கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாண இராச்சியம்

Page 1


Page 2


Page 3

ulIjllLITSOI GJId fulli
பதிப்பாசிரியர்
கலாநிதி சி. க. சிற்றம்பலம்
தலைவர், வரலாற்றுத்துறை.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வெளியீடு
திருநெல்வேலி, 1992

Page 4

YĀLPPĀŅA IRĀCCIYAM
(KINGDOM OF JAFFNA)
Editor
Dr. S. K. Sitrampalam Head, Department of History
UNIVERSITY OF JAFFNA PUBLICATION
Thirunelvely. 1992

Page 5
யாழ்ப்பான இராச்சியம்
usunristfuit கலாநிதி சி. க. சிற்றம்பலம்.
முதற் பதிப்பு 1992-10-01
(C) யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வெளியீடு
யாழ்ப்பாணம்.
அச்சீடு தாசன் அச்சகம், மகேந்திரா வீதி, யாழ்ப்பாணம்.
அட்டைப்படம் திரு ச, ஞானகுருபரன்,
விலை ரூபா 4-5C
Mwarremerderivaronnerna
YĀLPPĀŅA IRĀGCIYAM (KINGDOM OF JAFFNA)
EDITOR D. S. K. STRAMPALAM
FIRST EDITION 1992-10-01
(C) UNIVERSITY OF JAFFNA PUBLICATION
'-JAFFNA. PRESS THASAN PRINTERs,
MAHENDRA VBETHY, JAFFNA.
coVER DESIGN MR. S. GNANAGURUPARAN.
PRICE Rs. 45o

சமர்ப்பணம்
பாவலர் செழித்தோங்கு பதியென விளங்கிடும்
பகரரிய மானிப்பாயிற்
பண்புமிளிர் குலதிலகன் சாமிநா தப்பிள்ளை
பார்மெச்ச வாழ்ந்தஅசான்
ஆர்வலர் விருப்பினாற் சிற்றம்பலம் மகள்
அணிதங்க முத்தை வேட்டு
அருளோங்கு வேலக்கைப் பிள்ளையார் ஆலய
அறங்காவற் கன்பனாகித்
தேவரும் புகழ்ந்திடச் செய்தநற் றொண்டினாற் சீர்வைத்தி லிங்கம்மகவாய்ச்
சிந்தைமகிழ் வெய்தவுஞ் செந்தமிழ் வளர்க்கவுஞ்
சேணுலவு கீர்த்திபெறவுங்
காவல னெனத்தகுந் தம்பிமுத் துப்பிள்ளை
கல்விக்குத் தந்தையாகக் சுற்றநல் லூர்ச்சுவாமி ஞானப்பிர காசர்பதம் காணிக்கை யாகுமிந்நூல்

Page 6

உள்ளடக்கம்
e ADupesh
அணிந்துரை
பதிப்புரை
வரலாற்று அறிமுகம் E -- LXV
1. வரலாற்று மூலங்கள் 01 24 سمسم
2. ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் 25-65.
8. யாழ்ப்பாண மன்னர்களும்
போத்துக்கேயரும் 66-' .. -79
4. தொல்லியற் கருவூலங்கள் 80-06
5. ஆட்சி முறை 107-131 6. சமூகம் 132-19
7. Ց*ւոսյւն 192-268
8. பண்பாடு 269-292
9. சிற்பம் 293-312-س
10. நாணயம் 33-325.
உசாவியவை 326-344
சொல்லடைவு 345-372.
விளக்கப்படங்களின் அட்டவணை 373-374
விளக்கப்படங்கள் 375-46

Page 7
f
2
'8
0
ff
கட்டுரையாசிரியர்கள்
வரலாற்று அறிமுகம்
கலாநிதி சி. க. சிற்றம்பலம் தலைவர், வரலாற்றுத்துறை வரலாற்று மூலங்கள்
பேராசிரியர் வி. சிவசாமி தலைவர், சமஸ்கிருதத்துறை . ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் பேராசிரியர் சி. பத்மநாதன் வரலாற்றுத்துறை . யாழ்ப்பாண மன்னர்களும் போத்துக்கேயரும்.
திருமதி சோ. கிருஷ்ணகுமார் முதுநிலை விரிவுரையாளர் - I, வரலாற்றுத்துறை தொல்லியற் கருவூலங்கள்
திரு. ப. புஷ்பரத்தினம் S முதுநிலை விரிவுரையாளர் , I, வ்ரிலர்ற்றுத்துறை ஆட்சிமுறை
பேராசிரியர் சி. பத்மநாதன் வரலாற்றுத்துறை
. சமூகம்
கலாநிதி சி. க. சிற்றம்பலம் தலைவர், வரலாற்றுத்துறை
. Fou uh
கலாநிதி சி. க. சிற்றம்பலம் தலைவர், வரலாற்றுத்துறை
பண்பாடு
பேராசிரியர் வி. சிவசாமி தலைவர், சமஸ்கிருதத்துறை சிற்பம்
திரு. செ. கிருஷ்ணராஜா முதுநிலை விரிவுரையாளர் - II, வரலாற்றுத்துறை நாணயம்
பேராசிரியர் சி. பத்மநாதன் வரலாற்றுத்துறை

. மாணவர்களுக்கு அறிவூட்டுவதுடன் மட்டும் ஒரு பல்கலைக் ரழகத்தின் பணி நின்றுவிடுவதில்லை. புதிய ஆய்வுகளின் வாயி லாக அறிவைப் பிறப்பிப்பதும் அவ்வாறு பெறப்பட்ட அறிவைப் !ப்புவதும் நடிது கடமை ஆகும். இத்தொடர்பில், நூல் வெளியீடென்பது பல்கலைக்கழகச் செயற்பாடுகளுள் முதன்மை யானதோர் இடத்தைப் பெறுகின்றது. இவ்வெளியீட்டுப் பணி கடந்த காலங்களில் இடையிடையே சிற்சிலரால் மேற்கொள் ளப்பட்டு வந்த போதிலும் இதனைச் சீராக ஒழுங்கு செய்து முறைப்படுத்தும் முயற்சிகள் அண்மையிலேயே மேற்கொள்ளப் பட்டன. இதன் பொருட்டு வெளியீட்டு நிதியமொன்று நிறுவப் பட்டுள்ளது.
நமது பல்கலைக்கழகத்திலே தொடங்கப்பட்டுள்ள நூல் வெளியீட்டுத் திட்டத்தின் பேறாக வெளிவரும் வரலாற்று நூலே "யாழ்ப்பாண இராச்சியம்' ஆகும். யாழ்ப்பாணத்தை அர சாண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் யாழ்ப்பாண மக்களின் அரசியல், சமூக, சமய, கலை, பண்பாட்டு விழுமியங்களைப் பல்வேறு அறிஞர்கள் நுணுகி ஆராய்ந்து எழுதிய ஆக்கங்களே ஒரு தொகுப்பு நூலாக இன்று வெளியிடப்படுகின்றது. இப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் கலாநிதி சி. க. சிற்றம்பலம் இந்நூலின் பதிப்பாசிரியராவர்.
யாழ்ப்பாண இராச்சியம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இதுவரை காலமும் ஏற்ற நூலெ வையும் வெளிவராத குறையை "யாழ்ப்பாண இராச்சியம்" என்னும் இந்நூல் நிறைவு செய்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விட 4மாகும்.
எமது முன்னைய வெளியீடுகளை வாங்கி எம்மை ஊக்கு வித்தமை போன்று இவ்வெளியீட்டினையும் வாசக அன்பர்கள் வாங்கி எமக்கு ஆதரவு வழங்குவார்களென நம்புகின்றோம்.
பேராசிரியர் அ. துரைராசா. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், துணைவேந்தர். திருநெல்வேலி.
1992- 10 01

Page 8
அணிந்துரை
தத்தம் துறைகளிற் கைதேர்ந்த நமது பல்கலைக்கழக ஆய் வாளர்களின் பங்களிப்பே யாழ்ப்பாண இராச்சியம்" என்னும் இந்நூலாகும். மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக இப்பிரதே சத்திற் சிறப்புடன் விளங்கிய அரசின் பல்வேறு அம்சங்களை ஆய்வுரீதியாக முதன்முதலாகத் தமிழில் வெளிக்கொணரும் ஆராய்ச்சி நூல் என்ற பெருமையும் இதற்குண்டு. இவ்வரசின் வரலாற்றைப் பல்வகைச் சான்றுகளுடன் நிரைப்படுத்தி, கோவைப்படுத்தியுள்ள இந்நூல் காலத்தின் தேவையையும் பூர்த்தி செய்கிறது என்றால் மிகையாகாது.
இதன் பதிப்பாசிரியர் கலாநிதி சி. க. சிற்றம்பலம் வரலாறு, தொல்லியல் ஆகிய துறைகளில் ஆழ்ந்த புலமையுடையவர்: நீண்ட பல்கலைக்கழக ஆசிரிய அனுபவத்தையுடையவர். அத்துடன் பதிப்பித்தல் துறைக்கும் புதியவரல்வா. நமது கலைப் பீடச்சஞ்சிகையாகிய சிந்தனை?யின் ஆசிரியராகப் பலகாலம் செயலாற்றிய சிறப்பும் இவருக்குண்டு. நிதிநெருக்கடி காரண மாக இதனைத்தொடர்ந்து வெளியிடுவதிற் சிக்கல்கள் காணப் பட்ட காலகட்டத்தில் இதன் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுத் தமது தளராத உழைப்பினாற் பொதுமக்களிடம் பெற்ற நிதி கொண்டு இதனை இயங்கச்செய்தவர்.
நமது பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு கலாநிதி சி. க. சிற் றம்பலம் எழுதிய ‘பண்டைய தமிழகம்” என்ற நூலை வெளி யிட்டிருந்தது. பல்கலைக்கழக வெளியீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப் பட்டு வெளிவந்த முதல் நூல்இஃதாகும். அத்துடன் இப்பொருள் பற்றி முதல் முதலாகத் தமிழில் வெளிவந்த தரமான நூல் என்று தமிழக அறிஞர்களது பாராட்டையும் இந்நூல் பெற்றுள் ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண இராச்சியம்” என்ற பெய ருடன் வெளிவரும் இந்நூல் இவராற் பகிப்பிக்கப்பெறும் நூலாக அமைந்துள்ளதுடன் இதில் இடம்பெறும் மூன்று கட்டுரைகளும் இவரது ஆக்கங்களாக உள்ளன. இத்தகைய பணிகள் தொடர வேண்டும். இவ்வகையான முயற்சிகளை ஊக்குவிக்கப் பல்கலைக் கழகம் தயாராக உள்ளது.
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை. い கலைப்பீடாதிபதி. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், திருநெல்வேலி.
1992-10-01

O பதிப்புரை
யாழ்ப்பாண இராச்சியம் பற்றி ஆழமாகவும் அகலமாகவும் ஆராய வேண்டுமென்ற அவா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு வளாகமாகத் தனது பணியைத் தொடங்கிய காலத்திலேயே வரலாற்றுத்துறையில் கால் கொண்டுவிட்டது. அன்று வரலாற் றுத்துறையில் முதற்பேராசிரியராகவும், யாழ்ப்பாண வளாகக் கலைப்பீடாதிபதியாகவும் விளங்கிய பேராசிரியர் கா. இந்திர பாலா தலைமையில் இப்பணியை நிறைவேற்றிவைக்க எம்மவர் சிலரைக் கொண்ட ஒரு குழு உருவாகியது. துரதிர்ஷ்டவசமாகப் பல்வேறு காரணங்களால் இதன் பணிகள் இம்மியும் நகரவில்லை. எனினும் இக்குழுவின் இலட்சியமாக இருந்த இந்நூல் வெளி வரும் இந்நேரத்தில், பல்கலைக்கழக மட்டத்தில் வரலாறுபற்றி நமக்கு ஏடு தொடக்கிவைத்த நமது ஆசானை மானசிகமாக நினைவு கூருவதும் நமது கடமையாகிறது.
பேராசிரியர்கள் கைலாசபதி, இந்திரபாலா ஆகியோரின் நற் பணிகள் பல இன்றும் இப்பல்கலைக்கழக வரலாற்றில் நினைவு கூரப்படுவனவாக இருப்பினும் ஆராய்ச்சித்துறையை வளர்ப்ப தற்கு வேண்டிய நிதியத்தை இத்துறையில் ஈடுபாடு கொண் டிருந்த இவர்களது காலத்திற் பெற வாய்ப்பிருக்கவில்லை. இக் காலகட்டத்திலேயே "சிந்தனை போன்ற ஆய்வேடுகளும் செய லிழக்கப் பொதுமக்களின் நன்கொடை பெற்று இவற்றைச் சீர மைக்க வேண்டிய நிர்ப்பந்தமுமிருந்தது. பேராசிரியர் சு. வித்தி யானந்தன் துணைவேந்தராகக் கடமையாற்றிய காலத்திலும் பெருமளவுக்கு இந்நிலையே தொடர்ந்திருந்தது.
துணைவேந்தராகப் பேராசிரியர் அ. துரைராசா பொறுப் பேற்றமை இப்பல்கலைக்கழகத்தின் ஆய்வுத்துறை வரலாற்றில் ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது. அவருக்குரிய ஆராய்ச்சிப் புலமை, ஆளுமை, சர்வதேசத்தொடர்பு என்பனவே இப்பல் அலைக்கழக வரலாற்றிலேயே முதல்முதலாக ஆராய்ச்சி நிதிய மொன்றை ஏற்படுத்த வழி சமைத்தது. இந்நிதியத்தின் மூலம் ஆய்வாளர்கள் எதுவித நிதிக்கஷ்டமுமின்றி ஆய்வை மேற்கொள்ள வும், தமது ஆய்வின் பெறுபேறுகளை நூல்வடிவமாக்கவும் வாய்ப் பளிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்திலேதான் “கல்லான அகலிகை இராமனின் கால் பட்டதும் அழகிய பெண்ணாகப் புனர்ஜன்மம், எடுத்தாற்போல், நாம் மறந்திருந்த “யாழ்ப்பாண இராச்சி

Page 9
யம் பற்றிய ஆய்வும், புனர்ஜன்மம்" எடுத்தது. இதன் காரண கர்த்தா நமது பெருமதிப்பிற்குரிய துணைவேந்தரே ஆவர். நல் லூர் அரசு பற்றித் தரமான ஒரு ஆய்வுநூலை அறிஞர்களின் ஆக்கங்களோடு பதிப்பிக்கும்படி நம்மை அழைத்தது மட்டுமன்றி, இப்பணியைச் சளைக்காது தொடரும்படி நம்மை அடிக்கடி தட் டிக் கொடுத்து ஊக்கப்படுத்தியவரும் அவரேதான். துணைவேந், தரின் இத்தகைய அழைப்பு, இற்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னரே பள்ளிச் சிற்ானாக இருந்த காலகட்டத்தில் நம்மூர் அரசிய்ல் மேடைகளிலே "தமிழரசு பற்றி ஒலித்தநாத ஒலியினைப் பருகத்தொடங்கிய நமது செவிகளுக்கு நல்லுணவாகியது. இவ்வாறு இந்நூல் ஒளிகாணும் இவ்வேளையில் இதன் காரணகர்த்தாவாக வும் உந்து சக்தியாகவும் விளங்கியதோடமையாது இதற்குரிய அறிமுகவுரையையும் நல்கிய் பெருமதிப்பிற்குரிய நமது துணை வ்ேந்தரின் நற்பணியை நன்றியுணர்வுடன் நினைவு கூர்வது நமது தலையான பணியாகிறது.
இந்நூல் ஒரு தனிந்பரது அறுவடை அன்று. இத்துறையிற் கைதேர்ந்த பலரது ஒத்துழைப்பின்றி இது இன்றைய வடிவத்தைப் ம்ெற்றிருக்கவே முடிக்பாது: உரிய நேரத்தில் கட்டுரைகளைத் தத்துதவிய நமது மதிப்பிற்குரிய் பேராசிரியர் சி. பத்மநாதன் பேராசிரியர் வி. சிவசர்மி, திருவாளர்கள், செ. கிருஷ்ணராசா, ப. புஷ்பரத்தினம், திருமதி சோ. கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு நமது நன்றிகள், கட்டுரைகளை மட்டும் கொடுத்து விடுதலே தமது பணி என்றிராது வேண்டிய நேரத்தில் வேண்டியவாறு எமக்கு வேண்டிய சகல உதவிகளைச் செய்யவும் இவர்கள் பின்னிற் கவில்லை. இவ்வகையில் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ள 'உசா வியவை" என்ற கட்டுரை, நூற்பட்டியலைத் தொகுத்துதவிப் திருமதி சோ. கிருஷ்ணகுமாருக்கு நமது நன்றிகள்.
கட்டுரைகள்ைச் சமைப்பது ஆராய்ச்சிப் பணியின் ஆரம்ப கட்டமே. எழுதியனவற்றைப் பிழையறத் தட்டச்சிற் பொறித் துத் தரமானதாக்கும் பணி இதனை அடுத்து வருகிறது இச் சிரமமான பணியை முழுமனதுடன் " நிறைவேற்றி வைத்த செல்வி சுமித்திரா குமாருக்கு நமது நன்றிகள். இவ்வாறே நமது தேவைகளை வேண்டியவாறு பூாத்திசெய்யும் புவியியற்துறைக்கும், அதன் தலைவர் திரு. செ. பாலச்சந்திரனுக்கும் எமது நன்றிகள், இந்நூலுககுரிய படங்களை வரைந்துதவியல் இத்துறையின் வரைபடக் கலைஞராகிய நண்பர் செல்வகுமார், விரிவுரையாளர் திரு க இராஜேந்திர ஆகியோரை நன்றியுடன் நினைவு கூரு வதும். நமது கடமையாகிறது.

இந்நூலைப்பல்கல்ைக்கழக"வெளியீட்ாகி அங்கீகரித்த"ஆய்வுக் குழுவுக்கு நமது நன்றிகள் பல. எனினும், இந்நூல் பல்கலைக்' கழகத்தினால் வெளியிடப்படுவதற்குரிய தரத்தினைக் கொண் டுள்ளதா என்பதனை மதிப்பிடும் பொறுப்பு பேராசிரியர் கா. சிவத்தம்பியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தமது பல்வேறு சோலிகளுக்கு மத்தியிலும், சிரமம்பாராது இதனை மதிப்பீடு செய்தது மட்டுமன்றி, இதிலுள்ள குறைநிறைகளை ஆலோசனை களாக அவர் சுட்டிக் காட்டியுமிருந்தார். இவை இந்நூல் முழுமை பெறுவதற்குப் பெரிதும் உதவின. பேராசிரியரின் இர் பணியை நன்றியுடன் நினைவு கூருகிறோம். கட்டுரைகளைச் சீர்செய்தபோது உதவியவர்கள் பலர். இப்பணியில் நண்பர் ஏ. ஜே. கனகரத்தினா எந்நேரமும் தம்மை அணுகுவதற்குரிய வாய்ப்பை நமக்களித்திருந்தார். நூலகர், விசேடமாகத் துணை நூலகரான திருமதி ரோகிணி பரராஜசிங்கம் நூலகத்திலுள்ள நூல்கள். ஆராய்ச்சியாளருக்குப் பயன்படவேயுள்ளன என்ற சிந்தனையுடன் நூல்கள் பலவற்றைத் தந்துதவியுள்ளார். இவர்கள் யாவருக்கும் நமது நன்றிகள்
தட்டச்சிலிருந்த நூலின்ன அச்சுவாகனமேற்றுவது அடுத்த பணியாயிற்று. ப்ோர் ம்ேகங்கள் நம்மை அச்சுறுத்தி நமது தனித் துவத்தினைச் சீரழிக்க முனைந்து நிற்கும் இக்காலகட்டத்தில் இப்பணியைப் பொறுப்பேற்பது என்பது மிகமிகச் சிரமமானதே. இருந்தும் மிக்க மனவுறுதியுடன் இப் பெரும்பணியை ஏற்று. நிறைவேற்றி வைத்த புதுயுக, தாசன் அச்சகத்தாருக்கும், இதன் முகாமையாளர், ஊழியர் அனைவருக்கும் நமது நன்றிகள். இப் பணியிற் சுறுசுறுப்பாக இயங்கிய புதுயுக அச்சக முகாமையா ளர்" திரு. மு. ஜெயராஜா, தாசன் அச்சக முகாமையாளர் திரு. க. பாலசுப்பிரமணியம், ‘ஈழநாத நிறுவன வேலை முகாம்ை யாளர் திரு. அ. யோ. இமானுவேல், அழகன் நிலைய புளெர்க் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நமது நன்றிகள்.
அச்சகத்தில் நூலின் ஏட்டுப்பிர்தி இருக்கும் போது அச்சிடும் தாள்களுடன் அதனை ஒப்புநோக்கிடும் பணி (புறுப் பார்த்தல்) சிரமமானதே. மிகமிகச் சிரமமர்ன இப்ப்ெரும்பணியை இணைந்து நின்றுஇனிதாக ஒப்பேற்றிய பெரும்ைக்குரியவர்கள் நமது துணைப் பதிவாளர் திரு. வ. கோவிந்தபிள்ளையும் நமது துறையின் கட்டுரையாசிரியர் செல்வி யசோதா பத்மநாதனும் ஆவர். நண்பர் கோவிந்தபிள்ளையின் பணி இதனுடன் முடிவடைந்து விட்வில்லை. தமிழில் ஆழ்ந்த புலம்ை பெற்ற இவரின் கரங்கள் பtடதால் இந்நூலிலுள்ள் பல கட்டுரைகள் சீர் பெற்றன.

Page 10
இந்நூலினைச் சுவாமி ஞானப்பிரகாசருக்கு நாம் சமர்ப்பிக்க எண்ணியபோது சிறந்த ஒரு பாவைப் படைத்த சிறப்பும் இவருக்குண்டு. இவருக்கு நமது நன்றிகள்.
இவ்வாறே செல்வி யசோதா பத்மநாதனின் பணிகளும் வெறும் ஒப்புநோக்கோடு மட்டும் முற்றுப்பெறவில்லை. எதுவித மறுப்பு மின்றி இந் நூலுக்குரிய சொல்லடைவைத் தயாரிப்பது தொட்டு, இதனை இவ்வடிவில் வளர்த்தெடுப்பதில் அவர் ஆற்றிய பணிகள் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவை. சொல்லடைவைத் தயாரிக்கும் இவரின் பணிக்கு உறுதுணையாக நின்ற நமது வரலாற்றுத்துறை மாணவ, மாணவிகள் குறிப்பாக முதலாம் வருட, விசேட வரலாற்றுப் பிரிவைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவ, மாணவிகளின் பணிகள் போற்றத்தக்கன.
மேலும் இந்நூலின் உருவாக்கத்திற்கு உதவிய நண்பர்கள் பலர் நம் நினைவில் அகலாதவர்களாகின்றனர். இவ்வரிசையில் கட்டுரைகளின் எழுத்துப் பிழைகளைச் சரிபார்ப்பது தொட்டுப் பல்வகை உதவிகளைப் புரிந்த தமிழ்த்துறை விரிவுரையாளரி திரு. பொ. செங்கதிர்ச்செல்வனுக்கு நமது நன்றிகள். இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் திரு. ப. கணேசலிங்கம், வர லாற்றுத்துறை முதுநிலை விரிவுரையாளர்கள் திருவாளர்கள் செ. கிருஷ்ணராஜா, ப, புஷ்பரத்தினம் ஆகியோர் தேவை ஏற்படும் போதெல்லாம் தமது உதவியை நல்கினர். இவர் களுக்கு நமது நன்றிகள். இவ்வாறே இந்நூலின் ஆக்கத்திற்கு வேண்டிய ஆலோசனைகளை நல்கிய வரலாற்றுத்துறை முது
நிலை விரிவுரையாளர் திரு. ச. சத்தியசீலன், புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளர் திரு. இரா. சிவச்சந்திரன், கல்வித் துறை முதுநிலை விரிவுரையாளர் திரு. அ. க. குணசிங்கராசா ஆகியோரின் பணிகளும் அமைந்தன. இறுதி நேரத்தில் இந்நூல். முழுமை பெற உதவிய செல்வி உமா சங்கரி முத்துக்குமாரன் ஆற்றிய பங்களிப்புக்கும் நமது நன்றிகள்.
இந்நூலுக்கு வேண்டிய அட்டைப் படத்தினைச் சிறப்பாக வடித்துத்தந்த பெருமை நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த இளங்கலைஞர் திரு. ச. ஞானகுருபரனுக்கு உரியது. இதே போன்று இந்நூலில் இணைக்கப்பட்டுள்ள படங்கள் யாவும் எனறும் இன்முகத்துடன் தமது சேவையை உவந்தளிக்கும் மழலைப் புகைப்பட நிலைய உரிமையாளர் 'தம்பி” தங்கையர்கள் ஆகியோரின் கரங்களில் தவழ்ந்தவையே. சிறப்பாக இவற்றை

வடித்துத் தந்து இந்நூலிற்கு மெருகூட்டிய இவர்சளுக்கு நமது நன்றிகள். இந்நூலில் இணைக்கப்பட்டுள்ள பதவியா வடமொழிச் சாசனத்தைப் பெறமுடியாது சிரமப்பட்டபோது அதன் பிரதியைப் பெற்றுத் தந்து தக்க நேரத்திற் கைகொடுத்துதவிய தொல்லியற் துறைத் திணைக்களத்தினைச் சேர்ந்த திரு. என். கமலேந்திர னுக்கு நமது நன்றிகள்.
பல்கலைக்கழக வெளியீடான இந்நூல் அச்சுவாகனமேறும் போது இதற்கு ஒத்தாசை நல்கியவர்கள் பலர். இவர்களில் நமது பதிவாளர் திரு. க. பரமேஸ்வரன், சிரேஷ்ட உதவிப் பதிவாளர், திரு. இ. முருகையன், நிதியாளர் திரு. சி. ம. ஆலாலசுந்தரம் சிரேஷ்ட துணை நிதியாளர் திரு. க. கனகரத்தினம் ஆகியோர் அளித்த ஒத்துழைப்பு நினைவு கூரத்தக்கது.
இன்முகத்துடன் இதற்குரிய அணிந்துரையை நல்கிய கலைப் பீடர்திபதி பேராசிரியர் பொ. பாலசுந்தரம் பிள்ளை அவர்களை நன்றி புடன் நினைவு கூருவதும் நமது கடமையாகிறது இந்நெருக் கடியான இக்காலகட்டத்திற் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துத் துடிதுடிப்பாகச் செயற்படும் இவர் இப்பிரதேசக் கல்வி மேம்பாட் டிற்கு அயராது உழைக்கும் திறனும் கொண்டவருமாவர். கலைப் பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற மிகக் குறுகிய காலத்தில், பல சாதனைகளைப் புரிந்தவர். இவர் காலத்திற் கலைப்பீடம் பல்துறை வளர்ச்சிகளை எட்டிப் பிடிக்கும் என்பதில் நமக்கு அசை யாத நா பிக்கையுண்டு. இவரது பணிகளில் ஒன்றுதான் ஆராய்ச்சி வெளியீடுகளில் இவர் காட்டும் கரிசனையாகும். இந்நூல் வெளி வருவதற்கு இவர் காட்டிய அக்கறைக்கு, நமது நன்றிகள்.
போர்முரசு கொட்டும் இக்கால கட்டத்தில் இந்நூலை இவ் வுருவில் வெளிவரச் செய்தவன் அப்பரம்பொருளே. பல்வேறு சவால்கள் மலிந்து காணப்படும் இச் சூழலில் மனந்தளராது உறுதி யுடன் இப்பணியை நிறைவேற்றி வைக்க உதவிய அப்பரம்பொரு ளின் கருணையை என்னென்று வியப்பது. இடரிலும் தளராத சிந்தையைத் தந்துதவி, நமக்கும், நம்மவருக்கும் திசை காட்டி போன்று நின்றுதவும் அப்பரம்பொருளாகிய நமது அராலியூர்க் கரைபடபிட்டிக் கணேசனின் பாதாரவிந்தங்களைப் பரவி நிற்
Corrè.
சி. க. சிற்றம்பலம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், [პოჩ நெல்வேலி
9 0-01
韩

Page 11

வரலாற்று அறிமுகம்
ஈழத்து வரலாற்றுப் பின்னணி
கி. மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஈழத் திற்குப் பெளத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு அம் மதம் சம்பந்தமான விடயங்களைக் கோவைப்படுத்தி வைக்கும் மரபு அநுராதபுரத்திலுள்ள் பிரதான விகாரைகளிலே தோன்றி வளரலாயிற்று. பெளத்தம் இக்காலத்தில் அரச மதமாகப் பெற்றுக் கொண்ட அந்தஸ்தும் அதனால் அதற்குக் கிடைத்த வாய்ப்பும் வசதிகளும் நாடு, மதம், மக்கள் ஆகியவற்றை ஒரே வட்டத் தினுட் சுழல வைத்தது. இதனாற் பெளத்த மதத்தின் வரலாற் றோடு அதனைத் தழுவிய பெரும்பான்மை மக்களாகிய சிங்கள மக்களினதும், இந்நாட்டினதும் வரலாறு ஒன்றாக இணைத்துக் கோவைப்படுத்தப்பட்டன. இத்தகைய கருவூலங்களைக்கொண்டே இன்று இந்நாட்டின் வரலாற்றைக் கூறும் தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் போன்ற பாளிநால்கள் எழுதப்பட்டன. கி. பி. 4ஆம் நூற்றாண்டளவில் தீபவம்சமும், கி. பி. 6 ஆம் நூற்றாண்டளவில் மகாவம்சமும், அதன் பின்னர் சூளவம்சமும் எழுதப்பட்டன.
மகாவம்சம் எழுந்த காலத்திலே தமிழகத்தில் நாயன்மாரி களும் ஆழ்வார்களும் ஏற்படுத்திய கலாசார மறுமலர்ச்சியர்ந் பெளத்தம் அங்கு தளர்ந்தது; சங்கரரின் சமயப் பிரசாரத்தி தினால் இந்தியாவிலே பெளத்தம் சீரழிந்தது; நாயன்மார்கள் ஏற்படுத்திய கலாசார மறுமலர்ச்சி மத ரீதியிலும் இனரீதியிலும் ஈழத்து மக்கள் தனித்துவமான போக்கிற் செல்ல வழிவகுத்தது. இ.காலகட்டத்திலே சிங்கள மொழியைப் பேசுவோர் பெளத்தர் 1ளாகவும், தமிழ் மொழியைப் பேசுவோர் இந்துக்களாகவும் இாங்காணப்பட்டனர். அத்துடன் இக்காலத்தில் இந்தியாவிற் பொத்தம் சீரழிந்ததும், ஈழத்தின் மீது தமிழ்நாட்டிலிருந்து "படை எடுப்புகள் நிகழ்ந்ததும், பெளத்த் தர்மமே (தர்மதீபம்) ‘ழற்தின் உண்மையான நெறி எனவும் இதனைப் பாதுகாப்பது

Page 12
İİ
சிங்கள மக்களது கடமை என்ற உணர்வும் மேற்கூறிய மகா வம்சம், சூளவம்சம் போன்ற நூல்களின் மூலம் வளர்க்கப் பட்டன.
அத்துடன் இந்நூல்களின் கருவூலங்கள், நாட்டின் பிரதான தலைநகர்களாகிய அநுராதபுரம், பொலனறுவை போன்ற இடங் களிற் காணப்பட்ட விகாரைகளிற் பெறப்பட்டதால் நாட்டினது வரலாறு இத்தலைநகர்களை மையப்படுத்தி வரையப்பட்ட வர லாறாக இவற்றில் இட்ம் பெற்றிருப்பது ஆச்சரியத்திற்குரிய விடயம் அன்று. இதனால் இந்நூல்களின் துணைகொண்டு வட பகுதி வரலாற்றை அறிந்து கொள்வது வெகு சிரமமாகவே உள்ளது. எனினும் இட்பகுதியில் நாகரிகக் கட்டமைப்பும் அரச வியக்கமும் நாட்டின் ஏனை: பகுதிகளைப் போலக் கிறிஸ்தாப் தத்திற்கு முந்திய பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே காணப் பட்டதே இப்பாளி நூல்களிற் காணப்படும் ‘நாகதீபம்’ பற்றிய ஐதீகங்கள் எடுத்தியம்புகின்றன.2 இந் நாகதீபமே தமிழ் நூல் களில் நாகநாடு" என்ற வடிவமாக இடம்பெற்றுள்ளமை குறிப் பிடத்தக்கது.3 இப்பகுதியின் நாகரிகச் சிறப்பினை இப்பகுதியில் மேற் கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வுகளும், அகழ்வாய்வு களும் உறுதி செய்துள்ளன.கி இத்தகைய வரலாற்றுப் பாரம்பரி யத்தினையுடைய இப்பகுதியினைப் பாளி நூல்கள் அநுராதபுர அரசின் ஒர் அங்கமே என்று குறிப்பிட்டாலும்கூட, இவ்விராச் சியம் கி. பி. 10ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடையும் வரை சிற்சில காலப்பகுதிகளில் மட்டுமே அநுராதபுர அரசர் இப்பகுதியோடு கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய குறிப்புகள் இந்நூல்களில் உள. இவற்றுட் பெரும்பாலானவை இப்பகுதியில் இவர்கள் மேற் கொண்ட கலாசாரத் தொடர்புகளாக அமைவதால் இவற்றை இப்பகுதி மீது இவர்கள் கொண்டிருந்த அரசியல் ஆதிக்கத்திற் குரிய சான்றாகக் கொள்வது பொருத்தமாகத் தெரியவில்லை. தொடர்ச்சியாக ஒரு நூற்றாண்டுக்காவது இப்பகுதியை அநுராத புர அரசர் ஆளவில்லை. பின்வந்த பொலனறுவைச்சிங்கள அர சர்களும் (கி.பி. 1000-1250) இப்பகுதியைத் தொடர்ந்து ஆண் டது பற்றிய சான்றுகளோ அவர்கள் மேற்கொண்ட நிருவாக நடவடிக்கைகள் பற்றிய சான்றுகளோ இந்நூல்களில் இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண இராச்சியமும் அதன் வரலாற்றுப் பங்களிப்பும்
பொலனறுவை அரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்த கி. பி.
13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி ஈழத்து வரலாற்றில் ஒரு திருப்பு முனையானது. இக்காலத்திற் பொலனறுவை அரசு

வீழ்ச்சியடைந்ததோடு சிங்கள ராசதானிகள் பாதுகாப்புக்காகத் தம்பதேனியா, யாப்பகூவ, குருநாகல், கம்பளை, கண்டி, கோட்டை போன்ற இடங்களை நோக்கி நகர, வடபகுதியிற் சிங்கைநகரை மையமாக வைத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் தலைமையிலே தோன்றிய யாழ்ப்பாண அரசு ஈற்றிற் போர் முனையிற் போத்துக்கேயராற் கி.பி. 1619 இல் வீழ்ச்சியுறும் வரை ஒரு செல்வாக்குள்ள அரசாகத் திகழ்ந்தது. இவ்வரசைக் கி.பி. 1450 - 1467 ஆகிய காலப்பகுதியைக் கொண்ட பதி னேழு வருடங்கள் மாத்திரம் கோட்டை அரசு ஆட்சி செய்தது. இச் சந்தர்ப்பத்தினைத் தவிர ஏனைய கால கட்டங்களில் இவ்வரசு சுதந்திரமாக இயங்கியதோடு கி.பி. 14ஆம் நூற்றாண்டில் ஈழத் திலுள்ள மிகப் பலம்வாய்ந்த அரசாகவும் காணப்பட்டதைக் கூறும் கே.எம். டீ. சில்வா, இக்கால கட்டத்தில் மேற்கே புத்தளப் பகுதி வரைப் பரந்து ஈழம் முழுவதையும் தனக்குக் கீழ்க் கொண்டு வருவதற்குரிய வாய்ப்பினை இது பெற்றிருந்த நிலையிலே தென் னிந்திய விஜயநகரப் பேரரசின் தலையீடு இத்தகைய வாய்ப்பைத் தடுத்தது எனவும் கூறியுள்ளார். இத்துடன் இத்தகைய நிலை யானது தெற்கே இவ்வரசு தனது செல்வாக்கைப் பரப்புவதற்குப் பதிலாக வடக்கேயே இருந்து தென்னிந்திய தலையீட்டுக்குள்ளா கும்நிலையையும் ஏற்படுத்தியது எனவும் குறிப்பிட்டுள்ளார். 5
கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தடுப்பகுதியில் யாழ்ப்பாண அரசின் மேலாணை தென்னிலங்கை அரசுகளின் மீது கிட்டத் தட்ட ஒன்றரைத் தசாப்தங்களுக்கு இருந்தது போலவே கோட்டை அரசின் மேலாணையும் கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 7 வருடங்கள் யாழ்ப்பாண இராச்சியத்தில் நிலைத்திருந்ததும் வரலாறாகும். எனினும் கோட்டை அரசின் யாழ்ப்பாணத் தலையீடு அதன் வரலாற்றில் எத்தகைய பெரிய மாற்றத்தினையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் யாழ்ப்பாண அர சின் தென்னிலங்கை மீதான மேலாணை தென்மேற்கே தமிழ் வன்னிமைகள் புத்தள மாவட்டத்திலே தமது தனித்துவத்தை மேலும் ஸ்திரப்படுத்த உதவியதோடு இப்பகுதியிலே தமிழரின் செல்வாக்குத் தொடர்ந்து பேணப்படவும் வழிவகுத்தது. இதனைப் போத்துக்கேய டச்சுக்கார ஆவணங்கள் உறுதிப்படுத் துகின்றன. போத்துக்கேய வரலாற்றாசிரியரான குவேறோஸ் 6 சிலாபம் வரை இவ்வரசு ஒரு காலகட்டத்திற் பரந்திருந்தது எனக் கூற, போத்துக்கேயரிடம் 1658 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற டச்சுக்காரத் தேசாதிபதியாகிய வான்கூவன்ஸ்? இதனை உறுதிப் படுத்தியுள்ளார். யாழ்ப்பாண அரசைப் போத்துக்கேயர் சிதைத் காலும் அது ஏற்படுத்திய தமிழ்ப் பாரம்பரியத்தினையும் தனித்து

Page 13
V
வத்தினையும் அவர்களால் சிதைக்க முடியவில்லை என்பதை டச்சுக்காரர் ஆட்சியில் (கி. பி. 1658 - 1796) முதல் முதலாகத் தேசாதிபதியாக நியமனம் பெற்ற வான்கூவன்ஸின் பின்வரும் கூற்று உறுதிசெய்கிறது.8
'பழைய மலபாரி (தமிழ்) ராசாக்கள் ஆதிக்கம் பரந்து காணப்பட்டது. உயர்ந்த மலைத் தொடர்கள் மீதும் வேடர்களின் நிலப்பரப்புக்கள் மீதும் இந்த ஆதிக்கம் பரந்திருத்ததோடு புத்தளம், கற்பிட்டியின் நடுப்பகுதிக் கும் அது பரந்து இருந்தது. அது மேலும் தெற்கு நேர்க்கி விரிவாக்கப்பட்டு நீர்கொழும்பு வரை ஈழத்தின் மேற்குக் கரையோரம் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள்ளே இருந் தது. கிழக்குப் பகுதியில் பாணமை வரைக்கும் கும்புக் கன்ஒயாவிலும் அது பரந்திருந்தது. இன்றுங் கூட வழக் சுமாக மலபாரி மெர்ழியே இங்கு பேசப்படுகின்றது."
வான்கூவன்ஸ் தேசாதிபதியின் கூற்று வடக்கே இருந்த யாழ்ப் பாண அரசு, அடங்காப்பற்று வன்னிமைகள், திருகோணமலை, டிட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட வன்னிமைகள், புத்தன மாவட்ட வன்னிமைகள் ஆகியன பற்றியனவேயாகும்,
பின்னர் யாழ்ப்பாண அரசு மறைந்ததும் அதன் மேலாண் மையை ஏற்றிருந்த அடங்காப்பற்று வன்னிமைகளைக் கோட்டை, கண்டியரசர்களாலோ அன்றிப் பின்வந்த போத்துக்கேய அல்லது டச்சுக்காரராலோ அடக்கி அழிக்க முடியவில்லை. கடைசிச் சிங்கள அரசின் எச்சமாகிய கண்டி அரசு எவ்வாறு பிரித்தானியரால் அவர்களின் ஆணைக்குட்படுத்தப்பட்டதோ அவ்வாறே யாழ்ப் பாணத் தமிழ் அரசின் எச்சமாக விளங்கிய வன்னி நாடும் ஆங்கிலேயரால் அவர்களின் கட்டுப்பாட்டுக்குட் கொண்டு வரப் பட்டது. எனினும் ஈழத்தின் கிழக்குக் கரையிலும், மேற்குக் கரையிலும் இருந்த தமிழ் வன்னிமைகளின் நிலை இதிலிருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. யாழ்ப்பாண அரசின் சிதைவோடு வன்னிமைகள் முதலிற் கோட்டை அரசின் மேலாண்மையையும், பின்னர் கண்டி அரசின் மேலாண்மையையும் ஏற் தம் நிலைக்கு உள்ளாக்கப்பட்ட போதிலும் தமிழ்ப் பாரம்பரியத்தினை அவை பேணியதை இக்காலத்திற் கிழக்கிலங்கையிற் கிடைத்துள்ள தமிழ்ச் சாசனங்களும்9 புத்தள வன்னிமைகள் பற்றிய செப்பேடு களும் எடுத்துக் காட்டுகின்றன.10 இதனாற் போலும் டச்சுக் காரர் தமது ஆட்சிக் காலத்தில் இவற்றைத் தனிமாவட்டங்க ாாகப் பிரித்தனர். இவற்றுட் புத்தளம், யாழ்ப்பாணம் (தற்கால வடமாகாணப் பகுதி,) திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியன
e-gb.

இவ்வாறு இம் மாவட்டங்கள் தனித்துவமாக அமைந்திருந் தாலும் கூட இன்றைய வடகிழக்கு மாகாணத்திலமைந்த மேற் கூறிய யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட் டங்கள் ஆகியன நீதி, நிருவாகத்தினைப் பொறுத்த மட்டிலே தமது தலைமையகத்தினை யாழ்ப்பாணத்திலேயே கொண்டிருந் தமை குறிப்பிடத்தக்கது.11
யாழ்ப்பாண நகரம், கோட்டைப் பகுதியை அண்டிப் போத் துக்கேயராலும் பின்னர் வந்த டச்சுக்காரராலும் விஸ்தரிக்கப் பட்டது. எனினும் நல்லூர் இக்காலப்பகுதியிலும் தனது முக்கி பத்துவத்தினன முற்றாக இழந்துவிடவில்லை. நல்லூரைக் கைப் பற்றிய போத்துக்கேயரும் சில காலம் நிருவாக மையமாக தல்லூரைக் கொண்டபின்னர்தான் தற்கால யாழ்ப்பாண நகரப் பகுதியைக் கோட்டையை அண்டி நிருமானித்தனர். (படம் - 50). டச்சுக்காரர் காலத்திலும்கூட டச்சு நிருவாகிகளின் வாசஸ்தலங்கள் உட்படப் பல கட்டிடங்கள் நல்லூரிலிருந்தன. இவற்றுள் டச்சுக்காரரினால் யமுனா ஏரிக்கருகாமையில் அமைக் கப்பெற்ற சுதேச உயர்கல்வி நிலையமும் (Seminary) ஒன்றாகும். (படம் -51). 1796 இல் டச்சுக்காரரிடம் இருந்து ஈழத்தினைப் பொறுப்பேற்ற ஆங்கிலேயர் ஈழத்தினை 1833 இல் நிருவாக வச திக்காக ஐந்து மாகாணங்களாகப் பிரித்தாலும், வடமாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியன இன்றிருக்கும் நிலையைப் 19ஆம் நூற் றாண்டின் பிற்பகுதியிற் (1873இல்) பெற முன்னர் அளவிற் பெரிய பிரதேசத்தினை உள்ளடக்கியே காணப்பட்டன. வடபகுதியின் தலை தகராகக் கொழும்புக்கு அடுத்த நகரமாக யாழ்ப்பாணம் ஆங்கிலே பரால் உருவாக்கப் பட்டது.12 வடமத்திய மாகாணத்தின் தலை நகராக அனுராதபுரம் எழுச்சி பெற்றாலும் கூட இதனை விட வட பகுதிக்குரிய முக்கிய அலுவலகங்கள் காணப்பட்ட இடமாக இது காணப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாண அரசு மறைந்தாலும் அதன் நேரடி ஆட்சிக்கும், மேலாண்மைக்கும் உட் பட்ட வட பகுதியின் எச்சசொச்சமாக இன்றைய வட மாகாணம் விளங்குகிறது என்று கூறுதல் மிகையாகாது. அதுமட்டுமன்றி டிாழ்ப்பாண அரசின் அரசியற் பாரம்பரியத்தாலும் இப்பகுதிக்குக் கிடைத்த வசதிகளாலும் ஈழத்தமிழரை யாழ்ப்பாணத் தமிழ ரோடு இணைத்துப் பார்க்கும் மரபு தோன்றி வளர்ந்ததும் ரு பிப்பிடத்தக்கது. போத்துக்கேயரின் வரவு யாழ்ப்பாண அர சில சுதந்திரத்தினை மட்டும் சிதைக்கவில்லை. பல்வேறு அரிய ாட்டுச் சுவடிகள் சேகரித்து வைக்கப்பட்ட நல்லூரிலிருந்த புகழ் பூத்த நூல் நிலையமாகிய சரஸ்வதிமகாலையும் அழித்தது. பேAதுக்கேயரின் இத்தகைய தடவடிக்கைகளையே இந்தியாவில்

Page 14
Vl
முஸ்லிம் படை எடுப்பாளரும் சில நூற்றாண்டுகட்கு முன்னர் கடைப்பிடித்தனர். அத்துடன் போத்துக்கேயர் இவ்வரசின் தொல் லியல் எச்சங்களையும் அடியோடு அழித்து விட்டனர். இவ்வரசு காலக்கட்டிடங்களில் அரச நிருவாக மையப் பிரதேசங்கள், வழி பாட்டிடங்கள் ஆகியன பிரதானமாகும். இவை பெரும்பாலும் செங்கல், சுண்ணாம்பு, சுண்ணக்கல் ஆகியனவற்றைப் பயன்படுத் தியே கட்டப்பட்டிருந்தன. கருங்கற்களை வன்னிப்பகுதியிலிருந்தே எடுத்து வர வேண்டியிருந்ததால் இதன் பயன்வாடு குறைந்தே காணப்பட்டது. இதனாற் சிங்கள அரசுகளின் தலைநகர்கள் அப் பகுதிகளிற் கிடைத்த கருங்கற்களைப் பயன்படுத்தி அமைக்கப் பட்டது போன்று யாழ்ப்பாண அரசுக்குரிய கட்டிடங்கள் ஆக் கப் படவில்லை. யாழ்ப்பாண அரச ஆதிக்கத்தினைப் பொறுப் பேற்ற போத்துக்கேயர், தமது வதிவிடங்கள், கோட்டை கொத் தளங்கள், வழிபாட்டிடங்கள் ஆகியனவற்றை அமைக்க இவ்வரசின் கட்டிடங்களை அழித்து அவற்றினை மூலப் பொருளாகப் பயன் படுத்தியே அவற்றைக் கட்டிக்கொண்டனர். இவர்கள் உருவாக்கிய இக் கட்டிடங்களிற் பல தொல்லியற் சின்னங்களும் அகப்பட்டன. இதனை உறுதிப் படுத்துவனவாக யாழ்ப்பாணப் பிரதானவீதி யிலுள்ள கடை ஒன்றிற் கிடைத்த ஆறாவது பரர்க்கிரமபாகு வின் தமிழ்க் கல்வெட்டும்,18 கோட்டையிற் கிடைத்த சோழப் பேரரசனான முதலாவது இராஜேந்திரனது கல்வெட்டும் தக்க சான்றுகளாக உள்ளன, 14
கட்டிடங்கள், சிற்பங்கள் போன்றன இவ்வாறு சிதைக்கப்பட் டாலும் இப்பிரதேசத்திற்குரிய யாழ்ப்பாண அரசரின் நாணயங் களை இவர்களாற் சிதைக்க முடியவில்லை. அவை இன்றும் இவ் வரசின் மகிமையை எடுத்துக் காட்டும் சின்னங்களாக விளங்கு கின்றன. இவ்வரசின் சின்னங்கள் அழிக்கப்படுவதற்குப் போத் துக்கேயரோ அன்றி டச்சுக்காரரோ மட்டும் காரணரல்லர். இப் பகுதியிற் கட்டிடங்களைக் கட்டுவதற்குரிய மூலப்பொருட்கள் தென்பகுதியைப் போன்று விரவிக் காணப்படாமையும், தென் பகுதி போலன்றி மக்கள் தொடர்ந்தும் யாழ்ப்பாண அரசு மறைந்தும் கூட அப்பகுதியிலே வாழ்ந்தமையும் தொல்லியற் சின்னங்களைப் பாதுகாப்பதிற் கரிசனை அற்றவர்களாய், இவற்றை அழிக்கும் பணிக்கு உதவுபவர்களாய் மக்கள் விளங்கியமையும், இவற்றின் அழிவுக்கான காரணங்கள் எனலாம். அதிஷ்டவசமாக சிங்களத் தலைநகர்களிற் கோட்டைப் பிரதேசம் மட்டுமே போத் துக்கேயர், டச்சுக்காரர் ஆணையை ஏற்றது. ஏனையவை கை விடப்பட்ட நிலையிற் காடடர்ந்த பிரதேசங்களாக மாறியதாற் பாதுகாக்கப்பட்டன. பின்னர், கலாசாரச் சின்னங்களைப் பாது

Vil
காப்பதில் அக்கறை கொண்ட ஆங்கிலேயர் ஆட்சி உதயமானதும் இவற்றின் மகிமை வெளிக் கொணரப்பட்டது. ஆனால் இவ் வாறின்றி யாழ்ப்பாண அரசின் எச்சசொச்சமாக இன்று குறிப் பிடத்தக்க தொல்லியற் சின்னங்கள் மிகமிக அரிதாக இருப்பது விசனத்துக்குரிய விடயமாகும்.
டச்சுக்காரரிடமிருந்து ஈழத்தைக் கைப்பற்றிக் கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டு காலம் (கி. பி. 1796 - 1947) வரை ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலம் ஈழத்துக் கலாசார வளர்ச்சியில் (இவர்களுக்கு முன்பு இங்கு ஆட்சிசெய்த போத்துக்கேயர், டச் சுக்காரர் போலன்றி) ஒரு திருப்புமுனையாகியது. இங்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆங்கிலநிருவாகிகள், பிற உத்தியோகத்தர்கள், படைத்தளபதிகள் ஆகியோர் தாம் கடமையிலீடுபட்ட சமயத்தில் தாம் கண்ட ஈழத்தின் தொல்லியற் சின்னங்கள் பற்றிய தகவல் களை வெளிக் கொணர்ந்ததன் மூலம் ஈழத்துக் கலாசார மறு மலர்ச்சிக்கு வித்திட்டனர். இத்தகைய நடவடிக்கைகளின் ஓர் அம்சமாக ஈழத்திற் பாளி போன்ற மொழிகளைக் கற்பதிலும் அக்கறை காட்டப்பட்டது. இதன் விளைவாக ரேணர் என்ப வரால் 1834 இல் மகாவம்சம் ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. 1845 இல் றோயல் ஆசிய சங்கம் அமைக்கப் பட்டு ஈழத்துக் கலாசாரம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வழி வகுக்கப்பட்டது.
துரதிஷ்டவச்மாக இத்தகைய நிலை வடபகுதியிற் காணப் படவில்லை. இங்கு காணப்பட்ட தொல்லியற் சின்னங்கள் பல சிதைக்கப்பட்டதால் ஆங்கிலேயரைப் பெருமளவுக்கு இப்பகுதி ஈர்க்கவில்லை. அத்துடன் பாளி, சிங்கள மொழிகளைக் கற்பதில் இவர்கள் காட்டிய அக்கறையைப் போலத் தமிழ் மொழியைக் கற்பதிலோ அன்றி அதிலுள்ள பழைய ஏடுகளைத் தேடிப் பேணி வெளியிடுவதிலோ இவர்கள் அக்கறை காட்டவில்லை. ஆனால் இந் நியதிக்கு விதி விலக்காக அமைந்தவர் சேர் அலெக்சாண்டர் ஜோன்சன் என்ற நீதிபதியாவர். இவர் தமது ஆய்வின் மூல மாகத் தமிழரின் பாரம்பரிய சட்ட வழக்குகள் பற்றி எழுதிச் சென்றுள்ளார்.16 இவரைத் தவிர இப்பகுதி பற்றிச் சுட்டிக் காட்டுமளவுக்கு 19 ஆம் நூற்றாண்டிற் பிரசுரமான இரு வெளி யீடுகளே அமைகின்றன. இவை முறையே இந் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் மன்னார் பற்றிப் போக்கினால் எழுதப்பட்டகட்டுரையும்,16 வன்னி மாவட்டம் பற்றி லூயிசினால் எழுதப் பட்ட நூலுமாகும்.17 ஆங்கில நிருவாகிகளின் பங்களிப்பு அடு கிக் காணப்பட்ட கால கட்டத்தில் இங்கு வந்த அமெரிக்க

Page 15
VIII y
ஐரோப்பிய மத குருமாருங்கூட தமது சமய தடவடிக்கைக்ளில் அதிக கவனஞ் செலுத்தினார்களே தவிர இப்பகுதியின் வரலாறு பற்றிய பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை. அத்துடன் தாம் கடமையாற்றிய சமூ கத்தின் நிலை பற்றியும் அதன் பழக்கவழக்கங்கள்பற்றியும் கூட விரிவான குறிப்புகளை விட்டுச் செல்லவில்லை. இத்தகைய பின் னணியிற்றான் வடபகுதி வரலாற்றை அணுக வேண்டியுள்ளது.
யாழ்ங்ங்ாண இராச்சியமும் வரலாற்று மரபும்
சிங்கள அரசின் சின்னங்கள் பெருமளவுக்குப் பாதுகாப்பாக இருப்பதற்கும் தமிழரசின் சின்னங்கள் (அதாவது இற்றைக்கு நான்கு நூற்றாண்டுக்கு முன்னர் சிதைக்கப்பட்ட அரசின் சின் னங்கள்) சிதைந்து காணப்படுவதற்கும் இரு பகுதி மக்களிடமும் காணப்பட்ட வேறுபட்ட வரலாற்றுணர்வுகள் காரணமா அல் லது வேறுபட்ட வரலாற்று மரபுப் பாரம்பரியம் காரணமா என்று சிந்திக்க வைக்கிறது. பெளத்த மதத்தில் அதன் வரலாற்று நிகழ்ச்சிகளைப் பேணிக் கோவைப்படுத்தும் மரபினைப்போன்ற தொன்று இந்துக்கள் மத்தியில் ஈழத்திலோ அன்றி இந்தியா விலோ காணப்படவில்லை. யாழ்ப்பாண அரசு தோன்ற முன் னர் கூட இத்தகைய மரபு ஒன்று இப்பகுதியில் வளர்ந்திருக்க வில்லை என்றே தெரிகிறது. ஏனெனில், இக்காலத்திற்குரிய வர லாற்று நிகழ்ச்சிகளாகத் தொடர்ச்சியான நிகழ்ச்சிக் கோவைகள் இன்றி ஒரு சில தனி நபர்களை மையமாக வைத்துச் சில கதைகள் மட்டுமே காணப்படுகின்றன. இத்தகைய வரிசையிலேயே உக்கிரசிங்கன் கதை, மாருதப்புரவல்லி கதை, யாழ்ப்பாடி கதை, பாண்டிமழவன் கதை ஆகியன அடங்குகின்றன. சிங்கள அரசுகள் பற்றிப் பாளிறுால்கள் தரும் சான்றுகளை இக்காலப் பகுதியாகிய கிட்டத்தட்ட பதினைந்து நூற்றாண்டுக் காலப்பகுதியோடு ஒப் பிடும்போது இருபகுதிகளிலும் காணப்பட்ட வரலாற்று மரபு களுக்கு வேறொரு சான்றுகளையும் எடுத்துக்காட்டும் அவசிய மில்லை.
கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிம்கேசு நகர் அரசு தோன்றமுன்னர் வடபகுதியிலே தமிழ் மக்களோ அன்றி அவர்களுக்குரிய அரசமைப்போ இப்பகுதியிற் காணப்படவில்லை என்பதே சிங்கள வரலாற்றாசிரியர்கள் பலரின் பொதுவான கருத்தாகும். இது பற்றிப் பரணவித்தானா 1961 இலே பிர சுரித்த “வடபகுதியிலுள்ள ஆரிய அரசு" என்ற கட்டுரையில் வாதிடவும் தவறவில்லை.18 வடபகுதியை வரலாற்றுப் பின்னன் யில் நோக்கும் போது ஆரியச் சக்கவர்த்திகளாற் சிங்கைநக்ரில்

அமைக்கப்பட்ட இந்நூலின் கருப் பொருளாக அமைந்துள்ள அரசு, தென்பகுதியின் வரலாற்றிற் பல்வேறு காலகட்டங்களிற் குறிப் பிட்ட தலைநகரை மையமாகக் கொண்ட ஒரு அரசினைப் போன்றே இங்கும் நிலை கொண்டிருந்தது எனக் கொள்ளலாம். இதற்கு முன் னுள்ள கர்லப்பகுதி வரலாற்றை இலக்கியச் சான்றாதாரங்கள் அருகிக் காணப்படும் நிலையிற், பெருமளவுக்குத் தொல்லியற் சான் றாதாரங்களின் அடிப்படையிலேயே ஆராய வேண்டியுள்ளது.
தொல்லியற் சான்றுகளின் தார்ப்பரியத்தை - முக்கியத்
துவத்தை - சேர் போல் பீரிஸ்,19 இராசநாயக முதலியார்20
ஆகியோர் தொட்டுக்காட்ட ரகுபதியினால் யாழ்ப்பாணக் குடா நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வு நன்கு உறுதிப்
படுத்தியுள்ளது. 24 வன்னிப் பகுதியிலும் திட்டமிட்ட தொல்லியல் ஆய்வு நல்ல பலனைத் தரும் என்பதைப் பூநகரியிற் கிடைத்த தொல்லியற் சான்றுகள் உறுதி செய்துள்ளன.2 எவ்வாறாயினும்
யாழ்ப்பாண அரசு காலத்திலாவது வட பகுதியில் வரலாற்றைக் கோவைப்படுத்தும் மரபொன்று காணப்பட்டதென்று ஒரளவுக்கு ஊகிக்கலாம்.
யாழ்ப்பாண வரலாற்றைக்கூறும் யாழ்ப்பாண வைபவமாலை கூட இங்கு கடமையாற்றிய டச்சுக்கார நிருவாகியாகிய மேக்க றுானின் (கி. பி. 1739) ஆணைப்படியே தொகுக்கப்பட்டதை இந்நூலின் சிறப்புப் பாயிரம் எடுத்துக் காட்டுகிறது.23 எனினும் இந்நூலுக்கு உறுதுணையாக இருந்த கைலாயமாலை, வையா பாடல், பரராசசேகரன் உலா, இராசமுறை ஆகியவையும் இதன் சிறப்புப்பாயிரத்திற் குறிக்கப்பட்டுள்ளன. கைலாயமாலை நல்லூர் கைலாசநாதர் கோயில் பற்றியும், வையாபாடல் வன்னிக் குடி யேற்றம் பற்றியும் எடுத்துக் கூறுவனவாகும். இவற்றுட் கைலாய மாலை கி. பி. 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், வையா பாடல் கி; பி. 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் தொகுக் கப்பட்டிருக்கலாமெனவும் கூறப்படுகிறது. ஆனால் இந் நூல்களை விட யாழ்ப்பாண அரசரின் பட்டியலைத் தரும் நூலாக யாழ்ப் பாண வைபவமாலை ஒன்றே காணப்படுவது அவதானிக்கத்தக் கது. இதனை நோக்கும் போது இந் நூலாசிரியர் கூறும் பரராச சேகரன் உலா, இராசமுறை ஆகியன தற்போது கிடைக்கா விட் டாலுங் கூட அரசாட்சி மரபு பற்றிய தகவல்கள் இவற்றில் இடம் பெற்றிருந்தன என்றும் இத்தகைய மரபு யாழ்ப்பாண அரசு காலத்திற் காணப்பட்டதென்றும் ஊகிக்கலாம். இதனையே யாழ்ப்பாண வைபவமாலையிலுள்ள கீழ்வ்ரும் சிறப்புப்பாயிரம் எடுத்துக் காட்டுகிறது. 24 ۔

Page 16
Χ.
உரராசர் தொழுகழன் மேக்கறுா னென்றோது
முலாந்தேசு மன்னனுரைத் தமிழாற் கேட்க வரராச கைலாய மாலை தொன்னுரல்
வரம்பு கண்ட கவிஞர் பிரான் வையாபாடல் பரராச சேகரன்றன் னுலாவுங் காலப்
படிவழுவா துற்றசம் பவங்க டீட்டுந் திரராச முறைகளுந் தேர்ந்தியாழ்ப் பாணத்தின்
செய்திமயில் வாகனவேள் செப்பி னானே.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேகமாக்ப்பரவிய கிறிஸ்தவ மதப் பிரசாரத்தினதும் அதற்குப் பின்னணியாக அமைந்த மேலைத்தேய கலாசாரத்தினதும் தாக்கத்தின் எதிர் விளைவாக ஈழநாட்டின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றில் அக்கறை காட்டப்பட்டு, அதன், தனித்துவத்தை வெளிக்கொணரும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டன. வடபகுதியைப் பொறுத்தமட்டில் இத்தகைய கலாசார மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் நல்லைநகர் தந்த ஆறுமுக நாவலராவர். தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழ் பேண்ய யாழ்ப்பாண அரசின் தலைநகரிற் பிறந்த ஒருவர் இப் பணியில் முன்னின்றமையானது தற்செயலாக ஏற்பட்ட வரலாற்று நிகழ்ச்சியுமல்ல. நாவலரின் இத்தகைய பணியைத் தொடர்ந்தே தென்னிலங்கையிலும் அநகாரிகா தர்மபாலா போன்றோரின் நடவடிக்கைகள் அமைந்தன. இவ்வாறு ஏற்பட்ட கலாசார மறு மலர்ச்சி, அல்லது தனித்துவத்தின் சிறப்பியல்புகளைத் தேடல் என்பதன் ஒர் அங்கமாகவே வரலாறு பற்றி எழுதும் முயற்சிகள் ஆரம்பமாகின. இம்முயற்சிக்கு ஆங்கிலக் கல்வியறிவும் உறுதுணை யாக அமைந்தது.
இவ்வாறு எழுந்த வரலாற்று நூல்களை மூன்று பிரிவா கப் பிரிக்கலாம். முதலாவது பிரிவில் வரலாறு என்பது யாதென்றோ அன்றி அதிற் கட்டுக்கதைகள், ஐதீகங்கள் எவ் வாறு இனங்காணப்பட வேண்டும் என்றோ பகுத்து ஆராயும் திறனற்றவர்களால் எழுதப்பட்ட நூல்கள் அமையும். இவற்றை எழுதியவர்கள் இத்துறை பற்றி எவ்வித பயிற்சியுமற்றவர்களா கும். எனினும் எப்போதும் ஆரம்ப முயற்சிகள் இவ்வாறு அமைவது வழக்கம். அக்காலப் பின்னணியில் நோக்கும் போது இம் முயற்சிகள் மதிக்கப்பட வேண்டியனவையே. இரண்டாவது பிரி வில் வரலாறு பற்றியும், சான்றுகளை மையமாக வைத்து எவ் வாறு வரலாறு எழுதப்படல் வேண்டுமென்பது பற்றியும், ஐதீ தங்களை வரலாற்றில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற் றியும் தமக்குக் கிடைத்த ஆங்கிலக் கல்வியினாற் பயனடைந்த,

X
சக்க வரலாற்றுப்பயிற்சியோ அன்றிப் பல்கலைக்கழக வாசனையோ பூ - லாத அறிஞர்களால் எழுதப்பட்ட நூல்கள் அடங்கும். இந் நூல்கள் முதல் வகுப்பைச் சேர்ந்த நூல்களைவிடப் பன்மடங்கு சிறப்புடையனவாகக் காணப்படும் அதே நேரத்திற் பிற்கால யாழ்ப்பாண வரலாறு பற்றிய ஆய்வுகளுக்குக் கால்கோளாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்ந்து வர லாற்றியலிலே பட்டம் பெறாத சிலரும் நூல்களை எழுதியுள்ள னர். மூன்றாவது பிரிவில் , வரலாற்றியலிலே பல்கலைக்கழகப் பயிற்சியுமுடையோரால் எழுதப்பட்ட நூல்கள் காணப்படுகின் றன.
முதல் வரிசை நூல்கள்
யாழ்ப்பாண வரலாறு பற்றி எழுந்த கட்டுரைகளிற் காசிச் செட்டியினால் "டச்சுக்காரர் காலம் வரையிலான யாழ்ப்பாண வரலாறு" என்ற கட்டுரை முதன்மை பெறுகிறது.25 1847 இற் பிரசுரமான இக்கட்டுரை பெருமளவுக்கு இவ்வரசு பற்றிய நூல் களிலுள்ள ஐதீகங்களைத் தழுவியே எழுதப்பட்டது. இதனால் ஐதீகங்கள் இதில் முக்கிய இடத்தினை வகித்தன. எனினும் இக் கட்டுரை வெளிவந்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாண வரலாறு புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகக் காணப்பட்டதோடு சிங்கள மன்னர்களின் வரலாறே ஈழத்து வரலாறாகச் சித்தரிக் கப்பட்டுள்ளது எனக் குறை கூறப்பட்டுள்ளமையை நிராகரிக்கும் வகையில் இக்காசிச் செட்டியின் கட்டுரை அமைந்தது எனலாம்.28 ய்ாழ்ப்பாண வர்லாறு பற்றி மட்டுமன்றித் தமிழ்ப்புலவர்கள் தமிழர் சாதிகள், சடங்குகள், முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியும் இவர் கட்டுரைகளையும், நூல்களையும் வெளி யிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ரேணர் ஆங்கிலத் தில் எழுதிய ஈழத்தின் வரலாற்றை, இவர் தமிழில் மொழி பெயர்த்தும் உள்ளார்.27
தமிழ் நூல்களிற் கூறப்பட்ட ஐதீகங்களையே பெருமளவுக்கு ஆதாரமாகக் கொண்டு எழுதப் பெற்ற நூல்களில் 1879 இலே தெல்லிப்பழையைச் சேர்ந்த சாமுவேல் ஜோன் என்பவரால் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணச் சரித்திரம்,28 1884 இல் வட்டுக் கோட்டையைச் சேர்ந்த பி. பி சதாசிவம்பிள்ளையினால் வெளி யிடப்பட்ட யாழ்ப்பாண வைபவம், 29 போன்ற நூல்களும் குறிப் பிடத்தக்கன. யாழ்ப்பாண வைபவ மாலையை முதல் முதலிலே அச்சு வாகனமேற்றிய பெருமையும் வி. வி. சதாசிவம்பிள்ளைக்கு உரியது. இது நடைபெற்றது 1884 ஆம் ஆண்டில் ஆகும்,80

Page 17
ΧIΙ
இதனைத் தொடர்ந்து 1889 இல் சி. பிறிற்றோவின் யாழ்ப் பாண வைபவ மாலையின் ஆங்கில மொழி பெயர்ப்பும் வெளி யானது,31
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் பற்றி எழுந்த கட்டுரைகளிலும் நூல்களிலும் பாவலர் துரையப்பா பிள்ளையினால், எழுதி 1907 இல் வெளியான "இலங்கைத் தேசிய நோக்கு" (Ceylon National Review ) 6Tairp (6596).5uá) *யாழ்ப்பாணம் அன்றும் இன்றும்?" என்ற கட்டுரை முக்கியம் பெறுகின்றது.32 இக் கட்டுரையில் இப் பிரதேசம் தனக்கென ஒரு தனித்துவமான வரலாறு, கலாசாரப் பின்னணியை உடையதாக விளங்கியமை இவரால் எடுத்துக் காட்டப்பட்டது. இதற்கு முன் னர் இப் பகுதி பற்றி எழுதப் பட்ட கட்டுரைகளைப் போலல் லாது அணுகு முறையிற் சிறப்பம்சங்கள் பலவற்றை இது கொண் டிருப்பதோடு எதிர்கால யாழ்ப்பாணம் எப்படி அமைய வேண்டு மென்ற பாவலரின் எதிர்பார்ப்புகள் பற்றிய கருத்துகள் பலவும் இதில் இடம் பெற்றுள்ளமை அவதானிக்கத்தக்கது. இதே கட் டுரை பின்னர் மகாஜனக் கல்லூரிப் பொன் விழா மலரில் மறு பிரசுரமானது.33
ஈழத்து வரலாறே சிங்கள மக்களின் வரலாறு என எண்ணப் பட்ட காலத்தில் இத்தகைய கட்டுரைகள் தமிழரின் தனித்துவத் தினைக் கோடிட்டுக் காட்டிய அதே நேரத்தில் இது பற்றி அறிய வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தின. பாவலர் அவர்கள் இந்துவாகப் பிறந்து பின்னர் சிறிஸ்தவராக மாறி இறுதியில் இந்துவாக மாறியவராவர். ஆங்கிலத்துடனான உயர் கல்விக்கு வாய்ப்பளித்த பாதிரிமார்களுடைய பள்ளிக் கூடங்களிற் படித்த பலர் இக்காலத்திலே தங்களுடைய அறிவு முதிர்ச்சியினாலும், இந்து சமய மறுமலர்ச்சியின் தாக்கத்தினாலும் மீண்டும் இந்துக்க ளாக மாறத்தொடங்கினர். கிங்ஸ்பரி, கறல், பெரிய நெவின்ஸ் என்பவர்கள் தாமோதரம்பிள்ளையாயும், விசுவநாதபிள்ளையாயும்? சிதம்பரப்பிள்ளையாயும் மாறினர். இம்மாற்றம் தற்செயல் நிகழ்ச் சியல்ல. பழம்பெருமை, யாழ்ப்பாண மகத்துவம், தமிழர் நாகரிகம் முதலியவற்றிற் சிரத்தையுடைய துரையப்பர்பிள்ளை அவர்களும் ரெயிலர் என்பதை விடுத்து அருளம்பலம் துரையப்பாபிள்ளை பானார்.84 1910இல் இந்துச் சிறார்கள் கற்பதற்கெனத் தெல்லிப் பளையில் மகாஜனக் கல்லூரியை அமைத்த பெருமை பாவலருக் குண்டு. யாழ்ப்பாணத்திலேற்பட்ட கலாசார மறுமலர்ச்சியில் பாவலர் சிறப்பான ஓர் இடத்தினைப் பெறுகிறார். ஈழத்தமிழர் வரலாற்றிற் பாவலர் எற்படுத்திய தாக்கம் பற்றி வேலுப்பிள்ளை பின்வருமாறுகூறுகிறார்.35 -

ΧΙΙΙ
'தமிழ் இனம் தனித் தேகிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு, கூட்டாட்சி அமைப்பின் கீழ்த் தமிழ் அரசு ஒன்று நிறுவப் பட வேண்டுமென்ற அரசியற் கோரிக்கையை முன்வைத்த தமிழ்த் தலைவர்கள் பாவலரின் மாணவர்களாக அமைந் தமை தற்செயலாக நடந்த காரியமன்று. தெல்லிப்பளை மிஷன் பாடசாலையிலே திரு.எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பாவலரின் மாணவராக இருந்துள்ளார். மகாஜனக் கல் லூரிப் பொன்விழாமலர், பழைய மாணவர் என்று குறிப் பிட்டு, திரு. கு. வன்னியசிங்கம் அவர்களின் படத்தைப் பிரசுரித்துள்ளது.” V
இதே காலத்தில் 1912இல் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் யாழ்ப்பாணச் சரித்திரம் வெளி வந்தது.38 இந் நூலும் எஸ். ஜோன், சதாசிவம்பிள்ளை ஆகியோருடைய ஆக்கங் கங்களின் வரிசையிலேயே வைத்துக் கணிக்கப்பட வேண்டிய தொன்றாக இருந்தாலும் யாழ்ப்பாண வரலாறு பற்றிமேலோட்ட மாக அறிய முயலுவோருக்கு ஒரு கைநூலாக அமைந்தது என லாம். இப்பகுதி வரலாற்றில் இவருக்கு இருந்த ஈடுபாட்டை இந்நூலின் முகவுரையிற் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
* யாழ்ப்பாணத்திலேயுள்ளார்க்கு யாழ்ப்பாணத்தினது பூர்வோத்திர சரித்திரத்தை அறிவது அவசியமும் ஆனந்த முமாம். யாழ்ப்பாணத்தைப் பூகோள படத்திலே நோக் கும் போது அது கடுகுப் பிரமாணமாய்த் தோன்றினா லும், அதன் சரித்திரத்தை நோக்கும் போது, பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுள்ளதாயிருக்கிறது." V
முத்துத்தம்பிப்பிள்ளையின் யாழ்ப்பாணத்தின் பழம் பெருமை பற்றிய எதிர்பார்ப்புகள் வீணாகப் போகவில்லை. இக்காலத் திற்றான் 1918இல் வசாவிளான் aேலுப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாண " வைபவ கௌமுதியும் வெளிவந்தது 37 இதே காலத்தில் 1917 - 18 ஆம் ஆண்டுகளில் சேர். போல். பீரிஸ் என்ற அறிஞரால் யாழ்ப்பாணத்தில் மேற் கொள்ளப் பட்ட மேலாய்வுகள் இப்பகுதி, நாட்டின் பிற பகுதிகள் போன்றே நாகரிகம் படைத்த பகுதியாக விளங்கியதென்பதை எடுத்துக் காட்ட 1926இல் முதலியார் இராசநாயகம் அவர்களால் வெளி யிடப்பட்ட “புராதன யாழ்ப்பாணம்" என்ற நூல் இத்தகைய எண்ணக் கருவை. விரிவுபடுத்தியது.

Page 18
XV
இச்சந்தர்ப்பத்தில் இக்காலப்பகுதி யாழ்ப்பாணம் பற்றி எழுந்த நூல்களைப் பற்றி முதலியார் இராசநாயகம் பின்வரு மாறு குறிப்பிடுவதும் அவதானிக்கத்தக்கது 38
1வைபவமாலை யெழுதி 142 வருடங்களுக்குப் பின் தெல்லிப்பழை போதனா சக்தி வித்தியாசாலைத் தமிழா சிரியராகவிருந்த திரு. ஜோன் ஆசிரியர் அவர்கள் அவ் வைபவமாலையையே பெரிதும் பின்பற்றிச் சென்று, அதிலுள்ள சிற்சில சரிதங்களை மாற்றியும், சிற்சிலவற்றைத் திருத்தியும், யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலை வெணியிட்டனர். இஃதன்றித் திரு. ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை யென்னும் அறிஞரி சரித்தி ரங்களை முன் பின்னாக்கியும், விகாரப் பாட்டினைத் தழுவியும், மனோராச்சியஞ் செய்தும், 1912ல் ஒரு யாழ்ப்பாணச் சரித்திரத்தை வெளியிட்டனர். அதன் பின் தமிழரசர் காலத்தை வைபவமாலைப்படியும், வண. ஞானப்பிரகாச சுவாமியவர்கள் ஆராய்ச்சியுடனெழுதி யுதவிய போத்துக்கேயர், ஒல்லாந்தராகியோர் காலங் களையுஞ் சேர்த்து “யாழ்ப்பாண வைபவ கெளமுதி" யெனவொரு நூல் 1918ல் வசாவிளான் திரு க. வேலுப் பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டது. இதில் யாழ்ப் பாண வாசிகளின் பரம்பரை விளக்கமே நிறைந்தொளிரு வதால் மாணவர்களுக்கு உபயோகமற்றதெனக் கண்டு."
ஈழத்திலேற்பட்ட கலாசார விழிப்புணர்ச்சி, தனித்துவச் சிறப் புகளைத் தேடும் முயற்சிகள் ஆகியன தமிழ் மக்கள் மத்தியில் மேற்கண்டவாறு அமையச் சிங்கள மொழி பேசுவோர் மத்தியில் ஏற்பட்ட கலாசார மறுமலர்ச்சி " " தேசியம், தேசியஒருமைப்பாடு” என்னும் காற்றினாலே தூக்கி வீசப்படுவதற்குப் பதிலாகப் பழைய தனித்துவ வடிவங்களுக்குப் புத்துயிரைக் கொடுத்தது. இனவாதம். சாதிவாதம், வரலாற்றுத் திரிபு, தோற்ற மூலம் பற்றிய ஐதீ கங்களின் மீட்சி, பொற்காலம் பற்றிய வீரவழிபாடு போன்றன இவற்றின் விளைவாயின.39 மகாவம்சம் போன்ற நூல்களிற் சிங் தள மக்களின் மூதாதையினராக "விஜயனது ஐதீகம்" சித்திரிக் கப்பட்டு அவனின் பூர்வீகத்தோடு தொடர்புடைய இடங்களாக வட இந்தியாவிலுள்ள இடங்கள் சித்திரிக்கப்பட்டாலும் கூட, எக் கட்டத்திலும், இந் நூலில் விஜயனின் சந்ததியினர் 'ஆரியர்" என்ற குறிப்பில்லை. ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் மொழி களின் தோற்றம், உறவுகள் பற்றியுமான ஆய்வுகள் கீழைத்தேய

XV
மொழிகளைக் கற்ற ஐரோப்பியரால் மேற்கொள்ளப்பட்டு வட மொழி இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென்றும், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகியன இவற்றிலிருந்து வேறுபட்ட தனித்துவமான திராவிட மொழிக் குடும்பத்தினைச் சேர்ந்தன என்றும் எடுத்துக் காட்டப்பட்டன. இம் மொழி யாராய்ச்சியோடு இனத்துவமும் இணைக்கப்பட்டது. இதன் எதிரொலி ஈழத்திலும் ஒலித்தது.
இதனால் வட இந்தியாவிலிருந்து வந்த சிங்க்ள் மக்களின் மூதாதையினர் தூய ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களென்பதும் தென்னிந்தியத் தமிழர்களும் ஈழத்தமிழர்களும் இதிலிருந்து தரம் குறைந்த திராவிட இனத்தவர் என்ற எண்ணப்பாங்கும் மேலோங்கிக் காணப்பட்டது. இவ்வாறு இனத்துவ பரிமாணம் சிங்களப் புத்தி ஜீவிகள் மத்தியில் 19ஆம் நூற்றாண்டிற் புத் துயிர் பெற்று 20ஆம் நூற்றாண்டிற் செல்வாக்குப் பெற ஆரம் பித்தது.40 1897 இல் பெளத்தன் என்ற சஞ்சிகை (Buddhist) "ஆரிய சிங்களவர்கள்" என்ற தலைப்பைக்கொண்ட ஒரு கட்டுரையைத் தாங்கி வந்தது. 1899 இல் ஆரிய சிங்களப் பெயர்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது. 1910ஆம் ஆண் டில் ஏ. ஈ. ஆர். ரட்ணவீர என்பவர் ‘ஆரியன்" (The Aryan) என்ற பெயருடைய ஒரு சஞ்சிகையை ஆரம்பித்தார். 1920ஆம் ஆண்டுகளிற் பாடப் புத்தகங்களிலும் இக் கொள்கை பிரபல்ய மடையத் தொடங்கியது. சிங்கள - தமிழ் மொழிகளின் உறவுகள் பற்றியும் இக்காலத்திற் சர்ச்சைகள் உருவாகின. 1918ஆம் ஆண்டில் ஆனந்தாக் கல்லூரியில் முதலியார் டபிள்யூ. எவ், குணவர்த்தனா அளித்த ஒரு பேருரையிற் சிங்களத்தின் இலக்கண அமைப்புகளே திராவிடப்பாங்கிலும், சொற்றொகுதிகள் ஆரியப் பாங்கிலும் அமைந்துள்ளன என எடுத்துக்காட்டினார்.41 இக் கருத்தினையே பின்னர் 1933இல் றோயல் ஆசிய சங்கத்திற் சிங்களத்தில் திராவிட அம்சங்கள்" என்ற தலைப்பிற் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய கட்டுரையை இராசநாயக முதலியார் வாசித்த பின்னர் எழுந்த கருத்துரையாடலிற் பிரபல்யமான மொழிவல்லுனரும் கல்வெட்டியல் வல்லுனருமான எம். டி. சற். விக்கிரமசிங்கா இளங்கன்று பயமறியாது எனப் பொருள் தரும்? “Fools rush in where angels fear to tread in” GT6Both - iš Savů பழமொழியை மேற்கோள் காட்டி எள்ளிநகை ஆடியது சிங்கள ஆய்வாளர் மத்தியில் ஆரிய இனத் தனித்துவம் இக்காலத்தில் ஊன்றியிருந்தமைக்குச் சிறந்த உரைகல்லாக அமைகிறது.42
இக்காலக் கலாசார மறுமலர்ச்சியிலும் இதன் ஒரம்சமாகிய வரலாற்றியலிலும் சிங்கள மக்களின் ஆரிய இனத்தூய்மை, சிங் கள மக்களே இந் நாட்டிற்குரியவர்கள், பெளத்த மதத்தைப்

Page 19
xVÍ
பேணிப் பாதுகாக்கும் தெய்வ ஆணையைப் பெற்றவர்கள் என்ற உணர்வு மேலோங்கிக் காணப்பட்டதை அநகாரிகா தர்மபாலா, ஏ. ஈ. குணசிங்கா போன்றோரின் பேச்சுகளும் எழுத்துகளும் எடுத்துக் காட்டியுள்ளன. இதன் விளைவாக மதவாதம், இன வாதம் ஆகியன தலை தூக்கத் தொடங்கின. 1883 இன் பெளத்த கத்தோலிக்க மதக் கலவரம், 1915 இல் ஏற்பட்ட சிங்கள-முஸ்லீம் கலவரம் ஆகியன இதற்குத் தக்க உதாரணங்களாகும். 1917 இல் இந்தியாவைப் போன்று ஈழத்தவரை ஒரே தேசிய அணியில் இணைக்க முயன்ற சேர். பொன். அருணாசலம் இதற்கென ஒரு அமைப்பு அவசியமென உணர்ந்து இலங்கைத் தேசியக் காங்கிரசை நிறுவினாலும் கூட, தமிழருக்கு மேற்கு மாகாணத்தில் ஒரு பிரதி நிதித்துவத்தை அளிக்க இதன் தலைவர் ஒப்புதல் அளித்துப் பின் னர் பின்வாங்கியதால் இவர் 1923 இல் இதிலிருந்து விலகித் தமிழ் மகா சபை என்ற ஓர் அமைப்பை 1923 இல் நிறுவினார். இக் காலத்தில் (1924 இல்) அறிமுகமான மானிங் சீர்திருத்தத்தினால் இதுவரை பெரும்பான்மையினருடன் சரிசமமான நிலையில் கணிக் கப்பட்ட தமிழர் இதன்மூலம் தாம் சிறுபான்மையினமாக, பெரும் பான்மையினரால் ஆளப்படும் இனமாகக் கணிக்கப்பட்டுள்ளதை உணரத்தொடங்கினர். 1925இல் சேர். பொன். அருணாசலத் தின் திடீர் மறைவோடு தமிழ் மகாசபையும் அஸ்தமனமானது. 1930இல் அறிமுகமான டொனமூர் சீர்திருத்தங்களும் தமிழ் மக் களுக்கு விமோசனமளிக்காது என்பதைமுன்கூட்டியே அறிந்த சேர், பொன். இராமநாதன் **டொனமூர் சீர்திருத்தங்கள் சிறுபான்மை யோரின் மரண ஒலை" என மனமுடைந்த நிலையிற் கூறினார். இக்கருத்துத் தீர்க்கதரிசனமானதே என்பதை 1935 இல் இச்சீர் திருத் தங்களின் கீழ் உருவாக்கப்பட்ட தனிச் சிங்கள மற்திரி சபை உறுதிப்படுத்தியது. இப் பின்னணியிலேயே லெஸ்லி குணவர்த் தனா கூறுவது போன்று தற்கால ஈழத்து வரலாற்றியல் நெறி களும் வளர்ச்சி பெறத் தொடங்கிய காலகட்டமாகிய 1920 களிற் சிங்கள உணர்வுகள் மேலோங்கிக் காணப்பட்டன.43 தமிழருக் கெதிரான இனவுணர்வுகளோடு வரலாற்றைப் படைக்கும் மரபும் தோன்றி வளரலாயிற்று. இக் காலகட்டத்திலேயே யாழ்ப்பாண வரலாற்று நூல்களின் இரண்டாவது வகுப்பைச் சேர்ந்த நூல்கள் எழுந்தன. - இரண்டாவது வரிசை நூல்கள்
இவ்வரிசையில் இடம் பெறும் இராசநாயக முதலியார் ( 22.10-1870 - 17-1-1940 ), சுவாமி ஞானப்பிரகாசர் (30-8- 1875-22-1-1947) ஆகிய இருவரும் தமிழ்த் தேசியத்தின் தந்தை யாகிய பூரீலபூரீ ஆறுமுக நாவலரவர்கள் இறப்பதற்கு முன் (1879)

XVI
பிறந்தவர்களாவர். வயதிலும் இறப்பிலும் இருவருக்கும் 5-7 ஆண் டுகள் வரையே வேறுபாடு காணப்படுகிறது. எனினும், யாழ்ப் பாண வரலாற்றைப் பொறுத்தமட்டில் இவர்கள் ஆற்றிய பணிகள் இவர்களை இதன் முன்னோடிகளாக்குகிறது என்றால் மிகையா காது. இவர்கள் யாழ்ப்பாண வரலாறு பற்றியும், தமிழர் வரலாறு பற்றியும் மேற் கொண்ட ஆய்வுகள் கிட்டத்தட்ட மூன்று தசாப் தங்களை உள்ளடக்கியவையாகும். இக்காலப்பகுதியில் சிங்கள இனத்தின் வரலாறே இந்நாட்டின் வரலாறு என்ற கோட்பாட் டில் வரலாற்றியல் வளரத் தொடங்கியதோடு தமிழ் மக்கள் அரசியல் ரீதியிற் பல்வேறு நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கப்பட்ட னர். கர்லத்தின் தேவையைப் பூர்த்தி செய்ததோடு இக்கால கட்டத்தில் தமது அறிவுக்கெட்டிய விதத்தில் நிதானத் துடன் தமது வரலாற்றுப் பங்களிப்பைக் காய்தல் உவத்தல் இன்றி ஆற்றிய சிறப்பும் இவர்களுக்குண்டு.
யாழ்ப்பாண வரலாறு பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் ஒரு வர் இவ்விருவரின் பெயரை உச்சரியாது இதனை அணுக முடியா திருப்பதொன்றே இவர்களின் பணிகளுக்குச் சிறந்த எடுகோளாக அமைகிறது. இவ்விருவருள் இராசநாயக முதலியார் அரசாங்க சேவையிற் கடமையாற்றியவர்; சுவாமி ஞானப்பிர காசர் மதகுருவாகப் பணியாற்றியவர். இருவரும் அக்கால ஆங்கிலக் கல்வியின் பயனை நன்கு பெற்றிருந்தாலும் வர லாற்றியலிலே தக்க பயிற்சியோ பல்கலைக்கழக அனுபவமோ இல்லாதவர்கள். கீழைத்தேய ஆய்வுகளிலும், நெறிமுறைகளிலும் விருப்பும் ஈடுபாடும் கொண்ட இவர்கள் தங்களது பெருமுயற்சி யாலும், தொடர்புகளினாலுமே வரலாற்றியல் ஆய்விலே தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் ஆவர். இவர்களின் ஆய்வு நெறி முறைகள் பல்வேறு துறைகளில் இவர்களுக்கிருந்த பரிச்சயத்தை எடுத்தியம்புவனவாகவுள்ளன. முதலாவது வரிசையில் எழுதப் பட்ட நூல்கள் பெருமளவு இலக்கியக் கண்ணோட்டத்திற் காணப் பட இலக்கிய ஆதாரங்களை விமர்சன நோக்கிற் பயன்படுத்திய துடன் தாம் இவற்றிலிருந்து தெளிந்து கொண்ட கருத்தினை உறுதி செய்யத் தொல்லியற் சான்றுகளின் துணையையும் நாடி நின்றது. போற்றத்தக்கது. அதுமட்டுமன்றி அவற்றைத் தாராளமாகத் தமது நூல்களில் பயன்படுத்தியமையும் இவர்க ளுக்குரிய தனிச் சிறப்பாகும். முதலியார் இராசநாயகம் தமிழக அறிஞர்களுடன் கொண்டிருந்த தொடர்புகள் போன்றே சுவாமி ஞானப்பிரகாசரும் தமது வெளிநாட்டுப் பயணங்க ளின் போது உலகின் பல்வேறு நூலகங்களிலுள்ள பிரதிகளைப் பார்ப்பதற்கும் அறிஞர்களோடு கருத்துப் பரிமாறுவதற்கும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தார்.

Page 20
XVII
சேர் போல் பீரிஸ் வடபகுதியில் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு ஒத்த சை நல்கிய முதலியார் இராசநாயகம் றோயல் ஆசிய சங்கத்தில் சேர் போல் பீரிஸ் இது பற்றி ஒரு கட்டுரை வாசித்த போது அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட, ‘நாக தீப" என்பது தமிழ் நூல்கள் கூறும் வடபகுதியிலுள்ள ‘நாகநாடே என எடுத்துக் காட்டவும் தவறவில்லை.44 இதனைத் தொடர்ந்து இதே சங்கத் தில் இவரால் வாசிக்கப்பட்ட “யாழ்ப்பாணத் தமிழ் அரசும் ஆரம்ப கால கிரேக்க எழுத்தாளரும்” என்ற கட்டுரை முக்கியம் பெறு கின்றது.45 இக்காலத்திற்றான் (1922) யாழ்ப்பாணத்தில் முதல் முதலாகத் தமிழ் இலக்கிய மகாநாடு ஒன்று நடை பெற்றது. தமிழக அறிஞர்கள் பலர் இதிற் கலந்து இதனைச் சிறப்பித்தனர்; பாவலர் துரையப்பாபிள்ளை போன்றோரும் இதிற் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தனர். 1926 ஆம் ஆண்டில் இராசநாயக முதலியாரால் வெளியிடப்பட்ட புராதன யாழ்ப்பாணம்" என்ற நூலுக்கு முன்னுரை வழங்கிய சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியரான கிருஷ்ண சுவாமி ஐயங்காரும் இம்மகாநாட்டில் கலந்து கொண்டமை குறிப் பிடத்தக்கது. இந்நூலின் முன்னுரையில் ஏற்கனவே தமக்கு இராச நாயகத்தின் படைப்புகள் சிலவற்றை அறிவதற்கிருந்த வாய்ப்புப் பற்றியும் இவர் குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது. இதே காலத் திற்றான் (1924இல்) யாழ்ப்பாணத்தில் ஆரிய - திராவிட பாஷா ಸ್ಧಿತಿಕೆ சங்கமும், சைவ வித்தியாவிருத்திச் சங்கமும் உதய
B365.
இராசநாயகம் வரலாற்றை எக்கோணத்தில் அணுகினார் என்பதை 1926இல் இவர் வெளியிட்ட புராதன யாழ்ப்பாணம் என்ற நூலின் முன்னுரையில் இவர் முன் வைத்த கருத்துகளும், தமிழில் 1933இல் தற்காலம் வரை உள்ள வரலாற்றை "யாழ்ப் பாண சரித்திரம், என்ற தலைப்பில் வெளியிட்டபோது அதன் முன்னுரையில் இவர் கொடுத்துள்ள கருத்துகளும் கோடிட்டுக் காட்டுகின்றன. புராதன யாழ்ப்பாணம் என்ற நூலின் முன் னுரையிற்பின்வருமாறு அவர் கூறியுள்ளார்.46
“இத்துறையில் சிறந்த சாதனைகளை இளைஞர்களே நிலை நாட்டுவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். இன்று ஈழத்திலுள்ள பழைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் வெறும் பண்டிதர்களாகவே விளங்குகின்றனர். அவர்கள் காய்தல் உவத்தல் இன்றி விடயங்களை அணுக மாட்டார்கள். அறிவை நாடுபவர் கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டியவர்

XX
களாகவும் நேர்மையானவர்களாகவும் இருத்தல் வேண் டும். நாம் மனவருத்தத்துடன் ஒன்றை ஏற்றுக் கொள் ளத்தான் வேண்டும். இப் பண்டிதர்கள் இனப் பெருமை யாலும் தற்பெருமையாலும் தமது நிதானத்தை இழந்து விடுகிறார்கள். சில வேளைகளில் இவை பிரக்ஞை பூர் வமாக நடைபெறாது இருக்கலாம். ஆனால் வெளியே தெரியக்கூடாத இத்தகைய அணுகுமுறையின் விளைவுகள் வெளிப்படையாகவே பெருமளவுக்குத் தெரிகின்றன. இத்தகைய பொறிகளில் விழாது பார்த்துக் கொள்வது இளைஞர்களுக்குச் சுலபமாக இருக்கும். எமது மத்தியில் ஒரு பல்கலைக்கழகம் தோன்றியதும் இளைஞர்கள் எமது வரலாற்றை ஆராய்வதில் நாட்டம் காட்டுவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர்கள் எமது வரலாற்றை ஆராய்ந்து அறிவதற்கு நாட்டம் காட்டுவ தற்கு உந்துதலாக இருக்க வேண்டியது எம்மால் இயன் றளவு உண்மையை அறிவது மட்டுமே."
இந் நூலைத் தொடர்ந்து 1933 இல் வெளிவந்த இவரது யாழ்ப்பாணச் சரித்திரத்தின் முகவுரையில் இதற்கு முன்புள்ள நூல்கள் மாணவர்களுக்குப் பிரயோசனமா+வில்லை என்பதில் இவ ருக்கிருந்த அங்கலாய்ப்புத் தெரிவதை நோக்கும் போது இளஞ் சந்ததியினர் நமது வரலாற்றில் ஈடுபாடு கொள்ள வேண்டியத்ல் இவருக்கிருந்த அக்கறை வெளியாகின்றது. அஃதாவது,47
"மாணவர்களுக்கு உபயோகமற்ற தெனக் கண்டு, பள்ளிக் கூடங்களுக்குப் பிரயோசனமாகும் பொருட்டு, ஒரு யாழ்ப் பாணச் சரித்திரத்தை எழுதத் தொடங்கிய காலையில், முன்னுள்ள சரித்திரங்களுக்கு முரண்படவனேக சங்கதிகள் புதியனவாய் வெளிவந்த படியால், உண்மை சரித்திரம் இஃதெனத் துணிந்து நிறுவப்பட முன், எமக்குகெட்டிய வாராய்ச்சிப் பொருட் பயன்களை உலகினர்க்களித்து, அவைகளைப் பற்றி அன்னவர் கொள்ளும் அபிப்பிராயங் களை யறிந்த பின்னரே, உண்மைச் சரித்திரம் வெளிப் படுத்த வேண்டுமென அவாவி, அவ்வாராய்ச்சிசளைத் திரட்டி, ஒர் ஆராய்ச்சி நூலாக ஆங்கிலத்தில் எழுதிய 'ligtara56ar upript'unt607 b” ( Ancient Jaffna ) 61 Gor', பெயரிட்டு கி. பி. 1926 இல் வெளியிட்டமை, வெளி யிட்டு ஆறு வருடங்கள் சென்றும் எத்துறையிலேனும் மாறு கொண்டு ஐயப்பாடின்றி யொருதலை துணிந் தாரிலர்; மாறு கொண்டோர் மிகச் சிலரே. சரித்திர

Page 21
XX
வாராய்ச்சித்துறையில் நெடிது சென்று தேர்ந்த வண. ஞானப் பிரகாச சுவாமியவர்கள், எமது ஆராய்ச்சி முடிவு களை அதிகமாகத் தழுவியும், சிலவற்றில் மாறு பட்டு h யாழ்ப்பாண வைபவ விமர்சனம் ? என்னும் நூலை 1928 ல் வெளியிட்டனர். **
முதலியார் இராசநாயகம் யாழ்ப்பாண வைபவமாலையின் பிரதிகள் கிட்டாத கால கட்டத்தில் அடிக் குறிப்புகளுடன் அத ஈைப் பாகம் பாகமாக எழுதி வெளியிடும் முயற்சிகளில் ஈடு பட்டிருந்தார். இது இவ்வாறு பாகம் பாகமாக 1939 ஆம் ஆண்டில் இலங்கை வித்தியா சமர்ச்சாரப் பத்திரிகையில் வெளி வந்தது. பின்னர் இந் நூலுக்குரிய ஆங்கில மொழி பெயர்ப்பினையும் சேர்த்து வெளியிடக் கருதி முயற்சிகளில் ஈடுபட்ட போது அப் பணி நிறைவு பெற முன்னர் 1940 இல் மரணமானார்.48
இவற்றை விட இலங்கைச் சரித்திரப் பாதுகாப்புச் சபையின் ( Historical Manuscripts Commission ) Et flip g ši 37# 95 GJITIT 5 இருந்து செயற்பட்ட பெருமையும் இவருக்குண்டு. இச் சபை ஈழத்திலுள்ள பழைய சுவடிகளைத் தேடிப் பாதுகாக்கும் பணிக் காகவே அமைக்கப்பட்டது. இதன் கூட்டங்களுக்கு ஒழுங்காகச் சென்றவர்களின் வரிசையில் முதலியார் இராசநாயகத்தின் பெயர் இச் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் இடம் பெற் றிருந்தமை இவருக்கு இவ்விடயத்திலிருந்த ஈடுபாட்டினை எடுத்துக் காட்டுகின்றது.
இச்சபையின் அங்கத்தவராக இருந்தபோது மன்னார், யாழ்ப் பாணக் கச்சேரிகளுக்கு விஜயம் செய்து அங்கு தக்க முறையில் கவனிப்பாரற்றுக் கிடந்த ஒலைச் சுவடிகளாகவிருந்த டச்சுக்காரர் காலத் தோம்புகள் பற்றியும், அவற்றைப் பாதுகாக்க வேண்டி யதன் அவசியம் பற்றியும் அதற்காக இவர் மேற்கொண்ட நட வடிக்கைகள் பற்றியும் இவ்வறிக்கைகளிற் கூறப்பட்டுள்ளது.49 அதுமட்டுமன்றி அக்காலக் கண்டி மன்னனுக்கும் தென்னிந்திய, ஐரோப்பிய அரசுகளுக்குமிடையே தமிழ் மொழியிலமைந்திருந்த கடிதத் தொடர்புகளை ஆராய்ந்து அவற்றை இவர் மொழி பெயர்த்ததால் இவை தேசியச் சுவடித் திணைக்கள வெளியீடா கப் பின்னர் பிரசுரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்சது.
முதலியார் இராசநாயகத்தின் ஆராய்ச்சியின் நடுநாயகமாக விளங்குவது இவரது ‘புராதன யாழ்ப்பாணம்" என்ற ஆங்கில நூல் என்றால் மிகையாகாது. புராதன யாழ்ப்பாணம் என்ற தூலில் அவர் மேற்கோளாகக் காட்டியுள்ள தமிழ் இலக்கியக்

XXI
குறிப்புகள், சிங்கள இலக்கியச் சான்றுகள், வெளிநாட்டார் குறிப்புகள் ஆகியன இவருக்கு இத்துறையிலிருந்த ஆளுமைக்குச் சிறந்த உரை கல்லாக அமைகின்றன. இவற்றுடன் தொல்லியற் சின்னங்களிலும் கல்வெட்டாய்வு, நாணயவியல் ஆகியவற்றிலும் இவருக்கிருந்த புலமையும் வெளிப்படையாகின்றது. கந்தரோடை யிற் கிடைத்த தொல்லியல் அழிபாடுகளைக் கொண்டு இது புராதன யாழ்ப்பாணத்தின் தலைநகராக கிறிஸ்தாப்தத்திற்கு முன்னரே விளங்கியதென்று கூறியுள்ளதோடு, கதிரைமலை எனத் தமிழ் நூல்கள் கூறும் இடமே கந்தரோடை என இவர் எடுத்துக் காட்டியுள்ளமையும் இன்றும் பொருத்தமான தோர் கருத்தாகவே அமைந்துள்ளது. முதலாவது பராக்கிரமபாகுவின் நயினாதீவுக்கல்வெட்டு, உரும் பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயிற் கல்வெட்டு, ஆரியச் சக்கரவர்த்திகளின் கோட்டகமக் கல் வெட்டு ஆகியனவற்றை தம்மால் இயன்றவாறு வாசித்துப் பதிப் பித்த சிறப்பும் இவருக்குண்டு அதுமட்டுமன்றி யாழ்ப்பாண மாவட்டத்திலும், பிற இடங்களிலு h ஒரு பக்கம் மன்னர் உருவ மும் மறுபக்கம் நந்தியும் சேது என்ற தமிழ் வாசகமும் மட்டும் காணப்பட்டு மன்னரின் பெயர் பொறிக்கப்படாத யாழ்ப்பாண அரசரின் நாணயங்களை வைத்து இவை இம் மன்னரதே என்று முதல் முதலாக இனங் கண்ட பெருமையும் இவருக்குண்டு.50
முதலியார் இராசநாயகத்தை விடச் சுவாமி ஞானப்பிர காசர் வரலாற்றியலிற் சிறப்பான ஆளுமையைப் பெற்றிருந்தது பற்றிப் பத்மநாதன் பின்வருமாறு கூறியிருப்பது அவதானிக்கத் தக்கது. 51
"இலங்கைத் தமிழ் அறிஞர்சள் மத்தியில் பல வழிகளி லும் ஞானப்பிரகாசர் தன்னிகரற்ற அறிவுக் களஞ்சிய மாகத் திகழ்ந்தார். தமிழ் உரைநடை, தமிழ்ப் பாண் டித்தியம் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் இவர் ஆறுமுக நாவலருக்கு அடுத்த படியாகவே இனங்காணக் கூடியவராக விளங்கினார். ஆனால் நாவலரோ எனில் பாரம்பரியத் தமிழ்க் கல்வி முறை வழி வந்தவராவர். ஞானப்பிரகாசரில் பாரம்பரியம், நவீனத்துவம் ஆகிய இரண்டும் சங்கமித்த நிலையை உணர முடிகிறது. ஞானப்பிரகாசரின் சிறப்பான பணி யாதெனில் தமிழ் ஆய்வைப் பொறுத்தமட்டில் அதன் பாரம்பரியம், வரலாறு ஆகிய துறைகளில் முன்னோடி ஆய்வுகளை மேற் கொண்டதேயாகும் முறையான பல்கலைக்கழகக் கல்வி வாசனையோ அல்லது ஆய்வு நெறிகளில் தக்க

Page 22
XXI
பயிற்சியோ இவருக்குக் கிடைக்காவிட்டாலும் கூட, நாளடைவில் தாமrகவே வரலாற்று உணர்வுகளை வளர்த்துக் கொண்டதோடு தற்கால அறிவியல்துறை சம்பந்தமான நெறிமுறைகளிலும் பாண்டித்தியம் பெற் றிருந்தார். ஆசிய, ஐரோப்பியக் கண்டங்களுக்குப் பல தடவைகள் இவர் மேற்கொண்ட பயணங்கள் இவருக்கு இந்நாடுசளிலுள்ள பரந்த அறிஞர்களது தொடர்பினை ஏற்படுத்தியது. இவ்வாறு வெளிநாடுகளில் இவர் மேற் கொண்ட பிரயாணங்களின் போது தன்னுடைய ஆய்வுக் குரிய சான்றாதாரங்களை எச்சந்தர்ப்பத்திலும் சேகரித் துக் கொள்ளத் தவறவில்லை. பல்வேறு மேலைத்தேய கீழைத்தேய மொழிகளில் இவருக்கிருந்த பாண்டித்தியம் இவருக்குரிய தனிச் சொத்தாக அமைந்தது. இதனால் தமிழ், வடமொழி, சிங்களம், போத்துக்கேயம், பிரஞ்சு, ஜேர்மன் மொழிகளில் உள்ள மூலாதாரங்களிலிருந்து சான்றுகளை மிக்க துணிவுடன் இவரால் கையாள முடிந்தது. யாழ்ப்பாணம் பற்றி எழுதிய வரலாற்றாசி ரியர்களிடையே, ஞானப்பிரகாசர் அவர்கள் எல்லோரை யும் விட மிக்க புலமை வாய்ந்திருந்ததோடு அர்ப் பணிப்பு மனப்பான்மையுடன் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். யாழ்ப்பாணம் பற்றிய இவரது ஆய்வு கள் இப்பகுதி மக்கள் மீதும் மண்ணின் மீதும் இவருக் கிருந்த அக்கறையையே வெளிக்காட்டுவனவாய் அமைந் துள்ளன. இதிலுள்ள சிறப்பம்சம் யாதெனில் இவரது ஆய்வில் கடைப்பிடிக்கப்பட்ட நிதானமாகும்."
சுவாமி ஞானப்பிரகாசர் வெகு நிதானத்துடனேயே தமது ஆய்வுகளை மேற் கொண்டிருந்தார் என்பதற்கு 1928 இல் இவர் எழுதிய யாழ்ப்பாண விமர்சனம் என்ற நூலின் முன்னுரையே சான்றாகிறது. 52 அப்போது அவர் கூறியதாவது.
"யாழ்ப்பாணத்துப் பண்டை நாள் வரலாற்றின் கணுள்ள சிக்கல்களையெல்லாம் இந்நூல் அறுத்துவிடும் எனக் கூற அமையாது. எமது ஆராய்ச்சி அறிஞர்களால் மேலும் ஆராயப்பட வேண்டுவதொன்று. எல்லாத்துறை களிலும் முடிந்த முடிபை எடுத்தோதுவதன்று. பலப்பல அருந்துறைசளில் புது ஆராய்ச்சியின் மேல் ஊக்கத்தைக் கிளர்த்தி விடுவதே இந்நூலின் கருத்தா மென அறிக."
ஞானப்பிரகாசர் சிறப்பான ஆளுமையுடைய வரலாற்றாசிரி பராகவும், பன்மொழி வித்தகராகவும், திகழுவதற்கு அவர்

XXIII
தோன்றி வளர்ந்த சூழலும் ஒரு காரணமாக அமைந்தது. இவ ரின் பிறப்பிடம் மானிப்பாயாகும். இது பற்றிக் கைலாசபதி பின் வருமாறு குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.58
"மாணிப்பாயில் தலைமுறை தலைமுறையாகக் கல்வி மேம்பாடும் வேளாண்மை நலமும் மிக்கிருந்த குடும்பச் சூழலிலே பிறந்தவர் சுவாமி ஞானப்பிரகாசர். புரட்டஸ் தாந்தமும் சைவமும் விரவிய குடும்பங்கள் மானிப்பா யில் வாழ்ந்தன. உதயதாரகைப் பத்திராதிபராயிருந்த ஆர்ணல் சதாசிவம்பிள்ளை (1820 - 1896) நாவலர் கோட்டம் ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை (1858 - 1917) ஆகிய இரு தமிழ் அறிஞர்களும் சுவாமிகளின் நெருங் கிய உறவினர்களாவர்”.
சுவாமி ஞானப்பிரகாசரின் தந்தையாராகிய சுவாமிதாத பிள்ளை ஒரு கல்லூரி ஆசிரியராவர். இவர் மானிப்பாயைச் சேர்ந்த சிற்றம்பலம் தங்கமுத்துவை மணந்ததோடு, இவ்விடத்து வேலக் கைப்பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலராகவும் விளங்கினார். சுவாமி ஞானப்பிரகாசருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வைத்தி லிங்கமாகும். எனினும் இவர் பிறந்த அடுத்த வருடத்திலேயே இவரது தந்தையார் இறந்து விட்டார். இதன் பின்னர் இவரது தாயார் அச்சுவேலியைச் சேர்ந்த சந்தியாப்பிள்ளையை மணந்த தைத் தொடர்ந்து அச்சுவேலி சென்று கல்வி வாசனையுடைய தமது சிறியதந்தையின் அரவணைப்பில் வளர்ந்ததோடு சிறிய தற் தையின் மதமாகிய கத்தோலிக்க மதத்தையும் இவர் தழுவ நேர்ந்தது. எனினும், இவரின் நடவடிக்கைகளுக்கு நல்லூரே கள மாக அமைந்ததால் இவர் நல்லூர் ஞானப்பிரகாசர் எனவே அழைக்கப்பட்டார். பண்டைய தமிழ் அரசின் இராசதானியின் பெருமையை எடுத்தோதும் பணி சுவாமி ஞானபிரகாசருக்காகக் காந்திருந்தது போலும்.
ஈழத்துத் தமிழியல் வரலாற்றில் யாழ்ப்பாண அரசின் வர லாறு, தமிழர் சமயம், சமூகம் பற்றிய இவரது ஆய்வுகள் ஒரு மைல்கல்லாக அமைகின்றன என்றால் மிகையாகாது. இவரால் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண வைபவ விமர்சனம்64 அதுவரை யாழ்ப்பாண வரலாறு பற்றி வெளிவந்த நூல்களில் முதன்மை யும் முழுமையும் உடைய நூல் என்பதை மறுப்பதற்கில்லை. இந்நூலில் யாழ்ப்பாண அரசின் வரலாறு விரிவாக ஆராயப் பட்டுள்ளது. இவர் இந்நூலை எழுத முன்பு தமிழில் எழுதப் பட்ட நூல்கள் முழுக்க முழுக்க யாழ்ப்பாண இராச்சிய கால இலக்கிய மூலாதாரங்களை மட்டுமே மையமாக வைத்து எழு

Page 23
ΧΧΙV
தப்பட்டன. ஆனால் இவரோவெனில் இந்நூலில் இவற்றின் தகவல்களையும் பிற இலக்கியச் சான்றுகளினது குறிப்பாகப் போத்துக்கேய ஆவணங்களினதும் தொல்லியற் சான்றுகளினதும் துணை கொண்டு ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே போன்று வையாபாடலின் வசனநூலாகிய வையாவையும் ஞானப் பிரகாசர் பதிப்பித்தார்.53 ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டு ரைகள் யாழ்ப்பாண இராச்சியம் பற்றி எழுதினார். இவற் றுள் “யாழ்ப்பாண வைபவமாலையின் மூலங்கள்"56, யாழ்ப்பாண வரலாற்று மூலங்கள்’57, மறக்கப்பட்ட யாழ்ப்பாண அரசரின் நாணயங்கள்’58 போன்றன குறிப்பிடத்தக்கன. மேலும் "யாழ்ப் பாண அரசர்கள்’59, 'ஈழத்துப் போத்துக்கேயர் ஆட்சிக்காலத்து யாழ்ப்பாண அரசர்கள்"60 போன்ற நூல்களும் வன்னியர் பற்றி இவர் எழுதிய கட்டுரையும், 61 குறிப்பிடத்தக்கன. ஈழத்தின் ஆதிக் குடிகள் தமிழரே62 தமிழர், சிங்களவர்களாக மாறுகின் றார்கள்.68 ஈழத்திலே தமிழராட்சியின் தோற்றம்84 ஆகியனவும், தமிழரின் பூர்வ சரித்திரமும் மயமும்,87 தமிழரின் சாதி உற்பத்தி 66 போன்ற நூல்களும் தமிழரின் வரலாறு, சமூகம் ஆகியனவற்றில் இவருக்கிருந்த ஈடுபாட்டினை எடுத்துக் காட்டுகின்றன.
கத்தோலிக்க திருச்சபை வரலாறு பற்றி இவரெழுதிய ஆக் கங்களும் சிறப்பானவையாகும். இவற்றுட் கத்தோலிக்க திருச் சபையின் ஆரம்ப கால வரலாறு?ே, யாழ்ப்பாணத்தில் கத்தோலிக் கம்8ே போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன. தமிழ் மொழி சம்பந் தமாகவும் ஆய்வுகளை மேற் கொண்டு சிங்களமும் தமிழைப் போன்று திராவிட மொழிக் குடும்பத்தையே சார்ந்தது என்று 1933 இல் ஞானப்பிரகாசர் கூறியதை அக்கால அறிஞர் உலகம் எள்ளி நகையாடினாலும் கடந்த இரு தசாப்தங்களாக ஈழத்தில் நடை பெற்ற தொல்லியல் ஆய்வுகள் ஈழத்தின் ஆதிக் குடிகள் திராவிட மொழிகளையே பேசினர் என்பதை உறுதிப்படுத்தியுள் ளமை ஞானப்பிரகாசரின் ஆராய்ச்சித் திறமையையும் ஆய்வுப் புலமையையும் எடுத்துக் காட்டுகின்றதெனலாம்.69
சுவாமி ஞானப்பிரகாசரின் ஆக்கங்களை மதிப்பீடு செய்த பஸ்தியாம்பிள்ளை பின்வருமாறு அவரை நோக்குவது சிந்திக்கத் தக்கது 70
தற்கால வரலாற்றின் முன்னோடிகளில் ஞானப்பிரகாசர் ஒருவர் என்பது துலாம்பரமாகின்றது. இவரது ஆய்வுகள், மேற்குலகுடன் தொடர்புகளை ஏற்படுத்திய பின்னருள்ள நமது வரலாறு பற்றி நமக்குப் பல புதிய தகவல்களைத்

XXV
தருவது மட்டுமன்றித் தற்கால வரலாற்றாசிரியனுக் கிருக்க வேண்டிய அணுகு முறையினைக் கொண்டும் காணப்படுகின்றன. வரலாற்றுப் பின்னணியில் அறியக் கடினமான பல தகவல்களை இவரது ஆய்வுகள் தந்துத வியுள்ளன. தற்காலத்தைப் பொறுத்த மட்டில் சகல வரலாற்றுண்மைகளையும் அவரால் வெளிக் கொணர முடியாவிட்டாலும் கூட, வரலாற்றாசிரியனுக்கு இருக்க வேண்டிய நேர்மை, பகுத்துணர்வு ஆகிய பண்புகளுடன் தான் புரிந்து கொண்டவற்றை இவர் எழுதினார். ஞானப் பிரகாசரின் ஆய்வுகள் வெளியே அதிகம் தெரியாத அல் லது தெரியாத பல தகவல்களைக் கொண்டு இருந்தன. சான்றுகளை மையமாகக் கொள்ளாத வரலாற்றாசிரி யனின் முயற்சி அத்திவாரமற்ற, பயனற்ற பிரயத்தன மாகும். இவ்வாறே வரலாற்றாசிரியனுடன் இணையாத சான்றுகளும் உயிரற்றனவும் அர்த்தமற்றனவும் ஆகிவிடு கின்றன. இவ்வாறு மதிப்பிடும் போது சுவாமி ஞானப் பிரகாசர் வரலாற்றுத் துறையில் நிபுணத்துவமுடைய ஒருவராவர்ர். தற்கால யாழ்ப்பாணம் மட்டுமன் றித்தற்கால ஈழம் பற்றியதுமான இவரது வெளியீடுகளில் வரலாற்றாசிரியனுக்கும் அவனதுசான்றுகளுக்கும் இடை யிலான தொடர்ச்சியான ஊடாட்டமாகவும், தற்காலம், இறந்தகாலம் ஆகியவற்றுக்கிடையே முடிவுறாத ஒரு சொல்லாடலுமாகவும் அமைந்துள்ளன. அதுதான் வர லாறாகும். தற்கால யாழ்ப்பாணம், தற்கால இலங்கை ஆகிய காலப் பிரிவுகளை உள்ளடக்கிய போத்துக்கேய, டச்சுக்கார சகாப்தங்கள் பற்றிய அவரது ஆய்வுகள் அவரை முதற்றரமான ஆய்வு மாணாக்கனாக அங்கீக ரிக்க வைத்துள்ளன.
ஆய்வுகள் எப்போதும் சரியானவையாகவோ அன் றிப் பெருமளவு பயனுள்ளதாகவோ இருக்க வேண்டிய தவசியமில்லை. இவற்றில் உள்ள தவறுகள் கூடப்பயனுள் ளவையர்கும், மத்தியகால உலக வரைபட வரைஞர்களின் உலகப்படங்கள் பல மோசமான தகவல்களையுடையன வாக உள்ளன. அத்துடன் தவறான தகவல்களும் இவற் றுள் மலிந்துள்ளன. முழு உலகையும் (இன்று) வரைபட மாக்கியவுடன் மேற்கூறியவை பச்சாத்தாபத்துக்குரியன வாக அமையலாம். இருந்தும் மேற்கூறிய வரைபட வரை ஞர்களின் வரை படங்களின்றி பெரும் கண்டு பிடிப் பாளர்கள் புது உலகைக் கண்டுபிடித்திருக்கவே மாட்டார்

Page 24
XXVII
கள், தாங்கள் காணாத உலகு பற்றிய எண்ணக் கருவைத் தமக்குக் கிடைத்த வரையறைக்குட்பட்ட தகவல்களைக் கொண்டு வரை படமாக்கியதாலே தான் சரியான இன் றைய உலகின் வரைபடங்கள் வரையப்பட்டன என்பதை மறுக்க முடியாது. இவ்வாறே ஞானப்பிரகாசரின் ஆரம்ப கால ஆய்வுகள் தற்கால யாழ்ப்பாணம் பற்றிய தரமான ஆய்வுகள் வளருவதற்குக் கால் கோளாக அமைந்திருந் தன. மேலும், ஏனையவரைப் போல் ஞானப்பிரகாசரும் ஒரு தனி நபர் மட்டுமன்றி ஒரு சமூகத் தோற்றப்பாடு மேயாவர். அத்துடன் அவர் தான்சேர்ந்த சமூகத்தின் பிரக்ஞை பூர்வமான அல்லது பிரக்ஞையற்ற ஒரு பிரதி நிதியுமாவர். இத்தகைய அணுக முறையிற்றான் பழைய வரலாற்றுச் சான்றுகளை அணுகினார். ஞானப்பிரகாச ரின் ஆய்வுகள் அக்காலச் சமூகத்தைப் படம் பிடித்துள் ளன. தற்கால யாழ்ப்பாணம், ஈழம் பற்றிய ஆரம்ப கால ஆய்வுகளில் இவரது ஆய்வின் தாக்கம் இன்றும் உணரப் படுகிறது." இவை எல்லாவற்றையும் விடத் தமிழிலும் தரமான முறை யில் ஆய்வு செய்து பல்துறைகிளின் ஆய்வுகளைச் சிறப்பாக இம் மொழியிலும் வெளியிட முடியும் என எடுத்துக் காட்டிய பெரு மையும் இவரையே சாரும். இது பற்றிச் சிவசாமியை மேற்கோள் காட்டி அருமைநாயகம் பின்வருமாறு குறிப்பிடுகிறார் .71
"தமிழ்மொழி தக்க இடத்தினைப் பாடத்திட்டத்திலோ, சமூகத்திலோ பெற்றிராத காலத்திலே சுவாமிகள் தமது தாய் மொழியிலே தமது ஆய்வுகளை எழுதியமை குறிப் பிடற்பாலது. இன்று தென்னித்தியத் தமிழரிலும் பார்க்க ஈழத்துத் தமிழர் ஒரு வகையிலே பெருமைப்படத் தக்கவர்கள். ஆரம்பக்கல்வி தொடக்கம் பல்கலைக்கழகக் கல்வி - ஆராய்ச்சிக் கல்வி வ33ர தமிழ் போதனா மொழி யாக எமது நாட்டிலே விளங்குகிறது. இவ்வகையில் எமது முயற்சிகளின் வெற்றிகள் எவ்வாறாயினும், அவை தென்னிந்தியத் தமிழருக்கும் வழிகாட்டியாகவே அமைந் துள்ளதெனலாம். இதற்கு முன்னோடியாகத் தனிப்பட்ட வகையிலே பெருந்தொண்டாற்றியவர் வரிசையிலே ஞானப்பிரகாசர் பெருமிடம் வகிக்கிறார் என்பதில் ஐய மில்லை. அரசியல், சமூக, சமய வரலாறு பற்றிய நுண்ணிய ஆய்வுகளைத் தர்க்க ரீதியாசத் தமிழில் எழுதிக் காட்டியுள்ளார். தமிழினை ஆராய்ச்சி மொழி யாக நடைமுறையில் எடுத்துக் காட்டியவர்கள் வரிசை யில் இவருக்குக் குறிப்பிடத்தக்க ஓரிடமுண்டு."

XXVII
இச்சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தின் பழமை பற்றி எடுத் துக் காட்டிய சேர் போல் பீரிஸ் இத்தமிழ் இராச்சியம் பற்றித் தமது நூல்களில் ஆராய்ந்துள்ள:மயும், 1944 ஆம் ஆண்டில் “யாழ்ப் பாண இராச்சியம்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றையும் வெளி யிட்டமையும் குறிப்பிடத்தக்கது.72 ஞானப்பிரகாசர் மறைந்து கிட் டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் இப்பகுதி வரலாறு பற்றி ஆராய்வதில் சிலர் அக்கறை காட்டினர் இவர்களில் முதல் தரமானவர் சு. நடேசன் ஆவர். சிறந்த கல்விம னாகிய இவர், வரலாற்றறிவுடைய ஒருவராகவும் அக்காலத்தில் மதிக் கப்பட்டாரி. 1960இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தினாற் பிர சுரிக்கப்பட்ட 'இலங்கை வரலாறு" என்ற தலைப்பிலான நூலில் வெளிவந்த இவரது கட்டுரை தமிழர் வரலாற்றில் இவருக்கிருந்த புலமையையும் ஆளுமையையும் நன்கு எடுத்துக் காட்டுவதாயுள் ளது.73 இதேபோன்று யாழ்ப்பாண வரலாறு பற்றிய ஒரு கண் ணோட்டம்" என்று இவரெழுதிய இன்னொரு ஆங்கிலக் கட்டு ரையும் மகாஜனக் கல்லூரியின் பொன்விழா மலரில் பதிவாகி யுள்ளது.74
இங்கு 1956 இல் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியராகிய கணபதிப்பிள்ளை அவர்கள் தாம் எழுதிய வரலாற்று நாடகமாகிய "சங்கிலி என்ற நூலுக்கு எழுதிய முகவுரை பற்றிக் கூறுவதும் அவசியமாகின்றது. இம் முன்னுரைக்கு "இலங்கை வாழ் தமிழர் வரலாறு’ என்ற தலையங்கம் இடப்பட்டாலும் கூட இது “யாழ்ப்பாண வரலாற் றைக்’ மட்டுமே கூறுவதாக உள்ளது. யாழ்ப்பாண அரசு மறைந்த பின்னருள்ளதான நிகழ்ச்சியை விடுதலைப் போராட்டம்" என்ற உபதலைப்பில் ஆசிரிஜ், ர் இதில் நோக்கியுள்: மை அவதானிக்கத் தக்கது.75
"அரச பரம்பரை ஒழிந்தது. தன்மானம் என்னும் பெரிய தனத்தை இழந்துவிட்டோமே யென்னும் மனப் பாரம் யாழ்ப்பாணத்து மகன் ஒவ்வொருவனது இதயத் தையும் அமுக்கியது. மதித்தற்கரிய மாணிக்கமாகிய சுதந்திரச் செல்வத்தை இழந்து விட்டோமே என்ற கவலை மக்களை வாட்டியது. விடுதலை வேட்கை பொங்கியெழுந்தது. நாடு தொலைந்து பிறன் கைப்பட்ட ஈராண்டுக்கிடையில் ஆறுமுறை புரட்சி வெள்ளம் கான்யாறு போல் சரை புரண்டோடியது. இதனைப் போத்துக்கேய வரலாற்றாசிரியரே கூறிப் போவார்.

Page 25
XXVIII
முதன் முறை கரையார் தலைவன் போத்துக்கேயருக் கெதிராய் படையோடெழும்பினான். நல்லூருக் கருகா மையில் நடந்த போர் ஒன்றில் ஒலி வீரா இவனை முறியடித்தான்.
அடுத்து அரச குமாரன் ஒருவனை யாழ்ப்பாணத்தரச னாக்க விரும்பி, சின்ன மிக்கேல்பிள்ளை என்பவன் தஞ்சைக்குச் சென்று ஆயிரம் போர் வீரரைப் பன்னி ரண்டு தோணிகளில் ஏற்றி வந்து தலைமன்னாரை அடைந்து, அங்கிருந்து போத்துக்கேயரை எதிர்த்தான். ஒலிவீரா இம் முயற்சியையும் தோற்கடித்தான். பின்னர் முதலியார் ஒருவர் நடத்திய விடுதலைப் போரும் தோல்வியடைந்தது. சின்ன மிக்கேல்பிள்ளை தஞ்சை நாயக்கரிடம் திரும்பவுஞ் சென்று யாழ்ப்பான அரசிற் குத் தன்னை அரசனாக்கும்படி வேண்டினான். தஞ்சைப் பேரரசின் கீழ் யாழ்ப்பாணத்தைக் கொண்டுவர ஆண்டு 1620 கார்த்திகைத் திங்கள் முயற்சிகள் தொடங்கின. யாழ்ப்பாணத்தையும் அடுத்துள்ள பகுதிகளையும் கைப் பற்றுவதற்குத் தஞ்சைப் பெரும் படையொன்று வருவி தாக ஒரு செய்தி நல்லூரில்ருந்த ஒலிவீராவின் காதுக் கெட்டியது. அந்தோனியோ த மோத்தா கல்வா? (Antony de Motha Galvao) GT6ồTLIG IGör 3gp Guiršgöh கேயப்படை யொன்று பருத்தித் துறையில் தஞ்சை நாயக்கரின் படையைக் காத்திருந்தது. நாயக்கரின் படை வந்ததும் பெரும்போர் நிகழ்ந்தது. மீண்டும் போத்துக்கேயரால் தமிழர் சேனை முறியடிக்கப்பட்டது. இதுவே இலங்கைத் தமிழரின் தடைசி விடுதலைப் போராட்டம்."
இந்நூலாசிரியர் மேலோட்டமாக யாழ்ப்பாண வரலாற்றை எழுதியது போன்று வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மலையகம் போன்ற பகுதிகளிலுள்ள தமிழரின் வரலாற்றை எழுதுவதற்குரிய தமது அவாவை இம் முன்னுரையிற் தெரிவித் திருந்தும் அது பற்றிய ஆக்கங்கள் பின்னர் வெளிவரவில்லை.
மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியராக இருந்த g. எஸ். நவரத்தினம் ஈழத்துத் தமிழர் வரலாறு பற்றி எழுதியமை4° குறிப்பிடத்தக்கது. முதலியார் இராசநாயகத்தைப் போன்று இவரும் நவாலியைப் பிறப்பிடமாகக் கொண்டவராவர். சு. நடே சன் போன்ற புலமை இவருக்கில்லாது விட்டாலும்கூட ஒரு

XXIX
கல்லூரி ஆசிரியராக இருந்து ஆராய்ச்சி வசதிகள் குறைந்த சூழ லில் இவர் இப்பணியை மேற்கொண்ட மை போற்றத்தக்கது. இவர் யாழ்ப்பாண இராச்சியத்தின் அஸ்தமனம் வரையுள்ள ஈழத்தமிழரின் வரலாற்றை எழுதியுள்ளார்.76 இந்நூலில் ஈழத் தமிழர், ஈழத்தின் ஆதிக் குடிகளே எனக் கூறும் ஆசிரியர் இந் நாட்டின் நாகரிக வளர்ச்சிக்கும் அவர்கள் பங்காற்றினர் என வாதிட்டுள்ளார். சிங்கள, தமிழ்மொழி - பேசும் இரு இனங்களுக் கிடையிலான ஆளுமுரிமைக்கான போட்டி இறுதியாக இரு இனங் களும் மொழி வழி அரசுகளாக வேறுபட்ட பிராந்தியங்களிலே உரிமையுடையனவாக வளர்ச்சி பெற வழி வகுத்தது என்பதை யும் கோடிட்டுக் காட்ட இவர் தவறவில்லை. இந்நூலுக்கு சு. நடேசன் முகவுரை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்நூலாசிரியர் வன்னியர் பற்றியும் ஈழத்து இந்து மதம் பற் றியும் எழுதியுள்ளார்.77 இவ்வாறே, சீவரத்தினம்,78 காட் மன்79 போன்றோர் எழுதிய நூல்களும் இக்காலத் தமிழர், இந்துமதம் பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளன. ராகவனும்80 ஈழத்தமிழர் வரலாறு பற்றிச் சமூகவியற் கண்ணோட்டத்தில் எழுதியுள்ளார். தமிழில் வெளிவந்த நூல்களிற் சிவானந்தன்31, முத்துக்குமாரசாமிப்பிள்ளை82, ஜெசுந்தாதன்83, குணராசா84 ஆகி யோரின் நூல்களும் குறிப்பிடத்தக்கன.
முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன் றோரின் ஆக்கங்களின் ஒரு மதிப்பீடாகவே 1961 இல் பரணவித் தானாவினால் வெளியிடப்பட்ட "வட இலங்கையிலுள்ள ஆரிய இராச்சியம்" என்ற ஆங்கிலக்கட்டுரை அமைந்துள்ளது.85 முறை யான பல்கலைக்கழக வாசனையோ அன்றி வரலாற்றியற் பயிற் சியோ இன்றித் தமது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் 1930 களிலிருந்து தமது பெரு முயற்சியினால் ஈழத்து வரலாற் றிற் பிரமிக்கத்தக்க வகையிற் புலமை பெற்றதோடு ஆங்கில நடையில் முதற்றரமான முறையில் வரலாற்றை எழுதும் கைவண் ணம் படைத்தவராகவும் தம்மை ஆக்கிக் கொண்டார். எனினும், ஆரம்பத்தில் வெகு நிதானமாகவே ஈழத்து வரலாற்றை அணு கிய இவர் நாளடைவிற் சிங்கள தேசியவாதியாக மாறியமையை இவரின் ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய இவரின் அணுகு முறைக்கு உரைகல்லாக அமைவது 1961 இல் வெளி யான மேற்கூறிய கட்டுரையாகும். இதனை மேலும் உறுதி செய்வதாக 1960 இல் இவர் பதிப்பித்த இலங்கை வரலாற்றிலே சு, நடேசனின் கட்டுரைக்கு இவரளித்த தலைப்பும், அபிசி குறிப்பும் அமைந்துள்ளது. அதன் தலைப்பு ‘வடபகுதி இராச் சியம்" என்று மட்டுமே அமைந்துள்ளது. இதே நூலிற் சிங்கள

Page 26
XXX
இராச்சியங்கள் அவற்றின் தலைநகர் கொண்டு அழைக்கப்பட்டு ஆராயப்பட அவ்வாறின்றி வடபகுதியில் இக்காலத்திற் சிறப்பு புடன் விளங்கிய ஒர் இராச்சியத்தை மட்டும் ஏன் "வடபகுதி இராச்சியம்’ என வெறுமனே இந்நூல் அழைத்துள்ளது என்பது விந்தையாகவேயுள்ளது. ஒரு சமயம் இதனுடைய தலைநகரின் பெயரைக் கொண்டு இதனை அழைப்பது இதன் பதிப்பாசிரிய ருக்கு விருப்பமில்லாது இருந்இருக்கலாம். எவ்வாறாயினும் இக் கட்டுரையில் இவர் சில மாற்றங்களைச் செய்திருந்தார் என் பதை இவர் இதற்கு எழுதிய அடிக்குறிப்பிலேயே ஒத்துக் கொண் டிருக்கிறார்.86 இதனால் இக்கட்டுரையின் தலைப்பிற் கூட இவர் மாற்றம் செய்திருக்கலாம் என்றும் ஊகிக்க முடிகிறது. அத்துடன் இக்கட்டுரை வடபகுதியில் ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்தி x ன் காலத்திற்கு முன்னுள்ள வரலாற்றையும் கொண்டிருந்ததல் அப்பகுதி தாம் பதிப்பிக்கும் நூலின் காலப் பிரிவுக்குள் அடங் காததால் அப்பகுதியை இக்கட்டுரையிலிருந்து விலக்கி இருப் பதோடு இக்கட்டுரை சம்பந்தமாகத் தாம் அக் கட்டுரையா சிரியரோடு கலந்துரையாட இருந்ததாகவும், அவர் சுகவீனமுற் றிருந்ததாலும், அதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்காததாலும் இத் தகைய சந்திப்பு நிகழவில்லை எனவும் கூறியுள்ளார். இவரின் இக் கூற்றினை நோக்கும் போது தமது சித்தாந்தத்திற்கு ஏற்ற விதத்தில் வேண்டியவாறு திருத்தங்களைச் செய்தே இதனைப் பிரசுரித்தார் என்பது தெளிவாகின்றது.
1961 இல் வெளியிடப்பட்ட இவரது கட்டுரை கருப்பொரு ளாகப் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருந்தது. இராசநாய கம் போன்றோர் கூறுவது போல வடபகுதியில் (கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்னர்) ஆரியச் சக்கரவர்த்திக ளின் அரசு எழுச்சி பெற முன்னர் தமிழ் அரசு என்ற ஒன்று அங்கு காணப்படவில்லை. அப்பகுதியிற் காணப்படும் தொல்லி யற் சின்னங்கள் நாட்டின் பிறபகுதிகளிற் சிங்கள மக்கள் வாழ்த் தது போன்றே இங்கும் வாழ்ந்ததை எடுத்துக் காட்டுகின்றன . யாழ்ப்பாண அரசின் வருகையோடு சிங்கள மொழியைப் பேசு வோர் யாழ்ப்பாண அரசிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். யாழ்ப்பாண அரச வம்சத்தினை உருவாக்கிய ஆரியச் சக்கரவர்த் திகளும் கலிங்க வம்சத்தினரே. ஆனால் முதலியார் இராசநாய கம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் கூறுவது போல இவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அல்லர். இவர்களின் தாயகம் மலாயாத் தீப கற்பமாகும். இவர்கள் இராமேஸ்வரத் திலுள்ள பிராமணர்களுடன் கொண்ட மணத் தொடர்பால் ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம்

XXX
என்ற சொல் மலாயாத் தீபகற்பத்திலிருந்து வந்த இக்கலிங் கரைக் குறிக்கும் "சாவக" என்ற மூலத்தின் வழியே பிறந்து சிங் கள மொழியில் "யாபா-படுன" என வழங்கப்பட்டது. இச்சிங் களி மூலத்திலிருந்து பிறந்தது தான் யாழ்ப்பாணம் என இன்று தமிழில் வழக்கிலிருக்கும் பதம் என்பதாகும். இவரின் இவ்வா றான வாதப் பிரதிவாதங்களைக் கொண்ட ஆய்வு வெளியீடுக களின் ஒரு மதிப்பீடாக மூன்றாம் வரிசையிலுள்ள நூல்கள் காணப் படுவதால் அவை பற்றி இனி ஆராய்வோம். எனினும் எமது ஆய்வு ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திற்குரியனவாக இருப்ப தால் அக்காலம் பற்றிய செய்திகளுக்கே முக்கியத்துவம் அளித்து அவை பற்றிய ஆக்கங்களை மதிப்பிடுவதே அவசியமாகிறது.
மூன்றாம் வரிசை நூல்கள்
இந்நூல்களை எழுதியவர்கள் வரலாற்றியலிற் பட்டமும் பயிற்சியும் உடையவர்கள். இவர்களில் இந்திரபாலா, பத்மநாதன், குணசிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்திரபாலா சீழ்த்தின் ஆதித்திராவிடக் குடியிருப்புகள் பற்றித் தமது கலா நிதிப்பட்டத்திற்காக ஆய்வை மேற்கொண்டு பட்டமும் பெற் றவர்.87 இவ்வாய்வு ஆரியச்சக்கரவர்த்திகளின் எழுச்சி வரையுள்ள காலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கியதால் 1972 இலே தமி ழில் இவ்வாய்வுகளை உள்ளடக்கி யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார்,88 "யாழ்ப்பாண இராச் சியம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பத்மநாதனின் நூலும் கலாநிதிப்பட்டத்திற்காக ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலம் தொடக்கம் கி.பி. 1450 வரையிலான அதாவது கோட்டை அரசு இவ்வரசின் மீது படை எடுக்கும் காலப்பகுதி வரை உள்ள காலப் பகுதியை உள்ளடக்கியதாகவுள்ளது. எனினும், இவ்விராச் சியத்திற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியை அளிப்பதற்காக யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றத்திற்கு முன்னருள்ள ஈழத் தமிழரின் வரலாறும் இதனுடன் இணைக்கட்பட்டுப் பின்னர் இது பிரசுரிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.89 இவற்றை விட ஆங்கிலத்திலும் தமிழிலும் யாழ்ப்பாண அரசுபற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிய பத்மநாதன் யாழ்ப்பாண அரசனான பரராசசேகரனின் சிதம்பர தர்மம் பற்றிக் கூறும் கள்ளியங் காட்டிற் கிடைத்த இரு செப்பேடுகள் பற்றியும், வன்னியர் பற்றியும், எழுதியுள்ளார்.90 பத்மநாதன் எழுதிய இரு செப் பேடுகளான கள்ளியங்காட்டுச் செப்பேடுகள் ஒரு விரிவான நூலாகப் பின்னர் குணசிங்கத்தினால் வெளியிடப்பட்டது.91

Page 27
XXXIf
ஆராய்ச்சி முடிபுகள் - மதிப்பீடு
கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக யாழ்ப்பாண வர லாறு பற்றிய ஆய்வின் பலனாக இன்று இதனை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகளின் வரலாறு பற்றி நாம் அறிவன வற்றை இங்கே /கோடிட்டுக்காட்டுவது அவசியமாகின்றது இவ்வாரியச் சக்கரவர்த்திகள் தமிழ்நாட்டுப் பாண்டியவம்சத் தினைச் சேர்ந்தவர்கள் எனக் கைலாயமாலை கூற,92 யாழ்ப் பாண வைபவமாலை இவர்களைச் சோழ வம்சத்துடன் இணைத் துள்ளது93. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் கலிங்க வம்சத்துடன் இணைத்துள்ளனர். முதலி யார் இராசநாயகம் சுருக்கமாக இவ்வாரியச் சக்கரவர்த்திகளின் வம்சம், ஆட்சி செய்தகாலம் ஆகியன பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.94
கி. பி. எட்டாம் நூற்றாண்டு தொடக்கம் கலிங்க வரசனாகிய உக்கிரசிங்க்னும் அவன் வழியினரும் சில காலம் தனியரசினராயும், சிலகாலம் சோழவரசுக்கும் பொலன்னறுவையரசுக்குங் கீழடங்கியும், சிங்கை நகரி லரசு புரிந்து வந்தார்கள். இலங்கையிற் செங்கோலோச்சிய மன்னருள் புகழ், வெற்றி, ஆளுகை, குடியோம்பல் முதலிய செங்கோன்மைகளால் ஒப்பாரும் மிக்காருமின்றித் தனி யரசு நடாத்திய பராக்கிரமவாகுவும், அதன்பின் பொலன் னறுவையிலரசு செய்தார் சிலரும் சிங்கை நகரரசர் வம்சத்தினரே. அச்சிங்கை நகரரசர்கள் வேற்றரசர் களால் தாற்றிசையினுந் தாக்கப்பட்டு இடருழந்தா ரெனினும், நானூறு ஆண்டுகளுக்குள் ஆண்மையும் வலி யுஞ் சிறக்க, வசியும் வளனும் பெருக, கடற்படையோடு தரைப்படை வலியுங் கொண்டு, இலங்கை முழுவதும் ஒரு குடைக்கீழ் ஆளும் ஆற்றல் படைத்திருந்தார்கள். அவர்கள் இராமேச்சுரத்துப் பிராமணவரசு குடியிற் சம்பந்தஞ் செய்த பின், உபவிதம் அணிந்து, ஆரியவரசர் என நாமம் புனைந்து, இராமேச்சுரத்தைத் தந்தேயத் தினாளுகைக்குட்படுத்தி, அதனால் "சேதுகாவலன்" எனப் புதுப்பெயர் புனைந்து, விடைக்கொடியுஞ் சேது லாஞ்சனையும் பொறித்து, ஒருவர்பின்னொருவராகப் பரராசசேகரன், செகராசசேகரன் எனச் சிங்காசனப் பெயர்கள் பூண்டு உலகம் போற்ற அரசு செலுத்தி விந்தார்கள்."

ΧΧΧΙΙΙ
முதலியார் இராசநாயகம் யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்தி களின் வம்சம் கி.பி. எட்டாம் நூற்றாண்டிற் கலிங்க தேசத்தி லிருந்து வந்த உக்கிர சிங்கனின் வம்சத்துடன் ஆரம்பமாகிறது எனக் கூறுவதோடு, இவ்வம்சத்தினரே அநுராதபுரத்திலாண்ட அன்னர்களோடும் பின்னர் பொலனறுவையிலாண்ட மன்னர்க ளோடும் திருமணத் தொடர்பு கொண்டிருந்தனரென்றும் இரா மேஸ்வரப் பிராமணரோடு கொண்ட தொடர்பால் ஆரியர் என்ற வம்சப் பெயரைக் கொண்டிருந்தனரென்றும் சக்கரவர்த்திகள் நிலையை இவர்கள் அடைந்ததால் ஆரியச் சக்கரவர்த்திகள் எனப் பெயர் பெற்றனர் என்றும் கூறுவது இன்றைய ஆய்வில் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாக அமையவில்லை.
அதுமட்டுமன்றி ஆரியச்சக்கரவர்த்திகளின் வம்சாவழிப்பட்டி யலிற் குறிப்பிடப்படும் விஜய கூழங்கைச் சக்கரவர்த்தியே மாகனின் (கி.பி. 1215 - 1255) விருதுப் பெயரான விஜயகாலிங்கச் சக்கர வர்த்தியின் திரிபு என்றும் வாதிட்டுள்ளமை இன்று ஏற்கப்பட வில்லை. "காலிங்க' என்பது தமிழ் நூல்களாகிய யாழ்ப்பான வைபவமாலை போன்றனவற்றில் 'கூழங்கை’ என மாற்றப்பட் டுப் பின்னர் இதற்கான விளக்கமாக இவனின் கையொன்று கூழங்கையாக இருந்ததினாற் கூழங்கையன் - கூழங்கை எனத் திரிந்து கூழங்கையாரியன் என்றும், விசய கூழங்கைச் சக்கரவர்த் தியென்றும் இவன்" அழைக்கப்பட்டதை இராசநாயக முதலியார் ஏற்றுக் கொண்டு தவறாக இம்முடிவுக்கு வந்தார் என்றே கொள்ளல் வ்ேண்டும், மாகனின் ஆட்சி வடக்கே அமைந்திருந் தாலும்கூட அவனை ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்ச முதல் மன்னன் எனக்கொள்வது தவறு என்பதை அண்மைக்கால ஆய் வுகள் எடுத்துக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.95 வடக்கே மாகன் ஆட்சி செய்ததனைக் கொட்றிங்றன், சுவாமி ஞானப் பிரகாசர் ஆகியோர் அங்கீகரிக்கின்றனர். அதேநேரத்தில் இவனை உக்கிரசிங்கனாக இவர்கள் இனங் கண்டு கொண்டுள்ளமை ஈழ வரலாற்றுப் போக்குக்கு முரண்பட்ட ஒன்றாகவே காணப்படு கின்றது.98 ” நடேசனோவெனில் பாளி நூல்களில் முக்கியம் பெற்றுள்ள ஜெயபாகுவே மாகனர்ட்சிக்கு முன்னர் யாழ்ப்பா ணத்தை ஆண்டான் எனக் கூறி இவன் மாகனின் இனத்தவன் எனவும் கூறிப் போந்தார்.97 வடபகுதியில் மாகனாட்சியை அங்கீ கரித்துள்ள பரணவித்தானாவோவெனில் பாளி நூல்கள், பாண் டிய சாசனங்கள் ஆகியனவற்றின் சான்றுகள் வடபகுதியில் சாவ கன் நிலை பெற்றதை அங்கீகரித்துள்ளமையால் இச்சாவகன், மாகன் ஆகியோர் இந்தியாவிலன்றி மலாயாப் பிராந்தியத் திலிருந்தே இங்கு வந்தவர்கள் எனக் கூறி ஒரே வம்சத்தவர்க

Page 28
XXXIV
ளாகிய இவர்கள் இராமேஸ்வரப் பகுதிப் பிராமண வம்சத்தன ருடன் செய்து கொண்ட மணத் தொடர்பால் இவ்வாறு ஆரியச் சக்கரவர்த்திகள் எனப் பெயர் பெற்றனர் என்பதற்குக் குவேறோஸ் பாதிரியாரின் குறிப்பினையும் ஆதாரமாகக் காட்டியுள்ளார்.98
வடபகுதியில் மாகன் ஆட்சியையும் சாவகன் ஆட்சியையும் அங்கீகரிக்கும் இந்திரபாலா, பத்மநாதன் ஆகியோர் மாகன் சாவகனைப் போன்று மலாயாத் தீபகற்பத்திலிருந்து வந்தவனோ அன்றி ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தின் முதல் மன்னனோ அன்றி வடபகுதியிலாட்சி செய்த கலிங்க வம்சத்தினர் மணத்தொடர்பின் ளைவாக ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பெயரைப் பெற்றவன் என்றோ கருதவில்லை. மாகனை இந்தியாவிலுள்ள கலிங்க தேசத்தவன் எனக் கொள்ளும் இவர்கள் பொலனறுவையில் மாக னாட்சி நிலை கொண்டிருந்த போது தான் வடக்கே மலாயாத் தீப கற்பத்திலிருந்து வந்த சாவகன் சந்திரபானுவின் ஆட்சி பரந் தது எனக்கூறி, மாகனின் இறப்போடு சந்திரபானு தனியரசனா னான் எனவும் கொள்ளுகின்றனர். அத்துடன் மாகன், சந்திர பானு ஆகியோர் வம்ச ரீதியாகத் தொடர்பற்றவர்கள் என்பதும் இவர்களின் கருத்தாகும் 99 இதனால் யாழ்ப்பாண ஆரியச் சக்கர வர்த்திகளின் அரசு வடக்கே தோன்ற முன்னர் யாழ்ப்பாணத்தில் மாகன் சாவகன் ஆகியோரின் ஆட்சியும், இறுதியில் பதின்மூன் றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சியும் இங்கே ஆரம்பமாகியது என்பது இவர்களினது கருத் தர்கும்.
ஈழத்துத் தமிழ், பாளி, சிங்கள நூல்களையும், தமிழகப் பாண்டியக் கல்வெட்டுகளையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்த பத்மநாதன் ஆரியச் சக்கரவர்த்தி என்ற பெயர் "சக்கரவர்த்தி" என்ற விருதி ைr ஆரியர் என அழைக்கப்பட்ட பிராமணர்கள் தாங்கியதாலேயே ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்பட்டன ரென்றும் இவர்கள் பாண்டியராட்சியில் இராமேஸ்வரப் பகுதி யிற் பாண்டியரின் படைத்தளபதிகளாக விளங்கியதைக் கல்வெட் டுகள் எடுத்துக் காட்டுவதையும் மேற்கோள்காட்டி, பாண்டியரின் ஈழப்படையெடுப்பை முன்னெடுத்துச் சென்ற இவர்கள் தமிழகத் திற் பாண்டியராட்சி வலி குன்றப் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் தனியரசு அமைத்தார்கள் எனவும் கூறுகிறார்.100 இவ்வரசர்களின் பெயர்ப்பட்டியல் யாழ்ப்பாண வைபவமாலையிலுண்டு.
இம் மன்னர்கள் மாறிமாறிச் செகராசசேகரன், பரராசசேக ரன் என்ற சிம்மாசனப் பெயர்களைச் சூடியிருந்தமை தெரிகிறது.

XXXV
இம்மன்னர்களின் ஆட்சி ஆண்டுகளைப் பொறுத்தவரையில் இராச நாயக முதலியாரின் கருத்துக்கள் இன்று ஏற்புடைத்தாக அமையா விட்டாலும் கூட அவர் தரும் மன்னர் பட்டியலைக் கீழே தருகி Qprb. 101
lp rhosử Gìuu ?
விஜய கூழங்கை (சக்கரவர்த்தி)
குலசேகர (சிங்கையாரியன்) குலோத்துங்க (சிங்கையாரியன்) விக்கிரம (சிங்கையாரியன்) வரோதய (ghringapa uirthuair ) லார்த்தாண்ட (சிங்கையாரியன்) குணபூஷண (கிங்கையாரியன்) வரோதய (சிங்கையாரியன்) செயவீர (கிங்கையாரியன்) குணவீர (சிங்கையாரியன்) கனகசூரிய (சிங்கையாரியன்)
செண்பசப் பெருமாள் வரவு
கனககுரிய சிங்கையாரியன் மீண்டும்
ஆட்சிபீடமமர்தல்
சங்கிலி - 1
Lj6ýrme? Lj6š L-rtrh
காசி நயினார்
பெரியபிள்ளை
புவிராஜபண்டாரம்
எதிர்மன்ன சிங்கன் ۔
சங்கிலிகுமாரன்/சங்கிலி 1
sipa Gu
செகராசசேகரன் LurprirafGstaggir செகராசசேகரன் பரராசசேகரன் செகராசசேகரன் பரராசசேகரன் செகராசசேகரன் பரராசசேகரன் செகராசசேகரன் பரராசசேகரன் செகராசசேகரன்
பரராசசேகரன் செகராசசேகரன்
பரராசசேகரன் செகராசசேகரன் பரராசசேகரன் செகராசசேகரன் பரராசசேகரன்
ஒழுங்கான மன்னர் பட்டியலோ அன்றி அவர்களின் ஆட்சி ஆண்டுகள் பற்றிய விவரமோ இல்லாததால் ஒரு மன்னன் ஆட்சியைச் சராசரியாக இருபத்தைந்து ஆண்டுகளாகக் கணித் தும், சிங்கள நூல்கள், கல்வெட்டுகள், போத்துக்கேய ஆவணங் களிலுள்ள இப்பகுதி பற்றிய குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டுமே இம் மன்னர்களின் ஆட்சிக்காலம் பற்றி இன்று கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Page 29
XXXV.
இம்மன்னர்கள் ஆண்ட தலைநகர் பற்றியும் பல்வேறு வகை யான சிந்தனைகள் அறிஞர் மத்தியிலே காணப்படுகின்றன. வல்லிபுரத்திற் கிடைத்துள்ள அழிபாடுகளை மையமாகக்கொண்டு முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் இக்காலத்தில் இப்பகுதி முக்கியம் பெற்ற, துறைமுக வசதிகள் கொண்ட இடமாக விளங்கியதாக எண்ணி யாழ்ப்பான இராச் சியத்தின் முதற்றிலைநகராகிய "சிங்கைநகர் இஃதென்ற முடி புக்கு வந்துள்ளனர். பின்னர் சப்புமால் குமாரயாவின் காலத் திற்றான் நல்லூரும் அதனுடன் இணைந்த யாழ்ப்பாணப் பட்டி னமும் தலைநகராக எழுச்சி பெற்றன என்பதும் இவர்களது வாதமாகும். இவ்வாறு இவர்கள் கருதுவதற்கு மிகப்பழைய தல்ை நகராகச் சிங்கை நகரும் அதன் பின்னர் யாழ்ப்பாணப் பட்டின மும் இறுதியாக நல்லூரும் ஆவணங்களிற் குறிக்கப்பட்டுள்ளமை யும் ஒரு காரணமாகும். இது பற்றி சுவாமி ஞானப்பிரகாசர் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.102
"இம்மதம் எமக்கும் சம்மதம். வல்லிபுர மணற்கும்பி களுள் காற்றுக் காலங்களில் அகப்படும் பழம் பொருட்கள் அங்கு பல விடங்களிற் 'குவிந்து கிடக்கின்ற பூர்வ காலக் கலவோடுகள்", கீச்சுக்கிட்டம் ஆதியனவும்; அங்கி ருந்து கரை மார்க்சமாய்ப் போன பெரும் வீதியின் அடை யாளங்களும் அது ஒர் நாள் விஸ்தார நகராய் விளங் கியது எனக் கரதலமலகமாய்க் காட்டும். அப்பால் ஆரியச் சக்கரவர்த்திகள் தம் செல்வாக்கு நிரம்பிய நாட் களில் பெருங் கப்பற்படையுள்ளோராய்ப் பிரக்கியாதி பெற்றுள்ளமையினால், அம்மரக் கலத்திரள் ஆழியிற் சுலபமாய்ச் சென்று திரும்புவதற்கு அநுகூலமான துறை முகம் உள்ளோராய் இருந்தமை அவசியம். கேகாலைப் பகுதியிலுள்ள கொத்த கமத்திற் கண்டெடுத்த கல்வெட். டும் அன்னோரைப் பொங்கொலிநீர்ச் சிங்கை நகர் ஆரியர்" எனச் சூசிப்பிக்கின்றது. பெருங்கடற் சமீபமும் சிறந்த துறைப் பொலிவும் பொருந்தக் கொண்டது வல்லிபுரமே. அங்கு நற்றுறையுண்டோ என இராசநாயக முதலியார் கொண்ட ஐயுறவு எம்மால் இனிது தீர்க்கப் பட்டது. வல்லிபுரத்திற்கு நேரேயுள்ள கடலோரம் பண்டை நாட் தொட்டுக் குடாக்கரையென்றழைக்கப்படு தலையும், வெருகமுனைக்கும் கொட்டோடைக்கும் இடைப்பட்ட வில் வளைவான அக்கரை ஓர் காலம் மிகச் சேமமான ஒதுங்கு குடாவாய்த் திகழ்ந்தமையையும் கரை யிலேற்பட்ட பழைய வாய்க்காலொன்று கொண்டு போய்

காணப்படும் காலம்,
XXXV.
வீழ்த்திய மணற் குவியலால் அதன் வாயிற் களங்களுண்டு பட்டமையும், பட்ட காலத்திலும் இற்றைக்கும் மரக் கலங்கள் கச்சான் ஒதுக்கை நாடி அவ்வப்போது இக் குடாவில் நிறுத்தப்படுகின்றமையையும் நாம் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டோம். பருத்தித்துறை முகம் பறங்கிக் காரரோடு தான் எழுந்ததென்பது ஒர் ஐதீகம். sais 67 sob só GFísigup39687 (Ponta das Pedras) என்றார்கள். பெத்திறத்துறையே பருத்தித்துறையென வந்ததேயோ?. சிங்கைநகர் வல்லிபுரத்திலிருந்ததெனக் கொள்ளுதல் அமைவுடைத் தாயின் பறங்கிக்காரர் கி.பி. 1590 இல் கொளும் புத்துறையிலிறங்கி நல்லூரைச்சருவிய காலையில் சிங்கை நகரெனும் பெயரோடு ஒர் பெலத்த அரணிரு ததென பாதர் குவேறோஸ் கூறுகின்றமை (Conquista P 367) எவ்வாறென ஓர் ஆசங்கை நிகழும். பூர்வ சிங்கைநகர் கொளும்புத்துறைக்கும் நல்லூருக்கு மிடையிலா மெனக் கொள்ள வேறு சான்றில்லாமை யால், அச்சிங்கை நகர் அழிந்து பட்டு நல்லூர் தலை நகராயினபின், அப்பழைய நகர்ப் பெயரோடு ஒர் அரண் இங்கு விளங்கியதெனக் கொள்ளலாம்."
இக்கருத்துகளையும் பிற சான்றுகளையும் ஆராய்ந்து யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர் பற்றிக் குறிப்புகள்
சான்றுகள் ஆகியவற்றை இந்திரபாலா
பின்வருமாறு நிரைப்படுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது.108
15ஆம் நூற்றாண்டு சிங்கை
ST69th தலைநகர் சான்று 14ஆம் நூற்றாண்டு சிங்கை நகர் கொட்டகமக் கல்வெட்டு
சிங்கை செகராசசேகரமாலை சிங்கை செகராச சேகரம்
பனின் கல்வெட்டுகள்
சிங்கை தகழிண கைலர்சபுராணம் யாழ்ப்பாணாயன்
பட்டினம் திருமாணிக் குழிக்கல்வெட்டு யாழ்ப்பாணாயன்
பட்டினம் திருப்புகழ் unrunt-LIG60T
(யாழ்ப்பாண பட்டினம்) சந்தேஸ் நூல்கள் 16 ஆம் நூற்றாண்டு நல்லூர் போர்த்துக்கீச நூல்கள்
17ஆம் நூற்றாண்டு நல்லூர் கயிலாயமாலை
அரிகேசரிபராக்கிரமபாண்டி

Page 30
XXXVIII
இப்போது ஆராய்ச்சியாளரின் முன்னுள்ள கேள்வி யாதெ னின் சிங்கைநகர், யாழ்ப்பாணம், நல்லூர் ஆகியன ஒரே தலை நகரின் வெவ்வேறு வடிவங்களா அல்லது இவை தனித்தனி இடங்களின் பெயரா என்பதாகும். இராசநாயக முதலியார், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் சிங்க நகரும், நல்லூரும் வெவ்வேறு இடங்களே எனத் திட்டவட்டமாகக் கூறினாலும் பரஷவித்தானா வோவெனில் சிங்களறுரல்களை மேற்கோள் காட்டி இவற்றுள் "யாபாபடுன" எனவரும் குறிப்பு யாழ்ப் பாணத்தைக் குறிப்பதால், அறிஞர் மத்தியில் "சிங்கைநகர்’ என்ற பெயர் வழக்கிலிருக்க, பாமரமக்கள் மத்தியில் "யாழ்ப்பாணம்' என்றபெயர் வழங்கலாயிற்று என்கிறார்.104 இதற்கு முன்னு "ா ரணமாகத் தெற்கே இருந்த கம்பளை நகர் "கங்கா ஸிரி புர" என அறிஞரால் அழைக்கப்பட்டதையும் எடுத்துக் காட்டியுள் ளார். ஆரம்பத்தில் சிங்கைநகர் என்று பெயர் பெற்ற இடமே பின்னர் "நல்லூர் என அழைக்கப்பட்டதென்பது நடேசனின் கருத்தாகும்.105
போத்துக்கேய வரலாற்றாசிரியரான குவேறோஸ் பாதிரி யார் அக்காலத்தில் நல்லூரைத் தவிர வேறொரு நகரம் காணப் படவில்லை எனவும் அது ப்ோத்துக்கேயருடைய நகரமும் அங் காடியுமிருந்த இடத்திலிருந்து "அரை லீக்" (ஏறக்குறைய ஒன்ற ரை மைல்) தூரத்தில் இருந்ததென்று கூறுவதை மேற்கோளாகவும் கொண்டு இந்திரபாலா இம்மூன்று பெயரும் அருகருகே காணப் பட்ட இடங்களுக்கிடப்பட்ட பெயராகும் எனக் கூறுவது பொருத் தமான கருத்தாக அமைகிறது.106 நல்லூர் அரசின் கடற்கரைப் பட்டினமாக யாழ்ப்பாணம் விளங்கியது எனக் கொள்ளலாம். இதன் பாதுகாப்பிற்காகப் பண்ணைத்துறை, கொழும்புத்துறை, கோப்பாய், செம்மணி போன்ற இடங்களில் யாழ்ப்பாண அர சர் அரண்களை அமைத்தனர் எனலாம். இதனாற் கோட்டக மச் சாசனத்திற் காணப்படும் “பொங்கொலிநீர்ச் சிங்கை நகர் என்பது நல்லூர்த் தலைநகரையும் குறித்தது எனலாம். நல்லூ ரைக் கைப்பற்றிய போத்துக்கேயர் இருஆண்டுகளாக அதனைத் தமது நிருவாகத் தலைநகராகக் கொண்டிருந்தனர். பின்னர் பண்ணைத்துறையின் முக்கியத்துவத்தினையுணர்ந்து கோட் டையை அதில் கட்டத் தற்கால யாழ்ப்பாண நகரம் எழுச்சி பெற்றது எனலாம். எனினும் தற்கால யாழ்ப்பாண நகரம் கூட ஆரியச் சக்கரவர்த்திகளின் தலைநகர்ப் பகுதியிலிருந்தே எழுச்சி பெற்றது எனக் கொண்டால் மிகையாகாது.
தமிழ் நூல்களாகிய யாழ்ப்பாண வைபவமாலை, கைலாய மாலை போன்றனவற்றுள் நல்லூரில் அரசிருக்கையை ஆரியச் சக்கரவர்த்திகள் அமைத்தது பற்றிய குறிப்புகள் காணப்பட்

XXXIX
டாலும் கூட ஆரியச்சக்கரவர்த்திகளின் தலைநகர் பற்றி விரி வான தகவல்களை இவைகளோ அன்றிப் போத்துக்கேய ஆவ ணங்களோ தரவில்லை எனலாம். சிங்கள சந்தேஸய நூலாகிய கோகில சந்தேஸயத்திற் காணப்படும் குறிப்புக்கூட ஒரு வகையிற் கவித்துவ நோக்கிற் கூறப்பட்டுள்ளதைப் பின்வரும் அடிகள் எடுத் துக் காட்டுகின்றன.107
*யாழ்ப்பாண பட்டினத்தில் அரச கட்டிடங்கள் பல நிரைகளாக அமைந்துள்ளன. இக்கட்டிடங்களில் பொன் னாலான கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. அத்து டன் இக்கட்டிடங்கள் விலை மதிப்பற்ற இரத்தினக் கற்கள் ஆகியவை இணைந்து ஆக்கப்பட்டமையால் இவை எங்கும் பிரகாசம் பொருந்தியும் விளங்குகின் றன. இதனால் இவை தரும் ஒளி, அழகு ஆகியன குபேரனுடைய அழகா புரியோடு ஒப்பிடத்தக்கவை."
தலைநகர்களுக்குச் சூடப்பட்ட பெயர்கள் பற்றியும் அவற் றின் தோற்றம் பற்றியும் காணப்படும் கருத்து வேறுபாடுகள் பற்றி இங்கே குறிப்பிடுதலும் அவசியமாகின்றது. ஆரியச்சக்கர வர்த்திகளின் ஆட்சி வடபகுதியில் ஏற்பட முன்னர் இங்கு மாக னாட்சி நடைபெற்ற தென்பதை ஏற்கும் இந்திரபாலா, பத்ம நாதன் ஆகியோர் "சிங்கை நகர் என்பது இந்தியாவிலுள்ள கவிங்க நாட்டில் உள்ள "சிகபுர" என்பதன் திரிபே எனக்கூறி இப்பெயரும் தலைநகரும் மாகனால் உருவாக்கப்பட்டன எனக் கூறி யுள்ளனர். பரணவித்தானாவோ எனில் மலாயாத் தீபகற்பத்தி லிருந்தே இப்பெயர் ஈழத்தை அடைந்தது என வாதிட்டுள்ளார்.108 ஆனால் வடபகுதியை விடப் பொலனறுவைப்பகுதியிலேயே கூடிய காலம் மாகனின் ஆட்சி நிலைத்திருந்தும் இதுவரை அப்பகுதி யில் மாகனது பெயரை நினைவு கூரும் எத்தகைய இடப் பெயரோ தொல்வியற் சின்னங்களோ காணப்படாது இருக்க யாழ்ப்பாணக் குடாநாட்டுத் தலைநகர் மட்டும் மாகனால் பெயரிடப்பட்டது என்பது ஏற்க முடியாதென வாதிட்டு மாகன் ஆட்சி குடாநாட் டிலன்றிப் பெருநிலப் பரப்பாகிய வன்னியிலேதான் நிலை கொண் டிருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது:108 சிங்கைநகர் என்ற பெயர் கூட மாகனுக்கு முன்னரே ஈழத்தை அடைந்த தென்றும், பராந்தகன் காலத்திலே தமிழகத்தில் "சிங்கபுரம்" என்ற பெயர் காணப்பட்டதென்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.110
கலிங்க நாட்டுச் சிங்கபுரவோடு சிங்கநகரை இணைப்பது என்ற கருத்து அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வுகளின் பெறுபேறாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய தொன்றா

Page 31
XL
கவே காணப்படுகிறது. "சிங்கபுர' (சிம் கபுர/சீகபுர) என்ற இடப் பெயர் கலிங்க நாட்டுக்கு மட்டும் உரியதல்ல. வடமேற்கு இந் தியாவில் "சிம்கடர' (சீகோர்) என்ற இடமும், இதன் இன்னோர் வடிவமாகிய "சிங்கூர்’ என்ற இடம் கிழக்கிந்தியாவிலும் விஜய னது ஐதீகங்களிற் குறிக்கப்படும் இடங்களாக இனங்காணப்பட் டுங்கூட411 விஜயனின் ஐதீகத்துடனே ஈழத்து ஆதிக்குடியேற்றம் தொடங்குகிறதென்ற நம்பிக்கை நிலை கொண்டிருக்கும் ஈழத்தின் தென்பகுதியில் இப்பெயர் ஏன் நிலை கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாகவே உள்ளது. விஜயன் பற்றிய ஐதீகம் போன்றே இப் பெயரின் ஐதீகத்தன்மையும் இதற்குரிய காரணமாகவிருக்கலாம். அப்படியாயின் வடபகுதியில் மாகனோடு இதனைத் தொடர்பு படுத்துதலையும் ஒர் ஐதீகமாகவே கொள்ள வேண்டியுள்ளது. வடபகுதியில் கி.பி. 8ஆம், 9ஆம், 10ஆம் நூற்றாண்டுகளில் சோழச் செல்வாக்குஏற்பட்டதை உறுதிப்படுத்தும் மாருதப்புர வல்லியின் ஐதீகம், பராந்தகன், உத்தம சோழன் ஆகியோர் காலப்படை எடுப்புகள், அண்மையில் பூநகரிப் பகுதியிற் கண்டு பிடிக்கப்பட்ட முற்காலச் சோழக்கலை மரபுக்குரிய சிவதேவால யம் ஆகியன2 ஈழம் முதலாம் இராஜேந்திரனால் சோழப் பேரரசின் ஒரு மாகாணமாக (ஒன்பதாவது மாகாணமாக - மும் முடிச்சோழ மண்டலமாக) ஆக்கப்பட முன்னரே சோழச் செல் வாக்கு இங்குநிலைகொண்டதை எடுத்துக் காட்டுகின்றன. இக் கருத்தினை உறுதிப்படுத்துவதாக அமைவது தான் கோட்டையிற் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் இராஜேந்திரனின் காலக் கல்வெட் டில் வரும் ‘நல்லூர்" என்ற பெயராகும்.118 நல்லூர் என்ற பெயர் சோழர் காலத்திற் செல்வாக்குள்ள பெயராக விளங்கி யது. அது போலச் "சிங்கை" என்ற பெயரின் தோற்றமும் இக் காலத்திற் குரியதாகவிருக்கலாம். வருங்கால ஆய்வுகள் இதனை மேலும் உறுதிப்படுத்தலாம்.
யாழ்ப்பாணம் என்ற சொல்லின் மூலம் பற்றியும் அறிஞரி டையே கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. இப்பெயரை விளக்கவே யாழ்பாடி கதை எழுந்தது எனக் கூறும் ஞானப்பிர காகர் சிங்களச் சொல்லாகிய "யாபா படுணவின்' திரிபே தமிழ் யாழ்ப்பாணம் எனக் கூறியுள்ளார்.14 சாவக பட்டினமே யாவக பட்டினம் எனத் திரிந்தது என வாதிடும் பரணவித்தானா சிங்களத்தில் இது யாபா படுணவாக மாறியதென்றும், தமிழ் வடிவமாகிய "யாழ்ப்பாணம்’ இதன் திரிபே என்றும் கூறுகிறார்.115 ஆனால் யாழ்ப்பாணம் சிங்கள வடிவமாகிய யாபா படுணவுக்கு முந்தியே ஆவணங்களில் குறிப்பிடப்படுவதாலும் பாணன் பற் றிய ஐதீகத்தில் “யாழும் இணைத்துக் கூறப்படுவதாலும் தமிழ்

XLI
வடிவமாகிய யாழ்ப்பாணமே இவ்வாறு சிங்கள மொழியில் "யாபாபடுன" என வழங்கலாயிற்று எனக் கொள்வதிலே தவ நில்லை. யாழ் வாசித்த பாணனுக்குப் பரிசாகக்கிடைத்த பிர தேசமானதால் இது "யாழ்ப்பாணம்" என அழைக்கப்பட்டது என்று தமிழ் நூல்கள் தரும் விளக்கத்தினோடு இணைந்த ஒரு கருத்தே *யாழ்க்கொடி”. யாழ்ப்பாண மன்னரது கொடி என்ப தாகும். ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இவ்வரசர் களின் சிறப்புப் பற்றிக் கூறும் எந்தவொரு தமிழ் நூலிலும் காணப்படாவிட்டாலும் கூட கலிங்கத்துப் பரணியிற் காணப் படும் பல்வகைக் கொடிகளில் வீணைக்கொடியும் ஒன்றாகக் கூறப் படுவதால் இது யாழ்ப்பாணத்து அரசர்களது கொடியையே குறித்தது எனக் கருதப்பட்டது. ஆனால் இந்திரபாலா16 வீணைக் கொடிச் சிங்களவர் எனச் சோழக் கல்வெட்டுகளில் காணப் படும் குறிப்பை இதனுடன் இணைத்துப்பார்த்து இது சிங்கள அரசர்க்குரிய குறிப்பென இனங் கண்டுள்ளார். இது முதலாம் பராக்கிரமபாகுவிற்கு முன்னர் இப்பெயரைத் தாங்கி நின்ற சிங் களச் சிற்றரசனையோ அல்லது இம்மன்னனின் பல்வகைக் கொடி களிலொன்றையோ குறித்திருக்கலாம் எனஇவர் கூறியுள்ள கருத்து ஏற்புடைத்தாகவுள்ளது. ஏனெனில் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திற்குரிய இலக்கிய ஆதாரங்களில் அவர்களின் கொடியாக நந்தி விளங்கியதைச் செகராசசேகரமாலையின் சிறப்புப்பாரயித் தில்117
*அடற்கரிமூ வாயிரத்தோ டெழுநூறு
பாவலருக் களித்த கோவும் விடைக்கொடியுஞ் சேதுவுநீள் கண்டிகளொன்
பதும்பொறித்து மிகைத்த கோவும் வடக்கெழுவா டைக்குமிளந் தென்றலுக்குந்
தன்குலப்பேர் வழங்கு கோவும் கடக்கலுழி யத்திதனை யிரவலர்தங்கட்
களித்த - கருணைக் கோவும்.
என மேற்கண்டவாறு இடம் பெறும் குறிப்பும், தக்திை கைலாச புராணத்தின் நூற்சிறப்புப் பாயிரத்தில்,118 இடபவான் கொடி யெழுதிய பெருமான்" என்ற குறிப்பும், கைலாயமால்ை யின்119 அண்டருலக நிமிர்ந்தாடும் பரிசுடைத்தாய் கொண்ட விடை காட்டுங் கொடியினான்’ என்ற குறிப்பும் உறுதிப்படுத் துகின்றன.
i
பூர்வீக இடமாகிய பல புண்ணிய ஷேத்திரங்கள் நிறைந்த இராமேஸ்வரப் பகுதியிலுள்ள சேதுக்கரையிலிருந்து இவரிகள் ஈழத்திற்கு வந்ததால் தமது நாணயங்களில் மன்னரின்

Page 32
XLI
உருவத்தோடு, சமய நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் அரசின் கின்னமாகிய எருதோடும் பூர்வீக இடமாகிய சேதுக்கரையை நினைவு கூரும் "சேது" என்ற வாசகத்தினையும் பொறிக்க இவர்கள் தவறவில்லை. இதனால் இவை சேது நாணயங்கள் என அழைக்கப்பட்டன. பொதுவாக இவற்றின் முன்புறத்தில் மன்ன னின் உருவமும், பின்புறத்தில் கம்பீரமாகப் படுத்திருக்கும் எரு தும் அதற்கு மேற் பிறைச் சந்திரனும் எருதின் கீழ் "சேது" என்ற வாசகமும் காணப்படுகின்றன. இந்நாணயங்களின் தோற் றத்தினைப் பற்றி இந்திரபாலா420 கூறுகையில் இவர்களுக்கு முன்னர் இப்பகுதியில் நிலை கொண்டிருந்த கலிங்கமன்னரின் நர்ணயுங்களே, இத்தகைய நாணயங்களை இவர்கள் வெளியிடு வதற்கு முன்னுதாரணமாக இருந்தன எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்காதாரமாக இப்பகுதியில் எந்தவொரு கலிங்க, மன்னனது நாணயமும் கிடைக்காவிட்டாலும் கூட, பதவியாவிற் கிடைத்த ஒரு வெண்கல முத்திரையிலுள்ள சின்னங்களைக் காட்டியுள்ளார். இம் முத்திரையின் முன்பக்கத்தில் படுத்திருக்கும் எருதும் இதன், இருபக்கமும் குத்துவிளக்குகளும், மேலே பிறைச்சந்திரன், சங்கு, சாமரை ஆகியனவும் காணப்படுகின்றன (படம்-52). இத்தகைய சின்னங்கள் கலிங்க. தேசத்தில் ஆட்சி செய்த கீழைக்கங்க, வம்சத் தவூரின் பட்டையங்களிலும், முத்திரைகளிலும் காணப்படுவதால் பதவியா முத்திரை ஈழத்தில் ஆட்சிசெய்த கலிங்கருக்குரியதே எனக்கொண்டு யாழ்ப்பாணத்திலும் மாகனின் ஆட்சி நிலை கொண்டிருந்ததால் அவனே இச் சின்னங்களைப் பயன்படுத்தப் பின்வந்த ஆரியச் சக்கரவர்த்திகள் இவற்றைத் தமது நாணயங் களிற் சின்னங்களாகப் பொறித்தனர் எனவும். கருதுகிறார்.
இத்தகைய கருத்தை ஏற்பதிற் பல சிக்கல்கள் உள. முதலா வதாக வடபகுதியிற் கலிங்க: :மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் இற்றைவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இரண்டா வதாக இந்திரபாலா மேற்கோளாகக் காட்டும் "பதவியா முத் திரை கூடக் கலிங்க வம்சத்திற்குரியதென்று திட்டவட்டமாக எடுத்துக் காட்டும் குறிப்புகள் இதில் இல்லை. முன்றாவதாக தந்தி, *குத்து விளக்கு, சாமரை, சங்குபோன்றன பொதுவாகவே இந்து வம்சங்கள் வெளியிட்ட நாணயங்களிற் காணப்படுவதும் மரபு. ஆனால் ஆரம்பத்தில் ஆரியச்சக்கரவர்த்திகளினால் வெளி யிடப்பட்ட நாணயங்கள் தோற்ற அமைப்பிற் சோழப் பேரரசரால் வெளியிடப்பட்ட நாணயங்களை ஒத்தேயுள்ளன என்பதை இராச நாயகமும்,2 அங்கீரித்துள்ளதுள்ளதால் இவற்றிற் காணப்படும் சின்னங்களும்,தமிழக நாணயங்களிலிருந்தே ஆரியச் சக்கரவர்த்தி கனாற் பெறப்பட்டன எனத் கொள்ள. இடமளிக்கிறது.ஆரியச்

XLIII
சக்கரவர்த்திகளின் பூர்வீக இடமாகிய பாண்டியதர்ட்டில் எருற்ை நாணயங்களில் ஆதியிற் பயன்படுத்தப்பட்டதற்கான தடங்ங்கள் உள. பாண்டிய வம்சத்தின் மிகப்பழைய நாணயங்களில் சுருதே காணப்படுகின்றது.122 இதனைத் தொடர்ந்தே 'மீன்? அவர் களது சின்னமாகியது. முதலாவது 1 பாண்டியப் பேரரசு வெளி யிட்ட நாணயங்களிலும் படுத்திருக்கும் எருதின் உருவம் உண்டு. பல்லவரின் கொடியும் இடபக் கொடியே. அவர்க்ளின் இலட்சனை யாக எருது விளங்கியதை இராசநாயகமும்,128 நாகசுவாமி24பும் எடுத்துக் காட்டியுள்ளனர். நாகசுவாமி வெளியிட்ட 'தமிழ் நாணயங்கள்" என்ற நூலிற் பல்லவரின் முத்திரையிற் படுத்திருக் கும் எருதின் உருவம் காணப்படுவதை எடுத்துக் காட்டியுள்ளது தேரக்கற்பாலது.125 (படம் - 53). சோழப்பேரரசர் விெளியிட்ட நாணயங்சளிலும், பின்வந்த தாயக்க வம்சத்தவர்கள் வெளியிட்ட நாணயங்களிலும் அவற்றை அலங்கரிக்கும் ஒரு சின்னமாக எருதும் காணப்படுகிறது.128 இதனால் இத்தகைய நீண்ட தொரு வரலாற்றுப் பாரம்பரியத்தினையுடைய எருதை, தமிழக அரச வம்சங்கள் பயன்படுத்திய இச்சின்னத்தை, த்மிழகத்தி விருந்து வந்த ஆரியச் சக்கரவர்த்திகள் பயன்படுத்தின்ர் எனக் கொள்வதே பொருத்தமுடைய கருத்தர்க அமைகிறது வடபகுதி வரலாற்றிலே பல்லவ - பாண்டிய - சோழ வம்சங்களின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இது பற்றி இன்னும் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் பலவுண்டு. இதனால் மிகமிகச் சொற்ப காலத்தில் மட்டுமே வடபகுதியில் ஆட்சி செய்ததாக நம்பப்படும் மாகனின் நாணயங் வின் சின்னங்களிலிருந்தன்றி தமது பூர்வீக இடத்தில் வழக்கிலிருந்த நாணயங்களின் சின்னங்களிலிருந்தே தமது நாணத்திற்குரிய சின்னங்களை ஆரியச் சக்கரவர்த்திகள் தெரிந்தனர் எனக் கொள்ளுவதே சால்புடையதாகும், எருது, நாண பங்களில் மட்டுமன்றி, இராச்சியத்தின் கொடியின் சின்னமாகவும், முத்திரைகளின் இலட்சனையாகவும் இவர்களாற் பயன்படுத்தப்
• gdسیا۔ 11
ஆரியச் சக்கரவர்த்திகளின் நாணயங்கள் எவற்றிலாவது மன்னர்களின் பெயர் காணப்படவில்லை என்பது பொதுவான கருத்தாகும். ஆனால் மகாதேவன்.127 "யாழ்ப்பாணத்து அரிய நாணயங்கன்" என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் ஈழத்து மாதோட்டப் பகுதியிற் கண்டெடுக்கப்பட்ட செப்பு நாணயங்கள் பற்றிக் குறிப்பிட்டு (படம் - 54). இவை ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திற்குரியன என்கிறார். இவற்றில் முதலா வது நாணயம் வட்ட வடிவிலானது. 0.8". விட்டத்தினைக்

Page 33
XLV
கொண்டது. இதன் எடை 35 கிரையின் ஆகும். இவற்றின் முன்பக்கத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் நாணயங்களிற் காணப் படுவது போன்று படுத்திருக்கும் எருதும் பிறைச்சந்திரனும் உள.
இவற்றின் இருமருங்கிலும் தடித்த ஒவ்வொரு கோடுகள் உள. கீழே மூன்று கோடுகள் உள. இருமருங்கிலும், உள்ள தனித் தனியான கோடுகள் வாள், அங்குசம் ஆகியனவற்றையும் கீழுள்ள கோடுகள் மத்தளத்தையும் எடுத்துக் காட்டுவதாக இவர் கூறி யுள்ளார். இதன் மறுபுறத்திலே தடித்த நாகரி எழுத்தில் இரு வரிகளிற் புள்ளிகளாலான வட்டத்திற்குள் "சிறீ ராஜ சேகர " என்ற வாசகமுண்டு ஆரியச் சக்கரவர்த்திக்குரிய கலிங்க வம்சத் தொடர்பு பற்றி நம்பும் மகாதேவன் இத்தகைய நாகரி வடி வம்கூட அப்பிரதேசத்திற்குரியதென்று கூறுவதன் மூலம் ஆரியச் சக்கரவர்த்திகளின் நாணயங்களின் கலிங்கத் தொடர்பினை உறுதிப்படுத்த முனைந்துள்ளார். ஆனால் நாகரி வடிவத்தினை மட்டும் கொண்டு இவர் இதனைக் கலிங்கரோடு இணைப்பது பொருத்தமற்றதாகவே காணப்படுகிறது. இக்காலத்தில் தமி ழகத்து நர்ணயங்களில் மட்டுமன்றி ஈழத்து நாணயங்களிலும் நாகரி வரிவடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளமையால் இதனைக் கலிங்க வம்சத்தோடு மட்டும் இணைப்பது பொருத்தமற்ற கருத்தாகவே அமைகிறது.
இக்கருத்தினை அரண் செய்வதாக இவர் எடுத்துக் காட்டும் இரண்டாவது நாணயம் அமைந்துள்ளது. இதன் முன் பக்கத் திற் படுத்திருக்கும் நந்தியும் பின் பக்கத்தில் இரட்டை மீனும் சித்திரிக்கப்பட்டுள்ளன. இது ஆரியச்சக்கரவர்த்திகள் தமது மேலாளராகப் பாண்டியரை அங்கீகரித்துள்ளமையை எடுத்துக் காட்டுவதாக மகாதேவன் கூறுவது பொருத்தமாகவுள்ளது. இத் நாணயங்கள் ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகளின் வெளியீடு களாக இருப்பதாலும் அவர்கள் ஈழத்தின் மீது பாண்டிய அர சின் படைத்தளபதிகளாக வந்து, அவர்களின் பிரதி நிதிகளாகச் செயற்பட்டு, பாண்டிய அரசு வலிகுன்றிய காலத்தில் தனியரசர் களாகத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டதே தற்போது நில வும்கருத்தாக அமைவதாலும் மகாதேவனின் இக்கருத்து ஏற்புடை யதாகிறது. இதனையே "பாண்டி மழவன்" ஆரியச் சக்கரவர்த்தி களின் முதல்வோனைக் கூட்டி வந்து முடிசூட்டியதாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. மகாதேவன் கூறும் மூன்றாவது நாண யம் அளவில் சிறியது. 04' விட்டத்தினையுடையது. இதன் , முன் பக்கத்தில் இருக்கும் மன்னனின் உருவமும் நாகரி எழுத் தில் ‘ராஜராஜ’ என்ற வாசகமும் பின் பக்கத்தில் ஆரியச் சக்க

XLV
ாவர்த்திகள் பட்டாபிஷேகத்தின் போது வழக்கமாகக் குடும் விருதுகளான "செகராசசேகரன்’, ‘பரராசசேகரன்' ஆகியனவற் றுள், செகராசசேகரன்" என்ற பெயர் இடம் பெற்றுள்ளதாக மகாதேவன் இனங்கண்டுள்ளார். இரு வரிகளில் செகராசசேகரன் என்பது பொறிக்கப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டும் மகாதேவன் முதல் நாணய வகையிற் காணப்படும் "சிறீ ராஜ சேகர" என்ற நாகரி வரிவடிவத்திற்கும் தமிழ் வடிவமான இச் செகராச சேகரனுக்கும் உள்ள தொடர்பையும் எடுத்துக் காட்டி யுள்ளார், ஆனால் பரராசசேகரன்" என்பதன் மாற்று வடிவ மாக "ராஜசேகர" என்பதும் காணப்பட்டிருக்கலாம். எவ்வாறா யினம், மன்னர்களது பெயர்களோ அன்றி அவர்கள் குடியிருந்த சிம்மாசனப் பெயர்களோ ஆரியச் சச்கரவர்த்திகளின் நாணயங் களில் இல்லை என்ற கருத்து மறு பரிசீலனைக்குரியது என் பதை மகாதேவனின் கட்டுரை கோடிட்டுக் காட்டினாலும்கூட வருங்க்ால ஆய்வுகளே இவை பற்றி மேலும் பல விபரமான தகவல்களைத் தரமுடியும்,
இதனால் கங்கை நாடன்", "கங்கையாரியன்" போன்ற ஆரியச் சக்சரவர்த்திகளின் விருதுகளைக் கங்க வம்சத்துடனும், கங்கைப் பகுதியிலிருந்து இவர்கள் வந்தனரென்ற ஐதீகத்துடனும் இணைத் துப்பார்ப்பதற்குப் பதிலாக, இக் கால அரசியலிலும் சமயத்திலும் முக்கியம் பெற்றிருந்த கங்கை நதியின் மீது இவர்கள் கொண்ட ஈடுபாட்டாலேயே இத்தகைய ஐதீகங்கள் எழுந்தன என்ற கோணத்தில் நோக்குவதும் பலனுடைத்தாகும். இவ்வாறே பாண்டி நாட்டைச் சேர்ந்த இவர்களது பிராமணகுலத் தொடர்புகளும் ஆராய்தற்பாலன.
வரலாற்று நினைவலைகள்
யாழ்ப்பாண அரசு மறைந்து கிட்டத்தட்ட நான்கு நூற் றாண்டுகள் ஆயினும் நமது ந7 டு சுதந்திரம் பெற்ற காலகட்டத் தில் தமிழரின் நலன்கள் பாதிக்கப்பட்ட போது தமிழரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இணைப்பாட்சியில் சுயாட்சி அந்தஸ்துடைய ஒரு 'தமிழரசு” அவசியமென்றும், அதனை அடைவதற்கு அகிலஇலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற ஒர் அமைப்பு நாடு சுதந்திரமடைந்த அடுத்த ஆண்டிலே உரு வாகிவிட்டதும் வரலாறாகும். இவ்வமைப்பே எழுபதுகளில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுடன் இணைந்து தமிழர் விடுத லைக் கூட்டணியானது. இவ்வமைப்பு ஆரம்ப காலத்திலிருந்தே யாழ்ப்பாண அரசின் பாரம்பரியத்திற் கொண்டிருந்த ஈடுபாடு

Page 34
XLVI
பற்றி இதன் நடவடிக்கைகளும் வெளியீடுகளும் எடுத்துக் காட் டுகின்றன. இவ்வமைப்பு உருவாகிய காலகட்டத்தில் யாழ்ப்பாண அரசின் தலைநகரான நல்லூர், அதன் கொடி, சின்னம் என்ப வற்றை எவ்வாறு மதித்தனர் என்பது பற்றி அ. அமிர்தலிங் கம் தியாக வரலாறு" - "இலட்சியப்பாதை’ என்ற கட்டுரையிற் பின்வருமாறு கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.128
* இணைப்பாட்சியின் கீழ் தமிழ் இனத்தின் உரிமையைப் பெறுவதே எமக்குள்ள ஒரே வழி என்று திரு .செல்வ நாயகம் அவர்கள் பிரசாரம் செய்யத் தொடங்கினார். இந்த இயக்கத்தின் கால்கோள் விழா 13 -2 -1949 அன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் முன்றலில், பூgலபூரீ துரைச்சாமிக்குருக்கள் அவர்கள் ஆசி கூறித் திரு. செல்வ நாயகம் அவர்களைத் தலைமை வகிக்கும்படி அழைக்க ஆரம்பமாயிற்று, கோப்பாய்ப் பிரதிநிதி திரு. கு. வன்னிய சிங்கம் அவர்களும் மூதவை உறுப்பினர் டாக்டர் இ.மு.வி. நாகநாதன் அவர்களும் பேசிய இக்கூட்டத்தில் இளைஞர் களின் சார்ப்பில் பேசும் வாய்ப்பு, அப்போது ஓர் சட்ட மாணவனாக இருந்த எனக்குக் கிடைத்தது. அன்றிலி ருந்து தமிழ் மக்களின் அரசியலில் ஒர் புதிய சிந்தனை - ஈழத்தமிழன் ஒர் தனித் தேசிய இனம்; அவனுக்கு ஓர் தனிப் பிரதேசம் உண்டு; அதை அவன் ஆள வேண்டும்; அதன் பொருளாதாரத்தை விருத்தி செய்து தமிழன் வாழ முடியும்; தென்னிலங்கையை நம்பி வாழமுடியாது; வாழத் தேவையுமில்லை; இப்புதுமையான கருத்துக்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பட்டி தொட்டிகளிலும் பட்டி னங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கின.
சங்கிலி மன்னனின் ஆட்சி 1619 ஆம் ஆண்டு அழிக்கப் பட்டபோது இறக்கப்பட்ட நந்திக்கொடி, 3-9-49ல் -330 ஆண்டுகளின் பின் மீண்டும் நல்லூர் சங்கிலித் தோப்பில் உயர்த்தப்பட்டது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்து நல்லூர் கைலாசபிள்ளை யார் கோவில் வீதிக்குச் சென்றனர். வாலிபர்களின் கைகளில் நந்திக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன."
இதே கட்டுரையில் யாழ்ப்பாண அரசின் பெருமை பற்றியும் பின் வருமாறு கூறப்படுகிறது 129

2XY,
*சரித்திரத்திற்கு முற்பட்ட காலத் தொடக்கம், இலங் கையில் தமிழன் வாழ்ந்தான் என்பது - நடுவு நிலையில் நின்று . இந்நாட்டின் வரலாற்றை ஆராய்ந்தோர் எல் லோரும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும். காலத்துக்குக் காலம், சிங்கள மன்னரும் தமிழ் மன்னரும் இந்நாட்டை ஆண்டனர். எனினும், பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியர் இந்நாட்டைக் கைப்பற்றும்வரை, வட இலங் கையில் ஓர் நிலையான தமிழ் அரசும்; கிழக்கிலங்கை உட்பட வடகீழ் பிரதேசத்தில் தமிழ் வன்னிய குறுநில மன்னரின் ஆட்சியும் நிலவின. 1619 ஆம் ஆண்டு போர்த் துக்கேயர் வட இலங்கைத் தமிழ் அரசைக் கைப்பற்றிய போதும், அவர்களுக்கோ அடுத்து வந்த ஒல்லாந்தருக்கோ அடங்க மறுத்து, கைலை வன்னிபன், பண்டார வன்னியன் போன்ற குறுநில மன்னர் தமிழ் ஆட்சியைக் காத்து நின் றனர். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஆங்கில ஆட்சியே வன்னியர் ஆட்சியையும் அழித்து இலங்கை முழுவதையும் கைப்பற்றியதோடு, 1833ஆம் ஆண்டு முழு நாட்டையும் ஒரே நிருவாகத்தின் கீழ்க் கொண்டு வந்தது. தமிழ் இனத்தின் சுயாதீனமும் தனிப் பிரதேசமும் ஐக்கிய இலங்கை என்ற ஒரே அமைப்பின் கீழ்ப்பறிக்கப்பட்டன.”
தமிழரணக் கட்சியின்-ஆரம்பக் கூட்டத்தின் தலைமையுரை யில் அதன்தலைவர் எஸ். ஜே. வி.செல்வநாயகம் பின்வருமாறு கூறியுள்னமையும் அவதானிக்கத்தக்கது.130
*16ஆம் நூற்றாண்டிலே ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக இந்நாட்டு மக்களே தங்களுக்கென அரசாங்கங்களை அமைத்திருந்தனர். ஆயின், யாங்கள்
ஒரு விஷயத்தை மாத்திரம் ஊன்றிப் பரிசீலனை செய்தல் வ்ேண்டும்.அதாவது, போத்துக்கேயர் இலங்கைக்கு வரு வதற்குமுன் இங்குவசித்த மக்கள் பல நூற்றாண்டுகளாகச் சிங்களம் பேசும் இனம், தமிழ் பேசும் இனம் என இரு த்ேசிய இனங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். விஜயன் காலந் தொடங்கிப் பல நூற்றாண்டுகளாகச் சிங் களம் பேசும் தேசிய இனத்தைப்பற்றி மாத்திரம் பேசப்படு கிறது.இவர்களைச் சில காலங்களில் தமிழ் மன்னர்களும் அரசுடிரிந்தார்கள். எனவே, தமிழ் மக்கள் அவர்களிடையே எப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருந்தார்கள் என்பது புலனாகின்றது. ஆயினும், அது சிங்களத் தேசிய இனமும் சிங்கள அரசாங்கமுமேயாகும். பூமிகாத்திர சம்பந்தமான

Page 35
XLVII
காரணங்களாலும் வேறுபல நியாயங்களாலும் இலங்கை யின் வடபகுதிகளில் வாழ்ந்த மக்கள் நெடுங்காலமாகத் தமிழர்களாகவே திகழ்ந்திருத்தல் வேண்டும். அதனால், பெரும்பாலும் தமிழ் மக்களையே கொண்ட வட பகுதி களைத் தென்பகுதியிலிருந்த சிங்கள இராச்சியங்கள் ட்சிபுரிவது வரவரக் கடினமாக இருந்திருத்தல் வேண் டும். இறுதியாக, இயற்கையாயமைந்த ஒரு பரிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. 9ஆம், 10ஆம் நூற்றாண்டள விலே, வடபகுதித் தமிழ்ப் பிரதேசங்கள் பிரிந்து தனியர சாயின. இலங்கையின் தென்பகுதி, சில வேளைகளில் 2, 3 இராச்சியங்களாகப் பிரிந்திருந்தாலும் சிங்களப் பிரதேசமர்கவே இருப்பதாயிற்று.
இச்சந்தர்ப்பத்தில் தமிழரின் பாரம்பரிய தாயகக் கோட் பாட்டை வளர்த்தெடுத்தவர்களாக எஸ். ஜே வி. செல்வநாய கத்தையும்131 அவரது சகாக்களையும் பிரபல வரலாற்றாசிரிய ராகிய கே. எம். டி. சில்வா குறிப்பிடுவது நினைவு கூரற்பாலது. இப்பின்னணியிலேயே தமிழரின் ஆட்சியுரிமை பற்றி 1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி பண்ணாகத்திற் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது மகாநாடு பின்வருமாறு தீர்மானம் எடுத்தது.132
"1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி பண்ணாகத்தில் கூடிய தமிழர் கூட்டணியின் முதலாவது மாநில மாநாடு;
தனது உன்னதமான தாய்மொழியாலும், தம் மதங்களினாலும், தமது சிறப்புப்பெற்ற கலாச்சார பாரம்பரியங்களாலும், ஐரோப்பியப் படையெடுப்பாள ரின் ஆயுத பலத்தினால் வெற்றி கொள்ளப்படும் வரை lo) நூற்றாண்டுகளாக ஒரு பிரத்தியேகமான பிரதேசத் தில் தனி அரசாகச் சுதந்திர வாழ்வு நடாத்திய வர லாற்றாலும், தமது பிரதேசத்தில் ஒரு தனி இனமாக வாழ்ந்து தம்மைத்தாமே ஆளும் உள்ள உறுதியாலும், இலங்கை வாழ் தமிழ்மக்கள் சிங்களவரிலிருந்து வேறு பட்ட ஒர் தனித் தேசிய இனமென்று இத்தால் பிர் கடனப்படுத்துகின்றது."
பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகிய தனித்தமிழீழத் தீர்மானத்தைத் துண்டுப்பிரசுரமாக விநியோகித்து மக்களை அர சுக்கெதிராகக் கிளர்ச்சி செய்யத்தூண்டினர் என்பதை 'இராஜத் துரோகம்" என அரசு கணித்து இத் தீர்மானத்தை விநியோகித்த அ. அமிர்தலிங்கம், வ. ந. நவரெத்தினம், ச. பொ. இரத்தினம்,

XLIX
க. துரைரத்தினம் ஆகியோர் மீதும் வழக்குத் தொடர்ந்தபோது ஈழத் தமிழரின் இறைமை போத்துக்கேயர் சங்கிலி மன்னனைத் தோற்கடித்த போது போத்துக்கேயரிடம் சென்றதென்றும், பின் னர் சுதந்திர இலங்கையில் அவர்கள் வசமே வந்தடைந்தது என் றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.133
1977 இல் சிங்கள - தமிழ் இனக்கலவரத்தினை விசாரிக்க ஏற் படுத்தப் பட்ட சான்சோனி விசாரணைக் குழு முன்னரும் தமிழ ரின் பாரம்பரியத்தாயகக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டாலும்,134 1982 இல் கோட்டை இராசதானியை நினைவு கூரும் வண்ணம் அமைக்கப்பட்ட பாராளுமன்றத் திறப்பு விழாவில் எதிர்க் கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம் ஆற்றிய உரை வரலாற்று முக்கியம் வாய்ந்ததாக அமைகின்றது.185
** இன்று கொழும்பிலிருந்து கோட்டே பூரீ ஜயவர்த்தன புரத்திற்குத் தலைநகர் மாற்றப்படுகின்ற இந்த நிகழ்ச்சி, சிங்கள இனத்தின் பண்டைய பெருமையை மீண்டும் புதுப் பித்து ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துகின்ற நிகழ்ச்சி யாகக் கூறப்படுகிறது. உண்மையில் கோட்டே இராச்சிய காலத்தில் தான் சிங்கள இலக்கியம் அதி உன்னதமான வளர்ச்சியைப் பெற்றது என்பதை வரலாற்றை அறிந்த வர்கள் ஒப்புக் கொள்ளுவார்கள். சிங்கள மக்கள் தமது பரம்பரைப் பெருமை பெற்ற ஒரு தலைநகரில் தம் பழம் பெருமையை மீண்டும் மறுமலர்ச்சி அடையச் செய்யக் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியதைத் தமிழ் பேசும் மக்கள் எவ்விதத்திலும் ஆட்சேபிக்கவில்லை; அதை வர வேற்கிறார்கள். *" வாழு, வாழ விடு ** என்ற ஒரு கொள்கையிலே நாம் நம்பிக்கையுடையவர்கள். ஆனால், எம்மை ஓர் அடிமை இனமாக இரண்டாந்தரப் பிரசை களாக ஆக்கும் எந்த அமைப்பையும் எதிர்ப்போம். அதை எதிர்த்துப் போராடுவோம் என்ற உறுதிபூண்டவர்கள் நாம் என்பதை இவ்விடத்திலே கூறிவைக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம். - - - - -
கொழும்பு தலைநகராக இருந்த கால ஆரம்பத்தில் இலங்கை மக்கள் அனைவருமே அந்நிய ஏகாதிபத்தியங் களின் அடிமைகளாக இருந்தார்கள். அதன்பின்பு படிப் படியாகச் சிங்கள மக்களுடைய கைக்கு அரசியல் அதி காரம் மாறி 1948 ஆம் ஆண்டு அவர்களுடைய ஆட்சி அதிகாரம் பூரணத்துவம் டொற்றது. தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரையிலே அந்த நிலைமை

Page 36
L
இன்னும் ஏற்படவில்லை எஜமானர்களை மாற்றிக் கொண்ட ஒர் அடிமை இனத்தின் நிலையில் இன்றும் தாம் வாழ்வதா சுத் தமிழ் மக்கள் உணர்கின்றார்கள். இதை வலியுறுத்திக் கூறுவதுபோல 1948 ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட ஒரு சில மாதங் களுக்கிடையில் இலங்கைப் பாராளுமன்றத்திலே நிறை வேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டங்கள் இந்நாட்டில் வாழுகின்ற 10 இலட்சம் தமிழ் மக்களை நாடற்றவர் களாசவும் வாக்குரிமை அற்றவர்களாகவும் ஆக்கின. ஏனைய தமிழ் பேசும் மக்களைச் சந்தேகப் பிரசைகளாக, தமது குடியுரிமையை நிருபிக்க வேண்டிய நிலைக்கு உள் ளாக்கின. எட்டு ஆண்டுகளுக்குப் பின் சிங்களம் தனி உத்தியோக மொழியாக ஆட்சிப்பீடத்தில் அமர்த்தப்பட் டது. தமிழ் பேசும் மக்கள் வெளியில் விடப்பட்டார்கள். அரசியலமைப்புக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தங்களி னால் பெளத்த மதம் ஏறத்தாழ அரசாங்க மதம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இந்நாட்டில் வாழுகின்ற இந்து, முஸ்லிம், கிறிஸ்த்தவ மக்கள் தாழ்வுற்ற மக்கள் என்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டார்கன். இந்தத் தாக் கத்தினால், இந்த விதமான நடவடிக்கைகளுக்கெதிராக தமிழ் பேசும் மக்கள் சில கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினர். முதலில், மறைந்த தலைவர் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களுடைய தலைமையின் கீழ் சமப லப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதன் பின்பு தலைவர் திரு. எஸ். ஜே வி. செல்வநாயகம் அவர்களுடைய தலைமை யிலே ஓர் இணைப்பாட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இறுதியாக, அவையெல்லாவற்றையும் நிராகரித்து, புறக்கணிக்கப்பட்ட சூழ் நிலையில் தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையை அங்கீகரித்து அவர்கள் சுதந் திரம் பெற்ற மக்களாகத் தமது சொந்த நாட்டில் வாழும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த இலங்கைத் தீவினுடைய வரலாற்றிலே கோட்டே அரசின் காலம் விசேட முக்கியத்துவம் வாய்ந் தது. கோட்டே என்ற பெயரே அங்கு அழகக்கோனார் என்ற ஒரு தமிழ் மகன் கட்டிய கோட்டையின் பெய ரையே தாங்கி நிற்கிறது; ஒரு தமிழ்ச் சொல்லையே தாங்கி நிற்கிறது.

LI
கோட்டையில் அரசு அமைக்கப்பட்ட அந்தக் காலத் தில் இலங்கையில் மூன்று துரசுகள் நிலவின. கோட்டே இராச்சியத்தை விட வேறும் இரண்டு அரசுகள் இங்கே இருந்திருக்கின்றன ஆரம்பத்தில் கம்பளையைத் தலை நகராகக் கொண்டு பின்பு கண்டிக்கு மாற்றப்பட்ட ஒரு சிங்கள அரசும் வடக்கே நல்லூரைத் தலைநகரா கக் கொண்ட ஒரு தமிழ் அரசும் இலங்கையில் விளங் கின என்பது வரலாற்றில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒர் 26ðsT6Nuo Fußuỳ gối) GarGrif?) för “ “ A Historv of Sri Lanka' என்ற ஒரு வரலாற்று நூலில் பேராசிரியர் கே. எம். டி. சில்வா, 84ஆம் பக்கத்திற் பின்வருமாறு கூறு கிறார்: *14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிங்கள மக்களுடைய நிலை மி ஷம் வீழ்ச்சியடைந்திருந்தது. கம்பளை மன்னர்களுடைய ஆணை றுஹ"ணையிலும், மேற்குக் கடற்கரை ஓரத்திலும் செல்லுபடியாக இருந் தது போலத் தோற்றினாலும் ஆரிபச் சக்கரவர்த்தியின் கீழ் யாழ்ப்பாண அரசுதான் இந்தத் தீவில் மிகப்பலம் வாய்ந்த அரசாக இருந்தது." இது நான்கூறும் கூற்றல்ல. பல்கலைக்கழகச் சரித்திரப் பேராசிரியர் கே. எம். டி. சில்வா அவர்கள் எழுதியிருப்பதைத் தான் நரின் கூறுகி றேன். அன்றியும் தலைநகரை கோட்டேக்கு மாற்ற வேண்டிய தேவைக்கு அவர் கூறுகிற காரணம் மிகவும் ஆச்சரிய மானதாக இருக்கிறது அந்த நூலின் 88 ஆம் பக்கத்திலே 'தலைநகர் மீண்டும் ஒருமுறை மாற்றப்பட் டது. இந்தத் தடவை மலைப் பகுதியிலிருந்து மேற்குக் கரையோரத்துக்கு, கொழும்புக்குச் சமீபத்தில் நிஸங்க அழகக்கோன் ஜயவர்த்தனபுர என்ற கோட்டையைக் கட்டிய இடத்துக்கு மாற்றப்பட்டது. மீண்டும் இப்படி மாற்றப்பட்டதற்கான காரணம் முக்கியமாகப் பாது காப்பு நோக்கந்தான். மேற்குக் கடற்கரை ஓரத்தை, அங்குள்ள கறுவாத் தோட்டங்களிற் கண் வைக்கத் தொடங்கிய தமிழ் இராச்சியத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டுத்தான் கோட்டேக்கு இந்தத் தலைநகரம் மாற்றப்பட்டது” என்று பேராசிரியர் கிங்ஸ்லி டி. சில்வா கூறுகிறார்.
இந்த மூன்று அரசுகளும் தம் ஆதிக்கத்தில் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்டன. கோட்டே இராச்சியத்தில் இருந்து சண்பகப் பெருமாள் என்ற இளவரசன் - "சப்புமல் குமரா" என்ற பெயரைத் தாங்கியவன் - யாழ்ப்பாண

Page 37
L
அரசை வெற்றி கொண்ட வரலாற்றையும் 6ஆவது பராக் கிரமபாகுவின் ஆட்சியின் கீழ் இருபது ஆண்டுகள் யாழ்ப் பாண அரசு கோட்டே அரசின் கீழ் இருந்ததையும் அதி உத்தம ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த ஆதிக் கம் இருபது ஆண்டுகள் தான் நிலைத்தது. அதன்பின் யாழ்ப்பாண அரசு மீண்டும் சு சந்திரம் பெற்றது. 1 19 ஆம் ஆண்டு வரையும் கோட்டே அரசு போர்த்துக்கேய ஆட்சிக்குக் கீழ்ப்படிந்ததன் பின்பும்- ஒரு சுதந்திர அர சாக மிளிர்ந்தது. இது வரலாற்று உண்மை. இந்த மூன்று அரசுகளின் ஒன்றின் தலைநகராக விளங்கிய கோட்டே, முன்பு பெற்றிருந்த பெருமையையும் சிறப்பையும் மீண் டும்பெற ஆரம்பித்து விட்டது. இதையொட்டிச் சிங்கள மக்கள் பெருமைப்படுகிறார்கள். நாமும் மகிழ்ச்சியடை கிறோம். இறுதியில் வீழ்ச்சியடைந்த தலைநகராகிய கண்டி, அதனுடைய முக்கியத்துவத்தையும் சிறப்பையும் பாதுகாத்து வைத்திருக்கிறது. ஆனால், வடக்கே நல் லூரில் விளங்கிய இராஜதானி- 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17 ஆம் நூற்றாண்டு வரைக்கும் ஒர் இராச் சியத்தின் தலைநகராக இருந்த இராஜதானி - முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு நிலையில் இருக்கிறது. இந்த நிலையைத் தமது அடிமைத்தனத்தின் அறிகுறியாக - தாம் இன்னும் உரிமை பெறாத மக்களாக இருக்கி றோம் என்பதை எடுத்துக் காட்டுவதாக தமிழ் மக்கள் கருதினால் யாரும் அதைப் பற்றி ஆச்சரியப்பட முடி யாது. நல்லூரிலிருந்து கடைசியாக ஆண்ட தமிழ் மன் னன் சங்கிலியினுடைய இந்த இராஜதானியைப் பாது காத்து அதைப் புனரமைக்க வேண்டும் என இச்சந்தர்ப் பத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
அதி உத்தம ஜனாதிபதி அவர்களே, தங்களுடைய அர சாங்கம் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் மக்கள் கைக்கு ஒரளவு அதிகாரத்தைக் கெர்டுத்து அதிகாரத் தைப் பரவலாக்க அச் சபைகளை மாவட்டம் தோறும் நிறுவியிருக்கின்றது. எனவே, யாழ்ப்பாண மாவட்ட அபி விருத்திச் சபைக்கு இந்த நல்லூர் இராஜதானியைப் பாதுகாத்துப் புனரமைக்கும் அதிகாரத்தை, வாய்ப்பை வழங்க வேண்டும். சிங்கள மக்களின் கலாசாரப் பெருமை யைப் பாதுகாத்து அதைப் பேணும் ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் இந்நேரத்தில் அதே காலத்தில் சிறப்புற்றி ருந்த தமிழ்க் கலாசாரமும் புத்துயிரளிக்கப்பட்டுப் பேணப்பட வேண்டுமென்று கோருவதை எவரும் நீதி யற்றது என்று கூற மாட்டார்கள்.

LIII
கோட்டே அரசு காலத்தில் இரண்டு தேசிய இனங் களும் சுதந்திரம்பெற்ற இனங்களாக விளங்கின. இரண்டு மொழிகளும் சிறப்பாக வளர்ச்சியடைந்து விளங்கின. எல்லாச் சமயங்களும், சிறப்பாக பெளத்த மதமும் இந்து மதமும், பேணிப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. கோட்டேயில் உருவாகும் இந்தப் புதிய சகாப்தம் அந்தக் கோட்டே அரசு காலத்திற் கைக்கொள்ளப்பட்ட அதே புனிதமான கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டும் சகாப்தமாக மலர வேண்டுமென்று விரும்புகின்றேன். சமத்துவம், சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும். நாம் நண்பர்களாகச் சக வாழ்வு வாழ்வதற்கு ஒரு வழியைக் காண்போம் அந்த வழி சமத்துவம், சுதந்திரம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேதான் அமைய முடியும் என்பதை இந்தப் புதிய பாராளுமன் றத்தில நான் கூறிவைக்க விரும்புகிறேன். நான் கூறிய கருத்துக்கள் எவராலும் தவறாசப் புரியப்படக் கூடாது என்பதற்காக ஆங்கிலத்தில் சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன்.”
1983இன் சிங்கள - தமிழ் இனக்கலவரம் நம்நாட்டு வர லாற்றில் ஒர் புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறித் தது. இதனைத்தொடர்ந்து புதிதாகக் கொண்டு வரப்பட்ட அரசியற்றிட்டத்தின் ஆறாவது திருத்தத்தின் மூலம் தமிழ்ப் பாரா ளுமன்ற உறுப்பினர்களுக்குக், குறிப்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்குப் பாராளுமன்றக் கதவு அடைக்கப்பட்டது ஈழத் தமிழர் பிரச்சினை சர்வதேச பரிமாணத்தை அடையத் தொடங்கியது. போராட்டத்தின் வடிவமும் மாறத் தொடங்கியது. இளைஞர் இயக்கங்கள் சுதந்திர தாயகக் கோட்பாட்டினை இறுகப் பிடித்துக் கொண்டன. இந்தியாவும் தனது புவிசார் நலன்கள் சம்பந்தப்பட்ட வகையில் இனப் பிரச்சினையில் அக்கறை காட்டத் தொடங்கியது. 1985இல் திம்பு மகாநாட்டில் தமிழ் அமைப்பு களால் முன் வைக்கப்பட்ட, தமிழ்த் தேசிய இனம், மரபு வழித் தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகியன 1949இல் எஸ். ஜே. வி செல்வநாயகத்தினால் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து வைத்த போது உரைக்கப்பட்ட அம்சங்களாயினும் இளைஞர் அமைப்புகளின் பங்களிப்போடு இக்கோட்பாடு மேலும் வலுப் பெற்று உரம் பெற்றது. இதன் பெறுபேறுதான் 1987இல் ஏற்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தமாகும்.

Page 38
LV
இவ்வொப்பந்தத்திற்கும் இதற்கு முன்னர் சுதந்திரத்தின் பின்னர் இனப்பிரச்சினை கூர்மையடைந்த கால கட்டத்திற் சிங் கள தமிழ்த் தலைவர்களுக்கிடையே கைச்சாத்திடப்பட்ட ஒப் பந்தங்களுக்குமிடையே பெரிய வேறுபாடு உண்டு. மேற் கூறப் பட்ட ஒப்பந்தங்கள் முறையே 1957இல் கைச்சாத்தான பண்டார நாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம், 1965இல் கைச்சாத்தான டட்லிசேனநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகும். இவை இரண்டும் வட - கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம் பரிய பிரதேசமென அங்கீகரித்தாலும் கூடச் செயலாக்கம் பெற வில்லை. ஆனால் இந்திய - இலங்கை உடன்பாடோவெனில் (ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம்) இருநாட்டு அரசுகள்  ைச் சாத்திட்ட ஒப்பந்தமாகும். ஒன்றின் அங்கீகாரமின்றி மற்றைய தால் இதனைக் கிழித்தெறிய முடியாதவாறு வலிமை பெற்றி ருந்த ஒப்பந்தம் இஃதாகும்.138 செயலாக்கம் பெறுவதற்கான இரு அரசுகளின் ஒத்துழைப்போடு பல முக்கிய படிமுறைகளையும், ஷரத்துகளையும் கொண்டிருந்தது. இதன் செயலாக்கப்படிகளாக இடைக்கால அரசு, தேர்தல் மூலம் மாகாண அரசு ஆகியன அங்கீகரிக்கப்பட்டிருந்தன. முதன் முதலாகத் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களாக வட, கிழக்கு மாகாணங்கள் அங்கீகரிக்கப்பட்டு (தற்காலிகமாக) இணைக்கப்பட்டு, இவற்றின் பெயர்களும் மாற் றப்பட்டு, வட - கிழக்கு மாகாணமென உருமாற்றம் பெற்றது. முதலமைச்சரின் நிர்வாகப் பொறுப்பைத் தமிழர் ஒருவர் ஏற்று நடாத்தும் வாய்ப்பையும் அளித்தது. தெமள பட்டினம் (தமிழ் இராச்சியம்) எனச் சிங்கள நூலாகிய "நம்பொத்த’ குறிப்பிடும் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுமைக்குட்பட்ட இடமாகிய திருகோணமலை இத்தகைய மாநில அரசின் தலைநகராகவும் உயர்ந்தது.
ሎ எனினும், இவ்வொப்பந்தத்திலுள்ள முக்கிய குறைபாடு யாதெனில் இது உருவாக்கம் பெற்றபோது 1988 இல் திம்புவில் நடைபெற்ற மகாநாட்டில் பங்குபற்றிய தமிழ் அமைப்புகளின் ஆலோசனையைப் பெறாததே எனலாம். இதனால் தமிழ் அமைப் புகளின் ஏகோபித்த அங்கீகாரத்துடன், குறிப்பாக இவற்றுள் அரசியல், இராணுவ ரீதியில் பலம் வாய்ந்த அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் பரீட்சார்த்தமாகவேனும் இத னைச் சிறிது காலம் அமுல் நடாத்தித் தமிழ் மக்களின் நியாய பூர்வமான அபிலாஷைகளை இது எவ்வாறு பூர்த்தி செய்ய வில்லை என்பதை எடுத்துக் காட்டும் வாய்ப்பையும் இது இழந்து விட்டது. இத்தகைய சூழலிற்றான் இவ்வொப்பந்தத்தின் செய லாக்கம் நடைபெற்றது. மறுபுறத்தில் கோட்டை அரசோ வெனில் தமிழ் மக்களின் நியாயபூர்வமான குறைகளை ஏற்று இவ்வொப்

LV
தத்தின் மூலம் அதிகாரப் பரவலாக்கத்தினை அர்த்த புஷ்டி புள்ள சாக்கவும் முயலவில்லை என்பதை இம்மாகாண அரசின் / .மைச்சராக இருந்த அ. வரதராஜப் பெருமாளின் கூற்று கருத்துக் காட்டுகிறது.137 இந்திய அரசும் இவ்வொப்பந்தத்தி லுள்ள சந்துபொந்துகளை அடைக்கக் கோட்டை அரசின் மீது வேண்டிய அழுத்தங்களைப் பிரயோகிக்கப் பின்னின்றது. தமி ரீழ விடுதலைப் புலிகளுடன் கொண்டிருந்த முரண்பாடும், தொடர்ந்து கொண்டிருந்த இராணுவ நடவடிக்கைகளும் இந்திய அரசின் இத்தகைய அணுகுமுறைக்கு ஒரு காரணமாயுமிருக்க லாம். எவ்வாறாயினும், இப்பின்னணியிற்றான் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள், தலைவர் வே. பிரபாகரன் அணி யில் திரண்டுநின்று தமிழீழக் கோரிக்கையைச் சிக்கெனப் பிடித்து" நின்றுபோராட்டத்தினை முன்னெடுத்து வந்துள்ளனர். கோட்டை அரசின் தலைநகரில் இன்று நாட்டின் நாடாளுமன்றமே அமைந் திருக்கும் இக்கால கட்டத்தில், கோட்டையைப் போன்று ஒரு தனி அரசாகச் செயற்பட்டு, ஐரோப்பியரான போத்துக்கேய ரிடம் (கோட்டை அரசைத் தொடர்ந்து) யுத்தமுனையில் தனது சுதந்திரத்தினை இழந்த, யாழ்ப்பாண அரசு, விட்டுச் சென்ற "தமிழ்ப் பாரம்பரியம் இன்று தமிழ் மக்களைத் தனித் தேசிய இனமாகத், தனியான தாயகத்தையுடைய மக்களாகச், சுயநிர் ணய உரிமைக்கு அருகதையுள்ளவர்களாக ஆக்கியுள்ளதோடு உணர்வு பூர்வமாகவும் பழம் பெருமை பற்றிப் பேசவும் எழுத வும் வைத்துள்ளது.
அடிக்குறிப்புகள்
y
I. Silva, K.M. do. A History of Sri Lanka, (New Delhi) 1981
பக். 20-21,
2. Geiger, W. (ed), Mahavamsa, (Colombo), 1960.
அத்தியாயம் 1.
3. மணிமேகலை. (பதிப்பு) உ வே. சுவாமிநாத ஐயர்,
(சென்னை), 1956, காதை 8, பக். 43-63.
4. Pieris, P. E. "Nagadipa and Buddhist remains in Jaffna. Part I” (J. R. A. S. C. B.) Vol. XXVI, No 70, 1917. Ludt, 11-67; Pieris, P. E. Nagadipa and Buddhist remains

Page 39
8.
10.
1.
LVII
in Jeffna - Part lT,” (J. R. A. S. C. B.) Vol. XXVIII, No 72, 1919. Lui. 40-67; Begley, Vimala, “Archaeological exploration in Northern Ceylon' Expedition, Vol. 9, No 4, 1967. ш ф. 21-29; Begley, Vimala “Proto-historical material from Sri Lanka (Ceylon) and Indian contacts’; Kennedy, K. A. R., and Possehl, G. L. (ed Ecological Backgrounds of South Asian Pre-history. South Asian Occassional Papers, (Cornell University), 1973 Luis, 191-196; சிற்றம்பலம், சி. க. யாழ் மாவட்டத்தின் அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வும் ஆதிக் குடிகளும், செந்தழல், (தமிழ் மன்றம்), யாழ். பல்கலைக்கழகம், 1982; பக். 44-27. Sitrampalam, S. K. “Ancient Jaffna - An Archaeologicae Perspective' Journal of South Asian studies, Vol. ITI, No 1, 1984, Lui. 1-16; Ragupathy, P. Early Settlements in Jaffna - An Archaeological survey, (Madras, 1987.
Silva, K. M. de. Guo. J. T., 1982. L. 85.
Queyroz., F. de. Temporal and Spiritual Conquest of
- Ceylon, (Tr.) S. G. Perera, (Colombo) 1930, Liề. 151.
Rycklof Van Goens. Instructions for the guidance of the Opperkoopaman Anthony Pavilioen, Commandeur and Council of Jaffna Patam, 1658.
மேற்படி. பக். 84-86.
இந்திரபாலா, கா. "ஈழநாட்டுத் தமிழ்ச் சாசனங்கள். கிழக் கிலங்கைச் சாசனங்கள்", சிந்தனை மலர் 2, இதழ் 2 & 3 ஜுலை - ஒக்டோபர் 1968, பக். 35 - 50.
பத்மநாதன், சி. வன்னியர், (பேராதனை), 1970, பக். 45 - 47.
சின்னத்தம்பி, ஜே, ஆர். தமிழீழ நாட்டு எல்லைகள், (கொழும்பு), 1973,

12.
13.
14.
15.
16.
17.
18.
19.
21
22.
23.
LVIi
Indrapala, K. The city of Jaffna - A Brief History The Jaffna Municipal Council Silver Jubilee Souvenir, 1949 - 1974. (பக்கங்கள் இக்கட்டுரையிற் குறிப்பிடப்பட of 66tra) Indrapala, K. A Brief History of the city of
Jaffna Commemorative Souvenir - The Jaffna Public Library (Jaffna) 4. 6. 1984. Ljä, 7 - 11.
இந்திரபர்லா, கா. யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள், சிந்தனை மலர் 2, இதழ் 4, ஜனவரி 1969, பக். 8 - 12,
Indrapala, K. No. 10. A Cola Inscription from the Jaffna Fort.' Epigraphia Tamilica, Vol. I, Part I, (Jaffna) 1971. Lä. 52 - 56.
Pathmanathan, S. The Pioneer Historians of Jaffna, C. Rasanayagam and S. Gnanaprakasar Jaffna College Miscellany - Centenary Publication, 1981. Lud. 103 - 110.
Boake, W.J.S. Mannar - A Monograph, (Colombo) 1888; Boake, W. J. S., Tirukketiswaram, Mahatirtha,
Matoddam or Mantoddai (J. R. A. S. C. B.) Vol. X. No. 35, 1887 பக். 107 - 114
Lewis, J. P. Manual of the Vanni District, (Colombo) 1895.
Paranavitana, S. “The Arya Kingdom in North Ceylon' (J. R. A. S. C. B.) N. S. Vol. VII, Part 2, 1961. uš. 卫74·2罗尘。
Pieris, P. E, Guo, øin... as. 1917, 1919.
Raisanayagan, C. Ancient Jaffna (Madras) 1926.
Ragupathy, R. Guo, đĩ. Jpirảì), & 1987. புஷ்பரத்தினம், ப. . . “பூநகரிப் பிராந்தியத் தொல்லியல் மேலாய்வில் கிடைத்த தொல்பொருள் சின்னங்கள் - ஒரு வரலாற்று நோக்கு.? யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட ஆய்வரங்குக் கட்டுரை ( திருநெல்வேலி), (I. 3. 1990).
யாழ்ப்பாண வைபவமாலை (பதிப்பு) குல. சபாநாதன், (சுன்னாகம்), 1949.

Page 40
24.
26.
27.
28.
29.
35.
36.
37.
38.
VIII
மேற்படி. ப. க
Casie Chitty, Simon. “On the History of Jaffna from
the earliest period to the Dutch Conquest' (J.R.A.S.C.B.), Wol. I. No. 3, 1847 - 1848 Luak. 69 -79.
Morning Star (o-su siturg)5), 25-9-1845.
Natarajah, F. X. C., The Scholarship of Simon Casie Chitty”, Tamil Culture, Vol. I. Nos. 3&4, Sept. 1952, uáš. 269 - 274.
i
ஜோன், எஸ். யாழ்ப்பாணச் சரித்திரம் (முதற் பதிப்பு) (யாழ்ப்பாணம்) 1879.
சதாசிவப்பிள்ளை, வி. வி. யாழ்ப்பாண வைபவம், (சென்னை), 1884.
சபாநாதன், குல. மே. கூ. நூல். 1949, பதிப்புரை.
மேற்படி,
. Ceylon National Review, January, 1907.
Thuraiappapillai, T. A. “Jaffna Past and Present” Maha
jana College Golden Jubilee, Vol XXI, (Tellippalai) 1960. ud. 16 - 28.
வேலாயுதபிள்ளை, த. "துரையப்பாபிள்ளையின் வாழ்க் கையும் சமகாலமும் பாவலர் துரையப்பாபிள்ளை நூற் றாண்டு மலர், நூற்றாண்டு விழாச் சபை வெளியீடு (சுன் னாகம்), 1972. பக். 27. w
வேலுப்பிள்ளை, ஆ. 'பாவலர் துரையப்பாபிள்ளையின் யாழ்ப்பாணம் - அன்றும் - இன்றும் - மீள்பார்வை' பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை, நினைவுப் பேருரை -6. . 1986 u. 6.
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ, யாழ்ப்பாணச் சரித்திரம், (யாழ்ப்
பாணம்) 1912, வேலுப்பிள்ளை, க , யாழ்ப்பாண வைபவ கௌமுதி, (வசா விளான்) 1918,
இராசநாயகம், செ. யாழ்ப்பாணச் சரித்திரம், (யாழ்ப்பா GOOTIh), 1933, Lu. 11.

39.
40.
4.
42.
43.
44.
45.
46.
47.
LVIX
ஜயவர்த்தனா, குமாரி. 19ம் நூற்றாண்டின்பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் நிலவிய வர்க்க, இன உணர்வின் சில அம்சங்கள் - இலங்கை யில் இனத்துவமும் சமூக மாற்றமும் (வெளியீடு) சமூக விஞ்ஞானிகள் சங்கம் (தமிழாக்கம் - யாழ்ப்பாணம்), 1985, பக், 141 - 164.
குணவர்த்தன, ஆ. ஏ. எல். எச். ‘சிங்கத்தின் வழிவந்தோரி' - வரலாற்றிலும், வரலாற்றியலிலும் ‘சிங்கள உணர்வு".
இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும் (வெளியீடு) சமூக விஞ்ஞானிகள் சங்கம் ( தமிழாக்கம் - யாழ்ப்பா ணம்) 1985, பக். 102 - 103.
Gunawardhana, W.F. The Origin of the Sinhala Language, (Colombo) 1918.
Gnanaprakasar. S. Dravidian Element in Sinhalese' (J. R.A.S.C.B.) Vol. XV.XII, No. 89, 1936. Lui. 233 - 253. சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரையை "இளங்கன்று பய மறியாது" என எள்ளி நகையாடிய விபரம் இக்கட்டுரை யின் 251 ஆம் பக்கத்தில் உளது. மேலதிக விபரத்திற்கு Jayawardena, Kumari, Ethnic and Class Conflict in Sri Lanka (Dehivala) 1985, 6r6ip Tops uttäš56ļb.
Gunawardhana, R. A. L. H. "Pre-lude to the stateAn early phase in the Evolution of Political Institutions in Ancient Sri Lanka' The Sri Lanka Journal of the Humanities, Uuiversity of Peradeniya 1982, Vol VIII, Numbers 1 & 2. (Published in 1985); Lui. 1 - 39. குணவர்த்தன, ஆ. எ. எல். ஏச். மே. கூ. க. 1985, Ludò. 62 a 118
Rasanayagam, C. Nagadipa in the Tamil Classics' Pieris, P. E. G3Lo... 9... as... 1917, Litáš. 31 — 43.
Rasanayagam, C. “The Tamil Kingdom of Jaffna and the Greek writers” (J. R. A. S. C. B) 1922. Vol. 19 Luis. 17 - 54 54 - 56; 58 - 60.
Rasanayagam, C. Guo. Jř. 5Tá). 1926, முகவுரை பக்.1-11.
இராசநாயகம், செ. மே கூ. நூல். 1933. ப. 11.

Page 41
zq&。
尊9。
50.
51.
52.
53
54
55.
56.
7.
58.
AX
சபாநாதன், குல, மே, கூ. நூல். 1949. (பதிப்புரை- பன)
Sessional Paper IX - 1933 - First Report of the Historical Manuscripts Commission, June 1933 (Colombo;) Sessional Paper XXI - 1935- Second Report af the historical 'Manuscripts Commission September, 1935 (Colombo);
Rasanayagam, C. Gup. Gin. g5sráid. 1926, „Lu. 300. Pathmanathan, S. Guo. s. 5, 1981, Ludii. 27. 108.
ஞானப்பிரகாசர், சுவாமி, யாழ்ப்பாண வைபவ விமர்சனம்தமிழரசர் உகம் (அச்சுவேலி) 1928, உபோற்காதம் (முன்னுரை) ப. 1. கைலாசபதி. க. "மரபு வழித் தமிழ்க் கல்வியும் சுவாமி ஞானப்பிரகாசரும் சுவாமி ஞானப்பிரகாசர் சிந்தனையும் பணியும், பதிப்பாசிரியர் கா. இந்திரபாலா, (யாழ்ப் பாணம்), 1981, ப. 11. சுவாமி ஞானப்பிரகாசரின் சிறிய தந்தையாராகிய தம்பிமுத்துப்பிள்ளை அவரின் தற்தை யாராகிய சந்தியாப்பிள்ளையின் பெயராலும் அழைக்கப் கட்டுள்ளார். மே. கூ. நூல்.
வையா, (பதிப்பு) சுவாமி ஞானப்பிரகாசர்,(யாழ்ப்பாணம்),
1921.
Gnanaprakasar, S. The Sources of Yalppana - Waipavamalai Ceylon Antiquary and Literary Register 6(3), June 1921, Lui. 135 - 141.
Gnanaprakasar, S. "Sources for the study of History of Jaffna, Tamil Culture 2 (3) & (4) Sept. 1953, Luá. 30Ꭶ -- 816. Gnanaprakasar, S. The Forgotten coinage of the Kings of Jaffna Ceylon Antiquary and Literary Register 54) April 1920. ud. 172 - 179.
... Ancient Kings of Jaffna (incomplete) saints (5rrari
பிரகாசர் நூற்றாண்டு நினைவு மலர் 1875 - 1975. தொகுப்பாசிரியர் அருட்திரு. சா. ம. செல்வரட்ணம், அ. ம. தி. (கொழும்பு) 1975, ப. 97.
Gnanaprakasar, S. Kings of Jaffna during the Portuguese Period (Jaffna) 1920.

(6l.
(62.
63.
64.
65.
66.,
67.
69.
70.
71.
LXII
Gnanaprakasar, S. Nallamappana Vaaniyan and the grant of a Mudaliyarship" (J. R. A.S.C.B.) Vol. XXXIII., No. 89 - Parts I, II, III & IV. 1936, uji. 21 v - 23 1.
Gnanaprakasar, S. Ceylon Originally a land of Tamils' Tamil Culture, 1 (1). Feb. 1952, tuá. 27 - 35.
Gnanaprakasar, S. Famils turn Sinhalese' Tamil Culture, 1, (2) June, 1952, Lui. 130 - 142.
Gnanaprakasar, S. Beginnings of Tamil Rule in Ceylon' Tamil Cultu Ee, 1 ( 3 & 4 ) Sept. 1952, Audi. 2 l 3 - 225.
ஞானப்பிரகாசர், சுவாமி, தமிழரின் பூர்வ சரித்திரமும் சமய மூம்" (மூன்றாம் பதிப்பு -யாழ்ப்பாணம்- 1932) .
Gnanaprakasar, S. The Origin of Caste among the Tamils' (Trichinapaly) , 1920, சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் ஆகியன பற்றிய விவரத்தினைச் சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு நினைவு மலர். 18751975, (தொகுப்பாசிரியர், அருள் திரு. சா. ம. செல்வரட் ணம், அ. ம. தி. கொழும்பு 1975) என்ற நூலிற் கண்டு கொள்க.
segnanaprakasar, S'A History of Catholic Church in Ceyloa:
Period of Beginning 1505 - 1602 (Colombo) 1924.
Gnanaprakasar, S.A. “Catholicism in Jaffna: Brief Sketch of its History from the Esrliest times to the Present day (Colombo) 1926.
Sitrampalam, S. K. The Megalithic Culture of Sri Lanka, Unpublished bh.D. thesis, University of Poona, (Poona), 1981. 0
Bastiampillai, Betram. "Swamy Gnanaprakasar 's Historical Research, " சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு நினைவு மலர், 1875 - 1975, மே, கூ, நூல். பக். 46 - 66.
அருமைநாயகம், க. 'வரலாற்றாராய்ச்சித் துறையில் சுவாமி ஞானப்பிரகாசருடைய தொண்டு"- சுவாமி ஞானப் விரகாசர் சிந்தனையும் பணியும், மே.கூ.நூல். 1981. ud, l r 7.

Page 42
72.
73.
(74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
LX
Pieris, P.E. The kingdom of Jaffnapatam' (Colombo)
1944.
Natesan, S. “The Northern Kingdom” Parana vitana. S.,
(ed). History of Ceylon Vol. I, part II, (Colombo) 1960
( அ.) பக். 691-702
Natesan, S. "Glimpses of the Early History of Jaffna' Mahajana College Golden Jubilee, Vol. XX(, (Tellippalai) 1960 ஆ, பக். 38 - 45.
கணபதிப்பிள்ளை, க. சங்கிலி - (பேராதனை) 1956, பக். VII - XXXXI ( 7 - 41 ).
Navaratnam, C.S. Tamils and Ceylon-From the ear liest period up to the end of the Jaffna dynasty with a chart of important events up - to 1900 A.D., (Jaffna) 1958.
Navaratnam, C.S. Vanni and the Vanniyas,' (Jaffna) 1960; Navaratnam, C.S. “A short History of Hinduism in Ceylon (Jaffna) 1964. -
Sivaratnam, C. “An outline of the Cultural History and Principles of Hinduism (Colombo), 1964; Sivaratnam, C. The Tamils in Early Ceylon (Colombo) 1968; Sivaratnam, C. Origin and Development of the Hindu Religion and People (Colombo), 1978.
Cartman, James Rev. Hinduism in Ceylon (Colombo), 1957.
Raghavan, M.D. Tamil Culture in Ceylon (Colombo)
(ஆண்டு குறிப்பிடப்படவில்லை)
சிவானந்தன், யாழ்ப்பாணக் குடியேற்றம், பகுதி 1, (கோலா
லம்பூர்) 1932.
முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, கு. யாழ்ப்பாணக் குடியேற்
றம், (சுன்னாகம்), 1982. *
ஜெகந்நாதன். பொ. யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்" (யாழ்ப்பாணம்) 1987

84.
85.
86.
87.
88.
89.
90.
" தனை), 1970. 92.
93.
94.
95.
96.
'97.
98.
99.
LXIII
குணராசா, கா. நல்லைநகர் நூல் (யாழ்ப்பாணம்) 1987. Paranavitana, S. Gub. 4. g. 1961. Lud. 174 - 224.
Paranavitana, S. (ed) G3LD. 6. Báiy, 1960. Luš, 691. Indrapala, K. Dravidian Settlements in Ceylon and the Beginnings of the Kingdom of Jaffna, (Unpublished Ph.D. Thesis, University of London), 1966, ; Indrapala, K. Early Tamil Settlements in Ceylon, (J. R. A. S. C. B.) (New Series) Vol. XIII. 1969. Lud. 43 - 65.
இந்திரபாலா, கா. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம்" (பேராதனை) 1972, ས་
Pathmanathan, S. The kingdom of Jaffna (Colombo), 1978.
. . ༩ ༣ ། பத்மதாதன், சி. இரு தமிழ்ச் செப்பேடுகள் (யாழ்ப்பரினத் திலிருந்து) சிந்தனை. மலர் 3, இதழ் 1, ஜனவரி 1970 பக். 52 - 57. பத்மநாதன், சி., மே. கூ. நூல். 1970.
குணசிங்கம், செ. கள்ளியங்காட்டுச் செப்பேடுகள், (பேரா.
கைலாயமாலை, (பதிப்பு) சே.ஜே. ஜம்புலிங்கம்பிள்ளை, கண்ணி. எ0 - அ0 (70 - 80) (சென்னை) 1939.
யாழ்ப்பாண வைபவமாலை. மே.கூ. நூல். ப. 25.
இராசநாயகம், செ. மே. சு. நூல். 1933 பக். 46-47.
Pathmanathan, I. S. GLO. Ba. Brád. 1978. ** Paranavitana, S. Gu9. ar air, 1961. u. I 191. Natesan, S. Gio. r. a. 1960. (a) u. 602. Paranavitana. S. Guð. gr. s. 1961. Lið. 196 - 197.
இந்திரபாலா, கா, மே, கூ, நூல். 1972.
100. Pathmanathan, S. Oto. sa pitai). 1978.

Page 43
101.
102.
103. 104. 105.
106.
107.
108.
109.
110.
11,
112.
113.
114.
15.
116.
117.
118.
LXIV
Rasanayagam, Qar. GLD. 37, prô: 1926. Lui. 37U"- 374. ஞானப்பிரகாசர், சுவாமி. மே, கூ, நூல். 1928. ப. 87. இந்திரபாலா, கா., மே, கூ, நூல். 1972 ப. 71. Paranavitalia, S. Guo. aa, as... 1961. L. 20. Natesan, S. GuD. 9a... 35. 1960. (-geg) Lu, 695.
இந்திரபாலா, கா. மே, கூ, நூல் 1972. ப. 75.
Perera, P. S. (ed.) Kokila Sandesaya (Colombo); 1906. U. 243. Paranavitalia, S, GLD. s. v. 1961. L., 201. புஷ்பரத்தினம், ப. “யாழ்ப்பாண இராச்சியத்தின் தலை
நகர் - புதிய நோக்கு? முத்தமிழ் விழா konvň (u mp3Lmateřib) 1991, u, 36, - 55.
மேற்படி, ப. 52.
Ellawala, H. Social History of Early Ceylon' (Colombo), 1969. u. 102.
புஷ்பரத்தினம், படி * சோழர் கால மண்ணித்துகச் சிவா லயம் "யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட ஆய் வரங்குக் கட்டுரை ( திருநெல்வேலி,) 1990.பக், 1 - 14 Indrapala, K. GBLO. Sm. La áè. 1971, Luä. 52. - 56.
ஞானப்பிரகாசர், சுவாமி,மே.கூ. நூல். 1928. ப4 &
Paranawitana, S. Guo a. as. 1961. A. 202, இந்திரபாலா, கா. மே. கூ நூல். 1972 பக். 31-84.
செகராசசேகரமாலை, (பதிப்பு) இ. சி. இரகுநாதையர் (யாழ்ப்பாணம்); 1942. செய்யுள். 5.
தகFணகைலாசபுராணம், (பதிப்பு) பு. பொ. வைத்திலிங்க தேசிகர் (பருத்தித்துறை), 1916, வ:எ.

19.
120.
121.
122.
123.
124.
25.
126.
127.
129.
130.
131.
LXV
கைலாயமாலை, மே. கூ. நூல். கண்ணி - ருரு - சுo.
இந்திரபாலா, கா. மே. கூ நூல். 1972. பக். 83 - 84.
Rasanayagam, S. Gup. 9. Dirai). 1926. u. 300. Capsir பக்கம் மட்டுமே சோழ நாணயத் தொடர்பைக் காட்டப் பின் பக்கம் கலிங்க நாட்டு நாணயங்களை நினைவு கூருகின்றன என்பதும் இவரது கருத்தாகும்.
Raghavan, A. “A study of the coins of Tamil Nad, Proceedings of the First International Conference Seminar of Tamil Studies, • ol. I, (Kualalumpur) 1968, பக், 529 - 54 ,
Rasanayagam, S. Guo.d. pardi). 1926. Luž. 302 - 303.
Nagaswamy, R. Tamil Coins - A study (Madras) 1981.
மேற்படி, ப. 33.
மேற்படி, பக். 37, 71, 124-125,
Mahadevan, I. Some Rare Coins of Jaffna, Damilica, Vol. I, 1970. Lud. l l 1-120.
கதிரவேலுப்பிள்ளை, சி. (பதிப்பு) இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி வெள்ளி விழா மலர், (யாழ்ப்பாணம்) 1974,
lėš. Il 6 - 17.
மேற்படி. ப. 13.
மேற்படி, ப. 1 - 2.
Siva, K.M.de, The Traditional Home lands of the Tamits of Sri Lanka - A Historical Appraisal. (Colombo) 1987. sigil 6it Suntharalingm, C. Grievances of Eylom Thamils from "Cradle to Coffin' (Chunnakam) 1970. என்ற நூலையும், சிற்றம்பலம், சி. க., "தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம்", முத்தமிழ் விழாமலர், 1991 பக். 160 - 188. என்ற கட்டுரையையும் மேலதிக விபரங்கட்குப் பார்க்கவும்.

Page 44
32.
33.
134.
135.
l36,
137,
LXV
1977 . t Ꭵ . Ꮽ1 .
திருச்செல்வம், மு. *ழத்தமிழர் இறைமை (கொழும்பு),
மேற்படி, ப. 82.
இலங்கைப் பருவப்பத்திரம். இல. V - 1980. 1977 ஒகத்து 13 தொடக்கம் செப்தெம்பர் 15 வரை நடைபெற்ற சம் பவங்கள் பற்றி விசாரணை செய்த சனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கை (கொழும்பு) 1981.
Hansard, 29th April 1982 Lui. 20 - 24.
Vidyadhar, 1. தமிழர்களின் கோரிக்கைகளும் இந்திய
goigos gluigcuph' (New Delhi), 1987.
வரதராஜப்பெருமாள், அ. வடக்கு, கிழக்கு மாகாண அரசுக்கு அதிகாரப் பரவலாக்கல் செய்வதில் இலங்கை அரசு காட்டும் தயக்கம், (திருகோணமலை)27 - 4 - 1989.

அத்தியாயம் - 1 வரலாற்று மூலங்கள்
ஒரு நாட்டின் வரலாற்றினைப் பல்வேறு வரலாற்று .மூலங் களைப் பயன்படுத்தியே எழுத வேண்டியுள்ளது. இலங்கையின் சில முக்கிய இடங்களாகிய அநுராதபுரம், பொலநறுவை, தம்ப தேனியா, கோட்டை, கண்டி போன்ற தலைநகரங்களைக் கொண்டிலங்கிய சிங்கள அரசுகளைப் போலன்றி வட இலங்கை யிலே நல்லூரினைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய தமிழ் அரசு பற்றிய வரலாற்று மூலங்கள் குறைவாகக் கிடைத்துள் ளமை துரதிர்ஷ்டமே. நல்லூரின் தொன்மை, மேற்குறிப்பிட்ட வற்றிலும் பார்க்க அவ்வளவு பிந்தியதன்று. வரலாற்று மரபுக ளும் மூலங்களும் நன்கு பேணப்படாமை, மேற்குறிப்பிட்ட வர லாற்று மூலங்களின் பற்றாக்குறைக்கோர் காரணமாயினும், கி. பி 16 ஆம், 17ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதி பில் ஏற்பட்ட போத்துக்கேயப் படையெடுப்புகளும், அவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட அவர்களின் ஆட்சியும் இங்கிருந்த வரலாற்று மூலங்க ளைப் பெருமளவு சிதைத்தன அல்லது அழித்தன எனலாம். இவற்றுள்ளே கட்டிடங்கள் (கோவில்கள், அரச மாளிகைகள்முதலியன), சிற்பங்கள், ஒவியங்கள், ஏட்டுச் சுவடிகளாக இருந்த நூல்கள், சாசனங்கள். பலதிறப்பட்ட பாவனைப் பொருட்கள் முதலியனவும் அடங்குவன. இவற்றுள் சிலவற்றைப் பற்றிப் போத்துக்கேய அரச ஆவணங்கள், போத்துக்கேய ஆசிரியர் எழுதியுள்ள நூல்கள், யாழ்ப்பாணத்திலே நிலவி வரும் சில மரபுகள், தமிழ் நூல்கள், முதலியன குறிப்பிட்டுள்ளன. மேலும் போத்துக்கேய ஆவணங்களிலொரு பகுதியினை ஒல்லாந்தர் அழித்து விட்டமையாலும் அவர்கள் எழுதியவற்றுள் ஒரு பகுதி இன்று கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண் டிருந்த தமிழ் அரசு பற்றிய சில முக்கியமான தமிழ் நூல்கள், குறிப்பாக இராசமுறை, பரர்ாசசேகரன் உலா முதலியன இன்று

Page 45
கிடைத்தில. இவற்றையும் வேறு சிலவற்றையும் அடிப்படையா கக் கொண்டு எழுதப்பட்ட வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப் பாண வைபவமாலை ஆகிய வரலாற்றுச் சார்பான நூல்களும் வரலாறு பற்றியறிய ஒரளவே உதவுகின்றன. மேலும் சம காலத் தில் எழுதப்பட்ட பாளி, குறிப்பாகச் சிங்கள நூல்கள் சிலவற்றி லும் யாழ்ப்பாண மன்னர் சிலர் பற்றிய குறிப்புகள் உள்ளன. அத்துடன் இவ்வரிசையில் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் இது பற்றிக் கூறும் சில சாசனங்களும், இன்று இப்பகுதியில் எஞ்சியுள்ள சில கட்டிட அத்திவாரங்களும், வேறு சிலவும் குறிப் பிடற்பாலன.
இவ்வாறு மேற்கூறிய வரலாற்று மூலங்களைப் பயன்படுத் தித் தமிழரசு பற்றியும் அதன் தலைநகர், அரசர் பற்றியும் ஒர ளவு கூறலாம். பொதுவாக நல்லூரே சிங்கைநகர் என அழைக் கப்பட்டு வந்தது எனலாம். யாழ்ப்பாணப்பட்டிணம் (சிங்கள நூல்கள் யாயாபடுன எனக் கூறுவன) என்பதும் நல்லூரையே குறித்தது எனலாம். இந்நகரம் பெரும்பாலும் இன்றைய யாழ்ப் பாண நகரையும் அதனை அண்டியுள்ள பகுதிகளையும் உள்ள டக்கியிருந்திருக்கலாம். யாழ்ப்பாண அரசு பற்றிய வரலாற்று மூலங்களை இரு பெரும் பிரிவுகளாக வகுக்கலாம். அவையாவன:
(அ) இலக்கிய மூலங்கள் (ஆ) தொல்லியல் மூலங்கள் என்பனவாகும்.
(a) இலக்கிய மூலங்கள்
இவற்றினை இவை எழுதப்பட்டுள்ள மொழிகளின் அடிப்ப டையிலே மேலும் வகுத்துக் கூறலாம். -
1. தமிழ் நூல்கள்
(i) வையா பாடல்:-
வையாபுரி ஐயர் எழுதிய வையாபாடலை (கி. பி. 14 ஆம். 17 ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்டது) முதலிற் குறிப்பிட லாம். நூலாசிரியர் தமது சமகால அரசரும் புரவலருமாகிய பரராசசேகரன், செகராசசேகரன் ஆகியோரின் குலத்தைக் காட்டு முகத்தால் அவர்களுடைய முன்னோனும், வம்சத்தை நிறுவிய வனுமாகிய கூழங்கைச்சக்கரவர்த்தி அல்லது சிங்கையாரியனின் குலத்தையும் யாழ்ப்பாணன், ம்ாருதப் புரவீகவல்லி கதையினை பும், பொன்பற்றியூர் பாண்டிமழவன், வன்னிக்குடியேற்றம் பற்

-03
றிய செய்திகளையும் விபரீத்துள்ளார். வன்னியர் அடங்காப்பற் றிலே குடியேறினர். வன்னியர் வருகையைத் தொடர்ந்து மேலும் ஒரு சாரார் பிற நாடுகளிலிருந்து தத்தம் வழிபாடுகளோடு வந் தமை பற்றியும் இந்நூல் கூறுகிறது. இவற்றுள்ளே வன்னிக் குடி யேற்றம் பற்றிய செய்திகளே மிக முக்கியமானவை. 104 விருத் தப்பாக்களைக் கொண்டிலங்கும் இந்நூலிலே சமகாலச் சமய, சமூக நிலை பற்றிச் சில குறிப்புகள் காணப்படுகின்றன. வையா எனிற் பூமி எனப் பொருள்படும். எனவே, தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேச வரலாற்றினைப் பாட்டிலே கூறும் நூலெனவும் இதற் குப் பொருள் கொள்ளலாம்; நூலாசிரியரின் பெயரால் அழைக் கப்படுகிறதெனவும் கொள்ளலாம்.
(II) கைலாயமாலை
முத்துக்கவிராசர் இந்நூலினைக் கி. பி. 16ஆம் நூற்றாண்டின் முடிவில் அல்லது 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே எழுதி னார் எனப் பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. ஆனால் இது முற்பட்டதென ஒரு சாரார் கூறுவர். நல்லூரிலுள்ள முன்னைய கைலாயநாதர் கோயில் கட்டப்பட்டு வெகு விமரிசையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டமை இதிலே விரிவாக எடுத்துக் கூறப் படுகின்றது. அதேவேளை இதனைச் செய்வித்த முதலாம் அரச னான சிங்கை ஆரியன் நல்லூரைத் தலைநகராக அமைப்பித்த வாறும், அவன் முன்னோர் காலத்திலே யாழ்ப்பாணத்திலேற் பட்ட தமிழ்க்குடியேற்றங்கள் பற்றியும் அதிற் சுருக்கமாக எடுத் துரைக்கப்படுகின்றன. பின்னர் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலைக்கான முதனுரல்களில் இதுவுமொன்றாகும். சமகால சமூக, சமய குறிப்பாகச் சைவசமயப் பண்பாட்டு நிலைமையும் ஓரளவு விரிவாக இதில் இடம் பெற்றுள்ளது. இதிலே விரிவாகக் கூறப்பட்டுள்ள கோவிற் குடமுழுக்கு விழா பற்றியவர்ணனையி னைப் பிறிதொரு தமிழ் நூலிலும் காணமுடியாது. இது 310 கண்ணிகளைக் கொண்ட கலிவெண்பாவால் இயற்றப்பட் டுள்ளது. இந்நூலிலேதான் யாழ்ப்பாணநகரும், நல்லூர்க் கந்த சுவாமி கோயிலும் புவனேகபாகு என்பவனால் சக ஆண்டு 870 இல் அமைக்கப்பட்டன என்ற செய்தியினைக் கூறும் 'இலகிய சகாப் தம்" எனத் தொடங்கும் தனிச் செய்யுளும் இடம் பெற்றுள்ளது. இந்நூல் நல்லூரினை 'நல்லை மூதூர்' (29) என வருணிப் பதிலிருந்து நல்லூரின் தொன்மை தெளிவாகின்றது.
(i) யாழ்ப்பாண வைபவமாலை
இது யாழ்ப்பாணத்தின் வைபவத்தினை - சிறப்பினை - சீரினை. மகிமையினை - வரலாற்றினைக் கூறும் நூல் எனப் பொருள் படும், மாதகலைச் சேர்ந்த மயில்வாகனப் புலவர் சமகால யாழ்ப்

Page 46
-04
பாணத்திலே ஒல்லாந்தத் தளபதியாகவும், தேசாதிபதியாகவும் 1736இலே இருந்த மசெறல் என்பவரின் ஆலோசனைக்கேற்ப இந்நூலை எழுதினார் எனக் கூறப்படுகின்றது. ஏறக்குறைய இதே காலப் பகுதியிலே தான் கோணேலியஸ் ஜோன் சீமோன் எனும் ஒல்லாந்தத் தேசாதிபதி யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் மத்தியிலே பாரம்பரியமாக நிலவி வந்த பழக்க வழக்கங்களை - தேச வழமை யினைத் தொகுப்பித்தான் என்பதும் குறிப்பிடற்பாலது. வைபவ * மாலையின் முன்னுரையில் ஆசிரியர் தாம் பயன்படுத்திய நான்கு நூல்களைக் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் முற்குறிப்பிட்ட இரண் டையும் தவிர ஏனையவை இன்று வரை கிடைத்தில. அவற்றுள் ஒன்றான இராசமுறை மன்னர்களின் பெயர்களையும், சாதனை களையும் கால ஒழுங்கின்படி கூறியிருக்கலாம். இவ்வகையிலிது இந்தியாவிலே பேணப்பட்டு வந்த வம்சாவளி, இலங்கையிலெழுதப் பட்ட ராஜாவலிய முதலியவற்றுடன் ஒப்பிடக் கூடியதாயிருக்கலாம். மற்றைய நூலாகிய பரராசசேகரன் உலா என்பது இப்பெயரு டைய மன்னனின் சிறப்புகளைக் கூறியிருக்கலாம் அதன் அமைப் பும் உள்ளடக்கமும் சோழப் பெருமன்னர் காலத்திய மூவருலா போன்றிருந்திருக்கலாம்.
பயன்படுத்தப்பட்ட மூலங்களின் தன்மையாலும், ஆசிரியர் கொண்டிருந்த வரலாற்று நோக்கின் இயல்பினாலும் வைபவ மாலையிலே பெளராணிக அமிசங்களும், வேறு சில குறைபாடு களும் இடம் பெற்றுவிட்டன. எனினும் இவர் கூறியுள்ள சில விடயங்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்தைத் தொடர்ச்சியாக ஆண்ட மன்னரின் பட்டியலும், சாதனைகளும் பெரும்பாலும் பிற மூலங்களிலே கிடைக்காதவை. இவை இதன் மூலமே அறி யப்படுகின்றன. இவற்றுட் சிலவற்றையாவது பிற மூலங்களினால் உறுதிப்படுத்தலாம். இவ்வகையில் இது முக்கியத்துவம வாய்ந்த தாகும். மேலும், இந்நூலிற் காணப்படும் சில குறைபாடுகள் பாளி மொழியிலே இலங்கை வரலாற்றினைக் கூறும் மகாவம்சம், சூளவம்சம் முதலிய நூல்களிற் காணப்படினும், அவற்றின் முக்கி யத்துவம் மிகக்குறைவாக மதிப்பிடப்படுவதில்லை,
"ው இந்நூல்களிலே வரும் விஜயன், யாழ்பாடி அல்லது யாழ்ப் பாணன் பற்றிய கதைகளை நுணுகி ஆராய்ந்தே ஒரு முடிவுக்கு வரலாம். ஆரியச் சக்கரவர்த்தி என்பது பெரும்பாலும் குடும்பப் பெயராகவே காணப்படுகிறது. செசராசசேகரன், பரராசசேகரன் என்னும் பெயர்களிலே மன்னர்கள் பலர் இருந்தனர் எனவும் அறி யப்படுகின்றது. இவை பட்டப்பெயர்களாகவும் இருந்திருக்கலாம். பரராசசேகரன் எனில் "பேரரசர்களிலும் மேலான சிறந்த

-05- ܐ
அரசன்' எனவும் செகராசசேகரன் எனில் "உலகிலுள்ள அரசர் களிற் சிறந்தவன்” எனவும் பொருள்படுவன. சங்கிலி என்னும் பெயரில் ஒன்றிற்கு மேற்பட்ட அரசர் இருந்தனர். மேலும், செகராசசேகரம், பரராசசேகரம் எனும் வைத்திய நூல்களும், செகராசசேகரமாலை எனும் சோதிட நூலும், அரசகேசரி எழுதிய இரகுவமிசம் எனும் பெருங்காப்பியமும், தக்ஷணகைலாச புராண மும் வேறு சிலவும் குறிப்பிடற்பாலன. இந்நூல்களில் ஆங்காங்கே சமகால அரசர், சமூகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டுகளாக "சிங்கையெங்கோமான்", "சிங்கைதங்கு மாரியர்கோன்', 'சேவணிதுவசன்" (இடபக்கொடியோன்) எனச் செகராசசேகரமாலையும் "சிங்கை மேவுமாரியர்கோன்??, "செயம் பெறு சிங்கை நாடான் செகராசசேகரன்' எனச் செகராச சேகரமும் கூறுவனவற்றைச் சுட்டிக்காட்டலாம்.
மேலும் இரகுவமிசப் பாடல்கள் சிலவற்றிலே சமகால யாழ்ப் பாண நாகரிக அம்சங்கள் இடம்பெற்றுள்ளன எனக்கருதப்படு கின்றது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த அருணகிரிநாதர் யாழ்ப்பாணாயன் பட்டினத்திலே கோயில் கொண்டிருக்கும் முரு கப்பெருமான் பற்றியும் ஒரு திருப்புகழ் பாடியுள்ளார். இது நல் லூர்க்கந்தன் பற்றியதாகவும் கொள்ளப்படுகின்றது. மேலும், கதிர்காமக்கந்தன் பற்றியும் திருகோணமலையிலுள்ள முருகன் பற்றியும் திருப்புகழ்கள் உள்ளன என்பதும் ஈண்டுக் குறிப் பிடற்பாலது.
2. வடமொழி நூல்கள்
யாழ்ப்பாணத் தமிழரசிலே தமிழோடு வடமொழியும் போற் றப்பட்டாலும் வடமொழியில் நூல்கள் அதிகம் எழுதப்பட்ட தாகத் தெரியவில்லை. ஆனால் வடமொழி நூல்களிலிருந்து தமிழாக்கங்கள் பல குறிப்பாக வைத்தியம், சோதிடம், இலக் கியம் முதலியன பற்றி எழுதப்பட்டன.
தகழினகைலாச மாஹாத்மியம்
இந்நூல் இலங்கையிலுள்ள பல பிரதான இந்துத் தலங்க ளின் சிறப்புகளைத் திருக்கோணேஸ்வரத்தினை மையமாகவைத்து எடுத்துக் கூறுகின்றது. இந்நூலின் 15 ஆம் அத்தியாயம் யமு னைக் சிறப்புரைத்தலாகும். அதாவது யமுனாரி, சட்டநாதர் ஆலயம் ஆகியனவற்றின் சிறப்புகள் எடுத்துக் கூறப்படுகின்றன. இவற்றையமைத்த சிங்கையாரியன் கூணியாரியன் எனவும் அழைக்கப்படுகிறான்" மேற்குறிப்பிட்ட விடயம் பற்றி வைபவ

Page 47
مستر0-- "
மாலை முதலிய நூல்கள் கூறியிருப்பனவே இதிலும் காணப்படு álkår psar.
3. பாளி, சிங்கள நூல்கள்
இலங்கையின் புராதன, மத்திய கால வரலாற்றினைக் குறிப் பாகத் தேரவாத பெளத்த நோக்கிலே கூறியுள்ள மகாவம்சம், சூளவம்சம் ஆகிய பாளி நூல்களில் யாழ்ப்பாணம் பற்றிய குறிப்புகள் மிக அருமையே. நாகதீப என்னும் பதம் பொதுவாக இன்றைய வடமாகாணத்தையும், குறிப்பாக நயினாதீவையும் குறித்தது. குளவம்சத்திலே (90. 43. 47) இரண்டாம் பாண்டியப் பேரரசர்களில் ஒருவனாகிய மாறவர்மன் குலசேகரனின் தளபதி களில் ஒருவனாகிய ஆரியச்சக்கரவர்த்தி இலங்கைக்குப் படை யெடுத்து வந்து வெற்றிபெற்றமை பற்றிக் கூறப்பட்டுள்ளது. வழக்கமாகத் தமிழகப்படையெடுப்புகளைக் கண்டித்துக் கூறும் சூளவம்ச ஆசிரியர் இவ்வாரியச் சக்கரவர்த்தியின் மேலரசனாகிய (மாறவர்மன்) குலசேகரனை 'பாண்டியப் பெருமன்னர் எனும் தாமரைக் கொடியிற் பூத்த மலருக்குச் சூரியன் போன்றவன்' எனப் புகழ்ந்துள்ளார். இவ்வாரியச் சக்கரவர்த்தியே யாழ்பாண அரசைப் பின்னர் பாண்டியப் பேரரசனின் ஒத்தாசையுடன் நிறு வினான் என யாழ்ப்பாண அரசு பற்றி எழுதியுள்ள வரலாற்றா சிரியர்கள் பொதுவாகக் கொள்ளுவர். ஆரியச்சக்கரவர்த்தி பற் றிச் குளவம்சம் கூறியிருப்பனவும் யாழ்ப்பாண அரசின் ஸ்தாபக னான சிங்கையாரியன் பற்றிக் கைலாயமாலை போன்ற நூல்கள் கூறியிருப்பனவும் ஒப்பிடற்பாலன.
யாழ்ப்பாண அரசு பற்றிச் சமகாலத்திய சிங்கள நூல்களான ராஜாவலிய, கோகில சந்தேஸய, சேலலிஹினி சந்தேஸய முதலியன வற்றிலே சில குறிப்புகள் வருகின்றன. இக்குறிப்புகள் குறிப் பிட்ட சிங்கள மன்னர் யாழ்ப்பாண அரசுக்கெதிராக மேற் கொண்டிருந்த நடவடிக்கைகள் அல்லது யாழ்ப்பாண மன்னர் தென்னிலங்கையிலே தமதாதிக்கத்தினை நிலைநாட்ட மேற் கொண்ட நடவடிக்கைகள், அவர்களின் எதிர் நடவடிக்கைகள் தொடர்பாகவே வந்துள்ளன. எனினும் இச்சான்றுகள் குறிப்பி டற்பாலன. இங்கு தலைநகரம் யாபாபடுன அதாவது யாழ்ப் பாணம் என்றே குறிப்பிடப்படுகின்றது. கி. பி. 14 ஆம் நூற் றாண்டிலே யாழ்ப்பாண அரசு தென்னிலங்கை நோக்கி விரிவுற் றது. இது பற்றி ராஜாவலிய எனும் நூல் "ஆரியச்சக்கரவர்த்தி எனும் அரசன் கடற்கரைத்துறைமுக நகரான யாழ்ப்பாணத் திலே வாழ்ந்தான். அவனுடைய படைகளும், செல்வர்களும்

--7}سمٹ
இலங்கையிலுள்ள ஏனைய அரசுகளை விஞ்சிவிட்டன. மலை 1.பட்டிலிருந்தும், தாழ்ந்த பிரதேச மாவட்டங்களிலிருந்தும், ஒன் பது துறைமுகங்களிலிருந்தும் அவன் திறைபெற்றான்” எனப் பிரமாதமாகப் புகழ்ந்து கூறுகின்றது. இக்கூற்று பின்னர் கூறப் படும் கோட்டகம தமிழ் சாசனம், மடவலச் சிங்கள சாசனம், இவன் பற்றுற்றாவின் குறிப்புகள் முதலியவற்றாலும் உறுதிப்படுத்தப்படு கின்றது. இவை பற்றிப் பின்னர் கூறப்படும்.
கோகில சந்தேஸயத்திலே, கி. பி. 15 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலே யாழ்ப்பாண அரசைத் தனது தலைவனாகிய 6 ஆம் பராக்கிரமபாகு சார்பாக வெற்றி பெற்ற சபுமால் குமாரய (செண்பகப் பெருமாள்) சில காலம் இங்கு அரசப் பிரதிநிதியாக நிர்வாகத்தைக் கவனித்து வந்தான் எனக்கூறப்பட்டுள்ளது. யாழ்ப் பாண நகர் (நல்லூர்) பற்றி இந்நூலிலே (263) பின்வருமாறு வர்ணிக்கப்படுகின்றது. அதாவது “யாபாபடுனவிலே சிறந்த உயர்ந்த கட்டிடங்கள் நிரை நிரையாக உள்ளன; பொன்மயமான கொடிகள் இவற்றினை அலங்கரிக்கின்றன; அவற்றிலே (மாளிகை களிலே) பதிக்கப்பட்டுள்ள விலைமதிக்க முடியாத மணிகளும், இரத்தினக் கற்களும் மிக அதீதமான அழகினை ஏற்படுத்துகின் றன. சிறப்பினாலும், கவர்ச்சியினாலும் (அழகினாலும்) குபே ரனின் தலைநகரான அழகாபுரியுடன் இது ஒப்பிடற்பாலது" என்பதாம். இவ்வருணனையிலே கவிஞரின் கற்பனை இருப்பினும் யாழ்ப்பாணநகர் - நல்லூரின் சிறப்புக் குறிப்பிடற்பாலதே. இத னைக் கைலாய மாலையிலே வரும் நல்லூர் பற்றிய வருணனை யுடனும், அரசசேகரியின் இரகுவமிசம் கூறும் நகரவருணனையு டனும் ஒப்பிடலாம். சேலலிஹினிசந்தேஸயத்திலும் (29) சபுமா லின் நல்லூர் வெற்றியும், சிறப்பும் வருணிக்கப்பட்டுள்ளன.
4. வெளிநாட்டிாசிரியர் தரும் சான்றுகள்
(1) இவன் பற்றுற்றா
முதலாவதாக, மொறோக்கோ நாட்டுப்பயணியான இஷன் பற்றுற்றாவின் பிரயாணக் குறிப்புகளைக் குறிப்பிடலாம். இவை, *ரெஹ்லா" என அழைக்கப்படும். இதன் ஆசிரியர் தாம் கீழ் நாடுகளுக்குச் செய்த பயணத்தின் போது கி. பி. 1344 இல் இலங்கைக்கு வந்தவர்.சமகால ஆரியச் சக்கரவர்த்தியை நேரிலே கண்டு அளவளாவி நட்புறவு கொண்டாடியவர்; அவ்வரசனுடைய பெரிய வெளிநாட்டு வர்த்தகம் பற்றி, குறிப்பாகப் பல கப்பல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அரசனுடைய பண்பும், பரோபகார மும் அவரைக் கவர்ந்துள்ளன. அரசனை அவர் 'டித்தாள'

Page 48
-08
(புத்தளம் அல்லது வத்தளை அல்லது குறிப்பாகப் பட்டினம் அதாவது யாழ்ப்பாணப் பட்டினம்) என்னுமிடத்திலே சந்தித்த தாகக் கூறுகின்றார். அவனை "இலங்கையின் அரசன் (Sultan of Ceylon)” என்றே அழைத்துள்ளார். மேலும் சமகாலத் தமிழ் மன்னனைப்பற்றிய நேர்முக வர்ணனையும் செய்துள்ளார்.2 இத் தகைய ஒரு பேனா வர்ணனை ஏனைய தமிழரசர்களைப் பற்றி இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் அதில் அரசனின் பெயர் தெரியாது. அரசன் ஆரியச் சக்கரவர்த்தியெனப் பொதுப் பெய ராலேயே அழைக்கப்பட்டுள்ளான்.
(1) போத்துக்கேய, ஒல்லாந்த நூல்களும் ஆவணங்களும்
இம்மேலை நாட்டவர்கள் - முதலிலே போத்துக்கேயர் - சுமார் ஒரு நூற்றாண்டிற்குத் தொடர்பு கொண்டிருந்தனராயி னும், போத்துக்கேயர் அரை நூற்றாண்டிற்கும், ஒல்லாந்தர் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் யாழ்ப்பாணப் பிரதேச நிர்வா கத்தை நடத்தினார்கள். இந்நூல்களிலே பக்கச் சாய்வும் காணப் படுகிறது. எனினும் குறிப்பாகப் போத்துக்கேயரின் நூல்களிலே சமகால அரசு பற்றிய செய்திகள் மட்டுமன்றி, முற்பட்ட காலச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. நல்லூரில் இருந்த அரச மாளிகை, கோவில்கள், கோட்டை அரண்கள், மக்கள், போத்துக் கேயர் நடாத்திய போர்கள், அழிவுகள், ஆட்சி, கத்தோலிக்க சமயம் பரவுதல் முதலியன பற்றிய செய்திகள் பல இடம் பெற் றுள்ளன. ஒல்லாந்தரின் நூல்களிலும், ஆவணங்களிலும் சம காலம் மட்டுமன்றி முற்பட்ட காலச் செய்திகளும் இடம் பெற் றுள்ளன. போத்துக்கேய, ஒல்லாந்த நூல்களிலே இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களில் வாழும் தமிழர் (இவற்றிலே மலபார் என அழைக்கப்படுகின்றனர்) ஏனைய பகுதிகளிலே வாழும் சிங்கள மக்களிலிருந்து மொழி, மதம், சமூக பழக்க வழக்கங்களில் வேறுபட்டவர்கள் என மிகத் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது. இரு ஐரோப்பிய ஆட்சியாளரும் தம் தனிப்பட்ட நிருவாக முறையினை இங்கு நிலவியிருந்த பழைய பாரம்பரிய நிருவாகத்தை ஓரளவு தழுவியே இப் பிராந்தியங்களில் அமைத்தி ருந்தனர். இந்நூல்கள் அனைத்திலும் நல்லூரே தலைநகரெனக் கூறப்படுகிறது. குறைபாடுகளிருப்பினும் இவற்றிலே கூறப்படு வன ஓரளவாவது பிற மூலங்களாலும் உறுதிப்படுத்தப்படுகின் றன. வேறு மூலங்களில் இடம் பெறாத சில தகவல்களும் இவற் றில் உள்ளன.

-09
(அ) போத்துக்கேய நூல்கள்
போத்துக்கேய ஆசிரியர்களிலே கூத்தோவும், பறோசும் எழுதி asrar History of Ceylon from the Earliest Times to 1600 A.D. (ஆதிகாலம் தொடக்கம் கி. பி. 1600 வரையுள்ள இலங்கை வர Rontgo), Gur7 G3avintsgiffl6ofa5mrG35 GT(upg|Lu Conquista Spiritual Du Oriente (கீழ் நாடுகளில் ஆன்மீக வெற்றி), வேர்ணாவோ டி (5Ga/Gonnai) diarrisoflair The Temporal and Spiritual Conquest of the Island of Ceylon (ga) is 603.5 g air ala) Sudi, ஆன்மீகம் சார்பான வெற்றி) முதலிய நூல்களிலே யாழ்ப்பாண அரசு பற்றியும், அவ்வரசுடன் போத்துகேயர் எவ்வாறு தொடர்பு களேற்படுத்தி முடிவில் வெற்றி பெற்று நிருவாகத்தை நடத்தினர் என்பது பற்றியும் தமது சமயத்தினை எவ்வாறு பரப்பினர் என்பது பற்றியுமான பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
பலத்த போரின் பின்னரே போத்துக்கேயர் யாழ்ப்பாணத் தினைக் கைப்பற்றினர். மக்களின் சைவசமயப்பற்றும் இவற்றிலே கூறப்படுகின்றது. அக்காலத்திலே கொழும்புத்துறைக்குச் சமீப மாகவே தலைநகர் இருந்ததும் குறிப்பிடற்பாலது. குவேறோஸ் சுவாமிகளின் சான்றுப்படி கரையிலிருந்து நல்லூருக்கு வரும் வழியிலே (Chunguinaynar) சுங்குநய்னார்'3,அதாவது "சிங்கை நகர்’ எனும் பலமான அரணுள்ள இடம் பற்றிக் குறிப்பு வரு கின்றது. இதுவே தமிழ் நூல்களிலும், கோட்டகம தமிழ்ச் சாச னத்திலும், தமிழகக் கல்வெட்டிலும் வரும் சிங்கைநகர் அல்லது நல்லூராகும். இதுவே யாழ்ப்பாண அரசின் தலைநகரெனப் பொது வாகக் கொள்ளப்படுகின்றது" போலோததிரினிதாதே எனும் ஆசி ரியர் அரசன் தனது மாளிகைக்கு அண்மையிலிருந்த சந்தையினை மாளிகையிலுள்ள பல யன்னல்கள் மூலமாகப் பார்ப்பது வழக்கம் எனவும் கூறியுள்ளார்.கி அவர் குறிப்பிடும் சந்தை தற்கால முத் திரைச் சந்தைப் பகுதியாயிருந்திருக்கலாம். இவ்வாசிரியர் இருவரும் நல்லூரில் இருந்த பல கோவில்கள் பற்றி- குறிப்பாக ஒரு பெரிய கோவில் பற்றி -(இது பெரும்பாலும் பழைய நல்லூர்க் கந்தசுவாமி கோவிலாக இருந்திருக்கலாம்) குறிப்பிட்டுள்ளனர். அது த்ற்காலி கமாகக் கிறீஸ்தவ தேவாலயமாகவும், போர்வீரரின் பாசறை யாகவும் இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.5 அந்த அள வுக்குப் பெரிய ஆலயமாக - அரண்மனைக்கு அயலில் உள்ள ஆல யமாக - அது விளங்கி வந்துள்ளது. யாழ்ப்பாண அரசிலே பெருந் தொகையான இந்துக் கோவில்கள் இருந்தமைபற்றியும், அவற் றைப் போத்துக்கேயர் அழித்தமை பற்றியும் வேறு போத்துக் சுேய நூல்களும், தமிழ் நூல்களும் கூறுகின்றன. எடுத்துக்கர்ட்

Page 49
-10
டாக, யாழ்ப்பாணத் தமிழரசை இறுதியாக வென்ற போத்துக் கேயத் தளபதியான பிலிப்டி ஒலி வீரா ஐந்நூறுக்கு மேற்பட்ட கோவில்களை அழித்தான் எனப் புகழப்படுகிறான் 6 போலோத திரினிதா தே என்பவரின் சான்றுப்படி யாழ்ப்பாண அரசனான பர ராசசேகரன் (புவிராஜ பண்டாரம் அல்லது எதிர்மன்னசிங்கம் தனது ஆட்சியின் இரண்டாம் ஆண்டிலே கி. பி. 1592 - 1593 அளவிலே தனித்தீவினை (தற்கால லைடன் - வேலணைத்தீவி னை)ச் செப்புப் பட்டய மூலம் பிரான்சிஸ்கன் துறவிகளுக்குத் தானமாக வழங்கினான் எனக் கூறப்படுகின்றது.7 இப்பட்டயம் கிடைப்பின் இவ்வரசனைப் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைக்கலாம். இந்நடவடிக்கை அரசனின் சமய சகிப்புத் தன் மையையும் எடுத்துக் காட்டுகிறது.
மேற்குறிப்பிட்ட போத்துக்கேய ஆசிரியர்கள் சமகாலம் மட்டு மன்றி, முற்பட்ட கால யாழ்ப்பாண அரசு பற்றி நிலவி வந்த பாரம்பரிய வரலாற்று மரபுகளையும், ஐதிகங்களையும் குறிப் பிட்டுள்ளனர். இவை பெரும்பாலும் ஏற்கெனவே குறிப்பிட்ட தமிழ் நூல்களிலும் வந்துள்ளன. காலவெள்ளத்தால் அழிந்தவை போக, இன்றும் எஞ்சியனவாக லிஸ்பன், ஹேக், கோவா முத லிய இடங்களிலுள்ள ஆவண்ச்சுவடிச் சாலைகளிலுள்ள போத் துக்கேயரின் யாழ்ப்பாணம் பற்றிய ஆவணங்களும் பிறவும் நன்கு ஆராயப்பட வேண்டியவை. மேலும் யாழ்ப்பாணத்தினை ஆண்ட கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியின் கல்லறை கோவாவில் உள்ளமையும் குறிப்பிடற்பாலது.
(ஆ) ஒல்லாந்தர் நூல்களும் ஆவணங்களும்
ஒல்லாந்தரின் ஆட்சி யாழ்ப்பாண அரசிற்குச் சுமார் அரை நூற்றாண்டு பிற்பட்டதாயினும், ஒல்லாந்த ஆசிரியர் சிலரின் நூல்களும், ஒல்லாந்த இலங்கைத் தேசாதிபதிகள், யாழ்ப்பாணத் தலைமை அதிகாரிகள் முதலியோரின் பணிப்புரைகள் குறிப்பாக அவர்கள் தமக்குப் பின் பதவியேற்ற உயர் அதிகாரிகளுக்காக, எழுதிவிட்டுச் சென்றுள்ள அறிக்கைகள் அல்லது நினைவேடுகள் (Memoirs) சமகால யாழ்ப்பாணச் சமூகம், பொருளாதார நிலை பற்றிக் கூறும் செய்திகள் என்பன ஒரளவாவது யாழ்ப்பாண அரசு காலத்திற்கும் பொருந்தும். ஒல்லாந்தர் கால இலங்கை பற்றிய நூல்களிலே போல்டேயஸ் சுவாமிகள் எழுதியுள்ள A True and Exact Description of the Great Island of Ceylon (இலங்கைப் பெருந்தீவு பற்றிய உண்மையான சரிநுட்பமான வர்ணனை) எனும் நூல் (1672-ல் எழுதப்பட்டது) நன்கு குறிப்

-11
பிடற்பாலது. இவர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் தொடக்கத் திலே (1658 - 1665 வரை) யாழ்ப்பாணத்திலே புரட்டஸ்தாந் திய கிறிஸ்தவ பிரதம குருவாகத் திருப்பணி புரிந்தவர். இந்நூல் இலங்கை முழுவதைப் பற்றிக் கூறியிருப்பினும் யாழ்ப்பாணம் பற்றிய பகுதி சிறப்பாகக் குறிப்பிடற்பாலது. இவற்றில் பக்கச் சார்பு காணப்படினும், தாம் நேரடியாகப் பார்த்தவற்றை எழுதும் வாய்ப்புகளை அவர் பெற்றிருந்தார். இவரது நூலும் சமகால யாழ்ப்பாண மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் அதிலும் குறிப்பாகச் சமயப்பற்று முதலியன பற்றியும் குறிப்பிடுகின்றது. (தமிழ் மன்னர் காலத்திலே) நல்லூரில் இருந்த இந்துக் கோவில் ஒன்றினைத் தரைமட்டமாக்கி அவ்விடத்திலே போத் துக்கேயர் தமது தேவாலயத்தினை அமைத்தனர் எனவும், அத னைப் பின்னர் ஒல்லாந்தரி திருத்தித் தமது தேவாலயமாக்கினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.8 போல்டேயசின் நூலிலே சம கால நல்லூர்க் கிறிஸ்தவ ஆலய வரைபடமுள்ளது. r
இலங்கையிலிருந்த ஒல்லாந்த மகாதேசாதிபதிகளும், யாழ்ப் பாணத்தில் இருந்த தலைமை அதிகாரிகளும் எழுதியுள்ள நினை வேடுகள் பெரிய தகவற் களஞ்சியங்களுமாகும். இவற்றுள் மகா தேசாதிபதிகளான றைக்ளொவ் வான்கோவன்ஸ் (கி. பி 1663 - 1675), இவருடைய மகன் றைக்ளொவ் வான்கோவன்ஸ் ஜூனி யர் (கி. பி. 1675-1679), ஜூலியஸ் ஸ்ரீன்வான் கொல்லொனஸ்ே (கி. பி. 1743 - 1751) ஜன்சிறொய்டர் (கி. பி. 1757 - 1762) முதலியோரும், யாழ்ப்பாணத்திலே தலைமை அதிகாரிகளாகப் பணி புரிந்த அந்தோனி பவில்ஜோன் (17 ஆம் நூ. பிற்பகுதி) ஹென் டிறிக் சுவாடெக்ருன் (கி. பி. 1697) முதலிபோரும் எழுதி யுள்ளவையும் மகாதேசாதிபதியாகிய கெறிற்டி ஹீரே கொழும்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரை மேற்கொண்ட சுற்றுப் பிர யாண நிகழ்ச்சிகளடங்கிய நாட்குறிப்பேடு (செப்டம்பர் 3, 16 97) முதலியனவும் வரலாற்றேடுகளுட் குறிப்பிடத்தக்கவை. இவற் றுள் ஒன்றிலே யாழ்ப்பாண மக்கள் தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருவதும், அவர்களின் தேசப்பற்றும் கூறப்பட் டுள்ளன. அதாவது, "யாழ்ப்பாணத்திலே பெருந்தொகையான மக்கள் வாழுகின்றனர். அப்பிரதேசம் செழிப்பு வாய்ந்தது. மக்கள் இங்கு நீண்ட காலமாக வாழுகின்றனர். தாம் பிறந்த இடத்தில் அவர்கள் மிகுந்த பற்றுள்ளவர்கள், ஆனால் இங்குள்ள நிலங்களிலிருந்து மக்கள் அனைவருக்கும் தேவையான உணவு கிடைப்பதில்லை. அவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட காரணங் களால் அவர்களை மேலும் செழிப்புள்ள வன்னிப்பகுதிகளுக்கு புலம்பெயரச் செய்ய முடியாதுள்ளது" என்பதேயாம்.9 மேலும்

Page 50
س-12--
ஒல்லாந்தர் யாழ்ப்பாண மாகாணத்தின் (கொம்மான்ட்மென்ற்) இலச்சினையாக (Coat of arms) இப்பிராந்தியத்தின் கற்பகதரு வெனப் போற்றப்பட்டு வரும் பனைமரத்தினைப் பயன்படுத்தி வந்தமையும் குறிப்பிடற்பாலது.10
(ஆ) தொல்லியல் மூலங்கள்
ஒர் அரசின் தலைநகராக விளங்கிய நல்லூரில் இன்று ஒரு சில தொல்லியல் சின்னங்களே எஞ்சியுள்ளமை மிகவும் கவலைக் குரிய விடயமே. இப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெளிநாட்டு ஆக்கி ரமிப்பாளரின் (குறிப்பாகப் போத்துக்கேயரின்) படையெடுப்புகள் சூறையாடல், அழிப்புக் கொள்கை முதலியவற்றாலும் பின் னர் இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ள தமிழ் மக்களின் தொல் லியற் புறக்கணிப்பு, தேசப்பற்றின்மை முதலிய காரணங்களா லும், இப்பகுதியிலேற்பட்டுள்ள குடியிருப்புகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதெனலாம்.11 மேலும் யாழ்ப்பாண அரசு தோன்று வதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஏறக்குறைய கிறிஸ்து ஆண்டு காலம் தொட்டாவது நல்லூர்ப்பகுதி தொன்மை வாய்ந்து விளங்கி வந்துள்ளதென்பதும் சில தொல்லியல் சின்னங்களால் உறு திப்படுத்தப்பெறுகின்றது கைலாயமாலை (291) ‘நல்லைமூதூர்' என நல்லூரைக் குறிப்பிடுவது வெறும் புகழுரையன்று மேலும் நல்லூருக்குக் கிழக்கேயுள்ள கொழும்புத்துறைத் துறைமுகப்பகு தியும் அதனையடுத்து வடக்கேயுள்ள அரியாலைக் கடற்கரையும் தெற்கே தற்போதைய வில்லூண்டிப்பகுதி வரையுள்ள பகுதியும் குறிப்பிடற்பாலன. இவைகளுக்குள்ளே கோட்டை, வண்ணார் பண்ணை முதலியனவும் அடங்கும் அரியாலை கிழக்குப் பகுதி யிலேயுள்ள மணியம் தோட்டம், பூம்புகார் ஆகிய இடங்களிலே கிறிஸ்து ஆண்டிற்குச் சற்று முன்பின்னான சில நூற்றாண்டு களைச் சேர்ந்த பெருங்கற் காலப் பண்பாட்டுச் சின்னங்களும் கிடைத்துள்ளன 12 குறிப்பிட்ட கடற்கரைப் பகுதிக்கும் அதற்கு நேரேயுள்ள பூந ரிப்பகுதிக்குமிடையிலே புராதன காலம் தொட்டு நெருங்கிய தொடர்புகள் நிலவி வந்துள்ளன. ஒரு புறத்திலே இப்பகுதிக்கு இடையிலும் மறுபுறத்திலே தெற்கே யுள்ள பெருநிலப்பரப்புக் கிடையிலும் மேற்கேயுள்ள தென்னிந் தியப் பிராந்தியங்களுக்கிடையிலும் நிலவி வந்துள்ள தொடர்புகள் அண்மைக் காலத்திலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வர லாற்று விரிவுரையாளர் ப. புஷ்பரத்தினம் பூநகரியிலே நடத்தி வரும் ஆய்வுகளாலும் நன்கு புலப்படுத்தப்படுகின்றன.13 இது பற்றி ஏற்கனவே புவியியல் ரீதியிலே காலம் சென்ற லூதர் ஜெயசிங்கம் ஓரளவு சுட்டிக்காட்டியுள்ளார். போல். இ. பீரிசும்

سے 13--
யாழ்ப்பாண இராச்சியம் எனும் நூலிலே கோட்டைப் பகுதியிலே உரோம நாணயங்கள் கிடைத்துள்ளமை பற்றிச் சுட்டிக்காட்டி இப் பகுதியின் தொன்மை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.14
யாழ்ப்பாணநகரின் தொன்மை வாய்ந்த பகுதிகளிலே கோட் டைப் பகுதியும் ஒன்றாகும் எனக் கா. இந்திரபாலாவும் ஏற் கெனவே கூறியுள்ளார்.15 எனவே இப்பகுதி மேலும் நன்கு ஆரா யப்பட வேண்டிய ஒன்றாகும்.
நல்லூரிலும், அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளிலும் இது வரை கிடைத்துள்ள தொல்லியற் சின்னங்களைப் பின்வருமாறு வகுத்துக்கூறலாம். அவையாவன:
1. கட்டிடங்கள்
2. சிற்பங்கள்
3. நாணயங்கள்
4. சாசனங்கள் 5. ஏனைய சின்னங்கள் என்பனவாம்
1. கட்டிடங்கள்
ஏற்கெனவே குறிப்பிட்ட தமிழ், சிங்கள, போத்துக்கேய நூல்களிலே நல்லூரிலிருந்த கட்டிடங்கள், சிற்பங்கள் முதலியன பற்றிய குறிப்புகள் உள்ளன. எனினும் இன்றைய நிலையிலே ஒல்லாந்தர் ஆட்சிக்கு முற்பட்ட காலத்துக்குரிய (கி. பி. 1658க்கு முன்) முழுமையான கட்டிடங்கள் எவையும் இல்லை. இங்கிருந்த அரண்மனைகள், கோயில்கள் முதலியனவற்றை இடித்துப் போத் துக்கேயர் யாழ்ப்பாணம் பிரதான வீதி (முன்னைய பறங்கித் தெரு) யிலுள்ள பழைய வீடுகளையும் கோட்டையின் சில பகுதி களையும் சட்டினர் எனக் கூறப்படுகின்றது.16 இதனை உறுதிப் படுத்தும் வசையில் பிரதான வீதியிலுள்ள பஜனானந்தர் வீட்டி னைச் சேர்ந்த தற்போதைய 'சென்றல் கபே" யிலே தான் ஆறாம் பராக்கிரமபாகு காலத்திய தமிழ்க்கல்வெட்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.17 யாழ்ப்பாணம் கோட்டையிலிருந்து இரு கற்றுாண்களும் கிடைத்துள்ளன. இவற்றிலொன்றிலே முதலாம் ராஜேந்திர சோழன் காலத்திய கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது 18 இத்தூண்களும் மற்றையனவும் இப் பகுதியிலிருந்த அரண்மனை அல்லது கோயில்களிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்.

Page 51
, سن 14--
மேலும், யாழ்ப்பாணக் கோட்டையின் புறச் சுவர்களிலும், வேறு சில இடங்களிலும் பழைய காலக் (கோயில்/அரண்மனை) சட்டிடப்பகுதிகள் உள்ளனவெனவும் கூறப்படுகின்றது. இன்றைய கோட்டையின் ஆரம்பம் தமிழ் மன்னர் காலத்தில் ஏற்பட்டிருக் கலாம். பின்னர் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிகளில் அது திருத்தியும் விரித்தும் அமைக்கப்பட்டுள்ளதெனலாம். யாழ்ப்பா ணத்திலே முழுமையாக இருந்த ஒல்லாந்தரின் பாரிய கட்டிடம் இதுவொன்றேயாம். அவர்களுடைய கீழ் நாட்டாதிக்கத் தலைமை யிருப்பிடமாக இருந்த பட்டேவியாவில் (யாவாவிலுள்ளது) இருந்த கோட்டையிலும் இது பெரியதெனக் கூறப்படுகின்றது நல்லூரின் மையப்பகுதியிலே இன்றைய சங்கிலித் தோப்பிலுள்ள மந்திரி மனை. அதற்கு முன்னாலுள்ள வளைவு முதலியன யாழ்ப்பா ணத்தின் கடைசித் தமிழ் அரசனான சங்கிலியுடன் தொடர்பு படுத்தப்படினும், இன்றைய நிலையில் அவை ஒல்லாந்தராட்சி யின் பிற்பகுதியில் அல்லது பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் முற்பகுதியில் திருத்தி அமைக்கப்பட்டிருக்கலாம் என்றே கொள்ள முடிகின்றது. மேற் குறிப்பிட்ட வளைவுக்குப் பின்னாலுள்ள சிறு மேடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். மேலும், மந்திரி மனைக்கு அருகிலே தூர்ந்து காணப்படும் சுரங் கப் பாதை இங்கிருந்து உப தலைநகரான கோப்பாய்க்குச் செல் வதாகக் கூறப்படுகின்றது. ஆபத்துக்காலங்களில் தலைநகரிலி ருந்து அரசர் இதன் மூலம் தப்பிக் கோப்பாய்க்கும், அங்கும் சமா ளிக்க முடியாவிட்டால் தென்னிந்தியாவிற்கும் சென்றதாதக் கூறப் படுகின்றது. இவ்வாறு சங்கிலி தப்பிச்செல்ல முற்பட்டபோது வழி யிலே போத்துக்கேயராலே அவன் கைப்பற்றப்பட்டதாக அறியப் படுகின்றது. எனினும் இச்சுரங்கப்பாதை பற்றி மேலும் ஆராய வேண்டியுள்ளது.
மேலும் திருகோணமலையில் இருந்த புராதன சிவாலயத்தி னையும் தேவிநுவரையிலிருந்த பெரிய விஷ்ணு கோவிலையும் அழிக்கு முன் போத்துக்கேயர் அவற்றின் வரைபடங்களை வரைந்துள்ளனர்.19 ஆனால் நல்லூரிலிருந்த பெரிய கோவில் அல்லது கோவில்களின் வரைபடங்களை வரைந்தனரோ என்பது பற்றித் தெரியவில்லை. சங்கிலித்தோப்பிலுள்ள வளைவுக்கு அப்பாலேயுள்ள யமுனா ஏரி இன்று பழைய சிறப்பினை இழந்து காணப்படுகின்றது. பழைய தலைநகரை அடையாளம் காண இதுவும் அயலிலுள்ள வேறு சிலவும் ஒரளவு உதவுகின் றன எனலாம். இதற்கு அயலிலே தான் பழைய அரண்மனை, கந்தன் கோயில் முதலியன இருந்திருக்கலாம் என்பது பற்றிப் பெற்றுஸ் பிளான்சியஸ் என்பவர் வரைந்துள்ள படத்தின்

- 15
மூலமும்20 நல்லூரில் ஒல்லாந்தர் அமைத்த உயர்கல்வி நிறுவனத் தின் வரைபடம் மூலமும்21 தெளிவாக உறுதிப்படுத்தப்படுகிறது
தமிழ் மூலங்களிலும் போத்துக்கேய மூலங்களிலும் தலை நகரைச் சுற்றி அகழியும் அரணும் இருந்ததாகக் கூறப்படுகின் றது. சங்கிலித்தோப்பு, முத்திரைச் சந்தையிலுள்ள பழைய கட் டிட அத்திவாரங்கள் யமுனா ஏரியின் வலப்புறமாகக் காணப் படும் சில அத்திவாரங்கள் ஆகியன கவனித்தற்பர்லன. ஏற்கெ னவே குறிப்பிட்ட போல்டேயஸ் சுவாமிகளின் சான்றுப்படி பழைய இந்துக்கோயில் இருந்த இடத்திலே கிறிஸ்தவ ஆலயம் அமைக்கப்பட்டிருந்த தென்பதும், அரண்மனைக்கருகில் சந்தை இருந்ததென்பதும் உற்று நோக்கற்பாலன. மேலும், மக்கள் மத் தியிலே நிலவி வரும் செவிவழி மரபுகளும் இதே பகுதியினை வலியுறுத்துவன போலும், ஓர் அகழ்வாராய்ச்சியாளனின், கரு வியே ஒருவேளை புராதன தலைநகரின் சில அத்திவாரங்களை யாவது உறுதிப்படுத்தலாம். மேலும் வடக்கேயுள்ள சட்டநாதர் கோயில் சூழல், பண்டாரக்குளம், பாணன்குளச் சூழல், பூதராயர் கோயில் சூழல், கிழக்கேயுள்ள நாயன்மார்க்கட்டு, கொழும்புத் துறை, பிரதானவீதியை அடுத்துள்ள பகுதிகள், தெற்கேயுள்ள கைலாச பிள்ளையார் ஆலயச் சூழல், மேற்கேயுள்ள வீரமாகாளி அம்மன் கோவில் சூழல், கோட்டைப்பகுதி, வண்ணார்பண்ணை, தலங்காவற் பிள்ளையார் கோயில் சூழல் முதலிய இடங்களும் தொல்லியல் தடயங்களை இன்னும் உள்ளடக்கியிருக்கலாம். மேற்கூறிய இடங்கள் பலவற்றிலே மக்கள் குடியிருப்புகள், வர்த் தக நிலையங்கள் முதலிய பல மனித செயற்பாடுகள் ஏற்பட்டி ருக்கின்ற காரணத்தினால் எஞ்சியுள்ள தொல்லியற் சின்னங்க ளும் மறைக்கப்பட்டு விட்டன அல்லது கைவிடப்பட்டுள்ளன. வண்ணார்பண்ணைக்கு அயலிலுள்ள கமால் வீதிச்சிலைகள் நக ரிலே மக்கள் குடியிருப்புகளின் மத்தியிலே அண்மையிற் கிடைத் துள்ளமை இதற்கொரு எடுத்துக்காட்டாம்.
2. சிற்பங்கள்
ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, போத்துக்கேயரின் கலையழி வுக் கொள்கையினாலே இங்குள்ள அரண்மனைகள், கோயில்கள் முதலியன அழிக்கப்பட்ட போது அவற்றிலிருந்து சிற்பங்கள், ஒவியங்கள் முதலிய பல கலைச் செல்வங்களும் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டன. எனினும், தெய்வங்களின் சில படிமங் கள் கிடைத்துள்ளன. அண்மையில் இன்றைய சட்டநாதர் கோயில் திருக்குளத்தினை வெட்டிய போது வெளிவந்த எட்டுக்

Page 52
-16
கற்சிலைகள் கிடைத்துள்ளன. இவை பழைய சட்டநாதர் ஆல யத்தைச் சேர்ந்தவை எனக் கொள்ளப்படுகின்றன. தற்போது யாழ்ப்பாணம் நூதனசாலையில் இவை வைக்கப்பட்டுள்ளன. இவற்றிலே பிள்ளையார், வள்ளியம்மை, தெய்வயானை அம்மை யுடன் கூடிய முருகன், கஜலசஷ்மி, தகFணாமூர்த்தி, சனீஸ்வரன், காவல் தெய்வம் (ஐயனார்) ஆகியோரின் திருவுருவங்கள் அடங் கும். இந்நேர்த்தியான சிலைகள் கி. பி. 13 - 17 ஆம் நூற் றாண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தன எனலாம்.2 பூதராயர் குளத்திலிருந்து எடுக்கப்பட்டு நல்லைக்கந்தன் ஆலயத்தின் மூலஸ் தானத்திலேயுள்ள வேலின் இருமருங்கிலும் வைக்கப்பட்டுள்ள வள்ளியம்மை, தெய்வயானை அம்மை ஆகியோரின் தாமிர விக் கிரகங்களும் குறிப்பிடற்பாலன.23 இவை பெரும்பாலும் நல்லூரி லிருந்த பழைய கோயில் ஒன்றினைக் குறிப்பாகப் பழைய நல்லைக் கந்தன் ஆலயத்தைச் சேர்ந்தனவாயிருக்கலாம். யாழ்ப் பாணத்திலுள்ள கமால் வீதிப்பகுதியிலே 1979 ஆம் ஆண்டு குழி வெட்டியபோது தற்செயலாகக் கிடைத்துள்ள இரு சிலைகளும் குறிப்பிடற்பாலன. இவற்றுள்ளே கற்சிலை சண்டேஸ்வரனின் சிலை எனவும், தாமிரத்தால் செய்யப்பட்டுள்ள சிலை துர்க்கை யின் திருவுருவமெனவும் கா. இந்திரபாலா அடையாளம் கண் டுள்ளார்.24 இவை மேலும் ஆராயப்பட வேண்டியவை. இவை பெரும்பாலும் இப்பகுதியிலிருந்த கோயில் ஒன்றினைச் சேர்ந்தன வாக இருந்திருக்கலாம். புராதன நல்லூர்ப்பகுதியிலிருந்த கட்டி டங்களை இடித்து அமைக்கப்பட்ட கோட்டையிலும் சில சிலை களின் பகுதிகளாவது கிடைக்கலாம். சிற்பங்கள் அவ்வக் காலக் கலைப்பாணி, சிறப்பு, சமயநிலை முதலியனவற்றையும் பொரு ளாதார நிலையையும் பிரதிபலிப்பனவாகும்.
3, நாணயங்கள்
நல்லூரிலிருந்து ஆட்சிசெய்த தமிழ் மன்னர் தமக்கே சிறப்பான நாணயங்களைப் பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களிலே வெளியிட்டும் தமது தனித்தன்மையைப் புலப்படுத்தியுள்ளனர். இவற்றுள்ளே செப்புக் காசுகளே அதிகம். இவை யாழ்ப்பாணத் திலே மட்டுமன்றி, வெளியே பூநகரி, மன்னார், திருகோணமலை முதலிய இடங்களிலும், தமிழகத்திலும் கிடைத்துள்ளன. இவற் றின் பரம்பல் பற்றிய விரிவான ஆய்வு இது வரை நடைபெற்ற தாகத் தெரியவில்லை. யாழ்ப்பாண மன்னர் தனியான நாணயங் களை(சேது, நந்தி பிறை முதலியன பொறித்த நாணயங்களை) வெளியிட்டனர் என முதலியார் செ. இராசநாயகம் கூறிய கருத் தினை வண , பிதா ஞானப்பிரகாசரே தக்க சான்றுகளுடன் சழத்திலே வெளிவந்த ஆங்கில சஞ்சிகை ஒன்றிலும்5ே, தமது

-17
துரலொன்றிலும்28 ஆணித்தரமாக நிறுவினார். பழைய தலை நகரைச் சூழ்ந்துள்ள பகுதியிலே பெருந்தொகையான சேது நாண ஆங்கள் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்நாணயங்களிலே பூல வகைகள் உள்ளன. பொதுவாக முன்பக்கத்தில் ஆடையும் இtடமும் தரித்துக் கொண்டு அரசர் நிற்கும் நிலையிலே காணப் படுகிறார்; அவரின் இரு பக்கங்களிலும் இரு குத்துவிளக்குகள் ஆள்ளன. சிலவற்றிலே சூலம் உண்டு; இடது கரத்திலே மலர் அல்லது சங்கு வைத்திருக்கிறார். பின்பக்கத்திலே கம்பீரமான தோற்றமுள்ள ஓர் எருது படுத்த நிலையில் உள்ளது. அதற்கு மேல் இளம் பிறையும் "சேது" என்னும் வாசகமும் உண்டு. சேது என்பது சேதுகாவலன் என்பதன் சுருக்கமெனவும் கொள்ளப்படு நின்றது. யாழ்ப்பாண அரசர்கள் தமிழகத்தின் தென்கீழ்க் கரையி லுள்ள இராமேஸ்வரத்துடனும் தொடர்புள்ளவர்கள். அண்மைக் காலத்திலே வேறுவகையான நாணயங்களும் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றிலே பூரீராஜ சேகர (பரராஜசேகரன், செகராசசேகரன் எனும் மன்னர் பெயர்களின் அல்லது பட்டப் பெயர்களின் பகுதியாகும்), செகரா(ச)சேகர(ன்) எனும் மன்னர் களின் பெயர்களும் உள்ளதை ஐராவதம் மகாதேவன் சுட்டிக் கரிட்டியுள்ளார்.27 எனவே "சேது" மட்டுமன்றி மன்னர் பெயர் பொறித்த நாணயங்களும் நன்கு குறிப்பிடற்பாலன. நல்லூரிலும் அதன் சுற்றாடலிலும் யாழ்ப்பாண மன்னரின் நாணயங்களை விட முற்பட்ட கால நாணயங்கள் சிலவும் குறிப்பாகப் பிற் பட்ட கால நாணயங்கள் பலவும் கிடைத்துள்ளன. இவற்றுள்ளே சோழ, பாண்டிய நாணயங்கள், தம்பதேனியா, யாப்பகூவ, கோட்டை மன்னரின் நாணயங்கள், போத்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானிய நாணயங்கள் முதலியனவும் அடங்குவன. கோட் டைப் பகுதியிலே ரோமநாணயங்கள் கிடைத்தமை பற்றி ஏற் கெனவே கூறப்பட்டுள்ளது. நாணயங்கள் குறிப்பிட்ட காலப் பொருளாதார நிலை, கலைச்சிறப்பு, சமய நிலை, குறிப்பிட்ட மன்னரின் ஆதிக்கம், வியாபாரத் தொடர்புகள் முதலியனவற்றை யும் காட்டுவனவாகும்.
4. smraFsør fåt56T
இவற்றுள்ளே இப்பகுதியிலேயுள்ள யாழ்ப்பாண நகரின் பிர தான வீதியிலுள்ள "சென்றல் கபே யிலே கிடைத்த சாசனம், கோட்டையில் கிடைத்த முதலாம் ராஜேந்திர சோழப் பெருமன்ன எரின் சாசனம் ஆகியன பற்றி ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள் துை. யாழ்ப்பாணத்தில் இதுவரை கிடைத்த முதலாஒது சோழச் சாசனமும் இதுவேயாகும். இது அவர்களின் ஆதிக்கம் இங்கு

Page 53
س-i8س-
நிலவியதையும். கோயிலமைத்து அதனை ஆதரித்தமையினையும் காட்டும். இதுபெரும்பாலும் இன்றைய கோட்டைப் பகுதியில் அல்லது தலைநகரின் மையத்திலிருந்த கோயில் ஒன்றைச் சேர்ந் ததாக இருக்கலாம் ஆறாம் பராக்கிரமபாகுவின் சாசனம் அவ. னுடைய ஆட்சி சிறிது காலம் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டமை குறித்துச் சிங்கள நூல்களும், யாழ்ப்பாண வைபவமாலையும் பிறவும் கூறியிருப்பனவற்றை உறுதிப்படுத்துவதாகலாம். இது அரண்மனை அல்லது கோயிலைச் சார்ந்ததாயிருக்கலாம். இத னைத் தமிழிலே பொறித்ததன் மூலம் இப்பகுதியிலே வாழ்ந்த மக்களின் மொழியாகிய தமிழ்மொழியினையும் அவன் ஆதரித் தமை தெரியவருகிறது. தென்மேற்கு இலங்கையிலுள்ள முன் னேஸ்வரம் கோவிலிலும் இவனுடைய தமிழ்ச்சாசனம் உள்ளது.
யாழ்ப்பாண மன்னர்களுடைய தமிழ்ச் சாசனங்கள் ஒரு சிலவே கிடைத்துள்ளமை மிகவும் துரதிர்ஷ்டமே இவற்றுள் மிக முக்கியமானது தென் இலங்கையிலுள்ள கேகாலை மாவட்டத்தி லுள்ள கோட்டகம என்னுமிடத்திலே கிடைத்துள்ள ஒரு வெண்பா பொறிக்கப்பட்டுள்ள கற்பலகைச் சாசனம் ஆகும். அதிாவது,
"சேது - கங்கணம்வேற் கண்ணிணையாற் காட்டினார் காமர்வளைப் பங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார் - பொங்கொலிநீர்ச் சிங்கைநக ராரியனைச் சேரா வனுரேசர் siliidsoir LOLLDT.gift 5ith'
என்பதே அவ்வெண்பாவாகும்.28
வெண்பா யாப்பிலமைந்துள்ள இச்செய்யுள் கவிநயமுடைய தாகும். கி. பி. 14 ஆம் நூற்றாண்டிலே யாழ்ப்பாண ஆரியச் சக் கரவர்த்தி தென்னிலங்கையிலாதிக்கம் செலுத்தியதற்கு இதுவும் வேறு சில சான்றுகளும் உள்ளன. இங்கு அனுரேசர் என்பது: அனுராத புரத்திலிருந்த சிங்கள மன்னர் (அக்கால கட்டத்தில் அவர்கள் தென்னிலங்கையிலிருந்தாலும் பழைய தலைநகரின் பெயரால் அழைக்கப்பட்டிருப்பர்) அல்லது பொதுவாக அரசர் களைக் குறித்திருக்கலாம். SSASSASSASSSS AAALALASA SS SS LSS S S
கள்ளியங்காட்டிலே கிடைத்துள்ள இரு செப்பேடுகளிலொன்று யாழ்ப்பாண அரசனான பரராஜசேகர மகாராஜா சைவர்க ளின் பிரதான தலமாகிய சிதம்பரத்திலுள்ள மடத்திற்களித்த தானங்கள் பற்றிக் கூறுகின்றது.29 இது அரசரின் சமயப் பற்றி னையும், ஆதரவினையும், தமிழகத் தொடர்பையும், சுட்டிக் காட்டுகின்றது.

س-19--
வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தை அடுத்துள்ள நாயன் மார்கட்டு திருக்குளத்திலிருந்து பெறப்பட்ட கல்லிலே சிங்கையா ரியன் இத்தீர்த்தக் குளத்தைக் கலி (யுகம்) 3025 இலே கட்டி னான் எனக் கூறப்படுகின்றது.80 இக் கல்வெட்டிலுள்ளதமிழ் எழுத்துகள் மிகவும் தெளிவாக உள்ளன. இது யாழ்ப்பாண அரசர் காலத்தினைச் சேர்ந்ததெனப் பொதுவாக நம்பப்படு கின்றது. ஆனாலும் சிலர் இதனைப் பிற்காலத்தில் அரசனின் பெயரால் வேறு யாரோ பொறித்திருக்கலாமெனவும் கொள்வர். இதிலே கூறியுள்ள ஆண்டாகிய கலி 3025 தான் பெரிய சிக்கலை (பிரச்சினையை) ஏற்படுத்தியுள்ளது. இதன்படி இது சுமார் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். ஆனால் அவ்வாறு கொள்ள முடியாது. மேற்குறிப்பிட்டதற்கு அருகாமையில் அரசகேசரி வளவு உள்ளது. இங்கிருந்த மேல் மாளிகையில் இருந்து தான் அவர் இரகுவமிசத்தை இயற்றினார் எனக் கூறப்படுகின்றது. அண்மைக்காலத்திலே பதவியாவிலே கண்டு பிடிக்கப்பட்ட சிறிய சம்ஸ்கிருதக் கல்வெட்டு31 யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த ஆரியச் சக்கரவர்த்திக்கு உரியதென்பதை சி. பத்மநாதன் நன்கு துலக்கமாக விளக்கியுள்ளார்.32 இதன் மூலம் இப்பகுதியிலே கி. பி. 13 ஆம் நூற்றாண்டளவில் யாழ்ப்பாண அரசரின் ஆதிக் கம் நிலவியதை உறுதிப்படுத்தலாம். தகழிணகைலாசபுராணம் முதலிய நூல்களின் சான்றுப்படி திருகோணமலையிலே யாழ்ப் பாண அரசரின் ஆதிக்கம் நிலவியதை அறியலாம்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலே திருவிழாக் காலங்களிலே கூறப்படும் சம்ஸ்கிருதக் கட்டியம் (புகழ் மாலை) இக்கோவிலை பூரீசங்க போதி புவனேகபாகு கட்டினான் எனக் கூறுகிறது. இது கல்வெட்டாக இல்லாவிடினும் மரபு வழியாக நிலவி வந்துள்ளது. வசதிக்காக இதனையும் கல்வெட்டுத் தலைப்பிலே சேர்த்துள் ளோம். இப்புவனேகபாகுதான் ஆறாவது பராக்கிரமபாகு சார் பிலே யாழ்ப்பாணத்தினை வென்று சிறிது காலம் (கி. பி. 1450 - 1467) நிர்வாகம் செய்த சபுமால்குமாரய (தமிழில் செண்பகப் பெருமாள்) எனவும், இவனே பின்னர் கோட்டை அரசனாக ஆறாம் புவனேகபாகு எனும் பெயருடன் விளங்கினான் எனவும் பொதுவாகக் கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே முன்னைய தமிழ ரசரால் அமைக்கப்பட்டுப் போரின் போது பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படாத கோயிலை இவன் மேலும் திருத்தியமைத்தமை யால் அல்லது விசாலித்தமையால், இவன் பெயர் கோயிற் கட் டியத்திலிடம் பெற்றிருக்கலாம். மேலும் சிலர் இப்புவனேகபாகு தமிழரசனின் மந்திரி என்பர், வரலாற்றிலே ஒரு நிறுவனத்தை நிறுவியவனின் பெயர் மங்கிப் பின்னர் அதனைத் திருத்தியவனின்

Page 54
س-20خس- ,
பெயர் நிலைபெறுதலுமுண்டு. ஸ்டுத்துக்காட்டாகத் திருகோண மலையிலிருந்த பழைய வெல்கம் விகாரை (பெளத்த விகானர) சோழர்காலத்திலே திருத்தியமைக்கப்பட்டது. பின்னர் அரசரின் பெயரால் இது ராஜ ராஜப் பெரும் பள்ளி என அழைக்கப்பட்டது என்பது ஈண்டுகவனித்தற்பாலது.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டிலே கம்பளையிலிருந்து ஆட்சி செய்த மூன்றாம் விக்கிரமபாகுவின் ம.வெலச் சிங்களிக் கல்வெட் டொன்றிலே இவனுக்கும், மார்த்தாண்டப் பெருமாள் என்பவ னுக்குமிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் பற்றிக் குறிப்புள்ளது.33 இதன்படி மலைநாட்டிலுள்ள சிங்குருவான முதலிய ஐந்து மாவட்டங்களில் மார்த்தாண்டப் பெருமாள் வரிவசூலிசகும் உரிமை பெற்ற னென்று அறியப்படுகின்றது. இங்கு கூறப்பட் டுள்ள மார்த்தாண்டப் பெருமாள் சமகால யாழ்ப்பாண அரச னான மார்த்தாண்ட சிங்கை ஆரியன் எனப் பொதுவாக அடை யாளம் காணப்படுகிறான் 34 இக்காலத்திலே யாழ்ப்பாண மன் னரின் ஆதிக்க்ம் தெற்கே கம்பளை, பாணந்துறை வரை விரிவ டைந்துள்ளமை பற்றி ராஜவலிய, நிகாய சங்கிரஹ , குருணாகல விஸ்தர, இபின்பற்றுற்றாவின் பிரயாணக் குறிப்புகள் முதலியனவும் உறுதிப்படுத்துவன.
இலங்கைக்கு வெளியே தென்னிந்தியாவிலே குறிப்பாகத் தமிழகத்திலுள்ள தமிழ்ச்சாசனங்கள் சிலவும் குறிப்பிடற்பாலன. கி.பி. 13ஆம் நூற்றாண்டிலே ஆதிக்கம் சிறந்து விளங்கிய இரண் டாவது பாண்டியப் பேரரசைச் சேர்ந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், குறிப்பாக மாறவர்மன் குலசேகரன் காலத்துச் சாசனங்கள், தென்பாண்டி நாட்டில் ஆட்சி செய்த அரிகேசரி பராங்குசவர்மன், சில விஜயநகரப் பெருமன்னர், தஞ்ச்ர்வூர் நாயக்க மன்னர் முதலிபோரின் சில சாசனங்களிலும் யாழ்ப்பாணி அரசு பற்றிய குறிப்புகள் உள்ளன. யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி குடும்பத்தினர் பாண்டி நாட்டிலுள்ள செவ் விருக்கை நாட்டினைச் சேர்ந்தவரென்பது இரண்டாம் வாண்டி யப் பெருமன்னர் சாசனங்களாலும், பிறவற்றாலும், தலைநகர் சிங்கைநகர் என்பது கோட்டகம தமிழ்ச்சாசனம், செகராசசேகரி மாலை, செகராசசேகரம், தகழிண கைலாச புராணம் முதலிய வற்றோடு, அரிகேசரி பராங்குசவர்மனின் கல்வெட்டொன்றாலும் அறியப்படும். இது போலவே யாழ்ப்பாணம் யாழ்ப்பாணாயன் பட்டினம் என்பது திருப்புகழ், திருமாணிக்குழிக்கல்வெட்டு, (கி,பி. 15ஆம் நூற்றாண்டு ), சில போத்துக்கேய நூல்கள் முத லியவற்றாலும் அறியப்படும்.

---2fس-
5 ஏனைய சின்னங்கள்
மேலும் மத்திய காலக்கூரை ஒடுகள், செங்கட்டிகள், மட் பிரிண்டஒடுகள் முதலியன சங்கிலித்தோப்பு முதலிய இடங்களி லுள்ளன. இவை நன்கு ஆராயப்பட வேண்டியவை. வீரமாகாளி அம்மன் ஆலயத்திலே கடைசி அரசனான சங்கிலியனின் வாள் உள்ளதாகக் கூறப்படுகின்ற்து.
இடப்பெயர்கள்
தலைநகர் நல்லூர் (நல்ல ஊர்) என அழைக்கப்பட்டமை குறிப் பிடற்பாலது. இது தமிழகத்திலுள்ள இடமொன்றின் 'பெயராகும். தமிழகத்திலே ஆதிச்ச நல்லூர், சக்கரவர்த்தி நல்லூர், வெண்ணை நல்லூர், சேய் நல்லூர், வீராநல்லூர், சிறுத்தொண்டர் நல்லூர், கடையநல்லூர், சிங்கநல்லூர் முதலிய பல இடங்களுண்டு. இத் தகைய இடமொன்றிலிருந்து இங்ரு வந்து குடியேறியோர் தமது தாயகப் பெயரை இப்புதிய இடத்திற்குச் சூட்டியிருப்பர். மேற் குறிப்பிட்ட சிங்கநல்லூர் எனும் பெயர் தமிழகத்தின் பாண்டி நாடு, க்ொங்குநாடு முதலியனவற்றிலும் உண்டு. தல்லூர் எனும் பெயர் யாழ்ப்பாணத்திற்குத் தெற்கே பூநகரி, திருகோணமலை முதலிய இடங்களிலும் உள்ளது. நல்லூரிலும் அதனைச் சூழ்ந் துள்ள பகுதிகளிலுமுள்ள இடப்பெயர்கள் பற்றிய ஒரு நுண் ணாய்வும் நல்ல பயனளிக்கும். இப் பெயர்கள் பெரும்பாலும் தூயதமிழ்ப் பெயர்களே. நல்லூரிலுள்ள பழைய பிரதான சிவா லயங்களிலொன்று சட்டநாதர் ஆலயமாகும். தமிழகத்திலே திரு ஞானசம்பந்தர், முத்துத்தாண்டவர் முதலியோரி பிறந்த சீர்காழி யிலும் சட்டநாதர் ஆலயமுண்டு என்பதும் இங்கு ஒப்பிட்டு நோக்கற்பாலது.
இவ்வாறு பலதிறப்பட்ட வரலாற்று மூலாதாரங்களைப் பயன் படுத்தியே யாழ்ப்பாண அரசு குறிப்பாக அதன் தலைநகர் நல்லூர் பற்றி ஓரளவாவது அறியக்கூடியதாக உள்ளது. ஏற்கெனவே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாயிருந்து சோழப் பேரரசு தொடர்ந்து ஏற்பட்ட பாண்டியப் பேரரசு, ஆட்சிக் காலங்களில் மேலும் முக்கியத்துவம் பெற்ற நல்லூர், கி , பி. 13ஆம் நூற் றாண்டில் உதயம் பெற்ற தமிழரசின் தலைநகராகச் சுமார் நான்கு நூற்றாண்டுகளாக விளங்கியுள்ளது இவ்வரசு இலங்கையின் வட பிராந்தியத்திலிருந்த அரசு போலக் காணப்படினும், இதிலிருந்து ஆட்சி புரிந்த அரசர்கள் முழு இலங்கையிலும் தமதாதிக்கத்தை ஏற்படுத்த முயன்று வந்தமையும் குறிப்பிடற்பாலது. நன்கு முயன்று ஆராயின் மேம்லுபுதிய தகவல்கள் கிடைக்கலாம்.

Page 55
10,
11,
ー22ー
அடிக்குறிப்புகள்
1. Rajavaliya, (Tr.), by B. Gunasekere, Colomho, 1960, p. 60. " 2. Ibn Batuta, The Rehla, (Tr.), by M. Husain, Gaeward Oriental Series, No. CXXII, Baroda, 1953, pp. 217 – 224.
3. Queyroz Fernao De, The Temporal and Spiritual Conquest of the Island of Ceylon, (Tr.), Fr. S. G. Perera, Colombo, 1930, p. 452.
4. Trinidade, Paulo da, Conquista Spiritual Du Oriente, Ch'n pters on the Introduction of Christianity to Ceylon Eng. Tr., by Rt. Rev. Dr. Edmund Peiris and Friar Archilles Meersman, Colombo, 1972, pp. 199 - 200.
5. i. Trinidade, Ibid, pp. 211, 213, 215, 219, 363 - 365, 374.
ii. Queyroz, Op. cit, pp. 363 - 365, 374, 450-453, 632 - 634,
641 - 642. .
The Rebellion of Jaffna and the progress of its conquest under the government of Constantino De sa Noronho translated from Spanish into English by H. St. George JRASCB, Vol. X1, No. 41, 1890. p. 568.
Trinidade, Op. cit., pp. 181, 191.
Baldaes, Phillipus, A True and Exact Description of the Great Island of Ceylon, (Tr.), The Ceylon Historical Journal, Vol. VIII, Colombo, 1958 - 1959, p. 326.
. Instructions from the Governor General and Council of
India to the Governor of Ceylon (1656 - 1665) to which
is appended the memoir left by Anthonv Pavilgoen Commandeur of Jaffnapatam to his successors, (Tr.), by Sophia
Pieters, Colombo, 1908, p. 12.
Silva R, K. de & Beumer W. G. M. Illustrations and Views of Dutch Ceylon, Leiden 1988, p. 301.
சிவசாமி, வி. நல்லூரும் தொல்பொருளியலும், ஒளி, யாழ்ப் பாணம், ஆகஸ்ட் 1972, பக். 49 - 64,

12.
-23
Ragupathy P., Early Settlements in Jaffna. An Archaeological Study, Madras, 1987, pp. 32 - 37.
13. புஷ்பரத்தினம், ப. "இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி",
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
23.
24.
பொருளிதழ், யாழ்ப்பாணம், 1991.
Pieris D. E., The Kingdom of Jaffnapatam, Ceylon, 1944, p. 35, fn. 85. ۔
*யாழ்ப்பாணக் கோட்டையுள்ள இடத்திற்குத் தமிழ்ப் பெயர் ஒன்று இருந்திருக்கலாம் என்பது ஐயத்திற்கு இடமாயிலும், மழை பொழிந்த பின் கோட்டையின் சுவர்களுக்குட்பட்ட இடங்களிலே உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளன. எனவே, இப்பகுதியில் மிகப் பழைய காலம் தொட்டு மக்கள் வாழ்ந்திருப்பர்."
Indrapala K., “The City of Jaffna - A Brief Historical Survey The Jaffna Municipal Council Silver Jubliee Souvenir, Jaffna, 1974, unpaged (article 9 pages).
முத்துத்தம்பிப்பிள்ளை ஆ யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப் பாணம், 1915, பக். 75.
Indrapala. K., (ed), Epigraphia Tamilica Vol. I, Pt. I, Kandy, 1971, pp. 29 - 31.
Indrapala. K, (ed), Ibid, pp. 52-56.
Rasanayagam. S, Ancient Jaffna, Madras, 1926, pp. 214, 378. -
Pieris P. E., Ceylon, Portuguese Era, Vols. I & II, Colombo
913, 1914.
Silva R. K. de & Beumer W. G. M. Op. cit, pp. 323. 22.
சிவசாமி. வி, காலத்தால் முந்திய நல்லூர் சிலைகள், கலைக்கண் மறுபிரசுரம், வட்டுக்கோட்டை, 1973 - 11 - 23, ւմ. 1 - 8.
முத்துக்குமாரசுவாமி வை, நல்லூர் கந்தசுவாமி கோவில், பூரீலங்கா, 11 ஆகஸ்டு 1950, ப. 12 - 14, 41.
இந்திரபாலா கா. , கமால் வீதிச் சிலைகள்", வீரகேசரி வார வெளியீடு, 11 = 02 - 1979, ப. 5, 7, 25 - 02-1979, ப. 7,

Page 56
--24-ی
25. i. Gnanaprakasar Rev. Fr. S. The Forgotten coinage of the kings of Jaffna' Ceylon Antiquary and Literary Register, Vol. V, pt.4 Colombo April 1920, pp. 172-179.
ii. Codrington H. W., Ceylon coins and currency, Colombo,
1924, pp. 74 - 78.
26. சுவாமி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாண வைபவமாலை விமர்
சனம், அச்சுவேலி, 1928,
27. Mahadevan l, Some rare coins of Jaffna, E)amilica, Vol. I,
Madras, pp. 111 - 120.
28. i. Codrington H. W., “The Problem of the Kotagama Inscription, JRASCB’, Vol.XXXIII, Colombo, 1932, pp.214-215.
ii. Rasanayagam S., Ancient Jaffna, Madras, 1926, p. 364, இவ்வெண்பாவில் காணப்படும் இரண்டாவது வரியின் ஒரு பகுதியை வேறு விதமாக வாசித்தும் விளக்கம் அளிக்கப் பட்டுள்து. (இந்நூலில் இரண்டாவது அத்தியாயத்தைப் பார்க்கவும்.)
29. இது ஏற்கெனவே 04 - 09 - 1932 ஈழகேசரியில் வெளிவந்தது. இதைவிட கயிலாய வன்னியனாரின் தர்ம சாதனப் பட்டய மும் வெளிவந்ததாகத் தெரிகிறது. இவை இரண்டும் சி. பத்மநாதன் எழுதிய வன்னியர் (பேராதனை, 1970) எனும் நூலில் வெளியிடப்பட்டு ஆராயப்பட்டுள்ளன. r
30. இதுவும் முப்பதுகளில் ஈழகேசரியில் வெளிவந்தது. பின்னர்
வேறு பிரசுரங்களிலும் இடம் பெற்றுள்ளது. முத்துக்குமாரசுவாமி வை. நான்காம் வகுப்பு சரித்திர கதா வாசகம், யாழ்ப்பாணம், 1940, ப. 111.
31, Paranavitana S., A Sanskrit Inscription from Padaviya JRASCB (N.S), Vol.VIII, pt. 2, Colombo, 1965, pp.261-264.
32. Pathmanathan S., The Kingdom of Jaffna, Colombo,
1978, pp. 206 - 209.
33. Epigraphia Zeylonica Vol. V, pt. 3, No. 47, ColombQ,
1965, pp. 463 - 465,
34. i. Ibid p. 464.
ii. Pathmanathan S, Op. cit.

அத்தியாயம்)2
ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்
பதினாறாம் நூற்றாண்டிலே இலங்கை மீது போத்துக்கேய ரின் படையெடுப்புகள் ஏற்படலாயின. காலப்போக்கில் அவர்கள் கரையோரப் பகுதிகள் பலவற்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அத்துடன் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கும் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். இலங்கையிலேற்பட்ட போத் துக்கேயரின் ஆதிக்க வளர்ச்சி பற்றியும் அவர்கள் காலத்தோறும் இலங்கையிலுள்ள அரசர்களோடு கொண்டிருந்த தொடர்புகள் பற்றியும் போத்துக்கேய வரலாற்று நூல்கள் விரிவான தகவல் களைக் கொண்டுள்ளன. பதினாறாம் நூற்றாண்டிலே கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என்ற மூன்று இராச்சியங்களும் திரு கோணமலை, பழுகாமம், பானமை முதலிய பல சிற்றரசுகளும் நிலவியதாக அந்நூல்கள் கூறுகின்றன. இவற்றுள் யாழ்ப்பாண இராச்சியமானது. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதிகளை யும் வட இலங்கையிலுள்ள வன்னிமைகளான பனங்காமம், முள் ளியவளை, தென்னமரவடி முதலியவற்றையும் உள்ளடக்கியிருந் தது. (படம் -1)
யாழ்ப்பாண மன்னர்கள் தென்னிந்திய அரசுகளோடும், சிங் கள அரசுகளோடும் பின்பு போத்துக்கேயரோடும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தனர். விசயநகரப் பேரரசர்கள தும், தஞ்சாவூர் தாயக்கர்களதும் சாசனங்களும் அவர்களைப் பற்றிய பிற ஆவணங்களும் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பற் றிய சில சுருக்கமான குறிப்புகளைக் கொண்டுள்ளன. இவை பெரும்பான்மையும் யாழ்ப்பாண இராச்சியத்தை யாழ்ப்பாண தேசம் எனவும், யாழ்ப்பாணாயன் பட்டினம் எனவும் வர்ணிக் கின்றன.
யாழ்ப்பாண மன்னர்கள் தென்னிலங்கை அரசர்களோடு கொண்டிருந்த தொடர்புகளைச் சிங்கள வரலாற்று நூல்களான

Page 57
ー26ー
ராஜாவலிங், அளகேஸ்வரயுத்தய, நிகாயசங்கிரகய என்பவற்றின் மூலமாகவும் சிங்களச் சாசனங்கள் சிலவற்றின் வாயிலாகவும் கோகில சந்தேஸய, பறவி சந்தேஸய, பரகும்பாஸிரித போன்ற இலக்கியங் களூடாகவும் அறிந்து கொள்ளலாம். பதினாறாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலிருந்து யாழ்ப்பாண அரசரின் வரலாற்றை ஒருவாறு விரிவாகவும் தெளிவாகவும் போத்துக்கேய மூலங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், வளர்ச்சி என்பன பற்றியும், அதன் மன்னர்களின் வரலாற்றையும் காலவரிசைக் கிரமத்திலும் விரிவாகவும், தெளிவாகவும் ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கேற்ற வகையிலே தமிழ் நூல்கள் அமையவில்லை. யாழ்ப்பாண வரலாற்றைக்கூறும் யாழ்ப்பாண வைபவமாலை பதி னெட்டாம் நூற்றாண்டிலே மாதகலைச் சேர்ந்த மயில்வாகனப் புலவர் என்பவராலே எழுதப்பெற்றது. ஒல்லாந்த அதிகாரிகளின் வேண்டுகோளினாலே இந்நூல் எழுதப்பட்டது என்பதும் வையா பாடல், கைலாயமாலை, இராசமுறை, பரராசசேகரன் உலா என்னும் நூல்களை ஆதாரமாகக் கொண்டே அது எழுதப்பெற்றது என்பதும் நூலின் பாயிரத்தின் மூலமாக அறியப்படும் செய்திகளாகும். மயில் வாகனப் புலவர் மூலநூல்களாகக் குறிப்பிடுவனவற்றுள் இராச முறை, பரராசசேகரன் உலா ஆகியவிரண்டும் அழிந்தொழிந்து ‘விட்டன. ஏனையவிரண்டும் அச்சிடப்பெற்று வெளிவந்துள்ளன. கைலாயமாலை உறையூர்ச் செந்தியப்பர் என்பவராலே எழுதப் பெற்றுள்ளது. அந்நூலிலே அது எப்பொழுது எழுதப்பட்டது என்பது பற்றி ஒருவித குறிப்புங் காணப்படவில்லை. அது மயில் வாகனப்புலவரின் காலத்துக்கு முற்பட்டது என்பதைமட்டும் உறுதி யாகக் கொள்ளலாம்.
செய்யுள் வடிவில் அமைந்த வையாபாடல் என்னும் நூலிலே நூற்றிற்கும் மேலான பாடல்கள் காணப்படுகின்றன. அது செக ராசசேகரன் காலத்திலே வையாபுரி ஐயர் என்பவராலே எழுதப் பட்டது என்பது ஒரு ஐதீகம். மல்லிகாவனத்து விநாயகனைப் பாயிரச் செய்யுளொன்று புகழ்ந்துரைப்பதால் முள்ளியவளையிலே இந்நூல் எழுதப் பெற்றிருத்தல் கூடும். வன்னிப் பிரிவுகளைத் தமிழ் நாட்டிலிருந்தும் வந்த பிரதானிகள் பலர் கைப்பற்றித் தமது ஆட்சியை அங்கு ஏற்படுத்தியமை பற்றி வையாபாடல் வர்ணிப்பதாயுள்ளது. யாழ்ப்பாணத்து முதலாவது ஆரியவரசன் காலத்திலே இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்று கொள்ளும் வகையிலே இந்நூலின் கதைகள் அமைந்துள்ளன. பல பிரதானி களின் பெயர்களும், சமூகப்பிரிவுகளின் பெயர்களும் அவை யாழ்ப்

-27
பாணத்திலும், வன்னியிலும் குடியேறிய இடங்களின் பெயர்களும் இவற்றோடு தென்னிந்தியாவிலுள்ள எத்தகைய ஊர்களிலிருந்து இவர்கள் வந்தார்கள் என்பதும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்க ஒன்றாகும். ஆயினும் ஏனைய தமிழ் வரலாற்று நூல்க ளைப் போல வையாபாடலும் செய்திகளை எந்தவிதமான காலக் கிரம வரிசையிலும் அமைத்துக் கூறவில்லை. வன்னிநாட்டு மக்க ளிடையே நிலவிவந்த வரலாற்று அம்சங்கள் பொருந்திய கதை களுக்கு வையாபுரி ஐயர் இலக்கிய வடிவங் கொடுத்துள்ளார் எனவே கருத வேண்டியுள்ளது.
ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி ஏற்பட்டமை
பதின்மூன்றாம் நூற்றாண்டிலே உருப்பெற்ற யாழ்ப்பாண இராச்சியம் பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நிலை பெற்றது. அது ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக்காலத்தில் வலுப்பெற்றுப் பிரபலம் அடைந்தது. தென்னிந்தியாவிலுள்ள அரசுகளோடும், தென்னிலங்கையிலுள்ள இராச்சியங்களோடும், அது நெருங்கிய அரசியல், கலாசார, வாணிபத் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. யாழ்ப்பாண இராச்சியத்திற்குச் சிறப்பாக வுள்ள நிர்வாகமுறை ஆரியச் சக்கரவர்த்திகளினாலே ஏற்படுத்தப் பட்டது. வட இலங்கையில் வாழும் தமிழர் சமுதாயத்தின் சமூக வழமைகளினதும் பண்பாட்டு அம்சங்களினதும் தனித்தன்மை இக்காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டது.
மன்னார்க் கடலிலுள்ள முத்துக் குளிப்பின் பயனாக யாழ்ப் பாண அரசர் அதிக வருமானத்தைப் பெற்றனர். அவ்வருவாய் களின் மூலமாகப் பலம் வாய்ந்த சேனைகளை அவர்களால் வைத்திருக்க முடிந்தது, கடல்வழி வாணிபத்தில் அக்கறை கொண் டிருந்த ஆரியச் சக்கரவர்த்திகள் தூரதேச வாணிபத்திலும் ஈடு பட்டனர். பதின்நான்காம் நூற்றாண்டிலே பாக்குநீரிணைக் கடல் வழியான வர்த்தகம் இவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது.
இலக்கியம், சமயம், சோதிடம், மருத்துவம் முதலான "றைகள் சார்ந்தனவும் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலுமுள்ளனவு 1)ான ஏட்டுச்சுவடிகள் பலவற்றைத் தேடிப்பெற்று அவற்றை ஆராய்ந்த விற்பன்னர்களுக்கு ஆதரவளித்து ஆரியச் சக்கரவர்த் f ன் வித்தியாவிருத்தியை ஊக்குவித்தனர். மருத்துவம், சோதிடம் ஆகிய துறைகளிலே தமிழில் எழுதப்பெற்ற, காலத்தால் முற் பட்ட சில நூல்கள் யாழ்ப்பாண மன்னரின் ஆதரவுடன் எழுதப் பெற்றவை. வடஇலங்கைத் தமிழரின் தனித்துவத்தைப் பிரதி பலிப்பதான தேசவழமைக்கு அடிப்படையான கோட்பாடுகள்

Page 58
--28-س
யாழ்ப்பாண அரசர் காலத்திலே உருவாக்கப்பட்டன. தேசவழ மையானது பெரும்பாலும் ஆதன வகைகள், சொத்துரிமைகள், விவசாயம் பற்றிய வழமைகள் பற்றியதென்பது குறிப்பிடத்தக்கது
கலிங்கமாகன்
பதின் மூன்றாம் நூற்றாண்டிலே, கி. பி. 1215 இல் ஏற்பட்ட கலிங்க மாகனின் படையெடுப்பின் விளைவாக முன்னரே நிலை குலைந்திருந்த பொலநறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றது. மாக னும் அவனுடைய துணையரசனாகிய ஜயபாகுவும் பொலநறு வையிலிருந்து இராசரட்டையினை நெடுங்காலம் ஆட்சி செய்த னரென்று சிங்கள வரலாற்று நூல்கள் கூறுகின்றன. தென்னி லங்கையிலே பல சிற்றரசுகள் பொலநறுவையின் வீழ்ச்சியின் விளைவாகத் தோன்றின. காலப்போக்கிலே மூன்றாம் விசயபாகு என்னும் வன்னிராசன் தம்பதெனியாயில் இராசதானி அமைத்து அங்கிருந்து மாயரட்டை என்னும் பகுதியைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தான். அவனுடைய மகனாகிய இரண்டாம் பராக்கிரமபாகு (கி, பி. 123 - 71) மலைப்பகுதியினையும், தென்மேற்குப் பகுதிக ளையும் கைப்பற்றிச் சிங்கள இராச்சியத்தினை வலுப்படுத்தி னான். ஆனால் மாகன் ஆட்சி புரிந்த பகுதிகளை அவனாற் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை. அவனுக்குப் பின் உள்நாட் டுக் கலகங்களின் விளைவாகச் சிங்கள இராச்சியம் படிப்படியாக வலிகுன்றியது, அதன் தலைநகர் காலப்போக்கில் யாப்பகூவ, குருநாகல், கம்பளை, கோட்டை என்னுமிடங்களுக்கு மாற்றப் lu l-ġil.
பொலநறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றதனைத் தொடர்ந்து இலங்கையின் வடபகுதியிலும், வடமத்திய பகுதியிலும், கிழக்குக் கரையோரத்திலும் வன்னி என்று அழைக்கப்பெற்ற சிற்றரசுகள் பல எழுச்சி பெற்றன. அவற்றின்மேல் ஆதிக்கஞ் செலுத்திய வர்கள் வன்னியர் என்று அழைக்கப் பெற்றனர். வன்னியர் என் னும் குறுநில மன்னர் ஆட்சிபுரிந்த நிலப்பிரிவுகள் வன்னிப்பற்று என்றும் வன்னி என்றும் அழைக்கப்பட்டன. வேளைக்காரர் என் னும் படைப் பிரிவைச் சேர்ந்தவர்களுட் சிலர் வன்னியராயிருந்த மையால் வன்னிமைகளின் தோற்றம் பொலநறுவைக் காலத்தில் ஏற்பட்டிருத்தல் வேண்டும். மாகன் பொலநறுவையைக் கைப் பற்றிப் படையாட்சியை வன்னியருக்குப் பகிர்ந்து கொடுத்தான் என்று மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் கூறும். திருகோணமலை நிலாவெளி, சட்டுக்குளம் ஆகிய பகுதிகளிலே வன்னியர்களை ஆட்சியாளராகக் குளக்கோட்டன் நியமித்தான் என்று கேனே சர் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. “குளக்கோட்டன் எனும்

-سس29--
சோழகங்கனைச் சிந்தையில் வைப்பாம்” என்று பூரீதகழிண கைலாச புராணத்துப் பாயிரம் கூறுவதாற் குளக்கோட்டனின் இயற்பெயர் சோழகங்கன் என்பது தெளிவாகின்றது. சோழகங்கதேவன் என் னும் இராசகுமாரன் கி.பி. 1223 ஆம் ஆண்டிலே திருகோண மலைக்கு வந்திருந்தான் என்ற செய்தியைத் திருகோணமலைக் கோட்டையிலுள்ள சம்ஸ்கிருத மொழிச் சாசனமொன்றின் மூல மாக அறியமுடிகின்றது. அவனே குளக்கோட்டனாதல் வேண்டும்.
கோகர்ணம், கொட்டியாரம், கந்தளாய், பதவியா, கட்டுக்குளம், குருந்தனூர், மன்னார், மாதோட்டம், இலுப் பைக்கடவை, ஊராத்துறை, புலச்சேரி முதலான இடங்களிலே மாகன் படைநிலைகளை அமைத்துப் பொலநறுவையிலிருந்து இராசரட்டையினை ஆட்சி புரிந்தான் என்று சூளவம்சம் முதலான நூல்கள் கூறுகின்றன. மாகன் கைப்பற்றி ஆட்சிபுரிந்த இராச்சியம் பின்பு சாவகர்களின0 லே கைப்பற்றப்பட்டது.
于T5u压前
சந்திரபானு என்னும் சாவக அரசன் மலாய நாட்டிலிருந்து இரு தடவைகளாக இலங்கை மீது படையெடுத்து வந்தான். அவனுடைய முதலாவது படையெடுப்பு கி.பி. 1247 இல் நடை பெற்றது. ஆயினும் அவனை வீரவாகு, விசயபாகு என்னும் சிங் கள இளவரசர்கள் தோற்கடித்துத் துரத்தினார்களென்று சூள வம்சம் கூறுகின்றது. எனினும் அவன் பின்னர் சோழ, பாண்டிய நாடுகளிலிருந்து படைகளைச் சேர்த்து வட்இலங்கையில் மாகன் ஆட்சி புரிந்த இடங்களைக் கைப்பற்றி அங்கு தன் நிலையை வலுப்படுத்திக் கொண்ட பின்பு இரண்டாம் பராக்கிரமபாகுவின் இராச்சியத்தை மீண்டும் தாக்கினான். புத்தபிரானின் தந்ததாது வையும் இலங்கை மீதான ஆட்சியுரிமையினையும் தன்னிடம் ஒப்படைக்குமாறும் அதற்கிணங்காவிடிற் போர் புரிவதற்கு ஆயத்த மாகும்படியும் சந்திரபானு தம்பதெனிய அரசனை வற்புறுத்திய தாகச் சூளவம்சம் கூறுகின்றது. சந்திரபானுவின் மிரட்டல்களுக் குப் பணியாது இரண்டாம் பராக்கிரமபாகு யாப்பகூவ வரை முன்னேறியிருந்த சாவக அரசனுக்கெதிராகச் சேனைகளை அனுப்பியிருந்தான். விசயபாகு, வீரபாகு என்னும் இளவரசரின் தலைமையிற் சென்ற அச்சேனை சந்திரபானுவின் ஆதிக்கத்தை முற்றாக அடக்கியதாகச் சூளவம்சம் கூறும்.
பாண்டியப் படையெடுப்புகள்
சாவகரைப் பற்றிச் சூளவம்சம்' குறிப்பிடாதவொரு அம்சத் தைப் பற்றிப் பாண்டிய மன்னர்களின் சாசனங்கள் மூலம் அறிய

Page 59
سي-30 حسب
முடிகின்றது. முதலாம் சடாவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சி பிலே (கி பி. 1253 - 1268) பாண்டியப் பேரரசு உன்னத வளர்ச்சி கண்டது. தமிழக வரலாற்றிலே தலைசிறந்த மன்னர் களுள் ஒருவனான சடாவர்மனின் காலத்திலே பாண்டியராதிக் கத்தை வலுப்படுத்துவதற்கு அவனுடைய துணையரசனாகிய வீரபாண்டியனின் சாதனைகளும் ஏதுவாகவிருந்தன. இவர்களி ருவரும் சோழமண்டலத்திலே சில பகுதிகளைக் கைப்பற்றி யிருந்த கன்னடரான ஹோய்சாளரைத் தோற்கடித்து பூரீரங்கம். கண்ணனூர் முதலான நகரங்களைக் கைப்பற்றிக்கொண்டனர். ஹோய்சாள மன்னர்களான சோமேஸ்வரனும், வீரராமநாதனும் தழிழகத்தைவிட்டுத் தப்பியோடினர். அதன் பின்னர் பாண்டி யரின் தாக்கு தல்களின் விளைவாக மூன்றாம் இராசேந்திரனின் ஆட்சியும் நிலைகுலைந்தது; அங்கு சோழரின் ஆட்சி முடிவுற்றது. சோழமண்டலம் முழுவதும் பாண்டியர் வசமாகியது. பாண்டியப் படைகள் நெல்லூர்ப்பட்டினத்துத் தெலுங்குச் சோழர்களையும், தெலுங்கு தேசத்துக் காகதியர்களையும் செவுணர்களையும் தோற்கடித்தன. இவ்வெற்றிகளின் விளைவாகத் தமிழகம் முழு வதும் அதனோடு ஆந்திரத்தின் தென்பகுதியும் பாண்டியர் வச மாகின. அத்துடன் சேரநாட்டிலும் ஈழத்திலுள்ள தமிழ் இராச் சியத்திலும் பாண்டியரின் மேலாதிக்கம் ஏற்படலாயிற்று.
பாண்டியரின் சாசனங்களில் இலங்கை மீது நடைபெற்ற பாண் டியப் படையெடுப்புகளைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன. சடா வர்மன் சுந்தர பாண்டியனுடைய 5 ஆம் ஆட்சியாண்டு தொடக்கம் அவனுடைய மெய்க்கீர்த்தியிலே 'துலங்கொளிமணி யும் சூழிவேழமும் இலங்கை காவலனை இறைகொண்டருளி' என்ற மொழித் தொடர்கள் வருகின்றன. இவற்றின் மூலமாக கி.பி. 1258 வரையில் இலங்கை அரசனொருவனிடமிருந்து பாண் டியர்கள் யான்னகளையும் மணிகளையும் திறையாகக் கொண்டி ருந்தனர் என்று கருதவேண்டியுள்ளது. பாண்டியருக்குத் திறை செலுத்திய இலங்கை அரசனின் பெயரை மெ ப்க்கீர்த்தி குறிப் பிடவில்லை ஆயினும் 1258 ஆம் ஆண்டளவில் இலங்கையி லுள்ள இரரச்சியம் ஒன்றின்மீது படையெடுத்து அதன்மேற் பாண்டியர்கள் தமது மேலாதிக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர் என்று கருதலாம்.
சுந்தர பாண்டியனின் துணை அரசனாகிய வீரபாண்டியனு டைய மெய்க்கீர்த்தியிலே அவனது 10 ஆவது ஆண்டுமுதல் "சோணாடும் ஈழமும் சாவகன் முடித்தலையும் கொண்டருளிய' என்ற வாசகம் வருகின்றது. சோழநாட்டையும், ஈழத்தையும் வென்று கைப்பற்றியதோடு சாவக அரசனின் முடித்தலையினை

س-31--
யும் இவன் கவர்ந்தான் என்பதை இதனால் அறியலாம். சந்திர பானுவைச் சாவகன் என்று சிங்கள வரலாற்று மூலங்கள் வர்ணிப் பதால் அவன் மீது பாண்டியர்கள் நடாத்திய படையெடுப்பின் விளைவாகச் சந்திரபானு தோல்வியுற்று மடிந்தான் எனக் கருத லாம்.
பதினோராம் ஆண்டு முதல் வீரபாண்டியனுடைய மெய்க் கீர்த்தி அவனுடைய ஈழப்படையெடுப்புப்பற்றி விரிவாகக் குறிப் பிடுகின்றது. குடுமியாமலைச் சாசனத்திலே வீரபாண்டியனுடைய இலங்கைப் படையெடுப்புப்பற்றிய செய்திகள் வருகின்றன. வீர பாண்டியன் இலங்கைக்குச் சென்று போர்புரிந்து அந்நாட்டு மன் னருள் ஒருவனைக் கொன்று அவனுடைய முடி முதலான அணி கலன்களையும், சிங்காசனம், வெண்கொற்றக்குடை, சாமரம் முதலிய அரச சின்னங்களையும் கவர்ந்தான் என்றும் பின்னர் முன்பு தனக்குப் பகைத்தொழில் புரிந்து பின்பு பணிந்துவிட்ட சாவகனுடைய மைந்தனுக்கு ஆட்சியுரிமை வழங்கி வீரக்கழல் அணிவித்து அவனை ஆனை மேல் ஏற்றி அவனது நகரத்துக்குச் செல்லவிட்டான் என்றும் இலங்கையிலுள்ள அரசனொருவனிட மிருந்து யானைகளைத் திறையாகப் பெற்றுக்கொண்டான் என் றும் அச்சாசனம் கூறுகின்றது. பின்னர் திரிகூடகிரியிலும், திரு கோணமலையிலும் பாண்டியரின் இலச்சினையான இணைக்கயல் வடிவத்தைப் பொறித்துவிட்டு திரும்பிச் சென்றான் என்றும் சொல்லப்படுகின்றது. இம்மெய்க்கீர்த்தியின் செய்திகளின் மூலம் இலங்கையிலே சாவகர்கள் ஏற்படுத்தியிருந்த இராச்சியத்தைப் பாண்டியர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டு வந்தார்கள் என்று அறிந்து கொள்ள முடிகின்றது.
சாவகரின் ஆட்சி யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் வடக்கி லுள்ள வன்னிப் பிரதேசத்திலும், திருகோணமலையிலும் அமைந் திருந்ததென்பதையும், 14ஆம் நூற்றாண்டுக்குரிய திரிசிங்கள கடயம்பொத் என்ற நூல் மூலமாக அறிய முடிகிறது. இந்த இராச் வியத்தின் எல்லையிலே தமிழ்ச்சாசனங்கள் பொறிக்கப்பட்ட நாண்கள் நாட்டப் பெற்றிருந்தன என்று இந்நூல் சொல்வதும் குறிப்பிடத்தக்கது, சாவகச்சேரி, சாவாங்கோட்டை, சாவகக் கோட்டை ஆகிய இடப்பெயர்கள் 13ஆம் நூற்றாண்டில் அமைந்த சாவகர் ஆட்சியின் விளைவாகவே தோன்றின.
மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சிக் காலத்திற் பாண் யப் பேரரசு உன்னத நிலையினை அடைந்தது. அவனுடைய காலத்தில் வட இலங்கையிலுள்ள இராச்சியத்திலே தமிழரின் ஆதிக்கம் மேலும் வலுப்பெற்றது. யாழ்ப்பாண விவகாரங்களைக்

Page 60
-32
கவனிப்பதற்கெனப் பாண்டியர்கள் விட்டுச்சென்ற பிரதானிகளுட் பாண்டிமழவன் என்பவன் முக்கியத்துவம் பெற்றான். யாழ்ப்பா ணம் அரசன் ஒருவன் இல்லாமையால் நிலைகுலைந்தபொழுது பொன்பற்றி ஊரினனான பாண்டிமழவன் மதுரைநகருக்குச் சென்று சிங்கையாரியன் என்ற இராசகுமாரனை அழைத்து வந்து மன்ன
னாக முடிசூட்டினான் என்பது மரபு. கி.பி. 1284 ஆம் ஆண்ட ளவில் ஆரியச் சக்கரவர்த்தி தலைமையில் இலங்கைமீது நடை பெற்ற பாண்டியப் படையெடுப்பின் விளைவாகவே யாழ்ப்பா ணத்தில் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சி ஏற்படலாயிற்று. முதலாம் புவனேக பாகு (கி பி. 1272 - 1281) இறந்தபின் நடைபெற்ற பாண்டியப் படையெடுப்பினைப்பற்றிச் சூளவம்சம் பின்வருமாறு வர்ணிக்கின்றது,
'முன்பு பஞ்சமொன்று நிலவிய காலத்திலே பாண்டிய இராச்சியத்தில் ஆட்சிபுரிந்த சகோதரர்களான ஐந்து மன்னர்கள் ஆரியச்சக்கரவர்த்தி என்னும் பெயர் கொண்ட தமிழ்ச் சேனாதிபதியின் தலைமையிற் படை யொன்றை அனுப்பிவைத்தார்கள். அவன் ஆரியனல்லா னாயினும் மிகுந்த செல்வாக்கும் அதிகாரமுங் கொண்ட பிரதானியாக விளங்கினான். இராச்சியத்தின் எல்லாப் பக்கங்களையும் அழித்துவிட்டு அரண்கள் பொருந்திய சுபபட்டணத்தினுள் அவன் நுழைந்தான். அங்கிருந்த புனித தந்ததாதுவையும் விலைமதிக்கமுடியாத செல்வங் களையும் கவர்ந்துகொண்டு திரும்பிச்சென்றான். ஆங்கு பாண்டியகுலம் என்னும் தாமரைச்செடியின் மொட்டினை மலர்விக்கின்ற உதயசூரியன் என விளங்கிய குலசேகர மன்னனிடம் சம்புத்தரின் தந்ததாதுவை ஒப்படைத்தான்."" ஆரியச் சக்கரவர்த்தியின் தலைமையில் நடைபெற்ற பாண் டியப் படையெடுப்பின் விளைவாகச் சிங்கள இராச்சியம் மேலும் பலவீனமடைந்தது. சுபபட்டணம் என்னும் யாப்பகூவ, இராச தானி என்னும் நிலையை இழந்தது. அத்துடன் முதலாம் புவ னேகபாகுவின் மகனாகிய இரண்டாம் புவனேகபாகுவும் நான்காம் விசயபாகுவின் (கி.பி. 1271 - 2) மகனாகிய பராக்கிரமபாகுவும் ஆட்சியுரிமை குறித்துப் போர் புரிந் தார்கள். அதனாற் சிறிது காலம் சிங்கள இராச்சியம் பிளவு படலாயிற்று. புவனேகபாகு குருநாகலிலே தலைநகரமைத்து அங்கிருந்து ஆட்சி புரிந்தான். மூன்றாம் பராக்கிரமபாகு மது ரைக்குச் சென்று பாண்டிய மன்னனிடமிருந்து தந்ததாதுவை வேண்டிப் பெற்றபின் அதனைப் பொலநறுவையில் வைத்துக் கொண்டு அங்கிருந்து சிறிது காலம் ஆட்சி புரிந்தான்.

-33
யாழ்ப்பாண இராச்சியத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி ஏற்பட்டமையே மாறவர்மன் குலசேகரன் காலத்துப் பாண்டியப் படையெடுப்பின் பிரதான விளைவாகும். சூளவம்சம் குறிப்பிடும் படைத்தலைவனாகிய ஆரியச்சக்கரவர்த்தியோ அவனு டைய மரபிலுள்ள வேறொருவனோ காலப்போக்கில் அரசனாக யாழ்ப்பாணத்தில் அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும். சிங்கள நூல்கள் யாழ்ப்பாண அரசரை ஆரியச்சக்கரவர்த்தி என்று வர் ணிக்கின்றன. ஆரியச் சக்கரவர்த்தி என்பது யாழ்ப்பாணத்தில் அரசரின் இயற்பெயராகவன்றி வம்சப்பெயராகவே வழங்கி வந்தது. யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் முன்னோர்கள் தென்பாண்டி நாட்டுச் செவ்விருக்கை நாட்டுச் சக்கரவர்த்தி நல்லூரைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பாண்டியரின் சாசனங்கள் மூலமாக அறிந்து கொள்ளமுடிகின்றது.
மாறவர்மன் குலசேசரனின் ஆட்சியில் (கி. பி. 1268 - 1310) ஆரியச் சக்கரவர்த்திகள் சேனாதிபதிகளாகவும் அமைச்சர்களாக வும் சேவை புரிந்தனர் என்பது சாசனங்கள் மூலமாக அறிந்த உறுதியான உண்மைகளாகும். மதிதுங்கன் என்ற ஆரியச் சக்கர வர்த்தியொருவன் தனித்து நின்று வென்ற பெருமாள் என்ற சிறப்பு மிக்க விருதுப்பெயரைப் பெற்றிருந்தமையால் அவன் படைத்தலைவனாயிருந்தான் என்பதை அறிந்துகொள்ள முடிகின் றது. அழகன் என்ற ஆரியச்சக்கரவர்த்தி ஒருவன் தெய்வச் சிலையான் என்னும் விருதுப்பெயரைக் கொண்டிருந்தமையால் அவனும் போராற்றல் மிக்கவனாக விளங்கினான் என்று கருத லாம். தேவர் ஆரியச் சக்கரவர்த்தி என்னும் வேறொருவன் பாண்டியரின் அமைச்சனாக விளங்கினான். இவனுடைய கட்ட ளையின் பேரால் எழுதப்பெற்ற சாசனமொன்றிலே ‘சேது திரு முகம்" என்ற மொழித்தொடர் காணப்படுகின்றது. செவ் விருக்கை நாட்டிலும் அதற்கண்மையிலும் சேது என வழங்கிய பல திருத்தலங்களிருந்தமையுங் குறிப்பிடத்தக்கது.
பதினான்காம் நூற்றாண்டிலே யாழ்ப்பாணத்திலே சோமசர் மனால் எழுதப்பெற்ற செகராசசேகரமாலை என்னும் சோதிட நூலும் யாழ்ப்பாண அரசரின் முன்னோர் பாண்டியரின் அமைச் சராகவும் சேனாதிபதிகளாவும் விளங்கினரென்றும் அவர்கள் காத்தியாயன சூத்திரத்துக் காஸ்யப்பகோத்திரத்து அந்தணர் என்றும் இராமேஸ்வரத்திலுள்ள "பஞ்சகிராமவேதியர்’ ஐஞ்ஞாற் றுப் பன்னிருவரின் வழித்தோன்றல்கள் என்றும் வர்ணிப்பது குறிப் பிடத்தக்கது,

Page 61
ー34ー
யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகரிலிருந்து அரசு புரிந்தமையால் அவர்களைச் சிங்கைநகர் ஆரியரென யாழ்ப்பாணத்து நூல்கள் குறிப்பிடுகின்றன.
முதலாம் சிங்கையாரியன்
யாழ்ப்பாணத்து அரசர்களைப் பற்றித் தமிழ் நூல்களிலே குறிப்புகள் காணப்படுகின்ற பொழுதும் அவர்களின் ஆட்சிக் காலங்களைக் காலக்கிரம வரிசையில் அமைத்துக்கொள்வதற் கான சான்றுகள் எவையும் அவற்றிலே காணப்படுவதில்லை. பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிற் செண்பகப் பெருமா ளின் படையெடுப்பு நடைபெற்ற காலம் வரை மேல்வரும் ஒன்பது மன்னர்களும் ஒருவரின் பின் ஒருவராக யாழ்ப்பாண இராச்சி யத்தை ஆட்சி புரிந்ததாக யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடு கின்றது.
விசய கூழங்கைச் கக்கரவர்த்தி, குலசேகர சிங்கையாரியன், விக்கிரம சிங்கையாரியன், வரோதய சிங்கையாரியன், மார்த்தாண்ட சிங்கையாரியன், குணபூஷண சிங்கையாரியன், செயவீரசிங்கையாரியன், குணவீரசிங்கையாரியன், கனகசூரிய சிங்கையாரியன்
. கூழங்கைச் சக்கரவர்த்தி பற்றி யாழ்ப்பாண வைபவமாலை கூறும் செய்திகள் கைலாய மாலையிலிருந்து பெறப்பட்டவ்ை. ஆரியச் சக்கரவர்த்திகள் என்னும் அரச வமிசத்தை உருவாக்கிய முதலாம் அரசனைப் பாண்டிய இராசகுமாரனென்று வர்ணிப்ப தோடு அவனைச் செயவீரனென்றும் கைலாயமாலை குறிப்பிடுகின் றது. கண்ணகி வழக்குரை காவியத்திலே செகவீரன் என்ற அரசனொருவன் குறிப்பிடப்பெறுவதும் கவனிக்கத்தக்கது.
யாழ்ப்பாணத்து அரசர்களின் இராசதானி முதலாம் சிங்கை யாரியனின் காலத்திலே நல்லூரில் அமைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தவரின் வழிபாட்டிற்கெனக் கைலாயநாதர் கோயில் எல்லாச் சிறப்புகளும் பொருந்திய வண்ணமாக செயசிங்கையா ரியன் காலத்திலே அமைக்கப்பட்டது. அத்துடன் வீரமா காளி அம்மன் கோயில், சட்டநாதர் கோயில், வெயிலுகந்த பிள்ளை யார் கோயில் என்பனவும் முதலாவது அரசன் காலத்தில் அமைக்

سس-35-سس
கப்பட்டனவென்று மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார். நீதிமன் றமும், யமுனா ஏரியும், யானைப்பந்தி, குதிரைப்பந்தி, போர் வீரர்களுக்கான வீடுகள் ஆகியனவும் சிங்கையாரியனால் உருவாக் கப்பட்டனவென்று யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. முதலாம் சிங்கையாரியனாகிய செயவீரனால் மேற்கொள்ளப் பட்ட நிருவாக ஏற்பாடுகளைப் பற்றிக் கைலாயமாலை வர்ணிக்கின் றமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், தீவுப் பகுதிகளிலும் வன்னிப் பிரதேசத்திலும் நிர்வாகப் பொறுப்பு களைக் கவனிப்பதற்குத் தனது படைகளிலே சேவகம் புரிந்த பிரதானிகள் பலரைச் சிங்கையாரியன் நியமித்தான் என்பது மபுர.
பொன்பற்றியூரினனாகிய பாண்டி மழவனையும், அவனுடைய இளைய சகோதரனையும் மைத்துனனாகிய செண்பக மழவனை யும் திருநெல்வேலிக்கதிபர்களாக அரசன் நியமித் தான். பாண்டி மழவன் வளவு என்றும் நிலப்பெயர் திருநெல்வேலியில் இன்று வரை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. நரசிங்க தேவன் மயிலிட்டி என்னும் ஊருக்கு அதிபனாகினான். யாழ்ப்பாணத்தி லுள்ள மற்றுமொரு பிரதான ஊராகிய தெல்லிப்பளையிற் செண் பக மாப்பாணன், சந்திரசேகர மாப்பாணன், கனகராயன் என் ஒறும் மூவரும் ஆட்சியதிகாரம் பெற்றனர். வேராயிரவன், நீல கங்கன் ஆகியோர் முறையே இணுவில், பச்சிலாப்பாலை என்னு மிடங்களிலே அதிபர்களாக நியமனம் பெற்றனர்.
கனகமழவனும் அவனுடைய துணைவரும் புலோலிமீது அதி காரம் பெற்றனர். நரசிங்கதேவன், கூபகாரேந்திரன் என்னுமிரு வரும் தொல்புரத்தின் அதிகாரிகளாகினர். கோயிலாக்கண்டி, இருபாலை, ஆகியவற்றிற்கு முறையே தேவராசேந்திரன் மண் ணாடு கொண்ட முதலி ஆகியோர் அதிபர்களாயினர். தனி நாயக முதலியை நெடுந்தீவிற்கு அதிபனாக நியமித்த அரசன் சாஞ்சி நகரால் வந்த பல்லவராயனை வெளிநாடு என்னும் பகு திக்கு அதிகாரியாக நியமித்தான். யாழ்ப்பாணத்திலே புதிய நிருவாகிகளை உருவாக்கிய சிங்கையாரியன் மாதாக்கர் என்னும் ப7 வியாளர்களையும் தலையாரி என்னும் கிராமத் தலைவர் கrையும் நியமித்தான் என்று யாழ்ப்பாண வைபவமாலை கூறு கின்றது. மேல்பற்று, வடபற்று, தென்பற்று, கீழ்பற்று என்னும் பெரும் பிரிவுகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் மாதாக்கர் என்று வர்ணிக்கப்பட்டனர்.
ஆரியச் சக்கரவர்த்திகள் வட இலங்கையிலுள்ள வன்னிப்
: 'யிெனையும் கைப்பற்றி அங்கு தமது ஆதரவாளர்களை வன்னியர்களாக நியமித்துத் தங்கள் மேலாதிக்கத்தை நிலை

Page 62
--36-س-
நாட்டினார்கள். இவ்விடயம் குறித்து ஒல்லாந்த தேசாதிபதி களுள் ஒருவரான பான் கூன்ஸ் எழுதியுள்ள பின்வரும் குறிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.
*இந்த நான்கு மாகாணங்களும் (வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி பச்சிலாப்பாலை) அவற்றோடு பதின்மூன்று தீவுசஞம் யாழ்ப்பாணப் பட்டினம் என்னும் இராச்சியம் என்று வர்ணிக்கப்பட்டன. வன்னியரின் ஆட்சியின் கீழமைந்த வன்னி என்னும் நிலப்பகுதியும் இந்த இராச்சியத்திற்கு உரியதாகும். யாழ்ப்பாண அரசர்கள் அந்நிலப்பகுதியைக் கைப்பற்றி அங்கு தமது மேலாதிக்கத்தை ஏற்படுத்தியிருந் தார்கள்."
வன்னிப் பகுதியிலே பதின்மூன்றாம் நூற்றாண்டிலே ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆதிக்கம் ஏற்பட்டிருந்தது என்பதனைப் பதவியாவிலுள்ள சமஸ்கிருத மொழியிலும் கிரந்த எழுத்துகளி லும் அமைந்த, சாசனமொன்றின் மூலம் அறிய முடிகின்றது. இச்சாசனம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரியது என்பதை அதன் வரி வடிவ அமைப்பின் மூலம் அறிந்து கொள் ளலர்ம் எனப் பரணவிதான சருதுகிறார்.
* உலோகநாத தண்ட நாயக்கன் என்ற சேனாதிபதி ஒளி பொருந்திய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட சிகரம் பொருந்திய விகாரம் ஒன்றினைப் பதவியாவிலே அமைத்து அதற்கு வேளைக் கார விகாரம் (இதம் விஹாரம் வேளைக்கார நாமாங்கிதம்) எனப் பெயருமிட்டு அதனை வேளைக்காரப் படையின் பாது காப்பில் விட்டான் என்ற செய்தியை இச்சாசனம் குறிப்பிடு கின்றது, சேது கலம் என்ற வம்சம் பற்றிய புகழுரையோடு இச் சாசனம் தொடங்குகின்றது. இதனாலே பதவியாவில் வேளைக் கார விகாரத்தை அமைப்பித்த சேனாதிபதியானவன் சேதுகுலத் தோடு தொடர்புடையவன் என்பது தெளிவாகின்றது. அவன் சேதுகுலத்தை சேர்ந்தவனாதல் வேண்டும் அல்லது அவன் சேதுகுலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் சேவை புரிந்தவனாதல் வேண்டும்.
இலங்கையினைப் பொறுத்தவரையில் ஆரியச் சக்கரவர்த்தி களைத் தவிர வேறெந்தவொரு அரசர் குலமும் சேதுவுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை. ஆரியச் சக்கரவர்த்திகள் சேது காவலன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்ததோடு சேது என்னும் மொழியினைத் தங்கள் அரச முத்திரைகளிலும் (காசுகளிலும்) நாணயங்களிலும் பொறித்திருந்தார்கள். எனவே இச்சாசனம்

-س-37--
ஆரியச் சக்கரவர்த்திகளையே சேது குலம் என வர்ணிக்கின்ற தென்பது தெளிவாகின்றது. எனவே உலகநாத தண்டநாயக் கனும் அவனுடைய அதிகாரத்திலுள்ள வேளைக்காரப் படையும் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆதிக்கத்தைப் பதவியாவிலே ஏற் படுத்தியிருந்தனர் என்று கருதலாம். பாண்டியப் படையெடுப் புகளின் விளைவாக வன்னிப் பகுதியில் ஆரியச் சக்கரவர்த்தி களின் அதிகாரம் பரவியதென்பதையும் இச்சாசனம் உணர்த்து கின்றது.
பாண்டியப் பேரரசு நிலைபெற்ற காலத்திலே மதுரை நகரி லிருந்து மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக வன்னியர்கள் அடங்காப்பற்றின் மீது படையெடுத்து வந்து அதனைப் பல்வேறு கட்டங்களிலே கைப்பற்றினார்களென்றும் அங்கு சில குடியேற் றங்களை அமைத்தார்கள் என்றும் கொள்ளத்தக்க வகையிலே வையா பாடலில் வரும் கதைகள் அமைகின்றன. மேலும், யாழ்ப் பாணத்தில் அதி ,ாரஞ் செலுத்திய முதலாவது அரசனுடைய காலத்திலே அடங்காப்பற்றினை வன்னியர்கள் கைப்பற்றினார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.
வன்னியர் பற்றி வையாபாடல் கூறும் பிரதான அம்சங்களைப் பின்வருமாறு சுருக்கி அமைத்துக் கொள்ளலாம். செயதுங்கவீர வரராசசிங்கன் யாழ்ப்பாணத்தில் ஆட்சி புரிந்த காலத்திலே அவன் மதுரை மன்னனின் மகளை மணம் முடிக்க விரும்பினான். மதுரை மன்னன் அரச குலத்தவரான வன்னியர்களை அழைத்து, தனது மகளுடன் அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத் தான். தான் மணம் முடிப்பதற்கான இராசகுமாரியைக் கொண்டுவந்த வன்னி யரை அழைத்து அடங்காப்பற்றுக்குச் சென்று அதனைக் கைப் பற்றி ஆட்சி புரியுமாறும் யாழ்ப்பாணத்து இராசதானிக்கு ஆண்டு தோறும் திறை செலுத்துமாறும் அரசன் பணித்தான்.
வன்னியர்கள் அடங்காப்பற்றுக்குச் சென்று அங்கு நிலை கொண்டார்கள், அப்பகுதியைக் கைப்பற்றுவதற்கு மேலும் படைத்துணை வேண்டும் என்ற உணர்வால் உடனடியாகத் தங்களுடன் வந்து சேருமாறு மதுரை, மருங்கூர், காரைக்கால், காஞ்சிபுரம், கோவற்பதி, திருச்சிராப்பள்ளி, துளுவை நாடு, தொண்டைமண்டலம் முதலான இடங்களிலிருந்து பல திறத் தாரை அழைத்து வருமாறும் இளஞ்சிங்க மாப்பாணன், அத்தி மாப்பாணன், நல்லவாகுதேவன் முதலியோருக்குச் செய்தி அனுப் பினார்கள். இதன் பயனாக இளஞ்சிங்க மாப்பாணன், திடவிர சிங்கன், குடைகாத்தான், மலைநாடன், நல்லவாகு, சிங்கவாகு, நீலாசோதையன், அங்கசிங்கன், கட்டைக்காலிங்கன், கலைக்

Page 63
۔۔38۔
கோட்டு முடியோன், சொக்கநாதன், வீரகச்சமணி முடியரசன், காபாலிவீரன். சேது திறலரசுபுரியும் வீரன் முதலியோரும் ஆரிய வமிசத்தாரும் கப்பலேறிக் கடல் கடந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்கள்.
இவர்களுள்ளே திடவிரசிங்கன் கரிக்கட்டு மூலைப்பற்றுக்கு அதிபனாகினான். நல்லவாகு, மெய்த்தேவன், கறுத்தவாகு, சிங்கமாப்பாணன் ஆகியோர் சான்றாரையும் வலையரையும் துரத்திவிட்டு முள்ளியவளையைக் கைப்பற்றினார்கள். நீலை யினாரும், திசையாண்டாரும் படையும் மேல்பற்றுக்கு வந்து சகரன், மகரன் என்னும் வேட்டுவத் தலைவர்களைக் கொன்று விட்டு அங்கு அரசு புரிந்தார்கள், சிங்கவாகு கிழக்கு மூலை, மேற்குமூலை ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொண்டு பொக்கா வன்னியில் வாழ்ந்தான். சுபதிட்டு என்னும் அந்தணனும் படையும் திரியாய் என்னும் ஊருக்குச் சென்று நீலப்பணிக்கனைத் துரத்திவிட்டு அதனை ஆண்டனர். காலிங்கன் மலையகத்தார், கன்னார் ஆகியோருடன் கச்சாயில் வாழ்ந்தான். அங்கசிங்கன் கட்டுக்குளம் பற்றுக்குச் சென்று அங்கு தங்கியிருந்தான். சிங்க வாகு திருகோணமலைக்குப் போனான். மாமுகன் என்பான் தம்பலகாமம், வெருகல் என்னும் இடங்களைக் கைப்பற்றி அவற் றில் ஆட்சி புரிந்தான். மயிலன் என்பவன் கோட்டியாரத்திற்கு அதிபதியானான். நீலன், சன்மன் என்போர் முறையே இத்திமடு, நொச்சிமோட்டை ஆகிய இடங்களிலிருந்தனர்.
மதுவீர மழுவராயனும் "அரசாண்ட மழுவராயனும் "அழகா புரி என விளங்கிய யாழ்ப்பாணத்தில் மன்னனுடன் இருந்த னர். வன்னியர் மூவர் முகமாலையில் வாழ்ந்தனர். கோவலர் வமிசத்தோன் தேவராயன், கிளைகாத்தான், கொடிதேவன், கந்தவனத்தான் என்போர் செட்டிகுளத்தில் ஆதிக்கம் பெற்ற னர். உத்துங்கராயன் பனங்காமத்தின் அதிபதியானான்.(படம்-2)
முதலாம் சிங்கையாரியனைக் கைலாயமாலை செயவீரன் எனவும் குறிப்பிடுகின்றது. அவனையே செயதுங்க வீர வரராசசிங்கன் என்று வையா பாடல் வர்ணிக்கின்றதெனக் கொள்ளலாம். மதுராபுரி அரசன் வன்னியர்களை வட இலங்கைக்கு அனுப்பி வைத்தான் என்று வையாபாடல் கூறுவ தாலும் யாழ்ப்பாணத்தில் ஆட்சிபுரிந்த முதலாவது அரசனின் காலத்திலே வன்னியர் அடங்காப்பற்றினைக் கைப்பற்றினார்கள் என்று சொல்லப்படுவதாலும் மழவராயன், "சேதுபதி திறலரசு புரியும் வீரன்", ஆரியவமிசத்தோர் முதலிய பாண்டிய சாமந் தர்கள் வன்னியரின் படையெடுப்புடன் தொடர்புபடுத்தப்

ー39ー
படுவதாலும் வையாபாடலிலே கூறப்படும் "வன்னியர்" படை யெடுப்புகள் பதின் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற படையெடுப்புகளோடும், குறிப்பாக யாழ்ப் பாணத்திலே ஆரியச் சக்கரவர்த்திகளின் அதிகாரம் வலுப் பெற்றமையோடும் தொடர்புடையன என்பது தெளிவாகின்றது. அவற்றின் விளைவாக அடங்காப்பற்று எனப் பிற்காலத்தில் வழங்கிய வன்னிப்பகுதியிலும் திருகோணமலை, திரியாய், தம் பலகாமம், கட்டுக்குளம் போன்ற பிரிவுகளிலும் ஆரியச் சக்கர வர்த்திகளின் மேலாதிக்கம் ஏற்பட்டதென்று கொள்ளலாம். பதினாலாம் நூற்றாண்டில் எழுதப்பெற்றதென்று கருதப்படும் நம்பொத என்ற சிங்கள நூலானது நாகர்கோவில், கந்தரோடை தெல்லிப்பழை, மல்லாகம், காரைதீவு, முள்ளியவளை, திரு கோணமலை, வெல்கம்விகாரை. இலந்தகொட ஆகிய இடங்கள் தெமள பட்டணத்தில் இருந்தன என்று கூறுவதும் இங்கு குறிப்பிடத் தக்கது. தமிழ் இராச்சியத்தையே அந்நூல் தெமள பட்டணம் என்று வர்ணிக்கின்றது.
செயவீர சிங்கையாரியன் நல்லாட்சி புரிந்து நாட்டைப் பகைவரிலிருந்தும் பாதுகாத்தான் என்றும் கண்டி அரசனாகிய புவனேகபாகுவுடன் முத்துச்சலாபத்தைக் குறித்துப் (LIsrff புரிந்து அவனைத் தோற்கடித்தான் என்றும் பன்னிரண்டு வருடங்களாக இலங்கை முழுவதையும் ஆட்சி புரிந்தான் என்றும் யாழ்ப்பாண வைபவ மாலை குறிப்பிடுகின்றது. பின்பு பராக்கிரம பாகு பாண்டிய மன்னனிடம் முறையிட்டு அவனுடைய தலையீட்டின் பயனாகத் தனது இராச்சியத்தை மீண்டும் பெற்றுக் கொண்டான் என்றும் சொல்லப்படுகின்றது. ஆரியச் சக்கரவர்த்தியின் தலைமையில் நடைபெற்ற பாண்டியப் படை யெடுப்புடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளையே யாழ்ப்பாண வைபவமாலை திரிபுபடுத்திக் கூறுகின்றது போலத் தோன்று கிறது. முதலாம் புவனேகபாகுவின் ஆட்சியின் முடிவிலே ஆரியச் சக்கரவர்த்தி யாப்பகூவமீது படையெடுத்து அங்கிருந்து சம்புத் தன் தந்ததாதுவைக் கவர்ந்து சென்றான் என்றும் பின்பு மூன்றாம் பராக்கிரமபாகு, பாண்டிய அரசனிடமிருந்து தந்த தாதுவை மீட்டுக்கொண்டு பொலநறுவையில் முடிசூடிக் கொண்டான் என்றும் சூளவம்சம் கூறுவது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண வைபவமாலையிலுள்ள சிங்கையாரிய மன்னர் வரலாறு
குலசேகர சிங்கையாரியன் முதற் கனகசூரிய சிங்கையாரியன் வரையான அரசர்களின் வரலாற்றை மிகச் சுருக்கமாகப் பின்வரு மாறு யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.

Page 64
一40一
குலசேகர சிங்கையாரியன்
"குலசேகர சிங்கையாரியன் அரசாட்சி முறைகளைத் திருத்திக் குடிகள் பிரியப்படத் தக்கதாகச் சமாதான அரசாட்சி செய்து தன் மகன். குலோத்துங்க சிங்கையாரியனுக்குச் சிங்காசனத்தை ஒப்புவித்துச் சிவலோகஞ் சேர்ந்தான்."
குலோத்துங்க சிங்கையாரியன்
'குலோத்துங்க சிங்கையாரியன் வயல்நிலங்களைத் திருத்து வித்து வருமானங்களை அதிகப்படுத்திக் குடிகளையுஞ் சந்தோஷப் படுத்திச் சமாதான அரசாட்சி செலுத்தித் தன்குமாரனாகிய விக்கிரம சிங்கையாரியனுக்கு அரசாட்சியை வைத்துப் பரபதஞ் சேர்ந்தான்." விக்கிரம சிங்கையாரியன்
"இவன் காலத்திலே இங்குள்ள புத்த சமயிகளான சிங்கள வருக்கும் தமிழருக்கும் சமய காரியங்களையிட்டும் பெருங் கலக முண்டுபட்ட பொழுது சிங்களவர் சில தமிழரைக் காயப்படுத்தி இருவரைக் கொலைசெய்து இப்படியே முரட்டுத்தனங்காட்டி நின்றார்கள். அதையறிந்து விக்கிரம சிங்கையாரியன் அவர் களைப்பிடித்து விசாரணை செய்து அக்கலகத்துக்குத் தலை வராய் நின்ற புஞ்சிவண்ட என்பவனையும் வேறு பதினேழு சிங்களவரையும் கொலை செய்து வேறு பலரைச் சிறைச்சாலை யிலும் இடுவித்தான். அதன்பின் கலகம் அமர்ந்தது. சில சிங்க ளக் குடிகள் ஒளித்து இந்நாட்டை விட்டுப் புறப்பட்டார்கள் இவ்விக்கிரம சிங்கையாரியன் தமிழர் மேல் அதிக பட்சம் வைத்து நடந்ததினால் சிங்களவர் இவன் மேற் பற்றுள்ளவர்களாயிருந்த தில்லை. வரோதய சிங்கையாரியன்
"இவனுக்குப் பின் இவன் மகன் வரோதய சிங்கையாரியன் அரசாட்சியை ஒப்புக்கொண்டு மார்க்க வழிபாடுகளைக் குறித்துச் சில கட்டளைகளை ஏற்படுத்தி இரு திறக் குடிகளையுஞ் சமா தானப்படுத்தி முறைமையான அரசாட்சி செய்து தன் குமாரன் மார்த்தாண்ட சிங்கையாரியனுக்கு அரசிருக்கையைக் கொடுத்துப் பரகதி அடைந்தான்."
மார்த்தாண்ட சிங்கையாரியன்
"மார்த்தாண்ட சிங்கையாரியன் கல்வியும் வேளாண்மையும் விருத்தியாகத்தக்க முயற்சிகளைச் செலுத்தி வன்னியர்களால் வந்த கலகங்களையும் அமர்த்திக் குடிகளைத் தாய் போலக் காப்

-41
பாற்றித் தயாள குணமுள்ளவனாயரசாண்டதினால் அவன் மரணித்த போது இரு திறத்துக் குடிகளுள்ளும் அவனுக்காகப் பிரலாபியாதவர்களில்லை. அவன் மரித்தபின் அவன் மகன் குண பூஷண சிங்கையாரியன் முடிசூட்டி அரசாண்டான்."
குணபூஷண சிங்கையாரியன்
"இவன் தன் பிதாவிலும் அதிக தயாள குணமுள்ளவனாய்க் குடிகளைப் பாரபட்சமில்லாமல் நடத்தி அரசாட்சியைத் திறம் படுத்திக் கல்வியும் செல்வமும் வர்த்திக்க முயற்சி செலுத்திப் பூரண ஆயுளுடையனாய்த் தன் குமாரன் வீரோதய சிங்கையாரி யனுக்கு இராச்சியப் பொறுப்பை ஒப்புவித்து ஆறியிருந்த சில காலத்தின் பின் தேகவியோகமானான்."
விரோதய சிங்கையாரியன்
வீரோதய சிங்கையாரியன் காலத்தில் சிங்களவராற் சில கலகங்களுண்டுபட அவன் கலகங்களைத் தன் வீரத்தினாலடக்கி, அக் கலகங்களை வன்னியர்கள் மேற் தூண்டிவிட்ட செய்தியறிந்து, வன்னியர்கள்மேற் படையெடுத்து ஏழு வன்னியையும் கொள்ளை யாடி அவ்வன்னியர்கள் ஒருபோதும் அவ்வித எண்ணங் கொள் ளாதபடி செய்து திரும்பினான். அவன் மீண்டு வந்தவுடன் சிங்களக் கலகக்காரர் அவன் காலடியில் விழுந்து தங்கள் குற்றங் களைப் பொறுத்துக்கொள்ள வேண்டிக்கொண்டதினால் அவர் களுக்குப் பொறுதி கொடுத்து நன்முகங் காட்டினான்.""
மதுரைக்குச்சேறல்
"அக்காலத்திலே மதுரையிற் சந்திரசேகர பாண்டியனுடனே சத்துருக்கள் போயெதிர்த்து யுத்தஞ் செய்து இராச்சியத்தைப் பிடித்துக்கொள்ள, பாண்டியன் ஒளித்து யாழ்ப்பாணத்துக்கு ஓடி வந்து வீரோதய சிங்கையாரியனிடம் அடைக்கலம் புகுந் தான். அப்போது வீரோதைய சிங்கையாரிய இராசன் பாண்டியன் கீழ், பாளையத் தலைவராயிருந்த சேதுபதி முதலான வீரர் களையுங் கூட்டித் தன் சேனைத் திரள்களையுங் கொண்டு மதுரையிற் புகுந்து போராடிச் சத்துருக்களைத் துரத்திப் பாண்டியனுக்கரசாட்சியை நிலைப்படுத்தித் திரும்பினான்."
வன்னியர் வெறுப்பு
"இவன் மறுபடியும் வன்னியர்மேற் கொள்ளையாட
வரவெண்ணியிருக்கிறானென்று ஒரு பொய்க்கதையுண்டான போது வன்னியர்கள் பயந்து கண்டியிராசனிடம் போய்த் தங்

Page 65
س-42 سے
களுக்கு உதவிசெய்ய வேண்டி நின்றார்கள். அந்தக் கண்டி யிராசன் "யாழ்ப்பாணம் எங்கள் முன்னோர் பரிசாகக் கொடுத்த இராச்சியமாகவிருப்பதால் நான் அதற்கு விரோதமாகப் படை யெடுத்து என் குலப் பிதாக்களின் பேருக்கு அபகீர்த்தி வருவிக்க மாட்டேன்’ என்று மறுத்துச் சொன்னதினால் அவ்வேளு வன்னியர்களும் கன திரவியங்களைக் கொண்டுவந்து வீரோதைய சிங்கையாரியனைக் கண்டு நன்முகம் பெற்றுத் திரும்பிப்போய்ப் பயமற்றிருந்தார்கள். வீரோதைய சிங்கையாரியன் இளவயதிலே மரணமடைந்தான். இவன் டோசனஞ் செய்து இரவில் நித்திரையா யிருக்கையில் மரணமடைந்ததினால் இவன் மரணத்தைக் குறித்துப் பலவிதமாய்ப் பேசிக்கொண்டார்கள்.?
செயவீர சிங்கையாரியன்
"அவன் குமாரன் செயவீர சிங்கையாரியன் சிறுவயதில் முடிசூட்டி அரசனாய் வந்தும் சத்துரு பயமின்றி அரசாட்சியை நடத்திக் குடிகளை இரட்சித்து வெகு கீர்த்திமானானான்."
'அக்காலம் கண்டிநாட்டையரசாண்ட புவனேகபாகு முத்துச் சலாபத்தைக் குறித்து இவனுடனே விவாதம் பண்ணி நெருங்கி யதனால் இவன் அவனுடனே நெருங்கி யுத்தஞ் செய்து வெற்றி கொண்டு இலங்கை முழுவதும் மிதுன யாழ்க்கொடி தூக்கிச் சாலிவாகன சகாப்தம் 1380 ஆம் வருஷத்திலே இலங்கை முழு தும் ஒரு குடைக்கீழ் அரசாண்டான். பன்னிரண்டாம் வருஷத் திலே பராக்கிரமபாகு வென்பவன் பாண்டியராசனைப் பிணை வைத்துத் திறை தருவேனென்று செயவீர சிங்கையாரியனிடத்தில் இராச்சியத்தை வாங்கி அரசாண்டு இவனும் இவன் பின்வந்த அரசருந் திறையிறுத்து வந்தார்கள். இவன் நெடுங்காலம் அர சாண்டு தன் மகன் குணவீரசிங்கையாரியன் புயத்தில் இராச்சி யத்தையேற்றிப் பூலோக வாழ்வை நீங்கினான்.""
குணவீர சிங்கையாரியன்
'கண்டியரசர் கொடுத்து வந்த திறையை நிறுத்தினதினால் குணவீர சிங்கையாரியன் அவர்கள் மேல் யுத்தஞ் செய்து சில பகுதிகளைப் பிடித்துத் தமிழ்க் குடிகளையிருத்தித் தன்னரசாட்சி யாக்கினான். மதுரையையரசாண்ட நாயக்கர்களுக்குஞ் சில பேருதவி செய்தான். இவன் தன் பிதாவைப் போலவே சிறந்த அரசாட்சி செய்து வயோதிபனாகித் தன் மகன் கனகசூரிய சிங்கை யாரியனுக்கு அரச பதவியைக் கொடுத்துச் சொர்க்கமடைந்தான்.”

ー43ー
கனகசூரிய சிங்கையாரியன் சிங்களக் குடிகளுக்கு இளக்கங் காட்டி வந்ததினால் அவர்கள் மேல் நாட்டம் கொண்டு வன்னிய மார்களின் உதவிபெற்றுக் கலகஞ் செய்தபோது, கனகசூரிய சிங்கையாரியன் இரவிலே தன் மனைவி மக்களையுங் கொண்டு வடதேசத்துக்கு ஒடிப்போய்விட்டான்."
சிங்கையாரிய மன்னர்களைப் பற்றிய இந்த வரலாறு மிகச் சுருக்கமர்னவொன்றாகும். சமகாலச் சிங்கள மன்னர்களைப் பற்றிச் சிங்கள வரலாற்று நூல்கள் கூறும் வரலாறும் இதனைப் போன்று சுருக்கமானதாகும். அழிந்தொழிந்து விட்ட நூலாகிய இராசமுறை என்னும் நூலை ஆதாரமாகக் கொண்டே இப்பகுதி எழுதப்பட்டுள்ளது. இராசமுறை என்ற நூலிலுள்ள வரலாறும் சுருக்கமானதாக அமைந்திருந்ததா அல்லது யாழ்ப்பாண வைபவ மாலையின் ஆசிரியர் தான் விரும்பியவாறு மூலநூலிலுள்ள செய்திகளைச் சுருக்கியும் திரித்தும் எழுதினாரா என்ற விடயங் களைத் தெளிவுபடுத்த முடியாது.
பதினொரு சிங்கையாரிய மன்னர்களின் பெயர்களை மக்களின் நினைவில் என்றும் நிலைபெறும் வண்ணம் பதிவு செய்து வைத்தமை மயில்வாகனப் புலவரின் சிறப்பான பணியாகும். இப்பதினொருவருள் செயவீர சிங்கையாரியன், வரோதய சிங்கை யாரியன் ஆகியவிருவரைப் பற்றியும் முறையே கைலாயமாலை, செகராசசேகரமாலை ஆகியவற்றின்மூலம் அறியமுடிகின்றது. ஏனை யோரைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை தவிர்ந்த வேறெந்த நூலிலுங் குறிப்புகள் காணப்படவில்லை.
யாழ்ப்பாண அரசர்களைப் பற்றிய பகுதியில் யாழ்ப்பாண வைபவமாலையானது புனைகதைகளையோ நம் ப முடியா த ன வற்றையோ அதிகமாகக் குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. ஆயினும் யாழ்ப்பாண வைபவமாலையிலுள்ள குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாண அரசரின் வரலாற்றைத் தெளிவாகவும் விரிவாகவும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாது ஒவ்வொரு அரசனும் எத்தனை வருடங்களாக ஆட்சி புரிந்தா னென்றோ எப்பொழுது அரசனாக முடி சூ டி க் கொண்டா னென்றோ யாழ்ப்பாண வைபவமாலை கூற வில் லை. எனவே விங்கையாரிய மன்னர்களின் வரலாற்றைக் காலக்கிரம வரிசையில் அமைத்துக் கொள்வது இயலாதவொன்றாகும்.
தென்னிந்திய அரசுகளோடும் சிங்கள அரசுகளோடும் யாழ்ப்பாண மன்னர் கொண்டிருந்த தொடர்புகளைப் பற்றி பர்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. சிங்கள அரசரைக்

Page 66
س-44
கண்டி அரசரென்றே இந்நூல் வர்ணிக்கின்றது. பதினெட்டாம் நூற்றாண்டிலே, யாழ்ப்பாண வைபவமாலை எழுதப் பெற்றபோது, கண்டிநகரம் சிங்கள இராச்சியத்தின் இராசதானியாகவிருந்தது. அதற்கு முன்னிருந்த சிங்கள இராசதானிகளை மயில்வாகனப் புலவர் அறிந்திருக்கவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. யாப்பகூவ, குருநாகல், கம்பளை, கோட்டை ஆகியன ஒன்றன் பின் ஒன்றாகச் சிங்கள இராச்சியத்தின் தலைநகராக விளங்கிய காலங்களிலே சிங்கையாரிய மன்னர் சிங்கள மன்னர்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை ச் சிங்கள நூல்கள் மூலமாகவும் பிற ஆதாரங்கள் வாயிலாகவும் அறியமுடிகின்றது.
அயல்நாட்டுத் தொடர்புகளைப் பொறுத்தவரையிற் குறிப் பிட்ட அரசனொருவன் காலத்திலே நடந்த நிகழ்ச்சிகளை இன்னொருவன் காலத்து நிகழ்ச்சிகளாக மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார் என்று கருதுவதற்கும் இடமுண்டு. ஒன்பதாவது அரசனாகிய செயவீர சிங்கையாரியன் முத்துச் சலாபம் குறித்து கண்டிராசனாகிய புவனேகபாகுவுடன் போர்புரிந்து அதன் பயனாக இலங்கை முழுவதையும் பன்னிரண்டு வருடங்கள் ஆட்சி புரிந்தான் என்றும், பின்பு பாண்டிய மன்னனின் தலை யீட்டினால் பராக்கிரமபாகு சிங்கள இரச்சியத்திலே ஆட்சியுரிமை பெற்றான் என்றும், சொல்லப்படுகின்றது. உண்மையில் இந் நிகழ்ச்சிகள் பதின் மூன்றாம் நூற்றாண்டிலேற்பட்ட பாண்டியப் படையெடுப்புகளோடு தொடர்புடையவை. ஆதலினால் அவை முதலாம் அரசனாகிய செயவீரசிங்கையாரியன் காலத்தனவென்று கொள்ளப்படல் வேண்டும். மார்த்தாண்ட சிங்கையாரியன், வீரோதய சிங்கையாரியன் என்போர் வன்னியர்களை அடக் கியதாகச் சொல்லப்படுகின்றது. வடஇலங்கையிலுள்ள வன்னிச் சிற்றரசுகள், யாழ்ப்பாண இராச்சியத்திற்குரியவை என்பதும் அரசருக்கும் வன்னியருக்குமிடையே வன்னியர் செலுத்தவேண்டிய திறை காரணமாகத் தகராறுகள் காலந்தோறும் ஏற்பட்டன என்பதும் பிற மூலங்கள் வாயிலாக அறிந்த செய்திகளாகும். ஒன்பதாவது அரசனாகிய செயவீரசிங்கையாரியன் காலத்தில் அவன் பாண்டிய மன்னனுக்கு உதவியளித்ததாகச் சொல்லப் படுகின்றது. ஆயினும் இத்தகைய தொடர்புகள் உண்மையில் வரோதய சிங்கையாரியன் காலத்தில் ஏற்பட்டிருந்தவை என்பதைச் செகராசசேகரமாலை குறிப்பிடுகின்றது.
வரோதய சிங்கையாரியன் காலம்
யாழ்ப்பாண வைபவமாலையில் ஐந்தாம் சிங்கையாரியன் என்று சொல்லப்படும் வ ரோ த ய சிங்கையாரியனின் ஆட் சி யி லே யாழ்ப்பாண இராச்சியம் உன்னத வளர்ச்சியடைந்தது. இவன்

جست-45--
காலத்தில் எழுதப்பெற்ற செகராசசேகரமாலை, செகராசசேகரம் என்னும் நூல்களிலே இவனுடைய சாதனைகள் பற்றிய குறிப் புகள் காணப்படுகின்றன. தனது முன்னோர்களைக் காட்டிலும் கூடிய புகழினைப் பெற்றிருந்த வரோதயன் கச்சாயிலே தனது படைகளுடன் சென்று வலிபடைத்த "வடக்கர்" களைத் தோற் கடித்துப் பெரு வெற்றி பெற்றானென்றும் பாண்டிய மன்னன் முடியிழந்து, அதிகாரமிழந்தபொழுதும் அவனுக்கு ஆதரவாகத் திறல் பொருந்திய நிரையான யானைகள்ளயும் மிகுந்த பொன் னையும் கொடுத்தான் என்றும் செகராசசேகரமாலை புகழ்ந் துரைக்கின்றன. அத்துடன், 'ஏமத்தையர்கோன்' என்னும் பிரதானியொருவனுக்கு ஆட்சிபுரிவதற்கென நிலப்பகுதி ஒன்றினை யும் இவ்வரசன் வழங்கியதாகச் சொல்லப்படுகின்றது. அதுமட்டு மன்றி பிற மன்னர்களிடமிருந்து யானைகளையும் பொன்னையுந் திறையாகப் பெற்றானென்றும் செகராசசேகரமாலை வர்ணிக் கின்றது.
இச்சாதனைகள் ஒன்பதாவது அரசனாகிய வீரோதய சிங்கையாரியனுக்குரியவை என்று யாழ்ப்பாண வைபவமாலை பிழையாகக் கூறுகின்றது. கச்சாய்ப் போரினைப் பற்றிச் செகராச சேகரம் என்ற மருத்துவ நூலும் கூறுகின்றது. செகராசசேகரன் கச்சாயிலே 'வடக்கர் சேனையைப் போரிலே வென்று களத்தில் மடிந்த தன் பகைவர்களின் சடலங்களைப் பரிசோதனை செய்து சிவிற்றின் எலும்பு, தோல், தசை, நாடி முதலான அம்சங்களை ஆராய்ந்து தெளிந்து கொண்டான் என்றும் அந்நூல் செப்பு கின்றது. வரோதய சிங்கையாரியன் செகராசசேகரன் என்னும் பட்டப்பெயர் கொண்டவன் என்பதையும் மருத்துவத் துறையிலே ஆராய்ச்சிகள் நடத்தவல்ல மேதையாக விளங்கினான் என்பதை 4ம் செகராசசேகரத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. கீச்சாய்த்துறையிலே அவனை எதிர்த்துப் பொருத வடக்கர் யாரென்பதையும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதையும் இவ்வரசன் காலத்து நூல்கள் குறிப்பிடவில்லை. தமிழ்மொழி வழிக்கில் வடக்கிலுள்ளவர்களை வடக்கர் எனக் குறிப்யிடுவது மரபாகையால் இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து சேனையொன்று வரோதயன் காலத்தில் அவனுக்கெதிராகப் படையெடுத்து வந்தது எனக் கருதலாம்.
பாண்டிய மன்னனொருவன் பலவீனமடைந்த பொழுது அவ இறுக்கு வரோதயன் உதவி வழங்கினான் என்ற செய்தியானது வரோதயனின் காலத்தை ஒரளவிற்கு நிர்ணயித்துக் கொள்வ தற்குத் துணைபுரிகின்றது. மாறவர்மன் குலசேகரனின் ஆட்சி யிலே உன்னத நிலையிலிருந்த பாண்டியப் பேரரசு பதின்நான்

Page 67
-46
காம் நூற்றாண்டின் தொடக்கத்திலே அரசுரிமைப் போர்களி னாலும் வெளிநாட்டார் படையெடுப்புகளினாலும் தளர்ச்சியுற்று நிலைகுலைந்தது. மாறவர்மன் குலசேகரனுடைய புதல்வர்களான சுந்தர பாண்டியனும் வீரபாண்டியனும் கி.பி. 1310 ஆம் ஆண்டினையடுத்து ஆட்சியுரிமை குறித்துப் போர் புரிந்தார்கள். இச் சூழ்நிலையைச் சாதகமாகக் கொண்டு தில்லி சுல்தானின் பிரதம தளபதியும் அதிசூரனுமான மாலிக்கபூர் தமிழகத்திற்குப் படையெடுத்துச் சென்று அங்குள்ள செல்வங்களைக் கவர்ந்தான். பாண்டியரின் அரசுரிமைப்போரிலும் சுல்தானியப் படையெடுப் பால் ஏற்பட்ட போரிலும் பாண்டியரின் மேலாதிக்கத்தின் கீழ மைந்த அரசர்கள் பங்கு கொள்ளவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற் பட்டன. இத்தகையவொரு சூழ்நிலையிற் பாண்டியப் பேரழி ச இனுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தரசன் செயற்படுவது இயல் பானதாகும். எனவே, பாண்டியராசனுக்கு வரோதயன் பொன் னையும், யானை நிரைகளையும் கொடுத்து ஆதரவு புரிந்தான் என்ற செகராசசேகரமாலையின் கூற்று வெறும் புனைந்துரை யாகாது.
"ஏமத்தையர்கோன்' என்பவனுக்கு வரோதயன் ஆட்சியுரி மையும் குதிரைப்படையும் நாடுங் கொடுத்தான் என்ற கூற்றும் கவனித்தற்குரியதாகும். ஏமத்தையர்கோன் வன்னிச் சிற்றரசன் ஒருவனாதல் வேண்டும். ஒமந்தை என்னும் பதியினையே ஏமத்தை எனச் செகராசசேகரமாலை குறிப்பிடுகிறதென்று ஞானப்பிர காசர் கருதுகின்றார். மார்த்தாண்ட சிங்கையாரியன், விரோதய சிங்கையாரியன், கனகசூரிய சிங்கையாரியன் முதலிய மன்னரின் காலங்களிலே யாழ்ப்பாண அரசருக்கும் வன்னியருக்குமிடையிலே தகராறுகள் ஏற்பட்டிருந்தன என்பதை யாழ்ப்பாண வைபவமாலை மூலம் அறிய முடிகின்றது. வரோதய சிங்கையாரியன் தனக்குப் பணியாத வன்னியர்மீது படையெடுப்பு நடாத்திய காலத்திலே வன்னியர் சிலரை வென்று பின் வன்னிநாட்டிலே தனக்கு ஆதர வாகவிருந்த தலைவனொருவனுக்கு வன்னிநாடொன்றில் ஆட்சி யதிகாரமும் குதிரைப்படை முதலான சன்மானங்களுங் கொடுத் தான் என்று சிந்திக்கலாம்.
வரோதய சிங்கையாரியன் இலங்கை மன்னரிடமிருந்து திறை பெற்றிருந்த செய்தியினையும் அவன் காலத்து நூல்கள் குறிப்பி டுகின்றன. செகராசசேகரன் தென்னிலங்கை வேந்தர்களைத் தோற்கடித்தான் என்றும் முடிமன்னர்களிடமிருந்து பெருந் தொகையான பொன்னையும் யானைகளையும் திறையாகப்

-47
பெற்றானென்றும் செகராசசேகரமாலை செப்புகின்றது. இதே
விடயத்தைச் செகராசசேகரம் பின்வருமாறு புகழ்ந்துரைக்கின்றது:
". மணிமுடி புனையு மிலங்கை வேந்தர் சீர்யபொன் திறையளக்கச் செங்கோலோச்சும் செகராசசேகரமன் சிங்கைமேவு மாரியர்கோன்.""
யாழ்ப்பாண அரசானது வரோதய சிங்கையாரியன் காலத் திலே பொருள் வளத்திலும் படைபலத்திலும் இலங்கையிலே முதன்மை பெற்றிருந்ததென்பதனைச் சமகாலத் தமிழ் நூல்களிற் காணப்படும் குறிப்புகள் உணர்த்துகின்றன. பதினான்காம் நூற்றாண்டின் முதற்காற் பகுதியிலே காணப்பட்ட அரசியல் நிலைகளை அவதானிக்குமிடத்து இந்நூல்களின் குறிப்புகள் ஆதாரபூர்வமானவை என்பது புலனாகின்றது. மூன்றாம் விசய பாகுவினால் ( கி. பி. 1215 - 1236 ) உருவாக்கப்பெற்ற தம்ப தெனியா இராச்சியம் இரண்டாம் பராக்கிரமபாகுவிற்குப்பின் (கி . பி 1236-1271) படிப்படியாகத் தளர்ச்சியுற்றது. இரண்டாம் புவனேகபாகுவின் காலத்திலே (கி. பி. 1291 - 1302) சிங்கள இராசதானி குருநாகலில் அமைக்கப்பட்டது. அவனுக்குப் பின் அவனுடைய மகனாகிய நான்காம் பராக்கிரமபாகு (கி. பி. 13021326) ஆட்சி புரிந்தான். அவனுடைய நடவடிக்கைகள் பெரும் பாலும் இலங்கையின் தெற்கு தென்மேற்குப் பகுதிகளைப் பொறுத்தனவாயிருந்தன. இவனுடைய ஆட்சிக்காலத்திலே யாழ்ப் பாணப் பட்டினத்தவரின் படையெடுப்புகளினாலே அனுராத புரம் அழிவடைந்ததென்று குருனாகல விஸ்தரய என்ற நூல் குறிப்பிடும். நான்காம் பராக்கிரமபாகுவிற்கெதிராக நடந்த யாழ்ப்பாணத்தவரின் படையெடுப்பு வரோதய சிங்கையாரியன் காலத்தது எனக் கருதலாம்.
ஆரியச் சக்கரவர்த்திகளின் படையெடுப்பின் விளைவாகப் பராக்கிரமபாகுவின் ஆதிக்கம் பலவீனமுற்றதென்று சிந்திக்கலாம். போதா மாப்பாணன் என்ற பிரதானி ஏற்படுத்திய கிளர்ச்சியின் விளைவாகப் பராக்கிரமபாகு கொலையுண்டான் என்றும் குரு நாகலிலுள்ள அரண்மனை அழிவுற்றதென்றும் மடவெலச் சாசனம் கூறுகின்றது. இந்நிகழ்ச்சிகளின் விளைவாகச் சிங்கள இராச்சிய மானது மேலும் பலவீனமுற்றது. பராக்கிரமபாகுவிற்குப் பின் வன்னி புவனேகபாகு, ஐந்தாம் விசயபாகு என்னுமிருவரும் வலி யற்ற மன்னர்களாகக் குருநர்கலிலிருந்து ஆட்சி புரிந்தனர். ஆரியச் சக்கரவர்த்திகள் இச்சூழ்நிலையினைப் பயன்படுத்தித் தென்னிலங்கையிலே தமது ஆதிக்கத்தைப் படிப்படியாக ஏற் படுத்திக் கொண்டார்கள்.

Page 68
--48 - است.
கம்பளை அரசும் ஆரியச் சக்கரவர்த்திகளின் மேலாதிக்கமும்
சிங்கள இராச்சியத்தின் இராசதானி கி. பி. 1344 ஆம் ஆண் டிலே கம்பளை நகரத்திற்கு மாற்றப்பட்டது. நாலாம் புவனேக பாகுவும் அவனுடைய துணையரசனாகிய ஐந்தாம் பராக்கிரம பாகுவும் அங்கிருந்து ஆதிபத்தியஞ் செலுத்தினார்கள். கம்பளை இராசதானியாகிய காலத்திலே ஆரியச் சக்கரவர்த்திகளின் செல் வாக்கானது தென்னிலங்கையிலே, குறிப்பிடத் தக்க அளவிலே ஏற் பட்டு விட்டதென்பதை இஷன் பற்றுற்றாவின் வர்ணனைகள் மூலம் உய்த்துணர முடிகின்றது.
தில்லி சுல்தானியத்திலே சில காலம் உயரதிகாரியாகவிருந்து பின் பதவிதுறந்தவரும் சிறந்த கல்விமானாக விளங்கியவருமான இவுன் பற்றுற்றா தென்னிந்தியாவிலிருந்து கடல்வழியாக இலங் கைக்கு வந்தார். இலங்கையிலே சமனொளிபாதத்தைத் தரிசிப் பது அவரின் நோக்கமாயிருந்தது. கடல்வழியே வரும்பொழுது புயற்காற்று ஏற்பட்டதால் அவர் ஆரியச் சக்கரவர்த்தி வசமுள்ள கரையோரத்திலே இறங்க நேர்ந்தது. ஆரியச் சக்கரவர்த்தி கடல் வழிப் பாதையாகச் செல்வோரைத் துன்புறுத்துபவன் என்றும் அவனுடைய இராச்சிய எல்லைக்குட் காலடி வைப்பது அபாய கரமானது என்றும் கப்பலோட்டி எச்சரித்தபோதும் தான் எந்த நிலமையினையுஞ் சமாளிக்க முடியுமென்ற துணிவுடன் கரை யிறங்கியதாகவும் அவர் கூறுகின்றார்.
ஆரியச் சக்கரவர்த்தியின் அதிகாரிகள் இவுன் பற்றுற்றாவை விசாரணை செய்தபின் அரசனிடம் அழைத்துச் சென்றார்கள். அரசன் அவரை இராசமரியாதைகளுடன் வரவழைத்துச் சில நாட்களாகத் தனது விருந்தாளியாக வைத்திருந்தான். ஆரியச் சக்கரவர்த்தி தன்னுடன் மிகுந்த சினேகபாவத்துடன் நடந்து கொண்டதாகவும், பாரசீக மொழியைப் புரிந்து கொண்டதாக வும், பிறதேசங்களைப் பற்றியும் அயல்நாட்டு மன்னர்களைப் பற்றியும் தான் கூறியவற்றையெல்லாம் கூர்ந்து அவதானித்த தாகவும் இவுன் பற்றுற்றா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவுன் பற்றுற்றா கரையிறங்கிய பொழுது ஆரியச் சக்கர வர்த்தி முத்துச்சலாபத்திற்கு அண்மையிலே, "பட்டாள' என் னும் நகரிலே, மரத்தினால் உருவாக்கப்பெற்ற மாளிகையிலே தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகின்றது. அந்தமாளிகைக்குச்

شن-49---
சமீபத்திலே கடலிலிருந்து எடுக்கப்பெற்ற முத்துக்கள் குவிக்கப் பெற்றிருந்தன. மன்னனின் அதிகாரிகள் தரத்திற்கேற்ப அவற்றை வகைப்படுத்துவதிலே ஈடுபட்டிருந்தார்கள். உலகின் பல்வேறு பாகங்களிலுள்ள முத்துக்களைப் பற்றிக் கேட்டறிந்த அரசன் தன் வசமுள்ளனவற்றைப் போன்ற தரத்தால் உயர்ந்த முத்துக்கள் வேறெங்குமே காணப்படவில்லை என்பதைக் கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான் என்று கூறுகின்றார். இவுன் பற்றுற்றா ஆரியச் சக்கரவர்த்தி தன்வசம் உள்ளங்கையினளவு விட்டங் கொண்ட இரத்தினக் கற்களை வைத்திருந்தான்; அவற்றுள் ஒன்றினாலே தனது தாடியைத் தடவும் வழக்கமுடையவனாகக் காணப்பட்டான்; மற்றையது வெற்றிலையைத் துப்புவதற்கான துப்பட்டியாக அவனாலே பயன்படுத்தப்பட்டது' என்றும் கூறி ugerarmri.
ஆரியச் சக்கரவர்த்தியின் கடற்படை வலிமைபற்றி இஷன் பற்றுற்றா கூறுவன மிக முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புகளாகும், மதுரையிலிருந்து புறப்பட்டுக் கடல்வழியாக வரும்பொழுது ஆரியச் சக்கரவர்த்தியின் நூறு கப்பல்களைக் கண்டதாகக் கூறுகின்றார். அக்கப்பல்கள் மதுரைச் சுல்தானுடைய கப்பல்களைச் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றபோது அவை மிகவேகமாக ஒடித் தப்பிக் கொண்டன என்றும் அவர் கூறுகின்றார். பின்னர் அந்த நூறு கப்பல்களும் அராபியாவிலுள்ள யெமென் மார்க்கமாகப் புறப்பட்டுச் சென்றதனை அவராலே அவதானிக்க முடிந்தது.
ஆரியச் சக்கரவர்த்தி அயல்நாட்டு வாணிபத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவனாகவும் அதிலே குறிப்பிடத்தக்க பங்குகொண்டிருந்த வனாகவும் விளங்கினான். பட்டாள நகரின் கரையோரமெங்கும் கறுவா மரத்தின் துண்டங்கள் கட்டுக் கட்டாகக் குவிக்கப்பெற்று மலைபோலச் காட்சியளித்தமையினை இவுன் பற்றுற்றாவினாலே கண்டுகொள்ள முடிந்தது. மலையாள வணிகரும், தமிழக வணி கரும் புடைவைகள் முதலான பொருட்களை அரசனிடம் கொடுத்து விட்டுக் கறுவாவினை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டு அதனைக் கப்பல்களில் ஏற்றிச் சென்றார்கள். ஒரு சரிவதேச வர்த்தகப் பொருள் என்ற வகையிலே கறுவா பெற்றிருந்த முக்கியத்துவத் தினை நன்குணர்ந்திருந்த முதலாவது இலங்கை மன்னன் ஆரியச் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இயற்கைப் பொருள் என்ற வகையிலே கறுவா யாழ்ப் பாண இராச்சியத்திற்கு அந்நியமானவொன்றாகும். இலங்கை யின் ஈரலிப்பு வலயத்தில், மலைப்பிரதேசத்திலும் தென்மேற்குப்

Page 69
ー50ー
பகுதியிலும் மட்டுமே, காடுகளிலே கறுவா மரங்கள் இயற்கை யாகவே வளர்ந்தன. சிங்கள இராச்சியங்களில் விளைந்த கறுவர் வினை எவ்வாறு ஆரியச் சக்கரவர்த்தி பேரளவிலே பெற்றுக் கொள்ள முடிந்தது என்ற சிந்தனை இச்சந்தர்ப்பத்திலே எழுவது இயல்பாகும். தனது மேலாதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமே யாழ்ப்பாணத்து மன்னன் இவ்வாறு கறுவாவினை பெற் றுக் கொள்ள முடிந்தது.
பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் நிலவிய அரசியல் நிலைகளைக் குறித்து ராஜாவலிய என்னும் நூல் பின்வருமாறு வர்ணிக்கின்றது:
"பராக்கிரமபாகுவின் மகன் கம்பளையில் இருந்தான். அளகக்கோனார் என்னும் மந்திரி றயிகமத்திலிருந்தான். யாழ்ப் பாணப் பட்டினத்தில் ஆரியச் சக்கரவர்த்தி இருந்தான். இம்மூவருள்ளும் சேனாபலத்திலும் பொருள்பலத்திலும் ஆரியச் சக்கரவர்த்தி மேலோங்கியிருந்தான். அதனாலே அவன் மலைநாட்டிலிருந்தும் கீழ்நாட்டிலிருந்தும் ஒன்பது துறைமுகங்களிலிருந்தும் திறைபெற்றான்."
நிகாய சங்கிரகய என்ற சிங்கள நூலும் இவ்வண்ணமாகவே ஆரியச் சக்கரவர்த்தியினைப் பற்றி வர்ணிக்கின்றது. ஆரியச் சக் கரவர்த்தியின் ஆதிக்கமானது தென்னிலங்கையிலே வளர்ச்சியுற் றமை பற்றிச் சிங்கள நூல்களிற் காணப்படும் குறிப்புகள் இரு சாசனங்களின் மூலம் ஆதாரம் பெறுகின்றன. கம்பளைக்கு அண்மையிலே கோட்டகம என்னுமிடத்திலே கண்டெடுக்கப் பெற்ற தமிழ்ச் சாசனமொன்றிலே பின்வரும் வாசகம் காணப்ப டுகின்றது.
"சேது.
கங்கணம்வேற் கண்ணிணையாற் காட்டினார் காமர்வளைப்
பங்கயக் கையினாற் திலோதம் பொங்கொலிநீர்ச்
சிங்கை நகராரியனைச் சேரா வனுரேசர்
தங்கள் மடமாதர் தாம்.”
வெண்பாவிலமைந்த இச் சாசனச் செய்யுள் சிங்கைநகரில் வாழும் ஆரிய மன்னனுடைய வெற்றிகளைக் குறிப்பிடுகின்றது. சிங்கள இராசதானியாகிய கம்பளைக்கு அண்மையில் இச்சாசனம் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிங்கையாரியனு டைய படையொன்று கம்பளைவரை முன்னேறிச் சென்று அங்

ー51ー
குள்ள அரசனைத் தோற்கடித்தபின் இச்சாசனம் பொறிக்கப்பட் டதென்பது தெளிவாகின்றது. சிங்களவரசரை அநுராசரென்று சாசனம் கூறுகின்றமையுங் குறிப்பிடத்தக்கது. சாசனத் தொட ரானது சிலேடை நயம்பட அமைந்துள்ளது. "காமர்வளைப் பங் சுயக் கையினாற் திலோதம் பாரித்தார்" என்ற வாக்கியமானது அநுரேசரின் இளம் பெண்கள் தமது நெற்றித் திலகங்களைத் தமது அழகிய கைகளினாலே நீக்கிப் பொலிவிழந்தார்கள் என வும் அவர்கள் எள்ளும் நீருமிறைத்துப் பிதிர்க் கடன் செய்தார்கள் எனவும் இருவிதமான பொருள் குறிக்கும். ஆயினும் சிங்கையாரிய னுடைய சேவையானது கம்பளைவரை முன்னேறிச் சென்று அங் குள்ள அரசனைத் தோற்கடித்துப் பெருவெற்றி ஈட்டியதென்பது இச்சாசனத்தால் அறியப்படும் உறுதியான செய்தியாகும். கோட் டகமக் கல்வெட்டு சிங்கையாரியனுடைய இயற்பெயரைக் குறிப் பிடவில்லை; கம்பளை அரசனுடைய பெயரையும் அது குறிப்பிட வில்லை. இச் சாசனத்தின் வரிவடிவ அமைப்பினைக் கொண்டு அது பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குரியதென்று கருதலாம். அதிலே கூறப்படும் நிகழ்ச்சிகள் கம்பளை இராச தானியாக அமைந்தபின், அதாவது கி. பி. 1344 ஆம் ஆண்டுக்குப் பின்பு, நடந்தனவாதல் வேண்டும். தென்னிலங்கையிலே ஏற் பட்ட ஆரியச் சக்கரவர்த்தியின் ஆதிக்க வளர்ச்சியிலமைந்த ஒரு பிரதானகட்டத்தையே இச் சாசனங் குறிக்கின்றது.
ஆரியச் சக்கரவர்த்தி தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருந்த மேலாதிக்கம் பற்றி ராஜாவலிய போன்ற சிங்கள நூல்கள் கூறும் செய்திகளை மடவலச்சாசனத்திலுள்ள குறிப்புகள் உறுதிப்படுத் துகின்றன. அச்சாசனம் மூன்றாம் விக்கிரமபாகுவிற்கும் மார்த் தண்டம் பெருமாள் என்பவனுக்கும் இடையிலேற்பட்ட ஒப்பந்தம் ஒன்றினைப் பற்றிக் கூறுகின்றது. அவ்வுடன்படிக்கையில் மார்த் தாண்டம் பெருமாள் என்பவன் சிங்குறுவாண, வலவிட்ட, மாத் திளை, தும்பறை, சாகம, துன்றட்ட என்னுமிடங்களிலுள்ள மடி கைகளிலே சுங்கவரிகளைப் பெற்றுக் கொள்வதற்கு விக்கிரமபாகு இணங்கியிருந்தான். வர்த்தகப் பொருட்களை ஏற்றிச் செல்லு கின்ற கடவுகளே மடிகை என வழங்கி வந்தன. அத்தகைய நிலை பங்களிலே வரிகளைச் சேர்ப்பதற்கு மார்த்தாண்டம் பெருமாள் பிராமண அதிகாரிகளை நியமித்திருந்தான். வரோதய சிங்கையா யரியனின் மகனாகிய மார்த்தாண்ட சிங்கையாரியனே அவனுக்குப் பின் அரசனாகி முடிசூடினான் என்று யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. அவனையே மடவலச் சாசனம் மார்த்தாண்டம் பெருமாள் என்று வர்ணிக்கின்றதென்று பரணவிதான கூறுவார். விக்கிரமபாகுவின் காலத்தில் கம்பளை மீது ஆரியச் சக்கரவர்த்தி

Page 70
-52
படையெடுத்துச் சென்று பெருவெற்றியீட்டி அதன் விளைவாக மலைநாட்டுப் பகுதியிலே தனது மேலாதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான் என்பதையும் விக்கிரமபாகு இந்நிலையை ஏற்றுக் கொண்டான் என்பதையும் மடவலச் சாசனம் உணர்த்துகின்றது. இலங்கை வேந்தரிடமிருந்து யானைகளையும் பொன்னையும் வரோதய சிங்கையாரியன் திறையாகப் பெற்றான் என்று செகராச சேகரம் கூறுவதும் இங்கு கவனிக்கத்தக்கது. வரோதய சிங்கையா ரியனின் ஆட்சிக் காலத்திலே இளவரசனாகவிருந்த மார்த் தாண்ட சிங்கையாரியன் தென்னிலங்கை மீது படையெடுத்துச் சென்று யாழ்ப்பாண அரசனின் மேலாதிக்கம் அங்கு ஏற்படும் வகையிலே ஏற்பாடுகளை மேற்கொண்டான் என்று கருதலாம்.
அழகக்கோனாரின் எழுச்சியும் ஆரியச் சக்கரவர்த்தியின் மேலாதிக்கம் வீழ்ச்சியுற்றமையும்
கம்பளை இராச்சியத்தின் பிரதான அமைச்சர்களாக விளங் கியவர்கள் மலையாள வம்சாவழியினர் ஆவர். அவர்கள் அரச குடும்பத்தவரோடு மணத் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். மேணவர் குலத்தைச் சேர்ந்த சேனாலங்காதிகாரிகள் என்னும் பிரதானி சிலகாலம் பிரதான அமைச்சனாகவிருந்தான். ஆரியச் சக்கரவர்த்தியின் மேலாதிக்கம் ஏற்பட்டதன் விளைவாகச் சேனா லங்காதிகாரி செல்வாக்கினை இழக்க நேரிட்டது. மூன்றாம் விக்கிரமபாகு இராச்சியப் பொறுப்புகளை நடாத்துவதற்குரிய தகைமைகளைக் கொண்டிருக்கவில்லை. அத்தகைய சூழ்நிலை யில் முதலமைச்சனாகப் பொறுப்பேற்ற அழகக்கோனார் என்னும் பிரதானியே கம்பளை இராச்சிய விவகாரங்களுக்குப் பொறுப் பேற்றான். இவன் மலையாள தேசத்து வஞ்சிபுரத்திலிருந்தும் வந்த வணிக வம்சத்து நிஸங்க அழகேஸ்வரனின் வம்சாவழியைச் சேர்ந்தவனாவான்.
அழகக்கோனார் தனது சாதனைகளினாலே பெரும் புகழினை யும் செல்வாக்கினையும் பெற்றான். அழகேஸ்வர யுத்தய முதி லானநூல்களும் சில சாசனங்களும் அவனுடைய பிரதாபங்களைப் பெரிதும் புகழ்ந்துரைக்கின்றன. பிராமண வம்சத்து அமைச்ச னாகிய பாஸ்கர என்ற ஐயமகாலானாவின் துணையோடு ஆரி யச் சக்கரவர்த்தியின் படைகளைத் தோற்கடித்து அழகக் கோனார் இராச்சியத்தைக் காப்பாற்றினான் என்று நியங்கம் பாய சாசனம் செப்புகின்றது.
ஆரியச் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தை அழிப்பதற்கென அழகக்கோனார் உறுதியான பல நடவடிக்கைகளை மேற்கொண்

-53
டான். படைகளைத் திரட்டுவதிலும், கோட்டைகளை அமைப் பதிலும் அவன் ஈடுபட்டான். அழகக்கோனரால் அமைக்கப்பட்ட கோட்டைகளிலே ஜயவர்த்தன கோட்டையே பிரதானமானதா கும். கொழும்புக்கு அண்மையிலே, தாறு காம என்ற ஊரிலே ஆறுகளினாலே சூழப்பட்ட நிலத்திலே அக்கோட்டை அமைக்கப் பட்டது. தாறு காமத்தைச் சுற்றி மிக ஆழமான அகழியொன் றும் உருவாக்கப்பட்டது. அகழியினைச் சுற்றிப் பலமான மதில் கட்டப்பெற்றது இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்துவ தற்கென இடங்கிரிை. புலி முகம், பூமியந் தட்டு, அட்டாளை, வட்ட வெட்டம் முதலான அமைப்புகள் கோட்டையில் இடம்பெற்றன. அத்துடன் அதன் நான்கு பக்கங்களிலும் இலங்கையின் நான்கு காவற்றெப் வங்களுக்கும் கோயில்கள் அமைக்கப்பட்டன. இக் கோட்டைக்கு அபிநவஜயவர்த்தன என்று பெயரிடப்பட்டது. பெருமளவிலான தானியங்களும் உணவுப் பொருள்களும் அத னுள்ளே சேரிக் சப்பெற்றன. அத்துடன் சிங்களவரும் தமிழரும் சேர்ந்த பெரும் படையொன்றினை அழகக்கோனார் உருவாக்கி னான் என்றுஞ் சொல்லப்படுகின்றது.
போருக்கான எல்லாவிதமான ஆயத்தங்களையுஞ் செய்த பின்பு அழகக்கோனார் ஆரியச் சக்கரவர்த்திக்கு எதிரான நட வடிக்கைகளில் ஈடுபட்டான். கம்பளை இராச்சியத்தின் பல பாகங் களிலும் வரிசேர்ப்பதற்கென ஆரியச் சக்கரவர்த்தியினாலே நியமிக் கப்பட்டிருந்த சேவையாளர் அழகக்கோனாரின் கட்டளைப் பிர காரம் கைப்பற்றப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். இந் நிகழ்ச்சிகளினால் ஆவேசமுற்ற ஆரியச் சக்கரவர்த்தி தரைவழி யாகவுங் கடல்வழியாகவும் தென்னிலங்கைக்குப் படைகளை அனுப் பினான். பாணந்துறையில் இறங்கிய ஆரியச் சக்கரவர்த்தியின் சப்பல்கள் அழிக்கப்பட்டு எரியிட்டுக் கொளுத்தப்பட்டன. அத் துடன் கொழும்பு, வத்தளை, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களிலிருந்த ஆரியச்சக்கரவர்த்தியின் தளங்களுங் கைப்பற்றப் பட்டன அழகக்கோனார் ஈட்டிய வெற்றிகளின் விளைவாக தென்னிலங்கைமேல் ஆரியச் சக்கரவர்த்தி ஏற்படுத்தியிருந்த மேலாதிக்கம் முடிவுற்றது. ஆயினும் ஆரியச் சக்கரவர்த்தி இவற்றின் விளைவாகத் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.
மீண்டுமொருமுறை யாழ்ப்பாணத்து அரசன் தென்னிலங்கை மீது படையெடுப்பொன்றை நடாத்தினான் என்று கருதுவதற்கு ராஜாவலிய ஆதாரமாய் அமைகின்றது. நிகாய சங்கிரகய என்னும் நூலானது விக்கிரமபாகுவின் காலத்திலே நடந்த யாழ்ப்பாண அரசனின் படையெடுப்புப் பற்றிக் குறிப்பிடுகையில் ராஜாவலிய வானது அந்நிகழ்ச்சி ஐந்தாம் புவனேகபாகுவின் காலத்தில் ஏற்

Page 71
54--
பட்டதெனக் குறிப்பிடுகின்றது. இரண்டாம் முறையாக நடை பெற்ற படையெடுப்பிலும் ஆரியச் சக்கரவர்த்தியின் படைகள் தரைவழியாகவும் கடல் வழியாகவும் முன்னேறிச் சென்றன. கடல் வழியாகச் சென்ற சேனையானது பாணந்துறையில் இறங்கி அங் கிருந்து கொழும்பு, தெமற்றகெட, கோறக்கான, கொடபஸ் என்னுமிடங்களுக்கு முன்னேறிச் சென்றது. தரைவழியாகச் சென்ற சேனையானது மாத்தளைக்குச் சென்று அங்கு நிலைகொண்டது. இச்சூழ்நிலையில் புவனேகபாகு கம்பளையிலிருந்து ஓடிவிட்டான். அழகக்கோனாரின் மருமகனாகிய வீரவாகு மேற்கொண்ட முயற்சி களினாலே ஆரியச் சக்கரவர்த்தியின் படைகள் தோற்கடிக்கப் பட்டன. இப்போரின் விளைவாக, கம்பளையிலே புவனேகபாகு செல்வாக்கும் அதிகாரமும் இழந்தான். வீரவாகு ஆட்சி அதி காரத்தைக் கைப்பற்றிக் கொண்டான்.
விஜயநகர மேலாட்சியும் செண்பகப் பெருமாளின் படையெடுப்பும்
விஜயநகர மன்னர்களின் மேலாதிக்கம் தமிழகத்தில் ஏற்பட் டதன் விளைவாக ஆரியச் சக்கரவர்த்திகளின் பலம் பதினான் காம் நூற்றாண்டின் கடைக்காற் பகுதியிலே பெரிதும் பாதிப்ப டைந்தது. ப? க்குநீரிணைக்கடல் மீதான ஆதிக்கத்தையும் முத்துக் குளிப்பு மூலமான வருவாயினையும் ஆரியச் சக்கரவர்த்திகள் பெருமளவுக்கு இழக்க நேரிட்டது. அத்துடன் யாழ்ப்பாண இராச் சியத்தின் மீது விஜயநகர மேலாதிக்கமும் ஏற்படலாயிற்று. யாழ்ப் பாண அரசர்கள் விஜயநகரப் பேரரசர்களுக்குக் காலா காலம் திறை செலுத்த வேண்டியிருந்தது. விஜயநகரப் பேரரசு கர்நாட கத்தின் ஒரு பகுதியையும் தெலுங்குதேசத்தின் பகுதிகள் சிலவற் றையும் அவற்றோடு தமிழகத்தையும் உள்ளடக்கியிருந்தது. விஜய நகரப்பேரரசின் பிரதிநிதிகளாகவிருந்து மதுரையில் அரசுபுரிந்த நாயக்கர் மூலமே யாழ்ப்பாணத்தில் விஜயநகரப் பேரரசின் செல் வாக்கும் மேலாதிக்கமும் ஏற்படலாயின.
கி. பி. 1370 ஆம் ஆண்டளவிலே குமாரகம்பனன் என்னும் விஜயநகர இளவரசன் மதுரைச் சுல்தானியத்தைக் கைப்பற்றி இந்துக்களின் ஆட்சியைப் பாண்டிய தேசத்தில் மீண்டும் ஏற்படுத் தினான். மலையாளத்து மன்னனும் இலங்கை வேந்தனும் அவனு டைய அரண்மனைக்குச் சென்று அவனுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டனர் என்று மதுராவிஜயம் என்னும் நூல் கூறும். விஜயநகர ஆவணங்களெல்லாம் பெரும்பான்மையும் யாழ்ப்பா ணத்து அரசனையே இலங்கைவேந்தன் என்று குறிப்பிடுகின்றன

--55-س-
என்று தோன்றுகின்றது. பெரிஷ்டா என்பவர் கி. பி. 1378இல் மலையாளத்து அரசனும் இலங்கை மன்னனும் விஜயநகரத்திற்குத் தங்கள் தூதுவர்களை அனுப்பியிருந்தார்கள் என்றும் அங்குள்ள பேரரசனுக்குத் திறை கொடுத்தார்கள் என்றும் கூறுகின்றார். விரூபாகடின் என்ற இளவரசன் தொண்டைநாடு, சோழநாடு, பாண்டிநாடு ஆகியவற்றைக் கைப்பற்றிவிட்டுத் தனது தந்தை யான இரண்டாம் ஹரிஹரனுக்குப் பெருந்தொகையான இரத்தி னங்களைக் கொடுத்தான் என்று கி பி. 1383 - 4ஆம் ஆண்டிற் குரியதான ஆலம்பூண்டிச் சாசனம் குறிப்பிடுகின்றது. நாராயணி விலாசம் என்னும் நூலும் அரியூர்ச் செப்பேடுகளும் விரூபாசஷன் சிங்களத் தீவிலே வெற்றித்துரண் நாட்டியமை பற்றிக் கூறுகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையிலே விரூபாசஷன் அதன் வட பகுதியான யாழ்ப்வாண இராச்சியத்தையே கைப்பற்றியிருந்தான் என்று நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் ஹரிஹரன் விஜயநகரிலே இறந்தமையினை அடுத்துப் பேரரசிலுள்ள தென் பிராந்தியங்கள் எல்லாவற்றிலுங் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. இத்தருணத்தைப் பயன்படுத்தி ஆரியச் சக்கரவர்த்தியும் திறை கொடுக்காது விஜயநகர மேலாதிக்கத்தி லிருந்து தன்னை விடுவித்துக்கொண்டான் ஆயினும் விரூபாக்ஷன் அரசனாகியதும் தென் பிராந்தியங்கள் யாவற்றிலும் மீண்டும் விஜயநகர மேலாதிக்கத்தை ஏற்படுத்திக்கொண்டான். முதலாம் தேவராஜன் (கி.பி 1422-1446) காலத்திலே விஜயநகரப் பேரரசு பெருவளர்ச்சியடைந்தது, லக்கண்ண தண்ணாயக்கன் மதுரை யிலே பிரதிநிதியாகவிருந்த காலத்தில் இலங்கைமீது படை யெடுப்புகளை நடத்தினான். யாழ்ப்பாணப் பட்டினம், ஈழம் என்பவற்றிற்கு எதிர்ாகக் குதிரைப்ப்டை ஒன்றினைக் கடல்வழி யாக அனுப்பினான் என்று திருமாணிக்குழிக் கல்வெட்டுக் குறிப் பிடுகின்றது. கி. பி. 1441- 2 ஆம் ஆண்டிற்குரிய சாசனமொன்று முதலாம் தேவராயனை "ஈழம் திறைகொண்ட என்று வர்ணிப் பதால் லக்கண்ண தண்ணாயக்கன் நடாத்திய படையெடுப்பின் விளைவாக யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது விஜய நகர மேலாட்சி மீண்டும் ஏற்படுத்தப்பட்டதென்று கருதலாம்.
ஆறாம் பராக்கிரமபாகு கோட்டையில் கி. பி. 1415 இல் அரசனாகிய பொழுது பலநூற்றாண்டுகளாகப் பலவீனமுற்றிருந்த சிங்கள இராச்சியம் மீண்டும் வலுப்பெற்றது. பராக்கிரமபாகு விவேகமும், ஆற்றலுஞ், சாதுரியமுங் கொண்ட அரசனாக விளங் கினான். இலங்கை முழுவதிலும் தன் மேலாதிக்கத்தை ஏற்படுத் துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டான். கண்டி இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம், வன்னிச் சிற்றரசுகள் ஆகியவற்றைக் கைப்பற்றியமை என்பன இவனுடைய சிறப்புமிக்க சாதனைக ளாக ராஜாவலியவிலும் சமகாலச் சிங்கள நூல்களிலும் புகழ்ந்து

Page 72
ரைக்கப்படுகின்றன. புத்தளம் முதலான பதினெட்டு வன்னிக ளையும் பராக்கிரமபாகு கைப்பற்றியதாகப் பரக்கும்பா ஸிரித, கிரா சந்தேஸய போன்ற நூல்கள் கூறுகின்றன.
மலைப்பிரதேசத்தையும் வன்னிகள் பலவற்றையுங் கைப்பற் றிக் கொண்ட பின் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத் தின் மீது கவனஞ் செலுத்தினான். அக்கு அக்காலத்திலே கண்க சூரிய சிங்கையாரியன் ஆட்சி செலுத்தினான். மலையாள தேசத் துப் போர் வீரனான பணிக்கன் ஒருவனின் மகனும் பராக்கிரம பாகுவின் வளர்ப்பு மகனுமாகிய செண்பகப் பெருமாள் என்னும் சப்புமல் குமாரய யாழ்ப்பாணத்திற்கு எதிரான படையெடுப்புக் குத் தலைமை தாங்கினான்.
முதலாவது தடவையாகப் படையெடுத்தபோது செண்பகப் பெருமாள் எல்லைக் கிராமங்கள் சிலவற்றைத் தாக்கிவிட்டுத் திரும்பினான். பின்பு, மீண்டுமொருமுறை அவன் வட இலங் கையை நோக்கிப் படையெடுத்துச் சென்று பெரு வெற்றி பெற் றான். கனகசூரிய சிங்கையாரியன் இயலுமானவரை, போர்புரிந்து விட்டு நிலைமையைச் சமாளிக்க முடியாத நிலையிலே தன் மனைவி மக்களுடன் தென்னிந்தியாவிற்குத் தப்பியோடி விட் டான். கி. பி. 1450 ஆம் ஆண்டளவிலே எழுதப்பெற்ற முன் னேஸ்வரம் சாசனம் பராக்கிரமபர்குவைப் பரராஜசேகர புஜங்க" என்று வர்ணிப்பதால் அச்சாசனம் எழுதப்பட்ட காலத்திலே செண்பகப் பெருமாளினாலே யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டிருத் தல் வேண்டும்.
ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்திலே ஆட்சி செலுத்துவதற்கென, செண்பகப் பெருமாளை அரசப் பிரதிநிதியாக நியமித்தான். செண்பகப் பெருமாள் ஆரியச் சக்கர வர்த்திகளின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யாழ்ப்பாணத்துப் பிரதானிகளை அரசசபையிற் கூட்டி அவர்களின் ஆதரவுடன் ஆட்சி புரிந்தான். செண்பகப் பெருமாளைப் பற்றிய தனிச் செய்யு ளொன்று கைலாயமாலையிலே காணப்படுகின்றது. அது பின் வருமாறு அமைந்துள்ளது.
"இலகிய சகாப்த மெண்ணுாற்
றெழுபதா மாண்ட தெல்லை அலர்பொலி மாலை மார்ப
னாம்புவ னேக வாகு நலம்மிகும் யாழ்ப்பாணத்து
நகரிகட் டுவித்து நல்லைக் குலவிய கந்த வேட்குக்
கோயிலும் கட்டுவித் தானே."

ー57ー
புவனேகபாகு என்பது செண்பகப் பெருமாள் அரசனாகிய போது சூடிக்கொண்ட பட்டப்பெயராகும். செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலே தங்கியிருந்த காலத்திலே அரசனொருவனுக் குரிய விருதுகளையுஞ் சின்னங்களையும் பெற்றிருந்தான் என்று கருத இடமுண்டு. அவனாலே யாழ்ப்பாண நகரும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலும் கட்டப்பெற்றன என்பது இச் செய்புள் வாயிலாக அறியப்படும் செய்திகளாகும். கோட்டைக் காலத் துக்கு முற்பட்ட சிங்கள நூல்களெல்லாம் ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்தனர் என்று கூறுவதால், செண் பகப் பெருமாளினாலே இராசதானியானது முதன் முதலான யாழ்ப்பாண நகரிலே அமைக்கப்பெற்றது என்று கொள்ள முடி யாது. ஆயினும் புதிய அரச மாளிகையொன்றினையும் பிற கட்டிடங்களையும் கோட்டைகளையும் யாழ்ப்பாண நகரத்திலே செண்பகப் பெருமாள் அமைத்திருத்தல் கூடும்,
நல்லூர்க் சந்தசுவாமி கோயிலைச் செண்பகப் பெருமாளே தாபித்தான் என்பதற்கு அக்கோயிலில் இன்றுவரை ஒதப்பட்டு வரும் கட்டியம் ஆதாரமாய் அமைகின்றது. கஜவல்லி, மகர்வல்லி சமேதராகிய சுப்பிரமணியர் மீது செண்பகப்பெருமாள் மிகுந்த பக்தியுடையவனென்றும் பதினாறு மகாதானங்களைப் புரிந்த சிறப்புடையவனென்றும் கட்டியம் அவனைப் புகழ்ந்துரைக் கின்றது.
ஆறாம் பராக்கிரமபாகு தன் ஆட்சின் முடிவிலே முடிதுறந்து தன் மகள் வழிப்பேரனும் உலகுடைய தேவியின் மகனுமாகிய ஜயவீர பராக்கிரமபாகு என்னும் இளைஞனைக் கோட்டை இராச்சியத்தின் அரசனாக முடிசூட்டிவிட்டு கி. பி. 1467 இல் இறந்தான். இவற்றை அறிந்த செண்பகப் பெருமாள் யாழ்ப் பாணத்திலுள்ள படைகளை அழைத்துக் கொண்டு கோட்டைக் குச் சென்று அங்கு போர்புரிந்து அதன் விளைவாக அதிகாரத் தைக் கைப்பற்றிக் கொண்டான். பூரீசங்கபோதி புவனேகபாகு என்னும் பட்டப்பெயரோடு அங்கு ஆட்சி புரிந்தான். அவனுடைய அதிகாரத்தை ஒப்புக்கொள்ளாத சிங்களப் பிர தானிகள் மலைநாட்டிலும் கீழ்நாட்டிலும் கலகம்விளைவித் தார்கள். கீழ்நாட்டில் ஏற்பட்ட கலகத்தைச் சிங்கள நூல்கள் ஹேள சங்கே, (சிங்களக்கலகம்") என வர்ணிக்கின்றன. ஆயி னும், தனது தம்பியான அம்புலாகல குமாரனின் ஆதரவுடன் புவனேகபாகு அக்கலகங்களை அடக்கிவிட்டான்.
செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கித் தென்னிலங்கைக்குப் போனபின் கனகசூரிய சிங்கையாரியன் தமி

Page 73
-58
ழகத்திலுள்ள அரசர்களின் உதவிபெற்று மீண்டும் யாழ்ப்பாணத் திற்கு வந்து தனது ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டான். யாழ்ப் பாண இராச்சியமானது கோட்டை அரசனின் மேலாதிக்கத்திலி ருந்து விடுதலை பெற்றது. கனகசூரிய சிங்கையாரியனின் பின் வந்த அரசர்கள் நெடுங்காலமாகப் போத்துக்கேயரின் படை யெடுப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது. போத்துக்கேயருக்கு எதிரான போராட்டங்களிலே யாழ்ப்பாண மன்னர்கள் தென் னிந்திய அரசரினதும் சிங்கள மன்னரினதும் ஆதரவையும் பெற் றார்கள்.
கனகசூரிய சிங்கையாரியன் மீளவும் ஆட்சி பெறுதல்
செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்பு கனகசூரிய சிங்கையாரியன் தனது மனைவி மக்களுடன் அங்கிருந்தும் வெளியேறித் தமிழகத்திற்குப் போனான். அங்கு அவனுடைய மக்கள் திருக்கோவலூர் இராசதானியின் ஆதர விலே தங்கியிருந்தனர். நாடிழந்த நிலையில் அரசன் காசி பரியந்த மாகவுள்ள திருத்தலங்களைத் தரிசித்துக் காலங்கழித்து வந்தான். இவ்விடயங்களைப் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை மேல்வருமாறு வர்ணிக்கின்றது.
கனகசூரிய சிங்கையாரியன் தன் பிள்ளைகளாகிய பரராச சேகரனையும் செகராச சேகரனையும் திருக்கோவலூரில் இராசகுடும்பவத்தவர் பாலிற் கல்வி கற்க வைத்து யாத்திரை பண்ணும் படி தன் மனைவியுடனே காசி பரியந்தம் திருத்தலங் கள் தோறும் சுற்றித்திரிந்து திரும்பிக் கோகர்ண சிவாலயத்தில் வந்திறங்கி அவ்விடத்திலிருந்து சில வருடகாலம் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தான். அப்படி யனுஷ்டித்து வருங்காலத்தில் ஒரு நாள் கனவிலே, "நீ மதுரைக்குப்போ, அங்கே உனக்குச் சகா யங் கிடைக்கும்" என உத்தரவு கிடைத்ததனால், விரத உத்தியாயணமும் செய்து திருக்கோவலூருக்குப் போய் அங்கே தன் பிள்ளைகள் வளர்ந்தவர்களாய்ப் போர்ச் - சாமார்த்தியத்திலும் கல்விப் பயிற்சியிலுஞ் சரீர வழகிலும் அதிகப்பட்டவர்களாயிருக்கக் கண்டு அளவிலாத சந்தோஷமானான். பிதாவைக் கண்டபோதே பிள்ளைகளின் முகம் சூரியனைக்கண்ட செந்தாமரைப் புட்பங்கள் போலாயின. பிள்ளை கள் இருவரும் சத்துருவைச் செயிக்கவும் இராச்

--59ے
சியத்தை மீட்டுக் கொள்ளவும் பண்ணியிருந்த பிரயத்தனங்களைக் கண்டு பிதா மிகுந்த ஆச் சரியங்கொண்டு அவர்களை முத்தமிட்டு அங் குள்ள இராச குடும்பத்தாருக்குத் தான் காட்ட வேண்டிய நன்றியறிதல் எல்லாங் காண்பித்து, பிள்ளைகளையுந் தேவியையுங் கூட்டிக் கொண்டு மதுரையிற் போய்ச்சேர்ந் தான். கனகசூரிய சிங்கையாரியன் மதுரை யிற் சேர்ந்தபொழுது பாண்டிநாட்டைப் பகுதியாய் ஆண்ட சிற்றரசர் பலரும் சேனை களையும் ஆயுதங்களையுங் கொடுத்துவிட அவன் சகல ஆயுதங்களுடனேயும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து மேற்குவாசல் வழியாக நுழைந் தான்.""
கனக சூரிய சிங்கையாரியன் திருக்கோவலூர், மதுரை, திருகோணமலை ஆகிய விடங்களிலுள்ள அரசரின் ஆதரவைப் பெற்றிருந்தான் என்பது யாழ்ப்பாண வைபவமாலை மூலமாக அறியப்படுகின்றது. திருக்கோவலூரில் மலையமான்களின் ஆட்சி நிலவிவந்தது. மலையமான்கள் விஜயநகரப் பேரரசரின் மேலா திக்கத்தின் கீழமைந்த சிற்றரசராக ஆட்சி புரிந்தனர் கனகசூரிய சிங்கையாரியனின் பிள்ளைகள் திருக்கோவலூர் அரசரின் ஆதர விலே தங்கியிருந்து கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்சது.
பாண்டிநாட்டுச் சிற்றரசர்களிடமிருந்தே கனக சூரியசிங்கை யாரியன் படைகளையும் தளபாடங்களையும் உதவியாகப் பெற்று வந்து யாழ்ப்பாணத்திலே தனது அதிகாரத்தை மீண்டும் ஏற் படுத்திக் கொண்டான். இக்காலத்திலே விஜயநகரப் பேரரசரின் இராசப்பிரதிநிதிகளாக மதுரையிலிருந்த நாயக்கர்களே பாண்டி நாட்டில் ஆதிக்கஞ் செலுத்தினார்கள். விஜயநகரப் பேரரசுக்கும் யாழ்ப்பாண மன்னர்களுக்கும் இடையிலான தொடர்புகள் மீண்டும் வலுப்பெற்றன. விஜயநகரமன்னனின் மேலாட்சியை யாழ்ப்பாண மன்னர் ஒப்புக்கொண்டனர். அதன் மூலம் தென் னிலங்கை அரசரின் அச்சுறுத்தல்களிலிருந்தும் தமக்குப் பாது காப்பைத் தேடிக் கொண்டனர். திருகோணமலையிலே சிலகாலம் கனகசூரிய சிங்கையர்ரியன் தங்கியிருந்தானென்று யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. இக்காலத்திலே மணத்தொடர்பின் காரணமாக யாழ்ப்பாண மன்னருக்கும் திருகோணமலை வன்னி யருக்கும் இடையிலே தொடர்பேற்பட்டிருந்தமையாற் கனகசூரிய சிங்கையாரியன் தனது இராச்சியத்தை மீட்டுக் கொள்ளும் முயற்சியிலே திருகோணமலை வன்னியரின் ஆதரவையும் பெற் றிருத்தல் கூடும்.

Page 74
--60-سے
கனகசூரிய சிங்கையாரியன் போராடி வெற்றிபெற்று யாழ்ப் பாண இராச்சியத்தை மீட்டுக்கொண்டபின் சில காலம் அரசு செலுத்திவிட்டுத் தனது மூத்த குமாரனாகிய பரராச சேகரனை முடிசூட்டிச் சிங்காசனத்தில் வைத்துவிட்டுத் தான் இளைப்பாறிக் கொண்டான். கனகசூரிய சிங்கையாரியனுக்குப் பரராசசேகரன், செகராசசேகரன் என்னும் மக்களிருவர் இருந்தனரென்று யாழ்ப் பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. ஆயினும் இவை அவர் களின் இயற்பெயர்களாக அமைந்திருக்கவில்லை. சிங்கையாரிய மன்னர்கள் முடிசூடிக்கொண்ட பொழுது ஒருவர் பின்னொருவ ராகச் சூடிக்கொண்ட பட்டப்பெயர்களே பரராசசேகரன், செக ராசசேகரன் என்பனவாகும். ஆகையாற் கனக சூரிய சிங்கை யாரியனின் மக்களின் இயற்பெயர்களை மயில்வாகனப் புலவர் அறிந்திருக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
பரராசசேகரன்’ காலம்
கி , பி 519 ஆம் ஆண்டிலே ஆட்சியதிகாரம் பெற்ற முதலாம் சங்கிலிக்கு முன் ஆட்சி புரிந்த அரசன் பரராசசேகரன் என்னும் பட்டப்பெயரைக் கொண்டிருந்தான். இதே பட்டப்பெயரைச் சூடியிருந்த பிற்காலத்து மன்னனொருவனைப் பற்றிய செய்தி களையும் இவனைப்பற்றிய செய்திகளையுஞ் சேர்த்துப் பரராச சேகரனொருவனின் காலத்து நிகழ்ச்சிகளாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகின்றது. இதனாலே இவன் காலத்தைப் பற்றிய மரபுவழியான வரலாற்றுக் கதைகளிலே தடுமாற்றம் ஏற்பட் டுள்ளது.
பரராச சேகரனுக்கு இராசலெட்சுமியம்மாள், வள்ளியம்மை என்னுமிரு பெண்கள் மனைவிகளாயிருந்தனர். இராசலெட்சுமி யம்மாள் சோழராச வமிசத்தைச் சேர்ந்தவள் என்றும் மற்றை யவள் பாண்டி மழவன் குலத்திற் பிறந்தவள் என்றுஞ் சொல் லப்படுகின்றது. முன்னையவள் வழியாகச் சிங்கவாகு, பண்டா ரம் என்னுமிரு குமாரர்களும் வள்ளியம்மை வழியாகப் பரநிருப சிங்கம் என்னும் குமாரனும் பிறந்திருந்தனர்.
பரராச சேகரன் தனது குமாரர்களுடன் கும்பகோணத் திற்கு யாத்திரை சென்றான் என்பது ஐதிகம். இதனையிட்டு யாழ்ப்பாண வைபவமாலை மேல்வருமாறு வர்ணிக்கின்றது.
“மூத்த குமாரன் இறந்து போக அரசன் தன் இளைய குமாரனாகிய பண்டாரமென்பவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி வைத்துத் தீர்த்த மாடுவதற்குப் பரி வாரங்களுடனே கும்பகோணத்திற்கு யாத்திரை

-61
பண்ணினான். சோழதேசத்தரசனும் மகாமக தீர்த்த மாடுவதற்குப் பரிவாரங்களுடன் அவ்விடத்தில் வந்தி ருந்தான். அவ்விடத்தில் அச்சங்கிலி செய்த குழப்படி யினால் அவனையும் பரராசசேகரனையும் பரிவாரங்களை யும் அவ்வரசன் பிடித்துச் சிறையில் வைத்தான். படை சேனைகளுடன் பின்னாகப்போன பரநிருபசிங்கம் அதைக் கேள்விப்பட்டுப் போய்ச் சண்டையாரம்பித்துக் கடும் போர் பண்ணுகையிற் பரநிருபசிங்கத்திற்கு வலுவான காயங்கிடைத்தது. அப்படியிருந்தும் அவன் அந்தக் காயங்களையும் எண்ணாமல் வீராவேசங் கொண்டு போராடி அவ்வரச இனப் பிடித்துச் சிறையிலிட்டுப் பரராசசேகரன் முதலானவர்களைச் சிறையிலிருந்து நீக்கி மூன்று மாதம் அங்கேயிருந்து தனக்குப்பட்ட காயங்களை யும் மாற்றினான். அப்பொழுது சோழ நாட்டரசன் தன் இராச்சியத்தைத் தான் ஆளும் படி விட்டால் திறை யிறுப்பேனென்று வேண்டிக்கொள்ள, அவனிடத்திலே அதற்கேற்ப பிணை வாங்கிக் கொண்டு இராச்சியத்தை ஒப்புவித்துவிட்டு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினான்."
பரராசசேகரன் தென்னிந்தியாவிற்கு யாத்திரை சென்றான் என்ற செய்தி பரராசசேகரனின் திருப்பணி கூறும் பட்டயத்தின் மூலமாக அறியப்படுகின்றது. கும்பகோணத்திற்கண்றிச் சிதம்பரத் திற்கே அவன் யாத்திரை போனான் என்று அப்பட்டயம் கூறும். பரராசசேகரனுக்கும் சோழதேசவரசனுக்கும் போரேற்பட்டமை பற்றி யாழ்ப்பாண வைபவமாலை கூறுவன விசித்திரமானவை யாகவும் தடுமாற்றமானவையாகவும் அமைகின்றன. சோழதேச மானது இக்காலத்திலே விஜயநகரப் பேரரசரின் பிரதிநிதிகளான தஞ்சாவூர் நாயக்கரின் ஆட்சியின் கீழமைந்திருந்தது பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தஞ்சை நாயக்கர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது மேலாட்சியுரிமை பாராட்டியதோடு அதன் பாதுகாவலர்களாசவும் விளங்கினார்கள். விஜயநகரப் பேரரசரின் சாமந்தர்களின் உதவியுடன் யாழ்ப்பாண இராச்சியத்திலே தனது ஆட்சியதிகாரத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொண்ட கனகசூரிய சிங்கையாரியனும் அவனுடைய மகனாகிய பரராசசேகரனும் தென்னிந்தியாவுக்குப் படையெடுத்துச் சென்றமைக்கான சூழ் நிலை தோன்றியிருக்கவில்லை. நாயக்கர்களுக்கும் யாழ்ப்பாண அரசருக்குமிடையிலான தொடர்புகளைத் தவறுதலாகப் புரிந்து கொண்டமையினாலேயே யாழ்ப்பாண வைபவமாலையிலே
தடுமாற்றம் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.

Page 75
-62
பரராசசேகரன் சிதம்பரத்துக்குப் போய் வழிபாடு நிகழ்த்திய தோடு அங்கு சில நிறுவனங்களையும் உருவாக்கியிருந்தான். அவற்றைக் குறித்துச் செப்புச் சாசனமொன்று மேல்வருமாறு கூறுகின்றது.
**யாட்ப்பாணம் இராச்சியம் பண்ணியிருந்த பரராசசேகர மகாராசா அவர்கள் சிதம்பரத்துக்கு வந்து சிதம்பரே சுர தரிசனம் பண்ணி சபாபதிக்குக் குண்டலமும் பதக்க மும் சாத்தி தில்லை மூவாயிரவருக்கும் குண்டலம் போட்டுச் சுவாமிக்கு என்றும் கட்டளை நடக்கும்படி நித்தியமொரு வராகனுக்கு படிக்கட்டளையும் தினமொன்றுக்கு ஐங்கல அரிசி நெய்வேத்தியமும் மடத்திலே பிட்ச்சை கல அரிசியும் சுவாமிக்குப் பரிவட்டமும் இப்படி எந்த வேளை தர்மம் நடக்கும் படிக்கு முதல் வைத்து வாகனம் வைக் கிறதற்கு அங்கண ஒத்தியும் வாங்கி ஒரு நாளையிற் திருவிழாவும் நடப்பித்து வந்த பரதேசிகள் வந்த வேளை யிருக்கிறதற்கு இராசாக்கள் தம்பிரான் தெரு வீதி என்று மூன்னுாற்றறுபது மனையும் வாங்கி வீடு கட்டி நந்தாவனம் போடுகிறதற்கு நல்ல தண்ணீர்க்கிணற்றுக்குக் கிழக்கும் தெற்கும். முப்பதினாயிரம் குளிநிலமும் வாங்கி இராசாக்கள் தம்பிரான் வெளியென்று கொத்தங்குடியிலே பாதி ஊரும் வாங்கி யாட்பாணத்திலே தனது இராச்சியத்துக்குள்ளே அச்சுவேலி, புத்தூர், அளவெட்டி இந்த மூன்று ஊரும் சர்வமானியமாகச் சிதம்பர தர்மத்துக்குக் கொடுத்து இந்தக் கட்டளை என என்றும் தர்மம் விசாரிக்கும் படிக்கு இராசாவாசலுக்கு மந்திரிமாராகவும் இராச வம்சமாகவும் இருக்கிறவர் கள் தில்லியூர் சேனாபதியார் சிங்கையூர்ப் படையாண்டவர் தில்லியூர் குலத்துங்கர் பரநிருபசிங்கர் குலநிருவாங்கப்படை யாராய்ச்சியா ரிவர்கள் வம்சத்திலே நாலுபேரும் சம்மதித்து தங்களினத்துக்குள்ளே ஒரு தரைக் காவிவெட்டித் தம்பிரா னாராக வைத்து இராசாக்கள் தம்பிரானார் திருச்சிற்றம்பல மென்றவருக்கு பட்டமும் கட்டி வைத்து என்றென்றைக்கும் இந்தத் தர்மம் விசாரித்துக் கொள்ளும்படிக்கு இந்த நாலு பேரையும் பரராச சேகர மகாராச இதப்படி கட்டளை பண்ணித்தர்மம் நடக்கும் படிக்கு.”
பரராசசேகரன் சிதம்பரத்திற்குப் போய் பல தருமங்களைப் புரிந்ததாக இச்சாசனப் பகுதி கூறுகின்றது. சோழப்பெரு மன்ன ரின் காலம் முதலாகத் தமிழகத்திலே அமைந்த கோயில்கள்

س-63-به-
எல்லாவற்றிலும் சிதம்பரமே பிரதானமான ஆலயமாக விளங் கியது. சைவ இலக்கிய மரபிலே "கோயில்" என்பது முதற்கண் சிதம்பரத்தையே குறிக்கும். சைவாபிமானிகளாகவும் புராதன சைவத்தலங்களுள் ஒன்றான இராமேஸ்வரத்தின் காவலர்களா கவும் - சேதுகாவலர்களாகவும் - விளங்கிய யாழ்ப்பாண அரசர் சிதம்பரத்தின் மீது கவனஞ் செலுத்தியமை அவர்கள் சைவ சமயத்தின் மீதும் சைவத் தலங்கள் மீதும் கொண்டிருந்த மிகுந்த ஈடுபாட்டிற்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
பரராசசேகரன் சிதம்பரத்திற்கு யாத்திரை சென்று வழிபாடு நிகழ்த்தியதோடு தன்பேரால் என்றென்றும் நிலைபெறும் வண்ண மாக அறங்கள் பல புரிந்தான். பொன்னம்பல வாணருக்குக் குண்டலமும் பதக்கமும் சாத்திவிட்டுத் "தில்லைமூவாயிரவருக்குக்" குண்டலம் அணிவித்துச் சிறப்பித்தான். அத்துடன் ஒரு நாள் திருவிழா நடப்பித்து விட்டு தினமும் ஆராதனை செய்வதற்கு முதலும் இருப்பாக வைத்தான்.
கோயிலுக்கு வரும் பரதேசிகள் தங்குவதற்காக 360 வீடுகளை வாங்கி அதற்கு இராசாக்கள் தம்பிரான் தெருவீதி எனப் பெயரிட்டுப் பெருமடமொன்றினை உருவாக்கினான். "நந்தவன மொன்றினை உருவாக்குவதற்கெனக் கொற்றங்குடியிலே பெரு மளவிலான நிலத்தையும் கொள்வனவு செய்து தானம் பண்ணி னர்ன். சிதம்பரத்திலே தான் ஏற்படுத்திய அறக்கட்டளைகளின் பொருட்டு அச்சுவேலி, புத்தூர், அளவெட்டி ஆகிய ஊர்களைச் சர்வமானியமாக அரசன் கொடுத்தான் என்றுஞ் சொல்லப்படு கின்றது.
அது மட்டுமன்றி மடபரிபாலனத்தை நடாத்துவதற்கும் அதற்கான அறக்கட்டளையினை நடாத்துவதற்கும் தனது மந்திரிமா ராயுள்ள தில்லியூர்ப் படையாண்டவர், சிங்கையூர்ப் படையாண்டவர் முதலான நாலுபேரின் வமிசங்களைச் சேர்ந்த நாலு பேரைக்கொண்ட ஒரு குழுவினையும் அவர்களுள் ஒருவ ரைத் தம்பிரான் என்னும் மடாதிபதியபகவும் நியமிக்க அரசன் ஏற்பாடு செய்திருந்தான். பதினெட்டாம் நூற்றாண்டின் முதற் பகுதியிலே சிதம்பரத்திலே பரராசசேகரமகாராசா உருவாக்கிய மடமொன்று இருந்ததென்பதையும் சூரியமூர்த்தித் தம்பிரான் என்பவர் மடாதிபதியாகவிருந்து அதன் அலுவல்களைக் கவ னித்தார் என்பதையும் 'கயிலை வன்னியனார் மடதர்மசாதனப் பட்டயத்திலுள்ள மேல்வரும் மொழித் தொடரால் அறிந்து கொள்ள முடிகின்றது.

Page 76
-64
'...... பரராசசேகர மகாராசாவின் கட்டளை நடத்தும் சூரிய மூர்த்தித் தம்பிரானவர்களுக்கு பனங்காமப்பற்று வன்னிபம் நிச்சயச்சேனாதிராய முதலியார் அவர்களும். இவர்களைச் சேர்ந்த ஊரில் குடியானவர்களும் தங்கள் கயிலைப்பிள்ளை வன்னியனார் அவர்கள் மட தர்ம சாதனப் பட்டையங்குடுத்த . . . . . . . * பரராசசேகரன் மடம் என்ற அமைப்பு இந்நூற்றாண்டு வரை சிதம்பரத்திலே நிலைபெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
உசாவியவை
1. இரகுநாதையர், இ. சி. (பதிப்பு) செகராசசேகரமாலை (கொக்குவில்) 1942
(பதிப்பு) பூரீ தஷிணகைலாசபுராணம்
(யாழ்ப்பாணம்) 1942
(பதிப்பு) செகராசசேகரம்
(அச்சுவேலி) 1932
2. சபாநாதன், குல (பதிப்பு) யாழ்ப்பாண வைபவமாலை
(கொழும்பு) 1953 3. சண்முகரத்தின ஐயர் (பதிப்பு) திருக்கோணாசல புராணம்,
(யாழ்ப்பாணம்) 1909 4. ஞானப்பிரகாசர், சுவாமி யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
(அச்சுவேலி) 1928 5. பத்மநாதன். சி. வன்னியர் (பேராதனை) 1970 6. நடராசா, க. செ. (பதிப்பு) வையாபாடல்
(கொழும்பு) 1980
7. Codrington, H. W. A Short History of Ceylon, (London)
1939.
8. Geiger, W. (Tr & ed) Gulavamsa, (London) 1925. 9. Gunasekara, B. (ed.) Rajavaliya, (Colombo) 1911.
10. Indrapala, K. Dravidian settlements in Ceylon and the beginnings of the Kingdom of Jaffna. Ph. D. Thesis (Unpublished, University of London), 1966.
11. Lewis. J. P. Manual of the Vanni Distict (Colombo), 1895.

2.
3.
14.
l5.
16.
17.
18.
9.
20.
2I.
ー65ー
Liyanagamage, A. The decline of Polonnaruwa and the rise of Dambadeniya. (Colombo), 1968.
Navaratnam, C. S. Tamils and Ceylon (Jaffna), 1958.
99 Vanni and the Vanniyars (Jaffna), 1960.
Nilakanta Sastri, K. A. The Pandyan Kingdom (London), 1929.
Paranavitana, S. “The Arya Kingdom in North Ceylon'. J. R. A. S. C. B. (NS) Vol. VII, 1961, pp. 174 - 224.
Pathmanathan, S. The Kingdom of Jaffna (Colombo), 1978.
Perera, P. S. (ed.) Kokila Sandesaya (Colombo), 1906.
Perera, S. G. (Tr.), The Temporal and Spiritual Conquest of Ceylon of Fernao De Queyroz (Colombo), 1930.
Rasanayagam, C. Ancient Jaffna (Madras), 1926.
Suravira, A. V. (ed.) Pujavaliya (Colombo), 1961.
Wickremasinghe, Z. (ed.) Nikaya Sangrahaya (Colombo), 1890.

Page 77
அத்தியாயம் 3
யாழ்ப்பாண மன்னர்களும் போத்துக்கேயரும்
யாழ்ப்பாண அரசு 1450 ஆம் ஆண்டில், கோட்டை மன்ன னின் பிரதிநிதியான "சபுமால்குமரய" எனப்படும் செண்பகப் பெருமாளினால் வெற்றி கொள்ளப்பட்டது. இங்கு மீண்டும் யாழ்ப்பாண அரசை முன்பு ஆட்சி செய்த கனகசூரிய சிங்கை யாரியனின் மகனான பரராசசேகரன் ஆட்சியைப் பெற்றான். பரராசசேகரன், செகராசசேகரன் என்ற பெயர்கள். யாழ்ப்பாண மன்னர்களால் சிம்மாசனப் பெயர்களாகச் சூடப்பட்டுவந்தன, ஆதலால் பரராசசேகரனின் பின்பு அவன் மகனான சங்கிலி 1515 ஆம் ஆண்டில் ஆட்சியைப் பெற்றுக் கொண்டான்.
யாழ்ப்பாண மக்களின் மனதில் இன்றும் யாழ்ப்பாணத்தின் மன்னனாக நினைவில் நிற்பவன் சங்கிலி ஆவான். சங்கிலி எனப் பெயர் கொண்ட இரண்டு மன்னர்கள் இங்கு ஆட்சி செய்திருந் தாலும் இம் முதலாவது சங்கிலியே மக்களால் ஆகர்ஷிக்கப்பட்ட மன்னனாக நினைவு கூரப்படுகின்றான். யாழ்ப்பாண அரசின் வரலாற்றில் சங்கிலியின் வரலாறு பல்வேறு வகைகளிலும் முக் கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியாக அமைகின்றது. யாழ்ப்பாண வைபவமாலையின்படி சங்கிலி மன்னன் ஒருவனே, யாழ்ப்பாணத் தில் ஆட்சி செய்ததாகவும், அவனுடைய வரலாற்றுடன் யாழ்ப் பாண மன்னர்களின் வரலாறு முடிவுறுவதாகவும் கூறப்பட்டுள் ளது. ஆனால் இதற்கு மாறுபட்ட தகவல்களைப் போத்துக் கேய ஆதாரங்கள் தருகின்றன.
சங்கிலி ஆட்சியைப் பெற்றுக் கொண்ட முறைமை பற்றியும் அவனது குணவியல்புகள் பற்றியும் தமிழ் நூல்களும், போத்துக் கேய நூல்களும் அதிகமாகக் குறிப்பிட்டுள்ளன. யாழ்ப்பாண வை பவமாலை தந்தை உயிருடன் இருக்கும் போதே சங்கிலி அர

-67
சாட்சியைப் பெற்றுக் கொண்டான் எனவும், மூத்த சகோதரர் களைக் கொலை செய்தும், வஞ்சித்தும் ஆட்சியைப் பெற்றுக் கொண்டான் எனவும் கூறுகின்றது. இந்நூல் மேலும் பரராச சேகரனுக்கு அவன் பட்டத்தரசி அல்லாத பெண்ணுக்கு மகனா கப் பிறந்தவன் எனவும் கபட சிந்தையும் கடுவிவேகமும், அஞ் சாக் குணமும், துஷ்டநடத்தையும் உள்ளவன். எனவும் கூறுகின் றது. போத்துக்கேய குறிப்புகளிலும் சங்கிலி கொடியவன் என வும் கொலைகாரன் எனவும் கொடுங்கோலன் எனவும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளான்.
சங்கிலியைப் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை இவ்வாறு கூறு வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று யாழ்ப்பாண வைபவமாலை பதினெட்டாம் நூற்றாண்டிலேயே, மற்றுமோர் அந் நிய ஆதிக்கம் இங்கு நிலவிய வேளையில் எழுதப்பட்டமையாகும். மற்றைய காரணம் சங்கிவி, இரண்டாம் சங்கிலி குமாரன் ஆகிய இரு மன்னர்களதும் வரலாற்றை ஒரே மன்னனுக்கு உரியதாக எண்ணியும், இ ைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த வேறு பல அர சியற் சம்பவங்களைச் செவிமடுத்தும் தவறான கருத்துகளை எழுதியிருக்கக் கூடும் எனலாம். ஏனெனில் முதலாம் சங்கிலி ஒரு போதுமே போத்துக்கேயரால் கொலை செய்யப்படவோ, கைது செய்யப்படவோ தோற்கடிக்கப்படவோ முடியாத மன்னனாய் இருந்தான். ஆனால் யாழ்ப்பாண வைபவமாலை சங்கிலி போத்துக் கேயரால் தோற்கடிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப் பட்டான் எனக் கூறுகின்றது. இத்தகைய ஒரு சம்பவம் ஏற்பட் டிருக்குமாயின் போத்துக்கேய நூல்கள் அவற்றை மிகவும் பெரு மிதத்துடன் குறிப்பிட்டிருக்கும்.
போத்துக்கேய நூல்கள் சங்கிலியைப் பற்றிக் கடுமையாகக் குறிப்பிடுவதற்கும் சில காரணங்களிருந்தன. சங்கிலி ஆரம்பத் தில் இருந்தே போத்துக்கேயரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்போனாயிருந்தான். அவர்களுடன் தொடர்பு கொண்ட வர்களையும் தண்டித்தான். இவை போத்துக்கேயருக்குச் சங்கிலி மீது வெறுப்பை ஏற்படுத்தி இருந்தன. அதனால் அவர்கள் சங்கி லியை ஒரு கொடிய மன்னனாகவும், மக்களால் விரும்பப்படாத வனாகவும் எடுத்துக்காட்ட முற்பட்டனர். உண்மையில் சங்கிலி ஒர் ஆளுமை மிக்க மன்னனாகவும் நாட்டுணர்வு மிக்க தலைவ னாகவும் தீர்க்க தரிசனமும் கடும் போக்கும் கொண்ட ஓர் ஆட்சி யாளனாகவும் நடந்து கொண்டான் என்றே தெரிகின்றது.
சங்கிலி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சமயம் புதிய அந்நிய சக்தியான போத்துக்கேயரின் வருகையால் ஏற்படக்கூடிய

Page 78
س-68-س-
பாதிப்புகளை அவன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவன் போத்துக்கேயருக்கும் ஆக்கிரமிப்புக்குத் துணைபோகும் கருவியாக அவர்களாற் பயன்படுத்தப்பட்ட அவர்களின் மதமான கத்தோ லிக்க மதத்திற்கும் எதிரான கொள்கைகளைக் கடைப்பிடித்தான். பெருமளவுக்குத் தம் பொருளாதார லாபத்திற்காகக் கடல் வாணி பத்தில் தங்கியிருந்த யாழ்ப்பாண மன்னர்களுக்குக் கடற்பலம் கொண்ட போத்துக்கேயரின் வருகை பெரும் பாதிப்பினை ஏற் படுத்தியது. அதனால் அரசியல் பொருளாதார, சமய விடயங் களில் வேறுபட்ட அபிலாசைகள் கொண்ட போத்துக்கேயரை யாழ்ப்பாண மன்னர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத னால் ஆரம்பத்தில் இருந்தே யாழ்ப்பாண மன்னர்கள் தமது ஆற்றலுக்கு எட்டிய வரையில் போத்துக்கேயரை விரோதிகளா கவே கருதினர். அதன் பொருட்டு போத்துக்கேயரின் எதிரிகளு டனும் சமரசம் செய்து கொள்ளவும் தயாராயிருந்தனர். இந்த வகையிலேயே சங்கிலியின் செயற்பாடுகள் அமைந்தன. போத் துக்கேயர் 1505 ஆம் ஆண்டிலேயே கோட்டை அரசுக்கு வந்தி ருந்தனர். அவர்கள் யாழ்ப்பாண அரசுடன் தொடர்பு கொள்வ தற்கு அதிக காலம் சென்றிருக்க மாட்டாது, ஆயினும் யாழ்ப் பாண மன்னர்களுக்கும் போத்துக்கேயருக்கும் இடையிலான தொடர்பு பற்றிய குறிப்பு 1543 ஆம் ஆண்டிலேதான் முதன் முதலாகக் காணப்படுகின்றது. அதுவரை யாழ்ப்பாண மன்னர் களுடன் போத்துக்கேயர் வர்த்தக உறவுகளைத் தானும் ஏற் படுத்திக்கொள்ள முடியவில்லைப்போலும்.
1543 ஆம் ஆண்டில் போத்துக்கேயரின் பண்டங்கள் நிரம் பிய மரக்கலமொன்று யாழ்ப்பாணக் கரையில் ஒதுங்கியது. சங்கிலி வழமையாக மன்னர்கள் செய்வது போன்று அதில் நிரம்பியிருந்த பொருட்களைக் கைப்பற்றிக் கொண்டான். ஆயினும் போத்துக் கேயர் சங்கிலியுடன் தொடர்பு கொண்டு அதற்கீடான பெறுமதி யைப் பெற்றுக்கொண்டார்கள்
இதனைத் தொடர்ந்து முதலாவது சங்கிலிக்கும் போத்துக் கேயருக்கும் இடையிலான தொடர்பில் முக்கிய சம்பவம்,மன்னார்ப் பகுதியில் மதம் மாறியோர் மீது சங்கிலியால் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை ஆகும். இது 1544 ஆம் ஆண்டில் நடை பெற்றது. தென்னிந்தியாவில் மத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரான்சிஸ் சவேரியார் என்னும் துறவியின் சீடரொருவர் மன் னாரில் மத நடவடிக்கை என்ற பெயரில் போத்துக்கேய ஆக்கிர மிப்புக்குத் துணை செய்கின்றார் என்ற செய்தி சங்கிலி மன்ன னுக்குக் கிடைத்தது. மன்னன் பெரும்படையுடன் சென்று மதம் மாறியவர்களை மீண்டும் இந்து சமயத்திற்கு மாறும் படி ஆணை

-69
பீட்டான். அதற்கு அவர்கள் உடன்படாது போகவே, 600-700 பேர் வரை மதம் மாறியோரையும் மதபிரசாரம் செய்த குருவை யும், மன்னாரின் அரசியல் நிர்வாகியாக இருந்த உரசிங்கம் அல் லது இளஞ்சிங்கம் என்பவனையும் கொன்றான். சங்கிலி இவ்வாறு செய்தமைக்குக் காரணம் மதம் பற்றியதன்றி அரசியல்பற்றியதே யாகும் மதம்மாறியவர்கள் போத்துக்கேயரின் ஊடுருவல்களுக்கு வழிசெய்வார்கள் என எண்ணியே சங்கிலி அவ்வாறு செய்தான். குறிப்பாக மன்னாரில் இருந்த மக்கள் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்ற முற்பட்டமைக்குப் பின்னணியில் வேறுபல காரணிகள் இருந்திருக்க வேண்டும் சங்கிலி மன்னன் மதம் மாறியவர்களு டன் அவனது அரசப்பிரதிநிதியாக மன்னாரில் கடமையாற்றிய வனையும் சேர்த்தே கொலை செய்தமை அதில் அரசியல் கார ணிகள் சம்பந்தப்பட்டிருப்பதைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். இதுபற்றிக் சருத்துத் தெரிவித்த ஒரு வரலாற்றாசிரியர் "சங்கிலி" யின் நடவடிக்கை அவனது அரசியற் கண்ணோட்டத்திலும், சம காலத்தில் போத்துகேயரால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங் களையும் கருத்திற் கொண்டு பார்க்குமிடத்து முற்று முழுதாக நியாயமற்றது எனக் கூற முடியாததாயுள்ளது எனக் குறிப்பிட் டுவிவிார். இதனால் ஆத்திரமடைந்த கத்தோலிக்க மதகுருமார் *ளும், அரசியல் அதிகாரிகளும் சங்கிலியைத் தண்டிக்க விரும்பி னர். அதன் பொருட்டு யாழ்ப்பாணத்தின் மீது ஒரு படை யெடுப்பு மேற்கொள்ளும் எண்ணம் போத்துக்கேயரிடமிருந்தது.
ஆயினும் இதே காலத்தில் போத்துக்கேயரின் பண்டங்கள் நிரம்பிய வேறு மரக்கலமொன்று யாழ்ப்பாணக்கரையை அடைந் திருந்தது. அதனை மீளப்பெறும் நோக்குடன் போத்துக்கேயர் சங்கிலியு - ன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. இதுவும் இன்னும் பிற காரணிசளும் போத்துக்கேயரின் படையெடுப்பு முயற்சியைப் பின் போட வைத்தன.
இதே காலகட்டமளவில், கோட்டை அரசிற் போத்துக் கேயரின் தொடர்புகள் அபிவிருத்தி அடைந்து அவர்களின் ஆதிக்கம் அங்கு விஸ்தரிக்சப்பட்டது. யாழ்ப்பாணத்திலும் சங்கி லியின் அரசாட்சியில் அதிருப்தி கொண்டவர்களும், அரசுரிமை பெற விரும்பியவர் 9ளும் போத்துக்கேயர் உதவியை நாடினர். சங்கிலியின் மூத்த சகோதரனான பரநிருபசிங்கன் என்பவன் அரசுரிமையைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் அவர்களிடம் சென்று, கத்தோலிக்க மதத்தையும் தழுவிக்கொண்டான். ஆயினும் போத்துக்கேயரால் அவனுக்கு அரசுரிமையைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

Page 79
-سس.70سم
1545 ஆம் ஆண்டின் பின் சங்கிலி போத்துக்கேயருக்கு எதிராக, சீதாவாக்கை, கண்டி, கோட்டை அரசர்களுடன் இணைந்து செயற்பட்டான். சீதாவாக்கை மன்னனான மாய துன்னையுடன் இணைந்து போத்துக்கேயருக் 4 ம் அவர்களை ஆதரித்த புவனேகபாகுவிற்கும் எதிராகப் போரிட்டான். 1545, 1847 ஆகிய ஆண்டுகளில் சங்கிலி - மாயதுன்னையின் கூட்டு முயற்சிகள் புவனேகபாகுவினால் முறியடிக்கப்பட்டன. 1549ஆம் ஆண்டில் புவனேகபாகு போத்துக்கேயரின் எதிரியாக மாறிய சமயம், அவனுடன் சமாதானமாக நடத்து கொள்ளவும் சங்கிலி உடன்பட்டிருந்தான். இவை சங்கிலி மன்னன் திட்டவட்டமான ஒரு கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டான் என்பதைக் காட்டுகின்றதெனலாம்.
1551 ஆம் ஆண்டிலே, திருகோணமலையில் ஆட்சி செய்த வன்னியன் இறந்தான். அவனது எட்டு வயதுக் குமாரனே ஆட்சி யதிகாரத்திற்குரியவனானான். அக்குமாரனின் பெயரால் ஆட்சி செய்ய வன்னி குடும்பத்தவன் ஒருவன் நியமிக்கப்பட்டான். ஆனால் சங்கிலி திருகோணமலை அரசுரிமை தனக்கேயுரியதென நிலைநாட்ட முற்பட்டான். இதனால் அரசகுமாரனையும் அழைத்துக்கொண்டு மேற்குறிப்பிட்ட வன்னியன் தென்கரை சென்றான். (அடிப்படையில் திருகோணமலை அரசுரிமை யாழ்ப் பாண அரச குடும்பத்தவருக்கே உரியதாயிருந்தது) வன்னியன் கத்தோலிக்கனாக மாறியதோடு தென்கரையில் பரவர்களின் உதவியையும் போத்துக்கேயரின் உதவியையும் பெற்று மீண்டும் இந்து ஆட்சி செய்ய முனைந்தான். ஆனால் அது முடியாமற் போயிற்று பின்னர் சங்கிலி வன்னியனை அழைத்து அரசாட்சி தடத்துமாறு கூறினான்.
இவ்வாறு போத்துக்கேயரின் எண்ணங்கள் எவையும் சங்கிலி அரசனிடம் நிறைவேறாமலே இருந்தன. சங்கிலி தொடர்ந்தும் போத்துக்கேயருக்கு எதிராக வலிமையுடன் செயற்பட்டான். போத்துக்கேடருக்கு எதிரானவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்ள அவன் சித்தமாயிருந்தான். 552 இல் புவனேகபாகு இறக்க அவனின் மகள்வழிப்பேரனான தர்மபாலன் ஆட்சிக்கு வந்தான். அவனது தந்தையான விதியபண்டார என்பவன் போத்துக்கேயருடன் பசைத்துக் கொண்டு யாழ்ப்பாண அரச னிடம் வந்தான். அவன் புத்ததந்ததாது வையும், பெருமளவு திரவியங்களையும் பிற பொருட்களையும் தன்னுடன் கொண்டு வந்திருந்தான்.
இந்தப் புத்த தந்ததாது, யாழ்ப்பாண அரசு 1560 ஆம் ஆண்டில் முற்றுகையிடப்பட்ட போது, போத்துக்கேயரால் எடுக்

ー71ー
கப்பட்டதெனவும், அதனைப் போத்துக்கேயர் முற்றாக அழித் தொழித்தனர் எனவும் கூறப்படுகின்றது. அஃதாவது புத்த தந்ததாதுவைப் பொடி செய்து நீர் நிலையில் கரைத்தனர் என போத்துக்கேய நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். சங்கிலியுடன் இணைந்து போத்துக்கேயரை வெளியேற்றும் வகையில் போராடு வதே விதிய பண்டாரவின் திட்டமாயிருந்தது. ஆனால் தற் செயலாக நிகழ்ந்த விபத்தொன்றில் விதிய பண்டார இறந்தான். சங்கிலி விதிய பண்டாரவுக்கு ஒரு ஆலயம் அமைத்தான் எனவும், அதுவே நல்லூர் இராசதானியின் வடவாசலில் அமைந்துள்ள பூதராசர் ஆலயம் எனவும் கூறப்படுகின்றது. போத்துக்கேயர் விதிய பண்டார இறந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததோடு, அவனுடைய செல்வங்களைப் பெறவும் ஆவல் கொண்டிருந்தனர்.
இவ்வாறு 1540 - 1560 ஆண்டுக் காலத்தில் சங்கிலி கடைப் பிடித்த கொள்கைகளும், மேற்கொண்ட நடவடிக்கைகளும் போத்துக்கேயரை அதிருப்தி கொள்ளச் செய்ததோடு, யாழ்ப் பாண அரசின் மீது படையெடுக்கவும் துரண்டின. மன்னாரில் சங்கிலி மேற்கொண்ட நடவடிக்கை, போத்துக்கேயருக்கு எதி ரான பிடிவாதமான போக்கு, போத்துக்கேயரின் எதிரிகளுடன் சேர்ந்து போராடியமை, விதியபண்டாரவின் செல்வங்களைப் பெற்றுக்கொண்டமை, தமது மதம் பரப்பும் நடவடிக்கைகளை விஸ்தரித்தமை ஆகிய காரணிகள் இதற்கு உதவின. இது தவிர போத்துக்கேயருக்கு யாழ்ப்பாண அரசிலே கிடைத்த சிறு ஆதரவுகளும் தூண்டுதல்களும் இதற்கு வழி செய்தன.
1560 ஆம் ஆண்டில் பாரிய அளவில் திட்டமிடப்பட்ட படை யெடுப்பு, அக்காலத்தில் ராஜப்பிரதிநிதியாயிருந்த கொன்ஸ்தாந் தினோ த. பிரகன்சா என்பவனின் தலைமையில் மேற்கொள்ளப் வட்டது. இப்படையெடுப்பின்போது நல்லூர் இராசதானி கைப் பற்றப்பட்டது. அரசன் கோப்பாய்க்குத் தப்பி ஓடினான். அங்கு அரசனின் காவலரண் இருந்தது. அங்கும் போத்துக்கேயப்படை “பின் தொடரவே அரசன் மேலும் பின்வாங்கிச் சென்றான். கோப்பாயில் பல பிரதானிகளின் தலைகள் அரசனால் துண்டிக் கப்பட்டிருந்தன எனவும், அவை அரசனுக்குத் துரேர்கமிழைத் தவர்களின் தலைகளாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது, அரசன் பச்சிலைப்பள்ளி வரை பின்வாங்கிச் சென்றிருந்தான். போத்துக்கேயரை மீண்டும் துரத்தும் நோக்குடனேயே அரசன் இவ்வாறு செய்திருந்தான். போத்துக்கேயப்படை தொடர்ந்து போரிடமுடியாது பின் வாங்கியது. அவர்களால் சங்கிலி மன்ன னைக் கொல்லவோ, சிறைப்பிடிக்கவோ, சிம்மாசனத்தில் இருந்து

Page 80
-72
இறக்கவோ முடியவில்லை. ஆனால் சங்கிலிக்கும் போத்துக்கேய ருக்கும் இடையில் ஒரு சமாதான உடன்பாடு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. அது எவ்வளவு தூரம் நடைமுறையில் இருந்தது என்பது சந்தேகமே. முதலாம் சங்கிலி மீண்டும் நல்லூரில் இருந்து ஆட்சி நடத்தினான். -
1560 ஆம் ஆண்டுப் படையெடுப்பு போத்துக்கேயருக்கு அவர் களின் எண்ணங்களை அடைவதிலே தோல்வியை வழங்கினாலும், அவர்கள் மன்னார்ப்பகுதியைக் கைப்பற்றியமை அவர்களுக்குப் பல வகைகளிலும் சாதகமாயமைந்தது. மன்னாரில் சங்கிலியின் பிரதிநிதியான மகந்த (மகாதன்) என்பவன் துணிகரமாகப் போராடிய போதிலும் மன்னார் போத்துக்கேயரால் கைப்பற்றப் பட்டது. அங்கு போத்துக்கேயர் ஒரு கோட்டையைக் கட்டினர். திருக்கேதீஸ்வர ஆலயம் இதன்போது இடிக்கப்பட்டதெனக் கூறப் படுகின்றது. மன்னாரில் போத்துக்கேயர் பெற்ற ஆதிக்கம் அவர்கள் அங்கிருந்து கொண்டே யாழ்ப்பாண அரசின் அரசியல் விடயங்களிலே தலையீடு செய்ய வாய்ப்பளித்தது. யாழ்ப்பாண அரசில் அதிருப்தி கொண்டவர்கள் மன்னாரில் உள்ள போத்துக் கேயருடன் தொடர்பு கொள்வது இலகுவாயிற்று. மன்னாரிற் கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டன. மன்னாரின் முத்துக்குளிப்புப் பகுதிகள் போத்துக்கேய ருக்கு உரியனவாயின. தென்கரையில் இருந்து கத்தோலிக்க மதத் திற்கு மாறியவர்கள் இங்கு குடியேற்றப்பட்டனர். இவற்றிற்கு மேலாக, கடல் வழியாக யாழ்ப்பாண அரசின் மீது கண் காணிப்புச் செய்ய முடிந்தது. இவ்வாறு மன்னார் கைப்பற்றப் பட்டமை போத்துக்கேயருக்குப் பல வழிகளிலும் சாதகமா யமைந்தது. மன்னாரின் நிர்வாக விடயங்களைக் கவனிப்பதற்கு அங்கு ஒரு போத்துக்கேய தளபதி நியமிக்கப்பட்டான். அவன் யாழ்ப்பாண அரசியல் விடயங்களில் தனது செல்வாக்கை அதி கரிக்க முனைந்தான். சங்கிலி 1565 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான் எனக் கொள்ள இடமுண்டு. 1564 ஆம் ஆண்டில் மாயதுன்னைக்கு ஆதரவாகவும் போத்துக்கேயருக்கு எதிராகவும் வடக்கர் படையொன்றினைச் சங்கிலி அனுப்பியிருந்தான் எனத் தெரிகின்றது. ஆயினும் சங்கிலி மன்னனின் இறுதி முடிவு எவ்வாறு அமைந்ததெனத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அவன் போத்துக்கேயரிடம் சிக்கவில்லை எனக் கூறலாம்.
1565 - 70 ஆம் ஆண்டுக் காலத்தில் யாழ்ப்பாண அரசில் ஒரு குழப்பமான நிலை நிலவியிருப்பதாகத் தெரிகின்றது. புவிராஜபண்டாரம், காசிநயினார் போன்ற அரசர்கள் சிம்மாசன

-73
மேறியதாகத் தெரிகின்றது. மன்னார்த்தளபதி யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் செய்ய முற்பட்ட போதிலும் அதை அவனால் நடை முறைப்படுத்த முடியவில்லை. யாழ்ப்பாண மக்களின் விருப் பத்திற்குரிய ஒருவனே இராச்சியத்தை ஆள முடிந்தது.
1570 ஆம் ஆண்டில் பெரியபிள்ள்ை செகராசசேகரன் என் பவன் ஆட்சியைப் பெற்றிருந்தான். இவன் 1584 வரை ஆட்சி செய்தான். இவனுடைய காலத்திலேயே போத்துக்கேயர் முதன் முறையாக யாழ்ப்பாண அரசர்களிடமிருந்து திறை பெற்றதா கத் தெரிகின்றது. 10 கொம்பன் யானைகள் அல்லது அதற்கு ஈடான பணம் திறையாகச் செலுத்தப்பட்டது. தனது ஆதிக் கத்தை வலுப்படுத்துவதற்காகவும், இந்துப் பிரசைகளின் அபிலா சைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் விசுவாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் இம்மன்னன் போத்துக்கேயருக்கு எதிரான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண் டி யவனானான். அதன் பொருட்டு மன்னாரில் நிலை கொண்டிருந்த போத்துக்கேயரை வெளியேற்ற வேண்டியது இவனது முதற்கடமையர்யிருந்தது. இத னால் தஞ்சாவூர் நாயக்கர் களிடம் உதவி பெற்று மன்னார் மீதான தாக்குதல்களை நடத்தினான். இவனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மன்னர்களின் பிரதான நடவடிக்கையாக இதுவே அமைந்தது. இந்நடவடிக்கைகளால் மன்னாரில் இருந்து போத் துக்கேயர்களை விரட்ட முடியாது போனாலும் அவர்களது செயற். பாடுகளைக் கட்டுப்படுத்த முடிந்தது, பெரிய பிள்ளை செகராச சேகரனின் பின்னர் புவிராஜபண்டாரம் பரராஜசேகரன் என்பான் ( கி. பி. 1584-1591) ஆட்சிக்கு வந்தான். புவிராஜபண்டாரம் போத்துக்கேயருக்கு எதிரான நடவடிக்கைகளிலே தீவிரமாக ஈடு பட்டான். போத்துக்கேய இலக்கியங்களில் வரும் குறிப்புகள் அவன்மீது அவர்கள் கொண்டிருந்த ஆத்திரத்தையே காட்டுவன வாயுள்ளன. அந்நிய ஆதாரங்கள் எந்த அளவுக்கு ஒரு மன்ன னையோ மக்களையோ தூஷிக்கின்றனவோ அந்த அளவுக்கு சுதேச மன்னனும் மக்களும் நாட்டுணர்வு மிக்கவர்களாகவும் அந்நிய ஆதிக்கத்தை எதிர்ப்போராகவும் இருந்திருக்கின்றார்கள் என்றே கொள்ளவேண்டும். அந்தவகையிலும் புவிராஜ பண்டாரம் போத் துக்கேய ஆதிக்கத்திற்கு எதிராக வன்மையாக நடந்து கொண் டான் எனத் தெரிகின்றது.
புவிராஜபண்டாரம் 1590 ஆம் ஆண்டில் மன்னார் மீது திட்ட மிட்ட தாக்குதல்களை மேற்கொண்டான். அதன் பொருட்டு தஞ்சாவூர் நாயக்கர்களிட்மிருந்து மட்டுமன்றி, போத்துக்கேயரின் எதிரிகளாகவும், கடற்பலம் மிக்கவர்களாகவும் விளங்கிய கள்ளிக் கோட்டை சமோரினுடைய படையுதவியையும் நாடினான். ஆயி

Page 81
-74
னும் இத்தாக்குதல்கள் எவையும் வெற்றியளிக்கவில்லை. மாறாகப் போத்துக்கேயரை மீண்டும் ஒரு தடவை யாழ்ப்பாணத்தின்மீது படையெடுக்க வைத்தன. அவர்கள் தமக்குச் சாதகமான ஓர் ஆட்சியாளனை இங்கு நியமிக்க எத்தனித்தனர்.
1560 ஆம் ஆண்டில் போத்துக்கேயரின் முதற்படையெடுப்பு யாழ்ப்பாணத்தின்மீது நடைபெற்றது. போத்துக்கேயரின் இரண் டாம் படையெடுப்பு 1591 ஆம் ஆண்டில் இங்கு நடைபெற்றது. இப்படையெடுப்பின்போது புவிராஜபண்டாரம் கொலை செய்யப் பட்டான். அவன் தலையினை ஈட்டியிற் கொழுவி மக்களின் பார்வைக்குப் போத்துக்கேயர் வைத்தனர் எனப் போத்துக்கேய இலக்கியங்கள் கூறுகின்றன. இது புவிராஜபண்டாரம்மீது போத் துக்கேயர் கொண்டிருந்த பகைமையுணர்வையும், அவர்கள் யாழ்ப் பாண மக்களை அச்சுறுத்த எண்ணினார்கள் என்பதையும் காட்டு கின்றது. யாழ்ப்பாண வைபவமாலை யில் சங்கிலி மன்னன் கொலை செய்யப்பட்டான் என்பது பற்றித் தரப்படும் விபரங்கள் இம்மன் னனுக்கு நடந்ததையே மாறுபடக் கருதிக் கூறப்பட்டவை எனக் கொள்ளலாம். அங்கு கூறப்படும் காக்கை வன்னியன் கதையும் இம்மன்னனுடன் தொடர்பு பட்டதெனவே கொள்ள இடமுண்டு.
புவிராஜபண்டாரம் கொலை செய்யப்பட்ட பின், அவனுக்கு முன்னர் ஆட்சி செய்த, பெரியபிள்ளை செகராசசேகரனின் மைத் துனனான எதிர்மன்னசிங்ககுமாரன் ஆட்சியில் அமர்த்தப்பட் டான். அஃதாவது போரின் போது சைமான்பிஞ்ஞன் என்ற போத்துக்கேய தளபதியாற் காப்பாற்றப்பட்ட அரசகுமாரனாகிய எதிர்மன்னசிங்க குமாரன் போத்துக் கேயரின்கீழ் நிபந்தனைக ளுக்கு உட்பட்ட மன்னனாக நியமிக்கப்பட்டான் (படம்-3 ) போரின் முடிவில் இராச்சியத்தின் முதலிமார்களையும் தலையாரி களையும் நல்லூரில் ஒருங்கு கூட்டிய போத்துக்கேயர் மக்களின் சுதந்திரங்களையும் வழக்கங்களையும் பேணுவதற்கு உறுதியளித் ததோடு அவர்களையும் போத்துக்கேய மன்னனுக்கு விசுவாசமாக தடப்பதற்கு உத்தரவாதம் செய்யுமாறு கேட்டனர். அதன் பிர காரம் எதிர்மன்னசிங்க குமாரனை மன்னனாக்கினர். அரசன் போத்துக்கேய மன்னனின் பெயரால் ஆட்சி செய்வதற்கும் திறை செலுத்துவதற்கும் கத்தோலிக்க மதநடவடிக்கைகள் சுதந்திர மாகச் செயற்படுவதற்கும் உடன்பட்டான். இங்கு போத்துக்கே யருக்கும் யாழ்ப்பாண அரசின் பிரதானிகளுக்கும் இடையிற் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு, "நல்லூர் உடன்படிக்கை 1591 எனப்படும். இதன்படி, யாழ்ப்பாண அரசின்மீது போத்துக்கேய ரின் மேலாண்மை நிலைநாட்டப்பட்டது. யாழ்ப்பாண இராச்சி யத்தின் இறுதிக்கட்ட வீழ்ச்சி இவ்வொப்பந்தத்துடன் ஆரம்பித் ததெனக் குறிப்பிடலாம்.

-س-75
போத்துக்கேயரின் பிரதிநிதியாக எதிர்மன்னசிங்ககுமாரன் ஆட்சி நடத்திய போதிலும் திட்டவட்டமான கொள்கைகளின் அடிப்படையிலேயே நடந்து கொண்டான். பகிரங்கமாகப் போத் துக்கேயருக்கு எதிராகவோ, கத்தோலிக்க மதப்பரப்பல் நடவடிக் கைகளுக்கு எதிராகவோ எவ்வித நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை. அவர்களுக்குச் செலுத்த வேண்டிய திறையை ஒழுங்காகச் செலுத்தி வந்தான். ஆனால் மறைமுகமாக எதிர் மன்னசிங்ககுமாரன் இந்துக்களையே ஆதரித்தான். அத்துடன் போத்துக்கேயருக்கு எதிராகப் போராடிய கண்டி மன்னர்களுக்கு (விமலதர்ம சூரியன் (கி.பி 1593-1604) செனரதன் (கி.பி. 16041635) ஆகியோருக்குத் தென்னிந்தியாவில் இருந்து படை, ஆயுத உதவி என்பன யாழ்ப்பாணத்தின் ஊடாகக் கிடைப்பதற்கு அனு மதித்திருந்தான். அதுமட்டுமன்றி, கோட்டையின் மன்னனான புவனேகபாகு போன்று கிறிஸ்தவ மதப்பரப்பல் நடவடிக்கை களுக்கு அனுமதி வழங்கிய போதிலும், தான் கிறிஸ்தவனாக மாறாது இருந்தான். கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களையும் ஆதரிக்காதிருந்தான்.
ஆயினும் 1595 ஆம் ஆண்டளவிலேயே போத்துக்கேயர் அவனைச் சந்தேகிக்கத் தொடங்கியிருந்தனர். போத்துக்கேயரின் மதப்பரப்பல் நடவடிக்கைகளும், மதம்மாறியவர்கள் மத்தியில் ஏற்பட்ட மாறுதல்களும் அதிகரிக்கத் தொடங்கின. யாழ்ப் பாணத்தை அண்டியிருந்த தீவுப்பகுதிகளில் மதப்பரப்பல் நட வடிக்கைகள் துரிதமாக நடந்தன. அங்கு கிறிஸ்தவ தேவா லயங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கும்படியாக மன்னன் நிர்ப்பந்திக்கப்பட்டான். கிறிஸ்தவ தேவாலயங்கள் மதம் மாறியவர்களினதும் போர்த்துக்கேய ஆதரவாளர்களினதும் பாது காப்பு நிலையங்களாக மாறின. ஊர்காவற்றுறையில், கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதற்கு வழங்கிய அனுமதியும், அதற்கு வழங் கப்பட்ட, நில மானியங்களும் ஈற்றில் அப்பகுதி மீதான மன் னனின் அரசியல் ஆதிக்கத்திற்கே சவாலாக அமைந்தன.
இத்தகைய நிலையிலும் எதிர்மன்னசிங்க குமாரன் 1617ஆம் ஆண்டு ஏப்ரல் வரை ஆட்சி செய்தான். அவன் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தான். அவன் இறக்கு முன்பாகவே அவ்வேளையில் மூன்று வயதுக்குழந்தையாக இருந்த தனது மகனை அரசனாகவும், சகோதரனைப் பாதுகாப்பரசனாகவும் நியமித்துப் போததுக்கேயரிடம் அதற்கான அனுமதிக்கும் விண்ணப்பித்திருந்தான்.

Page 82
-76
இவ்வேளையில் சங்கிலிகுமாரன் எனப்படும் அரச குடும் பத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளன் எழுச்சி பெற்று அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரையும் பாதுகாப்பரசனையும் கொன்று தானே அரசனெனப் பிரகடனப் படுத்தினான். சட்ட ரீதியான மன்னனை ஆதரிப்பவர்கள், சங்கிலி குமாரனை ஆதரிப் பவர்கள், போத்துக்கேயரின் வருகையை ஆதரிப்பவர்கள் என மூன்று தரப்பினர் அங்கு காணப்பட்டனர். சங்கிலி தன்னையே ஆட்சி செய்ய அனுமதி வழங்குமாறு கோரிப் போத்துக்கேயரின் அனுமதியையும் பெற்றுக் கொண்டான். ஆயினும் சங்கிலிக்கு எதிரான சக்திகள் ஒருங்கு திரண்டு அவனை எதிர்க்கத் தொடங் கின. முதலியார்மார்களே முன்னணியில் நின்று கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சங்கிலிகுமாரன் கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவி வழங்குமாறு போத்துக்கேயரிடம் கோரினான். ஆனால் அவர்கள் எவ்வுதவியையும் வழங்கவில்லை. மன்னன் ஊறாத்துறையிற் சென்று புகலிடம் பெற்றதோடு தஞ்சாவூர் நாயக்கரிடம் உதவி கோரித் தூதனுப்பினான். தஞ்சாவூரில் இருந்து அனுப்பப்பட்ட படையின் உதவியுடன் சங்கிலி கிளர்ச்சிக்காரர்களை அடக்
ଶିଶar mteúr.
இவ்வேளையில் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றுவதற்கான சூழ்நிலை பல்வேறு வகைகளிலும் போத்துக்கேயருக்குச் சாதக மாக அமைந்திருந்தது. 1591 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பான அரசைக் கைப்பற்றி நேரடி ஆதிக்கம் செய்யும் எண்ணம் அவர் களுக்கிருந்தது. 1614 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றும்படி போத்துக்கல் மன்னன் தன் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டிருந்தான். பல்வேறு காரணிகளால் அப் பணிப்புப் பின்போடப்பட்டிருந்தது. 1619 ஆம் ஆண்டில் இதற்கான வாய்ப் புகள் அதிகரித்திருந்தன.
கொழும்பு, கோவா ஆகிய இருநிலைப்பட்ட தளங்களில் இருந்து இதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டன. மன்னார்த் தளபதியே யாழ்ப்பான விடயங்களில் கூடுதல் அதிகாரம் கொண் டவனாக இருந்த போதிலும் கொழும்பில் இருந்த பிரதான தள பதி தனது ஆதிக்கத்தையும் பிரதேச விஸ்தரிப்பையும் அதிகரிக் கும் நோக்குடன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதில் கூடுதல் ஆர்வம் காட்டினான். யாழ்ப்பாண அரசின் கேந்திர முக்கியத்து வம் உணரப்பட்டமை இதனை அவசியப்படுத்தியது. டச்சுக்காரர் போன்ற ஏனைய ஐரோப்பிய சக்திகள் ஆசியநாடுகளை நோக்கி முன்னேறியமை இதனை மேலும் துரிதப்படுத்தியது. இவற்றுக்கும் மேலாகச் சங்கிலி குமாரன் தஞ்சாவூர்ப் படையினரை இராச்சி

பத்துக்குள் வைத்திருந்தமை போத்துக்கேயரைச் சங்கிலி குமாரன் மீது சந்தேசமும், அதிருப்தியும் கொள்ள வைத்தது. போத்துக் கேயரின் வரவை எதிர்பார்த்த உள்ளூர் சக்திகள் அவர்களின் திட்டத்தை ஊக்குவித்தன.
இத்தகைய காரணிகளின் பின்னணியிலேயே யாழ்ப்பாணத் தைக் கைப்பற்றும் முயற்சிகள் திட்டமிடப்பட்டன. கொழும்பில் இருந்து பிலிப் த ஒலிவேறா தலைமையில் ஒரு படை அனுப்பப் பட்டது. அதன் ஒரு பகுதி கடல் வழியாகவும் மற்றொரு பகுதி தரை வழியாகவும் அனுப்பப்பட்டது. போத்துக்கேய வீரர்களையும் சிங்கள வீரர்களையும் உள்ளடக்கிய 5000 போர் வீரர்கள் இப் படையெடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். கடல் வழியாக வந்த படை மலபாரிக் கடற்படையினரின் நடமாட்டத்தைக் கண் காணித்தது. த ரை வழியாக வந்த படை பூநகரி வழியாக வத்தது. பூநகரிக் கடலேரியைக் கடப்பதற்குச் சங்கிலி குமாரனே உதவி யிருந்தான் எனக் கூறப்படுகின்றது. அவ்வாறாயின், அது சங்கிலி குமாரனின் புத்தியற்ற செயலாகவே கொள்ளப்பட வேண்டும்.
ஒலிவேறாவின் படை யாழ்ப்பாணம் வந்ததும் சங்கிலிகுமா ரன் கொடுக்க வேண்டியிருந்த திறைகளை வழங்குமாறு கேட்டது. இது கொழும்புத் தளபதியினால் ஒலிவேறாவுக்கு விடப்பட்டிருந்த கட்டளையாகும். சங்கிலிகுமாரன் திறையின் ஒரு பகுதியை உடன டியாக வழங்கியதோடு மிகுதியை விரைவில் வழங்கி விடுவதாக வும் வாக்குறுதியளித்தான். அத்துடன் வடக்கர்களின் படை யைத் தம்மிடம் ஒப்படைக்கும்படியும் ஒலிவேறா கேட்டுக் கொண்டான். சங்கிலி குமாரன் அவர்களை தான் மீளத் தென் னிந்தியாவுக்கே அனுப்பி விடுவதாகக் கூறினான். எனினும் அங்கு நின்ற தமிழ்ப்படையினருக்கும் போத்துக்கேயப் படையின ருக்கும் இடையில் போர் தொடங்கியது. போரில் தமிழரின் படை தோற்கடிக்கப்பட்டது. சங்கிலிகுமாரன் இந்தியாவுக்குத் தப்பி ஓட முயன்றான். முதன்முறை காற்றால் உந்தப்பட்டுப் பருத்தித்துறைக் கரையை அடைந்தான். மீண்டும் புறப்பட்ட சமயம் போத்துக்கேய ரினால் கைதுசெய்யப்பட்டான். யாழ்ப்பாண அரசு போத்துக் கேயரின் நேரடி ஆட்சிக்குட்படுத்தப்பட்டது.
சிறைப்பிடிக்கப்பட்ட சங்கிலிகுமாரன் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கோவாவுக்குக் கொண்டு செல்லப்பட்டான். கோவாவில் கத்தோலிக்க மதபோதனைகளால் கவரப்பட்டு சங்கிலிகுமாரன் கிறிஸ்தவனாக மாறினான் எனப் போத்துக்கேய நூல்கள் கூறுகின்றன. தனது நாட்டில் பிரான்

Page 83
--78ے
சிஸ்கன் சபைக்குருமார் சேமஞ் செய்ய வேண்டும் என்பதைத் தனது இறுதி ஆசையாக வெளியிட்டிருந்தான் எனவும் கூறப் பட்டுள்ளது. ஆனால் சங்கிலிகுமாரன் 1621 ஆம் ஆண்டில் போத்துக்கேயரால் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டான் எனப் போத்துக்கேய நூல்கள் கூறுகின்றன. கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்துவதில்லை என்ற தீர்மானம் 1818 ஆம் ஆண்டில் யேசுசபையினரின் கவுன்சிலில் எடுக்கப்பட்டிருந்தமை ஈண்டு அவதானிக்கத்தக்கது. அவ்வாறா யின் சங்கிலிகுமாரன் மதம் மாறியிருந்தானா என்பது ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.
அடுத்து யாழ்ப்பாண அரசு போத்துக்கேய ஆட்சியின் கீழ்ச் செல்வதற்கு உதவிய காரணிகளை நோக்குவோம். இங்கு தம் நேரடி ஆட்சியை நிலைநாட்டுவதற்குப் போத்துக்கேயருக்கு ஒரு நூற்றாண்டுக் காலம் வரை சென்றது. கோட்டை அரசில் போத்துக் கேயர் மிக விரைவாகவே முன்னேறினர். 1543 இல் கோட்டை அரசு போத்துக்கல் மன்னனின் மேலாதிக்கத்தைத் தானே முன் சென்று ஏற்றுக் கொண்டது. 1597 ஆம் ஆண்டில் கோட்டை அரசின் மன்னனான தர்மபாலனின் மரணசாசனப்படி, அவ்வரசு போத்துக்கேய முடிக்கு உரியதர்யிற்று.
ஆனால் யாழ்ப்பாண அரசின் மன்னர்களும் மக்சளும் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பைக் காட்டினர். இங்கு போத்துக்கேயர் தாம் விரும்பிய ஒரு அரசனைத்தானும் நியமிப்பதற்கு 1591 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி யிருந்தது. அவ்வாறு நியமிக்கப்பட்ட மன்னன் கூட, போத்துக் கேயரின் அபிலாசைகளை முழுதாக நிறைவேற்றக்கூடிய நிலையிற் செயற்படவில்லை.
இதனால் பதினேழாம் நூற்றாண்டில் போத்துக்கேயர் யாழ்ப் பாண அரசைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவ்வேளையில் அவர்களின் முயற்சி கைகூடுவதற்குப் பல்வேறு காரணிகள் சாதகமாயமைந்தன. யாழ்ப்பாண அரசுக்கும், மன் னர்களுக்கும் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளும் பொருளாதார நெருக்கடிகளும் தொடர்ந்து போராட முடியாத நிலைமையைத் தோற்றுவித்தன, இவற்றை எதிர்கொண்டு வெற்றியீட்டக் கூடிய அரசியல் தலைமைத்திறன் மிக்க மன்னனும் அப்போது எழுச்சி பெறவில்லை. யாழ்ப்பான அரசின் இறுதி மன்னனான சங்கிலி குமாரன் போத்துக்கேயரின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தக் கூடிய அளவுக்குத் திறமை, இராஜதந்திரம், மக்களின் ஆதரவு என்பவற்றைக் கொண்டவனாக இருக்கவில்லை,

س-79--
இவற்றை விட போத்துக்கேயரின் மத நடவடிக்கைகளால்,
அவர்களுக்கு விசுவாசம் மிக்க ஒரு பகுதியினர் அரசில் உருவாக் கப்பட்டிருத்தனர். அவர்களில் முதலியார் குடும்பங்களைச் சேர்ந்த பலர் இருந்தனர். அவர்கள் போத்துக்கேயரின் நேரடி ஆட்சியை இங்கு ஏற்படுத்தக்கூடிய வகையிலான நடவடிக்கைகளைச் செய் தனர்.
இவற்றிலும் மேலாகப் போத்துக்கேயரின் கடற் படைப் பல
மும் படைச்சிறப்புகளும் கரையோரப் பகுதிகளை அண்டியிருந்த யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றுவதற்கும் உதவியாக அமைந்தன.
உசாவியவை
1. இராசநாயகம், செ. முதலியார், யாழ்ப்பாணச் சரித்திரம்,
யாழ்ப்பர்ணம், 1933. 2. சபாநாதன், குல, யாழ்ப்பாண வைபவமாலை, கொழும்பு,
1963. 3. ஞானப்பிரகாசர், சுவாமி. யாழ்ப்பாண வைபவ விமர்சனம்,
யாழ்ப்பாணம், 1928. 4. Abeysinghe, Tikiri., Jaffna Under the Portuguese, Colombo,
1986. 5, Abeysingh', Tikiri., The Portuguese Rule in Ceylon 1594 -
1612, Colombo, 1966. 6. Baldaeus, Phillip., A True and Exact Description of Ceylon,
Colombo, 1960. 7. De Silva, C. R. The Portuguese in Ceylon 1617 - 1638, ኅ Colombo, 1972. 8. Gnanaprakasar, S., The Kings of Jaffna: During the Portu
guese Period of Ceylon History, Jaffna, 1920. 9. Queyroz, Fernao, de. The Temporal and Spiritual Conquest of Ceylon. Translated into English by Fr. S. G. Perera, Vol. I - III, Colombo, 1930. 10. Trinidade, Paulo. (Friar) Chapters on the introduction of Christianity to Ceylon, taken from The Conquesta Spiritual do Oriente, Translated by Rev. Edmund Peiris and Friar Achilles Meersman, Colombo, 1972. 11. Vriddhagrison, V. The Nayaks of Tanjore, Anaamalainagar,
1942.

Page 84
அத்தியாயம் 4 . தொல்லியற் கருவூலங்கள்
அறிமுகம்
தனித்திறம் வாய்ந்ததாகக் கணிக்கக்கூடிய பாரம்பரிய வர லாறு பண்டைய காலம் தொட்டு யாழ்ப்பாணத்திற்கு இருந்து வந்தாலும், வரலாற்றில் அதன் பெருமை சுதந்திர தமிழரசின் தோற்றத்தோடு மேலும் சிறப்படைவதனைக் காணலாம். இதை இவ்வரசு தொடர்பாகத் தோன்றிய தமிழ் இலக்கியங்களிலும் பிற வரலாற்று மூலங்களிலிருந்தும் அறியமுடிகிறது. இவ்வர லாற்று மூலங்கள் இவ்வரசின் தலைநகர் சிங்கையெனவும், யாப் பாபட்டுன எனவும்? நல்லூர் எனவும்3 வேறுபட்ட தகவல்களைத் தந்துதவுகின்றன. இவை தலைநகர் மாற்றத்தைக் குறித்து நிற்கின் றன என்ற கருத்தை வரலாற்று ஆசிரியர்களிடையே ஏற்படுத்தினா லும் கூட தற்போது நல்லூரைத் தவிர ஒரு இராசதானிக்குரிய கட்டிட அழிபாடுகள் எவையும் யாழ்ப்பாணத்திற் கண்டுபிடிக் கப்பட்டதாக தெரியவில்லை. பதினாறாம் நூற்றாண்டில் யாழ்ப் பாணம் வந்த போத்துக்கேயர் கூட நல்லூர் நகரத்தை மட்டுமே கண்டதாகத் தெரிகிறது.4 இதனால் 13 ஆம் நூற்றாண்டில் இருந்து 17 ஆம் நூற்றாண்டுவரை யாழ்ப்பாண இராசதானி யின் தலைநகராக நல்லூரே விளங்கியதெனக் கூறலாம்.
இவ் வரலாற்றுப் பெருமை வாய்ந்த நல்லூர் இராசதானி யின் நினைவுகள், நினைவுச் சின்னங்கள் இன்று மறக்கப்பட்டுள் ளன; மறைக்கப்பட்டுள்ளன எனக் கூறலாம். இலங்கையின் புரா தன தலைநகரங்களான அநுராதபுரம் பொலநறுவை என்பன கைவிடப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை அண்மித்தபோதிலும் கூட அவற்றின் நினைவுச் சின்னங்கள் பல இன்றும் பாதுகாக்கப்பட் டுள்ளன. ஆனால் இற்றைக்கு முன்னுாற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட நல்லூர் இராசதானியின் ஒரு கட்டிடத் தொகுதி தானும் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை. இதற் குப் போத்துக்கேயரும் பின்வந்த ஒல்லாந்தரும் கடைப்பிடித்த

-81
கலையழிவுக் கொள்கை ஒரு காரணமாக இருப்பினும் அரசமட் டத்தில் இலங்கையின் பிற இராசதானிகளைப் பாதுகாக்க எடுக் கப்பட்ட முயற்சி போன்று நல்லூர் இராசதானியைப் பாதுகாக்க முயற்சி எடுக்கப்படாமையும் முக்கிய காரணமாகும். இதைப் பாதுகாக்கும் முயற்சியில் நிறுவன ரீதியான அமைப்புகளோ, தனிப்பட்டவர்களோ அக்கறை செலுத்தியதாகவும் தெரிய வில்லை. 1957 ஆம் ஆண்டு கொழும்பு நூதனசாலைப் பொறுப் பாளராக இருந்த எஸ். சண்முகநாதன் தலைமையில் சங்கிலித் தோப்பில் சில ஆய்வுகள் நடத்தப்பட்டாலும் அவை ஆரம்ப முயற்சிகளாக அமைந்தன. 1984 ஆம் ஆண்டில் மாவட்டசபையின் குறைந்த அளவு நிதியோடு நல்லூரில் ஆய்வு மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டாலும் அது ஆரம்பப் பேச்சுவார்த்தை யோடு முடிவடைந்துவிட்டது. தற்பொழுது நல்லூர் இராசதானி இருந்திருக்கும் எனக் கருதும் இடங்களில் நெருக்கமான குடி மனைகளும் அரச நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் அமைக் கப்பட்டுள்ளதால் பெறுமதிமிக்க தமிழரின் கலைச்சின்னங்கள் இவற்றின் கீழே மண்ணோடு மண்ணாய் மறைந்துள்ளன. எனவே முழுமையான அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இவ்விராசதாணிபற்றிப் பூரணமாக அறிந்து கொள்வது கஷ்ட மாகும். ஆகவே இதுவரை கிடைத்த ஒரு சில கட்டிட அழிபா டுகள் சிற்பங்கள் கல்வெட்டுகள் நாணயங்கள் முதலிய தொல் லியற் சின்னங்களையும், இலக்கிய மூலங்களையும் வைத்து இவ் விராசதானிபற்றிக் கூறவேண்டியுள்ளது. இவற்றுள் இவ்விராச தானி தொடர்பான தொல்லியற் சின்னங்கள் பற்றி ஆராய் வதே இங்கு நமது முக்கிய நோக்கமாகும்.
நல்லூர் இராசதானி
இவ்விராசதானி அமைந்திருந்த உண்மையான இடத்தையோ அதன் விஸ்தீரணத்தையோ பூரணமாக அறிந்து கொள்ளக்கூடிய அளவிற்குப்போதிய தொல்பொருட்சான்றுகள் இதுவரை கிடைக்க வில்லை. கிடைத்த சான்றுகளை வைத்துக் கொண்டு நோக் கும்போது இவ்விராசதானி தற்போதைய நல்லூர்க்கந்தன் ஆல யத்திற்கு முன்னால் உள்ள மூன்றுமைல் சுற்று வட்டத்தினுள் அமைந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. இதன் எல்லைக்குள் வரலாற்றுப் பழைமை வாய்ந்த கொழும்புத்துறையும், பண்ணைத் துறையும் அடங்குகின்றன. இதை யாழ்ப்பாண வைபவமாலையில் வரும் ஆதாரங்களும் போத்துக்கேய ஆசிரியர்களுடைய குறிப் புகளும் உறுதிப்படுத்துகின்றன.5 இவ்விராசதானியின் அமைப் புப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலையில் வரும் வர்ணனை இங்கு நோக்கத்தக்கது.

Page 85
-82
* நாலு மதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்கா விடு வித்து மாடமாளிகையும், கூட கோபுரங்களை யும், பூங்காவையும், பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்படைக் கூபமும் உண் டாக்கி அக்கூபத்தில் யமுனா நதி தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு நீதிமண்டபம் யானைப் பந்தி, குதிரை லாயம், சேனாவீரரிருப்பிடம் முதலியன கட்டுவித்து- - கீழ்திசை வெய்யிலுகந்த பிள்ளையார் கோயிலையும், மேற்றிசைக்கு வீர மாகாளியம்மன் கோயிலையும் தென்திசைக்கு கயிலாய பிள்ளைாயர்கோயிலையும், வடதிசைக்கு சட்ட நாதேஸ்வரர் கோயில் தையல்தாயகி அம்மன் கோயில் சாலை விநாயகர் கோயிலையும் அமைப்பித்தனர்."6
மேற்கூறப்பட்ட வர்ணனைகள் இன்று நல்லூர் இராசதானி யினைக் காண விழைவோருக்கு மிகையாகவோ, கற்பனையா கவோ கருத இடமளிக்கலாம். அதில் ஒரளவு உண்மையிருப்பினும் அவற்றை முற்றாக வரலாற்று உண்மைக்கு மாறானவை எனக் கருதி ஒதுக்கிவிடமுடியாது. இந்நகர்பற்றி யாழ்ப்பாண வைபவ மாலையில் மட்டுமன்றி, போத்துக்கேய ஆவணங்களிலும் ஒரளவு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகரைப்பற்றி, போத்துக்கேயரே இங் கிருந்த கோட்டையையும் ஆலயங்களையும் இடித்துத் தரைமட் டமாக்கியதாக கூறியுள்ளனர். அவ்வாறு இடிக்கப்பட்ட கட்டி டங்களைக் கொண்டே இவர்காலக் கோட்டைகளும் தேவால யங்களும் மனைகளும் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு யாழ்ப்பாண வைபவமாலையில் வரும் கூற்று மேலும் ஆதாரமாக அமைகிறது.
"பறங்கிகள் ஆட்சியினை ஒப்புக்கொண்டு நல்லூரிற்குளே குடியிருந்து கொண்டு தங்கள் கருமங்களை நடத்திப் புறக் கோட்டை மதில்களை இடிப்பித்து அக் கற்களைக் கொண்டு போய்க் கடல் ஒரத்திலே சங்கிலியரசன் இடிப்பித்துப் பரவிவிட்ட தங்கள் கோட்டையை மறுபடி கோட்டையாகக் கட்டி அதன் கீழ்ப் புறத்திலே வீடுகளையும் அரசாட்சி மண்டபங்களையும் கட்டுவித்துக் குடிகள் சமீபத்தில் வீடுகட்டி வந்திருக்கும் படி வசதி பண்ணினார்கள்’7

س-83
இக்கூற்றில் பெருமளவு உண்மையிருக்கலாம் என்பதைப் பறங்கித் தெருவின் பிரதான வீதியிலும் குறுக்கு வீதியிலும் உள்ள பல வீடுகள் பழமையான கற்கள் கொண்டு கட்டப்பட் டிருப்பதைக் கொண்டு உணரமுடிகிறது. இக்கற்கள் பல பழைய நல்லூர் இராசதானிக்குரியவை என்பதில் ஐயமில்லை. இதற்கு பஜநாநந்தம் வீட்டில் உள்ள கற்கள் சிறந்த சான்றாகும். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை தமது யாழ்ப்பாணச் சரித்திரம் என் னும் நூலில் நல்லூர்க் கோட்டையில் இருந்த கற்சாசனங்கள் இங் குள்ள வீடுகள் சிலவற்றில் வைத்துக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.8 இக் கூற்றில் உண்மையுண்டு என்பதை அண்மை யில் இங்குள்ள பிரதான வீதியில் அமைந்த தேநீர்க்கடையொன் றின் வாசற் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு ஒன்று வாசல்படியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தமை எடுத்துக் காட்டியுள்ளது. இக்கல்வெட்டானது இன்னொரு கட்டிடத்தின் தூணாக அல்லது கதவு நிலையின் ஒரு பாகமாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. 53 அடி நீளமும் 7 அங்குல அகல மும் உடைய இக்கல்வெட்டுத் தூணில் 25 வரிகள் உள்ளன. இதிற் பதினைந்து வரிகளை மட்டும் தெளிவாக வாசிக்க முடிந் துள்ளது. அவற்றில் இருந்து இக்கல்வெட்டுப் பதினைந்தாம் நூற் றாண்டில் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்த ஆறாம் பராக்கிரம பாகுவிற்குரியதென்பது தெரியவந்துள்ளது.9 இவனின் ஆட்சி நல்லூரில் இருந்ததென்பதை இலக்கிய ஆதாரங்கள் தெரிவித் தாலும், இலக்கிய ஆதாரங்களின் இக்கூற்றினை உறுதிப்படுத் தும் வகையிலே கிடைத்திருக்கும் ஒரேயொரு சாசனம் இதுவா கும. இதனால், இதற்கொரு தனிமுக்கிபத்துவம் உண்டு. இதே போல் நல்லூர் இராசதானிக்குரிய கற்சாசனங்களும் கற்றுாண் களும் யாழ்ப்பாணக் கோட்டையிலும் வைத்துக்கட்டப்பட்டிருப் பதாக முத்துத் தம்பிப்பிள்ளை மேலும் குறிப்பிடுள்ளார். அவ் வாறான (இராசதானிக்குரிய) தற்சாசனங்கள் எவையும் இது வரை கோட்டையிற் கண்டு பிடிக்கப்படாவிட்டாலும், கோட் டையின் மேற்குப்பாகத்தின் வெளிப்புறங்களில் வைத்துக் கட் டப்பட்டுள்ள கற்றுாண்கள் பல நல்லூர் இராசதானிக்குரியவை என்பதை அடையாளம் காணமுடிகிறது. இவற்றுள் ஒருதூணில் உள்ள நேர்த்தியான தாமரைச்சிற்பம் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது.
தற்போதைய நல்லூர்ப் பிராந்தியத்தில் யாழ்ப்பாண மன்னர் காலக் கட்டிடங்கள் எவையும் முழுமையாக இல்லா விட்டாலும், அங்குள்ள மந்திரிமனை சங்கிலியன் தோப்பு, இராசாவின் தோட்டம் பண்டார மாளிகை பண்டாரக்குளம்

Page 86
-84
போன்ற பெயர்களும் இவ்விடங்களில் அழிந்த நிலையில் உள்ள கட்டிடச் சிதைவுகளும் அக்கால நல்லூர் இராசதாணியை நினவுைபடுத்துவனவாக உள்ளன (படம் 4).
மந்திரி மனை
பருத்தித்துறை வீதியிற் சட்டநாதர் கோயிலுக்குச் சற்றுத் தெற்காக நல்லூரின் பாரம்பரிய வரலாற்றை நினைவுபடுத்தும் வகையிற் கம்பீரமான முகப்புத் தோற்றத்துடன் இம்மந்திரி மனை அமைந்துள்ளது (படம். 5) நீண்டகாலம் அர்ச்சகரின் இல்லமாக இருந்த இம்மனை தற்போது தனிமையாக்கப்பட்டு ஒரு வரலாற்று நினைவாலயமென நினைக்கும் அளவிற்குக் காட்சியளிக்கிறது. இதன் கட்டிட அமைப்பும் மரத்தினாலான சிற்ப வேலைப் பாடுகளும் நூதனமான கலைமரபைப் பிரதிபலிக்கின்றன. இதன் பொதுவான வெளித்தோற்ற அமைப்பும் கலைமரபும் ஒல்லாந் தர் காலக் கலைமரபைப் பிரதிபலித்து நின்றாலும், அதில் சுதேசக் கலை மரபும் கலந்திருப்பதற்கான சான்றுகள் உள்ளன. இதனை நேரிற் பார்வையிடும் ஒருவருக்கு அன்னியரின் நினைவுச் சின்னமாக இது தென்பட்டாலும் அதை நுணுக்கமாக ஆராய்ந் தால் ஒல்லாந்தர் காலத்திற்கு முன்னரே யாழ்ப்பாண மன்னர் காலக் கட்டிடத்தொகுதி இங்கிருந்த தென்ற உண்மையைக் கண்டு கொள்ளமுடியும் அத்தகைய ஒரு வரலாற்றுப் பாரம்பரியம் இவ்விடத்திற்கு இருந்தமையர்ல்தான் பிற்காலத்தில் ஒல்லாந்தர் காலக் கட்டிடங்கள் பல இங்கே அமைக்கப்பட்டன எனலாம். தற்போது இப்பழைய கட்டிடத் தொகுதிகள் சில இடிந்த நிலையிலும், ஒல்லாந்தர் காலத்தில் மாற்றியமைக்கப்பட்ட நிலையிலும், காணப்படுகின்றன. இதற்கு இங்கிருக்கும் பழைமை யான கிணறு ஒன்றை ஆதாரமாகக் காட்டலாம். இக்கிணற்றின் ஒரு பகுதி மந்திரி மனைக்கு உள்ளேயும், மறுபகுதி வெளியேயும் அமைந்துள்ளது. இக்கிணற்றிற்கும் யாழ்ப்பாண மன்னர்கால யமுனா ஏரிக்கும் இடையே சுரங்கப்பாதையிருந்ததாகவும் சில காலங்களில் இக்கிணற்றில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இச்சுரங்கப்பாதை அடைக்கப்பட்டுக் காணப்படுகிறது. மேலும் இம்மனையின் பின்புறத்தில் நில அறையொன்றும் அதற்கு மேல் மூடுசாந்தினால் அமைக்கப்பட்ட மண்டபமும் இருந்ததாகத் தெரிகிறது. தற்போது இவை இடிந்த நிலையில் மூடுண்டு காணப்படுகின்றன. இவ்விடத்தில் இருந்து வீட்டுக்குச் செல்லும் சுரங்கவாசல் ஒன்று பிற்காலத்தில் அடைக் கப் பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இதே போல் வீட்டுக்குள்ளே இருந்த நில அறையும் அதற்குள் இறங்கிச் செல்ல இருந்த படிக்கட்டுகளும் பிற்காலத்தில் அடைக்கப்

-85
பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறான கட்டிடத் தொகுதிகள் சில யாழ்ப்பாண மன்னர் காலத்திற் கட்டப்பட்டவை என்பது தொல்லியலாளர் பலரின் பொதுவான கருத்தாகும்.
சங்கிலியன் தோப்பு கல்தோரணவாசல்
முத்திரைச் சந்திக்கு வடக்கே சில யார் தூரத்தில் வலது பக்கமாக இத்தோரண வாசல் அமைந்துள்ளது. நீண்டகாலம் கவனிப்பாரற்ற நிலையில் இருந்த இக்கட்டிடத் தொகுதி தற் போது நல்லூரில் இருந்த இராசதானியை நினைவுபடுத்தும் ஒரு நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. (படம் 6) அண்மைக்காலக் கலைவிழா மலர்களையும் தமிழ் மன்னர்கால வரலாற்று நூல்களையும் அலங்கரித்த இந்நினைவுச் சின்னம் யார் காலத்திற் கட்டப்பட்டதென்பதிற் கருத்து முரண்பாடுகள் உள்ளன. சிலர் இதனைச் சங்கிலிமன்னனின் அரச மாளிகை வாசல் எனவும் வேறுசிலர் யாழ்ப்பாண மக்களின் அடிமை வாழ்வு நினைவுச் சின்னம் எனவும் கூறியுள்ளனர். இக்கட்டிடமும், இதன் கலை மரபும் ஒல்லாந்தர் காலத்திற்குரியவை என்பதில் ஐயமில்லை. இதையொத்த கலைமரபுடைய கட்டிடத் தொகு திகள் பலவற்றை இன்றும் பறங்கித்தெருவில் உள்ள வீடுகளிற் காணலாம். இருந்தும் ஒல்லாந்தர் காலத்தில் நல்லூரில் இக் கட்டிடம் அமைக்கப்பட்டமைக்கு இவர்களுக்கு முன்னோடியாகத் தமிழ் மன்னர்கால இராசதானி இவ்விடங்களில் இருத்ததுதான் முக்கிய காரணமாகும். இவற்றின் பின்னால் தமிழ் மன்னர்களின் வரலாற்றுச் சாதனைகள் மறைந்து கிடக்கின்றன என்பதை இவ்விடங்களை ஆராய்வதன் மூலம் கண்டு கொள்ளலாம். இது பற்றி ஆங்கிலேய அரச அதிகாரியொருவர் தமது நினைவுப் பதிவேட்டில் 1803 ஆம் ஆண்டில் கூறியுள்ளதை இங்கு நினைவு கொள்ளலாம்.
** பருத்தித்துறை வீதியிலே நல்லூரில் உள்ள யாழ்ப்பாண மன்னர் இருந்த இடத்தைத் தரிசிக்கச் சென்றேன். இது சங்கிலித் தோட்பு என்று கடைசியாக ஆட்சிபுரிந்த சங்கிலி மன்னன் பெயரால் அழைக்கப் பட்டது. இது இப்பொழுது கோயில் ஆதனம் ஆகும். இங்கே ஒரு பழைய வாசல் கட்டிடம் உண்டு. இது டச்சுக் காரர் (ஒல்லாந்தர்) காலக் கட்டிடம் ஆகும். இங்கே இது எப்படி எழுந்தது என்பதற்கு விளக்கம் யாதெனில் டச்சுக்கம்பனியார் நல்லூரிலே தங்கள் தலைமைக்காரியாலயத்தை ஒரு பொழுது நிறுவியிருக்கலாம் அல்லது இது கொம்மாந்தரின் கிராமிய வாசஸ் தலமாக அமைக்கப்பட்டிருக்கலாம்.' 10

Page 87
--86س-
இக்கூற்றில் இருந்து யாழ்ப்பாண அரசை வெற்றி கொண்ட போத்துக்கேயரும், பின்வந்த ஒல்லாந்தரும் தமிழ் மன்னர்களின் இராசதானியிருந்த இடத்திலே தங்கள் முக்கிய நிர்வாக மையங் களை அமைத்துக் கொண்டனர் என்பதும், இதற்கான கட்டிடங் களை இராசதானிகாலக் கட்டிடங்களைக் கொண்டு தமது கலை மரபில் அமைத்துக் கொண்டனர் என்பதும் புலனாகிறது. இத னால் இன்று பாதுகாக்கப்பட்டுள்ள சங்கிலியன் தோப்புக் கல் தோரணவாசல் அன்னியர் ஆதிக்க நினைவுச்சின்னமாக இருப்பி னும் அதன் பின்னால் நல்லூர் இராசதானி கால வரலாறும் இணைந்துள்ளதெனக் கூறலாம். இதனால் இவற்றைப் பாது காப்பது அவசியமாகிறது. மேலும் இவர்கள் காலத்திற்குரிய தெனக்கருதப்படும் கட்டிட அழிபாடுகள் சில இக்கல்தோரண வாச லுக்குச் சற்றுக் கிழக்கேயுள்ள சங்கிலித்தோப்பு மேட்டிலும், யமுனா ஏரியைச் சுற்றியும் காணப்படுகின்றன. இவை ஒல்லாந் தர் காலத்தில் இயங்கிய கல்விக்கூடத்தின் அழிபாடுகள் எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர். (படம் - 7) 1957 ஆம் ஆண் டில் இப்பகுதியில் ஆய்வினை மேற்கொண்ட திரு. சண்முகநாதன் அவர்கள் இக்கட்டிட அழிபாடுகளிடையே சங்கிலி மன்னன் கால அரண்மனையின் அத்திவாரங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி னார். 11 இன்றும் இங்குள்ள குளத்தையும் வைரவர் கோவில் பகுதியையும் ஆண்டியுள்ள மேட்டு நிலப்பகுதியிற் பழைய கட்டிட அத்திவாரங்களையும், செங்கட்டிகளையும், ஒடுகளையும், மட் பாண்டங்களையும் அவதானிக்கலாம். இவற்றுட் பல தமிழ் மன்னன் காலத்திற் குரியவையாகும்.
யமுனா ஏரி
சங்கிலித்தோப்பு கல்தோரண வாசலுக்குக் கிழக்கே சில யார் தூரத்தில் இந்த யமுனா ஏரி அமைந்துள்ளது. நல்லுார் இராசதானி காலத்து முக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக இது இன்றும் போற்றப்படுகிறது. யாழ்ப்பாண மன்னர்களில் ஒருவனாகிய சிங்கை பரராசசேகரன் என்பவன் தனது சமய ஆர்வமிகுதியினால் தானும் குடிகளும் நன்மை பெறக் கருதி 1478 ஆம் ஆண்டில் யமுனா ஆற்றில் இருந்து காவடிகளிலே புனித நீரைக் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்ததால் இது இப்பெயரைப் பெற்றதென்பது முதலியார் இராசநாயகத் தின் கருத்தாகும் 12 வயல் வெளிகளையும் தென்னந் தோப்புக ளையும் சூழவரக் கொண்டுள்ள இவ்வேரியைச் சுற்றித் தற்போது பற்றைக் காடுகள் வளர்ந்துள்ளதினால் கிட்ட அணுகுவது கடின மானதாகும். (படம் . 8) இருப்பினும் இதன் அமைப்பும் கட்டிடப் பொறி நுட்பமும் அக் காலத் தமிழ் மன்னர்களின் தொழில்

-87
நுட்பத்திறனை எடுத்துக் காட்டுகின்றன. 'ப' வடிவில் அமைந்த இவ்வேரி, பொழிந்த முருகைக்கற்களையும், வெள்ளைக்கற்களை யும் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கேணிக்குள் இறங்கிச் செல்ல வசதியாகச் சிறிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான காலங்களில் அரசர்கள் தமது சொத்துகளை இவ் வேரியிற் போட்டுவிட்டு ஓடியதற்கு ஆதாரங்கள் உள்ளன. அண் மையில் இவ்வேரியிற் கண்டு பிடிக்கப்பட்ட மரத்தாலான அம்மன் சிலை இதற்குச் சிறந்த சான்றாகும். இவ்வேரியில் அரசர் தமது பாதுகாப்புக்கருதிச் சுரங்கங்கள் அமைத்ததாகக் கூறப்படுகிறது. அச்சுரங்கங்களில் ஒன்று மந்திரிமனையுடன் தொடர்புடைய தாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் இயற்கை அரண் இல்லாத யாழ்ப்பாணத்தில் அக்கால மன்னர் தமது பாதுகாப்புக்கருதிச் சுரங்கப்பாதைகளையும் இயந்திரப்பொறிகளையும் அமைத்திருந் தனர் எனக் கூறுவதில் வியப்பில்லை.13 இவ்வேரியைச் சுற்றிச் சில கட்டிடத் தொகுதிகள் இருந்திருக்கலாம் என்பதை இங்குள்ள செங்கட்டிகள் கலைவேலைப்பாடுடைய சுண்ணாம்புச் சாந்தினால் ஆன துாண்கள், பழைமையான ஒடுகள், மட்பாண்டங்கள் என்பன உறுதிபடுத்துகின்றன. சிலர் இவ்விடங்களில் அரசமகளிர் குளிப் பதற்குரிய மண்டபங்கள் இருந்ததாகக் கருதுகின்றனர். தற்போ தைய நிலையில் அக்காலத்தில் இது எதுவாக இருந்திருக்கும் எனக் கூறமுடியா விட்டாலும் நல்லுார் இராசதானி காலக்கட்டி டங்கள் சில இருந்திருக்கலாம் என்பதை மட்டும் கூறக்கூடிய தாக இருக்கிறது.
பண்டாரக்குளம்
சட்டநாதர் கோயிலுக்குப் பின்புறமாகச் சற்றுத் தொலை விலே இக்குளம் அமைந்துள்ளது. நல்லுார் இராசதானி தொடர் பாகத் தொல்லியல் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். யாழ்ப்பாண மொழிவழக்கில் பண்டாரம் என்றால் அரசன் எனப் பொருள்படும். யாழ்ப்பாண அரசர்கள், இளவரசர்கள் சிலர் தங்கள் பெயருடன் பண்டாரம் என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். பண்டாரக்குளம் என்றால் அரசகுளம் என்று பொருள்படும். இதன் அருகே இராச வீதி, வரலாற்றுப் பழமைவாய்ந்த பூதவராயர் ஆலயம் என்பன அமைந்திருப்பது இக் கருத்திற்கு மேலும் உரமூட்டுகிறது. ஒல்லாந் தர் காலத்தில் இக்குளத்தை அடுத்துள்ள வயல்கள் சின்னத்தம்பிப் புலவருக்கு மானியமாக வழங்கப்பட்டமை இப்பிரதேச வரலாற்று முக்கியத்திற்கு ஒரு சான்றாகும். ஆயினும் இவ்விடத்தில் இருந்து நல்லுார் இராசதானி தொடர்பான பொருட்கள் எவையும்

Page 88
-88
இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. இருந்தும் இவ்விடத் தின் பெயரும் அமைவிடமும் இராசதானி தொடர்பான சான்றுகள் இங்கிருக்கலாம் என்பதை உணர்த்துகின்றன என லாம் (படம் = 9) :
இராசாவின் தோட்டம்.
பண்டாரக்குளத்தைப் போல் யாழ்ப்பாண மன்னர்களுடன் தொடர்புடைய இடங்களில் ஒன்றாக இராசாவின் தோட்டம் கருதப்படுகிறது. இவ்விடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து 1972 ஆம் ஆண்டில் இவ்விடத்தின் தொல்லியல். மேலாய்வில் ஈடுபட்ட யாழ்ப்பாணத் தொல்பொருளியற்கழக அங்கத்தினர் சிலர், இங்கு பழமையான கட்டிட அழிபர்டுகளையும், விநாய கர் சிலையையும் ஒல்லாந்தர் காலக் கட்டிட அத்திவாரங்களை யும் அவதானித்தனர்.14 இவ்விடம் முழுமையான தொல்லியல் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்படுமானால் நல்லூர் இராசதானி காலத் தொல் பொருட் சின்னங்கள் வெளிவரலாம். (படம் - 10)
கோப்பாய் சங்கிலியன் கோட்டை
யாழ்ப்பாண மன்னர்களின் இராசதானி நல்லூரை மைய மாகக் கொண்டு அமைந்திருந்தாலும் இதற்கு வெளியேயும் இவர் களின் நடவடிக்கைகள் இருந்ததாகத் தெரிகிறது. இவற்றுட் கோப்பாய் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. போத்துக்கேயருக்கும் யாழ்ப்பாண மன்னர்களுக்கும் இடையிலான போராட்டத்தில் யாழ்ப்பாண மன்னர்கள் கோப்பாயில் உள்ள கோட்டையைத் தமது முக்கிய பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தியதாகத் தெரி கிறது. குறிப்பாக, சங்கிலி மன்னன் போத்துக்கேயரின் மேலா ணையை ஏற்று ஆட்சி நடத்தியபோது மீண்டும் அவர்கள் படை யெடுக்கலாம் என அஞ்சித் தனது படையின் ஒரு பிரிவை நல்லூ ரிலும் இன்னொரு பிரிவைக் கோப்பாயிலும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கோப்பாய் நல்லூரின் உபதலைநகர் எனவும் வேறு சிலர் கோப்பாய் நல்லூ ரின் பாதுகாப்பு இருக்கை (கோ - அரசன் பாய் - இருக்கை) எனவும் கூறுகின்றனர்.15 இவ்வாறு தமிழ் மன்னர்களின் வர லாற்றோடு கோப்பாய் சிறப்பித்துக் கூறப்பட்டாலும் இராச தானிக் காலத்திற்குரியதெனக் கருதப்படும் ஒரேயொரு கட்டிடத் தொகுதியைத்தான் அங்கு அடையாளம் காணமுடிகிறது. தற் போது அக்கட்டிடம் சங்கிலியன் கோட்டையென அழைக்கப் படுகிறது.

-89
இக்கட்டிடம் கோப்பாய்ச் சந்தியில் இருந்து வடக்காகச் சில யார் தூரத்தில் வலப்பக்கமாகச் சற்று உள்நோக்கி (பிரதான வீதியில் இருந்து கிழக்காகச் செல்லும் ஒழுங்கை இக்கட்டிடப் பகுதிக்குச் செல்கிறது) அமைந்துள்ளது. நீண்டகாலத்திற்கு முன் மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருந்த இக்கட்டிடம் அண்மைக் காலங்களில் இடிக்கப்பட்டு அவ்விடங்களில் புதிய வீடுகள் கட்டப் பட்டுள்ளன. எஞ்சியிருந்த கட்டிடப்பகுதிகள் கூட இடிக்கப்பட்டு வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வரணின் சுற்றாடலிற் கிணறு வெட்டிய போதும் வீடு கட்ட அத்திவாரம் வெட்டிய போதும் பழமையான கலைச்சின்னங்கள் வெளிவந்த தாக அறிய முடிகின்றது. ஆனால் இவற்றிற்கு என்ன நடந்த தென்பதை அறியமுடியவில்லை. தற்போது இவ்விடத்திற் பாது காப்பு அரண் இருந்ததென்பதற்கு அடையாளமாகச் சுவரின் சில பாகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. சில காலம் சென்றால் இவை கூட அழிக்கப்பட்டு இந்த இடத்திற் புதிய வீடுகள் கட் டப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பின்னர் கோப்பாயில் இருந்த சங்கிலியன் கோட்டையென்பது ஒரு கற்பனைக் கதை யாகவே கூறப்படும். (படம் - 11)
நல்லுார் இராசதானிக் கால ஆலயங்கள்.
நல்லுார் இராசதானி பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைப்வ மாலை இவ்விராசதானியில் இருந்த இந்து ஆலயங்கள்பற்றிச் சிறப் பித்துக் கூறுகின்றது. இவை யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்ட போத்துக்கேயராலும் பின்வந்த ஒல்லாந்தராலும் அழிக்கப்பட்டு விட்டன. இவ்விடங்களிற் பழைய பெயருடன் கூடிய புதிய ஆல யங்கள் பிற்காலத்திற் கட்டப்பட்டாலும் அவை புதிய கலை மரபைக் கொண்டிருப்வதால் நல்லுார் இராசதானிகாலக் கலை மரபையோ அன்றி அமைப்பையோ பூரணமாக அறிய முடிய வில்லை. இருந்தும் இப் புதிய ஆலயங்களுக்கு அருகே பழைய ஆலயக் கட்டிட அத்திவாரங்களும் சில கட்டிடத் தொகுதிகளும் சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதினால்இவற்றைக் கொண்டு யாழ்ப்பாண மன்னர் காலச் சமய நிலையை ஒரளவு அறிய முடிகிறது.
சட்டநாதர் ஆலயம் .
மந்திரி மனைக்கு வடக்கே சில பார் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சட்டநாதர் என்பது சிவனுடைய வைரவமூர்த் தங்களுள் ஒன்றாகும். இரணியனைக் கொன்றதனால் தருக்கித் திரிந்த நரசிங்கத்தை அடக்கி அதன் எலும்பைக் கதையாகவும்

Page 89
س-90----
தோலைச் சட்டையாகவும் தசித்தவரே சட்டநாதர் ஆவர். இப்பெயருடன் கூடிய ஆலயங்கள் சில தமிழ் நாட்டிலும் உண்டு. போத்துக்கேயரின் கலையழிவுக் கொள்கைக்கு நல்லுார்ச் சட்ட நாதர் ஆலயம் உட்பட்டிருந்தாலும் இதன் பழைய கலை மரபை அடையாளம் காணக்கூடிய சில அம்சங்களை மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும், கோயிலின் உட் பிரகாரத்தின் இடது பக்கத்தில் உள்ள மூடுசாந்துக் கூரையிலும் அடையாளம் காணமுடிகிறது. ஆயினும் மிகச் சமீபத்தில் மூடுசாந்துக்கூரையும் இடிக்கப்பட்டுப் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால் பழைய கலை மரபு அருகிவிட்டது இவ்வாலயச் சுற்றாடலில் இருந்துதான் அண்மைக்காலத்திற் பழைய இந்து விக்கிரகங்கள் பல கண்டு பிடிக்கப்பட்டுள்ளன, இவற்றுள்ளே தெய்வாணையம்மை, வள்ளி :ம்மை, கார்த்திகேயன், தீட்சணாமூர்த்தி, சனீஸ்வரன், கஜலட் சுமி ஆகிய விக்கிரகங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இச் சிலைகள் பற்றி ஆராய்ந்த சிவசாமி இவற்றுட் பல கி. பி. 14 ஆம் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவை எனவும் இவை சமகால விஜயநகர காலக் கலைமரபை ஒத்தவை எனவும் குறிப் பிட்டுள்ளார். 16 வேறுசிலர் இச்சிலைகளின் கலைமரபை அடிப் படையாகக் கொண்டு இவற்றுட் சில சோழர் காலத்திற்குரியவை எனவும் கருதுகின்றனர்.
யாழ்ப்பாண மன்னர் காலத்தில் இவ்வாலயம் சிறப்புற்றி ருந்ததென்பதில் ஐயமில்லை. ஆனால் அக்காலத்திலேதான் இவ் வாலயம் தோற்றம் பெற்றதெனக் கூறமுடியாது அண்மையில் இங்கு மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வின் போது இவ் வாலயத்தின் பழைய கட்டிட அழிபாடுகள் இடையே இருந்து ஆவுடையார் ஒன்றும் லிங்கவிக்கிரகம் ஒன்றும் கண்டுபிடிக்கப் பட்டன. இவற்றுள் 15’ நீளமும் 13" அகலமும் கொண்ட சதுர வடிவிலான ஆவுடையார் மிகப்பழமையான தென்பதை அதன் அமைப்பில் இருந்து அறியமுடிகிறது. சதுரவடிவில் ஆவுடை யாரை அமைக்கும் மரபு சோழர்காலத்திற்குரிய சிறப்பம்சமாகும். சோழருக்குப் பிற்பட்ட காலத்தில் இவை பெரும்பாலும் வட்ட வடிவிலே அமைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் பழைய மர பைப் பிற்பட்ட காலத்திலும் பின்பற்றும் பண்பு காணப்பட்டா லும் சட்டநாதர் கோயிலில் இவ்வாவுடையார் பயன்படுத்தாத நிலையிலே பழைய அழிபாடுகள் இடையே காணப்பட்டமை இதன் பழமைக்கு ஒரு சான்றாகும்.17 அண்மையில் யாழ் கோட் டையிற் கண்டுபிடிக்கப்பட்ட 11 ஆம் நூற்றாண்டுக்குரிய இரா ஜேந்திர சோழன் காலக் கல்வெட்டு ஒன்று நல்லூரில் இருந்த ஆலயம் ஒன்றுக்குத்தானம் அளித்தது பற்றிக் கூறுகிறது. சோழர்

-س-91--
காலத்துச் சிவன் ஆலயங்கள் முக்கியத்துவம் பெற்றதினால் இக் கல்வெட்டிற் கூறப்படும் ஆலயம் சட்டநாதர் கோயிலாகவும் இருக்கலாமெனக் கருதவும் இடமுண்டு. (படம் - 12)
பூதவராயர் கோயில்
சட்டநாதர் வீதியாற் சென்று அரசவிதிக்கு எதிராக உள்ள மணல் தெருவில் தீரும்பினால் இவ்வாலயத்தை அடையலாம். முதலாம் சங்கிலி அரசன் காலத்தில் கோட்டை அரசன் தர்ம பாலனின் தகப்பனாகிய விதியபண்டாரன் போத்துக்கேயருக்குப் பயந்து கோட்டையின் சொத்துகளோடு சங்கிலி அரசனிடம் அடைக்கலமாக இருந்து வருகையில் வெடி விபத்தொன்றில் இவன் இறக்க இவனின் நினைவாகச் சங்கிலி அரசன் கட்டிய கோயில் இது என்பது சி. எஸ். நவரத்தினத்தின் கருத்தாகும் .18 தற்போது இவ்விடத்திற் புதிய ஆலயம் அமைக்கப்பட்டிருந்தா லும் பழைய ஓர் ஆலயம் இருந்ததற்கான அத்திவாரங்களும், சில கட்டிடத் தொகுதிகளும் காணப்படுகின்றன. வடக்கு நோக்கிய வாசலையுடைய புதிய ஆலயத்திற்கு மேற்கே கிழக்குநோக்கிய வாசலையுடைய சிறிய கர்ப்பக்கிருகம் மட்டும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இது யாழ்ப்பாண மன்னர் கால ஆலயம் என்பது தொல்லியல் ஆய்வாளர் பலரின் கருத்தாகும். சுதை பும் செங்கட்டியும் கொண்டு கட்டப்பட்டுள்ள இவ்வாலயத் தின் கலை மரபு பழைய ஆலயம் என்பதை உறுதி செய்கின் றது. (படம் 13) இக்கர்ப்பக்கிருகம் 73 நீளமும், 8 அகல மும் 9’ உயரமும் உடையது. 6 உயரமுடைய இதன் விமானம் மூன்று தளங்களை உடையது. இவ்விமானத்தில் இரண்டு தளங்கள் வட்டவடிவிலும் மூன்றாவது தளம் சதுர வடிவிலும் உள்ளன. இதை அலங்கரிக்கும் தாமரை இதழ்களும் விமானந்தாங்கிப் பொம்மைகளும் கர்ணக் கூடுகளும் பழைய கலை மரபைப் பிரதி பலிக்கின்றன. இதையொத்த பழமையான சிற்பவேலைப்பாடுகள் யாழ்ப்பாணத்தில் வேறு இடங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது இங்குள்ள புதிய ஆலயம் பூதவராயர் என்ற பெயரைப் பெற்றிருந்தாலும் பிரதான தெய்வமாக முருகனே காணப்படு கிறது. ஆனால் பலிபீடத்திற் பிரதான வாகனமாக மயிலே: டு பழைய ஆலய எருது வாகனமும் காணப்படுகின்றமை அவதானிக் கத் தக்கது. இது பூதவராயர் ஆலயமாக இருந்து பின்னர் முருகன் ஆலயமாக மாறியதை எடுத்துக்காட்டுகிறது. இவ்வெருது வாக னம் மட்டுமன்றி, புதிய ஆலயத்தின் படிக்கட்டுகளில் வைத்துக் கட்டப்பட்ட பல கற்களும் பழைய ஆலயத்திற்குரியவையாக உள்ளன. இப்பழைய ஆலயத்திற்கு நேர் எதிரே புதிய ஆலயத் திற்குரிய திருக்குளம் அமைந்துள்ளது. (படம் 14) இக்குளத்தில்

Page 90
-س-92-س-
இருந்துதான் இற்றைக்கு 80 வருடங்களுக்கு முன்னர் பழமை யான இந்து விக்கிரகங்கள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது இலங்கையில் போத்துக்கேயர் ஆட்சியில் இந்து ஆலயங்கள் இடிக் கப்பட்டபோது அதில் இருந்த இந்து விக்கிரகங்களைப் பாது காக்கக் கிணறுகளிலே, குளங்களிலே, புதைத்தமையும் பிற்காலத் தில் அவை தற்செயலாகக் கிடைத்தமையும் பொதுவான வர லாற்று நிகழ்வு ஆகும். இதைப்போல் பூதவராயர் ஆலய விக்கி ரகங்களும் நல்லுார் இராசதானியில் இருந்த ஏனைய ஆலய விக்கிரகங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கலாம் போல் தெரிகிறது. இதற்குப் பூதவராயர் சட்டநாதர் ஆலயத் திருக்குளங்களிலும், யமுனா ஏரியிலும் கிடைத்த சிலைகள் சிறந்த உதாரணமாகும். இச்சந்தர்ப்பத்தில் வைபவமாலையில் வரும் கூற்றும் இங்கு நினைவு கொள்ளத் தக்கது.
பரராச சிங்க முதலி இறந்தபின் பறங்கிக்காரர் தாங்கள் இடியாமல் விட்டிருந்த ஆலயமெல்லாம் இடிப்பித்தார்கள். அப்பொழுது பரசுபாணி என்னும் பிராமணன் கீரிமலைச்சாரலில் உள்ள தேவாலயங்களின் தட்டுமுட்டுக்களையும் விக்கிரகங்களையும் கிணற்றில் போட்டு மூடி வைத்தான், கந்தசாமி கோயிலின் பணிவிடைக்காரனாக இருந்த (சங்கிலி யென்னும்) பண்டாரம் அத்திசையில் ஆலயங்களைக் குறித்த சம்பவங்களையும் செப்புப்பட்டயத்தையும் கொண்டு மட்டக்களப்பிற்கு ஓடினான்.19
இக்கூற்றானது யாழ்ப்பாண அரசு அன்னியரிடம் வீழ்ச்சி யடைந்த போதும் அங்கு வாழ்ந்த சைவமக்கள் தம்மதத்தின்மீது கொண்ட பற்றின் காரணமாக அன்னியர் அழிவில் இருந்து ஆலய விக்கிரகங்களைப் பாதுகாக்க அவற்றை மறைவான இடங்களிற் புதைத்துச் சென்றுள்ளனர் என்பதைக் காட்டுகின்றது. இதன் மூலம் எமக்குக் கிடைக்காத வேறும் பல அரிய கலைச் சின்னங்கள் மண்ணிற் புதையுண்டிருக்கலாம் என எண்ணவேண்டியுள்ளது.
வீரமாகாளியம்மன் கோயில்
இது சிங்கை ஆரியன் என்ற மன்னனால் நல்லூரின் மேற்குத் திசைக் காவலுக்காகக் கட்டப்பட்ட ஆலயம் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இது நல்லூர் இராசதானியின் எல் லைக்கு அண்மையில் இருந்ததால் (வண்ணார்பண்ணை) நல் லூருக்குள் நுழைய முயன்ற அன்னியருடன் நடைபெற்ற போர்கள் பல இப்பகுதியில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. இதுபற்றி யாழ்ப் பாண வைபவமாலையில் வரும் கூற்று நோக்கத்தக்கது.

-93
* யுத்தம் நடப்பதற்கு நல்லூர்க் கோட்டையில் மேற்கு வாசல் புறத்தே வீரமாகாளியம்மன் கோயிலுக்கு முன்னாகவிருந்த வெளியையே இடமாக நியமித்துக் குறித்த நாளிலே யுத்தத்தை ஆரம்பித்துப் பதினொரு நாளாக நடத்தினார்கள். பறங்கிகள் துப்பாக்கிச் சூத்திரத்தைக் கையிற் கொண்டு அணியணியாய் நின்றார்கள். தமிழர்கள் வாள் முதலிய படைக்கலங்களைக் கொண்டு நின்றார்கள் உ20
"சிப்பாண மன்னர்களின் போர்த்தெய்வமாக விரமாகாளி அம் மன் விளங்கியதால் அக்காலத்தில் இவ்வாலயம் முக்கியத்துவம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. இதனைப் போத்துக்கேய மதகுருவான குவேறோஸின் கூற்றும் உறுதிப்படுத்துகிறது. இவர்கள் காலத்தில் நல்லூரில் தரைமட்டமாக்கப்பட்ட இரண்டு பெரிய ஆலயங்களில் ஒன்று இதுவாக இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இன்று இவ்விடத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ள தால் பழைய ஆலயச் சிதைவுகளையோ, சான்றுகளையோ "முடிவில்லை. இவை இவ் ஆலயப்பகுதியில் மறைந்திருக் கலாம் எனக் கருதப்படுகிறது. (படம்-15)
நல்லுார்க் கந்தசாமி கோயில்
நல்லுார் இராசதானி பற்றிய ஆய்வைப்போல் இவ்வாலயம் பற்றியஆய்வும் தொல்லியலாளரினதும், வரலாற்று ஆசிரியர்களின தும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு இவ்வாலயம் எங்கே யாரால் எப்போது கட்டப்பட்டதென்பதில் உள்ள கருத்து முரண்பாடுகளே முக்கிய காரணமாகும். தற்போதைய நல்லுார்க் கந்தசுவாமி கோயில் பழைய ஆலயம் இருந்த இடத்தில் கட்டப் பட்டிருப்பதாகக் கூறமுடியாது. (படம் - 16 ) அவ்வாறு கூறக் ஃபிய அளவிற்கு இலக்கிய ஆதாரங்களோ அன்றித் தொல்லியற் சான்றுகளோ காணப்படவில்லை. நல்லுாரில் இருந்த இதன் ஆரம்பகால ஆலயமும் ஏனைய ஆலயங்களைப் போல் போத்துக் கேயரால் இடிக்கப்பட்டதாகும். இது பற்றிக் குவேறோஸ் சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கத் கககது.
*யாழ்ப்பாணத்தை இறுதியாக வென்ற போத்துக்கேய தளபதி பிலிப்டி ஒலிவீரா 1620 ஆம் ஆண்டிலே நல்லூருக் குச் சென்றான். அங்கிருந்த பெரிய கோயிலிலே (கந்தசாமி கோயில்) கிறிஸ்தவர்கள் அல்லாதவர் (சைவர்) மிக்க ஈடு பாடு உடையவர்கள். அவர்கள் அதனை அழியாது விட்டுச்

Page 91
-94
சென்றால் அவன் விரும்பிய எல்லாவற்றையும் வழங்குவ தாகவும் அவனுக்கு வீடு கட்டித்தருவதாகவும் பலமுறை வாக்குறுதி செய்து வந்தனர். ஆனால் அவன் மதப்பற்று மிக்க கத்தோலிக்கனாகையால் அவர்களின் நடவடிக்கை அக்கோயிலை அவன் அழிக்கக்கொண்டிருந்த விருப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. எனவே அதன் அத்திவாரத் தையும் இல்லாது அழிக்கக் கட்டளை இட்டான்.21
இக்கூற்றை யாழ்ப்பாண வைபவமாலையும் உறுதிப்படுத்துகி றது. இவ்வாறு போத்துக்கேயரால் இடிக்கப்பட்ட பழைய கந்த சுவாமி கோயிலானது தற்போது முத்திரைச்சந்தியில் அமைந் துள்ள சங்கிலியன் சிலைக்கு முன்புள்ள கிறிஸ்தவ ஆலயத்தை அண்டியுள்ள பகுதியில் இருந்துள்ளதென்பதற்குச் சில தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன. இப்பகுதியில் பல அத்திவாரங்களின் அழிபாடுகள் கிறிஸ்தவ ஆலயத்தைச் சுற்றியும் அதன் கீழாகவும் வும் செல்வதை அவதானிக்கலாம். இக்கட்டிட அழிபாடுகளுக்குச் சற்று வடக்கே புனித யமுனா ஏரி அமைந்திருப்பது இக் கருத் தினை மேலும் உறுதிப்படுத்துகிறது. இப்பழைய அத்திவார முள்ள இடத்திலே ஒல்லாந்தர் ஆட்சியின் போது ஆரம்பத்தில் களிமண்ணாலான கிறிஸ்தவ தேவாலயம் இருந்ததாக அக்காலத் தில் கிறிஸ்தவ சமயப்பணி செய்து வந்த போல்டேயஸ் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகக், கத்தோலிக்க மதம் பரப்பிய போத்துக்கேயர் ஆரம்ப காலத்தில் இங்கிருந்த இந்து ஆலயங் களை இடித்து அவ்விடங்களில் அல்லது அவற்றுக்கு அருகில் தமது கத்தோலிக்க தேவாலயங்களை அமைத்தனர். அதேபோல், கந்த சுவாமி கோயில் இருந்த இடத்தில் தமது காலத்தில் கத்தோ லிக்க தேவாலயம் ஒன்றையும் அமைத்தனர் எனலாம். அக் கிறிஸ் தவ தேவாலயமே தொடர்ந்து இன்றும் அவ்விடத்தில் விளங்கு கிறது எனலாம்.
இராசதானியில் இருந்த நான்கு எல்லைக் கோயில்களுக்கு இக்கந்தசுவாமி கோயில் மையக்கோயிலாகவும் பெருங்கோயி லாகவும் இருந்ததாகக் கூறப்படுறது. இக்கோயில் இருந்த இடத்தை அடுத்து அரச அரண்களுக்குரிய சான்றுகள் காணப்படுவதால் இதை ஓர் அரசகோயிலாகவும் கருதுகின்றனர். டோத்துக்கேயர் இக்கோயிலை இடிப்பதற்கு முன்னர் சில காலம் தமது பாது காப்பு அரணாகவும் இதைப் பயன்படுத்தியுள்ளார்கள், சுவாமி ஞானப்பிரகாசர், "போத்துக்கேயருடனான போரில் தோல்வியுற்ற செகராசசேகரன் என்னும் :ன்னன் அரண்மனைத் திரவியங் களை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு தீயிட்டு விட்டு ஓடிய பின் போத்துக்கேயர் எரிந்த அரணையும் கைப்பற்றிய ஆல

س-95--
யத்தையும் சுத்தம் செய்து அவற்றிலோர் ஸ்தோத்திர பூசை செய்து மகிழ்ந்தனர்" எனக் கூறுகிறார். 22 மேலும் இக்கோ யிலினைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போத்துக்கேயர் தமக்கு எதிராக மேற்கொண்ட தஞ்சாவூர்ப் படையெடுப்புகள் 'ாண்டை இக்கோயிலில் இருந்து எதிர்கொண்டதாகவும் மூன் ), ம் தடவை மேற்கொண்ட படையெடுப்பில் அப்படைத்தலை வனுக்கு இக்கோயிலில் வைத்தே தண்டனை கொடுத்ததாகவும் கூறுகிறார். இவ்வாறு சில காலம் அரணாகப் பயன்படுத்தப்பட்ட இக்கோயில் 2 , 2 . 1621 ஆம் ஆண்டில் அழிக்கப்பட்டதாகக் குவேறோஸ் கூறுகிறார்.
இவ்வாலயம் தொடர்பான மற்றொரு கேள்வி யாதெனில் இது யாரால் எப்போது கட்டப்பட்டதென்பதாகும். கைலாய மாலையில் வரும் தனிச் செய்யுள் இவ்வாலயத்தையும் யாழ்ப் பாண நகரத்தையும் அமைத்தவன் புவனேகபாகு எனக் குறிப் பிடுகிறது. இதை ஆதாரமாக வைத்துச் சிலர் இதன் தோற்ற காலத்தைப் "பத்தாம் நூற்றாண்டு எனவும் வேறுசிலர் பதினைந் தாம் நூற்றாண்டு எனவும் கூறியுள்ளனர். இச்செய்யுள் குறிக் கும் காலத்தைச் சகவருடம் எண்ணுாற்றெழுபதாக எடுத்துக் கொண்டு அதைப் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மந்திரி புவனேகபாகு காலத்தில் அரசும் கோயிலும் தோன்றியது எனக் கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. இலங்கையில் புவனேகபாகு என்ற பெயருடன் ஏழு மன்னர்கள் ஆட்சிபுரிந்த தற்குச் சான்றுகள் உண்டு. இவர்களுள் ஆறாம் பராக்கிரமபாகு கோட்டையை ஆட்சி செய்த காலத்தில் சபுமால் குமாரய என் பவன் (செண்பகப்பெருமாள்) கி. பி. 1450 ஆம் ஆண்டில் யாழ்ப் பாணத்தைக் கைப்பற்றிப் புவனேகபாகு என்ற பெயருடன் 17 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இதை யாழ்ப்பாண மெயின் வீதியில் கிடைத்த இவன் காலக் கல்வெட்டும் உறுதிப் படுத்துகிறது.23 இன்னும் நல்லுார்க் கட்டியத்தில் ஒதப்படும் சபுமால், பூரீசங்கபோதி, புவனேகபாகு போன்ற பெயர்கள் இவனையே குறிப்பனவாகும். இதனால் கைலாய மாலையில் பரும் தனிச் செய்யுளில் விளிக்கப்படும் புவனேகபாகு கி. பி 15 ஆம் நுாற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த செண்பகப் பெருமாளையே (புவனேகபாகு) குறிப்பதாகும். ஆனால் இவன் இவ்வாலயத்தைப் புதிதாகக் கட்டியதாகத் தெரியவில்லை. ஏற் கனவே இருந்த ஆலயத்தில் சில மாற்றங்களைச் செய்தான் எனலாம். மேலும் நல்லுார் ஆலயத்தின் தோற்றத்தை இராச தானியின் தோற்றத்தோடு தொடர்புபடுத்திக் காண்பது பொருத் தமாகத் தெரியவில்லை. இது இராசதானியின் தோற்றத்திற்கு

Page 92
--96س-
முன்னரே தோற்றம் பெற்றதாகக் கருத இடமுண்டு. அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையிற் கண்டு பிடிக்கப்பட்ட முதலாம் இராசேந்திர சோழன் காலக் கல்வெட்டு 11 ஆம் நுாற்றாண்டில் நல்லுாரில் இருந்த ஆலயம் ஒன்றிற்குத் தானம் அளிக்கப்பட்டது பற்றிக் கூறுகிறது.24 இக்கல்வெட்டானது சோழர் கால ஆலய மொன்று இங்கிருந்திருக்கலாம் என்பதற்குரிய சான்றாகும். சோழர் காலத்தில் சிவன் கோயில்கள் முக்கியத்துவம் பெற்றதைப் போல், பாண்டியர் காலத்தில் முருகன் ஆலயங்கள் சிறப்புப் பெற்றன. சோழருக்கு முன்னரே பாண்டியரின் செல்வாக்கு யாழ்ப் பாணத்தில் ஏற்பட்டதால் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தோற்றத்தை இவ்வம்சத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கவும் இடமுண்டு. எவ்வாறாயினும் இலங்கையில் பெளத்த மதம் செல்வாக்குப் பெறத் தமிழ் நாட்டுடனான தொடர்புக்கு யாழ்ப் பாணம் தொடக்க வாயிலாக இருந்ததென்பதை ஏற்றுக்கொண் டால் கி.பி 6ம் நுாற்றாண்டின் பின்பு தமிழ் நாட்டில் ஏற்பட்ட இந்து சமய மறுமலர்ச்சி யாழ்ப்பாணத்திலும் செல்வாக்குச் செலுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இதனால் நல்லுாரில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திற் பல இடங்களிலும் புதிதாகப் பல இந்துக் கோயில்கள் தோற்றம் பெற்றிருக்கும் என எதிர்பார்க் கலாம். நல்லுார்த் தலைநகரிலமைந்த கோயில்களில் வெயிலு கந்தபிள்ளையார் கோயில், கைலை விநாயகர்கோயில், கைலாச நாதர்கோயில் ஆகியனவும். இதற்கு வெளியே உள்ள பரராச சேகரப் பிள்ளையார் கோயில், அரசகேசரிப்பிள்ளையார் கோயில், ஆகியனவும் குறிப்பிடத்தக்கன. (படங்கள் 17-21)
சாசனங்கள்
தொல்லியற் சான்றுகள் என்ற அடிப்படையில் ஏனைய வர லாற்று மூலங்கள் பெறாத முக்கியத்துவத்தைச் சாசனங்கள் பெறு கின்றன எனலாம். இவை குறிப்பிட்ட ஒரு காலப் பகுதியில் அரசி யல் பொருளாதார பண்பாட்டு வரலாற்றை அறியவும் அக்காலம் தொடர்பாக ஏனைய வரலாற்று மூலங்களில் இருந்து பெறப்படும் வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. இவ் வகையில் யாழ்ப்பாண மன்னர் காலத்தில் வெளியிடப்பட்டவை எனக் கூறக்கூடிய சாசனங்கள் இதுவரை அதிகம் கிடைக்கப் பெறாமை ஒரு முக்கிய குறைபாடாகும். கிடைத்த ஒரு சில சாச னங்கள் கூட மன்னர் பெயரையோ காலத்தையோ குறிப்பிட வில்லை. இதனால் அச்சாசனத்திற்குரிய மன்னனையோ அவன் ஆட்சிக் காலத்தையோ அறிந்துகொள்ள முடியவில்லை. இருப் பினும் இதுவரை கிடைத்துள்ள ஒரு சில சாசனங்கள் ஒரு வகையில் யாழ்ப்பாண இராச்சியத்தின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்தி யுள்ளன என்பதில் ஐயமில்லை.

-97
4.1 கோட்டகமத் தமிழ்ச் சாசனம்
இச் சாசனம் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த கோட் டகம என்னும் இடத்திற் கண்டுபிடிக்கப்பட்டதால் இப் பெயரி னால் அழைக்கப்படுகிறது.25 14 ஆம் நூற்றாண்டுக்குரிய இச் சாசனத்திற் புலவர் ஒருவர் பாடிய ஐந்து வரிகளைக்கொண்ட செய்யுள் பொறிக்கப்பட்டுள்ளது. சிங்கையாரியனின் வெற்றியைக் கூறும் இச்சாசனத்தில் யாழ்ப்பாணத்தரசன் படைகள் மலைநாட் டில் நுழைந்து அங்கு அரசன் ஒருவனைத் தோற்கடித்தது பற்றிக் கூறுகிறது. இவ்வாறான ஒரு சம்பவம் அக்காலத்தில் நடந்தி ருக்கலாம் என்பதைப் பிற வரலாற்று மூலங்களும் உறுதிப்படுத்து கின்றன. குறிப்பாக ராஜாவலிய என்ற நூல் 14 ஆம் நூற் றாண்டின் நடுப்பகுதிக்குரிய அரசியல் வரலாறு பற்றிக் கூறுகை யில் கம்பளை, றைகம, யாழ்ப்பாணப் பட்டினம் ஆகிய நகரங்க ளில் இருந்து முறையே பராக்கிரமபாகுவின் மருமகன், அழகக் கோனார், ஆரியச் சக்கரவர்த்தி ஆகியோர் அதிகாரம் செலுத்தி னர் எனவும் இம் மூவருள் ஆரியச் சக்கரவர்த்தியே படைபலத் திலும், பொருள் வளத்திலும் மேலோங்கி இருந்தான் எனவும் மலைநாடு கரையோரப் பிராந்தியம் ஆகியவற்றில் இருந்தும் ஒன்பது துறைமுகங்களில் இருந்தும் திறைபெற்று வந்தான் என வும் எடுத்துரைக்கின்றது. மடவல என்னும் இடத்திற் கிடைத்த விக்கிரமபாகுவின் கல்வெட்டும் மார்த்தாண்டம் பெருமாள் என் றழைக்கப்பட்ட ஆரியச் சக்கரவர்த்தி விக்கிரமபாகுவின் உடன் பாட்டுடன் மலைநாட்டுப் பகுதியில் இருந்து திறைபெறுவதற்குப் பிராமணர் சிலரை நியமித்திருந்தான் எனவும் கூறுகின்றது.26 இவ்விரு சான்றுகளும் கோட்டகம சாசனத்திற் கூறப்படும் ஆரியச் சக்கரவர்த்தியின் வெற்றியைத் தொடர்ந்தே இவர்களின் ஆதிக்கம் தென்னிலங்கையிற் பரவியதை உறுதிப்படுத்துகின்றன. still h- 22)
4.2 நாயன்மார்கட்டுச் சாசனம்:
யாழ்ப்பாண மன்னர் தொடர்பாக நல்லூரிற் கண்டு பிடிக் கப்பட்ட முதலாவது சாசனம் என்ற வகையில் இதற்குத் தனி முக்கியத்துவம் உண்டு. 1942 ஆம் ஆண்டு இங்குள்ள அரசடி விநாயகர் கோயில் திருக்குளம் வெட்டியபோது இது கண்டுபிடிக் கப்பட்டு அங்குள்ள கோயிலில் நீண்ட காலம் வைக்கப்பட்டி ருந்தது. பின்னர் அது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் செ. கிருஸ்ணராசாவினது முயற்சியினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூதனசாலைக்குக்

Page 93
-98
கொண்டு வரப்பட்டது, 2 நீளம் 13"அகலம் கொண்ட இக் கல்வெட்டில் ஐந்து வரிகள் உள. இதனை வாசித்தோர் கலி 3025 இல் தீர்த்தம் கொடுக்கச் சிங்கையாரியனால் அமைக்கப் பெற்றது என வாசித்து இதன் காலத்தைக் கி. மு. முதலாம் நூற்றாண்டெனவும் கொண்டுள்ளனர். இதன் வரிவடிவ வளர்ச் சியை நோக்கும் போது கல்வெட்டில் உள்ள காலம் பிழையாக எழுதப்பட்டிருக்கலாம் போலத் தெரிகிறது இதன் எழுத்தமைதி யைக் கொண்டு இக்கல்வெட்டு 15ஆம் 16ஆம் நூற்றாண்டிற் குரியது எனத்தெரிந்து கொள்ளலாம். (படம்23) இதைப் பிற்காலத் தில் வாழ்ந்த ஒருவன் தனக்கு முன் வாழ்ந்த சிங்கையாரியன் பெயரால் எழுதுவித்திருக்கலாம் போலத் தெரிகிறது. இக் கல் வெட்டுக் கண்டு பிடிக்கப்பட்ட ஆலயச் சுற்றாடலை நோக்கும் போது இவ்விடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது. இக்கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட தற்போதைய திருக்குளத்தில் பழமையான கட்டிடங்கள் இருந்துள்ளன என்பதற்குரிய அத்தி வாரங்கள் சில காணப்படுகின்றன. இதைப் பழைய திருக்குளமாக அல்லது குளத்தின் நடுவில் அமைந்த நீராழி மண்டபமாகக் கருதலாம். (படம் 24) இதனால் கல்வெட்டிற் கூறப்படும் சிங்கை யாரியன் அமைத்த திருக்குளம் இதுவாக இருக்கலாம். இக் குளத்திற்கு வட எல்லையில்ே தான் நல்லூர் இராசதானிக் காலத்தில் "இரகுவம்மிசத்தை எழுதிய அரசகேரியின் வீடு இருந்த தாகக் கூறப்படுகிறது. இன்றும் இவ்விடம் அரசகேசரிவளவு" என அழைக்கப்படுகிறது. இவர் இந்திருக்குளத்தில் ஸ்நானம் செய்து தனது நித்திய கடமைகளை முடித்துக்கொண்டு இங்குள்ள விநாயகரை வணங்கி வந்தார் என்றும் இதனால் இவ்விநாய கரிற்கு அரசகேசரிவிநாயகர் என்ற பெயர் இருந்தது எனவும் கூறப்படுகிறது. மேற் கூறப்பட்ட சாசனமும் இக்கருத்திற்குச் சார்பாக அமைகிறது. எவ்வாறாயினும் இக்கல்வெட்டைப் போல் அது கண்டு பிடிக்கப்பட்ட சுற்றாடலும் நல்லூர் இராச தானி காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது எனக் கூறலாம். இதற்கு நாயன்மார்கட்டு என்ற பெயர் இவ்விடத்திற்கு வந்த வரலாறே சிறந்த உதாரணமாகும்.
4 . 3 கள்ளியங்காட்டுச் செப்பேடுகள்
யாழ்ப்பாண மன்னர் தமது ஆட்சியின் போது செப்பேடுகள் சிலவற்றை வெளியிட்டதாகத் தெரிகிறது. இது பற்றி யாழ்ப்பாண வைபவமாலையிலும் சில குறிப்புகள் உண்டு. இச் செப்பேடுகள் தனிப்பட்டவர்கள் சிலரிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை யெல்லாம் வெளியிடப்பட்டதாகவோ வெளிக்கொணரப்பட்ட

-99
தாகவோ கூற முடியாது. தனிப்பட்ட சிலர் அதன் முக்கியத்து வத்தை உணர்ந்தும் உணராமலும் மறைத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் யாழ்ப்பாண அரசர் பற்றிய செப்புப் பட்டயங்கள் கள்ளியங்காட்டில் இருந்து கிடைத்திருப்பது சிறப் பாக நோக்கத்தக்கது. இவ்விரு பட்டயங்களும் முன்பு நல்லூர் சிவஞானம் அவர்களின் மகன் திரு. சிவக்கொழுந்து என்பவரிடம் இருந்து பெறப்பட்டதாகத் தெரிகிறது.27 இச் செப்பேடுகளின் இருபக்கங்களும் பேச்சுவழக்குத் தமிழில் உள்ளது. இவற்றுள் ஐந்து வரிகளையுடைய முதலாவது சாசனம் 9 ** நீளமும் 12 ” அகலமும் உடையது. இது யாழ்ப்பாணத்து மன்னன் பரராசசேகர மகாராசா சிதம்பரம் சென்றது பற்றிக் கூறுகிறது. இதிற் கூறப்படும் சாலிவாகன சகாப்தம் தொளாயிரத்து நாற்பத்து நான்காம் ஆண்டில் பரராசசேகரன் சிதம்பரம் சென்றான் எனச் சொல்லப்பட்டிருப்பதால் இது பாராசசேகரன் ஆணைப்படி எழுதப் பட்டதாகக் கூறமுடியாது. எனினும் சிதம்பரத்தில் பரராச சேகரனுடைய பெயரைக்கொண்ட மடம் ஒன்று இன்றும் காணப் படுவதால் இந்த ஆவணத்திற் கூறப்படும் நிகழ்ச்சி உண்மையாகவே நடைபெற்றிருக்கலாம். இரண்டாவது சாசனம் 0** அகலமும் 11 ** நீளமும் உடையது. இது கயிலாய வன்னியனார் தர்மசாசன பட்டயம் எனத் தலைப்பிடப்பட்டது. இச்சாசனம் பிற ஆதாரங் களிற் கிடைக்காத புதிய சான்றுகள் எதனையும் தரவில்லை. இருப்பினும் இவ்விரு சாசனங்களிலும் வட இலங்கை அரசர் பற்றியும் அவர்கள் சிதம்பரத்தில் உள்ள அறநிலையம் ஒன்றினை ஆதரித்தமை பற்றியும் சில முக்கிய தகவல்கள் உள்ளன என் பதில் ஐயமில்லை.28 (படம்-25 26)
4 . 4 பதவியா வடமொழிச் சாசனம்
ஆரியச்சக்கரவர்த்திகள் கால மன்னர் தொடர்பாக யாழ்ப் பாணத்திற்கு வெளியே கிடைத்த சாசனங்களில் இதுவும் ஒன் றாகும். வடமொழியில் அமைந்த இச்சாசனத்தின் காலம் இதிற் குறிப்பிடப்படாவிட்டாலும் எழுத்தமைதி கொண்டு இது 13 ஆம் நூற்றாண்டிற் குரியதெனச் சாசனவியலாளர் கருதுகின்றனர். இதில் லோகநாதன் என்ற தண்டநாயகன் மணிகளாலும் முத்துக ளாலும் அலங்கரிக்கப்பட்ட மிக ஒளி பொருந்திய முடி கொண்ட விகாரம் ஒன்றை அமைத்து அதற்கு வேளைக்கார விகாரம் எனப் பெயரிட்டான் என்று கூறப்படுகிறது. இக்கல்வெட்டை வாசித்த பேராசிரியர் பரணவிதான இதன் தொடக்கத்தில் வரும் சேதுகுலத்தை மலேசியாவில் இருந்து வந்தவர்கள் எனக் குறிப்பிட்டார். இதற்கு கி.பி 5 ஆம் 6 ஆம் நூற்றாண்டில்

Page 94
م-100--
மலாயநாட்டின் ஒரு பகுதியைச் சீனர் சீது என அழைத்தமை யையும் இதனால் "சேது வெனுமோ?" என்னும் அரசு இங்கு இருந்ததென்பதையும் ஆதாரமாகக் காட்டியுள்ளார். ஆனால் சீ-து என்பது செம்மண்நிலம் எனப் பொருள்படும் எனக் கூறி இக்கருத்தைப் பத்மநாதன் நிராகரித்துள்ளார்.29இவர் கருத்தையே ஏனைய பலரும் ஏற்றுள்ளனர். எனவே இக்கல்வெட்டில் வரும் சேது குலத்தின் கீர்த்தி சேதுவை இலச்சினையாகக் கொண்ட ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சமான யாழ்ப்பாண மன்னர் குலத்தையே குறித்தது எனலாம். எனவே விகாரை அமைத்த லோகநாதன் ஆரியச்சக்கரவர்த்திகளின் தளபதிகளில் ஒருவனாக இருக்கலாம் என அறிஞர் கருதுவர். (படம்-27)
சேது நாணயங்கள்
நல்லூர் இராசதானி காலத் தொல்லியற் சின்னங்கள் இது வரை அரிதாகக் கிடைத்திருந்தாலும் இக்காலத்தில் வெளியிடப் பட்ட நாணயங்கள் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இதற்கு வெளி யேயும் பல இடங்களிற் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இக் கால இராசதானியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றது. யாழ்ப்பாண இர்ாச்சியத்தின் கல்வெட்டுகளிலும் கொடிகளிலும் சேது எனும் மொழியினை மங்கல வாக்கியமாகப் பயன்படுத்தியது போல் இக்கால நாணயங்களிலும் பயன்படுத் தப்பட்டுள்ளது. இதற்கு இந்நாணயங்களை வெளியிட்ட ஆரியச் சக்கரவர்த்தி மன்னர்கள் தங்கள் பழம் பதியாகிய புண்ணிய தலங்கள் நிரம்பிய இராமேஸ்வரத்தின் மேற் கொண்டிருந்த ஈடு பாடும் சமய அபிமானமும் காரணம் எனக் கூறப்படுகிறது. இத் தகைய வாசகம் கொண்ட நாணயங்களே 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு வரை பெரும்பாலும் செம்பிலும் சில பொன்னிலும் வெளியிட்டதாகத் தெரிகிறது. இவ்வாறான நாணயங்கள் பல நல்லூர், திருநெல்வேலி, கோப்பாய், புத்தூர், வல்லிபுரம், நாரந்தனை, மாங்குளம், மாந்தை, பூநகரி ஆகிய இடங்களிலும் திருகோணமலைக்கு அண்மையிலும் கிடைத்துள் ளன. இங்கெல்லாம் ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்களின் அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகள் செல்வாக்குப் பெற்றிருந்ததைப் பிற சான்றுகள் மூலமும் அறியமுடிகிறது.
6 . 0 நல்லூர் இராசதானியும் யாழ்ப்பாணக் கோட்டையும்
யாழ்ப்பாணத்தின் மத்திய கால வரலாற்றிற் சீரும் சிறப்பும் பெற்ற நல்லூர் நகரத்திற்குக் கந்தரோடை, வல்லிபுரம் போன்ற இடங்களைப் போலத் தொன்மையான பாரம்பரிய வரலாறு இருந்

-101
ததாகத் தெரியவில்லை. அவ்வாறு தெரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு இப்பகுதியில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டதாகவும் கூறுவதற்கில்லை. இதனால் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் மத்திய காலத்தில் இது சிறப்புப் பெற்றதற்குத் தமிழ் மன்னர் களின் இராசதாணி இந்நகரில் அமைந்ததே காரணம் எனக் கருது கின்றனர். ஆனால் சமீபத்தில் நல்லூரிற் கிடைத்த லக்ஷமி நாணய மும் இதற்குச் சற்றுத் தென்மேற்கே பூம்புகார், மணியந்தோட்டம் ஆகிய இடங்களிற் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிக்குடியிருப்புகளுக்குரிய சான்றுகளும் 30 கந்தரோடை, வல்லிபுரம் போன்ற நகரங்களுக்கு உள்ளவை போன்ற பாரம்பரியவரலாறு நல்லூருக்கும் இருந்திருக்க லாம் எனக் கருத இடமளிக்கின்றன. இதேபோல் அன்னியரின் நினைவுச் சின்னமாக உள்ள யாழ்ப்பாணக் கோட்டையும் அதைச் சூழவர உள்ள இடங்$ளும் வரலாற்றிற் சிறப்புப் பெற்றமைக்கு நல்லூர் இராசதானியின் வீழ்ச்சிக்கு ஏதுவாய் இருந்த போத்துக் கேயரும் பின்வந்த ஒல்லாந்தர் ஆங்கிலேயர் கால ஆட்சியுமே காரணம் எனக் கூறப்படுகிறது. இவற்றுட் கோட்டையின் அமைப் பும் அதன் கலைமரபும் நல்லூரில் உள்ள மந்திரிமனை, கற்றோ ரணவாசல் முதலியனவற்றைப் போல் அன்னியருக்குரிய தென் பதில் ஐயமில்லை. ஆனால் இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப் பட்டமைக்கு அன்னியர்தான் முதவில் காரணமாக இருந்தார்களா அல்லது இவர்களுக்கு முன்னரே தமிழ் மன்னர்களுடைய கோட்டை இவ்விடத்தில் இருந்தது தான் காரணமா? என்பது ஆய்வுக்குரிய விடயமாகும். (படம்-28)
இக்கோட்டை அமைந்த சுற்றாடலின் அமைவிடத்தையும் இவ்விடத்துடன் கடல்வழித் தொடர்பு கொள்ளக் கூடிய பண் ணைத்துறை, கொழும்புத்துறை, நாவாந்துறை, அராலித்துறை, ஊர்காவற்றுறை போன்ற இடங்களையும் நோக்கும்போது ஆதி கால வெளிநாட்டு வர்த்தகத்தில் இவ்விடமும் தொடர்பு கொண் டிருந்ததெனக் கூறலாம். கோட்டைப் பகுதியிற் கண்டு பிடிக் கப்பட்ட ரோம நாணயமும் 31 இதற்குச் சற்றுத் தென்மேற்கே வேலணை, மண்கும்பான், சாட்டி போன்ற இடங்களிற் கண்டு பிடிக்கப்பட்ட ஆதிக்குடியிருப்புகள்பற்றிய சான்றுகளும் ரோம நாணயங்களும், ரோம மட்பாண்டங்களும், அரேபிய, கிரேக்க, சீன மட்பாண்டங்களும், ஆதியில் இவ்விடங்களுடன் தென்னிந்திய கிரேக்க ரோம அரேபிய சீனத் தொடர்புகள் இருந்தமைக்குச் சான்றாகும்.32 இவ்விடங்கள் பத்தாம் நூற்றாண்டிற் சோழர் ஆட்சியுடன் மேலும் முக்கிய வர்த்த 5 நடவடிக்கைப் பிரதேச மாக விளங்கியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. தமிழ் நாட் டிற்குக் கிட்டவுள்ள இவ்விடங்களைச் சோழர் தமது கட்டுப்

Page 95
-102
பாட்டில் வைத்திருப்பதன் மூலம் மேற்கில் இருந்து ஏற்பட்ட அராபியரது வர்த்தக எழுச்சியைத் தடுக்கவும் இலங்கையின் பெரு நிலப்பகுதியிலிருந்து ஏற்பட்ட சிங்கள மன்னர்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும், கிழக்கே தென்கிழக்காசிய நாடுகளுடன் வர்த் தசத் தொடர்பை ஏற்படுத்தவும் வாய்ப்பாக இருந்திருக்கும். இதை உறுதிப்படுத்தக்கூடிய அதிக சான்றுகள் யாழ்ப்பாணத்தில் இதுவரை கண்டு பிடிக்கப்படாவிட்டாலும் இங்கு பரவலாகக் கண்டுபிடிக்கப்பபட்ட சோழர்கால நாணயங்களும் சோழரை நினைவு படுத்தும் செம்பியன்பற்று வளவர்கோன் பள்ளம் கங்கை கொண்டான் போன்ற இடப்பெயர்களும் கமால்வீதி நாரந்தனை போன்ற இடங்களிற் கிடைத்த இவர்கள் காலச் சிற்பங்களும் இதை ஒரளவு உறுதிப்படுத்துகின்றன. இவற்றுட் கோட்டை அமைந்துள்ள இடம் சோழரின் முக்கிய வர்த்தகத் துறைமுகமாக அல்லது அவர்களின் பாதுகாப்பு மையமாக இருந்ததெனக் கருதி இடமுண்டு. போத்துக்கேயரால் அழிக்கப்பட்ட யாழ்ப்பாண மன் னர் கால ஆலயங்களையும் அரண்மனைகளையும் கொண்டு இவ் விடத்திற் புதிய கோட்டை கட்டப்பட்டாலும் அவை அனைத் தும் யாழ்ப்பாண மன்னர் காலத்திற்குரியவையெனக் கூறமுடி யாது. இக்கோட்டையின் மேற்குப்புறப்பகுதியில் பழமையான கட்டிடங்களுக்குரிய கற்றுாண்கள் காணப்படுகின்றன; அவற்றுட் சில, 10 ஆம் நூற்றாண்டுக்குரிய கிரந்த எழுத்துகளையும் கொண்டுள்ளன. இவை பிற்பட்ட பல்லவர் அல்லது முற்பட்ட சோழர் காலத்திற்குரியவையாகும்.38 இக்கற்களை இன்னொரு இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவையெனக் கருத இட மிருப்பினும் சில வேளை இவ்விடத்தில் இருந்த ஒரு கட்டிடத் தின் கற்களாகவும் இவற்றைக் கொள்ளலாம். இக் கோட்டை யில் உள்ள இன்னொரு கல்வெட்டு 11 ஆம் நூற்றாண்டில் இரா சேந்திர சோழன் நல்லூரில் அமைந்த ஆலயம் ஒன்றுக்குத் தானம் அளித்தது பற்றிக் கூறுகிறது. இது தற்போதைய நல்லுர்க் கந்தசாமி கோயிலுக்கு முற்பட்டதான பழைய ஆலயத்தையோ அல்லது சோழர் காலத்தில் இங்கிருந்த இன்னொரு ஆலயத் தையோ குறித்திருக்கலாம் எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால் அக்காலத்தில் நல்லுர் என்ற பெயர் தற்போதைய நல்லூருக்கு இருந்ததற்கு ஆதாரமில்லை. இதேவேளை கோட்டை அமைந் துள்ள இடம் யாழ்ப்பாணம் எனக் குறிக்கப்பட்டதற் தம் ஆதார மில்லை. இதனால் மேற்கூறப்பட்ட சோழர் கல்வெட்டில் வரும் நல்லூர் யாழ்ப்பாணத்தின் முன்னோடிப் பெயரா என்ற சந் தேகம் ஏற்படுத்துகின்றது. சோழர் ஆட்சியில் நல்லூர் என்ற பெயர் தமிழ்நாட்டின் பல இடங்களிற்கு இடப்பட்டதற்கு ஆதார முண்டு. இதேபோல் இலங்கைபில் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட

-103
திருகோணமலை, பூநகரி, களுத்துறை குருநாகல் போன்ற இடங் களிலும் இப்பெயர்கள் உள்ளன. இவ்விடங்கள் பெரும்பாலும் கடற்கரையை அண்டிய துறைமுகங்களிலும் நகரங்களிலும் இருந் ததுடன் இவற்றில் முக்கிய வர்த்தக பண்பாட்டு நடவடிக்கைகள் இருந்தமைக்கான ஆதாரங்களும் உள்ளன. இவற்றுள் திருகோண மலையிலும் பூநகரியிலும் இவர்கள் கால ஆலயங்கள் கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.34 அப்படியாயின் கோட்டை யில் இருந்த சோழக் கல்வெட்டை முன்பு இங்கிருந்த ஆலயத் தின் கல்வெட்டாகக் கருத இடமுண்டு. அவ்வாறு கருதுவதற்கு இன்னொரு ஆதாரத்தை இங்கு எடுத்துக்காட்டலாம். இக் கோட் டையின் வடக்காக உள்ள நிலப்பகுதி இன்று ஐநூற்றுவன் வளவு என அழைக்கப்படுகிறது. ஐநூற்றுவன் என்பது சோழர் காலத்திற் குரிய முக்கிய வணிகக்கணங்களில் ஒன்றாகும். இவ் வணிகக்கணங் களே சோழர் காலத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் மட்டுமன்றிப் பல ஆலயங்களைக் கட்டுவதற்கும், நகரங்களை அமைப்பதற் கும் காரணமாக இருந்தன. குறிப்பாக, பொலநறுவையிலும் பதவி யாவிலும் உள்ள சில ஆலயங்களின் தோற்றம் வணிகக்கணங்க ளோடு தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. கோட்டையில் இருந்த சோழர் கல்வெட்டில் ஆலயத்திற்குத் தானம் கொடுத்தவனாக சரித்தன் என்பவன் குறிப்பிடப்பட்டுள்ளான். சாத்தன் என்றால் வியாபாரிகள் கூட்டம் என்று பொருள்படும் பல சோழக்கல் வெட்டுக்களிலே தானம் அளித்தவன் பெயர்களில் சாத்தன் என்ற பெயர் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சோழர் கால ஆலயம் பற்றிய கல்வெட்டும் அவர்கள் கால வணிகக் கணம் பற்றிய பெயரும் யாழ்ப்பாணக்கோட்டை அமைந்த பிரதேசத்துடன் தொடர்புடையனவாக இருப்பதினால் இக்கல் வெட்டில் வரும் ஆலயம் இங்கிருந்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. இச்சான்றுகளை நோக்கும்போது யாழ்ப்பாண ஆரி யச்சக்கரவர்த்தி மன்னர் காலத்திற்கு முன்னரே சோழர்காலத் திலேயே தற்போதைய கோட்டை அமைந்துள்ள பிரதேசம் முக் கிய வர்த்தகப் பண்பாட்டு மையமாக விளங்கியதெனக் கூறலாம். இவ்விடமே பிற்காலத்தில் யாழ்ப்பாண மன்னர்களின் முக்கிய கோட்டையாக விளங்கியிருக்கவேண்டும்.
ஆரியச் சக்கரவர்த்தி மன்னர் சுால அரண்மனைகளையும் ஆலயங்களையும் விபரித்துக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை அவர்கள் காலக் கோட்டை பற்றியும் கூறுகிறது. செண்பகப் பெருமாள் படையெடுப்புப்பற்றிக் கூறும் ராஜாவலிய என்ற சிங்கள நூல் யாழ்ப்பாணத்தில் இவன் அமைத்த காவல் அரண், கோட்டை என்பன பற்றியும் கூறுகிறது. இச்சான்றுகள் போத்துக்கேயருக்கு

Page 96
-104
முன்னரே தமிழ் மன்னர் காலக் கோட்டையொன்று யாழ்ப்பr ணத்தில் இருந்ததென்பதை உறுதிப்படுத்துகின்றன. அவ்வாறான கோட்டையொன்று இருந்ததென்பதை ஏற்றுக் கொண்டால் அது கடற்கரையை அண்டிய பகுதியாகவே இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. ஆரியச்சக்கரவர்த்தி மன்னன் ஒருவனின் வெற்றி பற்றிக் கூறும் கோட்டகம சாசனத்தில் வரும் “பொங் கொலி நீர் சிங்சைநகர்’ என்ற கூற்று இம்மன்னர்கால அரசி ருக்கை அல்லது இராசதானியின் கட்டிடம் ஒன்று கடற்கரையை அண்டியிருந்திருக்கலாம் என்பதையும் உணர்த்துவதாகக் கருத்தில் எடுத்துக்கொள்ள இடமுண்டு. தற்போதைய நிலையில் யாழ்ப் பாணக் கோட்டையைத் தவிர யாழ்ப்பாணத்தின் கடற்கரையை அண்டிய ஏனைய பகுதியில் யாழ்ப்பாண மன்னர் காலத் தொல் பொருட் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும் போத்துக்கேயருக்கும் யாழ்ப்பாண மன்னர்களுக்கும் இடையிலான போராட்டங்கள் பல கொழும்புத்துறைக்கும் பண் ணைத்துறைக்கும் இடையிலே நடந்ததாகத் தெரிகிறது. இவற்றை நோக்கும் போது யாழ்ப்பாண மன்னர் காலக் கோட்டை தற் போதைய கோட்டை இருக்கும் பகுதியில் இருந்ததெனக் கூற லாம். அக்காலத்தில் இக்கோட்டை மிகப் பெரிதாக இருந்த தெனக் கூறமுடியாவிட்டாலும் பெருமளவிற்கு மண்ணையும் கல் லையும் கொண்டு கட்டப்பட்டிருந்ததெனக் கூறலாம். போத் துக்கேயர் யாழ்ப்பாணத்தில் இருந்த இந்து ஆலயங்களை இடித்து அதன் அருகே புதிய கத்தோலிக்க தேவாலயங்களைக் கட்டிய போதிலும் ஆரம்பத்தில் இவை களிமண் கொண்டு கட்டப்பட்ட தாகத் தெரிகிறது. இதேபோல் யாழ்ப்பாண மன்னர் காலக் கோட்டையை இடித்து அல்லது அதில் சில மாற்றங்களைச் செய்து தமது கோட்டையாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதையே பின்னர் வந்த ஒல்லாந்தர் தற்போதைய நிலையில் கட்டி முடித்தனர். கோட்டையைச் சரிவர ஆராய்ந்தால் இக் கோட்டைக்கும் யாழ்ப்பாண மன்னர்களுக்கும் இடையிலான தொடர்பு மேலும் துலக்கம் பெறும்.
அடிக்குறிப்புக்கள்
1. இரகுநாதையர், இ. சி (பதிப்பு), செகராசசேகரமாலை
(யாழ்ப்பாணம்), 1942 செய்யுள் 36.
2. Gunawardhena, W. F., (ed) Kokilasandesaya (Colombo),
1924 verse. 246.
3. சபாநாதன், குல. (பதிப்பு) யாழ்ப்பாண வைபவமாலை
(கொழும்பு), 1953 ப, 27. w

5.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
س-105--
Queyroz, F. de.. The Temporal and Spiritual conquest of the Island of Ceylon (Tr) Perera, S. G., (Colombo)
1930 L. 50.
சிவசாமி, வி. 'நல்லூரும் தொல்பொருளும்' ஒளி (யாழ்ப் பாணம் ஆகஸ்ட்டு 1972) ப. 3.
சபாநாதன், குல, மு. சு. நூ. ப, 27
மேற்படி. ப. 78.
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ, யாழ்ப்பாணச் சரித்திரம் (யாழ்ப் LurrGOOrb), 1915 Lu, 75.
Indrapala, K. (ed) Epigraphia Tamilica Vol. 1 , pt, 1 (Kandy) 1971 Lă. 29 - 31.
ஈழகேசரி (14.02.1932)
சண்முகநாதன், எஸ். வீரசேகரி (கொழும்பு) 20.3.51).
இராசநாயகம், செ, யாழ்ப்பாணச் சரித்திரம் (யாழ்ப்பாணம்) 1933 Lă, 138 - 142.
சிவசாமி, வி., மு. சு. நூ, ப. 4.
சிவசாமி, வி. , சிவநேசசெல்வன் ஆ. (ப. ஆ) பூர்வகலா (வட்டுக்கோட்டை) - 1973
Ragupathy, P. Early settlements in Jaffna - An Archaeological survey (Madras) 1987 U. 215.
சிவசாமி, வி. மு.கூ.நூ ப. 13
அண்மையில் வரலர்ற்றுத்துறைச் சிரேஷ்ட விரிவுரையாள ருடன் தொல்லியல் மேலாய்விலீடுபட்டபோது எம்மால் இச் சிற்பங்களை இவ்வாலயச் சுற்றாடலிற் கண்டுபிடிக்க முடித்தது.
Navaratnam, C. S., Tamils and Ceylon (Jaffn. 1950., Lu. 152.
சபாநாதன், குல. மு.கூ. நூ. பக். 80 - 81
மேற்படி

Page 97
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30,
31.
32.
33.
34.
س-106 س
Queyroz, மு. கூ. நூ. புக். 642.
ஞானப்பிரகாசர் சுவாமி. யாழ்ப்பாண வைபவமாலை விமர் சனம் (அச்சுவேலி) 1928.
Indrapala, K., மு. கூ. நூ. பக், 29 - 31
Indra pala, K., “A Cola Inscription from the Jaffna Fort” Epigraphica Tamilica Vol. 1, pt. 1. (Jaffna) 1973 Lud. 52 - 56.
இராசநாயகம், செ. மு. கூ. நூ. ப. 68
E. Z, Vol. 3 No. 47, uš. 463 - 465.
ஈழசேகரி, (யாழ்ப்பாணம்) 4.9.1932.
பத்மநாதன், சி. வன்னியர் (பேராதனை, 1970).
Pathmanathan. S., The Kingdom of Jaffna (Colomboy 1978, பக். 206 - 209
Ragupathy. P., (p. aha. நூர், பக். 32 - 33.
Pieris, P. E., The Kingdom of Jaffnapatam (Ceylon) 1944, tյd, . 35
Ragupathy, P., (p. 3a. J5T.
சிவசாமி, வி. மு.கூ.நூ. ப. 4
புஷ்பரட்ணம், ப, "சோழர்கால மண்ணித்தலைச் சிவாலயம்?? கலைப்பீட ஆய்வரங்குக் கட்டுரைகள், 1990, திருநெல்வேலி, 1990 Luis. Il - Il 6.

அத்தியாயம் - 5
ஆட்சிமுறை
நாடு
யாழ்ப்பாணப் பட்டினம் என வழங்கிய வட இலங்கையில் நிலைத்த தமிழரசு யாழ்ப்பாணக் குடாநாடு, அதற்கருகிலுள்ள தீவுகள், மாதோட்டம், பூநகரி, பல்லவராயன் கட்டு என்பவற் றையும் அவற்றோடு வன்னி நாட்டையும் கொண்டிருந்தது. 14 ஆம் நூற்றாண்டில் திருகோணமலை வன்னியர், யாழ்ப்பாண மன்னரின் மேலாதிக்கத்துள் அமைந்திருந்தனர். இப் பிரதேசங்க ளைக் கொண்ட அரசினைச் சிங்கைநகர் என வழங்கிய நல்லூரை உள்ளடக்கிய யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்து ஆரியச் சக்கர வர்த்திகள் ஆண்டு வந்தனர்.
நகரம்
அரச மாளிகை, நிர்வாக நிலையங்கள், நீதிமன்றம் ஆகியன வும், அமைச்சர் அதிகாரிகள் போன்றோரின் உறைவிடங்களும் படையிலுள்ள யானை, குதிரைகளின் சாலைகளும் போர்வீரர்க ளின் இல்லங்களும் தலை நகரில் இடம் பெற்றன. யாழ்ப்பாணப் பட்டினம் என்னும் நகரம் பொன்மயமான கொடிகள் பொருந்திய நிரை நிரையான எழில் மிக்க மாளிகைகளையும் விசாலமான வீதிகளையும் கொண்டு அழகாபுரி என விளங்கியது என்று கோகில சந்தேஸய என்ற சிங்கள நூல் சிறப்பித்துக் கூறுகின்றது.
அரசர்
13 ஆம் நூற்றாண்டின் முற்கூற்றிலிருந்து 17 ஆம் நூற் றாண்டு வரை ஆரியச்சக்கரவர்த்தி மரபில் வந்தவர்களே நல்லூ ரிலிருந்து ஆண்டனர். சிங்கையாரியன், கங்கை நாடன், சேது காவலன் என்ற சிறப்புப் பெயர்களையும் செகராசசேகரன் பரராசசேகரன் என்னும் சிங்காசனப் பெயர்களையும் இவ்வரசர்

Page 98
-108
தாங்கியிருந்தனர். பண்டைக்காலத் தென்னாசிய அரசுகளில் வர்ரிசுரிமை குறித்து வரையறையான விதிகள் இடம் பெறவில்லை. தந்தையாண்ட நாட்டை மைந்தன் ஆள்வது மரபாகி இருந்தது. அரசனது மூத்த புதல்வனே ஆட்சிக்குரியவன் என்னும் கேட் பாடு நிலைத்திருந்தது. எனினும், அரசன் தன் விருப்பத்திற் கிணங்கப் புதல்வர்களுள் திறமையும் தேர்ச்சியும்மிக்க ஒருவனைத் தேர்ந்து இளவரசனாக நியமித்தலும் கூடும். அரசன் இறக்குமி டத்து இளவரசர் பால்யப் பருவத்திலிருந்தால் முந்திய அரசனது சகோதரர்சளுள் ஒருவனோ அல்லது ஒர் அமைச்சனோ இளவரசர் பருவமடையும் வரை பிரதிநிதியாக ஆட்சி செய்வதுண்டு.
யாழ்ப்பான வைபவமாலை ஒவ்வொரு அரசனும் இறந்தபின் அவனது மகனே அரசனானான் என்கின்றது. மேலும் முதலாம் சங்கிலி வழக்கத்தை மீறி அரசுக்குரிய தன் தமையனான பரநிருப சிங்கனைப் புறக்கணித்து ஆட்சியைக் கவர்ந்து கொண்டான் என்று சொல்கின்றது. எனவே யாழ்ப்பாண நாட்டில் ஒர் அரச னின் மூத்த புதல்வனே ஆட்சியுரிமை பெற வேண்டுமென்ற கோட்பாடு நிலவியதென்று கருதலாம்.
பட்டாபிஷேகம்
இந்து அரசுகள் அனைத்திலும் இளவரசர் பட்டாபிஷேகம், முடிசூட்டு விழா ஆகிய சடங்குகளைப் முடித்த பின்பே ஆட்சி அதிகாரத்தைச் சட்டபூர்வமாகச் செலுத்த முடியும். ஆரியச்சக் கரவர்த்திகளும் இம்மரபைப் பின்பற்றினார்கள். சிக்கையாரிய னான 1ஆம் ஆரியச் சக்கரவர்த்தியின் முடி சூட்டு விழாபற்றிக் கைலாயமாலை மிக விரிவாகக் கூறுகின்றது. சுபவேளையில் அரசனைப் பல்வேறு நதிகளிலிருந்து கொணரப் பெற்ற புனித நீரினால் அமைச்சர்களும் அதிகாரிகளும் நீராட்டினார்கள். பின் னர், எழில் பொருந்திய பட்டாடைகளை அரசனுக்கணிவித்து வீரக்கழல், பதக்கம் முதலான ஆபரணங்களைப் புனைந்து அரியாசனத்திலமர்த்தினார்கள். மறையவர்கள் மங்கல வாழ்த் துப் பாட, பல் வலக இன்னிசைகள் ஒலிக்க, பாண்டிமழவன் அரசனுக்கு நுதற் பட்டத்தை அணிந்தான். இதே போலப் பட் டத்தரசிக்கும் இளவரசர்க்கும் பட்டங் கட்டுவது வழக்கம். பட் டாபிஷேகம் முடிந்ததும் அரசன் பல்வகைத் தானங்களையும் அளித்துவிட்டு சுற்றத்தவரோடும் உயரதிகாரிகளோடும் விருந்து கொள்வான். முடிசூட்டு விழாக் காலத்திலே தலை நகரம் விழாக்கோலம் காணும். அலங்கரிக்கப்பெற்ற வீதிகள் தோறும் வாழை, கமுகு, கரும்பு முதலிய பசிய மரங்கள் நாட்டப்பட்டு பூரண கும்பங்கள் வைக்கப்படும். விருந்து கொண்டபின் சுற்ற

-109
மும் ஆட்சியதிகாரிகளும் சேனையும் புடைசூழ அரசன் யானை மேலேறி நகரின் வீதிவழியே வலம் வர அவனை நகர மாந்தர் வாழ்த்துவர்.
படைபலம்: இராணுவம்
அமைதியையும் வழமையையும் நிலைநாட்டி மக்களையும் நாட்டையும் காப்பதே மன்னனின் தலையாய கடமைகளாக இருந்தன. வழக்காறுகளைப் பேணி அமைதியை நிலைநாட்டி வரிகளைச் சேர்ப்பதற்கெனப் பலதரப்பட்ட அதிகாரிகளின் சேவை அரசனுக்குக் கிடைத்தது. நாட்டைக் காப்பதற்கென அரசன் படைகளை வைத்திருத்தல் அவசியமாயிருந்தது ஆரியச் சக்கரவர்த்திகள் குறிப்பிடத்தக்க அளவு பலம் பொருந்திய சேனை யைப் பெற்றிருந்தனர். அதனாலே 14 ஆம் நூற்றாண்டின் நடுக் கூற்றில் நிலவிய அரசியல் நிலைகளைக் கூறுமிடத்து சிங்கள வரலாற்று நூலான ராஜாவலிய இலங்கை அரசர்களுள் ஆரியச் சக்கரவர்த்தி பொருள் பலத்திலும் படை பலத்திலும் மேன்மை பெற்றிருந்தான் என்கின்றது. ஆரியச் சக்கரவர்த்தி அழகக் கோனாரை எதிர்த்துப்பல இலட்சக்கணக்கான போர் வீரர்களை அனுப்பியிருந்தான் என்று அவனது படைபலத்தை மிகைப் படுத்திக் கூறுகின்றது,
*" போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்த காலத்தில் முதலாம் சங்கிலி ( கி.பி 1519 - 1561) தலைநகரைப் பாதுகரிக்க 12, 000 இற்கு மேலான போர்வீரர்களை நிறுத்தியி ருந்தான்' என்று குவேறோஸ் சுவாமியார் கூறுகின்றார். எனவே, ஆரியச் சக்கரவர்த்தியின் படைபலம் உன்னத நிலையிலிருந்த காலத்திற் குறிப்பாக 14 ஆம் நூற்றாண்டில் அவனது படையில் 15, 000 போர் வீரர்கள் இடம் பெற்றிருத்தல் கூடும். யாழ்ப் பாண அரசர்கள் தம் படையிற் சேவகம் புரிவதற்குத் தென்னிந் தியாவின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் போர் வீரர்களை அழைப்பதுண்டு. செண்பகப் பெருமாள் என வழங்கிய சபுமால் குமாரீஇ என்ற 6 ஆம் பர: க்கிரமவாகுவின் சேனாதிபதி 15 ஆம் நூற்றாண்டின் நடுக்கூறில் படை எடுத்துக் சென்றபோது கரு Fாடர், கேரளர், தமிழர், துளுவர், வன்னியர், சோனகர் முத லியோரைக் கொண்ட ஆரியச் சக்கரவர்த்தியின் படை அவனை எதிர்த்தது என்று ராஜாவலிய கூறுகின்றது. 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளிலும் இவ்வாறே தென்னித்தியாவிலிருந்தும் குறிப் பாகக் கன்னட நாட்டிலிருந்தும் போர்வீரர்களை யாழ்ப்பாண மன்னர் வரவழைத்ததாகப் போத்துக்கேய நூல்கள் கூறுகின்றன

Page 99
-110
கடற்படை
14 ஆம் நூற்றாண்டளவில் ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தி களிடம் ஒரு பலம் பொருந்திய கடற்படை இருந்தது. அதனை வாணிபத்திற்கும் போரிற்கும் பயன்படுத்தினார்கள். கம்பளை அரசனைத் தாக்கிய பொழுது கடல் வழியாகவும் தரை வழி யாகவும் ஆரியச் சக்கரவர்த்தி தென்னிலங்கைக்குப் படைகளை அனுப்பியிருந்தான். அப்படை நீர்கொழும்பு, சிலாபம், வத்தளை, கொழும்பு, தெமட்டகொடை, கோற்கான என்னுமிடங்களைக் கைப்பற்றியிருந்ததென்று நிகாய சங்கிரகய, ராஜாவலிய முதலிய நூல்கள் கூறுகின்றன. 1344 இல் ஈழத்திற்கு வந்த இவுன் பற் றுற்றா என்ற இஸ்லாமிய அறிஞர் ஆரியச் சக்கரவர்த்தி பலம் பொருந்திய கடற்படையைப் பெற்றிருந்தான் என்றும் கூறுகின் றார். மேலும், இவுன்பற்றுற்றா பாண்டிநாட்டுக் கரைக்குச் சென்றபோது ஒரு நாள் ஆரியச் சக்கரவர்த்தியின் பல்வேறு அளவுகளிலுள்ள நூற்றுக் கணக்கான நாவாய்களை அங்கு தான் கண்டதா? வும், அவை யெமன் என்ற அராபிய நாட்டை நோக்கிச் சென்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். கறுவா, முத்து முதலிய வர்த்தகப் பொருட்களின் வாணிபத்தில் ஈடுபட்டிருந்த ஆரியச் சக்கரவர்த்தி மத்திய தரை நாடுகள் வரை தனது வர்த்தகப் படகுகளை நடத்தி வாணிபம் செய்து வந்தான்.
விஜயநகரப் பேரரசு எழுச்சியுற்றுப் பாண்டி நாட்டையும் கைப்பற்றியபின் மதுரையிலிருந்து விஜய நகரப் பிரதானிகள் இலங்கைமேற் படையெடுத்த காலத்தில் அவற்றை எதிர்த்து நிறுத்துவதற்கு ஆரியச் சக்கரவர்த் தி போதிய படைபலம் பெற்றி ருக்கவில்லை. எனவே, தொடர்ச்சியாக, நெடுங்காலமாக விஜ யநகரமேலாட்சி ஏற்படலாயிற்று.
நிர்வாகம்
ஆரியச் சக்கரவர்த்தியின் அதிகாரத்துளமைந்த பிரதேசங்கள் பல தரப்பட்ட பிரதானிகளால் ஆளப்பட்டன. நிலப் பிரபுக்களும் செல்வாக்குப் பெற்றவர்களும் நிர்வாகத்தில் உயர் பதவிகளைப் பெற்றிருந்தனர். பல பதவிகள் பரம்பரை உரிமையாக இருந்து வந்தன.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள வலிகாமம், தென்மராட்சி, பச்சிலைப்பாலை, வடமராட்சி என்ற நான்கு மாகாணங்களும் குடா நாட்டிற்கு வெளியிலுள்ள பூநகரி, பல்லவராயன் கட்டு, இலுப்பைக்கடவை, மாதோட்டம், மன்னார்த்தீவு என்பனவும்

--111
அரசனின் நேரடியான நிர்வாகத்திலமைந்தன. இவற்றை ஆளு வதற்கென அதிகாரிகளை மன்னன் நியமித்தான், யாழ்ப்பாணப் பட்டினத்திலுள்ள நிர்வாக அதிகாரிகளுள் வன்னியனாரைத் தவிர மாகாண அதிகாரிகளே உயர்பதவியையும் அதிகாரத்தையும் பெற்றிருந்தனர். அதிகாரிகளுக்கு அரசன் சன்மானமளிக்காது அவர்கள் ஊதியமாக மக்களிடமிருந்து உணவு முதலியவற்றைப் பெற்றனர். காலப் போக்கில் இவ்வழக்கம் தவிர்க்கப்பெற்று மக் களுள் ஒவ்வொருவரும் அதிகாரிகளுக்கெனக் காசு வழங்க வேண்டி யிருந்தது. முதிர்ச்சியடைந்த உழைக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு வரும் ஆண்டுதோறும் ஒவ்வொரு பணத்தைக் கொடுக்கவேண்டும்.
அதிகாரி எனும் பதவி வட இலங்கையில் வழக்கில் எப்போது வந்ததென நிர்ணயிப்பது கடினம். அதிகாரிகளின் பதவியும் கட மையும் காலத்திற்குக்காலம் நாட்டிற்கு நாடு வேறுபட்டிருந்தன. சோழ நிர்வாகத்தில் அதிகாரிகள் என வழங்கிய பிரதானிகள் ஆட்சிமுறையிற் சிறப்பிடம் பெற்றிருந்தனர். மேலும், பல்வகைத் திணைக்களங்களுக்கும் இவர்கள் பொறுப்பாக இருந்தனர். பாண் டியராட்சியில் 13 ஆம் நூற்றாண்டில் அதிகாரிகள் பிரதேச அடிப்படையில் அதிகாரம் பெற்றிருந்தார்கள். முதலாம் மாற வர்மன் சுந்தர பாண்டியனது திருப்பூவணம் செப்பேடுகளில் "முத்தூற்றுக்கூற்றத்து அதிகாரம் அழகப் பெருமாள்' என்ற மொழித் தொடர் வருகின்றது. இத் தொடரிலிருந்து முத்தூற் றுக் கூற்றம் எனும் இடத்திற்கு அழகப்பெருமாள் அதிகாரியாக இருந்தான் என்பது தெளிவாகின்றது.
விஜயநகரப் பேரரசில், குறிப்பாகக் கன்னட நாட்டின் அமைச் சர்கள், தண்டநாயக்கர் போன்றோர் தள அதிகாரி, சைன்ய அதிகாரி, சாமந்த அதிகாரி என அழைக்கப்பெற்றனர். மேலும் ஊர்த்தலைவரும் நகர முதல்வர்களும் அதிகாரி என அழைக்கப் பெற்றனர்.
ஈழ நாட்டின் பத்தாம் நூற்றாண்டு தொடக்கம் ஆட்சி ஆவ னங்களில் அதிகாரி, தமிழதிகாரி என்ற சொற்கள் இடம்பெறு கின்றன. 4ஆம் கஸபனது காலத்தில் உதுர் பாண்டிரதுன் என்ற ஓர் அதிகாரி இருந்தான். முதலாம் பராக்கிரமபாகுவின் (கி. பி. 1153 - 86) காலத்தில் அதிகாரி எனும் பட்டத்தைப் பெற்ற பல பிரதானிகள் இருந்தனர். நிஸங்கமல்லனது(கி.பி.1187-96) அமைச் சரவையில் மூன்றுக்கு மேற்பட்ட அதிகாரிகள் இருந்தனர். சாகஸ் மல்லனை அரசனாக்கிய பிரதானிகளுள் அதிகாரிகளும் இடம் பெற்றனர். எனினும் பொலநறுவைக் காலத்திற் சிங்கள மன்ன ரின் நிர்வாகத்தில் இடம்பெற்ற அதிகாரிகள் தனியான பிரதே

Page 100
س-112ست . .
சங்களுக்குப் பொறுப்பாக இருந்ததற்குச் சான்றில்லை. மேலும் அதிகாரி என்ற சொல்லே தென்னிந்தியத் தொடர்பின் வழியா கத்தான் ஈழ நாட்டு நிர்வாக முறையில் இடம் பெற்றது.
யாழ்ப்பாணப் பட்டினத்து அதிகாரிகள் கடமையிலும் அதி காரத்திலும் பாண்டிய அரசிலும் விஜய நகர அரசிலுமிருந்த அதிகாரிகளையே ஒத்துள்ளனர். மாகாணங்களை நிர்வகிப்பதில் அதிகாரிகளுக்குத் துணையாக முதலியார் பண்டாரப்பிள்ளை, கண்காணி, உடையார், தலையாரி, அடப்பனார், பட்டங்கட்டி என்போர் இருந்தனர்.
முதலியார்
முதலியார் என வழங்கிய பிரதானிகள் வரி சேர்ப்போருக்கு உதவி புரிந்ததோடு மக்களிடையில் எழும் தகராறுகளை விசா ரித்து நீதிவழங்கும் பொறுப்பினையும் பெற்றிருந்தனர். மேலும் யாழ்ப்பாணத்தில் தேச வழமை என்றும் வன்னியர் நாட்டு வழமை என்றும், வழங்கிய குடியியல் உரிமைகள் பற்றிய வழக்காறுகளை இவர்களே பேணி வந்தனர், மாகாணங்களில் உள்ள நிலைமை களை அவதானித்து இடையிடையே அதிகாரிகளுக்கு இவர்களே அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் மாகாணங்களில் இடம்பெறும் பொது நலசேவைகள் யாவற்றையும் முதலியார்கள் மூலமே அதிகாரிகள் நடப்பித்து வந்தனர். முக்கியமான அரசி யல் சமூக நிகழ்ச்சிகளில் முதலியார்கள் முதன்மை பெற்றிருந் தனர். வன்னி நாட்டில் ஆடிப்பிறப்பு, தைப்பொங்கல், புத்தாண்டு முதலிய தினங்களில் மக்களின் சில தரப்பினரின் சேவைகளைப் பெறுவதற்கு இவர்கள் உரிமை பெற்றிருந்தனர். அத்துடன் வில் லுக்குஞ்சம், ஒட்டுவிளக்கு, பாவர்டை, கொடி, தாரை, நாதஸ் வரம், முரசு முதலியனவும் இவர்களின் பதவிச் சின்னங்களாக அளிக்கப்பட்டிருந்தன. மேலும் இவர்களின் நிலங்கள் சிலவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
சிங்கள நிர்வாக முறையிலும் தமிழ் நாட்டு அரசியலிலும் முதலிகள் இடம் பெற்றிருந்தனர். பொலநறுவைக் காலத்தின்பின் உள்ள சிங்களக் கல் வெட்டுகள் முதலிகள் பற்றிக் குறிப்பிடுகி ன்றன. அதிகாரிகள் முறையைப் போல முதலியார் முறையும் தமிழ் நாட்டிலிருந்தே இலங்கையை அடைந்தது. சோழர் பாண் டியர் காலங்களில் தமிழ்நாட்டிலுள்ள முதலியார்கள் படைப்பிரிவு களின் தலைவர்களாகவும் வழக்காறுகளை ஆய்ந்து மக்களிடை யிலுள்ள தகராறுகளை விளங்கித் தீர்க்கும் தலைவர்களாகவும் அரசனுக்குரிய வரிகளைச் சேகரிப்பதில் ஈடுபடும் தரப்பினராகவும்

-113
அமைந்திருந்தார்கள். யாழ்ப்பாணத்து முதலியார்களின் பணிகள் சோழ, பாண்டிய முதலியார்களின் பணிகளை ஒத்துள்ளமை கவனித்தற்பாலது. முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி முதலியார் பட்டத்தைப் பெற்ற பல பிரதானிகளைப் பல ஊர்களின் அதிபர் களாக நியமித்தான் எனக் கைலாயமாலை கூறுகின்றது.
பண்டாரப்பிள்ளை
அரசனுக்குரிய வரிகளைப் பண்டாரப் பிள்ளை என வழங்கிய சேவகர்கள் மக்களிடமிருந்து பெற்றனர். தலைவரி, நிலவரி, வாரம் (தானியவரி), இனவரி (தொழில் வரி), அதிகாரி வரி (அதி காதிக்கம்) என்பனவற்றையும் மக்களிடமிருந்து அறவிட்டதோடு மன்னனுக்கு மக்கள் புரிய வேண்டிய சேவைகளையும் இவர்கள் நடத்துவிக்க வேண்டியிருந்தது. வரிசேர்க்குமிடத்து இவர் ஊர்க ளுக்குப் பண்டாரப்பிள்ளை தலையாரியோடு கூடிச் செல்வது வழக்கம். வரி கொடுக்கப் படாதவிடத்து நாட்டு வறுமைக்கு ஏற்ப அவர்களின் உடைமைகள் வரி இறுக்கும் வரை கவர்ந்து கொள்ளப்படும்.
ஒவ்வொரு மாகாணத்திலும் பல பண்டாரப் பிள்ளைகள் சேவை புரிந்தனர். அவர்களின் தொகை மாகாணத்தின் அளவிலும் மக்கள் தொகையிலும் தங்கியிருந்தது. 17 ஆம் நூற்றாண்டில் வடமராட்சியில் 6 பண்டாரப்பிள்ளைகளும், பச்சிலைப்பாலையில் 4 பண்டாரப் பிள்ளைகளும் சேவை புரிந்தனர்.
கண்காணி
கண்காணிகளின் கடமைகள், உரிமைகள் பற்றியறியப் போதிய சான்றுகள் காணப்படவில்லை. தமிழ் நாட்டு ஆட்சி யாவணங்களில் வரும் கண்காணி என்ற பதத்தின் பொருளை விளக்கியே யாழ்ப்பாணத்துக் கண்காணிகளைப் பற்றி ஒருவாறு அறியலாம். சோழரின் கல்வெட்டுகளிற் புரவுவரித்திணைக் களத்துக்கண்காணி பற்றிய குறிப்புகள் வருகின்றன. கண்காணி எனும் சொல் நிலவரி பற்றிய கணக்குகளைப் பரிசோதனை செய்யும் துரையையும் அதில் சேவகம் புரியும் ஊழியரையுங் குறிக்கின்றது. சில சோழக் கல்வெட்டுகளில் 'நாட்டுக் கண்காணி நாயகம் செய்வோர்' என்ற மொழித்தொடர் வருகின்றது. இதில் **கண்காணி’ என்னும் பதம் நில அளவை, வரி மதிப்பீடு ஆகிய வற்றை மேற்பார்வை செய்த சேவைகளைக் குறிப்பிடுகின்றது.

Page 101
ー114ー
வேறு சில கல்வெட்டுகளில் 'கண்டு கண்காணிச்சு மேல் வாரம் கொள்ளக் கடவதாகவும்” என்ற மொழித் தொடர் நிலங்களைச் செவ்வனே மதிப்பிட்டு அரசனுக்குரிய பங்கினைச் சேர்க்க வேண்டும் என்ற பொருளைத் தருகின்றது. எனவே, இக்கல்வெட்டு களில் வரும் சான்றுகளிலிருந்து கண்காணித்தல் என்ற பதம் வரி மதிப்பீட்டையும், கண்காணி என்னும் பதம் அம்மதிப்பீட்டை நடத்திய சேவகனையும் குறிக்கின்றன என்பது தெரிகிறது.
இதனால் நில அளவையை நடாத்துவதில் கண்காணிகள் பங்கு கொண்டனர் என்பது தெளிவாகிறது. மேல்வருவனவற்றி லிருந்து யாழ்ப்பாணப் பட்டினத்துக் காண்காணிகளும் இறைவரி நிர்வாகத்திற் பெரும் பங்கு கொண்டிருந்தனர் என்று கருதலாம்.
கணக்கப்பிள்ளை என்போர் வரவு செலவு பற்றிய கணக்கு களுக்குப் பொறுப்பாக இருந்ததோடு இலிகிதர்களாகவும் கடமை புரிந்தார்கள். உடையார் மணியம் என வழங்கிய பிரதானிகளின் கடமைகள் இவ்வாறிருந்தன என்று கொள்வதற்குத் தக்க சான்று களில்லை.
260hluss
தென்னிந்தியாவில் உடையார் என்னுஞ் சொல் பெரு வழக்கி லிருந்தது. சிற்றுார்த் தலைவர் முதல் அரசன் ஈறாக உள்ள பல தரத்திலுள்ளவரையும் உடையார் என வழங்கலாயினர். சோழ மனனர்களை அவர்களின் ஆவணங்கள் உடையார் என்றும் வர்ணிக்கின்றன. கன்னட நாட்டிலும் இளவரசர், அமைச்சர்கள் முதலியோர் உடையார் எனும் விருதினைக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் பேரூர்களின் தலைவர்கள் ஆவணங்களிலே உடை யார் எனச் சுட்டப்பெற்றுள்ளனர். பல நிர்வாக ஏற்பாடுகளில் இவர்களின் உதவி தேவைப்பட்டது. ஊர்களிலுள்ள நிலங்களை அரசனது அதிகாரிகள் தானமாக வழங்குமிடத்தோ விற்கு மிடத்தோ ஆவணங்களில் உடையாரின் ஒப்பத்தைப் பெறுவது வழக்கம் இலங்கையிற் சோழர் ஆட்சிக்காலத்தில் உடையார் என்ற பட்டத்தைக் கொண்ட பிரதானிகள் இருந்தனர். முதலாம் இரா ஜேந்திரனது மாதோட்டக் கல்வெட்டு சிறுகுளத்துார் உடையான் தேவனைப் பற்றிக் கூறுகின்றது. சோழராட்சிக் காலம் தொடக் கம் வட இலங்கையில் உடையார் என வழங்கிய நிர்வாகிகள் இருந்திருத்தல் கூடும். உடையார், முதலியாரின் அதிகாரத்துள்ள மைந்து ஊர்களில் அமைதியை நிலை நாட்டி வரிகளைச் சேர்த் துக் கொள்வதற்கு உதவி புரிந்திருத்தல் வேண்டும்;

-115
மணியகாரன்
பேரூர்களின் தலைவர்களாக மண்டி) ரின் என்ற பட்டத் தினைக் கொண்டோருமிருந்தனர். 174 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒல்லாந்தர் சளின் ஆவணங்களும் நல்லமாப்பாண வன்னி யன் பட்டயமும் மணியம் என வழங்கிய பிரதானிகள் யாழ்ப் பாணப் பட்டினத்திலுமிருந்தனர் என்பதற்குச் சான்றளிக் கின்றன.
விஜயநகரச் செல்வாக்கின் விளைவாகவே மணியம் என்ற பதவியைப் பெற்ற தலைவர்கள், யாழ்ப்பாண மன்னர்களின் நிர்வாகத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் நாட்டிலும் விஜயநகர ஆட்சி ஏற்பட்டபின்னரே மணியம் என்ற தலைவர் நிர்வாகத்தில் இடம் பெறலாயினர்.
தலையாரி
ஊர்த்தலைவர்கள் தலையாரிகளென அழைக்கப்பட்டனர். பட்டங்கட்டி, அடப்பனார் என்போர் மீனவர்கள், பரவர் ஆகியோர் வாழும் ஊர்களின் தலைவராய் இருந்தனர். ஊர்த் தலைவர் வாயிலாகவே அரசனுடைய அதிகாரிகளும் பிற சேவ கர்களும் மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர், தலையாரி முதலிய பதவிகள் பரம்பரை உரிமையாக இருந்தன. தலையாரி ஒருவன் அரசனுக்கு 60 சக்கரத்தைக் கொடுப்பதன் மூலம் தன் மசனுக்கு அப்பதவியை வழங்கலாம். புதல்வர் இல்லாத இடத்து இவ்வாறு பணத்தை அரசனுக்கு கொடுத்துத் தன் உறவினருள் ஒருவனை வாரிசாகத் தலையாரி தெரிந்து கொள் ளலாம். அவ்விடத்துத் தலையாரியும் அவனிடமிருந்து பொறுப் பேற்பவனும் தனித்தனியாக 60 சக்கரம் காசினை அரசனுக்கு அளிக்க வேண்டும். தலையாரியின் சேவைகளுக்கீடாக அரசன் சில வயல்களையும் பிற நிலங்களையும் வரியிலி நிலங்களாக வழங்கியிருந்தான்.
பட்டங்கட்டிகளும் அடப்பனாரும் கடற்றொழிலில் ஈடுபடும் ஒவ்வொரு தோணிக்கும் அதன் அளவிற்கேற்ப ஒரு பணத்தை அல்லது இரண்டு பணத்தைப் பெறுவதற்கு உரிமை பெற்றிருந் தனர். ஊர்களில் சில தகராறுகளைத் தீர்த்து அமைதியை நிலை நாட்டுவதோடு முதலியார்களும் பண்டாரப் பிள்ளைகளும் தத் தம் பணியை நிறைவேற்றத் தலையாரிகள் ஆதரவு புரிந்தனர்.
மாகாண அதிகாரிகளைத் தவிர, சில சாதியினரின் தலை வரும் அதிகாரிகள் என அழைக்கப்பட்டனர். தச்சர், கொல்லர்,

Page 102
-1 16
வண்ணார், சீவல் தொழிலாளர், கரையார், கைக்கோளர் முத லியோரின் அதிகாரிகள் தத்தம் சாதிகளைச் சேர்ந்தவர்களிடையே
அதிகாரம் பெற்றிருந்ததோடு அரசனுக்குரிய வரிகளையும் அவர் களிடமிருந்து சேர்த்தார்கள்.
வன்னியனார்
வன்னியம் எனவும் வன்னியனார் எனவும் வழங்கிய குறுநில மன்னர், பனங்காமம், முள்ளியவளை, தென்னமரவடி, கரிக்கட்டு மூலை, செட்டிகுளம். மேற்பற்று, கொட்டியாரம், திருகோண மலை முதலிய வன்னிநாடுகளை ஆண்டு வந்தனர். இவ்வன்னி யர்கள் அரசனது மேலானைக்குள் அமைந்திருந்தும் தம் நாடுக ளைத் தாமாகவே ஆண்டு வந்தனர். மேலும் வன்னியர்கள் தலைமுறை தலைமுறையாக ஆளும் முறையும் வழக்கிலிருந்தது. வன்னியர்கள் ஆண்டு தோறும் யாழ்ப்பாணப் பட்டினத்திற்குச் சென்று வரிசைகள், யானை முதலியவற்றைத் திறையாகக் கொடுத்தனர்.
வன்னி நாடுகளிலுள்ள நிலவரி, வாரம், தலைவரி, இனவரி போன்ற யாவும் வன்னியராலே சேர்க்கப்பட்டன. அத்தோடு வன்னி நாடுகளில் முதலியார் பண்டாரப்பிள்ளை முதலிய எல்லா அதிகாரிகளையும் வன்னியரே நியமித்து வந்தனர், வன்னி நாட்டு நிர்வாகம் யாழ்ப்பாண அரசனின் நேரடி ஆணைக்குள்ள தனைப் பெரிதும் ஒத்திருந்தது. எனினும் ஒரு வன்னி நாட்டின் உட்பிரிவுகளை முதலியார்களே ஆண்டனர். வன்னியர்களும் தத் தம் படைகளை வைத்திருந்ததோடு தம் நிலையைக் குறிக்கும் வண்ணம் சாமரம், பவளக்குடை, மணியாசனம் போன்றவற்றைப் பெற்றிருந்தார்கள். திருமலை வன்னியனார் மரகத சிம்மாசனத் தைக் கொண்டிருந்ததாகக் கோணேசர் கல்வெட்டுக் கூறுகின்றது, புத்தளத்திலிருந்த முக்குவர் ராஜவன்னியர் என்ற விருதினை யும் வெள்ளிவாள், கவசம், கணையாழி போன்றவற்றையும் கொண்ட சமக்கட்டினையும் தங்கள் சின்னங்களாகக் கொண் டிருந்தனர். முக்குவரின் சமூக அமைப்பு வேறுபட்டிருந்தது. அதற்கேற்பச் சாதியமைப்பு, மருமக்கள் தாய முறையின் வழியாக அமைந்திருந்தது.
புத்தளத்து முக்குவ வன்னிமையில் 16 ஆம் நுாற்றாண்டில் 18 உறுப்பினரைக் கொண்ட முத்திர கூடம் என வழங்கிய ஒரு நீதி மன்றம் நிலைபெற்றிருந்தது. திருகோணமலை வன்னியனார் தனி யுண்ணாப்பூபால வன்னியன் என்ற புகழ் மிக்க விருதினைப் பெற்றி ருந்ததோடு ஏனைய வன்னியரைக் காட்டிலும் கூடிய சுதந்திரமும்

-117
அதிகாரமும் பெற்றிருந்தான். கோணேசர் கோயிலின் வழமை களையும் நிறுவனங்களையும் நிலங்களையும் பராமரிப்து திருமலை வன்னியனாரின் பொறுப்பாகவே இருந்தது. மேலும் நாட்டு வழமை என்ற வழக்காறுகளை வன்னியனார் நிலை நாட்டி வந்தனர்.
வரிசை
ஆண்டு தோறும் இருமுறை தலைநகரில் அரசன் வரிசைகளைக் கூட்டினான். தலையாரி முதல் அதிகாரி வரை உள்ள நிர்வாகத்தி லிடம் பெற்ற சேவகர்கள் அனைவரும் வரிசையிற் பங்கு கொள்ள வேண்டும் தலையாரிகளும் பிற தலைவர்களும் உணவுப் பொருட் களையும், கனி வர்க்கங்களையும் கோழிகளையும் தலைநகருக்குக் கொண்டு செல்வது வழக்கம். ஒவ்வொரு சாதியினரும் தத்தம் தகுதிக்கேற்பப் பொருட்களை எடுத்துச் சென்றனர்.
வன்னியரும் பூநகரி, பல்லவராயன் கட்டு, இலுப்பைக் கடவை முதலிய இடங்களைச் சேர்ந்தவரும் ஆண்டுக்கு ஒரு முறை யாழ்ப்பாணப் பட்டினத்திற்குச் சென்றனர். எனினும், வெண் ணெய், கோழி முதலியவற்றை ஆண்டுக்கு இருமுறை தலை நகருக்கு அனுட் பினார்கள். இவ்வழக்கத்தின் மூலம் அதிகாரிகளின தும் சேவகர்களினதும் ஆதரவை அறிந்து கொள்வதோடு நாட்டு நிலைகளையும் அவர்கள் வாயிலாகப் புரிந்து கொள்வதற்கும் அரசன் வாய்ப்பினைப் பெற்றான். பல திறத்து அதிகாரிகளும் தம் தேவைகளையும் தம் அதிகாரத்தின் கீழமைந்த மக்களின் நிலைமைகளையும் அரசனுக்கு எடுத்துரைத்துத் தேவையான ஏற் பாடுகளைப் பெறுவதற்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார்கள்.
அரசனின் வருமானம்
யாழ்ப்பாண அரசர்களின் பொருளாதார நோக்கு, நாட்டு மக்களின் அயரா உழைப்பு, கைத்தொழில் முயற்சி முதலியனவும் தென்னிந்தியாவோடு நடைபெற்ற துரிதமான வாணிபமும், பொருள்வளமும், பணவளமும் பெருகுவதற்கு ஏதுவாக இருந்தன.
'14030 பதக்கம் காசு, 180 கண்டி அரிசி, 670 கண்டி பிறதானி யங்கள், வெண்ணெய், பால், எண்ணெய் முதலியன வரிசை வழி யாகப் பெற்ற உபகாரங்கள், 36 யானைகளை அரசன் ஆணடு தோறும் திறைய கப் பெற்றதாகப் போத்துக்கேய அறிக்கைகள் குறிக்கின்றன. அரசனது வருமானம் இன்ன இன்ன என அதன் பெறுமதி வரையறுத்துக் கூறாத பொழுதும் யாழ்ப்பாண அரசு தளர்ச்சியுற்று வீழ்ச்சியடையும் காலத்தில் அரசர்கள் பெற்றிருந்த வருமானம் பற்றி அறிந்துகொள்ள ஒரளவு இவை துணை புரிகின்றன.

Page 103
-118
நிலவரி
நிலவரியிலிருந்தே அரசன் கூடுதலான வருமானத்தைப் பெற் றான். யாழ்ப்பாணப் பட்டினத்தில் விளை நிலங்கள் பெரும் பாலும் தனியாரின் உடைமையாகவே இருந்தன வாரம் காணிக் கடன் என நிலவரி இருதிறப்பட்டிருந்தது. நிலங்களை வைத்திருப் போர் அவற்றின் தன்மைக்கேற்ப அரசனுக்கு ஆண்டுதோறும் குறிக்கப்பட்ட பணத்தை வரியாகச் செலுத்த வேண்டியிருந்தது. இதுவே காணிக்கடன் என வழங்கிவந்தது. விளைபொருளில் அரசனுக்குரியது வாரம் எனப்பட்டது. நிலங்கள் அளக்கப் பட்டு நிலத்தின் உற்பத் தி க் கே ற் ப வாரம் மதிப்பிடப்பட் டிருந்தது, பொதுவாக விளைநிலங்கள் மூன்று தரத்த னவாக வகுக்கப்பட்டிருந்தன. குளி, லாச்சம், என்னும் பிரிவுக களைக் கொண்ட நில அளவை முறை வழக்கில் வந்தது சோழ ராட்சியில் தமிழ் நாட்டிற் போல ஈழத்திலும் வேலி, காணி, குளி, முத்திரிகை என்ற பிரிவுகளைக் கொண்ட நில அளவை முறை நிலவி வந்தது. எனினும் இப்பிரிவுகளுள் குளி மட்டுமே வட இலங்கையிலே தொடர்ந்து நிலை பெற்று வருகின்றது.
சிங்கள மன்னர்களின் ஆட்சியில் நிலப்பரப்புகளை நீட்டல் அளவையைக் கொண்டு அளந்து குறிக்கும் முறை இருக்கவில்லை. விதைக்கப்படும் தானியத்தின் அளவைக் கொண்டே நிலத்தின் அளவைக் கணித்தனர். நான்கு நாழி தானியத்தைக் கொண்ட அளவே லாஹம் எனப்படும். அனுராதபுர மன்னர் காலத்தில் இருந்த லாஹமே திரிந்து லாச்சம் எனத் தமிழில் வழங்கலாயிற்று. ஆனால் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் 12 குளியைக் கொண்ட நிலமே ஒரு லாச்சமாகக் கொள்ளப்பட்டது. ஆரியச் சக்கரவர்த்திகள் தமிழ்நாட்டு அரசர்களைப் போலல்லாது வேறு பாடுகளற்ற ஒரே அளவினதான அளவுகோலை நிலங்களை அளப்பதற்குப் பயன்படுத்தினார்கள் சோழர் காலத்திலும் பாண்டி யர் காலத்திலும் 12 தொடக்கம் 247வரை நீளம் உள்ள கோல்கள் தமிழ்நாட்டில் இடம் பெற்றன. பாண்டியரின் சாசனங்களும் சோழரின் கல்வெட்டுகளும் 12 அடிக்கோல் நில அளவீட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றன. ஆரியச்சக்கரவர்த்திகள் பாண்டி நாட்டிலிருந்து வந்தபோது, இங்கு வட இலங்கையில் 12 அடிக் கோலையே பயன்படுத்தினார்கள்.
தானியவரி
விளைபொருளில் 1/10 பங்கு அரசனுடைய பாகமாகக் கொள்ளப்பட்டது. மாதோட்டத்திலும் வன்னியிலும் தீர்வை

ー119ー
என வழங்கிய தானியவரி விதைக்கப்பட்ட அளவு தானியம் மட்டுமே. நிலத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்ட வரிகளுள் மனைவரி, தோட்டவரி, மரவரி என்பனவும் இடம் பெற்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் அதன அளவிற்கேற்பப் பத்துக் காசு கொண்ட பணம், வரியாக ஆண்டு தோறும் செலுத்தப்பட்டது. தமிழ் நாட்டில் வாசல் பணம், மனை கூலி என்பன இவ்வரியை ஒத்திருந்தன. சிங்கள மன்னரின் நிர்வாக முறையிலும் மனை வரி இடம் பெற்றது. வீட்டை அடுத்துள்ள வளவில் வாழை, கமுகு, முதலிய மரங்களுக்குத் தோட்ட வரி இறுக்கப்பட்டது. பனை, இலுப்பை, வேம்பு போன்ற பயன்தரு மரங்களுக்கு மேலும் வரி விதிக்கப்பட்டது. இலுப்பை, வேம்பு முதலியவற்றின் விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் பெரும்பாலும் விளக்கு எரிப்பதற்குப் பயன்படலாயிற்று. தேவாலயங்களிலும் அரண்மனை முதலிய இடங்களிலும் விளக்கேற்றுவதற்கு வரியாகப் பெறும் இவற்றை அரசன் உபயோகிக்கலாம். 17 ஆம் நூற்றாண்டில் இலுப்பைக்கும் வேம்புக்கும் முறையே 5 காசும் 22 காசும் வரி களாகப் பெறப்பட்டன. பனைமரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு காசு வரியாக இறுக்கப்பட்டது.
தலைவரி
தமிழரசர் காலத்தில் 120,000 பணம் ஆண்டு தோறும் தலைவரி மூலம் கிடைத்தது. தமிழ் நாட்டில் ஆள்வரி, பிள்ளை வரி பேர்கடமை என்பன இதனை ஒத்திருந்தன பருவமடைந் தவர்களிடமிருந்தே தலைவரி பெறப்பட்டது. எனவே, 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணப் பட்டினத்தில் இரண்டு லட்சம் மக்கள் வாழ்ந்தனர். என ஊசிக்கலாம்.
அதிகாரி வரி
விஜயநகரப் பேரரசின் பிரதேசங்களில் இடம் பெற்ற அதி காரிக்கம் என்ற வரியை ஒத்ததே யாழ்ப்பாணத்து அதிகாரி வரியாகும். மாகாணங்களுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரி களின் வாழ்க்கைச் செலவிற்கும், அவர்கள் நிர்வாகக் கடமை களைப் புரிவதற்கும் இவ்வரி சேர்க்கப்பட்டது. வேளாளர் தனக் கரரர், சான்றார் என்ற மூவகைச் சாதியினரில் ஒவ்வொருவரும் இவ்வரியைச் செலுத்த வேண்டியிருந்தது.
இனவரி
வெவ்வேறு தொழில்களைப் புரிகின்ற ஒவ்வெரு சாதியாரிட மிருந்தும் அரசன் பெற்ற வரி இனவரி என வழங்கியது. தச்சர், கொல்லர், கைக்கோளர், கன்னார் போன்றோர், இவ்வரியைச்

Page 104
-120
செலுத்தினார்கள். தென்னிந்தியாவில் நூலாயம், தறிக்கடமை, செக்குக்கடமை போன்ற இனவரிகளை வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக அளிக்கும் வழக்கம் நிலவிவந்தது. ஆனால், யாழ்ப்பாணப் பட்டினத்தில் ஒவ்வொரு சமூகத்தினரும் இன வரியைக் கூட்டாகவே அரசனுக்குக் கொடுத் தார்கள். சிங்கள நிர்வாக முறையில் இடம் பெற்ற வத்த என்ற வரி இதனை ஒத்திருந்தது.
ஊழியம்
நாட்டிலுள்ள மக்கள் வரியிறுப்பதோடு ஊதியம் பெறாது ஊழியம் என்ற சேவையை அரசாங்கத்துக்கு ஆற்ற வேண்டியி ருந்தது. இவ்வாறான சேவையை மாதத்தில் ஒரு நாளைக்குச் செய்தார்கள். முதியவர்களும் அங்கவீனர்களும் ஊழியம் செய்யும் பொறுப்பிலிருந்து நீக்கப் பெற்றிந்த போதும் அவர்கள் பாய், எரிபொருள் போன்றவற்றை வழங்கவேண்டும். மாகாணங்களி லுள்ள முதலியார்களும் தலையாரிகளும் ஊழியத்தைச் செய்விக் கும் பொறுப்பினையும் அதைக் கண்காணிக்கும் பணியினையும் பெற்றிருந்தனர். எனினும், ஊழியச் சேவையில் பல ஊழல்களும் இடம் பெற்றிருந்தன. முதலியார்களும் தலையாரிகளும் தம் உறவினருக்கும் உற்றாருக்கும் இப்பொறுப்பிலிருந்து விலக்கு வழங் குவதுமுண்டு. எனவே, வறியவர்களும் செல்வாக்கற்றவர்களும் பெரிதும் இச்சேவையில் இன்னல்களையுற்றனர். நெற்களஞ்சியங் களை அமைத்தல், வாடி வீடுகளை அமைத்தல், தெருக்களை அமைத்துப் பேணுதல், இரவிலே நிர்வாகக் கடமைகளைப் புரிகின்ற அதிகாரிகளின் வசதிக்காக விளக்கேற்றிச் செல்லுதல், பொருட் களை ஏற்றிச் செல்ல மாடுகளையும், வண்டிகளையும் அளித்தல், அதிகாரிகள் தம் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டுப் பிர யாணம் செய்கையில் முரசு, நலசேவைகளை அளித்தல், ஆகிய பணிகளை ஊழியத்தின் மூலம் செய்விக்க முடிந்தது. மேலும் மக்கள் செய்ய வேண்டிய ஊழியம் அவர்களின் தொழில், சமூக நிலைமை என்பனவற்றிலேயே தங்கியிருந்தது.
முத்துக்குளிப்பு
மன்னார்க் கடலில் நடைபெற்ற முத்துக் குளிப்பிலிருந்து ஆரி யச்சக்கரவர்த்தி அதிக வருவாயைப் பெற்றான். 13ஆம், 14 ஆம் நூற்றாண்ட ளவில் மிகப் பேரளவிலே முத்துக்கள் காணப்பட்டன. 14ஆம் நூற்றாண்டில் ஈழம் வந்த ஜோர்டன்ஸ் பாதிரியார் எண்ணாயிரம் படகுகள் முத்துக்குளிப்பில் ஈடுபட்டதைக் கூறினார். ஆரியச் சங்கரவர்த்தியை அரண்மனையிற் சந்தித்த இவுன் பற்

-121
றுற்றா என்பவரும் அவ்வரசனிடம் தரத்தால் உயர்ந்த பெருந் தொகையான முத்துக்கள் இருந்தன என்றும் வேறு நாடுகளிலே தாம் கண்டவற்றைக் காட்டிலும் அவை தரத்தில் உயர்ந்தன என்றும் கூறியுள்ளார். அக்காலத்தில் மன்னார்க் குடாவில் இருந்து பெறப்பட்ட முத்துகளை உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் வாங்கிச் சென்றனர். இவை அழகு சாதனப் பொருளாக உபயோகத்திலிருந்ததால் அரசனும் வணிகர்களும் முத்துகளினால் அதிக செல்வம் பெற்றனர்.
முத்துச் சிலாபத்தைக் குறித்து, புவனேகபாகு என்ற அரச னோடு சிங்கையாரியன் பொருதான் என்று யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகின்றது. இதனை நோக்கும் போது, யாழ்ப்பாண மன் னன் முத்துச் சிலாபத்தைத் தன்வசப்படுத்துவதிற் பெரிதும் கவனம் செலுத்தினான் என்பது தெளிவாகின்றது. சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களிலே முத்துக் குளிப்பு நடைபெற்றது. 14ஆம் நூற் றாண்டில் ஆரியச்சக்கரவர்த்திகள் முத்துக்குளிப்பினை ஏகபோக உரிமையாக்கித் தாமாகவே நடாத்தி வந்தனர். முத்துக்குளிப்பு நடக்கின்ற இடங்களிற் படைகளை நிறுத்திக் காவல் புரிய வேண்டி யிருந்தது. அரசனது கண்காணிகளின் கண்காணிப்பில் முத்துக் குளிப்பு நடைபெறுவதற்கு முன் பல கட்டிடங்கள் அமைக்கப்பட் டன. இம்மாதங்களில் பேரளவிற் முத்துக்குளிப்பவரும் அதனை மேற்பார்வை செய்யும் அரசனது அதிகாரிகளும் கூடுவது வழக்கம். மாதோட்டத்தில் முத்துக்குளிக்கும் காலத்திற் குறிப்பிடத்தக்க வாணிபம் நடக்கும்; அத்துடன் மாதோட்டத்தில் உள்ள குளங் களைக் குடிநீர் வசதிக்காகச் சுத்தி செய்து பேணவேண்டியிருந்தது.
மேலும் அரிசி, வெண்ணெய், எண்ணெய் முதலிய உணவுப் பொருட்களைக் குறிப்பிடத்தக்க அளவு அரசனது அதிகாரிகள் சேர்த்து வைத்தனர். முத்துக்குளிப்பினை நன்கறிந்திருந்த பட்டல் கட்டிகளின் துணையோடு அரசனது அதிகாரிகள் கடலோரங் களைப் பார்வையிட்டு இன்ன, இன்ன இடங்களில் முத்துக்குளிப்பை நடத்தலாம் என்றும் தீர்மானித்தார்கள். பெருங் கப்பல்களில் மீனவர்கள் சென்று ஆழமான கடலை அடைந்ததும் பின்னர் சிறு சிறு நாவாய்களிற் கூட்டங் கூட்டமாகச் சென்று முத்துக் குளிப்பில் ஈடுபடுவர். நாவாய்களைச் செலுத்துவதற்கென இரு வரும் முத்துக்குளிப்பதற்கு ஒருவரும் கயிற்றினைப் பிடிப்பதற்கு இருவருமாக ஒவ்வொரு நாவாயிலும் ஐவைந்து பேர் செல்வது வழக்கம்.

Page 105
-122
முத்துக்குளிப்பவனை ஒரு கல்லிலே கட்டிய வண்ணம் கடலில் இறக்கி முத்துக்களைச் சேர்க்கையில் நாவாயில் உள்ள இருவரும் அவனைக் கயிற்றிலே பிடித்துக்கொள்வர் முத்துக்களை இயலு மான அளவு சேர்த்தபின் முத்துக்குளித்தவனை நாவாய்களில் உள்ளவர்கள் தோணியில் ஏற்றுவார்கள். இவ்வாறு முத்துக் குளித்தவுடன் அரசனது போர்வீரர்கள் காவல் புரிய, சில நாட் களுக்கு முத்துக்களைச் சேர்த்து அவற்றின் தரத்திற்கேற்ப அர சனது அதிகாரிகள் அவற்றை வகுப்பார்கள்: அரைவாசி முத்துக் களை அரசன் பெறுவான். மிகுதியை நாவாய்களிற் செல்வோர் தம்மிடையே பங்கிட்டுக்கொள்வர். முத்துக்குளிக்கும் மீனவர்கள் துறைகளிலுள்ள வணிகரிடம் தமக்குக் கிடைத்த முத்துக்களை விற்றுத் தேவையான உணவுப் பொருட்களையும் உடைகளையும் பெற்றுக் கொள்ளமுடியும். மேலும், முத்துக்குளிப்பு நடைபெறும் காலத்தில் அங்கு வரும் வணிகர்கள் பொருட்களை வாங்குமிடத் தும் விற்குமிடத்தும் அரசனுக்குக் குறிக்கப்பட்ட வரியினைச் செலுத்த வேன்டும்.
| UIT 60m60T55sir
யானைகளும் அவற்றின் வர்த்தகமும் அரசனின் ஏகபோக உரிமையாக இருந்தன. யானைகளைப் பிடித்துப் பழக்கும் முறை சிங்கள மன்னர் காலம் தொடக்கம் நிலவிவந்தது. பரம்பரை பரம் பரையாக இச்சேவையில் ஈடுபடும் பணிக்கர்கள் இருந்தனர். 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செகராச சேகரமாலை அரசன் பல யானைகளைத் திறையாகப் பெற்றதைக் குறிப்பிடுகிறது. இவற் றோடு பூநகரி. மாதோட்டம் முதலிய இடங்களிலும் யானைகளை அரசன் பிடிப்பித்தான்.
1591 ஆம் ஆண்டில் போத்துக்கேயரோடு ஏற்படுத்திய உடன் படிக்கையில் 12 யானைகளை ஆண்டுதோறும் திறையாக அளிப் பதாக யாழ்ப்பாண அரசன் உறுதி அளித்திருந்தான். 1845 ஆம் ஆண்டைச் சேர்ந்த போத்துக்கேயரின் வரவு செலவு பற்றிய அறிக் கை 27 யானைகளைப் போத்துக்கேயர் பெற்றதாகக் கூறுகின்றது,
இந்தியாவிற் பல்வேறு இடங்களிலும் அரசரும் குறு நில மன் னர்களும் யானைகளை விழாக்களுக்கும் போரிற்கும் பயன்படுத்தி னார்கள். மேலும் பாரமான பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும் யானைகள் பெரிதும் பயன்பட்டன. விஜயநகர அரசிலிருந்தும் வங்காளத்திலிருந்தும் வந்த வணிகர்கள் யானைகளை யாழ்ப்பா ணத்திலிருந்து வாங்கிச் சென்றார்கள். இவ்விதமாக யானைகளை விற்பதன் மூலம் அரசன் அதிக பணத்தைப் பெற்றான்.

-س-123-س-
5 ruG6 fr
வேறு நாடுகளில் உள்ள சாயவேரைப் பார்க்கிலும் ஈழத்திலுள்ளவையே மிகச் சிறந்தனவென்று வெனிசிய தேசத் தவரான மார்கோபோலோ குறிப்பிட்டுள்ளார். மன்னாரிற் சாயவேர் பேரளவிற் காணப்பட்டது. வலிகாமம், வடமராடC என்னுமிடங்களிலும் தீவுப்பற்றிலும் குறிப்பிடத்தக்க அளவிலே சாயவேர் கிடைத்தது. சாயவேரினைச் சேகரித்தற்கும் அரசனே ஏகபோக உரிமையைப் பெற்றிருந்தான்.
தமிழரசர் காலப் பட்டோலைகளை நோக்குமிடத்து அரசர் சில காலங்களிற் சாயவேரினைச் கேகரிசகும் பொறுப்பைக் குத்தகையாளரிடம் கொடுத்திருந்தனர் என்பதை அறியலாம். சில காலங்களில் தமததிகாரிகள் மூலம் தாமாகவே அதனை நடப்பித்து வந்தனர். சாயவேர்களைப் பிடுங்கி எடுத்தல் ஊழிய சேவை மூலம் நடைபெற்றது. அத்தொழிலுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகள் அதனை மேற்பார்வை செய்து வந்தனர். சாயவேர் மூலம் அரசனுக்குக் கணிசமான அளவு வருமானம் கிடைத்ததென்பதைப் போத்துக்கேய ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது.
பொருள் வளமும் மக்கள் வாழ்க்கையும்
விவசாயம்
ஆரியச் சக்கரவர்த்திகள் விவசாயமும் கைத்தொழிலும் வளர்ச்சியடைவதற்கு ஆதரவாக இருந்தனர். விவசாயமே kெரும் பாலான மக்களின் தொழிலாக இருந்தது. குறிப்பிடத்தக்க அள விலே நாட்டு மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் உற்பத்தியாகின. நெல், வரகு, கொள்ளு, குரக்கன் முதலிய தானியங்களும், எள்ளு, பயறு, வாழை, கமுகு, செங்கழுநீர்க் கொழுந்து, கரும்பு, வழுதிலை, பருத்தி முதலியனவும் நாட்டில் உற்பத்தியாகின. விளைநிலங்களிலே பெரும்பாலானவை மக்களின் தனி உடைமைகளாகவே இருந்தன. விளை பொருட்களுள் 1/10 வீதமே அரசனது பங்காகக் கருதப்பட்டது. யாழ்ப்பாணத்தி லுள்ள தானியவரி இலங்கையின் ஏனைய பாகங்களில் உள்ளது டன் ஒப்பிடுகையில் மிகக்குறைந்ததாகவே காணப்படுகின்றது. நீர்ப்பாசன வசதிகளின்மையாலும் விவசாயிகள் பல இடர்ப்பாடு கள்ை எதிர்நோக்கி இருந்ததாலும் தானியவரி இவ்வாறு குறை வாக இருந்திருத்தல் வேண்டும். நாட்டிற் போதிய அளவு நெல் காணப்படாத இடத்து, தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்க ளிலிருந்து அதன ைஇறக்குமதி செய்தார்கள்.

Page 106
-124
கைத்தொழில்
வன்னி ந7ட்டிலே விளைந்த பருத்தி யாழ்ப்பாணக் குடா நாட்டில் நூலாக நெய்யப் பெற்றுப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அத்துடன் நெசவுத்தொழிலும் சாயத்தொழிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்திருந்தன. மாதோட் டம் போன்ற இடங்களில் தமிழரசு ஏற்படுவதற்கு முற்பட்ட காலத்திலே நெசவுத் தொழில் இடம் பெற்றிருந்தது. முதலாம் இராஜேந்திர சோழனது மாதோட்டக் கல்வெட்டு அங்குள்ள நெசவாளரைப்பற்றியும் அங்கு நெய்யப் பெற்ற ஆடைகள் பற்றியும் குறிப்பிடுகின்றது. யாழ் ப் பாணத் தி ல் நெய்யப் பெற்ற பருத்தித்துணிகள் நெடுங்காலம் உபயோகிக்கக் கூடி யனவாக இருந்தன. ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் நெசவுத் தொழில் மேலும் விருத்தியடைந்தது. ஒல்லாந்தர் தென்னிந்தி யாவிலிருந்து மேலும் நெசவாளர்களை வரவழைத்து யாழ்ப்பா ணத்திற் குடியேற்றி நெசவுத் தொழில் விருத்தியடையப் பல வசதிகளை ஏற்படுத்தினார்கள். இங்கு நெய்யப் பெற்ற ஆடைகள் யாவா முதலிய இடங்களுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒல்லாந்த ராற் கொண்டு செல்லப்பட்டன. ஆரியச் சக்கரவர்த்திகள் காலத் திலே சாயமிடுதல் ஒரு தொழிலாக இடம் பெற்றிருந்தது. சாய வேரினை வண்ணமரிக்கும் பொருள்களோடு சேர்த்துக் காய்ச்சிச் சாயம் தயாரித்தனர். பின் துணிகளுக்கு ஏற்ற வண்ணம் பல் வேறு நிறங்களைக் கொண்ட சாயம் இடப்பட்டது. ஒல்லாந்தர் காலத்தில் இத் தொழில் மேலும் விருத்தியடைந்தது. பிற பல கைத்தொழில்களும் குறிப்பிடத்தக்க அளவிலே வளர்ச்சியடைந் திருந்தன.
கொல்லர், பொற்கொல்லர், கன்னார், குயவர், தச்சர் போன்றோரையும் கைக்கோளர், சாயக்காரர் போன்றோரையும் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திற்குக்காலம் தென்னிந்தியாவி லிருந்து அழைத்து வந்தனர் என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. குணவீர சிங்கை.ாரியன் என்ற மன்னன் காஞ்சிபுரத்திலிருந்தும் ஆந்திர தேசத்திலிருந்தும் கைக்கோளரை அழைத்து வந்தான் என்று சொல்லப்படுகின்றது. சிறு கைத்தொழில்களைச் செய்த வர்கள் சிறு, சிறு கூட்டங்களாகச் சேர்ந்தே இவற்றில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தலைமுறை தலைமுறையாகக் குறிப்பிட்ட ஒரு தொழிலைப் பயின்று வந்த மக்களிடையே அவ்வத்தொழி லும் அவர்களின் தனி உரிமையாக இருந்து வந்தது. பொது மக்கள் பெரிதும் மட்பாண்டங்களையே பயன்படுத்தியதால் மட் பாண்டங்களை வனைதலும் ஒரு முக்கியமான கைத்தொழிலாக
 
 

-125
இருந்தது. எனினும், அதிலீடுபடுவோர் தொகையும் குறைவாக இருந்ததென்பதை 1645 ம் ஆம் ஆண்டில் போத்துக்கேயர் தயா ரித்த வருமான அறிக்கைமூலம் அறியலாம். உலோகத்தொழில் சளும் ஆபரண வேலைப்பாடுகளும் தென்னிந்தியாவிலே உன்னத வளர்ச்சியடைந்திருந்தன. அங்கிருந்து வட இலங்கைக்கு வந்த தொழிலாளர்கள் அங்குள்ள தொழில் முறைகளையும் வேலைப் பாட்டு முறைகளையும் இங்கும் பின்பற்றினர் வெள்ளி, செம்பு, முதலிய உலோகங்களாலான பாத்திரங்கள், தேவாலயங்களிலும், செல்வர்களின் இல்லங்களிலும் புழக்கத்திலிருந்தன. இவற்றின் உபயோகத்தினாலும் உலோகத் தொழில்கள் சிறப்புற்றன.
ஆரியச் சக்சரவர்த்திகளின் சேது நாணயங்களின் வனப்பும் எழில் பொருந்திய தோற்றமும் அரசர்களது அக்கசாலைகளிலே தொழில் புரிந்த தொழில் வினைஞர்களின் நுணுக்கமான வேலைப் பாட்டிற்கும் திறமைக்கும் எடுத்துக் காட்டாக அமைகின்றன. யாழ்ப்பாணத்து மக்கள் பிற்காலங்களிற் போல ஆரியச்சக்கர வர்த்திகள் காலத்திலும் தங்க நகைளைப் பெரிதும் பயன் படுத்தி னார்கள். அழகு படுத்துவதற்கும் நகைளைப் பெண்கள் விரும்பி னர்கள். மேலும் சமுதாய நிலையினதும் செல்வத்தினதும் சின்ன மாக ஆபரணங்கள் விளங்கின.
வாணிபம்
யாழ்ப்பாணப் பட்டின அரசு நிலைத்த காலத்திலும் பறங் கியரும் ஒல்லாந்தரும் டை இலங்கையை ஆண்ட காலங்களிலும் யாழ்ப்பாணமும் தென்னிந்தியாவும் வர்த்தக அடிப்படையில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தன. மலையாளம், சோழ மண்டலக் கரை ஆகியவற்றோடு நடந்த வாணிபமானது யாழ்ப் பாணத்துப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருந்தது. அரிசி முதலிய உணவுப் பொருள்களும் தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதியாகின. இவ்வாறாக, பேரளவிலே தென்னிந்தியாவி லிருந்து ஈழ நாட்டிற்குப் பொருள்கள் இறக்குமதியானதால் ஈழம் விஜயநகரப் பேரரசிற்குத் திறை செலுத்தியதாகவும் நம்பப்பட்டது. ஆரியச் சக்கரவர்த்தி விஜயநகர அரசர்க்குத் திறை செலுத்தி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் மென்மையான புடைவைகளும் தென்னிந்தியாவிலிருந்து வட இலங்கைக்கு வந்தன. பொன், வெள்ளி, வெண்கலம், செம்பு, இரும்பு முதலிய உலோகங்ளையும் அங்கிருந்தே பெறவேண்டியி ருந்தது. அத்தோடு யாழ்ப்பாணத்து மக்களின் அன்றாட வாழ்க் கைக்குத் தேவைப்பட்ட பல பொருள்கள் மலையாளத்திலிருந்தும் தமிழ் நாட்டிலிருந்தும் பெறப்பட்டன. காலி முதலிய துறைகளிற்

Page 107
-126
சீனப்படகுகள் விற்ற சில பொருள்களும் வட இலங்கையை அடைந்திருத்தல் கூடும். வட இலங்கையிலிருந்து யானை, முத்து, சங்கு முதலிய பொருள்களை எடுத்துச் சென்று தென்னிந்தியாவில் விற்றனர். விஜயநகர அரசிலும் பாமினி அரசிலும் ஈழத்து யானைகள் தேவைப்பட்டன. விஜய நகர அரசர்கள் மட்டுமே 8,000 யானைகளை வைத்திருந்தனர். 16ஆம் நூற்றாண்டிலே சிறீநாதர் என்ற புகழ்மிக்க தெலுங்குப் புலவர் எழுதிய ஹரி விலாசம் என்ற நூல். நெல்லூார்ப் பட்டினத் திலிருந்த அவசி திப்பையச் செட்டி பற்றிக் கூறுகிறது. இப்பெரு வணிகர் விஜயநகரராயர், பாமினி அரசர் கொண்டவீட்டு ரெட்டி ஆகியோரின் அரண்மனைகளுக்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பதற்கு உரிமை பெற்றிருந்தார். ஈழத்திலிருந்து யா?* களையும் முத்துக்களையும் இவ்வணிகர் பெற்றாரென்று இந் நூல் சொல்லுகின்றது.
13 ஆம் நூற்றாண்டின் முடிவில் காயல் பட்டினமே தென் னிந்தியாவின் தலை சிறந்த பட்டினமாக இருந்தது. மேலும், மன்னார்க்கடலிற் பெறப்பெற்ற முத்துக்கள் காயலிலே விற்கப் பட்டன. அங்கிருந்து முத்துக்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றதாக மார்க்கோ போலோ என்ற வெனிசிய நாட்டறிஞர் கூறுகின்றார். மன்னாரிலிருந்தும் வேறு இடங்களிலிருந்தும் வணி கர்கள் முத்துக்களைச் சேகரித்துக் கொண்டு அத்துறைமுகத்திலே விற்றார்கள். முத்துக்குளிப்பை ஒரு குறிப்பிட்ட காலத்திலே அதாவது சித்திரை வைகாசி மாதங்களில் மட்டுமே நடத்த முடியும். ஆகையால் ஏனைய மாதங்களிற் பரவர் சங்கு குளிப் பார்கள். அக்காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சங்குகள் ஏற்று மதியாகின. வட இந்தியாவிற் குறிப்பாக வங்காளத்தில் இவை பெரிதும் தேவைப்பட்டன. தேவாலயங்களிலே சமய விழாக் களுக்குச் சங்குகள் பயன்படுத்தப்பட்டன. பல்வகைப்பட்ட ஆபர ணங்களும் அழகான சிறு பாத்திரங்களும் சங்கிலே செய்யப் பெற்றன.
யாழ்ப்பாணத்திலே உற்பத்தியான வேறு சில பொருள்கள் தென்னிந்தியப் பிரதேசங்களில் விற்கப்பட்டன. பனையும் அதன் பொருள்களும் மக்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்ததோடு பல சிறு கைத்தொழில்களின் வளர்ச்சிக்கும் மூலமாயமைந்திருந் தன. பனங்சட்டி, கற்கTரம், பனாட்டு, ஒடியல் என்பன உணவுப் பொருள்களாகப் பயன்பட்டன. வெல்லம், சர்க்கரை ஆகியவற் றிற்குப் பதிலாகப் பனங்கட்டியும் கற்காரமும் பயன்படுத்தப்பட்

ー127ー
டன. நாட்டின் தேவைக்கு மேலாக இவைகள் உற்பத்தியாகின. இவை யாவும் சோழ மண்டலத்திலும்தொண்டை மண்டலத்திலும் விற்கப்பட்டன. மேலும் வீட்டுத் தேவைகளுக்கும் விவசாயத் தேவைகளுக்கும் பனைஒலையால் இழைக்கப்பெற்ற பாய், கடகம் போன்றன உதவின. இவற்றையும் யாழ்ப்பாணத்து மக்கள் தென் னிந்தியாவில் விற்க முடிந்தது. அத்தோடு பனை மரமும் பல்வேறு தேவைகளுக்காகச் சோழ மண்டலத்திற்கும் தொண்டை நாட் டிற்கும் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் வேப்பெண்ணெய், இலுப்பையெண்ணெய் ஆகியனவும் தேங்காய், தேங்காய் எண் ணெய், தேங்காய்த் தும்பிலிருந்து திரிக்கப்பட்ட கயிறு போன்றன வும் தென்னிந்தியாவிலும், கிழக்கிலங்கையிலும் விற்கப்பட்டன. இவ்விதமான சிறு கைத்தொழில்களினாலே மக்களுக்குக் குறிப் பிடத்தக்க அளவு ஊதியம் கிடைத்தது. இவற்றை வெளிநாட்டில் விற்பதினாலே உற்பத்தி செய்த மக்கள் தமக்கின்றியமையாத பொருள்களான சில உணவுப் பொருள்களையும் உடைகளையும் வாங்கு வதற்குத் தேவையான பணத்தைப் பெற முடிந்தது.
ஆரியச் சக்கரவர்த்திகள் பலமுற்றிருந்த காலத்தில் வர்த்த கத்திலும் பங்கு கொண்டனர். 14 ஆம் நூற்றாண்டில் தென்னி லங்கையில் ஆரியச் சக்கரவர்த்தி தனது மேலாதிக்கத்தை ஏற் படுத்திய காலத்தில் கறுவா, முத்து போன்றவற்றின் வர்த்தகம் அரசனின் ஏகபோக உரிமையாகவிருந்தது. மலையாளத்திலும் சோழ மண்டலத்திலும் துணி முதலிய பொருள்களை அங்கி ருந்து கொணர்ந்து அரசனுக்கு அளித்துவிட்டுக் கறுவா முதலி யவற்றை வணிகர்கள் பெற்றுச் சென்றார்கள். மேலும் அரசன் வாணிபத்தில் ஈடுபட்டதால் பலம் பொருந்திய வர்த்தகப் படகு களை வைத்திருந்தான். இவை அராபிய நாடுகள் வரையும் சென்று வர்த்தகம் செய்து வந்தன. தென்னிந்தியாவிற்கும் யாழ்ப்பாணப்பட்டினத்திற்குமிடையில் நடைபெற்ற வாணிபத்தில் மலையாளத்தையும் சோழ மண்டலக் கரையையும் சேர்ந்த வணி கர்கள் பெரும் பங்கு கொண்டிருந்தனர்.
13 ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் வாணிபத்தின் பொருட்டு வளைஞ்சியர், மணிக்கிராமம் முதலிய வணிகக் குழுக்கள் ஈழத்திற்கு வந்தன. 14 ஆம் நூற்றாண்டளவில் தென்னிந்திய அரசியல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் விளை வாகவும் வேறு காரணங்களினாலும் இக்குழுக்களின் நடமாட்டம் குறைவுற்றது. அதன் பின் செட்டிகள், பட்டினவர், முதலியோ ரும் காயல்பட்டினம், காரைக்கால் முதலிய இடங்களிலிருந்து இஸ்லாமிய வணிகரும் பங்கு கொள்ளத் தொடங்கினர். பட்டி

Page 108
-128
னவர் பட்டrடை வகைகள், தங்கநகைகள், தானியங்கள், வாச னைச் சரக்குகள், கற்பூரம் முதலியவற்றை நாகபட்டினம் போன்ற இடங்களிலிருந்து ஏற்றி வந்து ஊராத்துறை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, மாதோ ட் படம் முதலிய இடங்களிலே விற்றார்கள்.
துறைமுகங்கள்
யாழ்ப்பாண அரசில் மாதோட்டம், அரிப்பு, மன்னார், கச்சாய்? கொழும்புத்துறை, பருத்தித்துறை, காங்கேசன்துறை முதலிய துறைமுகங்கள் இடம் பெற்றன. உள்நாட்டு வாணிபமும் அயல் நாட்டு வாணிபமும் இவற்றினுாடாக நடைபெற்றன. தென் னிந்திய வணிகர்கள் இலகுவிலே இத்துறைமுகங்களுக்கு வரக்கூடு மாகையால் இத்துறைமுகங்கள் மலையாளக் கரையிலும் சோழ மண்டலக்கரையிலும் உள்ள பட்டினங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தன.
மாதோட்டம் 13 ஆம் நுாற்றாண்டளவில் அதன் முக்கியத் துவத்தை இழந்தது எனினும், முத்துக்குளிப்பு நடக்கின்ற காலங் களிலே அங்கு பல இடங்களிலிருந்து வணிகர்கள் வந்து கூடுவது வழக்கம். காங்கேசன்துறை, கொழும்புத்துறை, ஊராத்துறை என்பவை ஏனைய துறைமுகங்களிலும் கூடிய முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தன. ஊராத்துறை முற்காலத்திலிருந்தே மிக முக்கி யத்துவம் பெற்றிருந்தது. பொலநறுவைக் காலத்தில் இங்கு பிற நாட்டு வணிகர்கள் வந்ததற்குச் சான்றாக முதலாம் பராக்கிரம பாகுவின் தமிழ்க் கல்வெட்டு அமைகின்றது. காங்கேசன் என்ற ஒருவனால் சிறப்புப் பெற்றதினாலே காங்கேசன்துறை என்ற பெயர் தோன்றியிருக்க வேண்டும். ஆரியச்சக்கரவர்த்திகள், காங்கேசன் என்ற விருதினையும் பெற்றிருந்தனர். எனவே ஆரியச் சக்கர வர்த்தி இத்துறைமுகத்தைப் பெருப்பித்து வர்த்தக வளர்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தான் எனக் கருதலாம். வட இலங்கை யிலே அரசு ஏற்பட்டதோடு, கொழும்புத்துறை முக்கியத்துவம் பெற்றது. தலைநகருக்கருகிலிருந்தமையாலும் குடாநாட்டிற்கும் வன்னி நாட்டிற்குமிடையில் தொடர்பு கொள்வதற்கு வசதிகளைக் கொண்டிருந்ததினாலும் கொழும்புத்துறை யாழ்ப்பாணப்பட்டி னத்தின் மிகப் பெரிய துறைமுகமாக விளங்கியது.
சுங்கவரி
சீலைகளுக்கான லாஞ்சினைப்பேறு, தரகு, துறைமுக வரி ஆகியனவும் கொழும்புத்துறைக்கான அதிகாரி வரியும், பிற துறை முக வரிகள், வச்சிலைப்பாலைக் கடவைகளிலுள்ள சுங்கவரி

ー129ー
என்பனவும் வர்த்தக வரிகளில் இடம்பெற்றன. தமிழரசர் கால வழமையின்படி நாட்டிலே விற்பனையான துணிகள் யாவும் அரசனது முத்திரையைப் பெற்றிருக்க வேண்டும். கடவைகள் வழியாகவும் துறைமுகங்களினூடாகவும் அவ்வாறு அரசனது முத்திரையிடப்படாத துணிகளை எடுத்துச் செல்வதற்கு அனுமதி யளிக்கப்படவில்லை. ஒவ்வொரு சீலைக்கும் முத்திரையிடப் பட்ட போது, இவ்வாறு இடப்பட்ட கூலியே லாஞ்சினைப்பேறு எனப்பட்டது. எட்டுச் சேலை, நான்கு கச்சை, இருபத்தைந்து சால்வை ஆகியவற்றிற்கு ஒரு பணம் லாஞ்சினைப் பேறாகக் கொள்ளப்பட்டது. நெசவாளர்களினது வீடுகளிலோ, பிறவீடு களிலோ துணிகள் விற்பனை நடத்துவதற்கு அனுமதியளிக்கப் படவில்லை. ஒரு குறிக்கப்பட்ட பொது இடத்திலேதான் துணிகள் யாவும் விற்பனையாக வேண்டும். உணவுப் பொருள்கள் இறக்கு மதியாகுமிடத்தும் விற்பனையாகுமிடத்தும் அரசனின் பாகமா கக் கொள்ளப்பட்ட வரியே தரகு என்பதாகும். ஆரியச் சக்கர வர்த்திகளின் ஆட்சிக்காலத்தில் பொருட்களை ஏற்றி வருகின்ற நாவாய்கள் துறைமுகத்தை அடையும் போது ஒரு பணம் தரகு இறுப்பது வழக்கம். நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள அங் காடிகளிலும் பட்டணத்திலும் தானியங்கள் விற்பனையாகு மிடத்து கொள்வோர் ஒரு பணம் பெறுமதியான தானியங்களைப் பெறுமிடத்து ஒவ்வொரு பிடி தானியம் தரகாகக் கொடுக்க வேண்டும். இவ்வழக்கம் அனுராதபுரகாலத்திலிருந்தே நிலவி யிருக்க வேண்டும். சிங்கள மன்னரின் கல்வெட்டுகளிலும் இவ்விதமான குறிப்புகள் வருகின்றன. ராஜேந்திர சோழனது மாதோட்டக் கல்வெட்டு தானியங்களை விற்போனும் கொள் வோனும் ஒவ்வொரு பிடி அரசிறையாகக் கொடுக்கும் வழக்கம் பற்றிக் கூறுகின்றது. நாட்டில் உற்பத்தியான பொருள்களையும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருள்களையும் விற் போர் ஒரு பொதுவிடத்தில் அரச சேவகன் முன்னிலையில் விற்க வேண்டும். துறைமுகங்களிலே சுங்க வரிகளைச் சேர்க்கும் பொறுப்பு குத்தகையாளரிடம் விடப்பட்டிருந்தது.
நாட்டின் முதன்மை வாய்ந்த துறைமுகமான கொழும்புத் துறையினூடாக யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்குமிடையில் துரி தமான போக்குவரத்து நடைபெற்றது. அத்தோடு வர்த்தகப் படகுகளும் கூடுதலாக இத்துறைக்கே வந்தன. இத்துறைமுகத் திற் சுங்கவரியைச் சேர்க்க உரிமை பெற்றவர் அத்துறைமுகத் தின் அதிகாரியாகவும் பொறுப்பேற்றிருந்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரிக்குச் செல்வோரும், பூநகரியி லிருந்து யாழ்ப்பாணத்திற்குச் வருவோரும் துறைமுகத்தில்

Page 109
-س-130--
வாழ்ந்த மீனவரும் துறைமுக அதிகாரிக்கு வழமையான கட்ட ணங்களைச் செலுத்த வேண்டும். துணிகள் யாவும் சுங்க வரித் துறையிற் பரிசோத்னை செய்யப்பட்ட பின்பே அங்கிருந்து வெளி யேற்றப்படுவதற்கு அனுமதி கிடைத்தது. மக்களாற் சுமந்து செல்லப்பட்ட ஒவ்வொரு சுமைக்கும் அரை மரக்கால் சுங்கவரி யாகக் கொள்ளப்பட்டது.
பச்சிலைப்பாலைக் கடவைகளிற் சுங்க அதிகாரிகள் நிறுத்தப் பட்டிருந்தனர். அங்கு அதிகாரியின் பரிசோதனையின் பின்பே அக்கடவையின் வழியாக எப்பொருளையும் கொண்டு செல்ல முடியும். வணிகர்கள் ஒரு கச்சை உடைக்கு பணத்தையும் 25 அங்க வஸ்திரங்களுக்கு பணத்தையும் வரியாகக் கொடுத்தனர்.
அபின், மஞ்சள், கராம்பு முதலிய பொருள்களில் 8 சதவீதம் வரியாகக் கொள்ளப்பட்டது. வன்னியிலிருந்து வந்த பொருள் களில் ஒரு பொதிஎருதில் சுமந்து வரும் (சுமைப்) பருத்திக்கு * பணமும் 6 எருதுகளின் சுமைப் பொதி வரகுக்கு ஒரு பணமும் வரியிறுத்தனர். பச்சிலைப்பாலை, எழுதுமட்டுவாள் என்னுமி டங்களில் உள்ளவர்கள் வன்னி சென்று விவசாயம் செய்வது வழக்கமாக இருந்தது. அங்கிருந்து தானியங்களைக் கொண்டு வருமிடத்துத் தன் வயலின் அளவிற்கு ஏற்ப 10 க்கும் 20 க்குமி டைப்பட்ட லாகம் தானியத்தை வரியாகக் கொடுத்தனர்.
உசாவியவை
1. இரகுநாதையர், இ. சி., (பதிப்பு), பூரீதஷிண கைலாச புராணம்
(யாழ்ப்பாணம்), 1942.
(பதிப்பு), சரசோதிமாலை, (யாழ்ப்பாணம்), 1910.
2. சபாநாதன், குல, (பதிப்பு), யாழ்ப்பாண வைபவமாலை,
(கொழும்பு), 1953.
3. சண்முகரத்தினம் ஐயர், (பதிப்பு), கோணேசர் கல்வெட்டு,
(யாழ்ப்பாணம்), 1909,
4. நடராசா, க. செ. (பதிப்பு), வையாபாடல்,(கொழும்பு), 1980.
5. நடராசா, F. X. C. (பதிப்பு), மட்டக்களப்பு மான்மியம்,
(கொழும்பு), 1962.
6. நாகலிங்கபண்டிதர், (பதிப்பு), தஷிண கைலாச மஹாத்மியம்,
(யாழ்ப்பணம்), கலி. 5030.

12.
13.
14.
15.
16.
17.
18.
-131
வைத்திலிங்க தேசிகர், பு. பொ., (பதிப்பு), தஷிண கைலாச
புராணம், (பருத்தித்துறை), 1916.
ஜம்புலிங்கபிள்ளை, சி. வி., (பதிப்பு), கைலாயமாலை,
(சென்னை), 1939.
Geiger, W, (ed) Culavamsa, (London), 1925.
. Gunasekara, B., (ed.) Rajavaliya, (Colombo), 1911.
, Harihara Sastri, & Srinivasa Sastri. V., (ed) Madhuravijayam,
(Trivandrum), 1916. The Rehla of Ibn Batuta, (Tr.) Mahdi Hussain, (Baroda), 1953. Perera, P.S., (edi, Kokila Sandesaya, (Colombo), 1906.
Rasanayagam, Ancient Jaffna, (Madras), 1926.
Siri Sunanda Sabadera, (ed), Paravi Sandesaya, (Matara), 1925.
Sugathapala, T., (ed) Gira Sandesaya, (Alutgama), 1924.
Vikramasinha, K. D.P., (ed.), Parakumbasirita, (Colombo), 1954.
Wickremasinghe, D. M. de Z., Nikaya Sangrahaya, (Colombo), 1890.

Page 110
அத்தியாயம் - 6
r சமூகம் வரலாற்றுப் பின்னணி.
போத்துக்கேயர் ஈழத்திற் கால் வைத்தபோது மூன்று அரசுகள் காணப்பட்டன. இவை முறையே கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என்பவை ஆகும். இவை மூன்றும் தனித்தனியான பிரதேசங்களில் ஆட்சி செய்தனவேயன்றி ஒன்றை மற்றொன்றால் அழிக்கவும் முடியவில்லை. இதன் விளைவாக அரசியல், சமூக, பொருளாதாரத்துறைகளில் இவைகளின் தனித்துவம் வளர்ச்சி கண்டதோடு பேணியும் பாதுகாக்கப்பட்டது. தமிழர் தாயகம் யாழ்ப்பாண அரசு காலத்தில் மேலும் ஸ்திரமடைந்தது. சிங்கள அரசின் மையப்பீடங்கள் தெற்கேயும், தென் மேற்கேயும் நகரத் தமி ழரசர் மையப்பீடங்கள் வடக்கேயும் கிழக்கேயும் நகர்ந்தன. இக் காலத்தில் யாழ்ப்பாண அரசின் அரசியல், சமூக, பொருளாதாரத் துறையிலான தாக்கம் வன்னியிலுமேற்பட்டது. இதனால் யாழ்ப் பாண அரசின் வருகை தனித்துவமான அரசியல், கலாசார, சமூக, பொருளாதார நிறுவனங்களின் வளர்ச்சியை எடுத்துக் காட்டி நின்றது.
இக்காலத்திற் சிங்கள - தமிழ்ச் சமுதாய, பொருளாதார நிறுவனங்களுக்கிடையேயும் இடைவெளி ஏற்படத் தொடங் கியது. பெருங்கற்காலச் சமுதாயத்தின் வழிவந்த சிங்கள - தமிழ் மொழி பேசுவோரும் தாய்வழிச் சமுதாய அமைப்பின் வழிவந் தவர்களே. யாழ்ப்பாண அரசு காலத்தில் மொழி ரீதியாக சிங்களதமிழ் அரசுகளுக்கிடையே தனித்துவம் வளரத் தொடங் கியது. சிங்களம், தமிழ்மொழி ஆகியன வேறுபட்ட மொழிக ளாக வளர்ந்ததோடு தமிழ், சிங்கள அரசுகள் இருவேறுபட்ட புவியியற் பகுதிகளில் ஆட்சி செலுத்த இத்தகைய இடைவெளிகள் மேலும் விரிவடையத் தொடங்கின. போத்துக்கேயர், டச்சுக் காரர் ஆட்சி இவ்வம்சங்களை மேலும் விரிவடையச் செய்தன. இதனால் யாழ்ப்பாண அரசுக்காலம் பழந்தமிழர் சமூக,

-133
பொருளாதார நிறுவன அமைப்புகளைப் பாதுகாத்த காலமாக விளங்கியது மட்டுமன்றிப்பிற்காலத் தமிழர் சமூக, பொருளாதார நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் காத்திரமான பங்களிப்பைச் செய்த காலம் என்று கூறினால் மிகையாகாது. துரதிஷ்டவசமாக, இவ்வம்சங்களை ஆராய்வதற்குச் சிங்கள அரசுக்குக் கிடைக்கும் சான்றாதாரங்களை ஒத்த சான்றாதாரங்கள் தமிழரசுக்குக் கிடைக்காவிட்டாலும் கூட, இப்பகுதியில் நிலை கொண்டிருந்த தேச வழமைச் சட்டங்கள், இக்காலச் சமூகம் பற்றியும் அதன் அசைவாக்கம் பற்றியும் அறிந்து கொள்வதற்குப் பேருதவியாக வுள்ளன. போத்துக்கேயரது ஆவணங்களில் அக்காலச் சமூகம் பற்றிய தகவல்கள் குறைந்து காணப்பட்டாலும் கூட யாழ்ப் பாணப் பகுதியை 1658இல் டச்சுக்காரர் கைப்பற்றியபோது கிறிஸ்தவ மதப் பிரசாரத்திற்காக இப்பகுதிக்கு வந்த போல் டேயஸ் பாதிரியாரின் சமகாலக் குறிப்புகள், டச்சுக்காரத் தேசாதிபதிகளின் நினைவேடுகள் ஆகியனவற்றைக்கொண்டு இக் காலச் சமூகம் பற்றி ஒரளவுக்கு அறிந்து கொள்ள முடிகிறது.
ஈழத்தில் டச்சுக்காரர் தமது ஆட்சியை விஸ்தரிக்க முனைந்த போது ஈழத்தின் கரையோர மாகாணங்களே அவர்கள் ஆளுகைக் குட்பட்டிருந்தன. இவற்றுட் சிங்கள மக்கள் வாழ்ந்த மேற்கு, தென்மேற்குப் பகுதிகளில் டச்சுக்காரரைக் கவருமளவுக்கு உள்ளூர்ச் சட்ட வழக்குகள் வலுப்பெற்றுக் காணப்படாததால் இப்பகுதிகளிலே தமது ரோம - டச்சுச் சட்டவாக்கங்களை அமுல் நடத்தினர். ஆனால் யாழ்ப்பாண அரசின் மேலாணைக்குட் பட்ட வடபகுதி இவர்களின் கைக்கு வந்தபோது இப்பகுதிக்கே உரித்தான சட்ட திட்டங்களைக் கொண்ட வலுவுள்ள அமைப் பாக ஸ்திரம் பெற்றிருந்த தேசவழமைச் சட்டங்களைக் கண்டனர். இதனால் மக்கள் மத்தியிற் செல்வாக்குற்ற இவற்றைப் புறக்கணி யாது பேணி, அவற்றை அமுல் நடாத்துவதில் அக்கறை கொண் டனர். அக்காலத்தில் தேசாதிபதியாக இருந்த சைமன் யாழ்ப் பாணப் பகுதித் திஸாவாக இருந்த கிளாஸ் இஸ்சாக்ஸ் என்பவரை இப்பகுதி மக்களின் சமூக, பழக்கவழக்கங்களைத் தொகுக்கும் படி பணித்தான். இவற்றை டச்சுமொழியிற் தொகுத்த இஸ்சாக்ஸ் 1707 இல் இவற்றைத் தேசாதிபதியிடம் சமர்ப்பித் தான். டச்சு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட இவ்வாவணம் பின்னர் சரி பார்ப்பதற்காக இவ்வழக்கங்களை நன் கறிந்த பன்னிரண்டு தமிழ் முதலியார்களிடம் ஒப்படைக்கப் பட்டு அவர்கள் ஒப்புதலுடன் ஏற்கப்பட்டுப் பின்னர் இப்பகுதி யின் சட்டமாக டச்சுக்காரராற் பிரகடனப்படுத்தப்பட்டது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழக்கிலுள்ள வழமைகளும்,

Page 111
-134
புத்தளப் பிரதேசத்தில் வழக்கிலிருந்த வழமைகளும் முக்குவச் சட்டங்களாக உருவெடுத்தமை போன்று வடபகுதி வழமைகள் தேசவழமைச் சட்டங்களாக உருவெடுத்தன. இச்சட்டங்கள் வன்னிப்பகுதியிலும் திருகோணமலை மாவட்டத்தில் சில பகுதிகளிலும் வழக்கிலிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சட் டங்கள் ஒரு வகையில் ரோமரின் முதுசொத்தாகிய ரோமச் சட்டம் போன்று இப்பகுதி மக்களின் முதுசொத்தாகின எனலாம். ரோமச் சட்ட வழக்கங்களையே பின்வந்த ஐரோப்பியரான டச்சுக்காரர் போன்றோர் அனுசரித்தனர். தேசவழமைச் சட்ட எல்லைக்குள் வராத அம்சங்களில் ரோமச் சட்ட திட்டங்கள்ை யாழ்ப்பாண அரசின் பகுதிகளிற் சட்ட திட்டங்களாகப் புகுத் தினர். பின்வந்த ஆங்கிலேயர் இதற்குப் புதுமெருகு அளித்தனர்.
ஐரோப்பியர் யாழ்ப்பாணப் பகுதி மீது மேலாணை செலுத்திய போது தேசவழமைச் சட்டங்களை அனுசரித்துப் பேணினாலும் தேவை ஏற்படும் போது, அதில் மாற்றங்களையும் செய்யத் தயங்கவில்லை. உதாரணமாக, தேசவழமைச் சட்டங்களில் ஒருவர் தமது முதுசொத்திலிருந்து சீதனம் கொடுக்கக்கூடாது என்ற ஒழுங்கு உண்டு.
ஆனால் போத்துக்கேயர் உருவாக்கிய சட்டதிட்டத்தின் மூலம் இது சாத்தியமானது. டச்சுக்காரர் விற்பனை, ஒற்றி திருமணம், சீதனம் சம்பந்தமாகவும் தேசவழமைச் சட்டங்களில் ம்ாற்றங்களைப் புகுத்தினர். இவ்வாறே ஈழம் முழுவதும் ஒரு முகப்படுத்தப்பட்ட தமது சட்டதிட்டங்களைப் புகுத்த விரும்பிய ஆங்கிலேயரும் இதிலே தேவையான மாற்றங்களைச் செய்யப் பின்னிற்கவில்லை.
தமிழக - ஈழத் தொடர்புகள்
சில வரலாற்றாசிரியர்கள் யாழ்ப்பாண வழக்குகள் கேரள நாட்டிலிருந்தும், சோழமண்டலக் கரையிலிருந்தும் ஏற்பட்ட சன வேற்றங்களின் விளைவாகவே வளர்ச்சி பெற்றன எனக் கருது கின்றனர்.2 ஆரம்பத்திற் கேரளப் பகுதியிலிருந்து இவை ஏற் பட்டதை எடுத்துக் காட்டும் இவர்கள் இத்தகைய நிகழ்ச்சி கி. பி. 10 ஆம் நூற்றாண்டு வரை நடைபெற்றது எனவும் கூறு கின்றனர். இதற்குப் பின்னர் சோழ மண்டலக் கரையின் செல் வ்ாக்கு ஈழத்திற் சோழராட்சியுடன் மேலோங்கியதன் விளை வ்ாகவே யாழ்ப்பாணத்து அரசில், சமூக, கலாசாரத்துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டது எனவும் கூறுகின்றனர். உண்மையில் இது மட்டும் காரணமல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட, வரலாற்றுதய

ー135ー
வரலாற்றுக் காலங்களில் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந் தும் சனவேற்றம் ஈழத்தை நோக்கி ஏற்பட்டது.8 இருந்தும் ஈழம் தனித்துவமான புவியியல் அமைப்புடன் திகழ்ந்ததால் தமி ழகம் வடஇந்தியச் செல்வாக்குக்கு உட்பட்டுத் தனது பல அம்சங் களை இழந்தது போல் ஈழம் தனது தனித்துவத்தை இழக்க வில்லை. இதனாற்றான் தமிழகம், ஈழம் போன்ற பகுதிகளில் ஒன்றில் வடஇந்திய ஆண்வழிச் சமுதாயத்தின் செல்வாக்குக் காணப்பட மற்றையதில் அதே அளவுக்கின்றித் தனித்துவமான பெண் வழிச் சமுதாய அமைப்பின் அம்சங்கள் பல பேணப்படு கின்றன எனலாம். இத்தகைய அமைப்பு மொழியால் ஒருகி கிணைந்த தமிழ் நாட்டவரின் நிறுவன அமைப்புகளிலிருந்து பல தனித்துவமான அம்சங்களைப் பெற்று வளர்ந்தது. இத் தகைய அம்சங்கள் நாளடைவிற் கூர்மையடைந்தன. இதற்கு ஓரிரு உதாரணங்களை மட்டும் கூறலாம். ஆரம்பத்தில், பெண் வழிச் சமுதாய அமைப்பான தமிழகச் சமுதாய அமைப்பில் ஆண்வழிச் சமுதாய அமைப்பு முறை செல்வாக்குப் பெறத் தொடங்கியது. ஈழத்துச் சமுதாய அமைப்பிற் பெருமளவுக்குப் பெண்வழிச் சமுதாய அமைப்பே காணப்படுகின்றது. இச்சமுதாய அமைப்பினை நெறிப்படுத்தும் வழக்கங்களே இப்பகுதித் தேச வழமைச் சட்டங்களாயின. இவற்றுக்கும் பண்டைய சேர நாடா கிய மலையாளப் பகுதியிற் காணப்படும் சட்டங்களுக்கும் வழக் கங்களுக்குமிடையே நெருங்கிய ஒற்றுமையுண்டு.4 மலையாளப் பகுதி வழக்கங்கள் மருமக்கட்தாயம் என அழைக்கப்படுகின்றன. இவ்வழக்குகள் தமிழகத்தைப் போலன்றி பெண்வழிச் சமுதாய அமைப்பையே பற்றி நிற்பது ஈண்டு நினைவு கூரற்பாலது. இதற்குக் காரணம் இம்மலைநாட்டுப் பகுதியின் புவியியல் அமைப்பேயாகும். இத்தகைய அமைப்பால் வடநாட்டுச் செல் வாக்குத் தமிழகத்தை அடைந்தது போலப் பழைய சேர நாடாகிய கேரளத்தில் நுழைந்து அவை ஸ்திரம் பெறமுடியவில்லை. மலை நாடான சேரநாட்டை 'மலபார்" என அழைத்த ஐரோப்பியர் வடபகுதி வழக்கங்களையும் மலபார் வழக்கங்கள் எனவும் கூறினர். தமிழக, சோழ மண்டலக்கரையை "கொறமண்டல்கரை" என இவர்கள் அழைத்தனர். தமிழகச் சமூக அமைப்பில் பிராமண குலத்தவர் கையோங்கிக் காணப்பட, ஈழத்தில் பிராமண குலத் தவர் மன்னர்களாக யாழ்ப்பாண அரசை ஆண்டுங் கூட இவ் வாறு நிகழவில்லை. ஈழத்துத் தமிழ் மக்களின் சமூக அமைப்பில் இவர்களின் எண்ணிக்கை ஒரு வீதமேயாகும்.

Page 112
-136
இவ்வாறு தமிழகத்திற் பிராமணர் கையோங்கியதற்கு வர லாற்று ரீதியான சில காரணங்களும் உள. தமிழகம், ஈழம் போன்ற பகுதிகளிற் சங்ககாலந் தொட்டே பிராமணர் பெற்றி ருந்த செல்வாக்கினைச் சங்க இலக்கியங்கள், ஈழத்துப் பாளி நூல்கள், பிராமிக் கல்வெட்டுக்கள் ஆகியன எடுத்தியம்புகின் றன.5 எனினும் அவர்களின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொன்றாகவே காணப்பட்டதால் இக்காலச் சமுதாய அமைப்பை அவர்களால் முற்றாக மாற்றமுடியவில்லை. சமயக் கடமைக ளோடு கற்றல், கற்பித்தல் ஆகிய கடமைகளிலீடுபட்ட இவர்கள் அரசரின் ஆலோசகர்களாகவும், வைத்தியம், சோதிடம் ஆகிய துறைகளிற் கைதேர்ந்தவர்களாகவும் காணப்பட்டனர். வடஇந் திய சமுதாய அமைப்பில், நால்வகை வர்ணப்பிரிவுகள் காணப் பட்டன. அவையாவன: பிராமணர், சத்திரியர், வைஷியர், சூத்திரர் ஆகும். இவர்களின் பிறப்பே இவர்களின் வர்ணப் பிரிவை நிச்சயித்ததோடு அதற்குரிய கடமைகளை வர்ணாச்சிரம தர்மம் எனவும் நிர்ணயித்தது. ஆனால் இவ்வர்ணாச்சிரமதர்ம அடிப்படையிலமைந்த நால்வகைப் பிரிவு பண்டைய தமிழகத் திலோ அன்றி ஈழத்திலோ செல்வாக்குப் பெறவில்லை. மாறாக, இப்பகுதிச் சமூகம் தொழிலடிப்படையில் பல்வேறு சாதிப் பிரிவு களாகப் பிரிந்திருந்தது. வட இந்திய அமைப்புமுறை எவ்வாறு பிராமணரை மையமாக வைத்துச் சுழன்றதோ அவ்வாறு தமிழகஈழச் சமூக அமைப்பும் வேளாளச் (சிங்களத்தில் கொய்கம) சாதிப்பிரிவினரை மையமாக வைத்துச் சுழன்றது. தென்நாட் டில் இஸ்லாமியப் படையெடுப்பும், பாண்டியத் தமிழரசின் சிதைவும், விஜயநகர அரசின் எழுச்சியும் கி. பி. 14 ஆம் நூற் றாண்டின் முற்பகுதியில் தென்னக வரலாற்றில் ஒரு திருப்பு முனையானது. இஸ்லாமிய ஆதிக்கப் படர்ச்சிக்கு எதிராகத் தென்னக இந்துப் பண்பாட்டைப் பேணி வளர்க்கவே இது தோன் றியது. இது அமைக்கப்பட்டதன் நோக்கம் வேதம், அந்தணர், பசு ஆகியோரைப் பாதுகாத்தற்கேயாகும். தென்னக இஸ்லாமிய ஆதிக்கப் படர்ச்சியாற் பிராமண குலங்கள் பல தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தன. இத்தகையகுலங்களிற் பல ஈழத்தின் சிங்கள அரசுகளையும் அடைந்தன.
விஜயநகர மன்னர்கள் வட இந்திய இந்து கலாசார அம் சங்களை அங்கீகரித்தவர்கள் ஆவார்கள். இவர்களின் ஆட்சியில் இக்கலாசார மரபிலே திளைத்த நாயக்க வம்சத்தவரான தெலுங்கர்களே முக்கிய இராணுவ, நிருவாகக் கடமைகளிலே தமிழகத்தில் ஈடுபட்டதாற் பிராமணரின் செல்வாக்கும் மேலோங்

-137
கியது. மத்தியகாலத் தமிழகத்திற் கோயில்கள் பெரிய நிறுவ வனங்களாக வளர்ச்சி பெற்றதாற் பிராமணர் செல்வாக்குள் ளவர்களாக எழுச்சி பெற்றனர். பிராமணர் முக்கிய பதவிகளை வகிக்கத் தொடங்கினர். முழு இந்தியாவையும் எடுத்துக் கொண்டாலும் கூட அவர்களது எண்ணிக்கையினை விடப் பன் மடங்கு மேலான பங்கினை அவர்கள் இன்று வகிப்பது கண் கூடு. வர்ணாச்சிரம அமைப்பிற் கல்வி அவர்களின் சொத்தாக இருந்ததும் இதற்கான பிரதான காரணமாகும். தமிழகத்தின் பிராமணரின் மேலாதிக்கத்திற்கெதிராகத் தோன்றியதே திரா விடர் இயக்கமாகும். ஈழத்தில் இத்தகைய நிகழ்ச்சியேற்பட வில்லை. இதற்கான வாய்ப்பையும் ஈழத்துப் புவியியற் தனித்துவம் அளிக்கவில்லை. வடபகுதி விஜயநகர மன்னர் மேலாண்மையை ஏற்ற காலத்திலுங் கூட தனது தனித்துவமான சமூக, பொருளா தார அமைப்பைப் பேண அதன் புவியியலின் தனித்துவம் வாய்ப்பளித்தது.
இச்தேச வழமைச் சட்டங்கள் வேளாள சமூகத்தினரதும் அவர்களது அடிமைகள், குடிமைகள் ஆகியோரதும் வழக்கம் களை எடுத்துக் காட்டுவதால் சாதியமைப்பு என்ற வட்டத் திற்குள்ளேதான் இவை செயற்பட்டன எனலாம். இத்தகைய அமைப்பு அக்கால மத்திய கால பொருளாதாரப் பின்னணியிற் சமூ கத்தின் பல்வேறு பிரிவினர் பிணக்குகள் இன்றி இயங்குவதற்கும் சமூகத்தில் ஸ்திரமான நிலை காணப்படுவதற்கும் உறுதி செய் வதாக அமைந்திருந்தது. இன்னொரு வகையிற் பார்த்தாற் தேசவழமை வழக்காற்றை இப்பகுதி வர்ணாச்சிரம தர்மம் எனவும் அழைத்துவிடலாம். ஆனால் பிற்காலத்திற் குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் மேலைத்தேயத்திற் சமூகவளர்ச்சி பற்றி ஏற்பட்ட சிந்தனைகளும், புதிய பொருளாதார அமைப்பின் அறிமுகமும் பழைய மானியமுறை அமைப்பை முற்றுமுழுதாக மாற்றியதால் யாழ்ப்பாண அரசு காலத்தில் வழக்கில் இருந்த பல வழக்குகளும் சாதியமைப்பு முறைகளும் இன்றைய சமுதாயபொருளாதார அமைப்பு வரம்பில் இணையமுடியாத ஒன்றாகவே விளங்குவதை நாம் அவதானிக்க முடிகின்றது. இதற்கு ஒர் உதாரணத்தினை மட்டும் கூறலாம். தேச வழமைச் சட்டத்தில் அடிமைகள் பற்றிய குறிப்புண்டு. ஆனால் இவ்வடிமைமுறையா னது உலகெங்கணும் காணப்பட்டதொன்றாகும். இப்பகுதிச் சமூகத்தில் மட்டும் காணப்பட்டதொன்றல்ல. போத்துக்கேயர், டச்சுக்காரர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இது காணப் பட்டது. எனினும் இம்முறை ஆங்கிலேயரால் ஒழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Page 113
ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணம் தேசவழக்காக இக்கால வடபகுதிச் சமூக அமைப்பு மூன்று முக்கிய கூறுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. அவை, ஆண்டான், அடிமை, குடிமை என்பன வாகும். இவை ஆண்டாராகிய வேளாள சமூகத்தை மையமாக வைத்து இயங்கிய சாதிப் பிரிவுகளாகும். எனவே சாதி அமைப்பு இக்காலச் சமூகத்தின் ஒர் முக்கிய அம்சமாகியது. இது பற்றிச் சிவத்தம்பி கூறியிருப்பது அவதானிக்கத்தக்கது.8
'அடுத்து இச்சமூகம், ஒரு சமூக அதிகாரப் படிநிலை முறையினை உடைய ஒன்றாகும். அதாவது மேலே உள்ளது உயர்ந்தது படிப்படியாகக் கீழேவரும் போது கீழேயுள்ளது தாழ்ந்தது என்ற ஒரு எடுகோள் இங் குண்டு. இப்படிநிலை சாதியமைப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். சாதி பற்றிய ஆய்வினை மேற் கொள்ளும் பொழுது, சாதிகளின் பட்டியலையும் அவற் றின் அதிகாரப் படிநிலைகளையும் பற்றி அறிந்து கொள்வது மாத்திரம் போதாது. இந்தச் சாதிகள் ஒவ் வொன்றும் தத்தம் சமூக உறவுகளில் ஒண்றிணைந்து ஒரு சமூக அமைப்பினை உருவாக்கியுள்ளன என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும். காலமாற்றங்களுக்கேற்ப அமைப்பு மாற்றங்களும் ஏற்பட்டு வந்துள்ளன என் பதை நாம் மனதிலிருத்திக் கொள்ளல் அவசியம். யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பில் தொழிலே பிரதான அடிப்படையாகின்றது. இதனால் இங்கு சாதி நிலைப் பட்ட தொழில் பிரிவுக்கு அதிக அழுத்தம் சொடுக்கப் படுகிறது."
எனவே இச்சமூக அசைவியக்கம் பற்றி அறிந்து கொள்ளு வதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் வன்னிப்பகுதியிலும் ஏற் பட்ட சனவேற்றம் பற்றி அறிந்து கொள்ளுவது மிக அவசிய மாகின்றது. இது பற்றிய தகவல்களை யாழ்ப்பாண வைபவமாலை, ைைலாயமாலை, வையாபாடல் போன்ற நூல்களிலிருந்து அறிய முடிகின்றது. இவை கூறும் வேளாளரின் சனவேற்றம் அவர்களின் அடிமை, குடிமைகளை உள்ளடக்கி இருந்தது. இவை எல்லாப் பிரிவும் ஒன்றிணைந்து பதினெண் சாதி” என வையாபாடலில் குறிக்கப்பட்டுள்ளது. கைலாயமாலையில் இவ்வேளாளர்? வேளா மரசர்களெனவும், முடி, கொடி ஆகியன படைத்த சிற்றரசர்கள் எனவும் சித்தரிக்கப்படுவதை நோக்கும்போது இவர்கள் தாம்நிலை கொண்டிருந்த பகுதிகளில் செல்வாக்குள்ள தலைவர்களாக விளங்க. இவர்களை மையமாக வைத்தே இக்காலச் சமூ 6 அமைப்பு இயங்கியதும் தெளிவாகின்றது. இத்தகைய சன வேற்றத்தில்

-139
தமிழ்நாட்டின் கிழக்குக் கரையே பிரதான இடத்தினை வகித் தாலும் மேற்குக் கரையிலிருந்தும் ஏற்பட்ட புலம் பெயர்வுகள் பற்றித் தமிழ் நூல்கள் குறிப்பதும் அவத" னிக்கத்தக்கது. எனி னும் யாழ்ப்பாண அரசு காலத்தில் ஏற்பட்ட சமூகவாக்கம் பற் றிச் சிந்திக்கும்போது இது முழுக்க முழுக்க ஆரியச் சக்கரவர்த்தி களின் காலத்தில் ஏற்பட்ட சனவேற்றத்தினால் மட்டும் ஏற்பட் டது என்று எண்ணுவது தவறு. இவ்வரசு தோன்று முன்னர் இப்பகுதியில் நிலைத்திருந்த தாய்வழிச் சமுதாய அமைப்பானது ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் ஏற்பட்ட சன்வேற்றத்தின் பலனாக வடஇந்தியச் செல்வாக்குடன் புகுந்த சமூக அமைப்பு டன் இணைந்து உருவானதே இன்றைய வடபகுதிச் சமூக உரு வாக்கம் எனக்கொள்ளுவதே பொருத்தமானதாகும் இதனால் நாம் ஆராயும் காலப்பகுதியில் இவ்விரு காலச் சமூக அமைப்பு சளும் இணைந்தன - சங்கமமாயின எனக் கொள்ளலாம். இத னைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு இக்காலத்தில் ஈழத்தை நோக்கித் தமிழகத்தில் இருந்து ஏற்பட்ட புலம் பெயர்வுகள் பற்றி ஆராய்வது அவசியமாகின்றது. இந்நூல்கள் தரும் குறிப்புகள் பல புனைந்துரைகளுடன் காணப்பட்டாலும் கூட இவையாவும் இக் காலத்தில் வட பகுதியில் ஒர் வரலாற்று நிசழ்ச்சியாக அமைந்த சனவேற்றம் பற்றியே குறிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமு மில்லை எனலாம்.
யாழ்ப்பாணத்தின் சனவேற்றம் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை - கைலாயமாலை
முதலில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சனவேற்றம் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை தரும் தகவல்களை ஆராய்வோம். இந்நூல் பின்வருமாறு குறிப்பிடுகிறது.8
"இங்ங்ணமிருக்கையில், ஒருநாள் புவனேகவாகுவுடன் ஆலோசித்து. சிங்கையா ரிய மகாராசன் தமிழ்க் குடிகளை அவ்விடம் அனுப்பிவைக்க வேண்டு:ென்று தமிழ் நாட் டரசர்களுக்குத் திருமுகங்கள் எழுதியனுப்பினான் , அவ் வரசர்கள் சில குடிகளை அனுப்பிவைக்க அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுள் ஐந்து குடிமைகளுடனேயும் வந்த பொன்பற்றியூர் வேளாளன் பாண்டிமழவனையும் தம்பியையும் மைத்துனனாகிய சண்பக மழவினையும் அவன் தம்பியையும் சிங்கையாரிய மகாராசன் திருநெல் வேலியிலே குடியிருத்தினான். காவிரியூர்ப் புரவலாதி தேவனின் மூத்தகுமாரனாகிய நரசிங்கதேவனை மயி லிட்டியிலிருத்தினான். வாவிநகர் வேளாளன் செண்பக மாப்பாணனையும் அவன் ஞாதியாகிய சந்திரசேகரமாப் பாணனையும் கனகராயரென்னுஞ் செட்டியையும்

Page 114
-140
தெல்லிப்பழையில் இருத்தினான். கோவலூரிலிருந்து வந்த பேராயிரமுடையானென்னும் வேளாளனை இணு விலில் இருத்தினான். அவ்வூர் திருப்திப்படாததினால் அவன் அவ்விடத்தை விட்டு மேலைக் கிராமத்திற் போயிருந்தான். இராச முத்திரையும் பல வரிசைகளும் பெற்ற கச்சூர் வேளாளன் நீலகண்டனையும் அவன் தம்பிமார் நாலுவேரையும் பச்சிலைப்பள்ளியிலிருத்தி னான். சிகரமாநகர வேளாளன் கனகமழவனையும் அவன் தம்பிமார் நால்வரையும் புலோலியில் இருத்தினான், கூபகநாட்டு வேளாளன் கூபகார்யேந்திரனையும் புண்ணியபூபாலனையும் தொல்புரத்தில் இருத்தினான். புல்லூர் வேளாளன் தேவராயேந்திரனைக் கோயிலாக் கண்டியிலிருத்தினான். ஏரேழுபதென்னும் பிரபந்தம் பாடப்பெற்ற உயர்குல வேளாள மரபினனான தொண்டை மண்டலத்து மண்ணாடு கொண்ட முதலி யென்பவனை இருபாலையென்னு:மரில் இருத்தினான். செய்யூர் இருமரபுந் துய்ய தனிநாயகன் என்னும் வேளாளனை நெடுந்தீவில் இருத்தினான். காஞ்சிபுரத் தால் வந்த பல்லவனென்னும் பிரபுவையும் இரண்டு துணைப் பிரபுக்களையும், வெளிநாடென்னும் பல்லவ ராய கட்டிலிருத்தினான்.
இப்படியே அந்தந்தப் பிரபுக்களை அவரவர் அடிமைக் குடிகளுடனே அவ்வவ் விடங்களில் இருத்தியபின், வல்லிய மாதாக்கன் என்னும் பராக்கிரம சூரனை மேற் பற்றுக்கும் செண்பக மாதாக்கனென்னும் சூரியவீரனைக் கீழ்ப்பற்றுக்கும், இமையானமாதாக்கன் என்னும் உத்தண்டவீரனை வடபற்றுக்கும், வெற்றிமாதாக்கன் என்னும் விசய பராக்கிரமனைத் தென்பற்றுக்கும் அதி காரிகளாக நிறுத்தி, உத்தண்டவீர சிகாமணியாகிய வீர சிங்கனென்பவனைச் சேனாதிபதியாக்கி ஓர் சுபதினத்திலே நல்ல மூசுர்த்தமிட்டு மகுடாபிஷேகம் பெற்று நகரிவலம் வந்து சிங்காசனம் ஏறிப் பூலோக தெய்வேந்திரனாய் அரசாண்டான்."
மேற்கூறிய குறிப்புப் பல்வேறு இடங்களிலே தமது அடிமை குடிமைகளுடன் வந்து இறங்கிய வேளான் தலைவர்கள் பற்றிய தகவல்களைத் தருகின்றன. இவர்கள் குடியேறிய இடங்களாகத் திருநெல்வேலி, மயிலிட்டி, தெல்லிப்பழை, இணுவில், பச்சிலைப் பள்ளி, புலோலி, தொல்புரம், கோயிலாக்கண்டி, இருபாலை, நெடுந்தீவு, பல்லவராயன்கட்டு ஆகியன விளங்கின. இவ்வேளாள வகுப்பினரே ஆரியச் சக்கரவர்த்திகளின் நிருவாக அமைப்பின் அச்சாணியாக விளங்கினார்கள் என்பதை இவர்கள் பற்றி யாழ்ப்

ー14lー
பாண வைபவமாலையில் மட்டுமன்றி விபரமாகக் கைலாய மாலையில் வரும் குறிப்புகளும் எடுத்துக் காட்டுகின்றன. குடா நாடு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதற்குத் தலைமை யதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். இவர்களின் கீழே நிருவாகத் தையும் பல்வேறு பகுதிகளிற் குடியேறிய இக்குழுவினர் கவனித் ததை இந்நூல்களில் இருந்து அறிய முடிகின்றது.
இக்குடியேற்றம் பற்றிக் கைலாயமாலை தரும் வர்ணனை களை நோக்கும் போது இவ்வகுப்பினர் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கிய வசதி படைத்த ஒரு குழுவினர் என்பதும் புலனாகின்றது. அத்துடன் பல்வேறு குலங்களைச் சார்ந்த இவர்கள் ஒவ்வொருவருக்கென்று அவர்களின் அந்தஸ்தையும் தனித்துவத்தையும் புலப்படுத்தும் விதத்திலே தனிக்கொடி, மாலை போன்ற சின்னங்கள் காணப்பட்டன. அத்துடன் இவர் கள் விருதுகள் பலவும் இந்நூலில் குறிக்கப்படுவதையும் அவதா னிக்கும் போது செல்வாக்குள்ள, பிரபுத்துவ குழுவினரே யாழ்ப் பாண இராச்சியம் உருவாக்கம் பெற்றபோது அதனை நிருவகிப் பதற்காகத் தமிழகத்தில் இருந்து ஈழத்தினை அடைந்தனர் என்பது தெளிவாகிறது. இத்தகைய நிலை யாழ்ப்பாண இராச் சிய காலத்திலே தான் முதன் முதலாகக் காணப்பட்டதொன் றல்ல. இதற்கு முன்னர் ஈழம் சோழப் பேரரசின் மாகாணமாக கி. பி. 11 ஆம் நூற்றாண்டில் வந்தபோது இங்குள்ள நிருவாகத் தைக் கவனிப்பதற்கு வேளாண் தலைவர்களும் பல இராணுவப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இனிக் கைலாயமாலை9 தரும் தகவல்களை அவதானிப் போம். இந்நூலிற் குடியேற்றங்கள் பற்றிய குறிப்பில் இப்பிரிவி னரின் சிறப்புகள் கூறப்படுவதோடு தமிழகத்திலிருந்து இவர்கள் குடிபெயர்ந்த இடங்கள், யாழ்ப்பாணப் பகுதியில் குடியேறிய இடங்கள், இவர்கள் பெற்றிருந்த விருதுகள் ஆகியனவும் குறிப் பிடப்பட்டுள்ளன. இவர்களில் முதன்மையானவனாகப் பாண்டிமழ வன் குறிப்பிடப்படுகிறான். இவன் சிறந்த சிவபக்தன் அனுஷ நட் சத்திரத்தில் பிறந்தவன். பசித்து வந்தோருக்கு உணவு அளிக்கும் பெருவிருப்புடையவன். மிகுந்த தருமவான். ‘சிவநேச ஆகத்தான் தோன்றும் அணிசத்தான் அன்னமருள் தாகத்தான் விஞ்சுந் தருமத்தான்". பகீரதி குலத்தில் உதித்தவன். வேளாளருக்குரிய மேழிக் கொடியை உடையவன். குவளைமலர் மாலையை அணி பவன். தமிழ் நாட்டிலுள்ள பொன்பற்றியூரிலுள்ள இவனுக்கு "ஊர்காத்தோன்" என்ற விருதுமுண்டு. இவன் திருநெல்வேலியில்

Page 115
-142
குடியமர்த்தப்பட்டான், திருநெல்வேலி பற்றி இந்நூல் "பண்பு செறி தக்க பலவளமுஞ் சார்ந்து கல்வி நாகரீகம் மிக்க திருநெல் வேலி எனக் குறிப்பிடுவதில் இருந்து இக்காலத்தில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய பண்பாளரும், பலவளமும் கொண்ட இடமாக இது திகழ்ந்தது புலனாகின்றது. இதே ஊரிலே தான் இவனின் மைத்துனனான செண்பகமழவனும் அவன் தம்பியும் குடியேறினர். செண்பக மழவனும் பேரும் புகழும் மிக்கவன் என்பதை இதிற் காணப்படும் பேசுபுகழ்ச் செண்பகப் பேர் வாய்ந்த திறன் மழவன்' என்ற அடிகள் உணர்த்துகின்றன. யாழ்ப்பாண அரசின் தலைநகராகிய நல்லூ ருக்கு அண்மையிற் காணப்பட்டாலும் மன்னனுக்கு இவர்கள் மிகவும் வேண்டியவர்களாக விளங்கியதாலும் இவ்வாறு இவர்கள் இங்கே குடியமர்த்தப் பட்டிருக்கலாம் போலத் தெரிகிறது.
நரசிங்க தேவன் என்ற வேளாளன்’ பற்றி இந்நூல் குறிப் பிடுகை பில் இவன் "கங்கை கல வேளாளரில் துளுவகுல வேளாள மரபில் வந்த இரத்தினம்" என இவனை வர்ணிக்கிறது. இவனின் பெயராகிய நரசிம்மன் என்பதே விஷ்ணுவின் நாமங்களில் ஒன் றாகும். இதனால் இவன் வைஷ்ணவ வழிபாட்டைப் பேணுபவ னர்கவும் இருந்திருக்கலாம். காவிமலர்மாலையை அணியும் இவன் "வெள்ளாமரசன்" என்ற விருதுக்குரியவன் இவன் பாரளாவிய புகழ் படைத்தவன். கலைஞர்களை ஆதரிப்பதில் போஷராசன் போன்றவன். கற்றவர்களுக்கு அளிக்கும் கொடை யில் கற்பகதரு போன்றவன். இவன் குடியிருந்த ஊர் பல வளங்களைக் கொண்ட "சீர்வளங்கள் வைகு மயிலிட்டி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெல்லிப்பழையில் நடைபெற்ற வேளாளக் குடியேற்றத் திற்குப் பொறுப்பாகச் செண்பக மாப்பாணன், சந்திரசேகரமாப் பாணன், கனகராயன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் குடியேறிய தெல்லிப்பழை நீர்வளந்தொட்டுப் பல வளமுஞ் சேர்ந்த பகுதியாக விளங்கியதை ‘பாரகத்துள் மேன்மை பலவுடையதாய் நகரத்தாய் தொல்லுலகோர் நாளுந் தொகுத்துப் பிரித்துரைக்குந் தெல்லிப்பழை" என்ற அடி எடுத்துரைக்கிறது.
செம்பகமாப்பாணனின் பிறப்பிடம் தமிழகத்திலுள்ள வாலி யூராகும், மேழிக் கொடியையுடைய இவன் "வெள்ளாமரசன்' என்ற விருதுக்குரியவன். முத்தமிழ் என அழைக்கப்படும் இயல், இசை, நாடகம் ஆகியவற்றுள் கைதேர்ந்தவன் என்பதை "முத் தமிழ் சேர் சித்தன்" என்ற குறிப்பு எடுத்துரைக்கிறது. இவன் இன்முகமும் இனிய வார்த்தைகளையும் பேசும் இயல்பினன்.

--143س-- ،
அரச சபையில் வீற்றிருக்கும் பெருமைக்குரியவன். இவனின் குலத்தில் உதித்த சந்திரசேகர மாப்பாணனும் இவனைப் போன்று வாலிநகரை இருப்பிடமாகக் கொண்டவன். "வெள்ளாமரசன்" என்ற விருதுக்குரியவனும் மேழிக்கொடியையும் குவளைமலர் மாலையையும் அணிபவனுமாவான். இதே ஊரில் சீரக மலர் மாலையை அணிந்தவனும், தமிழகத்துக் காயல் நகரைச் சேர்ந்தவ னும், மன்மதனைப் போன்ற அழகுடையவனும் தனவசிய குலத் தவனுமாகிய ( செட்டி ) கனகராயனும் குடியமர்த்தப்பட்டான்.
இணுவிலில் குடியேறியவனாகப் பேராயிரவன் குறிப்பிடப் படுகின்றான். தமிழகத்தில் இவன் கோவற்பதியைச் சேர்ந்தவன். மேழிக்கொடியையும் காவிமலர் மாலையையுமுடையவன். இந் நூலில் இவன் ‘நாட்டமுறும் ஆதிக்க வேளாளன், எனக் குறிக் கப்படுவதை நோக்கும் போது செல்வாக்கும் அதிகார பலமும் இவனிடம் காணப்பட்டமை புலனாகின்றது. சூரியனது ஆயிரங் கதிர்கள் வீசும் ஒளிக்குச் சமமாக ஒளிவீசும் பொன் ஆபரணங் களை அணிபவனாகிய அழகிய தோற்றத்தினை உடையவன் மட்டுமன்றி கலைகள் எல்லாவற்றிலும் பாண்டித்தியம் பெற்ற வனுமாவான். இவனின் இத்தகைய சிறப்பை ஆயுங் கலைய னைத்துஞ் சாதித்த’ என்ற அடிஎடுத்துக் காட்டுவதோடு இவன் குடியிருந்த இணுவிலின் சிறப்பையும் "சீராருங் கன்னல் செறி வாழை, கமுகுபுடை சூழ் கழனி என்னும் இணுவில்" என்ற அடி எடுத்துரைக்கிறது. இதன் பொருள் கரும்பு, வாழை, கமுகு ஆகியவற்றாற் சூழப்பட்டவயல்களையுடைய பகுதி என்பதாகும்
வச்சிலைப்பள்ளியில் கற்பகதரு போன்று காட்சி தரும் வண் ணம் குடியமர்த்தப்பட்ட நீலகண்டன் அடுத்து முக்கியம் பெறு கின்றான். இவன் தமிழகத்தில் கச்சூர் என்னும் இடத்தினைச் சேர்ந்தவன். குவளைமலர் மாலையை அணிபவன். கங்கை குலத் தினைச் சேர்ந்தவன். "வெள்ளாமரசன்’ என்ற விருதினையு முடையவன். நாற்றிசையும் புகழ் பெற்றவன். அழகுடைய தோற்றத்தினையுடையவன். செல்வத்தின் தலைவனாகிய குபே ரனைப் போன்றவன். அரசன் கொடுத்த விருதுப் பத்திரங்க ளைப் பெற்ற இவன் வீரமும் பலமுமுடையவன். வள்ளலான இவன் சிறந்த சிவபக்தன் என்பதை "இந்நிலத்தில் ஆலமுண்ட கண்டன் அடியை மறவாத வள்ளல்" என்ற குறிப்பு எடுத்துக் காட்டுகிறது.
s:
அத்துடன் இவன் "நிருபன்' எனவும் இந்நூலில் அழைக்கப் படுவதும், மன்னனுக்குரிய தகைமைகள் உடையவன் என விளிக் கப்படுவதும், மன்னனிடம் விருதுபெற்றவன் எனப் போற்றப்படு

Page 116
-144
வதும் வேளாள குலத்தவரில் இவன் மேன்மை பொருந்திய வனாகக் காணப்பட்டதை எடுத்துக் காட்டுகிறது. இவனின் வள்ளன்மையால் இவன் கற்பகதரு போன்று காட்சியளித்தான் எனவும் கூறப்படுகிறது, பச்சிலைப்பள்ளியில் குடியமர்த்தப்பட்ட இவனுடன் தம்பியர் நால்வரும் குடியமர்த்தப்பட்டதும் அவ தானிக்கத்தக்கது.
புலோலியிற் குடியேறிய கனகமழவனும் அவன் தம்பியர் நால் வரும் தமிழகத்திலுள்ள சிகரிமாநகரைச் சேர்ந்தவர்கள். "வெள் ளாமரசன்' என்ற விருதினையுடைய இவன் காவி மலர் மாலையை அணிபவன் ஆவன். சிறந்த ஆளுமை உடையவனான இவனின் பல்வகைச் சிறப்புகள் இங்கே கூறப்பட்டுள்ளன. கெட்டிக்காரனான இவன், வாய்மையுடையவன்; கல்விமான்; ஊக்கமுள்ளவன்; பல் வேறு தனிசிறப்புக்களும், வளமும் உடையவன். இதனையே இந் நூலின் கீழ்வரும் அடிகள் எடுத்துக் காட்டுகின்றன.
"ஒதுமொழி உண்மையுள்ளான் கல்வியுகப்புள்ளான் ஊக் கமுள்ளான் வண்ணம்யுள்ளான் மேலும் வளமையுள்ளான்."
எந்தவொரு இடமும் தனக்கு நிகரானதாக விளங்காச் சிறப் புடைய தொல்புரத்தில் - "மண்ணிடைப் பல்புரத்தின் நல்வளமு மொவ்வாப் பல வளஞ் சேர் தொல்புரம் குடியமர்ந்தவர்களாகப் கூபக நாட்டு வேளாளனும் அவனது உறவினனாகிய நரங்கு தேவனும் குறிக்கப்படுகின்றனர். மேழிக் கொடியையுடைய கூபக நாட்டு வேளாளனாகிய கூபகாரேந்திரன், கங்கா குலத்தைச் சேர்ந்தவன். காவிமலர் மாலையை அணிபவன். இவன் "பேர ழகைக் காவலர் நேர் செல்வன்'. அதாவது அளகாபுரியின் காவ லனாகிய குபேரனை ஒத்த செல்வத்தினையுடையவன். அறிஞ ரைப் பேணுபவன் - 'பாவலருக்கின்பப் பசு மேகம்”. இவனின் கூபகநாட்டுத் தலைவனாக (நாடாள்பவனாக) விளங்கியவன். நல்ல குணசாலியும், இனிய பண்புகளையுடையவனுமாவான். இவனின் பெருமைமிக்க குலத்தில் தோன்றிய நரங்குதேவனும் இவனுடன் தொல்புரத்தில் குடியமர்ந்தான்.
தேவராசேந்திரன் என்னும் வேளாளன் குடியமர்ந்த இடம் கோயிலாக் கண்டியாகும். சிறந்த செல்வந்தனும், தமிழகத்துப் புல்லூர் வாசியுமாகிய தேவராசேந்திரன், இரத்தின மூடியை யுடையவனாக விளங்கியதோடு வெள்ளாமரசன் என்ற விருதுக் குரியவனாகவும் திகழ்ந்தான்.

-145
இவனின் வில்வித்தைத் திறமை, போர்த்திறமை, கொடைத் திறமை, பொறுமை ஆகியன முறையே விஜயன், வீமன், கன்னன், றருமன் ஆகியோருடன் ஒப்பிடப்பட்டுள்ளதைப் பின் வரும் அடிகள் உணர்த்துகின்றன - 'விசயன் போர் வீமனுயர் வீறு கொடைக் கன்னன் இசையிற் பொறையில் இயல் தருமன்".
இருபாலையிற் குடியமர்த்தப்பட்ட மண்ணாடு கொண்ட முதலி தொண்டை நாட்டைச் சேர்ந்தவன் ஆவன். இவன் தொண்டை நாட்டரசன் என்ற விருதினையும் உடையவன்; குவளைமலர் மாலையினன். இவனின் குலம் கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஏரெழுபது பாடி அரங்கேற்றியபோது அவனுக்குச் செம் பொன்னால் அபிஷேகஞ் செய்த வேளாண் குலமாகும். தென் பற்றிலமைந்து பல்வளமுடைய நெடுந்தீவிற் குடியமர்த்தப்பட்ட தனிநாயக முதலி பற்றிய விவரமும் இங்கே கூறப்படுகிறது. சேயூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவன் காவிமலர் மாலையை அணிபவன்; 'வெள்ளாமரசன்" என்ற விருதினையுடையவன். இவன் இந்திரனைப் போன்ற செல்வச் சிறப்புடையவன் - இறை வணிகர் செல்வன்'. நிறைந்த பொறுமை, நீதி ஆகிய பண்பு களையுடையவன் - "நிறை பொறுமை நீதி யகலா தான், நிலைத்த புகழுடையவன் - நீங்காத கீர்த்தி நிலை யாளன்?. இவனின் தந்தை, தாய்வழிக் குலங்கள் இரண்டும் குற்ற மற்றவை"இருகுலமுந்துய்யன்'. நல்ல விளைவைத் தருகின்ற வயல்களை யும் பிறவளங்களையும் கொண்ட வெளிநாட்டில் வஞ்சி நகரில் இருந்து வந்த "வெள்ளாமரசன்" என்ற விருதினையுடைய பல் லவன் என்பானும் வேறு இரு தலைவர்களும் குடியமர்த்தப் பட்டார்கள். வேளாளத்தலைவர்களை, அவ்வப் பகுதிகளிற் குடி யேற்றிய மன்னன், இப்பகுதி நிருவாகத்திற்குப் பொறுப்பாக இவர்களுடன் மேலும் பலரை நியமித்தான். இவர்களுள்ளே தலையாரி, சேவகர் போன்றோர் அடங்குவர். இவர்களுக்கு மேலாக யாழ்ப்பாணத் தீபகற்பத்தினை நான்கு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் "மாதாக்கன்" எனப்பட்ட பிர தேசத் தலைவர்களையும் நியமித்தான். இவர்களுள் மிகுந்த தீரம் பொருந்திய வல்லிய மாதாக்கன் என்பான் மேற் பற்றின் அதிபதியானான். வட பற்றின் அதிபதியாக வலிமை பொருந்திய இமையாண மாதாக்கன் நியமனம் பெற்றான். இமயம் வரை தன் புகழ் பரவப் பெற்றுள்ள செண்பக மாதாக்கனைக் கீழ்ப்பற்றுக்குத் தலைவனாக்கினான். புகழ்மிக்கவனும், திறமைசாலியுமாகிய :ெற்றிமாதாக்கனைத் தென்பற்றின் அதிபதியாக்கினான். பல போர்களில் பகைவரை வென்று அனுபவமிக்க வீரசிங்கனைத் தனது படைத்தளபதியாக்கினான்,

Page 117
-46
யாழ்ப்பாண அரசின் ஆரம்பத்தில் ஏற்பட்ட குடியேற்றங்கள் பற்றிய வர்ணனையை நோக்கும் போது பல்வேறு நிருவாகப் பொறுப்புகளில் இக்குடியேற்றவாசிகள் அமர்த்தப்பட்டமை தெரிகிறது.
இந்நூல் கூறும் வட, தென், மேல், கீழ்பற்று ஆகியன தற் போதைய வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப் பள்ளி போன்ற பிரிவுகளின் முன்னோடிப் பிரிவுகளே ஆகும். இவற்றின் தலைவர்களாக "மாதாக்கன்" என்ற விருது உடைய தலைவர்கள் விளங்கினர். இவர்கள் மிகுந்த திறமைசாலிகளாக வும் விளங்கினர். இவர்களின் கீழ் முதலியார்மார் கடமையாற் றினர். இவர்களோடு தலையாரி, சேவகர் எனப்பட்டோரும் கடமையாற்றினர்.
அடங்காப்பற்றின் சனவேற்றம் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை - வையாபாடல்:-
யாழ்ப்பாண வைபவமாலை, வையாபாடல் ஆகியனவற்றுள் "அடங்காப்பற்று" என அழைக்கப்படும் வன்னிநாட்டில் ஏற்பட்ட குடியேற்றங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டாலும் இது பற்றிய விவர மான குறிப்பு வையாபாடலிலேதான் உண்டு. ஈழத்தில் வன்னி யர்களின் வருகை கி. பி. பதினொராம் நூற்றாண்டிற் சோழ ராட்சியுடன் தோற்றம் பெற்றாலும் கூட இவ்வன்னியர்களின் பிரதான குடியேற்றங்கள் குளக் கேர்ட்டன் காலத்திலும் பின்னர் யாழ்ப்பாண அரசை ஸ்தாபித்த ஆரியச் சக்கரவர்த்திகள் காலத் திலும் தர்ன் ஏற்பட்டது.10 யாழ்ப்பாண வைபவமாலை குளக் கோட்டனால் தொடக்கி வைக்கப்பட்டு வளர்ச்சி பெற்ற வன் னியர் குடியேற்றம் பற்றிப் பின்வருமாறு உரைக்கிறது.1
"பாண்டி நாட்டில் இருந்து ஐம்பத்தொன்பது வன்னியர் களும் வந்து அவர்களுடனே கூடினார்கள். குடிசனங்கள் வரவரப் பெருகி அதிகப்பட்டுக் கொண்டமையால் அரசாட்சியின்றி வெகுவித கலகங்கள் பலகாலும் நேரிட் டன. அவ்வேழு நாடுகளின் வருமானங்களும் கோணேசர் கோவிலுக்குச் செல்வனவேயன்றிக் கண்டி நாட்டரசருக்கு அந்நாடுகளால் யாதொரு நயமுமில்லாமையாற் கண்டி நாட்டு அரசர்கள் அந்நாடுகளைப் பராமுகம் பண்ணி விட்டார்கள். அக்காலத்திலே சந்திர வன்னியனும் வேறு அநேக குறுநில மன்னரும் ஒருவரின் பின்னொருவராகத் தோன்றியழிந்தபின் அவ்வன்னியர்கள் அனைவ:hம் ஒத்திணங்கித் தங்கள் சாதியிற்றலைப்பட்ட ஏழு பேரைத் தெரிந்து அவ்வேழு நாடுகளுக்குத் தலைவ

مس--147-سس۔
ராக்கி அவர்சளுக்குக் கீழ் அமைந்திருந்தார்கள். வன்னி யர்கள் ஆண்டு வந்ததினால் அவ்வேழு நாடுகளும் வன்னி நாடுகளெனப் பெயர் பெற்றன. அதுமுதல் அவ்வேழு தலைவர்களின் சந்ததியார் சுயேச்சைப்படி ஆண்டு வந்தனர்."
இந்நூல் குறிப்பிடும் ஏழு வன்னிமைகள் யாழ்ப்பாண அரசர்கள் காலத்தில் வன்னித் தலைவர்களால் அப்ாேது வன் னியில் சிற்றரசர்களாக விளங்கியோரைத் தோற்கடித்து ஸ்தா பிக்கப்பட்ட வன்னிமைகளே என்பதை வையாபாடல் மூலம் அறிய முடிகிறது. இவ்வன்னிமைகள் பனங்காமம், முள்ளி யவளை, கருநாவல்பத்து, தென்னமரவடி, மேல்பத்து, கரிகட்டு மூலை, செட்டிக்குளம்பத்து ஆகும்.
வன்னிப் பகுதியிலும் திருகோணமலைப்பகுதியிலும் ஏற்பட்ட வன்னியர் குடியேற்றம் பற்றி வையாபாடலில் வரும் குறிப் பினை ஆராய்வோம்.12 யாழ்ப்பாண அரசினை ஸ்தாபித்த முதல் மன்னனைக் கைலாயமாலை செயவீரசிங்கை ஆரியன் எனக்கூற வையாபாடல் இவனைச் செயதங்கவீரவரராஜசிங் கன் என அழைக்கிறது. இந்நூல் செயதுங்கவீரவரராஜசிங்கன் தன் மாமன் மகளாகிய சமதூதியை மணக்க விரும்பிப் பாண்டி நாட்டரசனாகிய மதுரை அரசனுக்குத் தூதனுப்பினான் எனவும், அவன் அறுபது வாட்படை வன்னியரை அழைத்து அவர்களுடன் தனது மகளை அனுப்பினான் எனவும் குறிப்பிடுகிறது. இளவ ரசியை மணந்த செயதுங்கவீரவரராஜசிங்கன் அவளோடு வந்த வன்னியர்களை அடங்காப்பற்று என அழைக்கப்பட்ட வன்னிப் பகுதியைக் கைப்பற்றி ஆளும் படியும் தனக்கு ஆண்டுதோறும் திறை அளிக்கும் படியும் பணித்தான் எனவும் இதிற் கூறப் படுகிறது.
அடங்காப்பற்றில் அப்போது பல சுதேச குறுநில மன்னர்கள் ஆண்டார்கள். இவர்களை அடக்கி வெற்றி கொள்ளுவதற்கு இவர்களிடம் போதிய படை பலம் இல்லாததால் தமிழகத்தி லுள்ள இளஞ்சிங்கமாப்பாணன், நல்லவாகுதேவன், அக்திமாப் பாணன் ஆகியோருக்குத் தூதனுப்பி அங்குள்ள “பதினெண் சாதியிலுள்ளவரையும்? அழைத்து வரும்படி கேட்டுள்ளதை வையாபாடற் செய்யுள் பின்வருமாறு எடுத்துரைக்கிறது 13
"ஆருடன் புகழ்வ தெனவவருரைப்ப
வழகிளஞ் சிங்க மாப்பாணன்
சீர்பெறு மெய்த்தேவன் திடவிர
சிங்க மாப்பாண னிராசிங்கன்

Page 118
سيد 148-سب
வேர்பெறு நல்ல வாகுவென் றுரைக்கும்
பேருடனோதியந்நாளி
னேர்பெறு பதினெண் சாதியுள்ளவரு மிவ்விடம்
வரவிசைந் திருமின்"
மேற்கூறிய தலைவர்கள் மதுரை, மருங்கூர், காரைக்கால், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, துளுவநாடு, தொண்டை மண்டலம், வடகிரிநாடு ஆகிய பகுதிகளிலுள்ள பற்பல குல மக்களைக் கூட்டிவருமாறு கேட்கப்பட்டிருந்தனர்.14
இவ்வழைப்பை ஏற்று வந்த வன்னியர்கள் கறுத்தவராய சிங்கன், தில்லி, திட வீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத் தான், வாகுதேவன், மகாதேவன், இராசசிங்கன், இளஞ்சிங்க வாகு, சோதையன். அங்கசிங்கன், கட்டையர், காலிங்கராசன் சுபதிட்டன், கேப்பயினார், யர்ப்பையினார், ஊமைச்சியார், சோதிவீரன், சொக்கநாதன், இளஞ்சிங்க மாப்ப உணன், நல்ல தேவன், மாப்பாணதேவன், தில்லைமூவரியிரவர், வீரவாகு, தானத்தார், வரிப்பத்தார் ஆகியோர் ஆவர்.
இவர்கள் வன்னிப்பகுதியை அடைந்தபோது அப்பகுதியி லாண்ட சுதேசக் குறுநில மன்னர்கள் அதனைத் தனிக்கல், கணுக்கேணி, முள்ளிமாநகர், கிழக்குமூலை, மேற்கு மூலை என ஐந்து பகுதிகளாகப் பிரித்து அரசாண்டனர். இவர்களுட் கணுக் கேணித் தலைவனாகிய வில்லிகுலப்பறையரை வென்ற திடவிர சிங்கன் அப்பகுதியின் அதிபதியானான். மெய்தேவன் என்பான் முள்ளிமாநகரில் அரசு செலுத்திய சந்திரவன் என்ற சான்றார் தலைவனை வென்று அதற்கதிபதியானான். தனிக்கல்லின் தலை வர்களாகிய சகரன், மகரன் ஆகியோரை வென்ற வாகுதேவன் அப்பகுதியின் அதிபதி ஆனான். இளஞ்சிங்கவாகு என்பான் கிழக்குமூலை, மேற்குமூலை ஆகிய பகுதிகளிலாண்ட இராட்சத குலத்தினரை அழித்து அப்குதிகளின் அரசனானதோடு வன்னி நாடுமுழுவதற்கும் தலைவனானான்.
வையாபாடலில் வன்னியர்கள் குடியேறிய பிறபகுதிகளும் கூறப் படுகிறது. கச்சாயில் காலிங்கரும் கட்டையரும் குடியேறத் தில்லி (தெல்லி) என்பான் பழையிற் குடியேறினான். யாப்பையினார், கேப்பையினார் ஆகியோர் கரைப்பற்றில் வாழ்ந்தனர். கருவாட் டுக் கேணியினை ஊமைச்சி என்ற பெண் அடைந்தாள். அங்க சன் கட்டுக்குளத்திற்குச் சென்று வாழ்ந்தான். சிங்கவாகு திரி கோணமலையை அடைய, மாமுகன் வெருகல், தம்பலகாமம் ஆகிய பகுதிகளை அடைந்தான். சுபதிட்டன் என்பான் கொட்

--149ست
டியாரப் பற்றில் அரசாண்டான். பூபாலன், கோபாலன் ஆகி யோர் திரியாய், கட்டுக்குளம் பகுதிகளில் வாழ்ந்தனர். செட்டி குளத்தில் தேவராயன், கொடித்தேவன், கந்த வனத்தான், குடை காத்தான் ஆகியோர் வாழ்ந்தனர். பனங்காமத்தில் துங்கரா பனும் துணுக்காயில் சோதிநாதன், சிங்கவாகு ஆகியோரும் வாழ்ந்தனர் அத்துடன் யாழ்ப்பாணம், நல்லுார் ஆகிய பகுதி களில் வாழ்ந்த வன்னியர்கள் பற்றியும் குறிப்புளது. யாழ்ப்பா ணத்திலே வீரமழவராயன், நீலமழவராயன் ஆகியோர் வாழ, நல்லூரில் வில்வராயன் வாழ்ந்தான். 15 எனினும் யாழ்ப்பாண அரசர்காலத்தில் அடங்காப்பற்றில் பனங்காமம், முள்ளியவளை, கருவாநாவற்பத்து, தென்னமரவடி, மேல்பத்து, கரிகட்டுமூலை, செட்டிகுளம்பத்து ஆகிய வன்னிமைகள் வலிமை பெற்றுக் காணப் பட்டதோடு, யாழ்ப்பாண அரசமாளிகைக்கு ஆண்டுக்கொருமுறை சென்று திறையும் அளித்தனர்.
யாழ்ப்பாண அரசுகால நிருவாக முறையே வன்னிப் பகுதி யிலும் காணப்பட்டது. எனினும் வன்னியர்கள் சுயமாக ஆண்டு அவற்றுட் சேவை புரிந்த முதலியார், கண்காணி, பண்டாரப் பிள்ளை, தலையாரி, அடப்பனார், மொத்தக்கர் முதலிய எல்லா அதிகாரிகளையும் நியமித்தனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது யாழ்ப்பாண இராச்சியத்தில் நிலவிய சமூக அமைப்பே வன்னியிலும் காணப்பட்டது. இதனாலே தான் இப்பகுதித் தேச வழமைச் சட்டங்கள் வன்னியில் மட்டுமன்றித் திரிகோணமலை யின் சில பகுதிகளிலும் செல்லுபடியானது. இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது இக்காலத்தில் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், திரிகோணமலைப் பகுதியிலும் ஏற்பட்ட குடியேற் றங்களேயாகும். இத்தகைய குடியேற்றங்களால் மட்டுமன்றி இதற்கு முன்னர் இப்பகுதிகளிற் காணப்பட்ட வழக்குசஞம் ஒன்றிணைந்தே இத் தேசவழமைச் சட்டங்களாக வளர்ச்சி பெற்றன என்பதே சாலப் பொருந்தும். யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் ஏற்பட்ட குடியேற்றம் (சனவேற்றம்) பற்றித் தமிழ் நூல்கள் தரும் தகவல்களிற் புனைந்துரைகள் காணப்பட்டாலும் கூட இவை வரலாற்று நிகழ்வாக இப்பகுதியில் அமைந்த சன வேற்றத்தையே குறிக்கின்றன என்பதில் எதுவித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. இக்காலத்திலே தமிழகத்திற் காணப்பட்ட அரசியற் சூழலும் ஒரு விதத்தில் இத்தகைய சன வெற்றத்தினைத் துரிதப்படுத்தவும் உதவியது என்றால் மிகை பாகாது.

Page 119
سس150--
தேச வழமைச் சட்டங்களும் சமூகப் பிரிவுகளும்:
இனி, இத்தேசவழமைச் சமூக அமைப்பின் அடித்தளமாகிய மூன்று முக்கிய பிரிவுகள் பற்றி நோக்குவோம். இவை ஆண்டான், அடிமை. குடிமை ஆகும். இம்மூன்று பிரிவுகளும் இப்பகுதியிலே நிலவிய சாதியமைப்பை மையமாகவே கொண்டி யங்கின. இவற்றை விடத் தேசவழமைச் சட்டங்கள் பின்வரும் விடயங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றன.16 இவற்றுட் பிரதான மானது சொத்துரிமையாகும். இது முறையே சீதனம், முதுசொம், தேடிய தேட்டம் என்னும் முப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. இப்பகுதிக்கே உரிய தனித்துவமான அம்சங்கள் இதற் குண்டு. இவற்றுடன் சுவீகாரம், காணியுரிமை, நன்கொடை, ஈடு, அடைவு, வாடகை, சொள்வனவு - விற்பனவு, அடிமைகள், வட்டிக்கடன் ஆகிய முக்கிய விடயங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.?
அக்காலச் சமூக அமைப்பில் சாதி அமைப்பு முக்கியமான தொன்றாகக் காணப்பட்டதால் அவைகள் பற்றிக் குறிப்பிடுதல் அவசியமாகின்றது. இது பற்றி இங்கே குறிப்பிடுவது இவற்றுக் கிடையே காணப்பட்ட உயர்வு தழ்வுகளை எடுத்துக்காட்டுவதற் கல்ல. மாறாக ஒரு வரலாற்றுக் கோவையாகவே இதனை இணைக்க விரும்புகிறோம்.
சாதி பற்றிய தடயங்கள் தமிழ்நூல்களாகிய யாழ்ப்பாண வைபவமாலை, வையாபாடல் ஆகியனவற்றிற் காணப்பட்டா லும் கூட இச்சாதிகளின் தொழில்கள், கடமைகள் பற்றிய நேர் முக வர்ணனையாக டச்சுக்காரரின் ஆட்சியின் ஆரம்பத்தில் சமய நடவடிக்கை ளிலீடுபட்ட போல்டேயஸ் பாதிரியாரின் குறிப்புகளும் டச்சுத் தேசாதிபதிகளின் நினைவேடுகளும் அமை கின்றன. இவ்விடச்சு ஆவணங்களிற் கி பி. 17 ஆம் நூற்றாண் டில் ஆட்சி செய்த தொமஸ் வான் றியின் கி பி. 1697 இல் வெளியிடப்பட்ட நினைவேடு வடபகுதியிற் காணப்பட்ட நாற்பது சாதிகள் பற்றியும் அவைகள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு இறுத்த வரிபபணம் பற்றியும் குறிப்பிடுகின்றது. யாழ்ப்பான அரசு கி. பி 10 19 இல் போத்துக்யேரால் கைப்பற்றப்பட்டுக் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு இடைளிெயில் மட்டுமன்றி அதே நூற்றாண்டில் இக்குறிப்பு வெளியிடப்பட்டதும் இதற் குரிய முக்கியத்துவத்தினை உறுதிப்படுத்துகிறது எனலாம் 18 இச் சாதிப்பிரிவுகளாவன:
(1) வேளாளர் - எல்லாச் சாதியினரையும் விட எண்ணிக்கையில் அதிகமானவர் (2) சான்ற ர் - தொகையிற் குறைந்தவர்கள் இவர்களுக்கும் வேளாளருடைய கடமைகளேயுண்டு. (3) தனக்

-151
காரர் - (4) பரதேசிகள் - வேளாளரோடு சமத்துவமாகக் கருதப் பட்டனர். (5) மடப்பள்ளி - இவர்கள் சுதேச மன்னர்கள் காலத்திற் பிராமணரின் சமையற் கூடத்திற் கடமையாற்றிய வர்கள். (6) மலையாளி அகம்படியார், (7) மீன்பிடிகாரர் - கரை யார், முக்குவர், பரவர், செம்படவர், கடையர், திமிலர். (8) முகமதியர் (சோனகர்) (9) செட்டிகள் (10) தட்டார் (11) வண்ணார் (12) நெசவாளர் (13) பறையர் (14) கிறிஸ் தவத் தச்சர் (15) கிறிஸ்தவக் கொல்லர் (16) குசவர் (17 வேர்குத்திப் பள்ளர் (18) சாயக்காரர் (19) எண்ணெய்க் காரர் (20) துரும்பர் - நளவருடைய வண்ணார் (21) சிவி யார் (22) கன்னார் (Fondadors) (23) பெட்டி செய்வோர் (Cabinet Makers) (24) Gasgol lugi, G.J. vii.3aiti (Shield Makers) (25) மேசன்மார் (26) தையற்காரர் (27) செருப்புக்காரர் (28) சித்திரக்காரர் (29) அம்பட்டர் (நாவிதர்) (30) பிரா D600rri (31) தவசிகள் (32) Lucir6haa sair (Palevelys) (33) பரவர் (Parாuas) (34) மறவர் (35) பள்ளர் (36) நளவர் (37) காலிக்காறர் (கோலியப் பறையர்) (Kalicarre Pareas) (38) கொட்டுக்காறப் பறையர் (கொட்டக்காரப் பறையர்) (Kottoecarre Pareas) (39) Fn 667 Ln if (Chiandas Wealepadre) (40) வலையர் அல்லது வெற்றிலைக்காரர்.
வையாபாடலிலும்19 யாழ்ப்பாண அரசில் நிலவிய சாதிகள், சமூகப் பிரிவுகள் பற்றிய குறிப்புகள் வருமாறு:-
கைக்குளர் சாண்டார் குயவர் வலைஞர் சீனர்
காராளர் திமிற்பரவ ரிவர்களோடு மைக் குழலார் நட்டுவர் மாமறவர் மிக்க
மலையகம் நல்லகம்படிகோ முட்டி யானோர் தக்கவர்கள் கன்னடர் சிங்களவர் தச்சர்
தட்டார் கன்னார் கொல்லர் தயவின் மிக்கோர் எக்குலமுங் கூடி யாழ்ப் பாணந் தன்னி
லிதமுடனே சிறந்துவீற்றிருந்தார் மாதோ
பல்வேறு சாதிப்பிரிவினர் வாழ்ந்த இடங்களும் இந்நூலின் பிறி தோரிடத்தற் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது 20
கட்டையர் காலிங்கர் மலையகத்தார் கன்னார்
காசினியிற் கச்சாயி லிருந்து வாழ்ந்தார்
கிட்டமுறு கோவியர்களோடு கெல்லி
யெனும் பெண்ணே பழையெனுமா நகரில் வாழ்ந்தாள்

Page 120
-52
திட்டமுறு சாவகச் சேரிதன்னிற்
றிடமுடனே யகம்படியார் ஈயவர் கொல்லர்
ஒட்டியர் முக்கியரும் பூநகரி யென்னு
மெழில்நகரி லிதமொடுவீற் றிருந்தார் மாதோ
வில்லவராயன் நல்லூர் தன்னில் வாழ்ந்தான் மேவலர்கள் புகழு மடப்பள்ளி யானோர் எல்லோரும் மானிப்பாய் தனிலிருந்தா
ரெழுதரிய கவறர் கோமுட்டி யானோர் பல்லோரும் தில்லை மூவாயிரவர் தாமும்
பார் மீது வரணி நாடதனில் வாழ்ந்தார் மல்லாருஞ் சிந்து நாட்டார் துலுக்கர்
மாபெரிய கடலோரம் மருவினாரே
சங்கமர்கள் முப்பதுடன் வீரமுட்டி
தன்னில் நாற்பது தாத ரெண்மர் தாமும் வங்கணஞ் சேர் கெருடாவி லிருந்து வாழ்ந்தார்.
வாகுசெறி பள்ளுவிலில் வருணத் தன்னிற் றங்கிய குச் சிலியர் பப்பரவர் சோனர்
தாவறுசீர் வசியர்கரை யார்கள் மிக்க சிங்களவ ருடன் சீனர் மறவ ரோடு
சீர் திகழும் நுகரை நகர் சேர்ந்திட்டாரே
மேற்கூறிய அட்டவணையிற் சாதிகளாகக் கைக்குளர், சாண் டார், குயவர், வலைஞர், காராளர், பரவர், நட்டுவர், மறவர் அகம்படியார், கோமுட்டி, தச்சர், தட்டார், கன்னார், கொல் லர், கோவியர், ஒட்டியர், முக்கியர், கவறர், தில்லைமூவாயிர வர், சங்கமர்கள், குச்சிலியர், பப்பரவர், வசியர், கரையார் போன்றோருடன் சிங்களவர், சீனர், சோனகர் (துலுக்கர்), கன்ன டர், காலிங்கர், மலையகத்தார் (மலையாளத்தவர்) போன்ற இனக் குழுவினரும் சேர்க்கப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.
அக்காலத்தில் ஆண்டான் வரிசையில் வேளாளரே காணப் பட்டாலும் பிராமணரும் இதனுள் அடங்குவர். இதனையே போல்டேயஸ் பாதிரியாரும் குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் வரி சையில் கோவியர் சாண்டார். பள்ளர், பறையர் குறிப்பிடப் பட்டுள்ளனர். வண்ணார், அம் பட்டர் போன்றோர் குடிமக்க ளாக இருந்தனர். நளவர், பள்ளர், பறையர் ஆகியோருக்குத் தனியான குடிமக்கள் காணப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் டச் சுக்காரரின் ஆட்சிக் கால ஆரம்பத்தில் ( கி. பி 1658 - 1665) மதப் பிரசாரகராக இருந்து ஊர் வழக்கங்களைக் கண்டறிந்த

س-153--
போல்டேயஸ் பாதிரியார் இச் சாதிகள் பற்றிக் குறிப்பிடுவது நம்பகரமாக இருப்பதால் அக்குறிப்புகளை நோக்குவோம். 21 அக்காலத்தில் சாதிகள் மாத்தின் கிளைகளைப் போன்று பிர தான சில பிரிவுகளிலிருந்து பல கிளைகளாகப் பிரிந்திருந்து வளர்ச்சி பெற்றதாக இவர் கூறுகின்றார். இவை பலவாக வேறு பட்டிருந்ததோடு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடும் தீண்டாமையும் இதில் ஒர் அம்சமாக வளர்ச்சி பெற்றதையும் இதிற் குறித்துள்ளார். பொதுவாகச் சாதி அடிப்படையிலேதான் தொழில்முறைகள், கல்வி ஆகியன அமைந்திருந்தன. பரம்பரை பரம்பரையாகத் தந்தையின் தொழில்களையே தனயர்கள் மேற் கொண்டிருந்தனர். திருமணங்கள், விருந்தோம்பல் போன்றனவும் இவ்வடிப்படையிலேயே அமைந்திருந்தன.
இச்சாதிகளில் முதன்மையானவர்களாக வேளாளரையும் பிரா மணரையும் இவர் குறித்துள்ளார். பொதுவாக வேளாளர்கள் கிறீஸ்தவ சமயத்தைத் தழுவிய நிலையிற்றான் முதன்மை நிலையைப் பெற்றிருந்தார்கள் என்றும் அல்லாவிட்டாற் பிராமணர்கள் தான் முதன்மையானவர்கள் எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் வேளாளரின் உடைபாவனைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. காற்சட்டை போன்று தோற்ற மளிக்கும் வகையில் இவர்கள் வேட்டியை இரு கால்களிலும் சுற் றிக் கொடுக்காகவே உடுத்தார்கள். (படம் 29 ) அவர்கள் அரையில் உடுத்த வேட்டியிலிருந்து ஆக்கப்பட்ட (பைபோன்ற) *மடி காணப்பட்டது. இதற்குள் வெற்றிலை, பாக்குப் போன்ற வற்றை இவர்கள் வைத்திருந்தார்கள். பொதுவாகத் தம்மோடு ஒரு சில ஏட்டோலைகளைக் கொண்டு செல்வதும் இவர்களின் வழக்கமாக இருந்தது. கடதாசி போன்று தேவைப்படும்போது எழுவதற்கு இது பயன்படுத்தப்பட்டது. அத்துடன் ஒரு சிறு பெட்டியையும் (வெள்ளி முலாம் பூசப்பட்டது) இவர்கள் தம்மோடு கொண்டு செல்வதும் வழக்கம். இதனுள் ஒரு முனையில் கத்தி போன்ற கூரிய பக்கமும் மறுமுனையில் எழுத்தாணி போன்ற கூருள்ள கருவியும் காணப்பட்டது. இவற்றைத் தீட்டுவதற்கு ஈயத்தினாலான சிறுதுண்டையும் வைத்திருந்தனர். இவர்கள் காலிற் செருப்பணிவார்கள். இவர்களின் காதின் கீழ்ப்பகுதி தோளிலே தெரிடுமளவுக்கு மிக நீண்டிருந்தது. இதற்குக் கார ணம் சிறு வயதிலிருந்து காதுகுத்திக் கடுக்கன்கள் அணிந்திருந் தமையே எனலாம். இவர்களின் பிரதான தொழில்களாக வேளாண்மை மந்தை வளர்ப்புக் காணப்பட்டது. இவர்களின் வசம் அதிகமான பசுக்கள், காளைகள், செம்மறியாடு, ஆடு

Page 121
-154
எருமைகள் இருந்தன. இவர்களின் இல்லங்கள் சிறப்பர்னவை யாகவும் சுத்தமானவையாகவும் காணப்பட்டன.
இவர்களின் இல்லத்தைச் சுற்றி வளவுக்குள் பெரிய முற்ற மும் காணப்பட்டது. இவற்றுள் வெற்றிலைச் செடிகளும் நல்ல கிணறுகளும் உண்டு. வளவில் தாவரங்களும் வளர்க்கப்பட்டன. இவற்றுக்கு நாளுக்கு நாள் இரு சரம் நீர் ஊற்றும் வழக்கம் காணப்பட்டது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் மழை பெய் வதால் நெற் பயிர்களைத் தை, ம. சி மாதங்களிலே தான் அறு வடை செய்வர் சில சமயம் வயல்களில் நீர் நிறைந்து காணப் படும் டோது அவற்றைப் பட்டைகளைக் கொண்டு வெளியேற் றுவார்கள், அறுவடைக்குப் பின்னர் சூடு அடித்தல், சூடு மிதித்தல் ஆகியன நடைபெறும். காளைகளைக் கொண்டே குடுமிதித் தார்கள். (படம்-30)
வருடம் ஒருமுறை பயிர் செய்யப்பட்டாலும் நீர்வசதியுள்ள இடங்களில் இருமுறையும் வேளாண்மை செய்யப்பட்டது.22 வேளாளரின் வளவிலுள்ள தென்னை மரங்கள் பற்றியும் குறிப் பிடப்பட்டுள்ளது. பொதுவாகத் தென்னங் கன்று நட்டு ஆறு ஆண்டு களுக்கு மழையில் லாக் கலங்களில் நீருற்றுவது வழக்கம். யாழ்ப் பாண நிலப்பகுதியின் மண்படையின் அளவு குறைந்து பெரும் பகுதி பாறையாகவே காணப் ட்ட தால் இவற்றைக் குடைந்து வெகு சிரமத்தின் மத்தியிலே தான் கிணறுகள் தேனிடப்பட்டன எனவும் இவர் கூறுகின்றார்.
வேளாளரின் உணவு வகைகளில் நெய், தயிர் ஆகியன முக் கிய இடம் வகித்தன. மரத்தினால*ன மத்துக்களைப் பயன்படுத் தியே நெய்யை இவர்கள் கடைந்தெடுத்தனர். (படம் 01) இவர்கள் உணவோடு நெய்யைச் சேர்த்து உண்பதில் அதிக விருப்பு டன் காணப்பட்டனர். தயிரும் இவர்களின் உணவில் முக்கிய மாகச் சேர்க்கப்பட்டது. இதிற் குளிர்த்தன்மை காணப்பட்டதால் இது ஒரு மருந்தாகவும் பயன்படுத்தபபட்டது. கடுமையான காய்ச்சல், இங்கு அதிகமாகக் காணப்படும் சின்னமுத்து போன்ற நோய்கள் ஏற்படும் போது இது ஒர் மருந்தாகவும் பயன்படுத்தப் பட்டது. சமூகத்திலே செல்வாக்குடன் விளங்கிய வேளாளர்கள் தமது சாதிக்குள்ளேயே திருமணங்களை மேற்கொண்டிருந்தனர். இவர்களின் திருமணங்கள் பெரும்பாலும் சித்திரை வைகாசி மாதங்களிலே நடைபெற்றன. சிறு சச்சரவுகளுக்கும் நீதிமன்றத் தினை ந டும் இவர்களிடம் பொறாமைக்குணமும் காணப்பட் டது. வாக்குவாதம் செய்தல், உளறல், உரத்து வாதாடல் ஆகிய பண்புகளில் இவர்களுக்கு நிகரானவர்கள் வேறு ஒருவருமில்லை எனவும் போல்டேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.

--س-155-سبس۔
டச்சுக்காரத் தேசாதிபதிகளிலொருவராகிய தொமஸ் வான்றீ யின் 23 குறிப்பில் வேளாளருக்கும் மடைப் ள்ளிச் சாதிப்பிரிவின ருக்குமிடையே காணப்பட்ட தீராத பகைமையுணர்ச்சி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் ஒருவரை ஒ3வர் நம்புவதில்லை என்றும் பதவிகள் வழங்கப்படும் போது இரு பகுதியினருக்கம் சமததுவமான முறையிலேயே இவை வழங் ஃப் பட்டன எனவும் இவர் கூறியுள்ளார். இன் னார் சோதிபதிய கிய சுவாடெக்ருன் 24 வேளாளர் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். தமது குலப் பெருமை கொண்டாடிய இவர்கள் ஏனைய சாதியினரை வெறுத்து அடக்கி வைத்திருந்தார்கள். செல்வாக்குள்ள இவர் கள் இவர்களுக்கெதிரான குற்றங்களை டச்சு நிருவாகத்தின ருக்கு ஏனையோர் புகார் செய்வ ையும் தடுத்தார்கள் இத னாற் பதவிகள் வழங்கப்படும் போது வேளாளரின் செல்வாக் கினைக் கட்டுப்படுத்துவதற்காக மடைப்பள்ளிச் சாதியினருக்கும் பிறருக்கும் வழங்கப்பட்டது எனவும் எடுத்துக் காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் உள்ளூர் நிருவாகத்தில் வேளாளர் பிரிவி னரே முக்கிய பங்கினை வகித்தனர் என்பதை போல் டேயஸ் பாதிரியார் போன்றோரின் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. முதலியார் உடையார், மணியகாரன் போன்ற பதவிகள் இவர் களிடமேயிருந்தது. முதலிய சர் பற்றி இவர் குறிப்பிடுகையில் நீதி நிருவாகத்தைப் பொறுத்தமட்டில் உள்ளூர்ச் சட்டங்கள், வழக் கங்கள் ஆகியனவற்றை நன்கறிந்த முதலியார்ம ;ரே ஈடுபட்டி ருந்தனர் எனவும் இவர் குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கத் தக்சது 25 நிலத்தினையும், வேளாண்மையினையும் அடிப்படை யாகக் கொண்டிருந்த அக்சாலப் பொருளாதார அமைப் பில் வேளாளர் பெற்ற முக்கியம் சமயத்துறையில் முக்கியமாக நாட் டின் ஆடி மவழி ஒழு தம் கோயில் சளுக்கும் இவர்களை உரித்தாளர் களாக்கியது. இங்கே நடைபெறும் நித்திய, நைமித்திய கிரி யைகளை ஒப்பேற்றி வைக்கும் பிராமண குலத்தவருக்கும் இவர்களுக்குமிடையே நல்லுறவு காணப்பட்டது 26 கோயிற்கிரி யைகளில் மட்டுமன்றி வீட்டுக் கிரியை களிலும் பிராமண சமூகத்தினர் முக்கிய பங்கினை வகித்தமையும் அவதானிக்கத் தக்கது. இக்காலக் கலைகளைப் போஷிக்குமிடங்களாகவும் இக் கோவில்கள் விளங்கின எனலாம். இதனால் அக்காலச் சமூகத்தின் ஒரு முக்கிய நிறுவனமாக இவை விளங்கின. கலைஞர்கள் மட்டு மன்றிப் பல்வேறு குடிமக்கள், தொழிலாளர் ஆகியோர் கோயில் களை அண்டி வாழ்ந்து நன்மை பெறுபவர்களாகவும் விளங்கினர்.
யாழ்ப்பாணப் பட்டினத்திலும் பிற இடங்களிலுமுள்ள பிரா மணர்கள் அடக்கம், அவையடக்கம் ஆகிய பண்புகளுடன் பழகு வதற்கும் இனியவர்களாக விளங்கினார்கள் என போல டேயஸ்

Page 122
سح156س
பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். அளவாக உண்பதிலும் பருகுவ திலும் விருப்புடைய இவர்கள் வெறியூட்டும் மதுவகைகளைத் தொட்டுமே பார்க்கமாட்டார்கள். தினமும் இருமுறை ஸ்தானம் செய்வார்கள் இவர்கள் உயிருள்ள மாமிசப் பிராணிகளை உண்ணு வதில்லை. சிற்றின்ப விருப்புடைய இவர்கள் டாம்பீகமாக வாழும் சுபாவமுடையவர்கள். இவர்களுட் சிலர் கிறிஸ்தவர்க ளாக மாறியும் கூடத் தமது குலத்தின் உரிமை பெருமைகளிற் சிரத்தை கொண்டிருந்தனர். கிறிஸ்தவர்களாக மாறினாலும் கூடத் தமது (குலத்தின் சிறப்புரிமையாகிய) பூநூலை அணியும் வழக்கமும் இவர்களிடையே காணப்பட்டது. தமிழகத்திலுள்ள சோழ மண்டலக் கரையிலுள்ள பிராமணர்கள் போன்று இங்குள்ள பிராமணர்களும் தமது குலத்திற்குள்ளேயே திருமணம் செய் தார்கள். இவர்கள் பெரும்பாலும் சகோதர, சகோதரிகளின் பிள்ளைகளையே மணப்பது வழக்கம், முறையற்ற முறையில் மணப்பதை இவர்கள் விரும்பமாட்டார்கள். தாங்கள் பிரமனின் வழித் தோன்றல்களே எனவும் மார்பு தட்டிக் கொள்வார்கள்.
கிறிஸ்தவர்களாக மாறிய இவர்களிற் சிலர் தாம் ஏபிரகாமின் வழிவந்தவர்கள் எனப் பெருமை கொள்வதும் வழக்கம். போல் டேயஸ் பர்திரியார் மேலும் அச்சுலிேயில் கற்றறிந்த பிராம ணர்கள் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் ஒருவரைத் தாம் அவரது 46 வது வயதில் மதம் மாற்றியதாகவும் அவர் வட மொழியில் கிறிஸ்தவம் பற்றி ஒரு நூலை எழுதியதாகவும் கூறியுள்ளார். பிரர்மணர்கள் கிறிஸ்தவ மதப் பரம்பலுக்குக் காட்டிய எதிர்ப்புப்பற்றி இன்னொரு போத்துக்கேய வரலாற் றாசிரியரான திரினிதாதே என்பவர் இக்காலப் பிராமணர் கல்வி யிற் சிறந்தவர்களாயினும் கிறிஸ்தவ மதத்தின் எதிரிகளே எனக் கூறி இப்பகுதியை ஆளுபவர்கள் பிராமணரால் ஆளப்படு கிறார்கள் என்றும், இவர்களது சமய நூல்கள் கிரந்த வரி வடிவத் தில் அமைந்திருந்தனவென்றும் கூறுகிறார். இப்பிராமண குலத் தவரிற் சட்டம்பி என அழைக்கப்பட்டவர் சிறந்த கல்விமான்' பின்னர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர். இவர்களிடம் தென் னிந்தியாவுக்கு யாத்திரை செய்யும் பழக்கம் இருந்ததோடு இவ் யாத்திரையின் போது பல சமய நூல்களை ஈழத்திற்கும் எடுத்து வந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.27
போல்டேயஸ் பாதிரியாரின் கூற்றினைத்தவிர இக்காலப் பிராமண குலத்தவரைப் பற்றித் தமிழ் நூல்களில் வரும் குறிப்பு களும் அவதானிக்கத்தக்கவை.28 இந்தியாவிற் பிராமண வம் சங்கள் ஆட்சி செய்வதற்கான தடயங்கள் காணப்பட்டாலுங் கூடத் தமிழ்நாட்டில் இதற்குரிய சான்றுகள் இல்லை. ஆனால்

-137
ஈழத்தில் அதுவும் வடபகுதியிற் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டு களுக்கு மேலாகத் தொடர்ந்து ஆட்சி செய்த பெருமை பிராமண வம்சமாகிய ஆரியச் சக்கரவர்த்திகளுக்கே உண்டு ஆரியர்” என்ற அடைமொழி பிராமணர் என்பதைக் குறிக்கும். சக்கரவர்த்தி ஒர் பட்டப் பெயராகும் ஒன்றுக்கு மேற்பட்ட அரசகுலப் பெண் கிளை மணக்கும் வழக்கமும் இவர்களிடையே காணப்பட்டது. அரசனுடைய பட்டாபிஷேகத்திற் பிராமணர் முக்கிய பங் கினை வகிப்பது வழக்கம். முடிசூட்டு விழாவிற்குரிய நன் நாளைக் குறிப்பது மட்டுமன்றி முடிசூட்டு விழாவின்போது மங்கல வாழ்த்துப்பாடல் பாடுவதும் அந்தணர் பொறுப்பாகவே காணப் பட்டது. பட்டாபிஷேகத்தின் முன்னேற்பாடாகப் புனித ஆறு களில் உள்ள நீரினால் மன்னனை நீராட்டுவது வழக்கம். இவ் வாறு அரசனை நீராட்டும் கடமை அந்தணருடையதே. அபிஷே கம் முடிந்த பின்னர் அரசனுக்கு நு கற்பட்டத்தை அணியும் பணி யையும் இவர்களே செய்தனர். இவ்விரு நிகழ்ச்சிகளின் பின்னர் முடிசூட்டும் வைபவத்திலும் அந்தணரே முக்கிய பங்கினை வகித் தனர். முடிசூட்டு வைபவத்தில் இவர்களுக்கு அரசன் தானம் வழங்குவது வழக்கம். அரசருக்குரிய முக்கிய ஆலோசகர்களாக விளங்கியதோடு அரசனின் பிறப்புத்தொட்டு இறப்பு வரையிலான கிரியைகளிலும் இவர்கள் பங்கு பற்றினர்.
வடமொழி நூல்களில் இவர்களுக்கு நல்ல பயிற்சி இருந்தது. வைத்தியம், சோதிடம் ஆகிய துறைகளிலும் இவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இக்காலத்திற் கோயில்களிலும் இவர்கள் முக்கி யமான பணிகளை ஆற்றினர். இவர்களிற் பலர் காசி போன்ற இடங்களிலிருந்தே வரவழைக்கப்பட்டனர் எனக் கைலாயமாலை போன்ற நூல்கள் குறிப்பிடுதலைக் கீழ்வரும் பாடல் எடுத்துக் காட்டுகின்றது.29
"அந்தணருளாய்ந் திங்கனுப்புமெனச் - செந்திருவார் சேதுபதிக்குச் செழும்பா சுரமனுப்பி யாதிமறையோர்கள் புகழாசிரியன் - வேதமுணர் கங்காதரனெனும் பேர்க்காசி நகரோனையினி திங்கே யவனனுப்ப?
இப்பாடலில் ஆரியச் சக்கரவர்த்தி கட்டிய கைலாச நாதர் கோயிற் பிரதம குருவாகவும், கும்பாபிஷேகக் கிரியைகளை நிறை வேற்றும் குருவாகவும் விளங்கிய கங்காதரர் காசியிலிருந்து வந் ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தை ஆண்ட பிரா மண குலத்தவர்களாகிய ஆரியச் சக்கரவர்த்திகளின் முன்னோர்

Page 123
-س-158--
காசியிலிருந்தே இடம் பெயர்ந்து வந்து பாண்டிநாட்டில் உள்ள சேதுக் கரையிலுள்ள இர கேஸ்வரப்பகுதியிற் குடியேறிப் பல்கிப் பெருகியவர்கள் என்பது வரலாறு இதனாற்றான் ஆரியச்சக்கர வர்த்திகள் சேது" என்ற பெயரை நாண பங்களிலும் கல்வெட்டு களிலும் மங்களப் பொருளாகப் பொறித்திருந்ததோடு சேது காவலர்" என்ற விருதுப்பெயரையும் குடியிருந்தனர். இதனால் யாழ்ப்பாணம் வந்த பிராமணர் கா உண்மையிலேயே காசியிலி ருந்து வரவழைக்கப்பட்டனரா அல்லது சேதுக்கரையிலிருந்து வரவழைக்கப்பட்டனரா என்பது ஆராயற்பாலது ஒரு சமயம் கைலாயமாலை ஆசிரியர், காசி, இந்துக்களுக்கு முத்தி கொடுக் கும் புண்ணிய தடமாக விளங்குவதால் இராமேஸ்வரம் பகுதி யிலிருந்து அழைக்கப்பட்ட கங்காதர ஐயரைக் காசியிலிருந்து அழைத்த தாகவும் கூறி இருக்கலாம் மாவிட்டபுரப் பகுதியிலும் சித பரத்தில் இருந்து வந்து குடியேறிய பிராமண குலத்தவர் செல்வாக்குடன் காணப்பட்டதையும் ஆலயக் கடமைகளில் ஈடு பட்டிருந்ததையும் ஆரியச் சக்கரவர்த்தி தனது மந்திரியுடன் அங்கு சென்று அக கோயிற் குருவாகிய பெரிய மணத்துளரின் சந்ததி யினர் அளித்த விருந்தினை உண்டது பற்றியும் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிட்டுள்ளது.
இக்காலத்தில் பிராமண குலத்தவர்கள் முக்கியம் பெற்றி ருந்து, மக்களின் சமூகக் கடமைளை நிறை3ேற்றினாலும் ஓர் செல்வாக்குள்ள குலத்தவராக எழுச்சி பெறவில்லை. இக்கால்த் தில் தமிழகத்தைப் போல வடபகுதிக் கோயில்கள் வசதி படைத்த நிறுவனங்களாக எழுச்சி பெறாததும் ஒரு காரணமாக இருக்கலாம். பிராமணர் வாழு கிராமங்கள் கூட இச்க" லத்திற் காணப்பட்டிருக்கலாம். இவர்களின் வதிவிடங்கள் பெரும்பாலும் ஆலயங்களை அண்டியே காணப்பட்டன. சோழர் காலத்தில் இத்தகைய பிராமணர் மட்டும் வாழும் ஊர்கள் காணப்பட்ட தற்கான சான்றுகள் உள. 80 நான்கு வேதங்களை நன்கறித்த பிராமணர் குடியிருப்பு ஈழத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள கந்த ளாயிற் காணப்பட்டது. அது "சதுர்வேதி மங்கலம்’ என அழைக் கப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள. இப்பின்னணி யில் நோக்கும்போது வடபகுதியிலும் பல பிராமணர் குடியிருப் புகள் இக் காலத்திற் காணப்பட்டிருக்கலாம் என ஊகிக்க இட முண்டு பிராமணர் மட்டுமன்றி "சைவக்குருக்கள்" என அழைக் கப்படும் குருமாரும் இக்காலத்திற் காணப்பட்டனரெனலாம். இச்சந்தர்ப்பததில் வரணியிற் குடியேறிய தில்லைமூவாயிரவர்" பற்றிய வைய பாடலின் குறிப்பு அவதானி கத்தக்கது.81 மர ணச் சடங்குகள் தொட்டுப் பல்வகையான கடமைகளில் அவர்கள்

--159س-
ஈடுபட்டிருப்பதை நோக்கும்போது யாழ்ப்பாண அரசர் காலத் திலும் இக்கிரிகைகள் பல இவர்களால் நடாத்தப்பட்டன எனவும் கொள்ளலாம். தமிழ்நாட்டிலுள்ள வேதாரணியத்தோடு இவர் களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்களைப் போன்ற இன்னொரு பிரிவினர்தான் பண்டாரங்க ளாவர். டச்சுக்காரர் ஆவணங்களில் இவர்கள் பற்றிய குறிப் புண்டு திருக்கே” யிற் கிரியைகளுக்கு வேண்டிய சமித்து வகை களைச் சேகரித்தல், மலர்மாலை கட்டல், சப்பறம் போன்ற சுவாமிக்குரிய அலங்காரங்களை அமைத்தல் ஆகியன இவர்களின் கடமைகளாக இருந்தன. சிலர் திருக்கோயில்களிற் பூசகர்களா கவும் விளங்கினர். தபசிகளும் புலாலுண்ணாத பிரிவினராவர். இவர்களும் திருக்கே! யில்களோடு தொடர்பு கொண்டிருந்தனர்.
கோவியர் பற்றிய குறிப்பும் வையாபாடலில் உண்டு. 32 ஆனால் தமிழகத்தில் இத்தகைய சாதி அமைப்புக் காணப்பட வில்லை. சிலர் இத்தகைய பிரிவினர் தெலுங்கு நாட்டில் காணப் படுகின்றனர் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.33 கோவில் அடிமைகள் கோவியராக மாறியிருக்கலாமென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது.34 இந்நூல் மேலும் குறிப்பிடுகையிற் பறங்கியர் அரசாட்சியைக் கைப்பற்றிய காலத்திலேயே கோவில் களெல்லாம் இடிபட்ட பின் கோவிலெசமானர்கள் அந்தக் கோவி யச்சிறைகளைப் பிறருக்கு விற்பனவு பண்ணியிருந்தார்கள் என்றும் பிற்க லத்தில் வட தேசத்திலிருந்து சில சிறைகள் வடசிறை கோவியம் என்னும் பெயரால் விலைப்பட்டார்கள் என் றும் கூறுகிறது. சிலர், கோ+இடையர் என்பதே கோவியராக மாறியிருக்கலாமெனவும் அபிப்பிராயப்படுகின்றனர்.35 யாழ்ப்பா ணத்தில் இருந்த சிங்கள வேளாளரே (கோய ரஸ்) பின்னர் சிங் களவர் ஆட்சி முடிவடைந்த பின்னர் தமிழரசரின் அடிமைக ளாகிக் கோவியர் என அழைக்கப்பட்டனர் எனவும் கூறப்படுகி றது. 36 டச்சுக்காரர் ஆவணங்களிலும் இவர்கள் பற்றிய விரிவான குறிபபில்லை. சாண்டார் எண்ணிக்கையிற் குறைந்து காணப் பட்டனர். இவர்களிற் சிலர் தங்களைக் கோவியர் எனப் பதிவு செய்து கொண்டனர் எனவும் சொல்லப்படுகிறது.37
நளவர் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகையில் வன்னியரின் கீழ் சேவுகராயிருந்த நம்பிகளே சீவனத்திற்கு வழி யில்லாததினாலே 'சாணாரக் கும்பன்' என்ற அயற் கிராமத்தி லிருந்த சாணாருக்குப் பணிவிடைக் காரர கிப் பனைஏறும் தொழில் பயின்று பின்னை அத்தொழிலைத் தங்கள் சொந்த

Page 124
-160س-
மாக்கிக் கொண்டார்கள் என்றுங் கூறி இவர்கள் தங்கள் குலத்தை விட்டு நளுவினதால் நளவரென்றாயிற்று எனக் கூறுகிறது.38 நள வர் பற்றிப் போல்டேயஸ் பாதிரிபார் குறிப்பிடும்போது இவர்கள் தோற்றத்தில் பிற சாதியினரை விடக் கறுத்த நிறமுடையவர் களாகக் காணப்பட்டனர் எனவும், இவர்களின் பிரதான தொழி லாகக் கள்ளிறக்கல் காணப்பட்டது எனவும் கூறியுள்ளார். அத் துடன் வயல்வேலை, மந்தைமேய்த்தல், மரங்களுக்கு நீர் பாய்ச் சுதல் போன்ற தொழில்களோடு கூலி வேலையும் இவர்கள் செய்தார்கள்.39 பறையர் பற்றிய குறிப்பும் போல்டேயஸ் பாதிரி யாரின் நூலிலுண்டு. 40
இராசநாயக முதலியார் கோவியரைப் போன்று தனக்காரர், நளவர் ஆகியோர் யாழ்ப்பாணத்திற் காணப்பட்ட மறைந்த சிங்களவர் ஆட்சியின் சின்னங்கள் எனக் கருதுகிறார்.41 தமக் கெனப் பிரத்தியேக முறையில் மரங்களில் ஏறும் பாணியினால் இவர்கள் இவ்வாறு பெயர் பெற்றார்கள். என்று இவர் கருது கிறார். தமிழகத்திலிருந்து வேளாளர் ஈழத்தினை அடைந்த போது அவர்களின் அடிமைகளாகப் பள்ளரே முக்கியம் பெற்ற றனர். வேளாளரின் விவசாயப் பூமிகளில் தொழில் செய்த போதும் பிற்பட்ட காலத்தில் மரமேறுதல் முதலிய தொழில் களில் இவர்கள் ஈடுபட்டனர்.
போல்டேயஸ் பாதிரியார் சமூகத்தில் தாம் கண்ட பல்வகைப் பிற சாதியினர் பற்றியும் பல்வகைத் தொழிற் பிரிவுகள், சமூக விழாக்கள் போன்றன பற்றியும் குறித்துள்ளார். 42 சிவியார் யாழ்ப்பாண அரசர் காலத்தில் பல்லக்குக் காவுதல் போன்ற கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இராமநாதபுரத்திலிருந்து வந்த மறவர் குடியேறிய இடம் மறவன் புலவு" எனக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை43 இவர்கள் உள்நாடுகளில் வந்து களவில் ஈடுபட்டதால் அவர் களைப் பிடித்துச் சங்கிலி இராசன் கொலை செய்ய, எஞ்சியோர் "பன்றியன் தாழ்வு’ என்னுமிடத்திற்குச் சென்று குடியேறி னார்கள் எனக் கூறுகிறது.
பரவர் தூத்துக்குடியிற் காணப்படுவது போன்று இங்கு எண்ணிக்கையில் அதிகமாகக் காணப்படாவிட்டாலும் இவர்களின் பிரதான தொழிலாக முத்துக்குளித்தல், சங்கு குளித்தல் ஆகியன காணப் பெற்றன. கரையார், முக்குவர் ஆகியோர் மீன் பிடித்தற் தொழிலிற்றான் முக்கியமாக ஈடுபட்டிருந்தனர். கரையார் பெரும் வலைகளுடன் யாழ்ப்பாண இராச்சியத்தின் கடற்கரைப்பகுதி

-161
களிலும் உப்பாற்றங் கரையிலும் வாழ்ந்தனர் எனவும் போல் டேயஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார். சில்லறை வியாபாரத்திலீடு பட்ட செட்டிமார் தந்திரமும் சூழ்ச்சித்தன்மையும் உடையவர் களாக வினங்கினார்கள்.44 இக்காலச் செட்டிகள் பிராமணருக்கு அடுத்தாற்போலச் கெல்வாக்குடன் விளங்கினார்கள். தலை நகர் நல்லூரில் மட்டுமன்றி, மாத்தறை போன்ற துறை முகங்களிலும் வியாபாரத்திலீடுபட்டிருந்தனர். இவர்கள் ஒரு டச்சு நாணயத்தை எவ்வாறு தேடிக் கொள்ளலாம் என்பது பற்றி நன்கறிந்திருந்தார்கள் எனவும் கூறப்படுகிறது.45
நாட்டு வைத்தியம் பற்றியும் போல்டேயஸ் பாதிரியார் கூறுவது அவதானிக்கத்தக்கது.46 இக்காலத்தில் நாட்டு வைத்தி யமும் சிறப்புப் பெற்றிருந்தது. நாட்டு வைத்தியர்களின் எண்ணிக் கைக்கும் குறைவில்லை. இவர்களுக்குச் சத்திர சிகிச்சை செய் வதில் பயிற்சி இல்லை. நோய்கள் பற்றித்தாம் பெற்றுள்ள அனு பவம், பயிற்சி ஆகியவற்றைக் கொண்டே இவர்கள் நோய்களை மாற்றுவர். இவ் வைத்தியம் சம்பந்தமர்க இவர்களது முன்னே சர் களால் அவர்கள் அனுபவங்களையும் ஆராய்ச்சிகளையும் எழுத்தில் பொறித்த ஏட்டுப் பிரதிகள் உண்டு. இவ் வைத்தியர்கள் நோய் களுக்கான சிகிச்சையாகக் குளிசைகளையும், திரவங்களையும் மருந்துகளாக அளிப்பது வழக்கம். இத்தகைய மருந்துகளை இவர்கள் பல்வேறு மூலிகைகளிலிருந்து தயாரிப்பார்கள், காய்ச் சல், அதிக வயிற்றோட்டம் ஏற்படும் போது சிறிதளவு மிளகை அரைத்துத் தண்ணீர் சேர்த்துப் பொக்கிளடிபில் வைத்தியர்கள் பூசும்படி பணிப்பார்கள். இதனால் இந்நே7ய் குணமடைவது வழக்கம். தானும் இவ்வாறு குணப்பட்டவர் சளுள் ஒருவன் எனவும் போல்டேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.
போல்டேயஸ் பாதிரியார் இப்பகுதியின் சுதேச வைத்தியம் பற்றியும் இது பற்றிக் காணப்பட்ட ஏடுகள் பற்றியும் குறிபிட் டுள்ளமை முக்கியமானது. யாழ்ப்பாண அரசர் காலத்தில் இப் பகுதிச் சுதேச வைத்திய முறையான சித்த வைத்தியம் சிறப் புடன் விளங்கியது. இது தமிழரின் வாரம்பரிய வைத்திய முறை யாகும். யாழ்ப்பாண அரசு காலத்தில் எழுந்த பரராசசேகரம், செகராசசேகரம் போன்றன இதற்குத் தக்க சான்றாகும். இன்று தமிழிற் காணும் மிகப்பழைய வைத்திய நூல் என்ற பெருமைக் குரியது செகராசசேகரமாகும் பரராசசேகரம் என்ற மற்ற வைத்திய நூல் கி. பி. 16ஆம் நூற்றாண்டிலே தொகுக்கப்பட்டது என நம்பப்படுகிறது. தமிழரசு காலத்திலேயே வைத்திய சிந்தா மணி, நயன சாஸ்திரம் என்ற வைத்திய நூல்களும் இயற்றப் பட்டன எனக் கருதப்படுகிறது.

Page 125
س-162-د
புண்களுக்கு வைத்தியம் செய்பவர்களான அம்பட்டர்களும் இங்கு காணப்பட்டனர். இவர்கள் சவரம் செய்வதோடு கைகால் நகங்களை வெட்டுதல், காதுகளைத் துப்பரவு செய்தல் முதலிய கடமைகளையும் செய்தனர். நெசவாளிகளும் இங்கு நிறைந்து காணப்பட்டனர். நெசவுத் தொழிலில் ஈடுபடும்போது நிலத்தில் குழிகளைத் தோண்டிக் கால்களை அதனுள் புதைய விட்டுப் பின்னர் நிலத்தில் வாங்கில் உட்காருவது போல் ராட்டினத்தை நோக்கி உட்கார்ந்து தமது கடமைகளைச் செய்வர். அதிக எண்ணிக்கையில் ஒவியர்களும் (சாயக்காரர்) காணப்பட்டனர். இவர்கள் சேலையில் ஒவியங்களைத் தீட்டுவதற்கு முன்னர் தாம் எடுத்துக்\கொண்ட பொருளினது வெளித் தோற்றத்தினை முதலில் வது வழக்கம். பின்னர் இப்பொருளின் பிற விவரங் களை அமைப்பர். இவ்வாறு அமைக்கும் போது இவர்களது ஒவியங்களிற் பல்வேறு பறவைகள், அழகான தோரண ஒப்ப னைகள் ஆகியனவும் இடம் பெறுவது வழக்கம் இவ்வோவியங் களை ஆக்குவதற்குச் சிறப்பான வர்ணங்களை இவர்கள் பயன் படுத்திதுவார்கள். இவற்றைத் துவைத்தாலும் இவ்வர்ணங்கள் மங்காது. எனினும் இந்தியா மசூலிப் பட்டினத்திலுள்ள இத்தகைய ஒவியர்கள் போல் இவர்கள் திறமைசாலிகள் அல்லர் எனவும் போல்டேயஸ் பாதிரியார் குறிப்பிடத் தவறவில்லை. ஐரோப்பாவிலுள்ள எந்தவொரு நாட்டிலும் காணப்படுவது போன்ற வினைஞர் கூட்டமும் இங்கு காணப்பட்டது. இவர் களிற் கொல்லர், தச்சர், கட்டிடக்கலைஞர்கள் மட்டுமன்றி யானைத்தந்தம், கருங்காலி ஆகிய பொருட்களிற் சிற்பங்களை ஆக்கும் திறமை பெற்ற சிற்பிகளும் இங்கிருந்தமை குறிப்பிடத்தக் கது. பொன், வெள்ளி போன்ற உலோகங்களில் பொருட்களைத் தயாரிப்பதிற் பாண்டித்தியம் பெற்ற கலைஞர்களும் இருந்தனர்.47 கலைத்திறன் படைத்த பல்வேறு கலைஞர்கள் பற்றி திரினி தாதே என்ற ஆசிரியரும் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்துவினது மரத் தினாலான சிறப்பான சிலை ஒன்றை வடித்த பிச்சை என்ற கலைஞர் பற்றிக் குறிப்பிட்டுள்ளதோடு நெசவாளர்கள் பற்றியும் இவர் குறிப்பிட்டுள்ளார். 48 ... . . . .
உள்ளுர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் இல்லை. இந் நீதி மன்றங்களில் வழக்குகளைத் தொடரும்போது வழக்காளிகளே தமது பக்கத்தில் ஆஜராவது வழக்கம். இவ்வாறு ஆஜராகும் போது தமது வழக்கைப் பற்றிப் பேசி விடயத்திற்கு வருவதற்குப் பதிலாக அரைமணித்தியாலத்திற்குக் குறையாமல் வாய்ச்சாலம் பண்ணும் வழக்கமும் அக்காலத்திற் காணப்பட்டது.

-163
சமூகப் பண்புகள்
பொதுவாக இக்காலத்திற் சாதியுணர்வுகள் மேலோங்கிக் காணப்பட்டதனை போல்டேயஸ் பாதிரியார் குறிப்பிடத் தவற வில்லை. 49 பிற்காலத்திற் குறிப்பாகப் பிரித்தானியர் காலத்தில் இவ்வுணர்வுகளைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இவரின் கருத்தினை உறுதி செய்கின்றன எனலாம். உயர் சாதி, கீழ் சாதி என்ற வேறுபாடு அப்போது காணப்பட்டது. சமூ கத்தில் உயர் சாதியினருக்கு மிகவும் உயர்வான மரியாதை அளிக் கப்பட்டது. ஒர் உயர்ந்த சாதியினரை ஒரு தாழ்ந்த சாதியினர் கடந்து செல்லும்போது தாழ்ந்த சாதியினர் உயர்ந்த சாதியின ருக்கு மரியாதை செலுத்துமுகமாக நிலத்தை நோக்கித் தமது தலையை தொங்க வைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. குடும்பங்களிற் கூடக் கணவன், மனைவி ஆகியோர் தாம் வேறு பட்ட சாதியினர் போன்று நடந்துகொண்டனர். கணவன், மனைவி ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து உணவு உண்பதில்லை. கணவன் உண்ட பின்னரே மனைவி உணவு உண்ணும் வழக்கமுமிருந்தது. பசு ஒரு புனிதமான பிராணியாக இவர்களால் மதிக்கப்பட்டது.
அக்கால யாழ்ப்பாணக் குடாநாட்டின் சனவேற்றம் மிக அடர்த்தியாகக் காணப்பட்டதாக டச்சுக்கார ஆவணங்கள் எடுத் துக் காட்டியுள்ளன.50 அத்துடன் இப்பகுதியில் இம்மக்கள் நெடுங்காலமாக வாழ்ந்து வருவதால் இதனை விட்டு வெளியே சென்று வாழுவதை அவர்கள் விரும்பவில்லை எனவும் இவை குறிப்பிட்டுள்ளதோடு மக்கள் தமது பழைய வழக்கங்களை இறுகப் பற்றி நின்றதையும் குறிக்கின்றன. இவர்களின் தொழில் வகைகள் கூட இவர்களின் நம்பிக்கைகள், வழக்காறுகள், சாதி ஒழுங்குகளுக்க மையவே அமைந்திருந்தன எனவும் இவை கூறி இப்பகதி மக்க ளிடையே சுாணப்பட்ட பல பொதுவான குறைபாடுகளையும். எடுத்துக் காட்டி உள்ளன. மூயாற் 5 என்ற டச்சுக்காரத் தேசா திபதி இப்பகுதி மக்களிடையே பொறாமையுணர்வு அதிகரித்துக் காணப்பட்டதாகவும், தங்களுக்குச் சிரமங்கள் ஏற்பட்டாலும் கூடத் தமது சகபாடிகளை அதர்ம வழியிலே துன்புறுத்திக் கஷ் டத்துக் குள்ளாக்குவதில் விருப்புடையவர்கள் எனவும் குறிப்பிட் G96in Grrrrř.
ஒரு வறிய சுதேசி சொல்வாக்குள்ள சுதேசிக்கெதிராகக் குற்றச் சாட்டுகளைக் கொண்டு வரும்போது அல்லது இச் செல்வாக்குள்ள சுதேசியாலே துன்புறுத்தப்படும்போது செல்வாக்குள்ள சுதேசி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி முறையீட்டாளருக்கு நீதி கிடைக்கர் வண்ணம் பார்ப்பதும் வழக்கமாகக் இருந்தது.

Page 126
سس.164---
இன்னெர்ரு டச்சுத் தேசாதிபதியாகிய சுவாடெக்குன் தமது காலத்தில் உள்ளூர்ச் சாதிப் பிரிவுகளுக்கிடையே சமத்துவ நிலை யைப் பேணுவ கற்காக நிருவாகப் பதவிகளை வேளாளர், அகம் படியார் ஆகியோருக்கு மட்டுமன்றிப் பிற சாதிப் பிரிவினருக்கும் நல்கியதாகக் குறிப்பிட்டுள்ளதோடு பொதுவாக இப்பகுதி மக்க ளிடையே நிலை கொண்டிருந்த தற்பெருமை, இறுமாப்பு, பிடி வாதம் ஆகிய பழக்கங்களையும் எடுத்துக் காட்டியுள்ளார்.82 பொதுவாகவே டச்சுக்காரத் தேசாதிபதிகளின் அறிக்கைகளை நோக்கும்போது உள்ளூர் மக்களின் நடத்தைகள் அவர்களைக் கவரவில்லை என்பது தெரிகிறது. டச்சுக்காரத் தேசாதிபதி களின் அநுதாபத்தினைப் பெறாதவர்களாகவே இம்மக்கள் சித் தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போல் டேயஸ் பாதிரியார் யாழ்ப்பாணப் பட்டின வாசிகளி டையே காணப்பட்ட பொதுப் பண்புகளை எடுத்துக் கூறி யுள்ளமையை இனி நோக்குவோம்.53 இவர்கள் புரிந்துணர்வும் நல் ஒழுக்கமும் உடையவர்கள் என்றும், அமைதி, அடக்கம், தூய்மை ஆகிய பண்புகள் இவர்களிடமுண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கிடையே பூசல்கள் குறைந்திருந்தாலும் கூட அதிகம் அலட்டிக் கொள்வதிலே ஆர்வமுடையவர்கள். இவர்கள் தமது நாக்கினை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமெனவும் அறிந்திருந் தார்கள். எவ்வாறாயினும் இவர்களிடையே காணப்பட்ட பெரிய குறைபாடு யாதெனில் இவர்கள் மத்தியிற் காணப்பட்ட ஒழுக்கக் கேடாகும். திருமணமாவதற்கு முன்னர் ஆண்கள் இன்ப நுகர்வில் ஈடுபட்டதால் மணமான பின்னரும் தாம்பத்திய உறவுகளைச் சீரான முறையில் வைத்துக் கொள்வது சிரமமாக இருந்தது. இத்தகைய சீரற்ற நடைமுறைகள் பற்றிய முறைப்பாடுகள் தனக் குக் கிடைத்ததாகவும், குடும்பப் பெயரைக் காக்கவும், அடுத்த சந்ததியினரைப் பெற்றெடுக்கவுமே திருமணம் நடைபெறுகின்ற தென்று சொல்லத் தான் கேள்விப்பட்டதாகவும், தாலி கட்டிய மனைவியை விடப் பிறபெண்களையும் தங்கள் மனைவியர்களாக வைத்திருக்க முடியும் என இவர்கள் செர்ல்லியதாகவும் கூறியுள் 67 mitirir.
இந்துக்கள் மத்தியில் நிலவிய உலகின் தோற்றம் பற்றிய கருத்துக்கள், அக்காலத்தில் நிலவிய நம்பிக்கைகள் ஆகியன பற்றி யும் போல்டேயஸ் பாதிரியார் எடுத்துக் கூறியுள்ளார்.54 பருத்தித் துறையில் தனது சமயப் பிரசாரத்தின் பின் அப்போது தேவா லயத்திற் கூடியிருந்த மக்களோடு ஏற்பட்ட சம்பாஷணையின் போதே மேற்படி விடயங்களைத் தாம் அறிந்ததாகவும் கூறி

س-165--
புள்ளார். இச்சம்பாஷணையில் உலகத்தின் தோற்றம், அதன் காலம், மறுபிறப்பு போன்ற விடயங்களும் பரிமாறப்பட்டன. அப்போது நடைபெறுவது கலியுகம் எனக் கூறிய அவர்கள் உலகம் கலியுகத்தில் 4864 ஆண்டுகளாக நிலை பெற்றுள்ளது என்று தமக்குச் சொல்லியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது தாம் கலியுகத்திற்கு முந்தியதாக மூன்று யுகங்கள் உண்டென்றும் அவை முறையே கிரே தகம், திரேதகம், துவாபர்யுகம் எனக் கூறியபோது அவர்கள் தங்கள் இரகசியங்கள் சிலவற்றைத் தாம் அறிந்திருந் ததையிட்டு வியப்புற்றஈர்கள் எனவும் கூறியுள்ளார். நட்சத்திரங் கள், கிரகங்கள், அவற்றின் தாக்கங்கள் பற்றியும் மக்கள் அறிந் திருந்தனர். சிலசமயம் பறவைகள் மூலமும் தமக்கு நடந்த, நடக் கப்போகும் விடயங்களைத் அறியும் வழக்கமும் காணப்பட்டது.
அக்காலச் சமுதாயம் பற்றிய மேலும் பல தகவல்களைப் போல்டேயஸ் பாதிரியார் தந்துள்ளார் 55 அங்கு மந்திரவாதி களுக்ாம் குறைவில்லை. இம்மந்திரவாதிகளுக்குரிய ஏடுகளும் காணப்பட்டன. இவற்றோடு இன்றைய செய்வினை, சூனியம் போன்ற வழக்கங்களும் அன்றைய சமூகத்திற் காணப்பட்டிருக் கலாம். போல் டேயஸ் பாதிரியார் மந்திரங்களைச் செபித்து நோய்களை மாற்றுதல், நோயாளிகளின் உடலில் அடித்து நோய் களைக் குணப்படுத்தல் போன்ற வழக்கங்களும் அக்காலத்திற் காணப்பட்டதைக் கூறுகிறார். களவு போனால் இழந்த பொருளை மீட்பதற்கு மக்கள் மத்தியில் சாத்திரம் கேட்டல், அது சம்பந்த மாகச் சில சடங்குகளைச் செய்தல் போன்ற வழக்கமும் காணப் பட்டது. சுபமுகூர்த்தம், நல்ல நாட்கள், தீயநாட்கள், முழுவியழம் பார்த்தல் ஆகிய வழக்கங்கள் அக்காலத்தில் இருந்ததையும் இவர் குறிப்பிடுகிறார். ஒருவர் வீட்டை விட்டுப் போகும்போது தும்மல் ஏற்படுதல், வீட்டுக்கூரையில் குறிப்பிட்ட சில பறவைகள் ஒலி எழுப்புதல், அல்லது இப்பறவைகளை வீட்டினிற் பார்த்தல், காகம் பறக்கும்போது அதன் நிழல்படல் ஆகியன கெட்ட சகுனங்க ளாகக் கருதப்பட்டதோடு, கண்ணுரறு, நாவூறு ஆகியவற்றிலும் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இக்காலத்திற்றான் பிர சித்தி பெற்ற வானசாஸ்திர நூலாகிய செகராச சேகரமாலை இயற்றப்பட்டது. இதனை இயற்றியவர் சோமசர்மாவாவார் இக்கால மக்களின் நாளாந்த வாழ்க்கையின் பிறப்புத் தொட்டு இறப்பு வரையிலான கருமங்களைக் மேற்கொள்
ளுவதற்குரிய கால நேரங்களைத் தந்து உதவும் L @5 சாங்க முறையும் இக்காலத்திற் தோன்றிவிட்டது எனலாம். புதுவருடப் பிறப்பாகிய சித்திரை தொட்டு அடுத்த வருடப்

Page 127
-166
பங்குனி மாதம் முடியும் வரையிலான காலப்பகுதிக்குரிய வீட்டுக் கிரியைகளுக்குரிய சுபநேரங்கள், சுவேளைகள், ஆகியனபற்றி மட்டுமன்றி ஆலயங்கள் அமைத் 8 ல் ஆலயக் கிரிகைகளை மேற் கொள்ளல், மனை அமைத்தல் போன்ற நற்கருமங்களை ஆற்று வதற்குரிய கால நேரம் பற்றிய குறிப்புகளும் இதிலுண்டு. பொது வாகவே அக்காலச் சமுதாயத்தில் இத்தகைய நம்பிக்கைகள் நன்கு வேரூன்றி இருந்தன என்றே கொள்ளல் வேண்டும்.
அக்காலத்திற்குரிய நம்பிக்கைகளோடு இன்னும் சிலவற்றைக் குறிக்கலாம். வருடத்தை இன்று கணிப்பதுபோல் உத்தராயணம், தக்ஷிணாயணம் எனக் கணிக்கும் மரபும் அக்காலத்தில் நிலவியி உருந்தது. தைப்பொங்கலுடன் தொடங்கி ஆடிப் பிறப்பு வரையும் உள்ள காலப்பகுதியே உத்தராயணமாகும். ஆடிப்பிறப்பில் இருந்து தைப்பொங்கல் வரையுள்ள பகுதி தகதிணாயனமாகும். உத்தராயணம் தான் சிறப்பான புண்ணிய நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்குரிய காலமெனச் சொல்லப்படுகின்றது. இதிலே இந் துக்களின் முக்கிய விழாக்கள் இடம் பெறுவது வழக்கம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. தைப்பொங்கல் விவசாய சமூகத்தின் சிறப்பான விழாவாகும். உழவர் தமது வயலில் கிடைத்த முதலறுவடையைச் சூரியனுக்குப் படைத்துத் தமது நன்றிக்கடனைச் செய்யும் விழாவே இஃதாகும். இந்நாளில் சூரியனுக்குப் படைத்து மகிழ்ந்த உழவன் அடுத்த நாள் தனது தொழிலுக்கு உறுதுணையாக நிற்கும் பசு, எருது ஆகிய மிருகங் களுக்கு நடாத்தும் பொங்கலே பட்டிப் பொங்கலாகின்றது இந் நாளில் இம்மிருகங்கள் நீராட்டப்பட்டு அலங்கரிக்கப்படுவதும் வழக்கம். தமிழகத்திற் காணப்படுவது போன்ற 'ஜல்லிக்கட்டு" என்ற எருது தழுவும் வழக்கம் அன்று ஈழத்திலும் காணப்பட் டதோ என்று நிச்சயமாகக் கூறமுடியாதுள்ளது. சாணம் பல வகையிலும் முக்கியம்ான பொருளாக அன்றும் இன்றும் மதிக் கப்படுவது அவதானிக்கத்தக்கது. வயலுக்கு உரமாக மட்டுமன்றி விறகாகவும் இது பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் இந்துக் களின் சின்னங்களின் ஒன்றாகிய வீயூதியும் இதிலிருந்து தான் பெறப்படுகின்றது அடுத்து இடம் பெறுவது சித்திரை வருடப் பிறப்பாகின்றது. சிங்களவர்களும் தமிழரைப் போல் ஒரே நாளில் வருடப் பிறப்பினைப் கொண்டாடுகின்றார்கள் கைவிசேடம் கொடுத்தல், நண்பர்கள். உறவினர்கள் இல்லங்களுக்குச் செல்லல் போன்ற வழக்கங்களும் இதனுடன் தொடர்புடையனவே தகூரி ணாயனத்தின் முதல்விழா ஆடிப்பிறப்பாக அமைகின்றது இதுவும் சமூகத்தின் ஒரு முக்கிய தினமாகப் பேணப்படுகின்றது" கொளுக்கட்டை சமைத்து உண்ணல், கூழ்காய்ச்சி உண்ணல்

-167
போன்ற தற்கால வழக்கங்களும் அன்று காணப்பட்டிருக்கலாம். தீபாவலியும் இந்துக்கள் மத்தியிற் சிறப்பான விழாவாக அமைந் துள்ளது. புத்தாடை புனைதல் இதில் முக்கிய அம்சமாகும். கார்த்திகை விளக்கீடு அடுத்த முக்கிய விழாவா -ம். இவற்றை விடச் சிறிய பல பண்டிகைகளும் உள. விழாவும் சடங்குகளும் சமூகத்தில் வாழ்வோடும் வளத்தோடும் தொடர்புடையன மட்டு மன்றிச் சமூகத்தின் சிந்தனையையும் பிரதிபலிப்பனவாகும்.
சமூகத்திற் பல விளையாட்டுகள் கூட அக்காலத்திற் பொழுது போக்காகப் பேணப்பட்டன. துரதிஷ்டவசமாக அவைகளுட் பல அழிந்து விட்டன. கிட்டியடித்தல், கேர்லாட்டம், தாயம், தாய்ச்சி, வாரோட்டம் போன்றன இவற்றுட் சிலவாகும். பெண்கள் மத்தியில் வழக்கிலிருந்த கும்மியடித்தல் போன்றவை யும் குறிப்பிடத்தக்கன. இவற்றை விட அக்காலச் சுதேசக் கலை வடிவங்கள் பல பின்னர் மறைந்து விட்டன போலத் தெரி கிறது. நாட்டுக்கூத்து, ஒப்பாரி போன்றன இவற்றுட் சிலவாகும். கொடும்பாவி கட்டி அழுதல் போன்றன மழை இல்லாக் காலங் களில் நடைபெற்ற ஓர் சமூக விழா ஆகும். இன்று இது அருகி விட்டது.
கல்வி வளர்ச்சி
அரசர்கள் கல்வி கேள்வியிற் சிறந்து விளங்கினர். யாழ்ப் பாண அரசு கால மன்னர்கள் தமிழ்ப் புலவர்களை அழைத்து சங்கமமமைத்த பெருமைக்குரியவர்கள். முச்சங்கங்களை அமைத்த பெருமை தமிழகத்திலுள்ள பாண்டியருக்கு உண்டென்றால் நான்காவது சங்கத்தினை அமைத்த பெருமை இவர்களுக்குண்டு எனலாம். கைலாயமாலை யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்தி களின் முதல் மன்னனைச் ‘சங்கச் சமூகத்தமிழாளன்" என அழைத் துள்ளமை அவதானிக்கத்தக்கது.58 சரஸ்வதி மகால் என்ற நூல் நிலையமும் இவர்களின் தலைநகரிற் காணப்பட்டது. அக்கால நூல்களில் இம்மன்னர்களின் கல்வித்திறமை பற்றிய குறிப்புகளும் உண்டு, தக்ஷண கைலாச புராணம் இக்குல மன்னன் ஒருவ னைக் கற்றவர் திலகன்" என அழைக்கின்றது.37 தமிழ் மொழி யினது வளர்ச்சிக்கு இவர்கள் பாடுபட்டதையும் இந்நூல்கள் குறிப்பிடத் தவறவில்லை. தமிழ்நாட்டில் பல தமிழ் அரசகுலங்கள் அழிந்துவிட்டதாற் பல தமிழ் அறிஞர்கள் ஈழம் நோக்கி வந்த னர். அவர்களை மட்டுமன்றி உள்ளூரில் இருந்த கல்வியாளரை யும் மதித்து அவர்களுக்குப் பரிசில்களை வழங்கியரீதரித்த பெரு மையும் இவர்களுக்குண்டு. செகராசசேகாமாலை ஆரியச் சக்கர சக்கரவர்த்திகளுள் ஒருவன் யானையையும் மூவாயிரத்து எழு

Page 128
-168
நூறு காசுகளையும் புலவருக்குக் கொடுத்தான் எனப் பின்வரும் பாடலிற் குறிக்கின்றது 58
“மன்னர் மன்று செகராசசேகரன்
மணவை யாரிய வரோர்தயன் பன்னு செந்தமிழ் வளம் பெறற்குதவு
பரிசிலங்கவர் சித்தியாம் பொன்னின் மிஞ்சிய காளாஞ்சி கெண்டிகை
பொலங் கலன் பிறவு மாம்பரிச் சின்னமுள்ள தொகை யாவுமிவ்
விதிசிறந்த றிந்துரை சேயிழாய்.
மன்னர்கள் தமிழ்மொழியை மட்டுமன்றி வடமொழியையும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டினர். இவர்கள் பிராமணர்களாக இருந்ததால் வடமொழிக் கலாசாரம் இப்பகுதியிற் பேணப்பட வும் வழிவகுக்கப்பட்டது. மன்னர் பரம்பரையில் தமிழ் வட மொழி ஆகியவற்றிலே தேர்ச்சிபெற்ற அறிஞர்களும் இருந்தனர். இவர்களுள் "அரசகேசரி" என்பவர் குறிப்பிடத்தக்கவர். காளி தாசனின் இரகுவம்சத்தைத் தமிழிற் தந்தவர் இவராவர். இவர் நாயன்மார்கட்டு என்ற இடத்தில் வாழ்ந்ததாகச் கூறப் படுகின்றது. அரசகுமாரர்கள் பொதுவாக அரண்மனையிற் பல் வேறு வித்தைகளிலும், கல்விகேள்விகளிலும் தலைசிறந்த குரவர் களாற் போதிக்கப்பட்டாலும் கூட, தமிழகத்திலும் சென்று கல்வி கற்கும் வழக்கம் இவர்களிடையே காணப்பட்டது. இதற்கான சான்றாதாரம் யாழ்ப்பாண வைபவமாலையில் உண்டு. கனக 鷺 சிங்கையாரியன் தனது பிள்ளைகளைத் தமிழகத்துத் திருக் காவலூருக்கு அனுப்பிக் கல்வி கற்பித்தான் என இதிற் கூறப்படு கின்றது.59
உள்ளூரில் பாரம்பரிய கல்விமுறையே காணப்பட்டது. சங்க காலத்தின் பொதிகை, மன்றம் என அழைக்கப்பட்ட ஊரின் நடு விலுள்ள மரங்களின் கீழ், பொது இடங்களில் இத்தகைய கல்விக் கூடங்கள் அமைந்திருந்தன. இத்தகைய மன்றங்களின் கீழ் இயங் கிய பாடசாலைகளே பிற்காலத்துத் திண்ணைப் பள்ளிகளாக எழுச்சிபெற்றன. தமிழகத்தைப் போன்றே ஈழத்திலும் இவ்வாறு நடைபெற்றிருக்கலாம். இதே போன்ற அமைப்பு பிற்காலத்தி லும் வளர்ச்சி பெற்றிருக்கலாம். எனினும் இக்காலக் கல்வி முறையிலே குரு குலவாசம்தான் சிறப்பான அம்சமாகக் காணப் பட்டது. சிறு பிள்ளைக்கு ஏடு துவக்குதல் தொட்டு அவனைச் சிறந்த கல்விமானாக ஆக்குவதில் அக்கால ஆசிரியர் கொண்ட பங்களிப்பு மகததானது. கல்வியானது சிறார்களை அறிவாளி களாக்கும் நோக்குடனே புகட்டப்பட்டது. எனினும் சமூகத்தின் எல்லாப் பிரிவினருக்கும் இத்தகைய கல்வி புகட்டப்படவில்லை.

-169
சாதி, தொழில், சமூக அந்தஸ்து ஆகியன ஆசிரியர்கள் மாண வர்களைக் கல்விக்காகத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கினை வகித்தன. இதனாற் பரம்பரை பரம்பரையாகவே இக்கல்வி வளர்ச்சி நடை பெற்றது. இக்கல்வியிற்கூட ஆண்களுக்கு மட் டுமே வசதி செய்து கொடுக்கப்பட்டது. இக்காலப் பெண்களின் கல்வி பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆரம்பத் தில் வீட்டில் தந்தையாரிடம் அல்லது பிற உறவினரிடம் கல்வி கற்ற குழந்தை பருவமெய்தியவுடன் குருவை நாடிச் சென்று கல்வி கற்பது வழக்கம். குருவினது வீட்டிலே தங்கிக் கல்வி கற்கும் வழக்கமுமிருந்தது. குருவிற்குப் பணிவிடைகள் செய்வது இவர் களின் பணியாகும். குருவானவர் மாணவருக்குக் கல்வியை இல வசமாகவே அளித்தார். எனினும் ஆசிரியர்களுக்கு மாணவர் களின் பெற்றோர் வருடத்தில் முக்கிய தினங்களிற் காணிக்கைப் பொருட்கள் கொண்டுவந்து அளித்தல் மரபாகும். மாணவர் களும் கல்வி கற்று முடித்தபின்னர் தொழில்களில் ஈடுபடும்போது ஆசிரியரைத் தேடி வந்து அவருக்குச் சன்மானம் அளிப்பதும் வழக்கம். சுருங்கக் கூறின் ஆசிரியர் மாணவர் தொடர்பு குரு குலவாசத்தோடு மட்டும் நிற்கவில்லை. ஆசிரியர் - மாணவர் உயி ரோடு இருக்கும்வரை ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டு அன்னியோன்னியமாகப் பழகி இருவரது இன்ப துன்பங்களிற் பங்கு கொள்வது அக்காலத்திற்குரிய சிறப்பான அம்சமாகும். கல்வியில் ஒழுக்கம் முக்கியமாகப் போற்றப்பட்டது. அத்துடன் இறைபக்தி, இலக்கிய ரசனை ஆகிய அம்சங்களுக்கும் முக்கிய இடம் கொடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் மண்ணில் எழுதப் பழகிய மாணவர் பின்னர் எழுத்தாணிகளைக் கொண்டு ஏடுகளில் எழுதப்பழகும் வழக் கத்தையும் கற்றுக்கொண்டனர். இக்காலப் புத்தகங்கள் யாவும் ஏடுகளாகவே காணப்பட்டன. இவ்வேடுகள் நெடிது காலம் நீடித்திருக்கும் தன்மையற்றுக் காணப்பட்டதால் இவற்றைப் பிரதி பண்ணுவதும் அக்காலத்தில் அடிக்கடி நிகழ வேண்டிய பணியாக இருந்தது. பெரும்பாலும் பழைய நூல்களை மனனஞ் செய்யும் முறைதான் அக்காலத்துக் கல்வி முறையிற் பேணப்பட் டது. மனனஞ் செய்து ஒப்புவித்தல் சிறப்பாகப் போற்றப்பட்டது. மாணவருக்குத் தமிழ் நெடுங்கணக்கு, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நிகண்டு, நன்னூல், கணிதம் போன்றனவும் கற்பிக்கப் பட்டன. இப்பாடசாலைகள் ஆசிரியருடைய வீடுகளில் இயங்கின. இவ்வீடுகள் திண்ணைகளைக் கொண்டு காணப்பட்டதால் "திண் ணைப் பள்ளிகள்" எனவும் அழைக்கப்பட்டன ஆசிரியர்கள் அக் கால சமூகத்திற் செல்வாக்குள்ளவர்களாக விளங்கினர். "வாத்தி

Page 129
-170-س
யார்? கிராமத்தின் முக்கிய அறிவாளி மட்டும் அல்லாமல் ஆலோசகராகவும் விளங்கினார். "எழுத்தறிவித்தவன் இறைவன்? என்பது முதுமொழி. இதனைப் பின்வரும் பாடல் எடுத்துரைக் கிறது.60
“எத்தனைதான் செய்தாலும் எங்களுக்குத் தாய்போலப் புத்தி வரச்செய்த பூரணன்காண் மாதாவே மண்மீதில் எங்களுக்கு வருத்தமிகச் செய்தாலும் கண்ணைத் தெரியவைத்த காரணன்காண் மாதாவே ஆண்பெண் சிறுவருடன் அறிவுமிக வுண்டாக்கும் காண்டற் கரிய கலையான அத்தனையும் தர்மம் முதலாகச் சாற்றுந் துறைநான்கும் விரிவாய் அறிவாக்கும் விளக்கொளிதான் மாதாவே பாவம் அகற்றிவைக்கும் பரிதாபம் நீக்கிவிடும் கோபம் அகற்றிக் கொடுமைதனை நீக்கிவிடும் எழுத்தின் படியாம் இரக்கப் புகுந்தாலும் வழித்துணையாய் வந்துநின்று வலிமைசெய்யும் மாதாவே வாழி! என்றும் வாழி! மறைமுறையும் தான்வாழி! ஏடுபிடித்து எழுதினவர் தான் வாழி!
இறுதியாகக் குருகுலக் கல்வியின் சிறப்புப் பற்றிக் கூறும் ஓர் எண்ணெய்ச் சிந்துப் பாடலைக் குலரத்தினம் மேற்கோள் காட்டி இருப்பதும் அவதானிக்கத்தக்கது 8
தந்தைக்குந் தாய்க்குந் தயவுமிக வுண்டாக்கிச் சிந்தை களிகூர்ந்து திடமாகத் தான்நினைந்து பள்ளிக்கு வைக்கப் பருவமிது வென்றறிந்து சோதிடர்கள் தம்மிடத்தில் தூயதொரு நாள்கேட்டு நாடினர் எல்லோரும் நன்றியுடன் தாங்கூடி மாமன்மார் வந்து மடியிலே தாமிருத்தி மைத்துனிமார் வந்து மகிழ்ந்துமுன் னாலேநின்று மஞ்சளால் ஆலாத்தி மகிமையாய்த் தானெடுத்துச் சோற்றினால் ஆலாத்திச் சொன்னபடி தானெடுத்து நாவூறு கண்ணுறு நன்றாகத் தான்போக்கி அள்ளிப்பொன் னாற்குறித்து ஐங்கரனைப் போற்றிசெய்து வள்ளிக் கொடியாள் மணவாளன் தன்னருளால் வெள்ளிக் கிழமை மிகுதூதர் கோயிலிலே பள்ளிக்கு வைத்தீரே பணிவுடைய மாதாவே! சீராய் வடகலையுந் தெள்ளியதோர் தென்கலையும் மெள்ளமெள்ள வேபடித்து மிகுந்தறிவும் வந்தபின்பு உள்ளந் தெளிந்து உறுதிநிலை தானறிந்து

مسـ171سس
ஒதரிய சாத்திரமும் உண்மையுள்ள தந்திரமும் நீதிக் கணக்கும் நெறியுள்ளோரி தங்கணக்கும் பஞ்சாங்க லட்சணமும் பதுமன் பிராணனுடன் ஐந்தெழுத்து மெய்யில் அடங்கியதோர் அட்சரமும் கற்கப் படிக்கக் கதைகா வியங்கள்கட்டச் சற்குணமும் நல்ல தயவுமிக வுண்டாக உற்பனவென் றெல்லோரும் உகந்துமிகக் கொண்டாட
பூர்வ, அபரக் கிரியைகள்:
அக்காலச் சமூகத்தின் முக்கிய அம்சங்களாகப் பிறப்பு, திரு மணம், இறப்பு ஆகியன இடம் பெற்றன. இதில் குடி மக்களின் பங்கு முக்கியமாகக் காணப்பட்டது. இவை சம்பந்தமாக நடை பெற்ற கிரியைகள் அல்லது நெறிமுறைகள் ஆகியன பிராந்தியத் திற்குப் பிராந்தியம் வேறுபட்டுக் காணப்பட்டாலும் இவற்றுக் கிடையே ஒரு பொதுப் பண்பை அவதானிக்க முடிகிறது.62 அத்துடன் இன்று நாம் இவை சம்பந்தமாகக் கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் மாறி வந்த பொருளாதார அழுத்தங்களாலும், மேற்கத்தைய செல்வாக்காலும் சில மாற்றங்களைப் பெற்றாலுங் கூட பிள்ளையைக் கர்ப்பத்தில் தாங்கிய நாளிலிருந்து தொடர்ச் சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த வழக்கங்கள் இன்றும் தொடர் வதை அவதானிக்க முடிகிறது. பிள்ளைப் பேறு தொட்டு இறக் கும் வரை பல கிரியைகளும் இடம் பெறலாயின. பிள்ளை பிறந் தவுடன் அதற்குப் பெயர் சூட்டல் (நாமகரணம்), சோறுாட்டல் (அன்னப் பிராசனம்), காதுகுத்தல் (கர்ண வேதனம்), வித்தியா ரம்பம் (ஏடு துவக்கல்) ஆகியன இவற்றுட் சிலவாகும். பெண் பருவமெய்தியவுடன் நடாத்தும் கிரியைகள் ருதுசாந்தி என அழைக்கப்பட்டன. இவை நடக்கும்போது சோதிடர்களின் நல் லாலோசனைப்படியே நடப்பது வழக்கம். பொதுவாகச் சோதிடம் ஒரு முக்கிய பங்கினை வகித்தது.
திருமணமானது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பயன்களையும் பெறுவதற்கான ஒரு வாழ்க்கைத் துணையைப் பெறலாகும். இவ் விவாக முறைகள் பற்றி மனுஸ்மிருதி போன்ற இந்து நூல்களில் பல விவரங்கள் காணப்பட்டாலும் தேச வழ மைச் சட்டம் இக்காலத்திற்குரிய சில நெறிமுறைகள் பற்றி கூறி யுள்ளமை அவதானிக்கதக்கது. இவற்றுள் எளிய முறையிலான விவாகச் சடங்கிலிருந்து அக்கினி வளர்த்துத் திருமணம் செய்தல் ஆகியனவும் அடங்கும். இத்தகைய சடங்கிற் பிதிர் தேவரது ஆசீர்வாதத்தைப் பெறுதல், தாலி கட்டுதல், ஒமம் வளர்த்தல்,

Page 130
-172
நவக்கிரக தானம், ஏழடி மிதித்தல், அம்மி மிதித்தல், அக் கினியை வலர் வருதல், நான்காம் நாளில் எண்ணெய் தேய்த்து முழுகுதல், அருந்ததி காட்டுதல், பெரியேர் ரது ஆசீர்வாதத்தைப் பெறுதல் ஆகியன முக்கியமானவையாகும். 68
அக்காலச் சமூக அமைப்பிலே திருமணம் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. இது பற்றிய விவரங்கள் தேச வழமைச் சட்டத்திலுண்டு. இச்சட்ட விதிகளுக்கமையப் பெற் றோர் அனுமதியுடன் திருமணம் நடைபெறல் வேண்டும். பெற் Gorrf இல்லாதவிடத்துப் பிள்ளைக்ளின் ப்ாதுகாப்புக்குப் பொறுப்பான தாய், தந்தை வழியைச் சேர்ந்தோர்களின் ஒப் புதல் அவசியம். ஜாதகப் பொருத்தம் பார்த்தல் போன்ற தற்கால வழக்கங்களும் அக்காலத்திற் காணப்பட்டன. பொது வாக மணமகன் / மணமகள் ஆகியோர் மணமுடிப்பதற்கான வயதை எட்டியிருத்தல் வேண்டும். அத்துடன் ஒரே சாதி யினராகவும் இவர்கள் இருப்பதோடு திருமணக் கிரியைகளி னால் இத்திருமணம் அங்கீகரிக்கப்பட்டும் இருத்தல் வேண்டும். அக்கால வழக்கங்களை நோக்கும்போது இன்று நடைபெறுவது போல் விரிவான கிரியைகள் நடைபெற்றிருந்தனவோ எனத் தெரிய வில்லை. வேதமும், பிராமணர்களும் அக்காலத்தில் மதிக்கப்பட் டதாற் சமூகத்தில் வடமொழிக் கலாசார வழிவந்த ஒமத்தோடு கூடிய கிரியைகளும் சாதாரணமான இலகுவான கிரியைகளும் இடம் பெற்றிருக்கலாம் என ஊகிக்கலாம். ஆடம்பரமற்ற இலகு வான சாதாரணத் திருமணக் கிரியைகள் பிராமணர்களின் செல் வாக்காற் பல்வேறு கிரியைகளாக வளர்ச்சி பெற்றிருக்கலாம். அக்காலத்தில் மிக எளிமையான முறையிலே நடைபெற்ற கிரியை களின் தொடர்ச்சியே இன்றைய பிள்ளையார் பூசைத் திரு மணங்கள் ஆகும். திருமணத்தினைக் குறிக்கும் சம்பந்தம் என்ற பதம் இத்தகைய எளிமையாக ஆரம்பத்தில் நடைபெற்ற கிரியை களைக் குறித்து நிற்க, விவாகம் என்ற இன்னொரு சொல் ஒமத்தோடும், அந்தணரோடும் கூடிய கிரியைகளையுடைய திருமணங்களைக் குறித்திருக்கலாம் எனக் கூறுவாருமுளர். இந்தியாவில் மலையாளப் பகுதியிற் காணப்படும் தாலிகட்டும் கல்யாணம் மிக எளிமையான திருமணமுறை என்பது ஈண்டு அவதானிக்கத்தக்கது. தேசவழமைச்சட்ட வழக்காறுகளில் ஆடவ னுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்டிரை மனைவிகளாக வைத்தி ருக்கும் உரிமை அளிக்கப்பட்டாலும் கூட, பெண்டிருக்கு ஒன் றுக்கு மேற்பட்ட ஆடவரைக் கணவராக வைத்திருக்கும் உரி மையளிக்கப்படவில்லை. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட கணவரை வைத்திருக்கும் உரிமை கண்டிச் சிங்கள வழக்காற்றில் பெண்க ளுக்கு அளிக்கப்பட்டிருந்தது நினைவு கூரற்பாலது.

-173
தமிழ் நாட்டைப் போலன்றித் திருமணமாகும் பெண் சொத்து களை வைத்திருக்கும் உரிமையைத் தேசவழமைச் சட்டத்திற் பெற்றுள்ளாள். இவற்றுள் அவளது சீதனம் மட்டுமன்றி அவளுக் குக் கிடைத்த நன்கொடைகள், உரிமைச் சொத்துகளும் அடங் ம்ே. எனினும் கணவனுக்கு மட்டுமே மனைவியின் சொத்துகளை மட்டுமன்றித் தான் தேடிய சொத்துகளையும் நிருவகிக்கும் பொறுப்பு தேச வழமைச் சட்டத்தின்படி கொடுக்கப்பட்டுள்ளது. கணவரின் அனுமதியின்றி மனைவியானவள் சொத்துகளைக் கைமாற்றவோ விற்கவோ முடியாது. விவாகரத்து, வித வைகள் மறுமணம் பற்றிய சட்ட நெறிமுறைகளும் தேச வழமைச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
விதவை, மறுமணம் செய்யும்போது தனக்குக் கொடுக்கப்பட்ட சீதனத்தையும், தேடிய தேட்டத்தின் அரைப்பங்கினையும் தனது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும் கடப்பர்டுடையவனாவள். மற்றவர்களின் பிள்ளைகளைப் பிள்ளை இல்லாதவர் மட்டுமன்றிப் ள்ளையுள்ளவர்களும் சுவீகாரஞ் செய்வதற்கான விதிகளும் உண்டு. கணவன், மனைவி ஆகியோரது பொருட்கள் மூன்றுபிரிவாக வகுக்கப்பட்டிருந்தன. அவை முதுசொம், சீதனம், தேடிய தேட்டம் என்பனவாகும். கணவனுக்குத் தனது பெற்றோர்களி டமிருந்து கிடைப்பதே முதுசொமாகும். மனைவிக்குப் பெற்றோர் அளிப்பது சீதனமாகும். கணவன், மனைவி ஆகியோர் சம்பாதித்த சொத்துகள் தேடியதேட்டம் எனப்படும். இவற்றைவிட உரிமைச் சொத்துகள் போன்ற விடயங்களும் தேசவழமைச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் அக்காலத்தில் வழக்கிலிருந்த திருமண நடைமுறைகள் பற்றியும் போல்டேயஸ் பாதிரியார் கூறியுள் ளமை இங்கே அவதானிக்கத்தக்சது.64 திருமணத்தின்போது தாலிகட்டும் வழக்கம் இந்துக்களிடம் மட்டுமன்றிச் சுதேசக் கிறிஸ் தவர்களிடமும் காணப்பட்டதை இவர் எடுத்துக் கூறுகிறார். அத்துடன் திருமணம் ஒர் அவசியமான சமூகக் கடமை என அக்காலத்தில் நம்பப்பட்டது. தங்கள் பிள்ளைகளை உரியகாலத் தில் மணமுடித்து வைக்கத் தாய், தந்தையர் அக்கறை காட் காட்டினர். ஒரு பெண்ணை மணம் முடிக்காத மனிதன் உண்மை யான மனிதனல்ல என இவர்கள் நம்பினர். திருமணத்தின் மூலம் தமது சந்ததியைப் பெருக்க விரும்பாதவர்கள் கொலை யாளிகளை விடச் சிறந்தவரல்லர் எனவும் நம்பினர். எனினும் பெண்ணுக்கேற்ற வரனைத் தெரிவது இலகுவாகக் காணப்பட வில்லை. ஆணும் பெண்ணும் தாய் தந்தையரின் அனுமதியுடனே மணம் முடித்தமை இப்பகுதியிற் காணப்பட்டதோர் சிறப்பான

Page 131
-174
அம்சமாகும். பொதுவாக மணமகளுக்குச் சீதனம் கொடுக்கப் பட்டது. பெண்கள் பொதுவாகப் பத்துப் பதினொரு வயதுகளில் மணம் முடித்தனர். அநேகமாகப் பதின்மூன்று பதின்நான்கு வய துகளிற் பெண்கள் தாய்மைப் பருவத்தினை அடைந்தனர் என வும் போல்டேயஸ் பாதிரியார் கூறுகின்றார்.
போல்டேயஸ் பாதிரியார் கிறிஸ்தவ திருமண விழா பற்றிக் குறிப்பிடுவதும் அக்காலத் திருமண நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்ளுவதற்கு உதவியாக உள்ளது. சுதேச கிறிஸ்தவ திருமணங்கள் கோயில்களிற்குள் நடைபெற்றதெனக்கூறும் இவர் தாலிகட்டும் வழக்கம் அப்போது காணப்பட்டதையும் கூறுகிறார். கோயிலிற் கிரியைகள் முடிந்த பின்னர் தம்பதியர் தமது இல்லங் களுக்கு இட்டுச் செல்லப்படுவர். திருமண வீடுகளில் வீட்டிற்கு முன்னாற் பந்தல் போடப்படும் வழக்கத்தினையும் இவர் குறிப்பிடு கின்றார். இப்பந்தல்கள் பல்வேறு விதமான பூக்கள், தென்னை யோலை, மாதுளஞ் செடி போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. வசதி படைத்தோர் மத்தியில் திருமணத்தின்போது பெரிய விருந்தளிப்பது வழக்கம் எனக் கூறும் இவர் தாம் அத் தகைய விருந்துகளிற் பங்கு கொண்டதையும் கூறியுள்ளார், கிறிஸ்தவர்கள் மத்தியில் விருந்தின்போது மான், முயல், கெளதாரி ஆகியனவற்றின் இறைச்சியோடு மீன் கறியும் பலவகையான இனிப்புப் பண்டங்களும் பழ வகைகளும் பரிமாறப்பட்டன. விகட மாகப் பேசல், ஆடல், பாடல், நடித்தல் போன்ற நிகழ்ச்சிகளும் இவ்வைபவங்களில் இடம் பெற்றன. இவ் வைபவங்களிற் குடி வகைகள் பரிமாறப்படுவதில்லை. இவ்வைபவங்களிற் பங்கு பற் றும் டச்சுக்காரர் தாம் குடிப்பதற்குரிய குடிவகைகளை ஒன்றில் எடுத்துச் செல்வர் அல்லது அத்தகைய குடிவகைகளை அவர்கள் மட்டும் பருகுவதற்கான ஒழுங்குகள் செய்யப்படும், கொண்டாட் டம் நான்கு, ஐந்து நாட்கள் தொடக்கம் சில சமயம் ஏழு நாட் கள் வரையும் நடைபெறும் களியாட்டங்கள் நடுநிசி வரையும் இடம் பெற்றன. அக்காலத்தில் வழக்கிலிருந்த பாலியத் திரு மணம் பற்றியும் போல்டேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். எட்டு, ஒன்பது வயதுச் சிறுவனும் சிறுமியும் தம்முன்னே அழைத்து வரப்பெற்றுச் சிறுமி தனது வருங்காலக் கணவருக்கு மெய்யுறுதி அளிக்க வைக்குமாறு கேட்கப்படுவதையும் தாம் அத்தகைய வழக்கத்தை விரும்பவில்லைனெவும் குறிப்பிட்டுள் ளார். பொதுவாகவே திருமணமான பெண்கள் வயதில் ஆண் களை விடக் குறைந்தே காணப்பட்டனர். திருமணமாகும் வய தெல்லையைத் தாண்டிய பெண்ணுக்கு ஏற்ற வரனைத் தேடுவது சிரமமாகவே இருந்தது. திருமணத்தின் போது சீதனமும் கொடுக்

-175
கப்பட்டது. சீதனமில்லாமற் திருமணங்கள் தடைபட்ட சம்ப வங்கள் பல உண்டு. சந்ததியில்லாமற் கணவனோ அன்றி மனைவியோ இறக்கும் போது அவர்களின் சொத்துகள், அவர் களின் முதுசொம், சீதனம் ஆகியவற்றைப் பொறுத்துக் கணவனது உறவினருக்கோ அல்லது மனைவியினது உறவினருக்கோ போய்ச் சேர்ந்ததாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
போல்டேயஸ் பாதிரியார் கூறும் கிறிஸ்தவ திருமண வைப வங்கள் இந்துத் திருமணங்களோடு பெருமளவுக்கு ஒத்துக் காணப் படுவது போலத் தெரிகின்றது. எனினும் அக்கால இந்துத் திரு மணங்கள் பற்றி ஒரு சில அவதானிப்புகள் அவசியமாகின்றது. கிறிஸ்தவ திருமணங்கள் போல் இந்துத் திருமணங்களும் கோவில்களிலேயே நடைபெற்றனவா என்பது கேள்விக்குறியா கவே உள்ளது. பெரும்பாலும் இவை இல்லங்களிலேயே நடை பெற்றன. கிறிஸ்தவ திருமணங்களிற் புலால் உணவு பரிமாறப் பட்டதும் கிறிஸ்தவ செல்வாக்கே எனலாம். பொதுவாக இந் துத் திருமணங்களில் இவை நடைபெறுவதில்லை. சுதேசக் கிறிஸ் தவரிடையேயும் குடிவகை பரிமாறப்படவில்லை என இவர் அடித் துக் கூறுவதை நோக்கும் போது இதனை இவர்கள் தமது பாரம் பரியமாகக் கொண்டிருந்தமை புரிகிறது. கிறிஸ்தவர்களாக மாறும் போதும் இவர்கள் இவ்வழக்கத்தினை அநுசரிக்கவில்லை எனலாம். இதே போன்று மாமிச உணவைப் பரிமாறும் வழக்கமும் கிறிஸ் தவர்களாக மாறிய பின் கைக்கொள்ளப்பட்டிருக்கலாம். இந்துத் திருமணங்களிற் குடிமக்களின் பங்களிப்புப் பிரதானமானதோரி அம்சம் என்பதும் அவதானிக்கத்தக்கது.
அபரக் கிரிகைகள் - அதாவது ஒருவர் இறந்தபின்னர் மேற் கொள்ளப்படும் கிரியைகள் அடுத்து முக்கியம் பெறுகின்றன.65 பிறப்பு, திருமணம் பற்றிய கிரியைகளில் பிராமணக் குருக்கள் முக்கியம் பெற்றுக் காணப்பட்ட இக்கிரியைகளிற் சைவக்குருக்கள் மாரே முக்கியம் பெற்றிருந்தனர். இவரிகளின் முக்கியமானவர்கள் வரணியில் வாழ்ந்தது பற்றி வையாபாடலிற் காணப்படும் குறிப்பை ஏற்கனவே கண்டோம். இக்கிரியைகளின்போது பொற் சுண்ணமிடித்துத் திருவாசகத்திலுள்ள திருப்பொற் சுண்ணப் பாக்கள் பாடுவது ஈழத்திற்குரிய தனிச் சிறப்பாகும். யாழ்ப் பாண அரசர்காலத்திலிருந்சுே இவ்வழக்கு வேரூன்றி விட்டது என்றெணலாம். இறந்தவர்களின் உடலை வெள்ளைத் துணி யினாற் சுற்றி கமுக மரத்தினாலான பாடை கட்டிச் சுடலைக்கு எடுத்துச் செல்வது இன்றும் காணப்படுவதை நோக்கும் போது

Page 132
-l76س--
சவப்பெட்டியோ அன்றி அலங்காரப் பாடைகளோ இன்றியே அன்று இறந்தோர் உடல்கள் சுடலைக்கு எடுத்துச் செல்லப்பட் டனபோலத் தெரிகிறது. மாமிச உணவு உண்ணாதவர், உண் பவர் ஆகியே7ருக்கிடையே இக்கிரியைகள் வேறுபட்டன. உடலை அடக்கஞ் செய்தலே பண்டைய தமிழரது வழக்கமாகக் காணப் பட்டாலும் ஆரிய கலாசாரத்தின் தாக்கத்தினால் தமிழர் மத்தி யில் தகனஞ் செய்தல் செல்வாக்குப் பெற்றது. உடலைச் சுட லையிற் தகனஞ் செய்த பின்னர் நடைபெறும் அபரக் கிரிகை களில் அந்தியேஷ்டி, அஸ்தி சஞ்சயனம், பாஷாணபூசை, சிரார்த் தம், சபிண்டீகரணம் ஆகியன குறிப்பிடத்தக்கன. செகராசகேர மாலை6ே அஸ்தி சஞ்சயனம், சபிண்டீகரணம் பற்றிய கிரியைகள் பற்றிக் குறிப்பிடுவதும் அவதானிக்கத்தக்கது. சபிண்டீகரணம் இருமுறை செய்யப்படும். அந்தியேஷ்டிக் காலத்திலும், இறப்பு நடந்து முப்பத்தோராவது நாளிலும் இது நடைபெறும். வருடந் தோறும் நடைபெறும் கிரியைகளே திவசம் (சிராதா) எனப்படும். இதனைத் திதி என்றும் அழைப்பதுண்டு. முதலாண்டு முடிவிற் செய்யப்படுவது (ஆண்டுத் திவசம்) ஆட்டைத் திவசமாகிறது.
சிங்கள - முஸ்லிம் மக்கள்
யாழ்ப்பாண இராச்சியத்திலே தமிழ் மக்கள் பெரும்பான் யினராக வாழ்ந்தாலுங்கூட இப்பகுதியில் வாழ்ந்த சிங்களவர், முஸ்லிம்கள் பற்றியும் இக்கால நூல்களிற் காணப்படும் குறிப்புகள் அவதானிக்கத்தக்கவை. யாழ்ப்பாண வைபவமாலை கி. பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய நிகழ்ச்சி பற்றிப் பின்வருமாறு கூறுகிறது.87
*அக்காலத்திலே கண்டி நாட்டிலிருந்து இலங்கையையர சாண்ட பாண்டு மகாராசன் மணற்றிடரென்றழைக்கப் பட்ட இந் நாட்டில் வந்திருந்தான். இவ்விடத்திற் குடி யிருந்த சிங்களரிற் சிலர் கீரிமலைக்குச் சமீபமாயிருந்த கரை துறைகளிற் குடியிருந்த முக்குவரென்னும் வலை ஞரைக்கொண்டு மீன் பிடிப்பித்து உணக்குவித்துக் கண்டி நாடு முதலிய நாடுகளுக்குக் கொண்டு போய் வியாபாரம் பண்ணுவது வழக்கமாயிருந்தது. . . . சிங்களவர் நிழல் வசதிக்கும் தண்ணிர் வசதிக்குமாக அங்குள்ள சிவாலயங்களிற்றங்கி அக்கோவிற் பிரகாரங் களில் மீனைக் காயப்போட்டுத் திருக் கிணறுகளில் தண்ணிர் அள்ளவுந் தொடங்கினதினால் அங்கிருந்த பிராமணர் கோவில்களைப் பூட்டிக் கொண்டு அப் புறத்தே ஒதுங்கி விட்டார்கள். கோவில்களிற் சில

-177
காலம் பூசை இல்லாமலிருந்தது. அதையறிந்து பாண்டு மகாராசன் கீரிமலைச் சாரலில் வந்திறங்கி விசாரணை
செய்து நியாயமான தண்டனை செய்து முக்குவக் குடி
களை அவ்விடத்தை விட்டுத் துரத்தி விட்டான்."
இதில் அக்காலத்திற் சிங்கள அரசின் தலைநகராக விளங் கிய அநுராதபுரத்திற்குப் பதிலாகக் கண்டி கூறப்பட்டிருக்கின் றமை தவறான செய்தியாகும். யாழ்ப்பாண வைபவமாலை எழுதப்பட்ட் காலத்திற் கண்டி தலைநகராக விளங்கியதால் அநுராதபுரத்திற்குப் பதிலாகக் கண்டியை இந்நூலின் ஆசிரி யர் தவறுதலாக எழுதி விட்டார் போலும், பாண்டுமகாராஜனை கி. பி. 5ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தினை அரசாண்ட காண்டிய மன்னர்களில் ஒருவனாகக் கொள்ளுவது ஏற்புடைத் Arrey.
சிங்களவர் பற்றிய குறிப்பு யாழ்ப்பாண அரசின் தோற்ற காலத்திற்கு முன்னரும் குறிப்பாக யாழ்ப்பாடியினது கதையிலும் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. யாழ்ப்பாணவைபவமாலை உக்கிரசிங்கனின் மகனாகிய வாலசிங்கமகரிராசாவிடம் மணற் றிடல்" என அழைக்கப்பட்ட பகுதிக்கு யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டு அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் கூறு கிறது. யாழ்ப்பாடிக் கதை யாழ்ப்பாணம் என்ற பெயருக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமாக எழுந்த ஐதீகம் எனக் கொண்டா லும் இக்கதை இக்காலத்தில் கி.பி. 8ஆம் அல்லது 9 ஆம் நூற் றாண்டுகளில் வட இலங்கையில் ஏற்பட்ட தமிழர் பரம்பல் பற் றிக் கூறும் கதை என்பதை மறுப்பதற்கில்லை. இக்குடியேற்றம் ஏற்பட்ட காலத்திலும் யாழ்ப்பாண அரசு தோன்றிய காலமாகிய கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலும் சிங்களவர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததை இந்நூலிற் கர்ணும் கீழ்க்கண்ட குறிப்புகள் எடுத் துக் கட்டுகின்றன. 68
*யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் என்று பெயரிட்டு இவ்விடத்தில் வந்திருந்து, வட திசையிற் சில தமிழ்க் குடிகளை அழைப்பித்துக் குடியேற்றி இவ்விடமிருந்த சிங் களவர்களையும் அவர்களையும் ஆண்டு, முதிர் வயதுள் ளவனாய் இருந்து இறந்து போனான். அக்காலத்திலே சிங்களவரும் பிறரும் இந்நாட்டை அரசாளக் கருதித் தமிழ்க் குடிகளையொடுக்கியதால் தமிழ்க் குடிகள் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய் விட்டார்கள். இந்த நிலைபரத்தில் யாழ்ப்பாணம் கொஞ்சக் காலம் தளம்பிக் கொண்டிருக்கையில், சிங்கள கலகத்துக்கு எடுபடாமல்

Page 133
, -178
இருந்து காலம் விட்டு வந்த பொன்பற்றியூர் வேளர்ளன் பாண்டி மழவன் என்னும் பிரபு மதுரைக்குப் போய் அவ்விடத்திலே சோழ நாட்டிலிருந்து வந்து இராச உத்தி யோகத்துக்கேற்ற கல்வி கற்றுக் கொண்டிருந்த திசை யுக்கிர சோழன் மகனாகிய சிங்க கேதுவுக்கு மருமக னாகிய சிங்கையாரியன் என்னுஞ் சூரிய வமிசத்து இராச குமாரனைக் கண்டு யாழ்ப்பாணத்தின் நிலைபரத்தை அறிவித்து இவ் யாழ்ப்பாணத்தை அரசாட்சி செய்ய வர வேண்டுமென்று கேட்க . . ."
மேலும் யாழ்ப்பாணவைபவமாலை விக்கிரம சிங்கையாரியன் காலத்திற் சிங்கள - தமிழ் மக்களுக்கிடையே நிலவிய சமயக் கலகம் பற்றியும் பின்வருமாறு குறிப்பிடுகிறது.89
இவன் காலத்திலே இங்குள்ள புத்த சமயிகளான சிங்கள வருக்கும் தமிழருக்கும் சமய காரியங்களையிட்டு பெருங் கலகமுண்டுபட்டபொழுது சிங்களவர் சில தமிழரைக் காயப்படுத்தி இருவரைக் கொலை செய்து இப்படியே முரட்டுத்தனங்காட்டி நின்றார்கள். அதையறிந்து விக் கிரம சிங்கையாரியன் அவர்களைப் பிடித்து விசாரணை செய்து அக்கலகத்துக்குத் தலைவராய் நின்ற புஞ்சிவண்ட என்பவனையும் வேறு பதினேழு சிங்களவரையுங் கொலை செய்து வேறு பலரைச் சிறைச்சாலையிலுமிடு வித்தான். அதன் பின் கலகம் அமர்ந்தது. சில சிங்களக் குடிகள் ஒளித்து இந்நாட்டைவிடப் புறப்பட்டார்கள். இவ் விக்கிரம சிங்கையாரியன் தமிழர் மேல் அதிக பட்சம் வைத்து நடந்ததினால் சிங்களவர் இவன் மேற் பற்று உள்ளவர்களாயிருந்ததில்லை.”
யாழ்ப்பாண வைபவமாலை வரோதய சிங்கையாரியன் காலத்தில் வன்னியரின் தூண்டுதலால் சிங்களவர் கலகஞ் செய்தது பற்றியும் குறிப்பிட்டுள்ளது. இக் கலகம் இம் மன்னனாற் பின்னர் அடக்கப்பட்டது.70 கனகசூரிய சிங்கையாரியன் காலத்திலும் சிங்களக் குடிகள் கலகஞ் செய்தனர். இக்காலத்திற்றான் கோட்டை அரசனான ஆறாவது பராக்கிரமபாகுவின் வளர்ப்புப் பிள்ளையாகிய செம்பகப் பெருமாள் (ஆறாவது புவனேகபாகு) யாழ்ப்பாணத்தின் மீது படை எடுத்து அதனைப் 17 வருடங்கள் ஆட்சி செய்தான் செம்பகப் பெருமாளின் தளபதிகளுள் ஒருவ னான விசயபாகு காலத்தைய சம்பவம் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு குறிக்கிறது.74

-179
"விசயபாகு வென்னுஞ் சிங்களவன் தானேயரசனெனத் தலைப்பட்டுத் தமிழ்க்குடிகளை யொடுக்கித் தமிழரை யுடைநடை பாவனைகளிலெல்லாந் தன்னைப் போலாக வேண்டுமென்று பலவந்தம் பண்ணி மாறுதல் பண்ணு வித்து அதற்கமையாதவர்களைத் தண்டித்துப் பதினேழு வருஷம் அரசாண்டான்."
கனகசூரிய சிங்கையாரியன் காலத்தில் சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட கதி பற்றியும் யாழ்ப்பாண வைபவமாலை உரைக்கிறது.72
"... விஜயபாகுவின் கலகத்தினுடன்பட்ட அநேக சிங் களவரைப் பிடித்துக் கொலை செய்வித்தான். அநேக சிங் களக் குடிகள் தங்கள் குடும்பங்களுடனே யாழ்ப்பா ணத்தை விட்டுக் கண்டி நாட்டுப் புறங்களிலே போய்க் குடியேறினார்கள். போகாமலிருந்த குடிகள் தமிழருக்கு மிகவும் பயந்து நடந்தார்கள்".
மேலும் முதலாவது சங்கிலியன் கால நிகழ்ச்சியாகப் பின்வரும் விடயத்தை யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது.78
*யாழ்ப்பாணத்திற் பலஇடங்களிலும் இருந்த புத்தசமயக் கோவில்களையெல்லாம் இடிப்பித்துச் சிங்களக் குடி யினை முழுதாகத் துரத்தி விட்டான். அந்தச் சிங்களக் குடிகள் ஒன்றாகிலும் இருந்ததில்லை’.
சபுமால் குமாரயவின் காலத்தின் பின்னரும் யாழ்ப்பாணத் தில் எஞ்சியிருந்த சிங்களக் குடிகள் பல யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற, ஏனையோர் தமிழ் மொழி பேசுவோர்களாக மாறி னர் எனலாம். வையாபாடலிலும் யாழ்ப்பாணத்திலிருந்த சிங்கள வர் பற்றிய குறிப்புண்டு.74
நல்லூரிலும் பிற இடங்களிலும் சோனகர்கள் குடியேறி இருந்ததை யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு உரைக் கிறது 75
"அக்காலத்திலே சந்தச்சாப்பு என்பவனால் மகம்மது மார்க்கத்தவர்களாக்கப்பட்ட தமிழ் வமிசத்தவர்களான சில சோனகக் குடிகள் காயில் பட்டிணம் முதலிய இடங் களிலிருந்து வந்து தென் மிருசுவில் என்னும் ஊரிலே குடியிருந்து சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள், முகாவில் என்னுமிடங்களிலுள்ள சந்தைகளில் வியாபா ரம் பண்ணிக் கொண்டு தாங்களிருந்ததென மிருசுவி

Page 134
- 180
லுக்கு உசனென்று பேருமிட்டார்கள். சில காலம் அவ் விடத்திலிருந்து அவ்விடம் வசதிப் படாததினால் அந்தச் சோனகக் குடிகள் அவ்விடத்தை விட்டு நல்லூரிற் கந்த சுவாமி கோவிலிருந்த இடத்திலே வந்து குடியிருந்தார்கள். சோனகர் அதிலே குடியிருந்தாற் கந்தசுவாமி கோயில் கட்ட வருங்காலத்திற்றடையாயிருக்குமென்று நினைத் துத் தமிழர் கூடி அவர்களை அவ்விடத்தை விட்டும் புறப் படுத்தத் தெண்டித்துப் பார்த்துங் கூடாமற் போயிற்று. "அந்த நிலங்களுக்கு அதிகவிலை தருவோம். எங்களுக்கு விற்று விடுங்கள்' என்றுங் கேட்டுப் பார்த்தார்கள். சோனகர் அதற்குஞ் சம்மதிக்கவில்லை. யாதொரு இணக்சத்துக்குஞ் சோனகர் சம்மதியாதே போனதினால் அந்தத் தமிழர் பன்றியிறைச்சியைக் கொண்டு போய் அவர்கள் தண்ணீர் குடிக்கும் கிணறுகளிற் போடுவித் தார்கள். பன்றியிறைச்சியைக் கண்டவுடனே சோனகர் அழுது புலம்பிப் பசி பட்டினியாய்க் கிடந்து ஆற்றாமல்
ஈற்றில் தமிழருடனே தங்கள் பெருநாட்களிலே தாங்கள் வந்து தங்கள் சமயவழிபாடு செய்யத் தடை பண்ணா திருப்பதற்கு ஒரு உடன்படிக்கை யெழுதுவித்துக்கொண்டு கிடைத்த விலையையும் வர்ங்கிக் கொண்டு போய், நாவாந்துறைக்குக் கிழக்குப் பக்கமாகக் குடியேறி னார்கள்.?
நல்லூரில் வாழ்ந்த சேர்னகர்கள் அங்கு பள்ளிவாசலும் கட்டியிருந்தார்கள். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கு அருகாக மேற்குப் பக்கமாக ஓர் மசூதி காணப்பட்டது. சோனகரும் அரச வியாபாரத்தில் மட்டுமன்றி அரச படையிலும் கருமமாற் றியதும் குறிப்பிடத்தக்கது. சோனகர் பற்றிய குறிப்பு வையா பாடலிலும் காணப்படுவது அவதானிக்கத்தக்கது.78 சோனகர் மட்டுமன்றி யாவுசர்களும் யாழ்ப்பாண அரசு காலத்தில் இருந் தார்கள். இவர்களையும் முதலாவது சங்கிலியனே அவர்கள் வாழ்ந்த இடத்திலிருந்து துரத்தியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் சாவாங்கோட்டையிலும் சாவகச்சேரியிலும் வாழ்ந்தார்கள் என யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகிறது.77
வாழ்வும் வளமும்
யாழ்ப்பாணக் குடாநாடு வடமராட்சி, தென்மராட்சி, வலி காமம், பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரிவுகளையும் ஐந்தா வது பிரிவாகத் தீவகத்தையும் கொண்டிருந்ததைப் போத்துக் கேய, டச்சு ஆவணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. யாழ்ப்பாண

-181
அரசை வெற்றி கொண்ட போத்துக்கேயர் பழைய நிருவாக முறையையே பெருமளவுக்கு இங்கு தொடர்ந்தனர் என்பதை யாழ்ப்பாண வைபவமாலை எடுத்துக் காட்டுகின்றது. சிங்களப் பகுதிகளில் இவ்வாறான கொள்கையே இவர்களாற் கடைப்பி டிக்கப்பட்டதை நோக்கும் போது தமிழ்ப் பகுதிகளிலும் இது நடைபெற்றிருந்திருக்கலாம் என எண்ணலாம். யாழ்ப்பாண வைபவமாலை பறங்கியராகிய போத்துக்கேயர் மேற்கொண்ட நிருவாக நடவடிக்கைகள் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.78
"அக்காலத்திலே பறங்கிக்காரர் தமிழரசரைப் போலவே தாங் களும் மாதாக்கர்களைவைத்து நடத்தக்கருதி இராயரத்தின முதலி மகன் சோழ சிங்கச்சேனாதிராய முதலியைக் கீழ்ப் பற்று மாதாக்கனாகவும், விசய தெய்வேந்திர முதலியை மேல்பற்று மாதாக்கனாகவும், அழகாண்மைவல்ல முதலி மகன் இராச வல்லப முதலியைத் தென்பற்றுக்கு மாதாக் கனாகவும், திடவிரசிங்க முதலி மகன் குமாரசூரிய முத லியை வட பற்றுக்கு மர்தாக்கனாகவும் வைத்து அரசாட்சி செலுத்தி வந்தார்கள்."
வடபகுதி 50-75 அங்குல மழைவீழ்ச்சியைப் பெறும் பிரதே மாகும். சிங்களப் பகுதிகளில் ஆற்று நீரின் பங்கினை இப்பகுதி யில் கிணற்று நீரே வகிக்கிறது எனலாம். வன்னிப் பிரதேசத்திலோ எனின் குளங்கள் உண்டு. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வில் குளத்தின் பங்களிப்பு முக்கியமாகின்றது. பெரும்பாலும் குடா நாட்டைப் போலன்றி வன்னிப் பகுதியிற் குளநீர் மூலம் இரு போக நெற்செய்கை செய்ய முடிந்தது. வடபகுதியின் எண்பத் தைந்து வீதமான மக்கட்தொகை யாழ் குடாநாட்டில் தான் வசித்து வந்தார்கள் என்பதை டச்சுக்காரர் காலத்தில் மேற் கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீடுகள் எடுத்துக் காட்டுகின்றன. வன்னிப்பகுதி உட்பட்ட வடபகுதியின் குடிசன மதிப்பீடு 1658 இல் மேற்கொள்ளப்பட்டபோது மக்களின் தொகை 1,20,000 எனக் கணிக்கப்பட்டது.79 இதனால் இதற்குச் சற்று முன் பின்னாகத் தான் யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் மக்கட் தொகையும் இவ்வாறு அமைந்திருக்குமெனக் கொள்ளலாம். யாழ்ப்பாண அரசு காலத்தில் கிராமங்களே முக்கியம் பெற்றன. போத்துக்கேய ஆவணங்கள் யாழ்க் குடாநாட்டில் 128 கிரா மங்கள் காணப்பட்டன எனக் கூறிப் பின்வரும் விபரங்களையும் தருகின்றன. இவை முறையே வலிகாமத்தில் 61, தென்மராட் சியில் 24, வட்மராட்சியில் 15, பச்சிலைப்பள்ளியில் 28 ஆகக் காணப்பட்டன. போத்துக்கேய வரலாற்றாசிரியராகிய குவே ரோஸ் பாதிரியார் அவர்கள் யாழ்ப்பாண அரசின் நகரங்கள் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் 80 -

Page 135
-182'-
"தல்லூரைத் தவிர வேறு நகரம் அவர்களுக்கு ஒரு போதும் இருக்கவில்லை. இது போத்துக்கேய ருடைய பட்டினமும் அங்காடியும் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஏறக்குறைய ஒன்றரை மைல் தூரத்தில் (அரை வீக்) அமைந்துள்ளது.*
நல்லூர் பற்றி இன்னோர் போத்துக்கேய வரலாற்றாசிரிய ரானதிரினிதாதேயும் கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.81 நல்ல கிராமம் (ஊர்) என்ற பொருளையே நல்லூர் தந்து நிற்கிறது என்பது இவரது கருத்தாகும். அத்துடன் இது இராச்சியத்தின் தலைநகராக விளங்கியதால் இங்கே ஒரு சந்தை இருந்தது பற் றியும் குறப்பிட்டுள்ளார். இது இராச்சியத்தின் தலைநகரில மைந்திருந்ததால் இவ்விராச்சியத்திற் காணப்பட்ட மிகப் பெரிய சந்தையாகவும் இது விளங்கியது. கிராமங்களிற் சிறுசிறு சந்தைகள் காணப்பட்டிருக்கலாம். நல்லூர்ச் சந்தை பற்றிக் கூறும் இவர் இராச்சியத்தின் அரண்மனையிற் காணப்பட்ட பல்வேறு சாள ரங்கள் மூலமாக இச்சந்தையில் நடைபெற்ற கொடுக்கல் வாங் கல்களை மன்னன் அவதானித்தான் எனவும் கூறுகிறார்: இச்சந்தை தினமும் மாலை நேரத்திலேயே கூடியது. செட்டிகளே இதிற் பிரதான பங்கினை வ்கித்தார்கள்.82 உள்நாட்டு வர்த்தகம் மட்டுமன்றி வெளிநாட்டு வர்த்தகத்திலும் இச் செட் டிகள் ஈடுபட்டிருந்ததையும் இவர் குறிப்பிட்டுள்ளார். இச் செட்டிகளின் வியாபாரத் திறமை பற்றிப் போல்டேயஸ் பாதிரி யார் குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.
பொதுவாகவே நல்லூர்தலைநகரி பகுதியின் எல்லைகளாக வடக்கே கோப்பாய்வடக்குப் பகுதியும், கிழக்கே சாவாங் கோட்டை நாவற்குழியும், தெற்கே பண்ணை ஆறும், மேற்கே பண்ணைஆறு, கொக்குவில், கோண்டாவில் ஆகியனவும் காணப் பட்டன. இதனை உள்ளடக்கிய பகுதியிற்றான் அரசன், நிரு வாகிகள், ஊழியர் ஆகியோரின் வதிவிடங்கள், சேனைப்பிரி வுகள், அரச வழிபாட்டிடங்கள், அந்தணர் வாசஸ்தலங்கள் ஆகியன காணப்பட்டன எனலாம்.
போத்துக்கேய ஆசிரியர்கள், யாழ்ப்பாணப் பகுதி மக்கள் கடின உழைப்பால் இப்பகுதியை வளம் பொருந்திய பகுதிகளாக ஆக்கினர் எனக் கூறுவதோடு இவர்களது விடாமுயற்சி, உழைப்பு ஆகியன கோட்டை இராச்சியம் வரை பரவியிருந்த தையும் குறிப்பிட்டுள்ளனர்.83 சிங்கள இராச்சியமாகிய கண்டி இராச்சியம் தென்னிந்தியாவோடு கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பு இப்பகுதியூடாகவே நடைபெற்றது என்றும் திரினி

س-183-بس۔
தாதே குறிப்பிட்டுள்ளார். கொழும்புத்துறை வழியாகவும், சுண் டிக்குளம் வழியாகவும் குடாநாட்டையும் வன்னிப் பகுதியையும் இணைத்த பாதைகள் சென்றதால் தரைவழி வர்த்தகர்கள் இதனைப் பயன்படுத்தினர். இவ்வர்த்தகத்தில் வெடியுப்பு, கந்தகம் போன்ற பொருட்களும் இடம் பெற்றன. போத்துக்கேய ஆவ ணங்கள், பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, கொழும்புத்துறை போன்ற துறைமுகங்கள் முக்கியம் பெற்றதையும் குறித்துள்ளன. பருத்தித்துறையில் 7-8 மாதங்கள் வரை கப்பல்கள் தங்கி நிற் பதாகவும் வெளியில் இருந்து வரும் கப்பல்களை நெறிப்படுத்து வதற்காக இத்துறைமுகத்தில் கொடியேற்றப்பட்டதாகவும் போல்டேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.84 ஊர்காவற்றுறை, காரைநகர் ஆகியன யானைகளை ஏற்றுமதி செய்வதில்முக்கிய பங் கினை வகித்தன. குறிப்பாக ஊர்காவற்றுறையில் மீன், கலை மான், நீண்ட காதுடைய பறவைகள், என்பனவும் வானம் பாடிப் பறவைகளும் காணப்பட்டன எனவும் கூறுகின்றார். மன்னார்ப் பகுதி குறிப்பாக மாதோட்டப் பகுதி முத்துக்குளிப்பில் முக்கியம் பெற்றது எனலாம். இப்பகுதி தமிழகத்துத் தூத்துக்குடியால் முக்கியம் பெற்றிருந்தது எனக் கூறப்படுகிறது இதன் செல்வச் செழிப்பை இங்குள்ள கட்டிடங்கள், வழிபாட்டிடங்கள் ஆகியன எடுத்துக்காட்டுகின்றன எனவும் போல்டேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் அனேக மீன்கள் காணப்பட் டன. மேலதிக மீனை மக்கள் கருவாடாக ஆக்கி ஏற்றுமதி செய்தனர். திரினிதாதே மன்னார்ப் பகுதியிற் கொம்புள்ள காளைகள் இருந்தது பற்றிக் குறிப்பிட்டதோடு இப்பகுதி மக்க ளின் உணவில் மீன் மட்டுமன்றி பால், நெய், தேன், அரிசி, காய்கறிகள் ஆகியன முக்கிய பங்கினை வகித்ததையும் எடுத்துக் காட்டி உள்ளார்.86 காட்டு யானைகளுடன் கரடி, காட்டுப் பன்றி, மான் ஆகியனவற்றின் இறைச்சியும் பல பழவகைகளும் உணவுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பொதுவாகவே யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்களின் பிரதான உணவாக அரிசி விளங்கியதை எடுத்துக்கூறும் இவர்கள் இங்கு காணப்பட்ட அரிசிப் பற்றாக்குறையை எடுத்துக் காட்டத் தவற வில்லை. இவர்களுக்கு தேவையான அரிசி வன்னி நாட்டிலிருந்தும் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் இருந்தும் பெறப்பட்டன. எனினும் யாழ்க் குடாநாட்டில் வலிகாமப்பகுதி மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியாக விளங்க பச்சிலைப்பள்ளி யில் ஜனத்தொகை குறைந்து காணப்பட்டது. பச்சிலைப்பள்ளி மக்களின் வறுமை பற்றியும் போல்டேயஸ் பாதிரியாரால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. வறுமை காரணமாகச் சிறிதளவு அரிசிச் சோற்றை மட்டும் உண்ட இவர்கள் பணம் பனாட்டு, பனம்பாணி

Page 136
-184
ஆகியவற்றைப் பெருமளவு உண்டனர். கருவாடும் இவர்கள் உண வில் முக்கியம் பெற்றது. பச்சிலைப்பள்ளியிற் காணப்பட்ட தென்னை மரங்களைக் காட்டு யானைகள் அழிப்பதும் வழக்கம். இதனால் பனைமரம் இப்பகுதிக்குரிய பிரதான செல்வமாகியது. பனைமரம் சோழ மண்டலத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.86 யானை இறவு ஊடாக வன்னிப் பகுதிக்குக் குடாநாட்டு மக்க ளின் பரம்பல் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிற் தோன்றி வளர்ந்து இருபதாம் நூற்றாண்டில் தான் இது உச்சநிலையை அடைந்தது.
வடபகுதியிற், குறிப்பாக நிலத்தினதும் நீரினதும் வளத் திற்கேற்ற முறையிலேயே உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டது. துலாவைப் பயன்படுத்தியே வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் நீர் பாய்ச்சப்பட்டது. பயிர்களை மாறி மாறி ஒரே இடத்திற் பயிரிடும் பண்பு அக்காலத்திற் காணப்பட்டது. மாரி காலத்தில் நெல்லும், கோடை காலத்தில் சிறுதானியங்களாக எள்ளு, பயறு, வரகு, குரக்கன் போன்றனவும் பயிரிடப்பட்டன. இத்தகைய நடைமுறை மனிதருக்கு மட்டுமன்றி இப்பகுதிக் கால்நடைகளுக் கும் நல்ல உணவை அளிக்க உதவியது. கால்நடைகளே மக்களின் செல்வமாக விளங்கின. மாட்டுவண்டி பிரதான போக்குவரத் துச் சாதனமாகக் காணப்பட்டது. உணவுப் பொருட்களை மட்டு மன்றி வியாபாரப் பொருட்களைப் பயிரிடும் மரபும் பதினேழாம் நூற்றாண்டிற் காணப்பட்டதால் யாழ்ப்பாண அரசர் காலத்தி லும் இது வளர்ச்சி பெற்றிருந்தது என ஊகிக்கலாம். இக்காலத் திற்றான் புகையிலைச் செய்கையும் முன்னிலை பெறத் தொடங் கியது. இதனால் விவசாய சமுதாயம், வியாபார சமூகத்தின் பண் புகளைப் பெற்றதோடு கிராமங்களுக்கிடையே வர்த்தக நட வடிக்கைகளையும் வளர்த்தெடுத்ததால் பிற்காலத்தில் முக்கிய நகரங்கள் வளர வழி வகுக்கப்பட்டது. பண்டமாற்று மட்டுமன் றிப் பணப்புழக்கமும் அதிகரிக்க இத்தகைய நடவடிக்கைகள் வழி வகுத்தன. . . .
உசாவியவை
1. Tambiah. H. W. The law of Thesawalamai Tamil Culture,
Vol. III, No. 4, October 1958, Ludi. 386-408.
2. Arasaratnam, S. Ceylon. (New Jersey) 1964, Lud. 98-116.
3. Sitrampalam, S. K. The Megalithic Culture of Sri Lanka, Unpublished Ph. D. Thesis, University of Poona, ...1980.

4.
-185
Coomaraswamy, W. Thesawalamai - It's Genesis and Development, Hindu Organ, - 1916/1933; 6/7/1933; 3/8/1933; 23/10/1933.
5. சிற்றம்பலம், சி. க. 'ஈழமும் இந்து மதமும்" - அனுராதபுர
காலம், சிந்தனை. தொகுதிI, இதழ் 1, பங்குணி. 1984.
i. 108 - 141.
6. சிவத்தம்பி, கா. யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்
7.
13.
14.
15.
கொள்ளல் - அதன் உருவாக்கம், அசைவியக்கம், பற்றிய ஒரு பிராரம்ப உசாவல். பேராசிரியர் சோ. செல்வநாயகம் நினை வுப் பேருரை - 8 யூன் 1992 பக். 14-15,
வேளாளர் என்ற பதத்தின் மூலம் “வேள்” ஆகும். இச் சொல்லடிப் பிறந்ததே 'வேளிர்" என்ற பதமுமாகும். ஈழத் திலுள்ள கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்புள்ள பிராமிக் கல்வெட்டுகளில் இப்பதம் காணப்படுவது ஈண்டு அவதா 6flis 55á.5g. (Sitra appalam, S. K. The form Velu of the Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal” Paper presented at the XVII Annual Congress of Epigraphical Society of India - Thanjavur 1991). Gajgir GTGiro Lugs தின் வழி வந்ததே 'வேளான்' 'வேளாளர்" ஆகும். ஈழத் திலுள்ள கி. பி. பதினொராம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் "வேளான்" என்ற பதம் காணப்படுவதும் நோக்கற்பாலது.
யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு) குல. சபாநாதன்,
(கொழும்பு) 1949. பக். 27-30.
முத்துராசக் கவிராயர் - கைலாயமாலை, (பதிப்பு)
பி. நடராசன் (யாழ்ப்பாணம்) 1983, பக். 24-31.
பத்மநாதன், சி. வன்னியர், (பேராதனை) 1970
யாழ்ப்பாண வைபவமாலை, ப. 12.
வையாபாடல், (பதிப்பு) க. செ. நடராசா, (கொழும்பு)
1990
மேற்படி செய்யுள், 27.
மேற்படி செய்யுள்கள் 28-50. மேற்படி செய்யுள்கள் 72-73.

Page 137
16.
17.
18.
19.
20.
21.
22.
-186
Thambiah., H.W. The Contents of Thesawalamai Tamil Culture, Vol. VIII No 2 April-June 1959. Luji. 108-143.
Thambiah, H. W. The Laws and Customs of Jaffaa, (Colombo) 1951.
Memoir of Thomas Van Rhee, Governor and Director of Ceylon for his Successor Gerrit de Heere, 1697, (Tr) Sopiha Anthonisz, (Colombo) 1915 LJá. 7-10. (Gal 6) 7 பிள்ளை, க. யாழ்ப்பாண வைபவ கௌமுதி, (வயாவிளான் 1918. uji. 107-117.)
GOINGhuuu Tum L.6) Golguiu uqsiT, 40.
மேற்படி செய்யுள்கள், 44, 73, 77.
Baldaeus, Phillipus. A True and Exact Description of the Great Island of Ceylon A - new and unabridged translation from the edition of 1672. Printed in Ceylon Historical Journal, Vol VIII - July 1958 - April 1959. Nos. 1 - 4. uš, 350 - 354.
உழவுத் தொழிலில் பயன்படுத்தப்பட்ட 3), Ghoi'r afon I, வேளாண்மையோடு தொடர்புடைய பல வழக்கங்கள், ஆகியன பற்றிக் கடந்த நூற்றாண்டில் லூவிஸ் எழுதிய கட்டுரை ஒன்று பயனுள்ள பல தகவல்களைத் தந்துள்ளது. *செவ்வாயில் வித்தும் புதனில் அருவியும் ஆகாது" என்ற பழமொழியை மேற்கோள்காட்டும் இவர் சூடு மிதிப்பதற் குரிய நாட்களாக வியாழன், வெள்ளி ஆகிய நாட்களே சிறந்தவை என்று நம்பப்பட்டதற்கும் ஓர் பாடலை மேற் கோளாகவும் எடுத்துக் காட்டியுள்ளார். கலப்பையின் பாகங்கள்கூடக் குறிப்பிட்ட மரங்களைப் பயன்படுத்தியே அக்காலத்திற் செய்யப்பட்டன. (உ- ம்) படவாள் பகுதி பாலை மரத்திலும், மேழி பங்கிராய் மரத்திலும், கொழுச் சிராய் காரை மரத்திலும், ஏர்க்கால் கருங்காலியிலும் செய்யப்பட்டதைக் குறிப்பிடும் இவர் நுகத்தினை ஆக்குவ தற்குப் புன்னை மரம் பயன்படுத்தப்பட்டதை எடுத்துக் காட்டியுள்ளார். நெல் விதைப்பு, அறுவடை ஆகியவற்றோடு தொடர்புடைய சடங்குகள் பற்றியும் விவசாய முயற்சிகளி லீடுபட்ட காளைகள், அவைகளுக்கு வழங்கப்பட்ட பெயர்கள்
முதலியன பற்றியும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

23.
24.
-187
(kewis, J. P. Tamil Customs and Ceremonies connected
with paddy Cultivation in the Jaffna District' (J. R. A.S. C. B. No 29. Vol VIII, 1844, udi 304 - 333.)
Memoir of Thomas Van Rhee. Guo, St. DIT. Lu, 12. இவர் தமது நினைவேட்டில் மடைப்பள்ளியினர் பிரா மணரின் சமயற் கூடத்தில் வேலை செய்தவர்கள் எனக் கூறினாலும், சிலர் இவர்கள் அரச குடும்பங்களிற்குச் சமை யல் செய்தனர் எனவும் கூறுகின்றனர். (முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை, கு. யாழ்ப்பாணக் குடியேற்றம், (சுன்னாகம்), 1982. ப. 48) இவர்கள் பற்றி இராசநாயகம் முதலியார் பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது கலிங்க நாட்டி லுள்ள மடைப்பள்ளி என்ற இடத்தில் இருந்து வந்த வர்கள் தான் இவர்கள். இவர்கள் வெளியே இருந்துதான். ஈழத்தினை அடைந்தவர்கள் என்பதனை வையாபாடற் குறிப்பும் அங்கீகரித்துள்ளது. (Rasanayagam, C. Ancient Jaffna, Madras 1921 Lud. 388 - 389), garnrói) urbi பாண வைபவமாலையோ எனில் மடைப்பள்ளி என்பது பாதுகாத்தல் எனப் பொருள்தரும் பதவியைக் குறித்த சொல் என்ற வகையில் எடுத்துக்காட்டுவதோடு, இப்பதவி சங்கிலி மன்னனாலேயே அதிருப்தியடைந்த இராசகுமாரர் களுக்கு நிருவாகப் பொறுப்பை அளித்து ஐந்நூறு கிராமங் களுக்குத் தலைவர்களாக்க உருவாக்கப்பட்டது எனக் கூறுகின்றது. (யாழ்ப்பாண வைபவமாலை பக். 63 - 64). இம் மடைப்பள்ளி வகுப்பினரில் இராச அல்லது குமார மடைப் பள்ளி என்ற பிரிவினர் காணப்படுவதை நோக்கும்போதும், இவர்களுக்கும் வேளாளர்களுக்குமிடையே அரச பதவிகளைப் பகிர்ந்து கொள்வதிற் காணப்பட்ட போட்டிகள் பற்றி டச்சுச் சேனாதிபதிகளின் நினைவேடுகளில் குறிப்புகள் இடம்பெற்றுள்ளதை அவதானிக்கும்போதும், யாழ்ப்பாண வைபவமாலை இப்பிரிவினரின் தோற்றம்பற்றிக் கூறுவது பெருமளவு ஏற்கக் கூடியதாக இருக்கின்றதுபோலத் தெரி கின்றது. மடைப்பள்ளிப் பிரிவினரில் சங்கு அல்லது சங்க மடைப்பள்ளி, சருகு அல்லது சர்வ மடைப்பள்ளி என்று அழைக்கப்பட்ட பிரிவினரும் இடம்பெற்றிருந்தனர். (முத்துக் குமாரசுவாமிப்பிள்ளை, கு.மே. கூ. நூ. ப. 48)
Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffna patam, 1697, for the Guidence of the Council of Jaffnapatam during his absence at the cosat of Malabar (Colombo) 1911, U. 27.

Page 138
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
س-188-س-
Baldaeus, Phillipus. Glo. g. giff. Lué. 354 - 356.
Bryan, Pfaffenberger. - Caste in Tamil Culture - The Relig ious foundations of Sudra Domination in Tamil Sri Lanka. (New York) 1982 955urruth 3. Lu i. 62 - 93.
Trinidade, Paulo da. Conquista Spiritual Du Oriente, Chapters on the introduction of Christianity to Ceylon (Tr) Rt. Rev. Edmund Peiris and Friar Archilles Meersman, (Colombo), 1972. Luji. 197 - 199.
யாழ்ப்பாண வைபவமாலை, பக். 32 - 33 . கைலாயமாலை, ப. 36.
சிற்றம்பலம், சி. க. ஈழமும் இந்து மதமும் - பொலநறுவைக் காலம் (கி. பி. 1000 - 1250) சிந்தனை. தொகுதிII, இதழ்11, ஆடி 1984. பக். 115 - 156.
6ơnaguum Lu TL6ño, Go-Fulů. 73. மேற்படி செய்யுள்கள் 44, 59, 65, 79. Thambiah, H. W. Go...5, 1959 . 110.
யாழ்ப்பாண வைபவமாலை, ப. 93. வேளாளர், கோவியர் ஆகிய சாதிப்பிரிவுகளுக்கிடையே உள்ள நெருங்கிய தொடர் புகள் அவதானிக்கத்தக்கவை. இரு சாதியினருக்கும் மண் வெட்டி, குத்துவிளக்கு, அறுகர்ல் என்பன பொதுவான மாட்டுக் குறிகளாகும். (முத்துக்குமார சுவாமிப்பிள்ளை. கு. மே, சு. நூ. ப. 51)
Thambiah, H. W. Gioa.a. 1959 L. 110. Rasanayagam, C. Gun.d. BТdiv, 1926 už, 383 - 384. Thambiah, H. W. Glo.g.s, 1959. L. Ill. யாழ்ப்பாண வைபவமாலை, பக். 60 - 61. Baldaeus, Phillipus. Gud. sh. glT. Lu. 372. மேற்படி, ப. 372.
Rasanayagam. C. GBLD. H. BIT. E. 383.

42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51,
52.
-1.89
Baldaeus Philipus, Guo. s. 15st. Lu. 373. யாழ்ப்பாண வைபவமாலை, பக். 61 - 62. Baldaeus, Phillipus, G3uo. aĥ... 5AT. Luáš. 371 - 372 Trinidade, Paulo da. Guo. m. pt. Lud. 141, 200 Baldaeus, Philipus. Guo, et. BIT. Lui. 375 - 376. GLopib Luq. u. 376. - Trinidade, Paulo da. 3o. s. T. Lud. 194 - 198. Baldaeus, Phillipus, GLD. J. DIT. Lu. 372.
Instructions from the Governor General and council of India to the Governor of Ceylon 1656 - 1665 (Tr.) Sophia Pieters, (Colombo) 1908. u. 12.
Memoir by Anthony Mooyaart, Commandeur of Jaffnapatam for the information and Guidance of his successor, Noel
Anthony Lebeck, 1766 (Tr.) Sophia pieters, (Colombo) 1910 Ludë. 2 - 7.
Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffnapatam, 1697 ilu. 27
53, Baldaeus, Philipus. Guo Jr., pit. Lua. 372 -373.
54.
55.
56.
57.
58.
59.
60.
மேற்படி ப. 356,
மேற்படி, பக். 373 -374,
கைலாயமாலை, ப. 32. கண்ணி. 210.
பூரீதஷிண கைலாசபுராணம், (பதிப்பு) பு. பொ. வைத்திலிங்க தேசிகர், (பருத்தித்துறை, 1916.சிறப்புப்பாயிரம்.
செகராசசேகரமாலை (பதிப்பு) இரகுநாதையர், (கொக்குவில்) 1942, பலவினைப்படலம், செய். 10.
யாழ்ப்பாண வைபவமாலை, பக். 46 - 47.
குலரத்தினம், க. சி. "ஈழத்துச் சைவக் கல்விப் பாரம்பரியம்,

Page 139
-190
சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், தெல்லிப்பழை, 1985. Lu. Il 43.
61. மேற்படி, ப. 142
62. Arumugam, C. “Customs and Ceremonies in the Jaffna District'. The Ceylon Antiquary and Literary Register, Vol. II, Part IV, April, 1917, Luši. 239 - 245.
63. சிவபாதசுந்தரம், சு. சைவக்கிரியை விளக்கம், (மூன்றாம்
பதிப்பு). (யாழ்ப்பாணம்) 1978, பக். 37 - 47.
64. Baldaeus, Phillipus. G3LD. sin. T. uš. 366 - 367.
65. சிவபாதசுந்தரம், மே, கூ, நூ. பக். 59 - 73.
66. செகராச சேகரமாலை, ப. 95, செய், 191 - 192.
67. யாழ்ப்பாண வைபவமாலை, பக். 9 - 10
68. மேற்படி, ப. 24
69. மேற்படி. ப. 36
70. மேற்படி, ப. 38
71. மேற்படி, ப. 45
72. மேற்படி, ப. 48
73. மேற்படி, ப. 59
74. வையாபாடல், செய். 40, 77; யாழ்ப்பர்ணக்குடா நாட்டிற் காணப்படும் இடப்பெயர்களிற் சிங்களமொழியின் கலப்புண்டு. இது பற்றி ஆராய்வது பயனுடைத்தாகும்.
75. யாழ்ப்பாண வைபவமாலை, பக். 91-29
76. வையாபாடல், செய், 77.
77. யாழ்ப்பாண வைபவமாலை, ப. 60.
78. மேற்படி. ப. 81.

-191
79. Arasaratam, S. Historical Foundation of the economy of the Tamils of North Sri Lanka. (Chunnakam) 1982. Ludii. 2-3
80. Queyroz, Fernao de, The Temporal and Spiritual Conquest of the lsland of Ceylon, (Tr.) S.G. Perera, (Colombo) 1930, Lu. 50 V−
81. Trinidade, Paulo da. Guo. J. T. Lui. 211, 213, 214, 219,
&39。
82. மேற்படி, ப. 200
83. மேற்படி, ப. 175
84. Baldaeus, Phillipus. Guo..H.T Lu. 334.
85. Trinidade, Paulo da, Guo.dn.g. u. 194.
86. Baldaeus, Phillipus. (Bufo.sn.gr. Lu. 394.

Page 140
அத்தியாயம் 7
ČF ) )
வரலாற்றுப் பின்னணி
ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் ஈழத்திற் காணப்பட்ட இந்துமத நம்பிக்கைகள், வழிபாட்டம்சங்கள், நிறுவனங்கள் ஆகி யனவற்றின் வளர்ச்சியினைக் குறித்த அதே நேரத்திலே தற்போ தைய இந்துமதத்தின் அம்சங்கள் பல பெரு வளர்ச்சி கண்டகால மாகவும் விளங்குகிறது என்றால் மிகையாகாது. இத்தகைய அம் சங்களின் வளர்ச்சியைப் பல்வேறு காலகட்டங்களாக நிரைப் படுத்தி ஆராய முடியும். இவற்றின் அடித்தளமாக யக்ஷ - நாக வழிபாடுகள் அமைந்திருந்தன. இன்றைய நாட்டார் வழிபாட் டம்சங்கள் பல இவற்றின் எச்சசெர்ச்சமாகவே விளங்குகின்றன. இவற்றோடு திராவிட மக்களாகிய இன்றைய சிங்கள - தமிழ் மொழி பேசுவோரின் மூதாதையினரின் வருகையும் திராவிட வழி பாட்டம்சங்கள் ஈழத்தில் நிலைகொண்டு ஸ்திரம் பெற வழி வகுத்தது.2 இன்று சிங்கள மொழியைப் பேசுவோர் பெளத்த மதத்தினைத் தழுவ முன்னர் இந்துக்களாக விளங்கினர் என்பத னைப் பெளத்தத்தினைத் தழுவியபோது இவர்கள் அதற்கு அளித்த குகைத் தானங்கள் எடுத்தியம்பும். பிராமிக்கல்வெட்டுக் களிலுள்ள இந்துப்பெயர்கள் மட்டுமன்றி இன்றும் நாட்டார் வழிபாடாகச் சிங்கள மக்கள் மத்தியில் நிலைகொண்டுள்ள இந்து மத அம்சங்கள் பலவும் இவற்றுக்குச் சான்று பகருகின்றன.3 இவ்வழிபாட்டம்சங்களோடு தமிழகத்திற் போன்று ஈழத்திலும் புகுந்த வடஇந்திய ஆரிய வழிபாட்டம்சங்களும் இந்துமதத்திற் சங்கமமாயின.4 எனினும் இக்காலத்திற் பெளத்தமதம் இந்தியா விலும் ஈழத்திலும் செல்வாக்குள்ள நிலையிற் காணப்பட்டதால் இந்துமதம் எதிர்நோக்கிய முக்கிய சவாலாகவும் அது காணப் till-gil.
இருந்தும், தமிழகத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஏற்படுத்திய இந்து கலாசார மறுமலர்ச்சி இந்துமதத்தினை முன் னிலைக்கு இட்டுச் சென்றது. இக்காலத்திற்றான் இந்தியாவிற்

---193م-
பெளத்தமும் சீரழிந்தது. எனினும் ஈழத்து மன்னர்கள் தமிழகத் தோடு கொண்டிருந்த மிக இறுக்கமான அரசியற்றொடர்புகள், ஈழத்தின் மீதான தமிழகப் படை யெடுப்புகள் ஆகியன ஈழத்தில் இந்து மதத்தினை மேனிலைக்கு இட்டுச் சென்றன. இதனாலே தமிழகத்தில் ஏற்பட்ட இந்து காலாசார மறுமலர்ச்சியின் தாக் கங்கள் ஈழத்திலும் எதிரொலித்தன. இக்காலத்திலே தமிழகத் தைப்போல் ஈழத்திலும் திருக்கோயில்கள் இந்து மதத்தின் கருவூலங்களாக அமைந்து காணப்பட்டதோடு "வேதமும் ஆகம மும் இவற்றின் அச்சாணியாகவும் முதன்மை பெறத் தொடங் கின. அத்துடன் இத்தகைய தாக்கத்தின் இன்னுமோரம்சம் யாதெனில் இந்துமதம், பெளத்தமதம் ஆகியன ஈழத்தில் அதனை அனுசரிப்போர் மத்தியில் இனத்துவ ரீதியிலே தமிழர் இந்துக் களாகவும், சிங்களவர் பெளத்தர்களாகவும் இனங்காணப்பட்ட மையேயாகும்.5
ஈழத்தில் ஏற்பட்ட சோழராட்சி இந்துமத வளர்ச்சியில் மற்றுமோர் மைற்கல்லாக அமைந்தது.8 பெளத்தம் தனது முதன்மை நிலையை இழந்து இந்துமத அம்சங்கள் பலவற்றோடு இயைந்து இயங்கும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டது. இத்தகைய போக்கினைச் சோழரின் பின்னர் அரசாட்சிப் பொறுப்பினை ஏற்ற சிங்கள மன்னராலே மாற்றியமைக்க முடியவில்லை,7 எனினும் மாகனனது வருகையும் அவனது நாற்பதாண்டுக் கால ஆட்சியும் பெளத்த மதத்தையும் அதன் நிறுவனங்களையும் சிதைத்துச் சீரழித்ததோடு இந்துமதத்தின் வளர்ச்சிக்கும் புதிய உத்வேகத்தை அளித்தது. இக்காலத்திலே தமிழகத்தைப் போன்று ஈழத்திலும் திருக்கோயில்கள் நிறுவன ரீதியாக வளர்ச்சி பெற்றுக் காணப்பட்டன எனலாம்.
இத்தகைய பின்னணியிற்றான் ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றனர். ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் ஈழத்து இந்துமத வரலாற்றில் மற்றுமோர் மைற்கல்லாகிறது. பிராந்திய ரீதியில் தனித்தனியே இயங்கிய சிங்கள - தமிழ் அரசு கள் தனித்துவமாகச் சமூக, பொருளாதார, கலாசார அம்சங்கள் பலவற்றைப் பேணிப் பாதுகாக்க இவற்றின் பின்னணியில ைஇந் திருந்த புவியியலமைப்பு வழிகோலியது. இதனாலே தமிழரசில் இந்துமதம் அரசமதமாக முன்னிலை பெற்றுக் காணப்பட்டாலும் சிங்கள அரசிலு n இது ஒரு செல்வாக்குள்ள நிலையிற் காணப் பட்டதை அக்காலச் சந்தேஸய இலக்கியங்கள் எடுத்துக் காட்டு கின்றன.8 இதனை மனதிற் கொண்டே பரணவித்தான9 'பராக்கிரமபாகுவினது (ஆறாவது) ஆட்சிக்குப் பின் கோட்டைட்

Page 141
-194
அரசின் மீதும் பிரதானிகள் மீதும் மகாசங்கம் செலுத்தி வந்த செல்வாக்குப் படிப்படியாகக் குன்றத் தொடங்கி, பிராமணர் செல்வாக்கு வளரத் தொடங்கியகென்றும், போத்துக்கேயர் இலங் கைக்கு வந்தபோது சிங்கள மக்களின் உயர் குழாத்தினர் விரை வாக இந்து சமயிகளாக மாறத் தொடங்கினர்' எனவும் குறிப் பிட்டுள்ளார்.
முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி கால ஆலயங்கள்
f. 物 略
ஆரியச் சக்கரவர்த்திகள் அந்தணர் குலத்தைச் சேர்ந்ததால்
வேதத்திலும் வேதகலாசாரத்திலும் பெருவிருப்புக் கொண்டிருந்
தனர். இருந்தும் சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதில் இவர்
கள் அதிக அக்கறை காட்டினர் என்பதை தக்கூரிண கைலாச
புராணத்தில் வரும் கீழ்வரும் செய்யுட்கள் எடுத்துரைக்கின்றன. 10
அம்புயத்து தாத் தண்ணலமைந்த வாரியர் தங்கோமர் நும்பாவந் திறைஞ்சுஞ் துே வுயர்கரைக் காவல் வேந்தன் செம்பொன்மா பவுலிச்சென்னிச் செகராச சேகரன் றும்பையஞ் சடையான்சைவந் தோன்றிடத் தோன்றினானால் (éBossen)
தோன்றிய காலைவேதந் தொனித்தனசிவனுாற் சைவ ழான்றமர்வெண்ணி றள்ளியணி ந்தனரலங்கில் வாகை வான்றணிச் சிங்கை காவன் மன்னனோர் சிங்கந் தோன்ற வென்றபல சமய மெல்லாங், கரியென விரிந்து போன
(3ο σο),
இத்து மதத்தில் இம்மன்னர் கொண்ட ஈடுபாட்டினால் இந்துமதத்தின் புனிதப் பொருளான நந்தி இவர்கள் ஆவணங்களில் முக்கிய இடத்தினைப் பெற்றது. ஆரியச்சக்கரவர்த்திகளின் அரச சின்னமாக நந்தி அவர்களின கொடியை அலங்கரிக்க, அவர்களின் பூர்வீக இடமாகிய, புண்ணிய சேத்திரங்கள் பல நிறைந்து காணப்பட்ட சேதுக்கரையைக் குறிக்கும் "சேது" என்ற வாசகமே அரச முத்திரைகள், நாணயங்கள் ஆகியனவற்றில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனையே செகராசசேகரமாலை11 விடைக் கொடியுஞ் சேதுவும் நீள் கண்டிகளொன்பதுவும் பொறித்து மிகைத்த கோ’ எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆரியச்சக்கரவர்த்திகள் சேதுகாவலர் மடடுமல்ல கங்கை நாடரும் கூட. "கங்கையாரியன்", "கங்கை நர்டன்' போன்ற பெயர்கள் இவர்களின் பூர்வீக இடமாகவும் இந்துக்களின் மோட்ச பதியாகவுமுள்ள காசியைக் கடந்து செல்லும் கங்கையை ஒரு புறமும், இந்துமதத்திற் புனித நீராக அதி உன்னதமான நிலை

كشد195 ــ
யிற் பேணப்படும் கங்கை நதியை மறுபுறமும் குறிக்க்லாம். கங்கை, யமுனை என்ன இந்துப்பாரம்பரியத்திற் புனிதத்தன்மை உடையவை. சேர்ழப் பெருமன்னனான முதலாம் இராஜேந்திரன் தனது வட இந்திய திக் விஜயத்தின் சின்னமாகக் கங்கை நீரை இட்டு வந்து தமிழகத்திற் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் தலைநகரை அமைத்து அங்கே தான் மைத்த வாவிக் குட் கங்கை நீரைச் சேர்த்தான் என்பது வரலாறு ஆரியச்சக்ரவர்த்திகள் கங்கையில் ஈடுபாடு கொண்டிருந்தது போல யமுனாதீர்த்தத் திலும் ஈடுபாடு கொண்டிருந்தது பற்றி யாழ்ப்பாண வைபவ மாலை பின்வருமாறு கூறுகின்றது 12
காசிநகரிலிருந்து வந்த வேதிய குலோத்துங்கனாகிய கெங்காதர ஐயர் என்னுங் குருவையுங்கொண்டு தனது பரிவாரங்களுடன் பிரயாணப்பட்டு பாண்டி ராசன் வழிவிட்டனுப்பி வைக்க யாழ்ப்பாணத்தில் வந்திறங்கி நல்லூர்ப்பகுதியிலே யரசிருக்கையை ஸ்தா பிக்கக் கருதி, சோதிடர்கள் தேர்ந்து நன் முகூர்த்கத்தில் அஸ்திவாரம் போட்டு, தாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் பூங்காவையும் நடுவிலே ஸ்நான மீண்டபமும், முப்பு டைக் கூபமும் உண்டாக்கி அக் கூபத்தில் யமுனா நதித் தீர்த்த மும் அழைப்பித்துக் கலந்து விட்டு, நீதி மண்டபம், யானைப் பந்தி, குதிரைப்பந்தி, சேனாவீரரிருப்பிடம் முதலிய வனைத்தும் கட்டுவித்து. தன்னுடன் வந்த காசியிற் பிரம குலதிலகரான கெங்காத7 ஐபரும் அன்ன பூரணி அம்பாள் என்னும் பத்தினியும் வாசஞ் செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த் திசைக் குப் பாதுகாப்பாக வெயிலுவந்த பிள்ளை பார் கோவி லையும், மேற்றி சைக்கு வீரமரகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்குச் சட்டநாதேசுவரர் கோவில் தையல்நாயகி அம்மன்கோவில், சாலை விநாயகர் கோவிலை புங் கட்டு வித்துத் திலகவதியாரென்னும் பத்தினியுடனே கிரகப் பிரவேசஞ் செய்து வாழ்ந்திருந்தான்."
மேற்கூறிய குறிப்பிலே காணப்படும் செய்தியிற் சில் விட பங்கள் அவதானிக்கத்தக்கவை. அதாவது தற்கால இந்துப் ாrம்பரியத்திலுள்ளது போன்று சுபமுகூர்த்தத்தில் நிகழ்ச்சிகளை யூ பிக்கும் வழக்%ம் அக்காலத்திலே காணப்பட்டமையே அது சி. rt, நல்லூரில் டிரசமாளிகை அமைந்தபோதே பூங்காவ னத்தின் நடுவில் அரசர்கள் ஸ்நானம் செய்வதற்கு ஸ்நான

Page 142
-196
மண்டபமும் அமைக்கப்பட்டது. இதிலிருந்து வேறுபடுத்தியே முப்படைக் கூபம்' கூறப்படுகிறது. இதன் பொருள் "ப" போன்ற வடிவிலமைந்த தடாகமாகும். இந்து ஆலயங்களிலுள்ள குளங்க ளுக்கும் இதற்கும் கோற்றத்தில் வேறுபாடு உண்டு. அவை பெரும்பாலும், சதுர நீள்சதுர வடிவிற்றான் காணப்படுகின்றன. இதுவோ எனிற் கேணிகள் போன்று மூன்று பக்கமும் 'ப' வடிவி லமைந்திருந்து. நான்காவது பக்கத்தில் இதிலிறங்குவதற்குரிய படிக் கட்டுகளையும் கொண்டிருந்தது போலத் தெரிகிறது "யமு னா ஏரி என அழைக்கப்படும் இடமே 'முப்புடைக் கூபம்" என்ற வர்ணனைக்குப் பொருத்தமான தீர்த்தமாகக் காணப்ப டுகிறது. இ9 ன் அமைப்பு டச்சுக்காரர்களின் காலத்திலும், இவ் வாறே காணப்பட்டதை டச்சு ஆவணங்களும் வரைபடங்களும் எடுத்துக் காட்டுகின்றன.13 இதிலே தான் யமுனா தீர்த்தம் சேர்க்கப்பட்டதை மேற்கண்ட குறிப்பிலே தெளிவாகக் காண லாம். இத்தகைய மரபு சோழர் காலத்தில் நாம் ஏற்க னவே குறிப்பிட்ட கங்கை கொண்ட சோழபுர மரபைப் பெரி தும் ஒத்துக் காணப்படுகிறது. இதனால் இன்று நல்லூரிற் காணப்படும் யமுனா ஏரி ஆரியச் சக்கரவர்த்திகளினால் "யமுனா தீர்த்தம் கலக்கப்பட்ட இடழே எனலாம். பட்டாபிஷேகங்சளில் மன்னர்களைப் புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட நீரினாலே அபிஷேகஞ் செய்வது வழக்கம். இத்தகைய தேவையை இது பூர்த்தி செய்தும் இருக்கலாம். இதனால் இதனை ஆரியச் சக்கரவர்த்திகள் ஸ்நானம் செய்த தடாகம் எனக் கூறுவதற்குப் பதிலாகப் புனித நீரான யமுனா தீர்த்தம் கொண்ட புனிதமான தடாகம் என்று கூறுவதே பொருத்தமாகும்.14
மேற்கூறிய கூற்றில் மூன்று திசைகளுக்கும் காவற்றொய்வங் களுக்குக் கோயில் அமைத்தது பற்றிய செய்தி கூறப்படுகிறது. இவை முறையே கிழக்குத் திசையில் அமைந்த வெயிலுவந்த பிள்ளையர் கோயில், மேற்குத் திசையிலே அமைந்த வீரமாகாளி அம்மன் கோயில், வடக்குத் திசையிலமைந்திருந்த சட்ட நாதர் கோயில், தையல் நாயகி அம்மன் கோயில், சாலை விநாயகர் கோயில் என்பவைகளாகும், யாழ்ப்பாண வைபவமாலை15 பிறி தோரிடத்தில் முதலாவது ஆரியச்சக்கரவர்த்தி தெற்குத் திசை யிலே  ைகலை விநாயகர் கே ரயிலயலிலே கையிலாதநாதர் கோயி லையும் கைலைநாயகியம்மன் கோயிலையும் கட்டுவித்தான் எனக் குறிக்கப்படுவதால் நான்கு திசைகளிலும் காவற்றெப்வங் களாக முறையே பிள்ளையார், அம்மன், சிவன், ஆகிய தெய் வங்களுக்குக் கோயில்கள் அமைக்கப்பட்டன எனலாம். தெற்குத் திசையிலே அமைக்கப்பட்ட கையிலாதநாதர் கோயில் கூட ஏற்

س-197-م
கனவே இங்கே காணப்பட்ட விநாயகராலயத்திற்கு அருகிலே அமைக்கப்பட்டதும் அவதானிக்கத்தக்கது. அரண்மனை அமைந்த இடத்திற் பாதுகாப்பாக நான்கு திசைகளுக்கும் தெய் வங்களுக்குக் கோயில்களை அமைக்கும் மரபு ஈழத்தில் அக்கா லத்திற்காணப்பட்ட ஒரு மரபாகும். இது யாழ்ப்பாண இராச்சியத் தில் மட்டுமன்றிக் கோட்டை இராச்சியத்திலும் காணப்பட்டது 16
மேற்கூறப்பட்டுள்ள அட்டவணையிலுள்ள கோயில்களை நோக்கும் போது நல்லூரின் கிழக்கெல்லையிலமைந்த வெயிலுவந்த பிள்ளையார்கோயில், மேற்கிலுள்ள வீரமாகாளி அம்மன் கோயில், வடக்கே உள்ள சட்டநாதர் கோயில், தெற்கேயுள்ள கையிலாத நாதர் கோயில் ஆகியன இருந்த இடங்கள் இலகுவில் இனங்கண்டு கொள்ளக் கூடியவையாகும். போத்துக்கேயரின் ஆட்சியில் இவை யாவும் இடிக்கப்படத் திரும்பவும் இவை அமைந்திருந்த இடங் களிலே பெரும்பாலும் டச்சுக்காரரின் ஆட்சியின் கடைக்கூற்றிற் கட்டப்பட்ட ஆலயங்களே நாம் இன்று காணும் ஆலயங்களாகும். ஆனால், தையல்நாயகி அம்மன் கோயில், சாலை விநாயகர் கோயில் ஆகியனவற்றைச் சரியாக இனங்கண்டு கொள்வது கஷ்ட மாக உள்ளது.17 யாழ்ப்பாண வைபவமாலைச் செய்தியை நோக் கும்போது நல்லூரில் மூன்று விநாயகர் ஆலயங்களும் இரண்டு சிவன் ஆலயங்களும், மூன்று அம்மன் ஆலயங்களும் காணப்பட்டதை அவதர்னிக்க முடிகிறது. அத்துடன் இக்காலத்திற்குரிய இணுவில் பரராசசேகரப்பிள்ளையார் கோயில், அச்சுவேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயில், உரும்பிராய் கருணாசரப் பிள்ளையார் கோயில் ஆகியனவற்றையும் இணைத்துப் பார்க்கும் போது யாழ்ப் பாண அரசர்களின் போ ஷிப்பைப் பெற்ற தெய்வங்களில் விநா யகர் முதன்மை பெற்றுக் காணப்படுகிறார் போலத் தெரிகிறது. இது பற்றி ஆராய இடமுண்டு.
முருக வழிபாட்டிடங்கள்
நல்லூரிலே தற்போதுள்ள முருகன் ஆலயத்தின் முன்னோடி யாகவுள்ள முருகன் ஆலயம் இப்போதுள்ள புரட்டஸ்தாந்து ஆலயம் இருக்குமிடத்திற் காணப்பட்டதை டச்சு ஆவணங்கள் எடுத்துக் காட்டுகின்றன.18 யமுனா ஏரிக்கு அருகில் விளங்கும் இக் கிறிஸ்தவ கோயிலிருக்குமிடம் ஒலிவேறாவினால் இடிக்கப் பட்ட புராதன கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டிருந்த இடமே என இராசநாயக முதலியாரும் குறிப்பிட்டுள்ளார். 19 இக்கோயி லைக் கட்டியவனாகப் புவனேகபாகு என்பான் யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை போன்ற நூல்களிற் கூறப்பட்டுள்
ளான். இப்புவனேகபாகு யார் என்ற கேள்வி அடுத்து எழுகிறது.

Page 143
-198
யாழ்ப்பாண வைபவமாலையில்20 மட்டுமன்றிக் கைலாய மாலையிலும்1ே புவனேகபாகு முதல7வது ஆரியச் சக்கரவர்த்தி யின் மந்திரியாகவே குறிப்பிடப்படுகிறான் கைலாயமாலை இம் மந்திரியாகிய புவனேகபாகுவை முதலாவது ஆரியச் சக்கரவர்த்தி மதுராபுரியில் இருந்து கூட்டி வந்து இராச மந்திரியாக நியமித் தீதைக் கூறுகின்றது. யாழ்ப்பாண வைபவமாலையில் ஈரிடங்களிற் புவனேகபாகு முதலாவது சிங்கையாரியனுடன் தொடர்புபடுத் தப்பட்டுள்ளான். இவற்றுள் ஒரிடம் நல்லூர் பற்றியதாகும். மற்றது, ம7விட்டபுரம் பற்றியது ஆகும்.22 நல்லூர் பற்றி யாழ்ப் பாண வைபவமாலை பின்வருமாறு குறிப்பிடுவது அவதானிக் கத்தக்கது.23
"சிங்கையாரிய மகாரா சன் இப்படியே அரசாட்சியைக் கையேற்று நடத்தி வரு ைஉயிற் புறமதில் வேலையையுங் கந்தசுவாமி கோவிற் றிருப்பணியையுஞ் சலிவாகன சகாப்தம் எண்ணுரற் றெழுபதாம் வருஷத்திலே புவனேக வாகு என்னும் மந்திரி நிறைவேற்றி முடித் தான்"
இதே நூல் மாவிட்டபுரத்தோடு சிங்கையாரியனையும் அவன் மந்திரி புவனேகபாகுவையும் தொடர்புபடுத்தும் சம்பவம் பின் வருமாறு அமைந்துள்ளது. 24
"சிங்கையாரிய மகாராசனும் புவனேகவாகு மந்திரியும் கீரிமலைக்குப் போய்த் தீர்த்தமாடிச் சிவாலய தரிசனமுஞ் செய்து கொண்டு அவ்வாலய விசாரணையை அரசாட்சி விசாரணைக்குள்ளாக்கிக் கொண்டு கந்தசுவாமி கோவி லில் வந்து பெரிய மனத்துளாரின் குமாரர் சிதம்பர தீட்சி தரின் மகன் சின்ன மனத்துளார், விருந்திட உண்டு இளைப்பாறினார்கள். அவ்விருந்து மகாவுசிதமாயிருந்த தினால் புவனேகவாகு அவ்விருந்திற்பரிமாறிய ஒவ்வொரு பதார்த்தத்திற்கும் ஒவ்வொரு பாட்டுச் சொன்னான்."
மேற்படி இருபந்திகளையும் படிக்கும் போது யாழ்ப் பாண வைபவமாலையிற் பல்வேறு காலநிகழ்ச்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கின்றன போலத் தெரிகின்றது இவற்றுள் முதல் நிகழ்ச்சி ஆரியச் சக்கரவர்த்திகளுள் முதல் மன்னன் அரசாட்சிக் காலத்துக்குரியதாகும். இதனோடு நல்லூர், மாவிட்ட புரம், கீரிமலை ஆகியன தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளன. இரண்டாவது நிகழ்ச்சி புவனேகபாகு பற்றிய சம்பவமாகும். இவை இரண்டும் வெவ்வேறு காலத்து நிகழ்ச்சிகளாகும். இதனை யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை ஆகியனவற்றில்

--199 سس
இவன் காலம் பற்றிக் கூறப்படும் "ஆண்டிலே காணப்படும் பாடபேதங்கள் எடுத்துக் காட்டுகின்றன. புவனேகபாகுவின் காலத்தை யாழ்ப்பாண வைபவமாலை "சாலிவாகன சகாப்தம் எண்ணுாற்றெழுபதாம் வருஷத்தில், எனக் கூறுகின்றது.25 இத னையே கைலாயமாலையில் வரும் தனிச் செய்யுள் ‘இலகிய சகாப்த மெண்ணுரற் றெழுபதாமண்ட தெல்லை" எனக் கூறுகி றது.28 ஆனாற் கைலாயமாலைச் செய்யுளுக்குப் பாடபேதமும் உண்டு.27 இது விசுவநாத சாஸ்திரிகளின் சம்பவக்குறிப்பில் உள்ளது. அஃதாவது
"இலகிய சகாப்த மெண்ணுரற்றெழுபத்து நான்கி னலர் திரிசங்க போதியாம் புவனேகபாகு நலமுறும் யாழ்ப்பாணத்து ந க்ரி கட்டுவித்து நல்லூர்க் குலவிய கந்தனார்க்குக் கோயிலொன்றமைப் பித்தானே.
இக்காலம் பற்றிய பாட பேதங்களை உற்று நோக்கும் போது தமிழ் நூல்களில் மன்னர் வரி சயில் மட்டுமன்றி பல் வேறு நிகழ்ச்சிகளைக் கால வரன் முறையிற் கோவைப்படுத்திக் கூறும் மரபு காணப்படாதிருப்பதை அவதானிக்க முடிகின்றது. நல்லூர்க்கந்தசுவாமி ஆலயத்தோடு தொடர்புடைய இரு வேறு மன்னர்களாகிய முதலாம் சிங்கையாரியன், புவனேகபாகு ஆகி யோரிற் புவனேகபாகுவைச் சிங்கையாரியனின் மந்திரியாகவும் மதுரையிலிருந்து வந்தவன் என்றும் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி யுடன் இணைக்கப்பட்டுள்ளமை தெரிகிறது. இக்கருத்தினைக் கைலாயமாலையிற் காணப்படும் பாடபேதமாகிய "இலகிய சகாப்தமெண்ணுாற்றெழுபத்து நான்கினலர்' என்பதற்கு ஞானப் பிரகாசர்28 கொடுக்கும் விளக்கம் மட்டுமன்றி நல்லூர் ஆலயக் கட்டியத்தில் புவனேகபாகு பற்றி வரும் வர்ணனையும் உறுதிப் படுத்துகின்றது எனலாம். டி.ாழ்ப்பாண வைபவமாலையிற் குறிக் கப்படும் கூற்றையும், கைலாயமாலையிலே தனிச் செய்யுளாக வரும் "இலகிய சகாப்தமெண்னூற்றெழுபதாமாண்டதெல்லை யையும் சகவருடம் எண்ணுாற்றெழுபதாக எடுத்துக் கொண்டு கிறிஸ்தாப்தத்திற்கு இதனை மாற்ற 78 ஆண்டுகளைச் சேர்த் தால் கி.பி 948 என வரும். இக்காலத்தில் நல்லூரில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி நடைபெறவில்லை. ஆனால் இந்து ஆலயமொன்று இங்கு இருந்திருக்கலாமென்" தை முதலாம் இரா ஜேந்திரனின் கோட்டைக் கல்வெட்டு எடுத்துக் காட்டுவது நோக்கற்பாலது.29
இக்கல்வெட்டில் வரும் பூரணமற்ற முறையிற் காணப்படும் இடப் பெயரை நல்லூர் என இந்திரபால இனங்கண்டு வாசித் துள்ளார். இதனால் இக்கல்வெட்டுக் குறிக்கும் இடப்பெயராகிய

Page 144
-200
நல்லூரும் இது கிடைத்த இடமாகிய கோட்டையும் பல வரலாற்று நிகழ்ச்சிகளை நம் மனக் கண்முன்னே நிறுத்துகின்றன எனலாம். போத்துக்கேயர் யாழ்ப்பாண அரசின் இராசதானியாக விளங்கிய நல்லுரரினுள் அரசமாளிகிை, கோயில்கள் ஆகியனவற்றைச் சிதைத்த பின்னர், யாழ்ப்பாணக் கோட்டையைக் கட்டினர் என் பதைப் போத்துக்கேய வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டியதை நோக்கும் போது யாழ்ப்பாண அரசு நல்லூரில் இராசதானி அமைக்க முன்பே நல்லூரில் ஒர் இந்து ஆலயம் இருந்ததென்பதும் வரலாற்றுண்டைமயாகிறது. இது சோழர் பாணியிற் கூட அமைந் திருக்கலாம் போலத் தெரிகிறது. இத்தகைய ஆலயம் முருக ஆலயமாகவும் விளங்கி இருக்கலாம் என்று யூகிக்கலாம். முதலா வது ஆரியச்சக்சரவர்த்தி இவ்வாலயத்திற்குச் செய்த திருப்பணி யாக இவ்வாலயத்தின் புறமதிலை இவனே கட்டியிருக்கலாம் என் பதை மேலே எடுத்துக்காட்டிய யாழ்ப்பாண வைபவமாலையின் குறிப்பு எடுத்துக் காட்டுவதாயுள்ளது. நல்லூரிலுள்ள கந்தசுவாமி ஆலயத்தின் புறமதில் வேலையை இம்மன்னன் செய்ய, இதற்கு இன்னொரு மன்னனான புவனேகபாகுவும் திருப்பணி செய்தான் என்று கொள்வது பொருத்தமானதாகக் காணப்படுகிறது. யாழ்ப் பாண வைபவமாலையில் மாவிட்டபுரம் பற்றி வரும் குறிப்பில் முதலாம் ஆரியச்சக்கரவர்த்தி அங்கு சென்ற போது மாவிட்டபுரக் கந்தசுவாமி கோயில் மட்டுமல்ல கீரிமலைச் சிவன் கோயிலும் காணப்பட்டமை தெளிவாகின்றது. இதனால் இச்சக்கரவர்த்தி காலத்தில் குடாநாட்டில் நல்லூர், மாவிட்டபுரம் போன்ற இடங் களிற் சிறப்பானி முருகன் ஆலயங்கள் விளங்கியமை தெளிவரி கின்றது.
நல்லூர் முருகன் ஆலயப் புறமதில் வேலைகளை முதலாவது ஆரியச்சக்கரவர்த்தி செய்தான் என்பது பொருத்தமுடைய கருத் தாக அமைகின்றது. இவ்வாரியச் சக்கரவர்த்தியே இதற்குத் திருத்த வேலைகளைச் செய்தான் என்பதற்குச் சுவாமி ஞானப் பிரகாசர் கொடுத்துள்ள விளக்கமும் பொருத்தமானதாகவே காணப்படுகிறது.80 அவர் இவ்வெண்ணுாற்றெழுபதில் வரும் *எண்" என்ற பதத்தைப் பேரெண்ணாக்கி இது 1000 என்பதைக் குறிக்குமெனக் கொண்டு அத்துடன் நூற்றெழுபதையும் கூட்டிப் பின்னர் சகவருடத்தை கிறிஸ்தாப்தத்திற்கு மாற்றுவதற்கு 78ஐயும் சேர்த்து 248 எனக்கொண்டுள்ளார். இது பெருமளவுக்கு ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்துடன் ஒத்துக் காணப்படுகிறது என லாம். இதனால் இந்தல் லூர் ஆலயத்திற்குப் பல திருத்தப் பணிகளை முதலாம் ஆரியச்சக்கரவர்த்தி மேற்கொண்டான் எனலாம். இது நடந்தது கி. பி. 13ஆம் நூற்றாண்டிலாகும்.

--سی-201-سـ
ங்ெகள நூல்களாகிய ராஜாவலிய, கோகிலசந்தேஸ்ய போன்ற நூல்களை நோக்கும்போது ஆறாவது பராக்கிரமபாகு வின் வளர்ப்புப் பிள்ளையாகிய ஆறாவது புவனேகபாகுவின் ஆட்சி (கி. பி. 1450 - 1467) ஆம் ஆண்டுக்காலத்திற் காணப் பட்டமை புலனாகின்றது. இவனே நல்லூர் ஆலயத்தில் இன்றும் ஒதப்படும் கட்டியத்தில் விளிக்கப்படுவது ஈண்டு அவதானிக்கத் தக்கது.81 அப் பாடல் வருமாறு,
சிறீமான் மஹாராஜாதிராஜ அகண்ட பூமண்டல
ப்ரதிதிகந்தர விச்றாந்த கீர்த்தி:
சிறீ கஜவல்லி மகாவல் லிசமேத சுப்பிரஹ்மண்ய
பாதாரவிந்த ஜநாதிரூட சோடச
மகாதான சூர்யகுல வம்சோத்பவ பூgரீசங்க
போதி புவனேகபாகு:
இதனைப் பின்வருமாறு சிவசாமி மொழி பெயர்த்துள்ளார்.32
திருவருட் சக்திகளான தெய்வானை அம்மனும் வள்ளி யம்மனும் ஒருங்கே பொருந்த வீற்றிருக்கும் சுப்பிரமணி யப் பெருமானின் திருவடித்தாமரைகளை வணங்குபவ னும், மன்னர்களுள் மன்னனும் செல்வங்களை உடைய வனும், மிகப்பரந்த பூமியடங்கலும் உள்ள திசைகள் எல்லாவற்றிலும் பரவிய புகழையுடையவனும், மக்களு டைய தலைவனும், பதினாறு பெரிய தானங்களைச் செய்பவனும் சூரிய குலத்திலே தோன்றியவனும் சிறீ
சங்க போதி என்னும் விருதுப்பெயர் தரித்தவனுமாகிய புவனேகபாகுவாகும்."
ஆறாவ்து பராக்கிரமபாகுவின் வளர்ப்புப் பிள்ளையாகிய செண்பகப் பெருமாள் (ஆறாவது புவனேகபாகு) பூரீ சங்கபோதி என்ற பட்டத்தினைச் சூடியிருந்தாலும், அவனது சாசனங்கள் அவனைச் சூரிய குலத்தவனென்றும் மஹாராஜாதிராஜ என்றும் பூரீ சங்கபோதி என்றும் அழைப்பதாலும்,33 கைலாயமாலைச் செய்யுளின் பாடபேதத்தினைத் தரும் விசுவநாத சாஸ்திரிகளின் பிரசுரிக்கப்படாத ஏட்டில் இவனைச் சிறீசங்கபோதி என அழைப் பதாலும் இம் மன்னனே கந்தசுவாமி கோயிலுக்கு ஆற்றிய பணி களை முதலாவது ஆரியச் சக்+ர வர்த்தி இககே யிலுக்கு ஆற் றிய பணிகளோடு யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை ஆதியன இணைததுள்ளன எனலாம்.
இவனை ஆரியச் சக்கரவர்த்தியின் அமைச்சர் எனக் கூறியதன் மூலம் இத்தகைய இணப்பு ஏற்பட்டுள்ளது எனலாம் மேலும் புவனேகபாகு என்ற பெய்ர் எழுதப்பட்ட பழைய பதக்கம் ஒன்று

Page 145
-------202س----
இன்றும் நல்லூர்க் கோயிலிலுள்ளதென்றும் தமக்குப் பிதிரார்ச் சிதமாகக் கிடைத்த இப் பொருளைப் பூதனாராச்சியார் என்ப வர் (பூதத்தம்பி என்ற தமிழ் மந்திரியின் மகள்) இக்கோயி லுக்குக் கொடுத்தார் எனவும், முத்துத்தம்பிப்பிள்ளை தமது யாழ்ப்பாணச் சரித்திரத்திற் கூறியுள்ளார்.34
ஒட்டுமொத்தமாக நோக்கும்போது நல்லூரிக் கந்தசுவாமி கோயில் அரச அரண்மனைக்குக் கிட்ட இருந்தது மட்டுமன்றிப் பெரிய கோயிலாகவும் இருந்ததைப் போத்துக்கேய ஆசிரியரான குவேரோஸ் போன்றவர்களின் குறிப்புகளிலிருந்து அறிய முடி கிறது.35 இதனை மையமாகக் கொண்டே நாற்திசைக் கோயில் களும் கட்டப்பட்டிருக்கலாம் போலத் தெரிகிறது. நாற்திசைக் கோயில்களில் ஒன்றாக முருகன் ஆலயம் குறிப்பிடப்படாமையே இவ்வாறு யூகிக்க வைக்கிறது. இவ்வாறு சிறப்புப் பெற்ற தல மாக இது எழுச்சி பெற்றதனாலேயே கி. பி. 14ஆம் நூற்றாண் டுக்குரிய அருணகிரிநாதரின் திருப்புகழில் நல்லூர் முருகன் *யாழ்ப்பாணாயன் பட்டினமேவிய பெருமாளே." எனப் போற்றப் பட்டுள்ளான் எனலாம்.38
கவாமி ஞானப்பிரகாசர் போத்துக்கேயர் 1560ஆம் ஆண்டில் நல்லூர் இராச்சியத்தின் மீது படை எடுத்த போது இது பெரிய கோயிலாக இருந்ததென்றும் இதிற் போத்துக்கேயர் தமது மத பூசையை நடத்தினர் என்றும் யாழ்ப்பாண வைபவ விமர்சனத்திற் குறிப்பிட்டுள்ளார் 87 அக்கால நல்லூர் மன்னனான செகராச சேகரனுக்கும் பேசத்துக்கேயருக்குமிடையே நடந்த போரில் தோல்வி கண்ட செகராசசேகரன் அரண்மனைக்குத் தீயிட்டுத் திரவியங்களுடன் கோப்பாய் சென்றதாகக் கூறப்படுகிறது அப் போது போத்துக்கேயர் அரண்மனையைக் கைப்பற்றியதோடு பெரிய ஆலயத்தில் தமது மத பூசையை மேற்கொண்டதாகக் கூறும் ஞானப்பிரகாசர் இது தற்கால நல்லூர் ஆலயம் இருந்த இடத்தில் நடைபெற்றிருக்கலாமென்று கூறுவது ஏற்புடைத் தாகவில்லை. போத்துக்கேயரின் ஆட்சி மறைவிற்குப் பின்னர் இங்கு மதப்பிரசாரம் செய்ய வந்த போல்டேயஸ் பாதிரியார் கூற்று இதனை உறுதிப்படுத்தவில்லை. இதனால் இத்தகைய மத பூசை பழைய நல்லூர் ஆலயத்திலேயே, அதாவது தற்காலப் புரட்டஸ்தாந்துத் தேவாலயம் அமைந்துள்ள இடத்திலே நடை பெற்றது எனக் கொள்ளலாம்,
போத்துக்கேயரால் அமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் டச்சுக்கலைக்காரர் காலத்திற் காணப்பட்டதைக் கூறும் இவர்
இது களிமண்ணினாற் கட்டப்பட்ட தென்றும் இத்த இடத்தில்

س-203-س
இதற்கு முன்னர் இந்துக்களின் (பகன்) கோயில் இருந்ததென்றும் கூறுகிறார்.38 (படம் 32) நல்லூர்க்கோயிலைப் போத்துக்கேயர் இடித்ததற்கான சான்றுகள் காணப்படுவதால் அவர்களே இக்கோ யிலை இடித்து இது காணப்பட்ட இடத்திலே தமது கிறிஸ்தவ தேவாலயத்தைக் கட்டினார்கள் எனலாம். யாழ்ப் (ாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயர், கோட்டைப் பகுதிக்குத் தமது தலைமையகத்தை மாற்றும் வரை 1619-1821 வரையிலான காலப் பகுதியில் நல்லூர்க் கோயிலைத் தமது இராணுவத் தலைமைப் பீடமாகவும் நிருவாக மையமாகவும் மாற்றியிருந்தனர்.39 நல்லூர் கோயில் போத்துக்கேயரால் இடிக்கப்பட்ட செய்தி குவேரோஸ் சுவாமிகளால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.40 யாழ்ப்பாண வைபவமாலையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.4
நல்லூரைப் போன்றே மாவிட்டபுரத்திலமைந்திருந்த முருகன் ஆலயமும் பிரசித்தி பெற்ற ஆலயமாக முதலாவது ஆரியச்சக்கர வர்த்தியின் போஷிப்பைப் பெற்ற ஆலயமாக விளங்கியது என் பதை யாழ்ப்பாண வைபவமாலை தரும் தகவல்கள் உறுதி செய் கின்றன எனலாம். இந்நூலில் ஆரியச்சக்கரவர்த்தி ஆனது மந் திரியாகிய புவனேகபாகுவிடம் இவ்விடம் சென்று ஆலய தரி சனம் மேற்கொண்டு விருந்துண்டான் எனக் குறிக்கப்பட்டுள்ளதை ஏற்கனவே கண்டோம். இதனால் முதலாம் ஆரியச்ச்க்கரவர்த்தி காலத்திலிருந்தே மாவிட்டபுரமும் நல்லூர் முருகன் ஆலயத்தைப் போன்று யாழ்ப்பாண அரசர்களின் போஷிப்பைப் பெற்றிருந் தமை தெரிகிறது. யாழ்ப்பாண வைபவமாலையிற் காணப்படும் மாருதப்புரவல்லி கதை+2 ஆரியச்சக்கரவர்த்தி காலத்திற்கு முன்பே இது பிரசித்தி பெற்ற முருக தலமாக வளர்ச்சி பெற்றதை எடுத் துக் கர்ட்டுவது போன்று நல்லூரிற் கிடைத்த சோழப் பேரரச னாகிய முதலாம் இராசேந்திரனின் கல்வெட்டும் இதன் பழமையை எடுத்துக் காட்டி நிற்கின்றது எனலாம். இச்சந்தர்ப்பத்திலே கைலாயமாலை43, வையாபாடல்44 ஆகிய நூல்களில் உக்கிரசிங் கனின் தலைநகராகிய கதிரைமலையில் (கந்தரோடை) அமைந் திருந்த முருகன் ஆலயம் பற்றிக் காணப்படும் குறிப்பும் அவதர்னிக் கத்தக்கது. இத்தகைய ஆலயம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் ஏன் குறிப்பிடப்படவில்லை என்பதும் புதிராகவே உள்ளது. இம் மூன்று நூல்களும் இவ்வாலயம் பற்றிக் கூறியுள்ளமை இதன் பிற பினை எடுத்துக் காட்டுகின்றது எனலாம். எனினும் தற்கா லக் கதிரைமலைச் சிவன் கோயிலுக்கும் இதற்குமிடையே உள்ள தொடர்பு ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.
இக்காலத்திற் சிறப்புப் பெற்ற முருக தலமாகச் செல்வச் சந்நி நியும் விளங்குகிறது எனலாம். எனினும் இது பற்றி யாழ்ப்பாண

Page 146
-204
வைபவமாலையிற்குறிப்பேதுங் காணப்படாமையும் ஆச்சரியமன்று. ஏனெனில் வேதாகம வழிபாட்டு மரபு வழி ஒழுகும் கோயில்களே இக்காலத்தில் மேன்மையுள்ள தலங்கள் என மதிக்கப்பட்டதால் இதன் வழி ஒழுகிய பல கோயில்களைக் குறித்த யாழ்ப்பாண வைபவமாலை செல்வச் சந்நிதி பற்றிக் குறிப்பிடாதது ஆச்சரியம் அன்று. காரணம் இத்தலம் வேதாகம வழிபாட்டு நெறிப்படி கிரி யைகள் மேற்கொள்ளப்படாத தலமாக அன்று தொடக்கS இன்றும் விளங்குவதேயாகும். வடபகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற முருக தலங்களிலொன்றாக இது விளங்குகிறது எனலாம். முரு கப் பெருமானின் சிறப்பான தலங்கள் பெரும்பாலும் குன்றுகள் மீதேதான் உள. ஆனாற் பாண்டி நாட்டிலுள்ள திருச்செந்தூர் என்ற தலம் மட்டுமே கடற்கரையில் உளது. இதனாற் செல்வச் சந்நிதி பாண்டி நாட்டுத் திருச்செந்தூரை நமது மனக் கண் முன்னே நிலை நிறுத்துகின்றது. அதே நேரத்தில் ஈழத்திற் கோயில் மரபுசளில் வேதாகம வழிபாட்டு நெறிமுறைக் கிரியைகள் மேலோங்கி நிற்கின்ற பின்னணியிற் பழந்தமிழரின் சங்க இலக் கியங்கள் கூறும் வேலன் வழிபாட்டு மரபு நெறியைப் பேணி நிற்கும் ஒரு தலமாக இன்று இது விளங்குவதும் இதற்குரிய மற்றோர் சிறப்பாகும். இத்தகைய பழைய வழிபாட்டு தெறிகள் இன்று செல்வாக்குப் பெறாவிட்டாலும் கூட இம்மரபு நெறி ஒழுகும் முருக தலங்களில் ஒன்றாகக் கதிச்சாமம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. கதிர்காமத்தைப் போல ஈழத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள புகழ் பெற்ற "திருப்படைக் கோயில்கள் பலவும் இவ் வழி ஒழுகி நிற்பனவேயாம்.45 அது மட்டுமன்றிச் செல்வச்சந்நிதி, ஈழத்தின் கிழக்குக்கரை முருகன் ஆலயங்கள், கதிர்காமம் ஆகிய வற்றிடையே காணப்படும் தொடர்பு, பூசை முறையில் மட்டுமல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. கதிர்காம யர்த்திரை செல்வச்சந் நிதியில் ஆரம்ட மாகிக் கிழக்குக் கரையிலுள்ள உகந்தை முருக னாலயம் போன்றனவற்றினூடாகக் கதிர்காமத்தை அடைவதும் இவற்றுக்கிடையே காணப்படும் பிணைப்பினை உறுதிப்படுத்து வதாய் அமைகிறது.
இச்சந்தர்ப்பத்திற் செல்வச்சந்நிதி ஆலயத்தின் சிறப்புப் பற்றிச் சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.46
"தமிழ்ச்சைவ மரபில் பெரும்பாலும் கோயில்களின் பெயர்கள் இடத்தின் பெயரையும் தலமூர்த்தியின் பெய ரையும் கொண்டிருக்கும் ஆனால் ஐங்கோ செல்வச்சந் நிதி என்று மாத்திரமே பெரிதும் வழங்கப்படுகிறது. “தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி என்னும் மர

-205
பும் இல்லையென்றே கூறவேண்டும். அதுபோலச் 'சந்நிதி முருகன்" என்றும் விதந்தோதப்படுவதில்லை. சந்நிதி யான் என்று குறிப்பிடப்படுவதுண்டு. "ஆற்றங்கரையான்" என்ற மரபுண்டு என்பதை இங்கு குறிப்பிடல் வேண் டும். ஊர்ப் பெயரையும் உறையும் தெய்வத்தின் பெய ரையும் குறிப்பிட வேண்டாத அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ள சந்நிதி" என்ற இப்பெயரின் கருத்தை அறி தல் அவசியம். "சந்நிதி" என்னும் சமஸ்கிருதச் சொல் சம் -- நி + தி என நிற்பது இதன் கருத்து. அண்மை யில் இருப்பது, அண்மைநிலை, முன் நிற்றல் என்பன வாகும். காலக்கிரமத்தில் தெய்வம், குரு, பெரியோர் முன்நிற்பதை "சந்நிதி "சந்நிதிதானம்" என்பன குறித் தன. எனவே சந்நிதி என்பது முருகன் முன் நிற்றலைக் குறிக்கின்றது. "செல்வச்சந்நிதியில் செல்வம் அடை மொழி முருகனையே செல்வமாகவும் அ ன் தருவன வற்றைச் செல்வமாகவும், அவனைச் செல்வத்தைப் பெறுவதற்கான வழியாகவும் கொள்ளும் அர்த்தங்களும் மனநிலை ஞம் அதிலே தொனிக்கின்றன. கோயில் களிற் *சந்நிதி"கள் உண்டு. இங்கு "சந்நிதியே" கோயிலாக வுள்ளது. செல்வச்சந்நிதி ஒர் அசாதாரணப் பெயர். செல்வச் சந்நிதி ஒர் அசாதாரணமான கோயில்."
இக்கோயிலிலுள்ள சிறப்பம்சம் இங்குள்ள பூசை முறையா (கம். கதிர்காமப் பூசை முறையையே இது ஒத்துக் காணப்படு கிறது. வாயைச் சேலைத்துண்டால் கட்டி மந்திரங்களை உச்சரியாது வணங்குவதே இம்மரபாகும். கதிர்க: மத் திருவிழா புெக்க முதல் நாள் முருகன் இங்கிருந்து கதிர்காமம் செல்வதும், அங்கிருந்து தீர்த்தத்தை முடித்துக்கொண்டு இங்கு வருவதையும் 6:டுத்துக் காட்டும் கிரிகைகள் நம்பிக்கைகள் ஆகியன இரு தலங் சளுக்குமிடையே கிளைவிட்டோடும் உறவுக்குச் சிறந்த சான் 1)ாகும். இக்கோயில் வழிபாட்டின் மற்றைய சிறப்பம்சமான காவடி எடுத்தல் தனித்தன்மை வாய்ந்தது. யாழ்ப்பாணப் பகு தியில் வேறு எவ்விடத்திலும் காணாத அளவுக்குப் பெண்களும் ஆண்களும் முருகன் மீது நேர்த்திக்கடன் வைத்துக் காவடி எடுத் தல் நமது பண்டைய சங்ககால வழிபாட்டின் எச்ச சொச்சங் களை எடுத்துக் காட்டுகிறது என்றால் மிகையாகாது. இதே போன்ற இக்கோயிலுக்குரிய இன்னுமொரு சிறப்பான அம்சம், இங்கு நடைபெறும் அன்னதானமேயாகும். அடுத்து முக்கியம் பெறுவது இங்குள்ள மடங்களாகும். தீராத நோயைத் தீர்க்கும் பொருட்டு இம்மடங்களில் மக்கள் வந்து தங்குவது வழக்கம் "

Page 147
-206
இத்தகைய சிறப்பான அம்சம் இம்மாவட்டத்தின் எப்பகுதி யிலும் இல்லை எனலாம். இம்மடங்கள் பல யோகிகள் தங்கு மிடமாகவும் உள. இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இவ்யோகிகள்/சித்தர்கள் ஆக்கோயிலில் நடைபெறும் அன்றாடப் பூசைகளிற் கலப்பதில்லை. இவ்வாறு இப்பூசைகளிற் கலக்காது செல்வச்சந்நிதியின் சூழலையே பற்றி நிற் கும் இவ்யோகிகள் பற்றியும் துச்சூழல் பற்றியும் மேலும் ஆராய்வது பலனுடைத் தாகும். யாழ்ப்பாணத்திலுள்ள சித்தர்கள் மரபின் தோற்ற வளர்ச்சியில் முருகன் ஆலயங்களுக்குப் பங்குண்டு. நல்லூரை விடச் செல்வச்சந்நிதி இதில் ஒரு படி முன்னே நிற்கிறது போலத் தெரிகிறது.
யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங் களில் ஒன்றாகிய "கந்தவனக்கடவை முருகன் ஆலயமும் இக் காலத்திற் சிறப்புப் பெற்றிருந்ததை எடுத்துக் காட்டுவதாக, அருணகிரிநாதர் பாடிய பாடலில் வரும் "கந்தசுவாமி கானகம்’ என்ற அடி அமைகின்றது எனக் கொள்ளப்படுகிறது 47 நல்லூர், மாவிட்டபுரம், கதிரைமலை போன்ற இடங்களிலமைந்திருந்த முருகன் ஆலயங்களின் பின்னணியில் இப்பாடலை நோக்கும் போது கந்தவனக் கடவையிலும் இக்காலத்திற் செல்வாக்குள்ள முருகன் ஆலயம் ஒன்று காணப்பட்டதையே இது எடுத்துக் காட்டுகிறது எனலாம்.
கதிர்காமம் இக்காலத்தில் இந்துக்களின் புகழ்பூத்த வழி பாட்டுத் தலமாக விளங்கியதை அருணகிரிநாதர் இத்தலத்தின் மீது பாடிய இருபத்தைந்து பாடல்கள் எடுத்துக் காட்டுவதோடு முருகனது ஆறுபடை வீடுகளோடு இதுவும் அருணகிரிநாதரின் பாடல்களில் இடம் பெற்றிருப்பது ஈண்டு நினைவு கூரற் பாலது.48
யாழ்ப்பாண அரசு காலத் தமிழ் மக்கள் இத்தலத்தின் மீது ஈடுபாடு கொண்டு பக்தி சிரத்தையுடன் ஒழுகியதை இக்காலத் தமிழ் நூல்களாகிய கதிரைமலைப்பள்ளு,49 பரராசசேகரம்50 ஆகிய நூல்களிற் காணப்படும் குறிப்புகள் எடுத்துக்காட்டுகின் றன என்று கூறினால் மிகையாகாது இக்காலத்திற் புகழ்பூத்த முருக தலமாக இது விளங்கியதை சிங்கள சந்தேஸய நூல்கள், 51 ஜினாகால மாலினி52 என்ற சீயதேசத்து நூல் ஆகியனவற்றிற் காணப்படும் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன 6 TarafTub,

-207
சிவவழிபாட்டுத் தலங்கள்
ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் மேம்பட்டிருந்த சிவவழி பாட்டினைப் பற்றி இவர்களால் நிறுவப்பட்ட கைலாசநாதர் ஆலயம் பற்றிய குறிப்பு எடுத்துக் காட்டுகிறது . இவ்வாலயத் தின் சிறப்பினைக் கூறும் தனியான நூல் கைலாயமாலை யாகும். எனினும் இது பற்றிய குறிப்புகள் யாழ்ப்பாண வைப வமாலையிலும் உண்டு. இக் குறிப்புகள் இக்காலத்தில் எவ்வாறு ஆலயங்கள் உருவாக்கப்பட்டன, அவற்றின் தோற்ற அமைப்பு அங்கங்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை எடுத்துக் காட்டும் அதே நேரத்தில் ஆலயத்தில் மூல மூர்த்தியின் பிரதிஷ்டா வைபவ மாகிய கும்பாபிஷேகம் தொட்டுக் கிரிகைகள் எவ்வாறு அமைந் திருந்தன என்பதையும் எடுத்துக் காட்டுவதோடு இந்நிகழ்ச்சிகளின் போது ஆலயத் தொண்டில் ஈடுபட்ட ஆடல், பாடல் இசை வல்லுனர்கள் பற்றியும் எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய வர்ணனைகள் இன்று நாம் காணும் ஆலய நிகழ்ச்சிகளை நம் மனக் கண்முன்னே படம் பிடித்துக் காட்டுவது ஈண்டு நினைவு கூரற்பாலது.
முதலில் யாழ்ப்பாண வைபவமாலையில் இவ்வாலயம் பற்றிக் காணப்படும் குறிப்பினை அவதானிப்போம்.8
"ஒரு நாளிரவிற் சப்பிர மஞ்சத்திலே அரசன் சாய்ந்து நித்திரை செய்திருக்கையில் பரமேசுர மூர்த்தி பாருவதி தேவியுடன் கனவிலே தரிசனையாகி யுத்தரவு கொடுத்த பிரகாரமாகவே மகா சந்தோஷத்துடனே கைலை விநா யகர் கோவி லயலிலே கயிலாத நாதர் கோவிலையுங் கைலைநாயகியம்மன் கோவிலையும் எவற்றினும் விசேஷித்தவைகளாகக் கட்டுவித்து மூன்று சபைகள், பரிவாரதேவர்கள் இருப்பிடம், உக்கிராணசாலை, யாக சாலை, அக்கிரகாரம், தேரோடும் வீதி, மடம், அன்ன சத்திரம் இவைகளையெல்லாம் இயற்றுவித்து பிரமா ணத்துக் கிணங்கச் சுற்றுமதிலும், கோபுரமுமெழுப் பிக் கேதாரத்திலே மன்மதன் பூசித்து வந்த ஆதார லிங்கத்தையும் அழைப்பித்து பிரதிஷ்டை செய்வித்துப் பாண்டியராசன் கீழ் முதற் பாளையத் தலைவனாயிருந்து இராமநாதபுரத்தை யாண்ட சேதுபதின் தப் பாசுரமனுப்பி யழைப்பித்து, கெங்காதரய்பர் என்னுங் காசியிற் பிராமண னையே பூசனை நடத்தும்படி வைத்து அல்லும் பகலுங் கைலாயநாதர் திருவடிகளைத் தியாவசித்துக் கொண்டு ஜர்க்கலையில் நெடுங்காலமிருந்து அரசாண்ட
6 , v sv sw

Page 148
-208
யாழ்ப்பாண வைபவ மாலையிலே மேற்கண்டவாறு கூறப் பட்டுள்ள செய்தி ஆரியச் சக்கரவர்த்திகளுள் முதல் மன்னன் காலத்திலேயே இக்கோயில் கட்டப்பட்டதை எடுத்துக் காட்டு கிறது. இத்தகைய செய்தியையே இக்கோயிலின் வரலாற் றைக் கூறும் கைலாயமாலையிலும் காணலாம். கைலாய நாதர் கனவில் மன்னனிடத்திலே தோன்றியதன் பேரிலே இக் கோயில் கட்டப்பட்ட நிகழ்ச்சி கைலாயமாலையிற் கூறப்படுகின் றது 54 நல்லூரிலமைந்த கைலாயநாதர் கோயில் மூன்றாவது கைலாயமாக விளங்கியதையும் கைலாயமாலை பின்வருமாறு எடுத்துரைக்கிறது.55
... நந்தமிர்தச் சித்திர கைலாச மொடு தென் கயிலை யிவ்விரண்டு நித்தமுள மோர்ந்துறையு நேயபக்தி - அத்துடனே முக்கைலையாக நல்லை மூதூரினொன்றமைந்த தக் கைலை மீதி னமர்ந்துறைய ..
கைலாயமாலைக் குறிப்பை நோக்கும்போது மூன்று கைலா யங்கள் இருந்தமை தெரிகிறது. இதில் முதலாவது இமய மலைக் கைலாயமாகும். இரண்டாவது திருகோணமலையிலிருந்த தென் கைலாயமாகிய கோணேஸ்வரமாகும். மூன்றாவது நல்லூரில் உள்ள கைலாயமாகும். ஆனால் யாழ்ப்பாண அரசர் காலத்திற் குரிய தட்சிண கைலாசபுராணத்திற் கூறப்பட்ட மூன்று கைலா யங்களும் வித்தியாசமானவையாகும். இவை அமைந்திருந்த இடங்களாகத் தமிழகத்திலுள்ள காளத்தி, திருச்சி, ஈழநாட்டிலே உள்ள திருக்கோணேஸ்வரம் ஆகியன குறிப்பிடப்படுகின்றன. 58 இம்மூன்று கைலாசங்கள் பற்றி வேலுப்பிள்ளை57 பின்வருமாறு கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.
"யாழ்ப்பாணத் தமிழரசு அமைந்தபோது, திருகோண மலைக் கயிலாசநாதரையும் நந்திக் கொடியையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களென்று கருதுவதற்கு இடம் இருக் கிறது. யாழ்ப்பாணத்துக் கயிலாசநாதர் கோயிலைப் பாட எழுந்த கயிலாயமாலை மூலக்கயிலாசம், திரு கோணமலைக் கயிலாசம், நல்லூர்க்கயிலாசம் ஆகிய மூன் றையுமே சிறப்பித்துக் கூறுகிறது. எனவே, யாழ்ப்பாண அரசர் காலத்திலே சிறப்பாகப் போற்றப்பட்ட மூன்று கயிலாசங்களிலே இரண்டு இலங்கையிலே காணப்படுகின் றன அக்காலத்திலே எழுந்த சமய நூல்களிலே கயிலாய மாலை, கதிரைமலைப்பள்ளு ஆகியவை தவிர ஏனையவை யாவும் திருகோணமலைப் பகுதிக் கோயில்களைப் பற்றி

--209-س-
யனவாக அமைந்திருப்பதற்கு இதுவே சரியான விளக்கமாகத் தோன்றுகிறது. நந்திக் கொடியோடும் நந்தி இலச்சினையோடும் சயிலாசநாதர் யாழ்ப் ராணத் திலே அரேசாச்சியிருக்கிறார். அவரைச் சார்ந்து பூரீ காரி யஞ் செய்தவர்களே ஆரியச் சக்கரவர்த்தி 4ள். அவர்கள்
காசியோடும் தொடர்பு வைத்திருந் ,ார்கள் காசியி லிருந்து இராமேஸ்வரத்தில் குடிபேறிய பாசுபதரின் பரம் பரையே அவர்கள் என்று செகராச சேரமாலை கூறும் பிரபலமான கோவில் உள்ள ஊரே நல்லூரி என்று பெயரிடப்படல் தமிழ் மரபு. சயிலாசநாதர் கோயிால், நல்லூருக்கு அப்பெயர் ஏற்பட்டிருக்குமா என்பது ஆரா யத்தக்கது "
மேற்கூறிய கருத்து அன்று ஈழத்தில் வளர்ச்சி பெற்றிருந்த கயிலாச பாரம்பரியம் பற்றிச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது எனலாம். இத்தகைய பெருமை வாய்ந்த கயிலாச நாதர் ஆலயத் தின் தோற்றத்தைக் கைலாயபாலை, யாழ்ப்பாண வைபவமாலை ஆகியன முதலாவது ஆரியச் சக்கரவர்த்தி காலத்தோடு எடுத் துக் காட்டினாலும் கூட முதலியார் இராசநாயகம் இக்கோயில் கி. பி. 1400 - 1519 வரையிலான காலப் பகுதியிலேயே கட்டப் பட்டது என்று கூறுவது ஏற்புடைய கருத்தாக அமையவில்லை. 58
நல்லூர் ஆரியச் சக்கரவர்த்திகளில் மூவர் திருகோணமலைக் கைலாசநாதனைத் தரிசித்துத் திருப்பணி பண்ணி நிவேதனப் பொருட்கள் அளித்தமை பற்றிக் கோணேசர் கல்வெட்டு, திருக் கோணாசல புராணம் ஆகியன குறிக்கின்றன. கோணேசர் கல்வெட்டு "ஆரிய குலராசன், பரராசசேகரன், செகராசசேகரன்' என்ற மூன்று ஆரியச் சக்கரவர்த்திகளும் கோணேசர் ஆலயத் திற்குச் செய்த திருப்பணிகள் பற்றிக் கூறுகின்றன.
இவர்களின் இயற்பெயர் கூறப்படாததால் இவர்கள் யார் என இனங்கண்டு கொண்டு இவர்களின் காலத்தினை நிர்ணயிப் பது சிரமமாகவே உள்ளது. இதில் வரும் ஆரியகுலராசன் ஆரியச் சக்கரவர்த்திகளில் முதல்வனாக இருத்தல் வேண்டுமென்றும் யாழ்ப்பாணத்தை ஆண்ட முதல் ஆரியச்சக்கரவர்த்தியாக இருத்தல் வேண்டும் என்றும், பத்மநாதன் கருதுவது ஏற்பு டைததாக அமைந்துள்ளது. 89 இவன் காலத்திலே திருகோண மலை கோணேசர் ஆலயம் மிகச் சிறப்பான ஆலயமாகக் குளக் கோட்டு மகாராசா செய்த திருப் பணிகளால் மேன்மை பெற்றி முந்ததால் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தி தனது ஆட்சியின்

Page 149
--210--
ஆரம்பத்தில் நல்லூரிற் சிவனுக்குரிய கயிலாசமாகிய கைலாச நாதர் கோயிலைக கட்டிய ஆரியச்சக்கரவர்த்தி இன்னுமொரு கைலாசமாகிய திருகோணமலையிலுள்ள ஆலயத்திற் ம் திருப் பணிகளைச் செய்திருக்கலாம். இத்தகைய கருத்தினைக் கோணே சர் கல்வெட்டிற் காணப்படும் திரிகைலைநாதர் பெருமைசேட்டு வந்து" என்ற சொற்றொடர் உறுதி செய்கிறது. பரராச சேகரன், செகராசசேகரன் ஆகிய மன்னர்கள் 15ஆம் 16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் எனப் பத்மநாதன் ஊகிப் பது மிகப் பொருத்த ரானதாகத் தெரிகிறது. மேற்படி பெயர்கள் பட்டப் பெயர்களாக இருந்தாலும்கூட, 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கனகசூரிய சிங்கையாரியன் இக்கோயிலோடு கொண்டி ருந்த தொடர்பினை யாழ்ப்பாண வைபவமாலை எடுத்துக் காட்டுவதை 'நாக்கும்போது இம் மன்னர்கள் ஒரு சமயம் கணக சூரிய சிங்கை ஆரியனின் மக்களாகிய பரராசசேகரன், செகராச சேகரன் ஆகியோராகவும் இருக்கலாம்.
கனகசூரிய சிங்கையாரியன் இத் தலத்தோடு கொண்டிருந்த தொடர்பை யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு உரைச்
கிறது.60 --
கனகசூரிய சிங்கையாரியன் தன்பிள்ளைகளாகிய பரராச சேகரனையும் செகராச சேகரனையுந் திருக்கோவலூரில் இராச குடும்பத்தவர் பாலிற் கல்வி கற்க வைத்து யாத் திரை பண்ணும்படி தன் மனைவியுடனே காசி பரியந் தம் திருத்தலங்கள்தோறும் சுற்றித்திரிந்து திரும்பிக் கோகர்ணச் சிவாலயத்தில் வந்திறங்கி அவ்விடத்திலிருந்து சிலவருட காலஞ் சிவராத்திரி விரதம் அனுட்டித்தான்
இனிக் கோணேசர் கல்வெட்டு ஆரியச் சக்கரவர்த்திகள் மேற்கொண்ட திருப்பணிகள் -பற்றிக் கூறுவதை நோக்குவோம், 61
*பரராசசேகரன் செகராசசேகரனென்றிருவர் திரிகை வைக்கு வடமேல்பாலில் இராச்சியம் பண்ணியிருப் பார்கள். அவர்கள் திரிகோணமலைப்பெருமை கேட்டு வந்து பாவநாசத் தீர்த்தத்திலும்படிந்து இரவிகுலதிலக ராகிய தேவராசகுளக்கோட்டுமகாராசனுக்கு இத்தனை ஐசுவரியன்ளைக்கொடுத்து தடுத்தடிமைக் கொண்ட கோணநாயகரே யென்று விழுந்தழுது gLoaisrrgth பண்ணி அறுபத்துநாலு:சிவாலயமுந் தரிசனை பண்ணி, ஏழு பட்டு முத்து மாலையும், வைரரத்தினம்

-211
பதித்த தங்கப் பதக்கமுஞ் சாத்துவித்து முத்துக்குடை பவளக்குடை கொடுத்து, வெகுதிரவியமும் அறைமுத லிருப்பாகவைத்து குருகுலக்கணக்கிலும் பதிப்பித்து நாட்டில் நூல்வாங்கிக் கோயிலுக்கொப்புவிக்கிறதற்கு ஒரு இறை கடமையில்லாத திரியாயூரும், அதற்கு ஏழு குளமும் ஏழுவெளியுங்கொடுத்து எந்தெந்தக் காலத் துக்குந் திரிக்கு நூல்வாங்கிக் கொடுக்கச் சொல்லித் திட்டமும்பண்ணி ஆதியாகிய கோணநாயகர் பாதார விந்தந் துதிசெய்து விடையும்பெற்றுத் தங்கள் நகரஞ்
சென்று வெகுநாளிரர்ச்சிய பரிபாலனம் பண்ணிச் சிவபதஞ் சேர்வார்கள்.
இந்நூலில் தொடர்ந்து கூறுகையில்,
"ஆரியகுலராசன், பரராசசேகரன், செகராசசேகரனwன்ட
நாட்டைஇராச்சியம் பண்ணிவருகிற நாளையிலே திரி கைலைநாதர் பெருமை கேட்டு வந்து, பாவநாசச் சுனை
யிற்றீர்த்தமும் படிந்து ஆலயமடங்கலும் பிரதகதிணஞ் செய்து திருமுன்னேவந்து அலரிகுலதிலதராகிய குளக் கோட்டுமஹாராசனைத் தடுத்தடிமை கொண்ட பூரீகமலபாத மிதுவோவென்றுவிழுந்து நமஸ்காரம் பண்ணி எழுந்து கனகவாபரணமும், நவ ரத்ன மாலையுஞ் சாத்தித் தங்கக்குடை, பொன்குடையுங் கொடுத்து, வெகுதிரவியமுமறைமுதலிருப்பதாக வைத்துக் குருகலக் கணக்கிலும்பதிப்பித்து, கோணநாயகரிடம் விடையும் பெற்றுத் தன்நகரத்துக்குப் போவான்."
மேற்கூறிய செய்திகளை உறுதிப்படுத்துவனவாகற் திருக்கோ ணாசலபுராணம், தகழி ண கைலாச புராணம் ஆகிய நூல் 3 விற் பர ராசசேகரன், ஈெ உராச சேகரன் ஆகியோர் இவ் வாலயத்துக்குச் செய்த திருப்பணிகள் பற்றிக் காணப்படும் குறி புகள் அமைந் துள்ளன. பரராசசேகரனின் திருப்பணி பற்றித் திருக்கோணாசல புராணம்62 பின்வருமாறு உரைக்கிறது.
அன்ன நாளிடை யாழிகுழகன் புவிமுழுதுந்
தன்னதாகவே தனிக்குடை நீழலிற் றாங்கு
மன்னனாம் பரராச சேகரனென்னும் வள்ளல்
பொன்னுலாந்திரி கோணமால் வரை தனிற் பொருந்தி
. . . (கரு)

Page 150
س-212-سر
சிந்தை யன்பினோ டரனுமை தனைத் தரிசித்தரிங் கந்த மின்னிதி பூண்மணி நிபந்தங்க ளமைத்து முந்து சீர் விழாத் தேர்த் திருநrண் முறை போற்றிச் சொத்த மாநகர் சார்ந்தன ன் தொல் குலத்தரசன்
([፭ ቃ'ፐ)
ஆரியச் சக்கரவர்த்திகளால் மட்டுமன்றி இப்பகுதியில் அர சாட்சி செய்த வன்னியராலும் திருக்கோணேஸ்வரம் போஷிக் கப்பட்டதைக் கி.பி. 14 அம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்று எடுத்தியம்புகிறது.83 இக்காலத்தில் ஈழத்தில் எழுச்சி பெற்ற நூல்களாகிய கதிரைமலைப்பள்ளு,64 கண்ணகி வழக்குரைகாதை65 போன்ற நூல்களில் மட்டுமன்றித் தமிழகத் தில் எழுந்த திருப்பு ஈழ் போன்ற நூல்களிலு ,66 போத்துக் கேய ஆசிரியராகிய குவேறோஸின் நூலிலும் புகழப்பட்டுள்ளமை ஈண்டு அவதானிக்கத்தக்கது.87
வன்னி மாவட்டத்தில் உள்ள கோயில்களிலே திருக்கேதீஸ் வரம் பிரதானமானது. இக்கோயிலும் போத்துக்கேயரால் இடிக் சப்பட்டது எனினும் யாழ்ப் பாண மன்னர் திருக்கோணேஸ் வர ஆலயத்துடன் தொடர்பு கொண்டது பற்றிய விரிவான சான்றுகள் யாழ்ப்பாண வைபவமாலையிலோ பிற நூல் களிலேர் காணப்படாமை புதிராகவே இருக்கிறது. எனினும் தகழிணகைலாய புராணம் இத்தலம் பற்றிக் குறிப்பிடுவது அவத னிக்கத்தக்கது.68 இந்நூல் "திருக்கேதீஸ்வரத்திற் சிவன் மகாதேவ ராயும் சுயம்புவாயும். நித்திபராயும், மங்கள காரா պւb, பிரசன்னராயும் இருக்கின்றார். பாலாவிக் கரையில் அந்தப் பகவான் கேதீசுவர மகாலிங்கத்தில் எல்லாவுலகங்களுக் கும் நன்மை செய்யும் பொருட்டு அடியார் விரும் பியவைகளைக் கொடுப்பவராய், எழுந்தருளி இருக்கிறார்." என உரைக்கிறது. இக்காலத்தில் மாதோட்டத்துறைமுகம் தனது முக்கியத்துவத்தை இழந்த மையும் ஒரு கரணமாக இரு கலாம். இந்தியாவோடு, குறிப்பாகத் தமிழகததோடு கொண்ட தொடர்புகளிலே திருகோணமலை முக்கியம் பெற்றிருக்கலாம் என்பதைக் கண்க சூரிய சிங்கையர்ரியன் தமிழகத்தில் இருந்து இங்கே வந்திறங்கிய தாக யாழ்ப்பாண வைபவமாலையிற் காணப்படும் செய்தி உறுதிப்படுத்துகிறது. ஒரு சமயம் திருகோணமலையிற் காணப் பட்ட சைவ இலக்கிய பாரம்பரியத்தினைப் போன்ற பாரம் பரியம் இங்கு காணப்படாமை பால் இவ்வாறு இக்கோயில் பற்றிய விரிவான சான்றுகள் எமக்குக் கிடைக்கா மலும் இருக் கலாம். பொதுவாகவே, தமிழ்ப் பகுதிகளில் இக்காலத்திலே

-213
திருகோணமலையே மிகக் காத்திரமான சைவ - தமிழ் இலக்கிய பாரம்பரியம் படைத்த பகுதியாக விளங்கியதென்பதை மறுப்பதற் கில்லை. இக்காலத்தில் இத்தலம் செல்வாக்கிழந்த நிலையிற் காணப்பட்டிருக்கலாம் போலத் தெரிகிறது. கோகில சந்தேஸ்ய இப் பகுதியிலுள்ள மர்தோட்ட நகரை மாவட்டுபட்டின" எனக் குறிக்கும் அதே நேரத்தில் அங்கிருந்த ஆலயத்தின் சிறப்புப் பற்றிக் குறிப்பிடாதமை அவதானிக்கத் தக்கது. நம் நாட் டின் எதிர்க் கரையிலுள்ள சிவ வழிபாட்டு தலமாகிய இராமேஸ்வரத்தினைப் போஷித்த ஆரியச் சக்கரவர்த் திகள் ஏன் இத் தலத்தினைப் போஷிக்கவில்லை என்பது புதிராகவே இருக் கிறது மன்னாரில் இடம் பெற்ற முத்துக்குளிப்பு வாணி பத் தினைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆரியச் சக்கர வர்த்திகள் இதனை நிச்சயம் போஷிக் திருப்பார்கள். ஆனால் இவர்கள் அளித்த கொடைகள் பற்றிய விபரங்கள் நமக் குக் கிடைக்கவில்லை என்று கூறுவதே பொருத்தமாகத் தெரிகிறது.
எனினும் கி.பி 13 ஆம் நூற்றாண்டிற் பாண்டிய மன்ன ரது போஷிப்பையும் பெற்றதாகக் கூறப்படுகிறது. முதலாவது சுந்தர பாண்டியன் பிந்திய காலப் பாண்டியர் பாணியில் இக் கோயிலைக் கட்டியதை இவனின் சிதம்பரக் கல்வெட்டும் இங் குள்ள அழிபாடு சளும். எடுத்துக் காட்டுவதாகவும் கருதப்படுகி றது 69 பாண்டியரின் பின்னர் இவ்விடம் ஆரியச் சக்கரவர்த் திகள் ஆட்சியில் வந்தபோது அவர்களின் பே ஷி பபையும் பெற் றது எனலாம். விஸ்வநாத சாஸ்திரி >ளின் சம்பவக் குறிப்பில் கி பி. 1540 ஆம் ஆண்டிலே திருகே யில் கடலின் வெள்ளப் பெருக்குக்கு உட்பட்டு இருந்தது எனவும் கூறப்படுகிறது 70 இதன் விளைவாகத் திருக்கோயிற் கட்டிடங்கள் சி ைசக் ப்பட்டாலும் கி.பி. 1589 ஆம் ஆண்டு வரை பூசைகள் நடைபெற்றதாகவும் மேற்கூறிய சம்பவக் குறிப்பிற் கூறப்படுகிறது. போத்துக்கேய ஆவணங்களில்71 இங்குள்ள இந்துக் குருமாரே 1541 இல் இங்கு போத்துக்கேய மதகுருமாரால் மேற்கொள்ளப்பட்ட மதமாற்றம் பற்றியும் அதன் தாக்கம் பற்றியும் சங்கிலி மன்னனுக்கு ஊர்வ லமாகச் சென்று முறையிட்டதாகக் கூறப்படுவதால் இக் காலத் திலும் இத்தலம் செல்வாக்குள்ள குருமாரைக் கொண்ட தல மாக விளங்கியமை புலனாகின்றது. இவர்களின் முறைப்பாட்டுக் கமையவே சங்கிலி மன்னன் மன்னாரில் மதம் மாறியோாைக் கொலை செய்தான் போலத் தெரிகிறது. மன்னார் 1561 இல் போத்துக்கேயராற் கைப்பற்றப்பட்டதை நோக்கும் போதும் யாழ்ப்பாணம் 1591 இல் இவர்களாற் கைப் பற்றப்பட்டதைக்
எகுத்திற் கொள்ளும் போதும் கி.பி. 1561 -1591 ஆம் ஆண்டு

Page 151
2 Aum
கட்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இக்கோயில் போத் துக்கேயரால் அழிக்கப்பட்டு மன்னார்க் கோட்டை கட்டப்பட் டது எனலாம். இதனால் விஸ்வநாத சாஸ்திரிகளின் சம்பவக் குறிப்பின் பிரகாரம் கி பி. 1589 வரை இக்கோயிலிற் பூசைகள் நடைபெற்றன என்றும் இக்காலத்திலேயே இதுவும் அழிக்கப் பட்டதென்றும் ஊகிக்க இடமுண்டு. r s
போத்துக்கேயர் கோட்டையை மட்டுமன்றி இங்கே தமது தேவாலயத்தையும் இக்கோயிலை அழித்தபோது கிடைத்த பொருட்களைப் பயன்படுத்திக் கட்டிக் கொண்டனர். இத்தேவா லயத்திற்குரிய மணியைச் செய்வதற்குரிய உலோகத்தை இவர்கள் இடைச் சிறுவனாற் காட்டப்பட்ட ஓரிடத்திற் புதைத்து வைக் கப்பட்டிருந்த பல்வேறு பரிமாணங்களிலுள்ள இருபது விக்கிர கங்களை உருக்கிச் செய்ததாகவும் போத்துக்கேய வரலாற்றா சிரியராகிய குவேரோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.? திருக் கோணேஸ்வரம் போத்துக்கேயரால் அழிக்கப்படப் போகின்றது என்பதை உணர்ந்த அத்தலத்தின் குருமார் பிரதான விக்கிர க்ங்களைப் பத்திரமான இடத்திற் புதைத்து வைத்திருந்தது போன்று திருக்கேதீஸ்வரத்திலும் செய்யப்பட்டது எனலாம்.
அடங்காப்பற்றின் சிறப்பான தலங்களில் உருத்திரபுரச்சிவன் கோயில், செட்டிக்குளம் சந்திரசேக்ரர், ஒட்டுசுட்டான் தான் தோன்றீஸ்வரர், வவுனிக்குளச் சிவாலயம் ஆகியன முக்கியம் பெறுகின்றன.
உருத்திரபுரச் சிவஸ்தலத்தின் அழிபாடுகள் சேரி வில்லியம் ருவைனம் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் கி.பி. 1882 இல் கண்டு பிடிக்கப்பட்டன. இத்தலத்தை அண்டி ஒரு குளமும் உண்டு. இத்தலத்திற்குரியதான லிங்கத்தின் அமைப்பு சதுரமாகக் காணப்படுவதால் இது சோழர் காலத் திற்கோ அல்லது அதற்கு முந்திய காலத்திற்கோ உரியதாக இருக்கலாம் என நவரத்தினம78 யூகிப்பது ஏற்புடைத்தாக அமைந்துள்ளது. அடங்காப்பற்றில் வன்னியர் ஆட்சியில் அத்தலம் அவர்களின் போஷிப்பையும் பெற்றது எனலாம். செட்டிக்குளத்தில் வீர நாராயணனால் அமைக்கப்பட்ட சந்திரசேகரன் ஆலயம் பற்றி வையாபாடவிற் குறிப்பிடப்பட்டுள்ளது.74 V−
ஒட்டுசுட்டான் சிவஸ்தலத்திலுள்ள லிங்கம் மட்டுமன்றி வவுனிக்குளத்தில் உள்ள லிங்கமும் இத்தலங்கள் பழைம்ை வாய்த்தன என்பதை எடுத்துக் காட்டும் அதே நேரத்தில் வன்னி

-215
நாட்டுத் தலைவர்களின் போஷிப்பையும் பெற்றன என்பதை பும் எடுத்துக் காட்டி நிற்கின்றன. துரதிஷ்டவசமாக இவை பற்றிய தகவல்கள் வையா பாடலில் இல்லை. எனினும் தக்ஷன கைலாச புராணத்திற் காணப்படும் "சுயம்பு நாதப்படலம்" என்ற அத்தியாயம் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் பற்றியதாகும் எனக் கொள்ளலாம்.75
யாழ்ப்பாண மாவட்டத்திலும் ஆரியச் சக்கரவர்த்திகள் அரசாண்ட நல்லூரில் மட்டுமன்றிப் பிற இடங்களிலும் பிரசித்தி பெற்ற சிவாலயங்கள் காணப்பட்டமைக்கான சான்றுகள் உள. இவற்றுட் சாவகச்சேரியிலுள்ள வாரிவனேஸ்வரம்" குறிப்பிடத் தக்கது. இது பற்றித் தகSண கைலாச புராணத்திற் குறிப்புண்டு 78 இந்நூல் "வாரிவனலிங்க மகிமை உரைத்த படலம்" என்ற அத்தி யாயத்திற் சிவபெருமான் சுயம்புலிங்கமாக விருபாங்கன் என்ற வைசியனுக்குக் காட்சி கொடுத்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளது. பின்னர் இதே இடத்தில் அமைக்கப்பட்ட ஆலயந்தான் வாரிவ னேஸ்வர ஆலயம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. போத்துக் கேயரால் அழிக்கப்பட்ட சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
தகழிணகைலாச புராணத்திற் புத்தூரில் நவக்கிரியிலுள்ள சிவன் கோயில் பற்றி நவசைல படலம்’ என்ற அத்தியாயத்திற் குறிப்புக் காணப்படுகிறது.? அதேபோன்று போத்துக்கேய ஆவ ணங்களிலும் அச்சுவேலிக்குத் தெற்கே புத்தூரிலுள்ள கி பி. 16ஆம் நூற்றாண்டுக்குரிய இரண்டு சைவ ஆலயங்கள் பற்றிய குறிப்புண்டு.
இவற்றுள் முதலாவது ஆலயம் சிறியது எனவும் இதற்குத் தெற்கே அமைந்திருந்தது பெரியது எனவும் குறிப்பிடப்பட்டுள் ளது. யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனு டன் நடைபெற்ற போரிற் போத்துக்கேயப் படைகள் இவ் விரண்டு ஆலயங்களையும் தமது பாதுகாப்பு அரணாகப் பயன் படுத்தின எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. போத்துக்கேய ஆவி ணங்கள் குறிக்கும் இரண்டு கோயில்களிற் பெரியது தற்போதைய புத்தூர்ச்சிவன் கோயில் என்றும், சிறியது வைரவ கோயிலென்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சிவன் கோயில் கூடம் ஆரம்பத்தில் அம்மன் ஆலயமாகவே காணப்பட்டுப் பின்னரே, சிவன் சோயிலாக மாற்றப்பட்டது எனவும் அபிப்பிராயம் தெரி விக்கப்பட்டுள்ளது.78
யாழ்ப்பாணத்திலுள்ள பழைய கோயிகளில் ஒன்றே நாசர் க்ோயிலாகும். இன்று அங்கு நடை.ெஅம் "கப்பற்றிரு. விழா போக்துக்கேயரால் இது அழிக்டிப்பட்- நிழ்ச்சியை

Page 152
&2lس۔
உருவகப்படுத்துவதாய் அமைந்துள்ளது.79 இத்தலம் நாகவழி பாடு - ஈஸ்வர வழிபாட்டுடன் சங்கமித்ததை நினைவூட்டி நிற் பது போன்று நயினை நாசபூஷணி அம்மன் ஆலயமும் நாக வழிபாடு ஈள் வரி வழிபாட்டுடன் சங்கமித்ததை எடுத்துரைக் கிறது. இக்கோயிலும் போத்துக்கேயரால் இடிக்கப்பட்ட பிர தான ஆலயங்களில் ஒன்றாகும். கீரிமலைச் சிவஸ்தலம் போத் துக்சேயரால் இடிக்கப்பட்டதை யாழ்ப்பாண வைபவ மாலை80 பின்வருமாறு குறிப்பிடுகிறது.
பரராசசிங்க முதலி இறந்தபின் பறங்கிக்காரர் தாங்கள்
இடியாமல் விட்டிருந்த ஆலயமெல்லாம் இடிப்பித் தார்கள். அப்பொழுது பரசுபாணி ஐயரென்னும்பிரா மணன் கீரிமலைச்சாரலிலுள்ளதேவாலயங்களின் தட்டு முட்டுக்களையும் விக்கிரகங்களையும் கிணறுகளிற் போட்டு மூடிவைத்தான்."
சிவஸ்தலங்கள் மட்டுமன்றி எதிர்ப்பட்ட சகல இந்து வழி பாட்டிடங்களும் பறங்கியரால் அழிக்கப்பட்டதைப் போத்துக் கேய ஆவணங்களே உறுதி செய்கின்றன. யாழ்ப்பாண இராச்சி யத்தைக் கைட் பற்றிய டி ஒலிவைறா என்ற போத்துக்கேயத் தளபதி இங்குள்ள ஐந்நூறு ஆலயங்களை அழித்ததிற் பெருமை கொண்டான் எனக் கூறியுள்ளமையும் அவதானிக்கத்தக்கது 8
ஏனைய வழிபாட்டுத் தலங்கள்:-
திரிமூர்த்திகளிலொருவராகிய விஷ்ணுவுக்குரிய சிறப்பான தலங்களும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற் காணப்பட்டன. வல்லி புரம், புன்னாலை ஆகிய இடங்களிலுள்ள விஷ்ணுவின் திருச் கோயில்கள் தொடர்ந்தும் இக்காலத்திற் சிறப்புடன் விளங்கி யதைத் தக்ஷிண கைலாயபுராணத்தில் இத்தலங்கள் பற்றிக் காணப்படும் குறிப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தலங்கள் பற்றி மேலும் சிங்கள நூலாகிய கோகில சந்தேஸ்யத்திலும் குறிக்கப்பட்டுள்ளமை இவை அக்காலத்திற் சிறப்புடன் விளங் கியதை எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.82 பன்னாலை விஷ்ணு கோயில் பற்றிய வரலாறு தகழிணகைலாசபுராணத்துப் பொன்னா லயப் பெருமையுரைத்த படலம்" என்ற அத்தியாயத்திற் கூறப்படு கிறது. விஷ்ணு, தனது அவதாரங்களிலென்றாகிய ஆமை வடி வத்தில் அப்பகுதி வலைஞர்களுக்குக் காட்சி கொடுத்த இடபுே இவ் வாலயம் அமைந்துள்ள இடம் என்பது இதிற்கூறப்பட்டுள்ளது.8

-217-a
தகதிண கைலாசபுராணத்தில் "வல்லிபுர வைபவமுரைத்த படலம்" என்ற அத்தியாயத்தில் வல்லிபுரக் கோயில் வரலாறு கூறப்பட்டுள்ளது 84 லவல்லி என்ற பெண் சந்ததி இன்றித் தவித்து வல்லிபுரக் கடலோரத்தில் விஷ்ணுவை வழிபட்ட போது ஒரு நாள் அங்குள்ள வலைஞர் க்ளின் வலையில் ஒரு பெரிய மீன் அகப்பட்ட தாகவும் அது அங்கும் இங்கும் துள்ளிய்ப்பாய்ந்து ஈற்றில் லா வல்லி யின் மடியில் வந்து தங்கிப் பின்னர் குழந்தை வடிவில் விஷ்ணு வாக மாறி மறைந்ததாகவும் அப்போது ஒரு ஞானி விஷ்ணு சக்க ரத்தினை அங்குள்ளோருக்குக் கொடுக்க, அன்றிலிருந்து விஷ்ணு சக்சரமே இவ்விடத்தின் வழிபாட்டுப் பொருளானது என்பதும் மேற்கூறிய நூலிற் கூறப்பட்டுள்ள வரலாறாகும். எவ்வாறாயி னும் விஷ்ணு சக்கர வழிபாடு மிகப்பழைய வழிபாட்டு மரபு என் பது மறுப்பதற்கில்லை எவ்வாறு முருக வழிபாட்டில் "வேல்" மிகப்பழைய வழிபாட்டு மரபை உணர்த்தி நிற்கின்றதோ அவ் வாறே சக்கர மும் உணர்த்துகின்றது. இத்தகைய சக்கர வழிபாடு வடபகுதியில் மட்டுமனறித் தென்பகுதியிலும் இக்காலத் திற் காணப்பட்டமை இக்காலத்தில் இத்தகைய மரபு ஈழத்தில் வேரூன்றிக் காணபபட்டதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள் ளது இத்தசைய வழிபாடு பற்றித் திஸ்ர சந்தேஸ் பத்தின் 50 ஆம், 52 ஆம் பாடல்களிற் குறிப்புகள் உள.85 இத்தகைய கோயி லொன்று பாணந்துறையில் அமைந்திருந்தது. இதன் பெயர் "சுதர்சன சக்கிர' ஆகும். அதாவது பார்வைக்கு இனிய சக்கரம் என்பதே இதன் பொருளாகும். அழகும் சிறப்பும் வாய்ந்த இக் கடவுள் உலகை ஆண்டு உலகத்தோருக்கு நன்மை பளிப்போன் என விளிக்கப்படுவதோடு வணங்குவோருக்கு மகிழ்ச்சியும் நன்மை யும் அளிப்பவன் எனவும் இங்கே போற்றப்படுகின்றான்.
யாழ் நகரிலுள்ள பெருமாள் கோயிலும் இக்காலத்திற் சிறப் புடன் விளங்கிய விஷ்ணு ஸ்தலமாகும். இதனைப் போஷித்த வர்கள் நெசவாளர்களாகும்,86 புத்தூரிலுள்ள கிறிஸ்தவ தேவா லயத்தின் அத்திவாரத்தினை கி.பி. 1824 இல் அகழ்ந்தபோது விஷ்ணு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதைக் குறிப்பிடும் நவரத்தினம் இந்துக்கோயில்களை அழித்த பின்னர் அவற்றின் விக்கிரகங்களைத் தமது தேவாலயங்களின் அத்திவாரத்திற் போட்டுக் கட்டுவது பேத்துக்கேயரின் மரபு எனவும் குறிப்பிட் டுள்ளதால் இக்காலத்தில் இப்பகுதியில் ஒரு விஷ்ணு ஆலயமும் காணப்பட்டிருக்கலாம் எனக் கருதலாம் 87 வவுனித குளப் பகுதி யிற் கோயிற் காடு என்ற இடத்திற் கண்டு பிடிக்கப்படட இந்துச் சிற்பங்களில் விஷ்ணு சிலை ஒன்றும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.8

Page 153
-218
விநாயகர் வழிபாடு இக்காலத்தில் மேன்மை பெற்றிருந்ததை ஆரியச் சக்கரவர்த்திகள் அமைத்த காவற்றெப்வங்களில் விநாயகர் ஆலயங்கள் முக்கியம் பெறுவது எடுத்துக் காட்டுகின்றது. இது மட்டுமன்றி இவர்கள் காலத்திற்குரிய உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோவில், அரச கேசரிப்பிள்ளையார் கோவில், பரராசசேகரப்பிள்ளையார் கோவில் ஆகியனவும் இக் காலத்திற் குரிய சிறப்புப் பெற்ற விநாயக வழிபாட்டிடங்களாகும். உரும் பிராய் கருணாசரப் பிள்ளையாருடன் தொடர்புடைய இலக்கிய கல்வெட்டாதாரங்கள் உள. யாழ்ப்பாண வைபவமாலையில் கருணாகரத் தொண்டைமான் என்னும் மன்னன் தொண்டமா னாற்றை வெட்டுவித்த செய்தி கூறப்படுகிறது 89 கருணாகரப் பிள்ளையார் கோயிலைக் கட்டுவித்தவன் ய ழ்ப்பாண வைபவ மாலை குறிப்பிடும் கருணாகரத் தொண்டமானே என இராச நாயக முதலியார் கருதுகிறார் 90 இவன் சோழநாட்டுத் தளபதி களில் ஒருவனாவான். நல்லூரிற் சேர்ழர் கால ஆலயம் காணப் பட்டதற்கான கல்வெட்டுச் சான்று காணப்படுவதை நோக்கும் போது இதே பாணியில் இன்னொரு ஆலயம் உரும்பிராயில் முதலாவது குலோத்துங்க மன்னனின் தளபதிகளில் ஒருவனான கருணாகரத் தொண்டைமானாற் கட்டப்பட்டது எனக் கொள் ளல் சால்புடைத்தாகும்.
எனினும் இவ்வாலயத்திற்குச் சிறப்பளிப்பது இங்கு கிடைத்த இரு தமிழ்க் கல்வெடடுக்களாகும். முதலியார் இராசநாயகம் இது கி.பி. 1567 இற் பொறிக்கப்பட்டதெனக் கருத்துத் தெரி வித்தாலும் இதன் வரிவடிவம் பதினைந்தாம் பதினர்றாம் நூற் றாண்டுகளைச் சேர்ந்ததோடு காணப்படுவது மட்டுமன்றி இதன் மொழியும் தமிழ்மொழியே என்பதும் குறிப்பிடத்தக்கது.91 தமி ழகக் கோயில்களை அண்டி மிகப் பெரிய கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஈழத்திலோ எனில் இத்தகைய கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவே. அதுவும் வடபகுதியைப் பொறுத்தமட்டில் மிகமிகக் குறைவே எனலாம். இப்பகுதியிற் கிடைத்த மிகப்பழைய தமிழ்க் கல்வெட்டு நல்லூர் ஆலயம் பற்றியதாகும்.
ஆனால் உரும்பிராய் ஆலயத்திற் காணப்படும் கல்வெட்டுகள் விரிவான தகவல்களைத் தந்தாலும் கூடப் பூரணமற்ற முறையிற் காணப்படுவதால் இவை பற்றிய பல தகவல்களை நாம் அறிவது கஷ்டமாக உள்ளது. இத்தலத்திற் கிடைத்த கல்வெட்டுகள் இரண்டையும் பதிப்பித்த இந்திரபாலா இவை பற்றிப் பின்வரு மாறு குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது.92 ح

-29
இக்கல்வெட்டு, கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக எழுதப்பட்டது என்பது தெளிவு. எனினும், இத் தர்மம் என்ன என்பதைத் திட்ட வட்டமாக அறியமுடியவில்லை. கல்வெட்டுப் பொறிக் கப்பட்ட தூண் ஒரு திரிசூலக் கல்லாக இருந்ததினாலும், கல்வெட்டிலே "இந்தத் திருசூல." என்ற வாசகம் வருகின்றமையினாலும், இத் தருமம் கோயிலுக்கு வழங் கப்பட்ட ஒரு நிலத்தானம் என யூகிக்கலாம் சைவக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தானங்களின் எல்லைக்கல்லாகவே திரிசூலக் கற்கள் நாட்டப்பட்டன. கோயிலின் பெயரும் எமது இக்கல்வெட்டிலே தெளிவாக இல்லை. ஆனால் முதலியார் இராசநாயகத்தின் குறிப்புப் படி கருணாகரப்பிள்ளையார் கோயில் என்ற குறிப்பு இதிலே வருகின்றது. அப்பாகம் இப்பொழுது அழிந்து விட்டது போலும்.
கல்வெட்டின் நடுப்பாகத்திலே தானம் செய்த சிலரு டைய பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இப் பெயர்களும் சிதைந்த நிலையிலேதான் காணப்படுகின் றன. கல்வெட்டின் இறுதியிலே வழமை போல் ஒர் ஒம்படைக்கிளவி காணப்படுகின்றது. "இந்தப்படி சந்தி ராதித்த வரையும் நடக்கக் கடவதாகவும், இந்தத் தன் மத்தை யாதா மெ ருவர் பொல்லாங்கு நினைத்தவர்கள் கெங்கைக் கரையிலே கோவதை செய்த பாவம் பெறக் கடவதாகவும்” என்று இறுதியிலே குறிப்பிடப்பட்டுள் ளது ...”
இரண்டாவது கல்வெட்டு மிகவும் தெளிவாக இருப்பதால் அதனைப் பூரணமாக வாசித்துக் கொள்ள முடியும். இதன் நோக்கம் கோயிற் பண்டாரத்துக்கு (அதாவது கோயிலின் திறை சேரிக்கு) ஐந்து பணம் தர்மமாக இடப்பட்டதைப் பதிவு செய் வதாகும். யாரால் இப்பணம் இடப்பட்டது என்பது போன்ற விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இது பதினாறாம் நூற்றாண் டின் இறுதியில் அல்லது பதினேழாம் நூற்றாண்டிலே பொறிக் கப்பட்டிருக்கலாம்.
அரசகேசரிப் பிள்ளையார் ஆலயம் பரராசசேகரன் என்னும் மன்னனின் மைத்துனனான அரசகேசரி என்பவரால் அமைக்கப் பட்டதாகச் சொல்லப்பட்டாலும், அரசகேசரி இங்கு வந்து வழி பட்டதாலேயே இது இப் பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.

Page 154
-220
இவ்வாலயம் பற்றிக் காணப்படும் கர்ணபரம்பரைக் கதை பின் வருமாறு அமைந்துள்ளது. ஆரியச் சக்கரவர்த்திகளின் மந்தி ரியாக அரசகேசரி விளங்கியபோது இாாச வீதியில் (நல்லூர் - இருபாலை - கோப்பாய் - நீர்வேலி - நவக்கிரி - அச்சுவேலி ஊடா கச் செல்லும் வீதி) ஒரு விசேட தீர்த்தம் இருப்பதாகக் கனவு கண்டார் பின்னர் அத்தீர்த்தத்தைக் கண்டுபிடித்து ஆலயம் அமைத்த இடமே அரசகேசரிப் பிள்ளையார் ஆலயம் காணப் படும் இடம் எனச் சொல்லப்படுகிறது. இந்நி+ழ்ச்சி இங்குள்ள சித்திரத்தேரிற் சிற்ப வடிவமாக வடிக்கப் பட்டுள்ளமை அவ தாணிச்கத்தக்கது. இணுவில் பரராச சேகரப்பிள்ளையாரும் யாழ்ப்பாண அரசரின் சிம்மாசனப் பெயர் களி ல ஒன்றாகிய பர ராச சேகரன் பெயரைத் தாங்கி நிற்பது அவானிக் கத்தக்கது. இணுவிலும் ஆரியச்சக்கரவர்த்தி 6ள் சாஸ்த்திலேற்பட்ட வேளா ளக் குடியேற்றத்துடன் தொடர்புடையதாகக் காணப்படுவதால் இவ்வாலயம் இவர்கள் ஆட்சியின் ஆர:பக் கட்டத்தில் அமைக்கப்பட்டிருந்திருக்கலாம். துரதிஷ்டவசமாக இது பற்றிய விபரங்கள் யாழ்ப்பாண வைபவமாலையிலோ கைல யமாலை யிலோ காணப்படவில்லை.
பாறளை விநாயகர் ஆலயமும் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திற்குரியதாகும். இதனை அண்மித்துக் காணப்படும் தொல் புரம் இக்காலத்து வேளாளக் குடியேற்றத்துடன் இணைத்துத் தமிழ் நூல்களிற் குறிப்பிடப்படுவதால் இவர்கள் இங்குள்ள விநா யகரைப் பே7 ஷித்தனர் எனலாம். இவ்வலயத்தின் அருகே ஒரு முருகன் ஆலயமும் உண்டு. இது கூட இக் காலத்தாகவிருக் கலாம். விநாயகர் ஆலயத்தினைப் போத்துக்கேயர் இடிக்க வந்த போது ஏற்பட்ட சம்பவம் பற்றிய கர்ண பரம்பரைக் கதை ஒன்றுண்டு. அஃதாவது போத்துக்கேயர் இவ்:ாலயத்தை இடிக்க வந்தபோது காகம் ஒன்று வந்து கொத்தி அவர்களை அவ்வாறு செய்யாது தடுத்ததால் இபபிள்ளைய ருக்கும் "கண்ணைக் கொத்திக காக்கைப் பிள்ளையார்' என்ற பெயர் வழங்கலாயிற்று என்று கூறப்படுகிறது.98
மருதடி விநாயகர் ஆலயமும் போத்துக்கேயர் இங்கு வந்த போது சிறப்புடன் காணப்பட்ட ஆலயமாகும். இது பற்றி முதலி யார் இராசநாயகம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.94
பறங்கியர் சைவ ஆலயங்களைப் பாழாக்கிய பின் டெரும்பாலும் அக்கோயில் இருந்த இடங்களிலேயே தங்கள் கோயில்களைக் கட்டினர் சாவகச்சேரி வாரி வளவு ஈஸ்வரன் கோயிலும், மானிப்பாய் மருதடி விநா

-221
யகர் கோயிலும் இருந்த இடங்களிலேதான் பறங்கியரின் கோயில்கள் கட்டப்பட்டதென்பதற்குப் பல சான்றுகள் உள. பிற்காலத்தில் மருதடி விநாயகர் ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டிய போது திருச்சந் நிதானம் மேற்கு நோக்கிய வாயிலாகக் கட்டப்பட்டது. பல்தேயஸ் (போல் டேயஸ்) பாதிரிய ர் இலங்கை பற்றி எழுதிய நூலில் கொடுத்திருக்கும் படத்தில், மருதமரம் மேற்கு வாச லைக் கொண்ட கிறிஸ்தவ க்ோயிலுக்கு முன்னே நிற் பதைக் காணலாம்.” முகலியார் இராசநாயகம் கூறியுள்ளதுபோலச் சாவகச்சேரி வாரிளைவு ஈஸ்வரன் கோயில் (வாரிவனேஸ்வரர்) மருதடி விநா யசர் ஆலயம் ஆகியவை அமைந்துள்ள இடங்களிலே கட்டப்பட் டிருச்கும் போத்துக்கேயர் காலக் கிறிஸ்தவத் தேவாலயங்கள் இங் கிருந்த இந்து ஆலயங்களை இடித்தே கட்டப்பட்டன என்பது தெரி கின்றது ( படம் 34-35) வையாபாடலில் விநாயகரோடு தொடர் புடைய "ஐங்கரன்", "காட்டு விநாயகன்", காட்டுவிநாயகமூர்த்தி" போன்ற பெயர்கள் காணப்படுவது அவதானிக்கத்தக்கது 95 விநா யகருக்கு ‘மூத்த நயினார்’ என்றதொரு பெயரும் வழங்கப்பட் டுள்ளது. வன்னியரின் குடியேற்றம் பற்றிய குறிப்பிற் காட்டு விநாயகமூர்த்தியின் அடைமொழியாகக் கணங்கள் முதல்வன் காட்டு விநாயகமூர்த்தி யெ ன்றைக் கரந்தீந்து குணங்களுடை யீர் குலதெய்வம் கொண்டே செல்லீரென வுாைத்தார்’ என வரும் அடியை அவதானிக்கும் போது வன்னிப் பகுதியிலும் விவசாயம் ேேலாங்கிக் காணப்பட்டதாற் போலும் "குல தெய் வமாக விநாயகர் வழிபடப்பட்டமை புலனாகின்றது.98
அத்துடன் பரராசசேகர மன்னன் காலத்தில் வன்னிப் பகு தியை அடைந்த தெய்வங்களாக ஐங்கரன், மூத்த நயினார்(விநா யகர்), குமரேசன், சித்திர வேலாயுதர் ஆகியனவற்றை வையா பாடல் குறிப்பதும் ஈண்டு அவதானிக்கத்தக்கது. இவை முறையே விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு இடப் பட்ட பெயர்களே ஆகும். இது பற்றி வையாபாடல் பின்வரு மாறு கூறுகிறது.97
ஆலமெனக் கரியமுகத் தைங்கரனை
யிளவல்கும ரேசன் றன்னைச் சீலமுட னவர்க்குதவித் திருநாம மூர் மூத்த நயினார் சித்திர வேலென்றோ திடுவீரென் றருளியவர்
பாதநிதம் பூசை செய்ய நால்வருண மதற்குறவாங் கங்கைமகார் தமையழைத்து நாடி யோதி. (92)

Page 155
--2ڑژ--
மேல்வரும் அடிகள் இத்தகைய தெய்வங்களுக்குப் பூசை செய்வதற்கு அந்தணரும் வன்னிநாட்டை அடைந்ததை எடுத் துக் காட்டுகின்றன. தாய்த்தெய்வ வழிபாடும் இக்காலத்திற் சிறப்புடன் விளங்கியது எனலாம். சிவ, முருக, விஷ்ணு வழி பாட்டோடு இணைந்தும் தனித்தும் இவ்வழிபாடு மேன் மையுற்றிருந்தது எனலாம். யாழ்ப்பாண வைபவமாலை நல் லூரை ஆண்ட முதலாவது ஆரியச் சக்கரவர்த்தி அமைத்த கோயில்களிலே தலைநகரின் மேற்குத் திசைக் காவற் தெய்வ மாக வீரமாகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளமையைக் குறிப் பிடப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது. போர்த் தெய்வமான காளி, யாழ்ப்பாண மன்னரின் வெற்றித் தெய்வமாகப் போற் றப்பட்டாள் எனலாம். இத்தலத்தின் முன் வாசலிலே தான் கோட்டை அரசன் தர்மபாலனின் தந்தையாகிய விதிய பண் டாரனுக்கம் முதலாவது சங்கிலி மன்னனுக்குமிடையிலே சத்தி யப்பிரமாணமாக ஒர் உடன்படிக்கை நிறைவேற இருந்ததென் றும் அப்போது தற்செயலாக ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு பகுதியினர் ஒருவரையொருவர் ஐயுற்றுத் தாக்க முற்பட்ட போது விதிய பண்டாரன் கொல்லப்பட்டான் என்றும் கூறப்படுகிறது பின் னர் பூதவராயர் கோயில் இந்நிகழ்ச்சிக்குப் பிராயச்சித்தமாகவே அமைக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.98 போத்துக்கேயருக் கும் யாழ்ப்பாண அரசருக்கும் இடையே நடைபெற்ற போர்க ளிற் கூட இத்தலம் குறிக்கப்படுவதும் அவதானிக்கத்தக்கது. இப்போர்களில் இத்தலத்திற் பூசகர்களும் பங்கு பற்றி யாழ்ப் பாண அரசனின் படைகளுக்கு ஊக்கமளித்தது பற்றியும் போத் துக்கேய ஆவணங்களிற் குறிப்புள்ளது.99
புகழ்பூத்த தாய்த் தெய்வ வழிபாட்டிடங்களில் நயினாதீவு நாக பூஷணி அம்மன் ஆலயமும் ஒன்றாகும். இதன் தொடர்ச்சி யான வரலாற்றைஅறிந்து கொள்ளுவதற்குரிய சான்றுகள்நமக்குக் கிடைக்காவிட்டாலுங் கூட இதன் பழைமையை எடுத்துக்காட்டச் சில சான்றுகளை நிரைப்படுத்தலாம். ஈழத்தின் பழைய வழிபாட்டு மரபுகளில் நாகவழிபாடும் ஒன்றாகும். இதனுடன் இணைந்த ஈஸ்வரி இத் தலத்தில் நாகேஸ்வரியாக வழிபடப்பட்டு வந்தமை ஒரு பிரதான சான்றாகும். இவற்றோடு சிலப்பதிகாரததிற் குறிப் பிடப்படும் கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கனுடன் இது தொடர்பு படுத்தப்பட்டுள்ளமை பண்டைய காலத்திற் கடல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பழந்தமிழரின் போஷிப்பையும் இது பெற்றதை எடுத்துக்காட்டுகின்றது எனலாம்.100 சோழராட்சி ஈழத்தில் ஏற்பட்டபோது அவர்களின் கடற்படை ஊர்காவற்
றுறை போன்ற துறைமுகங்களில் நடமாடியது. இக்காலத்திற்

-223
குரிய சான்றாக வேலணையில் முதலாம் ராஜராஜனின் நாண யங்களும், அவற்றுடன் ஓர் அம்மன் உருவம் பொறித்த பதக்க மும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.101 ஆதலால் இதனை வேலணை யிலே காணப்பட்ட ஓர்அம்மன் ஆலயத்துக்குரியதொன்றாகக் கருத லாம். இவ்வாறே நயினாதீவிலுள்ள சிறப்பான நாகேஸ்வரி ஆலயமும் சோழரின் போஷிப்பைப் பெற்றிருக்கலாம். ஆரியச்சக்கர வர்த்திகள் கடற்படை வலிமை படைத்துக் காணப்பட்டதோடு கடல் வாணிபத்திலும் அதிக கவனஞ் செலுத்தியவர்களுமாவர். ஊர்கர்வற்றுறை ஆரியச் சக்கரவர்த்தியின் காலத்துக்கு முன்னரே கடல் வாணிபத்திற் சிறப்புற்று விளங்கியதை நயினாதீவிற்கிடைத் துள்ள முதலாவது பராக்கிரமபாகுவின் கல்வெட்டு எடுத்துக்காட்டு வதால், 'நாகேஸ்வரி ஆலயம் தொடர்ந்தும் கடலாதிக்கம் பெற்ற ஆரியச்சக்கரவர்த்திகளின் போஷிப்பைப் பெற்று விளங்கியது என லாம். துரதிஷ்டவசமாக யாழ்ப்பாண வைபவமாலையிலே இவ் வாலயம் பற்றிய குறிப்புகள் காணப்படாவிட்டாலும் போத்துக் கேயரால் இது இடிக்கப்பட்டதை இங்கே காணப்படும் தேர்ச்சிற் பங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய சிற்பங்கள் நெடுங் காலமாக மக்கள் மத்தியில் இவ்வாலயத்தின் அழிபாடுபற்றி நிலவிவந்த கருத்தையே பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன. இவ் வாலயத்தினை இடித்த போத்துக்கேயர் இதன் கற்களைத் தாம் ஊர்காவற்றுறையிற் கட்டிய கோட்டைக்குப் பயன்படுத்தினர் எனலாம். எவ்வாறு நல்லூர் ஆலய அழிபாடுகள் யாழ்ப்பாணக் கோட்டையைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டனவோ அவ் வாறே நயினை நாகேஸ்வரி ஆலய அழிபாடுகளும் தீவுப் பற்றி லமைந்த ஊர்காவற்றுறைக் கோட்டையிற் புதைந்து கிடக்கின் றன என்றால் மிகையாகாது.
இத்தகைய வழிபாட்டு நெறிகளில் நாச்சிமார் வழிபாடும் ஒன்றாகும். இது பற்றி இருவித கருத்துக்கள் உள. சிலர் சப்த மாத்திரிகர்கள் (ஏழு பெண் தெய்வங்கள்) வழிவந்ததே இஃ தெனக் கூற. இன்னும் சிலர் தம் கணவர்மாருடன் உடன் கட்டை யேறிய வன்னிச்சிகளே இத்தகைய தெய்வங்களாக வழிபடப் படுகின்றனர் எனக் கூறுகின்றனர்.02 வன்னிச்சிகளின் வழிபாடாக இதனை ஏற்றுக் கொண்டால் இவற்றுக்கும், அண்ணமார் வழி பாட்டிற்கும், சிங்களப் பகுதிகளிலே காணப்படும் "பண்டார' தெய்வங்களுக்கும் இடையே தொடர்புண்டு எனலாம். இவை யாவும் ஆன்றோர் வழிபாட்டு நெறிகளே ஆகும்.
தாய்த் தெய்வ வழிபாட்டிலிருந்து துளிர்த்ததே பத்தினி
வழிபாடாகும். முதலாவது கஜபாகு மன்னனே இதனை ஈழத்திற் புகுத்தியவனாகக் காணப்படுகிறான். வடபகுதியினூடாகவே

Page 156
-224
இது வட - கிழக்கு மாகாணங்களுக்குப் பரவியதாகக் கொள்ளப் படுகிறது.108 யாழ்ப்பாணப் பகுதியிற் சிறப்புப் பெற்றிருந்த கண்ணகி ஆலயங்கள் பற்றிப் பின்வரும் அம்மன் பள்ளுப்பாடல் எடுத்துக் காட்டுகிறது.104
அங்கணம் மைக்கடவைசெட்டிபுல மச்சூழ்
ஆனதொரு வற்றாப் பளைமீ துறைந்தாய் பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்
புகழ்பெருகு கோலங்கி ராய்மீதுறைந்தாய் எங்கு மே உன்புகழை மங்காம லோத
என்றனது சிந்தையி லுறைந்தகா ரணியே பங்கமுறு துயரங்கள் தீர ருள் புரிவாய்
பரிவுசெறி கோலங்கி ராயிலுறை மாதே
மதுரையை எரித்த கண்ணகி ஐந்தலை நாகமாக மாறித் தெற்கு நோக்கி நகர்ந்து முதலில் நயினாதீவிலே தங்கிப் பின்னர் வட்டுக்கோட்டைப் பாங்கரில் உள்ள சுரட்டிப்பனை வழியாக சீரணி, அங்கணாமைக்கடவை. அளவெட்டி, சுருவில் முதலிய இடங்களிலே தங்கினாள் என்பது ஐதீகம், இந்நாகம் சென்ற வழியை வழுக்கை ஆறே எனக் கொண்டு இவ்வழுக்கை ஆற்று வழியை அண்டியே ஐந்தலை நாசிச் சந்நிதானம், அம்மன் சந்நி தானம் ஆகியவை காணப்படுகின்றன எனவும் இவர்கள் கொள்வர்.
சீரணியிலுள்ள கோயில் நாகம்மாள் கோயில் என அழைக் கப்பட, அளவெட்டி, சுருவில் ஆகிய இடங்களிலுள்ளவை நாக தம்பிரான் கோயில் எனவும் அழைக்கப்படுகின்றன இன்னும் சிலர் நாகதீவிலிருந்து புறப்பட்ட கண்ணகி கோப்பாய், மட்டுவில், வேலம்பிராய், கச்சாய் வழியாகச் சென்று நாகர் கோயிலையும் அதன் பின்னர் கரைச்சியிலுள்ள புளியம் பொக்கணையையும் அடைந்து ஈற்றில் வற்றாப்பளையை அடைந்தாள் எனக் கூறு கின்றனர். எனினும் வடபகுதிப் பழைய கோயில்களாக அங்க ணாமைக்கடவை, மந்திகை, களையோடை, கோப்பாய், குஞ்சிப் பரந்தன், வற்றாப்பளை ஆகிய இடங்களிலுள்ள கண்ணகி வழி பாட்டின் பெருமையை எடுத்துரைக்க கண்ணகி வழக்குரை காவி யம் ஒன்று எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.105 இதில் இரண்டா யிரத்துக்கு மேற்பட்ட செய்யுள்கள் உள்ளன. கண்ணகி வழிபாட் டுக்குரிய திருவிழா வைகாசி மாதத்திலே தான் நடைபெறுவது வழக்கம் எனினும் யாழ்ப்பாணப்பகுதி அல்லது வன்னி நாட்டுக் குடியேற்றங்கள் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை ஆகியனவற்றிலோ வையாபாடலிலோ இவ் வழிபாடு பற்றிய குறிப்புக் காணப்படாததற்குரிய காரணம்

-225
கண்ணகி வழிபாடு மேற்கூறிய நூல்கள் போற்றும் வேதாகம வழிபாட்டு நெறிக்கு அப்பாற்பட்ட பிராமணரல்லாத பூசாரிகள் இயற்றும் வழிபாடாகத் திகழ்ந்தது எனலாம். வன்னிநாட்டில் உள்ள இன்றய மடுமாதா கோயில் வன்னியர் ஆட்சிக்காலத்திற் கண்ணகி கோயிலாகவே இருந்தது என்பது கர்ண பரம்பரைக் கதை ஆகும். இதனை ஆதரிப்பதாக வட மத்திய மாகாணத் தின் அரசாங்க அதிபராக இருந்த அய்வேஸ் எழுதிய ‘வட மத்திய மாகாணக் கைநூலில்" காணப்படும் தகவல் அமைந்துள்ளது 108 இதில "மடுவிலிருக்கும் தூயமேரி மாதாவின் திருக்கோயில் புத்த சமயத்தினராலும் அநேக தமிழ் யாத்திரிகர்களாலும் பத்தினி அம்மன் கோயிலென்றே வழிபடப்பட்டு வருகிறது." என்ற குறிப்புக் காணப்படுகிறது.
கடந்த நூற்றாண்டில் வேதாகம வழிபாட்டு நெறிகளுக்கு ஆறுமுகநாவலர் புத்துயிரி அளித்ததன் விளைவாகக் கண்ணகி ஆலயங்கள் பல யாழ்ப்பாணக் குடாநாட்டில் ராஜேஸ்வரி, புவ னேஸ்வரி ஆலயங்களாக உருமாறின. இதனால் இவ்வழிபாடு செல்வாக்கிழந்தது.
இச்சந்தர்ப்பத்தில் ஐயனார் வழிபாடு பற்றியும் குறிப்பிடு 'தல் அவசியமாகின்றது. ஈழத்தில் நிலைத்திருந்த பழைய வழி பாட்டு நெறிகளில் இதுவும் ஒன்றாகும். ஐயனார் ஊர், வயல் ஆகியனவற்றின் காவற்றெப்வமாகவே ஆதியில் வழிபடப்பட் டார். இவரது வாகனங்கள் குதிரை, யானை என்பவை ஆகும். குளக்கரைகளிலும், ஊரின் புறத்திலும் பொதுவாக வடமேற்குக் க்ரையிலுந்தான் ஐயனார் கோயில்கள் உண்டு. ஊரைக் காக் கும் தொழிலே பிரதானமாகக் காணப்பட்டதாலே தானவர் (காப் பவர்) என்ற பெயரும் இவருக்குண்டு. இவற்றோடு சாஸ்தா, கையனார், சாதவாகனன், கோழிக்கொடியோன், சாத்தன், வெள்ளையானை வாகனன் என்ற பெயர்களும் காணப்படுகின் றன. காலகதியில் ஐயனாரின் தோற்றம் பற்றிப் புராண இதி காசக் கதைகளும் உருவாகத் தொடங்கின. மோஹினி வடிவாக வந்த திருமாலுக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாதலால் இவ ருக்கு ஹரிகர புத்திரர் என்ற பெயரும் ஏற்பட்டது காலகதியில் ஐயனாருடன் இரும னைவியரும் இணைக்கப்பட்டனர் பூரணா தேவி, புஷ்கலாதேவி என்பன இவர்களது பெயர்களாகும். ஐயனார் வழிபாட்டை இயற்றுபவர்களாக ஆகமவழி ஒழுகும் அந்தணரும், வேதாகமவழியின்றி ஒழுகும் பூசாரிகளும் காணப்படுகின்றனர்.

Page 157
-226
ஆரம்பத்தில் வேதாகம வழிபாட்டில் இணைந்திராத ஐயனார் வழிபாடு காலக் கிரமத்தில் அவற்றோடு இணைந்ததையே ஐயனாரின் தோற்றம் பற்றிய ஐதீகங்கள், மனைவியர் பற்றிய குறிப்புகள், வழிபாட்டு நெறிகள் ஆகியவை எடுத்துக் காட்டு கின்றன.
யாழ்ப்பாணத்திலும் வன்னிமாவட்டத்திலும் ஐயனார் கோயில்கள் பல உள. வையாபாடலில் ஐயனார், சாத்தன் பற் றிய குறிப்புக்கள் உள.107 யாழ்ப்பாணத்தில் ஐயனார் கோயில்கள் நெடுந்தீவு, அனலைதீவு, சுருவில், சுன்னாகம், சண்டிலிப்பாய். அராலி, வண்ணார்பண்ணை ஆகிய இடங்களிற் காண, படுகின் றன. எனினும் போத்துக்கேய ஆவணங்களிற் காரைநகரில் அமைந்திருந்த ஐயனர்ர் கோயில் இடிக்கப்பட்டதற்கான ஆதா ரங்கள் உள.108 ஈழத்துச் சிதம்பரம் எனப் புகழ் பெற்று விளங் கும் சிவன் கோயிற் பகுதியிற் காணப்படும் அரசமரத்திற்கு அண்மையிலேயே விய வில் ஐயனார் சிலை கண்டுபிடிக்கப்பட் டது. கோயில் போத்துக்கேயரn ல் இடிக்கப்படப் போவதை அறிந்த பக்தர்கள் ஏற்கனவே ஐயனார் சிலையை இவ்விடத்திற் கொண்டு வந்து புதைத்தனர் எனக் கொள்ளலாம். இதனாலேயே பிற்காலத்தில் ஈழத்துச் சிதம்பர ஆலயத்தை உருவாக்கும் போது பக்தர்களால் இதனருகில் ஐயனாருக்கும் ஒர் ஆலயம் அமைக்கப்பட்டது.
சிவனின் பிறமூர்த்தங்களில் வீரபத்திரர், வைரவர் ஆகியோர் காணப்படுகின்றனர். வைரவரைப் பொதுவாக திரிசூலமாகவே வைத்து வணங்கப்படுவது வழக்கம். போத்துக்கேயராட்சியிற் பகிரங்கமாக இந்துக்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுவதற்குத் தடை விதிக்கப்பட்டபோது ஏற்கனவே வழக்கிலிருந்த திரிசூல வழிபாடு மேலும் பிரபல்யமானது. வீரபத்திரருக்கும் கிராமப் புறங்களிற் சிறு ஆலயங்கள் உள்ளன. வையாபாடலில் வீரபத்தி ரரை ஐயனாரோடு இணைத்து "மங்கை கணத்துக்குரிய வீரபத்தி ரன் வாகு செறி ஐயனைப் பூசிப்போர்" எனக் கூறப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.109
நாட்டார் வழிபாட்டு நெறிகள்:-
மேற்கூறிய வழிபாட்டு மரபுகளை விட நாட்டார் வழிபாடாக மக்கள் மத்தியில் நிலைகொண்டிருந்த வழிபாட்டு நெறிகள் பற் றிக் குறிபபிடுவதும் அவசியமாகிறது 110 இவற்றிற் பெரிய கோயில்களோ அன்றிச் செல்வாக்குள்ள பூசகர்களோ காணப் படுவதில்லை. கிராம மக்கள் மத்தியில் நாட்டார் வழிபாடாக வளர்ச்சி பெற்றவையே இவை. இத்தகைய கோயில்கள் வீட்டுக்

-227
கோடியில், மரங்களின் கீழ் அல்லது சிறு கொட்டில்களிற் காணப்படுவது இயல்பு. இங்கு காணப்படும் பூசாரிகள் அல்லது பண்டாரங்கள் ஒன்றில் வழிபடுவோரில் ஒருவராகவோ, அவர்களுக்காக இறைவழிபாட்டுக் கடமைகளைச் செய்யும் பூசாரிகளாகவோ இருப்பர். இவ்வழிபாட்டிற் கிரியைகள் அதிகம் இடம் பெறுவதில்லை. அதற்கான தத்துவார்த்த விளக்கங்களை அறிய வேண்டியதன் அவசியமுமில்லை. மக்கள் விரும்பியபோது இத்தகைய கோயில்களுக்குச் சென்று பொங்கல், மடை, படையல் போன்றவற்றைச் செய்கின்றனர். சில சமயம் இக்கோயில்களில் தாங்களே பொங்கிப்படைத்துத் தெய்வத்துக்குப் பூசை செய் வதும் வழக்கம். இத்தகைய கோயில்கள் அமைந்துள்ள மரங்களில் வேம்பு, அரசு, நாவல், ஆல், புளி, மருது முதலியன முக்கியம் பெறுகின்றன. வேம்பு அம்மனையும், அரசு சிவனையும் குறிப் பதாகவும் கருதப்படுகிறது. இன்றும் இக்கோயில்களின் பெயர்கள் வண்டைய மர வழிபாட்டோடும் பின்னர் வளர்ச்சிபெற்ற உருவ வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்ததை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது இதற்கு உதாரணமாக அரசடிப்பிள்ளையார், மருதடிப்பிள்ளையார், அரசடி அம்மன், புளியடி வைரவர், ஆல மரத்தடி முனியப்பர், நாவலடிவைரவர் ஆகிய தலங்களைக் கூறலாம்.
இக்கிராமிய வழிபாட்டிற் பின்வரும் தெய்வங்கள் முக்கியம் பெறுகின்றன. பிள்ளையார், வைரவர், வீரபத்திரர், காளி, ஐயனார் போன்ற வைதீகக் கடவுளரும், காளி, வைரவர், வீர பத்திரர், அண்ணமார், மாரியம்மன், நாய்ச்சி மார், கண்ணகியம் மன், சீ ைகயம்மன், முனியட்பர் போன்ற வைதீக நெறிசாராத கடவுளரும் முக்கியம் பெறுகின்றனர். இவற்றோடு செய்வினை, சூனியம் நடைபெறும் போது விறுமர். இங்கரர் போன்ற தேவதைகளும் வணங்கப்பட்டன. க"டேறி, கல்லெறிமாடன் என்பவையும் கெடுதலைச் செய்யும் தெய்வங்களாகக் கூறப்படு கின்றன. காடேறித் தெய்வக்தினை வேட்டைக்குச் செல்பவர்கள் வணங்குவது வழக்கம், கல்லெறி மாடன் வீட்டிற்குக் கல்லெறி கின்ற தேவதையாகும். காளியின் மற்றொரு பெயர் நீலி ஆகும். இந்நீலி வழிபாடு இப்போது அருகிவிட்டது என்று கூறப்படு கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தெற்கு வேலியில் கள்ளிமரம் ஒன்றை நட்டுப்பின்னர் இதன் கீழ் கல் ஒன்றை வைத்து இதனைத் தெய்வமாக வழிபடுதலே இவ்வழிப; ட்டின் முக்கிய அம்சமாகும். புதுவருடப்பிறப்பு, தைப் பொங்கல் போன்ற தினங்களில் இத் தெய்வத்திற்குச் சிறு படையல் செய்வது வழக்கம். இவ்வாறு படையல் செய்த உணவைப்பின்னர் எடுப்பது வழக்கமில்லை"

Page 158
228--
காரணம் நீலி சுவைத்த உணவைத் தின்றால் அது நோயை வரவழைத்துவிடும் என்பதா லேயாகும். இக்கிராமிய வழிபாட் டோடு பிள்ளையார் வழிப டும் சங்கமித்து விட்டது. வழிகள், முக்கிய தெருக்கள், குளங்கள் ஆகியனவற்றிற் பிள்ளையார் உருவச் சிலை வைத்து வழிபடுவது இன்று வழக்கில் இருப்பது போன்று அன்றும் இருந்தது எனலாம். முறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் இதற்கு நல்ல உதாரணமாகும். தில்லையம்பலப் பிள்ளையார் மாட்டுப் பட்டிகளைப் பாதுகாக்கிறார் என்று வணங்கப்படுகிறார். சில கிராமியக் கோயில்களிற் பலியிடுதலும் உண்டு நட்டார் வழிபாட்டில் அடுத்து முக்கியம் பெறுவது சமாதி வழிபாட்டு முறையாகும், இறந்தவர்கள் நினைவாக நடுகல்லை நட்டு வழிபட்ட மரபின் தொடர்ச்சியே இஃதெனலாம். இறந்தவரைச் சமாதி வைத்து அதன் மேல் லிங்கம் வைத்து வழிபாடு செய்யும் முறையே இஃதாகும்.
கிராமங்களில் உள்ள வழிபாட்டு முறைகள் யாழ்ப்பாண இராச்சியத்தைப் போத்துக்கேயர் கைப்பற்றிய உடனும் அதன் பின்னர் டச்சுக்காரர் ஆட்சியிலும் வளர்ச்சி பெற்றன. நாட்டி லுள்ள பிரதான ஆலயங்களை இவர்கள் தகர்த்து விட்டது மட்டுமன்றிப் பகிரங்கமாக இந்துக்கள் தமது வழிபாட்டுக்கட மைகளை மேற் கொள்ளுவதற்கும் தடைவிதித்திருந்தனர். இத னாலேயே போத்துக்கேயருக்குத் தெரியாமல் வழிபாட்டுச் சின் னங்களை வளவின் ஒதுக்குப் புறங்களில் வைத்து வழிபடும் மரபு தீவிரமடைந்தது.
இம்மரபில் வேல், வைரவரது குலம் ஆகிய சின்னங்கள் முக்கிய இடம் பெற்றன நல்லூர் கந்தசுவாமி கோயில், மாவிட்ட புரம் கந்தசுவாமி கோயில் ஆகியன இடிக்கப்பட்டதால் அக் காலத்தில் இக்கோயில்கள் இருந்த இடங்களிலே மக்கள் வேல்களை வைத்து வழிபட, பின்னர் டச்சுக்காரர் ஆட்சியின் இறுதியில் மதச் சுதந்திரம் கிடைத்து இக்கோயில்களைக் கட்டிய போதுதாம் ஏற்கனவே வழிபட்ட வேலையும் கோயில் மூலஸ்தானத்தில் வைத்து வழிபட்டனர் எனக் கொள்ளப்படுகிறது. மேலும் இன்றும் . நல்லூர்க்கந்தசுவாமி கோயிலின் மூலஸ்தானத்தில் வேலுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவது அவதானிக்கத்தக்கது. இவ் வாறே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் மூலவிக்கிரகத்திற்கு அருகாமையிற் காணப்படும் வேற்சின்னமும் இதனையே எடுத்துக் காட்டுகிறது. இன்று இம்மக்கள் மத்தியிற் காணப்படும் சில வழக் கங்கள் யாழ்ப்பாண அரசு அழிந்த பின்னர் மக்கள் இரகசிய மாகத் தமது சமய அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்ததை எடுத்துக் காட்டுவனவாய் அமைந்துள்ளன. தாம் விரதத்திற்கு

سس229--
உண்ட வாழை இலையை வீட்டுக் கூரையிற் செருகும் வழக்கம் இற்றைக்குச் சில காலத்தின் முன் இருந்தது. இதற்குக் காரணம் தாம் விரதம் அனுஷ்டித்ததை யாருக்கும் தெரியாது மறைப்பதே, இவ்வாறே வயலில் நெல் அறுவடை செய்யும் போது தேங்காயை உடைத்து பாயின் கீழே மறைப்பது வழக்கம். இதுவும் கடவு ளுக்குத் தாம் செய்த வழிபாட்டை மற்றவர்கள் அறியக் கூடாது என்பதாலேயாகும். இவை போத்துக்கேய-டச்சுக்காரர் ஆட்சியில் இந்துக்கள் பகிரங்கமாக வழிபாட்டு முறைகளை மேற்கொள்ளு வதற்கு விதிக்கப்பட்ட தடைகளின் எதிர்விளைவுகளே எனலாம்.
இச்சந்தர்ப்பத்திற் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த நாவலர் அவர்கள் மேற்கூறிய வழிபாடுகள் பற்றிப் பின்வருமாறு கூறி யமை அவதானிக்கத்தக்கது. அன்று அவர் சைவசமயிகள் என்று பெயர் இட்டுக் கொண்டு அநேக மூடர்கள் உயிர்ப்பலி ஏற்கிற துட்ட தேவதைகளையும் காடன் மாடன், சுடலைமாடன், காட்டேறி மதுரைவிரன், கறுப்பன் பதினெட்டாம்படிக்கறுப்பன், சங்கிலிக் கறுப்பன், பெரிய தம்பிரான், முனி, கண்ணகி, பேய்ச்சி முதலானவர்களையும் வணங்குகிறார்கள் . இவர்கள் எல்லோ ரும் சிவத்துரோகிகள். இவர்களே அஞ்ஞானிகள், எனக் கூறி யிருந்தார்.111
வழிபாட்டு நெறிகள்
இந்து மதத்தின் அச்சாணியாக விளங்கும் திருக்கோயில்களை மையமாக வைத்து, ஆகமங்கள் இந்து மத வழிபாட்டுக் கிரி யைகளை நான்கு பிரிவுகளாகப் பித்துள்ளன. இவை கர்ஷணம் பிரதிஷ்டை, உற்சவம், பிராயச்சித்தம் முதலியனவாகும்.112 கர்ஷணம் என்பது திருக்கோயிலைக் கட்டுவதற்குரிய நிலத்தினைத் தயார் பண்ணும்போது மேற்கொள்ளப்படும் கிரியையாகும். பிரதிஷ்டை என்பது நான்கு வகைப்படும். அவையாவன அநா வர்த்தனம், ஆவர்த்தனம், புனராவர்த்தனம், அந்தரிதம் என்ப னவாகும் ஆலயங்கள் இல்லாதவிடத்துப் புதிய ஆலயங்களை அமைத்தலே அநாவர்த்தனம் எனப்படும். நித்திய, நைமித்தியக் கிரியைகள் நடைபெற்ற ஆலயம் தடைப்பட்டு அவ்வாலயம் பல காலம் கைவிடப்பட்டுப் பின்னர் அதனைப் புனருத்தாரணம் செய்து நடை பெறும் கிரியையே ஆவர்த்தனம் ஆகும். நித்திய, நைமித்தியக் கிரியைகள் நடைபெறும் ஆலயத்தில் மண்டபங்க ளையோ, கோபுரங்களையோ திருத்தி பாலஸ்தானம் செய்து பழுதடைந்த கட்டிடங்களைத் திருத்கிப் ந ை பெறும் கிரியையே புனராவர்த்தனம் ஆகும். தேவாலயங்களில் விதி தவறி நடக் கக் கூடாத காரியங்கள் நடைபெற்றால் மேற்கொள்ளப்படும் கிரியை பிராயச்சித்தம் எனப்படும்,

Page 159
"سس.230--
மேற்கூறிய கிரியைகளிற் கைதேர்ந்தவர்கள் பிராமணகுலத்த வர்கள். அக்காலத்தில் வட-கிழக்குப் பகுதிகளிலும் இவர்கள் வாழ்ந் ததை யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை, வையாபாடல் போன்ற குறிப்புகளில் மட்டுமன்றிக் கோணேசர் கல்வெட்டு, தகSண கைலாச புராணம், திருக்கோணாசல புராணம் ஆகிய வற்றின் மூலம் அறியக்கிடக்கின்றது. திருக்கோயில் நிர்மாணம், அவற்றின் அங்கங்கள், கோபுரங்கள், தீாத்தங்கள், பிராமணர் அக்கிரகாரங்கள் போன்றன- அதாவது "மூர்த்தி, தலம், தீர்த்தம்" ஆகியன அக்காலத்திலும் முக்கிய இடத்தினை வகித்ததையும் மேற்கூறிய நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதனால் வேதாகம முறைப்படியே அக்காலத்திற் கோயில்கள் கட்டப்பட்டு மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதோடு இவற்றின் நித்திய, நைமித்தியக் கிரியைகளும் அமைந்திருந்தன எனலாம்.
இக்காலக் கோயில்கள் யாவும் போத்துக்கேயராற் சிதைக்கப் பட்டதால் அவற்றின் தோற்றம் பற்றி நாம் விரிவான தகவல் களைப் பெற முடியாவிட்டாலும் கைலாயமாலையிற் காணப் படும் கோயில் நிருமாணம், பிரதிஷ்டா கிரியைகள் அக்காலத்தில் ஏனைய கோயில்களில் நடைபெற்ற அத்தகைய கிரியைகளுக்கு உரைகல்லாக அமைவதால் அது பற்றி இங்கே குறிப்பிடுவது அவசியமாகிறது.
கைலாசநாதர் கோயிலை ஆரியச் சக்கரவர்த்தி நிர்மாணிக்க நினைத்த போது மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி கைலாய மாலை பின்வருமாறு ("நிப்பிடுகிறது.113
a e a 0 - 0 களித்து மனப் பூரணம தாகிப் புனிதா லயமியற்றக் காரணமாய் நன்முகூர்த்தங் காட்டுவித்து - ஆரணத்திற் சொன்னமுறை தப்பாமற் சுற்றிச் சுவரியற்றி மன்னுசபை மூன்றும் வகுத்தமைத்து - உன்னி அதிசயிப்ப வீசனுறை யாலயமாற் றிப்பார்ப் பதிகோவில் பாங்கருறப் பண்ணி - விதியாற் பரிவார தேவர் பதியாக சாலை உரிதா மிடங்களி லுண்டாக்கி - அரிதான உக்ராண வீடுமமைத் தோதுதிரு மஞ்சனத்து மிக்கதிரு வாவியுடன் வெட்டுவித்து - முக்யமுறு மாமறையோர் வாழு மணியா ல பங்கள்செய்து ஓமமுறை செய்யுமிட முண்டாக்கிச் - சாமநிதம் ஒதுவிக்கு மாலயஞ்செய் துண்டுபசிதீர்ந்துவைக

ー231ー
ஒதனத்தா னப்பதியு முண்டாக்சிச் - சோதியுறை தேரோடும் வீதி திருத்திமட முஞ்சமைத்துக் காரோடும் பொங்கர்களும் காரணித்துச் - சீரான செம்பதும வோ டைகளுஞ் செய்யமணி மேடைகளும் உம்பாபதி யென்னமகிழ்ந் துண்டாக்கி"
கைலாயமாலை இத்தலத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகக் கிரியைகள் பற்றிக் கூறுவதும் ஈண்டு அவதானிக்கத்தக்கவை.14 இத்தகைய வர்ணனை அக்காலத்தில் வடபகுதியிற் காணப்பட்ட எல்லாக் கோயில்களுக்கும் பொருத்தமானதொன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமன்றி இப்பிரதேசத்தில் நடை பெற்ற இக்குடமுழுக்கு விழா பற்றிக் கிடைக்கும் மிகப்பழைய இலக்கியச் சான்றாக இது அமைவதால் இது பற்றி இங்கே விபரிப்பது பொருத்தமாகிறது. இவ்வைபவத்திற்காகக் கோயிலின் உள்ளும் புறமும் அமைக்கப்பட்ட பந்தலின் பந்தற்கால்கள் சந்தனக்கட்டைகளால் அமைக்கப்பட்டு இதன் மேற் சலாகைகள் நிரையாகப் பரப்பப்பட இது அழகிய பொன்னிறமான பந்தல் போன்று காட்சி தந்தது.
புதிய சேலைகளால் இப்பந்தலுக்கு வெள்ளையும் கட்டப் பட்டுப் பச்சை, கறுப்பு, சிவப்பு நிறச்சேலைகளால் வரிசையாயும் இது அலங்கரிக்கப்பட்டதோடு அசைந்தாடும் கொடிகளும் இதிற் கட்டப்பட்டன. பந்தலில் பவளங்களிலான சரங்களும் தொங்க விடப்பட்டிருந்தன. பின்னர் இதிற் பொற் குவியலைப் போன்று காட்சிதரும் வண்ணம் தருப்பைப் புல்லும் பரப்பப்பட்டது. மேலும் பாக்கு மரக்குலை, பழுத்த வாழைக்குலை, தாழைப் பழம் ஆகியனவும் கட்டப்பட்டுப் பந்தல் அலங்கரிக்கப்பட்டது. கும்பம் வைத்து ஆகுதி செய்வதற்கான இடம் வளைந்த வில் லைப் போன்ற வடிவில் அந்தணரால் அமைக்கப்பட்டது. இதில் வைக்கப்பட்ட கும்பமும் மிக அழகிய சேலையினாற் சுற் றிக் கட்டப்பட்டுமிருந்தது. கோயிலின் இரு மருங்கிலுமுள்ள வீதிகளும் பச்சைக்கமுகு, பல்வேறு எண்ணிக்கையிலான வாழை மரங்கள், கரும்பு, மணிமாலைகள், தோரணங்கள் ஆகியனவற் றாற் பொன்னிறமான நகரைப்போலக்காட்சி தரும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டன. மதில் சூழ்ந்த ஆலயமம் அழகிய சந்தணத் தால் மெழுகப்பட்டிருந்தது. இத்துடன் ட ஒளிவீசும் மாணிக் கக்கல், நீலம், வைடூரியம், வைரம் ஆகியன ஆக்கப்பட்ட சிங்கா சனமும் உருவாக்கப்பட்டது. இதன் பின்ன. குற்றமற்ற மறை யோரான கங்காதரக்குருக்கள் நீராடியபிrrர் கையிற் காப்புத் தரித்து, ஒமாக்கிணியை வளர்ட்பதற்குச் சித்து இடப வடிவிலான

Page 160
ー232ー
உருவத்தை வரைந்து அதன் மேல் எட்டுத் திசைகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட சுத்தமான அரிசியைத் தாமரைப்பூ வடிவிற் பரப்பி ஐந்து வண்ணப்பொடியினால் அதனை அலங்கரித்துப் பச்சை நிறத்தருப்பையை அதன் மேற் பரப்பி அதன் மேற் பொற்குடத்தையும் வைத்து மிக அழகிய மலர்களைத் தூவிக் கைகூப்பித் தொழுதார். இக்குடத்திற்குச் சிவந்த பொன்பட்டுச் சாத்தி முளைப்பாலிகையும் இதன் மேற் பரப்பப்பட்டது. கங்கா தரக்குருக்கள் பின்னர் சிவபெருமான் அருளிய ஆகம மந்திரங் களை ஆவாகனஞ் செய்து பூசித்தார். பின்னர் சந்திரசேகரரான சிவனின் அருகிலே உமையின் உருவமும் வைக்கப்பட்டு இதற்குப் பொன்னிறப்பட்டாடைகள் ஆபரணங்கள் சாத்தப்பட்டன. தூப மிடப்பட்ட பின்னர் இவ்வுருவங்களின் மலர்ப்பாதங்களில் சண் பகம், அலரி, தாமரை, திருக்கொன்றை ஆகியனவற்றின் மலர்கள் வேதமந்திரங்களை உச்சாடனஞ் செய்து சாத்தப்பட்டன. ஆண்ட வனுக்கு நிவேதனப் பொருளாக மடையாகப் பல்வேறு வகை யான அன்னவகைகள் சம்பா அரிசியிற் சமைக்கப்பட்டு மேருமலை போற் குவிக்கவும்பட்டன. இதனுடன் மாம்பழம், பலாப்பழம். வாழைப்பழம் ஆகியனவும் மலைபோற் குவிக்கப்பட்டன. மேலும் செவ்விளநீர், தேன், நெய், பலகாரவகை, பால் ஆகியனவும் படைக்கப்பட்டு வச்சிரமணி பதிக்கப்பெற்ற அழகிய காளாஞ்சி யில் வெற்றிலை பாக்கும் வைக்கப்பட்டன.
இவ்வாறு கிரியைகள் நடைபெற்றபோது முத்துமாலைகள் தூங்கும் வெண்கொற்றக் குடை நிழல் கொடுத்தது. ஆலவட்ட மும் பிடிக்கப்பட்டது. மங்கள வாத்தியங்களான சல்லரி பேரிகை, தவில், முரசு, தண்ணுமை போன்றன ஆர்த்தன. மந்திரங்கள் ஒலித்தன. வணிதையர் பல்லாண்டு கூறி நின்றனர். அழகிய சாம ரைகள் இரட்டின. தேவரடியாரான பெண்கள் அங்கங்களை அசைத்து நடனமாடினர். பதினாறு விதமான பூசா உபசாரங்கள் முடிந்த பின்னர் திரு மஞ்சனக் குடத்தைக் கையிலேந்திக்(கங்கா தரக் குருக்கள்) கைலாசநாதராகிய சிவனின் ஒளிவீசும் அழகிய திருமேனியில் அபிஷேகஞ் செய்தார்.
மேற்படி கிரியைகளும் அபிஷேகமும் நடைபெற்ற போது மகிழ்த்து சிவபிரான் பார்வதி சமேதராய் இக்கைலைமீது உறையத் தமது பரிவாரங்களுடன் வந்தடைந்தார். நல்லூர்க் கைலையை வந்தடைந்த சிவபிரான் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட தமது திவ்ய மங்கள விக்கிரகத்திற் சானித்தியமாய் கர்ப்பூரதீபாராத னைகளை எல்லாம் அகமகிழ்ந்து ஏற்றுக் கொண்ட பின் அலங் கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதிவலம் வந்து மீண்டும் திருக்

-233
கோவிலிற் புகுந்து அரசரும் குடிகளும் சிறப்புடன் வாழுமாறு அருள்பாலித்ததைப் பின்வரும் அடிகள் உணர்த்துகின்றன.115 அவையாவன,
... வெத்தை பிரா னெல்லாரும் போற்ற வெழிலினுட னேயமைத்த நல்லூர்க் கயிலைதனி னாடிவந்து - சொல்லரிய கர்ப்பூரதீபங் கனகமடன் மீதெடுப்பச் சிற்பரணி தெல்லாஞ் சிறந்துவந்து - பொற்பினொடு செப்புமலங் காரமிட்ட தேரி லெழுந்தருளி யப்பரிசே யாரு மணிந்துவர - வொப்பரிய வீதிவல மாகவந்து மேவுமனி யாலயம்புக் மாதிபர ணங்கே யமர்ந்துறைந்து - நீதியுறு மன்னவருஞ் சீரு மனிதர்களும் வாழ்த்திருக்க யுன்னியருள் செய்தா னுகந்து"
திருக்கோயிலில் நடைபெறும் கிரியைகள் நித்திய, நைமித் தியக் கிரியைகள் என்ற இரு பிரிவில் அடங்கும். மூன்று, ஆறுகாலங்களில் நடப்பதே நித்திய கிரியையாகும். வரு டத்தில் குறிப்பிட்ட தெய்வங்களுக்கென எடுக்கப்படும் விசேட நைமித்திய விழாக்களும் உண்டு வருடாந்தம் விசேஷ மாக நடைபெறும் கிரியையே மஹோற்சவமாகும். இவைய7வும் பஞ்சாங்கத்திற் கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கமையவே நடைபெறும். மஹோற்சவம் பத்துநாட்கள் தொடக்கம் இருபத் தைந்து நாட்கள் வரை நடைபெறுவது வழக்கம். வேதாகமங் களிற் கைதேர்ந்தோரே இக்கிரியைகளை நடாத்தி வைப்பது வழக்கம். கொடியேற்றம் தொட்டுக் கொடி இறக்கம் வரையி லான கிரியைகள் உள116 உற்சவமூர்த்திகள் இவ்விழாக்களின் போது அலங்கரிக்கப்பட்டு வெளியே எடுத்து வரப்படுவர். ஒவ் வொரு மூர்த்திக்கும் ஒவ்வொரு வாகனம் உண்டு. அவையா வன, பிரமாவுக்கு அன்னம், விஷ்ணுவுக்கு கருடன், சிவனுக்கு நந்தி, பார்வதிக்குச் சிங்கம், முருகனுக்கு மயில், கணேசனுக்கு எலி, வைரவருக்கு நாய், ஐயனாருக்கும் சூரியனுக்கும் குதிரை ஆகும். முக்கியமாக ஆலயங்களிற் காணப்படும் தேர்கள் அலங் கார வேலைப்பாடுடையனவாக, அக்காலச் சிற்பிகளின் கைவண் மைக்குச் சிறந்த உதாரணங்களாக விளங்குகின்றன எனலாம். இவற்றுள் இருவகை உண்டு. ஒன்று கட்டுத்தேர் மற்றது செய் கைத்தேர். செய்கைத்தேரிலேயே சிற்ப அலங்கார வேலைப் பாடுகள் உள்ளன. இத்தகைய சிற்ப அலங்கார வேலைப்பாடு கள ஆலயத்தின் கோபுரங்களிலும் காணலாம். ஆலய நிகழ்ச்

Page 161
-234
சிகளிலே திருமுறை ஒதலும், பல்வேறு இசைக்கலைஞர்களின் இசை முழக்கமும் இடம் பெறுவது வழக்கம். சமகாலச் சந்தேஸய நூல்களிற் சிங்கள இராச்சியத்தில் இந்து ஆலயங்களிற் காணப் பட்ட வழிபாட்டு நெறிகள் பற்றிவரும் குறிப்பும் இதனை எடுத்துக் காட்டுகிறது. 117
இக்குறிப்புகளைக் கைலாயமாலையில் நல்லூர்க் கைலாச நாதர் கோயிற் பிரதிஷ்டா வைபவறிகழ்ச்சிகள் பற்றிக் காணப் படும் வர்ணனையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது சமகாலத் தில் ஈழத்தில் இந்துக்கோயில்கள் யாவற்றிலும் நடைபெற்ற நித்ய நைமித்திய பூசைகள், அவற்றிற் பங்கு கொண்ட இசைக் கலைஞர்கள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. 118 அஃதாவது,
'--------------- -------- Gæ10 tol-sÖ சல்லரி பொற் பேரி தவின் முரசு தண்ணுமைமற் றெல்லா முரசு மெழுந் தொலிப்பச் - சொல்லரிய மங்களங்க ளார்ப்ப வனிதையர்பல் லாண்டி சைப்பப் பொங்குங் கவரி புடையிரட்டப் - பங்கமுடன் நாடகத்தின் மாதர் நடிக்கத் தொனியெழுப்பச் சோடசபூ சாவிதங்க டோற்றமிட்டு."
மேற்கூறிய வர்ணனை அக்காலத்தில் வடபகுதியிற் காணப் பட்ட ஆலய வழிபாட்டிற் காணப்பட்ட பூசையலங்காரங்கள், பண்ணிசை, வாத்திய இசைகள், நடனங்கள் ஆகியனவற்றை எடுத்துக் காட்டுகின்றன எனலாம்.
இந்துக்களின் பஞ்சாங்கத்தில் வருடம் உத்தராயணம், தக் கூழிணாயணம் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கலுடன் தொடங்கி ஆடிப்பிறப்பு வரையிலுமுள்ள 5rta) பகுதி உத்தராயணமாகும். இப்பகுதியிலேதான் ஆலயத்தோடு தொடர்புடைய கிரியைகள் மட்டுமன்றித் திரு மணம் போன்ற நற்கிரியைகளும் நடைபெறுவது வழக்கம். நாட் களும் கூட சுக்லபக்ஷம், கிருஷ்ணபசுஷம் என அமாவாசை, பெளர்ணமி போன்றனவற்றை மையமாக வைத்துப் பிரிக்கப் பட்டுள்ளன. கிரகங்களின் செயற்பாட்டிலும் இக்காலத்தில் நம் பிக்கை இருந்தது. கிரகங்களுக்குரிய சாந்தியாக நவக்கிரக வழி பாடு முக்கியம் பெற்றது. பிறப்புத்தொட்டு இறப்பு வரை ஒரு வரின் வாழ்வு இக்கிரகங்களின் செயற்பாட்டைக் கொண்டே வழிநடாத்தப்படுகின்றது என்ற நம்பிக்கையும் இன்று போல்

-235
அன்றும் இருந்தது எனலாம். பஞ்சாங்கத்தினை அனுஷ்டித்தே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்துக்களின் வாழ்வில் விரதங்கள் முக்கிய பங்கினை வகித்தன அம வாசை, பெளர்ணமி விரதங்கள் இவற்றுள் குறிப்பிடத்தக் கன. இவற்றுட் சித்திரையில் வருகின்ற பெளர்ணமியும், ஆடி அமn வாசையும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டன. மற்றும் ஆலய விழாக்களுக் குரிய விரதங்களும் அனுஷ்டிக்கப்பட்டன. இத்தகைய விரதங்களிற் கந்தஷஷ்டி சிறப்பான விரதமாக அன்று தொடக்கம் பேணப் பட்டு வருகிறது.
பொதுவாக யாழ்ப்பாண கலாசாரத்தினைப் பற்றி எழுதும் போதெல்லாம் இதன் கலாசாரத்தினைக் கந்தபுராணக் கலா சாரம் என்று கூறுவது வழக்கம். காரணம் இக்காலத்திற் கச்சி யப்ப சுவாமிகளால் எழுதப் பெற்ற கந்தபுராணம் இக் கலா சாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினை வேறொரு நூலும் ஏற் படுத்தாததே எனலாம்.
கணபதிப்பிள்ளை அவர்கள் கந்தபுராணக் கலாசாரம்" என்ற தலைப்பில் ஒரு நூலையே எழுதியுள்ளார்.119 இது பற்றி அவர் கூறியதாவது.
"யாழ்ப்பாணத்திலுள்ள கற்றவர்களும் மற்றவர்களும் கந்த புராணத்தை அருணுரல் வரிசையில் வைத்து ஒரு திருமுறையாகவே போற்றிப் பேணி வருகிறார்கள். கற்று முதியவர்களாய் இப்பொழுதும் இருக்கின்றவர்கள் சிலர் கந்தபுராணத்தில் ஒவ்வோர் பகுதியை ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் 'திருச்சிற்றம்பலம்’ என்று சொல்வதோடமையாமல் 'கச்சியப்ப சிவாசாரிய சுவா மிகள் திருவடி வாழ்க’ என்று ஆராமைமிக்குச் சொல்லி வருகிறார்கள்."
இத்தகைய கலாசாரத்தின் ஊற்று யாழ்ப்பாண ஆரியச்சக் கரவர்த்திகள் காலத்திலே ஆரம்பித்துவிட்டதென்பதை வேலுப் பிள்ளை எடுத்துக்காட்டியுள்ளமை கருத்திற் கொள்ளத்தக்கது. 120 ஆரியச்சக்கரவர்த்திகளின் வம்சத்தினைச் சேர்ந்த அரசகேசரி தமிழில் இயற்றிய இரகுவம்மிசத்திலிருந்தே இதற்கான ஆதா ரத்தினையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். யாழ்ப்பாணத் திலே கந்தபுராண கலாசாரம் நிலைகொள்ளத் தொடங்கிய மைக்கு அரசகேசரியின் நூலிலிருந்து சில குறிபபுக்களைக் காட் டலாம் எனத் தொடங்கி அதற்காதாரமாக இரு செய்யுள்களை யும், அவற்றின் பொருளையும் தந்துள்ளார். முதலாவது செய்யுள் ஆற்றுப்படலத்திலே காணப்படுகிறது.121

Page 162
-236
தடவரை எறிந்திட் டர்ரத் தாருக னுாறி வெய்ய வடலையி னெ ரிகட்டான வரையிற மடித்து வாரி விடமென வயிர வன்ம வீட்டுபு செவ்வேள் வென்றிப் புடைபட விளங்கும் வைவேல் போலவும் போயிற் றன்றே"
மேற்கூறிய செய்யுளிலே கந்தபுராணத்தின் யுத்த காண்டத்து முக்கிய செய்திகள் கூறப்பட்டதை எடுத்துக்காட்டிய வேலுப் பிள்ளை இந்நூலின் நாட்டுப் படலத்தில் வரும் மற்றுமோர் செய்யுளையும் மேற்கோளாகக் கொண்டு முருகன் அவதரித்த போது சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளைக் கண்ட கார்த்திகை மாதர் அறுவர் ஆளுக்கொரு குழந்தையாக எடுத்து வளர்த்த செய்தியை இது எடுத்துரைக்கிறது எனவும் கூறி அதற்கா தாரமாகப் பின்வரும் செய்யுளையும் எடுத்துக் காட்டியுள்ளார் 122
"ஊன்கொடுத்திடும் வேற்கணார்க் கொதுங்கிடு மாம்பல் கான்கொ டுத்திடுங் குவளைநாட் கமலமூ விரண்டும் வான்கொ டுத்திடு மன்னைய ரறுவரின் வழிபாற் றேன்கொ டுத்திட முருகனின் வளர்ந்தன செந்நெல்*
கந்தபுராணம் மட்டுமன்றிச் சைவசித்தாந்த தத்துவமும் இக் காலத்திற் செல்வாக்குடன் இப்பகுதியில் விளங்கியதற்கு ஆதா ரமாக அரசகேசரியின் பாயிரத்திற் காணப்படும் செய்யுளொன்றை வேலுட் பிள்ளை மேற்கோள் காட்டியுள்ளமையும் ஈண்டு அவதா னிக்கத்தக்கது.128 அஃதாவது
*கோதி கந்த குரவர் பரஞ்சுட ராதி யாறறு தத்துவ மல்ல தென் றோதி நின்ற குணங்குறி யோதிலார் சோதி யென்பதை யாமுந் துதித்துமே”
தீர்த்தம் - யாத்திரை
மூர்த்தி, தலம் மட்டுமன்றித் தீர்த்தங்களும் இக்காலத்திற் சிறப்புப் பெற்றிருந்ததோடு தெய்வீகத்தன்மை பெற்றும் காணப் பட்டதை இக்கால நூல்களும் எடுத்துக் காட்டுகின்றன. கீரி மலை விசேட தீர்த்தமாக இந் நூல்களில் விளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண வைபவமாலை124 இத்தீர்த்தத்தின் அருகிலமைந்தி ருந்த திருத்த: பலேஸ்வரர், திருத்தம்பலேஸ்வரி ஆலயங்கள் பற் றிக் குறிப்பிடுவதோடு, மாருதப்புரவல்லி கதையில் அவள் இதிலே தீர்த்தமாடியதாற் குதிரைமுகம் மாறித் தனது இயற்கையன அழகிய முகத்தினைப் பெற்றாள் எனவும் கூறுகிறது. மாவிட்ட

-237
புரக்கோயில், கீரிமலைச் சிவன் கோயில் ஆகியனவற்றின் தீர்த்தக் கரை கீரிமலைக் கடலிற்றான் உண்டு என்பது ஈண்டு குறிப்பிடத் தக்கது. இவ்வாறே ஆடி அமாவாசையில் விரதம் அனுஷ்டிப் போர் இங்கு தீர்த்தமாடுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறே திருக்கேதீஸ்வரத்தில் அமைந்துள்ள பாலாவியும் சிறப்பான தீர்த்தமாகப் பேணப்பட்டதை தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன. தலம், தீர்த்தம் ஆகியனவற்றின் மகிமை யால் மாதோட்டமும் புண்ணிய ஷேத்திரமாகக் கி. பி 9ஆம் 10ஆம் நூற்றாண்டிற் காணப்பட்டதைச் சிங்களக் கல்வெட்டுக் கள் உணர்த்துகின்றன. இக் கல்வெட்டுகளிற் குறிப்பிட்ட தானத் திற்கு இடையூறு செய்வோர் மாதோட்டத்திற் பசுவைக் கொன் நீறால் ஏற்படக் கூடிய பாபத்தைச் சம்பாதிப்பர் எனக் கூறப்பட் டுள்ளது 125 பசு இந்துக்களின் புனிதப் பொருள் என்பது ஈண்டு நினைவு கூரற்பாலது இவ்வாறே திருக்கே ணேஸ்வரம் அமைந் திருக்கும் இடத்தின் தீர்த்தமாகிய பாபநாசம்’ புண்ணிய தீர்த்த மாக மதிக்கப்பட்டுள்ளதை கோணேசர் கல்வெட்டு, திருக்கோ ணாசலபுராணம், தகூSணகைலாசபுராணம் ஆகியன எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறே திருக்கரசைப்புராணம் விளிக்கும் அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்துள்ள திருக்கரசையின் புண்ணிய தீர்த்தமாக மகாவலிகங்கையும் இந்நூலிற் போற்றப்படுகிறது."26 மகாவலி கங்கையைப் புண்ணிய நதியாகத் தகழிண கைலாச புராணமும் போற்றுகிறது இவ்வாறே கிண்ணியாவிலுள்ள ஏழு வெந்நீர் ஊற்றுக்களும் புண்ணிய தீர்த்தங்களில் அடங்குகின் றன.27 இராவணனோடு இவை இணைத்துக் கூறப்படுவது இவற் றின் பழமைக்குச் சிறந்த உரைகல்லாகும் கதிர்காமத்திலுள்ள மாணிக்ககங்கையும் புண்ணிய தீர்த்தமாகத் தகதிணகைல 'ச புராணம் போன்ற நூல்களில் மட்டுமன்றி இக்காலக் கல்வெட்டு களிலும் போற்றப்படுகிறது.128 உதாரணமாக கி பி. 17ஆம் நூற்றாண்டுக்குரிய சம்மாந்துறைச் செப்பேட்டிற் கூறப்பட்டுள்ள ஒழுங்குகளுக்குக் குந்தகம் விளைவிப்போர் பெறும் கதிகள் பற்றிப் பின்வருமாறு கூறப்படுகின்றது. அதன் வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது.129
"இதில் யாதா மொருத்தர் தடை பண்ணினால் காசி லெராமெசுவரத்திலெ கதிர்காமத்தில் மாணிக்க கெங்கையிலெ தீயிட்ட பாவத்தில் பொவராகவும்"
இதன் முக்கியத்துவம் யாதெனிற் சதிர்காமமும் அதன் தீர்த்த முமாகிய மாணிக்க கங்கை இந்துக்களின் புண்ணியஷேத்திரங்க ாான காசி, இராமேஸ்வரம் ஆகியனவற்றுடன் இணைத்துக்

Page 163
ー238ー
கூறப்பட்டுள்ளதேயாகும். அவை போன்று இத்தலமும் இக் காலத்திற் புண்ணியஷேத்திரமாக விளங்கியதும் இதில் அங்கீக ரிக்கப்பட்டுள்ளது. ஈழத்து நதிசளும் ஷேததிரங்களும் மட்டு, மன்றி இந்துக்களின் புனித நதியாகிய கங்கையும் இக்காலக்கல் வெட்டுக்களில் விளிக்கப்படுவதையும் காணமுடிகிறது. ஆரியச் சக்கரவர்த்திகள் கங்கையைப் போன்று புனிதத் தன்மை கொண்ட யமுனை நதியின் தீர்த்தத்தினைத் தமது தலைநகரில் அமைத்த தடாகத்தில் வருவித்து அதனைப் புனிதப் பொருளாகப் பேணி யதுமட்டுமன்றி *கங்கை நாடன்' என்ற விருதையும் பெற்றிருந் தமை அவதானிக்கத்தக்கது. தகழிண கைலாசபுராணத்தில் யமு னைத் தீர்த்தத்தை நல்லூரில் வரவழைகது ஆரியச்சச்கரவர்த்தி அதில் ஸ்நானம் செய்த 4 ன் விளைவாகத் தனது வியாதியைக் குணப்படுததியமையும் சட்டநாதர் கோயிலைப் போஷித்தமை யும் கூறப்படுகிறது.130 யாழ்ப்பாணத்திலுள்ள உரும்பிராய் கருணாகரப்பிள்ளையார் கோவிலிற் கிடைத்த அக் கல்வெட்டிற் கூறப்பட்டுள்ள ஒழுங்குகளை மீறுவோர் கங்கைக்கரையிலே கோவதை செய்த பாவங்களுக்குரிய தண்டனையைப் பெறுவர் எனவும் கூறப்படுகிறது.131 இதே போன்று திருகோணமலை மாவட்டத்திற் கிடைத்துள்ள கங்குவேலிக் கல்வெட்டிற் "கெங்கை கரையிலே காராம் பசுவைக் கெ(ான்)ற பாபம் கெ(ாள்)ளக்கடவர்" என்பதும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பிலுவில் கல்வெட்டில் "கெங்கைக் கரையில் காராம் பசு வைக் கொந்ற பாவத்தை கொள்ளக் கடவாறாகவும்" என்ற வாசகமும் காணப்படுவது அவதானிக்கத்தக்கது.132 கங்கை மட்டுமன்றிச் சேதுக்கரையும் அதனை அண்டியுள்ள இராமேஸ் வரப் பகுதியும் புண்ணிய ஷேத்திரங்கள் காணப்பட்ட இடமாக விளங்கியதோடு யாத்திரிகர்கள் தரிசிக்கும் இடமாகவும் காணப் பட்டமை குறிப்பிடத்தக்கது. சேதுக்கரையின் சிறப்பினையும், அதிலே தாம் கொண்டு இருந்த ஈடுபாட்டினையும் எடுத்துக் காட்டவே ஆரியச் சக்கரவர்த்திகள் தமது நாணயங்களிற் "சேது" என்ற வாசகத்தினைப் பொறித்தனர் எனலாம்.
யாத்திரை செய்யும் மரபும் இக்கால இந்துமதத்திற் காணப் பட்டது. இபின் பற்றுற்றா தனது நூலில் ஆரியச் சக்கரவர்த்தி தான் சிவனொளிபாத மலையைத் தரிசிக்கச் சென்றபோது ஆரியச் சக்கரவர்த்தி தனக்கு நான்கு யோகியர்கள், நான்கு பிராமணர்கள், பல்லக்குத் துரக்குவோர், தமக்குரிய தேவையான பொருட்களைச் சுமப்போர் ஆகியோரை அளித்துத் தனக்குதவியதாகக் கூறியுள்ளார்.183 இத்தகைய கூற்று இக்கா லத்திற் சிவனொளிபாதமலை ஒரு யாத்திரைத் தலமாக விளங்

- 239
கியதை எடுத்துக் காட்டுகின்றது எனலாம். கதிர்காமமும் ஈழத் தவர் மட்டுமன்றிப் பிற நாட்டவர்களும் தரிசிக்கும் ஓர் இடமாக விளங்கியதைச் சந்தேஸய நூல்களிலொன்ற" கிய கஹகுருலு என்ற நூலின் 198 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.184 அஃதாவது,
'நண்ப, ஈழம், வங்காளம், பர்மா, கஸ்மீரம், வடுகநாடு, கலிங்கம், நேபாளம், கெளடதேசம் ஆதியாம்பல நாடு களிலிருந்து பூசைப் பொருட்களும் காணிக்கைகளும்
கொண்டு அடிக்கடி இங்கு வரும் பக்த கோடிகளைப் பயப்படாமல் பார்."
கதிர்காமம் போன்று திருக்கோணேஸ்வரமும் இக்காலத்தில் ஒரு யாத்திரைத் தலமாக விளங்கியிருத்தல் வேண்டும். இத்தலத் தில் ஆரியச் சக்கரவர்த்தியாகிய கனகசூரிய சிங்கையாரியன் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தது பற்றி யாழ்ப்பாண வைபவ மாலை குறிப்பிடுவது நோக்கற்பாலது.136
ஈழத்தில் மட்டுமன்றி இந்திய இந்துமதவழிபாட்டிடங்க ஞக்கு யாத்திரை செய்தலும், தானம் வழங்கலும் இக்காலத்திற் காணப்பட்டன. இந்நூற்றாண்டிலுங் கூட சிதம்பர-ஆலயத்திற்கு நிலமானியம் கொடுக்கும் வழக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ள மைக்கான ஆதாரங்கள் உள. ஆரியச் சக்கரவர்த்திகள் தமிழ கத்திலுள்ள தலங்களை மட்டுமன்றி வடக்கே உள்ள தலங்களை யும் சென்று தரிசித்தவர்களாவர். இவற்றுட் காசி பிரதானமா னது. தமிழ்நாட்டுத் தலங்களில் இராமேஸ்வரம், சிதம்பரம் ஆகியன முக்கியமானவையாகும். சேது என வழங்கப்பட்ட பல புண்ணிய ஷேத்திரங்களமைந்த பகுதியிலிருந்து வந்த ஆரியச் சக்க ரவர்த்திகள் தமது ஆவணங்களிற் "சேது" என்ற மங்களப் பொருளைப் பொறித்த ஒன்றே இப்பதுதியில் இவர்கள் கொண்ட ஈடுபாட்டிற்குச் சிறந்த உதாரணமாகும். இதனால் இராமேஸ் வரம் இவர்களால் அடிக்கடி தரிசிக்கப்பட்ட தலம் என லாம். இவர்கள் இராமேஸ்வரக் கோயில் நிர்மாண வேலைகளி லுமீடுபட்டிருந்தனர் போலத் தெரிகிறது. இத்தகைய நிர்மா ணப் பணிக்கான கருங்கற்கள் திருகோணமலையிலிருந்து கொண்டு செல்லப்பட்டன. இது பற்றி ஞானப்பிரகாசர் பின்வருமாறு கூறு கிறார்.136
பரராசசேகரன் இராமேஸ்வரக் sே ாயிலின் கர்ப்பக் கிருகங்களில் வேலை செய்வித்தனன் போலும், இக்கட்டி டங்கள் திருகோணமலையில் வெட்டி எடுத்த சுருங்

Page 164
-240
கற்கள் கொண்டு பரராசசேகரனால் சக வருஷம் 1336இல் ( கி பி. 1414இல் ) சமைக்கப்பட்டன எனும் சாரமமைந்த கல்வெட்டுக்கள் அவற்றுள் ஒருகால் காணப்பட்டன. ஆயினும் 1866 ஆம் ஆண்டில் இராம நாதபுரச் சேது பதிக்கும் கோயிற் பிராமணர்களுக்கு மிடையில் வியாச்சியம் நடந்த போது ஒர் கட்சிக் கார ரால் குறித்த கல்வெட்டுக்கள் அழிக்கவும் மாற்றவும் பட்டொழிந்தன."
யாழ்ப்பாண இராச்சிய மன்னர்கள் நாள்தோறும் இராமேஸ் வரத்திற்குச் சுவாமி தரிசனஞ் செய்யப்போய் வருவார்கள் என் பதும், இவ்வாலய அபிஷேகத்திற்கு நாள்தோறும் நெடுந்தீவிலி ருந்து பாலும் கச்சதீவிலிருந்து பூவும் அனுப்பப்பட்டதென்பதும் ஐதீகம்.
சேதுகாவலர்களாகிய யாழ்ப்பாண அரசர் இந்துக்களின் சிறப்புடைத் தலங்களிலொன்றாகிய சிதம்பரம் சென்று வழிபாடு செய்து ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிப் பரராசசேகர மன் னனின் காலத்துக்குரிய செப்புச் சாசனமொன்று எடுத்துக் காட் டியுள்ளது.137 அத்துடன் சிதம்பர ஆலயத்திற்கு இம்மன்னன் தனது இராச்சியத்திலுள்ள அச்சுவேலி, புத்தூர், அளவெட்டி என்ற ஊர்களையும் மானியமாகக் கொடுத்தான். அத்துடன் தான் ஏற்படுத்திய மடத்தினைப் பரிபாலிக்கவும் தனது அறக் கட்டளைகளை நிருவகிக்கவும் தனது மந்திரிமாராகிய தில்லை யூர் சேனாபதியார், சிங்கையூர்ப்படை ஆண்டவர், தில்லியூர் குலத்துங்கர், பரநிருபசிங்கர், குல நிருவாங்கப் படையாராய்ச்சி முதலானோரின் நாலு வம்சங்களிலிருந்தும் நாலு பேரைத் தெரிந்து ஒரு குழுவை அமைத்ததோடு அக்குழுவின் தலைவனா கவும் தம்பிரான் . ஒருவரை நியமித்தான். தம்பிரானான அவ ருக்கு ‘காவிவேட்டித் தம்பிரானார் திருச்சிற்றம்பலம்," என்ற பட்டயமிடப்பட்டதையும் இது குறிக்கிறது. இத்தகைய மடம் பிற்காலத்திலும் குறிப்பாகப் பதினெட்டாம் நூற்றாண்டிலும் ஈழத்து வன்னிய தலைவர்களிலொருவனான கைலைவன்னியனா ரின் நினைவாக அளிக்கப்பட்ட தர்மசாசனத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.
இறுதியாக யாழ்ப்பாண அரசுகர்லத்தில் வடபகுதியில் செழிப் புற்றிருந்த வீரசைவர் பற்றியும் கூறுவது அவசியம் 138 வீரசைவர் என்டது சைவத்தில் ஒரு பிரிவினராவர். இவர்கள் லிங்கத்தைத் தாங்கிச் செல்வார்கள். லிங்கவழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்

-241
பவர்கள். ஈழத்துப்பாளி நூல்களையும் மட்டக்களப்பு மான்மியம் போன்ற தமிழ் நூல்களையும் ஆராயும்போது ஈழத்தில் மாக னாட்சிக் காலத்தில் வீரசைவம் சிறப்புற்றிருந்தமை தெரிகிறது.189 இதனாற் கலிங்கமாகன் ஆட்சிக்காலத்தில் ஈழத்தில் இது செல்வாக்குறத் தொடங்கியது. யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சி செய்த காலம் விஜயநகர அரசின் செல் வாக்குக் காணப்பட்ட கர்லமாகும் விஜயநகர அரசில் ‘வீரசைவம்? செல்வாக்குடன் காணப்பட்டதால் விஜயநகர - யாழ்ப்பாணத் தொடர்புகள் வீரசைவம் வடபகுதியில் மேன்மை கொள்ள வழி வகுத்தது. அத்துடன் தென்னிந்தியாவிற் குறிப்பாகத் தமிழகம் போன்ற பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்களது படையெடுப்பிற் “பண்டாரம்" என அழைக்கப்பட்ட இவ் வீரசைவர் ஈழம்நோக்கி வந்தனர்.
சிங்கள அரச சபையிலும் ஆதரவு பெற்று இவர்கள் காணப் பட்டதை நோக்கும் பாது இக்காலத்தில் வடபகுதியிலும் இது செல்வாக்குப் பெறத்தொடங்கியது என யூகிக்கலாம். "பண்டா ரம்" என்றாற் பெருமாளுக்குப் பணிவிடை செய்யும் களஞ்சியப் பொறுப்பாளர் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. யாழ்ப்பாண வைபவமாலையில் வரும் "கந்தசுவாமி கோயிற் பணிவிடைக்கார னாக இருந்த சங்கிலி பண்டாரம்” என்பதன் திரிபாகிய பண் டார" என்ற விருதைத் தாங்கிய மன்னர்கள் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலி பண்டாரம் என அழைக்கப்படுகிறான். சங்கமர் - ஆளி . பண்டாரம் என்பதன் திரிபே 'சங்கிலி பண்டாரம் எனக் கொள் வர் சிலர். விஜயநகரச் செல்வாக்காற் கோயில் நிருவாகத்திற் குப் பொறுப்பாக இருந்த “பண்டாரம் வாரியம்’ என அழைக்கப் பட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வந்தனர் என்றும் இதன் காவ லனாக மன்னன் விளங்கியதால் இவனுக்குப் பண்டாரவாரியத் தலைவன் என்ற பெயர் வழங்கப்பட்டதென்றும் இதன் குறுக் கமே "பண்டாரம்" எனவும் வாதாடுவர் சிலர். வீரசைவரில் ஒரு பிரிவினர் "சங்கமர்” என அழைக்கப்பட்டனர். சிவன் கோயில் களிற் பூசை செய்பவர்கள் இவர்களே. மட்டக்களப்பில் இவ்வழக்கமுண்டு. இவர்களை மேற்பார்வை செய்ததை எடுத் துக்காட்டும் சொல்லாகிய "ஆளி சங்கமருடன் புணர்ந்ததன் வடிவமே (சங்கமர்-ஆளி) சங்கிலியாக மருவியதெனவும் கொள் ளப்படுகிறது. வையாபாடலிலும் சங்கமர் பற்றிய குறிப்புண்டு. Lunt GFL5(5th இவர்களேயாவர். திருக்கோணேஸ்வரத்தில் கி. பி. 12 ஆம் நூற்றாண்டில் பூசகர்களாக விளங்கியவர்கள் பாசுபதரே ஆவர்.

Page 165
س-242 س--
யாழ்ப்பாணத்தில் இன்று வீரசைவர் அளவெட்டி, பண்ணா கம், தையிட்டி, கீரிமலை, பருத்தித்துறை, தீவுப்பகுதி, உரும்பி ராய், வண்ணார்பண்ணை, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களின் பணி யாழ்ப்பாண அரசு காலத்தி லும் சிறந்து காணப்பட்டிருந்தது. டச்சுக்கார ஆவணங்கள் குறிப் பிடும் தவசி என்ற வகுப்பினர் இவர்களே எனக் கொள்ள லாம். இவர்களது பணி பற்றி ஆராய்ந்த சண்முகசுந்தரம் இவற்றை நான்கு பிரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அவை யாவன, (1) கிராமியக் கோயில்களில் ஆற்றும் பணி (2) வேதா கம முறைப்படி நடக்கும் கோயில்களில் ஆற்றும் பணி. (3) சோடனை, சப்பரம், காவடி ஆகியவற்றை அமைக்கும் பணி. (4) கலைப்பணி, கூத்து, கரகம், காவடி, பண்ணிசை, உடுக்குப் பாட்டு, இசைச்சொற்பொழிவு ஆகியவற்றை வளர்க்கும் பணி.
கிராமியக் கோயில்களிற் பூசாரிமாராக" நின்று வழிபாட்டு நெறியாளர்களாக இவ்வீரசைவர்கள் விளங்குகின்றனர். நித்திய பூசை, விளக்குவைத்தல், பொங்கல், மடை, குளிர்த்தி, கஞ்சி வார்த்தல் ஆகியனவற்றை இவர்களே முன் நின்று செய்கின்ற னர். கிராமத்துக் கோயில்களில் நடைபெறும் கண்ணகி கதைப் பாட்டு, சித்திரபுத்திர நாயனார் கதைப்படிப்பு ஆகியனவற்றை யும் இவர்களே நடாத்தி வைப்பர். இக்கோயிலசளில் நடை பெறும் கரகம், காவடி, கூத்து, உடுக்குப்பாட்டு, இசைப்பாட்டுக் கதை ஆகியனவற்றிலும் இவர்களின் பங்களிப்புக் குறிப்பிடத் தக்கது. இவர்களுக்கு வைத்தியம், சோதிடம் ஆகிய துறைகளிலும் ஈடுபாடுண்டு. வேதாகமக் கோயில்களிலும் இவர்களின் தொண்டு அவசியமாகக் காணப்படுகிறது. கோயில்களிற் சங்கு வாத்தியம் ஒலித்தல், மத்தளம் வாசித்தல், திருமுறை ஒதுதல், பூந்தோட் டத்தினை மேற்பார்வை செய்தல், பூ எடுத்தல், மாலை கட்டுதல், சமித்துவகைகளைச் சேகரித்துக் கொடுத்தல், சாத்துப் படிக்கு வேண்டியவற்றைச் செய்தல், சப்பரம், மஞ்சம், தண்டிகை, பூந் தொட்டி, திருத்தொங்கல் என்பனவற்றைக் கட்டுதல் முதலியன இவர்களின் பணியாகிறது. வீடுகளில் நடைபெறும் விழாக்கள், கிரியைகள் ஆகியனவற்றிலும் இவர்கள் பங்கு கொள்ளுகின்றனர். திருமண வீட்டிற்கு வேண்டிய பந்தற் சோடனை, மணவறை, கழுத்து மாலை, சமித்துவகை ஆகியனவற்றை வழங்குபவர்களும் இவர்களே. இறுதியாக மக்கள் கலைக்கு இவர்கள் ஆற்றிவரும் பங் களிப்பும் குறிப்பிடத்தக்கது. கூத்து, காவடி, கரகம், உடுக்குப் பாட்டு, பண்ணிசை, இசைச் சொற்பொழிவு, ஆகியனவற்றையும் இவர்களே நடாத்தி வருகின்றனர். திக்தி, சங்கு, முகவீணை, புல்லாங்குழல், மிருதங்கம், கெஞ்சிரா, கடம் போன்றவற்றை

ー243ー
இசைப்பதிலும் இவர்கள் கைதேர்ந்தவர்கள் "சுருங்கச் சொன் னால் மக்கள் கலை யாவும் வீரசைவர் இரத்தத்திலே கலந்து விட்டன எனலாம். மக்கள் கலைக்கு மதக்கடமையும் உண்டு. சமுதாயக்கடமையும் உண்டு, இசைமூலம் கடவுளை வணங்கலாம். பொது மக்களை மகிழ்விக்கலாம். இவ்விரண்டு பணிகளையும் வீரசைவர் நன்கு செய்து வருகின்றனர்."
எனவே யாழ்ப்பாண அரசு கால இந்துமதம் இதற்கு முன்னர் ஈழத்திற் பெற்றிருந்த வளர்ச்சிகளின் முதிர்ச்சி யினை எடுத்துக் காட்டும் அதே நேரத்திற், சமகாலத்திலே தமிழகத்துடன், கொண்டிருந்த தொடர்பினாலும் பல்வகை வளர்ச்சிகளைக் கண்டது எனலாம். இத்தகைய வளர்ச்சிகள் ஈழத்திற்குத் தனித்துவமான பல அம்சங்களைக் கொடுத்தா லும் தமிழக இந்து மத வட்டத்திற்குள்ளே இதனை இணைத் தன. அரசியல், பொருளாதார, கலாசாரத் தொடர்புகள் இதனைச் சாத்தியமாக்கின. இன்று இந்து மதத்திற் காணப் படும் பல அம்சங்கள் உரம் பெற்று வளர்ச்சி பெற்ற கால மாக ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் அமைகிறது. இக்கால வளர்ச்சிகளிற் சிவன், உமை, முருகன், கணபதி ஆகியோரின் வழிபாடுகளை ஒன்றிணைத்த சைவசமயமே மேலோங்கியது. இதனாற் "சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவாறு இணைந் தன. இத்தகைய இணைப்பும், ஸ்திரமுமே பிற்காலத்தில் ஐரோப்பியர் ஆட்சியில் கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் வரை யான காலப்பகுதியில் இந்துமதம் பல சவால்களை எதிர் கொண்ட போது அவற்றைச் சமாளித்துத் தனது தனித்துவத் தைப் பேணுவதற்குரிய சக்தியையும் அதற்குக் கொடுத்திது இதனால் ஈழத்து இந்துமத வரலாற்றில் ஆரியச் சக்கரவர்த் திகள் காலத்தினை ஒரு மைற்கல் எனலாம்.
ஏனைய மதங்கள்
பெளத்தம்
ஈழத்துப் பெளத்த மதவரலாற்றினைக் கூறும் பாளிநால்க ளில் யாழ்ப்பாணக்குடாநாடும் வன்னிப் பகுதியுமடங்கிய அணு ராதபுரத்தின் வடபகுதி முழுவதும் "நாகதீபம்’ என அழைக்கப் பட்டுள்ளது. தமிழ்நூல்கள் கூறும் நாகநாடும் இஃதெனலாம். அத்துடன் இந்நூல்களிற் புத்த மதத்தின் ஸ்தாபகரான கெளதம புத்தர் ஈழத்தின் மீது மேற்கொண்ட இரண்டாவது விஜயத்தின் போது இப்பகுதிக்கு விஜயம் செய்தது பற்றிய ஐதிகமும் உண்டு.4

Page 166
-244
பெளத்தமதம் பின்னர் ஈழத்திற்குக் கி.மு. மூன்றாம் நூற்றாண் டின் நடுப்பகுதியிற் புகுத்தப்பட்டபோது அரச மரக்கிளையோடு வந்த துர்துக்குழு ஈழத்தில் வந்திறங்கிய துறைமுகமாக இப்பகுதியி லுள்ள ஜம்புகோள பட்டினம் குறிப்பிடப்படுகிறது 141 இத் துறை முகத்திலிருந்து ஊர்வலமாக இது அனுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பெளத்த அரசமரக்கிளை வந்திறங்கிய இடம் தற்காலச் சம்பில்துறையே எனவும் நம்பப்படுகிறது. இவ்விடத் திலேயே இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வண்ணம் திஸ் மஹாவிகாரை (ஜம்புகோள விகாரை) பச்சினாராம ஆகிய கட்டிடங்கள் தேவநம்பியதீசனால் கட்டப்பட்டன.142
இந் நிகழ்ச்சி நடைபெற்றுக்கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டு கட்குப் பின்னரே யாழ்ப்பாணத்திற் கி. பி. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளிற் சிங்கள மன்னர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.143 மகல்லகநாக (கி.பி. 138143) என்பவன் இப்பகுதியிற் ஸாலிபவத்த விகாரை ஒன்றைக் கட்டியதாகக் குறிக்கப்படுகிறது. இதே நூற்றாண்டிற் கனிட்டதிஸ் (கி. பி. 167 - 186) இங்குள்ள கோயிலைத் திருத்தியமைக்க, அடுத்த நூற்றாண்டில் வொற்ொரிகதிஸ் (கி.பி 209 - 231) திஸ்ஸ மகாவிகாரையைச் சுற்றி மதிலமைத்தான். கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகட்குப் பின்னர் இரண்டாம் அக்கபோதி (கி. பி. 604 - 814) இப் பகுதியில் இருந்த உண்ணலோமகாரக் கோயில் என்ற நிறுவனத்தை ராஜாயதனதாது என்ற விகாரைக் குக் கட்டிக் கொடுத்ததாகவும், ஆமலச் சேத்தியாவுக்கு ஒரு குடையை அளித்ததாகவும் கூறப்படுகின்றது.14 சூளவம்சத்தில் ஈழத்திற் சோழராட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த முதலாவது விஜயபாகு (கி. பி. 1055 - 1110) ஏற்படுத்திய பெளத்த நிறு வனங்கள் பற்றிக் காணப்படும் அட்டவணையில் ஜம்புகோள விகாரை, ஜம்புகோளலேன என்ற நிறுவனங்களும் குறிக்கப்பட் டுள்ளன. இவற்றை ஆசாரமாகக் கொண்டு இந்திரபாலா இது வடபகுதியிலுள்ள ஜம்புகோள விகாரைக்குரிய குறிப்பே எனக் கூறியுள்ளார். ஆனாற் சூளவம்சத்தினைப் பதிப்பித்த கெய்கர், இந் நிறுவனங்கள் அமைந்திருந்த இடம் பற்றிய தமது அடிக்குறிப் பில் இவை மாத்தளைக்கு வடக்கே 25 மைல் தொலைவிலுள்ள டம்புலவிலுள்ள நிறுவனங்களே என இனங்கண்டு கொண்டுள் ளார். இவை மட்டுமன்றி விஜயபாகுவினால் அமைக்கப்பட்ட நிறுவனங்கள் பற்றிய அட்டவணையானது இவை யாவும் சிங்களப் பகுதிகளிற் காணப்பட்டதை எடுத்தியம்புவதும் கெய்கரின் கூற்றுச் சரியானதே என்பதை எடுத்துக் காட்டுகிறது.145

-- 245--س-
யாழ்ப்பாணப் பகுதியில் நிலைகொண்டிருந்தி பெளத்தம் பற்றி மேற்கூறிய தகவல்களே பாளி நூல்களாகிய மகாவம் சம், சூளவம்சம் ஆகியனவற்றிற் காணப்படுகின்றன. சிங்கள மன்னர்கள் இப்பகுதியின் மீது மேற்கொண்ட பெளத்த சமயப் பணிகள் பற்றிய குறிப்புகள் கி. பி. 7 ஆம் நூற்றாண்டுக்குப் பின் னர் இந்நூல்களிற் காணப்படாமையால் இக்காலத்திலே தமிழ கத்தில் நாயன்மார் ஏற்படுத்திய இந்துக் கலாசார மறுமலர்ச்சியே வடபகுதியிற் காணப்பட்ட தமிழ்ப் பெளத்தர்களை இந்துக் களாகத் திரும்பவும் மதம்மாற வழிவகுத்தது. எனினும் ஆங்காங்கே சிற்சில இடங்களிலே தமிழ் நாட்டைப் போன்று வடபகுதியிலும் பெளத்தம் காணப்பட்டாலும் இது இக் காலந் தொட்டுச் சிங்களமொழி பேசும் மக்களோடு இணைந்தது. இதனையே கந்தரோடை, துணுக்காய், திருக்கேதீஸ்வரம் போன்ற இடங்களிற் காணப்படும் சிங்களக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
எனினும் ஈழத்திலுள்ள பெளத்த தலங்கள் பற்றிக்கூறும் கி.பி. 14 ஆம் நூற்றாண்டுக்குரிய சிங்கள நூலாகிய நம்பொத் தவில்145 தமிழ பட்டினத்தில் உள்ள பெளத்த வழிபாட்டிடங் களாகப் பின்வருபவை குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன நாககோவில (நாகர் கோயில்), கதிறு கொடவிகாரய (கந்த ரோடை), தெலிபொல (தெல்லிப்பழை), மல்லாகம (மல்லா கம்), மினிவன்கொமு விகாரய (வீமன்காமம்), தனிதிவயின (ஊர்காவற்றுறை), நாகதிவயின (நயினாதீவு), புயங்குதிவயின (புங்குடுதீவு), காரதிவயின (காரைதீவு) ஆகியன குறிப்பிடத்தக் சன. எனினும் இந் நூற்றாண்டின் முற்பகுதியில் போல்பீரிஸ் வடபகுதியில் மேற்கொண்ட மேலாய்வின் மூலம் பெளத்த அழி பாடுகள் பற்றிய சான்றுகள் வெளிவந்தன.147 கந்தரோடை, உடுவில், தெல்லிப்பளை, மல்லாகம், சுன்னாகம், புத்தூர், சம்பில்துறை, நிலாவரை, வல்லிபுரம், மகியப்பிட்டி, புலோலி போன்ற இடங்களில் பெளத்த அழிபாடுகளை இவர் இனங்கண் டார். சுந்தரோடைபற்றிக் குறிப்பிடுகையில் அதை ஒரு சிறிய அனுராதபுரம் எனவும் அவர் வர்ணித்துள்ளார். மேற்கூறிய இடங்களில் தாதுகோபுரங்களின் எச்சங்கள், புத்கசிலைகள், புத்தபாதம் வரையப் பெற்ற கற்கள் ஆகியன கிடைக்கப் பெற்றன.
1936இல் வல்லிபுரத்திற் கிடைத்த பொன்னேடு கி.பி. இரண் டாம் நூற்றாண்டிற் புயங்குதிஸ்வினால் அமைக்கப் பெற்ற விகாரை பற்றிக் குறிப்பிட்டுள்ளது.148 இவ்வாறே 1960களில்

Page 167
-248
கொண்ட இம்மன்னர்களது ஆட்சி மேலும் இப்பகுதிகளிற் பெளத் தத்தைச் சீரழிய வைத்தது. இப்பகுதிகளிற் பெளத்தர்களாக இருந்த சிங்களவர் பற்றி வையாபாடலிலும் யாழ்ப்பாண வைபவ மாலையிலும் காணப்படுகின்ற குறிப்புகள் இவர்கள் தொடர்ந் தும் பெளத்தர்களாக இருந்ததை எடுத்துக் காட்டுகின்றன.153 யாழ்ப்பாண அரசர்களிற் சங்கிலி மன்னன் போன்றோர் சிங்கள மக்களுக்கும், பெளத்த வழிபாட்டிடங்களுக்கு மெதிராக மேற் கொண்ட நடவடிக்கை பற்றி யாழ்ப்பாண வைபவமாலை தரும் செய்திகள் கருத்திற் கொள்ளத்தக்கன. 154 இவ்வாறு இக்காலத்திற் பெளத்தம் வடபகுதியிற் போஷிப்பின்றிச் சீரழிந்த நிலையிலும் கூட, இங்கு பெளத்தம் சிறப்புற்றிருந்த இடங்கள் பற்றிய குறிப்பையே இக்காலத்திற்குரிய ‘நம்பொத்த’ என்ற சிங்கள நூல் எடுத்துக் காட்டுகின்றது.159
இஸ்லாம்
ஈழத்தில் இஸ்லாமியரின் முதற்குடியேற்றம் கி , பி. 8ஆம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டது. பின்னர் இத்தகைய குடியேற் றங்கள் கி. பி. 13ஆம் நூற்றாண்டில் மேலும் தொடர்ந்தன. யாழ்ப்பாண அரசு தோன்றமுன்னர் இப்பகுதியில் இவர்களின் குடியேற்றங்கள் காணப்பட்டன. வடபகுதியில் ஏற்பட்ட சாவ கன் ஆட்சியும் இவற்றுக்கு ஊக்கமளித்திருக்கலாம். சைவத் துடனும் தமிழுடனும் தம்மை இணைத்துக் கொண்ட யாழ்ப் பாண அரசர்காலத்திலும் இஸ்லாமியர் வாழ்ந்ததை யாழ்ப்பாண வைபவமால்ை, வையாபாடல் ஆகிய நூல்களிற் "சோனகர்" பற்றி வரும் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. வாணிபமே இவர்களின் முக்கிய தொழிலாக அமைந்திருந்ததால் முக்கிய வாணிப நிலையங்களில் இவர்கள் காணப்பட்டனர். கொடி காமம், உசன் போன்ற பகுதிகளிலும் நல்லூர் தலைநகரி லும் இவர்கள் குடியேறியிருந்தனர். அரசஆதரவு இல்லாமையும், செல்வாக்குள்ள நிலைமையிற் 'சைவம் காணப்பட்டமையும் இஸ்லாம் மதத்தை ஒரு செல்வாக்கான நிலையில் எழுச்சி பெற வழிவகுக்கவில்லை. துரதிஷ்டவசமாக இவர்களின் வழி பாட்டிடங்களில் இக்காலத்திற்குரிய அழிபாடுகள் எதுவும் கண்டு பிடிக்கப்படாவிட்டாலும்கூட, நல்லூர்த் தலைநகரில் இவர் களின் வழிபாட்டுத்தலம் காணப்பட்டது. இதனையே யாழ்ப் பாண வைபவமாலையில் இவர்களுக்கும் இந்துக்களுக்குமிடையே ஏற்பட்ட பிணக்குகள் பற்றி வரும் குறிப்பு எடுத்துக் காட்டு கிறது. 156 இவர்கள் நல்லூரில் வாழ்ந்ததை போல்டேயஸ் பாதிரியாரும் குறிப்பிட்டுள்ளார்.157. இவர்கள் அமைத்தி ருந்த பள்ளிவாசல் பற்றியும் முத்துத்தம்பிப்பிள்ளை எடுத்துக்

-249
காட்டியுள்ளார்.158 இப்பள்ளிவாசல் அமைந்த நிலப்பரப்பிலேயே முஸ்லிம் பெரியாரான இப்றாஹீம் அடக்கஞ் செய்யப்பட்டா ரென்றும் இவ்விடம் தற்கால நல்லூர் ஆலயத்தின் மூலஸ் தானத்திற்கு அருகிற் காணப்பட்டதென்றும் கூறப்படுகிறது.159 தற்போதைய கந்தன் ஆலயம் இவ்விடத்திலே அமைக்கப்பெற்று விஸ்தரிக்கப்பட்டபோது முஸ்லிம்கள் தொழுவதற்கு வசதியின்றிக் கலகம் செய்த பின்னர் இவ்வாலயத்தின் மேற்குப் பக்கமாக முஸ்லீம்கள் வழிபாடு செய்வதற்கு ஒரு வாயில் அமைக்கப்பட் டது எனக் கூறப்படுகிறது.160 நாளடைவில் இவ்வாசலும் அடைக்கப்பட்டு மதில் எழுப்பப்பட்டது.
நல்லூரில் மட்டுமன்றிப் பண்ணைத்துறையிலும் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டதைக் குவேறோசின் நூல் எடுத்துக்காட்டுகிறது. இவ்விடத்திற் கத்தோலிக்கத் தேவாலயத்தை அமைக்கவிரும்பிய போத்துக்கேயர் அதற்கு முஸ்லிம்கள் உடன்படமாட்டார்கள் என்பதை அறிந்து தமது எண்ணத்தை நிறைவேற்ற இப்பள்ளி வாசலுக்குத் தீயிட்டனர் எனவும், இம்முயற்சிக்கு இப்பகுதியிற் கத்தோலிக்க மதப்பிரசார நடவடிக்கைகளிலீடுபட்டிருந்த 'கண் ணாடிப்பாதிரியாரே துணை நின்றார் எனவும் கூறப்படுகிறது.161
கிறீஸ்தவம் - கத்தோலிக்கம்
கீழைத்தேசத்திற் போத்துக்கேயரின் ஆதிக்க வளர்ச்சிக்குச் சமயப் பரம்பலும் வர்த்தகமுமே பிரதான காரணங்களாக அமைந் தன. இவை இரண்டிலும் போத்துக்கேயர் சமயப் பரம்பலுக்கே முன்னுரிமை கொடுத்தனர். காரணம் இவர்கள் கீழைத்தேசத் தவர்கள் அஞ்ஞானிகள் என்றும், தமது உண்மையான சமய நெறிக்கு அவர்களை மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு நன்மார்க் கத்தைக் காட்டலாம் எனவும் நம்பியதே. ஆனால் இவர்களின் பின்னர் ஈழம் வந்த டச்சுக்காரரோ எனில் வர்த்தகத்திற்கு முன் னுரிமை கொடுத்துச் சமயத்துக்கு அதற்கடுத்தாற்போலவே முன் னுரிமை அளித்தார்கள் இறுதியாக வந்த ஆங்கிலேயர்கள் வர்த்தகத்திலும் அதிலீட்டும் இலாபத்திலுமே அதிக அக்கறை காட்டினர். போத்துக்கேயரின் ஆரம்ப நடவடிக்கைகளின் கள மாகக் கோட்டை அரசே காணப்பட்டது. கோட்டை அரசிற் காணப்பட்ட வாரிசுரிமைப் போட்டி பினைப் பயன்படுத்தி முதலிலே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்ட இவர்கள் நாளடைவில் தமது கத்தோலிக்க சமயத்திஎைாயும் பரப்ப முயன்றன. , பேர்த்துக்கேயர் தமது முதல் நடவடிக்கையாக மன்னர்காை மதம் மாற்றுவதன் மூலம் மக்களை மதம் மாற்றலாம் எனக் சுருதினர். கோட்டை அரசனான புவனேகபாகு தனக்கும் தனது

Page 168
-250
சகோதரனாகிய மாயாதுன்னைக்குமிடையே நடைபெற்ற கோட்டை இராச்சியத்தின் ஆதிபத்திய உரிமைப்போரிற் போத்துக்கேயரின் ஐ தவியை நாடித் தனக்குப் பின்னர் தனது மகளின் மகனாகிய தர்மபாலனே இப்பதவிக்கு வர வேண்டு மென்று விரும்பினான். எனினும், இவன் உயிர் வாழும் வரை பல்வகை அழுத்தங்களைப் போத்துக்கேயர் பிரயோகித்துங் கூட இவன் கத்தோலிக்க மதத்தினைத் தழுவவில்லை. காரணம் மாயாதுன்னை இக் காலத்திற் பெளத்த மதத்தின் காவலன் தானே என்று கூறித் தனது மக்களைக்கூடத் தன்வசம் இழுத்து விடுவான் என்ற பயம் இவனுக்கிருந்தது.
ஆனாலும் மாயாதுன்னை தனக்குப் பின்னர் தனது பேர னான தர்மபாலனுக்குச் சவாலாய் அமைந்து விடுவான் என எதிர்பார்த்து, அத்தகைய நிலை ஒன்று ஏற்படுவதைத் தடுக்கும் யுத்திய "கத் தா னிருக்கும் போதே தனது பேரனான தர்மபாலனின் உருவச்சிலையைச் செய்து போத்துக்கல் தேசத்திற்கு அனுப்பி அத்தேச மன்னனால் முடிசூட்டி வைத்தானெனினும் தானிருக் கும் ப*து தனது பேரனை மதம் மாற்றுவதற்கான நடவடிக்கை களை அயன் எடுக்கவில்லை. 1951இல் அவன் இறந்த பின்னரே கிபி 1557 இல் தர்மபாலன் பெளித்தமதத்தினைவிட்டுக் கத்தோ லிக்க மதத்தினைத் தழுவினான். நாற்பது ஆண்டுகள் கத்தோ லிக்க மத விசுவாசியாக வாழ்ந்த இவன் 1597 இல் இறந்தான். இவன் இறக்கக் கோட்டை அரசின் ஆதிக்க உரிமை போத்துக் கேயரிடம் வந்தது. இருந்தும், இக்காலத்திற் போத்துக்கேயர் எதிர்பார்த்தது போல அவர்களின் சமயம் பரப்பும் நடவடிக் கைகள் வெற்றி பெறவில்லை. மாயாதுன்னையுடனும், பின்னர் அவன் மகனான முதலாவது இராஜசிங்கனுடனும் தொடர்ந்து நடைபெற்ற போர்களாற் பெளத்தத்தின் காவலனான மாயா துன்னையையும், அவனாண்ட சீதவாக்கை அரசையுமே பெளத் தர்கள் கணித்தனர்.
ஆனால் யாழ்ப்பாண அரசிலோ எனில் நிலைமை வித்தியாச மாக அமைந்தது. 1505இற் கோட்டைக்கு வந்த போத்துக்கேயர் 1560இல் முதலாவது சங்கிலிக்கெகிராகப் போர் நடவடிக் கைகளிலீடுபட்டாலும்கூட, சங்கிலியனோ அல்லது அவனின் பின்னர் அரசாண்ட எந்த ஒரு மன்னரோ மதம் மாறுவதன் மூலம் தமது அரசியல் அதிகாரத்தினை நிலைநாட்டவில்லை. போத்துக்கேயரிடம் தனது ஆட்சியை இழந்த இரண்டாவது சங்கிலியும் அவனது குடும் பத்தினரும் அவர்களின் சிறைக்கைதிக ளாக மாற்றப்பட்ட பின்னர்தான் மதம் மாற்றப்பட்டனர்.

-س-251-س-
இவ்வாறு மன்னர்கள் தமது அதிகாரத்தை ஸ்திரப்படுத்த மதம் மாற விரும்பாவிட்டாலும் கூட, அரச பதவியில் ஆசை கொண்ட இளவரசர்கள் அதனைப் பெறுவதற்காக மதம் மாற விரும்பிய நிசழ்ச்சிசளும், போத்துக்கேயர் இவர்களைப் பயன்படுத்தி மதம் மாற்றியதன் மூலம் அரசியல் இலாபம் தேட முனைந்ததற் குமான நிகழ்ச்சிகளும் இக்காலத்தில் இடம் பெற்றன. இவ்வாறு மதம் மாறாமல் இருந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. இதில் முதலாவது. மக்கள் இந்துக்களாக இருந்தது மட்டுமன்றி அவர்கள் மத்தியில் இந்துப் பாரம்பரியமும் நன்கு வேரூன்றியிருந்த மையே பிரதான காரணமாகும். இத்தகைய ஒரு பாரம்பரியம் நன்கு வேரூன்றி இருந்தமைக்குச் சில உதாரணங்களைக் கூறலாம்.
1591இல் ஏற்பட்ட நல்லூர் சமாஜத்தின் மூலம் போத் துக்கேயருக்கு விசுவாசியாக எதிர்மன்ன சிங்க மன்னன் விளங் கினாலும் கூட மதம் மாறவில்லை. கத்தோலிக்க குருமார் தீவி ரமாக மதம் மாற்ற முனைந்தபோது மக்கள் எதிர்த்து அவர் களைக் கொலை செய்ததோடு, தேவாலயங்களையும் தீக்கிரை யாக்கிய சம்பவங்சளும் இக்காலத்திற் காணப்பட்டன. இரண் டாவது காரணம் போத்துக்கேயரின் கத்தோலிக்க மதத்தி னைத் தமது இராச்சியத்தில் ஊடுருவ விடுவதன் மூலம் - இம்மதத்திற்கு மாறுபவர்கள் தமக்கு விசுவாசி >ளாக இராது தமக்குப் புதிய மத நெறியைப் புகுத்தியோருக்கு விசுவாசமபிருக்க விரும்புவர் என நம்பினர். இதன் மூலம் யாழ்ப்பாண அரசின் அரசியற் சுதந்தி ரமே அஸ்தமித்து விடும் என்பதும் இவர் களது எதிர்பார்ப் பாகும். இவர்களின் இத்தகைய அச்சம் நிஜமானதே என்பதை யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலி குமாரனுக் கெதிராகப் போத்துக்கேயரை வரவழைப்பதற்குப் புதிதாகக் கத் தோலிக்க மதத்தினைத் தழுவிய முதலியார்மார் முன்னின்றமை எடுத்துக் காட்டியுள்ளது.182
யாழ்ப்பாண அரசின் நேரடி நிருவாகத்தின் கீழ் காணப் பட்ட மன்னாரிலேயே போத்துக்கேயக் குரும "ரின் மத நடவடிக் கைகள் முதலில் ஆரம்பமாகின. தமிழகத்திலே தூத்துக் குடிப் பரதவரை மதம் மாற்றுவதிற் கத்தோலிக்க குருமார் வெற்றி கண்டனர். இவர்களை மதம் மாற்றுவதிற் பிரான்சிஸ் சவேரி யார் என்ற கத்தோலிக்க மதகுரு முன்னின்று உழைத்த "ர். இ .ர்கள் மட்டுமன்றி மன்னாரில் முதலாவது சங்கிலியனின் ரி , வாகியாகிய இளஞ்சிங்கனும் மதம் மாறினான். இத்தகைய மதமாற்றம் ஏனையோரையும் மதம் மாறிக் கத்தோலிக்க மதத்

Page 169
س----252س--
தினைக் கடைப்பிடிக்க வழிவகுக்கும் என உணர்ந்ததோடு ஈற் றிலே தனது அரசின் அரசியற் சுதந்திரத்திற்கும் உலைவைக்கும் என உணர்ந்த முதலாவது சங்கிலி மதம் மாறியோரைத் திரும் பவும் இந்து மதத்திற்குத் திரும்பும் படி வற்புறுத்தியும் கூட அவர் கள் மறுக்கவே அவர்களைக் கொலை செய்தான். சங்கிலியனின் இத்தகைய நடவடிக்கைகளை அக்காலச் சூழலில் இஸ்லாமியர், போத்துக்கேயர் ஆகியோர் பிற சமயத்தவர் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னணியில் உற்று நோக்கும்போது எந்த விதத்திலும் அக்கால உலகிற் கண்டிக்கத்தக்க, அநாகரிக நட வடிக்கையாக இது அமையவில்லை என்றே கூறலாம். எனினும் ஈழத்து வரலாற்றாசிரியர்கள் பலர் இச் சம்பவத்தை அக்காலச் சூழலிலிருந்து தனிமைப்படுத்தி மிகைப்படுத்தியே குறிப்பிட்டுள் ளமை அவதானிக்கத்தக்கது.
சங்கிலியன் காலந்தான் கோட்டை அரசன் தனது பதவியை ஸ்திரப்படுத்த மதம் மாறிய காலமாகும். சங்கிலியன் இவ்வாறு மதம் மாறமாட்டான் என்பதை உணர்ந்த போத்துக்கேய மத குருமார் அரண்மனையிலே தமது மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சங்கிலியனின் பிள்ளைகளுள் ஒருவன் கத்தோ லிக்க மதத்தினைத் தழுவியதன் விளைவாகத் தந்தையினாற் சிரச்சேதம் செய்யப்பட்டான். எனினும், இவனது இளைய மசனும் சகோதரியின் மகனும் மதம் மாறிக் கத்தோலிக்க மதத்தினைத் தழுவினர். 1560இற் போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது படை எடுத்ததன் விளைவாகச் சங்கிலி மன்னனுக்கும் இவர்க ளுக்கும் இடையே ஒர் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் விளைவாகப் போத்துக்கேயர் சங்கிலி மன்னனைத் திறை செலுத் தும் மன்னனாக ஏற்றுக் கொண்டதன் பேரிற் சங்கிலி மன்னன், தான் மதம் மாறாவிட்டாலுங் கூடத் தனது அரசிற் கத்தோ லிக்க மதப் பிரசாரம் மேற்கொள்ள அனுமதித்தான். இதனாற் பிரான்சிஸ் சபையினர் சமயப் பிரசார நடவடிக்கைகள் யாழ்ப் பாண அரசில் ஈடுபட வழி வகுக்கப்பட்டது. எனினும், இத் தகைய உடன்படிக்கை செயற்படவில்லை. வெகுவிரைவிற் சங்கி லியன் போத்துக்கேயருக்கு எதிராகக் கிளர்ந்து, கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் மதகுருமார்களையும் பிடித்துக் கோப்பா யிற் கொலை செய்தான்.
துரதிஷ்டவசமாகச் சங்கிலியனுக்குப் பின்னர் அரச பதவியை ஏற்றுக் கொண்ட வர்கள் அவனைப் போல வலிமையுடையவர் சளாகக் க, ணட் டவில் ன ல டெரிடி பிள்ளை சத்தோலிக்கத் தேவாலயங்களைத் தனது அரசில் நிருமாணிப்பதற்கு அனுமதித்

-253
தான். ஆனால் இவன் பின்னர் அரசனான புவிராஜபண்டாரம் போத்துக்கேயரின் மத நடவடிக்கைகளை எதிர்த்ததோடு, போத் துக்கேயரின் நேரடி ஆட்சியின் கீழிருந்த மன்னார் மீதும் தஞ்சை நாயக்க மன்னனின் படை உதவியோடு படை எடுத்துத் தோல்வி காண 1591இற் போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தினைத் தாக்கி இம்மன்னனையும் சிரச்சேதம் செய்தனர். இதே ஆண்டில் ஏற் பட்டது தான் "நல்லூர் சமாஜமாகும்". இதன் பிரகாரம் இப் பகுதி மக்கள் போத்துக்கேய அரசனை ஏற்றுக்கொண்ட அதே நேரத்திற் போத்துக்கேயரும் உள்ளூர் வழக்கங்களினை அங்கீ கரித்து ஒழுகவும் வாக்களித்திருந்தனர்.
1591இல் இந்நிபந்தனைகளுக்கமைய எதிர்மன்னசிங்கன் போத்துக்கேயரின் நம்பிக்கைக்குரியவனாகப் பதவி ஏற்றான். இதன் விளைவாகக் கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் நடவடிக் கைகள் மேலும் தீவிரமடைந்தன. இதனாலே திகிலடைந்த இந் துக்சளான முதலியார் மார் சிலர் இவனை நீக்கித் தஞ்சாவூரிலி ருந்து ஒரு மன்னனை அழைத்து அரசபதவியை அவனுக்களிக்க முயன்றும் அம்முயற்சி போத்துக்கேயராலே தோற்கடிக்கப்பட் டது.163 இம்மன்னன் அரண்மனையிற் கத்தோலிக்க மதத்தினைப் பரப்ப அனுமதியளித்ததோடு நல்லூருக்கு அண்மையிலும் "வெற் றிமா தா கோயிலை நிருமாணிப்பதற்கும் நிலம் கொடுத்தான். எனினும் இவன் கத்தோலிக்க மதம் பரவுவதை ஆதரிக்கவில்லை. இவன் தங்களின் மதம் பரப்பும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே இயங்குகின்றான் எனப் போத்துக்கேயர் விரைவில் அறிந்து கொண்டனர். இதனாற் கி.பி. 16 17இல் இவனிறச்சு இரண்டா வது சங்கிலி மன்னனானான். இவனை எதிர்த்தவர்களிற் கத் தோவிக்க மதத்திற்கு மதம் மாறிய முதலியார்மாரும் அடங்கினர். இவர்களே போத்துக்கேயரது ஆட்சி யாழ்ப்பாணத்திலேற்பட வேண்டுமென்று விரும்பியவர்களுமாவர். ஈற்றில் 1619இல் டி ஒலி வேறா தலைமையில் வந்த படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிச் சங்கிலியனையும் அரச குடும்பத்தினையும் கோவாவுக்கு அனுப் பியது. அங்கு மன்னனும் அரச குடும்பத்தினரும் மதம் மாற்றப் பட்ட நிகழ்ச்சியைச் சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு கூறு கிறார்.164
*யாழ்ப்பாண அரச மரபைச் சேர்ந்த கடைசிக் குடும்பத் தினர் கொழும்புக்குப் புறப்பட்டு, அங்கிருந்து கோவா அடைந்து கிறீஸ்த மதத்தைத் தழுவித்தலைசிறந்த கிறீஸ் தவர்களாக வாழ்ந்து இறந்தனர். அவர்களுடைய வரி சைக்கேற்ப அவர்கள் இருக்கும் போதும் இறந்த பின்னும் தக்க கெளரவத்துடனும் ஆதரவுடனும் நடத்தப்பட்டி

Page 170
-254
னர். யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்ட போர்த்துக் கேயர் சங்கிலிகுமாரனைச் சிறைபிடித்துத் தூக்கிலிடுந் தண்டனை விதித்தபோதும், நல்ல வீரர் பண்புக்கு ஏற்ப அரச மரியாதை கொடுத்தனர். எனினும், தமது கொடுஞ்செயலுக்கு இரங்கிப் பணிதுறந்து இயேசு கிறிஸ்து ந்ாதரின் புனித நாமத்தை உச்சரித்து உயிர் துறந்தனர். பிரான்சிஸ் மடத்தைச் சார்ந்த சமயப் பரப்பாளரின் தூண்டுதலினால் அவரது மனைவியும் கிறிஸ்து மதத்துக்கு மாற்றப்பட்டார்.
இவர் கோவாவிலுள்ள மதம் மாற்றப்பட்டவரின் தாபனத்தைச் சார்ந்த தமது மேலான வாழ்க்கையால் அக்காலக் கிறிஸ்தவர்களுக்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். சங்கிலிகுமாரனும் அவர் மனைவியும் முறையே டொன் பிலிப்பு, மார்க் கறிடா என்ற பெயரைப் பெற்றனர். கடைசியாக அரசாண்ட எட்டாவது பரராசசேகானது சிரேஷ்ட இராணி டொன் கிளாறா என நாமம் பூண்டனர். அவரது மூன்று பிள்ளைகளும் கொழும்பில் பெயரிடப் பட்டனர். இவர்களில் டோனா கொன்ஸ்றன்றினா அரசமரபுரிமையாளராவார். டோனா மேரியா, டோனா இசாபெலா சகோதரிகளாவர். அதே காலத்தில் இப் பரராசசேகரனது சகோதரியும், புருஷனும், மூன்று மகன் மாரும், ஒரு மகளும் கிறிஸ்தவ சமயத்தில் சேர்க்கப்பட்டனர். இவ் வரச மரபினர் டோனா டயகோ, டோனா மேறியா, டோனா பிலிப்பே, டோனா பிரான்சிஸ்கோ, டோனா பெர்னாடினோ, டோனா டியூஸ் எனப் பெயர் பெற்றனர். இவர்களைத் தொடர்ந்த சிலரின் சரித்திரத்தை நன்கு தெரியக் கூடியதாயிருக் கிறது. டோனா கொன்ஸ்றன்றினா, டோனா பெர் னாடினோ முதலானோர் கோவாவில் கல்வி பயிற்றப் பட்டு லிஸ்பனுக்குக் கொண்டு செல்லப்பட்டதும், தங்கள் அரசுரிமையை போர்த்துக்கேய அரசுக்குக் கை யளித்துப் பரிசுத்த பிரான்சிஸ் சமயப் பரப்பாளரின் மதத்தைச் சார்ந்தனர். டோனா மேரியா, டோனா இசாபெலா எனப் பெயர் கொண்ட இளவரசிகள் கோவாவிலுள்ள பரிசுத்த மொனிக்கா கன்னியர் மடத் தைச் சேர்ந்த பின் 1637ல் துறவிப் பெண்ணானார். பின்னர் அதே கன்னியர் மடத்துக்குத் தலைவியாகி 1682ல் இறந்தனர். இளைய இளவரசி 1638ல் சமயப் பிரமாணம் எடுத்து 1645ல் இறந்தனர்.

-255
யாழ்ப்பாணத்தில் வசிக்க விடப்பட்ட அரச குடும்பத் தைச் சார்ந்த ஏனையோர் சமயப் பரப்பாளரின் ஆர் வத்தினால் படிப்படியாகச் சமயத்தில் சேர்க்கப்பட் டனர் யாழ்ப்பாணத்து அரச குடும்பம் நன்னிலையில் முடிவைப் பெற்றதென்று பொதுவாகச் சொல்லப் பட்டது. குருதி மரபுடைய இளவரசரும் இளவரசியும் உலகியலான அரசு தங்களை அடையாதவிடத்து நிலையான வானுலக அரசைத் தேடினர்."
யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்ட போத்துக்கேயத் தள பதி டி. ஒலிவேறா கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதில் மிகத் தீவிரமாகப் பங்கு கொண்டான். இம்மதத்தின் பல்வேறு குருமார் பிரிவினரையும் சமயம் பரப்புவதற்காக இங்கு அழைத்து அவர்களைத் தக்கவாறு அனுசரித்து மரியாதை செய்ததோடு இந்துக்களின் வழிபாட்டிடங்களைச் சிதைப்பதிலும் அதிக அக்கறை காட்டியதால் இவர்களின் பெரியதும் சிறியது மான 500 ஆலயங்களை அழித்த பெருமைக்குரியவனாகவும் திகழ்ந்தான். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சமய நடவடிக் கைகளால் இந்துமதத்தின் உயிர்நாடியாக விளங்கிய திருக் கோயில்கள் இருந்த இடங்களிற் கத்தோலிக்கத் தேவாலயங்கள் கட்டப்பட்டதோடு பகிரங்கமாக மத அனுஷ்டானங்களை மேற்கொள்ளாது இந்துக்கள் தடுக்கப்பட்டனர். மதம்மாறு வோருக்கு பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டன. யாழ்ப்பாண அரசின் அரசமதமாக விளங்கிய இந்துமதம் இவ்வரசு மறைந் ததும் போத்துக்கேயராற் சீரழிக்கப்பட்டதை வேலுப்பிள்ளை பின்வருமாறு குறிப்பிடுகிறார் 165
"பறங்கியர் வேதத்தைப் பரப்பினமுறை இது. தாம் ஒர் பட்டினத்தைப் பிடித்துக் கொண்டவுடன் அதற்கு ஒர் எல்லை குறித்து, அவ்வெல்லைக்குள் "மகமதியர்", "விக்கிரகாராதனைக்காரர்" ஆகியோருள் ஒருவரும் இருக்கக்கூடாதென்று பறைசாற்றுவிப்பர். எல்லைக்குள் இருக்க விரும்புவோர் கிறிஸ்தவர்களேயாக வேண்டியது. தம் நாடுகளுள் பிற சமய ஆலயங்களையும் விடார். அப்பால் தமதாளுகைக்குட்பட்ட நாடெல்லாம் பிற சமயத்தவர்களுடைய பிரசித்தி கொண்டாட்டங்களை விலக்குவாரேயன்றித் தனித்தனியே பிரசைகளின் மனச் சாட்சியைக் கண்டிமைப்படுத்தார். ஆயின் தமது ஆலயங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் சென்று பிரசங்கங் கேட்கும்படி சகலருக்கும் கட்டளை பண் ணுவர். சனங்களைப் பிரசங்கங் கேட்கக் கவர்ந்திழுக்கு மாறு குருமார் பல சூழ்ச்சிகளைக் கையாண்டு வருவர்.

Page 171
س-256س-
"வசனம்’, ‘வாசகப்பர் நாடகம்", "பரிசு" எனத் தற்காலம் வழங்கும் காட்சிகள் அக்காலத்தில் இதற்காக ஆரம்பிக் கப்பட்டன. நம் கைக்கெட்டிய சகல சrட்சிகளின் படி யேயும் பறங்கியர் போதகத்தினாலேயே சனங்களைப் பெரும்பாலும் கிறிஸ்தவராக்கத் தேடினர். வாயினாற் செய்த போதகத்தோடு அச்சிட்ட நூல்கள் மூலமாயும் கிறிஸ்து சமயம் பரப்பப்பட்டது. இத் தமிழ் நூல்கள் கொச்சியில் பறங்கியர் ஸ்தர்பித்த இயந்திர சாலையில் அச்சிடப்பட்டன. சிறுபான்மை உத்தியோகங்களையும், கிறீஸ்தவராவோருக்கு வரிகள் குறைக்கப்படுதலாகிய
வேறு சிலாக்கியங்களையும், அளித்து இவற்றர்லும் சனங்களின் மனங்களைக் கவரப் பார்த்தனர். பள்ளிக் கூடங்களிலும் வேதம் கற்பிக்கப்பட்டது. மூன்று வெவ் வேறு கட்டமான கத்தோலிக்க குருமார் ஓயாது பிரயா சப்பட்டு உழைத்துச் சனங்களைத் தம் சமயத்திற் சேர்த் துக் கொண்டிருந்தனர்."
மேலும் தொடர்ந்து கூறுகையில்,166
"கத்தோலிக்க ஆலயங்களும் பலு முன்னிருந்த சைவ ஆலயங்களின் நிலத்தில் எழுந்தன. இவ்வாறே மானிப் பாய்க் கத்தோலிக்க ஆலயம் அவ்விடத்திலிருந்த மிகப் பழைய சைவ ஆலயத்தை இடித்துக் கட்டப்பட்டது. தற்காலப் பெருஞ் சந்தைகள் எல்லாம் பறங்கியருடைய ஆலயங்களுக் கணித்தாகவே எழுந்தன. ஆலயத்தைத் தரிசிப்போர் பண்டமாற்று செய்யத் தொடங்கியே சந்தை கூடும் வழக்கம் தலைப்பட்டது. பிற்காலச் சந்தைகள் அழிந்து போன கோயில் வளவுகளினுள்ளேயே கூடுவனவாயின."
இவ்வாறு யாழ்ப்பாண அரசின் ஆளுமைக்குட்பட்ட பகுதி களிலேயே போத்துக்கேயரின் சமயப் பிரசார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. வன்னிப் பகுதி இத்தகைய நடவடிக்கை களிலிருந்து தவிர்ந்திருந்தது. இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களின் வருகை ஈழத்து மத வரலாற்றில் ஒரு திருப்புமுனையானது. இது வரை இங்கு நிலவிய இந்து, பெளத்த மதங்களிடையே ஏற்பட்ட சங்கமிப்பைப் போன்றதொரு சங்கமிப்புப் பின்வந்த இஸ்லாத்திற் கும், கிறிஸ்தவத்திற்கும் சுதேச மதங்களுக்குதுடையே ஏற்படவில்லை. இவை தனியான கலாசாரப் பின்னணியில் நகர்ந்து செல்லத் தொடங்கின. யாழ்ப்பாண அரசில் முதன்மை பெற்றி

-257
ருந்த இந்துமதம் தனது முதன்மையை இஸ்லாத்தின் வருகை பால் இழக்காவிட்டாலும் போத்துக்கேயரின் வருகையால் இழந்தது மட்டுமன்றிப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்குமுள்ளாகியது. எனினும், போத்துக்கேயராலோ அல்லது பின்வந்த பிற ஐரோப் பியராலோ யாழ்ப்பாண அரசு ஸ்திரப்படுத்திய இந்துக் கலாசாரப் பாரம்பரியத்தை அழிக்கமுடியவில்லை என்று கூறினால் மிகை யாகாது.
அடிக்குறிப்புகள்
1. சிற்றம்பலம், சி. க. "பண்டைய ஈழத்து யக்ஷ - நாக வழி பாடுகள் சிந்தனை (புதிய தொடர்), தொகுதி 1, இதழ் 2, ஆடி, 1983, பக். 121 - 136; சிற்றம்பலம், சி. க. "ஈழமும் நாக வணக்கமும் மணிபல்லவ கலாமன்றம், நயினாதீவு, 28ஆம் ஆண்டு நிறைவு விசேட மலர், 16 - 4 - 1990. Lib. 37 - 40.
2. சிற்றம்பலம், சி. க. "பண்டைய ஈழமும் இந்துமதமும்? பாரதி, மயிலிட்டி கலைமகள் மகாவித்தியர்லய வெளியீடு, காங்கேசன்துறை, 1983. பக். 18 - 28.
3. சிற்றம்பலம், சி. க. 'இலங்கையின் ஆதிப் பிராமிக் கல் வெட்டுகள் காட்டும் இந்துமதம் சிந்தனை, தொகுதி 1. இதழ் 2, 1976. பக். 29 - 36; சிற்றம்பலம், சி. க. பெளத்தத் திற்கு முந்திய ஈழத்து இந்துமதம் சிந்தனை (புதிய தொடர்), தொகுதி 1, இதழ் 2, கார்த்திகை 1983. udi. 38 - 56; Sitrampalam, S. K. The Brahmi Inscriptions of Sri Lanka as a source for the study of Puranic Hinduism in Sri Lanka Ancient Ceylon, No. 7, Vol. I, 1990. பக். 285 - 309.
4. சிற்றம்பலம், சி. க. 'கிறிஸ்த்தாப்தத்திற்கு முன் ஈழத்தில் வாழ்ந்த பிராமண குலங்கள் பற்றிய இலக்கியச் சான்றுகள்" வேலணை மேற்குப் பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் (முடிப்பிள்ளையார்) ஆலயம் மகா கும்பாபிஷேகச், சிறப்புமலர், சுக்கில வருஷம், பங்குனி, 29 (11 - 4 - 1990). பக். 81 - 87; சிற்றம்பலம், சி. க. "கிறீஸ்த்தாப்தத்திற்கு முன் ஈழத்தில் வாழ்ந்த பிராமண குலங்கள் பற்றிய கல்வெட்டுச் சான்றுகள்" புங்குடுதீவு மேற்கு அரிய நாயகன் புலம், பூரீ வீரகத்தி விநா வகர் ஆலய மகாகும்பாபிஷேக மலர், 1989. பக். 50 - 55

Page 172
9.
10.
11.
12,
13.
14.
5.
6.
7.
‘ س-258
சிற்றம்பலம், சி. க. "ஈழமும் பிராமண குலங்களும் - கி.பி. 1ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி. 10ஆம் நூற்றாண்டு வரை கொக் குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய மகாகும்பா பிஷேக மலர், 7 - 6 - 1989 - 24 - 7 - 193 ச. பக். 61 - 63.
. Silva, K. M. de. A History of Sri Lanka (London),
1981. Uáš. 2 - 21.
. சிற்றம்பலம், சி. க. "ஈழமும் இந்து மதமும் - பொலநறுவைக்
காலம் (கி. பி. 1000 - 1250), சிந்தனை (புதிய தொடர்), தொகுதி 2, இதழ் 2, 1984. பக். 115 - 151.
மேற்படி, ப. 126.
சிற்றம்பலம், சி. க. "ஈழமும் இந்துமதமும் - பொலநறுவை அரசுக்குப் பிற்பட்ட - போத்துக்கேயர் வருகைக்கு முற்பட்ட காலம் (கி.பி.1250 - கி.பி. 1505), சிந்தனை (புதிய தொடர்), தொகுதி 2, இதழ் 3. கார்த்திகை 1984. பக். 129 - 179.
Paranavitana, S. (ed) History of Ceylon, (Colombo) 1960.
J. 767.
பூரீ தக்ஷண கைலாச புராணம் , (பதிப்பு) பு. பொ. வைத்திய லிங்க தேசிகர், பருத்தித்துறை, 1916. திருநகரச்சருக் கம், செய்யுள். 108 - 109.
செகராசசேகரமாலை, (பதிப்பு), இரகுநாதையர், (கொக்கு வில்), 1942. சிறப்புப்பாயிரம், செய்யுள். 7.
யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு) குல. சபாநாதன் (சுன் Garrasub) 1949. ud. 25 - 27.
Silva, R. K. de. and Beumer, W.G.M. (ed) Illustrations and Views of Ceylon 1602 - 1796, (London) 1988. L. 323
தகSண கைலாச புராணம், (பதிப்பு) சி. நாகலிங்கம்பிள்ளை, (வதிரி. யாழ்ப்பாணம்), விபவடு வைகாசி பக்.107.111:
யாழ்ப்பாண வைபவமாலை, மே, சு. நூ. ப. 34.
ஞானப்பிரகாசர், சுவாமி. யாழ்ப்பாண வைபவ விமர்சம்ை,
(அச்சுவேலி) 1928. ப. 100.
இக்கோயில்கள் சட்டநாதர் கோயிலை அண்டியே காணப் பட்டன எனக் கொணடாலும், ஒருசாரார் இக்குறிப்புத்

18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
'. 27.
28
29.
(
30.
31.
32.
---259-س- "
திருநெல்வேலித் தலங்காவற்பிள்ளையார், அம்மன்கோயில் ஆகியனவற்றுக்கும் பொருந்தும் என வாதிடுகின்றனர்.
Baldaeus, Phillipus. A True and Exact Discription of the Great island of Ceylon - A new and unabridged translation from the edition of 1672, printed in Cylon Historical Journal, Vol. VIII, July 1958 - April 1939. Nos - 1-4. Alu. 326.
இராசநாயகம், செ. முதலியார், யாழ்ப்பாணச் சரித்திரம், (வண்ணார்பண்ணை) 1933. ப. 141.
யாழ்ப்பாண வைபவமாலிை, மே. கூ. நூ. பக். 31 - 32.
கைலாயமாலை, (பதிப்பு) செ. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை, (சென்னை) 1939. கண்ணி. கசரு - கருரு. (145 - 155).
யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூ. பக். 31-32, மேற்படி, பக். 31 - 32.
மேற்படி. பக். 32 - 33.
மேற்படி, ப. 32.
கைலாயமாலை, மே கூ நூ. கண்ணி, உகூக (293).
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. யாழ்ப்பாணச் சரித்திரம், (யாழ்ப் Lum 600Tub) 1 933. Lu. 32.
. ஞானப்பிரகாசர், சுவாமி. மே கூ. நூ. ப. 67.
Indrapala, K. (ed.) Epigraphia Tamilica, Vol. І, Part I, (Kandy) 1971. ud. 52 - 58.
ஞானப்பிரகாசர், சுவாமி, மே. கூ நூ. ப. 67. Rasanayagam, s, Ancient Jaffna, (Madras), 1926. U. 332
சிவசாமி, வி. 'நல்லூரும் தொல்பொருளும் ஒளி, (யாழ்ப் பாணம்), ஆகஸ்ட் 972.
e முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. மே கூ. நூ. ப. 82.

Page 173
34. 35.
36.
37,
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
-س-260-سسه
மேற்படி. ப. 85
Queyroz, Fernao, de. The Temporal and Spiritual Conquest of Ceylon, (Tr) S. G. Perera, Vol. IV, (Colombo) 1930. L. 642.
திருப்புகழ், (பதிப்பு), சைவசித்தர்ந்த மகா சமாஜம் (சென்னை), 1935. செய்யுள். 1032.
ஞானப்பிரகாசர், சுவாமி, மே. கூ நூ. ப. 128,
Baldaeus, Phillipus, மே. கூ, நூ. ப. 326.
Abeysinha, Tikiri, Jaffna under the Portuguese, (Colombo)
1986.
Queyroz, Fernao, de, Gı8. da, töır. BK. JV, 1. 642.
யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூ, பக். 79 - 81.
மேற்படி, பக். 15 - 23.
கைலாயமாலை, மே. கூ. நூ, கண்ணி, க ை- கரு (10 - 15).
வையாபாடல், (பதிப்பு) க. செ. நடராசா. (கொழும்பு ) 1980, செய்யுள். 17,
சிற்றம்பலம், சி. க. 'ஈழமும் இந்துமதமும் - அநுராதபுர காலம்? சிந்தனை (புதியதொடர்), தொகுதி 2, இதழ் 1, பங்குனி 1984. பக். 108 - 141.
சிவத்தம்பி, கா. 'தமிழ்ச் சைவப் பண்பாட்டிற் செல்வச் சந் நிதியின் முக்கியத்துவம் - விரிவான ஓர் ஆய்வுக்கான சில தொடக்கக் குறிப்புக்கன்" தொண்டைமானாறு செல்வச் சந் நிதி முருகன் சித்திரப் பெருந்தேர் வெள்ளோட்டச், சிறப்பு மலர், 6, 9, 1984, அருணகிரிநாதரின் திருப்புகழில் வரும் *யாழ்ப்பாணாயன் பட்டினமேவிய பெருமாளே” என்ற குறிப்பு செல்வச் சந்நிதியானுக்கே பொருந்தும் எனவும் கருதப்படுகிறது. (சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், ஆற்றங்கரையான் (தும்பளை), 1989, ப. 123.
பொன்னையா, நா. "ஈழமண்டலத் திருத்தலத் தேவாரமும் திருப்புகழும் (சுன்னாகம்), 1934 பக். 34 - 95,

48.
A9.
50.
ー261ー
திருப்புகழ், மே, கூ. நூ. செய்யுள், 3, 21, 77, 228, 239, 276, 340, 437, 472, 5 21., 529, 594, 610, 641., 645, 650, 803, 994, 1018, 1045, 1106, 1112, 1138, 1178, 1267.
கதிரைமலைப்பள்ளு, (பதிப்பு) வ. குமாரசுவாமி, செ. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை வெளியீடு , (சென்னை), 1935,
பரராசசேகரம் (முதற் பாகம்), (பதிப்பு) ஐ பொன்னையா பிள்ளை, யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலை, விபவ
விநி) புரட்டாதி மீ" - 1928. ப. க. (1).
51. சிற்றம்பலம், சி. க. மே, கூ, க, காரித்திகை 1984,
1 é... 149 - 1 51.
52. Paranavitana, S. Guo. Sina . DIT. 1960. u. 764.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ நூ, ப. 34,
கைலாயமாலை, மே. கூ. நூ.கண்ணி, உகO-உஉரு. (210-225) மேற்படி. கண்ணி, உஅரு - உகூ0 (285 - 290)
வேலுப்பிள்ளை, ஆ. இலங்கைத் தமிழர்களின் கயிலாச பாரம்பரியம்’, யாழ். கனகரத்தினம் மத்திய மகாவித்தியா லயம் - நிறுவகர் கெளரவ ஆ. கனகரத்தினம் நினைவுப் பேருரை, 3, 5. 1989. பக். 1 - 28.
மேற்படி, ப. 21.
கைலாயமாலை, மே, கூ, நூ. ஆராய்ச்சி முன்னுரை, பக். i - xwர்.
பத்மநாதன், சி. இலங்கையில் இந்துமதம் - ஆரியச் சக்கர வர்த்திகள் காலம் (கி.பி. 1250-1620), சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மணிவிழாச் சபை வெளியீடு, துர்க்காபுரம், (தெல்லிப்பழை) 6. 3. 1985. பக். 211 - 227.
யாழ்ப்பாண வைபவமாலை, மே, கூ, நூ" ப. 48.
61. ஜீ தகரீன கைலாச புராணம் - கோணேசர் கல்வெட்டு,
(பதிப்பு பு.பொ. வைத்தியலிங்க தேசிகர், (பருத்தித்துறை) 1916. பக். உக (21).

Page 174
: 62.
63.
64.
65.
66,
67 68.
69.
70.
71.
72.
73.
74
5,
76.
77.
78.
-262
திருக்கோணாசலபுராணம், , ( பதிப்பு) ஆ. சண்முகரத்தின
ஐயர், (யாழ்ப்பாணம்), 1909. திருப்பணிப்படலம், ப. கசுக
( 194).
இந்திரபாலா, கா. "ஈழநாட்டுத் தமிழ்ச் சாசனங்கள் - கிழக் கிலங்கைச் சாசனங்கள் சிந்தனை, மலர். 2 இதழ் 283, ஜூலை - ஒக்ரோபர் 1968. பக். 35 - 50.
கதிரைமலைப்பள்ளு. மே, கூ, நூ, காப்புச்செய்யுள், அவை டக்கம், கடவுள் வணக்கம்.
கந்தையா, வி. சீ. கண்ணகி வழக்குரை (சுன்னாகம்) 1968. வரம்பெறுகாதை, ப. 2 செய்யுள், 3; கப்பல் வைத்த காதை, ப. 41. செய்யுள் . 148.
திருப்பு கழ், மே. சு. நூ. செய்யுள், 1331. Queyroz, Fernao, de, old. ... Dr. Book 11, uá. 236. தக்ஷிண கைலாசபுராணம், மே. சு. நூ. பக். 7 - 8. " ;
Navaratnam, C. S. A Short History of Hinduism in Ceylon, , (Jaffna) 1964. Lu. 4 I.
மேற்படி. பக். 41 - 42. Queyroz, Fernao, de, Gud. G. BT., Vol. 11. u. 243.
Gossibu. Vol 1V, Lu. 665. Navaratnam, C. S. 1964. Au, 45.
murrualde, மே. க. நா. செய்யுள், 33.
தக்ஷிண கைலாசபுராணம், மே.கூ. நூ. பக். 127 - 129. மேற்படி, i léi;. 101. 167.
மேற்படி பக், 130-131.
புஷ்பரத்தினம், ப. ஐரோப்பியர். ஆட்சிக்கு முற்பட்ட கால யாழ்ப்பாணத்து இந்துப் பாரம்பரியம் - ஒரு வரலாற்று
நோக்கு புத்தூர் அருள்மிகு பூரீ விசாலாகூரி உடனமர் பூரீ விஸ்வநாத ஸ்வாமி தேவஸ்தானம் - மகாகம்பாபிசேஷக் மலர்,
1989 ، J$. 48 - 49.

79.
80.
81.
82.
83.
84.
8S.
86.
87.
88.
89.
90,
91
'92,
-263
கணபதிப்பிள்ளை, க. ஈழத்து வாழ்வும் வளமும் (சென்னை), 1962, ud, 29 - 37. ! . .
யாழ்ப்பாண வையவமாலை, மே, கூ, நூ. பக். 80 - 81.
Pieris, P. E. . Ceylon and the Portuguese 1505 - 1658, (Tellippala), 1920. ஒலிவேறா இறந்த பின்னர் அவனுக்குப் பதிலாக இன்னொருவரை அப்பதவிக்கு நியமிப்பதற்குப் பதிலாக பிலிப் ராஜா எனத் தம்மால் அழைக்கப்பட்ட ஒலிவேறாவின் படத்தை வைத்தே போத்துக்கேய நிருவாகத் தினை யாழ்ப்பாணத்தில் நடத்தலாம் எனப் போத்துக்கேய ரைத் தமிழ் முதலியார்மார் கேட்டுக்கொண்டதாகப் போல்
பீரிஸ் மேற்கூறிய நூலின் 146 ஆவது பக்கத்திற் குறிப்
பிட்டுள்ளது கருத்திற் கொள்ளத்தக்கது. Paranawitana, S. Gud, a. al. 1960. Lu. 766. Sisa நூலாகிய கோகில சந்தேஸயத்தின் 252, 253 ஆம் பாடல் களில் வரும் உப்புல்வன் கடவுள் பற்றிய குறிப்பு, வல்லி புரம், பொன்னாலை ஆகிய ஆலயங்களிலமைந்த விஷ் ஆலயங்களுக்குரியதாகக் கொள்ளப்படுகிறது. தகதிண கைலாசபுராணம், மே. கூ. நூ. பக். 139 - 14 மேற்படி. பக். 133 - 139. சிற்றம்பலம், சி. க. மே, கூ, க. கார்த்திகை 1984, ப. 149. Navaratnam, C.S. Quo.a. uit. L. 71.
மேற்படி, U. 70
மேற்படி U. 70.
யாழ்ப்பாண வைபவமாலை, மே.கூ.நூ. ப. 14.
Rasanayagam, C: மே.கூ. நூ. பக். 226 - 267.
இந்திரபாலா, கா. "உரும்பராய் கருணாகரப்பிள்ளையார் கோயிலிலுள்ள கல்வெட்டுக்கள்? உரும்பராய் கருணாகரப்பிள் ளையார் கோயில் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக விழா மலர், 19 08, 1973, பக். 34 - 38, ۸۰ ۰؛
மேற்படி. பக். 36 - 37.

Page 175
一264一
93. பறாளை விநாயகர் பள்ளு, (பதிப்பு). சே.வே. ஜம்புலிங்கம்
பிள்ளை, (சென்னை) 1956, ப. 8.
94. இராசநாயகம், செ, மே. கூ. நூ, ப. 141. 95. வையாபாடல், மே, கூ. நூ. செய்யுள். 64,76, 92. 96. மேற்படி, செய்யுள், 64. 97. மேற்படி. செய்யுள். 92.
98. ஞானப்பிரகாசர், சுவாமி, மே, சு. நூ. பக். 123 - 124.
99. Gnanaprakasar. S, - A History of Catholic Church in Ceylon,
(Colombo), 924. L. 215.
100. சிற்றம்பலம், சி. க. நாகேஸ்வரி வழிபாடு’ நயினாதீவு பூரீ நாகபூஷணி அம்மன் கோவில் திருக்குடமுழுக்குப் பெருவிழா மலர், பாகம் 1, 28. 8. 1983.
101. செல்வரத்தினம், ம. பொ. தாரந்தனையில்கண்டெடுக்கப் பட்ட தொல்பொருட் கருவூலம்’, பூர்வகலா, யாழ்ப்பாணத் தொல்பொருளியற் கழகச் சஞ்சிகை, 1979. பக். 40 - 42.
102. சண்முகரத்தினம், த. 'ஈழத்திற் சைவக் கிராமிய வழிபாடு" நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாடு நிகழ்ச் சிகள் முதலாவது தொகுதி, பதிப்பாசிரியர். சு. வித்தியா னந்தன் (யாழ்ப்பாணம் - சுன்னாகம்) 1974, புர். 56 - 67.
103. பாலசுந்தரம், இ. "ஈழத்தில் கண்ணகி வழிபாடு பற்றிய ஆய்வில் வன்னிப் பிரதேச நாட்டார் பாடல்கள் பெறும் முக்கியத்துவம் "தமிழோசை", தமிழ்மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, (இலங்கை). 1986. Léč. 6 - 14.
104. சற்குணம், எம். "ஈழத்திற் கண்ணகி வழிபாட்டின் தோற் றமும் வளர்ச்சியும் திருக்கேதீச்சர திருக்குடத் திருமஞ்சன மலர், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை வெளியீடு, நள ஆண்டு ஆனி 4, 7. 1976. பக். 113 - 118. 105. மேற்படி, பக். 115 - 116.
106. வையாபாடல், மே, கூ, நூ. ப. 26.

()7.
lu8.
109.
10.
111.
112.
13.
114.
115.
16,
17,
18.
9.
20.
-265
மேற்படி - செய்யுள் 32 - 33; கோகில சந்தேஸயத்தில் மாதோட்டப் பட்டினத்திற்கு (மாவடுபட்டுன) வடக்கே அமைந்துள்ள ஐயனார் கோயில் பற்றிய குறிப்புண்டு. (Paranavitana, S. மே. கூ. நூ. ப. 769) இது ஒருசமயம் பூநகரியிலமைந்திருந்த ஐயனார் கோயில் பற்றிய குறிப் பாகவுமிருக்கலாம்.
நடராசா,F, X, C. காரைநகர் மான்மியம், கொழும்பு, 1971. Lă. 59 - 61.
வையாபாடல், மே. கூ. நூ. செய்யுள் 63. சண்முகசுந்தரம், த. மே. கூ. க. பக். 58 - 67; Kanapathipillai, K. Popular Religion among the Ceylon Tamiis',
Tamil Culture, Vol, VIII, No: 1 Jan - March 1959 Luji. 26 - 31.
கணபதிப்பிள்ளை, சி. கந்தபுராண கலாசாரம், யாழ்ப்பாணம், 1959 • 1յ, 82.
கைலாசநாதக் குருக்கள், கா. "சைவத் திருக்கோயிற் கிரியை நெறி', கொழும்பு, 1963, பக். 204 - 255.
கைலாயமாலை, மே கூ. நூ. கண்ணி. உஉ0 - உந0. (220-230り
மேற்படி, கண்ணி. உகரு - உகூ0. (235 - 290) மேற்படி கண்ணி. ந0ரு - நக9. (305 - 310) Cartman James, Rev. Hinduism in Ceylon, (Colombo) 1957.
சிற்றம்பலம், சி. க. மே, கூ, க. கார்த்திகை 1984. Lješ. 150 - 152.
கைலாயமாலை, மே கூ. நூ. கண்ணி, உகூ0-உகூரு. (290-295) கணபதிப்பிள்ளை, சி. மே கூ. நூ. ப. 40.
வேலுப்பிள்ளை, ஆ. அரசகேசரியின் இரகுவம்மிசமும் அது தோன்றிய இந்துப் பண்பாட்டுச் சூழலும் சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரை, யாழ்ப்பாணப் பல்கலைக்
கழகம், 28 நவம்பர் 1988 பக். 1 - 24,

Page 176
-س-266-س-
121. மேற்படி, ப. 16.
122. மேற்படி. ப. 16.
123. மேற்படி, ப. 17.
124. யாழ்ப்பாண வைபவமாலை, மே, கூ, நூ. பக். 7-22. 125. சிற்றம்பலம், சி. க. மே. கூ. க. பங்குனி 1984, பக். 130-131
126. திருக்கரசைப்புராணம், ( பதிப்பு ) வ. ச. இராசரத்தினம்
வேலணை, 1975.
127. தகழிண கைலாசபுராணம், மே. கூ. நூ. பக். 10 - 27. 128. இந்திரபாலா, கா. மே. கூ. க. 1968. பக். 35 - 50.
129. மேற்படி, ப. 49.
130. தகழிண கைலாசபுராண்ம், மே. கூ. நூ. பக். 107 - 111.
131. இந்திரபாலா, கா. மே, கூ, க. 1973. ப. 37.
132. இந்திரபாலா, கா. மே, கூ. க. 1968, பக். 32 - 42. 133. Navaratnan, S. Go. sa. BIT. U. 33.
134. சிற்றம்பலம், சி. க. மே, கூ, க. 1984, ப. 150.
135. யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூ. ப. 46. 136. ஞானப்பிரகாசர்.சுவாமி, மே. கூ. நூ. ப. 103. 137. பத்மநாதன், சி. வன்னியர், (பேராதனை), 1970. பக். 65-80.
138, சண்முகசுந்தரம், த. "யாழ்ப்பாணத்து வீரசைவர்' (ஏழாலை -
யாழ்ப்பாணம்) 1983.
139. நடராசா, F. х. C. மட்டக்களப்பு மான்மியம், (கொழும்பு) 1962; Liyanagamage, A. The decline of Polonnaruwa and the rise of Dambadeniya', (Colombo) 1968.

40.
4.
142.
143,
144.
145.
146.
47.
18.
49.
5().
-267
Mahavamsa, (ed ) Geiger, W. (Colombo) 1950. மணிமேகலை (பதிப்பு) உ. வே. சுவாமிநாத ஐயர், சென்னை, (1956) காதை, 8, வரி. 50 - 64.
Mahavamsa, Guo. gr. 15IT. gig guiruth XIX-XX. மேற்படி, அத்தியாயம் XX. வரி 24 - 26.
மேற்படி, அத்தியாயம் XXXV. வரி - 124 - 125; அத்தி uuriruulub. XXXVI. auf 9 - 10; aš FF u r u tb XXXVI. வரி, 36 - 37,
Culavamsa, Part - I, (ed) Geiger, W. (Reprinted Colombo) 1973. அத்தியாயம் 42. வரி. 62 - 63.
மேற்படி. அத்தியர்யம்: 60. வரி. 60 - 62; இந்திரபாலா, கா. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் (கண்டி) 1972. ப. 33
Pieris, P. E. Nagadipa and Buddhist remains in Jaffna, Part I (JRAS. C. B.) Vol. XXVI, No. 70, 1917 u. 13.
Pieris, P. E. CBLD. s. s. 1917. Lu. 44. Pieris, P. E. Nagadipa and Buddhist remains in Jaffna. Part II” (JRASC. B.), Vol. XXViii, No. 74. I 9 19. Luji. 40 - 88.
Paranavitana, S. “Vallipuram Gold plate Irscription of the reign of Vasabha” Epigraphia Zeylanica. Vol IV, No 29. 1934-1941 Ludž. 22. - 237.
Godakumbura, C E. "Kantarodai, (J. R. A. S. C. B.) New series, Vol. XII, 1968. Lidi. 67 - 85.
இந்திரபாலா, கா. கந்தரோடையிற் கிடைத்த ஒரு பிராமிச் சாசனம்’, ‘பூர்வகலா' - யாழ்ப்பாணத் தொல் பொருளியற் கழகச் சஞ்சிகை, 1973, பக். 16-17,
Rugupathy, P. Early settlements in Jaffna. An Archaeo
logical Survey - (Madras) 1987.
Nicholas, C. W. "Historical Topography of Ancient and Medieval Ceylon (J. R. A. S. C B.). N. S. Vol. VI. 1963. uji. 80-87; Kannangara, E. T. Jaffna and the Sinhala heritage," (Colombo) 1894. Ltd. 18-23.

Page 177
س-268--
153. வையாபாடல், மேற்படி, செய்யுள், 40, 77.
154. யாழ்ப்பாண வைபவமாலை, மே, கூ, நூ. பக். 24-59.
155. Pieris, P. E. (Buo. s. s. 1917. u. 44.
156. யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூ. ப. 59.
157. Baldaeus, Philipus, (Bufo. Fr., gr. L u 326.
158. முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. மே, கூ, நூ. ப. 86.
159. அப்துல் ரஹீம், எம். எஸ். யாழ்ப்பாண முஸ்லீம்கள் வரலா
றும் பண்பாடும், (யாழ்ப்பாணம்) 1979, ப. 38.
160. இராசநாயகம், செ, மே, கூ, நூ, ப. 113.
161. Queyroz Fernao de. Book IV. Gup. 3. ET, usi. 660-606.
162. Abeyasinghe, Tikiri, GB o. sin. Br.
163. ஞானப்பிரகாசர், சுவாமி. எஸ். மே. கூ. நூ. பக். 149 - 150.
164. ஞானப்பிரகாசர், சுவாமி. எஸ். “யாழ்ப்பாண அரச குடும்பம்" பூரீ லங்கா, மலர் 15, இதழ் 4, மார்ச் 1963. பக். 19 21. 1922 இல் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களால் எழுதப் பட்ட கட்டுரையே மேற்படி இதழிற் பிரசுரிக்கப்பட்டுள்ளது,
165. வேலுப்பிள்ளை. மெஸ், க. யாழ்ப்பாண வைபவகெளமுதி,
(வயாவிளான்), 1918. பக். 79 - 80.
166. மேற்படி, ப. 87.

அத்தியாயம் - 8
N6 IITQ
இலங்சையின் வட பிராந்தியத்திலே குறிப்பாக யாழ்ப் பாணத்தை மையமாகக் கொண்டு சுமார் நான்கு நூற்றாண்டுகள் ஏறத்தாழ கி. பி. 1250 - 169 வரை நிலவிய தமிழ் அரசிலே பண்பாட்டின் பல்வேறு கூறுகளும் பேணப்பட்டன; வளர்ச்சியும் அடைந்தன. மன்னர்கள் தலைநகரான நல்லூரினை ஒரு பண் பாட்டு நிலைக்களமாகச் சிறப்பித்தனர். சமகாலத் தென் இலம் கையில் ஆட்சி புரிந்த சிங்கள மன்னர்கள், தமிழக வேந்தர்கள் போல இவர்களும் கலைகளின் பல்வேறு துறைகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தனர். அவர்களிற் பலர் கலையுணர்வும், கலைத் திறனும் கொண்டிலங்கினர். மேலும் இக்கால கட்டத்திலே தென் னிந்தியாவிலே குறிப்பாகத் தமிழ் நாட்டிலேற்பட்ட முஸ்லிம் படையெடுப்புகள், அரசியற் குழப்பங்கள் காரணமாக அங்குள்ள மக்களில் ஒரு சாரார் யாழ்ப்பாண அரசுக்கு வந்து குடியேறினர். இவர்களிற் கலைஞர்களும் அடங்குவர். மேலும் யாழ்ப்பாண மன் னர்கள் தமிழகத்துடன் பொதுவாக நெருங்கிய அரசியல், பொரு ளாதார, பண்பாட்டு உறவுகளையும் கொண்டிருந்தனர்; தென் னிலங்கையுடனும் கொண்டிருந்தனர்.
இவ்வரசில் வளர்ந்த கலைகளைப் பற்றி முழுமையாக அறிய முடியாதுள்ளது. 16ஆம் நூற்றண்டிலும், 17ஆம் நூற்றண்டுத் தொடக்க காலத்திலும் இங்கு ஏற்பட்ட போத்துக்கேய படை யெடுப்புகளின் விளைவாக இங்கிருந்த கலைச்சின்னங்கள் குறிப் பாகச் சமயச் சார்புள்ள, சமயச் சார்பற்ற பல கட்டிடங்கள், சிற்பங்கள், ஒவியங்கள், ஏடுகள் முதலியன அழிக்கப்பட்டுவிட் டன. இசை, நடனம் போன்ற கலைகள் நலிவுற்றன. எனினும், அரசரின் ஆதரவிற்கு ஏற்ப நிலவி வந்த கலைகளை,

Page 178
س-270--
(sy) g560yp6wLDái 3,6) Goscir (Plastic Arts) (ஆ) அவைக்காற்றுக் கலைகள் (Performing Arts) (இ) இலக்கியங்கள்
என மூன்றாக வகுத்துக் கூறலாம். (அ) குழைமைக் கலைகள்
இவற்றிலே கட்டிடங்கள், சிற்பங்கள், ஒவியங்கள் ஆகியன அடங்குகின்றன. இவற்றுள்ளே சிற்பம் பற்றிப் பிறிதொரு கட் ரையிலே கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு இக் கலைகள் தான் போத்துக்கேயரின் கலை அழிவுக்கொள்கைக்குப் பெரிதும் இலக்காகின. ஒரு சில தெய்வச் சிலைகள், தூண்கள், கட்டிட அத்திவாரப் பகுதிகள் தவிர வேறு எவையும் தலைநக ரான நல்லூரிலோ, பிறவிடங்களிலோ எஞ்சவில்லை. எனினும் சமகாலத் தமிழ், சிங்கள நூல்கள் சிலவற்றின் மூலமும் இவற்றை அழித்த போத்துக்கலைச் சேர்ந்த அறிஞர் எழுதிய நூல்கள் மூல மும், ஒப்பீட்டு ரீதியிலே சமகாலத் தமிழகச் சான்றுகள் மூலமும் இவை பற்றி ஒரளவு கூறலாம். நல்லூரிலே ஒரளவு பெரிய அரண் மனையும், பல இந்துக் கோயில்களும் இருந்தன என்பதில் ஐய மில்லை.1 இங்கிருந்த கோயில்களில் பழைய நல்லூர்க்கந்தன் ஆலயம் அல்லது பிறிதொரு சைவ ஆலயம் பெரிய ஆலயமாக இருந்த தென்பது குவேறோஸ், போலோத திரினிதாதே முதலிய போத் துக்கேய ஆசிரியர்களின் நூல்களினாலும்2 அறியப்படுகின்றது. இக்கோயில் பெரிதெனக் கூறப்படுவதுடன் போர் வீரரின் பெரிய பாசிறையாகவும்3 சில காலம் பயன்பட்டதிலிருந்து இது ஒரு பெரிய கோயிலாக இருந்ததெனலாம். திருகோணமலையிலிருந்த பெரிய சிவாலயத்தையும், தேவிநுவரவிலிருந்த பெரிய விஷ்ணு ஆலயத்தையும் இடிக்குமுன் போத்துக்கேயர் அவற்றின் கலையி லீடுபட்டுப் போலும் வரைபடங்களை வரைந்துள்ளனர்.4 ஆனால் நல்லூரிலிருந்த கோயில் பற்றிய இத்தகைய வரைபடமொன்று இற்றை வரை கிடைக்கவில்லை. எனினும் சமகாலத் தமிழகக் கோயில்களின் கலைப்பாணியில் (விஜயநகர - நாயக்கர் கலைப் பாணியில்) ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அங்கு அமைக்கப்பட்ட மிகப் பெரிய கோயில்கள் போலன்றி, இங் குள்ள மூலவளங்களுக்கேற்ப இவை பெரும்பாலும் நடுத்தர அளவுள்ளனவாக அல்லது சிறியனவாக இருத்திருக்கலாம்.
சமயச் சார்பற்ற கட்டிடங்களில் அரண்மனை குறிப்பிடத் தக்கதாகும். இதுவும் சமகாலத் தமிழக அரண்மனைகள் போன்று இருந்திருக்கலாம். இக்கட்டிடங்களிலே நேர்த்தியான சிற்பங்களும், ஒவியங்களும் இடம்பெற்றிருக்கலாமெனப் பொதுவாகக் கொள்ள

-271
லாம். ஏற்கனவே வரலாற்று மூலங்களில் குறிப்பிட்ட - கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை, கோகில சந்தேஸய முதலிய நூல்கள் தல்லூரிலிருந்த கோயில்கள், அரண்மனைகள் பற்றிக் கூறியிருப்பவை நினைவு கூரற்பாலன. இந்நூல்களிலே புலவர்களின் மிகைபடக் கூறல், கற்பனை முதலியவற்றால் யதார்த்த நிலை குறைவாக நிலவினாலும், குறிப்பிடத்தக்க கட்டிடங்களும், கலைச் செல்வங்களும் இருந்தன எனக்கொள்ளுதல் தவறாகாது.
(ஆ) அவைக் காற்றுக் கலைகள்:-
இவ்வகைக்கலைகளிலே இசை, நடனம், நாடகம் முதலியன அடங்கும். இவற்றைப் பற்றி அறிவதற்கான மூலங்களும் ஒரு சிலவே கிடைத்துள்ளன. எனினும் சமகால இலக்கியங்கள் மூலமும், ஒப்பீட்டு ரீதியிலே தென்னிலங்கை, குறிப்பாகத் தமிழ்நாடு ஆகிய இடங்களில் நிலவி வந்த கலைகளுடனும் இவற்றை ஒப்பிட்டு நோக் கலாம். இவை அரசவைக்கலைகளாக மட்டுமன்றிக் குறிப்பாகக் கோவிற் கலைகளாகவும் பெரிதும் போற்றப்பட்டு வந்தன.
1. இசை
வாய்ப்பாட்டிசை, வாத்திய இசை ஆகிய இரண்டும் சாஸ் திரீய ரீதியிலும், நாட்டாரியல் ரீதியிலும் நிலவின எனலாம். யாழ்ப்பாண அரசு நிலவிய கட்டத்திலே கர்நாடக இசை தென் னிந்தியாவில் அரும்பி விட்டது. அதன் தாக்கம் ஓரளவாவது இவ்வரசு காலத்தின் பிற்பகுதியில் ஏற்பட்டுவிட்டதெனக் கொள் ளலாம். எனினும் பண்ணிசை தமிழகத்தைப் போன்று இங்கும் நன்கு நிலவிற்று எனலாம். கி. பி. 15ஆம் நூற்றாண்டுக்காலக் கோட்டையில் இருந்த சிவாலயத்திலே தேவாரம் பாடப்பட்ட தாக சேலலிஹினி சந்தேஸய5 எனும் சிங்களத்தூதுப் பிரபந்தம் கூறும். கவிராஜரின் கோணேசர் கல்வெட்டிலே திருக்கோணேஸ் வரர் ஆலயத்திலிடம்பெற்ற இசை, நடனம் பற்றிய குறிப்புகள் உள்ளன.6
இங்கு நடைபெற்ற நித்திய, நைமித்திய கிரியைகளின் போது அவற்றிற்கான இசை, நடனம் ஆகியனவற்றைச் செய்வதற் காகக் கலைஞர்கள் - தேவரடியார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என அறியப்படுகின்றது. இம்முறை ஏதோ ஒருவகையில் அண் மைக்காலம் வரை நிலவி வந்ததாகத் தெரிகின்றது.7 சமகாலத் தேவிநுவரவில் இருந்த பெரிய விஷ்ணுகோவிலிலே வழிபாட்டின் போது பாடுதற்கும் ஆடுதற்கும் பெருந்தொகையான தேவரடி யார் இருந்தனர் என கி. பி. 1344இல் இங்கு வந்த மொறோக்கோ நாட்டுப் பயணியான இபின்பட்டுட்டாவின் பிரயாணக் குறிப்பு

Page 179
-272
களால் அறியப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட கோவில்களைப் போன்று நல்லூரிலும், வேறுசில இடங்களிலுமிருந்த பெரிய கோவில்களிலாவது இசை, நடனம் இடம் பெற்றிருந்திருக்கலாம். கண்ணகி வழக்குரை காவியம் (இது இக்காலத்தியது என்பதிற் கருத்து வேறுபாடு உண்டு) பல்வேறு பண்கள், இராகங்கள், இசைவாத்தியங்கள், நடனங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. எடுத் துக்காட்டாக, புறநீர்மை, தக்கராகம், பஞ்சமம், நட்டபரடை, வியாழக்குறிஞ்சி, முதலிய பண்களையும் கரிகாம்போதி, மல்லாரி, முதலிய ராகங்களையும் குறிப்பிடலாம். பண், ராகம் எனும் பதங் களே இவற்றில் வந்துள்ளன. மேலும் மாதவிக்கு ஏழுசுரங்களை யும் பெற்றோர் கற்பித்தனர் என்பது,
அரியகுரல் துத்தம் கைக்கிளை இளைஉழி இருவிளரி தாமிரமிவையெல்லாம் - தெரியவே கண்ணான மாதவியைக் காசினியோர் மனமகிழப் பண்ணேழும் பாடுவித்தார் பார்த்து.
(அரங்கேற்றுகாதை 49) எனும் செய்யுளிலே கூறப்பட்டிருப்பது கவனித்தற்பாலது.
மேலும் புல்லாங்குழல், வீன்ண, தண்ணுமை முதலிய இசைக்கருவிகள் பற்றியும், ஆமந்திரிகை (வாத்ய கதம்பம்) பற்றி யும் குறிப்புகள் இந்நூலில் வந்துள்ளன.
கைலாயமாலையிலே கூறப்படும் இசைபற்றிய தகவல்கள் நன்கு குறிப்பிடற்பாலன. அரசனின் முடிசூட்டு விழாவிலும் கைலாயநாதர் கோவில் மகாகும்பாபிஷேகத்திலும் இடம் பெற்ற இசைக்கருவிகள், இசை, நடனம் பற்றிக் கூறப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, முடிசூட்டு வைபவம் பற்றிய வருணனையில் (அரசன்)
"சிங்கா சனத்திற் சிறந்திருப்பச் சங்கார்ப்பத் தண்ணுமை சல்லாரி தடாரி திமின்முரசு நண்ணு முருடு நகுபேரி யெண்ணுகின்ற மத்தளங் கைத்தாள மணிக்கா களஞ்சுரினை தித்திமுதல் வாத்தியங்கன் சேர்ந்ததிர - வத்வசனர் தம்புருவேய் வீணை சரமண் டலந்தொனித்துச் சம்பிரம சங்கீதந் தாமிசைப்ப" (IIIー Iこ0り
எனவரும் பகுதியையும், இதைத் தொடர்ந்து வரும் "மங் கலம் சேர் பல்லியங்கண் மற்றதிர என்பதையும், திருக்குட முழுக்குப் பற்றிய வருணனையில்,

-273
" . . . . . தெள்ளிய சீர்த்
தாமத்தரளத் தவளக் குடைநிழற்ற காமருறு மாலவட்டங் கைபிடிக்கச் சேமமடற் சல்லரி பொற்பேரி தவின்முரசு தண்ணுமைமற் றெல்லா முரசு மெழுந்தொலிப்பச் சொல்லரிய மங்களங்களார்ப்ப வணிதையர்பல் லாண்டிசைப்ப பொங்கு கவரி புடையிரட்டப் பங்கமுடன் நாடகத்தின் மாதரி நடிக்கத் தொனியெழும்பச் சோடசபூ சாவிதங்கள்" 257 - 261
எனவரும் பகுதியையும் சேர்த்துப் பார்க்கலாம். யாழ் பற்றிய குறிப்பு இந் நூலிலும், வேறு சில நூல்களிலும் வந்துள்ளது, யாழ்ப்பாணம் எனும் பெயரே யாழின் முக்கியத்துவத்தினைக் காட்டுவதாகலாம். ஆனால் இது எந்த அளவுக்குப் பயன் பாட்டிலிருந்தது என்பது பற்றித் திடமாகக் கூறமுடியாது.
மேலே வந்துள்ள தவில் பற்றிய குறிப்புத் தமிழிலச்பெத்தில் இது பற்றி வரும் காலத்தால் முந்திய குறிப்புகளில் ஒன்றாகும். தவில் கூறப்பட்டிருக்கிறபடியால் இதற்கான நாகசுரமும் பயன் படுத்தப்பட்ட்மை தொனிப்பாக உள்ளது. மேலும் “மங்களங்கள்", "மங்கலம்’ எனும் பதங்கள் மங்கல வாத்தியமான நாகசுரத் தினைச் சுட்டுவதாகவும் கொள்ளலாம். மேலும் "மங்கலம் சேர் பல்லியங்கன் மற்றதிர* 'மங்கலம்’, எனும் சொற்றொடரில் மங்கல வாத்தியங்களான நாகசுரம், தவில், ஒத்தூது, சல்லாரி முதலியனவும் அடங்கியிருக்கலாம்.
மேற் குறிப்பிட்ட இசைக் கருவிகள் அனைத்தும் இவ் வைப வங்களிலிடம் பெற்றனவா என்பது பற்றித் திடமாகக் கூறமுடி யாது. எனினும் இவற்றிற் பல இடம் பெற்றன எனலாம்.
ஆனாற் பண்ணிசை குறிப்பாகக் கோவில்களில் இடம் பெற்று வந்தது என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே குறிப்பிட்ட கர்நாடக இசைக்குரிய சில ராகங்களின் பெயர்கள், பல்வேறு இசைக் கருவிகள் பற்றிய தகவல்கள் ஆகியனவற்றின் மூலம் கர்நாடக இசையும் ஒரளவாவது இக் காலகட்டத்தில் இங்கும் நிலவி வந்தது எனலாம்.
11. நடனம்:-
இசை கோல நடனமும்-தமிழரின் சாஸ்திரீய நடனமாகிய பரத நாட்டியமும் குறிப்பாக இங்கிருந்த பெரிய கோவில்

Page 180
-------274س۔
களிலும், அரச அவையிலும் இடம் பெற்று வந்ததெனலாம்.
இக்காலத்திய சில நூல்களிலே பரதம் என்ற சொல்லும்
வந்துள்ளது. எடுத்துக்காட்டுகளாக,
"பார்தனில் இயலிசை நாடகம்
பரதமோ டியலிசை பாடினும்"
(மாதவி அரங்கேற்றுகாதை, 13)
'பரத நெறியாளன்" (மேற்படி, 111)
எனக் கண்ணகி வழக்குரை காவியத்திலும்,
'நடிக்கும் பரதமியலிசை நாடகம்” எனத் தக்ஷண கைலாச புராணச் சிறப்புப் பாயிரத்திலும்
"ஆடகச் சிலம்பொலி பரவக் கிண்கிணி பாடகச் சீறடி பரதப் பண்ணுறச் குடகக் கரங்களிற் கண்க டோய்தர நாடகத் தியல் பெற நாறு நாட்டினார்" (நாட்டுப்படலம் 1) எனத் திருச்செல்வர் காவியத்திலும்(இந்நூல் 17 ஆம் நூற் றாண்டுப் பகுதியில் எழுதப்பட்டதாயினும் குறிப்பிடற்பாலது) வருவன ஈண்டுக் கவனித்தற்பாலன. பரத எனும் பதம் நடனம் எனும் பொருளில் மட்டுமன்றி நடிகன், ஆடுவோன், நாடகம் முதலிய பொருளும்படும்.
நடனம் பற்றி வையாபாடலிலே,
*நச்சுவிழி நாட்டியம் செய்வோர்' "ஆடும் மாதர் வலம் வர' என வருவனவும் ஆடுவோரைக் குறிக்கும்.
"கறுவுமனக் கணிகையர்' என வருவதும், தகதிண கைலாச புராணத்திலே
"நடன விதந்தரு நளினத்தாற்கு' (திருநகரச் சருக்கம் 99)
என வருவதும் குறிப்பிடற்பாலன. பின்னைய குறிப்பு ஆடற்
கரசனுடைய (நடராஜருடைய) திருநடனம் பற்றியதாயினும், அதிலே வரும் ‘நளினம்’ எனும் சொல் பரதத்தின் சிறப்பி யல்பு ஒன்றினைச் சுட்டுகின்றது.
இதே போலக் கைலாயமாலையிலும், சிவபிரானின் சிதம்பரத் திருநடனம் பற்றி

--275سس
““ ... ... Lumrg5 DiGivri
கன்றச் சிலம்புகொஞ்சக் கங்கையுட லம் தற
மன்று நடமாடும் வரதபரன்" (22 - 284) என வருவதும் ஈண்டுக் குறிப்பிடற்பாலது.
மேலும் மாதவி எண், எழுத்து, இசை முதலிய கலைகளு டன் பதினொரு கூத்துகளையும் பயின்றாள் எனக் கண்ணகி வழக்குரை காவியம் கூறுகின்றது இதே நூலிலே சாரி, அடைவு (அடவு) முதலியன பற்றிய குறிப்புகளும் வந்துள்ளன. நாகசுரம், தவில் போல இசை, நடனக்கலைகளும் பொதுவாக மரபு வழிக் கலைஞர் குடும்பங்களிலே நன்கு பேணி வளர்க்கப்பட்டன என லாம். இவற்றை மன்னரும், மக்களும் ஆதரித்து வந்தனர். தேவரடியார்கள் அல்லது கணிகையர் குறிப்பாகக் கோவில்களிலே பாடியும், ஆடியும் தொண்டு புரிந்தனர். பிற்காலத்திலே குறிப் பாக 19 ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த கனகி எனும் தேவரடி யாள் பற்றிச் சுப்பையனார் ‘கனகி புராணம்" எனும் நூலினை இயற்றியுள்ளார்.
(11) நாடகம் :-
"முத்தமிழ்", "பன்னு செந் தமிழ்', 'ஒப்பிலா முத்தமிழ்", "பண்ணாரும் தமிழ்", "தீந்தமிழ்” என ஈழத்துப் புலவர் பலரும் போற்றிய தமிழின் இயல், இசை, நாடகமெனும் முப்பிரிவுக ளில் ஒன்றாகிய நாடகத் தமிழும் இங்கு நன்கு போற்றப்பட் டது. வையாபாடல், கைலாயமாலை போன்ற நூல் விலே வந் துள்ள நாடகம், பற்றிய சில குறிப்புகள் ஏற்கனவே கூறப்பட் டுள்ளன. எனினும் இக் காலத்திய நாடக நூல்கள் எவையும் கிடையாமை துரதிஷ்டமே. எனினும் சமகாலத் தமிழகத்திற் போலவே இங்கும் மரபு வழி நாடகங்கள், கூத்துகளாக இடம் பெற்றிருந்தன எனலாம். ஆனாற் பிற்பட்ட கால நாடகங்கள் ஓரளவு கிடைத்துள்ளன. W
நாட்டாரியற் கலைகள்
சாஸ்திரீய இசை, நடனம் மட்டுமன்றி நாட்டர்ரியல் இசை பும், கூத்துசஞம் நன்கு நிலவி வந்தன. இவை பிற்கால வட மோடி, தென்மோடிக் கூத்துகளுக்கு வழிவகுத் கன எனலாம். இவற்றிலே கைதேர்ந்த அண்ணாவிமார்களும் பிறகலைஞர்களும் இருந்தனர்.
மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், தொழில்களிலும் பிறவற்றிலும் பல பாடல்களும் ஆடல்களும் இடம் பெற்று

Page 181
-276
வந்தன. எடுத்துக்காட்டாக, விவசாயம், கடற்றொழில், திருமணம், மகப்பேறு முதலியன தொடர்பான நாட்டார் பாடல்கள் குறிப் பிடற்பாலன. இவற்றுட் பல இன்று சமூக மாற்றங்களின லும் பிறவற்றினாலும் மங்கி வருகின்றன.
கரகம், காவடி, கோலாட்டம், கும்மி முதலியனவும் குறிப் பிடற்பாலன. இவை பெரும்பாலும் கிராமிய வழிபாட்டு முறை களுடன் நெருங்கிய தொடர்புள்ளவை அதேவேளையிற் சாதா ரண மக்களின் வாழ்க்கை முறையிலிருந்தும் இவை எளிதிலே பிரிக்க முடியாதவை.
இக்கலைசளும், இவை போன்ற வேறு சிலவும் வாய்மொழி மரபிலே பேணப்பட்டு வந்துள்ளன, இன்று இக்கலைகளிலே கை தேர்ந்த ஒரு சில முதிய கலைஞர்களே உள்ளனர்.
(இ) இலக்கியங்கள்:-
யாழ்ப்பாண மன்னர்கள் தாய் மொழியாகிய தமிழையும் சமய பண்பாட்டு மொழியான வடமொழியையும் நன்கு பேணி வந்தனர். இவற்றிலே பாண்டித்தியமும் பெற்றிருந்தனர். அக் காலச் சூழலிலே இங்குள்ள புலவர்களை மட்டுமன்றித் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்த புலவர்களையும் நன்கு ஆதரித்து ஊக்குவித்தனர். அரசர்களிற் சிலர் புலவர்களாகவும் விளங்கினர். இரகுவம்மிச ஆசிரியரான அரசகேசரி அரச குடும்பத்தைச் சேர்ந் தவரே. அரசவை, பண்பாட்டு மையமாகவும் மிளிர்ந்தது. குறிப் பாகத் தமிழை மேலும் அபிவிருத்தி செய்ய முச்சங்கங்கள் அமைத்த தமிழக மூவேந்தர்களின் பின் -- சுமார் 1000 ஆண்டு களின் பின், தலைநகரான நல்லூரிலே தமிழ்ச்சங்கம் ஒன்று அமைத்து உள்ளுர், வெளியூர்ப் புலவர்களையும், அறிஞர்களையும் இவர்கள் ஆதரித்தனர். இதனாற் கல்வியறிவு பரவிற்று. பல நூல்கள் எழுந்தன. எனினும் அக்காலத்திய நூல்கள் யாவும் இன்று கிடைத்துள்ளன எனக் கொள்ள முடியாது. பிற நாட்டவர் படையெடுப்புகள் குறிப்பாகப் போத்துக்கேயர் படையெடுப்பாலும் மக்களின் புறக்கணிப்பாலும் நூல்கள் பல மறைந்திருக்கலாம். இத்தகைய நூல்களில் ஏற்கனவே வரலாற்று மூலங்களிற் குறிப் பிட்ட இராசமுறையும் பரராசசேகரன் உலாவும் அடங்குவன. முதலிலே தமிழ் இலக்கியம் பற்றிக் குறிப்பிடலாம்.
(1) தமிழ் இலக்கியம்:-
இலங்கையின் தமிழ் இலக்கியப் பாரம்பரியம் சங்க காலப் புலவர்களில் ஒருவரான ஈழத்துப் பூதந்தேவனாருடன் தொடிங்கு

-277
கின்றது எனப் பொதுவாக ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர் கூறுவர்.8 இவருடைய பாடல்களின் பின், சில தமிழ்ச் செய்யுட்கள் கி. பி. 9ஆம் நூற்றாண்டு தொடக்கம் சாசனங்களிலே கிடைத் துள்ளன. ஆனால் இன்று இலங்கையில் கிடைத்துள்ள காலத்தால் முந்திய முழுமையான தமிழ் நூல் என்றவகையில் கி.பி. 1310 இலே தேனுவரைப் பெருமாள் எனும் பண்டித போசராசன் தம்பதேனி யாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சிங்கள மன் னனான 4 ஆம் பராக்கிரமபாகுவின் ஆதரவில் எழுதியுள்ள சர சோதிமாலை என்னும் சோதிடநூல் குறிப்பிடற்பாலது. இந்நூல் எழுந்த காலத்திற்குச் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே யாழ்ப்பாண அரசு உதயமாகி விட்டது. யாழ்ப்பாண மன்னன் ஒருவனின் கோட்டகம வெண்பாச் சாசனம் ஏறக்குறைய இதே காலத்ததாகும் (கி பி 14 ஆம் நூற்றாண்டு), யாழ்ப்பாண அர சிலே எழுந்த காலத்தால் முந்திய நூல்கள் சோதிடம், வைத் தியம் பற்றியன எனப் பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. இக் காலந்தொட்டு ஒரளவாவது தொடர்ச்சியாகத் தமிழ் நூல்கள் எழுதப்பட்டு வந்துள்ளமை ஈண்டுக் குறிப்பிடற்பாலது.
சமகாலத் தமிழகத்திற் போன்றே இங்கும் தமிழிலக்கியம் வளர்ச்சி பெற்றதெனலாம். வடமொழி நன்கு போற்றப்பட்டது. இம்மொழியிலுள்ள சில நூல்களின் சாரமாகவும், மொழிப்பெயர்ப் பாகவும் சில நூல்கள் இயற்றப்பட்டன. அதேவேளையில் இந் நாட்டின் இயல்புகளைச் சிறப்பித்துக் கூறும் நூல்கள் சிலவும் எழுந்தன. எனவே பழமையையும் புதுமையையும் பிரதிபலிக்கும் நூல்களும் எழுந்தமையில் வியப்பில்லை. இக்காலத்தில் எழுந்த நூலகளை
(1) வைத்திய, சோதிட நூல்கள் (2) சமயச் சார்பான நூல்கள் (3) காவியங்கள் (4) வரலாற்றுச் சார்பான நூல்கள்
எனப் பொதுவாக வகுத்துக் கூறலாம். இவற்றுட் பலவற்றின் சரியான காலம் பற்றிக் கருத்து வேறுபாடிருப்பினும், இவை பெரும்பாலும் யாழ்ப்பாண அரசு காலத்தவை எனவே கொள் ளப்படுகின்றன. இவற்றுள்ளே ஏற்கனவே குறிப்பிட்டவாறு வட மொழி நூல்களின் மொழிபெயர்ப்பாகவும் அல்லது தழுவலாகவும் இயற்றப்பட்ட நூல்களும் அடங்குவன. மேற்குறிப்பிட்ட நூல்கள் புராணம், காவியம், மாலை, உலா, பள்ளு முதலிய இலக்கிக் வடிவங்களில் வந்துள்ளன. - ।

Page 182
س-278-س-
1) வைத்திய சோதிட நூல்கள்:-
இக்காலத்திய நூல்களிலே வைத்திய சோதிட நூல்கள் அளவிலும், தொகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. இக் காலகட்டத்தில் இவற்றின் அறிவு நன்கு தேவைப்பட்டிருக்க லாம். தமிழகத்தில் இக்கால கட்டத்திலே இவை பற்றிப் பல நூல்கள் எழுந்தன. அதே போக்கு இங்கும் ஏற்பட்டிருக்கலாம். சிறிய நூல்கள் மட்டுமன்றிப் பாரிய நூல்கள் சிலவும் இயற்றப் பட்டமை குறிப்பிடற்பாலதே. வைத்தியக் கலை மனித வாழ் விற்கு இன்றியமையாத ஒன்றே.
இவ்விரு அறிவியல்களும் ஒன்றுடன் ஒன்றுதொடர்புள்ளவை. குறிப்பாக வைத்தியத்திற்குச் சோதிட நூலறிவு அவசியமென மரபு வழியாகக் கருதப்பட்டு வந்துள்ளது. ஏனெனில் நோயா ளிக்குச் சிகிச்சை செய்யும் போது அவரது சாதகத்தினையும் வைத்தியர் பார்த்துச் சிகிச்சையளித்தல் வழக்கம். குறிப்பிட்ட நோய்களுக்கும், கிரகங்களுக்கும் தொடர்பிருப்பதாகக் கருதப் படுகின்றது. மேலும் சிகிச்சை என்பது நோய்க்குரிய மருந்தினை உட்கொள்ளுதல் மட்டுமன்றிச் சில வேளைகளில் அக்குறிப்பிட்ட நோய்க்கான கிரகசாந்தி முதலியனவும் செய்ய நேரிடும் எனவே, இத்துறைகளிரண்டினையும் "இரட்டை அறிவியல்கள்’ எனலாம். யாழ்ப்.ாண அரசில் எழுந்த காலத்தால் முந்திய தமிழ் நூல்கள் இவை பற்றியவையெனலாம் (கி. பி. 14, 15ம்நூ.). " சிங்கைய7 ரியன் சேதுகாவலன், கங்கைநாடன் கற்றவர் திலகன், ஆயுண் மறையுடன் அரிய நற் சோதிடம், பாய் திரைக்கடலுட் பலவு முணர்ந்தோன், ஒப்பிலா முத்தமிழோர்ந்த செப்பரும் செகராச சேகரன்' என அரசன் தகதிணகைலாசபுராண பாயிரத்தில், அரசகேசரியாற் புகழப்படுதல் ஈண்டுக் குறிப்பிடற்பாலது. மேலும் சமகாலத் தென்னிலங்கையிலும் வைத்தியமும் சோதிடமும் தொடர்ந்து போற்றப்பட்டு வந்தன.
(1) சோதிட நூல்கள்:- (1) செகராசசேகமாலை:-
ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, இலங்கையில் இன்று கிடைத் துள்ள காலத்தால் முந்திய சோதிட நூலான சரசோதிமாலையைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலெழுதப்பட்ட சோதிட நூலாக செகராசசேகரமாலை எனும் சோதிட நூல் விளங்குகின்றது. சிங்கை நகர் எனும் நல்லூரிலிருந்து ஆட்சி செய்த செகராசசேக ரனின் ஆதரவிலே சோமசன்மா எனும் புலவன் இதனை இயற்றி னான் என அறியப்படுகின்றது. இதுவும் பெரும் பாலும் பின்னர்

-279
எழுந்த செகராசசேகரமும் பரராசசேகரமும் மன்னர் பெயரால் அழைக்கப்பட்டுள்ளமை கவனித்தற்பாலது. இந்நூலிலே 13 செய் யுட்களிலே செகராசசேகரன் பற்றிய குறிப்புகள் வந்துள்ளன. 158ஆவது செய்யுளிலே மன்னனின் பெயரும், புகழும் மட்டுமன் றித் தமிழ்ப்பற்றும்,
"மன்னர் மன்னு செகராசசேகரமன்
மணவையாரிய வரோதயன் மன்னு செந்தமிழ் வளம் பெறற்குதவு பரிசில்”
என ஒருங்கே வருவதை அவதானிக்கலாம். 118ஆம் செய் யுளில், இவ்வரசன் "முத்தமிழ் சேர் செகராசசேகரமன்' எனப் புகழப்படுகிறான். 290 விருத்தப்பாக்களைக் கொண்டுள்ள இந்நூல் மகளிர் வினைப்படலம் தொடக்கம் மனைவினைப்பட லம் வரையான 9 படலங்களாக வகுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்தும் சில நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள்ளே அராலி இராமலிங்க முனிவர் வடமொழியிலி ருந்து கி. பி. 17ஆம் நூற்றாண்டிலே மொழிபெயர்த்த சந்தான தீபிகையினைக் குறிப்பிடலாம்.
(2) வைத்திய நூல்கள்:-
வைத்திய நூல்களிலே செகராசசேகரம், பரராசசேகரம் ஆகியன குறிப்பிடற்பாலன. இவை தமிழகச் சித்த வைத்தியம், வட இந்திய ஆயுள்வேதம் ஆகிய இரு வைத்திய மரபுகளையும் இணைத்தே கூறுகின்றன. இவற்றின் பொருளடக்கமும், முன்னு ரைகளும் இதற்குத் தக்க சான்றுகளாகும். மேலும் வெளியூர் மருத்துவ மரபுகளை உள்ளடக்கியிருப்பினும் இவ்விடத்திலே கிடைக்கக் கூடிய மூலிகைகளும் பிறவும் இந்நூல்களிலிடம் பெற் றுள்ளன. இந்நூல்களிலே செகராசசேகரம் காலத்தால் முற்பட்ட தெனக் கொள்ளப்படுகின்றது.
(அ) செகராசசேகரம்:-
'இது செகராசசேகர வைத்தியம்" எனவும் அழைக்கப்படு கின்றது. இதன் ஆசிரியர் யார் என்பது தெரியாது. ஆனாற். சிங்கைச்செகராசசேகரன் ஆதரவில் இயற்றப்பட்டதாகும். நூலிற் சில செய்யுட்களிலே செகராசசேகரன் புகழும் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக முகவாதசன்னிக்கு மருந்து கூறும் செய்யு ளிலே செகராச சேகர என்னும் சிங்கையாரியனை யெதிரொண் ணார்களென்னவே திசை கெட்டகன்றிடுமே" என வருவதைக் குறிப்பிடலாம்.

Page 183
--2880-ب۔
துரலின் தொடக்கத்திலே ஆயுள் வேத வைத்திய முறையைத் தழுவி இது இயற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது, ஆயுள் வேத துரலிலிருந்து சிலவற்றைத் தெரிந்து, அந்தாதித் தொடை பெற்ற விருத்தப்பாக்களால் இது அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அச் சேறிய செய்யுட்களிலே அந்தாதித் தொடையற்றிருத்தலையும் அவதானிக்கலாம். ஒரு வேளை சில பகுதிகள் விடப்பட்டிருக் கலாம். அச்சேறிய பிரதியிலே வியாதி வரும் வகை தொடக்கம், பித்தம் 42ன் குணமும், மருந்தும் வரையிலான 21 தலைப்புக்க ளிலே விடயங்கள் வருணிக்கப்படுகின்றன. பல்வேறு நோய்கள், அவற்றின் அறிகுறிகள் அவற்றிற்கான சிகிச்சை, மருந்துகள் முதலியன இதில் எடுத்துக் கூறப்படுகின்றன. அச்சேறிய நூலிலே சுமார் 1750 செய்யுட்கள் உள்ளன. ஆனால் அச்சேறாத செய் யுட்கள் ஏட்டு வடிவில் இன்னும் உள்ளதாகவும், அப்படியான சுவடிகளைத்தான் பார்வையிட்டதாகவும், தாவரவியல் விற்பன் னரும் மரபு வழிச் சித்த வைத்திய குடும்பத்தைச் சேர்ந்தவருமான பா. சிவகடாட்சம் கூறுகிறார்.9 மேலும் தாம் கண்ட ஏட்டுப் பிரதியிலுள்ள பல செய்யுட்கள் தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்த "அகத்தியர் இரண்டாயிரம்’ என்னும் நூலிலுள்ளதாகவும் ஆனால் அவற்றிலே செகராசசேகரன் பற்றிய குறிப்புகள் தவிர்க்கப்பட் டுள்ளன, எனவும் அவர் கூறுகிறார். இவர் பார்வையிட்ட ஏட்டுப் பிரதியிலே செகராசசேகரன், ‘அரச கங்கைக்கரை வேந் தர் தம்பிரான் வேதமொத்த செகராசசேகரன் வேங்கையாளி." எனவும் ‘பத்மராகமிலங்கு மணிமுடிபுனையும் இலங்கை வேந் தர் சீரிய பொன்திறையளக்கச் செங்கோலோச்சும், செகராச சேகரமன்சிங்கை மேவுமாரியர் கோன்’ எனவும், "ஆக்கியேதிற் யூலியுடனருந்தப் போகுமாம் சுரம் நோக்கியவாகடம் பயின்று தோயதுயிருன் காலனையுந் நீக்கியே யாருயிரை நிலையாக்கும் தரபாலன், சேக்கொடியேர்ன் செகராசசேகரனை வணங் கிடுமே."10 என வருவன குறிப்பிடற்பாலன. எனவே, இவை பற்றிய ஒர் ஒப்பியல் ஆய்வு அவசியம். ஆனால் அரசன் வாகடம் கற்று மருத்துவக் கலையிலே தேர்ச்சி பெற்றிருந்தான் என்பது அறியப்படுகின்றது.
(ஆ) பரராசசேகரம்:-
தமிழில் எழுந்த வைத்திய நூல்களில் மிகப்பெரிய நூலாக அம், தமிழிலக்கியத்திலுள்ள பெரிய நூல்களிலொன்றாகவும் இது திகழ்கிறது. இது பரராசசேகரன் எனும் அரசனின் ஆதரவிலே தமிழகத்திலிருந்து வந்தவர்களும் இங்கு வாழ்ந்தவர்களுமாகிய வைத்திய அறிஞர் குழு ஒன்றினாலே உருவாக்கப்பட்டதாகக் கொள்ளப்படுகின்றது. இவர்களிற் பன்னிருவர் இருந்ததாகக்

-281
கூறப்படுகிறது. இந்நூல் மொத்தமாக 12,000 செய்யுட்களைக் கொண்டுள்ளதெனவும் இவற்றுள்ளே தமக்குக் கிடைத்த ஏட்டுப் பிரத.ணிலுள்ள 8, 000 செய்யுட்களை ஏழு பாகங்களாக வெளி யிட்டுள்ளதாகவும் இவற்றைப் பதிப்பித்த ஏழாலை சுதேச வைத் தியர் ஐ பொன்னையா குறிப்பிட்டுள்ளார். நூலின் பாயிரத் தொடக்கத்திலே பிள்ளையார் காப்புச் செய்யுள்,
தரணியோர் புகழுந் தன் வந்திரிசெய்
தகவுடய சீர்த்தி பெறுமாயுர்வேதப் பேரணியும் வாகடத்தைப் பெரிதும் பேணிப்
பெட்புடைய தமிழ்ப் பாவாற் பேசும் வண்ணம்’ எனவும்,
அவையடக்கத்திலே,
"அந்தமிலாயுரு வேதமாயுயர்
சுந்தர மந்திரி சொல் சிந்தாமணிச் சந்த நல் வடமொழி தமிழ் வளம் பெற
எந்தை தன்னருளினாலியம் புவாமரோ" எனவும்,
வருவனவற்றை நோக்கும்போது இந்நூல் தன்வந்திரி வட
மொழியிலே இயற்றிய ஆயுள்வேத நூலினை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வளம் பெற எழுதப்பட்டதாகும் என்பது தெளிவு. அக்கால கட்டத்திலே தமிழிலே வைத்திய நூல்கள் தேவைப் பட்டன. எனவே, இத்தகைய நூல்கள் தோன்றியதில் வியப் பில்லை. யாழ்ப்பாண வைத்தியர் தென்னிலங்கையிலும் புகழ் பெற்றிருந்தனர் என யாழ்ப்பாண வைபவமாலை கூறியிருப்பது புகழுரையன்று.
இந்நூலிற் சில செய்யுட்களிலே பரராசசேகரன் புகழும் கூறப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, “பாரின் மேவுதிறலரசனான பரராசசேகரனை அண்டினோர்", "பரராசசேகரமன் பணித்த செங்கோல், காத்த புவியோர்களிரு
. . . . . ணிக்குமாபோல்’’. “பார் மேவுமரசர் குலதிலகமான பரராசசேகரன் மால் பருதி யேந்தி, ஏர் மேவுமுலகுபுலிந்தருளு நாளிலிசைத்தனனைங்கரத்த பியையிறைஞ்சலுற்றே"
போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும், இந்நூலிலே தென் திரைவேலவர் (கதிரிகாமக்கந்தன்) "கதிரை நன்னகர் வாழ் கதிர் வேல் முருகன்’, ‘சோதி வடிவேலன் கதிரையின் மேய அண்ணல் :

Page 184
بي-282يسه
"தொண்டர் பாவப் பிணியகற்றிக்கதிரை மேவுதூயல்’, ‘சிவனார் நெற்றி விழியில் வருஞ்சேயோற்குரிய கதிரைமலை" எனப் பல வாறு போற்றப்படுகிறார். இவற்றிலிருந்து நூலாசிரியரின் முருக பக்தி வெள்ளிடைமலை.
பாயிரம், அவையடக்கம் நூலடக்கம் முதலியனவற்றை நோக்கும்போது, நூலாசிரியர்களும் தொகுப்பித்த அரசனும் சைவசமயம், சைவ சித்தாந்தம் முதலியனவற்றிலே நன்கு தோய்ந் தவர்களென்பதும், வைத்தியநாதராகிய சிவனை வழிபட்டார் களென்.து, தெளிவு. அவையடக்கம் மூன்றாம் பாடல் 8ை ஆசித்தாசித்தின் திரியதார்த்தங்களாகிய பதி, பசு, பாசம் புற்றிக் கூறுகின்றது. மேலும் அவர்களின் தமிழ்ப்பற்றும் "அமிழ் துறள் தமிழ்மொழி எனும் பாயிரச் செய்யுள் போன்றவற் றாலும் புலப்படும். பரராசசேகரம் முதலாம் பாகத்திலே சிரரோக நிதானமும், இரண்டாம் பாகத்திலே கெர்ப்பரோக நிதானமும், பாலரோக நிதானமும், மூன்றாம் பாகத்திலே சுரரேர்க நிதானம், சன்னிரோக நிதானம், வலி ரோக நிதானம், விக்கல்ரோக நிதா னம், சத்திரோக நிதானம் ஆகியனவும், நான்காம் பாகத்திலே வாதரோக நிதானம், பித்தரோக நிதானம், சிலேற்பனரோக நிதானம், ஆகியனவும் ஐந்தாம் பாகத்திலே மேகரோக நிதானம், பிளவை ரோக நிதானம், பவுந்திர ரோக நிதானம், வன்மவிதி, சந்திர விதி, இரட்சை விதி ஆகியனவும், ஆறாம்பாகத்திலே உதரரோக நிதானமும், ஏழாம்பாகத்திலே மூலரோக நிதானம் அதிகார ரோகநிதானம், கிரகணி ரோகநிதானம், கரப்பன் ரோக நிதானம், கிரந்திரோக நிதானம், குட்டரோக நிதானம் ஆகி யனவும் பற்றிக் கூறப்பட்டு அவ்வவற்றின் குணமும், சிகிச்சையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு இது கூறும் பொருள் பரந்து விரிவுபட்டுக் காணப்படுகிறது. செகராச சேகரத்திலும் பார்க்க, இந்நூலின் மொழிநடை செம்மையும், தெளிவும் வாய்ந்து காணப் படுகின்றது.
ஏற்கனவே திரு ஐ பொன்னையா கூறியுள்ளவாறு, பிரசுரிக் கப்படாத 4000 செய்யுட்கள் கொண்ட பரராசசேகர ஏட்டுப் பிரதி தேடிக் கண்டுபிடிக்கப்பட வேண்டியதாகும். இப்பிரதியும், செகராசசேகரத்தில் விடப்பட்ட பகுதியும் ஆராய்ந்து பிரசுரிக் கப்பட்டுப் பேணப்பட வேண்டியவை.
(11) சமயச் சார்பான நூல்கள் :-
இவற்றுள்ளே தக்ஷஷிணகைலாச புராணமும், கோணேசர் கல் வெட்டும் திருக்கோணேஸ்வரம் பற்றியும், திருக்கரசைப் புரா

س283حبسته
ணம் திருக்கரசைத் திருப்பதி பற்றியும், கதிரை மலைப்பள்ளு கதிர்காமம் பற்றியும் வருணிக்கின்றன. இந்நான்கு நூல்களும் ஒரு வகையிற் குறிப்பிட்ட தல வரலாற்றைக் கவிதை வடிவில் எடுத்துக் கூறுவனவாசவும் அமைந்துள்ளன. இக்காலப் பகுதி யிலே தமிழகத்திலே தமிழிலெழுதப்பட்ட பெரிய தல புராணங்கள் அல்லது வடமொழியிலெழுதப்பட்ட மாஹாத்ம்யங்கள் (தமிழில் மான்மியங்கள்) மதுரை, சிதம்பரம், பூgரங்கம் முதலிய கோயில் களைப் பற்றிக் கூறுவன. தென்னிலங்கையிலும் பெளத்த தலங்கள் பற்றிய நூல்கள் எழுதப்பட்டன இந்தக் கால கட்டத்திலே இலங்கையிலுள்ள இந்துத் தலங்கள் பற்றித் திருகோணமலை யினை மையமாக வைத்து வடமொழியில் தக்ஷஷிணகைலாச மாஹாத்ம்யம் கூறுகின்றது.
அ) தகழிணகைலாச புராணம் :-
கோணேஸ்வரப் பெருமானும் மாதுமையம்மையும் வீற்றிருக் கும் புராதன சிவத்தலமாகிய திருக்கோணேஸ்வர வரலாற் றினை இந்நூல் பெளராணிக மரபிற்கேற்பத் தமிழிலே கூறு கின்றது. நூலாசிரியர் இதனைக் கயிலாய புராணம் என அழைத் துள்ளார். சிவபிரானின் உறைவிடமாக வடக்கேயுள்ள கைலாச மலை போன்று தெற்கே இலங்கையிலுள்ள திருகோணமலை தென்கைலாசமாகும். இந்நூல் பாயிரத்துடன் தொடங்கி, ஈழமண்டலச் சருக்கம், திருமலைச் சருக்கம், புவனோற்பத்திச் சருக்கம், அர்ச்சனா விதிச் சருக்கம், மச்ச அவதாரச் சருக்கம், தெரிசனாமுக்திச் சருக்கம், திருநகரச் சருக்கம் ஆகிய ஏழு சீரும் கங்களையும் 635 செய்யுட்களையும் கொண்டிலங்குகின்றது. சிதம்பர ஐயரின் பதிப்பில் இது யாழ்ப்பாணத்து மஹா வித்து வான் சிங்கைச் செகராசசேகரன் இயற்றினான் எனவும், பொ. வைத்திலிங்க தேசிகரின் பதிப்பில் பிரம்மபூரீ பண்டிதராசரால் இது இயற்றப்பட்டதெனவும் கூறப்பட்டுள்ளது. இரு பதிப்புக் களுக்கிடையே வேறுபாடுகளிருப்பதால் நூலாசிரியரின் பெயர் திடமாகத் தெரியாது. எனினும், செகராச சேகரன் ஆதரவிற் பண்டிதராசர் இதனை இயற்றியிருக்கலாம். முதற்பதிப்பிலுள்ள பாயிரம் நல்லூர் அரசகேசரியின் பெயரில் வந்துள்ளது. இக் காலத்திலே திருக்கோணேஸ்வரப் பகுதி சைவப்பற்றுள்ள யாழ்ப்பாண மன்னரின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த படியால் இது இம்மன்னராதரவில் இயற்றப்பட்டிருக்கலாம். அல்லது ஒரு பதிப்பிலுள்ளவாறு ஓர் அரசரே இதனை இயற்றியிருக்கலாம். திருநகரச் சருக்கத்திலே (108) "அம்புயத் துதரத்தண்ணலமைந்த வாரியார் தங்கோமானும்பர்வந்திறைஞ்சுஞ் சேதுவுயர் கரைக்கா வல்வேந்தன், செம்பொன் மெளலிச்சென்னிச் செகராச சேகரன்,

Page 185
-284
சம்பையஞ் சடையான் சைவந்தோன்றிடத் தோன்றினானால்" என வரும் செய்யுள் செகராசசேகரன் ஆதரவில் அல்லது அவன் காலத்தில் இயற்றப்பட்டதைக் காட்டுகிறதெனலாம். இந்நூல் வடமொழியிலுள்ள மச்சேந்திய (மத்ஸ்ய) புராணத்தைத் தழுவி எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இது செம்மையான தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது.
ஆ) கோணேசர் கல்வெட்டு:-
கோணேசர் சாசனம் எனவும் இது அழைக்கப்படும். இது 58 பாடல்களைக் கொண்டதாகும். சில பதிப்புகளில் 60 செய்யுள் களும் உண்டு. நூலாசிரியரான கவிராஜர் தக்ஷிணகைலாச புரா ணத்திற்குப் பாயிரம் எழுதியவராகவும் கூறப்படுகின்றது. அவ் வாறாயின் அவரின் சமகாலத்தவர் எனினும், நூலிலே ஒல்லாந் தர் பற்றிய குறிப்பும் வருவதாற் பிற்பட்டதாயுமிருக்கலாம். இது குளக்கோட்டன் காலத்திலும், பின்னரும் திருக்கோணேஸ்வரத் திற்குச் செய்யப்பட்ட திருப்பணிகளையும், ஒழுங்குமுறைகளையும் கூறும் தலவரலாறாகக் காணப்படுகின்றது. கோயிலில் இடம் பெற்ற ஒழுங்குமுறைகள், இசை, நடனம் முதலியன பற்றிய குறிப் புகளும் இதில் கூறப்பட்டுள்ளன. சமகாலத் தமிழ் நாட்டிலெழுந்த கோயிலொழுகு முதலிய நூல்களுடன் இது ஒப்பிடத்தக்கது. இது கல்வெட்டுப்பாட்டாக எழுதப்பட்டதெனத் தொடக்கச் செய்யுள் ஒன்று கூறுகின்றது. திருக்கோணேஸ்வரத்தில் இடம்பெற்று வந்த ஒழுங்கு முறைகள் சமகால யாழ்ப்பாணத்திலிருந்த சிவாலயங் களிலும் இடம் பெற்றிருக்கலாமென்பதை ஒப்பீட்டு ரீதியிலறிய இந்நூல் உதவுகின்றது. இந்நூலாசிரியரும் வையாபாடல் ஆசிரி யரும் ஒருவரேயென - வையாபுரி ஐயரே எனவும், அவருக்குக் கவிராஜர் எனும் விருது அளிக்கப்பட்டிருக்கலாமெனவும் க. செ. நடராசா கருதுகிறார். 11
இ) வியாக்கிரபாத புராணம்:-
இது வடமொழியிலுள்ள வியாக்கிரபாத மால் மியம் எனும் நூலின் மொழிபெயர்ப்பெனவும், இதனை அளவெட்டியைச் சேர்ந்த வைத்தியநாத முனிவர் விருத்தப்பாவிலே, யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலத்திலே இயற்றினார் எனவும் கூறப்படு Sairpg|.12
FF) திருக்கரைசைப் புராணம்:-
திருகோணமலையிலே மகாவலிசுங்கையாற்றங்கரையிலுள்ள கரைசை என வழங்கும் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் சிவ

-285
பிரானின் புகழை இது சிறப்பித்துக் கூறுகின்றது. இத்திருப்பதி "அகத்திய தாபனம்" எ60 வல் அழைக்கப்படும். இது வடமொழிப் புராணம் ஒன்றைத் தழுவி எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது. நூலாசிரியர் நூலின் பெயராலே கரைசைப் புலவர் என அழைக்கப் படுகிறார். ஈழத்தின் பெருமையையும், மகாவலி கங்கையின் சிறப்பையும் சைவசமய மரபிற் கூறும் இத்தல புராணம் கட வுள் வாழ்த்து, குரு வணக்கம், புராண வரலாறு, அவையடக் கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாயிரத்துடன் இலங்கைச் சருக்கம் (39), கங்கைச் சருக்கம் (53), தாபனச் சருக்கம்(17), பூசைச் சருக்கம் (46), ஆகிய நான்கு சருக்கங்களும், 169 செய் யுட்களும் கொண்டு விளங்குகின்றது. இதனை யாழ்ப்பாண மன்னர் வேண்டுகோளின்படி ஒருவர் இயற்றியிருக்கலாம் என ஆ. சதாசிவம் கருதினார்.13 த கழிணகைலாசபுராணத்தைப் பின்பற்றி இது எழுதப்பட்டிருக்கலாம் இந் நூலாசிரியர் உமாபதி சிவாச்சாரியாரின் சிஷ்ய மரபினைச் சேர்ந்தவரென ஒரு சாரார் கருதுகின்றனர்.14
இப்புராணங்களைத் தொடர்ந்து சிவராத்திரி புராணம், ஏகாதசிப் புராணம் முதலியன எழுதப்பட்டன.
உ) கதிரைமலைப் பள்ளு;-
"கதிரையப்பர் பள்ளு எனவும் அழைக்கப்படும் இந்நூல் ஈழத்திலெழுந்த காலத்தால் முந்திய பள்ளுப் பிரபந்தமாகும். இலங்கையிலுள்ள புராதன முருகத் தலமாகிய கதிர்காமத்தி லுள்ளமுருகனைச் சிறப்பித்துக் கூறும். இது 130 செய்யுட்களைக் கொண்டதாயினும், சில பதிப்புகளிலே கூடுதலான செய்யுட்சஞம் உண்டு. நூலாசிரியரின் பெயர் தெரியாது. பரராசசேகரனின் ஆணைக்கேற்ப 12 புலவரால் இயற்றப்பட்ட பரராசசேகரம் என்னும் வைத்திய நூலிலே "தென் கதிரைவேலவர் பல இடங்களிற் புகழப்படுவதால் இவர்களில் ஒருவரே இதனைப் பாடியிருக்கலாமென ஆ. சதாசிவம் கூறியுள்ளார்.15 வேறுசிலர் இக்கருத்தினை ஏற்றிலர் எனினும், இவ்விரு நூல்களுக்கு மிடை யில் உள்ள சில ஒப்புமைகள் பற்றி ஆ. சதாசிவம் எடுத்துக்காட் டியுள்ளமை குறிப்பிடற்பாலது. 16
யாழ்ப்பாண மன்னர்கள் முருகப்பெருமானிடம் மிகுந்த ஈடு வாடுடையவர்கள். நல்லூரில் மட்டுமன்றிப் பழைமை வாய்ந்த கதிர்காமத்திலே கோயில் கொண்டிருக்கும் இப்பெருமானிடம் பேரன்புடையோராய் இருந்தனர் என்பதில் வியப்பில்லை. பரராச சேகரத்தின் பாயிரத்திலுள்ள கடவுள் வணக்கத்தில் வரும் முருகப் பெருமான் பற்றிய செய்யுளிலே,

Page 186
-286
"கதிரை நன்நகர் முதற் பதிமேவி அடியவர் வேண்டிபாங்கருள் புரிவள்ளல்"
சனக் கதிர்காமத்திற்கு முதலிடம் அளித்திருத்தல் ஈண்டு குறிப் பிடற்பாலது. இதைக் தொடர்ந்து பிற்காலத்திலே பறாளை விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு முதலியன எழுந்தன.
111) காவியங்கள்
(அ) இரகுவம் மிசம்:-
இவ்வகையில் யாழ்ப்பாண அரச மரபைச் சேர்ந்த அரசகேசரி எழுதிய இரகுவம் மிசம் என்னும் நூல் முதலிற் குறிப்பிடற்பாலது. இது 15 ஆம் அல்லது 16 ஆம் நூற்றாண்டளவில் எழுதப்படட் டிருக்கலாம். வடமொழியிலே மகாகவி காளிதாசர் எழுதிய பெருங்காப்பியங்களில் ஒன்றும், வடமொழிப் பெருங்காப்பிய வரி சையில் முன்னணியிடத்தை வகிப்பதுமாகிய இரகுவம்மிசத்தின் தமிழாக்கமாகவே நூலாசிரியர் இதனைச் செய்தார் என்பது பாயி ரச் செய்யுளாகிய
"வன்றிசைக் காளிதாசன் வடமொழி தென்றிசைத்த தமிழானணி செப்புகே னன்றிசைக்கு முரைவழி நன்னெடுங் குன்றிசைப்பது போலுங் குறிப்பரோ"
என்பதாலே தெரியவரும். மாமனாகிய பரராசசேகர மன்னனின் வேண்டுகளின்படியே நூலாசிரியர் இதனை இயற்றினார் என் பது பற்றிப் பிறிதொரு பாயிரச் செய்யுள் கூறுகின்றது.
இந்நூல் பொதுக் காண்டம், சிறப்புக் காண்டம், பொதுச் சிறப் புக் காண்டம் ஆகிய மூன்று காண்டங்களைக் கொண்டு விளங்கு கின்றது. பொதுக் காண்டம் ஆற்றுப்படலம் தொடக்கம் இந்துமதி பிறப்பு நீங்குபடலம் வரையுள்ள பதினாறு படலங்களும் (1-16), 1506 செய்யுட்களும் கொண்டது. சிறப்புக்காண்டம் தசரதன் சாப மேற்றபடலம் தொடக்கம் அவதார நீங்குபடலம் வரையுள்ள (17-22) ஆறு படலங்சளும், 570 செய்யுட்களும், பொதுச் சிறப் புக்காண்டம் குகன் அயோத்தி செல்படலம் தொடக்கம் குல முறைப்படலம் வரையுள்ள (23-26) நான்கு படலங்களும், 370 செய்யுட்களும் கொண்டவை. எல்லாமாக 2444 செய்யுட்களைக் கொண்ட இந்நூல் முற்றுப் பெறவில்லை எனக் கருதப்படுகிறது. இந்நூல் எளிதிற் பொருள் விளங்க முடியா த செய்யுள் நடையில் அமைந்துள்ளதாயினும் கவிநயமுள்ளதாகும். இந்நூல் சோழரு டைய தலைநகரங்களில் ஒன்றான திருவாரூரில் அரங்கேற்றப்
• التر-سا-سالة

இந்நூலினை ஆசிரியர் மொழிபெயர்ப்பு நூலாகவன்றி புதிய ஆக்கமாக்க முயற்சித்துள்ளார். வடமொழி, தமிழ் அணி இலக்கண ஆசிரியர்களின் கருத்திற்கேற்ப இந்நூல் அமைந்துள்ளதெனலாம். அதற்கேற்றவாறு புதிய அமிசங்களைத் தமிழிலக்கிய மரபிற் கேற்பவும் செய்துள்ளார். முதலிலேவரும் ஆற்றுப்படலம், நாட்டுப் படலம், நகரப்படலம் முதலியன ஆசிரியரின் புதிய படைப்புகளே. தாம் கூறும் பொருள்பற்றித் தமிழிலே தனக்கு முன் தலை சிறந்த பெருங்காப்பியமாகப் படைத்துள்ள கம்பனை ஆசிரியர் பெரிதும் பின்பற்றியுள்ளார். பெரிய புராணச் சாயலும் நூலின் சில இடங் களில் உண்டு. அதேவேளையில் சமகால யாழ்ப்பாண நாகரி கத்தை ஓரளவாவது பிரதிபலிக்கும் வகையிலும் இந்நூல் காணப் படுகின்றது. இது பற்றி ஏற்கனவே, சி. கணேசையர், 17 ஆ. வேலுப் பிள்ளை18 முதலியோர் குறிப்பிட்டுள்ளனர். நூலின் காப்புச் செய் யுளாக விநாயகர் துதி கூறும்.
"உதயமாவலரியெண்ணிலுதித்தன வொளியிற்றாய சிதைவிலா நிலவுச் செக்கர்ச் செவ்வந்தி மெய்யார் தந்த புதைகொண் மாமதத்தவாம்பலானனப் புனிதப் பொற்றே னிதைய வாரிசைத்த தானாலெக்கலை மணவாதெற்கே" எனும் செய்யுள் குறிப்பிடற்பாலது.
இவ் ஆசிரியர் நல்லூரின் கிழக்குப் பகுதியிலுள்ள நாயன் மார்கட்டிலுள்ள குளத்தருகே அமைக்கப்பட்டிருந்த மாளிகையி லிருந்து இதனை இயற்றினார் எனக் கூறப்படுகின்றது. அதனயலில் உள்ளதும் அரசகுலத்தோடு தொடர்புடையதுமான பழைய பிள் ளையார் ஆலயமாகிய வெயிலுகந்த பிள்ளையாரைக் குறிப்பது போன்று மேற்குறிப்பிட்ட செய்யுள் அமைந்துள்ளது போலும். நூலில் இடையிடையே முருகப் பெருமான் - இங்கு யாழ்ப்பாண அரசர் போற்றிய நல்லூர்க்கந்தனைக் குறிப்பது போன்ற செய் யுட்களும் வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, 'செந்நெற்பயிர்கள் குமரக் கடவுள் போல வளர்ந்தன” எனவும், "ஆறு வேகமாகச் செல்லுதல் முருகனுடைய வேல் செல்லுதல் போல’ எனவும், “ஆஜனும் இந்துமதியும் சுப்பிரமணியரும் தெய்வானையும் போல’? எனவும், வரும் உவமைகள் கவனித்தற்பாலன. இராமாயணக்கதை இந்தியா அடங்கலும் மட்டுமன்றி, இந்தியப் பண்பாடு பரவிய ஈழத்தையும் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றையும் பல்வேறு வகையில் கவர்ந்துள்ளது. இலங்கையிலே தமிழ் மக்கள் மத்தி யில் மட்டுமன்றிச் சிங்கள மக்களின் மத்தியிலும் இது செல் வாக்குப் பெற்றுள்ளது. வடமொழியிலுள்ள பெருங்காப்பியங் களுள் ஒன்றான ஜானகீஹரணம் குமாரதாச எனும் புலவரால்

Page 187
-288
கி. பி. 67-ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளமை ஒப்பீட்டு ரீதியிற் குறிப்பிடத்தக்கதாகும். இப்புலவர் இலங்கையைச் சேர்ந்த அரசனென்றே பொதுவாகக் கொள்ளப்படுகிறது.
ஆ. கண்ணகி வழக்குரை காவியம்:-
சிறந்த பழந்தமிழிலக்கிய நூல்களிலொன்றான சிலப்பதி காரம் கூறும் கண்ணகி கதை தமிழ் மக்களின் உள்ளத்தினைக் கவர்ந்த கதைகளில் ஒன்றாகும், “கற்புக்கடம் பூண்ட பொற் புடைத் தெய்வமாம்” கண்ணகி வழிபாடு தமிழகத்தில் மட்டு மன்றி, ஈழத்திலும் பரவலாகத் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றிச் சிங்கள மக்கள் மத்தியிலும் நிலவி வந்துள்ளது. கண்ணகி ஆலயங்கள் யாழ்ப்பாணத்திலும் பரவலாக நிலவி வந் தன. கிழக்கிலங்கையில் இன்றும் மிகப் பரவலாக இவ்வழிபாடு நிலவுகின்றது. சிலப்பதிகாரம் கூறும் கதை சில மாற்றங்களுடன் பாமர மக்களையும் எளிதிற் கவரக்கூடிய வகையில், இலங்கைத் தமிழர் மத்தியிலே யாழ்ப்பாணத்திலே கோவலனார் கதை என வும், முல்லைத்தீவு மாவட்டத்திலே சிலம்பு கூறல் எனவும், கிழக்கு மாகாணத்திலே கண்ணகி வழக்குரை எனவும், நிலவி வந்துள்ளது. இவற்றிடையே சில வேறுபாடுகள் இருப்பினும் ஒற்றுமைத் தன் மையே கூடுதலாகக் காணப்படுகின்றது. கண்ணகி வழக்குரை காவியம் சைவசமய மரபிற்கேற்ப அமைந்துள்ளது என்பது 'சக வீரன் தாரணியில் சிவனருளாலிக் கதையைச் செந்தமிழ்ப்பா மாலை செய்தான்', 'ஆலயமாந்தென் கோணை அரனார் தம் திருவருளால் வேலையிலேயிக் கதையை விளம்பினேன்" என்பன வற்றாலும், பிறவற்றாலும் புலனாகும்.
இந்நூல் வரம் பெறுகாதை தொடக்கம் குளிர்ச்சிக் காதை ஈறாக பதினாறு காதைகளையும், 2226 செய்யுட்களையும். கொண்டதாகும். பெரும்பாலும் தாழிசையிலும், இடையிடையே சிந்து, வெண்பா, அகவல் முதலிய யாப்புகளிலுமான பாடல் களில் பொது மக்கள் விரும்பிக் கற்பதற்கான நடையில் இது அமைந்துள்ளது. சிலப்பதிகாரக் கதையினைத் தழுவியதாயினும் முதல் மூன்று காதைகளும் 8, Bப்பதிகாரத்தில் இடம் பெறாதவை. வஞ்சிக்காண்டம் எனும் குதியும் இதில் இல்லை. ஆனால், சிலப்பதிகாரத்திற் போன்று இதிலும் இசை (வாய்ப்பாட்டு, வாத்தியம்), நடனம் பற்றிய பேரங்கள் உள்ளன. இந்நூல் யாழ்ப் பாண மன்னர் காலத்தியதென ஆ. சதாசிவம்19, எவ். எக்ஸ், சி. நடராசா?0 முதலிய தமிழறிஞர் கொள்ளுவர். இதிலுள்ள,

-س-289 س
"அவனி புகழ் (பயில்) குடி நயினாப்பணிக்கனெனுமவன் மிகுந்தோன் (பலமிகுந்த) கவளமதக்களிற்றண்ணல் காங்கேசன் தேவையர் கோன் ! தவமென்ன விளங்கு புகட்சகவீரன் தாரணியிற் சிவனருளாலிக் காதையைச் செந்தமிழ்ப் பாமாலை செய்தான்' " எனும் செய்யுளின்படி இதனைச் சகவீரன் இயற்றினான் என அறியப்படுகின்றது. ‘காங்கேயன்", "தேவையர்கோன்" என் பன ஆரியச் சக்கரவர்த்திகளையும் குறிப்பன. மேலும், "ஆர்த்த திறலாரியர் கோன் அடலரசர் மணவாளன், கீர்த்திதனைப் பாடுவோர்க்குக் கிலேசமெல்லாம் நீங்குவபோல்", எனவரும் பகு தியும் ஆரியச்சக்கரவர்த்தியினைக் குறிப்பது ஆகலாம். எனவே இக்காலத்தில் இது எழுதப்பட்டிருக்கலாம்.
1) வரலாற்றுச் சார்பான நூல்கள் :-
இவற்றிலே வையாபாடல், கைலாயமாலை ஆகிய இரு நூல் களுடன் இக்காலத்திற்குப் பிற்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை யினையும் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றைவிட இன்று கிடைக்காத இராசமுறை, பரராச சேகரன் உலா ஆகியனவும் குறிப் பிடற்பாலன. இவை பற்றி வரலாற்று மூலங்களிலே கூறப்பட்ட படியால் இப்பகுதியிலிவை பற்றி விரிவாகக் கூறப்படவில்லை.
வடமொழி இலக்கியம் :-
ஏற்கனவே குறிப்பிட்டவாறு தமிழுடன் வடமொழியும் யாழ்ப்பாண அரசிலே நன்கு போற்றிப் பேணப்பட்டது. வட மொழி அறிவு குறிப்பாகச் சைவம், மருத்துவம், சோதிடம், இலக்கியம், நுண்கலைகள் எனப் பல்வேறு அறிவியல்களுக்கும் அவசியமெனக் கருதப்பட்டது.
யாழ்ப்பாண அரசிலே சைவசமயம் மிகச் சிறப்பான இடம் “வகித்து வந்தமையால் வடமொழிக்கும் முக்கியத்துவமளிக்கப் பட்டமையில் வியப்பில்லை. சைவசமய முதநூல்களான் வேதங்கள், ஆகமங்கள் மட்டுமன்றி சமய அறிவுக்குத் தேவை யான பல புராணங்கள், இதிஹாஸங்கள் முதலியனவும், இம் மொழியில் இருப்பதும் குறிப்பிடற்.ifலது. வடமொழியிலே சிறந்த தேர்ச்சி பெற்ற அந்தணர்களும், அந்தணர் அல்லாதோரும் பலர் இருந்தனர். கைலாயமாலையிலே வேதங்கள் ஆகமங்களின் சிறப்புக்கள் பற்றிக் கூறப்படுகின்றது. எடுத்துக்காட்டாக "வேதவடிவாகி விளங்குபரன்' 'சாமநிதமோதுவிக்குமாலயம்

Page 188
-290
செய்து", "மூலபரன் ஆகமத் தாலவ்வகையாக அமைத்துச் சந்தரசேகரனை ஆகமத்திற்கு சேர்த்து வைத்து" போன்றவற் றினைக் குறிப்பிடலாம். ஆகமங்களில் மிக்க தேர்ச்சி பெற்றோர் பற்றிக் கி.பி 17ஆம் நூற்றாண்டுப் போத்துக்கேய அறிஞரான போலோததிரினிதாதேயும் குறிப்பிட்டுள்ளார் 21 ஏறக்குறைய இதே காலத்திலோ அல்லது முன்போதான் திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாச முனிவர் போத்துக்கேயர் ஆட்சியின் போது திணிக்கப்பட்டிருந்த பசுவதைக்கு உடந்தையாக இருக்க விரும்பாமல் இந்தியாவுக்குச் சென்றார் எனக் கூறப்படுகின்றது. இவர் அங்கு சென்று மேலும் வடமொழியையும், சித்தாந்த சாஸ்திரங்களையும் அவற்றோடு தொடர்புடைய வேறு சில வற்றையும் நன்கு கற்றுப் பிரபல சைவ சித்தாந்த அறிஞரா கவும், வடமொழி, தமிழ் விற்பன்னராகவும் விளங்கினார். இவர் சிவஞ ன சித்தியாருக்குத் தமிழில் ஒர் உரையெழுதினார். இவருடைய ஏனைய நூல்களான பெளஷ்கராகமவிருத்தி, சித் தாந்த சிகாமணி, பிரமாணதீபிகை, சிவயோகசாரம், சிவயோக ரத்தினம், அஞ்ஞான விவேசனம், சிவாகமாதி மான்மிய சங்கி ரகம் முதலியன வடமொழியில் உள்ளவை. இவர் திருவண் ணாமலையில் உள்ள சைவ ஆதீனத்திற்குத் தலைவராகவும் விளங்கியவர். இவர் சிவசமவாதத்தினை வலியுறுத்தியுள்ளார் எனச் சிவஞான யோகிகள் முதலிய சைவசித்தாந்திகள் கண்டித் துள்ளனர். எனினும், அண்மையிற் சைவத் தமிழறிஞரான மு. அருணாசலம் இவர் சைவ சித்தாந்தத்திற்கு மாறாகி எது வும் கூறவில்லை என இவரின் கருத்திற்கு ஆதரவாக எழுதியுள் 6trfii.22
மருத்துவம், சோதிடம், புராணம், சமயம், காவியம் எனப் பலதரப்பட்ட விடயங்கள் பற்றிய வடமொழி நூல்கள் தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டமை குறித்து ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இக்காலத்தியதெனக் கருதப்படும் வடமொழி நூல்களிலே ஸ்கந்த புராணத்தின் ஒரு பகுதியெனக் கருதப்படும் தஷிணகைலாச மாஹாத்ம்யத்தினைக் குறிப்பிடலாம். ஏற்கனவே குறிப்பிட்ட வாறு தகழிணகைலாசம் எனும் திருகோணமலையினை மைய மாக வைத்து ஈழத்திலுள்ள பல இந்துத் தலங்களின் சிறப்பினை இந்நூல் எடுத்துக் கூறுகின்றது. நூலிலே திருக்கேதீஸ்வர நாதர், முன்னைநாதர், நல்லூர் சட்டநாதர் முதலியோர் பற்றிய தோத் திரங்களும் இடம்பெற்றுள்ளன.
இன்று கிடைத்துள்ள நூலின் பிரதி 22 அத்தியாயங்களும், 1809 செய்யுட்களும் கொண்டதாகும். இலங்கையின் பல பாகங்

ー291ー
களிலுமுள்ள இந்து சமயப் புண்ணியத் தலங்களாகத் திருக் கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நல்லூர் சட்டநாதர் ஆலயம் முதலிய பல சிவத்தலங்களும், கதிர்காமம் போன்ற முருகத் தலங்களும், பொன்னாலை, வல்லிபுரம் முதலிய விஷ்ணு தலங் களும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. இவற்றிலுள்ள மூர்த்தி, தல தீர்த்தச் சிறப்புகளும் எடுத்துரைக்கப்படுகின்றன. "வேறெவ் விடங்களிலுள்ள தலங்களிலும் பார்க்க இலங்கையிலுள்ளவை மிகச் சிறந்தவை" என இந்நூல் கூறுகின்றது. இவ்வகையிலிது தமிழி லுள்ள தகழிணகைலாச புராணம், திருக்கரைசைப் புராணம் போன்று சமயப்பற்றுடன், தேசப்பற்றினையும் வலியுறுத்தி இலங்கை இந்து சமயத்தின் மிகச் சிறந்த இடம் எனும் கருத்தினை ஆணித்தரமாக வலியுறுத்துகின்றது பாளி, சிங்கள நூல்களில் எவ் வாறு இலங்கை பெளத்த தர்மத்தின் கேந்திர நிலையம் என்பது வலியுறுத்தப்படுகின்றதோ, அதே வகையில் இந்நூல் இலங்கை இந்து சமயத்தின் மிக முக்கியமான இடம் என்பதை வலியுறுத்து கின்றது. வையாபாடல், கைலாயமாலை, இரகுவம்மிசம் முதலிய தமிழ் நூல்கள் வடமொழி அறிஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன வடமொழிப் புராணங்களைத் தழுவித் தமிழிற் புராணங்கள் எழுதப்பட்டமையும் குறிப்பிடற்பாலது இங்கு போற்றப்பட்ட சோதிடம், வைத்தியம், காவியங்கள், புராணங்கள், சமயசாஸ் திரங்கள் முதலியனவற்றை நன்கு விளங்கிக்கொள்வதற்கு சம்ஸ் கிருத அறிவு தேவைப்பட்டது. சம்ஸ்கிருத இலக்கிய ஈடுபாடு இரகுவம்மிசம் முதலிய நூல்களாலும் புலப்படும்.
அடிக்குறிப்புகள்
1. வரலாற்று மூலங்கள் பற்றிய ஆசிரியரின் கட்டுரையைப்
பார்க்கவும்.
2. மேற்படி.
3. மேற்படி.
4. Rasanayagam, S., Ancient Jafna, (Madras), 1926, Lu& 24,
378. w
5. Fernando, M. C., (Ed). Selalihini Sandesaya, (Moratuwa),
1956. செய்யுள் 22.
6. கவிராஜர், கோணேசர் கல்வெட்டு (புலவர் வை. சோமஸ்
கந்தர் பதிப்பு), (திருகோணமலை), 1968.
7. இந்நூற்றாண்டின் அறுபதுகளின் முற்பகுதியிலே திருக்கேய ணேஸ்வராலயத்திலே சிவாச்சாரியாராகப் பணிபுரிந்த சிவபூரி

Page 189
س-292--
ச. சிவசுப்பிரமணியக்குருக்கள் இத்தகவலை கட்டுரை ஆசிரி யருக்குக் கூறினார்.
8. அ) சதாசிவம், ஆ. (தொகுப்பாசிரியர்) ஈழத்துத் தமிழ்க்
கவிதைக் களஞ்சியம், (கொழும்பு), 1966, ப. 17. ஆ) வேலுப்பிள்ளை, ஆ. “தொடக்க கால இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்', தொடக்கப் பேருரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், (யாழ்ப் Lumr6BoTub), l986. Lu. 13. 9. இவர் கட்டுரையாசிரியருக்குத் தனிப்பட்ட வகையில் கூறி
யுள்ளார். 10. மேற்படி,
11. நடராசா, க. செ. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி
(கொழும்பு), 1982, ப. 18.
12. மேற்படி, ப, 20.
13. சதாசிவம், ஆ. மே. கு. நூ. ப. 45.
w
14. சதாசிவம், ஆ. மேற்படி.
15. சதாசிவம், ஆ. மேற்படி, ப. 59.
16. சதாசிவம், ஆ. :ேற்படி, ப. 59 - 60.
17. கணேசையர், அரசகேசரி இயற்றிய இரகுவம்மிசம் மூலமும்
புத்துரையும், (கொக்குவில்), ஆனந்த வருடம்.
18. வேலுப்பிள்ளை, ஆ. "அரசகேசரியின் இரகுவம் மிசமும் அது
எழுந்தகால இந்துப் பண்பாட்டுச் சூழலும்', சேர். பொன். இராமநாதன் நினைவுப்பேருரை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், (யாழ்ப்பாணம்) 1988.
19. நடராசா, க. செ. மே, கு. நூ. ப. 13 - 14.
20. சதாசிவம், ஆ. மே. கு. நூ. ப. 39
21.
Paulo da Trinidade, Conquista Spiritual du Oriente, (Tr.) by the Rt. Rev. Dr. Edmund Peiris and Frias Archilles Meersman. (Colombo), 1972, Luž. 198, 303.
22. அருணாசலம், மு. தமிழ் இலக்கிய வரலாறு - தமிழ்ப் புலவர்
வரலாறு 16ஆம் நூற்றாண்டு, 3ம் பாகம், (சென்னை), * 1976 ப. 05. W

அத்தியாயம் - 9
சிற்பம்
புராதன நல்லூர் என்ற மையத்தின் சிற்பக்கலை மரபினை ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கு எமக்குத் தொடர்ச்சியான வசையில் ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. அந்நியர்களின் ஆட்சிக்காலத்தின் போது கலை மரபினை அடையாளம் காணக் கூடியவகையில் அமைந்த கருவூலங்கள் யாவும் அழித்தொழிக்கப் பட்டமைபினால், நல்லூரின் கலைமரபினை ஆராய்வதற்கும் போதிய சான்றுகள் இல்லாப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இத் நிலையில் இங்கு கலைமரபு பற்றிய ஆய்வுகள் இன்னும் புத் துணர்வு பெறாதவொரு நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது இருந்தும் நல்லூர் ஒரு பழம் பெரும் மையம் என்ற வகையில் அதன் வரலாற்றுச் சிறப்பினை எடுத்துக்காட்ட உதவியாக ஆம் காங்த காலத்துக்குக் காலம் பெற்றுக் கொள்ளப்படும் கலைக் கருவூலங்கள் அமைவதனைக் காணலாம். 1957ஆம் ஆண்டில் சண்முகநாதன் என்பவரால் நல்லூர் சட்டநாதர் கோயிலுக்கரு காமையில் அமைந்த பூதவராயர் திருக்குளத்தினின்றும் மீட்கப் பட்ட குறிப்பிட்ட ஒரு தொகுதி கருங்கற்சிற்பங்களும்2, 1980இல் யாழ்ப்பாண முஸ்லீம் குடியிருப்பில் அமைந்துள்ள கமால் வீதியி லிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பெரிய கருங்கற் சிற்பமும், சிறிய வெண்கல உருவமும் நல்லூர்ச் சிற்பக்கலை மரபின் தன்மையை அறிவதற்குப் பெருந்துணை புரிகின்றன. மேலும் சங்கிலியன் தோப்பினுள் அமைந்து காணப்படும் யமுனாஏரியை ஆழமாக்கும் பணியில் யாழ்ப்பாண மாநகர சபையினர் ஈடுபட் டிருந்த பொழுது பெற்றுக் கொள்ளப்பட்ட மரத்தினாலான ஓர் அம்மன் சிலையையும் இங்கு சேர்த்துக் கொள்ளலாம்.
இச்சிற்பங்களின் கலைவனப்பினையும், அடையாளம் காணல் என்பதனையும் தென்னிந்திய சிற்பக்கலை மரபின் பின்னணி யில் எந்தவொரு நிலையிலும் வைத்து ஆராய்வதற்குரிய சூழ் நிலை இதுவரையிலும் ஏற்படவில்லை, வி. சிவசாமி அவர்கள்

Page 190
---294-س-
நல்லூர் பூதவராயர் திருக்குளத்தினின்றும் மீட்கப்பட்ட கருங் கற் சிற்பங்களைப் பற்றிய அறிமுகமாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.4 1979இல் கமால் வீதியிற் கிடைத்த இரு சிற்பங்களைப் பற்றிய விளக்கத்தினை, கா. இந்திரபாலா ஒரு விபரண ரீதியான கட்டுரையாகத் தென்னிந்தியப் பின்னணி யுடன் எழுதியுள்ளார். இவற்றினைத்தவிர வேறு எந்தவிதமான முயற்சிகளும் இக்குறிப்பிட்ட சிலைகள் பற்றி இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை எனலாம்.
நல்லூர் பூதவராயர் திருக்குளத்தினின்றும் மீட்கப்பட்ட கருங்கற்சிற்பங்களில் ஒரு தொகுதி தற்பொழுது யாழ்ப்பாணம் அரும்பொருளகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதே போன்று கமால் வீதிச்சிற்பங்களும் அங்கேயே வைத்துப் பாது காக்கப்பட்டுள்ளன. இவற்றினைவிட நல்லூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிங்கையாரிய மகாராசாக்கள் வெளி யிட்டிருந்த சேது நாணயங்கள் பல அங்கு காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. அவற்றிற் சிலவற்றினை இங்கு கலை மரபு நோக்கில் எடுத்தாளக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இப்பின்னணி யிலேயே மேற்படி குறிப்பிடப்ப்ட்ட சிற்பங்களைப் பற்றியதான நேரடியான அவதானிப்புக்களினதும், தென்னிந்தியப் பின்னணி யில் அவற்றின் நிலை பற்றிய விளக்கக் குறிப்புக்களினதும் தொகுப்பாக இக்கட்டுரை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சிலை களின் அமைப்பு, சிற்பக்கலையில் அதன் வனப்பு, கால ஆய்வுக்கு உதவும் கலைக்கூறுகள் என்ற வகையில் அச்சிலைகளை ஆராய் வது கலை வரலாற்றாய்வுக்கு உதவுவதாக அமையலாம்.
நல்லூரிற் சோழர் கலைமரபும் சிற்பங்களும்
சோழமன்னர்களது கல்வெட்டுக்களில் நல்லூர் என்ற மையம் பற்றிப் பல இடங்களிற் குறிப்பிடப்பட்டுள்ளமையைக் காண லாம். யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து மீட்கப்பட்ட சோழருக் குரிய சாசனமொன்றிற்கூட நல்லூரான" என்ற தொடர் இடம் பெறுவதனைக் காணலாம் 5 இதனை மேலும் உறுதிப்படுத் தக்கூடியவகையில் அவர்களது காலத்துக் கலைமரபுகளுடன் இணைந்த நிலையிற் சில சிற்பங்களைத் தற்போது அடையாளம் காணக்கூடியதாகவுள்ளது. அவ்வகையில் நல்லூர் பூதவராயர் திருக்குளத்தினின்றும் மீட்கப்பட்ட சிற்பத்தொகுதியிலிருந்து இரண்டு கற்சிற்பங்களையும், கமால் வீதிச் சிற்பமொன்றினையும் சோழர் கலைப்பாணியுடன் இனங் கண்டு ஆராய்ந்து கொள்ள முடிகிறது. , , !

--295-می ۔
அ. சனீஸ்வரன் சிற்பம். (படம் - 36)
பூதவராயர் திருக்குளத்தினின்றும் மீட்கப்பட்ட கருங்கற் சிற்பத்தொகுதிக்குள் சனீஸ்வரனது சிற்பமானது மிகவும் பழமை யானதாகக் கொள்வதற்கு உதவும் வகையில் அச்சிற்பத்தின் (சிற்ப) இலட்சணங்களை எடுத்துக் காட்டலாம். வாகனமான காகத்தின் மீது வலது காலை மடித்து, இடது காலைக் கீழே தொங்க விட்ட வண்ணம் செதுக்கப்பட்ட இச்சிற்பமானது அதன் உருவ அமைதியைப் பொறுத்தமட்டிலும், ஆபரணக்கலையின் இயல்புகளைப் பொறுத்தமட்டிலும், பழைமையான தன்மையைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம்.
பிற்பட்ட காலச் சோழர்களது சிற்பங்களிற் காணப்படும் ஆபரண முறை இச்சிற்பத்திலும் நன்கு பின்பற்றப்பட்டுள்ளது. அதன் அங்க இலட்சணங்களுள் ஜாமகுடமாகக் காணப்படும் தலையலங்கார முறையினைப் பிற்பட்ட சோழர் காலக் கலை மரபுடன் நன்கு அடையாளம் காணமுடிகின்றது. ஜடாமகுட மானது மூன்று முக்கியமான கூறுகளையுடையதாகவுள்ளது. அதன் சிரசில் காணப்படும் உச்சிக் கொண்டை பின்னர் அதன் கீழே உள்ள ஜடையை இரு கூறாக வகுக்கும் இடைவந் திக்கட்டு என்பனவே அவையாகும். சோழர் கலைமரபிற் கூடு தலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பணியாக இம்முறை அமைந் திருப்பதனைத் தென்னிந்தியச் சிற்பமரபுகளிற் காணலாம் 7 ஜடா முடியை இரு கூறாக வகுக்கும் இடைவந்திக்குக் கீழ்ப்பாகத்தில் இரத்தினாரமும், மேற்பாகத்தில் லிங்கக் குறியும் இடம் பெற்றி ருப்பது இரு முக்கியமான அம்சங்களாகும். சனீஸ்வரனின் ஜடாமுடி யிற் காணப்படும் லிங்கக் குறியானது அச்சிற்பத்தினை ஒரு சிவன் கோயிலுடன் தொடர்பு படுத்துவதாகவும் அமையலாம். இது மேலும் ஆராயத்தக்கதாகும்.
பிற்பட்ட சோழர் காலத்திற்குரிய சிற்பங்களிற் காணப்படு வது போன்ற ஆபரணமுறையினைச் சனீஸ்வரன் சிற்பத்திலும் காணலாம். நீண்ட மாலை (Oblong Garland) முறை பிற்பட்ட சோழர் காலமரபுக்குரியது.8 இச்சிற்பத்திலும் அதனைக் காண லாம். கழுத்தினைச் சுற்றிக் காணப்படுகின்ற ஆபரணங்களின் வகை கள் மிகவும் அலங்காரப்படுத்தப்பட்ட தன்மையையுடையன வாகக் காணப்படுகின்றன. அதே போன்று காதுக்குரிய அணி கலன்களிலும் அத்தன்மையை அவதானிக்க முடிகிறது.
சமபங்க நிலையில் உருவாக்கப்பட்ட இச்சிற்பத்தின் ஒரு சிறப் Laudul ey)gigol LiuditGOOTi4606Tuyuh (Three Dimensions) assrairl

Page 191
-296
தாக அமைக்கப்பட்டது என்பதே. காகவாகனத்துடன் கூடிய இச்
சனீஸ்வரன் சிலையிற் சமபங்க நிலையைப் பேணுமுகமாக மடிக்
கப்பட்ட வலது பாதமானது, அதன் இடது பாதத்தின் திரட்சி
யான தன்மையிலிருந்து சற்றுக் குறைக்கப்பட்டுள்ளமையையும் அவதானிக்கலாம். காகவாகனத்தின் தலைப்பகுதி இடது புற மாகவும், அது பறக்கின்ற நிலையிலும் சித்திரிக்கப்பட்டுள்ள மையை இங்கு காணலாம்.
நான்கு கரங்களில் வலது மேற்கரமானது உடைந்துவிட்ட நிலையில், இடது மேற்கரமானது பாசத்தினைத் தாங்கியுள்ளது. வலது கீழ்க்கரம் அபயஹஸ்தமாகவும் இடது கீழ்க்கரம் வரத ஹஸ்தமாகவும் காணப்படுகிறது.
உள்ளங்கைகளில் ஸ்வஸ்திக்காச் சின்னம் பொறிக்கப்பட்ட நிலையிற் கைமேடுகள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள் ளன. இதுவும் இச்சிலையின் ஒரு சிறப்பியல்பாகும்.
சனீஸ்வரன் சிற்பத்தொகுதியின் பீடமானது சில விசேட மான இயல்புகளைக் கொண்டுள்ளது. அதாவது இரட்டிக்கப் பட்ட சதுரமான பீ.மொன்று உருவாக்கப்பட்டுள்ள தன்மை, அதன் அமைப்பு, அதிற் கூடு (kudu) என்ற திராவிடப் பாணிக்குரிய கலைக்கூறு செதுக்கப்பட்டுள்ள விதம், என்பவையே அவையாகும். இதிலிருந்து இச்சிற்பமானது கோவிலின் உட் பிரகாரத்தினுள் வைத்து வணங்குவதற்காக அல்லாமற் கட்டி டிடமேல் விதானப் பகுதியிற் கட்டிடக்கலைக் கூறுகளுடன் வைத்து அலங்காரப்படுத்தப்படுவதற்காகவே உருவாக்கப்பட்டது எனக் கூறலாம். அவ்வகையிற் நல்லூர் பூதவராயர் குளத்தினின் றும் மீட்கப்பட்ட சிற்பத் தொகுதியினுட் சனீஸ்வரன் சிலை 'யானது தனித்துவமானதாகக் காணப்படுகின்றது.
எனவே சனீஸ்வரன் சிற்பத்தின் அமைப்பு, சிற்பக்கலையில் அதன் வணப்பு, கால ஆய்வுக்கு உதவும் கலைக்கூறுகள் என்பன வற்றை ஒன்று திரட்டி நோக்கும் பொழுது பிற்பட்ட சோழர் காலத்திற்குரிய சிற்பமரபினைப் பிரதிபலிக்கும் வகையில் அது அமைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. அந்த வகை யிற் கி.பி 10 க்கும் 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இச் சிற்பம் உருவாக்கப்பட்டிருக்கலாம்,
ஆ. தகழிணாமூர்த்தி சிற்பம்:9 (படம் - 37)
நல்லூர் பூதவராயர் திருக்குளத்தினின்றும் பெற்றுக் கொள் ளப்பட்ட சிற்பத் தொகுதியினுள் இன்னெரு தனித்துவமான

--سیس--297سے
கருங்கற்சிற்பமாகக் காணப்படுவது தகழிணாமூர்த்திச் சிற்பமாகும். இதன் தனித்துவத்தினை இச்சிற்பத்தில் இரண்டு அடிப்படைகளில் அடையாளம் காண முடிகிறது.
(1) நான்கு திருக்கரங்கள்.
(2) அபஷ்மாரபுருஷனின் முகத் தோற்றம். இவ்விரு அம்சங்களுமே இச்சிற்பத்தின் அமைதியினையும், கலைவனப்பினையும் காலத்தினையும் கணிப்பதற்குப் பெரிதும் பயன்படுபவையாக உள்ளன. e
பொதுவாக நல்லூர்ச் சிற்பத்தொகுதியினுள் நான்கு திருக் கரங்களையுடையவை அவற்றின் முழங்கைப் பாகத்திலிருந்தே பிரிவு கொண்டவையாகக் காணப்பட, தகூFணாமூர்த்திச் சிற்பம் மாத்திரம் தோட்பட்டையிலிருந்து நான்கு திருக்கரங்களுக்குரிய பிரிவுகளைக் கொண்டமைந்துள்ளது. இவ் விதிவிலக்கான தன் மையைப் பிற்பட்ட சோழர் சிற்பமரபிலும் காணக்கூடியதாக வுள்ளது. அனுராதபுரத்திலுள்ள அரும்பொருளகத்திற் பாது காக்கப்பட்டுள்ள சோழர்கால வெண்கலச் சிற்பங்களிலும் இத் தன்மையைக் காணலாம்.10
தகSணாமூர்த்தியின் நான்கு திருக்கரங்களில் மேல் வலது கரமானது சாமரையையும் (ஒருவேளை அக்கினியாகவும் இருக் கலாம்) மேல் இடது கரமானது நாகபாம்பினையும் தாங்கியுள் ளது. கீழ் வலது கரமானது அபயஹஸ்த நிலையில் உருத்திராக் கம் மாலையயைத் தாங்கியுள்ள அதேநேரத்திற் கீழ் இடது கரமானது, நேராக மடித்த இடது காலின் மீது புறங்கை வெளியே தெரியும் படியாகத் தொங்கவிடப்பட்டுள்ளது. உருத் திராக்க மாலையைத் தாங்கியுள்ள அபயஹஸ்த நிலையை *ஞான முத்திரை" என வி. சிவசாமி அடையாளம் கண்டுள்ளர்ர்.11
சமயங்க நிலையை வெளிப்படுத்தி அமைக்கப்பட்ட தக்ஷணா ர்த்தி சிலையின் தலையமைப்பினை நோக்கும் பொழுது பல றப்பியல்புகளையும் அவதானிக்க முடிகிறது. தீச்சுவாலை போன்று ஜடாபாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மையத்தில் இரத்தினாரம் செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் அலங்கரிக்கப்பட்ட தீச்சுவாலையையுடைய ஜடாபாரத்தின் கீழ்ப்பட்டமானது அகன்ற பட்டி போன்று அமைந்திருப்பது அதன் நீண்ட முகத் திற்கு மேலும் மெருகூட்டுவதாக அமைவதனைக் காணலாம், தடித்த உதட்டினையுடைய முகத்தோற்றமானது பிற்பட்ட சோழர் கலை மரபிற் பின்பற்றப்பட்டதென்பதனைக் கலையாய் வாளர் எடுத்துக்காட்டுவர்.

Page 192
سہ 298-س۔
கழுத்தில் அணியப்பெற்ற ஆபரணங்களின் தன்மையானது பிற்பட்ட சோழர் கலைமரபினைப் பின்பற்றியதாகும். அதனைத் தமிழ் நாட்டுச் சோழர் மரபுக்குரிய சிற்பங்களுடன் நன்கு அடை யாளம் காணமுடியும். பொதுவாக உருண்டை வடிவினதான ஆபரணங் வின் முத்துக்கள் பிற்பட்ட சோழர் மரபிற் சிற்பங் களை அணி செய்வதற்கு நன்கு பின்பற்றப்பட்டிருந்தது என்ப தனைச் சைவசமய குரவர்களின் வெண்கலச்சிற்பமரபில் இருந்து காணமுடிகிறது. அதே போன்றதொரு தன்மையை இங்கும் காணலாம்.
மேலும் அபஷ்மாரபுருஷனின் தோற்றத்தினை நோக்கும் பொழுது பொலநறுவையில் 1960இற் கண்டுபிடிக்கப்பட்டு, அனு ராதபுர அரும் பொருளகத்திற் பாதுகாக்கப்பட்டுள்ள பெரிய வெண் கல நடராசர் சிலையின் பீடத்தின் முகப்பிற் காணப்படும் வாத்தியக்காரர்களின் தோற்றத்தினையே ஞாபகமூட்டுவதாக உள்ளது 12 ஆனால் இம்மூர்த்தத்தில் அபஷ்மாரபுருஷ னின் வலது கரத்தில் நீண்ட உடைவாள் ஒன்று க*ணப்படுவதனையும் அவ தானிக்க டி டிகிறது. வாள் தாங்கிய அபஷ்மாரபுருஷ னின் தோற் றப்பாடு இப்பிராந்தியத்திற்குரிய சிற்ப உருவாக்கத்தின் விசேட மான பண்பாகவும கொள்ளலர்ம். அதன் முகத்தோற்றம் சோழர் காலப் பூதகணங்களை யொத்திருப்பதினால் இச்சிற்பத்தினையும் பிற்பட்ட சோழர் கலைப்பாணிக்குரியதாகக் கொள்ளலாம். எனவே மேலே கூறப்பட்ட பண்புகளை ஒன்று திரட்டி நோக்கும் பொழுது கைலாயமாலையின் உச்சியின் மீது வீற்றிருக்கும் இச் சிற்ப அமைதியானது கி. பி. 10க்கும் 12ஆம் நூற்றாண்டுக்கு மிடைப்பட்ட காலபபகுதிக்குரியதாகக் கொள்ளலாம்.
இ. சண்டேஸ்வரர் சிற்பம், 13 (படம் 38)
யாழ்ப்பாண முஸ்லிம் குடியிருப்புப் பகுதியிற் கமால் வீதியி லுள்ள ஓரிடத்திலிருந்து இபபெரிய - இருக்கும் நிலையில் அமைந்த கருங்கற் சிற்பமானது பெற்றுக் கொள்ளப்பட்டது சமபங்கநிலை யைப் பேணும் இச்சிற்பத்தின் கலைவனப்பினைப் பார்த்த மாத் திரத்திற் பிற்பட்ட சோழர் கலைப்பாணியுடன் இதனை ஒப்பிட்டு நோக்கிக் கொள்ளலாம்.
உயரமான சதுரவடிவபிடமொன்றின் மீது வலது பாதத்தினைப் பீடத்தினின்றும் கீழே தொங்கவிட்ட நிலையிலும், இடது பாதத் தினை மடித்த நிலையிலும் இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மடிக்கப்பட்ட இடது பாதமானது வலது தொடையைத் தொட்
டுள்ள வண்ணம் இச்சிற்பம் காணப்படுகிறது. பாதங்களில் பாத

ـ 299ېس---
சரங்கள் மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன. பாதங்களின் உருவ அமைதியானது மிகவும் பொருத்தமான வகையில் வெளிப் படுத்தப்பட்ட விதம் ஒரு வேளை தென்னிந்தியாவிலிருந்து இச் விற்பத்தினை இங்கு கொண்டு வந்திருக்கலாமோ எனவும் எண்ண வைக்கின்றது.
தலையமைப்பினைப் பொறுத்தமட்டில் ஜடாமகுடமானது சோழர் காலச் சிற்பக்கலை வனப்பின் மகுட மாவும் திகழ வைக் கின்றது மிகவும் நீண்ட ஜடாபாரம் விசேடமான பல இயல்பு களையுடையதாகவுள்ளது. ஜடாமகுடச்தின் உச்சியில் ஜடை யானது இரண்டாகப் பிரிக்கப்பட்டுப் பக்க வட்டாகக் கீழ்நேக்கி விடப்பட்டுள்ளது. அதனுடைய திரட சியான ஒழுங்கு படுத்தப் பட்ட தன்மையானது சிற்பக்கலையின் தேர்ச்சியை நன்கு வெளிப் படுத்தி நிற்கின்றது ஜடாமகுடத்தின் முன் மையப்பகுதியில் இரத் தினாரமும் அடியிற் சுவர்ண பட்ட மும் மிகவும் அலங்கா ரப்படுத் தப்பட்ட நிலையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன புராதன நல் லூர்ப் பிராந்தியத்திலிருந்து வெளிவந்த ஒரு கருங்கற் சிற் ம் என்ற வகையில் அழகியல் அடிப்படையிற் பல கலைத்துவப்பண புசளைத் தனது ஐடையிலே மாத்திரம் இச்சிற்பம் கொண்டுள்ள மையினை இலகுவாக அவதானிக்கலாம்.
கழுத்தாபரணங்கள், காதணிகலன்கள் என்பன மிகவும் தெளிவானவையாகவும் பிற்பட்ட சோழர் கால வெண் சல விக்கிரகங்களிற் பின்பற்றப்பட்டிருந்த அணிகலன்களின் வடிவமைப் பினையுடையதாகவும் இச்சிற்பம் விளங்குகின்றது யக்நோவீதம் என்றழைக்கப்படும் முப்புரிநூல் அதன் பெயருக்கேற்ப மூன்று புரிகளையுடையதாக இடது தோளினுாடாகச் செல்வதனையும் அவதானிக்க முடிகிறது.
இருகரங்களுள் வலது கரமானது மிகவும் நீண்ட, அழகான மழு ஒன்றினைத்தாங்கி நிற்க, இடது பிரமானது வரத ஹஸ்தமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அம்மழுவின் கூரான அடிப்பகுதி யானது வலது தொடைமீது தாங்கிநிற்கிறது.
இளமையான தோற்றப்பாட்டினை வெளிப்படுத்தக் கூடிய வாறு முகத்தோற்றமும், நீண்ட சதுரமான முகவெட்டுமுடை யதாய் மெல்லிய சாந்த நிலை வெளிப்படுமாறு அமைந்த தன்மை யும் இங்கு நோக்கத்தக்கது அதற்கேற்ப, மெருகு மேலும் கூடிக் காணப்படும் வகையிற் காதிற் பத்திர குண்டலங்களையுடையதா ஃவும், நீண்டதன்மையைக் குறைத்து ஒரளவிற்கு வட்டமான உருவிற் காதின் அமைப்புக் காணப்படுவதனையும் நோக்கலாம்.

Page 193
--300س--
இப்பின்னணியில் இச்சிலையை இந்திரபர்லா சண்டேசுவரர் என அடையாளம் கண்டுள்ளார். 14
இச்சிற்பத்தின் உருவ அமைதியினையும், கலைவனப்பினையும் அங்க இலட்சணங்களையும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது சந்தேகத்திற் கி.மின்றி அது பிற்பட்ட சோழர் கலைப் பண்புகளுக்குரியதாகக் கொள்ள வைக்கின்றது. அவ்வகையில் இச் சிற்பத்தை கி. பி. 10ஆம், 12ஆம் நூற்றாண்டுTளுக்கிடைப் பட்டதாகக் கொள்ளலாம்.
பாண்டியர் கலைமரபில் நல்லூர்ச் சிற்பங்கள்:
விநாயகர் கருங்கற் சிற்பம்:13 (படம்- 39)
நல்லூர்ப் பூதவராயர் திருக்குளத்தினின்றும் பெற்றுக் கொள் ளப்பட்ட கருங்கற்சிற்பங்களுள் இவ்விநாயகர் சிற்பமும் ஒன்றா கும். கருமையான மணியுருக்களைக் கொண்ட கருங்கல்வி னால் உருவாக்கப்பட்டு, இருக்கின்ற நிலையை உடைய இச் சிற்பத்தின் இயல்புகளை ஆராயும் பொழுது பல விசேடமான அம்சங்களைக் காணமுடிகிறது.
சிற்ப அமைதியின் வெளிப்பாட்டில் ஓர் இலகுத்தன்மையும், தெளிவும் வெளிப்பட்டு நிற்பதனைக் காணலாம். இச்சிற்பத்தின் தெளிவான, கவரத்தக்க இரு கூறுகளாக அதன் தலைப்பாக மும், அதன் வயிற்றுப் பாகமும் அமைந்துள்ளது. தலைமுடியா னது கூரான கரண்ட மகுடமாகவுள்ளது, அது ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஐந்து ஒடுங்கிய வளையங்களால் ஆனது. மிகவும் அழ காக வெளிப்படுத்தப்பட்டுள்ள இம்முடியானது அலகிகாரப்படுத் தப்பட்ட தலைக்குஞ்சங்களால் அல்லது மயிர்க்குஞ்சங்களால் அழகு படுத்தப்பட்டுள்ளது.
விநாயகரின் இருக்கின்ற அமைப்பானது நோக்கத்தக்கது. வலது பாதமானது நிலைக்குத்தாக மடிக்கப்பட்டும் இடது பாத மானது பக்கவாட்டாக மடிக்கப்பட்டும் அப்பெருவயிற்றுப் பாகத் தினையும் அதன் பாரத்தினையும் சுமக்க முடியாத நிலை சிறப் பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது விநாயகருக்கேயுரிய சிறப் பான நிலையாகவும் அமைந்துள்ளது. நான்கு திருக்கரங்களிற் பின்னிரு கரங்களும் பரசினையும், பாசத்தினையும் முறையே வலது. இடது டக்கங்களிலும், வலது முன்கரமானது உடைக்கப்பட்ட வலது கொம்பினையும், இடது முன்கரமானது மோதகத்தினை யும் கொண்டுள்ளன. இச் சிற்பஅமைதியிற்"பானை வயிறறோன் மோதகம் உண்கின்ற நிலை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டுள்ளமையும் உணர முடிகின்றது.

-301
முன்னெற்றிப் பட்டத்தில் முக்குறியும், அதற்கு மேல் வைரக் கல்லும் செதுக்கப்பட்டுள்ளது. இருதந்தங்களுக்குமிடையே நீண்டு காணப்படும் தும்பிக்கையின் மேற்பகுதியில் நீள்வட்டவடிவில் அதன் ஓங்கார நாதம் தீட்டப்பட்டுள்ளது. முப்புரிநூலானது மிகவும் நுண்ணியதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது, இதுவே அதன் புராதனத் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்ற அம்சமும் எனலாம். தும்பிக்கையின் நடுப்பாகத்தில் மலர்ம லையொன்று தொங்குவது போல அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. விநாயகரின் தோட்டட்டையில் தீட்.ப்பட்டுள்ள வீரக்கழல் போன்ற ஆபர ணத்தின் தன்மை இங்குநோக்குதற்குரியது. இச்சிற்பத்தில் வெளிப் படுத்தப்பட்டுள்ள மேற்படி பண்புகளை அவதானிக்கும் பொழுது பிற்பட்ட பாண்டியர்களுடய கலைப்பாணிக்குரிய அம்சங்களைக் காணமுடிகின்றது. அவ்வகையிற் கி.பி.14ஆம் நூற்றாண்டுக்குரிய சிற்ப இலட்சணங்களை அவ்விநாயகர் சிற்பம் கொண்டுள்ளது எனக் குறிப்பிட முடியு ? .
தண்டேஸ்வரர் சிற்பம்: ஐயனார் சிற்பம்.18 (படம்-40)
இருக்கின்ற நிலையிற் செதுக்கப்பட்டுள்ள இச் சிறிய சிற்ப மானது நிலைக்குத்த7க மடிக்கப்பட்ட நிலையில் வலது பாதத் தினையும், பக்கவாட்டாகமடிக்கப்பட்ட நிலையில் இடது பாதத் தினையும் கொண்டுள்ளது. இடது பாதமானது பக்கவாட்டாக மடிக்கப்பட்ட நிலையில் வயிற்றுப்பாகத்தில் அமைந்துள்ள ஞாபி யைத் தொட்டிருக்கவில்லை. சிற்பக்கலையில் இவ்வாறான இருக்கை நிலையானது உடலின் அரைப்பாகத்தினை மடிக்கப்பட்ட காற்பகுதி உள்ளடக்கியிருக்குமாறு செய்யப்படுவதே மரபாகும். அத்தகைய ஒரம்சம் இச்சிற்பத்தில் மீறப்பட்டுள்ளது எனக் கூற Gal)trib.
இச்சிற்பத்தின் ஆடை, ஆபரணக்கலை முறையைத் தெளி வாகிக் காணமுடியாதுள்ளது. இம்மூர்த்தமானது வேட்டி அல்லது தோத்தியினைக் கொண்டுள்ளது என்பதனை மடிக்கப்பட்ட பாதங் களிலுள்ள சுருக்கங்ளிலிருந்தே அறிய முடிகிறது. குந்தியிருக் கின்ற நிலையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இச்சிலையின் மேல் வஸ்திரத்தில் த லங்கார முறைகளைக் காணமுடியவில்லை இருந் தும் ஆபர லகங்கள் அணிந்துள்ளமைக்கான அடையாளங்+ளைக் காணமுடிகின்றது நவை பெருமளவுக்கு வரைவுகளாகவே காணப்படுகின்றன (Linear System)
கழுத்தினை :ொட்டி இருவரைபுருவங்கள் காணப்படுகின் றன. இவை ஒருவேளை அட்டியலை நினைவு கூர வைக்கலாம் ,

Page 194
س-302--
இதற்குமேற்புறமாக இரு நீண்ட வரையுருவங்கள் ஞாபி வரைக் கும் நீண்டு காணப்படுகின்றன. இது நீண்ட ஆபரணமொன்றின் வடிவமாகவும் உள்ளது. கழுத்தினை tெ ட்டிக் காணப்படும் அட் *டியலுக்கும், இந்த நீண்ட ஆபரணத்திற்குமிடையே பதக்கமும் 'வச்சிராயுதமும் தீட்டப்பட்டுள்ளன. மார்புப் பாகத்திலே தீட்டப் பேட்டுள்ள இவ்வச்சிராயுதம் ஒருவேளை இம்மூர்த்தத்தினை
அடையாளம் காண்பதற்கு உதவுவதாகலாம்.
மகுடம் மூன்று புரிகளையுடைய கரண்ட மகுடமாகவுள்ளது. மகுடத்தின் கீழ்ப்பாகத்திலிருந்து கேசம் வெளிப்பட்டுள்ளது. வெளிப்பட்ட கேசத்தின் அமைப்பானது இரு காதணிகளுக்கும் பின்புறமாகச் சுருளாக அமைக்கப்பட்டுள்ளது. காதுகள் தெளி வாக வெளிப்படுத்தப்படாது இருப்பினும் அதன் கோட்டு வ ர முறையிலிருந்து அதன் அமைப்பினையும் அதில் வெளிப்படுத்தப் பட்டுள்ள மகர குண்டலங்களையும் அடையாளம் காணக் கூடிய தாகவுள்ளது.
கரங்களை நோக்கும் பொழுது, வலது கரத்திற் பரசு என்ற படைக்கலமும், அதேநேரத்தில் இடது கரமானது மடிக் கப்பட்ட இடது பாதத்தின் மீது நேராகத் தொங்கவிடப்பட்டுள்ளமையையும் காணலாம். ஆனால் தொங்கவிடப்பட்டுள்ள அக்கரத்தின் புறங் கைப்பாகம் வெளியே தெரியுமாறு அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இடது கரத்தில் உருத்திராட்சமாலை ஒன்றும் அணியப்பட்டுக் காணப்படுகிறது. இந்நிலையில் இச்சிறிய சிற்பத் தினை ஒரு காவற்றெப்வமாகவே அடையாளம் கண்டுள்ளனர்.17
காதில் அமைந்துள்ள மகர குண்டலத்திலிருந்தும், மார்பிற் காணப்படுகின்ற வச்சிராயுத அமைப்பினின்றும், இடது கரத்தின் புறங்கைப்பாகத்திலிருந்தும் இச்சிற்பத்தின் அ ைப்ெபுப் பரசுராமர் சிலையின் ஒரு சிறிய வடிவத்தினைப் பிரதிநிதித்துவம் செய்வதா கவும் கொள்ளமுடியும். பொதுவாக ஐயனார்சிலை வடிவம் பரசினை வலது கரத்திற் தொண்டுள்ள நிலையிற் சித்திரிக்கப் படினும், காதில் மகர குண்டலங்களையோ, அல்லது புறங்கைப் பகுதி வெளியே தெரியும் முறையையோ கொண்டிருப்பதாக அமைக்கப்படுவது மரபில் இல்லை. அவ்வகையில் வலது பாதத்திற் ‘சதங்கை அணிந்த நிலையில் யாழ்ப்பாண அரும் பொருள கத்திற் பாதுகாக்கப்பட்டுள்ள இச்சிறிய, வெண்மணியுருக்களைக் கொண்ட கருங்கல் லினாற் செய்யப்பட்ட இச்சிற்பமானது பரசு ராமர் சிலையாகக் கொள்வதற்கே வழிவகுப்பதாக உள்ளது. இதன் காலத்தினையிட்டு மேலும் ஆராய்வதற்கு இடமிடப்பினும் இத னைப் பிற்பட்ட பாண்டியர் காலத்துக்குரியதாகக் கொள்ளலாம்.

-303
நாயக்கர் கலை மரபும் நல்லூர்ச் சிற்பங்களும்: மகிஷாசுரமர்த்தினியின் செப்புப் படிமம்: 18 (படம் 41)
கமால் வீதியிலிருந்து மீட்கப்பட்ட இச்சிறிய வெண்கல. உருவமானது யாழ்ப்பாணத்தின் வெண்கலச் சிற்பக்கலை மரபின் பழமையான வரலாற்றுத் தன்மையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது இற்றைவரைக்கும் பழமையானது என்ற நிலையில் யாழ்ப் பாணத்திற் கிடைத்த மூன்று வெண்கல உருவங்களுள் மகிஷா சுரமர்த்தினியின் நிற்கும் நிலையில் அமைந்த இச்சிற்பமானது முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.19 ஒடுங்கிய நிலையில் நீண்ட வமைப்பினையுடைய திருவாசி ஒன்றினுட் சதுரமான பீடமொன் றின் மீது அமைந்த வட்டவடிவமான தாமரையாசனத்தின் மீது மகிஷாசுரமர்த்தினியின் நிற்கும் நிலை வெளிப்படுத்தப்பட் டுள்ளது. மகிஷாசுரமர்த்தினியின் வாகனமான எருமையின் தோற் றமானது நீண்ட, உட்பக்க வளைவான கொம்பினையுடைய தாக, சதுரவடிவான பீடத்தின் முற்பக்கத்திலுள்ள உட்குழி வினுட் பு.ை ப்புச் சிற்ப அமைதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ளமையையும் காணமுடிகிறது.
மகிஷாசுரமர்த்தினியின் நிற்கும் நிலையைச் சமபங்கநிலை என்று கூறுவதற்கில்லை. ஒருவேளை அதனைத் திரிபங்கநிலை எனக் குறிப்பிட முடியும், மகிஷாசுரமர்த்தினியின் இடுப்புப்பகு திக்குக்கீழ் உள்ள நிலையானது திருகோணமலையில் 1957 இற் கிடைத்த, நிற்கும் நிலையில் அமைந்த பார்வதி சிலையொன் றின் அங்கலட்சணங்களையும், அசைவினையும் கொண்டிருப்பதி லிருந்து கிட்டத்தட்டத் திரிபங்க நிலைக்குரிய தோற்றத்தினை இச்சிற்பத்திற் காணமுடிகிறது. இச்சிற்பத்தின் இடுப்புக்குக்கீழ் உள்ள பகுதியானது ஒரே சீரான தன்மையில் வலது பக்கமாக வளைந்திருப்பதனை, அச்சிற்ப அமைதியிலிருந்து காண முடி கிறது.
மகிஷாசுரமர்த்தினியின் எட்டுத் திருக்கரங்களும் முழங் கைப் பாகத்திலிருந்து செல்வதனை இச்சிற்பத்திற் காணமுடிகின் றது. இத்தன்மையைத் தென்னிந்திய வெண்கலச் சிற்ப மரபுகளி லும் கூடுதலாகக் காணலாம். இவ்வெட்டுத் திருக்கரங்களுள் கீழ் முன்னிரு வலது, இடது கரங்களும் முறையே அபய, வரத ஹஸ்தங்களிலும் ஏனைய ஆறு திருக்கரங்களிலும் படைக்கலன் களைக் கொண்டுள்ள நிலையிலும் வடிவமைக்கப்பட் டுள்ளது. இந்திரபாலா முன்புற வலது கையிலே தாமரை குமாட்டுத் தாங்கியிருப்பதனை அடையாளம் கண்டுள்ளார்:

Page 195
---304-س--
வலது பக்கக் கரங்களில் மேலிருந்து கீழாக சூலம், வாள், அங் குசம் என்பனவும் இடது பக்கத்திலுள்ள கரங்களில் மேலிருந்து கீழாக வெண்டையம், அம்பு - வில்லு, பாசம் என்பனவும் காணப் படுகின்றன,
மகிஷாசுரமர்த்தினியின் தலையமைப்பு இங்கு நன்கு ஆரா யத்தக்கது. மகுடஅமைப்பினைக் கரண்டவடிவமாகக் கொள்வ தற்கில்லை. அதிற் பல பிரத்தியேகமான அம்சங்கள் காணப்படு கின்றன. அதாவது கூம்பு வடிவமாக அமைந்த இம்மகுடத் தின் மேற்பாகத்தில் மேலும் ஒரு சிறிய கூம்பு வடிவமான அமைப்புக் காணப்படுகின்றது, ‘கரண்டம குடம்" என இதனை அடையாளம் சாணுவதாயின் கீழிருந்து மேல் நோக்கி ஒடுங்கிய வளையங்களாக அல்லது புரிகளாக அது அமைந்திருக்கவேண்டும். ஆனால் மகிஷாசுரமர்த்தினியின் தலையிற் காணப்படுகின்ற இம் மகுடமானது ஒருவேளை கேச மகுடமாக இருக்கலாம். இம்மகு டத்தின் முன் புறத்தில் ஒரு சிறிய உருவம் இருப்பது போலத் தோற்றமளிக்கின்றது. இது ஒரு விசேடமான தன்மையாக இம்மகுடத்திற் காணப்படுகின்றது. இது மேலும் ஆராயத்தக்கது.
மகிஷாசுரமர்த்தினியின் முகத்தோற்றத்தினையும் காதணி களின் அமைப்பினையும் நோக்கும் பொழுது அவை கேரளப் பண் பாட்டினை வெளிப்படுத்துவதாக அமைவதனைக் காணலாம். பிற் பட்ட யாழ்ப்பாணத்துக் கோவில்களில் உள்ள தெய்வ அம்சங் களில் இத்தன்மையைக் காணலாம். முகத்தோற்றத்தினை மட் டும் வைத்து நோக்குகின்ற பொழுது, பொலன்னறுவையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்து வெண்கலச் சிற்பப் படிமம் சிங்களச் சிற்ப முறையின் அடியாகத் தோற்றம் பெற்ற கலைச் சாயலை வெளிப்படுத்துவதாகவும் கொள்ள முடியும்.21
நன்கு அலங்காரப்படுத்தப்பட்டுள்ள ஆபரணக்கலை முறை யையும் ஆடை வகைகளையும் நோக்கும் பொழுது விஜயநகர நாயக்கர் கலைப்பாணியைப் பிரதிபலிப்பதாகக் கொள்ள முடி கின்றது. விஜய நகரப் பண்பாட்டுக்குரிய பல அம்சங்களை இம் மகிஷாசுரமர்த்திணிப் படிமத்திற் காணமுடிகிறது. மிகவும் அலங் காரப்படுத்தப்பட்ட ஆடையின் தோற்றப்பாடு அதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். மகுட அமைப்பு முறையும், அதனை வலுப் படுத்தி நிற்கின்றது. இப்பின்னணியில் மகிஷாசுரமர்த்தினியின் படிமத்தினை கி. பி. 14 க்கும் 16 ஆம் நூற்றாண்டுக்குமிடைப் பட்ட காலப்பகுதிக்குரியதாகக் கொள்ளலாம்.

-305
கஜலக்ஷமியின் கருங்கற் சிற்பம்: 22 (படம் - 42)
பிரமாண்டமான உருவத்தோற்ற உணர்வினையூட்டி நிற்கும் இக் கருங்கற் சிற்பமானது விஜயநகரநாயக்கர் காலக் கலைப்பாணி யைச் சார்ந்தது என்பதனை அதன் பல கூறுகளிலிருந்தும் கண்டு கொள்ள முடிகிறது. இருமடங்காக்கப்பட்ட தாமரையாசனத்திற் சுகாசன நிலையில் வலது பாதத்தினைக் கீழே தொங்கவிட்ட வண்ணம் இடது பாதத்தினை மடித்துத் தாமரையாசனத்தின் மீது வைத்த வண்ணம் இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வலது பாதத்தின் தொடையை இடது முன்பாதம் கிட்டத்தட்டத் தொடு மளவிற்குக் கஜலக்ஷமியின் இருக்கையானது வடிவமைக்கப் பட்டுள்ளது.
லக்ஷமியின் இருமருங்கிலும் இருயானைகள் தத்தம் முன்னிரு பாதங்களையும் மேலுயர்த்தியவாறு தும்பிக்கைகளைத் தாமரை மொட்டுடன் வளைத்த வண்ணம் இணைக்கப்பட்டுக் காட்டப்பட் டுள்ளன. இங்கே லக்ஷமிக்கு நீர் சொரிவதற்குப் பதிலாக, இரு யானைகளினதும் தும்பிக்கைகள் லக்ஷ்மி கொண்டிருக்கும் தாமரை மொட்டுடன் இருபக்கங்களிலும் இணைக்கப்பட்டுள்ள தன்மை நோக்கத்தக்கது.28 லசுஷ்மியின் மேற் பின்னிருகரங்களும் தாமரை மொட்டினைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன.
மிகவும் அகலமான, அலங்காரப்படுத்தப்பட்ட மகர தோரண வளைவிற்குள் இக் கஜலக்ஷமியின் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ள தன்மையானது நன்கு ஆராய்தற்குரியது. மகரத்தின் திரட்சியான தன்மையானது அதன் பிற்பட்டகாலச்சிற்ப அமைதியினை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம். மகரதோரணத்தின் அமைப்பில் அதற்குரிய உருவ அமைதியிற் சீரான தன்மை பின்பற்றாத விதத் திலும் அதற்குள் இருக்கின்ற நிலையில் உருவாக்கப்பட்ட லசஷ் மியின் அங்கலட்சணங்களானவை சிற்பத்தினைப் பார்த்த மாத்தி ரத்திற் கவரக்கூடியதாக இருக்கின்றது.
மிகவும் தெளிவானதும், புருவங்கள் கூர்மை கெடாத வகை யிலும் ஒன்றின் மேல் ஒன்றாக ஒடுங்கிய வளையங்களைக் கொண்ட கரண்டமசூடமானது லசுஷ்மிக்குரிய எடுப்பான தோற் றத்தினை எடுத்து வழங்குகின்றது. அதே போன்று மிகவும் தெளி வாகவும் கூர்மையாகவும் செதுக்கப்பட்ட ஆபரணக்கலைத்திறன் இரண்டாம் பாண்டியப் பேரரசுக்குப் பிற்பட்ட காலத்திலே தென் னிந்தியாவில் வளர்ச்சி பெற்றிருந்த கலைப்பாணியை எமக்கு நினைவூட்டுவதாகவுள்ளது. விம்மிப்பருத்துள்ள மார்புப்பகுதிக்கும் கழுத்துக்குமிடையே காணப்படுகின்ற அட்டியல், பின்னர்

Page 196
-306
கழுத்துச்சங்கிலி, அத்துடன் இணைந்த வகையில் மார்புப் பதக்கம். என்பன மிகவும் திரட்சியான வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன, தோட்டட் டையிற் காணப்படும் அணிகலன்கள், குண்டலங்கள், மகுடத்தின் கீழ்ப்பாகத்திலிருந்து வெளிப்பட்டு நிற்கின்ற கேசம் என்பன மிகவும் அலங்கார நிலையிற் காணப்படுகின்றன.
ஆடையலங்காரத்தினைப் பொறுத்தமட்டிலும், தெளிவான பல இயல்புகளைக் காணமுடிகின்றது. குதிக்கால் வரையுமான ஆடையின் மடிப்பு வரைகள், மடிக்கப்பட்ட இடது காலின் ஆடை மடிப்புகள், அவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள விதம், அதில் உள்ள பாதசரங்கள் என்பன கஜலகஷ்மியின் அலங்காரத்தினை மிகைப் படுத்துகின்றன.
முன் வலது கரம் உடைந்துவிட்ட நிலையில் முன் இடது
கரமானது அபயஹஸ்தமாகவுள்ளது. அதன் உள்ளங்கையிற்
சுவஸ்திகா அமைப்பு மிகவும் தெளிவாகவும், உள்ளங்கைகளின்
அங்கலட்சணத்திற்கு மெருகூட்டுவதாகவும் காணப்படுகின்றது.
உருவ அமைதியைப் பொறுத்தமட்டில் அதனை முழுமையாக நோக்கும் பொழுது அதன் பொருத்தப்பாடு (proportion) மிகவும் குறைவு என்றே எண்ண முடிகிறது. லசஷ்மி தாங்கியிருக்கும் தாமரை மொட்டுக்களின் வடிவம் ஒன்றுக்கொன்று அதன் தோற் றப்பாட்டில் முரண்பாடாக உள்ளது. யாளியின் வாய்ப்பகுதியில் இருந்து புறப்படும் மகர மீன்களின் உருவம், அவற்றின் நீள - அகலங்கள் இங்கு வேறுபடுகின்றன. இடது மகர மீனின் மீது செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைப்பாடுகளை வலது மகர மீனின் மீது காணமுடியவில்லை. மகுடத்தின் கீழ்ப்பக்கப்பிடரி வழியாக வெளியே தெரியுமாறு செய்யப்பட்ட கேசத்தின் பரப் பானது இருபக்கங்களிலும் சமப்படுத்திவைக்கப்படவில்லை. சுகா சன நிலையில் இருக்கின்ற லசுஷ்மியின் மடிப்பாகமானது உயர மட்டத்தில் இருபக்கங்களிலும் ஏற்றத்தாழ்வாக இருப்பதனை யும் காணலாம். இக்காரணங்களினாற் சமபலம் பேணப்படாத ஒரு நிலையில் இப்பிரமாண்டமான சிற்பம் செய்யப்பட்டுள்ள மையை அவதானிக்க முடிகிறது.
இப் பின்வ ரியிற் பிற்பட்ட பாண்டியர் காலத்துச் சிற்ப மரபுகளு டனோ அல் து அதற்கும் பிற்பட்டதான விஜயநகரக்கலைப்பாணி யுடனோ இக்கஜலக்ஷமியின் சிற்ப அமைதியை ஒப்பிட்டுப்பார்க்க முடிகிறது. அவ்வகையிற் கி. பி. 14ஆம் 16ஆம் நூற்றாண்டுகளுக் கிடைப்பட்ட காலத்துக்குட்பட்டதாக இச்சிற்பம் அமையலாம்.

----307-س-
வள்ளி - தேவயானை சமேதசுப்ரமணியர்: 24 (IL-D - 43)
சிற்பவிதிசளுக்கமைய உருவாக்கப்பட்ட இச்சிற்பத் தொகுதி யானது கால ஆய்வுக்குரியதாகும். தென்னிந்தியச் சிற்பக்கலைப் பாணியை மிகவும் இலகுவாகப் பிரதிபலிக்கின்ற இச்சிற்ப அமை தியிற் பல அம்சங்கள் மிகவும் நுணுக்கமாக ஆாாய்தற்குரியன வாகும். தனித்தனி நின்ற இம்மூன்று சிற்பங்களும் முப்பரிமாண நிலையில் மிகவும் நேர்த்தியாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளமை அவற்றின் தனிச் சிறப்பியல்புகளாக அமைகின்றன எனலாம்.25
வலது பக்கத்திலுள்ள தேவயானையின் வலது கரமானது மலர்ந்து கொண்டிருக்கும் தாமரை மொட்டினைத் தாங்கியுள்ள அதே வேளையில் இடதுபக்கத்திலுள்ள வள்ளியின் இடது கரத் தில் மலர்ந்த தாமரை காணப்படுகின்றது. தேவயானையின் இடதுபக்கத் தோட்பட்டையூடாகச் செல்லும் முப்புரி நூலி லிருந்து அச்சிற்பத்தினைத் தேவயானை என அடையாளம் காண முடிகிறது. சிற்ப சாஸ்திரங்களில் விதந்துரைக்கப்பட்டதற்கேற்ப, இவ்விருசிற்பங்களும் தாமரை மலரினைத் தாங்கியிருக்கும் கரங் களின் நிலையானது மார்பகங்களின் முனைப்பாகத்திற்கு (Nipple) மேலே செல்லாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. தேவயானையின் உருவம் மார்புக்கச்சை அணியாத நிலையிலும், வள்ளி மார்புக் கச்சை அணிவிக்கப்பட்ட நிலையிலும் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.
இம்மூன்று சிற்ப உருவங்களினதும் முடியமைப்பினை நோக் கும் பொழுது அவை கரண்ட மகுட அமைப்பிற் காணப்படுவத னையும், தேவயானையின் மகுடமானது புரிகளற்ற நிலையிற் கூம்பு வடிவமாகத் தோற்றமளிப்பதனையும் காணலாம். முருக னது மகுடத்தில் நான்கு புரிகளையும் வள்ளியினது மகுடத்தில் மூன்று புரிகளையும் அவதானிக்க முடிகிறது. மகுடங்களின் மையத்தில் இரத்தினாரம் பொறிக்கப்பட்டுள்ளமையும் அவதா னிக்கத்தக்கது.
காதுகளில் அணியப்பெற்றுள்ள ஆபரணங்களை நோக்கும் பொழுது மகர குண்டலங்களை முருகனிலும் தேவயானையிலும் காணமுடிகின்றது. வள்ளியைப் பொறுத் தலரையிற் பத்திர குண் டலம் அணியப் பட்டுள்ளமை ஒரு வேறுபட்ட அம்சமாகும். வள்ளியினது உருவத்தினை விட மற்றைய இரு சிற்பங்களினதும் காதாபரணங்கள் மிகவும் அலங்காரப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதனை அவதானிக்க முடிகிறது.

Page 197
-308
நான்கு திருக்கரங்களையுடைய முருகனது திருவுருவத்திலே பின்மேல் வலது இடது கரங்கள் முறையே சூலத்தினையும், வேலினையும் தாங்கியிருப்பதனைக்காணலாம். முன்னிரு வலது, இடது கரங்கள் முறையே அபய, வரத ஹஸ்தங்களில் அமைந் திருப்பதனைக் காணலாம். முருகனது வாகனமான மயில் வலது பக்கம் நோக்கிய நிலையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு விதிவிலக் கான அம்சமாகும்.
கால அடிப்படையில் இம்மூன்று சிற்பங்களினதும் அமைதியை நோக்கும்போது தேவயானையின் மகுட அமைப்பிலிருந்து அவை விஜயநகர நாயக்கர் காலத்துக்குரியதாகக் கொள்ள முடிகின்றது. விஜயநகரச் சிற்பங்களிற் கூம்பகவடிவில் அமைந்த மகுடங்களையே பெருமளவிற் காணமுடிகின்றது. இப் பின்னணியில் இச்சிற்பத் தொகுதியினைக் கி. பி. 15ஆம் நூற்றாண்டுக்கும் 16ஆம் நூற் றாண்டுக்குமிடைப்பட்ட காலத்தினைச் சேர்ந்தவை எனக் கொள்ள முடியும் ,
யமுனா ஏரியிலிருந்து மீட்கப்பட்ட அம்மன் சிலை: 26 ( LuLúb - 44 )
1957ஆம் ஆண்டில் யாழ்ப்பான மாநகர சபையினர் யமுனா ஏரியை ஆழமாக்கி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பொழுது மரத்தினாற் செய்யப்பட்ட இவ்வம்மன் சிலை கிடைத் தது. இலுப்பை மரத்தினாலான இச்சிற்பமானது யமுனா ? என்ற பெண்பாற் பெயருக்குரிய ஏரியில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சம்பவமானது வரலாற்று ரீதியில் முக்கியம் வாய்ந்ததாக இருக்கின்ற பொழுதிலும், அதன் சிற்பக்கலையம் சங்களை நோக்கும் பொழுது அதன் உருவாக்கமானது பிற் பட்ட காலத்துக்குரியது என்பது வெளிப்படையாகின்றது. மரத் தினாலான பீடத்துடன் கூடிய இவ்வம்மன் சிலையை, ஊறுபட் டதன் காரணமாக வ்ழிபாட்டு நிலையிலிருந்து விலக்கி, இவ் வேரிக்குள் இட்டிருக்கக்கூடும்.
சிவசாமி குறிப்பிட்டது போன்று இச்சிலையானது பழமை யற்றதாயினும், கலைப்படைப்பு என்ற ரீதியில் எழில் வாய்ந்த தாக விளங்குவதனைக் காணலாம். நான்கு திருக்கரங்களிற் பின் மேல் - வலது இடது திருக்கரங்கள் முறையே பாசத்தினையும் (ஒருவேளை உருத்திராட்சமாலையாகவும் இருக்கலாம்). தாமரை மொட்டினையும் தாங்கியிருக்க, முன் வலது இடது கரங்கள் முறையே அபய, வரத ஹஸ்தங்களாக அமைந்திருப்பதனையும் காண முடிகின்றது இந்நான்கு திருக்கரங்களின் உள்ளங்கைகளி லும் சுவஸ்திகா சின்னம் மிகவும் அலங்காரப்படுத்தப்பட்ட நிலையில் பொறிக்கப்பட்டிருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.

-309
கழுத்தாபரணங்கள் மிகவும் தெளிவாகவும் கலைநுட்பரீதி யாகவும் தீட்டப்பட்டிருப்பது இங்கு கவரக்கூடிய அம்சமாக வுள்ளது. மார்புப் பதக்கத்துடன் இணைந்த கழுத்துச் சங்கிலி யின் அமைப்பு மிகவும் இலாவகமாக உள்ளது. தோட்பட்டை யிலும், இடுப்பிலும் அலங்கார ஆபரணங்கள் காணப்படு கின்றன.
ஆடையின் வெளிப்பாடு மரத் தொழிற்பாட்டு ரீதியில் மிக வும் கச்சிதமாக அமைந்துள்ளது. முற்கொய்யக முறையில் அம் மனுக்குரிய ஆடை அமைப்பு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
பாதத்தினுடைய அமைப்பானது எகிப்தியச் சிற்பங்களிற் காணப்படுகின்ற தன்மையை ஒத்ததாகவுள்ளது. அவ்வகையில் நிற்கின்ற நிலையில் அமைந்த இச்சிற்பத்தின் பாதமானது பீடத் துடன் ஒட்டியுள்ள நிலைபோன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் இவ்வம்மன் சிலையானது கட்டையான தோற்றத்தினை வெளிப்படுத்தும் நிலையிற் கலைவனப்பு மிக்க தாக உருவாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடலாம்.
முடிவுரை:
நல்லூரும் சிற்பக்கலைமரபும் என்ற ஒரு சிறிய இவ் ஆராய்ச் சிக் கட்டுரையில், முதன்முதலாக அப்பிராந்தியத்திற் கிடைக் கப்பெற்ற குறிப்பிட்ட கற்சிற்பங்களை (ஒன்றைத்தவிர) அடிப் படையாகக் கொண்டு சில கலைமரபுகளை அடையாளம் காண்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. இம்முயற்சியில் மிகவும் சுருக்கமாகச் சிற்பங்களுடன் தொடர்புபட்ட முறையிற் கலைப் பண்புகள் ஆராயப்பட்டுள்ளன. நல்லூரின் கலைமரபு பற்றிய இவ்வாய்வில் இன்னும் பல அம்சங்களைச் சேர்க்க வேண்டியுள் ளது. குறிப்பாக நல்லூர் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு தலை தகர் என்ற வகையில் அங்கிருந்து வெளியிடப்பட்டிருந்ததாகக் கருதப்படும் சேது நாணயங்களின் கலைவனப்பினையும் ஆராய வேண்டும்.
சேது நாணயங்களிலுள்ள குறியீடுகளையும், சின்னங்களை யும் வைத்துக் கொண்டு சித்தாந்த ரீதியில் முதலியார் செ. இரா சநாயகம் சிறந்தவொரு விளக்கத்தினைக் கொடுத்துள்ளார். சேது, சேதுகாவலர், இராமேஸ்வரம் ஆகியவற்றோடு கூடிய சமயவடிப்படையிலான தொடர்புகளையும் சேதுநாணயத்துடன் தொடர்பு படுத்தி ஆராய்ந்துள்ளார். ". 9ே சது நாணயத்

Page 198
--310-س
தின் பின்பக்கத்திலுள்ள சின்னங்கள் பரமேஸ்வரனையும் (அவர் படைத்த பிரபஞ்சத்தையும்) யாழ்ப்பாண இராச்சியத்தினுள் அடங்கியிருந்த இராமேஸ்வரத்திலுள்ள ஆலயத்தினையும் குறிப் பன' என அவர் விளக்கம் கொடுத்திருப்பது நோக்கத்தக்கது. இவ்வடிப்படையிற் கலையடிப்படையிற் சேதுநாணயங்களின் இடத்தினை எதிர்காலத்தில் ஆராய அறிஞர் முன்வருவர் என எதிர்பார்க்கலாம்.
அடிக்குறிப்புகள்
1. யாழ்ப்பாண வைபவமாலையிற் பல கலைக் கருவூலங்களும் வரலாற்றுச் சான்றுகளும் அழிக்கப்பட்ட செய்தி இடம் பெறு வதும் நோக்கத்தக்கது.
*.பரராசசிங்க முதலி இறந்த பின் பறங்கிக்காரர் தாம் இடிக்காமல் விட்டிருந்த ஆலயமெல்லாவற்றை யும் இடித்தார்கள். அப்பொழுது பரதபாணி என்னும் பிராமணன் கீரிமலைச் சாரலில் உள்ள தேவாலயங்களின் தட்டுமுட்டுச் சாமான்களையும் விக்கிரஹங்களையும் கிணற்றிற் போட்டு மூடி வைத்தான். கந்தசாமி கோவிலின் பணிவிடைக்காரனாக விருந்த பண்டாரம் அத்திசையில் ஆலயங்களின் சம்பவங்களைக் கொண்ட செப்புப்பட்டயத்தினை எடுத்துக் கொண்டு மட்டக்களப் புக்கு ஓடினான்."" யாழ்ப்பாண வைபவமாலை பக். 80 - 81
2. Sculptures Discovered at Nallur, Daily News, 20. 05. 1951.
3. இந்திரபாலா, கா. "யாழ் - க மால் வீதியில் அகழ்ந்தெடுக் கப்பட்ட சைவச்சிலைகள்" (வீரகேசரி வாரவெளியீடு), 11. 02. 1979; 18. 02. 1979; 25. 02. 1979.
4. சிவசாமி, வி. காலத்தால் முற்பட்ட நல்லூர் சிலைகள்,
கலைக்கண், மறுபிரசுரம், 23. 11. 1973,
5. Indrapala, K. (Ed); Epigraphia Tamilica, (Jaffna Archaeo
logical Society) 1971. L. 53.
6. சிவசாமி, வி. மேற்படி, 1973,
7. பாலசுப்ரமணியம், எஸ். ஆர். பிற்காலச் சோழர் கலைப்
பாணி, (சென்னை) 1966.

-31 l
8. பார்க்க: பொலன்னறுவையிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டு
கொழும்பு தேசிய அரும் பொருளகத்தில் வைக்கப்பட்டுள்ள திருவாசியுடன் கூடிய நடராசர் வெண்கலச் சிற்பம். இலக் assib: CMAR No. 13. 88. 283. Coomaraswamy, A. K. Bronzes from Ceylon Chiefly in the Colombo Museum, (Colombo) 1914.
9. சிலையின் உயரம் 15 அங்குலங்கள். பீடமான மலையின்
உயரம் 12 அங்குலங்கள்.
10. Krishnarajah, S. Saiva Bronzes in Sri Lanka (10th — 12th C.A. D) A Dissertation, Unpublished (Mysore), 1983. Lu.34.
Plate: Nataraja 906). 6.
11. சிவசாமி, வி. மேற்படி, 1973, ப. 6.
12. Godakumbura, C. E. Polonnaruwa Bronzes, Department of
Archaeology, 1960.
13. சிலையின் உயரம் 26 அங்குலம். பீடத்தின் உயரம் 134 அங்
குலம். பீடத்தின் அகலம் 64 அங்குலம்.
14. இந்திரபாலா, கா. மேற்படி, 18. 02, 1979, ப. 7.
15.
சிலை 18 அங்குல உயரமுடையது. பீடம் 3 அங்குல உயர (p60-ligil.
16. சிவசாமி, வி. மேற்படி, 1973, ப. 7
17. சிவசாமி, வி. மேற்படி.
18. திருவாசியுடன் கூடிய சிலையின் உயரம் 8 அங்குலங்கள்.
அகலம் 5 அங்குலங்கள்.
19. கந்தரோடையிலிருந்து இரண்டு சிறிய வெண்கல உருவங்கள்
20.
கிடைத்திருக்கின்றன. ஒன்று: ஹனுமார் வெண்கலச் சிற்பம் இரண்டாவது: இருக்கின்ற நிலையில் உள்ள பிள்ளையார் சிற்பம். இவை இரண்டும் தற்பொழுது யாழ்ப்பாண அரும் பொருளகத்திற் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்திரபாலா, கா. மேற்படி, 25.02. 1979, ப. 11.

Page 199
21.
22.
23.
24.
25.
-312
Krishnarajah, S. Guð, ér. s. Lu. 33.
சிலையின் உயரம் 24 அங்குலங்கள். பீடத்தின் உயரம் 5 அங்குலங்கள்.
சிவசாமி இதனை நீர் சொரிவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகக் கஜலக்ஷமியின் வடிவமைப்பில் இருபுக்க யானைகளும் நீர் சொரிவதனையே மரபாகக்கொள்ளி னும், இங்கு அவ்வாறு அமைக்கப்படவில்லை.
முருகனின் உயரம் 27 அங்குலங்கள். இருபக்கத்திலுமுள்ள பெண்கடவுளர்களுடைய உயரம் 22 அங்குலங்களாகும்.
சிற்பங்களின் பிற்பக்கங்கள் தெளிவாகவும், நேர்த்தியாகவும் வெண்கலச் சிற்ப அமைதியிற் காணப்படுவது போன்று சித்தி ரிக்கப்பட்டுள்ளன. சிரச்சக்கரங்கள் யாவும் தெளிவாக உள்
660
26 சிலையின் உயரம் 21 அங்குலங்கள்.

அத்தியாயம் 10
ph 6 urb
ஆரியச் சச்கரவர்த்திகள் வெளியிட்ட காசுகளே சேது நாண பங்கள் எனப்படும். அவை திருநெல்வேலி, கோப்பாய், சண்டி விப்பாய், புத்தூர், மாதோட்டம், மாங்குளம், நல்லூர், நாகர் கோயில் முதலிய இடங்களிலே கண்டெடுக்கப்பட்டுள்ளன. தென் னிந்தியாவிலும் சில இடங்களில் இவை கிடைத்துள்ளன. இவற் றுட் சில யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற நகரங்களிலுள்ள நூதனசாலைகளிலுள்ளன. ஏனையவை சென்னை, லண்டன், பொஸ்ரன் போன்ற பிறநாட்டு நகரங்களிலுள்ள நூதனசாலை களிலே காணப்படுகின்றன. வேறு சில நாணயங்கள் சேர்ப்போர் வசமுள்ளன.
ஈழத்திலுள்ள சேதுநாணயங்கள் அனைத்தும் செப்புக்காசுகள் எனவே, செப்புக்காசுகளை மட்டும் யாழ்ப்பாணத்து அரசர் வெளியிட்டனர் என்று இதுவரை கருதப்பட்டது. ஆனால், கொழும்பு நூதனசாலை அதிபர் பிறநாடுகளிலுள்ள ஈழக்காசுகள் பற்றித் தயாரித்த பதிவேடு ஒன்றிலே பொஸ்ரன் நூதன சாலையில் இருக்கும் சேது என்ற மொழி பொறிக்கப் பெற்ற பொற்காசினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஆரியச்சக்கரவர்த்திகள் செப்புக் காசுகளோடு பொற்காசுகளையும் வெளியிட்டனர் எனக் கொள்ளலாம். செப்புக் காசுகள் மிகுத் திருக்கையிலே பொற்காசுகள் அரிதாகவிருந்தன என ஊகிக்க Gorf b.
சேது நாணயங்கள் பற்றிய ஆராய்ச்சிகள்
பதினேழாம் நூற்றாண்டின் பின் வடஇலங்கையில் வாழ்ந்த பொது மக்கள் சேதுக்காசுகளைப் பற்றி ஒன்றுமே அறிந்திருக்க வில்லை; தமது நாட்டை முன்னொரு காலத்திலே ஆட்சிபுரிந்த அரசர்களே அவற்றை வெளியிட்டனர் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள முடியவில்லை. கீழைத்தேய நாணயவியலாள

Page 200
-314
ரும் ஆராய்ச்சியாளருங் கூட ஒரு காலகட்டத்தில் அந்நிலை யிலேயே இருந்தனர். பிறின்செப் (Prinsop) என்ற ஆங்கிலேயர் சேர்த்த இந்தியத் தொல் பொருட்களின் தொகுதியிலே மூன்று சேது நாணயங்களிருந்தன. எனினும், தமிழ் எழுத்துக்களிலே தக்க பயிற்சியில்லாமையால் அவர் அந்நாணயங்களை ஆராய முற்பட வில்லை. எடை, அளவு, தோற்றம் ஆகியவற்றிலே சேது நாண யங்கள் பராக்கிரமபாகுவின் கஹவணுவ என்ற காசுகளை ஒத்தி ருக்கின்றன என்றும் அம்மன்னன் பாண்டி நாட்டிலே புழக்கத்திற் காக அவற்றை வெளியிட்டான் என்றும் றைஸ் டேவிட்ஸ் (Rhys Davids) கருதினார். சூளவம்சத்திலுள்ள ஒரு குறிப்பை அவர் தன் கருத்துக்கு ஆதர்ரமாகக் காட்டினார். பராக்கிரம பாகுவின் தளபதியான லங்காபுர பாண்டி நாட்டிற்குட் படை யெடுத்துச் சென்றபோது அங்கு பராக்கிரமனின் பெயர் பொறித்த காசுகளின் புழக்கத்தை ஏற்படுத்தினான் என்று சூளவம்சம் செப்பு கின்றது. இக்கூற்றினைத் தவறாகப் புரிந்த டேவிட்ஸ் பராக்கிரம பாகுவே சேது நாணயங்களை வெளியிட்டான் என்று பிழையா சுக் கருதினார். ஈழத்து நூல்களில் மகாவம்சம் முதலிய பாளி மொழியிலுள்ள நூல்களில் மட்டுமே பயிற்சியுடைய டேவிட்ஸ் ஈழநாட்டு வரலாற்றை முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஆரியச்சக்கரவர்த்திகளைப் பற்றி அவர் அறிந்திருந்ததற்கு எந்த விதமான சான்றுமில்லை. எனவே, அவர் முன் கண்டவாறு சூளவம்சத்தின் சான்றினைத் தன் கருத்திற்கேற்றவாறு திரித்துச் சேது நாணயங்களைப் பராக்கிரமபாகு வெளியிட்டான் என்று கருதியதில் வியப்பில்லை.
பின்னர் சேதுபதி நாணயங்கள் பற்றித் தான் எழுதிய கட்டு  ெையான்றிலே திரேசி சுவாமியார் (Rev. Tracey) சேது நாணங் கன்னக் குறி துச் சில கருத்துகளைத் தெரிவித்தார். அவர் இந் நா பங்கள்: நன்கு அவதானித்து ஆராய்ந்து பின் அவற்றைப் பற் எழுதினார். ஈழநாட்டு வரலாறு பற்றி அவர் நன்கு அறிந் திராத போதும் சேது நாணயங்கள் பற்றித் திரேஸி சுவாமி சொன் னவை மிகப்பொருத்தமானவை. சேதுபதி என்ற மொழி வரையப் பெற்ற காசுகளை இராமநாதபுரத்துச் சேதுபதிகளே வெளியிட் டனர் என்றும் அவற்றிற்கும் சேது நாணயங்களுக்கும் ஒருவிதமான தொடர்பும் கிடையாதென்றும் அவர் எடுத்துக்காட்டினார். சேது நாணயங்கள் சேதுபதிகளின் காசுகளைக்காட்டிலும் பெரிதாக விருப்பத்தோடு அவை கலைவனப்புமிக்கனவாக அமைந் துள்ளன என்றும் எடையிலும் தோற்றத்திலும் ஈழக்காசுகளையே அவை ஒத்துள்ளன வென்றும் ஈழத்திலேயே அவை கூடுதலாக வுள்ளதால் அந்நாட்டிலேயே அவை வெளியிடப்பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் கருதினார்.

ー315ー
சுவாமி ஞானப்பிரகாசர் எழுபது சேது நாணயங்களைத் தேடிப்பெற்று ஆராய்ந்தபின் அவற்றை யாழ்ப்பாண மன்னரே வெளியிட்டனர் என்பதைத் தக்க சான்றுகளுடன் நிறுவினார். அவருடைய முடிபுகளை ஈழத்து நாணயங்களும் நாணயமுறையும் என்ற ஆங்கில நூலிலே கொட்றிங்ரன் என்ற ஆராய்ச்சியாளர் வற்புறுத்தினார்.
சேது நாணயங்களின் தனிச்சிறப்புகள்
சேது நாணயங்கள் உருவிலே பொலநறுவையிலிருந்து ஆட்சி புரிந்த சிங்கள மன்னரின் காசுகளை ஒத்தவை. அவை வட்ட வடி வமானவை. அவற்றின் ஒரு புறத்திலே கிரீடம் அணிந்த அரசனின் உருவம் - எழுந்து நிற்கும் நிலையிலுள்ள தோற்றம் - பதிக்கப் பெற்றுள்ளது. ஈழக்காசுகளிலே சேது நாணயங்கள் பல தனிச் சிறப்புகளைக் கொண்டவை. அவை அனைத்திலும் சேது என்ற மொழி வரையப்பெற்றுள்ளது. அதனாலேயே அவற்றைச் சேது நாணயங்கள் என்று குறிப்பிடுவது வழக்கம். அவை பலவற்றிலே நந்தி உருவமும் பொறிக்கப் பெற்றுள்ளது. சிலவற்றிலே எட்டு இதழ்களைக் கொண்ட தாமரை வடிவம் வருகின்றது. எல்லாச் சேது நாணயங்களிலும் செங்கோல், திரிசூலம், வச்சிராயுதம் ஆகிய உருவங்கள் காணப்படும். நந்தியினை இலச்சினையாகக் கொண்டு சேதுவுடன் ஏதோ தொடர்பு பூண்டிருந்த குலம் ஒன் றினைச் சேர்ந்த மன்னர்களே இவற்றை வெளியிட்டனர் என்று கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.
சேது எனும் மொழி தரும் பொருள்கள்.
சேது எனும் மொழி பல பொருள்களைக் கொண்டது. அணை, எல்லை, ஏரி, கரை, கடல் வழிப்பாதை, பாலம் போன்றவற்றை அது குறிக்கும். ஒம் எனும் பிரணவம் மந்திரங்களிலே சேது என் பதும் முதுமொழி. தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையிலான பாக்குநீரிணையிலே காணப்படுகின்ற இராமர் கல்லணையினையும் சேது எனக் குறிப்பிடுவது வழக்கம். இராமரோடு வந்த வாணர சேனைகள் இலங்கையினை அடைவதற்காக அச்சேது வை அமைத் தன என்பது பண்டைய நூல்மரபு. இராமேஸ்வரம் தீவினையும் அேது என்பர்.
மேலும் பல தலங்கள் சேது என வழங்கியதற்குப் பாண்டி நாட்டுச்சாசனங்கள் சான்றாயுள்ளன. செவ்விருக்கை நாட்டுக் கடற் கரையிலுள்ள சேதுமூலம் எனுமிடத்திலே போகீஸ்வரம் என

Page 201
-316
வழங்கிய திருஞானசம்பந்தன் தளம் இருந்ததாகப் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னரின் சாசனம் ஒன்று கூறுகின்றது. சேதுஸ்நானம் என்றவோர் தலத்தினை நூல்களும் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. இத்தலம் இராமேஸ்வரத் திலுள்ளதென்று திருமலை உடையான் சேதுபதி காத்ததேவரின் பட்டயம் ஒன்று கூறுகின்றது. சேதுபதிகளின் வேறொரு பட்டயம் சேது, தனுக்கோடி என்ற இடத்தினைக் குறிப்பிடுகின்றது. இன்னு மொரு பட்டயத்திலே பூரீராம சேது தனுக்கோடி சேது மூலம் என்ற தலம் பற்றிய குறிப்புண்டு. தேவை உலா எனும் நூல் சேது என்ற ஒரு நகர் பற்றிச் சொல்கின்றது. இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதிகள் சேது நகர் காவலன் என்னும் விருதினைக் கொண்டிருந் தனர். என்பதை அவர்களின் செப்பேடுகள் அறியத்தருகின்றன: முன்கண்டவாறு சேது எனப்பெயரிய தலங்கள் யாவும் பாண்டி நாட்டின் தென் கிழக்குப் பிரிவிலே - ஆரியச்சக்கரவர்த்திகளின் உற்பத்தித்தானமாகிய செவ்விருக்கை நாட்டுக்கு அண்மையிலே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சேதுவும் யாழ்ப்பாணத்து ஆரியச்சக்கரவர்த்திகளும்.
பதினேழாம் நூற்றாண்டு தொடக்கம் இராமநாதபுரத்திலே அதிகாரஞ் செலுத்திய சேதுபதிகளும் யாழ்ப்பாணத்தில் அரசு செலுத்திய ஆரியச்சக்கரவர்த்திகளும் சேதுவுடன் தொடர்பு கொண்டிருந்தனர். சேதுகாவலன், சேதுநகர்காவலன், சேது மூலர. கூடிதுரந்தரன் என்னும் விருதுகளைச் சேதுபதிகள் பெற்றிருந்தனர். என்பதை அவர்களின் செப்பேடுகள் மூலம் அறியலாம். மேலும், இராமேஸ்வரத்திலுள்ள இராமநாத சுவாமி கோயிலின் திருப் பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பினையும் அவர்கள் மேற். கொண்டிருந்தனர். ஆயினும் சேது எனும் மொழி பொறித்த காசுகளைச் சேதுபதிகளே வெளியிட்டனர் என்று கொள்வதற்கு எந்த விதமான சான்றுகளுமில்லை; சேதுபதி என்ற மொழி வதிக்கப்பெற்ற செப்புக்காசுகள் பல தமிழகத்தின் தென் பகுதி களிலே கண்டெடுக்கப்பெற்றுள்ளன. அவை சேது நாணயங் களோடு ஒப்பிடுமிடத்து அளவிலே மிகச் சிறியவை; அமைப் பிலும் உருவிலும் பெரிதும் வேறுபட்டவை. அவை அனைத்திலும் சேது அன்றிச் சேதுபதி என்ற மொழியே வரையப்பெற்றுள்ளது. அத்துடன் சேதுக்காசுகளிலே வரும் மன்னரின் உருவங்களோ, நந்தி, கமலமலர் முதலியவற்றின் உருவங்களோ அவற்றிலே காணப்படவில்லை.
சேதுபதிகள் அனுமக் கொடியைக் கொண்டிருந்ததால் சேதுக் சாசுகளை அவர்கள் வெளியிட்டிருப்பின் நந்தியின் உருவத்தினை அன்றி அனுமனின் வடிவத்தினையே தமது நாணயங்களிற்

سے 3f7--
பொறித்திருப்பர். ஆதலின்ாலே சேதுபதிகளன்றிப் பிற அர சரே சேது நாணயங்களை வெளியிட்டனர் என்பது தெளிவு.
சேது நாணயங்களிலே மிகப் பெரும்பாலானவை இலங்கை யின் வடபகுதிகளிலே அதுவும். ஈழமன்னர் பலரின் நாணயங்க ளோடு கண்டெடுக்கப்பெற்றுள்ளன. அத்துடன் அவை உருவிலும் எடையிலும் பொலநறுவைக் கால ஈழ மன்னரின் நாணயங்களை ஒத் துள்ளன. எனவே அவற்றை ஈழத்திலாண்ட மன்னரே வெளியிட் டனர் என்று கருதலாம். மேலும், நந்தியை இலச்சினையாகப் பெற்றுச் சேதுவோடு தொடர்பு கொண்டிருந்த அரசரே இவற்றை வெளியிட்டிருக்க வேண்டும். இலங்கை அரசருள் யாழ்ப் tumoria:Surgis L - ஆரியச்சக்கரவர்த்திகளே சேதுவோடு தொடர்பு கொண்டிருந்ததுடன் நந்தியினைத் தம் இலச்சினை யாகவும் பயன்படுத்தி வந்தனர்.
ஆரியச்சக்கரவர்த்திகளும் "சேது காவலன்" என்ற விருதி னைக் கொண்டிருந்தனர் என்பதனைச் செகராசசேகரமாலை, தகழிண கைலாசபுராணம் முதலிய யாழ்ப்பாணத்து நூல்கள் அறி யத்தருகின்றன. மேலும் இவற்றுளொன்று 'உம்பர் வந்திறைஞ் சும் சேது உயர்கரைக்காவல் வேந்தன்' எனச் செகராசசேகர னைப் புகழ்ந்துரைக்கின்றது. மேலும், நூல்கள் ஆரியச் சக்கர வர்த்திகளின் பூர்வீகத்தினைக் கந்தமாதனம், இராமேஸ்வரம் போன்ற இடங்களோடு தொடர்புபடுத்திக் கூறுகின்றன. யாழ்ப் பாண மன்னருள் ஒருவனாகிய செகராசசேகரனைத் தேவையர் கோன் எனக் (தேவை - இராமேஸ்வரம்) கண்ணகி வழக்குரை சிறப்பித்துக் கூறுகின்றது. பூரீ தகழிண கைலாசபுராண ஆசிரிய ரான பண்டிதராசர் தேவைமன் (தேவையர்கோன்) செகராச சேகரனுடைய வழியிலே தோன்றிய குமாரசூரியன்' எனும் இளங்கோ தனக்குக் கல்வி கற்பித் திதாகக் குறிப்பிடுகின்றார். செகராசசேகரனைக் கந்தமலையாரியர்கோன் எனவும் செகராச சேகரமானல. வர்ணிக்கின்றது. கந்தமலை எனப்படுவது பாரதத் தின் தென்முனையிலுள்ள சுந்தமாதனம் என்பதாகும். சேது எனும் தலம் கந்தமாதனத்தில் உளது எனச் சேதுபுராணம் செப்பு கின்றது.
இராவண சங்காரம் முடிந்தபின் திரும்பிச் சென்ற போது இராமர் இராமேஸ்வரத்தை அடைந்து அங்கு சிவாலயம் ஒன் றினை அமைத்து அதில் ஆராதனைகளை நிகழ்த்துவதற்காக அந்தணர் ஐந்நூற்றுப் பன்னிரு வரைக் குடியிருத்த அவர்களுள் இருவர் ஆரிய வேந்து (ஆரியச் சக்கரவர்த்தி) என்ற புகழ்வாய்ந்த பட்டத்தினையும் விடைக் கொடியினையும் பெற்றனர்" என்பது:

Page 202
-318
மரபு. இவர்களின் மரபினரே யாழ்ப்பாணத்து ஆரியச்சக்கரவர்த் திகள். இதுவரை கண்ட சான்றுகளிலிருந்து யாழ்ப்பாணத்து மன்னராகிய ஆரியச்சக்கரவர்த்திகள் சேது என வழங்கிய கந்த மாதனம், தேவை, இராமேஸ்வரம் முதலிய தலங்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்பது தெளிவாகின்றது. மேலும் அவர்கள் இராமேஸ்வரத்திலிருந்த பிராமணரின் வழியினர் என்ப தும் இலக்கிய மரபு. அவர்கள் தர்ங்கிய சேதுகாவலன் என்ற விருதும் இம்மரபுகள் ஒரளவிற்கு ஆதார பூர்வமானவை என்ப தைக் காட்டி நிற்கும். பதின்மூன்றாம் நூற்றாண்டிலே பாண்டி நாட்டிலே தளபதிகளாயிருந்த செவ்விருக்கை நாட்டைச் சேர்ந்த ஆரியச்சக்கரவர்த்திகள் சேதுகாவலன் என்ற விருதினைத் தர்ங்கி யிருத்தல் வேண்டும். அது காலப்போக்கிலே குல விருதாகியதும் அவர்களின் மரபில் வந்த யாழ்ப்பாணத்து ஆரியச்சக்கரவர்த்தி களும் அவ்விருதினைத் தாங்கி வந்தனர் என்று கொள்ளுதல் சாலப்பொருந்தும். பதினேழாம் நூற்றாண்டிலே யாழ்ப்பாணத்து அரசர் குலம் அழிந்தது. சேது காவலன் என்ற விருது இராம நாதபுரத்துச் சேதுபதிகளுக்கே உரிமையாகியது.
ஆரியச்சக்கரவர்த்திகள் மட்டுமே சேது என்ற மொழிகளை ஒரு மங்கல மொழியாகவும் குலச்சின்னமாகவும் பயன்படுத்தினர். அம்மன்னருள் ஒருவனது கல்வெட்டொன்று மலைநாட்டிலே கோட்டகம எனுமிடத்தில் உள்ளது. இது பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
சாசனங்கள் ஸ்வஸ்தி பூரீ அல்லது ஸித்தம் என்ற மங்கல மொழி யுடன் தொடங்குவது வழக்கம். ஆனாற், சிங்கையாரியனுடைய கல்வெட்டு சேது என்ற மொழியுடனே தொடங்குகின்றது. எனவே, யாழ்ப்பாண மன்னர் சேதுவை ஒரு மங்கலமொழியாக, தெய்வீக ஆற்றல் பொருந்திய மொழியாகப் பயன்படுத்தினர் என்பது தேற்றம். அத்துடன் அவர்கள் அதை ஒரு சின்னமாக வும் பயன்படுத்தினார்கள். சங்கிலிக்கும் போத்துக்கேயருக்குமிடை யிலே போர் நடைபெற்ற பொழுது சங்கிலியின் படை சேது என்ற மொழி வரையப்பெற்ற ஒரு பட்டையத்தை எடுத்துச் சென்றதாகக் குவேறோஸ் சுவாமியார் கூறியுள்ளார். ஆரியச் சக்கரவர்த்திகளுள் ஒருவனை "விடைக் கொடியுஞ் சேதுவும் நீள் கண்டிகள் ஒன்பதும் பொறித்து மிகைத்த கோவும்" எனச் செக ராசசேகரமாலை சிறப்பித்துக் கூறுகின்றது.
ஆரியச்சக்கரவர்த்திகள் நந்தி உருவத்தையே தம் இலச்சினை யாக - இராச முத்திரையாகப் பயன் படுத்தினார்கள். தகழி.ண கைலாசபுராணம் செகராசசேகரன் ஒருவனை 'இடபவான் கொடி

س-319س--
எழுதிய பெருமான்’ என வர்ணிக்கின்றது. சோதிடநூலும் சிங் கையாரியனுடைய விடைக்கொடி பற்றிக் குறிப்பிடுகின்றது. ஈழத்து அரசருள் யாழ்ப்பாணத்து மன்னர் மட்டுமே நந்தியினை இலச்சினையாகக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் மட்டுமே சேது, விடை ஆகியவற்றைத் தம் இலச் சினைகளாகப் பெற்றிருந்தமையாற் சேது என்ற மொழியும் நத்தி உருவமும் வரையப்பெற்ற நாணயங்களை அம்மன்னர்களே வெளி யிட்டனர் என்பதை ஓர் உறுதியான முடியாகக் கொள்ளலாம் அரச முத்திரை பொறித்த காசுகளைப் பற்றிச் செகராச சேகர மாலை கூறுகின்றது. அவையே சேது நாணயங்கள் என்பது தேற்றம்.
நாணயங்களிலே வரும் சேது எனும் மொழி சேதுகாவலன் என்ற விருதின் சுருக்கமே எனச் சிந்திக்கலாம். தாம் இராமேஸ் வரத்திலிருந்து வந்தமையினையும் அத்தலத்துடன் தாங் கொண் டிருந்த தொடர்பினையும் நினைவு கூரும் வண்ணமாக ஆரியச் சக்கரவர்த்திகள் சேது என்ற மொழியினைத் தம் குலச்சின்ன மாகக் கொண்டிருத்தல் கூடும். ஆயினும் கொட்டகம, திருப்புல் லாணி ஆகியவிடங்களிலுள்ள கல்வெட்டுகள் இம்மன்னர் அதை ஒரு தெய்வீகமயமான மொழியாகக் கருதினர் என்று எண்ண இடமளிக்கின்றன.
சேது நாணயவகைகள்: வர்ணனை: வகை 1
இதுவரை கண்டெடுக்கப் பெற்ற சேது நாணயங்களை உரு வம், அமைப்பு, எடை முதலியவற்றைக் கொண்டு நான்கு பிரிவு களாக வகைப்படுத்தலாம். ஏறக்குறைய நான்கு நூற்றாண்டு களாகவே புழக்கத்திலிருந்த சேது நாணயங்கள் காலப் போக் கிலே சில மாற்றங்களைப் பெற்று வந்தன. இவற்றுட் காலத் தால் மிகமுந்தியவை 13 ஆம் நூற்றாண்டுச் சோழ நாணயங் களை ஒத்துள்ளன. இவற்றினை வகை 1 எனக் கொள்ளலாம். அவை ஏனைய சேது நாணயங்களிலிருந்து குறிப்பிடத்தக்க அள விலே வேறுபடுகின்றன. வட்டவடிவில் அமைந்த இந்நாணயங்கள் சோழக் காசுகளைக் காட்டிலும் அளவிலே சிறிது பெரியவை. சராசரி 0.74 அங்குல விட்டமும் 61.7 கிரேயின்( Grain) நிறை யும் கொண்டவை. இந் நாணயங்களின் விளிம்பு நீண்ட காலப் புழக்கத்தினாலும் பிற காரணங்களினாலும் தேய்வடைந்துள்ளன. எனவே, அவை உருவாக்கப்பட்ட பொழுது சிறிது நிறை கூடி யனவாய் இருந்திருத்தல் கூடும். இந் நாணயங்கள் கலைவனப்பு அற்றவை. பிற அரசரின் நாணயங்களைப் போல வார்க்கப் பெற்றவை. காசுகளின் முற்புறத்திலே கிரீடம் அணிந்து நிற்கும்

Page 203
-320
அரசனின் தோற்றம் காணப்படும். வலுக்கையின் கீழ் ஒரு குத்து விளக்கின் வடிவம் அமைந்துள்ளது. இடக்கை மேலே உயர்த்தப் பட்டுள்ளது; அது நிறைகுடம் போன்ற ஓர் உருவினை ஏந்தி யுள்ளது. பின்புறத்திலே அமர்ந்திருக்கும் அரசனின் உருவமும் அதனருகிலே தமிழ் எழுத்துக்களிலே சேது என்ற மொழியும் பதிக்கப்பெற்றுள்ளன. சிங்கள மன்னருடைய நாணயங்களிலும் சோழ நாணயங்களிலும் அவற்றை வெளியிட்ட அரசனுடைய பெயர் தேவநாகரி எழுத்துக்ளிலே எழுதப்பட்டிருக்கும். ஆனாற் சேது நாணயங்களில் மன்னனின் பெயர் வருவதில்லை. அதற்குப் பதிலாகச் சேது என்ற மொழியே வரும். செகர உயிர் மெய்யின் கொம்பு சிறிதாய் அமைந்துள்ளது. கால் அங்குலம் முதல் அரை அங்குலம் வரை கொம்பு அகன்றுள்ளது. உகரக் குறியும் தடிப்பாகவும் ஆழமாகவும் அமைந்துள்ளது. இந்நாணய வகையில் மூன்று ரகங்கள் உண்டு. இந்த ரகங்களில் முன்புறத்தில் கர்ணப் படும் உருவங்களில் குத்து விளக்கு, மயிலின் தலை, திரிசூலம், பிறைச்சந்திரன் ஆகிய உருவங்கள் குறிப்பிடத்தக்கன. (படம்45)
டிவகை 2
இவ்வகையிலுள்ள நாணயங்களின் முன்புறம் வகை 1 இணைப் போலவே அமைந்துள்ளது. ஆயினும் அவற்றிலே ஒரு புதுமை காணப்படும். மன்னனின் உருவத்தின் இடப்புறத்திலே, படுத் திருக்கும் நந்தியின் சிறு வடிவம் பதிக்கப் பெற்றுள்ளது. பின்புற மானது முன்னைய வகையினவற்றைப் போலக் காணப்படும். இரு புறங்களிலுமுள்ள உருவங்களைச் சுற்றிப் புள்ளிகளாலான ஒரு வளையங் காணப்படும்.இவ்வகையினைச் சேர்ந்த நாணயங்கள் மிக அரிதாகவுள்ளன. ஒரு குறுகிய கால எல்லைக்குள் மட்டுமே இவை வெளியிடப்பட்டிருத்தல் கூடும்; அவை சராசரி 0.80 அங்குல விட்ட மும் 61 கிரேயின் நிறையும் கொண்டவை. இடபத்தினைத் தம் இலச்சினையாகப் பயன்படுத்தத் தொடங்கியதும் ஆரியச்சக்கர வர்த்திகள் தாம் வெணியிட்ட காசுகளிலே நந்தியின் உருவத்தைப் பதிப்பிக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர். எனக் கருத இட முண்டு. (படம் - 46)
வகை 3
மூன்றாவது வகை லுள்ள நாணயங்கள் இரு அளவுகளைச் சேர்ந்தவை. அவற்றி கூடத் தோற்றத்திலும் உருவ அமைப் பிலும் பல வேறுபாடு உள்ளன. அவை அனைத்தும் கலை வனப்புடையவை, அழுத்தமானவை, அழகுமிக்கவை.இக்காசுகள்

م-32l--
ஆரியச்சக்கரவர்த்திகளின் அக்கசாலைகளிலே தெர்ழில் புரிந்த உலோகத் தொழிலாளரின் கைவண்ணத்திற்கும், கலைத்திறனிற் கும் வார்ப்புக்கலையின் முன்னேற்றத்திற்கும் எடுத்துக் காட்டாய் அமையக்கூடியவை. அவற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன 111அ. 111ஆ, 111இ ஆகும். முன்புறத்திலுள்ள 111 அ.வில் நிற்கும் நிலையிலுள்ள மனித உருவம் மெலிந்தும் நேராகவும் அமைந்திருப்பதுடன் செவ்வனே வரையப்பெற்று முள்ளது. வலக்கரத்தின் கீழ் வச்சிராயுதம் போன்ற உருவம் காணப்படுகின்றது. அவ்வுருவத்தின் இடப்பக்கத்திலே திரிசூலமும் செங்கோல் போன்ற ஒரு நேர்கோடும் வரையப்பட்டுள்ளன. இவ் வுருவங்கள் யாவும் ஒரு வட்டத்தினுள் வரையப்பெற்றுள்ளன. வட்டத்தின் வெளிப்புறமாகப் புள்ளிகளாலான வளையம் அமைந் துள்ளது.
பின்புறத்திலே முன்னைய இருவகைகளிலுமுள்ள அமர்ந்த உருவம் நீக்கப் பெற்று அதனிடத்திலே நந்தியின் வடிவம் வரு கின்றது. நந்தியின் தலையின் மேலே சிறிது பின்புறமாகப் பிறை யின் வடிவம் வரையப்பெற்றுள்ளது. பிறையிலே ஒரு புள்ளி அமைந்துள்ளது. நந்தியின் முன்பும் பின்புமாக ஒவ்வொரு புறத் திலும் மும்மூன்று புள்ளிகளைக் கொண்ட தொகுதிகளுள்ளன நற்தியின் கீழே ஒரு தடித்த நேர்கோடு வரையப்பட்டிருக்கும். சில தடவைகளில் அக்கோடு வட்டத்தோடு இணையும். அக் கோட்டின் கீழே சேது என்ற மொழி காணப்படும். துகரத்தின் உயிர்க்குறியானது வட்டத்துடன் இணைகிறது. சில நாணயங் களிலே சகரம் துகரத்தைத் தொடுகின்றது. முன்புறத்திற் போலவே பின்புறத்திலுள்ள உருவங்களும் ஒரு வட்டத்தினுள்ளே வரையப் பெற்றுள்ளன. வட்டத்தினைச் சுற்றிப் புள்ளிகளால மைந்த வளையம் காணப்படும். 111 அ முன்னைய வகைகளிலுள்ள நாணயங்களைக் காட்டிலும் மிக அழகுடையவை. சிறப்புற அமைந்தவை (படம் - 47).
111 ஆ பிரிவைச் சேர்ந்த நாணயங்கள் மிக அரிதாயுள்ளன. இவற்றின் பின்புறத்திலே வரும் நந்தியின் உருவம் மிகுந்த அழ கும் கம்பீரமான தோற்றமுங் கொண்டது. ஒரு அரைவட்ட உருவினுள் அது அமைந்துள்ளது. வழமைபோல நந்தியின் தலை யின் மேற்புறத்திலே சிறிது பின்பாக பிறையும் அதனுள் ஒரு புள்ளியும் காணப்படுகின்றன. இவையனைவற்றுடனும் கீழே யுள்ள சேது எனும் மொழியும் ஓர் அழகிய வட்டத்தினுள் அமைந்துள்ளது. வட்டத்தினைச்சுற்றிப் புள்ளிகளாலான வளை

Page 204
-س-322-سه
யம் அமைக்கப் பெற்றுள்ளது. ஏனைய பிரிவுகளிலுள்ளவற்ைறக் காட்டிலும் இந் நாணயங்கள் நிறையில் மிகுந்தவை." சர்ாசரி 68
கிரேயின் நிறை கொண்டவை.
111 இ வகையினைச் சேர்ந்த காசுகள் அளவிலே சிறியன. அவை சராசரி 35.5"கிரேயின் நிறை கொண்டவை. ஒப்ப வார்க்கப்பெற்றி இந் நான்யங்க்ள் 11 அ, tr ஆ ஆம் வகை யிலுள்ள ஏனைய நாண்யங்கள்ைப் பெரிதும் ஒத்திருக்கின்ற பொழுதிலும் அன்வ சில'சிறப்பிய்ல்புகளைக் கொண்டிருப்ப் தால் ஒரு தனிப் பிரிவின்வாய் அமைகின்றன. அவற்றின் முன்புறத்திலே கிரீடம்தர்ங்கிய ஒரு மெலிந்த மனித உருவம் அமைந்துள்ளது. வலது கையின் கீழ் வச்சிராய்தத்தின் உருவம்'மிகத் 'தெளிவா" யுள்ளது. மேற்புறமாக உயர்த்தப்ப்ெற்ற இடக்கையின் கீழே திரி சூலம், செங்கோல் ஆகியவை காணப்படுகின்றன. இவை அனைத் தும் ஒரு வளையத்தினுள்ளே அமைந்துள்ளன. வளையத்தினைச் சுற்றி ஒரு சங்கிலி அமைந்துள்ளது. சங்கிலியின் வ்ெளிப்புறமாகப் புள்ளிகளைக் கொண்ட் ஒரு வட்டவளைய்மும்”இடம் பெற்றுள் ளது. சேது நீரண்யங்க்ளிலே விரும் சிங்கிலியின் வ்டிவம் அவற் றிற்கு ஒரு தனிச் சிறப்ன்ேப அளிக்கின்றது. பிற இன நாண்யங்க ளிலோ பர்ரத நாட்டு ' நாணயங்களிலோ இந்த வடிவம் இடம் பெறவில்லை. இந் ந்ாணயங்களின் பின்புறம் 11 ஆம் அவகைப் பிரிவுகளிலுள்ளவற்றையே ப்ெரிதும் ஒத்திருக்கின்றனி" ஆனர்ல் முன்புறத்தினைப் போலப்பின்புறத்திலும் “சிங்கிலியின் வடிவம் பதிக்கப் பெற்றுள்ளது: “
வகை 4: தாமரை நாணயங்கள்.
நான்காம் வகையிலுள்ள நாணயங்கள் அனைத்தும் சிறியன. அவற்று சில் மிகுந்த நிறைகெர்ண்ட்வை. "அக்வி சர்ர்சரி 3467* கிரேயின் நிறையுட்ையன. அவற்றின் முன்புறத்தில்ே மற்க் றய நாணயம்களில் வரும் உருவ்ங்களுக்குப் பிதிலாக் ஒர் ஆழ்கிய எட்டு' இதழ்களைக் கொண்ட தாமரை மலரின் விடிவம் காணப்படும்" இந் நாணயங்களிலே வளையம் அமைக்கப்படவில்லை.
பின்புறத்திலே நந்தியின் உருவமும் சேது என்ற மொழியும் பதிக்கப்பெற்றுள்ளன. நீந்தியின் கீழும் அதன் பின்புறத்திலும்” இரு புள்ளிகள் உள்ளனீ சிெகர உயிரி மெய்யின் கொம்பு சக்ர்த் துடன் இணைகிறது. துகரத்தின் உயிர்க் குறியானது 'ந்ந்தியின் கீழேயுள்ள நேர்கோட்டின்ைத்'தொடவில்லை. முன்புறத்திற் போல வட்டம் காணப்படவில்லை. புள்ளிகளர்லான வள்ையமும்’ செம்மையாக அனம்யவில்லை ttர்ட்ம் -48). a

-320
வகை கி
..இவ் "வகை நாணயங்களில் நான்கு தனிப் பிரிவுகள் உள. இவ்வாறு இவற்றைப் பிரித்து நிற்பன இவற்றின் முன்புறத்தில் உள்ள உருவங்களாகும். இவற்றின், முதற்பிரிவிலுள்ள நாணய வகையில்( 5அ) மனித உருவத்தின் இரு பக்கத்திலும் குத்து விளக்குச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வகையில் (5ஆ) வலப்பக்கத்திலுள்ள குத்து விளக்குக்குப் பதிலாக மலருடன் கூடிய தண்டே காணப்படுகிறது. மூன்றாவது வகையில் (5இ ) நிற்கும் உருவத்தின் வலப்பக்கத்தில் ஒன்பது புள்ளிகள் கொண்ட வடிவ அமைப்பும், இடது பக்கத்தில் விளக்கும் காணப்படுகின்றன. நான்காவது (5ஈ ) வகையில் மனித உருவத்தின் இருமருங்கிலும் விளக்கு, பூர்ணகும்பம் ஆகியன காணப்படுகின்றன.
இவவகை நணயுங்கள் இபருமளவுக்கு மூன்றாவது நாணய வகையை (111 அ-இ) ஒத்துக்காணப்படுகின்றன. இத்துடன் இந் நாணயங்கள் எல்லாவற்றிலும் முன்புறத்தில் நிற்கும் மனித உருவமும், பின்புறத்தில் நந்தியும் சித்திரிக்கப்பட்டுள்ளமை இவற் றுக்குரிய தனிச் சிறப்பாக அமைத்திருந்தாலும் கூட சில வேறு பாடுகளும் இவற்றிலே சாணப்படுகின்றன. திரிசூலம்,செங்கோல் போன்றன. பொதுவாகவே மூன்றாவது நாணய வகையிற்சித்தி ரிக்கப்பட்டிாலும் கூட இவற்றிலே இவை இடம் பெறவில்லை. மூன்றாவது நாணய வகையில் குத்துவிளக்குப் பொதுவாக நிற் கும் உருவத்தின் வலப்பக்கத்திலே தான் காணப்படுவது வழக்கம். ஆனால் இவ்வகை நாணயங்களிலோ, எனில் இது சில:சமயம் இடப்புக்கத்திலும், இன்னும், சில இடங்களில் இருமருங்கிலும் சித்திரிக்கப்புட்டுள்ளமை ஆவதானிக்கத்தக்கது. அத்துடின் மூன் றாம் ஐந்தாம் நாணய வகைகளிற் காணப்படும் விளக்குகள் அவற்றின் தோற்றம், வடிவமைப்பு ஆகியவற்றிலும் அவை வேறுபட்டுக் காணப்படுகின்றன. இதனால் இவ்விரு நானகவகை சீளும் இவை வெளியிடப்பட்ட காலத்தைப் பொறுத்தமட்டில் வேறுபட்டுக் காணப்படுகின்றன எனலாம். குத்துவிளக்குகளின் தோற்ற அமைப்புப் பெருமளவுக்கு இரண்டாவதுநாணயவகையை ஒத்துக் காணப்படுவதால் இந் நாணயவகிையும் அவற்றைத் தொடர்ந்தே வெளியிடப்பட்டன எனலாம்.
ஆறாவ்து நாணயவகையைச் சேர்ந்த நாணயங்கள் மிக அரு கியே ஆாணப்படுகின்றன.இவை.ஐந்தாம் வகை நாணயங்க ளைப் பெருமளவுக்கு ஒத்துக்காணப்பட்டாலும் கூட அவற்றைப் போன்ற கலை அம்சங்கள் உடையனவாக இவை காணப்படி

Page 205
س-324-س--
வில்லை. முன்பக்கத்தில் கிரீடத்துடன் கூடிய நிற்கும் மனித உருவம் உளது. இதன் இடது கரத்தின் கீழே குத்துவிளக்கு உளது. மேலே உயர்த்திச் சித்திரிக்கப்பட்டுள்ள வலது கரத்திலுள்ள பொருளைத் தெளிவாக இனங் கண்டு கொள்ளமுடியவில்லை. திரிசூலமும், செங்கோலும் இதன் கீழ் உள. பின்பிறத்தில் நந்தி தியும், பிறைச்சந்திரனும் உள. இவற்றில் சிறப்பான கலை அம் சங்கள் அமைந்திராததால் இத்தகைய நாணயங்கள் பெருமள வுக்கு யாழ்ப்பாண அரசு வலிகுன்றிய காலத்தில் கி.பி. 16ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் அல்லது கி.பி. 17 ஆம் நூற்றாண் டின் முற்பகுதியில் வெளியிடப்பட்டிருக்கலாம்.
இந்நாணயங்கள் எவற்றிலாவது எம்மன்னனது ஆட்சிக் காலத்தில் இவை வெளியிடப்பட்டன என்பதை எடுத்துக் காட் டும் விதத்தில் சான்றுகள் எவையும் காணப்படவில்லை. இதனால், இவற்றின் தோற்றம், காலம் ஆகியன பற்றிய மதிப்பீட்டை இவற்றிற் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களின் வடிவ அமைப் பைக் கொண்டும், எடையைக் கொண்டும், சித்திரிக்கப்பட்டுள்ள பொருட்களின் கலை அம்சங்களைக் கொண்டுமே தீர்மானிக்க வேண்டியுள்ளது (படம் - 49). முதல் இரண்டு நாணயவகைகளும் பெருமளவுக்குச் சோழ நாணய வகைகளை ஒத்துக்காணப்படுவதா லும், இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் ஏனையவற் றைப் போல வளர்ச்சி பெற்றுக் காணப்படாததாலும் கி. பி. 13 ஆம் நூற்றாண்டிலே இவை வெளியிடப்பட்டு விட்டன என லாம். மூன்றாம் நான்காம் நாணயவகையில் சிறப்பான கலை அம்சங்கள் காணப்படுகின்றன. இதனால் இவை யாழ்ப்பாண அரசு செழிப்புற்ற காலமாகிய கி. பி. 14 ஆம் அல்லது 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியிடப்பட்டிருக்கலாம். ஐந் தாம், ஆறாம் வகை நாணயங்கள் காலத்தால் இவற்றுக்குப் பிந்தியவையே. இவை பெரும்பாலும் யாழ்ப்பாண அரசு வலி குன்றிய காலத்திற்குரியனவாகும்.
அடிக்குறிப்புகள்
1. Allan, John. Catalogue of the coins of the Gupta dynasty and Sasanka, King of Gauda. (London) 1914.
2. Codrington, li. M. Ceylon coins and currency (Colombo, )
1924,

3
10.
11.
-325
Geiger, W. (Tr.) Culavamsa (London), 1973.
Gnanaprakasar, S. “The forgotten coinage of the kings of Jaffna' Ceylon Antiquary and Literary Register, 5 (4) April, 1920, uji. 172 - I79.
Gnanaprakasar, S. The Kings of Jaffna during the Portuguese period of Ceylon history (Atchuvelly), 1926.
Nilakanta Sastri, K.A. The Colas (Madras:) 1958. Parker, H. Ancient Ceylon (London) 1909.
Pathmanathan, S. Coins of Medieval Sri Lanka: The coins of the kings of Jaffna, Spolia Zeylanica, Vol. 35 Parts I & II. 1980, Lă. 409 - 447.
. Rasanayagam, C. Ancient Jaffna (Madras) 1926.
Elliot, Sir Walter Coins of Southern India (Numismata Orientalia 1886).
Tracey, J. E. “The Setupathi coins' Madras Jcurnal of literature and Science (1889 - 9-) udi. 1 - 12
一嶽一
سمبر

Page 206
--326-س
உசாவியவை மூல நூல்கள் (தமிழ்) {*. இரகுவம்மிசம், (பதிப்பு), சி, கணேசையர், (கொக்குவில் .
யாழ்ப்பாணம்), ஆனந்த வருடம், 1932.
2. இலங்கைப் பருவப் பத்திரம், இலVI1. 1980 -1977 ஒகத்து 13 தொடக்கம் செத்தெம்பர் 15 வரை நடைபெற்ற சம்பவங்கள் பற்றி விசாரணை செய்த சனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கை, (கொழும்பு), 1981.
3. ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், (தொகுப்பாசிரியர்),
ஆ. சதாசிவம், (யாழ்ப்பாணம்), 1966.
4. ஈழிமண்டலத் திருத்தலத் தேவாரமும் திருப்புகழும்,
பொன்னையா, (சுன்னாகம்), 1934.
5. கண்ணகி வழக்குரை. (பதிப்பு), வீ. சீ. கற்தையா, (காரை
தீவு), 1968.
* ※ 86. திரைமல்ைப்பள்ளு, (பதிப்பு), வ், கும்ார்ச்வ்ர்மி, (சே.வே. ஜம்புலிங்கம்பிள்ளை வெளியீடு), (சென்னை), 1935,
7. கைலாயமால், (பதிப்பு), செ.வே. ஜம்புலிங்கம்பிள்ளை,
(சேன்ன்ை), 1939.
8. கோணேசர் கல்வெட்டு, (பதிப்பு). சண்முகரத்தினம் ஐயர்,
(யாழ்ப்பாணம்), 1909,
9. . (பதிப்பு), புலவர் வை. சோமஸ்கந்தர்,
(திருகோணமலை), 1968,
10. ............... , (பதிப்பு), பி. நடராசன், ( யாழ்ப்பாணம் ),
1983.
11. சரசோதிமாலை, (பதிப்பு), இ. சி. இரகுநாதையர், (யாழ்ப்
பாணம்), 1910.
12. செகராசசேகரம், வெளியீடு ஞானப்பிரகாச யந்திரசாலை,
(அச்சுவேலி) 1932,
13. செகராசசேகரமாலை, (பதிப்பு), இ. சி. இரகுநாதையர்,
(கொக்குவில் - யாழ்ப்பாணம்), 1942.

. --327-- 14. சேதுபுராண வசனம்,(பதிப்பு), ஆர்.முத்துவிஜயம்பிள்ளை"
(சென்னை) 1920.
15. தகழிணகைலாச புராணழ். (பதிப்பு). கா. சிவசிதம்பரஐயர்.
சென்னை), 1887,
" தேசிகர், (பருத்தித்துறை),"1916,
17. . . (பதிப்பு), நாகலிங்கபண்டிதர்,
(வதிரி-யாழ்ப்பாணம்), விபவு வருஷழ்.
(பதிப்பு). பு, பொ.வைத்திலிங்கு,
'4.
18. பூரீ தகஷிண கைலாச புராணழ், (பதிப்பு), இ.சி. இரத
நாதையர், (யாழ்ப்பாணம்), 1942. ; ༨ ་་ ཁོ་ 2 g
19. தகழின கைலாச மஹாத்மயம், (பதிப்பு), நாகலிங்க பண்டி தர். (யாழ்ப்பாணம்), கலி. 5030. லிபவ. சித்திரை.
20 திருக்கரைசைப்பு ராணம் , (பதிப்பு),அ.குமாரசுவாமிப்பிள்ளை
(திருகோணமலை) 1952. 21. . . (பதிப்பு), வ. ச.இராசரத்தினம்,
(வேலணை), 1975. w 22. திருக்கோணாசல புராணம். (பதிப்பு), சண்முகரத்தினஐயர்,
(யாழ்ப்பாணம்),1909
23. திருப்புகழ், (பதிப்பு), சைவசித்தாந்த மகாசமாஜம்,
(சென்னை), 1935 ۶ ۰ - ۰ هم : " . با توجه a
24. பரராசசேகரம் (முதற்பாகம்), (பதிப்பு), ஐ, பொன்னை யாப்பிள்ளை, யாழ்ப்பாண சைவப்பிரகாச யந்திரசாலை
விடி இஆராதி,از LB۳ - - 1938 و . . ل م
.، یہ مشین۔ہندی ’’؟“ همه 25
. . . . . . . . . . . . . . . . . . . . . . (JLP Th Tash), (UH). ஐ பொன்னையா, (மல்லாகம்), 1936
26, பறாளை விநாயகர் புள்ளு,(பதிப்பு:செ.வே.ஜம்புலில்
' கம்பிள்ளை, (சென்னை), 1956.
27. மட்டக்களம்பு மான்மியம்,பதிப்பு, F. X, C. நடராசா, .
"(கொழும்பு), 1962.
28. மணிமேகலை, (பதிப்பு), உ. வே. சாமிநாதையர், (சென்னை), 1956, t

Page 207
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
A1.
- 328
யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு), குல. சபாநாதன், (யாழ்ப்பாணம்), 1949,
·a· · · · sa o d · · · 3. (பதிப்பு), குல. சபாநாதன்,
(கொழும்பு), 1953,
• • • • • • • • • • • • • • • • • • ..... ..... •••, (uglüLH), (56). Funr45m756, (கொழும்பு), 1963.
வையா, (பதிப்பு), சுவாமி ஞானப்பிரகாசர், (யாழ்ப்பாணம்), 1921.
வையாபாடல், (பதிப்பு), க. செ. நடராசா, (கொழும்பு), 1980.
மூல நூல்கள் - பிறமொழிகள்
A True and Exact Description of the Great Island of Ceylon, by Phillipus Baldaeus. A New and unabridged translation from the edition of 1672. Printed in Ceylon Historical Journal' Vol. VIII - July 1958 - April 1959. Nos - 1-4. (Dehiwala)
Conquista Spiritual De Oriente, by Paula da Trinidade, Chapters on the Introduction of Christianity to Ceylon (Tr.), Rt. Rev. Dr Edmond Peiris and Friar Archilles Meersmaa, (Colombo), 1972,
Culavamsa, (ed.) W. Geiger, (London, 1925, (Colombo), 1960; 1973.
Gira Sandesaya, (ed), T. Sugathapala, (Alutgama), 1924
Hansard, 29th April 1982.
Instructions from the Governor General and Council of
India to the Governor of Ceylon (1656 - 1665), (Tr.)
Sophia Anthonsz, (Colombo), 1908.
Kokila Sandesaya (ed.), P. S. Perera, (Colombo), 1906,
» » » » h hh : ) ... (ed), W. A. Gunawardhena, (Colombo), 1924.

42.
43.
44.
45.
46.
47.
48
49.
50.
51.
52.
53.
54.
55.
س329ست
Madhuravijayam, (ed) Harihara Sastri and Srinivasak Sastri, (Trivendram), 1916.
Mahavamsa, (ed.), W. Geiger, (Colombo), 1950, 1960.
Memoir by Anthony Mooyaart, Commandeur of Jaffna patam for the information and Guidance of his successor, Noel Anthony Lebeck, 1766, (Tr), Sophia Anthonisz (Colombo), 1910.
Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffnapatam, 1697, for the Guidance of the Council of Jaffnapatam during his absence at the coast of Malabar, (Colombo), 1911.
Memoir of Thomas Van Rhee, Governor and Director of Ceylon for his Successor Gerrit de Heere, 1697, (Tr.), Sophia Anthonisz, (Colombo), 1915.
Nikaya Sangrahaya, (ed.), Z. D. M. de Wickremasinghe, (Colombo), 1890,
Parakumbasirita, (ed.), K.D.P. Wickramasinha, (Colombo), 1954.
Paravi Sandesaya, (ed), Siri Sunanda - Sabadera, (Matara), 1925.
Pujavaliya, (ed), A. V. Suravira, (Colombo), 1961. Rajavaliya, (ed), B. Gunasekara, (Colombo), 1911, 1960.
Ryklof Van Goens, Instructions for the guidance of the opperkoopaman, Anthony Pavilioen Commandeur and Council of Jaffnapatam, 1658.
Selalihini Sandesaya, (ed.) M.C. Fernando, (Marotuwa), 1956.
Sessional paper 1X - 1933 - First Report of the Historical manuscripts. Commission, (Xolombo), June, 1933.
Sessional paper - 1935 - Second Report of the Historical manuscripts commission (Colombo), September, 1935.

Page 208
57
58.
59.
61.
63.
64.
65.
66.
62.
سبيس 330 نس.
Th? Rebda, by : Ibn Batuta, (Tr.), M: Hasala-(Barodia), 1953.
Th: Tempora and Spiritual conquests of Geyten by Fernao de Queyroz. (Tr), S. G. Perera, Vols., I - III, (Colombo), 1930.
தமிழ் நூல்களும் கட்டுரைகளும்
அப்துல் ரஹீ ச், எம். எஸ். யாழ்ப்பாண முஸ்லிம்கள் வர லாறும், பண்பாடும். (வ், ழ்ப்பாணம்), 1979,
அருணாசலம், மு. தமிழ் இலக்கிய வரலாறு. - தமிழ்ப் புல வர் வரலாறு, 16-ம் நூற்றாண்டு, 3-ம் பாகம்.(சென்னை), 197 .
அருமைநாயகம், க. 'வரலாற்றாராய்ச்சித் துறையில் சுவாமி ஞ ணப்பிரகாசருடைய தொண்டு’, சுவாமி ஞானப் பிரகாசர் சிந்தனையும், பணியும். (பதிப்பு), பேராசிரியர் கா. இந்திர பாலா, (பாழ்ப்பாணம்) 1981
இந்திரபாலா, கா. ‘ஈழநாட்டுத் தமிழ்ச் சாசனங்கள் . கிழக்கிலங்கைச் சாசனங்கள்’, சிந்தனை மலர்-2 இதழ் 2,
3, ஜூலை - ஒக்டோபர், 1968.
..., யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள், "சிந்தனை, மலர் 2, இதழ் 4, பேராதனை ஜனவரி 1989,
. . . . . . . . . a w யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம். (பேராதனை), 1972.
. . . . . "உரும்பிராய் கருணாகரப்பிள்ளையார் கோயிலிலுள்ள கல்வெட்டுகள், உரும் பிராய் கருணாகரப் விள்ளையா கோயில் புனராவர்த்தன. மகா கும்பாபிஷேக விழா மலர், (யாழ்ப்பாணம்), 1973%
... , "கந்தரோடையிற் கிடைத்த ஒரு பிராமிச் சாசனம்", பூர்வகலா, - யாழ்ப்பாணத் தொல்பொருளியற் கழகச் சஞ்சிகை, 1973.
..., “யாழ். கமால்வீதியில் அகழ்ந்தெடுக்கப் பட்ட சைவச் சிலைகள்", வீரகேசரி (வாரவெளியீடு),

67.
68.
(9.
70.
71.
72.
4.
75.
"76.
77.
78.
79.
80.
வ431
இராசநாயகம், செ. முதலியார், யாழ்ப்பாணச் சரித்திரம்,
(யாழ்ப்பாணம்), 1933.
ஈழகேசரி, 14.92 1932; 94 09. 1932.
கணபதிப்பிள்ளை, க. சங்கிலி, (பேராதனை), 1956,
80 SM * * 4.8 84 e * * ., ஈழத்து வாழ்வும் வளமும், (சென்னை), 互962。
கணபதிப்பிள்ளை, சி. கந்தபுராண கலாசாரம், (யாழ்ப் Jur607 Lib), . 1959.
கதிரவேலுப்பிள்ளை, சி., "இலங்கைத் கமிழ் அாசுக்கட்சி வெள்ளிவிழா மலர், (யாழ்ப்பாணம் , 1971 .
கந்தையா, வீ.சி. மட்டக்களப்புத் தமிழகம், (ய ழ்ப்பாணம்),
1964.
குணசிங்கம், செ. கள்ளியங்காட்டுச் செப்ப்ேடுகள், '(பேரா தனை), 1970.
குணராசா, க. நல்லைநகர் நூல், (யாழ்ப்பாணம்), 19 - 7.
குணவர்த்தனா, ஆர். ஏ. எல். எச். . “சிங்கத்தின் வழிவந் தோர் - வரலாற்றிலும், வரலாற்றியலிலும் சிங்க்ள உணர்வு", இலங்கையில் இனத்து மு: சமூக மாற்ற மும் , சமூக விஞ்ஞானிகள் சங்கம் (தமிழாக்கம்) (யாழ்ப்பாணம்),
985.
குலரத்தினம். க. சி ஈழத்துச் சைவக் கல்விப் பாரம்பரியம்’ சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், (தெல்லிப்பழை), 1985.
கைலாசநாதக் குருக்கள், கா. சைவத் திருக்கேடியிற் கிரியை நெறி (கொழும்பு), 1963.
கைலாசபதி, க, மரபுவழித் தமிழ்க் கல்வியு சுவ மி ஞானப்பிரகாசரும், சுவாமி ஞான பிரகாசர் சிந்தனையும் பணியும், (பதிப்பு), பேராசிரியர் கா. இந்திரபாலா,
(யாழ்ப்பாணம்), 1981
சண்முகசுந்தரம், த. ‘ஈழத்தில் சைவக் கிராமிய வழிபாடு", நான்காவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு நிகழ்ச்சிகள், முதலாவது தொகுதி (பதிப்பு) சு. வித்தியா னந்தன் (கன்னாகம்), 1974.

Page 209
سس-332--
1. ......... . . . . . . யாழ்ப்பாணத்து வீரசைவர்", (யாழ்ப்பாணம்),
82.
83.
84.
8S.
86.
87.
88.
89.
90.
91.
92.
சண்முகதாஸ் அ. மனோன்மணி சண்முகதாஸ், "ஆற்றங்
கரையான்" (தும்பளை) 1989.
சதாசிவப்பிள்ளை, வி. வி. யாழ்ப்பாண வைபவம், (சென்னை), 1884.
சற்குணம், எம். 'ஈழத்திற் கண்ணகி வழிபாட்டின் தோற்ற
மும் வளர்ச்சியும் திருக்கேதீச்சரம் திருக்குடத் திருமஞ்சன மலர், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை வெளியீடு, 1979.
சிவசாமி, வி. நல்லூரும் தொல் பொருளியலும், ஒளி, ( யாழ்ப்பாணம் ), ( ஆகஸ்ட் ), 1972.
. "காலத்தால் முந்திய நல்லூர் சிலைகள், கலைக் கண்", ( மறுபிரசுரம் ), (வட்டுக்கோட்டை), 1973.11.23,
சிவத்தம்பி. கா. * தமிழ் சைவப் பண்பாட்டிற் செல்வச் சந்நிதியின் முக்கியத்துவம்’ விரிவான ஒர் ஆய்வுக்கான சில தொடக்கக் குறிப்புக்கள்", தொண்டமானாறு செல் வச் சந்நிதி முருகன் சித்திரப் பெருந்தேர் வெள்ளோட்டம், சிறப்பு மலர், 6.9.1984,
... யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள் ளல் - அதன் உருவாக்கம் அசைவியக்கம் பற்றிய ஒரு பிராரம்ப உசாவல் ", பேராசிரியர் சோ. செல்வநாயகம் நினைவுப் பேருரை 8, யூன், 1992.
சிவபாதசுந்தரம், சு. சைவக் கிரியை விளக்கம், ( மூன்றாம் பதிப்பு ), (யாழ்ப்பாணம்), 1978.
சிவானந்தன், யாழ்ப்பாணக் குடியேற்றம், பகுதி1, (கோலா லம்பூர் ), 1932.
சிற்றம்பலம், சி. க. 'இலங்கையின் ஆதிப் பிராமிக் கல் வெட்டுக்கள் காட்டும் இந்துமதம்”, சிந்தனை, தொகுதி1, இதழ் 2, 1976.
8 de 8 8 y D e a la a se 8 a 8 a 8 uUTijp. மாவட்டத்தின் அண்மைக்காலத்
தொல்வியல் ஆய்வும் ஆதிக் குடிகளும், செந்தழல், தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1982,

93.
94.
95.
96.
97.
98.
99.
0.
102.
س-333-۔
... ' பண்டைய ஈழத்து யக்ஷ - தாக வழிபாடு கள் " சிந்தனை (புதிய தொடர் ), தொகுதி 1, இதழ் 2, eglig- 1983.
. " பெளத்தத்திற்கு முந்திய ஈழத்து இந்து மதம் ', சிந்தனை (புதிய தொடர்), தொகுதி 4, இதழ் 2, கார்த்திகை 1983
... ' பண்டைய ஈழமும் இந்து மதமும் ', பாரதி, மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம் வெளியீடு,
(காங்கேசன்துறை ), 1983.
... ? நாகேஸ்வரி வழிபாடு *, நயினாதீவு பூரீ நாகபூசணி அம்மன் கோவில் திருக்குடமுழுக்குப் பெருவிழா LD6)ñ, Lumrasiíb I, 1983.
p a a as a n e o 0 in to ஈழமும் இந்து மதமும் - அனுராதபுர காலம்", சிந்தனை, ( புதிய தொடர் ), தொகுதி 2,
இதழ் 1, பங்குணி, 1984,
8 9 s p g é a b g g g * ஈழமும் இந்து மதமும் - பொலநறுவைக் காலம். ( கி. பி. 1000 - 1250 ), சிந்தனை, (புதிய தொடர்), தொகுதி 2, இதழ் 2, ஆடி 1984.
ས་...་ "ஈழமும் இந்து மதமும் - பொலநறுவை அரசுக்குப் பிற்பட்ட போர்த்துக்கேயர் வருகைக்கு முற் பட்ட காலம்" (கி. பி. 1250 - கி. பி. 1505 ), சிந்தனை ( புதிய தொடர் ), தொகுதி 2, இதழ் 3, கார்த்திகை 1984.
- 8 8 . ஈழமும் பிராமண குலங்களும் கி. பி. 1ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி. 10ஆம் நூற்றாண்டு வரை', கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய மகா கும்பாபிஷேக மலர், 1989.
... ., “கிறிஸ்தாப்தத்திற்கு முன் ஈழத்தில் வாழ்ந்த பிராமண குலங்கள் பற்றிய கல்வெட்டுச் சான் றுகள்", புங்குடுதீவு மேற்கு அரிய நாயகன் புலம், பூரீ விர கத்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக மலர், 1989.
o ab eo e ao e o es v «* v 9 0 0 9 e o voor » "ஈழமும் நாக வணக்கமும், மணிபல்லவ கலா மன்றம், நயினாதீவு, 28 ஆம் ஆண்டு நிறைவு விசேட
popů, 1999,

Page 210
93.
104.
85.
106.
107.
109.
..
112.
114.
115.
مس-334یسیمی۔
. கிறீஸ்தாப்தத்திற்கு முன் ஈழத்தில் வாழ்ந்த பிராமண குலங்கள் பற்றிய இலக்கியச் சான்றுகள்", வேலணை மேற்குப் பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையர் ( முடிப்பிள்ளையார் ) ஆலயமகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர், 'சுக்கில வருஷம், பங்குனி, 29, 1990.
. "தமிழ் மக்களின் பாரம்பரிய பிரிதேசம், முத்தமிழ் விழா மலர் (யாழ்ப்பாணம்), 1991.
சின்னத்தம்பி, ஜே. ஆர்., தமிழீழ நாட்டு எல்லைகள், (கொழும்பு), 1973.
செல்வரத்தினம், ம.பொ., “நாரந்தனையில் கண்டெடுக் கப்பட்ட தொல்பொருட் கருவூலம்’, ‘பூர்வகலா, யாழ்ப்
பாணத் தொல் பொருளியற் கழகச் சஞ்சிகை, 1979.
ஞானப்பிரகாசர், சுவாமி, எஸ். சாழ்ப்பாண வைபவ விமர்சனம் - தமிழரசர் உகம், (அக்சுவேலி), 4928.
*-a us ws & • • • « & • øubm8 * *• • • • • • «A - s sidyniad பூர்வ சரித்திாமும் சமயமும், மூன்றாம் பதிப்பு, (யாழ்ப்பாணம்), 1932.
to be see as a the to 8 to a , யாழ்ப்பாண அரச குடும்பம்", பூரீ வங்கா மலர் 5, இதழ். 4 மார்ச் 1963
திருச்செல்வம், மு. ஈழத்தமிழர் இறைமை" (கொழும்பு), g4977.
தடராசா, க.செ. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி,
Qasmrphy), . 1982.
நடராசா எப். எக்ஸ். சி. ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு, (கொழும்பு), 1970,
.ை, காரைநகர் மான்மியம், (சொழும்பு),
971.
பத்மநாதன், சி. இரு தமிழ்ச் செப்பேடுகள் (யாழ்ப்பாணத் தில் இருந்து), சித்தனை, locuri ö, இதழ் l, ஜனவரி 1970.
e u a n pe pp. 49 ) • ? 1 * " * #005 Raisius (பேராதனை), 1970,

116.
17.
118.
贯9。
120,
121:
192.
124.
125
س35ئوسس
... , இலங்கையில் இந்து மதம் - ஆரியச்சக் கரவர்த்திகள் காலம் (கி.பி. 1250 - 1620), சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மணிவிழாச் சபை வெளியீடு, (தெல்லிப்பழை), 1985.
பாலசுப்ரமணியம், எஸ். ஆர். பிற்காலச் சோழர், கலைப் பாணி, (சென்னை), 1986.
பாலசுந்தரம், இ, ஈழத்தில் கண்ணகி வழிபாடு பற்றிய ஆய்வில் வன்னிப் பிரதேச நாட்டார் பாடல்கள் பெறும் முக்கியத்துவம்’, ‘தமிழோசை", தமிழ் மன்றம், யாழ்ப்பா ணப் பல்கலைக்கழகம், (யாழ்ப்பாணம்); 1986;
புஷ்பரத்தினம் ப. ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட கால யாழ்ப்பாணத்து இந்துப் பாரம்பரியம் - ஓர் வர லாற்று நோக்கு புத்தூர் அருள்மிகு விசாலாட்சி உடன மர் பூரீ விஸ்வநாதஸ்வாமி தேவஸ்தானம் - மகா கும்பாபி ஷேக மலர், 1989
... சோழர் கால மண்ணித்தலைச் சிவாலயம்", யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட ஆய்வரங்குக் கட்டுரை, (திருநெல்வேலி), 1990.
. "பூநகரிப் பிராந்தியத் தொல்லியல் மேலாய்வில் கிடைத்த தொல்பொருள் சின்னங்கள் - ஒரு வரலாற்றுநோக்கு" யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப் பீட ஆய்வரங்குக் கட்டுரை, (திருநெல்வேலி), 1990.
..-............................. *årnrþÖLJrrar o grrréấAuš9fär தலைநகர் - புதிய நோக்கு", முத்தமிழ் விழா மலர் (யாழ்ப்
LJтGRub), 1991. ι, έ
. wV von I - I se e ovajos v00 e pp 900 000- இலங்கையில் ൿ u6abrarf?asarflar
ஆட்சி ப்ொருளிதழ், (யாழ்ப்பாணம்); 1991
முத்துக்குமாரசுவாமி. வை. நான்காம் வகுப்புச் சகித்திரம் கதாவாசகம் (யாழ்ப்பாணம்), 1940.
--ge •aats • • was veroe • d• • er • • • *நல்லூர் கத்தகவாமி Gsitsially, பூரீலங்கா 1959.

Page 211
26.
27.
1 28.
129.
130.
131.
132.
133.
-336
முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, கு. யாழ்ப்பாணக் குடியேற் றம் (சுன்னாகம்), 1982.
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. யாழ்ப்பாணச் சரித்திரம், (யாழ்ப்
lumravarub,), 1915, 1912.
வரதராஜப் பெருமாள், அ. வடக்கு, கிழக்கு மாகாண
அரசுக்கு அதிகாரப் பரவலாக்கல் செய்வதில் இலங்கை அரசு
காட்டும் தயக்கம், (திருகோணமலை), 27- 4- 1989.
'வித்தியாகர், ஐ, (I. Vidyadhar) தழிழர்களின் கோரிக்கை
களும் இந்திய - இலங்கை ஒப்பந்தமும், (புது டில்லி), 1987 வீரகேசரி, (கொழும்பு) 20- 3- 51. -
வேலாயுதபிள்ளை, த. துரையப்பாபிள்ளையின் வாழ்க் கையும் சமகாலமும்” பாவலர் துரையப்பாபிள்ளை நூற்
றாண்டு மலர், நூற்றாண்டு விழாச்சபை வெளியீடு, (சுன்னாகம்), 1972.
வேலுப்பிள்ளை, ஆ. 'தொடக்க கால இலக்கியங்களும் அதன் வரலாற்றுப் பின்னணியும், தொடக்கப் பேருரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், (யாழ்ப்பாணம்), 1986.
* a Le osa e a o o . 'பாவலர் துரையப்பாபிள்ளையின்
யாழ்ப்பாணம் - அன்றும் - இன்றும் - மீள்பார்வை' பாவலர்
தெ. அ. துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை - 6, 1986.
134.
135,
LLLLLLLL0LLLLLL SLSLLLLLLLLLLLLL00LLLL 'அரசகேசரியின் இரகுவமிசமும் அது தோன்றிய இந்துப் பண்பாட்டுச் சூழலும், சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரை, யாழ்ப்பாணப் பல் கலைக்கழகம், 1988. −
. இலங்கைத் தமிழர்களில் கயிலாச
பாரம்பரியம், நிறுவகர் கெளரவ ஆ. கனகரத்தினம்
136,
137.
நினைவுப் பேருரை, யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், 1989.
வேலுப்பிள்ளை. மெஸ். க. யாழ்ப்பாண வைபவகௌமுதி (வயாவிளான்), 1918,
ஜயவர்த்தனா, குமாரி. "19ம் நூற்றாண்டின் பிற்பகுதியி லும் 20ம் நூற்றுாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில்

138.
139.
140.
141.
142.
143.
144.
145.
سمہ 337-بم
நிலவிய வர்க்க, இன உணர்வின் சில அம்சங்கள்? - இலங் கையில் இனத்துவமும் சமூகமாற்றமும், சமூக விஞ்ஞானிகள் சங்கம் (தமிழாக்கம்), (யாழ்ப்பாணம்), 1985,
ஜெகந்தாதன், பொ. யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்.
ஜோன். எஸ். யாழ்ப்பாணச் சரித்திரம், (முதற்பதிப்பு),
1879.
%
பிறமொழி நூல்களும், கட்டுரைகளும்.
Abeyasinghe, Tikiri. The Portuguese Rule in Ceylon 1594 - 1612, (Colombo), 966.
.................., Jaffna Under the Portuguese (Colombo), 1986,
Allan, John. Catalogue of the coins of the Gupta
dynasty, and Sasanka, king of Gauda, (London), 1914.
- Arasaratnam, S. Ceylon, (New Jersey), 1964.
................, Historical Foundation of the Economy of the Tamils of North Sri Lanka, (Chunnakatm), 1982.
Arumugam, C. Customs and Ceremonies in the Jaffna
District, The Ceylon Antiquary and Literary Register,
146,
Vol. II, Part IV, April, 1917.
Bastiampillai, Betram. Swany Ginanaprakasar's Historical Research, சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு நினைவு
மலர், 1875 - 1975, (கொழும்பு), 1975,
Begley, Vimala, Archaeological exploration in Northern Ceylon Expedition, Vol. 9, No. 4, 1967.
.................. Proto- Historical material from Sri Lanka, (Ceylon) and Indian Contacts', Ecological backgrounds of South Asian Pre - history, South Asian Occassional papers, South Asia programme, (ed), K. A. R. Kennedy and G. L. Possehl, (Cornell University), 1973.

Page 212
149.
150.
151.
152.
153.
154.
155.
156.
157.
58.
159.
160.
161.
162.
-338
Boake, W.J. S. Tirukkethiswaram, Mahatirtha, Matoddam or Mantoddai, J.R.A.S.C. B., Vol. X, No. 35, 1887.
49 ... ...... Mannar - A Monograph, (Colombo), 1888.
Cartman, Rev. James. "Hinduism in Ceylon,' (London),
1957. (
Casie Chitty, Simon. "On the History of Jaffna from the earliest period to the Dutch Conquest, J.R.A.S.C.B., Wol, I. No. 3, 1847 - 1848.
Ceylon National Review, January 1907.
Codrington, H. Ceylon coins and currency, (Colombo), 1924.
................. 'The problem of the Kotagama Inscription, J. R. A.S.C.B., Vol. XXXII, (Colombo), 1932.
.................. A Short history of Ceylon, (London), 1939.
Coomaraswamy, A. K. Bronzes from Ceylon chiefly in the Colombo Museum, (Colombo), 1914.
Coomaraswamy, W. Thesavalamai - Its Genesis and Development, Hindu Organ, 9/06l 1933; 6/7/ 1933; 3/8/1933; 23/10/1933.
Daily News, "Sculptures discovered at Nallur, 20.5.1951.
Ellawala, H. 'Social History of Early Ceylon (Colombo), 1969,
Elliot, Sir Walter. "Coins of Southern India' (Numismata Orientalia), 1886.
George, St. H. (Tr), The rebellion of Jaffna and the progress of its conquest under the government of constantino De Sa Noronho', J.R.A.S.C.B., Vol. IX, No. 41, 1890.

(3.
164.
65.
166.
167.
168.
169,
170.
17.
172.
173.
174.
175.
-339
Gnanaprakasar, S. The Origin of Caste among the Tamils' (Trichinapaly), 1920.
............. The forgotten coinage of the kings of Jaffna, Ceylon Antiquary and Literary Register, Vol. 5, No. 4, April 1920
.................. “The kings of Jaffna during the Portuguese period of Ceylon history, (Atchuvelly), 1920.
............... 'The Sources of Yappana - Vaipavamalai', Ceylon Antiquary and Literary Register, Wel. 6, No.3 June 1921.
................., A History of Catholic church in Ceylon; Peric d of Beginning 1505 - 1602, (Colombo), 1924.
............... 'Catholicism in Jaffa ; a Brief sketch of its history from the earliest times to the Present day, (Colombo), 1926.
Y SL C LLLL L0SLL LLLL 000S00SS SLLL C LLL SLSL LSL LS Dravidian Element in Sinhalese", J |R.A.S.C.B., Vol. XXXIII, ... No. 89, 1936.
.................. Nallamappana Vanniyan and the grant of a Mudaliyarship", J.R. A.S C.B. , Vol. XXXIII., No. 89, - Parts I, II, III, & 1 V, 1936.
0 - a 4 ......, “Ceylon Originally a land of Tamils', Tamil Culture, Vol. 1, No. 1. Feb. 1952.
..-................, *Tamils turn Sinhalese”, Tamil Culture, Vol. 1, No. 2, June, 1952.
* * * * * * . m e o ga » n r * ao se a ... 'B2ginnings of Tamil Rule in Ceylon,
Tamil Culture, Vol. 3, Nos. 3 & 4, Sept. 1952. `
s a 4 a was a , Sources for the study of History of Jaffna', Tamil Culture, Vol. 2, Nos. 3 & 4, Sept. 1953.
...... ... . ... ..., "Ancient kings of Jaffna (incomplete) சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு நினைவு மலர் 1875 - 1975, (கொழும்பு), 1975.

Page 213
176.
177,
178.
179.
180.
18.
182.
183
184.
185.
186.
187.
-سن-340-سم
Godakumbura, C.E. Polonnaruwa Bronzes Dept. of Archaeology (Colombo), 1960.
to to be n in a s we o a w No, 47 Medawala Rock Inscription of Vikramabahu IIl., Epigraphia Zeylonica, Voi. V. Pt. 3, 1965.
..................... Kantarodai J.R.A.S.C.B. (N.S.), Vol. XII, 1968. Gunawardana, R.A.L.H. Pre-Lude to the state - An early phase in the evolution of Political Institutions in Ancient Sri Lanka, Tha Sri Lanka Journal of the Humanities, University of Peradeniya Vol. VIII, Nos. 1 & 2. 1982 (Published in 1985)
Gunawardhana, W. F. The Origin of the Sinhala Language, (Colombo), 1918.
Indrapala, K. Dravidian settlements' in Ceylon and the beginnings of the Kingdom of Jaffna, (Unpublished, Ph. D. Thesis, University of London), 1966,
.................... Early Tamil settlements in Ceylon, J.R.A.S.C.B., (N.S), Vol. XIII, 1969.
..................... (ed) No. 10., “A Cola Inscription' from the Jaffna Fort,. Epigraphia Tamilica, Wol. I, Part I., (Jaffna), 1971.
The City of Jaffna - A Brief History." The Jaffna Municipal Council Silver Jubilee, Souvenir, (Jaffna) 1974.
go a D its ab 0 - 3 ... "A Brief History of the City of Jaffna. Commemorative Souvenir, - The Jaffna Public Library, (Jaffna), 1984.
Jeyawardena, Kumari. Ethnic and Class conflict in Sri
Lanka, (Dehiwala), 1985.
Kanapathipillai, K. Popular Religion among the Ceylon Tamils Tamil Culture, Vol. VIII, No. 1, Jan - March, 1959.

188.
189.
190.
191.
192.
193.
194.
195.
96.
197,
198.
199.
200,
20.
سے 341 سی
Kannangara, K.T. Jaffna and the Sinhala heritage, . (Colombo), 1984.
Krishnarajah, S. Saiva Bronzes in Sri Lanka (10th - 12th- : A.D.), Unpublished Dissertation, University of Mysore, 1983.
Lewis, J. P. "Tamil Customs and Ceremonies connected with paddy Cultivation in the Jaffna District J.R.A.S.C.B., No. 29. Voi. VI: 1844.
................. Manua of the Vanni District, (Colombo),
895,
Liyanagamage, A. The decline of Polonnaruwa and the rise of Dambadeniya, (Colombo), 1968.
Maładewan, I. *Some fare coins of Jaffna”, Damilica, Vol. I, 1970,
Morning. Star, 25.09. 1845.
Nagaswamy, R. Tamil Coins - A study (Madras), 198I.
Natarajah, F. X. C. The Scholarship of Simon Casie Chitty”, Tamil Culture, Vol. I, Nos. 3&4, Sept. 1952.
Natesan, S. The Northern Kingdom', History of Ceylon, Vol. I, Part (ed.) S. Paranavitana, (Colombo), 19(0.
........ ......... ‘Glimpses of the Early History of Jaffna Mahajana College Golden Jubilee, Vol. XXI, (Tellippalai) 1960
Navaratnam, C.S. Tamils and Ceylon - From the earliest period up to the end , of the Jaffna dynasty with a ciri 3 rt of important events up - to 1900 A. D. (Jaffna), 1928.
. “Wanni and the Vanniyas', (Jaffna), 1960'
..... ............ “A Short History of Hinduism in Ceylon', (Jafna), 1964.

Page 214
202.
203,
204.
205.
206.
207.
208.
209.
210.
211.
212.
213.
214.
215.
س-342--
Nicholas, C.W., "Historical Topography of Ancient and Medieval Ceylon, J.R.A.S.C.B. (N.S.) Vol, VI. 1963,
Nilakanta Sastri, K.A., “The Pandyan Kingdom’, (London), 1929.
. The Colas, (Madras), 1958.
Paranavitana, S. Vallipuram Gold Plate Inscription of the reign of Vasabha' Epigraphia Zeylanica, Vol. V, No. 29, 1934 - 1942.
..................... (ed), History of Ceylon, Vol. I, Part I, (Colombo), 1960.
s so a e s o o q so - . . The Arya Kingdom in North Ceylon' J.R.A.S.C.B., (N.S.), Vol. VII, Part 2, 1961.
..................... “A Sanskrit Inscription from Padaviya', J. R., A.S.C.B., (N.S.) Vol. VIII, pt. 2, 1965,
Parkar, H. 'Ancient Ceylon, (London), 1909.
Pathmanathan, S. "The Kingdom of Jaffnn, (Colombo), 1978.
....................., “Coins of Medieval Sri Lanka, The coins of the Kings of Jaffna, Spolia Zeylanica, Vol. 35, Parts I&II, 1980.
a e s a ... *The Pioneer Historions of Jaffna, C. Rasanayagam and S. Gnanaprakasar, Jaffna College Miscellany - Centenary Publication, 1981.
Pfaffenberger, Bryan - Caste in Tamil Culture, The Religious foundations of Sudra Domination in Tamil Sri Lanka (New York), 1982.
Pieris, P.E., "Ceylon, Portuguese Era', Vols. I & II, (Colombo), 1914.
..................... Nagadipa and Buddhist remains in Jaffna” i - Part I, J.R. A. S C.B., Vol. XXVI, No. 70,
1917,

216.
27.
218.
219.
220.
221.
222.
223.
224.
225.
226.
227.
228.
229.
230.
-343
............ Nagadipa and Buddhist remains in Jaffna, Part II, J. R. A. S. C. B., Vol. XXVIII, No. 72, 1919.
............ "Ceylon and the Portuguese 1505-1658. (Tellippalai), 1920.
........ The Kingdom of Jaffnepatam, (Colombo), 1944.
Raghavan, A. A study of the coins of Tamil Nad', Proceedings of the First International Conference Seminar of Tamil Studies, Vol. I, (Kualalumpur), 1968.
Raghavan, M. D. Tamil Culture in Ceylon, (Colombo), (n. d). Ragupathy, P. Early Settlements in Jaffna - An Archaeological Survey, (Madras), 1987.
Rasanayagam, C. Nagadipa in the Tamil Classics', J. R. A. So C. B., Vol. XXVI, No. 70, 1917.
............ 'The Tamil Kingdom of Jaffna and the Greek writers' J. R. A. S. C. B., Vol. 29, 1922.
............, Ancient Jaffna, (Madras) 1926.
Silva, C. R. de, The Portuguese in Ceylon 1617-1638,
(Colombo), 1972.
Silva, K. M. de, A History of Sri Lanka, (Oxford University Press, New Dalhi). 1981.
a O 8 a 0 The Traditional Home lands of the Tamils of Sri Lanka - A Historical Appraisal, (Colombo), 1987.
Silva, R. K. de and Beumer, W. G. M. (ed) Illustrations and Views of Ceylon. 1602 - 1796, (London), 1988.
Sitrampalam, S. K. "The Megalithic Culture of Sri Lanka, (Unpublished Ph. D. Thesis, University of Poona, Poona), 1981.
.................. 'Ancient Jaffna - An Archaeological Perspective’, Journal of South Asian Studies, Vol. III, No. 1, 1984.

Page 215
231.
232.
233
. 234.
235.
236.
237.
238,
239.
240.
241.
242.
س344سسيه
• • • ................ "The Brahmi Inscriptions of Sri Lanka as a source for the study of Puranic Hinduism in Sri Lanka, Ancient Ceylon, No. 7, Vol. I, 1993.
................. ... “The form Velu of the Sri Lankan Brahmi
inscriptions - A Reappraisal Paper presented at the XVII Annual Congress of Epigraphical Society of India(Thanjavur) - 1991.
Sivaratnam, C. An outline of the Cultural History and Principles of Hinduism' (Colombo), 1964.
•o o *o o a al o a 8 es a al a « a es 8 a ... 'The Tamils in Early Ceylon (Colombo),
... “Origin and Development of the Hindu Religion and People', (Colombo), 1978.
Suntharalingam, C. Grievances of Eylon Thamils : from
“Cradley to Coffin, (Chuņnakam), ... 1970.
Tambiah H. W., The laws and Customs of Jaffna,
(Colombo), 1951.
........... “The law of Thesawalamai, Tamil Culture. Vol. III, No. 4, October 1958.
a se o t O. O e o as as The Contents of Thesawalamai, Tamil culture. * Vol. VIII, No 2, 4 April - June i 1959.
Thuraiappapillai, T. A., “Jaffna Past and Present” Mahajana College Golden Jubilee, Vol. XXI, (Tellippalai), 1960.
Tracey, J. E. The Setupathi Coins, Madras Journal of literature and Science, 1889 - 94.
Vriddhagrison, V. The Nayaks of Tanjore, (Annamalaiaagar), 1942.

سن 345--س۔
சொல்லடைவு (1) இடப் பெயர்
அங்கணாமைக்கடவை அச்சுவேலி
அடங்காப்பற்று
அநுராதபுரம்
அம்பாறை அரசகேசரிவளவு அளவெட்டி இணுவில் இத்திமடு
இராசாவின் தோட்டம்
இராமநாதபுரம் இராமேஸ்வரம்
இருபாலை இலுப்பைக்கடவை.' உகந்தை
உசன்
உடுவில்
உருத்திரபுரம் உரும்பிராய் ஊர்காவற்றுறை
எழுதுமட்டுவாள் எருப்பெரித்தானை ஒட்(டி)டுசுட்டான்
、224岁
XXIII, i 62, 63, 156, 197, 215, 220. 240, IV, 3, 37, 38, 39, 46, 147,
149, 214, 246, 247.
I, II, V, XXAXIII, 1, 18, 47, 80,
118, 129, 177, 243, 244, 245, 247, 297, 298.
V, 238.
19, 98. 62, 63 224, 240, 242, 284。 35, 140, 143, 197, 220.
38
83, 88.
160, 207, 240, 314, 916, 318.
XXX, XXXI, XXXIII, XXXV., XLI, 17, 33, 63, 100, 158, 209, 213, 27, 238, 239, 240, 309, 810,
315, 316, 317, 318, 319.
35, 140, 145, 220.
: 29, 110 '117.
204
180, 24
·245 .
214, 246
XXI, 197, 218, 238, 242. . 29, 75, 76, 101, 128, 183 222,
223, 24.5. 130, 179.
"&46 .
214, 215

Page 216
கச்சாய் கச்சூர் கட்டுக்குளம் கண்டி
கதிர்காமம் (கதிரைமலை)
கந்தமாதனம் கந்தரோடை
கந்தவனக்கடவை கந்தளாய்
கம்பளை
sprirds கரிக்கட்டுமூலை கருநாவற்பற்று கருவாட்டுக்கேணி கணுக்கேணி காங்கேசன்துறை
காஞ்சி காயல் பட்டினம் காரைக்கால் காரைநகர் கிழக்கு மூலை கீரிமலை
கும்புறுபிட்டி குருந்தனூர் குருநாகல் குருந்த மலை
-346
38, 45, 128, 148, 151, 224
40, 143 28, 29, 38, 39, 148, 149.
. lII, IV, XX, LI, LI(, 25, 41,
42, 44, 55, 70, 75, 132, 142, 146, 172,176, 177, 179, 182. XXI, 5. 25, 203, 204, 205, 206, 237, 239, 281, 282, 283, 285. 286, 291
317, 318
XXI, 39, 100, 101, 203, 245 246,247
206
29, 158. III, XXXVI1, IL , 20, 28, 44, Io ,97 ,54 ,53 ,52 ,51 و 50 و48 224 °
38, 116, 147, 149
l47, 49.
148
148
28
ნ8, 157., 158, 194, 195, 207, 209,
210, 237, 239.
35, 37., 124, 140, - 148. 126, 127, 143, 179. 37, 127, 148. 183, 226, 246. 38, 148
92, 176, 177, 19s, 200, 216,
256。237,242.
246
29, 246 III, 20, 28, 32, 44, 47, 103. 246 W

கூபகநாடு கெருடாவில் கொட்டியாரம் கொடிகாமம் கொழும்பு
கொழும்புத்துறை கோட்டை
கோயிலாக்சண்டி கோவலூர் சங்கிலியன் தோப்பு சண்டிலிப்பாய் சம்பில்துறை
சாட்டி சாவக(ன்)க் கோட்டை (சாவக பட்டுன) சாவகச்சேரி
சிசபுர
சிங்கை
சிங்கூர்
சிதம்பரம்
-س-347--
。140,144...
5:
29, 38, 116, 149, 248. 17Ꮽ , 181 , 2Ꮞ8 W, XLX, L, LI, 1 1, 17, t 9 25, 44, 53, 54, 76, 77 81, 10, 253, 254, 313 XXXVI, XXXVIII, 128, 129, 183
TI, V, V, XXXI, XL, XLlX, L, LII, 1.II. LI'll , LIV. LV,
73, 14, 15, 16, 17, 18, 55、57、58, 78. 82, 9 7, 103. 104, 2{3, 222
1, 12,
9、25、28, 44 53
66, 68, 69, 70, 75.
93, 9.5, 98, 101, 102
132, 178, 182 193, 物
250, 21, 271.
XXXVII, XLVI, 14, 7 1 , 88, 89, 10t. 182, 202, 220, 224, - 52, 313.
35, 140, 144
140
14., 15, 21., 81, 83, 85, 86., 293 213, 226,
244, 245.
10, 246. XL, 31, 180, 182
3, 152, 179, 180, 2.5, 220, 221 XXXIX., XL. III, VIII, XXXII, XXXVI, XXXVII., XXXVIII, XXXIX., XL, 2, 9, 18, 20, 21, 33, 34, 50, 6.2, 63, 80, 107, 240, 278
XL
18, 61, 62, 63.. 64, 99, 158, 213, 239, 240, 274, 883,

Page 217
Sarth சிவனொளிபாதம் (சமனொளிபாத சிறுகுளத்தூர் சேது
செட்டிகுளம் / பற்று செவ்விருக்கை நாடு சோழமண்டலம்/ சோழ நாடு / சோழதேசம் தஞ்சை
தம்பதெனியா
தம்பலகாமம்
தமிழகம்
Ajøoffisi தாறுகாமம் திகழி திரிகோடகிரி
திரியாய் - திருக்கோவலூர்
XL, XLII, 58, 194, 23 8. sıs
-348
II, 53, II o. 48, 238.
114
316, 318.
8, 116, 147, 19, 14. 20, 33, 315, 316, 318
30, 55., 61., 125., 1 - 7, 128, 134 135, 155, 156, 178, 184, 218.
XXVII, 20, 25, 6 1, 73, 76, 95. l23, 253.
III, I, 17, 28, 29, 47, 227 38, 39,148.
I, XVII., XVIII, XXXII, XXXIV, XLIII, XLIII, XLIV, 6, 9, 1 6. 17. ፲8, 20፡ z 1, 26, 30 46, 49, 54,
58, , 62, . 63, 90., 96, 11 , , 113, II5 IIs II9 123 135 134, 135, 136, 137, 139, 141, 142, 143, 144, 147, 149, 156, 157, 58, 159, 60, 166, 167, 168, 169, 173, 178, 183, 192, 193, 194, 195, 208. 212, 218. 239, 41, .. 243, 245, 246, 247, 25, 269, 270, 271, 275, 276, 277, 278, 279, 280, 283, 284, 288, 298, 315, 316.
148 53
246
3
s
: 38, 39., 2149, 211
వీటి; • 59, • 168, 210,

திருகோணமலை
திருநெல்வேலி
துணுக்காய் தெமட்டகொட தெமள(ழ)பட்டுண தெல்லிப்பளை
தென்பற்று தென்னைமரவடி தேவிநுவர
தையிட்டி தொண்டமான் ஆறு தொல்புரம்
நல்லூர்
--349-ہ
IV, V. XXVIII, LIV, 5, 14, 16, 19, 20, 21, 25, 28, 29. 31, 38, 39, 59, 70. 100, 103, l07, 16. 117, 134 147, 148, 749, 208. 209, 210, 212, 213, 238, 239, 270, 283, 284, 290, 303, 313. 35, 100, 139, 140, 141, 142. 290, 313.
148, 149, 245, 246, 247. 54, 110. LIV, 39 XI, XV, XIII, XIV, 35, 39, 14o. 142, 245. 35 , 140 , 145, 146 , 18 1 . 25, l l 6, 147, 149. 14, 27J, 271. 242
204, 218. 3ኝ, 140, 144, 220 V, TX, X, XXII, XXVI, XXXVI. XXXVIU, XXXVIII, XL, XLVI, LI, LIII, LITT, 1, 2, 3, 5, 7, 8, 9, 11, 12, 13, 14, 15, 16, 17. 19, 21, 34, 35, 56 57, 58, 7.1, 72, 74, 75, 80,
• 81, 82, 83, 84, 85, ο 6, 87, 88,
89, 90. 92, 93, 94, 95, 96, 97, 98, 99. 100, 10 1, 102, 107, 142, 149, 152, 161, 179, 180, 182, 195, 196, 197, 198, 199, 200, 20 1, 202, 203, 206, 207, 208, 209, 210, 215, 218, 220, 222, 223, 228, 232, 234, 238, 248, 249, 251, 253, 269, 270,
9 9
271, 272, 276, 278, 283, 285, 28 , 290, 291, 293, 294, 296, 297, 299, 300, 303, 309, 313, 334,

Page 218
நவக்கிரி நாகதீபம் (நயினாதீவு) நாகநாடு நாசர்கோயில்/ (நாககோவில) நாய ன்மார்கட்டு நாரந்தனை நாவாந்துறை நீர்கொழும்பு நெடுந்தீவு பச்சிலைப்பள்ளி
பச்சிலைப்பாலை பண்டாரக்குளம் பண்ணைத்துறை பதவியா பழுகாமம்
பருத்தித்துறை
பல்லவராயன் கட்டு
J6) GT பன்றியன் தாழ்வு பனங்காமம்/ பனங்காமப்பற்று பாண்டிமழவன் வளவு
பாண்டிய நாடு
TGÖTS) பாணந்துறை பாலாவி புங்குடுதீவு புத்தளம்
215, 220. II, XVII, XXI, 6, 2 16, 222, 23, 224, 243, 245. II, XVI, 243,
39, 224, 225, και 4 , υ 13.
15, 9, 97, 98, 168, 287 100, 102.
101, 180.
IV, 53, 1 10. 35, 40, 145, 226, 240, 26. 71, 140, 143, 144, 146, 180, 181, 183, 184 35, 36, 110, 13, 128 130 15, 83, 87, 88. XXXVIII, 81, 101, 104, 249, XLII, 9, 29, 36, 39, 99, 1 g. 25 XXVIII, XXXVII, 77, 84, 85, 148, 164, 183, 242
107, 110, 117, 40.
148, 15 1.
160
25, 38, 64, 116, 147, 149.
35
20, 21, 30. 54, 55, 59, 110.1 ! 3, 146, 147, 149, 158, 176. 204, 314, 315, 316, 318.
IV, 35. 15, 20, 53, 54, 81, 104, 217. 212, 237.
245, 3.. 6. III, IV, 8, 5, 6, 116, 134.

புத்தூர்
புலோலி
----lن 3----
62, 63, 100
245, 313. 35, 140, 144, 245.
215, 217, 240,
புன்னாலை/பொன்னாலை 216, 291.
பூனகரி
பெரியபுளியங்குளம் பொக்காவன்னி
பொலநறுவை
மட்டக்களப்பு
O6
மந்திகை மயிலிட்டி Dian sub
றவன் புலவு
மன்னார்
LOrtig,6th மாத்தளை மாதோட்டம் / மாவட்டு பட்டு(ண)ன
மாந்தை மாவிட்டபுரம்
DIT Goiiu'numrti மிருசுவில்
முகமாலை முகாவில் (10க்கிரைச் சர்கை
VII, IX, XL, 1, 2, 16, 21, 77, 100, 103, 107, 110, 117, 122, 129, 152. 246
38
II, XXXII, XXXIII, XXXIV., XXXIX. 1, 28, 29, 32, 39, 80, 103, 111, lil 2, 128, 247, 298, 304, 315, 317 IV, V, XXVIII, 28, 92, 133, 183, 241
225
224
35, 139, 140, 142
39, 245.
60
VII, XX, 16, 25, 27, 29, 68, 69, 79, 72, 3, 76, 110, 120, 121, 123, 126, 128, 183, 2 3, 251, 253, 100, 313
51, 54, 244 XLIII, 29, 107, 110, 114, 1 18, 124, 122, 124, 128, 129, 183, 212, 213, 237, 246, 313
100. XLVI, 158, 198, 200, 203, 206, 228 236, 237. XXIII, XXVII, 152, 220, 256. 129, 179
38
129, 179.
9, 15, 85, 94.

Page 219
முத்துச் சிலாபம் முள்ளியவளை மேல்பற்று மேற்கு மூலை யம்புகோளப்பட்டுண
யமுனா ஏரி / யமுனாரி
யாப்பகூவ
Tubu url u GB) sar (EUTILIT 656oT) யாழ்ப்பாணம்
-352
42, 44, 48, 121. 25, 26, 38、39, II6, 147, 149
35, 88, 116, 140, 145, 147, 149, 181
38, 148 244, 246. V, ' 5, 14, 15, 35, 84, 86, 92. 94, 196, 197, 293, 308 III, 17, 28, 29, 32, 39, 40 44
XXXI, XXXVIII, XL., XILL 6, 7, 8, 20
IV, V, VI, IX, X, XI, XIII, XIII, XV, XVI, XVII, XVIII, XX, XXI, XXIII, XXIV., XXV., XXVI. XXVII, XXVII, XXX, XXXII, XXXIII, XXXIV, XXXVI, XXXVIII., XIL, XLI. XLII, XLII, XLV, , XLVI, LI, LI, LV 1, 2, 3, 4, 5, о, 7, 8, 9, 10, * 1 1 12, 13 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 25 26, 27, 28, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 41, 42, 43, 44, 46, 47, 49, 50, 52., 53., 54, 55., 56., 57, 58, 59, 60, 61, 62, 63, 66, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 80, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 93, 95, 97, 98, 99, 100, 102, 103, 104, 107, 108, 109, 112, 113, 114, 115, 116. 117, 121, 122, 123, 124, 25, 126, 127, 130, 132, 133, 134, 137, 138, 139, 141, 142, 148, 149. 150, 151, 154, 155, 157, 158, 159, 160, 175, 177, 178, μ79, 18l , 182, 195, 197 , 198 , 199, 200, 203, 204, 205, 206, 208, 209, 213, 215, 217, 224, 226. 235, 236, 238, 241, 242, 244, 245, 247, 252, 253, 255, 269, 273, 276, 277, 278, 281, 284, 285, 286, 287, 288, 293, 294,

(யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணாயன்
பட்டினம்
யாழ்ப்பாணப் பட்டினம்
வசாவிளான் வட்டுக்கோட்டை வண்ணார்பண்ணை வத்தளை
வரணி
வல்லிபுரம்
வல்வெட்டித்துறை வலிகாமம் வவுனிக்குளம்
வவுனியா வளவர் கோன் பள்ளம்" வற்றாப்பளை
வன்னி
வியாவில்
வீமன்காமம் வெடிக்கனாரி மலை வெருகல் வேரப்பிட்டி வேலணை Galevıbı9gritü
XXXVII,
-353
298, 310, 3.19.
302, 303, 311, 315,
304, . 308, ვ09, 316, 317, 318,
XXXIX, XL, 6l. 80, 97,
20, 107,
డిట్
50, 55, 111,
112, 114, 116, 118, 119, 120, 125,
127, 128, 164, 201. XII, XIV. XI, XLW1I1, 224, 242. l2, 15, 92, 226, 242. 7, 53, 110.
152,158,775。
XXXVI, XXXVII 217, 245, 291.
128 8 36, 110, 123, 146, 180, 181, 183.
100, 101, 216,
24, 217, 246.
246 102
224
IV, VI, VII, IX, XXVIII, XXIX,
XXXI, XXXIX, 2, 3, 11, 26, 27, 28, 31, 35, 36, 37, з9, 41, 55, 107, 112, 116, 118, 124,
128, 130, 132, 134, 138, 146, 147,
215 ,14 2 ,2 21 و184 ,183 و181 و149
221, 222, 224, 225, 226, 243.
226、
245
246
38, 148.
246 10, 101, 223, 224

Page 220
حـ-354سسة
C02) ċFroufi Guzif
அந்தணர் (பிராமணரி}
அம்மன் அம்மன் ஆலயம் அம்மன் உருவம் அம்மன் சிலை அரசகேசரிப்பிள்ளையார்
கோயில்
அரசகேசரி விநாயகர் ஆன்றோர் வழிபாடு
இந்துக்கள்
இந்து ஆலயங்கள்
இந்துமதம்
இராமேஸ்வரம்
இராஜேஸ்வரி ஆலயம்
இஸ்லாம் இஸ்லாமியர்
இயேசு கிறிஸ்துநாதரி
XXX, XXXII, XAXIV., XLV, 33, 37, 38, 92, 118, 135, 136, 37, 151, 152, 153, 156, 157, 158, 161, 168, 172, 176, 17 7, 178, 238 ,231 ,230 ,223 و222 وگه 19 و182 240, 289, 317, 318.
196, 197, 215.223, 227. - 197, 215, 223.
223
87, 293, 308, 309.
96, 197, 218, 219, 220.
98
223
I, VIII, XI, 54, 72, 75, I 58, 164, 166, 167, 173, 174, 203, 206, 225, 228, 229, 235, 237, 238, 240, 245, 247, 248, 25l. 253, 255。
89, 92, 93, 94, 104, 106, 199, 200, 221, 234, 270.
XXIX, LIII, 192, 193, 194, 229, 238, 243。246, 247。252, 255, 256, 257.
XXX, XXXI, XXXII, XXXII, XXXIV, 17, 63, 158, 209, 213, 237, 239, 309, 315, 316,
317, 318, 319.
225
248, 256, 257. 110 127, 136, 248, 252.
254

உருத்திரபுரச்சிவன்
Ganru
உரும்பிராய் ஆலயம்
உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில்
ஐயனார்
ஒட்டு)டிசுட்டான் தான் தோன்றீஸ்வரர்
கண்ணகி
கண்ணைக்கொத்தி காக்கைப் பிள்ளையார்
(பறாளை விநாயகர்)
سس-355--
214
之互8
218, 238.
16, 225, 226, 227, 233.
2I4、2I5.
224, 225, 227, 229, 88.
220
கத்தோலிக்க சமயம்/மதம் 8, 68, 69, 72, 74, 75. 249, 250,
கத்தோலிக்கம்
கதிர்காமம்
கதிருகொடவிகாரை கதிரைமலை
கதிரைமலைச்சிவன்
கோயில்
கந்தசுவாமி கோயில்
கந்தவனக் கடவை
முருகன் ஆலயம்
கருணாகரப் பிள்ளையார்
கோயில்
கஜலக்ஷமி 85 nru 6ör காடேறி காவல்தெய்வம்
காளி
25I, 252、253、255.
XV, XXIII, XXV, 69.
204, 205, 206, 237,238, 239, 283, 285, 286,291.
245 XXI, 203, 206, 282. .
XXI, 20s. ኁሩ 92, 93, 94, 180, 197, 198, 201, 241.
2O6
XXI, 197, 218, 219.
16, 305, 306. 92.9
227, 229.
16, 53, 196, 197, 218, 222, 225, 302.
222, 227,

Page 221
கிரியை
கிறிஸ்தவ தேவாலயம்
கிறிஸ்தவ teeth கிறிஸ்தவர்
கீரிமலை சிவஸ்தலம் / சிவன்கோயில்
குருண்ட விகாரை கைலாச (ய) (த) நாதர்
கைலாசபிள்ளையார்
கோயில்
கைலைவிநாயகர் கோயில் கோகர்ண சிவாலயம்
கோட்டைச் சிவாலயம் கோணநாயகர் கோணேஸ்வரம்
சட்டநாதர் கோயில் /
ஆலயம்
சண்டேஸ்வரர் சந்திரசேகரர் ஆலயம் சந்நிதி முருகன் சனீஸ்வரன் சாலைவிநாயகர் கோயில் சிதம்பரம்
செல்வச்சந்நிதி
-ܚ356--
157, 159, 171, 172, 174, 175, 176, 205, 207, 229, 230, 233, 232, 234,242. 9 15, 75, 94, 202, 203, 217, 22.
75, 78, '94, 156, 253, 254.
XII, 93, 156, 174, 175, 253, 254 255。 256.
200, 216, 237.
246
IX, 3, 12, 34, 72, 96, 157, 196, 197, 207, 208, 209, 210, 230, 234, 271, 272.
XI, 15, 8.2.
96, 196, 207. 58, 210.
271
210, 21.
56, 208.
5, 15, 16, 21, 34, 82, 84, 87.
89, 90, 91, 92, 195, 196, 197, 293, 16, 298, 300, 301.
24
204, 205.
16, 90, 295, 296. 82, 195, 196, 197.
, 213 ,158 ,99 ,64 ,63 ,62 ه 61 234, 239, i240, 274, 283.
203, 204, 205, 206.

சேது
சைவசமயம்/சைவம்
தட்சணாமூர்த்தி தலங்காவல் பிள்ளையார்
கோயில் திருக்கேதீஸ்வர ஆலயம் (திருக்கேதீஸ்வரம்) திருக்கோணேஸ்வரம்
திஸமஹா விகாரை தெய்வயானை அம்மன் தென்கைலாயம்
நந்தி
நந்தி இலட்சினை நந்திக்கொடி நயினை நாகபூசணி
sg|LDLD6öT நல்லூர் ஆலயம்
நல்லூர் கிறிஸ்தவ ஆலயம்
நல்லூர் கைலாசநாதர்
கோயில்
நல்லூர் சமாஜம் p5rTasri Gögrt u?di) நாக வழிபாடு நாச்சிமார்/வழிபாடு நாட்டார் வழிபாடு நாற்றிசைக் கோயில் பண்டார தெய்வம்
-357
XXI, XLII, 18, 33, 36, 38, 5o, 63, ggs" ,234 ,194 ,125 ,100 و 99 239, 315.
XXIII, 3, 9, 18, 63, 194, 21, 241, 243, 247. 248, 283, 285, 288, 289, 290, 298.
16, 90, 296, 297.
15
72
5, 208, 212, 214, 237, 239, 241, 245, 246, 247, 282, 283, 284, 290, 291.
244 16, 90, 201, 287, 307, 308. 208, 283.
XXI, XLI, XLII, XLIV, 194, 233, 315, 316, 317, 318, 319, 320, 321, 322, 324.
209, 315, 317.
XLVI, 208, 209.
216, 222. 90, 94, 95 199, 200, 201, 202, 203, 222., 223.,
1 I
234
251, 253. 215, 224, 245, 313. 192, 216, 222.
223, 227.
192, 226, 228. 202
233

Page 222
س-358 سے
பத்தினி அம்மன் கோயில் 225
பத்தினி வழிபாடு
பரராச சேகர பிள்ளையார் கோயில்
umfa6) பாலாவிக்கரை பாவநாச தீர்த்தம் புத்தசமயக் கோயில்கள் புத்தசமயத்தவர்கள் புத்தசிலைகள் புத்த தந்ததாது புத்தபிரான்
புத்தமதம் புத்தூர் சிவன் கோயில் புரட்டஸ்தந்து
புரட்டஸ்தாந்து
தேவாலயம்
புவனேஸ்வரி ஆலயம்
புன்னாலை விஷ் கோயில்
பூதராயர் / பூதராசர் /
Ա5ճաprnաf*
பூதராயர் ஆலயம் /
கோயில்
பெருமாள் கோயில்
பெளத்த தலங்கள் பெளத்த துறவிகள்
பெளத்த நிறுவனம் பெளத்தம்
பெளத்த மதம் / சமயம்
223
96, 197, 218, 220.
207, 230, 232, 233, 302, 303. 22
210, 211, 237.
179
40, 225.
245, 246.
70, 7.
29
243
215 XXIII, 1, 197,
202
225
216
16, 71, 91, 92, 293, 294, 295, 300.
15, 87, 91, 92, 222, 294, 295, 296.
217
245, 246, 247, 283.
26
244, 247.
I, XVI, 96, 193, 247, 248.
VIII, XVI, XX, L, LTII, 96, 192,
193. 244, 245, 246, 250.
243, 245, 246,

--359-س--
பெளத்தவழிபாட்டிடங்கள் 245, 248.
பெளத்த விகாரை பெளத்தர்
மகாகும்பாபிஷேகம் மகாமக தீர்த்தம் மகாவல்லி மகமதியர் மகமதுமார்க்கம் மகிசாசுரமர்த்தனி மசூதி மடுமாதா கோயில்
மருதடிப்பிள்ளையார்/
விநாயகர்
மாருதப்புர (வி க)வல்லி
மாவிட்டபுரம் கந்தசுவாமி
கோயில்/முருகன் ஆலயம் மானிப்பாய் மருதடி விநாயகரி கோயில்
முருகன் ஆலயம்
முருகண்டிப் பிள்ளையார் முன்னைநாதர் முன்னேஸ்வரம் முஸ்லிம்கள்
மூத்த விநாயகர்
ug Ge6ornir வல்லிபுரக் கோயில் வவுனிக்குளச் சிவாலயம் வள்ளி வன்னிச்சி வழிபாடு வாரிவளவு ஈஸ்வரன் கோயில் (வாரி வனேஸ் வரன் / ஆலயம்)
246
I, 245, 247, 248, 250.
272
61
57, 201.
255
179
303, 304.
180
225
220, 221, 227. VIII, 23, 203, 236.
XLVI, 200, 203, 228.
220, 21.
91, 9 მ, 197, 200, 202, 404, 206, 220.
228
290
18, 56. XI, XVI, L, 176 241, 241 249, 2.93.
22 82, 86, 195, 196, 238, 839.
217
2卫4
- 307
223
215, 220, 221

Page 223
"שתיraח67eb விநாயகர்
-360-ܡܗ
.245 ,100 و99 و I» . II 26, 88. 98, 197, 218, 220, 221, 286, 287, 300.
வியாவில் ஐயனார் சிலை 22J
விஷ்ணு/சக்கரம்/கோயில்/ 14, 127, 141,
222, 23.j, 270, 271, 291.
226,227。 15, 21, 34, 82, 92, 93, 195, 196,
ஆலயம்/ தலம்/ சிலை வீரபத்திரர் வீரமாகாளி seyibLogir கோயில்
வெயிலுகந்த பிள்ளையார்
கோயில் / <Չե60Այւն வெல்கம் விகாரை
வேலங்கை பிள்ளையார்
03. சமூக
அகம்படியார் அம்பட்டர் ஒட்டியர் கட்டையர்
é6aODLL if
é9560Fu Trif
கவறர்
கனனrர்
கிறிஸ்தவ கொல்ல
குச்சிலியர்
குயவர்
கேடயம் GoldFuůQBaumrî கைக்கோளர்/கைக்குளர்
கொல்லர்
கோமுட்டி
கோவியர்
சிங்கமரி
142 148, 216, 217,
197, 222.
19, 34, 82, 96, 195,196, 197, 287 20, 39.
XXIII
தொழிற் - பெயர்
l62, 164. 151, 152, 162. 五52
15.
151
XXVIII., 116, 124, 151, 162, 160.
5.
38, 119, 124, 151, 152.
5.
52
124,
15 Ι
116, l 15, 151, 152. I51, 152. 罩52,247。
151, 152.
lil 9, 24, 19, 124,
15. 152, 151, 152, 162.

•n civ -frri
'' Ir GoTri i'r sTuuli sriTigriř
épor 65 சான்றார் சித்தர்கள் சித்திரக்காரர் சிவியார் செட்டிகள் செம்படவர் செருப்புக்காரர் சைவக்குருக்கள் சோதிடர் தச்சர் தட்டார் தவசிகள்
தனக்காரர் திமில்பரவர் திமிலர் தில்லை மூவாயிரவர் தையல்காரர் நட்டுவர்
நளவர்
நெசவாளர் பட்டினவர் பண்டாரங்கள் பப்பரவர்
D56 ri
பரதேசிகள்
Luprohiri
புள்ளார்
பறையர் பொற்கொல்லர்
س-361--
119, 150, 151, 152, 159. 159
124, 151.
29, 30, 31. 30, 148, 150.
206
15
151, 152, 160. 126, 127, 139, 151, 161, 182, 151
151
258, 75
170, 17, 195.
I59
151, 152.
151, 159, 241. 119, 150, 160.
5.
51
63. 148, . 153, 158
151
15, 152. 151, 152, 159, 160.
24, 129, 151, 162, 27. 127, 128, 92 I59。2l9 24I。236. I51, 152
251
62, 63, 151. 115, 126, 151, 152, 160, 251
151, 152, 160. 15 l, 152, 160.
l24 ( ,

Page 224
-س-362-ه
மடப்பள்ளி 151, 152, 155, மந்திரவாதிகள் I65
மறையவர்கள் 108, 231.
மீனவர்கள் 115, 121, 122, 130. முக்கியர் 52
முக்குவர் l16, 151, 160, 176. மேசன்மார் 15
69uř 52
6 hu6zi67 60 atarri 116,151,152。 வலைஞர் 38, 151, 152, 217. வலையர் வன்னிமைகள் III, IV, 25, 147, 149. வன்னியர் XXIV., XXIX., XXXI, XLVII, 3,
41 ه4o ,39 ,38 ,37 ,36 ه 35 ,28 á 2, 43, 44, 46, 59, 107, 109, 1 16, 117, 146, 147, 148, 149, 59, 178, 212, 214, 221, 225. 247.
வில்லி குலப் பறையர் 1ፈ8
வீர சைவர் 240, 242, 243. வேர்குத்திப்பள்ளர் 51 GavaTTorrif 119, 136, 137, 138, 139, 140, 141.
142, 144, 145, 150, 151, 152, 153, 154, 155, 156, 160, 164, 220.
வைசியர் 五35
(4) தொல்லியல் சான்றுகள் அரசகேசரி பராங்குச வர்மனின் கல்வெட்டு XXXVII., 20. அரியூர்ச் செப்பேடுகள் 55 ஆலம் பூண்டிச் சாசனம் 55 ஆறாம் பராக்கிரமபாகுவின் தமிழ்க் கல்வெட்டு VI, 18
இரண்டாம் பாண்டியப் பெரு மன்னர் சாசனம் 20

--363سس
இராஜேந்திரன் காலக் கல்வெட்டு 90, 129.
உரும்பிராய்க் கருணாகரப் பிள்ளையார் கோயில் கல்வெட்டு XXI, 238
ஐயனார் சிற்பம் M 30 கங்குவேலிக் கல்வெட்டு 238 கமால் வீதியில் கிடைத்த சிற்பம் 2.94. கள்ளியங்காட்டுச் செப்பேடு XXX1, 18 கயிலை வன்னியனார் மட தர்ம சாதனப்பட்டயம் 63 காத்த தேவரின் பட்டயம் 316 குடுமியாமலைச் சாசனம் 31 குருண்ட விகாரையின் எச்சங்கள் 246 கோட்டகம (கொட்டகம) தமிழ்ச்சாசனம்(கல்வெட்டு) (கேகாலையில் கிடைத்த கல்வெட்டு) XXI, XXXVI, XXXVII, XXXVIII, 07.09, 20, 5, 97, 104, 277, 319.
கோட்டையில் கிடைத்த
முதலாம் இராஜேந்திர சோழனின் சாசனம் 17
சண்டேஸ்வரர் சிற்பம் 298, 301 சம்மாந்துறைச் செப்பேடு 237 சமஸ்கிருதக் கல்வெட்டு/
dr. LjuЈLћ 19 சமஸ்கிருத மொழிச்
FITFGolf 罗9
சனீஸ்வரன் சிற்பம் 295, 296
சிங்கை ஆரியன் கல்வெட்டு 318
சிதம்பரக் கல்வெட்டு 23
சேது நாணயங்கள் 17, 100, 25, 158, 294, 3u8,
310, 313, 314, 315, 316, 317, 318, 319, 320, 32.2,

Page 225
ー364ー
சோழநாணயம் சோழ பாண்டிய நாணயங்கள் சோழர் கல்வெட்டு சோழர்கால வெண்கலச் சிற்பம் தஞ்சாவூர் சாசனம் தட்சணாமூர்த்தி சிற்பம் தம்பிலுவில் கல்வெட்டு திருப்புவனச் செப்பேடு திருமாணிக்குழிக் கல்வெட்டு நடேசர் சிலை நயினாதீவுக் கல்வெட்டு நாயன்மார்க்கட்டுச் சாசனம் நியங்கம்பாய சாசனம் பதவியா முத்திரை பதவியா வடமொழி சாசனம் பாண்டிய மன்னர்சாசனம் (பாண்டிய நாட்டுச்சாசனம்) பெளத்த அழிபாடு பெளத்த சின்னங்கள்
மடவல சிங்களச் சாசனம் மந்திரி மனை மரத்தாலான அம்மன் சிலை மாதோட்டக் கல்வெட்டு மாறவர்மன் குலசேகரன்
FITF
முதலாம் இராசேந்திரனின் மாதோட்டக் கல்வெட்டு முதலாம் இராஜராஜனின்
நாணயம் முதலாம் இராஜேந்திரனின்
கல்வெட்டு முன்னேஸ்வர சாசனம்
319, 320, 324.
17
XLII, 102, 103, il 13, 1 18, 294,
297
25
296, 297. 238
112
XXXVII, 20, 55
298
ΧΧΙ
97
52
XLII
99
XXXIII, 30, 33, 118, 315, 316.
245, 246.
246
7, 20, 47, 51, 52. 14, 84.
87
129, 114.
20
124
223
VI, XL 96, 20. 56

dipinr Jf
யாழ்ப்பான மெயின்விதிக்
கல்வெட்டு
லசுஷ்மி நாணயம்
வல்லிபுரத்தில் கிடைத்த
பொன்னேடு விக்கிரமபாகுவின்
-ܒ݂ܗ365
36
95
101
245
கல்வெட்டு 97 விநாயகர் கருங்கற்சிற்பம் 300
விநாயகர் சிலை
வெண்கல உருவம்
வெண்கல முத்திரைச்
சின்னம்
&&
293,303.
XKLI
(5) நூல்களின் பெயர்கள்
இரகுவம்மிசம் இரகுவம்சம்)
இராசமுறை இராசவளி இராஜவலிய கண்ணகி வழக்குரை
திரைமலைப்பள்ளு (கதிரையப்பர் பள்ளு) கந்தபுராணம்
சஹகுருலு கிராசந்தேஸய குருணாகல விஸ் தர
6ð0 é856 TLD ' 56
5, 7, 19.98, 168, 171, 235, 276, 286, 291.
IX, 4, 26, 43, 276, 289.
4.
6, 50
34, 212, 224 288, 317.
878, 274, ዷ 75,
p
206, 208, 212, 283, 285. &35,236,290。
239
56
20, 47 XI, XXXII, XXXVIU, XLI, 2, 3, 6, 7, 12, 17, 26, 34, 35,
38, 43, 56, 95, 108, 113, 138, 139, 141, 147, 157, 158, 167, 197, 198, , 99, 201, 203, 207, 208, 209, 220, 224, 230, 231, 234, 271, 272, 274, 275, 289, 292, 297, 298.

Page 226
-366
கோகில சந்தேஸய XXXIX, 6, 7, 26, 107, 201,
21 3, 216, 27 Ι
சரசோதி மாலை 277, 278.
Ġg56menu gfb I, II, XXXl, 4, 6, 29, 32, 33
39, 244, 245, 247, 314.
செகராசசேகரம் XXXIV., XXXV, XXXVII, 5, 16,
20, 45, 52, 161, 279, 282.
செகராசசேகரமாலை XXXVII, 5, 20, 33, 4:3, 44, 45,46, 47. 122, 165, 167, 176, 194, 209, 278, 317, 318, 319.
சேதுபுராணம் 317
சேலலிகினி சந்தேஸய 6, 7, 271.
959 fos597 6056) trar l printa88Tub XXXVII, XLI, 5, 19, 20, 29, 167. 194, 208, 21, 2 2, 215, 216, 217, 230, 237, 238, 274, 278, 282, 283, 284, 285, 29I, 31 7, 318.
தகஷிண கைலாச மஹாத்மியம் 5, 283, 290.
திருக்க()ைரசைப் புராணம் 237, 282, 284, 29 1. திருக்கோணாசல புராணம் 209, 211, 230, 237,
திஸ்ர சந்தேஸய 217
தேவை உலா 316
நம்பொத்த LIV, 39, 245, 248.
நிகாய சங்கிரஹய 20, 26, 50, 53, 110. பரகும்பாஸிரித 26, 56.
பரராசசேகரம் IX, 5, 61, 206, : 79, 280, 282, 285,
பரராசசேகரன் உலா IX, 1, 4, 26, 276, 289.
பறாளை விநாயகர் பள்ளு 286
Désirathfi) I, II, VII, XV, 4, 5, 245
மச்சேந்திய புராணம் 284
மட்டக்களப்பு மாண்மியம்/
மட்டக்களப்பு பூர்வ
சரித்திரம் 28, 241,
மதுராவிஜயம் 54

سس-367--
யாழ்ப்பாணச் சரித்திரம் X1, X1, XV, XVIII, XIX, 83, 202.
யாழ்ப்பாண வைபவ
G56Tap9 XIII, XIV.
யாழ்ப்பாண வைபவம்
ΧΙ
யாழ்ப்பாண வைபவமாலை IX, XUL, XX, XX, XXIV, XXXI,
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
ராஜவலிய
606 unrunt L-6)
XXXIII, XXXIV., XXXVIII., 2, 3, 18, 26, 34, 35, 39, 43, 44, 45, 46, 51, 58, 59, 60, 61, 66, 67, 74, 81, 82, 89, 92, 93, 98, 103, 108, 121, 138, 139, 141, 14 6, 150, 158, 159, 160, 167, 176, 177, 178, 17, 180, 181, 195, 196, 197, 198, 199, 200, 201, 203, 204, 207, 208, 209, 210, 212, 216, 218, 220, 222, 223, 224, 230, 236, 239, 241, 248, 271, 289.
XX, XXIII, 202. 20, 26, 50, 51, 53, 55, 97, 103, i09, 110, 201.
IX, XXIV, 2, 26, 27, 37, 38, 39, 138, 146, 147, 148, 150, 15l. 158, 159, 175, 179, 180, 203,
, 214, 215, 221, 225, 230, 241, 248,
274, 275, 284, 289, 291.
(6) மனிதர்கள்
அரசகேசரி
அழகக்கோனார்
ஆறாம் பராக்கிரமபாகு
ஆறாம் புவகனேபாகு இந்திரபாலா
5, 7, 19, 98, 168, 219, 220, 235, 236, 276, 278, 283, 286. L., 50, 52, 53, 54, 97, 109. VI, LII, 7, 13, 18, 19, 55, 56, 57, 83, 95, 109, 178, 179, 201. 19, 201. XXXI, XXXV., XXXVI, XXXVII, XXXVIII, XXXIX, XLI, XLII, 13, 16, 199, 218, 244, 294, 300, 303. í

Page 227
-ـ368نس
Gavirusò por 7 11 ,49 ,48 ,20. وo, I go, 238, 271,
இரண்டாம் சங்கிலி XXXV, 67, 76, 77, 78, 250, 251,
(சங்கிலி குமாரன்) 253。254。
இராசநாயகமுதலியார் IX, XTJI, XVI, XX, XXI, XXVIII. XXIX. XXX. XXXI. XXXIII, XXXV., XXXVI, XXXVIII, XLII. XLIII, 160, 197, 209, 218, 219, 220, 221.
இளஞ்சிங்க மாப்பாணன் : 7 148 144 م و
*திர்மன்னசிங்கன் (մ) XXXV, Λo, 74, 25I, 253.
னேகசூரிய சிங்கை segihu6är XXXV, 34, 42, 43, 46, 56, 57. 58, 59, 60, 61, 168, 178, 179, 210, 212, 239.
காசிநயினார் XXXV, 72.
குலசேகரசிங்கைஆரியன் 34 39, 40. குவே(வை)றோஸ் III, XXXIV. XXXVI, XXXVIII,
'(வேர்ணாவோடி குவே 8, 93181 و109 و 95 و, goو, go 3 212, றோஸ் சுவர்மிகள்) ቖl4, : 249, 276, 318.
65răGarîu, 26 : *&2 ,210 ,209 , 6 14 ,8له ، و II, 23 په .
கத்தோ 9 கூபகாரேந்திரன் 35, 140, 144. Faisa) | XXXV., XLVI, XLIX, LII, 5, 10,
14, 21, 66, 67, 68, 69, 70, 71. 72, 74, 76, 82. 85, 88, 91, 160, 179, 213, 215, 248, 250, 252,
253。3 Is. சந்திரபானு XXXIV, 29, 31. சுயாடெக்ருன் • 11, 155, 164. (ஹென்டிறிக் சுவாடெக்ருன்) செண்பகப் பெருமாள் XXXV., XXXVI, LI, L, 7, 19, 34, (சபுமால் குமாரய) / 54, 56, 57, 58, 66, 95, 103, சப்பல்குமரா 109, 178, 179, 201
சைமான் பிஞ்ஞன் 74

ــ 369 حسب خمسة
ஞானப்பிரகாசர் XIV, XV, XVI, XVIL, XX, ʼ. XX, Y XXIII, XIII, XXV, XXV, XXVI, XXIX, XXX, XXXII, XXXII, XXXVI, XXXVIII, XL, 16. 46, 94, 199, 200, 202, 239. 353,290, 315,
திரினித்ாதே 9, 10, 556, 462, 182, 189, 270, (போலோத திரினிதாதே) 290,
பத்மநாதன் XXI, XXXI, XXXIV. XXXIX, 100,
191, 209, 210 பரணவிதான VIII, XXIX, XXXIII, XXXVIII,
w XXXIX, XL, 86, 99, 1993. புர்நிருபசிங்கம் (ன்) , $60, 61., 69., 108, 240. பராக்கிரமபா (வா)கு XXXI, 32, 39, 42, 44, 47, 50, Z 55, 56, 97, 314.
பாண்டி மழவன் VIII. XLIV, 2, 32, 35, 108, 139,
141, 178. -- کلن غاڼې: - 'و - : = பிச்சை 162 பிலிப்டி (த) ஒலிவீரா XXVIII., 10, 77, 93, 197, 198, 316,
(ஒலிவேரா) 353, 355 . ................ է: L6Gaorasung 3,19,32,39,42,44,54,56,57,
60, 70, 75, 95, 121 139, 192, 197, 198, 199, 200, 201, 203, 249. புவிராச பண்டாரம் XXXV. a. 10, 72, 73, 74, 253.
பெரியபிள்ளை 专,V செகராஐசேகரன் 73, போன்பற்றியூர் பரிண்டி ???
Lopajär t?J. Bluntão g fíflañv 12, 245. போல்டேயஸ் சுவாமிகள் 10, 11, 15, 94, 133, 150, 152, 153, 154, 155, 156, 160, 16.1, 262, 163, 164, 165, 173, 174, 175, i83, 202, 221, 248, 249. மயில்வrகனப் புலவர் 3, 26, 85, 43, 44, 60. .۔ : ”؟ , ۔ Lorras Gör XXXII, XXXIV. XXXIX, XL, XLII, XLIII, 28, 29, 193, 24 *; * 247, LDrtridCast Gun Gam 123, 26.

Page 228
--370۔پی ۔
மாரித்தாண்ட -
சிங்கையாரியன் 20, 34, 40, 43, 44, 46, 51, 52.
மார்த்தாண்டப் பெருமாள் 20, 51, 52, 97
முத்துத்தம்பிபிள்ளைப் X1, XIV, XXIII, 83, 202, 248.
முதலாம் இராஜேந்திரன் V1, XI, 13, 17, 96, 114, 123,
124, 195, 99, 203.
முதலாம் சங்கிலி XXXV, 60, 67, 68, 72, 91, 108,
109, I 79, 180, 222, 250, 25 II, 552
pass66 umritř gTirspsrruusuh IX., XIII, XV, XVI, XVII, XVIII, XX. XXI, XXVIII, XXX, XXX, . XXXI, XXXIII, XXXV., XXXVI, | . . XXVIII, XLII, 16, 86 209, 219,
220, 221, 309.
வரோதய சிங்கையாரியன் 34, 40, 43,44, 47, 51, 52, 178.
விக்கிரம சிங்கையாரியன் 34, 40, 178,
விசுவநாத சாஸ்திரிகள் 199, 20 1, 213, 214.
விதிய பண்டார 70, 71, 91, 222.
விஜய கூழங்கைச்
சக்கரவர்த்தி XXXIII, 34. விரோதய சிங்கையாரியன் 41, 42, 4, 45, 46,
வேலுப்பிள்ளை XII, XIII, XIV, XVI, 208, 235,
236, 255, 287.
வையாபுரி ஐயர் 2, 3, 26, 27, 284. றைக் ளொவ் வான்
கோவன்ஸ்
றைக் ளொவ் வான் கோவன்ஸ் ஐ"சணியர்
geir 6 Gaonraitil-f I Gagnrittsår urruumrtř 罩20

يس- 377 سبب
(07) விருதுப் பதவிப்பெயர்கள்
ay luaririt
அதிகாரிகள்
அதிபதி
அமைச்சன்
ஆரிய வேந்து
இடபவான் கொடி எழுதிய
பெருமாள்
60Ltunt
ஊர்காத்தோன்
கங்கானி
கங்கை ஆரியன்
கங்கை நாடான்
கணக்கப்பிள்ளை
கந்தமலை ஆரியர்கோன்
காங்கேயன்
சிங்கை மேவும் ஆரியர் ッヘ கோன்
சிங்கையாரியன்
(கூனியாரியன்)
112, 115, 149.
,109 ,1os ,107 ,76 ,2 5 ,49 و 5ف I 11, 112, 114, 115 116, 117, 119, 120, 121, 23, 128, 149.
148 ,145 وa I40 36
52, 107. 108, 111, 114, 2v 1.
37
38
Il 2, 114, 155.
141
112, 113, 114, 121, 149.
XLV, 194.
XLV, 107, 194, 238, 27 s, 278.
114
317
128, 289.
5, 280.
XXXV., XXXVI. 2, 3, 5, 6, وق “ ,38 ,35 ,34 ,32 :19 1 42, 43, 44, 50, 51, 60. 63, 92, 93, 97, 98, 107, 108, 1J9, 149, 178, 198, 199, 212, 231.
39, 278, 279, 318, 39.

Page 229
=372=
1-esgreir 2 XXXV., XXXV. XLVa, .
17, 26, 46, 5ళ్ళి 6, 66, ί07, 168, 202, 209, 210, 211, 278, 279, 280. 23, 284, 317, 818.
கேதுகாவலன் XXXII, xxxп, 17, зѣ, вз, то7, 194, 240, 258, 278, 309, 316, 817, 318, 319
சேதுபதி 4-1, 207, 314, 316, 317. soute சேனாதிபதி / சேஸ்பதி 32, 33, 36, 62, 109, 140; இந்த தலையாரி 35, 74. 112, 113, 115, 1:7, 146, 149 தேவையர்கோன் 289, 317. چن: في
till-sigil lig. II, 2, 45, 121.
பண்டாரப்பிள்ளை 2, 113, 115, 116, 149. fair triptib 87, 93, 159, 219, 241.
பண்டாரவாரியத்தலைவர் 241
LipurpurnTFG3s sprør XXXI, XXXII, XXXIV, XXXV,XLV, è, 4, 10, 17, 18, 58, 60, 61, 62, 63, 64, 66, 67. 209, 210, 21 1, 219, 221, 239, 240, 254, 280
281, 885, 286 . 鷲籤 teasmurrrgar 18, 99, 189, 176, 177, 198, 209,210 மணியகாரர் 115, 155. ' ', • . 10600ub li4, this. *m歌 மாதாக்கன் 35, 145, 146, 180, 181. முதலி XIII, XIV. XV, XVII, XVII, XVIII,
XX, XXII, XXVII, XXIX, XXX, XXXII, XXXIII, XXXV., XXXVI, XXXVIEE, 16, 64, 70, 74, Z6, 79, 86, 92, 112, 113, 114. 15, 116. * 120, 133, 145, 146, 149, 155,
150, 197, 209, 220, 251, 253.
வெள்ளாமரசன் 42, 43, 144, 145.

به. - نی -س 373 سس
விளக்கப் படங்களின்
Ulth Ulth
L-th
:
il-b
-th
th
It lib
L-eb 8 Lillb 9 ULib 10 UL Lb 11 படம் 12 படம் 13 ul-th 14
Luluh 15
LuLth 16
Lullib 17
lil -th 18
படம் 19 L-eb 20
ults 21
աւ-ւծ 22
LiLi-lib 23
Ulith 24
lil-th 25
tuLLh 26
Lb 27
அட்டவணை
யாழ்ப்பாண இராச்சிய கால அரசவாதிக்க மையங்கள் தமிழ் வன்னிமைகள் v. எதிர்மன்னசிங்கனைச் சைமான்பிஞ்ஞன் வென்று காட் பாற்றல் (தற்போது இரத்தினபுரிச் சமன் தேவாலயத் தில் உளது)
சங்கிலியன் தோப்பு - (த ற்போதைய நிலை மந்திரிமனை கல் தோரண வாசல் 9. ა) 9. யமுனாஏரிப் பகுதியிலுள்ள அழிபாடுகள் 9 Ο Lu(p6ornir grif பண்டாரக்குளம் p
இராசாவின் தோட்டம் , 2 கோப்பாய் சங்கிலியன் கோட்டை சட்டநாதர் ஆலயம் பழைய சட்டநாதர் ஆலய அழிபாடுகள் அ. பூதவராயர் ஆலயம் (தற்போதைய நிலை) ஆ. பூதவராயராலயத் திருக்குளம், வீரமாகாளியம்மன் ஆலயம் தற்கால நல்லூர் ஆலயம் (பழைய தோற்றம்) வெயிலுகந்தப் பிள்ளையார் ஆலயம் ( தற்போ. நிலை) கைலை விநாயகர் ஆலயம் / கைலாசநாதர் ஆலயம் (தற்போதைய நிலை) பரராசசேகரப்பிள்ளையார் ஆலயம் அரசகேசரிப்பிள்ளையார் ஆலயம் - (திருக்குளத்துடன்) (தற்போதைய நிலை) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலயம்
கோட்டகமத் தமிழ்ச் சாசனம் தாயன்மார்கட்டுத் தமிழ்ச் சாசனம் நாயன்மார்கட்டுத் திருக்குளம் கள்ளியங்காட்டுச் செப்பேடுகள் கள்ளியங்காட்டுச் செப்பேடுகள் பதவியா வடமொழிச் சாசனம்
99
99 勤總

Page 230
ub 28
ulub 29
Ulub 30
Luluh 31
படம் 32
sulth 33
படம் 34
படம் 35
படம் 36
படம் 37
tilth 38
լ iւ-ւb 39
Luluh 40
படம் 41
படம் 42
ullb 43
ulth 44
படம் 45
படம் 46
LuLth 47
படம் 48
lub 49
ulth 50
படம் 51
Lullb 52
படம் 53
ulth 54
سے 374 --ب>
யாழ்ப்பாணக் கோட்டை வேளாள சமூகத்தவரின் உடைகள் சூடு மிதித்தல் தயிர் கடைதல் நாற்றிசைக் கோயில்கள் நல்லூர் கிறிஸ்தவ தேவாலயம் சாவகச்சேரி கிறிஸ்தவ தேவாலயம் மானிப்பாய் கிறிஸ்தவ தேவாலயம்
சனீஸ்வரன் தக்ஷணாமூர்த்தி சண்டேஸ்வரர்
விநாயகர் தண்டேஸ்வரர் / ஐயனார் மகிஷாசுரமர்த்தினி கஜலசஷ்மி வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணியர்
அம்மன்
அ. சேது நாணய வகை
. s. சேது நாணய வ்கை
இ. சேது நாணய வகை 序。 சேது நாணய வகை சேது நாணய வகை அ. தற்போதைய யாழ்ப்பாண நகரப் பகுதியின்
ஆரம்ப காலத்தோற்றம், ஆ. தற்போதைய யாழ்ப்பாண நகரப்பகுதியின்
ஆரம்பகாலத் தோற்றம். நல்லூரில் அமைந்துள்ள டச்சுக்காரர் காலச்சுதேச உயர்கல்வி நிலையம் பதவியா முத்திரை பல்லவரின் இலட்சினை யாழ்ப்பாண மன்னரின் விருதுப் பெயர் பொறித்த நாணயங்கள்

-375
Ulth
al
1 நல்லூர் 2 கொழும்புத்துகற گی க கச்சாய் 4 சுன்டிக்கும் Ճ 5. பூநகரி 6 துணுக்கம் 7 கிலுஃஆபக்கடகவ e EastGaibabacpx 9 மாதோட்டம் 1a மன்wrர் 1 கெட்டிக்குகிாம் v2 GoëArtes 13 (on 14 முள்ளிய2இன் 15.முAலத்தீவு 16.குருந்தூர் ம&ல 17 மிதக்கனமரவழ 18 கிதாக்குளாய்
19 useT
20 ZASTOAAV 21 தம்பதேசியா لله سمت ر22uITi 2த குருநாகல் 24கம்டM 25 &éTo&- 26 புத்தகம் 27 சிலாபம் உநீதொழும்பு a.bിrgർ
யாழ்ப்பாண இராச்சிய கால அரசவாதிக்க மையங்கள்
L --—
யாழ்ப்பாண இராச்சிய கால அரசவாதிக்க மையங்கள்.

Page 231

س376--
uluh 2
1 புெருங்கானப்பர்து 2 uyAvY«SÜuiygi தமிழ் வன்னிமைகள்
34ps J s'
డిస్క్క 4) ღვ bruta-saflycemip) 8 கிழக்குமூலைவதற்கு 7.திடிக்குமுலை தடத்ர 8 மேல்பந்து தெற்கு 9 énPAju?g élosz 1ேெமல பந்து வடக்கு
15.புதுக்தழகிருப்பு 16 pAafiaar 17தரிக்கடup(மலைவடக்கு கேரிக்கட்டுமூசயாத 19 lossaera Ay 205ub65 aerulau 2 6fme91Tn- y.4urT yuô 2a5 (iscesarrud za Loc-&E5aTū 2ഥങ്ങ്യാതരr 25ugasnob 24சிபாரதிபு 27ሌቶÔቓጦTü>
ഷrg്4Suudis 1: 2 oooooo
t UL-1ô; 2
தமிழ் வன்னிமைகள்,

Page 232

-377
Lu -- Lb 3
எதிர்மன்னசிங்கனைச் சைமான் பிஞ்ஞன் காப்பாற்றல்,

Page 233

--378ے
LULth 4
சங்கிலியன் தோப்பு - தற்போதையநிலை.

Page 234

மந்திரிமனை - தற்போதையநிலை.

Page 235

-380
கல் தோரண வாசல் - தற்போதையநிலை,

Page 236

-381
யமுனா ஏரிப் பகுதியிலுள்ள அழிபாடுகள் - தற்போதைய நிலை
ul-th 8 t
யமுனா ஏரி - தற்போதையநிலை.

Page 237

-382
ut-th 9
பண்டாரக்குளம் - தற்போதையநிலை.
Luluh 10
இராசாவின் தோட்டம் - தற்போதையநிலை,

Page 238

حس سے 383ــــــــ
tilth 11
சங்கிலியன் கோட்டை (கோப்ப ) - தற்போதையநிலை
tullib 12
சட்டநாதர் ஆலயம் - தற்போதையநிலை.

Page 239

--384-سس
Ulub 13-sy.
stillb 13 e. பழைய சட்டநாதர் ஆலய அழிபாடுகள்.

Page 240

۔۔385-سے
sauurnrauf Gwuh -- A5bGunraum AJLupiŝ60av.

Page 241

س-386
பூதவராயர் ஆலயத் திருக்குளம் - தற்போதைய நிலை.
படம் 15
வீரமா காளியம்மன் ஆலயம் தற்போதையநிலை.

Page 242

----387--
ULib 16
தற்கால நல்லூர் ஆலயம்.

Page 243

--388-س-
தற்போதைய வெயிலுகந்தப்பிள்ளையார் ஆலயம்.
Luluh l8
தற்போதைய கைலை விநாயகா ஆலயம் I கைலாச
நாதர் ஆலயம்.

Page 244

مس-389-سه
Ulb 19
பரராசசேகரப் பிள்ளையார் ஆலயம்
(தற்போதைய நிலை)

Page 245

--390 نس
Lb 20
அரசகேசரிப்பிள்ளையார் ஆலயம் - (திருக்குளத்துடன்)
தற்போதைய நிலை.
ul-th 21
அரசகேசரிப் பிள்ளையார் ஆலயம் - தற்போதையநிலை.

Page 246

-39l
நாயன்மார்கட்டுத் தமிழ்ச் சாசனம்.

Page 247

--392-س
Luluh - 24
நாயன்மார்கட்டுத் திருக்குளம்
படம் 25 - 26
schrsflutamu Gé QeQuGescir.

Page 248

-393
tşpfutfrr avulGuom yÁ9äf aFmraV6asrib.

Page 249

Luluh 28
.ே ளாள சமூகத்தவரின் உடைகள்,

Page 250

--395 س--
தயிர் கடைதல்,

Page 251

سس-396-س۔
UL-lh 32
நல்லூரும் நாற்றிசைக்கோயில்களும்.
விெழமத்த பீச்கனயார்கோயில் 2 சட்டநாதர் கோயில்
விமாகாளி அம்மக் கோவில் 4 கலாசநாதர் காயில் 5 കൃഷ്ഥക്ക് വീഴ്ച
* &arణుuథ
Aaži 32
நாற்றிசைக் கோயில்கள்,

Page 252

--397سس۔
சாவகச்சேரி கிறீஸ்தவ தேவாலயம்

Page 253

-398
படம் 35
மானிப்பாய் கிறீஸ்தவ தேவாலயம்

Page 254

--س399--
u Lub 36
ன்
னிஸ்வர
凸圣

Page 255

O
Luth 37
தகதிணாமூர்த்தி.

Page 256

-401
ulub 38
சண்டேஸ்வரர்.

Page 257

-402
39
Ulth

Page 258

--403س--
ulth 40
த(ச)ண்டேஸ்வரர் / ஐயனார்.

Page 259

tilt-b 41
மகிஷாசுரமர்த்தினி.

Page 260

-405
lub 42
கஜலக்ஷமி.

Page 261

-406
ULLh 43
வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணியர்.

Page 262

(UL-th 44
அம்மன்,

Page 263

مس-408ست
UŁ lub 45 9.
Lillth 46 so
சேது நாணய வகை. (பின்புறம்)

Page 264

مس 409 سے
ulth 47 g).
சேது நாணய வகை. (பின்புறம்)

Page 265

48 y,
ill
சேது நாணய வகை,

Page 266

Lub 49 el.
சேது நாணய வகை.

Page 267

سس412 -- .{9. 50 מt-וש
தற்போதைய யாழ்ப்பாண நகரப்பகுதியின் ஆரம்பகாலத் தோற்றம்.

Page 268

-413
நல்லூரில் அமைந்துள்ள டச்சுக்காரர்காலச் சுதேச உயர்
கல்வி நிலையம்.

Page 269

-414
பதவியா முத்திரை.

Page 270

-415
பல்லவரின் இலட்சினை.

Page 271

--416 سے
யாழ்ப்பாண மன்னரின் விருதுப் பெயர் பொறித்த நாணயங்கள்

Page 272


Page 273


Page 274
யாழ்ப்பான
酮。LS。16。 ஆரம்பகாலப் 1505) போ திற்கு வந்தடே அரசுகள் கா6 முறையே யாழ் கண்டி அரசுக கோட்டை, க போலன்றி ய நீண்ட ஓர்
இருந்தது. சி றாண்டின் பி பெற்ற இவ்வ நூற்றாண்டின்
போர்முனையி திரத்தை இ! பகுதிக்குரிய லாறே இந்! ளாகும். இவ் முன்னருள்ள நூலாக இர்
عیبر م=حص

ண இராச்சியம்
ஆம் நூற்றாண்டின்
பகுதியில் (கி. பி. த்துக்கேயர் ஈழத் பாது இங்கே மூன்று ணப்பட்டன. இவை ப்பாணம்,கோட்டை iள் ஆகும். ஆனால் ண்டி அரசுகளைப் ாழ்ப்பாண அரசுக்கு அரசியற் பின்னணி . பி. 13 ஆம் நூற் ற்பகுதியில் 6T (955 ரசு கி. பி, 17 ஆம்
முற் பகுதி யில் போத்துக்கேயரிடம் ல் தனது சுதந் ழந்தது. இக்காலப்
இவ்வரசின் வர நூலின் கருப்பொரு வரசின் காலத்திற்கு வரலாறு தனி ஒரு ந்நூலின் பதிப்பாசிரி சிக்கப்படவுள்ளது.