கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆச்சி நீ காளி

Page 1
ஆக்கியோன் வே.
 

வரதசுந்தரம்

Page 2

GeFF IẾi − காளி
ஆக்கியோன் வே. வரதசுந்தரம்
சிவகாமி அம்மாள் பப்ளிகேஷன்ஸ் 25, 36வது ஒழுங்கை, கொழும்பு-06.

Page 3
திருக்கோணமலை அருள்மிகு நீ பத்திரகாளி அம்பாள் ஆலய இலட்சார்ச்சனை நன்நாளில் (29-01-2004) இந்நூலை வெளியிட்டு அன்பர்களுக்கு இலவசமாக விநியோகிக்க காளி ஆச்சியின் அருள்
GIUS) ཨ་ཧྥུ་

* விநாயகர் வணக்கம்
தி ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலு மெயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
தேவாரம் இ) பிடியதனுருவுமை கொளமிகுகரியது V/7 V7 வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
K கடிகண பதவர அருளினன் மிகுகொடை GNO இF வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.இ

Page 4
எமது வெளியீடுகள்
. காளி ஆச்சி
- வே. வரதசுந்தரம்
யாழ் திருநெல்வேலி அருள்மிகுறி வீரகத்தி விநாயகர் ஆலய வரலாறு - சிவநெறிச்செம்மல்
வை. அநவரதவிநாயகமுர்த்தி
. காளி ஆச்சி பாமாலை
- வில்வராணி வரதசுந்தரம்
. சிவநெறிச் சிந்தனைகள்
- சிவநெறிச்செம்மல்
வை. அநவரதவிநாயகமுர்த்தி
சாயி பாபா சாயி நாதா!
- செ. நடேசபிள்ளை
ஆச்சி நீ காளி
- வே. வரதசுந்தரம்
சிவகாமி அம்மாள் பய்விகேஷன்ஸ்

ஆசிச்செய்தி
“கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”
என்னும் முதுமொழிக்கமைய தன்னை தக்கசால்பு நெறியில் வழிப்படுத்தி தரமான பணியினை தமிழிற்கும், சைவத்திற்கும் வழங்கி வருபவர் ஆசிரியர் திருமிகு. வே. வரதசுந்தரம் அவர்கள். அரிய பொருள் பொதிந்த நூல்களை யாப்பதில் மிகு வல்லமை இவருக்குண்டு. அணி மையரில் 'திருக் கோணேஸ் வர தலயாத்திரை’ என்னும் தொடர் கட்டுரையை பொருள் நயம் மிக்கமுறையில் வரைந்து அரும்பணியாற்றியுள்ளார். சொல்லும் பொருளும் இவர் தமிழில் கலந்து உறவாடுவது அருஞ்சிறப்பு.
அந்தவகையில் அம்பாள் மேற்கொண்ட அளவற்ற பக்தியால் "ஆச்சி நீ காளி” என்னும் கவிமிகு நூலை பக்திரசம் சொட்டும் வண்ணம் வரைந்துள்ளார். இச்சுவையுறு நூல் சகலராலும்
I

Page 5
போற்றிப் பேணப்பட வேண்டிய அரும் பொக்கிஷ மாகும். இவரது இதுபோன்ற பெருமைசேர் பணிகள் மென்மேலும் வளர்ச்சியடைய எல்லாம் வல்ல பூரீ பத்திரகாளியம்பாளின் பூரண நல்லாசியும் அருளும் கிட்ட வேண்டுகிறோம்.
ஸர்வ சுகினோபவந்து
இவ்வண்ணம் (86.15185LDLDITLD600s சிவறுநீ. சோ. இரவிச்சந்திரக் குருக்கள். ஆதீன கர்த்தா ழரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம், திருக்கோணமலை,
III

வாழ்த்தரை
பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ் வரத்தின் காவல் தெய்வமாக அன்னை பத்திரகாளி அம்பாள் அருள்பாலித்து வருகின் றாள். அனைத்து இனங்களைச் சேர்ந்த அடியார்களால் பூசிக்கப்பட்டு வருபவள் அன்னை பத்திரகாளி அம்பாள். திருக்கோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயம் ஈழத்தின் வரலாற்றுப்புகழ்மிக்க சக்தி தலமாக விளங்குகின்றது.
அன்னையின் பெருமை, கருணை, பற்றி தோத்திரங்கள், அருட்பாடல்கள் நிறைய வெளிவந்துள்ளன. அவ்வரிசையிலே அம்பாளின் அருள்பெற்ற அன்பர் வே.வரதசுந்தரம் அவர்கள் நூற்றிஎட்டு தோத்திரங்கள் இயற்றியுள்ளார். அந்நூல் சிவகாமி அம்மாள் பப்ளிகேஷன்ஸினால் வெளியிடப்படுகின்றது. அன்னை சிவகாமி அம்பாள் பெரியம்மா என்று அன்பர்கள் உறவினர்கள் மாத்திரமல்ல, அன்னாரை நன்கு
III

Page 6
தெரிந்தவர்களால் அன்பாக அழைக்கப்பட்டு வந்தார். பெரியம்மா அன்னை பத்திரகாளி அம்பாளின் திருவடியைச் சேவித்தவர். பெரியம்மாவின் உள்ளத்தில் அம்பாளே நிறைந்திருந்தார். அன்னாரின் பெயரால் அமையப்பெற்ற சிவகாமி அம்மாள் பப்ளிகேஷன் அன்பர் வரதசுந்தரம் அவர்களால் இயற்றப்பெற்ற அம்பாள் தோத்திரங்கள் அடங்கிய நூலை வெளியிடுகின்றது.
பெரியம்மாவின் தங்கையான திருமதி தனலட்சுமி சிவசண்முகராசாவின் நினைவாக இந்த நூல் வெளியிடப்படுகின்றது. “சின்னம்மா’ என்று அன்பாக அழைக்கப்பட்டு வந்த அன்னாரை நீண்டகாலமாக அறிந்துள்ளேன். அன்னார் தமிழ் உணர்வு, சைவசமயப்பற்று நிறைந்தவர். தமிழர் உரிமைப்போராட்டம் ஆரம்பமான காலகட்டத்தில் அன்னார் தீவிரமாகக் அதில் பங்கு பற்றி உழைத்தவர். 1960களில் தந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற அஹிம் சை வழிப் போராட்டத்தின் போது அன்னார் முமுழுச்சாகப் பங்குபற்றினார். டிக்கட்இன்றி
IV

பஸ்களில் ஏறி சட்டமறுப்புப் போராட்டம் திருகோணமலையில் நடைபெற்ற போது, அதில் பங்குபற்றிய முன்னணித் தொண்டர்களில் ஒருவராகக் 'சின்னம்மாவும் பங்குபற்றியது நினைவுக்கு வருகின்றது.
அன்னாரின் நினைவாக அன்னை அம்பாளின் தோத்திரப்பாடல்கள் அடங்கிய நூலை அன்பர் வரதசுந்தரம் இயற்றி வெளியிடுகின்றார். அன்பர் வரதசுந்தரம் அம்பாளின் அருள் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரியம்மா, சின்னம்மா ஆகியோர் அன்னை பத் தர காளி அம் பாளின் அருள் பெற்றவர்கள். அக் குடும்பத்தைச் சேர்ந்தவரும் பிரபல ஊடகவியலாளருமான அன்பர் வரதசுந்தரம் அவர்களின் அம்பாள் அருட்பணி தொடர அம்பாள் அருள்பாலிப்பாராக!
சி. குருநாதன் ஸ்தாபக தலைவர் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். 18.01.2004
V

Page 7
அன்பின் ஊற்று ஆச்சி
கடவுளை உறவாகக் காண்பது நம் வழி வந்த மரபு.
கண்ணனைக் காதலனாகவும் காதலியாக வும் - ஏன் சேவகனாகவும் கூட - பல்வேறு உறவு முறைகள் மூலம் நெருக்கமாய்க் கண்டவன் நம் மகாகவி.
அந்த வரிசையில் ஆச்சியாய்க் நம் ஆதிபத்ரகாளியைக் காண்கிறார் திருமலை வரதசுந்தரனார். அம்பாளைக் குல தெய்வமாகக் கொண்ட-கண்ட நம் மக்கள் அவளை அம்பாளாச்சி என்றே மனமுருகி வேண்டுவர்.
வீட்டிலே-குடும்பத்திலே - மூத்தவள் ஆச்சி. வீட்டில் பெரியவர்களுக்குப் பல விடயங்கள் இருக்கம். அன்னை முதற்கொண்டு அனைவருமே அவரவர் வேலையில் மூழ்கியிருப்பர். ஆனால், வீட்டின் மழலைச் செல்வங்களைப் பாராட்டி, சீராட்டி வளர்ப்பதே தன் அன்றாடப்பணி என்று
VI

ஒருவள் இருப்பாள். அவள்தான் வீட்டுக்கு மூத்த பாட்டி : ஆச்சி. அன்னைக்கு நிகராய் - அதற்கும் மேலாய் - அன்பு செலுத்தி, பரிவு காட்டி, அரவணைத்து, நேசம் செய்யும் ஆச்சி மீதுதான் குழந்தைகளுக்கு விருப்பு அதிகம். அதுபோல இல்லத்திலே அந்த மழலை நெஞ்சங்களின் உணர்வுகளை அதகம் புரிந்து கொணர் டவளாகவும் அந்த ஆச்சிதான் விளங்குவாள்.
மக்களாகிய நாங்கள் சிறியோர் . ஆச்சியாகிய அம்பாள் நம்மை இரட்சித்து அருள்பாலித்து அன்பு மழை பொழிகிறாள். காளியை அகோரம் மிக்கவளாக-உக்கிரம் உடையவளாக - கூறுகிறோம். தீமைகளை அழிப்பதில்தான் அவள் தீவிரம் வெளிப்படும். ஆனால், பக்தியோடு தன்னை வழிபடும் அன்பர் க்கு அருள் மழை பொழிந்து அரவணைப்பதில் அவள் கருணைக்கடல். அதனால் தான் அவளின் அன்புருவைக் காளியாச்சியாகக் காண்கிறோம்.
VIII

Page 8
காளியாச்சியின் அருளாட்சியை நல்ல நான்கு அடிகளில் நல் முத்துகளாய்த் தருகிறார் நூலாசிரியார்.
தன் குடும்ப வாழ்வில் சுற்றத்தாருக்கும் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் ஆச்சியாப் விளங்கி அரவணைத்த அமரர் தனலெட்சுமி (சரஸ்வதியம்மா) சிவசண்முகராசா அவர்கள் நினைவாக இந்நூல் மலர்வது சாலச்சிறந்தது.
என் தந்தை நேசித்த அன்புத் தங்கை அவர். ஆச்சி போல் உயர்ந்து நின்று எம் மீது அன்புகொண்டு, ஆதரவு தந்து, பாசத்தோடு பரிவுகாட்டி அவரின் சால்பு என்றும் எங்களைத் தோன்றாத் துணையாயிருந்து நல்வழி காட்டும்.
ந. வித்தியாதரன்.
ஆசிரியர் உதயன்
W III

21. Sஅண்மையில் அமரத்துவமடைந்த எனது சிறிய தாயார் காளி பக்தை திருமதி. தனலகழ்மி சிவசண்முகராசா அவர்களுக்கு இச்சிறு நூல் காணிக்கை

Page 9

ஆச்சிரீ காளி
ஆலடிப்பிள்ளையார் வணக்கம்
கோணமலைக் காளி புகழ்கூறும் நூற்றெட்டு நாலடிப் பாக்கள் நான்பட நண்ணினேன் ஆலடிப் பிள்ளையே நின்பாதம் கும்பிட்டேன் வேழமே நிற்பாய் துணை!
குரு வணக்கம்
கவிதைபாடக் கற்றுத்தந்த கழகப்புலவன் என்னாசான் சிவசேகரம் ஐயாவே வணக்கம் ! வணக்கம்
கோணமலைத் திருத்தலம் காவல் செய் காளி வேப்பிலை ஏந்திடும் ஆச்சிநீ காளி. O1
O1

Page 10
கோணமலை ஊராரைக் காத்திடுவாள் காளி1. தொழுவார்க்குத் தீங்கில்லை ஆச்சிநீ காளி!
ஊரவர் துயர்களைய அற்புதங்கள் செய்திடுவாள் ஈரமுடை நெஞ்சத்தாள் ஆச்சிநீ காளி!
மீன்கயல் பொறித்தநம் திருக்கோண மலையுறை மீனாட்சி! காமாட்சி! ஆச்சிநீ காளி!.
நின்கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கோணமலைத் தாயே! ஆச்சிநீ காளி
O2
O2
03
04
05

நேர்நிதிடுவார் வேண்டுதலை நிறைசெய்வாள் காளி ஈர்த்திடுவாள் என்நெஞ்சை ஆச்சிநீ காளி
சந்திரன் ஐயா சாத்துப்படி கண்டு மனமது லயிக்கும் ஆச்சிநீ காளி
வேதியர் காட்டும் தீபங்கண்டு உள்ளம் உருகும் ஆச்சிநீ காளி
ஐயர் ஆற்றும் அர்ச்சனை கேட்டு ஆறுதல் அடைவோம் ஆச்சிநீ காளி
03
06
07
08
09

Page 11
கொடியேற்ற நாளில் கும்பிடும் நமக்குக் கோடி செய்தாய் ஆச்சிநீ காளி!
கொடியேற்றம் கண்டு நினைத்த காரியம் கைகூடும் கைகூடும் ஆச்சிநீ காளி
கொடியேறும் வேளை உனைக்கண்டு கண்டு மெய் சிலிர்க்கும் ஆச்சிநீ காளி.
கொடியேற்ற நாளில் வேண்ட வேண்ட
அத்தனையும் தந்தாய்
ஆச்சிநீ காளி!
04
10
11
12
13

தேர்வடம் பிடித்து நேர்கடன் செய்வோம் நினைப்பது தாராய் ஆச்சிநீ காளி!
நோய்பிணி தீர நோன்பு காத்தோம் ஆடீர் ஊஞ்சல் ஆச்சிநீ காளி
நகள் வலஞ்சென்று தீர்த்தம் ஆடி திருவருள் தாராய் ஆச்சிநீ காளி
ஆரன் போர் முடிந்து முற்றவெளி செல்வாய் மானம்பூ காண்பாய் ஆச்சிநீ காளி!
05
14
15
16
17

Page 12
கெளரிநோன்பு காக்க வாய்திறவாக் கணவன் வாய்திறந்தான் அம்மே! ஆச்சிநீ காளி 18
உன்கோயில் ஆழ்ந்து உருண்டுருண்டு வாரார் கண்டிலையோ கண்டிலையோ ஆச்சிநீ காளி 19
அங்கமெலாம் நோக உருண்டுருண்டு வாரார் அன்னார்க்கு அபயம் ஆச்சிநீ காளி 20
என்செய்வோம் என்று கண்ணிர் உகுத்துக் கதறினோம் கேட்டிலையோ ஆச்சிநீ காளி 21
06

மெல்லியர் தம் பாதம் கொப்பளிக்கக் கொப்பளிக்க அடியழித்தல் கண்டிலையோ ஆச்சிநீ காளி
ஈயறியாப் பூந்தேனே எழுத்தறியர் மறைபொருளே என்றெல்லாம் ஏத்துவனே ஆச்சிநீ காளி
மாதோட்ட நன்னகரில் கெளரியென்று பேர்பெற்றாய் கோணமலைத்தாயே ஆச்சிநீ காளி
என்புருகி ஏத்திடுவார் துன்பங்கள் போக்கிடுவாய் அன்புமிகு தாயே ஆச்சிநீ காளி
07
22
23
24
25

Page 13
இலமென்று இறைஞ்சினோம் நலம்பல தாராய் கோணமலைத் தாயே ஆச்சிநீ காளி!
நல்லார்கண் வறுமையுண்டு அல்லார்கண் செல்வமுண்டு ஒன்றும் புரியவில்லை ஆச்சிநீ காளி
வைகாசி மாதத்து நன்னாளிற் பொங்கி உனைநாம் தொழுவோம் ஆச்சிநீ காளி!
உருக்கமாய் பாட உதவிடுவாள் காளி பெருக்கமாய் வாழச்செய் ஆச்சிநீ காளி
08
26
27
28
29

மங்கையர் அடியழிக்க பங்கயக் கையினால் மங்களந் தாராய் ஆச்சிநீ காளி 30
கற்சிலையாய்க் காட்சிதந்து காரியங்கள் செய்திடுவாள் நற்றமிழால் நாம் தொழுவோம் ஆச்சிநீ காளி 31
மீனாட்சி கைபிடிக்க ஆண்டியும் அரசனாவான் பாைைபிடித்த பாக்கியம் ஆச்சிநீ காளி 32
துன்பமலை கண்டு துவளேன்! துணிவேன் தைரிதுசக்தி ..یہ ஆச்சிநீ கர் 33
09

Page 14
வெற்றிதனைக் கண்டு இறுமாப் பெய்தேன் பணிவு காப்போன் ஆச்சிநீ காளி! 34
நிரைகழலாய் அவனும் சிலம்பதனாய் அவளும் கோணமலை ஆள்வீர் ஆச்சிநீ காளி 35
ஆடவர் பெண்டிர் அழுதழுது வேண்டுதல் கேட்டிலையோ 1 கேட்டிலையோ! ஆச்சிநீ காளி 36
வன்செயற் காலத்தே வாலிபரைக் காத்தவள் நீயன்றோ! நீயன்றோ ! ஆச்சிநீ காளி 37
10

உலாவரும் கோணேசர் உவந்துறையும் கோயில் உறைபவளே தாயே! ஆச்சிநீ காளி
ஊமை நோய் நீங்கி வாய்திறந்த குருபரர்க்கு பிள்ளைபாடப் பரிசளித்தாய் ஆச்சிநீ காளி!
இரும்பு நெஞ்சு பிளந்து இனியசுகந் தந்தாய்! அரும்புமிள நகையாய் ஆச்சிநீ காளி
ஊழ்வினை உருண்டிட வாளினை வீசி ஏழுலகும் காக்கும் ஆச்சிநீ காளி!
, 11
38
39
40
41

Page 15
பலன் கருதாப் பணிசெய்வார் துயர்களைவாய் அம்மே! கோணமலைத் தாயே! ஆச்சிநீ காளி!
பாலம் போட்டாறு சல்லியம்மன் அடியார் நோன்பிருந்து வளமெடுப்பர் ஆச்சிநீ காளி
நந்தியார் உடல்தேறக் காப்பரிசி தந்தாய் ஈரநெஞ்சத்தாள் ஆச்சிநீ காளி
ஆறு பெருக்கெடுக்க அலமந்து லிங்கத்தை அரவணைத்த தாயே ஆச்சிநீ காளி!
12
42
43
45

கும்பநாள் வந்தால் குமரர்கள் கூடிக் காவடி தூக்குவர் ஆச்சிநீ காளி
தீமைதனைக் கண்டால் வீறு கொண் டெழுவேன் ஆலமுண்டு பயமில்லை ஆச்சிநீ காளி
ஆத்தாள் ஆத்தாளென்றும் காத்தாள் காத்தாளென்றும் கதறுவது கேட்டிலையோ! ஆச்சிநீ காளி.
கோணைத் தலைவனுக்கு இராஜ உபசாரம் உவந்திடுந் தாயே ஆச்சிநீ காளி
13
46
47
48
49

Page 16
மடியின்றிப் படிக்கும் மாணவர் தமக்கு
ஆரறிவு தாராய் ஆச்சிநீ காளி
வன்செயல் வாட்டியும் கண்ணெனக் கல்வி நாடுவார் காப்பாய் ஆச்சிநீ காளி!
வறுமையில் வாடியும் வாலறிவு தேடும் மாணவர்க் கருள்வாய் ஆச்சிநீ காளி
சிரத்திலே பாற்குடம் கரத்திலே வேப்பிலை மனத்திலே நீயுமுண்டு ஆச்சிநீ காளி
14
50
51
52
53
 

தமிழச் சாதி தலைநிமிர்ந்து வாழத் தலைசாய்த்துத் தொழுதோம் ஆச்சிநீ காளி
திருநடஞ் செய்கையில் தில்லைப் பிரானார் நின்னையே நோக்கும் ஆச்சிநீ காளி
வாழும் வயதினரைக் காலன் கொண்டு செல்வான் இது கொடிது 1 கொடிது! ஆச்சிநீ காளி
இரண்டு நாழி நெல்லுடன் அறம்பல குவித்தனை காமாட்சித் தாயே ஆச்சிநீ காளி
15
54
55
56
57

Page 17
தருமங் காக்க மென்கரம் துன்பஞ் சுமக்க மென்தோள் நமைக்காக்க பாதம் ஆச்சிநீ காளி
சாவோடு போராடும் நோயாளர் வேண்ட நோய்தீர்க்கும் மருந்து ஆச்சிநீ காளி
நினைக்கண்டால் தீயவர் நடுநடுங்கிப் போவர் கோணமலைத் தாயே ஆச்சிநீ காளி
இடபமாம் ஊர்தியில்
உலா நீ வந்தால்
கடகரி தோற்றிடும் ஆச்சிநீ காளி
16
58
59
61

பாயும் மனமடக்க மானில்நீ வாராய் UiTub60)6) LIT6Nu ஆச்சிநீ காளி
சிங்கத்தில் உலாவந்து சீர்செய்வாள் காளி சிங்கார வடிவினளே ஆச்சிநீ காளி
காமதேனு மீது கலையுடன் வந்து அள்ளியள்ளித் தாராய் ஆச்சிநீ காளி
ஊழிநாள் ஊர்தி இடபத்தில் வாராய் கோணமலைத் தாயே ஆச்சிநீ காளி
17
62
63 .
65

Page 18
பரிமாவில் நீ வந்து ஆசையறுமின் என்பாய் கோணமலைத் தாயே ஆச்சிநீ காளி
ராகுதோஷம் நீங்க நாகத்தில்நீ வரராய் கோணமலைத் தாயே ஆச்சிநீ காளி
புலனடக்கம் பேண யானைமீது வாராய் கோணமலைத் தாயே ஆச்சிநீ காளி
சம்பந்தப் பாலகன் பால்கேட் டழுதிடப் பரிவு காட்டினாய் ஆச்சிநீ காளி
18
66
67
68

grтLD8ET60TLb LITIQ இராவணன் உய்ந்த கோணமலைத் தாயே ஆச்சிநீ காளி
கவியரசன் கம்பன் இராமகாதை பாடப் பந்தம் பிடித்தனை ஆச்சிநீ காளி!
இராமபிரான் தொழுது பிரமகத்தி தீர்ந்த கோணமலைத் தாயே ஆச்சிநீ காளி
குளக்கோட்டன் வேண்ட கோணமலை எல்லை காவல் செய் தாயே ஆச்சிநீ காளி
19
70
71
72
73

Page 19
தவமுனியாம் அகத்தியர் தரிசித்த தலமாம் கோணமலைத் தாயே ஆச்சிநீ காளி 74
துன்பத்தில் உனைநொந்தான் குரு நமசிவாயன்
ஒடி நீ சென்றாய் ஆச்சிநீ காளி 75
அருட்சோதி வள்ளல் இராமலிங்க அடிகட்கு அமுது படைத்தவள்
ஆச்சிநீ காளி 76
மெத்தப்பசித்த
நமசிவாயர்க்குச் சோறு படைத்தவள்
ஆச்சிநீ காளி 77
20

குன்றக் குடியார் குரல் கேட்டிங்கு அருள் நெறி கண்டோம் ஆச்சிநீ காளி
சித்தன் அப்பாதுரை சித்துகள் காட்ட வியந்தனை! வியந்தனை! ஆச்சிநீ காளி
தபோவனங் கண்ட தவமகள் மாதாஜி தவங்கண்டு மகிழ்ந்தனை ஆச்சிநீ காளி
இமயத்து யோகியார் சச்சிதானந்தர் பணிகண்டு மகிழ்ந்தனை ஆச்சிநீ காளி
21
78
79
80
81

Page 20
கேரளத்து இளைஞன் கங்காத ரானந்தா ஏத்தித் தொழுத ஆச்சிநீ காளி
இராம கிருஷ்ணர் வைராக்கியம் கண்டு தரிசனந் தந்தாய் ஆச்சிநீ காளி
வித்தகன் விபுலானந்தன் அறிவுப் பணிகண்டு பூரித்துப் போனாய் ஆச்சிநீ காளி
கூத்தப்பிரானின் எடுத்த திருவடி நின்னது நின்னது ஆச்சிநீ காளி
22
82
83
84
85

குணக்குன்றாம் மகளிர் கூப்பினர் கரங்கள் மணவாழ்வு தாராய் ஆச்சிநீ காளி
வாழும் வயதினில் வரனின்றி வாடுறார் இது தகுமோ! தகுமோ! ஆச்சிநீ காளி!
கொடியன்ன நங்கையர் கொழுநன் தேடி நாடினார் உன்னை ஆச்சிநீ காளி
உன்னடியார் தம்மைக் கைபிடிக்க ஏங்குவார் கைகொடுப்பாய் நிச்சயம் ஆச்சிநீ காளி!
23
86
87
88
89.

Page 21
கெளரி நோன்பு காப்பார் தெய்வம் நீ காளி மாங்கல்யம் தந்திடுவாய் ஆச்சிநீ காளி
கன்னியர் தொழுதிடக் கணவர்கள் கிடைப்பர் இது நிச்சயம்! நிச்சயம்! ஆச்சிநீ காளி
பிள்ளைவரம் கேட்கத் தப்பாமல் தந்திடுவாய் கோணமலைத் தாயே ஆச்சிநீ காளி!
பூப்பெய்த வைத்தவள் நீ! மாங்கல்யம் தந்தவள் நீ ! மக்கட்பேறுந் தாராய் ஆச்சிநீ காளி
24
91
92
93

சந்தோஷ் சந்தோஷ் என்று சந்தானம் பெற்றிடச் சந்தனஞ் சாத்தினோம் ஆச்சிநீ காளி
சந்தானச் செல்வம் சளைக்காமல் எய்திடச் சந்தனஞ் சாத்தினோம் ஆச்சிநீ காளி
குலப்பெயர் சொல்லிடக் கொழுந்தொன்று வேண்டும் குணமலை உறைந்திடும் ஆச்சிநீ காளி
தாலாட்டு வீட்டில் தையலர்கள் பாடத் தருணமிது தருணமிது ஆச்சி நீ காளி
25
94
95
96
97

Page 22
ஒருகூரை நிழற்கீழ் ஒன்றுகூடி வாழ்ந்தோம் இன்று கூறு கூறானோம் ஆச்சிநீ காளி 98
ஒரு பானை சோற்றை
உண்டு மகிழ்ந்தநாம்
இன்று கூறு நூறானோம் ஆச்சிநீ காளி 99
உணர்வுகள் மரத்தாலும் உதிரம் தடிப்பென்று
உணருவர் ஒரு நாள் ஆச்சிநீ காளி 100
நவீன யுகத்தில் உறவுகள் நலியினும் அன்பு காப்போம்
ஆச்சிநீ காளி 101
26

உறவுகள் பிரியினும் துன்பம் வருங்கால் துணையாய் நிற்போம் ஆச்சிநீ காளி
எதுவரினும்! எதுவரினும் மனச்சாட்சி காப்போம் கோணமலைத் தாயே ஆச்சிநீ காளி
பாயிற் கிடவாமல் பட்டென்று பறந்திடப் பாதை கூறாய் ஆச்சிநீ காளி
நோயில் வாடாமல் ஒரு நொடியிற் செல்ல உபாயங் கூறாய் ஆச்சிநீ காளி!
27
102
103
104
105

Page 23
தூங்குவது போலுஞ்சாவு தூங்கி விழிப்பது ஜனனம் சாவுகண்டு அஞ்சேன் ஆச்சிநீ காளி! 106
சாவு வரும் போது சக்தி சக்தி சக்தி சரணம் சரணம் என்பேன் ஆச்சிநீ காளி 107
காலன் வரும் போது அக்காச்சி போன்று கைகூப்பிச் செல்வேன் ஆச்சிநீ காளி 108
 


Page 24
f ஆச்சி
ஆடவர் பென அழுதழுது ே கேட்டிலையே ஆச்சிநீ காளி
குலப்பெயர் கொழுந்தொக
துனமலை உ
ஆச்சிநீ காளி
சந்தோஷ் சர் சந்தானம் டெ சந்தனஞ் சா ஆச்சிநீ காளி
* சிவகாமி அம்மா து 25, 36வது ஒழுங்
உதயன் திருமணம்

நீ காளி
JILIT
வண்டுதல் ா கேட்டிலையோ!
.
சொல்லிடக் ன்று வேண்டும் உறைந்திடும்
ந்தோஷ் என்று பற்றிடச் த்தினோம்
ாள் பப்ளிகேஷன்ஸ் ங்கை, கொழும்பு-06.