கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபுலாநந்த அடிகளாரின் சமூக, கலை, இலக்கிய நோக்கு

Page 1
சமூக, கன
சுவாமி விபுலாநந்

லாநந்த அடிகளாரின் ல, இலக்கிய நோக்கு
கலாநிதி. சி. மெளனகுரு தலைவர்
நுண் கலைத்துறை, இழக்குப் பல்கலைக்கழகம்.
தர் நினைவுப் பேருரை - 1
விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை,
மட்டக்களப்பு.

Page 2
S. Maunaguru B. A. Hons, Dip- in- Ed, M. A., Ph. D. Head / Dept. of Fine Arts,
Eastern University.
Swami Vipulananthar's View on Society, Arts, and Literature
Swami Vipulananthar memorial Lecture - 1
1991 - 1 - 10
Compiled by
Kasupathy Nadarajah Joint Secretary.
Published by: Swami Vipulananthar Centinary Committe, Batticaloa.

மட்டக்களப்பு
விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபைத் தலைவர் திரு. க. தியாகராஜா
B.A., Dip - in - Ed., SLEAS.
அவர்களின்
தலைமையுரை.
தமிழ்கூறும் நல்லுலகிற்கு கிழக்கிலங்கை வழங்கிய ஒப்பற்ற அறிஞர் பெருமான் சுவாமி விபுலானந்த அடிக ளாராகும். இன்று நாம் அடிகளாரது நூற்றாண்டினைக் கொண்டாடுகின்றோம். இன்நூற்றாண் டு விழா நிகழ் வுகள், செயற்பாடுகள் பயனுடையதாய், கருத்துடைய தாய் இருக்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் மட்டக் களப்பில் சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை அமைக்கப்பட்டிருக்கின்றது. அடிகளாரின் புகழ் பூத்த பணி களை ஆய்ந்தறிந்து உலகறியச் செய்வதும், பேணிப்பாது காப்பதும் சபையின் நோக்கங்களாகும். இவ்விழாச் சபை இன்று முனைந்துள்ள பணிகளுள் ஒன்று விபுலாநந்த அடிகள் நினைவுச் சொற்பொழிவுகளை நடாத்துதலாகும். அடிகளாரது வாழ்க்கைப் பணிகள் போதியளவு ஆராயப் படவில்லை. அன்னாரது பணிகளின் சிறப்பு, பெருமை போதியளவு வெளிக் கொணரப்படவில்லை. அடிகளாரது பல்துறை சார்ந்த சிறப்புக்களைத் தேடி - ஆராய்ந்து - மதிப் பிட்டு உலகிற்கு வழங்குவது எமது கடமையாகும். இம் முயற்சியின் ஒரு முனைவே இந்த நினைவுச் சொற்பொழி வுகள். ஆய்வு நோக்குடன் அடிகளாரது பரந்துபட்ட, பன் முகப்பட்ட பெருமைகன்ள, திறமைகளை, ஆளுமைகளை, இத்தொடர் நினைவுச் சொற்பொழிவுகளின் மூலம் வெளிக் கொணரமுடியும் என்பது நூற்றாண்டு விழாச்சபையினரது நம்பிக்கையாகும். நினைவுச் சொற்பொழிவுத் தொடரில்
iii

Page 3
முதலாவது நினைவுச் சொற்பொழிவினை உ ங் களு க் கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
"ஈழமுதற்பணி இமையம் வரை கொடிகட்டும் இசைத் தமிழன்- புதுமைக்கபிலன். ஈழக்கரிகாலன்." என்றெல் லாம் புலவர் பெருமக்களால் புகழாரம் சூட்டப்பட்ட அடி களார் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகளே. ஆயினும் அன்னார் சாதித்து விட்டவையோ பலப்பல. மற்றையவர் க ளா ல் சாதிக்க முடிக்க முடியாதவை. தனது ஆசிரியர்களின் மனங் கவர்ந்த நன்மாணாக்கனாய், தலைசிறந்த ஆசிரியராக, அதிபராக, தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் முதற்தமிழ் பேராசிரியராக, மதிப்பார்ந்த துறவியாக, இராமக்கிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமையாளராக, மாணவரில் லப் பொறுப்பாளராக, கலை - இலக்கிய ஆய் வா ள ரா க, சமூக சேவையாளராக, கல்வியியலாளராக தனது சமயம், தனது மொழி, தனது சமூகம் ஆகியவற்றைப் பற்றிய தனித் துவம் வாய்ந்த சிந்தனையாளராக இத்துறைகள் யாவற்றி லும் சாதனைகள் புரிந்தவராக வாழ்ந்தவர் அடி க ளார்.
இன்றைய நினைவுப் பேருரையினை வழங்கவுள்ளவர் கலாநிதி சி. மெளனகுரு அவர்கள். பேருரையின் பொருள் "சுவாமி விபுலானந்த அடிகளாரின் சமூக, கலை, இலக்கிய நோக்கு'. இலக்கியத் துறையில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்துறையில் சிறந்த அறிவாற்றலுடனும் ஆய்வுச் சிறப்புடனும் விளங்கியவர் அடிகளார், கலைத் துறை யி னைப் பொறுத்தவரையில் அடிகளாரது சிறப்பு தனிப் பெருமையுடையது. அவரது உள்ளம் கலை யு ள் ளம். நோக்கு கலைநோக்கு. யாழ்நூலும் மதங்க சூளாம ணி யும் இவற்றுக்குச் சிறந்த சான்றுகள். சமூகத் துறை யைப் பொறுத்த வரையில் சமூக முன்னேற்றத்திற்கே தன்னை அடிகளார் அர்ப்பணித்தவர் என்றே கூறவேண் டும். இல்லறத்தைத் துறந்த விபுலாநந்த அடிகளார் சமூகப் பற்றினைத் துறக்கவில்லை. அல்லலுற்றிருந்த இளம் சமூகத்தின் உயர்வுக்காக, உயர்ச்சிக்காக தனது வாழ்வினை
iv

அர்ப்பணித்துப் பணி யா ற் றியவர் "ஈழத்தெரு நீளம் எங்கள் சண்முன்பாக வாழ வழியறியாத்தாழ் நிலையில் ஏழைகளாப் கம்பனும் வள்ளுவனும் காளி தாசக் கவியும் Ꮿ! tf t ! Ꮝ Ꭿ5 95 G r 36 ) ir p r r r liv, அடிகளாரது சமூகக் கண்ணோட்டத்தினை அவரது இக்கவிதை கோடிட்டுக் காட்டுகின்றது.
கலை இலக்கியம் சமூகத் துறைகளைப் பெ று த் த வரை பில் அடிகளாரது பணிகள் தனித்துவம் வாய்ந்தவை யாக அமைந்துள்ளன. இசை, நாடகம் ஆகிய நுண்கலைத் துறைகளில் அடிகளாருக்கு இயல்பான ஈடுபாடும் ஆர்வ மும் ஞானமும் இருந்தன. பண்டைய தமிழ் இலக்கியங் களையும், தமிழரின் கலைப் பொருட்களையும் படைப்புக் சளையும் ஆராய்ந்து, அவ்வாராய்ச்சியின் மூலம் ஆணித்த ர. ன முடிவுகளை நிறுவியவர் அடிகளார். பண்டைய இசைக்கருவியான பழையும், யாழின் வகைகளையும் ஆராய்ந்து யாழ்நூலினை ஆக்கிய பெருமை அகசனாருடை யது சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையினை ஆரம்ப நிலைக் களனாகவைத்து ஆரம்பித்து மட்டுநகர் வாவியி னுள் எழுந்த நாதத்தனால் தொடர்ந்து அவரது பேராய்வு எமக்கு யாழ் நூலினைத் தந்தது. ぶ இன்று "சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமூக கலை இலக்கிய நோக்கு" எனும் பொருள் பற்றியதாக அமைந்த முதலாவது பேருரையை வழங் ச வு எ னா ர் கலாநிதி சி மெளனகுரு அவர்கள். த ந் போது கிழக கிலங்கை பல்சலைச் சழகததின் நுண்கலைத் துறையின தலைவராக வுள்ளவர். இப் ம ைனின் மைந்தன. பட்டக்களப்பைப் \போறுத் தவரையில இம்மண் ணில் யலர்ந்து மணம்பரப்பத் தொடங்கியுள்ள குறிஞ்சி மலர். இலககிய அறிவியல, கலைத்துறையில் தனச்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத் திக் ம க ண்டு ள இளம் அறிஞன். து. ப் ம, ஆாவமும் உலள ,ொ இலக்கியததுறையிலும், கலைத்துறையிலும் குறிபபாக நாடகத்துறையிட, ஆழ்ந்த நடடமும் தேட்
V

Page 4
டமும் கொண்டவர். இவரைப் பற்றிய அறிவார்ந்த சில குறிப்புக்களைத் தருவது பொருத்தப்பாடுடையது என நினைக்கின்றேன். பேராதனைப் பல்கலைக் கழகத்தின் 1965 ல் இளம் கலைமானி (சிறப்பு) ப் பட்டமும் 1974ல் முதுக  ைல மா னி ப் பட்டமும் பெற்றவர். கொழும்பு பல்கலைக் கழகத்தில் 1975 ல் பட்டப்பின் கல்வி டிப்பு ளோமா பட்டமும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 1983 ல் (Ph , D) கலாநிதிப் பட்டமும் பெற்றவர் 'மட் டக்களப்பின் மரபுவழி நாடகங்கள்’’ இவரது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வுப் பொருளாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவினால் மேடையேற்றப்பட்ட "இலங்கேஸ் வரன்’ நாட்டுக் கூத்தில் இராவனேஸ்வரனாக வேடம் தாங்கி, அன்று பல மேடைகளையும், கலை உள்ளங் களையும் கலக்கியவர்; பெரிதும் பாராட்டப்பட்டவர்.
கலாநிதி மெளனகுருவினது சேவையினைப் பொறுத்த வரையில் பட்டதாரி ஆசிரியராக, பாடநூல் எழுத்தா ளராக, பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரி விரிவுரையா ளராக, யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரை யாளராக சிறந்த பணிகளை ஆற்றியவர், இன்று கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவின் தலைமைப்பீடத்தை அலங்கரிக்கின்றார். எழுத்துலகில் தனித்தும் கூட்டாகவும் அவரது படைப்புக்கள் பல. 20 ம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம், நாடகம் நான்கு, சடங்கிலிருந்து நாடகம் வரை, தப்பிவந்த தாடி ஆடு, மெளனகுருவின் 3 நாடகங்கள். ஏழு நாடகங்கள் ஆகியவை இதுவரை வெளியானவையாகும். ஈழத்தமிழ் நாடக அரங்கின் வளர்ச்சி, பத்துக்கூத்து நூல் பதிப்பு ஆகிய இரு நூல்களும் வெளியிடப்படும் நிலை யிலுள்ளவை. இவற்றுற் தப்பிவந்த தாடி ஆடு 1981ம் ஆண்டு முதல் 1988 வரை இலங்கையில் பிரசுரிக்கப் பட்ட சிறந்த சிறுவர் இலக்கிய நூலாகத் தெரிவு செய்யப் பட்டு 1991 ல் சாஹித்திய மண்டலப் பரிசினைப் பெற்
vi

றது. அத்தோடு இந்நூல் சிறந்த சிறுவர் நாடகத்துக்கான யாழ் இலக்கியப் பேரவை பரிசையும் பெற்றது. மெளன குருவின் மூன்று நாடகங்கள் சிறந்த நாடகங்களுக்கான யாழ் இலக்கியப் பேரவைப் பரிசையும் பெற்றுள்ளது.
பதினான்கு நாடகங்களை எழுதியுள்ள கலாநிதி மெளனகுரு அவர்கள் பதின்மூன்று நாடகங்களை தாயா ரித்து நெறிப்படுத்தியுள்ளார். நுண்கலை, இலக்கியம், நாடகம், நாட்டாரியல் சம்பந்தமாக நூற்றுக்கு மேற் பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். பல முக்கிய ஆலோச னைக்குழுக்களின் அங்கத்தவராக விளங்குகின்றார். இவ ரைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள், எம்மைப் பொறுத்த வரையிலும், கிழச்கிலங்கைப் பல்கலைக் கழகத்  ைத ப் பொறுத்தவரையிலும், மட்டக்களப்பைப் பொறுத்தவரை யிலும் பாரியவையாகும். எதிர்காலத்தில் அவை பலித மாகும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
விபுலாநந்த அடிகளாரது சமூக, இலக்கிய கலை நோக்கு மிகவும் விரிவான விடயப்பரப்பினைக் கொண் டது. இதில் ஒவ்வோர் துறையும் தனித்தனியாக ஆராய்ந்து மதிப்பிடப்பட வேண்டியவை. எனினும் இப்பாரிய பொறுப் பினை ஏற்றுள்ளார் கலாநிதி மெளனகுரு அவர்கள் . இத்துறைகளை ஆராய்ந்து விளக்கம் அளிப்பதற்கு இவர் மிகவும்பொருத்தமானவர். தகுதிவாய்ந்த வர். கலாநிதி மெளனகுரு அவர்களை "சுவாமி விபுலாநந்த அடிகளா ரின் சமூக, கலை, இலக்கிய நோக்கு’ எனும் பொருள் பற்றிய பேருரையினை வழங்கவுள்ளார்.
க. தியாகராஜா
தலைவர் விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, மட்டக்களப்பு
vii

Page 5

விபுலாநந்த அடிகளாரின் சமூக, கலை, இலக்கிய நோக்கு
முகவுரை:
மனித வரலாறு பல் வேறு முரண்பாடுகளுக்கும் , போராட்டங்களுக்கும், மாற்றங்களுக்கும் ம த் தி யி லே சென்று கொண்டிருக்கின்றது. மனிதர்கள் தாம் வாழும் காலத்தில் தம்மைச் சூழ நிகழ்கின்ற நிகழ்வுகளுக்கு எதிர் வினை (react) புரிவர். எதிர்வினை என்றால் பிரச்சினை களை, நிகழ்வுகளை எதிர்த்தல் என்பது  ெ1ாருளன்று. அத் தப் பிரச்சினையை எதிர் கொள்ளுதல் ஆகும். எ தி ர் கொள்ளுதல் மூன்று நிலைகளில் நடைபெறும்.
ஒன்று, தான் வாழும் காலச் சூழலில் காணப்படுகின்ற சமூக அமைப்பை, முரண்பாட்டை நடைபெறுகின்ற பிரச் சினைகளைக்கண்டு இது இப்படித் தான் என ஏற்றுக் கொண்டு அடங்கிப் போய் அதற்கமைய வாழ்தல். இந் நிலையினைப் பெரும்பாலான பொது மக்கள் மே ற் கொள்வர்.
இரண்டு, அந்தச் சமூக அமைப்பினின்று ஒதுங்கித் தனக் குள்ளே தனித்துப் போதல். சமூகத்தைத் துறந்து போதல். சமூகத்தைத் துறந்து தவம் செய்கின்ற ஞானியர், யோகி யர், சில எழுத்தாளர்கள் இந்நிலையினை மேற் கொள்வர்.
மூன்றாவது, அந்தச் சமூகத்தை, அதன் முரண்பாடு களைப் பிரச்சினைகளை எதிர் கொண்டு அதற்கு முகம் கொடுத்து அதற்கான தீர்வுகளை முன் வைத்து மாற்று வழிகளைக் காண முயற்சி செய்தல், சமூக உணர்வும் அர்ப் பணிப்புப் பண்பும் கொண்ட தனி நபர்கள் சிலர் உள்ள Gorrr. 9)2 i 4 sir Socially, active individuals gouri. Luj திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள்,
Ol

Page 6
சமூக சமய சீர்திருத்தவாதிகள் முற்போக்கானவையோ, பிற்போக்கானவையோ சில இயக்கங்களைச் சார்ந்து தொழிற்படுவோர் இவர்களுள் அடங்குவர். இவர்கள் ஒரு நோக்கிற்காக (Cause) செயற்படுவர். இவர்கள் மூன்றாவது வகையினர்.
முதலாவது வகையினர் சாதாரண மக்களானமையி னால் அவர்கள் தனிப்பட்ட கணிப்புப் பெறுவது இல்லை; இரண்டாவது வகையினர் மனித சமூகத்தை விட்டு ஒதுங்கிய, அல்லது மனித நிலை கடந்தவரானமையினால் பூசைக்குரியவர்களாகி விடுகிறார்கள்.
மூன்றாவது வகையினர் பிரச்சினையின் குவி முனைக களில் செயலாற்றுபவர்களாதலால் அவர்களின் சிந்தனைகள் அடுத்த தலைமுறையின்ரையும் ஈர்ப்பனவாகின்றன. எனவே தான் அடுத்த தலைமுறையினர் அச் சிந்தனையாளர்களைக் கூர்ந்து தோக்குகின்றார்கள்.
அவர்களின் சிந்தனைகளில் கொள்ள வேண்டியவற்றைத் தம் தேவைகளுக்கு இயைய கொள்ள முயல்கிறார்கள். இதனால் அத்தகையோரை நினைவு கூருகிறார்கள். இறந்த ஒரு மனிதரின் பழைய நினைவுகளும், பழைய வாழ்வும் இவ்வாறு தான் இன்றைய நிகழ்வுகளாகின்றன. As
விபுலாநந்த அடிகளும் இவ்வாறு தான் இன்றைய நிகழ்வாகி விடுகின்றார். இதுமட்டுமல்ல இறந்த மனிதரின் வாழ்வும் நினைவுகளும் இ ன்  ைற யப் பிரச்சினைகளே ( டு இயைபுடையனவாகும் போது அவர்களின் நினைவு முக்கியத்துவமுடையதாகின் றது. "ஒ மில்டன் நீ இன்று எம்முடன் இருந்தால்" என்ற ஏக்கமும் எழுகின்றது. சமூகத்தின் மாற்றங்களையும், முரண்பாடுகளையும் இவ்வாறு எதிர் கொள்ளுவோர்களில் முன்னணியில் நிற்பவர்கள் கலைஞர்களே. நுண்ணுணர்வு மிகப் பெற்ற இவர்கள் தான் சமூகத்தின் பிரச்சினைகளை முதலில் உணர்பவர்கள். இப்பிரச்சினைகளை முறைசார் புலமைக்கல்வி பெற்ற, பெறாத அறிஞர்களும் உணர்வர்.
02

பட்டமும், படிப்பும் இப்பிரச்சினைகளை விளங்கும் ஒர் முறையியலை (Methodology) இவர்களுக்குத் தருவதனால், இவர்களின் விளக்கம் முன்னவரிலிருந்து வித்தியாசமாக அமையும்.
துறவியரும் தம் உள்ளுணர் வால் (intution) இதனை உணர்வர் என்று கூறுவர். அதிஷ்டவசமாக விபுலாநந்தர் இம்மூன்றும் இணைந்த ஓர் உருவாக நம்முன் மிளிர்கின் றார். அவர் ஒரு கலைஞர், அறிஞர், துறவி, இக் கலவை மிக முக்கியமான கலவை. எனவே, சமூகம் பற்றிய அவர் கணிப்பு, அக்காலச் சூழலுக்கு அவர் எதிர்வினை புரிந்த விதம், அவரது சிந்தனைகள் என்பன கணிப்பிற்குரியத" கின்றன.
சூழலின் தாக்கம்
இலங்கையிலே பிறந்த விபுலாநந்த அடிகளார் தமிழ் நாட்டிலும் வட இந்தியாவிலும் வாழ்ந்தவர். எனவே இம் மூன்று நாட்டு நிகழ்வுகளும் அவரைப் பாதித்திருக்கும் என் பதில் ஐயமில்லை விபுலாநந்த அடிகள் வாழ்ந்த 55 வருடங் களும் (1892 - 1947) இம் மூன்று நாடுகளிலும் அரசியல் சமூகம், கலை, இலக்கியம் ஆகியவற்றில் மிக முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்ற காலங்களாகும்.
வட இற்தியச் சூழல்
இந்திய அரசியலில் வெள்ளையருக்கு எ தி ரா ன போராட்டம் மும்முரமாக நடந்த காலம் இது. காங்கிரஸ் கட்சி உதயமாகி மிதவாதிகள்,தீவிர வாதிகள் போராட்டம் நடைபெற்று பின்னர் காந்தியின் தலைமை ஏற்கப்பட்டு, காங்கிரஸ் மக்கள் மயமாகி தண்டியாத்திரை, உப்புச் சத்தி யாக்கிரகம் என்பன நடைபெற்று, மக்கள் கிளர்ச்சிகள் வெடித்ததுடன் இந்து முஸ்லிம் பிரச்சினைகள் தோன்றி இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு தேசங்களாக நாடு பிரியும் நிலையும் தோன்றிய காலம் இக்காலம்.
03

Page 7
சமூகத்தில் அனைத்து இந்தியரும் ஒருவர் என்ற தேசிய எண்ணம் வலுப் பெற்ற காலம். தீண்டாமைக்கு எதிராக மகாத்மா காந்தி தீவிர குரல் கொடுத்த காலம்
கலை இலக்கியத்தில் ஐரோப்பியக் கலைகளுக்கொப்ப, ஏன் அதற்கும்மேல் இந்தியக்கலைகள் சிறந்தன என்று கிழக்கின் பாரம்பரியத்தை மேற்குக்கு எடுத்துக் கூற இந் திய எழுத்தாளர்களும், அறிஞர்களும் உழைத்த காலம். மாக்ஸ்முல்லர், கலாயோகி ஆனந்த குமாரசாமி போன் றோர் இங்கு குறிப்பிடக்கூடியவர்கள்.
தமிழ் நாட்டுச் சூழல்
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமும் பரந்து பட்ட தேசிய இயக்கமும் உருவாகிய இச் சூழலில்தான் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஜஸ்டிஸ் கட்சி உருவானது. பிராமணர், பிராமணர் அல்லாதவர் பிரச்சினைகளும் உருவாகின. இதன் வி ைள வா க க் கரந்தைத் தமிழ்ச் சங்சம் டோன்ற சைவ - தமிழ்க் *ழகங்கள் உண் டா யி ன. தனித் தமிழ் இயக்கம் மறை மலையடிகள் தலைமையில் உண்டானது. கால்டு வெல்லின் கூற்றும் சிந்து வெளி நாகரிகக் கண்டுபிடிப்பும் ஆரிய திராவிட கருத்தைத் தோற்றுவித்தன. தென்னிந்திய மக்கள் திராவிட இனத்தினர் என்ற கருத்துருவாக்கம் உருவானது. இதனால் திராவிடக் கழகத்தை ஈ. வே. ரா. தொடங்கினார். இதன் விளைவாக தமிழ்த் தேசிய வாதம் தமிழ் நாட்டில் உருவானது. இது இலங்கையில் தோன்றிய தமிழ்த் தேசிய வாதத்திலிருந்து வேறானது. இந்தியத் தமிழ் தேசிய உணர்வு பின்வரும் அம்சங்களைக் கொண் டிருந்தது.
I) giu (b.dig, 6tgfrita0757. (Anti Brahmin)
11) சமஸ்கிருதப் பண்பாட்டுக்கு மாறானது. திராவி
டப் பண்பாட்டை வலியுறுத்துவது.
04

I) பிராமணரால் ஒதுக்கப்பட்ட பிராமணர் அல்லா தார் ஆரியருக்கு முற்பட்ட திராவிடர் புகழ் பேசி தம்மைப் பிராமணர் பண்பாட்டு மேலாதிக்க நிலையினின்று விடுவிக்கப் பார்த்த தன்மை கொண்டது. 1 சமூகத்தில் திராவிடக் கழகம் தீண்டாமைக்கு எதிராக சீர் திருத்தக் கருத்துக்களை வைக்க ஆரம்பித்தது இக் காலத்திலேயே.
கலை இலக்கியத்தில் தமிழர் கலைகளை மேன்மைப் படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப்பிள்ளை போன்றோரும், மறைமலையடிகள், கா. சுப்பிரமணிய பிள்ளை போன்றோரும் தமிழ் ஆராய்ச்சியில் இரு துருவங் களாயினும் முன் நின்றனர். மணிக்கொடி, ஆனந்தவிகடன், கலைமகள், தினமணிக்கதிர், கல்கி போன்ற பத்திரிகை கள் தோன்றின.
வெள்ளையருக்கு இந்தியக் கலைகள் உ ண ர் த் த ப் பட்டது போல வடவரான ஆரியருக்குத் தமிழ்க் கலைகள் உணர்த்தப் பட வேண்டும் என்ற தமிழ் உணர்வு பிரதான ஒட்டமாக இருந்தது.
இலங்கைச் சூழல்
தமிழ் நாடு இவ்வாறாக இலங்கையின் சூழல் இன் னொரு விதமாக அமைந்தது.
இலங்கை அரசியலில் மோர்லின் மின்டோ, மனிங் சீர்திருத்தம், டொனமூர் அரசியலமைப்பு, சோல்பரித் திட்டம் அனைத்தும் விபுலாநந்தர் காலத்தில் நடை பெறுகின்றன. மெல்ல மெல்ல இலங்கையர் அரசியலில் பங்கு கொள்ளும் நிலை உருவாகின்றது. பொன்னம்பலம்இராமநாதன், அருணாசலம் போன்ற தமிழ்த் தலைவர்கள் உதயமாகின்றார்கள். 1920, ல் அரசியல் நிலைமைகள் இலங்கையில் வகுப்புவாத உணர்வினை உருவாக்கின.
05

Page 8
இக்காலத்தில் இந்தியாவில் இந்து முஸ்லிம் பிரச்சினை போன்று இலங்கையிலும் தமிழ், சிங்களப் பிரிவினை உருவாகி இருந்தது.
இலங்கையில் தமிழ் தேசிய உணர்வு 1930 ன் பின் முனைப்பு பெறலாயிற்று. இது பின்வரும் அம்சங்களைக் கொண்டதாயிருந்தது. 2
கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு எதிரானது. 2. குறிப்பாகத் தமிழ் மக்களின் சைவத் தனித்துவத்தைப் பாதுகாக்க முனைவதாகவும் ஒரு மத - இலக்கிய இயக் கமாகவும் ஆறுமுக நாவலரால் மேற்கொ ள் ள ப் tull-gil. 3. கிறித்தவப் பாதிரிமாரால் சனரஞ்சகப் படுத்தப்பட்ட சமய நடவடிக்கைகளையும் முறைகளையும் இது கையேற்றுக் கொண்டது. فیر சமூக அமைப்பில் காந்தியத்தின் தாக்கத்தினால் தீண் டாமை ஒழிப்பு சிறிய அளவில் மேற்கொ ள் ளப் படினும் ஆறுமுகநாவலரின் கோட்பாடுகள் தீண்டாமையை மேலும் வற்புறுத்துவனவாகவே அமைந்தன.
முரண்பாடுகளும் சமரசமும்
கலை இலக்கியத்தைப் பொறுத்தவரை தமிழ்க் கலை கள் பிரதானப் படுத்தப்பட்டன. கலைப் புலவர் நவரட்ணம் போன்றோர் முக்கியமானவர்கள். இலக்கியத்தில் மரபுவழிப் பண்பு பேணப்பட்டது. வித்துவான் கணேசையர், குமார சுவாமிப்புலவர் போன்றோர் பிரதானமானவர்கள். அத் தோடு ஈழகேசரி போன்ற பத்திரிகைகளும், நவீன இலக் கிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பின்னணியினைச் சுருக்கமாகப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
O6

i) ஐரோப்பிய நாகரிகத்திற்கும் - இந்திய நாகரிகத்
திற்குமிடையே முரண்பாடு. i) வெள்ளையர் - இந்தியர் முரண்பாடு. i) ஆரியர் - திராவிடர் முரண்பாடு. iv) திராவிடர் - தமிழர் முரண்பாடு. V) பழைய இலக்கியம் - புதிய இலக்கியம் முரண்பாடு: wi) கிறித்தவம் - இந்து முரண்பாடு. wi) முஸ்லிம் - இந்து முரண்பாடு, wi) இந்துக்களுள் காணப்பட்ட உயர்ந்தவன் - தாழ்ந்
தவன் முரண்பாடு. ix) சமயச் சார்பு - சமயச் சார்பின்மை. X) துறவுநெறி - உலக வாழ்க்கை நெறி. இத்தகைய பிரச்சினைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் மத்தியில் விபுலாநந்தர் எவ்வண்ணம் இயங்கினார், இம் முரண்பாடுகளை எவ்வாறு அணுகினார், தீர்த்தார், தீர்க்க முயற்சித்தார் என்பதை ஆராய்வது ஓர் ஆராய்ச்சி மாணாக்கனுக்கு சுவையும், அறிவும் தரும் முயற்சியாகும். விபுலாநந்தரை அறிந்து கொள்ள அவரைப் புரிந்து கொள்ள எம் முன்னுள்ளவை உடனடியாக அவரது எழுத் துக்கள் தாம். இன்னும் அவர் ஆற்றிய சொற் பொழிவு சுள், அவரது கடிதங்கள், சிறு குறிப்புக்கள், ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரைகள், அவருடன் தொடர்பு கொண்டோர் அவர் பற்றி எழுதிய குறிப்புக்கள் கிடைப் பின் சரியான கணிப்பீடுகளைச் செய்ய முடியும். அவர் எழுதிய கட்டுரைகள் காலவாரியாகத் தொகுக்கப்படாமை யும், அவற்றில் சரியான பி ன் ன னரி அடிக் குறிப்புகள் கொடுக்கப்படாமையும் எமது ஆய்வுக்குத் தடையாக உள்ள சில அம்சங்களாகும். எனினும் கூ டி ய வ  ைர கிடைத்த ஆதாரங்களை ஒழுங்குபடுத்தி இவ்வாய்வினை மேற் கொள்ளுவோம். அவ்வகையில் இக்கட்டுரை ஓர் ஆரம்ப முயற்சியே தவிர முடிந்த முடிவல்ல என்பதையும் கூறவிழைகின்றேன்.
07

Page 9
விபுலாநந்தரின் எழுத்துக்களை வைத்து நோக்கும் பொழுது, 1920 ல், அவரின் எழுத்துக்களுக்கும் 1940 ல் அவரது எழுத்துக்களுக்கும் வேறுபாடுகள் காணப்படு கின்றன. 1920 ல் 28 வயதான விபுலாநந்தர் எழுதிய எழுத் துக்களுக்கும் 1940 ல் 48 வயதான விபுலாநந்தரின் எழுத் துக்களுக்கும் வித்தியாசம் இருப்பது இயல்பே. ஆராய்ச் சியாளர், பெரும் அறிஞர்களை இளவயது - முதிர்வயது என்று பிரித்தாராய்தல் இயல்பு. இளவயதில் உதித்த சில எண்ணக் கருக்கள் முதிர்நிலையில் வளர்ச்சி பெற்றுக் கனிந்தும் வரலாம். சில அழிந்தும் விடலாம். சில மாறு பாடும் அடையலாம். எனவே உதித்தவை எவை? அழிந் தவை எவை? மாறியவை எவை? வளர்ந்தவை எவை? என்ற ஆராய்ச்சி மிக அவசியமாகும். அதை விட்டு அவர் கூறிய அனைத்துக் கருத்துக்களையும் அவரின் முதிர்ந்த கருத்தாக எடுத்துப் பின்பற்ற நினைத்தல் அறிவுடமை யாகாது. அது கால முரணுமாகும்.
ஆரம்பத்தில் சித்தாந்தியாகக் காணப்பட்ட சுவாமி கள் பின்னாளில் பழுத்த வேதாந்தியாகக் காட்சி தருகி றார். மொழி பெயர்ப்புப் பற்றி இறுக்கமான கருத்துக் கள் கொண்டிருந்த சுவாமிகள் பின்னால் நெகிழ்ச்சியான கருத்துக் கொண்டவராயிருக்கிறார். இலக்கிய வரலாறு பற்றி ஆரம்பத்தில் விஞ்ஞான பூர்வமற்ற கருத்துக்கள் கொண்டிருந்த சுவாமிகள் பின்னாளில் அப்படி எழுதினா ரல்லர்.
ஆரம்பத்தில் குமரிக் கண்டத்தையும் தமிழர் பெரு மையும் பெரிதாகப் பேசாத அவர் பின்னர், தமிழர் குமரிக் கண்டத்தில் தோன்றி ஐரோப்பா நோக்கிப் பரவி னர் என்ற கருத்தின் பால் ஈர்க்கப்பட்டார்.
ஆரம்பத்தில் தமிழாராய்ச்சி மேற் கொண்ட அவர் பின்னாளில் இசை ஆராய்ச்சி மாத்திரம் செய்கிறார்.
இவ்வகையில் அவர் எழுத்துக்கள் அவரிடம் காணப் பட்ட முரண்பட்ட சிந்தனைகளையே எமக்குக் காட்டுவன
08

வாயுள்ளன. ஒரு வகையில் அவர் வாழ்வே முரணிலை யிற் காணப்படுகிறது. துறவியான அவர் மிகுந்த தமிழ்ப் பற்றுடையவராயிருந்தார். துறத்தல், பற்று வைத்தல், எதிர் துருவங்களல்லவா?
சித்தாந்தியாக எழுதிய, நடந்த அவர் வேதாந்தக் கருத்துக்களையும் தருகிறார்.
துறவியான அவர் அழகாக உடுத்துப் புறப்படுவதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் போல.
மரபு வழியில் இலக்கியம் பயின்ற அவர் நவீன கருத் துக்களையும் முன் வைக்கிறார்.
செந்தமிழ் மரபே தனி மரபு. பாண்டியன் தமிழே தமிழ் என்றுரைத்த அவர் பேச்சுத் தமிழையும் வரவேற் கிறார். தமிழ் மரபில் வளர்ந்த அவர் ஆங்கில மரபை யும் அரவணைக்கிறார்.
பழமையும் - புதுமையும் அவரில் இணைகின்றன. அ வ ர து சிந்தனைகள், முரண்பாடுகள் போலத் தோற்றமளிப்பினும் முடிவில் அவர் வைக்கின்ற முடிவான கருத்துக்கள் முக்கியமானவை. அவையே நமக்கு அவரை இனம் காட்டுவன. 1943 ல் எழுதிய ஒரு கட்டுரையில் பின்வருமாறு அவர் குறிப்பிடுகின்றார். "பழமையும் புதுமையும், துவைதமும், அத்வைதமும், பெள தீக விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானக் காட்சியும், மேற்றிசைய றிவும், கீழ்த்திசைச் சமயமும், மனமொடுங்கிய தியானநிலை யும், மன்பதைக்குத் தொண்டு புரிதலும் சமரசப்பட வேண் டிய காலம் இது 3
முரண்களைக் காணுதலும் முரண் வழிச் செல்லாது நல்லவற்றை இணைத்து சமரசம் காணும் நோக்கும் மனித குலத்திற்கு நன்மை புரிதல் வேண்டும் என்ற கருத்தும் விபுலாநந்தரின் கருத்தாகும்.
09

Page 10
தமிழ் இலக்கியத்தை ஆழக்கற்ற விபுலாநந்தர் தம் முன்னோர்களினின்று இக்கருத்தைப் பெற்றிருக்கக் கூடும். உலகை வெறுத்து மறுமை வாழ்வை நோக்கிய சமணம் ஒரு பக்கமாகவும் அகம் புறம் என்ற இம்மை வாழ்க்கை இன்னொரு புறமாகவும் நின்ற சூழலில் இரண்டு போக் கின் நல்ல அம்சங்களையும் இணைத்து இம்மையிற் செம் மையாய் வாழ்ந்து மறுமையையடைய வழி சொன்னவர் வள்ளுவர்.
வடமொழி இலக்கியம் ஒரு புறமும் - தமிழ் இலக்கியம் ஒரு புறமுமாகவும் நின்ற நிலையில் இரண்டினுள்ள நல்ல அம்சங்களைத் தெளிந்து வடமொழி வால்மீகி ராமாய ணத்தைத் தமிழ்க் கம்பராமாயணமாக்கியவர் கம்பர். பார தியும் இவ்வாறே பழமை என்று பழமையை தள்ளவும் இல்லை. புதுமை என்று புதுமையை ஏற்கவும் இல்லை. இரண்டில் நல்ல அம்சங்களையும் இணைத்தார்.
பழந்தமிழ் இலக்கியம் பயின்ற அவர் தம்முன்னோரி டம் கற்ற பாடத்தை விவேகானந்தரில் உரசிப் பார்த்து உறுதி செய்து கொண்டார். விவேகானந்தரும் பழமை - புதுமை இணைப்பின் இந்தியக் குறியீடு ஆவார்.
எல்லாச் செயற்பாடுகளும் மன்பதைக்குத் தொண்டு புரிதலே என்ற அவரது கூற்றில் மனிதர் மீது அவர் வைத்த அக்கறை புலப்படுகிறது.
எல்லா அறிவும் இறைவனை அடைவதற்கே என்ற பழைய கூற்றிலிருந்து எல்லா அறிவும் மனிதனுக்குச் சேவை செய்யவே என்ற இவர் கூற்று வித்தியாசப்படுகிறது.
இந்த எண்ணம் சிறு வயதில் அவரிடமிருந்த கருத்தா கும்.இக் கருத்து விரிந்து பெருகையில் இது சேரும் கடலாக இருந்தது இராமகிருஷ்ணமிஷனாகும்.
10

விபுலாநந்தரின் ஆளுமைப்பின்னணி
விபுலாநந்தரினால் ஆளுமையை உருவாக்கிய முக்கிய பின்னணிகளாக ஐந்தைக் குறிப்பிடலாம். அவையாவன
1. மரபு வழித் தமிழ்க்கல்வி.
ஆங்கிலக் கல்வி. விஞ்ஞான கணித அறிவு வடமொழி அறிவு. இராமகிருஷ்ண மடத்தொடர்பு பன்மொழி அறிவு.
மரபு வழித் தமிழ்க் கல்வி
விபுலாநந்தரின் மரபு வழிக் கல் வி காரைதீவிலே ஆரம்பிக்கின்றது. த ந்  ைத யா ரி ன் வழிகாட்டலின் கீழ் அவர் கல்வி பயில ஆரம்பித்தாலும் காரைதீவு வைத்தி லிங்க தேசிகர், தென்கோவை கந்தையா பண்டிதர், கயி லாயபிள்ளை முதலியோரிடம் கற்றார். இவர் 1912 வரை அதாவது 20 வயது வரை தமிழ்க்கல்வி பயின்றார். கயிலாய பிள்ளையிடம் சிலப்பதிகாரம் ப யி ன் றார். இளமையிற் காரைதீவு கண்ணகி கோயிலில் வருடாவருடம் பாடக் கேட்ட கண்ணகி வழக்குரை மீதிருந்த ஆர்வம் சிலப்பதிசாரம் மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக் கலாம். இவ் ஆர்வம் அவர் மனதினுள் கிடந்து வளர்ந்த தன் விளைவாகவே அவரது இறுதிக் காலத்தில் யாழ்நூல் உருவாகியிருக்கலாம்.
ஆங்கில அறிவு
கல்முனையில் லீஸ் பாதிரியாரது மெதடிஸ்த பாட சாலையில் ஆங்கிலக் கல்வி கற்ற சுவாமியவர்கள், 1904ல் மட்டக்களப்பு மெதடிஸ்த ஆங்கிலக் கல்லூரியிலும் பின் 1906ல் சென்ற் மைக்கல் கல்லூரியிலும் ஆங்கிலம் பயின் றார். 1906ல் யூனியர் கேம்பிரிஜ் பரீட்சை எழுதினார்.
| 1

Page 11
1909 - 1910 வரை சென்ற் மைக்கலில் ஆசிரியப் பணி யாற்றினார். 1915ல் கொழும்பில் ஆங்கில ஆசிரியப் பயிற் சிக் கலாசாலையில் கல்விபயின்றார். இந்த ஆங்கில அறிவு தான் அவருக்குப் பரந்த உலகப்பார்வையை அளித்ததுடன், பல்நூற் புலமை பெறும் மனப்பாங்கையுமளித்தது.
விஞ்ஞான கணித அறிவு
1915 ல் Maths இன்டமிடியட் சோதனையும் 1919 ல் லண்டன் பி. எஸ் . ஸி பரீட்சையும் எடுத்தார். அதில் பெளதிகத்தை ஒரு பாடமாக எடுத்துச் சித்தியடைந்தார். இரசாயன ஆசிரியராகப் பணியாற்றியதுடன் யாழ்ப்பா ணம், மானிப்பாய், இந்துக்கல்லூரியில் ஆய்வுக்கூடம் ஒன்றினையும் நிறுவினார்.
வடமொழி அறிவு
வைத்திலிங்கத் தேசிகரிடம் வடமொழிக்கல்வி பயின்ற இவர் யாழ்ப்பாண வாழ்க்கையின் போது அதனை மேலும் வளர்த்திருக்க வேண்டும். ஆரிய திராவிட பாஷா பிவிருத் திச் சங்கம் நிறுவியமை இவரது வடமொழிப் பற்றைக் காட்டுகிறது. இராமகிருஷ்ண மடத் தொடர்பும் இவரது வடமொழி ஆர்வத்திற்கு மேலும் ஊக்கமளித்திருக்கலாம்"
இராமகிருஷ்ணமடத் தொடர்பு
1911 - 1912 காலங்களில் தமது 20 வயதில் கொழும் பில் வாழ்ந்த காலத்தில் இவருக்கு விவேகானந்த சபை உறுப்பினர்கள் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அதில் உறுப்பினருமானார். 1917ல் கொழும்பில் சர்வானந்தா வால் கவரப்பட்டார். இதன் வளர்ச்சியாகத்தான் 1922ல் சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தில் பிர போத சைதன்யராகி 1924ல் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவுத் திருநாமமும் பெற்றார். இராமகிருஷ்ண மடம்
12.

அவருக்கு வேதாந்த அறிவைத் தந்தது. அனைத்து ஆன் மாவையும் சமனாகக் காண்கின்ற போக்கிற்கு ஒரு தத்துவ பலத்தை அத்வைத வேதாந்தம் இவருக்களித்தது.
பன்மொழி அறிவு
விபுலாநந்தருக்குப் பன்மொழி அறிவு இருந்தது. அவருக்கு லத்தின், கிரேக்கம், வங்காளம், பாளி, சிங்களம், அரபு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகள் தெரிந்திருந்தன. இப்பன்மொழி அறிவு அவருக்கு நூல்களை அவற்றின் மூலத்திலேயே படித்தறியும் வாய்ப்பினைக் கொடுத்திரு க் கலாம். பன்மொழி அறிவு பரந்துபட்ட பார்வையினையும் இவருக்குக் கொடுத்தது.
மேற்குறிப்பிட்ட பின்னணிகள் அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய தமிழறிஞர்கட்கு ஒரு சேரக் கிடைக்கா தவை. அவர் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் ஒன்றில் மரபு வழி வந்த தமிழறிஞர்களாயிருந்தனர். அன்றேல் சைவ சித்தாந்தக் கூட்டுக்குள் நின்று கொண்டு தமிழை அளந்தனர். அன்றேல் நவீன நோக்கற்றவராயிருந்தனர். பெரும்பாலும் தமிழ் வளர்த்தல் எ ன் பது இவர்கட்கு பழைய இலக்கண இலக்கிய மரபைப் பேணுதல் அல்லது அதன் வழி வளர்த்தல் என்பதாகவே இருந்தது.
விபுலாநந்தர் இவர்களினின்று வேறுபடுகின்றார். ஆங்கிலக் கல்வி அவருக்கு ஆங்கிலக் கலை இலக்கிய ஆராய்வு உலகை அறிமுகம் செய்தது. வடமொழிப் புலமை அவருக்கு வடமொழிக் கலை இலக்கிய உலகைக் காட்டியது.
வேதாந்த நெறி அனைத்தையும் பேதா பேதம் காட் டாது உள்வாங்கும் திறனையும், குணத்தையும் அளித்தது.
விஞ்ஞான அறிவு புறநிலைநின்று ஆராயும் பண்பை அவருக்குத் தந்தது.
இவற்றால் தன்கால மரபு வழித் தமிழறிஞர்களிட மிருந்து விபுலாநந்தர் வேறுபடுகின்றார். அவரது சமூக,
13

Page 12
கலை, இலக்கிய நோக்கினை இவ் ஆறு பின்னணிகளும் நிர்ணயம் செய்வதனைக் காணலாம்.
இந்த அடித்தளத்தில் எழுந்த அவரது சிந்தனைகள் அகண்ட உலக நோக்கையும் - அந்த உலகப் பரப்பில் தமி ழனையும் ஒன்றாகக் காணும் தன்மையையும் தமிழ்ச் சமூகத் தின் தனித்துவத்தை உலக சமூகத்தில் தேடும் பார்வையை யும் அவருக்கு அளித்தன.
சமூக நோக்கு
ஒருவரின் சமூக நோக்கே அவரின் ஏனைய சிந்தனை களுக்கான வாயிலாக அமைகின்றது. ஒருவரின் தத்துவ நோக்கைக் கூட சமூக நோக்கே நிருணயித்து விடுகிறது. சமூகம், ஏற்றத் தாழ்வுகள் மிக்க பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஆசியாவில் சாதிகளாகவும், ஐரோப் பாவில் வர்க்கங்களாகவும் உலகப் பரப்பில் இனங்களாக வும், சமூகம் பிளவுண்டு கிடக்கிறது. இதனால் சமமின்மை மன்பதையிடம் நிலவுகிறது. இப் பிரிவுகள் பற்றிச் சாதக மான அல்லது பாதகமான நோக்கு மனிதர் ஒவ்வொரு வரிடமும் உண்டு. அந்நோக்கு ஒவ்வொருத்தரினதும் அறிவு, அனுபவம் தத்துவ நோக்கிற்கியைய உருவாகிறது.
விபுலாநந்தரின் இளமைக்கால வாழ்க்கையும், மட்டக் களப்புச் சூழலும், இராமகிருஷ்ண மடத் தொடர்பும், வேதாந்த ஞானமும் அவருக்கு சமூகப் பிரிவினைகளுக்கு எதிரான நோக்கையே கொடுத்தன.
*மனிதன் உடலமைப்பில் ஒரே மாதிரியாக இருந்தா லும், குண வித்தியாசத்தினால் பலவகைப்படுவான்’** என்ற விபுலாநந்தரின் கூற்றில் மனிதனை வித்தியாசப் படுத்துவது குலமல்ல குணம், என்ற தொனி தெறிக்கிறது. உடலமைப்பில் அனைவரும் ஒன்று தான் என்ற இவர் கூற்றில் மனிதர் அனைவரும் பார்வையில் ஒன்று தான்; சமம் தான் என்ற பொருளும் தொனிக்கிறதல்லவா?
14

"மனிதர்கள் இரண்டு விதமாக வகுக்கப்படுவர். ஒரு விதம் பகவானிடத்தில் மனத்தைச் செலுத்தும் பத்தர்கள். மற்றொரு விதம் பொன் மீதும், பெண் மீதும் ஆசை வைத்திருக்கும் மானிடப் பதர்கள்." 9
மனிதனை இரண்டே இரண்டு சாதியாகப் பிரிக்கும் இவர் நோக்கில் ஒளவையாரின் இட்டார் பெரியோர் இடா தார் இழிகுலத்தோர் என்ற தொனியின் சாயல் விழுகிறது. பக்தி உடையோர் இல்லாதோர் என்ற இரண்டு சாதிக ளாகப் பிரிக்கலாமே தவிர வேறு சாதிகளாகப் பிரிக்க முடியாது என்பது அவர் கொள்கை. ܖ
பிராமணனுக்கு வியாக்கியானம் தர வந்த விபுலாநந்தர் அந்தணன் அறிஞனாய் இருந்தால் மாத்திரமே அவன் உண்மையான பிராமணன் என்று கூறுகிறார். பிறப்பால் சாதியில்லை. குணத்தால் தான் சாதி என்ற பாரதியின் கூற்று இங்கு பிரதி பலிப்பது போல உள்ளது. இதே கருத்தை என் கடன் பணி செய்து கிடப்பதே எனும் தன் நூலில் திரு. வி. க. வும் இக்கால கட்டத்தில் வெளி யிடுவது குறிப்பிடற்குரியது.
1930 ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமை புரிந்த காலத்தில் திருவேட் களத்தில் ஒதுக்கப்பட்ட ஆதித்திராவிடர்கள் வாழுகின்ற சேரிகளுக்குச் சென்று பாலர்கள் படிக்க பள்ளிகள் ஏற்படுத் தினார். வளர்ந்தோர் படிக்க இரவுப் பள்ளிகள் ஏற்படுத் தினார். இதனால் கல்வி அறிவு பெற வாய்ப்பில்லாது ஒதுக் கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி அறிவு கிடைக்க வழி காட்டினார். அவருக்கு சிதம்பரம்தாலுகா, வேட்களம் ஆதித் திராவிடர்களின் சார்பாக அளிக்கப் பட்ட பிரிவுரை வாழ்த்தில்
"தம் நலம் பேணும் பார்ப்பனர்களால் சண்டாளர் கள் என்றழைக்கப்படும் எங்களை அழைத்துத் தங்கள் வீட்டினுடனிருத்தி விருந்துண்ட காட்சியும், உவகையும் எங்கள் கண்களையும் மனதையும் விட்டு அகலுமோ?.
15

Page 13
எங்கள் முன்னேற்றத்திற்கென தங்களால் தொடங்கப் பட்ட இரவுப்பள்ளி என்றும் வளர்ந்து ஒங்குவதற்குரிய வழியொன்று தாங்கள் தேடுவதோடு,ஈழத்தீவில் தங்களால் நடாத்தப்படும் பள்ளிகளில் எங்குல மாணவர் பலரை சேர்த்துக் கொள்ளும் படியும் வேண்டுகிறோம்." 8
என்று வரும் ஆதி திராவிடர்களின் உளக் குறிப்பு கள் விபுலானந்தர் மனதையும் சேவையையும் எமக்கு உணர்த்துவன. விபுலானந்தரின் சமதர்ம சிந்தனை வாய்ந்த இக் கல்வித் தொண்டு நாவலரின் கல்விப் பணிகளோடு ஒப்புநோக்கற்குரியது. நாவலரின் கல்விப் பணிகளைப் பல மடங்கு விஞ்சியது.
சமூக நோக்குப் பற்றி அவர் நோக்கு மென்மேலும் பரந்து விரிவதை 1942, 43 ல் அவர் எழுதிய தென் னாட்டில் ஊற்றெடுத்த அன்புப் பெருக்கு வட நாட்டில் பரவிய முறை எனும் கட்டுரையில் காணலாம். 7 சாதி பேதம் வர்ண பேதங்களின்றி தொண்டர்கள் யாவ ரும் ஒருங்கு சேர்ந்து இறைபணி செய்தமையை அதில் விரிவாகக் கூறுகிறார். கவுணிய குலத்தவரான சம்பந்தருக் கும் பாணராகிய நீலகண்டருக்கும் உள்ள உறவு, வேளாள அப்பரும், பிராமணரான சம்பந்தரும் கொண்டஉறவு, பாணர்குல திருப்பானழவாரை உலோக சாரங்க முனிவர் தன்தோள் மீது கொண்டு சென்றமை, அரச குலத்தவரான சேரமான் பெருமாள் திருநீற்றுச் செலவினைக் கண்டு வண்னான் முன்னிலையில் தலை வணங்கியமை நான்காம் குரவரான உமாபதி சிவாச்சாரியார் கொற்றவன் குடியில் வசித்ததுடன் அங்கு பெற்றான் சாம்பான் என்ற புலை யனுக்கு தீட்சை கொடுத்தமை, இராமானுஜர் தீண்ட த் தகாதோருக்கும் இராமநாத மந்திரம் ஒதித் தீட்சை தந் தமை இராமானுஜரின் சீடரான இராமநந்தர் சம்பந்தி போசனம் செய்தமை, இராமநந்தரின் சீடர்களாக சக்கிலி யரான ரவிதாஸரும் நாவிதராகிய சோனரும் உழவராகிய தன்னரும் இஸ்லாமிய நெசவுகாரரான கபீர்தாஸரும்
16

இருந்தமை இங்ங்ணம் எண்ணற்ற உதாரணங்களைப் பழைய நிகழ்ச்சிகளினின்றும் எடுத்துக் காட்டுகிறார்.
குலம் தரு செல்வம் தரும் என்ற திருமங்கையாழ்வார் பாடலுக்கு உரைகண்ட பெரியவர்கள் பண்டைக்குல மொழிந்து தொண்டைக் குலமாதல் என்றுரைத்தஉரையை அழுத்திக் கூறுகிறார்.
பிரிவுகள் இல்லாத, சாதி பேதங்கள் இல்லாத வருண பேதங்கள் இல்லாத, இன பேதங்கள் இல்லாத ஒரு மனித குலத்தையே விபுலாநந்தர் கனவு கண்டார் என்பதை அவர் எழுத்துக்கள் காட்டுகின்றன. இத்தகைய ஒரு சமூக நோக்கை அவருக்களித்ததில் வேதாந்த ஞானம் முக்கிய பங்கு வகித் திருக்கலாம். தமிழ் மக்களின் எதிர் கால எழுச்சி மீது நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட அடிகளார் தமிழ்ச் சமூகம் தமக்குள் ஏற்றத் தாழ்வு அற்ற ஒரு சமூகமாக உருவாக வேண்டும் என்றே விரும்பி இருப்பார் என்பதில் ஐயமில்லை. இந்தப் பரந்த பார்வை யினையே அவர் கலைகள் மீதும் இலக்கியங்கள் மீதும் செலுத்தினார்.
கலை இலக்கியங்கள் சம்பந்தமாக அவர் எழுதிய கட்டுரைகள் தெ7 டக்கம் அவரது ஆராய்வின் கொடுமுடி எனக் கருதப்படும் யாழ்நூல் வரை தொகுத்து நோக்கின் உலகக் கலை இலக்கியங்களைத் தமிழருக்கு அறிமுகம் செய்வதும், இரண்டிற்குமிடையே காணப்படுகின்றஅபேதத் தன்மைகளை இனம் காட்டுவதும், உலக கலை இலக்கிய வளர்ச்சியை நோக்கித் தமிழரை முன் தள்ளுவதும், அதே நேரம் தமிழருக்குரிய தனித்துவமான கலை இலக்கிய வளர்ச் சியை உணர்த்துவவதுமே அவர் நோக்கங்களாயுள்ளன?
உலகம்-தமிழ்நாடு என்ற இரு துருவ முரண்பாடுகளை இணைக்க முயன்றவர் விபுலாநந்தர். முரண்பாடுகளில்
ஒற்றுமை காணும் அவரது முதுகெலும்பான நோக்கே இங்கு செயற்படுகிறது எனலாம்.
7

Page 14
விபுலாநந்தர் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வாழ்ந்த காலப்பகுதியில் தமிழ்த் தேசிய வாதம் வளர்ந்து வந்தமை முன்னரே குறிப்பிட்ட ஒரு விடயமாகும். தமிழ்த் தேசியம் பேசியோர் இரு நிலைக்குள் அடங்கினர்.
ஒரு சாரார் இந்திய நாகரிகத்தின் ஒரு கூறாகவே தமிழ் நாகரிகத்தைக் கண்டனர். நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப்பிள்ளை போன்றோர் இவ்வகையினர்.
இன்னொரு சாரார் தமிழர் நாகரிகத்தினையே இந் தியாவின் புராதன நாகரிகமாகக் கொண்டனர். பி. டி பூரீனிவாச ஐயங்கர், வி. கனகசபைப்பிள்ளை, ஆபிரகாம் பண்டிதர் போன்றோர் இவ்வகையினர். ஆனால் இரு சாராருமே தம்மால் முடிந்தளவு தமிழ்த் தொண்டு புரிந் தோரே.
தமிழரின் தனித்துவத்தை வெளிக் கொணர மேற் சொன்ன இரு சாராருமே முயன்ற இந்த வேளையிலே ஒவ்வொரு துறையிலும் தமிழ் வளர்ச்சி மேற்கொள்ளப் பட்டது. ஏட்டிலிருந்த பண்டைய தமிழ் இலக்கியங்களைப் ப தி ப் பி க் கும் முயற்சியில் உ வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரும், தமிழருக்குரிய தத்துவம் எனக் கூறிச் சைவ சித்தாந்தம், அதனோ டு ஒத்த முருக வழிபாடு என்பதை அறிமுகம் செய்வதில் மறைமலை அடிகள், திரு. வி. க. முதலியோரும், தமிழ ருக்குரித்தான நாடகத்தைக் காணுதலில் பேராசிரியர் சுந்தரம்பி ளை, பம்மல் ச ம் பந்த மு த லி யா ர், திரு. வி. கோ. சூரியநாராயணசாஸ்திரி போன்றோரும், தமிழரின் இசையைக் காண்பதில் ஆபிரகாம் பண்டிதர், அண்ணாமலை செட்டியார் போன்றோரும் ஈடுபட்டனர், ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஏற்கனவே கால்டுவெல் ஐயர் அவர்கள் தமது திரா விட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை வெளி
18

யிட்டு ஆரிய மொழியினின்று மாறுபட்டதுடன் தனித்து வமுமான அமைப்புடைய திராவிட மொழி என்று கூறத் தொடங்கி விட்டார். இதையொட்டி ஆய்வாளர்கள் திரா விடமொழி, ஆரிய மொழி இனம், செமிட்டிக் மொழி இனம், இரண்டிக்கும் மாறுபட்டது; வேறுபட்டது என நிறுவினர். கில்பர்ட்சிலேட்டர் ஜேம்ஸ் ஹார்னல், பியூரர் கிறிஸ்டோபர், ஹெய்மன் டார்வ், என். லஹோவரி, ஜி. எலியட் ஸ்மித் டாக்டர் H. R. ஹால், E. P. ஹாவல் போன்றோரும் திராவிடத் தனித்தன்மையை சரித்திர ரீதிய க வலியுறுத்தினர். திராவிடரின் தனித்தன்மை என் பதற்கு ஆய்வறிவியல் ஏற்புடமை - அந்தஸ்து தேடிக் கொள்ள இவர்கள் முயற்சிகள் உதவின.
இந்தோ - ஆரிய ஐதிகத்தினைத் தோற்றுவிக்க காரண கருத்தாவாக இருந்த மாக்ஸ் முல்லர், (1919) . M. நல்ல சாமிப்பிள்ளை போன்றோர் சித்தாந்த தீபிக; Tamil Antiquity போன்ற ஆராய்ச்சிச் சஞ்சிகைகளில் எழுதிய தமிழர் பற்றிய கட்டுரைகளினால் கவரப்பட்டு தனது The Six System in Indian Philosophy 676ö! Seylb BIT696) திராவிட மொழி இலக்கிய ஆய்வில் ஈடுபடுவோர் தென் னிந்தியாவிலே தத்துவ இலக்கியமொன்றுள்ளது என்பதை அறிவர் என ஒப்புக் கொள்ளுகிறார்.
இத்தகைய பின்னணியிலே தான் அரங்கிற்கு வருகிறார் விபுலாநந்தர். அவரும் தமிழரின் தனித்துவம் பற்றி, தமிழ்க்கலை இலக்கியம் பற்றித் தன் கருத்துக்களை முன் வைக்கிறார். ஒரு வகையில் அவரது கலை இலக்கியப் பணி கள் அன்றைய காலத்தின் தேவையுமாகும். கலை பற்றிய அவரது நோக்கினையும் பணிகளையும் பின்வரும் மூன்று தலையங்கங்களின் கீழ் நோக்குதல் பயனுடையதாம் .
1. கலைகள் பற்றிய அவரது கோட்பாடுகள். 2. இசைக் கலைக்கு அவரது பங்களிப்பு. 3. நாடகக் கலைக்கு அவரது பங்களிப்பு
19

Page 15
கலைகள் பற்றிய கோட்பாடுகள்:
கலைகள் பற்றிய அவரது கோட்பாடுகளை அறிய
அவரது பின்வரும் கட்டுரைகள் உதவுகின்றன.
1. நாகரிக வரலாறு.
எகிப்திய நாகரிகம்.
யவனபுரக்கலைச் செல்வம்,
மேற்றிசைச் செல்வம்,
ஐயமும் அழகும்.
உண்மையும் வடிவும்.
நிலவும் பொழிலும்.
மலையும் கடலும்,
கவியும் சால்பும்.
நாடும் நகரும் ,
O
கலைவரலாறு இன்று பல்கலைக்கழகங்களில் ஒரு பாட நெறியாகியுள்ளது. தமிழர்களின் கலை வரலாறு இன்னும் ஒழுங்காக எழுதப்படவேயில்லை. பூர்வாங்க முயற்சிகள் ஆங்காங்கு நடைபெற்றுள்ளன. பேர்ஸி பிறவுண், ஸ்டெலா காமேஷ், சிம்மர், ஆனந்தகுமாரசாமி ஆகியோர் இந்தியக். கலை வரலாற்றின் பல அம்சங்களை விரிவாக எழுதியுள் ளனர். இந்நிலையில் தமிழர் கலை வரலாற்றை எழுத முயன்றோருக்கு விபுலானந்த அடிகளார் உலகக் கலை வர லாற்றை நாகரிக வரலாறு எனும் கட்டுரையில், 9 தொட் டுக் காட்டிச் செல்கி *றார். இன்று கலை வரலாறு, சரித் திரத்திற்கு முந்திய கலைவரலாறு, எகிப்திய கலை வரலாறு, கிரேக்க கலை வரலாறு, றோமானிய கலை வரலாறு, பைசாண்டிய கலை வரலாறு, மத்திய கால கலை வரலாறு, மறுமலர்ச்சிக் கால கலை வரலாறு, நவீன கலை வரலாறு எனப்பாகுபடுத்தி பயிற்றுவிக்கப்படுகிறது. ஏறத் தாழ இதே வரலாற்று அணுகுமுறையைச் சுவாமிகள் கையாளு கிறார்.
20

பண்டைய நாகரிகமான பாரசீகம், அசிரியம், பபி லோனியா ஆகியவற்றின் நாகரிகங்கள், கலைகள் எடுத்துக் கூறப்படுகின்றன. எகிப்திய நாகரிகம் எனும் கட்டுரையில் 9 எகிப்தியரின் பிரமிட்டுக்கள் பற்றிக் கூறுகிறார்.அந்நாகரிக காலத்தை கி.மு. 3335 (கலியுக ஆரம்பத்திற்கு 234 வருடத் திற்குமுன்) எனக் கணிப்பிட்டு அக்காலத்தில் கட்டப்பட்ட Lopero hounit temple at the head of the lake googor குளத்தலை முற்றத்துக் கோயில் என அழைத்து அக் கோயிலின் அழகை பிரமிட்டுடன் ஒப்பிடுகிறார்.19
மொசப்படோமியாவில்நடைபெற்ற அகழ்வாராய்வின் போது கண்டெடுத்ததும், பாக்தாத் நகரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதுமான யாழ்க்கருவி பற்றிக் குறிப்பிடு கிறார்.11 இக்கருவி பின்னாளில் இவர் தமிழரின் பண்டைய யாழ்களை அமைக்கும் முயற்சிக்கு உந்துதலை அளித் திருக்கலாம். 1922ல் எகிப்தில் துட்டங்காமனின் பிரமிட் கட்டிடம் கண்டு பிடிக்கப்பட்டமை உலகக் கலை வரலாற் றில் மிக முக்கிய நிகழ்ச்சியாகும். அதனைத் தனது கட்டு ரையிற் குறிப்பிடும் அடிகளார் அங்கு காணப்பட்ட அழகு பொருந்திய கருங்காலிக் கட்டில்களையும் நவமணி இழைத்த ஆபரணங்களையும் பற்றிக் கூறுகிறார்.12
எகிப்தினையடுத்து கிரேக்கின் நாகரிகமும் கலை வள மும் கூறும் அடிகளார் கிரேக்க நாகரிகத்தின் தொடர்ச்சி யாக உருவான றோம நாகரிகம் பற்றியும் மத்திய கால நாகரிகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.
இக்கட்டுரைகளில் இரண்டு அமிசங்களைக் காண முடி கிறது. ஒன்று இத்தகைய பழம் பெருமை வாய்ந்த நாகரிகங்களையும் கலைகளையும் தமிழக்கு அறிமுகம் செய் தல். இன்னொன்று பழைய அசிரிய, சுமேரிய, பபிலோனிய மக்களுடன் தமிழ் மக்களையும் இணைத்து சுமேரியர், தமிழர் ஒற்றுமையைத் தொட்டுக் காட்டுவதன் மூலம் தமி ழரின் பண்டைய பாரம்பரியத்தைத் தமிழருக்கு உணர்த் துதல்.
21

Page 16
தமிழர்கள், உலகக் கலை வரலாற்றை, நாகரிகத்தை அறிய வேண்டும், பண்டைய நாகரிகங்களுடன் தாமும் தொடர்பு உடையோர் என்று அறிய வேண்டும்; தமக் கென்று தனித்துவமான ஒரு நாகரிகத்தைக் கொண்டிருந் தனர் என்பதை அறிய வேண்டும் என்ற நோக்கு அவருக்கு 20 களில் அவரது 28 வயதிலேயே ஆரம்பித்துவிட்டது.
இந்த நோக்கு அவரது முதிர்ந்த வயதுகளில் மேலும் வளர்ந்து முதிர்ச்சியுடன் வெளிப்படுகிறது. அம்முதிர்ச்சியின் உதாரணங்களாகத் திகழ்வனவே 1942ல் மதுரையில் இயற் றமிழ் மாநாட்டுக்கு தலைமை தாங்கி, அவர் ஆற்றிய உரையும் 1947ல் அவர் வெளியிட்ட யாழ்நூலும்.
ஆங்கிலராதி மேலை நாட்டவரது செல்வப் பெருக்கத் திற்கான காரணங்களை ஆராய்ந்த விபுலானந்தர் அவர் களது "அரசியன் முறையும் புலனெறி வழக்கமும் கலை பயினிலைமையும், பொருள் செயல் வகையும்"13 என்று கூறி அவர்களின் கலை வரலாற்றை, நாகரிகவரலாற்றைத் தமிழருக்குணர்த்துவதன் மூலம் தமிழரையும் முன்னேற்ற லாம் எனக் கருதி இருக்கக் கூடும்.
அந்நிய நாகரிகம் என்று ஐரோப்பியக் கலைகளை ஒதுக் கினாரல்லர் அடிகள். அங்கிருந்து நல்லன பெற்று தமிழர் கலைகள் தளைக்க வேண்டும் என்ற கோட்பாடே விபுலா நந்தரின் கோட்பாடாயிற்று பரந்த உலகப் பின்னணியில் தமிழர் கலைகளை இனம் காண்பதும் அதை வளர்ப்பதும் அவரது பிரதான கலை நோக்கம் எனலாம்.
சிற்பம், ஓவியம், கட்டிடக்கலைகள் பற்றி அவர் கூறிச் செல்லும் கருத்துக்கள் இக்கலைகள் பால் அவருக்கிருந்த அறிவைக் காட்டும். வண்ணமும், வடிவும், ஐயமும, அழகும் என்ற கட்டுரைகள் இதற்குச் சான்றுகளாம். ஒவியத்தை இரசித்தல் பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்.
"நவிலும் தோறும் இனிமை பயக்கும் நூல் நயம் போலவும் பயிலுந்தோறும் இனிமை பயக்கும் பண்புடையா
22

ளர் தொடர்பு போலவும் பார்க்குந்தோறும் அறிவுடை யோனுக்கு உவகையளிக்கும் ஓவியமே அழகிய ஓவியம்'14
வெறும் காட்சியாக மாத்திரம் ஒவியத்தை இரசிக்க முடியுமா? காட்சிக்குப் பின்னாலுள்ள ஒவியனின் உள்ளத் தைக் காண முயல வேண்டுமென்பது ஓவிய ரசிப்பின் இன் றையக் கொள்கையாகும். இதுவே இந்திய மரபின் ரசக் கொள்கையும் ஆகும். ஐயமும் அழகும் என்ற வியாசத்தில் வரும் காட்சியில் ஐயம் மிக்கது ஐயமே உண்மைப் பொருளை உணர்த்தும் என்ற கூற்றில் கலைரசிப்பின் நவீன நோக்குகள் விபுலாநந்தரில் தொனிப்பதைக் காண முடிகி றது. சித்தன்னவாசல், தஞ்சைப் பெரிய கோயில், சிகிரி யாக் குகை, அமராவதி ஆகிய இடங்களிற் காணப்படும் சிற்பம், ஓவியம் பற்றி அடிகளார் குறித்துச் செல்வது அவரது சிற்ப, ஒவிய ஈடுபாட்டிற்கு உதாரணங்கள் ஆகும். இவ்வகைச் சிற்ப, ஒவியங்களையும், அவற்றை ரசிக்கும் முறையினையும் தமிழ் மக்களுக்கு ஊட்டுதலும் அடிகளா ரின் கலை நோக்கினுள் அடங்கும்.
இசை பற்றிய நோக்கும் பணியும்
விபுலாநந்தர் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலம் தமி ழிசை இயக்கம் வேகம் பெற்ற காலமாகும். தமிழிசை பற்றி நடந்த முக்கிய ஆராய்ச்சிகளின் பெறுபேறுதான் விபுலாநந்தரின் யாழ்நூல். 1929 ல் அண்ணாமலையில் அண்ணாமலைச் செட்டியார் இசைக் கல்லூரியை நிறு வியதிலிருந்து இவ்வியக்கம் வேகம் பெறுகிறது. இதற்கு முன்னரேயே தமிழரின் இசை ஆராய்ச்சி ஆரம்பமாகி விட் டது 1907 ல் கர்ணாமிர்தசாகரத்திரட்டு எனும் நூலை யும் 1917 ல் கர்ணா மிர்த சாகரம் எனும் நூலையும் ஆபி ரகாம் பண்டிதர் வெளியிடுகிறார். இந்த பின்னணியிலே தான் விபுலாநந்தரின் இசை ஆர்வமும் உருவாயிற்று.19
23

Page 17
யாழ்நூலை உருவாக்கு முன்னரேயே அவர் இசை பற் றிச் சிந்திக்க ஆரம்பித்தமையை அவரது இசை பற்றிய கட்டுரைகள் உணர்த்துகின்றன. 1940 லிருந்து அவரது முழு நோக்கும் இசையின் பாற்றிரும்பி இருக்க வேண்டும். வங்கியம் (1942) சங்கீத பாரிஜாதம் (1942) நட்டபாடைப் பண்ணின் எட்டுக் கட்டளைகள் (1942) பாரிஜாத வீணை (1944) நீரரமகளிர் இன்னிசைப்பாடல், பண்ணும் திறனும் குழலும் யாழும், எண்ணும் இசையும், பாலைத்திரிபு. சுருதிவீணை, இயலிசை நாடகம், போன்ற அவரது கட்டு ரைகள் அவர் 1940 லிருந்து இசைபற்றிச் சிந்தித்த மைக்கு உதாரணங்களாகும். இக்கட்டுரைகளினூடாக வளர்ந்து வந்த இசை பற்றிய அவர் கரு த் தே யாழ் நூலாக முழுமை பெற்றிருக்க வேண்டும்.
யாழ் நூல் பற்றிப் பல அறிஞர்கள் போற்றிப் புகழ்ந் துள்ளனர். எனினும் முறையான மதிப்பீடு ஒன்றினை யாரும் இதுவரை செய்ய முயன்றாரில்லை. அடிகளார் மீது மற்றோர் கொண்டு இருந்த மதிப்பும், பத்தியும் புற நிலையான ஆய்வுக்குத் தடையாக அமைந்திருக்க லாம். அல்லது இசை ஆய்வு ஒரு துறையாக இன்னும் தமிழரிடை வளராமையும் ஒரு காரணமாயிருக்கலாம்.
யாழ் நூலைப் புரிந்து கொள்ள மூன்று வகை அறிவு தேவைப்படுகிறது.
1. இசை அறிவு. 2. கணித அறிவு. 3. தமிழ் அறிவு. இசையைக் கணித மொழியில் விளக்க முனை த விபுலாநந்த அடிகளார் இசைக்கணிதமே தமிழிசைக்கு அளி த்த பங்களிப்பு எனலாம். இவ் யாழ் நூலில் அடிகளாரின் தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும், விஞ்ஞான (கணித) புலமையும், சங்கீதப் புலமையும் சங்கமிப்பதனைக் காணலாம்.
24

யாழ்நூல்
சங்க இலக்கியங்களையும், சிலப்பதிகாரத்தையும், தேவாரங்களையும் ஆதாரமாகக் கொண்டு தமிழரின் இசைப் பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாக இனம் காண முயலுகிறார் அடிகளார். பாயிரவியல், யாழுறுப்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல், சேர்க்கை என்ற பகுதிகளாக இந்நூல் வகுக்கப்பட்டுள்ளது. பாயிரவியலில் தன் நோக்கம் கூறிய அடிகளார் யாழுறுப் பியலில் பண்டைத் தமிழில் இலக்கியங்களை ஆதாரமாக வும் தாம் கற்ற மேற்கு நாட்டு வரலாறுகளைத் துணை யாகவும் கொண்டு பண்டைத் தமிழர் மத்தியில் வழக்கி லிருந்த யாழ்களை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியிலீடு படுகிறார். வில்யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ் எனப்படும் செங்கோட்டு யாழ், சகோட யாழ் ஆகிய யாழ் வகைகளை வெளிக் கொணர்கிறார். பெளதிக இய லுக்கு ஏற்ப யாழின் நரம்பின் அமைப்புகள் கூறப்பட்டு ஒலிகள் அளக்கப்படுகின்றன. இசை நரம்புகளின் சிற் றெல்லை, பேரெல்லை என்பன கூறப்படுகின்றன.
பாலைத்திரிபியலில் பாலையின் வகைகள் செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற் செம்பாலை என வகுக்கப்பட்டு சகோடயாழுக்கு இசை கூட்டும் முறையும் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையில் யாழாசிரியனது அமைதி கூறிய செய்யுட் பாகத்துக்கு உரை கூறும் முகத்தான் பண்டைய யாழ் பற்றித் தன் கருத்து உரைக்கிறார் அடிகளார்.
பண்ணியல் எனும் அதிகாரத்தில் பண்களைப்பற்றிய தன் கருத்துக்களை முன் வைக்கின்றார். பிங்கலந்தை, சேந்தன் திவாகரம், சூடாமணி நிகண்டு ஆகிய நூல் களினின்று சூத்திரங்கள் காட்டப்படுகின்றன. நூற்று மூன்று பண்களைக் குறிப்பிட்டு அவற்றில் பாலை நிலை
25

Page 18
களைச் சுருதி வீணையிலமைத்துக் காட்டும் முயற்சி இவ் வதிகாரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வதிகாரத்தில் பழந்தமிழிசை மரபிற்கும் வடநாட்டிசை மரபிற்குமிடையே அமைந்த தொடர்பும் விளக்கப்படுகிறது.
தேவாரவியல் எனும் அதிகாரத்தில் 4ம் திருமுறைக்கு யாப்பமைதி கூறப்படுகிறது. தேவாரப் பண்ணின் உருவங் கள் ஆராயப்படுகின்றன. இந்தளம், காந்தாரபஞ்சமம், நட்டராகம், பஞ்சமம், தக்கராகம், தக்கேசி, கெளசிகம், செவ்வழி, செந்துருத்தி, காந்தாரம், குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி முதலாகிய பண்கள் பற்றிக் கூறப்படுகின்றன:
ஒழிபியலில் கணிதத்திற்கும் இசைக்குமுள்ள தொடர்பு விளக்கப்படுகிறது. இசைக் கணிதம் இதில் வெளிப்படுத் தப்படுகிறது. அத்தோடு இவ்வியலில் குடு மி யா ம  ைல இசைக் கல்வெட்டுப் பற்றி விளக்குவதுடன் தமிழிசையின் சுருக்கமான வரலாறும் உரைக்கப்படுகிறது. குடுமியாமலை இசைக் கல்வெட்டு தமிழிசை பற்றியது என்றுமுதல் விளக்க மளித்தவர் விபுலாநந்த அடிகளே என்று ஞானாகுலேந் திரன் குறிப்பிடுகிறார்.
இறுதியாக, சேர்க்கையில் தேவார இசைத்திரட்டும் இசை நாடகச் சூத்திரங்கள் சிலவும் சேர்க்கப்பட்டுள்ளன. முடிவுரையில் யாழ் நூலின் நோக்கம் கூறப்படுகிறது. சிலப் பதிகார அரங்கேற்றுக் காதையில் யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்த ஒரு விரிவுரை இந்நூல் என்று கூறுகிறார் அடிகளார்.
1. பண்டைத் தமிழர் இசைக் கருவிகளையும் இசை
யையும் வெளிக் கொணர்வதும். 2. தமிழிசை வரலாற்றை விளக்குவதும் 3. இசை ஆராய்ச்சிக்கு இன்றியமையாத கணக்கு
முறைகளைக் கணித மூலம் விளக்குவதும். இந்நூலின் நோக்கங்கள் என நாம் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
26

தமிழரின் தனித்துவம் பற்றிய நோக்கைக் கொண்டி ருந்த அடிகளார் தமிழரின் தனித்துவம் எனக் கருதப் பட்ட பண்ணிசையை வெளிக் கொணர்ந்தமையும், பழைய இசைக் கருவிகளை இலக்கிய உதவி கொண்டு மீளுருவாக் கம் செய்தமையும் தமிழ் இசைக்குச் செய்த பணிகளாகும்.
நாடகக் கலை பற்றிய நோக்கும் பணிகளும்
18ம், 19ம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டிலும் ஈழத் திலும் படித்த மத்திய தர வர்க்கத்தினருக்கு ஊடாக ஐரோப்பிய நாடக மரபு தமிழுக்கு அறிமுகமாகின்றது. ஐரோப்பிய நாடகங்களை நேரடியாகவும் தழுவியும் படித்த வர்கள் அறிமுகம் செய்தனர். விபுலாநந்த அடிகள் சேக்ஸ்பியரை மதங்கசூளாமணி மூலம் 1926ல் அறிமுகம் பண்ணுமுன்னரேயே சேக்ஸ்பியர் தமிழில் மொழி பெயர்க் கப்பட்டோ தழுவப்பட்டோ அறிமுகப்படுத்தப்பட்டு விட் டார். இம் முயற்சிகள் 1880 இ லி ரு ந் து ஆரம்பித்து விட்டன. 1880 ல் 'ரெம்பஸ்ற் காற்றுமழை என்ற பெய ரில் விசுவநாதன்பிள்ளையால் மொழி பெயர்க்கப்படுகிறது.
Antony and Cleopatra, As you Like it, Othello, King Lear, King John, Haumlet, Henry iv, Cymbaline, Julies Ceaser, Twelfth night, Two gentlemen of Verona, Tempest, Taming of the shrew, The Comedy of errors, The winters Tale, Much ado about nothing, Macbeth, Mid summer night dream, Measure for Measure, Richard I Romeo and Juliet.
ஆகிய 21 நாடகங்களையும் த ழு வியோ மொழி பெயர்த்தோ 50 நூல்கள் வெளிவந்து விட்டன என அறி கிறோம்.18 இதனை விட கி ரே க் க நாடகாசிரியரான சோபோக்கிளிஸ், பிரஞ்சு நாடகாசிரியரான மோலியர் ஆகி யோரின் நூல்களும் மொழி பெயர்க்கப்பட்டு விட்டன. Lord Lytonair Secret way gas g(up6 Gugst&rfurt figuib
27

Page 19
பிள்ளை மனோன்மணியம் வெளியிட்டு விட்டார். சமஸ் கிருத மொழியிலிருந்து பவபூதியின் உத்தரராம சரிதம், காளிதாசனின் சகுந்தலை, மாளவிகாக்கினிமித்திரம், பாசனின் சொப்பன வாச வதத்தா, தூதகடோத்கசம் பில்கணனின் பில்கணியம், மகேந்திரவர்மனின் மத்தவிலா சம், சூத்திரகனின் மிருச்ச கடிகம் போன்ற நூல்களைப் பலரும் மொழி பெயர்த்து விட்டனர்.
விபுலாநந்தர் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பிய நாடக மரபுக்கியைய நாடகங்களை மேடையிடுவோரில் பம்மல் சம்பந்த முதலியார் முக்கிய மாணவராகத் திகழ்ந்தார். வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், கலாவதி, மான விஜயம் என்னும் நாடகங்களை எழுதியதுடன் நாடக வியல் என்றதொரு நாடக இலக்கண நூலையும் எழுதி gif
இதே காலகட்டத்தில் இலங்கையிலும் தமிழ் நாடகத் துறையில் படித்த மத்திய தரவர்க்கத்தினரின் பங்களிப்பு ஆரம்பமாகி வி டு கி றது. 1913 ல் கொழும்பில் லங்கா சுபோதசபை ஸ்தாபிக்கப்பட்டது. இதன் முக்கியஸ்தர், கலையரசு சொர்ணலிங்கமாவார். பம்மல் சம்பந்த முதலி யார் நாடகங்களை இவர் மேடையிட்டார். அவற்றுட் பல சேக்ஸ்பியரின் நாடகங்களின் தழுவல்களாகும். 1914ல் யாழ்ப்பாணத்தில் சரஸ்வதி சபையும் 1920 ல் மட்டக்க ளப்பில் சுகிர்த விலாச சபையும் ஆரம்பிக்கப்பட்டன.17 மட்டக்களப்புச் சுகிர்த விலாசசபை வித்துவான் சரவண் முத்தன் விபுலானந்தரின் நெருங்கிய நண்பர். ஐரோப்பிய நாடகங்களும், சிறப்பாக சேக்ஸ்பியரின் நாடகங்களும் வடமொழி நாடகங்களும் தமிழுக்கு அறிமுகமான ஒரு பின்னணியில் மத்திய தரவர்க்கத்தவர்களும் கற்றோரும் இப்பணியிலீடுபட்ட காலையில் குறிப்பாக இந்நாடகங்கள் தமிழ் நாட்டில் பம்மல் சம்பந்த முதலியார் போன்றோரா லும் ஈழத்தில் அவரது ஏகலைவச் சீடரான கலையரசு
28

சொர்ணலிங்கம் போன்றோராலும் மேடையிடப்பட்ட காலத்திலே தான் மத்திய தர வகுப்பினரும், ஆங்கில வடமொழி அறிவு பெற்றவருமான விபுலாநந்தர் மதங்க சூளாமணி எழுதுகிறார்.
விபுலாநந்தர் தாம் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற
நாடகம் பற்றிய தமது நோக்கினை மதங்க சூளாமணியின் முகவுரையிற் குறிப்பிடுகிறார்.
"கல்வியறிவில்லாதார் கண்ட கண்டவாறு நாடகங்களை
அமைக்க முற்பட்டு நாடகத்துக்கே ஓர் இழிந்த பெயரை யுண்டாக்கி விட்டனர்." 18
என்று கூறும் அவர் அக் காலத்தில் நாடகம் எழுதிய நாடகமாடிய பலரைப் போலி நாடகக் கவிகள் என்கிறார். போலி நாடகக் கவிகளால் நாட்டுக்கு விளைகின்ற கேடு போலிவைத்தியனால் நாட்டிற்கு விளைகின்ற கேட்டினைப் பார்க்கப் பல்லாயிரம் மடங்கு பெரிது என்று கூறுமவர்; நாடகத்தை வெறுத்தொதுக்காது அதனை ஆராய்ந்து நல்ல நாடகங்களை அமைப்பது கற்று வல்லோர் கடமை என்கிறார். மேலும் "புதுநாடகமமைப்பதற்கு முற்படும் கவிஞருக்கு முறையறிந்தமைப்பதற்கு உதவியாகிய கருவி நூலும் இல்லை' 19 என்கிறார்.
எனவே அவர் மதங்க சூளாமணி எழுத நேர்ந்த மைக்கான காரணங்கள் எமக்குத் தெளிவாகின்றன.
1. போலி நாடகங்களை நீக்கவும். 2. நல்ல நாடகங்களை அமைக்கவும். 3. மக்கள் அதனால் பயன் பெறவும். நினைத்த அடிகள் கற்று வல்லாருக்கு நாடகம் பற்றி அறிவூட்ட எண்ணி இந்நூலை எழுதுகிறார்.
ம ன் ப ைத க் குத் தொண்டு செய்தல் என்ற அவர் நோக்கு இங்கு தெரிகிறது. அ  ைன த் து அறிவும்
29

Page 20
மன்பதைக்குச் சேவை செய்ய வேண்டும் என்று எண்ணிய அவர் இங்கும் நாடகத் துறை மன்பதைக்குச் சேவை செய்ய வேண்டும் என எண்ணுகிறார்.
*நாடகவியலை ஆராய்கின்ற இச்சிற்றாராராய்ச்சி’ என்றே தன் நூலைப் பற்றி விபுலாநந்தர் குறிப்பிடுகிறார். விபுலாநந்தர் கூத்து (நாடக) தமிழில் இறைவாப் புகழ் படைத்த நூல்கள் பல உருவாக்கினார்" என்று பலர் கூறு வதைப் போல அல்லாமல் நாடகத்தை ஆராயவே அவர் நூல் இயற்றினார். அவர் நாடகம் எழுதியவருமன்று தம் காலத்தில் வாழ்ந்த சம்பந்த முதலியார் சொர்ணலிங்கம் போன்று நாடகம் நடித்தவருமன்று. நாடக ஆராய்ச்சி யாளர் மாத்திரமே. இக்கால நாடகக்காரர்களுடன் நாடக எழுத்தாளர்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் கிடைப்பின் பிரயோசனமாகவிருக்கும்.
மதங்க சூளாமணி
மதங்க சூளாமணி 8 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. உறுப்பியல்.
2. எடுத்துக்காட்டியல்.
3. ஒழிபியல்.
உறுப்பியலில் சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரை யினால் பெறப்பட்ட அழிந்து போன நாடகத்தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை உரைக்கின்றார்.
இவ்வியலில் நாடக உறுப்புக்கள், நாடகத்திற்குரிய கட்டுச் கோப்பு (Structure) என்பவற்றுடன் நாடகத்திற்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவை என்பன பற்றி இந் திய ரசக்கோட்பாட்டினடியாக எடுத்துக் கூறப்படுகிறது. இரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ் பியரின் நாடகங்களில்
30

Lovers Labours lost. King Lear. Romeo Juliet. Timon of Athens The Tempest Macbeth Merchant of Venice. Julias Ceaser. Titus Andronics. As you like it.
The winters Tale. Twelfth night.
ஆகிய 12 நாடகங்களும் உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கமைய விளக்கப்படுகின்றன. நாடகத்தின் அமைப்பை மகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என விளக்கி அந்த அமைப்பு இந் நாடகங்களில் எவ்வாறு காணப்படுகிறது என்பதனையும் அத்தோடு நாடகம் தரும் வீரம், அச்சம், இளிவரல், அற் புதம், இன்பம், அவலம், நகை, உருத்திரம், நடுவு நிலை யாகிய 9 சுவைகளையும் தந்து அச்சுவைகளை இந்நாடகங் கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார்.
இதற்காக அவர் 12 நாடகங்களையும் முற்றாக மொழி பெயர்த்தார் அல்லர். விபுலாநந்தர் சேஷ்க்ஸ்பியரின் நாட கங்களை மொழி பெயர்த்தார் என்று பலர் தெரியாது மொழிகிறார்கள். இந்நாடகங்களை அறிமுகம் செய்யும் போது தமது ஆராய்வுக்குத் தேவையான பகுதிகளை மாத்திரமே அவர் மொழி பெயர்த்தார் என்பதனை நாம் மனங் கொள்ள வேண்டும்.
இப் 12 நாடகங்களிற் சிலவற்றின் அமைப்பை விஸ் தாரமாகக் காட்டிச் செல்லும் அவர் சிலவற்றின் கதை களை மாத்திரமே கூறிச் செல்கிறார். இது அவரது முதற் கட்டச் சிந்தனைகள் மாத்திரமே போல் தெரிகிறது. இதனை விரிவுற எழுதும் எண்ணம் அவருக்கிருந்தமையை அவரது முன்னுரை காட்டுகிறது.
31

Page 21
ஒழிபியல், தனஞ்சயனார் வடமொழியில் இயற்றிய நாடக இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்துக் கூறுகிறது . தனஞ்சயனார் பரத நூல், நாட் டிய சாஸ்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங் களையெல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தச ரூபகம். இதனால் வடமொழி நாடக இலக்கணங்களை ஒழிபியலில் அறிமுகம் செய்ய முயற்சிக்கிறார் எனலாம். இதனைவிட தொல்காப்பியச் சூத்திர உரையினின்று எடுக் கப்பட்ட நாடகத்திற்குரிய அபிநயம் பற்றிய சூத்திரங் களுடன் நடித்தல், நாடகத்திற்கு பாட்டு வகுத்தல், ஆட் டம் அமைத்தல், அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன.
இந்நூலை அடிப்படையாகக் கொண்டு விபுலாநந்த ரின் நாடகப் பணியை நோக்குவோம்.
1. தமிழில் நல்ல நாடகங்கள் தோன்ற வேண்டுமென் பதே அவரது முக்கிய நோக்கமாகும். அந்நாடகங்கள் நாடக இலக்கணங்கள் அமையப் பெற்றனவாகவும் , மேற்கு நாட்டின் மதங்க சூளாமணியான (மதங்கர் - நாடகக்காரர், சூளாமணி - சிறந்தவர்) சேக்ஸ்பியர் நாடகங்கள் போல் அமைய வேண்டும் எனவும் அவர் ஆசையுற்றிருக்க வேண்டும். தம் காலத்தில் நடை பெற்ற அல்லது எழுதப்பட்ட சேக்ஸ்பியரின் நாடகங் களும் சரியானபடி மொழி பெயர்க்கவோ, நடிக்கப் படவோ இல்லை என்பது அவர் அ பி ப் பி ரா யம் போலும். மேற்கு நாட்டு நாடகங்களை - சிறப்பாக சேக்ஸ்பியர் நாடகங்களைத் தமிழ் நாடக - இந்திய நாடக இலக்கண முடிவுகளுக்கமைய ஆராய்ந்தமை சிந்தித்தற்குரியது. ஆராயலாமோ என்பதும் ஆராய் விற்குரியது. بربر ،-
2. தமிழில் நாடகம் சிறப்படைய ஆசையுற்ற விபுலாநந்
தர் சேக்ஸ்பியரைச் சரியானபடி அறிமுகம் செய்வது
32

டன் வடமொழி நாடகமரபையும் அறிமுகம் செய்து அதற்கொப்ப தமிழ் நாடகமரபையும் காட்டுகிறார். ஒருவகையில் தமிழர் மத்தியில் நாடகமரபு ஒன்றிருந் ததென்பதை - அதன் தனித்துவத்தைக் காட்டுவதும் அவர் நோக்கமாயிருந்திருக்கலாம், ஆனால் அத் தனித் துவம் வெறும் தனித்துவமாயில்லாது உலகின் வளர்ச் சியினை உள்வாங்கி வளரும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதே அவர் அவா போலும். தமிழ்த் தனித்துவம் - உலகளாவிய சிந்த  ைன என்ற இரு முரண்களையும் இ  ைண த் து ஒன்றிலிருந்து ஒன்று பெற்று, சமரசம் கண்டு வளர வேண்டும் என்ற அவர் எண்ணமும் இங்கு தெரிகிறது. தமிழ் நாடகம் எழுதுவது நடிப்பதை விடத் தமிழ் நாடக ஆராய்ச்சியே அவரது பிரதான நோக்குப் போலும். இன்று பல்கலைக் கழகத்தில் நாடகமும் அரங்கியலும் ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடகமரபு, ஆசிய நாடக மரபு பறறி மாணாக்கர் பயில்கின்றனர். இந்நிலையில் இற்றைக்கு 70 வருடங்களுக்கு முன்னரே இது பற்றி சிந்தித்த விபுலாநந்தர் தூர நோக்குடைய மேதையாகக் காட்சி யளிப்பதுடன்; அவர் காலத்தில் நாடகத்துறையில் ஈடுபட்டவர்களிடமிருந்து நாடக ஆராய்ச்சியா ளர் என்ற வகையில் வேறுபட்டும் காணப்படுகிறார்.
சேக்ஸ்பியரை மாத்திரம் அறிமுகப்படுத்தாது கிரேக்க
நாடகங்களையும் ஆட்டுப் பாடலிலிருந்து அது தோன்றிய மையையும் இணைத்து ஆட்டுப்பாடலைத் தமிழரின் பண் டைய வேலனாட்டத்துடன் ஒப்பிடுதல்?! பின்னோக்கிப் பார்க்கையில் நாடக ஆராய்ச்சியில் அவர் கொண்டிருந்த தூரப் பார்வையினைப் புலப்படுத்துகிறது எனினும் க மெடி (Comedy) றஜடி (Tragedy) பற்றிய அவர் கருத்துக்கள், தமிழ் நாடகங்கள் பற்றிய அவர் கருத்துக்கள், இந்திய நாடக மரபின் இலக்கணம் கொண்டு ஐரோப்பிய நாடகங் களை ஆராய முயன்றமை என்பன ஆராய்விற்குரியன.
33

Page 22
தொகுத்துக் கூறின் இசையில் தமிழ்த் தனித்துவம் கண்டது போல நாடகத்திலும் தமிழ்த் தனித் துவ ம் காணல். அதே நேரம் உலக சமஸ்கிருத நாடக வளர்ச் சிக்கியைய எம்மை வளர்த்தல். நாடகத்தை ஆராய்ச்சி ரீதியாகக் கற்றல், நாடக அறிவு பெறல். இந்த அறிவை மன்பதைக்குப் பயன் தரக் கூடிய விதத்தில் பிரயோகித்தல் என்பன நாடகக் கலை பற்றி அவர் கொண்டிருந்த நோக்குகள் ஆகும். இலக்கிய நோக்கும் பணியும்
அவரது கட்டுரைகளும் சொற்பொழிவாற்றிய தலைப் புக்களும், ஆராய்ச்சி நூல்களும் செயற்பாடுகளும் அவரது இலக்கியப்பணிகளின் தன்மை பற்றியும் அதனுாடாக எழும் அவர் இலக்கிய நோக்கு பற்றியும் அறிய உதவும் சாதனங் கள் ஆகும். 40 களில் அவரது இலக்கிய நோக்குக்கும் 20 களில் அவர் இலக்கிய நோக்கிற்குமிடையே வேறு பாடுகள் காணப்படுகின்றன.
தமிழ் மக்களுக்கு உலக இலக்கியங்களையும் அவற்றின் செழுமையினையும் அறிமுகம் செய்தல் அவரது இலக்கிய நோக்கினுள் மிக முக்கியமானதாகப்படுகின்றது. சேக்ஸ் பியரையும், தனஞ்செயனாரையும் அறிமுகம் செய்வதன் மூலம் தமிழ் நாடகத்தை தரம் வாய்ந்த நி  ைலக் கு உயர்த்த எண்ணிய அடிகளார் உலக இலக்கியங்களையும் தாகூர் போன்ற வங்காளக் கவிஞர்களையும் அறிமுகம் செய்தல் மூலம் த மிழ் இலக்கியத்தின் தரத்தையும் உயர்த்த எண்ணியிருப்பார் என்பதில் ஐயமில்லை. கிரேக்க நாடகங்களையும், நாடகாசிரியர்களையும், ஆங்கிலத்தின் சிறந்த புலவர்கள் எனக்கணிக்கப்படும் மில்டன், சேக்ஸ் பியர், வால்டர் ஸ்கொட்ஷெல்லி, டென்னிஸன், றொபர்ட் பிரெளணிங், டைரன், கீட்ஸ் ஆகியோரையும் நோர்வே நாடகாசிரியர் இப்ஸனையும், வங்கமொழிக் கவிஞரான ரவீந்திரநாத் தாகூரையும் அறிமுகம் செய்யும் விபுலாநந் தர் சேக்ஸ்பியர், மில்டன், உவேட்ஸ்வர்த், கீட்ஸ், ஷெல்லி
34

டெனிசன் ஆகியோரது கவிதைகள் சிலவற்றையும் மொழி பெயர்த்துத் தந்துள்ளார். தமிழ் மாத்திரம் அறிந்தவர் பிற மொழியிலும் நல்லவையுண்டு எனக்கண்டு அ வ ற் றை அறிந்து தம் மொழியில் அவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்மென்ற சமரசப் போக்கே இதற்குக் காரண மாகும். ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவிப்பதற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டினை ஒருவாறு நிகர்ப்ப ஆரி யமும் தமிழும் வல்ல பண்டிதமணியாருக்கு (பண்டிதமணி கதிரேசன் செட்டியார்) ஆங்கில மொழிக் கவி நயத்தினை ஒரு சிறிது காட்டுதல் கருதி எழுந்த கட்டுரை என்று தமது ஆங்கில வாணிக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.22 மொழி பெயர்க்க அவர் தெரிந்தெடுத்த மேற் குறிப்பிடப்பட்ட கவிஞர்களின் பாடல்கள் விபுலாநந்தரின் நோக்கினைக் காட்டுவன. மானிடப் பெருமி த மும் தேசாபிமானமும், உலகவாழ்வும், ஆன் மிக உணர்வும் நிரம்பப் பெற்ற பாடல் கள் அவை. இப்பாடல்களிற் கூட ஆத்மிகமும் - உலோகா யுதமும் இணையும் தன்மையினைக் காணலாம். அடிக ளாரை தமிழியல் ஆராய்வுகளில் ஒப்பியல் கல்விக்கு முக் கிய இடமளித்த முன்னோடிகளுள் ஒருவர் எனக் குறிப் பிடும் கைலாசபதி ஆங்கில இலக்கியத்தை மாத்திரம் கற்பதோடு அமைந்தவர் அல்லர் அடிகள், உலக வரலாறு மானிடவியல், தத்துவம், விஞ்ஞானம், புராதன மொழி கள் முதலியவற்றையும் இடைவிடாது படித்து வந்திருக் கிறார். இவற்றின் விளைவாகவே பரந்த உளப் பாங்கு அவரிடத்தே வளர்வதாயிற்று என்று ம் கூறிச் செல்கி றார்.23 இப்பரந்த பார்வையினைத் தமிழ் அறிஞரும் எழுத் தாளரும் பெறின் தமிழ் இலக்கியத் தரம் உயரும் என அடிகளார் எண்ணியிருக்கக் கூடும்.
இலக்கிய விமரிசனத்துறையிலும் அடிகளாரின் பங்கு குறிப்பிடற்குரியது. இந்திய அழகியற் கொள்கையை அடிப் படையாகக் கொண்டே அவர் கவிதைகளை மதிப்பிட் டார் போலத் தெரிகிறது. கவிதை நயத்தலில் இரசிக
35

Page 23
விமரிசனமுறை ஒன்றினையே அவர் செய்துள்ளார். சொற் களின், ஒசையின், கவிதை அமைப்பின் துணை கொண்டு புலவனின் உணர்வையும் பாடல் தரும் சு  ைவ  ைய யு ம் பெறலே இவ்வணுகு முறையின் பிரதான நோக்காகும்.
யாழ்ப்பாணத்திலே வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை போன்றோரால் வளர்க்கப்பட்டு, பண்டிதமணி போன்றோரால் புகழப்பட்ட மரபு இது. விபுலாநந்தர் காலத்தில் தமிழ் நாட்டில் டி. கே. சி. யின் பாடல்களும் தெரிவும் வெறும் ரசனையின் பாற்பட, விபுலாநந்தரின் தெரிவும்,பாடல்களும் ரசனையோடு மன்பதைக்கு ஆண்மை, வீரம், ஞானம், தேசாபிமானம், பத்தி ஊட்டுவனவாயுமுள் ளன. இவ்வகையில் தம் கால ரசிக விமரிசனகாரர்களிலி ருந்து இவர் வேறுபடுவதுடன் இலக்கிய விமரிசனம் கூட மன்பதைக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக் குடையவராயும் காணப்படுகின்றார்.
பழைமை வாதியான இவர் நவீன இலக்கிய வளர்ச் சியில் நாட்டம் கொண்டுருந்தமை அவரின் கால முரணற்ற இலக்கிய பார்வையினை எமக்குக் காட்டுகிறது. மகாகவி பாரதியாரைத் தமிழ் நா ட் டி ல் பிரபல்யப்படுத்திய பெருமை இவருக்குண்டு. தமிழ் நாடு பாரதியின் கவித்திற னையும் கருத்து வல்லமையையும் காணுமுன்னர் கண்டு வெளிக் கொணர்ந்தவர் இவர்.பேராசிரியர் கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் எழுதிய நாடகங்களை * 'இது கொடுந்தமிழ் நாடகங்கள்?’ என ஒதுக்கினாரல்லர். அவற்றை உவந்தேற்ற விபுலாநந்தர் "மட்டக்களப்பு வழக் குத் தமிழையும் ஓரிரண்டு நாடகங்களிற் படம் பிடித்து வைப்பது நன்று’** - என்று கூறி வாழ்த்துகிறார். பாண் டியன் தமிழே தமிழ் என்று கூறிய பண்டிதர் மயில் வாக னனார், வழக்குத் தமிழின் இயல்பை ஆராய்ந்து எழுதிய சோழமண்டலத் தமிழும் ஈழமண்டலத் தமிழும் என்னும் கட்டுரை முக்கியமானதாகும்.
36

இவர் காலத்தில் மாதவையா போன்றோர் நாவல் எழுத ஆரம்பித்து விட்டனர். மணிக்கொடி தோன்றி விட்டது. வ. வே. சு. ஐயர் ஆகியோர் கதை எழுதுகி றார்கள். கலைமகள், கல்கி, ஈழகேசரி ஆகிய பத்திரி கைகள் நவீன இலக்கியத்திற்கு இடமளிக்க ஆரம்பித்து விட்டன. பேரா சிரி ய ர் க ள |ா ன வையாபுரிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை தொடக்கம் மு. வரதராசன் வரை இதற்கு உதாரணங்களாகும். எனினும் அடிகள் அம்முயற் சியில் ஈடுபட்டாரல்லர். அடிகள் ஆராய்ச்சியாளனே தவிர வசன ஆக்க இலக்கியகாரர் அல்ல என நாம் அமைதி காணலாம். எனினும் நவீன தமிழ்க் கவிதையின் தாக்கம் அவரிலும் இருந்தது என்பதை அவரது சில கவிதைகள் காட்டி நிற்கின்றன. கடுமையான செய்யுள்களை எழுதிய அடிகளார் எளிமையான கவிதைகளையும் எழுதியுள்ளார். நவீன இலக்கியம் அடிகளாரில் பிரதிபலிப்பதை அவரின் கவிதைகள் மூலம் தான் கண்டு கொள்ளலாம். நவீன இலக்கியத் துறைகளில் கால் வைத்த தாகூரை ஆதார மாகக் கொண்டிருந்த அடிகளார் நவீன இலக்கியம் பற்றி கரிசனை கொண்டிருந்தார் எனக் கொள்வதில் தவறில்லை.
பின்னாளில் அவர் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் மறுமலர்ச்சிக்கழகம் ஒன்றினை ஆரம்பித்து ந டத் தி ய போது அதிற் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் என்று அறிகிறோம். பழைய இலக்கியப் படிப்பினுடன் புதிய இலக்கியத்தையும் அரவணைத்த அவரது அகண்ட பார்வையினை இது நமக்குப் புலப்படுத்துகிறது.
அனைத்திலும் சமரசம் கண்டு நல்லன கொள்ளும் இவர் போக்கினை இலக்கியத்திலும் காண்கிறோம். மணி தரில் வேற்றுமை காணாதது போல பழைய இலக்கியமே நன்று. புதிய இலக்கியம் இலக்கணத்துள் அடங்காதது எனவே அது தீது என்றோ, செந்தமிழில் எழுதும் இலக் கியமே இலக்கியம் ஏனையவை இலக்கியமல்ல என்றோ ம தமிழ் இலக்கியமே சிறந்தது ஏனையவற்றுள் ஒன்றுமில்லை
37

Page 24
என்றோ இருமுனைச் சிந்தனை கொண்டவரல்லர் அடிக ளார். இரண்டிலுமுள்ள நல்லனவற்றைக் கண்டு அதற் குள் சமரசம் செய்து அதன் மூலம் சிறந்த உணர்ச்சியைக் காட்டியவர் அடிகளார்.
t
இலக்கிய நோக்கைப் பொறுத்தவரை காலத்தோடு வளர்ந்தவர் அவர். மாறாத உடும்புப்பிடி அவரிடம் இல்லை. மாறுதலிலும் மாற்றத்திலும் நம்பிக்கையுடைய வர். இத்தத்துவத்தில் வைத்த நம்பிக்கையே அவர் எழுத்துக்களுக்கு ஆழமும், அர்த்தமும் கொடுத்தன. தொகுப்பு
தொகுத்துரைக்குமிடத்து விபுலாநந்தரிடம் மனிதனை யும், சமூகத்தையும் புரிந்து கொள்ளுகின்ற - இயங்கியல் நிலையில் - அதன் சகல முரண்பாடுகளோடும் அதனைக் காணுகின்ற அகண்ட பார்வையும், அ  ைன த் தி லும் தொடர்பைக் காணுகின்ற தத்துவ நோக்கும் காணப் பட்டன. அவருடைய வாழ்க்கைப் பின்னணியும், நுண்மான் நுளைபுல அறிவும் வேதாந்த தத்துவமும் அவருக்கு இந் தப் பார்வையை அளித்திருக்கலாம்.
அவருடைய பிரதான சிந்தனைப் போக்கும் செயற் பாடுகளும் இந்தத் தடத்திலேயே செல்லுகின்றன. இதற்குப் புறனடையாகச் சில கட்டுரைகள் இல்லாமல் இல்லை. ஆனால் பிரதான ஒட்டம் இதுவே.
சகல முரண்பாடுகளையும் இணைத்தலும் சமரசம் காணுதலும் அவரின் பெரு நோக்காயிற்று. விவேகானந்தர் நவீன கால இந்தியாவுக்களித்த சிந்தனைப் போக்கு இது, அவர் வழிவந்த விபுலாநந்தர் இவ் வழிச் சென்றது வியப் பன்று.
சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை கண்ட அவர் அத்த கைய பண்புகள் இல்லாத தொண்டர் குலம் போன்ற புதுக்குலம் ஒன்று தமிழர் மத்தியிலே தோன்ற வேண்டும் என்று விரும்பினார்.
38

அத்தகைய சமூகத்திற்கு வேண்டிய மன உரத்தை அச் சமூகத்தின் பாரம்பரியத்தில் இருந்தே எடுத்துக் காட் டினார். இசைக் கலையைப் பொறுத்தவரை தமிழிசை மரபைக் கண்டறிந்தார். மரபைப் பேணினார். பழைய யாழினை மீளுருவாக்கம் செய்தார், கலைகளைப் பொறுத்த வரை நல்ல கலைகளை, ஆழமான கலைகளை அறிந்து உணர்ந்து ரசிக்கும்படி வழி காட்டினார். ஒடும் செம் பொன்னும் ஒக்கவே நோக்கும் நம் வாசகருக்கு ஆழமா னது இது மேலோட்டமானது. இது என்று கற்கும் கலை நயம் கண்டறியும் முறையைக் காட்டினார். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தினர் ஆரோக்கியமான மனம் பெற விரும்
attritri.
நாடகங்களைப் பொறுத்தவரை தமிழ் நாடக மர பைத் தமிழரை அறியச் செய்யப் பண்ணியதுடன் மேற்கு நாட்டு நாடகங்களையும், சமஸ்கிருத நாடக மரபினையும் அறிமுகம் செய்து மரபில் நின்று புதியது உருவாக வழி சமைத்தார்.
இலக்கியத்தைப் பொறுத்தவரை மரபு வழித் தமிழை யும், தமிழர் தம் பெருமையையும் உரக்கக் கூறிய போதும் அதன் நவீன வளர்ச்சியிலும் அக்கறை காட்டினார். பிற நாட்டு இலக்கிய மொழி பெயர்ப்பும், பாரதி அறிமுகமும் பேச்சுத் தமிழை ஆதரித்ததும் இதற்குதாரணங்களாகும்.
கூட்டு மொத்தமாகக் குறிப்பிடின் அவர் பழைமை பேணினாரில்லை. பழைமையினின்று புதுமையை அவாவி னார். அப்புதுமை உலகம் தழுவியதாக உலக கலை இலக் கியப் போக்குடன் ஒட்டியதாக அமைய வேண்டும் என அவாவினார் போலும். தமிழை உணர்வு நிலையில் அணு காமல் அறிவு நிலையில் அணுகமுயன்றார்.
குறுகிய மனப்பாங்கினின்று நம்மை விடுவித்து பரந்த நோக்கில் நம்மை நாம் விளங் கி க் கொள்வதும் நமது
39

Page 25
பாரம் பரியத்திலிருந்து புதுமையைக் கண்டறிந்து வளர்த்
துச்
செல்வதும் சகல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒரு
இணைவு கண்டு மன்பதைக்குத் தொண்டு செய்ய முன் வருவதும் இன்றைய தலைமுறை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களாகும்.
10.
சான்றாதாரங்கள்
1. சிவத்தம்பி கார்த்திகேசு, தமிழ் இலக்கிய வரலாறு, நியூ சென்சுரி புக் ஹவுஸ் சென்னை, 1988, பக் 87. 2. மேலது பக் - 87. 3. செல்வனாயகம், அருள். விபுலானந்த ஆராய்வு, கலை மகள் வெளியீடு, சென்னை, 1963, பக் - 140,
4. செல்வனாயகம் அருள். விபுலாநந்தத்தேன், பாரி
நிலையம், சென்னை 1956, பக் - 40.
5 . மேலது பக் - 38. 6. அடிகளாருக்கு சிதம்பரம் தாலுகா ஆதித்திராவிடர் கள் சார்பில் அளிக்கப்பட்ட வாழ்த்துமடல், 1933,
7. விபுலாநந்த ஆராய்வு, பக். 121 - 138.
8. மேலது. பக். 43 - 54.
9. மேலது. பக். 55 = 63,
மேலது, பக். 60. 11. இலக்கியக் கட்டுரைகள், உயர் திரு விபுலாநந்த அடி ベー கள், கல்வித் திணைக்களம், 1973, பக். 57.
12. விபுலாநந்த ஆராய்வு பக். 57.
13. மேலது பக். 34.
40

亚4,
15.
6.
7.
8.
9.
20.
2.
22。
23。
24.
செல்வனாயகம் அருள். விபுலாநந்தச் செல்வம், கலை மகள் வெளியீடு, சென்னை, 1963 பக் 112 விபரங்களுக்கு பார்க்க. பண்பாடு, பருவ இதழ், இந்து கல சார அலுவல்கள் திணைக்களம், இதழ் 2,
ஆகஸ்ற் 1991. சக்திப்பெருமாள், திருமதி. டாக்டர், தமிழ் நாடக வரலாறு, மதுரை 1990, பக் 347 - 351. சொர்ணலிங்கம் க. நாடகமும் நானும் சுன்னாகம் Il 9 6 8 Luji - 26. விபுலானந்த சுவாமிகள் முன்னுரை மதங்க சூளா மணி என்னும் ஒரு நாடகத் தமிழ் நூல், மறு வெளியீடு, பிரதேச அபிவிருத்தி அமைச்சு, 1987, மேலது.
மேலது.
விபுலானந்த ஆராய்வு иš - 75. விபுலானந்தச் செல்வம், பக்க 182. கைலாசபதி க. "முத்தமிழ் முதல்வரின் ஒப்பியல் நோக்கு" அடிகளார் படிவ மலர் கொழும்பு, 1969 Luis. 78.
இலக்கியக் கட்டுரைகள் பக். 145,
41

Page 26


Page 27