கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேவாரத் திருவருட் பாமாலை

Page 1
வெளி ஜெனிவா தமிழ்
Rue de Mon
1201 G.
 

ITU j5
LIITLIDIT GOD GWO
கலைச் சங்கம்
thoux 21
II TA'

Page 2

தேவாரத் திருவருட் பாமசீலை
வெளியீடு ஜெனிவா தமிழ் கலைச் சங்கம் Rue de Monthoux 21 120 l Genève

Page 3

தேவாரத் ருவருட் பாமாலை

Page 4

ஜெனிவா தமிழ் கலைச் சங்கதின் பணிகள் தொடரவேண்டும்
நாம் புலம் பெயர்ந்த ஜெனிவா மண்ணில் வதியும் தமிழ் சிறார்கள் தமிழ் மொழியையும் நமது சமயம் மற்றும் பரதம் இசை கலைகளையும் பயில வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையில் 1998ம் ஆண்டு சந்திரபாலன் இராஜேஸ்வரி ஆரம்பித்த ஜெனிவா தமிழ் கலாசார சங்கதின் பணி இன்று உயர்ந்து நிற்பதை அறிந்து மனம் மகிழ்கின்றேன். ஜெனிவா அற்புத விநாயகள் பெருமானின் திருவருளால் இன்று கலைச் சங்கம் மெல்ல மெல்ல சிகரம் போல் வளர்ந்து இன்று 25க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் வேளையில் வாணிவிழாவில் அன்புப் பரிசாக அறிவு களஞ்சிமாக தினமும் பூஜை அறையில் வைத்து போற்றிப் பாதுகாக்க வேண்டிய சிறிய நூலை அன்பளிப்பாக வழங்கும் செய்தி அறிந்து மனம் மகிழ்கின்றேன்.
சுவிஸ்லாந்து என்ற நகரில் அருள்பாலிக்கும் மனோன்மணி அம்பாள் திருவருள் கிடைக்க பிரார்த்தனை செய்வதோடு இராஜேஸ்வரி சந்திரபாலனின் கல்விப்பணி, கலைப்பணி தொடர வாழ்த்துகிறேன்.
சிவழறி கணேச சுந்தரேஸ்வர சர்மா
யூரீ மனோன்மணி அம்பாள் ஆலயம் ஒல்டன், சுவிஸ்.

Page 5
வாழ்த்துரை
புலம் பெயர்ந்த மண்ணில் நமது எதிர்கால சந்ததியினர் பண்பாட்டுப் பாரம் பரியங்களுடன் வாழ வேணடும் என்ற உயர்ந்த சிந்தனையில், கடந்த ஆறு ஆண்டு காலமாக ஜெனிவா நகரில் தமிழ், சமயம், பண்ணிசை (சங்கீதம்), பரதக்கலை ஆகிய வகுப்புக்களை நடாத்திவரும் பூரீமதி இராஜேஸ்வரி சந்திரபாலன் அவர்களைப் பாராட்டுகிறேன்.
இந்துக்களாகிய நாங்கள் ஆலயங்கள், கல்விச் சாலைகள், இல்லங்கள் போன்ற இடங்களில் கூட்டுப் பிரார்த்தனை, பஜனைகள் முதலியவற்றை பண்ணிசையுடன்பாராயணம் செய்தற்கேற்றமுறையில் நவராத்திரிவிழாவின் போது இந்த சிறிய நூலை வெளியிட்டு இலவசமாக வழங்குவது சிறந்த பணியாகும். இந்த புண்ணிய பணியில் முன்னின்று உழைத்த அனைவருக்கும் ஜெனிவா நகரில் அமர்ந்து திருவருள் பாலித்து வரும் எல்லாம்வல்ல அற்புத விநாயகப்பெருமான் அருள் பாலிப்பாராக.
தி. மகேஸ்வரன், பா. உ.
முன்னாள் இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர்

தமிழ் வெளியீடுகள்
புலம் பெயர் தமிழர்களுக்கு பயனுள்ளவை
புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தமது கலை, கலாசாரம், தமிழ்மொழி ஆகியவற்றை வளர்த்து தங்களது அடையாளத்தை நிலைநாட்டி வருகின்றனர். அவர்களது இளம் சந்ததியினர் வேற்று நாட்டு கலாசாரத்திலும் மொழிமாற்றத்திலும் சிக்கித் தவியாமல் பாதுகாக்க அரும் பாடுபட்டு வருகின்றனர். தமிழர் எங்கு வாழ்ந்தாலும் வாழும் நாடுகளில் சைவ ஆலயங்கள் அமைத்து சமயத்தைப் பேணிக்காத்து வருகின்றனர். புலம்பெயர் நாடுகளில் இன்று நூற்றுக்கணக்கான சைவக் கோயில்கள் தோன்றியுள்ளன. இவ்வால யங்கள் ஊடாக சமய சமூகப் பணிகள் ஆற்றி வருகின்றனர். தாயகத்தில் அல்லல்படும் உறவுகளுக்கு பல்வேறு புனர்நிர்மாணப் பணிகளுக்கு உதவி வருகின்றனர்.
இவ்வாறு தாயகத்தை மறவாது இருப்பதோடும் வாழும் நாடுகளிலும் தமிழ் கலை கலாசாரத்தை வளர்த்து வருகின்றனர்.
இவ்வாறு தமிழுணர்வுடன் வாழும் மக்களுக்கு ஜெனிவா தமிழ் கலைச் சங்கம் வெளியிடும் நூல் மிகப் பயனுள்ளதாக அமையும். இந்த வெளியீட்டைப் புலம் பெயர் தமிழர்களுக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ள இச்சங்கத்தை புலம் பெயர் தமிழர்கள் சார்பாக சுடரொளி வெளியீட்டுக் கழகம் வாழ்த்தி வரவேற்கிறது.
ஐ. ரி. சம்பந்தன்
செயலாளர் சுடரொளி வெளியீட்டுக் கழகம் லண்டன்.
28.09.04

Page 6
dflsNoub
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு"
வெளியீட்டுரை
நாங்கள் புலம் பெயர்ந்து அன்னிய மண்ணில் வாழ்ந்தாலும் பரம் பொருளை பாடிப்பணியவேண்டும், நமது பண்பாட்டுப்பாரம்பரிய ஆன்மீக நெறிமுறைகளை நமது சிறார்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அமைக்கப்பட்ட ஜெனிவா தமிழ் கலைச் சங்கம் சிறார்களுக்கு தமிழ், சமயம், பரதநாட்டியம், சங்கீதம், வயலின் ஆகியவற்றை நடத்திவருவதோடு இம்முறை தேவார மும்மூாத்திகளினதும் ஏனைய அருளாளர்களினதும் முக்கிய திருப்பாடல்களில் சிலவற்றை தொகுத்து இந்த நவராத்திரி நன்நாளில் வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறோம். எனவே, ஓய்வு நேரங்களிலும் பூஜை அறைகளிலும் இந்த பாக்களை பாராயணம் செய்து எல்லாம் வல்ல இறைவனின் இஸ்டசித்திகளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறேன்!
மேலும், இச்சிறு வெளியீட்டுக்கு வாழ்த்துரைகள் வழங்கிய சிவறி கணேச சுந்தரேஸ்வர சர்மா, தி. மகேஸ்வரன், ஐ. ரி. சம்பந்தன் ஆகியோருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
"மேன்மை கொள் சைவநீதி விழங்குக உலகமெல்லாம்"
மரீமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி
ஜெனிவா தமிழ் கலைச் சங்கம் Rue de Monthoux 21 1201 Genève 29 September 04

ஜெனிவா தமிழ் கலைச் சங்கம்
நவராத்திரி விழா
22.10.2004 அன்று விஜயதசமி அன்று நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து சிறப்பிக்கும் சிறு பிள்ளைகளின் நலன் கருதி சிறிய நிகழ்ச்சிகளை நடாத்த விரும்பி உள்ளோம். எனவே உங்கள் பிள்ளைகளுக்கு சைவ சமய வரலாறு பற்றிய போட்டியிலும் பண்ணிசைப் பாடல்களிலும் பங்குபற்றி விழாவினை சிறப்பிக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!
பேச்சுப் போட்டியின் தலைப்பு
1. சைவசமய வரலாறு 4. கோயில் திருவிழாக்கள்
2. நவராத்திரியின் மகிமை 5. திருத்தலங்கள் 3. தமிழரின் விசேஷ தினங்கள் 6. நாயன்மார்களில் ஒருவர்
பன்ைனிசை
1. தேவாரங்கள் 2. திருப்புகழ்
குறிப்பு : ஏடு தொடக்கும் வைபவமும் இடம்பெறும் (நடனம், சங்கீதம், வயிலின்).
பாடசாலைக்கு வெளியில் உள்ள பிள்ளைகளும் இப்போட்டியில் பங்குபற்றலாம்.
பங்குபற்றும் பிள்ளைகள் உங்கள் பெயர்களைத் தரவும். பங்குபற்று வோருக்கு பரிசில்களும் உண்டு. 6 வயது தொடக்கம் 18 வயதிற் குட்பட்ட பிள்ளைகள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
நன்றி. தொடர்புகளுக்கு:
திருமதி சந்திரபான் இராஜேஸ்வரி 022.741.49.26

Page 7

பொருளடக்கம்
பஞ்சபுராணம்
விநாயகர் துதி
தேவாரம்
திருவாசகம்
திருவிசைப்பா
திருப்பல்லாண்டு
திருப்புராணம்
திருப்புகழ்
திருமந்திரம்
வாழ்த்து
விநாயகர் அகவல்
சிவபுராணம்
கந்தர் சஷ்டி கவசம்
சகலகலாவல்லிமாலை
சரஸ்வதி துதி
திருவெம்பாவை
அபிராமி அந்தாதி
9
2O
2Ο
2】
24
s8
ses
39
4O
46

Page 8

பஞ்ச புராணம்
விநாயகர் துதி
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்செற்ெ பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர் தம்கை.
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
திருச்சிற்றம்பலம்
தேவாரம்
அங்கமும் வேதமு மோது நாவர் அந்தணர் நாளுமடி பரவ மங்குன் மதிதவழ் மாடவீதி மருகனிலாவிய மைந்த சொல்லாய் செங்கயண லார்புனற் செல்வ மல்கு சீர் கொள்செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரியேந்தியாடுங் கணபதி யீசரங் காமுறவே.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதேயிந்த மாநிலத்தே.

Page 9
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசியென்னுள்ளங்கவர் கள்வ னேடுடைய மலரான் முனநாள் பணிந்தேத்த வருள் செய்த பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே.
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீள் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன் யாதுஞ்சுவடு படாமலையாறடைகின்ற போது காதன் மடப்பிடியோடுங்களிறுவருவனகண்டேன் கண்டே னவர் திருப்பாதங்கண்டறியாதன கண்டேன்.
பித்தாபிறைசூடிபெருமானே அருளாளா எத்தான்மறவாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
மங்கையர்க் கரசி வளர்வைகோன் பாவை வரிகளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநாயகனால்
வேதமும் பொருள்களு மருளி அங்கயர் கண்ணி தன்னொடுமமர்ந்த
ஆலவா யாவது மிதுவே.
அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கையலர்மேய பெருநெறிய பிரமாபுரமேவிய பெம்மானிவன்றன்னை யொரு நெறியமனம்வைத்துணர் ஞானசம்பந்தனுரை செய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தலெளிதாமே.
12

பாடகமெல்லடிப் பாவையோடும் படுபிணக்காமி பற்றி நின்று நாடகமாடு நள்ளாறு ை நம்பெருமானிது வென்கொல் சொல்லாய் சூடகமுன்னக மடந்தை பார்கள் துணைவரொடுந் தொழுதேத்தி வாழ்த்த வாடகமாட நெருங்கு கூடலால வாயின் கணமர்ந்தவாறே.
நின்றுணுஞ் சமணு மிருந்துணுந்தேரு நெறியலாதனபுறங்கூற
வென்று நஞ்சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுடனாகித் துன்று மொண் பவ்வமவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்று மொண்கானல் வாசம் வந்துலவுங் கோணமாமலையமர்ந்தாரே
கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறியரவும் வைத்தார் திங்களைத் திகழவைத்தார் திசை திசை தொழவும் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறிமழவும் வைத்தார் அங்கையுளனலும் வைத்தானரையனை யாறனாரே,
அன்னம் பாலிக்கும்தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை யென்னம் பாலிக்குமாறு கண்டின் புற வின்னம் பாலிக்குமோவிப் பிறவியே.
வாழ்வாவது மாயம் மிது மண்ணாவது திண்ணம் பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய் செய்தபறிதான் றாழாதறஞ் செய்ம்மின்றடங்கண்ணான் மலரோனுங் கீழ் மேலுற நின்றான் றிருக்கேதாரமெனிரே
சுடுவார்பொடி நீறு நல்ல துண்டப்பிறை கீழுங் கடமார்களி யானையுரியணிந்த கறைக் கண்டன் படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற் றிடமா வுறைகின்றான் றிருக் கேதீச்சரத்தானே.
அங்கத்துறு நோய்களடியார் மேலொழிந்தருளி வங்கமலிகின்ற கடன் மாதோட்ட நன்னகரிற் பங்கஞ் செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேற் றெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே.
மூவரென விருவரென முக்கண்ணுடைமுர்த்தி மாவின்கனி தூங்கும் பொழில் மாதோட்டநன்நகரிற் பாவம் வினையறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல் தேவனென யாழ்வான்றிருக் கேதீச்சரத்தானே

Page 10
மந்திரமாவது நீறு வானவர் மேலதுநீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவதுநீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளதுநீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே
வேதத்திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தருவது நீறு உண்மையிலுள்ளதுநீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே
தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினு மனத்து மருவிநின்றகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த
கோணமாமலையமர்ந் தாரே.
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானளாவத் தருவரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்தர் அல்லா ராகில் அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
யாதியை யமரர்தொழுதேத்துஞ் சீலந் தான்பெரிதும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாளுமை நங்கை
யென்று மேத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கிம்பனெம் மானைக்
காணக்கண்ணடியேன் பெற்றவாறே.
4.

s திருவாசகம்
வேண்டத்தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ வேண்டு மயன்மாற் கரியோய் நீ
வேண்டி யென்னைப் பணி கொண்டாய் வேண்டி நீயா தருள் செய்தாய்
யானு மதுவே வேண்டினல்லால் வேண்டும் பரி சொன்றுண்டென்னி
லதுவு முன்றன் விருப்பன்றே.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே யாய சிவபதமளித்த செல்வமே சிவபெருமானே அம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவ தினியே.
பாரொடு விண்ணாயப் பரந்தவெம் பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்ருெந்துறையுறை சிவனே ஆரொடு நோகேனார்க்கெடுத்துரைக்கே
னாண்டநீ யருளிலை யானாய் வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென் றருள்புரி யாயே.
பால்நினைந்தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீபாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

Page 11
திருவிசைய்பா
கற்றவர் விழுங்குக் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவரறியா மாணிக்க மலையை
மதிப்பவபர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்ற வெஞ்சிவனைத் திருழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளங்
குளிரன்ெ கண் குளிர்ந்தனவே.
ஒளிவளர் விளக்கே! உலப்பிலா ஒன்றே!
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே!
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறலந் தேறல் மாறாத் திருக்குறிப்(பு) அருளும் தில்லைச்
செல்வன் பாற் செல்லும் செல்வில் அருக்கரை அள்ளல் வாய
கள்ளரை அவியாய் பாவப் பெருக்கரைக் காணா கண்வாய்
பேசா(து) அப்பேய்க ளோடே
நையாத மனத்தினனை
நைவிப்பான் இந்தெருவே ஐயா! நீ உலாப் போந்த
அன்று முதல் இன்றுவரை கையாரத் தொழு(து) அருவி
கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ? அருள் கோடைத்
திரைவோக்கிய சுந்தரனே?
16

திருப்பல்லாண்டு
மன்னுகதில்லை வளர்க நம் பக்தர்கள்
வஞ்சகர் போயகலப் பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவபனியெல்லாம் விளங்க அன்னநடை மடவாளுமை கோனடி
யோமுக் கருள்புரிந்து பின்னைப் பிறவியறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்(று) அருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுது மே.
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்துவம்மின் கொண்டுங் கொடுத்துங் குடி குடி
ஈழற்காட் செய்மின் குழாம்புகுந்து அண்டங் கடந்த பொருள் அள
வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள்
என்றே பல்லாண்டு கூறுதுமே
சீரும் திருவும் பொலியச்
சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு
பெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில்?
ஊரும் உலகுங் கழற
உளறி உமை மண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும்
பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
7

Page 12
திருப்புராணம்
வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்
கற்பனை கடந்தசோதி கருணையே யுருவமாகி அற்புதக் கோலநீடியருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோகமாகுந் திருச்சிற்றம் பலத்துணின்று பொற்பதனடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி
ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறு முகம் வாழ்க வெற்பைக் கூறுசெய்தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்கச் செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன்னணங்கும் வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியா ரெல்லாம்
ஆதியாய் நடுவு மாகி யளவிலா வளவு மாகிச் சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா வேக மாகிப் பெண்ணுமா யானு மாகிப் போதியா நிற்குந் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி.
உலகெலா முணர்ந் தோதற் கரியவ னிலவுலாவிய நீர்மலி வேணிய ணலகில் சோதியனம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
வேத வோசையும் வீணையினோசையுஞ் சோதி வானவர் தோத்திர வோசையு மாத ராடன் மணிமுடி வோசையுங் கீத வோசையுமாய்க்கினர் வுற்றவே.
சடை மருங்கி லிளம்பிறையுந் தணிவிழக்குந் திருநுதலு மிடமடங்கிலுமையாளு மெம்மருங்கும் பூதகணம் புடை நெருங்கும் பெருமையுமுன் கண்டரசன் போற்றிசைப்ப விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற் கருள் கொடுத்தான்.
18

திருப்புகழ்
இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் துழலாதே உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி
உனையெனது ளறியுமன்பைத் தருவாயே மயில் தகர்கலிடைய தரந்தத் தினைகாவல்
வனசகற மகளை வந்தித் தணைவோனே கயிலை மலை யனைய செந்திற் பதி வாழ்வே கரிமுகவனிளைய கந்தப் பெருமாளே.
ஏறுமயில் ஏறிவிளையாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே ஆறுமுக மானபொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.
பக்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணர்நேய
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திநியாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே.
அகரமுமாகி யதிபனுமாகியதிகமுமாகி அகமாகி
அயனெனவாகி அரியெனவாகி அரனெவாகி அவர்மேலாய் இகரமுமாகி யெவைகளு மாகி யினிமையுமாகி வருவோனே
இருநில மீதி வெளியனும் வாழ எனது முனோடி வரவேணும் மகபதியாகி மருவும் வலாரி மகிழ்களிகூரும் வடிவோனே
வனமுறை வேடனருளிய பூசை மகிழ்கதிர்காம முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலைமிசைமேவு பெருமாளே.
9

Page 13
திருமந்திரம்
யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாருமறிகிலார் அன்பே சிவமாவதாருமறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
அறியாம லேனும் அறிந்தேனுஞ் செய்து செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று நன்முகில் சேர் காளத்தி நாதன் அடிபணிந்து பொன்முகலி யாடுதலும் போம்.
வாழ்த்து
வான்முகிழ் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க V
குறைவிலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம்.
திருச்சிற்றம்பலம்
20

சிவமயம்
ஒளவையார் அருளிச் செய்த
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞானும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழமுகமும் விளங்குசிந்துாரமும் அஞ்சு கரமும் மங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்கு பொன் முடியுந் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய்ஞ்ஞான அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் முவழிக வாகன இப்பொழுதென்னை யாட்கொள்ள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயப் பிறவி மயக்க மறுத்துத் திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென்னுளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குலவயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென
2

Page 14
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன்னை யடக்கு முபாயம் இன்புறு கருணையின் இனி தெனக் கருளிக் கருவிகள் ஒடுங்கும் கருத்தினை யறிவித்து இருவினை தன்னை யறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி ஆறா தாரத் தங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரையறுத்தே இடைபிங் கலையி னெழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்றுமண்டலத்தின் முட்டிய தூணில் நான்னறெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலியதனிற் கூடிய அசைபை விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் மாதித்தனியக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் காட்டி இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டி சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்கமும் எண்முகமாக வினிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட வெனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை யறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து
22

வாக்கு மனமும் மில்லா மனோலயந் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி யிரண்டுக் கொன்றிட மென்ன அருள்தரு மானந்தத் தழுத்தியென் செவியில் எல்லை யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே யருள்வழி காட்டிச் சத்தத் தினுள்ளே சதாசிவங் காட்டிச் சித்தத் தினுள்ளே சிவலிங்கக் காட்டி அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடும்மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தினம்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தி னிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே!
கணபதி துணை
23

Page 15
Dசிவமயம்
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய
திருவாசகம்
தொல்லை யிரும்பிறவிச் சூழுந்தளைநீக்கி அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன் திருவா சகமென்னுந் தேன்.
சிவபுராணம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க இமைப்பொழுது மென்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகமமாகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க வேகங்கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங்கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன்கழல் வெல்க ஈச னடிபோற்றி எந்தை அடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னனடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி ஆராத இன்பம் அருளு மலைபோற்றி சிவனவன்என் சிந்தையுள் நின்ற வதனால்
24

அவனருளாலே அவன்றாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பனியான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெஞ்ஞான மாகி'மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின் நாற்றத்தி னேரியாய் சேயாய் நனியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுாறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்களேத்த மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் றன்னை மறைந்திட முடிய மாய விருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
25

Page 16
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு முடி மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள்ளுருகும் நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் மாரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா வமுதே அளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கு மொழியானே நீரா யுருக்கியென்னாருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாய் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி யல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வநதறிவாந் தேற்றனே தேற்ற தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பினுட்கிடப்ப ஆற்றேனெம் மையா அரனேயோ வென்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
26

கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து
திருச்சிற்றம்பலம்
27

Page 17
கநதர் சஷ்டிக் கவசம்
அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.
காய்பு
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பாலித்துக் - கதித்தோங்கும் நிஷடையுங்கை கூடும் நிரலர் அருள்கந்தர் சஷ்டி கவசந்தனை.
நூல்
சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை dẾg5b UrTLd5 d66ödé6orf uuITU மையல் நடஞ்செயும் மயில்வா கணனார் கையில்வேலால்எனைக் காக்கவென்றுவந்து வரவர வேலாயுதனார் வருக, வருக வருக மயிலோன் வருக, இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசகன் மருகா! வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவணபவனார் சடுதியில் வருக
28

ரஹண பவசரரரர ரரர flool600l Lu6nig fifff flff
விணபவ சரவண வீரா நமோ நம நிபவ சரவண நிறநிற நிறென
வசர ஹணபவ வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளும் இளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிர்ஐயும் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற்றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் றியும் தனியொளியொவ்வும் குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்நெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமும் தரித்து, நன்மணி பூண்ட நவரத்தின மாலையும் முப்புரி நூலும் முத்தனி மார்பும் செப்பழ குடைய திருவயிறுந்தியும் துவண்ட மருகில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககன செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுன டிகுடிகு டிகுகுண டிகுண
29

Page 18
ரரரர ரரரர ரரரர ரரர sfsfsfs sfsfsfs sfsfsfs sfsfsf (6(6(6(6 (6(806(6 (6(6(6(6 (6(BG டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ! மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலீலா லீலா லீலாவிநோ தனென்று உன்திரு வடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க, பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிாவேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ் வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர் வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறிச் செவ்வேல் காக்க நான்ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்டமிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க பனைத்தொடையிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரன்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்ரவேல் காக்க அரையிருள் தன்னில் அனைய வேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபடப் பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற்படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராக் கதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும், கனகபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை அடியினில் அரும் பாவைகளும்
31

Page 19
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும், நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைகளடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதும்அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாறள்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலது தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட்டோடப் Luliņu6i6id (ypÜLÜlu UMTơfäb tõusisoggT6id கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டு உருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில்செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலதுவாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனி தொடர்ந்தோடப் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங்குன்மம் சொக்குச் சிறங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருஅரை யாப்பும்
32

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்காய் மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவணபவனே! சைலொளி பவனே! திரிபுர பவனே! திகழொளி பவனே! பரிபுர பவனே! பவம்ஒளி பவனே! அரிதிரு முரகா! அமராவதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா! குகனே! கதிர்வே லவனே! கார்த்திகை மைந்தா கடம்பா! கடம்பனை இடும்பனையழித்த இனியவேல் முரகா! தணிகா சலனே! சங்கரன் புதல்வா! கதிர்கா மத்து உறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தில் மாமலை உறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத்து அரசே காரார் குழலாள் கலைமக்ள் நன்றாய் என்நா இருக்க யான் உனைப் பாட எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசம் ஆக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேக முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன் அருளாக அன்புடன் இரகதி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலாயுதனார் சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
33

Page 20
வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவள் ஆமே பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து மைந்தன் என்மீதுன் மனம்மகிழ்ந்து அருளித் தஞ்சம் என்றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேச முடன் ஒரு நினைவது ஆகி கந்தர் சஷ்டி கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்து ஆறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்துநீறு அணிய அட்ட திக்கு உள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர் மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர் எந்த தாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத்து அடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியால் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைய் பொடிப்பொடியாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்து அடி அறிந்து எனதுள்ளம் அட்ட லட்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்து உணவாகச் சூரபத்மாவைத் துணித்தகை யதனால் இருபத்தேழ்வர்க்கு உவந்து அமுதளித்த குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்
34

சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத்து ஆட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேலே போற்றி உயர்கிரி கனக சபைக்கோர் அரசே மயில்நடம் இடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவணபவஒம் சரணம் சரணம் சண்முகா சரணம்!
35

Page 21
சகலகலாவல்லி மாலை
வெண்டா மரைக்கன்றி நின்பதந்
தாங்கவென் வெள்ளை யுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ
லோசக மேழுமளித் துண்டானுறங்க வொழித்தான்
பித் தாகவுண் டாக்கும் வண்ணங் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே. 01
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய்பங்க யாசனத்திற் கூடும் பசுப்பொற் கொடியே
கனதனக் குன்றுண்மப்பாற் காடும் சுமக்கும் கரும்பே
சகல கலாவல்லியே. 02
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்ந்துன் னருட் கடலிற் குளிக்கும் படிக்கெனன்று கூடுங்
கொலோவுளங்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழ்ை சிந்தக் கண்டு களிக்கும் கலாப மயிலே
சகல கலாவல்லியே. 03
36

தூக்கும் பனுசற்றுறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவை தோய் வாக்கும் பெருக்கப் பணித்தருள்
வாய்வட நூற்கடலுந் தேக்குஞ்செழுந்தமிழ்ச் செல்வமுந்
தொண்டர்செந் நாவினின்று காக்கும் கருணைக் கடலே
சகல கலாவல்லியே. 04
பஞ்சப்பி தந்தரு செய்யபொற்
பாதபங்கேருகமென் நெஞ்சத் தடத்தளராததென்
னேநெடுந் தாட்கமலத் தஞ்சத்துவச முசர்த்தோன்
செந்நாவு மகமும் வெள்ளைக் கஞ்சக் கவிசொத் திருந்தாய்
சகல கலாவல்லியே. 05
பண்ணும் பரதமும் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும் விண்ணும் புவியம் புனலும்
கனலும் வெங்காலு மன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே. 06
பாட்டும் பொருளும், பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்க
ணல்காயுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந்தெழிக்கும் வண்ணம் காட்டும் வெள்ளோதிமப்பேடே
சகல கலாவல்லியே. 07
37

Page 22
சொல்விற் பணமு மவதான
முங்கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள்
வாய்நளினாசனஞ்சேர் செல்விக் கரிதென்றொருகால
முஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ் செல்வப்பேறே
சகல கலாவல்லியே. 08
சொற்கும் பொருட்கு முயிரா மெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரச்ன நானநடை கற்கும் பதாம்புயத் தாளே
சகல கலாவல்லியே. 09
மண்டகண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண்டளவிற் பணியச்செய்
வாய்படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி
யுண்டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வமுளதோ
சகல கலாவல்லியே. 10
38

சரஸ்வதி துதி
நாடிப் புலங்கள் உழுவார் கரமும் நயவுரைகள் தேடிக் கொழிக்குங் கவிவாணர்நாவும் செழுங்கருணை ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்துநடம் ஆடிக் களிக்கும் மயிலே உன் பாதம் அடைக்கலமே.
★ ★ ★
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் - வெள்ளை அரியாசனத்தே அரசரோடென்னைச் சரியாசனம் வைத்த தாய்.
★ ★ ★
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வினைசெய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறுபாவலர் உள்ளத் திருப்பாள் உள்ளதாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஒதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள் கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள் - ഖണ്
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள் கோத கன்ற தொழிலுடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள் - ിഖണ്
39

Page 23
திருவெம்பாவை
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
(85Tgëlou uJITuburrL&5 (86 8Luquib 6JT LLrëtab6ër மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்கன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேயெந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையிர் சீசீ இவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆனந்தன் அமுதன்என்றள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியிர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த்தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ கண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் ழ னணெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனேஏன்று ஒலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.
மானேநீ நென்னலை நாளைவந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென்றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சய் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
41

Page 24
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியி தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 8
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய். 9
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை யொருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள் ஏதவனுர் எதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். 10
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண்ணிறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநி ஆட்கொண்டருளும் விளையாட்டில் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
42

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச்சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ் வானுங் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிவம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீராடேலோர் எம்பாவாய்.
பைக்குவளைக் கார்மலரால் செங்கமலப்பைப்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங்களிகூர நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையிர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
43
5

Page 25
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 6
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடிநலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்தாடேலோர் எம்பாவாய். 7
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவிறற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்சுரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம்அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்தாடேலோர் எம்பாவாய். 8
உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய். 19

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றிஎல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீராடேலோர் எம்பாவாய். 20
45

Page 26
அபிராமி பட்டர் அருளிய
அபிராமி அந்தாதி
காபபு
தார்அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகுஏழும் பெற்ற சீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே கார்அமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.
T6)
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயம்என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே
துணையும், தொழுந்தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின் பணையும் கொழுந்தும், பதிகொண்ட வேரும், பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக்க்ே திருவே, வெருவிப் பிறிந்தேன் நின்அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்குஉற வாய மனிதரையே!
46

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும், பாம்பும் பகீரதியும் படைத்த புனிதரும் நீயும்என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயம்மேல் திருந்திய சுந்தரி, அந்தரி பாதம்என் சென்னியதே.
சென்னியது உன்பொற் றிருவடித் தாமரை, சிந்தையுள்ளே மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே! முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே பன்னியது என்றும் எந்தன் பரமஆகம பத்ததியே!
ததியுறு மத்தில் சுழலும்என் ஆவி, தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண் டாய்! கமலாலயனும் மதியுறு வேணி மகிழ்நனும், மாலும், வணங்கி என்றும் துதியுறு சேவடியாய்! சிந்துர ஆனன சுந்தரியே!
சுந்தரி எந்தை துணைவி. என் பாசத் தொடரையெல்லாம் வந்தரி, சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல் அந்தரி, நீலி அழியாத கன்னிகை, ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் மலர்த் தாள்என் கருத்தனவே.
கருத்தன் எந்தைதன், கண்ணன, வண்ணக் கணகவெற்பில் பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின. பேர்அருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்துஅன முரலும், நீயும்அம்ம்ே வந்துஎன் முன்நிற்கவே.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்ன்ை என்றும் வணங்குவது உன்மலர்த் தாள் எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே! இமயத்து அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!
47
10

Page 27
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும் தான்அந்த மான சரணாரவிந்தத் தவளநிறக் கானம்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே. 11
கண்ணியது உன்புகழ் கற்பதுஉன் நாமம் கசிந்துபக்தி பண்ணியது உன்இரு பாதாம் புயத்தில் பகல்இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த புண்ணியம் ஏது? என்அம்மே! புவி ஏழையும் பூத்தவளே! 12
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளைப் புவிஅடங்கக் காத்தாளை, அங்கையிற் பாசாங்குசமும் கரும்பு, வில்லும் சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே!
2/ܐyܓܓ ラVSミ
48


Page 28
Kumaran Press (Pvt) Ltd., Colombo, Tel. 2421388.
 


Page 29
Filiiliari Press Pvt Ltd., Clith
 

1. Tio|N !-42 | 388,