கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் பிரித்தானிய ஆட்சி

Page 1
T
இலங்கையில்
=芝
முதனு
திரு. ஜி. வமி. ெ
தமி நவாலியூர், சோ. ந.
கொழும்பு அப்போதிக்க
குமாரவிதி, கோட்டை

பிரித்தானிய פ6 יח
החLu|התחלה.
மண்டிஸ், B.A., Ph.D.
ழாக்கம்:
LUTFair, B.A. (Hons.)
|ப்பவர்;
tஸ் கம்பெனி, லிமிற்றெட்
கொழும்பு இலங்கை, 60
விலே ரூபா 375

Page 2


Page 3

இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
முதனுலாசிரியர் :
திரு. ஜி. வி. மெண்டிஸ், B.A., Ph.D.
தமிழாக்கம் : நவாலியூர் சோ. நடராசன், B.A. (Hons.)
பிரசுரிப்பவர் : கொழும்பு அப்போத்திக்கரீஸ் கம்பெனி லிமிற்றட் குமாரவீதி, கோட்டை, கொழும்பு, இலங்கை.
1960

Page 4
கொழும்பு அப்போதிக்க ரீஸ் கம்பெனி, லிமிற்றட் அச்சியந்திர சாலையிற் பதிப்பிக்கப்பெற்றது.

உள்ளடக்கம்
அத்தியாயம்
பக்கங்கள்
முதலாம் அத்தியாயம் 1-12
முகவுரை
1. புராதன காலம். 2. மத்திய காலம். 3. தற்காலப் பகுதி.
முதற் பாகம்
மத்தியகால அரசாங்கமுறையிலிருந்து தற்கால அரசாங்க முறைக்கு மாறுதல்
இரண்டாம் அத்தியாயம் • • I 5-37 س
இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றுதல் 1. கடற்கரைப் பிரதேசங்களைப் பிடித்தல். 2. கண்டிக் கெதிரா க மு த ர் போ ர் . 3. கண்டியின் வீழ்ச் சி. 4. கண்டிக்கலகம். 5. கோட்டைகளும், வீதிகளும்.
மூன்றம் அத்தியாயம் ... 38-48
நிருவாக அபிவிருத்தி 1. கிழக்கிந்தியக் கொம் பணி நிர்வாகமும் இரட்டை ஆட்சி யும். 2. அதிகாரிகளும், சிவில் சேவிஸ் உத்தியோகத் தரும். 3. நீதி பரிபாலனம்,
நான்காம் அத்தியாயம் . . 49-66
சமூகப் பொருளாதார மாற்றங்கள் (1796-1832) 1. பரோ பகா ர நடவடிக்கைகளும் சமயச் சலுகைகளும். 2. கல்வி. 3. புத்த சமயமும் இந் து சமயமும், 4. இராச காரியம் 5. விவசாயமும் வியாபாரமும்.
Ll

Page 5
1ν
அத்தியாயம் பக்கங்கள் ஐந்தாம் அத்தியாயம் 67- 80
கோல்புறுக் விசாரணைக்குழுவும் 1832-1833-ல் நடைபெற்ற அரசியல் சீர்திருத்தங்களும் 1. அரசியல் விசாரணை, 2. வியாபாரத்தில் ஏகபோக உரிமையையும், இராசகாரியத் தொழில்முறையையும் நீக்குதல். 3. தேசாதி பதியின் ஆதிக்கம் குறைக்கப்பட்டது. 4. நிர் வாகச் சீர்திருத்தங்கள்.
இரண்டாம் பாகம் விவசாயப் பொருளாதாரத்திலிருந்து வர்த்தகப் பொருளாதாரத்துக்கு மாறுதல்
ஆறம் அத்தியாயம் . . 83-il ll 0
தோட்டங்களைத் திறத்தல் 1. தோட்டம், வியாபாரம், தொழிலாளர். 2. போக்குவரத்து. 3. நிர்வாக மாற்றங்கள் 4. சட்டசபை. 5. கல்வி. 6. புத்தசமய மும், இந்து சமயமும், 7. பா ட்டாளி மக்க ளும், 1884-ல் நடந்த கலவரங்களும்.
ஏழாம் அத்தியாயம் ... lll-l 39
நாட்டின் அபிவிருத்தியும் குடிகளின் முன்னேற்ற ஆரம்பமும் (1851-1872) 1. தோட்டமும், தொழிலாளியும். 2. வாக னம், தபால், போக்குவரத்து வசதிகள். 3. நீர்ப்பாசன வசதிகளும், கிராமச் சங்கங் களும், 4. நிர்வாகச் சீர்திருத்தம். 5. சட்ட சபையும், ஸ்தலஸ்தாபனச் சபைகளும். 6. கல்வி. 7. கிறிஸ்தவ மிஷன்கள், புத்த சமயம், இந்துசமயம்.
எட்டாம் அத்தியாயம் .. I 40ーI66
நாட்டின் அபிவிருத்தியும் குடிகளின் முன்னேற்ற மும் (1873-1890)
1. தோ ட் ட மு ம், தொழிலாளிகளும். 2. போக்கு வரத்துச்சாதனம், 3. கொழும்

அத்தியாயம் பக்கங்கள்
புத் துறைமுகம் அமைத்தல், 4. நீர்ப்பாசன வேலையும் விவசாயிகளும். 5. நிர்வாக சீர் திருத்தமும் ஏனைய சீர் திருத்தங்களும். 6. கல்வி. 7. புத்த சமயமும் இந்து சமயமும்.
மூன்றம் பாகம் குடியேற்ற நாட்டாட்சியிலிருந்து பொறுப்பாட்சிக்கு மாறுதல்.
ஒன்பதாவது அத்தியாயம் ... 169-21 9
அரசாங்க நிர்வாகம் திருத்தியமைக்கப்படுதலும் சட்ட சபை ச் சீர் திருத்தமும் (1891-1913) 1. நிர்வாகச் சீர்திருத்தம். 2. தோட்டம் வியாபாரம், தொழில். 3. நீர்ப்பாசனம் 4. டோக்குவரத்துச் சாதனங்கள், 5. கல்வி, 6. சமூகத்தில் மாற்றமும் சட்டசபைச் சீர் திருத்தமும்,
பத்தாவது அத்தியாயம் ,。220一245
அரசியல் முறையில் அபிவிருத்தி 1. மனிங் சீர்திருத்தம், 2. டொனமோர் அரசியல் திட்டமும் அதன் பயனும்.

Page 6

முதலாம் அத்தியாயம்
1. புராதன காலம்
இலங்கைச் சரித்திரத்தை புராதனப் பகுதி, மத்தியகாலப் பகுதி, தற்காலப் பகுதியென மூன்முகப் பிரிக்கலாம். இவை ஐரோப்பிய சரித்திரத்தில் உள்ள அதே பிரிவுகளோடு ஒத்திரா விட்டாலும் இலங்கைக்கெனச் சொந்தமான சரித்திரப்பண்மை உடையனவாயிருக்கின்றன. ஐ ரோ ப் பி ய சரித்திரத்தின் புராதன காலம் கிரேக்க உரோம நாகரிகங்களினல் பாதிக்கப் பட்டது. ஆனல் இலங்கைச் சரித்திரம் இந்தியாவில் ஆட்சி நடத்திய மெளரியர், சாதவாகனர், குப்தர், பல்லவர், சோழர் ஆகியோரின் பண்பைப்பெற்றது.
சுமார் கி. மு. ஐந்தாவது நூற்றண்டு துவக்கம், அதாவது ஆரிய பாகத மொழியைப்பேசிய ஒரு சாதியார் இலங்கையில் வந்து குடியேறிய காலந்தொட்டு, கலிங்கமாகன் இலங்கை மீது படையெடுத்ததன் பயணுக பொலனறுவை தலைமையிழந்த 12-ம் நூற்றண்டின் இறுதிவரை, யுள்ள காலம் இலங்கைச் சரித்திரத் தின் புராதன காலமெனலாம். சிங்களச் சாதியார் பலவகை யிலும் உச்சநிலையடைந்த காலம் இதுவாகும். அனுராதபுரம், மாகமம், சீகிரியா, பொலனறுவை ஆகிய பழைய நகரங்கள் சீருஞ் சிறப்புமுற்றிருந்ததும் இக்காலத்திற்ருன், பெரிய குளங் களும், நீர்ப்பாசன வசதிகளு மமைக்கப்பட்ட காலமும் இதுவே. * வணதரங்கிணி ' என்ற தமது நூலில் ஜ்ோன்ஸ்டில் என்பவர் இக்குளங்களைப்பற்றிக் கூறும்பொழுது இவை தாம் புராதன சிங்கள நாகரிகத்தின் மிக ச் சிறந்த அம் சங்க ள் என்றும், மலைச்சிகரங்களும், பள்ளத்தாக்குகளும் நீங்களாக நாட்டின் மிக அழகிய கோலத்தை இவற்றிடையேதான் காணலாம் " என்றும் குறிப்பிட்டிருக்கிருர்,
வர ண் ட பிரதேச மென்று சொல்லக்கூடிய உஷ்ணமண்ட லத்தை அடுத்திருந்தபடியால் இக்கால நாகரிகமும் அந்நிலப் பாங்கையே உடையதாயிருந்தது. நீர்வளம் நிறைந்த பிரதேச மான சீத ள மண்டளம் தீவின் தேன்மேற்கை அடுத்திருந்தது. இக்காலத்தில் இப்பகுதி விளை வில் லாமல் காடாய்க்கிடந்தது. உஷ்ணமண்டலத்தில் புறம்பு புறம்பான தனிக் கிராமங்களில் சனங்கள் குடியிருந்தனர். ஊருக்கு ப் பெரியவர்களாயுள்ள
401-B

Page 7
2 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
கிராமத் தலைவர்கள் அவ்வக்கிராமத்து அலுவல்களை நடத்தி வந்தார்கள். பிணக்குகளைத் தீர்த்தும், குற்றவாளிகளுக்குத் தண்டனை விதித்தும், விவசாய கருமங்களை நடத்தியும் வந் தார்கள். மற்ற ஊர்களில் அதிகம் தங்கியிராமல் தங்கள் தங்களுக்குத் தேவையான உணவு முதலிய பொருள்களை உற் பத்திசெய்து வாழ்க்கை நடத்தினர். வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று உஷ்ணமண்டலத்தில் கொஞ்சம் மழையைக் கொடுத்தது. ஆனல் நெற்செய்கைக்கு அந்த மழை போதாது. அன்றியும் காட்டு மிருகங்களினலும் கள்ளராலும் நெற்பயிர் களுக்கு அடிக்கடி சேதமேற்படுவதுமுண்டு. மழையின்மையா லும், பஞ்சத்தாலும், நோயினலும் பல துன்பங்கள் நேரிட்டன.
அரசர்கள் ஒரளவுக்கு இந்த இன்னல்களை நீக்க உதவி செய்து வந்தார்கள். அவர்கள் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தச் சேனையை வைத்திருந்தார்கள். வெளிநாட்டுப் படை யெடுப்பையும் உள்நாட்டுக் கலகங்களையும் தடுப்பதற்கு அச் சேனை பயன்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தலை மைக்காரரை நியமித்து நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் நிலை நாட்டினர்கள். வயல்களுக்கு நீர்பாய்ச்சுவதற்காக ஆறு களையும் பெரிய உபநதிகளையும் மறித்துக்கட்டிக் குளங்களை உண்டாக்கினர்கள். பெரிய பெரிய கால்வாய்களை அமைத்து நீரை வயல்நிலங்களுக்குப் பாய்ச்சினர்கள். இந்தக் குளங் களே துடிக்கும் இருதயம், உஷ்ணமண்டலமெங்கும் பரந்து கிடந்த வயல்நிலங்களுக்கு உணவையும் உயிரை யும் கொண்டு செல்லும் இரத்தநாடிகள் போன்றன நீர்க்கால்வாய்கள். என்று ரெஜினுல்ட் பரார் என்பவர் தா மெழுதிய * புராதன இலங்கையில்’ என்ற நூலில் கூறுகிறர். நல்வாழ்வு நடத்திச் சனங் கள் மறுபிறப்பில் சுகம் பெறவேண்டுமென்று சமய தாபனங்கள் முயன்றன. அர சர் க ஞ ம் அவற்றுக்குத் துணைபு:றிந்தனர். சாதாரண மனிதரிடத்தில்லாத சக்திகள் பிராமணரிடத்தும். புத்த பிக்குகளிடத்து முண்டென்றும் அதன் பயனக அவர்கள் பஞ்ச பூதங்களையும் சொன்னபடி செய்வித்து உலகத்தில் தீங்கு வராமல் தடுப்பார்களென்றும் சனங்க ள் நம்பியிருந்தார்கள். இந்திய மகா சக்கரவர்த்தியான அசோகன் (கி. மு. 274-237) காலத்தில் புத்த சமயம் இலங்கையில் பரவிற்று. சிங்களரின் கலைப்பண்புக்கும், ஆத்மார்த்தமான தேவை கட் கும் புத்த சமயம் ஊற்றுப்போலிருந்துவந்தது. முக்கியமான கிராமங் களிலெல்லாம் பெளத்த விகார ங் கள் கிளம்பின. சமயம், கல்வி, கலை யாதியவற்றுக்கு அவை நிலைக்களஞயின பழைய இவ் விகாரங்கள் அழிந்து கிலமடைந்து கிடப்பதை நாட்டின்

முகவுரை 3
பலபாகங்களிற் காணலாம். சிறந்த சிற்பத் திறமையும் சித்திர வேலைப்பாடுமமைந்த இவற்றைப் பார்க்கும் பொழுது புத்த சம யம் இந்நாட்டில் எவ்வளவு உன்னத தானத்தை அடைந்திருந்த தென்றும், அது சனங்களின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறதென்றும் உணர்ந்துகொள்ளலாம். ஆரம்பத் தில் புத்த சமயம் பரலோக விஷயங்களில் அதிகம் ஈடுபட்ட பிக்குகளின் மார்க்கமாயிருந்தது. மகாயானபுத்த மென்ற பிரிவு ஏற்பட்டதும் புத்தசமயம் சாதாரண மக்களின் மனப்போக்குக்கு ஏற்றதாய் எல்லாராலும் கைக்கொள்ளப்பட்டது. மேலும் புத்த சமயம் பிக்குகளுக்கு ஏற்ற புறப்போக்குடையதாயிருந்த படியால், மகா யானபெளத்தர் வணங்கும் போதிசத்துவர் போன்ற மூர்த்திகளின் வழிபாட்டையும் உள்ளூரில் வணங்கி வந்த சிறு தெய்வங்களுக்குப் பதிலாக இந்துசமயத்தினர் புகுத் திய ஏனைய தெய்வங்களின் வழிபாட்டையும் அது தடைசெய்ய வில்லை. இந்தியாவிலே புத்த சமயத்தை இந்து சமயம் ஏறக் குறைய முற்றகவே தன்னகத்து அடக்கிக்கொண்டபோதிலும் இலங்கையில் அது தனித்துநின்றது. பொதுமக்களால் அனு சரிக்கப்படக்கூடிய பரந்த தன்மை இந்து சமயத்தில் நிரம்ப இருந்தது. புத்த சமயம் இந்தத் தன்மைகளை இந்து சமயத்திலி ருந்து நிரம்பப்பெற்றுத் தன்னுடைய போக்கையே மாற்றி விரிவடைந்தது. இந்த வகையாகச் சமயமும் கலைப்பண்பும் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பரவின. மெளரிய ஏகாதி பத்தியம் இலங்கைக்குத் தேரவாத புத்த சமயத்தைக் கொடுத் தது. பின்னர் சாதவாகன அரசர் ஆட்சிசெய்த காலத்தில் பெருகிய மகாயான புத்த சமயம் இலங்கையிலும் வேரூன் றிற்று. குப்த சக்கர வர்த்திகளும் பல்லவ அரசரும், சோழ மன்னரும் இந்து சமயத்தை இலங்கையிலும் பரவச்செய் தார்கள். ܝܝܝ v,
கிறிஸ்து சமயத்துத் திருச்சபைகள்போலப் புத்த சமயம் பொதுமக்களுக்குத் தாபனங்களை உண்டாக்கவில்லை. ஆரம்பத்தில் இலங்கையில் சிறு சிறு குழுவினராய்ச் சனங்கள் பிரிந்திருந்தார் கள். இந்து சமயம் பரவவே சாதிப்பிரிவு ஏற்பட்டது. முன் கூறிய குழுவின் பாகுபாடு சாதிப் பாகுபாடு போலவே தனி யினத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதிலும் தனி மனிதனே குழுவின் தனி அம்சமாயிருப்பான். சாதிப்பாகுபாட் டில் குடும்பமே தனி அம்சமாயிற்று. ஆனல் சாதிப்பாகுபாடு நிலைபெறுவதற்குப் பெருந்துணையாயிருந்தது சம யக் கிரியை களும் அனுஷ்டானங்களுமாகும். அவை சாதியை வளர்த்தன. சமயப் பிரமாணங் கூறின. செய்தொழில் வேற்றுமையே சாதிப்

Page 8
4. இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பாகுபாட்டுக்கு அடிப்படை. ஒவ்வொரு குடும்பத்தினரும் 1, 1. கென அமைந்த " சுவகர்ம முடையவராயிருந்தனர். அக.)ல் குடும்பம் ஒரு தனி வகுப்பாயிற்று. சமயத்தினுல் ஒன்று பட்டது. முற்பிறவிகளிற் செய்த வினையின் பயனகவே ஒருவன் இப்பிறவி யில் குறித்த ஒரு சாதியிற் பிறக்கிருன். அது அவனுடைய * சுவகர்மம் , பிறந்தவன் அந்தச் சாதியாசாரங்களை யறுஷ் டித்தே கடமைகளைச் செய்து வாழ்க்கை நடத்த வேண்டும். பிராமணப் புரோகிதர்கள் குடும் பங்களுக்கு வேண்டிய சமயக் கிரியைகளைச் செய்தார்கள். கிறிஸ்தவ திருச்சபைகளைப்போல ஒரு கூட்டத்தினருக்கு ஒரு சேரத் தமது சமயக் கிரியாதிகளைச் செய்யவில்லை. இதனல் சாதிப்பாகுபாடுகட்கு அரண் போன்ற குடும்பவாழ்க்கை பலமடைந்தது. தனிப்பட்டவர்கள் தமது குடும்ப நலன்களையும் சாதி நலன்களையுமே சொந்த நலனிலும் பெரிதாக மதித்து வந்தனர். சாதிக்கட்டுப்பாடு சீர்குலையா திருந்தது. விவசாய வாழ்க்கையையும் சேவை மானியவாழ்க்கை முறையையும் அனுசரித்த சமூகத்தினருக்கு இந்தச் சாதிப்பாகு பாடு மிக உகந்ததாயிருந்தது. அத்தகைய ஒரு சமூக வாழ்க்கை யமைப்பில் மனிதன் தான் பிறந்த சாதிக்கு ஏற்ற தொழிலைக் கைக்கொண்டு சீவியம் நடத்தினன். அதை மாற்றுவதற்கு அவசியம் ஏற்படவில்லை. எனவே சாதிக்கட்டுப்பாட்டை வலி யுறுத்தவேண்டியது இயல்பாயிற்று. தெய்வங்கள் சம்பந்த மாகவும் அதிகாரிகள் சம்பந்தமாகவும் பாகுபாடு வலியுறுத்தப் பட்டது போ லவே தொழில்பற்றிய சாதிப்பாகுபாடும் வலியுறுத்தப்பட்டது.
இக்காலப்பகுதியின் அரசியல் சரித்திரத்திலும் சில விசேஷ சம்பவங்களுண்டு. ஆரம்பத்தில் மோரியரும், இலம்பகர்ணரும் ஆதிக்கம் பெறுவதற்குச் சச்சரவிட்டார்கள். இவ்விரு குழு வினரும் மாறிமாறி ஆட்சி நடத்தியபின்னர் நாட்டிலே உள்ளூர் குழப்பம் உண்டாயிற்று. தென்னிந்தியாவிலிருந்து வந்த படை யெடுப்புக்களினுலும் நாட்டிலே குழப்பமுண்டானது. கொஞ்சக் கொஞ்சக் காலம் தென்னிந்தியர் இலங்கையில் ஆட்சி நடத்தி ஞர்கள். சோழமன்னர் தென்னிந்தியாவிலே பெரிய ஏகாதி பத்தியமொன்றை தாபித்தபொழுது இலங்கையும் 50 வருடத் துக்கு அதிகமாகவே அதில் அடங்கியிருந்தது. பின்னர், அனு ராதபுரத்துக்குப் பதிலாக சோழர் தலைநகராயிருந்த பொல னறுவை இலங்கையின் தலைநகராயிற்று. இலங்கை பண்டைக் காலத்தில் இராஜ ரட்டை, மாயா ரட்டை, உருகுணை என மூன்று மாகாணங்களாய்ப் பிரிக்கப்பட்டிருந்தது. இக்காலத்தில் இம்மூன்று மாகாண அரசர்களிடையிலும் சண்டைகள் அடிக்கடி யுண்டாயின. ஆணுல், சொற்ப சில காலங்களில் மாத்திரம்

முகவுரை 5
ராச்சியத்தில் பிளவு ஏற்பட்டதேயன்றிப் பொதுவாகச் சிங்களர் தனியரசனின்கீழ் ஒன்றுபட்ட ஒரு சாதியாக இருந்தனர். இந்த ஒ ற் று  ைம  ைய ஏற்படுத்துவதற்கான காரணங்களுமிருந்து வந்தன.
நமது தற்கால வாழ்கையிற் காணப்படும் பல அம்சங்கள் புராதன காலந்தொட்டே யிருந்துவருகின்றன. இலங்கையின் முக்கியமான சாதியினரான சிங்களரும் தமிழரும் புராதன காலத்தில்தான் குடியேறினர்கள். சமயங்களுள் பெருந்தொகை யினரைக்கொண்ட புத்த சமயமும் இந்து சமயமும் புராதன காலத்திலேயே நிலைபெற்றுவிட்டன. இன்றுவரை ஓரளவுக்கு நிலவிவரும் சாதிக்கட்டுப்பாடு பொலனறுவைக் காலத்தில் வேரூன்றத் துவங்கிற்று. மறுபடியும் இப்பொழுது நமது கவனத்தைப் பெற்றுவரும் நீர்ப்பாசன வேலைகள் புராதன காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவையாகும்.
2. மத்திய காலம்
13-ம் நூற்றண்டின் ஆரம்பந் துவங்கி பதினெட்டாம் நூற்ருண்டின் இறுதிவரை மத்திய காலமாகும். இலங்கை இக்காலத்தில் மூன்று தனி ராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டது. பெரிய பராக்கிரமபாகு இறந்த பின்னர் நாட்டிலே குழப்ப முண்டாயிற்று. இது மாகனுடைய படையெடுப்போடு முடிந் தது. அதன் பயனுக வடக்கே, தற்போது வடமாகாண மென்று வழங்கப்படும் எல்லையையே பெரும்பாலும் கொண்டதாயொரு தமிழ் ராச்சியம் தாபிக்கப்பட்டது. சோழ சாம்ராச்சியம் வீழ்ச்சியுற்ற பின்னர் 13-ம் நூற்றண்டில் பாண்டியர் ஆதிக்கம் பெற்றர்கள். அடுத்த நூற்ருண்டிலே விஜயநகர ராச்சியம் தாபிக்கப்பட்டது. 13-ம் நூற்ருண்டு துவங்கி இவ்வளவு கால மாகத் தமிழரசு சிதையாது நிலைநின்று கடைசியாக 1621-ல் போர்த்துக்கேயர்  ைக வ ச ப் பட்டது. இக்காரணங்களைக் கொண்டே சிங்கள அரசர்களும் தமது பழைய நகரங்களான அனுராதபுரம், பொலனறுவை ஆகிய ராஜதானிகளைக் கைவிட் டுத் தீவின் தென்மேற்கில் தம்மைக் கொஞ்சங்கொஞ்சமாக தாபித்துக்கொண்டார்கள்.
இலங்கை முழுவதிலும் தனக்கு ஆணையுண்டென்பதை வற் புறுத்தியவன் ஆருவது பராக்கிரமபாகு ஒருவனே. மற்றவர் களிற் பெரும் பா லோ ர் பலமற்றவர்களாயிருந்தபடியா ல், அரைக்கரை வாசி சுதந்திர ஆட்சிநடத்திய அதிகாரிகள்மீது ஆணை செலுத்த முடியாமற்போயிற்று. செல்வாக்குள்ள அதி காரிகள் சிலசமயம் அரசைக் கைப்பற்றினர்கள். உள்ளூர்க் குழப்

Page 9
6 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பங்களுண்டாயின. ராஜதானி அடிக்கடி மாறிற்று. 15-ம் நூற்றண்டின் இறுதியில் தனிப்பட்ட ஒரு இராச்சியம் கண்டி ராச்சியமென்ற பெயருடன் உண்டாயிற்று. மலைநாட்டு சிங் களவர், கீழ்நாட்டுச் சிங்களவரெனச் சிங்களச் சாதியினர் இரண்டு பிரிவாகப் பிரிந்தனர். கண்டி ராச்சியம் மலைநாட்டை யும், தற்காலத்து வடமத்திய மாகாணத்தையும், கீழ் மாகாணத் தையும், அம்பாந்தோட்டைப் பகுதியையு முள்ளடக்கியிருந்தது. சீதாவாக்கை அரசர்களாவது பின்வந்த போர்த்துக்கேயராவது டச்சுக்காரராவது அதைக் கைப்பற்றிக்கொள்ளவில்லை. 1815-ல் தான் பிரிட்டிஷார் கண்டியைப பிடித்து அந்த ராச்சியத்தையும் அடிப்படுத்தினர்கள். தற்போது வடமேல் மாகாணத்தையும், மேல் மாகாணத்தையும், சபிரகமுவா மாகாணத்தையும், காலி, மாத்தறைப் பகுதிகளையு முள்ளடக்கியிருக்கும் கீழ் பூமி 15-ம் நூற்றண்டில் கோட்டை ராச்சியமெனப் பெயர் பெற்றது. 16-ம் நூற்றண்டிலே இந்த ராச்சியத்தை இரண்டு அரசர்கள் பங்குபோட்டார்கள். கோட்டையிலிருந்து ஒருவனும், சீதா வாக்கையிலிருந்து மற்றவனும் ஆண்டனர். 1597-ல் இவை போர்த்துக்கேயர் வசம் சிக்கின. பின்னர், அவர்களுடைய கையிலிருந்த பிரதேசங்களையெல்லாம் 17-ம் நூற்றண்டின் மத்தியில் டச்சுக்காரர் கைப்பற்றிக்கொண்டனர். அவர்கள் இலங்கையிலரசாண்ட காலத்தில் பெரும் பகுதியில் யாழ்ப் பாணக் குடா நாட்டிலும், மேல் மாகாணத்திலும், காலி, மாத் தறைப் பகுதிகளிலும் நேரடியான ஆணசெலுத்தி வந்தார்கள்.
இம்மூன்று இராச்சியங்களிடையிலும் பலவித்தியாசங்களி ருந்தன. அரசியலைப் பொறுத்தவரையில் மாத்திரமல்லாமல், பொருளாதார விஷயத்திலும் பலவித்தியாசம் காணப்பட்டது. தமிழ் ராச்சியத்தில் தானிய வரி விதிக்கப்பட்டது. சனங்கள் அரசனுக்குத் தமது விளைவில் ஒரு பகுதியைத் திறையாகக் கொடுத்து வந்தார்கள். போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும் வந்தபொழுது இந்த வகையில் குறிப்பிடத்தக்க மாற்ற மொன் றையுஞ் செய்யவில்லை. சிங்கள அரசர் சீதளமண்டலமான தென்மேற்குப் பாகத்துக்குப் போன பொழுது உஷ்ண மண்டலத் திலுள்ள குளங்களையும் நீர்ப்பாசன வசதிகளையும் அழியவிட்டு விட்டார்கள். சீதளமண்டலத்தில், நெற்செய்கைக்கு ஏற்ற வயல் நிலங்கள் குறைவாயிருந்தபடியால், அரசர் நிலங்களைக் குடிகளுக்குச் சேவைக்கு மானியமாகக் கொடுத்தார்கள். இவ் வாறு பியூடல் முறை என வழங்கப்படும் சேவை மானிய முறை ஏற்பட்டது. அனுராதபுரத்திலும், பொலனறுவையிலும் ஆண்டட் அரசர்கட்கு அதிக வருமானம் கிடைத்தது. ஆனல்

முகவுரை 7
சேவை மானியமுறைப் பிரகாரம் அரசருக்கு அதிக வருமானம் கிடையாதபடியால் வெளிநாடுகளோடு வியாபாரஞ்செய்து பொருள்தேட முற்பட்டார்கள். பிரதானமாகக் கறுவா வியா பாரம் முன்னேறிற்று. இதில் ஏராளமான முஸ்லிம்கள் வந்து பங்குபற்றினர்கள். ஐரோப்பிய வல்லரசுகள் கரைப்பிரதேசங் களைக் கைப்பற்றியதற்கும் இக் கறுவாவே காரணமாயிருந்த தெனலாம். அரசனுக்கு குடிகள் செய்யும் மானிய சேவை பலதிறப்படும். இது இராசகாரியமென்று வழங்கப்பட்டது. போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும் இந்த ராசகாரியமுறை யில் தங்கள் வியாபாரத்துக்கும் அரசியல் முறைக்கும் ஏற்றபடி சிறிய மாற்றங்களைச் செய்தார்களேயன்றிப் பெரிய மாறுத லொன்றையுஞ் செய்யவில்லை. டச்சுக்காரர் பிரதானமாகச் சிங்களப் பிரதேசங்களில் பொருளாதார நிலைமையை அபி விருத்திசெய்யச் சில நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டனர். நெற்செய்கைக்கு உற்சாகமூட்டுவதற்காகப் பாழாய்ப்போன குளங்களிற் சிலவற்றைத் திருத்தினர்கள். கால்வாய்களை வெட்டு வித்துப் போக்குவரத்து வசதிகளை அபிவிருத்திசெய்தனர். தச்சு வேலை, செங்கல், ஒடு முதலியன செய்தல் ஆகிய கைத்தொழில் களை ஆரம்பித்தனர். கோப்பி முதலிய வியாபாரப் பொருள் களையும் உற்பத்தி செய்தார்கள். 19-ம நூற்றண்டில் பெரிதும் முன்னேற்றமடைந்த தோட்டங்களை டச்சுக்கார ரே முதல் முதல் ஆரம்பித்து வைத்தனர். -
சமூக விஷயங்களிலும் இம்மூன்று இராச்சியங்களும் பல வேறுபாடுகளை யுடையனவாயிருந்தன. தமிழ் ராச்சியத்தில் தென்னிந்திய சமயாசாரங்களும் சாதிக்கட்டுப்பாடுகளும் பெரி தும் பரவின. சிங்களப் பிரதேசங்களிலும் இந்து சமயாசாரங் கள் பரவினபோதிலும், புத்த சமயம் புனருத்தாரணஞ் செய் யப்பட்டது. நாட்டிலடிக்கடி ஏற்பட்ட சண்டை காரணமாக முதலில் புத்த சமயம் பரவ முடியாதிருந்தபோதிலும் 18-ம் நூற்றண்டில் நிலவிய சமாதானத்தின் பயணுக அது பெரிதும் மறுமலர்ச்சியடைந்தது. போர்த்துக்கேயராட்சியிலும் டச்சுக் காரராட்சியிலும் மலை நாட்டவருக்கும் கீழ் நாட்டவருக்குமுள்ள வித்தியாசங்கள் மேலும் வலுப்பெற்றன. போர்த்துக்கேயர் ரோமன் கத்தோலிக்க சமயத்தையும், ஒல்லாந்தர் புரட்ட ஸ் தாந்து சமயத்தையும் புகுத்தினர்கள். இதனுல் கரையையடுத்த பிரதேசத்திலுள்ள ஏராளமான சனங்கள் கிறிஸ்து மார்க்கத்தைத் தழுவினர். டச்சுக்காரர் விரிந்த ஒரு ஆரம்பக் கல்விமுறையை நடைமுறையிற் கொண்டுவந்ததால் சிங்களவரிலும் தமிழரிலும் பெருந்தொகையினர் எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டார்கள். மேலும் அவர்கள் நீதிமன்றங்களை ஏற்படுத்தினர். தமிழரின்

Page 10
8 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
தேச வழமையை ஆராய்ந்து அதைச் சட்டமாக்கினர். அது திருப்தியற்ற சந்தர்ப்பங்களில் ரோமன் டச்சுச் சட்டத்தைப் பின்பற்றினர்கள். சட்டரீதியான முறையில் கருமங்களை நடத்த அவர்கள்தான் முதல் முதல் ஆரம்பித்தார்களெனலாம். போர்த் துக்கேயர் ஆரம்பித்த மேல்நாட்டுத் தொடர்பை இவர்களும் கைவிடாது நிலைநாட்டி வந்ததால் இலங்கையர் மேலும் பல வகையில் அத்தொடர்பின் பயனப் பெறக்கூடியதாயிருந்தது.
எனவே பிரித்தானியர் ஆட்சியின் கீழ் ஏற்படவிருந்த முன் னேற்றத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தென்மேற்குக் கரைப் பிரதேசங்களிலும், யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் உள்ளவர் கள் மற்றவர்களைவிட மிகவுந் தயாருள்ளவராகும் வகையில் டச்சுக்காரர் அவர் களை முன்னேற்றப்பாதையில் விட்டுச் சென்றர்கள்.
3. தற்காலப் பகுதி
1796-ல் பிரித்தானியர் கரைப்பிரதேசங்களைக் கைப்பற்றிய தோடு இலங்கையில் தற்காலப்பகுதி ஆரம்பமானதெனக் கூற லாம். 1815-ல் அவர்கள் கண்டிராச்சியத்தைக் கைப்பற்றினர். 1818-ல் அவர்களை நாட்டிலிருந்து கலைத்துவிடும் நோக்கத்தோடு ஒரு புரட்சி யுண்டாயிற்று. அதை அவர்களடக்கித் தமது ஆட்சியை நிலைநாட்டினர். அன்றியும் தம்முடைய தேசத்தி லிருப்பது போன்றதும் இலங்கை முழுவதற்கும் பொதுவானது மான ஒரு மத்திய அரசாங்கத்தையும் அமைத்தார்கள். கோல் புறுாக் விசாரணைக்குழுவின் சிபார் கப்படி பழைய மூன்று பிரிவு களான தமிழ், கண்டி, கீழைச் சிங்களமாகிய இராச்சியங்களை ஒன்ருக்கி இணைக்கும் தனியரசாங்கமொன்றை ஏற்படுத்தினர். மாகாணங்களின் எல்லைகள் மாற்றப்பட்டன. அதன் பயனுய்க் கண்டியைச் சார்ந்த தாழ்ந்த பிரதேசங்கள் கீழைச் சிங்கள நாடுகளுடனும் தமிழ்நாடுகளுடனும் இணை க் கப் பட்டன. இலங்கை முழுவதற்கும் பொதுவான நீதிமன்றங்களை அமைத் தார்கள். சட்டத்தின் முன் எல்லாரும் சமன் என்ற கொள் கைப்படி எல்லாக்குடிகளுக்கும் சட்டம் செல்லுபடியாகும் முறையில் நீதிபரிபாலனஞ் செய்யப்பட்டது.
நாட்டில் ஒழுங்கையும் சமாதானத்தையும் நிலைநிறுத்துவ திலும் நீதிபரிபாலனம் முதலிய மூலாதாரமான அரசியற் கடமை களைச் செய்வதிலுமே பிரித்தானிய அரசாங்கம் ஆரம்பத்தில் ஈடு பட்டது. இங்கிலாந்திலும் இம்மாதிரி நடவடிக்கைகளிற்றன் அரசாங்கத்தினர் கவனஞ்செலுத்திவந்தனர். வேறுவகையான மாற்றங்களைச் சட்டத் திருத்தங்கள்மூலம் கொண்டுவர வேண்டு
i.

முகவுரை 9
மெனவும் எண்ணினர். ஆனல் அதைச்செய்வதற்கு இங்கிலாந்தி லுள்ளதுபோல இலங்கையில் பலம் பொருந்திய மத்திய வகுப் பொன்றிருக்க வில்லை. எனவே சமூகத் துறையிலும் தொழிற் துறையிலும் மாற்றங்களை யுண்டாக்கவேண்டியது அரசாங்கத் தின் கடமையுமாயிற்று. இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட கிரித்தவ சமயப்பேருரை இயக்கத்தின் தலைவர்கள் இலங்கையில் கிறிஸ்து சமயத்தைப் ப ர ப் ப வேண்டுமெனக் கிளர்ச்சி செய்ததன் பயணுய் இலங்கை அரசாங்கம் பழைய டச்சுப் பாடசாலைகளைத் தொடர்ந்து நடத்திற்று. அரசாங்க அலுவல் களை நடத்துவதற்கு ஆங்கில அறிவு படைத்த உத்தியோகஸ்தர் தேவைப்பட்டபடியால் ஆங்கில பாடசாலைகளைத் தாபித்தார்கள். நாட்டின் வளத்தைப் பெருக்கி வருமானத்தை அதிகரிப்பதற்காக வீதிகளையும் ரயிற் பாதைகளையும் அமைத்தார்கள். பாழடைந்து கிடந்த குளங்களைத் திருத்தி நீர்ப்பாசன வசதிகளைப் பழுது பார்த்தனர். 1870-ம் ஆண்டுவரை யில் அரசாங்கம், நடப்பது நடக்கட்டுமென்ற தலையிடாக் கொள்கையைக் கைவிட்டு நாட் டின் வளத்தைப் பெருக்கவும். மக்களின் நிலைமையைச் சீர் திருத்தவும் நடவடிக்கை யெடுக்கத் துவங்கிற்று. இங்கிலாந்தி லும் இதேகா லத்தில் இத்தகைய கொள்கையையே பிரித்தானிய அரசாங்கம் கைக்கொண்டது. சிறுவர் சிறுமியருக்கு ஆரம்பக் கல்வியூட்ட வசதிசெய்யப்பட்டது. சனங்களின் சுகாதாரம் முதலியவற்றைக் கவனிக்கவும் நடவடிக்கைகளெடுத்தார்கள். இருபதாம் நூற்ருண்டின் ஆரம்பத்திலிருந்து இத்தகைய பொது நலச் சேவைகள் பல வகையாக விஸ்தரிக்கப்பட்டன.
பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றிய காலத்தில் இலங்கை முற்றும் விவசாய நாடாகவேயிருந்தது. தானியவரி, கறுவா வியாபாரத்தில் அரசாங்கத்துக்கிருந்த ஏகபோக உரிமை முதலியனவற்ருல் வந்த வருமானம் ஐரோப்பிய உத்தியோகத் தரைப் பெரிய சம்பளத்தில் உயர்ந்த பதவிகளில் வைத்து நடத்தும் ஒரு தற்கால அரசாங்க நிர்வாகத்துக்குப் போதிய தாகக் காணப்படவில்லை. எனவே, தோட்டங்களைத் திறப் பதற்கு அரசாங்கம் பல விதத்திலும் உற்சாகமளித்தது. தொழி லாளரின் சுதந்தரத்தைக் கட்டுப்படுத்திய இ ரா சகா ரிய முறை நீக்கப்பட்டது. சொந்தத்தில் வியாபாரஞ் செய்வதற்கு இடையூருயிருந்த ஒரு தடை, கறுவா வியாபாரம் அரசாங்கப் பொறுப்பிலிருந்தமையே. இந்தத் தடையும் நீக்கப்பட்டது. ஐரோப்பாவில் கோப்பிக்கு மிகுந்த தேவை ஏற்பட்டதால் 1837-ம் ஆண்டு துவக்கம் இலங்கையில் கோப்பித் தோட்டங்கள் பெருகிக்கொண்டுவந்தன. மலைப்பிரதேசமெங்கும் பல தோட்

Page 11
O இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
டங்கள் கிளம்பின. பின்னர் 1870-ம் ஆண்டு துவக்கம் கோப்பித் தோட்டங்களில் - பூச்சிவிழுந்து பெரும் நட்டமுண்டாக்கவே கோப்பிச் செய்கையை எல்லாரும் கைவிட்டார்கள். பின்னர் தேயிலைத் தோட்டங்கள் உண்டாயின. நாளடைவில் ரப்பர் தென்னை ஆகிய பயிர்களையும் சாகுபடிசெய்தார்கள். இவ்வாறு தேயிலையும், தென்னையும், ரப்பருமே இத்தீவின் மூன்று முக்கிய மான விளைபொருள்களாயின.
தோட்டங்களைத் திறந்ததன் பயணுக வேறுபல மாற்றங்களு முண்டாயின. இலங்கையில் மூலதனமோ, தொழிலாளிகளோ இல்லாததால், ஐரோப்பிய முதலாளிகள் தங்கள் முதலைப் போட்டு இந்தியத் தொழிலாளரை வரவழைத்தார்கள். புதிய ரோட்டுகளும், ரயிற்பாதைகளும் திறக்கப்பட்டன. விளை பொருள்களை இலேசாக வெளிநாடுகட்கு அனுப்புவதற்காகக் கொழும்பில் ஒரு துறைமுகமும் அமைக்கப்பட்டது. உள்ளூரி லும், வெளிநாடுகளிலும் வியாபாரம் விருத்தியடைந்தது. கிராம எல்லைக்குள் அடங்கியிருந்த பொருளமைப்பு, அந்த எல்லையைத் தா ன் டி ச் சர்வதேசப் பொருளமைப்போடு தொடர்பு கொண்டது.
நிர்வாகத்திலும் பொருளாதார அமைப்பிலும் ஏற்பட்ட மாற்றங்களினல் சமூக அமைப்பும் மாற்றமடைந்தது. 9. சாங்க உத்தியோகத் தரும், நியாயவாதிகளும், ஆங்கில வைத்திய முறையைக் கையாளும் வைத்தியர்களும், ஆசிரியர்களும், தோட்ட முதலாளிகளும், வியாபாரிகளும், கொந்திருத்துக்கார ரும், போக்குவரவு ஒழுங்கு செய்வோரும், வர்த்தகர்களும் எனப் பல வகுப்பினர் கிளம்பினர். பிரதானமாகக் கீழைச் திங்களர் பிரதேசங்களிற்ருன் இவர்களின் தொகை அதிகரித் தது. பல சாதியிலிருந்தும் இப்புதிய மத்திய வகுப்பினர் இளம்பினர்கள். இதனல் சாதிக்கட்டுப்பாடு வலிகுறைந்தது. பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பத்தில் கிறிஸ்து சமயத்துடன் போட்டியிட்டு வலியிழந்த இந்துசமயமும் புத்த சமயமும் மறு படியும் மறுமலர்ச்சி பெற்றன. அரசியல் சீர்திருத்தம் வேண்டு மெனவும் கிளர்ச்சி செய்யத் துவங்கினர்.
முடிக்குரிய குடியேற்றநாடு என்றமுறையில் இலங்கை ஆரம் பத்தில் ஆட்சிசெய்யப்பட்டது. இவ்வரசியல் முறைப்படி தேசாதிபதிக்குச் சர்வ அதிகாரமும் உண்டு. அவரை மேற் பார் வ்ை செய்யும் உரிமை குடியேற்றநாட்டு மந்திரிக்கும் பிரித்தானிய பாராளுமன்றத்துக்குமே . யுண்டு. இம் மா தி ரி அரசியல மைப்பைப் பிற் போ க் கா ன நாடுகளிலேதான் காணலாம் 1833-ல் இலங்கையின் அரசியல் சம்பந்தமாக விசாரணை செய்த

முகவுரை F
கோல்புறுாக்கு விசாரணைக் குழுவினர் சில சிபா ர் சுகளைச் செய் தார்கள். அதன் பயனகத் தேசாதிபதிக்கு ஆலோசனை கூறு வதற்கு நிர்வாக சபையொன்றும் சட்டசபையொன்றும் ஏற் படுத்தப்பட்டன. இதில் உத்தியோகப் பொறுப்பில்லாத சிறு பான்மையினரும் அங்கத்தவராகச் சேர்க்கப்பட்டனர். மற்றப் படி தேசாதிபதி குடியேற்றநாட்டு மந்திரியினதும், பிரித் தானியப் பாராளுமன்றத்தினதும் மேற்பார்வையில் அரசாங்க நிர்வாகம் முழுவதையும் நடத்திவந்தார். தேசாதிபதி சட்ட மியற்றும் பொழுது சட்டசபையின் பேரில் தா ன் சட்டம் பிறப்பிப்பார். ن
19-ம் நூற்றண்டில் உத்தியோகப் பொறுப்பில்லாத ஐரோப்பிய அங்கத்தவரே பெரும்பாலும் சட்டசபைச் சீர் திருத்தத்துக்கு வாதாடினர். சட்டசபைக்கு மேலும் அதிகார மிருக்க வேண்டுமென இவர்கள் கேட்டதோடு நிர்வாகசபை தனது செய்கை எல்லாவற்றுக்கும் சட்டசபைக்குப் பொறுப்பா யிருக்கவேண்டுமென்றுங் கேட்டார்கள். ஆ ஞ ல் அவர்கள் கோரிய சீர்திருத்தங்கள் கிடையா விட்டாலும் நாட்டின் வரவு செலவுத் திட்டம் அமைப்பதில் பங்குபெற்றர்கள். இருபதாம் நூற்றண்டிலே சட்டசபைச் சீர்திருத்தத்துக்காகப் புதிய மத் திய வகுப்புத் தலைவர்களே கிளர்ச்சிசெய்தனர். பிரிட்டனில் பரவிவந்த விரிந்த கொள்கைகளினல் இவர்களும் தூண்டப் பட்டு இலங்கைக்கும் பொறுப்பாட்சி வேண்டுமென வாதாடி ஞர்கள். 1912-லும் பின்னர் 1921லும், 1924லும், 1932லும் ஏற்பட்ட சீர்திருத்தங்களின் பயணுகக் கொஞ்சங் கொஞ்சமாய்
இலங்கையர் பொறுப்பாட்சி பெற்ருர்கள். 1912-ல் சட்ட சபைக்கு அங்கத்தவரைத் தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கும் உரிமை வழங்கப்படது, 1921-ல் உத்தியோகப் பொறுப்
பில்லாத அங்கத்தவர் தொகை அதிகரிக்கப்பட்டது. 1924-ல் பூரணப் பிரதிநிதித்துவம் வாய்ந்த சட்டசபை அமைக்கப் பட்டது. 1931-ல் நிர்வாகம் சட்டசபைக்கு ஒரளவு பொறுப் புள்ளதாக்கப்பட்டது. இப்பொழுது உள்ளூர் விஷயங்களில் பூரண பொறுப் பா ட் சி வழங்க நடவடிக்கைகளெடுக்கப் பட்டு வருகின்றன.
இலங்கைச் சரித்திரத்தில் பிரித்தானிய் காலப்பகுதிதான் மிக முக்கியமானதும் பலவகையில் கவனத்துக்குரியதுமாகும். பல வித நிகழ்ச்சிக் கோலாகல மற்றதானுலும் இக்காலப்பகுதியில் முன்னுெருபோதும் ஏற்படாத பல மாறுதல்களுண்டாகிவிட்டன. பழைய தனியா ட்சியும் சேவை மானியமுறையும் மாறித் தற்காலப் போக் கு க் கே ற் ற புதிய வலியுள்ள மத்திய

Page 12
12 - . இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
அரசாங்கம் அமைந்துவிட்டது. விவசாயத்தை அடிப்படை யாகக் கொண்ட பொருளாதார அமைப்பு மாறி வியாபாரச் சார்புள்ள பொருளாதார அமைப்பு ஏற்பட்டுவிட்டது. பழைய குடியேற்ற அரசியலமைப்பும்ாறி சனநாயகப் போக்குள் ள பொறுப்பாட்சி ஏற்பட்டுவிட்டது. பிரித்தானிய ஆட்சியின் பயணுகக் குடிகளின் ஒரு சிறுபகுதியினரே தற்காலப் போக்குடன், மாறியிருக்கின்றனர். நிர்வாகம், பொருளாதாரம் அரசிய லாகிய விஷயங்களில் ஏற்பட்ட முன்னேற்றத்துக்கு ஏற்றபடி சனங்களெல்லாரையும் முன்னேற்றச் செய்வதே நமது இன்றை முக்கிய பிரச்னைகளுள் ஒன்ரு கும். தீவின் தென்மேற்குக் கரைப் பிரதேசங்களிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலு முள்ளவர்களே பிரித்தானிய ஆட்சியின் பயனகப் பெரிதும் முன்னேற்றமடைந்தி திருக்கிருர்கள். நாடுமுழுவதும் ஒரேவிதமாக -இனி முன்னேற வேண்டுமானுல் ஏனைய பா க ங் க ளி ல் உள்ளவர்களையும் முன்னேறச்செய்யவேண்டும். இத்தகைய பிரச்னைகளை இனி ஆராய்ந்து ஏற்ற வழிவகைகளை நாடவேண்டும். இதைச் சரிவரச் செய்ய வேண்டுமானுல் பிரித்தானியர் ஆட்சி நடத்திய காலப்பகுதியின் சரித்திரத்தை அறியவேண்டியதும் அவசிய மாகும்.

முதற் பாகம்
இலங்கை. மத்தியகால அரசாங்க முறையிலிருந்து தற்கால அரசாங்கமுறைக்கு மாறுதல்

Page 13

இரண்டாம் அத்தியாயம் இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றல்
1. கடற்கரைப் பிரதேசங்களைப் பிடித்தல் 1796-ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 15-ம் தேதி இலங்கையில் ஆட்சி செலுத்திய ஒல்லாந்த தேசாதிபதியாகிய ஜெராட் வான் அன்ஜெல் பீக், தன்னிலும் மிகப் பலம் பொருந்திய பிரித்தானிய சைனியத்தை எதிர்த்து நிற்கமுடியாமல் கொழும்பையும் இலங் கையில் எஞ்சியிருந்த ஏனைய டச்சுப்பிரதேசங்களையும் அப் பிரித்தானியர் வசம் ஒப்படைத்தார். இலங்கைச் சரித்திரத்தில் மிக முக்கியமான பகுதியாகிய பிரித்தானிய ஆட்சிக்காலம் அப்பொழுதுதான் ஆரம்பமானதெனக் கூறலாம். 795- it வருடம் ஒகஸ்துமாதம் 18-ந் தேதி பிரித்தானியப் பட்டாளம் திருக்கோணமலையைத் தாக்கி எட்டுநாட் சண்டையின் பின் அதைப்பிடித்துவிட்டது. மட்டக்களப்புத்தொட்டு மன்னர் வரை கரையோரமாக இருந்த கோட்டைகளை யெல்லாம் ஒக்ற் ருேபர் மாதம் 6-ந் தேதி அளவில் அது கைப்பற்றிக் கொண் டது. பின்னர் கொஞ்சக் காலத்திற்குள் இலங்கையிலிருந்த டச்சுச் சைனியத்திற் சேவைபுரிந்த டிமெருே ன் பட்டாளத்தைச் சேர்ந்த ஐந்து பகுதியினர் இலங்கையை விட்டுப்போய் இந்தியாவிலிருந்த பிரித்தானிய சைனியத்துடன் சேர்ந்து கொண்டனர். இதையறிந்த வான் அன்ஜெல் பீக் கொழும் பைப் பலப்படுத்துவதற்காகக் காலியிலிருந்த தனது பட்டாள மனத்தையும் அங்கே கொண்டுவந்தார். அப்படிச் செய்தும் பிரித்தானிய சைனியத்தை நிர்வகிக்க முடியாதவராய் அவர் கள் விடுத்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்டார்.
பதினேழாம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கொம்பெனி கீழ்த்திசை நாடுகட்கு வந்த பொழுது இலங்கையில் நடைபெற்ற கறுவா வியாபாரத்தின் முக்கியத்தை பூரணமாக அறிந்தேயிருந்தது. ஆனல் உ ட னே இலங்கை யைப் பிடிப்பதற்குக் கொம்பெனிக்காரர் முயற்சிசெய்யவில்லை. ஏனெனில் இலங்கையிலாட்சிநடத்திய போர்த்துக்கேயர், கப்பற் படையில் அதிக பலம்பெற்றிராவிட்டாலும், கோட்டை கொத்த ளங்களால் மிக அரண் செய்து கொண்டிருந்தனர். பின்னர் ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடமிருந்து கடற்கரைப் பிரதேசங் களைப் பிடித்துக்கொண்டதும் 17-ம் நூற்றண்டின் பிற்பகுதியில் இந்தக் கறுவா வியாபாரத்தைக் கண்ணும் கருத்துமாகக் காப்

Page 14
互6 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பாற்றி வந்தார்கள். 18-ம் நூற்ருண்டின் இடைக்காலத்துக்கு முன்னரே டச்சு ஆதிக்கம் திட்டமாக வலிகுன்றிவிட்டது. ஐரோப்பாவிலும் பிரான்சுடன் அவர்கள் செய்த யுத்தம் காரணமாக ஒல்லாந்தர் தலைமையிழந்து இரண்டாந் தர வல்லர சாகக் குன்றிவிட்டார்கள். கீழைத்தேசங்களிலும் அவர்களு டைய கடற்படை பிரித்தானிய, பிரெஞ்சுக் கடற்படையுடன் எதிர்நிற்க முடியவில்லை. தென்கிழக்கு இந்தியப் பிரதேசங்களிலும் பிரித்தானியர் அமைத்த வியாபாரத் தலங்களிலிருந்து அவர் களைக் கலைத் துவிட்டப் பிரெஞ்சுக்காரர் இத் தருணத்தில் முயன்று கொண்டிருந்தார்கள். அதனுல் இலங்கையில் டச்சுக்காரரின் ஏகபோக உரிமையாயிருந்த கறுவா வியாபாரத்தில் பிரித்தானி யர் அக்கறைகொள்ள அவகாசமில்லாமற் போய்விட்டது. 1759-ல் இலங்கையின் முக்கியத்துவத்தைப்பற்றி அவர்கள் மறு படியும் சிந்திக்கத் தலைப்பட்டனர். ஆனல் வியாபாரத்தைப் பற்றி அவர்கள் அப்பொழுது கருதினதே கிடையாது.
இத்தருணத்தில் இந்தியாவின் கிழக்குப்பிரதேசத்தில் ஆதிக் கஞ்செலுத்த பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் சிரத்தை கொண்டார்கள். வங்காள விரிகுடாவில் அவர்களுக்கிடையே கடற்சண்டைகள் நடைபெற்றன. இச்சண்டைகளில் பழு தடைந்த கப்பல்களைத் திருத்துவதற்கு பம்பாய்க்கு இட்டுச் செல்லவேண்டியிருந்தது. ஏனெனில் இந்தியாவின் கீழைக் கரையில் கடற்படைத் தளமாக உபயோகிக்கக்கூடிய துறைமுக மொன்றுகூட இல்லை. அன்றியும் வடகிழக்குப் பருவப்பெயர்ச் சிக் காற்றுத் துவங்கியதும் ஆபத்தான பெரிய சுழற்காற்றுகள் வீசத் தலைப்பட்டதால் கப்பல்களை மேலைக் கரையில் ஒதுக்க வேண்டியிருந்தது. இதன ல் கிழக்குக்கரை எதிரியின் தாக்கு த லு க்கு இலக்காகப் பாதுகாப்பின்றிக்கிடக்க நேரிட்டது. 1758-ல் பிரெஞ்சுக்கடற்படையுடன் சண்டை செய்த பிரித்தா னிய கப்பற் தொகுதி பழுதுதுபார்க்கப்படுவதற்காக பம்பாய்க்கு அனுப்பப்பட்டது. வடகிழக்குப் பருவப்பெயர்ச்சிக் காற்று ஆரம்பமானதும் ஒரு பிரெஞ்சுக் கப்பற்படை வங்காள விரி குடாவிற்ருே ன்றிச் சென்னையை முற்றுகையிட்ட பிரெஞ்சுத் தரைப்படைக்கு உதவிசெய்தது. ஆனல் ஏப்ரிலில் அந்தப் பருவக்காற்று மாறும்வரை பிரித்தானிய கடற்படை சென்னை யிலிருந்த த னது சைனியத்திற்கு ஒர் உத வி யும் செய்ய முடியாமற் போய்விட்டது.
வங்காள விரிகுடாவில் ஒரு துறைமுகம் அவசியமென்பதை இச் சம்பவங்கள் பிரித்தானியருக்குத் தெள்ளத்தெளிய உணர்த்தி விட்டன. இரண்டு பருவ ப் பெயர் ச் சிக் காலத்திலும்

இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றல் I 7
கப்பல்களுக்கு நல்ல பாதுகாப்பளிக்கக் கூடியதும் விசாலமானது மான சிறந்த ஒரு துறைமுகம் திருக்கோணமலை. ஆனல் அது டச்சுக்காரர் வசமிருந்தது. எனவே கண்டி யரசனுக்குச் சொந்தமான ஒரு துறைமுகத்தை அதே கடற்கரையில் பெற்றுக் கொள்ளவேண்டியிருந்தது. அக்காலத்தில் கீர்த் திபூரீ ராஜ சிங்கன் (1747-1782) கண்டியில் அரசு செலுத்தினன். அவன் டச்சுக்காரருக் கெதிராக உதவிசெய்யுமாறு சென்னையில் ஆட்சி நடத்திய பிரித்தானியக் கிழக்கிந்தியக் கொம்பெனிக்காரரை வேண்டிக்கொண்டான். அதற்கான ஆரம்பப் ப்ேச்சுக்களை நடத்துமாறு சென்னை அரசாங்கம் 1762-ல் ஜோன் பைபஸ் என்பவனை இலங்கைக்கு அனுப்பியது. தான் விரும்பிய உதவி யைச்செய்தால், ஒரு துறைமுகத்தையும், கறுவா வியாபாரத் தில் ஒரு பங்கையும் கொம்பெனிக்காரருக்குக் கொடுப்பதாகக் கண்டியரசன் வாக்களித்தான். ஆனல் டச்சுக்காரரை இலங் கையிலிருந்து கலைத்துவிட உதவி செய்வதற்குச் சென்னை அரசாங்கம் மறு த் து வி ட் டது. எனவே பைபளவின் தூது பயனற்றுப் டோய்விட்டது.
1763-ல் ஐரோப்பாவில் ஏழாண்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. அமெரிக்க சுதந்திரப்போர் (1775-1783) ஆரம்பமாகும் வரை பிரித் தானியர் இந்தியாவிலேற்பட்ட தொல்லைகளிற் தலைமூழ்கிக் கிடந்தார்கள். 1780-ம் ஆண்டின் இறுதியில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் டச்சுக் குடியரசின் மீது போர் தொடுத்தது. இத் தருணத்தை வாய்ப்பாகக்கொண்டு கிழக்கிந்திய கொம்பெனி திருக்கோணமலையைப் பிடிக்க எண்ணிற்று. இக்காலத்தில் கீர்த்திபூரீ இராஜசிங்கனின் சகோதரனன இராஜாதிராஜ விங்கன் (1782-1798) கண்டியை ஆண்டான். இலங்கையிலி ருந்து டச்சுக்காரரைக் கலைக்கத் தாம் இப்பொழுது உதவி செய்யத் தயாராயிருப்பதாகவும் அதற்காக ஒரு உடன் அடிக்கை செய்து கொள்ளப்போவதாகவும் சென்னையரசாங்கம் இவனி டம் ஒரு தூது அனுப்பிற் று. தனது சகோதரனுக்குத் தருணத் தில் உதவிபுரிய மறுத்த அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்ய இராஜாதிராஜசிங்கன் மறுத்துவிட்டான். இருந்தும் 1782-ல் கொம்பெனிக்காரர் திருக்கோணமலையைக் கைப்பற்றி னர். ஆனல் இத்துறைமுகத்தின் விசேஷத்தை அறிந்த பிரெஞ் சுக்காரர், பிரித்தானியருடன் சண்டை செய்து திருக்கோண மலையைத் திருப்பிப்பிடித்து யுத்த முடிவில் அதை மறுபடியும் டச்சுக்காரரிடம் ஒப்படைத்தனர்.
அடுத்த பன்னிரண்டு வருடங்களாக பிரித்தானியர் இலங் கையைப் பற்றிச் சிரத்தை கொள்ளவில்லை. 1793-ம் வருடம்

Page 15
18 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பெப்ருவரி மாதம் 1-ந் தேதி, பிரெஞ்சுப் புரட்சி நடந்தேறிய பின்னர் பிரான்ஸ் பிரித்தானியா மீது போர்ப்பிரகடனஞ் செய் தது. அதேதினத்தில் டச்சுக் கெதிராகவும் போர் தொடுத்தது. 1794-ம் வருடம் ஒக்ற்ருேபரில் ஒல்லாந்து தேசத்தில் பிரெஞ்சுச் சைனியம் பிரவேசித்து அந்நாட்டை அடிமைப்படுத்திற்று. பின் னர் 1795-ம் ஆண்டு மார்ச்சு மாதம் பிரான்சுக்குச் சார்பான வர்களின் துணையோ டு பற்றேவியா குடியாட்சியை ஏற்படுத் திற்று. ஒல்லாந்தின் தலைவரும், டச்சுக்குடியரசின் ராணுவத் துக்குத் தலைவருமாயிருந்த ஸ்ருத்ஹோல்டர் என்பவர் இங்கி லாந்துக்கு ஓடிவிட்டார். அங்கிருந்து இலங்கையை ஆட்சி செய்த ஒல்லாந்த தேசாதிபதிக்கு பிரித்தானிய அதிகாரிகள் மூலம் அவர் ஒரு நிருபம் அனுப்பினர். அதில் பிரெஞ்சுக்காரர் இலங்கை மீது படையெடுக்கும் பட்சத்தில் டச்சு ஆட்சியில் விசு வாசமுள்ள அத் தீவுவாசிகளைக் காப்பாற்றும் பொருட்டு பிரித் தானிய துருப்புக்கள் படைத் துணையாக அங்கே வந்தால் அவர் களை ஏற்றுக்கொள்ளுமாறு எழுதப்பட்டது. திருக்கோணமலை பிரெஞ்சுக்காரர் கையிற் சிக்குவதைச் சென்னை அரசாங்கம் விரும்பவில்லை. பிரித்தானிய ஏகாதிபத்திய அரசாங்கத்தின் தூண்டு தலின்பேரில் சென்னை அரசாங்கம் உடனே கண்டியரச ணுன ராஜாதிராஜசிங்கனுக்கு அவனுடைய ஒத்துழைப்பைக் கோரி ஒரு தூதை அனுப்பிற்று. பிரித்தானியரின் உதவியை டச்சுக்காரர் மறுத்தால் உடனே போர் செய்து இலங்கையைப் பிடிக்கவும் ஒரு பிரித்தானிய கடற்படையை அனுப்பிற்று.
இந் நிலைமையில் டச்சுத் தேசாதிபதி என்ன செய்வார் ? டச்சுக்காரர் பிரித்தானியருடன் இதுவரை தீவிரமான போட்டி யிட்டு வந்தபடியால் அவர்களிடம் இலங்கையைக் கொடுத்தால் மறுபடியும் அதை அவர்கள் திருப்பிக் கொடுத்துவிடுவார்களா என்ற சந்தேகம் அவருக்குண்டாயிற் று. பிரித்தானியரின் பாது காப்பை ஏற்றுக்கொள்ளுமாறு ஒல்லாந்துத் தலைவர் தனக்கெழு திய கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனவே இலங் கையைப் பிரித்தானியர் வசம் கொடுப்பதற்கு டச்சுத் தேசாதிபதி ஒருப்படவில்லை. பற்றேவியா குடியரசு ஒல்லாந்தரின் ஆதர வுடன்தான் நிறுவப்பட்டதென்பதை அறிந்ததும் அவர் பற்றே விய அதிகாரிகளின் ஆணையையே மேற்கொள்ளத் துணிந்தார். இம்மாதிரியான கொள்கை தூரதிருஷ்டியில்லாத குறுகிய கொள் கையென்று இப்பொழுது சொல்லக்கூடியதாயிருக்கிறது.
பிரித்தானிய பலம் சிறந்ததென்பதை டச்சுத் தேசாதிபதி
வான் அஞ்ஜெல் பீக் அறிந்திருந்தாரென்பதில் ஆட்சேபனை ஆனல் வழக்கம்போல பிரெஞ்சுக்காரர் உதவிக்கு

இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றல் 19
வருவார்கள்தானே என்று அவர் நம்பியிருந்தார். ஈற்றில் பிரித்தானியாவே வெற்றிபெறுமென்பதை அவர் முன்கூட்டியே அறிந்திராதபடியால் அவர்களுடன் நட்புக்கொள்வதுதான் சிறந்த மார்க்க மென்பதை அவர் அப்பொழுது உணரவில்லை.
இந்தியாவிலுள்ள தங்கள் பிரதேசங்களைக் காப்பாற்ற வேண்டுமானுல் இலங்கையைக் கைப்பற்றிவிட வேண்டுமென பிரித்தானியர் எண்ணினர்கள். சண்டை முடிவானதும் இலங் கையை மறுபடியும் டச்சுக்காரருக்குத் திருப்பிக்கொடுத்து விட வேண்டுமென்றே பிரித்தானிய ஏகாதிபத்திய அரசாங்கம் சிறிது காலம் எண்ணியிருந்தது. ஆனல் ஏமியன்ஸ் சமாதான மகா நாட்டில் இலங்கையைத்தானே வைத்துக்கொள்ள வேண்டு மெனத் தீர்மானித்தது. பலங்குன்றிக்கொண்டே வந்த டச்சு ஆதிக்கம் இவ்வாறு முடிவுற்றது. எனவே அக்காலத்தில் ஐரோப்பாவிலே மிக்க முன்னேற்றமுள்ளதும் வியாபாரத்துறை யிலும் கடலாதிக்கத்திலும் சிறந்திருந்ததுமான பிரித்தானியா வசம் இலங்கை சிக்கிக்கொண்டது. *
2. கண்டிக்கெதிராக முதற்போர்
G
பலமுள்ளதும் திருந்திய ஆட்சிமுறை யுடையதுமான ஒரு தேசத்தைச்சூழ்ந்து சிறுசிறு வல்லரசுகள் இருக்குமானுல் அவையெல்லாம் நாளடைவில் பெரிய அத்தேசத்துக்கு இரை யாக நேரிடும். அப்பெரிய வல்லரசு தனது எல்லையை விஸ்தரிக் கும் சூழ்ச்சியுடையதா யிராவிட்டாலும் வியாபாரத்தை விருத்திசெய்வதற்காகவோ, பொதுப்படையான நல்லாட்சியை நடத்துவதற்காகவோ தனக்குத் தொல்லைகொடுக்கும் சம்பவங் களில் அடிக்கடி தலையிட நேரிடலாம்’ என்று இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி பெருகியதற்கான காரணத்தை விவரிக்கும். பொழுது டொட்வெல் என்ற சரித்திராசிரியர் கூறுகிறர்.
உரியகாலத்தில் பிரித்தானியர் கண்டிராச்சியத்தைக் கைப் பற்றுவார்களென்பதை ஒருவரும் சந்தேகிக்கவில்லை. இராணுவ பலத்தைக்கொண்டு இலங்கையின் கரைப்பகுதிகளையெல்லாம் பிடித்துக்கொண்ட, பலமும் நன்கு வகுக்கப்பட்ட ஆட்சிமுறை யும் வாய்ந்த பிரித்தானியா போன்ற ஒரு நவீன வல்லரசு, ஒன் ருே டொன்று நெருங்கிய தொடர்பில்லாததும், வாழ்க்கையின் சக்ல துறையிலும் நவீனமற்ற மத்தியகால முறைகளையே அனு சரித்து வருவதுமான சிங்கள ராச்சியத்தைக் காலகதியில் கட்டாயம் கைப்பற்றிவிடுமென்பதற்குச் சந்தேகமென்ன ? கண்டி யரசனும் சும்மா இருக்கவில்லை. டச்சுக்காரருடன் சேர்ந்து

Page 16
20 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
கொண்டு தாழ்ந்த பிரதேசங்களிலிருந்து போர்த்துக்கேயரைக் கலைக்க முயன்றதால் தா ன் அவர்கள் கண்டிமீது படையெடுத் தார்கள். அவ்வாறே தங்களுக்கெதிராக பிரித்தானியரின் துணை யைக் கண்டி அரசன் பெற முயற்சிசெய்ததால் ஒல்லாந்தர் கண்டிராச்சியத்தைப் பிடிக்க முயன்ருர்கள். பிரித்தானியா சமீபத்தில் கைப்பற்றிய நாடுகளை அவர்கள் கையிலிருந்து பறித்துவிடக் கண் டி அரசன் பிரெஞ்சுக்காரருடன் சேராமலி ருப்பான் என்பது என்ன நிச்சயம் ? 1797-ல் சென்னை அரசாங் கத்துக் கெதிராக நடந்த புரட்சியில் கண்டியரசன் புரட்சிக் காரரை ஆதரித்தான். ஆனபடியால் கண்டிராச்சியத்திலிருந்து படையெடுப்பு ஏற்படாமல் தடுப்பதற்காகக் கண்டி எல்லைகளி லுள்ள முக்கியமான இடங்களில் பெருஞ்செலவில் காவற்படை களை பிரித்தானியர் ஏற்படுத்தவேண்டியதாயிற்று. பிரித்தா னியருக்குத் திருப்திகரமான உடன்படிக்கைகட்குக் கண்டியர சன் சம்மதிக்க நியாயமிருந்ததா ? அதுவுமில்லை. கிழக்கில் திருக்கோணமலைதான் மிகப்பெரிய கடற்படைத் தளமாயிருக்கு மென்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அதன் அயற் பிரதேசங் கள் தேவையான சாமான் முதலியவற்றைக்கொடுத்து உதவ வில்லை. ஆனபடியால் கொழும்புடன் தொடர்பு வைத்துக் கொள்ள் வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கொழும்பையும் திருக்கோணமலையையும் இணைக்கக் கண்டிராச்சியத்திற்கூடாக ஒரு பாதை அமைக்கவேண்டுமென யோசிக்கப்பட்டது. ஐரோப் பியரைத் தனது ராச்சியத்தில் வைத்திருக்க விரும்பாத கண்டி அரசனுக்கு இந்த யோசனை சமுசயத்தை உண்டுபண்ணவே அதை நிராகரித்துவிட்டான். தமது வியாபாரத்தை விருத்தி செய்வதை பிரித்தானியர் ஒரு முக்கியமான நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனல் கண்டி எல்லையில் விதிக்கப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி வரிகள், மலைநாட்டுடன் செய்யும் வியா பாரத்துக்குப் பெரும் முட்டுக்கட்டையாயிருந்தன. ஒன்றில் கண்டிராச்சியத்தில் ஆதிக்கம் செலுத்தவேண்டும், அல்லது அதைப்போரினல் வெற்றிகொள்ளவேண்டும். அப்படியானற் முன் கரைப்பிரதேசத்தில் பிரித்தானியர் ஆட்சி நிலைபெறு வதுடன் விருத்தியாகுமென்றும் அவர்கள் எண்ணினர்கள்.
ஆனல் சமாதான உடன்படிக்கைக்கான ஆரம்ப முயற்சி களில் கண்டிவாசிகளே முதலில் தலையிட்டார்கள். 1739-h ஆண்டு துவக்கம் கண்டி ராச்சியம் தென்னிந்திய மன்னர்களாற் பரிபாலிக்கப்பட்டு வந்தது. இவர்கள் நாயக்க மன்னர்களைச் சேர்ந்தவர்கள். இந்நாயக்க அதிபதிகள் விஜயநகர ராச்சியத் தின் சிறுசிறு பிரிவுகளை ஆண்டுவந்த குறுநில மன்னராவார்.

இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றல் 2I
கண்டியில் இவர்கள் ஆண்டபொழுது இராஜசபையில் அவர் களின் இனசன பந்துக்களே பெரிதும் ஆதிக்கம் பெற்றிருந்த தால் ஒரு அளவுக்குச் சுயேச்சையாயிருந்த சிங்கள அதிகாரிகள் இம்மன்னர்களை விரும்பவில்லை. மேலும் சிங்கள அதிகாரிகள் தம்முள் பரஸ்பரம் பொருமை கொண்டு பிணங்கியிருந்தார்கள். அதனல் நாயக்க மன்னரின் ஆட்சி நிலைத்திருந்தது. கீர்த்திபூரீ அரசுகட்டிலேறியபொழுது நாயக்க மன்னரைத் தொலைத்துவிடு வதற்கான ஒரு சூழ்ச்சி நடைபெற்றது. ஆனல் அது சித்தி பெறவில்லை. இருந்தும் சிங்கள மன்னன் ஒருவனைச் சிங்காசன மேற்ற முயற்சிசெய்த கட்சியின் பலம் கெட்டுப்போகவில்லை. இக்கட்சிக்கு சிங்கள முதற் பிரதானியான பிலிமத்தலாவை தஜல மைதாங்கித் தானே அரசனவதற்கும் முயன்றன். இராஜாதி ராஜசிங்கன் இறந்ததும் இவன் சிங்காசனமேறச் செய்த முயற்சி கள் பலிக்கவில்லை. தான் நினைத்த படியெல்லாம் ஆட்டிவைக் கலாமென்று நினைத்துக்கொண்டு பிலிமத்தலாவை பூரீவிக்ரம ராஜசிங்கனை அரியாசனமேற்றினன். தனது சூழ்ச்சிகட்கு எதி
ராய்நின்றவர்களை நாட்டைவிட்டுக் கலைத் தான். சிலரைச் சிறையிலிட்டான். வேறுசிலரைக் கொலைக்களத்திற் பலியிட் டான். எல்லாம் செய்தபின்னர் தன்னை அரசனுக்கிக்கொள்
வதற்காக பிரித்தானியரின் துணையையும் நாடினன்.
'அக்காலத்தில் இலங்கைத் தேசாதிபதியாயிருந்த பிரெடரிக் நோத் (1798-1805) என்பவர் பூரீவிக்ரம ராஜசிங்க ஆன அரசனுக ஒப்புக்கொண்டு விட்டபடியால் பிலிமத்தலாவையின் கேரி கைக்கு இணங்க முடியாமற்போய்விட்டது. ஆனல் கண்டி ராச்சியத்தின்மீது ஆதிக்கம்பெறுவதை அவர் மிகவும் விரும்பி னர். இந்தியாவில் இக்காலத்தில் இராசப்பிரதிநிதியாயிருந்த வெலெஸ்லி இந்திய சமஸ்தானங்கள் பல வலிமைபொருந்திய அயற்றே சங்களால் தாக்கப்படக்கூடிய ஆபத்தான நிஜலமை யைக் கண்டார். அம்மாதிரியான சமஸ்தானங்களுக்குப் பாது காப்பளிக்கப் பிரித்தானிய படைகளைத் துணையாக அனுப்பவும், அதற்கான உடன்படிக்கைகளைச்செய்து பிரித்தானிய ஆதிக்கத் தின்கீழ் அச்சமஸ்தானங்களைக் கொண்டுவரவும் எண்ணினர். நோர்த் தேசாதிபதியும் இம்மாதிரியான ஒரு கொள்கையை அனுசரிக்க எண்ணிப் பிலிமத்தலாவையுடன் சம்பாஷணை நடத்தி ணுர். சம்பாஷணையின் பின்னர் கண்டியரசனின் உயிருக்கு ஆபத்துண்டாகுமென்பதை நோத் அறிந்து கண்டியில் ஒரு பிரித் தானிய பட்டாளத்தை வைப்பதற்கான உடன்படிக்கைக்கு அரசனைச் சம்மதிக்கச் செய்யுமாறு பிலிமத்தலாவையைத் துTண் டினர். ஆனல் அரசனுக்கு அப்படியான ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை. பிலிமத்தலாவையின் ஆதரவைக்கூட அரசன் கைவிட்டுவிட்டான். பிரித்தானியரின் பாதுகாப்பைப் பெறு

Page 17
22 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
வதற்கான ஒரு மனநிலையில் அரசன் இருக்கவில்லை. பிரித்தானி யரைத் தவிர வேறு எவராலும் அவனுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய நிலைமையிருக்கவில்லை. நோத் தேசாதிபதியின் யோசனை யால் தனக்கு எவ்வித நன்மையுமில்லை யென்று நினைத்து அதை அவன் நிராகரித்துவிட்டான். ۔۔۔۔
ஆனல் பிலிமத்தலாவையின் பேராசைத் தீ தணியவில்லை. நோத் தனக்கு உதவிசெய்ய மாட்டான் என்பதை அறிந்த பிலிமத்தலாவை அரசனுக்கும் பிரித்தானியருக்குமிடையில் சண்டையைழுட்ட எ ன் னி ஞ ன். கண்டி ராச்சியத்தில் கொட்டைப்பாக்கு வியாபாரம் நடத்திய பிரித்தானிய பிரசை களான சில சோனக வியாபாரிகளின் சாமான்களைப் பறித் தெடுக்குமாறு சிலரைப் பிலிமத்தலாவை ஏவிஞன். எதிர்பார்த்த வண்ணமே நோத் தனது பிரசைகளைச் சரியாக நடத்தாதற்கு ஆட்சேபனை தெரிவித்து அவர்களுக்குண்டான நட்டத்தை ஈடு செய்யுமாறு கண்டி அரசனைக்கேட்டான். ஆனல் கண்டி அரசி யல் நிர்வாகம் மிக ஆறுதலாகவே நடைப்ெற்றதாலும் தனது பிரதானிகள் செய்யும் செய்கைகளெல்லாவற்றையும் மேற் பார்வை செய்ய அரசனுக்கு ஆற்றல் இல்லாதபடியாலும் நோத், தேசாதிபதியின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை. உள்ளே ஆய்ந்தோய்ந்து பராமல் கண்டியரசன் மீது போர் தொடுத்தான். முன்னேகேட்ட உடன்படிக்கைகளுக்கு அரசனை இனியாவது இணங்க வைக்கலாமென நோத் எண்ணினர்.
நோத் தேசாதிபதி காரியசாத்தியமான விஷயங்களை எண்ணி நடத்தும் திறமையற்றவர். கண்டிராச்சியத்தைப் போர்த்துக் கேயரும் ஒல்லாந்தரும் கைப்பற்றத் தவறியது எதனுல், அரசனைத் தம்மாதிக்கத்திற் கொண்டுவர அவர்களால் ஏன் முடியவில்லை. என்ற இன்னேரன்ன விஷயங்களை அவன் ஆழ்ந்து ஆலோசிக்க வில்லை. கண்டிப்படைகள் நல்ல ராணுவப் பயிற்சியில்லாதன வாயுமிருந்தது உண்மையே. நல்ல ஆயுதங்களைக் கொண்டன வும் கட்டுப்பாடான போர்ப் பயிற்சியுடையனவுமான பிரித் தானிய சைனியத்தோடு அவை எதிர்நிற்க மாட்டா. ஆனல் கண்டி அரசன் தனது சைனியத்தை மாத்திரம் நம்பியிருக்க வில்லை. மலைநாட்டின் அமைப்பையும், அதற்கேற்ற யுத்த முறையையுமே அவன் வாய்ப்பாகக்கொண்டான்.
கண்டி ராச்சியத்தின் மத்தியபகுதி மூன்றுவகையில் ஒரு இயற்கை அரணுக அமைந்த தெனச் சிங்கள யுத்ததந்திரிகள் எண்ணிஞர்கள். கடக்க முடியாத காடடர்ந்த வன்துர்க்க மாயிருந்தது. அதோடு செங்குத்தான குன்றுகளும், பாறை களும் உயர்ந்த மலைகளுமமைந்த ஒரு கிரிதுர்க்க மாகவுமிருந் தது. மழை காலத்தில் அது ஜலதுர்க்க மாயிருந்தது. ஆற்றிலே

இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றல் 23
நீர் பெருகிவரும் காட்டுப்பிரதேசம் கடக்கமுடியா திருக்கும். தாழ்ந்த பூமியிலிருந்து மலைநாட்டுக்குப் போக்குவரவு செய்வது மிகக் கஷ்டமானதாகிவிடும்.
திறந்த வெளியில் நின்று சண்டைசெய்யும் போர்முறையைக் கண்டி ராணுவம் விரும்புவதில்லை. நல்ல ஆயுதபாணிகளாகவும் சிறந்த தேர்ச்சியுடையவர்களாகவுமுள்ள ஐரோப்பியப் போர் வீரருடன் அவ்வாறு நேரடியான சண்டை செய்வதற்கு தன் னிடம் பலம் போதா தென்பதை அது உணர்ந்திருந்தது. காட்டுப் பகுதிகளை நன்கறிந்திருந்தபடியால் கண் டி. ராணுவத்தின் வனங்களில் ஒளித்திருந்து வெளிப்பட்டுக் காத்திராப்பிரகாரம் எதிரியைத் தாக்குவார்கள். அன்றியும் பாதை ஒற்றையடிப் பாதையாயிருந்ததால் எதிரிகள் ஒவ்வொருவராகவே போக வேண்டியிருக்கும். அப்பொழுது அவர்களை எதிர்த்துத் தாக்கு வது சுலபம். எதிரி இம்மாதிரியான தாக்குதலைச் சமாளித்துக் கொள்வதும் கஷ்டம். எதிரி ஒரு வாறு க ன் டி  ைய அடைந் தாலும் அவர்கள் சாமான்களையெல்லாம் அழித்துவிட்டு உள்நாட் டுக்குள் போய்விடுவார்கள். அவர்களைத் தொடர்ந்து எதிரி போனல் முன்கூறியவிதமான தாக்குதலை நடத்தி அவனைத் தோற்கடிப்பார்கள். எதிரியைக் கண்டியில் நிற்கவிட்டுவிடு வார்கள். மே மாதத்தில் மாரிகாலம் தொடங்கப் பாதை களெல்லாம் வெள்ளத்தில் கிடக்கும். சாமான்கள் வரத்து நின்றுவிடும். இந்தக் கஷ்டங்களைப் பயன்படுத்திக்கொண்டு எதிரியைச் சரணடையச் செய்வார்கள். இல்லையேல் எதிரி திரும்பிப்போனல் வழியில் நின்று மேலே கூறியபடி காட்டு யுத்தம் செய்வார்கள்.
பிரித்தானியச் சைனியம் இரண்டு வழியாகக் கண்டியை அடைந்தது. போர்த்துக்கேயர் பலான வழியாகச் சென்று கண்டியைத் தாக்கினர்கள். இப்பாதை கஷ்டமானதானபடி யால் பிரித்தானியர் இம்மார்க்கமாகச் செல்லவில்லை. வான் எ க் என்ற டச்சுச்தேசாதிபதி போன பாதையைப் பின்பற்றி பிரித்தானிய பட்டாளத்தின் ஒரு பகுதி போய் கலகேதரைக் கணவாயைத் தாண்டி முன்னேறிற்று. மற்றது திருக்கோணமலை யிலிருந்து புறப்பட்டு மாத்தளை வழியாகப்போய் பலக்கடுவைக் கணவாயைத் தாண்டிச் சென்றது. இரண்டு பட்டாளமும் கட்டுகாஸ்தோட்டையிற் சந்தித்துக் கண்டியைக் கைப்பற்றின. ஆனல், கண்டியரசன் அங்குருங்கே தைக்குப் பின்வாங்கி விட் டான். காட்டுப்பாதையாக வந்தபடியால் பிரித்தானிய பட்டா ளத்தைச் சேர்ந்தவர்களுக்குக் காட்டுக் காய்ச்சல் பிடித்துக் கண்டியிலேயே ஒவ்வொரு நாளும் பலர் இறந்துபோனர்கள். பின்னர் தென் மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று வீசத் தொடங்கிற்று. மழை பெய்து வெள்ளம் பெருகியதால்

Page 18
24 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
கொழும்புக்குச் செல்லும் பாதைகள் எல்லாம் துண்டிக்கப்பட் டன. நோய் ஒரு புறம். உணவுப் பஞ்சம் இன்னெரு புறமாக பிரித்தானிய சைனியத்தை வாட்ட மிக நிர்ப்பந்தமான நிலைமை யில் அது சரணடைந்தது. ஈற்றில் ஒரு சிலரைத் தவிர மற்றவர் களெல்லாரையும் கண்டி வாசிகள் கொன்றுவிட்டார்கள்.
இவ்விதமாயுண்டான வெற்றியினுற் தூண்டப்பட்டு வழக் கம்போலக் கண்டியரசன் பிரித்தானியப் பிரதேசங்களை எல்லாத் திக்கிலும் தாக்கினன். பிரித்தானிய சைனியம் இத்தாக்குதல் களை முறியடித்தது. இதேபோன்ற தருணங்களில் போர்த்துக் கேயரும் ஒல்லாந்தரும் செய்ததுபோல இவர்களும், தமது பட்டாளங்களைக் கண்டி ராச்சியத்துக்குள் அனுப்பி வீடு வாசல் களையும் பயிர்களையும் அழித்து வந்தார்கள். நோத் தேசாதி பதிக்குப்பின் அப்பதவியை ஏற்ற ஸேர் தோமஸ் மேய்ட்லந்து (1805-1812) இம்மாதிரியான கொள்ளைகள் நடக்க விடாமல் தடுத்தார். அரசனும் பிரித்தானிய தேசாதிபதியுடன் திருப்தி கரமான ஓர் உடன்படிக்கைக்குவர முடியவில்லை.
பிலிமத்தலாவையின் தந்திரத்தாலும் நோத் தேசாதிபதி யின் புத்திக் குறைவாலும் ஏற்பட்ட இந்த யுத்தம் இவ்வாறு முடிவுற்றது.
3. கண்டியின் வீழ்ச்சி
1803-ல் நடந்த யுத்தம் பிரித்தானியருக்கு நஷ்டத்தை உண்டுபண்ணின போதிலும் கண்டியரசனுடைய பலம் முன்னை யிலும் அதிகரித்தது. ஆணுல், 1815-ல் பிரித்தானியர் கண்டி மீது படையெடுத்தபொழுது பலமான எதிர்ப்பு உண்டாக வில்லை, முன்னர் போர்த்துக்கேய சைனியம் போனதுபோலவே பிரித்தானிய பட்டாளமும், மட்டமகொடை, இட்டமல்பான, எட்டிமுல்லை, அத்தாப்பிட்டி, கணேத் தன்னை ஆகிய இடங்களுக் கூடாகச் சென்று பலான வழியாசக் கண்டியை அடைந்தது. பிரித்தானியரின் வரவை அறிந்த அரசன் ஊறுகலைக்குச் சமீப பத்திலுள்ள போமுறே என்ற இடத்துக்கு ஒடினன். பிரித்தானி யர் அவனைக் கைதுசெய்து தென்னிந்தியாவுக்குத் தேசப்பிரஷ் டம் செய்துவிட்டார்கள்.
தனது ராச்சியத்திலும் அதற்கு வெளியிலும் பகைவர்களி ருப்பதை பூரீவிக்கிரம ராஜசிங்கன் உணர்ந்தான். தனது பலத் தைப் பெருக்கிக் கொண்டுவந்த கண்டியதிகாரிகள் தங்கள் தங்கள் பகுதிகளில் மிகுந்த செல்வாக்குடையவர்களா யிருந் தார்கள். நிந்தகம் என்று சொல்லப்படும் மானிய நிலங்கள் பலவற்றை அவர்கள் வைத்திருந்தபடியால் பூரணமான செல் வாக்கு அவர்களிடமிருந்தது. பல தலைமுறையாகவே அவர்கள் ஆட்சி நடத்திவந்தார்கள். ஒரே பகுதிகளைத் தந்தை பின்

இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றல் 25
மகனுகப்பெற்று வராவிட்டாலும் தொடர்பான ஆட்சி யிருந்தே வந்தது. சாதிக்கட்டுப்பாடு காரணமாகச் சனங்கள் தங்கள் வாழ்க்கை நிலை பிறவியினல் ஏற்பட்டதென நம்பிச் சிங்கள அதி காரிகளே தங்களை ஆளப்பிறந்தவர்களென்று எண்ணி யடங்கி னர்கள். சிங்கள அதிகாரிகளில் பலர் தம்முள் இனப்பற்று டையவர்களான படியால், எவ்வளவு வேற்றுமை கொண்டிருந்த போதிலும் அந்நியனுக்கெதிராக ஒன்றுபடும் தன்மையுடைய வர்களாயிருந்தார்கள்.
தன்னை அடிப்படுத்த பிரித்தானியர் முனைந்துநின்ற காலத் தில் சிங்கள அதிகாரிகளுக் கெதிராக பூரீவிக்கிரம ராஜசிங்கன் எ வ் வி த நடவடிக்கையுமெடுக்க முடியவில்லை. பிரித்தானிய எதிர்ப்பு நீங்கினதும் அதிகாரிகளின் பலத்தைக் குறைக்க முயற்சி செய்தான். இதுவரை சிங்கள அதிகாரிகள் நடத்திவந்த சில உத்தியோகங்களை அரசன் தனது சுற்றத்தாரான நாயக்கக் குழு வினருக்குக் கொடுத்தான். சிங்கள அதிகாரிகள் விசேஷ ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதிகளைப் புதிது புதிதாகப் பிரித்துப் பாகுபடுத்தினன். புதிய பதவிகள் ஏற்பட்டால் அவற்றின் அதிகாரிகளின் இளைய குடும்பங்களிலிருந்து சிலரைப் பொறுக்கி அவர்களிடம் அப்பதவிகளை ஒப்படைத் தான். இவ்வாறு பழைய அதிகாரிகட்கும் புதிய ஆட்களுக்குமிடையில் போட்டியை உண்டுபண்ணினுன். ஒரு அதிகாரி இறந்தால் அவருடைய சொத்தின் பெரும் பகுதி அரசனுக்குச் சேரவேண்டுமென்ற * மராள வரியை மறுபடியும் நடைமுறையிற் கொண்டுவந்த துடன் அதிகாரிகள் உத்தியோகத்தைப் பெறுங்காலத்தில் கொடுத்துவந்த வரியை யும் உயர்த்திவிட்டான். குடிகளை இம்சைப்படுத்தும் அதிகாரிகட்குத் தண்டனை விதித்துச் சனங் களின் ஆதரவையும் பெற்றுவந்தான்.
இந்த நடவடிக்கைகளொன்றும் அதிகாரிகட்குப் பிடிக்க வில்லை. தனது நோக்கத்தை நிறைவேற்றுவதில் இதுவரை தவறிய பிலி மத்தலாவை இனி அரசனைக் கொல்லவேண்டு மெனச் சூழ்ச்சி செய்தான். ஆனல், அது வெளிப்படவே அரசன் பிலிமத்தலாவையை 1812-ல் தூக்கிலிட்டான். அகிலப் பொலை முதல் அதிகாரியானன். அவனும் அரசனுக் கெதிரான அதிகாரிகளின் கட்சிக்குத் தலைமை பூண்டான். பிலிமத்தலாவை எவ்வளவு பேரா சைக்காரணுயிருந்தபோதிலும், க ன் டி யி ல் பிரித்தானிய ஆதிக்கம் ஏற்படுவதை அவன் ஒரு போதும் விரும்ப வில்லை. நோத் தேசாதிபதி இதை அறிந்திருந்தால் அரசனுக் கெதிராகப் போரிலீடுபட்டிருக்கமாட்டான். அகிலப்பொலையே

Page 19
26 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
விருதாக்காரன். பிலிமத்தலாவையின் தந்திரம் அவனிடம் குறைவு. கண்டியரசனைத் தொலைத்துவிடவேண்டுமென்ற விருப் பினல் பிலிமத்தலாவை கைவிட்ட தந்திரங்களை அவன் கைக் கொள்ளத் துவங்கினன்.
மேய்ட்லந்து தேசாதிபதியின் பின்னர் ஸேர் ரொபேர்ட் பிரெளன்ரிக் (1812-1820) தேசாதிபதியானன். கண்டியரச னுடன் சமாதானமாக நட்புப் பாராட்டுமாறு அவனுக்கு உத்த, ரவு கொடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் இக் காலத்தில் பிரித்தானியர் போர் செய்து, தமது எல்லையைப் பெருக்கும் கொள்கையைக் கைவிட்டு வந்தார்கள். பிரெஞ்சுக்காரர் இந்தியா மீது படையெடுப்பார்களென்ற பயம் நீங்கிவிட்டது. பிரித்தானியர் கடற்கரைப் பிரதேசங்களில் இருப்பதற்குக் கண்டியரசன் எவ்வித இடையூறும் உண்டுபண்ணவில்லை. ஆனல் தங்கள் வியாபாரத்தை பெ ரு க் கி க் கொள்வதற்கு பிரித், தானியர் விரும்பினர்கள். அந்த நோக்கத்துடன் ஒரு வியாபார உடன்படிக்கைக்கு அரசனை இணங்கச் செய்ய பிரெளன்ரிக் முயன்ருன். ஆனல், அது வாய்க்காமற்போகவே கண்டிமீது போர் தொடுக்க எண்ணினன். தான் செய்வது உசிதமா என்ப தைக்கூட யோசியாமல் பிரெளன்ரிக் அரசனுக்கெதிராக முரண் பட்டுக்கொண்டிருந்த சிங்கள அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தினன்.
தனது அதிகாரிகளும் பிரித்தானியரும் சேர்ந்து இவ்வாறு
சூழ்ச்சி செய்வதை அறிந்த அரசன் அகிலப்பொலைக்கு எதிராக வும் அவனை ஆதரிப்போருக் கெதிராகவும் நடவடிக்கை எடுத் தான். இவர்களை ஆதரித்த மாகாணங்களிலுள்ள சனங்களையும் இம்சைப்படுத்தினன். இச்சம்பவங்களாற் தூண்டப்பட்ட
அகிலப்பொலை அரசனுக்கெதிராகப் பிரித்தானியரின் துணையைத் தேடினன். 1803-ல் நடத்திய கண்டி யுத்தத்தில் தங்களுக், கேற்பட்ட நஷ்டத்தின் பின்னர் பிரித்தானியர் சாவதானமா கவே இருந்தனர். அகிலப்பொலை இதைக்கண்டான். அரச
னுக்கு எதிரிகள் பலர் இருக்கின்றனர் என்பதை ருசுப்படுத்திக், காட்டினுல்தான் பிரித்தானியரிடம் இருந்து உதவிபெறலாமென உணர்ந்தான். இதை நிதர்சனப்படுத்த எண்ணிக் கண்டி அரசனுக்கெதிராகக் கலகத்தை உண்டாக்கினன். பிரித்தானி
யர் அப்பொழுதும் உதவி அனுப்பவில்லை. புரட்சி சித் திபெற, வில்லை. அகிலப்பொலை தனது கட்சிக்காரருடன் பிரித்தானியப் பிரதேசத்தில் சரண்புகுந்தான்.

இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றல் 27
தனக்கெதிராக எழுந்த அதிகாரிகளிடம் அரசன் வெகுண்டு அவர்கள் மீது மிகக் கொடூரமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டான். மனித நீதிக்கு அப்பாற்பட்ட கொடுமைகளை இழைத்தான். கண்டியில் சிறை வைக்கப்பட்டிருந்த அதிகாரி களின் சுற்றத்தாருக்கும் பல கொடுமைகளை இழைத்தான். தனக்கு எதிராய் எழுந்த அதிகாரிகளின் சுற்றத்தவரான புத்த பிக்குகளுக்குக் கூடத் தண்டனை விதித்தான். சனங்கள் மிகக் கெளரவத்துடன் போற்றுவதைக்கூடப் பாராமல் புத்த பிக்கு களில் ஒருவரை ச் சிரச்சேதஞ் செய்வித்தான். இதனுல் நாட்டில் அதிருப்தி பரவிற்று. தன்னட்சிக்கு எதிராயிருந்த குடும்பங்களைக் கண்டிராச்சியத்துக்கும் பிரித்தானிய எல்லைக்குமிடையிலிருந்த மூன்று கோறலையிலும் நாலு கோறலையிலுமிருந்து அப்புறபடுத்த அரசன் முயன்ற பொழுது மறுபடியும் கலகம் உண்டானது.
அரசனை வெல்வதில் இனிக் கஷ்டமில்லையென பிரெளன்ரிக் தீர்மானித்தான். மற்றவர்கள் தோல்வியடைந்ததைப்போல் தானும் தோல்வியடைய முடியாதென எண்ணினன். அரசன் தன் அதிகாரிகளுடன் முரண்பட்டிருப்பதால் அவர்கள் பிரித் தானியரை வரவேற்பார்களென்பதையும் உணர்ந்தான். இதற் கிடையில் கண்டி ராச்சியத்தில் வியாபார ம் நடத்திய சில சிங்களப் பிரித்தானியப் பிரசைகளை அரசனின் உத்தியோகஸ் தர் ஒற்ற ரெனப்பிடித்து அங்க வீனப்படுத்தி அனுப்பினர் சள். அரசனின் பட்டாளம் கலகஞ்செய்தவர்களைக் கலைத்துக்கொண்டு போய் பிரித்தானிய எல்லையில் நுழைந்து ஒரு கிராமத்துக்கும் நெருப்பு வைத்துவிட்டது. இந்த இரண்டு காரணங்களையும் வைத்துக்கொண்டு பிரெளன்ரிக் கண்டி அரசன் மீது போர் தொடுத்தான்.
பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்றியவுடன் கண்டியதி காரிகளுடன் அவர்கள் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். கண்டி அரசுக்கு நாயக்க மன்னரை ஏற்றுக்கொள்வதில்லை யென்றும் பிரித்தானிய மன்னனே தங்கள் அரசனென்றும். அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ஆனல், அரசாங்க அதிகாரம் முழுவதையும் கைக்கொள்ள பிரித்தானியரால் முடியவில்லை. அதிகாரிகளின் துணையைக் கொண்டுதான் பிரித்தானியர் வெற்றிபெற முடிந்ததானபடியால் அவர்களுடைய உரிமை, பதவி, ஆதிக்கம் முதலியவற்றைப் பாதுகாத்துக் கொள்வதுடன் கிரிமினல், சிவில் நீதிபரிபாலனத்தையும் அந்தந்தப் பகுதி களுக்கு அந்தந்த அதிகாரிகள் வசமே விட்டுவிட வேண்டியிருந் தது. அத்துடன் சனங்களின் சமயானுஷ்டானங்களிற் றலை யிட்டால் குழப்பமுண்டாகுமென்றுணர்ந்து புத்த சமயத்தைப்

Page 20
28. இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பாதுகாத்துப் பரிபாலிக்கவும் அவர்கள் உடன்பட்டார்கள். பிரித்தானியருக்கும் நன்மையில்லாமலில்லை. எல்லைகளில் விதிக் கப்பட்டுவந்த சுங்கத்தீர்வை நீக்கப்பட்டது. அதனல் பிரித் தானிய வியாபாரம் விருத்தியடைய வழிபிறந்தது. பிரித்தானி யர் கண்டியைக் கைப்பற்றி இலங்கை முழுவதும் தமது ஆதிக் கத்தைச் செலுத்தினர்கள்.
கண்டிப்போர் சம்பந்தமாகப் பல ருசிகரமான கதைகள் உண்டு. சில மிக விவாதிக்கப்பட்ட விஷயங்களாகும். முக்கிய மான சரித்திரத்துக்கு இவை அவசியமில்லாதபடியால் இங்கே குறிப்பிடப்படவில்லை. ஈராயிரம் ஆண்டாக இருந்து வந்த சிங்களராட்சி கண்டி வீழ்ந்ததால் தொலைந்துவிட்டதெனப் பலர் துக்கமடைகிருர்கள். ஆனல், கண்டிராச்சியம் மத்திய கால நிலையிலிருந்தது. குறுகிய நோக்கமுடையதாயிருந்தது. ஆனபடியால் பிரித்தானியா போன்ற ஒரு நவீன ஏகாதிபத்திய வல்லரசின் முன் தனித்து நிற்கமுடியவில்லை. அது சுதந்திரம் இழந்துபோனலும் அதற்கீடாகச் சில நன்மைகளுமேற்பட்டன. மூன்று நூற்றண்டுக்கதிகமாகவே பல தனி ராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த இலங்கை ஒரு தனிராச்சியமாக மாறிற்று. உள்நாட்டுக் கலகமும் வெளிநாட்டுப் படையெடுப்புமில்லாமல் சமாதானமும் முன்னேற்றமும் அடைய வழி பிறந்தது.
4. கண்டிக் கலகம் கண்டி அதிகாரிகள் தங்கள் செய்கைகளுக்காக விரைவில் பச்சாத்தாபப்பட்டார்கள். அரசன் எவ்வளவு கொடுங்கோலன யிருந்தபொழுதிலும் சிங்கள சேவை மானிய அரசாட்சிமுறையி னல் அதிகாரிகளுக்கு இடைஞ்சல் ஏற்படவில்லை. தங்கள் ஆட்சிப் பகுதிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறுநில மன்ன ராகவே இருந்தார்கள். சனங்களும், அவர்களுடைய அதிகாரத் தையும் செல்வாக்கையும் பரிபூரணமாக ஒப்புக்கொண்டார்கள். ஆனல், கட்டுப்பாடும் ஒழுங்குமுள்ள பிரித்தானிய ஆட்சி போன்ற நவீன ஆட்சி அவர்களுடைய உரிமைகளைப் பொறுத் தவரையில் எவ்வளவு சலுகை காட்டிவந்தாலும் அவர்களுக்கு இடைஞ்சலை உண்டுப்பண்ணக்கூடியதாகவேயிருந்தது. கீழ்ப் பிரதேசங்களை அடுத்த எல்லைகளில் ஆட்சி நடத்திவந்த அதிகாரி கள் எல்லே வரிகளை இழந்ததனல் தங்களுக்குண்டான நஷ்டத்தை உணரத் துவங்கினர்கள். பிரித்தானியர் நியாய பரிபாலனஞ்: செய்த முறை ஒருவருக்கும் பிடிக்கவில்லை. சாதியாசாரப்படி எல்லாக் குற்றவாளிகட்கும் ஒரே விதமான தண்டனை விதிக்கப் படாது அவரவர் பிறப்புக்கும் அந்தஸ்துக்கு மேற்றபடியே இது காறும் தண்டனை விதிக்கப்பட்டுவந்தது. பிரித்தானியர் சாதிப்

இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றல் 29
பாகுபாடுகளைக் கவனிக்காமல் எல்லாருக்கும் ஒரே வகையான நீதியைச் செலுத்திவந்தார்கள். இது அதிகாரிகளின் செல் வாக்கையும் அதிகாரத்தையும் அடியறுத்து வந்தது. முன் னெல்லாம் அரசன் ஒருவனே அதிகாரிகட்குத் தலைவனுயிருந்: தான். இப்பொழுதோ பி ரித் தா னி ய உத்தியோகத்தரின் கட்டளையை அதிகாரிகள் சிரமேற்கொள்ள வேண்டி யேற்பட்டது அன்றியும் தங்கள் குடிகளிடமிருந்து பெற்றுவந்த மரியாதையை பிரித்தானிய போர் வீரரிடமிருந்து இவர் க ள் பெறமுடிய
அதிகாரிகளுடைய செல்வாக்கு மாத்திர மன்று, புத்த பிக்கு களுடைய செல்வாக்கும் குன்றிவிட்டது. அந்நாட்களில் நிலவிய சேவை மானியமுறை ஆட்சியோடு புத்தசமயமும் அந்நியோன் னியமாக ஒன்றுபட்டிருந்தது. எனவே புத்த பிக்குகளுடைய ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் புதிய ஆட்சிமுறை குறைத்து வந்ததால் அதை அவர்கள் விரும்பவில்லை. அரசன் புத்த சமய விழாக்களிலும் அனுஷ்டா னங்களிளும் பங்குபற்றினதுமன்றி விகாரைகளிற் சென்று வழிபாடு நடத்திப் புத்த குருமாருக்கு மிக்க மரியாதையுஞ் செய்தும் வந்தான். பிரித்தானிய உத்தியோ கத் த ர் அரசனைப்போல் நடக்கமுடியவில்லை. அன்றியும் புத்த குருமாருக்கு வழக்கம்போலிருந்துவந்த மரியாதையை அவர்கள் செலுத்தவும் முடியாமற் போய்விட்டது. குடிகளும் இந்த மாற்றங்களை விரும் பவில் லை. தலைமுறை தலைமுறையாகப்
போற்றிவந்த சிங்கள ஆட்சிமுற்ையையும் பழக்க வழக்கங்களையும்
இலேசாகக் கைவிடுவது சுலபமன்று.
விந்தனை, வெல்ல ச என்ற பகுதிகளில் ஆட்சி செய்துவந்த அதிகாரிகள் பிரித்தானிய ஆட்சியைப் பெரிதும் வெறுத்தார் கள். ராஜதானிக்கு எவ்வளவு தூரத்தில் ஒரு அதிகாரி இருக் கிருனே அவ்வளவுக்கு அரசனும் அப்பகுதியில் தலையிடுவது
குறைவு. சிங்கள அரசர்காலத்து ஆட்சிமுறை இப்படிப் J-L-gl. இந்த அதிகாரிகளும் தங்கள் உரிமைகளை நழுவ விடாது கண்ணுங்கருத்துமாய்க் , காப்பாற்றிவந்தார்கள்.
திசாவை என்ற அதிகாரியிடும் வரிகளிலிருந்து தப்பிக் கொலீ வதற்காக இப்பகுதியைச் சேர்ந்த சோனகர் பிரித்தானியரிடம் சொல்லி ஒரு சோனக முகாந்திரத்தை நியமித்தார்கள். தனது, அதிகாரத்தையும் வருமானத்தையும் குறைத் தற்கேதுவான இந்நடவடிக்கையை அந்தத் திசாவை விரும்பவில்லை. 1817-ம் வருடம் ஒக்ற்ருேபர் மாதம் வில்பாவே என்ருெரு போலியுரி மைக்காரன் கண்டி ராச்சியத்துக்கு உரிமை பேசிக்கொண்டு கலகஞ் செய்தான். திசாவையும் அவனது குடிகளும் அவனை

Page 21
30 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
ஆதரித்துக் கலகத்தை ஊக்கப்படுத்தினர்கள். இதையறிந்த மற்ற அதிகாரிகள் பலரும் கலகத்தில் சேர்ந்துகொண்டனர். முன்கூட்டியே திட்டப்படி ஒழுங்கு செய்யப்படாவிட்டாலும் அநேக அதிகாரிகள் இப்புரட்சியிற் பங்குபற்றினர்கள். சில அதிகாரிகள் மாத்திரம் பிரித்தானியரை ஆதரித்தனர். -
கலகம் நாளுக்குநாள் பல முற்று வருவதை பிரித்தானியர் உணர்ந்தார்கள். கண்டி ராச்சியம் பெரும்பாலும் காடடர்ந்த பிரதேசமாயிருந்தபடியால் புரட்சிக்காரர் வழக்கப்படி காட்டு யுத்தத்தை மேற்கொண்டார்கள். பிரித்தானிய சைனியங்கள் காட்டுப்பாதையால் போகும்பொழுது ஒளித்திருந்து தாக்கினர் கள். கலகக்காரரை அடக்குவது மிகக் கஷ்டமாய்ப் போய் விட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் நிலைமை மிகமோசமாயிருந்த படியால் சனங்களை அடக்குவதற்காக பிரிட்டிஷ் பட்டாளம் வீடுகளைத் தீக்கிரையாக்கிப் பயிர்களை அழித்து நீர்ப்பாசன வசதிகளைச் சேதப்படுத்திற்று.
கடைசியாகப் பிரித்தானியர் கலகத்தை அடக்கினர். பிர தானமான அதிகாரிகள் பரஸ்பரம் பொருமையுற்று மிக நெருக் கடியான தருணத்திற் கூட ஒற்றுமையாய்த் தொழில் செய்ய விரும்பவில்லை. நாலு கோறளையின் அதிகாரியான மொல்லி கொ  ைட பிரித்தானியரிடம் விசுவாசமுள்ளவனுயிருந்தான். அதனுல் கொழும்புக்கும் கண்டிக்குமிடையில் இடையூறின்றிப் போய்வர முடிந்தது. கடைசித்தறுவாயில் கலகஞ்செய்த அதிகாரிகள் தம்முள் பிணங்கிக் கொண்டதால் புரட்சியைக் கொண்டு நடத்த முடியவில்லை. காட்டு யுத்தம் செய்த கலகக் காரரை முதலில் தலைபணியச் செய்யப் பிரித்தானிய படைகள் போதவில்லை. பின்னர் இந்தியாவிலிருந்து படைகளையும், யுத்தக் கருவிகள் சாமான்கள் முதலியவற்றை எடுத்துச் செல்லத் தொழிலாளரையும் பிரித்தானியர் கொண்டுவந்தனர். 1818-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கலகக்காரரால் திருடப்பட்ட தந்ததாதுவை பிரித்தானியர் மறுபடியும் கைப்பற்றிக்கொண்ட தால் மூட நம்பிக்கையுள்ள குடிகள் பிரித்தானியப் படையை இவல்லுவது முடியாத காரிய மென்று எண்ணினுர்கள். தந்த த்ாதுவை யார் வைத்திருக்கிருர்களோ அவர்களே அரசாட்சிக்கு உரிமையுடையவர்களென்று சிங்களரிடையே ஒரு நம்பிக்கை யுண்டு.
கலகத்தை அடக்கியதும், அதிகாரிகளின் ஆதிக்கம் குன்றிப் போனது. கண்டி ராச்சியத்தை பிரித்தானியர் பூரணமாக அடிப்படுத்திக்கொண்டார்கள். வலிமை பொருந்திய ஒரு நவீன அரசின் கீழ்க் கண்டி மாகாணங்களெல்லாம் நேரடியாக

இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றல் 8 ፲፬
ஆட்சி செய்யப்பட்டன. மூன்று வருடங்களுக்கு முன்னரே ஒரு தனி ஆட்சியில் அடங்கிய இலங்கையில் இப்பொழுது எல்லாப் பகுதிக்கும் பொதுவான ஒரு நிர்வாகம் நிறுவப்பட்டது
5. கோட்டைகளும் விதிகளும்
பிரித்தானியர் யுத்தஞ் செய்து வென்ற கடற்கரைப் பிர தேசங்களை வாட்பலத்தினலே நிலைநிறுத்த வேண்டியிருந்தது. டச்சுக்காரர் இலங்கையை மறுபடியும் திருப்பிப் பிடித்துவிடு வார்களென்ற பயமிருக்கவில்லை. ஆனல், பிரெஞ்சுக்காரர் வந்து புகுந்து ஆங்கிலேயரைக் கலைக்கக்கூடிய நிலைமையிருந்தது. ரபால்கர் கடல் யுத்தம் பிரெஞ்சுக்காரரின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி யிட்டது. ஆனல் அது இனிமேல் நிகழவேண்டி யிருந்ததால் இந்தியா மீது படையெடுக்கும் நோக்கமாக பிரெஞ் சுக் கடற்படையொன்று புறப்படுவதற்கு ஒருவிதமான தடையு மிருக்கவில்லை.
இலங்கையிற் தமது ஆட்சியைப் பலப்படுத்துவதற்கு முதலில் பிரித்தானியர் பு தி ய முறைகளொன்றையும் அனு சரிக்கவில்லை. கொழும்பு வியாபாரத்தைப் பாதுகாப்பதற்காகப் போர்த்துக்கேயர் 1518-ல் ஐரோப்பியக் கோட்டைகளைப் போல ஒரு மத்திய காலக் கோட்டையைக் கொழும்பிலே கட்டினர்கள். 17-ம் நூற்றண்டிலே முன்னேற்றமான வேறுவித கோட்டை களைக் கரையோரங்களிலுள்ள முக்கியமான இடங்களில் வேறு ஐரோப்பிய வல்லரசுகளின் எதிர்ப்பிலிருந்து தங்களைப் பாது காப்பதற்காகக் கட்டினர்கள். டச்சுக்காரர் வந்தபொழுது இக்கோட்டைகளை மேலும் திருத்தி 17-ம் நூற்றண்டில் ஐரோப்பாவில் கட்டிய கோட்டைகளைப் போலக் கட்டினர்கள். கீழ்க்கரையில் முல்லைத்தீவு, திருக்கோணமலை, மட்டக்களப்பு, பானம ஆகிய இடங்களிலும், வடக்கில் யாழ்ப்பாணத்திலும், மேல் கரையில் மன்னர், கற்பிட்டி, புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை ஆகிய இடங்களிலும், தென்கரையில் காலி, மாத்தறை, தங்காலை, அம்பாந்தோட்டை ஆகிய இடங் களிலும் கோட்டைகள் அவர்களுக்கு இருந்தன. பிரித்தானியர் இவற்றைப் பழுதுபார்த்துப் பட்டாளங்களை ஆங்காங்கு அமைத் தார்கள் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்து வதற்கும் கடலிலிருந்து இந்தியாவைத் தாக்காமற் பார்த்துக்கொள்வதற் கும் திருக்கோணமலையைத் தமது கடற்படை ராணுவப்படைத் தலைமைக்காரியாலயமாகவுங் கொண்டார்கள்.

Page 22
32 இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி
கண்டி ராச்சியத்தை பிரித்தானியர் கைப்பற்றியபொழுது போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் பின்பற்றிய பாதுகாப்பு முறைகளையே அவர்களும் பின்பற்றினர்கள். படையெடுப் பைத் தடுப்பதற்காகக் கண்டி எல்லைகளிலுள்ள கேந்திரத் தானங்களிளெல்லாம் ராணுவநிலையங்களைப் போர்த்துக்கேய ரும் ஒல்லாந்தரும் நிறுவியிருந்தார்கள். பிரித்தானியரும் தமது வெற்றியை நிலைநிறுத்துவதற்காக கண்டி மாகாணங்களிலுள்ள முக்கியமான இடங்களில் ராணுவத் தலங்களை. ஏற்படுத்தினர். கொழும் பிலிருந்து கண்டிக்குச் செல்லும் பழைய பாதையி லுள்ள ரூவா ன் வளை, இட்டமல்பாணை, எட்டிமுல்லை, அட்டப் பிட்டி ஆகிய இடங்களிலும் பலானைக் கணவாய்க்கு மேலுள்ள அமுனு புரத்திலும் படைகளை நிறுத்தி வைத்திருந்தார்கள். முதற் கண்டிப்போரில் பிரித்தானியர் கைப்பற்றியிருந்த வட மேற்குப் பாதையிலுள்ள குருணுக்கல், கலகேதரை ஆகிய இடங் களிலும், திருக்கோணமலையிலிருந்து மாத்தளைக்குப் போகும் பாதையிலுள்ள நாலந்தா, பலக்கடுவை ஆகிய இடங்களிலும் பட்டாளங்களை நிறுத்தியிருந்தார்கள். மேலும் தங்களைப் பலப் படுத்திக்கொள்வதற்காக அமுனு புர, கலகேதரை, பலக் கடுவை ஆகிய முக்கியமான கணவாய்களில் கோட்டைகளை அமைத்த துடன் சாமான்களைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்காக ரூவான் வளையில் ஒரு பண்டசாலையையும் ஏற்படுத்தினர்கள். கண்டி ராச்சியத்திற்கு இயற்கையாயமைந்த கோட்டைகள் போன்ற வதுளை, கண்டி ஆகிய முக்கிய நகரங்களிலும், ரத்தின புரிக்கு அணித்தா கவுள்ளதும், கொழும்புக்கும் பதுளைக்குமிடை யில் மிக முக்கியமான கேந்திர ஸ்தானமாயமைந்ததுமான பட்டுகேதரையிலும் ராணுவத்தை நிறுத்தியிருந்தார்கள். போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காகத் தாழ்ந்த பூமிக்கும் மலை நாட்டுக்கு மிடையிலுள்ள காடுகளை வெட்டினர்கள். சைனியத் தின் நடமாட்டத்திற்கு உதவியாயிருக்குமாறு உள்நாட்டுப் படமொன்றையுந் தயாரித்தார்கள்.
கண்டிக்கலகத்தை அடக்கி நாட்டில் தமது ஆட்சியை ஸ்தா பித்த பின்னர் பிரித்தானியர் ரூவான் வளை, அரசன்கோட்டை (அட்டாப்பிட்டி), குருணுக்கல், கலகேதரை, மக்டோவல் கோட்டை மாத்தளை இரத்தினபுரி, ' நாவலப்பிட்டிக்கும் தல வாக்கொல்லைக்கு மிடையிலுள்ள கொத்தமலை, அங்குராங்கே தைக்குத் தெற்கேயுள்ள மத்துரட்டை, நுவரெலியா, வதுளை, வெளிமடைக்கு அணித் தாயுள்ள மக்டெனல்டு கோட்டை, பசறைக்குத் தென்கிழக்கேயுள்ள அலுப்பொத்தை ஆகிய இடங் களிலெல்லாம் படைகளை நிறுத்தினர்கள்.

இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றல் 33
பிரெளன்ரிக்குக்குப் பின்னர் தேசாதிபதியான சேர் எட்வர்ட் பாண்ஸ் புது முறையைக் கையாளத் துவங்கினர். அவள் (1820-1830) கோட்டைகளைக் கட்டி பிரித்தானிய ஆட்சியை இலங்கையில் நிலைநிறுத்தும் கொள்கையை ஆதரிக்க வில்லை. ராணுவத்தலங்கள் அநேகமாய் மலேரியாப் பிரதேசங் களிலிருந்ததால் போர் வீரர் பலர் காட்டுச் சுரத்துக்கு இரை யானுர்கள். இங்கிலாந்திலே இக்காலத்தில் ஏராளமான ரோட்டுகளமைக்கப்பட்டன. மெட்காவ், டெல்போர்ட், மக்கடம் ஆகிய நிபுணர் ரோட்டுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள். கோட்டைகளைக் கட்டும் வேலையை விட்டு விட்டு வீதிகளமைக்க வேண்டுமென பாண்ஸ் விரும்பினர். 1745-ல் நடந்த கலகத்துக்குப்பின் ஸ்கொத்துலாந்து மலைப் பகுதிகளிலும், பிரித்தானிய அரசாங்கம் ரோட்டுகளையமைத் தது. ஜாக்கோ பைட் கலகங்கள் மேலும் ஏற்படாமற் றடை செய்வதற்கு இவை தக்க பாதுகாப்பென எண்ணப்பட்டது. அப்பொழுது சேனைகள் தங்களுடைய பீரங்கிகளைக்கொண்டு விரைவாக நகர்ந்துசென்று கலகங்களை அடக்கிவிட முடியுமென எண்ணினர்.*
கண்டியில் ஆதிக்கம் செலுத்தவேண்டியது முக்கியமான பிரச்னையாயிருந்தபடியால் பாண்ஸ் 1820-ல் கண்டிக்கும் கொழும்புக்குமிடையில் ரோட்டுப்போட ஆரம்பித்தார். 1821-ல் அந்த ரோட்டுப் போக்குவரத்துக்குத் திறந்துவிடப் பட்டது. 1825-ல் கல்லுப்போட்டு முடிந்தது. 1832-ல் ரோட்டு முற்ருக முடிக்கப்பட்டது. பழைய பாதையொன்று கழனி கங்கையையடுத்து ஹன்வலை, அவிசாவலை, ரூவான்வலே மார்க்கமாக இட்டமல்பான, எட்டிமுல்லை, அட்டாப்பிட்டி, பலான ஆகிய இடங்களுக்கூடாக கன்னெறுவை வரை சென் றது. ஆனல் புதிய ரோட்டு கழனிக்கூடாக மஹாரை, ஹென ரத் கொடை, வியாங்கொடை, பஸ் யாலை, வரக்கர்ப்பொலே ஆகிய இடங்களுக்கூடாகச் சென்று கணேத்தனை என்ற இடத் தில் பழைய பாதையைச் சந்தித்தது. இதற்குமேல் வாகனங்கள்
*ரோட்டுகள் இலங்கைங்குப் புதியனவல்ல, நகர எல்லைக்குள் அவை முன்னேயுமிருந்தன. இலங்கையைச் சுற்றிக் கரையோரமாக ஒல்லாந் தர் அகலமான பாதையை வெட்டியிருந்தார்கள். 1814 வரையில் கொழும்புக்கும் காலிக்குமிடையிலிருந்த பாதையைப் பிரித்தானியர் திருத்தினர்கள். கொழும்பிலிருந்து திருக்கோணமலைவரை ஒரு பாதையைப் போடுவதற்கு பிரெளன்ரிக் திட்டம் போட்டிருந்தார். ஆஞல் கண்டிக் கலகம் அதற்குள் துவங்கிவிட்டது. 1815 வரை ஐரோப்பியச்சண்டை முடிந்து போனது. திருக்கோணமலையின் முக் கியத்துவமும் அதனற் குன்றிவிட்டது. எனவே கொழும்புக்கும் திருக்கோணமலைக்கு மிடையில் ரோட்டுப்போடவேண்டிய அவசியம் குறைந்துவிட்டது.
401-0

Page 23
இலங்கைப் படம்
Gosp u டைகளையும, få gowser நிலையங்கரையும் காட்டுகிறது
கண்டிக்குச்செலலும் பழைய பாதை as are es» ad
سمبر s "Aw454 87
I
کسمبر اے = غ tooea saw :وخته مینه مسلم نه ها
മഒക്ടേ 9uayaasan
மக்டொனல்ட் as fell
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றல் 35
மலையிலே இலேசாகப் போவதற்காகக் குன்றுகளின் பக்கமாய் வளைந்து வளைந்து சென்று இந்த ரோட்டு கடுகண்ணுவைச் சிகரத்தை யடைந்தது. ரோட்டின் இப்பகுதி காப்டன் டோசன் என்பவரால் போடப்பட்டபடியால் அவர் இறந்தபின் அவரு டைய ஞாபகத்திற்காக கடுகண்ணுவையிலுள்ள கோபு ர ம் கட்டப்பட்டது. இதே காலத்தில் வேறும் பல வீதிகளமைக்கப் பட்டன. 1821-ல் குருணுக்கலுக்கும் கண்டிக்குமிடையில் கல கேதரைக் கணவாய் மார்க்கமாக ஒரு வீதியமைக்கப்பட்டது. 1825-ல் கொழும்பு-கண்டி ரோட்டிலுள்ள அம்பேபுசவிலிருந்து பிரிந்த ஒரு ரோட்டுடன் இணைத்துக் கொழும்பையும் பிணைத்து விட்டனர். 1827-ல் இந்த ரோட்டு டம்புலவரை விஸ்தரிக்கப் பட்டது. 1831-ல் கண்டிக்கும் மாத்தளைக்குமிடையில் ஒரு ரோட்டுப்போடப்பட்டது. இதுவும் டம்புலவரை 1832-ல் விஸ்தரிக்கப்பட்டது. குருணுக்கல் மார்க்மாகக் கொழும்பிலி ருந்துவந்த ரோட்டுட்ன் இதுவும் இணைக்கப்பட்டது. கண்டிக் குப்போவதற்குக் கடக்கவேண்டிய கடுகண்ணுவை, கலகேதரை, பலக்கடுவை ஆ கி ய மூன்று கணவாய்களையும் ரோட்டுகள் இணைத்தன. மூன்று திசைகளிலிருந்தும் தீவின் மத்தியபகுதியை விரைவில் அடையக்கூடியவாறு இவை அமைந்தன.
கரையோரமாக ஒல்லாந்தரமைத்த வீதிகளிலும் பார்க்க இவை அதிகம் மாறுபட்டனவல்ல. ஒல்லாந்தர், காட்டுக் கூடாக மட்டமான பாதைகளை அமைத்தார்கள்.
நிரந்தரமான பாலங்களையோ மதகுகளையோ அவர்கள் அமைக்கவில்லை. ஆறு, சிற்றருவி முதலியவற்றை அணுகும் பொழுது ரோட்டுகள் படிப்படியாகச் சரிந்துபோகக்கூடியதாய் அமைக்கப்பட்டன. அதனல் வண்டிகள் இலேசாகப் போய்த் துறைத்தோணிகளில் அக்கரைக்குப்போயின. ஆனல் கொழும்புகண்டி ரோட்டிலும் அம்பேபுசவிலிருந்து பிரிந்து குருணக் கலுக்குச் செல்லும் ரோட்டிலும் பாலங்கள் அமைக்கப்பட்டன. 1822-ல் கழனிகங்கையைக் கடப்பதற்காகக் கண்டி ரோட்டில் பாலத்துறையில் தோணிப்பாலம் அமைக்கப்பட்டது. 59-வது கட்டையிலும், 67-வது கட்டையிலும், நானு ஒயா ஆற்றிலும், மாவனல்லையிலும் மூன்று பாலங்கள் மேலும் அமைக்கப்பட்டன. 1832-ல் பேராதனையில் மா வலிகங்கைக்கு மேலாக முதிரை மரத்தால் ஒரு பாலம் அமைக்கப்பட்டது.
அரசாங்கம் அதிக பணம் செலவுசெய்யவேண்டி யிராத படியால் மிகச் சொற்பகாலத்திலேயே இவ்வூளவு வீதிகளையும் அமைத்துவிட்டது. பிரித்தானிய ஆட்சிக்குமுன்னரே ராஜ காரியம்* என்ற தொழில்முறை இலங்கையில் நிலவிவந்தது:
* 19-ம் பக்கம் பார்க்க.

Page 24
ふ6 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
இதன்படி ஒவ்வொரு பகுதியிலுள்ள ஆண்களும் அவ்வப்பகுதி யைச்சேர்ந்த வீதிகளையும் பாலங்களையும் பழுதுபார்ப்பதற்கு இரண்டு வாரம் இலவசமாகச் சேவைபுரியவேண்டும். பிரித் தானியரும் ரோட்டுகளைப் போடுவதற்கு இம்முறையைப் பயன் படுத்தினர்கள். தொழிலாளரின் வேலையை மேற்பார்வை செய் வதற்கும் ரோட்டுகளுக்கு அடியெடுத்துக் கொடுப்பதற்கும் ராணுவ உத்தியோகஸ்தர்களை அமைத்தார்கள்.
ராணுவத் தேவைகளுக்கு மாத்திரமன்றிப் பொதுசனங் களுக்கும் இந்த ரோட்டுகள் உபயோகப்பட்டன. இங்கிலாந் திலே இக்காலத்திற்ருன் குதிரை வண்டிகள் அதிக பழக்கத் துக்கு வந்தன. கொழும்பிலேயும்* இக்காலத்தில் குதிரை வண்டிகள் உபயோகத்துக்கு வந்துவிட்டன.
1831-ம் ஆண்டு டிசெம்பரில் தேசாதிபதியும் சில அரசாங்க உத்தியோகஸ்தரும் சேர்ந்து கொழும்புக்கும் கண்டிக்குமிடை யில் ஒரு தபால்கோச்சு ஒட்ட வேண்டுமென்று எண்ணி ஒரு கொம்பனியை உண்டாக்கினர்கள். இதன் பயணுக 1832-ல் இலங்கையில் தபால்கோச்சு ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவி லேயே இதுதான் முதற் தபாற்கோச்சாகும். இதற்குக் கட்ட ணம் இரண்டு பவுண் பத்து சிலிங்காகும். ஏறக்குறைய இருபத் தைந்து ரூபாய் என்று கூறலாம். ஆனல் இம்மாதிரியா ன பிரயாணம் செளகரியமாகவும் துரிதமாகவுமிருந்ததால் செல . வுக்குத்தக்க நன்மையிருந்தது.
ரோட்டுகள் தபால் போக்குவரத்துக்குப் பெரிதும் துணை புரிந்தன. அரசாங்கத் தபால்களைப் பரிமாறிக்கொள்வதற்காக பிரித்தானியர் தமது ஆட்சிக்கால ஆரம்பத்திலேயே தபால் பகுதியை நிறுவினர்கள். கொழும்பு, திருக்கோணமலை, யாழ்ப் பாணம், மன்னர், காலி, மாத்தறை ஆகிய இடங்களில் தபால் கந்தோர்கள் நிறுவப்பட்டன. ஒட்டக்காரர் தபால்களை எடுத்து ஆங்காங்கு கொடுத்துவந்தார்கள். கோச்சு வந்ததும் தபால் பகுதியார் கோச்சியிலே கடிதங்களை அனுப்பினர்கள். ரோட்டு களில்லாத இடங்களில் ஒட்டக்காரர் மூலம் தபாலைக்கொடுத்து
வநதனா.
* கண்டியில் இவை இக்காலத்தில் பழக்த்துக்கு வரவில்லை. கண்டியி லுள்ள ஸ்தானிகர்கள் நோர்த் தேசாதிபதியிடம் செல்லும்பொழுது பல்லக்குப்போன்ற வண்டிகளிற் போவார்கள். மற்றவர்கள் தங்களைக் கைதிகளென்று பிழைபட எண்ணிக்கொள்ளாதவாறு வண்டியின் கதவுகளைத் திறந்துவிட்டுக்கொண்டே செல்லுமாறு உத்தரவிட்டார்கள்.

இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றல், 37
க ண் டி ராச்சியத்தை பிரித்தானியர் கைப்பற்றியதும் இலங்கை முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் அடங்கியதென்றும், கண்டிக் கலகத்தை அடக்கியபின்னர். இலங்கை முழுவதற்குமே பொதுவான அரசாங்க நிர்வாகம் ஏற்பட்டதென்றும் மேலே கூறினுேம், ரோட்டுகள் ஏற்பட்டதாலும் இந்த ஒருமைப்பாடு அதிகரித்தது. வேறுவேறு பிரிந்து தனித்துக்கிடந்த பல கிராமங் களும் பகுதிகளும் ஒன்ருே டொன்று தொடர்பு கொண்டன. தபால்பகுதியார் கொழும்பிலிருந்து ஏனைய பல பகுதிகளுக்கும் சமாச்சாரங்களை அனுப்புவதற்கு ரோட்டுகள் மிகப் பயன் பட்டன.

Page 25
மூன்றம் அத்தியாயம்
நிருவாக அபிவிருத்தி
1. கிழக்கிந்தியக் கொம்பெனியின் நிர்வாகமும் இரட்டை ஆட்சியும்
சென்னை அரசாங்கம் இலங்கையின் கடற்கரைப் பிரதேசங் களை ஒல்லாந்தரிடமிருந்து கைப் பற்றியதால் அப்பகுதிகள் அவர்களினுட்சியின்கீழே யடங்க வேண்டியதாயிற் று. கிழக் கிந்தியக் கொம்பெனியார் பெரிய பிரித்தானிய மன்னரின் பேரால் நாடுகளைப் பிடித்துவந்தபோதிலும், அந்நாட்டு நிர் வாகத்தை பிரித்தானிய அரசாங்கம் உடனே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கையைப் பிடிப்பதற்கு, கிழக்கிந்தியக் கொம்பெனி ஏராளமான பொருளைச் செலவு செய்தபடியால் இலங்கையின் வருவாயிலும் வியாபாரத்திலும் அதற்கும் கொஞ்சப்பாத்தியதை இருந்தது.
நிருவாக மாற்றம் மிகத் துர்ப்பாக்கியமானதே. சென்னை அரசாங்கம் தனது நாட்டிற்கேற்ற ஒரு நிர்வாகமுறையைக்கூட இது வரை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. தென்னிந்தியாவில் கலகமும் அராஜரீகமும், குடிகளை வாட்டி வந்தன. இக்காலத் திலும் ஓர் அளவிற்கு பொறுப்பற்ற நிர்வாகிகளின் எண்ணப் படியே ஆட்சி நடைபெற்றது. மிகக்கொடுமையான முறையிற் குடிகளிடம் திறை வசூலிக்கப்பட்டது. திறைவசூல் கூட ஏலத் தில் விலைகூறி விற்கப்பட்டது. அதை ஏலத்தில் வாங்கி திறை வசூல்செய்வோர் தயவு தாட்சணிய மின்றி குடிகளிடம் எடுக்க கூடிய அளவு திறையை எடுத்தார்கள். திறை கட்டத் தவறினல் அந்த நிலங்களை விற்றுத் திறைப்பணத்தை எடுக்க மாட்டார் கள். பயிர் செய்யவேண்டியதுதான் முக்கியம். விளைவு, இருந் தாலென்ன இல்லாவிட்டாலென்ன, திறைகொள்ளும் உத்தியோ கஸ்தர் அரசாங்கத்திற்கு அதிக பங்கைப் பெற்றுக்கொடுப் பதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தனர்.
சமாதானமாக அப்பங்கைப் பெற்றுக்கொள்ள முடியா ம லிருந்தால் விவசாயிகளை இம்சைப்படுத்துவார்கள். திறை கொடுக்கும்வரை நெற்றிக்கு கல்லு வைக்கும் முறை கூடக் கையாளப்பட்டது. VM
ஆரம்பத்தில் இலங்கையின் அரசாங்க நிர்வாகத்தை ராணுவ உத்தியோகஸ்தர் வசம் சென்னை அரசாங்கம் ஒப்படைத்துவிட் டது. ஆனல் நாட்டின் வியாபாரத்தை மேற்கொள்ளவும் திறை யைச்சேகரிக்கவும் காலதாமதமின்றி வேறு ஒழுங்குகளைச் செய்துகொண்டது. கரைப்பிரதேசங்களை மூன்று பகுதிகளாகப்

நிருவாக அபிவிருத்தி 39
பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பிரித்தானிய உத்தியோகஸ்தர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவ்வுத்தியோகஸ்தரின் காரியாலயங்களுக்குத்தான் கச்சேரி என்ற இந்திய வார்த்தை அன்றுதொட்டு இன்றுவரை வழக்கிலிருந்துவருகிறது. திறை சேகரிக்கும் விஷயத்தில் இப்புதிய அரசாங்கம் பல சங்கடங்களை அனுபவிக்கவேண்டியிருந்தது. இந்திய நிலப்புரிபாலன முறை சிங்களமுறையிலும் பார்க்க வேறுபட்டது. வட இலங்கையி லுள்ள தமிழ் மக்களின் முறையுடன் இது நெருங்கிய சம்பந்த முடையது. நிலத்துக்குரிமை யுடையவர்கள் தமிழ் முறைப்படி அதற்காகச் சேவைசெய்யவேண்டியதில்லை. அதற்குப்பதிலாகத் தமது காணிகளின் விளைவில் பத்திலொருபாகத்தை அரசாங்கத் துக்குக் கொடுக்கவேண்டும். அதை உத்தியோகஸ்தர்கள் வந்து விளைவுகாலத்தில் சேகரித்துக்கொண்டுபோ வார்கள்.
ஆனல் சிங்களமக்களுடைய முறை இதிலும் முற்றக் வேறு பட்டதாகும். டச்சுக் கொம்பெனியாரின் நேரடியான மேற் பார்வையிற் சில கிராமங்களிருந்தன. சிங்கள மன்னர் காலத் தில் இவை கபடகம் என்று வழங்கப்பட்டன. அரசனுடைய அரண்மனைக்கு அவசியமான உணவுப் பொருள்கள் எல்லாம் இந்தக் கிராமங்களிலிருந்தே அனுப்பப்பட்டன. இந்தக் கிரா மங்களில் கொம்பெனிக்குச் சொந்தமான பெரிய வயல் நிலங் களிருந்தன. அவற்றில் குடியிருப்போர் நிலத்துக்கு வரி கொடுப்பதைவிட்டு அதை ஒன்றில் சாகுபடிசெய்வார்கள் அல்லது கொம்பெனிக்குச் சேவைசெய்வார்கள். அரசாங்கத் துக்குச் சிறந்த சேவைசெய்ததனல் சிலருக்கு மானியமாகச் சில கிராமங்கள் கொடுக்கப்பட்டன. இவை நிந்தகம் என்று அழைக்கப்படும். நிந்தகத்தை உடைய ஒருவர் அப்பகுதியின் குறுநில மன்னரென்றே கூறலாம். அதில் குடியிருப்போர் அவ ருக்குச் சேவைசெய்யக் கடப்பாடுடையவர். தனது குடிகளி டையே பிணக்கு ஏற்பட்டால் அதைத் தீர்க்கவும், சிறு குற்றங் கள் செய்தவர்களுக்குத் தண்டனை விதிக்கவும் அவருக்கு அதி காரம் இருந்தது.
நிலங்கள் சேவைக்கு ஏற்றபடி வேறுமுறையிலும் கொடுக் கப்பட்டு வந்தன. கட்டுக்கரைகளையும், எல்லைகள், ரோட்டுகள் முதலியவற்றையும் காவல் செய்வதற்கும், சமாதானத்தையும் அமைதியையும் பாதுகாப்பதற்கும் யுத்தகாலத்தில் நாட்டைப் பாதுகாவல் செய்வதற்கும், சாமான்களையும் யுத்த தளவாடங் க்ளையும், எடுத்துச்செல்வதற்கும், காட்டைவெட்டுவதற்கும், கால்வாய்களை அமைப்பதற்கும், கறுவா வெட்டுவதற்குமாக ஆட்கள் அமர்த்தப்பட்டார்கள். இவர்களுக்கெல்லாம் சம் பளம் கொடுக்கப்படவில்லை. ' வடவசம் ' என்று வழங்கப்

Page 26
40. இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
படும் முறையில் நிலங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு மானி யம் பெற்ற குடும்பத்திலுள்ள ஆண்களில் ஒருவர் வருடம் மூன்றுமாதத்துக்கு அரசாங்கத்துக்குச் சேவைசெய்யவேண்டும். தனது பகுதிக்கு வெளியே வேலைசெய்ய நேர்ந்தால் தினப் படிச் செலவு கொடுக்கப்பட்டுவந்தது.
இது மிகச் சிக்கலானதொரு நிர்வாகமுறையாகும். சென்னை அரசாங்கம் இதைச் சரிவர நடத்த முடியாமலிருந்தது. அது சிறிது இலேசான ஒரு நிர்வாக முறையைக் கைக்கொண்டது. நிலத்தைக் கொடுத்துச் சேவை வாங்கும் முறை நீக்கப்பட்டது. விளைவில் அரைப்பங்கை அரசாங்கத்துக்குத் திறையாகக் கொடுக் குமாறு சட்டம் இயற்றப்பட்டது. நிலத்தை விவசாயிகளுக் குச் சொந்தமாகக் கொடுத்தால் அவர்கள் விவசாயத்தில் அதிக சிரத்தை எடுப்பார்களென்றும் அதனல் திறை அதிகரிக்குமென் றும், கருதினர்கள். மேலும் புதிய பல வரிகளும் விதிக்கப் பட்டன. உதாரணமாக 5 0 க்கு அதிகமான தென்னை மரங் களுடைய தோட்டக்காரர் ஒரு மரத்துக்கு இரண்டு பென்ஸ் வீதம் மர வரி கொடுக்கவேண்டுமென்றும் விதிக்கப்பட்டது.
சென்னை அரசாங்கம் அவ்வளவில் நிற்கவில்லை. பிரித்தானி யர் இலங்கையைக் கைப்பற்றச் சில ஆண்டுகட்கு முன்னர் முதலியார்களே பிரதானமான ராணுவ உத்தியோகத்தராக வும் அரசாங்க உத்தியோகத்தராகவுமிருந்தார்கள். அவர்கள் தான் வரிகளை வசூல் செய்தார்கள். கொம்பெனிக்காரருக்குச் சேவை செய்யவேண்டியவர்களிடமிருந்து ஊழியம் செய்வித்தார் கள். சிவில் வழக்குகளைத் தீர்த்தும், குற்றஞ்செய்தவர்களுக்குத் தண்டனை விதித்தும் வந் தா ர் க ள். டச்சு உத்தியோகத்தர் பிறப்பிக்கும் க ட் ட ளை களை நிறைவேற்றுவதுடன் நாட்டு நடவடிக்கைகளைப்பற்றியும் அவர்களுக்கு அறிவித்து வந்தார்கள். சுருங்கக்கூறுமிடத்து அவர்களுக்கு அதிக அதிகாரமிருந்து வந்தது. ஏகாதிபத்தியத்துள் இவர்கள் ஒரு ஏகாதிபத்திய மாகவே இருந்தார்களென்று கூறலாம். தங்களுடைய ஆட் சிக்கு இவர்கள் பெரிய இடையூறு விளைக்கக்கூடுமெனச் சென்னை அரசாங்கம் எண்ணியிருந்தது. எனவே அவர்களை உத்தியோ கத்திலிருந்து விலக்கியதுமன்றி அவர்களுக்கு மானியமாக வழங் கப்பட்ட நிந்தகத்தையும் கைப்பற்றிக்கொண்டது. இவ்வாறு காலியான இடங்களுக்குத் தென்னிந்தியாவிலிருந்து அமில்தார் என்று வழங்கப்படும் உத்தியோகத் தரையும், கீழ்த்தர பதவி கட்கு அவர்களுடன் வந்த சில்லறை உத்தியோகத்தரையும் நியமித்தது.

நிருவாக அபிவிருத்தி 41
சிங்கள மக்கள் இந்த மாற்றங்களை விரும்பவில்லை. சிங்கள அரசர்கள் உஷ்ணப் பிரதேசத்திலிருந்து தென்மேற்கிலுள்ள சீதளப் பிரதேசங்களுக்கு மாறியகாலந்தொட்டு நிலவிவந்த ஆட்சிமுறையில் அவர்கள் பெரிதும் பழகிவந்தார்கள். பின்னர் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆட்சிநடத்திய காலங்களி லும் இந்த நிர்வாகமுறை மாற்றப்படவில்லை. புதிய வரிகளைக் கூட அவர்கள் ஆட்சேபித்ததுமல்லாமல் வரி வசூல்செய்யும் முறையையும் விரும்பவில்லை. வசூல்செய்யப்பட்ட திறையை இதுகாறும் ஏலத்தில் கூடிய பணம் கொடுப்பவர்களுக்கு விற்று வந்தார்கள். ஆனல் சென்னை அரசாங்க ஆட்சியின்கீழ் வரி வசூல் செய்யும் உரிமையை இந்த இந்திய உத்தியோகத்தர் களும் அவர்களை ஆதரிப்போரும் விலைக்கு வாங்கினர்கள். சனங் களுடைய பழக்க வழக்கங்களை இவர்கள் அறிந்ததுமில்லை. அவர்களுடைய நன்மையில் சிரத்தை கொண்டதுமில்லை. குடிகளை வருத்தி அநியாயமான திறைகளை வாங்கினர்கள். சனங்களும் இந்த அநியாயத்தைப் பரிகரிக்க வகையறியாம லிருந்தார்கள். திறை வசூல்செய்வது மாத்திரமன்றி இவர்கள் நீதிபதிகளாகவு மிருந்ததால் இவர்களுடைய அநீதிகளை எடுத்துக் காட்டி வழக்குரைக்கக் குடிகட்கு முடியாதுபோய்விட்டது.
ஆட்சிமுறையில் திடீரென்று இவ்வாறு ஏற்பட்ட மாற்றங் களிஞலும் மேலே கூறிய அநீதிகள் காரணமாகவும் 1797-ல் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு கலகம் உண்டானது. இக்காலத் தில் இலங்கை அநேக கிராமங்களை உடையதாயிருந்தது. நெல் விளைவுக்கு ஏற்ற நீர்வளமுடைய பள்ளத்தாக்குகளை அடுத்தே பல கிராமங்களிருந்தன. நாட்டின் மற்றப்பகுதிகளெல்லாம் காடடர்ந்திருந்தன. கலகக்காரர் காட்டுப்பாதைகளில் பதுங்கி யிருந்து பிரித்தானிய போர் வீரரைத் தாக்கினர்கள். 1798-ம் வருடம் மார்ச்சு மாதம் வரை பிரித்தானியர் கலகக்காரரை அடக்க முடியவில்லை. பதவியை இழந்து, ஆதிக்கமும் ஐஸ்வரிய மும் உதவிய நிந்தக நிலங்களை இழந்து, தென்னை மரங்களுக்கு வரி கொடுப்பதுபோன்ற புதிய வரிகளையும் கொடுக்கவேண்டிய நிலைமையிலிருந்த, முதலியார்களே, இந்தக்கலகத்தை உண்டாக் கினர்கள். .
சனங்களுக்குப் பழக்கமில்லாத ஒரு புதிய நிர்வாகமுறையை ஏற்படுத்தியது பெரிய பிழையென்பதைச் சென்னை அரசாங்கம் அறிந்துகொண்டது. குடிகள் பெரிது ம் ஆட்சேபித்துவந்த தென்னைமர வரியை நீக்கிவிட்டு தேங்காய் ஏற்றுமதி மீது வ ரி விதித்தது. சேவைக்குச் சம்பளமாக நிலங்களைக் கொடுக்கும் மானியமுறையை மறுபடியும் ஏற்படுத்திற்று. இந்திய உத்தி

Page 27
42 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
யோகத் தரைப் பதவியினின்றும் நீக்கி முதலியார்களை அப் டதவிகளில் மறுபடியும் நியமித்தது. சுருங்கக் கூறுமிடத்து சென்னை அரசாங்கம் பெரும்பாலும் டச்சுக்காரர் காலத்து ஆட்சி முறையை திரும்ப ஏற்படுத்திற்று.
சென்னை அரசாங்கத்தின் நிர்வாகக் குறைகளை பிரித்தானி யத் தலைமை அரசாங்கமாகிய ஏகாதிபத்திய அரசாங்கம் எவ் வாறு மதித்ததென்பதைக் கூறுவது சாத்தியமில்லை. 1797-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இலங்கையில் கலகமுண்டான செய்தி லண்டனுக்குக் கிடைக்குமுன்னரே, இலங்கையை டச்சு காரருக்குக் கொடுப்பதில்லை யெ ன்று ம் , கொடுக்கவேண்டி வந்தாலும் விரைவில் கொடுப்பதில்லை யென்றும், நிர்வாகத் தைக் கொம்பெனி கையிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்றும் தீர்மானித்தது. இந்தியாவின் பாதுகாப்புக்குத் திருக்கோணமலை அவசியமாதலால் இலங்கையைத் தங்கள் கையிலிருந்து விட்டு விடக் கொம்பெனி விரும்பவில்லை. எனவே கொம்பெனியுடன் இலங்கை ஆட்சியில் பங்கு எடுத்துக்கொள்ள ஏகாதிபத்திய அரசாங்கம் உடன்பட்டது. இந்த ஒழுங்கின்படி, இங்கிலாந்தி லிருந்து சிவில்சேவிஸ் உத்தியோகத்தர்கள், நிர்வாக அலுவல் களைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டார்கள். GuirT i unit Ur விஷயங்களையும், வரிவசூலையும் கவனிக்கச் சென்னை உத்தியோ கத்தர் நியமிக்கப்பட்டனர். இவையன்றி அரசாங்கமுறையில் வேறெவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. உயர் பதவி களை பிரித்தானிய உத்தியோகத்தரும் கொம்பெனி உத்தியோ கத் தரும் வகித்தார்கள். முதலியார்களும் அவர்களுடைய உதவிக் காரியஸ்தர்களும் கோறளைகளின் நிர்வாகத்தைக் கவனித்துவந்தனர்.
தலைமைக்காரருக்குத் திருப்தியளித்தபோதிலும், இப்புதிய ஆட்சிமுறை சித்திபெறவில்லை. சென்னையிலிருந்து வந்த உத்தி யோகத்தரிடம் நேர்மையோ, திறமையோ கிடையாது. தென் னிந்தியருடைய பழக்க வழக்கம் பாஷை முதலியன சிங்கள மக்களுடைய பழக்க வழக்கங்களிலும் பார்க்க வித்தியாசமுடை யனவாயிருந்தபடியால் நிர்வாகத்தைச் செவ்வனே ந டத் த அவர்களால் முடியவில்லை. 1798-ல் இங்கிலாந்திலிருந்து அனுப் பப்பட்ட நோத் தேசாதிபதிக்கு விரோதமாக அவர்கள் கருமங் களைச் செய்துவந்தார்கள். தங்களில் ஒருவரே தேசாதிபதிப் பதவியைத் தாங்கவேண்டுமென்று அவர்கள் விரும்பியபடியால் நோத் பதவி ஏற்றதை அவர்கள் ஆதரிக்கவில்லை.

நிருவாக அபிவிருத்தி 43
இந்த இரட்டை ஆட்சி முறை ஈற்றில் ஒழிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தில் கிழக்கிந்தியக் கொம்பெனிக்கிருந்த தொடர்பு நீங்கிற்று. 1802-ல் இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடாகப் பிரகடனஞ் செய்யப்பட்டது. அரசாங்க நிர்வாகமும் ஏகாதிபத்தியத்தின் நேரடியான மேற்பார்வையில் விடப் tull-gil.
2. அதிகாரிகளும் சிவில்சேவிஸ் உத்தியோகத்தரும் இவ்வாறு பிரித்தானிய கிழக்கிந்திய கொம்பெனியின்
தொடர்பு நீங்கவே இலங்கை அரசாங்க நிர்வாகத்துக்கு தேசா திபதியே முழுப் பொறுப்பும் உடையவரானர். பிரதம நிர்வாக உத்தியோகத்தரும் அவர்தான். பிரதம நீதிபதியும் அவர்தான். சட்டவிஷயங்களில் மேலான பிரமாணமாயுள்ளவரும் அவர் தான். முக்கியமான விஷயங்களிலெல்லாம் அவருக்கு ஆலோ சனை கூறுவதற்கு ஒரு ஆலோசனைச் சபை நியமிக்கப்பட்டது. ஆனல் அவர்களின் ஆலோசனைகளின்படி காரியம் நடத்த வேண்டுமென்ற நிர்ப்பந்தம் அவருக்கு இல்லை. குடியேற்ற நாட்டு மந்திரிக்கே அவர் பொறுப்புவாய்ந்தவராயிருந்தார். குடியேற்ற நாட்டு மந்திரி பிரித்தானிய பாராளுமன்றத்துக்குப் பொறுப்புள்ளவராயிருந்தார். ஆனல் அக்காலத்தில் விரை வான போக்குவரத்துச் சாதனங்களில்லாதபடியால் லண்டனுக்கு அனுப்பும் செய்திகள் அங்கே போய்ச்சேர ஏறக்குறைய ஆறு மாதம் செல்லும். ஆனபடியா ல் இலங்கை விஷயங்களில் தேசா திபதி தாமே முடிபு செய்து கருமங்களை நடத்த உரிமை வழங்கப் பட்டார். நாட்டின் அரசியல் சம்பந்தமான பொதுக்கொள்கை களை நிர்ணயிக்கும் விஷயம் மாத்திரம் குடியேற்ற நாட்டு மந்திரியின் பொறுப்பில் விடப்பட்டது.
புதிய நிர்வாக முறைப்படி கடற்கரைப் பிரதேசங்கள் எட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பகுதியிலும் வருமான அதிகாரி என்ற பெயருடன் ஒர் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டார். கந்தோர்களில் குமா ஸ்தா வேலை செய் வதற்கு இங்கிலாந்திலிருந்து உத்தியோகத் தரை வரவழைப்பது மிகச் செலவான விஷயமாதலால் அப்பதவிகள் பறங்கி வகுப் பினருக்குக் கொடுக்கப்பட்டது. அவர்கள் பிரித்தானிய உத்தி யோகத்தருக்கும் பட்டினவாசிகளுக்குமிடையில் உபயோகமான தொடர்பாய் இருந்து வந்தார்கள்.
திறமையுள்ள அநேக சிவில் சேவிஸ் உத்தியோகத்தர் அவசியம் என்பதை அரசாங்கம் தனது அனுபவத்தைக் கொண் டும், சென்னை உத்தியோகத்தரின் குறைபாடுகளைக் கொண்டும் உணர்ந்துவிட்டது. இலங்கையில் கடமையாற்றும் சிவில் சேவிஸ்

Page 28
శ్రీ 4 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
உத்தியோகத்தர்கள் இங்கிலாந்திலுள்ளவர்களைப் போலல்லர். இவர்கள் பலவகையான கடமைகளைச் செய்யவேண்டி யிருந்தது. வருமான வசூல் முழுவதும் இவர்கள் செய்யவேண்டும். நிர் வாகம், நீதிபரிபாலனம் எல்லாம் இவர்கள் கையாற்ருனுக வேண் டும். அந்தந்தப் பகுதிகட்கு இவர்களே மன்னர்கள் என்று கூற லாம். எனவே ஆட்சி சரியாக நடைபெறவேண்டுமானுல் இவர்கள் திறமையுடையவர்களாக இருக்கவேண்டும். ஆதலால் சிவில் சேவிஸ் பதவிகளை நாற்பத்தைந்தாக உயர்த்தி, தகுதி வாய்ந்த வர்கள் அதில் விரும்பிச் சேரக்கூடிய நடவடிக்கைகளை பிரித் தானிய அரசாங்கம் எடுத்துக்கொண்டது. இளைப்பாறுங் காலத்தில் பென்ஷன் கொடுப்பதாகவும், ஒழுங்காகப் பதவி உயர்த்தப்படு மென்றும் உறுதி கூறிற்று. இம்மாதிரியான நடவடிக்கைகளால் அவர்கள் இலங்கையிலேயே தமது உத்தியோககாலம் முழுவதை யும் செலவு செய்யவும், உ ஸ் ரூ ர் நிலைமையைப் பற்றி ந ன் கு அறிந்துகொள்ளவும் உற்சாகமுண்டாகுமென நம்பியது.
நாட்டிலே ஆதிக்கம் பெற வேண்டுமானல் இம்மாதிரியான நடவடிக்கைகள் அவசியமென்பதை பிரித்தானிய அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே உணர்ந்துகொண்டது. உத்தியோகத்தர் மூலம் நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் உத்தியோகத்தர் ஆட்சி முறைக்குச் சிங்களரும் தமிழரும் தகுதியுடையவர்களாயிருக்க வில்லை. அவர்களுடைய முன்னேற்றம் அதற்குப் போ தா ம லிருந்தது. குடிகளின் குறைநிறைகளை நேரே போய்க் கவனித்து அதற்கான பரிகாரங்களைத் தேடிக்கொடுக்கும் ஆட்சி முறை யையே குடிகள் பெரிதும் விரும்பினர்கள். பிரித்தானிய உத்தி யோகத்தர் அந்நியராயிருந்தபடியா ல், குடி களுடன் நெருங்கிப் பழக முடியாதிருந்தது. எனவே நாட்டின் நிலைமையைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முதலியார்களையே நம்பியிருந்தார்கள். இதன் பயனக அரசாங்க நிர்வாகம் முதலியார்களின் கையிலேயே இருந்ததெனலாம். இவர்களின் அதிகாரத்தைக் குறைத்து சிவில் சேவிஸ் உத்தியோகத் தரைக் குடிகளுடன் நெருங்கிப் பழகச் செய்வதற்குத் தேசாதிபதிகள் பலமுறைகளைக்  ைக யா ன்
so
நோத் தேசாதிபதி, சேவைக்கு உபகாரமாக முதலியார் மாருக்குக் கொடுக் கப்பட்ட நிந்த க நிலங்களைப் பறித்துக் கொண்டு அவர்களின் ஏகபோக அதிகாரத்தையும் நீக்கிவிட் டார். இதற்குப்பதிலாக அவர்களுக்குச் சம்பளம் கொடுக் கப் பட்டது. அவர்கள் சீவனே பாயம் நடத்துவதற்கு அரசாங் கத்தில் தங்கியிருக்கக்கூடிய நிலைமையை உண்டாக்கினர். இலங் கையில் பிரித்தானிய நிர்வாகமுறையை நல்ல அத்திவாரத்தில் நிலைநிறுத்திய ம்ெய்ட்லந்து தேசாதிபதி நோத் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள் பலவற்றைக் கைவிட்டார். ஆனல் முதலியார்

நிருவர்க அபிவிருத்தி 45
凑 மார் விஷயத்திலும் சிவில் சேவிஸ் உத்தியோகத்தர் விஷயத் திலும் நோத் தேசாதிபதியின் முறைகளையே பின்பற்றினர். முத லியார் மாரின் அதிகாரங்களை மேலும் குறைக்கவிரும்பி அவர்கள் நடத்திவந்த நீதிபரிபாலன வேலையையும் அவர்கள் கையிலிருந்து எடுத்து நீதிபதிகள் கை யி ற் கொடுத்தார். நீதிபதிகளின் தொகையையும் அதிகரித்தார். கிராமங்களில் போலீஸ் வேலை செய்வதற்கு விதானை மாரை நியமித்தார். அவர்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பை முதலியார் மாரிடமிருந்து எடுத்து சமா தான நீதவான்களிடம் ஒப்படைத்தார். நிலவருமானங்களின் பதிவுப் புத்தகமான தோம்புகளைப் பாடசாலை உபாத்தியாயர், வசம் கொடுத்தார். இதனுல் நாட்டைப்பற்றிப் பிரித்தானிய உத்தியோகத்தர் அறிந்து கொள்வதற்கு புதிய ஒரு மார்க்கம் உண்டானது. தலைமுறை தலைமுறையாகத் தகப்பன் பின் மகளுக ஏற்றுவந்த முதலியார் பதவியை வேறு முக்கியமான குடும் பத்தவருக்குக் கொடுத்துப் பழைய அதிகாரிகளின் ஆதிக்கத்தை குறைத்தார்.
மெய்ட்லந்து சிவில் சேவிஸ் முறையையும் சீர்திருத்தினர். கிழக்கிந்தியக்கம்பெனி உத்தியோகத்தர்கள் கடமை பார்த்த காலத்தில், சொந்தப் பொறுப்பில் வியாபாரங்கூட நடத்தினர் கள். அந்த முறையைப் பின்பற்றி சிவில்சேவிஸ் உத்தியோகத் தர்களும் வியாபாரம் நடத்துவது அவர்களுடைய உத்தியோக கடமைக் குப் ப ங் க ம் விளைக்குமென்பதை மெய்ட்லந்து கண்டார். அன்றியும் அவர்கள் ஈடுபட்டிருந்த வேறு நடவடிக்  ைக க ளி ன ல் லஞ்சத்துக்காளாக வேண்டிவருமென்பதையு முணர்ந்தார். சிவில் சேவிஸைச் சேர்ந்தவர்கள் வியாபாரம் நடத்தக்கூடாதெனச் தடைவிதித்ததுடன் லஞ்ச நடவடிக்  ைக ளி ல் அவர்கள் ஈடுபடாதவாறும் சில வழிவகைகளைக் கையாண்டார். சிங்கள பாஷையை அறிவதனுல் சிங்களக் குடி சனங்களுடன் நெருங்கி பழகமுடியும், எனவே சிங்கள பாஷையில் தேர்ச்சிபெறும் சிவில்சேவிஸ் உத்தியோகத்தருக்கு உபகாரங் களையும் வழங்கினர். கந்தோரில் அடைபட்டுக்கொண்டிருந்து நிர்வாகம் நடத்துவதால் நன்மை உண்டாகாதென மெய்ட்லந்து எண்ணினர். ஒவ்வொரு பகுதிகட்கும் தலைமை வகிக்கும் உத் தியோகத்தர் அவ்வப் பகுதியில் சுற்றுப்பிரயாணஞ்செய்து குடி களின் குறைகளை அறிந்து வரவேண்டுமென்று கட்டளை பிட்டார்.
பிரெளன்றிக் தேசாதிபதியும் கண்டி மாகாணங்களில் இதே கொள்கையை அனுட்டித்தார். 1815-ல் கண்டியைக் கைப் பற்றியதும், ஒரு அர சாங்க ஏஜண்டையும், 4 உத்தியோகத் தரையும் ஆட்சி நடத்துமாறு நியமித்தார். ஆரம்பத்தில் கண் டிப்பகுதிகளை அதிகாரிகளின் பொறுப்பில் விட்டிருந்தார்

Page 29
46 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
1818-ல் நடந்த கலகத்தை அடக்கிய பின்னர் கண்டியை 11 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் ஆட்சிபுரிய ஒவ் வொரு ஏஜெண்டை நியமித்தார். சிவில் சேவிஸ் உத்தியோகத் தரின் தொகை சூறைக்கப்பட்டது. அவர்கள் சனங்களுடன் நெருங்கிப் பழகக்கூடிய முறைகளையெல்லாம் ஏற்படுத்தினுர், அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிந்தக மானியங்களை யெல்லாம் கைப்பற்றிக்கொண்டு அவர்களுடைய சேவைக்குச் ச ம் ப ள ம் கொடுக்கப்பட்டது. நீதிபரிபாலனஞ் செய்யும் கடமைகளையும் அவர்களிடமிருந்து நீக்கிவிட்டார். சனங்கள் அதற்காகச் செலுத்தும் பணமும் நின்றது. சிவில் சேவிஸ் தாபனத்தை மேலும் சீர்திருத்துவதற்காக பாண்ஸ் தேசாதி பதியும் சர். ரோபேட் வில் மட் ஹோட்டனும் (1831-1837) மேலும் பல நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டார்கள். சிங் களத்திலும் தமிழிலும் நல்ல ஞானமில்லாத வரை கீழ்த் தர சிவில் சேவிஸைச் சேர்ந்தவர்களுக்கு உத்தியோக உயர்வு கொடுக்க பாண்ஸ் மறுத்துவிட்டார். அவர்கள் சிங்களமும் தமிழும் படிக்க வேண்டுமென 1832-ல் ஹோட்டன் கட்டளை யிட்டார்,
அரசன் செய்யமுடியாததை பிரித்தானியர் செய்துமுடித் தனர். தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்குத் தேவையான அதிகாரமுமிருந்தது. அதிகாரிகளிடமிருந்து கைப் பற்றிய அதிகாரத்தை நடைமுறையில் கொண்டு வருவதற்கு புது உத்தியோ சுத்தர் கூட்டமும் அமைக்கப்பட்டது. தமது குறை களைச் சொல்லி நிவர்த்தி தேடுவதற்கு அதிகாரிகள் வெளி உதவி களைப் பெற முடியாதிருந்ததால் படிப்படியாக அவர்கள் அடங்கி விட்டார்கள்.
3. நீதிபரிபாலனம்
அரசியல் பொருளாதார நிலைமைகளிலும், பாஷை, பழக்க வழக்கம் ஆகியவற்றிலும் வேறுபட்ட ஒரு சாதியாரை ஆளு வதில் பிரித்தானியருக்கிருந்த கஷ்டங்களைப்பற்றி முன்னரே குறிப்பிட்டோம். திருப்திகரமான ஒரு நீதிபரிபாலன முறையை ஏற்படுத்துவதும் மிகச் சங்கடமான காரியமாயிருந்தது. முன்னர் ஆட்சிநடத்திய ஒல்லாந்தர் சனங்களின் நிலைமைக்கேற்றபடி ஒரு நீதிபரிபாலன முறையை ஏற்படுத்தியிருந்தார்கள். அவர்கள் மூன்றுவிதமான நீதிமன்றங்கள் அமைத் திருந்தனர். தமிழ் மக்களின் சிவில் சட்டங்களையெல்லாம் தொகுத்து ‘தேச வழமை? என்ற பெயருடன் வெளியிட்டார்கள். பரங்கி வகுப்பைச் சேர்ந்தவர்களின் வழக்கைத் தீர்ப்பதற்கு ரோமன் டச்சுச் சட் டங்கள் பயன்படுத்தப்பட்டன. உள்ளூர்ச் சட்டங்கள் தெளிவா யில்லாத சந்தர்ப்பங்களிலும் ரோமன் டச்சுச் சட்டங்களையே மற்றச்சனங்கள் விஷயத்திலும் உபயோகித்தனர். -

நிர்வாக அபிவிருத்தி 47
ரோமன் டச்சுச் சட்டங்களையோ ஊர்நடிவடிக்கைகளையோ அறிந்திராதபடியால் நீதி மன்றங்களைக் கையேற்று நடத்த பிரித்தானியரால் முடியவில்லை. அவர் கள் இலங்கையைப் பிடித்த காலத்தில் சமாதான உடன்படிக்கைக்கு இணங்க, டச்சு நீதிபதிகள், நடந்துகொண்டிருந்த , வழக்குகளையும் விசாரித்து முடிவு கூறினர். ஆனல், மேலும் தொடர்ந்து பதவியை வகிக் குமாறு அவர்களைக் கேட்டபொழுது அவர்கள் மறுத்துவிட்டார் கள். பிரித்தானியர் இலங்கையை மறுபடியும் டச்சுக்கார ருக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்களென்பதை அறிந்ததும் மறுபடியும் பதவி ஏற்க அவர்கள் உடன்பட்டனர்.
நோத் தேசாதபதியானதும், ஒல்லாந்தர் காலத்து ராட் வான் ஜஸ்டிட்டே என்ற நீதி மன்றத்துக்குப் பதிலாக உயர்தர நீதிமன்ற மொன்றை நிறு விஞர். நிறுவித்தானே அதற்குப் பிரதம நீதிபதியுமானர். பிரதானமான பட்டினங்களில் சிவில் கோடுகளை அமைத்தார். கிரா மாந்தரங்களில் சிவில் வழக்குகளை விசாரிப்பற்காக டச்சுக்காலத்து லாண்ட்ராட்ஸ் என்பவை போன்ற நீதிமன்றங்களைத் தாபித்தார். சிவில் கோட்டுத் தீர்ப்புக்களை ஆட்சேபனை செய்வோர் அப்பல் கேட்பதற்காக அப்பல் கோடு களும் தாபிக்கப்பட்டன. s
இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடான பின்னர் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. உயர்தர நீதிமன்றம் தாபிக் கப்பட்டது. இதுகாறும் நோத் தேசாதிபதியும் உத்தியோகத்த ஆளும் நீதிபதிகளாய்க் கடமை பார்த்து வந்த முறை நீக்கப்பட்டது. பிரித்தானிய சட்ட நூலறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட் டனர். இலங்கை அடங்கலுமுள்ள கிரிமினல் குற்ற விசார ணையை இவர்கள் நடத்தினர்கள். சிவில் வழக்கு விஷயங்களில் கொழும்பிலுள்ளவர்களின் வழக்குகளையும் இலங்கையிலுள்ள ஐரோப்பியரின் வழக்குகளையும் இவர்களே விசாரணை செய் தனர். சிறிய கிரிமினல் குற்றங்களை நீதவான்மாரும் சமாதான நீதிபதிகளும் விசாரித்தனர். மற்றப் பகுதிகளிலுள்ளவர்களின் சிவில் வழக்குகளை விசாரிக்க மாகாணந்தோறும் சிவில் கோடுகள் தாபிக்கப்பட்டன. பிரஜைகளின் தனிச் சுதந்திரத்தைப் பாது காப்பதற்காக நீதிபரிபாலனமும் நிர்வாகமும் வேறு வேரு கப் பிரிக்கப்பட்டன. ஐரோப்பியரைப் பொறுத்தவரையில் இந்த முறையை அனுசரிப்பதில் கஷ்டமிருக்கவில்லை. பிரித்தானிய சட்ட நூலறிஞர்களுக்கு தேசவழமையோ சனங்களின் பழக்க வழக்கங்களோ தெரியாதபடி யால் மாகாணக் கோடுகளில் அர சாங்க நிர்வாகத் தலைவர்களே நீதிபதிகளாகவும் அமர்ந்தார்கள். இவர்களுடைய வேலைகளைத் தேசாதிபதி மேற்பார்வை செய்து வந்தார். சிங்களம் , தமிழாகிய நாட்டுப் பாஷைகளை அறிந்திராத

Page 30
48 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
படியால் பிரித்தானிய நீதிபதிகள் கிரிமினல் வழக்குகளிற்கூடப் பிழைவிட்டார்கள். 1811-ம் ஆண்டில் ஜ்"ரிமாரை நியமித்து வழக்கு விசாரணை செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டதால் சில பிழைகள் தவிர்க்கப்பட்டன. சனங்களின் பழக்க வழக்கங்களை ஜ"ரிமார் அறிந்திருந்தார்கள். அத்துடன் மொழிபெயர்ப்பு விஷ யங்களில் அவர்கள் பிழைகளைக் காணக்கூடியதாயிருந்தது.
தேசாதிபதியின் கீழ் ஒரு கோடும் உயர்தர நீதிமன்றத்தின் கீழ் ஒரு கோடும் என்று இரண்டு விதமான கோடுகளை வைத் திருக்கும் முறை திருப்திகரமாய் நடைபெறவில்லை. தேசாதிபதி தனது உரிமை களை ப் பாதுகாப்பதிற் கண்ணுங் கருத்துமா யிருந்தார். நீதிபதிகளுந் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க ஆவலுள்ளவர்களா யிருந்தார்கள். ஒருவர் மற்றவரின் உரிமை களில் தலையிடுவதை விரும்பவில்லை. உரிமைகள் திட்டமாகப் பாகு படுத்தப்படா திருந்தபடியால் அடிக்கடி பிணக்குகளும் ஏற்பட் டன. பாண்ஸ் தேசாதிபதியாயிருந்த காலத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு அடிமை பல் லக்கேறிச் சென்றதற்காக யாழ்ப்பாண அரசாங்க ஏஜண்டு அவனுக்குச் ச வுக்கடி கொடுக்குமாறு கட்டளையிட்டார். டச்சுச் சட்டங்களின்படியோ பிரித்தானிய சட்டங்களின்படியோ இம் மாதிரி ஒரு வழக்கில் இப்படியான ஒரு தீர்ப்புக்கு இடமில்லை யென்று உயர்தர நீதிமன்றம் அத்தீர்ப்பை நிராகரித்துவிட்டது) உயர்தர நீதிமன்றம் இவ்விஷயத்திற் தலையிட்டதை பாண்ஸ் விரும்பவில்லை. தனது கீழ்த் தர உத்தியோகஸ்தரின் செய்கை சரியென்று நிறுத்துவதற்காக அடிமை செய்யும் எந்தக் குற்றத். திற்குஞ் சவுக்கடி நியாயமான தென்று ஒரு சட்டம் இயற்றினர்.
இந்தப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு வழி ஏற்படவில்லை. சிங்கள சேவை மானியமுறை யிருக்கும் வரை மாகாணக் கோடு களை உயர்தர நீதிமன்றத்தின் கீழ்க் கொண்டுவருவது சாத்தியப் படவில்லை. மிகநுணுக்கமாகச் சட்டங்களைத் தொகுத்த டச் சுக்காரர் கூட ச் சிங்களத் தேசவழமையைத் தொகுக்க முடிய வில்லை. பிரித்தானியர் அவ்வளவு சிறிய காலத்தில் அதை எப் படிச் செய்வார்கள்? எனவே உத்தியோகத்தரே சிங்களரிடை ஏற்படும் வழக்குகளைத் தீர்த்து வைத்தனர். அவர்கள் தங்கள் நிர்வாகக் கடமைகளை நிறைவேற்றும் பொழுது சனங்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடைய பழக்கவழக்கங்களை அறிந்து வந்தார்கள்.

நான்காம் அத்தியாயம்
சமூகப் பொருளாதார மாற்றங்கள் (1796-1832)
1. பரோபகார நடவடிக்கைகளும் சமயச் சலுகைகளும் இலங்கையிலே ஒல்லாந்தர் கடற்கரைப் பகுதிகளைக் கைப் பற்றி ஆட்சி நடத்திவந்த காலத்தில், ஐரோப்பாவில் ஆட்சி செய்தவர்கள் தங்களுடைய குடிகளை நடத்தும் முறையில் வெகு தூரம் முன்னேற்ற மடைந்திருந்தார்கள். சனங்களுக்குத் தண் டனை விதிக்கும் விஷயத்தில் முன்போல மிருகத்தனமாகவும் கொடுமையாகவும் அவர்கள் நடந்து கொள்ளவில்லை. சனங்க ளின் நன்மைக்கான கருமங்களைச் செய்ய முயன்ருர்கள். மத்திய காலத்து ஐரோப்பிய அரசர்களைப்போலவே சிங்கள அரசர் களும் பிரதானிகளும் ராஜத் துரோகஞ் செய்தவர்களுக்கும் கொடிய குற்றம் இழைத்தவர்களுக்கும், அங்கங்களைக் குறைத்து அவர்களை வதைத்து வந்தார்கள். போர்த்துக்கேயரும், ஒல்லாந் தரும் அம்மாதிரியான தண்டனை விதிப்பதிற் பின்னிற்கவில் ஆல. ஆனல் பதினெட்டாவது நூற்ருண்டில் ஐரோப்பாவில் பரவி வந்த பரோபகார இயக்கத்தினல் ஒல்லாந்தரும் பாதிக்கப்பட் டிருந்தனர். அதன் பயனக அக்கிரமச்செயல்களில் ஈடுபட்டி ருந்த தேசாதிபதிகளைத் தண்டித்ததோடு ஒருவரைச் சிரச்சேத மும் பண்ணிவிட்டார்கள். அதே இயக்கத்திலீடுபட்டிருந்த பிரித் தானியரும், இலங்கையிற் கரைப்பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் அங்கவீனம் பண்ணுதல் முதலிய) கொடிய தண்டனை கஜர அறவே ஒழித்துவிட்டார்கள். 1815-ல் கண்டி ராச்சியத்தில் நிலவிவந்த இத்தகைய கொடிய செயல்களையும் நிறுத்திவிட
வேண்டுமெனக் கங்கணங் கட்டிக்கொண்டார்கள்.
அவ்வளவில் அவர்கள் நின்றுவிடவில்லை. அக்காலத்தில் ஐரோப்பாவிலே உயர்ந்த வகுப்பைச்சேர்ந்தவர்கள், உலன்ெ. ஏனைய பாகங்களிலுள்ள ஏழை எளியவர்களின் நலத்தை முன் னிட்டும், பிற்போக்கானவர்களின் முன்னேற்றத்தைக் கருதியும் முயன்றுவந்தார்கள். மனிதர்களை அடிமைகளாக வைத்திருக், கும் வழக்கத்தை நீக்கவேண்டுமென்றும், ஐரோப்பாவிலும் மற்றத் தேசங்களிலும் உள்ள ஏழைகளின் நிலைமையை மாற்ற வேண்டுமென்றும் கிளர்ச்சி செய்தார்கள். பிரித்தானியரும் இவ்வியக்கத்தின் முன்னணியில் நின்றபடி யால் இலங்கையில்

Page 31
50 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
அடிமைமுறையை அகற்ற நடவடிக்கை எடுத்துக்கொண்டார் கள். அடிமைகளை வைத்து ஆளும் முறையை ஒல்லாந்தர் ஒப்புக் கொண்டதால் வீ டு க ளி ல் வேலையாட்களாக அடிமைகளை அமர்த் தி யிருந்தார்கள். வீட்டுத்தளவாடங்களை ஏலத்தில் விற்கும்பொழுது அடிமைகளையும் அவற்றேடு கூறிவிற்றர்கள். தமிழ்க் குறிச்சிகளில் மூன்றுசாதிகளை அடிமைகளாகவே கருதி வந்தார்கள். கண்டிராச்சியத்திலும் அடிமைகளிருந்தார்கள். ஆனல் அவர்களுக்குச் சில சலுகைகளிருந்தன. அவர்கள் பரா தீனர்களாக மாத்திரம் கருதப்பட்டு வந்தார்கள். பிரித் தானியர் ஆரம்பத்தில் அடிமைமுறையை அகற்ற முயற்சிசெய் தனர். நோத் தேசாதிபதி முற்போக்கான எண்ணப் பாங்குடை யவராதலால் ஆண்டானுக்கும் அடிமைக்கும் பிணக்கு ஏற்படுங் காலத்தில் விசாரணையில் அடிமைக்கே சலுகைகாட்டி வந்தார். 1818-ல் பிரித்தானியருடைய யோசனைக்கு இணங்கி பறங்கியர் தங்கீழ் வேலை செய்த அடிமைகளின் குழந்தைகளுக்கு விடுதலை யளித்தனர். 1833-ல் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஏனைய நாடுகளில் அடிமைகளுக்கு விடுதலையளித்ததுபோல இலங்கை யிலும் விடுதலையளிக்கப்படவில்லை. இந்தியாவில் சனங்களின் சமய, சமூக வழக்கங்களில் பிரித்தானியர் தலையிட விரும்பவில்லை. ஆனல் 1844-ல் அடிமைமுறை இந்தியாவில் ஒழிக்கப்பட்ட பின்னர்தான் அது இலங்கையிலும் நீக்கப்பட்டது.
இது மாத்திர மன்று; பிரித்தானியர் தமது பரோபகார மனப் பான்மையை வேறு வழிகளிலும் காட்டினர்கள். 1800-ல் இலங் கையிலே வைசூரிநோய் பரவிற்று. நோய்வாய்ப்பட்டவர்களைக் கிராமங்களுக்கடுத்துள்ள காட்டில் சிறு கொட்டிலில் அப்புறப் படுத்துவதே அக்காலத்தில் இலங்கையிலுள்ள வழக்கமாயிருந் தது. நோய் கடுமையாகப் பரவினல், நோயாளிகளை விட்டுவிட்டு மற்றவர்கள் கிராமத்தைவிட்டு வெளியேறுவார்கள். நோ ய் வாய்ப்படாதவர்களில் விருப்பமானவர்கள் மாத்திரம் அங்கே தங்கினர். நோயாளிகளிற் பலர் காட்டு மிருகங்களுக் கிரையா கினர் என்று ஸ்கின்னர்* என்பவர் கூறுகிருர், சிங்களர் இவ்வாறு அனுசரித்துவந்த வழக்கத்தை நோத் கண்டித்தார். வைசூரி நோய்க்குச் சிகிச்சை செய்வதற்காக நான்கு முக்கியமான இடங் களில் வைத்தியசாலைகளை ஏற்படுத்தினர். கிராமங்களில் மேற் பார்வை செய்வதற்காக மேற்பார்வையாளரை நியமித்தார்.
ஒருமுறை ஒருவருக்கு இந்நோய் வந்து மாறிவிட்டால் பின் னர் அவரை ஒருபோதும் இந்நோய் பீடிக்க மாட்டா தென்ற எண் ணம் பழங்காலந்தொட்டேயிருந்துவந்தது. கீழைத்தேசங்களில்
* இலங்கையில் ரோட்டு அமைத்தவர்களுள் தோமஸ் ஸ்கின்னர் புகழ் வாய்ந்தவர் “ அவர் இலங்கையில் ஐம்பது வருடம்’ என்ருெரு நூல் எழுதியிருக்கிருர், இலங்கைச் சரித்திரத்தின் பிரித்தானிய காலப் ப்குதியை ஆராய்வதற்கு இந்நூல் மிகச் சிறந்தது. Y,

சமூகப் பொருளாதார மாற்றங்கள் ,5及
வைசூரி நோயினல் இலேசாகப் பீடிக்கப்பட்டவர்களிடமிருந்து வைசூரிப்பாலை எடுத்துக் குழந்தைகளுக்குப் பால் குத்திவந் தார்கள். அவ்வாறு பால் குத்தப்பட்ட குழந்தைகளுக்குச் சற்றே நோய் காணப்படும். பின்னர் அவர்களுக்கு ஒருபோதும் அந்நோய் வரமாட்டாது. 18-வது நூற்றண்டில் ஐரோப்பாவிலே வைத் தியத் துறையில் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதன் பய ணுய்ப் பெரிய முன்னேற்றங்களுண்டாயின. ஆயுள்வேத வைத்திய முறையிலும் பார்க்க ஐரோப்பிய வைத்தியமுறை பல துறைகளில் மிகவும் அபிவிருத்தியடைந்தது. 1796-ல் ஜென்னர் என்ற ஆங்கி லேயர் நோயுற்ற பசுவிலிருந்து வைசூரிப்பாலை எடுத்து மனித ருக்குப் பால் கட்டுவதனல் பெரு வாரியானமுறையில் வைசூரி  ையப் பரவவிடாமல் தடுக்கால மென்று கண்டார். 1802-ல் நோத் தேசாதிபதி பால் கட்டும் முறையை இலங்கையில் செய்து நோயினல் ஏற்படும் மரணத்தைக் குறைத்ததுடன் நோய் அடிக்கடி உண்டாகாமலும் தடைசெய்தார்.
வேறுபல துறைகளிலும் ஐரோப்பா முன்னேற்றமடைந்திருந் திது. சமயக்கோட்பாட்டுக்காக சனங்களை வதைக்கக்கூடாதென் றும், அவரவர் விரும்பியவாறு சமயங்களை அனுட்டிக்க விட்டுவிட வேண்டுமென்றும் ஐரோப்பிய அரசர்கள் உணர்ந்தார்கள். ச யக் கொள்கைக்காகச் சனங்களைத் தண்டிக்கும் வழக்கம் இந்தியா விலும் இலங்கையிலும் இருக்கவில்லை. கிறிஸ்து சமயம் திருச் சபைகள் மூலமாக தேசம் முழுவதும் பரப்பப்பட்டு வந்தது. இவ் வாறு பரவிய சமயத்தின் ஆதிக்கம் அதிகாரத்திலிருப்பவர்க்குக் கூட எதிர்ப்பு உண்டாக்கக்கூடிய அளவு வல்லமை பெற்றிருந்தது. ஆனல் இந்தியாவில் சமயங்கள் இவ்வாறு ஒழுங்கான முறையில் அமைக்கப்பட்டிருக்கவில்லை. இந்திய அரசர்கள் தமக்குச் சார்பில் லாத சமயிகளைத் தண்டித்ததும் கிடையாது. ஆனல் அவர்கள் எல்லாச் சமயங்களையும் ஆதரித்துச் சலுகைகாட்டி வந்தார்கள். ஐரோப்பாவில் அரசர்களைக்கூடச் சமயம் கட்டுப்படுத்தக்கூடியதர யிருந்தது. அவர்களுடைய அதிகாரத்தை அடக்கியும் வந்தது. அரசன். தனது சமயத்தை அனுஷ்டிப்பவர்களையே ஆதிரிப்பது வழக்கமாயிருந்தது. இலங்கையில் போர்த்துக்கேயர் சமயங்கார ணமாக ஒருவரையும் தண்டிக்கவில்லை. ஆனல் அரசர்களையும், சனங்களையும் ரோமன் கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றுவதற்கு எல்லா முயற்சிகளையுஞ் செய்தார்கள். பொருள் உதவிக்கூட இவ் வித மதமாற்றஞ் செய்வதிலீடுபட்டனர். பெளத்தர், இந்துக்கள், இஸ்லாமியர், ரோமன் கத்தோலிக்கர் ஆகியோர் பொது இடங் களிற் பிரார்த்தனை நடத்தவிடாது ஆரம்பத்தில் டச்சுக்காரர். தடைசெய்தார்கள். புரட்டஸ்தாந்து சமயத்தவருக்களிக்கப் பட்ட சிவில் உரிமைகளைக் கூட மற்றச் சமயத்தவர்க்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆனல் ஐரோப்பாவிலேற்பட்ட மாறுதல்,

Page 32
.52 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
களின் காரணமாக இவர்களும் 18-ம் நூற்ருண்டின் பிற்பகுதியில் தங்கள் கட்டுபாடுகளைத் தளர்த்திக்கொண்டனர். பிரித்தானி யாவில் ரோமன் கத்தோலிக்கருக்குச் சமயச் சலுகை காட்டப் பட்டு வந்தது. இலங்கையிலும் ஆதியில் பிரிட்டிஷ் அதிகாரிகள் ரோமன் கத்தோலிக்கருக் கெதிராக டச்சுச் சட்டங்களை உபயோ கிக்கவில்லை. மெயட்லந்து தேசாதிபதி காலத்தில் மேலும் சலுகைகள் காட்டப்பட்டன. மேற்படி 1809-ல் சட்டங்கள் நிராகரிக்கப்பட்டதுடன் பிரித்தானிய ஆட்சி க் கு க் கத்தோ லிக்கரின் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் புரட்டஸ்தாந்தியர் அனுபவித்துவந்த உரிமைகளை மெய்ட்லந்து கத்தோலிக்கருக்கும் வழங்கினர். போர்த்துக்கல் பம்பாயை இரண்டாம் சாள்ஸுக் குச் சீதனமாகக் கொடுத்த காலந்தொட்டு இந்தியா விலும் கத்தோலிக்கருக்கும், புரட்டஸ்தாந்தியருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. r
இவ்வாறு பிரித்தானிய ஆட்சியின்கீழ் இலங்கை வாசிகள் பல உமரிைகளை இழந்தபோதிலும், அவர்களுடைய சீரிய பரந்த நோக்கின் பயனகப் பல நன்மைகளையும் அடைந்தனர்.
2. கல்வி
இலங்கையில் பிரித்தானியர் மிக முன்னேற்றமானதும் சீர்தி ருத்தமானதுமான அரசியல் முறையைத் தாபித்தபடியால், அத னல் ஏற்படும் பலாபலன்களைச் சனங்கள் அறிந்து பயன்படுத் துவதற்கு அவர்களுடைய அறிவு நிலைமையையும் விருத்தி செய்ய வேண்டியது அவசியமாயிற்று. ஆனல், அந்த வகையில் அவர் கள் அதிகம் செய்யாதது ஆச்சரியப்படத்தக்கதன்று. பொது ஜனங்களுக்குக் கல்வியூட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பு என் பதை இங்கிலாந்திலேயே அந்த காலத்தில் ஒருவரும் உணரவில்லை. அப்படியிருக்க த ங் க ள் வியாபார விருத்திக்காகக் கைப்பற்றிய இலங்கையில், கல்வி விஷயத்தைப் பற்றி அவர்கள் சிரத்தை கொண்டிருப்பார்களா? இலங்கைப் பொதுசனங்கள் புதிய அரசி யல் நிலைமைக்கு ஏற்றபடி கல்வி விஷயத்தில் முன்னேற முடியா திருந்தனர் என்பதை பிரித்தானியர் உணர்ந்திருக்கவுமில்லை.
பிரித்தானியரைக் காட்டிலும் டச்சுக்காரர் கல்வி விஷயத்தில் முற்போக்குடையவர்களா யிருந்தனர். மனிதர் தாந்தாம் செய் யும் கருமங்களுக்குத் தாங்களே கடவுளுக்குப் பொறுப்பாளிகள் என்ற கொள்கையை அவர்களுடைய சீர்திருத்தப்பட்ட திருச் சபைகள், எடுத்துக் கூறின. சமயத்தில் அவர்கள் பிரஸ் பிட்டீ ரியன் மதத்தைச் சேர்ந்திருந்தார்கள். சமயச் சடங்குகளை அம்மதத் திருச்சபைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சனங்கள் விவி லிய வேதத்தையும் ஏனைய சமய நூல்களையும் வாசித்து அறிந்து கொள்வதற்காக அவர்களுக்குக் கல்வியறிவை யூட்டினர்கள். இலங்கையை டச்சுக்காரர் கைப்பற்றியதும், சீர்திருத்தப்பட்ட

சமூகப் பொருளாதார மாற்றங்கள் 53
டச்சுத் திருச்சபைகள் கடற்கரை மாகாணங்களிலெல்லாம் பாட சாலைகளை ஏற்படுத்தின. வாசினை, எழுதல் கிறிஸ்தவ சமயக் கல்வி ஆகியவை மாணவர்க்குப் போதிக்கப்பட்டது. டச்சுக் கிழக் கிந்திய கம்பெனி அரசியல் காரணமாகவும் அப்பாடசாலைகளைப் பராமரித்து வந்தது. கிறிஸ்து சமயத்துக்கு மாறின வர்கள் தங்களுக்கு அதிக விசுவாசமுடையவர்களா யிருப்பார்களென்று எண்ணினர். h
கிறிஸ்து சமயத்தை இலங்கையிற் பரப்புவதை பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனி த ன து கடமையாகக் கருதவில்லை. கிறிஸ்து சமயப் பிரசாரத்தினல் ஒருவேளை தனது வியாபாரத் துக்குப் பங்க மேற்படலாமெனப் பயந்தது. எனவே இரண்டு வருடத்துக்குப் பாடசாலைகளைக் கவனியாது விட்டுவிட்டது. ஆனல், நோத் தேசாதிபதி விரிந்த நோக்குடையவராயிருந்தபடி யால் கல்வியை ஊக்கப்படுத்தினர். கல்வியினுல் மனிதனுடைய ஒழுக்கம் உயரும் என்ற கொள்கையை உடையவர் அவர் . டச்சு ஆட்சியில் கிறிஸ்து சமயத்தைத் தழுவியவர்கள் இப் பொழுது புத்த சமயத்துக்கோ இந்து சமயத்துக்கோ மாறிவிட் டால் பிரித்தானிய ஆட்சிக்கு விரோதிகளாகிவிடக் கூடுமெனவும் அவர் பயந்தார். ஆதலால் அவர் பாடசாலைகளை மறுபடியும் ஊக்கப்படுத்தினர். இங்கிலாந்திலே இக்காலத்தில் திருச்சபை கள்தான் கல்வியூட்டும் வேலையை நடத்திவந்தன. டச்சுக்காரர் செய்துவந்ததுபோலவே பாடசாலைகளில் கல்வியை மேற்பார்வை செய்வதற்காக ஐரோப்பியப் பாதிரிகளையும் சுதேசப் போதகர் களையும் நியமித்தார்கள். பாடசாலைகளில் நிறைவேற்றப்படும் கல்யாணச் சடங்குகட்காக வசூல் செய்யும் பணத்தை காரியவாதிகளான டச்சுக்காரர் உபாத்தியாயர்கட்குச் சம்பள மாகக் கொடுத்தார்கள். கலியாணச் சடங்கு செய்வதற்குப் பணம் கொடுப்பதை நோத் அங்கீகரிக்கவில்லை. அதை நீக்கிவிட்டு ஆசிரியர்களுக்கு ஒழுங்காகச் சம்பளம் கொடுத்தார். ஆனல் இம் மாதிரிச் சம்பளம் கொடுப்பதற்குப் போதிய பண மில்லா ததை அரசாங்கம் வி  ைர வில் உணர வேண்டியேற்பட்டது. எனவே 1803-ம் ஆண் டி லிருந்து பாடசாலைகள் மறுபடியும் தேடுவாரற்றுப் போயின.
பாடசாலைகளை உயிர்ப்பிக்க வேண்டுமென இங்கிலாந்திலிருந்து வற்புறுத்தப்பட்டது. 18-வது நூற்றண்டின் பிற்பகுதியில் இங்கி லாந்திலே ஒரு சமயப் புனருத்தாரணம் ஏற்பட்டது. அதன் பய ணுக இவான்ஜெலிக்கல் இயக்கம் உண்டாகி இங்கிலாந்துத் திருச் சபையைச் சேர்ந்த மத்திய வகுப்புச் சனங்களிடையே கிளர்ச் சியை உண்டாக்கிற்று. இந்த இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்களும் டச்சுப் பிரெ ஸ்பிட்டிரியின் மதத் தலைவரின் கொள்கைகளையே

Page 33
54 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
ஆதரித்தார்கள். ஆரம்பத் தில் ஞாயிற்றுக்கிழமைப் பாட சாலைகளை ஆரம்பித்தனர். பின்னர் தினப்பாடசாலைகளுண் டாயின. ஆரம்பக்கல்வி அளிக்கப்பட்டுவந்தது. பொதுஜன நீலத்தை அபிவிருத்து செய்வதில் முனைந்தார்கள். அடிமை வியா பாரத்தை ஒழிப்பதற்கு ஒரு இயக்கத்தை உண்டாக்கினர்கள். கிறிஸ்துசமயம் பரவாத அந்நிய தேசங்களில் அதைப் பரப்பு வதற்கு உழைத்து வந்தார்கள்.
பாடசாலைகளைக் கவனியாது விட்டபடியால் இ ல ங்  ைக யிலுள்ள கிறிஸ்தவர்கள் புத்த சமயத்தையும் இந்துசமயத்தை யும் தழுவுகிருர்களென்பதை இவான் ஜெலிக்கல் இயக்கத்தைச் சேர்ந்த வில்பர் போஸும் ஏனைய தலைவர்களும் உணர்ந்து பாட சாலைகளை மறுபடியும் திறந்துவிடுமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்தை நெருக்கினர்கள். 1810-ல் மறுபடியும் இலங்கை அரசாங்கம் பாட சாலைகளைத் திறந்தது. கிறிஸ்தவ கல்வி யூட்டுவதில் ஆர்வங் கொண்ட பிரெளன்ரிக் தேசாதிபதி புதிய பல பள்ளிக்கூடங்களைத் திறந்தார். கிறிஸ்தவரல்லாதவர்களுக்குக் கிறிஸ்து சமயத்தைப் போதிப்பதை பாண்ஸ் விரும்பவில்லை. சரியான போக்குவரத்துச் சாதனமில்லாதபடியால் பாடசாலைகளைப்போய்ச் செவ்வனே மேற்பார்வை செய்ய முடியாமற்போயிற்று. பாடசாலைகளும் திறமையான முறையில் வேலை செய்யவில்லை. போட்ட முத லுக்கேற்ற பலனைப் பாடசாலைகள் தரவில்லையென்று பாண்ஸ் அறிந்து 1820-ல் பாடசாலை ஆசிரியர்களின் வேலையை மேற் பார்வை செய்துவந்த உபதேசிகளின் பதவியை நீக்கிவிட்டார். அதனுல் பாடசாலைகளும் குறைந்தன.
நோத் கொழும்பிலே சிங்கள பாடசாலைகளையும் தமிழ்ப் பாடசாலைகளையும் ஏற்படுத்தினர். அத்துடன் உயர்தர பாட சாலை யொன்றையும் ஸ்தாபித்தார். இதில் ஐரோப்பியச் சிறுவர். களுக்கென ஒரு ஆங்கிலப் பாடசாலையும் சிங்க ளக் குழந்தை களுக்குச் சிங்களப் பாடசாலையும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பாடசாலையும் தாபிக்கப்பட்டன. இச் சுயபாஷா பாட சாலைகளில் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. அரசாங்க இலாகா அலுவல்களை பார்ப்பதற்கு ஆங்கில மறிந்தவர்களவசியமாதலால் பட்டினங்களில் சில ஆங்கிலப்பாடசாலைகளை நோத் தாபித் தார். இப்பள்ளிகூடங்கள் அதிக காலம் நிலைத்திருக்கவில்லை. ஆனல், அரசாங்கத்தில் உத்தியோகம் பார்ப்பதற்கு ஆங்கிலத்தின் அவசியம் இருந்துகொண்டே வந்தது. பிரெளன்ரிக், தீவின் பல பகுதிகளில் சுமார் 12 பாடசாலைகளைத் திறந்து அவற்றை வெஸ் லியன் மிஷனரிகளிடம் ஒப்படைத்தார். ஆனல் பாண்ஸ் இவற் றில் அக்கறை காட்டவில்லை. மிஷனரிகளுக்குக் கொடுத்துவந்த படிச் செலவையும் அவர் நிறுத்திவிட்டார். 1820-ம் ஆண்டுக்குப் பின்னர் பாடசாலைகள் ஒவ்வொன்ருக மூடப்பட்டன. அரசாங்க

சமூகப் பொருளாதார மாற்றங்கள் 55
உதவியில்லாததலால் ஆங்கிலக் கல்வி குறைந்தது. ஆனல், அதன் பின்னர் தனிப்பட்ட நபர்களின் முயற்சியாலேயே ஆங்கிலக் கல்வி பெரும்பாலும் பரிபாலிக்கப்பட்டு வந்ததென்று கூறலாம்.
அரசாங்கம் கைசோர விட்ட கல்வி விருத்தியை மிஷனரிமார் ஒரளவுக்குக் கையேற்று நடத்தினர்கள். இங்கிலாந்தில் ஆரம்பிக்க பட்ட இவான்ஜெலிக்கல் இயக்கத்தின் பயனக இலங்கையில் பல கிறிஸ்தவ மிஷன்கள் உண்டாயின. 1812-ல் பப்டிஸ்ட் மிஷன் ஆரம்பிக்கப்பட்டது. வெஸ்லியன் மிஷனும் சேர்ச் மிஷனும் 1814-ல் ஆரம்பிக்கப்பட்டன. பப்டிஸ்ட் மிஷனும், வெஸ்லியன் மிஷனும் ஆரம்பத்தில் ஆங்கிலப்பாடசாலைகளை ஏற்படுத்தின. சிறிது காலத்தின் பின்னர் அரசாங்கத்தார் நடத்தியதுபோலச் சிங்களப் பாடசாலைகளைக் கிராமங்களில் நடத்தினர்கள். இந்த விஷயத்தில் அவர்கள் 1816-ல் யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப் பட்ட அமெரிக்க மிஷனையும் சேர்ச் மிஷன் சங்கத்தையும் பின் பற்றினர். 1812-ம் ஆண்டு துவக்கம் 1832 வரை மிஷனரிச் சங்கங்கள் 235 பாடசாலைகளைத் திறந்தன. இதில் 10,000 மாணவர்களுக்குக் கல்வி பயிற்றப்பட்டுவந்தது. இப்பாடசாலை கள் திட்டமான ஒரு கொள்கையுடன் கருமங்களை நடத்தின. வேலையைச் செவ்வனே மேற்பார்வை செய்து வந்தன. அரசாங்க பாடசாலைகளைப் போலல்லாது இவர்களுடைய பயிற்சி இடை யருது நடைபெற்று வந்தது.
தங்கள் உத்தியோ கஸ்தர்களுக்கு ஏற்ற பயிற்சி கொடுப்பதற் காக தமது முக்கியமான பகுதிகளில் சில ஆங்கிலப் பாடசாலைகளைக் கிறிஸ்தவ மிஷனரிகள் நிறுவினர்கள். கோட்டையிலும், வட்டுக் கோட்டையிலும்* நிறுவப்பட்ட பாடசாலைகளில் இன்றைய உயர்தர பாடசாலைகளில் பயிற்றப்படும் முறையில் உயர்தரக் கல்வி போதிக்கப்பட்டது. கிராமங்களிருந்துவரும் திறமை யுள்ள பையன் எவனுயிருந்தாலும் அவன் தனது பாடசாலை வாழ்க்கையை வட்டுக்கோட்டை கல்லூரிவரை கொண்டுபோய் முடிக்கக்கூடிய ஒரு வசதியை அமெரிக்க மிஷன் செய்திருந்தது. அரசாங்க பாடசாலைகளில் பறங்கிப் பிள்ளைகளும், தலைமைக்காரர் பிள்ளைகளுமே பெறக்கூடியதாயிருந்த புதிய கல்வி அறிவை கிரா மப் பிள்ளைகள் கூடப் பெற்றுப் பயன் அடையக்கூடிய வசதி முதன் முதலாக இப்பாடசாலைகளால் உண்டானது.
கிறிஸ்தவ மிஷன் பாடசாலைகளுக்கு முன்னிருந்த ஆதரவு இப்பொழுது கிடைக்கவில்லை. புத்த இந்து சமயத்தைச் சேர்ந்த அநேக மாணவரின் சமயப்பற்றை மிஷன் பாடசாலைகள் குறைத்து வருவதாக எடுத்துக்காட்டப்பட்டது. இந் நாட்டிலுள்ள
* கோரட்டையிலிருந்த பாடசாலையே இப்பொழுது கோட்டை கிறிஸ்டி யன் கல்லூரியென வழங்கப்படுகிறது. வட்டுக்கோட்டையிலிருந்தது யாழ்ப் பாணக் கல்லூரி யென்று வழங்கப்படுகிறது.

Page 34
56 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
சகலருடைய தேவைகளையும் பூர்த்திசெய்யக்கூடிய அரசாங்கம் கல்வி முறையொன்றை ஏற்படுத்துவதற்கு மிஷன் பாடசாலை? முக்கியமான தடையாயிருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். பத்
தொன்பதாம் நூற்றண்டில் இந்தப் பாடசாலைகளில்லாதிருந்தால் நாட்டிலே கல்வியறிவு சொற்பமாகவேயிருந்திருக்கும். மிஷன் பாடசாலைகள் மாணவரின் அறிவொழுக்கங்களை நிச்சயமாக வளர்த்துவந்தனவென்றே கூறலாம். அன்றியும் பிரித்தானிய ஆட்சியின் பயனக ஏற்பட்ட மாற்றங்களில் பங்குபற்ற நாட்டி
லுள்ள குடிகளில் ஒரு பகுதியினரையாவது தயார் செய்து விட்டது.
3. புத்த சமயமும் இந்து சமயமும்
பொதுவாகப் பார்க்குமிடத்து பிரித்தானிய ஆட்சியினல் புத்த சமயமும் இந்து சமயமும் பாதிக்கப்பட்டனவென்றே கூற வேண்டும். கரைப் பிரதேசங்களில் அவை அரசனுடைய சமய மாயிருந்து வந்த காலம் மாறவே அவற்றின் செல்வாக்குக் குன்றினது. கிறிஸ்து சமயத்தோடு ஒத்த வலிமையின்றியே அவை போட்டி போடத் துவங்கின. சிறிது காலத்தில் கண்டி ராச்சியத்திலும் இதே நிலைமை ஏற்பட்டது.
கரை மாகாணங்களில் பல நூற்ருண்டாகவே இந்து சமயமும் புத்த சமயமும் பல கஷ்டங்களுக்குள்ளாயின. போர்த்துக்கேயர் இச்சமயங்களை எதிர்த்து வந்தபடியால் போர்க்காலங்களில் விகாரங்களையும் நாசஞ் செய்துவந்தார்கள். டச்சுக்காரர் புத்த இந்து சமயானுட்டானங்களை அனுமதிக்கவில்லை. அத்துடன் புத்த ரையும் இந்துக்களையும் நிர்ப்பந்தப்படுத்தித் தங்கள் சமயத்தில் சேர்த்துக்கொண்டார்கள். கண்டிராச்சியத்திலும் புத்த சமயம் வளர்ச்சியடையவில்லை. அடிக்கடி ஏற்பட்ட சண்டைகளின் பய ணுக பெளத்த விகாரங்களின் வாழ்க்கை சிதறுண்டது. பெளத்த சங்கம் சீரழிந்தது. துறவுபூண்டு ஆத்ம வாழ்வு நடத்திய பெளத்த பிக்குகள் உலக வியவகாரங்களிலு மீடுபட்டனர். விகா ரங்கட்குரிய நிலங்களைத் தாங்களாகவே பரிபாலிக்கவுந் தலைப் பட்டார்கள். கீர்த்தி பூgராஜசிங்கன் காலத்தில் வல்வித்த சரணங்கர என்ற பெரியார் புத்த சமயத்தைப் புனருத்தாரணஞ் செய்தார். கைவிடப்பட்டிருந்த ஆசாரியா பிஷேகத்தை சயாம் தேசத்திலிருந்து வரவழைக்கப்பட்ட புத்த பிக்குகளைக் கொண்டு நடத்தினர். இவ்வபிஷேகம் உபுசம்பதை என்று வழங்கப்படும். அனுராதபுரம், பொலனறுவை காலங்களில் புத்த சமயம் இருந்த உன்னத நிலையை மறுபடியும் அது அடையவில்லை.
வேறு பல வழிகளிலும் புத்த சமயம் சீரழிந்தது. ஒழுக்கமே உயர்ந்தது என்றும், சமயானுஷ்டானங்களில் பிறப்பு வித்தி шпrдҒ. шb கிடையாதென்றும் புராதன புத்த சமயம் வற்புறுத்

சமூகப் பொருளாதார மாற்றங்கள் 57
திற்று. பிறப்பினல் ஒருவன் பிராமணன் அல்லன். ஒழுக்கமே அவனை உயர் குலத்தவனக்கு மென்று புத்த பகவான் கூறினர். ஆனல், நாளடைவில் புத்த சமயமும் சாதிபாகுபாட்டை அனு சரிக்கத்துவங்கிற்று. கன்ம வசத்தால் பிறப்புண்டாகிறதென்ற கொள்கையும் இந்துக் கொள்கைகளின் கலப்பும், பெளத்த சங் கத்தினர் இராசகாரிய சமூகத்திலேயே தங்கியிருந்த மையுமே இந்த மாற்றத்துக்குக் காரணமெனலாம். பெளத்த சமய சரித் திரத்தை ஆராயுமிடத்து, புத்தர், சூரிய வம்ச அரச பரம்பரை யைச் சேர்ந்தவர் என்று அவருடைய பிறப்பைப் பற்றிப் பெருமை பாராட்டுவதை மிகப் பழங்காலத்திலிருந்தே காணக் கூடியதாயிருக்கிறது. இலங்கை யி ல் நாளடைவில், பிக்கு களல்லாத ஏனையோர் சாதிப்பாகுபாட்டை ஏறக்குறைய ஒப்புக்கொண்டார்களென்றே கூறவேண்டும். சங்கத்திற்சேரும் பிக்குகளும் வேளாள வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே யிருக்க வேண்டுமென்று, புத்தர் விதித்த நியதிகளுக்கு மாருகவே விதிக்கப்பட்டது.
பிரித்தானிய ஆட்சி ஆரம்பித்ததும் பெளத்த சமய நிலை மையில் முக்கியமான திருத்தம் எதுவும் உண்டாகவில்லை. டச்சு ஆட்சியில் புரட்டஸ்தாந்திய கிறிஸ்தவம் உயர்ந்த ஒருதா னத்தை வகித்துவந்தது. பிரித்தானிய ஆட்சியிலும் அதற்கு அந்த ஸ்தானம் உடனே கிடைத்துவிட்டது. பிரித்தானிய அர சாங்கம் ஒரளவுக்குக் கிறிஸ்தவ கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தபடியால் பல பிரித்தானிய தேசாதிபதிகள் புரட் டஸ்தாந்திய திருச்சபைகளை நேரடியாக ஆதரித்தார்கள். அர சாங்க உத்தியோக விஷயங்களில் கிறிஸ்தவருக்கு அதிக சலுகை காட்டப்பட்டது. அரசாட்சியின் சமயம் என்ற வகையில் கிறிஸ் தவ சமயத்துக்கு ஒரு பெரிய இடம் அமைந்தது.
கிறிஸ்தவ சமயம், பெளத்த இந்து சமயங்களைப்போல மறுமை வாழ்வுக்கான சமயமாயிருக்கவில்லை. ஒரு கொள்கைக்காக இன். னெரு கொள்கையை அமைப்பதுடன் அது நிற்கவில்லை. மத்திய காலத்துக் கிறிஸ்தவ சமயம் வறுமை வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஆனல், அநதக் கொள்கைகளை நாளடைவில் கைவிட்டது. மேலும் சமூக வாழ்வில் நிலவிய உயர்வு தாழ்வு முதலியனவெல்லாம் ஆண்டவனல் அருளப்பட்ட நியதியென மத்திய காலக் கிறிஸ்தவ சமூகம் எண்ணிவந்தது. கிரேக்க கலை ஞான அறிவினலும், பிரெஞ்சுப் புரட்சியின் பயனலேற்பட்ட முற்போக்கான எண்ணங்களினலும் அந்தக் கொள்கைகள் மாறி விரிவடைந்தன. ஐரோப்பாவில் ஏற்பட்ட முன்னேற்றத்தினல் கிறிஸ்தவ பிரமஞானமும் திருச்சபை நிர்வாகங்களும் மாற்ற மடைந்தன. மறுமை வாழ்வைப்பற்றி அதிகம் கூறுவதும் பழைய சேவை மானிய நிலைமைக்கேற்றுவாறு அமைந்ததுமான பெளத்த

Page 35
இலங்கையில் பிரித்தானிய ஆட்சி"
இந்து சமயங்களிலும் பார்க்க கிறிஸ்தவ சமயம் இக்கால வாழ்க்கை நிலைமைக்குப் பெரிதும் பொருத்தமுடையதாயிருந் தது. மேலும் கிறிஸ்தவ சமயம் சாதிக்கட்டுப்பாடுகளை எதிர்த் தது. தற்கால வாழ்க்கை நிலைமைகளினல் பாதிக்கப்பட்ட இலங் கையர் பலர், தங்கள் முன்னேற்றத்துக்குச் சாதிக்கட்டுபாடு பெரிய முட்டுக்கட்டையெனக் கருதினர்கள்.
சமய விஷயங்களில் பிரித்தானியர் நடுநிலைமை வகித்தபோதி லும் நோத் தேசாதிபதி சிங்களரும் தமிழரும் த மது பழைய சமயானுஷ்டானங்களை அனுசரிப்பதைத் தடுப்பதிற் கவனஞ் செலுத்தினர் என்று முன்னரே குறிப்பிட்டோம். ம்ெய்ட்லந்து தேசாதிபதி புத்த பிக்குகள் மீது சமுசயங்கொண்டார். இராஜ தானியான கண்டியில் புத்த பிக்குகள் ஆசாரியாபிஷேகம் பெறு வதைத் தடுக்க அவர் முயன்றதுடன் சனங்களிடையே பிக்குகளுக் கிருக்கும் செல்வாக்கைக் குறைப்பதற்காகத் தென்பகுதியிலுள்ள பிக்குகளிடையே பிளவை உண்டுபண்ணவும் முயன்ருர், *
இதே அரசியல் காரணங்களால் கண்டி மாகாணங்களில் பிரித்தானியர் வே ருெ ரு கொள்கையை அனுட்டித்தனர். 1815-ல் அவர்கள் புத்த சமயத்தை எதிர்க்க விரும் டவில்லை. ஏனெனில் அதனுல் தங்களுக்குப் பல கஷ்ட முண்டாகலாம் என எண்ணினர். பெளத்தசமயிகளின் வழிபாட்டு முறைகளையும் பெளத்த சங்கத்தையும் தேவாலயங்களையும் பாதுகாத்துப் பரி பாலிப்பதாகக் கண்டி உடன்படிக்கையில் பிரித்தானிய அரசாங் கம் உத்தரவாதமளித்திருந்தது. மேலும் கண்டியரசன் செய்ய வேண்டிய கடமைகளையும் தேசாதிபதி தானே நிர்வகிப்பதாக ஏற்றுக்கொண்ட்ார். இதனல் தேசாதிபதிக்கு மேலும் அரசியல் ஆதிக்கம் அதிகரித்தது. தலதா மாளிகை நிர்வாகத்துக்கும் ஏனைய தேவாலய பரிபாலனத்துக்கும் பொறுப்புள்ள உத்தியோகத்தர் களையும் நாயக தேரர்களையும் தேசாதிபதியே நியமனஞ் செய்வது? டன் தந்ததாதுவும் ஆபரணங்களும் கொண்ட கோயிலும் பிரித் தானிய அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவரின் பாதுகாப்பிலிருந் தது. மாளிகைக்கும் தேவாலயங்கட்கும் மானியமாக விடப் பட்ட நிலங்களை ஆட்சிசெய்வோர் திருவிழாக் காலங்களில் அவரவருக்குரிய பணியைச் செய்கிருர்களா என்பதைக் கவனிப் பதுடன் ராஜா வுக்குச் சொந்தமான கிராமங்களிலிருந்து கிடைக் கும் வருமானத்திலிருந்து திருவிழாவுக்கான செலவுகளையும் அனு மதித் துவந்தார். புத்த சமயம் சம்பந்தமாக பிரித்தானிய அர சாங்கம் அனுசரித்துவந்த கொள்கையைக் கண்டிக் கலகம் கூட மாற்றவில்லை. முன் போலவே அரசாங்கம் பெளத்த சமயத்தைப் பரிபாலித்து வந்தது . ஆனல், கண்டிப் பகுதியில் வேறு சமயத் தவரும் தங்கள் சமய வழிபாட்டுக்குரிய ஆலயங்களைக் கட்ட அனுமதித்தது.

சமூகப் பொருளாதார மாற்றங்கள் 59
ஆனல், 1818-ல் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட சீர் திருத்தங்கள், நிலங்களுடைய தேவாலயங்களையும் விகாரங்களை -யும் வெகுவாகப் பாதித்தன. கண்டி வாசிகளின் வாழ்வு பெளத்த சமயத்துடன் நெருங்கிப் கலந்திருந்தபடியா ல், எவ்வித பொது மாற்றத்தை உண்டுபண்ணினலும் அது சமயத்தையும் பாதிக்கக் கூடியதாகவே யிருந்தது. தேவாலய நிலங்களைப் பரிபாலித்து வந்த நிலாமைகளின் கையிலிருந்து நியாயம் வழங்கும் அதி காரத்தை எடுத்து விடவே அவர்கள் தங்கள் நிலங்களில் குடியிருப் போரிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்வது கஷ்டமாயிற்று. விகாரங்கட்குரிய நிலங்களை மேற்பார்வை செய்துவந்த பிக்கு களும் அதே நிலைமையிலிருந்தார்கள். கண்டி ராசாக்கள் காலத் தில் குடியிருப்பவன் தனது கடமையைச் செய்யத் தவறினல், பிக் குகள் தலைமைக்காரருக்கு முறையிடவேண்டியதுதான் தாமதம் அவன் தண்டிக்கப்படுவான். பிரித்தானிய ஆட்சியின் கீழ் நீதி மன்றத்திலே வழக்குத் தொடர வேண்டும். அது பழக்கமில்லாத ஒரு முறை. அன்றியும் வழக்குத் தொடரும்பொழுது தனது உத்தியோகத்தை நிரூபிக்கவேண்டியதும் அவசியம். இவ்வளவு வியவகாரங்களுக்கூடாக முறைப்பாட்டைச் செய்தாலும் தன்னு
டைய குறை நிவிர்த்தியாகப் பல காலமாகும்.
நிலைமை முழுவதும் புத்த சமயத்துக்கு எதிராக இருந்த தென்று கூறமுடியாது. பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பத்தில் 342,000 புரட்டஸ்தாந்திய கிறிஸ்தவர்களிருந்தார்கள். பெரும் பாலோர் பேரளவிலேயே கிறிஸ்தவராயிருந்தனர். பாட சாலைகள் கைவிடப்பட்டு வந்ததினுலும், சமய விஷயங்களில் அரசாங்கம் சலுகை காட்டத் துவங்கியதாலும் அவர்கள் மறு :படியும் தமது பழைய சமயத்தைத் தழுவினர்கள்.
1802-ல் சலாகம வகுப்பைச் சேர்ந்த அம்பஹபிட்டிய என் னும் சாமனேரர் (குருப்பட்டம் பெறுவதற்குப் பயிற்சி பெறும் ஒருவர்) கண்டி வழக்கத்துக்கு மாருக 5 பேருடன் பர்மாவுக்குச் சென்று அங்கே சங்கத்தில் சேர்ந்து கொண்டார். இவர்கள் திரும்பி இலங்கைக்கு வந்ததும் அமரபுரப் பிரிவு என்று ஒரு பெளத்த சங்கத்தை உண்டாக்கி எல்லாச் சாதியாரையும் அதிற் சேர்த்துக் கொண்டார்கள். சாதி சம்பந்தமாக பெளத்த சங்கத் தில் இப்படி ஒரு பிரிவு ஏற்பட்டது துரதிஷ்டவசமாகும். பழைய புத்த சமயத்தின் கொள்கைகளைப் புனருத்தாரணஞ் செய் வதற்கே அம்பகஹபிட்டியா ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். இந்து பெளத்த பிக்குகளிடையே சாதி வேறுபாட்டுணர்ச்சி முற்ருக ஒழிந்துவிடவில்லை.
உலகில் மற்றத் துறைகளில் ஏற்படும் மாற்றங்களோடு புத்த சமயத்தையும் முன்னேற்றமடையச் செய்ய இவர்கள்

Page 36
60 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
முயலவில்லை. பழைய காலத்திலிருந்த பெளத்த பிக்குகள் கல்வியறிவு நிரம்பி ஞானம் படைத்தவர்களாயிருந்தார்கள். இந்தியாவிலே வாழ்வின் பல துறைகளிலும் உண்டான மாற்றங் களை அறிந்து புதிதாய்த் தோன்றும் எண்ணப் போக்குகளைக் கிரகித்து இலங்கையின் சமய வாழ்வையும் உலகப் போக் குக்கு ஏற்றவாறு அவர்கள் மாற்றி வந்தார்கள். ஆனல் பிரித்தானிய ஆட்சிக்கால ஆரம்பத்திலிருந்த பெளத்த சங்கத் தினர் அயலே நடக்கும் மாற்றங்களையோ போக்குகளையோ கவனியாது தாம் தூர நின்றர்கள். சங்கத் தலைவர்களுக்கு ஆங்கில அறிவு போதாது. விகாரங்களில் ஒதிங்கியிருந்து பழைய நூல்களைக் கற்றுக்கொண்டு கிராமங்களில் பிச்சை யேற்று உண்டு போதனையை நடத்திக்கொண்டிருந்தார்கள். மேல்நாட்டிலிருந்து இலங்கையில் வந்து புகுந்துகொண்டிருந்த எண்ணப்போக்குகளையோ புதிய இயக்கங்களையோ பற்றி அவர்கள் பொதுவாக அறிந்திருந்ததே கிடையாது.
4. இராசகாரியம்
பிரித்தானிய நிர்வாக முறை நவீன அம்சங்களை உடையதா யிருந்தபடியால் இலங்கையில் நிலவிவந்த இராசகாரிய முறையை அவர்கள் நெடுங்காலம் நிலைத்திருக்க விடவில்லை. பிரித்தானி யரின் நீதிப்போக்குக்கு அது ஏற்றதாயிருக்கவில்லை. அத்துடன் அடிமைத்தொழில் செய்யும் வழக்கம் இங்கிலாந்தில் கண்டிக் கப்பட்டது. அது அங்கே வழக்கிறந்து போயிற்று. பிரித் தானிய சமுதாய வாழ்வு வியாபாரத்தையும் கைத்தொழிலையும் அடிப்படையாகக் கொண்டதாய் மாறி விட்டதால் இராச காரிய சேவை அவற்றுக்கு இடையூரு னதுடன் ஒரே தொழிலிற் சனங்களை அ  ைட த் து வைத்திருப்பதாயுமிருந்தது. ஆன படியால் அம்முறையை இலங்கையிலிருந்து அகற்றிவிட வேண்டி யது இன்றியமையாததாயிற்று. மேலும் இராசகாரியமுறை யினுல் அதிகாரிகள் அதிக ஆதிக்கமடைந்து குடிசனங்களை இம் சைப்படுத்தக் கூடியதாயுமிருந்தது. இம்முறை நடைபெறும் வரை பிரித்தானியர் இலங்கையில் போதிய ஆதிக்கம் பெறமுடியாமலு மிருந்தது. நோத் தேசாதிபதி இலட்சியவாதி. கண்முன் நடை பெறும் காரியங்களை ஆராய்ந்து அதற்கேற்ற கருமங்களைச் செய் யக்கூடிய திறமையற்றவர். வேறுபல நியாயங்களை கொண்டும் நோத் இராசகாரிய முறையை எதிர்த்தார். சேவைகளுக்காக நிலங்களை ஆட்சி செய்ய விடுவதைப் பார்க்கிலும் ஒரேயடியாக நிலங்களைக் கொடுத்துவிட்டால் அவற்றை சொந்தக்காரர் செவ் வனே செய்கைபண்ணுவார்களென்றும் அதனல் நாட்டின் செல் வம் பெருகுமென்றும் அதன் பயணுக அரசாங்க வருமானம் அதிக ரிக்குமென்றும் அவர் நினைத்தார். ஆனல் சனங்கள் இம்மாதிரி

சமூகப் பொருளாதார மாற்றங்கள் 6r
யான மாற்றத்தை விரும்பவில்லை யென்பதையும் முன்னர் சென்னை யரசாங்கம் இதில் சித்தியடையவில்லை என்பதையும் அவர் கவனிக்கவில்லை. எனவே 1802-ல் இராசகாரிய முறையை நோத் தேசாதிபதி நீக்கிவிட்டு சேவைக்காக மானியமாய்க்
கொடுக்கப்பட்ட நிலங்களில் விளை யும் பொருள்களில் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு திறையாகக் கொடுக்கவேண்டுமெனக் கட்டளையிட்டார்.
இலங்கையில் இரண்டு விதமான இராசகாரிய முறை இருந்து வந்தது. வீதிகள் பாலங்கள் முதலியவற்றை அழியவிடாது திருத்தி வைத்திருக்கவேண்டியது ஒன்று. இச் சேவையை அந் தந்தப் பகுதிகளிலுள்ள குடிகள் சம்பளமின்றிச் செய்யவேண் டும். மற்றது வேறு விதமான சேவைகள். இவை குடிகளின் சாதித் தொழிலைப் பொறுத்தன. சாதி என்பது பிரத்யேக மான ஒரு சமூகத் தொகுதி. இதிற் சேர்ந்தவர்கள் மற்றச்சாதி யாருடன் பந்திபோசனமோ விவாக சம்பந்தமோ வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஒருவன் ஒரு சாதியில் பிறப்பது பூர்வ புண்ணிய பலனென்றும் ஒரு சாதியிற் பிறந்தவன் மற்றெரு சாதியாக மாறமுடியாதென்றும் கருதப்பட்டது.
செய்தொழில் வேற்றுமையால் உயர்வு தாழ்வு கற்பிக்கப் பட்ட காரணமாக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தாழ்ந்த சாதியார்செய்யும் தொழிலை மேற்கொள்ளுவது அவமானமென் றுங் கருதினர். இச்சாதிப் பாகுபாட்டின்படி ஒவ்வொருவனுக் கும் அச்சாதிக்குரிய தொழில் அந்தஸ்து முதலியன உண்டு. அதில் மாற்றமேற்படுவது அபூர்வம். . சுருங்கக்கூறுமிடத்து ஒவ்வொரு சாதிக்கும் பூரணமான வாழ்க்கை முறையும் தொழில் முறையும் இருந்துவந்தன.
போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இச்சாதிப் பாகுபாட்டை மாற்றவில்லை. பிரித்தானிய அரசாங்கமும் ஆரம்பத்தில் இதை மாற்றவில்லை. அவரவர் சாதிக்கேற்ற தொழில்களை அவரவர் செய்துகொள்ள விட்டார்கள். உதாரணமாக கறு வாத் தொழிலை எடுத்துக்கொள்ளலாம். கறுவா வெட்டுவோர் கூலித் தொழில் செய்வோர் காவற்காரர் சேவுகஞ் செய்வோர் என்று இவ்வாறு பல வகுப்புத் தொழிலாளர் இருந்தனர். கறுவாத் தொழில் இவ்வாறு பல கஷ்டமான வேலைப்பாகுபாடுகளை உடையதாயிருந்தபோதிலும் அவ்வச் சாதியைச் சேர்ந்தவர்கள் தத்தம் சாதிக்குரிய தொழிலை நடத்திவந்தார்கள். அவ்வாறு செய்யத் தவறியவர்க்கு உடற்றண்டனை விதிக்கப்பட்டது. இவ் வாறே மற்றமற்றச் சாதியாரும் தத்தமக்குரிய தொழில்களை நடத்தி வந்தார்கள்.

Page 37
62 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
நோத் தேசாதிபதி ஏற்படுத்திய மாற்றங்களை ஜனங்கள் விரும்பவில்லை. குறித்த ஒரளவு வேலையைக் காணியாட்சிக்குரிய ஒவ்வொருவருஞ் செய்துவந்தனர். பொதுவாக அவ்வேலை அவ்வளவு கடினமானதன்று. ஆனல், புதிய முறையின்படி நிலத் தைச் சொந்தமாகப் பெற்றவர்கள் அதன் விளைவின் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு கொடுக்கவேண்டியிருந்தது. விளையும் நிலத்தை விஸ்தரித்தால் மேலும் கூடிய திறை அரசாங்கத் திற்குச் சேரும். நிலச் சொந்தக்காரர் அரசிறையை வசூலிக்கும் கடப்பாடு உடையவர்களாயிருந்தனர். விவசாயி விரும்பினல் தொழிலாளரைத் தொந்தரவு செய்யலாம். மேலும் அதிகாரிகள் அவர்களையும், வேலை வாங்கிக்கொண்டே வந்தார்கள். இராச காரிய முறைப்படி கடனளியான விவசாயி கடனுக்காக விளை வையே கொடுக்கக் கூடியதாயிருந்தது. புதியமுறைப்படி நிலச் சொந்தக்காரர் நிலத்தையே பறிமுதல் செய்யக்கூடிய தன்மை ஏற்பட்டது. r
புதிய மாற்றம் அவ்வளவு பயனுடையதன்று என்பதை அரசாங்கமே உணர்ந்துகொண்டது. சம்பளத்திற்குக்கூடப் பலர் வேலைசெய்ய மறுத்துவிட்டார்கள். தொழிலாளரின் உதவி பின்றி அரசாங்க நிர்வாகத்தை நடத்துவதே நோத் தேசாதிபதிக் குக் கஷ்டமாயிருந்தது. 1800-ல் நடந்த யுத்தத்தில் தொழி லாளரில்லாமல் தென்னிந்தியாவிலிருந்து ஒரு தொழிலாளர் படையைக் கொண்டுவர நேர்ந்தது. நிலத்தில் ஆட்சிபெற்றுப் பொலிஸ் கடமையைச் செய்துவந்த காவற்காரர் புதிய முறை யின் கீழ் வேலைசெய்ய மறுத்துவிட்டனர். கிராமங்களில் குற்றங் கள் மலிந்தன. - سمہ மெய்ட்லந்து தேசாதிபதி நோத்தின் திருத்தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் பழைய இராசகாரிய முறையை மீட்டும் உயிர்ப்பித்தார். இரண்டு வாரத்திற்கு இலவசமான சேவை புரியும் முறையை நோத் மாற்றி அதற்குச் சம்பளங் கொடுப்ப தாகக் கட்டளைபண்ணினர். மெய்ட்லந்து இலவச சேவையை மறுபடியும் நடைமுறையிற் கொண்டுவந்தார். அவர் இப்பிரச் சினையைச் சரித்திர ரீதியாக ஆராய்ந்து நாட்டின் அக்கால நிலைக்கு சேவை மானிய முறையே தகுந்ததென்றும் அதில் மாற்றமேற் படுத்த விரும்பினல் பொருளாதார நிலைமையை முதல் மாற் வேண்டுமென்றும் எடுத்துக் காட்டினர்.
தற்கால ஆட்சி முறைக்கு கண்டி மாகாணங்களில் சனங்கள் செய்துவந்த சேவை முறைகளில் பல பயனற்றன எனப் பிரெளன்ரிக் தேசாதிபதி கண்டார். கண்டிக் கலகத்தின் பின்னர் சேவை மானிய முறையை அங்கே நீக்கிவிட்டுத் தானிய வரி ஒன்றை ஏற்படுத்தினர். பழைய சேவைமுறைகளை, அவர் மறக்கவில்லை. இலவசமாகவும் சம்பளத்திற்கும் ஜனங்கள் சேவை

சமூகப் பொருளாதார மாற்றங்கள் 63
செய்ததை அவர் ஏற்றுக்கொண்டார். விகாரகம், தேவாலகம், நிந்தகம், ஆகியவற்றுக்கு தா னி ய வ ரி விதிக்கப்படவில்லை. ஆனல், நிந்தகத்துக்குத் தானியவரி விதிக்கப்பட்டது. நிந்தக அதிகாரிகள் வரி கொடுக்கத் தவறினல் அவர்களின் கீழ் வேலை செய்யும் தொழிலாளரின் சேவை மறுக்கப்பட்டது.
இவ்வாறு, இராசகாரியம் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. பின் வந்த ஒரு இலட்சியவாதி அதை நீக்கினர்.
5. விவசாயமும் வியாபாரமும்
அரசாங்க வருமானத்தைப் பெருக்குவதற்காக ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் தேசங்களில் வளத்தைக் கருத்தோடு பெருக்கிவந்தன. இலங்கையில் பிரித்தானியர் நாட்டின் விவசா யத்தை பெருக்குவதையே தமது கொள்கையாகக் கொண்டிருந்: தனர். இது இலங்கைக்குப் புதியதன்று. அனுராதபுரம், பொல னறுவை ஆகிய பழைய தலைநகரங்களிலிருந்து ஆண்ட சிங்கள அரசர்கள் நெற்சாகுபடியைப் பெருக்குவதற்காகப் பெரிய குளங் களையும் வாய்க்கால்களையும் வெட்டிக் குடிகளுக்கு உதவி செய்தார் கள். நீர் தேங்கக்கூடிய இயற்கை அமைப்புவாய்ந்த பள்ளத்தாக்கு களில் அணைகட்டிக் குளந்தொட்டும் ஆறுகளுக்கு குறுக்கே அணை கோலியும் அவற்றிலிருந்து கீழேயுள்ள வயல்களுக்கு நீர்பாயக் கால்வாயமைத்தும் விவசாயத்தை வி ரு த் தி செய்தார்கள். பின்னர் வந்த டச்சுக்காரர் இந்நீர்ப்பாசன வசதிகளிற் சிலவற்றை அழிய விடாமல் காப்பாற்றி வந்தார்கள். பிரித்தானிய தானிய வரியினல் அரசாங்கத்துக்கு அதிகம் வருமானம் வருவதைக் கண் டனர். ஆனல் ஏராளமான அரிசியை விசேஷமாகப் பஞ்ச முண்டான காலங்களில் வெளிதாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யவேண்டி ஏற்பட்டது.
இலங்கைக்குத் தேவையான அரிசி முழுவதையும் உள்ளூரி லேயே விளைவிப்பதில் அவர்கள் மிகவும் கவனம் செலுத்தினர்கள் அழிந்து போயிருந்த குளங்களையும் கால்வாய்களையும் திருத்தினர் கள். அத்துடன் விசேஷ விவசாய முறைகளையும் புகுத்த முயற்சி செய்தார்கள். -
18-ம் நூற்றண்டிலே ஒல் லாந் தரும் , பிரித்தானியரும் ஐரோப்பாவில் புதிய விவசாய முறைகளைக் கையாண்டு விவ சாயத்தைப் பெரிதும் சீர்திருத்தினர்கள். பூமியிலிருந்து நல்ல பயன்பெறுவதற்காகப் பயிர்களை மாற்றி சாகுபடிசெய்தனர். இலங்கையிலும், அம்மாதிரியான முறைகளை ஜனங்கள் பின்பற்றச் செய்வதற்குப் பிரித்தானிய அதிகாரிகள் முய்ன்றனர். விவசாய ஆராய்ச்சித் தோட்டமொன்றை ஏற்படுத்தி இலங்கையில்

Page 38
64 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
உருளைக்கிழங்கு, முள்ளங்கி, சோளம், முதலிய பயிர்களைச் சாகுபடி செய்யுமாறு தூண்டினர். நெல் நாற்று நடும் முறையை ஊக்கப் படுத்தியதோடு முத்துச் சம்பா போன்ற சிறந்த நெல்வகைகளை விவசாயிகள் சாகுபடிசெய்யுமாறும் தூண்டினர். ஆனல், அது அவ்வளவு சித்தி பெறவில்லை. பெரிய நிலச் சொந்தக்காரர்கள் தங்கள் நிலங்களைத் தாங்களே பயிர் செய்யாமற் குத்தகைக்குக் கொடுத்தார்கள். புதிய விவசாய முறைகளை மேற்கொள்ளச் சாதாரண விவசாயிகளிடம் பணமோ, போதிய அறிவோ கிடை யாது. அரசாங்கமும் விவசாயத் தளவாடங்களையும் விதை நெல்லையும் கொடுக்கும் அளவில் நின்றுவிட்டது.
வேறு விஷயங்களிலும் பிரித்தானியர் ஒல்லாந்தரைப் பின் பற்றினர். டச்சுக் கிழக்கிந்தியக் கொம்பெனி, கோப்பி, பஞ்சு, கரும்பு ஆகிய பயிர்களை மேற்கொண்டது. இவற்றைப் பயிர் செய்வதற்குப் புதிய பண்ணைகளையும் தோட்டங்களையுந் திறந்தது. கொழும்பிலேயும் கதிரானபோன்ற இடங்களிலும் கறுவா தோட்டங்களுண்டாயின. கொழும்பில் இப்பொழுது கறுவாத்தோட்டமென்று வழங்கும் இடம் அக்காலத்தில் கறுவா பயிர் செய்த இடமாகும். இந்த த் தோட்டங்களில் இராஜகாரிய முறை கையாளப்பட்டது. இதற்குமுன்னெல்லாம் டச்சுக் கொம்பெனியார் தாழ்ந்த பிரதேசங்களிலும், கண்டி ராச்சியத் திலும் உண்டான காட்டுக்கறுவாவை உபயோகித்தார்கள். ஆனல் கண்டியரசன் கறுவா வியாபாரத்துக்குத் தடை யுண்டு பண்ணவே புறம்பான கறுவாத்தோட்டத்தை உண்டாக்கவேண்டு மெனக் கொம்பெனியார் தீர்மானித்தனர். பிரித்தானியர் பிர தானமான கறுவாத் தோட்டங்களை மேலும் விருத்திசெய்தார் கள். சனங்கள் கறுவாத் தோட்டங்களை உண்டாக்கவும் வேறு பயிர்களைச் செய்யவும் அவர்கள் ஊக்கமளித்தார்கள். ஆனல் இதிலும் அவர்கள் சித்தியடையவில்லை. இவ்வளவு பெரிய முயற் சிகளில் ஈடுபடச் சிங்கள மக்களிடம் போதிய கல்வியறிவோ பணமோ இல்லை. ஐரோப்பியர் கொழும்புக்கு வெளியே குடி யேறக்கூடாதென்றும் கிழக்கிந்தியக் கொம் பெனி ச ட் ட ஞ
செய்திருந்தது.
பிரித்தானிய வியாபாரத்தை விருத்திசெய்யவும் அரசாங்க வருமானத்தை அதிகரிக்கவும் ஆவல் கொண்ட மெய்ட்லந்து தேசாதிபதி இந்தத் தடையை நீக்கிவிட்டார். அதன் பயனகப் பல ஐரோப்பியர் கோப்பித்தோட்டங்களை உண்டாக்கினர். பருத்தி, கரும்பு, சாயவேர், அபின் ஆகியவையும் அவர்களாற் சாகுபடிசெய்யப்பட்டன. கடற்கரைப் பிரதேசங்களில் கோப்பித் தோட்டங்கள் நல்ல பலனைத்தரவில்லை யென்பதையும், அதிக செலவின்றிக் கோப்பி உற்பத்திசெய்யும் இலங்கைத் தோட்ட முதலாளிகளுடன் போட்டியிடுவது சுலபமல்ல வென்பதையும்

சமூகப் பொருளாதார மாற்றங்கள் . 65
அவர்கள் உணர்ந்தார்கள். கண்டி ராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர், கோப்பிச் செய்கைக்கு மலைநாடு உகந்ததென்பதை உணர்ந்தனர். 1823-ல் ஜோர்ஜ் பேர்ட் என்பவர் கம்பளைக் கணித்தாகவுள்ள சிங்கப்பிட்டியில் முதல் ஐரோப்பியக் கோப்பித் தோட்டத்தை ஆரம்பித்தார். பார்ண்ஸ் கோப்பிச்செய்கை யில் ஊக்கங்கொண்டு தனது சொந்தத்தில் ஒரு தோட்டத்தை உண்டாக்கினர். க ன் ஞெ று வா வி ல், விவசாயப்பகுதியாரின் ஆராய்ச்சித் தோட்டம் இன்று நிறுவப்பட்டுள்ள இடத்தில், அவர் ஒரு அரசாங்கக் கோப்பித்தோட்டத்தையும் ஏற்படுத்தினர். இந்த முன்மாதிரியைப் பின்பற்றி சில அரசாங்க ஏஜெண்டு மாரும் தங்கள் தங்கள்பகுதிகளில் கோப்பித்தோட்டங்களை உண் டாக்கினர். அரசாங்கத் தோட்டங்களில் ராசகாரியமுறைப்படி தொழிலாளிகள் வேலை செய்தனர். சொந்தத் தோட்டங்களில் உள்ளூர் தொழிலாளிகள் வேலைசெய்தனர். உள்ளூர்த் தொழி ழிலாளர் எப்பொழுதும் அகப்படுவது கஷ்டமாயிருந்தபடியால் 1828-ல் பாண்ஸும் பேர்ட்டுமாகத் தென்னிந்தியாவிலிருந்து 150 தொழிலாளரை வரவழைத்தார்கள். ஆணுல் ஒரு வருடத்துள் எல்லாரும் வேலையைவிட்டு ஓடிவிட்டார்கள்.
வியாபாரப் பயிர்களைச் சாகுபடிசெய்வதையே பாண்ஸ் ஊக் கப்படுத்தினர். அதற்குத் தம்மாலானவற்றை யெல்லாஞ் செய் தார். கோப்பி, பருத்தி ஆகிய பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதிவரியை 1825-ல் பாண்ஸ் அகற்றிவிட்டார். கோப்பி, பருத்தி, கரும்பு, சாயவேர், அபின் முதலிய பயிர்கள் சாகுபடி யாகும் நிலங்கள் மீதுள்ள நிலவரியை 12 வருடங்களுக்குக் கொடுக் கத் தேவையில்லையென்று 1829-ல் கட்டளைபண்ணினர். தோட் டங்களில் வேலைசெய்யும் தொழிலாளிகள் இடையருமல் வேலை செய்வதற்கோ இராசகாரியமுறையை அனுசரிக்கவேண்டிய தில்லை எனக் கூறினர். М V
இத்தகைய நடவடிக்கைகளினல் தோட்டங்கள் பெருகின. விளைந்த கோப்பியைத் துறைமுகங்களுக்கு தொழிலாளர் மூலம் அனுப்புவது மிகச் செலவானதாயிருந்ததால் சில முதலாளிகள் கோப்பிச்செய்கையைக் கைவிட்டுவிட்டார்கள். கண்டிரோட் டைத் திறந்ததும் நிலைமை பெரிதும் மாறியது, 1200 ருத்தல் கோப்பியை ஏற்றிச்செல்வதற்கு ஒரு மாட்டுவண்டிக்கு 1831-ல் 1 பவுண் கூலி கொடுக்கப்பட்டது. ஆனல் அதற்குமுன்னெல்லாம் அதே வேலையைச் செய்ய 30 தொழிலாளர் தேவைப்பட்டனர். இவர்களுக்குச் சம்பளமாக பதினெரு பவுணும் 15 சிலிங்கும் கொடுக்கப்பட்டன.
-401-D

Page 39
66 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
கடற்கரைப் பிரதேசங்களை பிரிட்டன் கைப்பற்றியதும் இலங்  ைக க் கறு வா வியாபாரத்தைக் கிழக்கிந்திய கொம்பெனி கையேற்றுக்கொண்டது. இலங்கை முடிக்குரிய குடியேற்றநாடாக் கப்பட்டதும், கறுவாச் சாகுபடியையும், கறுவா சேகரிப்பதையும் அரசாங்கம் மேற்கொண்டது. கறுவா வியாபாரம் மாத்திரம் கொம்பெனிக்காரர் கையில் விடப்பட்டது. 1821-ல் கொம் பெனிக்குக் கறுவா கொடுக்கும் ஒப்பந்தத்தை அரசாங்கம் மறு படியும் புதுப்பிக்க விரும்பவில்லை. இலங்கையில் கறுவா விற்ப தற்கான பிரத்தியேக உரிமையை அரசாங்கமே தனதாக்கிக் கொண்டது. சுருங்கக்கூறுமிடத்து கறுவா வியாபாரம் மறுபடி யும் அரசாங்கத்தின் ஏகபோக உரிமையாக்கப்பட்டது.
தேங்காயும் இலங்கையில் இக் காலத்தில் ஏராளமாக உற் பத்தி செய்யப்பட்டது. பேட்டொ லாக்கி என்பவரின்* கணக் குப்படி இக்காலத்தில் 10,000,000 தென்னை மரங்கள் நின்ற தாக அறிகிருேம், 1 ஏக்கருக்கு 100 மரமாகப் பார்த்தாலும் 100,000 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடியாகியதென்று கூற லாம். தோட்டங்களிற் கூலி கொடுப்பதுபோலத் தென்னை சாகு படிசெய்யும் தொழிலாளிகளுக்குக் கூலி கொடுப்பதில்லை. அவர் களுக்கு நட்ட தென்னை மரங்களிற் சில பங்காகக் கொடுக்கப் பட்டன. தேங்காயெண்ணெய், கொப்பறை, தும்பு, கருப்பட்டி முதலிய தென்னைப்பொருள்கள் உள்ளூரில் உப்யோகப்படுத்தப் பட்டன. எஞ் சி ய பகுதி பெரும்பாலும் சோழமண்டலக் கரைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
விவசாய விருத்தியில் அரசாங்கம் எடுத்துக்கொண்ட நட வடிக்கைகள் அதிக பலனைத்தரவில்லை. உயர்ந்த சம்பளம்பெறும் ஐரோப்பிய உத்தியோகத்தரைக்கொண்ட தற்காலப் போக் குக்கேற்ற நிர்வாகத்தை அ  ைமத்த தா ல் அரசாங்கத்துக்கும் வரவுக்கு மிஞ்சிய செலவு ஏற்பட்டது.
* அந்தோனி பேட்டோலாக்கி என்பவர் கோர்வமிக்காவாசி. 1798-ம் ஆண்டு துவக்கம் 1819-ம் ஆண்டுவரை இவர் இலங்கைச் சிவில் சேவிவயில் கடமைபார்த்தார். ‘இலங்கையின் பண வியாபார, விவ சர்ய விமர்சனம், ’ என்று ஒரு நூலை இவர் இயற்றினர். இலங் கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப காலத்துப் பொருளாதார சரித் திரத்தையோ பொருளாதார நிலைமையையோபற்றிக் கூறும் ஒரே ஒரு நூல் இதுதான்.

ஐந்தாம் அத்தியாயம் கோல்புறுக் விசாரணைக்குழுவும், 1832-1833-ல் நடைபெற்ற அரசியல் சீர்திருத்தங்களும்
1. அரசியல் விசாரணை
வருஷா வருஷம் இலங்கை அரசாங்கத்தின் செலவு வரு மானத்தை விட அதிகரித்து வந்தது. இலங்கை அரசியல் நிர்வாக மும் திருப்திகரமாக நடைபெறவில்லை. பண நிலைமையைத் திரமான ஒர் அத்திவாரத்தில் வைத்து விட வேண்டுமென்றும், அரசியல் நிர்வாகத்தைச் சீர்திருத்தவேண்டுமென்றும் நினைத்து பிரித்தானிய ஏகாதிபத்திய அரசாங்கம் 1829-ம் ஆண்டில் டப்ளியூ. எம். ஜி. கோல்புறுரக் என்பவரை இலங்கைக்கு அனுப் பிற்று. இவர் இலங்கையின் அரசாங்க நிர்வாகத்தைப் பரி சீலனை செய்து அறிவிக்குமாறு கட்டளை யிடப்பட்டார். 1830-ல் சட்டம் சம்பந்தமான விஷயங்களையும் நீதிபரிபாலன முறையை யும் பரிசீலனை செய்யுமாறு சி. எச். கமெரன் என்பவர் அனுப் பப்பட்டார்.
இங்கிலாந்தில் இக்காலத்தில் 1832-ல் ஏற்படவிருந்த அர சியல் சீர்திருத்தத் திட்டம் உருவாகிக்கொண்டு வந்தது. அத்துடன் அடிமை வியாபாரத்தை ஒழிப்பதற்கான இயக்கமும் மும்முரமாய் நடைபெற்றது. இந்த முற்போக்கான எண்ணங் கள் கோல்புறுாக்கையும், கமெரனையும் பாதிக்காமல் விடவில்லை. எனவே இலங்கை அரசியல் நிர்வாகத்தில் அவர்கள் பல ஊழல் களைக் கண்டார்கள். ஆங்கில அரசியல் முறைகள்தாம் சிறந்தன வென்றும், அம்முறைகளையே குடியேற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டுமென்றும் நோத் தேசாதிபதி நினைத்ததுபோலவே இவர் களும் நம்பினர்கள். மெய்ட்லந்து தேசாதிபதி இலங்கையின் சரித்திரத்தோடு ஒட்டிப்பார்த்து எந்த வகையான அரசியல் முறை சிறந்ததெனத் தீர்மானித்தார். ஆனல் கோல்புறுாக்கோ, கமெரனே அவ்வாறு விஷயத்தை ஆராயவில்லை. புதிய அரசியல் மாற்றங்களுக்கு இலங்கை எவ்வளவு தூரம் தகுதியுடையது? அவற்றைச் சனங்கள் எவ்வளவுதூரம் விரும்புவார்கள் என்பதை யும் அவர்கள் பரிசீலனை செய்யவில்லை. இலங்கை அரசியல் நிர்

Page 40
68 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
வாகத்தைப் புதிய உலகப் போக்குக்கு ஏற்றதாக்கிவிட வேண்டு மென்ற ஒரே நோக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு சில அர சியல் திருத்தங்களைச் சிபார்சு செய்தார்கள்.
2. வியாபாரத்தில் ஏகபோக உரிமையையும் இராசகாரியத் தொழில்முறையையும் நீக்குதல் கோல்புறுாக் முதல் முதல் கண்டித்தவிடயம் இலங்கையில் நிலவிய இராசகாரியத் தொழில் முறையாகும். நோத் தேசா திபதி இ ைத க் கண்டித்துக்கூறிய ஆட்சேபங்களை ஏற்கனவே? குறிப்பிட்டிருக்கிருேம். இம்முறை பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்றதன்று என்றும், மனித நீதிக்கு மாறனதென்றும் கோல் புறுாக் இதைக் கண்டித்தார். இராசகாரியமுறை சனங்கள் தங் களுடைய சாதாரணத் தொழில்களை செய்யவிடாது தடுப்ப தால் வியாபாரம், விவசாயமாகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிய தடையாகும். அன்றியும் அவர்கள் தாங்கள் நினைத்தபடி தங் கள் தொழில்களை மாற்றிக்கொள்ளவோ அல்லது ஒரு இடத் திலிருந்து குடியெழும்பி வேறு இடத்துக்குப்போய்க் குடியிருக் கவோ முடியாமற் செய்துவந்தது. சனங்களை அடிமைகளாக்கிய தோடு எல்லாருக்கும் ஒரேவித உரிமையை அளிக்க மறுத்தது. தனக்கு அவசியமான தொழில்களை அரசாங்கம் செய்விக்க வேண் டியிருந்ததால் அதற்காகச் சாதிப்பாகுபாடுகளைத் தானே கைக் கொள்ளவேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது.
இராசகாரிய முறையே ஒழுங்கற்றதென கோல்புறுTக் கண்டித் தார். வேலை எல்லாருக்கும் சமமாகக் கொடுக்கப்படுவதில்லை. வாரம் எடுத்த ஒவ்வொரு குடும் பத்தவரும் இராசகாரியத்துக்கு ஒரு ஆண் தொழிலாளியை அனுப்பவேண்டும். ஆனல், வாரக் காணிகளெல்லாம் ஒரே அளவு உடையனவன்று. ஒரே விதமான விளைவு உடையனவுமன்று. ஒரே தொகையானவர்களால் ஆட்சி. செய்யப்படுவனவுமன்று. ஒருவன் அரசாங்கத்திலிருந்து கொஞ்சக் காணியைக் குத்தகைக்கு எடுத்திருக்கிருனென்று வைத்துக் கொள்ளுவோம். அவன் அரசாங்கத்துக்கு வேலைசெய்யவேண் டும். அந்தக் காலத்தில் தனது காணிகளைப் பார்க்க அவனுக்கு அவகாசம் ஏற்படமாட்டாது. மேலும் முதலாளிமாராயிருப்பவர் களுக்கு லஞ்சம் கட்டுபவர்கள் வேலை செய்யாது நீங்கிக்கொள்ள லாம். அந்த வேலையையும் மற்ற வார க் கார ரே பார்த்துக் கொள்ள வேண்டி ஏற்படும்.
எ ன வே இராசகாரியமுறையை அகற்றி விடப்பலர் விரும் பினர்கள். நோர்த் காலத்திலிருந்தவர்களின் மனே நிலையில் இவர்களிருக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்பட்ட நிர்வாக

கோல்புறுாக் விசாரணையும் அரசியல் சீர்திருத்தங்களும் 69
மாற்றங்களினுல் சேவை மானியத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார அமைப்பும் மாறியிருக்கலாம். அதனல் சனங் களுடைய மன நிலையும் மாற்றமடைந்திருக்கலாம். பிரித்தா னியர் அனுஷ்டித்த ராஜகாரிய முறையையே சனங்கள் பிரதா னமாய் ஆட்சேபித்தனர். தக்க பிரதி உபகாரமின்றிப் பிரித் தானிய அரசாங்கம் சனங்களை அவரவர் பகுதியிலிருந்து வேறிடங் களுக்கு அனுப்பி வேலைவாங்கி வந்தது. பழைய அரசாங்கங்கள் அவரவர் கிராமங்களிலுள்ள ரோட்டுகளைத் திருத்தி நல்லாக வைத்துக்கொள்ளும் வேலைகளில் சனங்களை ஈடுபடுத்திற்று. வேலையும் இலேசான வேலையாயிருந்தது. அதனல் அந்தந்தக் கிராம வாசிகளுக்கே நன்மையாயுமிருந்தது. ஆனல் இப்பொழுது
புதிய ரோட்டுகளையும் கட்டிடங்களையும் அமைத்து அவற்றில் கடு மையான வேலையைச் செய்யவேண்டி ஏற்பட்டதால் சனங்களின் புராதன பொருளாதார அமைப்புக்கு அம்மாதிரியான தொழில் நேரடியான பலனைக் கொடுப்பதாய்க் காணப்படவில்லை.
இராசகாரிய முறையை உடனே அகற்றிவிட இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. நோத் தேசாதிபதி காலத்தில் நடந்தது போல அரசாங்க வேலைகள் சீர்குலைந்து போவதை அது விரும்ப வில்லை. ஆனல், பிரித்தானிய ஏகாதிபத்திய அரசாங்கம் இலங்கை அரசாட்சியார் கூறிய நியாயங்களுக்கு அதிகம் செவிசாய்க் காமல் 1832-ல் இராசகாரியமுறையை நீக்கிவிட்டார்கள். கண்டி ராச்சியத்திலுள்ள அதிகாரிகளும், பிக்குகளும் இராசகாரிய முறை ஒழிக்கப்படுவதை ஆட்சேபித்தார்கள். சாதிக் கட்டுப் பாடும் வாரக் குடியமைப்புமே கண்டியதிகாரிகளின் செல்வாக்கை நிலைநிறுத்தி வந்தது. விகாரங்கள் தேவாலயங்களுக்கு ஆக் வேண்டிய வேலைகளை வாரக் குடிகளே செய்து வந்தார்கள். எனவே இராசகாரிய முறை ஒழிக்கப்பட்டால் விகாரங்களும் தேவாலயங்களும் அழிந்துவிடக்கூடுமென பிக்குகள் பயந்தார்கள். அக்காரணத்தால் நிந்தகம், தேவ்ாலகம், விகாரகம் ஆகியவை சம்பந்தமாக இராசகாரிய முறையை அனுஷ்டிக்கலாம் என அர சாங்கம் அனுமதித்தது. அதுவும் 1870-ம் நீக்கப்பட்டது. தொழில் செய்வோருக்குச் சம்பளம் கொடுக்கும் முறை அதன் பின் கொண்டுவரப்பட்டது.
இராசகாரியமுறை ஒழிக்கப்பட்டதும், வியா பா ர த் தி ல் அரசாங்கத்துக்கிருந்த ஏகபோக உரிமையும் ஒழியவேண்டி ஏற்பட்டது. இராசகாரிய முறையால் சேவை மானிய சமூகம் வியாபார சமூகமாக மாறுவதற்குப் பெருந் தடையேற்பட்டது. அதுபோலவே அரசாங்கம் தனக்கென விதித்துக்கொண்ட

Page 41
70 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
ஏகபோகமான வியாபார உரிமை, தனிப்பட்டவர்கள் வியா பாரத்திலும் சொந்த முயற்சிகளிலும் சிறப்படையாமல் தடுத்து வந்தது. அடம் ஸ்மித் என்பவர் எழுதிய * தேசங்களின் செல்வம் • என்ற நூல் இங்கிலாந்தில் இக்காலத்திருந்த அரசியல்வாதிகளிடையே செல் வா க்கு ப் பெற்றிருந்தது. விவசாயம், வியாபார ம் ஆகிய விஷயங்களில் அரசாங்கம் தலை யிடக்கூடாதென்றும், வ்ரியில்லாத வியாபாரம் நடை பெற வேண்டுமென்றும், தனிப்பட்டவர்களின் முயற்சிக்கு உற்சாக மளிக்க வேண்டுமென்றும் அடம் ஸ்மித் தமது நூலில் எடுத்துக் காட்டினர். இந்தியாவோடு வியாபார ஞ் செய்வதில் கிழக்கிந் தியக் கொம்பெனி ஏகபோக உரிமை அனுபவித்து வந்தது. ஒரு நூற்ருண்டுக்கதிகமாகவே கம்பெனி மீது செலுத்திய பல கண்டனங்களிலிருந்தும் அது பிழைத்து இருந்து கடைசியாகத் தனது ஏகபோக உரிமையை இழக்க நேரிட்டது. எனவே கோல்புறுாக், அரசாங்கம் வியாபாரத்தில் அனுபவித்துவந்த சகல உரிமைகளையும் கண்டித்தார். இக்காலத்தில் கறுவா வியாபாரம் முழுவதும் அரசாங்கத்தின் கையிலேதானிருந்தது. இதைக் கோல்புறுரக் கண்டித்ததுமன்றிக் கறுவா உற்பத்தி, அதன் வியாபாரம் சம்பந்தமாக அரசாங்கம் கையாண்டுவந்த முறை களாதியவற்றையும் கண்டித்தார். ஒரு தொழிலாளிக்குக் கொடுக் கும் சம்பளத்துக்கு அவன் கறுவா பயிர் செய்து பட்டையை எடுத்துக்கொடுக்கவும் வேண்டியிருந்தது. இதற் கென ஒரு சாதி பிரத்தியேகமாயமைந்தது. கறுவா எங்கே உற்பத்தி யானுலும் அது அரசாங்கத்துக்குச் சொந்தமானது. கறுவா மரத்தை யாராவது அழித்தால் அவனுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படுமென்று கறுவாச் சட்டம் விதிக்கப் பட்டது. இதன் பயனகக் கறுவாத் தோட்டங்களுக் கணித்தாக உள்ள கறுவாக் காடுகளின் விலையும் குறைய நேரிட்டது. சனங்கள் கறுவாப் பயிர் செய்வதிலோ, பட்டை செய்யுந் தொழிலிலோ பங்கெடுக்கக் கூடாதென அரசாங்கம் கட்டளை பண்ணிவிட்டது. அதனல் கறுவாத் தொழிலால் அரசாங்கத் துக்கு அதிக ஊதியமும் ஏற்படவில்லை.
கோல்புறுரக்கின் சிபார்சுப்பிரகாரம் 1833-ல் அரசாங்கத் தின் கறுவா வியாபார உரிமை அகற்றப்பட்டது. கறுவாச் சட்டங்களும் ஒழிக்கப்பட்டன. அரசாங்கமும் வேறு துறை களிற் தனக்கிருந்த ஏகபோக உரிமைகளையும் கைவிட்டு, விவ சாயம், வியாபாரம் ஆகிய விஷயங்களில் உள்ள ஊக்கத்தையும் கைவிட்டது. தனக்கிருந்த கோப்பித் தோட்டங்களையும்

கோல்புறுாக் விசாரணையும் அரசியல் சீர்திருத்தங்களும் 71
மிளகுத் தோட்டங்களையும் விற்று விட்டு பிறதேசங்களுக்குத் தேங்காயெண்ணெய், மின்னரம் முதலியன ஏற்றுமதி செய் வதையும் நிறுத்திவிட்டது.
Gill, Giu fIT u i Lh, கைத்தொழில் ஆகியவற்றில் அரசாங்கம் தலை யிட ஏதுவாகுமென எண்ணி நேரடியான வரி விதிப்பதையும் கோல்புறுாக் அனுமதிக்கவில்லை. இலங்கைப் பொருள்களின் உற்பத்தியையும் வியாபாரத்தையும் பாதிக்குமென்றெண்ணி நிலவரி, ஏற்றுமதி வரி ஆகியவற்றை விதிக்கக்கூடாதென அவர் கூறினர். ஆணுல், இந்த வரிகளை உடனே நீக்கினல் அரசாங் கத்தின் வருமானம் திடீரெனக் குறையக்கூடுமென்றும் இவற்றை படிப்படியாக ஒழித்துவிடவேண்டுமென்றும் எடுத்துக்காட்டினர். மேலும் அரசாங்க வருமானத்தில் திடீரென வீழ்ச்சி உண்டாக லாமென எண்ணிக் கறுவா மீது ஏற்றுமதி வரி விதிக்குமாறும் வேண்டினர்.
இராசகாரியமுறை ஒழிக்கப்பட்டமை இலங்கைச் சரித்திரத் தில் ஒரு மிக முக்கியமான சம்பவமென்றே கூறலாம். சிங்கள சேவை மானியமுறை ஆட்சியும் சாதிக் கட்டுப்பாடும் தொடர்ந்து நடைபெறுவதற்குச் சட்டபூர்வமான அனுமதி கொடுத்துவந் தது இராசகாரிய முறையே. அதற்கு ஒரு முடிபு ஏற்பட்டது. தேசாதிபதிகளின் நீதிமன்றங்களுக்கும் சாவு மணி அடிக்கப் பட்டது. சட்டத்தின் முன்னல் எல்லாரும் சம ன் ; உயர்வு தாழ்வு கிடையாது என்ற உரிமையை அளித்தது. வியாபாரத் திலிருந்துவந்த ஏகபோக உரிமை மறைந்து, இராசகாரியமுறை யும் ஒழிந்துபோகவே, பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர விருந்த வியாபார யுகம் இலங்கையில் உதயமாயிற்றென்று கூறலாம். -
3. தேசாதிபதியின் ஆதிக்கம் குறைக்கப்பட்டது
எந்தவிதமான சர்வாதிகாரமும் இருக்கக்கூடாதென இங்கி லாந்திலுள்ள அரசியல் கட்சியினர் அபிப்பிராயப்பட்டார்கள். கருத்து வேற்றுமைகளைக் கலந்துபேசித் தீர்த்துக்கொள்ளலா மென எண்ணினர்கள். நிர்வாக அதிகாரிகள் அனுபவித்து வரும் உரிமைகளை அவர்கள் கூர்ந்து கவனித்துவந்தார்கள். நிர்வாகம், சட்ட நிரூபணம், சட்ட பரிபாலனம் ஆகிய மூன்று துறைகளும் தனித்தனியே இருக்க வேண்டும். அப்படி யிருந் தால்தான் வாக்குச் சுதந்திர மும் செய்கைச் சுதந்திரமும் இருக்கும் இவற்றை அடைவதற்கு அதுதான் சிறந்த வழி ; தனி மனிதரின் உரிமைகளை இப்படித்தான் காப்பாற்றலாம் என்று அவர்கள் கருதினர்கள். இந்த எண்ணங்களால் பாதிக்

Page 42
72 இலங்கையில் பிரித்தானிய
கப்பட்ட கோல்புறுாக் இலங்கைத் தேசாதிபதி எல்லையற்ற அதிகாரமுள்ளவராயிருப்பதைக் கண்டித்தார். விசேஷமாக இரண்டு விஷயங்கள் அவருடைய பிரதானமான கவனத்தைப் பெற்றன. அரசாங்கத்துக்கு விரோதமாகவோ அல்லது நாட் டின் அமைதிக்குப் பங்கம் விளைக்கக்கூடிய விதமாகவோ இருக்கும் எவரையும் விசாரணையின்றி எவ்வளவு காலத்துக்கும் மறியலில் வைக்கத் தேசாதிபதிக்கு அதிகாரமிருந்தது. அப்படிப்பட்ட வர்களைத் தேசப்பிரஷ்டம் செய்யவும் அவருக்கு உரிமையிருந் தது. இது ஒன்று. மற்றது இவ்வாறு அவர் செய்வது சட்டப் படி சரியா என்பதை எந்த நீதித்தலத்திலும் விசாரணை செய்ய ஒருவருக்கும் உரிமை இ . கோல்புறுாக்கின் சிபார்சுப்படி இந்த இரண்டு சட்டங்களும் ஒழிக்கப்பட்டன. தேசாதிபதியும் தேசத்தின் சட்டத்துக் குட்பட்டவராக்கப்பட்டார். இதனல் சர்வாதிகார ஆட்சியமைப்பாயிருந்த இலங்கை அரசாங்கம் சட்டபிரமாணங்கட்குட்பட்ட அதிகாரக் குழு வின் ஆட்சி யமைப்புடையதாய் மாறிற்று.
தேசாதிபதியின் வேறு பல அதிகாரங்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறைக்கக்கூடிய வேறு பல சிபார்சுகளை யும் கோல்புறுக் செய்தார். கடற்கரை மாகாணங்களைப் போலவே கண்டி மாகாணங்களும் நிர்வகிக்கப்பட்டு வந்தபோதி லும், கண்டி நிர்வாக அதிகாரிகள் தேசாதிபதிக்கே நேரடியா கப் பொறுப்புள்ளவர்களாயிருந்தார்கள். இந்தப் பிரிவினுல் கண்டி அதிகாரிகளின் ஆதிக்கம் பெருகக்கூடுமென்றும் குடி களின் நன்மைக்கு எதிராகச் சிலவேளை அவர்கள் நடக்கக்கூடு மெனவும், தற்கால உலகப் போக்கைக் கடற்கரை மாகாண வாசிகள் அனுசரித்தது போலக் கண்டி வாசிகளும் அனுசரி யா திருக்க இது ஒரு தடையாயிருக்கக்க டுமெனவும் கோல்புறுரக் கண்டார். கண்டி நிர்வாகமும் மற்றப் பகுதிகளின் நிர்வாகத் தோடு இணைக்கப்பட்டால்தான் நாடு முன்னேறுமென எண்ணி ஞர். அவருடைய சிபார்சின் படி கண்டி விஷயமாகத் தேசாதி பதிக்கிருந்த விசேஷ அதிகாரம் அகற்றப்பட்டது. 1833-ல் மற்ற மாகாணங்களைப் போலவே கண்டி மாகாணமும் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இராசகாரியமுறை ஒழிக்கப்பட்டதினுல் சிங்கள நாட்டு நிர்வாகத்துக்கும் தமிழ்ப் பகுதிகளின் நிர்வாகத்துக்குமுள்ள வித்தியாசங்கள் போக்கடிக் கப்பட்டு வந்தன. இவ் வாறு கண்டிப்பகுதி, கடற்கரைப் பிரதேசம், தமிழ்ப்பகுதி என்ற மூன்று பிரதேசங்களின் நிர்வாக மும் ஒன்றுபடுத்தப்பட்டது. சட்டசபையையும் நிர்வாகசபை யையும் ஏற்படுத்த வேண்டுமென்று கோல்புறுாக் சிபார்சு செய்தார். அதன்பயணுக 1833-ல் இவ்விரு சபைகளும்

கோல்புறுாக் விசாரணையும் அரசியல் சீர்திருத்தங்களும் 73
ஏற்படுத்தப்பட்டன. நிர்வாக சபையின் ஆலோசனையுடன் தேசாதிபதி சகல நிர்வாக விஷயங்களையும் பண விஷயங்களை யும் கவனிக்கவேண்டுமெனக் கூறப்பட்டது. நிர்வாக சபை யின் யோசனைகளுக்குத் தேசாதிபதி செவிசாய்க்காமலிருக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனல், அப்படி அவர் செய்ய அவசர மேற்பட்டால் அதற்குறிய காரணங்களைக் குடியேற்ற நாட்டு மந்திரிக்கு அறிவித்துவிட வேண்டும். அதனல் நிர்வாக சபையின் ஆலோசனைகளைத் தக்க காரணமின்றி அவரால் நிரா கரிக்க முடியாது.
சட்டசபையில் சனப் பிரதிநிதிகளிருந்தார்கள். தேசாதி பதி கொண்டுவரும் சட்டங்களை அவர்கள் பரிசீலனை செய்யச் சந்தர்ப்பம் கிடைத்தது. சட்ட சபையில் ஒன்பது அரசாங்க உத்தியோகத் தரும் உத்தியோகப் பற்றற்ற ஆறு நியமன அங்கத்தினரும் இடம் பெற்ருர்கள். நியமன அங்கத்தவரில் பாதிப்பேர் ஐரோப்பியர். மற்றவர்கள் சிங்கள ர், தமிழர், பறங்கிகள் என்ற சமூகத்தினரின் பிரதிநிதிகள். ஒன்பது உத்தி யோக அங்கத்தவருள் ஆறுபேர் நிர்வாக சபை அங்கத்தினரும் மூன்று வேறு அங்கத்தினருமிருந்தனர். நியமன அங்கத்த வர்கள் நாட்டிலுள்ள பிரதானமான வியாபாரிகள் உயர்தர வகுப்பினர் ஆகியோரிடையிலிருந்து டொறுக்கி எடுக்கப்பட்டனர் இதுவரை ஆட்சி அதிகாரிகளும் அவர்களின் கட்டளையைச் சிரமேற்கொண்ட உத்தியோகத்தர்களுமே சட்டங்களைச் செய்து வந்தார்கள். ஆ ஞ ல், இப்பொழுது ஒரு முக்கியமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. தேசாதிபதியோ உத்தியோகத் தரோ தங்கள் செய்கைகளுக்குச் சட்டசபைக்குப் பொறுப் புள்ளவர்களாயிருக்கவில்லை யென்பது உண்மையே. சட்ட சபையிலுள்ள உத்தியோகத்தர் பெரும்பான்மையினராயிருந்த படியால் உத்தியோகப் பற்றற்றவர்களுக்கு அதிகம் செல்வாக் கிருக்கவில்லை யென்பதும் உண்மையே. ஆணு ல், நாட்டி ன் பிரதிநிதிகளாயிருப்பவர்களின் அபிப்பிராயத்துக்கு உத்தியோ கத்தர்கள் செவிசாய்க்கவேண்டியதொரு நிலைமை ஏற்பட்டது. இலங்கையில் பொறுப்பாட்சியின் ஆரம்பம் இதுதா ன்.
சட்டம் சம்பந்தமான அறிக்கையில் கமெரன் ? தேசாதிபதி யின் ஆதிக்கத்தை மேலும் குறைத்தார். தேசாதிபதியின் பொறுப்பிலிருந்த சிவில் நீதித்தலங்களின் விசாரணை முறை திருப்தியற்றதென்றும், அதில் கடமையாற்றும் உத்தியோகத்தர் கள் போதிய சட்டஞானமுள்ளவர்களல்லரென்றும் கமெரன் கண்டித்தார். இதன் பயணுக 1832-ல் இலங்கை முழுவதி

Page 43
74 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
லும் ஒரேவிதமான நீதித் த லங்கள் அமைக்கப்பட்டன. ஐரோப்பியருடைய வழக்குகளை உயர்தர நீதிமன்றம் விசாரணை செய்யவேண்டுமென்ற நியதி ஒழிக்கப்பட்டது. இலங்கையர் ஐரோப்பியரெல்லாருக்கும் சட்டம் ஒன்றுதானென விதிக்கப் பட்டது. தேசவழமைப்படி விசாரணை செய்யப்பட விரும்பி னுேர்க்கு அவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்டது. சிவில் நீதிஸ் தலங்கள் தேசாதிபதியின் அதிகாரத்திலிருந்து விடுவிக்கப்பட் டன. உயர்தர நீதிமன்றம் கிரிமினல் வழக்குகளை விசாரணை செய்வதுடன் சிவில் நீதி ஸ்தலங்களிலிருந்து வரும் அப்பல்களை யும் கேட்க வேண்டுமென விதிக்கப்பட்டது. 1833-ல் முக்கிய மான நகரங்களில் டிஸ்ரிக்கோடுகள் ஆரம்பிக்கப்பட்டன. இவை சிவில் வழக்குகளையும் சில கிரிமினல் வழக்குகளையும் விசாரணை செய்தன. தங்கள் தங்கள் பகுதிக்குள்ளேயே இவை ஆதிக்கம் செலுத்தின. டிஸ்ரிக் நீதிபதிகட்கு உள்ளூர் நட வடிக்கைகள் பழக்கவழக்கங்கள் தெரியாதபடியால் அவர்களுக்கு உதவிசெய்ய மத்தியஸ்தர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஐரோப பியர், இலங்கையர் என்ற வித்தியாசம் ஒழிக்கப்பட்டது. நியாய பரிபாலனம் நிர்வாகத்திலிருந்து பிரிக்கப்பட்டது. நிர் வாக விஷயத்தில் இலங்கை முழுவதும் ஒன்ருக்கப்பட்டது போலவே நீதிபரிபாலன விஷயத்திலும் ஒன்ருக்கப்பட்டது. இந்தச் சீர்திருத்தங்களினல் பல நன்மைகளுண்டாயின. நாட் டின் பல பாகங்களும் ஒரு நிர்வாகத்தின்கீழ் ஒன்றுபடவே ஒரு தேசம் என்ற உணர்ச்சி வலுவடைந்தது. நீதிபரிபாலன விஷயத்தில் உண்டான சீர்திருத்தங்களினுல் சனங்களுக்குச் சிவில் உரிமை உண்டானது. பிரதிநிதிகளடங்கிய அரசாங்க அமைப்பைச் சட்டசபைமூலம் ஏற்படுத்தியதால் சனநாயகக் கொள்கையமைந்த சனங்களுக்குப் பொறுப்புள்ள ஆட்சி கொஞ்சங் கொஞ்சமாக உருவாவதற்கு வழிபிறந்தது. தற்கால ஆட்சி முறையில் இ ல ங்  ைக  ைய இட்டுச்செல்வதற்கு கோல்புறுரக் பெரிதும் தொண்டு புரிந்தார்.
4. நிர்வாகச் சீர்திருத்தங்கள்
அரசியல் சீர்திருத்தங்களை மாத்திரம் செய்வதற்கு கோல் புறுரக் வரவில்லை. நிர்வாகச் செலவைக் குறைக்க வழி வகை களையும் ஆராய்ந்தார். வரவுக்கேற்ற செலவை அவர் திட்டப் படுத்த வேணடியிருந்தது. மாகாணங்களின் தொகையைக் குறைத்தும் சிவில்சேவிஸ் செலவைக் குறைத்தும் நிர்வாகச் செலவைக் சுருக்கினர். கண்டி ராச்சியத்தின் தாழ்ந்த பிரதேசங் கள் கரைப் பிரதேசங்களோடு நெருங்கிய தொடர்புடையனவா யிருந்ததால் அவற்றைக் கரைநாடுகளுடன் சேர்த்துவிட்டார்.


Page 44
gooogogis soos uouon œuoqjo : * · * * * &ggge
asevoun søtningos, q-gɛsi%
QTETT,
翻
-nige soosシ
quae uouo
ス
 
 
 

心了!·-·· L^ ^-, ?ほ * *opeo ș | {30$3--~~~~ operae;“净奥gsa gotos@@os$|
Š
Š
A.
sy.:r. -- were F. He
her
k
ܝܬܵܐ
S
...ws صعصعہ
«.确 3子シ ro :割 ····穩 Gaggio isole) · t,quaeponi'· ș»øø.- agrique? ?
· |-|-- *~-メ-Ķ s voorrra 9- soos voorneio ', ` ~ ~ ~ ¡ ¿ %... ?og ngogaetổ į {|- --§ ``|-
SqqLALTkSMSSSLSLMSSSLSLSLSL LqSkkSkSkkSkSkSSMSSSLSLSMSLALASLSLMeSLTL00LLLL00LS00LLLSL000SMLL LSALS
*
l,
· Hrņas»? --zion(
乙上

Page 45

கோல்புறுரக் விசாரணையும் அரசியல் சீர்திருத்தங்களும் 77
இவ்வாறு வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய மாகா ணங்களென மாகாணங்களை ஐந்தாகக் குறைத்தார்.* யாழ்ப் பாணம், கொழும்பு, காலி, திருக்கோணமலை, கண்டி ஆகிய பிரதானமான நகரங்களில் அரசாங்க ஏஜெண்டுகளை நியமித் தார். மேல் - மாகாணத்திலடங்கிய சிலாபம், நீர் கொழும்பு, களுத்துறை, குருணுக்கல், ரூவான்விலை, அத்தாப்பிட்டி (போட்கின்) ஆகிய இடங்களிலும் வடமாகாணத்தைச் சேர்ந்த மன்னரிலும், கீழ் மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பிலும் தென் மாகாணத்தைச் சேர்ந்த மாத்தறை, அம்பாந்தோ ட்டை இரத்தினபுரி, அலுப்பொத்தை ஆகிய இடங்களிலும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மடவலத்தன்னை (கல கேதரை) மாத்தளை, பதுளை ஆகிய இடங்களிலும் உதவி அரசாங்க ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டனர். -
சிவில் சேர்விஸிலும் கோல்புறூக் தீவிரமான மாற்றங்களைச் சிபார்சு செய்தார். 1833-ல் அவை நிறைவேற்றப்பட்டன. பென்ஷன் கொடுப்பது நிறுத்தப்பட்டது. பல உயர்தர உத்தி யோகங்கள் அகற்றப்பட்டன. சம்பளங்கள் வெகுவாகக் குறைக் கப்பட்டன. உயர்தரப் பதவிகளுக்கு இங்கிலாந்திலிருந்து உத்தியோகத்தரை நியமிக்கும் உரிமையை அரசாங்கம் கைவிட வில்லை. சாதிப்பாகுபாடின்றி இலங்கையர் ஐரோப்பியர் என்ற வித்தியாசமில்லாமல் திறமையுள்ளவர்கள் எவரும் சிவில் சேர் விஸ்"க்குப் போட்டியிடலாமென அனுமதிக்கப்பட்டது.
* யாழ்ப்பாணம், மன்னர், வன்னி, நெடுந்தீவு, அனுராதபுரப் பகுதி ஆகியவற்றை வடமகாணத்தில் அடங்கினர். அனுராதபுரப் பகுதி இப்பொழுது வடமத்திய மாகாணத்துடன் சேர்க்கப்பட்டிருக்கிறது கொழும்பு, களுத்துறை, சிலாபம், புத்தளம், ஏழு கோருளை (இது இப்பொழுது வட மத்திய மகாணத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது). நான்கு கோருளே, மூன்று கோருளே, புலத்கமத்தின் கீழ்ப்பகுதி (இது இப்பொழுது சபரகம மாகாணத்தின் வடபகுதியா யமைந் திருக்கிறது) ஆகியவற்றை மேல் மாகாணமாக்கினர். தென் மாகா ணத்தில் காலி, மாத்தறை, தங்காலை, அம்பாந் தோட்டை, சபரக மம் கீழ்உளவாவின் பகுதிகளான வல்லவாயா, புத்தளம். வெல்லச (இது இப்போது ஊவா மாகாணத்தின் ஒரு பகுதியாயமைந்திருக் கிறது), ஆகிய பகுதிகளை அடக்கினர். கீழ்மாகாணத்தில் மட்டக் களப்பு, திருக்கோணமலை, இப்பொழுது வட மத்கியமாகாணத்தைச் சேர்ந்த தமங்கடுவை, உளவாவைச் சேர்ந்த விந்தனை ஆகியவற்றை அடிக்கினர், மாத்தளை, கண்டி, எட்டிநுவரை, உடநுவரை, ஆறிஸ் பற்று, தும்பனை, தும்பரை, எவாஹேதை, கொத்மலை புலத்கமத் தின் மேற்குப்பகுதி, வடபலாத, வலப்பனை, ஆகிய பகுதிகளையும் மேல் ஊவாவைச் சேர்ந்த எட்டிக்கிந்தையும் உடுக்கிந்தை வியலுவை ஆகிய பகுதிகளையும் மத்திய மாகாணத்தில் அடக்கினர்.

Page 46
78 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
நாட்டின் அக்கால நிலைமையை நோக்குமிடத்து கோல் புறுாக்கின் சீர்திருத்தங்கள் மிக முன்னேற்றமானவையென்பதில் ஐயமில்லை. சிவில் சேர்விஸ் விஷயமாக அவர் செய்த சிபார் சுகள் காரியசாத்தியமற்றவை யென்றும் முரட்டுத்தனமுள்ளவை யென்றும் கொள்கைக்காகக் கொள் கை யைச் சாதிப்பவை யெயன்றுங் கண்டிக்கப்பட்டன.
இவை நியாயமான கண்டனங்களே. மெய்ட்லந்துபோன்ற தேசாதிபதிகள் செய்துவந்த நல்ல வேலைகளை இவர் பலனற்ற வையாக்கினர். சிவில் சேர்விஸ்தான் இக்காலத்தில் அரசாங்க மாயிருந்தது. சம்பளங்களைக் குறைப்பதனலும் உபகார வேத னத்தை ஒழிப்பதாலும், உயர்தர உத்தியோகத்துக்கு உயர் வதைத் தடுப்பதனலும் சிவில் சேர்விளலின் திறமையை நிலை நிறுத்த முடியாது. எனவே அவர் செய்த சிபார்சுகளினல் அரசியல் நிர்வாகத் திறமை குன்றிப்போயிற்று. அதன் பயனுய் 20 வருடமாக தேசம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஐரோப் பியத்தோட்ட முதலாளிகளையும், வியாபாரிகளையும், தேச மக்களை யும் கோல்புறுாக் சிபார்சுகள் பாதித்தன. தோட்ட முதலாளி கள் அவற்றுக்கு எதிர்ப்புக் காட்டாததற்குக் காரணம் அவை அவர்களுக்குச் சாதகமாக இருந்தமையே. நாட்டுமக்கள் பல வருடங்களின் பின்னர்தான் அவற்றலுண்டான தீமைகளை யுணர்ந்தார்கள். எனவே 1848-ல் தான் தமது எதிர்ப்பை அவர்கள் வெளிக்காட்டினர்கள்.
மூன்று முக்கியமான விஷயங்கள் கோல்புறுரக் மனதில் பதிந் திருந்தன. இங்கிலாந்திலே இக்காலத்தில், சிவில் சேர்விஸ் அக்கு இலங்கையிலிருப்பது போன்ற அவ் வள வு முக்கியத்துவம் இருக்கவில்லை. இராசகாரியத்தை ஒழித்து அரசாங்கத்தின் வியாபார ஆதிக்கத்தையும் அகற்றி நேர் வரிகளுக்குப் பதிலாக மறைமுகமான வரிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுத்தி நீதிபரிபாலனத்தை அரசாங்க நிர்வாகப் பிடியிலிருந்து அகற்றிச் சட்டசபைகளையும் ஏற்படுத்தியவுடன் சிவில் சேர்விஸின் கடமை களும் முக்கியத்துவமும் பெரிதும் குறைந்துவிடுமென அவர் எண்ணினர். -
கிராமச் சங்கங்களை அபிவிருத் தி செய்யத் தான் போட்ட திட்டத்தின் பயனுகவும் சிவில் சேர்விஸ்காரரின் கடமைகள் குறைந்துவிடுமென அவர் எண்ணியிருக்க வேண்டும். சேவை மானிய ஆட்சிக்கு முந்திய நிலைமையில் அல்லது அதே சமூக நிலைமையில் தான் இலங்கையிலுள்ளவை போன்ற கிராமச் சங் கங்கள் நிலைத்துநிற்க முடியும் என்பதை அவர் உணர்ந்திருந்த தாகத் தெரியவில்லை. அதிகார ஆட்சி, தனிப்பட்ட உத்தி யோகத்தரின் தாராளமான செல்வாக்கினல் நடத்தப்படும்

கோல்புறூக் விசாரணையும் அரசியல் சீர்திருத்தங்களும் 79
திர்வாகம் போன்ற தற்கால அரசாட்சியின் கீழ் அவை சிறப் டைய முடியாதென்பதையும் அவர் உணரவில்லை. கிராமச் சங்கங்கள் சரியாக வேலைசெய்ய வேண்டுமானுல் அரசாங்க உத்தியோகத்தர் அவற்றைத் தாமாக மேற்பார்வையிடவேண் ம். அதற்குத் திறமையுள்ள பல சிவில் சேர்விஸ் உத்தியோ கத்தர் தேவை.
இலங்கையைப் போன்ற ஒரு சிறிய தேசத்தில் ஐரோப்பிய சிவில்சேர்விஸ்காரர் பலரை உத்தியோகத்திலமர்த்திச் சம் பளம் கொடுக்கக்கூடாதெனக் கோல்புறுாக் நினைத்தே இவ் வாறு சிக்கனஞ்செய்ய எண்ணினரென்பதில் சந்தேகமில்லை. உயர்தர உத்தியோகங்களுக்கு விரைவில் இலங்கையரைப் பயிற்றி அமர்த்தலாமெனவும் அவர் எண்ணினர். இந்த நோக் கத்துடன் கல்வியபிவிருத்திக்கு அதிக பணம் செலவிடுமாறும் சிபார்சுசெய்தார். தற்காலத் தேவைக்கேற்ற கல்வி முறையை உதவாத வகையில் சுயபாஷைப் பாடசாலைகளுள் திறமையற்றவை யாயுள்ள பாடசாலைகளை அகற்றிவிட்டு ஆங்கிலப் பாடசாலைகளை த் தாபித்து இலங்கையரை அரசாங்க உத்தியோகங்களுக்குப் பயிற்றுமாறு சிபார்சுசெய்தார். அரசாங்க அலுவல்களெல்லாம் ஆங்கிலத்திலேயே நடைபெற்றுவந்தன. நீதித் தலங்களிலும் விரைவில் ஆங்கிலத்திலேயே அலுவல்கள் முற்ருக நடக்கவேண் டியிருந்தது. அரசாங்கத்தில் பயனுள்ள உத்தியோகத்தராக இலங்கை மக்கள் திகழவேண்டுமானல் ஆங்கிலத் துரைத்தனத் தாரின் பாஷை, அவர்களுடைய எண்ணப்பாங்கு, முதலியவற்றை அறியவேண்டியது அவசியமல்லவா ? முதலாவதாக உயர்தர வகுப்பினருக்கும் மத்திய வகுப்பினருக்கும் ஆங்கிலக் கல்வி ஊட்டுவதில் செலவிடும் பணம் வீண்போ காதெனவும் அவர் எண்ணினர்.
கீழைத்தேசக் கல்வியினல் பயனில்லை ; ஆங்கில அறிவினல் கீழ்த்திசை மக்கள் அறிவாலும் ஒழுக்கத்தாலும் முன்னேற்ற மடைவார்களென்று இக்காலத்திருந்த ஆங்கில அறிஞர் எண்ணி னர்கள். கோல்புறுாக்கும் இதே அபிப்பிராயத்தையே கொண்டி ருந்த படி யால் ஆங்கிலப்பாடசாலைகளைத் திறக்க வேண்டுமென விரும்பினர். இலங்கை சேவை மானிய சமூகத்திலிருந்து வியா பார சமூகமாக மாறவேண்டினுல் ஆங்கில அறிவு அத்தியாவசிய மெனவும் அவர் எண்ணியிருக்கலாம்.
சுயபாஷை பாடசாலைகளை ஒழித்து ஆங்கில்ப்பாடசாலைகளை ஏற்படுத்துமாறு கோல்புறுாக் செய்த சிபார்சு தகா தெனப் பல காரணங்களைக் காட்டிக் கண்டிக்கலாம். ஆங்கில பாஷை மூலம் கல்வியூட்டுவது சுதேசவாசிகளுக்கு ஏற்றதல்ல வென்பதை அனு பவத்தினுலும் உள நூலாசிரியர்களின் ஆராய்ச்சியினுலும் கண்டி

Page 47
80 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
ருக்கிருேம். மனிதர் இயல்பாக மாற்றத்தை விரும்ப மாட்டார் கள் என்பது உண்மை. இதை ஆங்கிலேயர் உணர்ந்திரு தனர். சரியான கல்வியைப் போதித்துவிட்டால் மக்கள் வா வைத் தாமாகவே விரைவில் மாற்றிக்கொள்வார்கள் என அவ கள் அறிந்திருந்தனர். இலங்கையில் மாத்திரமல்ல இந்திய விலும் இதே மாற்றங்களே ஏற்பட்டன. இதற்கு வேருெரு வழியுமில்லாதிருந்தது. கிறிஸ்து சமயத்தைச்சேராதவர்களே பெரும்பான்மையினராயுள்ள இத்தேசத்தில் ஆங்கிலக் கல்வி விருத்தி சம்பந்தமான விஷயங்களை ஆங்கிலிக்கன் பாதிரிகளும், அரசாங்க உத்தியோகஸ்தரும் அடங்கிய ஒரு சபையின் கையில் விட்டுவிட்டமை கோல்புறுாக்கின் புத்தியீனமே. ஆனல் அக் காலத்தில் இங்கிலாந்தில் கூடக் கல்வி விஷயங்கள் கிறிஸ்தவ திருச்சபைகளின் பொறுப்பிலேயே இருந்தன. ஆனபடியால் இங்கிலாந்திலும் பார்க்க முன்மாதிரியான ஒரு கல்வித்திட் டத்தை கோல்புறுாக் சிபார்சு செய்திருக்க முடியாது. மேலும் இப்படியான ஒரு விஷயத்துக்குப் பொறுப்பேற்கக்கூடிய வேறு தாபனங்கள் இலங்கையில் அக்காலத்தில் இருக்கவில்லை.
கோல்புறுாக்கின் சிபார்சுகளில் எவ்வளவு குறையிருந்த போதிலும் அவை உயர்ந்த நோக்கத்தோடுதான் செய்யப் பட்டவை என்பதில் சந்தேகமில்லை. இலங்கை மக்களின் நன்மை யொன்றைக்கருதியே அவை செய்யப்பட்டன. அந்த நோக்கத் துடன் அச் சிபார்சுகளை நடைமுறையில் கொண்டுவந்திருந்தால் அந்த நூற்றண்டில் நடந்த ஆட்சிமுறை சனங்களுக்கு அதிக நன்மையைக் கொடுக்கக்கூடியதா யமைந்திருக்கும்.

இரண்டாம் பாகம்
விவசாயப் பொருளாதாரத்திலிருந்து வர்த்தகப் பொருளாதாரத்துக்கு மாறுதல்

Page 48

ஆறம் அத்தியாயம்
தோட்டங்களைத் திறத்தல்
1. தோட்டம், வியாபாரம் தொழிலாளர்
இக் காலப்பகுதியின் முக்கியமான அம்சம் கோப்பித்தோட் ட்ங்களின் வளர்ச்சி. இதனுல் நாட்டின் பொருளாதார நிலை மையில் பெரிய மாறுதலுண்டானது. போர்த்துக்கேயர், டச்சுக் காரர் காலத்தில் கறுவா வியாபாரமே தலைசிறந்து விளங்கிற்று. ஆளுல் இக்கால இறுதியில் அதன் முக்கியத்துவம் குன்றி விட்டது.
1835-ம் ஆண்டுவரை பிரித்தானியரும் கறுவா வியாபாரத் தினல் பெரிய லாபம் அடைந்துவந்தார்கள். ஆனல் ஜாவா விலிருந்து உற்பத்தியான கறுவாவும், கசியா என்ற இளக்கமான கறுவாவும் போட்டியிடவே இலங்கைக் கறுவாவின் விலை விழுந்துவிட்டது. கசியா எவ்வளவு ரசமில்லாத கறுவாவா யிருந்தபோதிலும் மலிவானது. ஜாவாக் கறுவா இலங்கைக் கறுவா போலவேயிருந்தது. இலங்கைக்கறுவா மற்றக் கறு வாக்களிலும் பார்க்கச் சிறந்ததாயிருந்தபடியால் போர்த்துக் கேயரும் டச்சுக்காரரும் அதிக லாபம் பெற்ருர்கள். பிரித்தானி யர் டச்சுக்காரரை இலங்கையிலிருந்து கலைத்ததும், அவர்கள் 1825-ல் இலங்கையைவிட்டுப் போகிறபொழுது 3000 கறுவாக் கன்றுகளையும், விதைகளையும் பல கறுவாத் தொழிலாளரையும் கொண்டுசென்ருர்கள். சிறிது காலத்தில் அவர்கள் இலங்கை யிலும் பார்க்கக் குறைந்த விலைக்குக் கறுவா விற்கத் தலைப் பட்டுக் கறுவா வியாபாரம் முழுவதையும் கைப்பற்றினர். ஜாவாவுடன் போட்டியிடுவதனல் இலங்கை அரசாங்கம் இலங் கைக் கறுவாவுக்கிருந்துவந்த ஏற்றுமதி வரியைக் குறைத்திருக்க வேண்டும். அப்படிச்செய்தால் வருமானங் குறைந்துவிடு மென்று நினைத்து அரசாங்கம் அப்படியொன்றுஞ் செய்துவிட வில்லை. ஆனல் பின்னர் அந்த வரியைக் குறைத்தபொழுதும் விலை இறக்கத்துக்கு ஏற்றபடி குறைக்கவில்லை. கடைசியாக 1853-ல் வரியை அறவே நீக்கியபொழுது கறுவா வியாபாரம் மீளமுடியாத நிலைபரத்துக்கு வந்துவிட்டது.
கறுவா வியாபாரத்துக்கு வந்த நட்டம் போல மற்ற விளை பொருள்களுக்குண்டாகவில்லை. முடிக்குரிய நிலங்களை மலி வான விலைக்கு விற்ருர்கள். கோல்புறுாக்கின் சிபார் சுப்படி நிலவரியின்றியே அவை வழங்கப்பட்டன. இருந்தும் விவ

Page 49
84 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
சாயம் உடனே அபிவிருத்தியடையவில்லை. கோப்பி கொஞ்சம் முன்னேற்றமடைந்தது. மலைநாடுகளில் கோப்பி நல்ல பலனைத் தருமெனக் கண்டார்கள். கொழும் பிலிருந்து கண்டிக்கு ரோட் டுப் போட்டபின்னர் போக்குவரத்துச் செலவு பன்னிரண்டி லொன்ருகக் குறைந்துவிட்டது. இருந்தும் பலர் கோப்பி பயிர் செய்வதைக் கைக்கொள்ளவில்லை. இலங்கைக் கோப்பிக்கு இங்கிலாந்தில் அதிக இறக்குமதிவரி விதிக்கப்பட்டது. அத் துடன் மேற்கிந்திய தீவுக் கோப்பி விவசாயிகள் மிகுந்த அனு பவமுள்ளவர்களாயுமிருந்தார்கள். இவ்விரு காரணங்களினலும் இலங்கைக் கோப்பித்தோட்ட முதலாளிகள் போட்டியிட முடியாமற் போய்விட்டது.
ஆனல் 1837-ல் நிலைமை மாற்றமடைந்தது. l 835-6) மேற்கு இந்திய கோப்பிக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியே இலங்கைக் கோபிக்கும் விதித்தார்கள். ஐரோப்பாவில் கோப் பிக்கு கிராக்கி அதிகரித்தது. மேற்கிந்திய அடிமைகள் விடுதலை யடைந்ததன் பயனக அங்கே கோப்பித்தொழில் மந்தமடைந் தது. மேலும் மேற்கிந்திய கோப்பி பிரதானமாக இங்கிலாந் துக்கே ஏற்றுமதிசெய்யப்பட்டது. எனவே இலங்கைக் கோப் பிக்கு மதிப்பு உண்டானது. இத்தருணத்தில் கோப்பிச்செய்கை யைப் பற்றி ஜமேய்க்காவில் மூன்று வருடமாகப் படித்துப் ப்யிற்சிபெற்ற ஒருவர் 1837-ல் இலங்கைக்கு வந்தார். சரியான செய்கை முறைகளை அனுஷ்டிப்பதனல் கோப்பிச்செய்கையைப் பன்மடங்கு பலனுள்ளதாகச் செய்யலாமென அவர் காட்டினர்.
உடனே கோப்பிச் செய்கை விருத்தியடையத் துவங்கிற்று. 1834-ல் அரசாங்கம் 49 ஏக்கர் நிலங்களையே விற்றது. 1841-ல் 78,685 ஏக்கர் நிலம் விற்கப்பட்டது. 1845-ல் 35, 596 ஏக்கர் நிலம் செய்கைபண்ணப்பட்டது. 1828-ம் ஆண்டு துவக்கம் 1835 வரை வருடாவருடம் சராசரி 20, 911 அந்தர் கோப்பி இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன்விலை 24,862 பவுண். 1837-ல் கூட ஏற்றுமதி 30,000 அந்தருக்கு அதிகரிக்கவில்லை. அந்த வருடந்தொட்டுக் கோப்பி ஏற்றுமதி கூடிக்கொண்டே வந்தது. 1845-ல் 200,000 அந்தர் ஏற்றுமதி யாயிற்று. 1835-ல் ஒரு சில ஐரோப்பியக் கோப்பித்தோட்டத் துரை மாரே இலங்கையிற் காணப்பட்டனர். 1848-ல் 60,000 ஏக்கர் விஸ்தீரணமுள்ள 367 கோப்பித் தோட்டங்கலிருந்தன. கோப்பிச் செய்கையில் 1837 துவக்கம் 1845 வரை 3,000,000 பவுண் முதல் போட்டப்பட்டது. ۔۔۔۔۔
கோப்பிக்கு நல்ல கால முண்டென எண்ணி அந்த வியாபாரத் தில் பலர் ஈடுபட்டனர். மக்கென்ஸ்லி தேசாதிபதி தொட்டு, நீதிபதிகள், இராணுவ உத்தியோகத்தர், சிவில்சேவிஸ்காரரில் அரைவாசிப்பேர், இந்தியா, இங்கிலாந்து, ஆகிய தேசங்களி

தோட்டங்களைத் திறத்தல் 85
லிருந்து வந்த பல பணக்காரர் ஆகிய எல்லாரும் கோப்பிச் செய்கையில் பணத்தை வீசினர்கள். சில பணக்காரர் மித மிஞ்சிய விலைகொடுத்துக் கோப்பித்தோட்டங்களை வாங்கினர் கள். ஆனல் அதிக ஆசை அதிக நஷ்டமாயிற்று. நிலத்தின் தன்மை விவசாயமுறை இவற்றைப்பற்றிக் கவனியாது அவசரப் பட்டு நிலங்களை வாங்கி எதிர்பார்த்த அளவுக்கு மிகக் கொஞ்ச மாகவே அவர்கள் விளைவுபண்ண முடிந்தது. தேவைக்குப் போதுமான தொழிலாளரில்லாதபடியால் நாலு மடங்கு சம்பளம் கொடுக்கவேண்டியுமேற்பட்டது. சிவில் என்ஜினியர், நில அளவைப்பகுதியார் கடுமையாக வேலைசெய்யவேண்டி நேரிட் டது. ரோட்டுப்போடுமாறும் நிலங்களை அளந்து கொடுக்கு மாறும் அவர்களுக்கு வந்த கோரிக்கைகளை அவர்கள் நிறை வேற்ற முடியாதபடி யிருந்தது. மேலும் சுமை காரர் மூல மாகச் சாமான்களை அனுப்புவதும் மிகச் செலவாயிருந்த படியால் கோப்பி உற்பத்தி அதிக செலவுள்ள ஒரு தொழிலாதி விட்டது. * வரியில்லா வியாபாரம் ’ என்ற கொள்கையை பிரிட்டன் கைக்கொண்டுவந்ததால் ஜாவா, பிரேசில் ஆகிய இடங்களில் மிக மலிவாக உற்பத்திசெய்யும் கோப்பியை வழி யின்றி மார்க்கெட்டில் அனுமதித்தது. இலங்கைக் கோப்பிக்கு விதித்த இறக்குமதி வரியே இவற்றுக்கும் விதிக்கப்பட்டன இவற்ருேடு 1845-46-ல் பிரிட்டனில் பணக் கஷ்டம் உண்டானது. அதனல் இலங்கைத் தோட்டக்காரர் கொஞ்சமும் கடன்வாங் முடியவில்லை. இவற்றின் பயனக கோப்பிச்செய்கையில் ஈடு பட்டிருந்தவர்கள் பெரிய நட்டத்துக்குள்ளானர்கள். 1847-ல் பிரித்தானியாவில் ஏற்பட்ட பணநெருக்கடியினல் கோப்பிச் செய்கை மூன்று வருடத்துக்குப் படுத்துவிட்டது.
தோட்டங்கள் பெருகியதால் நாட்டவரின் வாழ்க்கையை வெகுதூரம் பாதிக்கக்கூடிய பொருளாதார மாற்றங்களுண்ட யின. வியாபாரம் விருத்தியடைந்தது. பிரித்தானியர் கரைப் பிரதேசங்களைப் பிடித்தபொழுது இலங்கையில் அதிகம் வியா பாரம் நடைபெறவில்லை. அந்த வியாபாரத்தினுல் கொழும்பை யடுத்த சில மைல் தூரங்களே பாதிக்கப்பட்டன. பிரித்தானிய சரக்குகளை விற்பதற்கு இலங்கையை ஒரு மார்க்கெட்டாக்கிக் கொள்ள வேண்டுமென்பதே பிரித்தானியரின் நோக்கமாயிருந்த போதிலும் 1825-ம் ஆண்டிற்கூட இலங்கை வெளிநாடுகளுடன் 521,000 பவுண் பெறுமதியான வியாபாரத்தை நடத்திற்று. கிராமங்கள் மற்றப் பகுதிகளுடன் தொடர்பில்லாமல் தனித்து நின்றகாலம் போய்விட்டது. ரோட்டுகள் போடப்பட்டதால் இந்தத் தனிமை ஓரளவுக்கு நீங்கிற்று. இராசகாரியத் தொழில் முறை ஒழிக்கப்பட்டதால் பழைய கூட்டுச்சேவை மானியச் சமூக

Page 50
86 W இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
மும் குலைந்தது. வியாபார ஏகபோக உரிமை (பிரதானமாகக் கறுவா வியாபார உரிமை) நீக்கப்பட்டதால், தனிப்பட்டவர்கள் வியாபார முயற்சியி லீடுபட்டார்கள். கோப்பிச் செய்கையே சரியான வியாபார முறையை ஆரம்பித்தது. கிராமவாசிகள் தங்கள் நிலங்களைச் செய்கை பண்ணி உணவுப்பொருள்களை ஆஉண்டாக்கினர்கள். அவர்களுடைய தேவைகளையெல்லாம் அவரவர் கிராமங்களிலேயே பெறமுடிந்ததால் வெளியுலகத் தைப்பற்றி அவர்கள் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனல் கோப்பி அந்நிய நாடுகட்கு ஏற்றுமதி செய்வதற்காகவே உற் பத்திசெய்யப்பட்டது. அவற்றைத் துறைமுகங்களுக்கு அனுப்பி அங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கப்பல்களில் ஏற்றுமதி செய்தார் கள். தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்குத் தேவையான உணவு உடை முதலியவற்றை இலங்கையின் மற்றப்பகுதிகளி லி ரு ந் தோ வெளிநாடுகளிலிருந்தோ வர வழைத்தார்கள். இதனல் உள்ளூர் வியாபாரமும் வெளியூர் வியாபாரமும் உண்டாயின. 1840-ல் இலங்கையின் வெளியூர் வியாபாரம் 1, 143,000 பவுணுக உயர்ந்தது. 1825-ம் ஆண்டின் வியாபாரத் திலும் இது இரண்டு மடங்குக்கும் கூட என்றே சொல்ல வேண்டும்.
வங்கி வசதிகள் இருந்திருந்தால் இலங்கையில் வியாபாரம் மேலும் விருத்தியடைந்திருக்கலாம். பணம் போட்டுவைத் திருப்பதற்கு இடமில்லை. கழிவு, கடன் முதலியன பெற்றுக் கொள்ளவும் ஒரு ஸ்தாபனமில்லை. வங்கி வேலை முழுவதும் சென்னை மூலமாகவோ, பம்பாய் மூலமாகவோ தான் செய்ய வேண்டியிருந்தது. ஆனல் 1841-ல் ஒரு லண்டன் வியாபாரி அந்நிய நாட்டுப் பணத்தைக்கொண்டு இலங்கை வங்கியென ஒரு வங்கியைத் திறந்தான். 1843-ல் தோட்டப் பகுதிகளில் ஒரு கிளையை ஸ்தாபிக்க எண்ணிக் கண்டியில் ஒரு கிளை வங்கி நிறுவப் பட்டது. தோட்டக்காரரை உற்சாகப்படுத்துவதற்காக அர சாங்கம் வங்கிக்கு ஆதரவு கொடுத்தது. வரையறுக்கப்பட்ட உத்தரவாதமுள்ள வங்கியாயிருக்க அனுமதிக்கப்பட்டது இந்த உரிமை ஒரு வருடத்துக்கு முன்பாகவே இலங்கை விவசாயிகள் கூட்டு வர்த்தகக் கொம்பெனி ' என்ற ஒரு ஸ்தாபனத்துக்கு மறுக்கப்பட்டது. கடதாசிநோட்டுப் பணத்தை முத்திரை ச் செலவில்லாமல் அடித்து விநியோ கஞ்செய்யவும் வங்கிக்கு அனு மதிகொடுக்கப்பட்டது. ஆனல் இது சனங்களுக்கு உண்மை யான ஒரு பாதுகாப்பளிக்கவில்லை யென்பது உண்மையே. இலங் கையில் முன்னெருபோதும் இல்லாத முறையில் பணம் பிரிப்பதற் கும் இந்த வங்கி வசதிகளை அளித்தது. இதல்ை கோப்பி வியா

தோட்டங்களைத் திறத்தல் 87
பார விருத்திக்கு எவ்வளவு தூரம் உதவிசெய்ததோ அது பாலவே அதன் வீழ்ச்சிக்கும் காரணமாயிருந்தது. 1851- ம் ஆண்டில் பம்பாய் ஒரியன்டல் வங்கி இந்த வங்கியை எடுத்துக் கொள்ளா விட்டால் அது முறிந்துபோயிருக்கும். ஓரியன் டல் வங்கி 1842-ல் வெஸ்டர்ண் பாங்க் ஒப் இந்தியா என்ற தனது பழைய பெயருடன் கொழும்பிலும் கண்டியிலும் கிளைகளே உண் டாக்கிற்று.
இராசகாரியத் தொழில்முறை ஒழிக்கப்பட்டதால் தோட் டங்களுக்குத் தொழிலாளர் தேவைப்படும் கஷ்டம் நீங்கவில்லை. அரசாங்கத்துக்கு அடிமை வேலைசெய்யும் பொறுப்பிலிருந்து சனங்கள் விடுதலையடைந்தால் அவரவர் தங்கள் தங்கள் போக்குக்கு ஏற்ற தொழில்களைச் செய்துகொள்ளப் பார்ப்பார் கள். அதனல் தோட்ட வேலைகட்குத் தொழிலாளர் கிடைக்கக் சுடுமெனப் பலர் எண்ணியிருந்தனர். ஆனல் அவ்வாறு ஒன்றும் நிகழவில்லை. சிங்கள மக்கள் கிராமத்திலேயே இருந்துகொண் டார்கள். தேசவழமைப்படியும், ரோமன்-டச்சுச் சட்டப்படி யும் பெற்றேர் சொத்தில் ஒரு பகுதி பிள்ளைகளுக்குச் சேர வேண்டியிருந்தது. இராசகாரியமுறை ஒழிந்ததும் விடுதலை யடைந்த கிராமவாசி தன்னுடைய கமத்தைப் பார்த்துக் கொண்டே காலங் கழித்தான். தோட்டங்களுக்குப்போய் வேலைசெய்ய அவன் விரும்பவில்லை. மேலும் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் கூலிக்கு வேலைசெய்வதை இழிவாகக் கருதினர் கள். எனவே தோட்ட முதலாளிகள் போதிய தொழிலாளரைப் பெறமுடியாதிருந்தது. கீழைச் சிங்களர் தோட்டங்களில் தச்சு Gaia), மேசன் வேலைகளிலீடுபட்டனர். தி ரா ம வா சி க ள் காட்டைவெட்டி நாடாக்கிப் புதிய வயல்களைத் திறப்பதிலீடு பட்டனர். தோட்டங்களை அடுத்திருந்தவர்களில் ஒரு சிலரே தொழிலாளராக வேலைசெய்தனர்.
1803-ல் கண்டிச் சண்டையின் போதும், 1818-ல் ஊவாக் கலகத்தின்போதும் தொழிலாளர் பி ர ச் னே முற்ருகத் தீ ர வழிபிறந்தது. 1839-ல் தென்னிந்தியாவிலிருந்து 2432 தொழி லாளர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்கள். ஆனல் அது போதாதிருந்தபடியால் சில தோட்டக்காரர் உயர்ந்த சம்பளம் கொடுத்துத் தொழிலாளரை அழைத்தார்கள். தொழிலாள ருக்குச் சம்பளம் பணமாகக் கொடுக்கப்பட்டது. சேவை மானிய முறைப்பிரகாரம் நிலம் வழங்கப்படவில்லை. எஜ மானுக்கு அடிமை வேலைசெய்யவேண்டிய நிர்ப்பந்தமிருக்க வில்லை. தாமே விரும்பி ஒரு உடன்படிக்கை செய்தாலன்றி அம்மாதிரியான நிர்ப்பந்த மொன்றிருக்கவில்லை. சில தோட்டங் களி ல் உயர்ந்த சம்பளம் கொடுக்கிருர்களென்றறிந்ததும் பல

Page 51
88 ヘ இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
தொழிலாளர் அப்படியான தோட்டங்களுக்குச் சென்றர்கள். தோட்ட முதலாளி இம்மாதிரி ஒடும் தொழிலாளர் மீது சிவில் வழக்குத் தொடரலாம். ஆனல் கோட்டு வழக்கு அதிக கால மெடுக்கும். காலமெடுத்தாலும் திருப்திகரமான முடிவு கிடையாது. தோட்ட முதலாளிகளுக்குப் பல துறையில் உதவி புரிந்துவந்த அரசாங்கம் 1841-ல் ஒரு சட்டத்தைச் செய்தது. அதன்படி ஒப்பந்தத்தை மீறும் தொழிலாளர் மீது கோட்டில் கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாமென இருந்தது. ஆனல் நிலைமை விரைவில் மாற்றமடைந்தது, அதிக கஷ்டமின்றித் தோட்ட முதலாளிகள் தமது வேலைகளைச் செய்யக்கூடியதா யிற்று. இவ்வாறு நாட்டின் செல்வ அபிவிருத்திக்குத் தோட்டங் கள் பெரிதும் துணைபுரிந்த போதிலும், வெளிநாட்டு முதலையும் வெளிநாட்டுத் தொழிலாளரையுங் கொண்டே நடைபெற்று வந்தன.
2. போக்குவரத்து
பார்ண்ஸ் ஆரம்பித்துவைத்த ரோட்டுத்திறக்கும் கொள்கை இக்காலத்திலும் தொடர்ந்து அனுசரிக்கப்பட்டது. புதிய நீரா விக்கப்பல்களைக் கட்டி மத்தியதரைக்கடல் மார்க்கத்தை மறு படியும் உபயோகிக்கத் துவங்கியதன் பயனுக இங்கிலாந்துக்கும் இலங்கைக்குமிடையில் விரைவான போக்குவரத்து ஏற்பட்டது.
ரோட்டுப்போடுவிக்கும் விடயத்தில் பார்ண்ஸுக்கு இருந்த வசதிகள் ஹோட்டனுக்கு இருக்கவில்லை. இராசகாரியத் தொழில்முறை ஒழிக் கப்பட்டது. ரோட்டுப்போடுவதிலும் பாலங்கட்டுவதிலும் இதுகாறும் ராணுவத்தினரும் பங்கெடுத்து வந்தார்கள். ஆனல் கோல்புறுாக்கின் சிபார்சுப்படி ராணுவம் அந்த வேலையைக் கைவிடவேண்டி ஏற்பட்டது. சிவில் என்ஜினீர் பகுதி நில அளவைப்பகுதியாரின் மூலம் ஹோட்டன் இந்த வேலைகளைச் செய்வித்து வந்தார். இப்பகுதிகள் 1833-ல் சீர் திருத்தப்பட்டன. ஒவ்வொரு மாகாணத்திலுள்ள தலைநகரங் களையும் இணைத்து ரோட்டுப்போடவேண்டுமென பார்ண்ஸ் ஆரம்பித்த திட்டத்தை ஹோட்டன் 1837-ல் ஓய்வுபெறுவ தற்கு முன் முடித்தார்.
கொழும்பு-கம்பளை வீதி 1833-ல் யாழ்ப்பாணம், பருத்தித் துறை வரை விஸ்தரிக்கப்பட்டது. ஒரு கிளை வடகிழக்கே கந்தளாய் வரை தொடுக்கப்பட்டது. ஏற்கனவே திருக்கோண மலையிலிருந்து கந்தளாய்க்கு ரோட்டுப் போட்டிருந்தது. முத்துக் குளிப்பு நிலையமாயிருந்த அரிப்பிலிருந்து அனுராதபுரம் வரை ஒரு வீதி அமைக்கப்பட்டது. இன்னென்று புத் தளத்திலிருந்து குரு ஞக்கலுக்கு ஓடிற்று. கண்டி-பதுளை ருேட்டையும் ஹோட்

தோட்டங்களைத் திறத்தல் 89
டன்தான் போடுவித்தார். மஹா ஒயா, பெலிஹ9ல்ஒயா, குருந்துஒயா, உமாஒயா ஆகியவற்றின் குறுக்கே ஹாரகம தெல்தெனியா ஆகிய ஊர்களுக்கூடாக இந்த ரோட்டு அமை கப்பட்டது. 1827-ல் ஆரம்பிக்கப்பட்ட கண்டி-நுவரேலியா, ரோட்டையும் இவர்தான்போட்டு முடித்தார் எனவே திருக்கோ ணமலை, பருத்தித்துறை, புத்தளம், நுவரெலியா, பதுளை, கா லி, மாத்த  ைற, தங்காலை, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களெல்லாம் ரோட்டுமார்க்கமாகக் கொழும் புட ன் இணைக்கப்பட்டன.
ராணுவத்தின் உபயோகத்தை முன்னிட்டும் நிர்வாகவசதி களை முன்னிட்டுமே இதுவரை இந்தரோட்டுகளெல்லாம் அமைக் கப்பட்டன. ஆனல் ஹோட்டன் போன பின்னர் இலங்கை அரசாங்கத்தின் ரோட்டுக்கொள்கை மாற்றமடைந்தது. நாட் டின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்காக, தோட்டங் களைத்திறந்து விவசாய முயற்சியிலீடுபடுவோருக்கு பார்ண்ஸ் காலத்தில் அரசாங்கம் விசேஷ சலுகை காட்டிவந்தது என முன்னரே குறிப்பிட்டோம். தோட்டச் சொந்தக்காரர் தமது விளைபொருள்களைக் கண்டிக்கு கொண்டுவருவதற்கு ரோட்டுகள் போட்டுகொடுக்கவேண்டியது அவசியமென இப்பொழுது அர சாங்கம் தீர்மானித்தது. உயர்தர அரசாங்க உத்தியோகத்தர் பலர், தோட்ட முதலாளிகளாயுமிருந்தபடியால் தங்கள் தங்கள் தோட்டங்களுக்கு ரோட்டுப் போடுவதையே அவர்கள் முதற் கவனித்தார்கள். விரைவில் தங்கள் தோட்டங்களுக்கும் ரோட் டுப் போட்டுவிடுவார்கள் என மற்றத்தோட்ட முதலாளிகள் காத்திருந்தனர். 1837 துவக்கம் 1842 வரை தோட்ட முத லாளிகளுக்கு ரோட்டுகள் மிக அவசியமாய் தேவைப்பட்ட காலத்தில் அரசாங்கத்துக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படவே புதிய ரோட்டுகள் போடுவதை மாத்திரமல்ல பழைய ரோட்டு களை அழியவிடாமல் பரிபாலிப்பதையே கைவிடவேண்டி ஏற் பட்டது. முத்துக்குளிப்பினல் பயனேற்படாததும், இலங்கையி லுள்ள இராணுவத்தைப் பரிபாலிப்பதற்கு இலங்கை அரசாங் கம் வருடாவருடம் 24,000 பவுண் கொடுக்கவேண்டுமென ஏகாதிபத்திய அரசாங்கம் கட்டளையிட்டதுமே இதற்குக் 5rt D'G00T 10.
ஆனல் 1840-ல் நிலைமை மாறிற்று. முடிக்குரிய நிலங்களை
விற்பனை செய்ததாலும் வேறு காரணங்களாலும் அரசாங்க வருமானம் அதிகரித்தது. புதிய ரோட்டுகள் அமைக்கப்பட் 67. பழையவ்ை திருத்தப்பட்டன. இவ்வாறு மொத்தம் 1247 மைல் நீளமுள்ள ரோட்டுகளை அரசாங்கம் அமைத்தது. நீர் கொழும்பிலிருந்து வியாங்கொடைக்கு ஒரு ரோட்டுப் போடப்பட்டது. இதனல் நீர்கொழும்பு கண்டியுடன் இணைக் கப்பட்டது. குருணுக்கலையில் ஜோர்ஜ் பிரேசர் என்பவரின்

Page 52
9 O இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
கரும்புத்தோட்டம் வரை நீர்கொழும்பிலிருந்து ஒரு ரோட்டு அமைக்கப்பட்டது. ஹொரணைக்கு 15 மைல் கிழக்கே மகாவக் ஒயாவுக்குச் சமீபத்திலுள்ள கரும்புத் தோட்டத்துக்குச் செல் லக் கூடிய முறையில் பாணந்துறையிலிருந்து நம்பபானைக்கு ஒரு ரோட்டு அமைக்கப்பட்டது. -
பழைய கண்டிப்பாதையை ஒட்டிக் கொழும்பிலிருந்து அவிசா வளைக்கும் ரூவான்வளைக்கும் ஒரு ரோட்டு அமைக்கப்பட்டது. இந்த ரோ ட் டு எட்டியாந்தோட்டைவரை விஸ்தரிக்கப்பட் -ģ- அவிசாவளையிலிருந்து இரத்தினபுரிவரை மற் ருெ ரு ருேட்டைப் போட்டார்கள். இந்த ரோட்டை அரசாங்கமும் ஒரு பிரிட்டிஷ் கம்பெனியுமாகச் சேர்ந்து ரக்வானை வரை விஸ்தரித்தன. மேலும் இரண்டு ரோட்டுகள் அமைக்கப்பட் டன. ஒன்று களுத்துறையிலிருந்து மத்துகாமத்துக்கூடாக அகலவத்தை வரை சென்றது. மற்றது காலியிலிருந்து பத்தகமை வரை போயிற்று. கொழும்பு நுவரெலியா ரோட்டு பதுளை வரை விஸ்தரிக்கப்பட்டது. அங்கிருந்து அல்ல என்ற இடம் வரை மேலும் அந்த ரோட்டை விஸ்தரித்தார்கள். அங்கிருந்து அம்பாந்தோட்டைவரை வல்லவா யாவுக்கூடாக ஒரு பாதை அமைக்கப்பட்டது.
இந்த ரோட்டுகளிற் பெரும்பாலானவை தற்போதிருக்கும் மேல் மாகாணம், சபரகம மாகாணம் ஆகிய பிரதேசங்களி லேயே அமைந்திருக்கின்றன. இந்தப் பகுதிகளைச் சீர்திருத்து வ தந் கு இவை பெரிது ம் துணைபுரிந்தன. ஆனல் பல ரோட்டுகள் வண்டிப்பாதைகள் போலவே அமைக்கப்பட்டன. காட்டை வெட்டிப் பாதையைப்போட்டு மண்ணைக்கொட்டி விட்டார்கள். இந்த நிலைமையை மாற்றி ரோட்டுகளைச் சீர் திருத்தவும் இக்காலத்தில் முயற்சியெடுத்துக் கொள்ளப்பட்டது. 1841-ல் கொழும்பு-கண்டி ரோட்டுக்கும், அம்பேபுச-குருணுகலை ரோட்டின் ஒரு பகுதிக்கும் கல்லுப்போடப்பட்டது. இதனல் பெரிய மாற்றங்களேற்பட்டன. கொழும்பிலிருந்து கண்டிக்குப் போய்த் திரும்ப 30 அல்லது 40 நாட்களெடுத்த மாட்டுவண்டி இப்பொழுது ஆறு அல்லது எட்டு நாட்களில் போய்த்திரும்பக் கூடியதாயிற்று.
கோப்பி விய்ாபாரத்தில் மந்தம் ஏற்படவே அரசாங்க வருமானம் குறைந்தபடியா ல் 1847-ல் ரோட்டு வேலைகள் குறைக்கப்பட்டன. ரோட்டுகளின் முக்கியத்துவத்தை அரசாங் கம் இப்பொழுது உணரத் துவங்கிற்று. இதற்காக 1832-ல் கைவிடப்பட்ட இராசகாரிய முறையைக் கூட உயிர்ப்பிக்க முயன்றது. 1848-ல் டொரிங்டன் பிரபு (1847-1850) ரோட்டுச்

இலங்கைப் படம்
(a fru (Bas oïT 14-1832 -r-s- ܚ ܝ ܥܝ ܡܢ 1850-ܙܶ18 8TITL(8a56i7)
ത്ര ഔഷ ീ
)
あ*イ போக்சோகே- ブ ހށ\ށ" .Y به سهیم الله عیلامی )G ܠ 7 ܔܼ حمد معه عرك معه وعوهة 'S வான் கிங் -V - − N ہی نے تحے آ39 به شهرک فوره عین نگر_معنی ہوr = صم
1. n- S 6) و ne{ క్షశ4-EN N N N 'is's 1 ܢܠ a a foara V
GD ህr}፰ngu፡ጣ
G பெலிஹல்ேஒயா
டு குருநதுஒயா GD e ucsua
حرصهم مع 003 مساف معتميمينييلسن

Page 53
92 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
சட்டம் என ஒரு சட்டத்தை நிறைவேற்றினர். இச்சட்டப்படி ஒவ்வொரு ஆணும் ரோட்டு வேலைக்காக வருடத்தில் ஆறு நாளைக்கு வேலை செய்ய வேண்டும் அல்லது மூன்று சிலின் வரி கட்டவேண்டும்.
15-வது நூற்ருண்டில் துருக்கியின் வெற்றிகளுக்குப்பின்னர் மத்தியதரைக் கடல் மார்கமாகக் கீழ்த்திசை நாடுகளுக்குப் பிரயானஞ்செய்வதை நிறுத்திக்கொண்டனர். நன்னம்பிக்கை முனையைச் சுற்றியே ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வரத் துவங்கி ஞர்கள். ஆனல் நீராவிக்கப்பல்கள் வந்ததும் 19-ம் நூற்ருண் டில் அந்தப் பழைய பாதையைப் பயன்படுத்தத் துவங்கினர்கள் ஆரம்பத்தில் நீரா விக்கப்பல்கள் இன்றைய கப்பல்களைப்போலப் பெருஞ் சமுத்திரத்தில் வெகுதூரம் போ கக்கூடியனவாக இருக்க வில்லை. அவைகள் அடிக்கடி நிலக்கரி எடுத்துக்கொள்வதுடன் இயந்திரங்களைச் சரிபார்க்கவேண்டியதற்கு ஒய்வு பெற வும் வேண்டியிருந்தன. எனவே அவை வந்தவுடன் பாய்க்கப்பல்கள் நின்றுவிடல்லை. அவையும் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிப் போய்க்கொண்டேவந்தன. நீராவிக்கப்பல்கள் நிலம் சூழ்ந்த மத்தியத் தரைக்கடலிலும் செங்கடலிலும் ஓடத் துவங்கின. இங் கிலாந்திலிருந்து பிரயாணஞ்செய்வோர் லிஸ்பனுக்குவந்து அங் கிருந்து மோல்டா அலெக்ஸான்ட்ரியா ஆகிய இடங்களுக்குப் போவார்கள். அலெக்ஸான்ட்ரியாவிலிருந்து தரைமார்க்கமாக சுவேஸைக் கடந்து ஏ டனு க் கு க் கப்பலெடுத்து பம்பாய் போவார்கள்.
1841-ல் கொழும்பு-கண்டி ரோட்டுக்குக் கல்லுப்போட்டார் கள். அதே வருடத்தில் பம்பாய்க்கும் காலிக்குமிடையில் கப்பல்போக்குவரத்து ஏற்பட்டது. கடிதங்கள் வரத் துவங்கின. முதல் மாதமொருமுறையும் பின்னர் இரண்டுவாரத்துக் கொரு முறையுமாகக் கடிதங்கள் பம்பாயிலிருந்து கொண்டுவரப்பட் டன காலியிலிருந்து லண்டனுக்கு அனுப்பும் கடிதம் நன்னம் பிக்கைமுனையைச் சுற்றிப் போவதானுல் 9 மாதமோ ஒருவருடமோ செல்லும். மத்தியதரைக்கடல் மார்க்கமாக 10 வாரத்தில் போய்ச் சேர்ந்துவிடும் -
1838-ம் ஆண்டு துவக்கம் காலியில் கொண்டுவந்திறக்கும் கடிதங்களைக் கோச்சு மூலம் கொழும்புக்குக் கொண்டுவந்தனர். இவ்விரு நகரங்களுக்கு மிடையில் தினமும் கோச்சு ஒடிக் கொண்டேயிருக்கும். * கொழும்பு ஒப் ஸ் ர் வர் " எ ன் ற பத்திரிகை தனக்கு அந்நிய நாடுகளிலிருந்துவரும் கடிதங்கள் இந்த மார்க்கமாகக் காலியிலிருந்து விரைவில் வருவதில்லை யென அதிருப்தி கொண்டு, புருக்கள்மூலம் கடிதங்களை எடுத்து வரச்செய்தது. இது 1850-ல் ஆரம்பிக்கப்பட்டது.

தோட்டங்களைத் திறத்தல் 93
ரோட்டுகளினல் உள்ளூர் நகரங்களிடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது தோட்டங்களின் அபிவிருத்திக்கும் வியா பார வளர்ச்சிக்கும் இவை உதவிபுரிந்தன. மத்தியதரைக்கடற் பாதையை நீராவிக்கப்பல்கள் உபயோகிக்க ஆரம்பிக்கவே இலங்கைக்கும் பிரிட்டனுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ـــــــــ۔
3. நிர்வாக மாற்றங்கள்
கோல்புறுாக், கமெரன் ஆகியோரின் சீர்திருத்தங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பும், நிர்வாகத் திறமையை மறுபடியும் ஏற் படுத்துவதற்கும் விசேஷமாகச் சிவில் சேவிவின் திறமையைப் பழைய நிலை மைக்கு மாற்றுவதற்கும் அரசாங்கம் செய்த முயற்சிகளுமே இக் காலப்பகுதியின் முக்கியமான சம்பவங் களாகும்.
கோல்புறுாக்கின் சீர்திருத்தத் திட்டங்கள் சர். வில்லியம் ஹோட்டன் தேசாதிபதி யாயிருக்கும் பொழுது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன. சர். வில்லியம் சிவில்சேவிளலில் சேரும் உத்தியோகத்தருக்கு விதிக்கப்பட்ட சம்பளம் முதலியன குறை வானவையென்றும் புதிய இந்த நிபந்தனைகளின்படி உயர்ந்த குடும்பத்து வாலிபர் சிவில்சேவிஸை விரும்பமாட்டார்களென் றும் குடியேற்றநாட்டு மந்திரிக்கு எடுத்துக்காட்டினர். அவரு டைய முயற்சியின் பயணுக 1837-ல் இளம் உத்தியோகத்தரின் சம்பளங்கள் வெகுவாக உயர்த்தப்பட்டன. அடுத்த தேசாதி பதியாய் வந்த சர். ஸ்டுவர்ட் மக்கென்ஸி 1839-ல் புதிதாக உத்தி யோகத் தி ல் சே ரு வோ ருக்கு 6 மாதம் துவங்கி 9 மாதம் பயிற்சியளிக்கப்பட வேண்டுமென்றும் அதன்பின்னரே உத்தியோகத்தில் நியமிக்கவேண்டுமென்றுங் கட்டளையிட்டார். 1833-ல் இந்த நிபந்தனை அகற்றப்பட்டிருந்தபடியால் அதன் பின் உத்தியோகமேற்ற பிரிட்டிஷ் உத்தியோகத்தர்கள் உள்ளூர் பாஷையையோ நிலைமையையோ அறியுமுன் நிர்வாகம் நடத்தத் துவங்கினர்கள்.
சிவில்சேவிஸ் சீர்கெட்டுவந்தது. இம்மாதிரியான மாற்றம் அதைத் தடுக்கவில்லை. உத்தியோக உயர்வு காலப்போக்கைப் பொறுத்ததா யிருந்தபடியால் சிங்களம் தமிழ் ஆகிய பாஷை களைப் படிக்கவோ தங்களை வேறு வகையில் விசேஷமாக முன் னேற்றமடையச் செய்யவோ அவர்கள் கவலை கொள்ளவில்லை. அன்றியும் பலர் தங்கள் பாதிநேரத்தை வேறு தொழில்களிற் கழித்தார்கள். சிவில்சேவிஸ்காரர் வியாபாரஞ் செய்யக் கூடா தென்ற நிபந்தனையிருந்ததன்றி விவசாயத்திலீடுபடக் கூடா தென்ற கட்டுப்பாடிருக்கவில்லை. நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காகத் தோட்டங்களை உண்டாக்குமாறு அரசாங்க

Page 54
94 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
மும் உற்சாகப்படுத்தவே, தங்கள் சொற்ப வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் பலர் தோட்டங்களை உண்டாக்கி ஞர்கள். தங்கள் நேரத்தில் பெரும்பகுதியைத் தோட்டவேலை யிலேயே செலவுபண்ணியும் வந்தார்கள்.
மக்கென்ஸ்லிக்குப்பின் சர். கொலின் காமெல் (1841-1847) தேசாதிபதியானர். சிவில் சேவிஸ்காரர் இப்படிச் சீர்குலைந்து போவதை அவர் தடுக்க வேண்டுமென்று எண்ணி மேலும் சீர்திருத்தம் செய்யவேண்டுமெனக் குடியேற்றநாட்டுமந்திரிக்கு இடித்துரைத்தார். அவருடைய விருப்பத்துக்கிணங்கி ஸ்டான் பிரபு 1845-ல் சிவில்சேவிஸைச் சீர்திருத்தினர். சிவில்சேவிஸ் காரர் தமது தோட்டவேலைகளை விட்டுவிட்டு உத்தியோகங்களை மாத்திரம் கவனிக்கவேண்டுமெனக் கட்டளையிட்டார். பென் ஷன் கொடுக்கப்பட வேண்டுமெனவும் அதுவும் ஐம்பத்தைந்து வயதில் கொடுபடவேண்டுமெனவும் விதித்தார். உத்தியோகத் தர்கள் முன்னெல்லாம் பன்னிரண்டு வருட சேவையின் பின் ஒய்வெடுத்துக்கொண்டு பென்ஷன் வாங்குவதை நிறுத்தவே இவ்வாறு கட்டளைபண்ணப்பட்டது. சிவில் சேவிஸ்காரரெல் லாம் இங்கிலாந்தில் ஒரு பிரவேச பரீட்சையில் சித்தியடைய வேண்டுமெனவும் இலங்கையில் பயிற்சிபெறுங் கால எல்லைக்குள் சிங்களத்திலும் தமிழிலும் தேர்ச்சிபெற வேண்டுமெனவும் விதித்தார். சிவில்சேவிஸ் பதவிகளை அதிகரித்ததுடன் உத்தி யோக உயர்வை அவர்கள் நிச்சயமாகப் பெறுவதற்காக சிவில் சேவிஸ்குக்கு வெளியேயிருந்து உயர்தரபதவிகளுக்கு உத்தியோ கத்தரை நியமிக்கக்கூடாதெனவும் கட்டளைபண்ணினர். சேவி ளவில் உயர்ந்த திறமை எப்பொழுதும் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்து திறமையைப் பார்த்துத் தான் உத்தியோக உயர்வு கொடுக்கவேண்டுமேயன்றி கால எல்லையைப் பார்த்துக் கொடுக் கக்கூடாதெனவும் விதித்தார்.
நாட்டை ஐந்து மாகாணங்களாகப் பிரித்ததனுல் அரசாங்க ஏஜெண்டுகளின் தொகை குறைக்கப்பட்டது. அதனல் சிக்கன மும் ஏற்படுத்தப்பட்டது. கண்டியைச் சேர்ந்த தாழ்ந்த பிர தேசங்களை மலைநாட்டிலிருந்து பிரித்ததும் பிரிட்டிஷாருடைய கொள்கைக்கு அனுகூலமாகவேயிருந்தது. ஏனெனில் கண்டி வாசிகளின் தேசீய பலம் அதனல் பிரிக்கப்பட்டது. ஆனல் அரசியல் நிர்வாகத்தைத் திறம்பட நடத்தமுடியாமலிருந்தது. ஏனென்ருல் அரசாங்க ஏஜெண்டுகள் தங்கள் ஸ்தானத்திலி ருந்துகொண்டு புறப்பகுதிகளையும் செவ்வனே மேற்பார்வை "செய்ய முடியாமலிருந்தது. இந்தக் காரணத்தினல் 1845-ல் புத்தளத்தைத் தலைநகராகக்கொண்ட வடமேல்மாகாணம் என ஒரு புதிய மாகாணம் அமைக்கப்பட்டது. சிலாபம் புத்தளம்,

தோட்டங்களைத் திறத்தல் 95
ஒரு காலத்தில் கண்டிராச்சியத்துடன் இணைந்திருந்த ஏழு கோருளை ஆகியவை மேல் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாகாணமாக்கப்பட்டன. குருணக்கலிலிருந்த உதவி ஏஜெண்டின் ஸ்தானம் மாற்றப்படவில்லை. ஆனல் சிலாபத்திலி ருந்த ஸ்தானத்தை அகற்றிவிட்டு புத்தளத்திலிருந்தே நிர்வாகம் நடத்தப்பட்டது.
ரோட்டுகள் போட்டப்பட்டதனல் வேறுபல மாற்றங்களு முண்டாயின. முக்கியமாக இராணுவக் கார ண ங் களை க் கொண்டே ஏற்படுத்தப்பட்ட பல உதவி அரசாங்க ஏஜெண்டு ஸ்தானங்கள் நீக்கப்பட்டன. மேல் மாகாணத்தில் நீர் கொழும்பு களுத்துறை, ரூவான்விளை, போட்கிங் ஆகிய இடங்களிலிருந்த உதவி ஏஜெண்டு ஸ்தானங்களும், தென் மாகாணத்தில் அலுத் பொத்தையிலிருந்ததும், மத்திய மாகாணத்திலிருந்த மாத்தளை, மடவலத்தன (கல கேதரை) ஆகிய இடங்களிலிருந்தவையும் ஒழிக்கப்பட்டன. கொழும்பு கண்டி ரோட்டிலுள்ள கேகாலை யிலும், கண்டி பதுளை ரோட்டிலுள்ள நுவரெலியிலும், கண்டி யாழ்ப்பாணம் ரோட்டிலுள்ள அனுராதபுரியிலும் புதிய உதவி ஏஜெண்டு தானங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1837-ல் கீழ், மாகாணத்துடன் சேர்க்கப்பட்டிருந்த விந்தனையைப் பிரித்து, மத்திய மாகாணத்தி னெருபகுதியாயிருந்த பதுளைப்பகுதியுடன் இணைத்தார்கள். பதுளையிலிருந்து ரோட்டுமார்க்கமாக விந்தனைக் குப்போவது சுலபமாயிருந்தது. அதுபோலவே கொழும்பி லிருந்து இரத்தினபுரிக்குப் போகவும் நல்ல ரோட்டு மார்க்க மிருந்தது. தென்மாகாணத்தைச் சேர்ந்த இரத்தினபுரியும் 1845-ல் மேல் மாகாணத்தோடு இணைக்கப்பட்டது. நீதிபரி பாலன விஷயத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. சட்டம் எல்லாருக்கும் பொது என்ற கொள்கை மக்கள் எல்லாரும் சம உரிமை உடையவர்கள் என்ற எண்ணத்தைப் படிப்படியாய் வளரச் செய்தது. குடிகளெல்லாரும் சம உரிமை உடையவர் க. ளென அரசாங்கம் கருதி நடத்திவந்தபோதிலும், முன்னே விசேஷ சலுகைகளை அனுபவித்துவந்தவர்கள் புதிய இக்கொள் கைக்கு ஏற்றவாறு தங்களைச் சித்தப்படுத்திக்கொள்ள உடனே முடியவில்லை. எனவே " உயர்ந்த வேளாள வகுப்பைச் சேர்ந்தவர்கள், தாழ்ந்த வேளாளருடன் சமமாக ஜூரிச் சபைகளிலிருக்க மறுத்துவிட்டார்கள். இந்த வாதத்தில் மற்ற வர்களும் பங்குபற்றினர்கள். பழங்காலத்தில் சனங்கள் தங்க ளுடைய சாதி விதிவசத்தால் கிடைத்ததென எண்ணி அடுத்த பிறவிகளில் அதை மாற்றி விடலாமென எண்ணித் திருப்தி யோடிருந்தார்கள். 1803-ல் அம்பக ஹப்பிட்டியா என்பவர் பெளத்த சங்கத்தில் எவ்வித சாதிப்பாகுபாடு மிருக்கக் கூடர்

Page 55
96 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
தென வாதாடினர். ஆங்கில நூலறிவினலும் புதிய பொரு ளாதார நிலைமையினலும் மாற்றமடைந்தவர்கள் சாதியினுல் உயர்வு தாழ்வு சாதிப்பது தகா தென்றும் எடுத்துக்காட்டினர். இதன் பயனுக 1843-ல் ஜூரிகளை நியமிக்கும் விஷயத்தில் சாதிப் பாகுபாடுகாட்டும் முறை அறவே ஒழிக்கப்பட்டது.
4. சட்டசபை
இக்காலப்பகுதியில் சட்டசபை அமைப்பில் அதிக மாற்றம் ஏற்படவில்லை. 1833-ல் கோல்புறுரக்கின் சிபார் சுப்படி தாபிக் கப்பட்ட சட்டசபை முதல் முதலாகக் கூடியபொழுது உத்தி யோக 7 அங்கத்தினரே தானம் வகித்தார்கள். வியாபார விவசாய சமூகத்தைச் சேர்ந்த ஆங்கில அறிவுள்ள சிங்களரோ தமிழரோ சட்டசபையில் தானம் வகிக்க விரும்பாததால் ஹோட்டன் தேசாதிபதி முதலில் உத்தியோகப்பற்றற்ற அங்கத் தவர்களை நியமிக்க முடியாமற்போய்விட்டது. கடைசியாக 1835-ல் அவர் ஒரு அலுவல் செய்தார். அரசாங்கத் துவிபாஷ கராயிருந்த சிங்கள முதலியாரையுந் தமிழ் முதலியாரையும் அவர்களுடைய சம்பளத்தையே பென்ஷனுகக்கொடுத்து வேலை யிலிருந்து ஒய்வுபெறச் செய்து அவர்களைச் சட்டசபையில் உத்தி யோகப்பற்றற்ற அங்கத்தவராக நியமித்தார். அவர்களோடு ஒரு பரங்கிக்காரரும் நியமிக்கப்பட்டார். பிரித்தானிய வர்த்த கரிடையிலும் தகுதிவாய்ந்த அங்கத்தவரில்லாதபடியால் 1837 வரை ஒருவரும் நியமிக்கப்படவில்லை. பிரித்தானிய வர்த்தகரா யிருந்தவர்கள் அந்நிய வியாபாரக் கொம்பெனிகளின் பிரதிநிதி களாக நாட்டில் எவ்வித நலவுரிமைகளுமின்றிச் சொந்தச் சொத்தின்றி யிருந்தார்கள்.
பிரித்தானிய முற்போக்காளர்கள் அரசியல் முறைகளைப் பற்றி இக்காலத்தில் கொண்டிருந்த கொள்கைகள் இலங்கையி லுள்ளவர்களையும் பாதித்தன. அதனுல் சட்டசபையில் உத்தி யோகப்பற்ற அங்கத்தினர் அதிகம் பேர் இருக்க வேண்டுமென் றும், அரசாங்கத்தின் செலவு விடயங்களைக் கட்டுப்படுத்த அதற்கு அதிகாரமிருக்க வேண்டுமென்றும் ஆரம்பத்திலிருந்தே பொதுசனங்கள் விரும்பினர்கள். நிர்வாகசபை தனது செய்கை கட்குக் குடியேற்ற நாட்டு மந்திரிக்கல்ல, சட்டசபைகளுக்கே பொறுப்புச் சொல்லக்கூடியதாயிருக்க வேண்டுமென சில ஐரோ ப்பிய வியாபாரிகளும் பரங்கிகளும் ஆலோசனை கூறினர்கள். அங்கத்தவரை நியமனஞ்செய்வதற்குப் பதிலாகத் தேர்ந் தெடுக்க வேண்டுமென்றும், தேர்தலில் கல்வியில்லாத பர்மரர் கூட வாக்குக்கொடுக்க அனுமதிக்கப்படவேண்டுமென்றும் அவர் கள் யோசனை கூறினர். ரோட்டுகளைப் போடும் விஷயத்தில்

தோட்டங்களைத் திறத்தல் 97
அரசாங்கம் போதிய சிரத்தை எடுக்கவில்லையென ஐரோப்பியர்* குறைகூறினர். மேலே குறிப்பிட்டவிதமான ஒரு சட்டசபையை ஏற்படுத்தினல் நிர்வாகசபையை நெருக்கித் தங்களுடைய விருப் பங்களை நிறைவேற்றிக்கொள்ளலாமென அவர்கள் எண்ணினர் கள். ஆங்கிலக்கல்விபெற்ற பறங்கிகள் அரசாங்கத்திலிருந்த பல குமாஸ்தா உத்தியோகங்களைப் பெற்றுக்கொண்டார்கள். திறமையுள்ள பலர் சட்டத்துறையில் உத்தியோகம் புரிந்தார் கள். பிரிட்டிஷ் அரசியல் முறைகளை மற்றத் தேசங்களிலும் கைக்கொள்ளலாமெனவும், பிரிட்டிஷ் பிரசைகளென்ற முறை யில் சுயாட்சியையோ அல்லது அந்தமுறையில் முன்னேறக் கூடிய ஒரு ஆட்சியையோ பெற்றுக்கொள்வது தங்கள் உரிமை யெனவும் அவர்கள் நம்பினர்கள். வேறுசில காரணங்களை முன்னிட்டும் அவர்கள் அரசாங்கத்தை எதிர்த்தார்கள். 1833-ல் சிவில் சேவிலில் இலங்கையரெல்லாருக்கும் இடமுண்டென அர சாங்கம் கட்டளையிட்டபோதிலும் ஐரோப்பியரே உத்தியோகங் களுக்கு நியமிக்கப்பட்டனர். பறங்கிகளை நீதித்துறையில் உயர்ந்த ஸ்தானங்களுக்கு நியமிப்பதைக்கூட ஐரோப்பியர் எதிர்த்தார்கள்.
இந்தக் கோரிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்க வில்லை. பெற்றே ரைப்போல நாட்டைப் பரிபாலிக்கும் ஆட்சி முறையே இலங்கைக்கு ஏற்றதென்றும் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஆட்சி வழங்கப்பட்டால் அது நாட்டிலே எவ்வித நிரந்தரமான நலவுரிமையுமில்லாத ஐரோப்பிய வியாபாரி களுக்கன்றி நிரந்தரமான நாட்டுமக்களுக்கு எவ்வித நன்மையும் பயவாதென்றும் இலங்கை அரசாங்கம் எடுத்துக்காட்டிற்று. ஏகாதிபத்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கம் சொன்ன நியாயங்களை ஒப்புக்கொண்டு சட்டசபைச் சீர்திருத்தக் கோரிக் கையை நிராகரித்தது. ஆணுல் ஒரு சலுகையை மாத்திரம் அனுமதித்தது. அரசாங்க உத்தியோகத்தருக்குக் கொடுக்கும் சம்பளம் முதலிய சில செலவுகள் நிரந்தரமானவை. அவற்றில் தலையிட இக்காலத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எவ்வித உரிமையுமிருக்கவில்லை. நிரந்தரமான செலவுகளைக் கொடுத்த பின் எஞ்சியுள்ள வருமானத்தை அது விரும்பியபடி பகிர்ந்து செலவுக்கு ஒதுக்கலாம். இந்த உரிமையை ஏகாதிபத்திய அரசாங்கம் 1840-ல் சட்டசபையிடம் கொடுத்தது.
* பிரிட்டிஷாரல்லாத சிலர் இலங்கையிலிருந்தபடியால் ஐரோப்பியர் என்ற பதத்தை உபயோகிக்கவேண்டி யிருக்கிறது.

Page 56
S8 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
5. கல் வி
இக்கால எல்லை முடியும் வரை கல்வி விஷயத்தில் கோல்புறுாக் கின் சிபார்சுகளே நடைமுறையிலிருந்துவந்தன. 1832-ல் சிங்கள, தமிழ் அரசாங்க பாடசாலைகள் ஒழிக்கப்பட்டன. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, சிலாபம் ஆகிய இடங்களில் ஐந்து ஆங்கில பாடசாலைகளை அரசாங்கம் ஆரம் பித்தது. இப்பொழுது ரோயல் கல்லூரி என்று வழங்கப்பெறும் கொழும்பு அகடமி 1836-ல் உயர்தர பாடசாலையாக்கப்பட்டது. மற்றப் பாடசாலைகளுக்கும் ஆசிரியர்களை உதவவேண்டுமென உத்தேசிக்கப்பட்டது. ஆங்கில பாடசாலைகளின் தொகை அதி கரித்தது. 1848-ல் 60 பாடசாலைகள் இருந்தன. இவற்றில் மொத்தம் 2714 மாணவர் கல்வி பயின்றனர். கண்டி, கொழும்பு, காலி ஆகிய இடங்களில் ஆண்களுக்கென மூன்று மத்திய பாடசாலைகளிருந்தன. * அவ்வாறே பெண்களுக்கும் மூன்று உயர்தர பாடசாலைகளுண்டாயின. பெண்களுக்கென அமைந்த 16 வேறு பாடசாலைகளும் இந்த அறுபதில் அடங்கியிருந்தன.
1832-ல் இப்பாடசாலைகள் அரசாங்கத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரிகள் பொறுப்பில் விடப்பட்டன. பாடசாலை களின் மானேஜராக இலங்கையில் உள்ள இங்கிலாந்துத் திருச் சபைத் தலைவர் நியமிக்கப்பட்டார். அரசாங்கப் பாடசாலை -களின் வேலையை மேற்பார்வை செய்வதற்காக கோல்புறூக்கின் சிபார்சுப்படி 1834-ல் முதலாவது பாடசாலை கமிஷன் ஏற்படுத் தப்பட்டது. டச்சுக்காரர் ஏற்கனவே இதேபோன்ற ஒரு தாபனத்தை நிறுவியிருந்தார்கள். இந்தக்கமிஷன் கொழும் பில் வேலைநடத்திற்று. காலி, யாழ்ப்பாணம், கண்டி, திருக் கோணமலை ஆகிய நகரங்களில் காரியசபைகள் ஏற்படுத்த பட்டன. அவை கமிஷனுக்கு உதவிபுரிந்துவந்தன. இங்கிலாந் துத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரிகளும், அரசாங்க உத்தியோ கத்தர்களுமே இந்தக் கமிஷனிலும், காரியசபையிலும் அங்கத் தினராயிருந்தனர்.
இந்தப் பாடசாலைக் கமிஷனின் முயற்சிகள் சித்திபெறவில்லை. இங்கிலாந்தில் கிறிஸ்தவ சமயக் கட்சிகள் கல்வி முற்போக்குக்கு எவ்வளவு மு ட் டு க் கட்டைகளை உண்டாக்கினவோ அதே போலவே இலங்கையிலும் உண்டாக்கின. பாடசாலைகளை நடத் திவந்த அங்கிலிக்கன் கிறிஸ்தவர்களிடையிலும் ஏனைய கிறிஸ் தவக் கட்சிகளிடையிலும் கருத்துவேற்றுமை உண்டானது.
* ‘விவசாயம் முதலிய பயன்தரக்கூடிய முயற்சிகளில் மாணவர்பயிற்சி பெறுமாறு தொழிற்கல்விக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடனே’ யே இவை அமைக்கப்பட்டன. ஆனல் இந்த நோக்கங்களை விரைவில் மறந்துவிட்டார்கள்.

தோட்டங்களைத் திறத்தல் 99
இதன் பயணுகப் பாடசாலைக் கமிஷனை 1814-ல் ஒழித்துவிட்டு மதகுருமாரைக் குறைவாகவும் பொதுசனங்களை அதிகமாகவுங் கொண்ட மத்தியபாடசாலைக் கமிஷனென ஒன்று நிறுவப் பட்டது. இதிலே உத்தியோகப்பற்றற்ற சாதாரண மக்களும், புரட்டஸ்தாந்திய கட்சியில் உள்ள வேறு பிரிவினரும் ரோமன் கத்தோலிக்கப் பிரதிநிதிகளும் இடம்பெற்றனர்.
கல்விவிருத்திக்கான அரசாங்க உதவி நன்கொடைப்பணம் இங்கிலாந்தில் இதுகாறும் சமயச் சங்கங்களின் பொறுப் பிலேயே இருந்துவந்தது. அவர்கள் அப்பணத்தைப் பாடசாலை களுக்கு விநியோ கஞ்செய்து வந்தார்கள். 1839-ல் அப்பணத்தை அரசாங்கம் பிரிவிகவுன்ஸிலின் கமிட்டி ஒன்றன் வசம் கொடுத்தது. வித்தியா தரிசிகள் பாடசாலைகளைப் பார்வையிட்டு மாணவர் களைப் பரீட்சித்து அறிவிப்பார்கள். அந்த அறிவித்தலின் பிரகாரம் உதவி நன்கொடைப்பணம் தரமறிந்து விநியோகஞ் செய்யப்பட்டது. இந்த முறையை அனுசரிப்பதால் பாடசாலை களின் கல்வி நிலையை உயர்த்தலாமென எண்ணினர்கள். இங் கிலாந்தில், அனுசரிக்கப்பட்டுவந்த முறைகள் இலங்கையிலும் பின்பற்றப்பட்டன. புதிதாய் ஏற்படுத்திய கமிஷனின் காரிய தரிசி பாடசாலை வித்தியா தரிசியாக நியமிக்கப்பட்டார். பரீட்சை நடத்துவதற்கு அவருக்கு உதவிபுரிவதற்காக மேற் பார்வைசெய்யும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர். பொதுவாக நல்ல நிலைமையிலில்லாத பாடசாலைகளைச் சீர் திருத்துவதற்காக அரசாங்கம் மேலும் சில நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டது. 1843-லும் 1844-லும் ஸ்தாபிக்கப்பட்ட ஆண்களுக்கான மத்திய பாடசாலைகளில் ஆசிரியரைப் பயிற்று மாறு கட்டளையிடப்பட்டது. 1846-ல் கிறிஸ்தவ பாதிரிமாரின் வேண்டுகோளுக்கிணங்கச் சிங்கள ஆசிரிய பயிற்சிப் பாடசாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
அரசாங்கப் பாடசாலைகளெல்லாம் அங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்தவையாயிருந்தன. எல்லாப் பாடசாலைகளிலும் கிறித் தவ சமயப் போதனை அளிக்கப்பட்டுவந்தது. மாணவர் சமய பாடங்களைப் படிக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தமில்லாவிட்டா லும் அவர்கள் அந்த வகுப்புகளுக்குப் போகாமல் விடுவதில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆங்கிலப் பாடசாலைகளைப் பாதிரி மார் திறம்பட நடத்திவந்தபடியால் ஆங்கிலக்கல்வி பயிற்றும் பொறுப்பை அரசாங்கம் அவர்களிடத்தேவிட்டு உதவி நன் கொடை அளித்துவந்தது. தகுதி வாய்ந்த ஏனைய ஆங்கில பாட சாலை கட்கும் அரசாங்கம் உதவி அளித்தது. கொழும்பிலே ஒரு ரோமன் கத்தோலிக்க ஆங்கிலப் பாடசாலையை ஸ்தாபிப்பதற்கு
401-E

Page 57
1 OO இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
அரசாங்கம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு 1839-ல் உதவிநன்கொடை அளித்தது.
சிங்களச் சிறுவருக்கும் தமிழ்ச் சிறுவருக்கும் கல்விகற்பிப்ப தற்கு ஆங்கில பாஷை சிறந்த சாதனமல்லவென்பதை பல வருட அனுபவத்தின் பயணுக விசாரணைச்சபை கண்டது. ஆங் கிலப் பாடசாலைகளில் உள்ள சிங்களத் தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்ப்பாஷையிலேயே கல்வியை ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன. இதேசமயத்தில் சிங்கள தமிழ்ப் பாடசாலைகளை நடத்திவந்த கிறிஸ்தவ பாதிரிகள் தங்கள் வேலையை விஸ்தரிக்க முடியாதெனக் கண்டார்கள்.
1847-ல் வித்தியா விசாரணைச்சபை கோல்புறுரக்கின் சிபார் சைக் கைவிட்டுச் சிங்கள, தமிழ்ப் பாடசாலைகளை ஆரம்பித்தது. பெண்களுக்கும் ஏற்ற கல்வி புகட்டினுலன்றிப் பெரும் பயனடைய முடியாதெனவும் அது உணர்ந்து இக் குறையை நீக்கவும் வழி தேடிற்று. ஆனல் கோப்பி வியாபாரத்தில் மந்தம் ஏற்பட்டதும் கல்வி விருத்திக்கும் முற்றுப்புள்ளியிடப்பட்டது. கல்விக்கென் ஒதுக்கப்பட்ட பணம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. Ꮏ 1 ᎧᎧ பாடசாலைகள் கைவிடப்பட்டன.
கோல்புறுாக்கின் சிபார்சுகளை அனுசரித்ததால் உண்டான கல்விக் கொள்கையினல் திட்டமான சில நன்மைகளேற்பட்டன. கிராமங்களிலிருந்து பாடசாலைகள் பட்டினங்களுக்கு மாறின. பட்டினங்களில் வசித்த பறங்கிகளுக்கு இது காறும் கல்விகற் பதற்கான வசதிகளேற்படவில்லை. அநேகமாய் எல்லாரும் புரட்டஸ்தாந்திய வேதத்தைச் சேர்ந்தவர்களானபடியால் இந்த ஆங்கில பாடசாலைகளில் சேருவதற்கு அவர்களுக்கு எவ் வித ஆட்சேபமுமிருக்கவில்லை. எனவே சரி அரைவாசி மாணவர் பறங்கிகளாகவே காணப்பட்டனர். ஆங்கிலக் கல்வியின் பயணுக அரசாங்க உத்தியோகங்களைப் பெற்றனர். கமெரன் நீதி பரிபாலனம் சம்பந்தமாகச் செய்த சிபார்சுகளின் பயனப் ஏற் பட்ட நீதிமன்ற உத்தியோகங்களில் அவர்கள் பங்குபற்றினர். சிலர் நியாயவாதிகளாய்த் தொழில் புரிந்தார்கள். புரட்டஸ். தாந்திய மதத்தின் மற்றப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஆங்கில பாடசாலைகளில் கல்விபயின்ருர்கள். ஆனல் ரோமன் கத் தோலிக்கர் ஒருசிலரே இப்பாடசாலைக்குப் போயினர். ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார் மேற்கு இந்தியாவைச் சேர்ந்த கொங்கணத்திலிருந்து வந்தபடியால் அவர்களுக்குப் போதிய ஆங்கில அறிவு இருக்கவில்லை. அதனல் ஆங்கிலப் பாடசாலை களை நடத்தும் ஆற்றலை அவர்கள் பெறவில்லை. ரோமன் கத்தோலிக்கர் பாப்பாண்டவருக்கு விண்ணப்பஞ்செய்யவே

தோட்டங்களைத் திறத்தல் OI
அவர் சில ஐரோப்பியப்பாதிரிகளை அனுப்பினர். அவர்கள்தாம் 1839-ல் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினர்கள்.
பதினைந்தாவது நூற்ருண்டில் ஐரோப்பாவிலே கிரேக்க பாஷையைப் படித்ததனல் எவ்வளவு நன்மைகளேற்பட்டனவோ அவ்வாறே இலங்கையிலும் இந்த ஆங்கிலக் கல்வி பல துறையில் பெரும் பயனைக் கொடுக்கக்கூடியதாயிருந்தது. சிங்களத்திலும் தமிழிலும் இலக்கியங்களிருந்தன. முக்கியமாக இந்தியாவிலே தோன்றிய உயர்தர இலக்கியங்கள் பாளியிலும் சமஸ்கிருதத்திலுமிருந்தன. இவை பெரும்பாலும் சமயச்சார் புடையனவாயும், மறுமை வாழ்வைப்பற்றியே அதிகம் பேசு வனவாயுமிருந்தன. ஆரம்ப புத்த சமயம் சில விஷயங்களில் நியாயவிசாரணைக் குகந்ததாயும் மனிதர் தமது பகுத்தறிவைப் பயன்படுத்தித் தாமாகவே விடயங்களை ஆராய்ச்சிசெய்ய உகந்ததாயும் இருந்தது. ஆனல் பின்னர் வந்த நூல்கள் மத்திய காலச் சமூக அமைப்பை ஏற்றுக் கொள்வதுடன் அதிகாரவர்க்கத்தின் பிரமாணமே பிரமாணமாயிருக்க வேண்டு மென்பதையும் அழுத்தமாகக் கூறின. ஆனல் ஆங்கில நூல்கள் ஐரோப்பிய நாகரிகத்தின் அம்சமான பரந்த முற்போக்கான எண்ணங்களைப் புகட்டின. இவ்வெண்ணங்களினல் தூண்டப் பட்டு ஆங்கில மாணவர்கள் பழைய பழக்க வழக்கங்களையும் முதியோர் கைக்கொள்ளும் சம்பிரதாயங்களையும் கைவிட்டுப் புதிய வழிகளில் கருமங்களைச் செய்ய முயன்ருர்கள். ஐரோப்பி யக் கலைகளையும் விஞ்ஞான முடிபுகளையும் ஆங்கிலத்தின் மூலம் அறியத் தலைப்பட்டார்கள். உலகின் மற்றப் பாகங்களில் என்ன நடைபெறுகிறதென்பதை இவ்வாறு அறிய முற்பட்டனர். ஆங்கில சரித்திரத்தைப் படித்த தனல் புதிய அரசியல் முறைகளைப்பற்றி அறிந்தார்கள். இங்கிலாந்தில் மத்தியவகுப் பார் அரசாங்க நிர்வாகத்தை எவ்வாறு கைப்பற்றினரென் பதைப் படித்துணர்ந்தார்கள். நாளடைவில் இலங்கையிலும் அத்தகைய அரசியல் சீர்திருத்தங்களைத் தாபிக்கவேண்டுமெனக் கோரினர்கள்.
அறிவைப் பரப்புவதில் பத்திரிகைகள் செய்த உதவிய்ை மறந்துவிடக்கூடாது. பிரித்தானிய அரசாட்சியின் ஆரம்ப காலத்தில் அரசாங்க கஸெட் என ஒரே ஒரு பத்திரிகையிருந் தது. பத்திரிகையொன்று அவசியமென்பதைப் பலர் உணர்ந் திருந்ததாகத் தெரியவில்லை. உள்ளூர் போக்குவரத்து வசதிகள் வாய்ப்பாயில்லை. அத்துடன் வெளியூர்ப் போக்குவரத்துகளும் பத்திரிகை வளர்ச்சிக்கு அனுகூலமாயிருக்கவில்லை. அன்றியும் தேசாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அதனல்

Page 58
I O2 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
அரசாங்கத்தைக் கண்டித்தெழுதுவது கஷ்டமாயிருந்தது. ஆனல் புதிய ரோட்டுகள் போடப்பட்டதினலும் கோல்புறுாக் கின் சிபார்சின் பிரகாரம் தேசாதிபதியின் விசேட அதிகாரங்கள் ஒழிக்கப்பட்டதுடன் வேறுபல சீர்திருத்தங்களும் ஏற்பட் தனலும் இந்த நிலைமை மாறிற்று.
கல்வி வளர்ச்சிக்குப் பத்திரிகை சிறந்த சாதனமெனக் கொண்டு ஹோட்டன் தேசாதிபதி அரசாங்க கஸெட்டை” * கொழும்பு சஞ்சிகை’ என மாற்றிப் பொதுசனங்கள் தங்க ளுடைய அபிப்பிராயங்களை எடுத்துக்காட்டி விஷயங்கள் எழுதலா மெனக்கூறினர். அரசாங்கம் ஒரு பத்திரிகை நடத்துவதைக் குடியேற்றநாட்டுக் காரியாலயம் விரும்பாதபடியால் 1833-ல் இந்தப்பத்திரிகை நிறுத்தப்பட்டது. அதற்குப்பதிலாக ஐரோப் பிய வர்த்தகர்கள் ஒப்ஸர்வர் ' என்ற பெயருடன் 1833-ல் ஒரு பத்திரிகையைத் துவங்கினர்கள். அது கொழும்பு ஒப்ஸர்வர் ' என மாற்றப்பட்டது. இது ஒரு வாரத் தாளாக நடத்தப்பட்டது. துவங்கின காலந்தொட்டே இந்தப்பத்திரிகை L. I Got) முற்போக்கான மாற்றங்களை எடுத்துக்கூறியதுடன் அரசாங் கத்தையும் பின்னிற்காமல் கண்டித்தது. தணியதிகாரம் நடத் தும் ஒரு அரசாங்கத்துக்குச் சுதந்திரமான ஒரு பத்திரிகையின் போக்கு உகந்ததன்று. ஆனல் அதைத் தடுப்பதற்குத் தேசாதிபதி எவ்வித நடவடிக்கையையும் எடுத்துக்கொள்ளவில்லை. அபிப் பிராயங்களை மனிதர் தாராளமாகச் சொல்லவேண்டும். பேச்சுச் சுதந்திரமும் எண்ணச் சுதந்திரமும் அவசியமென்ற கொள்கை கள் இக்காலத்தில் இங்கிலாந்தில் பரவிவந்தன. இந்தியாவில் பத்திரிகைகள் மீது போட்ட தணிக்கையை 1835-ல் எடுத்துவிட் டார்கள். மேலும் அரசாங்கத்தைக் கண்டித்தவர்கள் முற்றிலும் பிரிட்டிஷ்காரர். அவர்கள் அரசியல் அமைப்பு மாறவேண்டு மென்று விரும்பினர்களேயன்றி பிரித்தானிய ஆட்சி ஒழிந்துவிட வேண்டுமென்று விரும்பவில்லை. ஒப்ஸர் வருக்கு எதிராக * கொழும்பு குரொணிக்கிள்' என்ற பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. அரசாங்க உத்தியோகத்தர்கள் அதை ஆதரித்தனர். இப்புதிய பத்திரிகை தனது பெயரை 1838-ல் ஹெரால்டு” என்று
மாற்றியது. 1846-ல் சிலோன் டைம்ஸ் " எனப் பெயர் மாற்றப்பட்டது. அதே வருடத்தில் சில பிரித்தானிய வர்த்த கர்கள் சிலோன் எக்ஸாமினர் ” என்ருெரு பத்திரிகையை
ஆரம்பித்தார்கள். பத்திரிகைகள் ஐரோப்பிய வர்த்தகர்களின தும் தோட்டத் துரைமாரதும் நலவுரிமைகளைக் காப்பாற்ற வாதாடின. மேலும் உத்தியோகப்பற்றற்ற அரசாங்க உத்தியோ கத்தர் அரசாங்கத்திடம் கேட்கும் கோரிக்கைகளை ஆதரித்து அவர்களுக்குப் பக்கபலமாயுமிருந்தன.

தோட்டங்களைத் திறத்தல் 103
புதினப்பத்திரிகைகளும், அரசாங்கமும் மாத்திரம் அச்சு யந்திரங்களை வைத்திருக்கவில்லை. வெஸ்லியன் மிஷனும் சேர்ச் மிஷனும் அச்சுயந்திரங்களை தாபித்தன. பாப்டிஸ்ட் மிஷன் கண்டியில் ஒரு அச்சியந்திர சாலையை ஏற்படுத்திற்று. G) - மாகாணத்தில் நாலு அச்சியந்திர சாலைகளை அமெரிக்க மிஷன் ஏற்படுத்திற்று. இவை பல துண்டுப்பிரசுரங்களையும், சஞ்சிகை களையும், புத்தகங்களையும் அச்சடித்து வெளியிட்டன. 1841-ல் * உதய தாரகை என்ற வாரப்பத்திரிகையை அமெரிக்கமிஷன் ஆரம்பித்தது. மிஷன் பாடசாலைகளில் படித்துத் தேறியவர் களுக்கு வாசிப்பதற்கு இவை பல விஷயங்களை உதவின. மற்றப் பத்திரிகைகளோடு இவையும் கல்விவிருத்தியிற் பெருகிய துணை புரிந்தன.
6. புத்த சமயமும் இந்து சமயமும்
இலங்கை அரசாங்கம் பெளத்த சமயத்துடன் தொடர்பு வைத்திருப்பதை கோல்புறுாக்கு அனுமதியாவிட்டாலும் அவர் அவ்விடயத்தில் அதிகம் மாற்றங்களைச் செய்யவில்லை. கண்டி மாகாணங்களில் பெளத்த ஆதனங்களைக் காப்பாற்றிவருவதை அரசாங்கம் தொடர்ந்து நடத்திற்று. கபடகமத்திலிருந்து கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியைத் பெளத்த திருவிழாக்கள் சிலவற்றை நடத்துவதற்கு உதவினர்கள். இராசகாரிய முறை ஒழிந்ததும் கபடகமமும் விலையாயிற்று. எனவே முன்னர் செய் துள்ள வாக்குத்தத் தங்களுக்குப் பங்கம் வராமல் ஹோட்டன் அந்த விழாக்களின் செலவுக்குப் பணம் கொடுத்துவந்தார். பெளத்த சமயம் பொய்ச்சமயமென்றும் கிரித்தவ சமயத்தை யொழிய வேறெச் சமயத்தையும் அரசாங்கம் ஆதரிக்கக் கூடா தென்றும் இங்கிலாந்திலிருந்த கிறித்தவப் பாதிரிகளும் அவர் களுக்கிருந்த செல்வாக்குள்ள சிநேகிதர்களும் நம்பினர்கள். இதற்குக் குடியேற்றநாட்டு மந்திரியும் ஆதரவளித்தார். இதன் பயணுக அரசாங்கம் பெளத்த சமயத்தோடு வைத்திருந்த தொடர்பைக் கைவிட்டுவிட்டது. இராசகாரியமுறை ஒழிந் ததனுல் பாதிக்கப்பட்டுவந்த பெளத்த மதச் சொத்துக்கள் இத ணுல் மேலும் பராமரிப்பின்றிக்கிடந்தன.
சமய விஷயங்களில் பட்ச பாதங் காட்டக்கூடாதென எண்ணிய மக்கென்ஸி தேசாதிபதி முதல் முதல் இம்முறையில் நட வடிக்கை எடுத்தார். விகாரங்கள் தேவாலயங்களுக்கு குருக்கள் மாரையும் அதிபதிகளையும் நியமிக்கும் விடயத்தில் தான் அவற் றுக்கு உடந்தையாயிருக்க முடியாதென்று உத்தியோகப் பத்திரங் களில் அவ்வித நியமனங்களை உறுதிப்படுத்தும் கைச்சாத்தை இடுவதற்கு அவர் மறுத்தார். இதனல் பிக்குகளும் நிலாமை

Page 59
1 04 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
களும் சட்டபூர்வமான அதிகாரமில்லாதபடியால் விகாரங் களின் சொத்துக்களைப் பரிபாலிக்க முடியாதிருந்தனர். விகாரங் களைச் சேர்ந்த நிலங்களிற் குடியிருப்போரிடமிருந்து அவர்கள் சட்டபூர்வமாகச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்விக்க அதிகாரமில்லாதவர்களாயு மிருந்தார்கள். மேலும் பிக்குகள் விகாரங்களில் இருக்கும் உரிமையையும் குடிகள் விகார நிலங் களில் வசிக்கும் உரிமையையுங்கூட மக்கென்ஸியின் செய்கை பாதிக்கக்கூடியதாயிருந்தது. ஒரு விகாரத்தில் இருக்கும் பிக்குவை நீதிநியாயமின்றி ஒரு திசாவை அகற்றிவிட்டால் அந்த பிக்கு சட்டபூர்வமாக நியமிக்கப்பட்டாரென ருசுப்படுத்த முடியா மையால் வழக்குத்தொடரவும் இயலாதிருக்கவேண்டியேற்படும். இதனல் சில நியமன விஷயங்களில் மக்கென்ஸியும் கமெலும் ருசுப்பத்திரங்களில் கையெழுத்திடவேண்டிய நிர்ப்பந்தமேற் lull-gil.
புத்த சமயத்துடன் எவ்வித தொடர்பையும் அரசாங்கம் வைத்திருக்கக் கூடாதென்பதை கமெலும், உத்தியோகஸ்தரும், சட்டசபை அங்கத்தவர்களும் எதிர்த்தார்கள். 1847-ல் பிக்கு களையும், நிலாமைகளையும் நியமிக்க வேண்டாமெனவும், தந்த தாதுவை மகாநாயகதேரர் வசமும் தியவதன நிலாமை வசமும் ஒப்படைக்குமாறும் அதன் விழா சம்பந்தமான செலவுகளை அரசாங்கம் வருடாவருடம் கொடுப்பதற்குப்பதிலாக வருட மொன்றுக்கு 350 பவுண் வருமானமுள்ள நிலங்களை மானிய மாகக் கொடுத்துவிடலாமெனவும் குடியேற்றநாட்டுமந்திரி டொரிங்டனுக்குக் கட்டளையிட்டார்.
அரசாங்கத்துக்குப்பதிலாக ஒரு தாபனத்தை ஏற்படுத்து வதே பிரச்சினை. அரசாங்கம் நடத்திவந்த கடமைகளை அதிகாரி கள் குழுவொன்றை நியமித்து அதனிடம் ஒப்படைத்துவிடலா மெனக் கமெல் ஆலோசனை கூறினர். சங்கத்தைச்சேராத பொது சனங்கள் தங்கள் விஷயங்களில், பிரதானமாக சங்க ஒழுங்குகள் சம்பந்தமான விஷயங்களில் தலையிடுவதை பிக்குகள் விரும்ப வில்லை. ஆதலால் அந்த ஆலோசனையை அவர்கள் நிராகரித் தார்கள். அதிகாரிகளின் ஆதிக்கம் இதனல் கூடிவிடுமென்று எண்ணிக் குடியேற்ற நாட்டுமந்திரியும் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அரசாங்கத்துக்கு இருக்கும் தொடர்பு இந்த ஆலோசனையை நிறைவேற்றுவதால் முற்ருக நீங்கியபாடில்லை யெனவும் அவர் கருதினர். பெளத்த ஆலயங் களுக்குரிய நிலங்களைப் பெளத்த சங்கமே கையேற்றுப் பரிபா விக்கலாமென அவர் மற்ருெரு யோசனையைக்கூறினர். ஆனல் கிறிஸ்தவ திருச்சபைபோலப் பெளத்த சங்கம் செவ்வனே அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை அவர் உணரவில்லை.

தோட்டங்களைத் திறத்தல் 105
கண்டிப்பகுதியில் பல பிக்குகள் விகாரத்து நிலங்களைப் பரி பாலித்து வந்தபோதிலும், உலக வியவகாரங்களில் சங்கம் ஈடுபடக்கூடாதென்பது சங்கத்து விதிகளில் ஒன்று. அதையும் அவர் தெரிந்துகொள்ளவில்லை.
கிறிஸ்தவ மிஷன்கள் போதிய பணம், ஆள் அணி ஆகிய வற்றைப் பெற்றிருந்தபடியால் கல்லூரிகளைத் தாபித்தன. புத்த சமயத்துக்கோ இந்து சமயத்துக்கோ இம்மாதிரியான வசதிகளி ருக்கவில்லை. மதமாற்றம் செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டுவந்த புரட்டஸ்தாந்திய பாடசாலைகளுக் குப் பெளத்த பிள்ளைகளும் இந்துப்பிள்ளைகளும் போனர்கள். புத்த சமயமும் இந்து சமயமும் இக்காலத்தில் தமது செல் வாக்கை இழந்தன. பெளத்த பாடசாலைகளில் ஏராளமான பெளத்த சிறுவர் பயின்று வந்தது உண்மையே. ஆனல் விகாரங்களில் பெளத்த பிக்குகளால் பயிற்றப்பட்ட கல்வி சிங்கள பாஷை மூலம் கற்பிக்கப்பட்டது. அன்றியும் அரசாங்க பாடசாலைகளிலும் மிஷன் பாடசாலைகளிலும் நடைபெற்ற கல்வி முறை போலச் செவ்வனே வகுத்து ஒழுங்கு செய்யப்படவு மில்லை. தங்களுடைய மத நம்பிக்கைகள் எவ்வாறக இருந்த போதிலும் பல சிங்களரும் தமிழருந் தாங்கள் கிறிஸ்தவரென்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொண்டார்கள். பெளத்தர் களும், இந்துக்களும் கிறிஸ்தவ மிஷனாரிமாரை எதிர்க்காது விட்டுவிடவில்லை. ஆனல் அவர்களுடைய முயற்சிகளைத் தடை செய்வதற்கு இந்துக்களிடமாவது பெளத்தர்களிடமாவது போதிய ஆளணிகளிருக்கவில்லை.
7. பாட்டாளிமக்களும் 1848-ல் நடந்த கலவரங்களும் 1843-ல் அச்சடிக்கப்பட்ட முத்துக்குளிப்பின் விபரம் ’ என்ற நூலில் அதன் ஆசிரியர் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் பின்வருமாறு எழுதினர் :- சுதேசிகளின் பிரத்தியேகமான நன்மையை முன் னிட்டே நாங்கள் ஆட்சி நடத்துகிருே மென்று சொல்லிக்கொள் ளுகிருேம். ஆனல் ஐரோப்பிய வந்தார் வரத்தார்களின் பிரத்தி யேகமான நன்மையை முன்னிட்டே விவசாயத்தை விருத்தி செய்கிருேம்.
கோல்புறுக்கும், கமெரனும் செய்த சீர்திருத்த அறிக்கை களின் பயணுய் நாடுமுழுவதும் ஒரே நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது. சட்டசபையும் நிர்வாகசபையும் ஏற்படுத்தப் பட்டன : நீதிபரிபாலன விஷயங்களில் சீர்திருத்தங்கள் ஏற் படுத்தப்பட்டன. பிரித்தானிய மூலதனம் இலங்கையில் பல தொழில்களில் முதலீடு செய்யப்பட்டது. தோட்டங்கள் தோன் றின. வியாபாரம் விருத்தியடைந்தது. வருமானம் உயர்ந்தது

Page 60
I 06 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
வருடாவருடம் உண்டான வரவு செலவு விழுக்காடு தீர்ந்தது. போக்குவரத்துச் சாதனங்கள் நாடெங்கும் பெருகின. ஆங் கிலக்கல்வி பரவிற்று. பத்திரிகைகள் வெளியாயின. ஆனல் இந்த முன்னேற்றங்களினல் பாட்டாளிமக்களுக்கு எவ்வித நன் மையுமுண்டாகவில்லை. புதிய தாபனங்கள் வளர்ந்து வரவே அவர்களுடைய பழைய முறைகள் மறைந்தன. நிலைமை மோசமாயிற்று. சட்டசபையில் ஸ்தானம் வகித்துவந்த உத் யோகப்பற்றற்ற ஐரோப்பிய அங்கத்தினர் தங்கள் வியாபாரம், தோட்டம் முதலியவற்றை அபிவிருத்தி செய்வதில் கருத்துக் கொண்டு அரசாங்கத்தை நெருக்கித் தம் நலவுரிமைகளையே விசேடமாகக் கவனித்தார்கள். பத்திரிகைகளும் ஒருபுறத்தில் அவர்களுடைய விடயங்களைப்பற்றியே எடுத்துப்பேசி ஆதர வளித்துவந்தன. ஆனல் பாட்டாளி மக்களின் குறைநிறைகளை எடுத்துக்காட்டவோ அவர்களுக்காகப் பேசவோ ஒருவருமில்லை.
முற்காலத்தில் குடியானவர்களின் விவசாயத்தையும், நீர்ப் பரசன வசதிகளையும் அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் 'மிக ஊக்கங் காட்டிற்று. பேர்டோலாக்கி கூறியதுபோல் நெற் சாகுபடியே முக்கியமான விவசாயமாயிருந்துவந்தது. ஆனல் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. பிரித்தானிய முதலாளி கள் தோட்டங்களைத் திறந்தார்கள். அவர்களுக்கான வசதி களைச் செய்துகொடுப்பதில் அரசாங்கம் முனைந்துநின்றது. ஏனெனில் தோட்டங்கள் மூலம் அதிகமான வருமானங் கிடைக் குமென அரசாங்கம் எண்ணியிருந்தது. முன்னெல்லாம் நெல் விளைந்த வரண்ட பிரதேசங்களை அரசாங்கம் கைவிட்டது. ஒரே ஒரு மாகாணத்தின் நெற்சாகுபடியில் மாத்திரம் சிரத்தை யெடுத்து அங்கேயுள்ள நீர்ப்பாசன வசதிகளை அதிகரிக்க முயன்றது.
மலைநாட்டிலிருந்து தென்கிழக்குக்கரை வரையுள்ள பிர தேசத்தில் மூன்றிலொருபகுதிக்கு நீர் உதவிவந்த நீர்நிலையத் தில் 1837-ல் கிராம நீரணையும் ஊரு பொக்கை நீரணையும் உடைந்துபோயின. ஆனல் அவற்றைத் திருத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவில்லை. அனுராதபுரப்பகுதியில் நோயி ஞலும், மழையின்மையாலும் சனங்கள் மடிகிருர்களென்றும், சனங்கள் மிகக் கேவலமான நிலைமையிலிருக்கிறர்களென்றும் 1833-ல் ஸ்கின்னர் என்பவர் அறிவித்தார். அப்பொழுது பணமில்லாதபடியால் அரசாங்கம் அதைப்பற்றி ஒன்றுஞ்செய்ய வில்லை. ஆனல் பனம் வந்த பின்னர் கூட அவர்களுடைய நிலை மையைச் சீர்ப்படுத்த அரசாங்கம் ஒருவிதமான நடவடிக்கை யையும் எடுத்துக்கொள்ளவில்லை.

தோட்டங்களைத் திறத்தல் 107
1855-ல் பதுளையில் உதவி அரசாங்க ஏஜெண்டாக யிருந்த பெய்லி என்பவர் ஊவாவின் நிலைமை மிக மோசமாயிருப்ப தாகவும் கலகம் நடந்த காலத்தில் உடைந்த அணைக்கட்டுகள் இதுவரை பழுதுபார்க்கப்படாமலிருக்கின்றனவென்றும் வார்ட் தேசாதிபதிக்கு அறிவித்தார். பெரிய கால்வாய்களெல்லாம் உடைந்து அழிந்துபோயின. எஞ்சிக்கிடந்த பெரிய அணைக் கட்டுகளைக்கொண்டே அவற்றைக் குறி கண்டுபிடிக்கக்கூடியதா யிருந்தது. விசாலமான பிரதேசங்களுக்கு நீர்பாய்ச்சிவந்த ஆறேழு பெரிய குளங்கள் மிகப் பழுதடைந்த நிலைமையிலிருந் தன. அவற்றை அவசரமாகத் திருப்தியற்றமுறையில் பழுது பார்த்துவிட்டார்கள். இருந்த ஒரு கல்லணைகூட உடைந்து போயிருந்தது. மதகுகள் கிடையா. விவசாயிகள் நீர் வேண்டிய போது விரும்பிய இடத்தில் அணையை வெட்டி நீரைப்பாய்ச்சி ஞர்கள். மழையின்மையினுலும் குளங்கள் தூர்ந்துபோனமை யாலும் குடிசனத்தொகையும் குறைந்துகொண்டுவந்தது. உயி ரோடு மிஞ்சிய குடிசனங்களும் வறுமையும் நோயும் உடையவர் களாய் வேலைசெய்ய விருப்பமில்லாதவர்களாய்ச் சோம்பேறி களாய்ப் போயினர். அதனல் ஒரு சிறிய குளத்துக்கு அணை கட்டு வதுகூட அவர்களுக்கு முடியாத காரியமாயிற்று.
இராசகாரியமுறையை ஒழிக்காமலிருந்தால் வரண்ட பிர தேசத்தில் இம்மாதிரி மோசமான நிலைமை ஏற்படிருக்க மா ட் டாது. கிராமச் சங்கங்கள் பழையகாலந்தொட்டே விவசாயம் சம்பந்தமான ஒவ்வொரு சிறு கருமங்களையும் மேற்பார்வை செய்து வந்தன. நீர்ப்பாசனவேலைகள் அவ்வாறே கவனிக்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு பகுதி பிரித்துக் கொடுக்கப்பட்டது. அதை அவன் அழியவிடாது பாதுகாத்து
வந்தான். தனது பங்கை அலட்சியம் பண்ணினவனுக்கும் கிராம வழக்கத்துக்கு மாருக நடப்பவனுக்கும் தண்டனை விதிக்கப் j[. நியாயத்தலங்கள் ஏற்படுத்தப்பட்டதும் கிராமச்ق سL-L لL
சங்கங்கள் தமது அதிகாரத்தை இழந்தன. சனங்களின் ஒத்து ழைப்பைப் பெறுவதற்குக் காரணமாயிருந்த இராசகாரியமுறை ஒழிக்கப்பட்டதால் அவர்கள் அந்த ஒத்துழைப்பைப் பெற முடி யாமலுமிருந்தது. இதனல் அவர்கள் கோட்டில் வழக்குத் தொடர்ந்தார்கள். தேச வழமையையும், விவசாயம் சம்பந்த மாகக் கிராமங்களில் அனுசரிக்கப்பட்டுவரும் வழக்கங்களையுமறி யாத நீதிபதிகள் பெரும்பாலும் பிழையான தீர்ப்புக்களையே கொடுத்தார்கள்.
மேலும் புதிதாகக் கொண்டுவரப்பட்ட நிலச் சட்டங்கள் கிராமவாசிகளின் கூட்டுறவுச் சமூக வாழ்வை வேரறுத்துவிட் டன. நிலங்களை மற்றவர்களுக்கு விற்பதும் பிரிவிடுதல் செய்

Page 61
108 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
வதும் புதிய சட்டங்களின்படி இலகுவாக்கப்பட்டன. தனி மனிதருக்கு அதிக சுதந்தர உணர்ச்சி யேற்பட்டது. அதனல் கிராமவாசிகள் அதிகமாகக் கோடுகளில் வழக்குத்தொடர ஆரம்பித்தார்கள். கோடுகள் சனங்களுக்கு ஓரளவு பாதுகாப்பு அளித்தன. ஆன ல் நீதி ப தி க ள் ஐரோப்பியராயிருந்த படியால் அவர்கள் தேசவழக்கப்படியே வழக்குகளை நடத்தினர் கள். வழக்கறிஞர்களும், துவிபாஷகரும் அவர்களுக்கு உதவி யாயிருந்தனர். இது கிராமவாசிகளுக்கு அதிக பலனை அளிக்க வில்லை. மேலும் அதிக பணஞ் செலவுசெய்து நியாயவாதிகளை ஏற்படுத்தவும் அவர்களால் முடியவில்லை. தங்களுக்கு அனுகூல மாகச் சட்டத்தை உபயோகிப்பதற்குச் சட்ட அறிவு அவர்
களுக்கு கிடையாது. தீர்ப்புக்கூறப்படாமல் சில வழக்குகள் பல வருடங்களாக இழுபட்டன. நியாயவாதிகள் பணத்தைப் பெற்றர்கள். கிராமவாசிள் வறுமையடைந்தனர்.
நிலத்தகராறு காரணமாகச் சிறிய வழக்குகள் முளைத்தன. உண்மையான முறைப்பாடுகளும் பொய்யான முறைப்பாடுகளும் கொண்டுவரப்பட்டன. கால்நடைகள் தோட்டத்தை அழித்து விட்டன, வேலியை வெட்டிவிட்டான், எல்லையை அழித்து விட்டான், பழத்தைத் திருடினுன், தாக்கினன், பயமுறுத்தினன் என்று இப்படி ஆயிரம் சிறுசிறு குற்றங்கள் கோட்டுக்கு வந்தன. முன்னர் வழக்காடிய எதிரிகளிடையேதான் இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் மறுபடியும் கிளம்பின. செய்த குற்றங் களுக்கு ஈடுசெய்வதைப் பாராமல் இம்மாதிரியான அயற் சண்டைகளில் ஒருவருக்குச் செய்த குற்றத்துக்காக மற்றவர் பழிவாங்குவதையே நோக்கமாக வழக்குத் தொடுத்து வந்தார் கள். முன்னுளில் கிராமச் சங்கங்கள் இம்மாதிரியான சண்டை களைப் பல க்கவிடாமல் உடனுக்குடனே தடுத்துவந்தன. ஆணுல் கோடுகள் வந்த பின்னர் கிராமவாசிகளிடையே சச்சரவு அதி கரித்தது. அதனுல் கிராம வாழ்க்கையின் நிலை குன்றியது.
தோட்டங்களில் பல கிராமவாசிகள் வேலைபெற்றபோதி லும் அவை பெருகுவதை அவர்கள் விரும்பவில்லை. தோட்ட முதலாளிகள் நெல் விளையும் பள்ளத்தாக்குகளை அப்படியே விட்டுவிட்டார்கள். அந்தக்காலத்திலே நிலங்களை விற்பனை செய்யும்பொழுது அவற்றைச் சரியாக அளந்துகொடுக்கும் முறையில்லை. ' அதனல் பல கிராமவாசிகள் தாங்கள் சிறு தானியஞ்செய்த புன்செய்நிலங்களையும் ஆடுமாடு மேய்வதற் கான புல் தரைகளையும் கைவிடவேண்டி ஏற்பட்டது. G) தலைமுறையாக நிலத்தையே நம்பி வாழ்ந்ததாலும் அதையே தங்கள் உடைமையாக மதித்துவந்தபடியாலும் தங்கள், நிலங் களுக்கு அயலே அந்நியர் வந்து தோட்டம் வைப்பதையும்,

தோட்டங்களைத் திறத்தல் I 09
தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அவர்கள் விலைக்குவாங்கிக் கைப்ப்ற்றிக்கொள்வதையும் கிராமவாசிகள் வெறுத்தார்கள்.
1840-ல் கோப்பிச் செய்கை உன்னத மா ன நிலை யை அடைந்தது. அதனல் தோட்டங்களை அடுத்த கிராமங்களின் நிலைமை தலைகீழாயிற்று. தோட்டங்களில் பல புதுமாதிரியான தொழில்கள் உண்டாயின. தொழிற்குத்தகை, ஏற்று மதி இறக்குமதி ஏஜெண்ட், வியாபாரம். தச்சுத்தொழில் மேசன் தொழில், தவறணக்குத்தகை ஆகிய இப்புதிய தொழில்களில் பலர் ஈடுபட்டனர். கல்விஅறிவு அதிகமில்லாதவர்களும் அந் நியர் பழக்கவழக்கங்களில் பழகாதவர்களுமான கண்டிவாசிகள் இப்புதிய தொழில்களில் ஈடுபடப் பின்வாங்கினர். தாழ் பூமியி லுள்ளவர்கள் இவற்றிலீடுபட்டுக் கண்டிவாசிகளைச் சுரண்டி * னர்கள். மேலும் தோட்டப்பகுதிகளில் தவறணைகள் ஏற்பட்ட தனலும் கிராமவாழ்வு சீர்குலைந்தது. அரசாங்கம் மதுவகையி ஞல் அதிக வருமானம் வருவதைக்கண்டு அதைத் தடுக்காமல் விட்டுவிட்டது. அதன் பயணுகக் கிராமங்களில் குடியும், அணு சாரமும் தாண்டவமாடின.
1833-ல் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களின் பயணுக சிவில் சேர்விஸ் சீரழிந்ததினற்ருன் கிராமவாசிகளின் நிலைமை யும் இவ்வளவுக்குச் சீரழிந்தது. சிவில் சேர்விஸ் உத்தியோகத் தரில் பலர் தோட்டமுயற்சியில் அதிகமான நேரத்தைக் கழித் தனர். சிங்களம், தமிழ் படிப்பதை அலட்சியம் பண்ணினர்கள். தமது பகுதிகளில் சுற்றுப்பிரயாணஞ்செய்து குறைநிறைகளை அறிவதைக் குறைத்துக்கொண்டார்கள். தோட்டங்களுக்குச் செல்லும் ரோட்டுக்களைவிட மற்ற ரோட்டுகளெல்லாம் பழுது பாராமல் அப்படியே அழியவிடப்பட்டன. மேலும் அரசாங்கம் நடத்திவந்த சுயபாஷைப் பாடசாலைகள் மூடப்பட்டதாலும் கிரா மங்களுக்குப் போகவேண்டிய தேவை முன்னிருந்ததுபோல அதிகம் இல்லாமற்போய்விட்டது. கிராம அதிகாரிகள் அங் குள்ள உண்மையான நிலைமையைச் சிவில் சேர்விஸ் உத்தியோகஸ் தருக்கு அறிவியாமல் விட்டார்கள். பிரித்தானிய ஆட்சி அதி காரிகளின் செல்வாக்கைக் குறைத்துவிட்டதால் சனங்கள் அவர் களுக்கு கீழ்ப்படிய மறுத்துவிட்டார்கள். அதிகாரிகளும் தமது செல்வாக்குக் குறைக்கப்பட்டதை வெறுத்துத் தங்கள் வேலை களில் அதிகம் கவனங்காட்டாதிருந்தார்கள். கிராமங்களின் தொடர்பை சிவில் சேர்விஸ் உத்தியோகத்தர்கள் இழந்தனர். கோல்புறுரக் கிராமச் சங்கங்களைக் கெட்டுப்போகவிடாமல் காப் பாற்றவேண்டுமென்று சிபார்சு செய்திருந்தபோதிலும் அவர்கள் அதற்கான நடவடிக்கைகளொன்றையும் எடுக்கவில்லை.

Page 62
10 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
இவ்வாறு கிராமவாசிகள் திருப்தியற்ற குழப்பமான நிலை
யிலிருந்த பொழுதுதான் கோப்பி வியாபார நெருக்கடியினல் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யக் கருதிப் புதிய வரிகளை அரசாங்கம் விதிக்கத்துவங்கிற்று. முத்திரை வரி உயர்த்தப் பட்டது. கப்பல், தோணி, வண்டி, கரத்தை முதலியவற்றை வைத்திருப்போர் வருடமொன்றுக்கு 1 பவுண் லைசென்ஸ் வரி கொடுக்கவேண்டுமென விதிக்கப்பட்டது. துப்பாக்கி வைத் திருப்பவர்கள் 24 வழிலிங்கும் நாய் வளர்ப்போர் 14 வழிலிங்கும் வரி கொடுக்கவேண்டுமென விதிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆணும் வருடத்தில் ஆறுநாட்களுக்கு ரோட்டில் வேலைசெய்ய வேண்டும் அல்லது 3 விலிங்கு தலைவரிப்பணம் கொடுக்கவேண்டு மெனவும் சட்டமிடப்பட்டது. வழக்குத்தொடர்வோர் முத் திரைச் செலவு அதிகரிக்கப்பட்டதை விரும்பவில்லை. திரா மங்களில் ஒவ்வொருவரிடமும் ஒருநாய் நின்றது. பயிர்ச் செய்கையை மிருகங்கள் அழியாமல் காப்பாற்றுவதற்குத் துப் பாக்கி அவசியமாயிருந்தது. ரோட்டுவரி பழையபடி இராச காரியமுறையைக் கொண்டுவந்திருக்கிறதெனக் கூறப்பட்டது. மேலும் ரோட்டுகளினல் தமக்கு ஒருவித நன்மையும் ஏற்பட வில்லை எனக் கிராமவாசிகள் முணுமுணுத்தார்கள்.
1847-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி புதிய வரிகளை ஆட்சேபித்து 4000 குடியானவர்கள் ஒரு மனுவைச் சமர்ப் பித்தார்கள். அவர்களுக்கெதிராய் எடுக்கப்பட்ட நடவடிக்கை களின் பயனுய் மாத்தளை குருனுக்கலை ஆகிய பகுதிகளில் கலகம் உண்டானது. தாழ்ந்த பிரதேசத்தைச்சேர்ந்த இரண்டு சிங் களத் திருடர்கள் கலகக்காரர்களுக்குத் தலைமை வகித்தார்கள். கலகக்கூட்டம் கண்டி, மாத்தளை, குருணுக்கல் ஆகிய இடங் களில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களையும், கடைகளையும், தோட்டத் துரைமார் வீடுகளையுங்தாக்கிற்று.
இக்கலவரங்களைப் பெரிய புரட்சி என்று கூறிவிட முடியாது. ஆனல் நிலைமையைச் சரியாக அறிந்துகொள்ளாத அரசாங்கம் கலகத்தை அடக்கக் கடுமையான நடவடிக்கையை எடுத்துக் கொண்டது. பிரித்தானிய ஆட்சியை வீழ்த்துவதற்கு பெளத்த பிக்குகளும் கண்டிப் பிரதானிகளும் ஆரம்பித்த கலகம் என்று அரசாங்கம் எண்ணிற்று. டொரிங்டன் தேசா பதிபதி எடுத்துக் கொண்ட அடக்குமுறைகளைக் கல்வி யறிவுள்ள ஒரு பகுதியினர் கடுமையாகக் கண்டித்துக் குடியேற்றநாட்டு மந்திரிக்கு அறிவித் தார்கள். பிரித்தானிய பாராளுமன்றம் ஒரு விசாரணைச்சபையை ஏற்படுத்திற்று. அதன் பயணுக டொரிங்டன் பிரபு மாற்றப் பட்டார். இரண்டு உத்தியோகத்தர் வேலையிலிருந்து நீக்கப் பட்டனர். துப்பாக்கி, நாய், கடை ஆகியவை மீது விதிக்கப் பட்ட லைசென்ஸ"வரி ஒழிக்கப்பட்டது.

ஏழாம் அத்தியாயம் நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்ற ஆரம்பமும்
(1851-1872)
1. தோட்டமும் தொழிலாளியும்
1847-1850-ல் நடந்த வியாபார மந்தத்தின் பின்னர் கோப்பி அபிவிருத்தியடைந்தது. 1853-ல் கோப்பி பழைய நிலையை அடைந்தது. பின்னர் 1870 வரை விளைவு அதிகரித்துக் கொண்டே வந்தது. தோட்டங்கள் நல்ல வரும்படியைக் கொடுத்தன. பொருளாதார முறைகளுக்கிணங்க உற்பத்தி செய்யப்பட்டு வந்த தா ல் 1 அந்த ர் 27 விலிங்காக இருந்த விலை லண்டனில் 1850-ல் 41 விலிங்காக உயர்ந்து விட்டது. 1850-ல் 609, 263 பவுண் மதிப்புள்ள 378,473 அந்தர் கோப்பி ஏற்றுமதி செய்யப்பட்டது. 1855-ல் 1025, 282 பவுண் மதிப்புள்ள 506, 540 அந்தரும், 1870-ல் 2753, 005 பவுண் மதிப்புள்ள 1,059,030 அந்தர் கோப்பியும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
1 கோப்பிவிலை உயரவே நில விலையும் ஏறிற்று. 1857-ல் ஐரோப்பிய தோட்ட முதலாளிகளுக்கு 80, 950 ஏக்கர் தோட்ட மிருந்தது. 10 வருடத்தில் இது இரண்டுமடங்குக்கு அதிகமாகக் கூடிவிட்டது. 1857-ல் இலங்கையருக்கு 48,000 ஏக்கர் கோப்பித் தோட்ட மிருந்தது. 1849 க்கும் 1869 க்குமிடையில் இலங்கையி லிருந்து ஏற்றுமதியான கோப்பியில் அரைப்பங்கு துவக்கம் பங்குவரை அவர் களு  ைடய தோட்டங்களில் விளைந்த கோப்பியே. ஹ"னஸ் கிரியா, கிழக்கு மாத்தளை, பதுளை ஆகிய பகுதிகளில் தான் பிரதானமாக அவர்களுக்குத் தோட்டங்க ளிருந்தன. மேலும் பழைய மத்திய மாகாணத்தில் சிறுதுண்டு நிலம் உள்ளவர்கள் கூடக் கோப்பிச் செடிகளைப் பயிரிட்டார்கள்.
தோட்ட முதலாளிகளாகவும், வியாபாரிகளாகவும், ஒப்பந் தக்காரராகவும் கோப்பி வியாபாரத்திலீடுபட்ட இலங்கையர் பணம் சம்பாதித்துத் தனவந்தராயினர். அதனல் அவர்களுடை வாழ்க்கை நிலையும் உயர்ந்தது. இந்த மாற்றங்களும், ஆங்கிலக் கல்வியறிவும், போக்குவரத்துக்கான வசதிகளும் அவர்களுடைய பழக்கவழக்கங்களையும் எண்ணப்பாங்கையும் மாற்றின. பழைய சமூகக் கட்டுப்பாடுகள் மாற்றமடைந்தன. பணம் படைத்த வர்கள் பழைய சாதிக் கட்டுப்பாடுகளுக் கமைய மறுத்தார்கள்

Page 63
12 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
சிங்களப் பத்திரிகைகளிற் கூடச் சாதி சம்பந்தமான வாக்கு வாதங்கள் கிளம்பின.
தோட்டங்கள் வெளிநாட்டுத் தொழிலாளரை நம்பியிருந்த படியால் தொழிலாளர் பிரச்னையைப்பற்றி அரசாங்கம் இடைய ருமல் சிரத்தையெடுத்து வந்தது. 1860-ம் ஆண்டின் ஆரம்பத் தில் தொழிலாளர் கஷ்டம் தென்பட்டது. மோரிஷஸ், மேற் கிந்திய தீவுகள் ஆகிய தேசங்களில் கூடிய சம்பளமும் சிறந்த வைத்திய வசதிகளும் கொடுக்கப்பட்டதன் காரணமாகத் தென் னிந்திய தொழிலாளர் அங்கே ஏராளமாகச் சென்ருர்கள். ரயில் பாதைகளையும் ரோட்டுகளையும் அமைக்கத் துவங்கியதால் தோட்டங்களில் தொழிலாளர் கிடையாமற்போகலாமென்று பயந்து வாட் தேசாதிபதி 1857-ல் இந்தியத் தொழிலாள ருக்குப் பல சலுகைகளை ஏற்படுத்தினர். மன்னருக்கும் ராமேஸ் வரத்துக்கு மிடையில் தொழிலாளரை ஏற்றிக்கொண்டு வருவ தற்காக 1861-ல் அரசாங்கம் 4 கப்பல்களை ஏற்படுத்திற்று. சென்னை, நாகப்பட்டிணம், முதலிய இந்தியத் துறைகளிலிருந்து தொழிலாளரை கொழும்புக்கு ஏற்றி வருமாறு ஒரு பம்பாய் கப்பல் கொம்பெனிக்கு மூன்று வருடத்துக்குப் பணம் உதவி செய்வதாய் 1866-ல் இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது.
இலங்கையில் இந்திய தொழிலாளருக்கிருந்த வாழ்க்கை வசதிகளைச் சீர்திருத்திற்று. அதனுல் அதிகம் தொழிலாளரை இங்கே வரச்செய்யலாமென அரசாங்கம் உணர்ந்தது. 1861-ல் நீடித்த காலம் தொழிலாளரை அமர்த்தும் சட்டம் என ஒரு சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியது. இதன் பிரகாரம் வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளருக்குரிய உரிமைகள் வழங்கப்பட்டன. அதனல் முதலாளிமாரும் திருப்திகரமாக வேலைவாங்கக் கூடியதாயிருந்தது. முதலாளிகள் தொழிலாள ருக்கு நல்ல வைத்திய வசதிகளை ஏற்படுத்தவேண்டுமென 1865-ல் ஒரு சட்ட மியற்றப்பட்டது. தோட்டத்துரைமார் வசதிகளைச் செய்யத்தவறியதால், குடியேற்ற நாட்டு மந்திரி யின் வேண்டுகோளின்படி 1872-ல் அரசாங்கம் ஒரு சட்ட மியற் றியது. அதன்படி ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு ஐரோப்பிய வைத்தியரையும் அவருக்குப் பல உதவியாளரையும் ஏற்படுத்த தோட்ட முதலாளிகள் பணம் உதவவேண்டுமென நிர்ப்பந்தஞ் செய்யப்பட்டார்கள். --
2. வாகனம் தபால் போக்குவரத்து வசதிகள்
சாமான்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதிலும், போக்கு - வரத்திலும் இக்காலத்தில் விசேஷமான முன்னேற்றமேற்பட் பட்டது. இதற்குக் காரணம் கோப்பித் தோட்டங்கள் பெரு

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 113
கினமையே. ரோட்டுப்போடும் விஷயத்தில் முன்னிலும் பார்க்க அதிகமான ஊக்கம் காட்டப்பட்டது. கொழும்புக்கும் கண்டிக்கு மிடையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. ܗܝ*
சர். ஜோர்ஜ் அண்டர்ஸன் (1850-55) சர். ஹென்ரி வார்ட் (1855-1860) சர். ஹெர்க்கியூலிஸ் ரொபின்ஸன் (1865-1872) ஆகியோர் தோட்டங்களில் அதிக சிரத்தை யெடுத்தனர். தோட்ட முதலாளிகளுக்கு உதவிசெய்வதற்காகப் புதிய ரோட்டு களை அமைத்தார்கள். 1847-ல் ஏற்பட்ட வியாபார மந்தத் தினுல் ரோட்டுப்போடும் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டி ருந்தது. அண்டர்சன் அந்த வேலையை மறுபடியும் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தார். கிராமாந்தரங்களோடு தொடர்பு வைத்துக்கொள்வதற்காகவும் தோட்ட விளைபொருள்களை உள் ளூரிலிருந்து துறைமுகங்களுக்குக் கொண்டுவருவதற்காகவும் புதிய ரோட்டுகளை அமைக்க அவர் எண்ணினர். நினைத்த தெல்லாவற்றையும் ஒரே நேரத்தில் முடிப்பதற்குப் பணமில்லா திருந்தபடியால் ஒவ்வொன் ருெவ்வொன்ருக அவற்றின் அவசி யத்தையும் முக்கியத்தையும் அறிந்து அமைக்கத் துவங்கினர் ஏற்கனவே கொழும்போடு தொடுக்கப்பட்டிருந்த எட்டியா ந் தோட்டையிலிருந்து கம்பளைவரைக்கும் ஒரு புதிய ரோட்டை அமைத்தார். இந்த ரோட்டு கினிகேதனை மூலமாகக் கொழும்பை நோக்கிச் செல்லுகிறது. வாட் தேசாதிபதி இந்த ரோட்டை மேலும் சீர்திருத்தினர். பேராதனை, கம்பளை, நாவலப்பிட்டி, கிட்டுல்கலை ஆகிய இடங்களில் பாலங்களை அமைத்தார். நாவ லப்பிட்டியிலிருந்து கொத்மலைக்கு ரோட்டமைத்தார். எட்டி யாந்தோட்டையிலிருந்த மரப்பாலத்தை நீக்கிவிட்டு ரொபின் ஸன் இரும்புப்பாலத்தை அமைத்தார். கண்டிக்குத் தெற்கே யுள்ள பகுதியை விருத்தி செய்யவும் ரொபின்ஸன் முயன்ருர், டொ லஸ் பாகைப் பகுதியுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்காக மாவனெல்லையிலிருந்து அரணுயகாவை நோக்கிச் செல்ல ஒரு ரோட்டை அமைத்தார். கினிகே தெனையிலிருந்து டிக்கோயா வரை மற்ருெரு ரோட்டு அமைக்கப்பட்டது. இக்காலத்தில் அரசாங்கம் நெடுந்தெருக்களை அமைப்பதிலேயே சிரத்தை யெடுத்தது. தோட்டங்களுக்குத் தேவையான கிளைப்பாதை களைத் தோட்ட முதலாளிகளே போடவேண்டுமென எதிர்பார்த் தார்கள். இந்த ஒழுங்கு திருப்தியைக் கொடுக்கவில்லை. சம்பந் தப்பட்ட தோட்ட முதலாளிகள் செலவில் அரை வாசியைக் கொடுப்பதானல் கிளை ரோட்டுகளையும் அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தயாராயிருப்பதற்காக அறிவித்தது. இந்த ஒழுங்கின்படி டிக்கோயா தோட்ட விளை பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு வசதி யேற்படுத்துவதற்காகக் கண்டி-கினிகேதன

Page 64
114 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
ரோட்டு, டிக்கோ யா வரை விஸ்தரிக்கப்பட்டது. மத்திய மாகா ணத்தில் விவசாயப் பகுதிகளாயிருக்கு மிடங்களில் பல புதிய ரோட்டுகள் அண்டர்சன் தேசாதிபதி காலத்தில் அமைக்கப் பட்டன. இந்த ரோட்டுகளில் ஒன்று ஜெருே னிஸ் டி சொய்சா? என்பவரால் தமது செலவில் போடப்பட்டது. மற்ற ரேர்ட்டு களின் செலவில் ஒரு பகுதியை சம்பந்தப்பட்ட தோட்ட முதலா ளிகள் கொடுத்தார்கள். -
மாத்தளைக்கும் கண்டிக்கும் கிழக்கேயுள்ள பகுதிகளை அபி விருத்திசெய்ய வாட் தேசாதிபதி முயன்ருர், மாத்தளையிலி ருந்து ரத்தோட்டைக்கும் தெல் தெனியாவிலிருந்து ரங்கலைக் கும் அவர் ரோட்டுகளை அமைத்தார். 1858-ல் இப்பகுதியில் முப்பதிஞயிரம் ஏக்கர் கோப்பித்தோட்டமிருந்தது. ஆனல் விளைபொருளைக் கண்டிக்கு அனுப்புவதானுல் மகா வலிகங்கை மார்க்கமாக ஒடங்களில் அனுப்பவேண்டியிருந்தது. இது அவ் வளவு செளகரியமா யிருக்கவில்லை. இப்பகுதியிலுள்ள தோட்ட முதலாளிகள் கேட்டுக்கொண்டதன் பிரகாரம் தெல்தெனியா, கட்டுகாஸ்தோட்டை ஆகிய இடங்களில் வாட் பாலங்களை அமைத்தார். இதனுல் ரங்கலை, மடம நுவரை, மாத்தளை ஆகிய இடங்கள் கண்டியுடன் இணைக்கப்பட்டதுமல்லாமல் கோப்பிதோட்டங்கள் நிறைந்த குருணுக்கலும் இணைக்கப்பட் டது. இந்தப்பகுதியை விருத்தி பண்ண ரொபின்ஸனும் முயன் ருர். கட்டுகாஸ்தோட்டைக்கூடாக இவர் இரண்டு ரோட்டுகளை அமைத்தார். ஒன்று பம்பரால, கபரகல ஆகிய இடங்களை இணைத்தது. மற்றது அல் கடுவா வரை சென்றது. இதனல் கண்டி தெல்தெனியா ரோட்டு கல்மல்ஒயா வரை விஸ்தரிக்கப் ull-gil. -
சபரகம மாகாணத்தின் கிழக்குப்பகுதியிலும் ஊவா மாகா ணத்திலும் இக்காலத்தில் புதிய ரோட்டுகளமைக்கப்பட்டன. ரயில்வேக் கடனைத் தீர்ப்பதற்காக மராமத்து இலாகாச் செலவு
* ஜெருேனில் டி சொய்சா என்பவர் பேர்போன பரோபகாரியான சி. ச். டி. சொய்சாவின் தந்தை. இவர் சிங்களக் கரையார் வகுப்பைச் சேர்ந்தவர். கரையார் கமச்செய்கையில் இயல்பாகவே ஈடுபட்டிராதபடி யால், தோட்டங்கள் திறக்கப்பட்டபொழுது அந்த முயற்சியில் முதல் முதல் அவர்களே ஈடுபட்டார்கள். ஜெருேனிஸ் டி சொய்சா முதல் வியா பாரஞ்செய்தார். பின்னர் அரசாங்கத்துக்கு கொந்திராத்து ஒப்பந்த வேலைகள் செய்தார். 1835-ல் அங்குருங்கேதையிலுள்ள இராசா தோட் டமென்ற கோப்பித்தோட்டத்தையும் அதற்கடுத்துள்ள காட்டு நிலங்களை யும் வாங்கினர். முதல் கோப்பிச் சாகுபடி அவருக்கு 850 பவுனுக்கு அதிகமானவருமானத்தைக் கொடுத்தது. அந்தப்பணத்தைக்கொண்டே அவர் ராசாத்தோட்டம் வாங்கினர். வில்லியர்ஸ் எழுதிய வியாபார வித்தை ’ என்ற நூலில் 249-ம் பக்கம் பார்க்க.

சத்தித்துறை : O w O
இலங்கைப் படம் $ല\ *。 ീക്ഷിക്കി . .
Ծ Φ ܓܵܘ w க விகிகள் (1814. 1850) a usa e «Soisair (185 - 1872) --கவனியாமல்விடப்பட்டி (1851 - 1872)
+++++ ரெயில்பாதை $851-1872)
ey fols
7* Α v i ميع" St. 5G dia resyon
i`ፋ ` Y`Y~~{ ?pfag3Atzal i W, అకొలత4}<###** | ܐܲܗܼ݇،ܢܳܪܶܝܵܪܶ
"ఉత్తి gاق گرم نفع همگی
&ಅಭ
கீச்சொழும்பு
*/ * gruasësitë N. Y. 6asian-N எட்ழசக்ச்ேசட்ஜ்ை 3ಣಬ್ಜಿ ה(
Q . ܝ ܫܘܼܫ sa 41NS ". . Lu పెర్టీ ,昼 ܬܵܝܵܐ இவரெலிப்* ஆஃ\ @a *cy ö 4ʻ '\ శిక్గా rašGasa தம்பத்தில்
டிக்கோரி * சாவு ை" cமூலுகுடி f ஹன்முல்ஜ +హా-rgజఓూ கம்பபஃr Y இத்தின்புe** به مرگ پنجي-:ت
V - ”"லேடிஷ்தோட்ஆ. v ra see X வெல்கcத்rெடை \ \ \ܗ̄
。\ \ 月 ممبر منe rقسیم نہ Y*S、,。连山 -esser, برندہ (مه ہی 卢 N f N ''
S ” ག༽། \ε η με
கொத்மலை
2 டிம்புலா MP
3 வட்டகொபை அம்பாக்தோட்டை
శ్రీ 423ని ఫ్రలోu ፳ 8 பேராதை حیحsسمتھیسسلج
6 கடுகாஸ்தோட்கை

Page 65
16 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
களைக் குறைக்க வேண்டுமெனக் குடியேற்றநாட்டு மந்திரி கட்டளையிட்டதன் பயணுய் ரோட்டுப்போடும் வேலை குறைந்தது. சேர். சார்ல்ஸ் மக்கார்தி (1860-1863) புதிய ரோட்டுகளை அமைப்பதைக் குறைத்துக்கொண்டு பழைய ரோட்டுகளைப் பரிபாலிப்பதிலேயே கவனஞ் செலுத்திவந்தார். ஆனல் அப்புத்தளை தோட்டத் துரைமாரின் கோரிக்கைகளை அவரால் புறக்கணிக்க முடியவில்லை. கொழும்பு-இரத்தினபுரி ரோட்டை வார்ட் தேசாதிபதி பெல்மதுளை வரை விஸ்தரித்தார். மக்கார்தி அந்த ரோட்டை பலாங்கொடை வரை நீட்டிவிடுமாறு ஸ்கின் னரைக் கேட்டுக்கொண்டார். ஸ்கின்னர் மதிப்பிட்ட செலவி லும்பார்க்கப் பாதிச்செலவில் இதைச் செய்து முடிக்கவே மேலும் 15 மைலுக்கு இந்த ரோட்டை விஸ்தரிக்க மக்கார்தி அனுமதியளித்தார். எனவே இந்த ரோட்டு ஊவாவின் எல்லை வரை விஸ்தரிக்கப்பட்டது. ரொபின்ஸன் இந்த ரோட்டை அல்ல என்ற இடம் வரை விஸ்தரித்தார். ஏற்கனவே அல்ல, பதுளையுடன் இணைக்கப்பட்டிருந்தது. கொழும்பிலிருந்து கண்டி, நுவரெலியூடாக பதுளைக்குச் செல்லும் ரோட்டை வார்ட் திருத்தினர். ஆனல் பதுளைப்பகுதியில் புதிய தோட்டங் கள் பல கிளம்பவே, தோட்டத்துரைமார் கொழும்புக்குப் போவதற்கு நல்ல ரோட்டுகள் வேண்டுமெனக் கிளர்ச்சி செய் தனர். ரொபின்ஸன் மூன்று திட்டங்களை ஆலோசனை செய்தார். கண்டியிலிருந்து பதுளைக்குச்செல்லும் பழைய ரோட்டைத் திருத்த அவர் விரும்பவில்லை. ஏனெனில் அது சுகாதாரமற்ற தும், விளைவில்லாததுமான பகுதிகளுக்கூடாகச் சென்றது. வளப்பனைக்கூடாக உடபசலாவை மார்க்கமாய் ஒரு ரோட்டை அமைத்தால் ஒதுங்கிக்கிடக்கும் பல கிராமங்களை இணைப்பது மல்லாமல் அதிக குடிகளுக்கு நன்மை பயப்பதோடு பல கோப் பித் தோட்டங்களுக்கும் உதவியாயிருக்குமென்றும் எண்ணினுர். ஆனல் மதுல்சீமாவையும் தெல்தெனியாவையும் இணைக்க வேறு ஒரு ரோட்டுப்போட வேண்டியிருக்குமென்ற காரணத்தால் இந்த யோசனை கைவிடப்பட்டது. நமுனுகுலப் பகுதியிலுள்ள தோட் டங்களுக்கு உபயோகமாயிருக்கும் காரணத்தை முன்னிட்டு கொழும்பு அப்புத்தளை ரோட்டை விஸ்தரிப்பதுதான் நல்ல தென. அவர் முடிவுகட்டினர். இந்தப்பகுதிகளிலுள்ள ரோட்டு களை அவர் மேலும் சீர்திருத்தினர். நிரிவத்தை (இரத்தின புரிக்குச் சமீபத்திலுள்ளது) கஹவத்தை (பெல்மதுளைக்குத் தெற்கேயுள்ளது) பதுளை ஆகிய இடங்களிலிருந்த மரப் பாலங் களுக்குப் பதிலாக இரும்புப் பாலங்களை அமைத்தார். இரத்தின புரிப் பாலத்தையும் இரும்பினுலமைத்தார். கோப்பிச் செய்

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 117
கையிலீடுபட்டிருந்த மொறவாக்கை கோருளையோ டு தொடர்பு ஏற்படுத்துவதற்காகக் காலியிலிருந்து அகுறெஸ்ஸாவுக்கூடாக ஒரு ரோட்டமைத்தார்.
கோப்பித்தோட்டப் பகுதிகளை மாத்திரம் அவர்கள் கவனித் துவிட்டு மற்றவற்றைப் புறக்கணிக்கவில்லை. தனக்குமுன்னி ருந்த தேசாதிபதிகள் பாட்டாளிமக்களின் நலன்களைக் கருத வில்லையென்பதை வார்ட் தேசாதிபதி உணர்ந்தார். நாட்டின் பொது நிர்வாகத்தைச் சீர்திருத்தவும் அவர் எண்ணினர். பாண்ஸ் 9ம், ஹோட்டனும் அமைத்த பெருந்தெருக்கள், கோப்பி வியாபாரம் அபிவிருத்தியானவுடன் கைநழுவவிடப் L I Lll 60t. கண்டியிலிருந்து தம்புளை மார்க்கமாக வடக்கே பருத்தித்துறைக்கும் வடகிழக்கே திருக்கோணமலைக்கும் சென்ற பெரிய தெருவில், கோப்பித்தோட்ட முதலாளிகளுக்கு உப யோகமாயிருந்த மாத்தளைவரை செல்லும் ரோட்டுமாத்திரம் பழுதுப்ார்த்து நல்லமுறையில் பரிபாலிக்கப்பட்டது. வார்ட் இந்த ரோட்டை தம்புளை வரை சீர்திருத்தினர். அத்துடன் யாழ்ப்பாணத்துக்கும் யானை இறவுக்குமிடையில் ஐரோப்பிய ருடைய தென்னந்தோட்டங்களிருந்த பகுதிகளில் அண்டர்ஸன் ஆரம்பித்த வேலையை வார்ட் தொடர்ந்து நடத்தினர். கொழும்பிலிருந்து அப்புத்தளை மார்க்கமாக பதுளைக்குச் சென்ற தெருவை ரொபின்ஸன் மட்டக்களப்பு வரை விஸ்தரித்தார். இந்த ரோட்டு மதுல்சீமா கோப்பித்தோட்டப்பகுதிகளை இணைத் திது. அத்துடன் கீழ் மாகாணத்தின் தலைநகரும், நெற்சாகு படியை விருத்திசெய்வதற்கு விசேஷ முயற்சிகள் செய்யப்பட்டு வந்ததுமான மட்டக்களப்பு முதல்முதல் கொழும்புடன் இணைக் கப்பட்டது. இக்காலத்தில் வட மாகாணத்துக்கும் கீழ் மாகாண துக்கும் தரைமார்க்கமாக இலேசான போக்குவரத்துக் கிடை lLIT gil. எனவே கொழும்பிலிருந்து நீராவிக்கப்பல்களில் இப் பகுதிகளுக்குச் சென்றுவந்தார்கள். நீராவிக்கப்பல் போக்கு வரத்து முதலில் அரசாங்கத்தின் கையிலிருந்தது. பின்னர் ஒரு கொம்பெனி அதை நடத்திற்று. மறுபடியும் அரசாங்கம் அதைக்கையேற்றது.
இவ்வாறு இக்காலத்தில் ரோட்டு அபிவிருத்தியில் முன் னேற்றமுண்டானது. கண்டி, மாத்தளைப் பகுதிகளுக்குக் கிழக் கேயுள்ள பகுதிகளும், கண்டிக்கும் ஹட்டனுக்குமிடையிலுள்ள பகுதிகளும் கிழக்குச் சபரகமவும், ஊவாப் பகுதிகளும் ரோட்டு களால் இணைக்கப்பட்டன. வார்ட் தேசாதிபதியின் ஆட்சி முடியும் நாட்களில் 3000 மைல் ரோட்டு நல்ல நிலைமையிலி

Page 66
8 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
ருந்தது. இதிற் பெரும் பகுதி கல்லுப்போட்ட ரோட்டுகளாகவே இருந்தது. இலங்கையின் முக்கியமான பகுதிகள் கொழும் புடனும் கண்டியுடனும் இணைக்கப்பட்டிருந்தன.
தோட்டங்கள் பெருகியதால் புதிய பல ரோட்டுகள் அமைக் கப்பட்டன என்று கூறினேம். தோட்டப் பொருள்களை இலேசா யும் விரைவாயும் மற்ற இடங்களுக்கு அனுப்புவதற்காக ரயில் பாதைகள் போடப்பட்டன. vWM
இங்கிலாந்தில் 1825-ல் ஸ்டொக்டன்-டார் லிங்டன் ரயில்வே போடப்பட்டது. 1830-ல் லிவர்பூல்-மான்செஸ்டர் ரயில் பாதை ஆரம்பிக்கப்பட்டது. 1835 துவக்கம் ரயில் வேக் கொம் பெனிகள் வேறு பல ரயில் பாதைகளைப் போட்டன். இலங் கையில் கோப்பி வியாபாரத்தி லீடுபட்டிருந்த வர்த்தகர்களும் தோட்ட முதலாளிகளும் இங்கேயும் ரயில் பாதைகளை அமைக்கு மாறு கிளர்ச்சிசெய்தார்கள். கொழும்பிலிருந்து கண்டிக்கு ஒரு ரயில் பாதை அமைக்க வேண்டுமென 1845-ல் ஆலோசித்தார் கள். அதற்கென இங்கிலாந்தில் ஒரு கொம்பெனியும் ஏற்படுத் தப்பட்டது. அதற்கு 80,000 பவுண் செலவு ஏற்படுமெனவும் மதிப்பெடுக்கப்பட்டது. ஆனல் கோப்பி வியாபாரத்தில் வீழ்ச் யியுண்டாகவே பணம் கிடைக்கவில்லை. இங்கிலாந்தில் கடனுக அந்தப்பணத்தை எடுப்பதும் கஷ்டமாயிற்று. 1853-ல் கோப்பி வியாபாரம் தலையெடுக்கத் துவங்கிற்று. இதே காலத்தில் இந்தி யாவில் ரயில் பாதைகளைப் போடத் துவங்கினர்கள். வியாபாரி களும் தோட்டத் துரைமாரும் ரயில் போட வேண்டுமென மறு படியும் கிளர்ச்சி செய்தனர். 1845-ல் ஏற்படுத்தப்பட்ட கொம்பெனியுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதற் காகக் குடியேற்றநாட்டு மந்திரி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் ரயில் பாதைகளின் அவசியம் இலங்கையில் அதிகரித்துக் கொண்டேவந்தது. தாமதமின்றி ரயில் பாதை யைப் போட்டுவிட வேண்டுமென்று தோட்ட முதலாளிகள் விரும்பினர். 1850-ல் 278,473 அந்தராக இருந்த கோப்பி ஏற்றுமதி 1853-ல் 372,379 அந்தராக உயர்ந்தது. 1856-ல் 500,000 அந்தராக உயரக்கூடியதாயு மிருந்தது. இவ்வளவை யும் கோப்பி பறிக்கும் ஜனவரிக்கும், பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகும் மே மாதத்திற்கு மிடையில் கொழும்புக்கு அனுப்பி விடவேண்டும். மழைபெய்யத் துவங்கினல் ஆறுகள் பெருக் கெடுத்துவிடும். கோடையில் பாலமின்றியே போகக்கூடிய ரோட்டுகள் மழையின் பின் போகமுடியாத நிலைமைக்கு வந்து விடும். அதனல் செல்லுபடியாகா மற் கிடக்கும் கோப்பியின் விலை விழுந்துபோகும்.

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 1 19
இதுகாறும் சுதேசிகளுக்குச் சொந்தமான மாட்டுவண்டி களில் கோப்பிக்கொட்டை ஏற்றுமதிசெய்யப்பட்டது. 1854-ல் 30,000, 36,000 வண்டிச்சுமையுள்ள சாமான் கொழும்பிலி ருந்து கண்டிக்கும் அங்கிருந்து கொழும்புக்கும் போக்குவர வாயின. ரோட்டுகள் அவ்வளவு கெட்டுப்போயிருந்தபடியால் 14 துவக்கம் 18 தினங்களில் திரும்பக்கூடிய வண்டிகள் நாலு வாரம் ஆறு வாரம் கூட எடுத்தன. வண்டிகள் குறைந்த தாலும், தங்களுடைய சரக்குகளை முதல் ஏற்றிவிட வேண்டு மென்று தோட்டத்துரைமாரிடையே ஏற்பட்ட போட்டியின லும் வண்டிக் கூலி அதிகரித்தது. அரை வண்டிக்கு அரிசியை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து சென்ற வண்டி 10 அந்தர் கோப்பியுடன் திரும்புமானல் அதற்கு மூன்று பவுண் கூலி கொடுக்கப்பட்டது. 1854-ல் மழைக்குமுன் இந்தக்கூலி 4 பவுண் 10 ஷிலிங்காக மாறிற்று. சில இடங்களில் விபத்துக் காரணமாயும் மாட்டு நோயினுலும் காலநிலை காரணமாகவும் எவ்வளவு கூலிகொடுத்தும் வண்டி அமர்த்திக்கொள்வது முடியாத காரியமாயிற்று.
1854-ல் இந்தியாவில் மழைபெய்யாததால் விளைவு குறைந் தது. அதனுலும் தோட்டக்காடுகளில் சம்பளங்களை உயர்த்த வேண்டி ஏற்பட்டது. தொழிலாளருக்குக் குறித்த ஒரு விலைக்கு அரிசி கொடுக்கவேண்டியிருந்தது. சாதாரணமாகக் கொழும் பில் மூன்று ஷிலிங்கு 6 பென்ஸ் துவக்கம் 4 விலிங்கு வரை விலையான 1 புஸல் அரிசி இவ்வருடம் 7 விலிங்காக உயர்ந்தது. வாகனப் போக்குவரத்துக் கஷ்டங்களினல் கண்டியில் 10 ஷிலிங்கு துவக்கம் 12 விலிங்காக விலையேறிற்று. கம்பளையில் 13, 14 விலிங்கு கூட விற்றது. ஒரு புசல் நெல்லைத் தூக்கிச் செல்லும் தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 7 பென்ஸ் கூலி. உள்ளூரில் இந்த விலை மேலும் அதிகரித்தது.
அக்காலத்தில் கிடைக்கக்கூடிய வண்டிகளை எல்லாம் உப யோகித்தாலும் விளையும் கோப்பி முழுவதையும் அனுப்புவதற் குப் போதா தெனக் தோட்டத்துரைமார் கண்டனர். வண்டி களை ஒருவாறு அதிகரித்தாலும் அக்காலத்து ரோட்டு நிலை மையில் போக்குவரத்து அவ்வளவு வசதிப்படாதெனவும் கண்டனர். மேலும் பிரேஸிலில் ரயில் பாதைகள் போடப்பட்டு விடுமானல் பிரேஸில் கோப்பியின் விலை 1 அந்தர். 6 விலிங்கு துவங்கி 8 விலிங்கு வரை குறைந்துவிடுமெனவும் அப்படிக் குறைந்தால் தாங்கள் அந்தக்கோப்பி வியாபாரிகளுடன் போட் டியிட முடியாதெனவும் இலங்கைத் தோட்டக்காரர் பயந்தனர்.

Page 67
120 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
அவ்வாறு போட்டியிடுவதானல் கோப்பித் தோட்டங்களுக்கும் கொழும்புக்குமிடையில் மலிவான ஒழுங்கான போக்குவரத்து வசதி ஏற்படவேண்டுமெனவும் உணர்ந்தனர்.
ரயில் பாதை உடனே அமைக்கவேண்டியது மிகமுக்கிய மென்று 1855-ல் வாட் தேசாதிபதி கருதினர். 80,000 பவுண் 6 வீத வட்டிக்கு கடன் எடுக்கவேண்டுமென்றும் சட்டசபை ஏகமனதாக ஒப்புக்கொண்டது. இலங்கை அரசாங்கம் ரயில் பாதை அமைக்கும் வேலையைத் தன் தலையிற் போட்டுக்கொள் ளக்கூடாதென அப்பொழுது இருந்த குடியேற்றநாட்டு மந்திரி கருதினர். அரசாங்க உத்தரவாதமில்லாமல் வேலையைத் துவங்க கொம்பெனிகள் மறுத்தன. 1856-ல் ஒரு ஒப்பந்தத்தை துவங்க கொம்பெனிகள் மறுத்தன. 1856-ல் ஒரு ஒப்பந் தத்தைச் சட்டசபை தற்காலிகமாக ஒப்புக் கொண்டது. கொம் பெனி தனது தொகையை அதிகரிக்க அந்த ஒப்பந்தம் இட மளிப்பதாக உத்தியோகப்பற்றற்ற ஐரோப்பிய அங்கத்தினர் வாதாடியபோதிலும் சட்டசபை ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டது. 1857-ல் மறுபடியும் செலவு மதிப்பிடப்பட்டு இதற்கு 856,557 பவுண் செலவாகுமெனக் கணக்கிடப்பட்டது.
1858-ல் வேலை ஆரம்பமாயிற்று. மூன்று வருட வேலையின் பின்னர் வேலை நிறுத்தப்பட்டது. வேலைநடத்தி ஒரு வருடத்தின் பின், முன்னர் குறிப்பிட்ட மதிப்புப் போதாதென்றும் வேலை  ையமுடிக்க 22:14,000 பவுண் செலவாகுமென்றும் கொம்பெனி கூறிற்று. குடியேற்றநாட்டு மந்திரியும், தேசாதிபதியும், கொம் பெனியுங் கடுமையாகக் கண்டிக்கப்பட்டனர். வாட் தேசாதி வேலைதொடர்ந்து நடைபெறவேண்டுமென விரும்பியபோதி லும் ஒப்பந்தத்தை 1861-ல் நிறுத்திவிடவேண்டுமெனச் சட்ட சபை பிடிவாதமாய் நின்றது. பின்னர் இலங்கை அரசாங்கமே ரயில் பாதை அமைக்கும் வேலையை எடுத்துக்கொண்டது. இவ் வாறு இந்திய ரயில்வேபோலல்லாது இலங்கை ரயில்வே அரசாங்கப்பொறுப்பில் வந்தது. 1863-ல் மறுபடியும் வேலை யைத் துவங்கினர்கள். 1865-ல் அம்பேபுசவரை பாதை அமைக்கப்பட்டது. கண்டி ரயில் பாதை 1867-ல் முடிவடைந் 占gi·
ரோட்டுகளும், ரயில் பாதைகளும் அமைத்ததால் வியாபார மும் தோட்டங்களும் அபிவிருத்தியடைந்தன. அது மாத்திர மன்றி தபால் போக்குவரத்துக்கும் பெரிய உதவியாயிருந்தது. தபால் விஷயமாக இக்காலத்தில் பெரிய சீர்திருத்தங்கள் செய் யப்பட்டன. தபாலின் நிறைக்கும் அது எவ்வளவுதூரம் செல்ல வேண்டுமென்பதற்கும் தக்கபடியே இதுவரை முத்திரைச்

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 121
செலவு கணிக்கப்பட்டுவந்தது. அரை அவுன்ஸ் நிறையுள்ள ஒரு தபாலை 25 மைலுக்குள்ளாயுள்ள இடங்களுக்குக் கொண்டு போக 2 பென்ஸ் விதிக்கப்பட்டது. 150 மைலுக்கு அப்பாற் பட்ட இடமானுல் 1 விலின் விதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் ரோலண்ட் ஹில் என்பவர் முத்திரைச் செலவைத் தூரத்தைக் கொண்டு கணக்கிடத் தேவையில்லையென்றும் தபாலைச் சேகரித் துப் பொறுக்கிப் பிரித்து, சேரவேண்டிய இடத்தில் சேர்ப் பிப்பதைக்கொண்டுதான் கணக்கிடவேண்டுமென்றும் எடுத்துக் காட்டினர். 1845-ல் எந்த இடத்துக்கும் முத்திரை 1 பென்னி யாக மாற்றப்பட்டது. இலங்கையிலும் 1858-ல் 1 பென்னி யாக விதிக்கப்பட்டது. இவ்வாறு முத்திரைச்செலவு குறைக் கப்பட்டதால் தபால் போக்குவரத்து அதிகரித்ததோடு பொது வாக வியாபாரத் தொடர்பும் வியாபாரமுமே விருத்தியடைந்த தென்று கூறலாம்.
1858-ல் தான் மின்சார தந்திமூலம் தந்தி அனுப்பும் முறை யும் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டது. அதன் பயணுய் தீவி லுள்ள முக்கியமான பட்டினங்கள் ஒன்ருே டொன்று தொடர்பு வைத்துக்கொண்டது மாத்திர மின்றி இந்தியாவுடனும் இங்கி லாந்துடனுமே தந்தித்தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. 1837-ல் இங்கிலாந்தில் குக் என்பவரும் வீட்ஸ்டன் என்பவரும் மின்-காந் தத்தந்தியைக் கண்டுபிடித்தார்கள். 1847-ல் முதல் தந்திக் கொம்பெனி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது. 11 வருடங் களின் பின்னர் கொழும்புக்கும் காலிக்குமிடையில் தந்திவசதி ஏற்படுத்தப்பட்டது. கொழும்பு ஒப்ஸர்வர் பத்திரிகை ஏற்படுத்திவந்த புறத் தபால்சேவை அத்துடன் நிறுத்தப்பட்டது. அதே வருடத்தில் கொழும்புக்கும் கண்டிக்கும் மன்னருக்குமிடை யில் தந்திவசதி ஏற்பட்டது. 1865-ல் திருக்கோணமலையும் இவ்வாறே இணைக்கப்பட்டது.
இந்தியாவில் 1854-ல் தந்திவசதிகள் செய்ய ஆரம்பித்தனர். மன்னரிலிருந்து இந்தியாவுக்கு 1859-ல் தந்தி இணைப்பு ஏற் படவே கொழும்பு, கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகியவை தந்தியால் இணைக்கப்பட்டன. அதன் பின்னர் சிறிது காலத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்குமிடையில் தரைமார்க்கமாகத் தந்தி அமைக்கப்பட்டது. 1866-ல் ரொபின்ஸன் தேசாதிபதி இலங்கையிலிருந்துகொண்டே குடியேற்றநாட்டு மந்திரியுடன் தந்திபேசினர். தரைமார்க்கமா யமைந்த தந்திவசதி திருப்தி கரமாயில்லாதபடியால் 1870-6) கடலின் கீழ் தந்திகளை இணைத்து வசதிசெய்தனர். அதன் பின்னர் இலங்கைத் தேசாதி பதி தட்டுத்தடங்கலில்லாமல் நேரே குடியேற்றநாட்டு மந்திரி யுடன் தந்திபேசிவந்தார்.

Page 68
122 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
3. நீர்ப்பாசன வசதிகளும் கிராமச் சங்கங்களும்
20 வருடமாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த நீர்ப்பாசன வசதி களை வாட் தேசாதிபதி கவனிக்கத் தொடங்கினர். நாட்டின் நீர்ப்பாசன வசதிகளை விசாரணை செய்யுமாறு 1845-ல் ஒரு காரியசபை நியமிக்கப்பட்டது. பழைய குளங்களைக் சீர்திருத்த வேண்டுமென்றும் ரோட்டுச் சட்டத்தின்மூலம் கிடைக்கக்கூடிய தொழிலாளரை இந்த வேலைக்கும் உபய்ோகிக்கலாமென்றும் இந்தக் காரியசபை சிபார்சுசெய்தது. இலங்கையின் நிலையைச் சரியாய் அறிந்துகொள்ள முடியாத குடியேற்றநாட்டு மந்திரி அக்கால பிரித்தானிய அரசியற் கொள்கைகளினல் பாதிக்கப் பட்டு, போட்டமுதலுக்கு ஏற்ற பலன் கிடைக்கக்கூடியதாயும் இலங்கையின் விளைவை அதிகரிக்குமெனக் காணக்கூடியதாயு மிருந்தாலொழிய நீர்பாசனத்துக்குப் பணம் அனுமதிக்க முடியா தெனக் கூறிவிட்டார். மேலும் ரோட்டுச்சட்டத்தினல் திரட் டக்கூடிய தொழிலாளரை இந்த வேலைக்கு உபயோகிப்பதையும் ஆட்சேபித்தார்.
வியாபார மந்தம் ஏற்பட்ட காரணமாக நீர்ப்பாசன வேலை களைப் புனருத்தாரணஞ்செய்ய டொரிங்டனுக்கோ, அண்டர் ஸனுக்கோ முடியவில்லை. வாட் தேசாதிபதி வந்த காலத்தில் நிலைமை விருத்தியடைந்திருந்தது. நீர்ப்பாசன வசதிகள் சீரழிந்துகிடப்பதை அரசாங்க உத்தியோகத் தரும், பொது சனங்களும் வாட் தேசாதிபதிக்கெடுத்துக் காட்டினர். நாட் டின் விளைவை அதிகரிப்பதற்கு வாட் வகுத்த திட்டத்தில் குளங் களையும் நீர்ப்பாசன வசதிகளையும் திருத்தும் வேலையையும் சேர்த்திருந்தார். குடியேற்றநாட்டு மந்திரியின் கட்டளைப்படி மட்டக்களப்புப் பகுதியிலுள்ள இரக்காமம், அம்பாரை ஆகிய குளங்களைப் புதுப்பித்தார். தென் மாகாணத்திலுள்ள கிறுவா பற்றைச் சேர்ந்த கிரமா, ஊருபொக்கை ஆகிய குளங்களையும் புனருத்தாரணஞ் செய்தார். நாளடைவில் இவை பெரிய பய னைக் கொடுத்தன. இரக்காமம், அம்பாரை ஆகிய குளங்களுக் கணித்தாயுள்ள விளை நிலங்களை விற்பனை செய்ததாலேயே இவற்றைப் புதுப்பிக்கச் செலவுசெய்த பணம் தேறிவிட்டது. 1864-ல் மட்டக்க்ளப்பு பகுதியில் 77,000 ஏக்கர் நிலம் நெற் சாகுபடிக் குட்படுத்தப்பட்டது.
பெரிய குளங்களைப் புதுப்பிப்பதோடு மாத்திரம் வாட் நின்றுவிடவில்லை. வதுளை, மாத்தளை ஆகிய பகுதிகளிலும். மத்திய மாகாணத்தில் வேறு சில பகுதிகளிலும் உள்ள பல

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 123
சிறிய குளங்களையும் புதுப்பித்தார். சிவில் என்ஜினியரின் பகுதி யைச் சேர்ந்த தேர்ச்சிபெற்ற சில உத்தியோகத்தர் இக் குளங்களில் முக்கியமானவற்றை மேற்பார்வை செய்தனர். அர சாங்க மேற்பார்வையில் கிராமவாசிகள் கூலிபெருது வேலை செய்து வேறு சில குளங்களைப் புதுப்பித்தார்கள். ஒரு பகுதிச் செலவை அரசாங்கம் அளித்தது.
பொதுவேலைகளுக்குப் பணம் செலவுசெய்வதை மக்கார்தி குறைத்தார். நீர்ப்பாசன வேலைக்கு அவர் ஒன்றுஞ் செய்ய வில்லை. வாட்டைப் போலவே ரொபின்ஸனும் குளங்களைப் புதுப்பித்தார். 1866-ல் நீர்ப்பாசன வசதிகளைப்பற்றி அறிவிக் குமாறு ஒரு விசாரணைச்சபையை ஏற்படுத்தினர். நாட்டின் நீர்ப்பாசனமுறையை அபிவிருத்தி செய்து நெற்சாகுபடியைப் பெருக்க வேண்டுமென இச் சபை அங்கீகரித்தது. சிறிய நீர்ப் பாசன வேலைகளைத் திருத்துவதற்காகக் கொடுத்த பண உதவி யோடு 1867-ல் அரசாங்கம் 10 வருடத்தில் திருப்பிக்கொடுக்கக் கூடியவிதமாய் கிராமவாசிகளுக்குக் கடன் உதவவும் முன்வந் தது. தென் மாகாணத்திலும் நெற்சாகுபடியினல் நயம் பெற்று வந்த கிராமவாசிகள் அரசாங்கத்திடம் கடன் பெற்றர்கள்.
நீர்ப்பாசன வசதிகளை அபிவிருத்தி செய்ததனல் பெரும் பலன் விளைந்தது. ரோட்டுகள் போட்டதனலும் தோட்டங் களைத் திறந்த தனலும் ஏற்பட்ட அவ்வளவு பொருளாதார மாற்றங்களை இது கொண்டுவராவிட்டாலும் விசேஷமாக வரண்ட பிரதேசத்திலுள்ள சில பகுதிகளை விருத்திசெய்ய உதவிற்று. அதனுல் இப்பகுதியிலுள்ளவர்கள் தமது வாழ்க்கை நிலையை உயர்த்தக்கூடியதாயுமிருந்தது. குளங்களைத் திருத்தி விவசாயத்தை விருத்திபண்ணியது பழைய ஆட்சிமுறையைப் புதுப்பித்ததுபோலிருந்தது. இலங்கை அரசியல் முறையைத் தற்காலத்துக்கேற்றவாறு அமைக்கும் அலுவல் நடைபெற்றுக் கொண்டே வந்தது. பிரித்தானிய ஆட்சிமுறையில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்கவாறு காலத்துக்குக் காலம் இலங்கை ஆட்சிமுறையிலும் மாற்றங்களேற்படுத்தப்பட்டன. இலங்கை பல வகைகளில் இங்கிலாந்திலும் பார்க்க வேறுபாடுடையதா யிருந்தது. எனவே பிரித்தானிய ஆட்சி முறைகளை அப்படியே இலங்கையில் புகுத்துவது எப்பொழுதும் முடியாத காரியமென் பதை இப்பொழுது அரசாங்கம் முற்ரு ய் உணர்ந்தது. இலங் கைக்கு ஏற்ற பழைய சுதேச ஆட்சிமுறைகளைப் புதுப்பிப்பதற் கான நடவடிக்கைகள் சில எடுத்துக்கொள்ளப்பட்டன.
இவ்வாறன மாற்றங்களுள் முக்கியமானது கிராமச் சங்கங் களை ஏற்படுத்தியமையாகும். கிராமப் பொருளாதார அமைப் பில் பழைய குளங்கள் எவ்வகையில் உதவிபுரிந்தனவென்பது

Page 69
星24 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
அவை புதுப்பிக்கப்பட்டபின் அரசாங்கத்துக்குத் தெரியவந்தது. நீர்ப்பாசனத்தில் அதிக சிரத்தை யெடுத்துவந்த பெய்லி குளங்களையும் கால்வாய்களையும் பழுதுபடாமல் வைத்திருப்ப தற்கும், விவசாயத்தை விருத்திசெய்வதற்கும் பழைய ராச காரியமுறையை அனுஷ்டிப்பது நல்லதெனக் கூறினர். நீர்ப் பாசனம் பயிர்ச்செய்கை விஷயமாக பழைய தேசவழமையை
மறுபடியும் ஏற்றுக்கொள்வது நல்லதென்றும் கிராமச் சங்கங்
களுக்கு அதிகாரங் கொடுத்தால் அவை அவற்றை மேற்பார்வை செய்யுமென்றும், குற்றம் செய்வோருக்கு 2 பவுணுக்கு அதிகப் படாமல் தண்டனை விதிக்கப்படலாமென்றும், இச்சங்கங்களுக்கு அரசாங்க ஏஜெண்டோ, உதவி ஏஜெண்டோ தலைமைவகிக்கலா மென்றுங் கூறினர். வாட் இந்த யோசனையை அங்கீகரித்து 1856-ல் கிராமச் சங்கச் சட்டத்தை நிறைவேற்றினர். இக் கிராமச் சங்கங்கள் மிகுந்த பயனுடையனவென்று எல்லா அரசாங்க ஏஜெண்டுகளும் ஒப்புக்கொண்டனர். கிராமச் சனங் கள் இப்பொழுதும் சேவை மானிய முறைப்படியோ அதற்கும் முந்திய புராதன முறைப்படியோ வாழ்க்கை நடத்துவதால் புதிய ஆட்சிமுறைகள் அவர்களுக்கு உதவா தென்றும், கிராமச் சங்க முறைகளே ஏற்றனவென்றும் பொது வாக ஒத்துக் கொள்ளப்பட்டது.
1871-ல் கிராமச் சங்கங்களின் அதிகாரத்தை ரொபின்சன் அதிகரித்தார். கிராமச் சங்கங்கள் குறைந்ததன் பயணுகக் கோடுகளில் சிறு வழக்குகள் மிகப் பெருகின என்பது முன்னரே எடுத்துக் காட்டப்பட்டது. 1869-ல் 168, 426 பேருக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டது. இவர்களில் 112, 301 பேர் விசா ரணையின்றியே விடுதலை செய்யப்பட்டார்கள். குற்றஞ்சாட்டப் பட்டவர்களில் பத்தில் ஒருபகுதியினரே குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்டனர். இதனல் கிராமவாசிகளுக்கு அதிகப் பணச்செலவு ஏற்பட்டது. அவர்கள் கோடுகளோடு திரிய, வயல் அழிந்துபோயிற்று. ፵፩
இந்த நிலைமையை ஒழிக்கும் நோக்கத்துடன் கிராமவாசிகள் சட்டஞ் செய்யவேண்டுமென அதிகாரங்கொடுத்தார். விவ சாயம், மீன்பிடித்தொழில், கிராமப்பாடசாலை, கிராம வீதிகள்
ஆகியவை சிம்பந்தமாகக் கிராமவாசிகள் அனுசரிக்கவேண்டிய
விதிகளை ஏற்படுத்துமாறு ரொபின்சன் கேட்டுக்கொண்டார். கிராமத்திலுள்ள பிரதானமான கமக்காரரில் 5 பேரைத் திருவுளச்சீட்டுப் போட்டுப் பொறுக்கியெடுத்து, அந்தக்கிரா மத்தின் அதிகாரியைத் தலைவராக நியமித்தார்கள். இதுவே பஞ்சாயத்து அல்லது கிராமச்சங்கமென வழங்கலாயிற்று. மேலே கூறிய கிராமச் சட்டங்களை அமுல் நடத்த இந்தப்

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 125
பஞ்சாயத்துக்கு அதிகாரமுண்டு. கிராமவாசிகள் பழைய வழக் கங்களுக்கு மாறக நடந்தால், அல்லது சிறிய கிரிமினல் குற்றங் களையோ சிவில் குற்றங்களையோ செய்தால் அவற்றை விசா ரித்து 2 பவுணுக்கு அதிகப்படாமல் தண்டனை விதிக்கப் பஞ்சா யத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. விசாரணைகள் சுருக்க மாக நடத்தப்பட்டன. நியாயவாதிகள் இ ல் லை. அப்பீல் கேட்கவேண்டுமானல் அரசாங்க ஏஜெண்டுக்கு விண்ணப்பஞ் செய்யலாம். m
கிராமச் சங்கங்களால் மிகுந்த நன்மை ஏற்பட்டது. ஆயிரக் கணக்கான சிவில் குற்றங்களையும் கிரிமினல் குற்றங்களையும் இவை திருப்திகரமாகத் தீர்த்துவைத்தன. இவை கொடுத்த தீர்ப்புக்கு எதிராக மிகச்சில விண்ணப்பங்களே உண்டாயின. வழக்குப்போடும் வழக்கம் குறைந்தது. சில கிராமங்களில் பல நன்மைகளேற்பட்டன. பாதைகளைத் துப்புரவாக்கி வைத் திருந்தார்கள். கிணறுகளைச்சுற்றிப் பாதுகாப்பு ஏற்படுத்தினர் கள். பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டன. சுடுகாடுகள் புறம்பாக ஒதுக்கப்பட்டன. காடு வளர்ந்துபோகாமல் அவை பாதுகாக் கப்பட்டன. கால்நடைகள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றின் களவு எவ்வளவோ குறைந்துபோயிற்று.
4. நிர்வாகச் சீர்திருத்தம்
அரசியல் நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்கும் தோட்டத் துரைமாரும் வர்த்தகர்களும் கோரிய விஷயங்களுக் கேற்றதாக அதை அமைப்பதற்கும் இக்காலத்தில் சில நட வடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாட்டாளிகளின் நிலைமையை அபிவிருத்தி செய்யவும் அவர்களின் நன்மைக்கேற்றபடி அரசியல் முறையைத் திருத்தவும் சில முயற்சிகள் செய்யப் பட்டன. 1845-ல் சிவில் சேவிளRல் ஏற்படுத்தப்பட்ட மாற்றங் கள் அதிக பலனளிக்கக்கூடியனவா யிருந்ததால் மேலும் மாற் றங்கள் செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. சிவில் சேவிஸ்குழு என ஒரு சபையினர், சிவில் சேவிலில் சேர விரும்பு வோருக்கு ஒரு பரீட்சை நடத்தி அதில் முதற்தரமாகச் சித்தி யடைவோரையே தெரிந்தெடுத்தது. இதுகாறும் சில குடும் பங்களிலிருந்து சிவில் சேவிஸ் உத்தியோகத்தருக்கு ஆட்களைப் பொறுக்கி எடுத்தார்கள். ஆனல், புதிய பரீட்சை முறையினல் மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்களும் சிவில் சேவிஸில் பிரவே சிக்க வழிபிறந்தது. இப்பரீட்சை எடுக்க விரும்புவோர் சர்வ கலாசாலைப் பட்டதாரிகளாகவும், பல துறை சம்பந்தப்பட்ட கல்வியிலும் பரிச்சயமுடையவர்களாகவு மிருக்கவேண்டிய அவ சியம் ஏற்பட்டது. ஏனெனில் அத்தகைய அறிவுபடைத்தவர்

Page 70
126 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
கள்தான் இப்பரீட்சைக்குக் குறிக்கப்பட்டிருக்கும் பாடங்களை எடுக்கக்கூடியவர்களா யிருப்பார்கள். இலங்கையில் சிவில் சேவிஸ்காரரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் அதற்கேற்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. இதுகாறும் நியமிக்கப்பட்டு வந்தவர்கள் 1863-ம் ஆண்டு துவக்கம் போட்டியில்லாத ஒரு பரீட்சையில் தேறவேண்டுமென விதிக்கப்பட்டது. I 8 7 0 - Lo வருடம் துவக்கம் இங்கிலாந்தில் நடத்தப்படுவது போலவே இலங்கையிலும் சிவில்சேவிஸ் பரீட்சை நடத்தப்பட்டது. இங்கி லாந்தில் பரீட்சையில் தேறி இலங்கைக்கு வருவோர் சிங்களத் திலும் தமிழிலும் போதிய அறிவு பெறவேண்டுமென அதற் குரிய நடவடிக்கைகளும் 1867-ல் எடுத்துக்கொள்ளப்பட்டன.
மாகாண ஆட்சி சம்பந்தமாக 1833-ன் பின்னர் ஏற்படுத் தப்பட்ட சீர்திருத்தங்கள் அவ்வாறே தொடர்ந்து நடைபெற்று வந்தன. உப்புத்தொழில் நடைபெற்றுவந்தபடியால் புத்த ளத்தை வடமேல் மாகாணத்தின் தலைநகராக்கினர்கள். கோப்பித் தோட்டங்கள் சம்பந்தப்பட்ட வரையில் முக்கிய மானதும், மத்திய தானத்தை வகிப்பதுமான குருணுக்கல் 1856-ல் அம்மாகாணத்தின் தலைநகராக்கப்பட்டது. புத்தளத் தில் உதவி அரசாங்க ஏஜெண்டுக்காரியாலயம் ஒன்று நிறுவப் பட்டது. மிகச்சிறந்த துறைமுகத்தைக் கொண்டிருந்தபடியால் திருக்கோணமலை கீழ்மாகாணத்தின் தலைநகராயிருந்துவந்தது. ஆனல், அதன் முக்கியத்துவம் குறைந்து வரவே, விவசாயம் பெருக்கமுடையதும் குடிசனத்தொகை அதிகமுடையதுமான மட்டக்களப்பு 1870-ல் கீழ்மாகாணத்துக்குத் தலைநகரமாக்கப் பட்டது. திருக்கோணமலையில் உதவி அரசாங்க ஏஜெண்டின் காரியாலயமொன்று நிறுவப்பட்டது.
தலைமைக்காரரைப்பற்றி அரசாங்கம் கொண்ட கொள்கை சிறிது சிறிதாக மாறவே நிர்வாகம் அபிவிருத்தியடைந்துவந்தது. தலைமைக்காரரிடம் நம்பிக்கைவையாமல் ஆட்சிசெய்வது முடி யாத காரியமென்று 1848-ல் நடந்த கலகத்துக்கு பின்னர் அரசாங் கம் உணர்ந்தது. அதிகாரிகளும் பிரித்தானிய ஆட்சியை எதிர்ப் பதை விட்டுவிட்டார்கள். எனவே அரசாங்கம் அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெறுவதற்காக அவர்கள் இழந்த சில அதி காரங்களை மீட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டது. 1874-6) தலைமைக்காரர் கிராமச் சபைகளின் தலைவர்களாக்கப்பட்டனர். தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறிய கருமங்கட்கு எல்லாம் அவர்கள் பொறுப்புள்ளவர்களானர்கள். பழைய காலத்தில் இருந்த அதிகாரத்தில் சிலவற்றை மீட்டுக்கொண்டதோடு அரசாங்க ஏஜெண்டுகள் போலச் சனங்களிடத்து நேரடியான தொடர்பை ஏற்படுத்தியுங்கொண்டனர்.

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 127
மாத்தளை, இரத்தினபுரி, குருனுக்கல் போன்ற தோட்ட முள்ள முக்கியமான இடங்களில் நீதிபரிபாலன விஷயங்களை, வரிவசூலிக்கும் கடமைகளிலிருந்து பிரிப்பதற்கு 1860-ல் நட வடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அனுராதபுரம், மன்னர், முல்லைத்தீவு, திருக்கோணமலை, புத்தளம், அம்பாந் தோட்டை, நுவரெலியா போன்ற பிற்போக்கானவையும் பிரிட் டிஷ் தொழில் முயற்சிகள் இல்லாதவையுமான நகரங்களில் மேலே கூறிய இரு கடமைகளும் ஒன்ருக இணைக்கப்பட்டிருந்தன.
ஏழைகளின் வசதியைமுன்னிட்டு நீதிபரிபாலன முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. டிஸ்திரிக் கோடுகளிலுள்ள வேலை நெருக்கத்தைக் குறைப்பதற்காகவும், வழக்குகளை விரை வாய் விசாரணைசெய்து நீதிவழங்குவதற்காகவும், சிறிய குற் றங்களை விசாரணை செய்வதற்காகவும் 1844-ல் போலீஸ் கோடு கள் நிறுவப்பட்டன. சிறிய சிவில் பிணக்குகளைத் தீர்ப்பதற் காக 1848-ல் சின்னக்கோடுகள் ஏற்படுத்தப்பட்டன. காணி வழக்குகளை விசாரித்து நியாயம் வழங்குவதற்கும் இந்தக்கோடு களுக்கு 1852-ல் அதிகாரம் கொடுக்கப்பட்டது. பணச்செலவு அதிகமின்றி விரைவில் தீர்ப்புக் கிடைக்காதிருந்தபடியால் காணி வழக்குச் சம்பந்தமாகக் கலகங்களும் அடிபிடி சண்டை களும் ஏற்பட்டுவந்தன. சர். ஹென்ரி வார்ட் (1855-1860) காலத்தில் ஊர்ஊராகச் சுற்றும் கோடுகள் ஏற்படுத்தப்பட்டன. வழக்காளிகள் சில சமயங்களில் வெகுதூரங்களிலுள்ள கோடு களுக்குப் போகவேண்டியிருந்ததால் அவர்களுடைய வசதியை முன்னிட்டு நீதிபரிபாலனப்பிரிவுகள் மாற்றி அமைக்கப்பட்டன.
இலங்கைச் சட்டங்களை இங்கிலாந்துச் சட்டங்களோடு இணைக்கும் வேலையும் இக்காலத்தில் நடைபெற்றது. இலங்கை ஐரோப்பிய வர்த்தகர் சங்கத்தார் சிபார்சுசெய்ததன் பயனுக கப்பல், போக்குவரத்து கடற்கரை சம்பந்தமான விஷயங்களி லும், பணச் செக்கு, கடன் நோட்டு முதலிய விஷயங்களிலும் இங்கிலாந்துச் சட்டமே 1852-ல் இலங்கையில் அனுசரிக்கப்பட் L- l = பங்கு முயற்சி, கூட்டுவியாபாரக் கம்பெனி, கூட்டு நிர்வாகம், வங்கிமுயற்சி, வியாபாரிகளதும், ஏஜெண்டுகளதும், சீவிய இன்ஷஸூரன்ஸ், தீயால் வரும் நஷ்டத்துக்கு இன்ஷஸூரன்ஸ் இவைபோன்ற விஷயங்களில் இங்கிலாந்துச் சட்டங்கள் இலங் கைச்சட்டங்களுடன் இணைக்கப்பட்டன. கண்டிராச்சியத்தில் வழங்கும் சட்டங்களைக் கடற்கரைப் பிரதேசச் சட்டங்களுடன் இணைத்து எங்கும் ஒரே மாதிரியான சட்டத்தை நடத்தவேண்டு மென 1852-ல் தீர்மானிக்கப்பட்டது. கண்டிச் சட்டமோ

Page 71
28 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பழைய சிங்களச் சட்டமோ தீர்க்கமுடியாத பிரச்னைகள் ரோமன் டச்சுச் சட்டப்பிரகாரம் தீர்ப்பதற்காக அந்தச் சட்டங்கள் கண்டி மாகாணங்களிலும் புகுத்தப்பட்டன.
5. சட்டசபையும் ஸ்தலஸ்தாபனச் சபைகளும்
வியாபாரிகளும், தோட்ட முதலாளிகளும், ருேட்டுகளும், ரயில் பாதைகளும் திருப்திகரமாயில்லாததை முன்னிட்டுக் கிளர்ச்சி செய்தார்கள். சட்டசபையைத் திருத்த வேண்டு மென்ற கிளர்ச்சி இதன் பயனகவே உண்டானது. அரசாங் கத்தில் அதிக பங்கு எடுக்க வேண்டியது அவசியமென்றும் அதற்குச் சட்ட சபையில் உள்ள உத்தியோகப்பற்றற்றவர்கள் தொகை மற்றவர்களைவிட மேலாக இருக்கவேண்டுமென்றும் முதல்முதலாக 1848 துவக்கம் 1855-ம் ஆண்டுவரை கோரப் பட்டது. 1847-ல் நடந்த கோப்பிவியாபார நெருக்கடியின் பின்னர் அரசாங்கம் தனது செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ருேட்டுப்போடவும் பழுது பார்க்கவும் அரசாங்கம் உதவிய பணம் போதா தென வியாபாரி களும் தோட்ட முதலாளிகளும் முணுமுணுத்தார்கள். கோப்பி வியாபாரம் அபிவிருத்தியடைந்ததும் அரசாங்கம் போக்குவரத் துச் சாதனங்கள் ஏற்படுத்துவதில் அதிக பணத்தைச் செலவு செய்தது. உடனே கிளர்ச்சி குன்றிவிட்டது. கொழும்பிலி ருந்து கண்டிக்கு ரயில் பாதை போடப்போவதாக அரசாங்கம் போட்ட திட்டம் நிற்ைவேற்றப்படாததால் ஆங்கிலேயரும் பரங்கிக்காரரும் சட்டசபை அதிக அதிகாரம் பெற வேண்டு மென இரண்டாவது முறையாக 1859-ல் கிளர்ச்சிசெய்தனர்.
ஆனல் இக்கோரிக்கைகள் முந்திய அத்தியாயத்தில் குறிப் பிட்ட காரணங்களால் மறுபடியும் நிராகரிக்கப்பட்டன. இலங் கையில் பொறுப்பாட்சியை ஏற்படுத்தினுல் இங்குள்ள ஏழா யிரமோ எண்ணுயிரமோ ஐரோப்பியரும் பரங்கிகளும் நிர்வாக சபையைத் தங்கள் கையில் அகப்படுத்திக்கொள்ளுவார்கள். இருபதுலட்சம் சிங்களர், முஸ்லிம்கள், தமிழர் ஆகியோருடைய நல உரிமைகள் பிரதிநிதிகளில்லாமையால் பாதிக்கப்படும் என் றும் கூறப்பட்டது. இருந்தும் இக்கிளர்ச்சியின் பயணுக ஒரு நன்மை ஏற்பட்டது. இதுவரை அரசாங்கமே சட்டசபையில் எல்லா மசோதாக்களையும் கொண்டுவந்தது. ஆனல் இப்போ உத்தியோகப்பற்றற்றவர்களும் மசோதாக்களைக் கொண்டு வரலாமென்று உரிமை வழங்கப்பட்டது.
1865-ல் ராணுவச்செலவுகள் சம்பந்தமாக உத்தியோகப் பற்றற்ற அங்கத்தினர் கொண்ட தீர்மானம் தோல்வியுறவே, சபையில் தங்களுடைய தொகை அதிகமாயிருக்கவேண்டுமென

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 129
மறுபடியும் அவர்கள் கோரிக்கைவிடுத்தார்கள். 1838ஆண்டு துவக்கம் இலங்கையின் ராணுவ பரிபாலனத்துக்காக வருடாவருடம் இலங்கையின் வருமானத்திலிருந்து 24,000 பவுண் ஒதுக்கப்பட்டுவந்தது. பலகாலமாக இலங்கை வருமானம் செலவிலும் பார்க்க அதிகரித்துவந்ததால் இந்தச்செலவை இலங்கை அரசாங்கம் கொடுத்துவிடவேண்டுமென பிரித்தா னிய ஏகாதிபத்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டது 1838-ல் புதிதாகத் திறக்கப்பட்ட தோட்டங்களுக்கு ரோட்டுப்போட் அதிக பணம் தேவைப்பட்டதால் இந்த ராணுவச்செலவை அகற்றிவிடத் தேசாதிபதியும் சட்டசபையினரும் பலபடி முயன் றனர். ஆனல் சித்தியடையவில்லை. நாளடைவில் இராணுவச் செலவு கூடிக்கொண்டே வந்தது. 1864-ல் இலங்கையின் ஒருவருடச்செலவில் அரைப்பங்கான 200,000 பவுண் இராணு வச்செலவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கோப்பி வியாபாரம் விருத்தியடையவே இலங்கையின் வருமானம் மறுபடியும் அதி கரித்தது. கொழும்பு-கண்டி ரயில் பாதையைப் போடுவதற்காக அரசாங்கம் மற்றவகையான செலவுகளில் சிக்கனஞ்செய்தது. இதன் பயனுக 1864-ல் செலவு போக 100,000 பவுண் வருமா னத்தில் மிச்சமுண்டானது. பிரித்தானிய பாராளுமன்றத் தின் பொதுமக்கள் சபையிலிருந்து தெரியப்பட்ட ஒரு காரிய சபையின் சிபார்சின்படி இலங்கை ராணுவச் செலவுக்காக 135,000 பவுண் கொடுக்க வேண்டுமென்றும் மேலே கூறிய முழுத்தொகை வரும்வரை 10,000 பவுண் வருடாவருடம் கூட்டிக்கொடுக்க வேண்டுமென்றும் விதிக்கப்பட்டது. இந்த இராணுவச் செலவைத் தடையின்றிக் கொடுக்க ஒரு விசேஷச் சட்டம் இயற்றினல் அரசாங்க வரவுசெலவில் பூரணமாகத் தலையிடச் சட்டசபைக்கு உரிமை கொடுப்பதாகவும் குடியேற்ற நாட்டுமந்திரி வாக்களித்தார். இந்த இராணுவச் செலவுத் தொகை எவ்வளவா யிருக்கவேண்டுமென்பதைச் சட்டசபை யின் உத்தியோக அங்கத்தவர்களும் உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்களுமாகச் சேர்ந்த ஒரு காரியசபை நிச்சயிக்க வேண்டுமெனவும் விதிக்கப்பட்டது.
இராணுவச்செலவைக் கூட்டுவதை உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் எதிர்த்தார்கள். இலங்கையில் நிறுவப்பட்டி ருக்கும் இராணுவத்தின் பெரும் பகுதி ஏகாதிபத்தியத்தின் தேவைக்காகவே வைக்கப்பட்டிருக்கிறதென்றும், இலங்கையின் பாதுகாப்புக்காக வல்லவென்றும் அவர்கள் எடுத்துக்காட்டினர் கள். ஆனல் இராணுவச்செலவுக்கு நியாயமான ஒரு தொகையை அனுமதிக்கலாமென்றும், அத் தொகை இவ்வளவென நிர் ணயிப்பது சட்டசபையுடைய வேலையேயன்றிக் குடியேற்ற

Page 72
130 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
நாட்டுமந்திரியுடைய கடமையல்லவென்றும் 1848 லேயே இந்த உரிமை சட்டசபைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் எடுத் துக்காட்டப்பட்டது. ஆனல் உத்தியோக அங்கத்தவரின் ஆதர வுடன் அரசாங்கம் இராணுவச்செலவை அனுமதிக்கவே உத்தி யோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் ஒருசேரப் பதவியை ராஜிநா மாச்செய்துவிட்டுச் சட்டசபையினின்று வெளியேறி அரசாங்கத் துடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்.*
ஆனல் குற்றம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற அங்கத்த வரைச் சார்ந்ததே. இராணுவ நிர்வாகம் உள்ளூர் அரசியல் நிர்வாகம் இவற்றுக்குத் தேவையான செலவுப்பணத்தை பற்றி வாதியாமல் மற்றச் செலவுகளைப்பற்றி மாத்திரம் விவாதிக்கவே உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவருக்கு 1839-ல் உரிமை கொடுக் கப்பட்டிருந்தது. இது மேலே எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. வரவுசெலவைக் கட்டுப்படுத்தச் சட்டசபைக்கு உரிமையுண் டென்பதை 1848-ல் குடியேற்றநாட்டுமந்திரி அனுமதித்தார். சிவில், இராணுவமாகிய இரண்டுக்குந் தேவையான நிரந்தரச் செலவுகளை அனுமதிக்க ஒரு விசேஷச் சட்டம் செய்தபின்னர் தான் இந்த உரிமை சட்டசபைவசம் விடப்படுமென்பதையும் அவர் தேசாதிபதிக்கு எடுத்துக்காட்டியிருந்தார். சிவில் நிர் வாகச் செலவுகளை அனுமதித்து நிரந்தர நிர்வாகச் சட்டம் என ஒரு சட்டம் 1858-ல் இயற்றப்பட்டது. ஆனல் இராணுவச் செலவையும் அவ்வாறு அனுமதிக்கச் சட்டம் செய்யப்பட வில்லை. உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர் ராஜினமாச்செய்த தற்கு வேறு காரணங்களிருந்தன. அரசாங்கம் ரோட்டுப் பரி பாலன விஷயத்தில் காட்டிய அசிரத்தை 1861-ம் ஆண்டு துவக்கம் ஐரோப்பியருக்கு அதிருப்தியைக் கொடுத்துவந்தது. செலவு போக எஞ்சிய வருமானத்தை ரோட்டுப்போடுவதற்குச் செலவுசெய்ய வேண்டும் அல்லது வரிகளைக் குறைத்துவிட வேண்டுமென ஐரோப்பியர் கேட்டுக்கொண்டே வந்தார்கள். அரசாங்க உத்தியோகங்களில் பறங்கிகளுக்குக் கொடுக்கப்பட்டு வந்த பங்கு அவர்களிடையே அதிருப்தியை உண்டுபண்ணிக் கொண்டே வந்தது.
1865-ல் ஐரோப்பியரும், பறங்கிகளுமாகச் சேர்ந்து சட்ட சபையில் உத்தியோகப்பற்றற்றவர் தொகையை அதிகரிப்ப தற்காக இலங்கைச் சங்கம் என ஒரு சங்கத்தை ஏற்படுத்தினர். இதற்காக இலங்கையிலும் இங்கிலாந்திலும் இச்சங்கம் கிளர்ச்சி நடத்திவந்தது. ஆணுல் அதன் கோரிக்கைகளைக் குடியேற்ற
* இவ்வாறு ராஜிநாமாச்செய்தவர்கள் பெயர் பின்வருமாறு: வி. ஏ. லோரன்ஸ், ஜோர்ஜ் வால், டப்ளியு. தொம்ஸன், ஜேம்ஸ் டி அல்விஸ், ஜே. எச். ஈட்டன்.

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 131
நாட்டுமந்திரி நிராகரித்துவிட்டார். நாட்டில் வியாபாரம் பெரு கிச் செல்வம் கொழிக்கத் துவங்கவே ரோட்டுகளை அரசாங்கம் அமைக்க ஆரம்பித்தது. அதனேடு அக் கிளர்ச்சியும் குன்றி விட்டது. இலங்கை இராணுவப் பாதுகாப்புக்கு எவ்வளவு தொகையைச் செலவுபண்ணவேண்டுமெனச் சிபார்சு செய்யு மாறு ஒரு இராணுவ விசாரணைச்சபை ஏற்படுத்தப்பட்டது. 1867-ல் அதன் சிபார்சுகள் அங்கீகரிக்கப்பட்டன. 160,000 பவுண் கொடுக்கவேண்டுமென ஒரு விசேஷச் சட்டம் இயற்றப் பட்டது. அதன் பின்னர் அரசாங்க வரவுசெலவில் தலையிடச் சட் டசபைக்குக் குடியேற்றநாட்டுமந்திரி பூரண உரிமையளித்தார்.
இலங்கைச் சனங்கள் கேளாதிருக்கவே சட்டசபை ஸ்தாபிக் கப்பட்டதுபோல், அவர் களு  ைடய கோரிக்கையில்லாமலே ஸ்தலஸ்தாபனங்களும் அமைக்கப்பட்டன. நகரங்களில் நெரு க்கமும், சுகாதார முறையற்ற சீவியமுமே தொற்று வியாதி கட்குக் கால் என்பதை பிரித்தானிய மகாசனங்கள் உணரத் துவங்கினர்கள். நகர சு கா தா ர ம் அரசாங்கத்தின்மேற் பொறுத்த ஒரு கடமை என்பதையும் உணர்ந்தார்கள். 1848-ல் பிரித்தானிய பாராளுமன்றம் பொதுச் சுகாதாரச் சட்டமென ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதன் பிரகாரம் பொதுச் சுகாதார சங்கமொன்று ஸ்தாபிக்கப்பட்டது. 1853-ல் இலங் கையிலே அம்மை நோய் பரவிற்று. நகரங்களில் சுகாதார பட்டின சுகாதார சங்கங்களை ஏற்படுத்திற்று.
பிரித்தானிய ஆட்சி ஆரம்பமாவதற்கு முன் இலங்கையில் சில நகரங்களேயிருந்தன. குடிசனத்தொகையும் குறைவாகவே யிருந்தது. தோட்டங்களுண்டானதாலும், வியாபாரப் போக்கு வரத்து முதலியன ஏற்பட்டதாலும் கொழும்பு, கண்டி, காலி போன்ற நகரங்களும், தோட்டப்பகுதிகளில் சிறிய நகரங்களும் தோன்றின. அரசாங்கத் தலைமைக் காரியாலயம் கொழும்பி லிருந்திபடியாலும், இலங்கைப் பொருள்கள் ஏற்றுமதியாவதற் குக் கொழும்பே பிரதானமான துறைமுகமாயிருந்தபடியாலும் அது முக்கியமான நகரமாயிற்று. கொழும்பு கண்டி ரோட்டு போடப்பட்ட பின் தோட்டப்பகுதிகளின் நடுவேயமைந்த கண்டி, பொருள்களை, விநியோகஞ் செய்வதற்கு ஒரு மத்திய ஸ்தல மாயிற்று. ஆஸ்திரேலியா, தூரகிழக்கு நாடுகள் ஆகிய தேசங் களுக்குச் செல்லும், கப்பல்களும் அங்கிருந்து திரும்பும் கப்பல் களும் காலியில் வந்து தங்கிச் சென்றபடியால் அதுவும் முக்கிய மான நகரமாயிற்று.
இலங்கையின் முக்கியமான நகரங்களில் நகரசபைகளை ஏற் படுத்தவேண்டுமென 1865-ல் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட் டது. போர்த்துக்கேயர் காலத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு
"E-س-401

Page 73
五32 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
குழுவினர் கொழும்பு நகர நிர்வாகத்தை நடத்திவந்தார்கள். போர்த்துக்கேயருடைய " சிடாடே “ என்ற ஸ்தாபனத்துக்கு ரிய உரிமைகளும், அந்தஸ்தும் இந்தக்குழுவுக்கு இருந்தது. பின் னர் டச்சுக்காரரின் ஆட்சியில் இந்த நிர்வாகம் மறைந்தது. ஆரம்பத்தில் கொழும்பு நகரில் ஒருவகையான நகரசபை நிர் வாகத்தை பிரித்தானியர் ஏற்படுத்தினர்கள். நகரவாசிகளிட மிருந்து வரி வசூலிக்கப்பட்டது. அந்த வரிப்பணம் ரோட்டு களைப் பாதுகாக்கவும் வீதிகளில் வெளிச்சம் ஏற்றவும் உப யோகிக்கப்பட்டது. நகரங்களில் சுகாதார நிலைமையை அபி விருத்திசெய்வதையும் தொற்றுநோய்களைப் பரவவிடா மற் தடுப்பதையுமே முக்கியமான நோக்கமாகக்கொண்டு ரொபின் ஸன் தேசாதிபதி இந்த நகரசபைச் சட்டத்தை நிறைவேற்றினர்.
வீதிகளைப் பழுதுபார்த்து நல்லநிலைமையில் வைத்திருக்க வும், வெளிச்சம் ஏற்றவும், தண்ணிர் வசதி ஏற்படுத்தவும், பண்டங்களின் விற்பனையை மேற்பார்வை செய்து கட்டுப்படுத் தக்கூடிய விதமாகச் சந்தைகளை ஏற்படுத்தவும், நகரின் மத்தி யில் கசாப்புக்கடைக்காரர் கால்நடைகளைக் கொன்று இறைச்சி யடியாமல் அதற்கென ஒரு இடத்தை அமைக்கவும் இன்னே ரன்ன விஷயங்களைக் கவனிக்கவும், நகரிலுள்ள பிரதானமான நகர வாசிகளுக்கு அதிகாரத்தையும் தேவையான பணத்தையும் கொடுக்கவேண்டுமென ரொபின்ஸன் எண்ணியிருந்தார். இந்தச் சட்டத்தின் பயனக 1866-ல் கொழும்பிலும் கண்டியிலும் நகர
சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. 1867-ல் காலி நகரசபையும் நிறுவப்பட்டது. சில வருடங்களில் நகரங்களின் நிலைமை அபிவிருத்தியண்டந்தது.
1865-ல் ரொபின்ஸன் இச்சட்டத்தை நிறைவேற்றிய பொழுது நகரவாசிகள் அரசியல் நிர்வாகத்தில் ஒரளவு பயிற்சி பெறவேண்டுமென்னும் நோக்கத்தையும் மனதில் வைத்திருந் தார். சட்டசபை சீர்திருத்தப்பட வேண்டுமென நடைபெற்ற கிளர்ச்சி ரொபின்ஸனையும் பாதித்திருக்கவேண்டும். ஆகவே தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பிரதிநிதிகளையும் 9 நியமன அங்கத்தின ரையுங் கொண்டு கொழும்பு நகரசபை ஸ்தாபிக்கப்பட்டது. கண்டி நகர சபையிலும் காலி நகரசபையிலும் தலைக்கு 5 தேர்தல் அங்கத்தவரும் 4 நியமன அங்கத்தவரும் இடம்பெற்றனர். கொழும்பு நகரசபைக்குத் தலைவராக ஒரு சிவில் சேவிஸ்காரர் நியமிக்கப்பட்டார். கண்டியிலும் அவ்வம் மாகாண அரசாங்க ஏஜெண்டுகளே தமது மற்றைய கடமைகளோடு நகரசபைத் தலைவராகவும் கடமையாற்றினர்கள்.

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 133
6. கல்வி
இந்திய அரசாங்கம் 1854-ல் கல்வி சம்பந்தமான ஒரு அறிக்கையை வெளிப்படுத்திற் று. அதில் மேலைத்தேசக் கல்வியை எல்லா வகுப்பாரிடையிலும் பரப்பவேண்டுமென்றும், மாகாணங்களில் கல்வி இலாகாக்களை நிறுவவேண்டுமென்றும், கல்கத்தா, பம்பாய், சென்னை போன்ற நகரங்களில் சர்வகலா சாலைகள் ஏற்படுத்தவேண்டுமென்றுங் காணப்பட்டது. அரசாங் கம் செய்யும் அரசியல் சீர்திருத்தங்களால் மக்கள் பயனடையும் விதமாக தற்கால அறிவைப் புகட்டக்கூடிய கல்வியின் அவசி யத்தை இலங்கையில் முன்போல ஒருவரும் அதிகம் உணரவில்லை. இதற்கு நான்கு காரணங்களைக்குறிப்பிடலாம். ஒன்று சிங்கள, பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவதற்கு ஆங்கிலப்பாஷை யேற்ற தல்லவெனப் பலர் எண்ணினர். இங்கிலாந்திலேயே 1870-ம் ஆண்டு வரை நாட்டின் கல்விவிருத்திக்கு அரசாங்கம் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாதபொழுது இலங்கைக் கல்வி விருத்தியில் பிரித் தானிய அரசாங்கம் சிரத்தை யெடுக்காதது ஆச்சரியமல்ல : மேலும் ஆங்கிலக் கல்வி பரவியதால் சட்டசபைச் சீர்திருத்தம் வேண்டுமெனச் சனங்கள் கோரினர்கள். இதை இலங்கை அரசாங்கம் அவ்வளவு வரவேற்கவில்லை. மேலும் அரசாங் கத்திலுள்ள கீழ் உத்தியோகங்களுக்குத் தேவையான அளவு பேரை அப்போதிருந்த ஆங்கிலப் பாடசாலைகள் தேர்ச்சி கொடுத்து வெளிப்படுத்திக்கொண்டிருந்தன.
1847-50-ல் ஏற்பட்ட வியாபார மந்தத்தின்போது கல்வி யில் அரசாங்கம் சிக்கனத்தைக் கையாண்டது. பணநிலை மாறிய பின்னரும் அதில் அதிக சீர்திருத்தஞ் செய்யப்படவில்லை. அரசாங்கத்திலும் பார்க்க மிஷனின் கீழ் அநேக பாடசாலைகளும் அதிகப்படியான மாணவர்களுமிருந்தனர். 1868-ல் அரசாங்கப் பொறுப்பில் 18 ஆங்கிலப் பாடசாலைகள்தா னிருந்தன. இங்கே 1908 மாணவர் கல்விபயின்றனர். 41 துவிபாஷா பாடசாலை களிருந்தன இங்கே 1949 மாணவர் பயின்றனர். ஆனல், 63 சுயபாஷா பாடசாலைகளை அரசாங்கம் நடத்திற்று. இவற்றில் 3624 மாணவர் பயின்றனர். 1857-ல் போதன பாடசாலைகள் மூடப்பட்டதும் பள்ளிக்கூடங்களில் கல்வி நிலை சீர்கெட்டு வந்தது. ஆங்கிலக்கல்விகூட அதே நிலைமையிற்ரு னிருந்ததென அக்காலத்து வித்தியா தரிசியான செண்டால் என்பவரின் அறிக் கைகள் கூறுகின்றன. ۔۔۔۔ ”
பாடசாலைக்கமிஷன் நாளடைவில் தனது அதிகாரத்தை யிழந்து குடியேற்றநாட்டுமந்திரிக்கு ஆலோசனை கூறும் ஒரு சபை யாகவே யிருந்துவந்தது. நாட்டின் கல்வி விருத்தி சம்பந்தமாக அது நடந்துகொண்ட தன்மையினுல் அவமதிப்புக்குள்ளானது.

Page 74
134 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பாடசாலைகளில் சமய போதனை செய்யும் விஷயமாக அது காட்டி வந்த கொள்கை மேலும் அதை அவமதிப்பிற்குள்ளாக்கியது. இந்திய கல்வி சம்பந்தமாக 1854-ல் விடுவிக்கப்பட்ட அறிக் கையில் இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு உதவி நன்கொடை கொடுக்குமாறு காணப்பட்டது. 1857-ல் கொழும் பிலிருந்த ஆங்கிலிக்கன் மதகுருவும் இலங்கையிலுள்ள கிறிஸ்த பாடசாலைகளுக்கும் அதே சலுகை காட்டப்படவேண்டுமெனக் கோரினர். சமய போதனை கட்டாயமாக்கப்படாத பட்சத்தில் இந்தக் கோரிக்கைக்கு உடன்படுவதாகச் சட்டசபை ஒப்புக் கொண்டது. அம்மாதிரி நிபந்தனைகளிருக்கக் கூடாதென மிஷன் கூறிற்று. பாடசாலைக்கமிஷனும் மிஷனை ஆதரித்தது.
இலங்கையில் கல்வி சம்பந்தமாகப் பொதுவாய் அதிருப்தி யிருந்தபடியால் 1865-ல் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. இலங்கையிலிருந்த கல்வி முறையை இக்க மிட்டி சரிவர முற்றும் ஆராய்ந்து 1867-ல் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் பல சிபார்சுகள் செய்யப்பட்டன. அதன் பிரகாரம் பல மாற் றங்களுண் டாக்கப்பட்டன. 1870-ல் பாடசாலைக் கமிஷனை ஒழித்துவிட்டு அதற்குப்பதிலாக தேசாதிபதிக்குப் பொறுப்புள்ள ஒரு கல்வி இலாகா ஏற்படுத்தப்பட்டது. சுதேசபாஷையில் கல்விபரப்பும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதற் கான நடவடிக்கைகளை உடனே எடுக்கத் துவங்கிற்று. 1870-ல் 872 மாணவரைக்கொண்ட 156 அரசாங்கப் பாடசாலைகளி ருந்த இடத்தில் 1872-ல் 10, 852 மாணவரைக்கொண்ட 200 அரசாங்கப் பாடசாலைகள் உண்டாயின. லெளகீகக் துல்வியை நல்லமுறையில் பயிற்றிவந்த பாடசாலைகட்கு உதவிநன்கொடை வழங்கப்பட்டது. கிறிஸ்தவ மிஷனரிகளைத் திருப்திப்படுத்து வதற்காகச் சமய போதனை சம்பந்தமாக ஒரு வித நிபந்தனையும் ஏற்படுத்தப்படவில்லை. மிஷனரிமார் தமது கல்விமுறையை உடனே விஸ்தரிக்கத் துவங்கினர்கள். 1870-ல் 820 மாண வரைக்கொண்ட 229 பாடசாலைகளை அவர்கள் நடத்தினர். 1872-ல் 402 பாடசாலைகளிருந்தன. இவற்றில் 64 ரோமன் கத்தோலிக்க பாடசாலைகள். இங்கே 25,443 மாணவர் பயின் றனர். ஆங்கில பாடசாலைகளுக்கும், துவிபாஷா பாடசாலை களுக்கும் தேவுையான ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்காக ஒரு போதன பாடசாலையை அரசாங்கம் ஏற்படுத்திற்று. கொழும் புக் கல்லூரியில் (இது இராணி கல்லூரியெனவும் வழங்கப் பட்டது) உயர்தர வகுப்பு ஒன்று நடைபெற்றுவந்தது. இதி லிருந்து மாணவர் கல்கத்தா சர்வகலாசாலைப் பரீட்சைக்கு அனுப்பப்பட்டனர். ஆனல் மாணவர் தொகை குறையவே அந்த வகுப்பு ஒழிக்கப்பட்டது. சுவே ஸ்கால்வாய் திறந்த

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 185
அடுத்த வருடத்தில் திறமையுள்ள மாணவர்கட்கு பிரித்தானிய சர்வகலாசாலை யொன்றிற்போய்க் கல்வி பயின்றுவர சகாயநிதி அளிக்கப்பட்டது.
இவ்வாறு மிஷனரிமாரின் பிடியிலிருந்து கல்வியை நீக்கி அரசாங்கத்தின் கையில் கொடுத்தனர். அரசாங்கமே ஆங்கிலக் கல்வியைப் பரப்பப் பொறுப்பெடுக்கவேண்டுமென்று கோல் புறுரக் வெளியிட்ட சிபார் சுக்கு மாருகக் கல்வி விருத்தியடைந் தது. அரசாங்கப் பொறுப்பின்றித் திறம்பட நடத்தப்படும் பாடசாலைகளெல்லாவற்றுக்கும் உதவி நன்கொடை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதால் கல்வி விருத்தியடைந்தது. பெளத்த சமயிகளும் இந்துக்களும் தங்கள் தங்கள் கொள்கை களுக்கேற்ற பாடசாலைகளை நிறுவினர்கள். ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குக் கல்லூரிகள் நிறுவப்பட்டதால் போதன முறை உயர்ச்சியடைந்தது. உயர்தரக்கல்வியை விரும்புவோர் இந்தியாவைவிட்டு இங்கிலாந்தை நோக்கினர்கள்.
7. கிறிஸ்தவ மிஷன்கள், புத்த சமயம், இந்து சமயம்
இக்காலத்தில் கிறிஸ்தவு மிஷன்கள் முன்னேற்றமடைந்தன. 1860-ம் ஆண்டிலும் அதையடுத்த ஆண்டுகளிலும் இலங்கையி லுள்ள பல வேறு மிஷனரிச் சங்கங்களும் தாங்கள் இலங்கையில் ஆற்றிய பல வருடத்தொண்டை உத்தேசித்து ஜ"பிலி விழாக் களைக் கொண்டாடின. முன்னையிலும் பன்மடங்கு ஊக்கத் துடன் அவை தமது மதத் தொண்டில் ஈடுபட்டன. கல்வியின் பயனை உணர்ந்தவர்கள் கிறிஸ்தவ பாடசாலைகள் பரவுவதை வரவேற்றனர். கிறிஸ்து சமயத்தைப் பரப்பப் பாடசாலைகள் நல்ல சாதனமாயமைந்ததைக் கிறிஸ்தவ பாதிரிகள் உணர்ந் தனர். அவர்கள் நேரடியான போதனையைச் செய்ததோடு பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள், துண்டுப்பிரசுரங் கள் முதலியவற்றையும் அச்சிட்டு வெளிப்படுத்தினர்கள்.
இந்த நடவடிக்கைகளைப்பார்த்து இந்து சமயமும் பெளத்த சமயமும் தங்கள் சமயங்களைப்பற்றிப் பிரசாரஞ்செய்ய முற் பட்டன். அவை தமது நீண்டகால நித்திரையிலிருந்து விழித் தன. போர்த்துக்கீசர் காலத்தில் புத்த சமயம் மிகவும் கீழான நிலைமையை அடைந்தது. கண்டிராச்சியத்தில் வலிவித்த சரணங்கர என்பவர் பெளத்தசமயப் புனருத்தாரணத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவ்வியக்கம் கண்டிப்பகுதிகளில் மாத்திரமே பரவிற்று. ஆனல் நாளடைவில் சரணங்கராவின் சீடர்கள், கடற்கரை மாகாணங்களிலுஞ்சென்று விகாரங்களில் புத்த சமய நூல்களைத் தீவிரமாகப் படிப்பதிலும், புகட்டுவதிலு மீடுபட்டனர். டச்சுக் கிறிஸ்தவ செல்வாக்குக் குறைவாயுள்ள

Page 75
36 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
தென் மாகாணத்தில் இம் முயற்சி விசேஷமாக நடைபெற்றது. 1839-ல் பாணந்துறையைச் சேர்ந்த வலானே சித்தார்த்த தேரர், ரத்மலானையில் பரமதம்ம சேதிய பிரிவேணு என்ற பெளத்தமத கலாசாலையை நிறுவினர். இந்தக் கலாசாலையி லிருந்து பல அறிஞர்கள் கிளம்பினர்கள். ஹிக்கடுவை பூரீசுமங்கல (1826-1911) ரத்மலானை தம்மா லோக (18271887) இவருடைய சீடர் பூரீதர் மாராம (1853-1918) பண்டித பத்துவந்துடாவை தேவரகூPத (1819-1892) ஆகிய அறிஞ ரெல்லாம் இந்தக்கலாசாலையில் பயின்றவர்களே.
பெளத்த மத பாடசாலைகளில் கல்வி பயின்றவர்கள், அர சாங்க பாடசாலைகளிலும் மிஷன் பாடசாலைகளிலும் கல்விகற்ற வர்களோடு சஞ்சிகைகள் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாக வும் பல வாதப் பிரதிவாதங்களை நடத்தினர்கள். இப்படிப் பட்ட பல பத்திரிகைகள் இக்காலத்தில் எழுந்தன. அவற்று ளொன்று லக்மினி பஹன (1862), என்பது. பெளத்த பிக்கு களுடைய உலகப்பற்றைப்பற்றியும், அவர்களுக்குத் தானம் கொடுப்பது தகுதியுடையதா என்பதைப்பற்றியும் 1850-ம் ஆண்டிலும் அதற்கடுத்தடுத்த ஆண்டுகளிலும் வாதங்கள் கிளம் பின. சில ஆண்டுகளின் பின் 1865-ல் ' ராமண்யநிகாய என்ற பெளத்த சங்கப்பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இதிற் சேர்ந்த பிக்ஷ"கள் தாங்கள் பாளி பிடகத்தில் கூறப்பட்ட சுத்தமான பெளத்தத்தைப் பின்பற்றுவதாகக் கூறினர்கள்.
புத்த சமயிகட்கும் கிறிஸ்தவருக்குமிடையில் சமயவாதங் கள் நடைபெற்றன. ஆரம்பத்தில் கிறிஸ்தவர் மதப்பிரசாரஞ் செய்து வந்தபொழுது புத்தசமயிகள் அதை அவ்வளவாக ஆட் சேபிக்கவில்லை. புத்த சமயம் சன்னியாசப் போக்குடைய தாதலால் சங்கத்தையும் பொதுசனங்களையும் இணைப்பதற்கான ஒரு ஒழுங்கை அது கைக்கொள்ளவில்லை. ஆனல் கிறிஸ்தவ சமயம் அதற்கான ஒழுங்கையும் தாபனங்களையும் அமைத்துக் கொண்டது. பொதுசனங்கள் இந்து ஆசாரங்களைப் பின்பற்று வதையே பெளத்த சமயம் ஆதியில் ஆட்சேபித்தது கிடையாது. கிறிஸ்தவ பாதிரிகள் தங்கள் சமயத்தைப் பிரசாரஞ்செய்வது டன் நின்றிருந்தால் பெளத்த சங்கம் அவர்களுக்குச் சலுகை காட்டியிருக்கும். எதிர்த்திருக்கமாட்டாது. ஆனல் கிறிஸ்தவ பாதிரிமார் தாம் மதம் மாற்றச் செய்தவர்களை மற்றவர்களி லிருந்து பிரித்து ஒரு தனிச் சமூகமாக்கி பெளத்த விழாக்களிலும் பழக்க ஆசாரங்களிலும் பங்கு பற்ற மல் தடைசெய்யவே பெளத்தத்துக்கு ஆபத்துவந்துவிட்டதெனச் சங்கம் கருதிற்று. தனிப்பட்ட பெளத்த பிக்குகள் பாதிரிமாரோடு தங்கள் சமயத் தைப்பற்றி அந்தரங்கமாக வாதஞ்செய்துவந்தார்கள். இப்

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 137
பொழுது அவர்கள் பகிரங்கமாக வாக்குவாதஞ்செய்யப் புறப் பட்டனர். ஏற்கெனவே பட்டேகமத்திலும் 1865-ல் களனியைச் சேர்ந்த வரா கொடையிலும், 1866-ல் ரம்புக்கனைக்குச் சமீபத்தி லுள்ள உடன் விதவிலும், 1871-ல் கம்பளையிலும் இம்மாதிரி வாதங்கள் நடைபெற்றன. அவை இப்பொழுது உற்சாக மூட்டக் கூடியனவாயிருந்தன.
பகிரங்கமாக வாக்குவாதஞ்செய்வதோடு மாத்திரம் பிக்கு கள் நின்றுவிடவில்லை. கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் செய்யும் வேலையை எதிர்ப்பதற்கு பாதிரிமார் அனுசரிக்கும் முறையையே அவர்களும் பின்பற்றினர். பிரித்தானிய ஆட்சியின் பயனக ஏற்பட்ட புதிய தொழில்முறைகளி லீடுபட்டுப் பெரும் பொருள் சம்பாதித்த பெளத்தப் பொதுமக்களின் பண உதவியைக் கொண்டு பெளத்த பிக்குகள் அச்சியந்திர சாலைகளை ஏற்படுத்தி னர். பெளத்த மதப் பிரசாரத்துக்கள் கச் சங்கங்களை ஏற்படுத் தினர். மிஷன் பாடசாலைகளைப்போலவே ஒரு பெளத்த பாட சாலையை இக் கா லம் முடிவதற்கு முன் தொடந்துவையில் நிறுவினர்.
கிறிஸ்தவ பாதிரிகள் யாழ்ப்பாணத்தில் நடத்திவந்த வேலை களின் பயணுகத் தமிழ்க்கல்வி புனருத்தாரணஞ் செய்யப்பட்ட தோடு இந்து சமயமும் மறுமலர்ச்சியடைந்தது. வட்டுக்கோட் டைக் கல்லூரியில் தமிழ் இலக்கண இலக்கியத்தோடு இந்து சமயத் தத்துவமும் பயிலப்பட்டு வந்தது. சென்னை சர்வகலா சாலையார் 1857-ல் முதல் முதல் நடத்திய பீ. ஏ. பரீட்சையில் தேறியவர்களுள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுப்பிட் டிவை. தாமோதரம் பிள்ளையும், கரல் விஸ்வணுதபிள்ளையும் தமிழிலும் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர்கள். சங்கநூல்கள் பலவற்றை அச்சேற்றிய பெருமை தாமோதரம்பிள்ளைக்குரியது. இவரும் வட்டுக்கோட்டைக் கல்லூரியின் மற்ருெரு மாணவன் வேலுப்பிள்ளையுமாக ஒருவர் பின் ஒருவராய் சென்னை பிரஸி டென்ஸிக் கல்லூரிப் பேராசிரியராக இருந்துவந்தார்கள். 1800 வருடங்களுக்கு முந்திய தமிழர் ' என்ற ஆங்கில நூலை எழுதிய கனகசபைப் பிள்ளை, கரொல் விஸ்வணுதபிள்ளையின் மகனுகும்.
மூன்று நூற்ருண்டாக அந்நிய ஆட்சியின் பயணுய்க் கீழ் நிலையடைந்திருந்த இந்து சமயம் பூரீ ல பூரீ ஆறுமுகநாவலர் அவர்களால் மறுமலர்ச்சி பெற்றது. இவர் யாழ்ப்பாணம்` மெதடிஸ்ட் மத்திய பாடசாலையில் (இது இப்பொழுது சென்ட்ரல் கல்லூரி என வழங்கப்படும்) கல்வி பயின்ருர், கல்வியை முடித்துக்கொண்டு இவர் அதே பாடசாலையில் ஆசிரிய ராக இருந்தார். அப்பொழுது பாதிரி மார் தமது சமயத்தைப்

Page 76
丑3& இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பரப்புவதற்கு அனுசரிக்கும் முறைகளைக் கண்டார். கிறிஸ்தவ சமயத் துண்டுப் பிரசுரங்களை எழுதும் வேலையிலும் மொழி பெயர்க்கும் வேலையிலும் அமர்த்தப்பட்டார். இந்துக்களைக் கிறிஸ்து சமயத்துக்கு மாற்றும் வேலையில் தன்னை அவர்கள் பயன்படுத்துகிருர்களென்பதை உணர்ந்ததும், பாதிரிமாரின் கீழ் வேலைசெய்வதை விட்டுச் சைவ சமயத்தைப் பரப்புவதிலும், கிறிஸ்து சமயம் பரவுவதைத் தடுப்பதிலும் ஈடுபட்டார். கிறிஸ்து சமயிகளோடு அவரும் வாதஞ்செய்யத் தலைப்பட்டார். தற் காலச் சிங்கள இலக்கியத்தில் வசன நடையைச் சமயவாதத்தி லீடுபட்ட சிங்கள அறிஞர் அபிவிருத்திசெய்தது போலவே இவரும் தற்காலத் தமிழ் வசனநடை விருத்தியடைவதற்கு உதவி புரிந்தார். மாணவருக்குச் சைவப் பாடசாலையில் கல்வி பயிற்றவேண்டுமென்ற நோக்கத்துடன் யாழ்ப்பாணத்தில் வண்ணுர்பண்ணையில் 1872-ல் ஒரு ஆங்கிலப் பாடசாலையை நிறுவினர். மேலைத்தேச நாகரிகத்துக்கு இவ்வாறு முதல் முதல் எதிர்ப்பு ஏற்பட்டது. -
பெளத்த சமய விஷயங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அரசாங்கம் செய்த முயற்சிகளை ப்பற்றியும் அரசாங் கத்துக்குப் பதிலாக பெளத்த விஷயங்களில் தலையிடுவதற்கு ஒரு தாபனத்தை ஏற்படுத்த அது பட்ட கஷ்டங்களைப்பற்றியும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். கமெல் செய்த சிபார்சுகள் நிராகரிக்கப்பட்டதும் வேறு ஒழுங்குகளை அரசாங்கம் செய்ய வேண்டியிருந்தது. அப்படியான ஒழுங்குகளைச் செய்யும் வரை நியமனங்களைச் செய்யுமாறு குடியேற்றநாட்டுமந்திரி 1851-ல் அண்டர்சனுக்கு அதிகாரங் கொடுத்தார்.
தங்கள் கருமங்களை மேற்பார்வை செய்வதற்காக 1853-ல் பெளத்தர்களுக்கு ஒரு ஒழுங்கு அனுமதிக்கப்பட்டது. ஒவ் வொரு விகாரத்தைச்சேர்ந்த பிக்குகளும் தாங்களே தங்களு டைய மகாநாயக தேரரை ஏற்படுத்தலாமென அனுமதிகொடுக் கப்பட்டது. தேவாலயங்கள் இருக்கும் பகுதிகளின் இரட்டமகாத் மியாக்களும், கோருளைகளும், பஸ்நாயக நிலமையை ஏற்படுத்த அதிகர்ரம் வழங்கப்பட்டது. தியவதன நிலமையை ஏற்படுத் தும் உரிமை சில இடங்களில் பஸ்நாயக நிலமைக்கும் ரட்டே மகாத்மியாவுக்கும் அளிக்கப்பட்டன. நியமனங்கள் செய்யப் பட்டவுடன் அரசாங்கம் அவற்றை உத்தியோக முறையில் ஊர்ஜிதம் செய்தது.
இந்த ஒழுங்கு திருப்தியாயிருக்கவில்லை. விகா ராதிபதியை யும் நிலமையையும் நியமித்த பின்னர் கோயில் சொத்தெல்லாம் அவர்கள் கைக்கு வந்துவிடுகிறது. மற்றவர்கள் அவர்களை

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 139
விசாரிக்க உரிமையுமில்லை. கோட்டில் அவர்கள் நடவடிக்கை பற்றி விசாரணை செய்யவும் முடியாது. மேலும் சங்க நியதியின் படி பிக்குகள் உலக வியவகாரங்களில் ஈடுபடவும் முடியாது.
அரசாட்சியில் பங்குபற்றும் யோக்கியதை சிங்களவருக்கோ தமிழருக்கோ கிடையாதென அரசாங்கம் இக்காலத்தில் எண்ணி வந்த தென்பதை ஏற்கனவே எடுத்துக்காட்டியிருக்கிருேம். கண்டிவாசிகள் மிகப் பிற்போக்குள்ளவராகக் காணப்பட்டனர்.
தற்கால அரசாட்சி விஷயங்களை அவர்கள் சமாளிக்கச் சிறிதும் தகுதியற்றவர்களாயிருந்தனர். இதன் பயனகத் தகுதி யற்றவர்களையே பெரும்பாலும் விகா ராதிபதிகளாகத் தெரிந் தனர். அதனுல் விகாரங்களும் தேவாலயங்களுஞ் சரியாகப் பரிபாலிக்கப்படவில்லை. அத்துடன் பொறுப்பற்ற விகாராதி பதிகள் கோயிற் சொத்துக்களை வீணுக்கினர்.
* பெளத்த சமயத்தின் பரிபாலனத்தைப் பெளத்தர்களிடம் ஒப்படைக்கும்பொழுது அவ்வாறு பரிபாலிப்பதற்கான ஒரு நேர்மையான திட்டத்தையும் அமைத்துவிடவேண்டியது எங்கள் கடமை என்று கிளாட்ஸ்டன் கூறினர். இந்தக் கடமை நிறை வேற்றப்படவில்லை.

Page 77
எட்டாம் அத்தியாயம்
நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் (1873-1890)
1. தோட்டமும் தொழிலாளிகளும்
1870-ல் கோப்பித் தொழில் உச்சநிலையை அடைந்தது. அடுத்த சில வருடங்களில் கோப்பிவிலை 50 வீதம் உயர்ந்தது. மலைநாட்டிலுள்ள பெரிய காட்டுநிலப் பகுதி தோட்டமாக மாற்றப்பட்டது. இப்பகுதி நுவரெலியாவிலிருந்து சிவனெளி பாதம் வரை பரந்திருந்தது. டிம் புலா, டிக்கோயா, மஸ்கேலிய ஆகிய உயர் பூமிப் பள்ளத்தாக்குகள் எல்லாம் இதில் அடங்கின. இதற்கு சிவனெளிபாதக் காடு என்று பெயர் வழங்கப்பட்டது 1869-ம் ஆண்டு தொட்டு 1879 வரை 400,000 ஏக்கர் முடிக் குரிய நிலம் விற்பனையாயிற்று. 1878- ல் 275,000 ஏக்கர் தோட்டநிலங்கள் ஐரோப்பியருக்குச் சொந்தமாயிருந்தன.
ஆனல் 1890 க்கு முன்னர் கோப்பி வியாபாரம் வீழ்ந்தது. 1869-ல் கோப்பி மரங்களில் புழு விழுந்தது. ஆரம்பத்தில் அவ்வளவு சேதமொன்றும் ஏற்படாதபடியால் ஒருவரும் அதைக் கவனிக்கவில்லை. விளைவு குறையத் தொடங்கியபொழு தும் ஒருவரும் அதைக் கவனிக்கவில்லை. ஏனெனில் கோப்பிக்கு நல்ல விலையிருந்ததோடு ஏராளமாகப் பயிர் செய்யப்பட்டும் வந்தது. 1882 வரையில் புழு எல்லாத்தோட்டங்களிலும் பரவி விளைவைக் குறைக்கவே கோப்பி ஏற்றுமதி விரைவில் வீழ்ச்சி யடைந்தது. 1881-ல் ஏற்றுமதி 436, 881 அந்தராகக் குறைந்து விட்டது. 1854-ல் ஏற்றுமதியானதிற் பார்க்க இது குறைவு. 1889-ல் இது 76,416 அந்தராகக் குறைந்தது. தோட்டங்களும் 50,000 ஏக்கராகக் குறைந்துவிட்டன.
கோப்பி வியாபாரம் வீழ்ச்சியடைந்ததற்குக் கோப்பிப் புழு மாத்திரங் காரணமன்று ; கோப்பியின் விலை அதிகரிப்பதை யறிந்து பிரேஸிலில் கோப்பிச் செய்கையி லீடுபட்டார்கள். அங்கிருந்து ஏராளமான கோப்பி ஐரோப்பாவுக்கு அனுப்பப் பட்டது. அதனுல் இலங்கைக் கோப்பிக்குக் கிராக்கி குறைந்தது. 1876-80-ல் ஐரோப்பாவிலே பெரிய வியாபார மந்த மேற்பட்டி ருந்தது. கோப்பிப் புழு விழுந்ததாலும், கிராக்கி குறைந்த தாலும் பாதிக்கப்பட்ட கோப்பித் தோட்டக்காரர் தமது வியா பாரத்தை விருத்திசெய்வதற்கு ஐரோப்பாவில் கடனெடுக்க

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 141
முடியவில்லை. 1870-க்கு அடுத்த வருடங்களில் நல்ல விளைவு ஏற்பட்டபோதிலும் பிற்பகுதியில் விளைவு குன்றிவிட்டது. இத்தியாதி காரணங்களால் தோட்டங்கள் பாழாய்ப்போயின. வேறு பல தோட்டங்களை முதலாளிகள் விற்க முயற்சித்தார்கள். ஆணுல் வாங்குவதற்கு ஒருவரும் முன் வரவில்லை. இதனல் 1700-ல் ஐரோப்பிய தோட்டக்காரருக்கு நஷ்டமுண்டானது. சிலர் முதல் போட்ட பணத்தை யிழந்தனர். சிலர் உத்தியோ கத்தை யிழந்தனர். வேறுசிலர் இரண்டையு மிழந்தார்கள். இவர்களுள் 400 பேர் இலங்கையைவிட்டு வெளியேறினர்.
இதையடுத்து மற்றுமொரு விபத்து ஏற்பட்டது. 1884-ல் * ஒரியெண்டல் பாங்க் கோர்பரேஷன் ' என்ற வங்கி முறிந்தது. ஆரம்பித்த நாட்துவங்கி கோப்பித் தோட்டங்களுக்கு இந்த வங்கிதான் கடன் கொடுத்து வந்தது. திடீரென்று கோப்பித் தொழிலுக்கு நஷ்டமேற்படவே வங்கியும் முறிந்துபோயிற்று. இந்தக் காலத்தில் நோட்டுக்காசை வங்கிகள்தான் வழங்கி வந்தன. அரசாங்கம் வழங்கவில்லை. எனவே கோப்பி வியா பாரத்தில் நேரடியான தொடர்பில்லாத பலர் வங்கி முறிந் ததால் பாதிக்கப்பட்டார்கள். வங்கி நோட்டுகளுக்கு உத்தர வாதம் அளிப்பதாக கோடன் அறிவித்து நிலைமையை ஒருவாறு சமாளித்தார். இதனுல் அரசாங்கத்துக்கு 3000 ரூபாய்க்கு அதிகமாகச் செலவானது.
கோப்பி வியாபாரம் வீழ்ந்ததால் இலங்கை முழுவதும் பாதிக்கப்பட்டது. தோட்டங்களுண்டானதால் நாட்டிலே பல தீவிரமான மாறுதல்க ளேற்பட்டிருந்தன. பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. உள்ளூர் வியாபார மும் வெளி நாட்டு வியாபாரமும் நடைபெற்று வந்தது. 1837-ல் இலங் கையின் வருமானம் 372,000 பவுணுயிருந்தது. 1877-6 17,026, 191 ஆக உயர்ந்தது. 500,000 பவுணுக இருந்த ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் 10,000,000 பவுணுக உயர்ந் தது. இதற்குப் பிரதானமான காரணம் கோப்பித்தோட்டமே. வருமானம் அதிகரித்ததனுல் பல ரோட்டுகளையும் ரயில் பாதை களையும் அமைத்தார்கள். நாடு பல வகையில் அபிவிருத்தி யடைந்தது. கோப்பிவியாபாரம் வீழ்ச்சியடையவே வருமானம் குன்றியது. கடைசியாக 1882-ல் 12, 161,570 ரூபாய்க்குக் குறைந்துவிடவே நாட்டின் அபிவிருத்திக்கான துறைகளிற் செலவு செய்யப்பட்ட பணம் குறைக்கப்பட்டது.
ஆனல் இந்த நிலை  ைம. அதிக காலத்துக்கு நீடிக்கவில்லை. ' கோப்பி வீழ்ச்சியடையவே வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட் டன. 1861-ல் அரசாங்கப் பூந்தோட்டப்பகுதியார் ஹக்கல்ல என்ற இடத்தில் சிங்கோன தோட்டமொன்றை ஏற்படுத்தி

Page 78
罩42 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
1867-ல் தோட்டத்துரைமாரின் கவனத்துக்கு அதைக் கொண்டு வந்தார்கள். இலங்கையில் சிங்கோனத் தோட்டங்கள் ஏற்படுத் தப்பட்டன. 1872-ல் 500 ஏக்கர் தோட்டத்திலிருந்து எடுத்து அனுப்பப்பட்ட சிங்கோணவுக்கு லண்டனில் நல்ல கிராக்கி ஏற்பட்டது. 1877-ல் 6000 ஏக்கர் நிலத்தில் சிங்கோன பயிரி டப்பட்டது. கோப்பி வியாபாரத்தினுல் பெரிய இலாபம் ஏற் பட்டுவந்ததைச் சனங்கள் மறக்கவில்லை. 1879-gi) G35T வீழ்ச்சியடையவே எல்லாரும் சிங்கோஞ பயிரிடப்பார்த்தார் கள். 60,000 ஏ க் கர் சிங்கோளுத் தோட்டமாகிவிட்டது. ஜாவாவிற்கூடக் கோப்பிப் புழுவினுல் கோப்பித் தொழில் வீழ்ச்சி யடைந்தது. ஜாவாவிலும் சிங்கோளுத் தோட்டங்க ளேற்படுத்தப்பட்டன. அதனுல் இலங்கையிலிருந்தும் ஜாவா விலிருந்தும் ஏராளமான சிங்கோன ஏற்றுமதி செய்யப்பட்ட தால் சிங்கோளுவுக்கு விலை குறைந்தது. இதன் பயனுக 1884-ல் தோட்ட முதலாளிகள் வேறுபயிர்களைச் சாகுபடிசெய்ய முற் படவே சிங்கோனுத் தொழிலின் முக்கியத்துவம் குறைந்தது. அரசாங்கப் பூந்தோட்டப் பகுதியார் தேயிலை பயிரிடுவதைப் பற்றி ஆராய்ச்சி நடத்திவந்தார்கள். 1845-ல் ஒரு சிறிய தேயிலைத்தோட்டத்தை உண்டாக்கினர்கள். 1867-ல் இந்தி யாவில் தேயிலைச் சாகுபடி எவ்வாறு நடைபெறுகிறதென்பதை ஆராய்ந்து அறிவிக்குமாறு ஒரு தோட்ட முதலாளி நியமிக்கப் பட்டார். கோப்பியினல் நல்ல இலாபம் கிடைத்துவந்ததால் தேயிலைச் செய்கையில் ஒரு வரும் கருத்துச் செலுத்தவில்லை. 1873-ல் 250 ஏக்கர் தேயிலைத் தோட்டமே இருந்தது. கோப்பி வியாபாரம் வீழ்ச்சியடைந்ததன் பயணுக 1883-ல் 35,000 ஏக்கர் தேயிலைத் தோட்டம் உண்டானது. 1884-ல் இது இரட் டித்தது சிங்கோளுவுக்கு விலை குறைந்ததே காரணம். 1887-ல் தேயிலைத்தோட்டம் 150,000 ஏக்கராகவும், 1890-ல் 220,000 ஏக்கராகவும், உயர்ந்தது. 1889-ல் 34,345,852 முத்தல் தேயிலை இலங்கையிலிருந்து ஏற்றுமதிசெய்யப்பட்டது. இலங் கையின் மொத்த ஏற்றுமதியில் இது மூன்றிலொருபகுதியாகும்.
மாத்தளை, குருணு க் கல், ஊவாப்பகுதிகளாகியவற்றில் கொக்கோ சாகுபடி செய்ய முயன்றர்கள். ஆனல் தேயிலை யைப்போல அது அவ்வளவு பலனளிக்கவில்லை. பட்டேகமத்தில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. ஆனல் முன்னைய பிரயத்த னங்களைப்போலவே அதுவும் அதிக பலனைக் கொடுக்கவில்லை. இக்காலத்தில் தொழிலாளர் விஷயத்தில் அவ்வளவு கஷ்டமேற் படவில்லை. 1872-ல் தோட்டங்களுக்கு வைத்திய வசதி செய்ய ஒரு திட்டம் போடப்பட்டது. அது சித்தியடையவில்லை. 1878-ல் அரசாங்கம் ஒரு விசாரணேச்சபையை ஏற்படுத்திற்று.

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 143
அதனுடைய சிபார்சுகளின்படி 1883-ல் தோட்டங்களைக் குறிச்சி குறிச்சியாகப் பிரித்து அங்கங்கே வைத்தியசாலைகளையும், மருந்துச் சாலைகளையும் அரசாங்கம் ஏற்படுத்திற்று. 1870-ல் ஏற்படுத்தப்பட்ட வைத்தியக் கல்லூரியில் பயிற்சிபெற்ற வைத்தி யர்களையும் உதவி உத்தியோகத் தரையும் அந்த வைத்தியசாலை களுக்கு ஏற்படுத்திற்று. அங்கே சிகிச்சை பெறும் ஒவ்வொரு தொழிலாளியின் சார்பாகவுந் தோட்டத் துரைமார் அரசாங் . கத்துக்கு ஒரளவு பணம் கொடுத்துவந்ததோடு, ஏற்றுமதியாகும் ஒவ்வொரு அந்தர் கோப்பி, தேயிலை, கொக்கோ ஆகியவை மீதும் 10 சதமும், சிங்கோளு மீது 20 சதமும் வரிகொடுத்தும் வந்தார்கள்.
2. போக்குவரத்துச் சாதனம்
இக்காலப் பகுதியிலும் மேலும் ரோட்டுகளமைக்கப்பட்டன. ரயில் பாதைகள் போடப்பட்டன. தந்திவசதிகள் ஏற்படுத்தப் பட்டன. தோட்டங்களில் தேசாதிபதிகள் சிரத்தையெடுத்து வந்தபடியால் அப்பகுதிகளில் ரோட்டுகளும் ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டன. பிரித்தானியாவில் கிராம அபிவிருத்தியில் பொதுசனங்கள் சிரத்தை கொண்டபடியால் இலங்கையிலும் கிராமவாசிகளின் நன்மையைக் கருதிக் கிராமப் பகுதிகளும் அபி விருத்தி செய்யப்பட்டன.
கினிகேதனையிலிருந்து டிக்கோயா வரை ரோட்டுப் போடு வதற்கு அரசாங்கமும் உதவிநன்கொடை கொடுத்திருந்த தெனக் குறிப்பிட்டோம். சிவனெளிபாதத்துக்கு அணித்தாக வுள்ள பகுதிகளிலும் தோட்டங்களைத் திறக்கும் நோக்கமாக டிக்கோயாவிலிருந்து ம ஸ்கேலியா வரை ரோட்டு அமைக்க கிரெகெறி உதவிபண்ணினர். கந்தப்பளையிலிருந்து சென்ட் மார்கரெட் வரை உதவி நன்கொடை ரோட்டொன்றை அமைத்து அதன்பிரகாரம் நுவரெலியாவுக்கும் உடப்புசலா வைக்குமிடையில் மற்ருெரு பாதையை ஏற்படுத்தினர். இத னல் அப்பகுதிகளிலுள்ள தோட்ட முதலாளிகளும் கிராமவாசி களும் தங்களுடைய விளைபொருள்களை வெளிமார்க்கெட்டுகளுக் குக் கொண்டுபோகக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டது. கோப்பி வியாபாரத்தில் மந்தம் ஏற்படவே அரசாங்க வருமானமுங் குறைந் தது. ஜேம்ஸ் லோங்டன் (1877-1883) மராமத்து வேலைகளைக் குறைத்தார். இருந்தும் இந்தப் பகுதியில் மேலுஞ் சில ரோட்டு களை அமைத்தார். நானு ஒயா வரை ரயில் பாதை போடப்பட விருந்ததால் 1878-ல் ரயில் பாதையை அடுத்துக் கிளைரோட்டுக் கள் போடப்பட்டன. டிம்புலா ரோட்டை நானே யாவரை

Page 79
144 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
விஸ்தரித்தார். டிம்புலா, உடப்புசலாவை ஆகிய பகுதிகளில் விளையும் பொருள்களை ரயில் மார்க்கமாக வெளித்தேசங்களுக்குக் கொண்டுபோவதற்காக நுவரெலியாவையும் நானுஒயாவையும் இணைத்து மற்ருெரு ரயில் பாதை அமைக்கப்பட்டது. கோடன் வந்த காலத்தில் நாட்டின் வருமானம் அதிகரிக்கத் துவங்கியது. அவர் இப் பகுதி  ைய அபிவிருத்திசெய்யும் முயற்சி யைத் தொடர்ந்து நடத்தினர். அட்டன்-மஸ்கேலியா ரோட்டிலுள்ள நோர்வூட்டிலிருந்து போகவந்த லான் வக்கு ஒரு ரோட்டைப் போட்டு அதன்மூலம் அட்டனையும் போகவந்தலாவையையு மிணைத்தார். பூந்துலு ஓயாவையும் வட்டகொடையையுமிணைத்து மற்ருெரு ரோ ட்  ைட அமைத்தார். கண்டி-தெல்தெனியா ரோட்டை ரொபின்ஸன் கல் மல்ஒயா வரை விஸ்தரித்திருந்தார். இப்பொழுது அது நுகத்தனை வெளிவரை விஸ்தரிக்கப்பட்டு மேலும் வடக்கே டீஸ்டன்ஸ் வரை நீட்டப்பட்டது.
களுத்துறைப் பகுதியிலும் இரத்தினபுரிப் பகுதியிலும் இக் காலத்தில் மேலும் பல ரோட்டுகளமைக்கப்பட்டன. மாதம்பை வரையிருந்த ரோட்டை ரக்வானைக்கும் அதிலிருந்து மேலே புலுத்தோட்டைக்கும் கிரெகெறி தேசாதிபதி விஸ்தரித்தார். குகுலு கோருளையிலுள்ள கோப்பித் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு இது மிகவும் உதவியாயிருந்தது. மேலும் இப் பகுதியை அபிவிருத்திசெய்வதற்காக கோடன் தேசாதிபதி இரத்தினபுரி-பெல் மதுளை ரோட்டிலிருந்து கலவானவரை ஒரு ரோட்டை அமைத்தார். களுத்துறை-அகலவத்தை ரோட்டி லுள்ள மத்துகமையை நாபொடையுடன் இணைக்க ஒரு ரோட்டுப் போடப்பட்டது. பாணந்துறை-நம்பபான ரோட்டு இரத் தினபுரி வரை விஸ்தரிக்கப்பட்டது. எல்லாக் காலங்களிலும் கலுகங்கை நீர் நிறைந்திருப்பதால் நீராவிக்கப்பல் எப்பொழு தும் அந்த ஆற்றில் நம்பபான வரை செல்லக்கூடியதாயிருந்தது. எனவே நம்பபானயை இரத்தினபுரியுடன் ரயில் மார்க்கமாக இணைத்ததால், சபரகம மாகாண விளைபொருள்களை நம்பபான வரை ரயிலில் கொண்டுவந்து அங்கிருந்து கப்பல் மார்க்கமாகக் களுத்துறைக்குக் கொண்டுபோய் அங்கிருந்து ரயில் மார்க்க மாகக் கொழும்புக்குக் கொண்டுபோவது இலேசாயிருந்தது. ரொபின்ஸன் காலியிலிருந்து அகுரஸ்ஸ வரை போட்ட ரோட்டு மொறவாக்கை கோருளையில் கோப்பித் தோட்டங்களைத் திறப் பதற்காக விஸ்தரிக்கப்பட்டது.
மின்னரச் சுரங்கக்காரரின் வசதிக்காக பஸ்டும் கோருளையி லுள்ள மத்துகமையிலிருந்து வலிப்பன்ன்வரை கிரெகெறி ஒரு ரோட்டை அமைத்தார். பிற்போக்காயுள்ள பகுதிகளை மற்ற ஊர்களுடன் இணைப்பதற்கும் வியாபாரிகளும், அரசாங்க

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 145
உத்தியோகத் தரும் போக்குவரத்துச் செய்வதற்குமாக வேறு பல ரோட்டுகளையும் இவர் அமைத்தார். இவற்றுள் முக்கிய மானவை தம்புளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், திருக்கோண மலைக்குஞ் செல்லும் பெரிய ரோட்டுகளாகும். கிரெகெறி தேசாதிபதியாய் வந்த காலத்தில் இந்த ரோட்டுகள் காட்டுப் பாதைகள் போல இருந்தன. மதகுகளோ, பாலங்களோ இல்லா தபடியால் மழைகாலத்தில் கடக்க முடியாதனவாயிருந்தன. யாழ்ப்பாணத்துக்குப்போகும் நெடுந்தெருவிலிருந்து பல கிளை ரோட்டுகளுமமைக்கப்ப்ட்டன. மாங்குளத்திலிருந்து முல்லைத் தீவுக்கொன்றும், அனுராதபுரியிலிருந்து புத் தளத்துக்கு ஒன்றும் மதவாச்சியிலிருந்து மன்னருக்கொன்றுமாக மூன்று கிளை வீதிக ளமைக்கப்பட்டன. மன்னர் மதவாச்சி ரோட்டு இந்தியாவி லிருந்து இலங்கைக்கு வரும் தொழிலாளிகளுக்கு மிக அனுகூல மாயிருந்தது. மன்னர்த்தீவுக்கும் மூல பூமிக்குமிடையில் 1884-ல் கோடன் ஒரு பாலத்தை அமைத்தார். 1886-ல் அனுராதபுரி யிலிருந்து திருக்கோணமலைக்கும் ஒரு ரோட்டை அமைத்தார்.
தென் மாகாணத்திலும், கீழ் மாகாணத்திலும் பல ரோட்டுக் களை கோடன் தேசாதிபதி அமைத்தார். அல்துமுல்லை-அப்புத் தளை ரோட்டிலிருந்து கிளையாகப் பிரிந்து லேமஸ்தோட்டை வரை ஒரு உதவி நன்கொடை ரோட்டை ரொபின்ஸன் அமைத் திருந்தார். கிரெகெறி இதை கொஸ்லாந்தை, வல்லவா யா, தனமல் வில்லை ஆகிய இடங்களுக்கூடாக அம்பாந்தோட்டைவரை விஸ்தரித்தார். கொஸ்லாந்தை கோப்பித் தோட்டக்காரருக்கு இது மிக வசதியளித்ததோடு தென்மாகாணத்துக்கும் மத்திய பகுதிகளுக்கு மிடையில் உப்பு வியாபாரத்தை நடத்துவதற்கும் வசதியளித்தது. சுரத்தினுல் பீடிக் கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்த ரோட்டு நி வா ர ன ம ஸ்ரி க் க க் கூடியதாயிருந்தது. கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குப் போட்டிருந்த ரோட்டை கிரெகெறி பூர்த்திசெய்ததுடன் ஏருவூரிலிருந்து வண்டலூஸ் குடா என்னும் கல்குடா வரை ஒரு கிளை ரோட்டையும் அமைத் தார். வருடத்தில் சில மாதங்களில் கப்பல்கள் மட்டக்களப்பில் வந்திறங்கி ஏற்றுமதி இறக்குமதி செய்ய முடியாதிருந்தன. ஆனல் கல்குடாவில் அது வசதியாயிருந்தது. வருடத்தில் எல்லாக் காலங்களிலும் உபயோகமாகக்கூடிய ஒரு துறைமுகம் ரோட்டால் இணைக்கப்பட்டது மட்டக்களப்பு வாசிகளுக்குப் பெரிய நன்மையை அளித் துவந்தது. காரைதீவிலிருந்து வீரியடிக்கு கோடன் காலத்தில் ஒரு ரோட்டுப் போடப்பட்டது. ரூவான்விளையிலிருந்து அட்டன கலைக்கும் கிரியுல்லவிலிருந்து அலாவைக்கும் கோடன்தான் ரோட்டுகளை அமைத்தார்.

Page 80
146 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பாலங்களை அமைத்ததனல் பல ரோட்டுகள் சீர்திருத்தப் பட்டன. கிரெகெறி கட்டிய பாலங்களுட் சிறந்தது களுத் துறைப் பாலம். வள்ளத்தினுலமைக்கப்பட்ட பாலத்தை அகற்றி விட்டுப் பாலத்துறையில் ஒரு புதிய பாலத்தை லோங்டன் அமைத்தார். ஆனை இறவுப் பாலமும் இக்காலத்திற்ருன் போடப் பட்டது. 1890-ல் மொறட்டுவையைச் சேர்ந்த திகரொல்ல, பொல்கொடை, தெ புவன ஆகிய பாலங்களும் போடப்பட்டன.
கொழும்பு கண்டி ரயில் பாதை எதிர்பாராதவிதமான நன் மைகளை யுண்டாக்கிற்று. நாவலப்பிட்டிவரை ரயில் பாதையை அமைப்பதற்கு 1878-ல் நடவடிக்கைகளெடுக்கப்பட்டன. பிதுருதால கலை மலைக்கும் சிவனெளிபாதத்திற்கு மிடையிலுள்ள பகுதிகளில் தோட்டங்களைத் திறப்பதற்கும் திறந்த தோட்டங் களுக்கு மலிவாக உரம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கும் இந்த ரயில் பாதை அனுகூலமாயிருந்ததால் எல்லாரும் இதை வர வேற்ருர்கள். 1873-i கம்பளை வரை ரயில் பாதை போடப் L-L----gj[. அடுத்த வருடத்தில் அது நாவலப்பிட்டிவரைلL விஸ்தரிக்கப்பட்டது. மேலும் இந்த ரயில் பாதையை விஸ்தரிக்க வேண்டுமென கிரெகெறி விரும்பினர். 1880-ல் தான் விஸ் தரிப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1884-ல் அட்டன் வரையும், 1885-ல் நானு ஒயா வரையும் விஸ்தரிக்கப்பட்டது.
மாத்தளையிலுள்ள தோட்டப்பகுதிகளுக்காக ஒரு ரயில் பாதை 1878-ல் ஆரம்பிக்கப்பட்டு 1880-ல் பூர்த்திசெய்யப் பட்டது. 1877-ல் பாணந்துறை வரை ரயில்பாதை அமைக்கப் பட்டது. 1879-ல் களுத்துறைக்கும், 1890-ல் பெந்தோட்டைக் கும் இந்தப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. இவை யிரண்டையும் கிரெகெறி தான் திட்டம் போட்டு அமைத்தார். பாணந்துறை பெந்தோட்டை பாதை வளம் மிக்க அப்பகுதிகளின் அபிவிருத் திக்காகவே கட்டப்பட்டபோதிலும் ஆரம்பத்தில் சாமான்கள் அதிகம் கொண்டுசெல்லப்படவில்லை. போக்குவரத்தே அதிகம் நடைபெற்றது.
இந்தக் காலப்பகுதியில் ரயில், ரோட்டு மார்க்கங்களை விடக் கால்வாய் மார்க்கமாகவுஞ் சில இடங்களில் போக்குவரத்து நடைபெற்றது. புத்தளத்துக்கும் கொழும்புக்குமிடையில் கால் வாய் போக்குவரத்து நடைபெற்றது. கழனிகங்கையையும் கலுகங்கையையும் தொடுத்து டச்சுக்கார்ர் வெட்டிய கால்வாயும் போக்குவரத்துக்குப் பயன்பட்டது. 1879-ல் பொல்கொடை ஏரியிலிருந்து பாணந்துறைக் கடுத்த கடல் வரை வெட்டிய கால் வாய் மார்க்கமாகவும் போக்குவரத்து நடைபெற்றது.

○不
R - °ause anapW-T,
Ŵy
$አ
། * ܝܬܐ ܓ ۵۔ پارہ ہے؟ مراسمی ~_?N్య°--- \్క }
oved Arles
தலவாக்கொல்லே வடிகொ.ை &#ණ්හාෆිර්‍ඉuJz7
?ென். மக்ரெட் -
பகுதத் துவத்
ܔܔܓܠ̈
N
oA Araw fra?
a
V− محمبر **。 r; a AYAlg eft A , ao கந்தளாய்க்குளம்
Ao r"AS 2
به غرم به عقهٔ
狼 。。 da
്: ޕާބިތީ" W r سمص P ノ عبر
M
F9 敏 .بهع ܟ݂ a2 به بسازی به کالا ۴ تا /斜 ーC கு
پنجy (مN
மட்டக்களபடி ܓܔ-، ށަހި بر۔ حضح^ [3 : A
இலங்கைப் படம்
= வீதிகள் (1814 - 1872) - - - - as gasar ( 1873 - 1890) )1872 ۔ 85 ا ) قدی۔ ... میں وسطات (ع) ہیبسببسه கடிகரெயில்பாதை (1873 - 1890)
oro uos
இதிருக்கோணமல்
ெேகாடைதிரம்3 ھهf2 ഞ9
'*' /6 تدلأرض سے
منقة. چیتھڑ شیو
~്.
Ouadagab Graår C. ' SN~ 1*4/*ASar3f 4fas7avrtu w
-ళ ఓజ•t
' دہarہو گی۔ و
pe ”۱ م سمجه جسے n34
s
3 *్క
TF Aas \
# حملے چپقع ہو چ V
La aŭto ŝas68.Lu foo ל V
ழ்ப்பு కffg ープ。 (y سام هت تضمی t 5ణ్స****X_-_
k_இத்தினப்சிலி V ܗܝ V f \
దిrడఏN అశక్తిత్రి
n-3-4e, 4-6arta AfPAs Narcs traw " ہاتف ہو۔రిసా .ாேல்கரு لا يسة مستهلنسك -7
துெைக%C
5 நாவலபபிடடி 6 கம்பன 7 D&థితి 8 தெபுவகை

Page 81
148 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
தந்திவசதிகளும் மேலும் அதிகரிக்கப்பட்டன. 1874-ல் கொழும்பிலிருந்து பொல்கா வளை, குருனக்கல், அனுராதபுரி யாகிய இடங்களுக்குத் தந்திவசதி ஏற்படுத்தப்பட்டது. 1876-ல் பதுளைக்கும், மட்டக்களப்புக்கும் தந்தித்தொடர்பை ஏற்படுத்தி னர்கள். 1887-ல் நீர் கொழும்புக்கும் 1888-ல் இரத்தினபுரிக் கும், 1889-ல் மாத்தறைக்கும், 1890-ல் நீர்கொழும்பிலிருந்து புத்தளத்துக்கும் தந்திவசதிகளமைக்கப்பட்டன. இவ்வாறு இலங்கையின் பிரதானமான நகரங்களெல்லாம் தந்திமூலம் இணைக்கப்பட்டன. இதனுல் வியாபாரம் விருத்தியடைந்தது. அரசாங்க நிர்வாகமும் திருத்த மடைந்தது.
3. கொழும்புத் துறைமுகம் அமைத்தல் -
இக்காலத்து மிகப்பெரிய சம்பவம் கொழும்புத் துறைமுகம் அமைக்கப்பட்டமையேயாகும். தோட்டங்களைத் திறந்ததால் வியாபாரம் பெரிதும் விருத்தியடைந்ததென முன்னர் கூறி னுேம், தோட்டப் பொருட்களைக் கொழும்புக்குக் கொண்டு வருவதற்காக ரோட்டுகளமைக்கப்பட்டன. ரயில் பாதை அமைக் கப்பட்டதாலும் மலிவாயும், சீக்கிரமாயும் மலைநாடுகளுக்குச் செ ல் லக் கூடியதாயிருந்தது. இலங்கை விளைபொருள்களைக் கொண்டுவந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நல்ல ஒரு துறைமுகம் அவசியமாயிற்று. கிரெகெறி கொழும்புத் துறை முகத்தில் ஒரு நீரணையைக் கட்டினர். 1873-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலை 1882-ல் லோங்டன் காலத்தில் பூர்த்தி செய்யப் ---ģi.
கறுவா ஏற்றுமதி செய்யப்பட்ட காலந்துவங்கியே கொழும் புத் துறைமுகம் இலங்கை வியாபாரத்துக்கு ஒரு முக்கியமான இடமாயிற்று. பிரித்தானிய ஆட்சியின் பின்னர் தோட்டங்கள் பெருகவே கொழும்புத் முறைமுகத்தின் முக்கியமும் அதிகரித் தது. ஆனல் கப்பல்கள் உள்ளே வந்து தங்கக்கூடிய வசதி யில்லாதிருந்தது. அன்றியும் குடாவில் பெரிய கப்பல்கள் வந்து நங்கூரம் போடக்கூடிய ஆழமில்லாதிருந்தது. குடாவுக்குக் குறுக்கே மிதந்து கிடக்கும் கற்பாறை தொட்டு மணல்மேடி ருந்தது. இது சில இடங்களில் பத்தடி ஆழங் கூட இல்லா திருந்தது. இந்தி மணல்மேடு அடிக்கடி மாறுவதால் இதைக் கடப்பது கஷ்டமான காரியமாயிருந்தது. அதனல் கப்பல்கள் ஒரு மைல் தூரத்துக்கப்பால் நங்கூரமிட்டன. வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்திற்றன் துறைமுகத்துக்குள் கப்பல் கள் போவதானல் போகும். தென் கீழ்ப் பருவக் காற்றடிக்கும் காலமான ஏப்ரல் தொட்டு செப்டெம்பர் வரை கரைக்கும்

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 149
கப்பலுக்குமிடையே போக்குவரத்து அடிக்கடி துண்டிக்கப்படும். நல்ல காலநிலையிலுங்கூட இந்தத் தொந்தரவு ஏற்படுவதுண்டு.
இந்த நிலைமையில் காலித் துறைமுகத்தையே பல கப்பல்கள் நாடின. ஒல்லாந்தர் காலத்திலும் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பகாலத்திலும் காலி, மாத்தறை ஆகிய பகுதிகளிலிருந்து கிடைத்த கறுவா காலித் துறைமுகமார்க்கமாகவே வெளிநாடு களுக்கு அனுப்பப்பட்டுவந்தது. கறுவா வியாபாரம் குன்றவே காலித்துறையிலும் உள்ளூர் வியாபார நடவடிக்கை குறைந்தது. ஆணுல் மத்தியதரைக் கடல்வழியாகக் கப்பல்கள் போக்கு வரத்து ஆரம்பித்ததும் காலித் துறை மறுபடியும் முக்கியத் துவம் பெற்றது. இங்கிலாந்துக்கும் பம்பாய்க்கு மிடையிலும், கல்கத்தா, மலாய் நாடுகள், சீனு, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியுஸிலந்து ஆகிய பகுதிகளுக்கும் இங்கிலாந்துக்குமிடையிலும் நடைபெறும் கப்பற் போக்குவரத்துத் தொடரில் காலியும் ஒரு முக்கியமான தொடராயிருந்தது.
1869-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதி சுவேஸ் கால் வாய் திற்க்கப்பட்டதும் காலித் துறைமுகம் மேலும் முக்கியத்துவ மடைந்தது. லண்டனிலிருந்து மூன்று வாரத்தில் கப்பல்கள் காலியை அடைந்தன. போக்குவரத்துச் செலவு வீழ்ச்சியடைந் தது. கீழைக்கடற் போக்குவரத்து வியாபாரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. 1868-ல் 34 கப்பல்களே காலித் துறை முகத்துக்கு வந்தன. 1869-ல் இந்தத் தொகை ஐம்பத்தெட்டாக உயர்ந்தது. 1870-ல் இத்தொகை 82 ஆகவும் 1871-ல் நூற்றுப் பத்தாகவும் உயர்ந்தது. மேலும் இத்தொகை அதிகரிக்கு மெனவும் நன்னம்பிக்கைமுனையைச் சுற்றிவரும் பாய்க்கப்பல் களுக்குப் பதிலாக நீராவிக்கப்பல்கள் ஓடத் துவங்குமெனவும் எதிர்பார்க்கப்பட்டது.
நீராவிக்கப்பல்களின் தொகை அதிகரிக்கவே புதிய பிரச்னை கிளம்பிற்று. காலித் துறைமுகம் ஒதுக்கில்லாமல் திறந்த துறை முகமாயிருந்தபடியால் அங்கே வரும் கப்பல்களுக்கெல்லாம் ஒதுக்கிடம் கொடுக்க வசதியின்றி யிருந்தது. இதனல் கப்பல் களுக்கு ஆபத்து ஏற்பட்டால் கப்பல் கொம்பெனிகள் திருக் கோணமலைத் துறைமுகத்தைத் தங்கள் தங்குந் துறையாகக் கொள்ளக்கூடுமென அரசாங்கம் பயந்தது. தபால் கொண்டு வரும் கப்பல்கள் கொழும்புக்குப்பதில் காலியில் வந்திறங்குவது மிக வசதிக்குறைவாகவேயிருந்தது. காலியைவிட்டு அவை திருக்கோணமலைக்குப் போவதனல் மேலும் வசதிக்குறைவாக
G) LAO .

Page 82
150 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
வருடமுழுவதும் கப்பல்களுக்குப் பாதுகாப்பளிக்கக்கூடிய ஒரு துறைமுகமாகக் காலித் துறைமுகத்தைச் சீர்திருத்தின லென்னவென்று அரசாங்கம் ஆலோசனை செய்தது. துறைமுக அமைப்பை ஆராய்ச்சிசெய்த அளவில் காலித் துறைமுகத்தைப் போதியஅளவு விஸ்தரிக்க முடியாதென்றும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சிக் காற்றுவீசுங் காலங்களில் கப்பல்கள் அங்கு வந்திறங்குவது கஷ்டமாயிருக்குமென்றும் தெரியவந்தது. மேலும் அதற்கான செலவும் அதிகமாகுமெனவும் வியாபாரத் துக்கு நடுநாயகம் போன்ற கொழும்பிலிருந்து வெகுதூரத்தி லுள்ள காலித் துறையில் அவ்வளவு பணத்தைச் செலவிடுதல் ஏற்றதல்லவெனவும் கருதப்பட்டது.
எனவே கொழும்புத் துறைமுகத்தைச் சீர்திருத்துவது நல்ல தென அரசாங்கம் தீர்மானித்தது. நீராவிக்கப்பல்கள் பாய்க்கப் பல்கள் போலத் துறைகளில் அதிகநாள் தங்குவதில்லை. கொழும்பி லிருந்து விரைவில் செல்லலாமென்ற உறுதியும் கிடையாது. கொழும்பில் தாமதமேற்பட்டால் தாமதத்துக்கு ஏற்றவாறு கேள் வை உயர்த்திவிடுவார்கள். அதனல் இலங்கை விளைபொருள் களுக்கும் வெளியூர்களில் விலை அதிகரிக்கவே மற்றத்தேசப் பொருள்களோடு இலங்கை போட்டியிட முடியாமற் போய்விடும். எனவே வருடம் முழுவதும் பூரணமான பாதுகாப்பையும் ஒதுங்குமிடத்தையுந் தரக்கூடிய ஒரு துறையாகக் கொழும்புத் துறைமுகத்தை அமைத்துவிட வேண்டுமென்று அரசாங்கம் தீர்மானித்தது. இதன் பயனக உள்ளூர் வியாபாரம் விருத்தி யடைந்தது. கொழும்பு முக்கியமான ஒரு இடத்தில் அமைந் திருந்தபடியால் மற்றத்தேச வியாபாரத்தோடு கொழும்பு போட்டியிடுவதற்குப் பல அனுகூலங்களிருந்தன. தென்னிந்திய வியாபாரத்துக்குக் கொழும்பு ஒரு களஞ்சியசாலை போலானது. 1870-ல் 67710 டன் நிறையுள்ள 78 கப்பல்கள் கொழும்புக்கு வந்துபோயின. 1878-ல் 455517 டன் நிறையுள்ள 338 கப்பல் கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துபோயின. I 882-6) தபால் கப்பல்கள் கொழும்புக்கு வரத் துவங்கின. மேற்கே லண்டனுக்கும் கிழக்கே ஆஸ்திரேலியா, சீன, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குமிடையில் கொழும்பு நடுவில் நின்றது. 1883 க்கும் 1889 க்கும் இடையில் கொழும்புத் துறைமுகத்தின் வருமானம் 60 வீதம் உயர்ந்தது. வியாபாரம் மேலும் விருத்தியடைந்தது. 1890-ல் கப்பல்வரத்து 5,117,902 டன் ஆக உயர்ந்துவிட்டது.
4. நீர்ப்பாசனவேலேயும் விவசாயிகளும்
வாட் தேசாதிபதி ஆரம்பித்த நீர்ப்பாசன வசதிகளைச் ஒர் திருத்தும் வேலையை கிரெகெறியும் தொடர்ந்து நடத்தினர். ஆனல் அந்தப் புனருத்தாரண வேலைகளினல் உண்டாகும் நன்மைகளைப்பற்றி ஒருவரும் கவனிக்கவில்லை. கிராமவாசி

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 151
களின் நிலைமையைச் சீர்திருத்துவதே இந்த நீர்ப்பாசன வசதி களைச் சீர்திருத்துவதன் முக்கியமான நோக்கமாகும். மிக வறுமையான நிலையிலிருந்தவர்களுக்கு ஊதியமளிப்பதற்காகவே விசேஷமாக இத்திருத்தங்கள் நடத்தப்பட்டன. ,
நுவர கலாவிய-பகுதியிலிருந்த சனங்களின் கேவலமான நிலைமையைக் கண்டு கிரெகெறி தேசாதிபதி இரங்கினர். இந்தப் பகுதியில் 60,000 பேர் 1600 கிராமங்களிற் குடியிருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குளமிருந்தது. ஆனல் குளங் களுக்கு நல்ல மதகுகளில்லாதபடியால் நீர் பாய்ச்சுவது கஷ்ட
மாயிற்று. எனவே கிராமவாசிகள் பிரதானமாக புன்செய் விவசாயத்தையே மேற்கொண்டார்கள். அதனுல் காடுகள் அழிக்கப்பட்டன. அனுராதபுரியிலுள்ள அபயவீவா என்ற பசவங்குளத்தையும், மதவாச்சியிலுள்ள மகாவாவியையும்
கிரெகெறி பழுது பார்த்தார். கிராமக் குளங்களெல்லாவற்றுக் கும் இலவசமாக மதகுகள் கட்டிப் கொடுப்பதாகவும், குளக் கட்டுகளைச் சனங்களே பழுது பார்க்கவேண்டுமெனவும் அவர் கூறினர். டிக்சன் என்ற அரசாங்க ஏஜெண்டின் தலைமையில் நோயினுலும் பஞ்சத்தினுலும் வாடிச்செயலற்று நம்பிக்கையிழந் திருந்த சனங்கள் உற்சாகத்துடன், அரசாங்கம் வாக்களித்த நன்மைகளைப் பெறுவதற்காக 700 அல்லது 800 குளங்களைத் திருத்தினர்கள். 110,479 புசல் நெல்லு விளைந்த பகுதியில் இப்பொழுது 313,459 புசல் நெல்லு விளைந்தது.
நுவர கலாவியபகுதி வரண்ட பிரதேசத்திலிருந்தபடியாலும் அங்கே மலைகளில்லாதபடியாலும், மழையை எப்பொழுதும் நம்பியிருக்க முடியாதிருந்தது. எனவே கலாவாவியையும், அனுராதபுரியிலுள்ள திசாவாவியுடன் அதை இணைத்த யோத அல என்ற ஜயகங்கையையும் பழுது பார்ப்பதற்கு கிரெகெறி திட்டம் போட்டார். 1884-ல் கோடன் தேசாதிபதி இத்திட்டத் தைத் தொடர்ந்து அமுல் நடத்தி 1887-ல் பூர்த்திசெய்தார். இதனல் குளங்களுக்கு முன்னையிலும் பார்க்க அதிகம் நீர் கிடைத் தது. மத்திய் மாகாணம் வடமத்திய மாகாணங்களில் பாயும் அலஹரா கால் வாயையும் அவர் பழுது பார்த்தார்.
கீழ் மாகாணத்திலுள்ள நீர் பாய்ச்சல் வ ச தி களை யும் கிரெகெறி பழுது பார்த்தார். இரக்காமம், அம்பாறையாகிய குளங்கள் மட்டக்களப்புப் பகுதிக்கு எவ்வாறு பயன்பட்டனவோ அவ்வாறே திருக்கோணமலைப் பகுதிக்கும் பயன்படுமாறு கந்தளாய் குளத்தையும் அவர் பழுது பார்த்தார். வேர கொடை குளத்தையும் அவர் சீர்திருத்தினர்.
தென்மாகாணத்திலும் சில குளங்கள் திருத்தப்பட்டன. அலவெலாக் குளத்தை கிரெகெறி பழுதுபார்த்தார். 1871-ல் ரொபின்ஸன் ஆரம்பித்த திசமஹாராமா குளத்தைப் பூர்த்தி

Page 83
罩52 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
செய்தார். கிரிண்டி ஓயாவுக்கு எதிரே ஒரு அணையைக் கட்டி அந்தக் குளத்துக்கு நீர் பெருகச் செய்தார். கோடன், வளவை கங்கை நீர்ப்பாசன வேலைகளையும், தங்காலைப்பகுதியிலுள்ள உடுக்கிரிவில்ல நீர்ப்பாசன வேலைகளையும் புதிப்பித்தார். கந்த ளாய்க்குளத்தைப் பழுது பார்த்தமை சுற்றியுள்ள சனங்களின் நன்மைக்காக மாத்திர மன்று; வேறு பகுதிகளில் வறுமையி லாழ்ந்திருக்கும் சனங்கள் அங்குவந்து விவசாயஞ் செய்து நன்மை பெறலாமென்ற கருத்தினுலுமே. அந்தக் காரணத்தைக் கொண்டுதான் திசமஹாரா மாக் குளமும் பழுது பார்க்கப் பட்டது. 1881- ம் ஆண்டு துவக்கம் 1891-ம் ஆண்டு வரை இந்தப்பகுதியில் குடிசனத்தொகை 473 லிருந்து 10 16 வரை உயர்ந்தது.
வடமத்திய மாகாணத்திலும் குளங்கள் பழுதுபார்க்கப் பட்டன. உஸ்வாவி கல்கமுவாக் குளம் ஆகியவற்றை கிரெகெறி புதுப்பித்தார். வன்னியிலுள்ள தெமிளஹத் பத்திலும் சில குளங்களை கோடன் புதுப்பித்தார். 1880-ல் 95000 ரூபாய் பெறுமதியான நெல் விளைந்த இடத்தில் 1886-ல் 241,470 ரூபாய் பெறுமதியான நெல் விளைவாயிற்று.
ஊவா, சபிரகமூவாப் பகுதிகளிலும் கோடன் குளங்களைத் திருத்தினர். 1888-ல் கொங்கல விந்தனையிலுள்ள ஹம்பேகமுவ குளத்தைப் பழுது பார்த்தார். இந்தக் குளம் அப்புத்தளை யிலிருந்து பார்க்கத் தெரியும். இந்தப் பகுதியிலுள்ள சனங் களின் நன்மையை உத்தேசித்தே இக்குளம் புதுப்பிக்கப்பட்டது. இங்கே குடிகள் சுரநோயினுலும், பறங்கி வியாதியினலும் பெரும்பாலும் பீடிக்கப்பட்டிருந்தார்கள். கித் துல் பொக்க ஆற்றிலிருந்து கொலன்ன கோருளையிலுள்ள துங்கே மவரை பரந்திருந்த நீர்ப்பாசன வேலைகளையும் இந்த நோக்கத்தைக் கொண்டே கோடன் பழுது பார்த்தார். அரிசியைச் சமைத்துச் சாப்பிடலாமென்பதையே இப்பகுதிச் சனங்கள் அறியாதவர் களாய் பறங்கி, சுரம் முதலிய நோய்களினல் பீடிக்கப்பட்டு வருந்தினர்.
நெற்சாகுபடியை விருத்திசெய்வதற்காக வேறு பல நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டன. நீர்ப்பாசன வசதிகளைப் பழுதுபார்ப்பதற்குக் குடிசனங்களுக்கு ரொபின்ஸன் காலத்தில் முற்பணம் கொடுக்கப்பட்டுவந்ததென ஏற்கனவே குறிப்பிட் டோம். ஆனல் இப்பணத்தை மறுபடியும் அரசாங்கத்துக்குத் திருப்பிக் கொடுக்க இடப்பட்ட நிபந்தனைகள் அவ்வளவு திருப்தியா யில்லாதபடியால் பல பகுதிகளில் விவசாயிகள் அரசாங்கத்தினிடம் முற்பணம் பெறுவதைக் கைவிட்டனர். குளங்களைப் பழுதுபார்ப்பதற்கும் நல்ல நிலைமையில் வைத் திருப்பதற்குமாக ஏக்கருக்கு ஒரு ரூபாய்வீதம் விவசாயிகளுக்கு

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 158
உதவி செய்வதாக கிரெகெறி வாக்களித்தார். லோங்டன் காலத்தில் தானிய வரியைப் பற்றி விசாரணைசெய்ய ஒரு கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கமிஷன் அப்போது நிலவிவந்த விவசாயமுறையைக் கண்டித்தது. கோடன் நெற்சாகுபடியில் மிகுந்த சிரத்தை யெடுத்தார். நீர்ப்பாசன வசதிகளைப் பழுது பார்க்கும் விஷயத்தில் முந்திய அரசாங்கங்கள் போதிய சிரத்தை யெடாததைக் கண்டித்தார். சனங்களின் சுகாதாரத்துக்கும் சுக சீவனத்துக்கும், உயிர் வாழ்வுக்குங்கூட நீர்ப்பாசன வசதி களை ஏற்படுத்துவதுபோல முக்கியமான விஷயம் வேறென்று மில்லையென அவர் கருதினர். கோடன் இலங்கையில் தேசாதி பதியாயிருந்த காலத்தில் இங்கிலாந்தில், அரசாங்கமே குடிசனங் களின் நலத்தைக்கருதி அதற்கான வேலைகளையெல்லாஞ் செய்ய வேண்டுமென்ற கொள்கை பரவிவந்தது. இது கோடனுக்குப் பெரிதும் துணையாயிருந்தது. குளங்களைப் புதுப்பித்து நீர் வளத் தைப் பெருக்கியதால் பல கிராமங்களில் அற்புதமான மாற்றங் களுண்டாயின. அதனல் கோடன் தனது நீர்ப்பாசனத் திட்டங் களை மேலும் பூர்த்தி செய்யக் கூடியதாயிற்று. முப்பது லட்சம் ரூபாயைச் செலவுசெய்து 42 குளங்களைப் பழுது பார்த்ததோடு 164 மதகுகளையுங் கட்டுவித்தார். நீர்ப்பாசனச் சங்கம் என ஒன்றை 1884-ல் ஏற்படுத்தினர். இது திருப்தியற்றதாய்ப் போகவே, மாகாணங்களில் சிறிய நீர்ப்பாசன வேலைகளைப் பற்றி ஆலோசனை கூறவும் மேற்பார்வை செய்யவும் ஸ்தல நீர்ப்பாசன சங்கங்களை 1887-ல் ஏற்படுத் தி னர். பெரிய வேலைக%ளக் கவனிப்பதற்காக கொழும்பில் தேசாதிபதியைத் தலைவராகக் கொண்ட ஒரு மத்திய சங்கம் ஏற்படுத்தப்பட்டது. நீர்ப்பாசன வேலைகளைக் கவனிப்பதற்காக நெல்வரியில் காற்பகுதியை ஒதுக் கியும் வைத்தார்.
கிராமவாசிகளின் நிலைமையை அபிவிருத்தி செய்வதற்காக வைத்திய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. தோட்டங்களில் மேல்நாட்டு வைத்திய முறைப்படி சிகிச்சை செய்ய நடவடிக் கைகளெடுக்கப்பட்டனவென்று ஏற்கனவே குறிப்பிட்டோம். கிராமவாசிகளுக்குப் போதிய வைத்திய வசதிகள் செய்யப் படாதிருப்பதைக் கிரெகெறி கண்டித்தார். தான் அயர்லாந்து வாசியானபடியால் தனது தேசத்தில் அனுஷ்டிக்கப்பட்டுவந்த வைத்திய வசதிகளை இலங்கையிலும் ஏற்படுத்த முயன்று ர். கிராமங்களில் டிஸ்பென்சரிகள் ஏற்படுத்தப்பட்டன. அந்தந்த பகுதியிலுள்ள பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள வைத்திய அதிகாரி அந்த டிஸ்பென்ஸரிகட்கு வாரத்தில் குறித்த தினங்களில் வந்து போக வேண்டுமெனவும் ஒழுங்குசெய்யப்பட்டது.

Page 84
154 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
5. நிர்வாக சீர்திருத்தமும் ஏனைய சீர்திருத்தங்களும்
நாட்டின் வளத்தைப் பெருக்கும் கொள்கையை அரசாங்கம் இக்காலத்திலும் தொடர்ந்து கடைப்பிடித்துவந்தது. பொது மக்களின் நிலைமையைச் சீர்திருத்த இங்கிலாந்தில் முயற்சி செய்யப்பட்டு வந்தபடியால் இலங்கை அரசாங்கமும் கோல் புறுாக் சிபார்சுசெய்த காலந்தொட்டு அதிகம் கவனத்தைப் பெருத பொதுமக்களின் வாழ்வைச் சீர்ப்படுத்தப் பலபடமுயன் றது. இதனல் நாட்டின் நிர்வாகத்தை ஒரளவுக்குச் சீர்திருத்த வேண்டியுமிருந்தது. கோல்புறுாக் இலங்கையை 5 மாகாண மாகப் பிரித்திருந்தார். ஆனல் இப்பொழுது ஆறு மாகாணத் திலிருந்து, ஒன்பது மாகாணமாக இலங்கை பிரிக்கப்பட்டது. அரசாங்க நிர்வாகத்தைத் திறம்பட நடத்தவும், பாட்டாளி மக்களின் நிலைமையை உயர்த்தவும் வேறு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
1873-ல் சர். வில்லியம் கிரெகெறி வடமத்திய மாகாண மென ஒரு மாகாணத்தை உண்டாக்கினர். நிர்வாகம் நடத்து வதற்கு வடமாகாணம் மிகப் பெரிதாயிருந்தது. யாழ்ப்பாணத் தில் இருந்துகொண்டு, நுவர கலாவிய போன்ற தூரப்பகுதிகளை வட மாகாண அரசாங்க ஏஜெண்டு கவனிப்பது கஷ்டமான வேலையாகும். இதன் பயணுக இப்பகுதியிலுள்ள சனங்களின் கேவலமான நிலைமையைப் பரிகரிக்காது விட்டனர். இப்பகுதி யின் வளத்தைப் பெருக்கவும் ஒருவிதமான முயற்சியும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. நுவர கலாவிய பகுதியிலுள்ள சனங் களுக்கும் கீழ் மாகாணத்துட னிணைக்கப்பட்டிருந்த தமங்கடுவைப் பகுதியிலுள்ள சனங்களுக்கும், வடகீழ் மாகாணங்களிலுள்ள தமிழரோடு இயற்கையான தொடர்பு எதுவுமில்லாததையும் அவர் கண்டார். எனவே இப்பகுதிகளைப் பிரித்துத் தனி மாகாணமாக்கி அனுராதபுரத்தை அதன் தலைநகராக்கினர்.
1866-ல் சர். ஆர்தர் கோடன் ஊவா மாகாணமென ஒரு மாகாணத்தை ஏற்படுத்தினர். வதுளை இதன் தலைநகரமா யமைந்தது. மத்திய மாகாணத்திலிருந்து விந்தனை, வியலுவ, வெல்லச, உடுக்கிந்தை, எட்டிகிந்தை ஆகிய பகுதிகள் பிரிக்கப் பட்டன. வதுளையுடன் ரோட்டுமார்க்கமாக இணைக்கப்பட்டி ருந்த வல்ல வாயா, புத்த ள என்ற தென் மாகாணப் பகுதிக ளிரண்டும் அம்மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டன. இவ்வாறு பிரிக்கப்பட்ட மாகாணங்கள் எல்லா மாகச் சேர்ந்தே ஊவா என்று பெயரிடப்பட்டது. ஊவா மாகாணத்தைப் பிரித்து விடுமாறு ஐரோப்பிய தோட்டத்துரைமாரும், இலங்கை உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களும் கேட்டிருந்தார்கள். மத்திய மாகாண அரசாங்க ஏஜெண்டு கண்டியிலிருந்துகொண்டு வெகு தூரத்திலுள்ள பகுதிகளைச் சரியாக மேற்பார்வையிட முடியா

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 155
திருந்தது. தோட்டங்களேற்பட்டதன் காரணமாக மத்திய மாகாணம் அதிக முக்கியத்துவமடைந்தது மல்லாமல் அங்கே குடிசனத்தொகையும் அதிகரித்தது. ஊவாவிலும், பதுளை, மதுல்சீமா, மொனரகலை, வெளிமடை ஆகிய பகுதிகளிலும் தோட்டங்கள் அதிகரித்தன. ரயில் பாதை போடப்பட்டதும் மேலும் பல தோட்டங்கள் திறக்கப்படலாமென எதிர்பார்க்கப் பட்டது. மழையின்மையாலும் நீர்ப்பாசன வசதிகளைக் கவனி யாது விட்டுவிட்டதாலும் சனத்தொகை குறைந்துகொண்டே வந்தது. ஆதலால் கிராமவாசிகளின் நன்மையை மேற்பார்வை செய்யவேண்டியது அவசியமாயிற்று.
மூன்றுவது சபரகமுவா மாகாணம் உண்டாக்கப்பட்டது. கேகாலை இரத்தினபுரி ஆகிய பகுதிகள் வளங்குன்றிவந்தன. அத்துடன் இரத்தினபுரியின் குடிசனத்தொகையும் குறைந்து வந்தது. மேல் மாகாண அரசாங்க ஏஜெண்டு இப்பகுதிகளையும் கவனிக்க முடியாதிருந்தது. ரோட்டுகளமைப்பதற்கோ, பாட சாலைகள் ஏற்படுத்துவதற்கோ, விடுதிச்சாலைகள் உண்டாக்கு தற்கோ பணம் செலவு செய்யப்படவில்லை. குகுலு கோருளையி லுள்ள நீர்ப்பாசன வேலைகளும் கவனிப்பின்றி விடப்பட்டன. இந்நிலைமையைச் சீர்ப்படுத்துவதற்காக கேகாலை, இரத்தினபுரி யாகிய பகுதிகள் தனி மாகாணமாக்கப்பட்டு இரத்தினபுரி அதன் தலைநகராக்கப்பட்டது.
நிர்வாக வேலை விஸ்தரிக்கப்படவே மாத்தளை, களுத்துறை, நீர் கொழும்பு, சிலாபம் ஆகிய இடங்களில் உதவி அரசாங்க ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டனர். மாத்தளைப் பகுதியில் தோட்டங்கள் பெருகவே அதன் முக்கியத்துவம் அதிகரித்தது. மாத்தளை ஒரு பெரிய வியாபார நகரமாயிற்று. 184 6- th ஆண்டிலிருந்து 1874 வரை மேல்மாகாணத்தின் குடிசனத் தொகை 55,4000 லிருந்து 77, 6000 ஆக அதிகரித்தது. 1875-ல் களுத்துறை, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உதவி அரசாங்க ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டனர். நீர் கொழும்பில் கச்சேரி ஏற்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களுக்கிடையில் அதன் வருமானம் மூன்றிலொருபாகம் அதிகரித்தது.
1888-ல் புத்தளத்துடன் இணைக்கப்பட்டிருந்த சிலாபம் அதிலிருந்து வேருகப் பிரிக்கப்பட்டது. அதற்குப் பத்து வருடங் களுக்கு முன்னர் பல தென்னந்தோட்டங்கள் இந்தப்பகுதியில் திறக்கப்பட்டன. குடிசனமும் அதிகரித்தது. உதவி அரசாங்க -ஏஜெண்டின் காரியாலயம் சிலாபத்துக்கு மாற்றப்பட்டிருக்கும் ஆனல் புத்தளத்து உப்பு வருமானத்தை அரசாங்கம் சாவதான மாகக் கவனிக்கவேண்டியிருந்ததால் அவ்வாறு நடைபெற

Page 85
I 56 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
கிரெகெறி மாத்தளையில் உதவி அரசாங்க ஏஜெண்டை ஏற்படுத்தியபொழுது நெற்சாகுபடிக்கு மிக வா ய் ப் பா ன தம்புளைப் பகுதியைச் சீர்திருத்த வேண்டுமெனவும் எண்ணி யிருந்தார். வடமத்திய மாகாணத்தின் எல்லையிலுள்ளதான வவனியா-விளாங்குளத்திற்கும் ஒரு அரசாங்க ஏஜெண்டை மேற்கூறிய காரணத்தை முன்னிட்டு ஏற்படுத்தினர். 1888-ல் இப்பகுதி முல்லைத்தீவுடன் இணைக்கப்பட்டது. 1889-ல் இதற்கு வவுனியாப்பகுதி என்ற பெயர் கொடுக்கப்பட்டது.
அதிகார ஆட்சியின் பயணுகப் பல இலாகாக்கள் ஏற்பட்டன. இக்கால ஆரம்பத்தில் மராமத்து இலாகா, கல்வி இலாகா, அளவை இலாகா, ரோயல் பூந்தோட்ட இலாகா, வைத்திய இலாகா, போலீஸ், தபால், ரயில், துறைமுகம், சுங்கம், பதிவு இலாகா ஆகிய பல இலாகாக்களும் ஏற்பட்டன. இந்த இலா காக்களின் வேலைகளெல்லாம் தலைமைக் காரியாலயத்தின் பரி சீலனையிலிருந்தன. மாகாணங்களிலுள்ள கிளைகளும் அவ்வம் மாகாண ஏஜெண்டின் பார்வைக்கு அடங்கி நடந்தன. பெற்றர் போலப் பாதுகாக்கும் அரசியல் முறையே கிராமக் குடிகளுக்கு ஏற்புடையது. அதிகார ஆட்சி அவர்கட்குச் சிறிதும் பிடிக்க வில்லை. தங்கள் தங்கள் பகுதிகளிலிருக்கும் பலவேறு இலாகாக் களின் வேலையையும் ஒன்றே டொன்று தொடர்புபடுத்திப் பொதுசன நன்மையையே உத்தியோகத்தர் கவனிக்கிறர்களா வெ ன் ப  ைத மேற்பார்வை செய்யவேண்டியது அரசாங்க ஏஜெண்டுகளின் கடமையாயமைந்தது. அவர்கள் நாட்டில் ஒழுங் கையும் அமைதியையும் நிலைநாட்டுவதோடும் வருமானத்தை வசூல் செய்வதோடும் நின்றுவிடவில்லை. ரோட்டைச் சீர்திருத் தல், மற்றப் போக்குவரத்துகளைப் பழுது பார்த்தல், நீர்ப்பாசன வசதிகளைச் செம்மைப்படுத்துதல், காணிவழக்குகளைத் தீர்த்தல், தோட்டங்களை விருத்தி செய்தல், நெற்சாகுபடியை அதிகரித் தல், மராமத்து வேலைகளைக் கவனித்தல், காட்டுப் பரிபாலனம் ஆகிய இவையும் அந்தந்தப் பகுதியைப் பாதிக்கும் மற்ற விஷயங்களுமாகிய எல்லாம் அரசாங்க ஏஜெண்டின் மேற்பார் வையிலேயே இருந்தன.
இக்காலத்தில் தலைமைக்காரர் முறை ஒருவித மாற்றமு மின்றி இருந்து வந்தது. கிராமங்களில் இதற்கு மிஞ்சி அதிகார ஆட்சியைப் புகுத்தக் கூடாதென அரசாங்கம் உணர்ந்தது. அவ்வாறு புகுத்தியிருந்தால் அரசாங்க உத்தியோகத் தருக்கும் கிராமவாசிகளுக்கு மிடையில் பிணக்கு அதிகரித்திருக்கும் ; அத்துடன் எந்தச் செல்வாக்குள்ள குடும்பங்களிலிருந்து தலை மைக்காரர் தெரிந்தெடுக்கப்பட்டு வந்தார்களோ அந்தக் குடும் பங்களையே அரசாங்கத்துக்கெதிராக ஏவிவிடத் தூண்டுதலாயு மிருக்கும். -

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 157
கிரெகெறி காலத்தில், கண்டி மாகாணங்களில் ரட்டை மகாத்மியா முதலிய உயர்தரக் கிரா மாதிகாரிகளைப் பழைய அரசரின் குடும் பங்களிலிருந்து பொறுக்கி எ டு ப் ப து பல அரசாங்க உத்தியோகத் தருக்குப் பிடிக்கவில்லை. சிவில் சேவிஸ் உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சை மூலம் தெரிந்தெடுக்கப் பட்டதால் மத்திய வகுப்பைச் சேர்ந்த டாலர் சிவில் சேவிஸில் இடம்பெற்றர்கள். உத்தியோகத்தின் அடிப்படியிலிருந்து தேர்ச்சி பெற்றுப்பெற்று உயர்ந்தவர்களிடையேயிருந்து தலை மைக்காரரைப் பொறுக்கியெடுப்பதை முற்போக்கான எண்ணங் களுடைய உத்தியோகத்தர் ஆட்சேவிக்கவில்லை. ஆனல் கண்டிப் பகுதியில் அம்மாதிரியான நியமனங்கள் அவ்வளவு பலனைக் கொடுக்கவில்லை. ஏனெனில் கண்டிவாசிகளிடையே சாதிப் பாகுபாடும் சாதி யனுஷ்டானங்களும் அதிகம் காணப்பட்டன. தலைமைக்கார ஆட்சி முறை பழையதென்றும், தற்கால எண்ணப் போக்குக்கும் அரசியல் தத்துவங்களுக்கும் அது ஏற்றதன் றென்றும், அரசாங்கம் ஆட்சியை ஒரு கைக்குள் கொண்டுவரப் பார்க்குமிடத்து அது அதிக நாளைக்கு நிலைத்திருக்க முடியா தென்றும் அரசாங்கம் அபிப்பிராயப்பட்டது.
சட்ட பரிபாலன விஷயத்திலும் நீதிபரிபாலன விஷயத்தி லும் இக்காலத்திலும் மாற்றங்களேற்பட்டன. குடும்ப விஷயம் முதலிய வகைகளில் சிங்கள, தமிழ்ச் சட்டங்கள் நன்ருக முன் னேற்ற மடைந்திருந்ததையும், வேறுசில அம்சங்களில் அவை குறைவுற்றிருந்ததையும், பிரித்தானியர் இலங்கைக்கு வந்த காலத்தில் அறிந்தார்கள். வழக்குத் தொடரும்பொழுது என்ன முறைகளை அனுசரிக்கவேண்டும், குற்றங்கள் சம்பந்த மான சட்டங்களென்ன ? என்பவை கிடையா. மேலும் உடன் படிக்கை சம்பந்தமான சட்டம் தற்காலத் தேவைகளுக்குப் போதுமானதா யிருக்கவில்லை. பிரித்தானிய ஆட்சியில், இலங்கை சேவை மானியமுறை ஆட்சியிலிருந்து நீங்கி வியாபாரஞ் செய்யும் நாடாக மாறிற்று. அதனுல் புதிய தேவைகளுண் டாயின. அவற்றுக்கேற்ற புதிய சட்டங்கள் செய்யவேண்டி யிருந்தன. சிங்களருக்குரிய வழக்கத்தையொட்டியும் தமிழர் தேசவழமையைப் பின்பற்றியுமே டச்சுக்காரர் நீதி வழங்கினர் கள். அவை சில சமயங்களில் திருப்திகர மா யில் லாதிருந்ததால் ரோமன்-டச்சுச் சட்டங்களே அனுசரித்தார்கள். ரோமன். டச்சுச் சட்டங்கள் தொடர்ந்து நடைபெறு மென்று 1799-ல் நோத் உத்தரவாதமளித்தார். நாளடைவில் அந்தச் சட்டங்கள் மேலும் மேலும் அனுசரிக்கப்பட்டுவந்தன. பின்னர் எல்லா ருக்கும் பொதுவான சட்டமாகக் கைக்கொள்ளவும் பட்டது. இரண்டு வகையில் ரோமன்-டச்சுச் சட்டம் திருப்தியற்றதா, யிருந்தது. புதிய வியாபார அபிவிருத்தியினல் ஏற்பட்ட நிலை மைகளுக்கேற்ற சட்டங்கள் அதிலிருக்கவில்லை. எனவே முன்

Page 86
I 5& இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
குறிப்பிட்ட பிரகாரம் பிரித்தானிய வியாபாரச் சட்டங்களே இலங்கையிலும் அனுசரிக்கப்பட்டன. ஐரோப்பாவில் ஏற்பட்ட சீவகாருண்ய இயக்கத்தின் பயனகப் பழைய சட்டங்கள் காலப் போக்குக்கு ஏற்காதனவாகவே பல ஐரோப்பிய நாடுகளில் புதிய சட்டங்கள் உற்பத்தியாயின. டச்சுப் பீனல் சட்டங்களும் ஏற்புடையனவாகவிருக்கவில்லை. 1861-ல் இந்தியாவில் புதிய பீனல் சட்டமொன்று அமுலுக்குவந்தது. 1834-ல் இச்சட்டங் கள் தயார் செய்யப்பட்டபொழுது ஆங்கில கிரிமினல் சட்டங் களிலும் பார்க்க முற்போக்கான வையென்று அக் காலத்தில் கருதப்பட்டன. ரோமன்-டச்சுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இலங்கை கிரிமினல் சட்டம் ஒழிக்கப்பட்டது. அதற் குப்பதிலாக இந்தியப் பீனல் சட்டத்தைப் பெரிதும் உள்ள டக்கிய புதிய சட்டம் அனுசரிக்கப்பட்டது. இந்தியச் சட்டத் தைத் தழுவியே கிரிமினல் விவகாரச் சட்டமெனக் கோடுகளின் நடைமுறையை விளக்குஞ் சட்டமொன்று செய்யப்பட்டது. உயர்தர நீதிமன்றத்துக்கு இருந்துவந்த வேலையை குறைப் பதற்காக போலீஸ்கோட்டுக்கும் டிஸ் திரிக் கோட்டுக்குமுள்ள தண்டனை சம்பந்தமான அதிகாரங்கள் உயர்த்தப்பட்டன. ஜூரியில் இருப்பவர்களின் தொகை ஒன்பதாகக் குறைக்கப் பட்டது. பின்னர் இது ஏழாக மேலும் குறைக்கப்பட்டது. சிறைச்சாலைகளிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இரவில் குற்றவாளிகள் எல்லாரும், தராதரம் கவனியாது ஒன்றுகவே வைத்திருக்கப்பட்டார்கள். கிரெகெறி இதை விரும்பவில்லை. ஒவ்வொரு கைதிக்கும் ஒவ்வொரு சிறைக்கூடம் கொடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் சிறைக்கட்டிடங்கள் திருத்தப் பட்டன. மேலும் 5 சிறைச்சாலைகள் கட்டப்பட்டன.
பிற்போக்கான சமூகங்களின் விஷயத்தில் அரசாங்கம் கொண்ட சிரத்தையின் பயனகச் சட்டசபையில் உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவரின் தொகை அதிகரிக்கப்பட்டது. கண்டி வாசிகளின் பிரதிநிதியாக ஒருவரும் முஸ்லிம்களின் பிரதிநிதியாக மற்றெருவரும் 1889-ல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்டார்கள். பிரித்தானிய ஆட்சிக்கு முன் கண்டியில் ஐரோப்பிய நாகரிகம் சிறிதும் பரவவில்லை. 1815-ன் பின்னரும் மிக மெதுவாகவே அந்நாகரிகம் அங்கே பரவிற்று. ஐரோப்பியர் தோட்டங்களைப் பெரும்பாலும் கண்டி ராச்சியத்திலேயே திறந்தபோதிலும் கண்டிவாசிகள் வியாபாரத்தில் அதிகம் சிரத்தையெடுக்கவில்லை. தோட்டங்களைத் திறந்ததன் பயணுக ஏற்பட்ட ஏனைய பொருளா தார நடவடிக்கைகளிலும் அவர்கள் பங்குபற்றவில்லை. கிறிஸ்தவ பாதிரிகள் கல்வியைப் பரப்புவதற்குக் கரைப்பிரதேசங்களில் எடுத்துவந்ததுபோல கண் டிப்பகுதியில் அதிக சிரத்தை யெடுக்கவில்லை. முஸ்லிம்களும் பிரித்தானிய ஆட்சியினுல் வியாபாரத்துக்கு ஏற்பட்ட புதிய சந்தர்ப்பங்களைப் பயன்

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 159
படுத்தி நன்மையடைந்தார்களே தவிர சமூகமாக அவர்கள் முன்னேறவில்லை. அவர் களு  ைடய சமயக்கொள்கைகளும் வைதீகக் கட்டுப்பாடுகளும் மிஷன் பாடசாலைகளில் கல்விகற்க அவர்களுக்கு இடமளிக்கவில்லை. -
அரசாங்கத்துக்கும் உத்தியோகப்பற்றற்ற சட்ட ச  ைப அங்கத்தவர்களுக்கு மிடையில் அடிக்கடி பிணக்கு ஏற்படுவதற் குக் காரணமாயிருந்தது இராணுவச்செலவு. கோப்பிச்செடி புழுவிழுந்து அழிந்ததால் ஏற்பட்ட கோப்பி வியாபார மந்தத் தினுல் அரசாங்க வருமானம் வீழ்ச்சியடைந்தது. இராணுவச் செலவைக் குறைக்குமாறு அரசாங்கம் ஏகாதிபத்திய அரசாங்
கத்தைக் கேட்டது. 1873-ல் இச்செலவை ஏகாதிபத்திய அரசாங்கம் 124,000 பவுணுக்குக் குறைத்தது. இலங்கைத் துப்பாக்கிப்படை என்ற பட்டாளத்தைக் கலைத்துவிட்டு
இராணுவச்செலவை 1885-ல் 600,000 ரூபாயாகக் குறைத்தது.
நகரசபைகளின் திறமையை அதிகரிக்கும் நோக்கமாக 1865-ம் ஆண்டின் நகரசபைச் சட்டம் 1886-ல் திருத்தப்பட்டது. நகரின் சுகாதார வசதிகளை மேற்பார்வை செய்வதற்கு இச் சட்டம் நகர சபைக்கு மேலும் அதிகாரமளித்தது. நகரசபை ஸ்தானங்களுக்கு அபேட்சகராக முன்வருவோரின் சொத்து அந்தஸ்து முன்னிலும் அதிகமாயிருக்க வேண்டுமென விதிக்கப் பட்டது. நிர்வாக சபைக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. நகர சபைச் சட்டங்களை மீறி நடந்தவர்கள் மீது நகரசபை அங்கத்தவர்களே இதுவரை தண்டனை விதித்துவந்தார்கள். புதிய சீர்திருத்தப்படி அக்கடமை ஒரு நீதிபதிவசம் ஒப்படைக் கப்பட்டது.
1889-ல் கொழும்புக்குக் குழாய்மூலம் குடிதண்ணீர் கொடுக் கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. நோய்க்குக் காரணம் சிறிய கிருமிகளென்றும், தண்ணீர் மூலமாக நோய்க்கிருமிகள் எடுத்து செல்லப்படுகின்றனவென்றும் 19-ம் நூற்றண்டின் பிற்பகுதி யில் இங்கிலாந்திலுள்ளவர்கள் எண்ணத் தலைபட்டனர். கிரா மங்களில் கிணற்றுத்தண்ணிர் அவ்வளவு ஆபத்தைக் கொண்டு வரமாட்டாது. ஆனல் நகரங்களில் அழுக்குநீர் தங்கும் குழிக ளிருக்கிறபடியால் நீர் அசுத்தமாவதற்கு அதிக இடமுண்டு. எனவே நகரத்துக்கு வெளியேயிருந்து தண்ணீரை நகரத்துக்குக் கொடுப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டன. ரொபின்ஸன் காலத்திலேயே இந்த விஷயம் ஆரம்பிக்கப்பட்டது. குழாய் மூலம் லபுகம நீர்த்தேக்கத்திலிருந்து கொழும்புக்குத் தண்ணீர் கொண்டுவர வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. ல புக ம நீர்த்தேக்கம் கோடன் தேசாதிபதி காலத்திலே கட்டிமுடிக்கப் l ill-gil.

Page 87
60 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
சிறிய பட்டினங்களில் சுகாதாரத்தையும் ஏனைய மராமத்து வேலைகளையும் பார்ப்பதற்காக 1876-ல் பட்டின பரிபாலன மசோதா என ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இச்சங்கங்களில் மூன்று தேர்தல் அங்கத்தவர்களும் தேசாதிபதியால் நியமிக்கப் பட்ட மூன்று அங்கத்தவரும், இருப்பார்கள். அரசாங்க ஏஜெண்டோ உதவி அரசாங்க ஏஜெண்டோ தலைமைவகிப்பார். உப சட்டங்களை இயற்றவும், வரி விதிக்கவும், வீதி, வெளிச்சம், பட்டினச் சந்தை முதலியவற்றை மேற்பார்வை செய்யவும் அச் சங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. சுகாதாரச் சங்கங் களின் வசம் இதுகாறும் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களும், கிளை ரோட்டுகளையும், விடுதிச்சாலைகளையும் மேற்பார்வை செய்துவந்த மாகாணக் காரியசபை டிஸ் திரிக் காரியசபை ஆகியவற்றின் அதிகாரங்களும் இப்பட்டின பரிபாலன சங்கங்களின் வசம் ஒப்படைக்கப்பட்டன.
6. கல்வி 1870 லும் 1880 லும் பள்ளிக்கூடங்கள் பெருகின. முன் போலவே கல்விக்காரிய சபையின் சிபார்சுகளைக் கல்வி இலாகா நிறைவேற்றியது. 1872-ல் 10,852 மாணவர்களைக்கொண்ட 200 அரசாங்க பாடசாலைகளும் 25,443 மாணவர்களைக் கொண்ட 402 உதவிநன்கொடை பெறும் பள்ளிக்கூடங்களு மிருந்தன. 1890-ல் 40,290 மாணவர்களைக்கொண்ட 432 அரசாங்க பாடசாலைகளும், 73,698 மாணவரைக்கொண்ட 984 உதவிநன்கொடைபெறும் பாடசாலைகளுமிருந்தன. 1872-ம் ஆண்டு துவக்கம் 1890-ம் ஆண்டு வரை பாடசாலைகளின் தொகை இரண்டு பங்குக்கு அதிகமாய்ப் பெருகிற்று. மாண வர்கள் தொகையும் மூன்று பங்குக்கு அதிகமாகக் கூடிற்று. 1881-ல் ஆண்களில் 246 வீதம் கல்வி பெற்றிருந்தார்கள் . 1891-ல் இந்த வீதம் 27 9 ஆக உயர்ந்தது. பெண்கள் விஷயத் தில் இது 25 வீதத்திலிருந்து 44 வீதமாக உயர்ந்தது. கோப்பி வியாபாரம் மந்தப்பட்டது காரணமாக 1881 துவக்கம் அரசாங்க வருமானம் குறைந்தது. அதனல் கல்வி விருத்தியுங் குன்றிப் போயிற்று. 1892 துவக்கம் அடுத்த 10 வருடத்தில் 7 " 6 வீதம் அரசாங்க பாடசாலைகளின் தொகை அதிகரித்தது. உதவிநன்கொடை பெறும் பாடசாலைகள் 23 வீதம் அதிகரித் தன. 1885-ம் ஆண்டு துவக்கம் அரசாங்கம் கொடுத்துவந்த உதவி நன்கொடையை வருடாவருடம் குறைத் துவந்த தென் பதையும் கருத்தில் இருத்தவேண்டும். இக்காலத்தில் பல சுய பாஷா பாடசாலைகள் திறக்கப்பட்டன. கடற்கரைப் பிரதேசங் களில் கிறிஸ்தவ மிஷன் பாடசாலைகளைத் திறந்தது. விசேஷமாக மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம், வடமேல் மாகா ணம் ஆகிய பகுதிகளில் அரசாங்கம் பாடசாலைகளைத் திறந்தது.

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 161
1832-ம் ஆண்டு தொட்டு ஆங்கிலப் பாடசாலைகளில் சிரத்தை காட்டிவந்த அரசாங்கம் இப்பொழுது அதைக் கைவிட்டுவிட்டது. 1873-ல் ஆங்கிலக்கல்வி அரசாங்கத்தின் கையிலேயே பெரும்பகுதி யிருந்ததெனக் கூறலாம். 6}} lமாகாணத்தைத் தவிர மற்ற மாகாணங்களிலெல்லாம் அரசாங் கம் ஆங்கில பாடசாலைகளையும் ஏற்படுத்திவந்தது. 1881-ல் அரசாங்க வருமானம் வீழ்ச்சியடையவே தான் ஏற்படுத்திய ஆங்கிலப்பாடசாலைகளையும் து விபா ஷா பாடசாலைகளையும் அன்றில் மூடிவிடப்பார்த்தது. அ ல் ல து மிஷனரிகளிடம் கொடுத்துவிட ஆரம்பித்தது.
ஆங்கிலப் பாடசாலைகள் பெருகின. அரசாங்க நடவடிக்கை கள் பெருகியதாலும் நாட்டில் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டதாலும் ஆங்கிலப் பாடசாலைகளின் அவசியம் பெரு கிற்று. அரசாங்கம் உதவிநன்கொடை கொடுத்துவந்ததால் கிறிஸ்தவ மிஷன்களும் வேறு தாபனங்களும் அதை வாய்ப் பாகக் கொண்டு ஆங்கிலப் பாடசாலைகளை ஆரம்பித்தன. 1889-ல் துவிபாஷா பாடசாலைகளை அரசாங்கம் ஒழித்துவிடவே ஆங்கிலக் கல்வியைப் பெரும்பாலும் உதவிநன்கொடை பெறும் பாடசாலை களே மேற்கொண்டுவந்தன. ۔۔۔۔۔۔۔
ஆங்கிலக் கல்வி விஷயத்தில் இலங்கை இங்கிலாந்துடன் தொடர்பு வைத்திருந்ததே யொழிய இந்தியாவுடன் தொடர்பு வைக்கவில்லை. 1880-ல் கேம் பிரிட்ஜ் பரீட்சைகள் இலங்கையில் நடத்தப்பட்டன. கேம் பிரிட்ஜ் சீனியர் பரீட்சையின் முடிவை ஆராய்ந்து இலவசக் கல்வி வசதிகள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் ஆங்கிலப் பாடசாலைகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இது காறும் இத்தகைய இலவசக் கல்வி கொழும்பு அகெடமி யிலிருந்து பரீட்சை எடுத்தவர்களுக்கே வழங்கப்பட்டது. இப்பொழுது பரீட்சையில் போட்டியிடும் விஷயத்தில் எல்லாப் பாடசாலைகளுக்கும் உரிமையளிக்கப்பட்டது. 1880-ல் இந்தப் பரீட்சைகளுக்கு 21 மாணவர் தோன்றினர். 1890-ல் இத் தொகை 223 ஆக உயர்ந்தது. இம்மாதிரி மாற்றங்களேற்பட்ட போதிலும் கல்விப்போதனை உயர்ந்ததாயிருக்கவில்லை. 1867-ல் ஏற்பட்ட கல்வி விசாரணைச் சபை உபாத்தியாயருக்குப் பயிற்சி யளிக்கும் விஷயத்தை மிக முக்கியமானதெனச் சிபார்சு செய்தது. ஆனல் நாளடைவில் அதை எல்லாரும் புறக்கணித்து விட்டார்கள். அரசாங்கப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களைப் பயிற்றி அனுப்பிவந்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை சிறிது சிறிதாக மறைந்துவிட்டது. ஆங்கிலம் படிப்பதற்கு நல்ல மாணவர்கள் வந்துசேராததால் 1881-ல் அக்கலாசாலை ஒழிக்கப் பட்டது. துவிபாஷா பயிற்சிக் கலாசாலையும் 1883-ல் ஒழிக்கப் பட்டது. 1886-ல் சுதேசபாஷைப் பகுதியும் ஒழிக்கப்பட்டது.

Page 88
W
162 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
கொழும்பு, கண்டி, காலி ஆகிய இடங்களில் சிறிய சிறிய தாபனங்கள் ஏற்படுத்தப்பட்டன. மத்திய பயிற்சிக் கலாசாலை இவ்வாறு நீக்கப்பட்டது.
நாடு பல துறையிலும் அபிவிருத்தியடைந்ததன் பயனகவும், நியாயவாதிகளின் தொழில் பெருகிவந்ததாலும் சட்டக்கல்வி யில் மாற்றங்களேற்பட்டன. 1833-ம் ஆண்டு தொட்டு உயர்தர நீதிமன்ற நீதிபதிகள் பரீட்சை நடத்தி புரக்டர்களையும் அப்புக் காத்துமாரையும் ஏற்படுத்தினர்கள். அப்புக்காத்து மாண வரின் கல்வியை மேற்பார்வை செய்வதற்காக 1873-ல் சட்டக் கல்விச்சபையென ஒரு சபை ஏற்படுத்தப்பட்டது. சட்டக் கல்வியில் அப்புக்காத்துக்குத் தேர்ச்சிபெற விரும்பியவர்கள் முதல் பிரவேச பரீட்சையொன்றுக்குத் தோன்றி அதில் சித்தி யடைந்த பின்னர் அச்சபை நடத்தும் வகுப்புக்களுக்குச் சென்று படித்து அவர்கள் நடத்தும் கடைசிப் பரீட்சையிலுந் தேற வேண்டியிருந்தது. புரக்டர் விஷயத்தில் 1889-ம் ஆண்டுவரை
வேலை பழகிப்பின் நியாயவாதஞ் செய்யலாமென இருந்தது.
1899-ல் அவர்களும் அப்புக்காத்துமாருக்குரிய விதமாகப் பரீட் சையில் தேற வேண்டுமென விதிக்கப்பட்டது.
7. புத்தசமயமும் இந்து 5 Leu (pii.
இக்காலத்தில் புத்த சமயம் பெரிதும் முன்னேற்றமடைந் தது. 1873-ல் பாணந்துறையில் புரட்டஸ்தாந்திய கிறிஸ்தவர்
களுக்கும். பெளத்தர்களுக்குமிடையில் மறுபடியும் ஒரு வாக்கு வாதம் நடந்தது. ஆயிரக்கணக்கான பெளத்தர்கள் வந்து
கூடினர். இந்த வாக்குவாதத்தில் பிரதானமாகப் பங்குபற்றிய வர் மிகெத்துவத்தை குணுனந்தா என்பவர். இவர் முன்னரும் பல வாக்குவாதங்களில் கைதேர்ந்தவர். தனது பேச்சு
வன்மையால் கேட்டோரைப் பிணிக்கும் தகைமை பெற்றி
ருந்தார். இவருடைய செல்வாக்கினல் பெளத்த சமயம் பலமடைந்தது.
வாக்குவாதம் சமாதானமாக முடிந்தபோதிலும் அதனல் மிகுந்த பலன் ஏற்பட்டது. புத்த சமயத்தின் நன்மை தீமை
களைப்பற்றியும் பாதிரிமாரும், பெளத்த பிக்குகளும் மற்றவர்
களும் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் சிங்களத்தில் எழுதி
வந்தார்கள். இவை கேணல் ஒல்கட் என்பவர் காதுக்கெட்டின. இலங்கைப் பெளத்த சமய சரித்திரத்தில் இவர் முக்கியமான
பங்கெடுத்தாரென்று கூறலாம். மற்றச் சாதியாருடைய சமயங் களைப்பற்றியும் மதத்தாபனங்களைப் பற்றியும் ஐரோப்பாவிலும்
அமெரிக்காவிலுமுள்ள கல்விமான்கள் மிகுந்த சிரத்தை யெடுத் தார்கள். சாஸ்திர ரீதியாக விஷயங்களை ஆராய்ச்சி செய்ய

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 163
வேண்டுமென்ற எண்ணமே இவ்வாறு தூண்டிற்று. 1875-ல் நியூயோர்க் நகரில் ருஷ்ய மேதாவியாகிய பிளவட்ஸ்கி அம்மை யாரும், எச். எச். ஒ ல் கட் என்ற அமெரிக்க அறிஞரும் பிரம்மஞானசங்கத்தை ஏற்படுத்தினர்கள். சமயங்களிலுள்ள உண்மைகளைக் காண்பதே இச்சங்கத்தின் நோக்கங்களிலொன்று. 1878-ல் சென்னையிலுள்ள அடையாற்றில் தலைமைக் காரியால யத்தை ஏற்படுத்தி இந்து சமயத்தை ஆராயத் துவங்கினர்கள். 1880-ல் ஒல்கட் இலங்கைக்கு வந்து புத்த சமயத்தைத் தழுவி னர். பெளத்த மதக் கொள்கைகளும் சம யானுஷ்டானங்களுஞ் சிறந்தவையென்று ஒல் கட்டும் அவருடைய மேல்நாட்டுச் சீடர் களும் வாதாடினர்கள். இலங்கையின் பழைய நாகரிகம் முன் மாதிரியானதெனக் கூறினர்கள். கிறிஸ்து சமயம் அந்நிய சமயமென்றும், பெளத்த சமயம் அதிலும் சிறந்ததென்றும் கூறினர்கள். கிறிஸ்தவப் பாதிரிகள் கண்டித்து ஒதுக்கிய பெளத்த சமயம் இவர்களுடைய முயற்சியினல் புத் துயிர் பெற்றது.
புத்தசமயப் பிரசாரங்களைப் புதிய முறையில் அமைக்க வேண்டுமென ஒல்கட் உணர்ந்தார். பெளத்த பாடசாலைகளை ஏற்படுத்தும் நோக்கமாக பெளத்த பிரம்மஞான சங்கம் 1880-ல் ஏற்படுத்தப்பட்டது. இச்சங்கத்தை ஆரம்பிக்க ஏற்படுத்தப் பட்ட தினத்திலேயே ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக ஒரு நிதி சேர்ந்துவிட்டது. வருடக்கடைசியில் பெளத்த பிரசாரம் நடத்து வதற்காக சரசவி சந்தாச என்ருெரு சிங்களப் பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது. அ த ற் கு அனுபந்தமாக பெளத்தம் என்ற ஆங்கிலப் பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது. பெளத்த பிரம்மஞான சங்கத் தலைமைக் காரியாலயத்துக்கென 1885-ல் ஒரு கட்டிடத்தையும் வாங்கினர்கள். பெளத்தருக்கென ஒரு கொடி அமைக்கப்பட்டது. புத்தர் பிறந்தநாளாகிய விசாகப் பெருநாளைப் பெ ா து விடுதலை நாளாகக் கொண்டாடுமாறு அரசாங்கத்தைக் கேட்டார்கள். பெளத்த ஞாயிற்றுக்கிழமைப் பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறு துவங்கிய பாடசாலைகளுள் ஒன்று 1886-ல் ஆங்கில தினப் பாடசாலையாய் மாற்றப்பட்டது. இதுதான் இப்பொழுது ஆனந்தாக்கல்லூரி யாய் விளங்குகிறது. வேறும் பல பாடசாலைகள் ஏற்படுத்தப் பட்டன. 1890-ல் இவ்வாறு 50 பாடசாலைகள் நிறுவப்பட்டன. புதிய தாபனங்களை ஏற்படுத்துவதிலுள்ள ஆர்வத்தில் பெளத்த சமயிகள் தமது பழைய சம்பிரதாயங்களை மறந்து விடவில்லை. பழையகாலங்களில் அரசர்களும் அதிகாரிகளும் பாதுகாத்துப் பரிபாலித்துவந்த பெளத்த தாபனங்களை இப்பொழுது புதிய தொழில்களிலீடுபட்டுப் பணம் பெருக்கிய நடுத்தர வகுப்பினர் கவனிக்கத் துவங்கினர். ரத்மலானையில் ஒரு பிரிவேணு அமைக்
40l-G

Page 89
| 64 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
கப்பட்டதென முன்னர் குறிப்பிட்டோம். ஹிக்கடுவை பூரீ சுமங்கல தேரர் என்ற சிறந்த கல்விமானின் தலைமையில் 1873-ல் வித்தியோதயப் பிரிவேணு கொழும்பில் ஆரம்பிக்கப் பட்டது. 1876-ல் கழனியிலுள்ள பேலியகொடையில் வித்தியா லங்காரப் பிரிவேன தாபிக்கப்பட்டது. இதற்கு வலானே பூரீ தர்மா லோக தேரர் தலைமை ஆசிரியராக அமர்ந்தார்.
இவ்வாறு புத்த சமய மறுமலர்ச்சி யேற்பட்டதன் பயனுக சிங்களம், பாளியாகிய பாஷைகளைப் படிப்பதிலும் ஊக்கம் பிறந்தது. பெளத்த பண்டிதர்களின் உதவியோடு 19-ம் நூற் முண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்தவ பாதிரிகளும், சிவில் சேவிஸ் உத்தியோகத் தரும் பாளி, சிங்களமாகியவற்றைப் படிப்பதில் ஊக்கமெடுத்தனர். பல அகராதிகளைத் தொகுத்ததோடு, பெளத்த மதத்தைப் பற்றியும் இந்து மதத்தைப்பற்றியும் நூல்களை எழுதினர். இலங்கையின் புராதன சம்பவங்களைக் குறிப்பிடும் மகாவம்ச மென்ற நூலை ஆங்கில மொழிப்பெயர்ப் புடன் 1837-ல் ஜோர்ஜ் டேர்னர் என்பவர் பிரசுரித்தார். ஆரம் பந்துவங்கி கி. பி. 362 வரையுள்ள பகுதியே இவரால் பிரசுரிக் கப்பட்டது. 1845-ல் ரோயல் ஆசியாச் சங்கம் தாபிக்கப் LILL -ġill. அச்சங்கம் இலங்கையின் பழைய சரித்திரத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்திற்று. 13-வது நூற்றண்டில் இயற்றப் பட்ட சிங்கள வியாகரணமான சிதத்சங்கராவ என்ற நூலையும் வேறுபல சிங்கள நூல்களையும் ஜேம்ஸ் டி அல்விஸ் என்பவர் 1851-ல் பிரசுரித்தார். 1876-ல் கிரெகெறி கொழும்பு நூதன சாலையை ஏற்படுத்தினர். ரத்மலானை பிரிவேனேயில் படித்துத் தேறிய அறிஞர்கள் சிங்களத்திலும் பாளியிலும் சமஸ்கிருதத் திலுமுள்ள நூல்களை ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டார்கள். இதனல் நாட்டில் பாஷா ஞானம் வளர்ச்சியடைந்தது.
வடக்கேயும் இம்மாதிரியான அபிவிருத்திகள் நடைபெற் றன. கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்விபயின்று அரசாங்க சேவையினலும் வேறு தொழில்களினலும் பணக்காரராய் வந்த சில இந்துக்கள் 1888-ல் சைவ சமயத்தைப் பரப்புவதற்காகச் சைவ பரிபாலன சபையை நிறுவினர்கள். இவர்கள் பூனி ல பூரீ ஆறுமுக நாவலரின் சமயத்தொண்டினலும், இந்தியாவிலே பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பிரம்மஞான சங்கம் போன்ற தாபனங்களும் பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் செய்துவந்த இந்து மத புனருத்தாரண வேலைகளினலும் தூண்டப்பட்டனர். சைவ பரிபாலன சபை கிறிஸ்தவர் மதமாற்றஞ்செய்வதைத் தடுத்ததோடு இந்து மதத்தையும் பரப்பிற்று. பத்திரிகைகள் மூலம் சிறந்த தொண்டு செய்யலாமென்பதை உணர்ந்து 18894 ல் இந்து சாதனம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாத

நாட்டின் அபிவிருத்தியும், குடிகளின் முன்னேற்றமும் 165
மிருமுறை பத்திரிகைகளை வெளியிட்டுவந்தது. மகாநாடுகள் கூட்டிற்று பொதுப் பிரசாரங்களை ஒழுங்கு செய்தது : பாடசாலை உபயோகத்துக்காக நூல்களை வெளியிட்டது. துண்டுப்பிரசுரங்களையும் பிரசுரித்தது. கல்வி கிறிஸ்தவப் பாதிரிமார் கையிலேயே இருந்துவந்தது. அதனுல் அவர்கள் மாணவர்களை இலகுவில் தங்கள் சமயத்துக்கு மாற்றிவந்தார் கள். எனவே சைவ பரிபாலன சபை கல்வி விஷயத்தில் சிரத்தை யெடுத்தது. டவுன் ஹைஸ்கூல் என இருந்துவந்த பாடசாலையை 1890-ல் அது கையேற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யென்ற பெயருடன் நடத்திற்று. K
1853-ல் பெளத்த ஆலயங்களைப் பரிபாலிப்பதற்கு அரசாங் கம் செய்த ஒழுங்குகள் பலனளிக்கவில்லை. விகாரை நிலங்களை யும் தேவாலய நிலங்களையும் துஷ்பிரயோகஞ் செய்கிறர் களென கிரெகெறி தேசாதிபதிக்கு முறைப்பாடுகள் வந்தன. 1876-ல் மேல் மாகாணம், மத்திய மாகாணம், வட மத்திய மாகாணம் ஆகிய மாகாணங்களின் அரசாங்க ஏஜெண்டுகளையும் மூன்று பெளத்த மதத்தர்களையும் கொண்ட ஒரு கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. தேவாலயச் சொத்துக்கள் எவ்வாறு பரிபாலிக்கப்பட்டு வருகின்றனவென்பதை பரிசீலனை செய்ய வேண்டுமென நியமிக்கப்பட்டனர். ' தேவாலய வருமானத்தை அபகரித்துக் கொள்ளுகிருர்களென்றும், எங்கும் களவும், சூதும் தாண்டவமாடுவதாகச் சாட்சிகளிலிருந்து தெரியவந்ததென்றும் அரசாங்கம் தலையிட்டு இம்மாதிரியான சீர்கேடுகளுக்கு முற்றுப் புள்ளி போடவேண்டு மென்றும் விசாரணைச்சபை ஏகமனதாக அபிப்பிராயந் தெரிவித்தது. பெளத்த தேவாலய பரிபால னத்தை தேசாதிபதி நியமிக்கும் மூன்று அதிகாரிகள் வசம் ஒப்ப டைப்பதாக 1877-ல் கிரெகெறி தீர்மானித்தார். ஆனல் அரசாங்கம் இதில் தலையிடக் கூடாதெனக் குடியேற்றநாட்டு மந்திரி மறுபடியும் ஆட்சேபித்தார். பரிபாலன நிர்வாக சபை களை ஏற்படுத்த வேண்டுமென்றும் மற்றவர்களின் செய்கைகளை மேற்பார்வை செய்யக்கூடிய முறையில் உத்தியோகத்தர் ஒருவர் அந்த நிர்வாகசபையில் அங்கத்துவம் வகிக்கவேண்டு மென்றும், அவர் யோசனை கூறினர். இங்கிலாந்துத் திருச் சபையிலும் ஸ்கொத்திலாந்துத் திருச்சபையிலும், டச்சுப் பிரெ ஸ்பிட்டீரியன் திருச்சபையிலும் பாதிரிமாரை அரசாங்கமே நியமித்து அரசாங்கப் பணத்திலிருந்து அவர்களுக்குச் சம்பள முங் கொடுத்துவந்தது. லோங்டன் காலத்தில் அந்த முறை இங்கிலாந்தில் ஒழிக்கப்படவே அரசாங்கம் கோயில் விஷயங் களிற் தலையிடுவதை அவர் விரும்பவில்லை. அடுத்த குடியேற்ற நாட்டு மந்திரியாயிருந்த கிம்பர்ளி, லோங்டன் கூறுவதை அனுசரித்து இங்கிலாந்தில் திருச்சபை நடத்தப்படும் முறைப்

Page 90
66 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
படி பெளத்த ஆலயங்களையும் நடத்தலாமென ஆலோசனை கூறினர். ஆனல் கண்டிப் பெளத்தர்கள் அப்படி யொரு சிக்கலான முறையை நடைமுறையிற் கொண்டுவருவது கஷ்ட சாத்தியமென்பதை அவர் உணரவில்லை. கடைசியாக ஒருவித மான ஒழுங்குஞ் செய்யப்படாததால் தேவாலயங்களும் விசா ரங்களும் மிக மோசமான முறையில் நடத்தப்பட்டுவந்தன.
1866-ல் கோடன் தேசாதிபதி நிலைமையை மறுபடியும் புனராலோசனை செய்தார். அரசாங்க உதவியில்லாமல் ஒரு திருப்திகரமான திட்டத்தை ஏற்படுத்த அவரால் முடியவில்லை. இவ்விஷயத்தில் ஏதாவதொரு முறையை ஏற்படுத்தவேண்டி யிருந்ததால் லோங்டனும் குடியேற்றநாட்டு மந்திரிகளாயிருந்த கிம்பர்ளி, டேர்பி ஆகியோர் விதித்த கொள்கைப்படி ஒரு சட்டத்தை 1889-ல் நிறைவேற்றினர். இச் சட்டப்படி ஒவ் வொரு பகுதியிலுமுள்ள புத்த தேவாலயச் சொத்துக்களையும் பரிபாலிப்பதற்கு பெளத்த கிருகஸ் தரைக்கொண்ட ஒரு காரிய சபை ஏற்படுத்தப்பட்டது. இக் காரியசபை தர்மகர்த்தாக் களைத் தேர்ந்தெடுக்கும். காரியசபையை அந்தந்தப் பகுதியி லுள்ள பெளத்த கிருகஸ்தரும் பிக்குகளும் தேர்ந்தெடுப்பார் கள். இந்த ஜில்லாக் காரிய சபைகளை மேற்பார்வை செய் வதற்கு ஒரு மாகாணக் காரியசபை ஏற்படுத்தப்பட்டது. கல்வி யபிவிருத்தியுள்ள சமூகத்திலானல் இந்த ஒழுங்கு நல்ல பலனைக் கொடுத்திருக்கும். ஆனல் கண்டிவாசிகள் கல்வியில் முன்னேறி யிராதபடியால் இம்முறையைச் சரிவர அமுல் நடத்த முடியா மற் போய்விட்டது. எனவே 1853-ல் ஏற்பட்ட ஒழுங்கைப்போலவே இதுவும் தோல்வியடைந்தது. தேவாலயச் சொத்துக்களும், விகாரச் சொத்துக்களும் முன்போலவே சூறையாடப்பட்டன.

மூன்றம் பாகம் குடியேற்றநாட்டு ஆட்சியிலிருந்து பொறுப்பாட்சிக்கு மாறுதல்

Page 91

ஒன்பதாம் அத்தியாயம் அரசாங்க நிர்வாகம் திருத்தியமைக்கப் படுதலும் சட்டசபைச் சீர்திருத்தமும்
1891-1913
1. நிர்வாகச் சீர்திருத்தம்
முன்னரே விதிக்கப்பட்டமுறையில் இலங்கை அரசாங்கம் இக்காலத்திலும் முன்னேற்றமடைந்தது. தோட்ட அபிவிருத் திக்கு அரசாங்கம் உதவிசெய்து வந்தது. ரோட்டுகளமைக்கப் பட்டன. ரயில்பாதைகள் போடப்பட்டன. தந்திக்கம்பி களிணைக்கப்பட்டன. நீர்ப்பாசன வேலைகள் திருத்தியமைக்கப் பட்டன. சனங்களின் சுகாதார நலத்தையும் கல்வி யபிவிருத்தி யையும் அது கவனித்தது. அது மாத்திர மன்று ; அரசாங்க நிர்வாகம் கவனமாகச் சீர்திருத்தப்பட்டது. புதிய இலாகாக்க ளமைக்கப்பட்டதோடு பழைய இலாகாக்கள் திருத்தியமைக்கப் பட்டன. அரசாங்கத்தின் பல பகுதிகளும் மத்திய நிர்வாகத் துடன் விரை வாய் இணைக்கப்பட்டன. நிர்வாகமுறைகள் தி ரு த் தி யமைக்கப்பட்டதோடு அரசாங்கமுறை திறம்பட வேலையாற்றக்கூடியதாயும் உருப்படுத்தப்பட்டது.
பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பத்திலேயே இலாகாக்க ளமைக்கப்பட்டன. தொழில் நிபுணர்களை நியமித்தார்கள். சிவில் சேவிஸ் உத்தியோகத் தர்கள் அத்தகைய நிபுணர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட வில்லை. அளவைப்பகுதி சிவில் என்ஜினியர், அரசாங்கப் பூந்தோட்டம், காணிப்பதிவு, கல்வி இலாகா, வைத்திய இலாகா, தபால் இலாகா போன்ற பல இலாகாக்கள் ஏற்படுத் தப்பட்டன. மராமத்து இலாகாவையும், அளவை இலாகா வையுந்தவிர மற்ற இலாகாக்கள் தேச நிர்வாகத்தில் முக்கிய மான பங்கை இதுவரை எடுத்துக்கொள்ளவில்லை.
மேல்நாடுகளிலே இக்காலத்தில் அரசாங்கங்கள் தமது நிர் வாகமுறையை மாற்றியதோடு தமது குறிக்கோளைச் சீர்திருத்தி யும் எல்லையை விஸ்தரித்தும் வந்தன. தொழிலாளருக்கு சிறந்த வாழ்க்கைவசதிகளை அமைத்துக்கொடுத்து அவர்களின் சீவிய நிலையை உயர்த்தவேண்டியிருந்தது. ஏனெனில் தொழில் களிற் போட்டியேற்பட்டது. விஞ்ஞானசாஸ்திர வளர்ச்சி அதற்கு இடமளித்தது. பிரித்தானியாவில் நடந்த நிர்வாகச்

Page 92
1 70 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
சீர்திருத்தங்களினல் உற்சாக மடைந்த பிரித்தானிய உத்தியோ கத்தர்கள் இந்தியாவிலும் அம்மாதிரியான மாற்றங்களைச் செய்ய முயன்றனர். கேர்ஸன் பிரபு (1898-1905) இந்திய நிர்வாகத்தைச் சீர்திருத்தினர். கேட்டுக் கேள்வியில்லாமல் நடந்துவந்த அதிகார ஆட்சியை அவர் மாற்றி காருண்யமுள்ள ஒரு தனி ஆட்சியை உண்டாக்கினர். இலங்கையிலும் அப்படி II. If I GoÖT மாற்றங்களேற்படுத்துவதற்குச் சந்தர்ப்பமிருந்தது. தீவின் பல பகுதிகளில் ரோட்டுகள் பின்னிக்கொண்டு சென்றன. முக்கியமான நகரங்களை இணைத்து ரயில் பாதைகளமைந்திருந் தன. நிர்வாகத் தலைமைக் காரியாலயங்களைத் தந்திகள் இணைத் தன. நிர்வாகத்தின் கீழ்த்தர உத்தியோகங்களிலும் தொழில் களிலும் சேவைசெய்வதற்குத் தேர்ச்சிகொடுக்க ஆங்கிலப் பாடசாலைகளாங்காங்கு அமைந்தன. வருமானமும் உண்டா னது. முன்னுெருபோதும் இலங்கைக்கு இவ்வளவு வருமானம் கிடைக்கவில்லை. 1891-ல் 17,960, 710 ரூபாயாகவிருந்த அரசாங்க வருமானம் 1912-ல் 43, 741, 738 ரூபாயாக உயர்ந் தது. 1891-ல் வர்த்தகத்தினல் மொத்தம் 117,342, 259 ரூபாய் கிடைத்த இடத்தில் 1912-ல் 346, 434,756 ரூபாய் கிடைத்தது. நிர்மாண வேலைத்திட்டங்களை அமுல் நடத்து வதற்கு பிரித்தானிய மக்களின் சேமிப்புநிதியிலிருந்து கடன் பெறக் கூடியதாயிருந்தது. சர். வெஸ்ட் ரிட்ஜ்வேயும் (18961903) அவருக்கு பின் வந்த தேசாதிபதிகளும் இம்மாதிரியான மாற்றங்களுக்கு அனுகூலமாயிருந்தார்கள்.
அரசாங்கத்தின் பலவேறு பகுதிகளையும் ஒன்றுபடுத்தி ஒரு சேர வைத்திருக்கும் எஃகுச் சட்டம் போலுள்ள சிவில்சேவிளலில் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முடியவில்லை. மற்றச் சீர்திருத்தங்களை வைத்துக்கொண்டு நோக்கும்பொழுது சிவில் சேவிளலிலும் சில குறைபாடுகள் திருத்தப்பட வேண்டி யிருந்தனவென்று தெரிந்தது. முன்னெல்லாம் சிவில் சேவிஸ் உத்தியோகத்தரென்றல் வருமானத்தை வசூலிப்பதிலும், நாட்டிலே அமைதியையும், ஒழுங்கையும், நிலைநாட்டுவதிலும், மத்திய அரசாங்கத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதிலும், கிராமவாசிகளின் தேவைகளைக் கவனிப்பதிலுமே கருத்தாயிருந் தார்கள். அதற்கு மிஞ்சி அவர்களுக்கு வேலை கிடையாது. ஆனல் இப்பொழுதோ பட்டினங்களிலுள்ள மத்திய வகுப்பாரின் பல தேவைகளையும் கவனிக்கவேண்டியிருந்தது. மேலும் தனது உரிமைகளைக் கிள்ளிக்கொள்ளவரும் அநேக தொழில் நிபுணர் களின் நடவடிக்கையை மேற்பார்வை செய்யவேண்டும். 1860-ம் ஆண்டு துவக்கம் சிவில் சேவிஸ் உத்தியோகத்தரின் அந்தஸ்துக் குறையவில்லை. வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்தபடியாலும் ரூபாயின் விலைமதிப்புக் குறைந்தபடியாலும் 1878-ல் அவர்

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 17 I
களின் சம்பளத்தை உயர்த்தவேண்டியிருந்தது. சம்பள விஷய மாக ஒருவரும் கஷ்டத்துக்குள்ளாகாம லிருக்கு மாறு உத்தி யோகத்தரின் திறமை முதலியவற்றைக் கவனிக்காமலே அவர்களை உயர்ந்த தாபனங்களுக்கு நாளடைவில் உயர்த்தும் பழக்கம் கைவிடப்படவில்லை. ஆனல் அரசாங்க நிர்வாகம் சிக்கலாக வரவே அடிக்கடி உத்தியோகத் தரை மறு இடங் களுக்கு மாற்றுவதனல் ஏற்படும் சீர்கேடும் சில சிவில் சேவிஸ் உத்தியோகத்தர்கள் சில உத்தியோகங்களுக்குத் தகுதியற்றி ருப்பதும் பிரத்தியட்சமாயிற்று. இது வரை சம்பளங்கள் உத்தியோகத் தாபனத்துக்கென ஒதுக்கப்பட்டிருந்தனவேயன்றி ஆட்களுக்கேற்ற சம்பளம் என்றிருக்கவில்லை.
நிர்வாகத்திலுள்ள குறைபாடுகளைப் போக்கடிப்பதற்காக 1897-ல் ரிட்ஜ்வே படிப்படியாக உயரும் சம்பளத் திட்ட மொன்றை ஏற்படுத்தினர். பொதுவாக ஆட்களை உத்தேசித்தே சம்பளம் வகுக்கப்பட்டது. விசேஷமான உத்தியோகங்கள் விஷயத்தில் மாத்திரம் இது அனுசரிக்கப்படவில்லை. இரண்டா வது மூன்ரு வது தரத்திலுள்ளவர்கள் விஷயத்தில் ஒருவரி டத்திற்குப் பதிலாக மற்றவரை ஏற்படுத்தலாமென விதிக்கப் ull — gl. நாலாவது ஐந்தாவது தரத்திலுமப்படியே. ஒரு உத்தியோகத்தரின் திறமையை அறிந்து அவருக்கு ஏற்ற உத்தி யோகத்தை அளிக்கவும் அவருடைய பிற்கால உயர்வைப் பாதிக்காத முறையில் அவரை நெடுங்காலத்துக்கு ஒரு இடத் தில் வைத்திருக்கவும் வசதி ஏற்பட்டது.
சிவில் சேவிளலில் சேர விரும்புவோருக்கு இடப்பட்ட நிபந் தனைகள் வேறு சில காரணங்களால் மாற்றப்பட்டன. இலங் கையரையும் சிவில் சேவிஸ் உத்தியோகங்களில் நியமிக்கவேண்டு மென்று கோல்புறுாக் சிபார்சுசெய்திருந்ததாக ஏற்கனவே குறிப் பிட்டிருந்தோம். 1845-ல் சிவில் சேவிளவின் அந்தஸ்தை உயர்த் துவதற்காகச் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இவற்றல் இலங்கையர் சேர்ந்துகொள்வது கஷ்டமாயிருந்தது. 1870-ல் இலங்கையிலும் இங்கிலாந்திலும் ஒரேநேரத்தில் சிவில் சேவிஸ் பரீட்சையை நடத்த ஒழுங்கு செய்யப்பட்டது. இதனுல் இலங் கையர் இங்கேயே இருந்து பரீட்சையை எடுக்க வசதியேற்பட் டது. 1857-ம் ஆண்டு தொட்டு சிவில் சேவிஸ் பாடத்திட்டத்தில் மாறுதல்களேற்பட்ட படியால் இலங்கையர் அதற்கான கல்வி யைப் பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்படவில்லை. எனவே 1880-ல் இலங்கையில் பரீட்சை நடத்துவது கைவிடப்பட்டது. தொழில் அறிவு தேவையான இலாகாக்களில் உயர்ந்த உத்தி யோகங்களைப் பெறுவதற்கான கல்வியைப் போதிக்கவும் வசதி யில்லாதபடியால் இலங்கையர் அத்துறைகளில் உத்தியோகம்

Page 93
I 72 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பெறவும் முடியாதிருந்தது. உத்தியோகத்தர் திறமையுள்ள வர்களாயிருக்க வேண்டுமென்ற கொள்கையை அரசாங்கம் அனுசரித்தது. எனவே இங்கிலாந்திலிருந்தே உத்தியோகத் தரை வரவழைக்கும் கொள்கையைக் கையாண்டது. இதல்ை திற மைக்குப் பங்கமேற்படாதென எண்ணிற்று. தனது செல் வாக்கை நிரந்தரமாக்குவதும் அதன் ஒரு நோக்கமாயிருந்த தெனலாம். பிரித்தானிய உத்தியோகத்தர் தாங்கள் ஆளும் சாதி என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு உயர்ந்த பதவிகளுக்கு இலங்கையரை நியமிப்பதை விரும்பாதிருந்தார் கள். ஆனல் 1880-ம் ஆண்டிலிருந்து இலங்கையில் கல்வி முன்னேற்றமடைந்து வந்தபடியால் கல்விபெற்ற மத்திய வகுப் பினர் கீழ் தர உத்தியோகங்களி லிருப்பதோடு திருப்தியடை யாமல் சிவில் சேவிளRலும், தொழில் இலாகாக்களிலும் உயர் பதவிகளைக் கொடுக்கவேண்டுமெனக் கோரிக்கை செய்தார்கள். இவ்வாறு வளர்ந்துவரும் அதிருப்தியைக் குறைப்பதற்காக சர். ஹென்றி மக்கலம் (1907-1913) சில சலுகைகளைக் காட்டினர். குமா ஸ்தா சேவையிலிருந்து உயர்த்தப்பட்ட உத்தியோகத் தரினல் நிர்வகிக்கப்பட்டுவந்த இலங்கைச் சிவில் சேவிளவின் கீழ்த் தரப்படியை சிவில் சேவிஸ் ஸ்தலப்பிரிவெனப் பிரித்தார். இப் பிரிவில் உள்ள தாபனங்களை இரட்டித்து ஒரு போட்டிப் பரீட்சை மூலமாக இந்த தாபனங்களுக்கு உத்தியோகத்தர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திறமை யு ள்ள குமாஸ் தாக்கள் தமது பிரிவுகளில் உயர்ந்த தானம் வகித்தால் அவர்களை சிவில் சேவிளலில் சேர்த்துக்கொள்ளவும் ஒழுங்கு செய்யப்பட்டது. மராமத்து இலாகாவிலும் இம்மாதிரியான ஒழுங்குகளைச் செய்ய மக்கலம் உத்தேசித்தார். குமாஸ்தா வேலையின் அந்தஸ்தும் உயர்த்தப்பட்டது. குமாஸ் தாக்களில் நாலு பிரிவுகள் ஏற்படுத் தப்பட்டன. படிப்படியாக உயரும் சம்பளம் கொடுக்கப்பட்டது. திறமையையும் சேவைக் காலத்தையும் அனுசரித்து உத்தியோக உயர்வு வழங்கப்பட்டது. மற்றப் பகுதிகளுக்கு மாற்ற முடியாத உத்தியோகத் தரையுடைய அளவைப் பகுதி, தபால் ரயில் பகுதி ஆகியவற்றிலும் இம்மாதிரி மாற்றங்களேற்படுத்தப்பட்டன.
ஸ்தல தாபன நிர்வாகத்தில் இவற்றிலும் பார்க்க அதிக மான மாற்றங்களுண்டாயின. போக்குவரத்துச் சாதனங்கள் குறைவாயிருந்த காலத்தில் இலங்கையின் பல பகுதிகளுக்குப் போவது கஷ்டமாயிருந்தது. அப்பொழுது மாகாண வாரியாக நிர்வாகம் நடத்தும் முறை யேற்பட்டது. அரசாங்கம் இம் முறையினல் எதிர்மறையான நன்மையை செய்துவந்தது. அரசாங்க ஏஜெண்டுகள், உதவி அரசாங்க ஏஜெண்டுகள் இவர் களின் துணையோடும் முதலியார், மணியகாரன் அல்லது ரட்டே மகாத்மியா, முகாந்திரம், உடையார் அல்லது கோருளை,

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 173
விதானை அல்லது ஆராய்ச்சி ஆகியோருடைய உதவியோடும் தங்கள் பகுதிகளில் ஆட்சிநடத்தி வந்தார்கள். ஆரம்பத்தில் இம்மாதிரியான ஆட்சி முறை சனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தது. ஆனல் நாளடைவில் அரசாங்கம் தனது நடவடிக்கைகளை விஸ்தரித்துச் சனங்களின் நன்மையைக் கருதி நேரடியான ஆட்சியை நடத்தத் துவங்கவே மேற்குறித்த ஆட்சி முறை மத்திய அரசாங்கத்துக்கோ கல்வியறிவு பெற்ற மக்க ளுக்கோ திருப்தியளிக்கவில்லை. எனவே அரசாங்க ஏஜெண்டு கவனித்துவந்த சில கடமைகளைச் சிறிது சிறிதாக வேறு இலாகாக்
கள்வசம் ஒப்படைத்தனர். இலாகாக்கள் மூலம் நிர்வாகம் நடத்துவதைக் கிராமவாசிகள் விரும்பவில்லை. பெற்றேர் குழந்தைகளைப் பாதுகாப்பதுபோன்ற ஒரு ஆட்சிமுறையே பிற் போக்குற்றிருந்த அவர்களுக்கு ஏற்றதாயிற்று. அவர்களை
நேரடியாகப் பாதிக்கும் விஷயமெல்லாவற்றுக்கும் அரசாங்க ஏஜெண்டுகளே பொறுப்புள்ளவர்களாக விடப்பட்டார்கள். கிராமப் பகுதிகளை அபிவிருத்திசெய்வதற்கு மக்கலம் மேலும் சில நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டார். அரசாங்க ஏஜெண் டுகள் மகாநாடு கூடி தத்தம் மாகாணங்களின் அபிவிருத்தி சம்பந்தமான விஷயங்களை ஆலோசனை செய்யவேண்டுமென கிரெகெறி தேசாதிபதி கூறி 1870-ம் ஆண்டு துவக்கம் அத்தகைய மகாநாடுகள் கூட ஒழுங்கு செய்தார். கிராமத் தேவைகள் சம்பந்தமாக ஆலோசனை கேட்பதற்காக தலைமைக்காரரின் தர்பாரை மக்கலம் புனருத்தாரணஞ் செய்தார். தமிழதிகாரி களும் சிங்களப் பிரதானிகளும் அரசாங்க நிர்வாகத்துக்கு மிகப் பயனுடையவர்களென மக்கலம் எண்ணியிருந்தார். ஆனல் புதிய அரசாங்க முறையில் அவர்கள் கர்நாடகமான பேர்வழி களென கோடன் தேசாதிபதி எண்ணினர். இந்தியாவிலும் மத்திய வகுப்புப் பிரசைகள் சமஸ்தானதிபதிகள் ஆட்சியை எதிர்க்கவே, பிரித்தானிய அரசாங்கம் தமது பழைய கொள் கையை மாற்றித் தலைமைக்காரரில் அதிக நம்பிக்கை காட்டிற்று.
நாட்டிலே குற்றங்கள் அதிகரித்தன. அவற்றை அடக்கு வதற்கு மாகாண நிர்வாகிகளால் முடியவில்லை. எனவே போலீஸ் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மாகாணங்களில் குற்றங்களைத் தடுக்கும் வேலையை அரசாங்க ஏஜெண்டும் உதவி egy J 3FIT (is ஏஜெண்டும் நடத்தினர்கள். பட்டினங்களில் போலீஸ் மூலமாகவும், கிராமங்களில் தலைமைக்காரர் மூலமாக வும் இது நடத்தப்பட்டது. ரோபேர்ட் நொக்ஸ் எழுதிய இலங்கைச் சரித்திரம் ’ என்ற நூலில் அதன் ஆசிரியர், சிங்கள அரசர் காலத்தில் நாட்டில் குற்றங்கள் அதிக மில்லை யென்று கூறுகிறர். பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பத்திலும் அதிகமில்லை. தலைமைக்காரர் மூலமாக அவற்றை அடக்க

Page 94
74 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
கூடியதாயிருந்தது. போக்குவரத்துச் சாதனங்கள் அதிகரித்த தாலும், பழைய சமுதாய வாழ்வு மாற்றமடைந்ததாலும் காணிப் பிரிவினை ச ம் பந்த மா க ப் பல பிணக்குகளேற் பட்டதாலும் குற்றங்கள் அதிகரித்தன. கிராமங்களில் தலை மைக்காரர் அவற்றை அடக்கமுடியாமற் போய்விட்டது. பட்டி னங்களிலும் போலீசாரால் முடியவில்லை. இங்கிலாந்தில் நடந்து வந்தது போலவே போலீஸ் தலைமை அதிகாரி கொழும்பு எல்லை வரையிலேயே தமது ஆணையைச் செலுத்தினர். இதற்கு வெளியேயுள்ள போ லீ ஸ் வேலையைப் பற்றி அறிவிக்கும் பொறுப்பே அவருக்குக் கொடுக்கப்பட்டது. அரசாங்க ஏஜெண்டுகள் பல வேறு கருமங்களைக் கவனிக்கவேண்டி யிருந்த தால் மாகாணப் போலீஸுக்குத் தேர்ச்சிகொடுக்கவும் அவர் களின் ஒழுங்கை கவனிக்கவும் அவகாசமில்லாதவர்களா யிருந் தனர்.
குற்றங்களைக் குறைப்பதற்காக ரிட்ஜ்வே பல நடவடிக்கை களை எடுத்தார். இவை போதாவென உணர்ந்த சர். ஹென்ரி பிளேக் (1903-1907) போலீஸ் படையைத் திருத்தியமைக்க வேண்டுமெனச் சித்தங்கொண்டார். நல்ல உத்தியோகத் தரும் திறமையுள்ள ஆ ட் க ஞ ம் போலீஸில் சேரக்கூடியதாகச் சம்பளத்தை உயர்த்திச் சலுகைகளையும் விதித்தார். மாகாண நிர்வாகத்துடன் தொடர்பு வைத்துக்கொள்வதற்காக சிவில் சேவிஸ் உத்தியோகத்தரை போலீஸ் சூப்ரெண்டாகவும் உதவி சூப்ரெண்டாகவும் நியமித்தார். போலீஸ் படைக்குத் தலை வராக ஒருவர் நியமிக்கப்பட்டார். மேல் மாகாணம், தென் மாகாணம், வடமேல் மாகாணத்தின் ஒருபகுதி ஆகிய தொகுதி களிலுள்ள கிராமப் பகுதிகட்கும் போலீஸ் நியமிக்கப்பட்டது. குற்றங்களை அடக்குவதில் தலைமைக்காரருக்கு இப் போலீஸார் உதவிசெய்தார்கள்.
மக்கலம் மேலும் சில சீர்திருத்தங்களைச் செய்தார். பல வேறு கடமைகளைச் செய்யவேண்டி யிருந்ததால் சிவில் சேவிஸ் உத்தியோகத்தர்களுக்குப் போலீஸ் பயிற்சியளிப்பது சாத்திய மில்லை என அறிந்து அவர்களைப் போலீஸ் உயர்தர உத்தியோ கங்களுக்கு நியமிக்காமல் இந்தியப் போலீஸ் பரீட்சையில் தேறியவர்களையே அப் பதவிகளுக்கு நியமித்தார்.
நீர்ப்பாசன இலாகாவும் அரசாங்க ஏஜெண்டுகளின் d; L - að) LO யில் சிலவற்றைத் தனதாக்கிக்கொண்டது. முன்னெல்லாம் மராமத்து இலாகா அதிகாரிகளே அரசாங்க ஏஜெண்டுகளின் உதவியோடு குளங்களைப் புதுப்பித்தார்கள். லோங்டன் காலத்தில் இவ்வழக்கம். கெட்டொழிந்தது. தோட்டம், போக்குவரத்துச் சாதனம் ஆகியவை சம்பந்தமாக அரசாங்கம்

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 75
ஒரு திட்டமான கொள்கையை அனுசரித்துவந்தது. அரசாங் கத்தின் நீர்ப்பாசனக் கொள்கை மாறக்கூடாதெனவும் இடை யற மல் தொடர்ந்து நடைபெறவேண்டுமெனவும் கோடன் விரும்பினர். இதை நிறைவேற்றுவதற்காக மத்திய நீர்ப் பாசனச் சபையென ஒன்றையும் மாகாண நீர்ப்பாசன சபை களையும் ஏற்படுத்தினர். ஆனல் இவை விரும்பிய பலனைக் கொடுக்கவில்லை. மாகாண சபைகளில் அரசாங்க ஏஜெண்டும், பிரதம அளவை உத்தியோகத்தரும், மாகாண என்ஜினியரும் அங்கத்தவரா யிருந்தனர். ஆணுல் இவர்கள் வேறிடங்களுக்கு வேலை மாறிப்போவதால் இடையமுத ஒரு கொள்கையைச் சபை அமுல் நடத்த முடியாமலிருந்தது. மேலும் அச்சபைகள் செய்யும் சிபார்சுகளை நடைமுறையில் கொண்டுவந்தபொழுது எதிர்பார்த்த பலன் கிடைக்கவுமில்லை. நீர்ப்பாசனங்கள் முன் போலன்றி இப்பொழுது சாஸ்திர ரீதியான முறையில் பழுது பார்க்கப்பட்டதால் விசேஷ சாஸ்திர அறிவுள்ள உத்தியோ கத்தர் தேவைப்பட்டனர். சபைகள் தமது திட்டங்களை நிறை வேற்றுமாறு மராமத்து இலாகாவிடமும் அளவைப் பகுதியா ரிடமும் ஒப்படைத்தனர். ஆனல் இப் பகுதிகளுக்கு அதிக வேலையிருந்தபடியால் நீர்ப்பாசன வேலைகளில் அதிக கவன மெடுக்க முடியாமலிருந்தது. அன்றியும் மாகாண சபைகள் சமர்ப்பிக் குந் திட்டங்களை ஆராய்ந்து எவை ஏற்றவை எவை தகாதவையெனக் கூறக்கூடிய விசேஷ அறிவு இல்லாதபடியால் அதிக பலனளிக்கக் கூடிய வேலைகளையோ அவசியமான வேலை களையோ சிபார்சுசெய்ய முடியாதிருந்தது. இந்தக் குறைகளை நீக்குவதற்காக 1898-ல் ரிட்ஜ்வே நீர்ப்பாசன இலாகாவைச் சீர்திருத்தினர். ஹென்ரி பார்க்கர் என்பவரை நீர்ப்பாசன அதிகாரியாக நியமித்து அந்த இலாகாவை மராமத்து இலாகா வுடன் இணைத்தார். இதனுல் நீர்ப்பாசன வேலைகள் மராமத்து இலாகாவையோ, அளவைப் பகுதியையோ எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மாகாண நீர்ப்பாசனச் சபைகள் மத்தியசபைக்கு அனுப்பும் சிபார்சுகள் பயனுள்ள வையா, ஏற்றவையா என்பதை ஆராய்ந்து மத்திய சபைக்கு ஆலோசனை கூறக்கூடிய ஒரு நிபுணர் ஏற்படுத்தப்பட்டார். நீர்ப்பாசன வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1900-ல் 50 லட்சம் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கிற்று. எனவே புதிய ஒரு தனி இலாகாவை ஏற்படுத்தவும், உத்தியோகத்தரை அதிகரிக்கவும் அவசியம் ஏற்பட்டது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ரிட்ஜ்வே நீர்ப்பாசன இலாகாவைத் தனி இலாகாவாக அமைத்தார். அடுத்த வருடமே மாகாண சபைகள் ஒழிக்கப்பட்டன. நீர்ப்பாசன விஷயங்களில் ஆலோ சனை கூறும் கடமை அரசாங்க ஏஜெண்டுகள் வசம் ஒப்படைக்கப்

Page 95
176 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பட்டது. மத்திய நீர்ப்பாசன சபை அதிக அங்கத்தவர்களைக் கொண்டிருந்தபடியால் திறமையாக வேலை நடத்த முடியா திருந்தது. மேலும் நீர்ப்பாசன அதிகாரியின் பொறுப்புப் பலவற்றை அச்சபை எடுத்துக்கொண்டதால் அது உசிதமான தாகத் தெரியவில்லை. எனவே 1906-ல் பிளேக் மத்தியசபை யையும் ஒழித்தார். இவ்வாறு நீர்ப்பாசன இலாகா ஒரு தனி இலாகாவாக மற்ற இலாகாக்களுடன் ஒத்த அந்தஸ்தைப் பெற்றது.
இந்த சீர்திருத்தங்களால் நிர்வாகந் திறமையடைந்தது. ஆனல் கிராமவாசிகளின் நன்மையை அவை எப்பொழுதும் நாடவில்லை. கிராம நீர்ப்பாசன வேலைகளை நீர்ப்பாசன இலா காவே அரசாங்க ஏஜெண்டின் மேற்பார்வையில் தனது தொழில் நிபுணரின் உதவியோடு செய்துவந்தது. பெரிய நீர்ப்பாசன விஷயங்களில் நீர்ப்பாசன இலாகா நீரைப் பங்கீடுசெய்து கொடுப்பதோடு மாத்திரம் நில்லாமல் நெற்செய்கை விஷயத் திலும் பொறுப்பெடுத்துக் கொண்டது. மக்கலம் இதை விரும்பவில்லை. சனங்களின் தேவைகளை நன்கு அறியக்கூடிய அரசாங்க ஏஜெண்டுகள் நெற்சாகுபடிபோன்ற ஒரு முக்கிய மான விஷயத்தில் நேரடியான சிரத்தை எடுத்துக்கொள்வதை இம்முறையானது தடுத்ததே இதற்குக் காரணமாகும். எனவே பெரிய நீர்ப்பாசன வேலைகளில் ஈடுபட்டபோதிலும் நீர்ப்பாசன இலாகா அதையொன்றையே கவனித்துக் கொள்ளவேண்டு மென விதிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் காட்டுப் பரிபாலனமும் அரசாங்க ஏஜெண்டின் பொறுப்பிலேதா னிருந்தது. பிரித்தானிய ஆட்சியின் பின்னர் தோட்டங்களை ஏற்படுத்துவதற்காகப் பல காடுகள் வெட்டி யழிக்கப்பட்டன. மரம் வெட்டுவதற்காகக் கண்டபடி காட்டை வெட்டி யழித்தார்கள். சிலர் புதுக் கமங்களைத் திறப்பதற் காகவுங் காட்டை வெட்டினர்கள். காட்டைப் பரிபாலிப்ப தற்கும் புதிய மரங்களை யுண்டாக்குவதற்கும் காட்டுப்பரி பாலனஞ் சம்பந்தமான விசேஷ அறிவு வேண்டும். அரசாங்க ஏஜெண்டுகட்கு இந்த அறிவு கிடையாது. 1889-ல் காட்டிலாகா ஆரம்பிக்கப்பட்டபொழுது மிக முக்கியமான காடுகள் வன பரிபாலகர் என ஒரு உத்தியோகத்தரின் நிர்வாகத்தில் விடப் பட்டன. இவ்வாறு அரசாங்க ஏஜெண்டும், வன பரிபால கருமாக நிர்வாகம் நடத்தி வந்தபடியால் காட்டு நிலங்களை ஒதுக்கிவிடுவதிலும், எல்லை வகுப்பதிலும், தோட்டங்களுக்கான நிலங்களைப் பிரித்துவிடுவதிலும் முற்றிய மரங்களை அளந்து குறி போட்டுவிடுவதிலும் அதிக அபிவிருத்தி ஏற்படவில்லை. எனவே 1899-ல் அரசாங்க ஏஜெண்டுகளினதும், காட்டிலாகா

N
அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 177
உத்தியோகத்தினரதும் கடமைகள் வரையறுக்கப்பட்டன. காட்டி லா காவும் திருத்தியமைக்கப்பட்டது. மக்கலம் காலத் தில் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் காட்டுப்பரிபாலன விஷயத்தில் தேர்ச்சிபெற்றவர்களுக்கே காட்டிலாகா உயர்தர உத்தியோகங்களளிக்கப்பட்டன. இந்தியாவில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கே ரேஞ்ஜர் என்ற வனக்காவல் உத்தியோகம் வழங் கப்பட்டது.
ஐரோப்பாவிலுண்டான விஞ்ஞான சாஸ்திர வளர்ச்சியி னலும், இலங்கை நிர்வாகத் தேவைகளினலும் அளவை இலாகா திருத்தி யமைக்கப்பட்டது. 1800-ம் ஆண்டில் நோத் தேசாதி பதி காணிச் சீர்திருத்தம் சம்பந்தமான சட்டங்களை இயற்றிய பொழுது அளவை இலாகா வை ஏற்படுத்தினர். விலைக்கான காணிகளை யெல்லாம் அளந்து கொடுத்து தோட்டங்களின் வளர்ச்சிக்கு இந்த இலாகா பெரிதும் துணைபுரிந்தது. ஆணுல் 19-ம் நூற்ருண்டில் வேறெவ்வகையிலாவது இந்த இலாகா பயன்பட்டதாய்த் தெரியவில்லை. எனவே நமது நூற்ருண்டின் ஆரம்பத்தில் கிடைக்கக்கூடியதாயிருந்த இலங்கைப்படங்கள் பல பிழைகள் மலிந்தும், புதிய அரசாங்கத்தின் தேவைகளுக்குப் போதாதனவாயுமிருந்தன. மேலும் காணி உறுதி சம்பந்தமாக அரசாங்கம் அடிக்கடி இடையருமல் பிணங்கிக்கொண்டிருந்தது. காணி விபரங்களில்லாமல் அப்பிணக்குகளைத் தீர்க்க முடியா திருந்தது. இத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கமாக 1897-ல் ரிட்ஜ்வே அளவை இலாகாவை விஸ்தரித்தார். 1897-ல் ஸ்தல விவரண அளவையையும் துண்டுதுண்டாக அளப்பதையும் ஆரம்பித்தனர். மைலுக்கு 1 அங்குல அளவாகச் சரியான இலங்கைப் படத்தை அமைப்பதே ஸ்தலவிவரண அளவையின் நோக்கம். அரசாங்கத்துக்கும் தனிப்பட்ட சொந்தக்காரருக்கு மிடையில் காணிவிஷயமாக ஏற்படும் பிணக்குகளைத் தீர்க்க எல்லைகளைப் பிரித்து முடிக்குரிய நிலங்களை வரையறுப்பதே இரண்டாவது வகையான அளவையின் நோக்கமாகும். மக்கலம் தேசாதிபதியின் ஆட்சி முடிவதற்குள் 1000 சதுர மைல் விஸ்தீரணமுள்ள இடத்தை மேடு பள்ளம் அனுசரித்துப் படம் அமைத்தார்கள். 5300 சதுர மைல் விஸ்தீரணமுள்ள வடமேல் மாகாணமும், மத்திய மாகாணமும் அளக்கப்பட்டன.
தரவையாகக்கிடந்த ஏராளமான நிலங்களுக்கு விரைவில் சாசனம் அமைப்பதற்காக 1903-ல் ரிட்ஜ்வே, நிலம் நிச்ச யிக்கும் இலாகாவை உண்டாக்கினர். அரசாங்க ஏஜெண்டுகள் இடையருத வேலை உடையவர்களாயிருந்தபடியால் இந்த வேலை களே விரைவாயும் பூரணமாயும் கவனிக்க அவர்களுக்கு அவகாசம் கிடையாது. மேலும் அதற்கு விசேஷ அறிவும் வேண்டியிருந்தது.

Page 96
፱ 78 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
தரிசு நிலச் ச ட் ட த்  ைத இயற்றியதால் பதிவுப்பகுதியா ருக்கும் வேலை அதிகரித்தது. ஹவ்லொக் (1890-1895) காலத் திலும் பார்க்க ரிட்ஜ்வே காலத்தில் பதிவுசெய்யப்பட்ட உறுதி களின் தொகை 100 க்கு 50 வீதம் உயர்ந்தது. பிறப்பு, இறப்பு
விவாகம் ஆகியவற்றைப் பதிவுசெய்து புள்ளி விபரங்களைச் சேகரிக்கவேண்டியதன் அவசியத்தை அக்காலத்தில் நன்குணர்ந் தனர். எனவே பதிவு இலாகா விஸ்தரிக்கப்பட்டது. பதிவு முறைகள் சீர்திருத்தப்பட்டன. பொதுவாக அந்த இலாகாவே திருத்தியமைக்கப்பட்டது.
ஐரோப்பாவில் விஞ்ஞான சாஸ்திர சம்பந்தமாக ஏற்பட்ட அபிவிருத்தியின் பயணுக 1896-ல் இலங்கை அரச பூந்தோட்ட இலாகாவும் திருத்தியமைக்க வேண்டியதாயிற்று. இந்த இலாக வும் நோத் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. பேராதனை யிலும் அதன் கிளைகளாகிய ஹக்கலை, ஹெனரத் கொடை, அனுராதபுரி, பதுளை ஆகிய இடங்களிலுமுள்ள பூந்தோட்டங் களில் வேற்று நாடுகளிலிருந்து அழகிய பூஞ்செடிகள் கொண்டு வந்து நாட்டப்பட்டன. தேயிலை, சிங்கோன, கொக்கோ ஆகிய செடிகள் இத் தோட்டங்களிலே தான் முதல் முதல் பயிர் செய்யப்பட்டனவென முன்னரே குறிப்பிட்டோம். ஆனல் செடிகளுக்குண்டாகும் வியாதி, பயிர் செய்யும் முறைகள் முதலியவற்றைப் பற்றி இந்த இலாகா அதிகம் ஆராய்ச்சி செய்யாதபடியா ல் தோட்ட முதலாளிகளுக்கு ஏற்படும் பிரச்னை களைப்பற்றி இந்த இலாகா தகவல் கொடுக்க முடியாதிருந்தது. 1896-ல் அரச பூந்தோட்ட இலாகாவின் முயற்சிகள் விஸ்தரிக் கப்பட்டன. உஷ்ணமண்டலத்தில் வளரும் பயிர்களைப்பற்றியும் விசேஷமாக வியாபாரப் பயிர்களைப்பற்றியும் முறையான ஆராய்ச்சிகளை நடத்தினர். விவசாய விஷயங்களைப் பற்றிய அறிவைப் பரப்புவதற்காக 1897-ல் விவசாய சஞ்சிகையென ஒரு பத்திரிகை பிரசுரிக்கப்பட்டது. 1899-ல் ஒரு பயிர் நூலா ராய்ச்சிச்சாலை நிறுவப்பட்டது. 1901-ல் விவசாயப் பயிர் களைப் பரீட்சார்த்தமாகப் பயிரிட்டுப் பார்ப்பதற்காகக் கன் னெறுவாத் தோட்டத்தை அரசாங்கம் வாங்கிற்று. 1902-ல் பல விவசாய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உத்தியோகத்தி லமர்த்தப்பட்டார்கள். உஷ்ணமண்டல விவசாய விஷயங் களைப்பற்றிச் சரித்திரமுறையில் ஆராய்ச்சி நடத்தினர்கள். தாவர நூல் விவசாயம், தோட்டத் தொழில், கீடசாஸ்திரம், செடிகளுக்கேற்படும் வியாதிகள், விவசாய, ரசாயனம் முதலிய விஷயங்களில் இந்த இலாகா மேலும் விஸ்தரிக்கப்பட்டுப் புதுப் பிக்கப்பட்டு விவசாய இலாகா என்ற பெயரும் வழங்கப்பட்டது.
பெரிய விவசாயத் தொழில்கட்கு அரச பூந்தோட்ட இலாகா மிகுந்த துணைபுரிந்து வந்தது. தேயிலைச் செடிகளை நல்ல

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் I 79
முறையில் பயிரிடுவதைப்பற்றியும், தேயிலை செப்பனிடுவதைப் பற்றியும் தோட்ட முதலாளிகட்கு ஆலோசனை கூறிற்று. தேயிலை, தென்னை ஆகியவற்றில் புழுவிழாமல் தக்க நடவடிக்கையும் எடுத் துக் கொண்டது. 1897-ம் ஆண்டு துவக்கம் 1899 வரை ரப்பர் சம்பந்தமாகப் பலவகை ஆராய்ச்சிகளை நடத்தி, ரப்பரை நயமா கப் பெறவும் நல்ல முறையில் பதனிடவும் வழிவகைகளைக் கண்டு பிடித்தது. ரப்பர்பாலை அதிகரிக்கவும், மரத்தை நட்டு ஆறேழு வருடங்களுள் பால் வெட்டவும் சில முறைகளை இந்த இலாகா கண்டுபிடித்தது. இவ்வாறு ரப்பர் தொழிலிலே ஒரு புரட்சியை உண்டாக்கிற்று.
ஆனல் கிராமவாசிகளின் விவசாயத்தில் எவ்வித மாற்ற ஏற்படவில்லை. அவர்களுக்கு உதவிபுரிவதற்காக விவ. இலாகா எடுத்துக்கொண்ட முக்கியமான முயற்சி பாடசா தோட்டங்களை ஏற்படுத்தியதாகும். இந்தியாவில் கர்ஸன் செ ததுபோல இலங்கையிலும் மக்கலம் 191 1-ல் கூட்டுறவு நாணயச் சங்கங்களை ஏற்படுத்தினர். கிராமவாசிகட்கு நியாயமான வட்டி யில் கடன்கொடுத்து உதவி அதன்மூலம் அவர்களிடையே கடன் பழுவைக்குறைத்துச் சிக்கனத்தையும், கூட்டுறவையும் விருத்தி செய்வதே இச்சங்கங்களின் நோக்கமாகும். பெரிய தொழில் களுக்கு அரசாங்கம் செய்துவந்த உதவியை ஒப்பிட்டுப் பார்க் கையில் இது மிக அற்பமென்றே கூறலாம். 1876-ல் கொழும்பு நூதனசாலை ஏற்படுத்தப்பட்டது. 1890-ல் புதைபொருளா ராய்ச்சியிலாகா ஏற்படுத்தப்பட்டது. சரித்திர சம்பந்தமான பல பொருள்களைப் பாதுகாப்பதற்காகவும் பரிபாலிப்பதற்காக வும் 1900-ல் புதைபொருள் சட்டமென ஒரு சட்டமும் நிறை வேற்றப்பட்டது. சாஸ்திர ஆராய்ச்சி வளர்ச்சியடைந்து வந்ததன் பயனக வேறும் மூன்று இலாகாக்கள் ஆரம்பிக்கப் பட்டன. முத்துக்குளிப்பினல் அரசாங்கத்துக்கு நிரந்தரமான வருமானங் கிடைக்கவில்லை. பலகாலமாக இந்த வருமானங் குறைந்துவந்தது. ஐரோப்பாவிலே பிராணிநூல் சம்பந்தமாகக் காரியார்த்தமான சில ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. இதைக் கருத்தில் கொண்டு ரிட்ஜ்வே முத்துக்குளிப்பு சம்பந்தமாகவும், இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் மீன்பிடித்தல் சம்பந்தமாக வும் ஆராய்ச்சி செய்ய ஒரு நிபுணரை ஏற்படுத்தினர். இந்த ஆராய்ச்சி நல்ல பலனைக்கொடுத்தபடியால் கடற்செந்து இலாகா வென ஒரு இலாகா ஏற்படுத்தப்பட்டது.
நில ஆராய்ச்சி செய்து இலங்கையின் நிலவளத்தை விருத்தி செய்ய வேண்டுமெனவும் இக்காலத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனல் அதற்குத் தகுதிவாய்ந்த ஒரு உத்தியோகத் தரைப் பெற முடியாததால் நிலக்கணி ஆராய்ச்சியை நடத்துமாறு டொக்டர் ஆனந்த கே. குமாரசுவாமி நியமிக்கப்பட்டார்.
கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி முதலிய தொற்று நோய்களினல் நெல் விவசாயமும், வாகனப் போக்குவரத்தும் அடிக்கடி சீர்குலைவதை அரசாங்கம் வெகுகாலமாகவே கவனித்து

Page 97
80 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
வந்தது. 1865-ம் ஆண்டு துவக்கம் 1867 வரை வருடாவருடம் 100 க்கு பத்து வீதம் கால்நடைகளிறந்தன. அதனல் வருடா வருடம் 60,000 பவுண் நஷ்டமேற்பட்டது. இந்த நோய்களைக் குறைப்பதற்காக ஒரு மிருக வைத்தியரை ஏற்படுத்திக் கல்வி இலாகாவில் அவரை வேலைசெய்யுமாறு விட்டார்கள். இந்த ஒழுங்கு அவ்வளவு பலனைக்கொடுக்காதபடியால் அதற்கெனப் புறம்பான ஒரு இலாகாவை அமைத்து மாகாண அரசாங்க நிர்வாக உத்தியோகத்தரின் ஒத்துழைப்புடன் கருமங்களை நடத்திவந்தனர்.
சாராய வியாபாரத்தில் அரசாங்கத்துக்கிருந்த சிரத்தை ப்பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். சாராய உற்பத்தி, அயோகம் ஆகியவற்றையும் அரசாங்கமே கவனிக்கவேண்டி நிபட்டது. அதற்காகச் சென்னையிலுள்ளது போன்ற ஒரு கலால்முறை 1909-ல் ஏற்படுத்தப்பட்டது. அதற்கெனவே ஒரு தனியிலாகாவையும் அமைத்தார்கள்.
நாட்டின் அபிவிருத்தியும் செல்வப்பெருக்கமும் தபால் தந்திப்போக்குவரத்தை அதிகரித்தது. ரோட்டு, ரயில் பாதை முதலியன அமைக்கப்பட்டதாலும் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஏற்பட்டதாலும் சீக்கிரமாகவும் திறமையாக வும் தபால் போக்குவரத்தைச் செய்யக்கூடியதாயிற்று. 1877-ம் ஆண்டு துவக்கம் தபால் இலாகாவின் வேலை பன்மடங்கு அதி கரித்தது. 1890 துவக்கம் 1913 வரை முன்னெருபோதுமில்லாத வகையில் அது பெருகிற்று. ரிட்ஜ்வே காலத்தில் தபால் நிறை இரண்டுமடங்கு அதிகரித்தது. பார்சல் 60 வீதம் உயர்ந்தது. மனிஒடரின் தொகை 90 வீதம் பெருகிற்று. அவற்றின் பெறு மதியும் 70 வீதம் உயர்ந்தது. தபால் கந்தோர் சேம வங்கியில் 80 வீதம் அதிகமாகப் பணத்தை முதலீடு செய்தார்கள். முதலீடு செய்வோர்பேரிலும் 73 வீதம் பணம் அதிகரித்தது. இக்காலத் தில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் தபாலும் தொகையிற் கூடிற்று. 1893-ல் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் தபாலின் கட்டணம் 15 சதமாகக் குறைக்கப்பட்டது. 1898-ல் இக் கட்டணம் ஏகாதிபத்திய நாடுகட்கு 1 பென்னியாகக் குறைக் கப்பட்டது. 1895-ல் 139 தபால் கந்தோர்களும், 148 தபால் கட்டும் கந்தோர்களும் இருந்தன. 1903-ல் இத்தொகை 149 ஆகவும் 190 ஆகவும் முறையே உயர்ந்தது. பிளேக்கு காலத்தில் 156 தபால் கந்தோர்கள் இருந்தன. இவற்றல் உண்டாகும் வருமானமும் 1903-ல் 1,091,000.00 ரூபாயிலிருந்து 1906-ல் 1, 249,000 ரூபாயாக உயர்ந்தது.
இக்காலத்தில் மராமத்து இலாகாவும் திருத்தியமைக்கப் பட்டது. ஆரம்பத்தில் இது சிவில் என்ஜினியர் இலாகாவாக

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 1 8 Z
இருந்து நாளடைவில் மராமத்து. இலாகாவாக மாறிற்று. முதலில் இவ்விலாகா நெடுந்தெருக்களையே அமைத்துவந்தது. பின்னர் தோட்டங்களின் உபயோகத்துக்காகக் கிளைரோட்டுகள் போடப்பட்டன. ஒவ்வொரு ஆணும் வருடத்தில் 6 நாட்க ளுக்கு ரோட்டில் வேலை செய்யவேண்டும் அல்லது பதிலாகத் தலைவரிப்பணம் கொடுக்க வேண்டுமென்று 1848-ல் சட்டஞ் செய்யப்பட்டபொழுது கிளை ரோட்டுகளைக் கவனிப்பதற்காக மாகாணக் கமிட்டிகளும், ஜில்லாக்கமிட்டிகளும் ஏற்படுத்தப் பட்டன. ஆனல் நாட்டில் அபிவிருத்தி ஏற்பட்டுவரவே கிளை ரோட்டுகள் பல முக்கிய வீதிகளாக்கப்பட்டன. எனவே அவை மராமத்து இலாகர்வின் பரிபாலனத்தின் கீழ் விடப்பட்டன. இக்காலத்தில் இவ்வாறு பல ரோட்டுகளை மராமத்து இலாகா எடுத்துக்கொண்டது. புதிய பல ரோட்டுகளும் அமைக்கப் பட்டன. எனவே மராமத்து இலாகாவின் வேலை அதிகரிக்கவே உத்தியோகத் தரையும் அதிகரிக்கவேண்டி யேற்பட்டது.
தோட்டங்களிலும், சனங்களின் சுகாதார விஷயத்திலும் அரசாங்கத்தின் சிரத்தை அதிகரிக்கவே வைத்திய இலாகாவில் வேலையும் அதிகரித்தது. ஒவ்வொரு மாகாணத்திலும் வைத்திய சாலைகளும், மருந்துச்சாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. 1895-ல் வைத்தியசாலைகளும், மருந்துச் சாலைகளுமாக 317 தாபனங்க ளிருந்தன. இவற்றில் 794,700 நோயாளிகள் சிகிச்சைபெற்ற னர். 1902-ல் 64 வைத்தியசாலைகளும் 67 மருந்துச் சாலைகளும் 1,041, 615 நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தன. 1906-ல் 66 வைத்தியசாலைகளும் 502 மருந்துச் சாலைகளும் 1,531, 138 நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தன. 1913-ல் 75 வைத்திய சாலைகளும் 511 மருந்துச்சாலைகளுமிருந்தன. முக்கியமாகத் தோட்டங்களிலுள்ள தொழிலாளருக்கும் கிராமங்களிலுள்ள கிராமவாசிகட்கும் சிகிச்சையளிப்பதற்காகவே இக்காலத்தில் வைத்தியசாலைகளும் மருந்துச்சாலைகளும் அமைக்கப்பட்டன. நீர்ப்பாசன வசதிகள் புதுப்பிக்கப்பட்ட கிராமங்களிலும் முக்கியமான ரோட்டுச் சந்திகளை அடுத்தகிராமங்கள் அல்லது பட்டிணங்களிற் றன் பெரும்பாலும் கிராம வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டன.
மேல்நாட்டில் வைத்திய சிகிச்சை சத்திர சிகிச்சை சம்பந்த மாக ஏற்பட்ட புதிய முறைகளை இலங்கையிலும் கையாளு வதற்கு வசதிகள் செய்யப்பட்டன. 1899-ல் கிருமி வைத்தியத் தாபனமும் பாஸ்டர் தாபனமும் ஏற்படுத்தப்பட்டன. 1905-ல் உஷ்ண தேசத்திலுண்டாகும் வியாதிகள் சம்பந்தமான சிகிச் சைக்கு ஒரு வைத்தியசாலை ஏற்படுத்தப்பட்டது. மன்னருக் கணித் தாயுள்ள மாந்தையில் குஷ்டரோகிகளுக்கு ஒரு வைத்திய

Page 98
182 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
விடுதி ஏற்படுத்தப்பட்டது. தொற்று நோய் ஆஸ்பத்திரிகளின் தொகை அதிகரிக்கப்பட்டது. ரிட்ஜ்வே காலத்தில் பெண்கள் சிறுவர் சிகிச்சைக்காக லேடிஹவ்லக் ஆஸ்பத்திரி ஏற்படுத்தப் பட்டது. மக்கலம் காலத்தில் கூடியரோகத்தை தடைசெய்வதற் காக ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
கல்வி இலாகாவின் வேலையும் அதிகரித்துக்கொண்டே வந்தது. கிறிஸ்தவ மிஷன்களே பெரும்பாலான பாடசாலைகளை நடத்திவந்தன. பாடசாலைக்கமிஷனில் இந்த மிஷன்களின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டார்கள். ஆனல் இப்பொழுது கல்வி இலாகாவின் கொள்கை சம்பந்தமாக இவர்கள் தங்கள் அபிப்பிராயத்தைப் புகுத்த முடியாதிருந்தபடியால் அடிக்கடி கல்வி இலாகா வுடன் பிணங்கிக்கொண்டார்கள். 1905-ல் இரு பகுதியாருக்குமிடையில் அபிப் பிராயபேதம் அதிகரித்தது. எனவே சமரசம் ஏற்படுத்தும் நோக்கமாக கல்வி இலாகா உத்தியோகத் தரையும் மிஷன் பிரதிநிதிகளையுங்கொண்ட வித்தியா சங்கமொன்று அமைக்கப்பட்டது.
சிறைச்சாலை சம்பந்தமாகச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப் பட்டனவென்று ஏற்கனவே குறிப்பிட்டோம். சிறைச்சாலை நிலைமையை மேலும் சீர்திருத்தும் நோக்கமாகச் சில நட வடிக்கை களெடுத்துக்கொள்ளப்பட்டன. போலீஸும் சிறைச் சாலை நிர்வாகமும் போலீஸ் அதிகாரியின் தலைமையிலேயே இருந்தது. 1905-ல் போலீஸுக்கு ஒரு தலைவரும் சிறைச் சாலைக்கு மற்ருெரு தலைவரும் நியமிக்கப்பட்டனர். இதனல் இரண்டு இலாகாவுக்கும் நன்மை ஏற்பட்டது. நாட்டின் பல பாகங்களிலும் சிறுசிறு சிறைக்கூடங்களிருந்துவந்தன. சிறை வாசிகட்குச் சரியான பராமரிப்பு ஏற்படாதென அறிந்து இந்தச் சிறைச்சாலைகளைக் கொஞ்சங் கொஞ்சமாக மூடிவந்தார் கள். இதுகாறும் சிறுவரும் வயதான குற்றவாளிகளோடுதான் சிறை வைக்கப்பட்டுவந்தார்கள். இது நல்ல முறையன்றென உணர்ந்து சிறுவர்க்கென ஒரு சிறைச்சாலை மக்கோணுவில் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சிறையிலுள்ளவர்களுக்குச் சீவ னுேபாயத்துக்கு உதவக்கூடிய தொழில்கள் கற்பிக்கப்பட்டன. அதனல் அவர்கள் சிறைவாசஞ் செய்து தண்டனைக்காலத்தைக் கழித்த பின்னர் ஏதாவது தொழில் செய்து பிழைக்க வழியேற் பட்டது. மக்கலம் காலத்தில் வயதுவந்த கைதிகளுக்குக்கூட நெசவு தொழில், அச்சுத் தொழில் முதலியன கற்பிக்கப்பட்டன.
இலங்கைச் சட்டங்களைத் திருத்துவதற்கு நடவடிக்கைக ளெடுத்துவரப்பட்டனவென்று முன்னர் குறிப்பிட்டோம். இக் காலத்திலும் சில முக்கியமான திருத்தங்கள் செய்யப்பட்டன.

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 183
இங்கிலாந்துச் சட்டமுறைகளோடு இலங்கைச் சட்டங்களையும் தொடர்புபடுத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றது. வர்த்தகஞ் சம்பந்தமான விஷயங்களிலெல்லாம் இக்காலத்தில் பிரித்தானிய சட்டமே அனுசரிக்கப்பட்டுவந்தது. git LDrt går விற்பனை சம்பந்தமாகக் குறிப்பிட்ட சட்டமில்லாதிருந்தால் சில நீதிபதிகள் அம்மாதிரி வழக்குகளில் ரோமன் டச்சுச் சட்டத்தையே அனுசரித்தார்கள். இவ்விஷயமாகச் சட்டத்தை விளக்கி 1896-ல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இங்கிலாந்தி லுள்ளதுபோல் கூட்டுவியாபாரக் கொம்பெனிச் சட்டத்தின் கீழ் வங்கிகளையும் சேர்த்துக்கொள்ளலாமென 1897-ல் அனு மதியளிக்கப்பட்டது.
சாட்சிகள் சம்பந்தமான சட்டத்தைச் சீர்திருத்தவும் உறுதிப்படுத்தவும் ஹவ்லக் தேசாதிபதிகாலத்தில் நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுவிஷயமாக நீதிபதிகளுக்கு வழிகாட்டக்கூடிய திட்டமான சட்டங்களிருக்கவில்லை. ஆங்கில சட்டநூல்களையும், தீர்ப்பு அறிக்கைகளையும் அவர்கள் ஆராய வேண்டியிருந்தது.
பங்குபிரியாத காணிகளினல் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்தன. இதைத் தீர்ப்பதற்கு அவசியம் வழிதேட வேண்டியிருந்தது. பொருளாதார நியாயங்களையொட்டி முதல் தேசாதிபதியான நோத் கூட இவ்விஷயத்தில் கவனஞ் செலுத்தி யிருந்தார். ஆனல் அரசாங்கம் இவ்விஷயத்தைத் தீர்த்து வைக்கச் சரியான வழிவகைகளை எடுத்துக்கொள்ளவில்லை. சனங்கள் தங்கள் பங்குகளைப் பிரித்துக்கொள்ளலாமென்று மாத்திரம் ஊக்கமளித்தது. இம்மாதிரியான பங்குப் பிரிவிடுதல் செய்யும்போது முத்திரைச்செலவு கொடுக்கவேண்டியதில்லை யென மாத்திரம் 1897-ல் சட்டம் செய்தது.
மக்கலம் காலத்தில் குற்ற வழக்குமுறை என்ற சட்டம் திருத்தப்பட்டது. உயர்தர நீதிமன்றம் இதுவரை விசாரணை செய்துவந்த சில வழக்குகளை பகுதிக்கோடு விசாரணைசெய்யலா மென விதிக்கப்பட்டது.
1899-ம் ஆண்டு பெளத்த ஆலயச் சட்டம் சரியாக நிர்வா கஞ்செய்யப்படவில்லையென்று முறைப்பாடு செய்யப்பட்டதால் 1900-ல் அரசாங்கம் விசாரணை நடத்தி பெளத்த ஆலயச் சொத்து நிர்வாகம் சம்பந்தமான சில சீர்திருத்தங்களை 1902-ல் நிறைவேற்றியது. அரசாங்கம் ஒதுங்கி நிற்கும்வரை இம்மாதிரி யான சட்டங்களாற் பயனேற்படப் போவதில்லையென பெளத்த தலைவர்கள் எண்ணினர்கள். அதனல் புதிய சட்டம் கைவிடப்

Page 99
I 84 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பட்டது. பெளத்த ஆலயச் சொத்துக்களை நிர்வகிக்கும் விஷயத்தில் அரசாங்கம் மேற்பார்வை செய்யலாமெனக் குடி யேற்றநாட்டுமந்திரி 1904-ல் அபிப்பிராயப்பட்டார். எனவே முன்னர் நிராகரிக்கப்பட்ட மசோதா சட்டமாக்கப்பட்டது. தேசாதிபதி சம்பந்தப்பட்ட மாகாணங்களின் அரசாங்க ஏஜெண்டையோ உதவி அரசாங்க ஏஜெண்டையோ கிராமச் சங்கத்துக்குத் துணை செய்வதற்காகக் கமிஷனராய் நியமிக்கலா மென ஒரு திருத்தமும் அந்தச் சட்டத்திற் சேர்க்கப்பட்டது. பிரச்சனையைப் பூரணமாகத் தீர்த்துவைக்க இதனலும் முடிய வில்லை. தேவாலயச் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் விரைவில் வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டி யேற்பட்டது.
1867-ல் பட்டின சுகாதாரச் சங்கங்க ளேற்படுத்தப்பட்டன வென்று மேலே கூறினுேம், மாகாண நடவடிக்கை எல்லாவற்றி லும் அரசாங்க ஏஜெண்டு பங்குபற்றி யிருந்தாற்றன் நிர்வாகம் திறம்பட நடக்குமென இக்காலத்தில் அரசாங்கம் எண்ணி யிருந்தது. இந்தியாவில் கலெக்டர் இவ்வாறே தனது ஜில்லா வில் நடைபெறும் நடவடிக்கை யெல்லாவற்றிலும் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். பட்டின சுகாதார சங்கத்தின் அமைப்புச் சட்டம் தெளிவாயிருக்கவில்லை. அதன்படி அரசாங்க ஏஜெண்டு அச்சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கவேண்டியது அவசியமில்லை. இக்குறை 1891-ல் நீக்கப்பட்டு உத்தியோகத்த ரென்ற முறையில் அரசாங்க ஏஜெண்டு அங்கத்தவராயிருப்பா ரெனவும் சங்கத்தின் தலைவரெனவும் விதிக்கப்பட்டது.
பட்டினசங்க அந்தஸ்துக்குப் போதிய தகுதியில்லாதனவும், ஆனல் சுகாதார வசதிகள் செய்யப்படவேண்டியனவுமா யிருந்த பட்டினங்கட்கு 1892-ல் ஒருவகையான ஸ்தல நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்பட்டது. -
w இக்காலத்தில், பட்டினங்களின் சுகாதார ஒழுங்குகள் பல விதமாகத் திருத்தப்பட்டன. லபுகமையிலிருந்து கொழும்பிற்கு தண்ணிர் வசதிகள் ஏற்படுத்தியதுபற்றி முன்னரே கூறியுள்ளோம் கண்டி, காலி, நாவலப்பிட்டி, வதுளை, இரத்தினபுரி, மாத்தளை என்னும் பட்டினங்களுக்கும், இக்காலத்திலேயே சுத்தமான தண்ணீர், தண்ணீர்த் தேக்கங்கள் மூலம் அளிக்கப்பட்டது. கொழும்புப் பட்டினத்தின் சுகாதார நிலைமைகளை மேலும் திருத்துவதற்கு 1903-ம் ஆண்டில் ஆரம்பித்தனர். அழுக்குகளை குழாய்கள் மூலம் போக்குவதற்கும், வடிகால் முறைகள் பூரண மாய் அமைப்பதற்கும் இவ்வாண்டிலேயே ஆரம்பிக்கத் தொடங் கினர்.

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 185
வேறும் பல செளகரியங்கள் கொழும்புப் பட்டினத்தில் அமைக்கப்பட்டன. 1880-ம் ஆண்டு எடிசன் என்பவர் மின்சார விளக்கைக் கண்டுபிடித்தார். இதனல் வீடுகளில் மின்சார விளக்குகள் அமைக்க முடிந்தது. டைனமோவிலிருந்து மின்சார சக்தியைப் பிரயோகிக்கும் முறைகளையும் திருத்திக்கொண்டனர். இங்கிலாந்தில் மின்சார சக்தியைக்கொண்டு வீதிகளிலும், வீடு களிலும் 1888-ம் ஆண்டிலேயே விளக்கேற்ற ஆரம்பித்தனர். 1896-ம் ஆண்டில் 36 கொம்பனிகள் மின்சார வேலைகள் செய்ய ஸ்தாபிக்கப்பட்டன. இரண்டு வ ரு டங்க ள் கழியவே, கொழும்புப் பட்டினத்திலும் மின்சார சக்தியினல் விளக்கேற்ற ஆரம்பித்தனர். பிரயாண வண்டிகள் முதலியவற்றை இயக்கு வதற்கு மின்சாரத்தை இங்கிலாந்தில் தொடக்கத்தில் உபயோ கிக்கவில்லை. 1895-ம் ஆண்டிலேயே இங்கிலாந்தில் மின்சார வண்டிகளை உபயோகிக்கத் தொடங்கினர். 1899-ம் ஆண்டு கொழும்புப் பட்டினத்திலும் மின்சார வண்டிப் போக்குவரத்து உண்டானது. இவ்வாறே அரசாங்கம் முற்காலங்களிற் போலவே சனங்களுடைய தேவைகளுக்கும் விருப்பங்களுக்கு மியைய பல வேலைகள் செய்துவந்தது. சட்ட முறைகளைப் புதுப்பித்து நாட்டின், பொருளாதார நிலையையும், சமுதாய நிலையையும், முன்னேற்றமடையச் செய்திருக்கின்றது. விவசாயத்திலும் பல முன்னேற்றங்கள் அமைத்திருக்கின்றது. ரெயில் போக்குவரத் துகள், வீதிகள், புதிதாக அமைத்து, நீர்ப்பாசனத்திலும் பல புதுத் திட்டங்கள் உண்டாக்கி இருக்கின்றது. இவ் வண்ணம் நாட்டின் சகலவிதமான முன்னேற்றங்களுக்கும் அரசாங்கம் உழைத்தது. நிர்வாக முறைகளில் பல புது ஒழுங்குகளை அனு சரித்து அதன் திறமையை உயர்த்தியது. நாட்டின் சக்திகளை யெல்லாம் முயற்சியினல் பெருக்கியது. நாட்டின் உடல் வளர்ச்சியினையும் அறிவு வளர்ச்சியினையும் பலவித தேச சேவை களை ஆற்றி உயர்ந்த நிலைக்குக் கொணர்ந்தது.
2. தோட்டம், வியாபாரம், தொழில் இந்தக்காலத்தில் கோப்பிச் செய்கையும் சிங்கோனச் செய் கையும் குறைந்தன. தேயிலை, தென்னை, ரப்பராகியவை அதிகரித்தன.
கறுவா, கொக்கோ ஆகியவை அபிவிருத்தியடைந்தன. ரிட்ஜ்வே காலத்தில் கறுவா ஏற்றுமதி 90 வீதம் அதிகரித்தது. 1896-ல் 13,000 அந்தர் கொக்கோ ஏற்றுமதி செய்யப்பட்டது. 1902-ல் இத்தொகை 60,000 அந்தராக உயர்ந்துவிட்டது. கொக்கோத் தோட்டங்களும் 21,000 ஏக்கரிலிருந்து 35,000 ஏக்கராக அதிகரித்துவிட்டன.

Page 100
I 86 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
1890-ம் ஆண்டு துவக்கம் புகையிலை ஏற்றுமதி அதிகரித்தது. ஆனல் 20-ம் நூற்றண்டின் ஆரம்பத்தில் வெளிக்காரணங்களால் ஏற்றுமதி குறையத் துவங்கிற்று. புகை யிலை பிரதானமாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே பயிர் செய்யப்பட்டது. புகையிலை வியாபாரத்தில் யாழ்ப்பாணம் சிறந்திருந்தது. திருவாங்கூரில் யாழ்ப்பாணப் புகையிலைக்கு அதிக மதிப்பிருந்த படியால் நல்லாய் விலையாயிற்று. ஆனல் 1910-ல் திருவாங்கூர் அரசாங்கம் யாழ்ப்பாணப் புகையிலை மீது கடுமையான வரி விதித்ததால் புகையிலை வியாபாரத்துக்குப் பெரும் நஷ்டமேற் பட்டது. பிறகு இந்த வரி நீக்கப்பட்டு ஒரு அளவு புகையிலையை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யலாமென விதிக்கப்பட்டது.
தேயிலை வியாபாரம் இக்காலத்தில் மிக முன்னேற்றமடைந் தது. புதிய புதிய ரோட்டுகள் திறக்கப்பட்டதாலும், ஊவா, உடபுசலாவை, கழனிவெளி ரயில் பாதைகள் அமைக்கப்பட்ட தாலும், தேயிலை பெரிதும் அபிவிருத்தி யடைந்தது. 1896-ல் 330,000 ஏக்கர் தேயிலைத்தோட்ட மிருந்தது. 1900-ல் இது 392,000 ஏக்கராக உயர்ந்தது. இதில் இலங்கை முதலாளி களுடைய தோட்டமும் அடங்கும். 1903-ல் இது 406,000 ஏக்கராக உயர்ந்தது. 1890-ல் 110,095,000 ருத்தல் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் பெறுமதி 51, 337, 388 ரூபாயாகும். இது இலங்கை ஏற்றுமதியில் மூன்றிலிரண்டு பகுதி யெனலாம். 1900-ல் 3, 5 82,361 பவுண் பெறுமதியான 149, 265,053 முத்தல் தேயிலை ஏற்றுமதியாயிற்று. 1902-ல் 54, 298,294 ரூபாய் பெறுமதியான 150,829,000 ருத்தல் தேயிலை ஏற்றுமதியானது. இது மொத்த ஏற்றுமதியில் 56 வீதமென்று கூறலாம்.
ஆனல் இதன்பின்னர் தேயிலை வியாபாரம் வீழ்ச்சியடைந் தது. இலங்கையிலும் இந்தியாவிலும் உற்பத்தியாகும் தேயிலையை வாங்கிக்கொள்ளக்கூடிய முறையில் பிரித்தானிய தேயிலை மார்க்கெட் 1896 வரை விரிந்திருந்தது. அதன் பின்னர் தேவைக்கதிகமாக தேயிலை உற்பத்தி செய்யப்பட்டதால் 1896-ல் ருத்தல் 8 பென்ஸ் விற்ற தேயிலை 1900-ல் 7 பென் ஸாகக் குறைந்துவிட்டது. இதனல் தோட்ட முதலாளிகளுக்கு இலாபம் அதிகம் ஏற்படவில்லை. எனவே விளைவு குறைவான தோட்டங்கள் கைவிடப்பட்டன. புதிய தோட்டங்கள் திறப் பதையும் கைவிட்டார்கள். 1904-ல் தேயிலைத் தோட்டங்கள் 388, 753 ஏக்கருக்குக் குறைந்துவிட்டன. ஆனல் கொஞ்ச நாளையில் நிலைமை அபிவிருத்தியடைந்தது. செய்கை முறை யையும், தேயிலை உற்பத்தி செய்யும் முறையையும் சீர்திருத்தி, சாஸ்திர ரீதியான முறையில் சிக்கனமாகத் தோட்டங்களை

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 187
நடத்தத் தோட்டக்காரர் முயற்சிசெய்தார்கள். இதனுல் உற்பத்திச் செலவு குறைந்தது. பிரித்தானிய குடியேற்ற நாடு களிலும், ருஷ்யாவிலும், சீனுவிலும் இலங்கைத் தேயிலை விற்பனை செய்யப்பட்டது. 1903-ல் 149,200,000 ருத்தலாகக் குறைந்திருந்த தேயிலை ஏற்றுமதி 1906-ல் 170,000, 000 முத்த லாகக் கூடிற்று. 545 ஏக்கர் நிலத்தில் புதிதாகத் தேயிலை பயிரிடப்பட்டது. 1911-ல் ஏற்றுமதி 186,000,000 முத்தலாக உயர்ந்தது. ܗ
தேங்காய் வியாபாரமும் பெரிதும் விருத்தியடைந்தது. 1892-ம் ஆண்டு துவங்கி தெங்குப்பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்துக்கொண்டே வந்தது. 1896-ல் தேங்கா யெண்ணெய் கொப்பரு, தேங்காய்ப்பூ, தேங்காய், பிண்ணுக்கு, தும்பு என்பன 11, 178,000 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1911-ல் 38,000,000 ரூபாய் பெறுமதியான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1896-ல் 550,000 ரூபாய் பெறுமதி யான 57,500 அந்தர் நிறையுள்ள கொப்பரு ஏற்றுமதி செய்யப் பட்டது. 1911-ல் 821,000 அந்தர் ஏற்றுமதி செய்யப்பட்டது. 1870-ல் இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 4 வீதம், தெங்குப் பொருளாகவிருந்தது. 1880-ல் 9 வீதமாகவும், 1890-ல் 15 வீதமாகவும் 1900-ல் 17 வீதமாகவும், 1910-ல் 245 வீதமாக வும் உயர்ந்தது.
வடமேல் மாகாணம், மேல் மாகாணம், தென் மாகாணம், யாழ்ப்பாணக்குடாநாடு, கீழ் மாகாணத்துக் கரையோரப்பகுதி களாகிய இடங்களிலேயே தெங்குப்பொருள் வியா பாரம் மிகுதியும் அபிவிருத்தி யடைந்துவந்தது. ரப்பர் தோட்டங்கள் திறப்பதற்கு முன்னல் சபிரகமுவா மாகாணத்திலும் தென்னந் தோட்டங்களே யிருந்துவந்தன. கிழக்குக்கரையில் அமைத்தது போலத் தீவின் பல பாகங்களிலும் ரோட்டுகள் போடப்பட்ட தாலும் தெற்கே மாத்தறை வரைக்கும் வடக்கே நீர் கொழும்பு வரைக்கும், யாழ்ப்பாணத்துக்கும் ரயில் பாதை அமைக்கப்பட்ட தாலும், தேங்காய் வியாபாரம் பெரிதும் முன்னேற்றமடைந்தது.
அரச பூந்தோட்ட இ லா கா ஆரம்பத்தில் ரப்பரைப் பரீக்ஷார்த்தமாகப் பயிரிட்டது. ஆனல் அதிகம் பலனடைய வில்லை. பிரேஸிலிலிருந்து வ ர வ  ைழ க் க ப் பட்ட இரண்டு விதமான ரப்பர் விதைகளை இங்கிலாந்தில் செயற்கையான சீதோஷ்ண நிலையமைத்த கியூ தோட்டத்தில் 1876-ல் பயிரிட் டார்கள். அங்கே பயிரான சில செடிகளை வரவழைத்து பேராதனையிலும், ஹெனரத் கொடையிலும் பயிரிட்டனர். சீயாரா என்ற ரப்பர் தினு சுகள் முதலில் பூத்துக் காய்த்தன. 1883-ல் 977 ஏக்கர் நிலத்தில் இந்த ரப்பர் பயிரிடப்பட்டது.

Page 101
88 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
ஆனல் லண்டனில் ரப்பருக்கு விலை குறைந்திருந்தபடியாலும், இலங்கைத் தோட்ட முதலாளிகளுக்கு ரப்பருற்பத்தியில் அதிக பயிற்சியில்லாதபடியாலும் ரப்பரில் இலாபம் கிடைக்கவில்லை. எனவே ரப்பரைக் குறைத்துக்கொண்டு தேயிலையைப் பயிரிட் டார்கள். ஹீவியா ரப்பர் மரங்கள் பூத்துக் காய்த்தவுடன் 1881-ல் அந்த விதைகளை வெளிநாடுகட்கு அனுப்பினர்கள். 1896-ல் இந்த ரப்பர் திணிசைப் பயிரிட முயன்றனர். 1898-ல் 1071 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டது. தேயிலைக்கு நல்ல விலை யிருந்தபடியால் ரப்பர் செய்கை மெதுவாகவே நடைபெற்றது. மேலும் ரப்பரின் வருங்கால அபிவிருத்தியைப்பற்றிச் சந்தேக மிருந்தபடியாலும் ரப்பர் செய்கை அதிகம் பரவவில்லை.
ஆனல் 19-ம் நூற்றண்டின் முடிவில் நிலைமை மாறிவிட்டது. 1899-ல் அரச பூந்தோட்ட இலாகா நடத்திய ஆராய்ச்சிகளின் பயணுக ரப்பரைச் சரியான முறையில் பயிரிடவும் உற்பத்தி செய்யவும் கற்றுக்கொண்டார்கள். மேலும் தேயிலையின் விலை விழுந்தது. ரப்பரின் விலை உயர்ந்தது. ருத்தல் இரண்டு ஷிலிங்கிலிருந்து 1910-ல் 4 விலிங்காக உயர்ந்தது. 1904 லிலிருந்து 1906-ம் ஆண்டு வரையில் இது 6 விலிங்காக உயர்ந் தது. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ரப்பர் தொழில் விருத்தி யடைந்ததே இதற்குக் காரணமாகும். T Li L u fi செய்கை விரைவில் பரவிற்று. 1900-ல் 2000 ஏக்கர் ரப்பர் தோட்ட மிருந்தது. 1903-ல் இது 11,600 ஏக்கராக உயர்ந்தது. இதில் 10,500 ஏக்கர் கழனிவெளி ரயில் பாதை அமைந்துள்ள சபர கமூவா பகுதியிலிருந்தது. எஞ்சிய 1100 ஏக்கர் மேல் மாகா ணத்திலிருந்தது. 1906-ல் 50,472 ஏக்கர் தோட்டம் ரப்பர் செய்கையிலிருந்தது. 1907-ல் இது 150,000 ஏக்கராகவும், 1910-ல் 200,000 ஏக்கராகவும் உயர்ந்தது. 1903-ல் 84,784 ரூபாய் பெறுமதியான 389 அந்தர் ரப்பர் ஏற்றுமதி செய்யப் பட்டது. அதாவது அந்தர் ஒன்று ரூபா 257.70 சதமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. 1911-ல் 28,000,000 ரூபாய் பெருமதியான 61,212 அந்தர் ரப்பர் ஏற்றுமதியாயிற்று. ரப்பரில் நல்ல இலாபமேற்பட்டது. 1907-ல் லண்டனில் ரப்பரின் விலை ரு த் த ல் 4 விலிங்காக விழவே கொஞ்சக் காலம் மந்த மேற்பட்டது. பின்னர் பிரேலில் ரப்பர் தோட்டக்காரர் தற்காலிகமாக ரப்பரின் விலையை 12 விலிங் காக உயர்த்தவே 1910-ல் மறுபடியும் ரப்பர் வியாபரத்துக்கு நல்ல கால முண்டானது. ஐரோப்பிய கொம்பெனிகளே ஆரம் பத்தில் ரப்பர் தோட்டங்களைத் திறந்தன. பின்னர் இலங்கையர்

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 189
தேயிலையிலும்பார்க்க ரப்பர் செய்கையையே மேற்கொண்டனர். ஏழைகள் கூடத் தங்க ள் தோட்டங்களிலும் , வயல்களிலும் நெ ல் லை யும் கறுவாவையும் பயிரிடுவதைவிட்டு ரப்பரைப் பயிர் செய்தனர்.
விவசாயப் பொருள்களைவிட இரத்தின வியாபாரமும் நடை பெற்றது. மின்னர வியாபாரமும் விருத்தியடைந்தது. 1896-ல் 361, 000 தொன் மின்னரம் ஏற்றுமதி செய்யப்பட்டது. 1907-ல் இத்தொகை 538, 973 தொன்னக உயர்ந்தது. தோட்டங் களுக்குத் தொழிலாளர் அவசியமாயிருந்தபடியாலும், இலங் கையின் வருமானம் பெரும்பாலும் தோட்டங்களில் தங்கி யிருந்தபடியாலும் தொழிலாளர் பிரச்னைகளில் அரசாங்கம் சிரத்தை காட்டிற்று. தொழிலாளர் செலவைக் குறைப்பதற்கு அரசாங்கம் உதவிசெய்தது. ரோட்டுவரி, கிராமச்சங்கவரி அவர்களிடம் வாங்கப்பட்டது. தோட்டங்கள் கொடுக்கும் பணத்தைவிட எத்தனையோ மடங்கு அதிகமான பணத்தை அரசாங்கம் தொழிலாளருக்கு வைத்திய வசதி செய்து கொடுப்ப தில் செலவுசெய்தது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குவரும் தொழிலாளரின் வசதிக்காகவும் அவர்கள் போகும் இடங்களில் தொற்றுநோயைப் பரப்பிவிடாமல் பாதுகாப்பதற்காகவும் சுகா தாரத் தங்கல் வசதி ரிட்ஜ்வே காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. தோட்டமுதலாளிகள் சங்கம் இலங்கைத் தோட்டங்களின் நல உரிமைகளைக் கவனிக்குமாறு இந்தியாவில் ஒரு தொழிற் சபையை ஏற்படுத்தியிருந்தது. பிளேக் காலத்தில் இந்தச் செலவுக் கென அரசாங்கம் வருடாவருடம் 11,000 ரூபாய் கொடுக்க ஆரம்பித்தது.
இந்தக்காலத்தில் நாட்டிலே பேதி, வைசூரி முதலிய நோய்கள் பரவின. இதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை யெடுத்துவந்தது. 1889-ம் ஆண்டு துவக்கம் 1895 வரை பேதியினல் 4634 பேர் இறந்தார்கள், 5353 பேர் வைசூரி யால் மாண்டனர். பாம்பனிலிருந்து கப்பலில் மன்னுருக்கு வந்து அங்கிருந்து தொழிலாளர் ரோட்டு LDPT ri 5 5 DfT 5 மாத்தளைக்கு வந்தார்கள். இதுதான் தொழிலாளர் பயன் படுத்திய பழைய மார்க்கமாகும். இவ்வாறு பிரயாணஞ் செய்வது அவர்களுக்கு மிக மலிவாகவுமிருந்தது. தொற்று நோயினல் யாராவது பீடிக்கப்பட்டால் அவர்களை வழியில் ஏற்படுத்தப்பட்ட த ங் கு மி ட ங் களி ல் விட்டுவிடுவார்கள். மாத்தளைக்குப் போவதற்கிடையில் தொற்றுநோயால் பீடிக்கப் பட்டவர்களுக்கு நோய்கண்டுவிடும். எனவே மாத்தளை வரை சுகமாகப் போய்ச் சேரக்கூடியவர்கள் தொற்றுநோயினல் பீடிக்

Page 102
I 9 Ο இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
கப்படாதவர்களே. ஆதலால் தோட்டங்களிலுள்ள மற்றத் தொழிலாளருக்கு நோய் தொற்றக்கூடிய ஆபத்தில்லாதிருந்தது. ஆனல் தொழிலாளர் பயன்படுத்தும் பாதையிலுள்ள கிராமங் களிலிருப்பவர்கள் நோய் பிடித்துக் கஷ்டப்பட வேண்டியுமிருந் தது. 1891 துவக்கம் 1898 வரை மன்னர் பகுதியில் மாத்திரம் 500 பேர் வாந்திபேதியினல் மாண்டார்கள். 1897-ல் பம்பாயில் மிகமோசமான கொள்ளைநோய் ஏற்பட்டது. இலங்கையில் நோய் பரவ வொட்டா மற் தடுப்பதற்காகக் குறித்த பாதை மூடப்பட்டது.
தொண்டி, அம்மன் பட்டினம், தூத்துக்குடியாகிய துறைகளி லிருந்து கொழும்புக்கு வரும் தொழிலாளர் மூலமாகவே ஆபத் துண்டாவதற்கிட மிருந்தது. இந்தப்பாதையால்தான் ஏராள மான தொழிலாளர் வந்திறங்கினர்கள். 1898-ல் நூற்றுக்கு 80 வீதம் தொழிலாளர் இந்த மார்க்கமாகவே கொழும்புக்கு வந்தார்கள். எனவே 1899-ல் துரத்துக்குடிக்கும் கொழும்புக்கு மிடையில் ஒழுங்கான கப்பற்போக்குவரத்து ஏற்படுத்தப்பட் டது. இந்த மார்க்கமாக வந்தவர்கள் ஆரம்பத்தில் கொழும்பி லிறங்கி ரயில் மார்க்கமாகத் தோட்டக்காடுகளுக்குச் சென்ருர் கள். பின்னர் கழனியிலிறங்கி போனர்கள். கொழும்பிலும் தோட்டக்காடுகளிலும் வாந்திபேதி, வைசூரி முதலிய தொற்று நோய்கள் பரவா வண்ணம் 1897-ல் இராகமத்தில் ஒரு சுகாதார விடுதி மண்டபம் ஏற்படுத்தப்பட்டது. தூத்துக்குடியிலும் வாந்திபேதி சகஜமாயிருந்தபடியால் 7 மைலுக்கப்பால் தட்டப் பாறை என்ற இடத்திலும் ஒரு விடுதி ஏற்படுத்தப்பட்டது. இங்கே தொழிலாளரை வைத்தியர்கள் பரிசோதித்து ரயில் மார்க்கமாகத் தூத்துக்குடிக்கு அனுப்புவார்கள். அங்கிருந்து அவர்கள் கொழும்புக்குப் பிரயாணமாவார்கள். இந்த முறை யினல் நோய் உள்ளவர்கள் தடை செய்யப்பட்டார்கள். எனவே பேதியினல் ஏற்பட்ட மரணம் 1896 துவக்கம் 1902 வரை 1207 ஆகக் குறைந்துவிட்டது. இந்தியா-இலங்கை ரயில் பாதை. அமைக்கப்படும்வரை இந்த மார்க்கமாகவே தொழிலாளர் வந் தார்கள். புதிய பாதை ஏற்பட்டதும் தென்னிந்தியாவிலுள்ள மண்டபத்தில் ஒரு சுகாதார விடுதி தாபிக்கப்பட்டது.
3. நீர்ப்பாசனம்
கோர்டன் தேசாதிபதி போன பின்னரும் நீர்ப்பாசன வேலை களில் சிரத்தை குறையவில்லை. புறக்கணிக்கப்பட்டுவந்த பகுதிகளை விருத்தி செய்வதற்கும், அங்கு வசிக்கும் சனங்களுக்குச் சீவனம் உதவி அவர்களைச் சுகபலத்துடன் வைத்திருப்பதற்கும், நீர்ப்பாசன வசதிகளைத் திருத்தியமைப்பது அவசியமென

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 1 9
ஹவ்லக் உணர்ந்தார். ரிட்ஜ்வேயும் கிராமவாசிகளின் நன்மை யைக் கவனிப்பதில் பின்னிடவில்லை. நாட்டிலே வருமானம் அதிகரித்தது. வடக்கே ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த வசதிகளை யெல்லாம் பயன்படுத்தி, அவர் முந்திய தேசாதிபதி களிலும் பார்க்க மிகுந்த ஊக்கத்துடன் திட்டங்களை நிறை வேற்றினர். இதன் பயனுக 162,000 ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ச்சக்கூடிய வசதி ஏற்பட்டது. ஒரே விளைவில் 3, 240,000 புசல் நெல்லை அறுவடை செய்யக்கூடியதாயுமிருந்தது. நீர்ப் பாசன விஷயத்தில் பிளேக்கும் சிரத்தைக்காட்டினர். ஆனல் அவர் நீர்ப்பாசனக் கொள்கையில் முக்கியமான ஒரு மாற்றத்தை உண்டுபண்ணினர். நடைமுறையிலிருக்கும் திட்டங்களின்படி நல்ல நீர்த்தேக்கப் பிரதேசங்களோ, வாய்க்கால் வசதிகளோ இருக்கவில்லை. புதிய திட்டங்களை ஆரம்பிக்குமுன் இந்தக் குறைகளை நிவர்த்திசெய்யவேண்டுமென அவர் நிச்சயித்தார். நெல்வயல்களுக்கு மாத்திரம் இதுகாறும் நீர்ப்பாசன வசதி யமைக்கப்பட்டது. தென்னந்தோட்டங்களுக்கும் இவ்வசதியை
மக்கலம் தேசாதிபதி ஏற்படுத்தினர்.
வட மாகாணத்தில் பெரிய நீர்ப்பாசன வசதியமைக்கும் முயற்சி ரிட்ஜ் வே காலத்திற்ருன் முதல் முதலாரம்பிக்கப் பட்டது. கட்டுக்கரைக்குளம் முதல் பழுது பார்க்கப்பட்டது. இக்குளம் 4,425 ஏக்கர் விஸ்தீரணமுள்ளது. இதன்கரை 9 மைல் நீளமுள்ளது. 1,046, 000, 000 கன அடி நீர் நிறை வுடையது. 20,000 ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாய்ச்சக்கூடியது. பிளேக் காலத்தில் பல கால் வாய்கள் இதற்கு இணைக்கப்பட்ட தஞல் மேலும் 22,964 ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ச்சக் கூடியதா யிற்று. முல்லைத்தீவுக்குத் தெற்கேயுள்ள கணுக்கேணி நீர்ப் பாசன வேலைகளும் கரைச்சித் திட்டமும் ரிட்ஜ்வே காலத்திற் முன் ஆரம்பிக்கப்பட்டன. கரைச்சித் திட்டமும் 20,000 ஏக்கருக்கு நீர்ப்பாய்ச்சக் கூடியதாயிருந்தது. வடக்கே ரயில் பாதையை அமைத்ததன் பயணுகவே கரைச்சித்திட்டம் ஆரம் பிக்கக்கூடியதா யிருந்ததெனலாம். வடமத்திய மாகாணத்தில் நீர்ப்பாசன வசதிகளைப் புதுப்பிப்பதற்கும் ரயில் பாதைதான் துணைபுரிந்தது. மல்வத்து ஒயாவிலிருந்து நீர் பெறும் நச்சடு வாக்குளத்தை ரிட்ஜ்வே திருத்தினர். இதன் பயனுக 20,000 ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாய்ச்சக்கூடியதாயிற்று. இதே ஆற்றி லிருந்து நீர் பெறும் நுவரவாவியை பிளேக் பழுதுபார்த்தார். இது 63,000 ஏக்கர் நிலத்துக்குத் தண்ணீர் உதவியது. மல்வத்து ஒயாவின் கிளையான கந்தரா ஒயாவிலிருந்தும், நுவர வாவியிலி ருந்தும் நீர் பெற்ற மஹ்கல் கடவலக்குளமும், திருத்தப்பட்டது. 15,000 ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ச்சக்கூடியதும், தமங்கடு

Page 103
192 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
வைப் பகுதியிலுள்ளதுமான மின்னேரியாக் குளத்தை ரிட்ஜ்வே திருத்துவித்தார். வடமத்திய மாகாணத்திலும், வடமேல் மாகாணத்திலும் ஏராளமான குளங்கள் பழுதுபார்க்கப்பட்டன.
வடமேல் மாகாணத்திலும், ஊவாவிலும், மத்திய மாகாணத் திலும் மூன்று பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறை வேற்றப்பட்டன. தெ துரு ஓயாத் திட்டத்தை ஹவ்லக் ஆரம் பித்தார். பிளேக் இதை மேலும் விஸ்தரித்து 3770 ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசனஞ் செய்யக்கூடியதாய்ச் செய்தார். ஊவா வில் புத்தலவுக்குச் சமீபத்திலுள்ள குமுக்கன் ஒயாவின் கால்வாயான மதுருக்கட்டியாக் கால்வாயை ஹவ்லக் புதுப் பித்தார். மத்திய மாகாணத்தில் 2000 ஏக்கருக்கு நீர்ப் பாய்ச்சக்கூடிய மினிப்பே கால்வாயை புதுப்பிக்க மக்கலம் ஆரம்பித்தார்.
மட்டக்களப்புக்குத் தெற்கேயும் வடக்கேயும் கரையோர் மாக ரோட்டுகளமைக்கப்பட்ட கீழ் மாகாணத்தில் பெரிய எடுப்பில் பல நீர்ப்பாசன வேலைகள் நிறைவேற்றப்பட்டன. ரிட்ஜ்வே காலத்தில் கந்தளாய் திட்டமும் மட்டக்களப்புக்கு மேற்கேயுள்ள ரூகம் திட்டமும் தொடர்ந்து அபிவிருத்தி செய்யப்பட்டன. திருக்கோவிலுக்கு மேற்கேயுள்ள சாகமம் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. கல்குடாவுக்கு மே ற் கே வாகனேரிக்குளமும், உணிச்சைக்குளமும் புதிதாக வெட்டப் பட்டன. வாகனேரி 13,000 ஏக்கர் நிலத்துக்கும் உணிச்சை 19,000 ஏக்கர் நிலத்துக்கும் நீர் பாய்ச்சக்கூடியதா யிருந்தன. ரிட்ஜ்வே காலத்தி லாரம்பிக்கப்பட்ட இந்தக்குளங்கள் பிளேக் காலத்தில் பூர்த்தியாக்கப்பட்டன. அம்பரைக் குளத்துக்கு மேற்கேயுள்ள பட்டிப்பளை ஆற்றுடன் சம்பந்தப்பட்ட கொண்டவந்தவன் திட்டத்தையும் பிளேக் நிறைவேற்றினர். இது 12,600 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சிற்று. கொட்டி யாரக்குடாவுக்கு, தெற்கேயுள்ள அல்லைத்திட்டத்தை ஆரம் பித்தார். 3250 ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாய்ச்சுவதற்கு இத் திட்டம் இடமளித்தது. ரிட்ஜ்வே ஆட்சிக்கால ஆரம்பத்தில் கீழ் மாகாணத்தில் 68,009 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சும் வசதி இருந்தது. மேலும் 48,000 ஏக்கருக்கு நீர் பாய்ச்ச அவர் வசதிசெய்தார். 20,000 ஏக்கர் வயல் நிலத்தையும் விற்பனை செய்தார்.
தென்மாகாணத்திலும் பல நீர்ப்பாசன வசதிகள் செய்யப் பட்டன. வாட் தேசாதிபதி திசமகாராமைக் குளத்தைத் திருத்தத் திட்டம் போட்டார். ரிட்ஜ்வே அத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தி 7000 ஏக்கர் நிலத்துக்கு நீர்பாய்ச்சக்கூடிய

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 193
வசதியைச்செய்தார். வளவைகங்கைத் திட்டமும் மிக முக்கிய மானது. இது சபிரகமூவா மாகாணத்திலுள்ள உக்கல்கல் தோட்டையிலிருந்து வள வைக ங் கை முகத்துவாரம் வரை பரந்திருந்தது. இத்திட்டம் 1886-ல் ஆரம்பிக்கப்பட்டு ஹவ்லொக் காலத்திலும் வேலை நடந்துகொண்டே வந்தது. ரிட்ஜ்வே காலத்தில் திட்டம் மேலும் விஸ்தரிக்கப்பட்டு 10,000 ஏக்கருக்கு அதிகமான நிலத்துக்கு நீர் பாய்ச்சக்கூடிய வசதி ஏற்பட்டது. கிரிண்டி ஒயாவின் வலது கரையில் ஒரு கால் வாயை அமைத்து நீர்ப்பாசன வசதியை பிளேக் ஏற்படுத்தினர். இதன் பயனுக 12,500 ஏக்கர் நிலத் துக் கு நீர்ப்பாய்ச்ச வசதி ஏற்பட்டது.
இக்காலத்தில் தானிய வரி ஒழிக்கப்பட்டது ஒரு முக்கிய மான சம்பவ மென்றே கூறல்ாம். அனுராதபுரியிலும் பொல நறுவையிலும் ஆண்ட அரசர்கள் பிரதானமாக இந்த வரி மூலமே தமது வருமானத்தைப் பெற்றர்கள். பிரித்தானிய ஆட்சிக்கு முன்னர் இந்த வரி தானியமாகவே கொடுக்கப்பட்டது. வரிவிகிதம் விளைவைப் பொறுத்திருந்தது. இப்பொழுது குறித்த ஒரு வரியைப் பணமாகவே இறுக்கவேண்டியிருந்ததால் விளைவு ந்ல்லாயில்லாத காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வரியைக் கொடுக்க முடியாதிருந்தார்கள். வேறுபலர் லேவா தேவிக்கார ரிடம் பணம் வாங்கிக் கஷ்டப்பட்டனர். எனவே நாளடைவில் வரிகொடாதவர்களின் நிலத்தை அரசாங்கமும் லேவாதேவிக் காரரும் கைப்பற்றினர்கள். ஜோர்ஜ்வால் என்பவர் இந்த வரியைச் கொஞ்சக்காலமாக எதிர்த்தும் வந்தார். 1893-ல் இது ஒழிக்கப்பட்டமை கிராமவாசிகளுக்கு நல்ல பயனைக்கொடுத்தது.
4. போக்குவரத்து சாதனங்கள்
தோட்டங்களின் அதிகரிப்பும் வியாபார விருத்தியும் அரசாங்கத்தினுடைய முயற்சிகளும், நாட்டின் வளர்ச்சியும் இலங்கைத் தீவின் எல்லாப் பாகத்திலும், போக்குவரத்துச் சாதனங்களை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றன. இதனல் வியாபாரமும் பயிர்ச் செய்கையும், நாட்டில் பெருகின. பிர தானமாக தேயிலைச் செய்கை, ரப்பர் செய்கை, தென்னைச் செய்கை என்பவற்றைப் பெருக்குவதற்கும் நாட்டின் மற்றப் பாகங்களில் இவ்வாரு ன முயற்சிகளை கையாளுவதற்குமே இவ் விஷயத்தில் அரசாங்கம் கூடிய ஊக்கம் எடுத்துவந்தது. இவ் வேளையில் நாட்டில் உண்டாகிய பல்வகைத் திருத்தங்களுக்கும் அரசாங்கத்தின் நன்முயற்சியை- காரணமென்று கூறலாம். தெருக்களும் வீதிகளும் இக்காலத்திலேயே அதிகமாக அமைக் கப்பட்டன. மத்திய மாகாணத்தில் 1903-ம் ஆண்டு டிம்புலா விலிருந்து லிண்டுலா வரைக்கும் தெருவீதி அமைக்கப்பட்டது.

Page 104
194 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
நுவரெலியா மாகாணத்தில் தேயிலைச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு லிண்டுலாவிலிருந்து அக்கிரப்பத்தனை வரை தெருப் போடப்பட்டது. இதே மாகாணத்தில் கிழக் குப் பகுதியில் நுவரேலியா தொடங்கிச் சென் மாக்கிரட் வரையுள்ள ரோட்டு உடாப்புசல்லாவை வரையும் நீ டி க் கப் பட் டது. இதே ஆண் டிலேயே புறு க்  ைஸ டி லி ரு ந் து வடக்கே கைபோறஸ்ட் வரையும் ஒரு கிளைத் தெருவும் அமைக்கப்பட்டது. சிவனுெளி பாதத்தைச் சுற்றிவர உள்ள எல்லைப்பிரதேசமும் திருத்தப் பட்டிருக்கின்றது. நோவூட்டிலிருந்து தெற்கே லைப்கோட் வரை 1892-ம் ஆண்டில் ஒரு வீதி திறக்கப்பட்டது. 1893-ம் ஆண்டில் இவ் வீதி பூரணமாகக் கட்டப்பட்டது. இதே காலத்தில் மஸ்கேலி யாவிலிருந்து லுக்கூமுக்கு தென் கிழக்கில் குறுTடனுக்கும் மோரேயிக்கு தெற்கிலும் தெருவீதிகள் அமைக்கப்பட்டன. 1908-ம் ஆண்டில் கம்பளையிலிருந்து டொ லஸ்பாகேக்கு வீதி அமைக்கப்பட்டது. மாத்தளை மாகாணத்திலுள்ள தெல் தெனியா -ரங்கலை தெரு பெண்டேல் வரையும் நீடித்து அமைக்கப் Lull-gil. இம் மாகாணத்திலேயே இச்சமயத்தில் நவுலாத் தொடங்கி அலகார வரையுமுள்ள மாத்தளை-டம்புலாத் தெரு பூரணமாக்கித் திருத்தி அமைக்கப்பட்டது. இந்த வீதி திறக்கப் பட்டது தேயிலை, ரப்பர் செய்கைக்காகவில்லை. முக்கியமாக நெற்சாகுபடியைப் பெருக்குவதற்கேயாகும். போக்குவரத்துச் சாதனங்களைத் திருத்துவதற்கு மேற்கூறியவைகள் தவிர, மூன்று பிரதானமான பாலங்களும் கட்டப்பட்டன. மகாவலி கங்கை ஆற்றை மேவி, உளப்பனைக்குக் கிட்டவும், பேராதனை யிலும், கண்டிக்குக்கீழுள்ள பேர் வகா முவாவிலும் கட்டப்பட் Η - 6δΓ. பேராதனையில் இப்பாலங் கட்டுமுன் இவ்விடத்தில் பாலை மரப் பாலமிருந்தது. இப்பாலம் சரித்திரத்தில் குறிப் பிடப்பட்டது. 1832-ம் ஆண்டு கட்டப்பட்டது.
மேற்கு மாகாணத்திலும், பயிர்ச்செய்கையைப் பெருக்கு வதற்கு ரோட்டுகள் அமைக்கப்பட்டன. தென்னைச் செய்கை யும் ரப்பர்ச் செய்கையும் உள்ள களுத்துறை மாகாணத்தில், ஹொருன தொடங்கி, அங்குறுவத்தோட்டை யூடாக அழுத்து காமம் வரையுமுள்ள தெரு திருத்திப் பூரணமாக்கப்பட்டது. மத்துக்காமம் அகலவத்தைத் தெரு பதுரேலியா வரை நீடித்து அமைக்கப்பட்டது. 1896-ம் ஆண்டில் அத்வல்ஒயா வரை அத்தெரு நீடிக்கப்பட்டது. 1912-ம் ஆண்டு அகலவத்தையி லிருந்து கலா வல்லவாப் பண்ணையின் வடபாகம் வரை தெரு நீடித்துப் போடப்பட்டது. 1906-ம் ஆண்டு நாகொடைக்கும் நாபொ டைக்கும் இடையே தெருப்போடப்பட்டது. இவைகள் தவிர, வேறு இரண்டு தெருக்கள் மேற்கு மாகாணத்தின் வட

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 95
பாகத்தில் அமைக்கப்பட்டன. 1891-ம் ஆண்டில் அத்தனகலைக் கும் வியாங்கொடைக்கும் இடையே தெருப்போடப்பட்டது. 1900-ம் ஆண்டில் பசியாலைக்கு இத்தெரு நீடிக்கப்பட்டது. இந்த இரண்டு பட் டி ன ங் களை யும் ரூவான்வலையுடன் தொடுத்து ரோட்டு அமைக்கப்பட்டது. 1891-ம் ஆண்டில் அத்தணுக்கலுஒயா நதிக்குமேல் கட்டப்பட்ட பாலம் பூரண மாக்கப்பட்டது. கொழும்புப் பட்டினத்திற்கு இது ஒரு புது வழியை உண்டு பண்ணியது. மூன்றுவதாக லபுகமைக்கு அணித்தாகவுள்ள துன்மோதரையில் ஒரு பாலங் கட்டப்பட்டது. சபிரகம ஊவா மாகாணத்திலும் பல தெருக்களும் வீதிகளும் மேலும் திறக்கப்பட்டன. 1897-ம் ஆண்டில் கேகாலைக்கும் புலத் கொகுப்பிட்டிக்கும் தெருப்போடப்பட்டது. மின் ன ரக் கைத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கே பிரதானமாக இத் தெருப் போடப்பட்டது. இக் கைத்தொழில் புலத் கொகுப் பிட்டியில் உண்டு. எட்டியாந்தோட்டை வரையில் ரயில் போக்கு வரத்து ஏற்படவிருந்ததால் இவ்விடத்திலிருந்து பொலட்ட காமாவுக்கு வீதிகள் அமைத்துத் திருத்தங்கள் செய்ய முடிந்தது. இதிலிருந்து ஆர்ட்டோசு வரைக்கும் தெரு நீடிக்கப்பட்டது.
இதனல் வண்டிப் போக்குவரத்துச் சாதனங்களை மேற்கு டொ லஸ்பாகையிலிருந்து எட்டியாந்தோட்டை வரையும் ஏற் படுத்த இயன்றது. இம் மாகாணத்தில் இரண்டொரு பிரதான மான பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ரிட்டிகாகை ஒயா வைமேவி 1898-ம் ஆண்டில் ஒரு பாலம் கட்டப்பட்டது. வரக்கத்தோட்டை என்ற இடத்திலும் ஒரு பாலம் கட்டப் பட்டிருக்கிறது. இது இரத்தினபுரிக்கு அணித்தாயுள்ளது. இரத்தினபுரி பகுதியில் வளவை கங்கை ஒரமாக மாதம்பை தொடங்கி தென்மாகாணத்திலுள்ள அம்பலாந்தோட்டை வரை ஒரு வீதி கட்டப்பட்டது. இந்த வீதி 1905-ம் ஆண்டி லேயே பூரணமாக்கப்பட்டது. ஆற்றங்கரை யோரமாகவுள்ள காணிகளுக்கு நீர்ப்பாசன வசதியமைக்க இவ்வீதி மிகவும் பிரயோசனப்பட்டது. தென்மாகாணத்தில் வேறு விசேஷமான தெருவீதிகள் அமைக்கப்படவில்லை. ஆனல், 1903-ம் ஆண்டில் பெந்தோட்டையில் பெரிய பாலங்கள் கட்டப்பட்டன. காலிக்கு அணித்தாயுள்ள மகாமோதரையில் ஒரு பாலம்' 1902-ம் ஆண்டில் கட்டப்பட்டது. 1906-ம் ஆண்டில் மாத்தறைப் பகுதியிலும் ஒரு பாலம் கட்டப்பட்டது. w ஊவா மாகாணத்திலும் பல தெருக்கள் அமைக்கப்பட்டன. இதனல் தோட்டச் செய்கையை அபிவிருத்திசெய்ய முடிந்தது. 1894-ம் ஆண்டில் பண்டாரவளை வதுளைத் தெருவிலுள்ள நவுலை யிலிருந்து ஸ்பிரிங்பள்ளத்தாக்கின் கிழக்குப்பகுதிக்கு ஒரு தெரு
401-H

Page 105
இலங்கைப் Lu—džio
Gamulatan (1814 - 1890) o o os os Ggm LGBsain (1891 i 913) (890} = 185)ڑھrre:Oنتیج{60guھ موییم கெைசயில்பாதை(1891 - 1913)
நோர்வூ, டிக்கோயா 667 سالهك
டிம்புளே
நானு:ஒயச விண்டுலா அக்ரபததானே புலத்தொகுப்பிடடி அம்பவெை 10 அப்புத்தன 11 கும்பல்வலை 2 ஸ்பிரிங்வலி 3 வதுளே
5
அங்குருவத்தோட்டிை வரக்கத்தோட்டிை
/*్యసా@ ఫ్ట్నేతశుద్ర-*
வாசுதிேசிகுேேெ
e a
" هم عينة» هي قrم 3%දී
e V
تمديد
பொல்காவல் ܐܘ A. g. a esp.
శాడఖశిశిఖ#& ,' 'ރ ரிேயூன்కొన * (தவம்
traằ • ՝.
P cr:
2 eas & a Lట్టన్రీ 8 i 2 as de ur- s తో శిసు,  ̄ܢܝܢܼܔܰ
چلاs as a sa · = S · چھین لاgومG کہتے
yణ *மென மகலே - e at Lla deal & y'జలి" జా-అ* -త్రిDL 99%
Avto if y Wyw
;一つべエト
இரதநிரை புரி 1蛟、 சலவெலலச
*** 15 17 (cù a v
浔
. ...e a :. -ع
a و d قدو قله 2
● . مم. _ ه؟ மொறவாக்கை
له (60 ناحیه s سه مو (o
(a) وودج لافة لالعالميلاساسا
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 97
அமைக்கப்பட்டது. இவ்வாண்டிலேயே அதே வீதியிலுள்ள கும் பலா வல்லைக்கும் நமுனுகுலவுக்கும், எல்லாவுக்கூடாக ஒரு தெரு அமைக்கப்பட்டது. 1898-ம் ஆண்டில் இத் தெருவீதி பசறைக்கு நீடித்தமைக்கப்பட்டது. இதே தெரு, 1893-ம் ஆண்டில் மதுலசீமைக்கு நீடித்துப் போடப்பட்டது. பிறகு, 1899-ம் ஆண்டில் இத்தெரு துனே தினை என்ற இடத்துக்கும் நீடித்தமைக்கப்பட்டது. 1906-ம் ஆண்டில் அப்புத்தள்ை யிலிருந்து தம் பெத்தனைக் கிழக்குப் பகுதிக்கு ஒரு தெரு போடப் பட்டது. இப்பகுதியில் தேயிலைத்தோட்டம் உண்டு. ஊவா மாகாணத்தில், ரெயில் போக்குவரத்துக்கள் அமைத்ததும், வேறு இரண்டு தெருக்கள் போடப்பட்டன. நுவரேலியா வெலிமடைத்தெருவிலிருந்து அம்பவேலிக்கு ஒரு தெரு ப் போடப் பட்டது. 1912-ம் ஆண்டில் பண்டாரவளைக்கும் வெலிமடைக்கும் தெரு அமைக்கப்பட்டது. ஊவா மாகாணத்துக் கிழக்குப் பகுதிகளிலும் தெருக்கள் திருத்தி அமைக்கப்பட்டன. வல்ல வாயா மொனரகலைத் தெரு கல்போட்டுப் புதுப்பிக்கப்பட்டு கீழ் மாகாணத்திலுள்ள பொத்துவில் வரை நீடித்தமைக்கப் பட்டது. 1907-ம் ஆண்டில் இத்தெரு பிபிலைக்கு நீடித்துப் போடப்பட்டது. பிறகு பிபிலையிலிருந்து மடக மாவிற்கு ஹலன்டா வரையும் இத்தெரு நீடித்தமைக்கப்பட்டது. கீழ் மாகாணத்தில் மேற்கூறியவை தவிர இன்னெரு தெரு அமைக் கப்பட்டிருக்கின்றது. இத்தெரு மட்டக்களப்பின் தெற்கேயும் வடக்கேயும் கரையோரமாக அமைக்கப்பட்டது. இதனல் நீர்ப்பாய்ச்சுதற்குரிய வசதிகள் அதிகரித்தன. தென்னைச் செய்கை அபிவிருத்தியடைந்தது. வடக்கோரமாக அமைக்கப் பட்ட தெரு கிளிவெட்டிபறை வரையும் 1903-ம் ஆண்டில் கட்டப்பட்டது. தெற்கோரமாக அமைக்கப்பட்ட தெரு 1905-ம் ஆண்டில் நாவலாறு வரையும் நீடிக்கப்பட்டது.
வடமேற்கு மாகாணத்தில் தெருக்கள் அதிகமாக அமைப் பதற்கு ரெயில் போக்குவரத்து ஸ்தாபனங்கள் அனுகூலஞ் செய்தன. கண்டி-புத்தளம் வீதியிலுள்ள வாறியப்பொலை 1905-ம் ஆண்டில் கணேவத்தை ரயில் நிலையத்துடன் தொடுக் கப்பட்டது. பிறகு சிலாபத்திற்கும் நீடித்தமைக்கப்பட்டது. 1906-ம் ஆண்டில் நிக்கவராட்டியாவுக்கும் மாகோவுக்கும் தெருப் போடப்பட்டது. புத் தளத்தின் மேற்குக் கரையோரத்திலிருந்து வண்ணுத்திவில் வரைக்கும் இன்னுெரு தெரு அமைக்கப்பட்டது. போக்குவரத்துச் சாதனங்களை மேலும் திருத்துவதற்கு 1902-ம் ஆண்டில் தண்டகமையில் ஒரு பாலம் கட்டப்பட்டது. வட மத்திய மாகாணத்தில் முக்கியமான இரண்டு தெருக்கள் 1900-ம் ஆண்டில் பூரணமாக்கப்பட்டன. தலவா-கெக் கிராவ

Page 106
198 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
வீதியிலுள்ள இகல காமாவிற்கும் கலேவே வாவிற்கும் இடையே தெரு அமைத்துப் போக்குவரத்துண்டாக்கப்பட்டது. கலே வே வாவும் மாத்தளை-டம்புலாத் தெருவிலுள்ள பலாபத் வே வாவும் முன்னேயே தொடுக்கப்பட்டிருந்தது. ஹபரணை யிலிருந்து பொலநறுவை க்கு 1891-ம் ஆண்டில் தெரு அமைக்கப்பட்டது. இவைகளில் முதலாவது தெருவுக்கு கலே வேவாவிற்கு அணித்தாகவுள்ள பெலிகா மூவாவில் பெரிய தொரு பாலம் கட்டப்பட்டது.
வடமாகாணத்திலும் சில பிரதானமான தெருக்கள் அமைக் கப்பட்டன. வவனியாவிற்கும் மன்னர் மதவாச்சித் தெருவில் உள்ள பறையனுலங்குளத்திற்கும் ஒரு தெருப் போடப்பட்டது. கரையோரப் பகுதிகளில் மாந்தை தொடங்கி இலுப்பைக் கடவை வரை ஒரு தெரு 1901-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. 1905-ம் ஆண்டில் பரந்தனுக்கும் கரைச்சிக்கும் போக்குவரத்து சாதனங்கள் அமைக்கப்பட்டன. இதனல், நீர்ப்பாய்ச்சும் சாதனங்கள் இங்கு அதிகரிக்கப்பட்டன. 1906-ம் ஆண்டில் மதவாச்சி மன்னர் தெரு பேசாலை வரைக்கும் நீடித்தமைக்கப் பட்டது.
இக்காலத்தில் நாட்டுப் பகுதிகளிலுள்ள தெருக்களும் கூடிய அளவு திருத்தப்பட்டன. 1890-ம் ஆண்டில் தெரு அமைக் கின்ற விஷயத்தில் பல திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1635 மைல் தெரு கல் இடப்பட்டுத் திருத்தியமைக்கப்பட்டது. 965 மைல் நீளத் தெரு மக்கிபோட்டுத் திருத்தப்பட்டது. 542 மைல் நீளக்காட்டுப்பாதை திறக்கப்பட்டது. எல்லாமாக 3142
மைல் திருத்திப் புதுப்பிக்கப்பட்டது. 1912-ம் ஆண்டில் 2772 மைல் நீளமுள்ள தெரு கல்லிடப்பட்டுத் திருத்தப்பட் டது. 277 மைல் கல்லிடப்பட்டு நடைபாதை போடப்
பட்டது. 515 மைல் நீளத்தெரு மக்கிபோடப்பட்டுத் திருத் தப்பட்டது. 319 மைல் நடைப்பாதையாக்கப்பட்டது. எல்லா மாக 3883 மைல் நீளம் தெருவாகத் திருத்தியமைக்கப்பட்டது. வடக்கு நெடுந்தெரு 1891-ம் ஆண்டிலேயே கல் போடப்பட்டு பூரணமாக்கப்பட்டது. கண்டி-திருக்கோணமலைத் தெரு 1898-ம் ஆண்டில் நிறைவாக்கப்பட்டது. மோட்டார் போக்கு வரத்து உண்டாவதற்கு அனுராதபுரத் திருக்கோணமலைத் தெரு 1905-ம் ஆண்டிலேயே திருத்திக் கல்லிட்டு அமைக்கப்பட்டது, ரிட்ஜ்வேயினுடைய ஆளுகையில் மத்திய, வடமத்திய, ஊவா. சப்ரகாமுவா மாகாணங்கள் பல புதுத் திருத்தங்களைப் பெற் றன. சுமார் 300 புதுப் பாலங்கள் அமைக்கப்பட்டன. மரத்தினுல் கட்டப்பட்ட 400 பாலங்கள் புதுப்பிக்கப்பட்டு நிலைபெற்ற பாலங்களாக அமைக்கப்பட்டன. பிளேக்கினு

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 99
டைய ஆளுகையில் மேற்கு, வடமத்திய, கீழ் மாகாணங்கள் பல புதுத் திருத்தங்களைப் பெற்றன. இவைகளில் முறையே 43, 42, 24 மைல் நீளமுள்ள தெருக்கள் கல்லிடப்பட்டுத் திருத்தியமைக்கப்பட்டன. இவர் காலத்தில் 427 இரும்புப் பாலங்கள் கட்டப்பட்டன. மக்கலத்தின் ஆளுகையில் 36 புதுத் தெருக்கள் திறக்கப்பட்டன. 22 தெருக்கள் பூர்த்தி செய்யப்பட்டன. சுமார் 500 பாலங்கள் கட்டப்பட்டன.
முந்திய காலங்களில், தெருக்களில் கால்நடையர்கப் பிரயா ணஞ் செய்தனர். மாட்டுவண்டிகளும், குதிரை வண்டிகளும் ஊசாடின. 1896-ம் ஆண்டிலேயே சைக்கிள் நடமாட்டம் தொடங்கியது. மோட்டார் வண்டிப் போக்குவரத்து மக்கலம் காலத்திலேயே நடைமுறைக்கு வந்தது. இங்கிலாந்தில் 1816 ம் ஆண்டில் அவ்வளவு திருத்தங்கள் செய்யப்படாத சைக்கிள் வண்டியை உபயோகித்தனர். 1865-ம் ஆண்டளவில் சிறிது திருத்தி ரோல் ஓடினறி பென்னி பாதிங் “ என்ற பெய ருள்ள வண்டிகள் உபயோகிக்கப்பட்டன. இவ்வண்டிகளிற் சில இலங்கைக்கும் கொண்டுவரப்பட்டன. தற்காலத்தில் உப யோகிக்கப்படும் சைக்கிள் 1876-ம் ஆண்டிலேயே செய்யப் பட்டது. ஆணுல் இது பாவிப்பிற்கு 1890-ம் ஆண்டிலேயே கொண்டுவரப்பட்டது. காற்று நிறைக்கப்பட்ட சில்லுசைக்கிள் வண்டிக்கு போடக் இவ்வாண்டிலேயே கண்டு பிடித்தனர். சில வருடங்கள் கழிய இம்மாதிரியான சைக்கிள் வண்டிகள் இலங்கையிலும் உலாவத் தொடங்கின.
நீராவி, எண்ணெய் முதலிய வகைகளினல் உண்டாக்கப் படுஞ் சக்தியினல் இயங்கும் இரதப் போக்குவரத்துக்கேற்ற தெருக்கள் 1769-ம் ஆண்டளவிலேயே அமைக்கப்பட்டன. ரயில் வேப் போக்குவரத்து உண்டாய காலத்திலேயே நீராவி வண்டிகளும் உண்டாக்கப்பட்டன. ஆனல் இவ்வண்டிகள் பல இடையூறு காரணமாகப் பிரசித்தி பெறவில்லை. I 7-lb. நூற்றண்டில் மண்ணெண்ணெயை உபயோகிக்கத் தொடங்கினர். முதல் இது இயந்திரங்களுக்குப் பாவிக்கப்பட்டது. பிறகு, குரூட் எண்ணெயும் பெற்றேல் எண்ணெயும் தயார் செய் யப்பட்டது. டைம்மர் இந்த ஆவிச்சக்தியை உண்டுபண்ணுகிற எண்ணெயை பிரயோசனப்படுத்தி விரை வை அதிகரிக்கும் இயந்திரமொன்றைச் செய்தார். 1886-ம் ஆண்டில் இதனை ஒர் மோட்டார் சைக்கிள் வண்டிக்கு உபயோகித்தனர். பின், 1887-ம் ஆண்டு மோட்டார் வண்டிக்குப் பிரயோசனப்படுத் தினர். 19-ம் நூற்றண்டுக் கடைசிப்பகுதி யளவிலேயே மோட்டார் வண்டிகள் இங்கிலாந்தில் உபயோகிக்கப்பட்டன.
20-ம் நூற்றண்டு முற்பகுதியிலேயே இவ்வண்டிகள் இலங்கையில்

Page 107
200 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
நடமாடத்தொடங்கின. சில தோட்டப்பகுதிகளில் இம்மோட் ட்ார் மாட் டு வண் டி களு க்கு ப் பதி லா க மோட்டார் லொறிகளை உபயோகிக்கத் தொடங்கினர். பின் அனுராதபுரத்தி லிருந்து திருக்கோணமலைக்குக் கடிதங்கள் கொண்டுபோவதற் குக் தபால் இலாகா மோட்டார் வண்டிகளை உபயோகிக்கத் தொடங்கிற்று. பிறகு அர சா ங் க உத்தியோகத்தர்களும் இவ்வண்டிகளிற் பிரயாணஞ்செய்யத் தொடங்கினர்.
மோட்டார் வண்டிகள் நடமாடத் தொடங்கவே, தெருக் களில் மேலும் திருத்தங்கள் செய்யவேண்டியதாயிற்று. கல் போட்டமைக்கப்பட்ட தெருக்களை விஸ்தரித்து அ  ைமக்க வேண்டியதாயிற்று. மலைநாடுகளில் சுரங்கங்களைச் சாவதானமா யமைக்க வேண்டியதாயிற்று. தெருக்களை விஸ்தரித்து திருத் தங்கள் செய்யவே சுங்கம் வசூலிக்கும் ஸ்தாபனங்கள் அமைக்க வேண்டியதாயிற்று. 1910-ம் ஆண்டில் இச் சுங்கம் வசூலிக்கும் முறை நிறுத்தப்பட்டது. வண்டிப் போக்குவரத்துக்களை இடத்துக்கு இடம் தடுத்து வந்தமையினலேயே இம்முறையை நிறுத்திக்கொண்டனர். தெருக்கள் எவ்வளவிற்கு அமைக்கப் படுகின்றனவோ அவ்வளவிற்கு ர யி ல் போக்குவரத்துச் சாதனங்களும் அமைக்கப்பட்டன. 1890-ம் ஆண்டில் கரை யோரப் பகுதிகட்கும் , பெந்தோட்டைக்கும் போக்குவரத்து உண்டாக்கப்பட்டது. 1891-ம் ஆண்டில் அழுத்துகாமத்திற்கும் தெருக்கள் அமைக்கப்பட்டன. 1894-ம் ஆண்டில் காலிக்கும், 1895-ம் ஆண்டில் மாத்தறைக்கும், போக்குவரத்துச் சாதனங் கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு மேற்கு, தெற்கு மாகாணங் களிலுள்ள பிரதான பட்டினங்களுக்கும் கரையோரப் பகுதி கட்கும் பிரயாணத் தொடர்புகளை ஏற்படுத்தினர். 1893-ம் ஆண்டில் பெரிய தெரு அப்புத்தளைக்கும், 1899-ம் ஆண்டில் பண்டார வளைக்கும் நீடித்தமைக்கப்பட்டது. இவ்வாறு ஊவா மாகாணத்திற்கும், கொழும்புக்கும் பிரயாணச் சாதனங்கள் ஏற்படுத்தப்பட்டன. இப் பிரயாணச் சாதனங்களால் ஊவா மாகாணத்து விளைபொருள்களைக் கொழும்பிற்கு இலேசாகவும் செலவு அதிக மில்லாமலும் கொண்டுவர முடிந்தது.
ஐந்து புது போக்குவரத்துப் பாதைகள் இச்சமயத்தில் அமைக்கப்பட்டன. பொல்கா வலையிலிருந்து, வட மாகாணத் துக்கு ஒன்று அன்மக்கப்பட்டது. 1894-ம் ஆண்டில் இப்பாதை குருணக்கலுக்கு நீடிக்கப்பட்டது. 1900-ம் ஆண்டில் அனுராத புரத்திற்கு நீடிக்கப்பட்டது. 1905-ம் ஆண்டில் யாழ்ப்பாணத் திற்கும் இப்பாதை நீடிக்கப்பட்டது. இப் புதுப் பாதை வட மேற்கு, வடமத்திய, வடமாகாணங்கட்கும், கொழும் பிற்கும் போக்குவரத்துத் தொடர்புகளை அதிகரித்தது. அதுவுமல்லாது

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 20 I
காடுபற்றியிருந்த பல. நிலங்களைத் திருத்தித் தென்னை நெல் பயிரிடவும் இயன்றது. நெருக்கமான குடிசனமுள்ள வட மா காணப் பகுதி களுக்கும் இலங்கை யின் மறு பாகங் கட்கும் இப்பாதைகளினல் தொடர்பு ஏற்பட்டது. யாழ்ப் பாணத்திற்கும் இலங்கையின் மறுபாகங்கட்கும் இப்பாதைகள் ஏற்படுமுன் தொடர்பில்லாதே யிருந்தது. இப்பாதைகள் திறக்கப்பட்டதும் இங்கிருந்த நெருக்கமான குடிசனங்கள் கொஞ்சங் கொஞ்சமாக இலங்கையின் மறுபாகங்கட்குப் போய்க் குடியிருக்க ஆரம்பித்தனர். இவைகள் தவிர, வட மாகாணத்திருந்த தமிழர்கள் இப்பாதைகள் திறக்கப்பட்ட பின்பே இலங்கையின் மற்றைய பாகங்களிலுள்ள சனங்களுடன் சேர்ந்து பழகிக்கொள்ள முடிந்தது.
1913-ல் மதவாச்சியிலிருந்து தலைமன்னருக்கு ஒரு கிளைப் பாதை அமைக்கப்பட்டது. இக் கிளைப்பாதையினல் யுத்த நெருக்கடி காலத்தில் சனங்கள் இலங்கையிலிருந்து இந்தியா விற்கு இலேசாகப் பிரயாணஞ்செய்தனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்தியது. இதனுல் தென்னிந்தியாப் பிரயாணத்திற்குக் கொழும்பை ஒரு துறைமுகமாக்கினர். அதுவுமல்லாது இந்தியாவிலுள்ள தொழி லாளர் இலங்கைக்கு இலேசாக வந்தனர். இப் பாதை யமைக்கு முன் தூத்துக்குடியிலிருந்தே இலங்கைக்கு வந்தனர்.
ரப்பர், தேயிலை, தென்னை முதலிய பயிர்களை உற்பத்தி செய்வதில் உதவி உண்டாக்கும் பொருட்டுக் கழனி வெளிப் பாதை திறக்கப்பட்டது. இப்பாதை 1900-ம் ஆண்டிலேயே
திறக்கப்பட்டது. பின், 1902-ம் ஆண்டில் அவிசாவளை வரையும் நீடிக்கப்பட்டது. 1903-ம் ஆண்டில் எட்டியா ந் தோட்டைக்கும் நீடித்தமைக்கப்பட்டது. பிறகு 1912-ல்
அவிசாவளையிலிருந்து இரத்தினபுரிக்கும் இப்பாதை நீடிக்கப் பட்டது. பாதை அமைக்குஞ் செலவைச் சுருக்கும் பொருட்டு 2 அடி 6 அங்குல அளவு அகலத்துக்கே பாதை அமைக்கப்பட்டது. நாட்டின் இட அமைப்புக்கேற்ப இப்பண் தயின் முற்பகுதியில் அதாவது எட்டியாந்தோட்டை வரைக்கும் 57 பாலங்கள் கட்ட வேண்டியிருந்தன. உடப்புசலாவையிலுள்ள தேயிலைச்செய் கையை அபிவிருத்திசெய்வதற்கு நானுஒயாவிலிருந்து ராகலைக்கு முந்திய பாதைபோன்ற ஒடுக்க மா ன பாதை அமைக்கப் பட்டது. 1903-ல் இப்பாதை ஆரம்பிக்கப்பட்டு 3 வருடத்தில் பூர்த்திசெய்யப்பட்டது.
முகமையிலிருந்து நீர்கொழும்பிற்கு ஒரு ரெயில் பாதை 1907-ல் அமைக்க ஆரம்பிக்கப்பட்டது. இப்பாதை புத்தளம் வரை நீடிக்கப்பட்டது. ஏனென்றல், தென்னைச் செய்கை

Page 108
2O2 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
அபிவிருத்திக்கு இது அனுகூலமாய்க் காணப்பட்டது. இது 1907-ல் ஆரம்பிக்கப்பட்டு 1908-ல் ஜாயலை வரை நீடிக்கப் பட்டது. அடுத்த ஆண்டில் இப்பாதை பூரணமாக்கப்பட்டது.
இக்காலப் பகுதியில் ரிட்ஜ்வேயின் ஆளுகையிலேயே புகையி ரதப் போக்குவரத்துச் சாதனங்கள் பிரதானமாக அமைக்கப் பட்டன. இதற்கு 7,745, 104 ரூபாய் முதல் போடப்பட்டது. உடப்புசல்லாவைப் பாதைகளும், கழனிவெளிப் பாதையின் ஒரு பகுதியும், அமைப்பதற்கு 1902-ல் பணம் கடன்வாங்கப் பட்டது. 1896-ல் 297 மைல் புகையிரதப்பாதைகளமைக்கப் பட்டன. 1903 அளவில் 386 மைல் இப் புகையிரதப் பாதை நீட்டப்பட்டது. 1905-ல் 562 மைல் அளவிற்கு அமைக்கப் L. Lill -ğil. வடபாகத்தில் அமைத்த பாதை மாத்திரம் 160 மைல் நீளத்தை அடுத்தது. இப்பாதை அமைத்ததினற் பல கிளை வெளிப் பாதைகள் அமைக்க வேண்டியதாயிற்று. இவை களுக்கு 1904-ம் ஆண்டில் 361, 781.00 ரூபாய் பணஞ் செல வாயிற்று.
ஆரம்பத்திலிருந்தே புகையிரத ஸ்தாபனங்கள் நல்ல வரும் படியைக் கொடுத்தன. 1891லேயே இதன் புள்ளி விபரங்கள் கூடுதலாகக் காணப்பட்டன. சாமான் போக்குவரத்துக் கணக்குகளும், பிரயாணிகள் போக்குவரத்துக் கணக்குகளும் வர வர உயர்ந்துகொண்டே வந்தன. 1894-ம் ஆண்டின் புள்ளி விபரம் ரூபாய் 5,572,054. 1903-ம் ஆண்டின் புள்ளிவிபரம் ரூபாய் 8,000,000,00. 1895-ம் ஆண்டின் புள்ளி விபரத்தை யும் இதனையும் ஒப்பிடும்பொழுது, 28 வீதம் 1895-ம் ஆண்டி லும் கூடியிருக்கிறது. 1862 தொடக்கம் 1902 வரையும் பெற்ற இலாபம் ரூபாய் 33,000,000.
தந்திப் போக்குவரத்துச் சாதனங்களிலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டு 1890 முதல் 1913 வரை பெருக்கப்பட்டது. ஹவ்லொக் காலத்தில் மஸ்கேலியா போகவந்தலாவை, அக்கிரப் பத்தானை என்னும் இடங்களுக்குத் தந்திப் போக்குவரத்து உண்டாக்கப்பட்டது. ரிட்ஜ்வே காலத்திலே மேலும் 500 மைல் அளவிற்கு தந்திப் போக்குவரத்துப் போடப்பட்டது. புத்தளத் திலிருந்து மேலும் மன்னருக்கு இப்போக்குவரத்துக்கள் நீடிக் கப்பட்டன. இங்கிருந்து அனுராதபுரத்திற்கும், வவனியா மூலம் யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித் துறை காங்கேசன் துறைக்கும் முறையே தந்திப்பாதைகள் திறக்கப்பட்டன. இரத்தினபுரியிலிருந்து அப்புத்தளைக்கு தந்திப் பாதை திறக்கப்பட்டது. பிறகு ரம் பொடை மூலம் நுவரெலி யாவிற்கும் கொழும்பிற்கும் தந்திப்போக்குவரத்து ஏற்படுத்தப்

t d w அரசாங்க நிர்வாகம் திருத்தியமைக்கப்படுதல் 2O3
பட்டது. இது தவிர, சொழும் பிலிருந்து சளுத் துறைக்கு இன் னெரு டாதை அமைக்கப்பட்டது. இம்முயற்சிசளின் பயனுக 1895-ல் 519 த ந் தி க் சந் தோர் ச ஸ் ஏற் ட டுச் த ப்டட் டன.
இத் தந்திக் கந்தோர் சளமைக்கப்பட்டன. மக்க லம் சாலத் தில் ரயில்வே நிலையங்களிலுள்ள 50 த ந் தி க் சந்தோர்கள் டொதுசன உபயோகத்திற்கு ஸ்தாபிக்கப்பட்டன. ரிட்ஜ்வே காலத்தில் 168 வீதம் சு டி வந்த ன. இதற்கு க் காரணம்
1897-ல் 40 சதமாயிருந்த உள்நாட்டுத் தந்தி விகிதத்தை 25 சதமாகக் குறைத்த மையே. 1902-ல் இங்கிலாந்து'ச் குத் தந்திக் கட்டணம் 4 சிலிங்காய் இருந்தது. அது 2 சிலிங் 6 பென்ஸ் ஆகக் குறைக்கப்பட்டது.
டெலிபோன் போக்குவரத்துக்களும் பலவிதமாகக் கூட்டப் பட்டன. 1892-ல் தபால் இலாசா இலங்கை டெலிபோன் போக்கு வரத்துக்சளுச் குப் பொறுப்டெடுத்தது. அதுவரை இந்திய அரசாங்கத்தின் மேற்பார்வையிலேயே தபால் இலாசா இப்பொறுப்பை நடத்திவந்தது. 1896-ல் இத்தபால் இலாசா ஓரியண்டல் டெலிடோன் சொம் டெனியாரின் டெலி போன் இயந்திரமொன்றையும் பெற்றது. டெலிபோன முதல் கிரகாம் டெல் என்பவரே 1876-ல் உண் டாக்கிஞர். முதல் முதல் இங்கிலாந்தில் 1876 லே யே டெலிபோன் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டது. டெலிபோன் இயந்திரத்தை எல்லாரும் வைத்திருக்காததினல் டெ லி போ ன் போச்குவரத்துக்கள் விரைவில் எங்கும் பரவ வில்லை. பிளேக் காலத்தில் கொழும்பி லுள்ள எல்லாப் பொதுசன ஸ்தாபனங்களிலும் டெலிபோன் அமைக்கப்பட்டது. மக்கலம் காலத்தில் கொழும்புப் பகுதியில் அமைக்கப்பட்ட டெலிபோன் கம்பிகள் நிலத்திற்குக்கீழேயே அமைக்கப்பட்டிருந்தன. பிறகு கொழும்பிலிருந்து வெளிநாடு களுக்கு டெலிபோன் அமைக்கப்பட்டது. முதல் சண்டிச்கும் நுவரேலியாவிற்கும் அமைக்கப்பட்டது. பின், காலகா, களுத் துறை, காலி என்னும் இடங்களுக்கு தொடுக்கப்பட்டது. பின் சண்டி, நுவரேலியா, அனுராதபுரம், காலி, களுத்துறை என்னு மிடங்கட்கு டெலிபோன் மத்தியஸ்தானங்களமைக்கப்பட்டன.
மக்கலம் காலத்திலேயே கொழும்பில் 450 மைல் விஸ் தீரணத்திற்குச் செல்லும் மின்னலைத் தந்திஸ்தானமொன்று அமைக்கப்பட்டது. முதல் முதல் 1897-ல் மாக்கோனியே மின்னலைத் தந்திகொடுத்தார். பிறகு 1901-லே சிக்னல் குறி களினல் தந்திகொடுக்கும் முறை ஏற்பட்டது. அட்லாண்டிக்குக்கு ஊடாக மாக்கோனியே அதே ஆண்டில் இந்தக் குறி மூலம் தந்திகொடுத்தார். இப்புதுச் சாதனம் சில காலஞ்செல்ல
இலங்சையிலும் கொண்டுவரப்பட்டது.
.TTT

Page 109
2 04 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
இக்காலத்தில் கொழும்புத் துறைமுகத்தில் பல திருத்தங் கள் செய்யப்பட்டன். 1878 அளவில் தென்மேற்கு நீரணை கட்டப்பட்டது. இவ்வாறு பாதுகாக்கப்பட்ட இடம் போதாது வருமென்பதை அதிகாரிகள் உணர்ந்தனர். 1883 லிருந்தே கப்பல் போக்குவரத்து அதிகரித்துவந்ததென ஏற்கனவே குறிப் பிட்டோம். 1893-ல் கப்பல்கள் வந்து நங்கூரமிடுவதற்குத் துறையில் மேலும் வசதிகளமைக்கவேண்டியது அவசியமான தால் 1000 அடி நீளமுள்ள வடகிழக்கு நீரணையையும் 2670 அடி நீளமுள்ள வடமேற்கு நீரணையையும் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த வேலை 1896-ல் ஆரம்பமாயிற்று. 10 வருடத்தில் இரண்டு நீரணைகளும் பூர்த்தியாயின. பாது காப்பு பிரதேசம் 415 ஏக்கரிலிருந்து 660 ஏக்கருக்கு விஸ்தரிக் கப்பட்டது. கப்பல் பழுது பார்ப்பதற்கும் துடைப்பதற்கும் 700 அடி அகலமுள்ள ஒரு கப்பற் ருெட்டி கட்டுவதற்கு வடக்குப் பாரிசத்தில் கட்டப்பட்ட நீரணை மிக உதவியாயிருந்தது. 1899-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலை 1906-ல் பூர்த்திசெய் யப்பட்டது. இதைக் கட்டிமுடிக்க 408,022 பவுண் செலவா யிற்று. இதில் 159,000 பவுணை கடற்படை இலாகா உதவிற்று. இவ்வாறு செய்யப்பட்ட சீர்திருத்தங்களின் பயணுக ஆசியாவி லேயே கொழும்பு மிகச் சிறந்த பெரிய துறைமுகமாயிற்று.
இக்காலத்தில் கொழும்புத் துறைமுகத்துக்கு வருங் கப்பல் கள் மேலும் அதிகரித்தன. 1896-ல் 2144 கப்பல்கள் வந்த இடத்தில் 1911-ல் 2254 கப்பல்கள் வந்தன. 1891-ல் 5,696,1948 தொன் நிறையுள்ள கப்பல்கள் வந்து போயின. 1911-ல் அது 7,036, 625 தொன்னக மேலும் உயர்ந்தது. இவ்வாறு வியாபாரமும் வர்த்தகத் தேவைகளும் அதிகரிக்கவே காப்டன் தோட்டத்திலிருந்து கோல்பேஸ் வரையுள்ள பேரா வாவிப்பகுதி நிரவப்படவேண்டிய்தாயிற்று.
5. கல்வி
இக்காலத்திலும் க ல் வி பரவிற்று. 1912-ல் அரசாங்கப் பொறுப்பில் 5 ஆங்கிலப் பாடசாலைகளும், 19 துவிபாஷா பாட சாலைகளும், 778 சுயபாஷா பாடசாலைகளுமிருந்தன. உதவிநன் கொடைபெறும் பாடசாலை வகையில் 187 ஆங்கிலப் பாடசாலை களும், 31 துவிபாஷா பாடசாலைகளும், 1782 சுயபாஷா பாடசாலைகளுமிருந்தன. மொத்தம் 802 அரசாங்கப் பாடசாலை களில் 84,844 சிறுவரும் 23,997 சிறுமிகளும் கல்வி பயின்றனர். 2000 உதவிநன்கொடைபெறும் பாடசாலைகளிருந்தன. இங்கே 152,993 சிறுவரும், 77,365 சிறுமிகளும் கல்வி பயின்றனர். எல்லா மாக 339,199 மாணவ மாணவிகள் கல்விபயின் முர்கள். பதிவுசெய்யப்படாத 1533 பாடசாலைகளில் 35,402 பேர்

۔
அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 205
கல்விபயின்றனர். அதே வருடத்தில் சுயபாஷா பாடசாலைகளில் 7853 பேரும், ஆங்கில பாடசாலையில் 26,099 பேரும் கல்வி பயின் ருர்கள்.* 1891-ல் 199 வீதம்பேர் கல்வி கற்றர்கள். 1901-ல் 217 வீதம் பேரும், 1911-ல் 264 வீதம்பேரும் கல்வி பயின்றனர். ஆரம்பத்தில் கல்வி விரைவாகப் பரவவில்லை. 1892-ம் ஆண்டு துவக்கம் 1922-ம் ஆண்டுவரை 137 வீதமே அரசாங்கப் புாடசாலைகள் அதிகரித்தன. 39 வீதம் உதவிநன் கொடைபெறும் பாடசாலைகள் உயர்ந்தன. 1895-ம் ஆண்டு வரை வருடாவருடம் உதவிநன்கொடை குறைக்கப்பட்டது. அதன்பின்னர் உயர்த்தப்பட்டது. 1904-ம் ஆண்டில் சுய பாஷைக் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காகத் திட்டத்தை வகுக்குமாறு ஒரு சபை நிறுவப்பட்டது. பணவசதி, உள்ளூர் கல்வி வசதி முதலியவற்றை ஆராய்ந்து இந்தச் சபை சில யோசனைகளைக் கூறிற்று. 1907-ல் கிராமப்பட்டினப் பாடசாலை சட்டமென ஒரு சட்டம் இந்த ஆலோசனைகளைப் பெரும்பாலும் அனுசரித்துச் செய்யப்பட்டது. கல்வி போதிக்கும் பாஷை எதுவாயிருக்கவேண்டும், என்பதைப்பற்றியும், பயிற்சிபெற்ற ஆசியர்களில்லாத குறையைப் பற்றியும், போ தி க் க ப் படும் கல்விக்கும், மாணவர் கற்றுத் தேறிய பின் வாழ்க்கையில் கையேற்கும் தொழில்களுக்குமுரிய தொடர்பு பற்றியும் இந்தச் சபை சில சிபார்சுகளைச் செய்தது. ஆனல் அதிக பலனைக் கொடுக்கவில்லை.
ஆண்கலெல்லாரும் சுயபாஷைக் கல்வியைப் பெற வேண்டும்; அரசாங்க பாடசலைாயாளுெைலன்ன உதவிநன்கொடை பெறும் பாடசாலையான லென்ன அவை உள்ள வட்டாரங்களிலிருக்கும் மாணவர்கள் கட்டாயம் பாடசாலைக்குப் போகவேண்டும். இந்த கல்வி விசாரணைச் சபையின் முக்கியமான சிபார்சுகள் இவைதாம். வேறு மதப்போதனை செய்யப்படும் பாடசாலை களுக்குப் போகுமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்த அரசாங் கத்துக்கு உரிமையில்லாதபடியால் அப்படிப்பட்ட மாணவர் களுக்கு மதபோதனை செய்யவேண்டியதில்லையென விசாரணைச் சபை சிபார்சுசெய்தது. போதிய அளவு குடிசனங்களுள்ள பகுதிகளில் சிறு வருக்கு க் கட்டாயமாகப் பாடசாலைகளைத் திறக்கவேண்டுமெனவும் விசாரணைச்சபை சிபார்சுசெய்தது. பெண்கள் கல்வி விஷயத்திலும் சபை கவனஞ் செலுத்திற்று. அவர்களுக்கும் படிப்படியாகக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டு மெனச் சிபார்சு செய்தது. முதலில் மேல்மாகாணத்திலும், தென் மாகாணத்திலும், வடமத்திய மாகாணத்திலும் இதை ஆரம்பிக்கவேண்டுமெனச் சிபார்சு செய்தது. யாழ்பாணம், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைத் தவிர்ந்த மற்றப் பகுதிகளில் * 1869-ல் 27 பெண் பாடசாலைகளே யிருந்தன. 1870-ல் அரசாங்க பாட
சாலைகளும் உதவி நன்கொடைபெறும் பாடசாலைகளுமாக 385 பாடசாலை களில் 16927 பேர் கல்விபயின்றனர்.

Page 110
206 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
1907-ம் ஆண்டுக் கல்வி சட்டம் அமுல் நடத்தப்பட்டது. சுயபாஷா பாடசாலைகளைத் தேவையான இடங்களில் ஏற்படுத்த வும் கட்டாயமாக மாணவர்களைப் பாடசாலைக்கு வரச் செய்ய வும் திட்டங்கள் வகுப்பதற்காகப் பாடசாலைக் கமிட்டிகள் அரசாங்க ஏஜெண்டுகளின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டன. கிரா மாந்தரங்களிலும் சுயபாஷைக் கல்வி படிப்படியாகப் பரப் பப்பட்டது. பாடசாலைக்கு மாணவர்கள் வருதல் அதிகரித்தது. 1908-ம் ஆண்டு துவக்கம் 1912 வரை அரசாங்கம் 189 பாட சாலைகளை ஆரம்பித்தது. மாணவர்களும் நூற்றுக்கு 50 வீதம் அதிகரித்தார்கள். •
ஆங்கிலப் பாடசாலைகளின் தொகையும் அதிகரித்தது. இந்து சமயமும் பெளத்த சமயமும் புனருத்தாரணஞ் செய்யப்பட்டன. பெளத்தர்கள் சிங்களத்தில் சமய சம்பந்தமான ஆராய்ச்சிகளைச் செய்து பத்திரிகைகளைப் பிரசுரித்தார்கள். கிறிஸ்தவர்களுடன் வாதம் நடத்தினர்கள். தங்களுடைய சமயானுஷ்டானங் களின் நன்மை தீமைகளைப்பற்றியும் சிறு தெய்வவழிபாடு முதலிய கொள்கைகளைப்பற்றியுந் தங்களுக்குள் வாக்குவாதம் நடத்தி ஞர்கள். இந்துக்களும் சமய வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்துவந்தார்கள். இந்தக்காலம் முடிவதற்குள் “ இந்து சாதனம் ஆங்கிலப் பதிப்பு வாரம் இருமுறை பிரசுரிக்கப் பட்டது. தமிழ் பத்திரிகை வாரப் பத்திரிகையாக்கப்பட்டது. இவ்வகையான முயற்சிகள் நடைபெற்றதால் சுயபாஷைக் கல்வி அபிவிருத்தியடைந்திருக்க வேண்டும். ஆனல் கிறிஸ்தவர் களைப் போலவே பெளத்தரும் இந்துக்களும் ஆங்கிலப் கல்வியைப் பெரிதும் விரும்பினர்கள்.
நாட்டிலே ஏற்பட்டுவரும் மாற் றங்க ளு க் கேற்றவாறு சுயபாஷா பாடசாலைகளின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க அரசாங்கமோ, மிஷனரிமாரோ அதிக சிரத்தை யெடுக்கவில்லை. சுயபாஷைக் கல்வியைப் பரப்ப அவர்கள் முயற்சி செய்தது உண்மையே. மேலும் தனித் தமிழறிவோ தனிச் சிங்கள அறிவோ ஒருவருக்கு அதிக பலனை அளிக்கவில்லை. பழைய சிங்கள இலக்கியம் மத்திய கால ஐரோப்பிய இலக்கியம் போலவே சில விஷயங்களைக் கூறியது. மேலும் பேச்சு வழக்கி லில்லாத ஒரு பாஷையில் சிங்கள இலக்கியம் அமைந்திருந்தது. இக்காலத்துக்கேற்ற விஷயங்களைப் பற்றியோ, பத்திரிகைகளில் சொல்லப்படும் விஷயங்களைப்பற்றியோ சிங்கள இலக்கியம் கூறு வதில்லை. ஐரோப்பிய பாஷைகளிலிருந்து மொழிப்பெயர்க்கப் பட்டவை இந்த அம்சங்களைக் கொண்டிருந்தன. தமிழிலக்கியம் சிங்களத்திலும் பார்க்க முற்போக்குடையதாயிருந்த போதிலும் அதைப்போலவே தற்காலத் தேவைகட்கான விஷயங்களைக்

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 2O7
கொண்டிருக்கவில்லை. மேலும் உயர்தரக்கல்வி கற்க முன்வந்த சிறு தொகையினர் கூட ஆங்கிலத்தையும் மேலைத்தேசக் கலை களையும் மேற்கொண்டபடியால், சொந்தப்பாஷைகளைக் கவனி யாது விட்டார்கள். அதனலும் அப்பாஷைகள் வளர்ச்சி குன்றின. ஆனல் போக்குவரத்துச் சாதனங்கள் பெருகியபடி யினல் மேலைத் தேசத்துடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது சுவேஸ் கால்வாய் திறக்கப்பட்டதனலும், கடலில் தந்தி களமைக்கப்பட்டதனலும், இன்னுேரன்ன போக்குவரத்துச் சாதனங்கள் ஏற்படுத்தப்பட்டதனுலும் இதுகாறும் ஆங்கில இலக்கியத்தின்மூலம் ஐரோப்பாவைப் பற்றி அறிந்துவந்தவர்கள் இப்பொழுது நேரடியா க அறியக்கூடியதாய் ஏற்பட்டது. அரசாங்க அலுவல்கள் ஆங்கில பாஷை மூலமே நடைபெற்றன. கோடு கச்சேரிகளில் ஆங்கிலமே பேசப்பட்டது. வியாபார வர்த்தக விஷயங்களுக்கும் ஆங்கில பாஷையே உபயோகிக்கப் பட்டது. ஆங்கில அறிவு இல்லாதவர்கள் நாட்டின் பலவகை யான அபிவிருத்தியின் போக்கையும் அறிந்துகொள்ள முடியா திருந்தார்கள். மேலும் ஆங்கிலம் படித்தவர்களுக்கு உத்தி யோகம் கிடைத்தது. கோடுகளில் வேலை அதிகரித்தது. ஆஸ்பத் திரிகளும் மருந்துச் சாலைகளும் பெருகின. புதிய தோட்டங்கள் திறக்கப்பட்டன. வர்த்தகம் விருத்தியடைந்தது. முன்னெரு போதுமில்லாத முறையில் அரசாங்க இலாக்காக்கள் விரிந்தன. எனவே ஆங்கில அறிவு பெற்றவர்களுக்குத் தேவையுண்டா யிற்று. இவ்வாறு ஏற்பட்ட புதிய சந்தர்ப்பங்களைப் பயன் படுத்துவதற்கு மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலம் கற்றர்கள்.
ஆங்கிலப் பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வி ஆங்கிலச் சர்வகலாசாலைப் பாடத்திட்டங்களுடன் இணைக்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலைப் பரீட்சைகள் இலங்கையில் ஏற்படுத்திய பின்னரும், வட மாகாணத்திலுள்ள சில பாடசாலை கள் கல்கத்தா பரீட்சைகளுக்கும் சென்னை பரீட்சைகட்கும் மாணவரை ஆயத்தப்படுத்தி வந்தன. கல்விசம்பந்தமாக ஏற்படுத்தப்பட்ட கர்ஸன் விசாரணைச்சபையின் சிபார் சுகளின் பயனப் 1907-ல் வட்டாரங்களுக்குத் தகுந்தபடி கல்லூரிகள் ஒவ்வொரு சர்வகலாசாலையுடன் இணைக்கப்பட்டிருந்தன. இலங் கைக் கல்லூரிகள் சென்னைச் சர்வகலாசாலையுடன் இணைக்கப் பட்டன. இதற்கிடையில் யாழ்ப்பாணத்தை இணைத்து ரயில்
பாதை அ  ைமக்க ப் பட்டது. எனவே தீவின் ஏனைய கல்லூரிகளைப்போலவே யாழ்ப்பாணக் கல்லூரிகளும் தமது திட்டங்களை அமைத்தன. 1906-ல் யாழ்ப்பாணத்திலுள்ள
சில பாடசாலைகள் கேம்பிரிட்ஜ் பரீட்சைக்கு மாணவரை

Page 111
208 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
ஆயத்தஞ் செய்துவந்தன. பீ. ஏ. பரீட்சைக்குக்கூட மாண வரைத் தேற்றிவந்த யாழ்ப்பாணக்கல்லூரி 1911-ல் சென்னைச் சர்வகலாசாலையுடனிருந்த தொடர்பை நீக்கிக்கொண்டது.
அரசாங்கம் தகுதியான மாணவர்களுக்கு உபகாரப்பணம் கொடுத்து வந்தது. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஒக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் பரிசோதகர்கள் நடத்தும் பரீட்சை யின் பெறுபேற்றைப் பார்த்து அதன்படியே உபகாரப்பணம் கொடுக்கவேண்டுமென 1895-ல் தீர்மானிக்கப்பட்டது. 1906ல் இது கைவிடப்பட்டது. லண்டன் சர்வகலாசாலை நடத்திய இண்டர் மீடியேட் பரீட்சையின் முடிவைப்பார்த்து இரண்டு பேருக்கு உபகாரப்பணம் வருடாவருடம் கொடுத்தார்கள். கொழும்பு அக்கடமி (தற்காலம் இது ரோயல் கல்லூரி என வழங்கப்படும்) 1880-ல் விஞ்ஞான சாத்திரம் கற்பிக்கத் துவங் கிற்று. தொழிற் பயிற்சிக் கல்லூரியில் ரசாயனம், பெளதிக சாஸ்திரமாகியவை கற் பிப்பத ற்கு பரீட்சைக்கூடங்களமைக் கப்பட்டன. விஞ்ஞானக் கல்வியை விருத்தி செய்வதற்கு விஞ்ஞான சாத்திரம் கற்கும் மாணவர்களில் திறமையுடைய ஒருவருக்கு மேலே கூறிய உபகாரப்பணத்தில் ஒரு பகுதி கொடுக் கப்பட்டது.
ஆங்கிலப் பாடசாலைகளில் கல்விகற்பிக்கும் முறையைச் சீர் படுத் துவதற்கு ம் நடவடிக்கைகளெடுத்துக்கொள்ளப்பட் டன. பாடசாலைகளில் நல்லமுறையில் க ல் வி போதிப்பதற்கு இந்தியாவிலிருந்தது போலத் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களோ, பட்டதாரிகளோ இலங்கையில் இருக்கவில்லை. ஆசிரியர்க்குப் பயிற்சி அளிப்பதற்காக 1903-ல் அரசாங்கம் ஆசிரிய போதன பாடசாலையொன்றை ஏற்படுத்திற்று. 1911-ல் ஒரு கல்விச் சபை ஏற்படுத்தப்பட்டது. ஆங்கிலப் பாடசாலைகளின் கல்வி நிலைபற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையைச் சமர்பிப்பதற்காக இங்கிலாந்திலிருந்து ஒரு நிபுணர் வரவழைக்கப்பட்டார். இவர் கல்வி போதிப்பது சம்பந்தமாகவும், பரீட்சை நடத்துவது சம்பந்தமாகவும் பெரிய மாற்றங்களைச் சிபார்சுசெய்தார். உயர் தரக்கல்வி போதித்தாற்ருன் கல்வியினல் அதிக பயன் உண்டாகு மென்று கருதி சர்வகலாசாலைக் கல்லூரியொன்றை ஏற்படுத்தச் சிபார்சுசெய்தார்.
ஒரேபட்டினத்தில் பல சமயச் சார்பான பாடசாலைகள் ஏற்பட்டதால் கல்வியில் போட்டியுண்டானது. பொதுவாக மாணவரெல்லாருடைய தேவைகளையும் கவனியாது விசேஷ மாக முன்னுக்குவரக்கூடிய மாணவரின் தேவைகளையே பாட சாலைகள் கவனித்துவந்தன. பாடசாலைகள் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலைக்குப் பிரவேசிப்பதற்கான பாட

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 209
வகைகளையே கற்பித்துவந்தனவென்றும், 1903-ல் பாடசாலை களைப் பரீட்சை செய்ததன் பயனகத் தமக்கு இந்த அனுபவம் ஏற்பட்டதென்றும் ஒரு வித்தியா தரிசி தமது அனுபவங்களைக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த மாணவர்களில் 100-க்கு 988 வீதத்தினர் அந்தச் சர்வகலாசாலைகளுக்குப் போகும் வசதியற்றவர்களாகவே யிருந்தார்கள். எனவே வர்த்தகம் முதலிய உபயோகமான பாடங்கள் படிப்பிக்கப்படவில்லை. இம்மாதிரியான போட்டி பெண் பாடசாலைகளிலுமிருந்தன. பெண்களுக்குத் தேவையான கல்வியைப் புகட்டுவதில் கருத்துச் செலுத்தா மற் பெண் பாடசாலைகள் கேம்பிரிட்ஜ் பரீட்சை களுக்கு யார் அதிகமான மாணவிகளைப் பயிற்றுவிப்பதென் பதிலேயே கவனத்தைச் செலுத்தினர்கள்.
கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலைக்கு ஏற்ற பாடத்திட்டத்தை சிங்களப்பகுதிகளிலுள்ள ஆங்கிலப் பாடசாலைகள் அனுசரித்து வந்ததால் ஆங்கிலப் பாடசாலைக் கல்வி இங்கிலாந்துக்கேற்றதா யிருந்ததேயல்லாமல் இலங்கை க் கேற்ற தா யிருக்கவில்லை. மேலைத் தேசப் பாஷைகளான லத்தீன், கிரேக்க பாஷகளையும், பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மன் போன்ற பாஷைகளையுமே கற்றர்களன்றிச் சிங்களத்தைக் கற்கவில்லை. இக்காலப்பகுதி யின் இறுதியில் அரசாங்கம் உதவிநன்கொடை உதவி, சிங்கள பாஷை கற்பதை ஊக்கப்படுத்த முயன்றது. ஆனல் அது நல்ல பலனைக் கொடுக்கவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகள் ஆரம்பத்திலிருந்தே சென்னைச் சர்வகலாசாலையோடு இணைக்கப் பட்டிருந்தபடியால் ஊருக்கேற்ற, பாடத்திட்டங்களை அமைக் கக்கூடியதாயிருந்தது. கேம்பிரிட்ஜ் திட்டம் காலஞ்செல்லச் செல்லவே அனுசரிக்கப்பட்டது. சென்னையுடன் இணைக்கப் பட்டதன் பயணுக தமிழ்க் கல்வியையாவது விருத்திசெய்வதற் குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. கேம்பிரிட்ஜ் பாடத்திட்டங்களை அனுசரிக்கத் துவங்கியதும், யாழ்ப்பாணப் பாடசாலைகளும் இங்கிலாந்துக்கு ஏற்ற கல்விமுறையையே கைக்கொண்டன. அரசாங்க அலுவல்களைக்கொண்டு நடத்தும் சிப்பந்திகளைப் பெருக்கிவிடுவதே ஆங்கிலக் கல்வியின் நோக்கமாயிருந்துவந்தது. ஆசிரியர்களும், பெற்றேரும், மாணவரும் இந்த ஒரே நோக்கத் தையே மனதில் கொண்டார்கள்.
மாணவரிடையே பண்பாட்டை உண்டாக்கவேண்டுமென்ற எண்ணத்தை ஆங்கிலப் பாடசாலைகள் கருத்திற்கொள்ளவில்லை. கிறிஸ்தவ பாடசாலைகள் இதை அறவே மறந்துவிட்டன. இந்துக் கொள்கைகளையோ பெளத்த கொள்கைகளையோ அவை போதிக்கவில்லை. சிங்கள மக்களுடைய நாகரிகத்தில் பெளத்த சமயம் அந்நியோன்னியமாகக் கலந்திருந்தது. வீட்டில்

Page 112
21 O இலங்சையில் பிரித்தானிய ஆட்சி
சிறுவயது தொட்டு அவர்கள் கேட்ட கதைகளிலும், அவர் களுடைய தேசீய இலக்கியத்திலும், செறிந்திருந்தது பெளத்த சமயம். சரித்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் சிறந்த இடத்தை வகித்துவந்ததும் அது. பெளத்த சமயத்துக்காக அரசர்கள் படையெடுத்து வெற்றிகொண்டார்கள். பெரிய கட்டிடங்கள் எல்லாம் இம் மதச் சார்புடையனவாகவேயிருந்தன என்று ஆர். எஸ். கொப்பிள்ஸ்டன் எழுதுகிறர்.* இந்து சமயமும் தமிழருடைய வாழ்வில் இவ்வாறே கலந்திருந்தது. இந்து சமயத்தையும் பெளத்த சமயத்தையும் கிறிஸ்தவ பாடசாலை களில் போதிக்காது விட்டதனல் தமிழர் சிங்களருடைய பழைய நாகரிகச் செல்வத்தை அலட்சியஞ்செய்ததாயிற்று.
எனவே இந்துப்பாடசாலைகளிலும் பெளத்த பாடசாலைகளி லும் இந்தக் குறை நீக்கப்பட்டுவந்தது. இந்து பெளத்த பாடசாலைகளும் நாட்டில் பெருகி வந்தன. பெளத்த பிரம ஞானசங்கம் 1907-ல் 1780 பாடசாலைகளை நடத்திற்று. சைவ பரிபாலன சபையும் பல இந்துப் பாடசாலைகளை ஸ்தாபித்தது. பெளத்த பாடசாலைகளில் பெளத்த சமயமும், இந்து பாடசாலை களில் இந்துசமயக் கொள்கைளும் கற்பிக்கப்பட்டன. இவை நாட்டில் ஒரு மாற்றத்தை உண்டுபண்ணியபோதிலும் அதன் பலாபலன் உடனே கிடைக்கவில்லை.
வைத்தியக் கல்வியும், சட்டக்கல்வியும் உயர்ந்த நிலையை
அடைந்தன. இலங்கைக்குத் தேவையான வைத்தியர்களும் நியாயவாதிகளும் இலங்கைக் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற வர்களாகவே யிருந்தார்கள். பிற்போக்கான கிராமங்களி
லுள்ள சனங்கட்கு வைத்திய உதவி சுலபமாகக் கிடைக்கக்கூடிய தாயிருக்க வேண்டுமென டொக்டர் லூஸ் என்பவர் ஆலோசனை கூறியதன்படி 1870-ல் அரசாங்கம் வைத்தியக் கல்லூரியை ஸ்தாபித்தது. அந்தக் காலந்தொட்டு ஆஸ்பத்திரிகளிலும் மருந் துச் சாலைகளிலும் அக்கல்லூரியில் தேறிய வைத்தியர்களும் அப்போத்திக் கரிமாரும் கடமையாற்றினர்கள். 1901 - 6) வைத்தியக் கல்லூரியின் பாடத்திட்டம் மாற்றி யமைக்கப் பட்டது. 1902-ல் மேலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட துடன் புதிய பரீட்சைக்கூடங்களும் அமைக்கப்பட்டன. 1896 ல் சட்டக்கல்லூரியிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன. 1906-ல் பிரவேச பரீட்சைக்குப்பதிலாகச் சர்வகலாசாலைப் பரீட்சை ஏற்படுத்தப்பட்டது.
1854-ல் இந்தியாவின் கல்வி விஷயமாக ஆராய்ந்து வெளி யிடப்பட்ட அறிக்கையில் தொழிற் கல்வி இந்தியாவுக்கு மிக முக்கியமென எடுத்துக் காட்டப்பட்டது. 1882-ல் கூடிய ஆராய்ச்சிக்குழுவினரும் இதே அபிப்பிராயத்தையே தெரிவித்த * ஆர். எஸ். கொபிள்டன் கொழும்பு பிஷப்பாண்டவராயிருந்து பின்னர் இந்தியாவின் குருசிரேஷ்டரானுர். ‘இலங்கையிலும் மகதத்தி லும் புத்த சமயம்’ என்ற நூலை எழுதிஞர்.

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 21 I
னர். ஆனல் அவ்விஷயமாக அரசாங்கமோ, பொதுசனங்களோ தெளிவான ஒரு விளக்கத்தை அடையவில்லை. இலங்கையிலும் ஏறக்குறைய இதே நிலைமையே இருந்தது. 1893-ல் ஒரு தொழிற் கல்லூரி நிறுவப்பட்டது. 1896-ல் அமைப்புத் துறை என்ஜினீர் வகுப்பிலும், இயந்திர வகை என்ஜினீர் வகுப்பிலும் 10 மாணவர்களே சேர்ந்தார்கள். கல்வி முடிந்தவுடன் திட்ட மான உத்தியோகங்களை வகிக்கலாமென்ற உறுதி யில்லாதிருந்த படியால் பலர் இக்கல்லூரியில் சேரவில்லை. அரசாங்கம் சம் தப்பட்ட பிரதான தொழில் இலாகாக்களான மராமத்து இலாகா, அளவைப்பகுதி, ரயில்வே, தந்தி இலாகா ஆகிய பகுதி களில் உத்தியோகம் பார்ப்பதற்கு அவ்வத் தொழிலில் தேர்ச்சி பெற்றவர் அவசியமாயிருந்ததால், 1897-ல் தொழில் கல்லூரி இத்தகைய தேர்ச்சியளிக்கக்கூடிய ஒரு நிலையமாக மாற்றி அமைக்கப்பட்டது. 1903-ல் மாணவரின் தொகை 254 ஆக உயர்ந்தது. 1905-ல் ரசாயன பெளதிக சாஸ்திர ஆராய்ச்சிக் கூடங்களமைக்கப்பட்டதால் வைத்தியம் படிக்கும் மாணவர் களின் ஆரம்பப்பயிற்சி இக் கல்லூரியிலேயே கொடுக்கப்பட்டது. விவசாயக்கல்வியும் ஒர் அளவுக்குப் போதிக்கப்பட்டது. நிலம் படைத்தவர்களின் புதல்வர்கள் விவசாயக் கல்லூரியில் சிரத்தை யெடுக்காதபடியால் 1901-ல் அது மூடப்பட்டது.
6. சமூகத்தில் மாற்றமும் சட்டசபைச் சீர்த்திருத்தமும்
19-வது நாற்றண்டில் பிரித்தானிய ஆட்சி இலங்கையின் சனத்தொகையில் 90 வீதமான பாட்டாளிகளின் நிலைமையில் அதிக மாற்றத்தை யுண்டுபண்ணவில்லை. கிராமப்பகுதிகளில் ஆட்சி நடத்திய இலங்கை உத்தியோகத்தர்களின் பிரதான மான கடமைகள் பழைய மாமூலைப் பின்பற்றியே இருந்தன. அதாவது பிரித்தானிய ஆட்சிக்கு முன்னிருந்த ஆட்சி முறை யையே இவர்களும் பின்பற்றினர்கள். இதற்கு அரசாங்கத்தின் சாத்வீகமான நடப்பது நடக்கட்டுமென்ற கொள்கையே காரணம். பழைய சமூகக் கட்டுப்பாடுகளைக் குலையவிடாமல் பார்த்துக்கொண்டாற்றன் தங்களுக்கு வாய்ப்பு என இந்த உத்தி யோகத்தர் எண்ணினர்கள். அதனல் கல்வியைப் பரப்புவதிலோ அல்லது சாதிக்கட்டுப்பாடுகளை நீக்குவுதிலோ அவர்களிற் பலர் ஊக்கங்காட்டவில்லை. பிரித்தானிய அரசாங்க ஏஜெண்டுகளே இவர்களுடைய வேலையை மேற்பார்வை செய்தும் நெறிப்படுத்தி யும் வந்தார்கள். ஆனல் நாளடைவில் இந்த ஏஜெண்டுகளின் கடமைகள் அதிகரித்தன. கந்தோரிலும் வேலை அதிகரித்தது. ஆனபடியால் தங்களின் கீழ் வேலைசெய்யும் கீழ்த் தர உத்தி யோகத்தரிடம் பொறுப்பைக் கொஞ்சங் கொஞ்சமாக விட்டார்

Page 113
2互2 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
கள். வருடாவருடம் ஏஜெண்டுகள் நாட்டில் சுற்றுப்பிரயாணஞ் செய்துகொண்டு வந்தபோதிலும், சனங்களுடைய தேவைகலை அறிந்துகொள்வதில் அவர்கள் தவறினர்கள்.
20-ம் நூற்றண்டின் ஆரம்பத்தில் கிராமவாசிகளின் நிலை மையில் சிறிது அபிவிருத்தி உண்டானது. ரோட்டுகள் மிகக் குறைவாயிருந்த வடமத்திய மாகாணத்திலும், வடமேல் மாகா ணத்திலும், ஊவாவிலும், சபரகமுவாவிலும், கீழ் மாகாணம், வன்னியாகிய பகுதிகளிலும் நீர்ப்பாசன வசதிகள் அபிவிருத்தி யடைந்ததால் வயலில் விவசாயஞ்செய்ய அதிக வசதி ஏற் பட்டது. மேலும் வைத்திய வசதிகளினல் மக்களுடைய சுகாதாரமும் அபிவிருத்தியடைந்தது. உதாரணமாக 1892-ல் வடமத்திய மாகாணத்தில் இரண்டு ஆஸ்பத்திரிகளும் ஒன்பது மருந்துச்சாலைகளுமே இருந்தன. 1902-ல் 38 மருந்துச்சாலைக ளிருந்தன. இந்த மாகாணத்தில் வெகுசில பாடசாலைகளே யிருந்தன. ஆனல் கிராமவாசிகள் மேலும் பாடசாலைகளை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்ட தோடமையாது பல இடங் களில் தாங்களே கட்டிடங்களைப் போட்டுங் கொடுத்தார்கள். இருந்தும் கிராமவாசிகளின் வாழ்க்கைமுறை மாறவில்லை.
மத்திய மாகாணத்தில் சிறிது மாற்றங்கள் காணப்பட்டன. செத்தை அடைத்து கிடுகினல் வேய்ந்த வீடுகளுக்குப்பதிலாக செங்கல்லினுற் கட்டி ஒட்டால் வேய்ந்த வீடுகள் கிளம்பின. குறைந்த சாதியைச் சேர்ந்தவர்கள் அரையில் மாத்திரம் துணியைக் கொடுக்காக கட்டிக்கொள்வதை விரும்பவில்லை. தோட்டங்களின் தேவைகளுக்கான ரோட்டுகளும் ரயில் பாதை களும் போடப்படவே அவர்கள் தமது திருஷ்டியைத் தமது கிராம எல்லைக்கு அப்பால் திருப்பினர்கள். பட்டினங்களிலுள்ள தாழ்ந்த பிரதேசத்தி லுள்ளவர்களோடு பரிச்சயமேற்படவே தாங்களும் வியாபாரம் செய்யவேண்டுமென்ற உணர்ச்சியைப் பெற்றர்கள். உள்ளூர் அங்காடிகளில் விற்பனை செய்வதற்கு காய்கறிகளைச் சாகுபடி செய்தார்கள். வியாபாரிகட்கு விற்பனை செய்வதற்காகத் தமது தோட்டங்களில் மிளகு, ஏலம், தேயிலை, கொக்கோ முதலியவற்றைப் பயிரிட்டார்கள். 1890 லிருந்து 1902-ம் ஆண்டு வரை 6000 ஏக்கரில் இவ்வாறு கொக்கோ பயிரிடப்பட்டது. ஆனல் உண்மையான வியாபாரத்திலும், கைத் தொழில் முயற்சிகள் லும் சிலரே ஈடுபட்டிருந்தார்கள் இப்பகுதிகளில் பள்ளிக்கூடங்களுஞ் சொற்பமாகவே யிருந்தன. மேல்நாட்டு நாகரிகம் சனங்களிடத்தில் அதிகம் மாற்றத்தை யுண்டுபண்ணவில்லை. சாதி ஒழுக்கம் அதிகம் ஊறியிருந்த படியால் சனங்கள் விவசாயஞ் செய்வதையே மேலான தொழி லாகக் கருதி நிலத்தைத் திருத்தி விளைவுசெய்வதையே கெளரவ மாக மதித்து வந்தார்கள்.

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 213
யாழ்ப்பாணக் குடாநாடு வேளாளரின் ஆதிக்கமுடையதா யிருந்தது. இங்கே தேயிலைத் தோட்டங்களோ கோப்பித் தோட்டங்களோ இல்லாதிருந்தபடியால் பொருளாதார வாழ் வில் அதிக மாற்றமொன்றும் மேற்படவில்லை. இந்து சமயக் கோட்பாடுகளின் பயணுக சாதிக் கட்டுப்பாடு முதலியன நிலவின. இங்கேயும் கமக்காரர்கள் வியாபாரம் முதலிய வேறு தொழில் களில் ஈடுபடவில்லை. ஆனல் புதிய சக்திகள் தோன்றிப் பழைய சமூகக் கட்டுப்பாட்டை ஊடுருவின. கிறிஸ்தவ பாதிரி மார் ஒருவகையில் மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள். கல்வி பரவியதால் சமூகத்தில் காணப்பட்ட உயர்வு தாழ்வு ஒரளவுக் குச் சமமாயிற்று. தொழிலாளருடைய சம்பளம் உயர்த்தப் பட்டதும் ஓரளவுக்கு நிலைமையைப் பாதித்தது. விவசாயத்தி லீடுபடாமலிருந்த வேளாள வகுப்பைச் சேர்ந்தவர்களிற் சிலர் புதிய சில தொழில்களில் ஈடுபட்டார்கள். இவர்கள் சாதிக் கட்டுப்பாட்டை எதிர்த்துக் கிளர்ச்சிசெய்யத் துவங்கினர்.
மேல்மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் மேலைத் தேச நாகரிகத்தின் பயனுகச் சில மாற்றங்களேற்பட்டன. அதைப் பற்றி முந்திய அத்தியாயங்களிற் குறிப்பிட்டோம். 1882-ன் பின்னர் காலித் துறைமுகத்துக்குப் பெரிய கப்பல்கள் வராது விட்டுவிடவே மேல்மாகாணம் முக்கியத் துவ மடைந்தது. அரசாங்க இலாகாக்கள் பெருகியதும் வியாபாரம் விருத்தி யடைந்ததும் இதற்குத் துணையாயிற்று.
மத்திய வகுப்பினர் விரைவாக முன்னேற்ற மடைந்தார்கள். காலப்பகுதியில் ஏற்பட்ட பெரிய சமூக மாற்றம் இது என்றே கூறலாம். 1833-ம் ஆண்டு துவக்கம் சட்டத் தொழில் அபி விருத்தியடைந்ததையும் 1870 துவக்கம் வைத்தியத் தொழில் முன்னேற்ற மடைந்ததையும் பற்றி மேலே கூறினுேம். ஆங்கிலப் பாடசாலைகள் பெருகவே ஆசிரியர் தொகையும் விரைவாகப் பெருகிற்று. அரசாங்க இலாகாக்கள் பெருகின. வர்த்தக ஸ்தாபனங்களும் பெருகின. அதனுல் ஏராளமான குமாஸ் தாக் கள் உத்தியோகம் பெற்றர்கள். விவசாயம் பல துறையிலும் விருத்தியடையவே தோட்டமுதலாளிகளும், மேற்பார்வைக் காரரும், சாமான் போக்குவரத்து ஏஜெண்டுகளும், வியாபாரிக களும், வர்த்தகர்களுமெனப் பல திறப் பட்ட தொழில் முயற்சியை உடையவர்கள் தோன்றினர்கள்.
மத்தியவகுப்பினர் பிரதானமாகப் பட்டினங்களில் வசித் தனர். மேற்கரையோரமாகவும், யாழ்ப்பாணக் குடாநாட்டி லும் ஏராளமாயிருந்தார்கள். இவர்களிற் பெரும்பாலோர் ஆங்கிலக் கல்வியறிவு பெற்றிருந்தார்கள். கல்வி, செல்வம் ஆகியவற்றின் பயணுக இவர்கள் அதிக செல்வாக்குடையவர்

Page 114
2丑4 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
களாயிருந்தனர். அரசாங்கம் பலதிக்கிலும் தனது செல்வாக் கைப் பரப்பி அவர்களின் வாழ்க்கையைப் பலவாறு மாற்றியது. அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளையெல்லாம் பிரித்தானிய உத்தியோகத்தரே வகித்துவந்தார்கள். பிரித்தானிய தோட்ட முதலாளிமாரும், பிரித்தானிய வர்த்தகர்களுமாகச் சேர்ந்து உயர்ந்த வகுப் பின ரா ய் ஒதுங்கிக்கொண்டனர். கிராமங் களில் பரம்பரையாக அதிகாரஞ்செலுத்திவந்த குடும்பத்தினரே அரசாங்க நிர்வாகத்தை நடத்தினர்கள். ஆனபடியால் பழைய சாதிக்கட்டுப்பாடுகளை நீக்கச் சித்தங்கொண்டிருந்த பொது மக்களிடத்து அவர்கள் சிறிதும் அனுதாபங் காட்டவில்லை.
மத்திய வகுப்பினர் தங்கள் நிலைமையில் அதிருப்தி கொண் டார்கள். சட்டத்தின் முன் எல்லாரும் சமன் என்று 1833-ல் பிரகடனஞ் செய்யப்பட்டது. எனவே மத்திய வகுப்பினர் தமது உரிமைகளைப்பற்றி உணரத் தலைப்பட்டார்கள். பிரித்தா னியரும், கிராமாதிகாரிகளும் அவர்கள் குடும்பத்தினரும் அனுப வித்துவரும் விசேஷ உரிமைகளை அவர்கள் ஆட்சேபித்தனர். 1 904-6) ருஷ்யாவுடன் சண்டைசெய்து ஜப்பா ன் வெற்றி பெற்றது. கீழைத்தேச வாசிகள் சரியான தேர்ச்சியும், சாதனங் களும் பெற்ருல் மேலைத் தேசத்தினருக்குச் சமமாக, நிற்க முடியுமென ஒரு எண்ணம் இந்த வெற்றியின் பயணுக ஏற்பட் 4-து. ஆங்கிலப் பாடசாலைகளில் கல்விகற்ற சிங்களரும் தமிழரும் ஆங்கிலேயர் சரித்திரம், அரசியல்முறை முதலிய வற்றைப் படித்தார்கள். 1832-ம் ஆண்டில் இங்கிலாந்தில் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அரசியல் சீர்திருத்தத்தின் பயனுக பிரித்தானிய மத்திய வகுப்பினர் பிரித்தானிய சட்ட சபையில் ஆதிக்கம் பெற்றனர். அதுபோல இலங்கையிலும் தாங்கள் ஏன் சட்டசபையில் ஆதிக்கம் பெறக் கூடாதென எண்ணினர்கள். 1861-ல் இந்திய சட்டசபைகளில் உத்தி யோகப்பற்றற்ற அங்கத்தினர் இடம்பெற்றனர். 1892-ல் இந்தியச் சட்டசபை அமைப்பு மாற்றப்பட்டது. அ த ன் பிரகாரம் பிரதேசவாரியாகப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய் தனுப்ப உரிமையளிக்கப்பட்டது. தேர்தல் விஷயமாக மேலும் உரிமையை அதிகரித்து இந்திய அரசியல் அமைப்பு 1909-ல் மறுபடியும் மாற்றப்பட்டது. அத்துடன் இந்திய ராஜப் பிரதி நிதியின் நிர்வாக சபையிலும், கவனர்களின் மாகாண நிர்வாக சபைகளிலும் இந்தியர் இடம் பெற்றர்கள். ஆனல் இலங்கை அரசியலமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. இந்தியாவிலும் பார்க்க ஆங்கிலக் கல்வியில் இலங்கை அதிகம் முன்னேற்றமடைந்திருந்த போதிலும் அரசியல் சீர்திருத்தம் ஏற்படாதிருந்தது. தாராளக்கட்சியினர் கொள்கையினுலுந்

அரசாங்க நிர்வாகம் திருத்தி யமைக்கப்படுதல் 2I 5
தப்பட்ட கோல்புறுரக் நிர்வாகமுறையில் சீர்திருத்தமேற் படுத்தத் திட்டம் போட்டார். அத்துடனமையாது நிர்வாக உத்தியோகத்தர் பொதுசன அபிப்பிராயத்தை அனுசரித்துக் கருமங்களை நடத்தும் பொருட்டுச் சட்டசபையொன்று அமைக்க வேண்டுமெனவும் சிபார்சு செய்தார். ரோட்டு, ரயில்வே ஆகிய போக்குவரத்துச் சாதனங்கள் மூலம் நிர்வாக அமைப்பு ஒன்று படுத்தப்பட்டது. பூமி யமைப்பு, பொருளாதார நிலைமை முதலியவற்றை யொட்டி யெழுந்த வித்தியாசங்களை யனுசரித் துத் திட்டமமைந்த மாகாண நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் பொருளாதார வளம் அபிவிருத்தி செய்யப்பட்டது. சனங்களின் நல உரிமைகள் பொதுவானவை என்ற உணர்ச்சி நிர்வாகத்தை எல்லாருக்கும் பொதுவாக்கி யமைத்ததால் உண்டானது. இதற்குமுன்னுள்ள அரசாங்கமொன்றும் செய் யாத இந்த வேலை இப்பொழுது காரியசாத்தியமாயிற்று. இலங்கை ஒரு தேசம் ஒரே நாடு என்ற அடிப்படையான கொள்கையுடனேயே இந்த மாற்றங்களிற் பல அமுலுக்குக் கொண்டுவரப்பட்டன. ஆனல் சட்டசபை விஷயத்தில் இதற் கேற்றபடி சரிசமமான மாறுதல் செய்யப்படவில்லை.
மத்திய வகுப்பினர் சட்டசபையில் திருத்தஞ்செய்யுமாறு கேட்கத் துவங்கினர்கள். முன்னமே பாராளுமன்ற முறையில் ஒரு அரசியல் அமைப்புவேண்டுமெனச் சனங்கள் கோரினர்கள். அப்படி ஒரு பாராளுமன்ற முறையை அமைப்பதனல் சிறு பான்மையினரான ஐரோப்பியரும், பறங்கிகளுமே அதில் ஆதிக்கஞ் செலுத்துவார்களெனப் பயந்து அத்தகைய பாராளு மன்ற ஆட்சி கொடுக்கமுடியாதென மறுக்கப்பட்டது. ஆனல் இப்பொழுதோ சிங்களருந் தமிழருமே இந்தச் சீர்திருத்தத் தைக் கேட்டார்கள். ராணுவச்செலவுக்காக இலங்கையின் வருமானத்தில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுவந்தது. 1891-ம் ஆண்டு துவக்கம் இச்செலவு உயர்த்தப்பட்டு வருமானத்தில் 94 வீத ம் கொடுக்கப்படவேண்டுமென 1898-ல் தீர்மானிக் கப்பட்டது. இவ்விஷயத்தைப்பற்றி அவர்கள் சிரத்தைக் காட்ட வில்லை. அன்றி நிர்வாக சபையில் உத்தியோகப் பற்றற்றவர் களின் தொகை அதிகமாயிருக்க வேண்டுமென்றும் அவர்கள் கேட்கவில்லை. நிர்வாக அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங் களுக்கு உகந்தபடி சட்டசபையையும் மாற்றுவதற்காக வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை மாற்றவேண்டுமெனவும் பிரதேச வாரியாகத் தேர்தல் நடத்த ஒரு திட்டம் அமைக்கவேண்டு மென்றும் அவர்கள் விரும்பினர்கள். பிரித்தானிய ஆட்சியின் பயனக சனங்களின் நலவுரிமைகள் பிரதேசவாரியாக வித்தியா சப்பட்டனவேயன்றி வகுப்புவாரியாக வித்தியாசப்படவில் ஆல.

Page 115
21 6 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
ஜோன் பர்கசன் என்ற ஐரோப்பியச் சட்டசபை அங்கத்தவர் பிரதேசவாரியாகப் பிரதிநிதிகளைத் தேர்ந் தனுப்பவேண்டு மென 1887-லேயே வாதாடினர். தேர்தல் மூலமாகப் பிரதி நிதிகளைச் சட்டசபைக்கு அனுப்புவதே உசிதமென்றும், அதுவே உண்மையான பிரதிநிதித்துவமென்றுங் கருதிச் சிங்களரும் தமிழரும் தேர்தல்முறை வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் கள். ரிட்ஜ்வே சிபார்சு செய்தபடி நிர்வாகசபையிலும் உத்தி யோகப்பற்றற்றவர்கள் இடம் பெறவேண்டுமெனவும் அப்பொ ழுதுதான் அரசாங்கத்தின் அந்தரங்க ஆலோசனைகளில் அவர் களும் கலந்துகொள்ள முடியுமென்றும் அவர்கள் எடுத்துக் காட்டினர். ஐரோப்பியரின் நலவுரிமைகளை அவர்கள் புறக் கணிக்கவில்லை. தோட்டத் துரைமார் சங்கத்தினருக்கு ஒரு பிரதிநிதியும் ஐரோப்பிய வர்த்தக சங்கத்தினருக்கு ஒரு பிரதி நிதியும் இருக்க வேண்டுமென உடன்பட்டதோடு பறங்கியர், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மைக் கட்சியினருக்கும் சில ஸ்தானங்களை ஒதுக்கவேண்டுமென ஒப்புக்கொண்டனர்.
மிதமான இந்தக் கோரிக்கைகளை அரசாங்கம் சிறிதும் ஆதரிக்கவில்லை. கோல்புறுரக் காலத்தில் இருந்த தாராளக் - கொள்கைகள் இப்பொழுது மாறிவிட்டன. அரசாங்கம் பொது சனச் சார்புடையதாயிருக்க வேண்டுமென்ற எண்ணங்களெல் லாம் மாறி பிரித்தானியர் ஏகாதிபத்தியக் கொள்கையில் ஊறி யிருந்தார்கள். சுதேசிகளிடம் விரைவில் அரசாட்சியை ஒப்ப டைப்பது ஆபத்தென அவர்கள் எண்ணினர்கள். சுதேசிகளின் நன்மையை முன்னிட்டு குடியேற்றநாடுகளை ஒரு தர்மச் சொத் தாகக் கவனித்துவர வேண்டுமென்ற எண்ணம் போய் பிரித் தானிய சாமான்களை விற்பதற்கும், பிரித்தானிய முதலைப் போட்டு வியாபாரம் நடத்துவதற்கும் அவை மிக வாய்ப்பான இடங்களென்ற கொள்கை பிரித்தானிய மக்களிடம் பரவிற்று.
பிரஷ்ய அரசாங்கத்தைப்போல இலங்கை யரசாங்கமும் நிர்வாகத்தில் திறமையையே பெரிய குறிக்கோளாகக் கொண்டி ருந்தது. மேல்நாட்டில் நடந்த கைத்தொழிற் புரட்சி காரண மாக நிர்வாக விஷயங்களிலும் சாஸ்திரரீதியான முறைகள் அனுஷ்டிக்கப்பட்டன. கைத் தொழிலிற் சிறந்த வல்லரசுகளி டையே போட்டி ஏற்பட்டதால் ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் திறமையைப் ப்ெரிதாக மதித்தார்கள். இதே கொள்கையுடன் இலங்கைக்குவந்த பிரித்தானிய உத்தியோகத்தர்கள், அதிகார ஆட்சி சனங்களிடையே காரியத்தில் திறமையை உண்டாக்கு மென உணர்ந்தனர். இலங்கையில் ஏற்பட்ட அபிவிருத்தி, அதிகார ஆட்சியின் பயனென எண்ணி, பொதுசன ஆட்சியிலும் பார்க்க அதிகார ஆட்சி சிறந்ததென வாதாடினர்கள். நிர்வாக அபிவிருத்திக்கு ஏற்றவாறு சட்டசபை அமைப்பும் மாறவேண்டு

அரசாங்க நிர்வாகம் திருத்தியமைக்கப்படுதல் 2 7
மென நினைத்த கோல்புறுாக்கின் கொள்கையை அவர்கள் ஆதரிக்கவில்லை. அரசாங்க அலுவல்களில் தேர்ச்சிபெழுத பொதுமக்கள் சட்டசபையில் புகுந்து அரசாங்க நிர்வாகத்தில் தலையிட்டு அதன் திறமையைக் குறைத்துவிட அவர்கள் விரும்ப
மத்திய வகுப்பினரின் கோரிக்கையை பிரித்தானியர் ஆதரிக் காததற்கு மற்ருெரு காரணமுமுண்டு. தொழிற்புரட்சி காரண மாக பிரித்தானியர் தொழிலாளரின் நலவுரிமைகளில் அதிக சிரத்தை காட்டினர்கள். அதன் விளைவாக 1867-ல் பட்டினங் களில் வேலைசெய்யுந் தொழிலாளிகட்கு வாக்குரிமை அளிக்கப் பட்டது. 1884-ல் கிராமங்களில் வேலை செய்யும் தொழிலாள ருக்கும் வாக்குரிமை யளிக்கப்பட்டது. எனவே இலங்கையில் உள்ள சிறு தொகையினரானவர்களும் மற்ற வகுப்பாருடன் அதிக சம்பந்தமில்லாதவர்களுமான மத்திய வகுப்பாரிடம் அதிக பொறுப்பை அளிக்க அவர்கள் விரும்பவில்லை.
இவ்விஷயத்தில் இலங்கை அரசாங்கம் தூரதிருஷ்டியுடன் விஷயங்களைக் கவனிக்கவில்லை. சுயாட்சி நடத்துவதற்குச் கனங் களைப் படிப்படியாகப் பழக்கிக் கொள்ளவேண்டுமென்ற தாரா ளக் கட்சியாரின் கொள்கையை அது அனுசரிக்கவில்லை. நிர்வாக அமைப்பு பல வகைப்பட்ட சனங்களையும் ஒன்றுபடுத்தி ஒரு தேசத்தவராக்கியது போலவே அரசியல் மாற்றங்களும் அமைய வேண்டுமென அது எண்ணவில்லை. நிர்வாகத்தின் திறமையை அதிகரிப்பதே அரசியல் சீர்திருத்தத்தின் நோக்கமாயிருக்க வேண்டுமென அது நினைத்தது. பல வகுப்பினர் இருந்தார்கள். அவர்களிடையே கலப்புமணம் கிடையாது. பெரிய வகுப்பின குக்குச் சட்டசபையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. அவர்களுடைய அபிப்பிராயங்களை அரசாங்கம் அனுசரித்தது மல்லாமல் அவர்கள் விருப்பங்களை வெகுதூரம் திருப்திப்படுத்தி யும் வத்தது. புதிதாகத் தோன்றிய கல்வியறிவு பெற்ற மத்திய வகுப்பினருக்குச் சட்டசபையில் பிரதிநிதித் துவங் கொடுக்கப் படவில்லை. எனவே அதற்கு ஒரு பிரதிநிதியைக் கொடுத்து அரசாங்க வேலையில் அதையும் பங்கெடுக்க வைத்துவிட்டால் போதுமென இலங்கை அரசாங்கம் எண்ணிற்று. கீழைச் சிங்களவருக்கும் ஒரு பிரதிநிதி யிருக்கவேண்டுமென அது சிபார்சு செய்தது. ஏனெனில் அவர்களுடைய தொகையும் முக்கியத்துவமும் அதிகரித்துவந்தது. தேர்தல் மூலம் பிரதிநிதி களைத் தெரிந்தெடுக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. ஐரோப் பியப் பிரதிநிதிகள் ஐரோப்பிய சனங்கள் சிபார்சுசெய்யும் பேர்வழிகளிலிருந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.

Page 116
28 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பறங்கியரும், இலங்கைப் படித்தவர்களும் ஐரோப்பிய சங்கங் களைப்போலத் தமது பிரதிநிதிகளைத் தெரிந்து அரசாங்கத்துக்கு அறிவித்தால் அரசாங்கம் சிலரை நியமிக்கும்.
இவ்வாறு மக்கலம் தேசாதிபதி செய்த அரசியல் திருத்தச் சிபார்சுகளைக் குடியேற்றநாட்டு மந்திரி பொதுப்படையாக ஏற்றுக்கொண்டார். ஆனல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த அரசியல் திருத்தங்களை இலங்கைக்கு முற்று க மறுத்துவிட அவர் விரும்பவில்லை. ஐரோப்பியர், பறங்கியர். படித்த இலங்கையர் ஆகியவர்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கலாமென அவர் ஒப்புக்கொண்டார். ஐரோப்பியருக்கு மூ ன் ரு வ து ஸ்தானத்தைக்கொடுக்க அவர் சம்மதிக்கவில்லை. இதற்கிடை யில் இலங்கைத் தமிழர் நிலைமையை ஆராய்ந்தார்கள். 9 இலட்சத்துக்கு அதிகமான தமிழருக்கு ஒரு ஸ்தானமே வழங்கப் பட்டதென்றும் படித்த இலங்கையருக்குரிய ஸ்தானமும் சிங்களருக்கே செல்லுமாதலால் 23 லட்சத்துக்குச் சற்று அதிக மான சிங்களருக்கு 4 ஸ்தானங்கள் கிடைக்குமென்றும் தமிழ்ச் சாகியத்தவர் எடுத்துக்காட்டினர்கள். மக்கலம் தேசாதிபதி செய்த சிபார்சின் பயனகத் தமிழருக்கு மறுபடியும் ஒரு ஸ்தானம் வழங்கப்பட்டது.
1912-ல் புதிய சட்டசபை ஸ்தாபிக்கப்பட்டது. தேர்தல் முறையில் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பதும் சிங்கள மத்திய வகுப்பாருக்கும் தமிழ் மத்தியவகுப்பாருக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்திருப்பதுமே புதிய சட்டசபை அமைப்பிலுள்ள நவமான அம்சங்களாகும். பறங்கியர் மத்திய வகுப்பைச் சேர்ந்தவர் களாகவே யிருந்தனர். உத்தியோகத்தவர் பெரும்பான்மை யினராயிருக்கவேண்டி அரசாங்கம் மேலும் இரண்டு உத்தி யோகத்தரைச் சட்டசபைக்கு நியமித்தது. பொதுசனங்களின் உண்மையான பிரதிநிதிகள் படித்த மத்திய வகுப்பினரல்லர் ; அரசாங்க ஏஜெண்டர்களும், சிவில் சேவிஸ் உத்தியோகத்தரு மேயென மக்கலம் தேசாதிபதி அபிப்பிராயப்பட்டார். ஆனல் சட்டசபையில் அரசாங்க ஏஜெண்டர்கள் பிரதிநிதிகளாக நிய மிக்கப்படவில்லை. இதுகாறும் கொய்கமச் சாதியிலிருந்தே சிங்கள நியமன அங்கத்தினரும், வேளாள வகுப்பிலிருந்தே தமிழ் நியமன'அங்கத்தினரும் நியமிக்கப்பட்டார்கள். புதிய சட்டசபையில் இரண்டாவது நியமன ஸ்தானம் கராவ என்ற கரையார் வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டது. சிங்களப் பகுதிகளில் கராவ வகுப்பினர் செல்வமும் செல்வாக்கு முற் றிருந்தார்கள். படிப்புள்ள இலங்கையர் தமது பிரதிநிதியாகத் தமிழ் தலைவர் சேர் பொன்னம்பலம் இராமநாதனைத் தெரிந்தார் கள். அவரும் தமது நிகரற்ற தொண்டின் பயனக அடுத்த

அரசாங்க நிர்வாகம் திருத்தி ய்மைக்கப்படுதல் 29
சட்டசபைச் சீர்திருத்தம் ஏற்படும் வரை தமது ஸ்தானத்தை வகித்துவந்தார். தாழ்ந்த பிரதேசத் துச் சிங்களவருக்கு இரண்டு ஸ்தானங்களும், கண்டியருக்கு ஒன்றும் கிடைத்தது. இலங்கையிலுள்ள தமிழரின் தொகையில் ஏறக்குறைய அரை வாசியினராயிருந்த இந்தியருக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்க வில்லை. ஆனல் இலங்கைத் தமிழருக்குத் தம்மிலும் நான்கு மடங்கு அதிக சனத்தொகையுடையவர்களான சிங்களரைப் போல் மூன்று ஸ்தானங்கள் கிடைத்தன.*
சமூகங்களிடையே யுள்ள வேற்றுமைகளை ஒழிப்பதற்கு பிரித்தானிய, நிர்வாகம் முயன்றுவந்தது. ஆனல் புதிய சட்ட சபைத் திருத்தங்கள் அந்த வேற்றுமைகளை நிலைநிறுத்தின. படிப்புள்ள இலங்கையர் தேர்தல் தொகுதியென ஒரு தொகுதி ஏற்பட்டதால் ஆங்கிலங்கற்ற சிங்களர், தமிழர், முஸ்லிம்களா கியோர் தம்முள் ஒன்றுபட்டனர். ஐரோப்பியருக்கும் பறங்கிய
ருக்கும் தனித் தொகுதிகள் கொடுக்கப்பட்டதால் அவர்கள்
தாங்கள் இலங்கையரென்ற உணர்ச்சியற்று தனிப்பட்ட சமூகத் தினர் என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள்.
*1912-ம் ஆண்டுச் சட்டசபைப் பிரதிநிதிகள் விபரம்
உத்தியோகப்பற்றற்றவர்கள் 10
நியமிக்கப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கீழைச் சிங்களவர் . 2 ஐரோப்பியர் . . 8 as 2 தமிழர் 2 பறங்கிகள் . . 7 கண்டிச் சிங்களவர் I படித்த இலங்கையர் . . 1 முஸ்லிம்கள்
உத்தியோகப்பற்றுள்ளவர்கள் 11

Page 117
பத்தாவது அத்தியாயம் அரசியல் முறையில் அபிவிருத்தி
1. மனிங் சீர்திருத்தம்
மக்கலம் ஆட்சியின் பின்னர் இரண்டு பெரிய அரசியல் திருத் தங்கள் நடைபெற்றன. 1918-ம் ஆண்டு துவக்கம் 1925 வரை தேசாதிபதியாயிருந்த சர். வில்லியம் மானிங் சில அரசியல் திருத்தங்களை ஏற்படுத்தினர். பின்னர் 1931-ல் தேசாதிபதி யாய் வந்த சர். கிரேம் தொம்ஸன் (1931-1933) சில திருத்தங் களை உண்டாக்கினர். வேறு சில முக்கியமான மாற்றங்களும் ஏற்பட்டன. போக்குவரத்து வசதிகள் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டன. தலைநகரான கொழும்புப் பட்டினத்தோடு பதுளை, திருக்கோணமலை, மட்டக்களப்பு ஆகிய பட்டினங்கள் ரயில் மூலம் இணைக்கப்பட்டன. மோட்டாரில் அநேகர் பிரயா ணஞ்செய்யத் தலைப்பட்டார்கள். கார், பஸ் முதலிய வாகனங் கள் போவதற்கேற்றவாறு வீதிகளும் ரோட்டுகளும் திருத்தி யமைக்கப்பட்டன. சில விசாலமாக்கப்பட்டன. தோட்ட முயற்சியில், விசேஷமாக ரப்பர், தென்னைத் தோட்டங்களை உண்டாக்குவதில் இலங்கையர் அதிக சிரத்தை யெடுத்தார்கள். விவசாய முயற்சிகட்கு அரசாங்கந் தொடர்ந்து ஆதரவளித்து வந்ததோடு ஏனைய தொழில்களுக்கும் ஊக்கமளித்தது. நியாய மான நிபந்தனையில் இலங்கையர் கடன் பெற்றுக்கொள்வதற் காக 1938-ம் ஆண்டில் அரசாங்க உதவிபெறும் ஒரு வங்கி ஏற்படுத்தப்பட்டது. உள்ளூரில் வியாபாரம் விருத்தியடைந் தது. வெளியூர் வியாபாரமும் அதிகரித்தது. பாழடைந்த நீர்பாசனச் சாதனங்களைப் புதுப்பிக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. நெற்செய்கை அதிகரிக்கப்பட்டது. கல்வி பரவிற்று. ஆசிரியருடைய சம்பளம், எதிர்கால அபிவிருத்தி முதலியன வெகுதூரம் சீர்திருத்தியமைக்கப்பட்டன. அதனல் கல்வியும் உயர்ந்த ஒரு ஸ்திதியை அடைந்தது. தற்காலப் போக்குக்கு ஏற்றவாறு சுயபாஷைக் கல்வியும் திருத்தியமைக் கப்பட்டது. 1921-ல் சர்வகலாசாலைக் கல்லூரி ஒன்று ஸ்தாபிக் கப்பட்டது. 1942-ல் அது சர்வகலாசாலையாக மாற்றப்பட்டது. நாட்டின் சுகாதார வசதிகள் விரைவாய் அபிவிருத்தி செய்யப் பட்டன. பெளத்த இந்து சமயப் புனருத்தாரணம் மேலும் அபிவிருத்தியடைந்தது. பல பெளத்த பாடசாலைகளும் திறக்
கப்பட்டன. அவை திறம்பட நடத்தப்பட்டன. அரசாங்க

அரசியல் முறையில் அபிவிருத்தி 22I
இலாகாக்களும் பெருகின. உயர்தர உத்தியோகங்களில் பல
இலங்கையர் நியமிக்கப்பட்டார்கள். மணியகாரர்க்குப் பதிலாக பகுதிக் காரியாதிகாரிகள் என்ற உத்தியோகத் தரை நியமிக்க 1938-ல் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. L1LLtq 60r
சங்கங்களும், கிராமக் கமிட்டிகளும் ஏற்படுத்தப்பட்டதால் ஸ்தலஸ்தாபன ஆட்சி முன்னேற்றமடைந்தது. இவற்றினல் தீவிரமான மாற்றங்களொன்றும் ஏற்பட்டுவிடவில்லை. முன்னே ஆரம்பிக்கப்பட்ட ஒர் இயக்கம் சிறிதுசிறிதாக வளர்ச்சியடைந்து வந்ததென்றே கூறவேண்டும். ஆனல் அரசியல் முறை சம்பந்த மாக ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் பிரித்தானிய ஆதிக்கத் தைக் குறைத்து இலங்கையர் கையில் அதிக அதிகாரத்தைக் கொடுத்தன. சுயாட்சி அதிகரித்தது.
1912-ல் செய்யப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் மத்திய வகுப்பைச்சேர்ந்த சிங்களருடைய விருப்பத்தையோ தமிழ் மக்க ளுடைய விருப்பத்தையோ பெறவில்லையென்பதை முன்னரே எடுத்துக்காட்டினுேம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நிலை நிறுத்தின. அரசாங்க நிர்வாகத்தில் மிக முன்னேற்றமேற் பட்டிருந்தபோதிலும், அதற்கேற்ற சட்டசபையை ஏற்படுத்து வதற்குத் தவறிவிட்டன. மத்தியவகுப்பாரின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யாததோடு ஆளும் சாதியாரோடு சமமான அந்தஸ்துக் கொடுக்கவேண்டுமென்ற இலங்கையரின் கோரிக்கையையும் அவை நிறைவேற்றத் தவறிவிட்டன. மக்கலம் தேசாதிபதியின் பின்னர் மத்திய வகுப்பினரின் பலம் அதிகரிக்கத் துவங்கிற்று. தோட்டங்கள் புதிது புதிதாய் உண்டாக்கப்பட்டன. வியாபாரம் விருத்தியடைந்தது. அரசாங் கத்தில் பலர் உத்தியோகம் புரிந்தார்கள். வைத்தியத்துறையி லும், சட்டத்துறையிலும், ஆசிரியத் துறையிலும் பல அபிவிருத் திகளுண்டாயின. மத்தியவகுப்பார் பலம்பெறுவதற்கு இவை யெல்லாம் அனுசரணையாயிருந்தன. 1917-ல் மத்திய வகுப் பினர் மறுபடியும் அரசியலமைப்பில் சீர்திருத்தம் உண்டாக்க வேண்டுமெனக் கோரினர்கள்.
புதிதாய்ப் பல காரணங்களினல் இச்சீர்திருத்தக் கிளர்ச்சி வலுவடைந்தது. சென்ற மகா யுத்தத்தின்போது 1915-ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் இலங்கையின் சில பாகங்களில் கலகங்களுண்டாயின. சில சிங்களவர் சோனகருக்குத் துன்பம் விளைத்தார்கள். 1848-ல் நடந்ததுபோல் பிரித்தானிய ஆட்சிக் கெதிரான சூழ்ச்சிதா னிவையென்று கருதி பிரித்தானிய உத்தி யோகத்தர்கள் இந்த உள்ளூர் கலகங்களை மிகைப்படுத்தினர்கள். யுத்த காலமாயிருந்ததும் அவர்களுடைய ஆவலை அதிகரித்திருக் கலாம். எனவே கடுமையான அடக்குமுறைகள் கையாளப்

Page 118
222 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பட்டன. ராணுவச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. நிரபராதி களான பலர் தண்டனையடைந்ததோடு தூக்குத்தண்டனையும் விதிக்கப்பட்டனர். இந்த அடக்குமுறைகள் சிலவற்றை பிரித் தானிய தேசாதிபதியான சார்மேஸ் பிரபுவுக்குப்பின் (19131916) நியமிக்கப்பட்ட சர். ஜோன் அண்டர்சன் தேசாதிபதி கூடக் கண்டித்தார். அடக்குமுறைகள் பிரித்தானியருக்கெதிராய் அதிக கிளர்ச்சியை உண்டாக்கின. இம்மாதிரிக் கொடுமைகள் நடவாமலிருப்பதற்கு வழி நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொள் வதே யெனச் சிங்களவர்கள் உணர்ந்தார்கள்.
மிண்டோ-மோர்லி சிபார்சின் பயனக 1909-ல் இந்தியா வில் சட்டசபைகள் நிறுவப்பட்டபோதிலும், அரசியல் சீர்திருத் தக் கிளர்ச்சி இந்தியாவில் ஒய்ந்த பாடில்லை. 1916-ம் ஆண்டின் முடிவில் இந்திய தேசீய காங்கிரஸும் முஸ்லிம் லீக்குமாகச் சேர்ந்து அதிகப்படியான சுயாட்சி கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டன. ஒற்றுமையோடு கூடிய இந்தக் கோரிக் கையை அலட்சியஞ்செய்ய பிரித்தானியாவிலுள்ள பிரித்தானிய அதிகாரிகளோ, இந்தியாவிலுள்ள அதிகாரிகளோ விரும்ப வில்லை. யுத்தகாலத்தில் இந்தியா செய்த உதவிகளை அலட்சியஞ் செய்யவும் முடியாது. மேலும் தேசங்களின் சுதந்திரத்தையும், ஜனநாயகத் தத்துவத்தையும் காப்பாற்றவே சண்டைசெய்கிறே மென்றும் அதுவே தமது யுத்த நோக்கமென்றும் பிரித்தானியர் பறைசாற்றியிருந்தனர். ஒவ்வொரு தேசமும் சுயேச்சையாகச் சுயாட்சிநடத்தி முன்னேற வேண்டுமென்றும் அதையிட்டுத் தமக்கு அதிக சிரத்தையுண்டென்றும் அவர்கள் உலகறியத் தெரிவித்தார்கள்.
பல வகையான சாதிகளும் வகுப்புகளுமுள்ள இந்தியாவில் பாராளுமன்ற முறையான ஆட்சியை ஏற்படுத்துவது சாத்தியப் படாதென இதுகாறும் பிரித்தானியர் எண்ணியிருந்தார்கள். ஆனல் இப்பொழுது அவர்களுடைய காட்சி வேருெரு வகையில் திரும்பிவிட்டது. 1917-ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் இந்தியா மந்திரியான எட்வர்ட் மொண்டேகு ஒரு முக்கியமான பிர கடனத்தை விடுவித்தார். அதில் பின்வரும் வாக்கியங்களு. மடங்கியிருந்தன -
இந்திய அரசியல் நிர்வாகத்தின் எல்லாத் துறையிலும் இந்தியர் கூடிய பங்கெடுக்கவேண்டும். அதோடு பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரிக்கப்படாத ஒரு பகுதியாக இந்தியா விளங்குவதோடு பொறுப்புள்ள ஆட்சியை அது படிப்படியாக அடைவதற்குச் சுயாட்சித் தாபனங்களை அபிவிருத்திசெய்யவும் வேண்டும். இதுவே மன்னர் பிரான் அரசாங்கத்தின் கொள்கை யாகும். இந்திய அரசாங்கமும் இக்கொள்கையைப் பூரணமாக ஆதரிக்கிறது. ’

அரசியல் முறையில் அபிவிருத்தி 22 ጁ
இந்தியாவில் பிரித்தானியர் அனுசரிக்க வேண்டிய கொள் கையை வரையறுத்துக் கூறுவதுடன் மொண்டேகு நின்றுவிட வில்லை. இந்தியாவில் எவ்வாறு இக்கொள்கையை நடை முறையில் கொண்டு வரலாம் என்பதையும் எடுத்துக்காட்டினர். இந்தியா சுயாட்சிக்குத் தகுதியற்றதென்று முன்னெல்லாம் பிரித்தானிய அரசாங்கம் கூறிய கூற்றுக்களெல்லாம் நிராகரிக் கப்பட்டன. 1917-ம் ஆண்டினிறுதியில் அவரே இந்தியாவுக்கு வந்தார். 1918-ல் இந்திய அரசியல் சீர்திருத்த அறிக்கை என்ற ஒரு கூட்டு அறிக்கையை அவரும் அக்காலத்து இந்திய ராஜப் பிரதிநிதியாக இருந்த செல்ம்ஸ்போட் பிரபுவுமாகக் கூடி வெளியிட்டார்கள். அடுத்த வருடம் புதிய அரசியல் திட்டம் ஒன்று நடைமுறைக்கு வந்தது. பிரித்தானிய பாராளுமன்றத் தில் அம்மாதிரியான சட்டமொன்று நிறைவேற்றப்பட்டது. பிரதிநிதித்துவம் வாய்ந்த மத்திய சட்டசபையும், சுயாட்சி அம்சங்கள் பல பொருந்திய மாகாண சுயாட்சியும் வழங்கப் பட்டது. 145 அங்கத்தினரைக்கொண்ட புதிய சட்டசபையில் 52 பேர் பொதுத் தேர்தல் மூலமும், 52 பேர் விசேஷ தேர்தல் மூலமும் இடம்பெற்றனர். 26 உத்தியோக ஸ்தானங்களும் 15 உத்தியோகப்பற்றில்லாத ஸ்தானங்களும், ஒதுக்கப்பட்டன. மேல்சபையென்ற ராஜாங்கசபை 60 பேரை யுடையதாயிருந் தது. இதில் 34 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராஜப்’ பிரதிநிதியின் நிர்வாக சபை 7 பேரைக்கொண்டதா யமைந்தது. இதில் 3 இடம் இந்தியருக்கு அளிக்கப்பட்டது. LDIT 5IT 600Tsár களில்ே நிர்வாகப் பொறுப்பு உத்தியோகத்தரிடத்திலும் மாகா ணச் சட்டசபையிலிருந்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் வசமும் ஒப்படைக்கப்பட்டது. இரட்டை யாட்சி என்ற அரசியல்முறை இவ்வாறு அமைக்கப்பட்டது.
பிரித்தானிய ஏகாதிபத்தியம் இரண்டு பகுதிகளையுடையதாய் அக்காலத்தில் கருதப்பட்டது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகள், பிரித்தானியர் மேற்பார்வையில் நம்பிக்கையாக ஒப்ப டைக்கப்பட்டவை என்றும், மற்றக் குடியேற்ற நாடுகள் பிரிட்டனின் பங்காளிகள் என்றும் கருதப்பட்டுவந்தது. இந்தியா நம்பிக்கையாக வைக்கப்பட்ட சொத் தென்ற அந்தஸ் திலிருந்து, கூட்டு பங்காளியென்ற அந்தஸ்துக்கு மாற்றப்பட்டது. அத்தகைய மாற்றத்தின் முதற்படியே 1919-ம் ஆண்டுச் சீர்திருத்தம். யுத்தகாலத்தில் வெளியிடப்பட்ட யுத்த இலட் சியங்கட்கு இணங்கவும் இந்தியாவைப்பற்றி வெளியிடப்பட்ட அறிக்கைகட்கு ஏற்பவும் இலங்கையையும் சுயாட்சியின் ஆரம் பப்படியில் பிரித்தானியர் விட்டுவிடுவார்களென்று இலங்கையில் கல்வி யறிவுபெற்ற வகுப்பினர் எண்ணியிருந்தார்கள்.

Page 119
名24 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
சீர்திருத்த இயக்கத்தைத் தூண்டுவதற்கு மற்ருெரு காரண மிருந்தது. பிரித்தானியர் சமயவிஷயங்களில் சுதந்திரமளித்த தன் பயனுக இந்து சமயமும் பெளத்த சமயமும் புனருத்தார ணஞ் செய்யப்பட்டன என்று மேலே கூறினேம். இதனல் சிங்களவரும், தமிழருமன்றி முஸ்லிம்களும், பறங்கிகளும் கூடத் தமது பழைய நாகரிகம் பயிற்சிப்பண்பு முதலியவற்றில் சிரத்தை காட்டினர். பிரித்தானிய ஆட்சியில் குறைவாக மதிக்கப்பட்ட தமது பழைய நாகரிகத்தைப்பற்றிச் சிங்களரும், தமிழரும் அதிகமாக எண்ணத் தலைப்பட்டனர். இந்த வகையான பயிற்சிப்பண் பின் மறுமலர்ச்சியினல் பறங்கியர் தாம் பிரித் தானியருடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களென உணர்ந் தனர். சிங்களவரும், தமிழரும் பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்க்க அரசியற்றுறையிலும் பொருளாதாரத் துறையிலும் முற்பட்டனர். அதற்கு இப் பயிற்சிப்பண்பு பக்கபலமாயிருந் தது. தற்கால முறையில் கல்வியறிவு பெருத பலர் கூட இதன் பயனப் அரசியல் சீர்திருத்தக்கிளர்ச்சியி லீடுபட்டனர்.
சர். பொன்னம்பலம் அருணசலமவர்களின் வீறுள்ள தலை மையில் அரசியல் சீர்திருத்தக்கிளர்ச்சி 1917-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மே மாதத்தில் இலங்கைச் சீர்திருத்தச்சபையென ஒரு சபை ஆரம்பிக்கப்பட்டது. என்ன விதமான சீர்திருத்தங்களைக் கோரவேண்டுமென்பதை ஆலோசி பதற்காக டிசெம்பரில் ஒரு பெரிய மகாநாடு கூடிற்று. தாழ்ந்த பிரதேசத்துச் சிங்களவரும் பெருந்தொகையான தமிழரும், மற்றச் சமூகங்களின் பிரதிநிதிகளுஞ்சேர்ந்து இலங்கைத் தேசீய காங்கிரஸென்ற ஸ்தாபனத்தை நிறுவினர்கள். வில் லிங்டன் பிரபு பம்பாய் மாகாணத்துக்குச் சிபார்சுசெய்த அரசியல் திட்டம் போன்ற ஒரு அமைப்பு இலங்கைக்கு வேண்டுமென இலங்கைத் தேசீய காங்கிரஸ் முன்னர் குடியேற்ற நாட்டு மந்திரிக்கு அனுப்பிய விண்ணப்பங்களை அனுசரித்து ஒரு கோரிக் கையை விடுத்தது. 50 அங்கத்தினரடங்கிய சட்டசபை வேண்டும். அதில் 40 பேர் பிரதேசவாரியாகத் தேர்ந்தெடுக் கப்பட்ட வேண்டும். மற்றவர்கள் நியமன அங்கத்தவரும், உத்தியோக அங்கத்தவருமாக இருக்கவேண்டும். சபைத் தலைவரைச் சபை தெரிவுசெய்யவேண்டும். வரவு செலவைத் தயாரிக்கும் பொறுப்பு முழுவதும் சட்டசபையின் கையிலிருக்க வேண்டும். பெண்கள் விஷயத்தில் ஒரளவுக்கு மட்டுப்படுத்தப் பட்ட உரிமையிருந்தாற்போதும். மூன்று இலங்கையர் நிர்வாக சபையில் பொறுப்புவாய்ந்த மந்திரிகளா யிருக்கவேண்டும். இதில் இருவர் சட்டசபை தேர்தல் அங்கத்தவரிலிருந்து தெரி யப்படவேண்டும் என இவ்வாறு சீர்திருத்தம் கோரினர்கள்.

அரசியல் முறையில் அபிவிருத்தி 225ー
சுருக்கமாகக் கூறுவதானல் இலங்கையில் பாராளுமன்ற ஆட்சி முறை ஸ்தாபிக்கப்படவேண்டுமென்று கோரினர்கள். பூரணப் பொறுப்பாட்சியும், சட்டசபைக்கு ஓரளவுக்குப் பொறுப்புள்ள நிர்வாகமும் வேண்டுமெனக் கோரினர்கள். இந்தக் கோரிக்கை. கட்குப் பதிலாக குடியேற்றநாட்டுமந்திரி மனிங் தேசாதிபதி யுடன் ஆலோசனை செய்த பின் 1920-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு சட்டசபை விவகாரச்சட்டத்தைப் பிறப்பித்தார். இந்தியா வுக்கு அளிக்கப்பட்ட மொண்டேகு-செல்ம்ஸ் போட் சீர்திருத் தங்களிலும் பார்க்க இலங்கைக்கு அளிக்கப்பட்ட சீர்திருத்தம் தாராளக் குறைவானதே. அது 1909-ல் இந்திய மாகாணங் கட்கு மோர்லி-மிண்டோ சிபார்சுசெய்த சட்டசபையமைப்புப் போன்றதே. வகுப்பு பிரதிநிதித்துவம் நிரந்தரமாக்கப்பட்டது. ஐரோப்பியருக்கும் பறங்கியருக்கும் விசேஷத் தேர்தல் தொகுதி கள் முன்போல் ஏற்படுத்தப்பட்டன. படித்த இலங்கையர் ஸ்தானம் என்ற தொகுதி கண்டிச் சிங்களவர், கீழைச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்களாகிய பல சாகியத்தவரை உள்ளடக்கிய படி யால் அந்த ஸ்தானம் கைவிடப்பட்டது. கண்டியருக்கு மேலும் ஒரு நியமன ஸ்தானம் ஒதுக்கப்பட்டது. விசேஷ நல வுரிமைகட்கு விசேஷ பிரதிநிதித் துவ மளிக்கப்பட்டது. தாழ்ந்த பிரதேச விளைபொருட் சங்கத்துக்கு ஒரு தேர்தல் ஸ்தானமும் ஐரோப்பிய வர்த்தக சங்கத்துக்கு ஒரு தேர்தல் ஸ்தானமும் வழங்கப்பட்டன. வேறு விசேஷ உரிமைகட்காக மூன்று நியமன ஸ்தானங்கள் வழங்கப்பட்டன. உத்தியோகத் தர்களுக்கு 14 ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டன. சிங்களருக்கும் தமிழர்க்கும் பிரதேசவாரியாக 11 ஸ்தானமும், மேல்மாகாணத்தின் எஞ்சிய பாகங்கட்கு இரண்டு ஸ்தானங்களும், மற்ற மாகாணங்களுக்கு, ஒவ்வொரு ஸ்தானமும் வழங்கப்பட்டன.
இந்தச் சீர்திருத்தங்களினல் பிரதிநிதித்துவம் வாய்ந்த அரசாங்க மென்ற கொள்கை இலங்கையிற் புகுத்தப்பட்டது. ஆஞல் இலங்கையருக்கு உண்மையான அதிகாரம் கிடைக்க வில்லை. 37 அங்கத்தவரடங்கிய இந்தச் சட்டசபையில் உத்தி யோகப் பற்றில்லாதவரின் தொகையே அதிகமானலும், தேர்தல் பிரதிநிதிகளின் தொகை 16 ஆகும். மேலும் மூன்று ஐரோப்பிய அங்கத்தினரும் முக்கியமான எந்தக் கொள்கையை பொறுத்த வரையிலும் 14 உத்தியோகத் தரையே ஆதரிக்கக்கூடிய நிலைமை யிருந்தது. மேலும் நியமன அங்கத்தவர்களும் எப்பொழுதும், தனது கொள்கையையே ஆதரிப்பார்களென அரசாங்கம் நம்பிற்று. எனவே சட்டசபையில் அரசாங்கம் பெரும்பான்மை யான ஆதரவு பெறக்கூடிய வகையில் சட்டசபை யமைந்தி ருந்தது.

Page 120
226 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
பின்னர் மூன்று உத்தியோகப் பற்றில்லாதவர்களை அரசாங் கம் நிர்வாக சபையில் சேர்த்துக்கொண்டது. இவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிலிருந்து தெரியப்படவில்லை. பொறுப்பாட்சியின் ஆரம்பத்தைக்கூட இலங்கையில் புகுத்த அரசாங்கம் விரும்பவில்லை யென்பது தெரிந்தது.
சட்டசபை விவகாரச் சட்டங்கள் தேசாதிபதிக்கு விசேஷ மான அதிகாரங்களை வழங்கின. எந்த மசோதாவையோ, தீர்மா னத்தையோ சபையில் வா த த் துக்கு எடுத்துக்கொள்ளாமல் நிறுத்த தேசாதிபதிக்கு உரிமையிருந்தது. விவாதம் பண்ணும் நேரத்தை மட்டுப்படுத்தவும், உத்தியோகப் பற்றில்லாத அங்கத்தவரைச் சட்டசபைக்கு வராது தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அவருக்கு உரிமையளிக்கப்பட்டது.
சீர்திருத்தங்களை இலங்கைத் தேசீய காங்கிரஸ் கண்டித்தது. சமூகங்களுக்கிடையே பகையை வளர்க்கக்கூடிய விதமான வித்தியாசங்களை உண்டாக்கிவிட்டது. விசேஷ நலவுரிமைகளைச் சிருஷ்டிசெய்திருக்கிறது. பொறுப்பாட்சியின் ஆரம்பத்தைக் கூட அது கொடுக்கவில்லை.* என்று காங்கிரஸ் கண்டித்தது. பிரதேசவாரியான தேர்தல் தொகுதிகளில் கண்டியைச் சேர்க் காமல் விட்டது சிங்களவரைப் பிரிக்க அரசாங்கம் செய்த சூழ்ச்சியெனக் கூறப்பட்டது. சர் திருத்தங்களை நடைமுறையிற் கொண்டுவருவது முடியாத காரியமென எண்ணி காங்கிரஸ் புதிய சட்டசபையைப் பகிஷ்கரித்தது.
மனிங் தேசாதிபதி இக் கண்டனங்களைப் பொருட்படுத்தாது தேர்தல் தொகுதிகளை அமைக்கும் வேலையிலீடுபட்டார். தாழ்ந்த பிரதேச விளைபொருட் சங்கத்தினர் தமது பிரதிநிதி யைத் தெரிவுசெய்து அனுப்ப மறுத்தனர். பின்னர் மனிங் தேசாதிபதி காங்கிரஸை நாடினர். காங்கிரஸ் ஒத்துழைக்கு மானல் புதிய சட்டசபை செய்யும் சிபார்சுகளின் பிரகாரம் மேலும் சில சீர்திருத்தங்களைத் தருவதாக காங்கிரஸ் தூதுக் கோஷ்டிக்கு வாக்களித்தார். 1920-ம் ஆண்டு டிசெம்பரில் மனிங் தேசாதிபதியின் விருப்பத்துக்கு காங்கிரஸ் இணங்கிற்று.
இம் மாதிரியான ஒரு சட்டசபையி லிருப்பதனல் நாட்டிற்கு எவ்வித நன்மையும் கிடையாதென சர். பொன்னம்பலம் அருணுசலமும் வேறுசிலரும் அபிப்பிராயப்பட்டார்கள். அவர் களுடைய அபிப்பிராயம் முற்றுஞ் சரி என்பது பின்னர் நடந்த சம்பவங்களிலிருந்து தெரியவந்தது. புதிய சட்டசபை 1921-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இதில் தாழ்ந்த பிரதேசத்தைச் சேர்ந்த சிங்களருக்கு 11 ஸ்தானங்களும், தமிழருக்கு மூன்று ஸ்தானங்களும், பறங்கிகட்கு 2 ஸ்தானமும்,

அரசியல் முறையில் அபிவிருத்தி 227
கண்டியருக்கு 2 ஸ்தானமும், முஸ்லிம்களுக்கு 1 ஸ்தானமும், இந்தியருக்கு 1 ஸ்தானமும் கிடைத்தது. கொஞ்சக்காலத்துக் குப்பின் இலங்கைத் தமிழர் தேசீய காங்கிரஸிலிருந்து விலகி விட்டார்கள். மேல் மாகாணத்துத் தமிழர்க்கு ஒரு ஸ்தானம் ஒதுக்கப்படவேண்டுமென அவர்கள் கோ ரி யிருந்தா ர் கள். பிரபலம் வாய்ந்த இரண்டு சிங்கள காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே அவ்வாறு வாக்களித்திருந்தபோதிலும் காங்கிரஸ் அதை ஆதரிக்காதபடியால் இலங்கைத் தமிழர் அதை விட்டு விலகினர். தமது சொந்தக் கோரிக்கைகளடங்கிய ஒரு விண்ணப் பத்தையும் குடியேற்றநாட்டு மந்திரிக்கு அனுப்பினர்கள். முந்திய சட்டசபையில் சிங்களப் பிரதிநிதிகட்குச் சமமான தமிழ்ப் பிரதிநிதிகளிருந்தபடியாலும் தமிழ்ச் சாகியத்தின் முக்கியத்துவத்தை முன்னிட்டும் புதிய சட்டசபையில் சிங்களரில் மூன்றி லிரண்டு பங்கு தமிழ்ப்பிரதிநிதிக ளிருக்கவேண்டுமென்று கோரினர்கள். தேசீய காங்கிரஸில் தாழ்ந்த பிரதேசத்துச் சிங்களவரே ஆதிக்கம் பெற்றிருந்தார்கள். இந்தியாவில் சுயாட்சி இயக்கமானது இந்து-முஸ்லிம் ஒற்றுமையினுற் றன் சித்தி யடைந்த தென்பதை இவர்களுணர்ந்து தமிழரைத் தமது பக்கம் திருப்புவதற்காக முயன்றனர். வடமாகாணத்துக்கும் கீழ் மாகாணத்துக்கும் குடிசனத்தொகைப்படி கிடைக்கக்கூடிய ஸ்தானங்களுக்கு அதிகமாகவே கொடுக்கத் தாம் உடன்படு வதாகக் கூறினர்கள். இந்தியாவில் முஸ்லிம்களை மின்டோ தம் வசமாக்கிக்கொண்டதுபோலவே இலங்கையில் தமிழரையும் மானிங் தம்வசமாக்கிவிட்டதாகத் தெரிகிறது. இவ்வாறு வகுப்புவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை க் கொண்ட சட்டசபையில் காங்கிரஸின் கோரிக்கைகள் நிறை வேறுவதற்கான சந்தர்ப்பமில்லாது போய்விட்டது. ஜனநாயக முறையில் அமைந்த தற்காலப் போக்குள்ள அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசவாரியான பிரதிநிதித்துவம் எவ்வளவு அவசியமாயிருந்தபோதிலும், தமிழரும், ஏனைய சிறுபான்மை யினரும் சிங்களருக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு அரசியலமைப்பை விரும்பவில்லை.
அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் முயற்சியில் முதல் முன் வந்த சர். ஜேம்ஸ் பீரிஸ் 1921-ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இலங்கைத் தேசீய காங்கிரஸ் விரும்பியவகையில் சில அரசியல் சீர்திருத்தங்களைச் சட்டசபையில் பிரேரித்தார். 45 அங்கத் தினரடங்கிய ஒரு சட்டசபை அமைக்கப்படவேண்டுமென்றும் அதில் தேசவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 பிரதிநிதி களும், சிறுபான்மையினராக பதினுெரு அங்கத்தினரும், ஆறு உத்தியோகத்தினரும் இடம்பெறவேண்டுமென்றுங் கோரினர்.
401

Page 121
228 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
தேசவாரியாகத் தெரிவுசெய்யும் 28 பிரதிநிதிகளில் வடமாகா ணத்துக்கும், கீழ் மாகாணத்துக்கும் 9 ஸ்தானங்கள் ஒதுக்க வேண்டுமெனவும் விவரித்தார். சட்டசபையின் கூட்டங்களில் தலைமைவகிக்க ஒரு சபாநாயகரைத் தெரிந்துகொள்ள வேண்டு மென்றும், வாக்களிப்பவர்களின் தராதரம் குறைக்கப்பட வேண்டுமென்றும் பிரேரித்தார். சட்டசபையிலிருந்த தமிழர், ஐரோப்பியர், பறங்கியர், முஸ்லிம்கள், இந்தியர் ஆகியோர் 1922-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கூட்டறிக்கையை விடுத்தார்கள், 45 அங்கத்தினரடங்கிய சட்டசபையில் 19 பேர் பிரதேசவாரியாகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டுமென்றும் 11 பேர் வகுப்புவாரியாகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டுமென் றும் உத்தியோகப் பற்றற்றவர்களாய் மூவர் நியமிக்கப்பட வேண்டுமென்றும், 12 பேர் உத்தியோகப் பற்றுள்ளவர்களா யிருக்க வேண்டுமென்றும், அந்த அறிக்கையிற் தெரிவித்தார்
கள்.
மனிங் தேசாதிபதி தேசீய காங்கிரஸின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவில் மிண்டோ வாதித்ததுபோலவே இவரும் இலங்கையில் வாதித்தார். இலங்கையில் பல சாதி யினர் இருக்கிறபடியாலும், வகுப்புமுறைப்படியே சமூக நடை முறைகள் அமைந்திருக்கிறபடியாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவமே ஏற்ற தென்று அவர் எடுத்துக்காட்டித் தமிழருடைய கோரிக்கைகளையும் சிறுபான்மையோர் கோரிக்கைகளையும் ஆத ரித்தார். பிரதேசவாரியாக 28 அங்கத்தினரைத் தேர்ந்தெடுப் பதை அவர் விரும்பவில்லை. 47 அங்கத்தவர் கொண்ட சட்ட சபையை அவர் ஆதரித்தார். தேர்தல் தொகுதி நிர்ணய சபை என்ற பெயருடன் புதிய சட்டசபை அங்கத்துவம் பற்றிச் சிபார்சு செய்வதற்குச் சட்டசபை அங்கத்தவரிடையிலிருந்து பொறுக்கி யெடுத்த ஒரு குழுவினர் செய்த சிபார்சை அனுசரித்து, ஊவா மாகாணத்துக்கும், வடமத்திய மாகாணத்துக்கும் ஒவ்வொரு ஸ்தா னம் அளிக்கப்படவேண்டுமென்றும் சபரகமூவா மாகாணம் வட மேல் மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம், கீழ் மாகாணம் ஆகியவற்றுக்குத் தனித்தனி இரண்டு ஸ்தானங் களும், வடமாகாணத்துக்கு 5 ஸ்தானமும் மேல் மாகாணத்தில் கொழும்புக்கு ஒன்றும், ஏனைய பகுதிகட்கு மூன்று ஸ்தானங்களும், ஐரோப்பியருக்கு மூன்று தேர்தல் ஸ்தானங்களும், பறங்கிகளுக்கு இரண்டும், மேல் மாகாணத் தமிழருக்கு ஒரு ஸ்தானமும், முஸ்லிம் களுக்கு மூன்று நியமன ஸ்தானங்களும், இந்தியருக்கு இரண்டும், விசேஷ நலவுரிமைகளைப் பாதுகாப்பதற்கு மூன்று ஸ்தானங் களும் ஒதுக்கப்பட வேண்டுமெனவும் மனிங் சிபார்சுசெய்தார்.

அரசியல் முறையில் அபிவிருத்தி 229
பிரதேசவாரியான தேர்தல் ஸ்தானங்கள் 21, (சிங்களவர் அதிகமாயுள்ள இடங்களுக்கு 14. தமிழர் அதிகமாயுள்ள இடங் களுக்கு 7.) வகுப்புவாரியான தேர்தல் ஸ்தானங்கள் 6. (ஐரோப்பியருக்கு 3, பறங்கியருக்கு 2, இலங்கைத் தமிழருக்கு 1.) 5 வகுப்புவாரியான நியமன ஸ்தானங்கள். (முஸ்லிம்களுக்கு 3, இந்தியருக்கு 2.) விசேஷ நலவுரிமைகளைப் பாது காக்க 3 நியமன ஸ்தானங்கள். உத் தி யோக ஸ்தானங்கள் 12. இவ்வாறன ஒரு சட்டசபை யமைப்பை மானிங் சிபார்சுசெய் தார். ஒரு சமூகம் மற்றச் சமூகத்தை அடக்கி ஆளமுடியாதபடி செய்வதே இந்த அமைப்பின் நோக்கமென மனிங் தேசாதிபதி வெளியே சொன்னபோதிலும், சீர்திருத்தத்துக்கு கிளர்ச்சி செய்த சிங்களவரும், தமிழருமாகச் சேர்ந்து சபையிலுள்ள ஏனைய உத்தியோகத் தர்களையும், மற்றச் சிறுபான்மையோரை யும் மிஞ்சிவிட முடியாதபடி அவர்கள் தொகையை அமைத் தார். அரசாங்கத்துக்கு முக்கியமான கருமங்களில் உத்தியோ கத்தவருடைய வாக்கோடு, நியமன அங்கத்தவர் ஐரோப்பியர், பறங்கிகளாகியோரின் வாக்கையும் பெற்று, பெரும்பான்மை சம்மதத்தைப் பெற்றுவிடலாமென மனிங் எதிர்பார்த்தார்.
பிரதேசவாரியான, தேர்தல் தொகுதிகளில் வாக்களிக்க உரிமையுடையவர்கலெல்லாரையும் உள்ளடக்கும் விஷயத்தில் மனிங் உடன்பட்டார். காங்கிரஸ் பிரேரித்த சீர்திருத்தங்களுள் மனிங் உடன்பட்ட முக்கியமான ஒரேயொரு சீர்திருத்தம் இதுவே யாகும். நாட்டிலுள்ள பலவேறு சனங்களையும் ஒன்று படுத்தும் தன்மையுடைமையால் இதுவே மிகத் தூரதிருஷ்டிவாய்ந்த சீர் திருத்தமாகும். மனிங்கும், வகுப்புவாதிகளும் கூட இதை ஆதரித்தார்கள். சிங்களவருடைய ஆதிக்கத்தை இந்தப் பிரேரணை குறைக்குமென அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.
வாக்குரிமையை விசாலமாக்குவதற்கு மனிங் விரும்பவில்லை. சபைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற பிரேரணையை அவர் ஆதரிக்கவில்லை. மோர்லி-மிண்டோ சீர்திருத்தத்தில் கண்டபடி உபதலைவர் ஒருவரைத் தேர்ந்து எடுப்பதற்கு அவர் இசைந்தார். நிர்வாகசபையில் தேர்தல் மூலம் பிரதிநிதிகளா யிருப்பவர்களைச் சேர்க்க அவர் விரும்பவில்லை. உத்தியோக அங்கத்தவரல்லாதவர்க்கு மந்திரிபதவி கொடுக்கவும் அவர் விரும்பவில்லை. தேர்தல் தொகுதிகட்குக் கடமைப்பட்ட அங்கத்தவரை நிர்வாக சபையில் வைத்திருக்கவும் அவர் விரும் வில்லை. அதாவது பொறுப்பாட்சியின் ஆரம்பத்தைக்கூட அவர் கொடுக்க விரும்பவில்லை. நிர்வாகசபை தேசாதிபதி யொரு வருக்கே பொறுப்புள்ளது. தேசாதிபதி குடியேற்றநாட்டு மந்திரிக்கும் பாராளுமன்றத்துக்கும் பொறுப்புள்ளவர்,

Page 122
23 O இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
இலங்கைத் தேசீய காங்கிரஸ் மனிங் தேசாதிபதியின் சிபார் சுகளை மறுபடியும் எதிர்த்தது. ஆனல் மூலாதாரமான மாற்றங் களெதையுஞ் செய்யக் குடியேற்றநாட்டு மந்திரி மறுத்து விட்டார். மகாசனங்கள் சாதி, சமயமென்ற உணர்ச்சிகளைக் கடந்து அரசியல் உணர்ச்சிபெறுவதற்கு பல வருடம் பிடிக்கு மென்ற காரணத்தைக் காட்டி, வரையறையின்றிக் கொஞ்சக் காலத்துக்கு வகுப்பு பிரதிநிதித்துவம் இருக்கவேண்டுமெனக் குடியேற்றநாட்டு மந்திரியும், மனிங் சொன்ன அபிப்பிரா யத்தை ஆதரித்தார். ஆனல், காங்கிரஸைத் திருப்திப் படுத்து
வதற்காகச் சில சலுகைகளைக் காட்டினர். கொழும்புக்கு மற்றெரு ஸ்தானமும், தென் மாகாணத்துக்கு மேலுமொரு ஸ்தானமுங் கொடுக்க உடன்பட்டார். இதனல் 1920-ம்
ஆண்டி லிருந்ததிலும் பார்க்கக் குறைவான ஸ்தானங்களைப் பெறக்கூடிய நிலைமையிலிருந்த தாழ்ந்த பிரதேசச் சிங்கள வருக்கு மேலும் இரண்டு ஸ்தானங்கள் கிடைக்கக்கூடியனவா யிருந்தன. இவற்றின் பயனகப் பிரதேசவாரியாகத் தெரிவு செய்யப்படுவோரின் தொகை இருபத்து மூன்ருகக் கூடியது. சிங்கள, தமிழ்ப் பிரதிநிதிகளின் தொகையும் 49* அங்கத்த வரைக் கொண்ட சபையில் இருபத்து நாலாயிற்று.
1921-ம் ஆண்டுச் சட்டசபை யமைப்பு
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நியமன அங்கத்தவர்கள்
கொழும்பு I கண்டியர் 2 மேல் மாகாணம் 2 முஸ்லிம்கள் மற்ற மாகாணங்கள் . . 8 இந்தியர் I பறங்கிகள் I விசேஷ நலவுரிமைகள் ... 3 ஐரோப்பியர் 2 உத்தியோக அங்கத்தவர் . . 14 தா. பி. தோ. ச. -
ஐ. வர்த்தகர் சங்கம் மொத்தம் 37
அப்படியிருந்தும் சபையில் அவர்கள் சிறுபான்மையினராகவே யிருந்தார்கள். முஸ்லிம்களும், இந்தியரும் தாங்களும் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண் டனர். காங்கிரஸும் இதை ஆதரித்தது. குடியேற்றநாட்டு மந்திரி இந்தக் கோரிக்கையையும் அனுமதித்தார். இவ்வாறு தேர்தல் மூலம் ஸ்தானம் வகிக்கும் இலங்கையரின் தொகை முப்பத்தொன்றக உயர்த்தப்பட்டது. இந்தியாவுக்கு மொண் டேகு-செல்ம்ஸ்போட் சிபார்சுகள் கொடுத்தது போன்ற பொறுப்பாட்சி இலங்கைக்கும் வழங்கப்பட்டது. அதுவுமன்றி மனிங் வெகு சாதுரியமாக அமைத்த பிரதிநிதித்துவத் திட்ட

அரசியல் முறையில் அபிவிருத்தி 23.
மும் தலைகீழாக்கப்ப்ட்டது. இவ்வமைப்பு இந்தச் சீர்திருத்தங் களைச் சித்திகரமாக நடைமுறையிற் கொண்டுவர உதவியாயிருந் திருக்கலாம்.
மத்திய அரசாங்க அமைப்பைப் பொறுத்தவரையில் இலங் கைக்குக் கடைசியாகக் கொடுக்கப்பட்ட அரசியல் திட்டம் பல வகையில் மொண்டேகு-செல்ம்ஸ்போட் திட்டத்தை ஒத்தி ருந்தபோதிலும், இரண்டு முக்கியமான விஷயங்களில் மாறு பட்டது. தாராளக் கொள்கைகளில் நம்பிக்கையிருப்பதாக இச்சீர்திருத்த அறிக்கை மேலும் எடுத்துக் காட்டிற்று. சுதந்தர மிருந்தாற்ருன் அதை அனுஷ்டிக்க மனிதர் தயாராகமுடியும் என்ற கொள்கையை ஆதரித்தது. குடிசனங்கள் ஒரே இனத் தைச் சேர்ந்தவர்களாகும் வரை இந்தியா சுயராச்சியத்துக்கு அருகதையற்றதென்ற கொள்கையை நிராகரித்தது. படிப் படியாகச் சுயராச்சியம் வழங்கப்படுமென்று வாக்களித்ததோடு நில்லாமல், அதற்கான முதற்படியையும் அமைத்துவிட்டது.
மொண்டேகு-செல்ம்ஸ் போட் அறிக்கை வகுப்புத் தேர்தல் தொகுதிகளிருக்கக்கூடாதென அபிப்பிராயப்பட்டது. அரசியல் அனுபவம் பெருத ஒரு தேசத்தாரின் அரசியல் வளர்ச்சியில் வகுப்புப் பிரதிநிதித்துவம் ஏற்படுத் தப் பட வேண்டியது அவசியமென்ற கொள்கையை, இந்த அறிக்கை கண்டித்தது. சாதி, சமயப் பாகுபாட்டை அனுசரித்துக் குடிசனங்களைப் பிரித்தால், பர்ஸ்பரம் மாறுபாடான அரசியல் வகுப்புகள் உண்டாகும். அதனுல் குடிகள் வகுப்புமுறையில் எண்ணத் தலைப்படுவார்களே யல்லாமல் ஒரு தேசக் குடிகளென்று எண்ண மாட்டார்கள். வகுப்புக்கொள்கை மாறித் தேசீயக்கொள்கை உதயமாவது கஷ்டசாத்தியமான கருமமாகும். பிரித்தானியர் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளுகிருர்களென்று அடிக்கடி குற்றஞ் சுமத்தப்படுகிறது. சுயாட்சி கொடுப்பதற்கு முயற்சி செய்யுந் தறுவாயில் பிரித்தானியர் பிரித்தாளும் சூழ்ச்சியை அவசியமில்லாது கைக்கொள்ளுவார்களானல் மற்ருெருபுறத்தில் தூரதிருஷ்டி யற்றவர்கள் ; பாசாங்குக்காரர் என்ற குற்றச் சாட்டுக்கு ஆளாகவேண்டியேற்படும் என்று மொண்டேகுசெல்ம்ஸ் போட் அறிக்கை குறிப்பிடுகிறது.
இலங்கை விஷயத்திலும் குடியேற்றநாட்டு மந்திரியும், மனிங்கும் இம்மாதிரியான ஒரு அறிக்கையை ஏன் வெளியிட வில்லை. இலங்கைக்கும் படிப்படியாகச் சுயாட்சி வழங்கப்படு மென அவர்கள் ஏன் வாக்களிக்கவில்லை ? பல வேறு சமூகத்த வரையும் ஒன்றுபடுத்தக்கூடிய ஒரு அரசியல் திட்டத்தை அருளி இலங்கையிலும் தேசீய உணர்ச்சி வலுவடைய அவர்கள் ஏன் உதவவில்லை. அதற்குமாருக வகுப்புவாதத்தை வளர்க்கும்

Page 123
232 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
ஒரு அரசியலமைப்பை ஏற்படுத்தி, பிரித்தானியர் பாசாங்குக் காரர், துார திருஷ்டி யில்லாதவர்களென்ற குற்றத்துக்கு ஏன் ஆளாஞர்கள். இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பல பல கஷ்டங்க ளிருந்தபடியால் மிண்டோ ஏற்படுத்திய தனித் தொகுதிகளைத் தொடர்ந்து நிர்வகிக்க வேண்டுமென மொண் டேகு-செல்ம் ஸ்போட் அறிக்கை கூறியது உண்மையே. முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல, ஏனைய சிறுபான்மையோருக்கும் 1919-ம் ஆண்டுச் சட்டம் தனித் தொகுதிகளைக் கொடுத்தது. இந்தியாவைப்போல் சாதி சமய பேதங்கள் அதிகம் வேரூன் ழுததும், பலவேறு சமூகத்தவர்களையும் ஒன்றுபடுத்தும் முயற்சி திறம்பட நடைபெற்று வந்ததுமான இலங்கையில் தனித் தொகுதிகளை மேலும் அதிகரிப்பதற்கு என்ன நியாயம் ?
ஒரு காரணம் கூறலாம், நம்பிக்கைப்பொருளாக வைத்தி ருந்த குடியேற்ற நாடுகளின் எதிர்கால நிர்வாகத்தைப்பற்றி பிரித்தானிய ஏகாதிபத்தியம் திட்டமான ஒரு கொள்கையைக் கருத்தில் வைக்கவில்லை. இந்தியா சம்பந்தப்பட்ட வகையிலும், பிரித்தானியரின் தூர கீழ் திசை நாடுகளுடன் போக்குவரத்துச் சம்பந்தப்பட்ட வரையிலும், இலங்கை மிகமுக்கியமான ஒரு ஸ்தானத்தை வகிக்கிறதென்பதை, யுத்தம் காரணமாக பிரித் தானியர் பூரணமாக உணரக்கூடியதாயிருந்தது. இதனல் இலங்கைக்குச் சுயாட்சி கொடுக்கும் விஷயத்தில் அவர்கள் உற்சாக ங் கொள்ளவில்லை.
ஏகாதிபத்திய அரசாங்கம் பிறப்பிக்குஞ் சட்டங்கள் எவ் வாறு இலங்கை மக்களைப் பாதிக்குமென்பதை அறிவதற்கு இலங்கைச் சட்டசபையை ஒரு கண்ணுடிபோல ஏகாதிபத்தியம் பயன்படுத்தவே கருதியதென்பதும், சனங்களிடையே ஏற்படும் அதிருப்தி விரோதமாக மாரு மல் தடைசெய்வதற்கு அதை ஒரு கருவியாகக் கருதியதென்பதும் 1920-ம் ஆண்டில் அது பிறப்பித்த அரசாங்க சபை விவகாரச் சட்டத்திலிருந்து அறியக் கூடியதாயிருந்தது. 1911-ல் பிறப்பிக்கப்பட்ட விவகாரச் சட்டமும் இவ்விஷயத்தையே சுட்டிக்காட்டிற்று. சில அரசியல் சலுகைகளையாவது காட்டவேண்டி யிருந்தபடியால் பிரித்தானிய இந்தியாவில் வகுப்புப்பிரிவை அடிப்படையாகக்கொண்டு மோர்லி-மிண்டோ சிபார் சின் படி வழங்கப்பட்ட மாகானச் சட்டசபை போன்ற ஒரு சட்டசபையை இலங்கையிலும் தாபிக்க வேண்டுமெனத் தீர்மானித்தது. இதன் பயனுய் இலங்கையில் பாராளுமன்ற ஆட்சிமுறையைப் பிற்காலத்தில் தாபிக்கலா மென அதிகார வர்க்கம் எண்ணியதில்லை. இந்த அரசியல் சீர்திருத்தைச் சிங்களவர் தமிழராகிய இரு பெரும் சாகியத் தாரும் வேண்டாமெனத் தள்ளிவிடவே பிரித்தானிய அரசாங்

அரசியல் முறையில் அபிவிருத்தி 233.
கம் வேருெரு தந்திரத்தைக் கையாண்டது அதாவது வகுப்புப் பிரதிநிதித்துவத்தை விஸ்தரித்துச் சிங்களவரையும் தமிழரை யும் சட்டசபையில் சிறுபான்மையினராக்கிற்று. இதனல் மேலும் அதிக காலம் தனது அதிகாரம் குறையாமல் ஆட்சி நடத்தலாமென பிரித்தானிய அரசாங்கம் எண்ணிற்று. தேச மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியால் இலங்கையில் பிரித்தானி யரின் அதிகாரம் குறைந்துவிடமெனக் கருதப்படவில்லை. இந்த ஒற்றுமையின் பயனக பிரித்தானிய ஆட்சிக்கு எதிர்ப்பு உண் டாகவே தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக அரசாங் கம் தனது கொள்கையை மாற்றப் பின்வாங்கவில்லை
2. டொனமோர் அரசியல் திட்டமும் அதன் பயனும்
1920-ல் மனிங் பிரகடனஞ் செய்த அரசியல் திட்டம் ஒரு வகையில் சித்தியடைந்ததாலும் அடைந்திருக்கலாம். ஆனல் 1924-ம் ஆண்டுத் திட்டம் அதுவும் குடியேற்றநாட்டு மந்திரி ஏற்படுத்திய மாற்றங்களோடு கூடிய திட்டம் சித்திகரமாக நடைபெற முடியவில்லை. மோர்லி-மிண்டோ மாகாணச் சபைகள் (இவை ஒன்றிலாவது தேர்தல் மூலம் அங்கத்துவம் பெற்ற இந்தியர் பெரும்பான்மை இடம் பெறவில்லை) நிர்வாக சபைகள் தமது கடமையைச் சரிவரச் செய்வதற்குத் தடையா யிருக்கின்றனவென்று 1918-ல் வெளியான மொண்டேகுசெல்ம்ஸ்போட் அறிக்கை குறிப்பிட்டது. இந்தியாவில் அப்படி யானுல் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கத்துவம் வகித்தவர்களும் பெரும்பான்மையா யுள்ளவர்களுமான பிரதி நிதிகளடங்கிய இலங்கைச் சட்டசபை எவ்வளவு தடையா யிருக்கவேண்டும். மேலும் வரவுசெலவு விஷயங்களை நிர்ண யிப்பதில் இந்திய சட்டசபைகளுக்கில்லாத அதிகாரங்கூட இலங் கைச் சட்டசபைக்கிருந்தது.
இலங்கையில் சமூகப் பிரிவு வகுப்பு வித்தியாசத்தை அடிப் படையாகக் கொண்டிருக்கிறதென மனிங் தேசாதிபதி கூறியது சரியே. சாதிகளுக்கிடையே கலப்புமணம் கிடையாது. அவை தனிப்பட்ட வகுப்புகளாகப் புறம்பாயிருந்தன. g5 69, ח(וFית ח மறுமலர்ச்சி யேற்பட்டதன் பயணுகச் சமீபகாலத்தில் இச் சாதி வித்தியாசம் மேலும் வலுவடைந்தது. பிரித்தானியர் இலங் கையைக் கைப்பற்றிய காலத்தில் இலங்கையிலுள்ள பலவேறு வகுப்பினரும் சமமான ஒரு முன்னேற்றத்தை அடைந்திருக்க வில்லை. பிற்போக்குள்ள பகுதியினருக்குக் கல்வியூட்டி முன் நிலைக்குக் கொண்டுவரும் முயற்சியும் நடைபெறவில்லை. இதன் பயனக சமூகத்தில் உயர்ந்த ஸ்தானத்தை வகித்த தனவந்தர் கள் மாத்திரமே அரசாங்கம் உதவிய புதிய சந்தர்ப்பங்களை

Page 124
234 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
தமது நன்மைக்குப் பயன்படுத்தக் கூடியதாயிருந்தது. கீழைச் சிங்களவருக்கும் தமிழருக்கும் கல்வி விஷயத்திலிருந்த வசதிகள் முஸ்லிம்கட்கும், கண்டிவாசிகட்கு மில்லாதபடியால் அவர்கள் முன்னேற முடியாதிருந்தது. . உஷ்ணமண்டலத்தில் வசித்த தமிழர்கள், மலைநாடுகளில் தோட்டங்கள் திறந்த தனல் ஏற் பட்ட பொருளாதார மாற்றத்தினுல் நேரடியாகப் பயன் பெற முடியாமற்போகவே அரசாங்க உத்தியோகத்தை நாடினர்கள். இந்தியாவிலும் அதற்கப்பாலுமுள்ள தேசங்களில் உத்தியோ கங்கள் கிடைக்காமற் போனதாலும், கீழைச் சிங்களவர் போட்டி கடுமையாயிருந்ததாலும் தமிழர் தமது வருங்காலத்தைப் பற்றிப் பயப்படவேண்டியதாயிற்று. முஸ்லிம்களும், கண்டிவாசிகளும், முன்னேற்றமடைந்த ஏனைய சமூகங்கள் அடைந்து வந்த செல் வாக்கையும் அதிகாரத்தையும் தாங்களும் பெறவேண்டுமென் றெண்ணித் தமது வகுப்பு ஒற்றுமையைப் பலப்படுத்தினர். தமிழரும் பறங்கியரும் தாம் ஏற்கனவே அனுபவித்துவந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைநிறுத்துவதற்கு முயன் றர்கள். அரசியல் சீர்திருத்த வாதங்களில் தமிழரும், மற்றச் சிறுபான்மையினரும் வழக்கமாகச் சிங்களவருக்கு எதிராக நின் ருர்கள். சிங்களவரும் தமிழரும் ஒன்றுசேர்ந்த காலத்தில் சிறுபான்மையினர் உத்தியோ கவர்க்கத்தினரோடு சேர்ந்து
கொள்வார்கள். சீர்திருத்த வாதம் என்பதை ஆராய்ந்தால்
அது அதிகாரத்துக்கும் செல்வாக்குக்கும் போடப்படுஞ் சண்டை யாகவே யிருந்தது.
ஆனல் மனிங் தேசாதிபதி ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். பிரித்தானியர் தாங்கள் விரும்பாமலே நாட்டிலுள்ள சமூகத் தவரின் நலன்களை ஒன்று படுத்திவிட்டார்கள். அரசியல் சீர் திருத்தம் வழங்கப்பட்டால் அவை இலேசாகப் பிரிந்துபோக முடியாத அளவுக்கு பலவேறு வகுப்பாரிடையிலும் ஒற்றுமை யேற்பட்டுவிட்டது. 1815-ல் கண்டிராச்சியம் பிரித்தானியர் கைவசமானதும் இலங்கை முழுவதும் ஒரு தனி அரசியல் அமைப்பில் சேர்ந்துவிட்டது. பிரித்தானியரும் நாட்டின் பல பகுதிகளையும் ஒன்றுபடுத்தி மத்திய அரசாங்கம் ஏற்படுத்தும் கொள்கையை அனுஷ்டித்து வந்தார்கள். கோல்புறுாக் சிபார்சு களின் பயணுக மேற்கிலும் தெற்கிலும் உள்ள கீழைச் சிங்களர் பிரதேசங்களும் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள தமிழர் பிரதேசங் களும் மத்திய பாகங்களிலுள்ள கண்டிப்பகுதியும் எல்லாம் ஒரு பொது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. வகுப்புப் பிரிவைப் பொருப்படுத்தாமல் இலங்க்ை ஐந்து மாகாணங்களா கப் பிரிக்கப்பட்டது. அத்துடன் கமரனின் சிபார்சின் பயனுக

அரசியல் முறையில் அபிவிருத்தி 235
இலங்கை முழுவதிற்கும் பொதுவான் நீதிமன்றங்க ளமைக்கப்பட் டன. சாதிவித்தியாச மின்றி ஐரோப்பியர், இலங்கையர் எல்லா ருக்கும் ஒரே நீதி வழங்கப்பட்டது.
இந்த அரசியல் நிர்வாக ஒற்றுமை ஏற்பட்டபின்னர் பொருளாதார ஒற்றுமையும் ஏற்பட்டது. இராசகாரிய முறையை அரசாங்கம் நீக்கியதோடு அரசாங்கத்துக்கே சொந்த மாயிருந்த வியாபார உரிமையும் நீக்கப்பட்டது. தொழிலாளர் குறித்த ஒரு தொழிலைத்தான் செய்யவேண்டுமென்ற கட்டுப் பாடில்லாமல் எல்லாத் தொழிலிலும் ஈடுபட்டார்கள். வியா பாரத்தில் எல்லாரும் பங்குபற்றினர். தோட்டங்கள் எங்கும் திறக்கப்பட்டன. வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வியாபாரப்பொருள்கள் உற்பத்திசெய்யப்பட்டன. முன்னெல் லாம் உள்ளூர்த் தேவைக்கான பொருள்களே விளைவாயின. இப்பொழுது அந்த முறை மாறிவிடவே ஒரு பகுதியிலுள்ளவர் கள் தீவின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. இவ்வாறு தீவின் பல பகுதியினரின் நலன்களும் ஒன்றே டொன்று இணைந்து போயின.
இந்தப் பொருளாதார ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்கு வேறு பல காரணங்களுந் துணைசெய்தன. ரோட்டுகள் ஏராள மாகத் திறக்கிப்பட்டன. தந்தி டெலிபோன் முதலியன அமைக் கப்பட்டன. இவ்வாறு தீவின் பல பாகங்களையும் நெருங்கித் தொடர்புகொள்ளச் செய்யும் தபால் இலாகா அபிவிருத்தி யடைந்தது. இதனல் மத்திய அரசாங்கம், மfகாணங்களுடன் நெருங்கிய சம்பந்தம் ஏற்படுத்தியதால் இலங்கை முழுவதற்கும் பொதுவான ஒரு அரசாங்க நிர்வாகமுறை பல முற்றது.
மேலும் ஆங்கிலக் கல்வியின் பயனப் பல வகுப்பினரும் ஒருவரோடொருவர் நெருங்கிப்பழகினர். ஒரு பொதுப்பாஷை யும், ஓரளவுக்கு ஒரு பொதுவான வெளிநோக்கும் ஏற்பட்டது. சமூகத்துறையில் பலரும் ஒன்றுசேர வழிபிறந்தது. இவற்றல் இலங்கையில் பலவேறு சாதியாரும் ஒன்றுசேர்வதற்கான கார ணங்கள் பெருகவே வேற்றுமைகள் குறையத் துவங்கின.
புதிய சட்டசபை மத்திய வகுப்பாருக்கு அதிகாரம் வழங் கிற்று. மேலும் அதிகாரத்தைப் பெறுவதற்காக இவ்வகுப்பி னர் அரசியல் சீர்திருத்தத்துக்கு வாதாடினர். சட்டசபையிலும் பெரும்பான்மை ஸ்தானங்கள் இவ் வகுப்பினருக்குக் கிடைத்தது. வகுப்புமுறையில் பிரிந்துநிற்கும் மனப்பான்மை அருகிற்று.
401–Ia,

Page 125
236 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
நிர்வாக அதிகாரிகள் தாங்கள் நினைத்தபடி கருமங்களைச் செய்ய வும், தேசாதிபதி குடியேற்றநாட்டு மந்திரிக்குப் பொறுப்பான விஷயங்களைத் தான் விரும்பியபடி நடத்தவும் முடியா மற் போய்விட்டது.
மனிங் தேசாதிபதியின் பின்னர் சர். ஹியூ கிளிப்போட் அப்பதவியை ஏற்றர். (1925-1927) புதிய அரசியலமைப்புத் திருப்திகரமாயில்லையென அவர் குடியேற்றநாட்டு மந்திரிக்கு அறிவித்தார். அதன் பயணுக அர சி ய ல் விசாரணைக் குழு வொன்று ஏற்படுத்தப்பட்டது. இதற்கு டொனமூர் பிரபு தலைவராகவும், அவருடன் சர். மதியூநாதன், சர். ஜியோ பிரே பட்லர், டாக்டர் டிரம் மண்ட் ஷில் ஸ் என்பவர்கள் மற்ற அங்கத்தவர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பிரித் தானிய பார் லிமெண்டிலுள்ள பழமை தழுவும் கட்சி, தொழிற் கட்சி, மிதவாதிகளாகியோரின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட் டனர். இலங்கைக்குப்போய் அங்கே தற்போது நடைமுறையி லிருந்துவரும் அரசியல் முறையை ஆராய்ந்து அது எப்படி அமுல் நடத்தப்படுகிற தென்பதைப்பற்றியும், அது சம்பந்தமாக நிர்வாக விவகாரங்களில் ஏதாவது கஷ்டங்களிருந்தால் அதைப் பற்றியும் அறிவிக்கவேண்டும். அத் துட ன் தற்போதைய அரசியல் முறையில் மாற்றங்களை அமைப்பதற்கான யோசனை களை விசாரணை செய்வதுடன், நடைமுறையிலிருக்கும் அரசாங்க விவகாரச் சட்டங்களில் ஏதாவது மாற்றங்கள் செய்யலாமா என்பதையும் அறிவிக்கவேண்டும்." என்ற விதமாக விசா ரணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு நவம்பரில் விசாரணைக்குழு இலங்கைக்கு வந்து விசாரணை செய்துகொண்டு 1928-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்குத் திரும்பிற்று: அறிக்கை அதே ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
நிர் வா க ப் பொறுப்பில்லாத வெறும் பிரதிநிதிச்சபை யிருப்பது இலங்கை அரசியலமைப்பிலுள்ள ஒரு குறையென டொனமூர் விசாரணைக் குழுவினர் கண்டார்கள். முன்காலத் தில் சட்டசபைக்குப் பொறுப்பில்லாத நிர்வாகசபை யிருந்தது. அதற்குச் சர்வ அதிகாரமுமிருந்ததால் சட்டசபையின் விருப்பத் திற்கு அது சிறிதும் பணியவேண்டி யிருக்கவில்லை. பின்னர் ஏற்பட்ட சீர்திருத்தத்தின் பயனுகச் சட்டசபைக்கு அதிக உரிமை வழங்கப்பட்ட போதிலும் நிர்வாக அதிகாரம் வழங்கப் படவில்லை. எந்த நிர்வாக சபையை அது எதிர்த்து வந்ததோ அதன் இடத்தில் தான் ஆட்சிநடத்தச் சட்டசபைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. தீர்மானஞ்செய்யும் உரிமையே சட்ட சபைக்கிருந்த தொழிய அத் தீர்மானத்தை நிறைவேற்றும் அதிகாரம் அதற்கிருக்கவில்லை. மேலும் நிர்வாக சபையும்

அரசியல் முறையில் அபிவிருத்தி 237
தானுக ஒன்றுஞ்செய்யமுடியாத நிலைமையிலிருந்தது. அரசாங் கத்தை நடத்தும் அதிகாரம் அதன் கையிலிருந்தபோதிலும் சட்டசபையின் அனுமதியைப் பெறுவதற்கு அதற்குப் பெரும் டான்மை ஆதரவு அங்கே யிருக்கவில்லை.
நிர்வாக சபைக்குப் பணவிஷயத்தில் போதிய அதிகார மிருக்கவில்லை. என்ன என்ன திட்டங்களுக்குப் பணத்தைச் செலவு செய்யலாமென்று நிர்ணயிக்கும் உரிமை மாத்திர மிருந் தது. ஆனல் ப ன த்  ைத ஒதுக்கிடும் அதிகாரம் சட்ட சபையின் உத்தியோகப் பொறுப்பற்றவர்கள் கையிலிருந்தது. மோர்லி-மிண்டோ மாகாணச் சட்டசபைகளுக்குக்கூட இம் மாதிரிப் பண அதிகாரம் கொடுக்கப்படவில்லை. இலங்கைச் சட்டசபையில் உத்தியோகப் பொறுப்பற்றவர்கள் பெரும் பான்மையினராக்கப்பட்ட பொழுதும் கூட 1867-ல் சட்ட சபைக்கு வழங்கப்பட்ட பண அதிகாரம் வாபஸ் செய்யப்பட வில்லை. எனவே உத்தியோகப்பொறுப்பற்றவர்கள் பெரும் பான்மையாயுள்ளி பணக்கமிட்டி, நிர்வாகசபையிலும் பார்க்க அதிக அதிகாரத்தை நடத்திவந்தது.
உத்தியோகப்பொறுப்புள்ள அங்கத்தவர், தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளாகிய இருவகை அங்கத்தினரிடையே உள்ள வேறுபாட்டைப் பழைய அரசியல் திட்டம் அழுத்தம் திருத்த மாக எடுத்துக் கூறிற்று. நிர்வாகசபையில் 5 உத்தியோகப் பொறுப்புள்ள அங்கத்தினரும், 4 உத்தியோகப் பொறுப்பற்ற வர்களும் அங்கத்துவம் வகித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் இருவர் நிர்வாகசபையில் சேர்க்கப்பட்டார்கள். அவ்வாறு சேர்க்கப்பட்டவர்கள் தமது தேர்தல் தொகுதி ஸ்தானத்தைக் கைவிட்டுவிட்ட நியமன அங்கத்தினர் என்ற முறையிலேயே சேர்க்கப்பட்டனர். எனவே உத்தியோகப் பொறுப்புள்ளவர்களே நிர்வாகசபையில் பெரும்பான்மையினர். உத்தியோகப் பொறுப்பில்லாத தேர்தல் பிரதிநிதிகள் சட்ட சபையில் பெரும்பான்மையினராயிருந்தனர். இவ்வாறு இவ்விரு” சபையினருக்குமிடையில் தொடர்பில்லாதிருந்தது. அதனல் இரு சபைக்குமிடையில் பிணக்கு ஏற்படுவது சகஜமாயிற்று. உத்தி யோகப் பொறுப்பில்லாத சட்டசபை அங்கத்தவர்கள் அரசாங் கத்தின் நிர்வாகத்தில் பங்கில்லாதவர் களாயிருந்தபடியால் நிர் வாகசபையின் செய்கைகளைப் பொறுப்பற்ற முறையில் நிரந்தரம் கண்டித்துவந்தார்கள்.
நிர்வாகசபை தனது கடமைகளைத் தடையில்லாமற் செய் வதற்காக அரசியல் திட்டத்திலே விசேஷ அதிகாரம் வழங்கப் பட்டது. அந்த அதிகாரத்துடனும் உத்தியோகப் பொறுப்

Page 126
238 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
புள்ள அங்கத்தவர்களின் ஆதரவுடனும் அரசாங்கம் எந்தவித மான காரியத்தையும் செய்து முடிக்கக்கூடியதா யிருந்தது. அப்படிச் செய்வதானுல் சட்டசபை எதற்கு ? சட்டசபை அவசியமே யில்லை. ஆதலால் சட்டசபையிலுள்ள உத்தியோகப் பொறுப்பற்றவர்களின் ஆதரவையும் பெறுவதற்காக நிர்வாக சபை விட்டுக்கொடுத்தும் தான் கொண்ட கொள்கைகளை மாற்றி யும், தனது அதிகாரத்தைக் கைவிட்டும் வந்தது. எனவே நிர்வாகசபை வலியற்றதாகவே நாட்டின் நிர்வாகத்துக்குப் பூரண பொறுப்பு வாய்ந்த தேசாதிபதி தனது கடமைகளைத் திருப்திகரமாகச் செய்யமுடியாமற்போய்விட்டது.
டொனமூர் விசாரணைக் குழுவினர் மனிங் அரசியல் திட்டத் தைக் கண்டித்தார்கள். இலங்கைக்கு ஏற்ற ஒரு அரசியல் திட்டம் எதுஎன்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்தார்கள். பிரதி நிதித்துவம் வாய்ந்த ஆட்சி யிருந்துவந்தது. அடுத்தபடி பொறுப்பாட்சி. பொறுப்பாட்சியை இலங்கைக்கு உடனே கொடுப்பது உசிதமென விசாரணைக்குழுவினர் எண்ணவில்லை. அரசாட்சி முறையில் இலங்கையர் மேலும் அனுபவம் பெற்றல் தான் பொறுப்பாட்சிக்கு அவர்கள் தகுதிவாய்ந்தவர்கள். மேலும் இலங்கையரிடையே சாதி அபிமானம் அதிகமிருந்தது. அதனல் நாட்டின் பொதுநலனுக்குகந்த ஒற்றுமை மனப்பாங்கு ஏற்படவில்லை. பொறுப்பாட்சிக்குச் சிறுபான்மையினர் எதிரிடை யாயிருந்தார்கள். எனவே ஒரளவுக்குப் பொறுப்புள்ள ஆட்சியை வழங்குவதென விசாரணைக்குழுவினர் எண்ணினர்கள்.
இலங்கையைச் சுயாட்சிப்பாதையில் விட்டுவிடவேண்டு மென அவர்கள் தீர்மானித்ததும் மூன்று பிரச்னைகளை அவர்கள் ஆலோசிக்கவேண்டியிருந்தது. தமிழரும் ஏனைய சிறுபான்மை யினரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென வாதாடி ஞர்கள். ஆனல் விசாரணைக் குழுவினர் இந்தியாவில் மொண் டேகு-செல்ம்ஸ்போட் அறிக்கையில் குறிப்பிட்ட தொகை யையே அனுசரித்தார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது அரசியல் வாழ்வில் பிளவை போன்றது. அது நாளுக்கு நாள் பொதுமக்களின் சத்தை உறிஞ்சி உறிஞ்சி அவர்களைச் சக்தி யற்றவர்களாக்குகிறது. சுயநலத்தையும் பரஸ்பரம் சந்தே கத்தையும் பகையையும் உண்டாக்கி புதிய அரசியல் உணர்ச்சி ஊற்றுக்களில் நஞ்சூட்டுகிறது. அதனல் தேசீய ஒற்றுமை வளர்வதற்குப் பெரிய தடையுண்டாகிறது. அரசியல் திட்டத் தில் ஒற்றுமைக்குறைவை யுண்டுபண்ணும் அம்சங்களெல்லா வற்றையுமுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்கும் வரை, நாட்டின் குடிகளாயுள்ளவர் களிடையே யுள்ள பல

அரசியல் முறையில் அபிவிருத்தி 239 ܚ
வேறு பிரிவினரையும் ஒன்றுபடுத்தி ஒரே தேசத்தவரென்ற முறையில் அவர்கள் பொது உறவையும், பொதுக் கடமைகளை யும் உணரச்செய்ய முடியாது ' என அபிப்பிராயப்பட்டார்கள். இந்தியாவிலிருப்பது போல இலங்கையில் வகுப்பு பிரதி நிதித்துவத்தைத் தொடர்ந்து நடத்துவது அவசியமில்லையென் பதை விசாரணைக்குழுவினர் உணர்ந்தனர். சட்டசபைப் பிரதி நிதிகளிற் பெரும்பாலோர் குறுகிய வகுப்பு நலங்களைப் பாராமல் தேசத்தின் பொதுநலனே உத்தேசித்துக் கருமங்களை நடத்தி வந்திருக்கிருர்கள். மேலும் வகுப்புப் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து அமுல் நடத்துவதற்கு என்ன சமாதானம் ? பழைய ஒரு சம்பிரதாயமென்று கருதலாமா ? இல்லை. அதனுல் நற்பய னேற்படுமா ? என்ருல் முன்னே அந்த முறையைக் கையாண்டு பார்த்து தீமையே உண்டாகிறதென அனுபவத்திலறிந்த விஷயம். எனவே வகுப்புப் பிரதிநிதித்துவத்தை டொனமூர் குழுவினர் ஒழிக்கத் தீர்மானித்தனர். ஆனல் தற்காலிகமாக சிறுபான்மையினருக் கென்று 12 நியமன ஸ்தானங்கள் ஒதுக்கப் பட்டன. இதில் ஆறு ஸ்தானம் ஐரோப்பியருக்கென ஒதுக்கப் பட்டது. சிறுபான்மையினருக்கு ஏற்படும் பயத்தைத் தணிப் பதற்காக தேசாதிபதிக்கு விசேஷ அதிகாரம் கொடுக்கப்பட்டது. இந்த அதிகாரப்படி தேசாதிபதி பகடி பாதனமான மசோதாக் களுக்கு அனுமதிகொடுக்க மறுக்கலாம். ' குறித்த ஒரு வகுப் பையோ, மார்க்கத்தையோ சேர்ந்தவர்களுக்குப் பாதகமாயும், மற்றவர்களுக்குச் சாதகமாயும் இயற்றப்படும் மசோதாக்களை அனுமதிக்கத் தேசாதிபதி மறுக்கலாம்.'
அடுத்தபடியாக விசாரணைக்குழுவினர் வாக்குரிமை விஷய மாக ஆராய்ச்சி செய்தனர். கல்வி அந்தஸ்து மிருக்கவேண்டு மென 1920-ல் விதித்திருந்தபடியால் மத்திய வகுப்பினருக்கே வாக்குரிமை கிடைத்தது. வாக்குரிமையை மேலும் விஸ்தரிக்க வேண்டுமென 1924-ல் கிளர்ச்சி செய்யப்பட்ட போதிலும் மனிங் தேசாதிபதி அதற்கு உடன்படவில்லை. எல்லா மாக 204,997 பேருக்கே வாக்குரிமை யிருந்தது. இது மொத்தக் குடிசனத்தொகையில் 4 வீதமாகும். சமூகநலன் கருதியும் கைத் தொழில் வேலை நிலையங்களில் வேலைசெய்வோரின் நன்மை கருதியும், நல்ல சட்டதிட்டங்க ளில்லையென்றும், மாகாண நிர்வாகம் புராதனமுறையை அனுசரித்து நடைபெறுகிறதென் றும், பட்டினங்களில் நடக்கும் முன்னேற்றமான நிர்வாகத் துக்கும் இவைகளுக்கும் அதிக வித்தியாச முண்டென்றும் அவர்கள் கண்டனர். சுயாட்சிக்கான பொறுப்புகளை மேலும் வழங்கு வதற்கு முன்னர், பொதுசனங்களுக்குப் பூரணமான பிரதிநிதித் துவம் கொடுக்க வேண்டுமென அவர்கள் நிச்சயித்தனர். இதை

Page 127
24 O இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
எவ்வாறு செய்யலாமெனப் பலவித யோசனைகளை ஆராய்ந்த பின்னர் 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்கலாமெனச் சிபார்சுசெய்தனர்.
அரசாங்க உத்தியோகத்தரின் நிலைமைகளைப் பற்றி ஈற்றில் விசாரணைச் செய்தனர். சட்டசபை அங்கத்தினர் நியாயமில்லா மல் அரசாங்க இலாகாத் தலைவர்களையும், உத்தியோகத் தரை யும் கண்டனஞ் செய்துவந்தார்களென்ற முறைப்பாடிருந்தது. இதைப் பரிசீலனை செய்த பின் அரசாங்க உத்தியோகத்தரின் சம்பளம், பென்ஷன், நன்கொடை முதலியன சம்பந்தப்பட்ட விஷயமெல்லாம் குடியேற்றநாட்டு மந்திரியின் கையிலிருக்க வேண்டுமென்றும், உத்தியோக நிர்ணயம் சம்பந்தமானவை யெல்லாம் தேசாதிபதி கையிலிருக்க வேண்டுமென்றும் தீர் மானித்தார்கள். தேசாதிபதிக்கு உத்தியோக நியமனம், உயர்வு முதலிய விஷயங்களைப் பற்றி ஆலோசனை கூறுவதற்காக அரசாங்க ஊழியர் விசாரணைக்குழு என ஒரு தாபனம் ஏற்படுத்தப்பட்டது.
இலங்கை அரசியல் பிரச்னையைத் தீர்ப்பதற்காகப் புதிய விதமான ஒரு அரசியலமைப்பைச் சிபார்சுசெய்தனர். பாராளு மன்ற முறை இலங்கைக்கு ஏற்றதென அவர்கள் எண்ணவில்லை. ஏனெனில் இங்கிலாந்திலிருப்பதுபோல இலங்கையில் கட்சிகள் கிடையா. வகுப்புப் பிரிவுகளே உண்டு. பழைய சட்டசபை அங்கத்தினர் நிர்வாக விஷயங்களில் அதிக சிரத்தை காட்டி வந்தபடியால் அரசாங்க நிர்வாக விஷயங்களிலிருந்து சட்ட சபையை புறக்கணித்துவைப்பது புத்தியுமல்ல ; சாத்தியமு மல்ல வென்று எண்ணினர்கள். ல ண் டன் தலத்தாபன நிர்வாகமுறையை அனுசரித்து இலங்கைக்கு ஒரு அரசியல் திட்டத்தைச் சிபார்சுசெய்தனர். அங்கத்தினருக்குப் பொறுப் பும் அதிகாரமும் வழங்கக்கூடிய ஒரு அரசாங்கசபை தாபிக்க வேண்டுமென்றும், அதற்குச் சட்டமியற்றும் உரிமையும் நிர்வாக அதிகாரமும் இருக்க வேண்டுமென்றும் சிபார்சு செய் தார்கள். அரசாங்க இலாக்காக்கள் பத்துப்பிரிவாக வகுக்கப் படும். பிரதம காரியதரிசி, பணக்காரியதரிசி, சட்டக் காரிய' தரிசியென மூன்று உத்தியோகத்தர் அரசாங்க சபை அங்கத்த வராகவு மிருப்பார்கள். ஆணுல் அவர்களுக்கு சார்பாகவோ பாதகமாகவோ வாக்களிக்கும் உரிமை கிடையாது. எஞ்சிய ஏழு பிரிவுகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளால் நிர்வாகஞ் செய்யப்படும். அரசாங்கசபை அங்கத்தினர் ஏழு நிர்வாக சபைகளாகப் பிரிக்கப்படுவார்கள். உள்நாட்டு நிர்வாகம், விவசாயம், தலத்தாபனம், சுகாதாரம், தொழில், வர்த்தகம்,

அரசியல் முறையில் அபிவிருத்தி - 24
கல்வி, போக்குவரத்துச் சாதனம் என இந் நிர்வாகசபை ஏழாகும். ஒவ்வொரு நிர்வாகசபையும் ' ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும். அத்தலைவரே அப்பகுதியின் மந்திரி. முன் கூறிய மூன்று உத்தியோகத் தரும் இந்த ஏழு மந்திரிகளும் சேர்ந்த சபையே மந்திரிசபையெனப்படும். 65 தேர்தல் அங்கத்தவரையும், 12 நியமன அங்கத்தவரையும் அரசாங்க சபை கொண்டிருக்கும். உத்தியோகப் பொறுப்புள்ள அங்கத்த வர்களென்ற பழைய சட்டசபை வகுப்பினருக்கு இதில் இட மில்லை. உத்தியோகப் பொறுப்புள்ளவர்கள் பெ ரும் பா ன்  ைம. யினரா யிருக்கவேண்டுமென்ற அவசியம் இந்த அரசாங்க சபைக்கு இல்லை. டொனமூர் குழுவின் அரசியல் திட்டத்தை ஆரம்பத்தில் சட்டசபை கடுமையாகக் கண்டித்தது. கிளிப் போட் தேசாதிபதிக்குப்பின் பதவியேற்ற சர். ஹேபேட் ஸ்டான்லி (1927-1931) டொனமூர் திட்டம் பற்றித் தாம் கொண்ட அபிப்பிராயத்தையும் சட்டசபையில் கூறப்பட்ட அபிப்பிராயங்களையும் சேர்த்து ஒரு அறிக்கை எழுதிக் குடி யேற்ற நாட்டு மந்திரிக்கு 1929-ம் ஆண்டு ஜூன் மாதம் அனுப்பினர்.
சிறுசிறு விஷயங்கள் பலவற்றில் ஸ்டான்லி, விசாரணைக் குழுவினரோடு உடன்படவில்லை. 1924-ம் ஆண்டு அரசியல் திட்டம் முற்ருக பயனடையவில்லை என அவர் எண்ணினர். உத்தியோகப் பொறுப்பற்ற அங்கத்தவரோடு சேர்ந்து அரசாங்' கம் பல காரியங்களைச் செய்துவிட்டதென அவர் அபிப்பிராயப் பட்டார். நிர்வாகசபை முன்போலச் சர்வ அதிகாரமும் காட்ட முடி யா திருந்த து இயல் பென்றும், முக்கிய மா ன கருமங் களெல்லாம் அதன் கையிலிருந்து பறிக்கப்பட்டுப் பணக்கமிட் டிக்குக் கொடுக்கப்பட்டதென்ற கொள்கை பிழையென்றும் கருதினர். உத்தியோகப் பொறுப்பற்ற அங்கத்தவர்களின் செய்கைகள் உயர்தர அரசாங்க உத்தியோகத்தரிடையே மனக் கசப்பையும் உத்தியோக நிலையைப் பற்றிச் சமுசயத்தையு முண்டுபண்ணியது வாஸ்த வந்தான், ஆணுல் அதன் பயனுக. எவராவது தனது சம்பள் த்தை ப் பறிகொடுத்தது கிடை யாது. விடுமுறை, பென்ஷன் உரிமை முதலியவை சட்ட சபையின் நடத்தையால் எவ்விதமாவது பாதிக்கப்படவுமில்லை. விசாரணைக்குழுவின் சில முடிபுகள் மேலெழுந்த வாரியாகச் செய்யப்பட்டன என்றெல்லாம் மனிங் அரசியலமைப்பையும் அதன் நடைமுறையையும் அவர்கள் ஆராய்ச்சியின்றி எழுந்த மானத்துக்குக் கண்டித்துவிட்டார்களென்றும் ஸ்டான்லி நினைத்த போதிலும் டொனமூர் சிபார்சுகளிலுள்ள முக்கியமான அம்சங் களையெல்லாம் பூரணமாக ஆதரித்தார். சட்டசபை கண்டித்த வைகளுக்கெல்லாம் தக்க ஆதாரங்காட்டி மறுத்தார்.

Page 128
242 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வாய்ந்த சட்டசபை, வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டதை விரும்பவில்லை. சிங்களவர் தமக்குச் சட்டசபையில் இனி ஆதிக்கம் அதிகம் கிடைக்குமென்று எண்ணி அதை ஆதரித்தார்கள். இலங்கைத் தமிழர் தங்களுக்கு அரசியல் பலம் குறைந்துவிடுமென எண்ணி அதை எதிர்த்தனர். இதனுல் தமிழருக்கு வருங்காலத்தில் அரசாங்க உத்தியோகங்களும் குறைந்துபோமென எண்ணினர். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே தங்களுக்கு ஒரு பெரிய பாது காப்பென முஸ்லிம்களும் பறங்கிகளும் எண்ணினர். ஸ்டான்லி சிறுபான்மையினரோடு அனுதாபப்பட்டபோதிலும் சுயாட் சிக்கு வழி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒழித்து விடுவ தென விசாரணைக் குழுவினரோடு உடன்பட்டார். அப்படித் தான் வகுப்புப் பிரதிநிதித்துவ மிருந்தாலும் சட்டசபையில் எல்லாரும் வகுப்புவாரியாகவே வாக்கு அளிப்பார்களெனத் தேசாதிபதி எண்ணவில்லை. சனநாயக முறையில் அமைந்த ஒரு ஸ்தானத்தில் அப்படி ஒரு பிளவை ஏற்படுத்தக் காரண மாயிருப்பது தவறெனவும் எண்ணினர்.
வாக்குரிமை சம்பந்தமாகவும் அதிக வாக்குவாதம் நடந்தது. 21 வயதுக்கு மேற்பட்ட எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்படவேண்டுமென்று சட்டசபை அபிப்பிரா யப்பட்டது. தோட்டங்களிலுள்ள இந்தியத் தொழிலாளர் வந்தும் போயும் கொண்டிருக்கும் குடிசனத்தொகையினராத லால் அவர்களுக்கு வாக்குரிமையளிக்கக் கூடாதெனப் பெரும் பான்மையான அங்கத்தினர், விசேஷமாக சிங்களவர் அபிப்பிரா யப்பட்டார்கள். தேர்தல் முறை யை விரிவாக்கினல்த்தான் சுயாட்சிப்பாதையில் முன்னேறலாமென விசாரணைக்குழுவினர் கூறியதை ஸ்டான்லி ஆதரித்தார். இந்தியரென்ற துவேஷத்தி ணுல்தான் தோட்டத்திலுள்ள இந்தியத் தொழிலாளருக்கு வாக் குரிமை யளிக்கப்படவில்லையென்று சில இந்தியர் கூறிய அபிப் பிராயத்தை அவர் ஆதரிக்கவில்லை. தேசத்தில் நிரந்தரமான பற்றுள்ளவர்களுக்கும், நிரந்தரமாய்க் குடியேறியவர்களுக்குந் தான் வாக்குரிமையளிக்கவேண்டுமென அவர் விசாரணைக்குழு வின் அபிப்பிராயத்தை ஆதரித்தார். நிர்வாகசபை ஆட்சியை யும் தேசாதிபதிக்கு அளிக்கப்பட்ட விரிவான அதிகாரத்தையும் கடுமையாகக் கண்டித்தார். " நிர்வாக சபை ஆட்சிமுறை நடை முறையிற் சாத்தியப்படாது. அரசாங்க விவகாரங்களை நடத்தும் பொழுது அவசியமில்லாத தாமதம் ஏற்படும். மந்திரியின் சரியான கடமைகளுக்கு அது ஏற்றதன்று ; அந்தஸ்துக்குப் பாதகமானது. இலாக்காத் தலைவர்கள் தமது கடமைகளைச் சரிவரச் செய்வதற்கும் மந்திரிகளிடம் சரியான தொடர்பு வைத்துக்கொள்வதற்கு மிடையூருயிருக்கும். திட்டமான ஒரு

அரசியல் முறையில் அபிவிருத்தி 243
கொள்கையை மந்திரிகள் அமுல் நடத்த முடியாமற் தடைசெய் வதுடன் அதற்குப்பதிலாக மற்றவர்களைத் திருப்திப்படுத்தவும் நயம்பெறவும் கொள்கையைப் பேரஞ் செய்யவேண்டியுமேற்
படும். அதிக செலவையுண்டாக்கும். முழுப்பொறுப்பை உணர்ந்துகொள்வதற்கு இடையூருயிருக்கும். அரசியல் முன் னேற்றத்துக்குத் தடையாயிருக்கும்." என்றெல்லாம் கூறப்
பட்டது. டொனமூர் திட்டத்துக்கு நிர்வாகசபை ஆட்சியே மூலாதாரமானதென்றும் அதை எடுத்துவிட்டால் திட்டத்தின் சமத்துவம் குலைந்துவிடுமென்றும் ஸ்டான்லி கருதினர். சட்ட சபைக்கு விரிவான அதிகாரம் கொடுக்கப்படுவதாலும், அரசியல் முறையில் மிக முக்கியமான மாற்றங்கள் செய்யப்படுவதாலும், தேசாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைக் குறைக் கக்கூடாதெனவும் அவர் அபிப்பிராயப்பட்டார். பணவிஷயத் திலும் ஏனைய விஷயங்களிலும் தான் இதுகாறும் அனுபவித்து வந்த உரிமைகளையும் சலுகைகளையும் குறைப்பதற்கு அரசாங்க சபையும் விரும்பவில்லை. அரசாங்க உத்தியோகத்தர் சம்பளம் முதலியவற்றில் அதற்கிருந்த அதிகாரத்தைத் குறைத்துவிட அது விரும்பவில்லை.
ஸ்டான்லியின் அறிக்கையிற் பெரும்பகுதியைக் குடியேற்ற நாட்டுமந்திரி ஏற்றுக்கொண்டார். வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தை ஒழிக்கவும், நிர்வாக சபை ஆட்சியை ஏற்படுத்தவும், தேசாதிபதிக்கு விசேஷ அதிகாரம் வழங்கவும் அவர் உடன் பட்டார். 21 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலருக் கும் வாக்குரிமை அளிக்கவும், சம்மதித்தார். வாக்காளர் அட்ட வணையில் ஒருவர் பெயரைக் குறிப்பதற்கு அவர் குடியானவ ரென்ற அத்தாட்சி யுடையவராயிருக்கவேண்டுமென ஸ்டான்லி கூறிய அபிப்பிராயத்தையும் ஏற்றுக்கொண்டார். பிரதேசவாரி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 அங்கத்தினரும் 8 நியமன அங்கத்தவருமுள்ள ஒரு அரசாங்கசபை யமைக்கப்படவேண்டு மென்றும் நியமன அங்கத்தவரில் 4 பேர் ஐரோப்பியராயிருக்க வேண்டுமென்றும் அவர் விதித்தார். இது ஸ்டான்லியின் அபிப்பிராயத்துக்கு மாறனது. குடியேற்றநாட்டு மந்திரியின் சிபார்சுகளைச் சட்டசபை கடுமையாக எதிர்த்தபோதிலும் ஈற்றில் 2 அதிகப்படியான வாக்குகளினல் அவை நிறைவேற்றப் பட்டன. 19 பேர் சாதகமாகவும் 17 பேர் பாதகமாகவும் வாக் களித்தனர். டொனமூர் திட்டம் பூரணப்பொறுப்பாட்சி தரவில்லையென ஒருசாரார் கண்டித்தனர். யாழ்ப்பாணத் தமிழர் யாழ்ப்பாண வாலிபரின் தூண்டுதலினல் அரசாங்க சபை யைப் பகிஷ்கரித்தார்கள். தேசீயக் கோரிக்கைகளைக் கொஞ்ச மும் திருப்தி செய்யாத அரசியலமைப்பில் அவர்கள் பங்குபற்ற மறுத்தார்கள். -

Page 129
习44 இலங்கையில் பிரித்தானிய ஆட்சி
’ 1931-ல் சர். கிரேம் தொம்ஸன் டொனமூர் திட்டத்தை அங்குரார்ப்பணஞ் செய்து வைத்தார். இலங்கை மந்திரிகள் ஏழுபேரைக்கொண்ட ஒரு மந்திரி சபை ஏற்பட்டது. இதில் மூன்று மந்திரிகள் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளாயிருந்தார் கள். 1802-ம் ஆண்டு இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடான நாட்டொட்டு இதுவரை நிலவிவந்த நிர்வாகசபை ஒழிந்தது. பதிலாகப் புதிய மந்திரிசபை ஏற்படுத்தப்பட்டது. அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சியில் முக்கியமான பங்கெடுத்துவந்த சர். பரன் ஜயதிலகா சபை முதல்வராகவும் மந்திரிசபையின் உப தலைவராகவுந் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டொனமூர்திட்டம் அரசாங்கசபையில் இரண்டு கட்சியா ருக்குத் திருப்தியளிக்கவில்லை. ஒரு கட்சியினர் நிர்வாகசபை ஆட்சியையும், பண உரிமை குறைக்கப்பட்டதையும் கண்டித் தார்கள். மற்றக் கட்சியார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டதைக் கண்டித்தார்கள். அரசியலில் மாற்றஞ் செய்யவேண்டுமென 1932-ல் கிளர்ச்சி செய்தனர். நியாயமான அளவு காலம் திட்டத்தை நடைமுறையில் போட்டுப் பரீட் சியாமல் பெரிய மாற்றமொன்றையுஞ் செய்யமுடியாதெனக் குடியேற்றநாட்டு மந்திரி கூறிவிட்டார். பொறுப்பாட்சி வழங்கு வதற்கு முதற்படியாகவே டொனமூர்திட்டம் வழங்கப்பட்டது. 1937-ல் சர். ரெஜினல்டு ஸ்டப்ஸ் (1933-1937) பதவியைவிட்டு நீங்கியதும் சர். அண்ட்ரூ கோல்டிகொட் தேசாதிபதியானர். நாட்டில் அரசியல் நிலையை ஆராய்ந்து ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு குடியேற்றநாட்டு மந்திரி அவரைக் கேட்டார்.
ത്ത്
1938-ம் ஆண்டு நவம்பர் மாதம் சர். ஆண்ட்ரூ கோல்டி கொட் தனது சிபார்சுகளை அவருக்கு அனுப்பினர். வாக்குரி மையைக் குறைக்கவோ தேசாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கவோ அவர் விரும்பவில்லை. ( 50 வீதமோ அல்லது 40 வீதமோ ஸ்தானங்களைத் தமிழருக்கும் ஏனைய சிறுபான்மை யினருக்கும் ஒதுக்கிவிட வேண்டுமெனக் கிளர்ச்சிசெய்யப்பட் டது. அப்படிச் செய்தால் வகுப்பு மனப்பான்மை அதிகரிக்கு மென்றும், உண்மையான அரசியல் கட்சிகள் நல்ல முறையில் வளர்வதற்கு இடம் வரா தென்றும் சர். அண்ட்ரூ மறுத்து' விட்டார். சிறுபான்மையினர் அதிக ஸ்தானங்களைப் பெறக் கூடிய விதமாக தேர்தல் எல்லைகளை மாற்றியமைக்கலாமென அவர் எண்ணினர். நிர்வாக சபை ஆட்சியை ஒழித்துவிட வேண்டுமென அவரும் உடன்பட்டார்.
நிர்வாகசபை ஆட்சி யிருக்கும்வரை நிர்வாக யந்திரத் தைச் செலுத்தும் சக்திகளிடையே நிச்சய புத்தியோ, ஒற்று மைப்படுத்தும் முயற்சியோ, கட்டுப்படுத்தியும், அவசியமில்

அரசியல் முறையில் அபிவிருத்தி 245
லாததை ஒதுக்கியும் திட்டஞ்செய்யும் தன்மையோ இல்லாமற் போய்விடுகிறது. எல்லாம் பேரஞ்செய்வதிலும் சலுகைசெய் வதிலுந்தான் தங்கியிருக்கிறது. ஆதலால் கொள்கையை நிலை நிறுத்தவோ, பொறுப்பு ஏற்றுக்கொள்ளவோ முடியாமலிருக் கிறது.’ என அவர் கூறினர். நிர்வாகசபை ஆட்சிமுறையை நிலைநிறுத்துவதானல் அரசாங்க உத்தியோகத் தரை நியமிக்கும் விஷயத்தை தனிப்பட்ட ஒரு அரசாங்க ஊழியர் விசாரணைக் குழுவிடம் விட்டுவிடவேண்டும். நிர்வாகசபையிடம் விடக் கூடாது. நிர்வாக சபைகட்குப் பதிலாக ஒரு மந்திரிசபையை ஏற்படுத்தி தற்போதைய உத்தியோக அங்கத்தவரை நீக்கிவிட்டு அதற்குப்பதிலாக இரண்டு மந்திரிகளை ஏற்படுத்த வேண்டுமென அவர் விரும்பினர். - Y
அரசியல் சீர்திருத்தப் பிரேரணைகள் அரசாங்க சபையில் விவாதிக்கப்பட்டன. ஆனல் பொதுவான ஒற்றுமை ஏற்பட வில்லை. யுத்தம் முடிந்த பின்னர் அரசியல் சீர்திருத்தம் விஷய மாகப் புனராலோசனை செய்யலாமெனக் குடியேற்றநாட்டு மந்திரி கருதினர். யுத்தத்தின்போது சுதந்திரக் கொள்கையை யும் சனநாயகத் தத்துவத்தின் சிறப்பையும் பிரித்தானியா மறுபடியும் அழுத்தமாகக் கூறவேண்டி யேற்பட்டது. இந்தியா வுக்குக் குடியேற்ற நாட்டந்தஸ்து வழங்கப்படுமெனவும் பிரித்தானியா வாக்குறுதி செய்தது. இலங்கைக்கும் குடியேற்ற நாட்டந்தஸ்துக் கொடுக்கவேண்டுமென அரசாங்க சபை 1942-ல் தீர்மானம் நிறைவேற்றியது. சுயாட்சி மார்க்கத்தில் பூரணமான அபிவிருத்திக்கு வழிசெய்வோமென்று குடியேற்ற நாட்டு மந்திரி பதில் கூறினர். 1943-ல் பின்வருமாறு அவர் பிரகடனஞ் செய்தார் :- சண்டை முடிந்த தும் இலங்கை அரசியல் சீர்திருத்தத்திட்டம் பரிசீலனை செய்யப்படும். மன்னர் பிரானின் அரசாங்கம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் உள்ளூர் நிர்வாக விஷயங்களில் பிரித்தானிய சாம்ராச்சியத் துக்குக் குட்பட்ட பூரண பொறுப்பாட்சியை இலங்கைக்குக் கொடுப்பதே நோக்கம்,

Page 130


Page 131