கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (விஜயரட்ணம் இரவிகுலராஜன்)

Page 1
பாழ்ப்பாணம் அளவெட் கொழும்பு மட்டக்குளி பாம் வி
அமரர் விஜயரட்ை
அவர்கள் சிவபத நினை:
23 - 1
 

* தெற்கை பிறப்பிடமாகவும் தியை வசிப்பிடமாகவும் கொண்ட
எம் இரவிகுலராஜன் மெய்தியமை குறித்த
DI LIDHIO O - 1999

Page 2


Page 3

அமரர் விஜயரட்ணம் இரவிகுலராஜன்
பூவில் 15 - 08-1948 புகழில் : 23 - 09 - 1999
35 GO.
திதி நிர்ணயம்
ஆண்டு பிரம்மாதி ஆறாம்நாள் புரட்டாதி பூண்ட திரயோதசி யதனில் - ஈணர்டிருந்து மோகன் மனமறிந்த தாசன் ரவிகுலராஜன் ஏகன் பதமடைந்தான் என்றறி.

Page 4

விநாயகர் வணக்கம் ,
வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழப் பான்மைதரு செய்ய தமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வா
யானைமுக னைப்பரவி அஞ்சலி செய்கிற்பாம்.
ஒளவையார் அருளிச் செய்த விநாயகரகவல்
சீதக் களபச் செந்தாம ரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞானும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமு மங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியு மிலங்கு பொன் முடியுந் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் அற்புத நின்ற கற்பகக் களிறே முப்பழ நுகரு மூவிக வாகன இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்க மறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தெ னுளந்தனிற் புகுந்து குருவடிவாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் றன்னை யடக்கு முபாயம் இன்புறு கருணை யினிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிலித் திருவினை தன்னை யறுத்திருள் கடிந்து, தலமொரு நான்குந் தந்தெனக் கருளி

Page 5
மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயி லொரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி 'ஆறா தாரத் தங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையி னெழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பி னாவி லுணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய வசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையு மாதித்த னியக்கமுங் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தி னிரெட்டு நிலையும் உடற்சக் கரத்தி னுறுப்பையுங் காட்டிச் சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்கமும் எண்முக மாகவினிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட வெனக்கு தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யனிதெனக் கருளி உன்னை யறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என்செவியில் எல்லையில்லாத ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத் தினுள்ளே சதாசிவம் காட்டி சித்தத் தினுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்கு அணுவாய் அப்பாலுக் கப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே.

திருச்சிற்றம்பலம் சைவத் திருமுறைப் பாடல்கள் தேவாரம் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்
பண் - குறிஞ்சி கோயில் 1ம் திருமுறை
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
பண் - சீகாமரம் திருப்பிரம்மபுரம் 2ம் திருமுறை
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க் கிங்கேயென் றருள் புரியம் எம்பெருமான் எருதேறிக் கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ் சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே.
பண் - சாதாரி திருநெல்வேலி ம்ே திருமுறை
மருந்தவை மந்திரம் மறுமைநன் நெறியவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்நெஞ்சமே பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத்
துன்றுபைம்பூம் செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலியுறை செல்வர்தாமே.
திருநாவுக்கரசு நாயனார்
திருநேரிசை திருப்பாதிரிப்புலியூர் 4ம் திருமுறை புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும் இவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே.
தனித் திருக்குறுந்தொகை 5ம் திருமுறை
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.

Page 6
திருத்தாண்டகம் திருப்புள்ளிருக்குவேளூர் ம்ே திருமுறை
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட போரானைப் புள்ளிருக்கு வே; ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.
சுந்தரமூர்த்தி நாயனார்
பண் - செந்துருக்கி திருவாரூர் 7ம் திருமுறை
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவாரூர் வாழ்ந்து போதிரே.
திருவாசகம்
d மாணிக்கவாசக சுவாமிகள்
திருப்பெருந்துறையில் அருளியது 8ம் திருமுறை
அன்றே என்றன் ஆவியும் உடலும் உடமை எல்லாமுங் குன்றே அனையாய் என்னையாட் கொண்டபோதே
கொண்டிலையோ இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே.
(குழைத்தபத்து)
பெருமான் பேரா னந்தத்துப்
பிரிய திருக்கப் பெற்றீர் கான அருமால் உற்றுப் பின்னை நீர்
அம்மா அழுங்கி அரற்றாதே திருமா மணிசேர் திருக்கதவந்
திறந்த போதே சிவபுரத்து திருமால் அறியாத் திருப்புயங்கள்
திருத்தாள் சென்று சேர்வோமே.
(யாத்திரைப் பத்து)

திருவிசைப்பா கருவுர்த் தேவர்
கங்கை கொண்ட சோழேச்சரம் 9ம் திருமுறை
அன்னமாய் விசும்பு பறந்(து) அயன் தேட
அங்ங்னே பெரியநீ சிறிய என்னயாள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை என்று(ம்) நான் மறக்கேன் முன்னம்மா லறியா ஒருவனாம் இருவர்
முக்கணா நாற்பெருந் தடந்தோள் கன்னலே! தேனே! அமுதமே! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே!
திருப்பல்லாண்டு சேந்தனார்
பண் - பஞ்சமம் கோயில் 9ம் திருமுறை
மன்னுக தில்லை வளர்கநம்
பத்தர்கள் வஞ்சகர் போயகல பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து பின்னைப்பிறவி யறுக்கநெறி தந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
திருமந்திரம்
திருமூலர்
10ம் திருமுறை ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பெயரிட்டு, சூரையங் காட்டிடை கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே.

Page 7
கபிலதேவ நாயனார்
11ம் திருமுறை விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான்! - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனும் ஆம்; தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.
பெரிய புராணம் சேக்கிழார்
12ம் திருமுறை
இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார் “பிறவாமை வேண்டும்; மீண்டும்
பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும; இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா! நீ ஆடும் போதுன் :
அடியின்கீழ் இருக்க” என்றார்.
திருப்புகழ் அருணகிரிநாதர்
பத்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனப் பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் கருள்வாயே
உத்தமா தானசற் குணர்நேயா ஒப்பிலா மாமணிக் asifehutgfT வித்தகா ஞானசத் தினிபாலா
வெற்றிவே லாயுதப் பெருமாளே.
வாழுதது வான்முகில் வாழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய
சிவபுராணம்
திருவாசகச் சிறப்புப் பாயிரம்
தொல்லை இரும் பிறவிச் சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எம் கோன் திருவாசகம் என்னும் தேன்
(கலி வெண்பா)
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகமமாகி நின்றணிணிப் பான்தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தைஅடி போற்றி தேசன் அடிபோற்றி சிவன்சே வடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பணியான்
கண்ணுதலான் தன்கருணை கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண்நிறைந்துமண் நிறைந்துமிக்காய் விளங்கொளியாய் எண் இறந்து எல்லை இலாதானே நின்பெரும் சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
... 10
15
20
25

Page 8
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாயப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன்பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நீணியானே மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே
0 கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு முடி மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
30
35
40
45
50
55

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே சே அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆராவமுதே அளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே யுள்ளானே
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமென் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச்சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்எம் மையா அரனேஓ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலங்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற்பிறவி அறுப்பானே யோவென்று சொல்லற்கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
65
70
75
80
85
90
95

Page 9
சிவமயம்
கொழும்புத்தறை சிவயோக சுவாமிகள் அருளிய நற்சிந்தனைப் பாடல்கள்
குருபரன் திருத்தாள் சரணம்
நீயென்னை ஆளாயோ!
சோதிப் பிழம்பே சுரிகுழலாள் தன்கணவா ஆதிப் பொருளே யறியாமை யால்மிகவும் பாதிக்கப் பட்டேன் பரனே யினியுனது
நீதிக் கழல்காட்டி நீயென்னை யாளாயோ.
ஆளான மெய்யடியா ரகங்கோயில் கொண்டவனே! கேளாயோ வின்னுங் கிருபையுனக் கில்லையோ? பாழாகப் போகாமற் காப்பதுன்றன் பாரமையா வாளா விருந்தாற் பழியுனக்கு வந்திடுமே.
வந்துன் னடியடைந்த மெய்யடியார் வருத்தமெல்லாம் வெந்துபோம் வண்ணம் மிகுகருணை நீயளித்தி யந்தமொழி கேட்டு அடியேனு முன்னடிக்கீழ் வந்தேன் கருணை வழங்காய்நீ வான்பொருளே.
முத்திக்கு வழி
ஆசிரியப்பா
முத்திக்கு வழியை மொழியக் கேண்மோ சத்தியம் பொறுமை சாந்த மடக்கம் நித்தியா நித்திய வத்து விவேகம் பத்திசெ யடியாரைப் பணிதல் பகலவன் எழுமுன் எழுதல் இரும்புன லாடல் வழுவிலைந் தெழுத்தும் வரன்முறை பயிலல் குருபதம் பணிதல் கோலநீ றணிதல் வரும்பசிக் குண்ணல் வாயுற வாழ்த்தல் சாத்திரம் பயிறல், தன்போற் பிறரையும் பார்த்தல்; பணப்பற் றொழித்தல்; பண்புடன் வார்த்தை யாடல்; வாதனை தீர்த்தல் கோத்திரங் குலமெனுங் கோட்பா டொழித்தல் எட்டுணை யேனும் வேண்டுதல் வேண்டாமை யின்றி யென்றும் ஆண்டவ னடிக்கி ழமர்ந்து வாழ்தலே.

எழில் நல்லைவாசன் இராகம் - இந்தோளம் தாளம் - ஆதி
பல்லவி எங்கள் குருநாதன் எழில்நல்லை வாசன் இங்கும் அங்கும் எங்கும் பிரகாசன்
அனுபல்லவி
மங்கள கரமான வாக்யப்ர காசன் மாறாத மெளன தியானப்ர வேசன் (6ΠΠΕ)
சரணங்கள் அன்பர்ச காயன் ஆனந்த சாகரன் அல்லும் பகலும்நல்லை வீதியிற் சேகரன் என்பிழை யாவும் பொறுத்தெனை யாண்டவன் இரவும் பகலுமென்றன் மனத்தினில் தாண்டவன். (எங்)
வஞ்சம் பொறாமைகோபம் வைத்திடும் மாந்தர்க்கும் அஞ்சாதே யென்றருளை யீந்திடுஞ் சுதந்திரன் கஞ்ச மலர்ப்பதத்தைக் கனவிலும் மறவோர்க்குப் பஞ்சாமிர் தம்போனெஞ்சிற் பண்புட னினிப்பவன். (எங்)
சொல்லு சிவமே
சொல்லு சிவமே சொல்லு சிவமே
சுகம்பெற மார்க்கமொன்று சொல்லு சிவமே வெல்லும் பகையொழியச் சொல்லு சிவமே
வேறுபொரு வில்லையென்று சொல்லு சிவமே அல்லும் பகலுமறச் சொல்லு சிவமே
அன்பே சிவமென்று சொல்லு சிவமே கல்லுங் கரையக்கவி சொல்லு சிவமே
காயமே கோயிலென்று சொல்லு சிவமே,
அல்லலற்று வாழவழி சொல்லு சிவமே
அகம்பிர மாஸ்மியென்று சொல்லு சிவமே எல்லவர்க்கு நல்லனென்று சொல்லு சிவமே
எல்லாஞ் சிவன்செயலாய்ச் சொல்லு சிவமே நில்லாதிவ் வாழ்வென்று சொல்லு சிவமே
நீயுநானு மொன்றென்று சொல்லு சிவமே பொல்லாப்பிங் கில்லையென்று சொல்லு சிவமே
புத்தடியோம் நாங்களென்று சொல்லு சிவமே, 2

Page 10
கொல்லாமை பெரிதென்று சொல்லு சிவமே
கூசாமல் எவர்முன்னுஞ் செல்லு சிவமே நல்லோர் நடுவிருக்கச் சொல்லு சிவமே
நாமே யனைத்துமென்று சொல்லு சிவமே உல்லாச மாயெங்குஞ் செல்லு சிவமே
உண்மை முழுதுமென்று சொல்லு சிவமே கல்லார்க்குங் கதியென்று சொல்லு சிவமே
கட்டிம னத்தையாளச் சொல்லு சிவமே, 3
நல்லூர் வீதியில் இராகம் - பிலஹரி தாளம் - ரூபகம்
பல்லவி எந்நாளும் நல்லூரை வலம்வந்து வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே
அனுபல்லவி அந்நாளில் ஆசான் அருந்தவம் செய்தஇடம் அதுவாத லாலே அதிசயம் மெத்த உண்டு (எந்நாளும்)
சரண்ங்கள் வேதாந்த சித்தாந்தம் கற்றதனா லென்ன வேடிக்கைக் கதைகள் பேசினா லென்ன வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமற் போமே (எந்நாளும்)
சத்தியம் பொறுமை சாந்தம் அடக்கம் நித்தியா நித்தியந் தெரியும் நிபுணர் பத்திசெய் உத்தமர் பரவும்நல் லூரில் நித்தியம் வந்துபார்த்தால் முத்திநிச் சயமே (எந்நாளும்)
ஓம் தத் சத்
இருவருந் தேடிக் காணா இறைவ னென்போ லுருத்தாங்கி இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்னா னிவனென்ன ஒருவரு மறியா தோடியுலாவி யுவகை பூத்த முகத்தினராய் ஒருநா ளென்றனை யுற்று நோக்கிஓர் பொல்லாப்பு மிலையென்று அருவமுங் காட்டி யுருவமுங் காட்டி யப்பாற் கப்பாலாம் அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டி யந்த மாதி யில்லாச் சொரூபமுங் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சத்தில் மாட்டி விட்டான் துன்ப மிறந்தன வின்ப மிறந்தன சோதிசோதி சிவசோதி

சிவத்தினை வளர்க்கும் பாக்கிய மெமக்குச் சித்தித்த தினிமேலே தெய்வம் வேறே யுண்டென வெண்ணுஞ் சிந்தையு மிறந்ததுவே அவத்தினிற் செல்லும் மனத்தினை வெல்வோம் ஐம்பொறி வழிச்செல்லேம் அழியா மெய்ப்பொரு ளாகிய ஆன்மா அறிவோம் நாம் நன்றாய் தவவழிச் செல்வோம் குருமொழி கொள்வோம் தன்னைத் தானறிவோம் சாந்தம் பொறுமை யேய்ந்த நற்பணி சந்தத மணிந்து கொள்வோம் உவத்தலுங் காய்தலு மோடி யொளித்தன ஒன்றுங் குறைவில்லோம் உண்மை முழுதும் நீ ஓதுக தினமும் ஓம்தத் சத்ஓம் 2
கதிரவ னெழுமுன் காலை யெழுந்து கைகால் முகங் கழுவு கடிமல ரெடுத்து மாலை தொடுத்துக் கடவுளைப் பூசனைசெய் அதிர வராமுன் மனத்தினை யடக்கி ஐம்பொறி வழிச்செல்லாது ஆண்டவன் திவ்விய பாதத்தை வேண்டி ஆசையை வென்றிடலாம் முதிர முதிர முழுவது முண்மை யெனமுனி சொன்னமொழி முகமுக மாகக் கண்டு தெளிந்த முத்தியிற் சேர்ந்திடலாம் இதிலோர் ஐயமில்லை யில்லை யெல்லா மவன்செயலே இரவும் பகலு மிதய வெளிக்குள் ஏத்துக ஓம் தத்சத் 3
எண்ணி யெண்ணிப் பணிவார் நெஞ்சே யீசன் உறைகோயில் இருந்துங் கிடந்தும் நடந்துந் தொடர்ந்தும் ஏத்திப் பணிவோமே புண்ணிய பாவ மிரண்டுங் கற்பனை போக்கொடு வரவில்லாப் பொருளே நாங்கள் அருள் கொண் டறிநீ புத்தியை நாட்டாதே மண்ணில் வந்து பிறந்ததும் வாழ்ந்ததும் மாமா யையிதனை மாதவ ரறிவார் மற்றவ ரறியார் மதியா தேயிதனை எண்ணில் காலம் உயிரோ டிருப்போம் ஏதுக்கு மஞ்சாதே இயைந்த படிநீ நடந்துகொ ளென்றும் ஏத்துக ஓம்தத்சத் 4.
சிவனே உன் தரிசனந்தாராயோ
இராகம் - ஆனந்தபைரவி தாளம் - ஆதி
பல்லவி சிவனே யுன்தரிசனந் தாராயோ தேவாதி தேவர்தொழும் பெருமானே
அனுபல்லவி
தரிசனந் தாராய் தமியேனைக் காவாய் தத்துவா தீதனே சங்கர சிவசம்போ (சிவனே)

Page 11
சரணங்கள் அரிய விருவரும் அறியாத விமலனே கரியுரி போர்த்த கருணைக் கடலே திரிபுர தகனனே தில்லையில் வாசனே சிவகாமி யம்மை பூசிக்கு மீசனே (சிவனே)
வரவர மனசு சங்கடப் படுகுதே வாராய் துயர்தீராய் கண்பாராய் என்னைக்காவாய் இரவும் பகலுமுன்றன் இணையடி மறவாமல் பரவி யானந்த பைரவி ராகம் பாடி (சிவனே)
அத்துவிதப் பொருள் காப்பாம்
அத்துவி தப்பொருள் காப்பாம் - எனக்
கடியார்க ளென்றென்றுங் காப்பாம்
சித்தருந் தேவருங் காப்பாம்- என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம் (அத்து) 1
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளும் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம் (அத்து) 2
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம் - எனக் கருளை யளிக்குங் குருபரன் காப்பாம் (அத்து) 3
பஞ்சப் புலன்களுங் காப்பாம் - என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பாம் - நல்ல குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம் (அத்து) 4
சந்திர ஆரியர் காப்பாம் - எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம்- நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம் (அத்து) 5

மங்களம் ஜெய் மங்களம் அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத்தன்னா லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீகாழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
நானோ உடலை வைத்திருப்பவன். நீயே உயிர்மூச்சை பிடித்திருப்பவன் என் உடலின் இரகசியத்தை நீ அறிவாய் உன் உயிர்மூச்சின் இரகசியத்தை நான் அறிவேன்.
அதனால் தான் உனதுடல் என்னுள்ளே இருக்கிறது.
நீயும் அறிவாய் நானும் அறிவேன் ஓ ராமநாதா.
உனது உயிர்மூச்சு எனது உடலினுள் இருக்கும் அதிசயத்தை
தேவரதாசிமய்யா (கன்னட வீரசைவ வசனங்கள் - கி. பி.10)

Page 12
யோகர் சுவாமிகளின் அருள்மொழிகள்
தவத்திலே மேம்பட்டவர்களைக்கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவத் தியானம் செய்.
நாங்கள் எங்கள் சிறுமைக்குணத்தால் இயல்பழிந்து தரும வழி யினின்று தவறுகிறோம். தவறுதல் நீங்கி திடமுண்டாகச் சிவத் தியானமே சிறந்த கருவி.
அனைத்தும் அவன் செயல்; அவனன்றி அணுவும் அசையாது. நாம் இழந்து போவதுமொன்றும் இல்லை. ஆதாயமாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக்கின்றோம்.
ஆண்டவனையன்றி வேறொரு பொருளுமில்லை. அனைத்தும் அவன் செயல். உமது சுமை முழுவதையும் திருவடிக்கீழ் இறக்கி வைத்து இளைப்பாறு. கவலைக் கிடங்கொடாதே. நான் செய்தேன், அவன் செய்தானென்று நலியாதே. விழித்திடு.
தன்னைப்போல மற்றவர்களையும் நேசித்தலே ‘தவம்”. அதுவே அறம்.
மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழுமனத்தோடு விரும்புவானானால் சிவத் தியானத்தைத் தினந்தோறும் செய்து வரக் கடவன்.
ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது. ஒழுக்கமுடையார் எல்லாமுடையார். ஒழுக்கங்களாவன கொல்லாமை, கள்ளாமை, பிறர் வசை உரையாமை, பிறர் பொருள் கவராமை, தாழ்மை, பொய்யுரையாமை முதலியனவாம்.
தரும நெறியினின்றும் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திரு முன்னிலை என்று சாதனை செய்.
சிவத் தியானம் என்னும் மருந்தைத் தினந்தோறும் சாப்பிட்டு வா. மனக்குரங்கின் பிணி மாறும்.
கண்ணைப் போலக் காக்க அறத்தை.

அமரர் விஜயரட்ணம் இரவிகுலராஜன் அவர்களின்
வாழ்க்கை வரலாறு
அமரர் இரவிகுலராஜன் அவர்கள் வடபகுதியின், கலையும், கலை சார் விழுமியங்களும் குன்றாத அளவெட்டிக் கிராமத்தில், விஜயரட்ணம் என்பவருக்கும், புனிதவதி அம்மையாருக்கும், 1948ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15ம் திகதி, மூலநட்சத்திரத்தில் மூத்த புதல்வராகத் தோன்றினார்.
அமரர் அவர்கள் பிறந்த அன்றைய தினம், இந்திய சுதந்திர தினமாகையால், இலங்கை பூராகவும் கொண்டாட்ட தினமாக அமைந்தது. இணுவில் வைத்தியசாலை வீதியால் மேளதாளங்களுடன் வந்த ஊர்வலத்தின் சற்று முன்னே வருகை தந்து கொண்டிருந்த கொழும்புத் துறை யோகள் சுவாமிகள், வைத்தியசாலை வாயிலில் நின்ற தந்தையார் விஜயரட்ணத்தை நோக்கி, “உன்னிடம் ஒருவர் மேளதாளத்துடன் வருகிறார்” எனக் கூறினாராம். சற்று நேரத்தின் பின் வைத்தியசாலையின் உள்ளே சென்ற தந்தையார், பிறந்திருந்த புதல்வனைக் கண்டு, சுவாமி களின் கூற்றினை எண்ணி, எண்ணி அகமகிழ்ந்தார். தந்தையார் அவர்கள் யோகள் சுவாமிகள் மீது இடையறா அன்பும், பக்தியுமுடைய அடியாராக விளங்கினார். சுவாமிகள், அவருக்கு ஏற்பட்ட பல இன்னல்களின் போது கருணை மழை பொழிந்து தடுத்தாட்கொண்டமையும், அவருக்கு சுவாமிகள் எழுதிய திருமுகமும் - ("நானே நீ” - என்னுடைய இராச்சி யத்தில் இராப்பகலில்லை") குறிப்பிடத்தக்கவையாகும்.
அமரர் அவர்களை "ரவி” எனச் சுருக்கமாக யாவரும் அன்புடன் அழைப்பர். தனது பதினோராவது வயதில் தந்தையை இழந்த அவர், தாயாருடனும் தனது நான்கு சகோதரர்களுடனும், பல முறைகள் யோகர் சுவாமிகளின் ஆச்சிரமத்திற்குச் சென்று தரிசனம் பெற்று வந்தார்.
அவரது பதின்மூன்றாவது வயதில் ஏற்பட்ட மாறாக்கொடிய நோயினை (வெண்தேமல், லிகோடிமா) அறிந்த சுவாமிகள், அவரின் தாயார்பால் பேரிரக்கமுடையவராய், “இந்தியாவிலுள்ள வைத்தீஸ்வரப் பெருமானுக்கு நேர்ந்து வை” என்று ஆறுதல் கூறி அற்புதம் செய்தார். அன்றிலிருந்து அந்நோய் மின்னல் வேகத்துடன் குணமாகியமை சொல்லொணா அற்புதமாகும்.
யோகர் சுவாமிகள், அமரர் அவர்களுக்கும், அவரது உறறார், உறவினருக்கும் கூறிய அருள்வாக்குகள் யாவற்றையும், கனது

Page 13
அனுபவத்தால் உணர்ந்து கொண்ட அண்ணலார், சுவாமிகளின் பெரும் பக்தரானார். “யோகர் சுவாமிகளின்’ நாமத்தை நாம் ஒரு முறை செப்பினாலே அன்பர் இரவிகுலராஜன், மெய்மறந்து நிற்கும் நிலை செல்லுதற்கரியது. VIL
அன்பும், பண்பும் பெருக நல்லொழுக்க சீலராக வாழ்ந்து, பாட சாலையிலும், சமூகத்திலும் நன்மதிப்புப் பெற்று, தனது உயர் கல்விக்காக கொழும்பு சென்றார். கொழும்பில் "சாம்பமூர்த்தி அன்ட் சன்ஸ்", “விற்றோல் பெளஸ்ரெட்” போன்ற கம்பனிகளில் பணியாற்றி கணக்காய் வாளராக அனுபவம் பெற்றார்.
1980இல், அமரர் சண்முகராசா, ஈஸ்வரி அம்மையார் ஆகியோரின் செல்வப்புதல்வி இராஸேஸ்வரியை திருமணம் செய்து குடும்பச் சிறப்பெய்தினார். பின்னர் சேதுவத்தை மில்ஸ் கம்பெனியில் கணக்காளராக உயர்பதவி பெற்று, தொழிற் சிறப்பெய்தினார். ஒருங்கே குடும்பச் சிறப்பும், தொழிற்சிறப்பும் எய்திய இவர் இல்லற வாழ்வினை, வள்ளுவப் பெருமான் கூறிய "விருந்தோம்பல்” வரைவிலக்கணத்திற்கமையச் சிறப்புற நடாத்தியமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
இல்லற வாழ்வில், செந்தூரன் எனும் செல்வப்புதல்வனுடன் மேலும் பல செல்வப் பேறுகளும் அடைந்து, பத்தொன்பது வருடங்கள் இனிதே வாழ்க்கை நடாத்தி வந்தார்.
“மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற கருத்திற்கமைய, "பிறர் நலனையே’ தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டார் எனக்கூறின் மிகையாகது. இவரின் குறிக்கோள் வெற்றிபெற இவரின் பாரியாரும் ஒன்றிணைந்து செயற்பட்டமை சிறப்பம்சமாகும். நண்பர்களுடன் கலகலப்பாகப் பழகும் சுபாவமுடைய இவர், நகைச்சுவையுடன் பேசி எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிடுவதில் சமர்த்தர்.
திடீரென ஏற்பட்ட நோய், இவரை இந்திய மண்ணில் சிவபதமடைய வைத்தது. நோயுற்றிருந்த காலை "சிதம்பரம் போக வேண்டும்” எனப் பலமுறை கூறியமை அவரின் ஆழ்ந்த ஆத்மீகத்தைப் புலப்படுத்துகிறது. இவர் பிரிவினால் குடும்பத்தவர், உற்றார், உறவினர் நண்பர்கள் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
வாழ்க அவர் நாமம். வளர்க சிவதொணர்டு
v., ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

நினைவாஜ்சலி ரவி குலராஜன் என்றோர் மனித நேயமிக்க ஒரு மகா மனிதனைப் பற்றி, அவருடைய சமகாலத்தவன் என்ற ரீதியிலும், நெருங்கிப் பழகி யவன் என்ற ரீதியிலும் பெருமையுடன் ஞாபகப்படுத்துவதுடன், அவருடைய அழியாத மானுடப்பண்பிற்கு எண்ண மலர்களை அஞ்சலி செய்து வழி பட்டுக் கொள்கின்றேன்.
பாரி பெருநிலப்பரப்பு மன்னனாய் இருந்து வள்ளலாய் வாழ்ந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் பாரி போன்று வாழ்ந்து, ஏறத்தாழ ஒரு திங்களுக்கு முன்னர் எம்மை விட்டு நீங்கிய என்னினிய நண்பன் ரவிகுலராஜன் எளிமையாகவே வாழ்க்கையை ஆரம்பித்து, வசதிகள் வந்ததும் தன் பழைய வாழ்க்கையின் சொந்த பந்தங்களையோ உற்றார் உறிவினர்களையோ சுற்றம் சூழலையோ, பந்து மித்தரர்களையோ மறக்காமல், தன்னால் இயன்ற அளவிற்கு அவர் சந்திக்க நேர்ந்த எல்லார் வாழ்க்கை விளக்குகளுக்கும் எண்ணெயாக இருந்து திரியின் சுடராக இன்றும் ஒளிர்வதில் அவரது வாழ்வின் அர்த்தம் எம் எல்லாருக் கும் புரிகின்றது.
இளம் வயதிலிருந்தே, யாழகத்தில் வாழ்ந்து, தவராஜ செம் மேருவான யோகர் சுமாமிகளின் நேரடிச் செல்வாக்கிற்கும் கண்காணிப் பிற்கும் உள்ளாகிய எமது ரவிகுலராஜன், பற்றுகள் அற்றானின் பற்றி னைப் பற்றியே வாழ்ந்ததனால், ரவிகுலராஜனின் மனம், அவர் மட்டுமே வாழ்ந்த குறுகிய ஒன்றாக அல்லாமல், நாம் எல்லோரும் வாழ்ந்த மிக விசாலமானதாக இருந்தது.
ரவிகுலராஜன் எம் மத்தியில் வாழ்ந்த போது எல்லாருடனும் கண்ணியத்துடனும், கருணையுடனும் மிக நெருங்கி வாழ்ந்தார்.
அவர் ஞாபகம் நெஞ்சில் இனிக்கின்றது. அவர் மறைவு நினைவை வருத்துகின்றது. அவர் சான்றோர் நிழலில் ஒதுங்கியதால், இதமானவர். இங்கிதம் தெரிந்தவர்.
அவரது இம் முறையான வாழ்க்கை பிறவிக் கடல் கடந்து சத்திய சங்கமம் காண வைத்துள்ளது.
வாழ்வின் கொடுரங்கள் எங்கிருந்தாலும் அவற்றை வேரோடு வெறுத்தவர். à
அவர் ஒரு யுக புருஷன். மலரப் போகும் புது யுகத்தில் எம்மோடு இருக்க மாட்டார் என்பது எங்கள் இதயங்களில் ஒரு ஆறாத, ஆழமான புண்ணாகும்.
அவர் பிரிவால் வாடும் மனைவி, மகனுக்கும் - தாய், சேய்களுக்கும்" எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
முகம்மது கனி அபூயூசூப் முன்னாள் போக்குவரத்து, தொழிற்றுறை அமைச்சர், வடக்கு-கிழக்கு மாகாணம்.

Page 14
AN AFFECTIONATE APPRECATION BY A NEGHBOUR AND FRIEND
Mr. V. Ravikularajan
The unexpected demise of Vijayaratnam Ravi kularajan was a great blow to his family and friends. He was born in Jaffna and his full carreer was in Colombo. I knew him for the past six years, after he came to reside at our housing complex. For the folks, his death is great loSS as he was a peace loving, ever helpful person, whose company was always entertaining. He could fit into any company and could speak with ease on any subject. As a co-resident he and his wife were genorous contributors for any events which took place in the complex. He was not interested in hardcore politics. He would equate havenots haves as equals.
I have always been inspired and moved by the closeness of Mr & Mrs. Ravikularajan. They were a perfect pair. He would do the craziest things and she would quickly back him up. She was subtle but supportive. Ravi was a loving husband to Rajes and a dutiful father to his only son Chenthuran. Ravi and Rajes were known to be great host, and they made the most unusual food that was scrumptious. They would always find time to sit and chat with their guests. It is very difficult to imagine get-together and parties without Ravi. There will be a definite void, one that can never be filled.
My heartfelt condolences to his ever loving wife, son and relations. We will remember you dear Ravi, until we all meet again on the beautifull shore. Till then may God keep you in his loving care.
Friend K. THEVAKADACHAM

எமது குடும்பத் தலைவர் விஜயரட்ணம் ரவிகுலராஜன் அவர்கள் நோயுற்று வைத்தியசாலையிலிருக்கும் பொழுது, அவருக்கு வைத்தியப்பணி செய்த வைத்திய நிபுணர்களுக்கும், தாதிமார்களுக்கும், அன்னாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்க்கும், அனுதாபச் செய்திகள் அனுப்பியோருக்கும், தொலைபேசி மூலம் தயரில் பங்கு கொண்டோருக்கும், சகலவழிகளிலும் உதவிகள் பல புரிந்தோர்க்கும், அந்தியேட்டி சபிண்டீகரணக்கிரியைகளில் கலந்து கொண்டோர்களுக்கும் இந்நினைவு மலரினை அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எமத நன்றிகளைத் தெரிவித்தக்கொள்கிறோம்.
1/48-91, பாம் வீதி, LD606016,
மட்டக்குளி, கொழும்பு 15. மகன். \தொலைபேசி : 524.395 /

Page 15
சுவாமி விவேகானந்தர் மகாசமாதியடைந்த சில நாட்களுள் தன் சக சாதகர் ஒருவருக்குத் தோன்றிப் பின்வருமாறு கூறினார்:
"நான் என்னுடம்பைத் தப்பி விட்டேன்
மகாயோகி அரவிந்தர் மகாசமாதி அடைதற்கு சிலநாட்களுக்கு முந்தி பின்வருமாறு கூறினார்:
"நாண் இனி வரும்போத இப்பூவுலகில் நிலைத்த நிற்க வல்ல உடம்போடு வருவேன்
இப்பிரபஞ்சமனைத்துமே
பிரபஞ்ச சமுத்திரமாக இருக்கும்போது, இங்கே சாவேது? வாழ்வேது?
யாரோ
மரத்து நெருப்பு மரத்தை எரித்தது போல நான் எரிந்தேன்
பெருவெளிக் காற்று நறுமணம் நாசித்துளையை நிறைத்ததுபோல நான் நிறைந்தேன்.
மெழுகுப் பாவை தீக்கொழுந்தானது போல நான் தீக்கொழுந்தானேன்.
பிரபுவே நான் உம்மை வணங்கினேன். உலகத்தை இழந்தேன்.
அல்லம்ம பிரபு (கன்னட வீரசைவ வசனங்கள் - கி. பி.12)


Page 16


Page 17
பட்டுப்பூச்சி ஒன்று தன் ஒளனத்தின் நூலிழை அன்புடன் தன் வீட்டை தன் உடலையே இறுக்க சுற்றி, சுற்றி இறுதியிலே தானே இறந் நானும் என் மனத்தின் ஆசையின் எரிந்து போகின்றேன்.
ஓ பிரபுவே என் மனதின் பேரவாவை வெளியேற உன் வழிதை
மல்லிகார்ஜினனே.
மகாதேவ (கன்னட வீர

pu Tb நெய்கையில்
J}T5
து கொண்டிருப்பது போல
ன் ஆசையால்
u හිංipt ன காட்டு
Tuшӑѣaыт
சைவ வசனங்கள் - கி. பி.10)
PAGE SETTERS 72, Messenger Street, Colombo 12. Phone : 330.333