நானறிவேன். அவரது மனைவி மக்கள் அனைவரும் நல்ல செல்வச் செழிப்புடன் உயர்ந்த உத்தியோகத்துடன் பிறந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சேவையாற்றும் பதவியுடன் வாழ்வது கண்டு நான் பெருமைப்படுவது உண்டு. அவர்களது பணி இன்னும் சிறக்க நான் அவர்களுக்காக முருகனை வேண்டுகிறேன். முருகு என்றால் முருகன் அழகு ஆகும். ஓம் என்னும் பிரணவம் அ.உ.ம. ஆகும். பிரம்ம விஷ்ணு ருத்ர படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் புரியும் செயலாகும். இங்கே முருகு என்னும் சொல்லிலே உ என்னும் காக்கும் பதம் மூன்று முறை வருகின்றமையால் முருகன் ஒருமுறை இருமுறையல்ல மும்முறையும் காப்பவர் ஆகும். இதை திருமுருகாற்றுப்படையிலே நக்கீரர் மிகவும் அழுத்தமாக கூறுகின்றார்.
காக்ககடவியநீ. காவாதிருந்தாக்கால் ஆர்க்கும் பரமாம் அறுமுகவா - பூ க்குங் கடம்பா முருகா கதிர் வேலா நல்ல இடங்காண் இரங்காயினி எனவும் அருணகிரியார்
13

அகரமுழு ஆகி அதிபனுமாகி அதிகமுமாகி - அகமாகி அயனளவாகி அரியனவாகி அரனெனவாகி - அவர்மேலாம்
என்னும் இத்திருப்புகழால் அயன், அரி, அரன் ஆகிய மூவர்க்கும் மேலானவன் என்று சிவன் கூறிய கருத்தை வலுப்படுத்துகின்றார். அதுவும் இத்திருப்புகழால்,
வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உடையோனே என்றும் கதிர்காம முருகன் ஆறுமுகமாக ஆறுசக்திகளையும் கொண்டு காப்பவன் என்கிறார். முருகனை தம் இஸ்ட தெய்வமாக வழிபடுவோர்க்கு முருகப் பெருமான் அழகு, இளமை, ஞானம், கல்வி, செல்வம், அருள் ஆகிய ஆறு பேறுகளையும் கொடுக்கிறார். கந்தபுராண பாடலில் 496வது பாடலை நோக்கினால் புரியும்.
தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன்னுற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவார் தானே என்கின்றார் கச்சியப்பர். மாயையின் மகனான சூரன் எவ்வளவு கொடுமைகளைச் செய்தவன் எம்பெருமான் முன் சரணாகதி அடைந்தமையால் அவன் சூரன்+பதுமன் சூரபத்மன் இரு உயிர்களும் ஒரு உடலும் இரண்டாகப் பிளக்கப்பட்ட பின் மயில் முருகனை சுமக்கும் பாக்கியம் பெற்றது. சூரன் காலா காலமாக எம்பெருமானின் திருவடியை தனது கடைக் கண்ணால் நோக்கியவாறு தினமும் அவர் சிந்தனையுடன் இருக்கின்றான். மயிலாகக் காட்சி தருகின்றான்.
சேவல் பதுமனின் உயிரும் பாதி உடலும் இது அதிகாலை 4.00 மணிக்கு எழும்பி விடுகின்றது. இது பிரதி உபகாரம் பாராமல் மற்ற ஜீவராசிகளை கூவி அழைக்கின்றது. என்ன சொல்லிக் கூவுகின்றது. கொக்கரக்கோ கொக்கு + அறு + கோ கொக்கு ஆணவம் அறு கடவுளே என்று கூவி அழைக்கின்றது. முருகன் உணர்வுடன் அவர்கள் தூயவரானமையால் தான் இன்றுவரையும் நாம் முருகப் பெருமானைப் போற்றித் துதிபாடும் போது அவர்கட்கும் துதி பாடி வணங்குகின்றோம்.
மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி
காஞ்சிமாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி - அன்னாள்
சேவலும் மயிலும் போற்றி திருக்கை வேல் போற்றி போற்றி
என்று பாடுகின்றோம் பரவுகின்றோம். அகஸ்தியர், போகர், நக்கீரர், இடும்பன், சூரன், அருணகிரியார், பாம்பன் அடிகளார், தேவராய
V− 14

Page 14
சுவாமிகள், வள்ளலார், குமரகுருபரர், தாயுமானவர், கிருபானந்தவாரியார்
போன்றோர் முருக நாமம் போற்றித் துதித்தவர்கள் இன்று இறந்தும் இறவாப்புகளுடன் வாழ்கின்றனர்.
உகந்தை மலை ஆலயமும் யாத்திரிகரும்
முருகனின் தலங்களைக் குறிப்பிடுகின்ற போது நம்நாட்டு எழுத்தாளர்கள் இதுபற்றி ஆய்வு செய்து எழுதிய நூல்கள் மிக மிக அரிதானவையே. இந்த வகையில் இந்திய எழுத்தாளர்கள் முன்னணியில் உள்ளனர். முருகனது அவதாரம் முதல் இன்று வரைக்கும் சகல சம்பவங்களும் கதிர்காமம் தவிர இந்தியாவில் நடைபெற்றதாகவும் கருதியுள்ளனர். வள்ளி திருமணம் வள்ளி மலை ஆகிய வரலாறுகளும் அங்கு புதிதாகப் படைக்கப்பட்டிருக்கின்றது.
முருகனின் ஆறுபடை வீடும் அங்கே தான் இருக்கின்றதென பலரும், சிலர் கதிர்காமம் ஆறாம் படை வீடு என்றும் கூறுகின்றனர். இவ் ஆறுபடை வீட்டிற்கும் இந்தியா சென்று முருகனைத் தரிசித்தவன் நான், அங்கெல்லாம் முருகப்பெருமான் அருணகிரியார் கூறுவது போல், ஒவ்வோர் படை வீட்டிற்கும் ஒவ்வோர் முகத்துடன் நின்றே பக்தர்க்கு அருள்பாலிக்கின்றார். ஆயினும், கதிர்காமத்திலோ ஆறுமுகத்துடன் ஆறுமுக ரூபமாக நின்று அடியார்களை அரவணைக்கின்றான். அடியார்கள் கூட்டத்துடன் முருகனும் சேர்ந்து யாத்திரை செய்வார். பாத யாத்திரை செய்யும் அடியார்கள் இந்த உகந்த மலையில் சென்று தீர்த்த மாடியே அடர்ந்த கொடிய விலங்குகள் நிறைந்த காட்டினுாடே பிரயாணம் செய்வர்.
இந்த உகந்த மலையிலே ஒரு தீர்த்தத் தடாகம் உண்டு. அதை பாபநாச தீர்த்தம் என அழைக்கின்றார்கள். இவ்வாலயத்தில் சிகண்டி முனிவர் தவம் செய்ததாக வரலாறு உண்டு. பாத யாத்திரிகர்கள் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் இவ்வாலயத்தில் தங்கி முருகனைப் பாடிப்பணிந்து கொண்டாடுவார். கதிர்காமக் கொடி ஏற்றத்துடன் இவ் ஆலய உற்சவம் ஆரம்பிக்கும் மலைத்திருவிழாவின் பின் அடியார்கள் வனத்திடை புகுவார்கள். இவ்வாலய மூலஸ்தானத்தில் விக்ரகம் இல்லை. வேலாயுதம் ஒன்றே உண்டு.
15

வேலாயுதமும் உகந்தை மலையும்
வேல் என்றால் முருகன். முருகன் என்றால் வேலாகும். கந்தபுராண கதை தெரிந்தோருக்கு நன்கு தெரியும் சூரனின் தம்பியான தாராகாசூரனுடன் போர் புரிய வீரவாகு தேவரும் படையும் சென்றது. மாயையின் மகனான தாரகா சூரன் தாயின் மாயா சக்தியைத் துணையாகக் கொண்டு ஒரு பெரிய மலை வடிவம் பெற்று.கிரவுஞ்சமலை என நாமம் பொறித்து வாயை ஆவென பிளந்து படுத்திருந்தானாம். வீரவாகுவும் சேனையும் இது மலைகளின் தொடர் என நினைந்து இந்தக் குகை வழியே போகலாம் என எண்ணிச் சென்றனர். மாயா சக்தி கொண்ட மாயையின் மகனோ உடனே தன் வாயை இறுக மூடிக் கொண்டான் அனைவரும் அவன் வயிற்றிலே சிறை வைக்கப்பட்டனர்.
போர் முடிவுற்று மாலையில் வீரவாகுவும் படையும் திரும்பவில்லையாதலால் முருகப் பெருமான் ஞானசக்தியால் பார்த்தார் உணர்ந்தார். உடன் தன் தாய் உமையிடம் சென்று தாயே என்னுடன் பிறந்த ஞானவேல் சூரனை அடக்கவே பிறந்தது. மாயை தன் வலிமையால் இப்படிச் செய்துவிட்டாள் என்று கூறியதும் உமையம்மை, காளி உருக்கொண்டு தனது உக்கிரத்தில் இருந்து உக்கிரம் (தொப்புள்) ஆறுமுனைகளைக் கொண்ட உக்கிர சக்தி வேலை எடுத்துக் கொடுத்தார். உடன் கந்தவேள் அந்த வேலைப் பார்த்து தாராகாசூரனின் பஞ்ச பூதங்களையும் அறுத்து துவம்சம் செய்யுமாறு பணித்து ஏவிவிட்டார். உக்ரசக்திவேலே உடன் ஐந்து உருக்கொண்டு கிரரெளஞ்சமலையை ஆறு துண்டுகளாக அறுத்தன. இப்படி அறுத்த வேல்கள் மீண்டும் முருகன் கையில் சென்றடையாது ஒன்று கதிரைமலையில் கடப்பமர மீதும் இரண்டாவது வேல் உகந்தையில் சென்று நூறு விதமான கருங்கல்லு மலையைத் துளைத்து ஊடுருவிச் சென்று ஜலத்திலே சென்று குளித்துத் திரும்பி அவ்விடத்தில் வெள்ளை நாவல் மரமீது அமர்ந்து விட்டது. மற்றையது திருக்கோயிலில் தாமரை மலர் மிதம் நான்காவது மண்டுர் என அழைக்கப்படும் சின்னக்கதிர்காமத்தில் தில்லை மரம் மீதும், ஐந்தாவது வேல் வெருகலிலே வெருகமரம் மீதும் சென்று உறைந்ததாம். இந்த வேலானது துழைத்து எடுத்த தீர்த்த சுனையே உகந்தை மலையில் உள்ள பாபநாச தீர்த்தமாகும். இவ்வேல் அறுத்த மலைக்குன்று நாங்கள் முன்பு கதிர்காமம் சென்ற பாதையில் வாகூர வெட்டையில் ஐந்து வேல்களும் ஊடறுத்த வண்ணமாக ஐந்து வெட்டுடன் ஐந்து துண்டமாக காட்சியளித்தன. காலப்போக்கில் வனஜீவராசி பரிபாலன திணைக்களம் அங்கு உருவாக்கப்பட்ட வனவிலங்குகள் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்ட பின் இப்பாதைகளை
16

Page 15
மாற்றியமைத்து விட்டனர். இது போன்று தமிழர் பாரம்பரிய சான்றுகள் பல அழிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகள் தமிழர் கலாச்சாரம் திரிபு படுத்தப்படுகின்றது என்ற உண்மையை ருசுப்படுத்துகின்றன. இந்து மன்றங்களும் உலக இந்துப் பேரவுைகளும் பெயருக்கு உருவாக்கப்பட்டவை போன்று மெளனமாய் வாயை அடைத்து நிற்பது விந்தையிலும் விந்தையாகும்.
இங்கு ஒரு பெரிய உண்மை என்னவென்றால் இந்தியாவில் வேல் சென்று மலையை துளைத்ததாக ஒரு சான்றுமில்லை. காரணம் சூரசம்மாரம் இப்பகுதியிலே தான் நடைபெற்றது. கீரன் கூற்று இந்த விடயத்தை எப்படி நிரூபிக்கின்றதென நோக்குவோம்.
திருமுருகாற்றுப்படை பாடிய போது:-
வீரவேல் தாரைவேல், விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரிக் குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றும் துளைத்த வேலுண்டே துணை.
அடியார்களே வாழ்வில் மானிட ஜென்மத்துக்காக எம்பெருமானால் உருவாக்கப்பட்ட பாபநாச தீர்த்தமே இப்புனித தீர்த்தமாகும். இதில் நீராடுங்கள் உங்கள் பாபங்களை நீக்குங்கள்.
தீர்த்தச் சுவையும் வள்ளியம்மாள் கனவில் கூறியதும்
ஒருநாள் இரவு கனவில் நான் உகந்தை மலை மீது நின்று இந்த தீர்த்த தடாகத்தில் உள்ள நீர் குப்பை கூழங்களும் கல்லும் சேறும் நிறைந்து காணப்படுகின்றது. இதை கோயில் பரிபாலன சபையாவது துப்பரவு செய்விக்கவில்லையே என்று நான் மனவேதனைப் பட்டு நின்ற சமயம் ஓர் வெள்ளைக் கிழவி எனக்கு அண்மையில் வந்து மகனே! இது தாரகா சூரனை வதைத்த வேலானது வந்து மலையைத் துழைத்து ஜலத்தில் சென்று வாரிக்குளித்த தீர்த்தமாகும். இத்தடாகம் வள்ளி தடாகம் என்று மக்கள் அழைப்பார்கள். பாத யாத்திரை செய்யும் அடியார்கள் தன்னை நோக்கி வருபவருக்காக முருகப் பெருமான் உருவர்க்கியவர். சுமார் 2000 வருடகாலமாக இச்சுனையின் ஊற்று நீர் மக்களுக்குக் கிடைக்கவில்லை. ஊற்றுக் கணி அடைப்பட்டுள்ளது. நான் பலரிடம் சொல்லியும் செய்யவில்லை. உனக்கு விருப்பமானால் இப்புண்ணிய காரியத்தைச் செய் என்று கூறி கிழவி சென்றுவிட்டார்.
17

கிழவி சென்ற பின் நாங்கள் எப்படியோ நீரை இறைத்து விட்டோம். யார் யார் இறைத்தது என்று ஞாபகத்தில் இல்லை. நீரை இறைத்து விட்டு நாங்கள் சென்றுபடுத்துவிட்டு மறுநாள் காலை பார்க்கின்ற போது முதல் நாள் நீர் இறைக்குமுன் இருந்த அளவைவிட கூடுதலாக மழை பெய்த நீர் நிரம்பியிருந்தது. நீரின் துப்பரவை நான் பார்த்து நாங்கள் இறைத்த பின் நீர் இவ்வளவு அழகாக தெரிகின்றதே என எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்த சமயம் நீரின் அடிமட்டமிருந்து நீர்க்குமிழிகள் மேலே எழுந்தன. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். தோன்றிய நீர்க்குமிழிகளை அடுத்து ஒர் அழகிய பெண் நீரின் மேற்பரப்புக்கு வந்தா அப்பெண்ணின் இடுப்புக்குக் கீழ்ப்பகுதி மீனின் உருவம் கொண்டது நீர் தடாகத்தில் சுற்றிச் சுற்றி நீந்தி மூன்று முறை வலம் வந்துவிட்டு நீரில் மூழ்கிவிட்டாள்
ஐயோ! இப்பெண்ணிடம் நீர் யார் என்று கேட்கவில்லையே அவமறைந்து விட்டாவே என்று மனம் நொந்து கொண்டிருக்கையில் மீண்டும் நீர்குமிழி மேலே வந்தது அதன்பின் இன்னுமொரு பெண் மேலே மிதந்தார். அப்பெண்ணின் இடுப்புக்கு கீழே பாம்பின் உருவத்துடன் இருந்தார். இவவும் முந்திய பெண் நீந்தி விளையாடிய மாதிரியே நீந்தினார். யார் என கேட்க வேண்டுமென எண்ணிய நான் இரண்டாம் பெண் வேறு உருவமாய் வந்த வேளை பயந்து விட்டேன். ஒன்றும் கேட்காமல் பயத்தில் இருந்துவிட்டேன். மறுபடி இந்தப் பெண்ணும் முதலாவது பெண் மாதிரியே மறைந்தார். நான் நன்றாகப் பயந்து வியப்புடனும் இருக்கையில் மீண்டும் நீர்க்குமிழி; தூக்கிவாரிப் போட்டது. நீரின் உள்ளே இருந்து ஒர் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை. தங்க நிறமேனியே உடைய முழுவதும் பெண் ரூபமான பெண் நீரின் தடாகத்தில் சுற்றிச் சுற்றி நீந்தி வாய் விட்டுச் சிரித்தார்கள். என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு என்பக்கமாய் வந்து, இப்போது எனக்கு மிகுந்த சந்தோஷமுண்டு. நான் தினமும் வந்து குளிப்பேன். நான் தினமும் வருவேன், குளிப்பேன் என்று சொல்லி நீச்சல் அடித்து குளித்து விட்டு அவர்கரை ஏறி வள்ளியம்மன் கோயில் முன் மூன்று உடைத்த கற்தூண் துண்டுகள் கிடந்தன. ஒன்றில் அவ ஒருக்கையில் படுத்து மறுபக்கம் காலை மற்றக் கல்லில் நீட்டி வைத்துப்படுத்திருந்தே என்னுடன் கதைத்தார்.
உடன் அத்தாயார் இப்புனித கைங்காரியம் செய்தாய் நீ; இத்தீர்த்தம் உன்னால் மக்களுக்கு கிடைத்ததாக இருக்கட்டும் என்று கையை உயர்த்தி என்னை வாழ்த்திவிட்டு மறைந்து விட்டார். நான் வியப்பில் இருந்து விடுபட நீண்ட நேரமானது. இன்றைய சமூகம் இப்படி ஒர் கனவு கண்டேன் என்று கூறினால் எனக்கு கோப்பிசம்
18

Page 16
அடிக்க வேண்டும் இவருக்கு நல்லா கரைதட்டிற்று என்று ஏளனம் செய்வார்கள் என்று தெரியும். இவை அனைத்தும் நான் கண்ட கனவாகும்.
இருந்தும் இதை மறைப்பது சரியல்ல என உணர்ந்தேன். நான் எனது பதின்மூன்று வயது தொடக்கம் யாத்திரை செய்துள்ளேன். என் தாயார் சுமார் முப்பத்திரண்டு ஆண்டுகள் யாத்திரை செய்து முடித்தார்கள். என் தாயார் தெய்வானை என்றால் தம்பிலுவில் கிராமத்தில் இருந்து யாத்திரை செய்யும் அடியார்கள் பலருக்கு தெரியும் இந்த வகையில் எனக்கும் பலரைத் தெரியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஆகக் கூடுதலாக யாத்திரை செய்வோர் தொகை கூடிய கிராமங்களை எடுத்துக் கொண்டால் பெரிய கல்லாறு, கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிக்குடி, குறுமண்வெளி, பழுகாமம், அம்பிளாந்துறை, சேனைக்குடியிருப்பு ஏனைய கிராம மக்கள் சுமார் பதினைந்து இருபது பேர் வரைதான் வருவார்கள். இக்கிராமங்களில் இருந்து சுமார் நூறு பேர் வரையும் வந்ததை அவதானித்துள்ளேன். எத்தனை கிராம மக்கள் நடந்தாலும் தம்பிலுவில் கிராம மக்களின் தொகையை எக்காலமும் எந்த ஊரவரும் மிஞ்ச முடியாது. காரணம் அவர்களை முருக பக்தர்கள் என்று கூறுவதைவிட முருகனின் உறவினர்கள் என்று அழைப்பது சாலப் பொருந்தும் அவ்வளவு பக்தி மேம்பாடு உடையவர்கள்.
இம் மக்கள் மீது ஏதோ தெரியாது. எனக்கும் அளவு கடந்த ஆசை, அன்பு இதன் நிமித்தம் நான் தம்பிலுவில் சென்று சங்கமன் போடியாரின் கந்தபுராண சீடர்களில் ஒருவரான வட்டவிதானை கணேசனை அணுகி நான் கண்ட கனவைக் கூறினேன். அவர் எதுவித மறுப்பும் தெரிவியாது. உடன் குஞ்சித்தம்பி என்பவருக்கு தகவல் விட்டு நான் கண்ட கனவு பற்றி விளக்கினார். அவர் ஐயா கொழும்பு போய் எப்போது வரமுடியும் எனக்கேட்டனர். நான் இரண்டு வாரத்தில் வருவதாக கூறியதும் அவர்கள் உகந்தை தீர்த்த சுனையை துப்பரவு செய்ய சகல ஏற்பாடும் செய்வதாகக் கூறினர் பின் நான் கொழும்பு வீட்டிற்கு வந்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று தம்பிலுவில் சென்றபோது மொத்தம் சுமார் ஒரு இருபத்தைந்து பேர் வரை இவர்களில் இப்பாக்கியம் பெற்றவர்கள் பல இளைஞர்களது பெயரை குறிப்பிடவில்லை.
இப்புத்தகம் எழுத நேரம் காணாமயால் குறிப்பிடவில்லை. அவர்கள் என்னை மன்னிக்குமாறு வேண்டுகிறேன். மற்றும் பீதாம்பரம் ஆசிரியர் தலைமையில் சாயி சமத்தியினர். சிலரும் இந்து மன்றம் சார்பில் சில இளைஞர்களும் வயது வந்தவர்களில் வட்டவிதானை கணேசன், குஞ்சித்தம்பி, தேவதாசன், ராஜன், சின்னவன், போடி திருக்கோயில் அகதிமுகாமைச் சேர்ந்த குறுமண்வெளி ஊரைச் சேர்ந்த அரசன்
19

உகந்தை கோயில் வண்ணக்கர் முத்துபண்டா இவர் ஓர் தமிழ் மகனே கால மாறுபாடு பெயர் மாற்றியது ஆகியவர்களுடன் பிரயாணத்தை ஆரம்பித்தோம். இவ்விடயமாய் நான் கண்ட கனவு பற்றி நான் பீதாம்பரம் மாஸ்டரிடமும் கூறியிருந்தேன்.
கண்ட கனவு உண்மையா அல்ல எண்ணமா என்னும் சந்தேகம்
இவ்விடயத்தில் நானும் மனிதன் தானே நான் கண்ட கனவில் எனக்கு நம்பிக்கை இருந்தாலும் மற்றவர் அதை உண்மை என்று சொல்லும் போது நமக்கு உண்மையிலே பெருமை ஏற்படுகின்றதல்லவா. இதனால் நான் முன் கூட்டியே திரு. பீதாம்பரம் அவர்களிடம் கோயிலின் முன் மூன்று தூண் துண்டுகள் கிடக்கின்றனவா எனப்பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். சுமார் பகல் 12.00 மணியளவில் உழவு இயந்திர மூலம் பாணமையை அடைந்தோம். பாணமையில் பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதி பெற்று பிரயாணம் தொடங்க ஆயத்தம் செய்த போது சுமார் 1.30 மணியளவில் திடீரென ஒரு பேய் மழை பெய்யத் தொடங்கியது. இம்மழை
சுமார் 2-112 மணித்தியாலங்களுக்கு மேல் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. காலத்துக்குரிய மழையுமல்ல வேண்டுமென்று பெய்வது போல் தோன்றியது. பிற்பகல் 4.30 மணியாகியும் மழை விடுவதாக இல்லை. நான் பீதாம்பரம் அவர்களிடம் கூறினேன். மாஸ்டர் இது முருகப்பெருமான் நம்மைச் சோதிக்கின்றார். ஆனபடியால் தான் மாரி மழை போன்று இந்தக் கோடையில் சித்திரைக் கடைசியில் இம்மழை பெய்கின்றது என்ன செய்யலாம்.
நமது உணவுப் பண்டங்களையும் உடுப்புகளையும் உழவு இயந்திரத்தின் படங்குச் சாக்கால் முடிவிட்டு நாம் நனைந்தாவது போவோமா எனக் கேட்டதும் அனைவரும் ஒரே மனதாய் சம்மதித்தனர். பின் நாங்கள் தொடர்ந்து மழையில் நனைந்தபடியே சென்றோம். பாணமையில் இருந்து உகந்தை போகும் வரையும் பேய் மழை பெய்து எங்களைப் பயங்காட்டியது. நாங்கள் யாரும் கவலை கொள்ளவில்லை. கோயிலடியை சுமார் 5.45 மணியளவில் சென்று அடைந்தோம். உழவு இயந்திரத்தை விட்டு எங்கள் கால்கள் பூமியில் பட்டது தான் தாமதம் அடைமழை போன்று கொட்டிய மழை குடைபிடித்தாற் போல் நின்றுவிட்டது.
இது எங்களுக்கு முதலாவது அற்புதமாக இருந்தது. இறங்கியவுடன் நானும் பீதாம்பரமும் கணேசனும் கன்வில் தோன்றிய
20

Page 17
கல் உண்டா என்று பார்க்க மலை மேல் ஏறினோம். என்ன அதிசயம் அந்த மூன்று தூண்கள் உடைந்த கற்கள் அப்படியே இருந்தது. என் கனவின் முதற்பகுதி உண்மை என உணர்ந்தோம். அன்று இரவு நாங்கள் மடத்தில் தூங்கிவிட்டு மறுநாள் காலையில் தண்ணிரை இறைக்கத் தொடங்கினோம். அதாவது, காலை 6.30 மணிக்கு 120x60 அடி அகலமுடைய கல்லு மலையின் மீதுள்ள தண்ணிரை அதுவும் கோடை காலத்தில் இறைப்பதனால் மூன்று அங்குல வாட்டர்பம்பும் மூன்று வாளி கயிறுகட்டி ஒன்பது இளைஞர்களும் அள்ளி இறைத்தும் தடாகத்தின் சேறு குப்பைகள் கிடந்த மட்டம் பதினாறு அடி தாள்வு அளவு தான் இறைத்தோம் இறைத்து 16 அடிதாள்வில் அக்சுனைத் தடாகத்தினுள் ஆறு சுனைகள் உள்ளே அமிழ்ந்திருந்தமையைக் கண்டோம். இதைவிட முக்கியம் இத்தடாகத்திற்குள் சுமார் 20 அடிக்கு மேல் அகலமுடைய சுமார் 4, 5 அடி உயரமுடைய சுரங்கம் மேற்கு நோக்கிச் செல்கின்றது. சுமார் 25 அடிவரை நாம் உட்சென்று படமும் எடுத்தோம். அதற்கு அப்பால் இருட்டாகையால் நாம் பயத்தால் உட்செல்லவில்லை. ஆயினும் இன்னும் ஒருமுறை முருகப்பெருமானை வேண்டிலைற்மெசினும் கொண்டு இச்சுரங்கத்தை ஆய்வு செய்யும் எண்ணம் எமக்குண்டு. எமக்கு இக்காரியம் கைகூடாவிட்டாலும் எதிர்கால இளைஞர்களை இந்த ஆய்வினை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். அன்று முழுவதும் இறைத்துவிட்டு ஒய்வு பெற நினைத்தோம்.
கனவிலே கண்ட இரண்டாவது சான்று நிரூபிக்கப்பட்டது. நீரை இறைத்துவிட்டு இறைக்கும் போது நீர் இருந்த மட்டத்தை அடையாளமிட்டு கனவில் இறைத்த பின் மழை பெய்து நிரம்பிய நீர் முன்பு இருந்த அளவைவிட கூடுதலாக இவ்வளவு கனவில் தோன்றியது என்பதை கீறி அடையளம் காட்டிவிட்டு கீழே இறங்கி மடத்திற்கு வந்து விட்டோம். மீண்டும் மழை அன்றிரவு பெய்யத் தொடங்கிய மழை விடியற்காலையில் ஓய்ந்தது.
நான் மேலை மலை மீது ஒடினேன். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. காரணம் நான் கீறிக்காண்பித்த அதே மட்டத்தில் புதிய மழைநீர் நின்றது. இவ் வற்புதம் எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து 6 நாட்களாக இத்தடாகம் மட்டுமல்ல இம்மலை மீது உள்ள மற்றச் சுனைகளையும் துப்பரவு செய்தோம். இறுதியில் இம்மலையில் வேல் துளையிட்டு சென்ற பாதையின் உள்ளே ஏணியை வைத்து இருந்த குப்பைகள் அழுக்குகள் எல்லாம் கொங்கிறீட் போல் படிந்திருந்தவைகளை எல்லாம் எடுத்து மணலைக் கண்டு மணலைத் தோண்டி ஊற்றைக் கண்டோம்.
21

இன்று இவ்வூற்றுநீர் தடாகத்திலுள் நிறையும் மழை நீருடன் சங்கமமாகி அடியார்க்கு பாபந் தீர்க்கும் பாபநாச தீர்த்தமாய் கிடைக்கின்றது. அடியார்களே இதை நான் ஏன் குறிப்பிட்டேன் என்றால் பல அடியார்கள் இத்தீர்த்தத்தின் மாண்பு தெரியாமல் ஆடை தோய்கின்றனர். சவர்க்காரம் போடுகின்றனர். பின் தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு கிணற்று நீரில் மூழ்கின்றனர். நான் கூறுவது போன்று உங்கள் பார்வையில் இது புனித தீர்த்தம் இல்லையென வைத்துக் கொள்வோம். சாதாரண உகந்தை மலை தீர்த்தம் என் வைத்துக் கொள்வோம். என் முட்டாள் தனமான கேள்வி ஒன்றைக் கேட்கின்றேன். அடியார்களே உங்கள் உடலில் ஒரு சரும நோய் ஏற்பட்டுவிட்டது. தோல்வியாதியில் நிபுணத்துவம் பெற்ற வைத்திய கலாநிதியை கண்டு அவரைக்கான அவருக்கு காசு கட்டி வாகனத்துக்கு செலவு செய்து, கஷடப்பட்டு கியூவில் நின்று அவரைக் கண்டதும் அவர் ஒர் கிறீம் ரியூப் மருந்து ஒன்றைப் பூசும்படி கூறினார். நீங்களும் ரூபா 200 வரை கொடுத்து மருந்தை வாங்கினிர்கள். மொத்தம் ரூபா 600 வரை செலவு செய்து வாங்கிய மருந்தை உங்கள் உடம்பில் பூசிவிட்டு உடனே தண்ணீரில் சவர்க்காரம் போட்டு கழுவித்துடைத்து விடுவீர்களா? அப்படித் துடைத்தால் நோய் தீர்ந்து விடுமா இல்லையே இதையும்விட முக்கியத்துவமான பெறுமதி மிக்க தீர்த்தத்தை ஆடிய நீங்கள் எப்படி உடன் வேறு நீரில் தீர்த்தத்தை களுவ முடியும். வெளிநோய், உள்நோய், உளநோய், உளழ்நோய் ஆகிய நான்கு நோய்களைத் தீர்க்கும் இத் தீர்த்தத்தை எவ்வளவு புனிதமாய் பேண வேண்டும்.
உகந்தை மலையில் தீர்த்த தடாகம் துப்பரவு செய்து ஊற்று நீரைக் கண்டவர்கள் என்னுடன், கணேசன், ராஜன், தேவதாசன், சின்னவன் போடி ஆகியவர்கள். ஏனையோர் களைத்து விட்டதனால் மடத்தில் இருந்துவிட்டனர். நாங்கள் ஒவ்வோர் ஊறிய தீர்த்தத்திலும் ஒவ்வோர் கலனை நிரப்பிக் கொண்டு மடத்துக்கு வந்து விட்டோம். குஞ்சித்தம்பியும் அரசரும் பொங்கல் மோதகம் செய்ய ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.
பூசை பண்ணும் வாய்ப்பு கிடைத்த அற்புதம்
ஏனோ தெரியாது கணேசன் வட்ட விதானைக்கு என்மீது ஒரு அலாதியான தனி விருப்பமாகும். இவர்கட்கு தாசன், தேவதாசன், கணேசன் ஆகிய மூவரும் கோயில் பூசகரிடம் போய் கணேசன் மாமா இன்று இரவுப்பூசையை வேல்சாமியார் செய்யட்டும் என்றும் நாங்கள் வண்ணக்கரிடம் கேட்டோம். அவர் சம்மதித்து விட்டார் எனவும் கேட்ட
22

Page 18
மாத்திரத்தே பூசகர் கணபதிப்பிள்ளையோ ஆகா. அது அப்படிச் செய்ய முடியாதென மறுப்பு தெரிவித்தாராம் என்று என்னிடம் வந்து கூறினார்.
நானோ இதையிட்டு கவலை கொள்ளவில்லை. அவர்களுக்கு அது வேதனை போல் இருந்துள்ளது. நான் அவர்களைச் சமாதானம் செய்து விட்டு இளைஞர்களுடன் இணைந்து தடாகம் துப்புரவு செய்த மகிழ்ச்சிப் பெருக்கில் முருகன் மீது பக்திப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தோம். இவ்வேளை பூசகர் கணபதிப்பிள்ளை அவர்களும் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். அப்போது நான் வள்ளியம்மன் பேரில் சில பாடல்களைப் பாடினேன், ஆடினோம். அவரும் எங்களுடன் ஆடிப்பாடினார். பின் அவர் போய் கவுடா வீட்டில் படுத்துவிட்டார். நாங்கள் பூசைக்கு ஆயத்தம் செய்ததும் தேவதாசன் போய் பூசை செய்ய வரும்படி அவரை அழைத்ததும் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. தலைவலி தாங்க முடியவில்லை. உடல் சோருகின்றது. வேல்சாமியாரையே பூசையைச் செய்யச் சொல்லுங்கள் என்று அனுப்பி விட்டார் முருகப்பெருமான் இப்பிறப்பில் எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளனர் என்றே கூறவேண்டும். பின் அன்று நான் எனக்குத் தெரிந்தவரையில் பூசையைப் பண்ணி முடித்தேன்.
அன்று இரவு நாங்கள் ஆறுபேரும் இன்னும் ஒரு அற்புதம் கண்டோம். அதை நாங்கள் வெளியிட விரும்பவில்லை. காரணம் கோயில் மூலஸ்தானம் திறவாமல் பூசை நடைபெறுவதையே முருகன் பெரிதும் விரும்பியுள்ளார். ஆகவே அந்த விடயத்தை நான் கூறமாட்டேன் விரும்பியவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விட்டுவிட்டேன்.
பாத யாத்திரையும் பலனும்:-
மெய்யடியார்களே! இந்துக்களாகிய நமது வழிபாட்டு முறைகளில் மிகவும் புனிதம் நிறைந்த வழிபாட்டு முறைகளில் பாதயாத்திரை ஒன்றே மிகமிக சக்தி வாய்ந்தது ஒன்றாகும். நாம் செய்யும் புண்ணி கைங்கரியங்களும் தானதர்மமும் நமது மறுபிறப்புக்காக நாம் செய்யும் புண்ணியமே நாம் முற்பிறவியிலும் இப்பிறவியிலும் செய்த பாவங்களை நீக்கவல்ல வழிபாட்டு முறையே பாதயாத்திரையாகும்.
1951ஆம் ஆண்டில் இருந்து நான் பாதயாத்திரை செய்து வருபவன் அன்று முதல்' இன்று வரை பல வயோதிபர்கள் அதாவது வயது வந்தவர்கள் தமது அன்றாட பீடி. சுருட்டு, வெற்றிலை, கஞ்சா போன்றவற்றை புகைத்தல், உண்ணல் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களைச் செய்வதனால் வளரும் சமுதாயம் முன்னோர்கள்
23

செய்யமுடியுமானால் நாமும் செய்யலாம் எனமுடிவு செய்து, வீணே காலம் கடத்துகின்றனர்.
அடியார்களே நீங்கள் உங்கள் யாத்திரையை தூய்மை நிறைந்ததாக ஆக்குங்கள். முருகனைப் பாடிப் பணிந்து, துதித்து. மனம் நொந்து அழுது நடக்கும் போது அவனை கூப்பிட்டுச் செல்லுங்கள். என்று உங்களை மனம் உருகிக் கேட்டுக் கொள்கின்றேன். மற்றவர்கள் பாடுவதைப் பரவுவதை பரிகாசம் செய்வோர் இப்பாதையில் நடந்து வந்து பாபங்களைக் கூட்டிக் கொள்ளாதீர்கள். முதியவர்களே நீங்கள் யாத்திரை செய்த காலங்களில் கண்ட கேள்வியுற்ற அற்புத நிகழ்வுகளை நம் குழந்தைகளுக்கு எடுத்தியம்புங்கள். இளைஞர்களே தெய்வீக உணர்வு சுமார் 45 வயதுக்கு பின் தான் வரும். காரணம் தனது இயலாமை ஆரம்பிக்கின்ற வேளை கடவுளைப் பற்றிய எண்ணம் வரும். ஆகவே தான் முதியவர் பெற்ற அனுபவங்களை தாங்கள் விட்ட தவறுகளைக் கூறும்போது பரிகாசம் பண்ணாமல் அவர்களைக் கணம் பண்ணுங்கள். நக்கீரர் கூறுகின்றார். ஆற்றுப்படுத்தல் ஒரு மனிதனை திருத்தி அவனை நல்வழிப்படுத்தும் பணி. எல்லாவற்றிலும் சிறந்த பணி என்று கூறுகின்றார். அதாவது மனிதனை நல்வழிப்படுத்தல், நாம் நம் குழந்தைகளை நல்ல பழக்க வழக்கங்களைப் பழக்கி அவர்களைச் சமய வாழ்வுடன் இணைத்து நெறிப்படுத்தி நல்லவர்களாக சமுதாயத்திற்கு கொடுப்பதே ஆற்றுப் படுத்தல் ஆகும்.
அடியார்களே! பாதயாத்திரையின் போது நாம் பிரம்ம முகூர்த்தமான அதிகாலை சுமார் 4.00 மணியளவில் கண் விழிக்கின்றோம். கடவுளை வணங்குகின்றோம். 5.00 மணி 5.30 மணியளவில் பாரத்தையும் தலைமேல் வைத்து நடையைத் தொடங்குகின்றோம். இங்கு மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் நிறைந்து நம் அஞ்ஞானத்தைப் போக்குகின்றது. அதிகாலை அகஸ்தியரின் பொதிகைச் சோலை காடு நிறைந்த முகிலி வகை, சந்தன அகில் மரங்கள் நிறைந்த காடு. பூக்கள் மொட்டவிழ்க்கும் வேளை இளம் காற்று, இலைகள், கொடிகள், மரங்கள் அனைத்தும் தம்மிடையே உள்ள மருத்துவ சக்திகளை வெளிப்படுத்தி காற்றில் கலந்து விடும்.
காலைப் பொழுது கதிரவனின் இளம் வெயில் இவை அனைத்துடனும் சுமார் 12 மைல்கள் குறையாத நடை இவையனைத்தும் உடற்பயிற்சியுடன் இதயம் ஆண்டவனை ஆவலுடன் அழைக்கின்றது. நோயாளர்கள் தங்களால் முடியாதவிடத்து முருகனை நினைத்து என் நோயைத் தீர். இல்லாவிடில் என்னை இப்பாதையிலே கொன்று விடு என்று அடம் பிடிக்கும் ஒருவித பிடிவாத பக்தி. மூலிகை வாசம் நிறைந்த காறறு. ஒவ்வோர் நோய்க்கும் உண்டான மருந்துகள் காற்றுனுாடே
24

Page 19
கலந்து நமது உடலின் மயிர்க்கால்வாய்கள் மூலம் உடலை அடைந்து உடலில் உள்ள கிருமிகளை அழிக்கின்றன. இதனால் பலருக்கு பலன் கிட்டுகின்றது. நோய் தீருகின்றது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் யாத்திரிகள் திடகாத்திரம் அடைவதால் வருமானம் பெருகுகின்றது. பலன் கூடுகின்ற ஆயுட் பலன் ஆன்மபலன் இரண்டும் இந்த யாத்திரை மூலம் விசேடமாகக் கிடைக்கின்றது.
பிரம்ம முகூர்த்தமும் இறைவழிபாடும்:-
இதுபற்றி ஆதிசங்கரர் அவர்கள் கூறியதாவது, பிரம்மமுகூர்த்தம் என்பது விடியற்காலை 4.00 மணிமுதல் 5.30 மணிவரையுமாகும். இவ்வேளையில் நித்திரை விட்டெழுந்து குளித்து முழுகி மலர் பறித்து இறைவனுக்குச் சூட்டி தியானத்தில் இருக்க வேண்டும். படியளக்கும் பரந்தாமன் நம்மைக் காக்கும் கடவுளான விஷ்ணு மகாலெட்சுமி சமோதராக நமது இல்லங்களுக்கு விஜயம் செய்வாராம். இவ்வேளை தியானத்திலும் வழிபாட்டிலும் இருப்போரை வாழ்த்தி ஆசீர்வதிப்பார். கூடிய வழிபாடு செய்வோரிடம் இலட்சுமியை சற்று இவ்வீட்டில் தங்கி வா என்று சொல்வாராம்.
அன்பர்களே! நமது கிராமத்தை மனக்கண்முன் கொண்டு வந்து பாருங்கள். அதிகாலையில் எழுந்து, ஆலயம் சென்றோ வீடு வாசல் கூட்டி, ஆண்டவன் இப்பிரம்ம முகூர்த்தத்தில் வழிபடும் அன்பர்கள் வாழ்வு வளமுடன் விளங்கவில்லையா? அடியார்களே மனிதன் தவறு இழைக்காமல் இல்லை. ஆனாலும் ஒருமுறை விட்ட தவறை மறுமுறைவிடாமல் நடக்க வேண்டும். நம்மால் தினசரி ஆலயம் செல்ல முடியாது என்பது உண்மை. ஆனால் தினசரி வீட்டில் வழிபாடு செய்ய முடியாதா? இல்லையே.
1. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் 2. ஐந்தில் வளையாததது. ஐம்பதில் வளையாது 3. கடவுளை நம்பினோர் கைவிடப்படார். 1. ஆகவே, அதிகாலையில் துயில் எழும்பிவிடப் பழகுங்கள் 2. எழும்பும் போது இறைவனுக்கு நன்றி கூறப்பழகுங்கள். 3. உங்கள் குழந்தைச் செல்வங்களையும் எழுப்பி அதிகாலையில்
இறைவழிபாட்டில் இணையுங்கள், பாடுங்கள், பணியுங்கள்.
25

ஐயனே அரசே போற்றி அருமறைப் பொருளே - போற்றி துய்யனே துணையே - போற்றி தூமணித் திரளே - போற்றி
மெய்யருள் விளையே போற்றி வெற்றிபோல் ஏந்தும் மூவர்க்கையனே போற்றி எங்கள் கடவுளே போற்றி - போற்றி
போற்றி விண்ணவர் கோன் - போற்றி புரிதவர்த் தொண்டர்க் கின்பம் ஆற்று நல் அழகன் போற்றி யாகுமுன் பரியோன் போற்றி
நீர்ச்சுனை புனைந்த மேனி நிலவறைக் குன்றே போற்றி தீர்த்தம் என் மேற் கொளாதோ சிவசுப்ரமணியா போற்றி
மணியணி மால் விரிஞ்ஞன். மற்றுள கணங்கள் யாவும் பணிய நின்றவனே போற்றி பரமனே போற்றி
அன்பர்க்கு அணியடி அரனே போற்றி யார்க்கு நங்களித்து மாய்க்கும் குணமுடைய கர்தா போற்றி குமரவேள் போற்றி போற்றி
போற்றி வந்தாளுமுந்தன் பொன்னடிக் கமலம் போற்றி தேற்றுவார் உன்னையல்லால் திக்கு வேறில்லைப் போற்றி மாற்றனும் பிறவிக் காட்டை மடிக்க மெய்ஞானத் தீயை ஏற்றி முக்குடைத்தாய் போற்றி என்குறை தவிர்ப்பாய் போற்றி
26

Page 20
வாய்மதிக் கிடையோய் வாம பாகமே கொண்டாளன்னை தாயென உகந்தாய் போற்றி தனிப்பரம் கடரே போற்றி
வீயிலாப்புத்தேள் மாதை வேட்டுவர்க் கொருத்திக் கென்று நாயகன் ஆனாய் போற்றி நான் மறை முதல்வா போற்றி
முதலுமாய் னாப்பனாகி முடிவுமாய் நின்றாய் போற்றி அதசள பாதா போற்றி சகஸ்ர நாமா போற்றி மதி புனை பரமனார்க்கு மதலையாய் குருவாய்த் தேவர்ப் பதியென உளவேல் போற்றி பரம் சுடர்க் கண்ணா போற்றி
கண்ணுமாய் கருத்து மாகி காணெழில் எந்தை போற்றி விண்ணுமாய் மண்ணுமாகி விளங்கருள் தேனே போற்றி பண்ணவர்க்கருள தண்டபாணியாய் நின்றாய் போற்றி
தண்ணருக்கடலே போற்றி சதுமுகர்க்கிறைவா போற்றி
இறைவனே போற்றி ஆதி எந்தையே போற்றி வேலுக்கிறைவனே போற்றி
நீளர வெணி சிவனே போற்றி மறைபுனலநிய வொணா மாதவ மணியே போற்றி குறைவருள் நிறைவே போற்றி குளிர்சிவக் கொழுந்தே போற்றி
கொடுமையில் குளிர்மை போற்றி குக்குடக் கொடியாய் போற்றி குழுமிய சிவகணங்கள் கும்பிடும் தலைவா போற்றி தொழுபவர் கருள்வாய் போற்றி சுந்தரா போற்றி என்னை முழுதும் ஆள்பவனே போற்றி ஞான நீாயகனே போற்றி
நாயகமானார்க் கெல்லாம் நாயகமானாய் போற்றி
தாயென வருவாய் போற்றி தனிப்பரம் சுடரே போற்றி
தீயது புரிவோர் கன்றி தெய்வமும் குருவுமானாய்
நீ யெனக்கருள் வாய் போற்றி நித்தனே போற்றி போற்றி
27

ஒம் ஒம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஒம் ஒம் ஓம் ஓம் ஓம் ஓம் ஒம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஒம் ஒம்
சுப்ரமணிய அஸ்டோத்ரம்
அருள் தரும் அழகனே
அடியார்க்கு அரசனே
மருர்உயிர் மாயனே
மயில் வாகனனே
திருவுடைத்தேவனே தினமுனைப் பணிவோம் அறவளிச் செல்வனே அறிவிற் பெரியோன்
குறமகள் துணைவனே
குன்றுடைக்குமரனே விரிசடை மைந்தனே
வேலுடை பாலனே
கரிமுகற் கிளையோன்
கை கொடுப்பவனே அரியவன் மருகனே அரவணைப்பவனே
சிரித்திடும் முகத்தோன் செந்தூர் வேலனே கருணையின் வடிவமே
கார்த்திடும் முருகனே
நிரந்தர மான வா
நினைத்திட வருபவா அறுமுகம் கொண்டவா அன்பரைக் காப்போன் சூரனை வென்றவா
சுப்பிர மணியனே
28
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி

Page 21
ஒம் ஒம் ஒம் ஓம் ஒம் ஒம் ஒம் ஓம் ஒம் ஒம் ஓம் ஒம் ஒம் ஒம் ஓம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம் ஒம் ஒம்
பேர் எழில் கொண்டவா பிழைகளைத் தீர்ப்பவா
ஆரமுதானவா அபயகரம் நீட்டுவாய் நீரிடைத் தவழ்ந்தவர் நெருப்பிடைப் பிறந்தவா சீர் மிகு பாலனே சிந்தையில் நிறைந்தவா கார்முகில் குணத்தவா கடும் பிணி நீக்குவாய் போரிடத் துணிந்தவா பொறுமையின் நாயகா கூர்வடி வேலனே குறைகளைப் போக்குவாய் தேருடைச் சாமி தீந்தமிழ் நிறைந்தவா ஞானக்கனியே நாடிய செல்வமே சேவற் கொடியோனே சீற்றம் தணிந்தவா காவல் தெய்வமே கந்த வேளே கொடிமுடைக் கோவே குருபரக்கருளினாய் வடிவுடை அழகனே வரம் தருள் வள்ளலே
கோமணத் தாண்டியே
29
போற்றி போற்றி
போற்றி
போற்றி போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

ஓம் ஓம்
ஓம்
ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஒம் ஒம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம்
குமரனே முருகனே தேவருக்கருளுவாய் தெய்வானை நாயகா சுடர் மிகு ஜோதியே பாலாபிஷேகனே
பன்னீர் செல்வனே
ஜவ்வாது வாசனே ஜகமாளும் வேலனே
வள்ளி மணவாளனே
வயலூர் முருகனே நல்வழி காட்டுவாய் நானுனை மறவேன் செல்வக் களஞ்சியமே சிக்கல் சிங்காரனே பழநீ மலையனே பிள்ளைத் தெய்வமே பிறவிப் பயனே
பேசிட வைப்பவனே பெருமை நிறைந்தவா பெருவளி வழங்குவாய்
அருமை சரவணா
அழகு சண்முகா
கார்த்தி கேயனே
கந்தத் தோட்டத்தவனே அமைதி வடிவனே அகில நாயகா ஆற்றல் மிகுந்தவா
30
போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி
போற்றி
போற்றி போற்றி
போற்றி
போற்றி போற்றி
போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
போற்றி
போற்றி
போற்றி போற்றி
போற்றி
போற்றி
போற்றி போற்றி
போற்றி

Page 22
ஒம் ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஒம் ஒம் ஓம் ஓம் ஒம்
ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஒம் ஒம் ஓம் ஓம் ஒம் ஒம் ஒம் ஓம் ஒம் ஓம்
அரகரமுருகா போற்றி
உமையவள் மகனே
உருகுவார் கருளுவாய்
இமை போல் காப்பாய் ஏற்றம் தருவாய் மனக்குறை தீர்ப்பாய் மருத மலையானே ப்ரணவப் பொருளே பெரியவன் நீயே மறுமை தருவாய் மங்களச் செல்வனே
சிறுமை களைவாய் சீர்வரச் செய்வாய்
சந்தன பாலனே சற்குரு நாதனே திருநீறு அணிந்தவா திருப்புகழ் தந்தவா பரிவுடைய சேயே
பக்தியின் உயர்வே
பன்னிருகரத்தோய் பால் வடிமுகத்தோய் கண்ணெனக் காப்பாய்
கனிந்தருள் செய்வாய் வீரமே தருவாய் வெற்றியே தருவாய். பாடுவேன் உன்னையே
பரமனின் மைந்தா போற்றி
31
போற்றி
போற்றி
போற்றி
போற்றி போற்றி
போற்றி
போற்றி
போற்றி போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
போற்றி
போற்றி
போற்றி போற்றி
போற்றி போற்றி

பாராயணப் பாடல்கள்
திருமுருகப் பெருமானின் திருவருளைப் பெற்று உய்யும் பொருட்டுப் பக்திப் பாடல்கள் பாடிய புலவர் பலர். பாராயணத்திற்குரிய முறையில் அமைந்துள்ள் சில பாடல்கள் ஈண்டுத் தரப்படுகின்றன. o
‘எவரா யிருப்பினும் கார்த்திகேயனிடத்தில் பக்தி பண்ணுபவர் ‘புதல்வன்’ முதலிய பல பேறுகளைப் பெறுவர்' என்று வால்மீகி இராமாயணத்தின் பாலகாண்டத்தில் விசுவாமித்திரர் வாக்காக வியாசர் குறிப்பிடுகின்றார். எனவே பின்வரும் பாடல்களை மனனம் செய்து அன்பர்கள் திருமுருகன் திருவருள் பெற்றுய்வார்களாக.
நாள்தோறும் பாராயணம் செய்தற்குரிய திருமுருகாற்றுப்படையின் அடியிற் காணும் வெண்பாக்கள்
குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய் புன்றலைய பூதப் பொருபடையாய் - என்றும் இளையாய் அழகியாய் ஏறுார்ந்தான் ஏறே உளையாயென் னுள்ளத் துறை. (1)
குன்ற மெறிந்ததுவுங் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக் கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்வீடா வீரன்கை வேல். (2) . வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றும் துளைத்தவே லுண்டே துணை (3) இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும் கொன்னவில்வேற் சூர் தடிந்த கொற்றவா - முன்னம் பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலை வாங்கத் தகும். 4( ܫ) உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை யொருவரையான் பின்செல்லேன் - பன்னிரு கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் - கைக் வேலப்பா செந்திவாழ் வே. (5)
32

Page 23
அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும் முருகாவென் றோதுவார் முன். (6)
முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே மீசன் மகனே - ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான். (7)
காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்குங் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண இரங்கா யினி. (8)
பரங்குன் றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம் கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல் ஆசையால் நெஞ்சே யணிமுரு காற்றுப்படையைப் பூசையாக் கொண்டே புகழ். (9)
நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாடோறுஞ் சாற்றினால் - முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தானினைத்த வெல்லாந் தரும்.
திருமுருகாற்றுப்படையை நாடோறும் ஒதும் அடியார்கள் மேற்கண்ட வெண்பாக்களோடு கீழ்க்கானும் கட்டளைக் கலித்துறையினையும் ஒதுவர் ஒருமுரு காவென்றன் உள்ளங் குளிர உவந்துடனே வருமுரு காவென்று வாய்வெரு வாநிற்பக் கையிங்நுனே தருமுரு காவென்று தான்புலம் பாநிற்பத் தையன் முன்னே திருமுரு காற்றுப் படையுட னேவருஞ் சேவகனே
33

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி
அரனென வாகி அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ
எனதுமு னோடி வரவேணும் மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரு வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை
மகிழ்கதிர் காம முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென் ஆடுமயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு பெருமாளே.
- திருப்புகழ சேந்தனைக் கந்தனைச் செங்கொட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்வித் தோனை விளங்கு வள்ளி காந்தனைக் காந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
- கந்தா அலங்காரம்
பிறந்திறந் துழலும் பெருவியா தியையும் பெரும்பசி நோய்ச்சுடத் தளர்ந்து
நிறங்குலைந் தொருவர் பின் றிரிந் துழலு நிரப்பெனுங் குறுவியா தியையுந்
திறந்தருள் கடைக்கட் பார்வையா மருந்தால் தீர்த்தருள் புரியுநாள் உளதோ அறம்பொரு வின்பம் வீடருள் தணிகை ஆறுமா முகதயா நிதியே
- கந்தப் தேசிகா
34

Page 24
உருகா மனமுஞ் சிவஞான முணரா வறிவு முனதுடிகழ்
ஒதா நாவு மோதக்கேட் டுவந்தே யினிய நதிபோலப் பெருகா விழியு முடையேனைப் பிறவிக் கடலில் வீழாமற்
பேணி யெடுத்திங் கெனதுள்ளம் பிரியா விரிஞ்சைப் பதிவாழும் முருகா வருக சதுர்வேத முதல்வா வருக வினைதீர்க்கு
முனைவா வருக மலராறு முகவா வருக திருமாலின் மருகா வருக மயிலேறு மன்னா வருக அடியார்கள்
வாழ்வே வருக தெய்வசிகா மணியே வருக வருகவே.
- மார்க்கசகாய தேவா
அந்திப்போது அழகுறவே நடித்தருளும்
விழித்துணைவர் அருளும் கோவை வந்திப்போர் நினைத்தபடி மயில்ஏறி
அயிலெடுத்து வரும்செவ் வேளைச் சிந்திப்போம். ஆதலினால் நமதுபழ
வினைகளெல்லாம் சிந்திப் போமே
- திருவிரிஞ்சைப் புராணம
அறுசமயக் கடவுள் வேறு வேறின்றுயான்
ஒருவனே அங்கங்கிருந்து அன்பர்க்கு முத்திதரு வித்தென் றியாவர்க்கும்
அறிவித்த வதனமணியே. 「し - திருப்போரூர் சிதம்பர சுவாமிகள
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள் வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசல மமர்ந்த பெருமாளே.
35

துய்யதாம் மறைக ளாலுந் துதித்திடற் கரிய செவ்வேள் செய்யபே ரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க
வெய்யசூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க அன்னான் பொய்யில் சீ ரடியார் வாழ்க வாழ்இப் புவன மெல்லாம்.
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீ ரடிய ரெல்லாம்.
ஆன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலா நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி நல்கி என்னையும் அடிய னாக்கி இருவினை நீக்கி யாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி.
சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கிடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்திங் கென்றலை மேலயன் கையெழுத்தே
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
போற்றுவார் போற்றினும் போற்றட்டும் அதிலர் புழுதி வாரித் தூற்றிலும் தூற்றட்டும்
36

Page 25
திருமந்திரம் பாட்டு 2827 அறிவிக்க வேண்டாம் அறிவற்று - அயர்வோர்க்கு அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கு அறிவுற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே அறிவிக்கத் தம் அறிவார் அறிவோரே.
சுபம்
அந்திப்போத அழகுறவே நடித்தருளும்
விழித்தணைவர் அருளும் கோவை வந்திப்போர் நினைத்தபடி மயில் ஏறி
அயிலெடுத்த வரும்செவ் வேளைச் சிந்திப்போம் புகழ்ந்திடுவோம் மலரணிவோம்
அவர்கமலத் தாளும் தோளும் சிந்திப்போம் ஆதலினால் நமதபழ
வினைகளெல்லாம் சிந்திப் போமே.
37


Page 26
பாதயாத்திரையி 'நூல
-
Cover ଅଞ୍ଜଳ e Printed by Un
-
 
 

iLankas, rele; ozae