கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்

Page 1
■|-
)|- . . . . . ├ ( )
- ( ))----
T그-----
( )「 「|-디그 | (( () ()
 


Page 2


Page 3

மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447, 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. தொலைபேசி 24342926 தொலைநகல் 0091-44-24348082 LS67 s S58 d : manimekalaiGeth.net 96Daru 56T is : www.tamilvanan.com

Page 4
நூல் விவரம்
நூல் தலைப்பு * நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
ஆசிரியர் * அந்தனி ஜிவா
மொழி * தமிழ் பதிப்பு ஆண்டு * 2005 பதிப்பு விவரம் * முதல் பதிப்பு
உரிமை * ஆசிரியருக்கு தாளின் தன்மை * மேப்லித்தோ
நூலின் அளவு * கிரெளன் சைஸ்
(12% x 18% Qs.L5.)
அச்சு எழுத்து அளவு * 11 புள்ளி
மொத்த பக்கங்கள் * iv + 136 = 140 அட்டைப்பட ஓவியம் * ஜான் லேசர் வடிவமைப்பு * கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ்
(C) 23725639 அச்சிட்டோர் * ஸ்கிரிப்ட் ஆஃப்ஸெட்
சென்னை - 94. நூல் கட்டுமானம் * தையல்
வெளியிட்டோர் * மணிமேகலைப் பிரசுரம்
சென்னை - 17
விலை : ரூ. 50.00

பொருளடக்கம்
1. கனவுகள் 1 தமிழ் ஓலைகள் . 9
மலையக மைந்தன். 15
கலைக்கோவில். 21
கார்ல்மார்க்ஸைக் கண்டேன். 24
வரலாற்றுச் சின்னங்கள். 31
நாடக மேதையின் நினைவாலயம். 45
சென் லூட்ஸ் தேவாலயம் . 55
பாரிஸில் இனிய நினைவுகள். 63
10. டிஸ்னியின் அற்புத உலகம் . 76
11. பாரிஸில் நம்மவர்கள். 81
12. இனிய இரு நினைவுகள். 9 O
13. மெழுகு பொம்மைகள். 99 14. பூரீ கனக துர்க்கை அம்மன். 109
15. எடின்பரோவில் எழுத்தாளர் நூதனசாலை . 116
16. நினைவுகள் சாவதில்லை . 126

Page 5
iv
நினைவுகளின் முன்னோட்டம்.
நினைத்துப் பார்க்கிறேன். நினைவுகள் எங்கே சிறகடிக்கின்றன.
'கனவுகள் மெய்ப்பட வேண்டும்' என்றான் மகாகவி பாரதி. கனவுகள் 2003-ல் ஆகஸ்ட் மாதம் நனவாகியது. எங்கள் ஐரோப்பிய பயணத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து உதவிய என் மனைவியின் சகோதரர்களான தேவா, செல்வம் ஆகியோருக்கும் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
லண்டனில் இலக்கிய நெஞ்சங்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்த ‘புதினம்’ ராஜகோபால், பாரிஸ்டர் செல்வராஜா ஆகியோருக்கும் மற்றும் ‘தீபம்’ அனஸ் திரு. ஜோகரட்னம், திருமதி நவஜோதி ஜோகரட்னம், பாரிஸ்டர் S.J. ஜோசப், ‘தீபம்’ நித்தியானந்தன், சிலோன் சின்னையா போன்றவர்களுக்கும் தினகரன் வார மஞ்சரியில் இதனைத் தொடராகப் பிரசுரித்த ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த அருள் சத்தியனாதனுக்கும், இதனை நூலாகப் பிரசுரிக்க முன் வந்த மணிமேகலைப் பிரசுரத்தின் ரவி தமிழ் வாணன் அவர்களுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவிப்பது என் கடமையாகும்.
P.O. Box : 32 தோழமையுடன், Kandy %தவி தீஉா Srilanka. 9ந்த 线

as Tayssir ey5
G தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்றான் மகாகவி பாரதி.
’கனவு மெய்ப்பட வேண்டும்’ என்றான். ஆம். அதற்காகக் கனவுகள் காண வேண்டும். மகாகவியின் கனவை நனவாக்கியவர்கள் நம்மவர்கள்தான்.
நம்மவர்கள் என்றால் ஈழத்தமிழர்கள், புலம் பெயர்ந்து போன நம்மவர்கள். ஒரே மண்ணில் வாழ்ந்த சொந்த சகோதரர்கள் நாடு பிரிந்து, வீடு துறந்து உற்றார் - உறவினர்களை மறந்து புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் அவர்கள் மறக்காதது ஒன்றே ஒன்று தான்.
தாயையும், தாய் முலைப்பாலுடன் ஊட்டி வளர்த்த தமிழையும். புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும்,

Page 6
2 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
வாழும் நாட்டில் அவர்களின் தமிழுணர்வு சும்மா இருக்க விடவில்லை. பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி என்ற ஊடகத் துறையில் ஒரு சாதனையே புரிந்து விட்டார்கள்.
அது மாத்திரமல்ல.
நவீன நாடகத்துடன் நாட்டுக் கூத்தையும் மறந்து விடவில்லை. குறுந்திரைப்படங்களையும் எடுத்துள்ளார்கள். புலம் பெயர்ந்து அலை கடலுக்கு அப்பால். வெளிநாடுகளில் கால் பதித்தவர்கள் மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கி விட்டார்கள்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் நெஞ்சங்கள் வெளியிடு சஞ்சிகைகள், நூல்கள் என்னைத் தேடி வந்த பொழுது எல்லாம், நான் வெளியிட்ட நூல்களையும் சஞ்சிகைகளையும் அனுப்பி வைப்பேன்.
எனது நெஞ்சுக்குச் சொந்தமானவர்களை நேரில் காணவேண்டும் என்று ஆயிரம் கனவுகளைச் சுமந்து லண்டன் வந்தேன்.
லண்டன் பயணமாவதற்கு முன்னர் லண்டன் பயணத்திற்கான பிரிட்டிஸ் விசாவை பெறுவதற்காக vபிரிட்டிஸ் தூதுவராலயத்திற்கு என்னை அழைத்துச்
சென்றவர் மிக முக்கியமானவர்.
இலங்கையின் நாடக அரங்கிலும்
வெள்ளித்திரையும் புகழ்ந்து பூத்த மூத்த சகோதர சிங்கள கலைஞர் பிலிக்ஸ் பிரேமவர்த்தனா.

அந்தனி ஜீவா 3
இவருடன் காரில் சென்ற பொழுது லண்டனில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி பேசிக் கொண்டோம்.
இவர் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று அல்லது இரண்டு தடவை லண்டனுக்குப் போய் வருவார். இவரது மைந்தன் லண்டனில் வாழ்ந்து வருகிறார்.
லண்டனில் மிக முக்கியமான இரண்டு உன்னதமானவர்களின் இடங்களை நிச்சயமாகப் பார்க்க விரும்புகிறேன் என்றேன்.
இருவரும் மனிதகுலத்தை நேசித்த மகான்கள்.
ஒருவர் பொதுவுடைமை தத்துவத்தின் பிதாமகர் கார்ல் மார்க்ஸ்.
மற்றவர் நாடகமேதை வில்லியம் ஷேக்ஸ்பியர்.
முதலில் மார்க்ஸின் கல்லறையைத் தரிசிக்க வேண்டும்.
இரண்டாவது நாடகமேதை ஷேக்ஸ்பியர் வாழ்ந்த இடத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும்.
அதற்குரிய ஆலோசனைகளைக் கூறினார் பிலிக்ஸ் பிரேமவர்த்தனா.
ஏற்கனவே கார்ல் மார்க்ஸின் கல்லறையைத் தரிசித்து வந்த நண்பர் பெ. முத்துலிங்கமும், சகோதரி
மேனகா கந்தசாமியும் அந்த இடத்திற்குக் கட்டாயம் போய் வர வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.

Page 7
4. நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
ஆகஸ்ட் 3 ஆம் திகதி
நானும் என் மனைவியும் லண்டன் ஹித்ரு விமான நிலையம் வந்து சேர்ந்தோம்,
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் என் மனைவியின் அண்ணன் தேவாவும் தம்பி செல்வமும் அவரது மைந்தன் ஜோன் சங்கரும் எங்களை எதிர்பார்த்து இருந்தனர்.
தனது இரண்டு சகோதரர்களையும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்தது என் மனைவிக்கு ஒரே மகிழ்ச்சி. &
என் மனைவியின் தம்பி செல்வத்தின் வீடு விமான நிலையத்திலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருந்தது. அவரது காரில் உடனே வீட்டிற்கு வந்தோம். செல்வத்தின் மனைவி சாந்தியும், மகள் அஜானியும் அன்போடு வரவேற்றனர். அவர்களது வீடும் பின்புறமுள்ள தோட்டமும் எங்களைப் பெரிதும் கவர்ந்தது. அந்தத் தோட்டத்தில் இருந்த ஆப்பிள் மரமும், பேயர்ஸ் மரமும் காய்த்துக் குலுங்கியது.
உடனடியாக உடைகளை மாற்றிக் கொண்டு - தோட்டத்திற்கு வந்தோம். தோட்டத்தில் மரத்தில் காய்த்திருந்த ஆப்பிள் பழத்தை விட பேயர்ஸ் காய் சுவையாக இருந்தது.
அந்தத் தோட்டத்தில் அமர்ந்து உரையாடிய பொழுது பயணக் களைப்பே தெரியவில்லை.

அந்தனி ஜீவா 5
சிறிது நேரத்தில் எனது நெஞ்சுக்கு நெருக்கமான நண்பரான ராஜகோபாலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
நண்பர் ராஜகோபால் யாழ்ப்பாணத்தில் ‘ஈழநாடு’ பத்திரிகையில் பணியாற்றிய காலத்திலிருந்தும், பின்னர் கொழும்பில் 'தினகரன்' அதற்குப் பிறகு லண்டனுக்கு வருகை தந்து தமிழன், ஈழகேசரி, இப்பொழுது எட்டாண்டுகளாக அவர் நடத்திவரும் ‘புதினம்’ என்ற பத்திரிகை வரை எமது நட்பு தொடர்கிறது.
நண்பர் ராஜகோபாலுடன் பலதும் பத்தும் தொலைபேசியில் பேசினோம். அரை மணித்தியாலம் எப்படி சென்றதோ தெரியவில்லை. பின்னர் அவரே பேசுவதாகத் தொலைபேசியில் என்னைக் கேட்டார்.
அதன் பின்னர் ‘தீபம்’ மு. நித்தியானந்தத்துடன் தொடர்பு கொண்டேன்.
நண்பர் மு. நித்தியானந்தன் ஐரோப்பிய மண்ணில் புகழ்பெற்றுத் திகழும் ஊடகமான 'தீபம்’ தொலைக்காட்சியில் உயர் பதவி வகிக்கிறார். செய்திகளுக்குப் பொறுப்பாகவும் இருக்கிறார். இவர் தினகரன் பத்திரிகை ஆசிரியப் பீடத்தில் பணியாற்றிய பொழுது இவருடனான தொடர்பு ஏற்பட்டது. மலையப் பட்டதாரிகளில் ஒருவர்.
இவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில்

Page 8
秘 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
மலையகத்தின் மூத்த படைப்பாளிகளான மக்கள் கவிமணி சி.வி. வேலுபிள்ளை, தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம். ராமையா ஆகியோரின் படைப்புகளை வைகறை வெளியீடகத்தின் வெளியீடாகக் கொண்டு வந்தார்.
‘எப்பொழுது சந்திக்க வருகிறீர்கள்?’ என்று அன்போடு விசாரித்தார். ‘நேரில் சந்தித்து மலையக இலக்கியம் பற்றி நிறைய பேச வேண்டும்’ என்றார். ‘இன்னும் சிறிது நேரத்தில் இன்னொரு நண்பர் தொடர்பு கொள்வார்’ என்றார்.
சிறிது நேரத்தில் தொலைபேசி அழைத்தது. அவர் வேருயாருமல்ல, கவிஞர் இளைய அப்துல்லாஹ். அவரும் தீபத்தில் பணியாற்றுகிறார்.
நான் வந்திருப்பதை நண்பர் நித்தியானந்தன் அறிவித்ததாகவும் தீபம் தொலைக்காட்சியில் பேட்டி காண விரும்புவதாகவும் எப்பொழுது பேட்டியை வைத்துக் கொள்ளலாம் என்றும் கேட்டார்.
‘நாளை மாலை நண்பர் நித்தியானந்தனை சந்திப்பேன். அப்பொழுது கூறுகிறேன். உங்களைச் நாளை சந்திக்க விரும்புகிறேன்’ என்றேன்.
மாலையில் மனைவியின் சகோதரருடன் அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று வந்தோம்.
பிரான்ஸிலிருந்து வெளிவரும் ‘ஈழநாடு’ வார இதழை வாங்கினேன். ‘வடலி புதினம்’ என்ற இலவச பத்திரிகையையும் தந்தார்கள்.

அந்தனி ஜீவா 7
மறுநாள் விடியற் காலை 5 மணிக்கு எழும்பிவிட்டேன் - பி.பி.ஸி தொலைக்காட்சியைப் பார்த்தேன். −
காலை 10 மணியளவில் நாங்கள் தங்கியிருந்த பகுதியைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டோம்.
லண்டனில் முதல் பஸ் பயணம். இரட்டைத் தட்டு பஸ் வண்டியில் ஏறி மேல் தட்டில் அமர்ந்தவாறு ஹேரோ டவுனைச் சுற்றிப் பார்த்தோம்.
இரண்டு மணிநேரம் நகரைச் சுற்றிப் பார்த்தது புதிய அனுபவம்.
இங்கு யூதர்கள் நிறைய பேர் வாழ்கிறார்கள். எங்கும் கறுப்பர்களைக் காணக்கூடியதாக இருந்தது. இந்திய குஜராத்தியர்களை எங்கும் காணக்கூடியதாக இருந்தது.
பல்லின மக்கள் செறிந்து வாழும் நாடாக லண்டன் மாநகர் காட்சியளிக்கிறது. மீண்டும் வீட்டிற்கு வந்த பொழுது தகவல் காத்திருந்தது. லண்டன் தமிழ்ச்சங்கத்திலிருந்து அதன் தலைவர் திரு. அசோகனை தொடர்பு கொள்ளும்படி தகவல் கிடைத்தது.
லண்டன் தமிழ்ச்சங்கம் நல்ல பணிகளைச் செய்து வருகிறது. உலகெங்கும் இருந்து வரும் தமிழறிஞர்களை அழைத்து வரவேற்பு அளித்து கெளரவிக்கிறது.

Page 9
8 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
லண்டன் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பு கொண்ட பொழுது மாலதி என்ற சகோதரி பேசினார்.
அவரிடம் இலங்கை திரும்புமுன் லண்டன் தமிழ்ச்சங்கத் தலைவர் அசோகனைச் சந்திப்பகாக கூறினேன்.
来

அந்தனி ஜீவா 9.
தமிழ் இலைகள்
பகலுணவுக்குப் பின்னர் ஒய்வாக பி.பி. ஸி.யைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது.
இதைப் பாருங்கள்.’ என்று கூறியவாறு எனது மைத்துனர் செல்வத்தின் துணைவியார் திருமதி சாந்தி ஒரு புத்தகத்தைத் தந்தார்.
அந்தப் புத்தகம் ‘தமிழ் ஒலைகள் 2003 என்ற பிரிட்டிஷ் தமிழ் டிரக்டரி
இது அறுநூறு பக்கங்களைக் கொண்ட நூல். இலவசமாக வழங்கப்படுகிறது. புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்களால் வெளியிடப்படுகிறது. மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.
தமிழ் ஒலை சிறப்பாக வெளிவருவதையிட்டு எலிசபத் மகாராணியார் கூட வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
இந்தத் தமிழ் ஒலையில் விஷேட அம்சம் ஐரோப்பிய பக்கங்கள் டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன் என

Page 10
10 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
ஐரோப்பிய நாடுகளில் வாழும் நம்மவர்கள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
மற்றும் கணக்காய்வாளர்கள், கட்டடக் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், வைபவங்களில் உணவு வேலை வழங்குபவர்கள், சமூக அமைப்புகள், கணினி விற்பனை, புகைப்படக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், டாக்டர்கள் என்று பல்வேறு துறையினர் பற்றிய தகவல்கள், விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன.
லண்டன் செல்லும் ஒவ்வொருவரும் அவசியம் வைத்திருக்க வேண்டிய தகவல் களஞ்சியம். இத்தகைய தமிழ் ஒலைகள் வெளியிடும் டீ. சிறிஸ் கந்தராசாவும், ஏ. ஞானேந்திரனும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் ஒலை ஆசிரியர் குழுவில் தினகரன் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரான பொன். பாலசுந்தரமும் செயல்படுகிறார்.
இந்தத் தமிழ் ஒலைகள் எனக்குப் பெரிதும் உதவியாக அறிமுகமான கலை இலக்கிய நண்பர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள உதவியாக இருந்தது.
இலக்கிய ஆர்வலர் பத்மநாபர் ஐயர், நாடகக்கலைஞர் பாலேந்திரா, நடிகர் சிலோன் சின்னையா, ஓவியர் கே.கே. ராஜா, செல்வி அங்கையற் கண்ணி, பாரிஸில் வாழ்ந்த நடிகர் ரகுநாதன்

அந்தனி ஜீவா 11
ஆகியோருடன் தொடர்பு கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
மாலை நான்கு மணிக்கு நண்பர் மு. நித்தியானந்தனைச் சந்திக்கச் செல்வத்துடன் சென்றேன்.
அவரது காரில் செல்லாமல், வீட்டின் அருகில் உள்ள குயின்ஸ்பெரி ரயில் நிலையம் உள்ளது - அதனால் ரயிலில் செல்வது வசதியானது எனக்கருதி ரயிலில் பயணமானோம்.
லண்டனில் பல இடங்களுக்கு ரயிலில் போய் வருவது மிகச் சுலபம். சுரங்க ரயில் போக்குவரத்து மூலம் பல இடங்களுக்குச் சுலபமாக போய் வந்துவிடலாம்.
ரயில் நிலையங்களில் உள்ள தகவல் ܙ பிரசாரங்களான வழிகாட்டிகளை எடுத்து கையில் வைத்துக் கொண்டு பயணம் செய்து விடலாம்.
நண்பர் நித்தியானந்தன் கூறியபடி தீபம் தொலைக்காட்சி நிலையம் இருக்கும் ரயில் நிலையத்தின் அருகில் இறங்கி நின்றோம்.
சில நிமிடங்களில் நண்பர் நித்தியானந்தன், அனஸ் (இளைய அப்துல்லாஹ்) மாலி ஆகியோர் வந்தார்கள்.
நண்பர் நித்தியானந்தன் பாசத்துடன் கட்டியணைத்தார். அவர் மீது எனக்கு எப்பொழுதும் மதிப்பும் மரியாதையுமுண்டு.

Page 11
12 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
அருகிலுள்ள ரெஸ்டோரண்டில் அமர்ந்து பழைய நினைவுகளை இசை மீட்டினோம்.
நான் கொண்டு சென்றிருந்த மலையகப் படைப்புகளை நண்பர் நித்தியானந்தனிடமும், அனஸிடமும் கொடுத்தேன்.
மலையக வெளியீட்டகம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டிருந்த கவிதாயினி ‘மண்ணிழந்த வேர்கள்’ கவிதைத் தொகுதியை அக்கறையுடன் புரட்டிப் பார்த்தார்.
நூலாசிரியை பதுளையைச் சேர்ந்தவர். நித்தியானந்தனும் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஒவ்வொரு "கவிதையாகப் புரட்டி சில வரிகளை வாசித்தார்.
பின்னர் - மலையகத்தின் மூத்த படைப்பாளி கே. கணேஷ் பற்றி அக்கறையுடன் - நண்பர் சாரல் நாடனின் எழுத்து முயற்சிகளைப் பற்றிய விவரம் கேட்டார்.
மலையகத்தின் சிறுகதைச் சிற்பி என்.எஸ்.எம்.
ராமையா பற்றி சில சுவையான தகவல்களைச் சொன்னார். AO
அந்தப் பொன்மாலை பொழுதில் சுவையான பீர் அருந்தியபடி சிப்ஸை கொறித்தபடி பல விடயங்களைப் பேசி மகிழ்ந்தோம்.

அந்தனி ஜீவா 13
கொழும்பில் பம்பலப்பிட்டி கடற்கரை அருகில் சஹாரா வீதியில் அப்பொழுது கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய மட்டக்களப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.எஸ். மூக்கையாவுடன் நித்தியானந்தன் தங்கியிருந்தார்.
அப்பொழுது ஞாயிறு தினங்களில் அவர்களைச் சந்தித்து கடலில் குளித்து சுவைபானங்களை அருந்தி மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தோம்.
‘எப்பொழுது தீபம் பேட்டியை வைத்துக் கொள்ளலாம்?’ என நண்பர் அனஸ் கேட்டார்.
நான், “பாரிஸ் சென்று திரும்பிய பின்னர் பேட்டியை வைத்துக் கொள்ளலாம்’ என்றேன்.
செப்டம்பர் முதலாம் திகதியே பேட்டியை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம்.
பின்னர் அவர்களிடம் விடை பெற்று நானும் மைத்துனர் செல்வமும் ரயிலில் வரும் பொழுது எனக்கு வியப்பாக இருந்தது. ரயிலில் பயண்ம் செய்யும் அனைவருடைய கைகளிலும் பத்திரிகைகள்.
மெதுவாக அந்தப் பத்திரிகைகளில் விழிகளை மேய விட்டேன். “மெற்றோ என்ற ஆங்கில தினசரி.
‘இவர்கள் அனைவரும் பத்திரிகைகள் வாங்கிப் படிக்கிறார்களே!’ என ஆர்வத்துடன் செல்வத்திடம் சொன்னேன்.

Page 12
14 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
“பொறுத்திருந்து பாருங்கள்’ என்ற கேலியா ஒரு புன்சிரிப்புடன் கூறினார்.
ஒவ்வொரு ரயில் நிலையம் வரும் பொழுதும் பயணிகள் இறங்கிப் போகும்பொழுதும், கையில் வைத்திருந்த பத்திரிகைகளை இருக்கையில் போட்டு விட்டுப் போனார்கள். ஓரிருவர் மாத்திரமே பத்திரிகைகளை எடுத்துச் சென்றார்கள்.
என்னடா இவ்வளவு பக்கங்களைக் கொண்ட பத்திரிகைகளை அதுவும் பணம் கொடுத்து வாங்கிய பத்திரிகைகளை அனைவரும் வைத்திருக்கிறார்களே என்று பார்த்தால் பின்னர் தான் புரிந்தது. அது இலவசப் பத்திரிகை என்று. ஆனால் அதில் ஏராளமான செய்திகளும் கட்டுரைகளும் இருந்தன.
நானும் ஒரு பத்திரிகையை எடுத்துக் கொண்டு வீடு வந்தேன்.
மறுநாள் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
米

அந்தனி ஜீவா 15
மலையக மைந்தன்
மறுநாள் காலை. இனிமையான தகவல் ஒன்றை நண்பர் ராஜகோபால் தொலைபேசி மூலம் அறிவித்தார்.
மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், எழுத்தாளரும் சட்டதரணியும் கவுன்சிலராக இருந்த வரும், லண்டன்
பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டவருமான செல்வராஜாவைச் சந்திக்கும்படி சொன்னார்.
அவரது அலுவலகம் நான் தங்கியிருந்த வீட்டின் சிறிது தூரத்தில்தான் இருந்தது.
காலை பத்து மணி அளவில் அவரது அலுவலகம் சென்றேன். அலுவலகத்தில் வரவேற்பாளராக இருக்கும் ஆங்கிலப் பெண்மணியிடம் "மிஸ்டர் செல்வராஜா அவர்களைச் சந்திக்க வேண்டும்’ என்றேன்.
அவர் என்னிடம் "ஏதாவது எப்போயின்மென்ட் உண்டா? என்றார்.

Page 13
16 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
‘இல்லை’ என்றதும் அவர் தனது வாடிக்கையாளர்களுடன் பிஸியாக இருப்பதாக அறிய முடிந்தது.
அவரிடம் நான் இலங்கையில் இருந்து வந்திருப்பதாகவும், அவரிடம் எனது விசிடிங் கார்டை கொடுத்து விட்டு அங்கு அமர்ந்திருந்தேன்.
ஒரிரு நிமிடங்களில் கறுப்புக் கோட்டும் சூட்டும் அணிந்த ஒருவர் என்னருகில் வந்து தன்னை செல்வராஜா என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அத்துடன் “உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி’ என்று உரிமையுடன் எனது கைகளைப் பற்றிக் குலுக்கினார். ܫ- ܫ
நானும் “உங்களை இலங்கை வந்திருந்த பொழுது சந்திக்க முயற்சித்தேன்; முடியவில்லை. இப்பொழுது சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றேன்.
என்னை அவர் தனது பிரத்தியேகமான அறைக்கு அழைத்துச் சென்றார். அவரது உதவியாளர் சுடச் சுட தேநீர் கொண்டு வந்து தந்தார்.
முதலில் அவர் என்னிடம் eupg55 பத்திரிகையாளர் க. ப. சிவத்தைப் பற்றித் தான் கேட்டார்.
கண்டி திரித்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் க. ப. சிவம் வெளியிட்ட

அந்தனி ஜீவா 17
‘மலைமுரசு’ சஞ்சிகையில் தான் முதல் முதலில் எழுதியதாகக் குறிப்பிட்டார்.
பின்னர் எழுபதுகளில் தினகரன் வார மஞ்சரியில் ‘அட்டைகள் இரத்தத்தை உறிஞ்சுகின்றன’ என்ற சிறுகதையும், பெருந்தோட்டத் தொழிலாளர் பற்றி டெயிலி நியுஸில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையும் பலரின் பாராட்டைப் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
மலையகத்தின் இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வுக்காகப் பாடுபட்ட இர. சிவலிங்கத்தின் மறைவு பெரும் பேரிழப்பு என்றதுடன், தனது சட்டக் கல்லூரி நூல்களை இர. சிவலிங்கத்திற்குக் கொடுத்ததாகவும் அவருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்ததையும் குறிப்பிட்டார்.
‘கொழுந்து' சஞ்சிகையைத் தொடர்ந்து கொண்டுவரக் கூடாதா? ‘மலையகம்’ என்ற அடையாளத்துடன் ஒரு காத்திரமான சஞ்சிகை வெளிவர வேண்டும்’ என்றார்.
‘ஆரம்பத்தில் சிறிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். என்னுடைய இலக்கிய வாழ்க்கையைப் பொறுத்தவரை அதன் அடிப்படை, அத்திவாரம் எல்லாம் கண்டி திரித்துவக் கல்லூரி தான். அந்த வகையில் எனது தமிழ் ஆசிரியர் நவாலியூர் நா. செல்லத்துறைக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன்’ என நிறுத்திவிட்டு மீண்டும் அவரே தொடர்ந்தார் ‘எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை

Page 14
18 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
நான் மிகவும் பெருமைப்படும் விடயம் என்னவென்றால், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக இருந்த அமரர் வெள்ளையன் அங்குதான் படித்தார். அதே கல்லூரியில் நானும் படித்தேன் என்பது பெருமையாக இருக்கிறது.
அப்பொழுது கண்டியிலிருந்து ‘மலைமுரசு’ வெளிவந்து கொண்டிருந்தது. என்னுடைய கள்ளத்தோணியா’ என்ற சிறுகதை அப்பொழுது வெளிவந்தது’ என்றார்.
நான் கொண்டு சென்ற “ஞானம்' சஞ்சிகை, எனது 'அக்கினிப் பூக்கள்’ ‘மலையக மாணிக்கங்கள்’ ஆகிய நூல்களை அவரிடம் கொடுத்தேன்.
பாரிஸ்டரான மாத்தளை செல்வராஜா தனது சிறுகதைகளைத் தொகுத்து தான் பிறந்த மண்ணிலே வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தெரிவித்தார்.
நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, அவரது உதவியாளர் இரண்டு, மூன்று தடவை எட்டிப் பார்த்துவிட்டு சென்றார்.
பாரிஸ்டர் செல்வராஜாவிடம் சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்காகப் பலர் காத்திருப்பதை அறிந்து நானே மீண்டும் சந்திப்பதாகக் கூறி விடைபெற்றேன்.
‘ஒரு மாலைப் பொழுது வாருங்கள் நிறைய
பேச வேண்டும்’ என்று விடை கொடுத்தார்.

19
அந்தனி ஜீவா
uno? yoogiko smygud»s 49-7/euấoudreợae) 4,7ąsyuri

Page 15
20 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
மலையக மண்சார்ந்த ஒருவர் இன்று பிரித்தானியாவிலே செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக மட்டுமின்றி, கலை - இலக்கிய கல்வியாளர்களுக்கிடையே கெளரவத்திற்குரிய மனித நேயமிக்கவராகத் திகழ்கிறார்.
இவரைப் பற்றி எனது இனிய நண்பர் புதினம் ராஜகோபால் பெருமையுடன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“மாத்தளையில் பிறந்து லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த செல்வா, பிரிட்டன் அரசியல் நீரோட்டத்தில் இரண்டறக் கலந்து, கவுன்சிலராகி, வேட்பாளராகி செல்வாக்குள்ள அரசியல்வாதியாகத் திகழ்கிறார். a -ar
லண்டனில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சிகளில் அவரது குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிகம் பேசாவிட்டாலும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும், நல்ல கருத்துகளையும் மக்கள் மத்தியில் சொல்லி வருகிறார்.
மலையக மண்ணின் மைந்தனை எனக்கு
அறிமுகப்படுத்திய ராஜகோபாலுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

அந்தனி ஜீவா 21
கலைக்கோவில்
அன்று மாலை கலையழகு மிளிரும் இந்தியாவின் ஆலயம் ஒன்றை லண்டன் நீஸ்டன் நகரில் கண்ட பொழுது எனது விழிகள் வியப்பால் விரிந்தன.
லண்டனில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த குஜராத்தியினர் இந்த ஆலயத்தை நிர்மாணித்துள்ளனர். இந்தியாவில் இது போன்ற பல ஆலயங்கள் உள்ளன. இந்தியாவிற்கு வெளியே இவ்வளவு பிரம்மாண்டமான ஆலயம் இது என கின்னஸ் புத்தகத்திலும் பதியப்பட்டுள்ளது.
பூரீ சங்கர நாராயண மந்திர் என்ற இந்த ஆலயம் நீஸ்டன் நகருக்கே பெருமை சேர்க்கின்றது.
இந்தியச் சிற்ப சாஸ்திர இந்து மரபில் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்திற்கு பல்கேரியாவிலிருந்து 2832 தொன் எடையுள்ள வெண்ணிறச் சுண்ணாம்புக் கற்களும், 2000 தொன் எடையுள்ள மார்பில் கற்கள் இத்தாலியிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு 1526 சிற்பக் கலைஞர்களின் கைவண்ணத்தில் இரண்டு வருடங்களில் கலை வண்ணமிக்க சிற்பமாக வடித்துள்ளனர்.

Page 16
22 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயன
 
 

அந்தனி ஜீவா 23
பின்னர் கலைச் சிற்பங்களாக வடிவமைக்கப்புட்ட 26,300 சிற்பங்களைக் கொண்டு பூரீ சங்கர நார்ாயண மந்திர் என்ற கலா பூர்வமான ஆலயத்தை நிர்மாணிக்க மூன்று வருடங்கள் சென்றதாக அங்குள்ள பதிவுகள் தெரிவிக்கின்றன.
அது மாத்திரமல்ல, சந்தன மரத்தினாலான தூண்கள், கூரைச்சட்டங்கள் இன்னும் பல நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் ஒரே அமைதி. பக்தர்களுக்கான பிரார்த்தனைக்கூடம் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
உலகத்தில் பல பாகங்களிலும் இருந்து அரசியல் பிரமுகர்கள் கூட இந்த ஆலயத்திற்கு வருகை தந்துள்ளார்கள். எலிசபெத் மகாராணியார் கூட இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்கள்.
உலகின் எட்டாவது அதிசயக் கட்டிடம் என ‘ரீடர்ஸ் டைஜஸ்ட் இந்த ஆலயத்தின் சிறப்புகளை வியந்து பாராட்டியுள்ளது.
ஆலயத்தின் வெளியே மிக ரம்மியமான பூங்கா
காணப்படுகிறது. கண்களைக்கவரும் வகையில் எழில் மிகும் பூக்கள்.
நீண்ட நேரம் அந்த செளந்தர்யத்தை ரசித்ததில் மனதிற்கு பெரும் நிம்மதியாக இருந்தது.
来

Page 17
24 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
5rřáů Drřšparoš sír6Lit
)ெண்டன் பயணத்திற்கான விஸா கிடைத்தவுடன் நான் முதன் முதலில் அதுவும் அத்தியாவசியமாக யாரைப் பார்க்க வேண்டும் என்பதை எனது குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன். a -P
அவர் வேறுயாருமல்ல.
உலகத்தை மாற்றியமைத்த நூல்களுள் ஒன்றான ‘மூலதனத்தை வழங்கிய கார்ல் மார்க்ஸ்.
அவரின் கல்லறையைப் பார்க்க வேண்டும் என்பதே எனது பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
பேட்ரண்ட் ரஸ்ஸல் என்ற பேரறிஞன் கார்ல் மார்க்ஸ் பற்றி குறிப்பிடுகையில், “மார்க்ஸுக்கு ஜெர்மனி ஒழுங்கான திட்டத்தை வழங்க கூடிய ஆற்றலை அளித்தது. பிரான்ஸ் அவரை ஒரு புரட்சியாளனாக்கியது. இங்கிலாந்து ஒரு அறிஞனாகச் செய்தது” என்றார்.

25
அந்தனி ஜீவா
4ırmygowa»/ff qego@so affæ9æqws qwępujonqopus, ganoong) gwə49-w gogoșoa»-w

Page 18
26 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகத்தில் தோன்றிய பெரும் சிந்தனையாளர்களுள் கார்ல் மார்க்ஸும் ஒருவர். -
கார்ல் மார்க்ஸ் 1818ல் மே 5-ம் திகதி ஜெர்மனியில் பிரஷ்யாவின் ரைன் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரின் குடும்பத்தில் பிறந்தார்.
1883-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் திகதி லண்டனில் அமரரானார். மார்ச் 17-ம் திகதி லண்டன் ஹை கேட் மயானத்தில் மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்டார்.
அப்பொழுது அவரது நெருங்கி நண்பர் ஏங்கல்ஸ் நிகழ்த்திய இரங்கல் உரையில், “நம் கட்சியின் மிகப் பெரும் அறிஞர் தன் சிந்தனையை நிறுத்திவிட்டார். அவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்” என்றார்.
இன்று உலகமே போற்றப்படும் உன்னத மேதை. வாழும் பொழுது எத்தகைய துன்பங்களை அனுபவித்தார் என்பதை உலகமே அறியும்.
இப்பொழுது காரல்ஸ் மார்க்ஸ் இறந்து ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது.
வாழும் பொழுது துயரங்களுக்கு உள்ளான ஒரு மேதையை இன்று உலகமே போற்றும் உன்னதமான மானிடனாகிவிட்டார்கள்.

அந்தனி ஜீவா 27
, “கார்ல்மார்க்ஸ் ஆராய்ச்சி விளக்கை ஏந்திக் கொண்டு அறிவுச்சுரங்கத்தின் ஆழத்திற்குச் சென்றான். புதிய தத்துவங்களைக் கண்டுபிடித்தான். ஆனால் அதே சமயத்தில் வறுமையின் ஆழத்திலே வாழ்ந்தான். அதிகார சக்திகளின் அச்சுறுத்தல்கள் அலைக்கழித்தன. சக பாடிகள் பரிகசித்தார்கள். சொற்போர்க்கு இழுத்தார்கள். கடன்காரர்கள் இல்லாத தெல்லை எல்லாம் கொடுத்தார்கள்.
அவன் தன் ஆயுட் காலங்களில் எவ்வளவு கஷ்ட்டப்பட்டான். எத்தனை பேர்களின் கோபதாபங்களுக்கு உள்ளனான்’ என்று கார்ல் மார்க்ஸ் மேல் மிகுந்த மதிப்பு கொண்டு ஒரு கவிஞன் குறிப்பிடுகிறான்.
“மார்க்ஸ் யூதனாகப் பிறந்தான், கிறிஸ்தவனாக வாழ்ந்தான். மனிதனாக மரித்தான். அவன் பெயர் ஊழிக் காலம் வரையில் ஒலித்துக் கொண்டிருக்கும்!” என அவன் காலத்தில் வாழ்ந்த கவிஞன் குறிப்பிட்டுகிறான்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மாபெரும் மனிதர் என்று உலகமே இவரைப் போற்றியது.
‘மூலதனம்’ எழுதிய கார்ல் மார்க்ஸ் வறுமையைத் தவிர வேறு எதையுமே அனுபவிக்க வில்லை என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும். மார்க்ஸ் என்ற மேதை மறைந்து நூற்றாண்டும் கடந்து விட்டது. உலகமே இன்று அவரைப்

Page 19
28 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
போற்றுகின்றது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தூற்றியது. ஆனால் அவரைப் புரிந்து கொண்டவர்கள் இரண்டே இரண்டு பேர்தான்.
ஒருவர் அவர் வாழ்வோடு ஒன்றிவிட்ட துணைவி ஜென்னி. இன்னொருவர் அந்த மேதையின் வேதனையைத் தெரிந்து கொண்ட பிரெட்ரிக் ஏங்கல்ஸ்.
ஏங்கல்ஸ் ஒரு செல்வந்தரின் மகன். மார்க்ஸ் வறுமையில் வாடிய போதெல்லாம் பொருள் உதவி செய்தவர். மார்க்ஸின் மீது பெருமதிப்பு கொண்ட ஜென்னி, தனது சொத்து சுகங்களை எண்ணம் துறந்து மார்க்ஸைக் காதலித்து மணமுடித்தார்.
மார்க்ஸ் மனைவி ஜென்னி எழுதிய குறிப்பில் “எங்கள் குட்டி தேவதை பிரான்சிஸ்கா மார்புச் சளியால் மூச்சுத் திணறி, வாழ்வுக்கும் மரணத்துக்கும் நடுவே மூன்று நாள்கள் போராடி இறந்து போனாள். அவள் பிறந்தபோது தொட்டில் வாங்கக் கூட எங்களிடம் காசில்லை. இறந்த போது சவப்பெட்டி வாங்கக் கூட காசில்லை” என்று உருக்கமாக எழுதியுள்ளார்.
மாபெரும் மேதையில் குடும்பத்தில் எத்தகைய சோகம்!
அத்தகைய மேதையின் கல்லறையைத்
தரிசிப்பதற்காக ஒரு நாள் மாலை வேளையில் மூன்று மணி அளவில் புறப்பட்டோம்.

அந்தனி ஜீவா 29 ജിത്ത
எங்களோடு செல்வத்தின் குடும்பத்தினரும் வந்தார்கள். அந்த இடத்தை சிரமப்பட்டே தேடிப் பார்த்தோம்.
காரல் ஸ்மார்க்ஸின் கல்லறையைப் பார்ப்பதற்கு இரண்டு பவுன் அளவிடுகிறார்கள்.
கல்லறையின் நுழைவாயிலில் ஒரு பெண்மணி பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
கார்ல் மார்க்ஸின் கல்லறையைத் தரிசிப்பதற்கு உலகின் பல பாகங்களிலும் இருந்து பலர் வருகிறார்கள். நாங்கள் போயிருந்த பொழுது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு குழுவினர் வந்திருந்தார்கள்.
கார்ல் மார்க்ஸ் கல்லறையில் பதியப்பட்டிருந்த கல்லின் மீது மார்க்ஸின் மார்பளவு உருவம் சிறப்பாகச் வடிவமைக்கப்பட்டிருந்தது. -
அந்தச் சிலையை உற்றுப் பார்த்த பொழுது அவரது கரிய விழிகள் ஏதோ பேசுவது போலிருந்தது. அரை மணி நேரம் அந்தக் கல்லறையைப் பார்த்தவாறு மாமேதைக்கு மெளன அஞ்சலி செலுத்தினோம். மனதிற்கு நிறைவாக இருந்தது.
கார்ல் மார்க்ஸ் பற்றிய நினைவுகளைச் சுமந்து கொண்டு அந்த உத்தம மேதையின் மனிதகுலத்திற்காகச் செய்த பணிகளைப் பற்றி நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.

Page 20
30 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
“ஒரு தேசிய இனத்தை அடிமைப்படுத்துகின்ற மற்றொரு தேசிய இனம் தனக்கே விலங்குகளைத் தயாரித்துக் கொள்கிறது’ என்ற கார்ல் மார்க்ஸின் கூரிய சிந்தனையை நினைத்துப் பார்த்தேன்.
மனிதகுலத்தின் மேன்மைக்காகச் செயற்பட்ட மாபெரும் மேதைகளான மார்க்ஸ் - ஏங்கல்ஸ் என்றுமே நினைவு கூரப்படுவார்கள்.
米

அந்தனி ஜீவா 31
வரலாற்றுச் சின்னங்கள்
திடீரென ஒரு கடிதம். அதில் இரண்டு பதிவு செய்யப்பட்ட GT டிக்கெட்டுகள். லண்டனிலிருந்து இருநூறு மைல் தூரமுள்ள ஹேரோகேட் என்ற இடத்திற்கு வரும்படி எனது துணைவியாரின் அண்ணனின் அழைப்பு. ஐந்து மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து ஹேரோகேட் வந்து சேர்ந்தோம். பஸ் நிலையத்தில் எனது மனைவியின் அண்ணன் தேவா காருடன் காத்திருந்தார். ஹேரோகேட் ஒர் அழகான நகரம். அமைதியான சுற்றாடல். நகரின் அருகில்தான் அவரது வீடு. பத்து நிமிடத்துக்குள் அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டோம்.
அவரது துணைவியாரான வெள்ளைக்காரப் பெண்மணியான ஜொய்ஸ் எங்களை அன்புடன் வரவேற்றார்.
ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை வந்து எங்களுடன் உறவாடிச் சென்றுள்ளார். அவர் கல்லூரி ஒன்றின் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

Page 21
ப் பயணம்
நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய
32
Ausong)49 'qs/muấ%9
 

அந்தனி ஜீவா 33
அவர்களின் வீட்டைச் சுற்றி சிறிய பூந்தோட்டமும் இருந்தது. தோட்டத்தில் ஆப்பிள் மரங்களும் இருந்தன. அந்தப் பூந்தோட்டத்தை சிறப்பாகப் பராமரித்து வந்தனர்.
அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உண்டு. இருவரும் பட்டதாரிகள், லண்டன் நகரில் தொழில் நிமித்தம் தங்கியிருந்தார். நாங்கள் வந்திருப்பதை அறிந்து சனி, ஞாயிறு தினங்களில் வருவதாக அறிவித்தார்கள்.
அன்று இரவு பலதும் பத்தும் பேசி மகிழ்ந்தோம். பின்னர் விருது பெற்ற பிறவி மலையாளப்படம் பார்த்தோம்.
மறுநாள் அருகிலுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க யோர்க் நகரத்திற்குப் பயணமானோம்.
யோர்க் நகரம் ரோமானியர் ஆட்சி செய்த இடம். அங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த யோர்ச்மினிஸ்டர் என்ற தேவாலயம் உள்ளது.
இந்தத் தேவாலயம் ஒரு காலத்தில் ரோமானிய படையினரின் தலைமை நிர்வாக அலுவலகமாகத் திகழ்ந்துள்ளது.
யோர்க் மினிஸ்டர் என்ற தேவாலயத்தைப் பார்க்கச் செல்லும் வீதியில் ஒரு பெண்மணி பாடிக் கொண்டிருந்தார்.

Page 22
34 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
யோர்க் மினிஸ்டர் ஆலயத்தின் தோற்றம்
 

அந்தனி ஜீவா VA 35
அவரது இனிமையான குரலால் வசீகரிக்கப்பட்டு ஒரு கூட்டமே அவரது பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தது.
நாங்களும் அவர்களுடன் சங்கமித்தோம். அந்த கோகிலக் குயிலின் குரல் எங்களையும் ஆட்கொண்டது.
பாடல் முடிந்தது. அவர் வைத்திருக்கும் தட்டில் காசு போட்டார்கள். பின்னர் சிலர் அவருடன் உரையாடினார்கள்.
அப்பொழுதுதான் தெரிந்தது அவர் ஒரு பி.பி.ஸி. தொலைக்காட்சி பாடகர் என்று. பொது மக்கள் முன்னிலையில் பாடுவதை அவர் மிகவும் விரும்புகிறார்.
பின்னர் வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட அந்தத் தேவாலயத்திற்குச் சென்ற பொழுது.
அந்தத் தேவாலயத்தைப் பார்வையிட பல பாகங்களிலும் இருந்து பார்வையாளர்கள் வருகிறார்கள். அந்தத் தேவாலயத்தைப் பார்வையிட வருபவர்களிடமிருந்து ஒருவருக்கு நான்கு பவுண்களை அறிவிக்கிறார்கள். ரோமானிய சிற்பக் கலையின் சிறப்பு அந்தத் தேவாலயத்தில் பளிச்சிடுகிறது.
அந்தத் தேவாலயத்தில் உள்ளே ரோமானிய
எழுத்துக்கள் பொருத்தப்பட்டிருந்த மணிக்கூண்டுக்குக்
கீழே இரும்பினால் செய்யப்பட்ட இரண்டு ரோமானிய வீரர்களின் உருவங்கள்.

Page 23
நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
யோர்க் நகர வீதியில் வீதி ஒவியர் நூலாசிரியரை கோட்டோவியமாக வரைந்து கொண்டிருக்கிறார்
 

அந்தனி ஜீவா 37
அந்த மணிக்கூண்டின் ஒவ்வொரு மணித்தியாலங்களுக்கும் அந்த இரண்டு உருவங்களும்
கையில் வைத்திருக்கும் இரும்புத் தடியால் மூன்று தடவை அடிக்கிறார்கள்.
இதைப் பார்ப்பதற்குச் சுற்றுலா பயணிகள்
குழுமி நிற்கிறார்கள். தேவாலயத்திலுள்ள கலையழகு மிளிரும் சுவரோவியச் சிற்பங்கள் கண்கொள்ளக்காட்சி.
தேவாலயத்தின் அடித்தளத்திற்குச் சென்ற ஒரு பொழுது, ஒவ்வொருவருக்கும் ஒரு ஹெட்போனைத் தருகிறார்கள்.
அதன் மூலம் தேவாலயத்தின் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை விவரணமாகச் சொல்கிறதைக் கேட்கலாம்.
அந்த விவரணத்திற்குரிய சிற்பங்கள், ஒவியங்கள் போன்றன அடிதளத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தேவாலயத்தில் இருந்து திரும்பிவரும் வீதியில் ஒருவர் கெரிகேச்சர் என்ற கோட்டோவியமாக ஒவ்வொருவரையும் வரைந்து கொண்டிருந்தார். இலங்கையில் கொலட், ஒபாத்தா போன்றவர்களின் கோட்டோவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை.
அந்த ஒவியர் வரையும்வரை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

Page 24
LI 60 TLD
நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய
’,9069 iso?
spoolff mawazoo qound soyurmg)
 

அந்தனி ஜீவா 39
பின்னர், அவரோடு உரையாடிய பொழுது அவரது முன்னாலிருந்த நாற்காலியில் அமரச் சொன்னார். ஐந்து நிமிடத்தில் என்னையும் கோட்டோவியமாக வரைந்து அவரது கையெழுத்தைப் போட்டுத் தந்தார்.
அவர் ஒரு ஓவியத்துக்கு ஐந்து பவுண்
வாங்குகிறார். நானும் திருப்தியுடன் ஐந்து பவுணை கொடுத்தேன்.
ரோமானியர்களின் கோட்டை மதில்களைச் சுற்றிப் பார்த்தோம். ஆயிரம் ஆண்டுகள் பழம் பெருமைமிக்க மதில்களை அவர்கள் சிறப்பாகப் பாதுகாக்கிறார்கள்.
யோர்க் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தேசிய புகையிரத நூதனசாலையை பார்க்கச் சென்றோம்.
புகையிரத நண்பர்கள் என்ற அமைப்பு 1977இல் இந்த தேசிய புகையிரத நூதனச்சாலையை உருவாக்கியுள்ளது. இந்த நூதனச் சாலை பொதுமக்களின் பார்வைக்காக காலை பத்து மணிமுதல் மாலை ஆறு மணி வரை திறந்து வைத்திருக்கிறார்கள்.
இந்த நூதனச் சாலையில் ஜப்பானியர் அதி வேக ரயிலான “புளட் ரயிலில் ஏறி பார்த்தபொழுது. அதன் உள்ளே வைக்கப்பட்டிருந்த தொலைக் காட்சியில், ரயிலை பற்றிய விவரண சித்திரமொன்றை ஒளிபரப்புகிறார்கள்.

Page 25
40 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
அந்த ரயில் நூதனச்சாலையைச் சுற்றிப்பார்த்த
பொழுது ஐம்பது ஆண்டுகால வரலாற்றைச்
சித்தரிக்கும் புகையிரதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மகாராணியார் குடும்பத்தினருக்குத் தனியாக ரயில்கள் வைத்துள்ளனர்.
விக்டோரியா மகாராணியார் பயணம் செய்த புகையிரதம் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த நூதனச் சாலையை விட்டு வெளியே வரும் பொழுது சில விளம்பரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. யோர்க் சயரில் திறந்த கவிதைப் போட்டி.
முதல் பரிசு - இலங்கை பயணத்தில் ஒரு இலட்சம் ரூபாய்.
இரண்டாவது பரிசு - நாற்பதாயிரம் ரூபாய்.
மூன்றாம் பரிசு - பதினைந்தாயிரம். மற்றும் பத்து ஆறுதல் பரிசுகள் தலா இரண்டாயிரம்.
போட்டிக்கான கவிதை என்பது வரிகளில் இருக்க வேண்டும். பரிசு பெரும் கவிதைகளைப் பரிசளிப்பு விழாவில் படைப்பாளியே படிக்க வேண்டும்.
இன்னொரு விளம்பரம் எழுத்துப் பயிற்சிப் பட்டறை பற்றியது.
மற்றுமொரு விளம்பரம் வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்’ நாடக அரங்கேற்றம் பற்றியது.

அந்தனி ஜீவா 41
ரோமானிய வீரரின் சிலை அருகில் நூலாசிரியர்

Page 26
42 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம் " யோக்கில் தியேட்டர் ரோயலில் தினசரி நாடகம் நடைபெறுகிறது.
லண்டனில் ஒரு நாடகம் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தெரிவித்தேன்.
'நாடகம் பார்ப்பது என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே டிக்கட் புக் பண்ண வேண்டும்’ என்றார் தேவா.
"இலங்கை திரும்புவதற்கு முன் ஒரு நாடகம் பார்க்க ஏற்பாடு செய்வேன்’ என்றார்.
来

அந்தனி ஜீவா 43
grLas GD69ósi fsODSTONTOYW
நான் லண்டன் செல்வதற்கு முன்னர் விஸா எடுப்பதிலிருந்து எனக்கு லண்டனைப் பற்றி பல்வேறு தகவல்களைச் சொல்லி அறிவுரை வழங்கிய சிங்கள - ஆங்கில நாடகங்களில் நடிக்கும் நடிகரான பீலிக்ஸ் பிரேமவர்தனா எனது கலை - இலக்கிய முயற்சிகளை நன்கறிந்தவர்.
நாடக மேதை ஷேக்ஸ்பியரின் ‘ஸ்டார் போர்ட் அவன்’ என்ற இடத்தில் உள்ள அவரது பிறந்த இடத்தையும் நினைவாலயத்தையும் கட்டாயம் பார்க்க வேண்டும் என அன்புக் கட்டளை போட்டு விட்டார்.
இதற்காக ஒரு ஞாயிற்றுக்கிழமையை எனக்காக என் உறவினர்கள் ஒதுக்கி வைத்துக் கொண்டனர்.
ஒரு ஞாயிறு காலை இனிமையாக விடிந்தது.
திட்டமிட்டபடி லண்டனிலிருந்து நூறு மைல் தூரத்திலிருந்த நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த இடமான ஸ்டார் போர்ட் அவன் என்ற இடத்திற்குப் பயணமானோம்.
நாங்கள் போகும் வழியில் தான் புகழ்பெற்ற ஒக்ஸ்பொர்ட் பல்கலைக்கழகம் உள்ளது. ஒன்றரை

Page 27
44 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
 

அந்தனி ஜீவா 45 மணித்தியாலத்தில் நாடக மேதை ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தைச் சென்றடைந்தோம்.
நாடகமேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தை ‘ஷேக்ஸ்பியர் நாடு’ என்றழைக்கிறார்கள்.
முதலில் தகவல் நிலையத்திற்குச் சென்று ஷேக்ஸ்பியரின் நினைவாலயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டோம்.
அதே தகவல் நிலையத்தில் ஷ்ேக்ஸ்பியரின் நாடக நூல்களும், நாடகங்கள் சிலவற்றின் வீடியோ நாடாக்கள் இருந்தன.
அங்கு இருந்த வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘வாழ்வும் காலமும்’ என்ற டி.வி.டி.யை பதினான்கு பவுணுக்கு வாங்கிக் கொண்டேன்.
பின்னர் அந்த நாடக மேதையின் நினைவாலயத்தை நோக்கி நடந்தோம். நாடக மேதை நானுறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அந்தத் தெருவிலே நடந்தபொழுது எனக்குள் ஒரு புதிய உணர்வு ஏற்பட்டது.
அந்தப் புகழ்பெற்ற நாடகாசிரியர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் 1591-ல் தொடங்கி இன்றுவரை மேடையேற்றிக் கொண்டிருக்கும் நாடகங்களுக்குச் சொந்தக்காரர்.
நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் லண்டன் மண்ணின் மைந்தராக இருந்தாலும், உலகமெங்கும்

Page 28
46 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
உள்ள நாடகக் கலைஞருக்குச் சொந்தக்காரர். இவரது நாடகப்படைப்புகள் பல மொழிகளிலும் ஆக்கம் பெற்றுள்ளது. இவரது நாடகங்களில் இவரது படைப்பாற்றல் வெளிப்படுகின்றது.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் 37 நாடகங்களும் அவருக்குப் பின்பும் ஏன் இன்று வரையிலும் உலகின் பல பாகங்களிலும் மேடையேற்றப்படுகிறது.
நான் நாடகத்துறையில் ஈடுபட்டிருந்த காலங்களில் பிரபல திரைப்பட நடிகராக விளங்கிய டோனி ரணசிங்க, சிங்கள வடிவம் தந்த வெனிஸ் நகர வணிகர் என்ற நாடகத்தைப் பார்த்த ஞாபகமுண்டு.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பலவற்றை தமிழ் மொழி பெயர்ப்பில் படித்துள்ளேன்.
பல்கலைச் செல்வரான தான் தோன்றி கவிராயர் சில்லையூர் செல்வராஜன் தமிழில் தந்த “ரோமியோ ஜூலியட்’ வானொலி நாடகத்தைக் கேட்டு பரவசமடைந்துள்ளேன்.
நான் லண்டன் செல்வதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் நடிக நண்பர் கலைச் செல்வனின் நெறியாள்கையில் ஒத்தல்லோ’ நாடகம் கொழும்பு டவர் அரங்கில் மேடையேறியது.
முன்பு ஒரு தடவை நண்பர் கே. கே. மதிவாணன் ஆகியோருடன் இணைந்து பிரபல பாடகர் ஏ.ஈ. மனோகரனின் இலங்கையில் முதலாவது

அந்தனி ஜீவா 47
இசை நிகழ்ச்சியான ‘தேன்கிண்ணம்’ என்ற இசை நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினோம். அதில் 'ஒத்தல்லோ’வில் ஒரு காட்சியைத் தயாரித்து வழங்கினேன்.
அந்த ஒத்தல்லோ ஓர் அங்கத்தில் நடிகர் பூg சங்கரர் ஒத்தல்லோவாகவும், நடிகை சந்திரகலா டெஸ்டி மோனாவாகவும் நடித்தார்கள். அதனை நான் நெறிப்படுத்தியிருந்தேன்.
ஷேக்ஸ்பியரின் “ஒத்தல்லோ”வாக நடிகர் கலைச்செல்வன் சிறப்பாக நடித்திருந்தார். ஒத்தல்லோவாக கலைச்செல்வன் சிறப்பாக நடித்தார்.
ஒத்தல்லோ நாடகத்தின் முக்கிய பாத்திரமான இயாகோவாக பூரீகரன் சீனிவாசனும் டெஸ்டிமோனோவாக ராஜபூரீயும் நடித்தார்கள்.
நாடகமேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் வாழ்ந்த நினைவாலயத்தைப் பார்க்க உலகின் பல புாகங்களிலுமிருந்து பலர் வருகிறார்கள்.
முதலில் நாடக மேதை வாழ்ந்த வீட்டைப் பார்ப்பதற்காக அவர் வாழ்ந்த, நடந்த தெருவில் நடந்தோம்.
அந்தத் தெருவே ஒரு கலைக்கோலமாகக் காட்சியளித்தது. அந்தத் தெருவில் ஒரு பெண்மணி ஆறு அல்லது ஏழு புல்லாங்குழலை ஒருங்கிணைத்து செய்யப்பட்டது போன்ற ஒரு வாத்தியக் கருவியை வாயால் ஊதி இசைத்துக் கொண்டிருந்தார்.

Page 29
48 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
அந்த இனிமை மிகுந்த இசை. அவர் அருகில் எங்களையறியாமல் எல்லாரையும் இழுத்துச் சென்றது.
அவர் டைட்டானிக்’ திரைப்படத்தின் பாடலை, தனது இசைக்கருவியால் மெல்லிய ராகமாக இசைத்துக் கொண்டிருந்தார்.
அவரது அருகில் வைத்திருந்த மின் கருவிகளில் அவர் இசைக்கும் இசைக்கு ஏற்றவாறு இசை சப்த கோலங்கள் வந்து கொண்டிருந்தன.
அந்த இனிமையான இசையைக் கேட்டுவிட்டு அவரைக் கடந்து போகையில் கோட்டு, சூட்டுடன் தொப்பி சகிதம் ஒரு சிறிய மேடையில் ஒருவர் சிலைபோல் நிற்கிறார்.
அவரது தோற்றம் பிரபல நடிகர் சார்ளி சப்ளினை போல் தோற்றமளித்தது.
அந்தச் சிலையாக நிற்கும் கலைஞர் முன்னால் வைக்கப்பட்டிருந்த தட்டில் பார்வையாளர்கள் காசு போடும்போது மட்டும் தலையை மாத்திரம் அசைத்து நன்றி தெரிவிக்கும் பாவனையில் பார்க்கிறார்.
அவரைச் சுற்றி ஒரு கூட்டம்.
இவரைக் கடந்து செல்லும் போது இரு சகோதரிகள் வயலின் கருவியை இசைக்கின்றனர்.
இன்னும் சிலர் விதவிதமான தோற்றத்தில் காணப்பட்டனர். ஒரு கலைஞர் ஷேக்ஸ்பியரின்

abssá galm 49
கதாபாத்திரமான எட்டாவது ஹென்றி மன்னனாகக் காட்சியளிக்கிறார்.
பின்னர் நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்றோம். அந்த நினைவாலயத்தைப் பார்ப்பதற்கு ஆறரை பவுண் அறிவிடுகிறார்கள்.
நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் வாழ்ந்த வீட்டை தேசிய சொத்தாகப் பாதுகாக்கிறார்கள். அதனை ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தின் நம்பிக்கை நிதியம் நிர்வாகிக்கின்றது.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவாலயத்திற்குள் நுழைந்த பொழுது புகழ் பெற்ற நாடகக் கலைஞர்களைப் பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன.
நாடகக் கலைஞரான ஷேக்ஸ்பியர் 1564ல் ஏப்ரல் 26ம் திகதி பிறந்துள்ளார். 1616ல் மே மாதம் 24ல் மரணமடைந்துள்ளார்.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் தந்தையின் பெயர் ஜோன். தாயாரின் பெயர் மேரி.
பாடசாலையில் படிக்கும் பொழுது விளையாட்டிலும், கலைகளிலும் ஆர்வம் கொண்டவராக ஷேக்ஸ்பியர் இருந்துள்ளார்.
நாடக ஆர்வத்தின் காரணமாக தனது பிறந்த ஊரிலிருந்து லண்டனுக்கு நூறு மைல்கள் கால்நடையாக நான்கு நாட்கள் நடந்து வந்துள்ளார்.

Page 30
50 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
 

அந்தனி ஜீவா 51
உலகமே போற்றும் உன்னத நாடகமேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் முதலில் திரைக்குப் பின்னால் வசனம் சொல்லிக் கொடுப்பவராகவும், பின்னர் நடிகராகவும் அறிமுகமானார்.
நாடக மேடையேற்றம் சம்பந்தமான அனைத்து நுட்பங்களையும் அனுபவத்தின் மூலம் கற்றார். அதனால் தான் அவர் எழுதிய நாடகங்கள் உலகின் பல பாடங்களில் பல நாடுகளில், பல மொழிகளில் மேடையேற்றப்படுகின்றன.
நாடகமேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் தாம் வாழ்ந்த காலத்தில் 41 நாடகங்களை எழுதியுள்ளார். அவர் மறைவுக்குப் பின்னர் 36 நாடகங்கள் நூல்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
இவர் நாடகமெழுத தொடங்கிய காலகட்டத்தில் இன்பியல், துன்பியல், வரலாற்று நாடகம் என மூன்று வகை நாடகங்கள் வழக்கிலிருந்தன. இம்மூன்று வகையினுள் தமக்கு உகந்தது எதுவெனத் தெரிந்துணர்ந்து கொள்வதற்கான முயற்சியில் இறங்கினார்.
அக் காலத் தி ல் நாடக மெ ழுதி ப் பிரபலமடைந்திருந்த நாடகாசிரியர்களின் செயல் முறைகள்ைப் பின்பற்றி முதன்முதலாகச் சோதனை நாடகங்கள் எழுதலானார் ஷேக்ஸ்பியர். லத்தீன் இன்பியலைப் பின்பற்றி சில நாடகங்களை எழுதினார். பின்னர் துன்பியல் நாடகங்களை எழுதினார்.

Page 31
52 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
வில்லியம் ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்களை விட அவரது துன்பியல் நாடகங்ளே மிகவும் விரும்பப்பட்டன. அவரது துன்பியல் நாடகங்களின் நாயகர்களான ஹாம்லெட் கிங் வியர், ஒத்தல்லோ, புறுட்டஸ் ஆகிய பாத்திரங்கள் பலரின் பாராட்டை பெற்றன.
ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர், விரும்பிய வண்ணமே, மெக்பாத், இலக்கியத்தில் உன்னத படைப்பாகக் கருதப்படுகிறது.
அந்த ஷேக்ஸ்பியரின் நினைவாலயத்தைச் சுற்றிப் பார்த்தபொழுது பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது:
நாடகாசிரியராகவும் நடிகராகவும் விளங்கிய வில்லியம் ஷேக்ஸ்பியர் எட்டாவது ஹென்றி நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது குளோப் தியேட்டரின் கூரை தீப்பிடித்து எரிந்துள்ளது.
பின்னர் 1600ல் மீண்டும் தியேட்டர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குளோப் நாடக அரங்கு மாதிரி ஒன்றைச் செய்து வைத்துள்ளனர்.
ஷேக்ஸ்பியர் நாடகங்களை எப்பொழுது எழுதினார் என்ற குறிப்பு காணப்படுகிறது. முதல் நாடகத்தை நடிகராக இருந்தபொழுது 1591ம் ஆண்டு எழுதியுள்ளார்.

Q»
i

Page 32
54 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
1594ம் ஆண்டு புகழ்பெற்ற ரோமியோ ஜூலியட் நாடகத்தை எழுதியுள்ளார். 1603ம் ஆண்டு ஒத்தல்லோ நாடகத்தை எழுதியுள்ளார்.
நாடக மேதை ஷேக்ஸ்பியரின் மறைவுக்குப் பின்னர் டேவிற்கெறிக் என்பவர் 1769ம் ஆண்டு ஷேக்ஸ்பியர் வாழ்ந்த வீட்டில் நாடகம் நடத்தியுள்ளார்.
1847ல் ஷேக்ஸ்பியர் வாழ்ந்த வீடு ஏலத்தில் விற்க முற்பட்ட பொழுது சார்லஸ் டிக்கன்ஸ் போன்ற புகழ்பூத்த எழுத்தாளர் ஷேக்ஸ்பியரின் நாடக ஆதரவாளர்கள் நிதி திரட்டி ஷேக்ஸ்பியரின் வீட்டை வாங்கி தேசிய சொத்தாகப் பாதுகாத்துள்ளனர்.
உலக நாடக மேதையான ஷேக்ஸ்பியரின் நினைவாலயத்தைப் பார்க்க உலகெங்கும் இருந்து பார்வையாளர்கள் வருகிறார்கள் என்ற குறிப்பைக் காணமுடிந்தது.
米

அந்தனி ஜீவா 55
சென் லூபஸ் தேவாலயம்
)ெண்டனிலிருந்தபொழுது பிரான்ஸுக்குச் சென்றுவர திட்டமிட்டிருந்தேன். அதனால் எனது உறவினர்கள் பாரிஸ் போவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தனர். எனது மனைவியின் சகோதரர் செல்வத்தின் மகள் அஜானி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அந்த மகிழ்ச்சியான தகவலும் நாங்கள் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த பொழுதுதான் வந்தது.
இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அவர்களும் எங்களுடன் பாரிஸுக்கு வந்தார்கள். ஏற்கனவே அவர்கள் எல்லாருக்குமாக ஈரோ ஸ்டார் ரயிலில் டிக்கட்டுகளைப் பதிவு செய்து வாங்கி வைத்திருந்தார்கள்.
காலை 7.20க்கு ஈரோ ஸ்டார் மூலம் பாரிஸுக்குப் பயணமானோம். இது ஒரு அதிவேக ரயில். மூன்று மணித்தியாலத்தில் பிரான்ஸின் தலைநகரான பாரிசை அடைந்து விட்டது.
ஆனால் ஆங்கிலக் கால்வாய்க்கு அடியில் சுரங்கப் பாதையில் ரயில் செல்வது ஒரு சுகானுபவமான அனுபவம்.

Page 33
L6)
நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய
ợirmaouroop qojilo 49,9
 

அந்தனி ஜீவா 57
இந்த சுரங்கப் பாதையை இருபது நிமிடத்தில் ஈரோ ஸ்டார் கடந்து விடுகிறது.
லண்டனிலிருந்து பாரிஸ" க்கு காரிலும் செல்லலாம். ஆனால் பலர் ரயில் மூலம் செல்வதையே விரும்புகிறார்கள்.
பாரிஸில் இறங்கி தமிழ் கடை ஒன்றில் பகலுணவை முடித்துக் கொண்டு, மீண்டும் பாரிஸிலிருந்து வேறு ஒரு ரயிலில் பயணம் செய்து சென். லூட்ஸ் தேவாலயத்திற்கு வந்தோம்.
பாரிஸிலிருந்து சென். லூட்ஸ் தேவாலயத்திற்கு மாலை 5.30 மணியளவில் வந்து சேர்ந்தோம்.
பின்னர் வாடகைக் காரில் சென். லூட்ஸ் தேவாலயத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் செயின் சேகரமண்ட்க்கு வந்தோம்.
எங்களுக்காக ஏற்கனவே பதிவு செய்த அறைகளில் எங்களின் பொருட்களை வைத்துவிட்டு, ஹோட்டலின் மேல்தளத்திலிருந்து சிறிது வேடிக்கை பார்த்தோம்.
காலையில் லண்டனிலிருந்து புறப்பட்டு மாலை வரை பயணம் செய்த எந்தவித களைப்பும் எங்களுக்குத் தெரியவில்லை. சென். லூட்ஸ் தேவாலயம் உலகிலுள்ள புனித ஸ்தலங்களில் மிக முக்கியமானது.
இது கத்தோலிக்கர்களின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள், ஏனைய மதத்தவர்கள்

Page 34
58 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
என்று உலகின் பல பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கானோர் இங்கு வருகிறார்கள்.
ஆடு மேய்த்த பெர்னடேட் என்ற ஏழைச் சிறுமிக்கு தேவமாதா காட்சியளித்த இடம் தான் இந்த சென். லூட்ஸ் தேவாலயம் அமைந்த இடம்.
இரவு ஒன்பது மணியளவில் சென். லூட்ஸ் தேவாலயத்திற்குச் சென்றோம். போகும் வழியில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன.
ஒரே திருவிழா கோலாகலம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் வழிபாட்டுக்காகச் சென்று கொண்டிருந்தார்கள்.
இரவு என்று கூற முடியாத அளவிற்கு மின்சார ஒளி வெள்ளத்தில் பகல் போல் காட்சியளித்தது.
பின்னர் மீண்டும் திரும்பி வந்து மறுநாள் காலை ஏழு மணிக்கு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் காலை உணவை முடித்துக் கொண்டு தேவாலயத்தைச் சுற்றிப் பார்த்தோம். சென். லூட்ஸ் தேவாலயம் பெரும் நிலப்பரப்பில் அமைந்திருந்தது. அந்தத் தேவாலயத்தை அவசர கதியில் சுற்றிப் பார்க்க மூன்று மணித்தியாலம் எடுத்தது.
பின்னர் திரும்பி வந்து பகலுணவை முடித்துக் கொண்டு மீண்டும் அந்தப் புனித தேவாலயத்திற்குச் சென்றோம்.
எந்த நேரமும் ஒரே மனித வெள்ளம். பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு மொழி

அந்தனி ஜீவா - 59
பேசுபவர்கள். நாங்கள் சென்றிருந்த வேளை ஆகஸ்ட் மாதத் திருவிழா காலம் ஆதலால் வழமைக்கு மாறாக ஜனவெள்ளம்.
பாரிஸில் வாழும் புலம்பெயர்ந்த நம்மவர்கள் அநேகம்பேர்களை அங்கு காணக்கூடியதாக இருந்தது.
சென். லூட்ஸ் தேவாலயத்திற்கு அருகில் பலர் கூடி நிற்பதைப் பார்த்த பொழுது அது என்னவென்று அறிய அருகில் சென்றோம்.
புனித அன்னை, தேவனின் தாயார் ஆடு மேய்த்த சிறுமிக்குக் காட்சி கொடுத்த இடத்திலுள்ள நீரூற்றிலிருந்து வரும் தண்ணிரில் உடலைக் கழுவுவதற்காக அங்கே வரிசையில் நின்றிருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பெருந்தொகையானோர் கியூவில் நின்றார்கள்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் என்று வெவ்வேறாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. என் உறவினர்களும், எனது மனைவியும் போய் வரிசையில் நின்று கொண்டார்தள். என்னையும் வரும்படி அழைத்தார்கள்.
நான் அந்த சம்பிரதாயச் சடங்குகளில் நம்பிக்கை இல்லை என்று கூறி மறுத்துவிட்டேன். சிறிது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்த கியூவில் இலங்கையைச் சேர்ந்த சிங்கள டாக்டர் தம்பதிகள் இருந்தார்கள். அவர்களுடன்

Page 35
60 w நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
பேசிய பொழுது அந்தப் புனித நீரைப் பற்றியும், அதில் மூழ்கி எழுவது ஆரோக்கியமானது என்றும் கூறினார்கள்.
அப்பொழுது அவர் அருகிலிருந்த கறுப்பர், பிரான்ஸில் வாழ்பவர் என்றும் வெகு தொலைதூரத்தில் வாழ்பவர் என்றும் ஆண்டுதோறும் அங்கு வருவதாகவும், அந்த புனித நீரில் உடலைக் கழுவுவது ஆரோக்கியமானது என்றும் கூறினார்.
பின்னர் நானும் என்னையறியாமலேயே அந்த வரிசையில் அந்தக் கறுப்பு சகோதரரின் பின்னால் நின்று கொண்டேன்.
அங்கிருந்த அறைகளுள் நான்கு பேர் வீதம் அழைக்கப்படுகிறார்கள். எங்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு பின்னர் உள்ளாடையையும் களைந்து விட்டு பிறந்த மேனியாகத் தண்ணிருக்குள் இறங்கினோம்.
தண்ணிர்த் தொட்டியில் மார்பளவு தண்ணிரில் நின்று கொண்டு உடலைக் கழுவுகிறார்கள். வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணிரைத் தலையில் வார்க்கிறார்கள்.
சிறிது நேரத்தில் இவர்கள் தரும் ஆடையால் உடலை மறைத்துக் கொண்டு வந்து எங்கள் ஆடைகளை அணிகிறோம். இயற்கையாகவே தண்ணிர் காய்ந்து விடுகிறது. ஏதோ ஒரு புதிய உலகத்திற்குச் சென்று வந்தது போல உணர்வு ஏற்படுகிறது.

1
6
ợnająžuolo Quote»Affgot poșmæuroop qo7ilosoɛtɔ
*メ

Page 36
62 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
பின்னர் புனித அன்னை தேவமாதா காட்சி கொடுத்த பெர்ணதேத் மியூசியத்திற்குச் சென்றோம். அந்த நினைவாலயத்தில் அந்த ஆடு மேய்த்த சிறுமியின் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருந்தது.
நகரின் சிறிது தூரத்திலுள்ள அவர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்றோம். அவரும் இப்பொழுது புனித பெர்ணதேத் என்று அளிக்கப்படுகின்றார். அவரது வீடு நினைவாலயமாக அமைக்கப்பட்டுள்ளது.
சென்லூட்ஸ் தேவாலயத்திற்கு வருபவர்கள் அந்த நினைவாலயத்தையும் பார்வையிட வருகிறார்கள்.
சென். லூட்ஸ் தேவாலயத்தை அந்த நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு மூன்று நாட்களைச் செலவிட்டோம்.
அங்கு தங்கியிருந்த நாட்களில் ஒரு புதிய அனுபவமே ஏற்பட்டது.
அதனை வார்த்தையில் வடிக்க முடியாது. மனிதர்கள் எத்தனை நம்பிக்கையில் வருகிறார்கள் என்பதை அங்கே தான் காண முடியும்.
ஒவ்வொருவருக்கும் அவர்களது அனுபவமும் நம்பிக்கையும் சத்தியமானதாகும்.
来

அந்தனி ஜீவா 63
vrsali 6slov japotnjši
த்தான மூன்று நாட்களை சென். லூட்ஸ் தேவாலயத்தில் கழித்த பின்னர் பாரிஸ் வந்தோம்.
எமது உறவினரின் நண்பர் விமலேந்திரன் பாரிஸ் ரயில் நிலையத்தில் காருடன் காத்திருந்தார்.
அவருடன் பாரிஸ் டவுனிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பொந்துவாஸ் என்ற இடத்திலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றோம்.
பாரிஸ் ஒரு கலை அழகு மிகுந்த நகர். வீதிகளையும் கடைகளையும் பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருந்தன.
பாரிஸில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள்டவர் கண்ணையும் கருத்தையும் கவரக்கூடிய வகையில் அமைந்திருந்தது.
பாரிஸில் விமலேந்திரன் வீட்டில் தங்கினோம். அவரது துணைவியார், மூன்று பிள்ளைகள், மகள் லாவண்யா, மகன்கள் விதூஷன், கபீஷன் ஆகியோர் எங்களை மிகவும் அன்பாக கவனித்தார்கள்.

Page 37
64 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இலங்கையில் இருக்கும் உணர்வே எங்களுக்கு ஏற்பட்டது.
மறுநாள் பாரிஸ் நகரை விமலேந்திரனுடன் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம்.
முதலில் வைட்சேர்ச் என்றழைக்கப்படுகின்ற வெண்ணிற தேவாலயத்திற்குச் சென்றோம்.
அது ஒரு மலைக்குன்றில் அமைந்துள்ளது. காரில் சென்றதால் தேவாலயத்திற்கு அருகில் சென்றுவிட்டோம்.
வெண்ணிற தேவாலயத்திற்கு முன்னால் சென்று பார்த்தால் பாரிஸ் நகரிையே பார்க்கலாம்.
வெண்ணிற தேவாலயத்திற்குள் சென்று பார்த்த பொழுது அதன் கலையழகு எம்மை பிரமிக்க வைத்தது.
வெண்ணிற தேவாலயம் மிகவும் புகழ் வாய்ந்த தேவாலயமாகும். இந்தத் தேவாலயத்தின் உயரம் 275 அடியாகும். இந்த வெண்ணிற தேவாலயத்தைப் பார்ப்பதற்குப் பல நாடுகளிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
வெண்ணிற தேவாலயத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு புகழ்பெற்ற ஈபிள் டவரைப் பார்க்கப் போனோம்.

அந்தனி ஜீவா • 65
பாரிஸ் எழுத்தாளர்கள், கலைஞர்களை மிகவும் மதிக்கிறார்கள். வீதிகளுக்கெல்லாம் எழுத்தாளர்கள், கலைஞர்களின் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். பல இடங்களில் கலையழகு மிளிரும் சிற்பங்களைப் பார்க்கலாம்.
உலகில் அதிக சுற்றுலா பிரயாணிகள் விரும்பிப் பார்க்கும் நினைவுச் சின்னங்களில் ஒன்று ஈபிள் டவர். 1889 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் நடைபெற்ற உலகக் கண்காட்சிக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த கோபுரம். 300 மீற்றர் உயரமுள்ள இந்த கோபுரத்தின் உச்சியைப் பார்க்க ஒரு 200 மீற்றர் தூரம் நீங்கள் தள்ளி நிற்க வேண்டியிருக்கும்.
மொத்தமாக 16 ஆயிரம் பெரிய இரும்புத் துண்டுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 300 தேர்ந்த தொழிலாளர்கள், உலகின் மிகச்சிறந்த உலோகவியல் வல்லுநர்கள் அனைவரும் சேர்ந்து இனமல் நோக்கியே, மெளரிஸ் சொச்லின் ஆகிய இரு பொறியியலாளர்கள் தலைமையில் இக் கோபுரத்தை உருவாக்கினார்கள். சுமார் 50 தொன் பெயிண்ட் தேவைப்பட்டதாம் - ஈபிள் டவர் முழுவதற்கும்.
* 1889 ஆம் ஆண்டு இந்த கோபுரம் பார்வையாளர்களுக்காகத் திறந்துவிடப்பட்டது. இதற்கு ஏன் ஈபிள் கோபுரம் என்று பெயர் வந்தது தெரியுமா? ஈபிள் என்ற ஒப்பந்தக்காரருடைய நிறுவனத்தின் மூலம் இந்த கோபுரம் கட்டப்பட்டது. அதனால் அவர் பெயரையே சூட்டிவிட்டார்கள்.

Page 38
நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
piere நூலாசிரியரின் துணைவியாரும், செல்வம் தம்பதிகள் அஜானி ஜோன்சங்கர்
 

அந்தனி ஜீவா 6, இந்த ஈபிள் டவரின் உயரம் 1057 அடியாகும்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐம்பது இலட்சம் பேர்கள் கோபுரத்தில் ஏறி இறங்கிப் பார்வையிடுகிறார்கள்.
தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோபுரத்தைப் பார்க்க வருகிறார்கள். நாங்கள் கோபுரத்தைப் பார்க்கப் போன பொழுது, ஒரு நீண்ட வரிசை காணப்பட்டது.
இந்த அற்புதமான ஈபிள் டவரில் ஏறி சுற்றிப் பார்த்துவிட்டு இறங்குவதற்கு பத்து ஈரோக்கள் அறிவிடுகிறார்கள். கிட்டத்தட்ட இலங்கை பணத்திற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல்.
பின்னர் லிப்ட் மூலம் மூன்றாம் மாடிக்குச் சென்றோம். ஈபிள் டவரைச் சுற்றிப் பார்த்தபொழுது இதனை நிர்மாணித்த கலை உள்ளங்கொண்ட பொறியியலாளர்களைப் பாராட்ட வேண்டும் போல் இருந்தது.
ஈபிள் டவரின் மேலிருந்து பாரிஸ் நகரைக் கண்டு களிக்கலாம்.
கோபுரத்தில் பார்வையாளர்களை கவர்வதற்கான பல விடயங்கள் உண்டு. சிறப்பான சிற்றுண்டிச் சாலையும், ஒவியங்களும் காணப்படுகின்றன.
* ஈபிள் டவரைப் பார்த்த பின்னர் சார்லஸ் இளவரசரின் துணைவியார் இளவரசி டயானா

Page 39
68 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
ஈபிள் டவரின் மேல் பகுதி
 

அந்தனி ஜீவா 69
மரணமடைந்த இடத்தைப் பார்க்க விமலேந்திரன் கூட்டிக் கொண்டு சென்றார்.
இளவரசி டயானா விபத்திற்குள்ளாகி மரணமான இடத்தைப் பார்த்தோம். அங்கு ஒர் நினைவுச் சின்னம் அமைத்துள்ளார்கள்.
1961ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி பிறந்த டயானா 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் திகதி அதிகாலை பாரிஸிலுள்ள சுரங்கப் பாதையொன்றில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் காரில் சென்ற பொழுது விபத்திற்குள்ளாகி மரணமானார்.
இளவரசி டயானாவின் மரணச் செய்தி கேட்டு உலகமே கண்ணிர் வடித்தது.
டயானாவின் மரணச்சடங்கின் போது பிரபல பாடகர் எல்டன் ஜோன் பாடிய பாடல் என் நினைவிற்கு வந்தது.
அந்தப் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றை எனது பாரிஸ் நண்பர் ஒருவர் பத்திரமாக வைத்திருந்து என்னிடம் தந்தார்.
உணர்ச்சி மயமான அந்தப் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பே மிகச் சிறப்பாக இருந்தது.
போய் வா! இங்கிலாந்து ரோஜாவே போய் வா! என்றென்றும் எங்கள் இதயங்களில் மலர்வாயாக!

Page 40
U6)
நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய
70
ாறறம
இளவரசி டயானாவின் தே
 

p556f ஜீவா 71
வாழ்க்கை கிழிந்து சிதைகையில் உன் கருணை திடமாக நின்றது நீ எங்கள் தேசத்திற்கு அழைப்பு விடுத்தாய் வலியில் துடித்தோருடன் நீ பரிவுடன் பேசினாய் இப்போது நீ
சொர்க்கத்துக்கு சொந்தமாகிவிட்டாய் р 6йт 6hшш60oU நட்சத்திரங்கள் உச்சரிக்கின்றன. காற்றில் அசைந்தாடும் மெழுகுவர்த்தியைப் போல உன் வாழ்க்கையை நீ வாழ்ந்தாயென்று எனக்குத் தோன்றுகின்றது.
மேகங்கள் முத்தமிட்டபோது சூரியன் நீ அஸ்தமித்து விடவில்லை இங்கிலாந்தின் பசுமையான குன்றுகளில் உன் காலடிச்சுவடுகள் எப்போதும் பதிந்திருக்கும் உன்னுடைய மெழுகுவர்த்தி எரிந்து முடிந்து நெடுங்காலத்திற்குப் பின்னரும் உன் சரித்திரம் தொடரும்.

Page 41
72
நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
இனிமையை நாங்கள் இழந்து விட்டோம் உன் புன்னகையைக் காணாத இந்த நாட்கள்
சூனியமானவை
எனினும் எங்கள் தேசத்தின் தங்கக் குழந்தைகளுக்காக இந்தத் தீபம் எப்பொழுதும் ஒளிவிடும்
நாங்கள் முயன்று தான் பார்க்கிறோம் ஆனாலும் உண்மை உறைப்பதால் கண்ணிர் கொட்டுகிறது. நீ இத்தனை வருடங்களாக எங்களுக்கு
தந்த சந்தோஷத்தை எத்தனை வார்த்தைகளாலும் வெளிப்படுத்த முடியாது.
உன்னை இழந்துவிட்டதால் தன்னை இழந்துவிட்ட தேசம் சொல்கிறது
போய் வா! இங்கிலாந்தின் ரோஜாவே

அந்தனி ஜீவா 73
உன் மனித நேய இறக்கைகளை எவ்வளவு தூரம் நாங்கள் இழந்து நிற்கிறோம் எனபது
உனக்கே தெரியாது
இந்தப் பாடல் வரிகளில் எத்தகைய உண்மைகள் அடங்கியுள்ளன.
இளவரசி டயானா வெறும் அழகு தேவதை மாத்திரமல்ல, மனிதநேயமிக்க சமூக சேவகியாகத் திகழ்ந்தார். அன்னை தெரோசாவின் வாரிசாகவே மதிக்கப்பட்டார்.
பாரிஸில் பார்க்க வேண்டிய கலைக் கூடங்கள் பல உண்டு.
மோனாலிஸாவின் ஓவியத்தைப் பார்க்க வேண்டும் என்ற அவாவுடன் பயணமானோம்.
பாரிஸில் தங்கியிருந்த பொழுது அந்த நகரைச் சுற்றிப் பார்ப்பதில் நேரம் போவதே தெரியவில்லை. அந்த நகரம் எல்லாரையும் கவரக் கூடிய வகையில் சிறப்பாக அமைந்திருந்தது.
நகரில் திரும்பிய பக்கம் எல்லாம் கலையழகுமிளிரும் சிற்பங்கள்.
உலகின் மிகப்பெரிய நூதனச்சாலையாக வீனஸ் மியுஸியம் காணப்படுகிறது. செயின் நதிக்கரை

Page 42
74 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
யோரமாக மிகப் பெரிய விஸ்தீரமான இடத்தில் இதனை அமைத்திருக்கிறார்கள்.
அரச மாளிகையாகக் கலையழகுடன் கட்டப்பட்ட கட்டிடமே பின்னர் நூதனச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற வீனஸ் சிலை, மோனலிஸா ஓவியம் போன்றவை இந்தக் கலைக் கூடத்தில் இருக்கின்றன. v -
பாரிஸில் லாசெப்பல் என்று அழைக்கப்படும் நகரின் முக்கிய இடம். இங்குதான் நம்மவர்களான புலம் பெயர்ந்தவர்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.
புலம்பெயர்ந்த நம்மவர்களான தமிழர்களுக்கு முன்பே பாண்டிச்சேரி தமிழர்கள் அங்கு குடியேறி இருக்கிறார்கள். பாண்டிச்சேரி எனப்படும் புதுவை மாநிலம் ஒரு காலத்தில் பிரான்ஸின் ஆதிக்கத்தில் காலனியாக இருந்துள்ளது. இதனால் பாண்டிச்சேரி தமிழர்களுக்கு பிரான்ஸில் குடியேறவும் தொழில் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.
பாரிஸில் லாசெப்பல் பகுதியில் தான் அறிவாலயம், தமிழாலயம் ஆகிய புத்தகக் கடைகள் இருக்கின்றன.
பிரான்ஸில் எழுத்தாளர்கள் கவிஞர்களுக்கு மிக முக்கியத்துவம் உண்டு. எமிலிஜோலா, மாபஸான்

அந்தனி ஜீவா 75 போன்றவர்களின் எழுத்துக்கள் பிரான்ஸ் இலக்கியத்தை வளமூட்டியுள்ளன.
இலங்கைத் தமிழ் இலக்கியத்திலும் எமிலிஜோலா, மாபஸானின் தாக்கம் இருந்துள்ளது.
நம்மவரான அமரர் அ. ந. கந்தசாமி எமிலி ஜோலாவின் ‘நாநா’ நாவலை மொழி பெயர்த்துள்ளார். மாபஸானின் சிறுகதைகளையும் தமிழில் வடித்துள்ளார்.
இதனை நான் சொன்னபொழுது அங்குள்ளவர்களுக்கு அதிசயமாக இருந்தது. மாபஸானின் சிறுகதைகளை புதுமைப்பித்தனும் மொழிபெயர்த்துள்ளார்.
米

Page 43
76 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
டிஸ்னியின் அற்புத உலகம்
LDறுநாள் நான் தங்கியிருந்த வீட்டாருடன் பிரான்ஸிலுள்ள வோல்ட் டிஸ்னியின் அற்புத உலகத்தைப் பார்க்க புறப்பட்டோம்.
பாரிஸிலிருந்து ரயிலில் டிஸ்னியின் அற்புத உலகம் உள்ள டிஸ்னி கிராமத்திற்குச் சென்றோம். காலை பதினொரு மணிக்கு டிஸ்னியின் அற்புத உலகம் அமைந்துள்ள டிஸ்னி விலேஜுக்குள் நுழைந்தோம். வெளியே வரும் போது இரவு பதினொரு மணி
அப்பப்பா. அந்த அற்புத உலகத்தை எத்தனை மணி நேரம் வேண்டும் என்றாலும் சுற்றிப்பார்க்கலாம். சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை ஆயிரக்கணக்கானவர்கள், பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அங்கு வருகிறார்கள்.
புகழ்பெற்ற கார்டுன் படத் தயாரிப்பாளரான வோல்ட் டிஸ்னி முதன் முதலில் அமெரிக்காவில் தான் வோல்ட் டிஸ்னியின் அற்புத உலகத்தை உருவாக்கியுள்ளார். அதன் மாதிரி வடிவமே பாரிஸிலுள்ள வோல்ட் டிஸ்னியின் அற்புத உலகில்

அந்தனி ஜீவா
Aş»ơ0 Agogoșoaə-a
oorg/s@* 495mpoqooy

Page 44
78 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
டிஸ்னி ஹோட்டல், டிஸ்னி கிராமம், டிஸ்னி பூங்கா, டிஸ்னி ஸ்டூடியோ பூங்கா என்று நான்கு விதமாகப் பிரித்திருக்கிறார்கள். இதனை ஆறுதலாகச் சுற்றிப்பார்க்க ஒரு நாள் போதாது.
வோல்ட் டிஸ்னி உருவாக்கிய புகழ் பெற்ற கார்டூன் கதாபாத்திரங்களை இங்கு சந்திக்கலாம்.
அமெரிக்காவில் உள்ளது போன்ற கடை வரிசை, அங்கு கிடைக்கும் பொருட்கள் அமெரிக்காவின் வீதியில் உலா வருவது போன்று உள்ளது.
மிகப் பயங்கரமான மின்சார ரயில். அது குன்றின் மீது சென்று பாதாளத்தை நோக்கி வரும் பொழுது நம்மை அறியாமலே கூச்சலிடுகிறோம். ரயிலிலிருந்து வெளியே விழுந்து விடுவோமோ என்கிற உணர்வை செயற்படுத்துகின்றது. இந்த ரயிலில் சென்று வந்ததே ஒரு பயங்கர அனுபவம்.
அதே போல சுற்றுலா ரயில் ஏறி அரை மணித்தியாலத்தில் டிஸ்னியின் அற்புத உலகத்தைச் சுற்றி வந்துவிடலாம்.
வோல்ட் டிஸ்னியின் ஸ்டுடியோவில் டிஸ்னி உருவாக்கி மிக்கி மவுஸ் போன்ற கதாபாத்திரங்களைச் சந்திக்க முடியும்.
பின்னர் மாலை வேளையில் அந்தக் கதாபாத்திர உருவங்களை அணிந்தவர்கள் வெளியே வந்து பார்வையாளர்களுடன் படம் பிடித்துக்

அந்தனி ஜீவா 79
டிஸ்னி உருவாக்கிய கதாபாத்திரங்கள் மாலை வேளையில் இந்தக் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களைக் குதூகலத்தில் ஆழ்த்துகிறார்கள்.

Page 45
80 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
கொள்கிறார்கள். கார்டுன் போன்ற உண்மையான மனிதர்களே உலா வருகிறார்கள்.
வோல்ட் டிஸ்னியின் அற்புத உலகத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும். அதனை எத்தகைய குதூகலத்தோடு ரசித்து மகிழ்கிறார்கள்.
இரவானதும் அலங்கரிக்கப்பட்ட தோரணங்களில் வண்ண ஒளி உமிழும் வெளிச்சத்தில் ஊர்வலம் ஓர் சுற்றுலா வந்து பதினொரு மணியளவில் வோல்ட் டிஸ்னியின் அற்புத உலகம் நிறைவு பெறுகிறது.
அவசர அவசரமாக டிஸ்னியின் அற்புத உலகத்தைவிட்டு வெளியே வருகிறோம். வெளியே “மெட்ரோ ரயில் காத்திருக்கிறது - பாரிஸ் நகருக்குச் செல்வதற்கு.
ஒரு நாள் எவ்வாறு கழிந்தது என்று தெரியாமல் ஓடி வந்து ரயிலில் சங்கமமாகிறோம்.
米

அந்தனி ஜீவா 81
vrfieôlň góDnřsá
பTரிஸுக்கு நான் வந்துவிட்டதை அறிந்து நடிகர் ஏ. ரகுநாதன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
காலை 10 மணிக்கு பாரிஸ் ரயில் நிலையத்தில் காத்திருப்பதாகவும், நண்பரும் நாடக நெறியியலாருமான தாசீசியஸ் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
நான் தங்கியிருந்த வீட்டிற்குச் சிறிது தூரத்தில் தான் ரயில் நிலையம் இருந்தது. விமலேந்திரன் வந்து ரயில் ஏற்றிவிட்டார்.
பாரிஸ் ரயில் நிலையத்தில் நண்பரும், நாடறிந்த நாடகக்கலைஞருமான ஏ. ரகுநாதன் காத்திருந்தார்.
நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் நாடகக்கலைஞர் ரகுநாதனைச் சந்திக்கிறேன்.
நடிகர் ரகுநாதனை ‘நிர்மலா திரைப்படம் தயாரித்தது காலம் முதல் நான் அறிவேன்.

Page 46
82
நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
நடிகர் ஏ. ரகுநாதன்
 

அந்தனி ஜீவா 83
நாடகத் தந்தை கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் நாடகப் பாசறையில் வளர்ந்தவர்.
இலங்கையில் நாடகமும், சினிமாவும் வளர வேண்டும் என தணியாத தாகம் கொண்டவர். 1968ல் தனது நிழல் நாடக மன்றம் மூலம் ஏழு நாட்கள் இலவசமாகத் தமிழ் நாடக விழா ஒன்றை கொழும்பில் சரஸ்வதி மண்டபத்தில் நடத்தியவர்.
இலங்கையில் வாழ்ந்த இவர் நாட்டில் ஏற்பட்ட இன வன்செயலுக்குப் பின்னர் தமிழகம் சென்று குடும்பத்துடன் வாழ்ந்தார். பின்னர் பாரிஸுக்குச் சென்று வாழ்ந்து வருகிறார்.
பாரிஸ் ரயில் நிலையத்தில் என்னைக் கண்டதும் ஆனந்தத்தில் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
சகோதர நாடகக் கலைஞர்களைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டார்.
உங்களை தாசீசியஸ் கூட்டிக் கொண்டு வரச்சொன்னார். போகும் வழியில் கவிஞர் அருந்ததியை அறிமுகப்படுத்தினார். அவரைச் சந்தித்த பின்னர் அறிவாலயம் என்ற புத்தகக் கடைக்குச் சென்றோம்.
அந்தக் கடையில் இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளைக் காணக்கூடியதாக இருந்தது. எனது ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ நூலும் காணப்பட்டது.

Page 47
84 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
தமிழக சிறு சஞ்சிகைகள் அங்கு காணப்பட்டது. அதன் மத்தியில் இலங்கை சஞ்சிகையான ‘மூன்றாவது மனிதன்' சஞ்சிகையும் காணப்பட்டது.
அறிவாலயத்தின் உரிமையாளர் நூல்களை நம்மவர்கள் வாங்குவது மிகவும் குறைவு எனக்கூறி வருத்தப்பட்டார்.
பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூரீதர்சிங் இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டார்.
ஈழத்து எழுத்தாளர்களையும் அவர்களது எழுத்துகளுக்கு உரிய மதிப்பளிக்கும் பூரீதர்சிங் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் நம்மவர்களுக்கு ஈழத்து இலக்கியப் படைப்புகளை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் கூட அவரது தம்பி கார்ல் மார்க்ஸ் என்பவர் ‘பூபாலசிங்கம் புத்தக சாலை’ என்ற பெயரில் நூல் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார். இலங்கை எழுத்தாளர்களின் நூல்களைத் தேவையானோர் அங்கு தேடிச் சென்று வாங்குகின்றனர்.
அதன் பின்னர் கலைஞர் தாசீசியஸ் பணியாற்றும் டி.டி.என் தமிழ் ஒளி தொலைக்காட்சி நிலையத்திற்குச் சென்றோம்.
வரவேற்புக் கூடத்தில் யாரோ ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தவர் என்னை நோக்கி வந்தார்.

அந்தனி ஜீவா 85
அவர் எனது பத்திரிகையுலக நண்பரான ஈழநாடு கந்தசாமி அவரைச் சந்தித்ததும் பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்தேன். யாழ்பாணத்திலிருந்து வந்த ஈழநாடு பத்திரிகையில் பணிபுரிந்தார். பின்னர் பாரிஸில் வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றுவதாக அறிந்தேன்.
இப்பொழுது அவர் பாரிஸில் தமிழ் ஒளி தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
நண்பர் கந்தசாமியுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தாசீசியஸ் வந்தார்.
“உங்களுக்காக ஒரு பேட்டி ஒழுங்கு செய்திருக்கிறேன். இவ்வளவு தூரம் வந்த நீங்கள் எங்கள் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி தர வேண்டும்” என்றார்.
கலைஞர் தாசீசியஸ் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் அவருடன் பழகியுள்ளேன். அவர் ஒரு அற்புதமான கலைஞர். அவர் இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றது ஈழத்து நாடகத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
கலைத்துறையில் நான் ஈடுபட்ட காலங்களில் என் மீது அன்பு காட்டியவர்களில் மிக முக்கியமானவர் தாசீசியஸ்.

Page 48
86 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
பாரிஸில் தமிழ் ஒளி தொலைக்காட்சி சேவை கலாசாரப் பிரிவுக்குப் பொறுப்பாளராக இருக்கிறார் தாசீசியஸ்.
அவர் என்னை அழைத்துக் கொண்டு கலையகத்திற்குச் சென்றார். அங்கிருந்த பெர்லின் பல்கலைக்கழக மாணவி பிரசாந்தி சேகர் என்ற இளம் பெண்மணியை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
அவர்தான் என்னை பேட்டி காண இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அந்த சகோதரியோடு உறவாடிய பொழுது அவர் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர், பெண் படைப்பாளி கோகிலா மகேந்திரனின் மாணவி எனக் குறிப்பிட்டார். A-r
பின்னர் கலைஞர் தாசீசியஸ் என்னைப் பற்றிய அறிமுகக் குறிப்பு ஒன்றைக் கூற சகோதரி எழுதிக் கொண்டார்.
பேட்டி சம்பந்தமாக அந்த சகோதரியுடன் சிறிது நேரம் உரையாடியதன் பின்னர் என் பேட்டிக்கான கேள்விகளையும் தயாரித்துக் கொண்டார்.
பேட்டியை ஒளிப்பதிவு செய்வதற்காக என்னையும் பேட்டி காண்பவரையும் இன்னொரு அறைக்கு தாசீசியஸ் அழைத்துச் சென்றார்.
மூன்று கமிராக்கள் அரை மணித்தியால பேட்டியை ஒளிப்பதிவு செய்தது. கமிராவை இயக்கியவர் மிகச் சுறுசுறுப்புடன் செயல்பட்டார்.

அந்தனி ஜீவா 87
பேட்டி முடிந்ததும் தாசீசியஸுடன் விடைபெற்று கலைஞர் ரகுநாதன் வீட்டிற்குச் சென்றோம். அங்கு சிறிது நேரம் அவருடன் உரையாடியதன் பின்னர், அவரது துணைவியாரின் அன்பான உபசரிப்பு.
மீண்டும் அறிவாலயம் வந்தோம். வரும் வழியில் “இதோ நிற்கிறார் நீங்கள் தேடியவர்” எனக் கூறி ஒரு வரை கலைஞர் ரகுநாதன் அறிமுகப்படுத்தினார்.
அவர் யாருமல்ல, 'கொரில்லா' நாவலை எழுதிய எழுத்தாளர் ஷோபாசக்தி
நான் பாரிஸ் வருவதற்கு முன்னர் யாரை சந்திக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் வந்தேனோ அவரைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
எழுத்தாளர் ஷோபாசக்தி அவருடன் இருந்த நண்பர் உதயகுமாரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.
அருகிலிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தேநீரும் வடையும் வாங்கித் தந்து, பிறகு பல விடயங்களைப் பற்றி உரையாடினோம்.
மலையகம் சம்பந்தமாக பல தகவல்களை ஷோபாசக்தியும் அவரது நண்பர்களும் கேட்டார்கள். அதன் பிறகு எல்லாருமாக அறிவாலயம் வந்தோம். ஷோபாசக்தியும் அவரது நண்பர்களும்

Page 49
88 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
வெளியிட்ட ‘சனதரும போதினி” என்ற தொகுப்பு நூலை வாங்கித் தந்தார்.
மாலை ஆறுமணி ஆகிவிட்டது. நம்மவர்களான நண்பர்களுடன் உரையாடியதில் நேரம் போனதே தெரியவில்லை.
பின்னர் நான் இருக்கும் இடத்திற்குப் போக டிக்கட்டும் வாங்கிக் கொடுத்து ரயில் ஏற்றிவிட்டார் கலைஞர் ரகுநாதன்.
ரயிலில் வரும்பொழுது கலைஞர் ரகுநாதனைப் பற்றிய எண்ணங்கள் மனதில் சிறகடித்தன.
மூத்த கலைஞரான நடிகர் ஏ. ரகுநாதன் பாரிஸில் சும்மா இருக்கவில்லை. 1994ல் பாரிஸில் ‘இன்றும் ஒரு பெண்’ படத்தை இயக்கியுள்ளார். அதே ஆண்டு ‘முகத்தார் வீடு’ எனும் குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.
கலையரசுவின் நாடகப் பாசறையில் வளர்ந்தவரும், லண்டனில் பாரிஸ்டராகப் பணிபுரிந்து கொண்டு கலை வளர்க்கும் எஸ்.ஜே. ஜோசப் என்பவர் தயாரித்த சுவிஸ் அஜீவன் எழுதி இயக்கிய 'அழியாத கவிதை” என்ற குறும்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இ ன் னு ம் இந் த த் தி  ைர ப் பட ம் பார்வையாளர்களுக்குப் போட்டுக் காட்டப்படவில்லை. ஆனால் பாரிஸ்டர் ஜோசப் லண்டனில் எனக்காகப்

அந்தனி ஜீவா 89 பிரத்தியோகமாகத் திரையிட்டுக் காட்டினார். *அழியாத கவிதை’ திரைப்படத்தில் கலைஞர் ரகுநாதன் சிறப்பாக நடித்துள்ளார்.
வீடு திரும்பிய பின்னர் நடிகர் ஜேசு
ரட்ணத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினேன்.
来

Page 50
90 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
இனிய இரு நினைவுகள்
பTரிஸிலிருந்து லண்டனுக்கு ஈரோஸ்டார் ரயிலில் திரும்பினோம். லண்டனில் எனக்குத் தொலைபேசியில் இரண்டு தகவல்கள் காத்திருந்தன.
தினகரன் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றி, தற்போது லண்டனில் ‘புதினம்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்தும் நண்பர் ராஜகோபால் எனக்காக ‘இலக்கிய சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த இலக்கிய சந்திப்பு ஞாயிறு மாலை நடைபெறுவதாக இருந்தது. அதற்கு இன்னும் மூன்று தினங்கள் இருந்தன.
அடுத்தது நண்பர் கலாநிதி மு. நித்தியானந்தன் ஏற்பாடு செய்திருந்த 'தீபம்’ தொலைகாட்சி பேட்டி அது நாளை மறுநாள் காலையில் ‘தீபம்’ தொலைக்காட்சி நிலையத்திற்கு வரும்படி அழைப்பு.
அது வேலை நாட்களாக இருந்ததால் எனது மனைவியின் சகோதரரின் காரில் செல்ல வாய்ப்பில்லை.
நண்பரும், நடிகருமான 8 (് ഖTബr சின்னையாவைத் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு

அந்தனி ஜீவா 91
திருமணத்திற்காக லண்டனிலிருந்து வெகு தொலைவு சென்றுவிட்டார்.
என்ன செய்வது, யாரோடு போவது என்று யோசித்தபொழுது தொலைபேசி அழைத்தது.
யாராக இருக்கும். என யோசனையுடன் தொலைபேசியை எடுத்தேன்.
அது வேறு யாருமல்ல, நாடறிந்த எழுத்தாளர் அமரர் அகஸ்தியரின் மகள் நவஜோதி ஜோகரட்னம். எனது சங்கடமான நிலையை அவரிடம் தெரிவித்தேன்.
“ஒ அதற்கென்ன. நாங்கள் வந்து கூட்டிப் போகிறோம். ‘தீபம்’ தொலைக்காட்சி நிலையத்திற்கு” என்று அவர் சொன்ன பதில் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
அதே போல மறுநாள் காலை திருமதி நவஜோதியின் கணவர் ஜோகரட்னம் அவரது காரில் நேரிலேயே வந்து தொலைக்காட்சி நிலையத்திற்கு அழைத்துப் போனார்.
இந்த இடத்தில் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் மருமகனான ஜோகரட்னத்தைப் பற்றி சிறிது குறிப்பிட
எழுத்தாளர் அகஸ்தியரை தந்தையைப் போல நேசிப்பவர். அகஸ்தியரின் பெயரால் தினகரனில் ஒரு சிறுகதைப் போட்டியை நடத்துவதற்கும், அந்தச் சிறுகதைத் தொகுதி நூலாக வெளிவருவதற்கும் உதவியவர்.

Page 51
92 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
இந்தச் சிறுகதைத் தொகுதி நூலாக வெளிவந்த பொழுது, அந்தத் தொகுதியின் வெளியீட்டு விழா கண்டியில் நடைபெற்ற பொழுது அந்த விழாவில் கலந்துகொள்ள கண்டிக்கு வந்தார்.
அந்த விழாவை ஏற்பாடு செய்தவர் இலக்கிய ஆர்வலர் இரா. அ. இராமன், மற்றும் ராஜபூரீகாந்தன், அருள் சத்தியநாதன் ஆகியோர் தொகுதி சிறப்புற வெளிவர செயல்பட்டவர்கள்.
ஏற்கனவே எனக்கும் எழுத்தாளர் அகஸ்தியருக்கும் இருந்த தொடர்பின் காரணமாக விழாவில் என்னைச் சந்தித்து உரையாடிய அகஸ்தியரின் மருமகன் ஜோகரட்னமும், மகள் நவஜோதியும் மறுநாள் நான் பணியாற்றும் அலுவலகத்திற்கு நேரில் தேடி வந்து விட்டனர்.
அவர்கள் பாசமிகுந்த நட்புடன் ‘தீபம்’ தொலைக்காட்சி நிலையத்திற்குக் கூட்டிச் சென்றார்கள்.
‘தீபம்’ தொலைக்காட்சி நிலையத்தில் உள்ளவர்கள் ஜோகரட்னத்தை நன்கு அறிவார்கள்.
தீபத்தில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் தகவல் நிகழ்ச்சியான செய்திகளை எழுதி வழங்குகின்றார்.
தீபத்தில் என்னை பேட்டி காண இருந்த கவிஞர் இளைய அப்துல்லாஹ் வரவேற்றார்.

அந்தனி ஜீவா 93
ஏற்கனவே எனது கலை இலக்கியப் பங்களிப்பை அறிந்து வைத்திருந்த கவிஞர் இளைய அப்துல்லாஹ் என்னைச் சிறப்பாக பேட்டிக் கண்டார்.
அது ஒரு நேரடி ஒளிபரப்பு. கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலங்கள் மிக சுவாரஸ்யமான
பேட்டியாக அது இருந்தது.
பலர் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு இலங்கைத் தமிழ் இலக்கியம், மலையக இலக்கியம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்டார்கள். பிரான்ஸ், ஜெர்மனி என்ற தூர இடங்களிலிருந்து கேள்விகள் கேட்டார்கள்.
பேட்டி முடிந்து வந்ததும் நண்பர் மு. நித்தியானந்தன் பேட்டி சிறப்பாக இருந்தது எனப் பாராட்டினார்.
அது மாத்திரமல்ல, பேட்டி ஒளிப்பதிவை பதிவு செய்து வீடியோ’ பிரதி ஒன்றினை கவிஞர் இளைய அப்துல்லாஹ் அன்பளிப்பாகத் தந்தார்.
அப்பொழுது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாக நண்பர் மு. நித்தியானந்தன் தெரிவித்தார். M WM
தொலைபேசியில் பேசியவர் ஏற்கனவே எனது பேட்டியின் போது தொடர்பு கொண்டவர். மலையக மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளையின் ஒன்று விட்ட சகோதரர். அவரது பெயர் சித்ரராஜா என்பதாகும்.

Page 52
ப் பயண்ம்
நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய
quaíoffạffurmúcno-w (puriuo poud gueoff/7, qou,777)?go moșteģo
 

அந்தனி ஜீவா 95
என்னோடு நேரில் சந்தித்து பலவிடயங்கள் பேச விரும்புவதாகவும், எனது தொலைபேசி முகவரியைப் பெற்றுக் கொண்டார்.
மீண்டும் ஞாயிறு அன்று நண்பர் ‘புதினம்’ ஆசிரியர் ராஜகோபாலின் வீட்டில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில். ஜோகரட்னம், நவஜோதி தம்பதியினரைச் சந்தித்தேன்.
அகஸ்தியரின் மருமகன் ஜோகரட்னம் அந்த இலக்கிய சந்திப்பைத் தனது வீடியோவில் பதிவு செய்து தந்தார்.
அந்த இலக்கிய சந்திப்பிற்கு சகோதரி மேனகாவும், அவரது கணவர் நிர்மலனும் ராஜகோபாலின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிர்மலைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். மிக அமைதியானவர். அவரது அறைக்குச் சென்ற பொழுது ‘காலச்சுவடு கண்ணில் பட்டது. அதன் பிறகு அவரது சிறிய நூலகத்தில் காணப்பட்ட நூல்கள் அவர் எத்தகைய இலக்கிய ஆர்வலர் என்பதைப் புரியக் கூடியதாக இருந்தது.
அவரது அறையை எனக்குத் தங்குவதற்காகத் தந்தார். கணையாழி தொகுப்பு, புதுமைப்பித்தன் கவிதைகள், நண்பர் விஸ்வரட்ணத்தின் கவிதைத் தொகுப்பு இப்படி காத்திரமான இலக்கிய நூல்களையே அங்கு காணக்கூடியதாக இருந்தது.

Page 53
96 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
இலக்கிய சந்தீப்பிற்காக அங்கு எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் வந்திருந்தனர்.
கலாநிதி நித்தியானந்தன் அவரது துணைவியார் மீனாவுடன் வந்திருந்தார். நண்பரும், அரசியல் தொழிற்சங்கத் துறையிலீடுபாடு கொண்டவருமான க. தி. சம்பந்தன், கவிஞர் இராஜமனோகரன், திரு. பத்மநாப ஐயர், நாடகக்கலைஞர் பாலேந்திரா, அங்கையற்கண்ணி, பாரிஸ்டர் ஜோசப், பாடகர் சத்தியமூர்த்தி இன்னும் பலபேர் அந்தச் சந்திப்புக்காக வந்திருந்தார்கள்.
நடிகரும், நண்பருமான சிலோன் சின்னையா தனது கமிராவால் அந்த இலக்கிய சந்திப்பைப் பதிவு செய்தார்.
பி.பி.ஸி. விமல் சொக்கநாதன் என்னைப்பற்றி அறிமுக உரையை நிகழ்த்தினார்.
இலக்கிய சந்திப்புக்கு பாரிஸ்டரும், லண்டன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவரும் எழுத்தாளருமான மாத்தளை செல்வராஜா தலைமை வகித்தார்.
இலக்கிய சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, திடீரென வருகை தந்தார் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்.
அவர் அன்றைய தினம் தான் கனடாவிலிருந்து வந்திருந்தார். பத்மநாதன் ஐயர் மூலம் தகவல் அறிந்து வந்துவிட்டார். அவரின் வருகை எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

97
அந்தனி ஜீவா
Auấou úrtoqooo 4.-7ąoyun oĝore onoaoaog 'godsouzeogootou 4 golgoso się9@gúøurmýș87 oso girio dogaeg) un ļotros qoỹș-7/7 puafo()ur7 097/407ko soqooo qou,7,7% so moșæős

Page 54
98 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
இந்த இலக்கிய சந்திப்பு சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது. மிகவும் சுவையான இலக்கிய உரையாடல்கள் இடம்பெற்றன.
நண்பர் 'சுடரொளி' வெளியீட்டகத்தின் சார்பில் ஐ. தி. சம்பந்தனும், முன்னர் தினகரன் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிய பொன். பாலசுந்தரமும் அற்புதமான பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். இது என்னை எதிர்பாராத மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கலாநிதி மு. நித்தியானந்தன் அருமையான இலக்கிய உரை ஒன்றை நிகழ்த்தி, அவரும் தெளிவத்தை ஜோசப்பும் இணைந்து பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்கள்.
இலக்கிய சந்திப்பின் இறுதியில் நான் கொண்டு சென்ற ‘கண்டி தமிழர்கள் வரலாற்றுப் பதிவுகள்’ என்ற நூலையும் ஏனைய சில நூல்களையும் அங்கு வந்திருந்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினேன்.
இலக்கிய சந்திப்பின்போது கவிஞர் இராஜமனோகரனின் LD 35 6ít அபிராமி இராஜமனோகரனும், பாடகர் சத்தியமூர்த்தியும் பாடி மகிழ்வித்தனர்.
விழாவின் இறுதியில் ‘புதினம் ராஜகோபாலும், அவரது துணைவி நடன ஆசிரியை ராகிணி ராஜகோபாலும் சுவையான விருந்து வழங்கி இலக்கிய சந்திப்பைச் சுவையூட்டினார்கள்.
来

அந்தனி ஜீவா 99
மெழுகு பொம்மைகள்
)ெண்டன் செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் மேடம் துஷாடின் மெழுகு பொம்மைக் காட்சியகமாகும்.
மேடம் துஷாடின் கண்காட்சி சாலையைப் பார்க்க ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள்.
இந்த மெழுகு பொம்மைக் கண்காட்சியகத்தைக் கட்டாயமாகச் சென்று பாருங்கள். இல்லாவிட்டால் தான் வந்து கூட்டிப் போவதாக சகோதரி மேனகா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொன்னார்.
ஒரு ஞாயிறு காலை நானும் என் மனைவியும், மனைவியின் சகோதரர் செல்வமும், அவரது துணைவியார் சாந்தியும் காரில் போகாமல் ரயில் மூலம் மேடம் துஷாடின் மெழுகு பொம்மைக் காட்சியகத்திற்குச் சென்றோம்.
உலகப்புகழ் பெற்றவர்கள் எல்லோரும் அங்கு மெழுகுச் சிலைகளாகக் காட்சியளித்தார்கள்.

Page 55
1OO
ళ్ల
 
 

அந்தனி ஜீவா 101
ஹொலிவூட் நடிகர்களின் உருவங்களை பார்வையாளர்கள் போட்டிக் போட்டுக் கொண்ட படம்பிடித்துக் கொண்டார்கள்.
இந்த நடிகர்களின் கூட்டத்தில் ஒருவர் வித்தியாசமாகத் தெரிந்தார். அவர் யார் என்று அருகில் போய் பார்த்த பொழுது அவர் தான் இந்தியாவின் புகழ் பெற்ற சினிமா நட்சத்திரம் அமிதாபச்சன்.
திரைப்பட நட்சத்திரங்கள், தொலைக்காட்சி நடிகர்கள், பொப் பாடகர்கள், இவர்கள் மத்தியில் மைக்கல் ஜெக்ஷன் மைக்குடன் பாடியபடி காட்சி அளிக்கிறார்.
புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்ளி சப்ளின், ஜோன் வைன், ஜேம்ஸ் பொண்ட் சீன்கொனறி, அல்பிரட் ஹிட்ச்கொக் ஆகியோரும் மெழுகு பொம்மைகளாகக் காட்சியளிக்கிறார்கள்.
அதேபோல இன்னொரு பக்கம் உலகப் புகழ்பெற்ற நடிகர் மார்ஸன் பிராண்டோ, கவர்ச்சிக் கன்னி என்று உலகத் திரைப்பட ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிறிஜட் பார்டட் புன்னகை பூத்த முகத்துடன் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள்.
அவர் அணிந்திருக்கும் ஆடை காற்றில் பறக்கிறது.
அவரைச் சில நிமிடங்கள் பார்க்காமல் அங்கிருந்து அசைய முடியாது - உயிருள்ள சிற்பமா

Page 56
102 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
கம்பீரமான தோற்றத்தோடு பிடல்கெஸ்ட்ரோ, உடன் ஆசிரியர்
 

அந்தனி ஜீவா 103
என அவரது மெழுகு பொம்மை உருவம் வியக்க வைக்கிறது.
இலங்கை சினிமா ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க வைத்த திரைப்படம் “ஜ"ரஸிக்பார்க்' திரைப்படம். இதன் டைரக்டர் ஸ்டீவன் ஸ்பிர்ள் பேர்க். உலகத்திலே புகழ் பூத்த நெறியாளர்களில் மிக முக்கியமானவர். எண்பது திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். 40 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேடம் துஷாடின் மெழுகு பொம்மைக் கண்காட்சிக் கூடத்தில் அரசர்கள், அரசிகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்கள், புகழ்பூத்த மனிதர்கள் ஆகியவர்களின் மெழுகு பொம்மை உருவங்களைக் காணலாம். இன்று நம் மத்தியில் வாழும் வரலாற்று நாயகர்கள் அங்கு மெழுகு பொம்மைகளாக அவர்கள்
அடிக்கடி அணியும் ஆடைகளுடன் காணப்படுகிறார்கள்.
பி. பி.ஸி. 2002ம் ஆண்டில் எடுத்த வாக்கெடுப்பில் ‘பிரித்தானியாவின் பெருமை மிகுந்த மனிதர்’ எனத் தெரிவு செய்யப்பட்ட வின்சன்ட் சேர்ச்சில் வழமையான தோற்றத்தில் காணப்படுகிறார்.
அவருக்கு எதிர்ப்புறத்தில் அடல்ப் ஹிட்லர். இன்னொரு பக்கத்தில் கம்பீரமான தோற்றத்தோடு பிடல் கெஸ்ட்ரோ, விடுதலை வீரர்

Page 57
LU LULU6TLD
நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய
104
ւ սոու-ւ
நடிகை பிறிஜ
 

அந்தனி ஜீவா 105
நெல்சன் மண்டேலா, அரபாத், சதாம் ஹ"ஸைன், அமெரிக்கப் பிரதமர் புஷ், டோனி பிளேயர் மற்றும் இடி அமீனும் காணப்படுகிறார்.
அது மாத்திரமல்ல; மிகவும் எளிமையான தோற்றத்தில் மகாத்மா காந்தி, ஆபிரஹாம் லிங்கன் காட்சியளிக்கிறார்கள்.
மேடம் துஷாட்டின் வாழ்க்கை மிகவும் விநோதமானது. மேடம் துஷாட்டின் குழந்தைப் பருவ பெயர் மரியா என்பது. 1761ல் அவர் பிறந்தார்.
சின்னஞ்சிறு வயதிலேயே இராணுவத்தில் பணியாற்றிய தந்தை காலமானார். அப்பொழுது மரியாவிற்கு ஏழு வயது. அதனால் மரியாவின் தாயார் வைத்தியர் ஒருவரிடம் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார்.
அந்த வைத்தியர் மெழுகு பொம்மைகளை உருவாக்கினார். பின்னர் பொம்மைகளைச் செய்வதை விட, உயிருள்ள மனிதர்களை மெழுகு பொம்மைகளாக வடித்தார்.
அவர் 1767ல் பாரிஸ் நகருக்கு வந்தார். மரியா இவரிடம் மெழுகு பொம்மை உருவாக்குவதை நுணுக்கமாகக் கற்றார்.
பாரிஸில் மெழுகு பொம்மைக் கண்காட்சி அறையைத் திறந்தார். மரியா புகழ் பெற்ற மனிதர்களான வோல்டயர், பெஞ்சமின் பிராங்க்ளின் உருவங்களைச் செய்தார்.

Page 58
106 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
இந்த இரண்டு புகழ்பெற்ற மனிதர்களின் மெழுகு பொம்மைகள் மரியாவிற்கு மதிப்பைத் தேடி தந்தது.
1794 மெழுகு பொம்மைகளை உருவாக்கிய வைத்தியர் இறந்து போகவே, மரியா சிறிது காலத்திற்குப் பின்னர் தூஷட் என்பவரை மணந்தார். இவர் ஒரு பொறியியலாளர். இவரது முழுப் பெயர் பிரான்கைஸ் துஷாட் என்பதாகும்.
இந்த துஷாட் தம்பதியினருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் பிறந்தார்கள். மகள் இளம் வயதிலே மரணமானார்.
பிரான்ஸ் புரட்சிக்குப் பின்னர் 1802ல் மேடம் துஷாட் தனது மூத்த ம்கனுடன் லண்டனுக்குச் சென்றார். பிறகு அவரது குடும்பத்தினரும் லண்டனுக்கு வருகை தந்தனர்.
மேடம் துஷாட் தனது மெழுகு பொம்மைக் கண்காட்சியை 33 ஆண்டுகள் பிரித்தானியாவில் பல இடங்களிலும் நடத்தினார்.
அதன் பின்னர் 1835ல் மேடம் துஷாட் தமது எழுபத்திநான்காம் வயதில் ஒரு நிரந்தரமான இடத்தில் கண்காட்சியை வைக்க விரும்பினார். பேக்கர் வீதி கடைத் தொகுதியில் நிரந்தரமாக மெழுகு பொம்மைக் கண்காட்சியை அமைத்தார்.
பின்னர் 1850ம் ஆண்டு 84ம் வயதில் மரணமானார். அதன் பின்னர் அவர் வாரிசுகள் அந்த மெழுகு பொம்மைக் கண்காட்சியை நடத்தினார்கள்.

அந்தனி ஜீவா 107
மேடம் துஷாட்டின் மெழுகு பொம்மைக் கண்காட்சிக்கு 1925ல் ஒரு பயங்கர சோதனை ஏற்பட்டது. தீயின் காரணமாகப் பல மெழுகு பொம்மைகள் உருகிவிட்டன. அதில் வரலாற்றுப் புகழ்மிக்க நெப்போலியனின் உருவமும் ஒன்று.
பின்னர் மீண்டும் புதிய உருவங்கள் மெழுகு பொம்மைகளாக உருவாக்கப்பட்டன.
மேடம் துஷாட்டின் உருவம் கூட மெழுகு பொம்மையாக உருவாக்கப்பட்டுள்ளது. அவரது உருவத்தை வடிவமைத்த பொழுது, மேடம் துஷாட்டுக்கு 81 வயது என்று குறிப்பேட்டில் காணப்படுகின்றது.
அந்த மேடம் துஷாட்டின் மெழுகு பொம்மை காட்சியகத்தில் ஒட்டப்பந்தய வீரர் ஜெஸி ஓவன்ஸின் உருவ பொம்மையைக் கண்டேன்.
அதைப் பார்த்ததும் கால் நூற்றாண்டுக்கு முன்னால் நான் படித்த குறிப்பு ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.
உலகின் புகழ்பெற்ற ஒட்டப்பந்தய வீரரான ஜெஸி ஓவன்ஸ் ஒட்டப்பந்தயத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுவிட்டார். அப்பொழுது அங்கிருந்த ஹிட்டர் ஜெஸி ஒவனுடன் ‘நாயாலும் கூட ஓட முடியும்’ எனக் கூறி கைகுலுக்க மறுத்துவிட்டார்.

Page 59
108 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
இதற்கு முக்கிய காரணம் ஜெஸி ஒவன்ஸ் ஒரு
’கறுப்பர்’ என்பதே.
எப்பொழுதோ படித்த இந்தச் சம்பவம் ஜெஸி ஒவனைப் பார்த்ததும் என் நினைவிற்கு வந்தது. நானும் ஜெஸி ஒவனுடன் விரும்பி ஒரு படத்தைப் பிடித்துக் கொண்டேன்.
மேடம் துஷாட்டின் மெழுகு பொம்மைக் கண்காட்சி அவசியம் பார்க்க வேண்டியது ஒன்றாகும்.
来

அந்தனி ஜீவா 109
முரீ கனக துர்க்கை அம்மன்
ஒரு நாள் ஓய்வாக 'தமிழ் ஓலை’ என்ற தகவல் களஞ்சியத்தைப் புரட்டிக் கொண்டிருக்கையில் பல இந்து ஆலயங்களின் முகவரிகள் தென்பட்டன.
நம்மவர்கள் எங்கு சென்றாலும் ஆலயங்கள் அமைத்து, தேர் திருவிழாக்கள் நடத்துவதில் கெட்டிக்காரர்கள்.
லண்டனில் இருபத்தியிரண்டு சைவ ஆலயங்கள் இருப்பதாக அறிந்து கொண்டேன். அதிலும் மிகச்சிறப்பான பணிகளை பூரீகனக துர்க்கை அம்மன் ஆலயம் செய்து வருவதாக நண்பர்கள் சொன்னார்கள்.
இந்த ஆலயம் பற்றி ‘புதுமை ராஜகோபாலிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது ‘பூரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாகக் குழு தலைவர் எஸ். கருணை லிங்கத்தை நிச்சயமாகச் சந்திக்க வேண்டும்’ என்று கூறியதுடன் - பூரீ கண்க துர்க்கை அம்மன் ஆலயத்தை நான் பார்க்க விரும்புவதாக ராஜகோபால் கருணை லிங்கத்திடம் கூறிவிட்டார்.

Page 60
110 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
ஒரு வெள்ளிக்கிழமையன்று காலை பூரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாகக் குழுத்தலைவர் எஸ். கருணைலிங்கம் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டில் இருக்கும்படியும் என்னை வந்து பூரீகனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.
அவர் குறிப்பிட்டது போல பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் ஈலிங் பூரீ கனகத்துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். காரில் போகும் பொழுது அவரிடம் பல விடயங்களை பற்றி தெரிந்து கொண்டேன்.
பூரீ கனக துர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளையினர் இலங்கையில் வடக்கு - கிழக்கு மலையகம் என்று பேதமின்றி பெற்றோர்களை இழந்து, பராமரிப்பு இன்றி தவிக்கின்ற ஆதரவற்ற அநாதைக் குழந்தைகளைப் பராமரிக்கிறார்கள். அத்தகைய திக்கற்ற குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் காக்கும் கரங்கள் என்ற நற்பணியை இந்த ஆலயத்தினர் செய்து வருகின்றனர்.
அவரிடம் மேலும் பல தகவல்களைக் கேட்ட
பொழுது அவரது கார் ஆலய வாயிலை அடைந்துவிட்டது.
“நான் சொல்வதைவிட, நீங்களே நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்” என்று கூறியவாறு ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.

அந்தனி ஜீவா 111
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
அன்னை யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
என்றானே மகாகவி பாரதி அந்தக் கவியின் கனவை நம்மவர்களான இலங்கைத் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் நனவாக்கியுள்ளனர்.
ஆலயத்தில் நான் நுழைந்த வேளை அங்கு பகல் பூசை நடந்து கொண்டிருந்தது. அங்குள்ளவர்களைப் பார்த்ததும் லண்டனில் இருக்கிறோமா அல்லது இலங்கையில் இருக்கிறோமா என்ற உணர்வு ஏற்பட்டது.
அங்கு ஒரே தமிழ் மணம். பக்திப்பாடல்கள் தமிழில் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. காஞ்சிபுரம் பட்டுச் சாரிகளும், சரிகை வேட்டிகளும், இளம் நங்கையர்கள் பாவாடை, தாவணி சகிதம், அங்கு யாழ்ப்பாண இந்துக் கோவிலில் நடைபெறும் பூசை போல காணப்பட்டது.
பின்னர் கருணைலிங்கம் என்னை அழைத்துச் சென்று ஆலயத்தைச் சுற்றிக் காட்டினார். கோவில் நிர்வாகிகளுக்கு என்னை அறிமுகப்படுத்தினார்.
வடக்கு - கிழக்கு மலையகம் என கடந்த 32 மாதங்களில் 1.304. 029 பவுண்கள் அனுப்பப் பட்டுள்ளன. (ஒரு பவுணை இலங்கைப் பணத்தில் ரூபா. 150 என்று குறிப்பிடலாம்.)

Page 61
: 112 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
 

அந்தனி ஜீவா 113
கோவிலின் செலவு தவிர்த்து வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈழத்தில் அவதியுறும் சிறுவர்களின் பராமரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.
கோவிலின் கணக்கு வழக்குகள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இன்னொரு மிக முக்கியமான விடயத்தை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த ஆலயத்தின் மண்டபத்தை எழுத்தாளர்களின் நூல் வெளியிடுகளுக்கு இலவசமாக வழங்குகின்றனர்.
கலையழகு மிளிரும் அந்த செளந்தர்யமிக்க ஆலயத்தை இரண்டாவது தடவையும் சுற்றிப் பார்த்தேன். இந்த ஆலயங்கள் தான் நம்மவர்களை ஒருங்கிணைக்கின்றன. தங்களை அடையாளம் காட்டவும் ஒன்று கூடி சங்கமிக்கவும் இந்த ஆலயங்கள் வழிகாட்டிகளாக அமைகின்றன.
ஆலய நிர்வாகக் குழு தலைவர் கருணைலிங்கம் அம்மனின் தேர்த்திருவிழா வீடியோவையும், "வாசலிலே ஒளி வீசு’ என்ற புதுவை இரத்தின துரையின் பாடல்கள் அடங்கிய இசைப் பேழையையும் அன்புடன் தந்தார்.
அந்த இசைப் பேழையில் புதுவை இரத்தின துரையின் கவிதா வரிகளுக்கு இலக்கியனின் இனிய இசை உயிர்ப்பூட்டுகிறது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம், நித்தியபூரீ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஹரிணி,

Page 62
114 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
சுவர்ணலதா ஆகியோரின் இனிமை மிகுந்த குரலில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த இசைப் பேழையில் தமிழ்க்கவி புதுவை இரத்தினதுரையின் சில வரிகள்.
‘கருமேகம் கிழிந்து மழைநீர் சரமான நேரத்தில் மூச்சுவிட்டால் எதிரியின் முதுகில் படும் தூரத்தில் காலில் இடறும் கண்ணிவெடிகளைத் தாண்டி பகைவர் பாடிய படைத்தளத்துள்ளே எங்கள் தங்கையர் புகுந்தனர் கொற்றவைக் கூத்து - முடிந்த போது
விடிந்தது வெற்றி இவர்களின் கையில் விழுந்தது எப்படி எழுந்தார்கள்? கனவிலும் காணாத நிமிர்வு'
என்று எங்கள் கசிவி புதுவை இரத்தினதுரை எங்கள் பெண்களின் வீரத்தைக் கொற்றவைக் கூத்தாகவே கவியாகப் பதிவாக்கினார். அந்த எங்கள் தங்கையர் கொற்றவைக் கூத்தினை நேரிலே கண்ட நம் கவி புதுவை இரத்தினதுரை கொற்றவைத் தாயின் மேல் பாடிய இந்த வாசலில் ஒளி வீசு இறுவெட்டுப் பாடல்கள் ஆன்மீகத்தையும் நாளாந்த வாழ்வையும் இணைக்கும் இன்னிசைச் சங்கிலி எனலாம்.
இலங்கையில் உள்ள பல இந்து ஆலயங்கள் கூட தங்களின் வருமானங்களை தேர்த் திருவிழா என்று வீணாக வாரி இறைக்கிறார்கள். ஆனால்

அந்தனி ஜீவா 115
ஈலிங் பூரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய வருமானத்தில் கிடைக்கும் பணத்தில் பெரும் பகுதியை நற்பணிகளுக்காகச் செலவிடுகிறார்கள் என்பது பாராட்டுக்குரியது.
பிறந்த மண்ணை மறக்காமல் அவர்கள் செய்து வரும் நற்பணிகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும்.
来

Page 63
116 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
எழன்ரோவில் எழுத்தாளர் grøTšøTADIR)
Tென் மனைவியின் சகோதரர் தேவா எங்களுக்காக ஸ்கொட்லாந்து போவதற்காக ஏற்பாடு செய்திருந்தார். .
அதிகாலை ஹேரோ கேட்டிலிருந்து புறப்பட்டு ரயில் மூலம் எடின்பரோ ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து காரில் நாங்கள் தங்கப் போகும் விருந்தினர் விடுதிக்குச் சென்று அங்கு காலை உணவை முடித்துக் கொண்டு எடின்பரோ கப் பற்றுறைக்கு வந்தோம்.
மகாராணியார் குடும்பத்தினர் பயன்படுத்திய உல்லாச கப்பலான பிரிட்டானியாவைப் பார்வையிட பல நாடுகளிலிருந்து உல்லாசப் பயணிகள் வருகிறார்கள். ۔
இதனைப் பார்வையிட எட்டு பவுண் இலங்கை பணத்தில் ஆயிரத்து நானுறு ரூபாய் அறிவிடுகிறார்கள். இந்தக் கப்பல் ஓர் உல்லாச விடுதி போல காட்சியளித்தது. அரச குடும்பத்தினர் மட்டும்

11,
அந்தனி ஜீவா
gravuri
AșeșØuæ7īvooqs og/mun» o «»ðfæri 49%ąe»uają,

Page 64
118 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
பயன்படுத்திய இந்தக் கப்பலைச் சுற்றிப்பார்க்க மூன்று மணித்தியாலம் எடுத்தது. vn இந்தக் கப்பலில் ஒரு வீடு போல சகல வசதிகளும் இருந்தன. விருந்தினர் விடுதி, நூலகம், உலகத் தலைவர்களை வரவேற்று விருந்தளிக்கும் விருந்தினர் கூடம் இப்படிப் பல விதமான அறைகள் காணப்பட்டன.
இளவரசர் சார்லஸ் - டயானா தேன்நிலவை இந்தக் கப்பலில் கழித்துள்ளதாக ஒரு குறிப்பும் காணப்படுகிறது. மற்றும் இந்தக் கப்பலில் மகாராணியார் விருந்தளித்த விருந்தினர் கூடத்தை லண்டனிலுள்ள பெரிய நிறுவனங்கள் வாடகை எடுத்து விருந்தளிக்கின்றனர்.
அரச குடும்பத்தினர் எத்தகைய பொருட்களை பாவித்தனரோ அவை பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.
அரச குடும்பத்தினரின் உல்லாசக் கப்பலைப் பார்த்த பின்னர் எடின்பரோ நகரில் பகலுணவை முடித்துக் கொண்டு வரலாற்றுப் புகழ்மிக்க எடின்பரோ காசலுக்குச் சென்றோம்.
எடின்பரோ காசல் என்பது ஆதிகாலக் கோட்டை. இதனைச் சுற்றிப் பார்த்தோம்.
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இந்தக் கோட்டையின் முன்னால் கலாசார ஊர்வலம் ஒன்றை நடத்துகிறார்கள். பல நாடுகளிலிருந்து வரும் கலாசார

119
அந்தனி ஜீவா
-7æ97 usog) ogsmurs onæ9đæri ajų919 spouso
Audg)rī£9thus

Page 65
120 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
குழுவினர் பங்குபற்றுகிறார்கள். ஒரு தடவை நம் நாட்டின் கண்டிய நடனக் குழுவினரும் பங்கு பற்றியுள்ளார்கள்.
இந்தக் கலாசார விழாவைக் கண்டுகளிக்க பல நாடுகளிலிருந்தும் வருகை தருகிறார்கள். இதனை ஆசனங்களில் அமர்ந்து பார்வையிட கட்டணங்கள் அறிவிடுகிறார்கள். அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த இரண்டு இடங்களையும் சுற்றிப் பார்த்ததில் ஒரு நாள் கழிந்துவிட்டது.
இரவு படுக்கப் போகும் முன்னர் எனது மனைவியின் சகோதரர் தேவா, “நாளைக்கு உங்களுக்குப் பிடித்தமான ஒரு இடத்திற்கு அழைத்துப் போகிறேன்’ என்றார்.
எந்த இடம் என்று அவர் சொல்லவில்லை. மறுநாள் காலை சிறிது பணித்தூறல் விடிந்தது.
ஸ்கொட்லாண்டின் தலைநகரமான எடின்பரோவை முதலில் சுற்றிப் பார்த்தோம். நகரின் மையத்தில் உள்ள கோபுரத்தின் உள்ளே ஒரு நாற்காலியில் ஒருவர் அமர்ந்து மேசையில் எழுதுவது போல காட்சியளித்தார்.
அந்த கோபுரத்தின் அருகில் சென்று பார்த்து அந்தச் சிலையைப் பற்றிய குறிப்பை வாசித்தோம். எழுதுவது போல காட்சியளிக்கும் சிலை ஸ்கொட்லாந்தின் புகழ்பெற்ற எழுத்தாளரும், உலகின்

அந்தனி ஜீவா 121
சிறந்த எழுத்தாளராக மதிக்கப்படும் சேர். வோல்டர் ஸ்கொட் என்பவரே அவர்
ஒரு எழுத்தாளருக்கு எத்தகைய இடத்தை இவர்கள் அளித்துள்ளார்கள் என வியந்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது ‘நேற்று இரவு நான் சொன்ன இடத்திற்கு உங்களைக் கூட்டிப் போகிறேன்’ என்றார் தேவா.
அவர் அழைத்துச் சென்ற இடத்தின் பெயரைப் பார்த்த பொழுது, எனது விழிகள் வியப்பால் விரிந்தன.
அதிசயத்துடன் ஆச்சரியமாக அந்த இடத்தின் பெயர்ப் பலகையைப் பார்த்தேன். ‘எழுத்தாளர்களின் நூதனச் சாலை எடின்பரோ’ என்றிருந்தது.
இந்த எழுத்தாளர் நூதனச்சாலையில் ஸ்கொட்லாண்டின் முக்கியமான எழுத்தாளர்கள் மூவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சேர். வோல்டர் ஸ்கொட் (1771- 1832), ரொபர்ட் பேர்ன்ஸ் (1759-1796), ரொபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் (1850-1894) ஆகிய முத்தான மூவரும் ஸ்கொட்டிஸ் இலக்கியத்தின் முன்னோடிகள். இந்த மூவரின் படைப்புகள், கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள் போன்றவற்றைச் சேகரித்து வைத்துள்ளனர்.
இந்த மூவரின் படைப்புகளைத் தனித்தனியே வைக்காமல் ஒரே இடத்தில் வைத்ததற்குரிய காரணம் இவர்களுக்குப் பிறகு எழுதிய எழுத்தாளர்கள் இவர்களின் தாக்கத்திற்கு உட்பட்டவர்களே. 'உலக

Page 66
பதிந்த ஐரோப்பியப்
எடின்பரோவில் எழுத்தாளர் நூதனச் சாலை.
 

அந்தனி ஜீவா 123
இலக்கியத்தில் இந்த மூவருக்கும் தனி இடமுண்டு 66 ஆங்கில இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த எழுத்தாளர்களின் நூதனச்சாலையின் மூன்றாவது மாடியில் நூறு எழுத்தாளர்களின் புகைப்படங்களையும், அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்தக் கட்டிடத்தின் முதலாவது மாடியில் தான் சேர். வோல்டர் ஸ்கொட்டின், நூல்கள் கையெழுத்துப் பிரதிகள், அவர் எழுதிய பேனாக்கள், அவரது உடைகள், தொப்பி, கண்ணாடி ஏனைய பொருட்கள் காணப்படுகின்றன.
அத்துடன் அவர் எழுதுவது போன்ற அமைப்பில் உருவமும் உள்ளது. அந்த உருவத்தைப் பார்த்த பொழுது உயிருள்ள மனிதனைப் போல காட்சியளிக்கின்றது. அவரது தலைமயிர் கூட அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதே போல ஏனைய இரண்டு எழுத்தாளர்களின் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
அங்கே, அந்த நூதனச்சாலைக்குப் பொறுப்பாக இருந்தவரிடம் விசாரித்த பொழுது ஸ்கொட்டிஸ் இலக்கிய கர்த்தாக்களின் படைப்புகள் கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள நூலக அறையில் பாதுகாப்பாகச் சேகரித்து வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அந்த எழுத்தாளர்களின் நூல்களை வாசிப்பதற்கோ அல்லது ஆய்வு செய்வதற்கோ

Page 67
124 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
ஸ்கொட்லாந்து பிரஜையுடன் நூலாசிரியர்
 

அந்தனி ஜீவா 125
விரும்புபவர்கள் அந்த எழுத்தாளர்களின் நூதனச்சாலையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அல்லது எடின்பரோவில் உள்ள சேர் வோல்டர் ஸ்கொட் சங்கத்தில் அங்கத்தவராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அங்கு ஸ்கொட்டிஸ் இலக்கிய கர்த்தாக்களின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சமகால ஸ்கொட்டிஸ் இலக்கியத்தின் புகழ்பூத்த கவிஞரான டெனிஸ் என்பவரின் கவிதைத் தொகுதி இரண்டை வாங்கினேன். ஒன்றின் விலை இலங்கை பணத்தின் ஆயிரம் ரூபாய். அந்தக் கவிதைத் தொகுதியின் பெயர் "Smoke and Mirrors' GT 6örug). egy 60) L–60) uá5 திறந்தவுடன் இரண்டு வரிகளில் ஒரு புதுக்கவிதை.
“நான் ஒரு மனிதனைக் கண்டேன்
அவனது பெயரோ நேரம்
அவனே சொன்னான் நான் போகிறேன்!”
இதுபோன்ற எழுத்தாளர்களின் நினைவாலயம் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைய வேண்டும் என்ற கனவுகளுடன் வந்தேன்.
来

Page 68
126 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
நினைவுகள் சாவதில்லை
இலங்கை திரும்புவதற்கு இன்னும் சில நாட்களே இருந்ததால் லண்டனில் சில முக்கிய இடங்களைப் பார்க்க விரும்பினோம்.
ஒரு நாள் காலை வேளையில் பக்கிங்ஹாம் மாளிகையைப் பார்க்கப் போனோம். இந்த மாளிகை 1903ல் கட்டப்பட்டது. இதன் எதிரில் விக்டோரியா மகாராணியாரின் நினைவகம் உள்ளது.
இந்த மாளிகையின் முன்னால் வெளிநாட்டுப் பயணிகள் ஆயிரக்கணக்கில் கையில் கமெராவுடன் குழுமியிருக்கிறார்கள்.
எங்களைக் கூட்டிச் சென்ற அஜானியிடம் என்னவென்று கேட்டோம்.
இந்த அரண்மனையைக் காவல் காக்கும் படையினர் மாறும் காட்சி பதினொன்றரைக்கு நடைபெறுகிறது. இராணுவ அணிவகுப்பும், பேண்ட் வாத்திய இசையும் அரை மணித்தியாலத்திற்கு மேல் நடைபெறுகிறது.

Opiss6f 6fm 127
இதனைப் பார்க்கவே அரண்மனையின் முன்னால் மக்கள் கூட்டமாக நின்றார்கள். நாங்களும் அவர்களோடு நின்று கொண்டோம்.
அந்த இராணுவ அணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சி. அதனைப் பார்த்து விட்டு பின்னர் லண்டனில் புகழ்பெற்ற லண்டன் ஐ’ என்னும் சுழல் சக்கரக் காட்சியைப் பார்க்க வந்தோம். இதனை தேம்ஸ் நதியில் கப்பலில் இருந்தவாறு பார்த்தோம்.
உலகிலேயே மிக உயரமான கண்காட்சி சக்கரமான இதனை தேம்ஸ் நதிக்கரையில் பிரிட்டிஷ் எயர்வேஸ் நிறுவனம் உருவாக்கிப் பராமரித்து வருகிறது. இதன் உயரம் 135 மீட்டர். மெதுவாக ஒரு சுற்றுச் சுற்றி வருவதற்கு அரை மணித்தியாலம் ஆகிறது.
லண்டன் நகரைப் பார்க்க வேண்டும் என்றால் இந்தச் சக்கரக் கூண்டில் ஏறி பார்த்தால் போதும். பிக்பென் கடிகாரம், வெஸ்ட் மினிஸ்டர் பாலம், மாதா கோவில்கள், தேம்ஸ் நதியில் படகு செல்வது ஆகியவற்றைக் கண்டுகளிக்கலாம்.
இரவு வீடு திரும்பியதும் எனக்கு ஒரு தகவல் காத்திருந்தது.
லண்டன் தமிழ்ச்சங்கத் தலைவர் அசோகன் தொடர்பு கொண்டு இந்தியர்கள் நடத்தும் தொலைக்காட்சிக்குப் பேட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினார். மறுநாள் காலை பத்து மணிக்கு வரும்படி அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

Page 69
128 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
மறுநாள் நண்பர் சிலோன் சின்னையாவை தொடர்பு கொண்டு அவருடன் வாடகைக் காரில் தொலைக்காட்சி நிலையத்திற்குச் சென்றேன்.
சி இடிவை என்றழைக்கப்படும் அந்தத் தனியார் தொலைக்காட்சியில் என்னை செல்வி ரஜனி என்பவர் பேட்டி கண்டார். பேட்டியின் போது சுவிஸ், ஜெர்மனி போன்ற இடங்களில் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பல கேள்விகள் கேட்டார்கள். இந்த நேரடி பேட்டியை ராஜ்குமார் என்பவரின் தயாரிப்பில் சிவா என்பவர் பதிவு செய்தார்.
அதன் பின்னர் நானும் சிலோன் சின்னையாவும் ‘புதினம் ராஜகோபால் இல்லம் சென்றோம். அங்கு பகலுணவை உட்கொண்டவாறு பல விடயங்களையும் பேசினோம்.
மாலை, அமரர் அகஸ்தியரின் மருமகன் ஜோகரட்ணம், மகள் நவஜோதி அழைப்பின் காரணமாக அவர்கள் இல்லம் சென்றேன்.
மூவரும் ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்றழைக்கப்படும் ஈ.டி.பி.ஸி. வானொலி நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
அந்த வானொலி நிலையத்திற்குப் பொறுப்பாக
இருந்த எஸ்.பி. ஜெயகுமார் என்பவர் எங்களை அன்போடு வரவேற்றார்.

அந்தனி ஜீவா 129
வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் ‘சாளரம்' என்ற இலக்கிய மஞ்சரிக்காக
எனது பேட்டி ஒன்றினை திருமதி நவஜோதி ஜோகரட்ணம் பதிவு செய்தார்.
அதன் பிறகு என்னை நேரடியான ஒலிபரப்பிற்காக ஜோகரட்ணமும், பாலாவும் சுமார் ஒன்றரை மணி நேரம் பேட்டி கண்டார்கள்.
அந்த நேரடி பேட்டி விறுவிறுப்பாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது.
அமரர் அகஸ்தியரின் மருமகன் ஜோகரட்ணம் சட்ட நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர். பகுதி நேரமாக வானொலி, தொலைக்காட்சி என்று பம்பரமாக செயல்படுபவர். V
மற்றும் லண்டனில் நான் பார்த்த 'ஆர்ட்’ என்ற நாடகம் மூன்றே மூன்று கதாபாத்திரங்களைக் கொண்ட நாடகம். ஒரே காட்சியில் ஒன்றரை மணி நேரம் எப்படிக் கழிந்தது என்றே தெரியவில்லை.
ஒருநாள் மாலை பொழுதில் நானும் சிலோன் சின்னையாவும் மலையக மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளையின் ஒன்றுவிட்ட தம்பியான சித்ரராஜ் என்பவரைப் பார்க்கச் சென்றோம்.
அவர் சுகவீனமாக இருந்தார். மலையக மக்கள் மீது பேரன்பு கொண்டவர். 1983ன் கலவரத்தில் போது மலையக மக்களுக்கு ஏற்பட்ட நிலைமைகளைக் கண்டு மனம் வருந்தி, அங்குள்ள சிலருடன் கூடி இந்த

Page 70
130
நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
ஹேவுட் அரண்மனையின் தோற்றம்
 

அந்தனி ஜீவா 131
மக்களுக்காக நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.
இவர் கண்டியிலுள்ள திரித்துவ கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். சி.வி. வேலுப்பிள்ளையைப் பற்றி பல தகவல்களைத் தெரிவித்தார்.
ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ள “ஹேவுட்” அரண்மனையைப் பார்க்கப் போயிருந்தேன். இந்த அரண்மனையைச் சுற்றிப்பார்க்க நான்கு மணித்தியாலம் எடுத்தது.
இந்த அரண்மனையைச் சுற்றியுள்ள மலர்த்தோட்டம், அங்குள்ள பென்குவின் பறவைகள் என்னை மிகவும் கவர்ந்தன.
பலவித பறவைகளைக் கொண்ட பறவைகள் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பறவை பூங்காவைப் பார்க்க பெற்றோர்கள் சிறுவர்களைக் கூட்டி வருகிறார்கள். அவர்கள் தங்கள் பிஞ்சு மனதில் தோன்றும் எண்ணங்களைக் கவிதையாக வடித்துள்ளார்கள். இவர்களின் கவிதா ஆற்றலைத் தூண்டுமுகமாக கவிதைகள் அச்சிடப்பட்ட பிரசுரத்தை வழங்குகிறார்கள்.
சிலர் பறவைகளை ஒவியமாகத் தீட்டுகிறார்கள்.
இவை எல்லாவற்றையும் பார்த்தபொழுது நேரம் போனதே தெரியவில்லை.

Page 71
132 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
ஹேவுட் மாளிகையின் பறவைகளின் பூங்காவில் காணப்படும் பறவை ஒன்றின் தோற்றம்
 

அந்தனி ஜீவா 133
லண்டனில் இலங்கையர் தயாரித்த “சீக்ரட் லவ்' என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்த கீர்த்திசிங்கம் என்பவர் தனது வீட்டிலுள்ள பெரிய திரையில் போட்டுக் காட்டினர்.
டிஜிடல் வீடியோ கமிராவால் மிகச் சிறப்பாகப் படப்பிடிப்பை அவரே செய்துள்ளார்.
அந்தத் திரைப்படத்தின் பாடல் அடங்கிய சி.டி.யை அன்பளிப்பாகத் தந்தார்.
இலங்கை திரும்புவதற்கு முதல் நாள் பாரிஸ்டர் மாத்தளை செல்வராஜா அவரது இல்லத்தில் சிறப்பான
விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த விருந்துக்கு ‘தீபம்’ மு. நித்தியானந்தன் திருமதி. நித்தியானந்தன், நடிகர் சிலோன் சின்னையா ஆகியோருடன் தெளிவத்தை ஜோசப்பும் வந்திருந்தார்.
சி.வி.யின் படைப்புகளைத் தொகுப்பாக வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தோம். குழுவாகச் செயல்படுவது அத்துடன் தேசபக்தன் கோ. நடேசய்யரின் சட்டசபை உரைகளை அச்சில் கொண்டு வருவது எனவும் முடிவு செய்தோம். லண்டனில் இந்த பணிகளை பாரிஸ்டர் செல்வராஜா, தீபம் நித்தியானந்தன் ஆகியோர் செயற்பாட்டாளராக இருப்பார்கள். மலையகத்தின் நானும், தெளிவத்தை ஜோசப்பும் செயற்பாட்டாளராக செயற்படவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

Page 72
LI LLCTI)
நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய
134
griợto uns? ựsoso gioạon yoğursy pumgwaedae pyroko pogoooog-in
 

அந்தனி ஜீவா 135
நாங்கள் இலங்கை திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் எனது மனைவியின் சகோதரர் ஆனந்தன் அவரின் துணைவியார் சிவாஜினியுடன் எங்களைப் பார்ப்பதற்கு கனடாவிலிருந்து வருகை தந்தார். எங்களுக்காகப் பல பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்தார்.
நாங்கள் இலங்கை புறப்படுவதற்கு முதல் நாள் செல்வத்தின் வீட்டில் என் மனைவியின் மூன்று சகோதரர்களும் ஒன்று கூடிவிட்டார்கள். ஒரே குதூகலம். இரவு நீண்ட நேரம் இலங்கை நினைவுகளைப் பற்றியும் உறவினர்கள் பற்றியும் பேசுவதிலேயே நடு சாமம் ஆகிவிட்டது. மறுநாள் காலை ஆறு மணிக்கு நாங்கள் லண்டனில் இருந்த போது எங்களை வெகுவாக உபசரித்த செல்வத்தின் துணைவியார் சாந்தியிடமும் அவரது மகள் அஜானியிடமும் மகன் ஜோன் சங்கரிடமும் பிரிய மனமின்றி விடைபெற்று, ஹரீத்ரோ விமான நிலையம் வந்தோம். தேவாவும், செல்வமும் எங்களோடு வந்து வழியனுப்பி வைத்தார்கள். இனிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டு நாடு திரும்பினோம்.
米

Page 73
136 நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
விற்பனையாகும் இதர நூல்கள்
u ol616fgirl"GÜ ULUSUUTü - Travelogue = கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு (ஆஸ்திரேலியப் பயணம் ---- 40.00 ஒரு பத்திரிகையாளனின் மேலைநாட்டுப் பயண அனுபவங்கள்
தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் ரூ5,000 பரிசு பெற்ற நூல் ---- 50.00
ஒரு பத்திரிகையாளனின் கீழைநாட்டுப் பயண அனுபவங்கள் ----- 65.OO தமிழைத் தேடி ஒரு பயணம் 50.OO (தென் ஆப்பிரிக்கா, கென்யா, மொரிஷியஸ், லீஷெல்ஸ் துபாய் அழைக்கிறது! 21.00 . 25.00 ---------------- uu68OTubلا opé5dupluum5ما نذ5m06۱56fl6 ہUrپوقے لggéfdu பாலைவனக் கனவு (குவைத் பயண வழிகாட்டி ------------------ 35.00 அமெரிக்கத் தமிழரின் பார்வையில் இன்றைய அமெரிக்கா ------- 28.00
சிஷெல்ஸ் நாட்டில் ஒரு தமிழரின் அரை நூற்றாண்டு அனுபவங்கள் 7000
m SisuT - Indiam
2020ல் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் காண்போம் -------------- 75.00 வளர்ந்த நாடுகள் வரிசையில் இந்தியா ------------------------ 45.00 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவைப் படைப்போம் ---------- 40.00 இந்திய நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு வழிகாட்டி -------------- 52.00
mm (59 Ligi - Patriotism தேசிய ஒருமைப்பாட்டில் நமது பங்கு --------------------------- 28.00 நம் தேசியக் கொடி 17.00 நம் தேசிய கீதம் 9.00 8oucS۹ #6ou۵ 55 BJffseir ------------------------------ 25.OO) نأUB,(dB6) { 45.00 ---------------------------- [[JIJoumgه 6Sy آi56fheiلIT6doruلا اo(Bgم காஷ்மீர் பிரச்னை முழு விபரங்களும் தீர்வுக்கான யோசனைகளும் 55.00 இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட இயக்கங்கள் -------------- 40.00 நாடும் நடப்பும் 40.00 வ.உ.சி.யின் முத்தான மொழிகள் 25.00
m 3stgebih - Tamil Nadu um தமிழ்நாடு பற்றிய சுவையான செய்திகள் ------------------------ 52.OO தமிழகத்தின் மண் வளங்கள் 2O.OO தமிழ்நாட்டு விழாக்கள், பாகம்- ----------------------------- 17.00
தமிழகப் பழக்க வழக்கங்களும் அவற்றின் காரணங்களும், பயன்களும் 16.25 தமிழக ஊர்களின் பெயர்க் காரணங்களும் சிறப்புகளும் பாகம்-2- 32.00 காவிரி டெல்டா பகுதிகளை தெரிந்துகொள்ளுங்கள் -------------- 21.00 தமிழர் மரபுகள் 35.00


Page 74


Page 75
Antihōriაწყr: 3 tatëd 蠱 EU ܡܸܛܵ
cό
W. ery
ჯ. ვ. L'' .. "°EP
==:
L1113 SS * リ。
= 1_T":"#15 پہلی = sing thinker and acti.
工* تظالملک للال
playwright" and .............................. .ܧܫ ܢ ܒ ܩ 1 .. .. .. .. .. .. ܒ
| Lankan Jamii:EU