கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வீற்றிருந்தாள் அன்னை (அ. பரமேஸ்வரி)

Page 1
ി
ി
 


Page 2

ற்கு
கி
னக்கு
ந்தாய் 30 մլ) வோம் உ
ாமி ஏதுதரு
தாயே எமைத் தந்
│ │ │ │ │ │
திருமதி அ. பரமேஸ்வரி
27.09.2003
16.02. 1930

Page 3

அன்னை இறந்தபோது
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப் பையலென்றபோதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி?
முந்தித் தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே அந்திபகலாச்சிவனை ஆதரித்துத் - தொந்தி சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல்முட்டு வேன்?
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டு வேன்?
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ மெய்யிலே தீமூட்டு வேன்?
அரிசியோ நான் இடுவேன்? ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுண்nே தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே எனஅழைத்த வாய்க்கு?

Page 4
அள்ளிஇடுவது அரிசியோ! தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்? மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே என அழைத்த வாய்க்கு?
முன்னை இட்டதீமுப்புரத்திலே " பின்னை இட்டதி தென் இலங்கையிலே அன்னை இட்டதீ அடிவயிற்றிலே யானும் இட்டதீமூள்கமூள்கவே!!
வேகுதே தீயதனில், வெந்து பொடிசாம்பல் ஆகுமே பாவியேன் ஐயகோ! - மாகக் குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை.
M வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில் வந்தாளோ! என்னை மறந்தாளோ - சந்ததமும் உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன் தன்னையே ஈன்றெடுத்த தாய்!
வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்! நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால்தெளிக்க எல்லாரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்.
- பட்டினத்தடிகள்

கொழும்புதமிழ்ச்சங்கம்
* DIG5ID
நான் நடக்கப் பழகிய விதத்தைப் பற்றிய ஒரு சித்திரம்
அம்மாவின் தோளிலிருந்து நழுவி இறங்கினேன். நிலத்தை நோக்கி - அம்மா என்னை விடவேயில்லை. அணைத்தபடி குனிந்தாள் - மெல்ல தனது கைகளால் பற்றியபடியே ஒரு பூவைப்போல நிலத்தில் வைத்தாள் - நான் நிமிர்ந்து அம்மாவின் - ஒளிரும் முகத்தைப் பார்த்தேன். மெல்லிய சிரிப்பு. கஸ்ரப்பட்டு எழுந்து நின்றேன். அம்மாவின் கைகளை இறுகப் பிடித்தேன் மென்மையாய் தனது கைகளை விடுவித்தாள் நின்றேன். விழுந்து விடுவேன் போல இருந்தது - எனது பிஞ்சுக் கால்களுக்கு வலுவில்லை. கால்களும் வலித்தது. பொத்தென நிலத்தில் விழுந்தேன். தரையின் மீதேன் இத்தனை சத்தம் திகைப்பின் வலியில் ஒசைச்சிதறல் நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தேன் அதே புன்னகை - மீண்டும்

Page 5
அம்மாவின் கைகளை இறுகப் பிடித்தேன் எழுந்து நின்றேன் - எனக்கு உற்சாகமாயிற்று. அம்மாவின் கைகளை விடுவித்தேன் காலைத் தூக்கி ஒரடி வைத்தேன். உலகம் சுற்றி என்மேல் விழுந்தது. அம்மா என்னைத் தாங்கிப் பிடித்தாள் - மீண்டும் அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தேன் பதிலுக்கு அம்மாவும் - இப்போது மறுபடியும் எழுந்து நின்றேன். கால்களும் துடித்தது.
முன்னுக்குப் போ! யாரோ என்னை உந்தித்தள்ளினர். சத்தம் என்னைச் சிதைத்தது. பின்னால் வந்த குரலுக்குத் திரும்பினேன். மறுபடி விழுந்தேன்-அம்மா என்னைத்துக்கி அணைத்தாள் - மீண்டும் அம்மாவின் தோளிலிருந்து A. மெல்ல நழுவினேன் அம்மா சலிக்கவுமில்லை. மெல்லிய புன்னகை. தரையில் கால்களை வைத்தேன். நிமிர்ந்து நின்றேன். கைகளை உயர்த்திப் பிடித்தேன் காற்று லேசாய் வீசிச்சென்றது. கால்களிலொன்றை நிலத்தினின்று விடுவித்தேன். ஒரடி வைத்தேன் - நின்றேன் இப்போது - உலகம் என்மேல் விழவேயில்லை - நானும் உலகத்தின் மீது விழவில்லை அம்மா சற்றுத் தள்ளிநின்றா

குனிந்தபடியே
அணிநடைபோல - மெல்ல
ஒன்றன்பின்னொன்றாய்
அடிகளை வைத்தேன்
பூமி என் காலில் நசிந்தது
அம்மாவின் புன்னகை
மகிழ்ச்சியாயிற்று குதுகலத்தில் நானும்கிலிர்த்தேன் - அம்மா என்னை அள்ளி எடுத்தாள்.
- முல்லைக்கமல்
அம்மா
என்னை ஈன்றெடுத்து இவ்வுலகில் உலவவிட்டு மனிதச் சுழியினுள்ளே அமிழ்ந்து, அலைப்புண்டு, அழிந்து போய்விடாது வாழ வழி செய்தவளே - அம்மா!
உதரத்தில் சுமைதாங்கி உதிரத்தைப் பாலாக்கி உலகிற்கு எனைத்தந்த உத்தமியே என்தாயே!
சாமி கும்பிடென்று நீஎனக்குச் சொல்லித்தந்தாய். எது சாமி என்றெனக்குத் தெரியாத அந்நாளில் சிலையெல்லாம் கும்பிட்டேன்.

Page 6
உன்பிள்ளை நான் வாழ சிலையென்ன செய்ததம்மா? சித்தம் தெளிந்ததனால் இப்போது சொல்லுகிறேன் என்தெய்வம் நீயம்மா.
நின்னைத் தொழுதாலும் நித்தமுன்னைச் செபித்தாலும் பட்டகடன் தீர்ந்திடுமோ?
வார்த்தை வரம்புக்குள் வகைப்படாத என்தாயே உந்தன் பெருமையினை எப்படிநான் இயம்பிடுவேன்
- சுஜிந்திரா
அம்மாவுக்குத் தெரியும்
நாக்கிலிருக்கு ருசியின் நினைவலைகள் அம்மா வைச்ச வெந்தயக்குழம்பு அப்படி வெண்டிக்காய் வறை
காரல்மீன் சொதி
கத்தரிக்காய் பாற்கறி
திருக்கை வறை
தயிர்க்குழையல் கோழிப்பிரட்டல் , புளியாணம் சுறா வறுவல் , நண்டுப் பொரியல் மீன் தீயல் எல்லாம் தனிரகம், அம்மாவின் கைராசிப்படி, கூழ் காய்ச்சினால்
ஊர் கூடியிருக்கும்

உழுத்தங்கழி விடத்தற் பிட்டு, பனங்கிரைச் சுண்டல் பாவற்காய் வதக்கல் எல்லாம் இனிக்கும். பக்குவமறிந்த கலைஞ. கொடுக்கவும் வாங்கவும் அணைக்கவும் ஆதரிக்கவும் இருந்த கை அவளுடையது அந்தரிச்சு ஆர்வந்தாலும் தேறுதலுரட்டும் அம்மாவுக்கு என்னதான் தெரிஞ்சிருக்கவில்லை அப்பாவுக்குப் பக்குவமாய் நடக்கவும் எங்களை ஆளாக்கவும் ஊரோடு ஓடிஉழைத்து, உறவாகி எதையும் ஒப்பேற்றவும் எதையும் ஆராயவும் கூட.
-ஆரதி
நீயில்லா இரவு!
அம்மா! நீயில்லா இரவுகளின் அர்த்தம் என்ன? விழிகளினோரத்தில் வழியும் துயரமும் கண்ணிரும் பாறைகளை உருக்கி பாய்ந்த ஒரு நதியின் படுகையின் மேலே - இப்போது நிலவு இறங்குவதில்லை. மெல்லிய காற்றில்
நடுங்கும் உடலில்

Page 7
படியும் இரவையும் குளிரையும் தாண்டி உனது முகமும் புன்னகையும் இளஞ்சூடும் - எனது உடலைத் தழுவிற்று உனது பிரசவத்தின் பின்னால் வலியையும் மறந்து என் பிஞ்சுக் கரங்களை இறுகப் பற்றினாய் ஒரு இனிய மழைநாளைப் போல குளிர்ந்து கிடந்தேன். என்றுதலின் மேலே முத்தங்கள் பொழிந்தாய் அதன் சிலிர்ப்பை - என்றும் எனது உடலிலிருந்து எப்படிப் பிரிப்பாய், அம்மா! நீயில்லாத இரவுகளின் அர்த்தம் என்ன? ஒரு பொழுது நெற்றியில் காயமும் உதிரமுமாய் வந்தேன் - நீ மயக்கமுற்றுச் சாய்ந்தாய். அயலில் நின்றோர் தாங்கவுமற்று. "ஏகம் ஷத்" ஈசா உபநிடதத்தின் வரிகளில் கிடந்து துடித்த இறைவனும் அதிர்ந்தான் எனது அம்மா! எனது கடவுளே! நீயில்லா இரவுகளின் அர்த்தம் என்ன?
-முல்லைக்கமல்
8

அம்மாவின் உலகோடு
பெருமழை கொட்டிய அன்றிராவில் ஈரவிறகோடு இருந்தா அம்மா எரியா அடுப்பிற் புகை நிரம்ப தணியாப் பசித்தீயோடு அம்மாவைச் சூழ நாங்கள். வாசற் படியோரம்
நனையாச் சிறுசாக்கில் மழையையும் பார்த்து அம்மாவையும் பார்த்து எங்கள் நாய்க்குட்டி.
எப்படியோ, எப்படியெல்லாமோ ஆகி எங்கள் பசிதணிய காரியங்கள் முடிந்தன. புகையோடி சுடரும் நெருப்பெழுந்து மூண்டெரியத் தெரிந்த முகத்தில் அம்மாவின் முகம் அம்மாவின் முகத்தில் எங்களின் சிரிப்பு
இப்படித்தான். இப்படி இப்படியே தான் ஒவ்வோர் நாளும் ஒவ்வொரு விதமாய் அம்மாவின் உலகம் அம்மாவின் உலகோடு எப்போதும் நாங்கள் இப்போதும் தான்
-கருணாகரன்

Page 8
மு.பொ.வின் கவிதை
பெண்ணகத்தே இம்மண்ணின் வரலாறு
எல்லாப் பொருளுள்ளும் பெண்ணின் மகத்தான தன்மையெனும் 'தாய் புகுந்து தொட்டிலிடும்
இயற்கைத்தாய்! தேசத்தாய்! வீரத்தாய்! என்னைப் பெற்ற தாய்!
சூல் கொண்ட நாளிலிருந்து
சுமைதாங்கி எல்லா உயிரும் உள்ளுயிர்க்க தன் ஊன் உருக்கி உருக்கி உயிர்காக்கும் பேரியல்பே இப்பெருந்தாய்!
இத்தாய்மையின் பிரசவிப்பே இப்பேரண்டம். எல்லாக் கருத்தியலின் ஆளுமையும் அவள் கருப்பையின் விகச்சிப்பே.
அவள் கருப்பையுள் துயின்றவைகள் தம் உயிர்ப்பின் ஊற்றை மறந்து அவள் கைக்கு விலங்கிடவோ? சக்தி விழித் தெழுந்தால் அவள் காலடியில் சங்கரன்!
O

தாய்வெளி
(1)
வெளி நாகம்மாள் கோயிலிலே பறைமுழங்குது வைகாசிப் பொங்கல் நாள் தவிர வேறெந்தப் பொழுதோ சாமமோ பறை முழங்கினால், கோயிலை அண்டிய குடியிருப்புகளில் யாரோ பிள்ளைத் தாய்ச்சிக்கு பிரசவ நோக்காடு கண்டுள்ளது என்று பொருள்.
பறை முழங்க,
வெளி நாகம்மாள் இமை நடுங்கிக்
கண் விழிப்பாள் ஊரின் நோக்காடு அவளுக்கும் உற்ற நோக்காடுதான் ஊரும், பதறிக் கண் விழித்து, வெளி நாகம் மாளாய்ச்சியென விழிதூக்கித் தொழுதபடி கோயில் வெளிநோக்கிஒடும். பிரசவ நோக்காட்டைப் பிரதியெடுத்தாற்போல பறை இரங்கி இரங்கி முழங்கும் இருள் வெளியும் பிரசவ நோக்காடுற்றது போல் முனகும்.
வெளி நாகம்மாள் சந்நிதியில் ஊர்கூடிச் சேதி அறிந்ததும் பிரசவநோக்காடுற்றவளுக்காக பின்னும் ஒருதரம் பிரார்த்திக்கும் பிறகு பிள்ளைத் தாய்ச்சியின் வீடு நோக்கி ஒத்தோடும். உதவிகள், ஒத்தாசைகள் என ஒடிப் பறந்து திரியும் உள்ளப் பறைகள் ஓயாது இரங்கி ஒலித்தபடியிருக்கும். இமைப்பறைகள் மெல்லதிர, வெளிநாகம்மாளின் விழிகள் வழிதொடரும்.
11

Page 9
இரங்குகிற விழிகள் தாயிரங்காவிடில் யாரிரங்குவார்கள்? வெளி நாகம்மாளின் கோயில் விளக்கைப்போல ஒளிவிளக்கேந்தியபடி மருத்துவிச்சி வருவாள் பறையின் உச்சபட்ச ஒலிமுழங்கமெல்ல மெல்ல தணிகையிலே, வெளிநாகம்மாளின் இமை நடுக்கம் நீங்கி ஒர் இள அமைதி குடிகொள்ளும். ஓம்! ஒர் உயிர் பிறந்ததென உறவு கூறுமாப்போல் மறுபடியும் பறை எழுந்து முழங்கி அடங்கும். வெளி நாகம்மாள் கோயிலிலே விழிதீபம் மேலும் சுடரும்.
(2)
வெளிநாகம்மாள் ஒரு மருத்துவிச்சி உயிர்காத்து உயிர்தருகின்ற மருத்துவிச்சி ஊரின் எங்கோவொரு கோடிப் புறத்தில் பிரசவ நோக்காட்டுக் குரல் கேட்டு ஓடிவருகின்ற மருத்துவிச்சியென ஊர் நம்புகிறது. அந்த நம்பிக்கைச் சுடர்தான் வெளி நாகம்மாள் கோயிலிலே எரிகின்ற விழி தீபம் அந்த நம்பிக்கையின் உச்சபட்சம் தான் ஓங்கி முழங்கும் பறை. அச்சம், பயம், நம்பிக்கை, புதிய உயிரின் வரவிற்கான கட்டியம் எல்லாம் ஒன்று கலந்த கலவைக் குரல்தான் பறை அது மக்களின் உள்ளத்துப் பறையும் தான்.
ஊரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவளாய்
ஒவ்வோர் உயிரின் வரவிற்கும் உறுதி பயப்பவளாய் வெளிநாகம்மாள் இருக்கிறாள்.
12

ஒவ்வோர் உயிர்களின் வரவிற்கும் கணக்கு வைத்திருக்கிறாள் தாய்க்குத் தாயாய், செவிலித் தாயாய் முறையீடுகள், விண்ணப்பங்கள். வேண்டுதல்களுக்கெல்லாம் நேர்த்திகளுக்கெல்லாம் தேறியவளாய் நின்றிலங்கும் தாய்வெளியாள் இவள். பெருவெளியைப் பிரதானப்படுத்துவதாய் அமைந்தது இவளது எளியகுடில்
இவளது அகத்திபம் போல அணையாச் சுடர் விளக்கொன்று எரியும். அண்டி நின்ற குடிகளுக்கெல்லாம் சொந்தக்காரியான இவள் குடி முழுநாளும் பெருவெளியாள் இவளது வெளி பிரசவ நோக்காடுகளின் வெளி புதிய பிரசவங்களிற்கான முக்கல்கள். முனகல்கள் நிறைந்த வெளி புதிய மகப்பேற்றுக் காலங்களின் படைப்பு வெளி.
(3)
பறை முழங்குது
பறை முழங்குது வெளி நாகம்மாள் கோயிலிலே பறை முழங்குது பறை முழக்கம் பெருவெளியெங்கும் நிறைகிறது.
பறை முழங்கும் பெருவெளியில் தனிவெளி இடம் கொண்டாள் தாய் எல்லாத் தாய்மைகளினதும் தரிப்பிடமான பேரிடம் இவளின் இல்லிடம் எல்லாப் பிறப்புகளும் இவளது தாய்வெளியில் தான் தரித்து உயிர்வுறுகின்றன. தாயெனும் தனித்தனி வடிவங்களெல்லாமும் இந்தத் தாய்வெளியில் தான் சங்கமமாகின்றன. தாய்மையின் பிறப்பிற்கும் ஒடுக்கத்திற்குமான உயிர்த்தலம் இவள்.
13

Page 10
எல்லா மகப்பேற்றுக் காலங்களும் இவளிடத்தே தான் வேறுபடுகின்றன. சூல்கொண்ட மேகங்களின் பெருவெளித் திரட்சியான இவளோர் பிரசவவெளி புதிய மகப்பேற்றுக்கால நோக்காடுகளே உங்களது முக்கல் முனகல்களை இந்தப் பிரசவப்பெரு வெளியாளிடத்தில் வந்து பறை இடுக.
நாதப் பறையின் நடுக்கொலிகள் இந்தத் தாய்வெளியாள் நரம்பகளின் உள் அதிரும் ஏனெனில் இவள் இடமற்ற பெருவெளியாள் எல்லாப் பேறுகளும் இவளின் பெருவெளி நிகழ்வுகள்: பேரண்ட நகர்வுகளிலும் இவளின் பெரும் பறை முழவதிரும்.
எல்லா வெளிநடப்புகளினதும் காட்சி இவள் வெளி கொண்டகாட்சி இவள் மாட்சி உயிர்களின் வரவிற்கும், வாழ்விற்கும் இவளின் வெளித்திகழ்வே காவல். ஒவ்வோர் போக்கும் பரவும் இந்தப் புணர்வெளியாள் தானறிவாள் எல்லாத் தாய்மைகளிற்குமான மகப்பேற்றுக் காலம் இவள் தவறிப் போன பேறுகளிற்கும் தாய் இவளே தாய்மைகளின் தாய், எல்லாத் தாய்மார்களினதும் தாய்மையின் எல்லா யோனி வாயில்களினதும் தீட்டுத் துடக்கெலாம் போக்கி தாய்வெளியெனும் தூய குடியிருப்பாய் விளங்குபவள்.
தாய்வெளியாளே! வெளி இடம் கொண்டவளே உனது இல்லிடத்தில் எமது உள்ளத்தும் பறைகள் ஒலிஎழுப்புகின்றன. எமது போக்கும், வரவும், புணர்வும், பெயர்வும் என யாவற்றுக்கும் பேரிட மானவளே உனது புண்ணிய வெளியில் இச்சைகளின் இல்லிடமான எமது ஊனுடம்புகளை ஒப்படைக்கின்றோம், புதியவை நிகழும் பொருட்டாக
14

எஞ்சியிருக்கும் நம்பிக்கைத்துளியை விழியாய் எடுத்து உனக்கு விளக்கிடுகின்றோம் எமதறிவை பெருவெளித் துலக்கமுறச் செய்வாயாக. எமது சிறுமை பெருமைகள், இயலுமை இயலாமைகளை உனது திருமுன்னிலையில் சமர்ப்பித்தோம். பெரு நோக்காட்டு வெளியிடை எமை இட்டு
எம்மைப் புதிது பிறப்பிப்பாயாக.
15
சு.வில்வரெத்தினம் 26.10.03
மதிப்பீடு
அம்மா எனுமந்த அன்புமலைக் கோயில் சந்நதியில் நான்முன்னர்த் தாவித் தவழ்கையிலே
என்ன நினைவையவள் என்னில் செதுக்கினளோ?
சோறுரட்டி, வானம் தொடுத்த மலர்ச்சரத்தின் சீர்காட்டி, பாலூட்டி, துரக்கச் சிறுக்கியவள் ஊர்காட்டி, அன்பு ஒழுக்கி வளர்த்தஅவள் என்ன நினைவையெல்லாம் என்னில் செதுக்கினளோ? என்ன நினைத்திருப்பாள்?எந்தன் மகன் பெரிய மன்னனாய், காரில் மதிப்போடு மாற்றாரின் கண்ணில் படவாழும் காட்சி வழியிலவள் என்னை நிறுத்தி இறும்பூதல் எய்திருப்பாள் என்ன பிழை அற்றைச் சமூக இயல்புகளின் சின்னம் அவள் வேறு சிந்தை அவட்கேது? பாவமோய், என்னை நிதம் பள்ளிக் கனுப்பியவள் மோகமுற நானோ, முருங்கைமரக்கிளையில் காகம் இருந்து கரையும் அழகினிலும் வேகமுடன் காற்று விரைய, நிலமிருந்து சேவல் உதிர்த்த சிறகு மிதப்பதிலும் அண்ணாந்து பார்க்கையில் அங்கே கரும்பருந்து பண்ணாய் விசும்பில் படரும் சுருதியிலும் ஏதோா கனவை இயற்றத் தொடங்குகிறேன்.
(மதிப்பிடு கவிதையிலிருந்து)

Page 11
தாயை நினைக்கும் தவம்
பேரா.கா.சிவத்தம்பி
(அ.இரவியின் தாயாரின் நினைவாக வெளியிடப் பெறும் பிரசுரத்தில் இடம் பெறுவதற்காக எழுதப்பெறும் தொகுநிலைக் குறிப்புகள்)
இரவியின் தாயாரின் மறைவுபற்றி அறிந்த பொழுது, நான் அவருக்குக் கூறியதை இங்கு மீட்டுச் சொல்ல வேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன்.
"இரவி, உன்னைப்போல புண்ணியஞ் செய்த மகன்மார் மிக மிகக் குறைவு. நீஅம்மாவைப் பார்க்க வேண்டும், அம்மா உன்னைப் பார்க்கவேண்டும். நீ லண்டனிலிருந்து வந்து நிற்கும் பொழுதே, அதுவும் உனது மடியிலே அவா சரிந்திருந்த பொழுது அவர் ஆவி பிரிந்தது. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு சிலிர்க்கும் ஒரு விடயம். எத்தனை மகன்மாருக்கு இந்தப் பாக்கியம் கிட்டும். அதற்கு மேல் எத்தனை தாய்மாருக்கு அந்தத் திருப்தி கிட்டும்."
மரணம் எதுவுமே மனதை நிலைகுலையச் செய்வதுதான். உணர்ச்சிபூர்வமாக உலகைப் பார்ப்பவர்களுக்கு ஒரு பூச்சியின் தற்செயல் சாவுகூட ஓர் இழப்புத்தான். (மஹாகவி)
米 米 米
எந்த மனிதனது மரணமும் எனது மனித வலுவை சிறிதளவேனும் குன்றச் செய்கிறது என்பது ஒர் அறிஞனின் கூற்று. அது உண்மை. ஒரு மனிதனின் மரணமென்பது அந்த மனிதனுடைய பெளதீக முடிவு மாத்திரமல்ல, இறப்பு என்பது இற' என்ற சொல்லின்
16

அடியாக வருவது. இற்றுப்போதல் என்பது அதன் கருத்து. யாழ்ப்பாணத்து கிராமங்களில் இப்பொழுதும் கூட தலைக்கு மேலேயுள்ள ஒலைக் கூரையை மீண்டும் வேய வேண்டுமென்றால், 'என்ன கூரை இறந்து போய்க் கிடக்கிறது" என்பார்கள்.
மனித உடம்பாக, உடம்பென ஒருங்கு சேர்ந்திருந்த மூலகங்கள் இற்றுப் போவதுதான் - இறந்து போவதுதான் இறப்பு. ஆனால் இதற்குள் உள்ள சோகம் இந்த இறப்பு என்பது (இலக்கணப்படி இது வினைப் பெயராகும்) மனித நினைவுகள், எண்ணங்கள், அபிலாஷை கள்,ஆதங்கங்கள் என்பவற்றின் முடிவும்தான். மனிதர்களை நாம் நினைப்பது அந்த எண்ணங்களைக் கொண்டுதான். அந்த உறவுகளைக் கொண்டுதான். அந்த உறவுகள் ஏற்படுத்திய உணர்ச்சிகளைக் கொண்டுதான்.
இந்தச் சோகம் அளப்பரியது. தாங்க முடியாதது. இதனாலேதான் மரணச் சோகத்தைக் குறிக்க கையறுநிலை என்று கூறுவார். கள். கையறுநிலை என்பது வேறொன்றுமல்ல. கை திடீரென அறுந்த நிலை. கையறுந்த மனிதனால் எதையும் வாங்க முடியாது. கொடுக்க முடியாது. பிறருக்குத் தன்னைக் காட்டிக் கொள்ளவே முடியாது. உற்றவரின் மரணம் இதனால்தான் கையறுநிலையாகிறது.
இந்தக் கண்ணோட்டத்தில் தமிழ் இலக்கியப் பரப்பை மீள்நோக்கு செய்ய வேண்டும் போலப்படுகிறது. தாயை இழந்த துயரங்கள் எத்தனை நமது இலக்கியத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படிப் பார்க்கும் பொழுதுதான் ஏறத்தாழ 12ம் நூற்றாண்டு வரையுள்ள இலக்கியத் தொகுதி பற்றி சற்றுக் கோபம் வருகிறது. அகம், புறம் என்ற பிரிவில் அகத்தில் இச்சோகம் வருவதற்கான வாய்ப்பில்லை. புறத்தில் கணவனது இழப்பு பற்றிய சில மறக்க முடியாக் குறிப்புகள் உள்ளன. மகனை இழந்த தாய்மாரில் வீரம் கூடத் தெரிகிறது. இந்த வயிறுதான் அவனைப் பெற்றது என்று ஒரு தாய் கூறியதற்கான செய்யுள் உண்டு. அதைச் சொல்லி முடிந்த கையோடு எவ்வாறு தன் தலையிலடித்து அழுதிருப்பாளென்று வரவில்லை. தாய்மை, அந்த வீர வார்த்தைகளை சொல்லியிருக்க முடியும். ஆனால் அந்தச் சோகத்திலிருந்து தப்பியிருக்க முடியாது.
17

Page 12
நமது பண்டைய பாடல்களுக்குள்ளே ஐதீகக் கதைகள் இல்லாதிருப்பதன் குறைபாடு இவ்வாறு நோக்கும்போதுதான் தெரிய வருகிறது. மகள் பற்றிய தாயினுடைய அங்கலாய்ப்புகள் செவிலித் தோழியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அப்படியிருந்தும் மகளைக் காணாது தேடிச் சென்ற தாய்க்கு, மலையிடைப் பிறந்த மணி. மலைக்குப் பிரயோசனப்படுவதில்லை. எனவே கவலைப்படாதே என்று சொல்லப்படுகின்ற சந்தர்ப்பங்கள் உண்டு.
சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் செவிலி, தோழி ஆகியோரின் கூற்றுக்கள் நெஞ்சை உருக்குவன. ஆனால் தாய்ப்பாசம் என்ற நிலையிலோ அல்ல பிள்ளை ஒன்றினது புலம்பல் என்ற நிலையிலோ எதுவும் வரவில்லை என்றே நம்புகிறேன்.
இராமாயணத்தில், இராமனை இழந்த தசரதன் புலம்பல் மகத்தானது. ஆனால் அது ஆழ்வார்கள் வழியாக வருவது என்பார்கள். இந்திரஜித்தின் மரணத்தின் பொழுது மண்டோதரியின் புலம்பல் நெஞ்சை கலக்குகிறது. ஆனால் அந்த மகவிழப்பு சோகத்தினூடே அவளுக்கு தான் கைம்மை நோன்பு ஏற்க வேண்டிய சோகமும் புலப்படுகிறது. சேக்கிழார் பக்தி எனும் நேர் கோட்டிலிருந்து இம்மியும் விலகாதவர். எனவே சிறுத்தொண்டர் நாயனார் புராணத்திலும் அந்த உணர்வு இழப்பாக நிற்கவில்லை. பக்தி இலக்கியத்தினுள் மாணிக்க வாசகரின் ஒரு வரி, தாயன்பின் உன்னதம் முழுவதையும் ஒரு வரிக்குள் கொண்டுவருவது
"பால் நினைந்துட்டும் தாயினும் சாலப் பரிந்து."
பிறந்த குழந்தைக்கு, அது தாய்ப்பாலையே நம்பியிருக்கும் நாட்களில் தாய், தானே நினைந்து பாலூட்டுவாள்.
இன்னொரு கருமத்தை செய்து கொண்டிருக்கும் பொழுது குழந்தைக்கு பால் கொடுக்கும் நேரம் பிந்துகிறதோ எனும் பதறுகையுடன் தாய்மார் துடித்து அவசரப்படுகின்ற கணங்கள் இருக்கின்றனவே அவை தாய்மையின் மகோன்னத கணங்கள்.
இந்த தாய் பற்றிய பாடல், பாடற் குறைவை தமிழின் நிரந்தர குறைபாடாக்காமல் தவிர்த்தவர் பட்டினத்தார்.
18

தான் பாலியல் உறவு கொண்ட பெண்களை தமிழிலக்கியம் கூசிக் கோணும் வகையில் பாடல்களில் எழுதிய அதே பட்டினத்தார் தாய் இறந்த பொழுது பாடிய பாடல்கள் நெஞ்சை உருக்குபவை.
"அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப் பூ மானே என அழைத்த வாய்க்கு"
பதச்சோறாக ஓர் உதாரணம் இது.
பாடியவன் ஞானி என்பதனால் அந்தப் பாடல்களுக்குள்ளேயே ஒரு தேற்றமும் உள்ளது. இதுதான் வாழ்க்கை.
இழப்பை ஏற்றுக்கொள்வதில்தான் வாழ்க்கையின் தொடர்ச்சி தங்கியுள்ளது. நிஜமாய் நம் முன்னே உலவியவாள். நம்மை வளர்த்தவள் நினைவாக மாறுகிற பொழுது சோகமும் தப்பாது, அந்த சோகத்தினுள்ளே காலம் போகப் போக ஒரு சுகமும் இருக்கிறது.
இரவியினுடைய தாயார், மறைவு விரைவில் வராது. ஏனெனில் இரவியினது 'காலம் ஆகிவந்த கதை"க்குள் அவள்தான் நிறைந்து கிடக்கிறாள்.
தனது அம்மாவின் ஆளுமையினுடாகவே பல இடங்களில் இரவி நமக்கு அளவெட்டியை - யாழ்ப்பாணத்தை காட்டுகிறார்.
யாழ்ப்பாணத்து கிராமங்களின் அனுபவங்கள் உள்ளவர்களுக்கும், காலம் ஆகி வந்த கதையும் இரவியினது அம்மாவின் ஆளுமையும் நினைவழியா பதிகைகளாகின்றன.
ck k cK
தாய்மை பற்றிய எனது அனுபவங்கள் இரண்டு உள்ளன.
முதலாவது, தாயை நினைக்கும் பொழுது, நினைப்பவர் எந்த வயதினரானாலும் அவர் தனக்குத் தானே அந்தத் தாயின் பிள்ளையாக தன் வயதை மறந்த நினைவுக் கதகதப்பில் அமிழ்ந்து விடுகிறார். தாய், என்றுமே மறக்கப்பட முடியாதவள். அவள் எங்கள்
19

Page 13
இலட்சியப் பெண். பெண்களுக்கான இலட்சிய முன்மாதிரி.
இது என்னை இரண்டாவது அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது.
நாம், நமது வயதின் முதிர்ச்சியில் உலக அனுபவத்தில் எத்தனையோ பெண்களைப் பார்த்திருப்போம். அவர்கள் பற்றி அறிந்திருப்போம். அவர்கள் பற்றிய வன்மையான அபிப்பிராயங்கள் கூட நமக்கு இருக்கும். அந்தப் பெண்கள் அல்லது அதே பெண்கள் தத்தமது பிள்ளைகளுக்கு எவ்வாறு காட்சியளிப்பார்கள், காட்சியளிக்கிறார்கள் என்பதை நான் எனதுதான்பற்றிய உணர்நிலையில் நின்று பார்க்கும் பொழுது தான் புரிகிறது. தாய்மை என்பது எந்தப் பெண்ணையும் புனிதப்படுத்துகிற ஒரு நிலையாகும்.
நல்ல பெண்கள், நல்லவர்கள் அல்லாத பெண்கள் இருக்கலாம் ஆனால் தாய்மார்கள் தாய்மார்கள்தான்.
ஆச்சி, ஆத்தை, ஆத்தாள் போய் அம்மா வந்துவிட்டது. என்றாலும் தாய் என்ற சொல்லுக்குள் ஆயே (தன் - ஆய்) நிற்கின்றாள். இந்த ஆய்தான், ஆச்சி, ஆத்தாள் என்பதற்கான நதிமூலம், மானுடத் தொடர்ச்சி தாய்மையில் காணப்படுவதென்றால், தாய் என்ற இந்த சொல்லினில் தமிழ்ப்பண்பாட்டின் தொடர்ச்சி தெரிகிறது.
2O

இரவியினுடைய அம்மா
எஸ்.கே.விக்கினேஸ்வரன்
அது ஒரு தற்செயலான நிகழ்வுதான். இரவியின் வீட்டுக்குப் போகின்ற நோக்கத்துடன் நான் அங்கு போகவில்லை. சபேசனுடன் சைக்கிளில் அளவெட்டியில் உள்ள இரவியின் வீட்டிற்கு முன்னாலுள்ள வீதியால் சென்று கொண்டிருந்தேன். உதுதான் இரவியின் வீடு' என்று காட்டினாள் சபேசன். சைக்கிளை உழக்குவதை நிறுத்தி 'சிலோவாக்கி இரவியின் வீட்டுப்பக்கமாகப் பார்த்துக் கொண்டே போனேன். இரவி நிற்கிறான் போலை. அவன்ரை சைக்கிள் நிற்குது என்று நிறுத்தினான் சபேசன். இருவருமாக உள்ளே போனோம்.
ஹோலுக்குள் யேசுதாஸின் பாடலை பலமாக போட்டுவிட்டு கேட்டுக் கொண்டிருந்தான் இரவி. எங்களைக் கண்டதும் சிரித்தபடி எழுந்து வந்தான். யேசுதாசின் பாடலில் தொடங்கி அரசியல் இலக்கியம் என்று ஏதேதோ கதைத்தாக ஞாபகம். இரவியின் அம்மா வெளியிலிருந்து வந்து ஹோலுக்குள் நுழைகிறா. பளிச் சென்ற கைத்தறிச் சேலை, பெரியகுங்குமப் பொட்டு வெற்றிலை போட்டுச் சிவந்த வாய். சிரித்த படியார் இது புதிசாக' என்பதுபோல என்னைப் பார்த்தா. இரவி அறிமுகப்படுத்தினான். சிரித்தபடி அவன் சொல்வதைக் கேட்டுவிட்டு உள்ளே போனா அவ. நாங்கள் பேசிக் கொண். டிருந்தோம். கொஞ்சநேரத்தில் பால் கோப்பி கொண்டுவந்தா. மூன்று பேருக்கும். நல்ல வாசனையும் ருசியும் நிறைந்த கோப்பி. கோப்பியை அவ தந்த விதமும், தரும் போது புன்னகைத்த விதமும் எனக்கு மறக்க முடியாதளவுக்குப் பிடித்துப் போயிற்று. அந்த முகத்தில் தெரிந்த உபசரிப்பு கோப்பிக்கு மேலும் சுவையூட்டுவதாக இருந்தது.
21

Page 14
இரவியின் வீட்டில் இருந்த வெற்றிலைத் தட்டத்தில் இருந்து வெற்றிலை எடுத்துப் போட்டுக் கொண்டேன். நான் வெற்றிலை போடுவதைப் பார்த்துச் சிரித்தபடி வெற்றிலை போடுவியோ தம்பி என்று கேட்டா.
'கண்டால் போடுவேன்'சின்னனிலே இருந்து அப்பிடி ஒரு ஆசை ஆனால் பழக்கமாக இல்லை'
தட்டில் புகையிலையும் இருந்தது. ஒரு சிறிய துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன்.
பொயிலையும் போடுறீர். தலையைச் சுத்தாதே?
இல்லைப் பழக்கம்' என்றேன் நான். உண்மையில் எனக்கு அது பழகிப் போயிருந்தது. வெற்றிலையுடன் புகையிலையை நான் போடப் பழகியது எனது அம்மாவிடமிருந்து.
அதற்குப் பிறகு இரவி வீட்டுக்கு அடிக்கடி போகும் சந்தர்ப்பம் வந்து சேர்ந்தது. போகிற நேரத்தைப் பொறுத்து புட்டு. தோசை, சோறு அல்லது தேனீர் என்று ஏதாவது ஒன்றைத் தராமல் அவ அனுப்பியது கிடையாது. இதற்குப் பிறகு மறக்காமல் வெற்றிலைத் தட்டமும், கூடவே ஒரு புகையிலைத் துண்டும் அவவிடமிருந்து கிடைக்கும்.
இரவிநிற்கிறானா என்று கேட்டு போகிற சில நாட்களில் இரவி இல்லாவிட்டாலும் உடனே திரும்ப விடுவதில்லை. தேத்தண்ணி குடிச்சிட்டுப் போதம்பி என்று மறித்துவிடுவா. மறக்காமல் வெற்றி. லைத் தட்டும் புகையிலைத்துண்டும் கிடைக்கும். இப்படியான சந்தர்ப்பங்களில் இரவியைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பா. இரவியைப் பற்றிப் பேசுவதில் அவ்வளவு சந்தோசம் அவவுக்கு. இரவி பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது அவன் 'கெட்டுப் போகாமல் இருக்க நான் புத்தி சொல்ல வேண்டும் என்று எனக்குச் சொல்லுவா. எனக்கு சிரிப்பாக இருக்கும். அவவின் வார்த்தைகளில் கெட்டுப் போவது என்றால் 'காதலிக்கிறது' என்பது அர்த்தம்.
22

இயக்கம் அரசியல் என்று ஏதாவது பிரச்சினைகளுக்குள் மாட்டுப்பட்டு விடக் கூடாது என்பதில் அவ மிகவும் கவனமாக இருந்தா. அரசியலில் சம்பந்தப்படுவதை அவஎதிர்த்ததாக தெரியவில்லை. ஆனால் ஏன் அது ஒரு ஆபத்தும் இல்லாத ஒன்றாக இருக்கக் கூடாது என்பது தான் அவவுடைய யோசினையாக இருக்கும்.
இரவியின் வீட்டைக் கடந்து நான் செல்கின்ற நாட்களில், அது பிற்பகல் ஐந்தரையாக இருந்தால் அனேகமாக அவவை வாசல் கேற்றருகில் காணலாம். இரவி பல்கலைக்கழகத்தால் இன்னும் வரவில்லை என்று பார்த்துக் கொண்டிருக்கிறா என்று எனக்குத் தெரியும். இவ்வளவு வளர்ந்த மகனை இப்பிடி பார்த்துக் கொண்டு நிற்கிறாவே என்று நினைக்கையில் எனது அம்மாவின் ஞாபகம் எனக்கு வரும். எனது அம்மாவின் தீவிரமான அன்பை ஞாபகப்படுத்துகிற ஒரு பக்கம் இரவியின் அம்மாவிடம் இருந்தது. அந்த அன்பின் தீவிரம் இரவி மீதான ஒரு வகை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாத உரிமையாகவும் இறுகிப் போயிருக்கிறது. இரவிக்கு என்ன சாப்பாடு பிடிக்கும், அவனுக்காக எப்படிச் சமைக்க வேண்டும் என்பதையிட்டு அவவைத்திருந்த அக்கறை இரவியின் மனைவியான சுசி மீது கோபம் கொள்ள வைக்கிற குறைபிடிக்கிற அளவுக்கு பலமாக இருந்தது.
அளவெட்டியில் அவவை நான் கடைசியாகக் கண்டது 86 இல் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு 92ல் கொழும்பில் சந்திக்கும் வரை அவவைப் பற்றிய எந்த விபரமும் எனக்குத் தெரியாமல் இருந்தது. 92இல் கொழும்பில் சந்தித்த போது அதே விருப்பத்துடனும் அக்கறையுடனும் என்னைப்பற்றி விசாரித்தா. உடல் சற்றுத்தளர்ந்திருந்தது. முகத்தில் பழைய செந்தளிப்பு இல்லை. ஒருவகையான நிரந்தர சோகம் அவவின் மனதுள் ஆழமாக இருப்பது போல் பட்டது. கேட்டேன். தாங்கள் கொழும்புவந்து சேர்ந்த கதையைச் சொல்லிக் கவலைப்பட்டா. தான் வாழ்ந்த வீடு வாசலை தெருவை விட்டுவந்த துயரத்தை அவவால் மறக்கவே முடியவில்லை. அப்போது அங்கே போய் நிம்மதியாக இருக்கலாம் ஏன்றிருக்குதுரி ஸ்ன்று"த்ரீசி லாய்ப்புடன் சொல்லுவா, அந்த' "என்ற வார்த்தையில் சற்று
23

Page 15
அழுத்தம் தொனிக்கும். தனது மருமகளுக்கு "குத்துவதற்காக தான் அவ அப்பிடிச் சொல்கிறாவோ என்று தோன்றும். ஆனால் நான் விளக்கம் கேட்கவில்லை.
இரவியின் அப்பாவின் மறைவுக்குப்பிறகு இரண்டு தடவைகளும் இரவி வெளிநாடு போனபின் இரண்டு மூன்று தடவையும் கொழும்பில் அவ தங்கியிருந்த வீட்டுக்கு போயிருக்கிறேன்.
இடையில் ஒரு தடவை சென்னையில் அவவைச் சந்தித்தேன். அவவிடம் தீவிரமான ஒரு பிடிவாதமும் கோபமும் அப்போது குடிகொண்டிருந்தது. இரவியினுடைய குடும்பம் பற்றி, தனது உறவினர்கள் பற்றி எல்லாம் அவ கோபமாகப் பேசிக் கொண்டிருந்தா. இரவி மீதான அவவின் மட்டுமீறிய பிரியம், அவவின் பிடிவாதத்திற்கும் கோபத்துக்கும் அடிப்படையான காரணமாக இருந்திக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
இரவி வெளிநாடு சென்றபின் அவநோய் வாய்ப்பட்டுப்படுக்கையில் இருந்தா. பார்க்கப் போயிருந்தேன். அந்த இயலா வருத்தத்திலும் தனக்குத் தானே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்கிற ஒர்மம் அவவிடம் குடிகொண்டிருந்தது. நான் யாழ்ப்பாணம் போய் என்ரை வீட்டிலை சாப்பிடாமல் கிடந்தாலும் நிம்மதியாகக் கிடந்து சாகோணும் என்று சொல்லிக் கொண்டிருந்தா. இரவி தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கூறி நிறையக் கவலைப்பட்டா. இதனால் அவவுக்கு அவனுக்கு நெருக்கமான எல்லாம் மீதும் கோபம் இருந்தது. ஆனால் ஏனோ என் மீது அவ எந்தக் கோபத்தையும் காட்டவில்லை. மிகுந்த விருப்பத்துடன் அடிக்கடி வந்து தன்னைப் பார்த்துப் போகச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தா. தாயின் சோகம் எவ்வளவு ஆழமானது என்பதை நான் அவவிடம் தெளிவாகக் கண்டேன். அவவின் பிடிவாதமும் கோபமும் யதார்த்தமற்ற ஒன்றாக எனக்குத் தோன்றியபோதும் அதன்பின்னால் இருந்த, தன்னையே அழித்துக் கொள்ளும்அளவுக்கு ஆழமான அவவினது புத்திர பாசம் என்னை அசரவைத்துக் கொண்டிருந்தது. இரவிக்கு நான் கடிதம் போட்டேன். முடிந்தளவுக்கு அவவுடன் போனிலாவது பேசும்படி அவனுக்குச் சொன்னேன்.
24

இரவியின் அம்மா ஒரு அற்புதமான மனுவழி வருகிற இரவியின் நண்பர்களை வரவேற்பதில், அவர்களுடன் ஆசையாகப் பழகுவதில், அவர்கள் ஒவ்வொருவரதும் விருப்பத் தெரிவுக்கேற்ப அவர்களை உபசரிப்பதில் அவவுக்கு நிகர் அவதான். அவவின் கோபம் கூட நேர்மையானது, வெளிப்படையும் கூர்மையும் வாய்ந்தது. தயைதாட்சணியமில்லாமல் முகத்துக்கு நேரே கிழித்து விடுகிற கூர்மை. அதே வேளை நம்பமுடியாத அளவு இரக்கமும் அவவிடம் இருந்தது. அவ நாய்க்கு சாப்பாடு வைக்கிற விதம் மட்டுமே போதும் அவவின் இரக்கத்தை விளங்கிக் கொள்ள.
மாறாத சோகமாக இறுதிவரை அவவிடம் இருந்தது தனது சொந்த வீட்டுக்குப் போய் விட முடியாமல் போகப் போகிறதே என்ற கவலை. இரவியைக் காணாமலே செத்துப் போய்விடுவேனோ என்ற ஏக்கம் அவவிடம் ஆழமாக இருந்தது. தன்னுடைய பிள்ளையின் கண்முன்னால் தான் கண்ணை மூட வேண்டும், தனது அளவெட்டி மண்ணில் தான் புதைய வேண்டும் என்ற இரண்டு ஆசைகளையும் அவ அடிக்கடிசொல்லிக் கொள்வா. அளவெட்டிக்கு போக முடியாவிட்டாலும் அவவால் இரவி இலங்கை வரும் வரை உயிரைக் கையில பிடித்திருக்க முடிந்திருக்கிறது. அவவது இறப்பு அந்த ஆசை நின்றவேறிய சந்தோசத்துடன் நிகழ்ந்திருப்பது திருப்தியளிக்கிற ஒன்று.
இரவி, தனது அம்மாவின் மகனாகப் பிறந்ததற்காக பெருமையும் நிறைவும் கொள்ளத்தக்க ஒரு நல்ல அம்மா அவ.
25

Page 16
அம்மா
எஸ்.கே.விக்கினேஸ்வரன்
எனது 'மிகப் பின்னோக்கிய ஞாபகங்களில் நிற்கிற அம்மா. வுக்கு எத்தனை வயதிருக்கலாம்? ஒரு இருபத்தி இரண்டு அல்லது இருபத்தி மூன்று வயதிருக்கலாம் என்று நினைக்கிறேன். பளிச்சென்ற முகம். நெற்றியில் எப்போதும் மறையாத திருநீறு. ஒரு ஒற்றைக் கல்லு - சிவப்பு நிறம்- முக்கு மின்னி. அதை மூக்கு மின்னி என்று நான் சொல்லிக் கொள்வது அம்மா சொல்லித் தந்ததாலா அல்லது அது மின்னிக் கொண்டிருப்பதால் நான் வைத்த பெயரா என்பது ஞாபகம் இல்லை. என்னைத் தூக்கி அவ முத்திமிடுகிற வேளையில் அது உறுத்துவதால் அதைக் கழட்டி வீசும்படி நான் அடிக்கடி கத்தியிருக்கிறேன். ஆனாலும் முழுகுவதற்காகவோ அல்ல சுத்தம் செய்வதற்காகவோ அவ அதைக் கழற்றுகிறபோது முகம் சோபை இழந்து போனதாக எனக்குத் தோன்றும். அம்மா அதைத் திரும்பவும் போட்டுக் கொள்ளும் வரை அவவின் முன்னும் பின்னுமாக திரிந்தபடி அதைப் போட மாட்டீங்களா என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்.
முகத்தின் இடது கண்ணுக்கு கீழாக ஒரு துவரம் பருப்பளவு வடு அவவுக்கு இருந்தது. அவவுக்குப் பொக்குளிப்பான் வந்த போது, உடல் முழுவதும் பருப் போடாமல் அந்த ஒரே இடத்தில் மட்டும் போட்டதாம். அந்த ஒற்றைப் பருப்பு மிகவும் பெரியதாக வந்து மாறிய வழு என்று சொல்வா அம்மா. முக்கு மின்னியைப் போலவே அந்தத் தளும்பும் அம்மாவின் முகத்துக்கு வசீகரத்தைக் கொடுத்தது.
26

னக்கும் முகத்தில் அப்படி ஒரு தளும்பு வரவேண்டும் என்று நான் முத்துமாரி அம்மாளிடம் வேண்டியிருக்கிறேன். எனக்கு அம்மாள் வருத்தம் வராது. முத்துமாரி வரவிடமாட்டா என்று இப்படி நான் சொல்கிற போதெல்லாம் அம்மா அடிக்கடி எனக்குச் சொல்லுவா. ஆனால் எனக்கு பிறகு பொக்குளிப்பான் வந்தபோது முகத்தில் மட்டும் ஒரு பருக்கூடப் போடவில்லை. முத்துமாரி அம்மன் கோவி. லுக்கு நான் போகமாட்டேன் என்று அம்மாவுடன் இதற்காக நான் சண்டை பிடித்திருக்கிறேன். எனது முகத்திற்கு எது அழகாக இருக்கும் என்று எங்கள் எல்லாரையும் விட அம்மனுக்கத் தெரியும் என்று சொன்னா அம்மா.
அம்மாவுக்கு வெற்றிலை போடும் பழக்கம் மிகவும் அதிக"மாகவே இருந்தது. பளிச் சென்ற வெள்ளைப் பற்கள் தெரிய வெற்றிலைச் சிவப்பேறிய வாயுடன் அம்மா சிரிக்கும் போது பார்த்துக் கொண்டே இருக்கலாம். அம்மா கொஞ்சுகிற போதெல்லாம் அந்த வெற்றிலையின் வாசனையுடன் கலந்த அம்மாவின் மணம் நீண்ட நேரம் அப்படியே முகத்தைச் சுற்றி அசையாமல் நின்று கொண்டிருப்பதாக தோன்றும். ஒவ்வொரு தடவை வெற்றிலை போடும் போதும் எனக்கும் வெற்றிலை கேட்டு நான் அடம்பிடிப்பதுண்டு. ஆனால் அம்மாவின் அழகான சிவப்பு நிறம் ஒருபோதும் எனக்கு வந்ததில்லை என்ற தீராத குறை எனக்கு. அம்மாவிடம் அந்த ரகசியத்தைச் சொல்லும்படி நான் பலதடவை கேட்டிருக்கிறேன். அவவின் வாயில் போட்டிருக்கும் வெற்றிலையில் கொஞ்சத்தை விரல்விட்டு தோண்டி எடுத்து எனது வாயில் போட்டுப் பார்த்திருக்கிறேன். அம்மா அந்த இரகசியத்தை சொன்னதும் இல்லை. எனது வாய் அந்தளவுக்குச் சிவந்ததும் இல்லை.
ஒருநாள் அப்பு - அம்மாவின் தகப்பனார். இரகசியத்தை எனக்குச் சொன்னார். அம்மா சின்னப்பிள்ளையாக இருந்த போது தனது 'கக்காவை' அள்ளிச் சாப்பிட்டவவாம். 'வடை தப்பிச் சாப்பிடுவதாகச் சொல்லிச் சொல்லி சாப்பிட்டவள். அது தான் உவளுக்கு உப்பிடி வாய் சிவக்கிறது' என்று அப்பு சொன்ன பிறகு அந்த இரகசியம் எனக்குப்புரிந்தது. ஏன் எனக்கு மட்டும் அப்படி ஒரு
27

Page 17
சந்தர்ப்பம் ஏற்படாமல் போயிற்று என்ற கவலையைச் சொல்லி, அப்படிச் சாப்பிட ஏன் என்னை விடவில்லை என்று நான் கேட்டிருக்கிறேன். 'உன்ரை அம்மம்மாவும் அப்புவம் என்னை வளக்கேல்லை. நானாகவே வளர்ந்தனான். என்ரை குஞ்சை நான் வளர்க்கிறனெல்லே. வெற்றிலை சிவப்பாவாறது கக்கா சாப்பிட்டில்லை. உனக்கும் வளர்ந்தாப் பிறகு சிவக்கும் என்பா அம்மா.
ஆயினும் அம்மாவின் வாயில் ஏதோ அற்புதம் புதைந்திருக்கிறது என்ற ஒரு அசையாத நம்பிக்கை என்னுள் பலமாக வளர்ந்திருந்தது. அவ பேசும் போதுவார்த்தைகள் கணிரென்று ஒலிக்கும். பாடினால் அவ்வளவு இனிமையாக இருக்கும். யாரையாவது திட்டும் போது இதழ்கள் விரிந்து மூடுகிற விதமும் அவை துடிக்கிற விதமும் மிகவும் அழகாக இருக்கும். அந்த வாய்க்குள் என்ன மந்திரம் தான் அவ வைத்திருக்கிறாவோ என்று தோன்றும், அம்மா பனங்கிழங்கு சாப்பிடுகிற, புழுக்கொடியல் சப்புகிற அழகைப் பார்த்தால் எல்லோருக்கும் ஆசைவரும். பச்சை மிளகாயைக் கடித்தபடி பழஞ்சோறும் ஒடியல்புட்டும் சேர்த்துக் குழைத்துச் சாப்பிடுவதைப் பார்த்தால் அவ்வளவு ருசியா பச்சை மிளகாய் என்றிருக்கும். எனக்கு புழுக்கொடியலை சப்ப முடியாது. நன்றாகக் காய்ந்து இறுகிப் போயிருக்கிற புழுக்கொடியலை பாக்குவெட்டியால் வெட்டித் துண்டு துண்டாகத் தந்தாலும் பல்லு நோகும். ஆனால் அம்மாவின்பற்களில் அவை அரைபட்டு மாவாகிக் கரைவது ஆச்சரியமாக இருக்கும். அவவின் வாயிலிருந்து விரல்விட்டுத் தோண்டி எடுத்துச் சாப்பிட்டாலும், அம்மாவின் வாய்குள் இருக்கிற புழுக்கொடியல் அதைவிட ருசியாக இருக்கும் போல தோன்றும், நேரடியாக அவவின் வாயில் வாயைவைத்து சூடான புழுக்கொடியல் துவையலை உறிஞ்சி எடுத்து சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அம்மா வீட்டில் யாராவது நிற்கிறபோது இப்படி நான் தரும்படி கேட்பதற்கு ஒப்புக் கொள்வதில்லை. காகம் தன் குஞ்சுக்கு இரை கொடுப்பது போல அம்மா எனக்கு தந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று எனக்குத் தோன்றும், அம்மாவிடம் காகங்கள் தங்கள் குஞ்சுகள் மீது சரியான விருப்பம் வைச்சிருக்கின்றன என்ன? என்ற கேட்பேன். அம்மா
28

சிரிப்பா. எனது கேள்வியின் அர்த்தம் விளங்கிய சிரிப்பு அது. அம்மா. வின் அந்த சிரிப்பு யாருடைய கவலையையும் அப்பிடியே கரைத்துவிடக் கூடியது. அம்மா சொல்வா 'காகங்களுக்கு கையில்லை. அதுதான் வாயாலை கொடுக்குதுகள். உங்களுக்கு கையிருக்கு தானே" ஆனாலும் இந்தப் பதில் என்ன்ைத் திருப்திப்படுத்துவதில்லை.
நான் நடக்கத் தொடங்கிவிட்ட போது எங்கள் வீட்டுக் கிணற்றடியைச் சுற்றி வட்டமாக வேலி போட்டார்களாம். அது எனக்காகப் போடப்பட்ட வேலி என்பது பிறகுதான் எனக்குத் தெரியும். ஆனால் கிணற்றடியை நோக்கி ஓடிப்போவது என்பதில் எனக்குச் சரியான ஆசை. அதுவும் யாரும் இல்லாத நேரம் ஒடிப்போய் கட்டுக்கு மேலால் எட்டிப் பார்க்க, அதற்குள் நீந்தும் தவளைகளுடன் பேச எல்லாம் எனக்கு விருப்பம். ஆனாலும் நான் கிணற்றடிப்பக்கம் தனியாக போக ஒருபோதும் முடிவதில்லை. ஒன்றில் கிணற்றடிப் படலை முடிக் கட்டப்பட்டிருக்கும். அல்லது யாராவது என்னோடு கூட வருவார்கள். எப்படியாவது ஒருநாள் நான் தனியாக அங்கே போய்விட வேண்டும் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் முயன்று கொண்டே இருப்பேன். ஒருநாள் அந்தச் சந்தர்ப்பம் வாய்த்தது. அம்மா அடுப்படியில் வேலை. படலையைக் கட்ட மறந்து விட்டது யாரென்று தெரியவில்லை. ஆவெண்டு திறந்து கிடந்தது. ஒடிப்போய் கிணற்றின் கட்டுக்கு மேலால் எட்டிப்பார்த்தேன். கிணற்றின் நீர் மட்டமோ தவளைகளோ முழுதாக தெரியவில்லை. எக்கிப்பார்த்த போதும் தெரியவில்லை. கிணற்றின் வாசற்பக்கமாக போய் பார்க்க விருப்பம். ஆனாலும் வாசல் பக்கமாக தனியாகப் போகிற சின்னாக்களை கிணறு உள்ளுக்கை இழுத்துப் போடும் என்று அப்பு சொன்ன கதையால் மெல்லிய பயம் இருந்தது. ஆனாலும் ஆசையை அடக்க முடியவில்லை. மெல்ல மெல்லமாக கிணற்று வாசல்படிவரை போய் நின்று பார்த்தேன். தண்ணீர் மிக அழகாக இருந்தது. மரங்களின் நிழல்கள் தலைகீழாக உள்ளே தெரிந்தன. தவளைகளும் மீன்களும் ஒடித் திரிந்தன. நின்றபடி பார்க்கப் பயமாக இருந்தது. உள்ளே இழுத்து விடுமோ என்ற பயம்,
29

Page 18
மெதுவாக கட்டில் உட்கார்ந்தேன். கால்களை கிணற்றின் உட்பக்கமாக தொங்கவிட்டுக் கொண்டு தண்ணிரை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.
திடீரென்று பின்னாலிருந்து யாரோ என்னைத்துக்கினார்கள். அம்மா. வழமையான அம்மா அல்ல அது. கண்களும் முகமும் சிவந்து விட்டிருந்தது.சற்றும் எதிர்பாராத விதமாக எனக்கு அம்மா அடித்தா. இனி எப்பாவது இங்கே தனியா வருவாயா எனக் கேட்டு கேட்டு அடித்தா. நான் திகைத்துப் போனேன். காரணம் விளங்கவில்லை. அழுதுகொண்டு போய் வீட்டுமூலைக்குள் ஒழிந்து விட்டேன். அப்படியே துரங்கிவிட்டேனென்று நினைக்கிறேன். அம்மா எனது கைகளைத் தடவிவிட்டுக் கொஞ்சினா. கண்களால் பொல பொல வென்று கண்ணிர் வழிந்தது. என்னைத் தூக்கி இறுக்கி அனைத்தாள். 'ஏன் ராசா அங்கை போனாய். எவ்வளவு தவமிருந்து உன்னைப் பெத்தனான். என்று விம்மினாள். அவவின் முகம் கோணியது. எனக்கும் அழுகை வந்தது.
அம்மா எனக்கு அடித்ததும் அழுததும் பற்றிய எனது நினைவில் வருகிற சம்பவம் இதுதான். அதன்பிறகு பலதடவை அம்மா அழுததைப் பார்த்திருக்கிறேன். அவவிடம் அடி வேண்டியிருக்கிறேன். ஆனால் இந்த முதலாவது அடி இன்னமும் நோவது போலவும், அம்மாவின் இந்த முதலாவது அழுகை இன்னமும் கவலை தருவதாகவும் இருக்கின்றன.
நான் முதன் முதலாக பாடசாலைக்கு போகத் தொடங்கிய நாள்வரை அம்மாவின் பெரும்பாலான பொழுதுகள் என்னுடனேயே கழிந்திருக்கின்றன. அம்மா இல்லாமல் நானோ நானில்லாமல் அம்மாவோ இருந்த சந்தர்ப்பங்களே இல்லை என்கிற அளவுக்கு வேறு விடயங்களை என்னால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அம்மாவின் வேலைகள் எல்லாமே பார்க்க அழகாக இருக்கும். அம்மா தேங்காய் துருவுவது, காய்கறி நறுக்குவது, உலை துழாவுவது எல்லாமே பார்க்க அழகாக இருக்கும். நாங்களும் ஒருக்கால் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட
30

வைப்பதாக இருக்கும். சாணி போட்டு மெழுகிய அடுப்படிக்குள் அம்மா சமைக்கும் வரை அவவைப் பார்த்தபடியே இருந்து விளையாடிக் கொண்டிருப்பேன். அம்மா அடுப்பு மூட்டுகிற விதம் பார்க்க ஆசையாக இருக்கும். அம்மா வாயால் ஊதுவதும் அது குப்பென்று பற்றிக் கொள்வதும் ஆச்சரியமூட்டுகிற விடயமாக இருக்கும். நான் ஊதுறன் என்று சண்டை பிடித்து ஊதிப் பார்த்திருக்கிறேன். புகையால் கண்களை எரியப் பண்ணியதை தவிர பற்றவைக்க முடிந்ததில்லை. அம்மாவுக்கு எல்லாவற்றையும் கெட்டித்தனமாக நேர்த்தியாக செய்யமுடியும் என்பதை வளர வளர நான் புரிந்து கொண்டேன். ஆனால் என்னிடம் அம்மாவின் அந்த நேர்த்தி பற்றி வியப்பும் ஆசையும் இருந்ததே தவிர அந்த நேர்த்தியான இயல்பு தொற்றிக் கொள்ளவில்லை. அம்மாவிடம் இதற்காக பலதடவை நான் ஏச்சும் அடியும் வாங்கியிருக்கிறேன். ஆனால், அந்த நேர்த்தி ஒழுங்கு எல்லாம் அம்மாவுக்கு மட்டுமே முடிந்தவை. எனக்கு முடியாது என்ற ஒரு எண்ணமே என்னுள் வளர்ந்து வந்திருக்கிறது.
அம்மா சரியான கெட்டிக்காரி. கண்டிப்பான மனுவி. அடிபோடுவதிலும் அவவுக்கு இணையான தாய்மார் ஆரும் இல்லை என்று சொல்லலாம். கெட்டிக்காரி என்றால், ஒரு சின்னக்களவு பொய் கூட அம்மாவிடம் எடுபடாது. உடனை கண்டுபிடிச்சிடுவா. எனது நடையை வைத்தே என்ன நடந்திருக்கிறது என்று நான் வீட்டுப் படலையைத் திறந்து நுழையும் போதே கண்டுபிடிச்சிடுவா. பள்ளிக்கூடத்தில் நான் பலருக்குப் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறேன். மாட்டுப்படாத குட்டிக் குட்டிக் களவுகள் செய்திருக்கிறேன். ஆனால் அம்மாவிடம் அது சாத்தியப்படுவதே இல்லை. எல்லாவிதமான கெட்டித்தனமான கதைகளையும் மீறி அம்மாவுக்கு நடந்தது என்ன என்று சொல்ல முடியும். இது ஒரு பயங்கரமான ஆச்சரியம்தான். இந்தக் கெட்டித்தனம் கூடப் பரவாயில்லை. அதோடு அவ சரியான கண்டிப்பான ஆளாகவும் இருந்தது. அதைவிடக் கஸ்டமாக இருந்தது. பிழையைக் கண்டுபிடிப்பதுடன் மட்டும் அம்மா நின்றுவிடுவதில்லை. அந்தப் பிழைக்கான
31

Page 19
தண்டனையும் கூடவே வந்து சேரும். பொய் சொல்வதும், களவெடுப்பதும், மற்றவர்களுடன் சண்டை பிடிப்பதும், கெட்ட வார்த்தைகளை பேசுவதும், அம்மாவின் உத்தரவில்லாமல் எங்காவது போவதும் என்று இப்பிடி ஒரு நீண்ட பட்டியல் அம்மாவிடமிருந்தன. இவற்றுக்கெல்லாம் வெவ்வேறு அளவிலான தண்டனை கிடைக்கும். தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்து மிகவும் அதிகமாக இருக்கும். மற்றவர்களது பொருட்களில் ஆசைப்படுவதற்கும் களவெடுப்பதற்கும் அம்மாவைப் பொறுத்தவரை எந்த வித்தியாசமும் இல்லை. களவுக்குரிய தண்டனையே அதற்கும் கிடைக்கும்.
ஒரு நாள் நான் முதலாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறேன். இல்லை அரிவரி என்று நினைக்கிறேன். எனக்கு அப்போது வாய்ப்பாடு படிக்கிற வயது வரவில்லை. ஆனாலும் வாய்ப்பாடு என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். சங்கக்கடையில் மண்ணெண்ணை வாங்கி வரும்போது விசயன் வீட்டுக்கு முன்னால் இருந்த குப்பைப் பிட்டியில் மஞ்சள் நிற வாய்ப்பாடு மட்டையைக் கண்டேன். புத்தம் புதிதாக இருந்தது. குப்பைப் பிட்டியில் இருந்ததால் வீசப்பட்டது தானே என்று நினைத்து அதை எடுத்துக் கொண்டு வந்தேன். வீட்டுப் படலையை திறக்கும் போதே மெல்லிய பயம் ஏனோ என்னுள் தொற்றிக் கொண்டது. அடுப்படியிலிருந்த படியே 'உதென்ன கையில' என்ற கேள்வி அம்மாவிடமிருந்து வந்தது. குப்பைப் பிட்டியில் இருந்து எடுத்ததும் தப்பா என்று என்னால் யோசிக்கமுடியவில்லை. "நேரா கையில இருக்கிற சாமனோட அடுப்படிக்கு வரலாம்' என்ற உத்தரவு அம்மாவிடமிருந்து வந்தது. போனேன்.
"எங்கை எடுத்தனி இதை? ஆற்றை வாய்ப்பாடு இது? தெரியாது 'உண்மையைச் சொல்லு' எங்கை எடுத்தனி குப்பைப் பிட்டியிலை- விசயன் வீட்டுகுப்பை பிட்டியிலை' குப்பைபிட்டியே.? அப்ப விசயன் வீட்டிலை கேட்டணியோ இது தேவையில்லையோ எண்டு
32

நான் முழுசினேன். அம்மா மீது எனக்கு கோபமும் அதேவேளை அடிக்கப் போறாவோ என்று பயமும் வந்தது. டக்கென்று வெளியிலே ஒடினேன். அம்மா துரத்தி வந்து பிடித்துவிட்டா. '.பிடி வாய்ப்பாட்டை. கொண்டு போய் உடனை குடுத்திட்டு வா. ஆற்றையேன் சாமானை எடுப்பியோ..?அடி விழுந்தது. விசயன் வீடு போகும் வரை அம்மா பின்னால் தடியுடன் வந்தா. நான் அழவில்லை. நோவையும் மீறி கோபம் வந்ததால் அழுகை வரவில்வை. அம்மாவுக்கு விசர் நாய் கடிச்சு சாகணும் என்று வைரவரிடம் வேண்டிக் கொண்டு போனேன். விசயன் வீட்டில் அவனது அம்மா நின்றா. அவவுக்கு விசயம் விளங்கி விட்டது. "ஐயோ ஏனடியாத்தை பிள்ளைக்கு இதுக்குப் போய் அடிக்கிறாய். நான்தான் அதை எறிஞ்சனான் வெளியில்' என்று அம்மாவைப் பேசினா அவ. அவ எவ்வளவு நல்ல அம்மா. அப்போது எனக்கு அழுகை பொத்திக் கொண்டு வந்தது. நான் திரும்பி ஓடி வீட்டுக்கு வந்தேன்.
அம்மா வந்து என்னைப் பிடிச்சுத் தடவினா. நான் திமிறினேன். என் கோபம் அடங்கவில்லை. அன்று என்னை அப்படிக் கலைத்து வாய்ப்பாட்டை திருப்பிக் கொடுக்க வைத்திருக்காவிட்டால் அடுத்தநாளே என்னை கள்ளன் என்று அவர்கள் சொல்லியிருப்பார்கள் என்றா அம்மா. அம்மா அப்போது சொன்னதை நான் நம்பவில்லை. ஆனால் காலம் எனக்கு அப்படிப்பட்ட பல சந்தர்ப்பங்களை பின்னால் காட்டியது.
அம்மாவிடம் ஒரு சிங்கர் கை மெசின் இருந்தது. எனக்கும் தனக்கும் அம்மா அதில் உடுப்புத் தைப்பா. வெளியிலிருந்தும் அம்மாவிடம் வந்து உடுப்புத் தைப்பிப்பார்கள். கத்திரிக் கோலை லாவகமாக பிடித்து அம்மா துணிவெட்டுவதைப் பார்த்தால் துணி வெட்டுவதெல்லாம் எவ்வளவு சுலபமானது என்று தோன்றும். அந்த மெசினில் அம்மா தைக்கும் போது பக்கத்திலிருந்து அதைச் சுற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அம்மாவின் தையல் வேகத்திற்கு ஏற்ப அதைச் சுற்றுவதில் நான் தேர்ச்சி பெற்றுவிட்டிருந்தேன்.
33

Page 20
ஆனாலும் தேர்ச்சி பெறும்வரை அதில் இருந்த கவனம் பிறகு இருப்பதில்லை. சுற்றுவதில் ஆசை இருந்ததே தவிர. அம்மாவுக்காக விட்டுவிட்டு மெல்லமாக சுற்றும் வேலை எனக்குச் சலித்து விட்டது. வேகமாக மிக வேகமாக சுற்றுவதற்கு எனக்கு விருப்பம். அப்படி என்றால் அம்மா ஊசியை நிப்பாட்டிவிட்டு சுற்றச் சொல்லுவா, ஆனால் ஊசி மேலும் கீழும் இறங்கும் விதத்தில் சுற்றுவது தான் சுவாரஸ்யமாக இருக்கும். அம்மா திருகி விட்ட ஆணியை நான் அவவுக்கு தெரியாமலே இழக்கி விட்டுவிட்டு வேகமாக சுற்றினேன். படீரென்ற சத்தத்துடன் ஐயோ என்ற சத்தமும் கேட்டது. அம்மாவின் விரல் முழுவதும் ரத்தம் ஏதோ செய்து கொண்டிருந்த அம்மாவின் விரலில் ஊசி ஏறி முறிந்து விட்டது. அம்மா அழவில்லை. ஆனால் நான் பயந்து கத்தத் தொடங்கினேன்.
அம்மாவுக்கு நான் அழுவது கவலைப்படுவது பிடிக்காது. ஆறுதல் சொல்வதில் அம்மாவுக்கு இணை அம்மாவேதான். எங்கள் வீட்டுக்கு பல பெண்கள் அம்மாவுடன் கதைக்க வருவார்கள். தங்கள் கவலைகளை சொல்லி ஆறுதல் பெறுவார்கள். அம்மாவுக்கு மற்றவர்கள் கவலையை தனது கவலையாக சுமந்து திரிந்து யோசிக்கும் ஒரு இயல்பு இருந்தது. இதனால் அவவின் ஆலோசனைகள் எப்போதும் எல்லோருடைய பிரச்சினைக்கும் பொருத்தமான ஒரு தீர்வாக இருக்கும்.
(“என் அம்மா நினைவுகளி"லிருந்து ஒரு பகுதி)
34

காளி
அல்லது வீராங்கனைகளில் ஒருத்தி
செவிந்தன்
இரவியும் நானும் தமிழ் சிறப்புப் பாடமாகப் படிக்கத் தொடங்கியிருந்தாலும் மண்சுமந்த மேனியர் நாடகக் காலம் தான் எம்மை மேலும் இறுக்கியது. யாழ் பல்கலைக்கழக 'கலாசாரக்குழு' அது எங்கள் சிலரை நீடுழிய நண்பர்களாக்கி விட்டுப் பின் அருகிப் போயிற்று. அதிலிருந்து எங்களின் குழு வாழ்க்கை வேறு வேறு பெயர்களோடு இன்று வரை இறுக்கமாகியே வருகிறது.
80களின் நடுப்பகுதியது. அந்தக் காலத்தில் தான் சில வேளை இரவியுடன் அளவெட்டியிலுள்ள அவர்களின் வீட்டுக்கு செல்வதுண்டு. அப்போதிருந்தே இரவியின் அம்மாவிடம் அறிமுகமாகினேன். எனக்குள் ஆழமான நேசம் அவா மீது உருவாகியது.
அவா எங்கள் அம்மம்மாவின் தன்மைகள், குணநலன்களோடு ஒத்திருந்தா. நல்ல வெள்ளை, மிகுந்த றாங்கி, ஒரு மிடுக்கு, அதிசயிக்கத்தக்க நேர்மை, துணிவு- இவையெல்லாம் இருவருக்குமே ஒத்துப் போயிற்று. எங்கள் அம்மம்மாவை உறவினர், ஊரவர் 'அல்லி என்று தான் சொல்வார்கள். அவ்வளவுக்கு வித்தியாசமான, அசாத்தியமான குணநலன்கள். இரவியின் அம்மாவையும் உறவினர் சிறிமா என்று தான் சொல்வார்களாம்.
35

Page 21
இரவியின் அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் அம்மம்மாவின் நினைவுகள் வரும். அவ வருத்தமாக கிடந்து உத்தரித்த போது முழுமையாக முறையாக அவஷக்கு பணிவிடை செய்ய முடியாமற் போன சூழலின் கொடுமைகள் நினைவுக்கு 6)/(bLD...
இரவியின் அம்மா கொழும்பில் இரவியுடன் வந்திருந்தா. இது 90களில், கொழும்புக்குப் போகும் போதெல்லாம் இரவியின் கல்கிசை, இரத்மலானை , மொறட்டுவ வீடுகளுக்கு செல்லாமல் நான் வந்ததில்லை. கொழும்பு பயணத்தில் இரவியைச் சந்திப்பதும் ஒரு முக்கிய நோக்கமாக இருக்கும்.
போகும் போதெல்லாம் இரவியின் அம்மாவோடு இருந்து கதைப்பதற்கு ஒரு நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும்.
ஊர்ப்புதினங்களை அவாகேட்கும் விதம் ஆசையாக இருக்கும். அவாவின் அறிவுக்கு எட்டிய வகையில் இரவி வீட்டுக்கு ஒழுங்கான பிள்ளையாக இல்லை என்ற ஆதங்கம் அடிக்கடி வெளிப்பட்டு வந்து போகும். ஆனால் எதிலும் ஒளிப்பு மறைப்பு இல்லை. எல்லாம் வெட்டொண்டு துண்டு இரண்டு என்ற மாதிரி வெளிப்படை. இந்த நாட்களில் அப்படி வெளிப்படையான மனிதரை, அதுவும் பெண்களை காண்பது மிகவும் அரிது.
சரி. எல்லாம் நகர்ந்து போயிற்று. காலம் பல மாற்றங்களை கொண்டு வந்தாயிற்று. இரவி வெளிநாடு சென்றுமாயிற்று.
ஆனால் நான் இரவியின் அம்மா. பரமேஸ்வரி அருணாசலத்தின் தொடர்புகளை நிறுத்தியதாக இல்லை.
ரெலிபோனில் தொடர்புகளை ஏற்படுத்துவேன். கணிரென்று அவவின் குரல் காதுக்குள் கிழித்துக் கொண்டு வரும். "விந்தன் . நான் ஊருக்குப் போக வேணும் ஒருக்கா எண்டாலும், வீட்டைப் பாக்க வேணும், உங்களுக்கு ஏதும் வசதி செய்து தர முடியுமோ?" இப்படிக் கேள்விகள் தான் அடிக்கடி வரும். இரவு நேரங்களில் தான் தொடர்பு ஏற்படுத்துவேன். நீண்ட நேரம் கதைப்பா.
36

என் மனைவி அனுவை, மகள் மதுவை விசாரிப்பா, சிலவேளை மனைவியுடன் கதைப்பா. "விந்தன் அடுத்தமுறை வரேக்கை அவவையும் பிள்ளையையும் கூட்டிக் கொண்டு வாங்கோவன் ஒருக்கா பாக்க ஆசையாய் இருக்கு" இப்படி எத்தனையோ தடவை கேட்டுவிட்டா.
ஒருமுறை அதிகாலை வேளையில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் எங்கள் நண்பன் யோகருடன் சென்றிருந்தேன்.
கதைத்து முடிந்து வருவது பெரும்பாடாயிற்று. அவவும் தன் மகனை ஒத்த மகன்களிடம் கதைக்க நிறைய இருந்தது. "தம்பி அங்க போய் நல்லாக் கஸ்ரப்படுகுது. சுசியும் பாவம். அங்க விறைப்புத் தாங்க முடியேல்லையாம். தம்பி வாழ்க்கையை துலைச்சுப் போட்டன் எண்டு அழுகுது. நான் இஞ்ச கிடந்து இப்பிடி அழுந்துறன். கடவுள் கொண்டு போகவும் மாட்டன் எண்டுது. ஒருக்கா ஊருக்குப் போய் வீட்டையும் அம்மாளாச்சியையும் பாத்திட்டனெண்டால் நிம்மதியாய் செத்துப்போவன். தம்பி பிள்ளைகளையும் பாக்க வேணுமெண்டு தான் ஆசையாய் கிடக்கு.
இரவியின் அம்மா கதைத்துக் கொண்டு போகும் போது நான் குறுக்கிடுவதில்லை. தன் மனதின் சுமை முழுவதும் தீர்ப்பா. தீர்க்க இடம் விட்டுக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்.
அண்மையில் தீடீரென்று ஒருநாள் போன் எடுத்தேன். மிகவும் சந்தோசமாக குரல் கேட்டது. "தம்பியல்லோ வாறான், அடுத்த 6ம் திகதி பின்னேரம் 2.00 மணிக்கு வந்திறங்குகிறான். எப்ப தம்பியைப் பாக்க வாறியள். வரேக்க மறந்து போகாமல் கொஞ்ச மாம்பழம் வாங்கிக் கொண்டு வாங்கோ. தம்பிக்கு விருப்பம்"
இரவி வருகிறான் என்ற சந்தோசம் ஒருபுறம். வவுனியாவில்நல்ல மாம்பழம் இல்லை என்ற சிறு கவலை ஒருபுறம், "நான் நேர வாறன் எல்லாம் கதைப்பம்" என்று போனை வைத்தது ஞாபகம்.
இரவியின் அம்மா தன் ஊரில்-அளவெட்டியில்-யாழ்ப்பாணத்தில் கொண்டிருந்த அன்பு எப்படி ஆழமானது என்பதை அதிகம் அறியும் வாய்ப்பு சற்று நாளைக்கு முன்பு கிடைத்தது.
37

Page 22
இரவி கொழும்புக்கு வந்துநின்ற நாட்கள் அவை- அம்மாவைப் பார்த்தோம். படுத்தபடியிருந்தவா எழுந்திருந்தா. தலைமாட்டில் ரெலிபோன், றேடியோ, ரெலிவிஷன் எல்லாம் இருந்தது. இவைதான் இப்போதைக்கு அவவின் அறிவுத் தேடலுக்கான ஊடகங்கள்.
நீண்டநேரம் கதைத்திருந்தா. இலங்கையின் வரலாறும் தமிழீழ விடுதலைப் போரின் நியாயங்களும் வீரங்களும், தியாகங்களும் எல்லாமே அவவின் கதையில் வந்து போயிற்று. விசயன் - குவேனி கதை எத்தனையோ முறை கேட்டதுதான். ஆனால் அவ சொன்ன போது அதில் ஒரு தனி அழகு, தனி ருசி இருந்தது. தமிழர் பூர்விக சாதிகள் என்பதை அவதான் தள்ளாத வயதில் அசைக்க முடியாத உறுதியோடு கூறியபோது பெருமையாக இருந்தது.
ஏதேதோ காரணங்களால் எமது மக்கள் இடம் பெயர்ந்து சிதைந்து போய் விட்டார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் அவர்களிடமெல்லாம் தமது மண்ணின் மீதான காதல் பெருக்கெடுத்தபடியே உள்ளது. விடுதலைப் போரின் ஒவ்வொரு வெற்றி. களும் அவர்களை மானசீகமாக ஆர்ப்பரிக்க வைக்கிறது. எங்கள் பாடுகள் ஒவ்வொன்றும் அவர்களிடையே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இரவியின் அம்மாவின் கதைகள் உறுதியுடன் வந்த போது எமக்கு உணர்த்திற்று.
இன்றைக்கெல்லாம் பொங்கு தமிழர்களாய் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிறார்கள். எங்கள் தேசத்தலைவனை மனதில் பூசித்தபடியே தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதை காணும் போதெல்லாம் எங்கள் மனம் வெற்றிப் பேருவகையில் மிதக்கும். இரவியின் அம்மாவும் ஒன்று சொன்னா
"இவை சிறிலங்கா இராணுவம், எங்கட தலைவரைப் பிடிக்க எண்டு கணக்கத் தான் முயற்சிக்கினம். ஆனால் அவருமோ தன்ர முறைமையால உச்சிக்கொண்டுதான் வாறார். அவரை இவை ஒண்டும் பண்ணேலா" ஒருநாளுமே அடக்குமுறைக்குள்ளாகாத எங்கள் தலைவனைப் பற்றி அம்மா சொன்னா. அம்மா சொன்னது எங்களுக்கும் நெஞ்சில் பால் வார்த்தது தான்.
38

அந்த நேரம் மட்டக்களப்பின் ஒரு கிராமத்தில் வாழும் 65 வயதுப் பாக்கியம் அம்மா மனதில் வந்தார். தான் போகும் வீதியில் சிறீலங்கா அதிரடிப்படை அதிகாரிக்கும் தனக்கும் நடந்த உரையாடல் பற்றிச் சொன்னாவே அந்த அம்மா.
"தம்பி அந்த அதிகாரி கேட்டார். அம்மா சமாதானம் எண்டால் என்ன உங்களுக்கு என்ன சமாதானம் வேணும் எண்டு. நான் சொன்னன் மவனே வடக்கும் கிழக்கும் தமிழன்ர சொத்து. அதை விட்டுப் போட்டு நீ வந்த வானில ஏறி உன்ர ஊருக்குப் போ. அப்பதான் ராசா எங்களுக்கு உண்மையான சமாதானம். இப்பிடி தான் சொன்னா."
பாவற்குளம் பகுதியில இடம்பெயர்ந்தவை வாழும் முகாமில ஒரு அம்மா (60 வயது) தெரு நாடகம் போடப் போகேக்கை எங்களுக்குச் சொன்னா "தம்பிநாங்கள் எங்கட வீட்ட போகவேணும் அவையள் (ஆமிக்காரர்) தங்கட வீட்ட போகட்டும்"
இந்த அம்மாக்கள் எல்லாம் சொன்னதுதான் இண்டைக்கு தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கை, நாங்கள் எங்களுடைய பாரம்பரிய தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழ விரும்புகிறம் என்பதை தமிழ் மக்கள் இப்படியான மொழிகளில் தான் வெளிப்படுத்துகிறார்கள்.
இரவியின் அம்மாவும் இவ்வாறு தான் தன் தேசியப் பற்றை வெளிப்படுத்தினா. அந்த ஆசைதான் இரவியிடமும் நிறையவே இருக்கிறது. அதுதான் எங்களை எல்லாம் இணைத்தும் வைத்திருக்கிறது போலும்.
எத்தனை காலங்கள் கொழும்பில் இருந்து சில வசதிகளை அனுபவித்திருப்பா. எங்கு எப்படியிருந்தாலும், ஈழத்தமிழர்கள் தங்கள் தேசத்தை தாய் பூமியை, ஆசை மண்ணை மறந்ததாக இல்லை. புலப்பெயர்வுதமிழர்கள் எல்லோருமே ஏதோ ஒருவகையில் இந்த புனித விடுதலைப் போருக்கும் அதன் வேருக்கும் நீர் வார்த்த படியே தான் உள்ளனர்.
39

Page 23
இரவியின் அம்மாவிடமும் அந்தத் தமிழ்த் தேசிய உணர்வு ஆழமாகவே இருந்தது. இந்த உணர்வுகள் எல்லாம் சேர்ந்து தான் பொங்கு தமிழ் என்ற மக்கள் போர் ஈழத்திலேயும் நிகழ்ந்த படியேயுள்ளது. சர்வதேசமும், தென்னிலங்கையும் இவையெல்லாவற்றையும் புரிந்து கொண்டால் எல்லாருமே நிம்மதியா வாழவும் (Մ)Iջեւյմ).
கடந்த 27/09/2003ம் திகதி என் வாழ்நாளில் ஆழப்பதிந்தது. போன வருடம் இதே நாளில் தான் எங்கள் அன்புத் தெய்வம்நாங்கள் பூட்டப்பா என்று எல்லோரும் செல்லமாக அழைக்கும் எங்களது அம்மாவின் தந்தை எமது பேரன் எமது மக்களின் பூட்டப்பா அமரர் கந்தர் அருணாச்சலம் இறந்து போன துயரம்படிந்த நாள். அன்று முழுவதும் அப்பாவின் நினைவுகளிலேயே நான் மூழ்கியிருந்தேன்.
அன்று மாலை தான் 6.00 மணிக்கு இரவியின் அம்மா - பரமேஸ்வரி அருணாசலம் காலம் ஆகி விட்டா என்ற செய்தியும் வந்தது. என் நினைவில் ஒருபோதும் மறக்க முடியாத அந்தப் புனித நாளிலேயே எனது அருமை நண்பன் இரவியின் அம்மாவும் காலம் ஆகிவிட்ட கதை நெஞ்சை வாட்டியது.
இரவியின் அம்மா , இரவிக்கும், அக்காவுக்கும் . தனது மருமக்களுக்கும் பேரர்கள் அறுவர்க்கும் தனது மண்ணின் மீதான பற்றைக் கையளித்துவிட்டு, உறவினர்களையும் அந்த மண்ணோடு வாழ ஆசிர்வதித்துக்கொண்டு விடைபெற்று விட்டா. இரவியும் குடும்பமும் உறவுகளும் இனிதாய் வாழும் வழியை அந்தப் பரமேஸ்வரி - அருணாசலம் வழங்கியபடியே இருப்பா. அவவின் நினைவுகளை நெஞ்சில் நினைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் தம் மண்மீதான ஆசை பெருகட்டும். விடுதலை மூச்சும் வளரட்டும். அவவின் நினைவுகளோடு எங்கள் விடுதலைத் தேவியின் திருமுகம் ஒளி வீசட்டும்.
40

கொற்றவை பற்றிக் கூறினேன்
அ.இரவி
இனி கொற்றவை பற்றிக் கூறுவேன்.
இவாதான் அம்மா என்று நான் முதல் இனம் கண்டது எப்போது? எனக்குத் தெரியாது. அது எவருக்கும் தெரியாது. அம்மா அடிக்கடி சொல்ல ஒன்று கேட்டிருக்கிறேன். அம்மா நிலத்தில் இருந்தபடி சமைப்பா. அடுப்பு வெளிச்சமும் வெக்கையும் அம்மா முகத்தில் படரும். அம்மாவைச் சுற்றி, தேங்காயின் முதலாம் பால், இரண்டாம் பால் கோப்பைகளும், கரைத்த புளிக் கோப்பையும் இன்னும் இன்னும் ஏதனங்களில் நீராயும், மரக்கறிகளாயும், மிளகாய், வெங்காயமாயும், துருவிய தேங்காயப்பூவாயும் இருக்கும். நான் தவழ்ந்து வந்து சிந்தாமல், சிதறாமல் ஒவ்வொன்றாய் அரக்கி வைத்துவிட்டு. தவழ்ந்து போய் அம்மாவின் மடியில் ஏறிப் பால் குடிப்பேன். அது மிக மிக இனித் திருக்கும். ஆனால் அது இனித்த ஞாபகம் எனக்கு இப்போ இல்லை.
எனக்கு இனித்த ஞாபகம் வேறொன்று உண்டு. அப்போது தான் அம்மா தன் முகத்தையும், உணர்வையும், சூட்டையும் என்னுள் இறக்கினா. இன்னொன்றையும் தந்து கொண்டிருந்தா. அது மசியக் குழைத்த சோறு. பருப்பும், உருளைக்கிழங்கும், கீரையும் மசிச்ச சோறு. அது பகலா இரவா ஞாபகமில்லை. ஆனால் "அம்புலி மாமா வா வா" என்று அம்மா பாட்டுப் படித்தா.
"அம்புலிமாமா வா வா வா
அழகழ சொக்கா வா வா வா
எங்கெங்கே போறாய்?
காட்டை போறேன்
காடேன்?
41

Page 24
கம்பு வெட்ட
கம்பேன்?
மாடு சாய்க்க
மாடேன்?
6FIT6oof (3 ITL
சாணியேன்
வீடு மொழுக
வீடேன்?
பிள்ளைப் பெற?
பிள்ளையேன்?
எண்ணெய்க்குளத்தில் துள்ளித்துள்ளி விளையாட
கடைசி வரியில் அம்மா என்னை துக்கி தூக்கி சிரிக்கப் பண்ணுவா, கன்னம் கிள்ளுவா. கொஞ்சுவா. கடிப்பா, என்ரை ராசா, என்ரைதுரை என்று கொஞ்சுவா. என் ஞாபகத்தில் அப்பொழுதுதான் அம்மாவை முதல் காண்கிறேன். எனக்கு அப்போது மூன்று வயது என்றும் ஞாபகம். இரண்டாம் மாடியில் ஏறி வெளிச்ச வீடு பார்த்த ஞாபகம். மூன்றாம் மாடியிலி ஏறி கடலையே பார்த்த ஞாபகம். அம்மா மினுங்கல் கரை வைத்த கறுப்புச் சட்டை போட்ட ஞாபகமும் இருக்கு.
米 米 米 米
அம்மா'கிமோனாபோட்டு பகல் முழுக்க வீட்டிலிருந்த காலத்தில், எங்கள் வீட்டு முற்றத்தில் புளியமரம் இருந்தது. விறாந்தையில் சரஸ்வதியினது படம் இருந்தது. பள்ளிக் கூடம் போகத் தொடங்காத அந்தப்பகல்முழுக்க, அம்மாவின்சீலையை என்னில் சுற்றி இருந்தேன். பனை ஒலையை வெட்டிய கங்கு மட்டையை இரண்டு கையிலும் வீணையாக வைத்திருந்தேன். புட்டு அவிக்கிற நீத்துப் பெட்டியை தலையில் போட்டிருந்தேன். அம்மாவின் குங்குமப் பொட்டையும் இட்டிருந்தேன். எல்லாம் சரி. சரஸ்வதிக்கு கிட்டமுட்ட இருந்தேன். ஆனால் தாமரைப்பூ மாதிரியான ஒன்றுக்கு நான் எங்கே போவது. பனை ஒலையில் இருந்து பார்த்தேன். ஈர்க்கு குண்டியில் குத்தியது. நான் சரஸ்வதி அளவு இல்லாவிட்டாலும் ஓரளவு புன்னகை சிந்திக் கொண்டிருந்த போதும், தாமரைப் பூ மாதிரி ஒன்று அம்பிடாதது கவலையாக இருந்தது.
42

அக்கா பள்ளிக்கூடத்தால் வரும் வரைக்கும் நான் சிலவேளை அப்படி இருந்தேன். ஆனால் அப்படி அடிக்கடி இருக்கவில்லை. அம்மா "குளிரும் குளிரும்" என்று நான் கத்தினாலும், நாம்பிரான் கோயில் கிணத்தடிக்குக் கொண்டுபோய், ராணி சந்தன சவர்க்காரத்தில் நுரை ததும்ப தேய்த்துக் குளிப்பாட்டி விட்டா. சந்தன சவர்க்காரம் இப்போதும் எனக்கு மணக்கிறது. அது அம்மாவின் மணம்.
நாம்பிரான் கோயிலடியில் அது மணக்கிற காலத்தில் நாங்கள் கொழும்பை விட்டு அளவெட்டிக்கு வந்து விட்டோம். இலகடியில் இருந்தோம். சுகுணா, வனிதாவுடன் மாம்பூ பொறுக்கி சோறு கறி சமைத்து விளையாடினேன். ஆசை அத்தை நிறைய உருளைக் கிழங்கு பினைஞ்சு சுகுணா. வனிதாவுக்கு சோறுதித்த வந்தா. "தம்பி ராசா சாப்பிடன்ரா" என்று என்னைக் கெஞ்சினா, நான் வீட்டுக்கு ஓடி ந்ைதன். வீட்டிலை அம்மாவைக் காணேல்லை. எனக்கு அழுகை வந்திட்டுது. "அம்மா" என்று அழுதுகொண்டு வாத்தியரப்பு வீட்டடிக்குப் போனன். அம்மா வாறா. எனக்குச் சிரிப்பு வந்திட்டுது. அம்மாவை ஒடிப் போய்க் கட்டிப்பிடிச்சன். "விடு ராசா." எண்டா அம்மா. அம்மா ஆசையாச் சிரிச்சா. அம்மா எனக்கும் அக்காவுக்கும் நெஸ்ரமோல்ற் வாங்கிக் கொண்டு வந்தா. அதுக்காகத் தான் சங்கக் கடைக்குப் போயிருந்தா.
அப்பாதான் பின்னேரம் உழுத்தம்மா கரைச்சுத் தருவார். அம்மாவுக்கென்று அருமையான பால் பன்னாலையிலையிலிருந்து ஒராள் கொண்டு வருவார். பின்னேரம் முகம் கழுவி பொழுது பட்ட நேரத்திற்கு விபூதிக் குறியோட சேர்ட்டுப் போடாத கறுத்த மேலுடன் அவர் பால் கொண்டு வந்து தருவார். நான் வெறும் போத்தலைக் குடுத்திட்டு பால் போத்தலை வாங்கிக் கொண்டு வருவன். பாலில் இருந்து ஒருமணம் வரும். அது அம்மாவின் வாசம். அம்மா பாலைக் காய்ச்சி இராச் சாப்பாடு சாப்பிட்ட பிறகு, பாலுக்குள்ளை நெஸ்ரமோல்ற் போட்டுக் கரைச் சுத் தருவா. பிறகு ஒரு சின்னட்டில் போத்தலில் இருக்கிற சிக்கன் சூப்பும், மீனெண்ணெய்க்குளிசையும் குடிச்சிட்டுப் படுப்பம்.
நான் பள்ளிக்கூடம் போக மாட்டன் எண்டு போட்டன். அம்மாவை விட்டிட்டுப் போக மாட்டனேயெண்டு போட்டன்.
43

Page 25
"வேல்சாமி மாமா, வைரவநாதன் மாமா மாதிரி பெரிய இஞ்சினியரா வரவேணும். அல்லாட்டில் அப்புலிங்க மாமா மாதிரி பெரிய டொக்டரா வரவேணும். பள்ளிக்கூடம் போ ராசா." எண்டா அம்மா. அப்பிடி ஒவ்வொரு நாளுமே அம்மா சொன்னா. சொல்லிப் போட்டு நான் அழ அழ கையிலை பிடிச்சுக் கூட்டிக்கொண்டு போய் அம்மாவிற்குப்படிப்பிச்சநாகம்மா வாத்தியாரிட்டை என்னைப்படிக்க விட்டா. ஒவ்வொரு நாளும் காலமையில என் கண்ணிர் அதிகமாகப் பெருகியது. ஆனாலும் அம்மா கையைப் பிடிச்சுக் கூட்டிக் கொண்டு போய் பள்ளிக் கூடத்திலை விட்டா.
நாகம்மா வாத்தியார் அன்பாத்தான் படிப்பிச்சா, பிறகு பொன்னம்மா வாத்தியார், அதன்பிற்கு விசலாட்சி வாத்தியார் இடையிலை சூழல் பாடத்துக்கு செல்லாச்சி வாத்தியார் எல்லாரும் சீனன் கலட்டியில அன்பாத்தான் படிப்பிச்சினம். ஆனால் தலைமை வாத்தியாரா இருந்த சிவக்கொழுந்து வாத்தியார்தான் எடுத்ததெற்கெல்லாம் குட்டினார். தலையிலை மொளியன் மாதிரி வீங்கும்.
எனக்கும் மொளியன் மாதிரி ஒரு நாள் வீங்கிச்சு. என்ன காரணத்தால் சிவக்கொழுந்து வாத்தியார் எனக்கு அப்பிடிக் குட்டினார் என்று எனக்கு ஞாபகமில்லை. நான் அழுது கொண்டு அம்மாவிடம் போனேன். அம்மா என்னைப்பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் முடிகிற நேரம் ஒழுங்கையில் வந்து நின்றா. சிவக்கொழுந்து வாத்தியாரின் கார் அதால் போனது. "ஏன் என்ரை மோனுக்குக் குட்டினிங்கள்?" என்று அம்மா காரை மறித்துக் கேட்டா. "ஏதும் பிழை செய்தால் அடிக்கலாம். இப்பிடிக் குட்டினால் மூளையல்லே கலங்கிப் போயிடும்" என்றா அம்மா. சிவக் கொழுந்து வாத்தியார் பிறகு காரை ஸ்டார்ட் பண்ணிப் புகை கக்கிப் போனார். அம்மா தலையைத் தடவி விட்டு வீட்டைக் கூட்டிக் கொண்டு வந்தா.
அக்காவும் வர, அப்பாவும் வர நாங்கள் குசினிக்குள்ளிருந்து சாப்பிட்டோம். அம்மாவின் பக்கத்தில் சோறு கறிகள் இருந்தன. அம்மா ஒரு வாய் சாப்பிட்டு, ஒவ்வொருவருக்கும் தேவையான சோறு கறி போட்டு, பிறகு ஒரு வாய் சாப்பிட்டு நாங்கள் அப்பிடி அப்பிடி சாப்பிட்டு முடித்தோம். என் வயிறு பெருத்திருந்தால் அம்மா நிம்மதிப்பட்டா.
44

நான் மூன்று தரம் போட்டுச் சாப்பிட வேண்டும். அம்மாவின் நிம்மதியும் அது. மகிழ்வும் அது. அதற்காக சனிக்கிழமைகளில் வேள்வி இறைச்சியோ, பங்கிறைச்சியோ எதுவோ வாங்கினா. விளைமீன் ஒன்றே எங்களால் திண்ண முடியும் என்று அதனையோ நாள்தோறும் வாங்கினா. "இன்னும் கொஞ்சச் சோறாவது போடுறன் ராசா" என்று கெஞ்சுவதற்கு ஏதுவாய் அதே மீனைப் பொரித்து வைத்தா. றாலைப் பொரித்தா, சூடையைப் பொரித்தா முரலைப் பொரித்தா. இப்படிப் பொரிக்க முடியாது போகிறநாளில் முட்டையையாவது பொரித்து வைத்தா.
சனிக்கிழமை முழுக்குக்கு இவை எல்லாம் இருந்தன. உடல் முழுக்க காலையில் எண்ணெய் தேய்த்தேன். தலையிலிருந்து நல்லெண்ணெய் ஒழுகிற்று. உடல் பளபளக்க வெய்யிலில் நின்றேன். அம்மா தேசிச்காய் வைத்து அரப்பு அவித்துத் தந்தா. தலை, உடம்பு என்று தேய்த்தேன். உடுப்பு தோய்க்கிற கல்லில் கையை ஊன்றி குனியச் சொல்லி விட்டு முதுகு தேய்த்தா. "இஞ்சை பார் ஊத்தை படை படையா அப்பிக் கிடக்கு" என்று இன்னும் இன்னும் தேய்த்தா. "காணுமெணை, காணுமெணை விடுங்கோ" என்று கத்தினேன். முழுகினேன். என்னிலிருந்து நிறை கொஞ்சம் கழன்று விட்டாற் போலிருந்தது. முழுகி முடித்தவுடன், உள்ளி சுட்டும், பெருங்காயம் இட்ட இரசமும் அப்பா தந்தார். அதன் பிறகு எப்படியோ மூன்றுதரம் போட்டுச் சாப்பிடத்தக்க கறிகளுடன் அம்மா சோறு தந்தா.
அப்படித்தர முடியாத படி மழைக்காலத்தில் ஒருநாள் வந்தது. மழைக்காலத்தில் தீபாவளி நாள் ஒன்றைத் தவிர்த்து சனிக்கிழமைகளில் வேள்வி இறைச்சியோ, பங்கிறைச்சியோ கிடைப்பதில்லை. ஆயினும் அம்மாவுக்கு விளைந்து மலர்ந்த விளைமீன் எப்படியும் கிடைத்துவிடும். ஆனால் அதுவும் கிடைக்காமற் போயிற்று ஒரு முழுக்கு நாளில், அம்மா ஒரா மீன் வெட்டி குழம்பு வைத்தா. அதிலேயே பெரும் பொரியலும் ஆக்கினா. சுறாவோ, திருக்கையோ, கணவாயோ எதுவும் தின்னுகிற சாதியில்லையே நான். மீனென்றால் விளை மீன். இறைச்சியென்றால் கிடாய் இறைச்சி.
"இது என்ன மீன்?" என்றேன் அம்மாவிடம் "அது ருசியான மீன் ராசா" என்றா அம்மா.
45

Page 26
"கேட்டால் கேட்ட கேள்விக்கு மறுமொழி சொல்லுங்கோ. இது என்ன மீன்?"
"இது ஒரா மீன். விளைமீன் மாதிரி நல்லருசி அப்பன்"
"எனக்கு இந்த மீன் வேண்டாம்"
"ஒருக்கா திண்டு பார். இது எப்பிடி ருசியாயிக்கெண்டு பாரன். விளைமீன் மாதிரி இருக்கும்"
"அது உங்களுக்கெல்லோ, எனக்கில்லை. இண்டைக்கு நான் முழுகிறது எண்டு உங்களுக்குத் தெரியும் தானே? பேந்தேன் விளைமீன் வாங்கேல்லை?"
"சரவணமுத்தண்ணை சந்தைக்குப் போகேக்கையும் சொல்லி விட்டனான்ராசா. அவர் போக விளைமீன் முடிஞ்சுது எண்டு சொல்லிப் போட்டார். உவன் பறப்பான் ராசலிங்கமும் இண்டைக்கெண்டு விளைமீன் கொண்டு வரேல்லை. நான் என்னப்பன் செய்ய? முழுகிப் போட்டு இருக்கிறாய். இண்டைக்கு ஒருநாளைக்கு இதைச் சாப்பிடன்"
"வேண்டாம்." இறுக்கிச் சொன்னேன்.
அம்மா ஒரு மாதிரி என்னைப் பாத்தா " விடு ராசா நான் தீத்தி விடுறன்." அம்மா தீத்தத்தித்த நான் அமிர்தம் தான் உண்டேன். ஆனால் அதற்கிடையில் நான் அம்மாவைப்படுத்திவிட்ட பாடு. அம்மா இரங்கியோ, கெஞ்சியோ என்னைப் பார்த்த பார்வை. அம்மாவின் மகன் நான். உண்டு கொழுத்து, ஒரு நோய் வராது நீண்டு வாழத்தானே அம்மா நினைத்தா.
எங்கள் வீட்டு நாய் ரொமிக்கு மரக்கறி பிடிக்காது. அம்மா சோத்துடன் தயிர் விட்டுக் குழைச்சு வைச்சா. சில வெள்ளிக்கிழமைகளில் ரொமி அதைத் தின்றது. பிறகு தயிரும் மரக்கறிகளில் ஒன்று என்று ரொமிக்கு எப்படியோ தெரிந்து விட்டது. தயிருடன் சோற்றைத் தின்ன மறுத்தது. அம்மா கருவாடு வாங்கி அதன் தலைகளைக் கொய்து சோத்துடன் குழைத்து வெள்ளிக்கிழமைகளில் வைத்தா. ரொமி வாலாட்டித் தின்றது. "உனக்கு ஆகலும் செல்லம் கூடிப்போச்சு" என்று அம்மா ரொமியின் குண்டியில் அடித்தா. அது சிரித்து விட்டு அவுக் அவுக்கென்று தின்றது.
46

பிச்சைக்காரன் வீட்டுப் படலை தட்டினபோது அம்மா அரிசி போட்டதில்லை. சில்லறை குடுத்ததில்லை" இப்பிடி உடம்பை $வைச்சுக் கொண்டு பிச்சை எடுக்க வெக்கமா இல்லையா?" என்று ரசினா, "கொஞ்ச விறகு இருக்கு. கொத்தி விடு. சாப்பாடும் காசும் றன்" என்றா. அவன் விறகு கொத்தவில்லை. ஆனால் அப்பாவுக்கு தப்படிச் சாப்பாடு குடுத்தாவோ, எனக்கு எப்படிச் சாப்பாடுதந்தாவோ, பாமாவுக்க எப்படிச் சாப்பாடு குடுத்தாவோ அப்பிடி பிச்சைக்காரனுக்கும் குடுத்தா. ஒரு சின்ன வித்தியாசம், நாங்கள் வீட்டுக் கோப்பையில் சாப்பிட்டம். அவன் வாழை இலையில் சாப்பிட்டான். அவன் சாப்பிட்டு கைகழுவி பிறகு அம்மாவை ஒரு பார்வை பார்ப்பான். ாைய் ருசித்த, வயிறு நிறைஞ்ச நெகிழ்வில் அவன் கை கும்பிடாது. மனசு கும்பிடும்.
米 米 冰 米
நாங்கள் கொட்டிலில் இருந்தோம். பக்கத்தில் பெரிய கல்வீடு
கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அம்மா கட்டுவித்துக் கொண்டிருக்
கிறா. அப்படித்தான் சொல்ல வேண்டும். நான் அதுபற்றி வேறோர் கதை சொல்வேன்.
நாங்கள் இலகடியில் இருந்த ஒரு விடிகாலை பத்மாவதியத்தாச்சி குடும்பம் லொறி நிறைந்த சாமான்களுடன் எங்கள் வீட்டடியில் வந்து இறங்கியது. அது அவர்களுடைய வீடாம் என்று அந்த ஐந்து வயதில் நான் அறிந்தேன்.நாங்கள்பக்கத்துவிட்டுக்கு-வாத்தியாரப்புவீட்டிற்கு குடிபெயர்ந்தோம் அதிலிருந்தும் ஆகாதுஎன்று கண்ட பின்னர், எங்கள் குடிப்பெயர்வு கடல் நோக்கி நகர்ந்தது. அம்மாவின் ஊர் அது. அம்மாவின் உறவு அது. கீரிமலை கடற்கரையில் கேணியடியில், சின்னமாமாவின் வீட்டில் அம்மம்மாவும் இருக்க, நாங்கள் அங்கு வாழ்ந்தோம். அம்மா பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு அது. மூழ்கி முக்குளித்த கடல் அது. மாலைப் பொழுதில் உலாப் போன கடற்கரை அது. எங்கள் வாழ்வும் அது ஆனது. வாடை வீசிய கொடுங்குளிரில் பற்கள் கிடுகிடுத்தன. அலை அடித்து உயரே பனை தொட எழுந்தன.
அப்பா கொழும்பால் வந்தார். அந்த நாள் ஞாபகமிருக்கிறது. அம்மாவுக்கு கோயா பவுடர், முகத்துக்குப் பூசிற லக்ரோகலமைன்
47

Page 27
கிறீம், அஞ்சாறு லக்ஸ் சவுக்காரம் என்றும் எனக்கும் அக்காவுக்கும முந்திரிகைப்பழம், அன்னாசிப்பழம், பியர்ஸ் பழம் என்றெல்லாம் வாங்கிக் கொண்டு வந்தார். அம்மா அதையெல்லாம் பார்த்து விட்டு, "சுவெற்றர் வாங்கிக் கொண்டு வரேல்லையோ?" என்று ஏசினா, "அடட. மறந்து போனன்" என்றார் அப்பா. "போகேக்கிலையும் சொல்லி விட்டானனல்லோ" என்றும் ஏசினா.
பற்கள் கிடுகிடுக்கிற வாடைக்குளிருக்கு அம்மா ஒரு வேலை செய்தா, பெனியனைப் போட்டு விட்டா. அதற்கு மேல் ரீசேர்ட்டைப் போட்டு விட்டா. அதற்கு மேல் சேர்ட்டைப் போட்டு விட்டா. பிறகு அம்மா தன்சீலையால் எங்களைப் போர்த்தும் விட்டா. அந்தச் சீலையிலிருந்துபூச்சி உருண்டை வாசனையெல்லாம் வந்தது. நல்லாயிருந்தது. அம்மா என்னை இறுக்கிக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு படுத்தா. ஆசையா இருந்தது. அம்மா அப்பிடிக் கனநாள் படுத்தா.
வாடைக்குளிரும் போய், காலைப்பனியும் போய், பிறகு வெக்கை வந்ததாக்கும். அம்மா என்னைக் கட்டிப் பிடித்ததை விட்டா. நான் வெறும் மேலுடன் கிடந்தேன். அந்த நாளில் ஒரு பொழுது பட்ட நேரத்தில், அப்பா சொம்பில் தீர்த்தம் கொண்டு வந்தார். எந்தக் கோயிலினதும் தீர்த்தமல்ல அது. எங்கள் வீட்டுத் தீர்த்தம் அது. அளவெட்டி சவாரி வீதியில் அம்பிகாபதி அத்தாச்சி, "பிறகு காசைத் தாங்கோ" என்று கொடுத்த காணியில் வீடு கட்டுகிற ஆயத்தம் நடந்தது. முதல் வேலையாக கிணறு வெட்டினார் அப்பா. பாறையாய் கல்லுக் கிடந்தது. வெடி வைச்சு வெடி வைச்சு பாறை தகர்க்கப்பட்டது. அப்பாவின் சைக்கிளில் இடையிடைநானும் போய்ப்பார்த்தேன். நான் பாராத போதுபாறை பிளந்த நேரத்தில் ஊற்றிலிருந்துதண்ணீர் குபுகுபுவெனப் பெருகியது. அந்தத் தீர்த்தத்தை அப்பா சொம்பில் சேந்திக் கொண்டு வந்த பொழுதுபட்ட நேரத்தில், குபுகுபுவெனப் பெருகிய விதம் சொன்னார். முதல் தீர்த்தம் அம்மா குடித்தா. தன் தலையில் தெளித்தா. அம்மாளே என்றா
அம்மாள் கைவிடவில்லைத்தான். வீடு கட்டுகிற வளவில் ஒரு கொட்டில் போட்டு நாங்கள் குடியமர்ந்தோம். வீடு கட்டக் காணி இருக்கு. காசில்லை. அம்மா எப்பிடி இருக்கிறா என்று பார்க்க இரத்தினமாமா வந்தார். அம்மாவின் ஒன்று விட்ட அண்ணைதான்
48

அவர். ஆனால் அவர் அம்மாவை "தங்கச்சி" என்று கூப்பிட்டு சொந்த அண்ணையாக நிற்பார். அம்மா அவரைக் கண்டு அழப் பார்த்தா. "நான் சீட்டெடுத்துத் தாறன் தங்கச்சி.நீவீடு கட்டத் தொடங்கு."
அம்மா வீடு கட்டத் தொடங்கினா. அத்திவாரம் வெட்டவும் பன்னாலை சிவானந்தண்ணையின் லொறியிலை கல்லுப் பறிக்கவும், மணல் பறிக்கவும், சீமேந்து பறிக்கவும் சீட்டுக்காசு கரைந்து போயிற்று. அம்மாள் கோயிலில் போய் நின்று அம்மா அழுதா. அம்மாளிடம் குறை சொல்லி விட்டு வெளியில் வருகிறபோது தேனாம்பாளக்கா தன் பெரிய குங்குமப் பொட்டுடனும் முக்குத்தியுடனும் வந்தா. "ஏன் பரமேஸ்வரி அழுகிறாய்?" என்று ஒரு வார்த்தை
கேட்டா. அம்மாவுக்கு இன்னும் அழுகை பெருகிற்று.
"வா சிதம்பரநாதனிட்டை ஒருக்காக் கேட்டுப் பாப்பம்" என்று தேனாம்பாளக்கா, அம்மா சொல்லி முடித்த கதைகேட்டுச் சொன்னா. சிதம்பரநாதண்ணைநாதஸ்வரம் ஊதுகிறார்தான்.நல்ல கச்சேரிகள் செய்கிறார்தான். ஆயினும் அவ்வளவு காசு அவரிடம் இருக்குமா? சிதம்பரநாதணன்னை வீடு குடிபுகுந்திருந்தார் அப்போது அன்பளிப்பாக நிறையக் காசும் வந்து சேர்ந்திருந்தது அப்போது, சிதம்பரநாதண்ணையிடம் தேனாம்பாளக்கா கேட்டா. "பரமேஸ்வரியக்காவுக்கு எண்டால் நம்பிக்கை" என்றார் சிதம்பரநாதண்ணை. தவிலில் நல்ல சேவுகம் இல்லாவிட்டாலும் காசு புரட்டத் தெரிந்தவர் பெரிய கணேசண்ணை. அவரும் அம்மாவுக்குக் காசு புரட்டிக் கொடுத்தார்.
அம்மாவுக்கு அப்போது முப்பந்தைந்து வயது. இளம் பருவம். அழகாக இருந்தா. அம்மாவுக்கு இப்படிக் காசு கேட்பதில் நிறையவே வெட்கம், கூச்சம் இருந்தது. அம்மா அதை எனக்குப்பிறகு சொன்னா. "சரியா வெட்கப்பட்டு, சரியாக் கூச்சப்பட்டு, சரியாக் கஷ்டப்பட்டுத் தான் நான் இந்த வீட்டைக் கட்டி முடிச்சன." அப்பா எங்கு போனார் என்று அம்மாவிடம் நான் கேட்கவில்லை. எனக்கு அப்பாவையும் தெரியும். அம்மாவையும் தெரியும். அப்பாவுக்கு கடன் கேட்கவும் தெரியாது. கொடுக்கவும் தெரியது. அம்மாவுக்குச் சேர்க்கவும் தெரியும். செலவழிக்கவும் தெரியும்.
49

Page 28
அம்மா மனம் வைச்சு வீடு கட்டினா, அத்திவாரச் சீமேந்து காய தண்ணி அள்ளி ஊத்தி இறுக்கினா. சுவர் எழ அதற்குத் தண்ணி ஊத்தி இறுக்கினா.கொங்கிறீட் அரிந்துவெய்யிலில் காயவும் தண்ணி ஊத்தினா. செல்லத்துரையண்ணை, சின்னத்துரை அண்ணை, கனகரத்தினண்ணை காந்தியண்ணை, சாமியண்ணை என்று மேசன் வேலை செய்தவைக்கும். நாகமணி அண்ணை. ஐயாத்துரை. யண்ணை சிவஞானமண்ணை, நேரு அண்ணை என்று தச்சு வேலை செய்தவைக்கும் அச்சுதன் அண்ணை. இந்திரன் அண்ணை என்று பனை கீறி தீராந்தி, சிலாகை செய்தவைக்கும் அம்மா அமிர்தம் அமிர்தமாய்ச் சாப்பாடு போட்டா. சாய், அது என்ன சாப்பாடு!
யாரோ ஒருவர் தோட்டம் போய் பத்துப் பன்னிரண்டு வாழையிலை கிள்ளி வருவார். வாழையிலை கழுவி, நிலத்தில் விரித்து எல்லோரும் குந்துவர். வாழையிலையில் சோறு குவியும், மரவள்ளிக்கிழங்குக் கறி கரையில் வைபடும். அது நாளுக்கு நாள் கத்தரிக்காய் வெள்ளைக்கறியாக, கீரையாக, புடலங்காய் வறையாக, கோவாப்பிரட்டலாக, பீற்றுாட் வறுவலாக மாறுபடும். சோற்றுக் குவியலில் ஒரு குழி வெட்டுவார்கள். அம்மா அதனுள் மீன் துண்டுடன் குழும்பு விடுவா. பிறகு மீன் பொரியலையும் வைப்பா. அவர்கள் குழைத்து மீன் துண்டைப் பிய்ச்சு குழையலில் பொதிந்து உறிஞ்சி உறிஞ்சி தின்பதைப் பார்க்கவே எனக்கு வாயூறும். இரண்டாம் தரம் சோறுபோட்டு அதற்குக் கறிகள், குழம்பு விட்டு, அதன்மேல் மாங்காய்ச் சொதியோ, சூடைச் சொதியோ, றால் சொதியோ விட, அவர்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் பினைஞ்சு திரளை திரளையாக்கி வாய்க்குள் அதக்குவார்கள். "சோக்காயிருக்கு அம்மா" என்று செல்லத்துரையண்ணன் ஒருநாளும் சொல்லாமல் விட்டதில்லை. "அம்மாவின் ரை கைபட்டால் பேந்தென்ன?" என்று நாகமணி அண்ணையும் சொல்லாமல் விட்டதில்லை. மற்றவர்களும் வாயால் சொல்லாவிட்டாலும் கண்களாலும் மனசாலும் சொல்லிவிட்டு ஒரு கண் அயர்ந்தார்கள். எழுந்து வேலை தொடர்ந்தார்கள்.
அளவெட்டியில் சவாரி வீதிக் கரையில் நெடுங்கண்ணித் தோட்டத்திற்கு முன்னால், அதன் அயலிலேயே அப்படி ஒர் வீடு இல்லாதபடிக்கு ஒரு பெரும் வீடு, 1967இல் பெரும் வெள்ளம் பாய்ந்த
50

காலத்தில் எழுந்தது. அம்மாவின் பெயரைத்தான் அப்பா அதற்குச் சூட்டினார். ஈஸ்வரி விலா. அதன் கீழ் கட்டி முடித்த திகதியைக் குறித்தார். 6.12.1967 அம்மா போர்ட்டிக்கோவின் சிறிய சீமேந்துத் தரையில் பரமேஸ்வரி என்று ஈர்க்கு கொண்டு ஆங்கிலத்தில் எழுதினா. அதற்குப் பக்கத்தில் எனதும் அக்காவினதும் சிறிய
ாதங்களை சீமேந்து நிலத்தில் பதிப்பிச்சா.
முழுதாக இருபத்தைந்து வருடங்கள் அம்மா அந்த வீட்டில் வாழ்ந்தா. அந்த இருபத்தைந்து வருடங்கள் அம்மா உயிர்ப்புடன் வாழ்ந்த நாட்கள். உறவினர்கள் வந்தார்கள். அம்மா ஒரு நேரமாவது உண்ணக் கொடுக்காது விட்டதில்லை. எனது நண்பர்கள் வருவார். கள். அப்போது எது உண்டோ அதை அவர்கள் உண்ணாமல் போனதில்லை. எங்கள் வீட்டு ஆட்டுக்கும்.நாய்க்கும். கோழிக்கும், பூனைக்கும் அம்மா சாப்பாடு ஊட்டிவிட்டா. அப்படித்தான் நான் அதனைச் சொல்வேன். சாமம் வழிய பூனை திரிந்து விட்டு வந்து கதவடியில் நின்று கத்தும். அம்மா கதவைத் திறந்து பூனையை உள்ளே விட்டு "எங்கை உலாத்திப் போட்டு வாறாய்?" என்று பூனைக்கு ஒரு அடியும் கொடுத்து "நித்திரை கொள்ள விடுறியே, சனியன்" என்று திட்டும் கொடுத்து, பிறகு படுப்பா. இப்படி அம்மா பற்றி அனேகம் சித்திரங்கள் என்னிடம் உள்ளன. விரிக்கப்புகின் வேளை போதாது.
பஞ்ச தினங்கள் ஊருக்கு வந்தன. எங்கள் வீட்டுக்கு வந்ததில்லை. எங்கள் வீட்டின் ஒரு அறைக்கு கண்ணாடி அறை என்று பெயர். அந்த அறைக்குள், சருவங்கள், குடங்கள், குண்டான்கள் என்று பெரிய பெரிய ஏதனங்கள் இருக்கும். அவை அறைக்குள் சும்மா இருந்ததில்லை. நிறைந்து வழிந்திருந்தன. மாவால், உழுந்தால், பயறால், குரக்கனால், ஒடியலால், புளுக்கொடியலால், உப்பால், புளியால், ஊறுகாயால், செத்தல்மிளகாயால், அவித்த மிளகாயால், நிரம்பிக்கிடந்தன. அதே அறைக்குள் கப்பல் வாழைக்குலை அல்லது இதரை வாழைக் குலை அடிக்கடி கட்டப்பட்டிருக்கும். கட்டப்பட்டிருக்கிற காலங்களில் காலை குழல்புட்டு அவிபடும். வெளியில் மிசின் அறைக்குள் வெங்காயக்கட்டு கூரையில் கட்டப்பட்டிருக்கும்.
புளியம்பழம் உதிர்கிற காலத்தில் பன்னாலைக்குப் போய் பச்சைச் கோடன் சாக்கில் புளியை அப்பா வாங்கி வருவார். அம்மா
51

Page 29
காயவைப்பா. அம்மா காயவைக்கும் எதற்கும் நான் காகம் கலைக்க, கோழி கலைக்க போர்ட்டிக்கோவின் கீழ் கதிரையில் புத்தகம் வாசித்துக் கொண்டு இருப்பேன். முகத்தில் கொசு மொய்க்கும். பஞ்சி பஞ்சியாய் வரும் ஆனால் புளியம் பழத்திற்கு காத்து நிற்கத் தேவையில்லை. ஆனால் காய்ந்துமுடிந்த பிறகு அம்மாவுடன் இருந்து புளியங்கோது உடைக்க வேண்டும். அம்மாவுக்குத் தெரியும். பன்னாலையில் எந்த வீட்டு மரம் களிப்பிடிப்பான பழம் தரும் என்று. அதுதான் பச்சைக் கோடன் சாக்கில் வீட்டில் வந்திறங்கும். அம்மா இரண்டு நாளாவது காயவிட்டாதான். ஆனாலும் கோது உடைக்கிற போது களிப்பிடிப்பில் போய் ஒட்டிக் கொண்டு விடும். புளியம்பழத்திலிருந்து கோதைக் கழட்டுவதுதான் கொடுமை. நகக்கண்ணில் கோது குத்தி நோ வந்து விடும்.
பிறகும் அம்மா கோது உடைத்த புளியம்பழத்தை காயவைப்பா. இம்முறை காகத்திற்கும் கோழிக்கும் நான் காவலிருக்க வேண்டும். காய்ந்த பிறகு புளியம்பழத்தை அரிந்து கொட்டை நீக்க வேண்டும். அம்மா அதைச் செய்வா. கந்தியாத்தையும் நாகம்மாவும் வந்து அம்மாவுக்கு உதவி செய்வினம். அரிந்த புளியை இரண்டு பெரிய மண்குடத்தில் உப்பும் போட்டு அம்மா அடைவா. இறுக்கி அடைஞ்சு இரண்டு பெரிய மண் குடத்துப்புளி கண்ணாடி அறையுள் ஏனைய ஏதனங்களுடன் கிடக்கும்.
米 米 米 米
நானும் அக்காவும் சங்கிலி போட்டோம். மோதிரம் போட்டோம். அட்சரக் கூட்டுடன் அப்பாவும் வயிறு வரை நீண்ட சங்கிலி போட்டார். மோதிரம் போட்டார். அக்காவின் நான்கு பிள்ளைகளும் சங்கிலி போட்டார்கள். மோதிரம் போட்டார்கள். எனது இரண்டு பிள்ளைகளும் சங்கிலி போட்டார்கள். மோதிரம் போட்டார்கள். அக்காவும் எனது மனைவியும் விதம் விதமான நகைகள் போட்டார்கள். நல்ல நல்ல சேலைகள் கட்டினார்கள். நான் இரண்டுதரம் மோட்டார் சைக்கிள் வாங்கினேன். அப்பா ஆசைப்படுகிறார் என்று அப்பாவுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கும் எண்ணம் கொண்டேன். இவ்வளவும் இதற்கு மேலும் நிகழ்ந்தது அம்மாவால். அம்மா இல்லையெனில் இது ஒன்றும் இல்லை. அம்மா பின் வளவில்நிறைய முருங்கைகள் நட்டா. வாளியில்
52

தண்ணீரை இழுத்து இழுத்துக் கொண்டு போய் இறைத்தா. வருசம் தோறும்மூன்று, நான்கு பத்தாயிரம் ரூபாக்கணக்கில் அவை பலன் தந்தன. கிழக்குப்பக்கம் எலுமிச்சை மரங்கள் நட்டா. வருசம் ஆயிரம் "யூயிரம் ரூபாக் கணக்கில் அவை இலாபம் தந்தன. கூடு கட்டி கோழிகள் வளர்த்தா. கொட்டில் கட்டி ஆடுகள் வளர்த்தா. எல்லாமே உழைத்துக் கொடுத்தன. அவை தந்த நம்பிக்கையில் அம்மா அப்பாவைக் கூட்டிக் கொண்டு, இந்தியா சென்று காசி, இராமேஸ்வரம் எல்லாம் காட்டினா. கோயில் குளம் என்று கும்பிட்டுத் திரிந்தா. தன் உழைப்பின் நம்பிக்கையில், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் யாவருக்கும் யாவும் வாங்கிக் கொடுத்தா.
நான் வெளிநாட்டில் இருந்து உழைத்த போதும் அம்மா என்னிடம் ஒரு சதம் கேட்டதில்லை. வேண்டியதில்லை. நான் காசு அனுப்புகிறேன் என்று கேட்டபோதும் மறுத்தா. நான் கஷ்டப்பட்ட போது "உனக்குக் காசு அனுப்புகிறேன்" என்று சொன்னா அம்மா. "ராசா உன்னைப் பாக்க ஆசையாய் இருக்கு. நீ ஒருக்கா இஞ்சை வந்து என்னைப்பாத்துட்டுப்போ.நீபோறவாறபயணக் காசைநான் தாறன்" என்று தான் அம்மா சொன்னா. பிறகு நான் "அம்மா ஒகஸ்ட் ஆறாம் திகதி உங்களிட்டை வாறன்" என்றேன். "உண்மையோ ராசா? சரியான சந்தோசம்" என்றா. சந்தோசம் என்று சொன்ன சொல்லின் தொனியை நான் எப்படி விளங்கப்படுத்த? "நீ வாறத்துக்கு காசை அனுப்பி விடுறன்" என்றும் சொன்னா.
s 哗 *
அது 1978ஆம் ஆண்டு. எங்களுரில் அயலில் ஒரு சண்டியன் இருந்தான். எனது நண்பனாய் நடித்தவன் செய்த நாச வேலையில் அந்தச் சண்டியன் எங்கள் வீடு நோக்கி என்னை அடிக்க வருகிறான். அதை நாங்கள் அறிந்தோம். "அவன் வரட்டும் பாப்பம்" என்று அம்மா சொன்னா. வீட்டுப் படலையடியில் கிளுவை மரத்தில் கத்தியொன்றினைக் கொத்தி வைத்தா. சண்டியனின் கை சடக்கென என்னில் பாய்ந்தால், அம்மாவின் கையில் கத்தி இருக்கும். கத்தி அவன் கையை வெட்டும். அது எனக்குத் தெரியும். வெட்டுவதைத் தவிர வேறுவழியில்லை என்றும் தெரியும். சண்டியன் சைக்கிளில் வந்தான். சைக்கிளால் இறங்கிசண்டித்தனம் செய்தான். அம்மா கத்தி கொத்தி
53

Page 30
வைக்கப்பட்ட கிளுவங்கதியாலில் போய்நின்றா. அவன் அம்மாவைக் கண்டான். கத்தி கொத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். சைக்கிளை எடுத்துப் போய்விட்டான்.
அது 1983ஆம் ஆண்டு இனப்படுகொலை நிகழ்ந்து ஒருமாதம் கழித்து செப்ரம்பர் முதலாம் திகதி காங்கேசன்துறையில் வைத்து இராணுவம் என்னைப் பிடித்து பலாலி இராணுவ முகாமுக்குக் கொண்டு போய்விட்டது. அம்மா அதைக் கேள்விப்பட்டா. ஒருவருக்கும் ஒன்றும் சொல்ல வில்லை. தட்டிவானில் ஏறினா. பலாலி இராணுவ முகாமுக்குள் நுழைந்து, "என்ரை மகன் எங்கே?" என்று அட்டகாசம் செய்தா. ஆர்ப்பாட்டம் செய்தா. நான் அதற்குள் விடுதலையாகி விட்டிருந்தேன்.
2003ஆம் ஆண்டு செப்ரெம்பர் 24ஆம் திகதி வவுனியா நகரில் பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெறுகிறது. மிக மிகச் சின்ன இளைஞன் சிவப்புத்துணியில் சண்டிக்கட்டு கட்டியிருக்கிறான். மஞ்சள்துணியில் தலைப்பாகை கட்டியிருக்கிறான். கையில் புலிக் கொடி வைத்திருக்கிறான். நெற்றியில் திலகம் முகமெங்கும் உட்லெங்கும் செஞ்சாந்து வர்ணம். "என்னை விடுங்கோ. எங்கன்ரை நிலத்திலை நாங்கள் எங்கன்ரை கொடியை ஏத்தவேணும்" அவன் கத்துகிறான். அவனைச் சூழ அவனது தோழர்கள். பறை அடிக்கிறார்கள். பறை முழக்கம் உயர உயர எழுகிறது. அவன் ஆவேசம் கொள்கிறான். குழுமிநின்ற பல்லாயிரக்கணக்கானோருக்கு மத்தியில் அவன் கூட்டம் போகிறது. நடுவில் உயர எழுந்த கம்பம். அவன் புலிக் கொடியை வாயில் கவ்வியபடி கம்பத்தில் ஏறுகிறான். பறை உரக்க உரக்க எழுகிறது. ஓங்கி ஓங்கி ஒலிக்கிறது. அவன் உச்சத்துக்கு ஏறிவிட்டான். வாயில் கவ்வியிருந்த கொடியை கையில் எடுத்து விரித்துக் காட்டுகிறான். கூடியிருந்த சனம் திரளாக, ஆவேசமாக முழங்குகிறது. அக் கொடியை கட்டுகிறான். ஏற்றுகிறான்.
நான்சிலிர்த்துப் போய்நிற்கிறேன். சிலிர்த்துசிலிர்த்துக் கண்கள் பொங்குகிறது. உடல் நடுங்கத் தொடங்கியது. கால் உதறத் தொடங்கியது. அந்த உணர்வுப் பெருக்கை, உணர்ச்சிச் சுழிப்பை எப்படி வர்ணிப்பேன்? ஆனால் அம்மாவுக்கு எப்படியோ வர்ணித்தேன்.
54

அம்மாவும் சிலிர்த்து சிலிர்த்து அதைக் கேட்டா. அம்மாவினுள்ளும் ஆவேசம் சுழன்றாடியது கண்ணில் தெரிந்தது. அம்மா பிறகு சொன்னா "தமிழுக்காக, எங்கன்ரை நாட்டுக்காக நாங்கள் உயிரைக் குடுக்கத்தான் வேணும்"
நான் இந்தக் கதையை அம்மாவுக்குச் சொன்னது வியாழக் கிழமை (25ம் திகதி) இரவு. பிறகு வெள்ளிக் கிழமையாயிற்று. அம்மாவும் ஓயாமல் நிறையக் கதைத்தா. எல்லாம் கதைத்தா. வீடு கட்டின கஸ்டம் கதைத்தா. அப்பா பற்றிக் கதைத்தா. அக்கா பற்றிக் கதைத்தா. என் குடும்பத்தைப்பற்றிக் கதைத்தா. சின்னச் சின்ன இடர்கள், மகிழ்வுகள் பற்றியெல்லாம் கதைத்தா. வாழ்ந்த வகை சொன்னா. வாழவேண்டிய வழியும் சொன்னா.
நடக்கவே இயலாத அம்மா, 1992 யூலையில் தன் வீட்டை விட்டு அளவெட்டியை விட்டு, அம்மாள் கோயிலை விட்டு வந்தபிறகு, இன்னும் போக முடியவில்லையே என்கின்ற ஏக்கத்துடன் வாழ்ந்தா. நாளும் பொழுதும் அதுவே ஏக்கமாக இருந்தது. அந்த ஏக்கமே அம்மாவைத் தின்று கொண்டிருந்தது. வீடு, அளவெட்டி, அம்மாள். அந்தஏக்கமே அம்மாவின் தீரா நோய் நோய்வாய்ப்பட்டு, நடக்கவே இயலாநிலையில் அம்மாநான்கைந்து வருடங்கள் கழித்தா. அதுவே அம்மாவின் நரகல்நாட்கள். மிகமிகச்சுத்தத்தைப் பேணுகிற அம்மா அசுத்தத்தில் வாழவேண்டி வந்தது. அதுவே மகா கொடுமை. அந்த நரகலை நான் விபரிக்க விரும்பவில்லை.
சனிக்கிழமை (27.9.03) காலையில் அம்மாவின் முகம் வீக்கம் கண்டது. "என்னம்மா ?" என்றேன். "இருமி இருமி வீங்கியிருக்கு" என்றா. ஆஸ்பத்திரிக்கு போவமென மாட்டண் எண்டிட்டா. அம்மாவின் டொக்ரர் கயிர் அவர்களுக்கு போன் பண்ணினோம். வாறேன் என்றா. பின்னேரமே வந்தா. சோதித்து விட்டு "கிற்னியிலை பிரச்சினையிருக்கு உடனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போங்கோ"
o 60s DMT.
அம்மா வரமாட்டன் என்றா. "வேண்டாம் ராசா. இண்டைக்கு இரவைக்குப் பார்த்திட்டு நாளைக்குப் போவம்" என்றா. “இல்லை உடனை போவம்" என்று நானும் கோபியும் வில்லங்கப்படுத்தினோம்.
55

Page 31
"இல்லை அப்பன் ஆஸ்பத்திரியிலை சேலைன் ஏத்த ஊசி குத்துவாங்கள். அதை என்னாலை தாங்க ஏலாது ராசா" என்றா. எனக்கு விளங்கி விட்டது. அம்மா வேறொன்றை யோசித்து விட்டா. அம்மா அதை எனக்கு சொல்லியுமிருக்கிறா. வருவோர் போவோரிடமும் சொல்லியிருக்கிறா. 'தம்பி திரும்ப இங்கிலாந்துக்குப் போறதற்கிடையில் நான் செத்திட வேணும்" இதை அடிக்கடி சொல்லியிருக்கிறா. அதில் ஒர்மமாயும் இருந்திருக்கிறா.
"என்னாலை நீங்கள் ஒரு கரைச்சலும் படக்கூடாது" என்றும் சொல்லியிருக்கிறா.
நான் அக்காவுக்கு போன் பண்ணிச் சொன்னன் "அம்மாவுக்கு ஏலாமல் இருக்கு. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போப்போறம்" அக்கா தான் உடனே வருகிறேன் என்றா.
கோபி கதிரையில் இருந்தான். அம்மாவுக்குப் பக்கத்தில் நிலத்தில் நான் இருந்தேன். அம்மா என் கையைப் பிடித்தபடி எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினா. அம்மா ஒன்றை உறுதியாகச் சொன்னா, "நான் சாகப் போறன்" அப்பிடிச் சொன்னதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்பா காலமாக முன்னும் அப்பிடிச் சொன்னதை நான் மறித்து. மறுத்துக் கொண்டிருந்தேன். அது ஞாபகம் வர நான் அம்மா பேசுவதை ஒன்றும் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். அம்மா நான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் சொன்னா, "பிள்ளைகளை மருக்களை நல்ல இடத்திலை கலியாணம் பண்ணிக்குடு, ரதீப் பாவம். அவனைக் கைவிட்டிடாதை." என்றா. அம்மா எது சொன்ன போதும் அழவில்லை. இறுதியாக இதைச் சொன்னா, "நான் செத்தாப் பிறகு அப்பாவுக்குப் பக்கத்திலை என்னைத் தாட்டுப் போடுங்கோ"
பின்னேரம் ஐந்து மணியாகிறது. அக்கா வந்து விட்டா. அக்காவுடன் ஆர்த்தி, மடத்தடி மாமா, வசந்தா அத்தாச்சி, செல்வராசண்ணை எல்லோரும் வந்தனர். அம்மா கொஞ்ச நேரம் எல்லாருடனும் கதைத்தா. பிறகு அக்கா அம்மாவுக்கு உடுப்பு மாற்றிய பிறகு, படுக்கையில் கிடந்து மூச்சுத் திணறலில் துடித்தா. கோபி ஒட்டோவைக் கூட்டி வந்தான். நான் அம்மாவை அப்படியே
56

அள்ளித் துரக்கிக் கொண்டு ஒட்டோவில் ஏற்றினேன். அக்காவின் டியில் அம்மாவின் தலை இருந்தது. எனது மடியில் அம்மாவின் கால் இருந்தது. ஒட்டோ வேகம் பிடித்தது. அம்மா கண்ணை முடி மூச்சை வழ்டப்பட்டு விட்டா. அக்கா "என்னம்மா செய்யுது, என்னம்மா செய்யுது" என்றுதலையைத் தடவித்தடவிக் கேட்டா. ஒன்றும் கேட்க வேண்டாம் என்று அம்மா கையால் சைகை செய்தா. மூச்சு குறட்டைச் சத்தம் மாதிரி வாயால் வந்து கொண்டிருந்தது. தெகிவளையில் அப்பாவைத் தாட்ட சுடலையைக் கடக்கிற போதில் வாயில் வந்து கொண்டிருந்த மூச்சு வராமல் விட்டது. அப்பாவின் மரணத்தை மறுக்காத அதே வெள்ளவத்தை டெல்மன் மருத்துவமனை அம்மாவின் மரணத்தை உறுதிப்படுத்தியது. பெரும் கேவல் எழவில்லை. ஆனால் "அம்மா அம்மா" என்று அக்காவும் நானும் அரற்றி அரற்றி அழுதோம்.
எனது பிறந்த நாள் அன்று (செப்ரம்பர் 28) அப்பாவைத் தாட்ட அதே சுடலையில் அப்பாவைத் தாட்ட இடத்திலிருந்து கொஞ்சம் பக்கத்தில் அம்மாவைத் தாக்க இடம் கிடைத்தது. அம்மாவை கிண்டிய நிலத்தில் வைத்து மூன்று முறை நான் மண்ணள்ளிப் போட்டேன்.
எவரைக் கண்ட போதும், எந்தத் தெய்வத்தைநினைந்தபோதும் 6ான் கை கூப்பியதில்லை. அம்மாவை நினைந்த போதெல்லாம் என் கை கூப்பாமல் விட்டதுமில்லை.
இதுகாறும் நான் கொற்றவை பற்றிக் கூறினேன்.
57

Page 32
கீரிமலை
நாகலிங்கம் - பொன்னம்மா புதல்வி
பிறப்பு திகதி இடம்
தந்தை, தாய்
அணர்னாமார்
தம்பி
மனம்முடித்தது :
கரம் பிடித்தவர்
ஈன்றோர்
ஈன்றோர் வழி மருகர்
மகள்வழி பேரர்
மகன் வழி பேரர் :
பரமேஸ்வரி (1930 - 2003)
16.02.1930 கீரிமலை
: நாகலிங்கம் - பொன்னம்மா
: கனகரத்தினம்
இராசலிங்கம் சிவசுப்பிரமணியம் தியாகராஜா விசுவலிங்கம்
: நடராசா
27.08. 95
அருணாசலம் (அளவெட்டி)
சியாமளா (1957)
இரவி (1960)
பத்மசிகாமணி சுசிலா
L JITL (1 1976) கோபி (1977) Tg5 (1982) ஆர்த்தி (1990)
சஞ்சயன் (1988) சஞ்சுதன் (1988)
58

சகோதரர் வழி மைத்துனிமார்
துணைவன் வழி
மைத்துனர்
சகோதரர் வழி மருகர்
இராசிப்பிள்ளை செல்லம்மா சரஸ்வதி விமலா பரமேஸ்வரி நாகரத்தினம் ஞானேஸ்வரி
U6)j6TubLDIT + (ditj60di ju JT) கெல்லத்துரை + (நாகம்மா) மகேஸ்வரி + (மாரிமுத்து) நாகரத்தினம் + (விஸ்வலிங்கம்)
செல்வராசா + (இராசேஸ்வரி) மாணிக்க வாசகர் ஜலஜக்குமாரி + (பத்மசிங்கம்) (கனகரத்தினம் + செல்லம்மா) இராசமணி
சிவபாக்கியம் சிவசுப்பிரமணியம்
நாகேந்திரராசா + (கனகாம்பிகை) தெய்வேந்திரராணி + (தம்பித்துரை) லிங்கேந்திரராணி + சண்முகதாஸ்
விஜயகுமார் + இரதி நிரஞ்சனா + சிவகுமார் விஜயதாஸ் விஜயேந்திரன் + (சுமதி) விஜயசீலன்

Page 33
துனைவர் வழி மருகர்
கற்றல்
காலம் ஆதல்
Iஞ்சுளா + (தங்கரத்தினம்) தர்மதாஸ் + இரதி) சிவதாஸ் + நிர்மலா) அகிலன் + (சாந்தி) குமரன் + மஞ்சு
சுரேஸ்
பத்மாவதி (திருஞானம்) அம்பிகாபதி (தர்மலிங்கம்) பத்மசிகாமணி (சியாமளா) சிறீரஞ்சிதமலர் (தனராஜா) வசந்தா (செல்வராஜT)
தியாகேஸ்வரன் தங்கேய்ேவரன் சிறீதரன்
எஸ்கரன் JigbJENTIT
வனிதா
மெய்கண்டான் வித்தியாசாலை, இளவாலை
27 செப்ரம்பர் 23
GO

W // |
}
,sae■
----
வரி
மேளப்
LIII
(து եմնIT3 5լյլր
__N
(1951)

Page 34

| }
Ä No.
|
|-} W //
sae W
|-
// },
V
| , |- s.
|
//
: sae
//
//
\, //
|-
|
மகள் சியாமளா (1957)
} |- | |
W
இரவி (1960)
IIIT

Page 35

.
|-,,
| ||
|- |-
|
W
7′
sae
sae ae

Page 36

மானுடம் தெரிந்தவர்கள் மனிதம் மிளிந்தவர்கள்
இவர்களுக்கு என் வணக்கம்
1995 யூலை 6ம் திகதி, என்னுடைய அப்பா என் மடியில் இறந்து போகிறார். இறப்பதற்கு சில நிமிடங்களின் முன் நான் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி சில விடயங்கள் உரைக்கிறார். அதில் ஒன்று "அம்மாவைக் கவனமாகப் பார் ராசா. அம்மா எல்லோரோடையும் ஒத்துப் போக மாட்டா. நீதான் அம்மாவைக் கண் கலங்காமல் பார்க்க வேண்டும். அம்மா பாவம்."
அப்பா சொன்ன கடமைகளிலிருந்து நான் வழுவி விட்டேன். அம்மாவை நிரந்தரமாகக் கண் கலங்க விட்டு விட்டேன். எனக்கு சிறீலங்கா தேசியப்புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டது. நான் இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானேன். 1995 டிசம்பர் 24 ஆம் திகதி நான் அம்மாவை விட்டு அகன்றேன்.
அன்றிலிருந்து அம்மா உயிர்வாழ, உணர்வுடன் வாழ, பலர் பலவாறாக, நெஞ்சத்தால், நினைவால், செயலால், சொல்லால், வாழ்வால் உதவி புரிந்தார்கள். ஆறுதலாக இருந்தார்கள். அவர்கள் யாவரையும் இயலுமானளவு நினைவுகூர்கின்றேன். நன்றி சொல்கின்றேன். மேலும் மேலும் அத்தகைய காரியம் புரியும் அவர்களை வரவேற்கின்றேன்.
எத்தனையோ இடர்ப்பாடு. எத்தனையோ இக்கட்டு. எத்தனையோ இன்னல். சொல்லமுடியாத, எழுத முடியாத துன்பம். இவற்றினிடையேயும் என் அக்கா (சியாமளா) அம்மாவைக் கவனமாகப்
61

Page 37
பார்த்தா, அம்மா என்பதற்காகப் பார்த்தா, அதற்கும் அப்பால் ஆகலும் இரக்கம் கூடியும் பார்த்தா. இதற்கெல்லாம் என்ன செய்வேன் அக்காவுக்கு.
என் மருமக்கள், என் செல்வங்கள் கோபி, ரதீப் இந்தச் செல்வங்கங் என் அம்மாவை தங்கள் அம்மம்மாவை ஒரு குறையும் விடாது காத்தார்கள். மகன் இல்லாத போது மகன்களாய் நின்று, அளவிடமுடியா அன்பு செய்து, குறும்கு செய்து, குழப்படி விட்டு அம்மா உயிர்ப்புடன் வாழ உதவி செய்தார்கள். அவர்கள் நான்கு கைகளையும் என் கைகளுள் பொத்தி வைத்து அன்பு சொல்கிறேன்.
தொலை தேசத்தில் இருந்தாலும் மூத்த பேரன்பாபு காசு அனுப்பி தொலைபேசியில் கதைத்து அம்மாவுக்கு ஆறுதலாக இருந்தான். அவனைக் காணாது இறப்பதுதான் அம்மாவின் அதிக ஏக்கமாக இருந்தது. அப்படித்தான் ஆர்த்தி. எங்களுக்குக் கிடைத்த ஒரேயொரு பெட்டைக்குட்டி, அம்மாவின் ஒரே மகளின் ஒரே மகள் அவள். அவளைக் கண்டால் அம்மாவின் முகம் விரிவதைப் பார்க்க வேண்டும். அம்மாவின் ஒரே ஆறுதலும் அவள்தான்.
துணிந்தால் துயரமில்லை துக்கமில்லை வெட்கமில்லை பணிந்தால் தான் அடக்கி வைப்பார் - மகளே பாய்ந்தாலே அடங்கி நிற்பார் என்று அம்மா ஒதுவதும் அவளுக்குத்தான்.
எனது துணைவி சுசிலா இங்கு வசிக்கும் காலம் வரை (1999 ஒகஸ்ட்) அம்மாவுக்கு இன்னோர் மகளாக இருந்தா. பணிவிடைகள் பல செய்தா. அம்மா இறக்கும் வரை அதை எனக்குச் சொன்னா. சுசியல்லோ, எனக்கு எல்லாம் செய்தா என்று சொல்வா. சுசியுடன் என் மைந்தர் சஞ்சயன், சஞ்சுதன் இருவரும் அம்மாவுக்கு ஆறுதலாக இருந்தனர். அவர்களைக் காணாததும் அம்மாவின் ஏக்கங்களில்
ஒனறு.
சுசியின் அம்மா (சோதி) சுசியின் தங்கை (சுபத்திரா) இவர்களும் அம்மாவுக்கு அனுசரணையாக இருந்தார்கள். ஆறுதலாகக் கதைத்தார்கள். இப்படி ஆறுதலாக இருந்து, அடிக்கடி நேரிலோ
62

தொலைபேசியிலோ கதைத்து அம்மாவில் அக்கறைப்பட்டார் பலர். எல்லோரையும் நான் நினைவு கூர்வேனா தெரியாது. எனது நண்பர்கள் என்று விந்தன், சிதம்பரநாதன், பத்மினி அக்கா, எஸ்.கே.விக்கினேஸ்வரன் இவர்களை நான் குறிப்பேன். -
அம்மாவுடன் அடிக்கடி நேரிலும் தொலைபேசியிலும் கதைத்ததும் தன்னை ஒரு மகளாக நினையுங்கோ" என்று சொல்லியும், அம்மாவின் இறுதிச் சடங்கிலும், அந்தியேட்டி வரையிலும் எங்களுக்கு மிக உதவியாக இருந்தவர்.தவமலர் சின்னம்மா. அவரையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். அடிக்கடி வந்து அம்மாவுடன் ஆறுதலாகக் கதைத்தவர் சிந்தாமணி அத்தை. அவரையும் இங்கு குறித்தல் வேண்டும்.
அவளவையல்லோ தெய்வங்கள் என்று அம்மா தொலைபேசி. பில் குறிப்பிடுவா. அம்மா குறிப்பிட்டது அம்பிகாபதி அத்தாச்சி. குஞ்சத்தாச்சி. வசந்தா அத்தாச்சி இவர்களைத்தான். அம்மாவின் தேவையறிந்து மனசறிந்து வார்த்தையாலும், செயலாலும் ஆறுதல்
அளித்தோர் இவர்கள்.
முக்கியமாக ஒருவர். அம்மாவின் ஏழு சகோதரர்களில் இப்போதும் இருப்பவர். மடத்தடி மாமா (விசுவலிங்கம்) அம்மா சத்திர சிகிச்சை செய்த போது உடனிருந்து அம்மாவைப் பார்த்தார். மடத்தடி அத்தையும் (நாகரத்தினம்) அம்மாவில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
அளவெட்டியில் அயல் வீடாக இருந்த நிர்மதியம்மா, நிர்மதி பக்கா. இவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு அம்மாவுக்கு ஆறுதலாக இருப்பார்கள். அம்மாவின் தேவைகளை நிறைவேற்றுபவர் நிர்மதி அக்கா. அவ்வாறு ஒருவர் அளவெட்டியில் அயல் வீடாக இருந்த நாகம்மா, அவர் தன் மகன் உதயகுமாரை அனுப்பி, அம்மாவுக்கு ஆவன செய்தார். அம்மாவின் இறுதிக்காலத்தில் தன் பெறாமகளான தியாகினியை (ராசாத்தி) அனுப்பி அம்மாவைப் பாராமரிக்க வைத்தவர் நாகம்மா. தியாகினியும் அம்மாவின் கடுஞ்சொல் தாங்கி அம்மாவைக் கவனமாகப் பார்த்தா,
63

Page 38
மச்சாள் தங்கமல்லோ? என்று அம்மா அடிக்கடி கிறாயிட்டி அத்தையைப் (பரமஸ்வரி) பற்றி அடிக்கடி சொல்வா, அவா கனடாவிலிருந்து இலங்கைக்கு வருகிற போதெல்லாம் அம்மாவுக்கு மிக ஆறுதலாக இருந்தா.
மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள், கோபியினதும் ரதீப்பினதும் நண்பர்களை, ரதீப்பினது சிங்கள நண்பர்கள் யாப்பா, ஆசிரி, கலும் ஆகியோர் அம்மாவுக்கு மிக உதவி செய்தவர்கள். அதிலும் யாப்பா அம்மாவுக்கு உடுப்புத் தோய்த்தும் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் வந்து அம்மாவை சுகம் விசாரித்து விட்டு போவார். அவ்வாறு தான் கோபியின் நண்பர்கள் புஷ்பாகரன், ரவியழகன் போன்றோரும் அம்மாவில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். புஷ்பாகரன் அம்மாவின் தேவை அறிந்து உதவி புரிந்தவர்.
கல்யாணி, ராஜேஸ்வரி சண்முகம், சுமதி அம்மா இவர்கள் அம்மாவுக்கு அனுசரணையாக இருந்தவர்கள். ராஜேஸ்வரி சண்முகம் தமிழ் உலகம் அறிந்த முதல்தரப் பெண் அறிவிப்பாளர். அந்தக் கர்வம் சிறிதும் இன்றி அம்மாவுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்தார். அதைப்பார்த்து நான் மிக ஆச்சரியப்பட்டேன்.
அம்மாவின் இறுதிக்காலம் வரை அம்மாவிற்கு வைத்தியம் பார்த்தவர் டொக்டர் கயிர் அவர்கள். அவர் ஒருமுறை இங்கிலாந்துக்குச்சென்று வந்த போது நீங்கள் இனிமேல் வெளிநாடு போகக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டார் அம்மா. அவரும் ஒம் அம்மா, நான் இனி உங்களை விட்டுப் போக மாட்டேன் என்றார். அவ்வளவு உரிமை கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி என்ற ஒரு சொல் போதுமா?
அம்மாவின் இறுதி நிகழ்வின் போது கூட நின்றோர் பலர். நான் திகைத்துத் தடுமாறிய போது சுசியின் தம்பிமார் கண்ணதாஸ் , வினாயகதாஸ் இருவரும் வலதுகை, இடது கையாக நின்று இயலுமான உதவி செய்தனர். நிதி உதவியினை உடனடியாக இரத்மலானை இந்துக்கல்லூரி அதிபர் திரு.மன்மதராஜன் வழங்கினார். அவ்வப்போது என் தேவைக்கு மிக அனுசரணையாக இருந்தவர். ருசாங்கன், மற்றும் ரவியழகன், புஷ்பாகரன், யாப்பா, கலும்
64

இவர்களும் இயன்றளவு உதவி செய்தனர். தவமலர் சின்னம்மா பல சந்தர்ப்பங்களில் வழிகாட்டியாக நின்றார். விந்தன், நித்தியானந்தன் இவர்கள் ஆறுதலாக துணை நின்றனர். மடத்தடி மாமா (விசுவலிங்கம்) எல்லாக் கடமைகளிலும் பங்கேற்று குடும்பத்துக்குப் பொறுப்பாக, உதவியாக இருந்தார்.
இம்மலர் சிறப்புற படைப்புக்கள் தந்த பேரா.கா.சிவத்தம்பி. மு.பொன்னம்பலம், சு.வில்வரெத்தினம், எஸ்.கே.விக்கினேஸ்வரன். செ.விந்தன். கருணாகரன், முல்லைக்கமல், சுஜிந்திரா, ஆரதி ஆகியோருக்கு எனது பேரன்பு.
மிகக்குறுகிய காலத்தில் இக்கல்வெட்டை அழகுற பதிப்பித்துத் தந்தோன் என் மிக இனிய நண்பன் கேசவன். அவனுக்கும் ")வன் துணைவி சரோஜினிக்கும் என் மிக்க மகிழ்வைத் தெரிவிக்கின்றேன்.
அம்மாவின் மரணச் செய்தி கேட்டு இரங்கல் ஆறுதல் சொன்னோருக்கும். தெரிவித்தோருக்கும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டோருக்கும். அந்தியேட்டி நிகழ்வுக்கு கலந்து சிறப்பித்தோருக்கும் என் மிக்க நன்றி.
அ.இரவி
352, Kingston Rd, London SW208LN, U.K. Tel:(0044) (0) 2085439919
e-mail : iravia@hotmail.com
65

Page 39


Page 40


Page 41