கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (சுப்பையா சிவஞானம்)

Page 1


Page 2

மலர்வு
7-O-1B
உதிர்வு
26-07-2006
அமரர்
அல்மாத் தோட்ட கணக்கப்பிள்ளை சுப்பையா சிவஞானம்
நினைவாக
மலையகம் பற்றிய சிந்தனைகள்
- 4U 003
அளிக்கை
அவர் குடும்பத்தினர்

Page 3
அல்மாத் தோட்டக் கணக்கப்பிள்ளை
சுப்பையா சிவஞானம் நினைவு மலர்
வெளியீடு '
வெளியீட்டுத் திகதி வெளியீட்டு இடம்
அச்சுப் பதிப்பு
பக்கங்கள்
அவர் குடும்பத்தார் சீட்டன் பிரிவு அல்மாத் தோட்டம்
கந்தப்பளை
இலங்கை
24-08-2006
சீட்டன் இல்லம்
இல. 06, மஹாகுடுகல குடியிருப்பு earably (36OTTurt
இலங்கை பிரிண்ட்கெயர் குழுமம் இல, 77, நுண்கமுகொட பாதை களனி, இலங்கை
73
Suppiah Sivagnanam Commemoration Volume
Publisher
Date of Publication Place of Publication
Printers
Pages
His Family
Seaton Division
Alma Group
Kandapola
Sri Lanka
24-08-2006
Seaton House No.06, Mahacoodugala Colony
Halgranoya * Sri Lanka
Printcare Group No. 77, Nungamugoda Road, Kelaniya
Sri Lanka
73
2

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
உள்ளடக்க்ர்
அறிமுகம்
அல்மாத் தோட்டம் சில வரலாற்று ਠਲ5i:
இழக்காத உணர்வுகளோடு
மைத்துனரின் நினைவுகளில்
எங்கள் அப்பா
எங்கள் தாத்தா
<uurt
தாத்தா
தாத்தா
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன். . . . . .
என்றும் எங்களோடு நீங்கள்
அப்பா ஒரு நண்பனாய்
விழி கொடுத்து ஒளிகொடுத்தவரே
அல்மா சகாக்களின் உணர்வுகள்
மலையகப் பண்பாட்டுப் பேனுைகை சிக்கல்களும்
சவால்களும் - பேராசிரியர் கா. சிவத்தம்பி
மலையகக் கல்வி ஒரு எதிர்கால நோக்கு
தை. தனராஜ்
முன்னகர்த்த வேண்டிய பணிகளும் " சி. அ. யோதிலிங்கம்
புதிய வாசகங்கள்
நன்றிகள்
20
21
22
23
24
25
26
27
29
31
35
36
46
51
63
72
73

Page 4
அறிமுகம்
எங்கள் குடும்பத்தலைவர் சுப்பையா சிவஞானம் அவர்கள் அடிக்கடி குறிப்பிடும் ஒரு விடயம் எங்கள் பிள்ளைகள் தைரியசாலிகள் எதையும் சமாளிக்கும் வல்லமை அவர்களுக்கு உண்டு” என்பதாகும். அவரின் அந்த வார்த்தைகளின் ஒரு செயல் வடிவமாக இந்த நினைவு மலர் உங்கள் கரங்களை பற்றுகிறது. அவரது வாழ்வையும் நினைவுகளையும் நாம் சுமந்துக்கொண்டே இருக்கின்றோம். அவர் இன்று ஒரு வரலாற்று புருஷர். மலையகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தேயிலையுடன் உள்ள உறவு பின்னிப்பிணைந்த உறவாகும். அந்த வகையில் மலையகத்தின் நுவரெலியா மாவட்டம் அல்மா தோட்டத்தில் பிறந்து தேயிலை செடிகளோடும் அதன் மக்களோடும் வாழ்ந்த ஆழப்பதிந்த தலைமுறைகளில் ஒருவராக அதே தோட்டத்தில் வாழ்ந்து அமரத்துவம் அடைந்தார்.
விஜயன் என்று நெருங்கிய உறவினர்களாலும், சிவஞானம் KP என்று பெரும்பாலான உத்தியோகத்தர்களாலும், வேட்டி ஐயா என்று அன்பாக தொழிலாளர்களாலும் அழைக்கப்பட்ட இவர் எந்தளவு தூரம் மலையக சமுகத்திலும் அதற்கு வெளியிலும் மதிக்கப்பட்டார் அல்லது இவரது கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பதற்கு அவரது இறந்த செய்தி கேட்ட தருணம் முதல் உடல் தகனம் செய்யப்படும் வரை அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த பெருமளவிலான மக்கள் கூட்டமே சான்றாகும். தோட்டத் தொழிலாளர்களுடன் அவர் கொண்டிருந்த பிணைப்பானது அவர் இறந்த பிறகு அவரின் பூதவுடல் அக்கினி சங்கமத்துக்காய் அவரின் துணைவியாரின் சொந்த ஊரான மஹாகுடுகலையில் வைத்திருந்த போதும் அவர் எந்த தோட்ட மக்களுடன் வாழ்ந்தாரோ அவர்கள் பல மைல் தூரம் நடந்துவந்து கண்ணிர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய காட்சியானது, தான் ஓர் உத்தியோகத்தர் என்ற நிலைக்கு அப்பால் அடிமட்டத் தோட்டத் தொழிலாளர்களுடனும் அவர்களின் வாழ்வோடும் கொண்டிருந்த அசைக்க முடியாத உறவினை வெளிப்படுத்தி நின்றது.
தேவையற்ற, யதார்த்தத்திற்கு பொருத்தமற்ற சம்பிரதாய சடங்குகளை மாற்றியமைக்க வேண்டுமென அடிக்கடி அவர் குறிப்பிடுவார். அவரின் விருப்பப்படியே பூதவுடல் தகனம் செய்யப்பட்ட தினமான 29-07-2006 அன்றும் எட்டு அனுஷ்டிக்கப்பட்ட 03-08-2006 தினத்தன்றும் முடிந்தளவு யதார்த்தத்திற்கு ஒவ்வாத சம்பிரதாயங்களை தவிர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். இன்று (24-08-2006) உங்கள் கரம் எட்டும் நினைவு மலரானது அதிகாரத் தரப்பினரையும் பிழைப்புவாத தொழிற்சங்க தலைமைகளையும் மிகைப்படுத்தப்பட்ட வரலாற்றுக்கு மத்தியில் மலையக சமுக உருவாக்கத்திற்கு உண்மையாகவும், நேர்மையாகவும் தங்கள் ஆளுமையைச் செலுத்திய ஒவ்வொருவரினதும் பங்களிப்பை கெளரவிக்கும் செயற்பாட்டின் ஒரு சிறு முயற்சி மட்டுமேயாகும்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அல்மாத்தோட்ட உருவாக்கத்தில் பெரும்பங்களிப்புச் செய்த சுப்பிரமணியம் பெரிய காங்காணி - வீராயி தம்பதிகளின் நான்கு வாரிசுகளான சின்னையா, வேலு, சுப்பையா, மேகவர்ணம் ஆகியோரின் முன்றாமவரான சுப்பையா மகமாயி தம்பதிகளின் இளைய மகனாக சிவஞானம் 27-01-1936ல் அல்மாத் தோட்டத்தில் பிறந்தார். முத்த மகனான இரத்தினம் தற்போது தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தான் கோட்டையில் வசிக்கிறார்.
இளம் வயதிலேயே தன் தாயை இழந்த இவர், பின்னர் தந்தையுடன் தமிழ்நாட்டிற்குச் சென்றார். அங்கு இருக்கப் பிடிக்காது மீண்டும் இலங்கைக்கு வந்து தன் தாத்தாவான சுப்பிரமணியத்தின் வளர்ப்பில் அல்மாத் தோட்டத்திலேயே வளர்ந்தார். அல்மாத் தோட்டப் பாடசாலையிலேயே தன் கல்வியையும் தொடர்ந்தார். 1953ம் ஆண்டு தனது 17வது வயதில் அல்மா -லியாங் வெல (விய்யங்கோலை) பிரிவில் உதவி கணக்கப்பிள்ளையாகச் சேர்ந்தார். 1957ம் ஆண்டு அல்மாத் தோட்டப் பெரிய கங்காணியான சுப்பிரமணியம் அவர்கள் காலமானதை அடுத்து அவரின் முத்த மகனான சின்னையா அவர்களை அப்பதவியை ஏற்குமாறு நிர்வாகம் வேண்டியதை அடுத்து சிவஞானம் அவர்கள் லியங்வெலப் பிரிவின் தலைமைக் கணக்குப்பிள்ளையாக நியமிக்கப்பட்டார். அன்றுமுதல் 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறும் வரை (1953 தொடக்கம் 1994) 41 வருடங்கள் அல்மாத் தோட்டத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் (லியங்வெல, சரணவல்லி, கிரேமொன்ட், சீட்டன்) சேவை புரிந்தார்.
தனது வாழ்நாள் முழுவதும் தோட்ட மக்களையும் தேயிலைச் செடிகளையும் மிகவும் நேசித்தார். அவர்களுக்கு ஒன்றென்றால் மிகவும் துடித்துப்போவார். ஒரு குழந்தையை வளர்ப்பது போன்றே தேயிலைச் செடிகளையும் கவனித்தார். அதேபோன்றே தோட்ட மக்களின் அனைத்து சுக துக்கங்களிலும் பங்கேற்று அவர்களுடன் அருகிலேயே இருந்தார். தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.
1957ம் ஆண்டு மஹாகுடுகலை தோட்டத்தைச் சேர்ந்த சி. முத்தையா கங்காணி - உமாதேவி தம்பதிகளின் புதல்வியான சிவகாமியை தன் வாழ்க்கைத் துணைவியாக கரம்பிடித்தார். தேயிலைச் செடிகளையும் தோட்ட மக்களையும் எவ்வளவு தூரம் நேசித்தாரோ அவ்வாறே தனது குடும்பத்தையும் நேசித்தார். சமுகத்தில் பலரின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தனது நான்கு மகள்மாரையும் உயர் கல்விவரை சிறந்த கல்வியை ஊட்டினார். தனது ஒரே மகனுக்கும் இலங்கையில் முன்னணி தனியார் கல்லூரியில் கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். தனது துணைவியாரையும் எந்தக் குறையுமின்றி கவனித்தார்.
இவர் அல்மாத்தோட்டத்தில் தொழில்புரிந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்கள், உத்தியோகத்தர்களுக்கிடையே நெருக்கமான உறவுகளுக்கு வழிகோலினார். இவர் அல்மாவின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள ாட்டக் கோவில்களின் நிர்வாகத் தலைவராக விளங்கியதுடன் லியங்வெலப் பிரிவில் ஸ்த்திற்றியபோதுவிாக்கிலுள்ள
R

Page 5
லியங்வெல கிராமத்து பெளத்த விகாரையின் நிர்வாகக்குழுத் தலைவராகவும் அம்மக்களால் நியமிக்கப்பட்டார். எவ்வளவு தூரம் சகோதர மொழி மக்களிடத்திலும் இவர் மதிக்கப்பட்டார் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. அதேபோல் அல்மாத் தோட்ட உத்தியோகத்தர்களினால் அவர்களின் தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். இவர் சேவையிலிருந்த காலத்திலும் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொழிலாளர்களும் உத்தியோகத்தர்களும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இவரையே முதலில் அணுைகும் முறையைக் கண்டோம். இவரை அவர்கள் ஒரு தந்தையாக, வழிகாட்டியாக, ஒரு முத்த சகோதரனாக அவர்களின் குடும்ப அங்கத்தவராகவே கருதினர். இவரும் அவர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப செயற்பட்டார். அத்தோடு தொழிலாளர்களுக்கு பண உதவி தேவைப்பட்ட பொழுது அதைக் கொடுத்துதவியதுடன் பல வேளைகளில் உணவுக்கு கஷ்டப்பட்டவர்களுக்கு அத்தேவையை நிறைவுசெய்துகொள்ளவும் உதவினார். வேலையற்ற இளைஞர்களுக்கு தோட்டத்தில் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்ததுடன் நிர்வாகத்துடன் கதைத்து அல்மாத் தோட்டத்திலுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் விவசாயப் பயிர்ச்செய்கைக்காக ஒருதுண்டு காணியாவது இருப்பதையும் உறுதிசெய்தார். அத்தோடு நில்லாது தனது பிள்ளைகளுக்கு இளம் வயது முதல் மலையகம் பற்றிய சிந்தனையை ஒளட்டினார். மலையக சமுக மாற்றம் பற்றிய தேடலை தூண்டியதுடன் முடிந்தளவு அதற்கான பாதையையும் காட்டினார். 1964 ஆம் ஆண்டு சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தை எதிர்த்ததுடன் தோட்ட மக்கள் அனைவரையும் இலங்கைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்குமாறு தூண்டியதுடன் அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார். நாம் இந்தியப் பிரஜைகள் அல்ல, இந்நாட்டுப் பிரஜைகள். எனவே இந்திய வம்சாவளித் தமிழர் என்ற பதத்திற்கு பதிலீடாக மலையகத் தமிழர் என்ற பதம் பிரயோகிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மலையகப் பாரம்பரிய பண்பாட்டியல் விழுமியங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஒரு அங்கமாக அல்மாத் தோட்டத்தில் சமுக நாடகங்களை தொழிலாளர்கள் மத்தியில் இளக்குவித்ததோடு, அர்ச்சுணன் தபசு, காமன் கூத்து, பண்பாட்டு கருவிகளான உடுக்கு, பறை போன்றவற்றின் தொடர்ச்சியான பயன்பாட்டிற்கும் முடிந்தளவு ஒத்துழைப்புகளை வழங்கினார். அத்தோடு வேறு தோட்டங்களிலிருந்து கலைஞர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தி அக்கலைஞர்களையும் பாராட்டி ஒளக்குவித்தார்.
இன்றைய இளைஞர்கள் மலையக சமுக மாற்றத்தைக் காண்பார்கள் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். மலையக சமுக மாற்றத்தை விரும்பியவர்களை இளக்குவித்தார். அவர்கள் நிகழ்திய கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று குறைநிறைகளை சுட்டிக்காட்டியதுடன் ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும் மலையகத்தில் வேட்டியுடன் தொழில் பார்த்த கடைசி தோட்ட உத்தியோகத்தராக 1994ம் ஆண்டு ஓய்வுபெறும்வரை திகழ்ந்தார். இறுதிக் காலங்களில் மஹாகுடுகலையில் வசித்த போதும் மலையக சமுக மாற்றமென்ற கனவுகளுடனே வாழ்ந்தார். தான் உயிருடன் இருக்கும் போதே அல்மா சென்று அனைத்து மக்களையும் பார்க்கவேண்டுமென்ற அவாவுடன் இருந்தார். ஆனால், அந்த அவா நிறைவேற
6

முன்னரே இவ்வுலக வாழ்க்கைக்கு விடைகொடுக்க நேரிட்டது எங்களுக்கு பெரும் கவலையே. இருப்பினும் அவர் விரும்பிய படியே அவர் இறந்த பிறகு அவரின் இரு கண்களையும் பார்வையற்ற இருவருக்கு இவ்வுலகைத் தரிசிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியதற்காக நாம் இலங்கை கண் வங்கிக்கு தானமாகக் கொடுத்ததில் மன ஆறுதல் கொள்கின்றோம்.
இறுதியாக அவர் கண்ட மலையக சமுக மாற்றத்தை அடைவதற்காக அதன்பால் அக்கறை கொண்டோரையும் இணைத்துக்கொண்டு அதற்கான பயணத்தைத் நம்பிக்கையோடும் உறுதியோடும் தொடருவோம்.
*சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே’
குடும்பத்தார்
சீட்டன் இல்லம்
இல 06 மஹாகுடுகல குடியிருப்பு ஆள்கரனோயா
24-08-2006

Page 6
SLLLLLLLLY LLLYLLLLL L0LL0LL K0YYYLL KHLL S00K0KYYTL KKKKSLLLKS gurgu府學) 學eusangu家的 原宮守n니명e su忠道는 이후 的高等學그역g)高.
||||||||
Isogo-Fujitolo qiiousNorego Imricorso
1.W|'']]]]||||
『-- |-
!s',
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|}}
|
||·| | ||||||||| ssssssssssssss.
|- | |-|-| sssssssssssssssssssssssssssss|||||
|-sae||]]*|Ĥae|-|s赋门 T-----|-*)歴*----:
----sae ---- ( )
詞*
*
*劑 현, 《: - ,
 

| |
||| ||
|
sos|||||||||||
W|||-
|-|
|
||*|s.
WTA) - 『T 『
ଗl &୍Tୟ୍ଯ
தி
த் இர
ர்) சிறுபராய
LIL ||
திரு
ந்
fi (s-LDI
Slassessf
芷
隔 西 일 手
தினம்
பி சகோதரர்
Eg DILL EF
தாய் ம
III 5!} | FILIE IIL III III
LIITELET
நிே
ஆ

Page 7
|-藏
=============================================
தில்
555, T65,
சிவஞானம் அவர்கள் இளமை
1)
 
 

அல்மாத் தோட்டம்
(ALMAGROUP) சில வரலாற்றுப் பதிவுகள்
இலங்கையில் பெருந்தோட்டச் செய்கையும் அல்மா தோட்டமும்
இலங்கையில் 1824ம் ஆண்டு ஜோர்ஜ்பேர்டும், 1886ம் ஆண்டு ஜேம்ஸ் டெயிலரும், 187ம் ஆண்டு ஹென்றிவிகமும் முறையே கோப்பி, தேயிலை, றப்பர் தோட்டங்களை ஆரம்பித்ததாக அறிய முடிகிறது. பின்னைய காலங்களில் ைேன பெரும் பொருளாதார வருவாயை நாட்டிற்கு ஈட்டிக் கொடுக்கக்கூடிய பெருந்தோட்டப் பயிர் செய்கையாக
விருந்தியடைந்தன.
வரலாற்றில் ஆரம்ப காலம் முதல் இந்தியர்கள் இலங்கைக்கு வருவதும் போவதுமாக ருேந்தாலும் 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கை விரிவடைந்ததையடுத்தே தென் ந்ேதியாவிலிருந்து தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வேங்கையின் மத்திய மலை நாட்டில் வந்து குடியேறினர். இது ஆரம்பத்தில் ஒரு கட்டாய பொருளாதார குடியேற்றமாகவே அமைந்திருந்தது.
இவ்வாறான ஒரு பட்டத்திலேயே நுவரெலியா மாவட்டத்தில் அல்மா குரூப் என்ற தோட்டம் தோன்றியது. கிடைக்கப்பெறும் தகவல்கள் இந் நோட்டம் 19ம் நூற்றாண்டு நடுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. வாய்வழித் தகவல்களின்படி இத் தோட்டத்தில் ஆரம்பத்தில் கோப்பிச் செய்கையும் பின்னர் முழுமையாக தேயிலைச் செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்பந்தமில் இந் தோட்டக்குடன் முக்கிய தொடர்புகளை கொண்டிருந்த ஆங்கிலேயரான 'அல்மா" வின் பெயரே இத் தோட்டத்திற்கு இடப்பட்டது. அல்மா தோட்டம் நான்கு பிரிவுகளை (Divisins) கொண்டுள்ளது. அவை முறையே கிரேமொன்ட் (Grgymnt), சீட்டள் (8:ton), LHMMTT SLLtLLC LLLSSS TtTTTLkLSS SLLLHaCLLLLLLL TTTT CO LTTTS STTTTT கிரேமொண்ட், பீட்டன், சாலிEெlவி என்பன இங்கிலாந்து நாட்டிலுள்ள சில இடங்களின் பெயரை ஆாபகப்படுத்தும்வகையில் அமைந்திருப்பதுடன் வியங்வெல அருகிலுள்ள ஒரு சகோதர சிங்களவர்களின் கிராமத்தை நினைவுபடுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
இன்று அல்மா தோட்டத்தில் கிரேமோனர்ட் பிரினில் 233 ஏக்கரிலும், சிட்டன் பிரிவில் 186 ஏக்கரிலும், லியங்கிலை பிரிவில் 185 ஏக்கரிலும், சாவிவெலி பீவில் 170, ஏக்கரிலுமாக மொத்தம் 780 ஏக்கரில் தேயிலைப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அல்மா நோட்டத்தின் பெயரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கள் காணி உள்ளது. தேயிலை பயிர்ச்செய்கைக்கு உட்படாத காணியில் பெரும்பகுதி மலைப் பாங்கான தரிசு நிலமாகவும் மிகுதியில் தோட்டதொழிலாளர்களினால் மரக்கறி பயிர்ச் செய்கையும் மேற்கொள்ளப்படுகிறது. அல்பாவில் நான்கு மாடிகளைக் கொண்ட ஒரு தேயிலை தொழிற்சாலை கிரேமொன்ட் பிரிவில் உள்ளது. இது அல்மாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது தேயிலைத் தொழிற்சாலை ஆகும். இங்கு

Page 8
நிறுவப்பட்டிருந்த முதலாவது தொழிற்சாலை 20ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தொன்றின் போது முற்றாக சேததமடைந்து விட்டதாகவும் அறிய முடிகிறது. இத் தொழிற்சாலையானது தற்போது அல்மா கிரேமொண்ட் பாடசாலை அமைந்திருக்கும் இடத்திலேயே அமைந்திருந்ததாகவும் மேலும் தெரிய வருகிறது.
இலங்கையில் காங்காணி முறைமை
அக் காலகட்டத்தில் தமிழ் நாட்டிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்தவர்கள் அதே தோட்டங்களில் ஏஜெண்ட்களாக அதாவது அந்த தோட்டத்தை பொறுப்பாக இருந்து கவனித்துக்கொள்ளலாயினர். அவர்களே பின்நாட்களில் பெரிய கங்காணியாக அறியப்பட்டார்கள். தென்னகத்தில் விவசாயிகள் கங்காணியின்கீழ் வேலை செய்யும் முறைக்கு பழகி இருந்தார்கள். இந்த கங்காணிகள் பெரும்பாலும் தோட்டச் சொந்தக்காரருக்கோ அல்லது தோட்டதுரைகளுக்கோ நன்கு அறிமுகமானவர்களாக இருந்தனர்.
இலங்கையில் எட்வர்ட் பார்ன்ஸ்சுடன், (1819) ஜோர்ஜ் பேர்ட்டுடன் (1824) ஆள்பதிகளாக இருந்த காலத்தில் கங்காணிமுறை நடைமுறைக்கு வந்தது. பார்ன்ஸின் தோட்டத்தில் கரும்புச் செய்கையை ஆரம்பிக்க வந்த துரையான வில்லியம் நோர்த்வே தான் முதலில் இலங்கையில் கங்காணி முறைக்கு செயல் வடிவம் கொடுத்தவர். பின்னர் தொழிலாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வாய்ப்பும் வல்லமையும் கொண்டவர்களாக காங்காணிகளே தோட்டங்களில் விளங்கினர்.
அல்மாவை பொறுத்தவரை, ஆரம்ப காலத்தில் 13 பெரிய காங்காணிமார் இருந்துள்ளனர். ஒரு முறை அனைத்து கண்காணிமார்களையும் தோட்ட அலுவலகத்திற்கு வருமாறு தோட்ட அதிகாரி கேட்டார். ஆனால், ஒரு பெரிய காங்காணி மட்டுமே குறித்த தினம் தோட்ட அலுவலகத்திற்கு சென்றதால் அன்று முதல் அவர் மட்டுமே அல்மாவின் பெரிய காங்காணியாக நியமிக்கப்பட்டாராம். அவரே மெ.சி. சுப்பிரமணியம் ஆவார். இவர் 1914 முதல் 1957 வரை பெரிய காங்காணியாக இருந்து தனது 82 வது வயதில் 1957 ஆம் ஆண்டு ஜூ ன் மாதம் 25ம் திகதி இயற்கை ஏய்தினார். இவரது இழப்பை அடுத்து இவரது முத்த மகன் சு. சின்னையா அல்மா தோட்டத்தின் பெரிய காங்காணியாக நியமிக்கப்பட்டார். இவர் 1967ஆம் ஆண்டு காலமானதையடுத்து இலங்கையில் அரசாங்கம் எடுத்திருந்த முடிவின் படி பெரிய கங்காணி முறை அல்மாவிலும் முடிவுக்கு வந்தது. முதல் பெரிய காங்காணியான மெ. சி. சுப்பிரமணியத்தின் மரணத்தை அடுத்து அவர் தோட்டத்திற்கும் மக்களுக்கு செய்த சேவைக்காக தோட்ட செலவிலே நினைவு கல்லறை ஒன்று கட்டப்பட்டதுடன் இன்று வரை அது தோட்ட மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மெ. ச. சுப்பிரமணியத்தின் இளைய மகனான சி. சுப்பையாவின் இளைய மகனே காலஞ்சென்ற கணக்குப் பிள்ளை சிவஞானம் ஆவார். இவர் 1953-1994 வரை அல்மாவின் நான்கு பிரிவுகளிலும் கணக்குப்பிள்ளையாக கடமையாற்றியுள்ளார். (1953-1970 வரை லியங்வெல, 1970-1977 வரை சரணவள்ளி, 1977-1981 வரை கிரேமொன்ட் 1981-1985 வரை லியங்வெல 1985-1994 வரை சீட்டன்).
12

ஆரம்பத்தில் அல்மாத் தோட்டம் இங்கிலாந்தில் வரையறுக்கப்பட்ட இலங்கை giful JoosjLDITFreibofoit Lispaleolig5bg5 (The United Planters Company of Ceylon Ltd.) சொந்தமானதாக இருந்தது. இத்தோட்டம் 1972 ஆம் ஆண்டு மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையால் (EDB) பொறுப்பேற்கப்பட்டது. மீண்டும் இலங்கை அரபIங்கத்தின் தனியார்மயமாக்கல் கொள்கைக்கு ஏற்ப பெருந்தோட்டங்கள் தனியார் நிர்வாகங்களிடம் 1992 ஜூ ன் மாதம் கையளிக்கப்பட்டபோது, அல்மாத்தோட்டம் வரையறுக்கப்பட்ட மத்துரட்ட பயிர்ச்செய்கை நிறுவனத்தின் (Maturata Plantation 1.t) கீழ் கொண்டுவரப்பட்டதுடன் இன்று வரை அந்நிறுவனமே நிருவகித்து வருகிறது.
ஆரம்பம் முதல் தோட்ட அதிகாரிகளாக ஆங்கிலேயர்களே இருந்துள்ளனர். 1972 ஆம் ஆண்டு தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து உள்ளுர் அதிகாரிகள் நியமனம் பெற்றனர். ஆங்கிலேயரான வோல்டே டெரி (Waltey Terry) என்பவரே அதிக காலம் அல்மாவின் தோட்ட அதிகாரியாக (துரை) இருந்தவராவார். அவர் 1950ம் ஆண்டு தொடக்கம் 1961ம் ஆண்டுவரை கடமையாற்றினார்.
13

Page 9
ம்
பிரமணிய முதலாவது பெரிய க
is
மெ. சி. சுப்
ழில்
)
TFITT
திகதி வரை தொ
*ம்
25
l
T
ଈର୍ଷୀ
தி 1957 ஜூ 82வது வயதில் சிவபாத
(அல்மாத்தோட்டத் ம் ஆண்டு முதல்
1914
டந்தார்
ונם3IR.
t
Luli,
14
 

|
ஆண்டு வரை
FlfileEIT
சியுமான பெரிய
É7,
முதல் 19
திகதி
HLITETIJLD l
Lib
шуп55ц.
函
上
舞蹟 欧驾 mm s 则明 해 1
15

Page 10
GeauiTGü EL 6Lrf (Wall tey Terry)
இருந்த
பெரிய துரையாடி
i
டந்துநின்
பூோ
ܐܡ
TL LIII
EGET ET LII)
홍 . 涨潮 山山 斑皿 脚圈 ཏེ། ཕྱི་ 情。 나그 的 原 凤河 鹰燕 四斑 加上 下晒 *函岛 ? -- 随剧 朋岛 置
இவர் கடமையாற்றினார்
ங்கிலேயர்
16
 

Wነህ 조 AUS VULKAIS
tష్ణా ቨበበ Y፩W
**?tara, As a
F’ith all gyfred zavishes
fir fhir'is (1775
for for Wei Yer
Žá * 効*必/ ޗަޗި ർഗ%പ്ര
-
வோல்டே டெரி அவர்கள் சிவஞானம் அவர்களுக்கு வருடாந்தம் நத்தார் வாழ்த்து மடல் அனுப்புவது வழக்கமாகும். இதுவே டெரி அவர்கள் இறப்பதற்கு முன் அனுப்பிய இறுதி வாழ்த்துமடலாகும்.
17

Page 11
!ȚILẬg|No|LĘ storinĥşağąs-IĘ Ęng +I (FIT).Ito ī£qĀŋi-iĝ Ĥg prisos gỡfŤ ||ose||RolĒ qi&LẤnos
ņos -qızırı -1, riņ##ĝlo isođīsșeșğlıoğą, plilo iso prítos mųırısı Tılsī£ğın solgo soling
KLTY YYLLTKYKYLLL LLLL LSYY K0000 KKKK KLJLK LK00 K0 KKKL
|[[]]]]]]]]]]]]] ||||||譯
18
 
 
 

@Istoff, q, G5I 198929ாபி3 ரப9ா9 ர9யாேகுதி
s.配)
19

Page 12
இழக்காத உணர்வுகளோடு."
1957 ஆம் ஆண்டு, நான் எனது தந்தையான மஹாகுடுகலையைச் சேர்ந்த சி. முத்தையா அவர்களை இழந்து ஆறுமாதங்கள் உருண்டோடி இருக்கும். இளமையிலேயே கவலைகளை சுமந்து கொண்டிருந்த வேளையில் தான் எம் திருமணம் நடந்தது. பெரிய குடும்பத்தில் பிறந்த நான் திருமணத்தின் பின் பயமாக இருந்தாலும் உங்களது அன்பான துணை என்னை ஒரு சாதாரண பெண்ணாக வாழப் பழக்கப்படுத்திக்கொள்ள வைத்தது. எதையும் அனுசரித்து போகும் உங்கள் குணம், வந்த கோபத்திற்காக பின்னர் வருத்தப்படும் உங்கள் சுபாவம் இன்னும் என் நினைவலைகளில்
தனக்கு பெற்றோர் வளர்ப்பு கிடைக்கவில்லை என்பதால் எங்கள் பிள்ளைகளுக்கும் அந்த குறை வந்துவிடக்கூடாது என்பதில் நீங்கள் காட்டிய அக்கறையை, எப்படி சொல்வது. பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல பாடசாலைகளில் கல்வி வாய்ப்பை பெற்று கொடுத்தீர்கள். வாழ்நாள் முழுவதும் நீங்கள் தேயிலைக்கும் தோட்ட மக்களுக்காய் உழைத்தீர்கள். தோட்ட மக்களை உயிராய் மதித்தீர்கள். நமக்கு உணவளிப்பது தேயிலையே என ஒவ்வொரு தேயிலை செடியையும் உங்கள் குழந்தையை போல் பராமரித்தீர்கள். இந்த இடத்தில் எந்த தேயிலை என அச்செடியின் வரலாற்றையே கூறுவீர்கள். இனி நாம் யாரிடம் கேட்பது? தோட்டத்தில் உத்தியோகத்தர், தொழிலாளி என பேதம் பார்க்காது தேவை ஏற்பட்டப்போதெல்லாம் நீங்கள் செய்த உதவிகளை எப்படி மறப்பது?
நீங்கள் எனக்கு ஒரு நல்ல துணைவனாக, பிள்ளைகளுக்கு நல்லதொரு வழிகாட்டியாக திகழ்ந்து காட்டினிர்கள். ஆனாலும் காலன் இவ்வளவு விரைவாக உங்களை அழைப்பான் என நான் துளியும் நினைக்கவில்லை.
இறுதியாக உங்கள் விருப்பப்படியே கண்களை தானமாக வழங்க உங்கள் செல்வங்களுக்கு அனுமதியளித்தேன். மேலும் நீங்கள் அடிக்கடி கூறுவது போல் உங்கள் பிள்ளைகள் தைரியசாலிகளாகவே உள்ளனர். நீங்கள் நினைத்த மலையக சமுக மாற்றத்தை காண அவர்கள் ஒருபோதும் 560)ւաո Ց5 இருக்க மாட்டார்கள். நாங்கள் இழந்தது உங்கள் உயிரைத்தான், உங்கள் உணர்வுகளை அல்ல!
துணைவி சி. சிவகாமி
20

மைத்துனரின் நினைவுகளில்.
இலங்கையில் வெள்ளையர் ஆட்சிக்காலத்திலே அதிலும் மலையக தேயிலைத் தேட் பங்களை வெள்ளையர் நிர்வாகம் செய்த காலத்தில் மகமாயி, சுப்பையா தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் திரு. சிவஞானம் அவர்கள்.
அக்காலத்தில் உயர் கல்வியை பணம் செலவிட்டு பெற வேண்டிய காலத்தில் தோட்டப்பாடசாலையில் தன் கல்வியை முடித்தார்.
இளம் வயதிலேயே தாயாரை இழந்த இவர் தன் தந்தையின் வளர்ப்பிலும் இருக்கமுடியவில்லை. காரணம் தந்தை இந்தியா சென்றுவிட்டார். தன் தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவர் இவர். வெள்ளையரின் நிர்வாகத்தில் தேயிலைத் கோட்டத்தில் ஒரு சிறு பதவி கிடைத்தாலும் கெளரவமாக கருதப்பட்ட அக்காலகட்டத்தில் தேயிலை சம்பந்தமான அனைத்தையும் கற்று தேர்ச்சியும் பெற்றார். பின் பதவியும் கிடைத்தது. படிப்படியாக முன்னேறி அல்மா குரூப்பில் கிரேமவுண்ட், சார்லிவளி, லியாங்வெல, சீடன் ஆகிய நான்கு பிரிவு தோட்டங்களிலும் மிகத் திறமையாகப் பணியாற்றி நிர்வாகத்தின் நன் மதிப்பைப் பெற்றதோடு தோட்டத்திற்கு அதிக இலாபத்தையும் தேடிக்கொடுத்தார்.
எனது சகோதரி சிவகாமியை திருமணம் முடித்து நான்கு மகள்மார் ஒரு மகனையும் பெற்றெடுத்து அவர்களுக்கு சிறந்த கல்வியைப் பெற பெருமுயற்சி எடுத்தார். அதில் தன் மகனை பட்டதாரியாக்கியமை பெருமைக்குரியது. அதேபோல் மகனும் *மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்? எனும் குறளுக்கமைய தன் கடமையைச் செய்தார். மகள் மார் முலம் பேரப்பிள்ளைகளைக் கண்ட இவர் யாவரடனும் ஹாஷ்யமாக பேசக்கூடியவர். குறிப்பாக இளைஞர்கள் இவரைச் சுற்றி எந்நேரமும் இருப்பார்கள்.
தன் பதவியில் ஓய்வு பெற்றபின் எங்கள் ஊரான மகாகுடுகலயில் வசிக்கத் தொடங்கினார். இங்கும் நண்பர்களுக்கு குறைவில்லை. தன் முதுமையிலும் தன் தேவையை தானே பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் இருந்தார். யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் கடந்த 26-07-2006 சிவபதம் அடைந்தார். எனது அன்புக்குரிய மைத்துனரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
21

Page 13
எங்கள் அப்பா
அல்மா தோட்டத்தில் பிறந்து அங்கே வாழ்ந்தவரும் எங்கள் வழித்துணையாய் விளங்கும் எனதருமை அப்பாவுக்கு,
செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கமைய உங்கள் தொழிலில் நேர்மையையும் கண்டிப்பையும் நாம் கண்டோம். அதனாலேயே பதவி உயர்வுகளையும் பெற்றீர்கள். உங்களை சுற்றி எந்நேரமும் தொழிலாளர்கள் கூட்டமாகவே இருப்பார்கள். பெருமை என்னவென்றால் எமது சகோதர மொழித் தொழிலாளர்கள் எந்நேரமும் (ஐயா) என்று சொல்லி உங்களைச் சுற்றி இருப்பார்கள். தொழிலாளர்களிடம் நண்பனைப் போலவே பலகுவீர்கள். அப்பா கலியான வீடென்றாலும் கருமாதி வீடென்றாலும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். தோட்டத்தில் கோவில் திருவிழா என்றால் நம் வீடும் முழு அல்மா தோட்டமுமே கொண்டாட்டத்தில் கலந்து குதுாகலிக்கும். நீங்கள் பணமிருந்தாலும் எளிமையான ஒடடையையும் வாழ்க்கையையும் விரும்பி வாழ்ந்தீர்கள்.
அப்பா நீங்கள் அருமையான 4 புதல்விகளையும் ஒரு புதல்வனையும் பெற்றெடுத்தீர்கள். அன்புடனும் பாசத்துடனும் கண்டிப்புடனும் வளர்த்தீர்கள். தோட்டத்தில் கல்வி வசதி இல்லாமையால் அருகிலுள்ள நுவரெலியா நகரத்தில் நல்லாயன் மகளிர் கல்லூரி விடுதியில் 5 பேரையும் தங்க வைத்து கல்வி கற்பதற்குரிய வசதிகளை செய்து கொடுத்தீர்கள். விடுமுறையில் வீட்டுக்கு வந்தாலும் பாசமாக இருப்பீர்கள். இருந்தாலும் படிப்பு விடயத்தில் கண்டிப்பாகவே இருந்தீர்கள். இதனாலேயே உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். பெண் பிள்ளைகள் நால்வரை விடுதியில் பணம் கட்டி படிக்க வைப்பதை ஒருசிலர் ஏளனம் செய்தனர். அதையும் மீறி பெண் பிள்ளைகளை படிக்கவைத்தது வீண்போகவில்லை. புதல்விகள் நால்வரும் நல்ல நிலைமையிலேயே இருக்கின்றார்கள். மருமகன்களோடு பாசத்தோடு இருப்பீர்கள்.
வைத்தியசாலையில் இறுதியாக நாங்கள் பார்க்க வந்த போது ஏதோ சொல்ல நினைத்தீர்கள். ஆனால் உங்களால் சொல்ல முடியவில்லை. என்ன சொல்ல நினைத்தீர்களோ ஆண்டவனுக்குத்தான் தெரியும். வைத்தியசாலையிலிருந்து வந்து 2 மணி நேரத்தில் காலன் உங்களை கொண்டுபோனது எங்களுக்கும் பெருங்கவலையே.
அப்பா நீங்கள் இவ்வுலகை விட்டுச் சென்றாலும் உங்கள் இரு கண்களாலும் இருவர் ஒளிபெற்று இவ்வுலகில் வாழ்கிறார்கள்.
அன்புத் தந்தையே உங்கள் எளிமையான வாழ்க்கையை பின்பற்றி நாங்களும் எங்கள் வாழ்க்கைப்பாதையை கடந்து செல்வோம். யாவரையும் அவ்வழியே செல்ல வழிகாட்டுவோம்
உங்கள் அன்புமகள் புவனகாந்தி
22

எங்கள் தாத்தா
பள்ளி விடுமுறை நாட்களில் எங்கள் வரவை வழிமேல் விழி வைத்து
பார்த்திருக்கும் எங்கள் தாத்தா
நீங்கள் எங்களுடன் சிறு பிள்ளைபோல் விளையாடுவீர்கள் சண்டையும் போடுவீர்கள் சமாதானம் செய்வீர் கள் நாங்கள் இன்னும் ஓடித்திரிய தயார்
ஒழிந்து விளையாடத் தயார்
நீங்கள் ஓய்வெடுத்துக்கொண்டீர்கள்
நாங்கள் தணிந்து நின்று உங்கள்வழியை பின்பற்றுவோம் யாவரையும் அவ்வழிச் செல்ல
வழிகாட்டுவோம்
பேரப்பிள்ளைகள் நிரோஷன் 2 ως ιτ
23

Page 14
அப்பா
அப்பா என்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் நிறைய புரிகிறது. நீங்கள் எங்களை விட்டு பிரிந்த பின், எப்படி சொல்வது எப்படி எழுதுவது? ஒரு பக்கம் உங்களை பிரிந்த கவலை மறுபக்கம் அம்மா. அடுத்த பக்கம் நீங்கள் பாசமாக வளர்த்த தம்பி, தங்கை, எல்லா பக்கமும் கவலை என்றாலும் இந்த சில வரிகளை நான் எழுதத்தான் வேண்டும்.
சிறு வயதில் தாயை இழந்த நீங்கள் எவ்வளவோ கவுடத்துக்கு மத்தியில் தாத்தா, பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தீர்கள். வேலை என்றால் உங்களிடம் படிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளைவிட தேயிலை செடியை கவனித்தீர்கள். அதில் அப்படியொரு அக்கரை, உரிய நேரத்தில் உரம், மருந்து கொழுந்து காலத்தில் நீங்கள் வேலைப்பார்க்கும் தோட்டத்தில் தான் நிறைய வருமானம். நீங்களும் வேஷ்டியை மடித்துக்கொண்டு தொழிலாளர்களோடு சேர்ந்து தேயிலை செடிகளுக்குள் சென்று சரியான முறையில் உரம் இட்டார்களா?, கவாத்து முறையாக வெட்டப்பட்டதா என்று உன்னிப்பாக கவனிப்பீர்கள்.
இதனால் நீங்கள் எங்களை கவனிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. எங்களை நன்றாகவே கவனித்தீர்கள். சில மயில் துரத்துக்கு அப்பால் உள்ள நுவரெலியா நல்லாயன் மகளிர் பாடசாலையில் சேர்த்து அங்கே தங்கவைத்து படிக்க வைத்தீர்கள். இதனால் உங்கள் பிள்ளைகள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். உங்களுக்கு எவ்வளவு பெருமை. யாரைக்கண்டாலும் கதைப்பீர்கள். உங்கள் மருமகன்மாருடன் சரிசமமாக கதைப்பீர்கள், பழகுவீர்கள். பேரப்பிள்ளைகளிடம் பாசம் அதிகம். உன் பிள்ளைகள் ஒருவிதம் நல்ல பாசம் என்று என்னிடம் கூறுவீர்கள். அதற்கு நான் என்னைப்போல்தான் என்று கூறுவேன். எல்லோரையும் நல்லா இருப்பா என்று கூறுவீர்கள். நாங்கள் வருகிறோம் என்றால் வெளியே நின்று பார்த்துக்கொண்டிருப்பீர்கள். வந்ததும் முதலில் கீர்த்தி வாப்பா, எப்படி இருக்கிறாய்? என்று கேட்பீர்கள் அந்த வார்த்தையை எங்கே? எப்போ? கேட்போம்? இனிமேல்.
உங்களைப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம். குடும்பத்தில் எந்த விழாக்களிலும் நீங்கள் இருப்பீர்கள். நான் என் பிள்ளைகளுக்கு சில அறிவுரைகளை கூறுவேன். அதாவது எதிலும் ஆசை வைக்கக்கூடாது. என்னுடையது என்று கூறக்கூடாது. சாதாரண மனிதனாக வாழ வேண்டும் என்று கூறுவேன். அது உங்கள் முலம் என் பிள்ளைகளுக்கு நன்றாகவே விளங்கிவிட்டது. கடைசியில் உங்கள் கண்களையும் தானம் செய்து விட்டீர்கள். அந்த கண்களால் யாரோ இந்த உலகை பார்க்கிறார்கள். என்ன செய்தும் உட்ங்கள் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
լD&ail
சியாமளாதேவி
24

தாத்தா
பாசமுள்ள தாத்தா பாசத்தை பொழிந்தவர் - தாத்தா தன்னம்பிக்கை கொண்டவர் - தாத்தா தர்மம் செய்தவர் - தாத்தா
மனிதர்கள் எவ்வளவு இருந்தாலும் மனதில் பட்டதை சொல்லியவர் - தாத்தா மனகஷ்டத்தை தாங்கி கொண்டவர் மனமகிழ்ச்சியுடன் வாழ்ந்தவர் - தாத்தா
எத்தனை கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் எதிலும் முன்னோக்கி சென்றவர் - தாத்தா எங்களை பிரித்தது இந்த மரணமா? எப்போது உங்களை பார்ப்பது - தாத்தா
நாம் எதையும் கொண்டுவந்ததுமில்லை நாம் கொண்டு போவதுமில்லை அந்த ஒரு சொல்லிற்காக உங்கள் இரு
கண்களையும் தர்மமாக கொடுத்தீர்களே - தாத்தா
பேத்தி ம.டிலக்ஷனா, பேரன் ம. டிலிசன்
25

Page 15
தாத்தா
அன்பு மிக்க தாத்தா என்மேல் அண்பைப் பொழிந்தவர் ~ தாத்தா எங்கள் உறவை வளர்த்தவர் - தாத்தா
பலருக்கு நன்மை செய்தவர் ~ தாத்தா
எங்களுக்கு கஷ்டம் என்று தெரிந்தால் தடித்துப் போய்விடுவீர்களே. என்னை சிறு வயதில் நீங்கள் தானே வளர்தீர்கள் ~ தாத்தா எங்களுக்கு ஒரு குறையுமில்லாமல் பார்த்தீர்களே ~ தாத்தா நான் படித்து உங்களையெல்லாம் காப்பாற்ற வேண்டுமென்று
கூறுவீர்கள்
எங்கள் அத்தையிடம் கதைத்தீர்களே ~ தாத்தா எங்களிடம் கதைக்கவில்லையே ~ தாத்தா நீங்கள் எங்களிடம் கதைக்காததே மிகவும் கவலையானது
வைத்தியசாலையில் என்னை கூட்டிவரவா என்றபோது சரி என்றீர்கள்
பேத்தி கீர்த்திகா
26

எண்ணி எண்ணிப் பார்க்கிறேன் என்ன சொல்ல நினைத்தீர்கள்
இறுதியாக.
கண்களை திறந்த ~ உற்றுநோக்கி கூறவந்த வார்த்தையினை ~ காளன் வந்த தடுத்தானே.
உங்களின் பார்வை உறவுகளை தவிக்கவிட்டுப் போகிறேன் உரிமையோடு பார்த்துக்கொள் என்பதா?
வியாழனன்று காலை விழித்திருந்து கதைத்திருப்பீர்கள் என்றன்றோ எண்ணி வந்தேன். நேற்று இருந்த இடமோ இன்று இடம்மாறி.
திரும்ப முடியா இடத்திற்கு தொலைந்து போனதென்ன. நீங்கள் செல்லமாய் சொல்லும் சின்னவன், பெரியவன் ~ உங்கள் செல்லப் பேரன்கள்
சீத்தா தாத்தா வென ~ இனியாரை அழைப்பார்கள்.
நீங்கள் கொண்ட பிரியத்தால் ~என் பிள்ளைகளை நானல்ல - யார் ஏதும் சொன்னாலும் அவரோடு வருத்தம் கொள்வீர் - இப்படி ஒரு தாத்தா இனி எங்கே கிடைக்கப்போறார்
ஆண்பிள்ளையாய் வளர்த்தேன் ~ என அடிக்கடி கூறுவீர்கள் ~ ஆண்
பிள்ளையாய் நான் செய்ய இயலா வேலையெல்லாம் என்னவர் செய்ய எனக்களித்த வாய்ப்பாய் நினைக்கவா ~ அல்ல
வரமாய் நினைக்கவா
நெஞ்சு கணக்கிறது. நினைக்கின்றபோது உங்களைப் பார்க்க வந்தால். என்ன வாகனம், எவ்வளவு பணம் தந்தாய் சின்னவனை கிளினிக் கூட்டிப் போனாயா? என அக்கரைக் கொள்வார் யார் இருப்பார்.
இரண்டு நாட்களிலே வீடு வந்த சேர்வீர் என்றார் - இவ்வாறு வருவீர் என்று எள்ளளவும் எண்ணவில்லை
அப்பா நீங்கள் அண்பானவர் தியாக சீலர் வாழுகின்ற போது வாழ்ந்ததோ மற்றவருக்காய் வாழ்ந்த
பிறகும்
கண்களை தானம் செய்து இன்னொரு உலகம் காண ஒளி தந்த தெய்வம் நீங்கள் இன்னும் எத்தனை பிறவி கொண்டும் உங்கள் கடனடைக்க ஒரு போதும் இயலாது.
உங்கள் மகளானேன் அதனால் உலகில் வளமானேன்
மகள் - ரவிச்சந்திரிகா

Page 16
28
 

என்றும் எங்களோடு நீங்கள்
வெள்ளையர் ஆட்சியில் அஸ்மா தோட்டத்தில் அண்னையின் மடியில் அன்பு புதல்வனாய் |DSTJjši କାଁ மைந்தளாய் பிறந்த எங்கள் அன்பு பிதாவே
பிறந்த ஆறாம் வயதில் அன்னையை இழந்து ஆற்றாத் துயரில் நீங்கள் வீழ்ந்த வேளை அண்னையின் இழப்ால் ஆராம் மாதம் சகோதரியையும் இழந்து கலையுடன் கழித்த வேளை
தந்தையுடன் தமிழ் நாடு சென்றும் அங்கும் பிடிப்பீன்றி மரது கப்பலில் மலையகத்திற்கே ஓடி வந்த மாமனிதன் நீங்கள் தோட்டப் பாடசாலையில் கிரமமாக கண்வியை சந்நீர்கள்
காலங்கள் கடக்க கனக்சுப்பிள்ளை வேலையும் வேலையில் பதவி உயர்வுகளையும் தொடர்ந்து பெற்ற எங்கள் அன்னை விவகாமி அம்மானையும் கரம் பிடித்தீர்கள்
செய்யும் தொழிலில் நேர்மையும் கண்டிப்பும்
2_ங்களிடம் நாம் கண்டோம் மக்களிடம் அன்பும் பரிவும் காட்டும் உங்கள் பாச துனத்தையும் நாம் ரன்டோம் சிறந்த நிர்வாகி
பின்ற பாராட்டையும் பலமுறை நீங்கள் பெற்றதை நாம் கண்டோம் தொழிலே முதல் ஆடும்(Iாய் நீங்கள் போற்றியதை நாம் கண்டோம்.
காலத்தின் மாற்றம் மக்கள் ஐவருக்கு அண்பு தந்தையானீர்கள் பாராட்டி சீராட்டி அன்பு கவிந்த கண்டிப்பால் ஆளாக்சி விட்டீர்கள்
கல்வி கூடமே அறியாமல் பலர் வாழ்ந்த வேளை பெண்களின் கல்வியை ஏளனம் செய்தபோதம் எதிராக நீங்கள் புதல்விகள் நாள்வரையும் அருமை புதல்வனையும் சொற்ப வதுமானத்தில் கல்வியில் சொர்க்கம் கான வைத்தீர்கள் பட்டதாரி ஆக்கினீர்கள் பகிப்தும் பாராட்ட சேட்டீர்கள்
சோர்வை விரும்பாத நீங்கள்
நாமும் அவர் வழிக்கு செல்ல வழிகாட்டினீர்கள் மாற்றான் கையை நம்பாபல் சமயப்ாக உழைத்து வாழவும் வஞ்சகர்களாய், சுயநலவாதியாய் வாழாமல்

Page 17
பிறர்நலவாதியாக, சமூகசிந்தனையுடன் வாழவும் பயந்த அடிமைகளாய் வாழாமல் பயமறியா சிங்கங்களாய் வாழவும் உங்கள் அனுபவங்களை கூறி கற்றவர்கள் கூடிய சபையில் நாங்களும் அமரும் நிலையை எமக்கு தந்த தந்தையே குடும்பத்தில் மட்டுமா நீங்கள் குதாகல மன்னன் உற்றார் உறவினர் வீடு தேடி வந்தாலும் நீங்கள் வீதி வழியே நடந்து உலா சென்றாலும் கல்யாண வீடானாலும் கருமாதி வீடானாலும் அங்கெல்லாம் உங்களைச் சுற்றி ஓர் கூட்டம் அவர்கள் மத்தியில் நீங்களோர் குதாகல மன்னன்
ஆடம்பர வாழ்வை விரும்பாத அருமை தந்தையே சுதந்திரமாய் வாழனும் சுகபோகங்களுடன் அல்ல கோமாளியாய் வாழலாம் கோடீஸ்வரனாய் அல்ல நிம்மதிகள் அங்கே இல்லை இருளான அந்த வாழ்வால் இதயங்கள் கணக்க வேண்டாம் என்பீர்கள் இதிலும் பல உண்மைகள் நாம் கண்டோம் உங்கள் சொல்லும் செயலிலும் புது புது அர்த்தங்கள் கண்டோம்
எமதருமை தந்தையே உங்கள் எண்ணங்கள், நினைவுகள், ஆசைகள் விந்தை உலகில்
வீழ்ந்திடாமல் உங்கள் வழியில் வீராப்பாய் நாங்கள் வாழ்ந்த காட்டுவோம்
உங்களின் கம்பீர தோற்றம வீராப்பான நடை குதாகல பேச்சு அண்பு மாறாத வேளை அவசரமாய் ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம் அடுத்த நாள் சுகமாகி வருவீர்கள் என்றார்கள் இன்னும் பல ஆண்டுகள் எங்களோடு வாழவேண்டும் என்று தவித்த வேளை மெளனமாய் நீங்கள் இந்த மண் வாழ்வை முடித்து விண்ணிற்கு தாவி விட்டீர்கள் இறுதியில் ஏதோ கூற வந்தீர்கள் என்பதை உங்கள் உதட்டோர புன்னகையால் நாங்கள் அறிகின்றோம்
அருமை தந்தையே உங்கள் அன்பு நெஞ்சங்களை கால காலமாய் உங்கள் கனிவான அண்பை நினைத்து (கண்ணிர் சிந்த) அழவைத்து விட்டீர்கள் காலங்கள் கடந்தாலும் உங்கள் பிரிவால் கனத்த எங்கள் இதயங்களில் உங்கள் நினைவுகள் வற்றாத ஜீவநதியாய் வாழ்நாள் முழுவதம் வடிந்தோடும்
அன்பு மகள் - சிவஞானம் மங்கையர்கரசி

அப்பா ஒரு நண்பனாய் .:
Hello Sivagnanam How Are You? Ib T6oi G 601 5 6hú u T 60) a aš கானனும்போதெல்லாம் அடிக்கடி கேட்கும் ஒரு வினா. இதற்காக அவர் என்னோடு கோபம் கொண்டதில்லை. நானும் வருத்தப்பட்டதில்லை. ஏனெனில் நாமிருவம் அப்பா மகன் என்ற உறவுக்கு அப்பால் நண்பர்களாகவே பழகினோம். எந்த விடயத்தைப் பற்றி தீவிரமாக மணித்தியாலக் கணக்கில் விவாதிப்போம். முரண்பட்டாலும் குறித்த விடயத்திலேயே முரண் காணப்படுமேயொழியே உறவைப் பாதிக்காது. தைரியமாக எதையும் கையாளுவோம்.
நான் எனது ஆரம்பக் கல்வியை அல்மாத் தோட்டப் பாடசாலையில் கற்றாலும் பின்னர் நான் சிறந்த கல்வியைப்பெற வேண்டுமென இலங்கையின் முன்னணி தனியார் கல்லூரியான புனித தோமஸ் கல்லூரிக்கு பல கஷ்டங்களுக்கு மத்தியில் சேர்ப்பித்தார். 1983ம் ஆண்டு கலவரம் என் மனதை பெரிதும் பாதித்ததால் நானும் மற்றவர்களைப் போல் இக்கரைக்கு அக்கரைப் பச்சை கானும் ஒரு இந்திய விரும்பியாகவே இருந்தேன். இதை மாற்றியமைப்பதில் அப்பா வெற்றி கண்டார். ஒரு நல்ல உதாரணம் 1980 நடுப்பகுதியில் நான் கண்டியில் ஒரு கடை உரிமையாளருடன் உரையாடிய போது தம்பி நீங்கள் இந்திய சிட்டிசனா, இலங்கை சிட்டிசனா” என்று கேட்டார். நானும் பாருங்களேன் எங்கள் அப்பாவுக்குப் பைத்தியம் இலங்கை சிட்டிசன் எடுத்துள்ளார் என்றேன். அந்தக் கடை உரிமையாளரோ என் தந்தையின் நடவடிக்கை சரியே என்று என்னை ஏசினார். அந்த நிகழ்வே எனக்கு இலங்கை பற்றிய சிந்தனையை தூண்டியதாகும்.
பிறகு படிப்படியாக அப்பா என்னை இலங்கை குறிப்பாக மலையகம் பற்றிய சிந்தனையை வளர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். நானும் மலையகம் பற்றிய தேடலில் தீவிரம்காட்டத் தொடங்கினேன். பல புத்தகங்களை இருவரும் வாசித்தோம். சாரல் நாடன் எழுதிய தேசபக்தன், கோ. நடேசய்யர் புத்தகத்தை நான் வாசிப்பதற்கு வாங்கிவந்திருந்த வேளையில் நான் ஏதோ குறிப்பிட அவர் இந்த புத்தகத்தின் இத்தனையாம் பக்கத்தில் ‘நாம் ஏனென்று கேள்வி கேட்பதற்கல்ல சேவை செய்து LDL algoib(85 (It is not Our business to reason why, but what it is to serve and die) என்று ஒரு கங்காணியின் கல்லறையில் எழுதியிருப்பதாக கோ.நடேசய்யர் அன்றே சட்டசபையில் குறிப்பிட்டு இதுவே மலையகத் தமிழரின் நிலை எனக் குறிப்பிட்டதாகக் கூறினார். நான் ஆச்சரிப்பட அப்பாவோ தான் அந்தப் புத்தகத்தை முதல் நாள் இரவே படித்துவிட்டதாகக் கூறினார். அதோடு நில்லாமல் அந்த வாசகத்தை நாம் மாற்றி எழுத வேண்டும் என்றார். எப்படி என்று கேட்டபோது (It is our business to reason why, but it is not to serve and die") (38F6oal 6&Filst LDL6 lap) மட்டுமல்ல ஏனென்று கேள்வியை எழுப்ப வேண்டும். இது எவ்வளவு தூரம் அவர் மலையக சமுகம் மீது பற்றுக் கொண்டுள்ளார் என்பதை எனக்கு உணர்த்தியது. மேலும் நாம் இந்திய வம்சாவளித் தமிழரல்ல. நாம் இந்நாட்டுப் பிரஜைகள் எனவே மலையகத் தமிழர் என்றே அழைக்க வேண்டுமென்றார்.

Page 18
மற்றுமொரு சம்பவம் 1989களில் பெ. சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்த போது எனக்கு 17 வயதிருக்கும். நானும் அவரை ஆதரிக்க வேண்டுமென்ற போது மிகவும் கோபப்பட்டவாறு எதிர்த்தார். மலையக மக்கள் முன்னணியால் மலையகத்துக்கு சரியான வழியைக் காட்ட முடியாது. தயவு செய்து அந்த முடிவை மாற்றிக்கொள் என்றார்.
மறுபுறம் 1996இல் நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்த போது சக மலையக மாணவர்களுடன் சேர்ந்து புதிய பண்பாட்டு அமைப்பை ஆரம்பித்த போது, அப்பா மிகவும் உற்சாகப்பட்டார். எம்மையும் ஊக்குவித்தார். சரியான முடிவென தட்டிக்கொடுத்தார். ஆலோசனைகளை வழங்கியதுடன் தன் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். எமது ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஏதோ ஒரு வகையில் அவரது பங்களிப்பை கண்டோம்.
மலையகத்தில் கல்வி வாய்ப்புகள் குறைவு என்பதால் எனக்கு ஆரம்பதம் முதலே சிறந்த கல்வியூட்ட எண்ணினார். என்னை பொறியியலாளராக்க எண்ணினார். எனது பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வியில் நான் விடுதியிலேயே தங்க வேண்டிய நிலை. எனவே நாம் அடிக்கடி எழுதிக் கொள்ளும் கடிதங்கள் பல பக்கங்களில் இருக்கும். சிலவேளை சிறுபிள்ளைத்தனமானதாகவும் இருக்கும். ஆனால் அந்த மடல்கள் தான் எங்கள் உயிரோட்டமுள்ள அன்பின் அத்திவாரக் கற்கள் அப்பா என்னை பொறியியலாளராக ஆக்க எண்ணியப் போதிலும் எனக்கு முகாமைத்துவ துறையிலேயே பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. அதற்காக அவர் கவலைப்படவில்லை. ஒரு மலையக தந்தை என்ற நிலையிலிருந்து சந்தோசப்பட்டார். நான் பகுதிநேர செய்தியாளர் தொழிலை செய்த போது பல விடயங்களை அவர் சொல்லி தந்தார். செய்தித்துறை பயிற்சிக்காக சுவீடன் அரசாங்கம் என்னை அழைத்ததை கேட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். மேலும் தன்னால் விமான நிலையம் வரை வர பஸ்சில் வந்து வழியனுப்பி நல்லப்படியாக போயிட்டு வாப்பா' என்று கண்கலங்கினார். முதல்தடவையாக அவர் கண்கலங்கியதை அன்று நான் கன்டேன். இது ஆனந்தக் கண்ணிரா? முதல்தடவையாக பிரியும் கவலையின் கண்ணிரா தெரியவில்லை. எனது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு அம்மாவை மட்டும் அழைத்து போகுமாறு கூறினார். அப்பாவாகவல்ல நண்பனாக வாங்க என்றவுடன் மறு பேச்சின்றி என்னோடு வந்துவிட்டார். ஆனால் இன்று நான் முகாமைத்துவ துறையில் முதுமானி பட்டத்தை பூர்த்தி செய்யும் தருவாயில் யாரை அப்பாவாக / நண்பனாக அழைத்து போவது என்ற போராட்டம் எனது மனதுக்குள்ளே இன்று நடந்து கொண்டுள்ளது.
பல்கலைக்கழக வாழ்க்கை முடித்த நான் கொழும்பில் தொழில் புரிய ஆரம்பித்த பின்னர் வெள்ளி இரவு பஸ் ஏறி சனிகாலையில் வீட்டிற்கு வந்துவிடுவது வழக்கம். ஒவ்வொரு சனி காலையிலும் அவர் என் வருகைக்காக குளிரையும் பொருட்படுத்தாது வெளியில் பாதையையே பார்த்திருப்பார். சனி இரவு பன்னிரெண்டு, ஒரு மணி வரை பல விடயங்கள் பற்றியும் அலவலாவுவார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்படும்
32

போது பஸ் ஏறும்வரை வந்து வழியனுப்பி வைப்பார். எனது உயர்கல்வி நடவடிக்கைகள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக என்னால் ஒவ்வொரு வாரமும் வர முடியாது போயிற்று அக்கா சொல்வாள் “இந்த கிழமை தம்பி வருவானா? என அட்பா அடிக்கடி கேட்பதாக, நானும் இந்த வருட இறுதியுடன் என் கல்வி நடவடிக்கைகள் முடிந்துவிடும் பிறகு உங்களுடனேயே வந்து இருந்து விடுகிறேன் என்று அப்பாவிடம் கூறி இருந்தேன். ஆனால் எல்லாமே இன்று மாறிவிட்டது.
அப்பா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது நான் வந்து அவருடன் இருந்தேன். குணமாகிவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. நுவரெலியா வைத்தியசாலையிலிருந்து கண்டிக்கு அழைத்து சென்ற போது அவர் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டதை நினைக்கும் போது விழிகள் அடங்க மறுக்கின்றன. இறுதியாக கண்டி வைத்தியசாலையில் நான் அவரை பார்த்த போது ஏதோ சொல்ல நினைத்தார். முடியவில்லை. மறுநாள் காலையில் நாங்கள் சென்ற போது அப்பாவை காணவில்லை. நான் போய் பிரேத அறையில் பார்த்த போது அமைதியாக நீண்ட உறக்கத்தில் இருந்தார். அந்த உறக்கம் நிரந்தரமானது என்பதை அப்போது என் மனம் உறுதிப்படுத்தியது.
என்னால் அழுகையை மறைக்கவோ அடக்கவோ முடியவில்லை. அம்மா தைரியமுட்டினாள். அப்பாவின் விருப்பப்படி அவரது கண்களை தானம் செய்ய வேண்டுமென்ற போது அம்மா அனுமதி வழங்கினார். தானம் செய்யப்பட்ட கண்கள் உயிரோட்டத்துடன் இருப்பதை கண்டேன். அதன் பின்னே மனதை ஆறுதல்படுத்திக் கொண்டேன்.
இனி என் வருகைக்காக அவர் காத்திருக்கப்போவதில்லை. இரவு விழித்திருந்து கதைக்க போவதுமில்லை. இன்று அப்பா என்ற நண்பனை நான் இழந்தாலும் அவரது உணர்வுகளும், இலட்சியங்களும் எம்மோடு என்றுமிருக்கும். அவர் எமக்கு காட்டிய அந்த இலட்சிய பாதையை தொடர்ந்து முன்னெடுத்து மலையக சமுக மாற்றத்திற்கு துணை நிற்போம் என்ற உறுதி எமக்கு நம்பிக்கையூட்டுகின்றது.
LD&E,63 சிவஞானம் பிரபாகரன்
33

Page 19
SriLanka Eye Doritionsi
Øදස්ෆර් හඩ්සන් සීග්‍රීඩා අකෂිදුන මූලස්ථානය.
|’ වීදනා මියාවත, කොළඹි 07 ಜಲಿ” ಕ್ಲಿಪ... 26951 26.98ರಿ4 259804. 288042 }
ෂු කවර හෝ තැනක සිටින අන්ධcරාගියෙකුව སྤྱི་ “ දානමය ප්‍රාර්ථනයෙන් හා අධිෂඨානයෙන් යුතුව
kssLSS0SSeSSss LLLLLLM sLMLTLeeeL GLGGLLLLLLL 0S
.தக.ேகி:சி.ஜே. V
· චීසීන් දැන් දාහ් සඳඇස එදිනට අප රෙටී ෆ්හලක සූදානම් ෆරාහීහ් උදෙසා ප්‍රමුඛතාවය සළකා බලා s rozdělze:é.éážka.éka.„čacké. AE22
፵ ප්‍රදානය කරන ලද බවට ෆෂිම් * අක්ෂිදාන සිහිවටන පත්‍රය
නිකුත් කරන ලදී. æð g3se osed exa) oe syse de EsBoos శ్లో 14 දී ඇස් දැන් දුන් අය විසින් ප්‍රාර්ථනිය පත්‍රාප්තිය ලංගමායි ܡܪ § f ශ්‍රී ලංකා අක්ෂිදාන සංගමය ප්‍රාර්ථනා කරයි. 箕
意
t * f44 වසරක් තුල අන්ඩරෝගීන් 80000ව පිහිටාවමන් ඇස්/සීරුරු සපත් | | “නැෂිග් ඥාති 4 හිංඥාතමින්ග් කෞරවනීය දායකත්වයෙන් වැෆඩන ශ්‍රී ලංකා
--
சிவஞானம் அவர்களின் இரு கண்களும் தானமாக வழங்கப்பட்டதன் நிமித்தம் இலங்கை கண் வங்கியினால் வழங்கப்பட்ட சான்றிதழ்
34
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழி கொடுத்து ஒளி கொடுத்தவரே
மனிதம் கொலையாகிப் போன தேசத்தில், நீங்கள் இறந்ததாக சொல்லப்பட்ட செய்தியை என்னால் நம்பவியலாது போயிற்று.
LDTLDst- - - வேதனை முள்ளில் பட்டு, கிழிந்து போனது மனச் சேலை, சோதனை அமிலம் தொட்டு, உக்கிப்போயின உணர்வுகள்.
அன்றாடம் ஆயிரம் முனகல்கள் இன்றோ ஆயிரமாயிரம் முனகல்கள்
மனதின் வனத்தில் தினம் வலிக்கும் இந்த வேதனை முனகல்கள் ஆயிரம் காலத்திலும் அழியாத வடுவாய்
ஆனாலும் இரு வழி கொடுத்ததால், இதயத்தின் இறுக்கங்கள் மெல்ல நகரும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாய் இதய முலையில் நினைவிருக்கும் இருளின் சுவர்களை தடவிக் கொண்டு, சிறுமையாய் வாழ்ந்தவர்களின் கன்னிர் சுமையை இறக்கி வைக்க சிந்துதல் கொடுத்தவர் நீங்கள்
35
கொடுமைகள் பல கண்டும் கோணா மனங்களுடன் தொடர்கின்ற பயணத்தில் அடுத்த நிகழ்ச்சி என்ன? உற்சாகம் படுத்தியவர் நீங்கள்
மலை முகடுகளின் மத்தியிலே, மனிதம் இல்லா மனித சிந்தைகளில் மனிதத்தை தூவிவிட்டவரே *விழி’ கொடுத்து ஒளி கொடுத்ததால்
நாளைய
உணர்ச்சி உதடுகள் உங்கள் பெயரை உச்சரிக்கும் நிச்சயமாய்
புகழேந்திரன்"

Page 20
அல்மா சகாக்களின் உணர்வுகள்
நான் அல்மாவின் தொழிற்சாலை மேற்பார்வையாளராக தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தேன். என்னை இன்றும் வாடா போடா என்று கூப்பிடும் ஒரே श४।IT அவர் மட்டுமே, இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது எனக்கு வழிக்காட்டியாக ஒரு தந்தையைப் போல் இருந்தவர், எந்தப் பிரச்சினையிலும் துணை நின்றவர். சுப்பையா தங்கராஜா (வயது 52) பிரதம குமாளப்தா
பெரும் இழப்பு வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்த இவரிடமே வாழ்க்கையின் முக்கிய பாடங்களை கற்றேன்.
ஒகளம்டின் தேவசகாயம் (64) குமானம்தா
வியங்வெலப் பிரிவு
தொழிலாளி உத்தியோகஸ்தர் என்ற பேதமின்றி பழகினார், தொழிலாளர்களின் குடும்ப நண்பராகவே இருந்தார். ஐயாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாது. கருப்பையா (வயது-2ே) (குண்டுத்தலைவர்)
நான் தோட்டத்தில் தொழில் செய்த போதும் அவரை அண்ணன் என்றே அழைப்பேன். தேயிலைச் செடிகளையும் தோட்ட மக்களையும் தன் பிள்ளைகளை போன்றே கவனித்தார். ஜெகநாநன்
 

சிட்டன் பிரிவு:
எமக்கிடையில் நெருங்கிய உறவு இருந்தது. எங்களை அவர் தொழிலாளியாக ஒரு போதும் கணிக்கவில்லை. ஆனால் தொழில் தளத்தின் தனது கடமையை செய்ய தவறமாட்டார். மேலும் மக்களுடன் நவ்) உறவை கொண்டிருந்தார். எஸ்டேட்டிற்காக உழைந்தார். தொழிலின்றி இருந்த கம்பளை பிரதேச மக்களுக்கு அல்மா தோட்டத்தில் தொழில் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று உழைத்தார்.
வீரையா (7ே வயது)
தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கதுடன் நல்ல உறவையும் வளர்ந்தார். இவரை வேட்டி ஜயா என்றே அன்பாக அனைவரும் அழைப்பர். கோவில் பூசைகளில் மக்களுடன் ஒன்றாக இருந்து வேளைகளை கவனிப்பார். இவர் இருந்த காலமே சிட்டனின் ரெழிப்பான காலமாகும். ம, பொன்னம்மா (59 வயது)
எப்போதும் மக்களோடு இருந்தார். தோட்ட பக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிகம் அக்கறை காட்டினார். தினமும் மாலை தொழில் முடிந்து தொழில் தளத்திலிருந்து வரும் போது பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்கள் அவருடன் ஒன்றாக படி விடயங்கள் பற்றி கதைத்துக் கொண்டு வந்து ஐயாவின் வீட்டில் தேநீர் அருந்திவிட்டே போவர். தோட்ட மக்களால் இவர் மிகவும் நேசிக்கப்பட்டவர். தொழிலாளி உந்தியோகர்கள் பேதமின்றி அனைவருடனும் ஒரே விதமாகவே பழகுவார். எதிலும் முடிவெடுக்க முன் தொழிலாளர்களின் ஆலோசனையை பெற்றே முடிவெடுப்பார்.
அம்பலம் 55வயது)
கிரேமொண்ட் பிரிவு
நான் தோட்டத்தில் வேலை செய்தாலும் அவருக்கு தம்பி முறை உறவு. அனைவரையும் மதித்து நேசிக்கும் தன்மை வேறு எந்த உத்தியோகஸ்தரிடமும் நான் கானவில்லை. தவறுகளை கோபப்படாமல் சுட்டி காட்டுவார். அவரின் பிரிவை தாங்க முடியவில்லை சண்முகம் (சுப்பண்ணன)
வப்போதும் தேயினது செடிக்காக உழைத்தவர். அதைத் தன் பிள்ளைகளைப் போன் கவனிப்பார். வேலைத்தளத்தில் கோபமாக இருந்தாலும் அதை வேரிடத்தில் காட்டமாட்டார். செம்வையா கார்காணி
சரனவள்ளி பிரிவு
நான் தோட்டத்தில் வேலை செய்திருந்த போதும் அவரின் குடும்ப நண்பன் போலவே
ருேப்போன். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ராசு அணினன்

Page 21
Tineirolae storir sīĝļļTiff |,&EQI, III~1sẽrojo Ĥlo|ssssss: +III&T) sẽsīgi-i? ---- ----- |--------- Įo Tsofoss Imigosoɛ llosofųongo -171Lofçısı,go, Qoqoofsgői
__,|| |W}|
|||||||||
|-,|-|-||- |-T,|-|-|----『W』 |-,|- |- |-|-illus |-|-|||}}}|-|-sss||-|-叠,||TIsae
lae W)
TTL"
| |||
 

Hessrs. Elli, till & Co., Ltd. IGili I bi.
LJEir" i "B"
SUKELETRATE STAFFE
0 SLSKLLLLLLK KK KKLLL LL0L KKLLK S LSLL S LLLLLL KYLLKLLL LLLLL Y S S AKKSSKSKKYKKLKK S KY LLLLLLLLS 00 KYYLKL YYSS LLLKKLKKLLKLZ L0 KKJLKKSS KKS LLLeLY aLSLLLLLLLCL S LS YLSLKLLLS KLLLLLLL S SSSKS LLLLMLL S LS Risic is larly it. By-fir filt.
slīcēlās P = GHill ER, Eito KYYYLYLY LLL KLKYYS SKJ S LLLLLLK YLYYKK KK the të Str. GË ate Fa Fier.
Fit F. Fai FFL Ll
lid-Li Jet Ghet, il-'F'.

Page 22
the traith planters' tomp a tip of legist, ti),
葱á
燃鑿,驚燃盛當愛 ii's £e به سبب تسمیهin s Å9 fS.
LTLTLSTMS SZZLLzLELtSSZLLL LLSLLTL AMA GOkiP, Aiheesse și AȚA, Fia. 3 šios šioliitik ANAPA
2REY4/EN,
fy Ref:
《》 《ཧ་ E. K.
*曇鸞 chá. S of 23:35, 4; s. XVI šasis
ე წლ ჭ: “’ ’’ ’’ tra ad argers havig
groo#RE:Rasi i SeYY SYszSkLELELL SEYttLLE utLS SitYYLSLS
iesă arge; శిgh *బికిణి 畿
LeMLSSTLML Y LYY kLLeLTCCLeES LeeeLYzeL S LYLt LLL LLeL LLTL LLMttLLLLLLL LL LMMeLLLLL LL LLLLLS LL LLLLMLCL
in ths o. zt azt.
LkLLLLLL LLL LLkttL LsLSeeeeLeLLLLL LLLLL S LLLLSLLLLLSLLLLLL of sy retireiserat freis Gary KG,
ർട്ട്
அல்மாத் தோட்டத்தில் நீண்டகாலம் தோட்ட அதிகாரியாக கடமையாற்றிய வோட்டே டெரி ஓய்வு பெற்று தாய்நாடு செல்லும்போது சிவஞானம் அவர்களுக்கு வழங்கிய சான்றிதழ்
40
 

The sinited Planters' Companul of Crulon, Timited. Kaarbaris si akhs. YLLLYS LLL0LLLYLLLSLLL LLLSLSSYLLYzYYLYY 0Y 0L LLLLLGLLLLS0LLS sions ANs: womtala BousTEAD TFS.
LLEEEETM S S EELLLLLELL SELSttLELSLYSLLLLLLLS ALMA GROUP, ***** AWKAKA . :: KANDAPOEA,
widowany: SäragðANYA Extexx.y My Ref: Your Rsf:
3. 33iv signanang i SR 5: plen BArat yourg insan, HASA A gered kiHowiktige erfor field works, hird vorking elmkS lLYSESEEm SY te lSSAS t eHeeL tttLLLLLLLLlLLLLLLL LtttLL LtLLtHLL
sugervisits staccessfully.
41

Page 23
சூழ <ஸ் சியாக" ரேயg of ஆேறு, இiம்.
is im Filipina, Ti i ini L. JLH II. LLLLLL LTTLLLLLLL S LLLLL LLL LLLL TL TLLLLLGSS
LLLLLSSLLLLLLLL LL SL L LLTLLLLLTLLLSLLS
i hii:- HATLIHATA TFhur Ed La Litij ALMA GROUP,
Filippihılirsi === LLLLLLL S LLLLS L LLLLLLL MLLLLLL LL LMMLL TLLLL KAћ||Ед РС. Д.
LLLLLLLLSS TTL TLTL LTLLLLS S TGLLLCLCLS PH, T UNITA... Ni... Ego Luu Liu Haipeil) CTH
nuIwar FFH n = HALTA
வழங்: ETE
ir"; ===
14tli F-H#1 #1: #EFT',
3, BEF BERIFF, ia= |tirketi II-lea ==
aLSLY L SK SKS KS LLL KKL L KuLuuLLLL S KKKuKS
다
thHij lift Fit. FUTJ.
S KYY KJJ L YYLLLLLLL K K K KaK Y S
E 1 ---------
42
 

குருசாமி அவர்கள் நான் செய்த ஊன்றுகோலுடன் 131லயக சமூகத்தின் வரலாற்றை ஆங்கில மொழியில் எழுதிய தொழிற்சங்கவாதி நடேசன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரது இறுதி காலத்தில் சிவஞானம் அவர்களின் ஏற்பட்டில் குருசாமி (கண்பார்வை இழந்தவர்) அவர்களால் செய்யப்பட்ட 3ான்றுகோஸ். எனினும் இதை நடேசன் அவர்களிடம் கையளிப்பதற்கு முன் அவர் இயற்கை எய்திவிட்டார்,
43

Page 24
மரண அறிவித்தல்
மஹாகுடுகலையை வசிப்பிடமாகக் கொண்ட
(விஜயன் K.P)
அவர்கள் 26-07-2006 புதன்கிழமை அன்று காலமானார். அன்னாரின் பூதவுடல் 29-07-2006 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மஹகுடுகலை தோட்ட பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
gങ്ങ பிரிவுத்துயரால் வாடும் மனைவி, பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள்
சகோதரர்கள் சகோதரிகள் மற்றும் உறவினர்கள் தகவல்: ரவிச்சந்திரிக்கா-(ஆசிரியர்-துவலிடஸ்டேல்.த.ம.வி மங்கையற்கரசி. (அதிபர் துவ ஹைபொரஸ்ட் இல.01.த.வி
 

* காவியமாகிடும் கண்ணீர் வரிகள் 3
IYZ
YN
静 莽 அல்மா தோட்டப் பிரிவுகளில் வாழ்ந்தவரும் 米 Z
தேயிலைச் செடிகளோடும் 米
அதன் மக்களோடும்
ஆழப்பதிந்த தலைமுறையில்
ஒருவருமாகி
LD6)56 உதிர்வு 27 - 01 - 1936 cludiyire 26 - 07 - 2006
米冰冰冰来水率米冰冰冰米水来来率米冰水冲米冰冰米来来水水水林冰本本本率率本米米米水米来
திரு.சுப்பையா சிவஞானம் KP
来事本来来米率率本来水来冰率率率率来半率水本毕本来来家来来来水水水水率率来来本米米率本率米本 米
米 莱米米来来来来来来来来来来来来米米霖
45
அவர்களின் 米
வாழ்வையும, நினைவையும் 米
சுமந்து 米
அவரது பிரிவால் Se
C மீளாத்துயரில் முழ்கியுள்ள אל
米 உறவுகளோடு 米
米 எமது கணக்கின்ற இதயங்களை 米
米 காணிக்கையாக்குகின்றோம். 米
Z 米 N
A - A. 米
Z புதிய பண்பாட்டு அமைப்பு عملح
Ox 7R

Page 25
மலையகப் பண்பாட்டுப் பேணுகை:
சிக்கல்களும், சவால்களும்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
குறிப்பு : எனது மாணவர் சிவஞானம் பிரபாகரன், அவரது தந்தையாரின் மறைவை ஒட்டி வெளியிடும் நினைவு மலரில் மலையகம் பற்றி எழும் சில முக்கிய வினாக்களை தொகுத்து பார்க்க விரும்புவதாக கூறினார். இச்சிறு கட்டுரை அத் தேவையை பூர்த்தி செய்வதற்காக எழுதப்படுகிறது. ஆழமான, அகலமான மிகவும் உன்னிப்பாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயம் பற்றி என்னுடைய கருத்துக்களை கேட்டுள்ளமைக்கு என் நன்றிகள். அவற்றினை இங்கு ஓர் அறிமுக நிலையிலேயே தருகிறேன்.
மலையக்தின் சமுக அரசியல் தனித்துவம் பேணப்படுவது, இலங்கை தமிழ் நிலை நின்று பார்க்கின்ற போது கூட மிகமிக அத்தியாவசியமான ஒரு விடயமாகும். ஏனெனில் இலயங்கையின் தமிழ்வாழ்க்கை/பண்பாடு என நோக்கும் பொழுது அதிலே பிரதேச தனித்துவங்கள் மிக முக்கிய இடம் பெறுவதை அவதானிக்கலாம். மட்டக்களப்பு திருமலை, வன்னி, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் - சிலாபம் ஆகிய பிரதேசங்கள் ஒவ்வொன்றும் இலங்கைத் தமிழ் பண்பாட்டின் பன்முகப்பாட்டையும், அதே வேளையில் வீறார்ந்த நிலையையும் காட்டுவனவாக உள்ளன.
இலங்கையின் நியாயமான பிரஜைகள் என்று இந்திய வம்சாவழித் தமிழர் ஏற்றுக் கொள்ளப்பட்டமை ஏறத்தாழ பூரணமாகியுள்ள இன்றைய நிலையில் இம் மக்கட் கூட்டத்தினரில் இயல்பாக தனித்துவங்களை வற்புறுத்துவதும், பேண்ணுவதும் அவர்களின் சமுகக் குழுமத் தனித்துவத்துக்கும் அதே வேளையில் இலங்கையில் தமிழரின் நிலைபேறுடைமைக்கும் (Stability) உதவுவதாகும்.
இந்திய வம்சாவழித் தமிழரை மலையகத் தமிழர் எனும் வழக்கு ஏறத்தாழ கடந்த கால் நூற்றாண்டு காலமாகப் போற்றப்பட்டு வருகிறது. மலையகம்" என்ற தொடர் காரணமாக இலங்கையின் மேற்கு (அவிசாவளை), தெற்கு பகுதிகளிலுள்ள றப்பர் தோட்ட இந்திய வம்சாவழித் தொழிலாளர்கள் கொண்ட வரப்படவில்லை. பெருந்தோட்டச் செய்கை முறைமையினுள் முக்கியத்துவம் பெறும் தேயிலைத் தோட்டப் பகுதிகளும், அவை சார்ந்த நகரங்களுமே மலையகம் என்ற தொடருக்குள்ளே கொண்டு வரப்படுகின்றன. இறப்பர் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள் படிப்படியாக தங்கள் தமிழ் அடையாளங்களை கல்வி முதல் ஆடையணி, உணவு வரை பல முக்கியத் துறைகளிலே இழப்பதை காணலாம். மலையக அரசியல் தலைமைகளிடத்து இது பற்றிய சிரத்தை இருப்பதாக தெரியவில்லை.
46

மலையகம் எனும் வரையறைக்குள் வருகின்ற பொழுது அதன் தனித்துவத்தை பேண வேண்டுமென்பதில் மலையக புத்திஜீவிகள் முதல் அரசியல்வாதிகள் வரை முக்கிய சிரத்தை காட்டுகின்றனர். இதன் தேவையை வற்புறுத்துகின்ற அதே வேளையில், இந்த பேணுகை எத்தகைய வடிவம் எடுக்க வேண்டுமென்பது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டுவதாகும். இயல்பாகவே பண்பாட்டு பேனுைகையே முக்கியமானதாக வற்புறுத்தப்படும், வற்புறுத்தப்படுகிறது.
இக்கட்டத்திலே பண்பாடு பற்றிய ஒரு தெளிவு அவசியமாகின்றது. பண்பாடு என்பதை இரண்டொருவரி வரைவிலக்கணங்களால் அறுதியிட்டு கூற முடியாதென்பது பல அறிஞர் கருத்து. பண்பாடு எனும் பொழுது அதனுள் பின்வருவன நிச்சயமாக இடம் பெறும்.
ஒரு சமுகப் பின்புலம் அச்சமுகப் பின்புலத்தை தீர்மானிக்கும் அரசியல் பொருளாதார காரணிகள் உறவுமுறை விவாகம் நம்பிக்கைகள், வழிபாடுகள் (மதம்) கலைகள்
9 600T6, 9 6OL வாழ்க்கைப் பற்றிய பெறுமானங்கள் (Values), இதற்குள் சமுக நோக்கு, உலகம் பற்றிய கண்ணோட்டம் 8 தங்கள் குழுமம் பற்றிய பிரக்ஞை
மேலே கூறியவை யாவும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நிற்கும் நிலையில், இந்த வட்டத்தினுள் வராதோரின் கண்ணோட்டத்தில் மாத்திரமல்லாமல் அந்த குழுவினரின் அகஉணர்விலும் (நாம் இன்னார் என்ற உணர்வு) பண்பாட்டு உணர்வினை தீர்மானிக்கும்.
பண்பாடு என்பது எப்பொழுதும் சமுக மாற்றங்களுடன் இயைந்து செல்வதாகும். பண்பாடு என்பது தேக்க நிலையல்ல. பண்பாட்டில் மரபு முக்கியமானதாகும். மரபின் பிரதான பண்பு ‘காலமும் வழக்கும் திரிந்த விடத்தும், திரிந்தவற்றிற்கேற்ப அமைந்து செல்வதோர் முறைமை” என்பர். முன்னேற்றங்களை தரும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அந்த மாற்றங்களினூடே பாரம்பரிய - மரபு தொடர்ச்சியினை பேண்ணுவது பண்பாட்டின் முக்கிய அம்சமாகும்.
மேற்கூறியனவற்றை ஆழமாக மனத்திலிருத்திருக் கொண்டு மலையகப் பண்பாட்டின் அமைப்பினையும் வெளிப்படுநிலைகளையும் பற்றி நோக்க வேண்டியது அவசியமாகின்றது.
இவ்வாறு சிந்திக்கும் பொழுது மலையகத்தின் அரசியல், பொருளாதாரச் ‘சூழல்”
முக்கியமாகின்றது. மலையகம் எனும் பொழுது ஒரு புறத்தில் பெருந்தோட்ட வாழ்க்கையும் (தொழிலாளர் நிலை), இன்னொரு புறத்தில் நகள்ப்புற குடியிருப்புக்களும் பெரும்பாலும் வர்த்தகம் சார்ந்தோர் வாழ்க்கை முறையும் பிரதானமாகின்றன. ஆனால் மலையகப் பண்பாடு எனும் பொழுது பிரதானமாக பெருந்தோட்டத் துறையே முக்கியம் பெறுகிறது.
47

Page 26
தோட்டத் தொழிலாளரின் உத்தியோகப்பூர்வநிலை, அவர்களின் தொழில் முறைமைகள், குடியிருப்பு முறைமை, சமுக ஒருங்காடல் ஆகியனவற்றை தீர்மானிப்பதை காணலாம். உதாரணமாக கொழுந்தெடுத்தல், கொழுந்து கூடையை சுமக்கும் முறைமை, லயன்களை கொண்ட குடியிருப்பு, அந்தக் குடியிருப்புக்களின் கட்டட அமைப்பு, தோட்டத் தொழிலை செய்வதற்கான உடை ஆகியவவை முக்கியமாகின்றன.
தோட்டத்துப் பொருளாதார வாழ்க்கை முறைமை தொழிற்சங்க முறைமையை அத்தியாவசியமாக்குகின்றது. அந்த தொழிற்சங்கங்கள் இவர்களது அரசியலை தீர்மானிக்கின்றன. தொழிற்சங்கத்தின் அதிகார அமைப்பு இவர்களது சமுக அமைப்பை பாதிக்கின்றது.
இந்த பொருளாதார, தொழிற்சங்க அதிகார முறைமைகளுக்கு அமையவே கல்வி நிறுவனங்களும் அமைக்கப்படுகின்றன. தோட்டப் பாடசாலை தோட்ட முறைமையை பேணுவதற்கு உதவுகின்றதா?, அதனை மாற்ற உதவுகின்றதா? என்ற வினாவை நாம் கேட்பதில்லை.
ஆனால் மலையகப் பண்பாடு என நாம் அடையாளம் கானும் பல விடயங்கள் மேலே கூறியனவற்றிற்குள்ளேயிருந்தே கிளம்புகின்றன. ஆனால் இப்பொழுதோ இந்த அமைப்பில் குறிப்பாக குடியிருப்பு முறைமையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
இன்னுமொரு முக்கியமான விடயமென்னவென்றால், இந்த அரசியல், பொருளாதாரச் சூழல் அவர்களது மொழி, மதப் பேணுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதாகும். அதாவது தொழிற்சங்க தலைமை முறைமை இவர் களின் மத நிலைப் பாடுகளையோ, தமிழ்த் தன் மையையோ வற்புறுத்துவதில்லை. இதனால் மலையகத் தமிழர்களே கல்வி மந்திரிகளாக இருக்கின்ற மாகாண சபைகளில் கூட மலையகத் தமிழ்ப் பிள்ளைகளின் பாடசாலைகளில் சிங்கள ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். உண்மையில் இவர்களது தமிழ்த் தன்மையை வற்புறுத்த முயன்ற சில இயக்கங்களை தொழிற்சங்கத் தலைமை அழித்தொழத்து விட்டன என்று திரு. பெ. முத்துலிங்கம் கூறுகின்றார். அதில் நிறைய உண்மை உண்டு. அது மாத்திரமல்ல, தோட்டப் பாடசாலைகளின் கல்வி முன்னேற்றத்தை தொழிற்சங்கத் தலைவர்கள் மறைமுகமாக தடை செய்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
இந் நிலையில், பண்பாட்டு பேணுைகை என்பது ஒரு மறைமுகமாக அரசியல் சூழ்ச்சியாக கூட மாறலாம். மாற்றங்களை வரவேற்பதும், அந்த மாற்றங்களினூடே மரபு தொடர்ச்சியைப் பேனுவதும் பண்பாட்டின் பயன்பாடாகும்.
அடுத்து மதத்தின் முக்கியத்துவம் பற்றி நோக்குவோம். முற்றிலும் தொழில்நுட்ப, கைத்தொழில் மயப்பட்ட சமுகங்கள் தவிர்ந்த மற்றைய சமுகங்களில் மதம், பண்பாட்டின் பிரதான தளமாகும். கைத்தொழில் மயமாக்கப்பட்ட சமுகங்களிலும் மதம் உண்டு. ஆனால் மதச்சார்பின்மையே சமுக நியமங்களை வழி நடத்தும். பாரம்பரிய, மரபு, வழி சமுகங்களில் மதம் முக்கிய இடம் பெறும். இது ஒரு சமுகவியல் இயல்பு.
48

ה-"? ;
پېښه
இந்தபின்க்கிேய
பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, பர்மா போன்ற நா காணலாம்.
பெருந்தோட்டத் துறையில் பாரிய கைத்தொழில் மாற்றங்கள் இடம் பெறாது மனித உழைப்பையே அது சுரண்டுவதாக அமைகிறது. இதனால் அந்த சமுக அமைப்பும் அப்படியே பேணப்படுகிறது. அதனையே தொழிற்சங்க அமைப்புகளும் விரும்புகின்றன. தொழிற் சங்கங்கள் பெருந்தோட்டங்ளில் கைத்தொழில் முன்னேற்றத்திற்கோ, தொழில் முறை அமைப்பிற்கோ வழிவிடுவதில்லை.
இதனால் மதம் முக்கியமாகிறது. பெருந்தோட்ட நிலையில் மத வழிபாட்டை iழன்று நிலைப்பட எடுத்து கூறலாம்.
1. சாதி நிலைப்பட்டது (உ-ம்) மதுரைவிரன் வழிபாடு 2. தொழில் நிலைப்பட்டது (உ-ம்) ரோதமுனி 3. பொதுப்படையான வழிபாடு. அதிலும் மாரியம்மன் போன்ற வழிபாட்டு முறைகளே முக்கியத்துவம் பெறும். இருப்பினும் தோட்ட நிலைகளில் முருகன், பிள்ளையார் வழிபாடும் உண்டு.
சற்று ஊன்றி நோக்கும் போது பொழுது தான் மத வழிபாட்டின் ஊடாகவே பல து நிலைப்பட்ட மாற்றங்களை அறிந்துக் கொள்கின்றனர் எனலாம். கோவில்கள் வீன மயப்பாட்டுக்கு வருவதை கும்பாபிஷேகம் முலமாக காணலாம்.
இன்னொரு முக்கிய உண்மை இந்த மதவழிபாட்டு நிலையே பெருந்தோட்டத் தொழிலாளர்களை மலையகத்து நகள்புறங்களுக்கு கவர்ந்திழுக்கின்றது என்பதாகும். பெருந்தோட்ட பகுதிகளின் நகள் புறங்கள் இரண்டு விடயங்களில் பண்பாட்டு மாறுநிலைகளுக்கு உதவுகின்றன. முதலாவதாக நகர்புறத்து கோவில்களை சொல்லலாம். உதாரணம் நாவலப்பிட்டி, ஹட்டன், பதுளை, மாத்தளை, பண்டாரவளை, கண்டி போன்றவற்றை குறிப்பிடலாம்.
இரண்டாவாக கனிஷ்ட, இடைநிலை கல்விக்கான பாடசாலைகள் (கல்லூரிகள்) பகர்புறங்களிலேயே உள்ளன. கதிரேசன் கல்லூரி, சென்ஜோன் பொஸ்கோ, சென் மேரிஸ்-பொகவந்தலாவை, சென் மேரிஸ்-பண்டாரவளை, ஹட்டன்-ஹைலன்ட்ஸ் பதுளை-சரஸ்வதி போன்றவற்றை குறிப்பிடலாம். இவை முலம் ஏற்படும் புதிய பண்பாட்டு பரிமாணங்கள் முக்கியமானவை ஆகும். மத நிலைப்பட்ட முறைமைகளில் நவீன பயப்பாட்டின் வெளிப்பாடன சமஸ்கிருத நெறிப்படுகையை தோட்டத்துக் கோவில்களிலும், 1.கள்ப்புறத்துக் கோவில்களிலும் காணக் கூடியதாக உள்ளது. (குருக்கள் பூசை \சய்தல், கும்பாபிஷேகம் செய்தல், மஹோற்சவங்கள் நடத்தல் போன்றவை)
மலையகத்திலே பாரிய மத நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று ரத்துக் கூறப்படும் வேளையில், மலையக மத / கலை பண்பாட்டின் பிரதான வெளிப்பாடுகளான காமன் கூத்து, அருச்சுணன் தபசு ஆகியவை போற்றப்படுவது பற்றிய பேச்சையே காண முடியாதுள்ளது. இது கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
49

Page 27
கல்வி நிலையில் மிக முக்கியமான ஒரு தொழிற்பாட்டினை காணலாம். மலையக பாடசாலைகள் எல்லாவற்றிலும் இந்து மதத்தை பொறுத்தவரையில் “சைவ நெறி" என்ற பாடப் புத்தகத் தொடரே பயன்படுத்தப்படுகிறது. இது மட்டக்களப்பு, திருமலை, மன்னார், சிலாபம் பகுதிகளிலுள்ள ஆகம வழிசாராத வழிபாடுகளை கணக்கில் கொள்ளவில்லை என்ற குறைபாடு ஏற்கனவே உள்ளது. யாழ்ப்பாணத்தில் கூட தொண்டமானாற்று செல்வசந்நிதி போன்ற மிக சில கோவில்களை தவிர மற்றும்படி “சைவ நிலைப்பட்ட கோவில்களையே விதந்து கூறுகின்றது என்ற குற்றச்சாட்டு உண்டு. மலையகத்தை பொறுத்தவரையில் இந்த பாடப் புத்தகங்களிலே காணப்படுபவை அந்த மாணவர்களின் மத9iனுபவ உலகிற்கு முற்றிலும் அப்பாற்பட்டவை என்று சில அறிஞர்கள் கூறுகின்றார்கள். இந்த விடயத்தில் கவனஞ் செலுத்தப்படாமல் இருப்பதனால் மலையகத்து வழிபாட்டு மரபுகள் பலவற்றை வருங்கால மலையக தலைமுறையினர் மறந்து போகலாம்.
மத விடயத்தில் மலையகத்தில் இன்று நடைபெறும் மத மாற்றங்களும், இடம்பெறும் புதிய இந்து இயக்கங்களும் மலையகப் பண்பாட்டுத் தொடர்ச்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும். மலையக அடிநிலைத் தமிழரின் கல்விப் பற்றி மலயக அரசியல் தலைவர்கள் சிரத்தை காட்டாது இருப்பதால் மலையகத்தில் தமிழ்மொழி வழிக்கல்வி பலவீனப்பட்டுள்ளதை பல இடங்களிலே காணலாம். பெரும்பாலான மலையகத் தமிழ் மாணவர்கள் சிங்கள மொழி முலமே கல்வி கற்க வேண்டிய தேவை ஏற்பட்டு வருவதையும் காணக் கூடியதாக உள்ளது. இவற்றுக்கு மேலாக சில நகர்ப்புறங்களிலே காணப்படும் இன்டர்நெஷனல் (சர்வதேச) பாடசாலைகள் ஆங்கில மொழி முலமாக கல்வி கற்பிக்கின்றோம் எனும் நகைப்புக்கிடமான விநோதமும் காணப்படுகிறது. ஆங்கில மொழி வழி கல்வி எந்த மட்டத்தில் அவசியம் என்பதே வினா? இவ்வாறு நோக்கும் பொழுது மலையகத்தின் பண்பாட்டுப் பேணுகை என்பது இன்று ஆழமாக சிந்திக்கப்படாத ஒரு வாய்ப்பாட்டு கோஷமாகவே உள்ளது. இந்த விடயத்தில் மலையகப் புத்திஜீவிகளின் பொறுப்பு மிக முக்கியமானதாகும்.
மேலே ஏறிவிட்டவன் ஏணியை மறக்கலாம். ஆனால் இனிமேல் ஏற இருப்பவர்களுக்கு அந்த ஏணி முக்கியம். மலையகத்தின் நவீனமயமாக்கம் மலையகத்தின் பண்பாட்டு மரபை மறந்து விட்டால் மலையகத்தின் தனித்துவத்துக்கான தொடர்ச்சி இழக்கப்பட்டு விடும்.
50

மலையகக் கல்வி ஓர் எதிர்கால நோக்கு - தையல் முத்து தனராஜ் MBA (Sri)
அறிமுகம்
கல்வியின் முக்கியத்துவம் பற்றிய ஒரு விழிப்புணர்வு இன்று மலையகத்தில் குறிப்பாக அதன் மையப்பகுதிகளில் பரவலாக ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. மலையகக் கல்வி உட்பட மலையக மக்களின் தனித்துவமான அடையாளம் குறித்து அறுபதுகளில் கருக்கொண்ட சிந்தனை ஊற்றுகள் எழுபதுகளில் வேகம் கொண்டு வளர்ந்தன. எனினும் 1983ல் நடந்தேறிய துர்ப்பாக்கியமான நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்நாட்டில் வாழும் முழுத் தமிழினமுமே நிலைகுலைந்த போது மலையகமும் அந்த ஊழிக் காற்றில் ஆடிப் போனதில் வியப்பில்லை. ஆனால் இன்று திரும்பவும் இந்நாட்டில் தனது அடையாளத்தையும் இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மலையகம் ஈடுபட்டுள்ளது. எனவே அத்தகைய சமூக இருப்பின் அடிப்படைகளில் ஒன்றான கல்வி குறித்த கருத்தாடல்களும் ஆங்காங்கு நடைபெறுகின்றமை மகிழ்ச்சி தரக்கூடிய விடயமே.
எனினும் இத்தகைய கல்விச் சிந்தனைகளும், கல்விச் செயற்பாடுகளும் தனித்தனித் தீர்வுகளாக சிதறிக் கிடக்கின்றனவே அல்லாமல் முழு மலையகத்தையும் தழுவிய ஓர் ஆழ்ந்த முழுமையான, தந்திரோபாய சிந்தனையோ (STRATEGIC THINKING) அதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு முழுமையான திட்டமோ (STRATEGIC PLAN) இல்லை என்பதை மலையகக் கல்வியில் கரிசனையும் ஆர்வமும் கொண்டுள்ளவர்கள் கவனத்திற் கொள்வது அவசியமாகும். கல்வி விருத்தியில் அன்றும் இன்றும் பின்தங்கி நிற்பது மலையக சமூகமே. இனி என்றுமே அவ்வாறு பின்தங்கி நிற்காமல் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு நிகராக கல்வியில் முன்னேற வேண்டுமாயின் முழு மலையகத்தையும் தழுவிய ஒரு பெருந்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு இன்றைய அரசியல் சூழ்நிலை சாதகமாக இருப்பதால் மலையகக் கல்வி விருத்திக்கான ஒரு பெருந்திட்டம் பற்றிய விளக்கத்தை (AWARENESS) உருவாக்க இக்கட்டுரை முயல்கிறது. அதற்கு தேசிய கல்வி முறைமை, மலையக் கல்வியின் இன்றைய நிலை ஆகிய விடயங்களை விளங்கிக் கொள்வது முக்கியமானது.
தேசிய கல்வி முறைமை
இலங்கையின் கல்வி நீண்டகால வரலாற்றை கொண்டதெனினும் நவீன கல்வி
முறைமை சுமார் 130 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1869ல் பொதுப்போதனாதிணைக்களம் அமைக்கப்பட்டமை இந்நாட்டின் நவீன
51

Page 28
கல்விமுறைமையின் தோற்றத்தைக் காட்டி நிற்கிறது. இப்பொதுப் போதனா திணைக்களமே பின்னர் கல்வித் திணைக்களமாகவும் சுதந்திரத்துக்குப் பின்னர் கல்வி அமைச்சாகவும் பரிணாமம் பெற்றது. இத்திணைக்களம் அமைக்கப்பட்டமை ஒரு முறைசார் தேசிய கல்விமுறைமைக்கு அடித்தளமாக அமைந்ததெனினும் இன்றைய கல்வி வளர்ச்சிக்கான அடித்தளத்தை கல்வி மீதான விசேட ஆணைக்குழுவின் அறிக்கையே (கன்னங்கரா அறிக்கை (1943) இட்டது எனலாம். வசதிப்படைத்தோரின் சொத்தாக விளங்கிய கல்வியை சகலருக்குமான கல்வியாக மாற்றியமைத்த பெருமை கன்னங்கரா அவர்களையேசாரும். இதனைத் தொடர்ந்து இந்நாடு பல்வேறு கல்விச் சீர்திருத்த குழுக்களையும் வெள்ளை அறிக்கைகளையும் கண்டுள்ளது. இந்த வரிசையில் இறுதியாக அமைவது தேசிய கல்வி ஆணக்குழுவின் (1992) அறிக்கையாகும். இதன் அடிப்படையிலேயே தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஐம்பது ஆண்டுகால கல்விச் சீர்திருத்தங்கள் காரணமாக இலங்கையின் கல்வி முறைமை ஒப்பீட்டளவில் மிக உயரிய அடைவு மட்டங்களைக் காட்டி நிற்கிறது. எழுத்தறிவு வீதம், சேர்வு வீதம், ஆசிரியர் மாணவர் விகிதம் ஆகிய கல்விக் குறிகாட்டிகள் இலங்கையின் உயரிய கல்வி அடைவுகளுக்கு சான்று பகர்கின்றன. எனினும் இவ்வடைவுகள் யாவும் கல்வி முறைமையின் அளவு ரீதியான பரிமாணங்களைக் காட்டுகின்றனவே தவிர பண்பு ரீதியான வளர்ச்சிப் பரிமாணத்தைக் காட்டி நிற்கவில்லை என்பது வேறு விடயம். சுமார் 20 மில்லியன் மக்களைக் கொண்டுள்ள இந்நாட்டில் சுமார் 4.2 மில்லியன் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர். இவர்களுக்கு சுமார் இரண்டு இலட்சம் ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.
6.4 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் ஒரு ஆரம்பப் பாடசாலையேனும் காணப்படுகிறது. 400 பிள்ளைகளுக்கு ஒரு பாடசாலை காணப்படுகிறது. 13 பல்கலைக்கழகங்களும் ஐந்து பட்டமேற்கல்வி நிலையங்களும் உள்ளன. இவற்றில் சுமார் 4200 மாணவர்களுக்கு 3000 விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் கற்பிக்கின்றனர். இவை தவிர பலநூறு தொழில்சார் கல்விநிலையங்களை அரசாங்கமும், தனியார் முகவர்களும் நிர்வகிக்கின்றனர். அரசின் வருடாந்த கல்விச் செலவினம் சுமார் 27,000 மில்லியன் ரூபாய்களாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று வீதமாகவும் மொத்தப் பொதுச் செலவினங்களில் 10.6 வீதமாகவும் காணப்படுகிறது.
தேசியக் கல்வி முறையின் அளவுசார் பரிமாணங்கள் ஏனைய அபிவிருத்தி நாடுகளில் கல்வி அடைவுகளோடு ஒப்பிடும் போது பாராட்டுக்குரியவை. கடந்த இரு தசாப்தங்களாக இந்நாட்டில் காணப்படும் அபிவிருத்திக்கு சாதகமற்ற சூழ்நிலைகளின் காரணமாக பல அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் இலங்கையின் கல்விச் சாதனைகளை விஞ்சி விட்ட போதிலும் இன்றும் 864 டொலர் தலா வீத வருமானம் கொண்ட ஒருநாடு என்ற அடிப்படையில் இலங்கையின் கல்விச்
52

சாதனைகள் வியப்புக்குரியவைதான்.
இவ்விடயத்தில் வேதனைக்குரியதென்னவெனில் இந்நாட்டின் கல்வி அபிவிருத்தி மலையகக் கல்வியை உள்ளித்துக் கொள்ளவில்லை என்பதாகும். இதற்கு பல்வேறு அகக் காரணிகளும் புறக் காரணிகளும் உள்ளன. இவற்றில் மிகவும் அடிப்படையானது மலையகக் கல்வி மேம்பாடு நோக்கிய அரசாங்கத்தின் உறுதிப்பாடு (Political Will) இன்மையாகும். 1943ல் தேசிய கல்வி முறைமைக்கான ஓர் உறுதியான அடித்தளம் திரு. கன்னங்கரா அவர்களால் இடப்பட்டபோது தேசிய கல்வி முறைமையின் ஓர் அங்கமாக மலையகக் கல்வி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இலங்கையின் தேசிய கல்வி முறைமையின் பிதாமகரான திரு. கன்னங்கரா மலையகக் கல்வியை முற்றுமுழுதாக நிராகரித்ததோடு "மலையகக் கல்வி என்பது இந்திய முகவரின் பொறுப்பு" எனவும் தட்டிக்கழித்தமை மலையக சிறார்களுக்கு அவர் செய்த வரலாற்றுத் துரோகமாகும். மலையகக் கல்வி முறைமையை தேசிய கல்வி முறைமையின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னும் கோரிக்கையை முன்வைத்த மாத்தளை பாராளுமன்ற உறுப்பினர் திரு. அலுவிகாரைக்கும் அக்கோரிக்கையை நிராகரித்த திரு. கன்னங்கராவுக்கும் இடையில் நடைபெற்ற விவாதம் மலையகக் கல்வி வரலாற்றில் ஒரு கறைபடிந்த சம்பவமாகும்.
மலையகத்தை "கல்வி ரீதியாகத் தனிமைப்படுத்தும்” முயற்சிகள் 1970கள் வரை தொடர்ந்து நீடித்தன. சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த தேசிய அரசுகளும் காலனித்துவ அரசாங்கங்கள் கொண்டிருந்த அதே "மாற்றாந்தாய்” மனப்பான்மைகளையே கொண்டிருந்தன. இந்நாட்டின் மலையகம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் கல்விக்கு அரசாங்கம் பொறுப்பாக இருந்த போது பெருந்தோட்டங்களில் மாத்திரம் மலையகச் சிறார்களின் கல்விக்கு கல்வியுடன் எந்த தொடர்பும் இல்லாத தோட்டத்துரை பொறுப்பாகவிருந்தார். இந்த நிலைமை 1970கள் வரை மாற்றப்படவில்லை. 1960களில் அரசு நன்கொடை பெற்ற தனியார் பாடசாலைகள் ஒரே இரவில் தேசியமயமாக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் பெருந்தோட்டப் பாடசாகைள் உள்வாங்கப்படவில்லை. மலையகப் பிள்ளைகள் தேசிய கல்விமுறைமையின் நன்மைகளைத் தாமும் பெற்றுக்கொள்ள இன்னுமொரு பதினைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது, 1970-77 காலப்பகுதிகளில் 24 தோட்டப் பாடசாலைகளும் 1977-94 காலப்பகுதிகளில் ஏனைய தோட்டப் பாடசாலைகளும் படிப்படியாக அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டன. ஒரே இரவில் சகல தனியார் பாடசாலைகளும் (உதவி நன்கொடை பெறாதவை தவிர்ந்த) அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட இந்நாட்டில் 800 தோட்டப் பாடசாலைகளைப் பொறுப்பேற்க சுமார் இருப்பத்தைந்து ஆண்டுகள் சென்றன.
53

Page 29
மலையகக் கல்வியின் இன்றைய நிலை
இன்றைய மலையகக் கல்வி முறைமை சுமார் 800 பாடசாலைகளையும் 5,000 ஆசிரியர்களையும் இரண்டு இலட்சம் மாணவர்களையும் கொண்டு இயங்குகிறது. மலையகத்தில் தோட்டப் பாடசாலைகள் என ஒரு பிரிவு இன்றில்லை. சகல பாடசாலைகளும் தேசிய பாடசாலை முறைமைக்குள் உள்ளீர்க்கப்பட்டு விட்டன. ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்காக கொட்டகலை யதன்சைட்டில் ஓர் ஆசிரியர் கலாசாலையும் பத்தனையில் ஒரு கல்வியியல் கல்லூரியும் இயங்குகின்றன. கடந்த இரு தசாப்தங்களில் மலையகத்தைச் சேர்ந்த கணிசமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக ஆரம்பக்கல்வியை மலையக ஆசிரியர்களே பொறுப்பேற்றுக் கொண்டு விட்டனர். ஒரு சிலவற்றைத் தவிர சகல பாடசாலைகளிலும் அதிபர்களாக பதவி வகிப்பவர்களும் மலையகத்தில் பணியாற்றும் கல்வி அதிகாரிகளிலும் கணிசமானோர் மலையகத்தைச் சார்ந்தவர்கள் தான். மலையகக் கல்வியை தேசியக் கல்வியுடன் ஒப்பிடும் போது கடந்த இரு தசாப்தங்களில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த காலகட்டத்தில் தேசிய கல்வி முறைமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் ஒப்பிடும் போது மலையகக் கல்விக்கும் தேசிய கல்விக்கும் இடையிலான அகன்ற இடைவெளி எவ்வளவு தூரம் குறைக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வுக்குரியது. தேசிய கல்வி முறைமையின் ஓர் அங்கமாக இருப்பதால் அதன் குறைபாடுகள் மலையகக் கல்வியிலும் காணப்படுகின்றன. உதாரணமாக ஆசிரியர் பரம்பலில் தேசிய ரீதியாகக் காணப்படும் அமைப்பு ரீதியான சமநிலையின்மை (STRUCTURAL INBALANCE) அதாவது சில குறிப்பிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை மலையகத்திலும் காணப்படுகின்றது.
அதே நேரத்தில் மலையகக் கல்வி தமிழ் மொழிக் கல்வியின் ஓர் அங்கமாக விளங்குவதால் அதில் காணப்படுகின்ற மொத்த ஆசிரியர் சமநிலையின்மை (OVERALLINBALANCE) மலையகக் கல்வியிலும் காணப்படுகிறது. உதாரணமாக உலக வங்கியின் அறிக்கை (1996)யின் படி தேசிய கல்விமுறையில் 14,000 ஆசிரியர்கள் மிகையாகக் காணப்படும் போது தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் 10,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பட்டன. மலையகப் பாடசாலைகளிலும் ஆசிரிய வெற்றிடங்கள் மிகையாகக் காணப்படவே செய்கின்றன. எனவே கல்விப் பிரச்சினைகள், குறைபாடுகள் மலையகப் பாடசாலைகளில் மட்டுமே காணப்படுகின்றன எனக் கூறுவதற்கில்லை.
ஆனால், இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான விடயமென்னவெனில் தேசிய கல்வி முறைமையிலும் தமிழ்மொழி மூலக் கல்வி முறைமையிலும் காணப்படுகின்ற கல்விப் பிரச்சினைகளும் குறைபாடுகளும் மலையகக் கல்வி முறைமையிலும் காணப்படுகின்ற அதேவேளையில் இவற்றில் காணப்படாத மலையகக் கல்விக்கு மட்டுமே உரித்தான கல்விப் பிரச்சினைகளும், குறைபாடுகளும் மலையகக் கல்வி முறைமையில் காணப்படுகின்றன என்பதாகும்.
54

இவ்விடயத்தைச் சரியான முறையில் விளங்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே எதிர்காலத்தில் மலையகக் கல்வியை வினைத்திறனும் விளைதிறனும் மிக்க வகையில் திசைமுகப்படுத்த முடியும்,
மலையகக் கல்வியை மேம்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட காத்திரமான முயற்சிகள் 1980களின் மத்திய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு முன்னோடியாக பல முகவரகங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி பின்வரும் கல்விப் பிரச்சினைகள் இனங்காணப்பட்டன.
1. பலவீனமான உட்கட்டமைப்பு
பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்ச்சி குறைந்தவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் அர்ப்பணிப்பு, ஊக்கல் குறைவு இடைநிலைக் கல்விக்கான வசதிகளின்மை உயர்ந்த இடைவிலகல் வீதம் குறைந்த எழுத்தறிவு வீதம் பிள்ளைகளின் போஷாக்கின்மை உபகரணங்கள், தளபாடங்கள், இடப்பரப்பு பற்றாக்குறை விரிவாக்கத்துக்குதவியாக காணிகள் இன்மை மேலதிகமான வாசிப்பு துணைநூல்கள் இன்மை அதிபர்களின் தேர்ச்சி குறைவு போதிய தமிழ் கல்வி அதிகாரிகள் இன்மை பாடசாலை மேற்பார்வை செயற்பாடுகளில் குறைபாடு பெற்றோரின் ஈடுபாடு குறைவு பாடசாலை - சமூக உறவுகளில் குறைபாடு
முன்னர் குறிப்பிட்டவாறு இப்பிரச்சினைகள் மலையகக் கல்விக்கு மாத்திரம் உரித்தன்று. ஆனால், இவற்றில் பல மலையகக் கல்வியில் மிகவும் முனைப்பாகக் காணப்படுகின்றன. அவை தீர்க்கப்படாத வரையில் மலையகக் கல்வியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. இப்பிரச்சினைகள் அனைத்தையும் பற்றி இங்கு விவாதிக்க முடியாதெனினும் ஒரு சிலவற்றை விளங்கிக் கொள்வது மிகவும் முக்கியமானது.
மாணவர்கள் ஆசிரியர் விகிதம் தேசிய மட்டத்தில் 22:1 ஆகும். இது மிகவும் பாராட்டக்கூடியதொரு அடைவு மட்டமாகும். மிகவும் விருத்தி அடைந்த நாடுகளில் கூட இவ்விகிதம் 25:1 ஆக உள்ளது. ஆனால், மலையகத்தில் மாணவர் ஆசிரியர் விகிதம் அண்ணளவாக 40:1 ஆகும். அதாவது மலையகத்தில் மாணவர் ஆசிரியர் விகிதத்தை தேசிய மட்டத்துக்கு உயர்த்த வேண்டுமெனில் தற்போது மலையகத்தில் பணிபுரிகின்ற ஆசிரியர்களின் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை ஒருபுறமிருக்க மறுபுறத்தில் பணிபுரிகின்ற ஆசிரியர்களின் தொழில் நிலைத்தேர்ச்சி திருப்திகரமாக இல்லை என்பது பொதுவான கருத்து. ஆசிரியர்களின் தொழில்நிலைத் தேர்ச்சி என்பது பின்வரும் காரணிகளில் தங்கியுள்ளது.
55

Page 30
1. தொழில் நுழைவு நிலையில் அவர்களது கல்வித் தகைமை 2. ஆசிரியர்களின் தொழிற்பயிற்சிக்கான நிறுவனங்களில் வழங்கப்படும் பயிற்சி
நெறிகளின் தரம் 3. அந்நிலையங்களில் காணப்படும் வசதிகள் 4. அந்நிலையங்களில் பணிபுரியும் வள நபர்களின் தகைமையும், அர்ப்பணிப்பும்,
திறமையும்
தொடர்ச்சியான வாண்மை விருத்திக்கான வாய்ப்புகள்
மலையகத்தில் மிக அண்மைக்காலம் வரை க.பொ.த. சாதாரண தர தகைமை கொண்டவர்களே ஆசிரியர்களாக நியமனம் பெற்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தேசிய கல்வி நிறுவகத்தின் தொலைக்கல்வி மூலமான ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களின் தொகை மிகவும் குறைவாக உள்ளது. சிற்சில பாடங்களில் மோசமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. அழகியல், தொழில்நுட்பம் முதலிய பாடங்களில் தொழில் பயிற்சி பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு அரிதாகக் காணப்படுகிறது.
ஆசிரியர்களுக்கான தொழில்சார் உதவிகள் வழங்குவதில் முதன்மை ஆசிரியர்கள் மிகவும் முக்கியபங்கு வகிக்கின்றனர். மலையகக் கல்வி வலயங்களில் முதன்மை ஆசிரியர்களுக்கு பெருந்தட்டுப்பாடு நிலவுகிறது. ஊவா மாகாணத்தில் மிக அண்மைக்காலம் வரை தமிழ் மொழி மூலமாகப் பணியாற்றக்கூடிய முதன்மை ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. மறுபுறத்தில் மலையகத்தில் நியமிக்கப்பட்டுள்ள முதன்மை ஆசிரியர்களில் பலர் எந்தளவுக்கு ஆசிரியர்களுக்கு வழிகாட்டக்கூடியவர்கள் என்பது தொடர்பான சந்தேகமும் உள்ளது. அத்துடன் இந்த முதன்மை ஆசிரியர்களுக்கு தமது கடமையை செவ்வனே மேற்கொள்ள எந்தளவுக்கு நிர்வாக அதிகாரங்களும், தொழில்சார் பயிற்சியும், ஊக்கமும் வழங்கப்படுகின்றன என்பதும் ஆய்வுக்குரிய விடயமாகும்.
மலையக ஆசிரியர்கள் மாத்திரமல்லாது முழு நாட்டிலும் பணிபுரிகின்ற தமிழ் மொழிமூல ஆசிரியர்களுக்கும் வாண்மை விருத்தி மற்றும் உயர்கல்விக்கான வாய்ப்புகள் எந்தளவுக்கு உள்ளன என்பது தமிழ்க்கல்வியியலாளர்களது கவனத்தை ஈர்க்கவேண்டிய விடயமாகும். மிக அண்மைக்காலம் வரை தமிழ் மொழிமூலமாக கல்வியியலில் முதுமாணி (M.Ed, M.A.) பட்டங்களைப் பெறுவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தையே நாடவேண்டிய நிலைமை இருந்தது. திறந்த பல்கலைக்கழகத்தில் இக்கற்கை நெறிகளை இன்று தமிழில் பயில்வற்கு முடிந்த போதும் வள நபர்களின் பற்றாக்குறை காரணமாக ஒரு சில மாணவர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படுகின்றனர். தேசிய கல்வி நிறுவகத்தில் முதன் முறையாக தமிழில் ஏற்படுத்தப்பட்ட கல்வி முதுமாணி கற்கைநெறிக்கு ஒரே முறையுடன் வெற்றிகரமாக மூடுவிழா நடாத்தப்பட்டது. மலையகப் பாடசாலைகளிலும் உயர்கல்வி நிலையங்களும் கல்வி முதுமாணி பட்டம் பெற்றுள்ளவர்களை
56

விரல்விட்டு எண்ணி விட முடியும்.
பாடசாலைகளில் கல்விசார் செயற்பாடுகளையும் நிர்வாகப் பணிகளையும் மேற்பார்வை செய்வது நிறுவன விருத்திக்கு அடிப்படையானதொரு விடயமாகும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மேற்பார்வைப் பணிகளை பெரும்பாலும் சிங்கள கல்வி அதிகாரிகளே மேற்கொள்ளும் நிலை காணப்படுகிறது. இதற்கு காரணம் தமிழ் கல்வி அதிகாரிகளின் பற்றாக்குறைவாகும். 1977ல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் மலையக கல்வி வலயங்களில் தமிழ் கல்வி நிர்வாக அதிகாரிகளுக்கு 118 வெற்றிடங்கள் இருந்த போதும் 9 அதிகாரிகளே உள்ளனர் என அறியப்பட்டது. பின்னர் சிலர் போட்டிப்பரீட்சை அடிப்படையில் நியமிக்கப்பட்டபோதும் அவர்களில் சிலர் நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக தமது பதவிகளை இழந்தனர். இவர்களுக்கு எவ்வித நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் மலையகப் பாடசாலைகளில் கிரமமாக மேற்பார்வைகளை மேற்கொள்ளவும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு கண்டு கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் பண்புத்தரத்தை மேம்படுத்தவும் வாய்ப்புகள் குறைவாகும். கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்தைச் சேர்ந்த தமிழ் அதிகாரிகள் மலையகத்தில் ஒருவருமே இல்லை. அவ்வாறாயின் மலையக கல்வி வலயங்களில் கல்வி நிர்வாகப் பொறுப்பை மலையகத்தவர் பெற்றுக் கொள்ளும் காலம் அண்மையில் வரப்போவதுமில்லை. அது ஒருபுறமிருக்க இப்பொறுப்பாண்மையை இவர்களுக்கு வழங்கும் அரசியல் மனநிலை உள்ளதா? என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
அண்மைக்கால கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகள்
1980களின் மையப்பகுதியில் மலையகக் கல்வி விருத்திக்கான காத்திரமான செயற்பாடுகள் ஆரம்பமாகின. இவற்றுள் பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி அபிவிருத்தித் திட்டம் (PSEDP) மிகவும் முக்கியமானது. இச் செயற்திட்டத்துக்கு சுவீடிஷ் சீடா (SIDA) நிறுவனம் நிதி உதவியை வழங்கியது. “பெருந்தோட்டப் பாடசாலைகளை அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் அபிவிருத்தி செய்து தேசிய கல்வி முறைமையில் சமத்துவமாக ஒன்றிணைப்பதே" இச் செயற்திட்டத்தின் நோக்கமாக இருந்தது. இந்நோக்கத்தை அடைவதற்கு இச்செயற்திட்டம் பின்வரும் மூன்று கட்டங்களில் தனது செயற்பாடுகளை மேற்கொண்டது. முதலாவது கட்டம் (1986-90) இரண்டாவது கட்டம் (1990-94) மூன்றாவது கட்டம் (1994-98)
இச்செயற்திட்டம் பின்வரும் பத்து துணைச் செயற்திட்டங்களை கொண்டிருந்தது. 1. ஆரம்பக் கல்வியில் தரவிருத்தி
. ஆசிரியர் நிரம்பல்
சேர்வு வீதம், வரவு வீதம் ஆகியவற்றை அதிகரித்தல் . இடைநிலைக் கல்விக்கான வாய்ப்புகளை விரிவாக்குதல் . உட்கட்டமைப்பு விருத்தி
57

Page 31
6. உடல்நலமும் சுகாதாரமும்
7. பாடசாலை சுகாதாரம்
8. முறைசாரா கல்வி விருத்தி
9. செயற்திட்ட லாகாவினை மதிப்பிடல் 10. ஒழுங்கமைத்தல், முகாமைத்துவம், கண்காணித்தல்
PSEDP செயற்திட்டம் 1998 டிசம்பர் 31ம் திகதி முடிவடைந்தது. இச்செயற் திட்டத்துக்காக சீடா நிறுவனம் 1055.36 மில்லியன் ரூபாய்களை செலவு செய்தது. 808 மலையகப் பாடசாலைகளில் 700 பாடசாலைகளில் தரவிருத்தியும் 436 பாடசாலைகளில் உட்கட்டமைப்பு விருத்தியும் மேற்கொள்ளப்பட்டன.
1986 ஆரம்பிக்கப்பட்ட இன்னுமொரு அபிவிருத்திச் செயற் திட்டம் ரீபாத கல்வியியல் கல்லூரிச் செயற்திட்டமாகும். இதற்கு ஜெர்மனிய GTZ நிறுவனம் நிதியுதவி செய்தது. இச்சசெயற்திட்டம் நான்கு கட்டங்களைக் கொண்டிருந்தது. ஆரம்ப அபிவிருத்திக்கட்டம் (1986-91) செயற்படு கட்டம் (1992-94) முடிவுறுகட்டம் (1998-99) இந்நான்கு கட்டங்களுக்கும் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக 644 மில்லியன் ரூபாங்களை GTZ நிறுவனம் வழங்கியது.
. ரீபாத கல்வியை நிர்மாணித்தல். . இக்கல்லூரிக்குத் தேவையான உபகரணங்கள், தளபாடங்களைப் பொருத்துதல்
கல்லூரிக்கு அண்மையில் 81 பாடசாலைகளை விருத்தி செய்தல் . வளநிலையங்களை ஸ்தாபித்தல் . க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு புத்தூக்க வகுப்புகளை நடாத்துதல் . ஆரம்ப பாடசாலைகளுக்கான ஒரு வெளிக்கள நிலையத்தையும் ஆலோசனை
சேவையையும் நிறுவுதல்.
இந்த இரு செயற்திட்டங்களும் மலையகக் கல்வி விருத்தியில் மிகவும் முக்கியமானவை. உயரிய மனிதாபிமானத்துடன் வழங்கப்பட்ட இந்த உதவிக்காக சுவீடிஷ் ஜெர்மானிய மக்களுக்கு மலையக மக்களும் அவர்களது சந்ததியினரும் நன்றிக்கடன் பட்டுள்ளனர். எனினும் இந்த செயற்திட்டங்கள் எந்தளவுக்கு வினைத்திறனுடனும் விளைதிறனுடனும் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றிய ஒர் கல்விசார் மதிப்பீடு வெளிவாரி முகவர்களால் நடாத்தப்பட வேண்டும். அவ்வாய்வு முடிவுகள் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை சீரிய முறையில் திசைமுகப்படுத்துவதற்கு பெருந்துணையாக இருக்கும்.
மலையகக் கல்வியின் எதிர்காலம்
1970களுக்குப் பின்னர் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மலையகக் கல்வி விருத்தியில் ஒப்பீட்டளவில் கரிசனை காட்டி வந்துள்ளன. அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் முக்கியமானது மலையக மக்கள் 1940 களில் இழந்த அரசியல் உரிமைகளை 1970களிலிருந்து படிப்படியாகப் பெற்றுக்
58

கொண்டமையாகும். மலையக மக்களின் “வாக்கு வங்கி” பெரும்பான்மையின அரசியல்வாதிகளுக்கு காலத்துக்குக் காலம் தேவைப்படுகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும் கூட மலையக மக்கள் பால் அரசியல்வாதிகள் கரிசனை கொள்வதற்கு ஒரு துணைக் காரணியாகவிருக்கலாம். பிரச்சினைகள், முரண்பாடுகள் கூர்மையடையும் போது அதுபெரும் போராட்டமாக வெடித்துக் கிளம்புவது வரலாற்றின் நியதியாகும்.
இன்றைய சாதகமான அரசியல் சூழ்நிலையை மலையகக் கல்வி மேம்பாட்டுக்கு ஏற்புடையதாக மாற்றிக் கொள்வதில் மலையகத் தலைமைகளும் மலையகக் கல்வியில் அக்கறை கொண்டோரும் தொலைநோக்குடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இதற்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய விடயம் மலையகக் கல்வியின் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தந்திரோபாய திட்டத்தை (STRATEGICPLAN) வடிவமைப்பதாகும். இத்திட்டத்தில் குறுங்கால, மத்தியகால, நீண்டகாலத் திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். இத்தகைய திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டுமானால் மலையகக் கல்வி தொடர்பாக ஒரு தொலைநோக்கினை (VISION) உருவாக்கிக் கொள்வதும் அவசியமாகும். தொலைநோக்கு இல்லாத செயற்பாடுகள் இலக்கு இல்லாத பயணம் போன்றதே.
இவ்வாறான ஒரு முழுமையான கல்வி அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குவதற்கு முதற்படி தற்போதைய மலையகக் கல்வி நிலையை பகுப்பாய்வு செய்வதாகும். மலையகக் கல்வி பற்றிய பூரணமான தகவல்கள் இல்லை. இத்தகவல்களை ஒன்றுதிரட்ட வேண்டும். உதாரணமாக மலையகத்தில் பணிபுரிகின்ற ஆசிரியர்களில் எத்தனை பேர் மலையகத்தவர்கள்? அவர்களது கல்வித் தகைமைகள் யாவை? அவர்களது வாண்மை விருத்தித் தேவைகள் யாவை? போன்ற விபரங்கள் திரட்டப்பட வேண்டும். அதேபோல மாணவர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள் போன்றோரின் பூரணமான தகவல்கள் திரட்டப்பட வேண்டும். ஆய்வு பூர்வமான தகவல்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படாத எந்த திட்டமும் தனது குறிக்கோள்களை அடைய முடியாது.
மலையகம் பொதுவாக கல்வியில் பின்தங்கி இருந்தாலும் மலையகத்துக் குள்ளேயே வேறுபட்ட நிலைமைகள் இன்று காணப்படுகின்றன. ஒப்பீட்டளவில் மத்திய மலைநாட்டில் காணப்படும் கல்வி அபிவிருத்தி மலைநாட்டின் ஒரப்பகுதிகளில் காணப்படவில்லை. கடந்த இரு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட கல்விச் செயற்பாடுகள் கண்டி, நுவரெலியா முதலிய மாவட்டங்களையே முனைப்பாக கொண்டிருந்தன. இம்மாவட்டங்களில் உட்கட்டமைப்பு தேவைகள் கணிசமான அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே இங்கு பண்புத்தரவிருத்தி நோக்கிய செயற்பாடுகளுக்கு முதன்மை அளிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் ஏனைய பகுதிகளில் உட்கட்டமைப்பு தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
59

Page 32
எந்தவொரு கல்வி முறைமையிலும் மாணவர்களுக்கு அடுத்து மிக முக்கியமான பகுதியினர் ஆசிரியர்களே ஆவர். இந்நாட்டில் மிகவும் மோசமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவது மலையகத்தில் தான். இப்போது பணிபுரிகின்ற ஆசிரியர்கள் தொகையை இரட்டிப்பாக்கினால் தான் மலையகத்தில் மாணவர் ஆசிரியர் விகிதத்தை தேசிய விகிதாசாரத்துக்கு சமமாக்க முடியும். இன்று க.பொ.த. உயர்தரத்தில் சித்தியெய்திய மாணவர்கள் கணிசமாக உள்ளனர். இவர்களைக் கொண்டு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும். அதே நேரத்தில் மலையக ஆசிரியர்களின் வாண்மை விருத்தி தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முதற்படியாக தகைமையும் அர்ப்பணிப்பும் கொண்ட முதன்மை ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். அவர்களைக் கொண்டு மலையக ஆசிரியர்களுக்கு தொழில்சார் உதவிகளை வழங்குவதற்கு ஆவண செய்தல் வேண்டும்.
ஆசிரியர் வாண்மை விருத்தியில் தொடருறு கல்வி (CONTINUING EDUCATION) மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இக்கல்வியை வழங்குவதில் பல்கலைக்கழகங்களும், தேசிய கல்வி நிறுவகமும் முக்கியமான நிறுவனங்களாகும். இவற்றில் கல்வியில் இளமாணி, முதுமாணி (BEd,MEd) பட்ட கற்கை நெறிகளில் பங்கு கொள்ளும் மலையக ஆசிரியர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையினரே. இந்நெறிகளில் நியாயமான அளவு மலையக ஆசிரியர்களைச் சேர்த்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
அதேபோல மலையக பாடசாலைகளில் பொருத்தமான அதிபர்களை நியமித்தல், அவர்களுக்குத் தேவையான முகாமைத்துவ பயிற்சிகளை வழங்குதல், அவர்களது நிர்வாக செயற்பாடுகளுக்கு உதவி செய்தல் ஆகியவையும் முக்கியமானவை. மலையக கல்வியை நிர்வகிப்பதில் மலையகத்தவர் பங்குகொள்ள வேண்டுமெனில் போதுமான அளவுக்கு கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களுக்குக் கல்வி முகாமைத்துவத் துறையில் பயிற்சி அளிக்கப்படவும் வேண்டும்.
இவ்வாறான அடிப்படையான விடயங்களில் கவனம் செலுத்தாமல் மலையகக் கல்வியை விருத்தி செய்துவிட முடியாது. இப்போது தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் பின்பற்றப்படும் கல்விக் கொள்கைகள் மலையகத்தில் காணப்படுகின்ற விசேட பிரச்சினைகளை கவனத்திற் கொண்டிருக்கவில்லை. பொருத்தமான உடன்பாடான கொள்கைத் தெரிவுகளின்றி ஒரு பின்தங்கிய மக்கள் கூட்டத்தின் கல்வியை முன்னேற்றிவிட முடியாது. மலையகக் கல்வி பின்தங்கியுள்ளது என்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளும் தேசிய கல்வி ஆணைக்குழு (1992) ஏனைய பிரதேசங்களில் காணப்படுகின்ற பின்தங்கலையும், மலையக பின்தங்கலையும் ஒரே கூடைக்குள் போட முயல்கிறது. இது மிகவும் துரதிஷ்டமானது. ஏனைய பிரதேசங்களில் காணப்படுகின்ற கல்விப் பின்தங்கல் நிர்வாகம் சார்ந்தது. ஆனால், மலையகத்தின் பின்தங்கல் பின்பற்றப்பட்ட பாரபட்சமான கல்விக் கொள்கைகளின் நேரடி விளைவாகும். பின்தங்கியிருத்தல் பொதுவாக இருந்த போதும் அதற்கான காரணங்கள் வேறுபட்டவை. எனவே வேறுபட்ட நோய்களுக்கு
60

ஒரே மருந்தை கொடுத்து குணமாக்க முயல்தல் பேதமையாகும். மலையகக் கல்வியை மேம்படுத்த வேண்டுமெனில் குறிப்பிட்ட காலத்துக்கு உடன்பாடான ITJugö (POSITIVE DISCRIMINATION) as(6b 6ö6ä Gar660)56 பின்பற்றப்படல் வேண்டும். இந்தியா உட்பட பல நாடுகளில் பின்தங்கிய பிரதேசங்களையும் இனக்குழுக்களையும் தேசிய மட்டத்துக்கு உயர்த்துவதற்காக இவ்வாறான கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறான ஒரு கொள்கையை அரசாங்கம் பின்பற்ற வேண்டுமெனில் அதற்காக மலையகத் தலைமைகள் ஒன்றுபட்டு மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். உதாரணமாக கடந்த நான்கு தசாப்தங்களில் பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர்களின் பங்குபற்றல் ஒரு வீதத்தை விட குறைவானதாகும். பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கும் ஒரு சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. உடன்பாடான கொள்கையைப் பின்பற்றாமல் பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர்களின் சேர்வு விகிதத்தை கூட்ட முடியாது. உண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பின்பற்றும் தகவல் கொள்கையின் காரணமாக மலையகத்தைச் சார்ந்த பல்லைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகப் பெற முடியாதுள்ளது.
மலையகக் கல்விப் பிரச்சினைகளை சரியான முறையில், சரியான வடிவத்தில், சரியான இடங்களில் நாம் முன்வைக்க வேண்டுமெனில் அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றுள் முக்கியமானது "மலையகக் கல்விச் செயலகம்" (PLANTATION EDUCATION SECRETARIAT) s (IB6. It issLIL (36.60 (SLib. solo6) ஆய்வு, கொள்கை உருவாக்கம், நெருக்குதல்களை ஏற்படுத்தல் (LOBBYING) முதலியவற்றை முனைப்பாக கொண்டு இச்செயலகம் செயற்படுதல் வேண்டும்.
இச் செயலகத்தில் சார்பில் வருடாந்த மலையகக் கல்வி மாநாடு (ANNUAL EDUCATIONCONFERENCE) நடத்தப்பட வேண்டும். மலையகக் கல்வி ஆர்வலர்கள் தமக்குள் கொண்டிருக்கக்கூடிய வேறுபாடுகளும் சித்தாந்த முரண்பாடுகளும் இந்த மாநாட்டில், அவர்கள் பங்கு கொள்வதற்கு தடைக்கற்களாக இருக்கக் கூடாது. மலையகக் கல்வியில் ஆர்வம் கொண்ட சகலரும் இம்மாநாட்டில் பங்குகொண்டு தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
(plg660
மேற்படி முன்மொழிவுகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது அசாத்தியமானவைகளாகத் தோன்றலாம். ஆனால், இவற்றுக்கு செயலுருவம் கொடுக்காமல் மலையகக் கல்வி முன்னேற்றத்தை எண்ணிப்பார்க்க முடியாது. மலையகக் கல்வி மேம்பாடு இரண்டு விடயங்களில் தங்கியுள்ளது. அரசியல் உறுதிப்பாடு (POLITICAL WILL) அடுத்தது அத்தகைய உறுதிப்பாட்டினை ஒன்றுபட்டு தொடர்ச்சியாக மேற்கொள்ளும் முயற்சிகள், இவை இரண்டும் இருக்குமாயின் ஒரு பத்தாண்டு காலத்துக்குள் மலையகக் கல்வியை தேசிய
61

Page 33
மட்டத்துக்கு கொண்டு வர முடியாவிட்டாலும் ஒரளவுக்கு முன்னேற்றிவிட முடியும்.
அரசியல் தலைமைத்துவம் மாத்திரம் கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்தி விட முடியாது. அதற்கு சாதகமாக ஒரு கல்வித் தலைமைத்துவத்தைக் கட்டி எழுப்புதல் மிகவும் முக்கியமானது. மலையகத்தில் கட்சி சார்பற்ற ஒரு கல்வித் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவது வரலாற்றின் தேவையாகும். ஒரு சிலர்தான் உள்ளனர் என்ற போதிலும் இன்று பல்வேறு துறைகளிலும் மலையகத்தைச் சேர்ந்தோர் பிரகாசிக்காமலில்லை. அவர்களது உதவியுடனும் பங்களிப்புடனும் மலையகத்தில் ஒரு கல்வித் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்ப முடியும். அவ்வாறான ஒரு தலைமைத்துவத்தை உருவாக்க மலையகக் கல்வியில் ஆர்வமுள்ள சகலரும் தமது அரசியல் வேறுபாடுகளையும் சித்தாந்த முரண்பாடுகளையும் ஓரளவு புறந்தள்ளிவிட்டு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் முயற்சி செய்தல் வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும்.
நிபுணத்துவ ஆலோசகர் தொலைக்கல்வி பங்காண்மை நிகழ்ச்சித்திட்டம் (DEMP / DEPP)
(கல்வி அமைச்சு)
நன்றி நாடோடிகள்
62

மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சியும்
முன்நகர்த்த வேண்டிய பணிகளும்
சி. அ. யோதிலிங்கம்
மனிதன் ஒரு சமுகப் பிராணி என்றார் சிந்தனையாளர் அரிஸ்டோட்டில். இதன் அர்த்தம் சமுகத்துடன் இணைந்து கூட்டாகவும் தனியாகவும் வாழ்வதேயாகும். மனிதன் சமுகமாக வாழும் போது தான் கூட்டடையாளத்தையும் கூட்டிருப்பையும் பேணிக் கொள்ள முடியும். அதன் வழி கூட்டுரிமைகளுக்காக போராடவும் முடியும். ஒரு சமுகம் அதன் அடையாளத்தின் பேரால் ஒடுக்கப்படுகின்ற போது அதற்கு எதிராகக் கூட்டுச் செயற்பாடுகள் முலம் தான் தனிப்பட்ட நலன்களையும் கூட்டு நலன்களையும் பேணிக் கொள்ள முடியும். கூட்டுரிமைகளைப் போராடிப் பெற்றுக்கொள்ளவும் முடியும். இதனால் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட பொறுப்புகள் இருக்கின்ற அதேவேளை கூட்டுப்பொறுப்பும் இருக்க வேண்டும். இங்கு கூட்டுப் பொறுப்பு என்பது, சமுக நலன்களுக்கான பொறுப்பேயாகும். தன் சமுகத்தில் ஏனையவர்களோடு இணைந்து சமுகத்தின் பொது நலன்களுக்காக உழைக்க வேண்டியது ஒவ்வொருவருக்குமுள்ள தார்மீகக் கடமையாகும்.
அமரர் சுப்பையா - சிவஞானம் தன் குடும்பப் பொறுப்புக்களோடு சமுகப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டவர். நீண்ட காலம் கணக்குப்பிள்ளையாக தொழில் பார்த்தவர். மலையக மக்களோடு நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்தவர். தன் தொழிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட புதிய பண்பாட்டு அமைப்பு போன்ற மலையகத்தின் இளந்தலைமுறை அமைப்பினருக்கு ஒத்துழைப்புக்களை நல்கி வந்தவர். அவருக்காக வெளியிடப்படும் இந்த நினைவு நூலில் மலையக அரசியல் - வரலாற்று வளர்ச்சியும் நகர்த்த வேண்டிய பணிகளும் என்ற தலையங்கத்தில் கட்டுரை ஒன்றினை எழுதுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
நான் மலையக சமுகத்தை சேர்ந்தவனல்ல. அதற்கு வெளியில் தனது விடுதலைக்காகப் போராடும் வடகிழக்கு சமுகத்தைச் சேர்ந்தவன். ஆனால், மலையக மக்கள் தொடர்பாக மிகுந்த அக்கறையுடையவன். முடிந்தவரை அவர்கள் தொடர்பான தேடல்களை மேற்கொண்டு வருபவன். வடக்கில் குடியேறிய மலையக மக்கள் மத்தியில் புனர்நிர்மான பணிகளை மேற்கொண்டவர்களில் ஒருவன். எனினும் மலையக மக்களின் அபிலாசைகளை அவர்கள் அனுபவித்து வெளிப்படுத்துவது போல ஒரு அகநிலை நின்ற ஆக்கத்தினை கொணர முடியாது. எனவே ஒரு புறநிலையாளன் என்றவகையிலேயே எனது கருத்துக்களை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
கருத்துக்கள் எப்போதும் முடிந்த முடிவுகளல்ல. விவாதங்களுக்குழு கலந்துரையாடல்களுக்கும் உரியவை. கருத்துகள் மோதுகின்றபோதுதான் உண்மைகளை தரிசிக்க முடியும். எனவே என்னுடைய கருத்துக்களையும்
63

Page 34
விவாதத்திற்கும் கலந்துரையாடல்களுக்கும் எடுத்துக்கொள்ளுமாறும் அதேவேளை தவறுகளை மன்னிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
மலையக மக்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஒரே தடவையில் வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை என்பவற்றை புறரீதியாக எதிர்நோக்குகின்றனர். அதேவேளை மலையக மக்களில் பெரும்பான்மையினர் சாதிரீதியான ஒடுக்குமுறை, உள்ளக வர்க்க ஒடுக்குமுறை என்பவற்றிற்கு அகரீதியாகவும் முகம்கொடுக்கின்றனர். எனவே ஒரே சமயத்தில் இன விடுதலையும் வர்க்க விடுதலையும் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதாவது தேச அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவர்கள் அதேதருணத்தில் சமுக மாற்றத்திற்கான அரசியலையும் முன்னெடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரேநேரத்தில் புறரீதியான ஒடுக்குமுறைக்கும் அக ரீதியான ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடுகின்றபோது போராட்ட தந்திரோபாயங்களில் அதிக கவனம் எடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனைய தேசங்களை விட மலையக தேசத்திற்கு இதற்கான கட்டாயம் அதிகமாக இருக்கின்றது. ஏனெனில் மலையக மக்களில் பெரும்பான்மையினர் அடிநிலை மட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களே! இன விடுதலையையும் பெறவேண்டும் அதேவேளை அந்த விடுதலை அடிநிலை மக்களையும் போய்ச் சேரவேண்டும்.
ஆனால், ஒரு தேசப் போராட்டம் என்பது அந்தத் தேசம் புறநிலையிலிருந்து வருகின்ற ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகும். இதனால் வர்க்க, சாதி, பிரதேச நிலைகள் கடந்து தேசத்தின் அனைத்துப் பிரிவினரையும் இணைக்க வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது. அதுவும் சிங்கள தேசத்தினால் முற்றிலும் சூழப்பட்ட ஒரு தேசம் வெற்றியடைவதற்கு தனது முழு ஐக்கியப் பலத்தையும் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. இதனால்தான் அனைவரையும் இணைத்துக் கொள்ளவேண்டிய தந்திரோபாயங்கள் மலையகத்தின் முன்னணி சக்திகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனது இந்தக் கட்டுரை அக ஒடுக்குமுறை பற்றிய அதிக கவனத்தினைக் குவிக்கவில்லை. மாறாக புற ரீதியான ஒடுக்குமுறையான இன ஒடுக்குமுறையிலேயே கவனம் செலுத்துகின்றது.
இன ஒடுக்குமுறை தொடர்பான மலையகத்தின் இன்றைய அரசியல் நிலையும் எதிர்கால பணிகளையும் பற்றி முழுமையாக புரிந்துகொள்வதற்கு மலையக அரசியலின் வரலாற்று வளர்ச்சி அது இன்று வந்தடைந்துள்ள கட்டம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.
III
மலையக மக்கள் சுமார் 87 வருடங்களாக நீண்ட போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். அவர்கள் அமைப்பு ரீதியாக போராட வெளிக்கிட்ட ஆண்டாக 1919ம் ஆண்டினைக் குறிப்பிடலாம். இந்த ஆண்டே சேர்.பொன்னம்பலம் அருணாசமும்,
64

பெரி சுந்தரமும் இணைந்து தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பினை உருவாக்கி மலையக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பியிருந்தனர். 1919ம் ஆண்டிலிருந்து 1935ம் ஆண்டுவரை மலையக அரசியலின் முதலாவது கட்டம் எனக் கூறலாம். அன்றைய காலகட்டத்தில் கொடூர ஒடுக்குமுறையாக இருந்த துண்டுமுறையினை ஒழிப்பதற்காக இவர்கள் குரல்கொடுத்தார்கள் எனக் கூறப்படுகின்றது. ஆனாலும் இக்காலகட்டத்தினை நகர்த்திய பெருமை நடேசையரையே சாரும். ஏ. ஈ. குணசிங்காவின் தொழிற்சங்கத்தில் உப தலைவராக இருந்த அவர் குணசிங்காவின் இனவாத நடவடிக்கைகளால் அதிலிருந்து விலகி தோட்டத் தொழிலாளர்களுக்கென தனியான தொழிற்சங்கமான இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கி செயற்பட்டார். டொனமுரின் அரசாங்க சபையில் ஹட்டன் தொகுதி உறுப்பினராக 1936 தொடக்கம் 1947 வரை கடமையாற்றியும் இருந்தார். தோட்டங்களுக்கு வெளியார் செல்லக்கூடாது என்ற கட்டளையையும் மீறிச்சென்று தொழிலாளர்களுக்கு விழிப்பூட்டினார்.
1935 தொடக்கம் 1947 வரை மலையக அரசியலின் இரண்டாவது காலகட்டம் எனக் கூறலாம். இக்காலகட்டம் இடதுசாரிக்கட்சிகள் மலையக மக்களின் ஆதிக்கம் செலுத்திய காலகட்டமாகும். இடதுசாரிகளே மலையகத்தில் வேலை நிறுத்தம் உட்பட பல போராட்டங்களை அறிமுகப்படுத்தியவர்களாவர். இவர்களினால் நடாத்தப்பட்ட முல்லோயாப் போராட்டம் புகழ்பூத்த ஒன்றாகும். பிரஸ்கேடில் சம்பவமும் மலையக அரசியலை மையமாக வைத்தே நிகழ்ந்திருந்தது. (பிரஸ்கேடில் இடதுசாரி தொழிற்சங்க நடவடிக்கைகளை மலையகத்தில் நகர்த்துவதற்கு முன்னோடியாக திகழ்ந்த ஒரு ஆங்கிலத் தோட்டத்துரையாவார். ) மலையகத்தின் முதல் போராளி கோவிந்தனும் முல்லோயாப் போராட்டத்திலேயே மரணமானார். 1947 வரை மலையக அரசியலில் இன ஒடுக்குமுறை பெரிதளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கவில்லை. வர்க்க ஒடுக்குமுறையே பிரதானமாகத் தொழிற்பட்டது. இதனால் நடேசையரும் இடதுசாரிகளும் வர்க்க ஒடுக்குமுறைகளிலேயே அதிக கவனம் செலுத்தியிருந்தனர். ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயரின் கைகளில் இருந்ததினால் இன ஒடுக்குமுறை பெரியளவிற்கு வளர்ச்சியடையவில்லை. ஆனாலும் கொழும்பு நகரத்தில் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான இனவாதம் 1920 களிலேயே ஆரம்பித்துவிட்டது.
அநாகரீக தர்மபால இந்திய வர்த்தகர்களுக்கு எதிரான இனவாதத்தினைத் தொடக்கி வைத்தார். ஏ. ஈ. குணசிங்கா கொழும்பில் வாழும் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான இனவாதத்தினை தொடக்கிவைத்தார். அரச அதிகாரம் சிங்களத் தலைவர்களிடம் இல்லாததினால் அது பெரியளவிற்கு நடைமுறைச் செயற்பாட்டில் எழுச்சியடையவில்லை. எனினும் இந்தப் போக்கு நீண்டகாலம் நிலைக்கவில்லை. 1931ல் அறிமுகப்படுத்தப்பட்ட டொனமுர் அரசியல் யாப்புடன் இனவாத சக்திகள் அதிகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு தமது செயற்பாட்டினை முடக்கிவிட்டனர். தமக்குக் கிடைத்த அரைகுறை அதிகாரத்தை வைத்துக்கொண்டே நகரத்தில் பணியாற்றிய இந்திய வம்சாவளி அரசாங்க உத்தியோகத்தர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போன்றோரை பதவியிலிருந்து நீக்கினர். இந்நிலையில் இவற்றுக்கு முகம்கொடுப்பதற்காகத் தான் நேருவின் வழிகாட்டலில் இலங்கை இந்திய
65

Page 35
காங்கிரஸ் 1939இல் உருவாக்கப்பட்டது. 1940இல் இதனுடைய தொழிற்சங்கம் மலையகத்தில் பணியாற்ற ஆரம்பித்தது.
இந்திய வம்சாவழியினருக்கெதிரான இனவாதம் கொழும்பில் ஆரம்பித்தாலும் இக் காலத்தில் மலையகத்தில் முற்றுமுழுதாக அது நடைபெறவில்லை எனக்கூறமுடியாது. 1937ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளுராட்சிச் சபைச் சட்டம் இதற்கு நல்ல உதாரணமாகும். பண்டாரநாயக்கா உள்ளுராட்சி அமைச்சராக இருந்த போது கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தின் முலம் உள்ளுராட்சிச் தேர்தலில் வாக்காளராகும் உரிமை மலையக மக்களுக்கு இல்லாமல் செய்யப்பட்டது. இதைவிட அரசாங்க சபைத் தேர்தல்களில் கூட மலையக மக்களின் வாக்கு வீதத்தினைக் குறைப்பதற்காக வாக்குரிமைச் சட்டத்தில் பல கட்டுப்பாடுகள் 1936 தேர்தலின் போது கொண்டுவரப்பட்டன.
முன்றாவது காலகட்டம் 1947ம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டுவரை வருகின்றது. 1947இன் சோல்பரி அரசியல் யாப்பு, அதன் பின்னர் 1948ல் வழங்கப்பட் சுதந்திரம் என்பனவற்றின் முலம் இலங்கையின் ஆட்சியதிகாரம் முழுமையாக சிங்களத் தலைமைகளின் கைகளுக்கு சென்றது. ஆங்கிலேயர்கள் இலங்கைத் தீவின் பன்முக சமுகத்தன்மை கவனத்திலெடுக்காமல் ஒற்றையாட்சி அரசியலை அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றனர். பல்வேறு இனங்களும் நியாயமான வகையில் அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்ளும் தன்மை அதிகாரக் கட்டமைப்பில் இருக்கவில்லை.
சிங்களத் தலைமை தென் இலங்கையில் மலையக மக்களின் அரசியல் அடையாளத்தையே இல்லாமல் செய்யும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. இரு பிரஜாவுரிமைச் சட்டங்களின் முலமும் வாக்குரிமைச் சட்டத்தின் முலமும் மலையக மக்களின் அரசியல் அடையாளத்தை இல்லாமல் செய்தது. மலையக மக்கள் பலவந்தமாக தொழிற்சங்க அரசியலுக்குள் மட்டும் குறுக்கப்பட்டனர். மறுபக்கத்தில் அரச இயந்திரத்தை முழுமையாக சிங்களமயமாக்கும் முயற்சி நடைபெற்றது. 1950இல் தேசியக்கொடி, 1956இன் தனிச் சிங்களச் சட்டம் என்பன சிங்கள மயமாக்கல் செயற்பாட்டில் பிரதான விடயங்களாக இருந்தன. ஏனைய இனங்களுக்கு பாதுகாப்பாக சோல்பரி யாப்பில் காணப்பட்ட 29வது பிரிவு கோமறைக்கழகம் என்பன மலையக மக்கள் விடயத்தில் சிறிதளவு பாதுகாப்பைக்கூட கொடுக்கவில்லை. பிரஜாவுரிமைப் பிரச்சினையில் உலக நீதிக்கு புகழ்பெற்ற கோமறைக் கழகமும் கையை விரித்திருந்தது.
இந்த அரசியல் அடையாளப் பறிப்பின் உச்சநிலை அம்சமாகவே 1964இல் கைச்சாத்திடப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் அமைந்தது. மலையக மக்களின் சம்மதமில்லாமலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரைவாசி இந்திய வம்சாவழி மக்கள் நாடுகடத்தப்பட்டனர். 1974இல் கைச்சாத்திடப்பட்ட சிறிமா - இந்திரா ஒப்பந்தமும் இந்த நாடுகடத்தலில் பங்காற்றியிருந்தது.
ஏற்கனவே டொனமுர் காலத்தில் நகர்ப்புறங்களில் பணியாற்றியவர்கள் வேலை நீக்கப்பட்டதால் சுயமாக வெளியேறினர். பின்னர் வந்த ஒப்பந்தத்தின் முலம்
66

பலவந்தமாக நாடுகடத்தப்பட்டனர். இந்த இருவகை வெளியேற்றங்களினால் 1940களில் இரண்டாவது பெரிய இனமாக 13 வீதமாக இருந்த இந்திய வம்சாவழியினர் 1981இல் 5.5 வீதமாக மாறினர்.
சுதந்திரம் கிடைத்தவுடனேயே மலையக மக்களின் அரசியல் அடையாளத்தை பறித்த ஆட்சியாளர்கள் 1972இன் பின்னர் மலையக மக்களின் கூட்டிருப்பையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதற்காக மேற்கொண்ட பிரதான நடவடிக்கையே மண் பறிப்பாகும். 1972இல் கொண்டுவரப்பட்ட காணிச்சீர்திருத்தச் சட்டம், 1975 இல் காணி உச்சவரம்புச் சட்டம் என்பன மலையக மக்களை அவர்கள் வளமாக்கிய நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தின. அத்தோட்டங்கள் பெருந்தோட்டத் துறையுடன் எந்தவித தொடர்புமற்ற சிங்கள கிராமவாசிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதற்கு எதிரான போராட்டத்திலேயே டெவன் தோட்டப் போராளி சிவனு லட்சுமணன்
சுட்டுக்கொல்லப்பட்டார்.
இலங்கை இந்தியர் காங்கிரசும் பின்னர் பெயர் மாற்றப்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இக்காலகட்டத்தினை நகர்த்திய முக்கிய அமைப்பாக இருந்தது தொண்டமான் பிரதான தலைவராக விளங்கினார். ஏனைய பல தொழிற்சங்கங்கள் தொழிற்பட்ட போதும் இன அரசியலை நகர்த்திய அமைப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினையே குறிப்பிடலாம். மலையக ஆய்வாளர் காதர் இலங்கை - இந்தியர் காங்கிரசினையே மலையகத்தின் முதலாவது தேசிய இயக்கமாகக் குறிப்பிடுகின்றார். 1947 தேர்தலில் இவ்வமைப்பின் சார்பில் 6 பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
நான்காவது காலகட்டம் 1977 தொடக்கம் 2000 வரையிலான காலகட்டமாகும். இக்காலகட்டத்தில் மலையக மக்களின் நீண்ட போராட்டத்தின் வாயிலாக மலையக மக்களுக்கு அரசியல் பிரதி நிதித்துவம் கிடைத்தது. 1977ம் ஆண்டு தேர்தலில் தொண்டமான் நுவரெலியா - மஸ்கெலியா தொகுதியிலிருந்து முன்றாவது அங்கத்தவராக தெரிவுசெய்யப்பட்டார்.
அதேவேளை இக்காலகட்டத்தில் தான் வட கிழக்கில் தனிநாட்டுப் போராட்டமும் முனைப்புடன் தொழிற்படத் தொடங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு என பிரச்சாரம் செய்து போட்டியிட்டு வடகிழக்கிலுள்ள 19 தமிழ்த்தேர்தல் தொகுதிகளில் 18 இனைக் கைப்பற்றியது. அதேவேளை 1977, 1983 காலங்களில் இரு இன அழிப்புச் சம்பவங்களும் நடைபெற்றன. இதில் வடகிழக்குத் தமிழர்கள் மட்டுமல்ல மலையகத் தமிழர்களும் அழிக்கப்பட்டனர். 1983இன் பின்னர் வட-கிழக்கு பாராளுமன்ற அரசியலுக்கு முதன்மையான இடம் இல்லாமல் போனது விடுதலை இயக்கங்கள் முதன்மையான இடத்தினைப் பெற்றுக் கொண்டன. மலையக இளைஞர்கள் பலரும் இயக்கங்களில் இணைந்துகொண்டனர்.
வட-கிழக்கு நிலைமைகள் மலையகத்திலும் விழிப்புணர்வுகளைக் கொண்டுவரத் தொடங்கின. மலையகம், மலையகத் தமிழர் என்ற எண்ணக்கருக்களும் வளர்ச்சியடையத் தொடங்கின. மலையக விடுதலையை மையமாக வைத்த தீவிரவாத
67

Page 36
இயக்கங்களும் மலையகத்தில் தோன்றின. பாராளுமன்ற அரசியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் போட்டி போடக்கூடியளவிற்கு மலையக மக்கள் முன்னணியும் எழுச்சியடைந்தது. 1978இல் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திற்கான மலையகப் பிரதிநிதிகளையும் அதிகரிக்கச் செய்தது.
மலையக மக்களும் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடச் செய்தமை, வடகிழக்குப் போராட்டத்தில் மலையக இளைஞர்களும் இணைந்து விடுமோ என அஞ்சியமை போன்ற காரணங்களினால் மலையக மக்களின் ஒடுக்குமுறைகளில் சிறிய நெகிழ்வுகளை ஏற்படுத்தின. இதன் காரணமாக நடாற்றவர்களுக்கு பிரஜைவுரிமை வழங்கப்பட்டது. அம்பேகமுவ, நுவரெலியா பிரதேச சபைகள் மலையக மக்களின் தலைமையில் விடப்பட்டன. கிராமசேவகர்கள் ஆசிரியர் உத்தியோகங்கள் வழங்கப்பட்டன. பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகள் மலையக மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் மேலும் தோன்றுவதற்கு காரணங்களாயின. மலையக மக்கள் மேலும் மேலும் தங்கள் கூட்டிருப்பினை ஆதாரப்படுத்துவதற்கான வழிகளைத் தேடத் தொடங்கினர். நுவரெலியா மாவட்டம் மலையக மக்களின் கூட்டிருப்பினை வன்மையாக வெளிப்படுத்தும் மாவட்டமாக வளரத் தொடங்கியது. சிறியாத கல்விக் கல்லூரி மலையக ஆசிரிய உருவாக்கத்திலும் பெரிய பங்கினை ஆற்றத் தொடங்கியது. ஆசிரிய சமுகம் மலையக சமுகத்தில் முக்கிய சமுக சக்தியாக மாறத் தொடங்கியது.
2000 க்குப் பின்னர் மலையக அரசியலின் ஐந்தாவது கட்டம் வருகின்றது. இக்கட்டத்தில் வடகிழக்குப் போராட்டம் இறுதிக்கட்டத்தினை நோக்கி நகரும் தறுவாயில் இருக்கின்றது. முஸ்லிம்கள் தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்தி இனப்பிரச்சினைத் தீர்வின் போது தங்களுக்கான தீர்வினையும் வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால், மலையகத்தைப் பொறுத்தவரை பாராளுமன்ற அரசியற் தலைமைகள் இனப்பிரச்சினைத் தீர்வின் போது மலையக மக்களுக்கான தீர்வினையும் வற்புறுத்தும் நிலையில் இல்லை. விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் அதிகளவு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இரண்டு பிரதான சிங்களக் கட்சிக்கு பின்னாலேயே அவை செல்லப் பார்க்கின்றன. தேர்தலில் வெற்றி பெற்றதும் ஆளும் கட்சி எதுவோ அதில் சேர்ந்துவிடுகின்றன. ஆளும் கட்சி அதிக அக்கறைகாட்டாத போது கூட மந்திரிப்பதவிகளுக்காக ஜனாதிபதி செயலகத்தின் முன் தவம் இருக்கின்றன. ஒரு எதிர்க்கட்சி அரசியலை நடாத்துவதற்கு அவை எதுவும் தயாராக இல்லை. எதிர்க்கட்சி அரசியல் முலம் தான் மக்களின் பிரச்சினைகளை கராறாக முன்வைக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை. வடகிழக்கில் தமிழ்ப் பாராளுமன்றத் தலைமைகள் 50 வருடங்களுக்கு மேலாக எதிர்கட்சி அரசியலை தெளிவாக நடாத்தியிருந்தன. அதுவே தமிழ்த்தேசிய அரசியலை தெளிவாக அடையாளப்படுத்தியதுமல்லாமல் ஆயுதப் போராட்ட அரசியலை நடாத்துவதற்கும் சரியான அடித்தளங்களை உருவாக்கிக் கொடுத்தது. செல்வநாயகம் போன்ற நேர்மையான பாராளுமன்ற அரசியல் தலைவர்களை மலையக அரசியலில் காண முடியவில்லை.
68

மறுபக்கத்தில் இனவாத ஒடுக்குமுறை மலையகத்தில் தற்போது புது வடிவத்தினை எடுக்கத்தொடங்கியுள்ளது. மலையகத்தின் உயிர்மையமாக இருக்கின்ற நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களின் நிலத்தொடர்ச்சியை சிதைக்கும் வகையில் மேல் கொத்மலைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஓர் இன்னோர்வகை மண்பறிப்பாகும். மலையகப் பாராளுமன்ற சக்திகள் ஆரம்பத்தில் இதனை எதிர்த்தாலும் பின்னர் சரணடைந்துவிட்டனர். ஏனைய சக்திகள் தொழிற்சங்க அரசியலில் மட்டும் கவனத்தினைக் குவிக்கின்றன. புதிய ஜனநாயகக் கட்சி மாத்திரம் இதற்கு சற்று விதிவிலக்காக உள்ளது.
இந்நிலையில் தான் பாராளுமன்றம் சாராத அரசியல் முலம் மலையக மக்களின் அபிலாசைகளை வெளிக்கொணர்வதற்கு புதிய இளைஞர் குழாம் முன்னுக்கு வந்திருக்கின்றது. இது வடகிழக்கு அரசியலில் பாராளுமன்றம் சாராத இளைஞர் குழாம் முன்னுக்கு வந்து வரலாற்றை நகர்த்தியதைப் போன்றது. தற்போது இச்சக்தி சிறியதாக இருந்தாலும் எதிர்காலத்தில் வளர்ச்சியடையலாம். புதிய பண்பாட்டு அமைப்பு இச்செயற்பாட்டில் முன்னணியில் நிற்கின்றது. அது நவீன வளர்ச்சியடைந்த தேசியச் சிந்தனைகளோடு மலையக அரசியலைப் பார்க்கின்றது.
அதேவேளை மலையக மக்கள் ஐதாக இருக்கின்ற இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை மாவட்டங்களில் மலையக மக்களின் இருப்புக்கான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. நுவரெலியா மாவட்டத்தை பாதுகாப்பதன் முலமே ஐதாக வாழ்கின்ற மக்களின் இருப்பினைப் பாதுகாக்க முடியும். அல்லது மாற்று நடவடிக்கைகள் எதையாவது எடுக்க முடியும்.
IV
இதுவரை மலையக மக்களின் வரலாற்று வளர்ச்சியைப் பார்த்தோம். இந்த வளர்ச்சிகளுடாக மலையக மக்கள் புதிய கட்டம் ஒன்றுக்கு வந்திருக்கின்றனர். தங்களுக்கான தேசிய அடையாளத்தை வரையறுப்பதும் அதன் வழி தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான மார்க்கங்களை நாடுவதுமே இக்கட்டத்தில் அவர்களுக்கு முன்னால் உள்ள பணிகளாகும்.
இன அரசியல் பொதுவாக முன்று கட்டங்களினூடாக வளர்வதே வழக்கமானதாகும். இன அரசியலை உருவாக்கும் கட்டம், இன அரசியலை தேசிய அரசியலாக வளர்க்கும் கட்டம், அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் கட்டம் என்பனவே அம்முன்று கட்டங்களுமாகும்.
மலையக அரசியல் தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது. ஆனால், இரண்டாவது கட்டம் இன்னமும் பூர்த்தியாக்கப்படவில்லை. நான் ஏற்கனவே கூறியது போல தேசிய அடையாளத்தை வரையறுப்பது இக்கட்டத்தில் முக்கியமானதாகும். தேசிய அடையாளத்திற்கான கோரிக்கைகளை தெளிவாக வரையறுத்து அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் போதே தேசிய அடையாளம் தெளிவாக வரையறுக்கப்படும்.
69

Page 37
இதற்கு பிரதான நிபந்தனை எதிர்க்கட்சி அரசியலை தொடர்ச்சியாக முன்னெடுப்பதே பாராளுமன்ற அரசியற் தலைமைகள் இதற்கு முன்வராவிட்டால் பாராளுமன்றம் சாராத சக்திகள் இதனை முன்னெடுப்பதற்கு முயற்சித்தல் வேண்டும்.
மலையக மக்கள் முதலில் தமது பிரதேசத்தில் மக்களை அறிவூட்டி அரசியல் மயப்படுத்தி ஒரு சக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டும். மலையக மக்களின் வெவ்வேறு பிரிவினராக இருக்கும் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், புலமையாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் ஆகிய ஒவ்வொரு பிரிவினனரும் தங்கள் தங்கள் தளங்களில் நின்று கொண்டு மலையகத்தேசியத்திற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
தேசியத்திற்கான அரசியற் செயற்பாடுகள் என்பவை சிம்பனி இசையைப் போன்றது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் இடங்களில் தமக்குரிய இசைக்கருவிகளை இசைக்கும்போதுதான் சிம்பனி இசை தெளிவாக வரும். அதேபோன்று தேசத்தின் அனைத்து சக்திகளும் செயற்படும் போது தான் தேசியச் செயற்பாடுகுளும் ஒரு சக்தியாக வெளிவரும்.
மலையக மக்களை ஒரு சக்தியாக உருவாக்கிக் கொண்டபின் துணைச் சக்திகளையும் நட்புச்சக்திகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மலையக மக்களுக்கு பிரதான துணைச் சக்தியாக இருக்கப் போகின்றவர்கள் வட-கிழக்கு மக்களே! வடகிழக்கின் புதிய தலைமுறை மலையக மக்களை மிகவும் அக்கறையோடு நோக்குகின்றது. ஒரு தரப்பினுடைய அரசியல் அபிலாசைகளை மற்றயை தரப்பு அங்கீகரித்து பரஸ்பர ஒத்துழைப்பினை நல்குகின்ற நிலையினை உருவாக்குதல் வேண்டும். வட-கிழக்கின் நீட்சியாக இருக்கின்ற புலம்பெயர் மக்கள் மலையக மக்களின் அபிலாசைகளை சர்வதேச மயப்படுத்தும் பணியில் பயனுள்ள பங்கினை ஆற்ற முடியும்.
இரண்டாவது துணைச் சக்தி தமிழக மக்கள். இவர்களுடன் உயிர்த்துடடிப்பான தொடர்புகளை ஏற்படுத்த மலையக தேசிய சக்திகள் முன்வரவேண்டும். ஏற்கனவே நாடுகடத்தப்பட்ட இந்தியாவில் வாழும் மலையக வம்சாவழியினர் இது விடயத்தில் பயனுள்ள பங்கினையாற்ற முடியும்.
முன்றாவது துணைச் சக்தி உலகெங்கும் பரந்து வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் இன்று தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பீஜித் தீவுகள் என பல இடங்களில் இந்திய வசம்சாவழித் தமிழர்கள் வாழ்கின்றனர். இதை விட பல கல்விமான்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வாழ்கின்றனர். அவர்களுடனும் உயிர்த் துடிப்புள்ள தொடர்புகளைப் பேனுவது சர்வதேச மயப்படுத்துவதற்கும் பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
70

இவர்களை சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளும் உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் மலையக மக்களுக்கு நல்ல சக்திகளாக இருப்பர்.
இவ்வாறு பரந்தளவில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போதே மலையக அரசியலை காத்திரமான நிலைக்கு கொண்டுவர முடியும். இவையெல்லாவற்றிற்கும் அடித்தளமாக இருப்பது முதலில் மலையக மக்கள் தங்களைச் சக்தியாக உருவாக்கிக் கொள்வதாகும்.
முடிவுரை
இறுதியாக மலையக அரசியல் தொடர்பாக அடிப்படையான சில கருத்துக்களை நான் முன்வைத்திருக்கின்றேன். தீர்வினை மலையக மக்களே தீர்மானிக்க வேண்டும். ஆனால் இன ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு சமுகம் ஏதாவது ஒரு வகையில் அரச அதிகாரக் கட்டமைப்பில் சமுகமாக பங்குபெறாமல் அச்சமுகத்தின் அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பது பொதுவான உண்மையாகும். அதிகார வடிவங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அச்சமுகங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம்.
மற்றைய சமுகங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஒவ்வொரு சமுகமும் தமக்கான அதிகார வடிவங்களை தீர்மானித்துக்கொள்வதற்கு அவற்றிற்கு மறுக்க முடியாத உரிமை உண்டு.
71

Page 38
புதிய வாசகங்கள்
மேதைகளின் நினைவுக்காய் மேதினியோர் அமைப்பதுபோல பாதையின் ஓரத்தில் படர்ந்திருக்கும் தேயிலையின் வாதங்களின் மத்தியிலே வருடங்கள் நறாக சாதலின் புகழ்பாடும் சாக்காட்டுக் கல்லரைகள்!
தஞ்சையூர் சில்லாக்கள் தாலுகா-கிராமங்கள், கொஞ்சமும் குறைவின்றி குறித்துள்ள கல்லறையிள் தஞ்சுகின்ற அவனுமோர் தோட்டத்து தொழிலாளி எஞ்சியுள்ள எழும்பினையும் இலங்கைக்கே ஈந்த செம்மல்!
கல்லரையில் அவன் தாங்கிக் காலங்கள் போயென - அன்னுமவன் சந்ததிகள் இருப்பதுவும் கல்லரைதான் நல்லவனாய் நாம்நினைத்து நட்டுவைத்த கற்கள்லே இன்றுமுதல் தொறித்திடுவோம் இப்படியோர் வாசகத்தை
"ஊரைவிட்டு வந்தவன்ஊரின்றி வாழ்ந்தவண்ஊருக்கே உழைத்தவண்உருக்குலைந்து போனவன்யாருக்கும் இளைத்தவன்யாவருக்கும் அடியவன்பேருக்கே மனிதனிவன்பீறவிப் பெருங்குருடன் "
கவிமணி கலாஜோதி குமார இராமநாதனின் சாரல் தொகுப்பிலிருந்து
72

நன்றிகள்.
26-07-2006 காலமான எங்கள் தந்தையாரின் மரணச் செய்தி கேட்டு எமது இல்லம் வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் எமது துயரத்திலும் பங்கெடுத்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசி முலமும், கடிதம் முலமும் அனுதாபச் செய்தி அனுப்பியவர்களுக்கும், 29-07-2006 தகனக் கிரிகைகளில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அனைத்து விதத்திலும் எம்மோடிருந்த அல்மா மற்றும் மஹாகுடுகலை தோட்ட மக்களுக்கும் சம்பிரதாய நிகழ்வுகளை நடத்திய சுப்பிரமணியம், ராஜ்குமார் ஆகியோருக்கும், அப்பா இறந்த செய்தி கேட்டு தொலைபேசியில் அனுதாபம் தெரிவித்ததுடன் இவ் நினைவு மலருக்காக தனது ஆக்கத்தையும் தந்துதவிய பேராசியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கும் மேலும் நினைவுமலருக்கான ஆக்கங்களை கொடுத்துதவிய கல்வியியலாளர் தை. தனராஜ், அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் ஆகியோருக்கும் இம் மலரினூடாக தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்ட அல்மாத்தோட்ட மக்கள் உட்பட அனைவருக்கும், மலருக்காக தகவல்களை சேகரித்த போது தெரிந்த தகவல்களை கொடுத்துதவிய அல்மாத் தோட்ட அலுவலக உத்தியோகஸ்தர்கள் எங்கள் தந்தையின் சகோதரிகளான யசோதை, இந்திராணி ஆகியோருக்கும் இம்மலரை வடிவமைத்து வெளிக்கொணர்வதில் பங்களிப்பு செய்த பிரியதர்சினி போல்ராஜ், சுகந்தி மணிமாறன், பாலரமேஷ், நிஷாத், சமந்த ரட்நாயக்க, செல்வகுமார் ஆகியோருக்கும் நினைவு மலரை அச்சிட்டு உதவிய பிரிண்ட் கெயார் நிறுவனத்துக்கும் இங்கு பெயர் குறிப்பிடாத ஆனால் மரணச் செய்தி கேட்ட நிமிடம் முதல் இன்று வரை அனைத்து வழிகளிலும் உதவிய அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றிகள்.
குடும்பத்தார்
24-08-2006
சீட்டன் இல்லம், சீட்டன் பிரிவு இல. 06, மஹாகுடுகல குடியிருப்பு அல்மாத் தோட்டம் ஆள்கரனோயா கந்தப்பளை
73

Page 39


Page 40

விடுகளில்
 ாை ருக்கும் இங்கு தீர் 1லைாருக்கும் விடுதலை
ா ரோடு குறவருக்கும் மரவ நுக்கும் விடுதலை
திறமை கொண்டதினாற் தொழில் பரிந்தாரு
சேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த 矿、
ாழை ரென்றும் அாைரென்றும்
וההשתחנה והוהות6N חווה, והיה