கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துப் பதிப்புக்கலை வளர்ச்சியிலே சன்மார்க்க சபையின் பணி

Page 1
ஈழகேசரிப் பொன்னேயா நினவுநா
ஈழத்துப் பதிப்புக்க சன்மார்க்க சன
* 。
வெள்
குரும்பசிட்டி ச
ܗܒܘ ܐܒܨ ܘ ܒ -¬¬

ல வளர்ச்சியிலே பயின் பணி
- ஓர் ஆய்வு
in
பாலசுந்தரம்
ரியீடு ன்மார்க்க சபை
89

Page 2
திருமகள் அழுத்தகம், சுன்னுகம்

ஈழத்துப் பதிப்புக்கலை வளர்ச்சியிலே சன்மார்க்க சபையின் பணி
- ஒா ஆயவு
ஈழத் தமிழர்தம் கலை, கலாசாரம், சமய வாழ்வு, இலக்கியம் என்பவற்றின் மேம்பாடு கருதிய குறிக்கோள்களின் உந்து சக்தியி ஞல் உதயமானதே குரும்பசிட்டி சன்மார்க்க சபை. தேசியப்பற்று, பொதுசனசேவை, விவசாயப் புரட்சி, இலக்கிய ஆர்வம், அச்சுத் தொழிலீடுபாடு முதலாம் பண்புகள் பொருந்தப்பெற்ற ஈழம் தந்த கேசரி நா. பொன்னையா அவர்களால் நல்மனதோடு 1934இலே குரும்பசிட்டியில் ஆரம்பிக்கப்பட்ட சன்மார்க்கசபை, 55 ஆண்டுகால சேவையினைச் சீரியமுறையிலாற்றி, ஏனைய நிறுவனங்களுக்கு ஒர் ஆதர்ச வழிகாட்டியாகத் திகழ்கின்றது. குறிப்பாக இதன்பணி கிரா மிய எழுச்சி, கல்வி, சமயம், இலக்கியம், கலைகள், பதிப்புத்துறை என்ற அடிப்படையில் விரிந்து காணப்படுகின்றது. இவற்றுள் நூல் வெளியீட்டுத் துறையிலே சன்மார்க்கசபை மேற்கொண்ட பணிகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
*சன்மார்க்கசபை மேற்கொண்ட கலை, இலக்கியப் பணிகளிலே சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒரு நிலையான பணி நூற்பிரசுரமாகும். குறிப்பாக ஈழத்தின் பாடசாலைப் பாடநூல் வெளியீட்டுத் துறையில் இச் சபை மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளது. அத்துடன் பொது வாசகனை நோக்கிச் சமயம், இலக்கியம், கலை ஆகிய பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் இச்சபை வெளியிட்டுள்ளது. ஈழத்தின் தமிழ் நூல் பிரசுரம் தொடர்பாக ஆராய்பவர்கள் குரும்பசிட்டி சன்மார்க்கசபை யின் நூற்பிரசுரப் பணியைத் தனி இயலாக நோக்கவேண்டிய அளவிற்கு அப்பணி காத்திரமாகவுள்ளது” என்று துணைவேந்தர் சு. வித்தியானந் தன் அவர்கள் சன்மார்க்க சபையின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா வுரையிலே குறிப்பிட்டதை உன்னிப்பாகக் கவனித்த சன்மார்க்க சபையினர் தமது சபையின் பதிப்புப் பணியைத் தனியாக எம்மை ஆராயும்படி பணித்தமையை நன்றியுடன் ஏற்றுக்கொண்டேன்.
சன்மார்க்க சபையினரால் அளவிற் பெரியனவும் சிறியனவுமாக 53 பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை வகை-துறை யாக நோக்கும்போது சமயம், வரலாறு, கட்டுரை, கலை, இலக்கி யம் (நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், மருத்துவம்), பாட நூல்கள், மலர்கள் என வகைப்படுத்தலாம். இந்நூல்களின் பதிப்பு முயற்சியை அணுகுவதற்குத் துணையாக ஈழத்திற் பதிப்புக் கலையின் போக்குப்பற்றி அறிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகின்றது.

Page 3
བསམ་ 4 མཁས་པས་མ་
ஈழத்தில் நூல் வெளியீட்டுக்கலை :
பத்தொன்பதாம் நூற்றண்டிலே தமிழ்மொழி பல்வேறுபட்ட வளர்ச்சியினைப் பெறுவதாயிற்று. இவ் வளர்ச்சிக்கு மேலை நாட்டார் வருகையும், அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உரைநடை இலக்கிய வகைகளும் அவற்றைப் பரப்பத் துணைபுரிந்த அச்சுயந்தி ரங்களும் முக்கிய காரணிகளாயமைந்தன. கத்தோலிக்க மதகுருமா ரின் சமயப் பிரசார நடவடிக்கைகளும், பத்திரிகைகள், துண்டுப் பிரசுரங்களும் தமிழில் உரைநடை வளர்ச்சிக்குத் துரிதகதி யூட்டின. இதேபாணியில் பூரீலபூரீ ஆறுமுக நாவலர் அவர்களும் அச்சகம் நிறுவிப் பதிப்புத்துறையிலீடுபட்டு நூல்கள், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடும் பணியினைச் சிறப்புறச் செய்தார்கள். ஈழத்தைப் பொறுத்தவரை யிலே கிறிஸ்தவ சமய நடவடிக்கைகளும் அதன் நிமித்தமாகக் கொண்டு வரப்பட்ட அச்சுயந்திரத்தின் அறிமுகமும், ஈழத்திற் பதிப்புத்துறை முகிழ்த்து, வளர்ச்சியடைந்து தமிழ் மொழியின் வளர்ச்சியிலே புதிய தொரு சகாப்தத்தைத் தோற்றுவிப்பதாயின.
நாவலரது நூல் வெளியீட்டு முயற்சிகளை நோக்கும்போது பொதுமக்களுக்குக் கல்வியூட்டும் பணியிலும், பழைய இலக்கியங்க ளைப் பாதுகாக்கும் ஆர்வத்துடனும் சைவசமயப் போதனை அடிப் படையிலும் செயற்பட்டமையை அவதானிக்கலாம். நாவலருக்குப் பின்வந்த சி. வை. தாமோதரம்பிள்ளை (1832-1901) அவர்களும் இதே குறிக்கோளுடன் நூல் வெளியீட்டுத்துறையிலே தீவிரமாக முயற்சி எடுத்தார்கள். இவரது காலத்தில் தமிழ்மரபுக் கல்வியும், தமிழர் கலாசாரமும் புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலக் கல்வியும் மேனட்டு நாகரிக மோகமும் மேலோங்கியிருந்த அச்சூழலிலே பழந் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை அச்சிட்டு அவற்றின் வளர்ச்சிக்கு உரமூட்ட வேண்டிய அவசிய மிருந்தது. இதேபோன்றே 1950களிலே தமிழ்மொழிக் கல்வி வற்புறுத்தப்பட்ட காலத்திலே தமிழில் நூல்கள் வெளியிடவேண்டிய கட்டாய தேவையிருந்தது. அப்போதே ஈழகேசரிப் பொன்னையா அவர்களாலே தாபிக்கப்பட்ட திருமகள் அழுத்தகம் துரிதமாகச் செயற்படத் தொடங்கிற்று. சன்மார்க்க சபையின் நூல் வெளியீடு:
“நல்ல நூல்களை எழுதி வெளியிடுவதும் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் உபயோகமான சமயசம்பந்தமான சிறு பிரசுரங்களை வெளியிட்டு இலவசமாக வழங்குவதும் சன்மார்க்க சபையின் வேலைத் திட்டங்களுள் ஒன்ருகும்.’’ நூற்பதிப்பு முயற்சியிலே சன்மார்க்க சபையினர் இதுவரை வெளியிட்ட நூல்களை வகைதுறையாக நோக்கலாம்.
1. குரும்பசிட்டி சன்மார்க்க சபை-30ஆம் ஆண்டு நிறைவு
மலர் 1965, பக். 57,

- 5 -
பாடநூற் பதிப்பு : இலக்கிய மஞ்சரி:
ஈழத்துப் பாடசாலைகளிலே கீழ் வகுப்பு மாணவர்களுக்கு இலக் கியம் ஒரு பாடமாகப் படிப்பிக்கப்படவேண்டுமென்று கல்விப்பகுதியி னர் தீர்மானித்த பொழுது சன்மார்க்க சபைத் தலைவரான நா. பொன்னையா அவர்கள் சன்மார்க்க சபையின் செயற் குழுவின ருக்குப் பாடசாலைகளுக்குரிய இலக்கிய பாடப் புத்தகங்களை எழுதும்படி ஆலோசனை கூறி உற்சாகமூட்டினர். சபையின் செய லாளராக இருந்த பண்டிதர் வ. நடராசா, திரு. கனக. செந்திநாதன் என்போரால் இலக்கிய மஞ்சரி எழுதப்பட்டு, சபையின் பெயரால் வட- இலங்கைத் தமிழ்நூற் பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்தன. இப்பாட நூல்களைக் கல்விப் பாட நூற் பிரசுர சபையார் அங்கீகரித்த தோடு ஆசிரியர் உலகமும் பெருமளவில் ஆதரித்து உற்சாகமளித்தது. கிறிஸ்தவ ஆதிக்கமும் ஆங்கிலக் கல்வியும் பாடசாலைக் கற்கை நெறியிலே தம் செல்வாக்கைச் செலுத்தியிருந்த காலகட்டத்தில் ஆறுமுகநாவலர் அவர்கள் சைவமுந் தமிழும் தழைத்தோங்கும் வகையிலான கற்கை நெறியைத் தாம் தாபித்த பாடசாலைகளில் அறிமுகஞ்செய்து செயற்படுத்தினர்கள். அப்பாடசாலைகளிற் பயிலும் மாணவர்களுக்கு ஏற்றவகையிலே சைவ வினவிடை, பாலபாடம் முதலிய நூல்களை எழுதிப் பதிப்பித்து அவர்களுக்கு வழங்கினர்கள். ஐம்பதுகளில் அதேவழியிலே சன்மார்க்க சபையினரும் செயற்பட் டிருக்கிருர்கள். அவர்கள் எழுதி வெளியிட்ட இலக்கிய மஞ்சரி (3ஆம் , 4ஆம், 5ஆம்) புத்தகங்கள் சிறுவர்களின் தமிழ்க் கல்விக்கு உரமூட்டுவன வாக அமைகின்றன.
*சிறுவர்கள் அழகிய படங்களையும் இனிய பாடல்களையும் மிகவும் சுவைத்து அனுபவிப்பார்கள். இளம் உள்ளங்களுக்கு எழுச்சி தருவன இவை. இவற்றின் உதவியுடன் அவர்களுக்குப் பல விடயங்களைப் போதித்துவிடலாம்’ என்பது இக்காலக் கல்வியியலாளர் கருத்தா கும். இத்தகு கல்வி உளவியற் கோட்பாட்டைக் கருத்துட்கொண்டு இலக்கிய மஞ்சரி - மூன்ரும், நான்காம் புத்தகங்களை 1950களில் வெளியிடலாயினர். இந்நூல்கள் பத்துப் பதிப்புக்களைக் கண்டுள்ளமை மூலம், இவற்றின் மவுசு தெற்றெனப் புலப்படுகின்றது. ஒவ்வொரு பதிப்பிலும் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத் திருத் தங்கள் தெடர்பாகப் பத்தாம் பதிப்பு (1979) முன்னுரையிற் கூறப் படும் கருத்து நோக்கற்பாலது:
** இலக்கிய மஞ்சரி வரிசைப் பாடப் புத்தகங்கள் காலத்துக்குக் காலம் புதிய பாடல்களையும் நல்ல வசன நடைகளையும் உள் ளடக்கி வெளிவரின் அவை மாணவர்களுக்கு இலக்கியத்திலே

Page 4
- 6 -
ஆர்வத்தை உண்டாக்கும், என்ற நோக்கம் பற்றி இலக்கிய மஞ்சரிமூன்றும் நான்காம் புத்தகங்களைத் திருத்தியும் புதுக் கியும் வெளியிடலானுேம்."
இந்நூல்கள் காலத்தின் தேவைக்கும், கல்விக் கொள்கைகளுக்கும் பொருந்த அமைந்திருந்த தன்மையினல் இலங்கைக் கல்வித் திணைக் களத்தினர் 1978ஆம் ஆண்டு தொடக்கம் இவற்றைத் துணைப்பாட நூல்களாகச் சிபார்சு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
சைவசமய போதினி :
சமயக் கல்வியை வளர்த்தெடுக்கும்வகையில் நாவலர் அவர்கள் "முதலாம் சைவவினவிடை, இரண்டாம் சைவவினவிடை’ முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்டதோடு, அவற்றைப் பாடசாலை மாணவருக்குரிய பாடநூல்களாகவும் செயற்படுத்தி வந்தார். நாவலர் காட்டிய சமயக் கல்விப் பணியைப் பிற்காலத்திலே சன்மார்க்க சபையினர் நன்குணர்ந்து, சமயப் பொறுப்புணர்ச்சியோடு, மாண வர்களுக்குச் சமய் நெறியைப் போதிக்கும் வகையிலே சைவசமய போதினி” என்ற பெயரில் மாணவரின் தரத்தைக் கருத்திற்கொண்டு, 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம் வகுப்புக்களுக்குரிய “சைவ சமய போதினி நூல்களை எழுதி வெளியிடலாயினர். அரசாங்கத்தி ஞற் சமயம் கட்டாய பாடமாக்கப்பட்டதை யடுத்து, பாடசாலைக ளில் ஒவ்வொரு வகுப்பிற்குமுரிய சைவ சமய பாடநூல்களை எழுதி வெளியிட வேண்டுமெனச் சபை தீர்மானித்தது. இம் முயற்சிக்கு உறுதுணையாக நின்று சைவசமய போதினி என்ற நூலை எழுதியோர் திரு. மு. ஞானப்பிரகாசம், பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை, சைவப் புலவர் க. சி. குலரத்தினம் ஆகியோராவார்கள்.
சமய அறிவு ஆரம்ப வகுப்புக்களிலிருந்தே கற்பிக்கப்படல் வேண்டு மென்பது அறிஞர்களினதும், அரசாங்கத்தினதும் கல்விக்கொள்கை யாக இருந்து வருகின்றது. அதற்கேற்பக் கல்விப்பகுதியார் வகுப்பு அடிப்படையில் ‘சமய பாடத் திட்டங்களை வெளியிட்டுள்ளனர். அப் புதிய சமய பாடத் திட்டத்திற்கமைவாக 'சைவசமய போதினி” என் னும் பெயரிலே சைவசமய பாட நூல்களைச் சன்மார்க்க சபையினர் வெளியிடத் தொடங்கினர்.
கல்வியின் உறுதியான பயனை அளிப்பது சமயக் கல்வியாகும். அவ்வகையிலே கல்வித் திணைக்களத்தினரும் சமயக் கல்விக்கு முதன்மை அளித்துள்ளனர். அன்றியும் சமயக் கல்விப் பரீட்சையிற் சித்தியடைய வேண்டிய கட்டாயத் தேவையும் இருந்தது. இந்த அடிப்படையில்

ہس۔ 73 سس۔
萨
ஐம்பதுகளிற் சன்மார்க்க சபையினரி 'சைவசமய போதினி” என்ற பாடப் புத்தகங்களை அறிமுகஞ் செய்ய்லாஞர்கள். மாணவர்கள் இளம்பிராயத்திலேயே சமயத்தில் நாட்ட்ம்' காள்ளவ்ேண்டுமென்ற நோக்கத்திற்கு இயைய 'சைவசமய போதினி"யும் எழுதப்படலாயிற்று. சைவசமய குரவர்களின் வரலாறுகள், புராணக் கதைகள், பாராய ணம் பண்ணவேண்டிய திருமுறைப் பாடல்கள், நீதிச் செய்யுள்கள் என்பனவும் இந் நூல்களில் இடம் பெறலாயின. சன்மார்க்கசபை தமது பெயருக்கேற்ப இளந்தலைமுறையினரை நன்னெறிப்படுத்தும் பாங்கில் இந்நூல்கள் அமைந்ததோடு மட்டுமன்றி, பாடசாலைகளிற் கட்டாய பாட நூல்களாகவும் போதிக்கப்பட்டமை இவற்றின் பெருமையையும், தேவையினையும் வெளிப்படுத்துகின்றன. அன்றைய கல்வி நெறியிற் பெரிதும் தேவைப்பட்டுநின்ற இந் நூல்களை எழுதி யும், பதிப்பித்தும் வந்த சன்மார்க்க சபையினரின் சேவைகள் பதியப் படவேண்டியனவேயாம். --
"சைவசமய போதினி” நூல்களின் சிறப்புக்களில் விதந்து கூறப் படவேண்டியவை ஆங்கு கூறப்படும் சமயக் கதைகளாகும். நாயன்மா ரதும், சமயப் பெரியாரதும் கதைகளை இளையேர்ர் ஆர்வத்துடன் கேட்கும் வகையிலான உரைநடையினைக் கையாண்டிருத்தல் பாராட் டப்படவேண்டியதாகும். மேலும் இவை சிறுவர்களுக்குரிய நூல்க ளாதலாற் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களும் பெரிதாக இருப்ப தும் சிறப்பு அம்சமே. விளக்கப் படங்கள், விளக்கக் குறிப்புக்கள், பதவுரைகளும் நூலில் இடம்பெற்று, எளிதாம் தன்மை பொருந்த நூல் அமைந்துள்ளது. ஒவ்வொரு நூலினதும் அட்டைப் படங்கள் கோயில் தரிசனத்துடன் அமைந்திருப்பதும் விதந்து கூறப்படவேண் டியதேயாகும்.
சமய நூல்கள் :
சமய சம்பந்தமான சிறு பிரசுரங்களை வெளியிட்டு, இலவசமாக வழங்கவேண்டும் என்ற முறையிற் செயற்பட்ட, சன்மார்க்க சபையி னர், அத்திட்டத்தின் முதற்படியாக அப்பர்புகழ்மாலை என்ற பெய ருடன் கூடிய ஒரு தொகுப்பு நூலை வெளியிட்டு இலவசமாக வழங்கினர். சன்மார்க்க சபையின் ஆரம்ப ஸ்தாபகர்களுள் ஒருவரும், சபையின் செயலாளராகச் செயற்பட்டவருமாகிய அமரர் வ. பொன்னுக்குமாரு ஆசிரியரின் நினைவாகத் திருவெம்பாவையும், திருப்பள்ளி யெழுச்சியும் சேர்ந்த ஒரு நூலை வெளியிட்டு இலவசமாக விநியோகித்தனர். மேலும் சிவபுராணம், தோத்திரத் திரட்டு, பாராயணத் திரட்டு, கோளறு பதிகம், திருமுருகாற்றுப்படை ஆகிய சமய நூல்களையும் இச்சபை வெளியிட்டு இலவசமாக வழங்கியுள்ளது.

Page 5
- 8 -
குரும்பசிட்டியிற் கோயில்கொண்டருளிய மகாமாரி அம்பாள்மீது அளவெட்டியூர் அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவர் பாடிய பாடல் களை, குரும்பசிட்டி மகாமாரி அம்பாள் திருப்பதிகம் என்ற பெயரில் இச்சபையினர் 1971இல் வெளியிட்டிருந்தனர். இப்புலவர் நவக்கிர கங்களின் சுயரூபம், குணம், அவற்றின் பெருமை முதலியவற்றை விளக்கி, எளிய நடையில் பக்தியை வளர்க்கக்கூடியவகையிற் பாடிய நவக்கிரக தோத்திரமாலையை 1973இல் வெளியிட்டுச் சமய இலக்கிய பாரம்பரியம் வளர உதவியாக அமைத்தனர்.
இச்சபையின் சமயப் பணிக்கு முத்தாய்ப்பு வைத்தது போன்று பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் " "சைவநற்சிந்தனை”* என்ற கட்டுரைத் தொகுப்பை 1959இல் வெளியிட்டிருந்தனர். இதன் இரண்டாம் பதிப்பு மேலும் இரு கட்டுரைகளைச் சேர்த்து 1980இல் வெளிவந்தது. இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு சிந்தனையும் மனக்கவலை மாற்றும் மருந்தனையதாகும்.
இரசிகமணி கனக. செந்திநாதன் அவர்கள் நாவலர் பெருமானின் 52 பொன்மொழிகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்தார். அதனை நாவலர் அறிவுரை என்ற சிறு நூலாக 1968இலே சன்மார்க்கசபை வெளியிட்டது. 1968இல் உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு சென்னை யிற் கொண்டாடப்பட்டபோது, நாவலர் பெருமான் சரியாகக் கெளரவப்படுத்தப்படவில்லை என்பதால், ஈழத்தில் நாவலருக்குச் சிலை எடுக்கும் முயற்சி 1968இல் கூர்மையடைந்திருந்தது. இக்கால கட்டத்திலேயே நாவலரை மகானுகக்கொண்டு, அவரது பொன் மொழிகள் சிலவற்றை நூலாக வெளியிடும் முயற்சியிலே சன்மார்க்க சபை ஈடுபட்டமை காலவர்த்தமானத்தோடு தொடர்புபட்ட செயலாகும்.
வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
பெரியார்கள், ஞானிகள் ஆகியோரது வரலாறுகள் இருவடிவிற் கிடைக்கின்றன. தத்தம் வாழ்க்கை வரலாற்றைத் தாமே எழுதியன வாக (Autobiography) அமைந்த நூல்கள் ஒருவகை. உதாரணமாகக் காந்தியடிகளின் சுயசரிதையைக் குறிப்பிடலாம். ஒருவரது வாழ்க்கை வரலாற்றை இன்னெருவர் எழுதுவதாக அமையும் நூல்கள் (Biography) இரண்டாவது வகையாகும். இந்த இரண்டாவது வகை யைச் சார்ந்த வாழ்க்கை வரலாற்று நூல்களாக ஏழு நூல்களைச் சன்மார்க்க சபையினர் 1951 முதல் 1988 வரை வெளியிட்டுள்ளனர். இந்நூல்களிலே சன்மார்க்கசபையோடு இணைந்து அதன் வளர்ச்சிக் காகப் பாடுபட்ட திருவாளர்கள் நா. பொன்னையா, கோ. நமசிவாயம்,

-- 9 -
கனக, செந்திநாதன், த. இராசரத்தினம் ஆகியோரைப்பற்றியும், கலை யுலகிலே தொண்டாற்றிச் சிறந்துவிளங்கிய சிற்பாசிரியர் வி. ஆறுமுகம், இப்போதைய சபைத் தலைவர் கலாகேசரி ஆ. தம்பித்துரை ஆகிய கலைஞர்கள் பற்றியும் தனித்தனி நூல்கள்ை வெளியிட்டு சன்மார்க்க சபை பெரியார்களதும் கலைஞர்களினதும் வாழ்க்கை வரலாற்றை எதிர்காலச் சந்ததியினருக்குத் தந்துள்ளமை பாராட்டப்படவேண்டிய செயலாகும்.
1. திரு. நா. பொன்னையா அவர்களின் வாழ்க்கை வரலாறு (1951) :
(கலப்புலவர் க. கவரத்தினம்) சன்மார்க்க சபையின் தந்தையெனத் திகழ்ந்தவர் ஈழகேசரிப் பொன்னையா அவர்கள்; தமிழர் மத்தியில் ஆங்கிலமோகம் மேலோங்கி யிருந்த காலகட்டத்திலே 1930இல் ‘ஈழகேசரி’ பத்திரிகையை ஆரம் பித்து இலக்கியம், சமயம், அரசியல் என்ற மூன்று விடயங்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்; தமிழகத்தில் ‘மணிக்கொடிக் காலம்’ போன்று ஈழத்தில் "ஈழகேசரிக் காலம்’ எனத் தனியொரு காலப் Liao)6), i2h15It guaii; 9.5G5TG) ''Ceylon Patriot'', ''Kesari' என்னும் பத்திரிகைகளைச் சிலகாலம் நடாத்தியவர்; பாலபோதினி, இலக்கிய மஞ்சரி, தமிழ் மஞ்சரி, உரைநடைச்சிலம்பு, மற்றும் துணைப் பாடநூல்கள் எனத் தமிழிலே பாடப் புத்தகங்களை வெளியிட்டு மாணவர்களுக்குத் தொண்டாற்றிய வள்ளல்; மேலும் தமிழ் இலக் கிய இலக்கண நூற் பதிப்புக்கள், விசேட மலர்கள் என அவர் வெளியிட்டவை பல்வகைப்பட்டனவாகும். சன்மார்க்கசபையின் தாபகராகவும் அதன் பல்வேறுபட்ட பணிகளிலும் அதன் வளர்ச்சியி லும் ஈடுபட்ட அத்தமிழ்மகனின் மறைவையொட்டி (30-3-1951) * கல்வெட்டுப்பாணியில் ஒரு சிறு நூலை இச்சபை வெளியிட்டது. இதில் அவரது வரலாற்றுக் குறிப்புக்கள் யாவுந் தரப்பட்டுள்ளன. அவரது இளமைக்காலம், வெளிநாட்டு அநுபவம், ஈழத்தில் அவர் மேற்கொண்ட பல்வகைப்பட்ட பணிகள் யாவும் இச்சிறு நூலிலே தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஈழகேசரிப் பொன்னையா அவர்கள் பற்றி ஆராய்வோருக்குரிய ஒரு கைந்நூலாக இது அமைகின்றது.
11. கலைமடந்தையின் தவப்புதல்வன் (1964):
(இரசிகமணி கனக. சேக்திகாதன்) கலையுலகிலே சிற்பிகளாகவும், ஓவியர்களாகவும், கட்டிட விற்பன் னர்களாகவும் வாழ்ந்து சென்ற கலைஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் பொதுவாக எழுதப்படாமல் மறைந்தே வந்திருக்கின்றன. உதாரணமாக தமிழகத்தில் உயர்ந்து நிற்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கோபுரத்தைக் கட்டியெழுப்பிய கலைஞர்களின் வரலாறு என்ன என்பது தமிழ் உலகத்திற்குத் தெரி யாது. அரச வரலாறுகளும் பெரும் பிரபுக்கள் வரலாறுகளும் எழுதப்

Page 6
- 10 -
பட்டு வந்தனவேயன்றி, நிச்சயமாக மக்கள் அறிந்திருக்கவேண்டிய கலைஞர்களின் வரலாறு எழுதப்படாமலே இருந்துவந்திருக்கிறது. பேராசிரியர் சுந்தரம்பிள்ள்ை "மனேன்மணி"யத்தில் ஆயனச் சிற்பியின் வரலாற்றைப் படைத்தார். அது கற்பனையா உண்மையா என்பதும் ஆராயத்தக்கதாகும்.
இந்நிலையில் ஈழத்துப் பண்பாட்டு வரலாற்றில் இடம்பெறவேண் டிய கலைஞர்களின் வரலாறு எழுதப்படவேண்டிய அவசியம் தெளி வாகின்றது. சென்ற நூற்ருண்டுகளில் வாழ்ந்து சென்ருேரைப் பற்றிய தகவல்களைப் பெறுவது இனி முடியாத காரியம். எனவே இந் நூற்றண்டிலிருந்தாயினும் இப் பணியை ஆரம்பிக்கலாம். இந்த ஆரம்பப்பணியின் ஒரு மைற்கல்லாக அமைவதே 'கலைமடந்தையின் தவப்புதல்வன்’ என்ற சிறு நூலாகும்.
திருநெல்வேலி, மட்டுவில், வட்டுக்கோட்டை என்னும் பழம் பதிகள் பரம்பரை பரம்பரையாகக் கைவினைஞர்களை (சிற்பிகள்) உருவாக்கித் தந்திருக்கின்றன. இந்நூற்ருண்டின் நடுப்பகுதியில் தலைசிறந்த சிற்பாசாரியராக விளங்கிய திரு. வி. ஆறுமுகம் அவர்கள் மட்டுவிலிலே பிறந்து திருநெல்வேலியிலே வாழ்ந்து கலைத் தொண் டாற்றியவராவர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு ஆலயங் களிற் காட்சி தரும் சித்திரத் தேர்களும், வாகனங்களும் அவரது கைவண்ணத்தின் பெறுபேறுகளேயாம்.
இவரது குருகுலப் பட்டறையில் உருப்பெற்ற கலைஞர்களில் அவரது மகன் கலாகேசரி ஆ. தம்பித்துரை தலையாயவர். இத்தகு கலைப் பாரம்பரியங்கள் மறைந்து போகாது பேணும்வகையிற் சன்மார்க்க சபையினரின் கலையார்வம் காரணமாக கனக. செந்தி நாதன் அவர்களாற் சிற்பாசாரியர் வி. ஆறுமுகம்பற்றி எழுதப்பட்டதே இச் சிறு நூலாகும். நூல் சிறிதாயினுந் தரப்பட்ட விடயங்கள் அறிதற்கரிய செய்திக் கருவூலங்களாகும்.
II. நமச்சிவாய மலர் (1969):
ஆசிரியப் பணியுடன், சன்மார்க்க சபையின் வளர்ச்சியிலும், அதன் சேவையிலும் உழைத்த அமரர் கோ. நமசிவாயம் அவர்களது
வாழ்க்கை வரலாற்றை எடுத்தோதும் சிறு கைந்நூலே "நமச்சிவாய மலர்".
IV. கவின் கலைக்கு ஒர் கலாகேசரி (1974):
(கனக. செக்திகாதன்) தொடர்ச்சியாக இரு தலைமுறையில் வந்த கலைஞர்களைப்பற்றி நூல் எழுதி வெளியிட்டமைக்காகச் சன்மார்க்க சபையினருக்குத் தமிழுலகு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது. 1964இலே சிற்பாசாரியர்

- 11 -
வி. ஆறுமுகம்பற்றிய நூலை வெளியிட்டதோடு, அவரது மகனகிய ஒவியக் கலை விற்பன்னரின் கலைவாழ்வின் வெள்ளி விழாவைக் கொண் டாடுமுகமாக-அவரது வாழ்க்கை வரலாற்று நூலைச் சன்மார்க்கசபை வெளியிடுவதாயிற்று.
இளமைக்காலத்தில் தந்தையாருடன் திருநெல்வேலிக் கலைச்சூழலில் வாழ்ந்து கலைப்பயிற்சி பெற்ற திரு. தம்பித்துரை அவர்கள், மகாஜனுக் கல்லூரியில் ஓவியக்கலை ஆசிரியரானதும் குரும்பசிட்டியில் வாழத் தொடங்கினர். சன்மார்க்கசபையுடன் அவரது பணி இணைவதாயிற்று. தந்தையைப் போன்றே தனயனும், ஈழத்துக்கோயில்களின் தேர்கள், வாகனங்கள் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஒவியக் கலை பற்றி இவர் பல நூல்களை எழுதினர்; பலராற் பாராட்டப் பெற்ருர். அன்னுரது பணிகளைத் தொகுத்துத் தனிநூலாகக் கனக. செந்திநாதன் அவர்கள் எழுதிய இந்நூலைச் சன்மார்க்கசபை வெளி யிட்டு ஈழத் தமிழர்தம் கலைப் பாரம்பரிய வரலாற்றை வளம்படுத்தி யுள்ளது.
V. ʼ இரசிகமணி நினைவு மஞ்சரி (1978):
ஈழத்து இலக்கிய வரலாற்றிலே கனக. செந்திநாதனுக்குத் தனி மதிப்புண்டு. இரசிகமணி', 'இலக்கியச் செல்வர்", "நடமாடும் நூல் நிலையம்’ எனப் புகழப்படும் கனக. செந்திநாதன் அவர்கள் சன்மார்க்க சபையின் பணிகளுடன் மிக நெருக்கமாகத் தன்னை இணைத் துக்கொண்டவர். சன்மார்க்க சபையில் 40 ஆண்டுகள்வரை உறுப்பின ராகவும், கால் நூற்ருண்டுக்கு மேல் உபதலைவராகவும் பணிபுரிந்தவர். அன்னரின் மரணத்தை யொட்டி (16-11-1977) அவரது நினைவாக வெளியிடப்பட்ட ஒரு சிறு கைந்நூலே இதுவாகும். அவரோடு இணைந்து பழகிய கலைப்பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார்கள்.
VI. நிஜங்களின் தரிசனம் (1988):
(ஏ. ரி. போன்னுத்துரை)
தனிமனிதன் ஒருவன் தனது ஆளுமையை வளர்த்துக்கொள்வ தற்குத் துணையாக அவன் சார்ந்து நிற்கும் நிறுவனங்கள் துணையாகின் றன. குரும்பசிட்டி திரு. த. இராசரத்தினம் ஆசிரியரவர்கள் ஈழகேசரி நா. பொன்னையா அவர்களுக்குப் பின்பு சன்மார்க்க சபையினை நன்கு வழி நடத்திய செயல் வீரர். ஆசிரியராகி, அதிபராகி உயர்ந்த இராசரத்தினம் அவர்கள் தன் பிற்கால வாழ்விற் குரும்பசிட்டி

Page 7
- 12 -
அம்பாள் ஆலயத் திருப்பணியில் ஒன்றிய பொதுநல ஊழியர் ஆனர். அன்னரின் வாழ்க்கை வரலாற்றை அவரது உறவினராகிய திரு. ஏ. ரி. பொன்னுத்துரை அவர்கள் எழுதியிருக்கிருர்கள். இந்நூலிலே சன்மார்க்க சபையின் செயற்பாடுகள் வெளிப்படுகின்றன. தனிமனித னின் ஆளுமையும் நற்பண்புகளும் தொனிக்கின்றன.
VII. கலையுலகில் கால்நூற்றண்டு 1974 :
(ஏ. ரி. போன்னுத்துரை)
கலையரசு சொர்ணலிங்கத்துக்கு அடுத்தபடியாக ஈழத்து நாடகத் துறையிலே தன் முத்திரையைப் பதித்துக்கொண்டவர் திரு. ஏ. ரி. பொன்னுத்துரை அவர்கள். சன்மார்க்க சபையின் இ லக் கிய நடவடிக்கைகள் அனைத்திலும் பங்கெடுத்துக்கொண்ட ஏ. ரி. பொ. தனது நாடக அனுபவங்களையும் சன்மார்க்க சபையுடன் இணைத் துக்கொண்டார். இலங்கைக் கலைக் கழக நாடகக் குழுவின் ஒர் உறுப் பினராக இருந்து பிராந்திய மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நாடகப் போட்டிகளை மதிப்பிடும் வாய்ப்பு எனக்கு 1980இல் கிடைத்தபோது, ஏ. ரி. பொ. வின் நாடக ஆளுமையை அவர் பங்குபற்றிய “பொறுத்தது போதும் நாடகத்தின் மூலம் என்னல் அறியக்கூடியதாக இருந்தது. அவர் நாடகத்துறையில் 25 ஆண்டுகள் புரிந்த சாதனைகளைப் பாராட்டி அவருக்கு வெள்ளி விழா பெருமள வில் நடாத்தப்பட்டு 'கலைப் பேரரசு’ என்ற நாடக விருதும் கலைப் பெருமக்களால் வழங்கப்பட்டது. அன்னரைக்கொண்டு அவரது நாடக அனுபவங்களைக் கலையுலகில் கால் நூற்ருண்டு என்ற நூலாக, சன்மார்க்க சபை அவரைக்கொண்டு எழுதுவித்து வெளியிட்டது. ஈழத்துத் தமிழ் நாடக அரங்கியல் பற்றி அறிய விரும்புவோருக்கு இந்நூல் அரியதோர் செய்திக் களஞ்சியமாகும்.
VIII. இந்திய விடுதலைப் போரில் இலங்கை மகன் பங்கு 1975:
(தியாகி கோ. இராஜகோபால்)
காந்திய தசாப்தத்தில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைச் சுருங்கக் கூறி, அதனல் ஏற்பட்ட பொது எழுச்சியையும் அதிலே தன் பங்கை யும் விளக்கமாக, சரளமான நடையில் நூலாசிரியர் எழுதியுள்ளார். தியாகி கோ. இராஜகோபால் அவர்களின் சுயசரிதை என்று கருதத் தக்க வகையிலேயே இந்நூல் அமைந்துள்ளது. “காந்தீயத்தை மறந்து வரும் இக்கால வாலிபருக்கும் இனிமேல் வரும் தலைமுறை யினருக்கும் இந்நூல் நிச்சயம் பயன்படும் ' என்பது நூலின் பதிப்புரை வாசகமாகும்.

- 13 -
மாவிட்டபுரத் திருத்தல வரலாறு 1965 (மகாராஜரீ சு. து. ஷண்முககாதக் குருக்கள்)
தனியார் வரலாறுகள் பற்றிய நூல்களை வெளியிட்டு வந்த சன்மார்க்க சபையினர், திருத்தலங்களின் வரலாறுபற்றியும் சிந்தித் திருக்கின்றனர். அவ்வகையில் மாவிட்டபுரத் திருத்தல வரலாறு நூலை வெளியிட்டுத் தந்தமை அவர்களது குறிக்கோளில் நின்றும் வில காத வெளியீட்டுப் பணியை வலியுறுத்துகிறது.
இலக்கியம் சார்ந்த நூல் வெளியீடுகள் : கவிதை :
இலக்கியப் பூங்காவிலே கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என்ற துறைசார்ந்த நூல்களையும் சன்மார்க்கசபை வெளியிட்டுள் ளது. கவிதைத் துறையிலே சன்மார்க்க சபையுடன் தொடர்புடைய கவிஞர் வ.இளையதம்பி, கனக. செந்திநாதன் ஆகிய இருவரது படைப் புக்களையும் நூலுருவாக்கியது. "ஈழகேசரி’யிலே சிறுவர்களுக்கான பாடல்களை எழுதி வந்தவர் திரு. வ. இளையதம்பி அவர்கள். ஆசிரிய ராகக் கடமை புரிந்து வந்த திரு. இளையதம்பி, மாணவர்களின் உளப்பாங்குக் கேற்ற பாடற் பொருள்களைப் பற்றியே பாடினர். இவரது பாடல்களிலே தெய்வ சிந்தனை மேலோங்கிற்று எனலாம். சன்மார்க்க சபையும் தனது குறிக்கோளுக்கமைய திரு. இளையதம்பி அவர்களது படைப்புக்களில் 32 தலைப்புக்களிலான பாடல்களைத் தேர்ந்து "பாலர் விருந்து' (1971) என்ற பெயரில் வெளியிட்டு சிறுவர் இலக்கியப் பரப்பிலே தனது பங்களிப்பை நல்கிற்று.
சிறுவர்களுக்கு அறிவுச் சுடர் கொளுத்தும் வகையிலான இவரது பாடல்கள் பேணிப் படிக்கத்தக்கன. பழைய தலைமுறைக் கவிஞரின் சிறுவர் பாடல்கள் இன்றைய சிறுவர் இலக்கியச் சித்தாந்தங்களி னின்றும் வேறுபட்டவை எனச் சிலர் கருதலாம். ஆனல் ஈழத்துப் பழைய தலைமுறைக் கவிஞர்களின் ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு", * கைவீசம்மா கைவீசு’, ‘ ஆடிப் பிறப்பு', ' கத்தரி வெருளி என்ற தொடர்களாகிய சிறுவர் பாடல்கள் இன்றும் நிலைத்துச் சிறுவர் மத்தியில் வரவேற்புப் பெறுகின்றன. இப்பரம்பரையிலே வந்தவரே *இதம் என்ற, புனை பெயரிற் கவிதை எழுதிய திரு. வ. இளையதம்பி ஆவார். " பாலர் விருந்து ' என்ற தொகுப்பைச் சிறுவர்களுக்கு அறிமுகஞ் செய்து வைத்தமை வரவேற்கத்தக்கதாம்.
சன்மார்க்க சபையினர் சிறுவர் இலக்கியத்துறையிலே தொடர்ச்சி யாக ஈடுபாடு காட்டி வந்திருக்கின்றனர். 1974இலே கனக. செந்தி நாதன் ஆசிரிய கலாசாலை அரங்கில் இளம் ஆசிரியர்களுக்கு நிகழ்த்

Page 8
- 4 -
திய "ஈழத்துக் குழந்தைப் பாடல்கள்’ என்ற சிறப்புச் சொற்பொழி வொன்றின் பிரதியைக் காலதேவனின் கையில் அகப்பட்டு அழிய விடாது 1988இல் ‘ஈழத்துக் குழந்தைப் பாடல்கள்’ என்ற சிறு கைந்நூலாக வெளியிட்டுள்ளனர். அந் நூலிலே கனக. செந்திநாதன் அவர்கள் * குழந்தைகளுக்காகப் பாடும் கவிஞர்கள் சில விடயங்களை ஞாபகத்தில் வைத்திருத்தல் நன்று " எனப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார். பயன் கருதி ஈண்டுக் குறிப்பிடுதல் பொருத்தமே.
(i) இலகுவான சொற்கள்.
(ii) எளிமையான மெட்டு. (i) தாளம் போட்டுப் பாடக்கூடியனவாய பாடல்கள். {iw) சூழலிற் கண்டும் கேட்டும் அநுபவிக்கும் பொருள். (w) நல்ல கதைகள். (wi) வந்த சொற்களே மீண்டும் மீண்டும் வருதல். (wi) அபிநயம் செய்யக்கூடிய பதங்கள்.
நவீன நரிவிருத்தம் 1978 : (கனக. செந்திகாதன்) r
கனக. செந்திநாதன் நவீன நரிவிருத்தம் ' என்ற பொருள் பற்றிப் பாடிய 20 பாடல்களை அவரது மரணத்தின் பின் அவரது நினைவாக கல்லச்சுப்பிரதியாக சன்மார்க்க சபை வெளியிட்டிருந்தது. சமுக சீர்திருத்தமே இப்பாடல்களின் உட்பொருளாகும். விலங்கு இனத்திற் குள்ளப்புத்தியுடைய மிருகம் நரி என்று மனிதன் அதனை இகழ்வது வழக்கம். ஆனல் மாந்தருள்ளும் நரிப்புத்தியுடையோர் பலருள்ளனர் என்று நரியே கூறுவதாகப் பாடப்பட்ட இப்பாடல்கள், சமூக சீர்திருத்தம் நாடும் இச்சபையால் வெளியிடப்பட்டமை மிகப் பொருத்தமே.
நாவல் :
1956க்குப் பின்பு ஈழத்தில் முற்போக்கு அணியினரின் செயற்பாடு துரிதகதி அடையத் தொடங்கியது. அதே வேளையிலே தமிழ்மொழி உணர்வும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் புதுவேகம் பெறலாயின. அப்போதைய அரசியல், தமிழ் இலக்கியப் போக்கையும் வீறு கொள்ளச் செய்தது. தேசியப் பிரச்சினைகள் எழுத்துக்களில் உருவம் பெற்றன. அதே காலகட்டத்திலே தமிழகப் பத்திரிகையிற் பல எழுத்தாளர் சேர்ந்து தொடராக ஒரு கதையை எழுதும் போக்குக் காணப்பட்டது. அதனைப் பரீட்சார்த்த முறையாகக் கொண்டு இ. நாகராஜன், கனக. செந்திநாதன், சு. வேலுப்பிள்ளை, குறமகள், எஸ். பொன்னுத்துரை ஆகிய ஐவரும் மத்தாப்பு என்ற தலைப்பிற்

- 15 -
குறுநாவலாக 'வீரகேசரி’யிலே தொடர்ந்து எழுதிவந்தனர். அதற்குக் கிடைத்த வரவேற்பின் மகிமையால் அக்குறுநாவலைச் சன்மார்க்க சபை 1962இல் நூலாக வெளியிட்டது.
குரும்பசிட்டியின் இலக்கிய பாரம்பரியத்தின் இரண்டாந் தலை முறையைச் சார்ந்த திரு. கே. எஸ். சிவகுமாரன் பல சிறுகதைகளையுங் குறுநாவல்களையும் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். அவற்றுள் ஒரே ஒரு தெய்வம் ' என்ற குறுநாவலையும் * பொன்மலர்' என்ற சிறுகதையையும் ஒரே நூலிலே தொகுத்து சன்மார்க்க சபை " ஒரே ஒரு தெய்வம் ' என்ற பெயரில் 1973இல் வெளியிட்டிருந்தது.
“ ஈழத்து இலக்கிய உலகில் இப்போது வாராவாரம் ஒரு நூலை யாவது எழுத்தாளர் வெளியிட்டு வருவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. மிகப் பழைய எழுத்தாளர்கள் தொடக்கம் எழுத்துத் துறையில் இப்போது காலடி எடுத்து வைக்கும் இளம் எழுத்தாளர்கள் வரை தங்கள் படைப்புக்களை நூல் உருவிற் கொண்டுவர முயலுகின்ற னர். இது ஒரு வரவேற்கக்கூடிய முயற்சி' - இது நூலில் * என்னுரை " - என்ற பகுதியில் வரும் ஒரு குறிப்பாகும். இந் நூலுக்கு மதிப்புரை எழுதிய கவிஞர் வி. கந்தவனம் கூறுவதும் ஈண்டு கவனிக்கத்தக்கது. ‘எங்கள் நாடு, எங்கள் எழுத்தாளர்கள், எமது நூல்கள் என்று யாழ் இலக்கிய வட்டம் கடந்த பல ஆண்டுக ளாகச் செய்துவரும் தேசிய நோக்கோடுகூடிய இலக்கியப் பிரசாரத்தின் எழுச்சி நலம் வாய்ந்த விளைவு ஏற்கெனவே வெளிப்படத் தொடங்கி விட்டது. இரசிகர்கள் விழிப்படைந்தனர். எழுத்தாளர்கள் ஊக்கம் பெற்றனர். இலக்கியப் படைப்புக்கள் பல நூல் வடிவம் பெற்றன. ஈழத்துப் பத்திரிகைகள் வாழத் தலைப்பட்டன. இவ்விருவரது சமகாலக் கருத்துக்கள் எழுபதுகளில் ஆக்க இலக்கிய நூல் வெளியீடுகள் ஆரோக்கியமான முறையில் நடைபெற்றிருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. அப்பணியிற் சன்மார்க்க சபையும் பங்கைச் செலுத் திற்று என்பது வெள்ளிடைமலை.”*
சிறுகதை:
திரு. இரா. கனகரத்தினம் எழுதிய "சீசரின் தியாகம்’ என்ற கதை யும் திரு. கா. சு. செல்வரத்தினம் எழுதிய "அன்ன பூரணி’ என்ற சிறு கதையும் தனித்தனிச் சிறு நூல்களாகச் சன்மார்க்கசபையினரால் 1952இல் வெளியிடப்பட்டன. இவை சிறுகதை இலக்கிய வரம்புக் குட்பட்டவை இல்லை. ஆனல் குட்டிக் கதைகள் போன்றவை. முன்னது சிறுவர் கதையாகவும் பின்னது காதற் கதையாகவும் அமைகின்றன.

Page 9
- 16
நாடகம்:
சன்மார்க்க சபை ஒரு சிறந்த நர்டக அரங்காகவும் செயற்பட்டு வந்திருக்கிறது. பல நாடகங்களை மேடை யேற்றியிருக்கிறது. இங்கு
நடைபெற்ற நாடகங்களை எழுதியும், இயக்கியும், நடித்தும் வந்த கலைஞரே ஏ. ரி. பொ. இவர் தாம் எழுதிய 'பக்தி வெள்ளம்", "கூப்
பிய கரங்கள்’ என்ற ஓரங்க நாடகங்களைச் சன்மார்க்க சபை இரு நூல்களாக வெளியிட்டுள்ளது.
மருத்துவம் :
தமிழ் இலக்கியத்தில் மருத்துவம் ஒரு தனிப் பிரிவாக வளர்ந்து வந்திருக்கின்றது. ஈழத்தில் அதன் முழுமையான வளர்ச்சியைப் பரராசசேகரத்திற் காணலாம். தமிழ்ப் பண்பாட்டோடு சமூக நலனையும் சன்மார்க்க சபை மதித்து மக்களுக்கு இன்றியமையாத வகையிலான மருத்துவ ரீதியிலான சில கட்டுரைகளை வெளியிட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறது. அவ்வகையில் வெளி வந்த கட்டு ரைப் பிரசுரங்களின் தலைப்புக்கள் வருமாறு:
1. உணவும் சுகாதாரமும் I. இன்றைய சூழ்நிலையில் எமது பகுதிச் சுகாதாரப் பிரச்சினைகள் II. பற்சுகாதாரம் IV. (5d56j Gafir Go) 5. (Anaemia)
கட்டுரை நூல் வெளியீடுகள் : I. கடுக்கனும் மோதிரமும் 1972:
(கனக. செக்திாகாதன்)
பழந்தமிழ் இலக்கியப் பரப்பை இலக்கிய இரசனை புலப்படும் வகையில் 14 கட்டுரையாக எழுதப்பட்ட ஒரு கட்டுரைத் தொகுப்பே இந் நூல். 'கவிதை இரசனையை வளர்க்கும் கட்டுரை நூல்கள் ஈழத் தில் அதிகம் வருவதில்லை. அத்துறையிற் சிறிது முயன்று பார்த்தா லென்ன? என்ற ஆசையால் வெளிவந்ததுதான், * கடுக்கனும் மோதிரமும்’ என்னும் இந்த நூல்" என முகவுரையில் ஆசிரியர் தமது நோக்கைக் குறித்தார். இக்கட்டுரைகள் "வெற்றிமணி’ என்ற சிறுவர் பத்திரிகையில் அவ்வப்போது வெளிவந்தவையாகும். திருக் குறள், இராமாயணம், குசேலோபாக்கியானம், நரிவிருத்தம், பாரதிபாடல், தேசிகவிநாயகம்பிள்ளை கவிதை, பிள்ளைத்தமிழ், வேதநாயகம்பிள்ளை பாடல், தனிப் பாடல்கள் எனப் பலவகைப் பட்ட கவிதைகளை இந்நூல் கட்டுரை வடிவில் அறிமுகஞ் செய் திருக்கிறது. உயர் வகுப்பு மாணவர்களின் இலக்கிய இரசனையை வளர்க்கும் நோக்குடன் அமைந்த இந்நூலைச் சன்மார்க்கசபை வெளியிட்டுத் தனது இலக்கியப் பணியைத் தொடர்வதாயிற்று.

egy-vi
இக் கட்டுரைகள் ஒப்பு இலக்கிய அடிப்படையில் எழுதப்பட்டுத் தரமான இலக்கிய இரசனைக்கு மாணவரையும் இலக்கிய இரசிகரையும் இட்டுச் செல்கின்றன. ஒரே மாதிரியான இரு சம்பவங்களை அருகருகே இணைத்துக் காட்டும்போது ஒன்ருல் ஒன்று அழகு பெறுகிறது. இதற்கு "கடுக்கனும் மோதிரமும் ' என்ற கட்டுரை சிறந்த சான்று. மாறுபட்ட சம்பவங்களை இணைத்துக் காட்டும் வகையிலான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இராமனின் படிப் படியான மூன்று வகைச் சிரிப்புக்கள் வரிசையாகக் காட்டப் படுகின்றன. வெவ்வேறு புலவர்களின் பாடல்களை ஒட்டவைத்து தரம்கண்டு ஒப்புமை இலக்கிய உணர்வுக்கு வழிநடாத்தும் உத்தி முறையும் இக்கட்டுரைகளிற் காணப்படுகின்றது.
11. பாடசாலை நாடகம் 1973 :
(ஏ. ரி. பொன்னுத்துரை)
ஈழத்தின் அண்மைக்காலத் தமிழ் நாடகங்களின் போக்கினையும் வளர்ச் சி யினை யும் ஆராயும் போது கலைப்பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை ஒரு முக்கிய நாடகக்காரராகத் தென்படுகிருiர். நாடக ஆசிரியராக, நடிகராக, நெறியாளராக ஏ. ரி. பொ. அவர்கள் காட்சிதருகிருர்கள். அவர் எழுதிய 17 நாடகங்களில் 4 நாடகங்கள் நூலுருப்பெற்றுள்ளன, சன்மார்க்க சபையின் கலைக் கண்களாக கனக. செந்திநாதனும், ஏ. ரி. பொவும் சிறந்திருக்கிருர்கள். ஆக்க இலக்கியத்துறையிலும் விமர்சனக் கலையிலும் கனக. செந்திநாதன் சிறந்து விளங்க, நாடகத்துறையிலும், கிராமிய நடனங்களிலும் ஈடுபாடும், ஆய்வுநாட்டமும் கொண்டவராக ஏ. ரி. பொ. காணப் படுகிருர், நாடகக் கருத்தரங்குகளிலும், அரங்கப் பயிற்சியிலும், அயரா நாட்டங்கொண்ட ஏ. ரி. பொ. “பாடசாலை நாடகம் பற்றித் தாம் 1966இல் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையைச் சன்மார்க்கசபை 1973இல் நூலாக்கித் தந்துள்ளது. இந்த நூலுக்கு முன்னுரை வழங்கிய திரு. இரா. சிவலிங்கம் கூறும் கருத்து ஈண்டு உற்று நோக்கத் தக்கதாகும். ** தமிழில் இத்தகைய நூல்கள் நிறைய வெளிவர வேண்டும். இன்று நமது தேவைகளுக்கேற்ற பல நூல்கள் வெளிவர வேண்டும். பாடசாலை நாடகங்களை இயற்றுதல், இயக்குதல் பற்றிய நூல் இன்றைய தேவைக்கு ஏற்ற ஒன்ருகும். இந்நூல் நமது அடிப்படைத் தேவையொன்றினைப் பூர்த்திசெய்கின்றது. இதனை அடியொற்றி மேலும் பல நூல்கள் வெளிவரல்வேண்டும் என்பது எனது அவா. இச் சிறு நூலில் பாடசாலை நாடக அமைப்பின் பல் வேறு கோணங்களையும் ஊன்றி நோக்கித் தமது கருத்துக்களைச் சுவைபடக் கூறியுள்ளார் நண்பன் பொன்னுத்துரை. பாடசாலை

Page 10
= 18 ~ :
நாடகத் தயாரிப்பு பற்றிய குறிப்புக்களைச் சேகரித்ததோடல்லாமல், ஒரு "மாதிரி " நாடகத்தையும் (வீரமுரசு) வெளியிட்டிருப்பது இதன் பயன்பாட்டைப் பன்மடங்காக்கியுள்ளது. (பக். i - tw)
11. தாளக் காவடி 1988 : (ஏ. ரி. பொன்னுத்துரை)
நாடகக் கலைவளர்ச்சிக்கும் சன்மார்க்கசபை தன்னலியன்ற பங்க ளிப்பைச் செய்து வந்துள்ளது. காவடி, கரகம், கூத்து முதலாம் கலை களுக்குச் சபை நடாத்திய விழாக்களிலே தனி இடங் கொடுத்துப் பேணுவதில் அமரர் த. இராசரத்தினம் அவர்கள் முன்னின்று உழைத்திருக்கிருர். அவருக்குத் துணையாக நாட்டார் கலை நாயகன் எனத் திகழும் ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களும் செயற்பட்டு வந்திருக்கிருர்கள். ஒரு நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் ஜீவநாடி யாக விளங்குவது நாட்டார் கலைகள் என்பதை ஈண்டு நினைவுகொள் ளல் தக்கதே. நாடகத்துறையிலும் நாட்டார் இசைத் துறையிலும் பயிற்சி மிக்கவர், ஏ. ரி. பொ. அவர்கள். அவர் காலத்துக்குக் காலம் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளையும் வானெலிப் பேச்சை யும் தொகுத்து இந் நூலை ஆக்கியுள்ளார். கலைப்பேரரசின் தகுதி கண்டு அவர் சார்ந்த சன்மார்க்க சபை இதனை வெளியிட்டுள்ளது.
இந்நூலிலே " தாளக் காவடி", "அண்ணுவிமுதல் எடுத்துரைஞர் வரை', 'உடுக்கு’, ‘அரங்கும் அவையும் என்ற நான்கு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
* காவடி ஆட்டம் நுட்பம் செறிந்துள்ளது. அதில் தாளக் காவடி அதிநுட்பம் வாய்ந்தது. " தாளக் காவடி ஆடவிரும்பும் ஆர்வலர்கள் இதில் துறை போகிய அண்ணுவிமாரிடம் 3, 4 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கு மேல் முறையான பயிற்சி பெறவேண்டும். கிராமியக் கோலங்களும் கலைத்துவமும் இணைந்த கலைவடிவம் தாளக் காவடி, என ஆசிரியர் கூறுவது உன்னித்து நோக்கத்தக்கதாம். தாளக் காவடியின் " தாளக் கட்டுக்கள் பலவற்றைக் கட்டுரை தாங்கி நிற்கிறது.
தாளக் காவடி போன்ற நாட்டார் கலைகள் எமது கலாசார மேம்பாட்டுக்கு மாத்திரமன்றி, சமூகத்தின் பரஸ்பரம், ஒற்றுமை, உயர்வற்ற தாழ்வற்ற நோக்கு என்பன சுடர்விடப் பெரிதும் துணை புரிந்தன (பக். 9), என்ற கருத்தும் கட்டுரையிற் பளிச்சிடுகிறது. தாளக் காவடி கலைதேர்ந்த அண்ணுவிமார் பற்றிய செய்திகள், ஆடப்பட்ட சூழல்கள், காலங்கள், பங்குபற்றியோர், சமூகநிலைப் பாடு என்பனவும் கட்டுரையிலே விபரிக்கப்பட்டுள்ளன.

- 19 -
இரண்டாவது கட்டுரையில் அண்ணுவியார், எடுத்துரைஞர் ஆகியோரது இயல்புகளும் செயற்பாடுகளும் விளக்கப்பட்டு இன் றைய ஈழத்தமிழ் நாடகங்களின் போக்கும் இங்கே அணுகப்பட் டுள்ளன. உடுக்கு வாத்தியம் பற்றிய கட்டுரையை அடுத்து ‘அரங் கும் அவையும்” என்ற கட்டுரையில் ஈழத்துத் தமிழ் நாடக அரங்கைப்பற்றிய பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்நூலின் மூலம் ஈழத்து நாடகக்கலை பற்றிய பல தகவல்கள் எமக்குக் கிடைக்கின்றன.
IV. குரும்பசிட்டியின் இலக்கியப் பாரம்பரியம் 1988: (9. do GnurrasFMT)
அமரர் த. இராசரத்தினம் அவர்களின் நினைவுநாள் உரையாக இது அமைகிறது. குரும்பசிட்டி சன்மார்க்க சபைச் சூழலில் வளர்ந்த இலக்கிய கர்த்தாக்களின் பணிகளைக் காலவர்த்தமானங்களுடன் ஒப்பு நோக்கி ஆராய்ந்து தயாரித்த சிறப்புச் சொற்பொழிவை இச் சபையினர் நூலாக்கித் தந்தமை எதிர்காலப் பயன் கருதிய முயற்சியே.
கலைகள்: ஓவியக்கலை 1961; (ஆ. தம்பித்துரை)
கலாகேசரி ஆ. தம்பித்துரை அவர்கள் நயடறிந்த ஓர் ஓவியக் கலைஞர். இவர் ஓவியக்கலைபற்றிப் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைக ளைச் சன்மார்க்க சபை தொகுத்துத் தனி நூலாக 1961இல் தமது 7ஆவது நூலாக வெளியிட்டுள்ளது. கவின்கலை சம்பந்தமான பல வகைப்பட்ட அறிவு நூல்களும், கலை நூல்களும் வாசகர்களிடையே பரவவேண்டும் என்பதும் இந் நூ ைவெளியிடுவதன் நோக்கமாகும். என்று பதிப்புரை வாயிலாகச் சன்மார்க்க சபை தனது இலட்சியத்தை வெளிப்படுத்துகின்றது. "ஒவியம் பற்றிச் சாதாரண வாசகர்களும், முக்கியமாகக் கல்லூரிகளில் உள்ள உயர்தர வகுப்பு மாணவர்களும், ஆசிரிய கலாசாலை மாணவர்களும் ஆரம்ப அறிவைப் பெறவேண்டும் என்ற ஆசைதான் இக் கட்டுரைகள்' என்று ஆசிரியர் தன் கருத்தை முகவுரையிற் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலிற் கலையின் பயன், ஒவியத்தினிடம் பெறும் கோடுகள், நிறங்கள், மேலை நாட்டுக் கலைவிமர்சகர்களின் கருத்துக்கள், உலக நாடுகளில் ஒவியக் கலையின் வளர்ச்சி முதலான பல விடயங்கள் ஆராயப்படுகின்றன. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும்வகை

Page 11
m 20 -
யில் இலக்கிய மஞ்சரி, சமய நூல்கள் முதலியனவற்றை வெளியிட்டு வந்த சன்மார்க்கசபை, ஒவியக்கலை வளர்ச்சிக்கும், ஏற்ற பங்களிப் பாக இந் நூலை வெளியிடுவதாயிற்று.
இது போன்றே கலாகேசரி ஆ. தம்பித்துரை அவர்கள் எழுதிய "சிறுவர் சித்திரம்" என்ற நூலையும் வெளியிடுவதாயிற்று.
udeviscir:
1. குரும்பசிட்டிசன்மார்க்க சபை 30ஆண்டு நிறைவு மலர்-1965 1. பொன்விழாக் கண்ட சன்மார்க்க சபை 50ஆம் ஆண்டு
நிறைவு விழா மலர்-1985
இந்த இரண்டு மலர்களும் சன்மார்க்க சபையின் செயற் றிட் டங்களையும், நடவடிக்கைகளையும், சாதனைகளையும் தொகுத்துக் கூறு வனவாக அமைவதோடு இச்சபையினைப்பற்றி ஆராய்வோருக்குத் தக்க தகவற் கருவூலங்களாகவும் அமைகின்றன. சன்மார்க்கசபை யின் பொன் விழாப் பேருரையிலே பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் கூறிய கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.
** ஒரு சமுதாயத்தின் பண்பாட்டுச் சிறப்புக்களைப் பிரதிபலிப்பன வற்றுள் அதன் சமூக நிறுவனங்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின் றன. எனவே ஒரு சமுதாய நிறுவனத்தின் வரலாறு என்பது ஒரு வகையில் அச்சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றில் ஒரு கூருகவே அமைகிறது.
இக்கருத்திலிருந்து அறியப்படுவது யாதெனில் இங்கு குறிப்பி டப்படும் இரு மலர்கள் தரும் 50 ஆண்டுக்காலச் செய்திகள் இப் பிரதேசத்தின் கலை கலாசார நடவடிக்கையின் வரலாருகவே அமைத ஸ்ாகும். அவ் வகையில் முக்கியத்துவம் பெறும் இம்மலர்களை வெளி யிட்ட இச்சபையின் பணி மேலும் சமூக முக்கியத்துவம் பெறுதல் வெளிப்படையாகிறது.
III. வெள்ளிவிழா மலர் 1974:
(காடகக் கலைஞர் ஏ. ரி. பொ.) ஈழத்துத் தமிழ் நாடக அரங்கில் ஏ. ரி. பொ. வின் பங்கினை அறிந்து கொள்வதற்குரிய தகவல்களைக் கொண்டதாக இம்மலர் அமைகின்றது. இம்மலர் ஈழத்து நாடக வரலாற்றிற்கு ஒர் அரிய தகவற் களஞ்சியமாகும்.

- 21 -
சன்மார்க்க சபையுடன் தொகூர்புடிைய நூல் வெளியீட்டிாளர்கள்:
சன்மார்க்கசபையின் நூல்களை ஈழகேசரிப் பொன்னையாவின் திருமகள் அழுத்தகமே வெளியிட்டு வந்தது.
பொன்னையா அவர்கள் நாவலர், தாமோதரம்பிள்ளை போன் ருேரின் வரிசையில்வந்த மதிப்பிடத்தக்க சிறந்த நூல் வெளியீட் டாளராவார். தமிழ் நூல் வெளியீட்டுத்துறையிலே திருமகள் அழுத்த கத்துக்குத் தனிப் பெருமையுண்டு. அத்தகு மேம்பாட்டுக்குக் காரண கர்த்தாவாகச் செயற்பட்டவர் பொன்னையா அவர்கள். அந்த அச்சகத்திற் பணிபுரிந்த திரு. கோ. அப்பாக்குட்டி, திரு. மு. சபாரத்தினம் என்போரும், நூல் வெளியீடு செம்மை பெறப் பாடு பட்டவர்கள். பொன்னையா அவர்கள் இறந்ததும் அவர் நினைவாக *ஈழகேசரிப் பொன்னையா நினைவு வ்ெளியீட்டு மன்றம்’, ஒன்று நிறுவப் பட்டு அம்மன்றத்தினுரடாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் "மட்டக்களப்புத் தமிழகம் " "ஈழம் தந்த கேசரி’ என்ற இரு நூல்களும் ஈண்டு நினைவு கொள்ளத்தக்கவை.
மு. சபாரத்தினம், ஆ. முத்தையா, பொ. இராசரத்தினம் ஆகிய மூவரும் சன்மார்க்க சபையுடன் இணைந்து பிணைந்த முக்கிய உறுப்பினர்கள். இவர்கள் நூல் வெளியீட்டுக் கலையில் மிகத் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களது திறமை திருமகள் அழுத்தகத்தினூடாக வெளிப்படுத்தப்பட்டன. ஏ. ரி. பொ. அவர்களும். சன்மார்க்க சபைக்காக மலர்களும் நூல்களும் வெளியிட்டிருக்கிருர். இவ்வரிசை யிற் கணக. செந்திநாதனும் குறிப்பிடத்தக்கவர். எனவே சன்மார்க்க சபை பல நூல்களை வெளியிட்டதுமட்டுமன்றி நூல்வெளியீட்டுக்கலை சிறப்படையும் வகையிற் பலரை உருவாக்கியிருக்கின்றது என்பதும் விதந்துரைக்க வேண்டியதோர் அம்சமாகும்.

Page 12
சன்மார்க்க சபை வெளியீடுகள்:
பாடிநூல்கள்:
1-3. இலக்கிய மஞ்சரி 3ஆம், 4ஆம், 5ஆம் புத்தகங்கள். 4-8. சைவசமய போதினி 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம்
புத்தகங்கள்.
சமயநூல்கள்:
9. அப்பர் புகழ்மாலை 10. திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி 11. சிவபுராணம் 12. தோத்திரத்திரட்டு 13. பாராயணத் தோத்திரத்திரட்டு 14. கோளறு பதிகம் 15. திருமுருகாற்றுப்படை 16. தோத்திரங்கள் 17 . உமையம்மை புராணம் 18. குரும்பசிட்டி விநாயகர் பத்து 19. குரும்பசிட்டி அம்பாள் பதிகம் - அருட்கவி சி. விநாசித்தம்பி 20. நவக்கிரகத் தோத்திரமாலை 9 21. சைவ நற்சிந்தனைகள் 22. நாவலர் அறிவுரை
வாழ்க்கைவரலாற்று நூல்கள்:
23.
24。
25.
26.
திரு. நா. பொன்னையாவின் வாழ்க்கை வரலாறு
- கலைப்புலவர் க. நவரத்தினம் கலைமடந்தையின் தவப்புலவன்
- கனக. செந்திநாதன் நமச்சிவாய மலர்
கவின்கலைக்கோர் கலாகேசரி
- இரசிகமணி கனக. செந்திநாதன்

- 23 –
27. கலையுலகில் கால்நூற்ருண்டு
- ஏ. ரி. பொன்னுத்துரை 28. இரசிகமணி நினைவுமஞ்கரி 29. நிஜங்களின் தரிசனம்
கட்டுரை நூல்கள்:
30. மாவிட்டபுரத் திருத்தல வரலாறு
- மஹாராஜழரீசு. து. ஷண்முகநாதக்குருக்கள் 31. இந்திய விடுதலைப் போரில் இலங்கை மகன் பங்கு
- தியாகி கோ. இராஜகோபால் 32. பாடசாலை நாடகம்
- ஏ. ரி. பொன்னுத்துரை 33. தாளக் காவடி
-ஏ. ரி. பொன்னுத்துரை 34. குரும்பசிட்டியின் இலக்கியப் பாரம்பரியம்
- அ. சிவராசா, M. A.
35. கடுக்கனும் மோதிரமும்
- இரசிகமணி கனக. செந்திநாதன் 36. ஈழத்துக் குழந்தைப் பாடல்கள்
- இரசிகமணி கனக. செந்திநாதன்
கலை;
37. ஒவியக்கலை - கலாகேசரி ஆ. தம்பித்துரை
38. சிறுவர் சித்திரம் " se 教 隸
இலக்கியம்:
39. குறுநாவல் "மத்தாப்பு' 40. ஒரேஒரு தெய்வம் - M. K. S சிவகுமாரன் 41. சீசரின் தியாகம் - இரா. கனகரத்தினம் 42. அன்னபூரணி - கா. அ. செல்வரத்தினம்
கவிதை: W
43. பாலர் விருந்து - வ. இளையதம்பி (இதம்)
44. நவீன நரிவிருத்தம் - இரசிகமணி கனக. செந்திநாதன்

Page 13
- 24
நாடகம்:
45. பக்திவெள்ளம் (ஓரங்க நாடகம்)
- ஏ. ரி. பொன்னுத்துரை 46. கூப்பிய கரங்கள் (ஒரங்க நாடகம்)
- ஏ. ரி. பொன்னுத்துரை
மருத்துவம் !
47. உணவும் சுகாதாரமும்
- கா. வைத்தீஸ்வரன் (சுகாதாரக் கல்வி அதிகாரி, யாழ்ப்பாணம்)
48. இன்றைய சூழ்நிலையில் எமது பகுதி சுகாதாரப் பிரச்சினைகள்
- வைத்திய கலாநிதி
இ, தெய்வேந்திரன் 49. பற்சுகாதாரம் - பொ. காசிநாதன்
(பொது சுகாதார பரிசோதகர்)
50. குருதிச்சோகை - பொ. காசிநாதன்
DG) assiT:
51. சன்மார்க்க சபை 30ஆவது ஆண்டு நிறைவுமலர் (1965)
52. நாடகக் கலைஞர் ஏ. ரி. பொ. வெள்ளிவிழாமலர் (1974)
53. பொன்விழாக்கண்ட சன்மார்க்கசபை (1985)
(பொன்விழாச் சிறப்புரைகள்)


Page 14
திருமகள் அழுத்தகம், சுன்னகம்