கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையம் அமைப்பு விதிகள்
Page 1
Reg. NO: JIWW (
எல்தாபித
இணுவில் மா இணுவின்
பாதுநூலகம் //
நிலையம்
Page 2
இணுவில் பொதுநூலகம் சனசமூக நிஷையம்
அமைப்பு விதிகதி)
1. பெயர்:- இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையம் 2. இலச்சினை:-
பதிவு இலக்கம்:- J/VC/43/CC/695
3. ஸ்தானம்:-
இந்நிலையத்தின் ஸ்தானம் இணுவில் ரீபரராஜசேகரப்பிள்ளை யார் கோவிலின் கிழக்குப் புறமாக இணுவில் மானிப்பாய் வீதியின் தெற்கே நூலகத்தின் சொந்தக் காணியில் கட்டபபடட கட்டட மாகும். 3.1 இந்த (நிலையத்தின்) இணுவில் பொதுநூலகம் சனசமூகநிலை யம் என்னும் பெயரை இனிவரும் எக்காலத்திலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இதன் பொதுச்சபையினாலே, நிர்வாகசபை யினாலே அல்லது முழு அங்கத்தவர்களின் விருப்பத்தினாலோ மாற்றி அமைக்கவோ, முற்றாக இல்லாமல் செய்யவோ (Մ9լգամfr5l.
4. நோக்கம்:-
இந்நிலையத்தின் நோக்கம் சமுதாய தொண்டு புரிதல் சமயம், கல்வி, கலை கலாச்சார விளையாட்டு சுகாதார சேவைகளைப் புரிதல்.
5. 6Rf856:-
சனசமூக நிலையங்கள் அனுசரிக்கப்பட வேண்டியதாகிய விதிகளுக்கு இணங்க இந்நிலையத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு செய்யவேண்டிய பணிகள்.
Page 3
1) ஓர் வாசிகசாலை, நூல்நிலையமும், சிறுவர் பூங்காவும்
அமைத்தல். 2) நூல் நிலையத்தில் பொதுமக்களுக்கு இரவலாக கொடுத்து
உதவக்கூடியதாக அரிய நூல்கள் அடங்கிய பிரிவு இருக்கும். 3) உடல் வளர்ச்சிக்கும் சிந்தனை விருத்திக்கும் ஏற்ற உள்ளிட
வெளியிட விளையாட்டுகளில் ஈடுபடுதல். 4) கணனிப்பிரிவு நடத்துதல். 5) தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுதல். 6) கற்றலிற்கான இரவுபகல் சேவையினை வழங்குதல். 7) சிரமதான தொண்டாற்றுதல் 8) இரத்ததானப் பணிசெய்தல். 9) விழிப்புக்குழு நிறுவுதல் 10) இணுவில் கிராம முன்னேற்றத்திற்கு வேண்டிய பொது
அமைப்புகளிற்கு ஒத்தாசை புரிதல்.
9ே அரசியல் கட்சி பிரசார விடயங்களும் நிலைய முன்னேற்றத்திற்கு
ஒவ்வாத விடயங்களும் இந்நிலையத்தில் பேசுதல் தவிர்க்கப்படும்.
6. அங்கத்துவம்:-
இணுவிலில் வசிக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் நிலை யத்தில் அக்கறை உள்ளவர்களான நிர்வாகசபையினால் தெரிவு செய்யப்பட்டவர்களும் இந்நிலையத்தின் விதிகளுக்கு அமைந் தொழுக உடன்படுவராயின் அங்கத்தவராக சேர அருகதை உடையவராவார்.
மேற்கூறிய அருகதை உடையவர்களின் அங்கத்துவ விண்ணப்பங்கள் நிர்வாகசபையில் அங்கீகாரம் பெற்ற பின் விண்ணப்பித்தோர் அங்கத்தவர்களாகப் பதிவு செய்யப்படுவர் அங்கத்தவர் தொகை வரையறுக்கப்படமாட்டாது.
அங்கத்துவ்ப் பணமாக ரூ. 50.00 செலுத்த வேண்டும் (ஆயுள் அங்கத்தவர், சாதாரண அங்கத்தவர்) வயது - பொதுச்சபை உறுப்பினர் 16 வயது
02
1)
2)
3)
4)
5)
இந்நூலகத்தின் பெயரில் இயங்குகின்ற/இயங்க இருக்கின்ற கிளைகள் யாவும் இந்நிலையத்தின் பிரதான/தாய் நிர்வாகத்தின் கிளைகளாகவே கருதப்படும். இக்கிளைகள் பற்றிய விபரம் மற்றும் கிளைகளில் உள்ள உறுப்பி னர்கள் பற்றிய விபரங்கள் யாவும் தாய்/பிரதான நிர்வாகத்திற்கு அறிவிக்க வேண்டும். கிளைப்பிள்ளை அங்கத்தவர்கள் தாய்ச்சங்கத்தில் நிகழும் நிர்வாகசபைக்கூட்டங்களிலோ, அல்லது பொதுச்சபைக் கூட்டங் களிலோ பங்குபற்ற முடியும். ஆனால் நிர்வாகசபைத் தெரிவிலோ, அல்லது பிரேரணைக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்க
முடியாது. அதாவது ஒரு கிளை அங்கத்தவர் அதன் தாய்ச்சங்
கத்தில் இணைந்து (ஆலோசனைகள்) கொள்ளும் பட்சத்திலே தான் அவரது வாக்களிக்கும் உரிமை அங்கீகரிக்கப்படுகிறது.
பிரதானதாய் நிர்வாகத்தை கிளைகள் கட்டுப்படுத்த முடியாது. தேவை ஏற்படின் கிளைகள் தமது கருத்துக்களை தெரிவிக்கலாம். இக்கிளைகள் ஏதாவது கருத்துக்களை முன்வைத்தால் அக் கருத்துக்களை கட்டாயம் பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு பிரதான நிர்வாக சபைக்கு உண்டு என்னும் இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் பிரதான நிர்வாகத்திற்கு மட்டும் தான் உண்டு.
6) வெளிநாட்டுகிளையில் உள்ள ஒருவர் மீண்டும் தாய் நிர்வாகத்தில்
7)
இணைய விரும்பின் இணைந்து கொள்ளலாம். அங்கத்துவ விதிகளுக்கு அமைய செயற்பட வேண்டும். நிலைய அங்கத்தவர்கள் மாத்திரம் விளையாட்டுக்களில் பங்கு பற்றும் உரிமை உண்டு.
சந்தா: அங்கத்தவர்கள் கீழே குறிப்பிட்ட வண்ணம் சந்தா செலுத் தப்படவேண்டும்.
1)சாதாரண அங்கத்தவர்கள்:
இவர்கள் ஒவ்வொருவரும் சந்தா பணமாக மாதம் ஒன்றிற்கு 10/- குறையாமல் செலுத்த வேண்டும்.
Page 4
2) ஆயுட்கால அங்கத்தவர்கள்:
ஆயுட்கால அங்கத்தவராக சேர விரும்புபவர் 500/- குறையாத
தொகையை சந்தாவாக செலுத்துதல் வேண்டும்.
இவ்விரு வகையினரும் நிலையத்தின் விதிகளிற்கு அமைந்
தொழுக உடன்படுபவர்களாக கருதப்பவர்.
9ே குறிப்பு:- இந்நிலையத்திற்கு அன்பளிப்பாக/நன்கொடையாக
கொடுப்பவர்களது பெயர் விபரங்கள் அதற்குரிய பதிவேட்டில் பதியப்படவேண்டும்.
9. வாக்குரிமை:
மேற்கூறப்பட்ட சபையின் அங்கத்தவர்கள் இந்நிலையத்தின் பொதுக்கூட்டங்களுக்கு சமூகமளிப்பதற்கும், அதில் பங்கு கொள்ளவும் உரிமை உடையவராவார். ஆயின் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட சந்தாப்பணம் நிலுவையில் உள்ள அங்கத்தவர்கள், கூட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றவோ வாக்கு அளிக்கவோ உரிமையற்றவராவர். தொடர்ந்து 6 மாதங்களுக்கு சந்தா பணத் தை செலுத்தாதவர்கள் தமது அங்கத்துவத்தை இழந்தவரர் களாவர்.
10. போவடிகர்கள் (2):
1)
இந்நிலையத்தின் போஷகர்களாக இருவர் ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்
JL03660 (SLD.
ஆலோசகர்கள்: (6) பேர்
சபையின் உத்தியோகத்தர்கள்
18) விதிகளின் மாற்றம்
இக்கட்டடத்தை நிரந்தர வாடகைக்கு கொடுக்கவோ/விற்கவோ அல்லது/இந்த இடத்தில் இருந்து மாற்றவோ எவருக்கும் உரிமை
04]
இல்லை.
2)
உற்சவகாலங்களில் குறிப்பிட்ட பகுதியை தண்ணிர்ப்பந்தல் தேவைகளுக்கு (றி பரராஜசேகரப்பிள்ளையார் தண்ணிர்பந்தல்) பயன்படுத்த உரிமை உண்டு.
9. சபையின் நிர்வாக உத்தியோகத்தர்கள்:-
1)
2)
10.
11.
இச்சபைக்கு பின்வரும் நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப் படுவர்:
அ) ஒரு தலைவர்
ஆ) ஒரு உபதலைவர்
இ) ஒரு செயலாளர்
ஈ) ஒரு உபசெயலாளர்
உ) ஒரு பொருளாளர்
ஊ) ஒரு நிலையப் பொறுப்பாளர் எ) ஒரு விளையாட்டுப் பொறுப்பாளர் ஏ) பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தர்
ஐ) பத்திராதிபர் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூவரும் ஆயுட்கால அங்கத்தவராக இருத்தல் வேண்டும். இவ்வுத்தியோகத்தர்கள் யாபேரும் ஒவ்வோர் ஆண்டுத் தொடக்கத்திலும் நடைபெறும் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படுவார்கள். (இவர்கள் மூவரும் தெரிவு செய்யப்பட்ட பின்னும் (5 மாததிற்குள்) ஆயுட்கால அங்கத்தவராகலாம்) இச்சபையின் கருமங்கள் யாவும் மேலே சொல்லப்பட்ட உத்தியோ கத்தர்களையும், பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அங்கத் தவர்களையும் கொண்ட ஒர் நிர்வாக சபையினால் நிர்வகிக் கப்படும்.
கணக்குப் பரிசோதகர்:-
இந்நிலையத்தின் வரவு செலவுக்கணக்குகளைப் பரிசோதிப்பதற்கு ஒவ்வோர் ஆண்டுத் தொடக்கத்திலும் நடைபெறும் பொதுக்
Page 5
12.
13.
கூட்டத்தில் ஒரு கணக்குப் பரிசோதகர் தெரிவு செய்யப்படுவர். இவர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரவு செலவுக் கணக்குகளைப் பரிசோதித்து யாதும் பிழைகள் காணப்படின் அதுபற்றி தமது அறிக்கையைத் தலைவர் மூலம் நிர்வாக சபைக்கு எழுத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
நிதி விபரம்:- சபைக்குச் சொந்தமான நிதி முழுவதற்கும் பொருளாளரே பொறுப்பாளராவர். ரூபா.2000/-க்கு மேற்பட்ட பணம் யாவும் நிலையத்தினது பேரில் வங்கியில் இடப்பட்டிருத்தல் வேண்டும். அவ்விதம் இடப்பட்ட பணம் திருப்பி எடுக்க வேண்டியிருப்பின் நிர்வாக சபையின் அங்கீகாரம் பெற்று தலைவரும் பொருளாளரும் அல்லது செயலாளரும் பொருளாளரும் கையெழுத்திட்டு எடுத்தல் வேண்டும்.
குறிப்பு:- விசேட கொண்டாட்டங்களுக்காகச் சேர்க்கப்படும் பணத் திற்கு இவ்விதி அமையாது. ஆயினும் கொண்டாட் டங்களுக்காகச் சேர்க்கப்படும் பணம் நிர்வாக சபையின் அனுமதியுடன் செலவு செய்தல் வேண்டும்.
தொழில் நிலையாளரின் கடமைகள்:-
1)தலைவர்-1) பொதுக் கூட்டங்களிலும் விசேட பொதுக் கூட்டங்
களிலும் நிர்வாக சபைக் கூட்டங்களிலும் தலைமை வகிப்பதும், பொதுவாகச் சபையின் காரியங்களை மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்துவதும் மற்றும் நிர்வாக சபை அங்கத்தவர்களுக்கு அவர்கள் கடமைகளைச் செய்வதற்கு உதவி புரிவதும் தலைவரின் கடமைகளாகும். 2) கூட்டத்தின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் எத்த கையோர் மீதும் உடன் நடவடிக்கை எடுக்கும் உரிமை தலைவருக்கு உண்டு
2) உபதலைவர்: தலைவர் கூட்டங்களுக்கு வருகைதர முடியாத
அல்லது பணியாற்ற முடியாத காலங்களில் அவரின் கடமைகளைப் புரிதல்.
3) செயலாளர்;1)அங்கத்தவர்களின் பெயர்களும் விலாசங்களும்
பதிந்துள்ள ஓர் பதிவேட்டை வைத்திருத்தல். 2) நிலையக் கூட்டங்களை கிரமம் தவறாத முறைப்படி
முன் அறிவித்தல் கொடுத்து கூட்டுதல். 3) ஒவ்வொரு கூட்ட நிகழ்ச்சிகளையும் நிகழ்ச்சிக்
குறிப்பு புத்தகத்தில பதிந்து வைத்திருத்தல். 4) நிலையத்திற்குச் சொந்தமான ஆதனங்கள், தளபா டங்கள், பொருட்கள், பத்திரங்கள் முதலியவற்றின் விபரங்கள் அடங்கிய இடாப்பு ஒன்றினைப் பேணு தல். அவ்வாதனங்கள், பொருட்கள் முதலியன வற்றிக்கு பொறுப்பாக இருத்தல். 5) நிர்வாக சபையின் தீர்மானங்கள் சம்பந்தமாக நிலை யத்தின் சார்பாக வேண்டியவாகளுட6ர் கடிதப்போக்கு வரத்துச் செய்தல், அதற்குரிய கடிதக் கோவையைப் பேணுதல். 6) ஒவ்வொரு நிர்வாக சபைக் கூட்டத்திலும் சென்ற நிர்வாக சபைக் கூட்டத்தின் நிகழ்ச்சி அறிக்கையைச் சமர்ப்பிப்பதுடன் விசேட நிர்வாகசபைக் கூட்டம் நடைபெற்றால் அதன் அறிக்கையையும் சமர்ப் பித்தல் வேண்டும். 7) வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் வருடாந்த அறிக்கையை நிர்வாக சபையின் அங்கீகாரத்துடன் சமர்ப்பித்தல். 8) நிலையம் சம்பந்தமாகவும் வாசிகசாலை சம்பந்த மாகவும், நூல்நிலையம் சம்பந்தமாகவும் நிலையப் பொறுப்பாளர் ஆற்றும் கருமங்களை மேற்பார்வை யிட்டு, வாசிகசாலை செவ்வனே இயங்க அவருக்கு வேண்டிய ஒத்தாசை புரிதல். 9) நிர்வாக சபையின் தீர்மானங்களின்படி வேண்டிய வேளைகளில் நிலையத்தின் பிரதிநிதியாகக் கடமையாற்றல்.
Page 6
10) நிர்வாக சபையினால் அங்கீகரிக்கப்பட்ட செலவுக
ளுக்கு வேண்டிய பணத்தை பொருளாளரிடமிருந்து பெற்றுச் செலவுசெய்து பற்றுச்சீட்டுகளுடன் செலவு விபரங்களை பொருளாளர் மூலம் அடுத்த நிர்வாக சபைக் கூட்டத்தில் சமர்ப்பித்தல். விசேட கொண் டாட்டச் செலவுகளுக்கும் இவ்விதி அமையும்.
11) அரசாங்க நன்கொடைப் பணத்தை உரிய காலத்
தில் பெறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தல்.
12) பொதுவாக நிலையத்தின் வேலைத்திட்டங்களை
வகுத்து நிர்வாகசபையின் அங்கீகாரத்துடன் நடை முறைப்படுத்தல்.
4)உபசெயலாளர்- பொதுவாக செயலாளருக்கு மேற்கூறிய கடமை
களை செய்வதற்கு உதவி புரிதல். செயலாளர் ஏதாவது வசதியீனத்தால் தமது கடமைகளைச் செய்யாதுவிடின், அவரது கடமைகளைச் செய்தல்.
5) பொருளாளர்:
1)
2)
3)
4)
5)
6)
7)
அங்கத்தவர்களிடமிருந்து சந்தாப் பணம் அறவிடல். சபையின் வரவு செலவுக் கணக்கைப் பேணுதல்
சந்தாப் பண பதிவேடு ஒன்றினை வைத்திருத்தல் நிலையத்திற்காகச் சேகரிக்கும் பணம் யாவற்றிற் கும் பற்றுச்சீட்டுகள் வழங்குதல். நிலையத்தின் செலவுகளுக்குரிய பற்றுச்சீட்டுகளை பெற்று ஒழுங்காக வைத்திருத்தல். ஒவ்வொரு நிர்வாக சபைக் கூட்டத்திலும் சபையின் வரவு செலவுக் கணக்குகளையும் பற்றுச்சீட்டு களையும் சமர்ப்பித்தல்.
நிலையத்திற்குச் சேரும் ரூபா 2000/- க்கு மேற்பட்ட பணம் யாவற்றையுல் சேமிப்பு வங்கியில் நிலை யத்தின் பெயரில் செலுத்தி சேமிப்புப் புத்தகத்தை தமது பொறுப்பில் வைத்திருத்தல். விசேட கொண் டாட்டங்களுக்கு சேகரிக்கப்படும் பணம் இவ்விதிக்கு
8)
9)
10)
11)
12)
கட்டுப்படாது. (இது சம்பந்தமாக வசூல் பத்திரத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூவரி னது கையொப்பங்களின்றி பணம் வசூலிக்கக்கூடாது).
தினசரி கணக்குப் புத்தகத்தில் பதிந்து வைத்திருக்கும் அரசாங்க நன்கொடைகளையும், பொதுமக்களின் நன்கொடைகளையும் கணக்குப் புத்தகத்தில் பிறிதொரு பக்கத்திலும், சந்தாக்களை சந்தாக்காரர்களின் பெயர்களையும் கொண்ட தனிப் புத்தகம் ஒன்றிலும் பதிந்து வைத்திருத்தல் வேண்டும்.
நிர்வாக சபையினால் அங்கீகரிக்கப்பட்ட செலவுக ளுக்கு வேண்டிய பணத்தைச் செயலாளரின் கேள்விப் படி கொடுத்து முறையாகக் கணக்குப் பேணுதல். மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்குப் பரிசோத கரால் பரிசோதிக்கப்பட்டு கைச்சாத்திடப்பட்ட வரவு செலவுக் கணக்கு விபரங்களை அடுத்து வரும் நிர்வாகசபைக் கூட்டத்தில் சமர்ப்பித்தல். வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் கணக்குப் பரிசோத கரால் பரிசோதிக்கப்பட்டு கைச்சாத்திடப்பட்ட ஆண்டு வரவு செலவுகளைப் பற்றிய அறிக்கையை நிர்வாகசபையின் அங்கீகாரத்துடன் சமர்ப்பித்தல். இவர்களுடன் இருக்கவேண்டிய ஆவணங்கள் பற்றுசீட்டு புத்தகம், வங்கிப் புத்தகம்.
6) நூலகப் பொறுப்பாளர்:
அவர் பொதுவாக நூலக பொறுப்பாளராகவும், வாசிகசாலைப் பொறுப்பாளராகவும் கடமையாற்றுவார்.அவரது கடமைக
6T66.
1)
2)
தினந்தோறும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணிவரையும் நிலையத்தைத் திறந்து வைத்து வாசகர்களுக்கு வசதியளித்தல் வேண்டும்.
வாசிகசாலையிலுள்ள நிலையத்தின் சொத்துக் களை அதாவது வானொலிப்பெட்டி, சஞ்சிகைகள்,
Page 7
பத்திரிகைகள், நூல் நிலையத்தில் இருக்கும் புத்தகங்கள் முதலியவற்றைப் பாதுகாத்தல்.
3) வாசிகசாலையில் வாசகர்களுக்கு அசெளகரியம் உண்டு பண்ணாதபடி வானொலிப்பெட்டி (தொலைக் காட்சி) இயக்குதல்.
4) பொதுவாக வாசிகசாலையில் உள்ள நூல் நிலையம் வளர்ச்சியடைவதற்கான பணியை செயலாளரின் மேற்பார்வையில் புரிதல்.
5) நிலையத்திலுள்ள பொருட்களின் விபரங்களைக்
கொண்ட பதிவேடொன்றினைப் பேணல்,
6) நூல் நிலையத்திலிருக்கும புத்தகங்களின் பட்டியல் ஒன்று வைத்திருத்தல் வேண்டும். நிலைய அங்கத்த வர்களுக்கு அவர்கள் விரும்பும் நூல்களை விநியோ கித்து குறித்த தவணைக்குள் (இருகிழமை) திரும்பப் பெற்று ஒழுங்காக வைத்திருத்தல் வேண்டும்.
7) விளையாட்டுத்துறைத் தலைவர்:
இந் நிலையச் செயலாளர் மேற்பார்வையில் கடமையாற் றுவார். நிர்வாக சபையின் அதிகாரத்துடன் விளையாட்டுக் கரியங்களுக்குரிய உபகரணங்களுக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்படும் செலவுகளுக்கும் செயலாளர் மூலம் பொருளாளரிடமிருந்து தேவையான பணத்தைப் பெற்று விளையாட்டுப் பகுதி தலைவருக்கு (குழுத் தலைவருக்கு) அளிப்பார். அத்துடன் விளையாட்டுப் பகுதிக்குரிய சாதனங் களுக்கு பொறுப்பாக இருப்பார். சங்க அங்கத்தவர்கள் அல்லாதோர் விளையாட்டுகளில் பங்குபற்றவியலாது.
8) பத்திராதிபர்
பத்திரிகையாளரோடு சபையின் அமைதியுடன் தொடர்பு கொள்ளல், விளையாட்டுச் செய்திகளை விளம்பரப்படுத்தல்.
خمير 10) நிர்வாக சபை உறுப்பினரின் கடமைகள்
1) நிலையத்தின் செலவுகளை ஆராய்ந்து அங்கீகரித்தல்.
2) சேமிப்பில் இடப்பட்டிருக்கும் பணத்திலிருந்து தேவைப்படும்
பணத்தை எடுப்பதற்கு அங்கீகாரம் வழங்கல்.
3) மூன்று மாத்திற்கொருமுறை கணக்குப் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்ட வரவு செலவுக் கணக்குகளை ஆராய்ந் து அங்கீகரித்தல்.
4) தலைவர் அல்லாத தொழில் நிலையாளர்களில் எவராவது விலகினால் அதனால் ஏற்படும் வெற்றிடத்திற்கு வேறொரு வரைத் தெரிவுசெய்தல்.
குறிப்பு:- தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களுக்கு தகுந்த காரணம் காட்டாது சமூகமளிக்கத் தவறிய அங்கத்த வர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகிவிட்வர்களாகக் கருதப்படுவர். ஆயினும் அவர்களுக்கு செயலாளர் எழுத்து மூலம் அவர்கள் அடுத்து மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்கத் தவறியதைச் சுட்டிக்காட்டி அதனால் அவர்கள் விலகிவிட்டதாகக் கருதப்பட்டு அவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்ப டுவதனை தெரியப்படுத்துதல் வேண்டும்.
5) வேண்டிய வேளைகளில் உப சபைகளை (குழுக்களை)
நியமித்து நிலையத்தின் கருமங்களை ஆற்றுதல்.
6) நிலையத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு இவ்விதிகளுக்கிணங்க உபவிதிகளை ஆக்குதல், மாற்றுதல்.
7) செயலாளரினதும், பொருளாளரினதும் ஆண்டறிக்
கைகளை பரிசீலணை செய்து அங்கீகரித்தல்.
8) வருடாந்தப் பொதுக்கூட்டத்திற்கு வேண்டிய ஒழுங்குக
ளைச் செய்தல்.
9) பொதுவாக நிலையத்தின் விதிகளுக்கிணங்க நிலையத்தின் நிர்வாகம் செவ்வனே நடைபெறுவதற்குத் திட்டங்களை வகுத்து நடாத்துதல்.
11. கூட்டங்கள்.
1) நிர்வாக சபைக் கூட்டம்
2) விசேட நிர்வாக சபைக் கூட்டம்
|11
Page 8
3) வருடாந்தப் பொதுக் கூட்டம்
4) விசேட பொதுக் கூட்டம்
இவை கீழ்க்காணும் முறையில் நடைபெறும்.
1) நிர்வாக சபைக் கூட்டம்
மாதமொருமுறையாயினும் அல்லது அதற்குக் கூடுதலாக வேனும் ஐந்து (5) நாள் முன்னறிவித்தலோடு நிர்வாகசபை கூட்டப்படும். இக்கூட்டத்தில் பொருளாளரின் கடந்த மாத வரவு செலவுக்கணக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
2) விசேட நிர்வாக சபைக் கூட்டம்
தலைவர் அல்லது செயலாளர் அவசியமெனக் கருதப்படும் போது அல்லது ஆறு (6) நிர்வாக சபை அங்கத்தவர்கள் எழுத்து மூலம் கேட்கும்போது விசேட நிர்வாக சபைக் கூட்டம் குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னறிவித்தலோடு கூட்டலாம்.
3) வருடாந்தப் பொதுக் கூட்டம்
சபையின் வருடாந்தப் பொருக்கூட்டம் ஒவ்வொரு வருட மும் மார்ச் மாதத்தில் நிர்வாக சபையினலால் தீர்மானிக் கப்பட்ட தினத்தில் நடைபெறுதல் வேண்டும். அக்கூட்டத் தில் நிர்வாக சபையின் முடிந்த வருட அறிக்கையும், பரிசோதிக்கப்பட்ட வரவு செலவுக் கணக்குகளும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இக்கூட்டத்திற்கு சமூகமளிக் கும் அங்கத்தவர்களிலிருந்து நடப்பு வருட நிர்வாக சபை அங்கத்தவர்கள் (9ம் விதியின்படி) தெரிவுசெய்யப்படுவர்.
4) விசேட பொதுக்கூட்டம்
நிர்வாகசபை தானாகவோ அல்லது பதினைந்து (15) பேருக்குக் குறையாத அங்கத்தவர்கள் செயலாளருக்கு எழுத்து மூலம் கொடுத்த விண்ணப்பத்தின் பேரிலோ ஒரு
விசேட் பொதுக் கூட்டத்தைக் கூட்டலாம். இக் கூட்டத்தில் கூட்ட விளம்பரத்தில் குறிக்கப்பட்ட விடயங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும்.
12
12. கூட்ட அறிவித்தல்
1) வருடாந்தப் பொதுக்கூட்டங்களுக்கு 14 நாள் முன் அறிவித்தலுடன் விசேட பொதுக்கூட்டங்களுக்கு ஐந்து (5) நாள் முன்னறிவித்தலோடும் கூட்டப்படல் வேண்டும். 2) நிர்வாக சபைக் கூட்டங்கள் ஐந்து (5) நாள் முன்னறிவித்
தலோடு கூட்டப்படல் வேண்டும்.
13. முன்னிலைத் தொகை (கோறம்)
இந்நிலையத்தின் கூட்டங்கள் நடைபெறுவதற்கு குறைந்த பட்சம் சமூகமளிக்கவேண்டிய அங்கத்தவர் தொகை பின்வருமாறு இருத்தல் வேண்டும்.
- கோறம் -
1) நிர்வாக சபைக் கூட்டம் . 1/3 க்கு மேற்பட்ட
அங்கத்தவர்கள்.
2) விசேட நிர்வாக சபைக் கூட்டம் . 1/3 க்கு மேற்பட்ட
அங்கத்தவர்கள்.
3) வருடாந்தப் பொதுக் கூட்டம் . 1/4 க்கு மேற்பட்ட
அங்கத்தவர்கள்.
4) விசேட பொதுக் கூட்டம் . 1/4க்கு மேற்பட்ட
அங்கத்தவர்கள்.
மேற்குறித்த தொகை அங்கத்தினர் சமூகமளிக்கும் கூட்டங்கள்
முறையான கூட்டங்கள் எனக்கருதப்படும்.
14. வாக்குத்தொகை
வருடாந்தப் பொதுக் கூட்டத்திலும் விசேட பொதுக் கூட்டத்திலும் கொண்டுவரப்படும் பிரேரணைகள் நிறைவேறுவதற்கு அக்கூட்டத்தில் சமூகமளித்திருக்கும் வாக்குரிமையுள்ள அங்கத்தவரில் மூன்றில் இரண்டு (2/3) பங்கினர் வாக்களித்தல் வேண்டும் (7ம் விதியைப் பார்க்க)
13
Page 9
16.
17.
15. அங்கத்தவர்களின் உரிமைகள்
1) நிலைய அங்கத்தவர்கள் எவரேனும் செயலாளரின் பதிவேடுகளையோ பொருளாளரின் பதிவேடுகளையோ பார்வையிட விரும்பின் செயலாளருக்கு எழுத்தில் அறிவித்தல் கொடுக்க வேண்டும். அறிவித்தல் கொடுத்து ஒரு வாரத்தின்பின் செயலாளரால் அறிவிக்கப்படும் நாளிலும் நேரத்திலும் நிலைய மண்டபத்தில் தாம் குறிப்பிட்ட புத்தகங்களைப் பார்வையிட உரிமையுடையவ ராவர்.
2) 7ம் விதிப்படி வாக்குரிமையற்ற அங்கத்தவர்கள் மேற்கூறிய
உரிமையையும் இழப்பர்.
3) வாக்குரிமை அற்ற அங்கத்தவர்கள் எக்கூட்டத்திலும் எந்தவொரு பிரேரணையை கொண்டுவரவோ அனும திக்கவோ உரிமையற்றவராவர்.
ஒரு அங்கத்தவர் நிர்வாகசபை முன் கொண்டுவரும் பிரேரணையில் சனசமூக நிலையத்தின் முன்னேற்றத்திற்கு பங்கம் விளைவிக்குமெனக் கருதப்பட்டால் அப்பிரேரணை பொதுச்சபையில் அங்கீகாரத்துக்கு விடப்படும்.
பிரேரணைகள்
1) நிர்வாக சபைக்குப் பிரேரணைகள் சமர்ப்பிக்க விரும்பும் அங்கத்தவர்கள் கூட்டம் கூட்டுவதற்கு மூன்று (3) நாட்க ளுக்கு முன் எழுத்து மூலம் பிரேரணைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்வருவனவற்றிற்கு முன் அறிவித்தல் வேண்டியதில்லை 1) மூலப்பிரேரணையில் திருத்தம் கோரும் பிரேரணைகள். 2) பிரேரித்த பிரேரணையை வாபஸ் பெறல் 3) நன்றி, வாழ்த்து, அனுதாபம் தெரிவித்தல்.
14
18) விதிகள் மாற்றம்.
1) நிர்வாக சபை பிரமாணங்களை தேவைக்கேற்றவாறு ஆக்கலாம். ஆனால் இப்பிரமாணங்கள் பொதுக் கூட்டத் தில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இப்பொதுக் கூட்டத்தில் இப்பிரமாணங்கள் அங்கீகரிக்கப் பட்டபின் செயற்படுத்தப்படும் அங்கீகாரம் பெறாவிடின் இப்பிரமாணங்கள் செல்லுபடியாகாதவையாகும்.
2) இப் பிரமாணங்களில் சொல்லப்படாத எந்தக்காரியங்க ளுக்கும் நிர்வாக சபையின் தீர்மானமே முடிந்த முடிபாகும். ஆனால் அத்தீர்மானங்கள் அடுத்து வரும் பொதுக்கூட்டத்தில் தெரிவிக்கப்படல் வேண்டும்.
3) இக்கட்டடத்தை நிரந்தர வாடகைக்கு கொடுக்கவோ/விற்க வோ அல்லது இந்த இடத்தில் இருந்து மாற்றவோ எவருக்கும் உரிமை இல்லை.
4) பூரீ பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் உற்சவகாலங் களில் குறிப்பிட்ட பகுதியை தண்ணிர்ப்பந்தல் தேவைக ளுக்கு பயன்படுத்த அனுமதித்தல் வேண்டும். (யூரீ பரராஜசேகரப்பிள்ளையார் தண்ணிர்ப்பந்தல்)
5) இந்த யாப்பை எக்காலத்திலும் நிர்வாகசபையோ அல்லது பொதுச்சபையோ அல்லது முழு அங்கத்தவர்களிலாலோ மாற்றி அமைக்க முடியாது ஆனால் புதிய ஆக்கபூர்வமான பதிவுகளை 2/3 பெரும்பான்மையோடு இணைத்துக் கொள்ளலாம்.
Page 10
Page 11
ஹரிஹனன் பிறிண்டேர் 44, காங்கேசன்துறை சாலை, ய
ாம் (தனியார்) நிறுவனம், ாழ்ப்பாணம். தொ.லே - 02-2)