கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இஸ்லாத்தில் மகளிர் நிலை

Page 1
இஸ்லாத்தில்
மகளிரும் சாட்சியம்
பேராசிரியர் :
முஸ்லிம் பெண்கள் ஆராய்
 

Desi og
பற்றிய இஸ்லாமிய
கமறுதீன் கான்
ச்சி செயற்பாட்டு முன்னனி
°0

Page 2

இஸ்லாத்தில் மகளிர் நிலை -மகளிரும், சாட்சியம் பற்றிய இஸ்லாமிய சட்டங்களும்,
பேராசிரியர் கமறுத்தீன் கான் முன்னாள் இஸ்லாமிய வரலாற்றுப் பிரிவுத் தலைவர் (பகவல்பூர் இஸ்லாமிய 5itojë Gurg Too)
பதிப்பு சுல்பிகா ஆதம்
மொழிபெயர்ப்பு ஏ.இக்பால்
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயற்பாட்டு முன்னணி, 17. பார்க் அவனியு, கொழும்பு - 5
1996

Page 3
முன்னுரை
இஸ்லாத்தில் மகளிர் நிலை; - மகளிரும், சாட்சியம் பற்றிய இஸ்லாமியச் சட்டங்களும்.
இஸ்லாம் ஓர் ஆத்மீக வழிகாட்டலுக்குரிய ஒரு மார்க்க மாக மட்டுமல்லாது, நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற, சட்டதிட்டங்களைத் தெளிவாக வரையறுத்துக் கூறுகின்ற ஒரு வாழ்க்கை முறையாகவும் அமைகின்றது. இஸ்லாமியச் சட்டதிட்டங்களை இறைவன் அல்குர்ஆன் மூலமும், நபிகளா ரின் வாழ்க்கை முறை மூலமும் மக்களுக்கு எடுத்துக் கூறி யுள்ளான். 1400 ஆண்டுகளுக்கு முன்னிறக்கப்பட்ட குர்ஆன் இன்றுவரை என்னென்றைக்கும் மாற்றமடையாத நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இறைவன் மனிதர்களுக்கு வழிகாட்டவே அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இதிலுள்ள விடயங்களை ஒளிவுமறைவற்ற விதத்தில், எல்லோரும் தெளிவாக அறிந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைத்து அருளியுள்ளான். எழுத, வாசிக்க முடியாத உம்மி நபி மூலம், சாதாரண மக்களுக்கு விளங்கும் வகையிலேயே இவற்றை வழங்கினான். "ஒவ்வொருவரும் இதனை, வாசித்து, ஆய்ந்து உண்மைகளை கண்டறிந்து கொள்ள வேண்டும்” என்றும் அவன் குர்ஆனில் கட்டளை யிட்டுள்ளான். இதன் மூலம் குர்ஆனிலுள்ள விடயங்களை ஆய்ந்தறிந்து கொள்ளும் உரிமையை, இம்மண் ணில் பிறந்துள்ள மனிதர்கள் ஸ்ல்லோருக்கும் இறைவன் உத்தரவாத மளித்துள்ளான்.
மேலும் நபியவர்களின் வாழ்க்கை நடைமுறைகள் குர்ஆன் வசனத்திற்கு கொஞ்சமும் மாறுபடாத வகையிலேயே அமைந்திருக்கும், ஹதீஸ் எனப்படும் இந் நடைமுறைகள்

வாய்மொழி மூலமும், எழுத்துமொழி மூலமும் நம்மை வந்தடைகின்ற வாய்ப்புக்களை மகிமைக்குரிய சஹாபாக்கள் எமக்களித்துள்ளார்கள். இந் நடைமுறைகள் பற்றிய விளக்க வுரைகள், எப்பொழுதும் வாய்மையுடையதாக இருப்பதில்லை. சிலவேளைகளில் பக்கச்சார்பான விளக்கங்களையும் நோக்கு களையும் உள்ளடக்கியதாக இருப்பதைக் காணக்கூடிய தாகவுள்ளது. எவ்வாறாயினும், நாயகத்தின் நடைமுறைகள் குர்ஆனுக்கு மாறுபட்டிருக்க முடியாது. இவ்வுலகில் அவர் களைத் தவிர குர்ஆனுக்கு விஸ்வாசமாக நடந்தவர்கள், நடப்பவர்கள் எவரும் இருக்க முடியாது. எனவே ஹதீஸ்களில் ஏற்படும் முரண்பாடுகள், அவற்றை எமக்குப் பரிமாறிய வர்களின் புலக்காட்சிகளையும் உள்ளடக்குவதால் ஏற்பட்டதே யாகும், எனவே குர்ஆன் கூறும் திட்ட வட்டமான சட்டங் களுக்கு முரணாக அமையும் ஹதீஸ் விளக்கங்களையும், நோக்குகளையும் கருத்திற் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. இத்துடன் இவ்வாறு செய்வது எவ்வகையிலும் எம்பிரானைப் பாதிக்கப் போவது மில்லை,
எமது கெளரவத்திற்குரிய அல்குர்ஆன் வியாக்கியானவிய லாளர்களான என அபுல்கலாம் ஆசாத், அஷ்கர் அலி எஞ்சினியர், கமாறுத்தீன் கான் போன்றோரின் கருத்துப்படி அல்குர்ஆன் வசனங்களை, இரு விடயங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட முடியும்,
() என்றென்றைக்கும் மாற்றமுடியாத, ஆத்மீக வாழ்க்கை யுடன் தொடர்புடைய வரையறைகள், சட்டதிட்டங்கள் போன்றன. இவ்வசனங்களுடன் காரணம் கூறும் வாக் கியங்கள் எதுவும் காணப்படுவதில்லை, அது இறை வனின் கட்டளை, அதற்கான காரணம் கூற வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை,

Page 4
(2) சமூக அல்லது லெளகீக வாழ்க்கையுடன் தொடர்பான சட்டவரையறைகள், இவற்றிற்கு பினன்ணி, சந்தர்ப்பம், காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றை விளக்க, மேலும் வசனங்கள் இணைக்கப்பட்டுமிருக்கும். எனவே வியாக்கியானம் செய்வோர் இவை பற்றி கவனத்திற் கொள்ள வேண்டிய அவசியமுண்டு.
அல்குர்ஆனை வியாக்கியானம் செய்யும் போது அவ்வசனங் களுக்கான பின்னணியும் எப்பொழுதும் இணைத்து நோக்கப்பட வேண்டியது அவசியமாகும், அத்துடன் அதற்கான பொருள் கொள்ளலும் இப்பின்னணியுடன் இணைத்தே கொள்ளப்பட வேண்டும். இந்த நிலைப் பாட்டுடன் பகுத்தறிவுள்ள எவரும் முரண்பட முடியாது. குறிப்பாக சமூக வாழ்வுடன் தொடர்பான அம்சங்களை எடுத்து நோக்கும்போது இது முக்கியமானது, ஏனெனில் சமூக வாழ்வு இயங்கு நிலைப்போக்குடையது. மாறிக் கொண்டே இருப்பது நபி களாரின் வாழ்க்கைக் காலத்திற்கு பின், நேர்வழி நடந்த சகாபாக்கள் (உ+ம்:- உமர் ( ரழி) காலத்தில்) இம் மாற்றங்களுக்கு ஏற்ப, சில நடைமுறைகளை மாற்றியமைத்த சம்பவங்கள் இதற்குச் சான்று, மேலும் குர்ஆனில் ஒரு விடயம் குறித்து பல இடங்களில் அறிவுறுத்தப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பாக ஆய்வு செய்யும் ஒருவர், ஓரிடப் பொருளை மாத்திரம் கருத்திற் கொண்டு, அதைப் பொதுமைப்படுத்துவது அறிவின் பாற்பட்டதாக் அமைய முடியாது.
அல்குர்ஆனின் ஆரம்ப கால வசனங்கள் மனிதக்குழுவை ஒருமைப்படுத்திய ஒரு சொல் மூலம் விளிப்பதை பல இடங் களில் அவதானிக்க முடியும், எனினும் பிற்காலத்தில் இறக்கப்பட்ட வசனங்கள் மிக தெளிவாக ஆண்களையும், பெண்களையும் குறிக்கும் சொற்களை உ+ம்:- ஒவ்வொரு வசனங்களிலும் மீள வலியுறுத்திக் கூறுவதையும் காணலாம், இங்கு நோக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமானது எல்லாச் சட்டத்திட்டங்களிலும் ஆணையும், பெண்ணையும் சமபங்காளி

களாக இறைவன் நோக்குவதாகும். இதுவே இஸ்லாமிய, குர்ஆனிய நிலைப்பாடாகும்.
இச் சிறிய கையேட்டில் அடங்கும் ஆய்வுக் கட்டுரையானது பாகிஸ்தானில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமிய சாட்சிய சட்டத்திற்கு எதிராக பெண்கள், எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினர், இதற்கு எதிராக பல உலமாக்கள் அறிக்கைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு, இவர்களைத் தண்டிக்க வேண்டும் என அரசைக் கோரினர். இதற்குப் பதிலளிக்கவே பேராசிரியர் கமறுதீன் கான் அவர்கள் இதனை வெளியிட்டுள்ளார்கள்.
இக் கட்டுரையின் ஆரம்பப் பகுதி குர்ஆன் வியாக்கியானத் திற்கான உரிமையை எடுத்துக் கூறுவதோடல்லாது மிக முக்கியமாக இஸ்லாத்தில் பெண்களின் நிலை எவ்வாறுள்ளது; குறிப்பாக சாட்சியம் பற்றிய இஸ்லாமியச் சட்டங்கள் எவ்வாறுள்ளன என்பதை ஆய்வு செய்து எம்மிடையேயுள்ள முரண்பாடுகளுக்கு விளக்கமளிக்கின்றது,
இந்த வகையில், பேராசிரியரவர்கள், சாட்சியம் தொடர் பான எல்லாக் குர்ஆன் வாக்கியங்களையும் எம்முன் வைக்கின் றார். அவற்றின் பின்னணி, நிபந்தனைகள் பற்றித் தெளிவு படுத்துகின்றார், ஒவ்வொரு வாக்கியமும் தனித்தனியே வலியுறுத்தும் விடயங்கள் என்ன என்றும், அவற்றை இணைத்து நோக்கி என்ன முடிவுக்கு வரமுடியும் என்பது பற்றியும் தெளிவாக விமர்சனம் மூலம் எடுத்துக் கூறுகின்றார்.
பெண்கள் மானிடவர்க்கத்தின் சமபங்காளியாகவே இறை வன் கொள்கிறான்; இஸ்லாம் கொள்கிறது; ஆனால் முஸ்லிங்களாகிய நாம் மறுக்கின்றோம்; இது அல்குர்ஆனுக்கு அதனை உருவமைத்த இறைவனுக்கும் செய்யும் துரோகமாகும் என்பதையும் பல ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகின்றார்.

Page 5
"உண்மையை கண்டு கொள்வது ஒவ்வொரு முஸ்லிமுக் கும் கடமையாக்கப்பட்டுள்ளது", எனவே எவருக்கும் யாரும் அறிவுறுத்த முடியாது, அவரவரே கண்டு கொள்வதே நியாயமுமாகும், எனவே வாசகர்களே, உங்களுக்கு இட மளித்து நாம் இவ்விடயத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டிய வேளை வந்து விட்டது. எனினும் ஓரிரு விடயங்களுடன் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள எனக்கு நீங்கள் அனுமதி தர வேண்டும். இக் கையேட்டை வெளியிடும் எமது அமைப்புப் பற்றியும் அதன் செயற்பாடு பற்றியும் ஒரிரு வசனங்கள் கூற வேண்டும். எமது முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயற்பாட்டு முன்னணி 1986 இல் ஸ்தாபிக்கப்பட்டு, முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகள், தேவைகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. தனது செயற்பாடுகளை இஸ்லாமிய கோட்பாட்டுக்குள், பிணைத்துக் கொண்டு, இறைவன் எமக்களித்துள்ள சகல உரிமைகளையும் வென்றெடுக்க முயன்று வருகின்றது. இந்த வகையில் “இஸ்லாமிய சட்டத்தின் கீழ் வாழும் பெண்கள்" பற்றிய உலகளாவிய ஆய்வு முக்கிய இடம் பெறுகின்றது. குர்ஆனிய சட்டங்களுக்கான முற்போக்கு வியாக்கியானங்களைக் கண்டு கொள்வதற்கு ஏனையோருக்கும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இந் நோக்கத்தின் அடிப்படையிலேயே பேராசிரியர் கமறுதீன் கான் அவர்களின் இந்தச் சிறிய குர்ஆனிய விளக்கவுரையை வெளியிட முன் வந்துள்ளது.
நல்லது கண்டு நற்பேறடைய எல்லாம் வல்ல இறைவன் எமக்கருள் புரிய வேண்டும்.
சுல்பிகா ஆதம் செயற்றிட்ட இணைப்பாளர், முஸ்லிம், பெண்கள், ஆராய்ச்சி, 1996. 09.27 செயற்பாட்டு முன்னணி,

இஸ்லாத்தில் மகளிர் நிலை
கமறுத்தீன் கான் (பகவல்பூர் இஸ்லாமிய சர்வகலாசாலை, இஸ்லாமிய வரலாற்றுப்பிரிவு முன்னாள் தலைவரும், பேராசிரியரும்.)
மகளிரும், சாட்சியம் பற்றிய இஸ்லாமியச் சட்டங்களும்,
இஸ்லாத்தில் மகளிர் நிலை பற்றிய கருத்துக்களை முன் வைப்பதற்கு முன், அதனுடன் தொடர்பான மற்றுமொரு விடயம் பற்றி கலந்துரையாடுதல் அவசியம் என நினைக்கின்றேன். அதாவது இஸ்லாமியச் சட்டங்களுக்கு வியாக்கியானம் செய்தல் பற்றியதாகும்,
சமய உலமாக்கள் இதற்குத் தாம் மாத்திரமே தகுதி பெற்றவர்கள் என உரிமை கோருகின்றனர். இதற்கு ஆதாரமாகக் குறிப்பிட்ட ஹதீஸ் ஒன்றையும் காட்டுகின்றனர், அதாவது “கல்விமான்கள் நபிபெருமானாரின் வாரிசுகளாகும்”. இதன் அடிப்படையில் குர்ஆனையும், சுன்னாவையும் வியாக்கியானம் செய்யும் தகுதி தங்களுக்கு மாத்திரமே உண்டு என்று கூறுகின்றனர், இந்த ஹதீஸ் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதும் திரிவுபடுத்தப்பட்டதுமாகும். ஏனெனில் குர்ஆன் கல்விமான்களுக்கு என்று கூறப்பட்டதல்ல, மனுக்குலத்தின் எல்லா ஆண்களுக்கும், பெண்களுக்கும் என எழுதப்பட்டதாகும், மக்காம் காலத்தில் அடிப்படைத் தேவைகள் பற்றி விபரிக்கப்பட்டபொழுது இறைவன் மானிடர்களை ஒ! மக்களே என்று அழைக்கின்றானே தவிர ஓ! அறிஞர்களே என்று அழைக்கவில்லை,

Page 6
அவ்வாறே மதீனா யுகத்தில் பிறப்பிக்கப்பட்ட அழைப்புகளில் முஸ்லிம்கள் ஒ! விசுவாசிகளே என அழைக்கப்பட்டுள்ளனர். உண்மையில் "ஓ! அறிஞர்களே’ என்ற கருத்தைத் தரும் சொற்கள் குர்ஆனில் எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது உபயோகிக்கப்படவில்லை. ஏனெனில் நபிபெருமான் (ஸல்) அவர்கள் அறிஞர்களை மட்டும் கொண்ட சமூகம் ஒன்றிற்கு இஸ்லாத்தைப் போதிப்பதற்காக இறைவனால் நியமிக்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. முழுச் சமுதாயத்திற்கும் அவ்வாறு செய்யவே அவர்கள் தெரிவு GoFuiuuuuuuuunt fré956î7 "கூறுக, ஒ மானிடர்களே, உங்கள் அனைவருக்கும் நான் இறைவனின் தூதுவன் ஆவேன்”, (7:158), "நான் உம்மை அனுப்பியுள்ளது வேறு எந்தக் காரணத்திற்கும் அன்று. முழு மனித வர்க்கத்திற்குமே நன்நோக்கங் களுக்காகவும், அவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்குமாகவே யாகும்” (34:28), அத்துடன் இறைவனின் தூதை ஒரு அறிஞனிடம் இருந்து (உலமாக்கள்) மக்கள் கற்றறிய வேண்டுமெனக் கூறுகின்ற எந்தவொரு வாக்கியமுமே குர்ஆனில் இல்லை. அதற்கு முரனாக இறைவனின் அறிவுறுத்தல்களை விளக்கிக் கொள்வதற்கு தன்னுடைய பகுத்தறிவை உபயோகிக்கு மாறு, மனிதர்களை இறைவன் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்கியங்களில் கேட்டுக் கொண்டுள்ளான். அது மட்டுமன்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அறிஞர்கள் மாத்திரமே விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் மர்மமாக எழுதப்பட்டிருந்த தால் அது முழு மனித சமுதாயத்திற்கும் அளிக்கப்பட்டதாகக் கருத முடியாது. எனவேதான் குர்ஆனை இறைவன் தெளி வாக அரபு மொழியில் இறக்கியுள்ளதாகக் கூறியுள்ளான், (16:103; 26:195); வேரொரு இடத்தில் இறைவன் இவ்வாறு கூறு கின்றான். "நாம் தங்களுக்குத் தெளிவான தூதுகளை, குறியீடு களை அனுப்பியுள்ளோம், இறை நம்பிக்கை இல்லாதவர்களைத் தவிர வேறு எவருமே அவற்றை நம்பாதிருக்கவில்லை” (2:9),

இவ்விடத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் நபி பெருமான் அவர்கள் கற்றறிந்த ஒருவராக இருக்கவில்லை. அவர் ஒரு எழுத வாசிக்கத் தெரியாதவராகவே இருந்தார். (உம்மி) (7:157), அவருடைய அனேகமான தோழர்களும் அந் நிலையிலேயே இருந்தார்கள், எனவே கற்றறிந்தவர்கள் மாத்திரம் விளங்கிக் கொள்ளக்கூடிய ஒரு சமயத்தை அவர் போதித்திருக்க முடியாது. அவ்வாறு அவர்கள் செய்திருந்தால் அவர்களுடைய தோழர்களும் அச் சமயத்தை விளங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்களுள் அனேகள் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாக இருந்தார்கள். மேலும் அவர்கள் இறுதித் தூதராவார். (33:4) மேலும் தற்கால, கடந்தகால உலமாக்கள் அனைவரையும் விட நபி அவர்களின் தோழர்கள் குர்ஆனையும் இஸ்லாத்தையும் பற்றிய நல்ல விளக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.
குர்ஆனில் உள்ள மற்றொரு வசனம் பின்வருமாறு:-
இது அல்பதார் என்னும் மிகப் பெரிய அறிஞரால் வியாக்கியானம் செய்யபட்டுள்ளது. “எமக்கு இந் நூலை அளித்தவன் அவனே, அதில் உள்ள வசனங்களில் சில தீர்க்கமானவையாகவும் கருத்துக்களை தெளிவாக முன்வைப் பனவையாகவும் வேறு சில அவற்றின் தொடர்ச்சியாகவும் உள்ளன. இதன் கருத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் தொடர்ச்சியான விடயங்களை வேறுபடுத்தி, பிளவுகளை ஏற்படுத்தக் கூடியனவாக, தமது சொந்த வியாக் கியானத்தையும் கொடுக்க முற்படுபவர்களாகவும் இருப்பர், அவ் வசனங்களின் வியாக்கியானங்களை இறைவனை விட வேறு எவருமே செவ்வனே அறியமாட்டார்கள். நன்கு கற்றறிந் தவர்கள் இவ்வாறு கூறுவர், "நாம் அதனை நம்புகின்றோம். அதில் கூறப்பட்டவை யாவும் இறைவனாலேயே சொல்லப் பட்டவை" (37), ஆனால் இதே வசனத்தை சில அறிஞர்கள் பின்வருமாறு வியாக்கியானம் செய்கின்றனர். “அதன் வியாக்கி யானத்தை இறைவனை அன்றி வேறு எவருமே அறியமாட்
3

Page 7
டார்கள். எனவே நன்கு கற்றறிந்தவர்களாகிய நாம் அதனை நம்புகின்றோம்” என்று கூறுவர். அத்துடன் "நன்கு கற்றறிந்த வர்கள்” என்பது உலமாக்களையே குறிக்கின்றது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர். இது ஒரு கேலிக்குரிய கூற்றாகும். ஏனெனில் அவை நபிபெருமானின் தோழர்களையே குறிக் கின்றது. அவர்கள் கல்விமான்களாக இருக்கவில்லை. அனேக மானவர் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாகவே இருந்தார்கள் என்றும், அல்தபாரி, இவ்வகையான மாறுபட்ட வியாக்கி யானத்தை எந்த வகையிலுமே ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், அது தேவை அற்றது எனவும் கருதுகின்றார்,
ஆகவே நாம் குறித்த உலமாக்களிடம் பின்வரும் வினாக் களை விடுக்க விரும்புகின்றோம். குர்ஆனிலும் சுன்னாவிலும் உள்ள விடயத்தை வியாக்கியானம் செய்து, அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள், திருக்குர்ஆனின் கூற்றுக்களை ஒப்புக் கொள்ளாதவர்கள் எனவும், இஸ்லாமிய கொள்கைகளை துறந்தவர்கள் எனவும், சமயப் பகைவர்கள் எனவும், தாம் செய்த குற்றத்திற்குப் குற்றப்பரிகாரம் செய்யாதவிடத்து கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும், எனவும் இஸ்லாமிய அரசாங்கங்களை வற்புறுத்தும் ஏகபோக உரிமையை அவர்களுக்கு யார் அளித்தார்கள்? குர்ஆனில் உள்ள சாட்சி யம் பற்றிய சட்டத்தை ஏற்றுக் கொள்ளாததற்காக தண்டனை பெற மறுத்து அதற்கெதிராக ஊர்வலத்தில் சென்ற பெண்களின் (லாகூரில் இருக்கும் உலமாக்கள் குழு ஒன்று) விவாகத்தை ரத்துச் செய்யப்போவதாக பிரகடனம் செய்வோம் என அச்சுறுத்தினார்கள், இன்னுமொரு சந்தர்ப்பத்தில் சமயக் கல்வியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் லாகூரின் ஜின்னா வீதியில் ஆட்சேபனை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். மேல் குறிப்பிட்ட பெண்களால் இன்னுமொரு ஊர்வலம் நடாத்தப்பட்டால் அவர்களுக்குத் தண்டனை அளிக்கும் பொறுப்பைத் தாம் ஏற்று, அப் பெண்களை அடித்து அவ ரவர் வீடுகளிற்கு அனுப்பப் போவதாகக் கூறினர்.

ஊர்வலத்தில் செல்லும் பெண்களைத் தூஷிப்பதும், அவர்களுக்குக் கண்டனம் தெரிவித்து பத்திரிகைகளில் அறிக்கை வெளியிடுவதும், தமது புனிதக் கடமையென பெரும்பாலான மெளலவிமார் கருதுகின்றார்கள். அவர்களுள் அனேகமானோர், இவ்வாறு ஊர்வலத்தில் செல்லும் பெண்கள் யாருக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கின்றார்கள்? இறைவனுக்கு எதிராகவா? அல்லது அவனது தூதர்களுக்கு எதிராகவா? குர்ஆனை திருத்தம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோருகின்றார்களா? எனக் கேட்கின்றனர். இவர்கள் தவறாக வழிநடத்தப் பட்ட, மேல்நாட்டு மோகம் கொண்ட ஏற்கனவே மாசடைந்த சமுதாயத் தைச் சேர்ந்த பெண்கள் என்றும், அவர்கள் இவ்வாறு விஷமத் தனத்தில் ஈடுபடுவதை பலாத்காரத்தைப் பாவித்தாவது நிறுத்தி விட வேண்டுமென்றும் வேறு சிலர் கூறுகின்றார்கள்
இஸ்லாத்தைப் பற்றிய போதிய அறிவு இல்லாத சாதாரண மக்கள் கூட.பெண்களுக்கு எதிராக இப் போராட்டத்தை நடாத்துவதில் முனைந்துள்ளனர், நாள் தவறாது மகளிரைத் தூஷிக்கின்ற, அவர்களுக்கு எதிராக விஷம் கக்கும் வார்த்தை களைப் பயன்படுத்துகின்ற, பிரபல்யமான சமய அறிஞர் ஒருவரும் உள்ளார். குறித்த ஊர்வல சம்பவத்தின் பின்னர் - இவர் மிகவும் குரூரமான கருத்துக்களை தினந்தோறும் கூறி வருகின்றார். "மதத்தை எதிர்த்து நிற்கும் (முர்த்தாத்) ஒருசில பெண்கள்” என்னும் தலையங்கத்தின் கீழ் கராச்சி நாளேடு ஒன்றில் வியக்கத்தக்க கதை ஒன்றையும் ஒரு ஆசிரியர் வெளியிட்டுள்ளார். கராச்சி சர்வகலாசாலையில் சமயத் தீவிர வாதிகளைக் கொண்ட மாணவர் அமைப்பொன்று இக் கதை யில் சில அமைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அச் சர்வகலாசாலை யின் ஒவ்வொரு சுவரிலும் ஒட்டினார்கள், இவ்வாறு செய்த தன் நோக்கம், அங்கு கல்வி கற்கும் பெண் மாணவர்களின் எதிர்காலச் சுபீட்சம், ஆண்களின் கைதிகளாக வாழ்வதிலேயே தங்கியுள்ளது என அறிவுறுத்தவும், பெண்களைத் தரத்தில் குறைந்த மானிடர்கள் என்றும், அவர்களை அடக்கி வைத்திருப்ப

Page 8
தனாலேயே இஸ்லாத்தையும், முஸ்லிம் சமுதாயத்தையும் மேம் படுத்த முடியுமென மாணவர்களுக்கு அறிவுறுத்தவுமேயாகும்.
மிகவும் வருந்தத்தக்க ஒரு அறிக்ககையினை ஒய்வு பெற்ற பிரதம நீதி அரசராகிய நீதிபதி கூதீருதீன் அகமத் வெளியிட்டுள்ளார். உத்தேச சாட்சியங்கள் சம்பந்தமான சட்டத்தை எதிர்த்து ஆட்சேபனை தெரிவித்த பெண்களைப் பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார். “உத்தேச சட்டத்தின் சில பகுதிகள், குர்ஆனின் கூற்றுக்களை அப்படியே கொண்டுள்ளன என்பதை அவர்கள் அறியாரோ? குறித்த குர்ஆனின் கூற்றுக் களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாதிருந்திருக்கலாம். அவர்களின் இவ் ஆட்சேபனை வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும், குர்ஆனை ஏற்றுக் கொள்வதோ, நிராகரிப்பதோ என்பது அவர்கள் தீர்மானிக்க வேண்டிய ஒரு பாரிய விடயம் ஆகின்றது. நம்பிக்கை உள்ள முஸ்லிம்கள் இவ்வகையான சமயத்திற்கு எதிரான, இறைகேடான கூற்றுக்களை வரவேற்க மாட்டார்கள் என்பதில் அவர்கள் ஐயம் கொள்ள வேண்டியதில்லை”. (இக் கூற்று கராச்சியில் "டோன்' என்னும் சஞ்சிகையில் 1983 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வெளியாகியது) ஒய்வு பெற்ற ஒரு நீதிபதியின் இவ் வகையான விவாதம் அவர் வகித்த பதவியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அதற்கு ஒவ்வாத ஒரு கூற்றாகும், சட்ட வல்லுனராகிய அவர் பாரம்பரிய இஸ்லாமிய அடிப்படை சட்டங்கள் குர்ஆனின் கருத்தையே உண்மையில் பிரதிபலிக்கின் றன எனவும், "போதியளவு ஆய்வு செய்யாது தீர்மானம் எடுக்கும் உலமாக்களின் கருத்து" என்ற வகையில் பெண்கள் முன்வைத்த ஆட்சேபனைகளை “வெட்கப்பட வேண்டிய ஒரு விடயம்” எனவும், அவர் கூறியது வருந்தத்தக்க ஒரு விடயதாகும், ஒரு சட்டப் பிர்ச்சினை பற்றி வேறுபட்ட கருத்தொன்றை வைத்திருப்பது ஒரு உன்னதமான நிலையே தவிர ஒரு வெட்கக்கேடான செயலல்ல என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரியும் என்பதை இக் கட்டுரையின் பிற்பகுதியில் எம்மால் நிரூபிக்க முடியும், இஸ்லாமிய சரித்திரத்திலேயே இஸ்லாமிய
6

ஒப்படைச் சட்டம் சட்டவல்லுனர்கள் மத்தியில் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது என்பதேயாகும். எனவே உயர் நீதிபதி அகமத் அவர்களின் தனித்துவமான இக் கூற்றை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இவ்விடயத்தில் குர்ஆனை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பதோ என்பது சர்ச்சைக் குரிய விடயமல்ல, அதில் கூறப்பட்டுள்ள விடயத்தின் பொருளை இன்னது என்று வியாக்கியானம் செய்வதே சர்ச்சைக்குரிய விடயமாகவுள்ளது. நீதி பரிபாலிப்பின் உன்னதமான கோட்பாடுகளில் ஒன்று யாதெனில், ஒரு சட்டத்தைப் பற்றி வேறுபட்ட கருத்துக்களை அறிந்திருப்பதே யாகும், அது இஸ்லாமிய சட்ட்மாக இருக்கலாம் அல்லது வேறு சட்டமாக இருக்கலாம். நீதி அரசரின் அறிக்கையிலுள்ள, குறிப்பிடப்பட்ட பந்தியின் இறுதி வாக்கியம், மக்கள் கும்பல் சட்டத்தை தம் கையில் ஏந்திச் செயற்பட்டு, முஸ்லிம் பெண்களின் சுதந்திரத்தையும் கெளரவத்தையும் அழித்துவிட ஒரு தெளிவான தூண்டுதலாகும், ஓய்வுபெற்ற பிரதம நீதி அரசரொருவர் எவ்வாறு இவ்வகையான பொறுப்புணர்ச்சியற்ற கூற்றை முன்வைக்கக்கூடியதாக இருந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது.
சமயக் கொள்கை மீறல் பற்றிய சர்ச்சை,
ஆட்சேபனை தெரிவித்த இம் மகளிர் சமயக் கோட்பாட்டை மீறி விட்டார்கள் என அனேக உலமாக்களும் சாதாரண மக்களும் பிரகடனப்படுத்தி விட்டார்கள், சாட்சியம் தொடர்பான ஒரேயொரு குர்ஆன் வசனத்தின் அடிப்படையில், அதாவது ஒரு ஆணின் சாட்சியமளிக்கும் ஆற்றலுக்கும் ஒரு பெண்ணின் சாட்சியளிக்கும் ஆற்றலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டின் தன்மையை ஏற்றுக் கொள்ளாததினாலேயே இது நிகழ்ந்தது. இதே விடயம் சம்பந்தமாக குர்ஆனில் உள்ள வேறு ஏழு வாக்கியங்களில் இக்கருத்து குறிப்பிடப்படவில்லை, இச் சந்தர்ப்பத்தில் சமயக் கோட்பாட்டை மீறிவிட்டார்கள் என்ற கருத்துக்கே இடமில்லை. ஏனெனில் குறித்த அளவைப்
7

Page 9
பற்றிய விடயத்தில் கருத்து வேற்றுமை ஏற்படுவது சகஜம், பல பிரபல்ய சட்ட வல்லுனர்கள் இவ்விடயத்தைக் கவனத்தில் எடுத்து அவர்களுடைய ஆக்கங்களில் இவ் விடயத்தைப் பற்றிய பொதுக் கருத்திலிருந்து வேறுபட்ட வகையிலேயே எழுதியுள்ளனர். அதனை இக் கட்டுரையில் பின்னர் விவாதிப் போம். இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புவது யாதெனில், சமயக் கோட்பாட்டை மீறல் என்னும் பிரச்சினை எழுவது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள ஒரு விடயத்தை விசுவாசி ஒருவன் ஏற்கமறுக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரமேயாகும். ஆட்சேபனை ஊர்வலத்தை நடாத்திய பெண்கள் இக் குற்றத் தைச் செய்யவில்லை. சர்ச்சைக்குரிய ஒரு விடயத்தைப் பற்றி அவர்கள் தம் கருத்தைத்தான் முன்வைத்தார்கள். அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு சகல உரித்தும் உண்டு, ஆண் உலமாக்களின் பேரினவாத, சுரண்டல்தனமுள்ள கருத்துக்களை அவர்கள் ஏற்க வேண்டும் என்ற கடப்பாடு எதுமும் அவர் களுக்குக் கிடையாது.
சாட்சியம் பற்றிய சர்ச்சை முஸ்லிம் மகளிர் மத்தியில் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. ஏனெனில் இதனை அடிப்படையாக வைத்து இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் அனேக தீர்மானங்களை எடுத்துள்ளனர். அத் தீர்மானங் களினால் முஸ்லிம் மகளிரின் வாக்குரிமை முற்றாகப் பறிக்கப் பட்டு, அவர்களுக்கு இருந்த அடிப்படை மனித உரிமைகள் шпөйо நீக்கப்பட்டு, அவர்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக்கி ஆண்களின் நிலையான கொடுமைக்கும் ஆளாக்கியுள்ளனர்.
எது எவ்வாறிருப்பினும் சாட்சியம் பற்றிய இஸ்லாமியச் சட்டம் இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று அல்ல என்பது தெளிவு. எனவே அவ்விடயம் பற்றிய விளக்கத்தில் வேறுப்ாடு இருப்பின் அது இஸ்லாத்திற்கோ அல்லது சமுதாயத்திற்கோ எந்தவொரு மாசையும் ஏற்படுத்தாது. ஆனால் இஸ்லாமிய சட்டத்திற்கும் 'ஷரியா சட்டத்திற்கும் முரணான உண்மையான மீறல்கள், சிந்திக்க வேண்டிய ஒரு
8

விடயமாகும், இஸ்லாமிய சமய சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து யாதெனில் ஒரு இஸ்லாமிய நாட்டில், அதன் இறைமை,அந் நாட்டு மக்களுக்கே உரித்தாகுமேயன்றி அரசியல் அமைப்பிற்கு முரணான செயல்கள் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒருவருக்கு உரித்தான தாகாது. அவ்வாறெனின் இவ்வுலமாக்கள் இஸ்லாமிய நடைமுறையற்ற, குர்ஆனிற்கு எதிரான பின்வரும் செயல்களை ஏன் கண்டனம் செய்கிறார்கள் இல்லை, அவையாவன:- இராணுவச் சட்டத்தின் மூலம் ஆட்சி செய்வது, மக்களின் அடிப்படை உரிமைகளை இடைநிறுத்துவது, அந் நாட்டு கொடுக்கல் வாங்கல்களில் வட்டி அறவிடும் முறையைப் பின்பற்றுவது (இது குர்ஆனில் கண்டிப்பாக விலக்கப்பட்ட ஒரு விடயமாகும்), நாட்டில் நடைமுறையில் இருக்கும் பொருளாதாரச் சுரண்டல்களும், மக்கள் மேலாளர் களுக்குப் பணிந்து, பணிபுரியும் ஒழுங்குமுறை முதலியனவாகும். இவ்வகையான செயல்களில் ஈடுபடுபவர்கள் சமயக் கோட் பாட்டை மீறியவர்களாகமாட்டார்களா?
வேறு சில உதாரணங்களை எடுத்துப் பார்ப்போம்: துருக்கி, டியூனிசியா, அல்ஜீரியா போன்ற நாடுகளின் சட்டத்திலும் அலுவலக ஒழுங்கு முறையிலும், பல்தார மணம் செய்வது சட்டபூர்வமற்றதாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வகையான விவாகங்கள் குர்ஆனில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் மேலே குறிப்பிடப்பட்ட அந்த முஸ்லிம் நாடுகளில் உள்ள முஸ்லிம்களை சமயக் கோட்பாடுகளை மீறியவர்களாகக் கருதலாமா? இந் நாடுகளுடனான தொடர்புகளை பாகிஸ்தானிய அரசாங்கம் துண்டிக்க வேண்டுமென ஏன் இந்த உலமாக்கள் கேட்கின்றார்கள் இல்லை? மேலும் துருக்கிய அரசியல் அமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று யாதெனில் அந்நாடு மதச்சார்பற்ற நாடு என்பதேயாகும். இதன் பயனாக அவ் அரசின் நடவடிக்கைகள் எதிலும் சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளைச் சேர்த்துக் கொள்வதில்லை, ஆகையால் துருக்கிய சமுதாயத்தை, முற்றாக இஸ்லாமிய சமயக் கோட்பாடுகளைத் துறந்தவர்களாகக் கருதுவதா?
9

Page 10
இவ்விடயம் பற்றிச் சிந்திக்கும்பொழுது ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது. அதாவது இஸ்லாமிய சட்ட வல்லுனர் களால் தொகுக்கப்பட்டுள்ள 'ஷாரியா சட்டத்தை தம் நாட்டில் அறிமுகப்படுத்தி அதை அமுல் செய்வதற்கு எந்தவொரு முஸ்லிம் நாடாவது கடமைப்பட்டுள்ளதா?
அரச (சமயச் சார்பற்ற) சட்டமும் சமயம் சார்ந்த சட்டங்களும்.
இஸ்லாமிய சரித்திரத்தில் சட்டங்களை வகுப்பதற்கென எந்தவொரு அரச அதிகார சபையாவது, நிறுவப்பட்டதற்கான அத்தாட்சி இல்லை என்பது வியக்கத்தக்க ஒரு விடயமாகும். இப் பொறுப்பு தனிப்பட்ட சட்ட வல்லுனர்கள் கையில் விடப் பட்டது. எனவே தற்காலத்தில் நடைமுறையில் இருக்கும் இஸ்லாமிய சட்டங்களின் தொகுப்பு தனித்து இயங்கிய சட்ட வல்லுனர்களின் தொகுப்பாகும். எனவே அது சட்ட வலு அற்றதாகும், இஸ்லாமிய சட்டத்தைப் பற்றிய கருத்து வேற்றுமைக்கும் தெளிவான விளக்கமின்மைக்கும் இதுவே காரணமாகும்.
தனிநபர் சட்டவல்லுனர்களால் இவ்வகையான இஸ்லாமிய பொதுச் சட்டம், (அரசியல் அமைப்புச் சட்டம்) வர்த்த சட்டம், பொது நிருவாகச் சட்டம் முதலிய சட்டங்கள் எக் காலத்திலுமே அமுல் நடத்தப்படவில்லை. இதனைத் தெளிவாகச் சொல்வ தாயின் அரசுகளைப் பொறுத்தமட்டில் இஸ்லாமிய குடும்ப சட்டத்தைத் தவிர வேறு எந்த இஸ்லாமிய சட்டத்தையும் அவர்கள் எப்பொழுதுமே அமுல் செய்யவில்லை. இக் காரணத்தினால் சட்ட வல்லுனர்களுடைய முயற்சிகள் சாட்சியம் கூறுவதோடு தொடர்புடைய சட்டம் உட்பட நீதிப் பரிபாலன அமைப்புகளில் இஸ்லாமிய தனிநபர் சட்டத்தை அமுல்படுத்து வதற்கு மாத்திரமே அரசாங்கங்கள் உலமாக்களை பதவியில் அமர்த்தின, அதேவேளை இவ் அரசுகள் இவ் அமைப்புகளுக்கு
1 O

சமாந்தரமான நிறைவேற்று ஒழுங்குகளையும் நிர்வாகச் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தின, ஆனால் இம் முயற்சியில் அவ்வரசுகள் உலமாக்களின் சேவைகளைப் பயன்படுத்த வில்லை. இவ்வொழுங்கு இஸ்லாமிய சரித்திரத்தில் தொடர்ச்சி யாக நடைமுறையில் இருந்தது, "ஷரியா சட்டத்தின் அனேக அம்சங்கள் செயற்படுத்தப்படாது இடைநிறுத்தப்பட்டிருந்தன. இஸ்லாமிய உலகத்தின் எந்த பகுதியிலுமே இஸ்லாமியர்கள் இவ் ஒழுங்கீனத்திற்கு எதிராக செயற்பட முடியவில்லை,
நவீன யுகத்தில் துருக்கியர்தான் முதன்முதலில் இரண்டு வேறுபட்ட தெளிவான கருத்துக்களை அறிமுகப்படுத்தியவர்களா வர். அதாவது 'ஷரியா சட்டம் ஒருபுறமும் தேசிய வழக்கில் உள்ள சட்டங்கள் மறுபுறமுமாகும். மேற்கத்தைய நாடுகளின் நாகரிகம் காரணமான அழுத்தங்களினாலும், நவீன தேவைகளி னாலும் ஐரோப்பிய நாடுகளின் சட்ட முறையை தழுவ விரும்பி னர். அத்துடன் ஷரியாவின் நோக்கெல்லையையும், குறைத்துக் கொண்டனர், காமிலிய புரட்சியின் போது இவை அகற்றப்படும் வரை நீடித்தது.
புரட்சிகரமான சட்ட அதிகார அமைப்புக்கள் சகல இஸ்லாமிய நாடுகளிலும் இஸ்லாமிய சட்டத்தை மேவிச் செயற்பட்டன. இதற்கு விதிவிலக்காக இடைக்கால யுகத்தின் இறுதியிலே, ஓரிரு நாடுகளில், சில ஏற்பாடுகள் இருந்தன. அவ்வாறு விதிவிலக்காக இருந்த ஓரிரு நாடுகளில்கூட, பாரம்பரிய இஸ்லாமிய சட்டங்களுக்கு உரிய இடம் கொடுக்கப்பட வில்லை. இவ்வாறான பாரம்பரிய இஸ்லாமிய சட்டமாகிய ஷரியா சட்டத்தை அமுல்படுத்துவதில் இருந்த தயக்கத்திற்கான காரணம் அதனை அது உள்ளவாறே நடைமுறைப்படுத்த முடியாமையாகும். எனவே இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப் படுத்த முடியாது என்று சொல்வதைவிட இஸ்லாமிய நாடுகள் அதனை கவனத்திற்கு எடுக்காது இருப்பது சுலபமாயிற்று, ஒரு காலத்தில் இஸ்லாமியச் சட்டத்தை மறுசீரமைப்பது பற்றியும் 'இஜ்திஹாத்' என அழைக்கப்படும் (கிரமமான
11

Page 11
காரணங்களின் அடிப்படையில்) தர்க்கரீதியாக புனரமைப்பது பற்றியும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன, ஆனால் இப்பொழுது சட்ட வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட 'ஷரியா சட்டத்தை நிறைவேற்றுவதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் குர்ஆனில் இருந்தோ சுன்னாவில் இருந்தோ பெறப்பட்ட சட்டங்களை அமுல்படுத்துவதற்கு அந்தளவு கவனம் செலுத்தப் படுவது இல்லை, இக் கூற்றுகளை மனதில் வைத்தே சாட்சியம் பற்றிய இஸ்லாமிய சட்டத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்,
இஸ்லாமிய சமய இலக்கியத்தில் மகளிரை அவமதித்து இழிவுபடுத்தும் கூற்றுகள்,
பெண்கள் மிகவும் உன்னதமான ஸ்தானத்திலும் தூய்மையான நிலையிலும் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளனர், எனினும் குர்ஆன் விளக்கங்களிலும் ஹதீத் இலக் கியங்களிலும் "சட்ட"(Figh) நூல்களிலும் மகளிரை அவமதிக்கக் கூடிய வகை யிலும், இழிவாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக குர்ஆன் வசனங்களுக்கு விளக்கவுரை வழங்கும் இரு பிரபல்ய மான அறிஞர்களின் உரைகளைக் குறிப்பிடலாம்,
குர்ஆனில் உள்ள "ஆனால் அவர்களின் ஆண்கள் அவர் களைவிட ஒருபடி உயர்ந்தவர்கள்” (2:228) என்னும் வாக்கியத்திற்கு விளக்கம் அளிக்கையில் இப்னு ஜராரீர் அல்தப்ரி என்பவர் கூறுவதாவது: "சில அறிவாளிகள் கூறுகின்றார்கள், ஒருபடி உயர்வு என்னும்பொழுது ஆண்கள் சொத்துக்களுக்கு வாரிசாகும்பொழுதும், ஜிகாத் என்னும் சமயப் போராட்டத்தின் பொழுதும், இவற்றைப் போன்ற வேறு சந்தர்ப்பங்களிலும் பெண்களைவிட ஆண்களை உயர்வான நிலையில் இறைவன் வைத்திருக்கின்றான். இதன் கருத்தை வேறு சிலர் இவ்வாறு கூறுகின்றனர். "ஒருபடி உயர்வு என்பது, ஆள்வதையும் கீழ்ப்படிவதையும், அதாவது ஆண்களின் ஆட்சியையும் பெண்கள்
12

அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதையும் குறிக்கின்றது. அதாவது பெண்கள் தன் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், மனைவியர் சொற்படி ஆண்கள் செயற்பட வேண்டிய கட்டுப்பாடு கிடையாது" என்றும் (4:34) வாக்கியத்திற்கு பிழையாகக் கருத்துக்களைக் கூறுகின்றனர்.
இதன் கருத்தை வேறுசிலர் இவ்வாறு கூறுகின்றனர்; "இவருக்கு இந்தளவு அந்தஸ்து கொடுத்திருப்பது, அவர் திருமணம் செய்யும்பொழுது அவளுக்கு நன்கொடை (மகள்) கொடுத்திருப்பதனால் என்றும், குர்ஆனின் சட்டப்படி அவர் கற்பு மீறிவிட்டார் என்று அவள் அவர் மீது குற்றம் சாட்டினால், அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என குறிப் பிடப்பட்டிருப்பதனாலும், அவள் அவ்வாறு நடந்துவிட்டதாக குற்றம் சாட்டப்படின, பின் அவர் அவளை விலக்கிவிடலாம் என்று கூறப்பட்டுள்ளதாலுமாகும்,
வேறு சிலர் கூறுகின்றார்கள்: "அவர் அனுபவிக்கும் இவ்வந்தஸ்த்து அவர் அவளைவிட மேன்மையானவர் என்பதனாலும், அவளுக்குச் செய்ய வேண்டியவற்றை நிறை வேற்றும் பொறுப்பு அவருக்கு இருப்பதனாலும், அவளுக்காக சில உரிமைகளை கைவிட வேண்டி இருப்பதனாலும் கூறுப் பட்டுள்ளதென்பதாகும்.
வேறு சிலர் கூறுவது யாதெனில்: "இவருக்கு இவ் வந்தஸ்த்து கொடுக்கப்பட்டிருப்பது ஏனெனில் இறைவன் அவருக்கு "தாடி கொடுக்கப்பட்டிருப்பதனாலும் அது அவளுக்கு மறுக்கப்பட்டிருப்பதனாலுமாகும்”,
இதே வாசகத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த பக்கர் அல்தீன் அல்ராசி என்பவர் இவ்வாறு எழுதுகின்றார், "ஆண் பெண்ணைவிட அந்தஸ்த்தில் உயர்ந்தவர்கள் என்பது யாவரும் அறிந்ததொன்றே. எனினும் இக் கூற்றில் இருந்து இரு வகையாகப் பொருள் கொள்ளலாம். ஒன்று யாதெனில் ஒரு
13

Page 12
ஆண் பல துறைகளில் பெண்ணைவிட உயர் அந்தஸ்த்தை வகிக்கின்றான். அவையாவன முதலாவதாக அறிவாற்றல், இரண்டாவதாக ஒரு ஆணைக் கொன்றதற்காக செலுத்தப்பட வேண்டிய நஷ்டஈடு (ஒரு பெண்ணின் உயிருக்காக செலுத்தப்பட வேண்டிய நஷ்டஈட்டைவிட இரண்டு மடங்காக ஆணின் உயிருக்கு செலுத்தப்படவேண்டும்) என்று இருந்த வழமையின் காரணமாகவாகும், மூன்றாவதாக சொத்துரிமை அடிப்படை யிலும், நான்காவதாக நம்பிக்கைச் சொத்தை வைத்திருக்கும் உரிமை காரணமாகவும், மத்தியஸ்தராகச் செயற்படும் உரிமை காரணமாகவும், சாட்சியம் அளிக்க இருக்கும் உரிமையும் ஆகும், ஐந்தாவதாக ஆண் இன்னொரு பெண்ணை மணம் முடிக்க இருக்கும் உரித்தும், வைப்பாட்டிகளை வைத்திருக்கும் உரித்தும் ஆணுக்கு இருப்பதனாலும், அவளுக்கு அவ்வகையான உரித்து இல்லாததினாலும் ஆகும். ஆறாவதாக கணவன் தன் பெற்றாரிடம் இருந்து பெறும் சொத்துக்களில் கூடுதலான பகுதியைப் பெறுவதற்கு உரித்து இருப்பதனாலும், பெண் அவ்வாறு தன் பெற்றாரிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் சொத்துக்கள் குறைவாக இருப்பதனாலும் ஆகும். ஆறாவதாக விவாகரத்துச் செய்யும் அதிகாரம் ஆணுக்கு இருப்பதும், அவள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ அவ்வாறு செய்யப் பட்ட விவாகரத்தை மீளப் பெற்றுக் கொள்ளும் உரிமை அவருக்கு இருப்பதனாலும், ஆனால் அவ்வுரிமை பெண்ணுக்கு இல்லை என்பதனாலுமாகும். இது மாத்திரமன்றி ஆண் விவாகரத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் பொழுது அதனைத் தடுக்கும் உரிமை பெண்ணுக்கு இல்லை, எட்டாவதாக புதையல் அல்லது அவ்வகையான வேறு ஏதாவது சொத்துக்களைப் பெறும் பொழுது ஆணின் பங்கு பெரிதாக இருப்பதனாலுமாகும்.
இக் காரண்த்தின் அடிப்படையில் பெண்ணைவிட
ஆண்கள் அந்தஸ்த்தில் உயர்வானவர்கள் என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பெண்கள் ஆண்களின் கையில்
14

அருகதை அற்ற கைதிகளாகி விடுகின்றனர். இதனால்தான் நபிகள் நாயகம் (அவர்கள் மீது இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்குவானாக) இவ்வாறு கூறியுள்ளார். "உங்களது மனைவியருக்கு நல்லதையே செய்யுங்கள், ஏனெனில் அவர்கள் உங்கள் பிடியில் இருக்கும் கைதிகளாவர்”, வேறொரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு கூறியுள்ளதாகக் கூறப்படுகின்றது. "வலிமை குறைந்த இரு சாரார்களையும் அதாவது அனாதைகளையும் பெண்களையும் பொறுத்தமட்டில் இறைவனுக்குப் பயந்து செயற்படுங்கள்" என்பதாகும்.
இஸ்லாத்தைப் பற்றி மிகவும் ஆற்றல் வாய்ந்த அறிஞர்களின் நோக்கில் பெண்மையைப் பற்றிய மிக உயர்ந்த கோட்பாடு இதுவாகும். பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமியப் பெண்களை தூஷித்து இழிவுபடுத்தும் உலமாக்களின் மொழியின் பாணி இறுதியாகத் தரப்பட்ட இரு பந்திகளில் குறிப்பிடப் பட்டிருக்கும் வரலாற்றுக் கூற்றுகளைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன. உத்தேச சாட்சியச் சட்டத்திற்கு அஞ்சும் பெண்களின் உணர்ச்சியை இது விளக்குகின்றது. இவர்களை "சைத்தானின் முகவர்கள்" என சுட்டிக்காட்டி தூஷித்து இழிவு படுத்து வதற்கு “உருது சஞ்சிகைகள் பாரிய அளவில் முயற்சி செய்துள்ளன. அதேபோன்று வானொலி, தொலைக்கர்ட்சி சேவைகள் யாவும் இம் முயற்சியைக் குறிப்பிட்டு இம் முயற்சிக்கு ஒத்தாசையாகச் செயற்பட்டு பெண்களைப் பற்றி தப்பான கருத்துக்களைப் பரப்புகின்றன. அந் நாட்டில் அரசியல் சமய அமைப்புக்கள் யாவையும் பெண்களின் இம் முயற்சியை அடக்கி அவர்களுக்கென வகுக்கப்பட்டதாகக் கருதப்படும் வரையறவுகளுக்குள் வாழச் செய்வதில் தீவிரமாகச் செயற்படுகின்றன. எனவே இவ்வகையில் இஸ்லாமிய தீவிரவாதப் போக்கு செயற்படுமேயாயின், அவ்வகையான எல்லா நாடுக்ளுமே அவர்களுக்கென அமைக்கப்பட்ட ι μηττήμ சிறைச்சாலையாக மாறிவிடும் என உண்மையிலேயே பெண்கள் அஞ்சுகின்றனர்.
15

Page 13
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்ப அறிமுகக் கருத்துக்களை அடிப்படையாக வைத்து மகளிரும் சாட்சியம் பற்றிய இஸ்லாமிய சட்டமும் மகளிரும் என்னும் விடயம் பற்றி விஞ்ஞான, தர்க்க ரீதியாகவும், புறநோக்காகவும், சமய அறிஞர்களோ அல்லது வேறு எந்த வகையிலுமான அறிஞர்களோ, தேசிய பத்திரிகைகளோ வேறெந்த தகவல் சாதனங்களோ இவ்வகையில் முன்வைக்காத கருத்துக்களின் அடிப்படையில் விவாதிப்போம்.
குர்ஆனின் ஏற்பாடுகள்
சாட்சியம் பற்றிய சட்டம் சம்பந்தமாக குர்ஆனில் 09 விசேட வாக்கியங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரேயொரு வாக்கியத்தில்தான் சாட்சியம் அளிப்பதற்கு ஆணுக்கும் பெண் ணுக்கும் இடையில் உள்ள தகைமையின் அளவு குறிப்பிடப் பட்டுள்ளது. எஞ்சிய 06 வாக்கியங்களில் ஆண்களையும் பெண்களையும் சாட்சிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ் வாக்கியங்கள் பிணக்கிற்குரிய வாக்கியங்களைவிட முக்கியத்துவம் வாய்ந்தவை. 08 ஆவது வாக்கியத்தில் ஆணைச் சாட்சியாகவும், 09 ஆவது வாக்கியத்தில் பெண்ணைச் சாட்சியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆனின் விரிவுரையிலும் இஸ்லாமிய சட்ட வியாக்கியானங்களுக்கான அடிப்படைக் கோட்பாடு, ஒரு விடயத்தைப் பற்றி இறுதி விளக்கத்தை அளிப்பதற்கு முன்பு அவ்விடயத்தைப் பற்றி குர்ஆனில் உள்ள சகல வாக்கியங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதேயாகும். ஆனால் இந்த விடயத்தில் மாத்திரம் அனேக சட்ட வல்லுனர்கள் விதிவிலக்காகச் செயற்பட்டு குறித்த ஒரு வாக்கியத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து இஸ்லாமிய சாட்சியச் சட்டத்தை வடிவமைத்துள்ளனர். எனவே நாம் இவ் வாக்கியங்கள் யாவற்றையும் அறிந்த பின் எமது கருத்துக்களை முன்வைப்போம்.
16

முதலாவது வாக்கியம்
இறைவன் இவ்வாறு கூறுகிறான்.
"ஓ! விசுவாசிகளே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்துவதென கடனுக்குமேல் கடன் பெற்றிருப்பின் அதனை எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அதன் பின்னர் இரு சாட்சிகளை அழைத்து, அவ் இருவரும் ஆண்கள் அல்லவெனின் ஒரு ஆணையும் நீர் அங்கீகரிக்கும் இரு பெண்களையும் அழைத்து சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் இவ் இரு பெண்களில் ஒருவர் தவறு இளைப்பின் மற்றவர் ஞாபகப்படுத்துவார்” (2:282), சட்டஅறிஞர்கள் இவ் வாக்கியத்தின் அடிப்படையிலேயே முழுச் சான்றுச் சட்டத்தையும் உருவாக்கி யுள்ளனர். இதன் அடிப்படையில் பின்வருவனவற்றை அவர்கள் ஊகித்துள்ளனர்.
(1) சாட்சியம் கூறும் விடயத்தைப் பொறுத்தமட்டில்
ஒரு பெண் அரை மனிதனுக்குச் சமன்.
(2) பிரசவம், ஒரு பெண்ணின் அங்கக் குறைபாடு போன்ற விசேட சந்தர்ப்பங்கள் தவிர, ஒரு பெண் தனித்து சாட்சியம் கூற முடியாது.
(3) குர்ஆனினால் தண்டனை தீர்மானிக்கப்பட்டுள்ள "கிஸ்சா (பழிக்குப்பழி வாங்கும்) வழக்குகளிலும் வேறு குற்றவியல் வழக்குகளிலும் ஒரு பெண்ணைச் சாட்சியாகக் கருத முடியாது.
(4) ஒரு சிலரின் கூற்றுப்படி சகல சிவில் வழக்குகளி லும், வேறு நபர்களின் கருத்துப்படி நீதியோடு சம்பந்தப்பட்ட வழக்குகளில் மாத்திரமே ஒரு ஆணுடன் இரண்டு பெண்கள் சாட்சியம் அளிக்க
GOID)
17

Page 14
(5) ஒரு பெண் பரிபூரண சாட்சியாக இருக்க முடியாது என்ற காரணத்தினால், அவள் ஒரு நீதிபதியாக இருக்க முடியாது.
(6) ஒரு பெண்ணிற்குச் செலுத்தப்பட வேண்டிய பணயப் பணம் ஒரு ஆணுக்குச் செலுத்தப்பட வேண்டிய பணத்தின் அரைப்(ர்) பங்கு.
(7) ஒரு பெண் தனக்குத்தானே பாதுகாவலனாக (வாலி) இருக்க முடியாது என்றமையால், தான் நினைத்தவாறு மணம் செய்ய முடியாத நிலை, எனினும் அப் பெண்ணின் மகன் அவளின் பாது காவலன் (வாலி) என்ற வகையில் மணம் முடித்து வைக்கலாம் என்ற நிலை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊகங்கள் யாவும் அதிகார பூர்வமற்றவை மாத்திரமன்றி, பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடனும், அவர்களுக்கு வன்மம் ஏற்படுத்துவதை அடிப்படையாகவும் கொண்டுள்ளன. குர்ஆன் விளக்க உரையா சிரியராகிய அல்தபாரி அல்குத்துபி என்பவரும் வேறு அனேக உரையாசிரியர்களும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியங்கள் சிபாரிசுகளேயன்றி நிர்ப்பந்தங்கள் அல்ல எனக் கூறியுள்ளார். எனவே சட்ட அறிஞர்களின் வாதங்கள் முழுமையாகச் சிதற டிக்கப்படுகின்றன. அனேக சட்ட அறிஞர்கள் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதற்கான காரணம், அக் காலத்துப் பெண்கள் வியாபாரத்தில் அதிக பங்களிப்பு செய்யாததினால் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய போதியளவு விளக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை என வாதிடுகின்றனர். இதி லிருந்து, அப பொழுது நிலவிய சமூக நிலையை அடிப்படையாக வைத்தே இவ் விதி நிர்ணயிக்கப்பட்டது என்பதையும் சமூக நிலை காலத்திற்குக் காலம் மாற்றம் அடைவதனால் மாற்றங்களுக்கு ஏற்ப இவ் விதிகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் விளங்கககூடியதாயுள்ளது. எனவே
18

சாட்சியம் பற்றிய சட்டத்தின் நிரந்தர விதியாக இதனைக் கருத முடியாது. (குர்ஆனில் உள்ள ஏற்பாடுகளிலும் சுன்னாவில் உள்ள ஏற்பாடுகளிலும் இருக்கின்ற மாற்றங்களை ஏற்றுக் கொள்வது பற்றி இக் கட்டுரையில் பின்னர் கருத்துத் தெரி விக்கப்படும்.)
அடுத்ததாக மேலும் இவ் வாக்கியத்தில் வரையறுக்கப்பட்ட காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அது எல்லாக் காலத்திற்கும் உரிய விதியின் அடிப்படையாகக் கருத முடியாது. இக் கருத்து வேறு பல கருத்துரைகளிலும் கூறப்பட்டுள்ளது. இவ் வாதம் முக்கியத்துவம் அடைவதற்கு வேறு காரணங்களும் உண்டு, விவாகரத்து, கற்பின்மை பற்றிய குற்றச்சாட்டுகள், ஒழுக்கக்கேடு, உயில் முதலியனவற்றோடு ஒத்த முக்கிய வழக்கு விவகாரங்களுக்கு, குர்ஆனில் ஒழுங்கு விதிகள் தர்ப்பட்டுள்ளன. எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாக்கி யத்தில் இருக்கும் ஒழுங்குவிதிகள், குறிப்பிட்ட வழக்குகளில் பின்பற்றுவதற்கென குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு மேலாகச் செயற்படுவதற்காக அமைக்கப்பட்டிருக்க
(UDu9— uU fTğ5J .
பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாட்சியம் அளிப்ப தற்கு பெண்களுக்கு என்று அளிக்கப்பட்டுள்ள தனித்துவமான உரிமை பற்றி எந்தவிதமான வேற்றுமையும் இல்லை. எனினும் மேலேகுறிப்பிடப்பட்டுள்ள 3 ஆம் 4 ஆம் ஊகங்களில் ஆதார பூர்வமானவை எனக் கூறுவதற்கு குர்ஆனிலோ, சுன்னாவிலோ எந்தவிதச் சான்றும் இல்லை. (இவ்விடயம் பற்றி பிரபல்ய சட்ட அறிஞரான இபுனுகையிம் என்ன கூறியுள்ளார் என்பதை பின்பு தெரிவிக்கின்றோம்.) அனேக குற்றவியல் செயல்கள், விசேடமாகப் பாரிய குற்றத்தோடு ஒத்த செயல்கள் ஆண்களாலே தான் செய்யப்படுகின்றது. அவ்வாறு இருந்தும் குற்றவியல் வழக்குகளில் விசேடமாகப் பிறர்மனை புகுதல் போன்றவற்றில் பெண்களின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என
19

Page 15
சட்ட அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இக் கூற்றின் கருத்து யாதெனில் பெண்கள் முன்னிலையில் ஒரு கொலையோ கற்பழிப்போ நடந்தால் அப் பெண்களின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவ்வாறாயின் அப்படிப்பட்டதொரு குற்றம் அச் சந்தர்ப்பத்தில் நடைபெறவில்லை என்றே கருதப் படும். இதைவிட முட்டாள்தனமானதும், ஏழனத்திற்குரியது மான வாதங்கள் ஏதும் உண்டோ? இறைவனின் உரிமைகளோடு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் பெண்கள் சாட்சியம் அளிக்க முடியாதென்றும் சட்டவல்லுனர்கள் கூறுகின்றார்கள். அதாவது குர்ஆனில் தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ள குற்றங்கள் சம்பந்த மான விவகாரங்களாகும். எனினும் இறைவன் தன்னுடைய உரிமைகளைப் பாதுகாக்கும்படி குர்ஆனில் எங்கு குறிப்பிட் டுள்ளான்? அப்படியானதொரு கருத்தைக் கூறுவது இறை நிந்தனையல்லவா? எப்படி இறைவனின் உரிமைகளைப் பாதுகாக்க பெண்களை விட ஆண்கள் தகைமை உள்ளவர்களாவர்?
அவை எவ்வாறாயினும் இறைவனின் தூதுகளும், கட்டளை களும் சகல நம்பிக்கையாளர்களையும் நோக்கியே உள்ளன. குர்ஆனில் வெறுமனே ஆண்களுக்கு மாத்திரம் விழிக்கின்ற எந்தவொரு வாக்கியமுமே இல்லை. இறைவனின் 'ஷரியா" விதிகளில் அவருடைய பெண் நம்பிக்கையாளர்களுக்கு, ஆண்க ளுக்குக் கொடுக்கப்படும் அதே பொறுப்புக்களையே கொடுத்துள் 67 Tfts எனவே சாட்சி கூறும் அடிப்படை உரிமையைப் பெண்களுக்கு மறுக்க முடியாது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 ஆவது ஊகமும் நகைப்புக்கு இடமானது, ஏனெனில், ஒரு பெண் முழுமையானதொரு மானிடனாகையாலும், அவள் முழுமையான விசுவாசி என்ப தாலும் ஒரு பெண் ஒரு முழுமையான சாட்சி என அத்தாட்சிப் படுத்தியுள்ளோம். ஆகையால் ஒரு அரசாங்கத்திலோ அல்லது நீதி பரிபாலனத்திலோ ஒரு பதவியினை வகிப்பதைத் தடுக்க (LPlling).
20

ஆறாவது (06) ஊகம் மிகவும் மனுநீதிக்கப்பாற்பட்டதாகும், அவ் ஊகத்தின்படி ஒரு பெண்ணின் உயிரின் பெறுமதி ஒரு ஆணின் உயிரின் பெறுமதியில் அரைப்பங்கு (4) ஆகும். இது இஸ்லாத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தஸ்து எனக் கருதமுடியுமா?
ஏழாவது (07) ஊகத்தைப் பற்றிக் கவனம் செலுத்துவதே அவசியமற்றது. ஏனெனில் பெண்கள் யுத்தத்தில் ஈடுபடுவ தில்லை. அவ்வாறு யுத்தம் புரிவதற்கு அவர்கள் உருவாக்கப் படவும் இல்லை. எவ்வாறாயினும் நவீனகால யுகத்தில் கொள்ளைப் பொருட்களைப் பகிர்ந்து கொள்வது என்ற கோட் பாட்டுக்கே இடமில்லை. எது எவ்வாறிருப்பினும் இதற்கு முந்திய பந்தியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இவ் விடயத் திற்குப் பொருந்தும்,
எட்டாவது (08) ஊகம் பெண்களின் ஆளுமைக்கும் கெளரவத்திற்கும் இழைக்கப்படும் பெரும் அவதூறாகும், ஒரு பெண்ணின் உடல் அவளுக்கே சொந்தம் அற்றது எனக் கூறுவது அவள் ஒரு மானிடப் பிறவி அல்ல வெறுமனே ஒரு ஜடப்பொருள் எனக் கூறுவதற்கு ஒத்ததாகும். தனக்குத்தானே ஒரு பெண் பாதுகாவலனாக இருக்க முடியாது. ஆனால் அவளின் மகன் அவ்வாறு இருக்கலாம் எனக் கூறுவது அவளை அவமதிப்பதற்குச் சமமாகும். சில சட்ட வல்லுனர்கள் கூறுகின்றார்கள்; ஒரு பெண் மணம் செய்யாமல் பெற்ற மகன் கூட அவளுக்கு பாதுகாவலனாக இருக்கலாம்; இவ்வாறு கூறியிருப்பது இக் கூற்றை மேலும் வலுப்படுத்துகின்றது.
சுருங்கக் கூறின் சட்ட அறிஞர்கள் குறித்த குர்ஆன் வாக்கியத்திற்குத் தப்பான விளக்கம் அளித்து, ஏற்கனவே பெற்றுக் கொண்ட அகத்துாண்டுதலைப் பயன்படுத்தி பெண் களின் உரிமைகளை சரிபாதியாக்கியது மட்டுமல்லாமல. அவற் றைப் பூச்சியமாக்க முயற்சித்து, அல்ராசி குறிப்பிட்டவாறு அவர்களை "அருகதையற்ற கைதிகளாக்கி உள்ளனர்.
21

Page 16
எனவே குறித்த வாக்கியம் பற்றி எமது முடிவான கருத்து, அது ஆரம்ப காலமாகிய மதீனா யுகத்தில் இறக்கப்பட்ட தாகையால் பின்னர் இறக்கப்பட்ட வேறு வாக்கியங்களி னால் வழக்கற்றதாக்கப்பட்டோ அல்லது ஒதுக்கப்பட்டோ விட்டன என்பதாகும், அவ்வாறு பின்னர் இறக்கப்பட்ட, அதனை விடக் கூடுதலான தரமான வாக்கியங்கள் இருப்பதனால் சட்ட அறிஞர்கள் பெரும்பாலானோரின் கருத்து மாறுபட்டதாக இருப்பினும், சாட்சியம் கூறுவதற்கான தகைமைகளின் தன்மை யைத் தீர்மானிப்பது பற்றிய அவர்களின் கூற்று ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும்.
அனேக சட்ட வல்லுனர்களின் கருத்துப்படி, சாட்சியம் கூறுவது தொடர்பாக இஸ்லாமிய சட்டத்தின், ஒரு ஆண்மகன் இரு பெண்களுக்குச் சமன் என்னும் அடிப்படை விதி, இறுதி யானதொன்றல்ல என்பதையும், அது சர்ச்சைக்குரிய ஒரு விடயமாகும் என்பதையும் இப்போது நிரூபிக்க முடியும், பொதுப்படையாக சட்டவல்லுனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கு முரணான கருத்தை பல முக்கிய சட்ட அறிஞர்கள் கொண்டுள்ளனர். * ܫ̄ܝ.ܝܪ ܖ
(1) மாலிக் என்னும் அறிஞரின் கூற்றுப்படி, நிதியோடு சம்பந்தப்பட்ட எல்லா வழக்குகிளிலும் இரண்டு பெண்களின் சாட்சியங்களை ஏற்றுக் கொள்வது, வழக்காளி அவ்விடயம் பற்றி உறுதியுரை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தால் மட்டுமேயாகும்,
(2) அகமத் இபுனு ஹன்பல் என்னும் அறிஞரின் கருத்துக்களில் ஒன்று, மேலே குறிப்பிடப்பட்ட விடயத்தோடு ஒத்த கருத்தாக உள்ளது.
(3) விவாகரத்து அல்லது சீதனத்தோடு ஒத்த வழக்கு களில் நான்கு (04) பெண்களின் சாட்சியம், கலி
22

(4)
பாக்களான உமர், அலி, காதீ. சுரையா ஆகியோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சியம் பற்றிய 'ஷரியா குழுவினரின் கருத்துப்படி ஒரு பெண்ணின் சாட்சியத்தை சகல குற்றவியல் வழக்குகளிலும் ஏற்றுக்கொள்வது ஒரு ஆணின் சாட்சியம் இரண்டு (02) பெண்களின் சாட்சியத்திற்குச் சமம் என்ற அடிப்படையிலேயே ஆகும். (ஆதாரங்கள் வருமாறு:- அல் குவானிள் அல் பிஜியா (பக்கம் 310) : அல் மகல்ளா (9ஆம் சுவடி, Lu 595 D 397) s அல் முகாணி (12 ஆம் சுவடி, பக்கம் 15) : அல் துருக்கு, அல் ஹிக்மியா (பக்கம் 137, 141) இவை சுபகானி மஹமானியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பல்-சபத் அல் தஷ்ரி, அல் இஸ்லாமி, (உருது மொழி பெயர்ப்பு, பக்கம் 403)
இரண்டாவது வாக்கியம்
இறைவன் கூறுகின்றான்,
"ஒ" விசுவாசிகளே உங்களில் யாராவது ஒருவர் இறக்கும்
சந்தர்ப்பத்தில் அவர் விருப்பப்படி நடவடிக்கை எடுக்கும்படி எதனையாவது விட்டுச் சென்றிருந்தால், உங்களில் இருவர் அல்லது உங்களைச் சாராத வேறு இருவர் அல்லது நீவிர் பிரயாணம் செய்து கொண்டு இருக்கும்பொழுது மரணிக்க நேர்ந்தால் அவ்வமயம் எவரின் பொறுப்பில் நீர் இருக்கின்றிரோ அவரின் சாட்சியம் அதற்காகப் பெற்றுக் கொள்ளப்படும்”. (5:106), முதலாவது வாக்கியம் அடங்கியுள்ள 2 ஆவது அத்தியா யத்தில் பெரும்பகுதி ஹிஜ்ரி ஆண்டு 1-2 இற்கிடையில் இறக்கப் பட்டவையாகும், 'அவ் ஐந்தாம் அத்தியாயம் ஹிஜ்ரி 5-7 ஆம் ஆண்டிற்கிடையில் இறக்கப்பட்டவையாகும்.
23

Page 17
குறித்த முதலாம் கட்டத்தில் உயில் எழுதுவது நாளாந்த வாழ்க்கையில் நிபந்தனைக்கடன் பெறுவதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில் உயிலைப் பொறுத்தமட்டில் பல சட்டப் பிணக்குகளோடு சம்பந்தப்பட்டிருந்தது எனலாம்.
எனவே சாட்சியம் தொடர்பான சட்ட நோக்கில் இருந்து பார்க்குமிடத்து இரண்டாவது வாக்கியம் முதலாம் வாக்கியத்தை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இவ் வாக்கியத்தில் இரு நபர்கள் சாட்சிகளாகலாம். அவர்கள் இரு ஆண்களாகவோ அல்லது இரு பெண்களாகவோ இருக்கலாம். சில நேர்மையற்ற கருத்துரையாளர்கள் "நபர்கள்" என்னும் சொற் பதம் ஆண்களை மாத்திரமே குறிக்கின்றது என விளக்குகின்றார்கள். ஆனால் மிகவும் முக்கியமான விடயம் யாதெனில் குறித்த வாக்கியத்தில் இரு முஸ்லிம் நபர்கள் சாட்சிகளாக இல்லையெனில் அவர்களுக் குப் பதிலாக இரு முஸ்லிம் அல்லாதவர்கள் சாட்சியம் அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனேக கருத்துரை யாளர்களின் கருத்துப்படி "உங்களைச் சாராத வேறு இருவர்” என்பதன் பொருள், “முஸ்லிம் அல்லாத நபர்கள்” என்பர். இந்த வாக்கியத்தில் உள்ள இக் கருத்துக்கு அமையவே முஸ்லிம் சட்ட அறிஞர்கள் ஏகமனதாக முஸ்லிம் அல்லாதோரின் சாட்சியத்தை ஏற்கின்றார்கள், விசுவாசிகளாகிய முஸ்லிம் பெண்களில் வைக்கவேண்டிய நம்பிக்கையைவிட விசுவாசிகள் அல்லாத ஆண்களின் சாட்சியத்திற்கு அளிக்கப்பட்டி ருக்கும் அந்தஸ்த்து சட்ட நோக்குடன் பார்க்குமிடத்து நியாயம் அற்றதாகத் தென்படவில்லையா? (சட்ட வல்லுனர்கள் எவ்வளவு மறுப்பைத் தெரிவித்தாலும்) உண்மை யாதெனில் குறித்த இவ் வாசகம் பெண்கள் சாட்சியம் அளிப்பதற்கான தெளிவான உரிமையை அவர்களுக்கு அளித்திருக்கின்றது என்பதேயாகும்.
24

மூன்றாவது வாக்கியம்
இருவர் ஒரு பாவச்செயலைச் செய்துவிட்டார்கள் எனத் தெரிய வந்தபின், அவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்த வேண்டி நேரிட்டால், அவர்களுக்காக அவர்களுக்கு மிக நெருங்கிய வேறு இருவர் சாட்சியம் அளிக்கலாம். (5:107), இவ் வாக்கியம் முன் குறிப்பிடப்பட்ட வாக்கியத்தின் தொடர்ச்சியாகும். இதன் அர்த்தம் யாதெனில் தன் இறுதி விருப்பத்தைத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் சமூகமளித்திருந்த இரு மூல சாட்சிகள் பொய்யுரைப்பின் அல்லது மோசடி செய் திருப்பின் மிக நெருக்கமான இரு உறவினர்களின் சாட்சியத்தை ஏற்கலாம். அச் சாட்சிகளுக்கு சிலவேளை அவ்வுயிலில் பங்கு இருக்கலாம். அவர்கள் அவ் உயில் எழுதப்படும் நேரத்தில் அங்கு சமூகமளிக்காதவர்களாகவும் இருக்கலாம். எது எவ்வாறாயினும் இரு சாட்சிகள் பற்றித்தான் குறிப்பிடப்பட் டுள்ளதேயன்றி முன்னர் குறிப்பிடப்பட்ட நிலைநிறுத்தப்பட்ட கருத்துக்கு அமைய அச் சாட்சிகள் ஆண்களோ இல்லது பெண்களோ என்று குறிப்பிடப்படவில்லை,
நான்காவது வாக்கியம்
ஓ நபியே, நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்யும் பொழுது அவர்களுடைய காலம் முடிந்ததன் பின். அவ்வாறு செய்யவும், அவர்களின் குறித்த காலம் முடிந்ததன் பின்னரும் தொடர்ந்து அவர்களை வைத்திருக்க விரும்பினால் கெளரவத்துடன் வைத்திருக்கவும், அவர்களை விட்டுப் பிரிய நேரின் அவ்வாறே கெளரவத்துடன் பிரிந்து செல்லவும், சாட்சியம் சொல்லத் தேவைப்படின் உங்களில் நீதியான இருவரை அழைக்கவும். (65:1,2), இங்குகூட இரு நீதியான
25

Page 18
நபர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதேயன்றி இரு நீதியான ஆண்கள் எனக் குறிப்பிடவில்லை. ஒரு கடன் ஒப்பந்தத்தில் சேர்ந்து கொள்வதைவிட விவாகரத்துச் செய்வது முக்கியமான தொரு விடயமாகும். இவ் வாக்கியம் ஹிஜிரி ஆண்டு 06 இல் இறக்கப்பட்ட ஓர் அத்தியாயத்தில் உள்ளதாகும்.
ஐந்தாவது வாக்கியம்
“இதுபோன்று உங்கள் பெண்களில் யாராவது இழிவான செயலில் ஈடுபடின் அவர்களுக்கு எதிராகச் சாட்சியம் அளிக்க உங்களுள் நால்வரை அழையுங்கள்”. (41:15) இழிவான நடத்தை பற்றிய குற்றச்சாட்டு (பிறர்மனை விரும்புதலை விட குறைவான குற்றமாயிருப்பினும்) அது ஒரு பாரதுாரமான குற்றச்சாட்டாகும், அப்படியிருந்தும் அதற்கு நான்கு (04) சாட்சிகளை மாத்திரமே அழைக்க வேண்டி உள்ளது. அச் சாட்சிகள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். இவ் அத்தியாயம் ஹிஜிரி 04 ஆம் 05 ஆம் ஆண்டுகளில் இறக்கப்பட்டது.
ஆறாவது வாக்கியம்
"கற்புள்ள பெண்களை கற்பற்றவர் எனக் குற்றம் சாட்டும்போது, ஒருவர் அதற்கு (04) நான்கு சாட்சிகளை முன் வைத்தல் வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அவர்களை எண்பது (80) தடவைகள் அடித்துத் தண்டிக்கவும்".(24: ), அதாவது அயலில் உள்ள பெண்களை தூஷிப்பதும், அவர்களின் கற்பிற்கு களங்கம் கற்பிப்பதும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். மேலும் அவர்களின் குற்றச்சாட்டை நிரூபிக்க நான்கு (04) சாட்சிகளை அவர்கள் முன் வைக்க வேண்டும். இது பிறர்மனை நாடுதல் என்னும் சமுதாயத்தின் ஒழுக்கத்திற்கு மிகவும் பாதகமானதொரு நிகழ்வாகும், அப்படி யிருந்தும் இதனை நிரூபிக்க நான்கு (04) சாட்சிகள் (ஆண்களோ அல்லது பெண்களோ) தேவைப்படுகின்றது,
26

ஏழாவது வாக்கியம்
"இச் சந்தர்ப்பத்தில் ஏன் அவர்கள் நான்கு (04) சாட்சிகளை அழைத்து வரவில்லை? அவ்வாறு சாட்சிகளை முன்வைக்காவிடின் இறைவன் கண்ணில் அவர்கள் பொய்க் குற்றம் சாட்டுபவர்களாகத் தென்படுவர்" (24:13) இது நபிகள் நாயகம் அவர்களின் மனைவி ஆயிஷாவிற்கு எதிராக மதீனாவில் உலாவிய பொய்வதந்தி ஒன்றோடு சம்பந்தப்பட்டதாகும். இது ஹிஜிரி ஐந்தாம் ஆண்டு பாணிமுஸ்தலிக் என்னும் இடத்திற்கு நாயகம் அவர்கள் சென்று திரும்பியதன் பின்னர் ஒரு சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தியாகும், இஸ்லாத்தின் ஒழுக்க வரலாற்றில், நபிகள் நாயகம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில், ஏற்பட்ட பாரதூரமான ஒரு நிகழ்வாகும். எனினும் இச் சந்தர்ப்பத்தில் கூட நான்கு (04) சாட்சிகள் கோரப்பட்டனரேயன்றி நான்கு (04) ஆண் சாட்சிகள் கோரப்பட வில்லை, இந்த ஆறு வாக்கியங்கள் அதாவது 2 ஆம் வாக்கியத்தில் இருந்து 07 ஆம் வாக்கியம் வரையுள்ள வாக்கியங்கள் இஸ்லாத்தின் சமுதாய வாழ்க்கை ஒழுக்க நெறி யோடு சம்பந்தப்பட்ட மிகவும் முக்கியமான சட்டப் பிரச்சினைகளோடு தொடர்பானவையாகும். எனினும் இப் பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் "சாட்சிகள்” எனும் சொற்பதம் வரும் சந்தர்ப்பங்களில் அது பெண் சாட்சியோ, ஆண் சாட்சியோ எனக் குறிப்பிடப்படவில்லை. எனவே இச் சொற்பதம் இருசாராரையும் குறிக்கின்றது. ஏனெனில் தெளிவாக ஆண் அல்லது பெண் சாட்சிகள் எனக் குறிப்பிடப் பட்டிருக்காமையினாலாகும். எந்தவொரு வாக்கியத்திலாவது அவ்வாறு வேறுபடுத்திக் குறிப்பிடாது பொதுவாகவே குறிப் பிடப்பட்டுள்ளது. எனவே "சாட்சிகள்" என்னும் சொல் இவ் வாக்கியத்தில் ஆண்களையும் பெண்களையும் சமமாகக் கருதுகிறது என்பதை ஐயத்திற்கிடமின்றிக் கூறலாம். இவ் வாக்கியத்தில் எங்கள் இறைவன் "ஆண் சாட்சிகளையே” கருதினான் எனக் கூறுவது ஆண்கள் இறைவனிடம் மிகவும் நெருக்கமானவர்கள் எனக் கருதுவதற்குச் சமமாகும், ஆனால்
27

Page 19
இறைவன் தான் நினைத்ததையே செய்கின்றான். அவ்வாறு செய்யும்பொழுது தன்னுடைய தூதுவர்களின் ஆலோசனையைக் கூடப் பெறுவதில்லை. மேலும் ஒழுக்க விதிகளைக் குறிப்பிடும் வாக்கியங்கள் கூட வெளிப்படையான தூதுகளாக இருக்கின்றன. (3:7:99), அத் தூதுகளில் சட்ட வல்லுனர்களால் மாத்திரமே கண்டுபிடிக்கக்கூடியளவிற்கு மறைவான கருத்துக்கள் இருக்க வில்லை. மேலும் நாம் மனதில் வைத்திருக்க வேண்டிய விடயம் யாதெனில் இவ் வாக்கியங்கள் யாவும் குற்றவியல் வழக்குகளோடு சம்பந்தப்பட்டவையாகும். அத்துடன் அவ் வழக்குகள் யாவற்றிலும் ஆண்களைப் போன்று பெண்களும் சாட்சியம் அளிக்கக்கூடியவர்கள். எனவே குறித்த வாக்கியங்களின் பரிபூரண வலு தனித்து நிற்கும் ஒரு வாக்கியத்தின் கருத்தை பிஞ்சுகின்றது. (2:282) காலத்திற்குக் காலம் மாறக்கூடிய ஒரு சாதாரணநிலையை ஒட்டியதேயாகும்.
எட்டாவது வாக்கியம்
"தமது மனைவியரைக் குற்றம் சாட்டுபவர்கள் குற்றத்தை நிரூபிக்க தம்மைவிட வேறு சாட்சிகள் இல்லாதபட்சத்தில், அவர்களில் ஒருவருடைய சாட்சியமும், இறைவனின் மீது நான்கு முறை சத்தியம் செய்து, தர்ன் சத்தியவான் என்று கூறியது பொய்யாகவும் இருப்பின் அவன் இறைவனின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்”. (24:6). இது தனித்துவமானதொரு சந்தர்ப்பமாகும். ஏனெனில் ஒருவர் தன் மனைவியின் கற்பில் ஐயம் கொண்டு குற்றம் சாட்டும்பொழுது அதற்குத் தன்னைவிட வேறு சாட்சிகள் இல்லாத ஒரு சந்தர்ப்பமாகும். அச் சந்தர்ப் பத்தில் நீதிமன்றம் அவருடைய தனித்த சாட்சியத்தை ஏற்றுக் கொள்வது குறித்த வாக்கியத்தில் உள்ள ஒழுங்கு முறைகளுக் 560) DI அளிக்கும் உறுதியுரையிலேயே தங்கியுள்ளது. எவ்வாறெனினும் அந் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அவ் மனைவியின் கூற்றிற்கு செவிமடுக்காது தீர்ப்பளிக்கக்கூடாது.
28

ஒன்பதாவது வாக்கியம்
“ஒருவர் பொய்கூறி உள்ளார் என ஒரு பெண், நான்கு தரம் (04) இறைவனின் மீது சத்தியம் செய்து கூறுவாளேயாயின், அவ்வாறு சத்தியம் செய்து கூறிய விடயம் பொய்யானதாயின், அவள் இறைவனின் கடும் கோபத்திற்கு ஆளாவாள்” (24:7), இப்படியானதொரு உறுதியுரையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, ஒரு பெண் கூறியதன் அடிப்படையிலேயே விவாகத்தை ரத்துச் செய்யலாம், அவ்வாறு ரத்தாகும் விவாகத்திற்கான பொறுப் பினை இருசாராரும் சமமாக ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். இவ்விரு வாக்கியங்களும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன. அத்துடன் ஒரு உன்னதமான கோட்பாட்டினையும் அடக்கியுள்ளது.
அதாவது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகபாரதூரமான தொரு விடயமான விவாகரத்து போன்றவற்றிலும் சாட்சியத்திற்கு ஒரு பெண் ஓர் ஆணுக்குச் சமமாகவே கருதப்படுகின்றார். குறித்த விடயத்தில் அவள் தனித்துக் கூறும் சாட்சியம் போதுமானதாகின்றது. எனவே இக் கோட்பாடு இஸ்லாமிய சான்றுச் சட்டத்தில் விகிதாச்சாரக் கருத்தினை முற்றாக நிராகரிக்கின்றது. அது மாத்திரமன்றி ஆண்களுக்கும் பெண்களுக் கும் இடையில் உள்ள சமத்துவத்தை வெளிப்படையாகக் கூறு கின்றது.
பெண்ணின் ஞாபக மறதித் தன்மை
ஒரு வாக்கியத்தில் (2:282) இறைவன் கூறுகின்றான்; "ஓ! விசுவாசிகளே ஒரு குறிப்பிட்ட கால வரையறையுடன் ஒரு குறிப்பிட்ட கடனைப் பெறுவீரேயாயின் அது பற்றிய விபரங்களை எழுதி வைத்துக்கொள்ளும், அதற்கு இரு ஆண் சாட்சிகளையும் அழைத்துக் கொள்ளும், அவ்விரு சாட்சிகளும் ஆண்கள்
29

Page 20
அல்ல என்றால் ஒரு ஆணையும் இரு பெண்களையும் (சாட்சிகளாக) ஏற்றுக்கொள்ளும், அவ்விரு பெண்களில் ஒருவர் தவறு இழைப்பின் மற்றவர் ஞாபகப்படுத்துவார்”. வியாபார விடயங்களைப் பொறுத்தமட்டில் குர்ஆனில் ஒரு ஆணின் சாட்சியத்தை இரு பெண்களின் சாட்சியத்திற்குச் சமப் படுத்துவதற்கான காரணம் யாதெனில் அக் காலத்தில் பெண்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதில்லை. எனவே அவர் களுக்கு வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களிலும், நிதிக் கொடுக்கல் வாங்கல்களிலும், போதியளவு விளக்கம் இருக்கவில்லை. எனவே குறித்த விடயங்களுக்கு சாட்சிகளாக அவர்களை ஏற்றுக் கொள்வது ஒரு அவசரதேவை ஏற்படும்போது மாத்திரமேயாகும். மேலும் இவ் விடயங்கள் பற்றிய போதிய விளக்கம் இன்மையால் அவற்றை மறந்துவிடும் வாய்ப்பு இருந்தது, எனவேதான் ஒரு ஆணின் சாட்சியத்திற்குப் பதிலாக இரு பெண்களின் சாட்சியம் அவசியம் எனக் குறிப் பிடப்பட்டுள்ளது. அவ்வமயம் ஒரு பெண் மறந்தால் மற்றவர் ஞாபகப்படுத்தக்கூடியதாக இருக்கும், ஆனால் இருவருமே மறந்துவிடக்கூடிய வாய்ப்பு அரிது. குறித்த விடயத்தைப் பற்றிக் குறிப்பிடப்படும்பொழுது அவ்வாக்கியத்தில் உபயோகிக் கப்பட்டுள்ள சொற்கள் இழிவுபடுத்தக்கூடிய சொற்களாக இல்லை. மேலும் அவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி பெண்களின் இயற்கையான தன்மையாகவும் கூறப்படவும் இல்லை. மேலும் குறித்த விதி வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ளதேயன்றி சட்ட வல்லுனர்கள் குறிப்பிட்டிருப்பது போல் வாழ்க்கையின் சகல பிரச்சினைகளுக் கும் ஒவ்வாது, வரலாற்றின்படி வர்த்தக நிபந்தனைகளும் வழமைகளும் தொடர்ச்சியாக மாற்றம் அடைவதைக் காணக் கூடியதாக இருக்கின்றமையால், குறித்த விதி விசேடமாக சந்தர்ப்பத்துடன் தொடர்புடைய தன்மையுடையது என்பது வெளிப்படையானது,
30

குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தில் இருந்த பெண்கள் தற்காலத்துப் பெண்கள் அல்ல. இன்று வாழ்க்கையில் சகல துறைகளிலும் பெண்கள் ஆண்களுடன் போட்டி இடுகின் றார்கள், அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும் கோடிக்கணக்கில் மிகவும் ஆற்றல் உள்ள, கல்வி கற்ற பெண்கள் ஆசிரியர்களாகவும், பேராசிரியர் களாகவும், பொறியியலாளர்களாகவும், வர்த்தக நிறைவேற்று அதிகாரிகளாகவும், தொழில் செய்கின்றார்கள். இவர்களுள் பலர் அமைச்சர்களாகவும், பிரதம அமைச்சர்களாகவும் பலம் வாய்ந்த ஜனநாயக நாடுகளில் இருக்கின்றார்கள். அறிவிலும், ஒழுக்கத்திலும், ஏனைய பல துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்குச் சமம் என அவர்கள் காட்டியுள்ளார்கள் சிலவேளைகளில் மனிதத்துவ அம்சங்களில் அவர்கள் ஆண்களைவிட உன்னதமானவர்களாக இருக்கக்கூடும். எனவே பெண்கள் இயற்கையாகவே ஞாபகமறதித் தன்மை கொண்டவர்கள் என்ற கூற்றோ அவர்களுள் இருவர் ஒரு ஆணுக்குச் சமம் என்னும் கருத்தோ தற்காலத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.
சாட்சியத்தின் வகைகள் பற்றிய இபுனுகையிம் அவர்களின் கருத்து,
குற்றவியல் வழக்குகளிலும், தண்டனை குர்ஆனினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குற்றங்களிலும், ஒரு பெண்ணின் சாட்சி யம் சட்டபூர்வம் அற்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், குர்ஆனின் (22182), வாக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரையறைகளுக்கு அமைய ஏற்றுக்கொள்ள முடியாது என அனேக சட்ட வல்லுனர்கள் கூறுகின்றார்கள், பணத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்களிலும் சாதாரணமாக அவர்களுக்கு மாத்திரமே தெரிந்த அல்லது அறிந்த விடயங்களில் மாத்திரமே சாட்சியம் செல்லும் உரிமை உண்டு என்கின்றனர். உதாரணமாக ஒரு பிரசவம், குழந்தைக்குப் பாலூட்டுவது, ஒரு பெண்ணின்
31

Page 21
கன்னித் தன்மை, கன்னி அல்லாத நிலை முதலியன போன்ற விடயங்கள் பற்றி மாத்திரமே அவர்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளலாம். இபுனுகையிம் இக்கருத்தை பலமாக மறுத்து, சமயத்தில் இதற்கு ஆதாரதமாக எதுவும் இல்லையெனக் கூறுவதுடன், குர்ஆனிலோ, நபிகள் நாயகம் அவர்களின் ஹதீதிலோ, அல்லது அவர்களுடைய சகாக்களின் அறிக்கை களிலோ, பெண்களின் சாட்சியத்தை சில சந்தர்ப்பங்களில் ஏற்கும்படியும், வேறு சில சந்தர்ப்பங்களில் த்விர்க்கும்படியும் கூறப்படவில்லையென்றும் கூறி, (இலம் அல்முவக்கின் தொகுப்பு 2, ப்,76 எவ்) சகலவிதமான பிணக்குகளிலும் தங்குதடையின்றி பெண்களின் சாட்சியத்தை ஏற்கலாம் என்று கூறுகின்றார்.
முஸ்லிம் சமுதாயத்தின் (உம்மாவின்) நடைமுறை வழக்கம்
இஸ்லாமிய, சாட்சியம் பற்றிய சட்டத்தில், பெண்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளும் ‘வீதம் பற்றிய கோட்பாட்டுக்கு ஆதாரமாகக் காட்டப்படும் மிகவும் வன்மையான வாதம், குறித்த முஸ்லிம் சமுதாயம் கடந்த ஆயிரத்து நானுநூறு ஆண்டு களாக பிழையான கருத்துகளுடன் செயற்பட்டிருக்க முடியாது என்பதேயாகும். இதற்கான பதில், இவ் வாதம் வரலாற்று ரீதியான உண்மை அல்ல, இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே முஸ்லிம் சமுதாயம் கடும் போக்குடைய மன்னர்களாலும், இராணுவ சர்வாதிகாரிகளாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அக் காலங்களில் சாட்சியம் பற்றிய சட்டம் உட்பட, தனிநபர் சட்டங்கள் அடங்கிய, சட்ட வல்லுனர் களால் தொகுக்கப்பட்ட இஸ்லாமிய சட்டம் ஒன்று, அமுல் செய்யப்படவில்லை. குறித்த காலங்களில் தனிநபர் நடைமுறை களோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் அதாவது விவாகம், விவாகரத்து, கைக்கூலி, மரபுச் சொத்துரிமை முதலியவற்றோடு
32

சம்பந்தப்பட்ட சட்டங்கள் மாத்திரமே அமுல் செய்யப்பட்டன. இந்த ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்திய சட்டம் அவர்கள் இஷ்டப்படியே அமைந்திருந்தது. இந் நிலை இப்பொழுதும் அவ்வாறேயுள்ளது,
பாகிஸ்தான் உட்பட அனேக முஸ்லிம் நாடுகளில் நடைமுறையில் இஸ்லாமிய சட்டம் இல்லை. அங்கெல்லாம் இருப்பது மேற்கத்திய நாடுகளில் இருந்து, இரவல் வாங்கப் பட்ட சட்ட ஒழுங்குமுறைகளே யாகும். குர்ஆனின் கட்டளைப் படியே சரியாகச் செயற்பட்டுள்ளார்கள் என்பதற்கு, நெடுநாட் களாக முஸ்லிம் சமுதாயத்தில் குறித்த ஒரு வழமை இருந்தது எனக் கூறுவது, ஏற்றுக் கொள்ள முடியாதவொரு விவாதமாகும், ஒரு பிழையான விடயத்திற்கு முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் இணக்கமுடையதாக இருந்திருக்க முடியாது. இது ஹதீஸ் சட்ட வல்லுனர்களின் கூற்றைப் புனிதப்படுத்துவதற்கெனத் உருவாக்கப்பட்ட ஒரு விடயமாகும். இக் கருத்திற்கு ஆதாரமாக முஸ்லிம் சமுதாயம் குர்ஆனில் கூறப்பட்ட ஒரு விடயத்தைப் பிழையாக விளங்கி அதைச் சரியென ஏற்று பல்லாண்டு காலமாக பின்பற்றி வந்த பல விடயங்களை நாம் இங்கு குறிப்பிடலாம். அவற்றில் ஒன்று சுமார் 13 நாடுகளில் பரந்த அளவில் எந்தவித மனக்கஷ்டமும் இன்றி (நடைமுறையில் இருந்த) அடிமைகளை வைத்திருக்கும் முறையாகும். இப் பாரதூரமான கொடிய செயலை முஸ்லிம் சட்ட வல்லுனர்கள் நிரந்தரமாக்கி அதன் கோட்பாடுகளையும் பிரச்சினைகளையும் தங்களது நூல்களிலும் கல்லூரிகளிலும் கலந்துரையாடினர், இந் நூற்றாண்டில் அடிமைகளை வைத்திருக்கும் நிலை ஒழித்துக் கட்டப்பட்டு விட்டது. இதனை முஸ்லிம் உலகம் வன்மையாக எதிர்த்தது. எனினும் குறித்த காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகள் உலக இராணுவ பலத்தையும், செல்வாகையும் கொண்டிருந்தமையால் இக் கொடிய வழமை உலக சமுதாயத்தில் இருந்தே முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது.
33

Page 22
மணம் செய்யாமல் இன்னொரு பெண்ணை வைத்திருக்கும் நிலை இதற்கு வேறொரு உதாரணமாகும். இவ்வாறு செய்வ தற்கு குர்ஆனில் ஓர் அங்கீகாரமும் இல்லை. எனினும் சட்ட வல்லுனர்களும் குர்ஆனின் உரை அறிஞர்களும் அதிலிருந்து சில கருத்துக்களை எடுத்து வேண்டுமென்றே அதற்குத் தப்பான விளக்கங்களைக் கொடுத்து அவ் வழக்கத்திற்கு அங்கீகாரம் இருப்பதாகக் கூறி இதனை இறைவனால் கொடுக்கப்பட்டதொரு வரப்பிரசாதம் என 13 நூற்றாண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் இக் கொடிய ஒழுங்கு முறைகளைப் பின்பற்றச் செய்தனர். இப் பழக்கம் மிகவும் ஒழுக்கக் கேடாக வும், சமுதாயத்திற்கு தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்த பொழுதிலும் சமய அறிஞர்கள் (உலமாக்கள்), இது குர்ஆனினால் அங்கீகரிக்கப்பட்டதென முஸ்லிம் சமுதாயத்திற்கு எடுத்துக் கூறினர். இதன் காரணமாக இத் தீய பழக்கத்திற் கான அங்கீகாரம் சமய நூல்களில் இப்பொழுதும் உள்ளது.
அரசியல் அமைப்புமுறை இன்னொரு விடயமாகும், இஸ்லாம் மிகவும் கூடிய ஜனநாயகக் கோட்பாடுகளைக் கொண்ட ஒரு சமயமாகும். அதன் சமய, சமுதாய அமைப்புகளும் அவ்வாறே, குர்ஆனில் அரசியல் அமைப்புச் சட்ட ஒழுங்குகள் இல்லாவிடினும் ஜனநாயக ரீதியில் இயங்கும் ஒரு சமுதாயத்தையே அது விரும்புகின்றது. இஸ்லாமிய சமய நெறியோடு சம்பந்தப்பட்ட சகல நூல்களும் இஸ்லாமிய அரசியல் அமைப்புமுறை, பிரதிநிதித்துவ அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களைக் கொண்டதும் ஜனநாயக ரீதி யானதும் என்பதை ஏற்றுக் கொள்கின்றன. எனினும் நேர்வழி நடந்த நான்கு கலிபாக்களின் ஆட்சியைத் தவிர இக் கலிபாக் களினது குறுகிய கால ஆட்சி ஏனையவர்களின் காலத்தில் இஸ்லாமிய சமுதாயம் தொடர்ச்சியாகத் தனிப்பட்ட சர்வாதி காரிகளாலேயே ஆளப்பட்டு வந்துள்ளது. இக்கருத்து எந்தள விற்கு இஸ்லாமிய சமுதாயத்தில் ஆழமாகப் பதிந்திருக்கின்றது என்றால், இன்று பொறுப்புணர்ச்சியுள்ள உலமாக்கள் மாத்திர
34

மன்று உளமாக்கள் அல்லாதவர்கள்கூட, "ஜனநாயகம்’ நாளாந்த இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு ஒவ்வாத ஒன்று எனக் கூறுகின் றார்கள்.
அடுத்ததாக வட்டிமுறையைக் குறிப்பிடலாம். குர்ஆனில் தெளிவாகவும் கடுமையாகவும் வட் டியெடுத்தல் விலக்கப்பட்டுள்ளது. (2:275), எனினும் அது தவிர்க்கமுடியாத ஒரு முறையென சர்வதேச ரீதியாகக் முஸ்லிம் உலகம் கடைப்பிடித்து வருகின்றது. அத்துடன் நில்லாது சில முஸ்லிம் நாடுகளில் வட்டி என்பதை இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு அமைவாக்குதற்காக "இலாபம்’ என்ற பெயர் குட்டி அறிவிடப்பட்டும் வருகின்றது,
இவ்வாறு பல்வேறு உதாரணங்களை நாம் தரலாம். ஆனால் இதுவரை தரப்பட்ட உதாரணங்கள் போதுமானவை எனக் கருதுகின்றோம். எனவே குர்ஆனில் இருக்கும் ஒரு விதிமுறையை இஸ்லாமிய சமுதாயம் பிழையாக விளங்கி நூற்றாண்டு காலமாக ஒழுகி வந்தது என்பதை காரணமாகக் காட்டி அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? அதையே இஸ்லா மிய ஷரியாச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்காக வாதிடவும் (Upgtung).
உலக மக்களின் விழிப்புணர்வு
முஸ்லிம் உலகிற்கு பெண்கள் ஒரு தனித்துவமான இனம் அன்று. உலகியல் நன்மைகளைப் பெறுவதற்காக இறைவனால் படைக்கப்பட்ட படைப்புக்கள் இரண்டில் ஒன்று பெண்களாகும். ஆண்களுடன் அவர்களும் உள்ளனர். அத்துடன் இப் பூவுலகில் உள்ள ஏனைய பெண்களைவிட முஸ்லிம் பெண்கள் வேறுபட்டவர்களல்ல, மேலும் சரித்திரத்தில் பெண்கள் பெரும் இன்னல்களுக்குள்ளாக்கப்பட்டவர்களாவர். உலக மக்களின் மனச்சாட்சி இவ்வாறு செய்வது மடமை
35

Page 23
என்பதை ஏற்று அவர்கள் சகல மட்டத்திலும் ஆண்களுக்குச் சமமானவர்கள் என நம்புகின்றனர். சகல முன்னேறிய நாகரிகம் அடைந்த, அபிவிருத்தி அடையும் நாடுகளில்கூட பெண்களுக்கு ஆண்களோடு சமமான அந்தஸ்தும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வகையான அனேக நாடுகளில் பால் அடிப்படையிலான வேறுபாடு காட்டப்படுவதில்லை. அவற்றுள் பலவற்றில் பெண்கள் ஆண்களைவிட கூடுதலான அந்தஸ்த்தையும் கெளரவத்தையும் அனுபவிக்கின்றார்கள், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் மனித உரிமைகளுக்கான பட்டயத்தில் பெண்கள் ஆண்களோடு இயற்கையாகவே சம அந்தஸ்தையும், உரிமையையும், சிறப்புரிமையையும் கொண்டுள் ளார்கள் என சட்டப்படி பிரகடனப்படுத்தியுள்ளமை, சமுதாயத் தில் (பாகிஸ்தான் உட்பட) சகல அங்கத்தவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு விடயமாகும். இப் பட்டயம் பெண்களுக் கெதிரான சகல பாகுபாட்டையும் தடை செய்துள்ளது: ஒழித்துக் கட்டியுள்ளது.
எனவே முஸ்லிம் அல்லாத சமுதாயத்தில் வாழும் பெண்கள் சுயேட்சையாகச் செயற்படக்கூடிய நிலையில் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள். அதுமாத்திரமன்றி சகல தனிநபர், சமுதாய சட்ட உரிமைகளையும் எந்தவிதமான தடையும் இன்றி அனுபவித்து வருகின்றார்கள். அத்துடன் உலக ஆண்கள் அவர்களுக்கு மதிப்பும் கெளரவமும் அளித்து வருகின்றார்கள், ஆகவே முஸ்லிம் பெண்கள் உலகில் தங்களுடைய நிலை யாது என்று கேட்பது சகஜமே, ஒரு முஸ்லிம் பெண்ணின் நிலை யைப் பற்றி குர்ஆனில் உள்ள ஒரு வாக்கியத்தைப் பிழையாக விளங்கியுள்ள உலமாக்களின் செயலினால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, குறைந்த அந்தஸ்த்து உள்ளவளாக இருக்க வேண்டுமா? இறைவனின் சமயம் ஆகிய இஸ்லாத்தின் நோக்கம், பெண்களை அடக்கி, ஒடுக்கி கட்டுப்பாட்டிற்குள்
36

வைத்திருப்பதா? ஒரு சமயம் அதன் நோக்கத்தை எவ்வகையி லாவது நிறைவேற்றுவதற்கு எதையும் ஈடாக்குமா? ஒரு சமயத் தின் பிரதான இலக்கு மனித சமுதாயத்திற்கு சுபீட்சத்தையும் நியாயத்தையும் வழங்குவதைவிட வேறொன்றாக இருக்க முடியுமா? இக் கேள்விகள் இன்றைய முஸ்லிம் பெண்களின் மனதிற்குக் கடும் வேதனையை ஏற்படுத்தி வருகின்றது.
இறுதிக் கேள்வி
கருத்துரையாளர்களும் சட்ட வல்லுனர்களும், உலமாக் களும், சாட்சியம் பற்றிய எண்ணிக்கையைத் தீர்மானிப்பதற்கு குறித்த (2:282), வாக்கியத்தை அடிப்படையாக கூறுகின்றார்கள், அதாவது இரண்டு (02) பெண்களின் சாட்சியங்கள் ஒரு (0) ஆணின் சாட்சியத்திற்குச் சமம் என்பதாகும். இது உறுதியானது: குர்ஆனில் உள்ள ஏனைய வாக்கியங்களால் எந்த வகையிலும் பாதிக்கவோ அல்லது மாற்றம் செய்யவோ முடியாது; இறுதி யானது; (முக்கம்) வேறெந்த வாக்கியத்தாலும் அதை ரத்துச் செய்ய முடியாது; அக்கூற்று இறை நீதி என்று பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகின்றனர். இக் கட்டுரையின் முற்பகுதியிலே இந்த விடயங்களைக் கருத்திற் கொண்டு குர்ஆனின் ஏற்பாடுகள் பற்றி தெளிவாகக் கூறி மேற்படி கூற்று பிழையெனத் தெளிவாக்கப்பட்டது. எனினும் எமது வார்த்தையை உலமாக்கள் ஏற்கவில்லை. எனவே ஒருவர் பின்வரும் கேள்வியைக் கேட்கலாம். குறித்த வாக்கி யத்தில் உள்ள கூற்றை எவ்வாறு மாற்றுவது அல்லது இஸ்லா மிய சட்டக் கோட்பாடுகளுக்கு அமைவாக நீதி பாபாலனத்தின் பொழுது அளிக்கப்பட்ட தீர்வுகளுக்கும், இஜிதிகாத் pGub தெளிவாக்கப்பட்ட விடயங்களுக்கும் அமைய எவ்வாறு மாற்றிக் கொள்வது? இது பற்றி அடுத்த பகுதியில் ஆராய்வோம்.
37

Page 24
குர்ஆனும் சுன்னாவிலும் உள்ள அதிகார ஆணைகளின் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளல்,
(கட்டுரையின் இப்பகுதி சுப்பி மஹமாசாணியின் பல்சாபத் அல் இஸ்லாமி என்னும் நூலில் 4 ஆம்அத்தியாயத்தில் 1 ஆம்பிரிவில் உள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை.)
இஸ்லாமிய ஷிரியாச் சட்டத்தின் ஒழுங்கு முறைகளையும், நோக்கங்களைப் பற்றியும், அதற்கான காரணங்களையும் பற்றி லிஸ் இபுனு அப்துல்சலாம், அல்ஷாபி, இபுனு அல் கையிம் அல் ஹன்பாலி, அபுஇஸாக் அல் சதிபி முதலியோர் அதிகார ஆணைகளை இரண்டாகப் பிரித்துள்ளனர்.
அவையாவன:- (1) வழிபாடுகள்,
(2) உலக விடயங்கள்.
முதலாவது வகையின் கீழ் ஷார் எனப்படும் வழிபாட்டு ஒழுங்கு முறைகளின் பிரச்சினைகள் பற்றி கருத்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இப்போதைக்கு அவ் விடயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டியதில்லை. இரண்டாவது விடயத்தின் நோக்கம் மனித வர்க்கத்தின் நன்மையும் நல்வாழ்வுமாகும். விஸ்இபுனு அப்துல் சலாம் இவ் விடயம் பற்றி இவ்வாறு கூறுகின்றார்.
"ஷரியாச் சட்டத்தின் அதிகார ஆணைகளின் நோக்கங்கள் இவ் உலகத்திலும் மறு உலகத்திலும் சுன்னாவின் மேம்பாடே யாகும்”. உலக விடயங்களைக் கையாளும் ஷாரியாச் சட்டங்கள்
காரணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஏனெனில், அவை மக்களுக்கு நல்லது செய்வதற்காகவும், தீங்கிலிருந்து காப்பதற்காகவுமே உருவாக்கப்பட்டுள்ளது. இன்னொரு
வார்த்தையில் கூறினால், நல்லவை ஆகுமாக்கப்பட்டுள்ளன. தீயவை தவிர்க்கப்பட்டுள்ளன. இக் கருத்தை பல நியாயவாதிகள் ஏற்றுக் கொள்கின்றனர்.
38

'ஷரியா சட்டத்தின் நோக்கங்கள் பற்றி இபுனுகையிம் அவர்களுடைய கூற்று சிறந்ததொன்றாகும், "ஷரியா சட்டத்தின் நோக்கம், இவ் உலகிலும் மறு உலகிலும் மக்களின் நல்வாழ்வும் மேம்பாடுமேயாகும்”. ஷரியா முழுமையாக நியாயத்தையும் இரக்கத்தையும் பகுத்தறிவையும் உள்ளடக்கியதாகும். ஏதோ ஒரு பிணக்கு, கொடுங்கோல் ஆட்சியை நியாயப்படுத்துவது, இரக்கமற்றவர்களினால் ஏற்படுத்தப்பட்ட துன்பம், நியாயத்திற் குப் பதிலாக அநியாயம் ஆகியனவாக அமைந்தால், அது 'ஷரியா' வுக்குட்பட்டதாக இருக்காது. தவறான விளக்கம் காரணமாக 'ஷரியா அதனோடு சம்பந்தப்பட்டிருக்கலாம். எனவே 'ஷரியா சட்டம் என்பது இறைவன் தான் படைத்தவர் களுக்கு நியாயமும் இரக்கமும் அளிப்பதற்கான அமைத்த ஒரு ஒழுங்கு முறையாகும். (இஆம் அல் முவக்கின் 4 ஆம் அத்தியாயத்தில் 1 ஆம் பக்கம்)
அதிகார ஆணையை மாற்றம் செய்வதற்கான கோட்பாடுகள்
இபுனு ஹல்துண் இவ் விடயம் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்: உலகில் நிகழும் நிகழ்வுகளும், இவ் உலக மக்களின் பழக்கவழக்கங்களும் எக் காலத்திலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. காலத்தால் ஏற்படும் மாற்றங்களையும் நிலமைகளில் ஏற்படும் புரட்சிகளையும் தான் உலகம் என்று அழைக்கின்றோம். மனிதர்கள், சமுதாயங்கள், நகரங்கள் முதலியவற்றில் காலத்திற்குக் காலம் எவ்வாறு மாற்றம் ஏற்படுகின்றதோ, அவ்வாறே உலகின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இறைவன் தான் படைத்தவர்கள் மத்தியிலே இவ்வாறு தான் செயற் படுகின்றான்" (முஅத்திமா பக்கம் 24)
39

Page 25
“உலகத்தின் மாற்றம் அடையும் தன்மை காரணமாக மனித சமுதாயத்தின் நியமங்களிலும் மாற்றம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. மனித சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்திலும் மாற்றம் ஏற்படுகின்றது. அத்துடன் மக்களின் சந்தோஷத்திலும் மேம்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன, மனிதனின் மேம்பாடே சகல சட்டங்களின் அடிப்படையாக இ ருப்பதனால் காலத்தினால் ஏற்படும் மாற்றங்களை அனுசரித்து ஷரியாச் சட்டத்தினால் விதிக்கப்பட்ட அதிகார ஆணையிலும் மாற்றங்கள் ஏற்படத்தான் வேண்டும். மேலும் இந்த அதிகார ஆணைகள் தொடர்ந்து சுற்றாடலினதும் சமூகத்தினதும் நிலைமைக்கு ஈடுகொடுக்கவும் வேண்டும்.
இக் கோட்பாட்டிற்கு ஆதாரமாக இபுனுகையிம் மிக அழகாக பின்வருமாறு கூறியுள்ளார். "இறைவனினால் விதிக்கப் பட்ட அதிகார ஆணையை மாற்றம் செய்யும்பொழுது அவ்வவ் மாற்றங்கள் காலத்திற்கும், இடத்திற்கும், நோக்கத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் மனிதர்களுடைய பழக்கவழக்கங்களுக்கும் அமைவாக இருக்கும். இத் தெளிவான உண்மை தொடர்பாக, சமுதாயத்திற்கும் சட்டத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றிய அறிவின்மையின் காரணத்தினால், மக்கள் தப்பான அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். இதனால் இஸ்லாமிய 'ஷரியா சட்டத்தின் நோக்கெல்லை குறுகியதாக்கப்பட்டது. இக்குறுகிய சிந்தனை, மனிதனின் மேம்பாட்டிற்காக உன்னதமான கவனத்தைச் செலுத்தியுள்ள 'ஷரியா வுடன் பொருந்தமாட்டாது", (இலாம்)
படடத்தட்ட இதே விடயத்தினை குவாவித் அல் நஜமி கூறியுள்ளார். அதனை மஜலத்-அல்-அகாம், அல்-அத்லியாவின் 39 ஆவது பிரிவில், கூறுகிறார், காலம் மாறும்பொழுது அதற்கேற்ற வகையில் அதிகார ஆணைக்கட்டளைகளும் மாறும் என்பது எவராலும் மறுக்க முடியாததொன்றாகும். இக் கோட்பாட்டை பூர்த்தி செய்வதற்குப் பின்வரும் சொற்பதங்களைச்
40

சேர்த்துக் கொள்ள வேண்டும், "அதிகாரஆணைகள் சந்தர்ப் பத்திற்கு அமையவும் இடத்திற்கு இடமும் மாற்றம் அடையும், இவ் விடயத்தை அனேக சட்டவல்லுணர்கள் விளக்கியுள்ளார்கள்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கோட்பாட்டிற்கு அமைய 'ஷரியா வின் அதிகார ஆணைகள் பொது மக்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டமையால், அவ்வடிப்படை விருப்பம் அற்றுப்போகும் பொழுது அல்லது மாற்றம் அடையும்பொழுது சம்பந்தப்பட்ட அதிகார ஆணையிலும் அல்லது மாற்றம் ஏற்பட நேரிடும். எனவே அடிப்படைச் சட்டத்தில் (மஜல்லா) இவ்வாறு கூறப்பட்டுள்ளது, "ஷரியாச் சட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டதாயின் அச் சட்டம் செயல் வலு உள்ளதாக இருப்பதும், இல்லாமல் போவதும், அக்காரணி வலு உள்ளதாக இருப்பதிலும், இல்லாமல் போவதிலும் தங்கியுள்ளது.
குர்ஆனையும் சுன்னாவையும் அடிப்படையாகக் கொண்ட அதிகார ஆணைகளில் மாற்றங்கள்.
"குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் விளக்கமளித்த ஆரம்ப கற்றறிந்த பெரும்பான்மையான சட்ட வல்லுனர்கள், ஷரியாவின் அதிகார ஆணைகளில் மாற்றம் செய்வதன் அடிப்படைகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும் அவர்கள் மத்தியில் உள்ள கருத்து வேற்றுமை, குர்ஆனிலோ சுன்னாவிலோ குறிப் பிட்ட ஒரு விடயம் பற்றி தீர்க்கமான முடிவு எடுக்கும்பொழுது, எவ்வாறு மாற்றம் செய்வது என்பது பற்றியதேயாகும். எனவே பின்வரும் கேள்வி எழுகின்றது. குர்ஆனிலோ சுன்னா விலோ இருக்கும் ஒரு விடயத்திற்கு, இஜிதிகாத் மூலமோ, சட்டவாக்கங்கள் மூலமோ வழமைகளைக் கொண்டோ, அல்லது வேறு ஏதேனும் வழியைக் கையாண்டு திருத்தம் செய்வதோ அனுமதிக்கப்பட்டுள்ளதா?
41

Page 26
இதற்குரிய பதில் மிகவும் கடினமானதாகும். அத்துடன் விபரமான விளக்கமும் தேவைப்படுகின்றது, குர்ஆனிலோ சுன்னாவிலோ நம்பிக்கையோடும் வணக்கத்தோடும் சம்பந் தப்பட்ட ஒரு விதி இருப்பின் பூமி பூமியாக இருக்கும் வரை யிலும், வானம் வானமாக, இருக்கும் வரையிலும் மாற்றம் பெறாது இருக்கும். ஏனெனில் ஒரு சமயத்தின் கோட்பாடுகளும், தெளகிதும், நம்பிக்கைக்கான விதிகளும் மாற்றம் செய்யப்பட முடியாதவையும், ஆரம்பத்தில் இருந்தவாறு தொடர்ச்சியாக இருக்க வேண்டியதுமாகும். இந்த ஏற்பாடுகள் யாவற்றிலும் குர்ஆனிலோ சுன்னாவிலோ எழுதப்பட்டிருக்கும் ஒழுங்கு விதிகளைப் பேணுவது கட்டாயமான விடயமாகும். எனவே அது காலத்தாலோ, இடத்தாலோ, சந்தர்ப்பத்தாலோ பாதிப்படைய முடியாது.
ஆனால் குர்ஆனிலோ சுன்னாவிலோ உள்ள ஒழுங்கு விதி, ஏதேனும் உலகாயுத விடயங்களோடு சம்பந்தப்பட்டிருக்கு மேயாயின், அது பற்றிக் கவனத்தில் எடுக்க வேண்டும். அவ் விதியின் நோக்கமும் கருத்தும் என்னவென்று அறிந்து கொள்வதுடன், அதற்கான காரணங்களையும், ஏன் அவ்வாறு விதிக்கப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ளுதலும் வேண்டும். இதனைப் பொறுத்தமட்டில் சட்ட வல்லுனர்கள் மத்தியில் ஏகோபித்த இணக்கம் உண்டு, ஆனால் குர்ஆனினாலும் சுன்னாவினாலும், உலக விடயங்கள் சம்பந்தமாகக் கூறப்பட் டுள்ள சில அதிகார ஆணைகளை மாற்றுவது குறித்து கருத்து வேற்றுமை உண்டு. சிலர் அதனை பரிபூரணமாக சட்டத்திற்கு முரணானது எனக் கூறுகின்றனர். வேறு சிலர் சில சந்தர்ப் பங்களில் மாத்திரம் மாற்றம் செய்யலாம் எனக் கூறுகின்றனர்.
குறித்த விடயம் பற்றி அனேக சட்ட வல்லுனர்களின் உண்மையான கருத்து யாதெனில் தெளிவான ஒரு விதி (ஹூக்ம்) ஒரு விடயத்தைப் பற்றியதாக இருக்கும் பொழுது அதற்கு எதிர்ப்புக் காட்டுவதற்கு ஒருபொழுதும் இடமளிக்க
42

முடியாது. அவர்களின் கருத்துப்படி 'ஷரியாவின் எந்தவொரு விதியையும் நிலமைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியாது. குர்ஆனிலோ சுன்னாவிலோ ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக தெளிவான சட்டம் இல்லாத பட்சத்தில் மாத்திரமே மாற்றம் செய்வதற்கான அனுமதியுண்டு,
ஆனால் இந்த அபிப்பிராயங்களுக்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட விதிக்கான அடிப்படைக் காரணங்கள் மாறுகின்றபோது ஏட்டில் (னாஸ்) அல்லது அதன் ஒரு பகுதியில் மாற்றம் செய்யலாம் என்று சில கலிபாக்கள், இமாங்கள், இஸ்லாமிய சட்ட வல்லுணர்கள் ஆகியோர் கருதுகின்றனர். வேறு கார ணங்களுக்காகவும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. அதாவது தேவைகளின் அடிப்படையிலோ அல்லது பொதுமக்களின் விருப்பு அடிப்படையிலோ ஆகும். இக் கூற்றிற்கு உதாரணமாக சில சட்ட (பிக்ஹ்) நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங் கள், அபிப்பிராயங்கள் எதுவுமற்று கீழே தரப்பட்டுள்ளன,
உமர் இபுனு அல் கத்தாய் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீமானங்கள்,
கலிபா உமர் அல் பாரூக் (தனிச்சிறப்புக் காண்பவர்) அவர்கள் இஸ்லாமிய ராஜ்யத்தின் ஆரம்ப கர்த்தா என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் தன்னுடைய நிர்வாகத்தை துணிகரத்துடனும் நியாயத்துடனும் நடாத்தியவர் என்பதிலும் பெயர் பெற்றவர். அவருடைய ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய ராஜ்ஜியம் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. அக்காலத்தில் மக்களுடைய உரிமைகளுக்கும், தேவைகளுக்கும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது, கலிபா உமர் உடைய முழு ஆட்சிக் காலமும் சிறந்த வெற்றிகளையும் பாரிய மாற்றங்களையும் ஏற்படுத்தியதொன்றாகத் திகழ்ந்தது, அதன் பயனாக புதிய தேவைகள் அடிக்கடி ஏற்பட்டன. பழமைவாய்ந்த பழக்கவழக் கங்கள் அற்றுப் போயின. எனவே நபிபெருமான் (ஸல்) அவர்
43

Page 27
களின் கட்டளைகளும் கலிபா அபூபக்கர் அவர்களின் கட்டளைகளும் இப்புதிய தேவைக்கும் கோரிக்கைக்கும் அமைய மாற்றம் செய்ய வேண்டியதாயிருந்தது. இந்த விடயத்தில் உமர் அவர்கள் மிகவும் விழிப்பாகவும் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். அவர் இவ்வாறு செய்தது அரசியல் நோக்கங் களுக்கும் பொது நன்மைகளுக்குமாகவேயாகும். இதற்கென (குர்ஆனிலும் சுன்னாவிலும்) பல விதிகளை சில சந்தர்ப்பங்களில் எதிர்ப்பதற்கும் தயங்கவில்லை. அதற்குரிய சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
முதலாவது உதாரணம் : அல் முவல்லபா, அல் குலு புஹதும், (உள்ளங்கள் சங்கமித்தவர்கள் - இஸ்லாத்திற்கு புதிதாக சேர்ந்து கொண்டோர்)
குர்ஆனின் வசனம் ஒன்றில் (960) சக்காத்தை செலவு செய்வதற்கான வழிமுறைகளை இறைவன் குறிப்பிட்டிருக்கின் றான் என்பது நம்மனைவருக்குந் “தெரியும், அதற்கமைய சக்காத் பெறுவதற்கு தகைமையுள்ள ஒரு சாராரென குறிப்பிடப் பட்டுள்ளோரில் "உள்ளங்கள் சங்கமித்தவர்கள்" அடங்குவர். இஸ்லாமிய சமயத்தில் தொடர்ந்தும் இருக்கும் விருப்பை அவர்கள் மனதில் ஏற்படுவதற்கு நபிபெருமான் அவர்கள் இவ்வகையானோருக்கும் சக்காத் வழங்க வழி செய்தார்கள். இத்தகைய ஒழுங்கு செய்ய வேண்டியதன் தேவை, யாதெனில் அவர்களின் விசுவாசத்தை வலுப்படுத்துவதும், தீமையில் இருந்து அவர்கைளக் காத்துக் கொள்வதுமாகும். மேலும் அவர்களின் கூட்டத்தார் மத்தியில் அவர்கள் வகித்த உன்னத நிலைக்குமாக இவ்வாறு செய்யப்பட்டது.
இவ் விடயம் பற்றித் தெளிவாகக் குர்ஆனில் கூறப்பட்டி
ருந்தும், இத்தகையவர்களுக்கான சக்காத் பங்கு உமர் அவர் களினால் ஒழிக்கப்பட்டது. இதனை நியாயப்படுத்த அவர்
44

கூறிய காரணம் யாதெனில், இஸ்லாம் வலுவடைந்து விட்டமையினால் இவ்வேற்பாடு அவசியமில்லை; குறித்த "உள்ளம் சங்கமமானவர்கள்” தொடர்ந்தும் இஸ்லாத்தில் இருக்க விரும்பினால், சொந்த நன்மைக்காகவே அவர்கள் அவ்வாறு இருக்க வேண்டும் என்றும், முஸ்லிமாக இருக்கின்ற காரணத்திற்காக அவர்களுக்கு எந்தவிதக் கொடுப்பனவும் செய்யக்கூடாது என்றும் அவர் கருதினார்.
குர்ஆனில் குறித்த வாக்கியத்தில் உள்ள விதி, இஸ்லாத் தைப் பரப்புவதற்கும் அதற்கான ஆதரவை அதிகரிப்பதற்கும் வகை செய்வதாகும். இஸ்லாம் வலு அடைந்ததும் அந்தத் தேவை அற்றுவிட்டது. எனவே குறித்த தேவைக்கு மாத்திரம் செய்யப்பட்ட ஒழுங்கு விதியை உமர் அவர்கள் இல்லாமல் செய்தார்கள்.
இரண்டாவது உதாரணம்: விவாகரத்து
"நபிபெருமான் (ஸல்) அவர்களது காலத்திலும், அபூபக்கள் (ரழி) அவர்களுடைய காலத்திலும், கலிபாஉமர் (ரழி) அவர் களுடைய காலத்திலும், ஒரு ஆண்மகன் தன்னுடைய மனைவியை விவாகரத்துச் செய்வதாகத் தொடர்ந்து (ஒரே தடவையில்) மூன்று முறை கூறினாலும் அவர் ஒருமுறை விவாகரத்து செய்யப் போவதாகக் கூறியதாகவே கருதப்பட்டது. இவ் வழமைக்குப் பின்னர் விலக்கு அளிக்கப்பட்டது. அப்படியிருந்தும் உமர் அவர்கள் இவ்வாறு விவாகரத்துச் செய்வதாக மும்முறை கூறுவதை, மூன்று தடவைகள் கூறியதாகக் கருதி அவ்வாறு செய்யப்பட்ட விவாகரத்து இறுதியானதென பிரகடனம் செய்தார். இவர் இவ்வாறு செய்ததற்கான காரணம் யாதெனில் மக்கள் இவ்வாறு விவாகரத்துச் செய்வதை ஒரு கேலியாகக் கருதுவதையும், விவாகரத்துச் செய்வது பரவலாக நடைபெறும் ஒரு விடயமாகக் கருதியமையையும், அவர் கருத்திற் கொண்டதால்
45

Page 28
இவ்வாறு குற்றம் செய்பவர்களைத் தண்டிப்பதற்காகவும், இத் தீய பழக்கத்தை நிறுத்துவதற்காகவும் உமர் அவர்கள் இம் மாற்றத்தைச் செய்தார். (இலாம் பாகம் 03, பக்கம் 24)
மூன்றாவது உதாரணம்: உம்மஹாத்-அல்-அவ்லாத்,
இது தமது எசமான்களுக்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்த அடிமைப்பெண்களைப் பற்றிய விடயமாகும். இவ்வாறான அடிமைப் பெண்களை விற்பனை செய்வது நபிபெருமான் அவர்களுடைய காலத்திலும் அபூபக்கர் அவர்களுடைய காலத்திலும் அனுமதிக்கப்பட்டிருந்தது, "எமது இரத்தம் அவர்களுடைய இரத்தத்துடன் கலந்து விட்டது" எனக் கூறி உமர் அவர்கள், இவ்வாறு அடிமைப் பெண்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்குவதை நிறுத்தி விட்டார்கள்,
நான்காவது உதாரணம்:
களவு -
குர்ஆன் வாக்கியம் (5:38) இன்படி இஸ்லாமிய ஷரியா வில் களவு செய்வதற்குக் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனை கைகளைத் துண்டிப்பதாகும். இதனை நபிகள் நாயகம் அவர் கள் பிரகடனப்படுத்தி நடைமுறைப்படுத்தினார்கள். எனினும் மக்களின் தேவைகளையும், அவர்கள் ஒன்றுபட்டிருப்பதற்கான அவசியத்தையும் உணர்ந்த உமர் அவர்கள் இத் தண்டனை விதிப்பதை பஞ்ச காலத்தில் இடைநிறுத்தி வைத்திருந்தார்கள். சட்ட அறிஞர்கள் மத்தியில் இச் செயற்பாடு குறித்து பரிபூரண இணக்கம் காணப்பட்டது. (இலாம் பாகம் 03, பக்கம் 07)
46

ஐந்தாவது உதாரணம்: மணம் புரியாத ஆண், பெண் உடலுறவு,
அனேக சட்ட வல்லுனர்களின் கருத்துப்படி மணம் 'சய்யாத ஒருவர், மணம் செய்யாத ஒருவருடன் உடலுறவு கொண்டால் அதற்காக 100 சவுக்கடிகளும் ஒரு வருடகால நாடு கடத்தலும் தண்டனையாக விதிக்கப்படலாம். நாடு கடத்துதல்’ திடமாக அங்கீகரிக்கப்பட்ட ஹதிதுகள்ால் உரு வாக்கப்பட்டதாகும். எனினும் றாபியா இபுனு உமையா, இபுனு கலாவ் ஆகியோரை உமர்(ரழி) அவர்கள் நாடு கடத் தியபொழுது, அவர்கள் றோமியோ (பைசான்டைம்)வுக்கு தப்பி யோடினார். அச் சந்தர்ப்பத்தில் இனிமேல் நான் யாரையும் நாடு கடத்தமாட்டேன் என உமர் அவர்கள் பிரகடனம் செய் தார். இது குர்ஆனில் (னாஸ்) கூறப்பட்டதற்கு முழுமையாக முரண்பட்ட ஒரு செயலாயினும் வேறு நபர்கள் இவ்வாறு நாட்டை விட்டுச் செல்வதைத் தடுப்பதற்காக உமர் அவர்கள் இவ்வகையானதொரு தீர்மானத்தை எடுத்தார்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உதாரணங்களில் இருந்து (குர்ஆனிலும் சுன்னாவிலும்) உள்ள சில விதிகள் (உலகாயுத விடயங்கள் குறித்த) தற்காலிக தன்மையுடையவை, அல்லது காலத்துடன் மாறுந்தன்மையுடையவை என்பது தெளிவாகின்றது.
வேறு கலிபாக்களின் தீர்மானங்கள்.
கலிபா உமர் இப்னு அப்துல் அசீஸ் இவ்வாறு கூறினார். ‘ஒரு அன்பளிப்பு நபிகள் நாயகத்தின் காலத்தில் பரிசாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அது இப்பொழுது இலஞ்சம் என்ற வரைவிலக்கணத்தினுள் வந்துவிட்டது. எனவே அவர்களின் கருத்துப்படி இப் பரிசைப் பெற்றுக் கொள்வது தவறான செயலாகும்,
47

Page 29
ஷரியா சட்டம் மாற்றம் செய்யப்பட்டமைக்கு இன்னுமொரு உதாரணம், முஸ்லிம் ராஜ்ஜியத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு விதிக்கப்படும் தண்டனையோடு தொடர்புடையதாகும். இமாம்ஹனிபாவின் கருத்துப்படி முஸ்லிம் அல்லாதோருக்கு விதிக்கப்படும் தண்டனை, ஒரு முஸ்லிமுக்கு விதிக்கப்படும் தண்டனைக்கு ஒத்தாக இருக்க வேண்டும். ஆனால் இமாம் மாலிக் இனதும், இமாம் ஹம்பலியினதும் கூற்றுப்படி அது அரைப்பங்காக இருத்தல் வேண்டும், ஷாபி இமாமின் கருத்துப்படி அது 4 பங்காக இருத்தல் வேண்டும், அபூபக்கர், உமர், உதுமான் முதலியோரின் காலத்தில் ஒரு யூதருக்கோ அல்லது ஒரு கிறிஸ்தவருக்கோ விதிக்கப்படும் தண்டனை முஸ்லிமுக்கு விதிக்கப்படும் தண்டனைக்குச் சமமாகவே இருந்தது.
இமாம் அபு யூசுவ்
இவர்கள் ஹாரூன் அவர்களின் ஆட்சிக் காலத்தில், அப்பாசிய ராஜ்ஜியத்தின் பிரதம நீதியரசராக இருந்தார்கள், ஹன்பிமத்ஹப்பின் அதிகாரமுள்ள ஸ்தாபகர்களில் இரண்டாம் இடத்தை வகிப்பவராகும். அவருடைய காலத்திலே மிகவும் முக்கியமானதொரு சட்டப்பிரச்சினை எழுந்தது.
“ஒரு 'ஷரியா சட்டம் வழமையை அடிப்படையாகக் கொண்டிருக்குமிடத்து அவ் வழமை மாற்றம் அடையும்பொழுது அச் 'ஷரியா சட்டத்தில் மாற்றம் செய்வது சட்டபூர்வமானதாகுமா? இவ் விடயத்தை வேறு சொற்பதங்களில் கூறுவதாயின் பழமையான வழமையை அடிப்படையாகக் கொண்ட 'ஷரியா" விதியை பின்பற்றுவது அவசியமானதாகுமா? அல்லது புதிய வழமையைப் பின்பற்றுவது அவசியமானதாகுமா? புதிய வழமை நிராகரிக்கப்பட வேண்டுமென்றும் 'ஷரியா’ வின் விதிப்படி ஒழுக வேண்டுமென்றும் இமாம் அபு ஹனிபாவும் இமாம் முகமதும் கூறியுள்ளனர். இமாம் அபு யூசுவ் அவர்கள் இதற்கு முரண்பட்ட கருத்தைக் கொண்டுள்ளார். அவர்
48

கூறுவதாவது, குறித்த ஒரு சந்தர்ப்பத்தில் பொது மக்களின் விருப்புக்கு அமைய 'ஷரியா’ விதிகள் கைவிடப்பட வேண்டும் என்பதேயாகும். அவ்வாறு செய்து புதிய வழமையை ஏற்றுக் கொள்வது அவசியமாகும். ஏனெனில் இச் 'ஷரியா விதிகள் வழமையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றமையால் இவ்வாறு செய்வதே உசிதமானது. (எனவே சமகால வழமை இதன் போது இடம் பெற வாய்ப்பு ஏற்படும்.)
இமாம் அல்-குராபி அல் மாலிக்கி (ஹிஜ்ரி,684)
இவர் இஸ்லாமிய சட்ட வல்லுனர்களுள் மிகச் சிறந்த ஒருவராவார். சட்டத்தில் சமூக மாற்றத்தினால் ஏற்படும் பிணக்குகள் பற்றிக் கருத்துக் கூறுகையில் இவர் இவ்வாறு கூறுகின்றார். "சகல விடயங்கள் பற்றிய விதிகளும், சில காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன; இவை சில காரணிகளிலும் தங்கியிருக்கின்றன; எனவே வழமையும் நடைமுறையும் மாற்றம் அடையும்போது, அவையும் மாற்றம் அடையும்” (கித்தாப்-அல் அக்ஹம் பக்கம் 6867) இக்கூற்று மேலே குறிப்பிடப்பட்ட அபுயூசுவ் அவர்களின் கருத்தினை முழுமையாக ஒத்ததாக இருக்கின்றது.
இமாம் அல்-தூபி அல்-ஹம்பலி (ஹிஜ்ரி716)
ஹம்பலி மதுஹபைச் ஸ்தாபித்த மிகப் பிரபல்யமான அறிஞர் இவராகும். அத்துடன் குர்ஆனில் குறிப்பிடப்படும் விடயங்களுக்கும், இணக்கமுடைய விடயங்களுக்கும் மேலாக பொது மக்களது விருப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, வெளிப்படையாகச் செயற்பட்ட இமாங்களில் ஒருவராவார்,
இக் கோட்பாட்டின் கருத்து யாதெனில் வணக்கங்களும்
நம்பிக்கைகளும் குர்ஆனின் கட்டளைகளிலும், விடயங்களிலும் முழுமையாகத் தங்கியிருப்பதாகும். ஆனால் உலகாயுத விட
49

Page 30
யங்கள் பொது மக்களின் விருப்புடனும், நலனுடனும் தொடர்பு டையன. ஏனெனில் அரசியல், சமூகப் பிரச்சினைகள் மக்க ளது “நல்லது பற்றிய அளவீடு, அவர்களது வழமை, காரணம் ஆகியவற்றோடு தொடர்புடையது.
விதிகளில் மாற்றம் செய்வதென்பது, ஏட்டிலுள்ள விடயங் களில் மாற்றம் செய்வதென அர்த்தம் அல்ல. ஏனெனில் புனித் நூலிலுள்ள விடயங்களை ஏதாவது நிபந்தனைகளின் கீழ் ஒப்பிடுவது எக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க முடியாததாகும், விதிகளில் மாற்றம் செய்வது என்பது, புனித நூல்களில் உள்ள விடயங்களுக்கு கொடுக்கப்படும், பல்வேறு விளக்கங்களில் செய்யப்படும் மாற்றமேயாகும், அவ்வாறு மாற்றம் செய்வது, பழக்கவழக்கங்களின் மாற்றத்தினாலோ அல்லது காரணிகளின் மாற்றத்தினாலோ அவசியமாகின்றது. இங்கு குறிப்பிடப்படும் சகல வாதங்களும், கூற்றுகளும் தரமான ஆதாரங்களையும் பழமை வாய்ந்த வழமைகளையும், இஸ்லாமிய ஷரியாவை நன்கு கற்றறிந்த பல்வேறு மத்ஹப்களைச் சேர்ந்த கல்விமான்களின் கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இக் கருத்துக்கள் யாவற்றினது சாராம்சம் உலகாயுத விடயங்களுடன் தொடர்பான பிரச்சினைகள், நியாயமான காரணங்களையும் காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டவையாகும்; அவை யாவும் மக்களின் சந்தோஷத்தை முழுமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், பழக்க வழக்கங்களினதும், நடைமுறையினதும் தேவைகளை பூர்த்தி செய்வனவுமாகும், மனிதர்களின் இருப்புக்கும் இல்லாமைக்கும் ஏற்ப உலகாயுத விடயங்களும் எப்பொழுதும் (மாற்றிம்) சுழற்சியடைந்து கொண்டு செல்கின்றன. பொது மக்களது வசதிக்கும், தேவைக்கும் ஏற்றவாறு இவை மாறுகின்றன; தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களுக்கு உட்படுகின்றன; காலத்துடன் மாறுகின்றது; இதிலிருந்து மாற்றுவழமைகளும், உபயோகங்களும் விருத்தியடைகின்றன. இஸ்இபுனு அப்துல் சலாம், குவைத் அல் அக்காம், பாகம் 03 பக்கம் 04)
50

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்களில் இருந்து, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் முழு வரலாற்றிலும், அது மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் ஒரு தடையாக இருக்கவில்லை என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். அத்துடன் அது ஒவ்வொரு நாட்டினதும் சமுதாய, பொருளாதார வளர்ச்சிக்கு என்றென்றும் முழுமை யான ஒத்துழைப்பை அளித்திருக்கின்றது. இஸ்லாமிய ஷரியாச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உமர் இபுனு கத்தாப், அபுயூசுவ் போன்ற சிறந்த ஆற்றல் படைத்தவர்கள், உறுதிப்பாடு கொண்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் உதயமானார்கள். அவர்கள் 'ஷரியா வின் நோக்கங்களை நன்கு விளங்கியிருந்தனர். அவர்கள் அதன் உண்மையான இலக்கை மனதில் வைத்து, மக்களின் மனங்கள் விறைப்படை யாது, நெகிழ்வுத் தன்மையுடன் இருந்த காலத்தில், பல்வேறு துறைகளில் நிபுணர்களும் வல்லவர்களும் இருந்த காலத்தில், இஸ்லாமிய ஷரியா சட்டம் வழக்கில் இருப்பதற்கு உதவினார்கள்,
மேலே கூறப்பட்ட கலந்துரையாடல்களில் இருந்து, சாட்சியம் அளிப்பது என்பது வெறுமனே ஓர் உலகாயுத விடயம் என்பது தெளிவாகி இருக்கும். இவ் விடயம் வணக்கத் துடனோ, விசுவாசக் கோட்பாடுகளுடனோ எந்த விதத் தொடர்பும் அற்றதாகும். சாட்சியம் அளிப்பது என்பது அரசியல், சமுதாயத் தேவைகளுக்கு அமைய, பழக்க வழக்கங் களுடன் தொடர்பாக அமையும் ஒரு விடயம் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. இது, நவீன காலத்தில் மனித உரிமைகளின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாக எல்லோராலும் கருதப்படுகின்றது. குறித்த விதி (2:282) எந்த வழமையை அடிப்படையாகக் கொண்டிருந்ததோ அது முற்று முழுதாக மாற்றம் அடைந்து விட்டது. எனவே அதனைச் செயல் அற்றுப் போனதொரு விடயமாகக் கருதலாம்,
51

Page 31
(1)
(2)
(3)
GFITTnTogFio
உலமாக்களும், அடிப்படைத் தீவிரவாதிகளும் 'ஷரியா' வைப் பற்றி விளக்கம் அளிக்க ஏகபோக உரிமை கொண்டிருக்கவில்லை, ஏனைய விசுவாசி களும், அவர்களுக்கு இருக்கும் அதே அளவு உரித் துடன் இருக்கின்றார்கள்,
ஷரியா சட்டத்தின் கீழும், குர்ஆனின் சட்டங்களுக்குக் கீழும் ஆண்களுக்கு இருக்கும் அதே கடப்பாடுகள் பெண்களுக்கும் உண்டு. எனவே ஆண்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் பெண்களுக்கும் உரித் தாகும். எனினும் சட்டத்தோடு சம்பந்தப்பட்ட சாட்சியம் பற்றிய விதிகள், இதற்கு முரணாக இருக்கின்றது. ஏனெனில் அது அவர்களின் அந்தஸ்த்தையும் கெளரவத்தையும் அடிப்படை உரிமைகளையும் குறைக்கின்றது. எனவே குர்ஆனி னால் ஆணுக்கும் பெண்ணுக்கும் கொடுக்கப்பட்டி ருக்கும் சமத்துவத்தோடு ஒட்டிய பொதுக் கோட் பாட்டிற்கு அமைய அவ் விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பெண் தனது இயற்கையான தன்மைகளிலும், ஒழுக்கக் கட்டுப்பாட்டுத் தன்மையிலும், கல்வி அறிவு பெற்றுக் கொள்ளும் தன்மையிலும், ஆணை விடத் தரத்தில் குறைந்தவர்கள் எனவும் அக் கார ணத்தினால் அவர்களின் உரிமைகள் வரையறுக் கப்பட வேண்டும் எனவும் வாதிடுவது மடமையாகும், இவ் வாதத்திற்கு குர்ஆனில் எந்தவித ஆதாரமும் இல்லை. அத்துடன் மனிதாபிமான ரீதியில் நியா யப்படுத்தவும் முடியாது. இது, பெண்களை அவ
52

(4)
(5)
மதிப்பதற்கும், அவர்களின் உரிமைகளை மறுப்ப தற்கும், மடமை வாய்ந்த, சுயநலம் மிக்க மனிதர் களினால் உருவாக்கப்பட்ட ஒரு கூற்றாகும்,
அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும், அனேகமான ஏனைய நாடுகளிலும், பெண்கள் ஆண்களுடன் சகல விடயங்களிலும் வெற்றிகரமாகப் போட்டி யிட்டு, தமது நாளாந்த விடயங்களையும் தாமே கவனித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு முயற்சிக்கின்றனர். அவ்வாறு செய் வதன் மூலம் அவர்கள் கற்றறிவதிலும், ஒழுக்கக் கோட்பாட்டிலும் ஆண்களுக்குச் சமமானவர்கள் மாத்திரமன்றி பல விடயங்களில் அவர்களை விடச் சிறந்தவர்களாகவுமுள்ளனர். எனவே பெண் களின் தகைமை யினத்தைப் (வியாபார விடயங்களில் அறிவு குறைவு) குறிக்கும் குறிப்பிட்ட வசனம்
(2:282) அக் கால அராபியப் பெண்களுக்கு பொருத் தமானதாக இருந்திருப்பினும் இக் காலப் பெண் களுக்கு பொருந்தாதவையாகும். எனவே ஆண்கள் பெண்களுக்குச் சமமானவர்கள் அல்ல என்னும்
விதி திருத்தப்படல் வேண்டும். அல்லது இடை நிறுத்தப்பட வேண்டும். (விதி (9:60) உம் (5:38) உம் உமர் காலத்தில் இடைநிறுத்தி வைக்கப்பட்டது போன்று செய்தல் வேண்டும்.)
பதின்னான்கு நூற்றாண்டுகளாக இவ்வகையான சமத்துவம் இன்மையை முஸ்லிம் சமுதாயம் பின் பற்றி வந்ததென வாதிடுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். பல்லாண்டு காலமாக ஒரு பிழை செய்யப்பட்டு வந்துள்ளது என்பதால் அது சரியாகிவிடாது. முஸ்லிம் சமுதாயத்தில் அடிமை
53

Page 32
(6)
களை வைத்திருப்பதும், வைப்பாட்டிகளை வைத்திருப் பதும் பதின்மூன்று நூற்றாண்டு காலமாக வழமை யில் இருந்ததன் பின்னர், உலக மக்களின் மனச்சாட்சி அதற்கு எதிராகத் திரண்டு எழுந்த பொழுது, அந்த வழமை கைவிடப்பட்டது. (இவ் இரண்டு பழக்கங்களும், தீவிரமாக விளக்கமளிப்பவர்களின் கருத்துப்படி, குர்ஆனினால் அங்கீகரிக்கப்பட்டவை шп@g5йо.)
முஸ்லிம் சமுதாயத்திலும் இஸ்லாமிய இலக்கிய நூல்களிலும் பெண்களை வெறுப்புடன் புறக்கணிக் கப்படும் நிலமை,
குர்ஆன் வியாக்கியானங்களிலும், ஹதீதிலும், சட்ட (பிக்ஜ்) இலக்கியங்களிலும் அடிக்கடி பெண்கள் மிகவும் மடமை வாய்ந்தவர்கள் எனவும், புத்திசாதுரி யம் அற்றவர்கள் எனவும், சமயக் கோட்பாடுகளை முறையாகப் பேணாதவர்கள் எனவும் வர்ணிக்கப் படுகின்றது. இமாம் அல் ராசி அவர்களின் கருத்துப்படி, பெண்கள் சகல உரிமைகளையும் இழந்து தமது கணவன்மார்களின் கையில் கதி அற்ற கைதிகளாக இருக்கின்றனர். இவ்வகையான கலாச்சார வழமையினால் தற்கால முஸ்லிம் சமு தாயத்தில், பெண்கள் வெறுப்புக்கு இலக்காகி மிகவும் துன்புறுத்தப்பட்டவர்களாகவும் உள்ளனர். இதற்கு உதாரணமாகப் பெண்கள் சாட்சியமளிப்ப தற்கான தகைமை பற்றி, இந் நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெறும் சர்ச்சையை எடுத்துக் காட்டலாம். பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்களிலும், அவமானப்படுத்தக்கூடிய வகை யான சொற்பதங்கள் மூலம் அவர்களை நாளாந்தம் தூஷித்து வருகின்றார்கள்,
54

(7)
(8)
குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஒரு விடயத்தைப் பற்றி வியாக்கியானம் செய்யும்பொழுது, அவ் விடயம் சம்பந்தமாக குர்ஆனில் உள்ள சகல விடயங்களையும் கவனத்தில் எடுத்து அதன் சரியான பொருளை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது எல்லோ ராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கோட் பாடாகும். சாட்சியம் பற்றி அவ்வாறு விளங்கிக் கொள்வதற் காக் ஏனைய வாக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து குறித்த வாக்கியம் (2:282) அவ்விடயம் பற்றி ஆரம் பத்தில் இறக்கப்பட்ட வாக்கியம் எனச் சுட்டிக் காட்டினோம். வெகு காலத்திற்குப் பின்னர் அதே விடயத்தைப் பற்றி இறக்கப்பட்ட எட்டு (08) வாக்கி யங்கள் குர்ஆனில் உள்ளன. அவற்றுள் விவாக ரத்து, கற்பின்மை பற்றிய குற்றச்சாட்டு, பிறர் மனை விரும்புதல் போன்ற மிகவும் முக்கியமான விடயம் பற்றி ஆராயப்பட்டது. அவற்றில் எல்லாம்
வெறுமனே சாட்சியம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதே யன்றி அதில் ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடு
காட்டப்படவில்லை. எனவே ஏற்றுக் கொள்ளக் கூடிய சாட்சியம் பற்றிச் சிந்திக்கும்பொழுது, சாட் சியம் அளிக்கும் தகைமை பற்றிப் பார்க்க வேண்டுமே யன்றி (2:282) வாக்கியத்தில் குறிப்பிடப்படும் எண்ணிக் கையை, அந்தஸ்துடன் ஒப்பிட்டு அதற்கு முக்கி யத்துவம் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
நேர்வழி நடந்த கலிபாக்கள் (உமரும் அலியும்) சில வழக்குகளில் பெண்கள் மாத்திரமே சாட்சியாக இருந்ததை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதேபோன்று மாலிகி, ஹம்பலி, ஷாபியி, மதுஹப்களில் உள்ளவர் களும் பெண் சாட்சியங்கள் மாத்திரம் இருந்த சந் தர்ப்பங்களில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். குற்றவியல் வழக்கிலோ அல்லது சொத்துக்கள்
55

Page 33
(9)
(IO)
பற்றிய வழக்கிலோ, ஹ"துரத் பற்றிய வழக்கிலோ பெண்களின் சாட்சியங்களை ஏற்றுக் கொள்வதைத் தடுக்க குர்ஆனிலோ சுன்னாவிலோ எந்தவிதத் தடையும் இல்லையென பிரபல்ய சட்டவல்லுண ராகிய இபுனுகையிம் வன்மையாக வாதாடுகின்றார்.
குர்ஆனிலுள்ள குறித்த (2:282) வாக்கியத்தில் உள்ள விதி சர்ச்சைக்குரியதொன்றாகும். எனவே எவ ரேனும் அது பற்றி தன்னுடைய கருத்தை முன் வைக்கலாம். அதேபோன்று பாரம்பரியமாக ஏற் றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கு முரணான கருத்தை ஏற்றுக் கொள்ளலாம். அப்படியிருந்தாலும் அவர் தொடர்ந்தும் முஸ்லிமாக இருக்கலாம். (லாகூரில் ஒரு உலமா, பெண்கள் ஊர்வலமாகச் சென்றமை யால் சமயக் கட்டுப்பாடுகளை அவர்கள் மீறி விட்டார்கள் எனக் கூறி அவர்களது விவாகங்களை ரத்துச் செய்து விடப் போவதாக அச்சுறுத்தினார், இவர் தனது கருத்தை மீளாய்வு செய்து, அப் பெண்களின் சாந்தமான நட த்தை பற்றிச் சிந்தித்தல் உகந்ததாகும்.)
சமூகவியல் ரீதியாகச் சட்டத்திற்கு வியாக்கியானம்
கூறல.
முஸ்லிம் சட்ட வல்லுனர்கள் இஸ்லாமிய சட்டத்தை இரண்டாக வகைப்படுத்தியுள்ளார்கள், விசுவாசத்துடனும் வணக்கத்துடனும் சம்பந்தப்பட்ட சட்டங்களை ஒருபுறமும் உலோகாயுத விடயங் களுடன் தொடர்பான சட்டங்களை வேறொரு புற முமாக வகிைப்படுத்தியுள்ளார்கள். குர்ஆனிலோ, சுன்னாவிலோ விசுவாசத்தைப் பற்றியோ (ஈமான்) அல்லது வணக்கத்தைப் பற்றியோ ஏதேனும் விதி இருப்பின், அது என்றென்றைக்கும் மாற்றம்
56

(11)
அடையாது, மாற்றம் செய்யப்படாது இருத்தல் வேண்டும் என்றும், எதனாலும் எச் சந்தர்ப்பத்திலும் அதற்குப் பாதிப்பு ஏற்பட மாட்டாது என்பதிலும் முழுமையான இணக்கம் இருக்கின்றது.
ஆனால் உலோகாயுத விடயங்களுடன் தொடர் பான விதிகள் சமூக சூழ்நிலைகளிலும், பொது மக்களின் நலனிலும், பழக்கவழக்கங்களிலும், தங்கி யிருப்பதால் அவற்றில் மாற்றங்கள் ஏற்படும்போது அவ் விதிகளிலும் மாற்றங்கள் ஏற்படும்,
இவ் ஆய்வுரையில் பல சிறந்த முஸ்லிம் சட்ட வல்லுனர்களுடைய கருத்துக்களைச் சுட்டிக் காட்டு கின்றோம். அவர்களின் கூற்றுப்படி "ஷரியா வில் உள்ள ஒரு விதிக்கான நோக்கங்களும், காரணங்களும் சமூகப் பழக்க வழக்கங்களும் மாற்றம் அடையும் பொழுது அவ் விதியிலும் மாற்றம் ஏற்படும், அல்லது திருத்தம் செய்யப்படும், அல்லது இடை நிறுத்தப்படும். ஏனெனில் உலோகாயுத விடயங்கள் தொடர்பான ஷரியா சட்டங்கள் எப்பொழுதுமே பொது நலனுக்கும், பொது மக்களின் வசதிக்கும், அவர்களின் சொகுசுக்கும், சந்தோஷத்திற்கும்தான் வழி செய்கின்றன. சட்டம், மக்களின் நன்மைக்காக வரையறுக்கப்பட்டுள்ளதேயன்றி, மக்கள் சட்டத்தின் நன்மைக்காக உருவாக்கப்படவில்லை. ஏனெனில் இறைவன் கூறுகின்றான் (2185) "இறைவன் எமக்கு வசதி செய்வதற்கே விரும்புகின்றான். உம்மைத் துன்புறுத்த விரும்பவில்லை", நபிபெருமான் அவர்கள் கூறியுள்ளார்கள். “செளகரியத்தை ஏற்படுத் துங்கள், கஷடங்களை ஏற்படுத்தாதீர்கள், எல் லோரிடனும் நன்கு பழகுங்கள். அவர்களுக்கு அஞ்சி ஒதுங்காதீர்கள்.
57

Page 34
l2,
தற்சமயம் முஸ்லிம் உலகில் அரைப்பங்கின ருக்கு (அதாவது பெண்கள் சமுதாயம்) அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. (அதாவது சாட் சியம் அளிக்கும் உரிமை அல்லது ஒரு முழு மனிதனாக சாட்சியம் அளிக்கும் தன்மை) சாட்சியம் பற்றிய சட்டத்தில் உள்ள சமத்துவம் இன்மையை அடிப்படையாகக் கொண்டு சட்ட வல்லுனர்கள் பெண்களின் உரிமைகளை பல துறைகளில் அரைப் பங்காக்கி உள்ளார்கள். (உதாரணமாக பணயக் கைதியை மீட்பதற்கான பணம், கொள்ளையடித்த சொத்துக்களில் அரைப்பங்கு முதலியன) அவ்வாறு செய்து வேறு சில விடயங்களில் அவர்களின் உரிமைகளை முற்றாக மறுத்துள்ளனர். (ஒரு பெண் விவாகரத்துச் செய்ய முடியாது, தனக் குத்தானே பாதுகாவலனாக இருக்க முடியாது, ஒரு ஆட்சி செய்பவராக இருக்க முடியாது, அத் துடன் விளையாட்டுப் போட்டிகளில் கூட பங்குபற்ற முடியாது) இப்படிப்பட்ட சட்டங்கள் இறைவனின் நோக்கங்களையும் காரணங்களையும் எப்படிப் பிரதிபலிக்க முடியும்? சட்ட வல்லுனர்களின் உள் ளங்கள் உணர்ச்சியற்று விறைத்துப் போய் இருக்கா விடின் இக் கொடுரத்தையும் அறிவொளிப் பகை மையையும் உணர்ந்திருப்பார்கள். இறைவனாலேயே இதனை உணர்த்த முடியாது போயிற்று, அப்படி யென்றால் யாரால்தான் அவ்வாறு செய்ய முடியும்?
மானிடர்களின் மனச்சாட்சி
58


Page 35