கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெசாக் கூடு

Page 1


Page 2

வெசாக் கூடு
சிங்கள மூலம் :
ஜி.பி. சேனாநாயக்க
தமிழில் தருபவர் :
கே. ஜி. அமரதாஸ்
தமிழ் மன்றம்

Page 3
VESAK KOODU
a story for children originally written by G.B. Sevanayaka in Sinhala translated into Tamil by: the late K.G. Amaradasa, B.A. (Lond.)
(C) Copyright reserved
First Edition: January 1993
Sixty nineth Publication of:
THAMIL MANRAM, GAHINNA, KANDY.
Office address:
Thamil Manram, No.10, Fourth Lane, Koswatta Road, Rajagiriya, Srilanka.
Laser Typeset at: LKM Computer Prints, Madras - 17

அறிமுகம்
ஒரு ஏழு வயதுச் சிறுவன் கூறும் கதை இது. அவனுடைய அண்ணன் வெசாக்கூடு ஒன்றை அமைப்பதற்குத் தயாரான போது, உதவிக்குப் போன தம்பி செய்த தவறினால் விபத்து ஏற்பட்டு, அண்ணன் துயரடைகிறான். அதற்குக் காரணமான தம்பி அதைவிடப் பன்மடங்கு மனவேதனைப்படுகிறான். தன் தவறை உணர்ந்த பின்னர், அப்படியான தவறினால் வரும் விளைவு பற்றிய எண்ணமே, தாங்கொனாக் கவலையால் அவனை வாட்டுகிறது.
வெசாக் என்றால் என்ன? இலங்கையில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் பெளத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். நாலில் மூன்று பங்கு மக்கள் மட்டில், அந்தச் சமயத்தினர்தான் இலங்கையில் வாழ்கின்றனர். இவர்கள், ஒவ்வொரு ஆண்டிலும் மே மாதத்தில் வெசாக் பண்டிகை கொண்டாடுவார்கள்.
அவர்கள் பின்பற்றும் பெளத்த சமயத்தைத் தோற்றுவித்த சித்தார்த்தர், சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு, வட இந்தியாவில் பிறந்தார். அவர் பிறந்த தினம் பூரணச் சந்திரன் தோன்றும் பெளர்ணமி நாள் என்றும், அப்படி ஒரு நாளில்தான் அவர் பெளத்த சமயத்தைக் கண்டு பிடித்தார் என்றும், அதேபோன்ற பெளர்ணமி தினம் ஒன்றில் அவர் இவ்வுலகை விட்டு மறைந்தார் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இப்படியான மூன்று முக்கிய நிகழ்ச்சிகளைக் குறிக்கும் தினமே வெசாக் தினம் எனப்படுகிறது. பெளத்தர்களுக்கு இது மிக, மிக முக்கியமான ஒரு பண்டிகை. உலகின் ஏனைய நாடுகளில் வாழும் பெளத்த மதத்தினரும் வெசாக் தினத்தைக் கொண்டாடுவர்.
வெசாக் தினத்தில் பெரும்பாலான வயோதிபர்கள் பெளத்த கோயில்களில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடுவர்.

Page 4
4 9 ஜி. பி. சேனாநாயக்க
இளைஞர்களும் சமயச் சடங்குகளில் பங்கு கொள்வதுண்டு. எனினும் கோயில்களையும், வீதிகளையும், தத்தமது வீடுகளையும் அலங்களிப்பதில்தான் இளவயதினர் பெரிதும் ஆர்வம் கொள்வார்கள். மின்சார தீபங்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தல்கள், தோரணங்கள் விதிகளில் எல்லா நகரங்களிலும் காணப்படும். இது தவிர, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதிலும் பெளத்தர்கள் இக்காலப் பகுதியில் மிக மும்முரமாய் ஈடுபடுவார்கள். குறிப்பாக அலங்காரத் தோரணங்களைப் பார்ப்பதற்கு, கிராமப் புறங்களிலிருந்து நகருக்கு வரும் மக்களுக்கு, இலவசமாக உணவும், குடிபானங்களும் வழங்கப்படுகிறது.
வெசாக் பண்டிகையைக் கொண்டாடும் நோக்கத்துடன் பெளத்தர்கள் வீடுகளை அலங்களிப்பதில், பெரும்பாலும் கிராமப் புறத்தினர் மெல்லிய தாள்களினால் கூடுகள் அமைத்து, அதனுள் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைப்பார்கள், இரவில் அக்கூடு கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். கூட்டினுள் மெழுகுவர்த்தி எரிதல், தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு மனதில் மகிழ்ச்சியை, ஏற்படுத்தும். V.
இப்படியான ஒரு சம்பவத்தைப் பின்னணியாக வைத்து சிறுவர்களுக்கென அமரர் ஜி.பி. சேனாநாயக்க “வெசாக்கூடு” என்ற பெயரில் சிங்களத்தில் இக்கதையை எழுதினார். அவர் ஒரு பிரபல எழுத்தாளர். பெருந்தொகையான நாவல்கள், சிறுகதைகள் முதலியன எழுதி எழுத்துத்துறையில் பல பரிசுகள் பெற்ற அவரை, சிங்கள மக்கள் ஒரு சிறந்த அறிஞராகக் கருதுவர்.
இலங்கையின் மிகப்பெரிய சிறுபான்மையினரான தமிழர், சிங்களத்தில் பிரபலமான எழுத்தாளர் ஒருவர் எழுதியதை வாசித்தறிதல் வேண்டும் என விரும்பிய தமிழபிமானி திரு. கே.ஜி. அமரதாஸ், அக்கதையை தமிழில் மொழி பெயர்த்து, உரிய திருத்தங்கள் செய்து பிரசுரிக்கும்படி என்னிடம் எழுத்துப் பிரதியைத் தந்தார்.

வெசாக் கூடு 9 5
தமிழைத் தாய்மொழியாக ஏற்றிப் போற்றும் எனக்கு, இந்நூலை தமிழ் தெரிந்த சிறுவர்கள் படித்துப் பயன்பெற வழி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது பற்றிப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்டைத் தந்த திரு. அமரதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அச்சாக்குவதில், பேருதவி புரிந்த திரு. வே கருணாநிதி அவர்களுக்கும் நன்றி
தமிழில் இந்நூல் பிரசுரமாகும் சமயத்தில், மூலநூல் எழுதிய திரு. ஜி. பி. சேனாநாயக்காவும், தமிழில் மொழி பெயர்த்த திரு. கே.ஜி அமரதாஸவும் இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டனர் என்பதை நினைக்கும்பொழுது பெரிதும் கவலையாயிருக்கிறது.
சிங்கள-தமிழ் மக்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படுத்தும் பாலமாய் அமைந்துள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற வகையிலும், இந்நூலைப் பிரசுரிப்பது பற்றி நான் பூரிப்படைகிறேன். எமது சிறிய நாடான இலங்கையில், நூற்றாண்டு நூற்றாண்டு காலமாக இருந்து வந்துள்ள, சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை நீடிக்க வேண்டும். அத்தகைய உன்னதமான ஒற்றுமை சீர்குலையலாகாது. அந்த உயரிய இலட்சியத்திற்கு இந்நூல் வெளிவருதலும், ஒரளவேனும் பங்களிப்பொன்றாய் அமையுமெனில், அதுதான் என் பணிக்குக் கிடைத்த பெரும்பயன் என நான் திருப்தியடைவேன்.
10, நாலாவது லேன், - எஸ். எம். ஹனிபா கொஸ்வத்த ரோட், தமிழ் மன்றம், ராஜகிரிய.
பெப்ரவரி, 1993

Page 5
வெசாக்கூடு
வெசாக் பண்டிகைக்காக எண்கோண வடிவத்தில் மிகப்பெரிய வெளிச்சக்கூடு ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் முதன் முதலில் ஏற்பட்டது அண்ணாவின் மனதில்தான். அவ்வாறு வெசாக் வெளிச்சக்கூடு அமைப்பதற்கு அம்மா அவ்வளவு ஊக்கமளிக்கவில்லை. ஆனால் என் தங்கையும், நானும் அண்ணனை அப்பணியில் ஊக்கப்படுத்தினோம்.
அண்ணா மூங்கில் துண்டொன்றை கொண்டு வந்து வெளிச்சக்கூட்டின் நடுப்பகுதியை அமைக்கத் தொடங்கினார். அவர் வீட்டின் சாப்பாட்டறையின் தரையிலுள்ள மேசை அருகில், காகிதமொன்றினை விரித்து, அதன் மேல் உட்கார்ந்துகொண்டு மூங்கில் துண்டை பிளந்து மெல்லிய துண்டுகளாக வெட்டினார். அப்பொழுது அண்ணாவுக்கு வயது பதினான்கு. தங்கைக்கு ஆறு வயது எனக்கு வயது ஏழு மூங்கில் துண்டுகளைச் சேர்த்து, எண்கோண வடிவத்தில் வெளிச்சக் கூட்டை அமைக்கும் விதத்தை தங்கையோ நானோ அறிந்திருக்கவில்லை. ஆதலால், அண்ணா மூங்கில் துண்டினை, சிறிய துண்டுகளாகப் பிளப்பதை நாம் பார்த்துக் கொண்டிருந்தது, அவர் ஒரு அதிசயமான வேலையில் ஈடுபட்டிருப்பதை ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பது போன்றுதான்.
அவர் வெளிச்சக்கூட்டை அமைக்கும் விதத்தை பார்த்துக் கொண்டிருந்த சமயம் எம் இருவருக்கிடையில் அடிக்கடி சண்டையும் நிகழ்ந்தது. அண்ணா வெட்டி நன்றாகத் துப்புரவுபடுத்தி பக்கத்தில் வைத்த மூங்கில்

வெசாக் கூடு 9 7
துண்டுகளை எடுத்துவிட்டு, அவர் அருகில் நின்றுகொண்ட நான் என் அருகில் அவற்றை வைத்துக் கொண்டேன். அவை என் அருகில் வைக்கப்படுவதை தங்கை விரும்பவில்லை. அண்ணா வெட்டித் துப்புரவு படுத்தி பக்கத்தில் வைத்த மூங்கில் துண்டு ஒன்றினை நான் காணாமல் தங்கை எடுத்துவிட்டு, அவளுடைய கால்களின் கீழே மறைத்து வைத்தாள். என் அருகில் அமர்ந்து கொண்டிருந்த அவள், நான் அந்த மூங்கில் துண்டைக் கண்டுவிடக்கூடும் என்ற சந்தேகத்தோடு, இரு கால்களையும் மூடி வைக்கும்படி அவள் அணிந்து கொண்டிருந்த மேலங்கியை நீட்டி, தரையில் விரித்தாள். அவள் தனது இரு கால்களையும் மறைக்க முயலும் விதத்தைக்கண்டு, என் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. அவள் மூங்கில் துண்டு ஒன்றினை மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். மூங்கில் துண்டின் ஒரு பக்கம், அவளுடைய இரு முழங்கால்களின் இடையில் வெளியே நீண்டிருப்பதை நான் அக்கணம் கண்டேன். நான் அதை இழுத்து என் அருகில் வைத்தேன். தங்கையின் சிவப்பு நிறம் கொண்ட சிறிய வாயின் கீழுதடு கோபத்தால் நீட்டப்பட்டிருந்தது. அவளுடைய இரு கண்களும் கண்ணிர்ால் நிரம்புவதை நான் கண்டேன்.
தனது வேலையில் மனமும் கண்ணும் ஈடுபட்டிருந்ததனால் அண்ணா தங்கை மூங்கில் துண்டை மறைத்த விதத்தையோ அல்லது நான் அதைப் பிடுங்கி எடுத்ததையோ கவனிக்க வில்லை. தங்கையின் கண்களில் நிரம்பிய கண்ணிர் வடிந்து கன்னம் வழியாய் கீழே இறங்கத் தொடங்கியது. கண்களிலிருந்து கண்ணிர் வடிதலை உணர்ந்த தங்கையின் கோபம் அதிகரித்தது. அவள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து எனது பின் புறத்திற்கு வந்து எனது தலையில் வேகமாக அடித்துவிட்டு

Page 6
8 9 ஜி. பி. சேனாநாயக்க
வீட்டுக்குள்ளே ஓடினாள். அம்மா என்னைத் திட்டி, அவளைச் சமாதானப்படுத்துவதை நான் கேட்டேன்.
அண்ணா மூங்கில் துண்டுகளைக் கட்டி, சமசதுக்க வடிவத்தில் பெரிய அளவில் ஆறு சட்டங்களை அமைத்து, அவற்றை முறையாக ஒன்றுக்கொன்றுடன் கட்டிக்கொண்டு எண்கோண வெளிச்சக்கூடு ஒன்றினைச் செய்து எடுத்தார். அது ஒரு பெரிய வெளிச்சக்கூடு. இருபது சிறிய வெளிச்சக்கூடுகள் கொண்ட ஒரு பெரிய வெளிச்சக்கூட்டின் மையமான கூடாக அது அமைக்கப்பட்டிருந்தது. அது, வீட்டுச் சாலையில் இருந்த சாப்பாட்டு மேசையின் உயரத்திற்குச் சமமான உயரம் கொண்டது. அண்ணா அதை மேசை அருகில் கொண்டு போய், வீட்டின் சாப்பாட்டறைக்கும், நடுச்சாலைக்கும் இடையில் இருந்த மதில் வளைவின் கீழ் அதை வைத்தார். வெளிச்சக்கூட்டை அங்கு வைத்த அவர் தொங்கிக் கொண்டிருந்த தனது கமீசினால் நெற்றியில் இருந்த வியர்வைத்துளிகளைத் துடைக்கும் வண்ணம் திரும்பி, மேசை அருகில் வந்து, வெளிச்சக்கூட்டை கவனித்தார். நெற்றியில் விழுந்த நீண்ட தலைமயிர்ச் சுருளும், ஒன்றுக் கொன்று அழுத்திக் கொண்டிருந்த அவரின் உதடுகளும், கண்கள் களைப்படைந்த காரண்த்தாலோ என்னவோ நீட்டமான புருவங்களும் கொண்ட அவர் நீண்ட கால முயற்சியின் விளைவாக சிலையொன்றினை செதுக்கி முடித்த ஒரு சிற்பி, அச்சிலையை கவனிப்பது போல அவ்வெளிச்சக் கூட்டைக் கவனித்தார்.
தங்கை குசினிக்குள் ஒடிப்போய், அம்மாவை அழைத்துக் கொண்டு வந்தாள்.
அண்ணா வெசாக் வெளிச்சக்கூட்டை அமைத்து முடிக்கும்வரை தங்கையும் நானும் பொறுமையற்ற

வெசாக் கூடு 0 9
நிலையில் இருந்தோம். அவர் சிறிய வெளிச்சக் கூடுகளுக்காக மூங்கில் துண்டுகளை வெட்டும் விதத்தையும் அவைகளைத் துப்புரவு செய்த முறையையும் கவனித்த போது, அவர் வேண்டிய அளவு விரைவில் பணி புரியவில்லை என்ற எண்ணம் என் மனதில் பட்டது.
பிரதான வெளிச்சக்கூட்டின் நாலு புறங்களிலும் தொங்குவதற்கு நான்கு சிறிய வெளிச்சக்கூடுகளும் அச்சிறிய கூடுகளில் சுற்றித் தொங்குவதற்கு இன்னும் சிறிய பதினாறு வெளிச்சக்கூடுகளும் அமைக்கப்பட்டன.
எமது வீட்டுத் தோட்டத்தில், கிடுகு வேய்ந்த சுடரைகொண்ட ஒரு குடிசை உள்ளது. அது கட்டப்பட்டது, பிரதானமாக நாம் பாடசாலைக்கு பிரயாணம் செய்வதற்காக பயன்படுத்திய ஃபக்கி’ வண்டியை நிறுத்தி வைப்பதற்காகத்தான். ஆனால் 'ஃபக்கி வண்டியுடன் உடைந்து கிடந்த நாற்காலி ஒன்றும், பெரிய கதிரை ஒன்றும், மரத் துண்டுக் குவியலும் அங்கு இருந்தன.
பெரிய வெளிச்சக்கூட்டிற்கு, சிறிய கூடுகளை இணைக்கும் மரத் துண்டுகள் கட்டப்பட்ட போது, வெளிச்சக்கூட்டை வீட்டிலிருந்து வெளிப்புறம் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு விசாலமாக பரந்திருந்த படியால், கிளைகளை இணைப்பதற்காக அண்ணா அந்த பெரிய வெளிச்சக்கூட்டை தோட்டத்திலுள்ள குடிசைக்கு கொண்டு போனார். அவர் அக்குடிசையின் தரையில் பாய் ஒன்றினை விரித்து, அதில் வெளிச்சக்கூட்டை வைத்துக் கொண்டு கிளைகளைக் கட்டி வைத்தார்.
வெளிச்சக்கூட்டுக்குக் கிளைகளை கட்டுவதற்கு சில வேளைகளில், அண்ணா அதினுள்ளே இறங்கினார். அவரின் உயரம், எனது உயரத்திலிருந்து பத்து

Page 7
10 0 ஜி. பி. சேனாநாயக்க
அங்குலத்திற்குக் கூட இருந்தாலும், அந்த வெளிச்சக்கூடு அவருக்கு உள்ளே இறங்கியிருக்கக் கூடிய அளவுக்கு பெரியதாக இருந்தது எமக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
வெளிச்சக்கூடுகளில் காகிதம் ஒட்டப்பட்ட பிறகு, "பீக்கு 'களை சரிபண்ணும் வேலை ஆரம்பித்தது. காகிதத்தினால், சிறிய சதுக்கங்களை வெட்டி, அவற்றின் இரு மூலைகளையும் மடித்து அவைகள் ஒன்றுசேரும் இடத்தில் சருவபித்தலை துண்டுகளை ஒட்டி பீக்குகள் அமைக்கப்படுகின்றன. இதை நாம் இலேசாகச் செய்யக்கூடிய வேலையாய் இருந்தபடியால், அவ்வேலை எமக்கு ஒப்படைக்கப்பட்டது.
நாம் இருவரும் சில மணித்தியாலம் ஒத்துழைத்து வேலை செய்தோம். தங்கை அம்மாலை நேரம் முகத்தை கழுவி, பவுடர் பூசி சுற்றிலும் சுருள் வைத்துப் புதிதாக தைத்தெடுத்த ஒரு மேலங்கியை அணிந்து கொண்டு அங்கு வந்து "பீக்கு 'களை அமைக்க என்னருகில் அமர்ந்தாள். அவளுடைய புதிய மேலங்கியை கண்டு எனது மனதில் பொறாமை ஏற்பட்ட காரணத்தாலோ என்னவோ அவள் மீது சினங்கொள்ள எனக்கு எண்ணம் வந்தது.
ஒட்டிக் கொண்டிருந்த காகிதத் துண்டை பக்கத்தில் வைத்து நான் நாசியை மூடிக்கொண்டு "சரியான நாற்றம்' என்று சொன்னேன். பவுடர் பூசிக்கொண்டிருந்த முகத்தை என் பக்கத்திற்குத் திருப்பி, தங்கை எதுவும் கேட்காததுபோல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"பவுடர் பூசினாலும் முகத்திலுள்ள நாற்றம் போகுமா?" நான் சொன்னேன். தங்கையின் சிறிய முகம்

வெசாக் கூடு 9 11
கோபத்தால் சிவந்தது. "ம் வாயின் அழகு கிரி அப்புட வாய் மாதிரி இருக்கு” நான்தான் மறுபடி சொன்னேன்.
அவள் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தைவிட்டு ஓடிவந்து என்னை அடித்தாள். நானும் அவளுக்கு அடியொன்றைக் கொடுத்தேன். அவள் எனது தோளிலிருந்து தொங்கிக்கொண்டு எனது முகத்தைச் சொறியத் தொடங்கினாள். நாம் இருவரும் தரையில் விழுந்து சுழற்றிக் கொண்டு சண்டை பிடித்தோம். பக்கத்தில் நாம் செய்து வைத்திருந்த பீக்கு'களும், பீக்குகளை அமைப்பதற்கு வெட்டி வைத்திருந்த காகிதத் துண்டுகளும் 'சருவபித்தலை தாள்களும் சண்டை பிடித்துக்கொண்ட எமக்குக் கீழ்ப்பட்டு நொறுங்கின. நாம் சண்டை பிடிக்கும் சத்தத்தைக் கேட்ட அண்ணா ஒடி வந்தார். அம்மா கத்திக்கொண்டு வரும் சத்தத்தை கேட்ட நாம் இருவரும் சண்டையை நிறுத்திவிட்டு வெளியே வந்தோம்.
அம்மாவின் அடியைப் பெற்றுக்கொண்ட நாம் இருவரும் விறாந்தையின் இரண்டு மூலைகளுக்குப் போனோம். ஒரு மணித்தியாலம் போல் மூலையில் அழுது கொண்டிருந்த தங்கை, மெதுவாக என் அருகில் வந்து "அண்ணா, வெசாக் வெளிச்சக்கூட்டைப் பார்க்கப் போவோமா?” என்று கேட்டாள்.
நான் எதுவும் பேசாமல், உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பி, அம்மா இருக்கிறாளா என்று சுற்றிப் பார்த்துவிட்டு தங்கையோடு வெளியே இறங்கினேன். அண்ணா எம்மைத் துரத்துவார் என்று எண்ணி, நாம் அவர் இருந்த குடிசைக்குப் போகப் பயப்பட்டோம். பிரயோசனமில்லாத, சிறிய சிறிய கனிகளைக் கொண்ட உயரமாக வளர்ந்த ஒரு எலுமிச்சை

Page 8
12 0 ஜி. பி. சேனாநாயக்க
மரம் அந்த வீட்டின் முற்றத்தில் இருந்தது. ஏதேனும் சப்தம் எழும்பக்கூடும் என்று கவலைப்பட்டு, மெதுவாக காலடி வைத்து எலுமிச்சை மரத்தடிக்குப் போனோம். அண்ணா விசாலமான வெளிச்சக்கூட்டின் அருகே நின்று, அதில் பீக்குகளை ஒட்டிக் கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டு இருந்தோம்.
குடிசையில் ஒரு லாந்தரை தொங்க வைத்துக் கொண்டு அன்றிரவும் அண்ணா வெளிச்சக்கூட்டை அமைத்துக் கொண்டு இருந்தார். ஆயினும் அவர் எம்மை அங்கு வரவிடவில்லை. நாம் உறங்கப் போகும்பொழுதும் அண்ணா வெளிச்சக்கூட்டை அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
தங்கையையும் என்னையும் ஒரே கட்டிலில் உறங்கச் செய்வது அம்மாவின் பழக்கமாகும். "எங்களுடைய வெளிச்சக்கூடு போல அழகான ஒன்று வேறு எங்குமே இல்லை தானே அண்ணா” என்று இருளில் கட்டிலில் என் அருகே கிடந்த தங்கை கேட்டாள்.
"ஒம் தங்கை. எங்களுடைய வெளிச்சக்கூடு
போல அழகான வெளிச்சக்கூடு வேறு எங்குமே இல்லை”
என்று உறங்குவதற்கு கண்களை மூடிக்கொண்டேயிருந்த நான், பதிலளித்தேன்.
அடுத்த நாள் அது வெசாக் பெளர்ணமி தினம். அன்று அம்மா மற்ற நாட்களில் போலல்லாமல் எம்மை நேரத்தோடு எழும்பச்செய்தாள். அம்மா எம்மைக் கூப்பிடும் பொழுது எமது ஊரின் விகாரையில் முரசு கொட்டுதல் எமது காதில்பட்டது. வெசாக் தீபங்கள், கொடிகள், ஒலை அலங்காரங்கள் ஆகியன ஊர் முழுவதும் அலங்கரிக்கப் பட்டிருக்கும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. நாம்

வெசாக் கூடு 9 13
இருவரும் கட்டிலிலிருந்து எழுந்த உடனே, வெளிச்சக்கூட்டைப் பார்க்கப் போனபோது, பெரிய வெளிச்சக்கூடும் சிறிய வெளிச்சக்கூடும் ஒன்றுசேர்த்து இணைக்கப்பட்டிருக்கவில்லை.
வெசாக் வெளிச்சக்கூடு தொங்க வைப்பதற்காகப் பாதைக்குக் கொண்டு வரப்பட்டது. எமது வீட்டில் வேலை செய்யும் பணியாட்களில் ஒருவரான கிரா ஒரு நெடியவன். பெரிய வெளிச்சக்கூட்டை பாதைக்குக் கொண்டுவந்தவன் அவன்தான். கிராவும் அண்ணாவும் சிறிய கூடுகளை சிலதடவைகள் போய்க் கொண்டு வந்தார்கள். பெரிய வெளிச்சக்கூட்டின் நான்கு கிளைகளிலும் சிறிய வெளிச்சக்கூடுகளும் சிறிய கூடுகளின் நான்கு கிளைகளிலும் மீண்டும் சிறிய கூடுகளும் தொங்கவிடப்பட்டன. வெளிச்சக்கூட்டை பார்க்க வந்த பிள்ளைகளை அதைத் தொடுவதற்கு விடாமல் தடுக்கும்பணி தங்கைக்கும் எனக்கும் விசேட பொறுப்பாயிருந்தது.
முன்னைய நாள் இரவு கிராவினால் நீண்ட மூங்கில் ஒன்று பாதை ஒரத்தில் நாட்டப்பட்டிருந்தது. பாதையின் விசாலமான பகுதியில், பரந்த பல சிறிய கூடுகள் கொண்ட இந்த வெசாக் வெளிச்சக்கூடு, மூங்கிலின் உச்சியில் கட்டப்பட்ட கயிற்றினால் மேலே தூக்கிக் கட்டப்பட்டது.
பளிச்சிடும் 'சருவபித்தலை' துண்டுகளும், காற்றில் சரசர என்ற சத்தமிட்டு ஒன்றுக்கொன்று தழுவிக்கொண்டு அசையும் காகித கீற்றுகளும் கொண்ட விசாலமான வெளிச்சக்கூடு, குஞ்சுகளினால் சுற்றி வளைத்துக்கொள்ளப் பட்ட பெரிய வெண்மையான பறவை போன்றது என்ற உவமை என் மனதில் பட்டது. வெசாக்

Page 9
14 9 ஜி. பி. சேனாநாயக்க
வெளிச்சக்கூடுகளின் கிளைகளில் இணைக்கப்படும் சிறிய வெளிச்சக்கூடுகள் "குஞ்சுகள்” ஆக அறிந்து கொள்வது, சாதாரண வழக்கமாகும். ஆதலால், இந்த வெளிச்சக் கூட்டுத்திரள் பல பறவைகள் போன்றன என்ற எண்ணம் எனது மனதில் பதிந்துவிட்டது.
அன்று, நாள் முழுவதும் தங்கையும் நானும் அடிக்கடி பாதைக்கு ஒடிப்போய் ஆகாயத்தில் தொங்கும் வெசாக் வெளிச்சக்கூட்டின் அழகைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தோம். ஒரு வெசாக் வெளிச்சக் கூட்டின் அழகு, உச்ச நிலைக்கு வருவது அதிலுள்ள மெழுகு திரிகளை எரிய வைத்த பிறகுதான். இந்த வெளிச்சக்கூடுகளின் மெழுகு திரிகளை எரிய வைக்க ஏற்றவாறு இருள் வரும்வரை தங்கையும் நானும் மிக்க ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.
இரவின் இருள் பரவத் தொடங்கியதும் பூக்களையும் எண்ணெயையும் எடுத்துக்கொண்டு, விகாரைக்குச் செல்லும் சனங்களினால் பாதை நிரம்பியது. அண்ணா கிராவோடு வெளிச்சக்கூட்டில் மெழுகுதிரிகளை எரிய வைக்க ஏற்பாடு செய்தார். தங்கையும் நானும் விறாந்தையில் வைத்துக் கொண்டிருந்த மெழுகு திரிகளை பாதைக்குக் கொண்டு வந்தோம். கிரா வெளிச்சக்கூட்டை இறக்கினான். முதலாவதாக வெளிச்சக்கூடுகளில் மெழுகு திரிகள் வைக்கப்பட்டன. பிறகு அவைகளை எரிய
வைத்தனர்.
அண்ணா பெரிய வெளிச்சக்கூட்டில் மெழுகு திரிகளை எளிய வைத்துவிட்டு சிறிய வெளிச்சக்கூடுகளில் மெழுகு திரிகளை எரிய வைக்கத் தொடங்கினார். எரியும் மெழுகுதிரி ஒன்றினை கையில் வைத்துக் கொண்டிருந்த எனக்கும் ஒரு சிறிய வெளிச்சக்கூட்டின் மெழுகு திரியை

வெசாக் கூடு 9 15
எரிய வைக்க ஆசை வந்தது. நான் அண்ணாவுக்குத் தெரியாமல் ஒரு வெளிச்சக்கூட்டின் மெழுகுதிரியை எரிய வைத்தேன். நான் வேறு வெளிச்சக்கூட்டின் மெழுகு திரியை எரிய வைக்க முயலும்போது, அதிலுள்ள ஒரு காகிதக்கீற்று தீப்பிடித்தது. வாயால் ஊதி அதை அணைக்க எடுத்த எனது முயற்சி சரிவரவில்லை. காகிதக் கீற்றிலிருந்து, வெளிச்சக்கூடு தீப்பிடித்தது. நான் பயப்பட்டுக் கத்தினேன். நான் இருந்த இடத்திலிருந்து, கொஞ்ச தூரத்தில் இருந்த கிரா தீப் பிடித்த வெளிச்சக் கூட்டை அணைக்க ஓடி வந்தான். ஆனால் அவனுக்கு அதை, விரைவில் செய்ய முடியவில்லை. அந்த வெளிச்சக்கூட்டிலிருந்து வேறு ஒரு வெளிச்சக்கூடு தீப்பிடித்தது.
அக்கணம் அண்ணா ஒடி வந்து தீப்பிடித்த வெளிச்சக்கூடுகளை மற்றவைகளிலிருந்து பிரிக்க முயன்றார். அண்ணா குனிந்து கொண்டு பெரிய வெளிச்சக்கூட்டின் கிளையொன்றிலிருந்து சிறிய வெளிச்சக்கூடு ஒன்றினைப் பிரித்து எடுக்க முயலும் போது, அவருடைய கமீசக்கையும் தீப்பிடித்தது. அவர் வெளிச்சக்கூடுகளை ஒரு பக்கத்திற்குத் தள்ளி விட்டு மற்றக் கையால் அடித்துத் தீயை அணைக்க முயன்றார். அவருடைய முயற்சி சரிவரவில்லை. அண்ணாவின் கமீசை தீப்பிடித்ததைக் கண்டு நான் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு, அம்மாவும் அப்பாவும் வீட்டுள்ளேயிருந்து ஓடி வந்தார்கள்.
அப்பா, அண்ணாவின் கமீசைக் கிழித்துக் கழற்றினார். நான் அண்ணாவின் கமீசக்கையில் எரியும் தீயை அணைக்க முயலும்போது தீப்பிடித்த வெளிச்சக்கூடு ஒன்றிலிருந்து பரவிய சுவாலையால்

Page 10
16 9 ஜி. பி. சேனாநாயக்க
பெரிய வெளிச்சக்கூடும் தீப்பிடித்தது. பிறகு வெளிச்சக்கூடுகளின் தீயை அணைக்க யாரும் முயலவில்லை.
அண்ணாவின் கமீசு தீப்பிடித்த போது தங்கையும் நானும் அழ ஆரம்பித்ததை நாம் நிறுத்தவேயில்லை. அண்ணாவின் கையில் காயம் இருந்ததால், அவரை வைத்தியர் வீட்டிற்கு கொண்டு செல்லல் அவசியமென்று அப்பா சொன்னார். அந்த சுடுகாயத்தால், அண்ணா இறந்து போகலாம் என்ற பயமும் சோகமும் என் மனதில் உண்டாயின. வெளிச்சக்கூடு தீப்பிடித்துக் கொண்டது எனது செயலால்தான் என்ற நினைவு எனது சோகத்தை மிகுதியாக்கியது. கிரா எமது 'ஃபக்கி" கரத்தையை வீட்டு முன்னால் கொண்டு வந்தான். தந்தை அண்ணாவை கரத்தையில் ஏற்றிக்கொண்டு வைத்தியர் வீட்டிற்குப் போனார்.
வெளிச்சக்கூடு தீப்பிடித்தது எனது செயலால் தான் என்பது அம்மாவுக்குத் தெரியும். ஆனால், அவர் அதற்காக என்னைத் திட்டவில்லை. அவர் அவ்வாறு நடந்துகொண்டது ஏற்கெனவே பயப்பட்டு இருந்த என்னை, மேலும் பயப்படுத்துவது பொருத்தமில்லை என்று நினைத்ததால் தானென நான் நினைக்கிறேன். அழுதுகொண்டு இருந்த தங்கை, அம்மாவைத் தழுவிக்கொண்டு தூங்கினாள். டாக்டர்' என்று ஊரார் அழைக்கும் அப்போதிக்கரின் வீடு எமது வீட்டிற்கு ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்தில் இருந்தது. அங்கு போய் வருவதற்கு, சாதாரணமாக ஒரு மணித்தியாலத்திற்கு மேல் எடுப்பதில்லை. அண்ணா திரும்பும் வரை ஒரு தூணில் சாய்ந்துகொண்டு இருந்த எனக்கு, சில மணித்தியாலங்கள் கழிந்து விட்டன என்ற

வெசாக் கூடு 9 17
உணர்வு வந்தது. விஹாரையில் முரசு முழங்குதல், அடிக்கடி காதில் பட்டது. "ஃபக்கி" கரத்தை வருவதை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு முரசு முழங்குதல் பெரிய தொல்லையாகத் தோன்றியது. முரசு முழங்குதல் நிறுத்தப்பட்ட பிறகு பாதையிலிருந்து வருகின்ற மற்றச் சப்தங்கள் காதில் விழுந்தன.
கரத்தை திரும்புவதற்குத் தாமதமாவது, அண்ணா இறந்து போயிருப்பதன் காரணமாகத்தானென நான் நினைத்தேன். இந்த எண்ணம் வந்தபொழுது எனது கண்களில் கண்ணி வடிந்தது. பாதைப் பக்கத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த நான், வராந்தையில் ஒரு சாய்தல் நாற்காலியில் உட்கார்ந்து இருந்த அம்மாவைக் கண்டேன். அவர் மேல்வாய்க்குக் 6D 56DL வைத்துக்கொண்டு அசையாமலே இருந்தார்.
ஒரு மாட்டின் கழுத்தில் கட்டிய சிறிய மணிகளின் ஒசையைக் கேட்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. நான் மீண்டும் கூர்மையாகக் காதுகளை பாதைப்பக்கம் செலுத்தினேன். அது ஒரு மாட்டு மணி ஒசைதான். ஒடும் ஒரு மாட்டின் குளம்புகள் மோதும் சத்தமும், வண்டிச் சக்கரங்கள் பாதையில் கல்லின் மேல் ஒடும் சத்தமும் கேட்கத் தொடங்கின. பிறகு கிரா "ஒடடா புள்ளே' என்று அவரது முரடான குரலில்’சொல்லிக் கம்பால் மாட்டுக்குத் தாக்கும் சப்தம் கேட்டது. வண்டி அருகில் வர வர அண்ணா இறந்திருக்கும் என்ற பயம் எனது மனதில் மீண்டும் வளர்ந்தது. அண்ணாவின் பூதஉடலை வண்டியில் கொண்டு வருவார்கள் என்று நான் நினைத்தேன்.
அம்மா, அண்ணாவை வண்டியிலிருந்து இறங்கச்
செய்து அவரை வீட்டினுள் அறைக்கு அழைத்துச் சென்றார். அண்ணாவின் முழங்கையிலிருந்து கீழ் பாகம்

Page 11
18 9 ஜி. பி. சேனாநாயக்க
வரை பஞ்சு வைத்து, துணியால் கட்டப்பட்டிருந்தது. நான் வீட்டிற்குள் போகாமல் வராந்தையில் சாய்தல் நாற்காலியில் உறங்கிக் கொண்டிருந்த தங்கை அருகே, வெகு நேரம் இருந்தேன். அண்ணா இறந்து போகலாம் என்ற பயத்தை என் மனதிலிருந்து நீக்க இயலவில்லை.
நான் சாய்தல் நாற்காலியிலிருந்து எழுந்து அண்ணா இருந்த அறைக்குப் போனேன். அங்கு ஒரு பெரிய கட்டிலில் அண்ணா கிடத்தப்பட்டிருந்தார். அம்மாவும், கட்டிலில் உட்கார்ந்து அண்ணாவின் கட்டப்பட்ட கையை அவருடைய மடியில் வைத்துக் கொண்டு இருந்தார்.
'டிங்கிரியிடம் சாப்பாடு கேட்டு தின்றுவிட்டு உறங்கப்போ' என்று நான் அறைக்குள் வருவதைக் கண்ட அம்மா மெல்லிய குரலில் சொன்னார்
அவர் சொன்னதைக் கேட்காததுபோல் நான் மெதுவாகப் போய் அவருடைய காலடியில் அமர்ந்தேன். அடிக்கடி அண்ணா முணுமுணுக்கும் குரல், அவர் இறந்து போகலாம் என்ற பயத்தை மீண்டும் என் மனதில் வளர்த்தது. அம்மாவின் கால்களைப் பிடித்துக்கொண்டு, எனது தலையை அம்மாவின் முழங்கால்களின் இடையில் வைத்துக் கொண்டு நான் அழுதேன்.
அண்ணா, கட்டப்பட்டிருந்த கையை அம்மாவின் மடியிலிருந்து எடுத்து எனது தலையைத் தடவ ஆரம்பித்தார்.
அவர் எனது தலையைத் தடவிக்கொண்டு, 'தம்பி” என என்னை அழைத்தார். 'தம்பி வெளிச்சக்கூடு எரிந்ததற்கு அழ வேண்டாம். அடுத்த வருடம், நாம்

வெசாக் கூடு 0 19
அதைவிடப் பெரிய வெளிச்சக்கூடொன்றைச் செய்வோம்” என்று அண்ணா சொன்னார்.
அண்ணா தனது கையிலிருந்த வலியைப் பற்றியோ, தான் இறந்து போகக் கூடுமென்பதனைப் பற்றியோ பேசாமல், வெளிச்சக்கூட்டைப் பற்றிப் பேசினதால் அவர் இறந்து போகக்கூடுமென்ற அச்சமும், துயரமும் என் மனதிலிருந்து விலகின.
வீட்டு முற்றத்திலுள்ள ஈரப்பலாக்காய் (Breadfruit) மரத்தில் கட்டியிருந்த மாடு, தனது தலையை அசைத்து கழுத்தில் கட்டியிருக்கும் மணிகளை ஒலித்தது எனது காதில் பட்டது. "கொஞ்சமிரு” என கிரா மாட்டுக்குக் கூறினான். அத்துடன் தகர வாளியொன்று, எதனுடனோ மோதிப் பாதையில் புரண்டது. ஒரு நாய் குரைத்துக்கொண்டே ஓடியது.
எரிந்த வெளிச்சக்கூட்டின் எஞ்சிய கறுப்பு நிற மூங்கில் துண்டுகள், பெரிய ஒரு மிருகத்தின் எலும்புக்கூட்டைப் போல பாதையின் ஒரு பக்கத்தில் இருப்பது எனது மனதில் தோன்றியது. சரியாக எரிய வைப்பதற்கும் முன்னதாக, வெசாக் வெளிச்சக்கூடு எரிந்து போனதே என்ற சோகம் எனது மனதில் நிரம்பியது.
D D

Page 12
அமரர் கே.ஜி. அமரதாஸ்
அன்பினால் பல இனத்தவர்களுடன் பிணைக்கப் பட்டிருந்த பண்பான ஒருவர்தான் திரு. கே.ஜி. அமரதாஸ. இவர் 1986ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் நாள் சனிக்கிழமை காலமானார். அதை அறிந்து துயரடைந்த இலங்கையர் ஒரிருவரல்ல ஆயிரம் ஆயிரம் பேர் எனில் மிகையாகாது. இவர்களில் அரைவாசிக்குக் குறையாத வர்கள் தமிழர்கள் என்று துணிந்து கூறலாம். எல்லோருடனும் மிக நெருங்கிப் பழகுவதில் ஆனந்தம் கண்ட அமரதாஸ், தமிழ் மொழியை நேசித்தார். தமிழ் நண்பர்களுடன் பெரிதும் அன்பாகப் பழகினார். தமிழறிந்தவர்களுடன் அணுக்க உறவோடு இருக்கவே விரும்பினார். அவருக்கு மிகவும் நெருக்கமாயிருந்த எனக்குத் தெரிந்தவர்களுள் பழம்பெரும் எழுத்தாளர்கள் திரு. சோ. நடராஜா, பேராசிரியர் கலாநிதி ம.மு. உவைஸ் ஆகியோர் இருவர். அறிவில் முதிர்ந்த பெளத்த பிக்குகளுடன் எத்தனைக்கெத்தனை மரியாதையுடன் நயமாகப் பழகுவாரோ, அதே போன்று தமிழ், முஸ்லிம் அறிஞர்களுடனும் பெரிதும் சினேகமாகவே பழகுவார். அறிஞர்கள் அனைவரும் அவருக்கு "உள் வீட்டுப் பிள்ளைகள்' - அதாவது, தனது உறவினர் போல் மதித்து அவர்களுடன் பழகுவார்.
1957ம் ஆண்டில், இலங்கைக் கலைக் கழகத்திலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தின் இறுதியில் கலைக் கழகத்தில் முதற் செயலாளராயிருந்த திரு. கே.ஜி. அமரதாஸ் தமிழில் கையெழுத்திட்டிருந்தார். அக்கடிதத்தைப் பற்றி கலாநிதி

வெசாக் கூடு 0 21
ம.மு. உவைஸ் அவர்களுடன் ஆலோசித்தபோது, அவர் கையெழுத்திடுவது மாத்திரமல்ல, அழகான நடையில் தமிழ் எழுதும் அளவுக்குப் பயின்றுள்ளார்” எனக்கூறினார். பின்னர், அவரைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் பல கிடைத்த சமயம் "எப்படித் தமிழ் படித்தீர்கள்” எனக்கேட்டேன். "சுய முயற்சிதான்" எனப் பதிலளித்தார். தான் கலைக் கழக அலுவலகம் செல்லும் சமயங்களில், தமிழில் வாசித்துப் பிழைகளிருந்தால் திருத்தும் படி கூறியதாகவும், தமிழில் எழுதி திருத்தித் தரும்படி கேட்டதாகவும் கலாநிதி உவைஸ் என்னிடம் கூறினார். 'பலரிடம் கேட்டுத் தமிழைப் படித்தேன்' என்று திரு. அமரதாஸ் ஒரு சமயம் என்னிடம் சொன்னார். அவரின் தமிழ் எழுத்துக்கள், தனித்தனி எழுதப்பட்ட மணிமணியானவைகளாயிருந்தன.
லண்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியான, திரு. அமரதாஸ் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நல்ல நடையில் எழுதும் திறமை வாய்ந்தவர். அதனால்தான், ஐம்பத்தைந்தாவது வயதில், கலாச்சாரத் திணைக் களத்தின் சேவையிலிருந்து இளைப்பாறிய அவரை, அமைச்சரவை அனுமதியுடன் கலாசார அலுவல்கள் அமைச்சர் மீண்டும் அமைச்சில் கடமையாற்றும்படி வேண்டிக் கொண்டார். தனது கடைசி நாள் வரை, கலாசார அலுவல்கள் பிரதிப் பணிப்பாளராக
இருந்தார். அமைச்சின் பிரசுரங்களில் தொன்னூறு
விகிதமானவற்றிற்கு ஏதோ ஒரு விதத்தில் அவரே பொறுப்பாயிருந்தார். சிங்களத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சிங்களத்திற்கும் பல ஆவணங்களையும் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.

Page 13
22 0 ஜி. பி. சேனாநாயக்க
பாட்டுக்கொரு புலவன்’ பாரதியின் கவிதைகளை அவர்தான் முதன்முதலில் சிங்களத்தில் மொழி பெயர்த்தார். பாரதி நூற்றாண்டின் போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பிரசுரித்த சிங்கள் நூலில், அவர் மொழி பெயர்த்த பாரதியின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழிலிருந்து, பாரதியின் வாழ்க்கை வரலாற்றைச் சிங்களத்திற்கு மொழி பெயர்த்துதவிய திரு அமரதாஸ்தான் இந்நாட்டின் பெரும்பான்மையினருக்கு, பாரதியை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தார். "மகாகவி பாரதி” எனும் சிங்கள வரலாற்று நூலின் இறுதியில், அவர் மொழி பெயர்த்த "பாப்பாப் பாட்டு" இடம் பெற்றுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாற்று நூலை, பாரதி நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கல்ஹின்னைத் தமிழ் மன்றம் 1982 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினோராம் நாள் பிரசுரித்தது.
திரு. அமரதாஸ்வின் தமிழ்ப் பணிக்காக தமிழ் அலுவல்கள், பிரதேச அபிவிருத்தி அமைச்சு பொன்னாடை போர்த்தி அவரை கெளரவித்து, அமைச்சு அலுவலகத்தில் பல தமிழறிஞர்கள் முன்னிலையில், 1983 ம் ஆண்டில் நடைபெற்ற வைபவமொன்றில் அப்பொழுது பிரதேச அபிவிருத்தி அமைச்சராயிருந்த மாண்புமிகு திரு. செல்லையா ராஜதுரை அவருக்குப் பொன்னாடை போர்த்தினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் முன்னாள் தமிழ்ச் சேவைப் பணிப்பாளரும் பின்னர் இலங்கைத் திரைப்படக் கூட்டுத் தாபனத்தின் பணிப்பாளராய் இருந்தவருமான கலாநிதி கே.எஸ். நடராஜா, அமைச்சின் செயலாளர் அமைச்சின் தமிழ் அலுவல்கள் பணிப்பாளர் போன்ற பிரதான அதிகாரிகள், பத்திரிகை ஆசிரியர்கள் போன்ற பிரமுகர் பலர் அவரின்

வெசாக் கூடு 9 23
தமிழ்ப்பணியை மதித்து இவ் வைபவத்தில் கலந்து கொண்டனர்.
1981 ம் ஆண்டு மார்ச் மாதம் 'உத்தமர் உவைஸ்" எனும் நூல் கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் ஏழாவது பிரசுரமாக வெளிவந்தது. மார்ச் மாத இறுதியளவில், அவர் வீடுசென்று திரு. அமரதாஸாவிற்கு இந்நூலின் ஒரு பிரதியை அன்பளிப்புச் செய்துவிட்டு வந்தேன். "ஒரு நல்ல பணி செய்துள்ளிகள்” என்று திரு அமரதாஸ் என்னைத் தட்டிக் கொடுத்தார். மேலும் "உரியவருக்கு, உரிய கெளரவம் செய்துவிட்டீர்கள்” என்றும் சொன்னார். 'மிக்க நன்றி” என்று கூறிவிட்டுத் திரும்பினேன். சுமார் இரண்டு மாதத்தின் பின்னர் என்னை வீடு தேடி வந்து சந்தித்தார். கையில் எழுத்துப்பிரதி ஒன்றிருந்தது. வழக்கமான பேச்சுக்களின் பின்னர் "உங்கள் உத்தமர் உவைஸ் நூலைத் தழுவி சிங்களத்தில் அவரின் வரலாற்றை எழுதியுள்ளேன். இது நூல் வடிவு பெற வேண்டும்" என்றார். "நான் கேட்டுக் கொள்ளாமலே இதனைச் செய்துள்ளிகளே, என்ன சன்மானம் தரவேண்டும்?” என்றேன். அவர் முகத்தில் கோபப் பாவனை தோன்றியது. ஆனால் அதை அவர் வெளிக்காட்டவில்லை. கோபத்தை அடக்கிக்கொண்டு நல்ல நிதானமாகச் சொன்னார். "உவைஸ் அவர்களின் அரிய சேவைபற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் பல வருட காலமாக அவருடன் நெருங்கிப் பழகி வருகிறேன். அவரின் சேவைக்கு இது என் காணிக்கை. நீங்கள் இதை வெளியிடுவதுதான் எனக்குத் தரும் சன்மானம்' என்றார். அவரின் வேண்டுகோள்படி "உவைஸ் சிரித்த"கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் பதினெட்டாவது பிரசுரமாக 1984 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. நூலின் பிரதியொன்று அவரிடம் கொடுக்கப்பட்ட சமயம், அவரின் முகத்தில்

Page 14
24 9 ஜி. பி. சேனாநாயக்க
தோன்றிய மகிழ்ச்சிப் புன்னகை இன்னமும் என் மனக்கண்முன்னே சிலைமேல் எழுத்துப்போல் நிற்கிறது.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் தவிர்ந்து சமஸ்கிருதம், பாளி போன்ற ஏழு கீழைத்தேய மொழிகளில் அவர் அறிவு பெற்றிருந்தார். எனவே, அவர் ஒரு மொழி வல்லுனர். இதனால் அவர் ஆழமான அறிவு பெற்றிருந்தார். பல ஆங்கிலக் கவிதைகளைச் சிங்களத்திலும், தமிழிலும் மொழி பெயர்த்துள்ளார். மகாகவி இக்பாலின் உர்துக் கவிதைகள் சிலவற்றையும் தமிழில் செய்திருப்பதாக என்னிடம் சொன்னார்.
1925ம் ஆண்டு மே மாதம் பத்தாம் திகதி மாத்தறைக்கு அண்மையிலுள்ள பம்புறன எனுமிடத்தில் பிறந்த திரு. அமரதாஸ், அவரின் பெற்றோருக்கு ஒரே மகன். இரு சகோதரிகள் மாத்திரமே அவரின் உடன் பிறந்தவர்கள். நொறின் எனும் பெண்மணியுடன் இனிது இல்லறம் நடாத்தி நாலு ஆண்மக்களுக்குத் தந்தையானார். "நேரத்தை வீணாக்குவதுதான் எனக்கு மிக வெறுப்பான செயல், வேலை செய்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்; திருப்தி காணுகிறேன்" என்று கூறிய அமரதாஸ், தனது அறுபத்தோராவது வயதில் வேலையிலிருக்கும்போதே காலமானார். 1986, ஜூலை 28ம் திகதி திங்கட்கிழமை மாலை ஐந்து மணிக்கு அவரின் பூதவுடல் கல்கிஸ்ஸை மயானத்தில் தகனஞ் செய்யப்பட்டது.
- எஸ். எம். ஹனிபா


Page 15