கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோட்டப்புற அமைப்பில் மனித உரிமைகள்

Page 1
... ---.
ថ្ងៃ៣LLLញ្ញា ៥
:
 
 


Page 2

தோட்டப்புறஅமைப்பில் Loefg, 2 floodish

Page 3
0
0
()
0
முகவுரை
தோட்டப்புற அமைப்பு
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் - பிரஜாவுரிமை மற்றும் 6 raiserfsoLD
Poeso prfoloser
தன்னிச்சையான கைதுகளும் சுதந் தர அமைப்புகளின் கட்டுப்பாடுகளும்
சிறுவர்களின் உரிமைகளும் குழந்தை தொழிலாளர்களை தடை செய்ய Փւքաn6ՓԼՕպլb.
பொருளாதரா உரிமைகள்
சமூக கலாசார உரிமைகள்
இந்த மாநாடானது பின்வரும் சிபாரிசுகனைச் செய்கிறது இந்த மாநாடானது பின்வரும் சிபாரிசுகனைச் செய்கிறது சுகாதாரமான வாழ்வுக்கு உரிமை
LDITIBT peo முன்வைக்கப்பட்ட சுகாதார உரிமைகள் குறித்த சிபாரிசுகள்
smoort frt DrfoLosoft
பெண்கள் உரிமை (தோட்டப்புறங்களில் ஆணாதிக்கமும், பெண்களில் அதன் தாக்கமும்)
தோட்டப்பகுதியில் பெண்களும், கல்வியும்
சுகாதாரமும் மறு உற்பத்தி நிலையும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் சமூக உணர்வு
மாநாட்டில் கீழ் குறிப்பிடப்படும் சிபாரிசுகள், தோட்டப்புற பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவது தொடர்பாக முன்வைக்கப்பட்டத
மனித உரிமை பாதுகாப்புத் தொடர்பான அரசு சாரா நிறுவனங் களினதும், தொழிற்சங்கங்களினதும் பங்கு
அரச சார்பற்ற நிறுவனங்கள்
தொழிற்சங்கங்கள்
திட்டங்கள் சாத்தியப்படக் கூடிய விடயங்கள்

முகவுரை
இலங்கையின்பெருந்தோட்டங்களில்தமிழ்மக்கள் வாழும்விடயம் இந்நாட்டுஅரசியலில் அடிக்கடி ஒப் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது. சுதந்திர இலங்கையின் முதலாம் பாராளுமன்றம் அங்கீகரித்த பிரதான இரண்டு சட்டங்கள் அம்மக்களின் வாழ்க்கையோடு நேரடியாகத் தொடர்பு கொண்டவை. அவை 1948 இன் பிரஜா உரிமைச் சட்டமும் 1949 ன் பாராளுமன்றத் தேர்தல் (திருத்தச்) சட்டமும் ஆகும். பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களை சுதந்திர இலங்கையின்பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளாத பிரச்சினை பல்வேறுபட்ட பரிமாணங்களில் கடந்த 50 ஆண்டுகளில் தோன்றிஉள்ளன.
சுதந்திர இலங்கையின் அரச கொள்கைகளை தயாரிக்கும் நடவடிக்கைகளில் தோட்டத் தொழிலாளரைப் புறக்கணித்தல அல்லது தோட்டத் தொழிலாளரை இலக்காகக் கொண்ட அரச கொள்கைகளைத் தயாரிக்காது கைவிடல் என்பன பற்றி இலங்கையின் அரசியற் கட்சிகளுக்கிடையே பகிரங்கப்படுத்தப்படாத இனக்கம் இருப்பதாகவே தோன்றுகின்றது. தோட்டத்தொழிலாளர்தொடர்பான"அரசியல்பிரச்சினை"அறுபதுகள் வரை, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ராஜ்ய உறவுகள் தொடர்பான பிரச்சினையின் உய பிரச்சினையாகவே கருதப்பட்டது. அதன்பின்னரே தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக அரசுகளின் அவதானம் செலுத்தப்பட்டது. அரசியல் கட்டமைப்புக்கள், தேர்தல் அவசியங்கள் , வேலை நிறுத்தங்கள் போன்ற சந்தர்ப்பங்களிலேயே தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளையிட்டு கவனம் செலுத்தப்பட்டது. அரச கொள்கைகளிலிருந்து தமிழ்தோட்டத்தொழிலாளர் ஒதுக்கப்பட்ட அதேநேரத்தில், சிங்கள இனவாதச் சக்திகள் அம்மக்களைiபற்றி நிரந்தரமாகப்பயத்தையும்dதியையும் சந்தேகத்தையும் கட்டியெழுப்பின.
பொருளாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து பெருந்தோட்டங்களில் வேலை நிறுத்தங்கள் ஏற்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் சிங்கள இனவாதக் குழுக்கள் அவற்றை தமிழ் இனவாத அரசியல் செயல்திட்டத்தின் அங்கங்களாகவே கருதின. தமிழ் தோட்டத் தொழிலாளிசிங்கள பௌத்த கிராமவாசியைவிட அதிக சலுகைகளைப் பெற்ற, அரசியில் பேரம் பேசும் இயலுமை கொண்ட, நியாயமற்ற நன்மைகளை எதிர்பார்க்கும் சிறுபாண்மையினரே எண்பது இச் சிங்கள இனவாதக் கருத்தியலின் ஒரு கருத்தாகும்.
ஆனால் மனித உரிமைகள், சமுக நீதி என்ற நோக்கில் பெருந்தோட்டத்துறையின் தமிழ் மக்கள் மீது பார்வையைச் செலுத்தும் போது இதைவிட வித்தியாசமான யதார்த்தத்தையே கான முடிகின்றது. பொருளாதார, சிவில், அரசியல், கல்வி, சமுக, சுகாதாரத்துறைகளின் உரிமைகள் தொடர்பாக பெருந்தோட்டத்தொழிலாளருக்கான குறைந்தளவு உரிமைகளே கிடைக்கின்றன. பெருந் தோட்டங்களில் உள்ள பின்தங்கிய பொருளாதார சடுகக் கட்டமைப்புக்கள் மிக மந்தமாகவே மாற்றமடைகின்றன. பொருளாதார சமுக ரீதியான ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கு மிகக் குறைந்த அவகாசமே பெருந்தோட்டத் தொழிலாளருக்கு உண்டு.

Page 4
மலையகத் தமிழ் மக்களின் இப் பிரச்சினைகள் பொதுவாக எமது நாட்டு அரசியலில் disvögøNgunia involgólixø06).
பெருந்தோட்டப் பொருளாதார சமுக அமைப்பின் எதிர்காலம் பற்றியும் மிக அரிதாகவே ஆழமாகக் கலந்துரையாடப்படுகின்றது. இங்குள்ள உற்பத்திமுறைகள், உற்பத்தித்தொழில் நுட்பம்,(லதனத்திற்கும் உற்பத்திக்குமுள்ள உறவுஎண்பன காலம்கடந்தவையாகும். தோட்ட முகாமைத்துவம் தனியார்மயப்படுத்தப்பட்டபின்னர் தோட்டப்பொருளாதாரத்தில் பிரவேசித்த நிதிமுலதனத்துக்கோ,இந் நிலைமையை மாற்றும் தேவை இருப்பதாகத் தெரியவில்லை.
சிங்களச் சமுகத்தில்பெருந்தோட்டக்கைத்தொழில்சமுகத்தின்மனிதஉரிமைகள் பற்றிய புதிய அறிவூட்டலை ஏற்படுத்தும் நோக்கில் இச்சிறுநூலை நாம் வெளியிடுகின்றோம். 1997 ஆம் ஆண்டில் சமுக விஞ்ஞானிகள் சங்கம் நடத்திய செயலமர்வு இச் சிறு நூலுக்கான அடித்தளமாக அமைந்தது. சல்விமான்கள், ஆய்வாளர்கள், பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த தொழிற்சங்கங்கள்,அரசியல்செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மேற்படி செயலமர்வில் பங்குபற்றினர். அவர்கள் முன்வைத்த கருத்துக்கள்"பெருந்தோட்டக்கைத்தொழில்துறையில் மனித உரிமைகள்" என்ற அறிக்கையைத் தயாரிப்பதில் பேருதவியாக அமைந்தது.
மேற்தறித்த செயலமர்வைஏற்பாடுசெய்வதிலும், அதன் அறிக்கையைத் தயாரிப்பதிலும் காலஞ் சென்ற திரு சாள்ஸ் அபேசேகர அவர்கள் ஆற்றிய பங்களிப்பை இங்கு நன்றியுடன் நினைவுகருகின்றோம். இலங்கைமனிதஉரிமைகள் இயக்கத்தின்மிகச்சிறந்தசெயற்பாட்டுத் தலைவரான அபேசேக்கர அவர்கள், "பெருந்தோட்டத்துறையில் தமிழ் மக்களின் மனித உரிமைப்பிரச்சினை, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான ஒட்டு மொத்தமான பிரச்சினையின் ஒரு பகுதியாகும்" என அடிக்கடி வலியுறுத்தினார். ஓரங்கட்டப்பட்ட சமுகங்களுக்கும் இனங்களுக்கும் "நியாயத்தையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்துதல் இலங்கையின் சனநாயக மனித உரிமைகளுக்கான போராட்டத்தின் இலக்காக அமைய வேண்டும்" என அபேசேக்கர உறுதியாக நம்பினார்.
இந்நூல்சர்க சமத்துவம்பற்றிய சாள்ஸ்அபேசேக்கரஅவர்கள்மீதப்படுத்தியஞாபகத்தை அழியாமல்பாதுகாக்கக்காரணமாக அமையும் என்பது எமது உறுதிவாய்ந்த நம்பிக்கையாகும்.
கலாநிதி ஜயதேவஉயண்கொட சமுக விஞ்ஞானிகள் சங்கம்
1998 ஒக்டோபர்

தோட்டப்புற அமைப்பில் மனித
so foofaggi
தோட்டப்புற மக்களின் மனித உரிமைகள் தொடர்பாக தன் கவனத்தை குவித்துள்ள இம்மாநாடு அம்மக்களை இந்தியா வம்சாவளி தமிழர்களை கொண்ட மக்கள் என வரையறை செய்துள்ளது. இந்தப் பதம் தொடர்பான தர்க்கங்கள் சிலவற்றை பங்குபற்றிய சிலர் முன்வைத்தனர். சிலர், இலங்கைத் தமிழர்கள்' எனவும் 'மலையகத் தமிழர்' எனவும் குறிப்பிடவிரும்பினர். இந்திய வம்சாவளிப்பிரஜைகள் என்ற பதமே இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏனெனில், அரசாங்க சட்டமியற்றுதலின் போதும், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், பிறப்புச் சான்றிதழ் என்பவற்றிலும் இவ்வாறே குறிப்பிடப்படுகின்றது.
இம்மாநாட்டில் மனித உரிமைகளுக்கான வரைவில்க்கணப்படுத்த saéluLDraai 25 ggi6060T (55ùu556pari ICCPR, ICESCR, CEDAW ஆகியவற்றிடமிருந்து பெறுவது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
தோட்டப்புற அமைப்பு
இவ் அமைப்பு, 19ம் நூற்றாண்டில், இங்கிலாந்திலிருந்து மூலதனத்தைப் பெற்றும், நிலத்தை இலங்கையிலிருந்தும், தொழிலாளர்களை தென் இந்தியாவிலிருந்தும் கொண்டு, ஏற்றுமதிச் சந்தைக்காக ஸ்தாபிக்கப்பட்ட காலனித்துவ அமைப்பாகும். தொழிலாளர்கள் தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படக் காரணம், பிரதானமாக உள்ளூர்த் தொழிலாளர்கள் தமது உழைப்பை வழங்க விரும்பாததே ஆகும். இதன் காரணமாக இத் தொழிலாளர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் என அழைக்கப்பட்டனர். தோட்டப்புறங்களில் இவர்கள் தொழிலாளர் நிர்வாக கட்டமைப்பு ஒன்றின் கீழ் வாழவைக்கப்பட்டனர். இவர்கள் சுதந்திரமாக வெளியில் திரிவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இவர்களது சுகாதாரம், கல்வி, பாவனைப்பொருள் வினியோகம் உள்ளிட்ட அனைத்து தேவைகட்கும் தொழில் கொள்வோரே பொறுப்பாக இருந்தனர். இந்த முறையானது, தேசியமயம் மற்றும் தனியார் மயம் ஆகியவற்றின் கீழான முகாமைத்துவத்தின் காரணமாக மாற்றமுற்று வருகின்றது. அரசு, அவர்களது சமூக நலன் தொடர்பான நடவடிக்கைகளை கவனித்து நாடளாவிய திட்டங்கள் பலவற்றை அமுல்படுத்தி வருகின்றது.
1

Page 5
எனினும் , மூலாதாரமான કી દ્રો) திட்டங்கள் இதுவரை கவனிப்புக்குள்ளாகவில்லை.
இத்தொழிலாளர்கள், தமிழ்மொழியை பேசுவதுடன், இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள். இவர்கள், சிங்கள பெளத்த மக்கள் சூழ்ந்துள்ள பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வேறு சமூகத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து உறவாடும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவர்கள் பெருமளவில் பிற சமூகத்தவரிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், ᏞᎫ Ꮆu) விடயங்களில் பாரபட்சப்படுத்தப்படுத்தப்பட்டும் வருகின்றனர். ஏனையோருக்கு இதுவரை பிரஜாவுரிமையோ, வாக்குரிமையோ கூட வழங்கப்படவில்லை.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்படும் பல மனித உரிமை மீறல் விடய்ங்களுக்கு அடிப்படையாக இருப்பவை இந்த அடிப்படைநிலைமைகள்ே ஆகும்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் - பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் என் ப்வை பிரஜாவுரிமையிலிருந்து தோற்றம் பெறும் உரிமைகளாகும். இந்தச் சமூகத்தின் பிரஜாவுரிமை தொடர்பான பிரச்சினை, 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, நிலவிவந்த ஒரு புரிதல் தான், இலங்கையின் சனத்தொகையில் ஒரு அன்னியக் கூறாகவே இந்த இந்திய வம்சாவளி மக்கள் நிலவுகிறார்கள் என்பது. இதுவே இந்த சமூகத்தின் பிரஜா உரிமைப் பிரச்சினை. இதன் காரணத்தினாலேயே ஒரு மூடுண்ட பிரச்சினையாக இருந்து வந்தது. அச்சந்தர்ப்பத்தில் பிரஜா உரிமையானது வரையறை செய்யப்பட்ட விதமே இந்தச் சமூகத்தின் பெரும் பகுதியை வெளியொதுக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகும். வாக்களிக்கும் உரிமையையும், பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளை கொண்டிக்கும் உரிமையையும், மறுக்கும் எண்ணமே இந்த வெளி ஒதுக்கலுக்கான காரணமாகும். இந்தியாவுடன் இது தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன் படி சிலருக்கு
محمد
2

இலங்கைப் பிரஜாவுரிமையும், அதைவிட குறைந்த தொகையில் சிலருக்கு இந்திய பிரஜாவுரிமையும் கிட்டியது. எனினும், இவ் ஒப்பந்தம் வேறு சிலரை நாடற்றவர்களாக ஆக்கியது. இந்திய வம்சாவளி மக்கள் இந்த நாடுகடத்தல், திருப்பி அனுப்பல் நடவடிக்கையின் போது சொல்லொணாத் துன்பங்களுக்கு உள்ளாகினர். அன்றிலிருந்து இன்று வரை இந்தப் பிரஜாவுரிமைப் பிரச்சினை நாட்டின் தேசிய இனப்பிரச்சினையின் ஒரு பிரச்சினைக்குரிய அம்சமாகவே கலந்துள்ளது.
இதன் வளர்ச்சிகள் இன்று நாட்டில் இருவிதமாக பிரஜாவுரிமை உள்ளவர்களை உருவாக்கிற்று. ஒன்று, பிறப்பு பிரஜாவுரிமை. மற்றையது பதிவு பிரஜாவுரிமை, இந்திய வம்சாவளி மக்களுக்கெதிரான பராட்சத்தை மிகத் தெளிவாகக்காட்டும் இந்த நிலைமை ICCPR பகுதி i 26வது சரத்திற்கு விரோதமானதாகும். அது இவ்வாறு கூறுகிறது:
சட்டம், பாரபட்சமாய் நடாத்துதலை தடுப்பதுடன், அனைத்து மக்களினது சமதன்மையையும், பாதுகாப்பையும் வலியுறுத்துகின்றது. இனம், சாதி, நிறம், பால், மொழி, மதம் , அரசியல், மாறுபட்ட கருத்துக்கள், தேசிய சமூக குழுக்கள், சொத்து, பிறப்பு என்பவை
தொடர்பாக பாரபட்சம் காட்டப்படுதல் கூடாது.
பிரஜாவுரிமைப் பிரச்சினை தொடர்பாக உள்ள மேலதிக பிரச்சினை என்னவென்றால், அது உடன்பாடு தொடர்பான 7 குறிப்பான சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியா வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கியிருப்பதாகும். இது இச்சட்டங்கள், பிரஜாவுரிமையை பதிவு செய்தோரிடையே வித்தியாசங்களை ஏற்படுத்தியது. இது மிக முக்கியமான தாற்பரியத்தை பல பிரதேசங்களில் ஏற்படுத்தியது. உதாரணத்திற்கு வாக்கிட தயாராகும் போது, தமிழர்கள் வழமையாக பிரஜாவுரிமை சான்றிதழ்களை கொண்டிருக்க வேண்டும். ஆனால் 'பிரஜைகள் அல்லாதோர் பிரஜாவுரிமை' பெற்றவர்களுக்கு 1988 ல் சான்றிதழ் வழங்கப்படாததால் வாக்குரிமை தொடர்பாக அவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இம்மீறுதல் 3ம் பிரிவில், 25வது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.
அனைத்து பிரஜைகளும் சரத்து 2 - ல் குறிப்பிடப்பட்ட உரிமைகளுக்கு உரித்தானவர்கள். அவற்றை எந்த காரணமற்ற
3

Page 6
விடயங்களுக்காகவும் கட்டுப்படுத்த முடியாது. காலததுககு காலம் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கவும், தேர்ந்தெடுக்கப்படவும் , அவர்களுக்கு ഉ_fിഞഥ இருக்கவேண்டும்.
இம்மாநாடு இந்தச் சமூகத்தவர் அனைவரினதும் உரிமைகளையும் அடிப்படை உரிமைகள் என்ற வகையில் கருத்திற்கொண்டு , சில விடயங்களை சிபாரிசு பண்ணுகிறது. யாப்பில் அடங்கப்பெற்றிருக்கின்ற சில விடயங்கள் நீக்கப்பட்டு அதிலும், குறிப்பாக இலங்கைப் பிரஜைகள் என்ற விடயத்தில் 1948 பெப்ரவரி 4 இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த நாளில் இலங்கையில் வசித்தவர்களும், நிரந்தர குடிகளும் இலங்கைப் பிரஜைகளாகக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு "இலங்கைப் பிரஜை" என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். பல்வேறுபட்ட சட்ட நடவடிக்கைகள், மாறுதல்களின் பேரில் தங்களை இந்தியப் பிரஜைகளாக கருதிச் செயற்படுபவர்களுக்கு, இந்த விடயம் பற்றிய ஒரு தெரிவுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். வரலாற்றில் இடம் பெற்ற ஓர் அநீதிக்கான சரியான ஒரு மாற்றீடு இந்த அளவீடாகத்தான் இருக்கும்.
இது இந்தியாப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்த 84 ஆயிரம் விண்ணப்பங்களையும் உள்ளடக்கவேண்டும். விண்ணப்பித்தவர்கள் பலர் தற்போது மரணமடைந்தும், வயோதிபர்களாகியும் உள்ளனர். இலங்கையின் பெரும்பாலானவர்களின் பிள்ளைகள் விண்ணப் பிக்கப்பட்டபோது 18வயதுகுட்பட்டவர்களாக இருந்தவர்கள் - இப்போது வளர்ந்து திருமணம் முடித்தவர்களாக உள்ளனர். அத்துடன் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற மறுக்கின்றனர்.
இந்தியக் கடவுச்சீட்டு உள்ளவர்களது பிள்ளைகள் உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு என்பறவற்றில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களாக உள்ளனர். அவர்கள் அரச உத்தியோகங்கட்கு விண்ணப்பிக்க முடியாதவர்கள் மட்டுமல்லாமல் இலங்கையின் உயர் கல்வி நிறுவனங்களின் கல்வி கற்கும்
வாய்ப்பும் அற்று உள்ளார்கள்.

மாநாட்டில் 17வது திருத்தம் தொடர்பாக சில விடயங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பிட்ட நபர் 5 வருடங்கள் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டிருப்பாராயின் அவர் பிற பிரஜைகள் போன்று அனைத்து உரிமைகளுக்கும் உரித்தானவர் ஆவார். இந்த விடயம் 84000 இந்திய கடவுச் சீட்டு வைத்திருப்போரின் பிரச்சினைகளை தீர்க்கும்.
சிவில் உரிமைகள்
மாநாட்டில் இந்திய வம்சாவளியினரின் சிவில் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள் கண்டு கொள்ளப்பட்டதுடன், பிரஜாவுரிமை உரிமைகளை தடை
செய்யும் விடயங்களும் தெரிந்து கொள்ளப்பட்டன.
* நில உடைமை உரிமை மற்றும் குடியேற்றும் உரிமை
இவ்விடயம் மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. முதலாவது, இந்திய வம்சாவளியினருக்கு அவர்கள் தங்கியிருக்கும் வீடு, காணி என்பவற்றுக்கு உரித்துடமை உண்டென திரும்பத்திரும்ப பரம்பரை
பரம்பரையாக வாக்களிக்கப்பட்டது. இது இன்றும் நிறைவ்ேற்றப்படாதுள்ளது. இரண்டாவது, இச்சமூகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிற சமூகங்களினால்
பாரபட்சத்துக்குள்ளாகியும் உள்ளது. இச்சூழ்நிலையும், இப்பரபட்சத்தை நீக்க அரச முயலாமையும் தோட்டப்புறங்களுக்கு வெளியே இந்திய வம்சாவளித் தமிழர்கள் சுதந்திரமாக தமது வதிவிடங்களை தேடிக்கொள்ள முடியாமல் செய்துள்ளன. இம் மீறுதல்கள் பகுதி i ன் சரத்து 12:1, ICCPR ல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாக தமது தேசத்திற்குள் வாழ்பவர்கள் அனைவரும் வசிப்பிடத்தைத் தெரிந்து கொள்ளும் சுதந்திரத்தைக்
கொண்டவர்கள்.
மூன்றாவது, இந்திய வம்சாவளியினர் வீடமைப்புத்திட்ட
5

Page 7
சலுகைகளிலிருந்து விலத்திவைக்கப்படுகின்றனர். பாரபட்சம் தொடர்பாக பேசும்பொழுது, பொதுவான கருத்து, ICCPR ன் கட்டுரை 40, 4வது பந்தியிலும், அ. பொதுவான கருத்து இல 18(37) b, c/ (பாரபட்சமற்றதன்மை) 10வது பந்தியிலும் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.
இங்கு சமத்தன்மையின் தத்துவங்கள், சில சமயங்களில் அரசியல் கட்சிகள் உறுதிப்படும் நடவடிக்கைகள் மற்றும் நீக்கிவிடும் தன்மைகள், பாரபட்சம் தொடர்பாக மறவாதிருக்கும்
தன்மையை ஏற்படுத்தும்.
மாநாட்டில், தற்போது தோட்டப்புறங்களில் குடியிருப்பவர்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இது தமிழர்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தும். இக்கோரிக்கையில் பால்நிலை விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். வீட்டு மற்றும் காணி உரிமையை ஆணுக்கு அளிக்கும் போது அதன் ஆபத்தை விளங்க வேண்டும். இந்த நிலையை தடுக்க நடவடிக்கை எடுத்தலுடன், பெண்கள் ஆணாதிக்க சமூகத்தில் தங்கியிருக்கும் தன்மையும் மாறுபடும்.
அத்துடன், மாநாட்டில், தோட்டப்புற தொழிலாளர்களின் வசிப்பிடங்கள் மற்றும் அவர்களுக்கான அணுகுமுறைகள் சுதந்திரத்திற்கு எதிரானதாக அமையக்கூடாது என யாப்பில் கூறப்பட வேண்டும் என் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தன்னிச்சையான கைதுகளும் சுதந்திர
அமைப்புகளின் கட்டுப்பாடுகளும்
தன்னிச்சையான தலையீடுகளான அடையாள அட்டைபரிசோதனை,
மற்றும் தன்னிச்சையாக தடுப்புக் காவலில் வைத்தல் என்பன நிகழ்கால
பாதுகாப்பு அம்சங்களாகி உள்ளன. இம் மீறுதல்கள் ICCPR ன் கீழ் 3ம்
பகுதியில், 3வது கட்டுரையிலும், 17வது. 9வது கட்டுரையிலும் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.
6

தமது தனித்தன்மை, குடும்பம், வீடு என்பவை தொடர்பாக எந்தவொரு நபருக்கும் தன்னிச்சையான மற்றும் சட்டரீதியற்ற தலையீடுகள் இருக்கக் கூடாது.
9வது கட்டுரையில்:
ஒவ்வொருவரும் தனிப்பட்ட நபரும் பாதுகாப்புக்கு உரித்தானவர்கள். எந்தவொரு நபரும் தன்னிச்சையான
கைதுக்கும், அகெளரவத்திற்கும் ஆளாக முடியாது.
இந்திய வம்சாவளி மக்கள் குறிப்பாக தடுத்து வைத்தல் தொடர்பான அணுகுமுறைகளை அறியாதுள்ளனர். மேலதிகமாக, தமிழர்கள் பொலிஸ் நிலையத்தில் தமது பெயர்களை பதிவு செய்தல் வேண்டும் என்ற கொள்கையை இவர்கள் வேறு இடங்களுக்குச் செல்லும் போது மீற வேண்டி ஏற்படுகின்றது. 3வது பகுதி, 12:1. கட்டுரையில்,
தோட்டப்புற தமிழர்கள் அடையாள அட்டை தொடர்பான பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். அடையாள அட்டைத் தொடர்பான விபரங்களை முகாமைத்துவம் வைத்திருப்பதால் இனப் பிரச்சினை காலகட்டங்களில் (1972 - 1987) அவை வேண்டுமென்றே அழிக்கப்பட்டுவிடுகின்றன. குறிப்பாக, பெரும்பாலான, இந்திய வம்சாவளித் தமிழர்கள், அடையாள அட்டையை பெற முடியாதுள்ளனர். இவை, மீறப்படுதல் தொடர்பான ICCPR ன் பகுதி 3, கட்டுரை 16ல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவரும் பிரஜ்ை என்ற வகையில் சட்டத்திற்கு முன்னர் சமமானவர்கள்.
மாநாட்டில், அரசாங்கத்திடம் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அறிக்கைகள் பற்றி நிலையான கொள்கை இருக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், நாம் பிறப்புச் சானறிதழ் தொடர்பான அமுலாக்கல்களை சுயமாகவும், தமிழ் பதிவாளர்கள் தொடர்பான விடயங்களை முகாமைத்துவத்திற்கும் பொறுப்பளிக்காது விட வேண்டும்.
7

Page 8
சிறுவர்களின் உரிமைகளும் குழந்தை தொழிலாளர்களை தடை செய்ய முடியாமையும்.
இலங்கையில் குழந்தை தொழிலாளர்களது பிரச்சினை பாரிய பிரச்சினையாக உள்ளது. சிறுவர்கள் நகரங்களில், வீட்டுவேலைக்காரர்களாக துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்றனர். அத்துடன், பாலியல் தொழிலாளர்களாகவும் விளங்குகின்றனர். இலங்கையின் தோட்டப்புறங்களில், ஏழ்மை காரணமாக வேலையின்மை காரணமாக, சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றனர். எனினும், இலங்கையில் இது தொடர்பான சட்ட திட்டங்கள் நிலவுகின்றபோதிலும் அவை திடமாக நிறைவேற்றப்படுவதில்லை. ICCPR பகுதி 3, கட்டுரை 24:1 ல் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு சிறுவரும் இனம், நிறம், மதம், மொழி, தேசியம், சமூகக்குழு, சொத்து, பிறப்பு என்பவை தொடர்பாக பாரபட்சம் காட்டப்படக்கூடாது. அவர்களுக்கான பாதுகாப்பு உரிமை அரசினால், குடும்பத்தினால், சமூகத்தினால் வழங்கப்பட வேண்டும்.
இந்த மாநாடானது சிறுவர் உழைப்பைத் தடைசெய்யும் சட்டங்களை உடனடியாகவும், திறமையாகவும் அமுல் நடத்தும்படி சிபார்சு
செய்கிறது.
1929 ஆம் ஆண்டின் கூலி நிர்ணய சபையிலும் இந்தியத்
தொழிற்சட்டத்திலும், சிறுவர் உழைப்பானது அனுமதிக்கப்பட்டுள்ளது. (மூன்று வகைத் தொழிலாளர்கள்: ஆண், பெண் , சிறுவர்) இந்த சட்டங்கள் திருத்தப்பட்டு
வயதெல்லையானது பதினெட்டாக உயர்த்தப்படல் வேண்டும். வேலை தேடும் 12 - 18 வயதிற்கும் உட்பட்ட வேலையற்றோரின் வேலை செய்யும் உரிமையானது குறைக்கப்படுதல், கவனிக்கப்படல்
வேண்டும்.

* கட்டமைப்புப்பாகுபாடும் உரிமைகளின் சமமின்மையும்
இந்த மாநாடானது ICCPR இன் பார்வையில் இந்தியத் தமிழரின் உரிமைகள் மீறப்பட்டு உள்ளமையும், அவர்கள் பாரபட்சமாக நடாத்தப்படுகின்றதையும் சுட்டிக்காட்டுகிறது. இப்பாகுபாடானது அரச சேவையில் விசேடமாக வெளிப்படுகிறது. குறிப்பாக பெரும்பான்மையுடன் ஒப்பிடும் போது, இச் சமூகத்திற்கு முக்கிய தேவையான போதியளவு பஸ் சேவையின்மை, போதிய ஆஸ்பத்திரி வசதியின்மை, தமிழ் பேசும் நலன்புரி தொழிலாளர் போதியளவு இன்மை, மருத்துவச்சிகள் இன்மை.
இந்த மாநாடானது தோட்ட்ப்பகுதி சமுதாயத்தை பிரதேச செயலாளர் பிரிவு, கிராம சேவையாளர் பிரிவு, உள்ளூராட்சி மன்றங்களுடன் ஒன்றிணைக்க வேண்டுமெனச் சிபார்சு செய்கிறது. இதனால்
இந்தியத் தமிழர்கள் தனிமைப்படுத்தப்படுவது குறைக்கப்படுவதுடன் அவர்களது சிவில் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகிறது.
* தோட்டப்பகுதி, சமுதாயத்தினுள் இருந்து வெளிப்படும் சிவில் அரசியல் உரிமை மீறல்கள்
மேலே குறிப்பிடப்பட்ட இந்திய தமிழருக்கு எதிராக சிவில், அரசியல் உரிமை மீறல்களை விட அத்தோட்டப் பகுதி சமுதாயத்தின் உள்ளேயே தலைமை கட்டமைப்புகளில் இருந்து உரிமை மீறல்கள் நடைபெறுவதை இந்த மாநாடு அடையாளம் கண்டுள்ளது. சமுதாயத்தில் காணப்படும் இன, சாதிப்பாகுபாடு, தலைமைத்துவத்திற்கான போட்டி, ஆண் , பெண் என்ற பாகுபாடு, சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிர்வாக கட்டமைப்பு போன்றவற்றைப் பற்றி இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
சமுதாயத்தில் காணப்படும் இந்த விடயங்கள் ஒரு திட்டமொன்றை உருவாக்கி இவ்விடயத்தைப் பற்றி அந்த சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென சிபார்சு செய்கிறது. மேலும், இந்த மாநாடனது இந்தத்
9

Page 9
தோட்டப்பகுதியில் வாழும் சிங்களச் சமுதாயத்தினருக்கும் இந்தியத் தமிழருக்குமிடையே ஒரு பலமான சமுதாய இணைப்பொன்று இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சிபார்சுகளானது நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென வற்புறுத்துகிறது.
பொருளாதார உரிமைகள்
தோட்டத் தொழிலாளர்கள் மிக நீண்டகாலம் போராடியே தொழிற்சங்க உரிமைகளையும் தொழிலாளர் என்ற ரீதியில் குறிப்பிடத்தக்களவு நன்மைகள் பெற்றனர். ஆனால் இது தற்போது மிக மோசமான நிலையிலுள்ளதாகத் தோன்றுகிறது. ஏனென்றால், அரசாங்கத்தின் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தினை தோட்டப்பகுதியின் சொந்தமும், நிர்வாகமும் தனியார் மய்ப்படுப்படுத்தலே காரணமாகும். தனியார் மயப்படுத்தலின் முதல்படியானது ஐந்து வருடங்களுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டது. அது தோட்டப்பகுதியின் நிர்வாகம் தனியார் கம்பனிகளுக்கு நிலம் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட போதே ஆரம்பிக்கப்பட்டது. இறுதிப்படியாக, காணி தனியாரின் சொந்தத்திற்காக காணி மாற்றப்படுதல் இப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தனியார் மயப்படுத்தலின் விளைவாக ஏற்படும் முக்கிய அம்ங்கள்:
1. வேலை நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படுதல், கட்டுப்பாடுகள் அதிகரித்தல், அடிப்படை மனித உரிமையான நியாயமான அளவு கூலி பெறுதல் இங்கு மீறப்படுகிறது.
i. புதிய தொழிலாளர்களை பதிவு செய்தல் மறுக்கப்படுகிறது.
i. ஆறுமாதம் வேலை செய்த சமயாசமய ஊழியர்களை வேலையிலிருந்துநீக்கல், தொழில்சட்டங்களை மீறல், இதனால் தொழிலாளரின் சேமலாயநிதி, தொழிலாளர் நம்பிக்கை நிதியம், இருப்பிட வசதிகள் போன்ற நலன்கள் பறிக்கப்படுகின்றன.
10

iv. தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்வதுடன் அவர்களின் இடத்திற்கு சமயாசமய அடிப்படையில் தொழிலிலிருந்து ஒய்வு பெற்ற ஆட்களை நியமித்தல். இதனால் இதுவரை அவர்கள் அனுபவித்து வந்த இருப்பிட மற்றும் அவர்களுக்கு உரித்தான நலன்கள் பறிக்கப்படுகின்றன.
V. நீதிமுறையான கட்டளைகள், தீர்ப்புகள், அலட்சியப்படுத்தப்படல், தொழில் நியாயசபை,
தொழிற்திணைக்கள கட்டளைகள்.
Vர். தனியார் மய திட்டத்தில் உள்ள அடிப்படை பகுதிகளை
அமுல் நடத்தாமை - அரசாங்கம் 10% பங்குகளை தொழிலாளர்களுக்கு வழங்கியமை,
Vi. சமூக நல திட்டங்கள் குறைக்கப்படுவதுடன்
அலட்சியப்படுத்தப்படுகின்றது. கூலி நிர்ணய சபை சரத்தின் படி சமூக நலத்தின் 10% தோட்ட தொழிலாளர்களின் கூலி கணக்கிடப்படும்போது மீறப்படுகின்றது.
இந்த மாநாடு ஆனது தோட்டப்பகுதியில் உள்ள எல்லா
தொழிற்சங்கங்களையும் தனியார் மயத்திட்டம் தோட்ட
தொழிலாளர்களையும் அவர்களின் வேலை நிபந்தனைகளையும்
பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சிபாரிசு
செய்கின்றது.
சமூக கலாசார உரிமைகள்:
இந்த மாநாடானது, குறிப்பாக பின்வரும் உரிமைகளில் தனது கவனத்தை
செலுத்துகிறது.
* மொழி உரிமை
ICCPR (1966) இன் உறுப்புரை 27 ஆனது சிறுபான்மையினரின்
மொழி உரிமையை அங்கீகரிக்கிறது.
11

Page 10
சிறுபான்மையினர் தாம் வாழும் பிரதேசத்தில் அவர்களின் இன, மத, மொழி, உரிமைகள், மதிக்கப்படல் வேண்டும். அத்துடன் அவர்கள் தங்களுடைய கலாசாரத்தை பாதுகாக்க, தங்களுடைய மதத்தை கடைப்பிடிக்க தங்களுடைய மொழியை
உபயோகிக்கும் உரிமைகள் மறுக்கப்படலாகாது.
சிறுவர் உரிமை பற்றிய உடன்படிக்கையின் உறுப்புரை30 கூட சிறுவரின் மொழி உரிமையை அங்கீகரிக்கிறது.
ஐ.நா.வின் பட்டயமும் சிறுபான்மையினரின் இனமதமொழி உரிமையை grå $35ífij, áfagpg. (UN General Assembly Resolution 47/135 18.12.92
"பாரபட்சமில்லாமல், தலையீடு இல்லாமல் பகிரங்கமாகவோ தனிப்பட்டரீதியிலோ சிறுபான்மையினர் தங்களது கலாசாரத்தை பாதுகாக்கவும் , தமது சமயத்தைப் பின்பற்றவும், கடைப்பிடிக்கவும் உரிமை இருக்கின்றது.'
இலங்கை 1987இல் தமிழை உத்தியோக மொழியாக அங்கீகரித்தது. ஆனால் அது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. தோட்டப்பகுதியில் சிங்களமே அரச கருமமொழியாக இருக்கிறது. அரசியல் அமைப்புக் கூட மக்கள் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டுமாயின், அவர்கள் விரும்பும் மொழியில் அதாவது தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் மொழியில் தொடர்பு கொள்ளலாம் என அங்கீகரித்துள்ளது. ஆனால் இந்த உரிமைகள் மதிக்கப்படுவதில்லை. அத்துடன் இதை வடக்கு கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள்
எடுக்கப்படுவதில்லை. இதற்குக் காரணங்கள்,
1. சிங்களம் 1956 இல் உத்தியோகபூர்வ மொழியாக ஏற்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ஆட்சிப்பீடம் ஏறும் அரசாங்கங்கள், அரச கட்டமைப்புக்களை சிங்களம்மயப்படுத்தும் முயற்சி.
i. இருமொழிகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லாமை. அரசியல் தலைமைப்பீடத்தில் அரசியல் இலாபங்கள்.
12

i. அரச அதிகாரிகளின் தமிழ் எதிர்ப்புத்தன்மை.
iV. மொழிக் கொள்கையை அமுல் நடத்துவதற்கு தேவையான மனித வளங்கள் போதாமை, நிறுவன ரீதியான தன்மை போதாமை தமிழ் பேசும் மக்கள் மொத்த சனத்தொகையில் 26% ஆக இருந்தாலும் அவர்களில் அரச சேவையிலுள்ளோர் 8% மானவர் மாத்திரமே.
V. அரசியல் அமைப்பிலுள்ள மொழிக் கொள்கை பற்றிய ஏற்பாடுகளை திறமையாக சட்டமுறைப்படி அமுல் செய்வதற்கு அரசாங்கத்தை வற்புறுத்தத் தேவையான சட்டங்கள் போதியளவு இல்லாமை.
wi. தமிழர்களின் மொழி உரிமை பற்றி குரல் கொடுக்க போதியளவு
சமூக, தனிப்பட்ட நபர்கள் இல்லாமை.
இந்தியத் தமிழர்கள் நாள் தோறும் மொழிப்பிரச்சினையினை எதிர்நோக்குகிறார்கள். அரசாங்க நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும் போது குறிப்பாக, அவர்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் இடங்களான பொலிஸ் நிலையம், தபாற்கந்தோர், ஆஸ்பத்திரி, பிறப்பு இறப்புப் பதிவாளர் போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். அவர்கள் போக்குவரத்துச் செய்யும் போது, பலவிதமான பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். அத்துடன் நீதிமன்றங்களிலும், நியாயசபைகளிலும் சிங்களத்தில் மட்டும் தான் தீர்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. இதனாலும் அவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றார்கள். இது ICCPR இல் பிரிவு III ஐ மீறும் செயலாகின்றது. உறுப்புரை 14:3F பின்வருமாறு கூறுகின்றது.
குற்றவியல் குற்றம் ஒன்றிற்கு குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பின்வரும் உத்தரவாதங்கள் உண்டு. (A). அவரால் விளங்கக்கூடிய மொழியில் குற்றத்தின் தன்மை பற்றியும், குற்றம் சாட்டப்பட்டமை பற்றியும் உடனடியாக அறிவித்தல் (F) நீதிமன்றத்தில் உபயோகிக்கப்படும் மொழி விளங்காவிடில் அல்லது அவருக்கு அம்மொழி தெரியாவிடில் ஒரு மொழி பெயர்ப்பாளரின் உதவியை அவர் பெற முடியும்.
13

Page 11
சமுதாயத்திலுள்ள கல்வி அறிவில்லாத பெண்களை இது வெகுவாகப் பாதித்துள்ளது. ஆகவே, அவர்கள் சமூகத்தில் வாழும் சிங்களம் பேசக்கூடிய ஆண்களில் தங்கியிருக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
ந்த மாநாடானது பின்வரும் சிபாரிசுகளைச் செய்கிறது:
CD ADEI
1. இருமொழிக் கொள்கைகளை திறமையாகவும், துரிதமாகவும் அமுல் நடத்துவதற்குநடவடிக்கை எடுத்தல்.இது சட்ட நடவடிக்கைகளையும் உள்ளடக்கலாம்.
ii மொழிக்கொள்கையைக் கட்டுப்படுத்தவும், நடைமுறையிலுள்ள் சட்டங்களை மீள்பரிசீலனை செய்யவும், மேற்பார்வை செய்யவும், தேவையான வலுவான நடவடிக்கைகளை எடுத்தல். உதாரணமாக:- அரச சேவையில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு, எதிர்காலத்தில் அரச சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள் இரண்டு மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படல் வேண்டும். இந்த நோக்கங்கள் முறையாகமேற்பார்வை செய்யப்படல் வேண்டும்.
i. மனித மூலவளங்களின் குறைபாடுகளை நீக்குவதற்காக சரியான நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும். அத்துடன், அரச சேவையில் இரு மொழிகளையும் பயன்படுத்தும் தன்மையை அதிகரித்தல் வேண்டும்.
iv. அரசியல் அமைப்பிலும், பல்வேறு சர்வதேச உடன்படிக்கையிலும் காணப்படுகின்ற மற்றவர்களின் மொழி உரிமைகளை மதிக்கச் செய்யும் தன்மையினை ஏற்படுத்துவதற்காக சமூகங்களுக்கிடையே திறமையான நடவடிக்கை எடுத்தல்
வேண்டும்.
14

* கல்வி கற்பதற்கான உரிமை:
தோட்டப்பகுதியிலுள்ள தமிழர்களின் சமூக முன்னேற்றத்திற்கான கல்வியானது ஒரு முக்கிய வளமாகக் கருதப்படுகிறது.
1CBSCR இல் உறுப்புரை 13; கல்வி கற்பதற்கான உரிமையை அங்கீகரிக்கின்றது. சிறுவர்களின் உரிமைகள் சம்பந்தமான உடன்படிக்கையின் உறுப்புரை 29(1) ஆனது சிறுவர்களின் கல்வி கற்பதற்கான உரிமையை அங்கீகரிக்கின்ற அதே வேளை, அரசாங்கம் அதை நிறைவேற்றச் செய்யும் பொறுப்புடையது எனவும் விளம்புகிறது.
இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 27 (h) ஆனது எழுத்தறிவில்லாத தன்மையை முற்றாக இல்லாமல் செய்வதை உறுதிப்படுத்தும் அதேவேளை எல்லோருக்கும் கல்வி கற்பதற்கான உரிமை உண்டென உறுதி
அளிக்கின்றது.
ICCPR பிரிவு IIIஇல் உறுப்புரை பின்வருமாறு கூறுகிறது.
மக்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்படுவதை சட்டம் தடுக்கிறது. அவர்கள் இன, நிற, மத, பால், மொழி, அரச, வேறு நோக்கம், தேசிய அல்லது சமூக சொத்து, பிறப்பு அல்லது வேறுதன்மை போன்றவற்றின் அடிப்படையில் பாரபட்சமான
முறையில் நடத்தப்படுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறது.
ICCPR உறுப்புரை 40 இன் நாலாம் பந்தியில் மேற்கூறப்பட கருத்து விளக்கப்படுகிறது.
ஒரு பொது விமர்சனம் இல, 18 (37)P/, C/ (பாரபட்சமின்மை), பின்வருமாறு கூறுகிறது.
உறுப்புரை 26 ஆனது உறுப்புரை 2 இல் ஏற்கெனவே வழங்கப்பட்ட உத்தரவாதத்தை வெறுமனே மீண்டும் கூறுவது
15

Page 12
மட்டுமல்ல, அத்துடன் அது தானே ஓர் தன்னாதிக்க உரிமையை வழங்குகிறது. அது சட்டத்தில் பாரபட்சம் காட்டப்படுவதைத் தடுக்கிறது அல்லது அது பகிரங்க அலுவலர்களினால் நடத்தப்படுகின்றதும், பாதுகாக்கப்படுகின்றதுமான எந்தத் துறையையும் உண்மையாக பாரபட்சம் காட்டுவதிலிருந்து தடுக்கிறது. வேறுவிதத்தில் கூறுவோமாயின் உறுப்புரை 24 இல் அடங்கியுள்ள பாரபட்சமின்மைக் கொள்கை நடைமுறைப்படுத்தலானது உடன்படிக்கையில் வழங்கப்பட்ட
உரிமைகளோடு மட்டுப்படுத்தப்படவில்லை.
மேலும், தாய் மொழியில் கல்வி கற்கும் உரிமையானது 1978 ஆம் ஆண்டின் இலங்கை அரசியல் யாப்பின் அமைப்பில் 21(1) பாதுகாக்கப்படுகிறது. ஒருவன் சிங்களத்தில் அல்லது தமிழில் கல்வி கற்கலாம்.
ஆனால், இந்தியத் தமிழர்களுக்கு தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையானது மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பாரபட்சமான தன்மை உள்ளதற்கான உண்மையான சான்றுகள் இருக்கிறதெனக் கூறலாம். இது பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் அதிகரிப்பு வீதத்திலும், மாணவ ஆசிரியர்களின் அதிகரிப்பு வீதத்திலும் தோட்டப்பகுதியில் வேலை செய்யும் தரமான தொகையான ஆசிரியர்கள், மாணவர்களின் தொகையிலும் (சமூகத்தின் ஒரு பகுதி) அவர்களின் பிரதேசக் கல்வியிலிருந்தும் புலனாகிறது. அடுத்தபடியான பாரபட்சமாக மத்திய மாகாணத்திலும் மற்றைய பகுதிகளிலும் தேசிய தமிழ் பாடசாலைகள் அல்லது தொழில்நுட்பக்கல்லூரி இல்லாமையை குறிப்பிடலாம். தோட்டப்பகுதியில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு சிங்கள, முஸ்லிம் அதிபர்கள் வேறு கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுதல் இன்னுமொரு பிரச்சினையாகும்.
இந்தப் பிரச்சினைக்கு உதாரணமாக இதைக்குறிப்பிடலாம். சிங்களம் வாசிக்கத்தெரியாத பெற்றோருக்கு சிங்களத்தில் மாணவரின் முன்னேற்ற அறிக்கையை வழங்குதல் . இதனால் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகளின் முன்னேற்றத்தை மதிப்பிடும் வாய்ப்பானது அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
16

ஆண்களுக்கு முன்பே பெண்கள் பாடசாலையை விட்டு விலகுவதால் இங்கு பெண்களுக்கு கல்விச் சமமின்மையும், எழுத்தறிவு வீதம் குறைதலும் ஏற்படுகிறது. இதனால் மீண்டும் பெண்கள் சமுதாயத்தின் மீது தங்கி வாழும் தன்மை அதிகரிக்கிறது.
கல்வியில் பாரபட்சமானது பின்வரும் காரணங்களால் உருவாகிறது.
i. சமுதாயமானது அரசியல் காரணங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டது.
i. மூலவளங்கள் வழங்குவதில் பாரபட்சம், வசதிகள் கிடைக்கப்பெறுவதில் பாரபட்சம் - நிறுவனங்கள் போதியளவு
ஆசிரியர்கள், பயிற்றப்பட்ட ஆசிரியர்கள்.
i. இச்சமுதாயத்தில் கல்வித் தேவைகளைக் கவனிப்பதற்காக திணைக்களத்தில் ஆட்கள் முழுமையாக இல்லாமை அல்லது
போதியளவு இல்லாமை.
iv. கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக தற்போதைய அரசியல் தலைமைத்துவத்திற்கும், சமுதாயத் தலைவர்களுக்கும் ஓர் கடமைப்பாடில்லாமை,
V. கல்வி அபிவிருத்தியை மேம்படுத்த, முன்னேற்ற தேவையான மூலவளங்கள் மற்றும் வேறு வசதிகள் போதியளவு இல்லாமை - பொருளாதாரம், போக்குவரத்து, நிர்வாகத்திறமை குறைந்த அதிபர்கள், ஆசிரியர்களின் போதிய அர்ப்பணிப்புத் தன்மை போதாமை, ஆசிரியர் பெற்றோருடன் போதியளவு தொடர்பு இல்லாமை.
இந்த மாநாடு பின்வருவற்றைச் சிபாரிசு செய்கிறது
1. தற்போது கல்வித்திட்டத்தில் மறுபரிசீலனை செய்து கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
17

Page 13
i. தோட்டப்பகுதிக் கல்வியை மேம்படுத்துவதற்காக துரித திறமையான திட்டமொன்றை தயாரித்தல் வேண்டும். இதன் முக்கிய நோக்கமானது குறிப்பிட்ட காலத்தினுள் மற்றைய பிரதேசத்தில் வாழும் மாணவர்கள் அனுபவிக்கும் கல்வி வசதிகள் இவர்களுக்கும் கிடைக்கச் செய்தலாகும். இத்திட்டமானது தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி
என்பவற்றை உள்ளடக்குதல் வேண்டும்.
i. அரசாங்கமானது மூலவளங்களை - பொருட்கள், மனிதன் சமமாகப் பங்கீடு செய்தல் வேண்டும்.
iv. தரமான கல்வி வழங்கப்படுகின்றதா என்பதை அவதானிக்க ஒரு விசேட நிர்வாகத்திட்டமொன்றை அமைத்தல் வேண்டும். v
V. கற்றல், திறமையை அதிகரித்தல், அத்துடன் வருமானத்தை அதிகரித்தல், அபிவிருத்தி முயற்சியில் ஈடுபடல் போன்றவற்றுக்குப் பதிலாக முறைசாராக் கல்வி வளங்கள் பற்றிய ஆராய்ச்சி.
wi. தோட்டப்பகுதியிலுள்ள பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான சமமான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக சுமூகத்தின் தலைமைத்துவத்தை தயார் செய்தல். அதற்கு மேலாக கல்வி கற்கும் ஆர்வத்தை சமூகத்தினரிடையே அதிகரிக்கச் செய்தல்,
wi. இதனால் தோட்டப்பகுதியிலுள்ள மக்களுக்கு அவர்களது சமூக கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்தவும் உரிமை வழங்கப்படுகிறது. ஏனெனில் அவர்களுக்கு கலைகள் சம்பந்தமான படிப்பு, வாசிகசாலை போன்றவற்றை அணுகும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
18

சுகாதாரமான வாழ்வுக்கு உரிமை
சுகாதாரம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். அரசானது பாரபட்சம் இல்லாது அனைவர்க்கும் சுகாதார சேவைகளை சமமாக வழங்கும் பொறுப்பைக் கொண்டது.
சர்வதேச மனித உரிமைகள் வெளியீட்டின் உறுப்புரை25 ஆனது பின்வருமாறு கூறுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் சுகாதாரமாக வாழ, ஆரோக்கியமாக வாழ உரிமை உண்டு. அத்துடன் உணவு, உடை, உறையுள், சுகாதார வசதிகள், சமூகவாதிகள், மருத்துவ வசதிகள் போன்றவற்றைப் பெற உரிமை உண்டு. அத்துடன் வேலைவாய்ப்பின்மை, நோய் இயலாமை, தாரம் இழத்தல், முதிர்ந்த வயது போன்றவற்றுக்கு பாதுகாப்பு பெறும் உரிமை உண்டு.
攀 ICESCR இன் உறுப்புரை 12 ஆனது ஒவ்வொருவருக்கும், சரீர மனரீதியாக ஆரோக்கியம் பெற உரிமை உண்டு எனக் கூறுகின்றது.
இலங்கை அரசியல் அமைப்பானது சுகாதார வசதிகள் வழங்குதல் என்பது ஓர் அடிப்படை உரிமை என்று குறிப்பிட்டுக் கூறவில்லை. ஆனால் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், சுகாதார வசதிகளை இலவசமாக பல வருடங்களாக வழங்கி வந்துள்ளது. ஆனால் இந்த வசதிகள் இந்திய தமிழருக்கு மறுக்கப்பட்டுள்ளது.
தனிநபர் வருமானம் குறைவாக இருந்தாலும் இங்கு தரமான வாழ்க்கை உண்டு என்று இலங்கை பெருமை பாராட்டிக் கொள்ளலாம். இங்கு ஆண்களின் வாழ் காலமானது 69.5 வருடத்துக்கு கூடுதலாகவும், பெண்களின் வாழ்நாளானது 74.2 வருடங்களாகவும் காணப்படுகிறது. குழந்தைகளின் இறப்பு வீதம் அதாவது PQL இன் இன்னோர் காட்டி குறிப்பிடத்தக்களவு
19

Page 14
குறைவாக காணப்படுகிறது. (1000 பிறப்புக்கு 7.2). ஆனாலும் இந்த நன்மைகள் சனத்தொகையின் எல்லாப் பிரிவினருக்கு கிடைப்பதில்லை.
உண்மையிலேயே இலங்கை சனத்தொகையில் இந்த நன்மைகள் கிடைக்கப்பெறாதவர்கள் இருக்கின்றனர். இதில் முக்கியமானவர்கள் இந்தியத் தமிழர்கள் ஆவர். தோட்டப்பகுதியில் உள்ள பெண்கள் ஆண்களைவிட மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் சமூக நலக்காட்டி ஆனது, அவர்களது ஆரோக்கியமானது குறைவாக உள் ளநிலையையே காட்டுகிறது. போஷாக்கின்மை காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். குழந்தைகள், 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகள், பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், பாடசாலை செல்லும் சிறுவர், சிறுமியர்.
இதற்கான காரணங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. தொழில் ரீதியான காரணங்கள்.
(a). நோய்களுக்கு முக்கியமான காரணம்.
தரமற்ற சுகாதாரம் அற்ற இடங்களில் வேலை செய்தல்.
ம்ழைகாலங்களில் குறிப்பாக வெப்பம் குறைந்த இடங்களில் தேயிலை, நன்கு வளர்ந்த, ஓரளவு வளர்ந்த தோட்டங்களில் பெண்கள் நீண்ட நேரம் வேலை செய்தல்.
அவர்கள் அடிக்கடி உச்சி வெயிலிலும், உச்சக்குளிரிலும் மாறி மாறி வேலை செய்வதால் பாதிக்கப்படுகின்றனர். Sg5GOTTć) S16Jffa5(G5355 Ronchitis, Pneumonia, Pleurisy, ASthma போன்ற சுவாச சம்பந்தமான போய்கள்
ஏற்படுகிறது.
(b). பாதுகாப்பற்ற வேலை செய்யும் முறை வேலை *செய்யும் பெண்களில் பொதுவாக காணப்படும் முதுகுவலி, Utero - Vaginal Prolapse GUIT 6TD Gaugj (35 (pj, élulu
காரணங்களாக அவர்கள் மலைமேடுகளில் பாரமான
20

கூடையை முதுகில் தாங்கிக் கொண்டு ஏறி தேயிலை கொழுந்து பறித்தல் தான் காரணம் என்று சொல்லப்படுகின்றது.
(c), தொழில் ரீதியாக சுகாதார பாதிப்புக்கு, மரணத்துக்கு விவசாய இரசாயன பொருட்கள் பாவிப்பதும் , பாதுகாப்பற்ற விதத்தில் அவற்றை உபயேர்கப்படுத்துவதும், இரசாயன பசனைகளை உபயோகிப்பதும் இன்னோர்
காரணமாக அமைகிறது.
ii. வாழும் சூழல்
a). காற்றோட்டமற்ற, வெளிச்சமற்ற, போதுமான தரத்தைக் கொள்ளாத, பெருமளவானோர் வசிக்கும் வீடுகள்.
b). சுகாதார நிலைமைகள் பயிர்களுக்குத் தெளிக்கப்படும் இரசாயணப் பொருட்கள் கலந்த மாசடைந்த குடிநீர் பாவனை. குறைந்த மலசலசுட வசதிகள், குறைந்த கழிவு சுத்திகரிப்பு வசதிகள்.
iii. பொருளாதாரக் காரணங்கள்:
a). திருப்தியற்ற வருமானம்
b). குறைந்த சமநிலையற்ற உணவு உட்கொள்ளல்.
c). சரியான சுகாதார பாதுகாப்புக்கான வாய்ப்பின்மை,
d). இயற்கை சூழலிலிருந்து போதுமான பாதுகாப்பின் மை. (குளிருக்கு உதவும் வகையிலான உடைகளுக்கான முதலீடுகள் குறைவு, வீட்டை சூடாக வைத்துக் கொள்ளும் வசதிகளின்மை.)
21

Page 15
iv. பாரபட்சமாய் நடாத்துதல்:
a). தோட்டப்புற சுகாதார திட்டமானது, தேசிய சுகாதார திட்டத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளது. குறைந்தளவான சுகாதார வசதிகள் தோட்டப்பகுதிகளுக்கு கிடைக்கின்றமை.
b) இன அடக்குமுறை மற்றும் இன வன்செயல்கள் என்பன உளவியல் ரீதியான பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன.
V. அறிவீனம்:
a). ஆரோக்கியம், சுகாதாரம், போஷாக்கு மற்றும் நோய்கள் தொடர்பான கவனக் குறைவு, இவற்றை தடுப்பதற்கான முறைகள் தொடர்பான அறிவீனம் நிலவுகின்றமை.
மாநாட்டில் முன்வைக்கப்பட்ட சுகாதார உரிமைகள் குறித்த சிபாரிசுகள்:
1. தேசிய சுகாதாரக் கொள்கை நிகழ்ச்சித் திட்டத்தை கற்பதற்கான நடவடிக்கை எடுத்தல் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கிடையே கூட்டான சுகாதார, வேலைத் திட்டங்களை
அமுல்படுத்துதல், வசதிகளை மேம்படுத்துதல்.
i. தோட்டப்புற வீடமைப்பு மற்றும் நலன்புரிநிதி தொடர்பான வேலை திட்டங்களுக்கான கற்பித நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும், அந்நடவடிக்கைகளை தெளிவுப் படுத்தலும்.
i. தோட்டப்புற மக்களுக்கான தொடர்ச்சியான கற்பிதங்களை பின்வருவனவற்றின் கீழ் மேற்கொள்ளல்.
a), சுகாதாரத்தை அவர்களது அடிப்படை உரிமையாக கருதும்படியாக அம்மக்களுக்கு அறிவுறுத்தல். மற்றும் சரியான, சமமான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
22

b) வேலை தன்மைகளை அபிவிருத்தி செய்துக் கொள்ளல். குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கிடையே, சுகாதாரமின்மை தொடர்பான ஆபத்துக்களை சட்டரீதியாக முகாமைத்துவம் சுட்டிக் காட்டுதல் (NIL மற்றும் வேறு அமைப்புக்களின் சுகாதாரம் தொடர்பான அமுலாக்கல்களும் இதில் அடங்கியுள்ளன.) -
c). தோட்ட அமைப்பில் சுகாதாரம், போஷாக்குத் தொடர்பான
அறிவூட்டல் நடவடிக்கைகளை மேற் கொள்ளல்.
iv. ஓய்வு நேரங்களில் பயனளிக்கும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல். சமூக ஒற்றுமைத் தன்மையை கட்டியெழுப்புதலும், குடிபோதை போன்ற சீர்கேடுகளை தடுக்க நடவடிக்கை எடுத்தலும்.
V. திட்டமிட்ட வீடமைப்புத் திட்டம் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை PHWT ஊடாகவும், வீடமைப்பு அமைச்சினூடாகவும் சிறப்பாக மேற்கொள்ளுதலை உறுதிப்படுத்தல்.
கலாசார உரிமைகள்
தோட்டத்துறை அமைப்பானது ஒரு பாரிய அமைப்பாகும். தொழிலாளர்களின் தனிப்பட்ட பார்வை ඊණn.!-- இதனால் கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்நிலைமை இன்றுவரை நீடித்துச் செல்கின்றது. இது அச்சமூகத்திற்கு தமது வாழ்க்கை தொடர்பான சுய அதிகாரத்தைக் கூட எடுக்க விடாது மறுதலித்துள்ளது. இவ்வாறானதொரு கலாசார அமைப்பிலிருந்து விடுதலை பெறுதல் முக்கியமானதோடு, சுய அதிகாரத்துவம் கொண்ட கலாசார உய்ர்ச்சியானது இச்சமூகத்திற்கு அவசியமானதாகும். விரிவான கற்பிதமும், நூலகப் பிரவேசமும் இதற்கு வழிகோலும்.
ICESCR ன 10வது பத்திரிகை வெளியீட்டில் ஒவ்வொருவருக்குடிலர்ச்ார வாழ்வு தொடர்பாகவும், கலாசார உயர்வு தொடர்பாகவும் §T
குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கொAண் பிரகடனத்தின்
23

Page 16
22வது பிரிவில் கலாசார உரிமைகள் அனைவருக்குமானவை. அது அவரது/ அவளது கெளரவத்திற்கும், சுய அபிவிருத்திக்கும் உரித்தானது எனக் கூறப்பட்டுள்ளது. இதன் படி, தோட்டப்புற மக்களுக்கு தமது கலாசார உரிமைகளை சமூகத்தினுள் போஷித்து வளர்க்கும் உரிமை இருக்க வேண்டும்.
இம்மாநாட்டில் இவ்விடயம் தொடர்பாக கடந்த காலங்களில் நிலவிய பெரும்பான்மையோரின் ஆட்சியும், அபிப் பிராய பேதங்களை வன்முறைகள் மூலம் அடக்கியமையும் இந்திய வம்சாவளியினருக்கு தமது கலாசார அடையாளத்தை வெளிப்படுத்த தடையாகவிருந்தது. அதனாலேயே அவர்களது கலாசாரம் தொடர்பான சுய அதிகாரத்தை வாழ்வில் பூர்த்தி செய்ய இடமளிக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
பெண்கள் உரிமை
தோட்டப்புறங்களில் ஆணாதிக்கமும், பெண்களில் அதன் தாக்கமும்
தோட்டப்புற சமூகம், சம்பிரதாயபூர்வ ஆணாதிக்க வாதத்திற்கு சரியானதொரு மாதிரியாகும். ஆண்கள் சுப் பிரிடென்டன், பெரிய கிளார்க்மார்கள், கங்காணிமார், டீமேக்கர் என சமூகத்தின் வெவ்வேறு தளத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். தோட்டப்புற சனத்தொகையில் பெண்கள் 50 சதவீதத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் இதுவரை அதிகாரம் கொண்டவர்களாக, தீர்மானம் எடுப்பவர்களாக இல்லை; மாறாக ஆண்களே இவற்றைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இதற்கு உதாரணமாக, ஆண் சுப் பிரிடென் டன்கள், பெண் தொழிற்சங்கவாதிகளுடன் பேரம் பேச விரும்புவதில்லை. ஏனெனில், அவர்கள் பெண் என்ற ஒரே
காரணத்தினாலாகும்.
இறுக்கமான நிறுவனங்களான - குடும்பம், தொழில் நிறுவனம், அரசு என்பன அதிகாரம் வாய்ந்த கீழ்ப்பட்ட ஆணாதிக்க சமூகத்தை கட்டியெழுப்ப ஒன்றுக்கொன்று உதவிபுரிகின்றன. முக்கியமாக சமூகத்தை வகுப்பு, சாதி, பால் என்ற ரீதியில் பிரிக்க உதவுகின்றன. ஆணாதிக்கம், சமூகத்தை அடக்கும்,
நிர்வகிக்கும் வடிவமைப்பை ஆண்கள், பெண்கள் இடையேயும்
24

தோற்றுவிக்கின்றது. பெண்கள் மத்திய கிழக்கில் பணிப்பெண்களாக வேலை பெறுகின்ற போதும் தரகர்களால் ஏமாற்றப்படுகின்றனர். மாநாட்டில் தோட்டப்புற பெண்கள் தொடர்பான பிரதிநிதித்துவம் காணப்படாமையையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது.
தோட்டப் புற பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு 50 சதவீதமாகும். இப்பெண்கள் அதிக நேரம் வேலை செய்கின்ற போதிலும், ஆண்களுக்குச் சமனான கூலியையே பெறுகின்றனர். ஆண்களாக இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு, பெண் தொழிலாளர்கள் ஆண்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகளை கூட பெறுவது கிடையாது. பெரும்பாலான தோட்டங்களில், பெண்களுக்கு நேரடியாக வேதனம் கிடைக்கப் பெறுவதில்லை; அவை சம்பள தினம் கணவன்மார்களால் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.
ஆண்கள், பெண்களின் உழைப்பை வீட்டில் பெற்றுக் கொள்வது மட்டுமன்றி, அவர்களது வேதனத்தை கட்டுப்படுத்துபவர்களாகவும், மகப்பேறு சலுகைகளை பயன்படுத்துபவர்களாகவும் விளங்குகின்றனர்.பெண்களின் வேதனம், வீட்டுச் செலவுக்கே பயன்படுகின்றது. பெண்களாலேயே வீட்டுத் தயாரிப்பு பொருட்கள் பெற்று வழங்கப்படுகின்றன. மறு உற்பத்தி அவர்களது அதிகாரத்துவ சமூக தொழிற்பாடாகும். இதனால் பெண்கள் பல்வேறு வகையான கொடுமைகளை அனுபவிக்கின்றனர். சம்பிரதாயம், தொழில் நிறுவனங்கள், மாறுபட்ட சமூக குழுக்கள் என்பன காரணமாகவும் அழுத்தங்களை அனுபவிக்கின்றனர்.
தோட்டப்பகுதியில் பெண்களும், கல்வியும்
குடும்ப பொறுப்புகள் காரணமாக வயதுவந்த மற்றும் இளம் பெண்கள் கல்வியைத் தொடரமுடியாதுள்ளனர். வழமையான எதிர்பார்ப்புகளான, காலங்காலமாக நிலவும் கடமைகளை தாங்குதலும், தாழ்ந்த குடும்ப நிலைமையும் குடும்பத்தில் காணப்படுகின்றமை இதற்கு தடையாக உள்ளது. இதனால் பெண் பிள்ளைகள் வீட்டு வேலைக்கென தோட்டப்புறங்களுக்கு வெளியே, அடிமை நிலையில் தொழில் புரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
25

Page 17
சுகாதாரமும் மறு உற்பத்தி நிலையும்
தோட்டப்பகுதியில் பெண்களின் சுகாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. கர்ப்பிணித்தாய்மார்களின் இறப்பு விகிதமும், சிசு மரண விகிதமும் இப்பிரதேசத்திலேயே அதிகமாக உள்ளது. இப்பெண்களின் சுகாதார உரிமைகள் மறுக்கப்படுவதோடு, குடும்பத் திட்டங்களிலிருந்து அவர்கள் தவிர்க்கப்படுகின்றனர். அத்துடன், உட்ல் ரீதியான சுதந்திரமான முடிவுகளை எடுக்க முடியாதுமுள்ளனர். இம் மறுதலிப்புக்கான பீதி, பரம்பரை பரம்பரையாக இருந்து வருவதால் அவர்களது சனத்தொகை குறைவடைந்து வருகின்றது. தனிப்பட்ட பெண்ணின் தீர்மானம் எடுக்கும் உரிமை, மறு உற்பத்திக்கான உரிமை என்பன இச்சமூகத்தில் ஆண்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றது. பெண்களும் இதனால் சுகாதாரம் தொடர்பான ஆபத்துக்களை அனுபவிக்கின்றனர்.
பெண்களுக்கெதிரான வன்முறைகள்
பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்பன தோட்டப்புறப் பகுதிகளில் அதிகம் இடம் பெறுகின்றன. பெண்கள் ஒரு புறம் அடித்து துன்புறுத்தப்படுகின்றனர், பாலியல் வல்லுறவு செய்யப்படுகின்றனர், வன்முறைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர். அதேவேளை, தற்கொலை சம்பவங்கள், வீட்டு மரணங்கள் என்பன அதிகம் இடம் பெறுகின்றன. வீட்டு வன்முறைகளும் அதிக்ரித்து வருகின்றன. வீட்டு வேலைகளுக்காகச் செல்லும் இளம் பெண்கள் உடலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும், பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாகி பிரசவத்திற்காக வீடு திரும்புகின்றனர்.
அதிகரித்து வரும் சமூக உணர்வு
உரிமைகள் தொடர்பாக இப்பிரதேசங்களில் ஓரளவு சமூக உணர்வு அதிகரித்து வருகின்றதெனலாம். அத்துடன் பெண்கள், சம பிரஜைகளாக யாப்பின் அடிப்படையில், கலாசார கருத்தியல் அடிப்படையில் திருமணம், தொழில், கல்வி என்பவற்றில் சம அந்தஸ்து கோருகின்றனர்.
26

மாநாட்டில் கீழ் குறிப்பிடப்படும் சிபாரிசுகள், தோட்டப்புற பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவது தொடர்பாக முன்வைக்கப்பட்டது.
1. தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மாற்று தலைமைத்துவம் தொடர்பாக அனைத்து சமூக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், என்பன முன்னணி நிறுவனங்களில் ஆண்களையும் , பெண்களையும் தீர்மானம் எடுக்கும் வகையில் முன்னணிப்படுத்தல் பெண்கள் சுப்பிரிடென்டர்களாக முன்னணி வகிக்க ஊக்கமளித்தல்.
i. அனைத்து பிரிவுகளிலும் பெண்களை முக்கிய பிரதிநிதியாக, தொழிற்சங்கங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் உறுதிப்படுத்துதல்.
i. பால்நிலை சமத்துவம் தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களை தோட்டப்புற ஆண், பெண்கள் மத்தியில் ஏற்படுத்தல்; மிகவும் விமரிசனத்துக்குள்ளாகிய சமூக விடயங்கள் மற்றும் பால்நிலை விழிப்புணர்வு, சமூக, அரசியல், கலாசார, சட்டம் போன்றவை தொடர்பாக பெண்களை அறிவுறுத்தல்.
iv. திட்ட அடிப்படையிலான கல்வி பயிற்சிகளையும், சமத்துவமின்மை, இனம், சாதி, தொடர்பான விளக்கங்களையும், அவற்றிற்கான
பரிகாரத்தை வழங்குல்.
V. குடிபோதை தொடர்பாக விழிப்புணர்வினைசமூகத்தினரிடையேயும், பெண்களிடையேயும் ஏற்படுத்தல்.
Vi. பெண்கள் மத்திய கிழக்கிற்குச் செல்வது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளல்.
27

Page 18
மனித உரிமை பாதுகாப்புத் தொடர்பான அரசு சாரா நிறுவனங்களினதும், தொழிற்சங்கங்களினதும் பங்கு
இம்மாநாட்டிற்கு அனைத்து அரசு சார்பற்ற நிறுவனங்களையும், தொழிற்சங்கங்களையும் பிற சமூக சேவை நிறுவனங்களையும், தோட்டப்புற மக்களிடையே செயல்படும் அமைப்புகளையும் அழைத்ததன் மூலம் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இந்த விழிப்புணர்வு, தமது உரிமைகளை பாதுகாப்பதற்கான அடிப்படையை தருவதோடு, உரிமையை துஷ்பிரயோகம் செய்யாதிருக்கவும் முடியும்.
இவ்வாறான நடவடிக்கையினை முன்னெடுத்துச் செல்லும் அமைப்புகள், எந்தத் தடையிலும் முகம் கொடுக்காத வகையில் சுதந்திரமான முறையில் அவர்களது நடவடிக்கைகளை எடுத்துச் செல்லல் வேண்டும்.
தொழிற்சங்கங்கள் அங்கத்துவம் தொடர்பாக போட்டித் தன்மையை கொண்டிருக்கின்றன. அதேவேளை, பெரிய மற்றும் பழைய தொழிற்சங்கங்கள், புதிய தொழிற்சங்கங்களின் அவசரத் தன்மையை விருப்பத்துடன் தடை செய்கின்றன. இச்செயற்பாடு சில தோட்டப்புற வேலை படைகளை பிரதிகூலமான நிலைக்கு இட்டுச் செல்கின்றது. இந்நிலைமை, புதிய தொழிற்சங்கங்கள் தேவை என தெளிவாக உணர்த்தவும் வழி செய்கின்றன.
சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தற்போது தோட்டப்புற முகாமைத்துவம் தொடர்பாக விருப்பதுடன் கவனம் செலுத்துவதுடன் இத்தலையீடு சட்டரீதியான தொழிற்சங்க கிளர்ச்சி/வேலை நிறுத்தங்களையும் முறையான அரச சார்பற்ற நிறுவன நடவடிக்கைகளினால் ஏற்படுத்துகின்றது. இவ்வாறான தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
தோட்டப்புற தொழிற்சங்கங்கள் அரசினதும், முகாமைத்துவத்தினதும் அங்கீகாரத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளன. இவ் அங்கீகாரம் அரச சார்பற்ற அமைப்புகள் வரையிலும் பரந்துள்ளதுடன், இவர்களது வேலை முறையும் முறையான திட்டங்களாக சிவில் சமூக அமைப்புகளால்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
28

அவர்களது பங்கில், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற அமைப்புகள் என்பன அங்கீகாரம் தொடர்பான ஆதாரத்தை, ஜனநாயகத்தினூடும், தெளிவான தவறான முகாமைத்துவ குற்றச்சாட்டுகள் இன்றியும் அளித்தல் வேண்டும்.
அரசு சார்பற்ற நிறுவனங்கள்
மாநாட்டிற்கு வருகை தந்த பெரும்பாலான அரச சார்பற்ற நிறுவனங்கள், இந்திய வம்சாவளி மக்களுடன் தொடர்பு கொண்டிருப்பதுடன், அவர்களது நடவடிக்கையின் இசைவு சில வேளைகளில் போட்டியின் காரணமாக தடைபடுகின்றதுடன், நிதி உதவிக்கான போட்டியும் நிலவுகின்றதென குறிப்பிடப்பட்டிருந்தது. சில அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பும், பரஸ்பர உதவிகளும் காணப்படுகின்ற
போதும் அவை போலியான நடவடிக்கைகளாகவும் உள்ளன.
அரசு சார்பற்ற நிறுவனங்களிடையே ஆலோசனைகளை
ஊக்குவிக்கும் பிரயத்தனம் ஏற்படுத்த வேண்டியதொன்று இயந்திரமயம் எவ்வாறாயினும் அதன் வளர்ச்சி, அடையாளம் தொடர்பான மதிப்பு என்பனவும் நிஜமான பங்களிப்பும் அரச சாரா நிறுவனங்களுக்குத் தேவை. இது நீண்ட காலத்தைப் பிடிக்கக் கூடிய விடயம். அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஒப்பந்தத்தை அமைத்துக் கொள்வது தொடர்பான திட்டவட்டமான நடவடிக்கைகளும் அவசியம். இதன்படி, யாப்பு சீர்திருத்தம் இன்னும் நிகழ்ச்சி நிரலில் உள்ளது. இதனால் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் , பிற அமைப்புகளுக்கும் பிரஜா உரிமை தொடர்பான பலம் ஏற்படும். இந்நிலைமை, இந்திய வம்சாவளிப் பிரச்சினை தொடர்பான நிலைமைக்கும் உதவும் எனலாம். அரசு சார்பற்ற நிறுவனங்கள் உள்நாட்டு ரீதியிலான ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வது மக்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
தொழிற்சங்கங்கள்
தொழிற்சங்க தலைவர்கள் தன் உணர்வுக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். பல தரப்பட்ட தொழிற்சங்கத்தன்மை, அங்கத்துவம் தொடர்பான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். சில விடயங்கள் தொழிற்சங்கத்தின் ஈர்ப்புக்குள்ளாவது பொது விடயங்களினாலாகும். தொழிலாளர்களின்
29

Page 19
கவனத்தை குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்து நடவடிக்கை எடுக்கும் போதுதான் ஈர்க்க முடியும்.
தொழிற்சங்க போட்டிகளின் காரணமாக முகாமைத்துவம் இவற்றை சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன. அவர்கள் தொழிற்சங்கங்களை கீழாக மதிப்பீடு செய்கின்றதுடன், தொழிற்சங்கத் தலைமைத்துவத்திற்கு பிற ஊக்குவிப்பு வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர். சுய கெளரவம் கொண்ட தொழிற்சங்கங்கள் இவ்வாறான நிலைமைக்கு உட்படுவதில்லை.
முன்னர் குறிப்பிட்டது போல், தொழிற்சங்கங்களில் பெண் தலைமைத்துவம் குறிப்பிடும்படி இல்லை. எனினும், 50 சதவீதம் பெண்கள் இத்தொழிற்சங்கங்களில் அங்கத்துவம் வகிக்கின்றனர். அவர்களுக்கு தலைமைத்துவம் தொடர்பான விழிப் புணர்வை அவசரமாக சில
செயற்பாடுகளினூடாக ஏற்படுத்துவது அவசியம்.
இச்செயற்பாடுகள் தோட்டப்புறங்களின் தனியார் மயப்படுத்தலின் பின் சாத்தியமாகலாம். ஏனெனில், தொழிற்சங்கங்கள் தனியார் முகாமைத்துவங்களுடன் சம்பளம், வேலை என்பன தொடர்பாக பேரம் பேசக் கூடியதாகவிருக்கும். இது எவ்வாறாயினும், பாரிய தொழில் சமூகமாக இருக்கும் இவர்களின் பிரச்சினைகளான - பிரஜாவுரிமை, சமூக நலன் போன்றவை தொடர்பாக அரசாங்கத்திற்கு கொடுக்கக்கூடிய அழுத்தம் இதனால் திசைமாறக் கூடும்.
அனைத்திற்கும் முதல், தொழிற்சங்கங்கள், தோட்டப்புற தொழிலாளர்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளை மனித உரிமைகளினூடு அணுகுமுறை செய்து பரிகாரம் தேட வேண்டும் என்பதை
விளங்கிக் கொள்ள வேண்டும்.
திட்டங்கள் சாத்தியப்படக் கூடிய விடயங்கள்
தற்கால நிலைமையை கருத்திற் கொண்டு, குறிப்பாக உடனடிப் பிரச்சினைகளான, இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மனித உரிமைகள் அமைப்புகள் தொழில் புரிவதற்காக கொண்டிருக்கும் சக்தி கருத்திற் கொள்ளப்பட்டு, மாநாட்டில் அரசு சார்பற்ற நிறுவனங்கள்,
30.

தொழிற்சங்கங்கள் பின்வருவன பற்றி கவனமெடுத்தல் வேண்டும் என்ற
கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
1. தோட்டப்புற பகுதிகளில் மனித உரிமை விடயம் தொடர்பாக செயற்பட, கூட்டான அரசு சார்பற்ற, தொழிற்சங்க அமைப்பினை ஸ்தாபித்தல். இதற்கு TU, NGO தலைமைத்துவம் என்பவற்றால் பயிற்சியளிக்கப்பட்ட வெவ்வேறு அமைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்ட மனித உரிமை படையணியொன்றை ஸ்தாபித்தல். இப்படை, தோட்டப்புற மக்களின் மனித உரிமைகள் தொடர்பாக வேலைகளை மேற்கொள்வதுடன், தேசிய அளவிலான மனித உரிமை அமைப்புகளை அடைய வழியாக இருக்கும்.
2. பிரஜாவுரிமை தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பித்தல், அரசியலமைப்பு தற்போது சீர்திருத்தத்திற்குள்ளாகிவருகின்றது. அத்துடன் யாப்பின் சில பகுதிகள் பிரஜாவுரிமைத் தொடர்பான பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன. ஆகையால் சரியான நேரத்தில் அரசாங்கத்தையும், அனைத்து அரசியல் கட்சிகளையும், பிரஜாவுரிமை தொடர்பான பிரச்சினைகளையும் தீர்க்க மாநாட்டில் சிபாரிசு செய்யப்பட்டவாறு வலியுறுத்தல் வேண்டும்.
3. தோட்டப்பகுதிகளில் கல்வித் திட்டத்தை மேம்படுத்தக் கூடியவாறான நடவடிக்கைகளை எடுத்தல். இது தற்கால நிலைமைகளை அறிந்து கொள்ளவும், தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், கல்வி, வசதிகளை அதிகரித்துக் கொள்ளவும், குறிப்பாக தொழில்நுட்ப, தொழில் சார் கல்வி முறைகளை இளைஞர்களுக்கு வழங்கவும். சமூகத்தின் தோட்டப்புற பாடசாலைகளில் இவை தொடர்பான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கவும் வழி செய்யும்.
கல்வி தொடர்பான அக்கறை தோட்டப்புறப் பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களில் குறைவாகவே காணப்படுகின்றது.
31

Page 20
தோட்டப்புற பாடசாலைகளில் இரண்டாம் கட்ட கல்வியை
கட்டாயப்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.
4. சுகாதார வசதிகளை முன்னேற்றுவது தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்கொள்ளல். மற்றும் பெண்கள் உரிமை தொடர்பாக மறு உற்பத்தியை நிர்வகிப்பது தொடர்பான
வேலைத்திட்டங்களை ஏற்படுத்துதல்.
5. ஊழியர் நலன்புரிச் சேவைகளை தோட்டப்புறங்களில் உறுதிப்படுத்தி, பொதுப்படுத்துவதுடன் பாரியளவிலான தொழிற்சங்கங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் என்பன தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
6. இளைஞர்களுக்கும் வயதுவந்தோருக்குமான கல்வி திட்டங்களை மேம்படுத்துதல் - இது பல்மொழித் தன்மைகள் கொண்டதாகவும், மனித உரிமைகள், சமாதானம் என்பன தொடர்பாகவும், புத்தகங்களை வெளியீடு செய்வதன் மூலம் மேற்கொள்ளுதல். இந்நிகழ்ச்சித் திட்டங்கள் மனித வள அபிவிருத்திக்கு அவசியமானதாகும்.
7. தோட்டப்புற தொழிலாளர்களின் தொழில் முறையான
பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பானவற்றுக்கு அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும்.
32


Page 21
ஆவகளுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்திர்
Be. , -g1T SRI LITSlls
இதாலைபேசி:E
FP, SS

குமான இயக்கம் கண்டி நற்பு ஒன்றியம் ந, கோழும்பு-5 இலங்கை,
34380,5942:29
TE