கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் மயிலங்கூடல் அருள்மிகு ஞானவயிரவசுவாமி அருள்விருத்தம்

Page 1
மகாகும்பாபிஷே 2005,
 

Paus RIJE || 53
வையிரவசுவாமி
விருத்தம்
வெளியீடு O3.3O

Page 2


Page 3

சிவம்யம் யாழ். மயிலங்கூடல் அருள்மிகுஞானவயிரவசுவாமி
அருள்விருத்தம்
கலாபூஷணம்,பண்டிதர் சி. அப்புத்துரை
மகாகும் பாபிஷேக தினவெளியீடு 2005, 03.30

Page 4
ஆசிரியர்
உரிமை
முதற்பதிப்பு
அச்சுப்பதிப்பு :
நூல் பற்றிய தரவு
: யாழி, மயிலங்கூடல
அருள்மிகு ஞானவயிரவசுவாமி அருள் விருத்தம்
: கலாபூஷணம் பணர்டிதர் சி. அப்புத்துரை
: ஆசிரியருக்கு
: 2005 lost fai
கதா பதிப்பகம் கொழும்பு-13

2. சிவமயம்
குருபாதம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் மலேறி சோமசுந்தர ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள் வழங்கிய அருளாசிச் செய்தி
யாழ். மயிலங்கூடல் அருள்மிகு ஞான வயிரவ சுவாமி மீது கொண்ட இறுக்கமான பற்றுக் காரணமாக அவரு டனாகி வாழும் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் தம் உள்ளத்துணர்வைப் புலப்படுத்திப் பாடிய நூல்தான் மயிலங்கூடல் அருள்மிகு வயிரவசுவாமி அருள் விருத்தம் என்பது. வயிரவப் பெருமானை அவர் எவ்வளவு உறுதி யாகப் பற்றுகின்றார் என்பதைப் பாவடிகள் அழுத்திக் காட்டுகின்றன. அத்துடன் வரலாற்றுச் செய்திகளையும் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். கல்விசார் மாணவர்களுக்கு இது பெரும்பயன் தரவல்லது. ஆலய வரலாறு திருவூஞ்சல் என்பனவும் இடம் பெற்றுள்ளமை பாராட்டிற்குரியது. மகாகும்பாபிஷேக தின வெளியீடாக இது வருவது மேலும் பெருமகிழ்விற்குரியது.
பண்டிதர் அவர்கள் சுகத்துடன் வாழ வேண்டும்.
பல்லாண்டு வாழ வேண்டும். பயன்தரு நூல்கள் பல இன்னமும் வெளியிட முயற்சிக்க வேண்டும். வயிரவப் பெருமான் திருவருள் என்றும் அவருடனாக வேண்டும். எனப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.
‘ என்றும் வேண்டும் இன்ப அன்பு 2005.02.05 மரீலறி சுவாமிகள்
II

Page 5
Фசிவமயம்
வெளியீட்டுரை
வயிரவ சுவாமி எங்கள் முழுமுதற் கடவுள். எங்கள் மனம் நிறைதெய்வம். நாம் எங்கு சென்று வாழ்ந்தாலும் எம்முடனாகி எமக்கருள்பவர் அவர். போர்க்காலச் சூழ் நிலை காரணமாகக் கொழும்பில் நாம் வாழ்ந்து கொண்டி ருந்தாலும் எங்கள் சிந்தனையுடனாகி அவர் எம்மை வாழ்வித்துக்கொண்டே இருக்கின்றார். அவர் நினைவு எம்மை உற்சாகப்படுத்தியமை காரணமாகத் தோன்றியது தான் இந்த அருள் விருத்தம். அதனை எம் பெருமான் திருவடிகளிலேயே சமர்ப்பிக்கின்றேன்.
இந்த மயிலங்கூடல் அருள்மிகு ஞானவயிரவ சுவாமி அருள் விருத்தம் என்னும் நூலை ஆலய நான்காவது என்று நினையக்கூடிய கும்பாபிஷேக நாளில் வெளியிட்டு வைப்பதில் பெருமகிழ்வடைகின்றோம்.
இதற்கானதொரு அருளாசிச் செய்தியை நல்லை திரு ஞானசம்பந்தர் ஆதீன இரண்டாவது குருமகா சந்நிதானம் ரீலழரீ சோமசுந்தரஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் வழங்கிக் கெளரவித்துள்ளார்கள்.
இதனை அழகுற அச்சிட்டு உதவியவர்கள் கொழும்பு கீதா பதிப்பகத்தினர்.
இவர்கள் எல்லோர்க்கும் எம்பெருமான் திருவருள் கிடைப்பதாக. எல்லோரையும் நன்றியுடன் நினைகின்றேன்.
சி. அப்புத்துரை கொழும்பில்:
மயிலங் கூடல். х қ 18/1, 9th Lane,
இளவாலை, wasala Road,
Te: 234 1083 Colombo. 13.
V

சிவமயம்
யாழ். மயிலங்கூடல் அருள்மிகு ஞானவயிரவசுவாமி
அருள்விருத்தம்
காப்பு மலர்மகள் மகிழ்ந்து வைகும்
மகிதலம் மயிலங் கூடற் குலவிடும் வயிர வர்தம்
கோநிலை புகலும் மாலை சொலவுனைத் தொழுது நின்றேன் சுமுகனே காப்பாய் மேலாம் அலகிடற் கரிதா மூற்றம்
அருளிநீ அணைந்து நிற்பாய்.
I6)
திருநிறை மயிலங் கூடற்
றிகழுமோர் கோயி லாங்கண் பெருமையோ டுறைந்த சித்த
பெருநிதி யெனவே நின்றாய்
கருமமே திருவாய் நாமுங்
கருத்துட னிருந்தோ மெங்கள்
பருவரல் கெடுத்துப் பண்பார்
பதத்தினை அருள்வாய் காப்பாய். l.
அருஞ சொற் பொருளடைவு: காப்பு: குலவுதல் - சஞ்சரித்தவர். கமுகன் - விநாயகன். ஊற்றம் - ஆற்றல. 1. சித்தனர் - வயிரவர். பருவரல் - துன்பம்,

Page 6
நகுலைநா யகிச மேத
நகுலையி லுறையு மெந்தை தொகுமடி யவர் தந் துன்பம்
துடைத்திடு மரிய செய்தி மிகுகளிப் பளிக்கத் தூய்மை
மிகவுயர் முனிவர் சார்ந்த நகுலமா மலையின் சாரல்
நயந்துறை யரசே யாள்வாய்.
நகுலமா முனிவன் சார்ந்து
நலந்தரு தவமி யற்றித் தகுமுறை யருளைப் பெற்றுத்
தவத்துரு வாகி நின்றான் பகுதியாம் மயிலங் கூடல்
வயிரவ அணைப்பாய் காப்பாய் மிகுநிலா விழையோம் துன்பம்
விலக்குவ ததுவே போதும்.
மாவையின் பகுதி யாகும்
மாண்பினால் மயிலங் கூடற் பாவையர் இளைய ரேத்தும்
வைரவ இறையே ஏற்பாய் தேவையை நிறைவித் துன்தன்
தெய்வீகத் துறைய வைப்பாய் நாவையுன் புகழிற் றோய்த்து
நைந்தனம் வழுத்தி நின்றோம்.
2. துடைத்திடும் - இல்லாமற் செய்யும்.

விமலனே வினையை வீட்டி
விலக்குவை விரைவில் வேத ஞமலிமீ துலவுஞ் சேத்ர
ஞானபா லகனே வையத் தமலநீ யணைத்தே அன்பர்
ஆணவம் அழிப்பாய் ஆளும் நிமலனே மயிலங் கூடல்
நேர்ந்துறை நியாம நீதி. 5.
சுணங்கனி லமர்ந்தாய் ஞான
சுகந்தரு சிவமே நாளும் வணங்கினம் வழுத்தி நின்றோம்
வரமருள் மயிலங் கூடல் அணங்கினர்க் கருளல் வேண்டும்
அணைந்தவர்க் கினியை நின்தன் கணங்களுக் கருளும் பிச்சைக்
கபாலமு மியைந்தாய் கண்டோம். 6.
திகம்பர வடிவு கொண்டு
திசையெலாங் கரந்து நிற்கும் சிதம்பரத் துறைவோன் போற்றுந்
திருவுரு வுடைய சேயே இகம்பரம் இரண்டும் வேண்டி
இசைத்தனம் தமிழை அன்பாய்த் திகம்பர மயிலங் கூடற்
றிலகமே திருவே தேர்ந்தோம். 7.
விட்டி-இல்லாமற் செய்து. ஞமலி - நாய், சேத்திரம் - வயல். ஞானபாலகன் - ஞானக் குழந்தை. நரியாம - சிவனர். சுணங்கனர் . நாய். கபாலம் - பிரமணி தலை ஒடு.
தரிகம பரவடிவு-இருள வடிவு. கரந்து-மறைந்து.தரிகம் பரன-சிவன 3

Page 7
தாயினுந் தயவு காட்டுந்
தயாநிதி மயிலங் கூடற் சேயெமைக் கருத்தில்
வைத்த செவ்வழல் வடிவே வாராயப் பாயிருள் அகற்றி யென்றன்
பரிமளம் பரிந்தே பேணி நாயினும் நாயேன் றன்னை
நயந்துநீ அணைப்பாய் நல்லோய். 8.
அயன் தலைக் கபால மேந்தும்
அரியதா மிடது கையாற் பயன்விளை பரமன் சூலம்
பரிந்தினி தணைத்தாய் பற்றித் தயங்கிடு தமரு கத்தைத்
தரித்தவுன் வலக்கை சேர்த்து மயங்கவை மயிலங் கூடல்
மகேசுர போற்று கின்றேன். 9.
கூடலில் உறையுங் கோவே
குழகனே குமர நேர்ந்த தேடலின் திருவாய் எம்மைத்
திளைக்கவைத் தருள்வாய் தேர்ந்த பாடலின் பயனே யார்க்கும்
பயனுடை உருவே என்றும் ஆடலை உவந்தாய் ஐய
அமிர்தம தனையாய் ஆர்ந்தோம். 10.
8. தயவு - அன்பு தயாநிதி - அருட்செல்வம், பரிமளம் - மகிழ்ச்சி 9. தமருகம் - உடுக்கு. மயங்க - பரவசமடைய,
குழகன் - இளையோன்.குமரன் - வயிரவர்திளைத்தல் - அனுபவித்தல்,
4

வெண் டலை மாலை கூடி
வெறிநிலை பகர்ந்தாய் கையில் தண்டலைச் சூலந் தாங்கித்
தமியரைப் புரந்தாய் கூடல் மண் டலை வைத்தே யுன்னை
மனத்தினிற் பதித்தோ மென்று கொண்டலை யாது காத்தி
குருபர குலைந்தோங் கொள்வாய். 11.
கஞ்சுக மணிந்தாய் காந்துங்
காரிருள் கலித்தல் கண்டோம் விஞ்சியோர்த் தடுத்தாட் கொண்டு
விழவயர் விபுவே வெம்பும் பிஞ்சுளத் தடியன் செய்த
பிழைபொறுத் தணைப்பாய் பின்னும் கெஞ்சினன் மயிலங் கூடற்
கிளரொளி கிலியை நீப்பாய். 12.
கண்ணுதற் கடவுள் மைந்த
காரிருட் சிவப்பு வண்ண எண்ணிடற் கரியை மாறாய்
எழுதிடற் கெளியை ஈங்கு மண்ணினில் மயிலங் கூடல்
மகிமைசேர் மருந்தாய் வந்தாய் பெண்ணிட மமர்ந்த பித்தர்
பிறிதொரு வடிவும் ஆனாய். 13.
// தமியர் - வறியர்.
72. கருத்சுகம் - சட்டை, காந்தும் - மனம்வேகும். கலித்தல் - மிகுதல்.
வி/ ஞானி கிலி - பயம்
I, ரிததர். சிவன.

Page 8
சித்தநேர் மகிழ்வு பொங்கச்
சிவன் வயி ரவரென் றாய சத்திய நிகழ்வைத் தந்தார்
தவமுனி சேக்கி ழார்தாம் மெத்தவு முயரி தான
மேதகு மடியர் நூலில் அத்தனே அவனாம் என்றார்
அணைந்தடி பணிந்து நின்றோம். 14.
சிற்பர வடிவே சீர்சால்
சின்மயக் குருவே எங்கள் தற்பரண் மயிலங் கூடல்
தயாநிதி யனையாய் சாமி அற்புத அமுதே ஆரும்
அமிர்தினின் சுவையே தேரும் நற்றவ நறவே யார்க்கும்
நலஞ்செயுந் துணையே ஏற்பாய். i).
வெற்றியின் விளைவே வேண்டி
விழைவதை அருள் வாய் தூய விற்பொலி வெதிருஞ் சூல
வித்தக விபுவே வெய்ய வெற்றரைப் பிளையே யன்பாய்
விருந்தெனை யணைப்பாய் தேர்ந்த கற்றவர் வதியும் கூடற்
கனகமா மணியே காப்பாய். 16.
14. அத்தனர். கடவுள். அடியர்நூ7ல - திருத்தொணர்டர் புராணம்.
15. சிற்பரம் - பிரமம். சின்மயம் - அறிவுமயம், தற்பரன் - கடவுள்,
தயாநிதி - கிருபைக்குவை,
16. விலர் - பிரகாசம், வெற்றரைப்பிள்ளை - வயிரவர்,
6

கரிதனைக் கருவம் போக்கிக்
காத்தருள் கருத்தால் நீயும் உரிதனை உவந்தே யேற்று
உன்னதென் றணிந்தாய் பின்னர் நரிகளைப் பரிக ளாக்கி
நடத்தினை நயந்து நின்றோம் அரிதது மயிலங் கூடல்
அரசனே போற்று கின்றோம். 17.
இரணியற் படுத்த தாலே
ஏமுறு வரியின் தோலை உரங்கெடுத் துருவிச் சட்டை
உருவினி லணிந்து நின்றாய் கரந்தனிற் குருதிப் பிச்சைக்
கபாலம துடைய னாய்நில் பரம்பொருள் மயிலங் கூடற்
பண்ணவ வழுத்தி னோமே. 18.
பரமனை மதித்தி டாத
பங்கயத் தயன்த லுச்சிச் சிரமரி பணியின் தோற்றச்
சித்தனெம் மயிலங் கூடல் வரவினால் வாழ்ந்தோம் வையை
வரம்பினை யடைந்தோ னுள்ளத் துரம்மலி யொருவ னென்கை
ஒர்ந்தனம் உணர்ந்தோம் வாழி. 19.
17. கரி - கயமுகாசுரன். உரி - தோலி, பரி - குதிரை. 18. துமுறல் - கர்வங்கொளல. பணணவன் - கடவுள். ! 9. சித்தன - வயிரவர்.

Page 9
சிவனுளத் திருந்து மூன்று
செப்பிய முறைமை தோன்றித் தவறிழைத் தகந்தைக் காளாய்த்
தங்கியோர்த் தடிந்தாட் கொண்ட தவநிதி ஞாளி யூர்தி
தனிமுதல் தோற்றம் ஒன்றே பவமறுத் திடுவை கூடற்
பரமனே பலிதேர் மூர்த்தி. 20.
வயிரவர் ஒருவ ரேதான்
வருமுறை மூன்றா மென்க உயிர்க்குயி ரெனுமு தல்வன்
ஒருவனே குமரன் பாலன் கயமுகன் முதலோ ரென்றுங்
கருதினம் மயிலங் கூடற் பயிலுமெம் வைர வன்தாள்
பணிந்தனம் பரவி நின்றோம். 21.
மங்கல வாரம் சுக்ர
மகிமைநேர் வாரம் சேர்ந்து பங்கயன் சிரம ரிந்த
பரமனுக் குவப்பாங் காண்பீர் திங்களில் வருடத் தோற்றம்
சிறந்தஐப் பசியில் வந்த அந்தநாள் பரணி யாமே
அரன்மகற் கருமை யாகும். 22.
20. தடிந்து குறைத்து. ஞாளி. நாய், பவம் - பிறவித்துன்பம். 22. மங்கல வாரம் - செவி வாய். சுக்கிரவாரம் - வெள்ளி.
பங்கயனர்- பிரமணி. திங்களில் வருடத் தோற்றம் - சித்திரை,
8

ஆவணி யணிசேர் மாத
ரோகிணிக் குடமு முக்குத் தேவருந் துதிசெய் தார்ப்பத்
திகழ்ந்தது முதன்மைத் தாகிப் பாவலர் இசைவல் லாளர்
பல்லியத் திறமை பூண்டோர் ஏவரு மிசைத்து நிற்ப
இயைபொடேற் றிருந்தாய் வாழி. 23.
சித்திரை மிருக சீர்டச்
சிறந்தநாட் குடமு முக்கோ இத்தலத் திரண்டென் றாய
இடத்ததாய் மயிலங்கூடல் உத்தமத் திருவுக் காக்கி
உயர்வினிற் களித்தோம் உய்ந்தோம் சித்தமு மவன தாகும்
திருவினாற் சிறந்தோந் தேர்க. 24.
இயற்கையின் அழகு மண்டி
ஈர்ந்திடும் மயிலங் கூடற் செயற்கையின் திறமோ நன்றாய்ச் செழித்திடு சிறப்புக் காட்டும் கயற்கணார் தொகுத்த காந்தட்
கரங்களைத் தலையில் வைத்துச் செயற்றிறன் இழந்து நிற்பர்
சிவபுரஞ் சேர்த்து வைப்பாய். 25.
... குடமுழுக்கு- கும் பாபிஷேகம். பல லியம். பலவாத்தியம். 23. மனர்டி - நிறைந்து.

Page 10
ஓங்கிய தருக்க ளெல்லாம்
உன்னெழில் உணர்த்தித் தாழும் தேங்கிய குயிலின் கீதத்
துன்னிசை ஒலித்து நீடும் வீங்கிய முலைகள் பாலை
வேண்டியாங் களித்து நிற்கும் பாங்கியை மயிலங் கூடற்
பரமனே பணிந்து நின்றோம். 26.
ஓங்கிய பிரண வத்தின்
ஒலிதிகள் சினக ரத்துப் பாங்குயர் மடத்து முன்றில்
பளிச்சிடும் பாலர் தோற்றம் மாங்குயில் இசையிற் காணும்
மங்கல ஒலியின் தோற்றம் ஈங்கெமக் கிறையைச் சிந்தை
இயைவித்த ஏத்தி நின்றோம். 27.
வானுயர் மயிலங் கூடல்
வண்டமிழ்ப் புலவோர் கூடித்
தேனினு மினிதே யான
தீந்தமிழ்க் கவிதை யாத்து
ஊனினு முயர்ந்த தூய
உயிரினுக் குயிரா மெங்கள்
பானுவாம் வயிர வர் முன்
படைத்திட விழைந்தார் கேளிர். 28.
26. தருக்கள். மரங்கள், பாங்கியை. பாங்கு + இயை. 27. சினகரம். கோயில். 28. பானு. கதிரவன்.
10

முக்கனி சருக்க ரைதேன்
முளிதயிர் பால் நெய் சேர்த்துப் பக்குவ மாய்ப்பி சைந்து
பல்சுவைப் பஞ்சா மிர்தம் இக்கெணெய் இளநீர் சாந்து
இனியபால் தயிர்நெய் தேன்நீர் மிக்குள பன்னி ரானும்
மஞ்சன மயர்வை மேலோய். 29.
அன்பினா லுருகி நிற்கும்
அடியரைப் புரப்பாய் தேர்ந்தோம என்பினை யெனினும் வேண்டின்
இறுத்திட விழைந்தேன் என்றும் உன்பினன் மயிலங் கூடல்
ஒருவனே உவப்போ டெந்தன் துன்பினை அகற்றத் தூய
துணையடி யளியை நேர்ந்தேன் 30.
கவிதையின் உருவே தூய
காவியச் சுவையே நல்ல கவிதையின் பொருளே தேருங்
காட்சியின் தெளிவே வாய்ந்த கவிதையின் வளமே கண்ணிற்
காண்பவர் உயிர்ப்பே தேனாங் கவிதையின் இசையாய்க் கூர்ந்து
கருதுவோர்க் கினியை ஆவாய். 3.
29. முளிதயிர்- முற்றியதயிர். இக்கெணெய். இக்கு + எணர்ணெய்.
இக்கு - கரும்பு, 10. அளியை அனர் பை.
11

Page 11
அசைத்திடு வளியே மேலை
அண்ட(ம்)வான் வன்னி சார்ந்தே இசைத்திடு புவியே ஏற்ற
இனியநற் புனலே ஏற்ப வசைத்திடு புலனே ஏதோர்
வடிவிலா வணுவே வேண்டி மிசைத்தமர் மயிலங் கூடல்
மெய்ப்பொருள் வரித்த ணைப்பாய், 32.
தத்துவப் பொருளே நேரில்
தனிப்பெருந் தலைவ னாகி இத்தரை வந்த எங்கள்
எதிரிலா நிதியே தூய பத்தரை மாற்றுப் பொன்னே
பணிநில வொளியே யூன்றி முத்திரை பொறித்தாய் கூடல்
முழுநில வொளியே வாராய். 33.
வெண்ணில வொளிரும் வேளை
வெங்கதிர் சுடரும் வேளை எண்ணிலா மரங்க ளெல்லாம்
இன் மலர் சொரியும் வேளை மண்ணினில் மயிலங் கூடல்
மக்கள துள்ளம் பொங்கும் கண்ணினில் மணியாம் நாதன்
கழலிணை தொழுவர் கண்டே. 34.
32. வளி - காற்று வன்னி - நெருப்பு புனல் - நீர் மிசைதல் - அநுபவித்தல் 33. எதிரிலா நிதி - ஒப்பில்லாத செல்வம் பணிநிலவு குளிர்ந்த நிலவு
12

செந்தளிர் புரையும் மேனிச்
செம்மலே சிவமே உன்னைப் பைந்தளிர் கொண்டே நாளும்
பரவினோம் பரமா வேண்டும் அந்தளிர் பறித்தர்ச் சித்தோம்
ஐயனே மயிலங் கூடல் இந்தனங் கமழும் கோயில்
இறைவனே அருளல் வேண்டும். 35.
முச்சுடர்த் தமிழே மூவா
முதுதமிழ்ச் சுவையே மூத்த இச்சகத் திசையே ஈரும்
இசையினுண் அசைவே ஏய்ந்த கச்சப நிதியே காலக்
கருத்தினுண் கருவே காப்பாய் மெச்சியே மயிலங் கூடல்
மிசைத்தமர் தலைவ னாம்நீ. 36.
கண்ணினுண் மணியாய்க் காந்தக்
கருமணி விழியாய் ஆழ்ந்திங் கெண்ணிடு மெண்ணத் துள்ளே
இருந்திடு முயிர்ப்பாய் ஒன்றும் பண்ணியை பாட்டாய்ப் பக்திப்
பாட்டினுண் பொருளாய் வந்த மண்ணினிற் கூடல் வாழ்வே
மதித்தருள் மணாள நல்கே. 37.
3. புரைதல் - ஒத்தல். இந்தனம் - நறும் புகை.
6, சகம் - உலகம் கச்சபம் - நவநிதிகளுள் ஒன்று ஆமை வடிவினது.
மிசைத்து - உயர்வுடனாகி
97, பாட்டினுணர் - பாட்டினர் + நுணர்.
13

Page 12
கண்டெனச் சுவைப்பாய் போற்றுங்
கரும்பென இனிப்பாய் தீர அண்டினர்க் கெளியாய் ஆர
ஆறுதல் அளிப்பாய் வேண்டி மண்ணினர் மயிலங் கூடல்
மாதுயர் துடைப்பாய் சூழுந் தெண் திரைக் கடல ணைந்த
தெய்வமே தெருட்டி யேற்பாய். 38.
மனதுறை மயிலங் கூடல்
மக்கள்மா துயர்து டைத்துக்
கனவினில் வந்து நாளும்
காட்சிகள் தந்து நீழும்
நினைவினில் நிற்பை சூலம்
நேர்ந்தகை அபயம் நல்கும்
அனல்நிகர் சடையாய் ஆரும்
அமிர்தமே அணைத்த ருள்வாய். 39.
நெஞ்சுறை மயிலங் கூடல்
நிமலனே யருள்வாய் நேர்ந்த வஞ்சகர்க் கரியாய் வேண்டும்
வழித்துணை யாவாய் வாழ்த்திக் கெஞ்சினர்க் காப்பாய் கேண்மை கெழுதகை யன்ப நைந்தே அஞ்சினர்க் கபயம் நல்கும்
அண்ணலே போற்று கின்றோம். 40.
38. கணிடு - கற்கணர்டு. 39. அபயம் - அடைக்கலம் 40. கெழுதகை - உரிமை. கேணிமை - உறவு.
14

துட்டரை அழிப்பாய் தூர்ப்பாய்
தூயரைக் காப்பாய் மேலாம் மட்டிலா வருளாய் மண்ணில்
மறுபிறப் பறுப்பாய் தேர்ந்து பட்டுறை மயிலங் கூடற்
பதியுறை பரம மூர்த்தி விட்டிடா தெம்மை யேற்று
வீட்டுல களிப்பாய் நேர்ந்தோம். 4.
குங்கும நிறத்தாய் கோதிற்
கூரிருள் உவப்பாய் சால நுங்கிரு ளகற்றுந் தூய
நுவலரும் வரவே ஏய்ந்த மங்கலம் மகிழ்வாய் சுற்று
மாதிரம் புரப்பாய் துன்றிப் பங்கமில் மயிலங் கூடற்
பயின்றனை பரிந்தேற் பாயே. 42.
தூங்கிரு ளகற்றுங் கூடற்
சோதியே சுடரே உன்தன் பூங்கரத் தொளிருஞ் சூலம்
புன்மைகள் தீய்க்கும் நீண்டு ஓங்கிய உருவத் தொன்றி
உவர்ப்பன ஒடுங்கும் என்றும் நீங்கிடா தெம்மு ளத்து
நிறைந்தவ நினைய வைப்பாய். 43.
1. நேர்ந்தோம் - வேணர்டினோம். 42. கோது-குற்றம். கூரிருள்-திணிந்த இருள்.நுங்குதல்-ஆரநிறைதல்.
நுவலரும். சொல்லுதற்கரிய ஏய்ந்த ஒத்த மாதிரம்- திசை, 43. புணர்மை- இழிதகவு. தயக்கும்- அழிக்கும்.
15

Page 13
நைபவர்க் கருள் வாய் கூரும்
ஞானநா யகனே ஆரும் மைநிற வழகா விஞ்சும்
மாரியாய் அருள் வாய் மாண்ட பையனாம் மயிலங் கூடற்
பாலரைப் பரிந்தே ஏற்பாய் தையலர் சார்பி லாதாய்
தயாவினாய் அருளல் வேண்டும். 44.
மேற்றிசை வடக்குத் தெற்கு மேதகு கிழக்கு என்று நாற்றிசை மருங்கும் காக்கும்
நாதன கோயில் ஆங்கே போற்றியென் றனையும் நேயர்
புனிதரா குவது கண்டோம் மாற்றுயர் மயிலங் கூடல்
மன்னவ எமையு மாள் வாய். 45.
வெண்ணிலா வெறித்தற் காக
விரிகதிர்ப் பரிதி யானாய் தெண்ணிலா வொளிய தாகுந்
திருவருட் டுணையே தேர்ந்தோம் கண்ணிலாக் குழவி போன்று
கருத்திலா திருந்தோ மந்தோ நண்ணினை மயிலங் கூடல்
நற்றவ நலஞ்செய் வாயே. 46.
44. நைபவர். நொசித்தவர். விஞ்சும்- மேலதிகமாகும்.
பையனாம். பையல் + நாம். தயா- கிருபை, 46. குழவி. குழந்தை.
16

ஆர்த்திடு கங்கை நீங்கா
தரற்றிடு வாரி ஒன்றிப் பார்த்திடு விழியே யெங்கும்
பரந்துள பொருளே நல்ல கூர்த்தமெய் யுணர்வே கொண்டு
குறித்தெமை யணைப்பாய் கோல நேர்த்தியாய் மயிலங் கூடல்
நிறைந்தவ நினையே நேர்ந்தோம். 47.
கிள்ளையின் மொழியே குஞ்சு
கீச்சிடு மொலியே தேனாம் கள்ளைநேர் குயிலின் கூவற்
கனிவினிற் கண்டோ முன்னைப் பிள்ளையின் மழலை பூவைப்
பேச்சினில் உறைவாய் மண்டுங் கொள்ளைகொள் மயிலங் கூடற்
கோமள குறுகி நின்றோம். 48.
இராஜியின் மைந்த னாகும்
இமையவர்க் கிறையே தூண்டும் இராசிநேர் தாக்க மெல்லாம்
இமைப்பினில் துடைப்பாய் கூரும் இராவணத் தேவே யென்றும்
இனிமையே செய்வாய் மேலாம் பராபர மயிலங் கூடற்
பனிமதிச் சடையாய் ஏற்பாய். 49.
/7 வாரி-கடல், கூர்த்த மெய்யுணர்வே-நுண்ணிய உணர்மை உணர்வு.
48. கள். தேன். குறுகி. அனைந்து பூவை- நாகணவாய்ப் பறவை.
கோமளம். இளமைச்செவிவி
49. இராஜி-பார்வதி.இராசி-கிரகநிலை. இராவணம்-இரவு வணிணம், கறுப்பு
17

Page 14
கன்னலைத் தேனைப் பாகைக்
கணியினை நிகர்ப்பை நீயே இன்னலைத் துடைத்தே யேற்ப
தியைவிப்பை எழிலே என்றும் மின்னலாய் விரைந்து பாய்ந்து
மிகுதுயர் களைவை மெய்யாம் என்னிலை மயிலங் கூடல்
இறைவரீ உணர்ந்த ணைப்பாய். 50.
கற்சிலை சுணங்க ணுார்திக்
கடவுளே என்றாற் பேசும் பொற்சிலை அருள்சு ரக்கும்
பொழிந்திடு கண்ணிர் போக்கும் வெற்றிலை பழங்கள் வைத்து
வேதனை சொல்லும் வேளை பற்றுவை மயிலங் கூடற்
பண்ணவ பரிந்தே பாராய். 51.
வெம்பிணி களைவாய் வெய்ய
வேதனை தவிர்ப்பாய் விட்ட அம்பினிற் பட்ட புள்போல்
அலந்தனம் அமைதி காணோம் எம்மிறை மயிலங் கூடல்
ஏந்தலே யணைப்பாய் காப்பாய் எம்மிடர் தவிர்க்க வேண்டி
எழுந்தருள் எவர்க்குந் தேவே. 52.
50. கனர்னல். கரும்பு. பாகு- வெல்லப்பாகு. இன்னல்- துன்பம். 51. பணர்ணவன். கடவுள். 32. அலந்தனம்- வேதனைப்பட்டோம்.
18

பற்றினைத் துடைக்க வுன்றன்
பற்றினைப் பற்றி நின்றேன மற்றிலை; தெய்வ மொன்றே;
மதித்தனன் வணங்கு கின்றேன் பொற்றிரட் பிரபை காலும்
புனிதமார் கழல்கள் பற்றி நிற்பதைத் தவிர வேறு
நிலையிலை நினைவே நீதான். 53.
காலனை உதைத்துக் கால
காலனென் றமர்ந்தாய் செந்தில் வேலனை யளித்துச் சூரின்
வேரினைத் துடைத்தாய் காழிப் பாலனை அழுகை போக்கிப்
பைந்தமிழ் பெறவும் வைத்தாய் சேலனை விழியர்க் கூடற்
சேய்சிவ அருளு வாயே. 54.
கல்வியில் மனிதர் நல்லர்
கருத்தொடு வணங்க நீள்வ தில்லையா முலகி லெங்கள்
இருப்பினை உணர்ந்தோம் வல்ல சொல்லினா லன்றித் தூய
அன்பினைக் கொட்டி நாளும் தொல்லைகள் தவிர்க்க வேண்டித்
தொழுதனந் தொழும்பி னின்றோம். 55.
சி. பிரபை, ஒளி.
34. காலகாலன்- இயமனுக்கு இயமன். குர் - அச்சம்
துடைத்தாய - இல்லாமற் செய்தாய்.
13 கலவியில் - கல்வி இல்லாத. தொழும்பு- தொணர்டு.
19

Page 15
கூற்றுவன் சீற்றம் போலாம்
கொடுவினைக் கஞ்சேன் தீர மாற்றெதி ரிலாத வெய்ய
மமதையை மதிக்க மாட்டேன் நீற்றினை யணிந்த குய்ய
நினைவினர் நிழலும் பாரேன் போற்றினன் மயிலங் கூடற்
புனிதன்தாள் புகல டைந்தேன். 56.
அன்பினை வழியாக் கொண்டு
அணைந்தகண் ணப்பன் நாளும் துன்பகல் பூசை செய்து
தொடர்ந்தவெம் ஒளவை ஒன்றி இன்பமார் துறையில் தோழன்
ஏய்ந்தசுந் தரனென் றார என்வழி தெளிந்தி லேன்யான்
இறைவறி யணைத்த ருள்வாய். 57.
முடியினைக் காண வேண்டி
முடுகிய பிரமற் சார்ந்து அடியினைக் காணப் பூமி
யகழ்ந்திடு மரியாந் தேவர் வடிவினைக் காண வொட்டா
வண்ணமாய் நின்றாய் நீண்டு நெடிதுறை மயிலங் கூடல்
நீதியே நின்தாள் வேண்டும். 58.
36. மமதை. ஆணவம். குய்யம். வஞ்சனை. புகல்
அடைக்கலம்.
20

அகல்விளக் காகி நின்ற
அற்புதத் திருவே ஆழ்த்தும் இகல்கடிந் துடனாய் எம்மை ஏற்றதிம் இறைவ ஈங்கு புகல்வதற் கெதுவு மில்லை
பொருந்துமா றருள்வை போதும் நகலிலை மயிலங் கூடல்
நம்பியே நைந்த ணைப்பாய். 59.
விண்ணவர்க் கிறையே யார்க்கும்
வேண்டுவ தருள்வோய் இந்த மண்ணினில் மயிலங் கூடல்
மதித்துறை திருவே ஆழ எண்ணுநர்க் கெளியை வேண்டு
மேற்றமு மளிப்பாய் எங்கள் கண்ணுதற் கடவுள் தந்த
கருணைவா ருதியே காப்பாய். 60.
சந்திரன் சாபம் போக்கித்
தலையினி லணிந்தாய் தேர்ந்தேள்ம். இந்திரன் தவறு நோக்கி
எண்ணில கண்ண ஸ்ரித்தாய் சுந்தரன் தோழ மைக்காய்த்
துணிந்திருட் டுது போனாய் இந்தவா றெனையு மாள்வாய்
இயவுனி இரந்தேன் ஏற்பாய். 61.
9. இகல்- பகை, நகல்- பிரதி. /0. வாருதி. கடல. ( 1. இயவுள்- கடவுள்.
21

Page 16
கங்கையைச் சடையில் வைத்துக்
கடுவிடங் கண்டத் தேற்றுத் திங்களை முடியிற் சேர்த்துத்
தீந்தமிழ் மொழியை ஆய்ந்து மங்கைநே ரிலாதாள் வந்தி
மனையுதிர் பிட்ட ருந்தித் தங்கினை மயிலங் கூடல்
தண்ணளி யருள வேண்டும். 62.
பன்றியின் குட்டி கட்குப்
பாலினை யளித்தாய் நண்ணி அன்றுப தேசம் செய்தே
அரியபுள் ஸ்ரினையாட் கொண்டாய் நன்றென அயிரை உண்ணும்
நாரையின் முத்தி கண்டாய் இன்றெனக் கருள்வ்ாய் கூடல்
இருந்தவ வேண்டி நின்றேன். '63.
பாடக னாகிப் பாடல்
பாடயான் விழைந்தேன் மேடை நாடகத் தடியர் போன்று
நானுனைப் பணிந்தேன் நாளும் ஏடவிழ் மலர்கள் கொண்டு
ஏத்தினன் மயிலங் கூடல் ஊடகத் தடிய ருள்ளே
ஒருவனாய் ஏற்ற ருள்வாய். 64.
62. கடுவிடம் - கொடியவிடம். 63. அரியபுள்- கரிக்குருவி. 64. ஏடு. இதழ்.
22

அத்தனே அருள்வாய் சீர்சால்
அம்பிகை மைந்த வுன்னை இத்தனை காலம் யானோ
எண்ணிலன் எந்தா யுன்தாள் முத்தனே மயிலங் கூடல்
முதல்வனே யருள வேண்டும் எத்திற மெனினு மென்னை
ஏற்றுன தடியிற் காண்பாய். 65.
கரந்தனில் தண்டம் ஏந்திக்
காரரா அரைஞா ணாக்கி உரமலி சிறுத்தொண் டர்தம்
உளம்வெளிப் படுத்தாய் ஒர்ந்தோம் பரவினம் மயிலங் கூடற்
பார்வதி மைந்த பாரிற் பரம்பொருள் நீயே யாகும்
பைரவ வழுத்தி நின்றோம். 66.
மெத்தவும் நேர்த்தி யான
மேலவர் உளம்போற் கோயில் பத்தியோ டமைத்து நாளும்
பரவுநர் பணிந்தோர் சைவர் உத்தமச் சான்றோர் வைகும்
உயர்பதி மயிலங் கூடற் சித்தனே சிவமாந் தேவே
திருவடித் திருவ ஸ்ரிப்பாய். 67.
63. முத்தனர். வயிரவர்,
86. தணர்டம்-விஷ்ணுவினர் எலும்புகளால் அமைந்தது. கார்-அச்சம். காரரா-அச்சத்தைத்தரும் பாம்பு. கருநிறப்பாம் பெனினுமமையும்.
67. சித்தனர். வயிரவர், திரு. தெய்வீகச் செல்வம்.
23

Page 17
சித்தம துணையே சேரத்
திருவளர் தொண்ட ராகிப் பத்தியின் பால ராகிப்
பணிவொடு பரவி மேலாம் வித்தக வாழ்வ யர்ந்து
வெற்றியின் விழைவை நோக்கி நத்திவாழ் மயிலங் கூடல்
நம்மையும் ஆண்டு கொள்வாய். 68.
பன்னகா பரணன் தும்பி
பராபரை மைந்தன் சாமி வன்னமாங் கோயில் வைகும்
வளம்நிறை பதிகள் நாப்பண் சொன்னலத் துயர்வு மல்கும்
தூயர்தந் துயர்கள் போக்கி இன்னலைத் தவிர்க்குங் கூடல்
இறைவந் நிதியம் ஆனாய். 69.
கரும்பிலு மினிய ராய
கல்விசேர் மாந்தர் வைகும் பெரும்பதி நகுலை தெற்கின்
பேரலங் காரக் கோயில் விரும்பியே உறைந்தாய் விண்ணோர்
விழைந்திட வருகை தந்தாய் மருந்தினை மயிலங் கூடல்
மகேசுர வாழ்வ ளிப்பாய். 70.
68. நத்துதல் - விரும்புதல்
69. பன்னகம் - பாம்பு, தும் பி. விநாயகனர். பராபரை.
உமாதேவியார். சாமி. வயிரவர். நிதியம். செல்வம்.
70. மருந்தினை- மருந்துபோன்றவன்.
24

கல்லையுங் கணிய வைக்கும்
கலையின துயர்வு காட்டும் எல்லையில் எழில்சேர் சிற்பம்
இயைபதி யிருந்தாய் மாவைத் தொல்தலை யிட்டிப் பேரூர்
தொடர்ந்தனம் தொழுதோம் பின்னர் புல்லினம் மயிலங் கூடற்
புண்ணிய புனைந்தோம் தாள்கள். 71.
வெற்றிலைக் கொடிவ ளர்ந்து
விதானமென் றமைந்து நிற்பச் சிற்றிலைப் பயிரி கீழாய்ச்
செம்மைசேர் விரிப்பென் றாகப் பொற்றிருத் திராட்சை தொங்கப்
பொழிலிடை மயிலங் கூடல் அற்புதன் அழகு கண்டோம்
அரன்மக வனைத்தே யாள்வாய். 72.
கத்தரி வெருளி வேண்டக்
கதலியின் குலைகள் தொங்கச் சித்திரித் துளதா மென்னச்
சின்னவெங் காயங் காணப் பத்தரின் பணிவுப் பான்மை
பசுந்தினை பரிந்து காட்ட முத்தநீ மயிலங் கூடல்
முழுமையுள் முகிழ்த்தாய் ஆர்ந்தோம்.73.
புல்லினம்- தழுவினம், விதானம்- மேற்கட்டு. முத்தனர். வயிரவர்.
25

Page 18
கரும்பினங் களித்தே யோங்கிக்
ககனமீ தசைந்து நிற்பக் குரும்பைகள் குவிந்த தென்னை
குதுாகலித் தழகு காட்டப் பெரும்பலா வினத்த ருக்கள்
பெருநிழல் பரப்பக் கூடல் விரும்பியே கோயில் கொண்ட
வித்தக வினைதீர்ப் பாயே. 74.
பஞ்சியும் பசியும் தீரப்
பழங்களும் நறவும் பெற்றுக் கொஞ்சிடுங் குருவிக் கூட்டம்
குலவிட ஒதுங்குஞ் சோலை அஞ்சினர்க் கபயம் நல்கும்
அணைந்துள கூடற் கோயில் நெஞ்சினில் நிறுத்தி யென்றும்
நினைகுவம் சரணம் ஐய. 75.
நீறுள சாம்பல் மொந்தன்
நெடிதுயர் அரம்பை தாங்கும் தாறுகொள் கோலம் சைவத்
தபோதனர் காட்சித் தாகும் பேறுபெற் றுயர்ந்தோர் வைகும்
பெருமைசேர் மயிலங் கூடற் காறுதல் அளிப்போய் ஐய
அணைத்தெமை யாள்வாய் காப்பாய். 76.
74. கலித்தல். ஆரவாரித்தல். ககனம் - ஆகாயம். தருக்கள்
மரகர்கள்.
73. பஞ்சி. சோம்பல. சரணம்- அடைக்கலம்.
76. அரம்பை. வாழை. தாறு குலை
26

பொன்னிறப் பூவு திர்க்கும்
பொலிந்தஅபூ வரையில் வண்டு கன்னலென் நறவு மாந்தக்
களித்துவந் திருந்த காட்சி மன்னிய மஞ்சள் நாப்பண்
மற்றொரு கறுப்புப் பொட்டாய்த் துன்னியே யொளிருங் கூடல்
தூயனே துயர்க ளைவாய் 77.
சேத்திர பாலன் ஆய
திகம்பர நாதற் தந்த சூத்திர தாரி யாகுஞ்
சுடலையாள் பவன்தன் நெஞ்சத் தோத்திரப் பதிவாய் வந்த
தூயனே மயிலங் கூடற் கேத்திரத் துறையுஞ் செய்ய
சேத்திர பால ஆள்வாய். 78.
சிவதலஞ் சேத்ர மென்ப
சேத்திரக் காவ லென்கை சிவனுறை நிலத்தைச் சார்ந்துஞ் சென்றுள தெனலா மென்க அவனுடைக் கோரத் தோற்றம்
அதற்குமே யேற்ற தெங்கள் தவமுதல் மயிலங் கூடல்
தயாபர தயாவோ டேற்பாய். 79.
துன்ன?. வெளிப்பட்டு. தேதிரம் - கோயில். சேத்திரபாலர்ை. வயிரவர், கய/பரணர் - அருளுடையோனர்.
27

Page 19
சுடரொளி மேல தாகுஞ்
சுருட்புகை யென்னத் தோன்றும்
கடக்களிற் றுரியைப் போர்த்த
கஞ்சுக தாரி யென்ப
திடமளி புராணங் கந்தன்
தேர்வினிற் கச்சி யப்பர்
மடம்பட வுரைத்தார் கூடல்
மகேஸ்வர மதித்த ணைப்பாய். 80.
சிவன்நுதல் விழியில் தோன்றிச்
செங்கணா னுரியை வாங்கிக் கவசமா யணிந்து ஞாளி
மீதிவர்ந் தூருஞ் செய்தி சிவகடம் பவன புராணத்
திருவினாற் றெளிந்தோங் கூடற் பவமறுப் பவனே அந்தப்
பண்ணவன் அணிந்து வந்தோம். 8.
நரசிமத் தோலு ரித்து
நயந்தரை சுற்றி என்பை உரமுடைத் தண்ட மாக்கி
உவந்துகைக் கொண்டு தோலில் சிரகபா லத்தோன் சட்டை
செறித்தமை சீகா ழத்திப் புராணநூல் சொல்லுங் கூடற்
புனிதனே யரவ ணைப்பாய். 82.
80. கடக்களிறு-மதஞ் சொரியும் யானை, கஞ்சுகம் -சட்டைதாரி.தரித்தவன்.
81. செங்கனான். திருமாலி.
82. சீகாழத்திப்புராணம்- சீர்காழிப் புராணம், சிரகபாலத்தோன்.
தலையோட்டினை வைத்திருப்பவன்.
28

பக்குவ மடைந்த ஆன்மா
பயன்கொள வேண்டும் முத்தி தக்கவைப் பதற்காய்ச் சாந்தம்
தழுவுவண் ணத்த வெண்மை தொக்கிருந் தருளு நக்கன்
தூநெறிச் சாத்வீ கத்தோன் புக்கிருந் தருளுங் கூடற்
பூரண புனைந்தேன் தாள்கள். 83.
விருப்பினை நிறைவு செய்யும்
விதத்துரா சதகு ணத்தின் இருப்புள நிறமோ செம்மை
எழில்வயி ரவரின் கோலம் திருப்பமாய் இராச தத்தின்
தீர்நெறி நிலைய தாகும் கருப்பொருள் மயிலங் கூடற்
கருணைவா ருதியே காப்பாய். 84.
மூர்த்திகன் தமோகு ணத்து
முழுமுதல் கருமை வண்ணம் நேர்த்திகள் பிணியி னிக்கம்
நெருங்கிய பிசாசு பில்லி பேர்த்துமே பீடிப் பின்றிப்
பின்னிட வழிச மைப்பன் ஆர்த்துநில் அண்ணல் கூடல்
அழல்வண அணைத்தே யாள்வாய். 85.
83. நக்கன்- ஆடையில்லாதவனர், சிவன், வயிரவன் *3. முர்த்திகனர். வயிரவன். அழல் வணன்- திவனர்ணனர்.
29

Page 20
வழிபடு மடியர் வேண்டி
வரித்திடும் வகையி லான எழிலிய நிறமும் ஏற்ப
இசைபடு குணமுங் கூடல் கழிமுகத் தொன்றி ஓங்கும்
கஞ்சுக மணிந்தோன் காட்சி விழிகளுக் கிசைவ ழங்கும்
வெற்றியு மளிக்கும் நேர்ந்தோம். 86.
சிரித்தருள் செய்த சேறைச்
செந்நெறிச் செல்வர் தண்டம் தரித்தொரு வயிர வன்தன்
தகவுருத் தாங்கி வேழம் உரித்தனன் எனநாம் செய்தி
உணர்ந்தனம், அப்பர் சொல்லால் தரித்துறை குமர கூடற்
தற்பர தரியா தேற்பாய். 87.
கங்கைவார் சடைக்க ரந்த
கைலையின் முதல்வர் தாமும் மங்கைநேர் பிலாதோன் மன்னன்
மனத்திருந் துதித்தோன் தாமும் சங்கையாயச சடடை சாரநது
சமத்துவ முணரக் கூடல் மங்கையர் வழுத்த நின்றார்
மகேசுர மைந்த போற்றி. 88.
86. எழிலிய- அழகிய, கழிமுகம் - சங்கமமுகம்.
87. அப்பர் சொல் - தேவாரம். குமரனர். வயிரவர். தற்பரனர்.
சிவனர்,
88. மங்கை நேர்பிலா தோன். வயிரவர். மன்னனர். இறைவன.
30

சிவகுமா ரர்க ளென்று
செப்புதற் குரிய நால்வர் சிவனுடை அம்ச மாகிச்
சிறப்புறு நிலையிற் சித்தன் நவநிதி சூலம் போதும்
நனிவழி படற்குக் கூடல் தவநிதி மயல்நீத் தென்னைத்
தகும்வழி அணைத்தேற் பாயே. 89.
கார்வணத் தழக னென்ற
கருத்தினன் ஞாளி யூர்தி ஏர்வண மிலது மன்று
இருளிடை இயக்க முண்டு நேர்வணஞ் செம்மை வெண்மை
நிமித்தமா யமைவ கூடல் ஒர்வண நியம மில்லை
ஒருவனே உவப்போ டேற்பாய். 90.
சிவன்தன வியாப கத்தாற்
சீருடை யிலனாய் நக்(கி)னம் உவந்தடை யுருவே ஞாளி
ஊர்தியு முடையான் மேலும் தவநிதி கபாலஞ் சூலம்
தரித்தனன் உடுக்குக் கூடற் பவமறுப் பவனுங் கொண்டான்
பரமனே யவனாங் கண்டோம். 91.
89. சித்தனர். வயிரவர். 90. ஏர்வனம். ஏர்வனர்னம்- அழகுவணர்னம். 91. நக்கினம்- நிருவாணம்- உடையில்லாத நிலை.
31

Page 21
வயிரவர் கிராமத் தெய்வம்
வளம்படு காவல் நோக்கில உயிரென வுணர்ந்தோம் அன்றி உதிரநேர் பலியு மேற்கும் செயிர்நிலை யமைதி காணும்
செஞ்சடை எழுந்து நிற்கும் வயிரிய மயிலங் கூடல்
வள்ளலே வரிப்பாய் ஏற்பாய். 92.
எந்தைபி ரானே யெந்தை
எவர்க்குமென் றெடுத்துச் சொல்லும் மந்திர மெமதாஞ் சித்தன் -
மகனெனும் மகிழ்வு முண்டு தந்திர நான்கில் ஏழாம்
பைரவிப் பகுப்பிற் காண்க சுந்தர மயிலங் கூட்ல்
தூயனே துணையு மாவாய். 93.
அக்ரம மான பேரை
அடக்கிநல் நீதி யாக நிக்கிர கித்துத் தூய்மை
நிலைக்கவைத் தருள வந்த உக்கிர மூர்த்தி முத்தன்
உருவமு மதன்வ ழித்தே வக்கிர மன்று கூடல்
வளாகத்து நிதியே காப்பாய் 94.
92. உதிரம்." இரத்தம், செயிர். சினம். வயிரிய. திணினிய.
93. மந்திரம்-திருமந்திரமெனும் நூல்.ஏழாம் பைரவிப்பகுப்பு- நான்
காந்தந்திரத்தில் பைரவி மந்திரம் ஏழாமிடத்தில், சுந்தர-அழக.
94. நிக்கிரகித்து-தணர்டித்து.முத்தன்-வயிரவர். வக்கிரம்-கொடுமை,
32

பயங்கர முகமுங் கோரப்
பற்களின் வடிவு தானும்
உயர்ந்தசெஞ் சடையு மூரும்
உரகமாம் அரையில் ஞானும்
நயந்திடற் குரிய வல்ல
நலஞ்செய வந்து கூடல்
உயவிருந் தருளு கின்றாய்
உயிர்க்குயி ரானாய் ஓர்ந்தோம். 95.
அடாதவர்த் தடிய வேண்டி
அரனுரு மடுத்தா னென்று கடாவினர்க் கறிவு றுத்தக்
கருதினர் எளிதிற் கந்தன் தடாகமொன் றினிலே வந்த
சரிதையைத் தெரிவித் தன்பர் குடாவுநெஞ் சையம் தீர்த்துக்
குளிர்ந்தனர் குதூக லித்தோம். 96.
சாணியோ டறுகு சேரத்
தருங்கரி முகன்வ ணக்கம் கோணிய வடிவிற் கம்பி
கொழுத்திலை யானால் வேலாம் பூணிய பவாங் கம்பி
பொருந்திடில் நேரா யொன்று காணுவம் வயிர வர்தான்
கணித்தெமை யெளிதேற் பாயே. 97.
91. ம. ரகம்- பாம்பு. ஞானர்- கயிறு. 96. கடாவினர் - கேட்டோர். தடாகம் - குளம், குடாவுநெஞ்சு
துளைக்கும் மனம்,
33

Page 22
வயிரவ தினமும் போற்றி
வழுத்திடத் துணிந்து முல்லை கயிரவம் சிவந்தி என்னுங்
கடிகமழ் மலர்க ளோடே தயிரனம் இளநீர் கண்டு
தகும்வடை நிவேதித் துன்தாள் உயிரெனக் கண்டு நின்றோம்
உடையவ எமையு மாள்வாய். 98
ஒர்ந்தனஞ் சுணங்க ணுார்தி
உன்திற முவந்து கூடல் ஆர்ந்தவுன் அருளை மாந்தி
அளப்பிலா மகிழ்வு துய்த்துப் பேர்ந்துநம் நலத்தைப் பேணும்
பெருநலத் துடனு றைந்தோம் தேர்ந்தவ வருள்பு ரிந்து
தெளியவைத் தணைத்தே யாள்வாய். 99.
தஞ்சமென் றுனைய டைந்த
தரியலர்க் குதவுஞ் சேயே
கெஞ்சினங் கீழா மெங்கள்
கிளர்வினைக் கெடுத்து நாளும்
கொஞ்சிடுங் குழவி யென்னக்
குலவிடுங் குமர கூடற்
பிஞ்சுளத் தடியேம் வேண்டப்
பெருமகிழ் வளித்த ருள்வாய். 100.
98. கயிரவம்- ஆம்பல. சிவநிதி. செவிவந்தி.
99. மாந்தி. நிறையக் குடித்து.
100தரியலர். பகைவர். கிளர்வு- உயரும்நிலை. குழவி.
குழந்தை, பிஞ்சுளம்- வளர்ச்சியடையாத உள்ளம்.
34

2. சிவமயம்
யாழ். மயிலங்கூடல் அருள்மிகு ஞானவயிரவசுவாமி
திருவூஞ்சல்
காப்பு
சீர்பூத்த வானுலகு தேவ ரோடு
சென்றுறைந்த தெனஅழகு திகழு நல்ல ஏர்பூத்த பல்வளமிக் கோங்கு தெல்லி
எழில்பூத்த மாமயிலங் கூடல் மேய நேர்பூத்த உயிர்க்குயிராய் விளங்கு நித்த
நிமலவயி ரவர்பேரில் ஊஞ்சல் பாடக் கார்பூத்த கரிமுகவ னுபய சீதக்
கழலடியாம் மலர்நிதமுங் காப்பதாமே.
வேதமென ஓங்குசதுர்ப் பாதம் நாட்டி
மேல்விளங்கு கலைகளெனும் விட்ட மோட்டிப் போதமெனும் பிரணவமாங் கயிறு மாட்டிப்
புகலரிய மந்திரமாம் பலகை பூட்டிச் சோதியெனு மாவுரண முத்து வேய்ந்த
துகளறுநல் லூஞ்சலெனும் மஞ்ச மீது சாதியெனும் மாமயிலங் கூடல் வாழுஞ்
சர்வகுண வயிரவரே யாடீ ரூஞ்சல்.
35

Page 23
தேவர்கள்துந் துபியோசை கடல்போ லார்ப்பச்
சிறந்தநா ரதர்வீணை தேன்போ லார்ப்ப மூவர்கள்வாழ்த் தொலிசந்த முகில்போ லோங்க முனிவரர் கரவோசை முன்னே ஆர்ப்பப் பாவலர்நா வலர்கள்தமிழ் வேத மோதப்
பக்தியுட னடியவர்கள்ப ரிந்து போற்ற ஒவறுசீர் மாமயிலங் கூடல் வாழும்
உயர்ஞான வயிரவரே ஆடீ ரூஞ்சல்
பேரிமுதன் மத்தாள முடுக்கை மொந்தை பேசரிய வீணைதுளை நாக சின்னம் வாரியெனக் கணங்களிரு மருங்கு மார்ப்ப
மறைமுனிவர் வாயார வேத மோதப் பாரியஇந் திரன்முதலோர் பரவல் செய்ய
பன்னுமறை உருவெடுத்துப் பயின்று போற்ற மாரிமறு காவளஞ்சூழ் மயிலங் கூடல்
மன்னுமறை வயிரவரே ஆடீ ரூஞ்சல்.
இந்திரனும் மாருதனுங் கவரி வீச
எண்கணன்மா மறையதனை இனிதே ஒதச் சந்திரனும் மாதவனுங் குடைக ளேந்தத்
தண்ணழகா பதியால வட்டந் தாங்க விந்தையதாய் நிருதியுடை வாள தேந்த
விறல்வருணன் நீர் தூவுந் துருத்தி யேந்த அந்தகன்பொற் பிரம்பேந்த ஆடீ ரூஞ்சல்
அருண்ஞான வயிரவரே யாடீ ரூஞ்சல்,
36
5

பொன்னிலங்கு முத்தரியம் பொலிந்தே யாடப்
புகழிலங்கு முப்புரிநூல் பொருந்தி யாட முன்னிலங்கு முற்பீதாம் பரமு மாட
முறையிலங்கு கண்டசர முறையே யாட மன்னிலங்கு தார்வளர்திண் புயமு மாட
மார்பகநற் பதக்கமணி மருவி யாட மின்னிலங்கு மாமயிலங் கூடல் வாழும்
விறல்ஞான வயிரவரே ஆடீ ரூஞ்சல்
செங்கமலத் தயன்சிரங்கொள் செங்கை யாடத்
திருமேனிக் கஞ்சுகமுந் திகழ்ந்தே யாடப் பங்கமில்செந் தாமரைநேர் பதமு மாடப்
படர்பலிதேர் கபாலமது பரவி யாட மங்கலஞ்சேர் மறைஞானி மகிழ்ந்தே யாட
மார்பகநற் பதக்கமணி மருவி யாட இங்கிதஞ்சேர் அரம்பையர்வாழ் மயிலங் கூடல்
இனிதுறையும் வயிரவரே யாடீ ரூஞ்சல்
கங்கைசுதன் முன்னவனே ஆடீ ரூஞ்சல்
கணபதிக்குப் பின்னவனே ஆடீ ரூஞ்சல் செங்கனக மேனியனே ஆடீ ரூஞ்சல்
செந்தொடைமா லைப்புயனே ஆடீ ரூஞ்சல் துங்கமறை மேனியனே யாடீ ரூஞ்சல்
துய்யகருங் குதிரையனே யாடீ ரூஞ்சல் பங்கயன்பொற் சிரமரிந்தோய் யாடீ ரூஞ்சல்
பரமான வயிரவரே யாடீ ரூஞ்சல்
37

Page 24
ஆலமிடற் றினன்சேயே யாடீ ரூஞ்சல்
அம்பிகைதன் புத்திரனே யாடீ ரூஞ்சல் சூலமணிக் கரதலனே யாடீ ரூஞ்சல்
சுருதிதனின் உட்பொருளே யாடீ ரூஞ்சல் நீலநிறக் கஞ்சுகனே யாடீ ரூஞ்சல்
நின்மலச்செம் மேனியனே யாடீ ரூஞ்சல் சேலனைய விழியரமா மயிலங் கூடல்
சேர்ந்துவளர் வயிரவரே யாடீ ரூஞ்சல் 9
அண்டர்சரா சரவுயிர்கள் வாழி வாழி
அனல்கையுறும் அந்தணர்கள் தாமும் வாழி கொண்டல்மழை பொழிந்துமிக ஓங்கி வாழி கோக்கள்அர னடியார்கள் குலவி வாழி தண்டுபுனை விபூதிருத்தி ராட்சம் வாழி
தக்கபஞ்சாக் கரஞ்செங்கோல் தானும் வாழி அண்டர்புகழ் தருமயிலங் கூடல் வாழும்
அமலவயி ரவர் நிதமும் வாழி வாழி. 10
குறிப்பு: மயிலங்கூடல் அருள்மிகு ஞான வைரவ சுவாமி
திருவுபூஞசல விழிசிட்டியைச் சேர்ந்த கணபதிச் சட்டம்பியாராற் பாடப்பட்டதென்றும், அந்த ஏட்டுச் சுவடி எப்படியோ தவறிவிட்ட தென்றும், பின்னர் அவ்வுபூர்க் காசிச்சட்டம்பியாரைக் கொண்டு பாடுவிக்கப்பட்டதென்றும்,
அதுவே இப்போதுள்ள இத் திருவுஞ்சற் பாவென்றும்
கூறுவர்.
38

36JLDub
யாழ். மயிலங்கூடல் அருள்மிகு ஞானவயிரவசுவாமி
ஆலயவரலாறு அறிமுகம்:
முன்னொருபோது தெல்லிப்பழை தென்மேற்கு மயிலங்கூடல் அருள்மிகு ஞானவயிரவசுவாமி ஆலயம் என்று பெயர் பெற்றிருந்த எமது திருக்கோவில் இன்று இளவாலை வடக்கு மயிலங்கூடல் அருள்மிகு ஞான வயிரவசுவாமி ஆலயம் என்று, அரசினர் நிர்வாகப் பிரிப்பிற்கு அமைவாகப் பெயர் பெறுவதாயிற்று. காலப் போக்கில் இன்னும் எப்படியெ ப்படியோவெல்லாம் இந்த நிர்வாகப் பிரிவுப் பெயர் மாற்றம் பெறலாம். ஆனால் வழிபாட்டிடமாகிய ஆலயம் இடம் மாறப்போவதில்லை. எங்கள் வழிபாடும் ஆலயமும் இதே இடத்திற் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் எமது ஆலயம் யாழ். மயிலங்கூடல் அருள்மிகு ஞானவயிரவ சுவாமி ஆலயம் என்று பொறிக்கப்படுவதே சாலப்பொருத்தம் என்ற காரணத்தால் இவ்வண்ணங் குறியீடு செய்துள்ளோம்.
சிவமூர்த்தங்களுள் வயிரவ மூர்த்தமும் ஒன்று. வயிரவக கடவுள் சிவன் திருவுள்ளத்திருந்து மூன்று முறை தோற்றி யதாகச் செய்திகள் உண்டு. சிவனை நிந்தித்த பங்கயா சனனின் உச்சித் தலையைக் கிள்ள வந்தது ஒரு முறை: சிவனடியார்களைத் துன்புறுத்திய கயமுக அசுரனின் கர்வத் தைப் போக்கத் தோன்றியது இன்னொரு முறை. இரணியனை வதஞ்செய்த காரணத்தாற் செருக் குற்ற திருமாலின் தோலை உரித்துக் சட்டையாய் அணிந்து அவன் மமதை கெடுக்கத் தோன்றியது மற்றொரு முறை. இப்படி வயிரவரெனுந் தோற்றம் மூன்று முறை நிகழ்ந்திருப்பினும் வயிரவர் ஒருவரேதான். தேவைகள் காரணமாக அந்த அந்தத் தேவைகளில் நிறைவு காண்பது காரணமான சிவன் திருவுள்ள வெளிப் பாட்டுத்
39

Page 25
திருவடிவே வயிரவர். திருவுள்ள வெளிப்பா டெனவே வயிரவர் சிவனின் வேறல்லர் என்பது தெளிவு. ‘விடையவர்தாம் சித்தமகிழ் வயிரவராய்த் திருமலை நின்றணைகின்றார்’ என்பது எமது சிந்தனைக்குப் பேருப காரமான பெரியபுராணச் செய்தி.
இந்தவகை மூர்த்தியே, முதல்வனாம் மூர்த்தியே எங்கள் கிராமத்திலும் உறைகின்றார். யாழ்ப்பாண தேயத்தின் வடபால் கடற்கரையுடனாகிய புனித தலம் நகுலேஸ்வரத்தின் தென்புறமாக ஒரு கல் தொலைவி லுள்ளதுதான் மயிலங்கூடல் எனும் எமது கிராமம். முந்திரிகை வாழை, மா, பலா, தோடை முதலிய பழந்தரு மரங்களால் நிறைந்தது அது. வெற்றிலை, கத்தரி, மிளகாய், மரவள்ளி முதலான காசுப் பயிர்களும் இங்கு வளர்ந்து வளஞ்செய்கின்றன. இத்தகு செழுமைமிகு கிராமத்தின் மத்தியிலேதான் எங்கள் குலதெய்வம் வயிரவப்பெருமானின் ஆலயம் அமைதி கண்டுளது.
தோற்றமும் வளர்ச்சியும்:
இந்த எமது ஆலயத்தின் தோற்ற காலத்தை எம்மெ வராலும் சொல்லிக்கொள்ள முடியவில்லை. இதுதா னென்று சொல்லிக்கொள்ள முடியாததொரு காலத்திலே இங்கு வாழ்ந்த எமது மூதாதையர் வழிபாட்டுணர்வுடனாகிய வேளை ஒரு கல்லையோ அன்றி வேறோர் சாதனத்தையோ குறியீடாக்கி வழிபாட்டைத் தொடர்ந்திருக்கலாம். ஆட்சி மாற்றங்கள் வெவ்வேறு மதத்தினர் கைவசமாகிய வேளை எமது வழிபாட்டு முயற்சிகளுக்கும் மாற்றமேற்பட்டதுண்டு. இலங்கை அரசியல் அந்நியர் வசமானபோது எமது மக்கள் வழிபாட்டுச் சுதந்திரமும் பறிபோனது. அதனால் மரங்களின் கீழோ கிணற்றின் பக்கலிலோ ஒரு கம்பியை நாட்டி அல்லது ஒரு கல்லை வைத்து மனத்தால் தியானித்தனர். இந்த வழிபாட்டு முறைதான் நாளடைவில் வயிரவ சுவாமி வழிபாடாகியிருக்க வேண்டும்.
பரிபாலனம்:
எமது ஆலயமும் இந்தவகையில் தோற்றம் பெற்று வளர்ந்தது என்றுதான் எண்ணவேண்டியுளது. பத்தொன் பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலுப்பிள்ளை என்னும்
40

பெயரையுடைய ஒரு சைவப்பெரியார் இந்த ஆலய பரிபால னத்தை நிர்வகித்துள்ளார் என்று தெரிகிறது. தொடர்ந்து கி.பி. 1923 ஆம் ஆண்டுவரை வேலுப்பிள்ளை அவர்கள் மைந்தன் மயில்வாகனம் அவர்களால் பரிபாலனம் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. இவர் ஒரு கலாவிநோதன் என்றும் தெரிகிறது. அதனால் அவர் தமது பரிபாலன காலத்தில் சிறந்த தவில் நாதஸ்வர வித்துவான்களின் கச்சேரிகளை இடம்பெறச் செய்துள்ளார். வாண வேடிக்கைகளும் வேறு கலை நிகழ்ச்சி களும் விடிய விடிய நடைபெற்றதாக அறிய முடிகின்றது. திரு. வே. மயில்வாகனம் அவர்களைத் தொடர்ந்து அவர் மகன் தியாகராஜா (வேலுப்பிள்ளை) அவர்கள் முகாமையில் ஆலய நிர்வாகம் சிறப்பாகச் சென்றுகொண்டிருந்தது. திரு. வே. மயில்வாகனம் திரு. ம. தியாகராஜா என்போரது நிர்வாக காலத்தில் இவ்விருவரதும் நெருங்கிய அனுசரணையாளராகி எம்பெருமான் சந்நிதியை என்றும் புனிதமுடையதாக அழகியதாக வைத்திருந்தவர் திரு. வே. வயிரவப்பிள்ளை அவர்கள். இசைஞானக் கல்வி பெறாத வயிரவப்பிள்ளை அவர்கள் சாஸ்திர அறிவு பெற்றவர்களுக்கு எந்தவித குறைவுமின்றிப் பாடக்கூடியவர். ஊஞ்சற் பாடல்களை அவர் மெய்மறந்து உளமுருகி ஈடுபாட்டுடன் பாடும்போது எல்லோரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருப்பர்.
கி.பி. 1971ஆம் ஆண்டு திரு. ம. தியாகராஜா அவர் கள் இயற்கை எய்தியபோது அவருக்கு ஆண்பிள்ளை இல்லாத காரணத்தால் மூத்த மகள் செல்வலட்சுமியின் பெயரால் அவர் கணவர் திரு. த. கந்தையா அவர்கள் பரிபாலனத்தைக் கவனித்து வந்தார்கள். வழிபடுவோர் மத்தியில் தோன்றியதொரு உணர்வு காரணமாக 1985.10.05 ஆம் தேதி தொடக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொரு திருப்பணிச் சபையினர் ஆலய நிர்வாகத்தையும் பொறுப் பேற்றுக் கொண்டனர். இந்தத் திருப்பணிச்சபையின் தலை வராகப் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களும் உப தலைவர் களாகத் திரு. த.கந்தையா, திரு. இ.பொன்னையா, திரு. க.குட்டித்தம்பி என்போரும் இணைச் செயலாளர்களாகத் திரு. வ.சிதம்பரநாதன், திரு. சி.விமலநாதன் என்போரும் பொருளாளராகத் திரு. சி.நவரத்தினம் அவர்களும் செயற்குழு
41

Page 26
உறுப்பினர்களாகத் திருவாளர்கள் க. மாரிமுத்து, பொ. மனமோகன், கி.ஜெகதீசன், கி.இராசா என்போரும் தெரிவு செய்யப்பட்டனர். 1986.09.21இல் நடை பெற்ற வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் திருப்பணிச்சபை ஆலய பரிபாலன சபையாக மாற்றம் பெற்றது. பரிபாலனத் தையும் திருப்பணியையும் இச்சபையே சிறப்புற நிர்வகித்து வந்தது. தலைவர், செயலாளர், பொருளாளர் என்னும் பதவிகளுக்கு முன்னையவர்களே மீண்டும் தெரிவாகினர். உபதலைவர 'களாக திரு. க.செல்லத்துரை, திரு. பொ.இராசேந்திரம், திரு. சா.ஆறுமுகம் என்போரும் உப செயலாளராக திரு. சி.சிவபரனும், நிர்வாக உறுப் பினர்களாகத் திருவாளர்கள் க.பொன்னம்பலம், வி.விஸ்வபாலசிங்கம், க.குட்டித்தம்பி, க.சுப்பிரமணியம், வ.கனகசிங்கம், திருமதி கு.செல்வலக்குமி என்போரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1989.01.01 ஆந் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரு.க.குட்டித்தம்பி அவர்கள் தலைவராகவும் திரு.வ.சிதம்பரநாதன் அவர்கள் செயலாளராகவும், பண்டிதர் சி.அப்புத்துரை அவர்கள் பொருளாளராகவும், திரு.பொ.இராசேந்திரம் உப தலைவராகவும், திரு. க.மோகனதாஸ் உபசெயலாளராகவும், திருவாளர்கள் சி.நவரத்தினம், க.கிருபாமூர்த்தி, பொ.சிறீகுமரன், திருமதி சு. ஆறுமுகசாமி, திருமதி ச. கண்ணபிரான், திருமதி கு.செல்வலக்குமி என்போர் உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
போர்க்காலச் சூழ்நிலை காரணமாகப் பரிபாலனம் இடையீடுபட்டதுண்டு. 1991இல் கிராமத்தை விட்டு வெளியே றிய மக்கள் மீண்டும் அங்கு சென்றுவரக் கூடியதொரு சூழல் ஏற்பட்டபோது 1998இல் ஆலயத்தைப் புனிதப்படுத்தி விளக்கேற்றிப் பூசை நடைபெறக்கூடியதொரு ஒழுங்கு செய்யப்பட்டது. பின்னர் அமைக்கப்பட்ட பரிபாலன சபை யின் நிர்வாகசபைத் தலைவராக திரு. க.பொன்னம்பலமும், செயலாளராக திரு. க.மோகனதாசும், பொருளாளராகத் திரு. சி. நவரத் தினமும் , உபதலைவராகத் திரு. வ.சிவசுப்பிரமணியமும், நிர்வாக சபை உறுப்பினர் களாகத் திருவாளர்கள் க. குட்டித் தம் பி, க.கிருபா மூர்த்தி,
42

சு.ஜெகதீஸ்வரன், ப.கிரிதரன், ந.பிரதீபன், க.செல்லத்துரை, செல்வன் கு.கெங்காதரன் என்போரும் தெரிவுசெய்யப் பட்டனர்.
இந்த நிர்வாக சபையினரது முயற்சி காரணமாக ஆலயம் புனர்நிர்மாணஞ் செய்யப்பட்டு 2005.03.30 தாரண பங்குனி பதினேழாம் நாள் புதன்கிழமை அனுஷ நட்சத்திரத்தில் மஹா கும்பாபிஷேகம் காண்கிறது.
கும்பாபிஷேகம்:
இந்த ஆலயத்தின் முதலாவது கும் பாபிஷேகம் எப்பொழுது நடைபெற்றதென்பதைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. திரு. வேலுப்பிள்ளை மயில்வாகனம் அவர்கள் முகாமையாளராகிப் பரிபாலனம் செய்த காலத்தில் ஒரு கும்பாபிஷேகம் ஆவணி ரோகிணியில் நடைபெற்றதாகத் தெரிகிறது. தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து மாவிட்டபுரத்தில் வாழ்ந்த குருசிரோமணி சிவபூரீ அரிகரக் குருக்கள் அவர்கள் அக்கும்பாபிஷேகக் கிரியைகளுக்குத் தலைமை தாங்கி யுள்ளார்கள். அது எந்த ஆண்டில் நடைபெற்றதென்று தெளிவாகத் தெரியவில் லை. முதலாவதாக நடந்த கும்பாபிஷேகம் அதுதானா என்பதுந் தெரியவில்லை.
இதன் பின்னர் நடைபெற்ற மற்றொரு கும்பாபிஷேகம் பற்றி செய்திகளும் கிடைக்கவில்லை. மூன்றாவது புனராவர்த்தன மகா கும் பாபிஷேகம் 1984.05.04 வெள்ளிக்கிழமை காலை மிருகசிரிட நட்சத்திரத்தில் நடைபெற்றுளது. நயினை பிரதிஷ்டாபூஷணம் சிவபூரீ சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் கிரியைகளுக்குத் தலைமைதாங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து இப்போது நடைபெறுகின்ற புனராவர்த்தன கும் பாபிஷேகத்தின் போதுதான் இந்த நூல் வெளியாகின்றது.
43

Page 27
சிறப்பு நிகழ்வுகள்:
தினமும் காலையில் நிகழும் நித்திய பூசையைவிட மாதா மாதம் சிறப்பாக நைமித்திய விழாக்களும் நடைபெறுகின்றன. சித்திரை வருடப்பிறப்பு சித்திரைப் பரணி, வைகாசி விசாகப் பொங்கல், ஆவணிச் சதுர்த்தி, ஆவணி ரோகிணி, புரட்டாதி நவராத்திரி, ஐப்பசிப் பரணி, ஐப்பசி வெள்ளிகள், கார்த்திகைக் கார்த்திகை, மார்கழித் திருவெம்பாவை, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி சிவராத்திரி என்னும் வைபவங்கள் சிறப்பாக நடை பெறுவதுண்டு. சமய குரவர்கள் குருபூசை, வைகாசியில் அலங்கார உற்சவம் என்பனவும் பக்தி சிரத்தையாகக் கொண்டாடப்படும்.
செவ்வாய் தோறும் கூட்டுவழிபாடு நடைபெறுவதுண்டு. அலங்கார உற்சவம், நவராத்திரி, திருவெம்பாவைக் காலங்களில் பிள்ளைகளை ஊக்கு விப்பதற்காக மாலை கட்டுதல், சகலகலாவல் லிமாலை மனனம் முதலான போட்டிகள் நடைபெறும்.
வாகனங்கள்:
சிவபூர் நாகேந்திர ஐயா அர்ச்சகராகப் பணிபுரிந்த காலத்தில் மயிலங்கூடலைச் சேர்ந்த ஓர் அடியவரால் தனிக்குதிரை வாகனம் ஒன்று உபகரிக்கப்பட்டது. பொருத்த மற்ற பராபரிப்பினாற் சில ஆண்டுகளுள் அது உபயோக மற்றுப் போய்விட்டது. பின்னர் கொல்லங்கலட்டியைச் சேர்ந்த அடியவர்களால் இரட்டைக்குதிரை உபகரிக் கப்பட்டது. சில ஆண்டுகளின் முன் தெல்லிப்பழை அடிய வர்களால் மற்றோர் இரட்டைக் குதிரை வாகனம் அன்பளிப்புச் செய்யப்பட்டது. மற்று இரட்டை ஆட்டுக்கடா வாகனமும் இருந்தது. போர்க்காலச் சூழலில் அவை மறைந்துவிட்டன.
44


Page 28


Page 29