கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் 49 - 50 ஆம் ஆண்டுப் பொது அறிக்கை

Page 1
கொழும்புத்
(சவை
இலங்கை அரசின் சங்கங்களுக் பதிவுபெற்ற தமிழ்மொழிக்
(5,191
சக நம்
ஆம் ஒழுங்கை
கருத்திரா மாவத்தை வழி, கொழும்பு-.ே
 
 
 
 
 
 
 

தமிழ்ச் சங்கம் ரைவுளது)
:வார் சட்டத்தின்படி
கல்விப் பண்பாட்டு அமைப்பு |
司、2025】
'சங்க ஆட்சிக் குழு
I 고 தொலைபேசி 5 27 19

Page 2
ဆု s ~
it, is (5 s * d 。 盛 洽层器莺 G 盖澳 塔渤 帕森°1
・守 ', a . " أنه 总 ,፥ • ክነ-እ'
5.
C
 
 

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" (திருவள்ளுவம்)
கொழும்புத் தமிழ்ச் சங்கம் (சபை வரைவுளது)
(அரச சங்கங்களுக்கான கட்டளைச் சட்டத்தின்படி பதிவு
செய்யப்பெற்றது. பதிவு எண் எஸ். 73. ஆரம்பம் - 1942, கட்டிட நிதிக்கு வரி விலக்கு அனுமதியுள்ளது.)
49-50 ஆம் ஆண்டுப் பொது அறிக்கை
2.
(தி. ஆ. 2022-23 8R. ؟ll. 1-1-1991 -1991 س12-31 س(
• உறுப்பினர்:
ஆயுள் உறுப்பினர் 215. சாதாரண உறுப்பு 105. கெளரவ உறுப்பினர் 15,
கூட்டங்கள் :-
ஆட்சிக் குழுக் கூட்டங்கள் 7 பொதுக்கூட்டம் துணைக்குழுக் கூட்டங்கள் 6
இலக்கியப்பணிகள்:-
(அ) 24-4-1991 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் அறைப் பேராசிரியரும் தில்ல்ைத்திருத்தலத் தில்லைவாழ் அந்தணருள் ஒருவரும் ஆகிய கலாநிதி ஐ. ஆனந் தி நடராச தீட்சிதர் அவர்கள் "தில்லைத் திருத்தமிழும் தமிழும்’ என்னும் பொருள் பற்றிச் சிறப்புச்சொற் பொழிவு நிகழ்த்தினார்.
(ஆ) 30-5-1991 - கல்கத்தா இராம கிருட்ண மடத்துச் சுவாமி லோகேசுவராநந்தா அவர்கள் 'சுவாமி விவேகானந்தர் பணிகள்’ என்னும் பொருள் பற்றிச் சிறப்புச் சொற் பொழிவு நிகழ்த்தினார்.
சங்கநாள்விழா :-
22-3-1991 - ஆம் நாள் சங்க நிலை ய த் தி ற் சங்கத் தலைவர் திரு. செ. குணரத்தினம் அவர்களது தல்ைமையிற் சிறப்பாக நிகழ்ந்தது. கிராமக்கைத்தொழில் - சுற்றுலாத்துறை அமைச்சர்

Page 3
மாண்புமிகு செளமியமூர்த்தி தொண்டமான் அவர் கள் முன்னாட் சங்கத்தலைவர் அமரர் பொ. சங்கரப்பிள்ளை அவர் களின் உருவப் படத்தைத் திரை நீக்கம் செய்ததொடு 1990ஆம் ஆண்டு வழங்குவதற்கு உரிய சங்கத்தமிழ்த் தேர்வுகள், நூலாக் கங்கள், கல்விப்புலமை ஆகியவற்றினதும் பரிசில்களை வழங்கி உரை நிகழ்த்தினார்.
நூல்வெளியீடுகள்:-
(அ) நாம் தமிழர்:- சங்கத்தின் மூன்னாட் தலைவர் GL u nr .
(ஆ)
சங்கரப்பிள்ளை அவர்களால் எழுதப் பெற்றதும் அவரது புதல்வர்கள் உதவிய நிதி உதவியொடு சங்கத்தினால் மீள்பதிப்புப் பெற்றதும் ஆகிய "நாம் தமிழர்" என்னும் நூல் வெளியீட்டு விழா 22-3-1991 ஆம் நாள் நிகழ்ந்தது. மாண்பு மிகு அமைச்சர் செள. தொண்டமான் அவர்கள் பிரதம அதிதியாகப் பங்கு பற்றினார். வீரகேசரி பிரதம ஆசிரியர் திரு. ஆ. சிவநேசச்செல்வன் அவர் கள் ஆய்வுரை வழங்கினார். பிரபல தொழிலதிபர் தி. குமார வேள் அவர்கள் முதற் பிரதியை அமைச்சரிடம் பெற்றார். வர்த்தகமேற்பார்வைச் சபைத் தலைவர் திரு. கே. சி. விக்கினராசா,டாக்டர் திருமதி விசயராகவன் ஆகியவர்கள் சிறப்புப்பிரதிகள் பெற்றார்கள்,
சிறுவர்பாட்ல்கள்:- கல்வித்துறை அறிஞர் திரு. த. கனக ரத்தினம் அவர்கள் எழுதி அவரது நிதி உதவியொடு சங்கம் பதிப் பித்த சிறுவர் பாடல் எ ன் னு ம் நூலின் வெளியீட்டு விழா 2-6-1991 ஆம் நாள் சிறப்பாக நிகழ்ந்தது. இந்து சமய கலாசார இராசாங்க அமைச்சர் மாண்புமிகு பீ. பீ. தேவராஜ் அவர்கள் பிரதம அதிதி யாகப் பங்குபற்றினார். கொழும்புப் பல்கலைக் கழகக் கல் வித்துறைப் பேராசிரியர் சோ. சந்திரசேகரம், தினகரன் பிரதம ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதன், வீரகேசரிப் பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வன், பூரீ பாதக்கல்விக் கல்லூரி கலாநிதி சிரோன்மணி இராசரத் தினம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவைப்பணிப்பாளர் எஸ் சிவராசா, கொழும்பு விவேகானந்தக் க ல் லூ ரி அதிபர் எஸ். தில்லைநாதன் ஆகியவர்கள் ஆய்வுரைகள் வழங்கினர். பிரபல அறங்காவலர் தி. செந்தில் வேல்
---- 2 --س--

அவர்கள் முதற் பிரதியையும் கொழும்பு தெற்கு ரோட் டரிக் கிளப் தலைவர் வி. அரியரத்தினம் சிறப்புப் பிரதி யும் பெற்றனர்.
8. நூலகப்பணி:-
தமிழ் மொழி ஆர்வலர்க்கும் ஆய்வாளர்க்கும் உதவுதற்காக அமைந்த இச்சங்க நூலகம் இந்நாட்டில் முதன்மையான தமிழ் மொழி நூலகங்களுள் ஒன்றாக உள்ளது. பல துறைசார்ந்த தமிழ்மொழி நூல்களொடு பயனுள்ள வடமொழி ஆங்கில நூல்களும் உள்ளன. இன்று இங்குள்ள 12,000 நூல்களுள் அரைப்பங்கு நூல்கள் தமிழ்நாடு அரசு அன்பளிப்பாக வழங் கியவை. ஏனையவைகளுள் ஒருபகுதி இந்நாட்டு அறிஞர்களால் வழங்கப்பெற்றவை. ஏனையவை சங்கத்தின் நிதியால் பெறப் பெற்றவை.
இந்நூலகத்தில் அரிய நூல்கள் பல உள்ளன. இந்நூலகம் இன்று சங்கநிலையத்தில் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. நாள்தோறும் நூலகத்து இருவர் பணிபுரிகிறார்கள் இவ்வாண்டு நூலகத்திற்கு நூல் வழங்கியவர் பெயர்கள் இவ் அறிக்கையின் பின் இணைப்பில் உள்ளன.
நூல்களை நூலகத்தில் இருந்து பயன்படுத்துதற்கும் எடுத்துச் சென்று பயன்படுத்துதற்கும் உரிய ஒழு ங் கு கள் செய்யப் பெற்றுள்ளன. பல்துறை சார்ந்த ஆர்வலர்களும் ஆய்வாளர்க ளும் நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
ஆண்டு முற்பகுதியில் பொதுச்செயலாளர் தமிழ்நாடு சென்று உதவியதனாற் தமிழ் நாடு அரசு பொது நூலகத்துறையின் 1200 நூல்களும் திருவாவடுதுறை ஆதீனத்து 40 நூல் களும் உலகத் தமிழ் இஸ்லாமிய ஐந்தாம் மகாநாட்டு 30 நூல் களும் இவ்வாண்டு பிற்பகுதியில் நூலகத்திற்கு வந்து சேர்ந்தன. தமிழ்நாடு அரசு நூல்களைத் துறைமுகத்தில் இருந்து இந் நூலகத்திற்கு வருவதற்குப் பயன்கருதாது உதவிய துணைத் தலைவர் திரு. வ. மு. தியாக ராசா அவர்களும் அவர் பணிபுரி யும் நலீம் ஹாஜியார் நிறுவன ஏசென்சியாளரும் பாராட்டிற்கு உரியர் ஆவர். இந்நூல்களுட் பெரும்பாலானவை ஆய்வுப் பணிகளுக்குப் பயன் தரும் பல்கலைக்கழகங்களதும் பதிப்பகங் களதும் நூல்களாகும். ܫ
- 3 -

Page 4
நூலகவியலறிஞர் திரு. செல்வராசா அவர்களின் வழிகாட்டலின்
10
படி நூலக நூல்களின் நூல் அட்டைகள் பயன் தரும் வகையில் ஒழுங்கு செய்யப் பெறுகின்றன, இதற்காகத் தட்டெழுத்தாளர் இருவர் பணிபுரிகின்றனர். இவ்வேலை நிறைவுற்றதும் நூலகப் பணி சிறப்பாக அமையும்.
பத்திரிகைப்படிப்பகம்:-
இஃது இப்போது சங்கநூலகத்தில் இருந்துவருகிறது. இலங்கை யில் வெளிவரும் தமிழ் - ஆங்கில நாளிதழ்களும், இலங்கையிலும் தமிழகத்திலும் வெளிவரும் பிரகான தமிழ் வார - மாத சஞ்சிகை களும், வெளிநாட்டுத் தூதுவரகங்களும் உலகச்சூழற்காப்பு நிறுவனங்களும் உதவும் ஆங்கில வெளியீகளும் இப்படிப்பகத்தில் உள்ளன, இவற்றுற்சில, இச்சங்கத்தின் நிதி உதவியால் வருவன. ஏனையவை அறிஞர் சிலரதும் தூதுவரகங்கள் - இந்நாட்டுப் பொது அமைப்புக்கள் - உலகப்பொது அமைப்புகள் உதவியாற் கிடைப்பன.
இப்படிப்பகத்திற்குத் தனியான இடவசதி விரைவில் ஒழுங்கு செய்யப் பெறும். நூலகத்திற்கும் சங்க வகுப்புகளுக்கும் வருபவர்கள் இப்படிப்பகத்தைப் பயன்படுத்துகின்றனர். தனி யான இடவாய்ப்பு அமைந்தால் இப்படிப்பகம் மிகப்பயன் உள்ளதாக உதவும். இப்படிப்பகச் சஞ்சிகைகளதும் உதவுபவர் களதும் பெயர் த ஸ் இவ்அறிக்கையின் பின் இணைப்பாக ୬-ଙtଗt ଜot.
கல்விப்பணி
இளம் வயதினரதும் தொழில்புரி நிலையினரதும் அறிவுவளர்ச்சி தொழில்வாய்ப்பு ஆகியவற்றிற்காக விரிவுரைகளும் கருத்தரங்கு களும் வகுப்புகளும் சங்கநிலையத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நாட்டில் சிறந்த கல்வி நிலையமாகப் பணியாற்றி வருகிறது. நாட்டின் பல பிரதேசத்தவர், பல்வேறு சமுகத்தவர் இங்கு கல்வி கற்கின்றனர். சிறந்த அறிஞர்கள் விரிவுரையாளராக உள்ளனர். பலர் இங்கு கற்றுப் பயன்பெற்றுள்ளனர். பல்துறைப் பாடங்களொடு பல் துறைமொழிகளும் இங்கு கற்பிக்கப் பெறுகின் றன. இலண்டன் பொறியியற் கழகம் ஒன்றின் தேர்வுக்கு அதன் அனுமதி பெற்ற அமைப்பாக இந்நிலையம் பெரிதும் உதவி வருகிறது. இக்கல்விப்பணி சமுகப்பணியாகப் பல ஆண் டு
, འཐབ་4 །

காலமாக இடம் பெற்று வருகி றது. இப்பணியினால் தமிழ் மொழிக்கும் இச்சங்கத்தின் பல்துறைப்பணிக்கும் SFpůLÜ Lu Lu னும் உள்ளவாகின்றன.
11. கலைமகள் விழா
கல்விக் கடவுள் கலைமகளுக்கு ஆண்டு தோறும் sßarqph 6flypnt இவ்வாண்டு 1991-10-17 ஆம் நாள் இந்நிலையத்தில் கல்விச் செயலாளரின் பங்களிப்பினால் நிகழ்ந்தது. சங்கநிலைய விரிவு ரையாளர் திரு. இ.வீ.பா. சர்மா அவர்கள் கலைமகள் பூசையை யும் வழிபாட்டையும் நிறைவேற்றினார். சங்கவகுப்பு மாணவி யர் கலைமகள் துதிப்பாடல்களைப் பாடல்களைப் படித்தனர். சங்க உறுப்பினர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் இந் நிகழ்ச்சியிற் பங்கு பற்றினர்.
12. புதிய மாடிக்கட்டிட நிறைவு
直3。
சங்கநிலைய முற்பக்க மூன்றாவது மாடியின் அமைப்பு வேலை இவ்வாண்டு தெடங்கப்பெற்று நிறைவு பெற்றது. சங்கக்கட்டிடத் திற்காக வங்கிகளில் இருந்த வைப்புநிதி இதற்குப்பயன்படுத்தப் பெற்றுள்ளது. ஆறு இலட்ச + பா வரை செலவாகியது. இதன் தொடக்க நாள் நிகழ்ச்சி 1991-10-17 ஆம் நாள் துணைத் தலைவர் திரு. வ. மு. தியாகராசா அவர்களது தலைமையில் துணைச் செயலாளர், கல்விச் செயலாளர், நூலகச் செயலாளர் உதவியொடு நிகழ்ந்தது. சங்க ஆட்சிக்குழுவினர்களும் சங்கக் கல்வி நிலைய விரிவுரையாளர்களும் இதிற் பங்குபற்றினர்.
விபுலாநந்த அடிகள் நூற்றாண்டு
செந்தமிழ்க் கருவூலமான சிலப்பதிகாரம் தந்த இளங்கோ அடிகளைப்போலத் துறவுநிலை நின்று முத்தமிழுக்கும் வியத்தகு பணி புரிந்து தமிழுலகிற்கு வழிகாட்டிய இந்நாட்டவரான விபுலாநந்த அடிகளாருக்குத் தமிழுலகின் பல பகுதிகளிலும் பல்வேறு அமைப்புக்கள் சிறப்பாக விழாக்கள் எடுத் தன. இச்சங்கம் அடிகளார் நூற்றாண்டுக்காகத் தன் பங்களிப்பைப் பயன்தரு வகையில் பல்வேறு வகைகளிற் சிறப்பாக ஒழுங்கு களைச் செய்தது.
- 5 -

Page 5
அடிகளார்.முத்தமிழுக்கும் பணியாற்றினார் ஆதலின் இவ்வாண்டு இச்சங்கத் தமிழ்த் தேர்வுகள் இயல், இசை, நாடகம் ஆகிய முத்துறைகளிலும் ஒழுங்கு செய்யப்பெற்றன. இளம்வயதினர்க் காக நாவன்மை - தமிழ்த்திறன் - கவிதை முதனிலை - இசை - நாடகம் ஆகிய தேர்வுகளும் வயதுவந்தவர்களுக்காக ஆய்வுக் கட்டுரைகள், நூலாக்கங்கள் ஆகியதேர்வுகளும் ஒழுங்குசெய்யப் பெற்றன. · . ' : 2 : , : ; ; , : , ,
அனைத்துத் தேர்வுகளும் அடிகளார் வரலாறு பணிகள், பாடல்கள், சிந்தனைகள் தொடர்பானவையாக இரு ந் த ன. தமிழ்த்திறன் - கவிதை முதனிலைத் தேர்வுகள் 3 ம ணி நேர அளவுள்ள எழுத்துத் தேர்வுகள், பல கல்வி நிலையங்கள் இத் தேர்வுகளிற் பங்குபற்றின.
இத்தேர்வுகள் அனைத்தும் பிரதேச வகையாக முதலில் நிகழ்ந் தன. அவற்றில் தெரிவு பெற்றவர்கள் நிறைநில்ையிற் பங்குபற் றினர். திருகோணமலை, மட்டக்களப்பு, மலையகம், வவுனியா, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் பிரதேசத் தேர்வுகள் நிகழ்ந் தன, பூறி சண்முக வித்தியாலயம், மட்டுநகர் இந்துக்கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், நாவலப்பிட்டி கதிரேசன் குமார ம்கா வித்தியாலயம், தமிழ்ச்சங்க நிலையம் என்பன பிரதேசத்தேர்வு நிலையங்களாக உதவின.
வ்டக்குக் கிழக்கு மாகாண சபைக் கல்வி கலாச்சார அமைச்சு உதவிச்செயலாளர் திரு. தில்லை நடராசா, மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைத் தலைவர் திரு. ம. சிவநேசராசா, பேராதனைப் பல்கலைக் கழகப் பொறியியற்றுறை விரிவுரை யாளர் திரு. வே.சண்முகரத்தினம், வவுனியா நீர்ப்பாசனப்பகுதி உத்தியோகத்தர் திரு. சி. வாமதேவன், பொதுச் செயலாளர் ஆகியவர்கள் இத்தேர்வுகளின் பிரதேசப் பொறுப்பாளர்களாக உதவினர். இசைத்துறை, நாடகத் துறைத் தேர்வு களு க் கு இலங்கை வானொலிப் பகுதி அறிஞர்கள் எஸ். பாலச்சந்திரன்" சர்வானந்தா மயில்வாகனம், கே. பரராசசிங்கம் ஆகியவர்கள் உதவினர்.
அடிகளார் நூற்றாண்டுக்காக நூல்வெளியிடவும் சங்கநிலையத் தில் முத்தமிழ் விழா நடத்தவும் சங்கம் ஒழுங்குகளை மேற் கொண்டுள்ளது.
ー6ー

13. கல்விப் புலமைப் பரிசில்
கல்வித்திறமையும் பொருள் வாய்ப்பு இன்மையுமான மாணவர் களுக்கு நிதி உதவி ஆண்டு தோறும் வழங்கும் சங்கக் கல்விப் புலமைத் திட்டத்தின் படி இவ்வாண்டு பின்வரும் மாணவர் களுக்கு ஆயிரம் ரூபா நி தி உ த வி க ள் வழங்கப் பெற்றன. இவற்றுள் ஒன்று கொழும்பு மஸ்கன்ஸ் நிறுவனத் தாபகர் பெரியார் எஸ். சுப்பிரமணிய்ம் நினைவுக் கல்விப்பு ல மை நிதியிலிருந்தும் ஏனையவை சங்கக்கல்வி நிதியிலிருந்தும் வழங் பெற்றவை. .
(அ) செல்வன் அன்ரனி பெர்னாண்டோ ஜெயகாந்த்
நஸ்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயம், சிலாபம்
(ஆ) செல்வன் பொ. பூரீகாந்தன்,
இந்து கனிட்ட மகாவித்தியாலயம், குருநாகல்,
(இ) செல்வன் சு. செல்வகுமார்
கனிட்ட மகாவித்தியாலயம் கிளிநொச்சி
(ஈ) செல்வி தட்சிணகெளரி சுப்பிரமணியம்
ஆனைப்பந்தி இ. கி. ச. மகளிர் வித்தியால்யம்
(உ) செல்வி சுகிர்தலோசனி த.
பூரீ சண்முக வித்தியாலயம், திருகோணமலை,
14. முந்தல் நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
இந்நாட்டில் உள்ள ஏனைய தாபனங்களின் பணிகளுக்கு உதவுதல் சங்கத்தின் பணிகளுள் ஒன்று. இதற்கு இணங்க முந்தல் கலைமகள் நூலகத்தின் விண்ணப்பத்தை ஏற்று இந் நூலகத்திற்கு 54 நூல்களை இச்சங்கம் இவ்வாண்டு அன்பளிப் பாக வழங்கியது. அதன் தலைவர் ஏ. கனகரத்தினம் அவர்கள் பொதுச் செயலாளரிடம் பெற்றுக்கொண்டார்.
15. பேராசிரியர் சு. வித்தியானந்தன் பிறந்தநாள் விழா
யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அமரர் சு. வித்தியானந்தன் அவர்களது பிறந்த நாள் விழா 18-5-1991 ஆம் நாள் சங்க நிலையத்தில் சங்கத் தலைவர் தலைமையில் நி க ழ் ந் த து. பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சி. தில்லைநாதன், கொழும்புப் பல்கலைக்கழகப்
- 7 -

Page 6
பேராசிரியர் சோ.சந்திரசேகரம், இசுலாமிய கலாசார இராசாங்க
அமைச்சுச் செயலாளர் எம். எம். பமீல், கல்கின்னத் தமிழ் மன்றத் தன்லவர் அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா ஆகியவர்கள் உரைநிகழ்த்தினர். புலவர் த. கனகரத்தினம் அவர்கள் கவிதை மலர் வழங்கினார்.
16. சங்கமுன்னாட் தலைவர் நா. மாணிக்கஇட்ைக்காடர் நினைவஞ்சலி
7.
இச் சங்க த் தி ன் முன்னாட் தலைவரும் ஐ. நா. சபையின் இணைப்பு நிறுவனத்திற் பணியாற்றியவரும் ஆகிய நா. மாணிக்க இடைக்காடர் அவர்கள் அமரத்துவம் பெற்றார். தலைவர் சங்கத்தின் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் மறைந்த தலைவரின் தகனக்கிரியையின் போது பங்கு பற்றினார். இப்பெரியாருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் 8-12-1991 இச்சங்க நிலையத்தில் சங்கத்தலைவர் தலைமையில் நிகழ்ந்தது. அமரரது மனைவியாரும் பிள்ளைகளும் இந்நிகழ்ச்சிக்கு வருகைதந்தனர்.
இந்துசமய கலாசார இரசாங்க அமைச்சர் மாண்புமிகு பீ. பீ. தேவராஜ் அவர்கள் இப்பெரியாரின் உருவப் படத்தைச் சங்க நிலையத்தில் திரைநீக்கம் செய்தார். கொழும்பு இராமகிருட்ண மிசன் தலைவர் சுவாமி ஆத்மகனானந்தா, கொழும்பு இந்து கல்விச்சபைச் செயலாளர் டாக்டர் க. வேலாயுதபிள்ளை, இலங்கை இந்துமாமன்றச் செயலாளர் க, நீலகண்டன், தினகரன் பிரதம ஆசிரியர் இ. சிவகுருநாதன், வீரகேசரிப் பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வன் ஆகியவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினர். புலவர் த. கனகரத்தினம், புலவர் இரா, மயில் வாகனம் ஆகிய இருவரும் கவிதை அஞ்சலிகளை வழங்கினர்.
க. கைலாசபதி நினைவு ஆய்வரங்கு
பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு ஆய்வரங்கு தேசீயக்கலை இலக்கியப் பேரவை ஆதரவில் 7-12-1991 ஆம் நாள் சங்கநிலையத்தில் நிகழ்ந்தது, ச ங் கம் இதற்கு ஆதரவு வழங்கியது. பேராசிரியர் சி. தில்லைநாதன், வீரகேசரிப் பிரதம ஆசிரியர் ஆ. சிவனேசச்செல்வன், வடகிழக்கு மாகாணசபைப் பிரதிச்செயலாளர் சி. பற்குணம், தேசீய கலை இலக்கியப்பேரவைச் செயலாளர் என். இரவீந்திரன் ஆகியவர் கள் உரை நிகழ்த்தினர். பேரசிரியரின் மனைவியும் மகளும் வருகைதந்து பங்கு பற்றினர்.
- 8 -

18. தனியார் நூல் வெளியீட்டு விழாக்கள்
(அ) பகவத் கீதை தமிழாக்க நூல் வெளியீட்டுவிழா
(ஆ)
சொல்லாக்கத்துறை அறிஞரும் சங்க முன்னாட் துணைத் தலைவருள் ஒருவரும் ஆகிய இ. இரத்தினம் அவர்கள் தமிழாக்கம் செய்ததும் அவரது மனைவி ஞானம் அவர்கள் பதிப்பித்ததுமான 'பகவத் கீதை' நூல் வெவயிட்டு விழா 22-6-1991 ஆம் நாள் சங்க நிலையத்திற் சங்கத் தலைவர் தலைமையில் நிகழ்ந்தது. இராமகிருட்ண மிசன் தலைவர் சுவாமி ஆத்மகனானந்தா, திருநெறிமன்றத் தலைவர் ஆ. குணநாயகம், பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன், அரச கருமமொழித் திணைக்கள உதவி ஆணையர் வ. சிவ ரா ச கிங் கம், திருமதி ஞான ம் இரத்தினம் ஆகியவர்கள் உரை நிகழ்த் தினர். கல்கி நிறுவன உரிமையாளர் திரு. சி. சின்னத்துரை அவர்கள் முதற் பிரதியைப் பெற்றார்.
நிர்வாண நூல் வெளியீட்டு விழா
வடகிழக்கு மாகாண சபைக் கல் வி கலாசார அமைச்சு உதவிச்செயலாளர் உடுவை தில்லைநடராசா அவர்கள் எழுதிய நிர்வாணம் என்னும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா 4-12-1992 ஆம் நாள் சங்க நிலையத்திற் சங்கத் தலைவ்ர் தலைமையில் சங்க ஆதரவில் நிகழ்ந்தது. இந்து சமய கலாசார இராசாங்க அமைச்சர் மாண்புமிகு பீ. பீ. தேவராஜ் அவர்கள் பிரதம அதிதியாகப் பங்கு பற்றினார். சட்டத்தரணி திரு. நீலகண்டன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். வரணியூரான் எஸ். எஸ். கணேசபிள்ளை, திறனாய்வாளர் கே, எஸ். சிவகுமாரன்,
வீர கே ச ரி ப் பிரதம ஆசிரியர் ஆ. சிவனேசச்செல்வன்,
தினகரன் பிரதம ஆசிரியர் இ. சிவகுருநாதன், இலங்கை வானொலித் தமிழ்த்துறைப் பணிப்பாளர் திரு. எஸ். சிவராசா, வானொலி நிருவாகப் பணிப்பாளர் திரு. வீ. ஏ. திருஞானசுந்தரம் ஆகியவர்கள் உரை நிகழ்த் தினர், வடகிழக்கு மா காண சபை ப் பி ர த ம செ ய லா ள ர் திரு. சொ. கணேசநாதன் அவர்கள் முதற்பிரதி பெற்றார். வானொலிக் கலைஞர் கே, எஸ். பாலச்சந்திரன் அவர்கள் பல்சுவைக் கலை நிகழ்ச்சியை வழங்கினார்.
- 9 -

Page 7
(இ) "சிவகாமியம்மை தமிழ் நூல் வெளியீட்டு விழா
தமிழவேள் பதிப்பித்த சிவகாமியம்மை தமிழ்" நூல் வெளியீட்டு விழா சங்கத் தலைவர் தலைமையில்23-8-1991 ஆம் நாள் நிகழ்ந்தது. பேராதனைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. தில்லைநாதன், கொழும்பு இந்துக்கல்லூரி அதிபர் சி. பா. சர்மா, வீரகேசரிப் பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வன், தி ன க ர ன் பிரதம ஆசிரியர் இ. சிவகுருநாதன் அரசகரும, மொழித் திணைக்கள உதவி ஆணையாளர் வ. சிவராசசிங்கம் ஆகியவர்கள் உரை நிகழ்த்தினர், கல்கி நிறுவன உரிமையாளர் சி. சின்னத் துரை, ஈசுவரன் பிரதேர்ஸ் நிறுவனத்து ரி. வீரவாகு, தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் வ, மு தியாகராசா, சுங்கமுன்னாள் உதவி ஆணையாளர் கே. கே. சுப்பிர மணியம், பாட்டா நிறுவனத்து எஸ். சிவநாதன் ஆகிய வர்கள் முதற் பிரதிகளைப் பெற்றனர்,
19. நூல்களின் அன்பளிப்புகளினால் சங்கத்திற்கு நிதிஉதவி
(°)
(乌)
இலங்கை ஒலிபரபுக் கூட்டுத்தாபனம் - ரூபவாகினித் தமிழ்ப்பகுதிகளின் முன்னாட் பணிப்பாளர் தி ரு ம தி ஞானம் இரத்தினம் அவர்கள் தமிழ்ப் பேரறிஞரும் தமது கணவருமான இ. இரத்தினம் அவர் க ளா ல் எழுதப் பெற்றுத் தம்மாற் பதிப்பிக்கப் பெற்ற பகவத் கீதை' நூலின் 300 பிரதிகளை அன்பளிப்பாக வழங்கினார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ப் பகுதிப் பணிப்பாளராகவும், இச் சங்கத் தி ன் தலைவராகவும் இருந்த கலாநிதி க. செ. நடராசா அவர்கள் தமிழகத்திற் தாம் ப தி ப் பித் த ஈழத்துத் தமிழ் இலக்கிய வளாச்சி என்னும் நூலின் 300 பிரதிகளை இ ச் சங்க த் தி ற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்,
தம் நூல்களின் விற்பனையால் வரும் நிதியைச் சங்கத்தின் பணிகளுக்குப் பயன் படுத்தும் படி தெரிவித்துள்ளனர், இவற்றினால் வரும் நிதி சங்க நூற்பதிப்புப் பணிக்குப் பயன் படுத்தப் பெறும், இவை மிக ப் ப யன் உள்ள நூல்கள். சங்க வரலாற்றில் புதிய வழிவகையிற் சங்கத் திற்கு உதவியுள்ளனர், இவர்கள் இருவரதும் அன்ப ளிப்புகள் பெரும்பாராட்டுக்கு உரியன,
- 10 -

20
கலிபோணிய ஆங்கில அறிஞர்க்கு உதவுதல்,
உலக மொழிகள் ஆய்வில் ஈடுபட்ட கலிபோணிய ஆங்கிலரான
ஆலன் என்பவர் தமிழ் மொழி கற்கத் தமிழ்நாடு வந்தார்.
இலங்கைத் தமிழ் கற்க மதுரைப்பேராசிரியர் டாக்டர் சாம்ப சிவனார் அவர்களின் ஆற்றுப்படுத் தலைப் பெற்று இச்சங்கத் திற்கு வந்தார். அவர் இங்கு தங்கியிருந்து தமிழ்மொழி பயில அனைத்து உதவிகளையும் பொதுச்செயலாளரும் சங்க ஆசிரியர்
களும் உதவினர். ஒருமாதம் இங்கு தங்கியிருந்தார்.
21.
22.
23.
சேர். பொன் இராமநாதன் நினைவு தினம்
இலங்கைத் தமிழுக்குச் சிறப்புப்பெற்றுத் தந்தவரும் இலங்கை மக்கள் அனைவராலும் போற்றப் பெறுபவரும் ஆகிய சேர். பொன். இராமநாதன் நினைவு தினம் கொழும்பு விவேகானந்த சபை ஆதரவில் நிகழ்ந்தது. பழைய பாராளுமன்றப் பக்கலில் இந்துசமய கலாசார இராசாங்க அமைச்சர், மாநகர சபைமேயர், உதவி மேயர் ஆகியவர்களும் பல தாபனங்களின் உறுப்பினர்
களும் பங்கு பற்றி அவரது சிலைக்கு மாலை அணிந்தனர்.
இச் சங்கச் சார்பில் தலைவர் திரு. செ. குணரத்திணம் அவர்கள் மாலை அணிந்தார்.
இலங்கை நூல்களுக்கு உதவுதல்
இலங்கையில் வெளியாகும் நூல்களுக்கு ஆதரவு வழங் குதல் வேண்டும் என்னும் கொள்கைக்கு இணங்க இலங்கையில் வெளி யாகும் நூல்களில் 5 - 10 நூல்களை இச்சங்கம் விலையாகப் பெற்று வருகிறது. விலையாகப் பெறும் நூல்கள் சங்கநூலகத் திற்கும் சங்கத்தமிழ்த் தேர்வுப் பரிசில்களுக்கும் விலையாகப் பெறுபவர்களுக்கும் உதவுகின்றன. இந்நூல்களை விலையாகப் பெறுவதன் மூலம் இலங்கையில் நூல்களை எழுதுபவர்க்கும் நூல்களை வெளியிடுபவர்க்கும் சங்கம் ஆதரவும் ஊக்கமும் வழங்குகின்றது.
நூல் விற்பனைப் பகுதி
இலங்கை நூல்களையும் நல்ல இலக்கிய நூல்களையும் பெறு வதற்குச் சங்கம் உதவவேண்டுமெனப் பொதுவாகத் தெரிவித்த கருத்துகளுக்கு இணங்கச் சங்க வெ னி யீ ட் டு நூல்களையும் இலங்கை நூல்களையும் விலையாகப் பெறுபவர்களுக்கு உதவு
தற்காக நூல் விற்பனை அமைப்பு ஒன்று இவ் ஆண்டு சங்க

Page 8
நிலையத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது. வரும் ஆண்டுகளில் இவ் அமைப்பின் பணி விரிவாக்கப் பெறும். நல்ல இலக்கிய நூல்களை இங்கு பெறுதற்கும், வழிவகை செய்யப் பெறும்.
24, சங்கநிலப் பயன்பாடும் எல்லைமதில் அமைத்தலும்.
25.
26.
சங்கநிலப் பகுதியில் பல ஆண்டுகளாக இருந்தவர் 29-4-1991 ஆம் நாள் வெளியேறியதைத் தொடர்ந்து சங்கப்பிற் பகுதி நிலம் நன்கு சுத்தம் செய்யப் பெற்றதொடு உயர்ந்த எல்லை மதிலும் அமைக்கப் பெற்றுள்ளது. சங்கப்பணிகளுக்கு இந்நிலம் பயன்படுத்தப்பெறுகின்றது. சங்கத் தமிழ் த் தேர்வுகளிற் பங்குபற்றுதற்கு வந்த மாணவர்கள் இப் பகுதியைப் பயன்படுத் தக்கூடியதாக இருந்தது.
இரத்மலானை இந்துக்கல்லூரி
நாட்டின் சிறந்த கல்வி நிலையமாக விளங்கிய இரத்துமலானை இந்துக்கல்லூரி எதிர்பாரா வகையில் 1983 ஆம் ஆண்டு ஏற் பட்ட அமைதியற்ற நிலையினாற் பெரிதும் பாதிப்பு உற்றது, மாணவர்களதும் ஆசிரியர்களதும் தொகை மிகக்குறைவுற்றது. மு த லி ல் இதன் அயலில் உள்ள கந்தா வளை அர சி ன ர் வித்தியாலயத்திலும் பின்பு தெகிவளை அரசினர் வித்தியாலயத் திலும் நடைபெற்றது.
இந்த இடர்ப்பாடான நிலையில் இ க் கல் லூ ரி அதிபர் ப் பொறுப்பை ஏற்ற வி, வைத்தியநாதர் இக்கல்லூரி கைவிடப் படாமற் பாதுகாத்ததொடு இக் கல்லூரியை மீளஅமைத்தற் காகத் தளராது பல வ ைக க ளி ற் தொடர்ந்து உறுதியொடு முயற்சி செய்துவந்தார், இடர்ப்பாடான நிலையில் இக்கல்லூரி அபிவிருத்திச் சபைக்கூட்டங்கள் நடைபெறுவதற்கு இச்சங்க நிலையம் உதவியது. இ வ ரி ன் முயற்சி இன்று நல்ல பயன் தந்துள்ளது. இக்கல்லூரி மீள அமைவதற்கு உதவிய அனை வருக்கும் அதிமாண்புமிகு சனாதிபதி அவர்களுக்கும் இச்சங்கம் பெரும் பாரட்டைத் தெரிவிக்கிறது.
உலகச் சூழற்காப்பு நிறுவனத் தொடர்பு
உலகச்சூழற்காப்பு நிறுவனத்தின் தல்ைமையகமும் அதன் கிளை நிலையங்களும் இத்தொடர்பினால் உலகவங்கியும் தம் அரிய வெளியீடுகளையும் செயற்திட்டங்களையும் அனுப் பி உதவுகின்றன. தங்கள் உலக - பிரதேச - கருத்தரங்குகளுக்கும்
- 12 - .

மகாநாடுகளுக்கும் அழைப்புகளை அனுப்புகின்றன. கட்டண உயர்வுகளினால் இவற்றிற் பங்குபற்றவில்லை. கெளரவ உறுப் பினராக இருந்து உதவி வருகிறது. சிறியநாடுகளுக்குக்கொடுத்த கடன்களைப் பெரிய நாடுகள் மீளப்பெறாமல் விடவேண்டும் எனவும் தீமைதரும் செயற்கைப்பொருள்கள் செயற்கை உரங் கள் ஆகியவற்றின் பயன் பாட்டிற்கு உலகநாடுகள் ஆதரவு வழங்கலாகாது எனவும் இச்சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது.
27. க. பொ. த. உயர்தரத் தமிழ் மொழிப் பாட்த்திட்டம்
க. பொ. த. உயர்தரத் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தைத் திருத்தியமைத்தற்கான அறிவுரைக் குழுவிற் பங்குபற்றும்படி கல்வி அமைச்சு மொழிப் பாடநூற்பகுதிப் பணிப்பாளர் இச் சங்கத்திற்குத் தெரிவித்தார். துணைச் செயலாளரும் தமிழ் மொழிப் பாடநூற்பகுதியில் பல ஆண் டு பணியாற்றி நல் அனுபவம் உள்ளவரும் ஆகிய புலவர் திரு, த. கனகரத்தினம் அவர்கள் சங்கத்திற்காக இப்பணியை ஏற்றுச் சிறந்த க.பொ.த. உயர்தரத் தமிழ்மொழிப் பாடத்திட்டம் உருவாக உதவிசெய் துள்ளார். இச்சங்க நூலகத்தில் இருந்து நூல்களும் கொடுத்து உதவினார்.
28. சமூக - கலாசார அமைப்புகளுக்கு உதவுதல்
(அ) இந்து சமய கலாசார அலுவல்கள் இராசாங்க அமைச்சு அமைச்சில் ஒழுங்கு செய்த மகாகவி பாரதி நாள் சிறப்புரை நிகழ்ச்சிக்கு இச்சங்கத்தின் தலைவர் தலைமை வகித் துத் தலைமையுரை நிகழ்த்தி அந்நிகழ்ச்சிக்கு 2.5earntrf.
கொழும்பு வரதராச விநாயகர் ஆலயத்தில் நிகழ்ந்த விபுலாநந்த அடிகளார் விழாவில் விபுலாநந்த அடிகளார் பற்றிச் சிறப்புரை தலைவர் நிகழ்த்தினார். அச்சிறப்புரை சங்க வெளியீட்டில் இடம்பெற்றுள்ளது.
(ஆ) கோட்டே மிரி கா ன பங்களிப்பிலான அபிவிருத்திக் கழகம் கனடிய அபிவிருத்தி நிதிஉதவியொடு வெளியிட்ட "இலங்கை நாட்டார் கதைகள்” என்னும் நூல் வெளி யீட்டு நிகழ்ச்சியில் அக்கழக அழைப்பை ஏற்று இச்சங்கத் தின் துணைச்செயலாளரும் பொதுச்செயலாளரும் பங்கு பற்றி உரைநிகழ்த்திச் சிறுவர் கதை நூல்கள் மும்மொழி களிலும் வருதலின் பயனை முன்வைத்தனர்.
- 13 -

Page 9
29. தமிழ்நாடு பொது நூலகத்துறை
தமிழ்நாடு பொது நூலகத் துறை பயன்தரும் வகையில் நூலக வளர்ச்சித்திட்டங்களை வகுத்து மாவட்டங்களிலும் ஊர்களி லும் நூலகங்களை நிறுவி நல்ல பணி செய்து வருகிறது. நூலகங் கள் அமைப்பதற்கான நிலம் பெறுதற்கும் கட்டிடம் அமைப் பதற்கும் நூலகர்களை நியமித்தற்கும் நூல்களைப் பெறு தற்கும் வழிவகை செய்திருக்கிறது. நூலகங்களுக்குப் பொது நூலகத் துறை நிதி உதவி வழங்குகிறது. நூலகத் துறையைப் பின்பற்றி ஆர்வலர்கள் நிலமும் நிதியும் நூலகங்களுக்கு வழங்கு கி ன் ற ன ர், நூலகங்களை நெறிப்படுத்தவும் மேற்பார்வை செய்யவும் நூலகப்பயிற்சித்துறை உத்தியோகத்தர்கள் நியமிக் கப் பெற்றுள்ளனர். நூலகத்துறை ஆண்டுதோறும் பதிப்பகங் களில் இருந்து நூல்களை விலையாகப்பெற்று நூலகங்களுக்கு உதவுவதினால் நூல்களை எழுதுபவர்களும் வெளியிடுபவர்களும் பயன் பெறுகின்றனர். தமிழ்நாடு அரசு, பொதுநூலகத் துறைச் சட்ட த் தி ன் மூல ம் இத்துறையைத் தனி ஒரு துறையாக அமைத்து ஆண்டுதோறும் நிதி உதவுகிறது. இப்பொது நூலகத் துறைக்கு அதிக நிதி தேவையாவதினால் வள்ளல்களும் ஆர்வலர் களும் நிதி உதவுகிறார்கள். நூலகத் துறைக்கும் நூலகங்களுக்கும் நிதியும் நிலமும் வழங்குபவர்களுக்கு பொது நூலகத் துறையும் தமிழ்நாடு அரசும் விருதுகளை வழங்குகின்றன. பொதுநூலகத் துறை அனைவரதும் பாராட்டுதலைப் பெற்றுப் பெரும் வளர்ச்சி பெற்றதற்குப் பொது 'நூலகத்துற்ை*இi க்குநராகப் பொறுப் பேற்ற 'முன்ைவர் சி. பழனிவேலு அவர்களின் வ்ழிப்படுத்து தலும் முயற்சியுமே வழிவகுத் தன. ”༈ ༣ , ༣ ་་་་་་་་་་་་
&
இவ்வாண்டுத் தொடக்கத்தில் இச்சங்க் நூலகநூல்களைப் பெற் றுக்கொள்ளத் தமிழ்நாடு சென்ற இச்சங்கப்பொதுச்செயலாளர் தமிழ்நாடு பொது நூலகத் துறையின் பணிகளும் திட்டங்களும் இந்நாட்டிற்கும் பயன் உள்ளவை என் உணர்ந்து தமிழ்நாடு பொது நூலகத் துறைப் பணிகள் திட்டங்கள் பற்றிய வெளியீடு களைப் பொது நூலகத்துறை இயக்குநரிடம் பெற்று வந்து இந்து சமய கலாசார அலுவல்கள் இராசங்க அமைச்சரிடம் கொடுத்தார். نما
30. நாட்டின் அமைதியற்றநிலை
நாட்டின் அமைதியற்ற நிலை தொடர்ந்து நிலவுகிறது. இதனை யிட்டு இச்சங்கம் ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறது. நல்லிணக்

31.
32.
33.
கமும் நல்லமைதியும் வரவேண்டுமென அனைவரும் விரும்பு கின்றனர். இவைக்கான முயற்சிகளும் வழிபாடுகளும் நடை பெறுகின்றன. இவைக்காக இச்சங்கம் இறையருளை வேண்டு கின்றது. Y -
நினைவு கூரல்
இவ்வாண்டில் உயிர் நீத்த சங்க உறுப்பினர்க்கும் பெரியார் களுக்கும் இச்சங்க ஆட்சிக்குழு அஞ்சலி செய்து ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றது.
நன்றியுரை
இச்சங்கத்திக்கு நிதிகள், நூல்கள், பொருள்கள், சஞ்சிகைகள் ஆலோசனைகள் ஆகியவைகளை வழங்கியவர்களுக்கும் சங்கப் பணிகளுக்கு உதவியவர்களுக்கும் தொலைத்தொடர்புச் சாதனங் களுக்கும் இறைவனுக்கும் இச்சங்கம் பெரும் நன்றியறிதலைத் தெரிவிக்கின்றது.
நிறைவுரை
உலகிற் பழமையும் மிக்க சிறப்பும் பெற்ற பண்டைத்தமிழ்ச் சங்க வழியில் அமைந்து இந்நாட்டிலும் உலகிலும் தமிழ்மொழி இலக்கியம் பண்பாடு கலை ஆகியவற்றின் வளர்ச்சிகளுக்காக ஐம்பது ஆண்டுகள் இச்சங்கம் பல்வகைப் பணிகளை இறையரு
ளாலும் பெரியார்களின் வழி காட்டல்களினாலும் வள்ளல்
களின் நிதி உதவியாலும் செய்து வந்துள்ளது.
இச்சங்கம் இதுவரை செய்த பணிகள் மிகச் சிறியவை: செய்ய வேண்டுவன மிகப்பெரியவை. இந்நாட்டிலும் உலகிலும் மிகப் பெரிய பயனுள்ள சிறந்த தாபனமாக உலகு உள்ளளவும் நிலை பெறுதல் வேண்டும். இதற்கு இறையருளும் அனைவரதும் ஆ த ரவு ம் வாழ்த்துதலும் நல்லறிஞர்களது வழிகாட்டலும் வள்ளல்களின் உதவிகளும் வேண்டுவன ஆகும்.
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
- 15 -

Page 10
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பணி போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்
"சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கச் சுடர்கஇவ் வையக மே'
(Loirt 356 Lurrpt Sulum ri)
வளர்க சங்கப்பணிகள். உயர்க தமிழ்மொழி.
ஓங்குக உலகமெல்லாம்.
செ. குணரத்தினம் தமிழவேள் க. இ. க. கந்தசுவாமி
தலைவர் பொதுச்செயலாளர்
கொழும்புத் தமிழ்ச்சங்கம்
சங்க அகம்
7, 57 ஆம் ஒழுங்கை,
(உருத்திரா மாவத்தை வழி)
கொழும்பு 6. தொலைபேசி:- 5 837 59
J - 5 - 1992
- 16 سس۔

கொழும்புத் தமிழ்ச் சங்கம் (சபை வரைவுளது)
இல, 7, 57 ஆம் ஒழுங்கை கொழும்பு-6. ஐந்தொகைக் கணக்கு - 1991 திசெம்பர் 31
நிரந்தர இருப்பு - குறிப்பு 1 முதலீடு நிரந்தர வைப்புகளில் - குறிப்பு 2
நடைமுறை இருப்புக்கள் மின்சக்தி வைப்பு 19000 விற்பனை நூல்களின் இருப்பு 92,000.50 இறைவரிக் கொடுப்பனவுகள் 35,882.02 வங்கி இருப்பு 724,748 03
252,820.55 நடைமுறைச் செலவினக் குறைப்பு:
நூலகக் கட்டணம் 800 00 கணக்காய்வுக் கட்டணம் 2,500.00 3,300,00
எஞ்சிய நடைமுறை இருப்பு எஞ்சிய பணித்துறை இருப்பு
நிதி நிலை
திரட்டிய நிதி
கடந்த ஆண்டு ஐந்தொகைப்படி 1,321,223.7
கூட்டு: செலவினம் மேலதிக வருமானம் 325,020.55
பரிசில் நிதி"
கடந்த ஆண்டின்படி இருப்பு 127,223.28
கூட்டு: பெற்ற நன்கொடை 15,000.00
42,223.28
குறை; பரிசில் செலவு 12,100.00
பதிப்பு நிதி
கடத்த ஐந்தொகைப்படி
- 17 -
469,272.05 802, 798.28
249,520.55
1,826,367,00
1 ,ᏮᏎᏮ,2Ꮞ3.72
130,123,28
56,000.00 5,826, 367. oo

Page 11
கரியானதென உறுதிப்படுத்தப்படுகிறது
செ குணரத்தினம் பொ. இராசசுந்தரம் க. இ. க. கந்தசுவாமி
தலைவர் பொருளாளர் பொதுச் செயலாளர்ல்
மேற்காட்டிய 31 திசெம்பர் 1991 ஐந்தொகைக் கணக்கும் இத னொடு உள்ள வரவு செலவுக் கணக்கும் சரியானவை என வும் தரப்பெற்ற பேரேடு, காசேடு, தகவல் ஆகியவற்றின்படி தயாரிக் கப்பெற்றன எனவும் உறுதிப்படுத்துகின்றேன்.
. டபிள்யூ. எஸ். கிருபாரத்தினம் கொழும்பு (பட்டயக் கணக்காளர்) திகதி : 9 - 6 - 1992 ஜி. இராசதுரை அன். கோ.
குறிப்பு: இச்சங்கத் தொடக்க ஆண்டின்படி 1991- ஆம் ஆண்டு இச்சங்கம் ஐம்பது ஆண்டு நிறைவு பெறுகிறது, கடந்தகால ஆண்டு அறிக்கையின்படி ஒராண்டு குறைவாக க் குறிப்பிடப் பெற்று வந்து ளது. யாதோ காரணத்தால் இடையில் ஒராண்டு விடுபெற்றுள்ளது. இதனை நிறைவு செய்து இவ்வாண்டு 49 - 50 ஆண்டறிக்கை ஆக வெளியிட ஆட்சிக்குழு தீர்மானித்தது,
- 18 -

கொழும்புத் தமிழ்ச் சங்கம்(சபை வரைவுள்ளது)
இல, 7, 57 ஆம் ஒழுங்கை, கொழும்பு - 6. வரவு செலவுக் கணக்கு-1991 ஆம் ஆண்டு
உறுப்புரிமைக் கட்டணம் ஆயுள் உறுப்புரிமை சாதாரண உறுப்புரிமை
நன்கொடைகள் கட்டிட நிதி
கல்வி நிதி : நூற்பதிப்பு நிதி நூலக உறுப்புரிமை நூல்களின் விற்பனை வரவு aučitą. வருமானம் நிரந்தர வைப்பு சேமிப்புக் கணக்கு பல்லின வருமானம்
செலவுகள் அலுவலர்கள் செலவுப்படி இறையும் வரியும் மின் சக்தி தொலைபேசி
நீர் வரி
காப்புறுதி . . அலுவலகச் செலவுக்ள் கூட்டச் செலவுகள் அச்சகச் செலவுகள் காகிதாதிகள் நூலகச் செலவுகள் தபாற் செல்வு செய்தித்தாள்கள் சஞ்சிகைகள் காப்புப் பேழை பிரயாணம் கணக்காய்வும் பிறவும் கட்டிடத் திருத்தங்கள் நூல் அன்பளிப்பு வங்கிக் கட்டணம் தேய்மானம்
செலவிலும் மேலதிக ஆண்டுவருமானம்
300 1,00 24.25.00
276,900.00 22,275.00 26,602,00 4,300 00
11 17 ,66 Ꭰ.86 ; 6, 19764
35, 100 00 -91 i.93 9 967.20 2.02 7.95 6,57Ꮾ . 8 7 1,002, 00 19,030.15
9,789 50
ί86 71.00 .
I 270,30 3,065.00 2,837.60 6, 158,50
'' 368. 50) ·
'1, 200 00. 4,000.00 8,220.75 1,360.00 402.50
23,01 6.00
426。00
ο 77.00 9,764.00
123,859.50 859.50
469,987.50
144,966.95
- 19 -
25.020。55

Page 12
@æTOųúbliż. Þıôự ở giả sử (sau amæra árats)
@ow. 7, 57 osób odpůsons,கொழும்பு - 6.
1991 @@sibuń 31 opląsųjį p ≡n@#கணக்குகளுக்குக் குறிப்புகள்
01. நிரந்தர இருப்புகள்
|ffov@pů šlo q l-gplb புதிய கட்டிடம் மின் உபகரணங்கள் 

Page 13
நூல்களை அன்பளிப்பாக வழங்கியவர்கள் 1991
பெயர் நூல்களின் எண்ணிக்கை
திருமதி விமலா குலசிங்கம் கொழும் 13 - 4
திரு. பொ. கணநாதபிள்ளை, கொழும்பு 6 - 6 இஸ்லாமிய மாதர் ஆராய்ச்சி நிலையம் - 1 கலாநிதி க. செ. நடராசா, கனடா. - 10
திரு. செ. குணரத்தினம், தலைவர், கொழும்புத்
தமிழ்ச்சங்கம் - 95 அல்ஹாஜ் எஸ். எம். ஹனியா, இராஜகிரிய - 07 திரு. த. கனகரத்தினம், துணைச்செயலாளர் - 02 திரு. என். செல்வராசா, நூலகவியல் அறிஞர் - 02 திருமதி ஞானம் இரத்தினம், அவுஸ்திரேலியா (தமிழறிஞர் இ, இரத்தினம் அவர்களின் நூல்) - 63
தமிழறிஞர் பொ. சங்கரப்பிள்ளை நூல்கள் - 08 திரு. பொ. தருமலிங்கம், புலவர்மணியின் மகன் - 03 திரு. பீ. தம்பிமுத்து, கொழும்பு 4. - 02 நிழல் வெளியீட்டகம், கனடா. - 12 உலகவங்கி நிறுவனம், அ. ஐ. நாடு - 01 உலகச் சூழற் காப்பு நிறுவனம். - 01 கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு. - 01
அறங்காவலர் வி. ரி. வி. தெய்வநாயகம்பிள்ளை
கொழும்பு 13. - 01
திரு. எஸ். இராசரத்தினம், தெகிவளை. - 03 இந்துசமய கலாசார அமைச்சு, கொழும்பு 2 - 03 திரு. வி. என். சிவராசா, கொழும்பு 12. - 02 திரு. தில்லைநடராசா, வடகிழக்கு மாகாண
சபை - 02 அளுத்கம ஆசிரிய பயிற்சிக் கல்லூரி - 01
திரு. விசயரத்தினம், புலவர்மணியின் மகன் - 03 தமிழ்நெறிப்புரவலர் க. கனகராசா, ஜே. பீ.
யாழ்ப்பாணம் - 05
திரு. எஸ். இராசரத்தினம், கொழும்பு 4. - 01
一22一

நண்பர் கலைக்கழகம், கொழும்பு 4. - Ol
திரு. வே. சண்முகரத்தினம், விரிவுரையாளர்
பேராதனைப் பல்கலைக் கழகம். - 01
க. இ. க. கந்தசாமி, பொதுச்செயலாளர். - 03
சஞ்சிகைகள் உதவியவர்கள்
இந்திய தூதுவரகம், - India, Samoad, குமுதம்
கொழும்பு. உலகச் சூழற்காப்பு — ECOFORUM, UNEP,
ш650ћшзsѣв6іт Environтепt пеирs, One Country
திரு. செ. குணரத்தினம் - தமிழ் மாதரும், ஆனந்த
சங்கத்தலைவர் விகடன்
உலகத்தமிழ்ப் - உலகத்தமிழர் குரல்
பண்பாட்டுக்கழகம், இலங்கை. கொழும்புத் தமிழ்ச் - நல்வழி, செந்தமிழ்ச்செல்வி,
W சங்கம் இந்து கலாசாரம் கலாநிதி சங்கரப் Hinduism, International
பிள்ளை மனோகரன் அ. ஐ. நாடு தொழிலாளர் தேசீய மாவலி.
சங்கம்
ஆட்சிக்குழு 1991 காப்பாளர்:- திரு. எச். டபிள்யு. தம்பையா கியு. சி. , பேராசிரியர் த. நடராசா, பேராசிரியர் எம். எம். உவைஸ், திரு. ஆர். எம். பழனியப்பச்செட்டியார், திரு. நா. மாணிக்க இடைக்காடர், திரு. எஸ். கே. பொன்னம்பலம், திரு. பொ. அரியநாயகம், திரு. எஸ். சத்தியமூர்த்தி, திரு. சி. செந்தில் வேள், அல்ஹாஜ் எம். எஸ். ஷாஜகான், திரு. வ. ந. சிவ ராசா, திரு. த. நீதிராசா ஜே. பி. , கலாநிதி க. செ. நட ராசா, திரு. து. தருமராசா, திரு. கே. கே. சுப்பிரமணியம்
ー23ー

Page 14
தலைவர்;- திரு. செ. குணரத்தினம்
துணைத் தலைவர்கள்:- திரு. சி. ஆ. கந்தையா, திரு. வ. மு. தியாகராசா, திரு. த. நடேசுவரன், திரு. இ. சி. செந்தில் நாதன், திரு. ச. சரவணமுத்து, திரு. வ. சிவராசசிங்கம் அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா, திரு. ஆ. சிவநேசச்செல்வன், திரு. ஆ. குணநாயகம், திரு. அ. தேவதாசன், பேராசிரியர் சோ. சந்திரசேகரம்.
பொதுச் செயலாளர்- திரு. க. இ. க. கந்தசுவாமி துணைப் பொதுச் செயலாளர். திரு. த. கனகரத்தினம் பொருளாளா:- திரு. பொ. இராசசுந்தரம் துணைப் பொருளாளர் :- திரு. தி. சி. கணேசலிங்கம்
ஆட்சிக்குழு உறுப்பினர்:-
திரு. சு. பேராசிரியன், திரு. இ. பூரீஹரி, திரு. அ. மு. துரை சாமி, திரு. இரா. கருணாகரன், திரு. பொ. பரமநாதர், திரு. ஆ. வ. க. நீலகண்டன், திரு. தி. கனகலிங்கம், திரு. த. இன்பதேவராசா. திரு. இரா. மயில்வாகன் ம், திரு. க. இ. ஆறுமுகம், திரு. என், டி. பீரிஸ், டாக்டர் ஏ. ஜே. செரிபுதீன், திரு. ஆ. குகானந்தன், திரு. இ. பாலசுப்பிர மணியம், டாக்டர் குமார் வடிவேல், திரு. எஸ். பசீதரன், திரு. பொ. தருமலிங்கம், ஜனாப் ஏ. எச். எம். நெளபர், திரு. எம்” மனோகரன், திரு. சி. விபுலாநந்தா, திரு. அ. முருகேசு, திரு. சிற்றம்பலம் கந்தசாமி, திரு. தி. கணேச ராசா, திருமதி செ. திருச்சந்திரன், திரு. சி. கருணானந்த
тптағт.
உள்ளகக் கணக்காய்வாளர்- திரு. எஸ். பாலேசுவரன் பிரசித்த கணக்காய்வாளர்:- மெசர்ஸ் ஜி. இராசதுரை அன் Gassnit تھی۔ சிறப்புத்துறைச் செயலாளர்கள்;- கல்வி-திரு. சு. பேராசிரியன், உறுப்புரிமை - திரு. தி. சி. கணேசலிங்கம், நூலகம் - திரு. தி. கணேசராசா, இலக்கியம் -
- 24 -

அல்ஹாஜ் எ.ஸ் எம். ஹ்னிபா, நிலைய அமைப்பு-திரு. இ. கருணாகரன்.
ஆயுள் உறுப்பினர்கள்
திரு. கே. சி. விக்கினராசா, கொழும்பு 5. திரு. தெ. ஈசுவரன், கொழும்பு 11. திரு. எஸ். சர்வானந்தா, கொழும்பு 7.
சங்கப் புலவர் குழு
திரு. செ. குணரத்தினம், திரு. வ. கிவராசசிங்கம்,
திரு. பொ. தருமலிங்கம், திரு. த. கனகரத்தினம், திரு. டாக்டர் ஏ. ஜே. செரிபுதீன், திரு. இரா. மயில்வாகனம்
- 25 -

Page 15


Page 16
10.
11.
2
13.
14.
15.
6.
கொழும்புத் தமிழ்ச் ச
இல, 7, 57 ஆம் சங்கப் பரிசில்களும் அவற்றிற்கான
நிதி வழங்கிய
நாள்
முல்லைதீவு ஆ. கனகசபாபதி முதலியார் நினைவுப் பரிகில் 5-8-1982 மறவன் புலவு மு. கணபதிப்பிள்ளை அதிபர் பரிசில் 20-8-1982 கலாநிதி அசோகன் சங்கரப்பிள்ளை (அ.ஐ.நா.டு.) பரிசில் 8-10-1982 சங்கமுதற் தலைவர் அ. சபாரத்தினம் நினைவுப் பரிசில் 26-11-1982 சங்க்ப்புலவர் க. மதியாபரணம் நினைவுப் பரிசில் 7-7-1983 தமிழ்ப்புரவலர் பொ. அரியநாயகம் பரிசில் 31-1985-3س பேராசிரியர் க. கைல்ாசபதி நினைவுப் பரிசில் 27-5-1985 தமிழறிஞர் பொ சங்கரப்பிள்ளை நினைவுப் பரிசில் 10-7-1985 புலவர் சிவங் கருணாலயபாண்டியனார் நினைவுப் பரிசில் 19-7-1985 சைவப்பெரியார் எஸ், சிவசுப்பிரமணியம் நினைவுப் பரிசில் 3-س-11-س I9 86 சட்ட வல்லுநர் சி, அம்பல்வாணர் நினைவுப் பரிசில் 3-11-1986 முன்னாள் பா, உ, சி, கதிர்வேற்பிள்ளை நினைவுப் பரிசில் 3-11-1986
கொழும்பு மஸ்கன்ஸ் நிறுவனப் பெரியார் எஸ். சுப்பிரமணியம் நினைவுப் பரிசில் 14-7-1988 சிவத் தமிழ்ச் செல்வி பண்டிதை அப்பாக்குட்டி தங்கம்மா பரிசில் 12-7-1989 மனோன்மணி சங்கரப்பிள்ளை பரிசில் (அ.ஐ.நாடு.) 16-7-1989 செ குணரத்தினம் தல்ைவர் 1 5-7-1989
வழங்கிய
நிதி
2,000.00
1,250.00
2,500.00
2,600.00
2,500.00
25,000.00
2,500.00
з,000.00
2,500,00
5,000.00
5,000.00
5,000.00
10,000.00
5,000.00
3,000.00

ங்கம் (சபை வரைவுள்ளது) ஒழுங்கை கொழும்பு - 6.
நிரந்தரவைப்பு நிதியங்களும் - 1991
1991
1-1-1991 1991 1991 1991 31-12-1991 நிதி ni L. இறைவரி வழங்கிய மேலதிக் நிதியஇருப்பு இருப்பு பரிசில் நிதிவரவு
4,830.95 60387 120.79 750.00 - 4,564, 30
3,119.04 389.88 77.99 750.00 2,680. 93
6,005.37 750.67 150.14 450,00 6,155.90
11,395.93 1,424.49 284。92 互000。00 1 1 , 535 .50
7,558.50 944.81 88.98 550.00 m 7,764.33
43,369.42 5,421.18 1084.28 3,000.00 muas 44,706.32
3360.21 420。03 84,06 50 0.00 inwa 3,196.18
4,718.52 589.82 117.99 - dan 5,I90,3む
4,044.22 974.29 194.83 1,000.00 5,000.00 8,823.68
6,107.04 763,38 - 152.76 500.00 выдж 6,217.66
W
7, 1 07:04 888.38 177,70 500.00 nnnnnn 7,317.7፭
6,887.04 860, 88 172, 24 1,000,00 na 6,575,68
9,920.00 1,240.00 248.00 1,000.00 an 9,912.0 (
5,500.00 687.50 I37.50 500,00 time 5,550.0C
3,300.00 4 H2.50 82.50 6,000.00 MWIMMM 3,030.0 ( - 625.00 125.00 10,000.00 10,500.00 27,223.28 16,996.68 3399,68 12,100,00 15,000.00 143,720,2:

Page 17

" مسعو NN ܡܘܿܣܡܘܚܫܚܚܚܚܚܚܚܫܝܬܐ ሣ! '•• * * Rosar sww.
-
(b e-mail vud “A m», ayır . b. cavrokasi: www.
A V a 4 had was re - i. : كحنيه" حة
4ʼ M''voʻtk W^A Pts & ۶ د. م . . . پ م. به"، " . م . م. psi - 7.1 mra wi..', reas.
وی هم به سه که با همه ۴ ه
بر سر مصقه شما . نه . . . . به ۹ ها : ها
• + < r
Yo -- Yo » e asY -- ب. م . ،
v k ž4 v u " *” " ♥ ‰ ሩ
wy. 4. . . . با با . . . . . . . . .
* . . به ، ، ماه مه ۱۹ ܙ• ܝܐ . . . . . . ܙܚ . ،
di là " , ، ه. به ) ، ، ۹ سه جم
با ۷۶۹ ، ، به خا 8 م و
ww.
عیب «ماه هومبابوه. بچه ها » {{n ۹۰۰
, , , ) பூதந்தேவனார் நிலையம் w
1, ப. குளம் - முல்லைத் தீவு வீதி, மாங்குளம்

Page 18
-瓜迫肛即 |-『디나.|-si = sĩ No, o |E| − (...) 』。』 尸s!- |-|-|-! – !=
·|-|- s. - = |-= |│ │ │ │| . - |-|- : | . |--
|- ( ) |- .
- |- ( )
|- |- |-|- │ │ │ │
 
 
 
 
 
 
 

Works sits endha Street) լեյը 1Յ: