கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சக்தி தோத்திரங்கள்

Page 1
தி தோத்
 

IRISSOT
திர
Б
- சிவசிவ

Page 2
சமர்ப்பணம்
திருமதி. சிவபாக்கியம் சிவசுப்பிரமணியம் (தொல்புரம்/பதுளை) அவர்களின் ஞாபகார்த்தம். பிறப்பு 05-05-1910 இறப்பு - 08-05-2001
B22-3-4 சொய்சாபுர தொடர்மாடி, மொறட்டுவ.
 

2 -
சக்தி தோத்திரங்கள்
ஓம் சக்தி ஒம்
விநாயகள் துதி திருச்சிற்றம்பலம்
சித்தி புத்தி சேர் தருவ தில்லைச் சிதம்பரத்தில், முக்தி கொடுத்தோன் முதல்வா மூத்தோனே நித்தம் நித்தம் உன்னையே நோக்கி உகந்து வரமளிக்கும் அன்னையே ஈன்று எடுத்தாய்
கலைநிறை கணபதி சரணம் சரணம் கஜமுக குணபதி சரணம் சரணம் தலைவநின் இணையடி சரணம் சரணம் சரவணபவகுவற சரணம் சரணம் சிலைமலியுடையவசரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் உலைவறு மொருபரை சரணம் சரணம் உமைசிவையம்பிகை சரணம் சரணம்
பூரீ காயத்திரி மந்திரம்
ஓம்! பூர்பு வஸ்ஸவ : தத் ஸ்விதுர் வரேண்யம் பர் கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ஃப்ரசோதயாத் ஒம்.

Page 3
இதன் பொருள் : யார் நம்முடைய அறிவை தூண்டுகிறாரோ அந்த சுடருடைய கடவுளின் மேலான ஒளியை தியானிப்(8штиотаъ.
பராசக்தி
மாதா பராசக்தி வையமெல்லாம் நீநிறைந்தாய்! ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே ஏதாயினும் வழிநீசொல்வாய் எமதுயிரே! வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே. 4.
வாணி
வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள் ஆணி முத்தைப் போலே அறிவு முத்து மாவையினாள் காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய் மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே 5
பூரீ தேவி
பொன்னரசிநாரணனார் தேவி புகழரசி மின்னு நவரத்தினம் போல் மேனியழகுடையாள் அன்னையவள் வைய மெல்லாம் ஆதிரிப்பாள் பூரீதேவி தன்னிரு பொற்றாளே சரண் புகுந்து வாழ்வோமே 6
பார்வதி
மலையிலேதான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள் உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள் நிலையில் உயர்ந்திடுவாள், நேரே அவள் பாதம் தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே 7
»kk ***
இமவான் பெற்ற இளையாய் போற்றி மலையத் துவுசன் மகளே போற்றி கலையாய்க் கனிந்த தலைமகள் போற்றி தக்கன் மகளாய்த் தனித்தாய் போற்றி, முக்கட் சுடரின் முதல்வி போற்றி 8

சீலமுடன் வாழ அருள் செய்யும் தேவி செம்மையுளம் எனக்கருளும் செல்வத் தேவி ஏல நறுங் குழலியாய் இனிய காஞ்சி இன்ன கரும் என்னுளமும் அமர்ந்த தேவி ஆலமதும் அமுதமென ஆக்குந் தேவி அடியேனறியாமையையும் நீக்கும் தேவி காலமெலாம் உனை மறவேன் அருளாய்க் காஞ்சிக் காமாட்சியம்மையே போற்றி போற்றி. 9
காஞ்சி காமாட்சி
முத்துமணி மண்டபம் ரெத்தினச் சிம்மாசனம் முழங்கிடும் மணி ஓசையே முப்பெறும் சக்தியாம் திரிசூலம் ஏந்திடும் முத்துநகை பெற்ற தாயே பத்து விரல் சூட்டிய பவழமணி மோதிரம் பாடக தண்டை கொலுசும் பச்சையுடன் நீலமும் புஷ்பராகத்திலும் பதித்திட்ட தாலியழகும் முத்து முக்குத்தியும் முழுவைரக் கம்மலும் முத்தார ஒட்டியானம் m முத்து மணிமாலையுடன் முக்தி தரும் கைகளில் முக்கணிக் கரும்பு வில்லும் சித்திரத்தில் என்றுமே சக்தியாய் விளங்கிடும் தேவியவள் அருள் மாட்சியே செந்தமிழ் பாடிடும் சிந்தையில் வாழ்ந்திடும் தேவியுமை காமாட்சியே! 10
காசி விசாலாட்சி
ஆதி சிவன் உடல் மீது பாதி உடல் பெற்றிட்ட அழகான அன்னை உமையே ஆற்றல் சேர் சக்தியாய் அகிலத்தை காப்பதற்கு அருளாகி வந்த திருவே வேதனைகள் தீர்க்கின்ற வேல் விழியே அருள் காட்டி வெற்றியினை காட்டுவாயே வெங் கொடுமை தணிக்கின்ற கங்கை

Page 4
நதி ஓரத்தில் விளையாடும் அன்னை நீயே மாதவங்கள் செய்கின்ற மாமுனிவர் பல பேர்கள் வாழ்கின்ற புனித காசி மாற்றங்கள் செய்கின்ற தீர்த்தங்கள் விளையா மணக்கின்ற இனிய காசி சோதனைகள் வரும்போது வேதனையை நீக்குகின்ற சோலையாம் விசாலாட்சியே சொந்த மென வந்துநிதம் உன்னடியைத் தொழுவோர்க்குத் துணை நீயே விசாலாட்சியே! 11.
மதுரை மீனாட்சி
மீன்கொடி பறக்கவே மேதினி சிறக்கவே மிளிர்கின்ற மாமதுரையே மேகநிறச் சொக்கள் மீனாட்சி கல்யாணம் மேன்மையாய் நடக்குதங்கே தேன் சொட்டும் சித்திரையில் திருவிழா நடக்குதே திக்கெட்டும் மக்கள் வெள்ளம் தெவிட்டாத மொழிபேசும் சிங்கார கிளியோடு சிரிக்கின்றதாயின் உள்ளம் வான் முட்டும் கோபுரம் வழிந்தோடும் வைகையும் வையத்தை வாழவைக்கும் வாழ்ந்திடும் தமிழ்ச் சங்க வள்ளுவன் குரலோடு வாழ்வினை உயரவைக்கும். கோனாட்சி செய்கின்ற மீனாட்சி பவனிவர கொஞ்சும் எழில் தங்க ரதமே கோடிப்பேர் நெற்றியில் குங்குமம் ஆகியருள் கோதை மீனாட்சி யுமையே! 2
தில்லை சிவகாமி
ஆட்டங்கள் ஆடியே அகிலத்தை ஆண்டிடும் ஆனந்த வல்லிநியே அழகான நாட்டிய முத்திரை நூற்றெட்டு அமைந்திட்ட சிவகாமியே பாட்டரங்கம் கொண்டு பாவலர் நாள்தோறும் பாமாலை கோடிதருவார்

பாமாலை பாடியே பூமாலை பல குடும் பக்தர்கள் நாடி வருவார் கோட்டங்கள் மண்டபம் கோபுரம் நந்தியும் கூத்தனின் புகழ் பாடுதே கூத்தனுடன் சக்தியும் ஆடிடும் ஆட்டத்தில் கொடுமைகள் அழிந்தோடுதே வாட்டங்கள் போக்கிட வந்திடும் அன்னையே வல்லியவள் சிவகாமியே வரம்வேண்டி கரங்கூப்பும் வறியவள் வாழ்வினை வளமாக்கும் தேவியுமையே! 13
கொல்லங்குடி காளி
நல்லதை சொல்லென்றும் நல்லதே செய்யென்றும் நயம்படச் சொல்லும் தாயே நச்சு எண்ணம் கொண்ட இச்சையாய் அலைவாரை நசுக்கிடும் அன்னை நீயே பொல்லாத செயலினை பொடிப்பொடியாக்கிடும் பொன் சுடர் தீபம் நீயே புகழுடைய வாழ்விற்குப் பொன்முடி சூட்டியே பூத்தூவி வாழ்த்துவாயே கல்லாத மாந்தரின் கண்ணிரை நீக்கிடும் கருவண்ண அன்னை நீயே கற்றோரின் நெஞ்சத்தில் கலங்கரை விளக்கான காவியச் சுடரும் நீயே வில்லாக மேலாக வினை தீர்க்கும் மருந்தாக விளங்கிடும் சக்தி நீயே வேண்டிடும் நல்லவரம் விரைவாக தந்திடும் வெண் கொற்ற காளியும்ையே 14
வடசென்னை காளிகாம்பாள்
காமாட்சி மீனாட்சி காசி விசாலாட்சி சென்னை நகள் காளிகாம்பாள் தருமமிகும் சென்னையில் நியாயத்தை வழங்கிடும் அன்னையே காளிகாம்பாள் கல்வியே இல்லாத மாந்தருக்கு கற்பித்த
கலைவாணி காளிகாம்பாள்.

Page 5
செல்வமில்லாதவரை செல்வந்தனாய் மாற்றும் திருமகளே காளிகாம்பாள் கோழையை வீரனாய் ஆக்கிடும் சக்தியே மலைமகளே காளிகாம்பாள் கலைமகள் அலைமகள் மலைமகள் நியேயென போற்றிடும் காளிகாம்பாள் மராட்டிய சிவாஜிக்கு வெற்றியை அளித்திட்ட பவானி காளிகாம்பாள் மனமார வேண்டியே மகிழ்வூட்டும் அன்னையே மகிழ்ச்சி தரும் காளிகாம்பாள்!! 15
பூரீ கற்பகாம்பாள்
தித்திக்கும் திருக்கோவில் சிங்காரப் பொற்கோவில் சிறக்கின்ற மயிலை யூரே திருநீற்றுப்பாமாலை தினம்பாடி அதிகாலை செய்புவர் சிவனின் பேரே! முத்து ஒலி வைரவிழி முழுநிலவுமுகத்தின் ஒளி முருகவேள் தரும் புன்னகை சக்தியின் திருக்காட்சி சரித்திரம் புகழ்மாட்சி சாற்றிடும் அற்புதங்கள் தங்க உடல் அங்கமதில் தவழ்கின்ற சிங்காரம் தமிழ் தந்த பொற்பதங்கள் எத்திக்கும் மறையாக ஏழையரின் இறையாக இருப்பவள், கற்பகாம்பாள் எல்லோரும் எல்லாமும் என்றுமே பெற்றிட எழில் கூட்டும் அம்மையுமையே 16
அபிராமி துதி
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வராத நட்பும் குன்றாத வளமையும், குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும் தவற்ாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,

தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும் துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதி கடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! 17
அபிராமி அந்தாதி
-அபிராமிப்பட்டர்
கணபதி காப்பு
தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்(து) உமைமைந்தனே உல(கு) ஏழும் பெற்ற சீரபிராமி அந்தாதிஎப் போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதி யேநிற்கக் கட்டுரையே 18
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே 19
சுந்தரி எந்தை துணைவிஎன் பாசத் தொடரைஎல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தி னாள்மகி டன்தலைமேல் அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் கந்தரி கைத்தலத் தாள்மலர் தாள்என் கருத்தனவே 20
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்ப(து) உன்னை என்றும் வணங்குவ(து) உன்மலர்த் தாள் எழுதாமைைறயின் ஒன்றும் அரும்பொரு ளேஅரு ளே'உமை யே இமயத்(து)
அன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே 2.
பூத்தவ யேபுவனம்பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவ ளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு முத்தவளே என்றும் முவா முகுந்தற்(கு) இளையவளே மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே. 22

Page 6
பின்னே திரிந்(து) உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் அன்னே உலகுக்(கு) அபிராமி என்னும் அருமருந்தே என்னே இனி உன்னையான் மறவாமல் நின்(று) ஏத்துவனே.
23
உடைத்தனை வஞ்சய் பிறவியை உள்ளம் உருகும் அன்பு படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை நெஞ்சத்(து) அழுக்கை எல்லாம்நின் அருட் புனலால் துடைத்தனை சுந்தரிநின்னருள் ஏதென்று சொல்லுவதே 24
சித்தியும் சித்தி தருந் தெய்வமாகித் திகழும்பரா சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார் முத்தியும் முத்திக்கு வித்தும்வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே 25 ஆசைக் கடலில் அகப்பட்டு) அருளற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லல் பட இருந்தேனை நின் பாதம் எனும் சாவக் கமலம் தலைமேல் வலியவைத்(து) ஆண்டுகொண்ட நேசத்தை என்சொல்லுவேன்ஈசர் பாகத்து நேரிழையே 26
ஆளுகைக்(கு) உன்றன் அடித்தா மரைகள் உண்டு); அந்தகன்பால் மீளுகைக்(கு) உன்றன் விழியின் கடை உண்டு; மேல் இவற்றின் முளுகைக்(கு) என்குறை, நின்குறை யேஅன்று, முப்புரங்கள் மாளுகைக்(கு) அம்பு தொடுத்தவில் லான்பங்கில் வாள்நுதலே
27
வாணுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்(கு) எண்ணிய எம்பெரு மாட்டியைப் பேதை நெஞ்சில்
காணுதற்(கு) அண்ணியவள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்(கு) எண்ணிய எண்ணம் அன்றோமுன் செய் புண்ணியமே.
28
தவளே இவள் எங்கள் சங்கரனார்மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்(கு) அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுள் யாவர்க்கும் மேலே இறைவியும் ஆம்
துவளேன் இனியொரு தெய்வமுண்டாகமெய்த் தொண்டு செய்தே
29

அரணம் பொருள் என்று அருள்ஒன்றிலாத அசுரர் தங்கள் முரண் அன்(று) அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே சரணம் சரணம் என நின்ற நாயகி தன்னடியார் மரணம் பிறவி இரண்டும்எய்தார் இந்த வையகத்தே 30
ஐயன் அளந்த படியிருநாழி கொண்டு) அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால் செய்ய பசுந்தமிழ்ப்பாமாலை யும் கொண்டு சென்று பொய்யும் மெய்யும் இயம்பவைத் தாய்இதுவோ உன்றன் மெய்யருளே 31
நாயே னையும் இங்(கு) ஒரு பொருளாக நயந்து வந்து நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன் தாயே மலைமகளே செங்கண் மால்திருத்தங்கச்சியே 32
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு பூணேன் உனக்(கு) அன்பு பூண்டு கொண்டேன்நின் புகழ்ச்சியன்றிப் பேணேன் ஒரு பொழுதும் திருமேனிப்ரகாசமன்றிக் காணேன் இருநிலமும்திசை நான்கும் ககனமுமே 33
தனந்தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வ வடிவுந் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழ லாள்அபிராமி கடைக்கண்களே 34
என்குறை தீரநின்(று) ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின் நின்குறை யேஅன்றி யார்குறை காண் இரு நீள் விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய் தன்குறை திரளங்கோன்சடை மேல்வைத்த தாமரையே 35
உடையாளை ஒல்கு செம்பட்டு) உடையாளை ஒளிர்மதி செஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்குநுண்ணுரல் இடையாளை எங்கள் பெம்மானிடையாளை இங்(கு) என்னை இனிப் படையாளை உங்களையும்படையாவண்ணம் பார்த்திருமே
36
பதத்தே உருகிநின் பாதத்திலேமனம் பற்றி உன்றன் இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான் ஒருவர் மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன் முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே 37

Page 7
நன்றே வருகினும் திதே விளைகினும் நான் அறிவ(து) ஒன்றேயுமில்லை உனக்கே பரம்எனக்(கு) உள்ள எல்லாம் அன்றே உனதென்(று) அளித்துவிட்டேன் அழியாதகுணக் குன்றே அஹருட்கட லேஇம வான்பெற்ற கோமளமே 38
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தங்கோன் போதிற் பிரமன் புராரிமுராரி பொதிய முனி காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன் முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே 39
குழையத் தழுவிய கொன்றையந்தார்கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந் தோளும் கரும்பு வில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ணகையும் உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்
-றனவே 40
ஆத்தாளை எங்கள் அபிராமி வல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளைப் புவி அடங்கக் காத்தாளை ஜங்கணை பாசாங் குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத்தொழு வார்க்(கு) ஒரு தீங்கில்லையே. 4.
§ද 3%ද දං
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகித்ரீயம்பகி யெழிற் புங்கவி விளங்குசிவ சங்கரி கசஸ்ரதள புட்பமிசை வீற்றிருக்கும் நாரணி மனாதீத நாயகி குணாதிதநாதாந்த சக்தி யென்று(ன்) நாமமே யுச்சரித் திருமடியார் நாமமே நானுச்சரிக்க வசமோ? ஆரணிசடைக்கடவுளாரணியெனப்புகழ் வகிலாண்ட கோடியீன்ற அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும் ஆனந்த ரூபமயிலே வாரணியு மிருகொங்கை மாதர்மகிழ் கங்கை புகழ் வளமருவு தேவையரசே, வரைராசணுக்கிருகண் மணியா யுதித்த மலைவளர்க்காத லிப்பெணுமையே 42
பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும் வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதி வெள்ளிதமிழ்ப்பூந் சீதாம் புயத்திலிருப்பாளிழருப்பளென் சிந்தையுள்ளே ஏதாம் புவியிற் பெறலரிதாவது எனக்கினியே 43
10

எங்கும் சக்தி
எங்கும் நிறைந்த சக்தி - புவியாவும் படைத்த சக்தி; பொங்கும் பேரன் புருவில் - அருள் பொழியும் அமர சக்தி!
அண்டம் கடந்த சக்தி, நுண் அணுவுக் கணுவான சக்தி; பிண்டம் சமைக்கும், சக்தி புவி பேணி வளர்க்கும் சக்தி!
கல்லில் உறங்கும் சக்தி, உயிர்க் கனலில் துடிக்கும் சக்தி;
புல்லில் துளிர்க்கும் சக்தி, எழிற் பூவில் மலரும் சக்தி!
காயில் புளிக்கும் சக்தி - நல்ல கனியில் இனிக்கும் சக்தி; சேயின் எழில் முகத்தில் இளஞ் சிரிப்பை மலர்த்தும் சக்தி!
தீமை யகற்றும் சக்தி - உயர் செல்வம் அளிக்கும் சக்தி; வாய்மை துலக்கும் சக்தி - அருள் வன்மை வளர்க்கும் சக்தி!
ஓங்கி வளர்ந்த சக்தி-பல்லுயிர்க்கும் உயிரான சக்தி; தாங்கியணைக்கும் சக்தி - அருட் தாயான சுத்த சக்தி! 44
பூவெலாம் படைத்த பூத நாயகியே புகலடைந்த புண்ணியர் தமக்கும் காவலாய் நிற்கும் கருணை நாயகியே சிவந்தரு சக்தி நாயகியே தேவர் கொண்டாடுந் சித்திநாயகியே சிவந்தரு சக்தி நாயகியே ஆவலாய் உன்னைக் கூவினேன் பணிந்தேன் அடியேனுக் கருள் புரிவாய் 45
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் - பராசக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி - ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.
கணபதிராயன் - அவனிரு காலைப் பிடித்திடுவோம்; குணமுயர்ந்திடவே - விடுதலை கூடி மகிழ்ந்திடவே, (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)
சொல்லுக்கடங்காவே - பராசக்தி சூரத் தனங்களெல்லாம்; வல்லமை தந்திடுவாள் - பராசக்தி வாளியென்றேதுதிப்போம்.
(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்’
11

Page 8
வெற்றி வடிவேலன் - அவனுடை வீரத்திறனைப் புகழ்வோம்; சுற்றிநில்லாதேபோ! - பகையே! துள்ளி வருகுது வேல்.
(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) தாமரைப்பூவினிலே - சுருதியைத் தனியிருந்துரைப்பாள், பூமணித்தாளினையே. கண்ணிலொற்றிப்புண்ணிய மெய்திடுவோம்.
(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) பாம்புத் தலைமேலே - நடஞ்செயும் பாதத்தினைப் புகழ்வோம்; மாம்பழ வாயினிலே - குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம்
(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) செல்வத்திருமகளைத்-திடங்கொண்டு சிந்தனை செய்திடுவோம்; செல்வமெல்லாந்தருவாள் - நமதொளி திக்கனைத் தும்பரவும்
(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 46 மோகத்தைக் கொன்றுவிடு-அல்லாலென்றன் மூச்சைநிறுத்திவிடு தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லாவதில் சிந்தனை மாய்த்துவிடு; யோகத்திருத்திவிடு - அல்லாலென்றன் ஊனைச் சிதைத்தவிடு ஏகத் திருந்துலகம் - இங்குள்ளன யாவையும் செய்பவளே !
(மோகத்தை)
பந்தத்தை நீக்கிவிடு - அல்லாலுயிர்ப் பாரத்தைப் போக்கிவிடு சிந்தை தெளிவாக்கு - அல்லாலிதைச் செத்த உடலாக்கு இந்தப் பதர்களையே நெல்லாமென எண்ணி இருப்பேனா? எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று இயங்கியிருப்பவளே
(மோகத்தை)
உள்ளம் குளிராதோ?பொய்யாணவ ஊனம் ஒழியாதோ? கள்ளம் உருகாதோ - அம்மா! பக்திக் கண்ணிர் பெருகாதோ? வெள்ளக் கருணையிலே இந்நாய் சிறு வேட்கை தவிராதோ விள்ளற் கரியவளே - அனைத்திலும் மேவியிருப்பவளே
(மோகத்தை) 47
米来米
"சத்தியாய் விந்து சத்தி யாம்மனோன் மணிதானாம்
ஒத்துறு மகேசையாகி யுமைதிரு வாணியாகி வைத்துறுஞ் சிவாதிக் கிங்கன் வஞச்சத்தி யொருத்தியாகும்
எத்திற நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்" 48
'சிவஞான சித்தியார்
12

தேவி துணை gth is áil
கெளரிக் காப்பு
விநாயகர் துதி
முனனின்று செய்யுள் முரையாய்ப் புனைவதற்கு என்னின்றருள்செய் எலிவாகனப்பிள்ளாய் சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வுதரும் எக்குற்றமும் வாராமற்கா
வேண்டுதற்கூற்று
காப்பெடுக்க வந்தேனே கெளரியம்மாள் தாயாரே காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன் எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய் பண்ணும் வினையாவும் பணிபோலப் போக்கிடுவாய் உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக என்றும் இருந்தே எனைக் காத்து வந்திடுவாய் காடும் கடந்து வந்தேன் மலையும் கடந்து வந்தேன் காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய் சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே அரியை உடையவளே அம்மாகாளிதாயே கொடியமகிஷாசூரனைக் கூறு போட்டவளே அசுரக் குணம்யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய் பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய் அரணை நினைத்தல்லோ அம்மா நீநோன்பிருந்தாய் சங்கரனை எண்ணியல்லோ சங்கரி நீநோன்பிருந்தாய் ஐங்கரனைப் பெற்றவளே அன்று நீநோன்பிருந்தாய் விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும் அம்மா உமையணைத்தே அருள்மாரி பொழிந்தானே வகையாற்றுப் படலமிதை வழிவழியாய்க் காட்டிடுவீர் நெறியறியாத்திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய் காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஒட்டிவிடு
13

Page 9
நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா பூமணியே மாமணியே புனிதத் தாயவளே நான் விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா கல்வி சிறப்பதற்குக் கலைமகளே வாருமம்மா செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே! ஏட்டுடைத் தலைவியரே எல்லாம்மிகு வல்லமையே காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள் நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா காளிமகா தேவியரே காசினிக்கு வித்தவளே வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே காசினியில் வேற்றுமையை கணப் பொழுதே மாற்றிவிட்டால் ஏசனின்றி வாழ்ந்திடுவோம் ஏத்து புகள் தேவியளே காப்பெனக்குப் போட்டு விட்டால் கல்மனது இளகிவிடும் ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும் தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும் இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும் நம்பி அணிவோர்க்கு நல்லதெல்லாம் பெருகிவரும் நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும். சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கெளரியம்மா காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று ஏப்பம் மிகவிட்டுக் என்றுமே இருந்தறியேன் நாளும் பொழுதில்ெலலாம் நறுங்காப்புக் கட்டதனில் பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன் காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்
14

ஞானச் செழுஞ் சுடரே காளியுன்னைக் காணுகின்றேன் காப்பெனக்குக் கையிலுமான்() கடமைகளைச் செய்திடுவேன் ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன் தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே காப்புக் கையிலிருந்து கண்திறlது காட்டுமடி சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு பக்தி மனதுடனே பரவியணிவோர்க்கு சித்திலெல்லாந்தருவாள் சீய்பெருகு கெளரியவள் முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர் சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே அச்சக்தி எல்லாம் அருள்வாள் கெளரியவள் கெளரிக் காப்பதனைக் காலம் தவறாமல் முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர ஞானம் ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே காளியாய் வந்தமர்ந்த கெளரியே காப்பருளும் 49
திருச்சிற்றம்பலம்
இலக்குமி துதி
பொருளற்ற வர்க்கிவ்வுலகில் என்றிப் புவிபுகழும் தெருளற்ற ஞானி அப்பொய்யா மொழியில் தெரிந்துரைத்தான் மருளற்ற மாந்தரும் வற்றாத செல்வம் இவ்வையகத்துள் அருளற்ற லாதடைவரோ? செந்தாமரை ஆண்டவளே 50
சித்தம் தெளிந்திடும், செவ்வினையாவும் திருத்தமுறும் நித்தம் மறிந்தெழு செல்வமும் தங்கி நிலைபெறும் நல் முத்தர்க்குரிய பெரும்பதம் வாய்க்கும் இம்முவுலகில் பக்தர்க் கருளும் திருமகள் பாதம் பணிபவர்க்கே நித்தமுனை வேண்டி மனம் நினைப்பதெல்லாம் நியாய்ப் பித்தனைப்போல் வாழ்வதிலே பெருமையுண்டோ?திருவே சித்தவுறுதிகொண்டிருந்தார் செய்கையெல்லாம் வெற்றிகொண்டே உத்தம நிலை சேர்வரென்றே உயர்ந்த வேத முரைப்பதெல்லாம் சுத்தவெறும் பொய்யோடி சுடர்மணியே! திருவே! மெத்த மயல் கொண்டு விட்டேன் மேவிடுவாய் திருவே! 51
15

Page 10
உன்னையன்றி இன்பமுண்டோ உவகமிசை வேறே? பொன்னைவடி வென்றுடையாய் புத்தமுதே திருவே! மின்னொளி தரு நன்மணிகள் மேடையுயர்த்த மாளிகைகள் வன்னமுடைய தாமரைப்பூமணிக்குளமுள்ள சோலைகளும் அன்னம் நறு நெய்பாலும் அதிசயமாத் தருவாய் நின்னருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன் திருவே152
பொன்னிலும் மணிகளிலும் - நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும் கன்னியர் நகைப்பினிலும் - செழுங் காட்டிலும் பொழிவிலும் கழனியிலும் முன்னிய துணிவினிலும் - மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப் பன்னிநற் புகழ்பாடி-அவள் பதமலர் வாழ்த்திநற்பதம் பெறுவோம்.
53
திருத்தாமரை மேல் வீற்றிருக்கும் தேவி தெய்வ விளக்கொளியே கருத்தாய் வணங்கும் அடியவர்க்குக் கணகவெள்ளம் பாய்ச்சி வரந் தருந்தாயே! நின் சிலம்படிகள் சிந்தித்து உணரும் எளியேனை வருந்தா நிற்கும் வறுமைகெட வழங்காயோ நின் திருவருளே!
54
வாயால் தூய புகழுரையை வழங்காரில்லை இரவுபகல் ஓயாது உன்சீர் தேடாமல் ஒழிவாய் உளரும் ஈங்கில்லை நீயா யிருந்திவ்வகில மெல்லாம் நிருத்தம் புரியும் பொருட் செல்வி தாயாயிருந்து இவ்வுயிர் கட்குத் தைரிய முட்டும் தயாபரியே
55
மலரின் மேவு திருவே - உன்மேல் மையல் பொங்கிநின்றேன் நிலவு செய்யுமுகமும் - காண்பார் நினைவழிக்கும் விழியும் கலகலென்ற மொழியும் தெய்வக் களிதுலங்கு நகையும் இலகு செவ்வ வடிவும் - கண்டுன் இன்பம் வேண்டுகின்றேன்.56
கமல மேவும் திருவே - நின்மேல் காதலாகி நின்றேன் குமரி நின்னை யிங்கே - பெற்றோர் கோடியின்ப முற்றார்; அமரர் போல வாழ்வேன் - என்மேல் அன்புகொள்ளவையாயின்; இமய வெற்பின் மோத - நின்மேல் இசைகள் பாடி வாழ்வேன்;
57
16

வாணி தன்னை யென்றும் நினது வரிசை பாட வைப்பேன்; நாணியேக லாமோ?- என்னை நன்கறிந்திலாயோ? பேணி வைய மெல்லாம் - நன்மை) பெருகவைக்கும் விரதம் பூணுமைந்த ரெல்லாம் - கண்ணன் பொறிகளாவரன்றோ 58
பொன்னும் நல்ல மணியும் . சுடர்செய் பூண்களேந்தி வந்தாய்! மின்னும் நின்றன் வடிவிற் பணிகள் மேவிநிற்கு மழகை என்னுரைப்பனேடி! - திருவே! என்னுயிர்க்கொரமுதே! நின்னை மார்பு சேரத் - தழுவி நிகரிலாது வாழ்வேன்; 59
செல்வ மெட்டு மெய்தி-நின்னாற் செம்மையோகி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை - உலகில் இல்லையாக வைப்பேன்
முல்லை போன்ற முறுவல் - காட்டி மோகவாதை நீக்கி எல்லையற்ற சுவையே! என்னை நீஎன்றும் வாழ வைப்பாய் 60
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் -இனி என்னைப் புதியவுயிராக்கி - எனக் கேதுங் கவலையறச் செய்து - மதி தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் 6.
கலைமகள் வணக்கம்
ஆய கலைக ளறுபத்து நான் - கினையும் ஏய உணர்விற்கு மென்னம்மை- தூய உருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி - னுள்ளே இருப்பளிங்கு வாராதிடர் 62
படிக நிறமும் பவளச் செவ்வாயும் கடிகமழ்பூந் தாமரைபோல் கையும் - துடியிடையும் அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால் கல்லும்சொல் லாதோ கவி? 63
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை அரியா சனத்தில் அரசரோ டென்னைச் சரியா சனம்வைத்த தாய்
17

Page 11
சரஸ்வதி சரஸ்வதி செள்பாக்கியதாயினி சரஸ்வதி! சரஸ்வதி சரஸ்வதி சகல கலாவாணி சரஸ்வதி!!
சரஸ்வதி சரஸ்வதி! நலமெல்லாம் அருள்வாய் சரஸ்வதி!! 65
தஞ்சமென்றே வந்தேன் சரஸ்வதி - எந்தன் தாயே தருணம் வா சரஸ்வதியே நெஞ்ச முருகிப்பாட சரஸ்வதியே நாவிலே நர்த்தனம் செய் சரஸ்வதியே வெள்ளைத் தாமரை வாழும் சரஸ்வதியே - எந்தன் உள்ளங் குளையப் பாட அருள் தருவாய் கள்ளங் கபடொழித்துக் கொஞ்சித் தமிழில் தாயைக் கண்டு களிக்கப் பாட்டுப் பாடவையம்மா , 66
பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும் வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதி வெள்ளிதமிழ் பூஞ் சீதாம் புயத்திலிருப்பாளிருப்பாளென் சிந்தையுள்ளே ஏதாம் புவியிற் பெறலரிதாவது எனக்கினியே 67
நாடிப்புலங்கள் உழவார் கரமும், நயவுரைகள்
தேடிக் கொழிக்கும் கவிவாணர் நாவும்,
செழுங்கருணை ஒடிப்பெருக்கும் அறிவாளர் நெஞ்சும்
உவந்து நடம் ஆடிக்களிக்கும் மயிலே, உன்பாதம் அடைக்கலமே
68
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பணியே போல, நண்ணியநின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய் 69 அம்மா தாயே கலைவாணி, நீஎன் நாவைக் காப்பாயே இம்மா நிலத்தின் இனிமையெல்லாம் இருக்குது நாவின் அசைவினிலே வெண்தாமரை மேல் வீற்றிருப்பாய் வீணையைக் கையில ஏற்றிருப்பாய் வாணி சரஸ்வதிமாதாவே-எங்கள் வாக்கினில் வந்து அருள்வாயே அம்மா அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி நீயே அன்னபூர்ணேஸ்வரி தாயே ஆதிபராசக்தி நீயே 70
18

சரஸ்வதி தேவியின் புகழ்
வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள் வீணை செய்யும் ஒலியிலி - ருப்பாள் கொள்ளை யின்பங் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்தி - லிருப்பாள் உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே ஒதும் வேதத்தி னுண்ணின் - றொளிர்வாள் கள்ளமற்றமுனிவர்கள் கூறும் கருணை வாசகத்துட்பொருளாவாள்
(வெள்ளைத்) 71
மாதர் தீங்குரற்பாட்டிலிருப்பாள் மக்கள் பேசும்மழலையிலுள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியி னாவை இருப்பிடங்
- கொண்டாள்
கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம்
- கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள் இன்ப மேவடிவாகிடப் பெற்றாள்
(வெள்ளைத்) 72
வஞ்சமற்றதொழில்புரிந்துண்டு வாழ மாந்தர் குலதெய்வமாவாள்
வெஞ்ச மர்க்குயிராகிய கொல்லர் வித்தை யோர்ந்திடு சிற்பியர்
- தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர் வீர மன்னர்பின் வேதியர்
- யாரும்
தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம் தரணி மீதறிவாகிய தெய்வம்
(வெள்ளைத்) 73
தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம் தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம் உய்வமென்ற கருத்துடையோர்கள் உயிரினுக்குயிராகிய தெய்வம் செய்வமென்றொருசெய்கையெடுப்போர்செம்மைநாடிப்பணிந்திடு தெய்வம் கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம்; கடவுளர் தெய்வம் (வெள்ளைத்) 74
19

Page 12
செந்தமிழ்மணிநாட்டிடையுள்ளிர்! சேர்ந்தித் தேவை வணங்குவம் - வாரி!
வந்த னம்மிவட் கேசெய்வதென்றால் வாழி யஃதிங் தெளிதன்று
- கண்டீர்! மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை வரிசை யாக அடுக்கி - யதன்மேல் சந்தனத்தை மலரையிடுவோர் சாத்திரம்மிவள் பூசனையன்றாம்
(வெள்ளைத்) 75
வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன வூர்கள் நகள்க ளெங்கும் பலபல பள்ளி தேடு கல்வியி லாதொரூரைத் தீயினுக்கிரையாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை கேண்மை கொள்ள வழியிவை
Φ60ότιαίτ (வெள்ளைத்) 76
ஊணர் தேசம் யவனர்தந் தேசம் உதய ஞாயிற் றொளிபெறுநாடு சேன கன்றதோர் சிற்றடிச்சீனம் செல்வப் பார சிகப்பழந் தேசம் தோன லத்த துருக்கம் மிசிரம் சூழ்கடற்கப் புறத்தினி லின்னும் காணும் பற்பல நாட்டிடை யெல்லாம் கல்வித் தேவி னொளிமிகுந்
தோங்க. (வெள்ளைத்) 77
ஞான மென்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்திர்! ஊண மின்று பெரிதிழைக் கின்றீர்! ஓங்கு கல்வியுழைப்பை மறந்தீர்! மான மற்று விலங்குக ளொப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ? போனதற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்) 78
இன்ன றுங்கனி சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைக
- ளியற்றல் அன்ன சத்திரமாயிரம் வைத்தல் ஆலயம்பதினாயிரநாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர்விளங்கியொளிரநிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோ ரேழைக்
-கெழுத்தறிவித்தல் (வெள்ளைத்) 79

நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதிகுறைந்தவர் காசுகள் - தாரீர்! அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளிர்! ஆண்மையாள ருளைப்
- பினை நல்கீர்!! மதுரத் தேமொழி மாதர்களெல்லாம் வாணி பூசைக் குரியன
- (Sucr எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும் இப்பெ ருந்தொழல் -நாட்டுவம் வாரீர்!
(வெள்ளைத்) 80
சரஸ்வதி கவசம்
சரசுவதி என் தலையைக் காக்க வாக்கின்
தலைவியாம் வாக்தேவிநுதலைக் காக்க
விரசுபகவதிகண்ணைக் காக்க நாசி
விமலைவாக் வாதினியான் காக்க வித்தைக் (கு)
உரியதனித் தேவதை என் உதடு காக்க உயர்புகழ்ப் பிராம்மிபல் வரிசை காக்க மருவும் ஐம் என்றிடுமனு கண்டம் காக்க வாழ் ஹ்ரீமாம் எழுத்து என்றன்பிடரைக் காக்க 81
எழுத்தான சிரீம் என்தோள் காக்க வித்யா திருஷ்டாத்மா என் மார்பில் இருந்து காக்க வழுத்துவித்யா ரூபிணிஎன் நாபி காக்க வாணிகரம் காக்க எல்லா எழுத்தின் தேவி விழுத்தகான் அடிகாக்க வாக்கிற்கென்று மேயஅதிட்டானதேவதைதான் என்றன் முழுத்த உறுப் பெவற்றினையும் காக்க காக்க முள் கிழக்கில் சர்வகண்ட நாசிகாக்க 82
அங்கியெனும் திசைக்கண்ணே நின்று பீஜாட் சரிகாக்க மந்திரராஜத்தின் தேவி பொங்கு தெற்கிலேயிருந்து காக்க காக்க புகல்முன்றக் கரவுருவாள் நிருதிதிக்கில் தங்கியெனைப் புரந்தருள்க மேற்குத் திக்கில் சாற்றுநா நுனியுறையும் அன்னை காக்க துங்கமிகுசர்வாம்பி கைதான் வாயு துன்னுதிசையினில் என்னைக் காக்க 83
2

Page 13
சத்தியவா கினிவடக்கில் காக்க எல்லாக் கலையினிலும் உறைவாள்ஈ சானம் காக்க நத்துவர்வ பூசிதையாள் ஊர்த்துவத்தில் நயந்திருந்து காத்தருள்க அதோமு கத்தில் புத்தகவா சினியாகும் தேவி காக்க புகழ்கிரந்த பீஜத்தின் உருவாய் நின்றாள் எத்திசைகளிலும் இருந்து காக்க காக்க எளியேனைக் கலைமகள் தான் என்றும் காக்க 84
சகலகலாவல்லி மாலை
வெண்டா மரைக்கன்றிநின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொலோசக மேழுமளித் துண்டானுறங்க வொழித்தான்பித் தகாவுண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலா வல்லியே 85
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைப்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகலகலா வல்லியே 86
அளிக்குஞ் செந்தமிழ்த் தெள்ளமுதார்ந்துன்னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலா வல்லியே 87
துரக்கும் பனுவற்றுறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவை தோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ் செல்வமுந் தொண்டர்செந்நாவினின்று காக்குங் கருணை கடலே சகல கலா வல்லியே 88
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங்கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென்னேநெடுந் தாட்கமலத் கஞ்சத்துவச முயர்த்தோன் செந்நாவுகமமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத்திருந்தாய் சகல கலாவல்லியே 89
22

பண்ணும் பரதமும் கல்வியு தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழ தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும் வெங்காலுமன்பர் கண்ணுங் கருத்துநிறைந்தாய் சகல கலா வல்லியே 90
பாட்டும் பொருளும் பொளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் திம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணங் காட்டும் வெள்ளோதிமப் பேடே சகல கலா வல்லியே 9.
சொல்லிற் பனமுமவதான முங்கவி சொல்லவல்ல நல்வித்தையுந்தந்தடிமைகொள் வாய்நளிளாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொகுகாலமுஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே 92
சொற்கும் பொருட்டும் முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை W கற்கும் பதாம்புயத் தாயே சகல கலா வல்லியே 93
மண்கண்ட வெண்குடை கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண்டளவிற் பணியச்செய்வாய்படைப் போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வமுளதோ சகல கலாவல்லியே 94
குமரகுருபர சுவாமிகள்
வெள்ளைநிறமல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்ந்த மலரெதுவோ வெள்ளைநிறப்பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது 95
புத்தகத்துள்ளுறைமாதே பூவிலமர்ந் திடுவாழ்வே வித்தகப் பெண் பிள்ளை நங்காய் வேதப்பொருளுக்கிறைவி முத்தின் குடை உடையாளே மூவுலகந் தொழுதேத்தும் செப்புக் கவித்த முலையாளே செவ்வரியோடியகண்ணாய் தக்கோலந்தின்றதுவர்வாயாய் சரஸ்வதியென்னுந்திருவே எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயலிசை நாடகமென்னும்
த்தமிழ்க்கல் விகளெல்லா முழுவதும் எனக்கருள் செய்தேன் த்தம் தனிலிருந்து திருவருள் செய்திடுவாயே 96
23

Page 14
தாவறுமுலகெலாந் தந்த நான்முகன் தேவுதன் துணைவியாய்ச் செறிந்த பல்லுயிர் நாவுதோ றிருந்திடும் நலங்கொள் வாணிதன் பூவடி முடீமிசை புனைந்து போற்றுவாம் * 97
பூரீ சரஸ்வதி காயத்ரி
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ப்ரஹ்ம பத்ன்யை ச தீமஹி தந்நோ வாணிபிரசோதயாத்!! 98
மங்களம்
சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்கரீமனோஹராய சாஸ்வதாய மங்களம் குருவராய மங்களம் தத்தாத்ரேயாய மங்களம் கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம் ரகுவராய மங்களம் வேணுகிருஷ்ண மங்களம் சீதாராம மங்களம் ராதாகிருஷ்ண மங்களம் ராமகிருஷ்ண மங்களம் சாரதாம்பா மங்களம் ஆனந்த மங்களம் விவேகானந்த மங்களம் அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு ஆதி சக்தி அம்பிகைக்கு அனந்த கோடி மங்களம். 99
»k?«»k
கண்களை மூடி இருதய கமலத்தில் அம்பிகை வீற்றிருப்பதை தியானித்து சொல்ல வேண்டிய பிரார்த்தனை எல்லோரும் சுகமாக வாழ்க! எல்லோரும் நோயின்றி வாழ்க! எல்லோருக்கும் மங்களம் உண்டாகுக! ஒருவரும் துன்புறாதிருக்க வேண்டும்! பொய்யிலிருந்து என்னைமெய்மைக்கு வழிநடத்துவாயாக அஞ்ஞான இருளிலிருந்து ஞானஜோதிக்கு வழிநடத்துவாயாக. மரணத்திலிருந்து மரணமிலா பெருவாழ்வுக்கு அழைத்துச செல்வாயாக 100
திருச்சிற்றம்பலம் ஓம் சாந்தி : சாந்தி: சாந்தி சங் ஓம் அமைதி ஓம் சக்தி ஓம் ஹரி ஓம் தத்ஸத்,
24

ஒவ்வோர் ஆன்மாவும் உள்நிறைந்த தெய்வத் தன்மையுடையது. உள்ளும் புறமும் நிறைந்திருக்கும். இயற்கையை அடக்கி, உள்ளேயுள்ள தெய்வத் நன்மையை வெளிப்படுத்துவதே நோக்கமாகும்.
செயல், வழிபாடு, பிராணனைக் கட்டுப்படுத்தல், தத்துவ ஆராய்ச்சி என்பவற்றுள் ஒன்றினாலோ, பலவற்றினாலோ, எல்லாவற்றினாலுமோ இதைச் செய்து கதந்திரனாக இரு.
இதுவே சமயத்தின் முழு உண்மை.
(Karmayoga, Bakthiyoga, Rajayoga, Gnanayoga)
- சுவாமி விவேகானந்தர்
இப்புத்தகத்தை மிகவும் குறைந்த கட்டணத்தை பெற்றுக்கொண்டு சிறப்பாகவும் அழகாகவும் அச்சடித்துத் தந்த குமரன் அச்சகம் உரிமையாளர்களுக்கும் அங்கு சு சுமையாற்றும் அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும். அத்துடன்
டங்கள் பணியும் சிறப்பாக வளர வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
நன்றி.
சிவசிவ

Page 15
4.
சிந்திப்போம் செயற்படு
உழைப்போம் உயர்வோம் உத்த எப்பொழுதும் எல்லோரிடமும் அ
சினம் காத்து உணர்ச்சி வேகத்
மிகுந்த பொறுமை, அமைதி,
மெளனம் உடம்பிற்கும், உள்ளத்
நேர்மை, நிதி, பிரார்த்தனை, பக்
இரக்கம், கருணை, ஜீவ காருண்
கோபப்படாமல் ஆசைக்கு வரம்
நல்ல உயர்ந்த எண்ணங்களை இடைவிடாது செய்வோம், தீய எண்ணங்கள் ஆழ் மனதில் நல்லதையே நினைப்போம். இை கடமையை அன்புடனும் மகிழ்ச்:
நம்பிக்கை, தன்னம்பிக்கை, தை தேவை.
தான தர்மம் பாவத்தை விலக்கு
மனச்சாட்சியை மதித்து, தீமை6
பிறருக்கு அன்புடன் உதவி செய்
பிறரை ஏமாற்றாமை,
நல்லதைப் பரப்புவோம், சாதன்ை
HELPEWER
KLIMAFAN
POI,
CO
T

ܩ
வோம் உயர்வடைவோம்
மனாவோம்.
ன்பு செலுத்துவோம்.
தைத் தடுப்போம்.
இன்சொல், மகிழ்ச்சி, குறைந்த பேச்சு, திற்கும் சக்தி தரும்,
தி, சத்தியம்.
Eயம்.
பு கட்டி காமத்தை மட்டுப்படுத்துவோம்.
மனதில் வளர்த்து நல்ல செயல்களை
பதியா வண்ணம், உடனே கிள்ளி எறிந்து றவன் நாமத்தை செபிப்போம்.
சியுடனும் சரிவரச் செய்வோம்.
நரியம், துணிவு விழிப்புணர்வு எப்பொழுதும்
ம், நல்ல நோக்கம். யை, பாவத்தை முற்றிலும் விலக்குவோம்.
வோம்.
ன செய்வோம் சரித்திரம் படைப்போம்.
HURT NEVER
rfrted by
FRESS (PWT) LTD DAM STREET,
LOMIBO- 12.
EL : 1.83