கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவுப் பேருரை பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர்சால்புக் கோலம்

Page 1
நினைவுப் பேரு
 

பல்கலைகழகம்

Page 2

நினைவுப் பேருரை
பேராசிரியர் வித்தியானந்தன்
காட்ரும்
ஈழத்துத் தமிழர்சால்புக் கோலம்
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள்
தமிழ்த்தறைத் தலைவர், யாழ். பல்கலைகழகம்
கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடு

Page 3
Title
Author
PERASIRIYAR S. VITHIANANTHAN KADDUMEELATHU THAMILAR SAALPUKKOLAM
Professor A. Velupillai Head of Tamil Department University of Jaffna.
Published in December 1989
Reprinted in 2001
No of Copies
Price
Published by
1OOO
RS. 75/-
COLOMBO TAMIL SANGAM 7, 57th Lane,
Colombo 6
Tel: 563759
Printed by AJ PRINTS 44, Station Road, Dehiwela.

தோற்றம்
1924. O5.08
மறைவு
1989. O1. 21
யாழ். பல்கலைக்கழக முன்னுள் துணைவேந்தர், உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டுப்பேரறிஞர்,
பேராசிரியர் கலாநிதி க. வித்தியானந்தன்
அவர்கள்

Page 4

முன்னுரை
செ. குணரெத்தினம் தலைவர் கொழும்புத் தமிழ்ச் சங்கம் இராசாங்கச் செயலாளர் மின்சக்தி எரிபொருள் அமைச்சு
பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் எனது ஆசிரியர். நான் 1954 ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற் கற்பதற்குத் தெரிவாகி அங்கு சென்றபொழுது தமிழ் மாணவர்களாகிய எம்மை முதலிற் கண்டு வரவேற்றது கலாநிதி அவர்களே. யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியில், பத்து ஆண்டுகள் படித்ததால் எனக்குத் தமிழிற்பேரார்வம் இருந்தது, யான் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்காது மற்றைய பாடங்களுடன் தமிழை ஒருபாடமாகவே கற்றேன். என்னுடன் கற்ற மற்றொரு உடன் மாணவன் இன்று திறைசேரிச் செயலாளராக விளங்கும் திரு.ஆர்.பாஸ்கரலிங்கமாவார். தமிழை ஒரு பாடமாகப் பயின்றபோதும் தமிழில் அதிகம் ஆர்வம் காட்டியதால் என் போன்றோர் தமிழ் கற்பித்த ஆசிரியர்களுடன் நெருங்கிப் பழகமுடிந்தது. இக்காலத்திலேயே என்னுடன் ஒரே விடுதியில் இருந்துதமிழினைக் கற்றவர்கள் பேராசிரியராக விளங்கிய கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களும் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை அவர்களும் ஆவர்.
யான் 1956/1957/ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகம் வெளியிடும் இளங்கதிர்ச் சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்ததோடு பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கம் நெறிப்படுத்திய பல விழாக்களிலும் பங்கேற்று அரங்கேற்றிய நாடகங்களிலும் பங்குகொண்டமையால் பேராசிரியருடைய தொடர்பு மிகவும் நெருக்கமான தொன்றாக அமைந்தது. ஆசிரியர் என்ற அளவிலல்லாது, தமிழ் சம்பந்தமான எல்லா முயற்சிகளிலும் பேராசிரியர் உள்ளன்போடு பங்குகொண்டு உழைத்து மாணவர்களுக்கு வழிகாட்டினர்.
நான் பல்கலைக்கழகம் சென்றதும் நடந்த விவாதத்தில் ஒரு பக்கத்திற்கு யானும் மறுபக்கத்திற்கு முன்னைய வீரகேசரி பிரதமராசிரியர் க.சிவப்பிரகாசமும் தலைமை தாங்கவைத்து இவ்விவாதத்தினை நடத்தக் காரணராக இருந்தவர் கலாநிதி அவர்களே. அப்போதைய தமிழ்ச் சங்கத் தலைவர் இன்றைய மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. செல்வரத்தினம் என்பவரே. பேராசிரிய ருடைய தனித்தனித் திறமைகள் அநேகம். அவை பற்றி யான் இங்கு எதுவும்
V

Page 5
கூற முயலவில்லை. அவருடைய மாணாக்கராகிய கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை
அவர்களே இந்த சொற்பொழிவையும் நூலையும் ஆக்குவதால் இவற்றை
அவரையே கூற விடுதல்தான் சிறப்பு என்று நினைக்கிறேன். "மலைவாணன்
என்ற புனை பெயரில் பட்ட மகிமை என்று யான் வெளியிட்ட இளங்கதிரில்
கலாநிதி அவர்கள் எழுதிய கட்டுரை இப்பொழுது பல்கலைக்கழகத்தின் சரித்திரத்தில் ஒருபகுதியாகி விட்டது.
சிறந்த தமிழ் ஆசிரியர் என்ற சிறப்பிலும், மாணவர்களிடையே தமிழ் உணர்ச்சியினை வளர்த்த சேவையே அவருடைய தனிச்சிறப்பு என்பேன். அத்தோடு மாணவர்களோடு சினேகபாவமாய்ப் பழகுவதும் இவரின் மற்றொரு சிறப்பு நகைச்சுவையோடு கலந்து பாடம் நடாத்துவதில் கலாநிதி வல்லவர்.
பலகாலமாக எம்மிடையே தொடர்புகொண்டிருந்த அன்பு கடைசி காலத்தில் மிகவும் நெருக்கம் அடைந்தது. அதனாலேயே, பேராசிரியர் கடைசியாகக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் புலவர் சிவங் கருணாலய பாண்டியனார் அவர்களைப் பற்றிச் சிறப்புச்சொற்பொழிவாற்றிய பொழுது அவரை வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இதுவே பேராசிரியர் ஆற்றிய இறுதியான ஆராய்ச்சி உரையாகும். பேராசிரியர் அவர்கள் இவ்வுலகைவிட்டுப் பிரிவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு பிரதேச அபிவிருத்தி, இந்து சமய, தமிழ் அமுலாக்கல். அமைச்சின் செயலாளராக நான் கடமையாற்றியபொழுது என்னை வந்து எனது கந்தோரில் சந்திக்க விரும்பினர். நான் கார் அனுப்பி அவரை வரவழைத்து எனது அமைச்சில் அவரைச் சந்தித்தேன். அப்பொழுது அவர் என்னை வாழ்த்தி நான் இன்னும் பல சிறப்புக்களையும் பெறவேண்டும் என்று தான் விரும்புவதாகவும் தனது மகிழ்ச்சியினையும் கூறினார். இதுவே எமது கடைசிச் சந்திப்பு. அவரது மாணவர்களில் அவரை இறுதியாகச் சந்தித்தது யானே என்று அறியும் பொழுது எனது கண்கள் பனிக்கின்றன.
அவரது பிரிவின் போது மாணவன் என்ற முறையில் இரங்கற்பாவினை எழுதி அவரது இன்னொரு மாணவனாகிய தினகரன் தலைமை ஆசிரியர் இ. சிவகுருநாதனுக்கு அனுப்பியிருந்தேன். அதில் இரு பாடல்கள் வருமாறு:
கண்நிறைந்த தமிழ்உருவாய் நீஅரங்கில் உரைநிகழ்த்தக்
கவின்உறு சேரசோழபாண்டி யரையெம் கண்ணிற்காண்போம்
எண்ணரிய புகழ்ச்சோழன் இராசராசன்
எழில் படைகள் நடத்தி இசை கொள்ளல்காண்போம்
VI

பண்ணினிலே இசைமுழங்கும் தமிழ் நாடகங்கள்
பாங்காக அரங்கேறும் நாட்டோர் மீட்டும்
கண்ணனைய கவின்லைகள் எழுந்துமுரசறையும்
கவின்திருவே வித்தியானந்தனே! உன் காட்சிகானில்,
விண்ணடந்த தமிழ் அறிஞோய் உனைஎதிர்கொண்டு
விளங்குபுகழ் விபுலானந்தன் விரைந்துகொள்வான்
தண்ணளியோய்! இளங்கோவும் கம்பனும்வந்து
தருநிழலில் உனைஏற்று அரவணைப்பர்
கண்மணியாய் உனைஏற்க விரைந்துபேராசான்
கணபதிப்பிள்ளை வந்து உனைக்காதலிப்பார்
எண்ணரிய தமிழ்ப்புல்வோர் அரவணைப்பில்
என்றுமவர் தண்ணிழலில் இனிதேவாழ்தி
அத்தோடு அவர் நினைவாகப் புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற நினைவு அஞ்சலி விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேராசிரியர் அவர்களைப்
பற்றி உரை நிகழ்த்தவும் கிடைத்தது எனது பாக்கியம்.
தவத்திரு சேவியர் தனிநாயகம் அடிகளோடு சேர்ந்து உலகத் தமிழ் மாநாடுகள் பலவும் கண்டதோடு, சரித்திரப் புகழ்வாய்ந்த 4ஆம் உலகத் தமிழ் மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடாத்திப் புகழீட்டியது பேராசிரியரைத் தமிழ் கூறும் நல்லுலகில் தமிழ் இருக்கும் வரையும் மறக்கக் கூடியது அன்று.
இப்பொழுது கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியாகும். பேராசிரியர் அவர்கள் பற்றிப் பேராசிரியர் கலாநிதி ஆவேலுப்பிள்ளை ஆற்றிய சொற்பொழிவின் நூலுருவாய் இவ்வெளியீட்டினுக்கு இந்த முன்னுரையை
வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
வாழ்க பேராசிரியர் கலாநிதி வித்தியானந்தன் நாமம்!
வளர்க அவரது மாணவ பரம்பரை!!

Page 6

பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர் சால்புக் கோலம்
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை,
தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
1. முன்னுரை
பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் சுகவீனம் காரணமாகக் கொழும்பிலுள்ள மருத்துவமனையொன்றிலே அனுமதிக்கப்பட்டுக் காலமானார் என்ற செய்தி 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி வானொலியிலே வெளியாகி, அவர் நேசித்த ஈழத்தைக் கலக்கத் தொடங்கியது.
1924 ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி தெல்லிப்பழையிலே ஒர் உயர் குடும்பத்திலே இரண்டாவது குழந்தையாக, வித்தியானந்தன் பிறந்தார். சைவத்தையும் சைவக் கல்வியையும் பேணுவதிலே வித்தியானந்தனுடைய முன்னோர் அக்கறை செலுத்தி வந்துள்ளனர். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலிலே திருப்பணி செய்தும் ஆடி அமாவாசையின் போது அன்னதானம் செய்வதை மரபாகக் கொண்டும் அமையாத வித்தியானந்தன் முன்னோர் காங்கேசன்துறையிலே இரண்டு கல்வி நிலையங்களைத் தொடக்கிய பெருமையையும் கொண்டிருந்தனர். ஆறுமுகநாவலர் செல்வாக்கு உட்பட்ட சின்னத்தம்பி, வீமன்காமம் தமிழ்ப்பாடசாலையைத் தொடக்கி விட, மகன் சட்டத்தரணி சுப்பிரமணியம், அதை இப்போதுள்ள இடத்திலே காணி விலைக்கு வாங்கி நிறுவினார். சுப்பிரமணியம் தம்முடைய மகன் வித்தியானந்தனை இந்தப் பாடசாலைக்கே முதலில் அனுப்பி வைத்தார். வித்தியானந்தனுடைய குடும்ப உறவினர் ஒருவரே நடேசுவராக் கல்லூரியையும் ஆரம்பித்தார். இன்றைய யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வளாகத்தின் முன்னோடியாகச் சேர்பொன்னம்பலம் இராமநாதனால் நிறுவப்பட்டு பரமேசுவராக் கல்லூரியின் முன்னாள் அதிபர்களுள் ஒருவரான முத்துக்குமாரு எம்.ஏ. வித்தியானந்தனுடைய பெரியதகப்பனாராவார். இந்த முத்துக்குமாரு ஆறுமுகநாவலருடைய அண்ணன் தம்புவினுடைய மகன் கைலாசப்பிள்ளையின் மகளை மணம் முடித்தவராதலால் நாவலர் பரம்பரையுடனும் வித்தியானந்தன் தொடர்பு கொண்டவரெனலாம்.
பேராசிரியர் வித்தியானந்தனுடைய வாழ்வு, இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது. கொழும்பிலிருந்த பல்கலைக்கழகக்

Page 7
கல்லூரிக்கு வித்தியானந்தன் மாணவனாக அனுமதி பெற்றுச் சென்றதும், அது அந்தஸ்து உயரப் பெற்றுப் பல்கலைக்கழகமாக மாறுகிறது; பேராசிரியர், விரிவுரையாளராகப் பலர் புதிய நியமனங்கள் பெறுகின்றனர். உதாரணமாக, கலாநிதி கந்தசுவாமி கணபதிப்பிள்ளை விரிவுரையாளராக இருந்த தமிழ்த்துறையிலே, சுவாமி விபுலானந்தர் பேராசிரியராகவும், திரு வி. செவ்வநாயகம் எம். ஏ. விரிவுரையாளராகவும் நியமனம் பெறுகின்றனர். இம் மூவரும் வித்தியானந்தனுடைய இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆசிரியர்களாவர்.
வித்தியானந்தன் குருபக்தி பற்றிப் பல இடங்களிலே பேசி இருக்கின்றார். திருமூலர் திருமந்திரத்திலே குருபக்திபற்றிவியந்து கூறியதைப் பல இடங்களிலே எடுத்துக் காட்டியிருக்கிறார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையைத் தம்முடைய குருவெனக் கூறியுள்ள இவர், அவரைத் தம்மை ஆளாக்கிய பெருமகனென்றும் கூறுவர். கல்வியிலே முன்னேற விரும்புபவர் குருபக்தியுடையவராக இருக்க வேண்டும் என்பதை வித்தியானந்தன் வலியுறுத்துவர். கற்பவர் மாணவரென்பதும் கற்பிப்பவர் ஆசிரியரென்பதும் பொது வழக்கு. ஆசிரியர் என்பவரும் வித்தியானந்தன் குறிப்பிடும் குரு என்பவரும் ஒருவரா என்ற வினா எழுகின்றது. குரு என்பது வடமொழிச் சொல், குருவிடம் உபதேசம் பெறுபவர் சிஷ்யன் அல்லது சீடர் எனப்படுவர். சைவாகமங்களின் படி, சிவபெருமானே குருவாகின்றார். சாஸ்திரங்களின்படி இறைவன் மானுட வடிவம் எடுத்துக் குருவாகின்றான்.தந்தை, தாய், அரசன், மூத்தோன் என்போரையும் குருவெனக் கொள்ளும் மரபு உண்டு. பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகம் முதலிய ஒவ்வொன்றிலும் ஒரு மாணவருக்குப் பல ஆசிரியர் அமைகின்றனர். ஒரு மாணவர் எல்லா ஆசிரியர்களையும் குரு என்று கொண்டு பக்தி செலுத்த முடியாது. பெரும்பாலான ஆசிரியர்கள் ஊதியத்திற்காகவே ஆசிரியத் தொழில் செய்கின்றனர். ஆசிரியர் சிலருக்கு மாணவர் சிலரோடு ஒத்து வருவதில்லை. கற்குங் காலத்திலே மாணவருடைய ஆளுமை வளர்ச்சியிலும் கற்றபின் மாணவருடைய முன்னேற்றத்திலும் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும்ஆசிரியர் மிகச் சிலரே. அவரே குருவெனத் தக்கவர்.
வித்தியானந்தன், வீமன்காமம் தமிழ்ப்பாடசாலையிலும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும், பரி, யோவான் கல்லூரியிலும், யாழ், இந்துக் கல்லூரியிலும், இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், இலண்டன் பல்கலைக்கழகத்திலும் பல ஆசிரியர்களிடம் கற்றிருந்தபோதிலும், பேராசிரியர் கணபதிப்பிள்ளையை மட்டுமே குருவாகக் கண்டார். வித்தியானந்தனுடைய பல்கலைக்கழக ஆசிரியர்களுள்ளே, சுவாமி விபுலானந்தர் புகழ்மிக்கவர்; நெருக்கமான தொடர்பைப் பாரதநாட்டோடு கொண்டிருந்தார். மட்டக்களப்புக் காரைதீவைப் பிறைப்பிடமாகக் கொண்டு
2

விஞ்ஞானப் பட்டதாரி ஆகி ஆசிரியத் தொழிலை மேற்கொண்டிருந்த இவர், இராமகிருஷ்ண மிசனால் கவரப்பட்டு, அந்த மிசனில் துறவியானார். சமயவழியாலே வட இந்தியாவிலுள்ள கல்கத்தாவுக்கு ஈர்க்கப்பட்டு இமயமலைச் சாரலிலிருந்து 'பிரபுத்த பாரத என்ற பத்திரிகையின் ஆங்கில ஆசிரியராக இவர் கடமையாற்றியவர். மதுரைத் தமிழச் சங்கப் பண்டிதரான இவர், பக்தியிலக்கியங்களிலே ஆர்வம் மிக்கவராக இருந்ததோடு ஆங்கில இலக்கிய அறிவு என்னும் புதிய நோக்குப் பெற்றுத் தமிழ் மொழியிலக்கிய வளர்ச்சியிலே அக்கறை காட்டி வந்தார். தமிழ்ப்பேராசிரியர் பதவி சுவாமி விபுலானந்தரைத் தேடி வந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக வரும்படி, விபுலானந்தர் அழைக்கப்பட்டார்.
தமிழ்கூறும் நல்லுலகிலே, சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமே ஒரே பல்கலைக்கழகமாக அக்காலத்தில் இயங்கியது. அது தென்னிந்தியாவுக்குப் பொதுவாகக் கருதப்பட்டதேயல்லாமல், தமிழ் நாட்டுக்குச் சிறப்பானதாகக் கருதப்படாமையால், தமிழ்த்துறை வலுவுள்ளதாக அங்கே அமைக்கப்படவில்லை. சிதம்பரத்திலே கருதப்படாமையால், தமிழ்த்துறை வலுவுள்ளதாக அங்கே அமைக்கப்படவில்லை. சிதம்பரத்திலே சைவச் சூழலிலே தமிழ் வளர்க்கவென அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கட்டியெழுப்பப்பட்டபோது பல்கலைக்கழகச் சூழலுக்கேற்ற தமிழ்க் கல்வியை ஒழுங்கமைத்து நெறிப்படுத்த விபுலானந்தரே தக்கவரென்ற நிலையிருந்தது. வழக்கறிஞராகப் பயின்று, தமிழ் இலக்கியத்திலே புலமையை வெளிப்படுத்திய தமிழ் நாட்டவர்களான ச. சோமசுந்தரபாரதியார், கா. சுப்பிரமணியபிள்ளை முதலியோர் விபுலானந்தருக்குப்பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசியர் பதவியைத் தொடர்ந்து ஒருவரின் பின் ஒருவராக அலங்கரித்தனர்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே விபுலானந்தரின் அன்புக்குரிய மாணவரானார். கணபதிப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியிலே வடமொழியைச் சிறப்புப் பாடமாகவும், தமிழ் மொழியைத் துணைப் பாடமாகவும் கற்று முதலாம் வகுப்பிலே தேறியவர். அவர் கற்ற காலத்திலே, தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் வாய்ப்பு உலகில் எங்கும் இருக்கவில்லை. பிரான்சிஸ் கிங்ஸ்பரி என்று அழைக்கப்பட்டவரான அழக சுந்தர தேசிகர் (பிரபல பதிப்பாசிரியர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் மகன்) பல்கலைக்கழகக் கல்லூரியிலே, கணபதிப்பிள்ளையின் தமிழாசிரியராக இருந்தார். மேனாடு சென்று டாக்டர் பட்டம் பெறுவதற்கான புலைமப்பரிசில் பெற்ற கணபதிப்பிள்ளை, தமிழ்ப்புலமையை வளர்த்துக் கொள்ள விரும்பியதனால், அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்த்துறையிலே பயின்றுவித்துவான் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

Page 8
கி.பி. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுத்தமிழ்ச் சாசனங்களிலே மொழியாய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்றுநாடு திரும்பிய கணபதிப்பிள்ளை,பல்கலைக்கழகக் கல்லூரியிலே தமிழ் விரிவுரையாளராக 1936 இல் நியமன்ம் பெற்றார். பல்கலைக்கழகக் கல்லூரியிலே தமிழ் விரிவுரையாளராக 1936இல் நியமனம் பெற்றார். பல்கலைக்கழகக் கல்லூரி 1942 இல் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டதும், சுவாமி விபுலானந்தரே முதலாவது தமிழ்ப் பேராசிரியராக அழைக்கப்படுகிறார். 1946 இல் சுவாமி விபுலானந்தர் மறைந்ததும் தமிழப் பேராசிரியரான கணபதிப்பிள்ளை 1965 இல் அப்பதவியிலிருந்து இளைப்பாறினார்.
விபுலானந்தருக்குக் கணபதிப்பிள்ளையும், வித்தியானந்தனும் மாணவராகின்றனர். மாணவர் இருவரும் விபுலானந்தர் மேல் பெருமதிப் புடையவராக இருந்துவந்துள்ளனர். விபுலானந்தரிடம் இரண்டு ஆண்டுகளாகவே அக்காலத்தில் அமையப் பெற்ற சிறப்புக்கலைத் தமிழும் இரண்டாண்டுகள் முதுகலைமாணித் தமிழும் கற்று 1947 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்திலே துணை விரிவுரையாளராக வித்தியானந்தன் நியமனம் பெற்றார். விபுலானந்தரின் மாணவர் என்பதை அவர் பெருமையாகப் பல இடங்களிலே குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் விபுலானந்தரைத் தமது குருவெனப் பொதுவாகக் குறிப்பிட்ட தில்லை. கணபதிப்பிள்ளை பல்கலைக்கழக வாழ்க்கையிலே கால்நூற்றாண்டு காலம் வித்தியானந்தனோடு தொடர்புகொண்டிருந்தார். கணபதிப்பிள்ளையின் செல்லப்பிள்ளை போல் வித்தியானந்தன் விளங்கினார். கணபதிப்பிள்ளை தமிழ்த்துறைத் தலைவராக இருந்த போது, வித்தியானந்தன் தமிழ்த்துறையிலே செல்வாக்கு மிக்கவராக இருந்தார்.
2. வாழ்க்கையில் முக்கியமான கால கட்டங்கள்
வித்தியானந்தனுடைய வாழ்க்கையின் முக்கியமான காலகட்டங்களை இனி நினைவு கூரலாம். இவர் இளமைப்பருவத்திலேயே குடும்பப் பொறுப்பை உணர்ந்து சகிப்புத்தன்மை உள்ளவராக வளர்ந்து வந்தார். இவருக்கு இளையவர்களாக ஒன்ப்து சகோதரர்கள் பிறந்தபின்பு, இவருடைய இருபதாபவது வயதிலேயே தந்தை மறைந்து விட்டார். பன்னிரண்டு ஆண்டுகள் பின்பு தாயும் மறைந்துவிட்டார். தமையன் அம்பிகாபதியோடு சேர்ந்து இவர் குடும்பபாரத்தைச் சுமந்து, கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி வந்தார். 1948 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்துக்கு கீழைத்தேயக் கல்விச்சாலைக்குச் சென்ற இவர், அல்பிரட் மாஸ்ரர் (Alfred Master) என்ற அறிஞரின் மேற்பார்வையிலே தம்முடைய டாக்டர் பட்ட ஆய்வைத் தொடங்கினார். பத்துப் பாட்டுப் பற்றிய ஒரு வரலாற்று சமூக, மொழியியல் guij6). (A Historical, Social and Linguistic Study of Pattupattu) என்ற தலைப்பிலே அவருடைய ஆய்வுக் கட்டுரை அமைந்தது.
4

1950 ஆம் ஆண்டிலே, வித்தியானந்தன் நாடு திரும்பினார். விரிவுரையாளர் என்ற தரத்துக்குப் பதவி உயர்ந்தது. டாக்டர் பட்டத்தைக் கலாநிதி என்று குறிக்கத் தொடங்கி, கலாநிதி சு. வித்தியானந்தன் என்ற பெயரிலே இவர் பிரபலமானார். இலங்கைப் பல்கலைக்கழகத்திலே டாக்டர் பட்டம் பெற்றவர்கள் பலர் இருந்தபோதும், கலாநிதி என்று தனியே குறிப்பிடும் போது, அது இவரையே நீண்ட காலமாகக் குறித்து வந்தது. இப்பொழுது இலங்கையிலே கலாநிதி என்பது டாக்டர் என்ற சொல்லுக்குச் சமமாக விளங்குகிற போதிலும் தமிழ் நாட்டிலே இந்தச் சொல் இந்தப்பொருளில் இன்னும் ஏற்றுக்கொளள்ப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
வித்தியானந்தனுடைய பிரபலமான மாணவர்களுள் த. சண்முக சுந்தரம், ஜனாப் எம். எம். உவைஸ் என்போர், அவர் இலண்டனுக்குப் போகமுன்பே மாணவர்களாகி விட்டார்கள். பொதுக்கலை மாணவராகிய சண்முகசுந்தரம் நாட்டாரியலிலே குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்தவர். தெல்லிப்பழையைச் சேர்ந்த இவர், வித்தியனந்தனுடைய வழி காட்டலிலே பல்கலைக்கழகத்தின தமிழ்ச் சங்க ஆண்டு இதழான இளங்கதிரைத் தொடங்கி வைத்தவர். பாணந்துறையிலிருந்து பல்கலைக்கழகம் புகுந்து சிறப்புத் தமிழ் பயின்ற உவைஸ் இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வுகளிலே சாதனைகளை ஏற்படுத்தி அதன் பயனாக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலே இஸ்லாமியத் தமிழிலக்கியப் பேராசிரியராக விளங்குபவர். இவர்கள் இருவரும் வித்தியானந்தனுடைய நன் மாணவர்களாக விளங்குவதிலே பெருமைப்படுபவர்கள்.
1956 ஆம் ஆண்டு வித்தியானந்தன் மூத்த விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்றார். 1950 - 56 ஆண்டுகளுக்கிடையே வித்தியானந்தனுடைய மாணவர்களாக இருந்த சிலர் பின்பு தமிழ்ப் பேராசிரியர்களாகினர். வித்தியானந்தன் இலண்டனிலிருந்து திரும்பியதும் ஆ. சதாசிவம், கமலாதேவி நாகலிங்கம் ஆகியோர் மாணவராகினர். வித்தியானந்தனிலிருந்து இரண்டு வயது மட்டும் இளையவரான சதாசிவம் மதுரைத் தமிழச் சங்கப் பண்டிதர்ப் பட்டம் பெற்ற பின்பு பல்கலைக்கழகம் புகுந்து சிறப்புத்தமிழ் மாணவராயிருந்தார். சிறப்புத்தமிழிலே முதன் முதலிலே முதலாம் வகுப்பிலே சித்தியடைந்த சதாசிவம் பொதுவாக வித்தியானந்தனுடன் ஒத்துப்போகாதவராகவே செயற்பட்டு வந்தார். வித்தியானந்தனுடைய திருக்கோவையார் விரிவுரையாற் கவரப்பட்டுக் காதலியாக மாறிய கமலாதேவி 1957 ஆம் ஆண்டிலே, வித்தியானந்தனைத் திருமணம் செய்து, அவர் முன்னேற்றத்துக்குதவிய இல்லத்தரசியாக விளங்கினர்.
1952ஆம் ஆண்டு இலங்கைப்பல்கலைக்கழகக் கலைப்பீடம் பேராதனைக்கு மாற்றலாகியது. அவ்வாண்டு பல்கலைக்கழகம் புகுந்தோருள், ச. தனஞ்செயராச
5

Page 9
சிங்கம் சிறப்புத்தமிழ் பயின்று முதலாம் வகுப்பிலே சித்திஎய்தி, 1957 ஆம் ஆண்டு துணை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். 1972 ஆம் ஆண்டு எடின்பரோப் பல்கலைக்கழகத்திலே கலாநிதிப் பட்டம் பெற்ற இவர், 1974ஆம் ஆண்டு வித்தியாலங்கார வளாகத்துத் தமிழ்த்துறைத் தலைவரானார். 1978 இல் மறைந்த இவர், இணைப் பேராசிரியராக இருந்தவர். 1953 இல் பல்கலைக்கழகம் புகுந்தவர்களுள், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி என்போர் சிறந்த நாடக நடிகர்களாக விளங்கி வித்தியானந்தனுடன் மிக நெருக்கமான உறவை வைத்திருந்தவர்கள். சிறப்புத் தமிழ் வகுப்பிலே பயின்று கைலாசபதியே வித்தியானந்தனுடைய அபிமான மாணவராக ஒரு காலத்திலே கருதப்பட்டு, முதலாம் வகுப்பிலே சித்தியடைந்தார். 1961 ஆம் ஆண்டு, கைலாசபதியே வித்தியானந்தனுடைய அபிமான மாணவராக ஒரு காலத்திலேகருதப்பட்டு, முதலாம் வகுப்பிலே சித்தியடைந்தார். 1961 ஆம் ஆண்டு, கைலாசபதியைத் துணைவிரிவுரையாளராகப் பல்கலைக்கழத்திலே சேர்ப்பதிலே வித்தியானந்தன் மிகுந்த அக்கறை காட்டினார். பொதுக்கலை பயின்று மூன்றாவது வகுப்புச் சித்தி பெற்ற சிவத்தம்பி, பேராசிரியர் சிவத்தம்பி ஆக முன்னேறுவதற்கு, வித்தியானந்தன் பல சந்தர்ப்பங்களிலும் தம்முடைய ஆதரவை நல்கியே வந்தார். 1955 ஆம் ஆண்டிலே பல்கலைக்கழகம் புகுந்தோருள், ஆ. வேலுப்பிள்ளை மட்டுமே சிறப்புக் கலைத் தமிழ் பயில முன்வந்தார். தமிழ்ச் சங்க ஏடான இளங்கதிரின் பத்தாவது ஆண்டு மலரை வேலுப்பிள்ளை சிறப்பாக வெளியிட, வித்தியானந்தன் சகல வழிகளிலும் உதவினார். முதலாம் வகுப்பிலே சித்தியடைந்த வேலுப்பிள்ளை 1959 ஆம் ஆண்டு துணைவிரிவுரையாளரானர்.
1967 ஆம் ஆண்டு வித்தியானந்தன் ஆராய்ச்சித் துறைத் தலைவராக (Reader) பதவி உயர்வுபெற்றார். இப்போதுள்ள இணைப்பேராசிரியர் பதவிக்குச் சமமான பதவி அது. 1956-1967 ஆண்டுகளுக்கிடையிலே வித்தியானந்தனுடைய மாணவர்களாக வந்த மூவர் இன்று இணைப்பேராசிரியர்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களிலே கடமையாற்றுகின்றனர். 1957 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் புகுந்தவர்களுள்ளே சி. தில்லைநாதனும் பொ. பூலோகசிங்கமும் சிறப்புத் தமிழ் பயின்று முதலாம் வகுப்பிலே சித்தியெய்தி இன்று பேராதனைப் பல்கலைக்கழகத்திலே கடமையாற்றுகின்றனர். தில்லைநாதன் தமிழ்த்துறைத் தலைவராக உள்ளார். 1959 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் புகுந்து சிறப்புத் தமிழ் பயின்றவர்களுள்ளே தமிழ்ச் சங்கத்தல்ைவராக இருந்தவரும் முதலாம் வகுப்பிலே தேறியவருமான அ. சண்முகதாஸ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே இணைப்பேராசிரியர் ஆவார். தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலே இசைத்துறை இணைப்பேராசிரியராக திருமதி ஞானா குலேந்திரனும், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகக் கல்வித்துறைத் தலைவர் வ. ஆறுமுகமும் இவரிடம் சிறப்புத் தமிழ் பயின்றவர்களென்பது இங்கு குறிப்பிட வேண்டும்.
6

வித்தியானந்தன் 1970 ஆம் ஆண்டு பேராசிரியராக நியமனம் பெற்று 1977 ஆம் ஆண்டு வரை பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தமிழ்த்துறைத் தலைவராகக் கடமையாற்றினார். 1965 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் புகுந்து சிறப்புத் தமிழப் பயின்றவர்களுள்ளே இ. பாலசுந்தரம் முதலாம் வகுப்பிலும் நா. சுப்பிரமணியம் இரண்டாம் வகுப்பு மேற்பிரிவிலும் சித்தியெய்தி இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே மூத்த விரிவுரையாளர்களாக உள்ளனர். 1967ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் புகுந்து சிறப்புத் தமிழ் பயின்றவர்களுள் திருமதி ச. வாமதேவா முதலாம் வகுப்பிலே சித்தியெய்தி இந்து நாகரிகத்துறை மூத்த விரிவுரையாள ராகவும், க. அருணாசலம் இரண்டாம் வகுப்பு மேற்பிரிவிலே சித்தியெய்திப் பேராதனையில் மூத்த விரிவுரையாளராகவும் உள்ளனர். 1970 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் புகுந்து சிறப்புத் தமிழ் பயனற்றவர்களுள்ளே து. மனோகரன் இரண்டாம் வகுப்பு மேற் பிரிவிலே சித்தியெய்திப் பேராதனையிலே விரிவுரையாளராக உள்ளார்.
திறமையடிப்படையிலேயே, பல்கலைக்கழக விரிவுரையாளர் எவரும் பேராசிரியராக வர இப்போது வாய்ப்புண்டு. மிக அண்மைக்காலம் வரையிலே, ஒரு துறைக்கு ஒரு பேராசிரியரே நியமனமாகலாம். ஒருவர் ஒரு துறையிலே பேராசிரியராக இருந்தால், அவர் இளைப்பாறும் வரை அல்லது இறக்கும் வரை, இன்னொருவர் எத்தகைய திறமை உடையவராக இருந்தாலும் பேராசிரியராக முடியாது. துணை விரிவுரையாளராக நியமனம் பெறுபவர் உயர் பட்டம் பெற்று விரிவுரையாளராகி, காலக்கெடுவின்படி, மூத்த விரிவுரையாளராகலாம். திறமையடிப்படையடையிலே நீண்ட கால சேவைக்குப்பின், ஒருவர் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பதவி உயர்வு பெறலாம். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவி வரலாற்றிலே, 1965 ஆம் ஆண்டிலேயே முதன் முதலிலே போட்டியேற்பட்டது. கணபதிப்பிள்ளை 19 ஆண்டுக் பேராசிரியராக இருந்து இளைப் பாபாறினார். பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவிக்கான கல்வித்தகைமைகள் யாவும் வாய்க்கப் பெற்று, 19 ஆண்டுகள் பல்கலைக்கழக ஆசிரிய சேவை அனுபவம் உடைய வித்தியானந்தன் பதவிக்குப் போட்டியிட்டார். சுமார் 23 ஆண்டுகள் பல்கலைக்கழக ஆசிரிய சேவை அனுபவமுடையவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் எம். ஏ. பட்டதாரியுமான செல்வநாயகம் பதவிக்கு விண்ணப்பித்தார். மேற்படி இருவருக்கும் மாணவராக இருந்தவரும் 13 ஆண்டுகள் பல்கலைக்கழக ஆசிரிய சேவை அனுபவமுடையவருமான கலாநிதி சதாசிவம் மூன்றாவது விண்ணப்பதாரி. இவ்வாறு முக்கோணப்போட்டி ஏற்பட்டது.
செல்வநாயகம் பேராசிரியராகத் தெரிவு செய்யப்பட்ட போது, அவருக்கு வயது 58. அவர் ஐந்து ஆண்டுகள் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து 1970 ஆம் ஆண்டு இளைப்பாறினார். 1968 ஆம் ஆண்டுகொழும்பிலே தனிப்பல்கலைக்கழகம்
7

Page 10
உருவாகியது. அடுத்த ஆண்டு அப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவி விளம்பரப்படுத்தப்பட்டது. கலாநிதி சதாசிவமும், உவைஸ், எம்.ஏ.யும் போட்டியிட்டனர். சதாசிவம் பேராசியராகத் தெரிவு செய்யப்பட்டார். முன்பு நிகழ்ந்த முக்கோணப் போட்டியால் ஏற்பட்ட கசப்புணர்வு தொடர்ந்தது. வித்தியானந்தன் போட்டியின்றித் தெரிவாவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த வேளையிலே, திரும்புவும் முக்கோணப் போட்டி ஏற்பட்டது. இன்னொரு பல்கலைக்கழகத்திலே தமிழ்ப்பேராசிரியர் பதவி பெற்றுவிட்ட சதாசிவம் ஏன் விண்ணப்பிக்கிறார் என்ற வினாவை அக்காலத்திலே பலர் எழுப்பினர். வித்தியானந்தன் பேராசிரியர் ஆவதைப் பேராசிரியர் செல்வநாயகம் எதிர்த்து வந்தமை, பத்தாண்டுகள் பல்கலைக்கழக ஆசிரிய சேவை அனுபவம் கூட நிரம்பப் பெறாத கலாநிதி கைலாசபதியைத் தம்முடைய அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்துப் பார்க்கத் தூண்டியது. கைலாசபதி, வித்தியானந்தனுடன் போட்டியிடுகின்றாரா என்று அக்காலத்திலே மூக்கின்மேல் விரலை வைத்தவர் பலர். தமிழ்த் துறையிலே வித்தியானந்தனுடைய செல்வாக்கு மிகக் குறைவாகக் காணப்பட்ட காலமென 1965 - 70 ஆண்டுக்காலப் பிரிவைக் கூறலாம்.
வித்தியானந்தனுடைய வாழ்க்கை வரலாற்றிலே 1974 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாகும். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் 1972 ஆம் ஆண்டு இலங்கையிலே நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த முடிவு செய்தது. அம்மன்றத்தின் இலங்கைக்கிளையால் மாநாட்டை நடத்த முடியாமல் எத்தனையோ இடையூறுகள் ஏற்பட்டன 1973 ஆம் ஆண்டு பிற்காலத்திலே வித்தியானந்தன் இலங்கைக் கிளையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். மாநாட்டை 1974ஆம் ஆண்டு ஜனவரியின் நடத்துவது, அதை யாழ்ப்பாணத் திலேயே நடத்துவது என்ற இலங்கைக் கிளையின் முடிவுகளுக்குப் பேராசிரியர் வித்தியானந்தன் செயல்வடிவம் கொடுத்த விதம் அவருடைய புகழை மிகமிக உயர்த்திற்று.
இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசைப் பகைத்து விட்ட வித்தியானந்தனுக்குப் பல தொல்லைகள் வந்து சேர்ந்தன. அந்த அரசின் ஆதரவாளர்களாகவும் பிரசாரகர்களாகவுமிருந்த முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்த சில தமிழ் விரிவுரையாளர்கள் வெகுவேகமாகப் பதவி உயர்வுகள் பெற்றார்கள். 1974 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் தொடங்கப்பட்டபோது, கைலாசபதியே முதலாவது வளாகத் தலைவரான சூழ்நிலை இதுதான். 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்று அரசாங்கம் மாறியதும், யாழ்ப்பாண வளாகத் தலைவராக வரும்படி வித்தியானந்தன் அழைக்கப்ட்டார். 1979 ஆம் ஆண்டு யாழ்ப்பாண வளாகம் முழுநிலைப் பல்கலைக்கழகமாக மாறியது. வித்தியானந்தன் முதலாவது துணை வேந்தராக
8

நியமிக்கப்பட்டார். தமிழர் சிலர் சிறுகாலப் பிரிவுகளுக்கு தற்காலிகமாகத் துணைவேந்தர்களாகக் கடமையாற்றியிருந்த போதிலும், துணை வேந்தரென முழுநிலை நியமனம் பெற்ற முதல் இலங்கைத் தமிழர் வித்தியானந்தனே.
1979ஆம் ஆண்டு வித்தியானந்தனுக்கு ஒரு பேரிடியையும் கொடுத்து விட்டது. சுமார் 22 ஆண்டுகள் வித்தியானந்தன் குடும்பம், இலட்சியத்தம்பதிகள் என்று பிறர் கூறத்தக்க அளவுக்கு வித்தியானந்தனை உயர்த்தி வைத்திருந்த கமலாதேவி ஐந்து பிள்ளைகளையும் வித்தியானந்தன் பொறுப்பில் விட்டு விட்டுத் திடீரென மறைந்து விட்டார். வித்தியானந்தனால் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியுமா என்ற ஐயம் பலருக்கு ஏற்பட்டது. வித்தியானந்தன் தம்மைத் தேற்றிக் கொண்டு, பொறுப்புகள் வகிக்கச் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்ட தம்முடைய அனுபவத்தைப் பயன்படுத்தி, மீளவும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சிறப்பாக நிர்வகித்து வந்தார்.
துணை வேந்தர் பதவி மும்மூன்று ஆண்டுகளுக்கே இப்போதைய பல்கலைக்கழகச் சட்டவாக்கத்தின்படி வழங்கப்பட்டு வருகின்றது. 1981ஆம் ஆண்டு இறுதியிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவித் தேர்வு நடைபெற்றது. வித்தியானந்தனோடு அக்கால விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் தருமரத்தினம் போட்டியிட்டார். வித்தியானந்தன் தெரிவு செய்யப்பட்டார். வித்தியனந்தன் அறுபதாண்டு வாழ்க்கையை நிறைவு செய்த வகையில், அவருடைய மணிவிழா 1984 ஆம் ஆண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு - கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கொழும்பிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றதால் இலங்கையில் வேறெவருக்கும் மணிவிழா இதுவரையில் இத்தனை சிறப்பாக எடுக்கப்படவில்லை என்று கூறத்தக்கவகையில், நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்னும் பல கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டும், சீரற்றிருந்த நாட்டுநிலைமை காரணமாகக் கைவிடப்பட்டன.
அக்காலவாக்கில் ஏற்பட்ட பல்கலைக்கழகத்திருத்தச் சட்டத்தின்படி, யாழ்ப்பாணப் பல்கலைகழகப் பேரவை, துணைவேந்தர்ப் பதவிக்கு மூவரைச் சிபார்சு செய்ய, ஜனாதிபதி அவர்களுள்ளிருந்து ஒருவரை நியமிப்பார். 1985இல் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகப் பேரவை வித்தியானந்தனோடு, மருத்துவபீடாதிபதி பேராசிரியர் சிவஞானசுந்தரத்தையும் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் குணரத்தினத்தையும் சிபாரிசு செய்தது. வித்தியானந்தன் நியமனம் பெற்றார் 1988 இல் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. பல்கலைக்கழகப் பேரவை வித்தியானந்தனையும் சிவஞானசுந்தரத்தையும் பேராசிரியர் துரைராசாவையும் சிபாரிசு செய்தது. ஜனாதிபதி, வித்தியானந்தனை நியமித்தார்.அவர்
9

Page 11
துணைவேந்தராகத் தொடர்ந்து பணியாற்றத்தக்க சூழ்நிலை யாழ்ப்பாணத்தில் நிலவவில்லை. விடுமுறை பெற்று வெளிநாடு சென்ற வித்தியானந்தன் அங்கிருந்தபடியே துணைவேந்தர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். நாடு திரும்பிய வித்தியானந்தன் கொழும்பில் வாழ்ந்து வந்தார்.
கனடாவிலே மூத்தமகன் அருள்நம்பி இல்லறம் நடத்துவதைக் கண்டு வந்த வித்தியானந்தன் கொழும்பிலே மூத்தமகள் மகிழ்நங்கைக்கும் சிறப்பாகத் திருமணம் நடத்தி வைத்தார். ஏனைய பிள்ளைகளான அன்புச் செல்வி, இன்பச் செல்வன், சிவமைந்தன் ஆகியோரின் எதிர்காலம் சிறப்பாக அமையத்தக்க ஒழுங்குகளையும் இவர் செய்திருந்தார்.
3. ஆளுமை நிறைவு
வித்தியானந்தனுடைய ஆளுமை 1954ஆம் ஆண்டளவிலே முழுச் செம்மையடைந்து விட்டதென்பது எமது கருத்து. 1953 ஆம் ஆண்டு அவருடைய முதல் நூலாகிய இலக்கியத்தென்றலும் 1954ஆம் ஆண்டு இரண்டாவதுநூலான தமிழர் சால்பும் வெளிவந்தன. முதலாவது நூல், இலக்கிய வரலாற்றின் சில கூறுகள் தொடர்பாகப் பேராசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுதி. இது பல்கலைக்கழக மாணவர்களின் பெருவரவேற்புக்குரியதாக இருந்தது. தமிழர் சால்பு மிகச் சிறந்த ஆய்வு நூல். சிறப்புக்கலை மாணவர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் மட்டுமே இந்த நூலைத் தேடிப் பயின்றனர். இந்த நூல் வித்தியானந்தன் கலாநிதிப் பட்டத்துக்குச் சமர்ப்பித்த AHistorical, Social and Linguistic Study of Pattuppattu' (uggji UIT (6.) Upful 6JT6) Tig), Jepg, மொழியியல் ஆய்வு) என்ற ஆய்வேட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட்து. எனவே, இவருடைய தமிழர்சால்பு ஆராய்ச்சி 1948ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டதெனலாம். இவருடைய ஆராய்ச்சிக்கான தலைப்பை இவர் எப்பொழுது, எப்படித் தெரிந்தெடுத்தார் என்ற வினா எழுகிறது. சுவாமி விபுலானந்தரைப் பின்பற்றி, இவர் சமயத் தமிழுக்கு ஈர்க்கப்படவில்லையென்பது அவதானிக்கத்தக்கது. சமகால திராவிட இயக்கச் சிந்தனைகளாலேயே இவர் கவரப்பட்டிருந்தாரென்பதற்கு, தமிழர் சால் பிலே அகச் சான்றுகள் காணப்படுகின்றன. .
மேனாட்டுப்பல்லைக்கழகங்களிலே ஆராய்ச்சி நுணுக்கங்களைப் பயின்று உயர் பட்டங்கள் பெற்று மாணவர்களை வழி நடத்தும் வாய்ப்பு, தமிழ் கூறும் நல்லுலகிலுள்ள பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளிலே இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்துறைக்குமட்டும் கிடைத்திருந்தது. அண்மைக் காலத்திலே மொழியில் துறையில் மட்டும் மேனாடுகளில் பயிற்சியும் பட்டமும் பெற்ற தமிழ்
O

நாட்டுத்தமிழ் அறிஞர் சிலர் உளர். பேராசிரியர் கணபதிப்பிள்ளையே மேனாட்டிலே பயிற்சிபெற்றுக் கலாநிதிப்பட்டம் பெற்ற முதல் தமிழ்த்துறை அறிஞர். அத்தகைய இரண்டாவது அறிஞர் வித்தியானந்தனாவார். வித்தியானந்தனுடைய ஆளுமையிலே அவர் இலண்டனிலே செய்த ஆராய்ச்சி ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆய்வேட்டைத் தமிழ் நூலாக விரிவுபடுத்தியபோதுமொழியியல் கூற்றினை வித்தியானந்தன் விலக்கிவிட்டார். வித்தியானந்தன் எழுதிய "ஈழமும் தமிழ் இலக்கணமும்’ என்னும் கட்டுரை கலைப்பூங்கா (1961) வில் வெளியாகிப் பின்பு தமிழியற் சிந்தனை (1979)யிலே தொகுக் கப்பட்டுள்ளது. இதுதவிர, வித்தியானந்தன் இலக்கணம் சம்பந்தமாகவோ, மொழியியல் சம்பந்தமாகவோ 1954 இன் பின் எதுவுமே எழுதவில்லை. ஆனால் இலக்கணம் கற்பிப்பதிலே அவர் பேரீடுபாடு காட்டி வந்தார். தமிழ்த்துறையிலே வித்தியானந்தனுடைய கூட்டாளிகளாக இருந்தவர்களுட் பலர் மொழியியலிலே பயிற்சியும் உயர் பட்டங்களும் பெற்றவர்கள், எனினும், நன்னூலை மாணவர்கள் மனங்கொள்ளத்தக்க வகையிலே கற்பிப்பவர் வித்தியானந்தனே என்ற புகழ் அவருக்குநிலைத்திருந்தது. சூத்திரக் கருத்துக்களை தொகுத்தும் வகுத்தும் ஒழுங்குபடுத்தி, காலத்துக் கேற்றனவும் மாணவர்கள் மனதிலே பதியத்தக்கனவுமான எடுத்துக் காட்டுகளை அமைத்து, தெளிவுறுத்துவதற்குத் தேவையான இடங்களிலே ஆங்கில நெடுங்கணக்கிலே தமிழ்ச் சொற்களை வரைந்து, அவர் நன்னூலைக் கற்பித்து வந்தார். தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம் அவர் சிறப்புக்கலைத் தமிழ் மாணவர்களுக்கு விரும்பிக் கற்பிக்கும் பாடமாகும்.
பத்துப்பாட்டை வரலாற்றுமுறையில் ஆராய்ந்த வித்தியானந்தன் வரலாற்று நோக்குக் கைவரப் பெற்றவரானார். தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் உரைநடை வரலாறு என்னும் நூல்களை எழுதிச் செல்வநாயகம் புகழ் பெற்றவராக இருந்தபோதும், வித்தியானந்தனும் இடையிடை இலக்கிய வரலாறு கற்பித்து வந்தார். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, இலங்கைப் பல்கலைக்கழகத்துறையிலே இலக்கிய வரலாற்றுப்பாடத்திட்டம் மிகவும் விரிவான பாடநெறியாக இருந்தது. செல்வநாயகத்தின் இலக்கிய வரலாற்றிலே போதிய அளவு முக்கியத்துவம் பெறாத கூறுகளான தமிழ் இலக்கண நூல்கள், இஸ்லாமியர் தமிழ் தொண்டு, ஈழநாட்டுப் பெரியார் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை முதலியன இவருடைய இலக்கியத் தென்றலிலே விரிவாகக் கூறப்பட்டுள்ளமையினால், முன்னதற்கு ஒரு துணை நூலாகப் பின்னதைக் கூறலாம். இலக்கிய வரலாறு தொடர்பான கட்டுரைகளைப் பேராசிரியர் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர் சஞ்சிகைகளிலே எழுதி வந்துள்ளார். v.

Page 12
வித்தியனந்தன் தம்முடைய ஆய்வேட்டிலே பயன்படுத்திய வரலாற்று நோக்கும் சமூக நோக்கும் இணைந்து, அவரை ஒரு பண்பாட்டு வரலாற்றாய் வாளராக மாற்றிவிட்டன. பத்துப்பாட்டிலே திருமுருகாற்றுப்படையைக் காலத்தாற் பிந்தியதென்ற முறையிலே விலக்கி, அதே காரணத்தால் எட்டுத்தொகையுள்ளும் கலித்தொகை,பரிபாடல் என்பனவற்றை விலக்கி, சங்க காலத்துக்குரியனவென நிச்சயிக்கப்பட்ட பிற சான்றாதாரங்களை இணைத்து, வித்தியானந்தன் உருவாக்கிய நூலே தமிழர் சால்பு ஆகும். சால்பு என்ற பெயரிலே கூட தனிச்சிறப்பு உண்டு. வித்தியானந்தன் பண்பாடு என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஆங்கிலத்திலே Culture என்பதற்கு மாற்றீடாக உருவாக்கப்பட்ட வார்த்தை "பண்பாடு ஆகும். வித்தியானந்தன் ஆய்வு செய்த காலத்திலே தமிழ்ப்பண்பாடு என்றால் சைவப்பண்பாடு அல்லது இந்துப் பண்பாடு என்ற குறுகிய பொருளும் வழங்கியது. வித்தியானந்தன் கண்டு கொண்ட சங்க காலத் தமிழர் பண்பாடு இக்குறுகிய வட்டத்தைக் கடந்ததென வித்தியானந்தன் கருதினார். சங்ககாலத் தமிழிலே வழங்கிய சான்றோர் என்ற சொல் வித்தியானந்தனைக் கவர்ந்திருக்கிறது. சால்பு உடையவரே சான்றோராவார். சங்கச் சான்றோர் என்று மட்டுமல்லாது பிற்சான்றோர் என்ற வழக்கம் உரையாசிரியர்களாலே பயன்படுத்தப்பட்டு வந்தது. எனவே சால்பு என்ற வார்த்தையை இவர் வழக்கிற்குக் கொண்டு வந்தார். தமிழர்களுக்குச் சிறப்பாக உரிய சால்பு சங்ககாலச் சால்பே என்ற கோட்பாட்டையுடைய இவர் நூலுக்குத்தமிழர் சால்பு என்றுபெயரிட்டார். தமிழர் சால்பு, பொருட்செலவைக் குறைப்பதற்காக, தமிழ் நாட்டிலே கும்பகோணத்திலே அச்சாகியபோதிலும், இலங்கையிலே வெளியிடப்பட்டது. தமிழ் நாட்டு வரலாற்றுப் பேராசிரியர்களான கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, ரி. வி. மகாலிங்கம், ஆர். சத்தியநாதையர் முதலியோரும் தமிழ்த்துறை அறிஞர்களுள் பேராசிரியர் எஸ் வையாபுரிப் பிள்ளையும் மட்டுமே வித்தியானந்தனைப் பாராட்டினர். 1971 ஆம் ஆண்டு தமிழர் சார்பின் இரண்டாவது பதிப்பு சென்னையிலேயே வெளியாகியது.தமிழ்நாட்டுத்தமிழ் அறிஞர்கள் அதன்பின்பே வித்தியானந்தனுடைய பெருமையை உணரத் தொடங்கினர். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, தமிழர் பண்பாடு என்ற கட்டுரைத் தொகுதி மூன்றாம் பதிப்பு (1955) முன்னுரையிலே வித்தியானந்தனுடைய நூலை வியந்து கூறுவது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பண்பாட்டு வரலாற்றுக்கு, இந்து வெளிப்பண்பாடு இக்காலத்திலே திராவிடருக்கு உரியதாகவும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்ததுவாகவும் இருத்தலினாலே, முன்னுரையாக அமைகிறது. தமிழர் சால்பே முதலாம் அத்தியாயமாக அமைகிறதெனலாம். இது போன்ற இன்னொரு சிறந்த நூல் சங்ககாலத் தமிழர் பண்பாட்டை விளக்குவதற்குத் தமிழ் நாட்டிலே தோன்றவில்லை. வித்தியானந்தனுட்ைய 30 ஆவது வயதில் வெளிவந்த இந்த
12

ஒரு நூலே தமிழியல் ஆய்விலே, அவருக்கு ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுத்தரவல்லது விவரண முறையில் அமைந்துள்ள வித்தியானந்தனுடைய நூலை அடித்தளமாகக் கொண்டு வியாக்கியான முறையிலே ஆய்வுகள் செய்த கைலாசபதியும் சிவத்தம்பியும் பின்பு பிரபலமாகினார்.
4. ஆசிரியர் (Teacher)
வித்தியானந்தன் சிறந்த போதனாசிரியர்களுள் ஒருவரெனக் கொள்ளப்படுகிறார். பட்டதாரி மாணவர்களின் மனங்கவர்ந்த போதனாசிரி யர்களுள் அவர் ஒருவர். தமிழை ஒரு பாடமாகப் பலைக்கலைக்கழகத்திலே பயிலாத மாணவர் சிலர் அவருடைய பெரிய பொதுக்கலை வகுப்புக்களுக்கு விரும்பிச் செல்வதுண்டு. நன்னூலை விரும்பிக் கற்பித்த வித்தியானந்தன் அந்நூலிலே நல்லாசிரியர் இலக்கணமாகக் கூறப்படும் பின்வரும் பகுதியை மற்ந்ததில்லை.
"உரைக்கப்படும் பொருள் உள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொள”
மாணவரைப் பயிற்றி வந்தவர் இவர். நகைச்சுவையும் சிருங்காரரசமும் ஒரோவிடத்து இவருடைய விரிவுரைகளிலே இழையோடும். பண்டைக்கால, இடைக்கால இலக்கிய இலக்கணங்களிலுள்ள கடினமான பகுதிகளை இக்கால மாணவர் மனங்கொள்ளத்தக்க வகையில் விளக்க வித்தியானந்தன் கையாளும் உத்திகள் அவருடைய தெளிந்த அறிவையும் கருத்துகளை வெளியிடும் ஆற்றலையும் மட்டுமல்லாது உலகியலறிவையுங் காட்டுவதாகும்.
மாணவர்களுக்குக் கற்பித்தலிலே வித்தியானந்தனுக்குள்ள பேரார்வம் அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே துணை வேந்தராக இருந்த போது வெளிப்பட்டது. பொதுவாக, இலங்கைப் பல்கலைக்கழகங்களிலே, அவ்வப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் ஒருவரே துணை வேந்தராகப் பணியாற்று கின்றனர். துணை வேந்தராகக் கடமையாற்றும் பேராசிரியர், தம்முடைய பதவிக் காலம் முடியும் வரையிலே, பட்டதாரி மாணவர்களுக்குப் போதனாசிரியராக இருப்பதிலிருந்து விலகியிருப்பதே பொது இயல்பு. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவுமிருந்த வித்தியானந்தனே முதலிலே வளாகத் தலைவராகவும் பின்பு துணை வேந்தராகவும் யாழ்ப்பாணத்திலே நியமனம் பெற்றார். துணை வேந்தர்பதவியைவிட்டுவிலகியபின்பு, 1988ஆம் ஆண்டிலேயே இவர், யாழ்ப்பாணப்
13

Page 13
பல்கலைக்கழகத் தமிழ்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே, இவர் துணை வேந்தராக இருந்த காலத்திலே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலே இவருக்கு சிறப்பான கடப்பாடு எதுவும் இருக்கவில்லை. மேலும் அப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, உயர்பட்டங்களைப் பெற்ற பல மூத்தோர்களைக் கொண்டிருந்ததனால், துறையின் தேவை கருதி, வித்தியானந்தன் போதனாசிரியராக வந்து சேர்ந்தார் என்று கூற முடியாது. 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து, அவர் தம்முடைய சுயவிருப்பத்தின் பேரிலே, பொதுக்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு இலக்கிய வரலாறும் சிறப்புக்கலை மாணவர்களுக்குத் திருக்கோவையாரும் தொல்காப்பியம், சொல்லதிகாரம் சேனாவரையமும் கற்பித்து வந்தார்.
‘மாணவர்களும் மாணவர் தேவைகளும் எப்பொழுதும் வித்தியானந் தனுடைய உள்ளத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்து வந்துள்ளன. வித்தியானந்தனுடைய முதல் நூலான இலக்கியத்தென்றல், மாணவர்களை மனதிலிருத்தி எழுதப்பட்ட மாணவர் சஞ்சிகைகளிலே வெளியான கட்டுரைகளின் தொகுப்பேயாகும். இவர் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளைப் பல்கலைக்கழக மாணவர் சஞ்சிகைகளிலும், பிற மாணவர் சஞ்சிகைகளிலும், தினசரிப்பத்திரிகைகளிலும், வார வெளியீடுகளிலும் வெளியிட்டுள்ளார். இவற்றின் வடிவத்திலே சில மாற்றங்களைச் செய்து சிறந்த சஞ்சிகைகளிலே வெளியிட்டிருந்தால், இவற்றுட் சில, சிறந்த ஆய்வுக் கட்டுரைகளென்ற கணிப்பைப் பெற்றிருக்கும்.
S. gby (rufiji fur Giri (Researcher)
பல்கலைக்கழகப் போதனாசிரியர், ஆராய்ச்சியாளராக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறார். போதனாசிரியர் ஒவ்வொருவரும் பட்டப்பின்படிப்பு ஆய்வு நிகழ்த்தி, ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற பின்பே, போதனாசிரியர் தொழில் நிரந்தரமாகிறது. ஆதாரமான இந்தப்பட்டத்தைக்கூடப் பெறமுடியாமல், போதனாசிரியர் சிலர் சிரமமப்படுவது உண்டு. வித்தியானந்தன் 26ஆம் வயதிலேயே இந்தக் கலாநிதிப்பட்டத்தைப் பெற்றுவிட்டார். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுள் வேலுப்பிள்ளை, பூலோகசிங்கம் முதலிய இரண்டொருவர் தவிர, ஏனையோர் தங்களுடைய முப்பதுகளிலேயே கலாநிதிப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனரென்பது இவ்விடத்து ஒப்புநோக்கத்தக்கது. பேராசிரியர் பதவிக்கு வித்தியானந்தனோடு போட்டியிட்ட 'கலாநிதிகளும் தங்களுடைய முப்பதுகளிலே அப்பட்டங்களைப் பெற்றோரேயாவர்.
'தமிழர் சால்பு வெளிவந்தபின், வித்தியானந்தனுடைய கவனம் இலங்கைத்
14

தமிழ் இலக்கியத்தை நோக்கித் திரும்புகிறது. வரலாற்று நோக்கிலும் சமூக நோக்கிலும் தோய்ந்திருந்த இவர், அரசியல் ஈடுபாடும் சமூக உறவும் கொண்டவராக உருவாகினார். தமிழ்நாட்டுத் திராவிட இயக்கத்தால் முன்பே கவரப்பட்டிருந்த இவர், இந்த நூற்றாண்டின் ஐம்பதுகளிலும் அறுபதிகளிலும் தீவிர தமிழ் உணர்ச்சி உள்ளவராகக் காணப்படுகிறார். ஈழத்தமிழர் தேசியம் வளர்ந்த காலம் அது. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இனப்பிரச்சினை கூர்மை பெற்று வந்திருக்கிறது. பொதுவாகச் சிங்களவர் களுக்கும் சிறப்பாகச் சிங்கள பெளத்தர்களுக்கும் இந்த நாட்டிலே முதன்மை வழங்கப்பட வேண்டுமென்ற இயக்கம் தெற்கிலே தீவிரமடைந்து அரசின் கொள்கையாக அங்கீகாரம் பெறுகிறது. தமிழர் பிரதேசங்களிலே, சிறப்பாகக் கிழக்கு மாகாணத்திலே திட்டமிட்ட சிங்களவர் குடியேற்றம் நடைபெறுகிறது. மொழிப் பிரச்சினை சூடுபிடித்து, சிங்களம் மட்டுமே அரசகருமமொழி என்ற இச்சட்டம் நிறைவேற்றப்பட,பதற்றம் தொடர்கிறது. பதற்றத்தைத் தணிப்பதற்காக, பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தோடு பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். ஜே. ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலே, ஐக்கிய தேசியக் கட்சி கொடுத்த நெருக்கடி காரணமாக, பண்டாரநாயக்கா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிகிறார். நாடு முழுவதும் சிங்களவர்-தமிழர் இனக்கலவரம் நடக்கிறது.
1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேர்தலிலே சிறுபான்மை அரசாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ. தே. க. ஆட்சி, சுதந்திரக் கட்சி, தமிழரசுக் கட்சி கூட்டினால் தோற்கடிக்கப்பட்டு ஜூலை மாதம் மற்றொரு பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. சுதந்திரக் கட்சி சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு மறுத்துவிட்ட நிலையிலே, தமிழர் 1961ஆம் ஆண்டு சக்தியாக்கிரகப் போராட்டத்தைத் தமிழர் பிரதேசங்களிலே தொடங்குகின்றனர். யாழ்ப்பாணக் கச்சேரி வாசலிலே நடந்த மறியல் போராட்டம் பிரசித்தமானது. வித்தியானந்தனும் இந்த மறியல் போராட்டத்திலே கலந்து கொண்டார். இதற்கு முன்பும், பின்பும் தமிழரசுக் கட்சி மாநாடுகளிலே பங்குபற்றிய வித்தியானந்தன் பல பொது மேடைகளிலே தமிழ் உணர்ச்சி மிக்க உரைகளை ஆற்றினார். தமிழர் தேசியத்தின் ஊதுகுழலாக அக்காலத்திலே தினசரியாக இருந்த சுதந்திரன் பத்திரிகை விளங்கியது. இவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களும் அக்கால சுதந்திரன் பத்திரிகையிலே வெளியாகின. தமிழர் சார்பிலே நான்காம் இயலாக இடம்பெற்ற "போரும் போர் முறைகளும்' என்ற பகுதியும் சிலப்பதிகாரமும் வஞ்சிக் காண்டத்திலே வெளிப்படும் செங்குட்டுவன் வீரமும் வித்தியானந்தனுடைய இரத்தத்திலே ஊறிவிட்டன என்று கூறத்தக்கவகையிலே அவருடைய ஆக்கங்கள் அமைந்தன.
5

Page 14
வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த தமிழரசே தமிழடைய இலட்சியத்தாகமாக உருப்பெற்று வந்த வேளையிலே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரையும் உள்ளடக்கத்தக்கதாகத் "தமிழர்” என்ற சொல் அமையாமை உணரப்பட்டது. முஸ்லிம்கள், சிறப்பாகக் கிழக்கு மாகாண முஸ்லிம்கள், தமிழர்களிலிருந்துதங்களைப்பிரித்து நோக்குவது தெரியவந்தது. தமிழர்களையும் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் இணைத்து "தமிழ் பேசும் மக்கள்” என்று குறிப்பிடும் வழக்கு இலங்கை அரசியலிலே முக்கியத்துவம் பெற்றது. இந்தியாவிலே, இத்தகைய அரசியல் தேவை நிலவாதபடியால், தமிழ் பேசும் மக்கள் என்ற தொடர் வழக்குக்கு வரவேயில்லை.
அரசியல் ரீதியிலே தமிழ்பேசும் மக்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியைத் தமிழரசுக் கட்சி தொடக்கிவிட, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வலியுறுத்திவர, பின்பு தமிழர் விடுதலை இயக்கங்கள் துரிதப்படுத்துகின்றன. கலை, இலக்கிய ரீதியிலே, தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைப்பதிலே, வித்தியானந்தன் அளவுக்கு வேறெவரும் பணியாற்றவில்லை. வடக்கு - கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகவும் தமிழைத்தாய்மொழியாகக் கொண்டவர் களாகவும் இருந்தவர்களை ஒன்றுபடுத்துவது சுலபமாக இருக்கவில்லை. சமய ரீதியாகவும், சாதி ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் பிளவுபட்டிருந்த தமிழ் பேசும் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுடைய சால்பைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டதே வித்தியானந்தனுடைய வாழ்க்கைப் பணி என்று கூறலாம்.
சமய வேறுபாடுகளைக் கடந்து நின்று முஸ்லிம்களையும் கிறிஸ்தவர் களையும் இந்துக்களோடு இணைத்து நோக்கும் இயல்பு, "தமிழர் சால்பு” வழிவந்ததெனலாம். தமிழர் சால்பின் ஐந்தாம் இயல், தமிழ் மக்களுக்குச் சிறப்பான சமயக் கோட்பாடுகளும் வழிபாட்டு முறைகளும், ஆறாம் இயல், தெய்வங்கள், ஏழாம் இயல் ஆரியர் நம்பிக்கைகளும் சமயச் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும், எட்டாம் இயல், சமணமும் பெளத்தமும் என்பனவாம். இவ்வியல்களில் ஆழந்துஈடுபட்ட வித்தியானந்தனுக்கு, இந்துக்களின் பண்பாடே பூரணமான தமிழ்ப் பண்பாடு என்ற கோட்பாட்டின் பொருந்தாமை புலப்பட்டுக் கொண்டேயிருந்தது. தமிழ் மக்களுக்குச் சிறப்பான சமயக் கோட்பாடுகளும் வழிபாட்டு முறைகளும் காலப்போக்கிலே இந்து சமயத்திலே பலவீனமடைந்தன என்பதையும் ஆரியர் நம்பிக்கைகளும் சமயச் சடங்குகளும் வழிபாட்டுமுறைகளும் இந்துக்களின் பண்பாட்டிலே செல்வாக்குமிக்கு வளர்ந்து வந்திருக்கின்றன வென்பதையும் தெர்டக்க காலத்திலேயே இந்துக்களாக மட்டுமல்லாது சமணர்களாகவும் பெளத்தர்களாகவும் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுபவர் களாகத் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்களென்பதையும் உணர்ந்து கொண்ட வித்தியானந்தன் பரந்த மனப்பான்மையைக் கடைப்பிடித்து வந்தார்.
6

வித்தியானந்தன் அளவுக்கு முஸ்லிம்களை அணைத்துக் கொண்ட தமிழ்ப் பேராசிரியர் பிறர் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. வித்தியானந்தன் "தமிழர்சால்பை" ஆராய்வதற்கு முன்பே, இலங்கைப் பல்கலைக்கழகத்திலே உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றிய காலத்திலேயே, உவைஸ் அவர்களை மாணவராக அடைந்துவிட்டார். இலண்டனிலே கலாநிதிப்பட்ட ஆய்வில் ஈடுபட்ட காலத்திலும், இலங்கைப் பல்கலைக்கழகத்திலே கலைமாணிப் பட்டம் பெற்று, "முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய பணி” பற்றிய முதுகலைமாணிப் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருந்த உவைஸoடனான தொடர்பு வளர்ந்தது. வித்தியானந்தன் நாடு திரும்பியபின், உவைஸ், நன்றிமறவாது, உத்தம நண்பராக மாறினார். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு ஒருவர் உதவி வந்தனர். "இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு” பற்றிய கட்டுரையை இலக்கியத் தென்றலில் வெளியிட்ட வித்தியானந்தன் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் சஞ்சிகையிலே கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வந்தார். 1961 ஆம் ஆண்டிலே, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர முஸ்லிம் மாணவர்களுக்குப் பாடநூலாக அமையும் கலையும் பண்பும் என்ற நூல் "பிறையன்பன்” என்ற புனைபெயரில் வித்தியானந்தனால் வெளியிடப்பட்டது. "தமிழர் சால்பு” எழுதிப்பயிற்சிபெற்றிருந்த நூலாசிரியர் முஸ்லிம்களின் சால்பினைக் "கலையும் பண்பும்” என்ற தலைப்பிலே வெளிக்கொண்டு வந்தார். உவைஸினுடைய உதவி தாராளமாகக் கிடைத்தமையால், இஸ்லாமிய மார்க்கச் சம்பந்தமான பிழைகள் நூலில் காணப்படவில்லை.நூலாசிரியர் புனைபெயரைக் கையாண்டிருந்தமையால், அவர் முஸ்லிமாக இருக்க வேண்டுமென்றே தொடக்கத்தில் பலர் கருதினர்.
வித்தியோதயப் பல்கலைக்கழகத்திலே சிறிது காலம் தமிழ் விரிவுரை யாளராகவும் தமிழ்த்துறைப் பொறுப்பாளராகவும் கடமையாற்றிய உவைஸ், பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் வழிகாட்டலிலே முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள் பற்றிய கலாநிதிப் பட்ட ஆய்வினைத் தொடங்கினார். 1972ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திலே வித்தியானந்தன் நெறிப்படுத்துதலிலே முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள் பற்றிய கலாநிதிப் பட்டமும் வழங்கப்பட்டது. தமிழ் நாட்டிலே முஸ்லிம் அறிஞர் சிலர் தமிழ் இலக்கியத்திலே ஆய்வுசெய்திராமையின், உவைஸ் மக்கு எதிர்பாராத வாய்ப்புக் கிட்டியது. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்திலே, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் பரப்பும் வளமும் செழுமையும் பரவலாக உணரப்பட்டு வந்த நிலையிலே, உலகத் தமிழராய்ச்சி மாநாடுகளின் அமைப்பினைப் பின்பற்றி, உலக இஸ்லாமியத் தமிழராய்ச்சி மாநாடுகள் சில, முஸ்லிம்களால் ஒழுங்கு செய்து தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் நடத்தப்பட்டன. அம் மாநாடுகளிலே, “தமிழ் எங்கள் மொழி; இஸ்லாம் எங்கள் வழி” என்ற போரெலி எழுந்தபோது வித்தியானந்தன் மிக மகிழ்ந்தார்.
17

Page 15
கிறித்தவத் தமிழர்கள் தமிழ் இனத்தவர்களே என்ற உண்மை இன்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால், அண்மைக்காலம் வரையிலே, தமிழர் வேதக்காரர் என்ற பாகுபாடு இருந்தது. கிறித்தவத்தை ஐரோப்பிய மிசனரிமாரிடமிருந்து அறிந்து கொண்ட கிறித்தவத் தமிழர், தம்மைத் தமது பாரம்பரியத்திலிருந்து பிரித்தெடுத்து, மேனாட்டுப் பண்பாட்டையே இலட்சியமாகக் கொள்ளும்வேதக்காரர் ஆகினர். மதம் மாறாத இந்துக்கள் தம்மைத் தமிழர் என்று கூறிக் கொண்டனர். இலங்கையைப் பொறுத்தவரை, இந்த நிலை சைவமும் தமிழும் ஒன்று என்ற நிலைக்கு இட்டுச் சென்றது. தமிழருடைய பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களைத் தழுவிக் கொள்ள, கிறித்த வராகிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் வளர்ச்சி பெற்றதும், கிறித்தவர் - இந்துக்கள் ஒற்றுமை வளர உதவியது. நல்லூர்ச் சுவாமி ஞானப்பிரகாசரும் தனிநாயகம் அடிகளும் செய்த தமிழ்ப் பணிகள் கத்தோலிக்கரை ஏனைய தமிழர்களோடு இணைத்தன.
கிறித்தவர்கள் வருகையால், தமிழர்களாகிய இந்துக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை வலியுறுத்தி வந்த ஒரு சூழ்நிலையில், கிறித்தவ மிசனரிமார் வருகையால் தமிழ் மறுமலர்ச்சி பெற்றது என்ற துணிகரமான கருத்தைப் பேராசிரியர் கணபதிப்பிள்ளை சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு தம்முடைய தொடக்கப் பேருரையிலே முன்வைத்தார். வித்தியானந்தன் இந்தக் கருத்தை வளர்த்து வலியுறுத்தி வந்த இடங்கள் பல. இவர் இலக்கிய வரலாறு கற்பிக்கும் போது, கிறித்தவர்களுடைய தமிழ்த் தொண்டு பற்றி மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளித்து வந்துள்ளார். முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நடைபெற்றபோது, "ஈழத்து மிசனரிமார் தமிழ்த் தொண்டு” என்ற தலைப்பிலே ஆராய்ச்சி கட்டுரை வாசித்தார். கிறித்தவர்கள் தமிழ்த் தொண்டு பற்றி, தினகரன் பத்திரிகையிலே கட்டுரைகள் எழுதியுள்ளார். மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலுமுள்ள கத்தோலிக்க நாட்டுக் கூத்துக்களிலே இவர் ஈடுபாடு கொண்டிருந்தார். மன்னாரைச் சேர்ந்த மூன்று கத்தோலிக்க நாட்டுக் கூத்துகளை இவர் பதிப்பித்துள்ளார். 1962இல் இளங்கதிரிலே "கிறித்தவரும் ஈழத்திலே தமிழ் வளர்ச்சியும்” என்னும் கட்டுரையினையும் 1969இல் உடுவில் மகளிர் கல்லூரி இதழிலே "அமெரிக்க மிசனும் தமிழர் கல்வியும்” என்னும் கட்டுரையினையும் இவர் எழுதியமை அமெரிக்க மிசன் கல்விப் பணி பற்றி முதுகலைமாணிப்பட்ட ஆய்வும் கலாநிதிப் பட்ட ஆய்வும் மேற்கொள்ள எஸ். ஜெபநேசன் அவர்களைத் தூண்டியது. வித்தியானந்தனுடைய மாணவர்களின் நெறிப்படுத்தலிலே பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்த ஆய்வுகளை மேற்கொண்ட ஜெபநேசன் இன்று யாழ்ப்பாணக் கல்லூரி அதிபராக விளங்குகிறார்.
18

ஈழத்து இலக்கியம் என்ற பரப்பை வித்தியானந்தன் விரிவாக்கினர். உயரிலக்கியமே இலக்கியமெனக் கருதப்பட்டு வந்தசூழ்நிலையிலே, ஈழத்திலே சில மாவட்டங்களிலே உயர்வகுப்பினர் சிலரே இலக்கிய ஆக்கத்தோடு தொடர்புபட்டவராக இருந்து வந்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டமும் திருகோணமலை மாவட்டமும் கடந்த சில நூற்றாண்டுகளாக உயரிலக்கியங் களைப் படைத்துவந்துள்ளன. இவ்விரண்டு மாவட்டங்களுக்கும் இடையில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டப்பகுதியிலே, வையாபாடல், கதிரமலைப்பள்ளு என்பன தோன்றியிருக்கக் கூடுமென்ற கருத்து அண்மைக்கால ஆராச்சி யாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. இருபதாம் நூற்ருண்டு தொடக்கத்துக்கு முன்பு வடக்கு கிழக்கு இலங்கையிலுள்ள ஏனைய மாவட்டங்களிலிருந்து, புலவர் பரம்பரைகள் இருந்ததற்கும் உயரிலக்கிய ஆக்கங்கள் நிகழ்ந்தமைக்கும் தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை. உயரிலக்கியப் பாரம்பரியம் நிலவாத மாவட்டங்களிலே செளுமையான நாட்டாரிலக்கியப் பாரம்பரியம் நிலவிவந்துள்ளது. 1960ஆம் ஆண்டு மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களை வெளியிட்டவித்தியானந்தன், நூலுக்குக்கிடைத்த எதிர்பாராத வரவேற்பைக் கண்டு, 1962ஆம் ஆண்டிலே இரண்டாவது பதிப்பு வெளியிடக்கூடியவரானர். இங்கு மட்டக்களப்பு என்பதுமட்டக்களப்பு மாவட்டத்தை மட்டுமல்லாது அம்பாறை மாவட்டத்தையும் உள்ளடக்குகிறது. 1964ஆம் ஆண்டிலே, வித்தியானந்தன் மன்னார் நாட்டுப்பாடல்களை வெளியிட்டார்.
உயரிலக்கியங்களைப் போற்றிவந்த தமிழறிஞர் பொதுவாக நாட்டாரியலை வெறுத்து ஒதுக்கி வந்த நிலையிலே, வித்தியானந்தன் புதுவழியிலே போனார் போராசிரியர் கணபதிப்பிள்ளையிடம் காணப்பட்டநாட்டாரியற் பற்றுவித்தியானந்த னிடம் மிகவும்வளர்ந்த நிலையிற் காணப்படுகின்றதெனக் கூறலாம். 1984ஆம் ஆண்டு வெளியான வித்தியானந்தம் என்ற தொகுப்பு நூலிலுள்ள, பேராசிரியர் கணபதிப்பிள்ளையும் ஈழத்தின் அடிநிலைத்தமிழ் பண்பாட்டு விழிப்புணர்வும், என்ற கட்டுரை, கணபதிப்பிள்ளைக்கு யாழ்ப்பாணக் கிராமியத்திலுள்ள ஆழமான ஈடுபாட்டை எடுத்துக் காட்டுகிறது. பேச்சு வழக்குத் தமிழை ஆக்க இலக்கியத் தமிழாகப் பயன்படுத்திய கணபதிப்பிள்ளையும், நாட்டாரிலக்கியங்களிலே ஆர்வம்காட்டி உழைத்து வந்த சதாசிவ ஐயர் வெள்ளவத்தை மு.இராமலிங்கம் முதலியோரும் வித்தியானந்தனுடைய முயற்சிக்குத்துாண்டுதலாக இருந்திருக்க வேண்டும். நாட்டார் பாடல்கள் அவை வழங்கி வந்த மாவட்டங்களிலுள்ள தமிழ் பேசும் மக்கள் யாவருக்கும் பொதுச் சொத்தாயினும், முஸ்லிம் மக்களிடையே சிறப்பாக வளங்கி வருபவை. எனவே நாட்டார் பாடல் தொகுப்புகளும் வெளியீடுகளும் ஒருவகையிலே முஸ்லிம் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகவும் ஆகின.
19

Page 16
நாட்டார் கூத்துக்களின் மீட்புப் பணியே வித்தியானந்தனுடைய தலையாய தமிழ்ப்பணியெனலாம். இவருக்கு நாடு முழுவதும் அறிமுகம் பெற்றுத் தந்தது இப்பணியே. இப்பணியை வாழ்க்கைப்பணியாகச் செய்யத்தக்க தகைமையுடைய வராக, இவர் வளர்ந்த கதை சுவையானது. பல்கலைக்கழக மாணவர்கள் நடித்து அரங்கேற்றத்தக்க நாடகங்களைப் பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஒவ்வோராண்டும் புதியனவாக எழுதிக் கொண்டிருக்க, வித்தியானந்தன் அவை ஒவ்வொன்றுக்கும் தயாரிப்பாளராக விளங்கினார். 1940 களின் பிற்பகுதியிலிருந்து இந்த நிலைமை காணப்பட்டது. தமிழர் சால்பிலே, பதினான்காம் இயலாக, கல்வியும் கலைகளும் என்ற பகுதி காணப்படுகிறது. அவ்வியலின் ஆறாவது துணைப்பிரிவான இலக்கியம் ஈழத்து நாட்டாரிலக்கியத்தை நோக்கி இவரை வழிநடத்திற்று. சுமார் 48 பக்கங்களில் அமைந்துள்ள கல்வியும் கலைகளும் என்ற இயலிலே மூன்றில் இரண்டு பங்கு பகுதி நடனம், இசை பற்றிய செய்திகளை நுணுக்க விபரங்களுடன் தருகிறது. பொதுவாக, தமிழர் சால்பும், சிறப்பாக இந்த இயலுமே முஸ்லிம்களின் கலையும் பண்பும் எழுதக் கூடிய துண்டுதலை வித்தியானந்தனுக்கும் வழங்கியிருக்க வேண்டும். நடனம் என்ற பகுதியிலே சங்க காலத்து நாட்டுக் கூத்துக்கும் இசை என்ற பகுதியிலே இச்ைகருவிக ளுக்கும் இவர் வழங்கியுள்ள முக்கியத்துவத்தைப் பார்க்கும் போது, இவருடைய எதிர்கால வாழ்க்கைப் பணியின் மூலவேர்களைக் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
1956ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க ஆதரவுபெற்ற கலைக்கழகத்தின் நாடகக் குழு உறுப்பினராக, இவர் நியமிக்கப்பட்டார். 1956, 1960ஆம் ஆண்டுகளிலே மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இருந்து கூத்துக்களைத் தருவித்து, அவற்றைப் பல்கலைக்கழகத்திலே மேடையிட்டார். 1962ஆம் ஆண்டு பல ஏட்டுப்பிரதிகளைக் கொண்டு பரிசோதித்தபின் மட்டக்களப்பு அலங்காரரூபன் நாடகத்தைப் பதிப்பித்தார். மட்டக்களப்பு, மன்னார் பிரதேச கலாமன்றங்களின் ஆதரவுடன், பல்வேறு முயற்சிகளில் இறங்கினார். மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த எண்டிறீக்கு எம்பரதோர் நாடகம் (1964), மூவிராசாக்கள் நாடகம் (1966),ஞானசவுந்தரிநாடகம் (1967) என்னும் கத்தோலிக்கர் தொடர்பான நாடகங்கள் இவரால் பதிப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு பதிப்பிலும் நீண்ட முகவுரை எழுதினார். பல ஆய்வுக் கருத்துகள் பொதிந்தவையாக, இம்முகவுரைகள் அமைந்தன. ஈழத்துத் தமிழர்களுடைய நவீன நாடகம், நடனம், நாட்டிய நாடகம் ஆகியவற்றிலே பிரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு, இவர் தெளிவுபடுத்திய மரபு வழி நாடக உத்திகள் என்றுமே வற்றாத ஊற்றுக்கண்களாயமைவன.
தமிழியற் சிந்தனைகள் (1979) என்ற இவருடைய கட்டுரைத் தொகுப்பு
2O

நூலிலே, ஈழத்தின் கிராமிய நாடகங்கள் என்ற சிறந்த கட்டுரை இடம் பெற்றுள்ளது. வித்தியானந்தம் (1984) என்ற நூலில் இடம் பெறும் 'ஈழத்து நாட்டுக்கூத்து மரபு என்ற இவருடைய கட்டுரை, இத்துறையிலே இவர் பூரண முதிர்ச்சியடைந்த பின்பு எழுதிய கடைசிக் கட்டுரையெனப் போற்றத் தகுந்தது. Tamil Culture என்ற சஞ்சிகையிலே, 1964ஆம் ஆண்டிலேயே இவர் The Folk Drama in Ceylon' 6T66TD 9, 165, SLC660)(Juloo)6OT 6T(pg. 3CD555ITs. Trends in World Theatre 6T6örgld splitSgg(36) Tamil Folk Drama Basis for Future Tamil Theatre என்னும் கட்டுரையினை எழுதி, நாட்டுக் கூத்தின் முக்கியத்துவம் பற்றி அவருடைய சிந்தனை வளர்ச்சி பெற்று வந்தவாற்றினைப் புலப்படுத்தினர். 1968ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழராய்ச்சி LDITIbrTLLC36) 'A Study of Two Types of Folk drama peculiar to the Tamils of Ceylon என்ற கட்டுரை சிலாகித்துக் குறிப்பிடத்தக்கது. வாய்மொழி யாகவே வழங்கி வந்த மட்டக்களப்பு நாட்டுக் கூத்துக்களின் தாளக் கட்டுகளை இவர் ஒலிப்பதிவு செய்து பேணி வந்தார். பிறநாட்டறிஞர்களுக்கும் வழங்கினார்.
வித்தியானந்தன் பதிப்பித்த நூல்களிலே கஞ்சன் அம்மானை )1976) சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. நீதியரசர் ழரீஸ்கந்தராசா, திருமதி கண்மணி பூரீஸ்கந்தராசா நினைவாக, ஒரு நூல் வெளியிடத்தக்க வாய்ப்பு வித்தியானந்த னுக்குக் கிடைத்ததும், அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட நூல் கஞ்சன் அம்மானை என்பதை உணரும் போது, இவரைப்பற்றியும் ஒரளவு அறிந்துகொள்ள முடிகிறது. மட்டக்களப்புக்கலை, இலக்கியம் பற்றிப் பூரணமான களஆய்வு நிகழ்த்தியிருந்த இவர், மட்டக்களப்புத்தமிழகம், கண்ணகி வழக்குரை முதலிய நூல்கள் வெளிவர வி.சீ. கந்தையாவுக்குத் தூண்டுதலாக இருந்தோடு, மட்டக்களப்புத் தமிழகத்தில் மட்டும் பயின்று வழங்கிய கஞ்சன் அம்மானை வெளிவர வேண்டுமென்றும் ஆசைப்பட்டிருக்கிறார். மட்டக்களப்புத் தமிழகத்திலே ஆங்காங்கு காணப்படும் கிருஷ்ணன் கோவில்களிலே கஞ்சன் அம்மானை பாராயண நூலாக விளங்குகிறது. யாழ்ப்பாணத்துக்குக் கலாசாரம், கந்தபுராண கலாசாரம் என்ற கோட்பாட்டைப்பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை முன்வைத்தபோது, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை பாரத கலாசாரமே மட்டக்களப்புக் கலாசாரம் என்ற கோட்பாட்டை வெளியிட்டார். மட்டக்களப்புக் கலாசாரத்தை மகாபாரதத்தோடு இணைத்து நின்ற இலக்கிய மூலாதாரம் கோவில்களிலே பாடப்பட்ட கஞ்சன் அம்மானையும் இறந்தவர் வீடுகளிலே பாடப்பட்ட வைகுண்ட அம்மானையும் .Dائ9)bنے
தமிழ் நாட்டிலே, வித்தியானந்தனுக்குக் கிடைத்த அங்கீகாரமாக, தமிழ்ப்பல்கலைக்கழக மூதவை உறுப்பினராக இவர் இரண்டு முறை பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. தமிழ் கூறும் நல்லுலகிலே முதற் பல்கலைகழகமாகச் சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த நூற்றாண்டிலே
21

Page 17
நிறுவப்பட்ட போது சி.வை.தாமோதரம்பிள்ளையும், கறல் விசுவநாத பிள்ளையும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணச் செமினரியிலே பெற்ற பயிற்சியினால், முதல் பட்டதாரிகளாகினர். சென்னைப்பல்கலைக்கழகம் தென்னிந்தியாவின் பொதுப் பல்கலைக்கழகம் போல இயங்கிமையால், அண்ணாமலைச் செட்டியாரின் முயற்சியிலே, சிதம்பரத்திலே தமிழர்களுக்கென ஒரு பல்கலைக்கழகம் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியது. தமிழ்க்கல்வி போற்றப்பட்ட அப்பல்கலைக்கழகத்திலே, தமிழப்பேராசிரியர் பதவி முதல் முதல் உருவாக்ப்பட்டு, மட்டக்களப்புச் சுவாமி விபுலானந்தர் அப்பதவியை ஏற்கும்படி அழைக்கபடப்டார். ஏழு ஆண்டுகள் முன்பு, தமிழின் பல்வேறு துறைகளை மட்டும் ஆராய்வதையே நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு தஞ்சாவூரிலே தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியது. இந்தியாவுக்கு வெளியிலுள்ள தமிழர் அறிஞர்கள் சார்பிலே, வித்தியானந்தன் மட்டுமே இவ்வாறு கெளரவிக்கப்பட்டார்.
இவர், பல பல்கலைக்கழகங்களின் வெளிவாரிப் பரீட்சகராகக் கடமையாற்றியுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், முதலிய நிறுவனங்களின் கலாநிதிப் பட்ட ஆய்வேடுகள் பலவற்றுக்கு இவர் வெளிவாரிப் பரீட்சகராக இருந்துள்ளார். இலங்கைப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிலே தமிழ்த்துறைகள் தோன்றியபோது, அவற்றுட் சிலவற்றுக்கு அவ்வப்போது வெளிவாரிப் பரீட்சகராக இருந்துள்ளார். கோலாலம்பூரிலுள்ள மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுத்துறையின் வெளிவாரிப்பரீட்சகராக இருந்த இவர், அப்பல்கலைக்கழகத்தின் அழைப்பில் அங்கே சென்று அறிவுரைகள் வழங்கியவர்.நாட்டாரியல் தொடர்பான ஒப்பியல் ஆய்வுநடத்த வேண்டி, 1960ஆம் ஆண்டிலே, இவர் பிரித்தானியா, யூகோசிலாவியா, ஐக்கிய அமெரிக்கா, யப்பான் ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்கள் சிலவற்றிற்குச் சென்றிருந்தமை இவ்விடம் நினைவுகூரத்தக்கது.
ஆங்கிலம் மூலம் கல்வி பெற்றவரும் இங்கிலாந்திலே ஆங்கிலமொழி மூலம் கலாநிதிப் பட்டம் பெற்றவரும் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கு ஆங்கிலம், லத்தீன் முதலிய மொழிகளையும் பாடங்களாகக் கற்றவருமாகிய வித்தியானந்தன் ஆங்கில மொழியிலே மிகவும் குறைவாகவே எழுதியுள்ளார். அவ்வாறு அவர் எழுதியதும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பான வைகளாகவே பெரும்பாலும் அமைந்துள்ளன. அவற்றுள், Tamil Studies in English in Ceyplori (upto 1968) 6T6öTugj6 b Tamil Influences on Sinhalese Culture (1974) என்பதும் தமிழியற் சிந்தனை (1979) என்ற கட்டுரைத் தொகுப்பில் வெளிவந்துள்ளன. உலகத் தமிழராய்ச்சி மன்ற நிறுவகர் என்று போற்றப்படும் தனிநாயகம் அடிகள் இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சென்னையிலே நடைபெற்றபோது, Tamil Studies Abroad என்ற கட்டுரைத் தொகுதி ஒன்றினை வெளியிட்டார். அக்காலவரையிலே ஆங்கில மொழியிலே
22

வெளியான இலங்கையர் தமிழாய்வுகளைப் பற்றி வித்தியானந்தன் எழுதிய கட்டுரை, இலங்கைத் தமிழர் பண்பாட்டிலே அவருக்குள்ள பரந்த அறிவினோடு வேறுபல திறமைகளும் வெளிக் கொண்டு வருவதாக அமைந்துள்ளது. 1974ஆம் ஆண்டு ய்ாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலே, வித்தியானந்தன் படித்த ஆய்வுக் கட்டுரை, சிங்களவர் பண்பாட்டிலே காணப்படும் தமிழர் செல்வாக்குகளை எடுத்துக் காட்டும் போது, தமிழர் சால்பு ஆய்வுக் கண்ணோட்டம், ஈழத் தமிழர் சால்பினை மட்டுமல்லாது சிங்களவர் சால்பினையும் நோக்கி விரிவதைக் காணலாம்.
6. செயலாண்மைத்திறன் மிக்கவர் (Administrator)
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுள் செயலாண்மைத் திறம்மிக்கவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வித்தியானந்தனுடைய செயலாண்மைத் திறனைப்பற்றி இரண்டுவித அபிப்பிராயம் இருக்கமுடியாது. தொடக்க காலங்களிலே, இலங்கைப்பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கமும் அதன் நடவடிக்கைகளும் இவருக்குக் களங்களாகின. கொழும்பிலே இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லுாரி இயங்கியகாலத்திலே, தமிழ் மாணவர் நலன்கருதி, அக்காலக் கணிதப் பேராசிரியர் சி. சுந்தரலிங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச் சங்கம் நீண்டகால வரலாறு உடையதாயினும், அது உயிர்த்துடிப்புடையதாக விளங்கிய காலம் வித்தியானந்தன் அதனேடு தொடர்புபட்டிருந்த காலமே. பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய நாடகங்ளை, வித்தியானந்தன் தமிழ்ச் சங்கம் முலமாகவே தயாரித்து வழங்கிவந்தார். பொருளோ பொருள் (1948), முருகன் திருகுதாளம் (1950), சங்கிலி(1951), உடையார் மிடுக்கு (1953), தவறான எண்ணம் (1954), சுந்தரம் எங்கே? (1955), துரோகிகள் (1956), முதலிய பேராசிரியர் கணபதிப் பிள்ளையின் நாடகங்கள் வித்தியானந்தனுடைய நெறிப்படுத்துகையும் மேடையேற்றத்தையும் பெற்றிருந்தன. இந்நாடகங்களுட் பெரும்பாலான யாழ்ப்பாணப் பேச்சுவழக்குத் தமிழிலே எழுதப்பட்டு, தமிழ்நாடக வளர்ச்சியிலே ஒரு புது வளர்ச்சியைத் தொடக்கி வைத்தன. இந்நாடகங்களுட் சிலவும் கணபதிப்பிள்ளையின் பிற ஆக்கங்களுட் சிலவும் கணபதிப்பிள்ளையின் நாட்டாரியல் ஈடுபாட்டினைப் பிரதிபலித்தன.
வித்தியானந்தனுடைய துாண்டுதலும் ஆலோசனையும், தமிழ்ச்சங்க ஆண்டு இதழாக, 'இளங்கதிர் தோன்ற உதவின. இங்கிலாந்திலிருந்து திரும்பியதும் இவர் தமிழ்ச்சங்கப் பெரும்பொருளாளர் ஆனார். பேராதனைப் பல்கலைக்கழகத்திலே இவர் கடமையாற்றிய கால்நூற்றுண்டு காலமும் முதலிலே பெரும்பொருளாளராகவும் பின்பு பெரும்தலைவராகவும் தமிழ்ச் சங்கத்தோடு இவர் நெருங்கிய தொடர்பினைப் பேணிவந்தார்.
23

Page 18
பல்கலைக்கழகத்திலே காணப்பட்ட எத்தனையோ மாணவர் அமைப்புக் களுள்ளே, எதுவும் தமிழ்ச்சங்கம் அளவு பணியாற்றவில்லை. ஆண்டுதோறும் இளங்கதிர் வெளிவந்தது. தமிழ்ச்சங்க நடவடிக்கைகளிலே, நாடகம் அல்லது நாடகப்போட்டி ஒவ்வோராண்டும் இடம்பெற்றது. நாடகங்கள் பல பேராதனையில் மட்டுமல்லாது, கண்டியிலும், யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் வேறு இடங்களிலும் மேடையேற்றப்பட்டன. மாணவர்களுடைய திறன்களை வளர்ப்பதற்காக, பேச்சுப்பேட்டி, விவாதங்கள், சிறுகதைப்போட்டி, கவிதைப்போட்டி என்பனவற்றைத் தமிழ்ச்சங்கம் ஒழுங்கு செய்து நடத்தியது. இளங்கதிர் வெளிவரத்தொடங்கியதும்,தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளின் பதிவேடாக, அது விளங்கி வந்தது. தமிழ்ச்சங்க வரலாறு வித்தியானந்தனுடையவாழ்க்கை வரலாற்றிலே ஒரு பகுதி என்று கூறத்தக்க வகையிலே, இவர் பணியாற்றி வந்தார். மாணவர்களுக்குச் சிறந்த பயிற்சி கொடுத்து அனுப்பவேண்டியது தமதுகடமை எனக்கருதிய இந்தக் கடமை வீரர், சங்கச் செயற்குழு உறுப்பினரை வலிந்து அழைத்து, அவர் தேவையைக் கேட்டறிந்து, உதவும் பண்பாளர். தமக்கு ஏற்படும் சிரமத்தையும் பொருட்செலவையும் ஒரு பொருட்டாக எண்ணாது, இவர் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளின் வெற்றிக்குக் கடுமையாக உழைத்து வந்தவர்.
இவருடைய நாட்டுக்கூத்து மீட்புப்பணி 1959ஆம் ஆண்டு தொடங்குகிற தெனலாம். 1959, 1960ஆம் ஆண்டுகளிலே, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலிருந்து கூத்துக்களைத் தருவித்துப் பல்கலைக்கழகத்திலே மேடையிட்டார். துருப்பிடித்தமணிபோலக் காணப்பட்ட நாட்டுக்கூத்தைப் பட்டைதீட்டினல், அதன் மதிப்பும் பயனும் உயரும் என்பதை இவர் உணர்ந்துகொண்டார். மட்டக்களப்பில் இருந்து தருவித்த நாட்டுக்கூத்திலே அறிமுகமான மெளனகுரு பல்கலைக்கழக மாணவனாக வந்து சிறப்புக் கலைத்தமிழ் பயிலத் தொடங்கி நான்கு ஆண்டுகள் பல்கலைக்கழகத்திலே தங்கியமை, வித்தியானந்தனுடைய நாட்டுக்கூத்துத் தயாரிப்பு முயற்சிகளுக்குப் பெருவாய்ப்பாக அமைந்தது. மெளனகுருவைக் கதாநாயகனாகக்கொண்டு, 1962இல் கர்ணன் போர் என்ற வடமோடிக் கூத்தையும், 1964இல் நொண்டிநாடகம் என்ற தென்மோடிக் கூத்தையும் 1965இல் இராவணேசன் என்ற வடமோடிக் கூத்தையும் வித்தியானந்தன் தயாரித்து நெறிப்படுத்தி அளித்தார். 1968இல் வாலிவதை என்ற வடமோடிக் கூத்தும் இவரால் தயாரித்து அளிக்கப்பட்டது.
தயாரிப்பு அல்லது தயாரிப்பும் நெறியாள்கையும் என்ற பணியை இவர் எவ்விதம் நிறைவேற்றிவைத்தாரென்பது கவனிக்கப்படவேண்டும். கூத்து மரபின் ஆடல் பாடல் பிசகாது, கூத்திற் பாவிக்கப்படும் அதே வாக்கியங்களைக் கையாண்டு, மரபு பிறழாது, இவர் கூத்தைச் செம்மைப் படுத்தினர். விடியவிடிய ஆடப்பட்ட கூத்துக்களை ஒன்றரை மணித்தியாலத்துக்குள் அமைத்தமையும், நடிப்புப் பண்பினைக் கூத்துட் புகுத்தியமையும், இராக தாளங்களை ஒர் ஒழுங்கிற்குள்
24

கொண்டு வந்தமையினையும், நவீன ஒலி, ஒளி, மேடை அமைப்புக்களைக் கூத்திற் பாவித்தமையும் அவர் கூத்திற் புகுத்திய திருத்தங்களாகும். முதன் முதலிலே பல்கலைக்கழக மாணவரை நாட்டுக்கூத்தில் ஈடுபடுத்தியதுடன்,பெண் பாத்திரங்களுக்குப் பெண்களையே ஆடவும் வைத்தார். இந் நாடகங்கள் பேராதனை, கண்டி, கட்டுகள்லத்தோட்டை, மன்னர் வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு முதலாம் பிரதேசங்களில் மேடையிடப்பட்டன.
இவர் ஒழுங்கு செய்த நாடக மேடையேற்றங்களால் செலவுக்கு மிஞ்சியதாக வருவாய் காணப்பட்டது. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் பெயரிலே, இலாபப் பணம் தமிழ்க் கல்வியிலே சிறப்புச் சித்திகள் பெறுபவர்களுக்கு, வட்டிப் பணத்திலே பரிசில்கள் வழங்கப்படுவதற்க்காக, இவரால் பேராதனைப் பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்பட்டது . ஆறுமுகநாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை முதலிய ஈழநாட்டுத் தமிழ்ப்பெரியார் இவ்வாறு நினைவுகூரப்பட்டதுடன், இப்பரிசில்கள் தமிழ்த்துறை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுதலாகவும் அமைந்தன.
மட்டக்களப்புக் கூத்துக்களை அறிமுகப்படுத்தியதுபோல, யாழ்ப்பாணத்து அண்ணாவிமரபுநாடகங்கள், முல்லைத்தீவுக் கோவலன் கூத்து, சிலாபக்கூத்து, மன்னார்க்கூத்து, மலையகக் காமன்கூத்து என்பனவும் இவரால் வெளியுலகுக்கு அறிமுகஞ் செய்யப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி வி. வைரமுத்து, கரவெட்டி, கிருஷ்ணாழ்வார், வந்தாறுமூலை க. செல்லையா அண்ணாவியார், கழுதாவளை சி. தங்கராசா அண்ணாவியர், முல்லைத்தீவைச் சேர்ந்த வே. சுப்பிரமணியம் அண்ணாவியார், மன்னார் நானாட்டானைச் சேர்ந்த பென்சமின் செல்வம் முதலிய கலைஞர்கள் தேசிய மட்டத்தில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர்கள் ஆவர்.
கலைக்கழகம் தமிழ்நாடகக் குழுத்தலைவர், பின்னர் கலாசாரப் பேரவை தமிழ் நாடகக் குழுத் தலைவர் என்ற முறையிலே 1964, 1966, 1969, 1970, 1971, 1972 ஆம் ஆண்டுகளிலே, இவர் பல கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தார். நவீன நாடக உத்திகளை அறிமுகம் செய்வதும் நாடக அனுபவங்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும் இக் கருத்தரங்குகளின் நோக்கங்களாகும். ஆட்டம், பாடல், ஒப்பனை,உடை, நடிப்பு ஆகியவற்றிலே செலுத்த வேண்டிய கவனத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்துவனவாக, இக்கருத்தரங்குகள் அமைந்தன. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், ஹட்டன் ஆகிய இடங்களிலே நாடக எழுத்து, நாடகத் தயாரிப்பு, மேடை ஒழுங்கு, ஒப்பனை தழுவலாக்கம், பார்வையாளர் பிரச்சினை, அமெச்சூர் நாடகமன்றங்களின் பிரச்சினை என்பன சம்பந்தமாக, வித்தியானந்தன் நடத்திய நாடகக் கருத்தரங்குகள் மிகவும் முக்கியத்துவம்
25

Page 19
வாய்ந்தவை. காத்திரமான நாடகங்களை மேடையேற்றுவதில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த நாடக நெறியாளர், எழுத்தாளர், நடிகர் பலர் இக்கருத்தரங்குகளிற் பங்குகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் நவீன நாடகம் செழித்து வளரவும் இக் கருத்தரங்குகள் உதவின.
கலைக்கழகம் தமிழ் நாடகக் குழு மூலமாக, தமிழ் நாடக நூல்களை எழுதுவோருக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் 1958, 1959, 1960 ஆம் ஆண்டுகளில் இவர் நாடக எழுத்துப் போட்டியினை நடத்தினார். அதில் வெற்றி பெற்றோருக்குப் பரிசு வழங்கப்பட்டதுடன், அந்நூல்கள் அச்சிடவும்பட்டன. சொக்கன், எஸ். பொ. செம்பியன் செல்வன், த. சண்முகசுந்தரம், கதிரேசப் பிள்ளை, முத்து விஞ்ஞானம், முல்லைமணி, தேவன், ஏ. ரி. பொன்னுத்துரை, திமிலைத் துமிலன் முதலிய நாடக எழுத்தாளர், போட்டியிற் கலந்து கொண்டு பரிசில் பெற்றனர். வித்தியானந்தன் ஒழுங்குபடுத்திய நாடக விழா நாடகங்களில் நா. சுந்தரலிங்கம், அ. தாசீசியஸ், மெளனகுரு, மொளசால் அமீர், மாத்தளைக் கார்த்திகேசு, கே. ஏ. ஜவாஹர், கலைச் செல்வன், ம. சண்முகலிங்கம் முதலிய நாடக உலகின் பெரியார் பலர் இயக்குநர்களாக அல்லது நடிகர்களாகப் பங்கு கொண்டனர். வித்தியானந்தன் இலங்கையின் பல பாகங்களுக்கும் மாறிமாறிப் பிரயாணம் செய்து சுற்றிச் சுழன்று, நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து கனகச்சிதமாகச் செய்து முடித்து வந்தமை, பலரை வியப்பில் ஆழ்த்தி வந்தது.
தமிழ்ப் பேராசிரியராக நியமனம் பெற்று 1970இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தமிழ்த்துறைத் தலைவரான வித்தியானந்தன், தமிழ்த்துறையைத் தமிழ் ஆராய்ச்சித்துறையாக மாற்றினார். பல்கலைக் கழகத்தின் முக்கியமான பணி ஆராய்ச்சியை வளர்ப்பதற்காக இருக்க வேண்டுமென்பதை உணர்ந்து கொண்ட இவர், பல்கலைக்கழகத்தின் ஏனைய துறைகளிலே முன்பு போல, பட்டதாரிப் படிப்புகளே பெரும்பாலும் நடந்து கொண்டிருக்க, தமிழ் துறையிலே மாணவர்கள் பலர் பட்டப்பின்படிப்புப் படித்து ஆராய்ச்சிப் பட்டங்கள் பெற இவர் வழிகோலினார். உவைஸ் இவருடைய நெறிப்படுத்தலிலே கலாநிதிப் பட்டம் பெற்றார். இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டு மரபினை வெளிக்கொண்டு வரும் ஆவலினால் உந்தப்பட்ட இவர், தம்முடன் பல்கலைக்கழகத்திலே கடமையாற்றிய தம்முடைய பழைய மாணவர் களாகிய வேலுப்பிள்ளை தில்லைநாதன், முதலியோரை ஏற்றபடி தம்முடன் சக நெறிப்படுத்துநர்களாக இணைத்துக் கொண்டு, முதுமாணிப்பட்டம ஆய்வுகள் பல வெற்றிகரமாக' நிறைவேற உழைத்தார். ஈழத்தில் கண்ணகி வழிபாடு, ஈழத்து நாவல் இலக்கிய வளர்ச்சி, ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி, ஈழத்து நாடக வளர்ச்சி, ஈழத்துப் பத்திரிகை வளர்ச்சி, சோமசுந்தரப் புலவர் கவிதைகள், விபுலாந்தர் இலக்கிய முயற்சிகள் முதலிய தலைப்புகளிலான ஆய்வேடுகள் முதுகலைமாணிப் பட்டங்களை மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தன.
26

நச்சினார்க்கினியரின் விமரிசன முறை போன்ற ஈழத்தோடு தொடர்பில்லாத னவாகச் சில ஆய்வேடுகள் அக்காலத்திலே தயாரானமையையும் இவ்விடத்திலே குறிப்பிட வேண்டும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குத் துணை வேந்தராகக் கடமை யாற்றியபோது, வித்தியானந்தனுடைய ஆராய்ச்சிநெறிப்படுத்துகை தொடர்ந்தது. தமிழ்ப் பத்திரிகைத்துறை வளர்ச்சி, சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் பணிகள் தொடர்பாக, முதுகலை மாணிப்பட்ட ஆய்வேடுகள் தயாராகின. மட்டக்களப்பு நாடக மரபு தொடர்பாக மெளனகுருவும் யாப்பிலக்கண வளர்ச்சி தொடர்பாக நா. சுப்பிரமணியமும் கலாநிதிப் பட்டங்கள் பெற்றனர். மெளனகுரு நுண்கலைத்துறையிலும் சுப்பிரமணியம் தமிழ்த்துறையிலும் கடமையாற்றி வருகின்றனர். யாழ்ப்பாண நாடக மரபு பற்றிய கலாநிதிப் பட்ட ஆய்வைத் தொடங்கிய காரை சுந்தரம்பிள்ளையின் ஆய்வு இன்னும் பூரணத்துவம் அடையவில்லை. முதுமாணி கலாநிதிப்பட்ட ஆய்வுகளைத் தொடங்குவோர் பலர், இடையிலே சோர்வடைந்து முயற்சியை விட்டு விடுவது உண்டு. வித்தியானந்தன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். இவருடைய ஊக்கம் இல்லாவிட்டால், தமிழ்த்துறையில் ஆய்வுப் பட்டங்கள் பெற்ற பலர் அவ் ஆய்வுப் பட்டங்களைப் பெற முடியாமற் போயிருக்கலாம். பேராசிரியர் கணபதிப்பிள்ளை காலத்தில், அவருடைய நெறிப்படுத்துதலிலே, ஆய்வேடுகள் எழுதிப்பட்டங்கள் பெற்றவர்கள் உவைஸபம் வேலுப்பிள்ளையுமே, வித்தியானந்தன் ஒருபுறம் இவர்களை ஊக்கியும் மறுபுறம் கணபதிப்பிள்ளையத் தூண்டியும் செயற்பட்டமையினாலேயே இவர்கள் தங்களுடைய ஆய்வேடுகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் எழுதி முடிக்கக் கூடியதாயிருந்தது.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நடவடிக்கைகளிலே, செயலாண்மைத் திறன் மிக்க இலங்கைத் தமிழர் இருவர் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தனர். 1964 ஆம் ஆண்டு புதுடில்லியிலே உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை நிறுவியவரும் 1966ஆம் ஆண்டுகோலாலம்பூரிலே முதலாவது உலகத் திழிழாராய்ச்சி மாநாட்டைச் சிறப்பாக நடத்தியவரும் தொடர்ந்து சர்வதேச மட்டத்திலே செயலாளர் நாயகங்களுள் ஒருவராக பயனுள்ள பணியாற்றி வந்தவரும் பேராசிரியர் தனிநாயகம் அடிகளாவர். முதல் ஐந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலும் பங்கு பற்றிய ஒரே இலங்கைத் தமிழ் அறிஞர் வித்தியானந்தனே. சர்வதேச மட்டத்திலே தனிநாயகம் ஆற்றிய பணியை இலங்கை மட்டத்திலே வித்தியானந்தன் ஆற்றினார். 1972ம் ஆண்டு இலங்கையிலே நடத்திருக்க வேண்டிய உலகத் தமிராய்ச்சி மாநாடு நடைபெற முடியவில்லை. மாநாட்டை ஒழுங்குபடுத்தி நடத்தியிருக்க வேண்டிய இலங்கைக்கிளை பிளவுபட்டுச் செயல் இழக்கும் நிலையை அடைந்தது.
27

Page 20
இலங்கைத் தமிழர் தேசிய உணர்வு வளர்வதை விரும்பாத இலங்கை அரசு மாநாடு கொழும்பிலேயே நடைபெறவேண்டுமென்றநிலையைக் கொண்டிருந்தது. இலங்கைக் கிளையிற் பெரும்பான்மையினர் மாநாட்டை யாழ்ப்பாணத்திலேயே நடத்த விரும்பினர்.
மாநாட்டை யாழ்ப்பாணத்திலே நடத்த விரும்பியவர்கள் 1973ஆம் ஆண்டு வித்தியானந்தனை இலங்கைக்கிளையின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். உலகத் தமிழராய்ச்சி மன்றத் தொடங்கிப் பத்தாவது ஆண்டு பூர்த்தியாகும் 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்திலே நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது. அரசும் அரசின் அடிவருடிகளான தமிழர்கள் சிலரும் மாநாட்டைக் குழப்புவதற்கு இயலுமான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தனர். வித்தியானந்தனுடைய நன் மாணவர்களாக அதுகால வரையிற் கருதப்பட்ட சிலர், சுயநலம்கருதி அரசுடன் சேர்ந்து கொண்டனர். தமிழ்த்துறைப் பூலோகசிங்கம், வரலாற்றுத்துறைப் பத்மநாதன் முதலிய வெகுசில பல்கலைக்கழக கல்விமான்களே வித்தயானந்தனுக்குப் பக்கபலமாக நின்றனர். தமிழர்சால்பிலுள்ள போரும் போர்முறைகளும் என்ற அத்தியாயத்திலுள்ள மறப்பண்புஎன்ற பகுதி இவருடைய இரத்தத்திலே எவ்வளவுக்கு ஊறியிருந்தது என்று அறிஞர் வியக்கத்தக்க முறையிலே இவர் பணியாற்றினார். இவருடைய புகழ் உச்சநிலையை அடைந்தது அந்த மாநாடு நடந்த காலத்திலேயே என்பது பலருடைய கருத்து.
அன்றைய அரசாங்கத்தையே இவர் துணிந்து எதிர்த்துநின்றதால், பலவித தொல்லைகளுக்கு ஆளானர். இஸ்லாமியத் தமிழாராய்ச்சிமாநட்டுக்கு இந்தியா போக, இலங்கை அரசு இவருக்கு அனுமதி மறுத்தது. பல்கலைக்கழக வளாகம் ஒன்றை அதே ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நிறுவிய இலங்கை அரசு, இவரை ஒதுக்கி, மூத்த விரிவுரையாளராகக் கடமையாற்றிய இவருடைய பழைய மாணவர். ஒருவரை முதல் வளாகத் தலைவராக நியமித்தது. வளாகத் தலைவர், தம்முடைய பதவியைப் பயன்படுத்தி, யாழ்ப்பாண வளாகத்தின் முதல் பேராசிரியர் என்ற பதவியைத் தட்டிக் கொண்டார், பேராசிரியர் பதவிக்கு முக்கோணப் போட்டி உருவாகியதாயினும், கடுமையான போட்டி வளாகத் தலைவருக்கும் வேலுப்பிள்ளைக்கும் இடையே நிலவியது. நிர்வாகம் எத்தனையோ தில்லுமுல்லுகளைச் செய்தது. அரசு ஆதரவுபெற்றவரை எதிர்த்து, உண்மையின் பக்கம் குரல் கொடுக்க வித்தியானந்தன் இனியும் துணிவாரா என்ற வினாவைப் பலர் எழுப்பினர். இவர் உண்மையை உறுதியுடன் எடுத்துரைத்துக் கடமையைச் செய்யச் சிறிதும் தயங்கவில்லை. பேராசிரியர் தேர்வுக் குழுவிலே, அக்காலத் தமிழ்த்துறைப் பேராசிரியர்களான வித்தியானந்தனும் சதாசிவமும் எதிர்த்து நிற்க, இரண்டு சிங்களவர் உட்பட மூவர் ஆதரவு பெற்ற வளாகத் தலைவர் முதலாவது தமிழ்ப் பேராசிரியராகத் தெரிவு செய்யப்பட்டார்.
28

வித்தியானந்தன் தலைமையிலான இலங்கைக் கிளை தொடர்ந்து ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வந்தது. மூன்றாவது உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடத்திய பின், உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் மையம் தன்னுடைய நடவடிக்கைகளைச் சுருக்கிக் கொண்டு விட்டது. பல்வேறு நாடுகளிலும் நிறுவப்பட்ட அதன் கிளைகள் உலகத் தமிழாராய்ச்சிமாநாடு நடைபெறும்போது ஒத்துழைப்பு நல்குவது தவிர வேறு பணிகளில் ஈடுபடவில்லை. நான்காவது அனைத்துலகத்தமிழாராய்ச்சிமாநாட்டில் நிகழ்ச்சிகள், வாசிக்கப்பட்ட இலங்கை தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் உட்பட வித்தியானந்தனாலேயே பதிப்பிக்கப்பட்டன. நல்லூர்ச் சுவாமி ஞானப்பிரகாசரின் நூற்றாண்டு விழா இலங்கைக் கிளையால் கொழும்பில் கொண்டாடப்பட்டது. வித்தியானந்தன் தலைமையிலே, ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிக்கப்பட்டன.
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறாத காலங்களிலே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, இலங்கையிலே தேசிய பிரதேச மாநாடுகள் நடைபெறவேண்டுமென்ற தீர்மானம், வித்தியானந்தன் தூண்டுதலாலே இலங்கைக் கிளையால் எடுக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு. இவர் அத்தகைய ஒரு மாநாட்டை மட்டக்களப்பிலே நடத்தினார். இலங்கையின் பல பகுதிகளிலுமிருந்து அறிஞர்கள் பங்கு பற்றிய இந்த மாநாடு மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களைச் சிறப்பான ஆய்வுக்களமாக்கிற்று. இனப்பிரச்சினை கூர்மையடைந்து வந்தமையால் நாட்டிலே நிலவிய அசாதாரண சூழ்நிலையும் யாழ்ப்பாண வளாகத்திலும் பின்பு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திலும் இவருடைய பொறுப்புக்கள் அதிகரித்து வந்தமையும், தொடர்ந்து தேசிய பிரதேச மாநாடுகள் நடப்பதற்குத் தடங்கல்கள் ஆகின. வித்தியானந்தனுடைய பேரார்வமமும் கடும் உழைப்பும் 1983 ஆம் ஆண்டு முல்லைத்தீவிலே வன்னிப்பிரதேச மாநாடு நடைபெறக் காரணமாகின. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்கள் ஆய்வுக்களங்கள் ஆகின. மட்டக்களப்பு மாநாடும் வன்னி மாநாடும் நடைபெற்ற போது, சிறப்பு மலர்கள் வெளியிடும் பொறுப்பினை இவரே ஏற்றுக் கொண்டார்.
வளாகத் தலைவராகவும், பின்பு துணை வேந்தராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைப் பத்தாண்டுகளுக்கு மேல் இவர் வழிநடத்தி வந்துள்ளார். இவ்வளவு நீண்ட காலம் ஒரு பல்கலைக்கழகத்தை வழிநடாத்தக் கூடிய வாய்ப்பு, மிகச் சில துணைவேந்தர்களுக்கே கிட்டுகின்றது. தமிழ்த்துறைப்ப்ேராசிரியர்கள் மிக அருமையாகவே இந்த நியமனம் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவிலே மதுரைக் காமராசர் பல்கலைகழகத்துக்கு மட்டுமே தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், மு. வரதலாசனார், வ. சுப. மாணிக்கம் முதலிய தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் துணை வேந்தர்களாகக் குறுகிய காலங்களுக்குப் பணியாற்றியிருக்கிறார்கள். தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணை வேந்தர் வ. அய். சுப்பிரமணியம் தமிழப் பேராசிரியராகவே முதலிலே நியமனம் பெற்றவராயினும்,
29

Page 21
நீண்ட காலம் மொழியியற்றுறைப் பேராசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றியவ ராதலால், மொழியியற்றுறைப் பேராசிரியராகவே பொதுவாகக் கொள்ளப் படுகிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வித்தியானந்தன் தலைமையிலே குறிப்பிடக்கூடிய வளர்ச்சி கண்டது. பரமேசுவராக் கல்லூரியையும் யாழ்ப்பாணக் கல்லூரியின் ஒரு பகுதியையும் இணைத்து, மிகமிக அவசரமாக, மிகக் குறைந்த செலவில் 1974ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யாழ்ப்பாண வளாகம், வித்தியானந்தன் வளாகத் தலைவராக வந்தபோது சிறிதளவே வளர்ச்சி கண்டிருந்தது. விஞ்ஞான பீடத்துக்கான கட்டிடங்கள் புதியனவாகக் கட்டப்பட்டு, யாழ்ப்பாணக் கல்லூரிப் பகுதி கைவிடப்பட்டு, விஞ்ஞானபீடம் திருநெல்வேலிக்கே கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. பாரிய நூல் நிலையக் கட்டிடத்துக்கு அத்திவாரம் போடப்பட்டு ஒரு பகுதிகட்டி முடிக்கப்பட்டது. கைலாசபதி கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. சைவசித்தாந்தப் பேராசிரியர் பதவிக்கு அறக்கட்டளைத் தவிசு இவர் ஒழுங்கு செய்தார். பல்கலைக்கழகத்திலே மருத்துவ பீடம் நிறுவப்பட்டமை இவர் முயற்சியாலேயே கைகூடியது. அரசு, கட்டிடங்களைக் கட்டி, வசதிகளைச் செய்து கொடுத்து விட்டு, மருத்துவபீடத்தைத் தொடங்கும்படி கேட்கவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம், அது தொடங்கிய காலத்திலே தொடங்கியமை, இவரது தன்னம்பிக்கைக்கும் துணிவுக்கும் ஒர் எடுத்துக்காட்டாக அமைந்தது. சித்தவைத்தியக் கல்லூரிக்கென கைதடியிலே கட்டப்பட்டுப்பயன்படுத்தப்படாமலிருந்த கட்டிடமே, மருத்துவபீடத்துக்கான முதல் கட்டிடமாயிற்று, மருத்துவபீடத்துக்குச் சிறந்த மருத்துவநிபுணர்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு இவர் பட்ட சிரமம் நீண்ட கதையாக அமையவல்லது. திருநெல்வேலியிலேயே கட்டிடமும் பிற வசதிகளும் ஓரளவுபூர்த்தி செய்யப்பட்டு, மருத்துவ பீட இடமாற்றத்தை இவர் நடத்தி வைத்தார்.
பல்கலைக்கழகம் சகல பீடங்களும் கொண்ட பூரணத்துவமான பல்கலைக்கழகமாக வளர வேண்டுமென்ற இலட்சியத்தை முன்வைத்து இவர் உழைத்து வந்தார். விவசாய பீடம் கிளிநொச்சிப் பகுதியிலே தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியது. சில ஆரம்ப முயற்சிகள் இது தொடர்பாக இவர் காலத்திலே நிறைவேறியிருந்தன. மருத்துவபீடத்தின் ஒரு பகுதியாக அல்லது தனிப்பீடமாக பல் வைத்தியப் பயிற்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே இடம் பெற வேண்டும் என்பதை இவர் வலியுறுத்தி வந்துள்ளார். தமிழ் மாணவர்கள் பெருந்தொகையின்ர் விரும்பிப் பயிலும் பொறியயில் பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிறுவ அரசு தொடர்ந்து அனுமதிமறுத்துவந்தது இவருக்குக் கவலையாக இருந்து வந்தது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் பணிப்பாளர்கள் குழு கடைசி இரண்டாண்டுகள் இவரையே அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தமை, கல்விமான்கள் வித்தியானந்தனுக்குத் தனிப்பட்ட முறையில் வழங்கிய கெளரவமென்றே கொள்ளத்தக்கது.
3O

பத்தாண்டுகளுக்கு மேல் தலைமை வகித்து ஒரு வளரும் பல்கலைக் கழகத்துக்குத் துணை வேந்தர் செய்த பணி போதியதா என்ற வினாவை எழுப்பலாம். கடந்த பத்தாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் நிலவிய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டே, இவ்வினாவுக்கு விடையளிக்க வேண்டும். இலங்கையிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களை எடுத்துக் கொண்டால், பேராதனைப் பல்கலைக்கழகம் பூரண வளர்ச்சி பெற்றிருந்தமையால், இக்காலத்திலே சிறப்பாக வளர்ச்சி பெறவில்லை. கொழும்புப் பல்கலைக்கழகம் வியக்கத்தக்க வளர்ச்சி கண்டது. உறுகுணைப்பல்கலைக்கழகம் சில ஆண்டுகள் முன்பு பல்கலைக்கழகக் கல்லூரியாகத் தோன்றி வேகமாக வளர்ச்சி கண்டது. உறுகுணைப் பல்கலைக்கழக வளர்ச்சியிலே பழைய நிதியமைச்சர் றொனி டி மெல் விசேட அக்கறையெடுத்துக் கொண்டார். கொழும்புப் பல்கலைக்கழகம் தலைநகரில் அமைந்திருந்தமையாலும் அங்கும் பத்தாண்டுகளுக்கு மேலாகத் துணைவேந்தராகக் கடமையாற்றிய ஸ்டான்லி விஜய சுத்தராவுக்கு உயர் மட்டத் தொடர்புகள் இருந்தமையாலும், அதன் பெரு வளர்ச்சி சாத்தியமாயிற்று. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அத்தகைய வாய்ப்புகள் அமையவில்லை. தமிழ்பேசும் மாணவர்களே கற்றறுவந்த யாழ்ப்பாணப்பல்லைக்கழக வளர்ச்சியிலே, இலங்கை அரசு அதீத அக்கறை காட்டவில்லை. குறிப்பிட்ட பத்தாண்டுகளிலே ஐந்து ஆண்டுகள் வட இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்கட்கியில் இருந்தார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் வட இலங்கைப் பாராளுமன்ற ஆசனங்கள் அனைத்தும் காலியாக இருந்தன.
இனப்பிரச்சினை அல்லது தேசியப் பிரச்சினை மிகவும் கூர்மையடைந்து விட்ட நிலையில், பல்கலைக்கழகத்தைக் கொண்டு நடத்துவதே பெரிய பிரச்சினையாகி விட்டது. அரசாங்கத்தை எதிர்த்து நின்ற அல்லது அரசாங்கத்தோடு போராடி, பதவிவிலகுவதுதவிர, காரியம் எதுவும் சாதித்திருக்க முடியாது. ஆயுதம் ஏந்திய குழுக்கள் பல விடுதலை இயக்கங்களாகச் செயற்பட்ட நிலையிலே, அவற்றுக்கிடையே தோன்றும் பூசல்களில் அகப்படாமலும் முதலிலே இலங்கை இராணுவத்தையும் பின்பு இந்திய அமைதிப்படையையும் சமாளித்தும், பல்கலைக்கழகத்தைக் கொண்டு நடாத்த வேண்டியிருந்தது. இயல்பு வாழ்க்கை குழம்பிய நிலையிலே தலையெடுத்த கணக்கற்ற சிக்கல்களுக்கு வழிமுறைகள் கண்டு, அறுபது வயது கடந்து விட்ட நிலையிலும் எவ்வளவோ சிரமமான பிரயாணங்களை மேற்கொண்டு, அங்கும் இங்கும் ஒடித்திரிந்துவித்தியானந்தன் கடமையாற்றியது கண்டு பலர் ஆச்சரியப்பட்டனர்.
7) மனிதாபிமானி (Humanist)
வித்தியானந்தன் ஒரு பெருமனிதர், மனிதாபிமானம் என்ற பெருங்குணத்தை அபரிமிதமாகப் பெற்றவர்; கருணையாளர். அவருடைய பரந்து
31

Page 22
விரிந்த உள்ளம் அவரை ஒரு பெரிய மனிதராக இனங்காட்டுகிறது; ஏனைய பல்கலைக்கழக ஆசிரியர்களிலிருந்து அவரை வெகுதூரம் உயர்த்தி விடுகிறது. தமிழ் பேசும் மக்கள் பற்றியே அவர் அதிக அக்கறை காட்டி வந்தபோதிலும், சிங்களவர் முதலிய பிற இனத்தவர்களின் அன்பையும் இவர் பெற்றிருந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்திலே ஐந்தாண்டுகள் ஜயதிலகா மண்டபத்தின் துணை மேலாளராகவும் ஆறாண்டுகள் விஜயவர்த்தனா மண்டபத்தின் மேலாளராகவும் இவர் கடமையாற்றியபோது, எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த மாணவர்களை அணைத்து நடந்தார். இவருடைய தனிப்பட்ட உதவிகள் வரையறையின்றி எல்லாச் சமூகத்தவர்களுக்கும் கிடைத்து வந்தன. கமலாதேவி வித்தியானந்தன் "பர்த்தாவுகேற்ற பதிவிரதை'யாக, 'அவர் காரியம் யாவினும் கைகொடுக்கும் புதுமைப் பெண்ணாகத் திகழ்ந்தார்.
தமிழர் சால்பு என்னும் நூலிலுள்ள பதின்மூன்றாம் இயலான பெண்கள்' என்ற பகுதி வித்தியானந்தனுடைய வாழ்க்கை பற்றிய நோக்கிலே செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இயலுக்குப் பெண்கள் என்ற தலைப்புக் கொடுக்கப்பட்ட போதும், இல்லறம், குடும்ப வாழ்க்கை, காதல் மரபு பற்றிய சங்க இலக்கியச் செய்திகள் யாவும் இந்த இயலுள்ளேயே தொகுக்கப்பட்டுள்ளன. இவர் தம்முடைய வாழ்க்கையிலே செயலாக்க முயன்ற இல்லற வாழ்க்கை இலட்சியங்களை இந்த இயலுள்ளே கண்டு கொள்ளலாம். காதல் ஒழுக்கத்தைப் பற்றிய கவிதை மரபு, திருமணம், இல்லற வாழ்க்கை என்ற பிரிவுகள் இவ்விடத்திலே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. மனைவிக்கு விளக்காகிய வாணுதல் கணவனாக, இவர் விளங்கினார். மூன்று ஆண்களும் இரண்டு பெண்களுமாக ஐந்து பிள்ளைகளுடன் வாழ்ந்த இக்குடும்பம் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தமக்குத் தரப்பட்ட வீட்டை ஒரு மடமாக மாற்றி வாழ்ந்தது.
சுமார் 22 ஆண்டுகள் இலட்சியத் தம்பதியர் போல வாழ்ந்த வித்தியானந்த னுடைய குடும்ப வாழ்க்கை, 20 ஆண்டுகள் பேராதனையிலே நடைபெற்றது. தம்முடைய மாணவர்களையும் பழைய மாணவர்களையும், வித்தியானந்தன் அனைத்து நடந்த அளவுக்குப் பிறர் அணைத்து நடந்ததாகத் தெரியவில்ைேல. வித்தியானந்தனுடைய வீட்டுக்கு எப்போதும் போகலாம், தேவையானால் எப்போதும் தங்கலாம், எத்தகைய பிரச்சினையையும் அவரோடு பேசலாம், உதவி கேட்டால், சற்றும் தயங்காது, செய்யக்கூடியதைச் செய்வார் என்பது பொதுவான அபிப்பிராயம், மாணவர்களைக் குருவாக இருந்து அணைத்தது போல, கலைஞர்களை, சிறப்பாக, நாடகக் கலைஞர்களையும் இவர் அணைத்துவந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி வி.வி. வைரமுத்து, மட்டக்களப்பைச் சேர்ந்த வந்தாறுமூலை க. செல்லையா அண்ணாவியார், மன்னார் நானாட்டானைச் சேர்ந்த பென்சமின் செல்வம் முதலிய கலைஞர்கள் வித்தியானந்தனுக்கு மிகவும் வேண்டியவர்களாயினர்.
32

பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த தமிழ்நாட்டு அறிஞர், தமிழ் சங்க நிகழ்ச்சிகளிலே பங்குகொள்ள வரும் எழுத்தாளர், கலைஞர், பேச்சாளர் இலவசமாகத் தங்கி நன்கு உபசரிக்கப்படும் இடம் வித்தியானந்தன் வீடாக இருந்தது. வடிவத்தில் பெரிய மோட்டார் காரையே பயன்படுத்தி வந்த இவர் இலவசமான பொதுமக்கள் போக்குவரத்துச் சாதனமாக அதனைக் கையாண்டார்.
இவர் தம்முடைய பழைய மாணவர்கள்,நண்பர்கள் முதலியோர்களுடைய விலாசம் முதலிய விபரங்களை நுட்பமாகப் பேணி வந்தார். அரசாங்க காரியாலயங்கள், கூட்டுத்தாபனங்கள், தனியார் நிறுவனங்களிலே இவருடைய பழைய மாணவர்கள் அல்லது நண்பர்கள் ஒருவர் இருவராவது காணப்பட்டனர். இவரிடம் தனிப்பட்ட உதவிகோரி வருபவர்களுக்கு உதவுவதற்கு இவர் இத்தகைய தொடர்புகளைப் பயன்படுத்திக் கொண்டார். வேறு எப்பல்கலைக் கழகப் பேராசிரியரும் சமமாகக் குறிப்பிட முடியாத அளவுக்கு நாடறிந்த மனிதராக மாறியிருந்த இவர், தம்முடைய புகழைப் பிறருக்கு உதவும் அச்சாணியாக மாற்றினார்.
வித்தியானந்தனுடைய பெருந்தன்மைக்கான தூண்டுதல் தமிழர் சால்பு என்னும் நூலிலுள்ள ஒன்பதாம் இயலான (சமையவாழ்க்கை) என்பதாகும். சங்ககாலத் தமிழர்களிடையே தமிழ் மக்களுக்குச் சிறப்பான சமயக்கோட்பாடு, ஆசிரியர் வழிபாட்டு முறைகள், சமணம், பெளத்தம் என்பன நிலவியமையை எடுத்துக் காட்டும்இவர், இவை யாவற்றையும் கடந்த பண்பட்ட வாழ்க்கையையே "சமையவாழ்கை"யென எடுத்துக்காட்டுகிறார். இவருடைய வாழ்கையின் திறவுகோல் என்று கூறத்தக்கனவாகச் சமய வாழ்க்கை என்ற பகுதியிலே இடம் பெற்றுள்ள சில கூற்றுக்கள் வருமாறு:
சங்ககாலத்தில் மக்களுக்குத்தொண்டு செய்வதிலும் உலகம் நல்லநிலையில் வாழவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்திலுமே தமிழர் உள்ளம் பதிந்திருந்தது.
அன்பே சமய வாழ்க்கையின் அடிப்படையாக இருந்தது. அக்காலமக்கள் ஒருவர்க்கொருவர் உயிர்விடும் பண்புடையவர்.
முற்காலகத்தில் தமிழகத்தில்வாழ்ந்தோர் தாம் ஒருவருக்கு ஒர் உதவி செய்யும்பொது, மறுமைப் பயனை எதிர்பார்ப்பதில்லை. மறுமைப்பயன் கருதிச் செய்தலை ஒரு வகை வணிகம் எனலாம். அறத்தை விலைகொடுத்து வாங்கும் அத்தகைய அறவிலை வணிகர் அல்லர் தமிழர். தேவர் உண்ணும் அமுதங் கிடைப்பதாயிருந்தாலும் இனியதொன்று கிடைத்துவிட்டது என்றுகருதி, அதனைத் தனியாக உண்பவர் தமிழ்நாட்டிலே இருக்கவில்லை. யாரிடமும்,
33

Page 23
எதனோடும் வெறுப்புக் கொள்பவரும் வாழவில்லை. பிறர் அஞ்சும் இன்னல்களுக் குத் தாமும் அஞ்சி, அதனல் புதிய புதிய நற்செயல்களைச் செய்யாது மனம் மடிந்திருப்பவரும் இல்லை. புகழ்தரக்கூடிய கருமமாயின் தம் உயிரையும் கொடுப்பர்.
நீண்டகாலம் வாழச்செய்யும் ஆற்றலுடைய நெல்லிக்கனியைத்தானே உண்ணாது ஒளவையாருக்கு அதனை ஈந்து, அவர் நெடிதுவாழும்படி செய்தான் அதியமான் நெடு மான் அஞ்சி.
பெருமை பெற்ற பரிசிலன் பரிசில்பெறாது வாடினனாகத் திரும்பிச் செல்லுதல் தனது நாட்டை இழந்ததனினும் மிக இன்னாது என எண்ணினான் குமணன். கொடுப்பதற்கு வேறுபொருள் இல்லாததனால் தன்தலையை வெட்டித் தம்பியிடம் கொடுத்ததால் புலவரின் வறுமை தீரும் என உணர்ந்தான் அவ்வள்ளல்.
வேருேர் இல்லத்திற்கு அறிஞர் சிலர் பசியோடு சென்றனர். இல்லாள் அவரைவிரும்பிவரவேற்ருள்.இருந்த வரகும் தினையும் இரப்போர்க்குப்பசியாற்றித் தீர்ந்து விட்டன. அடுத்த விதைப்பிற்கு ஒதுக்கப்பட்ட விதைத் தினைதான் மிஞ்சியிருந்தது.விதைத்தினையை மிகுந்த மகிழ்ச்சியோடு உரலிடத்துப்பெய்து, குற்றியெடுத்துஇரவலரை உண்பித்தாள். இவ்வாறு பொருள்வேண்டி வருவோர் அறிவாலும், குணம் செயல்களாலும் மிகத் தாழ்ந்தோராயினும் அவர்பாலும் அருள்புரிந்து அவர் வேண்டுவன நல்கிப்புரப்பர்.
பண்டைத்தமிழ்மக்கள் மிகைபட உண்ணாதவர். சிறிதே சினம் உடையவர். சிலவாகிய சொற்களைச் சொல்லுதலோடு பலசொற்களைச் சான்றோர் சொல்லக் கேட்டலை உடையவர்; நுண்ணுணர்வினர்; பெருங்கொடையாளர்; கலங்கிய கள்ளோடு தண்ணிய கட்டெளிவை அளிப்பவர், கனிந்த தாளிதத்தோடு கூடிய கொழுவியதுவையலைப் பிறருக்கு அளிப்பவர்.
முயற்சி செய்வதொன்றே மக்கள் கருதவேண்டுவது. மற்றவை கருதுவது அவரின்கடமை அன்று. இம்முறையில் நற்செயல்கள் செய்வோரே உயர்ந்தோர் எனக்கொள்ளப்படுவர். உயர்ந்த விருப்பமுடையவராய் இருப்பதே உயர்ந்தோர்
என்பதற்கு அடையாளம்.
நல்ல வினைகளைச் செய்தல் இயலாததாய் இருந்தாலும், நல்லதல்ல வற்றைச் செய்தலை நீக்கிக்கொள்ளுதல் வேண்டும். அதுதான் யாவரும் புகழ்வது.
இவ்வாறு பிறர்பொருளை வெளவாது தம்முடைய முயற்சியால் உழைத்த
34

தமிழர் சமூக சேவையைத் தமது கடமையாகப் போற்றினர். மக்கள் இனம் முழுவதும் நலம்பெறல் வேண்டும், அனைவரும் இன்புற்று வாழவேண்டும் என்ற கொள்கை தமிழரிடையே பரவியதனாலேயே (யாதும் ஊரே யாவரும் கேளிர்) என்ற மனப்பான்மையும் உள்ளடக்கியது. இக் காரணிகளினாலேயே, தமிழருக்கு எல்லா ஊரும் ஊராகவும் எல்லா மக்களும் உறவினராகவும் இருக்க இடம் உண்டாயிற்று.
இத்தகைய சங்க காலத் தமிழர் சால் பாலே துாண்டப் பெற்ற வித்தியானந்தன். மூன்று அரசகுலத் தம்பிமாரோடு உடன்பிறந்த அவதாரமூர்த்தி. ஆகிய இராமன் வேடர் குலக் குகனையும் குரங்கினச் சுக்கிரீவனையும் அரக்கர் கோமான் விபீடணனையும் மூன்று புதிய தம்பியராகச் சேர்த்துக் கொண்டதுபோல, எங்கெங்கோ இருந்தவர்களையெல்லாம் அணைத்துத் தம்முடைய பெரிய குடும்பத்தை இன்னும் மிகப்பெரிய குடும்பபாக ஆக்கிக் கொண்டார். இலங்கைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வேறு எவருக்கும் இவ்வளவு மிகப்பெரிய குடும்பம் இருப்பதாகத் தெரியவில்லல. புதியவர்களைக் குடும்பத்திலே சேர்த்துக் கொள்வதாலே, பிரச்சிைைனகள் எழலாம். அவதார மூர்த்தியாகிய சுக்கிரிவனைத் தம்பியாக ஏற்றுக் கொண்டதால், 'வாலிவதை நிகழ்த்தவேண்டிய கடப்பாடு உண்டாயிற்று. இராமன் வாலியை வதைத்தது நியாயமா என்பது பற்றி இன்னும் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வித்தியானந்தனுக்கும் இதுபோன்ற செயல்கள் செய்யவேண்டி ஏற்பட்டதுண்டு.இவரைப்புரிந்துகொண்டு விட்ட இவரது மிகப்பெரிய குடும்ப உறுப்பினர் சிலர், தம்முடைய எதிரிகளை மடக்க இவருக்குக்கோள் சொல்லியும் தம்முடைய தவறுகளில் இருந்து தப்ப இவர் உதவியை நாடியும் இவரைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
சுமார் நாற்பதாண்டுகள் முன்பு, இலண்டனிலிருந்து. திரும்பிய இலட்சியவாதி வித்தியானந்தன், ‘இன்பமுடன் வாழ்வோம் இந்த நாட்டிலே என்னும் எண்ணம்' என்ற தலைப்பிலே தினகரன் பத்திரிகையிலே தொடர் கட்டுரை எழுதினார். இந்த நாட்டுத் தமிழ் இனத்துக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. இலட்சக்கணக்கிலே, தமிழர் வெளிநாடுகளுக்குப் பறந்து கொண்டிருக்கின்றனர். வித்தியானந்தனுடைய பிள்ளைகளிலும் நால்வர் வெளிநாடு சென்றுவிட்டனர். ஐந்தாமவர் செல்ல ஆயத்தமாவதாக அறியப்படு கிறது. வித்தியானந்தனும் தம்முடைய வாழ்க்கையின் இறுதிப் பகுதியிலே சில மாதங்களைக் கொழும்பிலேயே கழிக்க வேண்டியதாயிற்று. அவர் கடைசியாகக் கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சி கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஒழுங்கு செய்த புலவர் சிவங் கருணாலய பாண்டியனார் நினைவுப் பேருரையாகும். 1988இல் இவர் அந்த நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். 1989இல் இவர் பற்றிய
35

Page 24
நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு கொழும்புத் தமிழ்ச் சங்கம் எம்மைக் கேட்டுக் கொண்டது.
குறிப்புரை
பேராசிரியர் வித்தியானந்தன் பல்கலைக்கழகச் சேவையிலிருந்து இளைப்பாற வேண்டிய 65 வயதை அண்மிக் கொண்டிருந்த போது, எம்மை விட்டுப்பிரிந்துவிட்டார். இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து, பல்கலைக்கழகத்துக்கு வெளியிலிருந்து எம்மை வழி நடத்துவாரென்ற எமது எண்ணத்திலே மண் விழுந்து விட்டது. கடந்த பத்தாண்டுகளுக்குள்ளே கைலாசபதி, தனிநாயகம், பண்டிதமணி, சதாசிவம் முதலிய தமிழ் அறிஞர்களை இழந்து கலங்கியிருந்த ஈழத்துக்கு வித்தியானந்தனுடைய இழப்பு பேரிடியாக அமைகிறது. மலையே சரிந்து விட்டது. போன்ற உணர்வு ஏற்படுகிறது.
வித்தியானந்தன் வாழ்க்கையிலே பல எதிர்ப்புகளைக் கண்டிருக்கிறார். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சி ஒடுங்குபவராக, அவர் இருந்திருந்தால், அவர் செயற்கரிய செய்த பெரியாராக வளர்ந்திருக்க முடியாது. தொடர்ந்தும் அவர் எதிர்ப்புகளைச் சமாளித்து, நிலை கொள்வார் என்று பலர் எதிர்பார்த்தனர்.
வித்தியானந்தனோடு முப்பத்து மூன்று ஆண்டுகள் காலம் நெருங்கிப் பழகிய எமக்கு இவரை நினைவு கூர்வது சிரமம் அல்ல. மறப்பதுதான் சிரமம், இப்பேருரையினை தயார் செய்த போது, அவர் எழுதிய சில நூல்களையும் அவரைப் பற்றிய சில நூல்களையும் பயன்படுத்தினோம். அவை வருமாறு:
கலை, இலக்கியப் பத்திரிகை நண்பர்கள் (1984) பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணிவிழா மலர், அபிராமி, அச்சகம், யாழ்ப்பாணம்.
சண்முகதாஸ் அ. (1984) துணை வேந்தர், 'வித்தி, தமிழ் மன்றம், கல்கின்னை, கண்டி
வித்தியானந்தன் சு. (1953) இலக்கியத் தென்றல், தமிழ் மன்றம், கல்கின்னை, கண்டி
(1954) தமிழர் சால்பு, தமிழ் மன்றம், கல்கின்னை, கண்டி. (1979) தமிழியற் சிந்தனை, முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம் (1984) வித்திானந்தம், மணிவிழா வெளியீடு, ஈழமுரசு அறிவுபூட்டகம்,
யாழ்ப்பாணம்.
36


Page 25