கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இரட்டை மணிமாலை

Page 1
சிவ
r. கொழும்பு கெ அருள்மிகு வர
 

色_
LDub
ாட்டாஞ்சேனை தராஜ விநாயகர்
மணிமாலை
அப்புத்துரை

Page 2

D.
PohjLDub
கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு வரதராஜ விநாயகர்
இரட்டை மணிமாலை
பணன்டிதர் சி. அப்புத்துரை

Page 3
SLDfrüILIsoorLib
பொன்னைப் பெற்றுப் புனிதநிறை புகழார் கல்வி பொருந்தச்செய்(த) எந்தன் தணையாய் எனக்களித்த இனியள் அன்னை தில்லைமுத்து அன்புத் தந்தை சுப்பையா அவர்தம் நினைவாய் ஆனைமுகத் திண்பந் தருமிறை திருவடியில் எழில்பெறச் சூட்டி இறைஞ்சுகின்றேன்.
භික්‍ෂූණීtfluff.

நுழைவாயில்
நேரிசை வெண்பா
கொட்டாஞ்சே னைவரதக் குஞ்சரன்மே லண்புமலர் கட்டியொரு பாமாலை காட்டினார் - திட்டமுடன் யாப்பைக் கடைப்பிடித்தார் மரபை வழிமொழிந்தார் ஏற்பான் இறைவன் இதை,
கட்டளைக் கலித்தறை.
இதயம் இறைவன் இருக்கும் இடமென் றறிந்துநிதம் அதனைத் தடைத்தப் புதிதாக்கிக் கொள்ளுமோ ராற்றலினை உதவும் படியவ் விறைவனை யேபணிந் தள்ளுருகித் ததிசெய் திடுமிம் மணிமாலை யால்தன்பம் தோற்றிடுமே.
நேரிசை வெண்பா
தோற்காத சீர்வென்றி தாயோர்தம் பேரன்பு நாற்றிசையோர் போற்று நலனெல்லாம் - வேற்கரத்தோன் அண்ணன் அருள்வான்சி அப்புத்து ரையார்க்கென்(று) எண்ணுகிறேன் காக்க இறை.
கலாநிதி நா. சுப்பிரமணியன்.
தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர், யாழ், பல்கலைக்கழகம். uTypůULJITGooTLb.
1997.06.04
ர்Jல்
温警瓷

Page 4
4.
9.
சிவமயம் மகா வித்தவான் சி. கணேசையரின்
மாணவர்
இலக்கண வித்தகர், பண்டிதர் இ. நவசிவாய தேசிகர்
அவர்கள் வழங்கிய
சிறப்புப்பாயிரம்.
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இந்துமா ஆழியின் முத்தென் றியாவரும் ஏத்திலங் காதுவீபத் தேற்றமார் தலைநகர் கொழும்புகொட்டாஞ்சேனை
எனும்பதியி லாலயங்கொள் தந்திமுக வரதரா சப்பெயர் விநாயகன்
தன்மீது மரபுபேணித் தந்தனன் இரட்டைமணி மாலையொன் றியாரெனில்
தண்டமிழ் என்னிடத்தம் முந்தைநெறி கற்றபண் டிதன்பள்ளி அதிபனாய்
முன்னைநாட் சேவைசெய்த மொழிபுகழ் எய்தியின் றிளைப்பாறி நந்தமிழ்
மொழிக்கும் மதத்தினிற்கும் சிந்தைமகிழ் வொடுதொண்டு செய்பவன் தக்கவர்ச்
சேர்ந்தொழுகு கின்றசீலன் செல்வமயி லங்கடடல் அப்புத் தரையெனச்
கெப்புநா மத்தினானே.
இநமசிவாய தேசிகர், தென்மயிலை, 09.04.I.997.

5
கொழும்பு கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகர் ஆலய அறங்காவலர் திரு. பொ. பாலசுந்தரம் அவர்கள் வழங்கிய
வாழ்த்துரை
வழிபடுமவர் இடர்களைபவன் கணபதி. தன்னை அடைந்தார் தயர் தீர்ப்பதற்கெனக் கொழும்பு மாநகரின்கண் கொட்டாஞ்சேனைப் பதியிலே எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் வரதராஜ விநாயகப் பெருமான். வேண்டுநர் வேண்டிய வரத்தை வேண்டிய வாறே ஈபவன் என்பதால் வரதராஜன் எனப் பெருமான் நாமம் அமைந்துள்ளது. அவனைப் போற்றிப் பாடி வழிபடும் அடியவர் உடற்பிணியும், மனக்குறையும் நீங்கி நலம் பெறுதல் அன்றாட நிகழ்வு.
வரதராஜவிநாயகருக்குப்பாவால் ஆரம் சூட்ட எண்ணினார் ஒருபக்தர். அவர் தான் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள். இவர் அதிபராக இருந்த நாட்டுக்குச் சேவை புரியப் பலரை உருவாக்கித் தந்தள்ளார். தமிழ்ப்புலமை நிரம்பியவர். அடக்கமே இவரின் அறிவை, புலமையைக் காட்டி நிற்கிறது. இவர் இலக்கண வித்தகர், பண்டிதர் இ. நமசிவாயதேசிகரின் மாணவர்.
கடந்த சில வருடங்களாக வரதராஜ விநாயகரைத் தினமும் வழிபாடு செய்த வருகின்றார். தாம் வழிபடும் மூர்த்திக்குச் சூட்டுவதற் கெனத் திருவிரட்டை மணிமாலை யாத்தள்ளார். இது கட்டளைக் கலித்துறை, வெண்பா ஆகியவற்றால் ஆனத.
விநாயகப் பெருமானின் திரு விளையாடல்கள், அற்புதச்செயல்கள், அடியவர்க்காக அவர் எழுந்தருளிவந்தருளிய அருட்திறங்கள் இந்நூலிற் செறிந்திருக்கின்றன. இந்நூல் அடியவர்கட்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலே அச்சில் வெளிவருகிறது. இந்நூலை யாவரும் பாராயணம் பண்ணிப் பயனடைய வேண்டும். பண்டிதர் ஐயா அவர்களின் பணி மேலும் சிறப்புற வேண்டி வரதராஜ விநாயகர் திருவடியை வணங்கி வாழ்த்தக் கூறுகிறேன்.
பொ. பாலசுந்தரம்.

Page 5
9 சிவமயம்
முகவுரை
ரேசியல் நிலைமை காரணமான இடப்பெயர்வு வரதராஜ விநாயகனை அணைந்து வாழ வைத்தத. அங்கு நிலவிய தொரு பிணைப்பு - ஆத்மதிருப்தி ~ என்பவற்றை மூலமாகக் கொண்டு உருவாயத இந்த இரட்டைமணிமாலை. எம்பெருமானை வழிபடும் அடியவர்கள் இத்திருப்பாடல்களையும் ஏற்றுப் போற்றிப் பயனடைவார்களாக.
இதற்கொரு சிறப்புப்பாயிரம் அளித்த என் வணக்கத்திற்குரிய ஆசிரியர் இலக்கணவித்தகர் இ.நமசிவாயக தேசிகர் அவர்களுக்கும் நுழைவாயிலில் என வழிப்படுத்திய பேராசிரியர்நா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், வாழ்த்தரை வழங்கிய ஆலய அறங்காவலர் திரு. பொ. பாலசுந்தரம் அவர்களுக்கும் அழகுற அச்சிட்டுதவிய செவ்வந்தி நிறுவனத்திற்கும் எம் நன்றிகள் உரியன.
சி. அப்புத்துரை மயிலங்கடல், இளவாலை. 1997 - 09 -05

9.
சிவமயம். கொழும்பு - கொட்டாஞ்சேனை அருள்மிகு வரதராஜ விநாயகர்
இரட்டை மணி மாலை
காப்பு கட்டளைக் கலித்துறை.
பொன்னார்ந் திலங்குகொட் டாஞ்சேனைப் பூம்பதிக்
கோயில்கொளும் மின்னார் வரதரா சைங்கரன் பூங்கழல் மீதிலுயர் மண்ணு மிரட்டை மணிமாலை சூட்டி மனங்குளிர முன்னித் ததிக்க முனைந்தனன் மூத்தவ முன்னிற்கவே.
நூல் * நேரிசைவெண்பா.
1. கோதில்கொட் டாஞ்சேனைக் கோவே குளிர்நிலவே
ஆதி வரதரா சைங்கரனே - பூதலத்தோர் போற்று மிரட்டைமணிப் பொன்மாலை சூட்டுதற்காம் ஆற்ற லளித்தே யருள்.
கட்டளைக் கலித்தறை
2. அருள்வாய் வரதரா சைங்கர நின்கழற் காட்படுத்தி
மருள்வா யழுந்தி மனத்தத மாசா(க) மறந்துணையான் இருள்வாய்க் கிடந்தே னிருவினைத் துன்பத் திடரகலக் குருவாய் வருவாய் குறைதீர்த் தருள்வாய் குலக்களிறே.

Page 6
நேரிசை வெண்பா
களிபெறுமா றவ்வைதனைக் காதலித்தேற் றந்நாள் ஒளிதிகழ்கை லாயத்தி னுய்த்தாய் ~ அளியேனென் வந்திக்கா நெஞ்சை வரதரா சைங்கரனே சிந்திக்க வைப்பாய் தெளிந்தது.
கட்டளைக்கலித்துறை.
தெளிந்தனஞ் செய்ய திருவடி தேராச் சிறுமையினை பளிங்கெனக் கண்டோம் பரமன் திருத்தேர் பயிலுமச்சு முளிந்திட முப்புரம் முற்றிலும் தீவெந்த மூழ்கையிலே அளிந்திடு மண்பினோ டாள்வாய் வரதரா சைங்கரனே.
நேரிசைவெண்பா
ஐங்கரனே ஆனைமுகத் தைய அரண்மகனே பிங்கலையாள் பேறே பிரணவமே ~ பொங்கிநலி வல்வினைகள் வாட வரதரா சைங்கரநல்(கு) எல்லையில்பே ரின்ப புரி
கட்டளைக்கலித்தறை
புரிந்துணர் வில்லாப் புலையனேன் தன்னைப் புறத்திலிடா திரிந்த திருவினை யின்புகா ணென்றே எழிற்கையினாற் பரிந்தெடுத் தண்கழல் பற்றிப் படர்ந்திடப் பண்ணிடுவாய் கரிந்த கயமுகற் காய்ந்த விநாயக காத்தருளே.
நேரிசைவெண்பா.
காத்தனைநீ ஞாலம் கடமுனிதன் குண்டிகைநீர் நீத்தமிகு காவிரியாய் நீண்டிடவே ~ மூத்தவனே வாழ்வளிக்க வேண்டும் வரதரா சைங்கரவென் சூழ்வினைக ளெல்லாந் தரந்தது.

I2.
கட்டளைக்கலித்தறை.
8. தரந்தேன் வரதரா சைங்கர நின்பதத் தாநிழலை
இரந்தேன் இருவினை ஏகிட ஈடில்பே ரின்புணர்வு
பரந்து பரவிப் பணிந்தநின் றேனைப் பரிதவித்திங் கிரங்கு நிலைதவிர்த் தண்பரை முந்தற வேற்றருளே
நேரிசைவெண்பா
9. முந்து மடியருக்கு முற்படுத்தல் செய்குவையே
எந்தை யிணையடியே என்னடைவு ~ சிந்தைநிறை மன்ன வரதரா சைங்கரநின் மைந்தனென தின்னல்தீர்த் தேற்பாய் இனி.
கட்டளைக்கலித்துறை.
10. இனிக்கண மேனு மியையா தனைப்பிரிந் திங்கிருக்கை
மனித்தப் பிறவி வரதரா சைங்கர மாண்புடைத்தென் றினித்த முடைய இறையடி கண்டிட ஏங்கிற்றுளம் பனித்தவுன் சீரடி பற்றித் தொடரப் பணித்தருளே.
நேரிசை வெண்பா.
11. பணிந்தே பருப்பமுத பால்தெளிதேன் பாகு
தணிந்த கரும்புகனி தாபம் ~ திணிந்தவிருள் சிந்துமொளித் தீபம் சிறக்கவமைத் தேன்திருமுன் வந்தேய ருள்புரிகு வாய்.
கட்டளைக்கலித்தறை.
வாய்ந்த மனத்திய லாலுனை வாழ்த்தி வணங்குகின்றேன் காய்ந்து கரிந்த கருங்கலா மென்றிடக் காழ்த்தமனம் தேய்ந்து திருவொளிர் சிந்தைய னாயிடச் செய்தருள்வாய் ஏய்ந்த சிறையினிற் சேந்தனை மீட்டனை எம்மிறையே.

Page 7
I3.
I4.
IS.
I6.
I7.
10
நேரிசைவெண்பா
எம்மிறைசேர் கோயில் எழிலார் திருத்தொண்டாற் றம்வினைதீர்ந்தின்பார்தல் தாங்கண்டோம் - எம்மைநிதம் வாட்டுவினை போக்கும் வரதரா சைங்கரவுன் நாட்டமென்பா லாம்நம்பி னேன்
கட்டளைக்கலித்துறை
நம்பியுன் தாளினை நாடி நயந்தேன் நமனுலகக் கும்பி தவிர்த்தன் குரைகழற் கேயெனைக் கடவிடுவாய் தம்பி மயிலெழுத் தந்தையைத் தான்வலம் வந்தகனி வம்பெனப் பெற்ற வரதரா சைங்கர வாழ்த்துவனே.
நேரிசை வெண்பா
வாழ்த்த வணங்க வறியா வறியனையப் பாழ்த்த நரகப் படுகுழிக்கண் - ஆழ்த்திவிடா வண்ண மணைப்பான் வரதரா சைங்கரனென் னெண்ணத் திணிக்கு மிறை.
கட்டளைக்கலித்துறை ,
இறையவ வென்தன தின்ன லிரிந்திட வேயருள்வாய் மறைமுதன் மைந்த வரதரா சைங்கர வாழ்முதலே முறையித வோவெனை மூண்டெழுதன்பியல் மூடைகளு ளுறையவிட் டுன்னடி யானென்கை ஓங்காரத்
தட்பொருளே. நேரிசை வெண்பா
گھر
பொருளெனவே போற்றினார் பொய்ம்மயக்குப் போக விருள்நீங்கி இன்பநிலை எய்த ~ அருளினைகாண் ஐய வரதரா சைங்கரநிற் காட்பட்டேன். உய்திபெற ஒன்றியணை ஓர்ந்து.

I8.
I9.
2O.
11
கட்டளைக்கலித்தறை
அணைத்தனை நம்பியை ஆரமுதேற்றே யறிந்தவந்தோம் பிணைத்த பிறவிப் பெருமையுணர்வினிற் பின்தொடர்ந்தேன் இணைந்த இருவினை யேகிட வெண்ணையுமின்னடிக்கீழ் பணைக்கை வரதரா சைங்கர வேற்குவை பற்றினனே,
நேரிசைவெண்பா
பற்றுமிகும் ராவணன் பத்திசெய்த லிங்கமதோ அற்புதமாய்க் கோகர்ணத் தானதே -மற்புயத்த மாவரக்கற் றேய்த்தாய் வரதரா சைங்கரவென் பாவவினை போகவெனைப் பார்.
கட்டளைக்கலித்துறை
பாரதம் மேருவிற் பண்டு பொறித்தமை பாரறியும் பேரதோ ராயிரம் பெற்றபெம் மான்சடைப் பிள்ளைமதி நேரத கோட்டு நிறைவெனக் கொண்டென நேர்ந்தெனையும் கோருவ னேற்க வரதரா சைங்கர கோதிலையே.

Page 8


Page 9