கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ செல்வச் சந்நிதி வேல் அழகன் பாமலர்

Page 1
நி
வச்சந்
(if (ର
 

முருகன் ஆலயம்

Page 2

- ||-----
|
|
|-*( |-|- |共口 「 ----|-
----
| | |-
|- | #
----嗜
|||
■■『
니TT니日星 |-No!----|-
■
+
|- | mae

Page 3
O குகமயம்
முநீ செல்வச்சந்நிதி வேலழகன் துணை
இறைவனைத் தொழுதெழ எண்ணிறைந்த வழிகள் பக்தியோகம் - மந்திரப் பூசைகள் மெளனப் பூசை அபிஷேகங்கள், ஆராதனைகள், கடும்விரதங்கள், நேர்த்திகள் ஆகம விதிகள், அவற்றிற்கு அப்பாற்பட்டவைகள் இப்படி எத்தனையோ விதங்கள் அத்தனையும் சினமடக்கி மனமடக்கி சிந்தையில் தெளிவுபூட்டி சிதானந்த நிலைக்கு இட்டுச் செல்ல. பூரீ செல்வச் சந்நிதியில் எந்த வழி வந்தாலும் தந்த சுகம் தரும் சுகம் இனி வரும் சுகம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை! சிதறும் தேங்காயில் ஆணவம் சிதறலாம் கற்பூர ஒளியில் சிந்தை கரையலாம் தரும்திரு நீற்றால் மனமாயை தெளியலாம் திருவமுதும் வேற்கரணித் தீர்த்தமும் பூவரசும் நோயையும் கர்ம வினையையுமே மாற்றலாம் என்னும் சுகங்கள் வரும் ஏகாந்த வாழ்வு வரும் மாயைப்பிடியிலே சுயநலத்தால் உந்தப்பட்டோர்
தொண்டைமானாற்றருகில் சந்நிதி மணலில் கால்பட்டதுமே வாழ்வு வளர்கின்றது! தாழ்வு அகல்கின்றது.
மந்திரப் பூசையை விரும்பும் வேலழகன் சந்நிதியில் மெளனப் பூசையை ஏற்கிறான். ஏசியும் பேசியும் துதிப்பவர்க்கு ஓர் தனி இடம் பக்தி நெறியின் பிரதிபலிப்பு இங்கே ஓர் விதம் இவற்றுள் எனக்கு இட்ட பணி
பாடிப்பணிவதே அதற்கு சிந்தையிலே பா இதழ்கள் தந்து கவியாக்கி பாட ராகமும் தர பாடிக் கொண்டே இருக்கிறேன் என்பாட்டில் அவை அனைத்தும் அவன் பொற்பாத கமலங்களில் சமர்ப்பணம்!
30.06. 1995 வேலனடிமை

2 (55LDujub
முநீ செல்வச் சந்நிதி வேலழகன் துணை
கஜானனம் பூத கணாதி சேவிதம் கபித்த ஜம்பு பலசார பக்ஷிதம் உமா சுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
வக்ர துண்ட மகா காயா சூர்ய கோடி சமப் பிரபா நிர் விக்னம் குருவே தேவ சர்வ தாய் யேகி சர்வதா.
மண்ணுலுகத்தினில் பிறவி மாசற எண்ணிய பொருளெல்லாம் எளிதில் முற்றுற கண்ணுதலுடையதோர் களிற்று மாமுக பண்ணவன் மலர் அடி பணிந்து போற்றுவாம்.
குருப்பிரம்மா குரு விஷ்ணு குருத்தேவோ மகேஷ்வரா குரு சாட்சாத் பரப்பிரம்மா தஸ்மை பூர் குரவே நமக.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வாஸ்ர சாதகே சரண்யே திரயம்பகே கெளரி நாராயணி நமோஸ்துதே.
மங்களே மங்களாத்ரே மாங்கல்யே மங்களப் பிரதே மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேகி மே சதா!
ஓம் திரயம்பகம் யஜா மகே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருக மிவ பந்தநாத் மிருக்யோர் மோக்ஜிய மாம் ருதாத் ஓம் ஹிரீம் நம சிவாய!
இடையனாய் வந்து கதிர் காமரை இரட்சித்த முகமொன்று கதிர்காமந்தனில் பூசை முறைகாட்ட அழைத்த முகமொன்று கதிரமலைக் கொடியேற்றம் காணச் சென்ற முகமொன்று களைத்துத் துவயலுண்ண ஓடிவந்த முகமொன்று அடியவர்க்கு அன்னதானம் அளிக்கும் முகமொன்று புண்ணியனார் சமாதி கண்ட பூவரசமரத்தருகே கோயில் கொண்டு வீற்றிருக்க வந்தமுகமொன்று
--

Page 4
ஆறுமுகமாகி ஏறுமயிலேறி வள்ளி தெய்வானை மங்கையுடன் வேலாகி நிற்க அடியவரும் தேவர்களும் அகமகிழ்ந் துறவாடும் செல்வச் சந்நிதி வாழ் வேலழகா சரணமய்யா.
உன்னையொழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரை நான் பின்சேல்லேன் பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடிய வினை தீர்த்தருளும் வேலப்பா.என் சந்நிதி வாழ்வே!
ஆறிரு கரங்கள் நீட்டி அணைத்திடும் அருளே போற்றி ஆறிரு கைகள் காட்டி அபயமெனும் அன்பே போற்றி ஆறிரு கரங்களாலே அனைத்தையுமே அருள்வாய் போற்றி ஆறிருகை அமுதளித்து பழமாக்கும் திருவே போற்றி அன்னமலை அரசே போற்றி ஆற்றங்கரை அருளே போற்றி பூவரசத்தருகமர்ந்த புண்ணியனின் பொன்கழல்கள் போற்றி கல்லோடைக்கரை அமைந்த பாதார விந்தம் போற்றி சொல் அமுதம் எனக்களித்த சுந்தரனே போற்றி போற்றி என்னிரண்டு கரங்களாலே எடுப்பதெல்லாம் மலராக்கி உன்னிரண்டு பாதத்திலே ஏற்றிடுவாய் போற்றி போற்றி என்னையுமே மலராக்கி ஏற்கும் நாள் வரும் வரையில் பன்னிரண்டு விழிகளினால் பாவிஎனை காப்பாய் போற்றி.
அண்ணனை முன்வைத்தேன் ஆனைமுகத்தரசே போற்றி விக்கினங்கள் அகல்விக்கும் வினாயகப் பெம்மான் போற்றி ஆயிரம் கரங்கள் கூப்பி அழைக்கின்ற அருளே போற்றி ஆறுதல் தருவதற்கு ஆறிரு கரங்கள் நீட்டி இன்பமான வாழ்வதனை இனியெமக்குத் தருவதற்கு ஈதலே கதியென்றால் கோலால பூசையுண்டு உன்அருள்தான் வேண்டும் உவந்ததைத் தருவாய் போற்றி ஊழ்வினைப் பயனெல்லாம் உனைவாழ்த்தப் போயிடுமே எனப்பன் என்று சொன்னேன் என்தாயும் நீயன்றோ ஏரகப்பதிவாழும் எங்கள் சந்நிதி வேலா ஐயா எனப்பணிந்தால் ஐயங்கள் பறந்திடுமே ஒன்றாகி நாமெல்லாம் ஒற்றுமையாய் வாழவேண்டும் ஒலங்கள் குறைய வேண்டும் பா ஒதலே நிறையவேண்டும் ஒளவுதமாய் நின்றெமக்கு அருளதனை அள்ளித்தர ஆனைமுகன் தம்பியே ஆதிசெல்வச் சந்நிதி வாழ் ஞானக் கனிவுடைய நாயகனே போற்றி! போற்றி!!
-2-

வேழமுகத்தான் துணை வினாயகப் பெம்மான் துணை ரூானமுதல்வன் துணை நாதாந்த நாயகன் துணை வினையகல வைத்தான் துணை துணையாக நின்றான் துணை நம்பினோர்க் கென்றும் துணை நாதன்தாள் நாளும் துணை
வேலும் மயிலும் துணை வெற்றிவேல் முருகன் துணை நாளும் கோளும் துணை நம்பினோர் வாழ்வில் துணை நாதாந்த நாமம் துணை வேதாந்த விளைவே துணை சங்கடம் தீர்ப்பாய் துணை சந்நிதி வேலன் துணை சரவணபவனே துணை சகலமும் ஆனாய் துணை வேற்கரணி முத்தே துணை பூவரசத் திருவே துணை காலடியே நாளும் துணை கல்லோடைக்கரையும் துணை பாவடியைத் தந்தாய் துணை பாபங்கள் தீர்ப்பாய் துணை சேவடியைத் தொழுவார் துணை சேவலும் மயிலும் துணை வள்ளி தெய்வானை துணை வல்வினைகள் தீர்ப்பாய் துணை ஆற்றங்கரையான் துணை ஈராறு கரங்கள் துணை ஆறுமுகத் திருவே துணை ஆறுதல் தருவாய் துணை
சந்நிதி வேலா சரணம் சரணம் சரவணபவனே சரணம் சரணம் சந்நிதி வேலா சரணம் சரணம் சரவணபவனே சரணம் சரணம் சந்நிதி வேலா சரணம் சரணம் சரவணபவனே சரணம் சரணம்
சந்நிதி வேலா சரணம் சரணம் ஷட்கோண இறைவா சரணம் சரணம் சந்நிதி வேலா சரணம் சரணம் ஷட்கோண இறைவா சரணம் சரணம் சந்நிதி வேலா சரணம் சரணம் சகலதும் நீயே சரணம் சரணம்!
ஆற்றங்கரை வேலனுக்கு ஆவணியில் பெருவிழாவாம் அடியவர்கள் திருக்கூட்டம் அலைமோதிப் பாயுதிங்கே வருமடியார் குறைகளெல்லாம் வரமுன்னே தீர்த்து வைக்கும் வடிவேலன் பெருங்கருணை வார்த்தைகளில் அடங்கிடுமோ
எந்தன் வார்த்தைகளில் அடங்கிடுமோ
பசியாற மடங்களிலே ஆக்கிவைத்த அன்னமலை மலைகண்ட மால்மருகன் தன்னை குழந்தையாக மாற்றியுமே குன்றேறி விளையாட அன்னமலை ஆறுதங்கே அடியர் பசி திருதங்கே அப்பன் அருள் சொரியுதங்கே.
(ஆற்றங்கரை) சந்நிதியின் பெரும்நிதியே சரவணபவ ஷண்முகமே சங்கடங்கள் தீர்ப்பதிலே உனையன்றித் தெய்வமில்லை வேலுண்டு மயிலுண்டு வேண்டும்துணை நீயென்று வேண்டியவர் வாழ்வினிலே வேதனைகள் இனியேது
(ஆற்றங்கரை)
ஆற்றங்கரை வேலவனே ஆறுமுகத் திருவடிவே ஆறாத துயரங்கள் ஆற்றருகே இனியேது ஆடிவரும் காவடியில் உன் அழகுமுகம் காணவேண்டி கூடிவந்த அடியவர்கள் கும்பிட்டு நிற்கையிலே நெஞ்சத்துக் கனலெல்லாம் கற்பூர ஜோதியாக கசிந்துருகித் தொண்டைமான் ஆற்றினிலே சங்கமமோ?
(ஆற்றங்கரை)
-3-

Page 5
வாருங்கள் பூரீ செல்வச் சந்நிதிக்கே - வந்து வேண்டுங்கள் வேலவன் திருவருளை ஆலமிலை அமுதும் அவன் திருநீறும் ஆனந்த அமைதியைத் தந்திடுமே
தொண்டைமானாற்றம் கரையினிலே தோன்றிய சந்நிதிக் கோவிலிலே ஆத்ம ஈடேற்றம் வேண்டிவந்த ஞானியர் வாழ்வதை அறியாயோ! நினைத்தால் அருளும் அண்ணாமலைக்கிணையாய் மனத்தால் கொள்ள அன்னமலை அரசன் வரமுன்னே வரம் தரும் வள்ளலாய் - இங்கே வீற்றிருப்பதை நீ மறந்தாயோ?.
தேவர்கள் குறையெல்லாம் தீர்த்த இடம் தேவலோகமே தினம் பூசை செய்யும் இடம் வானவர் கானவர் தானவர் தினம் தினம் பூஜிக்கும் பூலோக புண்ய ஸ்தலம். சூரசம்ஹார நாடகத்தில் வேலன் அபயம் கொடுத்த இடம் ஆதலால் மனம் திறந்து மனிதன் பணிந்தாலோ - அவன் மனைக்கே தெய்வ அருள் செல்லுமாம். வினையெல்லாம் போக்க விக்னேஸ்வரனும் - என்றும் துணையாய் வெற்றிவடி வேலவனும் ஆதிமூலத்தின் வேற்படை அருகே அம்மை அப்பனும் லிங்கோற்பவமாய் அமைந்த பெருமைக்கு மெருகூட்ட வள்ளி ஆலயத்தில் திருமாலவனும் பூவரசத் தருகே ஹரிஹரனும் இணைந்த விந்தை வேறெங்கு முண்டோ
ஆலும் அரசும் வேம்பும் பூவரசும் வேலவன் வீதியில் ஒன்றாய் மலரும் வைரவ சுவாமிக்கோர் ஆலயம் அமைத்து போற்றுகின்றார் செல்வச் சந்நிதியில். அத்தனை சக்திகளும் ஒன்றிணைய அமைந்த வேலவன் ஆலயத்தில் வந்தவர் என்றும் வாழ்வதினால் வாருங்கள் பூரீ செல்வச் சந்நிதிக்கே.

ரீ செல்வச் சந்நிதிக்கு வாருங்கள் - வேலன் திருவருளை தினம் நாடி நில்லுங்கள் மாறாத மனத்தோடு சொல்லுங்கள் - வேலன் கூறாமல் குறைதீர்ப்பான் நம்புங்கள்.
(நீங்கள் பூரீ) அமரர்கள் குறைதீர்க்க அப்பன் கண்ணில் வந்தோன் அசுரர்களை அழிக்க சக்திவேலைக் கொண்டோன் ஆறாகி ஒன்றாகி அறிவாகி நின்றோன் மாறாத பக்தி கொண்டோர் மனங்களில் நிறைவோன்
- - - - - - - - - - - நின்று குகனாக வாழ்வோன்
(நீங்கள் பூரி) அடியார்கள் பசி தீர்க்கும் அன்னதானக் கந்தன் அருட்பசி தனைப் போக்கும் ஞானஸ் கந்தவேலன் புகழ்பாடிப் பூவரச மரத்தருகே நின்றோரின் குறைதீர்த்து மனைவாழ மயிலேறி வருவான். .வந்து இதமாகச் சிரிப்பான்
(நீங்கள் பூரி) s
அரஹர சிவசிவ சண்முகநாதா சந்நிதி வேலா சரணம் சிவசிவ ஹரஹர சரவண பவனே சந்நிதி வேலா சரணம்
செல்வச் சந்நிதி வேலா சரணம் வேலனைத் துதித்தால் வேண்டும் வரங்கள் வேண்டிய அளவில் தருவான் காலனையும் வெல்லும் வேலனிவன் - உன்னைக் காலகால மென்றும் காப்பான் ஞான அறிவும் தருவான் அன்னதானக் கந்தனாய் வருவான் (அரஹர)
ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைகளைத் தீர்க்கும் வாராது இடரிவன் பாதாரம் தனிலே மாறாது சரண் அடைந்தோரை எங்கும் தங்கும் வேலவனே பொங்கும் மங்களம் தாராய் தங்கு தடையின்றி வரம் தரவே ஆற்றங்கரை யருகே நின்றருள்வாய். (அரஹர)
as
-5-

Page 6
எங்கெங்கு நின்றாலும் அங்கெனக்கோர் இடம் தருவாய் பொங்கும் மங்களமாய் என்னுள்ளே தங்கிடுவாய் அங்கிங்கெனாத படி எங்கும் அனல் ஜோதியாய் தங்கிட வந்தவனே சந்நிதியின் பெருநிதியே!
பூங்காவனத் தழகை பூவினிடை வேலழகை பாங்காக நான் காண பலதிசையில் சென்றாலும் அங்கெனக்கோர் இடம் தந்தாய் அழகை ரசித்தேனே ஓங்கார ரூபத்தைச் சரவணத்தில் கண்டேனே!
தாமரை மலரினிலே தவழ்ந்து வந்த பாலகனே தாமரைத் தடாகத்தை தானமைத்தார் சந்நிதியில் சாமரை வீசுகின்ற சிறுமியரின் பக்தி மெச்சி தாமரை மலர்களினிலே மீண்டும் நீ ஆடிவந்தாய்!
பூங்காவனத்தினிலே பூவின்மேல் வரும்வேளை நீங்காத நினைவாக்க பா தந்தாயென் நாவின்மேல் பாங்காக ஊஞ்சலிலே ஆடிவரும் வேளையிலே ஆடிரோ ஊஞ்சல் பாட அடிஎடுத்துத் தந்தாயே!
சரவணத்துப் பொய்கைதனை சந்நிதியில் அமைத்துமே பிரணவத்தின் பெரும் பொருளே! பேரின்பப் பெட்டகமே எம்மிடையே நீ இன்று இருப்பதுபோல் ஓர் உணர்வு ஊஞ்சலுக்கு ஓடிவா ஆடிரோ ஊஞ்சல் பாட!
வேதங்கள் பிடமாக இருவினையும் கயிறாக நாதங்கள் கைகளாக நானுன்னை ஆட்டிடுவேன் வேதாந்த சாரமே நாதாந்த ரூபமே பூங்கா வனத்தினிலே பொங்கும் உன் அருள் தாராய்!
கதிர்காமர் அன்று உனைத்தன் கையாலே ஆட்டினாரோ கதிர்காமம் சென்றுவந்த களை இன்னும் அடங்கலையோ மருதர் கதிர்காமர் வழிவந்த நாங்களுமே தருகின்ற உன்னருளால் பூங்காவனம் அமைப்போம்!
ஏங்காத மனம் தந்தாய் அதைப் பூங்காவனமாக்கி பாங்காக ஊறிடும் எண்ணெங்களை ஊஞ்சலாக்கி ஆடநீ வருவாயோ அழகுமிகு கந்தா என
பாடியுமே ஆட்டிடுவோம் பாலகா நீ வந்தமர்வாய்!
உன்னை நினைத்தாலே என்துயர் தீர்த்திடுவாய் உனைநாடி வந்தாலோ பிறவிப்பிணி தீர்த்திடுவாய் உள்ளத்து ஊஞ்சலிலே உனைவைத்து ஆட்டிவிட்டால் வெள்ளத்து நீராகி வினைப்பயனை வேரறுப்பாய்!
證
-6-

ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகவேலவா - உன் ஆ ல்காண ஆற்றங்கரை வந்தேன் - அங்கே ஆடி வரும் காவடியில் அழகுமுகம் காட்டி அன்னதானக் கந்தனாக நின்றாய்.
தேடிவரும் அடியவர்கள் காணமுடியாமல் நின்று தேம்பித்தேம்பி அழுகின்றார் உன்வாசலில் - அங்கே பாடிவரும் அடியவரின் பக்கத்திலே நீ ஓர் பாலனாக ஆடி வருகின்றாய்.
கூறுமடியார்கள் வினை தீர்ப்பதற்கு என்றோ குன்றுதோறும் ஓடி வருகின்றாய் - அங்கே மாறுபட்ட சூரரெல்லாம் கூறுபட்டு வேறுபட்டு வேலின் முன்னே சேவல் மயிலாகின்றார்.
அமுதூட்டி அறிவூட்டி ஆடல் காட்டும் அன்பு வேலா அடியனை நீ ஆட்கொள்ளும் நாள் எப்போது - அப்போ பூவாக என்னை நீ மாற்றிவிட்டால் - அந்தப் பூவரச மரத்தருகே காத்திருப்பேன்.
as
செல்வச் சந்நிதியில் செவ்வேளைத் துதிப்பவர்க்கு செல்லா நின்ற வினையகல சொல் எழா நிலை தோன்ற சாயுச்சம் தந்திடுவான் சக்தி உமை பாலனவன்.
நீ அமர்ந்த திண்ணை அருகே நான் இருந்து பாடுகையில் செந்தமிழ்ப்பாவெல்லாம் செந்தணலாய்த் தோன்றுதையா செந்தணலும் செவ்வேளாய் சிந்தையிலே தோன்றிடவே செங்கதிர்கள் அங்கிருந்து என் நாவைச் சென்றடைய
(நீ அமர்ந்த)
எந்நாவும் செந்நாவாய் மாறுகின்ற வேளையிலே சின்னஞ்சிறு வேலனங்கே சதிர் ஆட வருகின்றான் சரவணப் பொய்கையிலே அவனாடும் ஆட்டத்திலே தாமரை மலரிதழ்கள் பாமலராய் உதிர்ந்தனவே
(நீ அமர்ந்த)
கடல் மடை திறந்ததுபோல் அருள் வெள்ளம் ஓடயிலே கந்தா உன் புகழ்பாட

Page 7
நாயேனுக் கேது பயம்?. கந்தன் என்றால் கருவாகும் - உமை மைந்தன் என்றால் உருவாகும் முருகன் என்றால் மூச்சாகும் - முத்துக் குமரனென்றால் பாட்டாகும்.
s (நீ அமர்ந்த)
அரஹர சிவசிவ முருகா - உந்தன் அருளன்றி கதியேது திருவே மால்மருகா.
அமுதூட்ட ஆற்றருகே வந்தாய் - ஆலம் இலைமீது அமுதாகி அருள் எல்லாம் தந்தாய் இருளான இதயத்தில் வந்தாய் - பூவரசாகி புண்ணியனார் சமாதியிலே நின்றாய்.
ஒளியாகி அறிவாகி நின்றாய் - பூவரசத்தின் அருகினிலே ஆலயமும் கண்டாய் பசிபோக்க மடங்களையும் கொண்டாய்- அடியர் பிணிபோக்கி அன்னதானக் கந்தனாகி நின்றாய்.
கல்லோடைக் கந்தனாகி வந்தாய் - பின்னர் காத்து அருளவென்று காலடியும் தந்தாய் அமுதாகி அடியர் பசி தீர்த்தாய் - பின்னர் வேலாகி ஞானத்தையும் விரும்பியே தந்தாய்.
ரீ செல்வச் சந்நிதிக்கு வந்தாய் - அங்கே செல்லா நின்ற வினைகள் சொல்லாமலே ஓடும் துதிப்போர்க்கு வல்வினைகள் போகும் - அங்கே துதியாத மனமெல்லாம் தூள்தூளாய் ஆகும்.
ஞானத்தை யான் அறியவென்றோ - இங்கு ஞான ஒளிகாட்டி நாயேனைக் கவர்ந்தாய் ஞானானந்தனும் இங்கு வந்தான் - அந்தப் பேரானந்த நினைவைச் சிந்தையிலும் தந்தாய்
தருகின்ற தன்மையினால் இயக்கம் - நீ மறந்தாலோ தமியேனுக் கோயாத உறக்கம் எழுகின்ற நாதத்தால் மயக்கம் - அந்த இன்பநிலை காட்டுதற்கு ஏன் இன்னும் தயக்கம்.
-8-

சின்னஞ்சிறு வேலவனே - என் சிந்தையிலே நின்றிடையா ரீ செல்வச் சந்நிதிக்கு வந்திடுவேன் தந்திடையா!
அன்னை தந்தை உலகமென்று அண்ணன் பழம் பெற்றானே உன்னடியார்க் கோர் உலகம் நீ அமைத்தாய் பழனியிலே
தென்னாடுடை சிவனும் உண்ணா முலையாழும் தேடியே வந்தாலும் தென்பழனி அமர்ந்தாயே பழம்நீ என்றாலும் பதிவிட்டு ஏகாமல் எம்பசி தீர்த்திடவே இருந்தாயே எம்முடனே!
வீரவாகு தேவர் இங்கு தூதுசெல்லும் வழியிலே சந்திகாலப் பூசை செய்தார் பூரீ செல்வச்சந்நிதியில் அமரர் கூறைதீர அபயகரம் காட்டி அன்றுமுதல் இன்றுவரை ஆதரவும் தருகின்றாய்!
பூவரச மரத்தடியில் புண்ணியனார் சமாதி கண்டார் வேலாக அவரருகே வீற்றிருப்பேன் என்றாயே வேண்டும் அடியவர்க்கு தாண்டும் வழிதரவே கல்லோடைக் கரையினிலே காலடியும் தந்தாயே!
தொண்டை மானாற்றருகே வேண்டுகின்றார் தொண்டரெல்லாம் வேலவா உனையன்றி வேறு கதியேது அன்னையாய் தந்தையாய் அருட்குருவாய் தெய்வமாய் ஆற்றருகே அமர்ந்தவனே ஆறாதோ எம்துயரம்!

Page 8
அஞ்சி அஞ்சி அலறிவரும் அடியவரின் நெஞ்சமதில் அஞ்சேல் என்று சொல்லி வீற்றிருக்கும் காரணமோ வேண்டும் அடியவர்க்கு வேலாகத் தோன்றுவதும் கெஞ்சி நின்றால் நெஞ்சமது நெக்குருகி நிற்பதுவும் உள்ளம் உருகியதால் உன்னடியர் கண்களிலே கவலைகள் ஆறாகக்கசிந்துருகும் என்பதினால் ஆற்றருகே அமர்ந்தாயோ ஆறுமுகா என் குருவே ஆலம் இலைமீது அமுதுதரும் கந்தனும் நீயே மாறாத நோய்க்கெல்லாம் திருநீறு அருமருந்தோ வேறுபட்ட மனநிலையை வேல்தோன்றி மாற்றிடுமே அதர்மங்கள் கூறாகும் அந்த நாளும் வந்திடாதோ செல்வச் சந்நிதிவாழ் வேலழகா சரணம் ஐயா
ஏற்றினோம் மாவிளக்கு - உனக்கு. ஏற்றினோம் மாவிளக்கு - உனக்கு.
வள்ளிமலைக் காட்டினிலே வளர்ந்த தினை மாவெடுத்து இந்திரனார் லோகத்திலே இருந்து வந்த இனிப்பெடுத்து ஆறுபடைவீடுதனை ஓராறு திரிகளாக்கி ஞானத்தை நெய்யாக்கி நாம் படைத்தோம் உந்தனுக்கு
(ஏற்றி) உள்ளமதைத் தட்டாக்கி உணர்வுதனை அனலாக்கி ஏற்றிய திரிகளாலும் எரிகின்ற அழகினிலே படைவீட்டு ஜோதியிலே பதமலர்கள் தான் கண்டோம் ஆற்றங்கரையினிலே ஆனந்தம் தான் அடைந்தோம்
(ஏற்றி)
சக்தி தருவாய் என்று உந்தன் சந்நிதிக்கு வந்தோம் சித்தி விநாயகன் துணையும் அன்னை சக்தி அருளும் வேண்டும் தோகை மயிலேறும் மால்மருகா இந்த ஏழைக்கருளவும் தாமதமேன் ஆற்றங்கரையினில் ஆறுதல் காட்ட ஆறுமுகத்தோடு வந்தருள்வாய் வந்தருள்வாயே வரம் தந்தருள்வாயே!
ஐந்தெழுத்து ஆதிமூலம் ஆறாகி எழுந்தருளி
ஆறெழுத்து மந்திரமாய் ஆளவந்த ஆறுமுகா
சிவகாமி மைந்தனே சிருங்கார வேலனே.
(ஏற்றி)
證
-10

நானமும் நீயே கந்தா ஆனந்தமும் நீயே கந்தா ஞானானந்த வெள்ளமதில் நீந்த அருள்வாயே கந்தா
தொண்டைமானாற்றருகே தொண்டர்களைக் காக்க வந்தாய் தொலையாத வினை தீர்க்க வேலாகக் காட்சிதந்தாய் இலை மீது அமுது தந்தாய் சிலையாகவும் நின்றாய் வலை வீசி நின்றவரை அருளாலே ஆட் கொண்டாய்
ஆட்கொண்டது போதாதென்று பூசையும் தான் பெற்றாய் பூசையின் சிறப்பறிய புண்ணியனை வரவும் வைத்தாய் அறிந்தபின் அவனை உந்தன் அருகினிலே அடங்க வைத்தாய் அடக்கத்தின் மேலே ஒர் பூவரசைத் தோற்றவைத்தாய்
பூவரசைத் தலவிருட்சமாய் போற்ற வேண்டும் என்று சொன்னாய் தேவரசன் குறைகளையெல்லாம் தீர்த்து வைத்தாய் இத்தலத்தில் பாவரசன் அருணகிரிக்கு பதமலரைத் தந்தது போலே கவியரசாய்க் கதிர்காமரை ஆக்கி நீயும் களிப்படைந்தாய்
அவர் அருகே நீயிருந்து ஆடிடவும் பாடிடவும் அமைத்த அந்தத் திண்ணை அருகே எந்தனையும் பாடவைத்தாய் ஆறாத துயரமெல்லாம் நீறாக மாறுதங்கே ஆறாக ஓடும் மனத்தில் தியானநிலை கூடுதங்கே.
அன்னதானக் கந்தன் ஆகி அடியர் பசி எல்லாம் தீர்த்தாய் ஆலம் இலைமீது அமுதாகிப் பிணி தீர்த்தாய் புன்ைனியனார் சமாதி கண்ட பூவரச மரத்தருகே எங்களையும் பாடவைத்து என்ன சுகம் நீ கண்டாய்.
சுகம் எல்லாம் அடியருக்கே சொர்க்கமும் அவர்களுக்கே சொந்தம் என்றால் நீயே அன்றி வேறேது வேல் முருகா அன்னையுமாய்த் தந்தையுமாய் அருட்குருவாய் தெய்வமுமாய் ஆதரித் தெனையாளும் உன் பொன்னடிகள் தான் வேண்டும்.
கல்லோடைக் கந்தன் ஆகி காக்கவும் செய்கின்றாய் காலடியும் தந்த பின்னே காத்துமே நிற்கின்றாய்
காவடியாய் ஆடவும் வைத்தாய் காலடியில் அடங்கவும் வைத்தாய் காலமெல்லாம் காத்திருப்பேன் உன் திருவடியில் சரண் அடைய.
s
- -

Page 9
எத்தனை பிழைகள் எத்தனை குறைகள் அத்தனை இருந்தாலும் அருளுதல் உன் கடன் சிந்தனையும் நீயே வந்தனையும் உந்தனையே வருந்தி அழைத்தால் வாராதிருப்பாயோ வடிவேலா.
நீ நினைத்தால் நான் வருவேன் சந்நிதி முருகா நீ மறந்தால் ஆறுமோ என் மனம் ஆறுமுக வேலா.
ஆறுபடை விடுதன்னில் ஆடியது ஓர் முகமே ஆற்றங்கரை மீதினிலே ஆறவந்த ஆறுமுகமே அன்னதான மடங்களிலே அடியர்பசி ஆறயிலே போதும் என்ற பொலிவினிலே பொங்குமுந்தன் எழில் கண்டேன்
அல்லலுறும் அடியவர்கள் தேடுவது யார்முகமோ? வள்ளிக்குற மணவாளா வாஞ்சையுடன் உன் முகமே! ஒருமுகமாய் நின்று உந்தனையே துதிப்பவர்க்கு ஆறுமுகமளிக்கும் ஆறுதலுக் கிணையேது.
ஐந்தெழுத்து மந்திரமோ? ஐந்துகர அண்ணனுமோ? அஞ்சுதலைப் போக்குதற்கோ ஆறுமுக மாயினாயோ? ஆறுமுகம் ஏறுமுகமாய் மாறயிலே ஏதுபயம் வேல்தோன்றி அபயமென்றால் வேண்டுதற் கினியேது?
ஓம் என்ற பிரணவமும் ஆறெழுத்தும் சேர்ந்து விட்டால் "யாம் இருக்க பயம் ஏது" நெஞ்சகத்தில் நிறைந்திடுமே மாம்பழத்துப் போட்டியினால் ஞானப் பழம் ஆனதினால் நாம் எல்லாம் ஈடேற நல்ல குருநாதனானாய்.
ஞானப்பசி கொண்டவர்கள் நாடும் இடம் எவ்விடமோ மோனநிலை கொண்ட எங்கள் மோகனனின் சந்நிதியே
பூவரச மரத்தருகே பூவாக மாறிவிட்டால் காயான உன்மனத்தை கனியாக்கி தந்திடுவான்.
證
a 12

ஆடிமுடிந்த பின்னே தங்கவேலா - நீ தங்கவந்த இடமிதுவோ எங்கவேலா. தங்குதடையின்றி தெரிசனமோ தரவோ தொண்டைமான் ஆற்றருகே கோயில் கொண்டாய் வேலா.
(اريك) காட்டுவழி வந்ததினால் தங்கவேலா - கதிர் காமருமே பயந்ததினால் தங்கவேலா திருப்பியே பார் என்றாய் தங்கவேலா - நீ விரும்பியே மாறிநின்றாய் வெள்ளிவேலாய் - முருகா
(اريك) சங்கநிதி பதுமநிதி எல்லாமே வேலா - உந்தன் பொன்னடியைச் சரணடைந்தோர் காலடியிலே எந்தவனம் ஏகினாலும் கந்தவேலா - அதைக் கந்தவனம் ஆக்கிடுவாய் செல்வச் சந்நிதிவேலா.
(s.19) வெள்ளைமனம் வேண்டுமென்பாய் வெள்ளிவேலா - எனைத் தள்ளிஇனி வைத்திடாதே வெள்ளிவேலா வள்ளிக்குறமாதுடன் விளையாடியது போதும்வேலா பள்ளிகொள்ள என்னோடு வரமாட்டாயோ பாலா.
(اريع) உன்னையே தூங்கவைத்தால் வெள்ளிவேலா - நான் தன்னையுமே தூங்கவைப்பேன் எங்கவேலா நானுமே தூங்கிவிட்டால் கந்தவேலா - அந்த நானற்ற நிலைபுரியும் செல்வச்சந்நிதி வேலா
as | ()
தொண்டைமானாறும் சந்நிதி வேலனும் தொண்டருக்கே
என்றும் சொந்தமன்றோ சந்நிதியில் வந்து வேண்டி நின்றாலே எந்நிதியும் தருவேன் என்றானே!.
(தொண்டை) ஆறுதல்தர அன்னதான மடங்களும் ஆலமர நிழலும் போதாதோ நீறுதனைப் பூசி நிம்மதிபெறவே சொன்ன இடம் செல்வச்சந்நிதியுமே
(தொண்டை) பூவரசமரத்தடியினிலே உனைப் பூவாகமாற்றி அர்ப்பணித்தே காயான மனத்தைக் கணியாக்கவே நீ கவியாகி அவன் புகழ்பாடிடவே கனிந்த இதயத்தில் கருணைமழை பொழிய கந்தனுமே அங்கு
வந்திடுவான் கானத்திலும் அன்னதானத்திலும் அவன் காவடி ஆட்டத்தைக்
கண்டிடலாம் ஆற்றருகே அந்த ஆட்டத்தைக் கண்டால் ஆடாத மனமெல்லாம் ஆடிடுமே ஆடிமுடிந்ததும் தேடமுயன்றால் ஆறுமுகனை அங்கு கண்டிடலாம்.
(தொண்டை)
- 13

Page 10
முருகா சரணம் முத்துக்குமரா சரணம் கந்தா சரணம் கதிர்வேலா சரணம்
தச்சகொல்லை நாயகனின் தாள்பணிந்தோமே - அன்னை சக்திவீர மாகாளியை வேண்டி வந்தோமே கூறுமடியார் வினைகள் தீர்த்த வேலவா ஆற்றங்கரை ஓரத்திலே அமைதியைத் தருவாய் (Lp(535t.....(P(b5T.........(UPC55T......... (UPC55.......
(முருகா சரணம்) வேண்டுமடி யார்களெல்லாம் தாண்ட ஒர்வழி வேண்டுமட்டும் தருவேனென்று விரும்பியே சொன்னாய் தானத்திலும் கானத்திலும் மகிழ்ந்தது போதும் ஞானத்தையும் தந்தருள வேலவா ஓடி வா.
தொண்டை மானாற்றருகே தொண்டர் கூடுகின்றார் தொலையா வினைதீர்க்கும் உந்தன் நீறணிகின்றார் கற்பூர ஒளியில் கந்தன் கருணை தோன்றவே சொற்பூவால் தோத்திரங்கள் பாடி மகிழ்கின்றார்.
ஆற்றம் கரையினில் அமர்ந்த வேலழகா பாடும் படி நீ பணித்தாய் பணிந்தேன் கூடும் அடியார் குறையெல்லாம் தீர்த்தே தேடும் வழியில் தெரிசனம் தருவாய்.
ஆலம் இலையில் அமுதெல்லாம் தருவாய் காலம் வரவே கனியும் தருவாய் ஒலம் இடும் அடியார் குறை தீர்ப்பாய் ஞாலம் உள்ளவரை நான் மறவேன் உனை.
திருநீறு அணிந்தால் தீருமுன் குறைகள் தீர்த்தமும் தீர்க்குமே மாறா நோய்களெல்லாம் சரணடைந்தோரின் தீராவினை தீரும் சாயுச்யம் பெறவே சந்நிதியை நாடு.
பூவரச மரத்தடியினில் அமர்ந்து புண்ணியனை வேண்டி பொன்னுலகு பெறவே சிந்தையிலே சிவசிவ நாராயணா என்றால் சிவ நாகதம்பிரானும் திருவருள் தருவான்.
-14

முழுமனத்தோடு முருகா என்றொரு முறை முறையிட்டால் கருகாதோ கர்மவினையெல்லாம் சிறைமீட்டுத் தேவர்குறை தீர்த்த வெற்றிவேலனுக்குன் குறைதீர்க்க அக்கறையில் குறைவேதும் உளதோ,
அக்கரையில் நின்றவரை இக்கரைக் கழைத்துமே அற்புதங்கள் காட்டியதை அறிவாயோ மனிதா ஆர்ம் கரையமர்ந்தும் அன்னதானமளித்தும் ஆடுகின்ற நாடகத்தின் அந்தம் அறிவாயோ.
ஆற்றம் கரையோரம் அமர்ந்த வேலழகா சாற்றும் கவியெல்லாம் உன்புகழ் அன்றோ மாற்றும் வழியிலும் மால் மருகேசா நீ தோற்றும் காட்சியானால் அதுஒன்றே போதும் ஐயா.
s
தெய்வத்தைத் தேடி வருகின்றேன் - செல்வச் சந்நிதி தீரத்தில் நிற்கின்றேன் வேலா நான் ஓர் பாபியோ வேளை இன்னும் வரவில்லையோ.
ஆற்றம் கரையினில் அருள்வடிவாய் - நீ அமரவந்தாய் என்று அறிந்திருந்தும் ஆணவம் என்னை இன்னும் விடவில்லையோ - அதை அழித்திட உனக்கின்னும் மனம் இல்லையோ.
பழனிக்கு ஆண்டியாய் வந்தவனே - எங்கள் பழவினை தீரவேண்டி மலையேறினேன் ஒளவைக்கு பழம் கொடுத்து அருள்செய்தவா! இந்த அடியேனுக்கும் தர மனம் இல்லையோ.
ஆறுபடைவீடெல்லாம் தேடிவந்தேன் - நீயோ
ஆறியமர சந்நிதி வந்தாயென்றார்
சந்நிதியில் உன்னை வேண்டி நின்றால் . அங்கே
எந்நிதியும் தருவாயென்றார்
சங்கநிதி பதுமநிதி கேட்கவில்லையே - உந்தன்
பொன்னடி கண்டாலே போதும் வேலா
அருணகிரித் திருப்புகழில் ஆடி நின்றாய் - முருகா கதிரகாமர் பாடலிலே களிப்படைந்தாய் உனைத்தேடி பூவரச மரத்தடியிலே - வேலா நானும் தான் பாடுகின்றேன் வரமாட்டாயோ?
- 15

Page 11
சந்நிதி வேலனின் சந்நிதியில் வந்து யார் நின்றவரோ - அவன் ஆட்டத்திலே மன ஓட்டத்தின் எல்லையை யார் கண்டவரோ யார் நின்றவரோ.அருள் தான் கண்டவரே.
சின்னஞ்சிறுவேலன் மெல்லமாய் வந்துந்தன் சிந்தையில் நின்றிடுவான் பென்னம் பெரியதாய் சோதனைகள் பல தந்துமே வாட்டிடுவான் வந்ததைக் கண்டுமே வாடிவதங்கியே ஒடி ஒதுங்கிடாமல் நின்றவர் வாழ்வில் சாதனைகள் பல நித்தமும் தந்திடுவான் சக்தி உமைமைந்தன் - எங்கள் சந்நிதி வேலழகன்
(சந்நிதி வேலனின்) ஆடிமுடிந்தபின் ஆற்றங்கரைதன்னில் ஆறத்தான் வந்தானோ - அன்றி ஆலமிலையினில் அமுதுண்டு அவன்பசி ஆறத்தான் நின்றானோ அன்னதானக் கந்தன் ஆகவே நிற்பது அவன் பசி தீர்ப்பதற்கோ - அன்றி ஆற்றருகே நின்றால் ஆறாத பசி எல்லாம் ஆறிடும் என்பதாலோ ஆறாகி வந்தவனோ இங்கே ஆறாகி நின்றானே
(சந்நிதி வேலனின்)
பூவரச மரத்தடியினிலே என்னைப் பூவாக மாற்றிடவோ பா ஒன்றைத் தந்துந்தன் பக்கத்திலே என்னைப் பாடவும் வைக்கின்றாயோ வேலாக நெஞ்சத்தில் தோன்றியுமே எங்கள் வேதனை தீர்ப்தற்கோ தொண்டைமானற்றம் கரையினிலே நீ வீற்றிருக்க வந்தாய் வந்தவன் ஆறுமுகன் - அவன் தந்தது ஆறுதலை
(சந்நிதி வேலனின்)
தொண்டைமானாற்றம் கரையினிலே எங்கள் சந்நிதி வேலனின்
ஒயிலாட்டம் தொண்டரின் குறைகள் தொலைப்பதற் கிங்கே தோகை விரிந்தோன்
மயிலாட்டம் கவலைகள் தீரக்கனத்த மனங்களின் கண்களில் தோன்றும் நீரோட்டம் கனிந்த மனங்களில் காட்டிடும் லீலையில் காரணமாய் வந்த பாவோட்டம் இருமலை கொணர்ந்த இடும்பனைப் போலே எண்திசையிலும்
காவடியாட்டம் பஜனையால் மகிழ்ந்து பாடுவோர் நெஞ்சில் பக்குவமாய் வரும்
அருளோட்டம் அன்னதானத்தில் சிறந்த இடம் - அவன் அருள்மழை பொழியுமிடம் ஆவணி மாதத்திலே அப்பன் பெருவிழாக் காணுமிடம் - வேலன் திருவிழாக் காணுமிடம்
s (தொண்டைமானாற்றம்)
- 16

ஆl கரையினில் அமைந்த ஆலயத்தில் அப்பன் ஆறியமர வந்தான் மாற வேண்டுமடியவரின் வேதனை விளிம்பில் வேலாகக் காட்சி
தந்தான் ப(மடியவரின் ஒசைதனில் கலந்து தேடும்வழி காட்டவே பாலனவன் பூவரசமரத்தடியில் புன்னகை காட்டி நின்றான்
நின்றவன் எந்தன் நினைவை நீல மயிலாக்கி ஏறி வந்தான் வந்தவன் தன்னை வாரியணைத்திட வானில் நானும் திரிந்தேன் எங்கும் காணமல் ஏங்கியே நான் எனக்கு உள்ளே தேட முயன்றேன் என்னைக் காண்பதற்கு எண்திசையிலும் நீ தேடி வந்ததேனோ என்றான்
பாடிப்பாடி உன்னைத் தேடி நின்றால நீ ஆடி ஆடி வருவாயே என்று ஆரோ சொன்னதில் ஆலயம் ஒன்றை
பாவால் நான் அமைத்தேன் என்றேன் அமைத்த ஆலயத்தின் அருகினிலே பூவரசைத் தோற்ற மறந்தாய் அதன் அடியினிலே வரும் ஒலியினைக் கேட்க மறந்தது ஏனோ என்றான்
என்னைப் பூவரசமாக்கியே அங்கே எழுந்து நின்ற போது - அவன் தன்னையே நாதமாக்கியே அதன் அடியினில் ஒழிந்து கொண்டான் என்னிலே மலர்ந்த மலரெடுத்து அவன் பாதம் தனில் சாற்றினேன் அவன் தன்னையுமே மலராக்கியே - எந்தன் அருகினில் அமர்ந்து
கொண்டான்.
நாடிலும் நீயுமென்ற நிலைகளெல்லாம் இந்த நானிலத்தில் இனியேது எனலே உன்னைக் கண்டு கொண்டால் நான் என்ற நிலை ஏது என்றான்.
s
கார்த்திகைத் தீப நந்நாளிலே -அன்று கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த காரத்தகேயனை நீ கருத்தினில் கொண்டால் நேரத்தியாய் உன் குறை தீர்ப்பானே.
அருட்குரு நாதனின் திருவருட் கருணையால் ஆயிரம் அகல் விளக்கேற்றி நின்றால் யூ. புகன்தன் ஈராறு கரங்களால் அ.ப.பி அள்ளி அருள் தந்தருள்வான்
ஆற்றங்கரையினில் திருவிளக்கேற்றினால் கராமல் குறைதீர்க்க வேலன் வருவான் வl,ா, அந்த வேலன் தந்தது போதாதென்றால் பனவிரு விழியாலுனைப் பார்த்திடுவான்
கடைக்கண்ணின் பார்வை ஒன்றே போதுமென்றே நீ கதறிய நாட்களை மறந்தனையோ பன்னிரு விழிகளின் பார்வையும் உன் மேலே பட்டுவிட்ட பின்னால் வினையேது
- 17

Page 12
ஆற்றருகே நீ சிரித்தால் ஆறுமுகா-அங்கே அன்னமெல்லாம் மலையாகும் மடங்களிலே அடியவர் பசியெல்லாம் ஆறுதங்கே -வேலன் அருள்வெள்ளம் ஆறாக ஓடுதிங்கே. (ஆற்றருகே)
பூவரச மரத்தருகில் புகழ்பாடும் -அடியர் நெஞ்சமதில் நிம்மதியின் நிழலாடும் பொங்கிவரும் புன்னகையில் வேலாடும் -அதைக் கண்டோர்கள் கண்களிலே நீராடும். (ஆற்றருகே)
பசி ஆற அன்னதான மடங்களுண்டு -பின்னே களை ஆற ஆற்றங்கரை ஓரமுண்டு பிணிதீர்க்க ஆலமிலையில் அமுதுமுண்டு -கர்ம வினைபோக்க வேற்கரணித் தீர்த்தமுண்டு. (ஆற்றருகே)
காவடியாய் உன் மனமே ஆடவந்தால் -அங்கே கந்தனருள் கடல்மடைபோல் திறந்திடுமே கற்பூரமாயுருக நீ துணிந்தால் வேலன் கதவில்லா வாசலிலே காத்திருப்பான். (ஆற்றருகே)
ஆற்றோரம் நான் காத்திருப்பேன் கல்லோடைக் கரையினில் விழித்திருப்பேன் பூவரச மரத்தடியில் நினைத்திருப்பேன் -வேலா பொங்கும் உன் எழிலுருவைக் காட்டிடுவாயே
தொண்டைமான் ஆற்றருகே குறை தீர்க்கின்றாய் குறையாத அருளை வாரி இறைக்கின்றாய் வருகின்ற அருள் வெள்ளம் தனில் நீந்தவே அடியேனுக் கருகதையும் தந்தருள்வாய்.
ஆற்றம் கரை நடுவே ஆண்டவா உன் சந்நிதி ஆறுதல் தர அங்கோர் ஆலய மாமணி அடியாரின் குறையெல்லாம் அறிவித்த மணிகேட்டு ஓடோடி வருவாயே குறை தீர்க்கும் குருபரனே
கவலைகள் கண்ணிராய் கசிந்துருகி ஓடுது கந்தா உன் அருள் வெள்ளம் கடல்மடையாய் பாயுது கால் தொட்டோர் குறையெல்லாம் அவர் எடுத்து -நீ கொடுத்த திருநீறு தனைப்பூச நீறாகி மறையுது
శ్రీ
- 18

வேலவன் வீதி வரும்வேளை -வேலில் வெற்றிலைத் துண்டினைக் கண்டோம் பத்திர முத்திரை வேலவனே -எங்கள் பத்தரை மாற்றுப் பசும்பொன்னே...(வேலவன்)
சந்நிதி வேலனின் திருவிளையாடலால் வந்த ஓர் கதையின் ஞாபகமே வெற்றிலை மடங்கும் திரிகோண சக்தி மூர்த்தம் கொண்ட தங்கவேலானான். (வேலவன்)
சிவமுனி சிகண்டி சீடருடன் கதிர்காமம் செல்லும் காட்டு வழியிலே கண்டான் மதம் கொண்ட யானை ஒன்று -தன் சீடரைத் துரத்தி வருவதையே
வேலை நினைத்தான் வேண்டி நின்றான் வெற்றிலை எடுத்தான் மந்திரம் ஜெபித்தான் அம்புபோல் அதனை ஆனைமேல் ஏவ ஆனையும் மறையவோர் கந்தர்வன் நின்றான்
ஆனைச் சாபமும் நீங்கிய நிலையில் ஐராவசு என்ற கந்தர்வன் சிகண்டி முனிவரையும் வணங்கி நின்றான் சிங்கார வேலனின் கருணையை உணர்ந்தான்.
இருவரும் முருகனை வணங்கிடவே வேலனும் அங்கு காட்சி தந்தான் சிகண்டியின் பக்தியை மெச்சியுமே கதிர்காமம் வந்தென்னைக் காண்பாயென்றான்.
ஐராவசுவும் அவன் அருள் வேண்ட வடபதியாம் செல்வச் சந்நிதியில் நடக்கும் பூசைமுறைச் சிறப்பறிவாய் ஆட்கொள அங்குநான் வருவேனென்றான்.
கந்தனின் பூசைச் சிறப்பறிய கந்தர்வனும்சந் நிதி வந்தான் முருகநாகர் என்ற பெயரிலே முருகனை இங்கு வணங்கி நின்றான்.
-19

Page 13
அன்னவனை ஆட் கொண்டிடவே அப்பனின் அருள் அங்கு தோன்றிடவே அவனும் சமாதி நிலைகொண்டான் அதன்மேல் பூவரசும் தோன்றியதே.
அதனருகே அப்பன் வேலாகி நின்று பூவரசைத் தல விருட்சமென்றான் என்னை வணங்கும் அடியரெல்லாம் பூவரசைப் போற்ற வேண்டும் என்றான்.
வெற்றிலை வேலாய் மாறியதாலும் யானைச்சாபம் தனை நீக்கியதாலும் வெற்றிலைத் துண்டினை வைத்துக் கொண்டே வேலவன் வீதி வருகின்றான். (வேலவன்)
證
உள்ளம் என்றும் உனக்காக வேலப்பா உகந்தது எதுவோ அதனைத் தருவாய் கந்தப்பா -எனக்கு (உள்ளம்)
உன் எழில் காணச் சந்நிதி வருவேன் வேலப்பா உன் கருணையை நினைந்து உருகிட வேண்டும் கந்தப்பா. (உள்ளம்)
ஏசியும் பேசியும் துதிப்பவர்க்கு நீ எதிரில் நிற்பாயாம் அறிந்தும் அவ்வழி நாட என் மனமோ மறுக்கிறதே அடித்தாலும் நீயே எனை அணைத்தாலும் நீயே ஆற்றங்கரையினிலே என்றும் காத்திருப்பவன் நானே. (உள்ளம்)
அபயம் தர நீ வருவாய் என்பதை அறிந்திருந்தும் அறியாமை என்ற அஞ்ஞானத்தால் வாடுகின்றேன் சஞ்சல மனத்தால் வரும் சங்கடம் தன்னை சடுதியில் தீர்ப்பாய் எங்கள் சந்நிதிவேலே. (உள்ளம்)
அடிமணம் தினமுனை நாடும் என்பதை அறியாயோ அங்கு ஆலயம் ஒன்றினை அமைத்ததை நீயும் மறந்தாயோ பூவரசாய் எனை மாற்றவந்ததை மறந்தாயோ நீ விழுத்தும் பழுத்த இலையெல்லாம் பாமலர் இதழே.(உள்ளம்)
விழுந்த பழுத்த இலைபோல் பாமலர் பழுத்திடுமோ விழுந்த மனத்தோர் மத்தியில் நிம்மதி தந்திடுமோ விழுந்த இலைகள் பத்திரமாய் மாறும் விந்தையைப்போல் பழுத்த பாமலர் கந்த கவசமாய் ஆவது எப்போ. (உள்ளம்)
-20

சlfகி வேலழகன் சந்நிதியில் நின்றால் வினை வருமா எந்தி கொடுத்தாலும் அவன் நிதி என்னாளும் குறைந்திடுமா
அslளி அள்ளிக் கொடுப்பதற்கோ இங்கு அன்னமலை மீது நின்றான் அன்னமலை ஆறயிலே அடியர் பசியெல்லாம் ஆறுதய்யா
துள்ளித்துள்ளி விளையாட ஓர் வள்ளிக் குறமாதைக் கொண்டான் தள்ளித்தள்ளி வைத்திடாதே எனக்குந்தன் தயை என்றும் வேண்டுமையா
வெள்ளிமயில் மீதினிலே நீ விழாக்கோலம் கொண்ட நாளில் கள்ளத்தனமாகவே வள்ளியை நீ கண்டுவிட்டுச் செல்லும் மர்மம் என்ன?
தீரத்தத் திருவிழாவிலே கனநேரம் வள்ளியோடு நின்றுவிட்டதால் திரும்பி நீ சென்றபோது தெய்வானை கதவையும் பூட்டினாளோ?
பலமுறை வந்தபோதும் கதவங்கே திறக்கவில்லை -பின் தைப்பூச நிதி தருவேனென்றாய் கதவங்கே திறபட்டதோ
பழம் ஒன்றால் கோபம் கொண்டு நீ பழனிக்கு வந்த முருகா - உன் தெய்வர்னை பூட்டிய கதவருகே திரும்பவும் வந்த மர்மம் என்ன?
சக்திகள் இரண்டுக்குமே நீ சரிபாதி தந்ததினால் இரண்டுக்கும் மத்தியிலே நீ சிவமாகி நிற்கின்றாயோ?
சிவமாகி நின்றதினால் உனக்கு தனியாக இடமில்லையோ சக்திகள் தனைவேண்ட உன்னருளும் தன்னாலே வந்திடுமோ?
தனியாக வேலாக நின்ற இடம் பூவரச மரத்தடியோ பூவாக நான் வருவேன் உந்தன் பொன்னடியில் இடம்தேடி
ாமலை நான் படைப்பேன் நீ ஏறிவிளையாட வருவாய் ஆடிய பின்னாலே உன் காலடியில் பூமலையை நான் குவிப்பேன்
s
-21 -

Page 14
வேலவனே வரலாமே வேண்டும் வரம் தரலாமே வேண்டும் நிலைதாண்டியதால்வேலாஉன்சந்நிதிகண்டதினால்
வேலாவா பாலாவா வேகமாய் ஓடியே வா
உள்ளம் கவர் கள்வனாகி என்றும் என்னுள் இருப்பதினால் பள்ளம் தனை மேவ அருள்வெள்ளம் நித்தம் வருவதினால் வள்ளம் தனில் நீ வருவாய் வழி காட்டியாயிருப்பாய் கள்ளம் எல்லாம் கரைந்ததினால் கவலைகளும் இனியேது (வேலாவா)
சந்நிதியை நினைத்தாலே சாயுச்யம் வரும் என்றால் சந்நிதியில் நின்றவர்க்கு சங்கடங்கள் இனியேது அன்னதான மடமுமுண்டு ஆலமிலையில் அமுதுமுண்டு நோய் மாறத் தீர்த்தமுண்டு பூவரச நிழலுமுண்டு. (வேலா வா)
பூவரச நிழல் வேண்டின் தீர்ந்திடும் உன் நோய்களெல்லாம் பூவரச இலை வேண்டின் சுகபோக வாழ்வு வரும் பூவரச அடி வேண்டின் வேலன் அருள் தான் சுரக்கும் புண்ணியனை வேண்டி நின்றால் பொன்னுலக வாழ்வு வரும் (வேலா வா)
பூவரசப் பூ வேண்டின் பாமலரைத் தந்தருள்வான் பூவரசாய் மாறிவிட்டால் அருகினிலே தான் அமர்வான் உள்ளே உள்ளே சென்றாலோ சமாதிநிலை தான் புரியும் இன்னும் உள்ளே சென்றாலோ தன்னையுமே தந்திடுவான். (வேலா வா)
நீ ஆறானால் நான் தொண்டமானாற்றம் கரையாவேன் பூவரசானால் நான் நிலமாவேனே வேலழகா நீ அமுதானால் நான் ஆலமரத்து இலையாவேன் நீ வேலானால் நான் சந்நிதியில் திருநீறாவேன் . (நீ)
கரையாகி நான் அங்கே என்றும் காத்திருந்தால் நீ அலையாகி என்னை அடிக்கடி வந்து அணைப்பாயே பின் நிலையாகி அங்கு நீயுமே நின்று சிரித்தாலோ நான் மடங்களில் தோன்றும் அன்னமலைகளாய் மாறிடுவேன் .(நீ)
நானாகாமல் தானாகி உன் நினைவொன்றால் அது ஏனாகி என் சிந்தையில் தெளிவைத் தரமுன்னே நானாகி நிற்கும் ஆணவத்தையுமே நாணவைத்து நீயாகி என் நெஞ்சத்தில் நிம்மதி தருவாயே . (நீ)
பூவரசத்து இலையாகி எனைக் காத்து நின்றால் - நான் பாவரசாகிப் பூவரச மர நிழலினிலே பாமலரைத் தினம் தினம் பாடிப்பாடி நின்றிடுவேன் - அது பூமலராய் உன் பொன்னடிக்குத் தினம் வந்திடுமே . (நீ)
(333
-22

கல்லோடைக் கரையினிலே காலடியும் தந்தவனே தொண்டமானாற்றருகே தொண்டரைக் காப்பவனே
வண்டமிழ் வடிவேலா . (கல்லோடை) எழுகோடி மந்திரத்தை ஓம் சரவணபவத்தில் இருத்தியே தொழுகோடி அடியவர் இடர் தீர்த்தாய் அறுகோணச் சக்கரத்தில் ஆடிவரும் அழகேசா அருளாற்றுச் சந்நிதியில் ஆடல்முகம் தெரியுதய்யா
கந்த கடம்பா கருணைக்கடலே கார்த்திகேயா திருவடிவேலா சரவண ஷண்முக சிவகுருநாதா வள்ளி குஞ்சரி மணவாளா முருகேசா மால்மருகேசா எங்கள் குமரேசா
வருவாய் . is ..... மயிலேறி . குறைதீர்க்கும் ஐயா (கல்லோடை)
ஆலம் இலைமீது அமுதாக வருபவனே அன்னமலை மீதேறி ஆடிவரும் அருள்வடிவே பூவரச மரத்துப் புண்ணியனார் அருகிருந்து வேலாகக் கதவில்லாத் தலைவாசல் தனில் வருவாய்
வடிவேலா உமைபாலா வள்ளிலோலா ஆற்றைமட்டுமே காட்டி நிற்பதால் ஆறுதல் இங்கு தருவாயோ பொருளாகி நீ அருளாகி நீ அன்பாகி பின் அறிவாகும் வேதாந்த நாதாந்த ஏகாந்த நிலையோ . (கல்லோடை)
s
ஆடுகின்றானடி சந்நிதியில் - அதைப் பாடவந்தேன் ஆற்றம் கரை யருகில் அன்னையும் ஆட அப்பனும் ஆட அருகிருந்த மூன்று சக்திகளும் ஆட (ஆடுகின்றா)
வேண்டுகின்றேன் நீயோ வாட்டுகின்றாய் - அப்போ எந்தையோ என் துயர் தீர்க்க என்றான் காட்டியுமே பின்னே கண்ணசைத்து நீ ஆடுகின்ற ஆட்டத்தின் அர்த்தமென்ன - வேலன் (ஆடுகின்றா)
ஊழ்வினை சூழ்வினையோ நானறியேன் - அதை உணர்ந்தவர் உரைக்கவும் தடுக்கின்றாய் சொல்லாமல் சொல்லி அங்கே மெல்லவைத்த உன் சோதி வடிவழகை சொல்லில் கண்டேன் - வேலன் (ஆடுகின்றா)
அரிசியைக் கற்கண்டாய் ஆக்கி வைத்தே - அன்று
அடியவர் களைதீர்த்தாய் மடங்களிலே
ஆறுதல் தர வேண்டி ஆறுமுகா என்றேன் - நீ
மாறுமுகமாகி மாறுவதேன் முருகா (ஆடுகின்றா)
-23

Page 15
வேலவனை வேண்டி நின்றேன் ஏதுபயம் (இனி எனக்கு ஏது பயம்)
சந்நிதிவேலே நஞ்சு கொண்ட நாகத்திற்கும் நான் அஞ்சேன் அது மயிலடியில் . யாமிருக்கப் பயமேன் என்றவன் சொன்னதினால் ஞாலமெல்லாம் அவன் புகழ்பாடித் திரிந்திடுவேனே . (வேலவனை)
சோதனைகள் பல அவன் எனக்குத் தந்திருந்தாலும் சாதனையில் அவனே நிற்பான் சத்தியமே! நிச்சயமே சமநிலைக்கு தென்னகம் வந்த இருமலை போலே இங்கோ! அன்னமலை அருகே கந்தன் அருளே தருவான் .(வேலவனை)
மந்திரப் பூசையிலே அவன் மகிழ்ந்திருந்தாலும் மெளன அன்புப் பூசையை இங்கு விரும்பியதால் வந்து சேரும் மலர்களுமோ இங்கு பலவிதமே அடியர் இதயங்களும் பாமலரும் அதில் அடங்கிடுமே . (வேலவனை)
சரவண பவாய - குகாய நமஓம் சரவண பவாய - குகாய நமஓம்
வேலவன் வந்தான் வேலவன் வந்தான் ஆற்றங்கரையிலே அவன் வீதியோர மடங்களையும் பார்த்து வருவான்
கடைத்தேற இனி வழியில்லாமல் கந்தா என்று வந்தவர்க்கவன் கதவில்லா வாசலிலே காத்துக் காத்து நின்றிடுவான்
அமுதளித்துப் பிணி தீர்த்து தீர்த்தத்தாலே வினையும் போக்கி பூசகரை வணங்க வைத்து திருநீற்றையும் தான் இட்டு
பூவரச நிழலினிலே நோய்களையும் தான் மாற்றி புதுவாழ்வையும் காட்டி புத்துணர்வையும் கொடுத்து
மடங்களிலே அன்னமளித்து களையாற இடமும் வைத்து களை தீர்ந்த பின்னாலே கலி தீர்க்க மனமும் கொண்டு
அருளாற்று அருகினிலே ஆராரோ தான் பாடி இருளாற்று அஞ்ஞானம் இனி உனக்குப் போதும் என்று .
ஆராரோ நீயாரோ அருமையான குழந்தையாரோ
முருகா என்று மொழிந்ததினால் முன்வினையும் முடிந்ததோடா கந்தா என்று கதறியதால் கர்மவினை கரைந்ததோடா குமரா என்று கும்பிட்டதால் குழப்பமெல்லாம் குறைந்ததோடா வேலா என்று வேண்டியதால் வேதனையும் போனதோடா .
ஆராரோ நீயாரோ அருமையான குழந்தையாரோ
-24

ஆற்றங்கரை வேலவன் தான் வந்தானடி - இங்கே ஆடிமுடிந்த பின்னே நின்றானடி *" شبیه ----ة அள்ளி அள்ளிக் கொடுக்க அன்னமலைகளைப் படைத்தே - அங்கே... அருகிருந்து அடியரோடு உண்பானடி
பூவரச மரத்தருகே வந்தானடி - அவன் புகழ்பாடும் அடியவரைக் கண்டானடி அருள்மாரி போல் இலைகளை உதிரவைத்தே - அவர் இருள் நீக்கி இதயங்களைக் குளிரவைத்தான்டி
கும்பத்தில் அபிஷேகம்செய்து பார்க்க வந்தோர்க்கு - வேலன் ஹோமமில்லாக் கும்பத்திலே அருள் சுரப்பான்டி கற்பூர ஒளியே ஹோமமாகும் விந்தை - இந்த மாநிலத்தில் எங்குமில்லா(த) புதுமைதானடி
பிணி தீர்க்க வந்து துணைவேண்டி நின்றோர்க்கு - ஆலம் இலைகளிலே அமுதாகி நின்றானடி நடுந்சில்லா அமுதென்று சொல்லாலே தான் உணர்த்தி ஆழமும் இல்லையென்று அறிவுறுத்திச் சென்றான்டி
தொண்டமானாற்றருகே வேலன் வந்தான்டி - அங்கே தொண்டர்குறை தீர்ப்பேன் என்று அபயம் தந்தான்டி கதவில்லா வாசலிலே காத்திருப்பான்டி - வருவோர் *வலைகளை வரமுன்னே தீர்த்து வைப்பான்டி
வேற்கரணித் தீர்த்தமதில் தீர்த்தமாடியே - பின் பூவரச மரநிழலில் அமைதி கண்டோர்க்கு எந்நிதியும் தருவேனென்று சந்நிதி வந்தே - இங்கே வேற்படை மலை அமர்ந்து காட்சி தந்தானடி
அருளோடு வேலாட ஆட அடியார் நின் புகழே தான் பாட திருநீற்றைத் தலைமேலே போட நீ போட தீவினைகள் பறந்தோடி ஒட .
(8) விக்கும் அடியவர்கள் கூட கூட - நின் திருநாமம் திக்கெட்டும் LITL LTL சீர்த்தமது கோமுகையில் ஓட ஓட தெளிவான சிந்தனையை நாட .
1ாப்பாய் முருகா எனப் பாட பாட கருணை அருளாறாகி ஓட ஓட ஆலமிலை அமுதினைத் தேட தேட அடியவர் பிணியெல்லாம் ஒட.
நெய்யொளியில் மாவிளக்கு கூட கூட மணி விளக்காய் நீ அருகே ஆட ஆட தாயகியா தருளதனை அள்ளி அள்ளி தருகின்றாள் உன் துணைவி வள்ளி ...
-25

Page 16
அன்னமலை யருகே அமர்ந்தவனே அடியார்கள் குறை எல்லாம் தீர்ப்பவனே பூரீசெல்வச் சந்நிதி வேலழகா தீராயோ எங்கள் வினைகளெல்லாம் .
பிணி தீர்க்கத் திருவேற்கரணி கொண்டாய் இனியேது கவலை எந்தனுக்கு துணிவோடு உன்புகழ் பாடிடுவேன் - வேலா நோய் தீர்க்கும் பூவசர மரத்தருகே .
பாலான மனத்தையும் அடங்க வைத்து - நீ
உறையாகி என்னுள் என்றும் உறைபவனே
பாடுகின்ற மனத்தினால் தேடவைத்து - நீ பாடலாய் வந்தெனக்கு அமைதி தந்தாய்
வேதனையைத் தந்தும் என்னை வேகவும்விட்டாய் - பின்னே சாதனையில் சத்தியத்தின் சாயலும் கண்டேன் - இனி வேளைவரும் போது தான் வேலை எனக்கோ - வேலா வேண்டும் வளர வேண்டுகின்றேன் தாண்டும் வழிதா .
வித்து வாங்க வருவோர்க்கு சந்நிதியிலே - நீ சந்தான விருத்தியை தர எண்ணியே வித்தையெல்லாம் விளைவாக்கி ஆலமிலையில் அமுதாக்கி உண்ணவைப்பாய் (உன்) அண்ணன் வாசலில்
(அன்ன மலை) 證
வேலுண்டு மயிலுண்டு வேதனைக்கு நீயுண்டு நானுண்டு களிப்பதென்றால் சண்முகா கூடவா
வேதனை தருவதென்றால் வேலவா என்றழைப்பேன் சோதனை வரும் வேளை சோதிவடி வேலா என்பேன் பாதனைத் தருவதென்றால் பன்னிரு கரம் நீட்ட சாதனை வரும்வேளை சந்நிதியானே என்பேன்
உன்னைத் துதிப்பதற்கு நின் அருள்தான் வேண்டும் நின்பாதம் நான்காண உன் துணை தான் வேண்டும் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோற்றுவித்த மூத்த குடி வாழ்வதற்கு முருகா நின் அருள் வேண்டும்
-26

காலடி தந்த இடமோர் கல்லோடை நாலடி தந்தவன் பூவரச மரத்தடியில் வேலடியைக் காணவோர் சந்நிதானம் தேடிவந்தால் தினமும் அங்கே அன்னதானம்
காவடிகள் அடிக்கடி அங்கே தேடிவரும் பாவடிகள் புத்தம் புதிதாய் நித்தம் வரும் நாவடியால் தேடினாலும் நலங்கள் வரும் நம்பிச் சேவடியில் மனம் பதித்தால் நிம்மதி வரும்
சும்மா இருந்து சுகங்காண வருவோர்க்கு அம்மா இதுபோல் இடம் வேறில்லையே தம்மால் இனியேதும் முடியாமல் வந்தோர்க்கு எம்மான் அருள் வெள்ளம் அரவணைக்கக் காத்திருக்கும்
வந்தவழி தெரியாமல் போறவழி புரியாமல் சொந்தவழி கண்டு சுகங்காண வேண்டின்
எந்த வழியாலும் சந்நிதியை நாடிவிட்டால் பந்த வழி துறந்து பாதிவழி சென்றதன்றோ
ஆலயக் கதவுகள் திறபட்டதோ ஆலமிலை அமுதெல்லாம் வைபட்டதோ அக்கரை நிலமெல்லாம் வெளிப்பட்டதோ ஆற்றினில் வேலவன் அருள் பட்டதோ?
மடங்களில் அன்னமெல்லாம் மலையானதோ ஆற்றருகே காவடிகள் அலையானதோ ஒளியிலே கந்தனருள் தெளிவானதோ அடியார் நெஞ்சத்துக் கனலெல்லாம் நீறானதோ!
திருநீற்றுத் தட்டங்கு தென்பட்டதோ வாய்கட்டும் அன்பரின் கை பட்டதோ அடியவர் அன்பரின் கால் தொட்டதோ எடுத்தவர் கொடுத்தவர் நீறிட்டதோ!
-27

Page 17
வேலா உனை வணங்க நின் தாள்மேல் தலை வைத்தேன் தாள்மேல் தலை வைக்க -என் வாழ்வே மலரக் கண்டேன்
வளர்ந்த என் வாழ்வெல்லாம் மலர்ந்தது நின் அருளால் தளரா மனத்துடனே -நின் புகழ்பாடும் பணிதாராய்
நீயே என் நிதியே நிதம் வருவேன் உன் சந்நிதிக்கே புத்தம் புதுக் கவிதையெல்லாம் நீ நித்தம் நித்தம் தந்தருள்வாய்
பாடும் பணியென்றால் -நீ வீடும் தருவாயென்றார் பாவடி நான் படைக்க நின் காலடி காட்டிடுவாய்
காலடிக் கரையினிலே நின் காவடி ஆட்டமெல்லாம் -எனைக் காண நீ வைப்பதெப்போ -மனக் குறையெல்லாம் மறைவதெப்போ!
盘
வேலா உன் வாசலிலே -வந்து வேண்டாதார் இங்கு யாரையா (86.16).T)
ஆலயக் கதவுகள் அடைபட்டு நின்றபோதும் தன்மந்த காலத்தில் தடைபல வந்தபோதும் உன்வாசல் காணாமல் உருகிடும் அடியவர்க்கு அவர் வாசல் தனை நாடி அற்புதங்கள் காட்டி நின்ற.வேலா)
உன் அமுது உண்ணாமல் அன்னத்தையே மறந்தவர்க்கு விழுதாகி நீ நின்று வினை எல்லாம் தாங்கி நின்றாய் அழுதாலும் ஆறாத அடியரின் கவலைதனை ஆற்றுதற் கென்றோ இன்று ஆற்றருகே வழிவிட்டாய்.(வேலா)
கலியிலே கந்தனருள் கடல்மடை என்று காட்ட காலத்திலே பல கோலத்தைக் காட்டி நின்றாய் தொண்டைமானாற்றருகே தொழுதாலே மனம் நிறையும் என்றவர் எண்ணத்திற்கு நெய் விளக்கேற்றி வைத்த.(வேலா)
-28

வேலா வேண்டுகின்றேன் வேண்டும் வரம் தாராய் பாலா பற்றி நின்றேன் தாளே கெதி யன்றோ
தொண்டைமானாற்றம் கரையில் தொழவினை தீரமணம் கொண்டோ ஆறுபடை வீட்டினுக்கும் அப்பால் ஆறவந்தாய் சந்நிதியில் அழகா (வேலா) ஆலிமிலை தருவது அமுதென்றால் ஆiறங்கரை பூவுலகில் சொர்க்கமோ! பூவரசே கற்பகத் தருவானால் 0வi கரணி சரவணப் பொய்கையாகுமே. (866) T)
கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்ததை காட்டவோ சின்னஞ்சிறு பெண்களின் கைகளில் நெய்விளக்கும் ஏற்றியே காட்டுகின்றாய் சந்நிதியில் வேலவா. ))36u6חט(
ஆான்டிக் கோலம் கொண்ட அந்த நாளிலே y , லை கொணர்ந்த ஓர் இடும்பனை
இருத்தியே இருப்பிடம் கொண்டவா இதமாகப் பழனியும் ஆனவா. (வேலா)
பழனி போல் பாரோர் பாபம் தீர்க்கவே ஈழத்திலும் இன்னல்களைப் போக்கவே சந்நிதியைச் சொர்க்க பூமி ஆக்கியே அன்னமலை சொர்ணமலை அமர்ந்தவா. (வேலா)
ங்களில் அன்னமலை தோன்றவே வாசலெல்லாம் சொர்ணமலை ஆனதோ கருமடியார் குறைகள் பாதி தீருமே கோலம் கண்டால் கற்பூரமாய் ஆகுமே. (வேலா)
தீராவினை தீர்க்கக் கோயில் கொண்டுமே மாறாநோய் மாற்றத் திருநீற்றையும் அவர் எடுக்க நீ கொடுக்கும் விந்தையை காட்டுகின்றாய் சந்நிதியில் வேலவா. (வேலா)
பாதும் பற்றப் பாபம் தீரும் என்பதை
Iர்ே காணக் காட்டுகின்றாய் பாலகா தீர்க்கமான தெளிவைத்தரும் தீர்த்தத்தை ப கண்டோர் வாழ்வில் சஞ்சலங்கள் ஏதுமுண்டோ. (வேலா)
காலடியும் தந்த அந்தக் கரையினில் காவடியாய் மனங்களையும் மாற்றியே பாவடியால் பாபங்களைப் போக்கவே பாடவைத்தாய் எங்களையும் வேலவா (வேலா)
-29

Page 18
நீ தான் அன்பு நீ தான் அறிவு நீ தான் ஞானத் தெளிவு
வா என்று சொன்னேன் வந்தாயெனுள்ளே தா என்று கேட்டேன் தந்தாயுன் அருளை சஞ்சலம் தீர்க்க சந்நிதியில் நின்றாய் சந்தேகம் தீரும் வழி சொன்னால் போதும்.(நீ தான்)
நாதாந்த முடிவே நாயகனாய் வருவாயே வேதாந்த விளைவே முத்தெல்லாம் தருவாயே தொண்டைமானாற்றருகே தொழுவோரின் வினை தீர்த்து ஏகாந்த எழிலே என்னையுமே காட்டிடுவாய்.(நீ தான்)
உன்னையே நினைப்போரின் மனை நாடி வருவாயே உன் வாசல் வருவோரின் உள்ளத்தில் உறைவாயே உறைந்தோரின் நெஞ்சத்தில் நிம்மதியும் தான்வருமே கடைந்தபின் கந்தனருள் கடல்மடையாய்ப் பாய்ந்திடுமே
證 (நீ தான்)
செல்வச் சந்நிதியில் செல்வங்கள் குறைவதில்லை -செவ்வேளின் சேவடியைப் பற்றியோர்க்கு செல்வங்கள் அழிவதில்லை மெள்ளமாய் மெள்ளமாய் செல்வனை மனத்தில் இருத்த பள்ளமாய் மனத்தையாக்க செல்வங்கள் தனைக் குவிப்பான்
அன்னமலைகள் அள்ள அள்ளக் குறைவதில்லை சொர்ணமலைகளின் நடுவினிலே சுப்ரமண்யன் வேற்படையாய் அமர்ந்த காட்சிச் சிறப்பதனை சொல்லச் சொல்ல வாயினிமை குறைவதில்லை
பூவரச மரத்தடியின் சிறப்பையெல்லாம் பாவரசர் பாடிவைத்தார் பாமாலையாய் பாமரர்கள் பகுத்தறிவால் பகிர்ந்து சொன்னார் அறிந்தால் அதுவுே அறிவாகும் அன்னமலை வேலாகும்
அறிவுக்கு மறுபெயரே வேலாகும் -அதைக் குறைவின்றி நீ கொள்ள வேண்டுமென்றால் பார்க்கவந்த பாருலகாம் மனத்திருளில் மறைந்திருக்கும் செல்வனையே காண முயல்.
-30

ஆilதகன்று ஊன்றிய வேலா ஆவதெல்லாம்
உன்னருளாலே ஆழ்கடலைத் தாண்டி உந்தன் ஆணையை என் சிரமேல்
கொண்டேன் ஆண்மட்டும் ஊனமின்றி வாழ்ந்திருந்தால் போதுமையா துெைதன்று கேட்பதையெல்லாம் எப்போதோ விட்டு விட்டேன் (எப்போதோ விட்டு விட்டேன்)
ற தைருளே என்றென்றும் என்னுடனே இருப்பதென்றால் ற லகதனில் பூவரசத்து இலைச்சருகே ஆனாலும் காசாக மாறுகின்ற விந்தை உந்தன் கருணைமழை அருமைதனை உணர்ந்தவர்க்கு அவனியெலாம் இன்பமயம்
(அவனியெலாம் இன்பமயம்)
பொய்யான உலகத்திலெல்லாம் மெய்யாக மிளிர்ப்பவனே அய்யா உன் அருளதனை அன்றாடம் அறிவோர்க்கு பொய்யென்று விட்டதெல்லாம் தொட்டவுடன் மெய்யாகும் பொய்யென்ற மெய்யினுள்ளே பொன்னாகி நிற்பவனே
(நானாகி நிற்பவனே)
கைவந்து எடுக்கவந்தால் பையினிலே ஒன்றுமில்லை பன்னிருகை வேலவனின் கையிருப்பு உந்தனுக்கே 1ாலடியில் சிரம் வைத்தால் பன்னிருகை திறந்திடுமே தருவதனைத் தாங்கிடவே உன் கைகளுக்குத் திறனுண்டோ
(உன் பையதனில் இடமுண்டோ)
சந்நிதியை நினைத்தவர்க்கு எந்நிதிக்கும் குறைவில்லை சந்நிதிக்கு வந்துவிட்டால் சந்ததியே வாழ்ந்திடுமே சந்நிதியின் பெரும் நிதியே சரவணபவ ஷண்முகமே சந்நிதியைச் சரணடைந்தாலோ சாயுச்ய் சங்கமமே
(சாயுச்ய சங்கமமே)
盘
-31

Page 19
சின்னஞ்சிறு வயசில் உன்னை நிதம் காண
ஆற்றங்கரை வருவேனே தொண்டைமான் ஆற்றங்கரை வருவேனே
கல்லோடைக் கரையதனில் காணும் உந்தன் கோலம் போலே காட்சியை வேறெங்குமே காணத்தான் முடியுமா. பென்னம் பெருவயசில் தன்னந் தனியாக்கி தடைபல தருவதும் ஏனோ உனைக்கான தடைபல தருவதும் ஏனோ.
காணாத துயரை உந்தன் அருள்வெள்ளம் மறைத்தாலும் மனம் மட்டும் என்றும் உந்தன் மண்ணைத்தான் தேடுதே. தன்னந் தனியனாய்ச் சின்னஞ் சிறு வயசில் தேடி நான் வந்திருந்தேனே சந்நிதியைத் தேடி நான் வந்திருந்தேனே
காணாத காட்சிகளை நான் காண என்றோ கனதுாரம் என்னை இன்று அனுப்பி வைத்தாயோ காணுகின்ற காட்சியெல்லாம் கண்ணுக்கு இனித்தாலும் உன்கோலம் ஒன்றே எந்தன் மனம் நிறையப் போதுமய்யா
தூர இருக்கையிலே மாறாப் பெரு ஒளிளையக் காட்டி நீ எனைக் கவர்ந்தாயோ அன்று காட்டி நீ எனைக் கவர்ந்தாயோ கோலங்கள் பல காட்டும் சந்நிதியை நினைப்பவர்க்கு காலங்கள் மாறினாலும் எந்நிதிக்கும் குறைவுமில்லை
தூர இருத்தியுந்தன் வாசல் மறைத்தாலும் சோராமல் அருள் தருவாயே என்றும் மாறாமல் அருள் சுரப்பாயே. நீறிட்ட பின்னாலே அமுதுண்ட அடியவர்க்கு வேறுபட்ட மனநிலையும் வேதனைகள் தருவதில்லை.
வாராது இடர் என்று வாயாரப் பாடவைத்து காணாத துயர் துடைப்பாயே உன்னைக் காணாத துயர் துடைப்பாயே
பூவரச மரத்தடியின் பூசையின் சிறப்பையெல்லாம் பூவுலகில் வேறெங்குமே காணத்தான் முடியுமா.
證
-32

ஆற்றங்கரை ஓரத்திலே ஆறெழுத்து மந்திரத்தை அன்று கதிர்காமருக்கு அறியவைத்தாய்
அன்றுமுதல் இன்றுவரை அவர் வழியில் வந்தவர்கள்
வாய்கட்டும் பூசைமுறையால் வணங்குகின்றார்
எழுந்தருள்வாய் பள்ளி எழுந்தருள்வாய்.
வீரபாகுதேவர் முன்பு சந்தி காலப் பூசை செய்தார் போர் தொடுக்க முன்னால் முருகன் சிவபூசை இங்குசெய்தாய் பூரீ செல்வச் சந்நிதியே இத்தலத்தின் பெயரும் என்றாய் சித்திக்கும் முத்திக்கும் சிறந்த இடம் ஆகுமென்றாய்
(எழுந்.) ஏமகூடப் போர் முடிவில் ஏகும் இடம் சந்நிதியே கதிர்காம யாத்திரைப் பலனைக் காட்டும் இடம் சந்நிதியே ஆறில்லா நிலப்பரப்பில் தொண்டைமான் ஆறு வைத்தாய் ஆறவந்த அடியருக்கு அன்னதான மடமும் வைத்தாய்
(எழுந்.) சத்துருவைச் சம்கரிக்க வேற்படையாய் ஆனவனே எந்நிதியும் சித்திக்க சந்நிதியின் வேலானாய் பூவரச மரத்தடியில் புண்ணியனார் சமாதி வைத்தாய் பூக்கள் இங்கு கனியாகும் கருணை உந்தன் அருள்வெள்ளம்
(எழுந். )
திக்குத் தெரியாத காட்டில் நின்றேன்
பக்குவமாய் அங்கோர் பாலன் வந்தான்
தித்திக்க சித்திக்க அமுது தந்தான்
வேல் அழகன் வேல் அழகன்
அமுதுண்ட களைப்பினிலே அயர்ந்து விட்டேன்
பூவரச மரத்தருகே ஒளியானான்
பூவாகி நானுமங்கே ஓடக் கண்டேன்
வேல் அழகன் வேல் அழகன்
காயாகிப் பழமாகிக் காவல் நின்றேன் காலடியில் சரண் என்றால் கனியுமென்றான் காப்பதுன் கடன் என்றேன் காட்சி தந்தான்
வேல் அழகன் வேல் அழகன்
ஆற்றின்ப வெள்ளத்தில் நீந்தக் கண்டேன் வேற்கரணித் தீர்த்தமாக மாறக் கண்டேன் வேலும் மயிலும் என்றேன் விழித்து விட்டேன்
வேல் அழகன் வேல் அழகன்
-33

Page 20
ஆற்றங் கரையினில் அன்னமலையினில் வெற்றி வேற்படையின்
விளிம்பிலே ஆறுபடையையும் ஆற்றுப்படையையும் ஆறுமுகத்தையும் அறியவா
அறிவாகவும் அருளாகவும் அப்பன் ஆற்றங்கரை அமர்ந்ததால் அன்று தேவர்கள் இடரெல்லாம் தீரமுன் இங்கே அபயகரம் காட்டினான்
அன்றுமுதல் தேவர் நித்தம் இத்தலத்தில் பூசை காண வந்ததால் முருகாற்றுப்படையுமிங்கே ஆறுபடையுமிங்கே அமைவதில் விந்தை என்ன
ஆறு கடல் நீராய் ஆவதை வேறெங்குமே கண்டாயா -அதன் அருகினில் சரவணப் பொய்கையுமே வேற்கரணியாய் ஆனதெங்கே
பூவரசமே தல விருட்சமாய் ஆன புதுமை வேறெங்குமுண்டோ பூவாக உனை அப்பன் மாற்றும் புதுமை பூவுலகில் காண்பதரிது
அன்னமலை அமைத்து பழனிமலை காட்டும் ஆண்டியை மறந்தாயோ வேட்கை தணிவித்த தணிகை மலையுமே பூரீசெல்வச் சந்நிதியே
செந்தூர்க் கடலின் நீர் தொண்டைமானாற்றில் கலந்ததை உணர்ந்தாயோ அங்கே படைத்தளம் இங்கே அபயகரம் அர்த்தம் அறிவாயோ
உன்னைப் பழமாக்க சோலைபல அமைத்த செல்வத்தை மறந்தாயோ பழமுதிர்ச் சோலைகள் பல இங்கே இருப்பது கண்ணுக்குத்
தெரியலையோ
பரம் குன்றம் தனில் தெய்வ யானையை மணந்த காட்சி மூலஸ்தானத்தில்
சுவாமி மலையுமாக்கி இங்கே தந்தைக்குபதேசம் நடப்பதை
உணர்வாயோ
தினம் தினம் நடப்பதை உணர்வாயோ
證
-34

சின்ன வண்ண அடியெடுத்து வாராய் ழரீ செல்வச் சந்நிதியில் தாராய் தப்பு செய்தேனோ தண்டனை பெற்றேனோ இனி மேல் சோதனைகள் போதும் வேலா! .
பட்டதெல்லாம் நின்னருளால் ஒளிகண்ட பனியாக்கி தொட்டதெல்லாம் துலங்கிடவே துணைபுரிவாயே விட்டதெல்லாம் வினைப்பயனோ விளையாட்டென்
றெண்ணவோ கண்டதெல்லாம் கந்தனருள் கடல்மடை தானோ
என்றும் நீயே துணை நான் வாழும் வரை உனை என்றும் நான் மறவேனே! .
ஆற்றங்கரை ஓரத்திலே அன்னமலை தான் அமைத்து அடியரின் பிணியெல்லாம் அன்றாடம் தீர்ப்பாயே நாடி வந்த என்னையுமே நாயாக்கி அலையவைத்து நல்ல குருநாதன் தந்து நாயகனாய் மாற்றி ஏற்றம் நீ தந்தாய்
ஏணி நீ ஆனாய் உனை என்றும் நான் மறவேனே! .
வேற்கரணித் தீர்த்தமதை பூவரசில் தான் ஊற்ற வேற்கருணை வீடுவரை தேடியுமே வந்திடுமே பூவரச மரத்தருகே புகழ்பாடி நானிருக்க ஆலமிலை அமுதினிலே அத்தனையும் தருவாய்
என்றும் நீயே துணை நான் வாழும் வரை உனை என்றும் நான் மறவேனே! .

Page 21
சந்நிதியும் குகனருளும் எந்நிதியே - அங்கே ஊறிடும் ஆறெழுத்தை நெஞ்சமதில் கொண்டார்க்கு இருமலையும் இணைந்தங்கே இதயத்தில் தோன்றிடுமே இன்ப நிலை ஆற்றருகே இருப்பதை நீ உணர்வாயோ
அன்னமலை சொர்ணமலை சிவசக்தி கிரிகளாக அண்ணாமலை ஆண்டவனும் அவன் சக்தி துணையோடு மூலவர் ஸ்தானத்தில் முச்சக்திச் சங்கமமாய் மாலவன் மருகனை நீ மனதினிலே இருத்திவிடு
வேலவனே உன் மனத்தில் விரும்பியே இருக்கவந்தால் சோலைவனமாகி அங்கே சொர்க்கமும் தோன்றிடுமே ஆலமிலை அமுதுனக்கு அன்றாடம் உணவாக ஆனந்த நிலை காண அங்கே ஆறெழுத்தே - அடிக்கல்லோ
வேறெழுத்தை வேண்டாது ஆறெழுத்தே ஆழமாக அடிமனத்தே அது வேகமாக நிலை கொள்ள யோகங்கள் எல்லாம் உன்னிடம் மோகமாகிச் சேரவே
கானத்தின் எல்லையிலே கந்தனருள் சுரந்திடுமே!
சரணவபவ என்று உன்மனத்தைப் பண்படுத்த சாயுச்ச நிலை என்று அவனங்கே குடியிருக்க
பூவரசாய் உன் மனம் பூப்பூத்த நிலையினிலே புண்ணியனார் உன் நிலையைத் தன் நிலையாய் ஆக்கிடுவார்
-36

மூலவனும் வேலவனே எழுந்தருளும் வேலவனே
ஆனமட்டும் தொழுதழுது பாருங்கள் - அவன் ஆலமிலை அமுதுண்டு தேறுங்கள்
ஐயன் திருநீறணிந்து அன்னமலை அமுதுண்டு ஆனந்த நிலை காண வாருங்கள் சந்நிதியில் ஆறுதலும் தந்திடுவான் தேறுங்கள்
பூவரச மரத்தடியில் பூவாக உனைமாற்றி புண்ணியனின் பாதத்திலே சாற்றுங்கள் - அங்கே புதுவாழ்வு தான் வருமே பாருங்கள் - இனி புவி ஆள அடி எடுத்துப் புறப்படுங்கள்
வேற்கரணித் தீர்த்தமதில் வேண்டுமட்டும் தான் குளித்து வேதனையை ஆண்மட்டும் தீருங்கள் - பின்னே வேலவனின் வாசலுக்கு வாருங்கள் - அவன் வேண்டுமட்டும் தருவதெல்லாம் கொள்ளுங்கள்
புத்தம்புது பாசமைத்து சின்னஞ்சிறு வேலவனை மனதாரப் பாடியுமே நில்லுங்கள் - அப்போ தாய் தேடும் கன்றினைப் போல் தானாக உன் பின்னால் வேலவனே வந்திடுவான் பாருங்கள் - உன்னைத் தானாக்கித் தந்திடுவான் தேறுங்கள்
சந்நிதியை நினைத்தவர்க்கு சந்நிதியான் தண்கருணை வேகவைக்கும் வினையைஎல்லாம் பாருங்கள் பாதிவழி வரமுன்னே வீடுவரை அவன் கருணை ஜோதியாய்ச் சூழ்ந்திடுமே பாருங்கள் வீதிவரை வந்துவிட்டால் மீதி ஏதும் இல்லாமல் சோதியாய் மாற்றிடுவான் நில்லுங்கள் - கற்பூர ஜோதியிலே அவனாக மாறுங்கள் .
s
-37

Page 22
எங்கிருந்தால் காண்பேன் உன்னை என்றேன் - நீ அங்கிருந்துபார் அன்னமலை யென்பாய் சொர்ணமலை தான் படைக்கும் சுப்ரமணியா-என் எண்ணமலை மீதேற ஓடி வருவாய் . (எங்கி)
பூவரசத்தோரம் பாமாலை படைத்து பூ ஆரம் சூட வந்தால்-நீ ஆற்றங்கரையோரம் ஆலமர நிழலில் ஆவினத்தை
மேய்த்து நிற்பாய்.(எங்கி)
ஆலமிலை அமுதை ஆனமட்டும் உண்டு
சோர்ந்துறக்கம் கொள்ள என்றால் சாலை ஓர அருகில் ஆடிவந்த காவடிகள் மத்தியிலே
காட்சி தருவாய் காவடியைக் காண என்று கால் கடுக்க ஓடி
வந்தால் கணப்பொழுதில் மறைந்திடுவாய் காலடியைத் தான் பதிக்க கல்லோடைக்
கரையினிலே கண்டவர்கள் பின்மொழிந்தார்.
(எங்கி)
வந்தவழி நான் மறந்து சொந்தவழி
ஏதென்று உந்தனையே கேட்க நின்றேன் பந்தவழியால் நின்று பாதிவழி சென்ற பின்னும்
எந்தவழி வேண்டும் என்பாய் தந்தவழியாற்தானே சந்நிதிக்கு நான் வந்தேன்
எந்தவழி இனி என்றேன் வந்தவழி பந்தவழி தந்தவழி பாதிவழி
எந்தவழி வந்தாலுமே அது எந்தன்வழி என்றுணர்ந்து எட்டியடி நீ
வைத்தாய் தன்னுடனே சங்கமமென்றான்
(எங்கி) 盘
-38

அரூபமாயிருக்கும் ஆரமுதே அன்னமலையாக்கும்
அருள் வெள்ளமே -ஞான சொரூபமாய் நெஞ்சில் வேலாகத் தோன்றும் சிவசுப்ரமண்ய தெய்வமே! ஆவினம் மேய்க்கும் இடையனைப் போலே
ஆலமர நிழலிலும் -தொண்டை மானாற்றம் கரையோரம் நீ ஆடும் ஆட்டத்தின்
அர்த்தத்தை யாரறிவார்!. (95ULDT)
பூவரசத்தோரம் பாசிந்திப் பூசிக்கும் யாசிக்கும்
அடியவர் நெஞ்சில் தோன்றிடும் எண்ணங்கள் காட்டிடும் காட்சிகள் வார்த்தையிலே அடங்கிடுமோ வேற்கரணித் தீர்த்தத்தால் பூவரசை நீராட்ட
வேண்டும் அடியவரின் வேதனைகள் தீர்ந்தவிதம் சாதனைகள் ஆனவிதம்
சாற்ற இனிக் கவிபாடவா. (அரூபமா)
கவிபாட கனவினிலும் நனவினிலும் என் அப்பன்
அடியெடுத்துத் தந்தவிதம் எல்லாம்
தவியாத தாகத்தால் நான் தவிக்க செவி தன்னில்
கனியாக அவன் ஊட்டினான்
கனியாக அவனுாட்ட கவியொன்று உருவாக நான் என்ற நிலை மாறி ஆட
அழகங்கே உருவாக அவனங்கே வேலாகி
அருளுட்டிக் கரம் நீட்டினான். (அருபமா)
கவிதந்து புவியாள களிகூர்ந்து எந்தனை நீ
கனதூரம் அனுப்பினாலும்
கதி என்று சந்நிதியில் நின் பணியை
நான் செய்ய கட்டளை நீ இடும் நாள் எப்போ?
தொட்டகுறை விட்டகுறை ஏதேனும் உண்டென்றால்
ஏற்றதை நீ தந்தருள்வாய்
பட்டதெல்லாம் போதுமய்யா மற்றதெல்லாம்
இனி எனக்குன் பாதார விந்தம் துணை.(அரூபமா)
-39

Page 23
வேலவனைத்தினம் வேண்டிநின்றால் அங்கே வேதனைகள் தீராதோ? சோதனைகள் தோன்றுவதும் சாதனைகள் ஆகுவதும்
சத்ரு சங்கார மன்றோ!
பாலகனை வேண்டி நிதம் பதமலரைத் தான் பற்ற
பக்குவமும் தந்தருள்வாய் -அதை நித்தியமாய் ஆக்குதற்கோ சத்தியத்தைச் சரவணத்துள்
பக்குவமாய் பதுக்கி வைத்தாய் சத்தியமும் நித்தியமும் பக்குவமும் பதநிலையும்
ஆறெழுத்தில் அடக்கமன்றோ -அது நீறிட்ட நெற்றிதனின் மத்தியிலே நின் ஒளியைத்
தானாகத் தான் தருமே!. (வேலவனை)
பாருக்குள் பார்க்க வைத்து பாபி எனைத்தான் மாற்ற
பாமலையைப் படைத்தாயோ -அதில் நான் ஏறித்தான் தவழ நீ அங்கே படியாகிக்
காலடியும் பதித்தனையோ அன்னமலை அருகினிலே ஆற்றின்ப அருள்வெள்ளம்
ஆறாகிப் பாய்வதென்றால் சரவணத்தின் பொய்கையுமே சரிபாதி இருள் நீக்க
வேற்கரணியாய் ஆனதோ. (வேலவனை)
புண்ணியனார் அடங்குவதும் பூவரசு தோன்றுவதும்
அருகினிலே அமர்வதற்கோ பாவி எனை இருத்தியுமே பூ இலையை பாமலையாய்
எனக்குள்ளே தேடவைத்தாய் ஏறி அங்கே தேடுகின்றேன் இமயத்தின்
இடையினிலே மடையாகப் பாய்கின்றதோ அந்த வெள்ளத்தின் வேகத்தில் வேரூன்றி நான் நிற்க
வேண்டுவதும் நின் துணையே!. (வேலவனை)
சந்நிதியை நினைத்தாலே சங்கடமும் சஞ்சலமும்
சரிபாதி ஆகுமன்றோ -பின் சந்நிதியில் நின்றாலோ மறுபாதி நீறாகி
ஆறாகி ஓடுமன்றோ வாழத்தான் வழிகேட்டால் மீளத்தான்
வழிசொல்வேன் ஈழத்தின் வடகரையில் ஆழத்தை அறியவைத்து ஆண்டியாய்
வந்தோரை அரசனாய் ஆக்கிடுவான்.(வேலவனை)
s
-40

பாவாரம் தந்துந்தன் பாதாரம் நான் காண பாதை வழி தன்னைப் பாவி நான் கண்டுணர பாசத்தால் நீ தந்த அருள்விளக்கின் ஒளியதனால் இருளான பாதையெல்லாம் பகலாகத் தோன்றுதையா!
அணையாத அகல்விளக்கின் தீபத்தின் ஒளி தன்னில் தொலையாத பாதை முடிவில் சந்நிதியை நான் காண நான்காண என்றதை நீ காட்ட விரும்பியே அணையாத ஒளி தந்தாய் அலையாமல் வழி கண்டேன்!
விழி தந்தாய் ஒளி தந்தாய் வினையகலத் துணை நின்றாய்
கண்மூடி முழிக்கையிலே சந்நிதியில் நான் நின்றேன் வந்தவனை அணைத்திடவே வழிமேலே விழிவைத்து
கதவில்லா வாசலிலே கனநேரம் காத்திருந்தாய்!
எனைக்காக்க வந்தவனை காக்கவைத்த பாவிதனை கண்ணிரால் நனைப்பதற்கோ கருணை வெள்ளக் கடலானாய் ஆறியமர வந்த ஆற்றங்கரை யருகே ஆறாடும் கடலாடும் நிழலாடும் பூவரசம்!
அருகோரம் அமர்ந்திருந்து அசையாத நினைவென்றால் இலையெல்லாம் சருகாக இன்பநிலை தான் கூட மனஆட்டம் அடங்கவரும் நினைவோட்ட ஒடுக்கத்தில் வேலவனின் பொன்னடியை வேண்டும்வரை கண்டிடலாம்
நீ எந்தன் தந்தை நான் உந்தன் சேயே பேயாகி அலைந்தேன் இனிப் பேரின்ப வீடருள்வாய்
நீ அந்த இடையன் நான் ஆட்டு மந்தை அலைச்சலைப் போக்கி ஞான உழைச்சலை மீட்டு. ஊனக்கண் போதாது ஞானக்கண் தந்தருள்வாய் கண்ணார நான் கண்டு காலடியில் தானுறங்க
(பாவாரம்)
-41

Page 24
என் இதயக் கோவிலும் நீயே அங்கு வாழும் தெய்வமும்நீயே ஆற ஆற்றங்கரை நின்றாலும் ஆறுமுகன் பெரும் நிதியே. நான் என்ற தெல்லாம் இனி நீயாக மாற வேண்டும் அன்னமலைச் செல்வம் எந்தன் எண்ணமலை ஏறவேண்டும் நீயே எந்தன் தெய்வம் நானோ உந்தன் அடிமை நானற்ற நிலை தந்தாலோ எல்லாம் நீயே என்று வண்ணத் தமிழ் பாவாலே வாழ்த்தி வணங்குவேன்.
(என் இதயக்.)
கடலில் நின்ற கதிர்காமரை கரைக்கு இழுத்த கதை கூறவா அழைத்தவந்த அறுபத்திமூவர்க்கு அமுதுபடைத்த விதம் கூறவா அன்னவனை ஆட்கொண்ட பின்னே பூசை ஏற்ற விதம் கூறவா ஆலமிலை அமுதனைத்தும் மறைந்த விதம் நான் கூறவா.
செந்தூரில் களம் அமைத்தாலும் சந்நிதியில் வேல் கொடுத்தாய் அன்று சென்ற ஏம கூடத்திலும் வெற்றிவேற்கொடி வைத்தாய் -இன்று கதிர்காமம் கொடியேற சந்நிதியின்வேல் போக வேண்டும் தீர்த்தமும் ஆடிய பின்னே திரும்பி இங்கே வரவேண்டும்
போவதையும் வருவதையும் கண்டவர்கள் இன்றுமுண்டு அரசமிலை அசைவதையும் பயறியிலை சிலிர்ப்பதையும் பார்த்தவர்கள் கண்களெல்லாம் தொண்டைமான் ஆறாவதும் பக்தியின் பரிணமிப்போ அன்றி முக்திக்கு முதற்படியோ!
அன்னதான மடங்களிலெல்லாம் அன்றாடம் வருவதுமுண்டு அன்போடு கவனிப்போர்க்கு தொல்லைகளும் தருவதுமுண்டு பாடுவோரின் பக்கத்தில் பாலகனாய் ஆடுவதுண்டு ஆனமட்டும் ஆட்டிவிட்டு பின் அருள் மழையும் பொழிவதுண்டு
அருள்மழையில் நனைந்தவர்க்கு சந்நிதிதான் சொர்க்கமம்மா எந்நிதியும் நாடாமல் அவர் உன்னுடனே இருந்திடுவார் அன்னவர்க்கு சேவை செய்ய அடியனைநீ அழைப்பதெப்போ அந்தநாள் வரும்வரை எந்தன் மனதில்அமைதி தந்தருள்வாய்
ܛܔ ് རྫུ་
-42

வேலா உனை நினையாத நாளில்லையே வேலை வணங்காத வேலை வேறு எனக்கில்லையே!. ஆற்றங்கரையில் அன்னமலையில் அவன் அமுதுக்கும் நீறுக்கும் இணையேதப்பா.
பழமாகி பொருளாகி பழிபோக்க செந்தூரில் தளமாக்கி வேல் கொண்ட வடிவேலவா சந்நிதியில் வேண்டுவோர்க்கும் தேவர்க்கும் அபயகரம் அருளிட்டி நின்ற எங்கள் அருள் தெய்வமே கடலூரில் நின்றவரை கரையூருக்கழைத்து வந்து உடலூரில் உனைக்காட்டி அருளிட்டவே மெளனப் பூசை முறையொன்றை மெளனமாக எடுத்துரைத்து சந்நிதிக்கு சாயுச்ய நிலை தந்தாயே அதை நீயே தருவாயே. (வேலா)
கருணைக்கு கடலாகி நின்றாலும் திரிந்தாலும் கடல் நீரால் எம் தாகம் தான் தீருமா அதற்காக நெருப்பாகி கடல் நீரை மழையாக்கி ஆறாக்கி குளமாக்கி அருள்கின்றாயே உணவுக்கு உப்பெல்லாம் உறைகின்ற கருணையில் கடலாகி மீண்டும் நீ ஆகின்றாயே மழைகண்டு பயிர் வாழ்ந்து நாமுண்டு பசி போக்க சுடராகத் தோன்றிவந்த சுப்ரமண்யனே உனையே மறவா வரமே வேண்டுமே.(வேலா)
苓
தொண்டை மானாற்றம் கரையோரம் தொடரும் உந்தன் அருள் வெள்ளம் நீந்திட வாழ்ந்திட வருவேனே நீயாக நான் மாறும் நாள் வரையில்
(தொண்டை) ஆளும் தெய்வம் எனக்காரென்று நீயன்று கோவிலில் காட்டினாயே ஆளும் படை குண்டு ஆற்றைக் கடந்தாலும் அடியரைத் தீண்டவில்லை சூழும் வினை எனைச் சூழ்ந்தாலும் நீ என்னை மீண்டும் தான் வாழ வைத்தாய் வாழும் வரை நான் மறவேனே வேலும் மயிலும்
துணைதானே -- (தொண்டை) நீ எந்தன் தாயாக நானுந்தன் சேயாக மாறும் நேரம் வரை பூவரசத்தடி பூவாக்கி என்றும் உன் பொன்னடி காண வேண்டும் வா என்றழைக்கும் நாள்வரை உந்தன் வாசலில் காத்திருப்பேன் வருவாய் அருள்வாய் அறிவேனே ! சந்நிதி என்நிதி உணர்வேனே
ཚུའུ་ (தொண்டை)
-43

Page 25
சந்நிதி வேலன் தான் சத்ரு சம்ஹாரன் தான் -என்னுள் இணைந்தங்கே இருந்தானம்மா வினை ஒன்று தான் ஓர் திரை போலவே என் இதயத்தை மறைக்கின்றதே இசை ஒன்றாலே திரை அசைகின்றதே நீ ஒளி தந்தால் விரைந்தோடியே உள்ளொளி கண்டாலே நீ விழி தந்தாலே நான் என்னுள்ளே உனைக்காண்பேனே முருகா.
பாரெல்லாம் திரிந்தாலும் நெஞ்சத்தில் நிதம் உன்னையே நினைக்கின்றேன் பூவரசோரம் உனைப் பாடித்துதிக்கின்றேனே தொலையாத என் வினையைத் தொலைத்தாலென்ன தொண்டைமானாற்றில் அவை கரைந்தாலென்ன அமுதூட்டத்தான் நீ வரமாட்டாயோ திருநீற்றைத்தான் இடமாட்டாயோ முருகா முருகா அலைந்தேன் அறிந்தேன் அருள்வாய். (சந்நிதி)
நீதானே துணைதந்து உன் அருகில் வைத்தாயென்னை குழந்தைக்கு குருவாகி வளர்த்தாயய்யா காலங்கள் பகைத்தாலும் கருணை செய்தாய் கனதூரம் தானென்னை அனுப்பினாலும் நெஞ்சுக்கும் நினைவுக்கும் தூரமில்லையே.முருகா முருகா உனை நான் மறவா வரம்தா. (சந்நிதி)
苓
நான் மறைந்து தானாக வேண்டுமய்யா மான் வள்ளி நாயகா நீ தான் வழி கூறய்யா. (நான்)
பிரணவத்தின் பொருள் கூறா பிரமனைச் சிறை அடைத்தாய் என்னையே உணரவைக்க சிறை வைத்தாய் சரவணத்தில் தன்னையே அறியாமல் தற்குறியாய் வாழாமல் உன் சிறை வாழ்ந்தாலே என்குறை தீருமன்றோ (நான்)
அறிந்தவர் கூறுவது அறிவுக்கு எட்டவில்லை தெரிந்தவர் சொல்வதெல்லாம் தெருக்கூத்தாய் தெரிகிறது உணர்ந்தவர் உரைப்பதெல்லாம் உண்மையாக இருந்தாலும் உன்னருள் ஒன்றேதான் ஓங்கார நுளைவாசல் (நான்) செல்வத்தின் சந்நிதியில் சத்தத்தால் வணங்கி நின்றேன் ரீசெல்வச் சந்நிதியில் சித்தத்தை அடக்கு என்றாய் பூவரச மரத்தடியின் புண்ணியரை தியானித்தால் சப்தங்கள் அடங்கிய பின் சித்தம் தெளிவிப்பாயோ? (நான்)
-44

செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமப் பயணத்திற்கு செல்வனை வழியனுப்ப கூடுகின்றார் அடியரெல்லாம் சேமமாய் நீயும் சென்று வரவே சேர்ந்து வேண்டி நின்றார் மாந்தரெல்லாமே!
ஆடியமாவாசையன்று அப்பனவன் பயணமென்று நாடிவந்த அடியர் மனம் சோர்ந்து வாடி நிற்க ஆலயத்தில் பூசை செய்து அன்பாக உனைத் தாங்கி அர்ச்சகரும் வந்திடவே அன்பர் கூட்டம் மோத அப்பனின் பயணத்தினால் கவலைகள் கண்ணிராய் ஒடத்தான் செய்தாலும் திரும்பி நீ வரும் நாளை எண்ணி மனது ஆறி நிற்க உனைக் காணும் நாளை எதிர்பார்த்து தானே உந்தன் அடியர் எல்லாம் வாழ்கின்றார் (செல்)
வேண்டி நின்ற அடியரின் விருப்பங்கள் நிறைவேறி மீண்டும் நீ வந்த நாள் வார்த்தைகளில் அடங்கிடுமோ கன்று ஒன்று தாயிடத்தே களிப்புடன் வந்ததுபோல் காத்திருந்த பக்தரெல்லாம் கந்தா உனை நாட மானிடர் பிரிந்த பின் கூடினாலே வார்த்தையில்லை மகானுபாவனே உன்னைக் கண்டதற்கு வார்த்தையுண்டோ மீண்டும் உந்தன் அடியவர் வாழ்வு உன்னோடு தானே என்றென்றும் இருக்க உவந்து அருளிடுவாய் உமை மகனே (செல்)
பூசகரின் திருவடியைத் தொழுகின்றேன் -அதில் வேலன் இடும் திருநீற்றைப் பெறுகின்றேன் ஆலமிலை அமுததனை உண்கின்றேன் -கர்ம வினை தீர்ந்த பயனை நான் பெறுகின்றேன் (பூசகரின்)
பூவரச மர நிழலில் பாடி நின்றேன் -அந்த வேலவனும் பாலகனாய் ஆட வந்தான் அந்த சுகம் உலகினிலே சொர்க்கமய்யா -அதை மீண்டும் எமக்கும் அளிக்கும் நாள் எப்போதையா (பூசகரின்)
தொண்டைமானாற்றில் நீர் ஆடுகின்றேன் -திருச் செந்தூரின் கடலலையைக் காண்கின்றேன் வேற்கரணித் தீர்த்தக் குளத்தைப் பார்க்கின்றேன் -அங்கே சரவணத்தின் பொய்கைதனை அறிகின்றேன் (பூசகரின்)
அன்னமலைச் செல்வத்தையே நினைக்கின்றேன் -அங்கே அடியர் பசி ஆறுவதைக் காண்கின்றேன் அன்னம் படைத்த அடியர் மனை தேடுகின்றேன் -அங்கே சொர்ணமலை குவிவதையே காண்கின்றேன் (பூசகரின்)
-45

Page 26
கந்தன் என்றால் அர்த்தம் கருணையோ -உமை மைந்தன் என்றால் அர்த்தம் மழையாகிப் பொழிவதாலோ வேலன் என்றால் அர்த்தம் வேண்டுவது தந்தருளும் பாலன் என்றால் அர்த்தம் பாபி எனைக் காப்பதாலோ (கந்தன்)
அன்னதானக் கந்தனாகி அடியரின் பசி போக்கி ஆற்றங்கரை வேலனாகி ஆறாத துயரம் மாற்றி சந்நிதிக் கந்தனாகி சங்கடங்கள் தனை நீக்கி சரணாகதி என்றால் சரவணபவமாகும் (கந்தன்)
தொண்டைமான் ஆறாகி தொண்டர் குறை தீர்த்தருளும் வேற்கரணித் தீர்த்தமாகி வேதனைகள் தனைப் போக்கும் சரவணப் பொய்கையாகி சர்வமங்களம் ஈட்டி பூவரச மரத்தடியில் பூவாக்கி பொன்னடி சேர்க்கும் (கந்தன்)
ஆறமுகமாகி அனைத்தையும் அள்ளித் தந்து ஏறுமுகமாகி சத்ரு சங்காரம் செய்து ஆறுபடை வீட்டின் பின்னே ஆற்றங்கரை அமர்ந்தருளி ஆறுதலை எனக்களித்த ஆறுமுகா சரணமய்யா (கந்தன்)
盪修 魂漫奏
நோய்க்கெல்லாம் மருந்துண்டு முருகா -சந்நிதியில் திருநீறும் திருஅமுதும் தீர்க்காத நோயுண்டோ (நோய்க்)
பன்னிரு விழிப்பார்வை என்றும் இருந்தும் -உந்தன் பன்னிரண்டு அபயகரம் கண்டும் பன்னிரண்டு ஆண்டுகள் தான் வந்தும் -பாலன் நோயின்னும் முற்றாக மாறாத தேனையா (நோய்க்)
நான் செய்த தீவினையோ அறியேன் யார் செய்த சூழ்வினையோ புரியேன் எனை வந்து சூழ்ந்தாலும் பொறுப்பேன் என்பாலனை இன்னும் தான் வாட்டுதல் முறையோ (நோய்க்)
காரணத்தால் காரியங்கள் நடப்பதென்று புரிந்தும் கலங்குகின்ற மனத்தினுக்கு அமைதி தனைத் தாராய் விலங்கு மனம் விமலா உனை வாழ்த்தும் துலங்கவைத்து துயர் தீர்த்தாய் துதிபாடி வாழ்வேன் (நோய்க்)
業
竜司

நீ போடும் பிச்சைக்கு நான் பாடும் எச்சில்களை மெருகூட்டி வாழவைக்குமென் தெய்வமவன் சந்நிதியான்
செல்வச் சந்நிதியான் ஆற்றங்கரையரசன் கல்லோடைக் கரையமர்ந்த கலியுகத்தின் வரதனவன் நான் வாழ வேண்டுமென்று நாட்டைவிட்டே அனுப்பிவிட்டு வீட்டையுமே வீழ்த்திவிட்டு வினை அறுத்து நின்றாயோ செல்வச் சந்நிதியான் ஆலம் இலை அழகன் பூவரச மரத்தருகே வேலாகி நின்றவனாம்! சூழ்ந்தவினை சூழாதிருக்க இருள் சூழ்ந்த கண்டத்தில் இருத்தி நீ வைத்தாலும் வினை முற்றாய் மாறவில்லை செல்வச்சந்நிதியான் அன்னமலை அரசனவன் சொர்ணமலை தான் படைக்கும் சுப்ரமண்ய தெய்வமவன் எங்குதான் வந்தாலும் எல்லா வினையும் தீர்வதில்லை பாதிவழி சென்றால்தானே மீதிவழி தான் புரியும்
செல்வச் சந்நிதியான் சங்கடங்கள் தீர்ப்பவனே சஞ்சலங்கள் தீர்க்கவல்ல சந்நிதியின் சரவணபவமே!
養
司
வேலனுக்கு தீர்த்தமிங்கே வேதனைகள் தீருதிங்கே பாலனுக்கு அபிஷேகம் பார்த்தோர் வினை திருதிங்கே (வேலனுக்கு)
கூறுமடியார்கள் வினைகள் தீர்ப்பதற்கோ தீர்த்தமிங்கே தீர்ந்த கதை கூறுதற்கோ தீர்த்தக்கரை தேடி வந்தான் (வேலனுக்கு)
குளத்தருகே நின்று கொண்டு குற்றேவல் புரிபவர்கள் விளக்கருகே நின்ற அந்த விட்டலுக்கு இணையாகும் விளக்கருகே நின்ற விட்டல் வேறெங்கும் செல்வதில்லை விடிந்தபின் விட்டலெங்கே விளக்கொளியில் சங்கமமே. (வேலனுக்கு)
இரும்பு மனம் கனிந்தபின்னே இளகியதோ கரும்பாகி கரும்பாகிச் சாறாகிப்பின் இளநீராய் மாறியதோ கனிந்தபின் நெஞ்சக்கனல் எரிந்திடவே நீறானார் நீறான பின்னாலும் பன்னிரால் கழுவி நின்றார் (வேலனுக்கு)
எண்ணிஎண்ணித் தெளிவதற்கோ என்னை வைத்தாய் எண்ணை வைத்தார் எண்ணமும் அழிவதற்கோ பழம்வைத்து அரப்பிட்டார் பாலான மனங்கள் தான் பாரினிலே பல உண்டு பாலாறு பாயுதிங்கே பாலனுக்கு அபிஷேகம் (வேலனக்கு)
47

Page 27
திடநெஞ்சம் கொண்டவர்கள் தயிராக நிற்கின்றார் நெக்குருகும் அடியரோ நெய்யாக மாறிவிட்டார் கனிந்தவரோ கனிவினிலும் பல அளவில் நிற்கின்றார் கனிகளிலும் பல வகைகள் கந்தனுக்கு அபிஷேகம் (வேலனுக்கு)
வேலாக வந்தவன் தீர்த்தக் கரையருகே ஒளியானான் கண்டவர்கள் குளத்தருகே கரைந்தார் பின்கனியானார் கந்தனவன் களிப்படைந்தான் அடியவரை அணைப்பதற்கோ பட்டாடை கட்டிக்கொண்டு பளிங்குமுகம் காட்டவந்தான் (வேலனுக்கு)
என்நிலையும் முன்னிலையில் தன்னிலையில் தானில்லை நீறிட்டார் பொட்டிட்டார் நிமிர்ந்தேன் என்நிலை மறந்தேன் என்னையே மலராக்கி என் அப்பன் முன்நின்றேன் எடுத்தவர் சாற்றிவிட்டார் வேலழகன் மீதினிலே (வேலனுக்கு)
குகரத்ன மலர்
தொண்டமானாற்றின் கரையினிலே தொண்டரைக் காக்க வந்தவனே வண்டமிழ்த் தெய்வம் சரவணனே கண்டவர் விண்டில்லா மெய்ப்பொருளே!
ஆதியில் அசுரரை அழித்திடவே தேவர்கள் செல்லும் வழிதனிலே சந்திகாலப் பூசை செய்ததினால் சந்நிதி என்ற பெயர் வந்ததுவோ!
சீர்பெற்ற இந்தத் தலத்தினிலே சிறப்பறிய வந்தான் ஓர் முனிவன் அறிந்த பின் அடைந்தான் சமாதிநிலை அதன்மேல் பூவரசும் வளர்ந்ததோ!
ஆலமரத்தின் நிழலினிலே ஆவினம் மேய்க்கும் இடையனைப்போல் ஆதியில் அற்புதம் காட்டியபின்
ஆண்டு கொண்டார் கதிர்காமரையே!
வேண்டுவார் கேட்பது கொடுப்பதினால் எந்நிதியும் தரும் சந்நிதியோ ரீ செல்வச் சந்நிதி பெயரென்றார் தீராத வினையில்லை இத்தலத்தில்.
-48

பூவரச மர அருகினிலே வேலாக வைத்துன்னைப் பூஜிப்பதை விரும்பியே சொன்னாய் கதிர்காமற்கு வேலவன் ஆலயம் உதித்ததோ!
பூசைமுற அறியா உன் அன்பனுக்கு கதிர்காமம் கூட்டிச்சென்று காட்டினாயோ வாய் கட்டிப் பூசை செய்கின்றார் மெளனப் பூசையின் சிறப்பறிந்தோம்!
அன்னதானக் கந்தனின் ஆலயத்தில் மாறாத நோயென்று ஏதும் உண்டோ எங்கிருந்தோ வந்த என்னையுமே ஈர்த்து விட்டாய் இனி ஏற்றிடையா
சிந்தனை அடக்கி ஓர் மனதாய் சீருடன் இதனைப் பாடிடுவோர் குகையிறை வேலவன் திருவருளால் குகரத்தினமாய்த் திகழ்வாரே!
s
Suid:
ஞானபண்டிதா சரணம் சரணம் ஞானஸ்கந்தா சரணம் சரணம் ஞானவேலா சரணம் சரணம் ஞானசற்குரு சரணம் சரணம்
ஆழ்ந்து அகன்று ஊன்றியதே ஞான அறிவு ஆனதினால் வேலின் வடிவம் கொண்டாயோ வேல்முருகா சந்நிதியில் ஆலமிலையில் அமுதூட்டும் ஆண்டவனே வேலழகா ஆண்டியாக வருபவனும் நீ அன்னதானக் கந்தனும் நீயே
அன்னதானக் கந்தனாகி அடியர் உடற்பசி போக்கியபின் அருட்பசிக்கு விருந்தாக ஞானவேலாய் வந்தாயே ஓமென்றொலிக்கும் மணியோசை உள்ளே எம்மை அழைத்துச்செல்ல வாவென்றழைக்கும் பாலனாகி வாசலிலே நிற்பாயே.
மனதில் தோன்றும் எண்ணங்களை மலர்களாக்கிச் சூட்டியபின் தூபதீபம் ஏற்றியுமே தோத்திரங்கள் பாடிடுவேன் பாடப்பாட பாவி எந்தன் பழவினைகள் தீர்ந்தபின்னே ஜோதியிலே உன் உருகாட்டும் கற்பூரமாய் ஆக்கிவிடு.
-49

Page 28
ஊஞ்சல்: அன்னமலை அருகமர்ந்த ஆறுமுக வேலழகா சொர்ணமலை தனைப்படைக்கும் சுப்ரமண்ய சுவாமிநாதா எண்ணமலைச் சிந்தனையில் தான் மலரும் பாமலையில் ஏறிவிளையாட வரும் ஐங்கரனின் இளையோனே!
சங்கரனும் நாரணனும் ஒன்றிணைந்த சந்நிதியில் அன்னையவள் அருள் சுரக்க நாடிவரும் அடியவரை தேடிவந்து இருள் நீக்க ஆறு பொறியாக வந்தாய் ஆறாகிக் கரையாகி ஆற்றங்கரை வேலாகி ஆலமிலை அமுதாகி பூவரச நிழலாகி வேலாகி வேழமுகன் பின்நிற்கும் பெருவடிவே காலாகிக் கோலாகி அற்புதங்கள் பலகாட்டி நீயாகி நானாக்கி நின்றருளும் நிர்மலனே! தானாக்கி தயைபுரிய தொண்டைமான் ஆற்றருகே வீதி ஓர மடங்களிலே விருந்துண்ணும் அடியராகி அன்பரோடு அருகமரும் ஆரமுதே வேலழகா சோர்ந்து வரும் அடியவரையும் சார்ந்து நின்ற தேவரையும் காக்க என்று காலடியும் தந்த பெரும் கருணையே காவடிகள் மத்தியிலே காட்சி தர வருபவனே காலடியே துணை எனக்கு காலங்கள் உள்ளவரை காத்து நிற்பேன் வேற்கரணிக் குளத்தருகே வேலழகா வள்ளி தெய்வ யானையுடன் வல்வினைகள் தீர்க்க என்று உள்ளம் என்னும் கோவினிலே உணர்வென்னும் ஊஞ்சலிலே மெள்ள மெள்ள ஆடிடுவாய் மேன்மையெலாம் நிறைந்தவனே துள்ளிவரும் எழில் உருவே தொடர்ந்துவரும் நல்லிசையே அள்ள அள்ளக் குறையாத ஆனந்தமே வந்திடுவாய் கோபமில்லா உள்ளத்திலே கொஞ்சி நிற்கும் குமரனே பாபமில்லா நல்லெண்ணத்தை தூபதிப மாக்கிடுவேன் ஐந்து பெரும் தொழில் வல்ல ஆதிசக்தி பாலகனே நெய்வேத்யம் காட்டிடுவோம் நாமுமக்கு அடிமையப்பா கல்ப கோடிக் காலமெல்லாம் கருணை வெள்ளம் ஆனவனே சொற்பூவால் அர்ச்சனைகள் தோத்திரங்கள் பாடிடுவேன் பற்பலவாய் எண்ணமிடும் பாபிமனச் சிந்தனையைக் கற்பூரமும் ஆக்கிடுவேன் கர்வமதில் எரித்திடு
(UPC555ft......... (UP(UbმნT........(სP(სნმნIT..........
苓
-50

சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ்வர தகமதில் உனது பொற்சரணம் எப்போதும் நற்கதி எல்லோரும் துதித்திட ஈதலும் பல கோலால பூசையும் நல்லவை ஒதலும் நற்குணச்சார நீதியும் நெஞ்சினில் ஈரமும் சற்குரு சீர்பாத சேவையும் மறவாத நின் அருளைத்தாராய்.
முருகா.முருகா. (P(535........ உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
(P(b35T........(UPC555.T..........(UP(b E.T........ நாள் என்செயும் வினைதான் என்செயும் எனைநாடிவந்த கோள்என் செயும் கொடுங்கூற்று என்செயும் குமரேசன் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
(p(B5sy......(Lp(535T.......(UPC58st......
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா(து) உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்.
ஓம் பூர்ணமத பூர்ணமிதம் - பூர்ணாத் பூர்ண முதச் யதே பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா விசிஷ்யதே.
ஓம் சாந்தி.சாந்தி.சாந்தி.
விபூதி பரமம் பவித்ரம் சந்நிதி வேலன் திருக்கரம் பரமம் விஜித்ரம் அவன் அருளும் ஒளிக்கரம் பரமார்த்த நிஷ்டார்த்த மோட்சப் ப்ரதானம் வேலன் விபூதிம் இதமாஷ்ட யாமி. குங்குமம் பூரீஸ்கந்தராஜா முறி சுப்ரமண்யா முறிசெல்வச் சந்நிதிவாழ் திருமகளார் துணைவா ஆற்றங்கரையமர்ந்த அன்னமலை அரசே பூவரசத் தருகமர்ந்து அடியவரைக் காப்பாய்!
-51

Page 29
EÒ 55LDuJub முரீ செல்வச் சந்நிதி கோவில் பூசகர் வரிசையில் முருகர் ஐயரின் வழித்தோண்றல்கள்
அந்திராச முதலி
சந்திரசேகர முதலி
"Hமருதர் பொன்னி)- கோணன் கந்தர் வழி
கதிர்காமர் + விராசி
ஆறுமுகம் வேலுப்பிள்ளை பிள்ளையினார் சின்னன் முருகர் ஐயர் குப்பச்சியம்மா
+ கந்தையா ஐயர் கந்தர்
+ தெய்வானை
siburgguut சின்னாச்சி அம்மா ஆச்சிப்பிள்ளை
-- ート -- கண்ணகை பொன்னையர் கந்தையா
துரைசாமி ஐயர் செல்லைய்ா ஐயர் நாகலிங்க ஐயர்
-- -- + கண்ணகை தங்கச்சிப்பிள்ளை செல்லமுத்து
பொன்னுத்துரை ஐயர்
+ துரைரெ 笃 6&TDLDT
பாலேந்திரா ஜயர் இராசேந்திரா வசந்தாதேவி சரோஜினிதேவி புவனேந்திர ஐயர்
-- -- -- -- 十
தங்கரெத்தினம் மகமாசிதேவி சிவதாஸ் ஆறுமுகம் ரீ ரஞ்சினி
 

gajLou Jub
ஓம் பூரீ செல்வச் சந்நிதி வேலழகன் துணை
4
NRada
gg yy
ab
O
() 三 ミ乙二ラ
- - சமர்ப்பித்த ஓர் பாமலரை - சந்நிதியில்
அர்ச்சித்த ஓர் பரம்பரைக்கு அர்ப்பணமாக்கினால் அதில்வரும் சுகமே தனி!
மந்திரப் பூசைக்கு வழிகாட்ட ஓர் அந்தண குலம்! மெளனப்பூசை வழிபாட்டிற்கு இன்னோர் குலம் வழித்தோன்றலால் அர்ச்சிப்பதால் அந்தணர் ஆகின்றனர். கதிர்காமர் பரம்பரையில் வந்த அர்ச்சகர்கள் அனைவரும் செவ்வேளை அர்ச்சித்த செம்மனச் செல்வங்கள்! அழகனுக்கு அழகூட்டினர். அர்ச்சித்தனர். அவன் காட்டிய வாய்கட்டும் மெளனப் பூசை முறையினால்! பாதம் பற்றும் பழக்கமே சந்நிதி தரும் பெரும் நிதி அன்னவர் அவன் பாதம் பற்ற அன்னவர் பாதத்தை யாம் பற்ற

Page 30
பற்றற்றான் ஓர் பரமானந்த நிலையை அன்னவருக்கு உவந்தளிக்க, அன்னவரின் ஆசிகளால் அவை செல்வச் சந்நிதியை நினைவு கொள்ளும் அனைவருக்கும் கிட்டும் என்ற பேராவலில்! முறையே செல்லையா ஐயர், பொன்னுத்துரை ஐயர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறையடி இணைந்த பொன்னுத்துரை ஐயரின் சிரேஷ்ட மகனாகத் தோன்றிய பாலேந்திரா ஐயர் அவர்களின் நினைவாஞ்சலியாக எனது ஞானத் தந்தையாம் பூரீமுருகேசு சுவாமிகளின் நல்லாசிகளுடன் பாமலர் அர்ச்சனையை எம்மைவிட்டு மறைந்தாலும் எம்மனத்தே என்றும் நிறைந்திருக்கும் பாலேந்திரா ஐயரின் பாதக்கமலங்களில் படைக்கின்றோம். அவை வழிவழியே ஆதி கதிர்காமர் பாதம்வரை அர்ப்பணமாகட்டும்!
ஒம் சந்நிதிவேலா சரணம் சரணம் சரவண பவமே சரணம் சரணம்
 


Page 31
சங்கர் அச்சகம் (416)

ஸ்காபரோ, கனடா264-715