கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வித்துவரத்தினம் (க. செபரத்தினம் அவர்களின் பவள விழா மலர்)

Page 1
வித்துவான் க.6 SIGJ i 5-6
 
 

lar IIIršičje or 5
fe

Page 2

வித்துவரத்தினம்
வித்துவான் க. செபரத்தினம்
அவர்களின்
பவள விழா மலர் /12|წაN
を! S
*് @თ6°
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் O8. O4.2OO6
வித்துரைத்தி

Page 3
செபரத்தினம் எனும் அருந்தவப் புதல்வனை இம்மண்ணிற்களித்த அன்புப் பெற்றோர்
* M.
I
A | . S * ...) மண்மங்களக் கோலத்தில் வித்துவான், துணைவி நேசம்மா தோழன் 1. ஞானரத்தினம், தயாநிதி ஆகியோர்
༈
விக்குவரத்தினம்
 
 
 

நுளைவாயில்.
2
().
2.
3.
14.
ls.
7.
18.
2),
ஆண்ற புகழ்கொண்ட அருந்தமிழாளன் -மலர்க்குழு 3. எழுபத்தைந்தாண்டான இளைஞர் - வி.கந்தவனம 7 தலைவரின் எழுதுகோலிலிருநது
ஆர்.என்.லோகேந்திரலிங்கம் 8 தமிழ் - கல்விப் பணிகள் செயலாற்று வெண்பா
- ஈழத்துப் பூராடனார் O இரத்தினத் தமிழ்ச் சுடர் த.சிவபாலு 14 அவர் பூவா? நாரா? -பொ.கனகசபாபதி 22 செந்தமிழ்ச் செம்மல் செபரத்தினம் - வி.கந்தவனம் 2. வித்தாகி நின்ற வித்தகன் - இ. தங்கராசா 29 நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
-பார்வதி கந்தசாமி 32 வாழ்த்தும் வணக்கமும் - நா.சுப்பிரமணியன் 34 ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் வரிசையில்
- இ.பாலசுந்தரம் 37 முல்லை மாலை -இளவாலை அமுது 4[]] அன்பிற்கினிய ஆசிரியப் பெருந்தகையே
-யோசள் சந்திரகாந்தன் 42 நல்லாரைக் காண்பதும் நன்றே த.வசந்தகுமார் 4 பவள விழாக் காணும் செபரத்தினமே வாழ்க
- ம.செ.அலெக்சாந்தர பன்னூறு அகவைகள் வாழ்க க.ஞானரத்தினம் S சேவை தொடரட்டும் வி.குலேந்திரன் 52 நான் கண்ட வித்துவான் - முருகவே பரமநாதன் 53 எனது ஆசிரியர் - பெனடிக்ற் தேவகுமார் 57 வாழ்க நீடுழி - மீரா இராசையா ()
விக்குவரத்தினம்

Page 4
21.
22.
63
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
கிழக்கே உதித்து மேற்கில் ஒளிரும் -குரு அரவிந்தன் புலம் பெயர்ந்தாலும் தமிழின் புகழ் பரப்பும்
61
எம். கந்தசாமி
என் மனதில் நிறைந்த சான்றோன் - ந. மாசிலாமணி 67 கீழ்க்கரையில் எழுந்த தமிழ்ஒளி
- எஸ். கே. குமரகுரு 69 ஈழத்துத் தமிழ்ச் சான்றோரை முன்நிறுத்திய சான்றோன் - அ.சிவானந்தநாதன் 73 நயனுடை வல்லுநர் - சுகுமாரி சிவம் 75 வித்துவான்=அறிஞன்-புலவன் - எஸ்.பி. கனகசபாபதி 77 தமிழ்நாடும் ஈழத்துச் சான்றோரும் மு.நித்தியானந்தன் 78 கீழக்கரையின் வித்துவஒளி தந்த அறிஞர்கள்
- சி.பத்மநாதன் 82 பவளவிழாக் காணும் தமிழ்ச்சான்றோன்
- சு.சிவவிநாயகமூர்த்தி 84 என்மனச் சிறையில் வித்துவான்
- என். முருகேசபிள்ளை 86 வணக்கத்திற்குரிய ரத்தினம் - அஜந்தா ஞானமுத்து 87 எங்கள் தமிழ் ஒளி - பிலோமினா கிருஷ்ணபிள்ளை 92 எனது நண்பர் - நல்லதம்பி பாலசிங்கம் 94 Viduvan Sebaratnam - The Revd. McClashan 96
அமுது வைத்த பொட்டு - அடைக்கலமுத்து 98
வித்துவரத்தினம்

ஆன்ற புகழ்கொண்ட அருந்தமிழாளன்
பவளவிழாக் கொண்டாடும் அணையாத தீபமாய் 'தமிழ் ஒளியெனப் பெயர்கொண்ட வித்துவான் கனகரத்தினம் செபரத்தினம் அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் தமிழ்பால் காதல் கொண்டவர்கள் ஆகியோரின் சார்பில் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் இம்மலரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறது.
மாறாமணம் வீசுகின்ற தமிழ்ச் சோலையில் பூத்த புதல்வர்களின் புகழை மங்கவிடாது புதுமெருகூட்டிய இத்தகைய தொரு பெரியாருக்கு இத்துணை சிறியதொரு மலரா என்று நீங்கள் உங்கள் மனதிலே வினா எழுப்பக் கூடும் என்ற எண்ணம் எம் மனக் கண்ணிலே தோன்றாமலில்லை.
தமிழே தன்மூச்சென பன்முகப்பார்வை கொண்டு உழைக்கும் வித்துவான் முத்தமிழின் உறைவிடம், ஒளிக்கீற்று, நவரத்தின மாலை அணியாக அமைந்துள்ள அவரின் பணிகளையோ அன்றி வரலாற்றையோ நாம் இந்த ஒரு சிறிய நூலில் அடக்கமுடியாததுதான். உருவம் சிறிதாகவிருப்பினும் அது தாங்கிவரும் செய்திகள் மிகவும காத்திரமானவை. தமிழ்ப் பெரியோர்களின் சுகந்தத்தைத் தன்வாழ்நாள் முழுமையும் நுகர்ந்து அனுபவிக்கின்ற தன்மை கொண்ட ஒருவருக்கு நாம் செய்யும 'தினையளவான நன்றிக்கடன் இது.
அவரின் அன்பு என்னும் உள்ளக் கமலம் விபுலாநந்த வித்தகரின் பால் ஈர்க்கப்பட்டு அதில் கட்டுண்டு கிடக்கின்றது. எனவே எமது நட்பு மேலீட்டால் தருகின்ற இப் பூ செம்பூவாக விரிவடைய அதன் சுகந்தத்தை அவர் எந்தவித கயர்ப்பு, உவர்ப்பு, வெறுப்பு, துவர்ப்பு என்பன் இன்றி இன்பு, பண்பு, கனிவு, திணிவு, கொண்டு ஏற்றுக்கொள்ளும் மொய்ப்பு அவரிடம் உண்டு.
தண்மை, உண்மை, வெண்மை, கணிமை, இனிமை கொண்ட பண்புடைமைக்குச் சான்றான வித்துவான் அவர்கள், இவ்விதழை விழைந்து ஏற்றுக்கொள்ளுவார் என்னும் எண்ணம் எம்மிடத்திலுண்டு. அத் தற்றுணிபினாலே அவரோடு நன்கு பழகிய, அறிந்த, இணைந்திருந்த அன்புக்குரியவர்களின் உள்ளக்கிடக்கைகளை வித்துவானைச் சிறைப்பிடிக்க வேண்டும் எனவினவியவேளை எந்தவித காய்தல், வெறுத்தலின்றி உள்ளக் கனிவோடு தம்மனப் பதிவுகளைப் பகிர்ந்துகொள்ள முன்வந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது நன்றி.
நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே எனத் தான்
5 வித்துவரத்தினம்

Page 5
கற்று அறிந்தவற்றை எல்லோரும் அனுபவிக்கவேண்டும் என்பதோடு மட்டுமன்றி எம் மொழிக் குத் தொண்டாற்றிய எம்மவர் மறக்கப்படலாகாது, மறுக்கப்படவோ அன்றி ஒதுக்கப்படவோ கூடாது என்பதனை இருப்பாக்கி அவற்றை வெளியே கொண்டு வரும் முயற்சி திருவினையாக்கி வெற்றி கண்ட தமிழ்ச் சான்றோனாக இன்று எம்முன்னே காட்சியளிக்கும் பெருமகனாரின் பணிகளைப் பதிவாக்குவதற்கு இந்தச் சிற்றேடு பல வழிகளிலும் பங்களிப்பைப் பெற்றுள்ளது.
"நெஞ்சில் உரனும் நேர்மைத் திறனும்’ கொண்டு உழைத்தவர் வித்துவான் அவர்கள். தனது எண்ணங்களை வடித்துத் தந்தவர்.
"நூலெனப் படுவது நுவலுங்காலை முதலும் முடிவும் மாறு கோளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மைகாட்டி உண்ணின் றகன்ற உரையொடு புணர்ந்து நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே' (486) என்னும் தொல்காப்பியத்தின் பால் அவர் கவரப்பட்டுள்ளனர் போலும். அவரின் அரியபணி ஈழத்தின் தமிழ் பணியாற்றியவர்களைப் பற்றி கல்லித் தெள்ளி ஆய்ந்த அடிப்டையில் எழுந்துள்ளது.
இவ்வித தமிழ்ப்பணியினை எமக்குத் தந்த தக்கோனான இவரை எழுத்தாளர் இணையம் அதன் பத்தாவது ஆண்டு விழாவிலும் பாராட்டிக் கெளரவித்தது. இன்றும் அவரது பவள விழாவைப் பெருமையுடன் கொண்டாடுகிறது. இவ்வேளை அவரை வாழ்த்துவது பொருத்தமானது என உணர்ந்து நாம் முன்வைத்த பணிக்கு ஆதரவுக் கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம்.
த.சிவபாலு வி.கந்தவனம் மலர்க்குழு
6 வித்துவரத்தினம்
 

எழுபத்தைந்து ஆண்டான இளைஞர்!
முத்தமிழில் முத்துக்களைக் குளிக்க லாகும்
முன்னவரின் மரபுகளில் திளைக்க லாகும் புத்தமுதப் பண்பாடு சிறக்க லாகும்
புதியபல சிந்தனைகள் பிறக்க லாகும் சொத்துச்சுகச் செல்வநலம் மெத்தத் தேறும்
தொட்டவுடன் மணற்கேணி போல ஊறும் வித்துவான் செபரத்தினம் அவர்க ளோடு
விரும்பிச்சிறு பொழுதுதனைக் கூடி னாலே!
அழகாக அவையேறிப் பேச வல்லார்
ஆராய்ந்து கட்டுரைகள் எழுத வல்லார் தழுவாது சிறுகதைகள் படைக்க வல்லார்
தலையாய அறிஞர்விபு லாநந் தர்க்குக் குழுவாகப் பெரியவிழா எடுத்த மேலோர்
குணமென்னும் குன்றேறி நிற்குஞ் சான்றோர் விழியாகச் சமூகத்துக் குதவுந் தொண்டர்
மீன்பாடுந் தேனாட்டு மைந்த ராமே!
ஐயநினக் கென்ன வயதெழுபத் தைந்தோ
அமுதத்தமிழ் அருந்துபவர் இளமை குன்றாத் தெய்வமென நீடுலகில் திரிவ ரன்றோ
திரிந்தரிய பணிகள்பல புரிவ ரன்றோ செய்யதமிழ் வளர்த்துவரும் துய்ய சான்றோய்
திருமைந்தன் யேசுபிரான் அருளி னாலே வையமதில் வேண்டுவன யாவும் எய்தி
மனைமக்கள் சுற்றமுடன் வாழ்க நன்கே!
வி. கந்தவனம்
u-N
வித்துவரத்தினம்

Page 6
வித்துவச் செருக்கை விலத்தி நிற்கும்
வித்துவான 85. செபரத்தினம்
ஆர். என். லோகேந்திரலிங்கம் தலைவர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
கனடிய மண்ணில் வாழ்ந்துவரும்
தமிழ்பேசும் கல்விமான்களில் தன்னை சிறந்த முறையில் அடையாளம் காட்டி அரும்பணி ஆற்றிவருபவர் வித்துவான் க. செபரத்தினம் அவர்கள். கலை, இலக்கியம், மற்றும் கல்விசார் நடவடிக்கைகளில் பிறந்த நாடாம் ஈழத்திலும் புலம்பெயர் நாடாம் கனடாவிலும் ஓய்வின்றி உழைத்து வருபவர் இந்த சிந்தனையாளர் செபரத்தினம்.
வயது எழுபத்தைந்து ஆகினாலும் வாலிபத்துச் சிந்தனைகள் மனதை அலங்கரிக்க எங்கள் மத்தியில் இவர் வலம் வரும்போது அந்த பவனியானது எமக்கு அதிக பலம் தருகின்றது. அறிவுசார் ஆலோசனைகள் எமக்கு தேவைப்படும்போது வித்துவான் அங்கு முன்வரிசையில் அமர்ந்திருந்து கைகொடுப்பார். இங்கு இடம்பெறுகின்ற இலக்கியக் கூட்டங்கள் கருத்தரங்குகள் மற்றும் போடடிகளில் தவறாது அவர் கலந்து கொள்வதனால் அந்த நிகழ்வுகள் அவரது பிரசன்னத்தால் உயர்வு பெறுகின்றன.
ஆழமான இலக்கியப் பார்வையும் சமூகப் பார்வையும் கொண்ட வித்துவான் அவர்கள் எமது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முக்கிய பணிகளில் எப்போதும் முன்னின்ற உழைத்து வருபவர். தனது இரு நுால்களுக்கு நமது எழுத்தாளர் இணையத்தைக் கொண்டு அறிமுக விழாக்களை நடத்தியவர். வித்துவச் செருக்கு என்பது அவர் விரும்பாத ஒன்று என்பதை நாம் அவரது உரையாடல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். அவரது அறிவு அனுபவம் ஆகியவை கனடிய மண்ணில் பல சந்தர்ப்பங்களில் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளன. ஆர்வம் அவரை எப்போதும் சோர்வில்லாமல் வைத்திருக்கும். இதனால் வித்துவான் அவர்களை மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த தேவைகளுக்கு எந்தப்பொழுதில் நாடினாலும் தவறாது உதவி வழங்குவதற்கு பின்னிற்காதவர்.
தனது இளவயதுக் காலம் தொடக்கம் பல்வேறு இலக்கியப் பரிசுகள் மற்றும் பட்டங்கள் பெற்றுவரும் இந்த வெற்றியாளனுக்கு அவரது 75வது வயதில் விழாவொன்றை எடுப்பதும் அதில் கலந்து
8 வித்துவரத்தினம்
 

கொள்வது என்பதும் நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றே நான் கருதுகின்றேன். ஏனென்றால் வித்துவான் செபரத்தினம் போன்ற கல்விசார் பெரியோர்களின் நிழல் நம்மை தடவிச் செல்வதால் தான் நம்மாலும் சில காரியங்களை ஆற்ற முடிகின்றது என்ற நம்பிக்கை என்றும் எனக்குண்டு.
வாழ்க இப்பெரியார் வளர்க அவர் பணிகள்
உதயன் விழாவில் விருது பெற்றவேளை
9 வித்துவரத்தினம்

Page 7
தமிழ் ஒளி வித்துவான் கலாமுதுமானி திரு.க.செபரத்தினம் அவர்களின் தமிழ் - கல்விப் பணிகள் செயலாற்று வெண்பா
ஈழத்துப் பூராடனார்
ஆசானின் ஆசி வேண்டல் ஐங்கரன் என்தமிழை ஆக்கிவைத்த பேராசான் பொங்கிதயத் தேந்திநான் பூந்தமிழ்ச் - சங்கையுற வித்துவான் செபரத்தின வியன்மணியின் பலபணியை சித்தம்நிறை வரலாறாய்ச் செப்பும்
வித்துவானின் மலர்வு மருதமகள் நெய்தலுடன் மருவுகின்ற கிழக்கிழத் திருவுறையுந் தம்பிலுவில் திகழுர் - பெருமையுடன் இரட்சகரின் இறைப்பணி இயற்றிவந்த கனகரத்தின குரவன் மகனாகக் குவிந்து
செபரத்தினப் பெயரிட்டு செந்தளிராய் வளர்த்தெடுக்க தவத்திருவாய் வளர்ந்ததந்தத் தமிழ் - உவப்புள்ள பலபணிகள் செய்து பயன்தரும் பேறுகளை உலகினிற்கு ஊட்டியதை உரை
கல்வியில் உயர்தல் புரட்டாதி இருபதுபுரை நான்கு முப்பதிலே புரக்கவனி தனிலுதித்து மட்டக் - களப்புற்று ஆங்கிலத்திற் கற்ற அடையாளப் பத்திரத்தை ஓங்குமத்திய கல்லூரியில் பெற்று
நல்லூரில் கிறிஸ்தவ நல்லாசிரியப் பயிற்சிபெறு கல்லூரியிற் கல்விகற்றுத் தேறி - நல்லதொரு ஆசிரியர் என்று அவரிடங் கற்றவர்கள் பேசிடவே சிறந்திட்டார் பின்பு
பேராதனைப் பலகழகப் பீடமதன் வித்துவானென் தராதரப் பரீட்சையிலே தேறி ஆராதிக்குங் கல்வியால் இளமாணிக் கரைசேர்ந்து கல்வித்துறை வல்ல வித்துவமும் வாய்த்தார்
கற்பித்தற் பணியும் கனடியப்பாராட்டுகளும் கல்விகற்ற பள்ளியிலே கற்பிக்கும் வரங்கிடைத்த
நல்லதொரு ஆசிரியர் ஆகி - வல்லமையால் 10 வித்துவரத்தினம்
 

வித்தியாலய அதிபராய் விளங்கி இளைப்பாறி கத்துகடல் தாண்டினார் கனடா
ஆடியகால் ஆடாது அவமே இருந்திடாதென் பாடியதாம் பாட்டின்பாற் படவே - கோடிடாது இலங்கையில் செய்தமிழ் இணையிலாப் பணியதனை துலங்கிடவே செய்தார் துணிந்து
கனடிய எழுத்தாளர் கவினிணையம் இவர்பணியை கனப்படுத்திப் பாாட்டி விருதுத் தனமீய தமிழர்தக வலதும் தக்கதோர் விருதளிக்கும் தமிழறிஞர் ஆனார் தலைத்து
இலக்கியத்தில் எழுத்தில் இறவாத பணிபுரிந்து துலக்கிய துயறிவு கண்டு - இலக்கியத்துக் கலாநிதி ஆகுகின்ற ஆளுமைக்கு கிழ்ககிலங்கை கலாபீடம் கெளரவித்த களிப்பு
முதுமானி என்றார் முழுமைபெற்ற முதிர்நிலைக்காய் புதுவிருதோ வெணப்புலவோர் புழுங்க - பொதுவாக கற்றேர்கள் செய்யுங் காரியத்தில் தவறொன்று உற்றதென்று உழன்றதே உலகு.
கிறிஸ்தவகுடும்ப நலச் சிறப்பு திருப்பளு காமத்து திருநிறையும் நேசம்மா உருப்பாவை தனைமணந்து உலகில் -மருளற்று இல்லறத்தில் இணைந்து இறையருள் கைக்கொண்டு நல்லறமே கண்டாரென நவில்
யேசுமதப் பணியில் இவர்குடும்பம் இயற்றியவை பேசுவதே பெருநூலாய் பெருகும் - ஆசுகவி இவர்தந்தை செய்த இரட்சணிய அம்மானை நவமான நூலென்பார் நயந்து
வித்துவானின் உடன்பிறந்த வேதநாயகம் கிறிஸ்தவத்து தத்துவப்போ தகர்அவர் சுதனும் - அத்தகைய கிறிஸ்தவ அருட்பணியின் கிருபைமகன் அதுபோல மறித்திவரின் மகனும்மறை மகனே
தமிழ்ப்பணியில் மட்டுமல தம்மததைப் போதிக்கும் அமிழ்தறிவும் கொடுக்குமிவர் ஆகமத்து - கமழறிவு அருளுரை கர்வதற்கு ஆனதகை பெற்றதனால் திருக்குடும்ப மென்றெண்ணித் தேர்
தமிழறிஞர் ஆவண நூற் தகை தமிழ்மொழியுந் தமிழினமுந் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு
11 வித்துவரத்தினம்

Page 8
தமிழ்செய்து உயர்ந்தவரைத் தாங்கல் - அமிழ்தாயும் எனவுணர்ந்த இவ்வறிஞர் ஈழத்தில் வாழ்ந்தபல இனத்தமிழர் தமையிட்டு எழுதி
வருங்காலச் சந்ததியார் வளமிக்க தமிழ்வளர்த்த பெருமக்கள் தமையிட்டு அறிய - அரும்பெரும் தேடலுந் திரட்டலுந் தெளிவுறச் செய்தாய்ந்து நாடறிய தொகுத்திட்டார் நூல்
வாழையடி வாழைஎனும் வளநூலே முதல்நூலாம் தாழைமண முத்தமிழின் பெரியன் - வாழ்வியலை மயில்விபுலர் வாழ்வும் வளமும் அதையடுத்து நயனங்கள் பேசுகின்ற நூல்
கிழக்கிலங்கை மண்ணின் கிளர்ந்தெழுந்து புகழ்பூத்த பழந்தமிழர் மைந்தரெனும் பனுவல் - அழகால்
இரண்டாவது பாகம் இனிதாய்ந்து தொகுத்ததிவர் புரண்டுருண்ட மண்ணுக்கிடு பூசை
சங்க காலந்தொட்டு சார்ஈழத் தமிழறிஞர் சங்கத் தமிழாய்ந்த பேறு - பொங்கியபோல் அதன்பின்பும் பலஈழ அறிஞர்கள் அங்குசென்று இதமான பணிசெய்தார் என்க
அத்தனை தமிழறிஞர் யாரென்று ஆய்ந்தறிந்து முத்தமிழ் நூலாக்கி முனைந்த - வித்துவான் ஈழத்தமிழ்ப் பங்கழிப்பு எத்துணைத்து எனவிளம்பும் ஆழத்தமிழ் நூலென்று அறை
பதினெட்டாம் நூற்றாண்டில் பைந்தமிழ்செய் அறிஞர்கள் மதியுள்ள ஈழத்து மாவறிஞர் - புதிதாகத் தமிழகத்தில் பணிசெய்த தகவல்கொள் வரலாறு அமிழ்தான ஆவணத்தின் நிதி
பார்புகழும் கந்தவனப் பாவலர்தம் கவிநயமென் சீர்கொண்ட ஆய்வுநூற் சிறப்புத் - தார்பூண்டு நூற்பதிப்பில் முத்திரை முகப்பிட்டு தமிழ்செய்து நாற்திசையும் புகழ்கொண்ட நயம்
பணிபுரிந்த பள்ளிகளில் பலகாலும் விபுலர்தனை அணிசெய்துஅறிய ஆங்காங்கு - மணியான சிலைகள்தமை நிறுவிச் செய்தசெயல் யாழ்நூலார் தலைாயாய பணியோதும் தகை
இலங்கையிலே செய்த இணையிலாத் தமிழ்ப்பணிக்கு துலங்கிந்து கலாச்சார அமைச்சு - இலங்க
12 வித்துவரத்தினம்

தமழ்ஒளி என்னும் தகைவிருது தானிந்து தமிழ்செய்து வைத்தசெயல் தமிழ்
கட்டுரைகள் ஆய்வுகள் கதைகள் கவிநயங்கிள் மட்டிலாத் தொகையாக வரைந்து - இட்டபணி இணையில்லாத் தமிழ்வளத்தை இனிதாக்கித் தந்ததுவும் துணையாக்கித் தந்ததுவுந் தோய்
செந்தமிழில் ஆய்கிலத்தில் சீர்கொண்ட செம்மலிவர் தந்தல ஆக்கங்கள் தரத்தால் - முந்திடவே பத்திரிகை கழகங்கள் பார்மக்கள் ஆதியன
lதிவிரு தளித்தனவே சிறக்க
குஞ்சரத்துக் குட்டிபோல் குறைவான பனுவல்களை நெஞ்சாரத் தந்திட்ட இவர் - எஞ்சும்பல இனியதமிழ் நூலாக்கி எதிர்காலச் சந்ததியார் கனிநெஞ்சிற் கனிந்திருப்பார் காண்
எனதெண்ணத் திண்ணியர் இருநூறு பனுவல்களை எழுதி வெயியிட்டவென் ஒருநூலுக் குமட்டுமே அறிமுகப் - பெருமுரையைப் பெற்றுள்ளேன் அதுவுமிவ் அறிஞரிடம் எனச் சொன்னால் உற்ரனத் தெளிவதனை உணர்
பனைபோலச் சுவடியாய்ப் பயின்றஇரண் யசம்ஹாரந் தனைஅச்சிற் பதிப்பித்த போது - எணைஈர்த்த செபரத்தினச் செம்மலிடம் அதற்கோர் முகவுரையாம் உபதேசம் பெற்றிட்டேன் நான்
விபுலாநந்தரின் பணிகள் முத்தமிழ் முதுபுலவர் முனிவிபு லாநந்தவடி வித்தகத்தில் விழைவுற்ற வினையால் - சித்தமுறச் சென்றவிட மெல்லாம் சிலைவைத்தார் விழாவெடுத்தார் இன்றுமவர் அப்பணியைத் தொடர்ந்து
தொரன்ரோ கனடாவில் தூய்விபுலர் நினைவுமன்ற பொருந்துமுயர் காப்பாள ராக - ஒருங்கிணைந்து பணியாற்றி வருகுமிந்தப் பைந்தமிழர் பல்லாண்டு அணிகொள்ளப் பரணருளை வேண்டு.
邀
13 வித்துவரத்தினம்

Page 9
இரத்தினத் தமிழ்ச் சுடர்
த.சிவபாலு எம்.ஏ.
தமிழ்த் தேடலில் முன்னின்று பல அறிவுப் பொக்கிசங்களை வெளியுலகிற்குக் கொணி டுவருவதில் வல்லவராகவும் எழுத்துலகில் தனக்கென ஒரு தடத்தினைப் பதித்துக் கொண்ட மேலவராகவும் எம் மத்தியிலே தன்னடக்கத்தோடு பற்பல தமிழ்ப் பணிகளைச் செய்துவரும் வித்துவான் செபரத்தினம் அவர்கள் 24.09.2005 அன்று 75வது வயதில் காலடி எடுத்துவைக்கின்றார்.
"தோன்றின் புகழொடு தோன்றுக அ.திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று” என்ற குறளை அவர் நன்கு மனதிருத்தியுள்ளார் போலும். அவர் எங்கு தோன்றினும் புகழோடு தோற்றம்தரும் உதாரணராகவே நான் அவரைக் காண்கின்றேன். ஒலி நயம், பொருள் நயம், இனிமை நலம், இவற்றால் வரும் இன்பம் அவரின் பேச் சிலும் எழுதி திலும் கரைபுரண்டோடுவதைக் காணலாம். அமைதியாக இருக்கும் இந்த மனிதரா மேடையில் இந்தவிதமாக சிங்கம் போன்று கர்ச்சிக்கின்றார் என்று எண்ணும் அளவிற்கு அவரின் நாவாற்றல் உரத்த தொனியைக் கொண்டது. எனக்கு ஒலிபெருக்கி தேவையில்லை என்று அவர் மேடையில் குறிப்பிட்டுள்ளமையினை நான் வியந்து கேட்டதுண்டு. தான் மனதில் எண்ணிய கருத்தை முன்வைப்பதில் எந்தவித தயக்கமோ பயமோ சற்றும் காண்பிக்காத அவர் பேச்சு நடையோ ஆற்றொழுக்கு எழுத்து நடையோ வெள்ளப்பிரவாகம். அவர் தமிழ்ச் சான்றோர்கள் பற்றி எழுதியது மட்டுமன்றி எனது 'உலகுக்கு உழைப்போம் கவிதைத்தொகுதியில் சுவாமி விபுலாநந்தரைப் பற்றி எழுதிய கவிதையைப் பாராட்டியதோடு அவர் திருப்தியடையவில்லை ஏனைய தமிழ் அறிஞர்களைப் பற்றியும் எழுதியிருக்கலாமே என்ற ஆதங்கத்தையும் என்னிடம் எடுத்துரைத்தபோது அவரின் பரந்த நோக்கத்தை என்னால் உணர முடிந்தது. கனடிய மண்ணில் இலக்கியக் கூட்டங்களில் கண்டுதான் பழக ஆரம்பித்தோம் ஆனால் அவர் மிக இலகுவாகவும், வேகமாகவும் கவர்ந்திழுக்கும் சக்தி படைத்தவர் என்பதனை நான் உணர காலமெடுக்கவில்லை. அவ்வளவிற்கு அவர் நெருக்கமாக ஒரு உறவினரைப்போன்று 14 வித்துவரத்தினம்
 

உரிமையோடு பழகும் பாங்கு என்னைக் கவர்ந்து கொண்டது.
மீன்பாடும் தேன்நாடு எனப்போற்றப்படும் மட்டுநகர்ப் பிரதேசத்தின் தென்பாலமைந்த தம்பிலுவில் என்னும் குக்கிராமத்தில் உதித்தவர் வித்துவான் செபரத்தினம் அவர்கள். தந்தையார் ற தேசியார் அ.ப.கனகரத்தினம் ஆசிரியர் துணைவி வ.எ.சின்னாச்சி தம் தியினரின் இளவலாக 1930ம் ஆண்டு வந்துதித்தார். இளமைப் பராயத்திலேயே தமிழில் மிக்க நாட்டமும் ஈடுபாடும் கொண்டவராகத் திகழ்ந்த பெரத்தினம் தனது ஆரம்பக்கல்வியினைத் தான்பிறந்த கிராமத்தில் பெற்றுக்கொண்டார். அதன்பின் அவரின் மதிநுட்பத்தை அறிந்த பெற்றோர் அவரை மட்டக்களப்பிலுள்ள மெதடிஸ்த மத்திய கல்லுரியில் இடைநிலைக் கல்வியினைக் கற்பதற்காக ஏற்பாடுசெய்திருந்தனர். இடைநிலைக் கல்வியைப் பூர்த்தி செய்துகொண்ட பின்னர் யாழ்ப்பாணம் நல்லூர் ஆசிரிய கலாசாலையில் பயின்று ஆசிரியராக வெளியேறினார்.
ஆசிரியராகப் பணியாற்றும்போதே தமிழ்மீது கொண்ட காதலால், பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட வித்துவான் பட்டப்படிப்பினை மேற்கொள்ள தெரிவாகி அங்குசென்று தமிழ்மொழி “வித்துவான்’ பட்டத்தைப் பெற்றுத் தனது தமிழறிவுக்கு மேலும் 1 ம் போட்டுக்கொண்டார். "கல்வி கரையில கற்பதற்கோ எல்லையில" என்ற முதுமொழியை மனதிருத்தி தொடர்ந்தும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகத் தன்னைப் பதிந்து கலைப்பட்டதாரியாக வெளியேறினார். அதன்பின்னர் nÍ hO k$f ; gy fi y f f Of j i Ply 'f y þ. p bggs Nkh' 616ögð)|b பட்டப்பின் கல்விக் கற்கை நெறியில் பட்டத்தையும் பெற்றுக்கொண்டு ஆசிரியப் பணி யேற்றவர் அதிபராக அளப் பரும் சேவையாற்றிவந்துள்ளார்.
தான் தெரிந்தெடுத்த கல்வித்துறையில் சிறந்துவிளங்க அவருக்கு மேற்படி கல்வி நெறிகள் துணைநின்றன. கல்வித்துறையிலே ஆசிரியராகக் கால்பதித்த செபரத்தினம் அவர்கள் துணையதிபர், அதிபர் பதவிளைப் பெற்று கல்வி நிருவாகத்திலும் தனது பணிகளை அகலவிரித்து தமிழ்ச் சமூகத்திற்கு தன்னாலான பணிகளைச் செய்து வந்தவர் என்பது பலரும் அறிந்ததே. ஆசிரியப் பணியோடு எழுத்துப்பணியையும் அவர் மேற்கொண்டார். பத்திரிகைகளில் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என அவர் எழுத்துலகில் பிரபலமாக விளங்கினார். இவரின் 'வாழையடி வாழை அவரை தமிழ் கூறும் நல்லுலகிலே உயர்த்தி வைத்தது. அவர் தனக்குரியாளன் அல்லர்
15 வித்துவரத்தினம்

Page 10
பிறர்க்குரியவராகவே வாழ்ந்து காட்டுகின்றார்: தானுண்டு தன்பாடு உண்டு என்றே தானாகத் தனியிடம் சேராது ஊரே தாலாட்ட தனிவழி நடந்திடத் துணிந்து தானேதான் தமிழ்நிகர் மைந்தனாய் மலர்ந்தார்
உதிரமே உழைப்பிலே தமிழன்னை ஊற்றாய் உதித்ததோ உள்ளத்து உணர்வு மெய்ப்பொருளாய் மதித்தவன் மனமணிவிளக் கெனத் தமிழ்ப்பால் மதியிலே கொண்டனன் மாண்புடன் எழுத்தை. என்று உவக்கத்தக்க வகையிலே உண்மை உணர்வோடும் உள்ளத்தெளிவோடும் தனது வித்தகத்தை தமிழ்த் தாயின் நற்பணிக்கு அர்ப்பணித்து இரவுபகலாக தேட்டங்கள் கொண்டு உழைத்து அளப்பரும் உணி மைகளை உலகுக்கு அறியத் தரும் வகையிலே தன் எழுத்துப்பணியினை மேற்கொண்டுள்ளமைக்கு அவரின் இல்கிகயப் படைப்புக்கள் சான்று பகர்கின்றன.
கல்வித்துறைப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்ட வித்துவான் வெறுமனே வீட்டினுள் முடங்கிக் கொள்ளாது இன்றுவரை தமிழ்ச் சமூகத்திற்கு அரும்பெரும் பணிகளை ஆற்றிவருகின்றார். ஈழத்திலிருந்த காலத்தில் பாடசாலையிலும் சமூகத்திலும் தம்மாலான பணிகளை எமது சமூகத்திற்கு செய்துள்ளார். அவர் இலங்கை சாகித்திய மண்டல உறுப்பினராகவும், கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றில் பொதுச் செயலாளர் பதவிகளை வகித்து செயற்பட்டும் செயற்படுத்தியும் வந்தவர். தமிழ் அன்னைமீது கொண்டுள்ள காதலால் அவர் செய்துவரும் பணியினால் இன்று எம்மத்தியிலே உயர்ந்து நிற்கின்றார். கனடாவிலும் சுவாமி விபுலாநந்தர் மன்றத்தின் துணைத்தலைவராக பணியாற்றியதோடு இன்று அதன் காப்பாளராகவும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை நல்கி வழிப்படுத்தி வருகின்றார்.
saffluJIJITE (9(Bb55T6)556) "The Bear" 6T6irgb Anton Shekove வின் ஓரங்க நாடகத்தை மொழிபெயர்த்து எழுதியதோடு (1958) அவரது எழுத்துப் பணியை நாடறியத் தொடங்கியது. எழுத ஆரம்பித்த அவர் ஒரு துறையோடு நின்றுவிடாது பல்துறை சார்ந்தும் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஈழத்தில் அவர் இருந்த காலப்பகுதியில் அவரது பல ஆக்கங்கள் பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்துள. அவையாவன:
> மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழறிஞர் மூவர் - வீரகேசரி மார்ச் -1962, >நல்லை நகர் நாவலரும் காரைநகர் வித்தகரும் - வீரகேசரி ஜூலை1968
>தமிழ் இலக்கிய வரலாற்றில் விபுலாநந்தர் பெறும் இடம் - தினபதி
ஜூலை 1978, >அறிவொளிபரப்பிய புலவர்மணி - வீரகேசரி நவம்பர் 1995,
6 வித்துவரத்தி

Pமகாகவி சுப்பிரமணிய பாரதியார் . செந்தாமரை செப்ரம்பர் 1997 Pநாவலர் பெருமான் - செந்தாமரை டிசம்பர் 1997 >மட்டக்களப்புத் தமிழகமும் புனித மிக்கேல் கல்லூரியும் - உதயன்
gé/tibilij 1997 Pதமிழ் காத்த சி.வை.தாமோதரம்பிள்ளை - உதயன் ஜனவரி 2002, Pபண்டைத்தமிழர் அகவாழ்க்கை- கனடா தமிழீழச் சங்க வெள்ளி
விழா மலர் 2003 Pபண் ைத் தமிழரின் ஈதற் சிறப்பு - கனடா தமிழீழச் சங்க வெள்ளிவிழா
t)h bij 2003, Pதமிழ் மொழியும் தமிழ்ச் சங்கங்களும் - கொழும்புத் தமிழ்ச சங்க
இதழ் - ஓலை மே 2004, P.ஆறுமுகநாவலரும் கிறித்தவர்களும்- நாவலர் பெருமான் இதழ் -
ராண்டிரியே இந்துசமயப் பேரவை - 2004 *துெல்காப்பியமும் ஈழத்தமிழகமும் - தொல்காப்பியக் கட்டுரைகள் -
தொகுப்பு நூல் - ஈழத்தமிழ்ப்புலவர்கள் - 2004, வெளியிடப்பட்ட நூல்கள்: C/வாழையடி வாழை - 1962 (யாழ்ப்பாணத்து மூதறிஞர்
பண்டிதமணி கணபதிப்பிள்ளை, மட்டக்களப்புத் தமிழகத்தின்
பெருமைமிகு தமிழறிஞர் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் வாழ்வியலைத் தொகுத்து சரிதையாக அவர்கள் வாழ்ந்த
காலத்திலேயே எழுதிப் பதிப்பித்து நூலாக்கியுள்ளார்) 7 /6մլ புலாநந்த அடிகளாரின் வாழ்வும் வளமும் -1994
(அடிகளாரின் கல்விப் பணிகளையும், கல்விச் சிந்தனைகளையும் மையக் கருத்துக்களாகக் கொண்டு பாமரரும் அறிந்து கொள்ளும் பாண்மையில் இலகு தமிழில் நூலாக வடித்துத் தந்துள்ளார்). //நயனங்கள் பேசுகின்றன - சிறுகதைத் தொகுதி 2000
(இக்கதைகளுள் உதயன், தமிழர் செந்தாமரை போன்றவற்றால் நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டிகளில் தங்கப் பதக்கங்களைத் தட்டிக்கொண்டவையும் உள்ளடங்குகின்றன.) 7/ஈழத்துத் தமிழ்ச்சான்றோர். மணிமேகலை பிரசுரம் 2000
(18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ் கூறும் நல்லுலகின் தலை சிறந்த 18 புலவர்களின் சரிதத்தை, அவர்களின் ప్లే வாழ்வியல், இலக்கியப் பணி என்பனவற்றை ஆய்ந்து
உலகத்திற்குத் தந்த ஒரு உன்னத படைப்பாகும். யாழ்ப்பாணம், பட் க்களப்பு, புத்தளம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இப்பெரும் புலவர்களின் தமிழ்ப் பணியினை அறிந்து
7 வித்துவரத்தினம்

Page 11
கொள்ளவும், ஈழத்தவரின் தமிழ்ப் பணியை உலகறிய
வைப்பதாகவும் அமைந்துள்ளதோடு, பதிப்பித்த குறுகிய காலத்திலேயே
பதிப்புக்கள் அனைத்தும் முடிந்து விட்டதோடு இரண்டாவது பதிப்பும் முடிவடைந் துள்ளதாக அறியக்கிடக்கின்றது)
2) தமிழ் நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும்- மணிமேகலை
பிரசுரம் - 2005 (மிக அண்மையில் வெளிவந்துள்ளது. இது கொழும்பில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஈழத்தில் பிறந்து தமிழகம் சென்று அங்கு தமிழ்ப் பணியாற்றிய பெரியார்கள் பலர். அவர்களின் வரலாறு ஒழுங்காகப் பதியப்படவில்லை அல்லது பேணிப் பாதுகாக்கப்பட வில்லை என்பதனை மனதிருத்தி அந்த மன உறுத்துதலால் அவர்களை வெளிக்கொண்டுவர பெரியார் செபரத்தினம் அவர்கள் செய்த முயற்சி இன்று கைகூடியுள்ளது. ஈ ழ த து ப பூதந்தேவனார் தொட்டு பேராசிரியர் முகம்மதுஉவைஸ்
வரையான 24 தமிழ்ச் சான்றோரின் வரலாற்று ஆவணமாகவும், இலக்கியப் பேழையாகவும் அது அமைந்துள்ளது.) C/கிழக்கிலங்கையின் புகழ்பூத்த மைந்தர்கள் - றிகொப்பியிட்,
ரொறன்ரோ,கனடா- 2003 (கிழக்கிலங்கையின் தோன்றி
தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த 145பேரின் வாழ்க்கைக்
குறிப்புக்களை, ஆய்வுக் கட்டுரை ஆக்கங்களாகப் புடம்போட்டு வரலாற்றுப் பதிவுகளாகத் தந்துள்ளார்) தனது எழுத்தாற்றலால் அவர் அரிய படைப்புக்களைத் தமிழ் உலகிற்கு ஆக்கித் தந்துள்ளதோடு அவரின் ஆக்கங்களின் உன்னதத்தினால் பல பரிசில்களையும் விருதுகளையும் தட்டிக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1. 1967ல் இலங்கைக் கலைக் கழகத் தமிழ் ஓரங்க நாடகப்போட்டியில்
பணப்பரிசிலும் பாராட்டிதழும் 2. 1993ல் இலங்கை இந்து சமயகலாசார அமைச்சின் தமிழ்
ஒளி" பட்டம் 3. 1998ல் உதயன் பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் தங்கப்
பதக்கமும் பணப்பரிசிலும் 4. 1999ல் தமிழர் செந்தாமரையின் சிறுகதைப் போட்டியில் பணப்பொதி 5. 2003ல் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் பத்தாவது ஆண்டு
விழாவில்- நிறைகுடக் கேடயம் 6. 2003ல் ஈழத்துத் தமிழ் புலவர் மாநாட்டில் ஈழத்துச் தமிழ்ச் சான்றோர்
நூலுக்கு பணப்பரிசிலும் சான்றிதழும் 18 வித்துவரத்தினம்

7, 2004 கிக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின் கெளரவ முதுமாணிப்
11' i)" 2006 தமிழர் தகவல் இலக்கிய விருதும் தங்கப் பதக்கமும்
ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் என்னும் நூலின் வெளியீட்டில் ரையாற்றிய முனைவர் பார்வதி கந்தசாமி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: "நீண்டகாலமாகத் தெரியாதிருந்த பரந்த கருத்துக்களை ஆlt ஆய்ந்து தந்துள்ளார். இவர் இலைமறை காயாக நம்முடனே வாழ்கின்றார். செய்தியிதழ்கள் போதியளவு முக்கியத்துவம் இவர் 1ே160 1ே1 (நுக்கு வழங்குவதில்லை. அவரது எழுத்துக்கள் சாத0ை116னவையல்ல, அக நிலைசாரா புற நிலைசார்ந்து எழுதப்பட் 06வ. அவரது நூல் மிகவும் தரமானது. அது Iெழிபெயர்க்கப்பட வேண்டிய நூல். யாழ்ப்பாணத்திற்கு வெளியே பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் தொட்ட பணியில் தொடர்ந்து வித்துolன் செபரத்தினம் ஐயா அவர்கள் மேற்கொண்ட முயற்சி மு:lெoனது. வாழையடி வாழை, விபுலானந்த அடிகளாரின் வாழ்வும் வளமும்’ போன்ற நூல்களோடு, நயனங்கள் பேசுகின்றன’ என்னும் சிறுகதை நூலும் அவரின் ஆற்றலின், இலக்கியத் தெளிவின், சமுதாய நோக்கத்தைப் படம்பிடித்துக்காட்டுகின்றன. சமூகத்தை, மானுடத்தை நேரிக்கும் ஒருவரால்தான் இப்படியான ஆய்வுகளைச் செய்யமுடியும். து பரிய சமுதாய நோக்கில் நேர்மையாக நின்று இந்நூலைப் பக) த்துள்ளார். தமிழ்ச் சான்றோர்களின் கதைகள் பிள்ளைகளுக்குக் சொல்லிக்கொடுக்கப்படவேண்டும்" என்று அவர் எடுத்துக் கூறியுள்ளமை வித்துவான் செபரத்தினத்தின் தரத்தினை, தமிழ் அறிவினைப் புடம்போட்டுக் காட்டுவதாக அமைகின்றது.
இந்த நூல் வெளியீட்டில் உரையாற்றிய பேராசிரியர் சந்திரகாந்தன் அடிகளார் அவரின் பணிகுறித்து ”ஈழத்து இலக்கிய வரலாறு எழுதப்படாதது ஒரு பெரும் குறை. அக்குறையை நிவர்த்திக்கும் வகையில் இந்நூலைத் தந்துள்ளார் வித்துவான் அவர்கள். இது ஒரு Iரியமுயற்சி என்பதனையும் நூலாசிரியர் மிகுந்த அறிவாற்றல் மிக்கவர், கவிதை, நாடகத் துறைகளிலும் அவர் சிறந்த புலமை மிக்கவர். இலங்கை இந்து கலாச்சார அமைச்சினாலேயே தமிழ்ஒளி" என lட் ப்பட்டு பட்டமளித்துக் கெளரவிக்கப்பட்ட அவர் பரிசில்களையும் புெiறுள்ளார் அவர் நான்கு நூல்களை எழுதியுள்ளார் அவை எல்லாமே மிகதி தரம்வாய்ந்தவை. எல்லோரும் வாங்கி வாசிக்கவேண்டிய நூல் 60ll) குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துரை தந்த பேராசிரியர் அருட்திரு சந்திரகாந்தன் அவர்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு இந்நூலை இக்காலச் சந்ததியினரும் வருங்காலச் சந்ததியினரும் பயனுறும் வகையில் தந்துள்ளார். இரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்த இலக்கிய கர்த்தாக்களை நேர்மையான ஆய்வினை மேற்கொண்டு தந்துள்ளார். சமகால இலக்கியவாதிகளின் தொடர்புகள், அவர்களிடம் நிலவிய யூேட்டிகள் விவாதங்களை எல்லாம் ஆய்ந்து சிநிதி"இழிவரத்தினம்

Page 12
புறநிலைப்படுத்தப்பட்ட வரலாற்றுத் தேவைகளை அவர் தேடித்தந்துள்ளார். அவர் 1962இல் எழுதிய 'வாழையடி வாழை என்னும் புலவர் சரித நூல் பல்கலைக்கழக உசாத்துணை நூலாகப் பயன்படுகின்றது. ஈழத்துச் தமிழ்ச் சான்றோர் எனும் நூல் ஒரு அரிய பொக்கிசமாகும். இதில் உள்ள வரலாற்றுப் பாரம்பரியங்கள் பிள்ளைகளுக்கு உணவோடு சேர்த்து ஊட்டவேண்டிய தமிழ் அறிஞர்களின் கதைகளாகும். எனவே இவற்றைப் பெற்று பிள்ளைகளுக்கு எங்கள் பாரம்பரியங்களைச் சொல்லித்தரவேண்டும் என சபையோரை வேண்டியதோடு அவரது பணி தொடரவேண்டும் எனவும் அவர் எனது தந்தையாரின் நண்பர் எட்டுவயதுச் சிறுவனாக இருக்கும்போதே அவருடன் பழகினேன்”, என்று அவர் இள வயதிலிருந்தே பழகிவந்த இந்தப் பெரியாரைப் பற்றிக்குறிப்பிட்டுள்ளமை கருத்திற்கொள்ளத்தக்கது.
தமிழறிவுசார் ஈழத்தவரின் புலமை பற்றிய குறிப்புக்கள் அல்லது பதிவுகள் தமிழகத்தால் புறந் தள்ளப்பட்டுள்ளமை வெளிப்படை. ஈழத்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மூடிமறைக்கப் பட்டுள்ளன. அ. முத்துத் தம்பிப்பிள்ளை அவர்களின் கலைக் கழஞ்சியப் பணி ஆவணப்படுத்தப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. "ஈழத்தமிழகத்தில் தோன்றிய தமிழகப் புகழாளர்களை நாம் நினைவு கூர மறந்துவிட்ட காரணத்தால் அவர்களுடை பணிகளையும் அவர்கயையுமே உலகு மறக்க நேர்துள்ளது. இதற்குப் பிள்ளைவர்களும் விதி விலக்கல்ல. தமிழில்கலைக் களஞ்சியம் ஒன்றைத் தந்த முதல்வர் என்ற பெருமைக்குரியவர். எனினும் இந்த உண்மையைப் பலர் மறந்துவிட்டனர். சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியம் முதலாந் தொகுதியில் சென்னைப் பச்சையப்பன் தமிழாசிரியர் திரு ஆ. சிங்காரவேல் முதலியார் எழுதி வெளியிட்ட 'அபிதான சிந்தமணியே முதல் முதலில் வெளிவந்த கலைக்களஞ்சியம் என்ற குறிப்புக் காணப்டுகிறது. இ.'து உண்மைக்குப் புறம்பானது ஆ. முத்துத்தம்பின்ளை 1886ல் அபிதான கோசம்’ என்ற கலைக்களஞ்சியத்தை எழுதத் தொடங்கி 1902ல் அதனை அசசிட்டு வெளியிட்டார் என்பது முகவுரை மூலம் பெறப்படுகிறது’ என மனோன்மணி சண்முகதாஸ் தனது நவீன இலக்கிய காலத்திற்கு முற்படட தமிழக ஈழ இலக்கிய உறவுகள் என்ற கட்டுரையில் எடுத்துக் காட்டியுள்ளமையினை ஒப்பவே வித்துவான் தமிழ் அறிஞர்களின் தேடலில் தன் கவனத்தையும் பணியையும் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்க
காலந்தொட்டு ஈழத்து அறிஞர்கள் தமிழ் நாடு சென்று தமிழ்ப் 20 வித்துவரத்தினம்

கணியாற்றி யுள்ளனர் எனினும் அவர்களின் வரலாறுகள் ஆவணப் படுத்தப்படாமையினால் அவர்களைப் பற்றியோ அவர்களின் பணிகள் பற்றியே அறியமுடியாதுள்ளது. பாரதியார், மோனம் அருளம்பலனார் பற்றி அவரை யாழ்ப்பாணத்துச் சுவாமி’ எனக்குறிப்பிட்டு அவரை நாம் வணங்கவேண்டும் எனப் பாடலில் யாத்துள்ளார் எனின் அவர் எத்துணை அறிவாற்றல் மிக்கவராக இருத்தல் வேண்டும் என்பது புலனாகின்றது. இத்தகைய் ஈழத்துத் தமிழறிஞர்களின் பெருமை எங்கும் பேசப்படாமல் அது மண்ணோடு மண்ணாக மறைந்துள்ளமை தமிழ் உலகிற்கு இழைக்கப்பட்ட பெரும் தீங்காகவே
billbool I'II I(6 fotóg ġebl.
"ஈழத்துத் தமிழிலக்கியங்களை நோக்கும்போது அங்கு தமிழகத்திலிருந்து வேறுபட்ட மரபிலே தமிழ் வளர்வு பெற்றுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண அரசர்கள் காலத்தில் செம்மொழி சார்ந்த இலக்கியங்களும், நாட்டார் பாடல்கள் சார்ந்தும் சமமாக இலக்கிய வளர்வு இடம் பெற்றுள்ளது” என்கிறார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அது மட்டுமன்றி போத்துக்கேயர் காலத்திலேயே மேலை நாட்டு மதங்களின் தாக்கங்களின் வாயிலாக மன்னார், புத்தளம் போன்ற பிரதேசங்களில் கிறித்தவ காவியங்கள் மொழி பெயர் க் கப் பட்டுள்ளன. இவை பற்றிய தகவல் களர் ஆவணப்படுத்தப்படாமையால் பெருந்தொகையான தமிழ் இலக்கியங்கள் அழிந்துபோயுள்ளன.
இந்த முயற்சியில் இறங்கியுள்ள வித்துவான் செபரத்தினம் அவர்கள் எதிர் காலச் சந்ததியினருக்கு பல ஆவணங்கள் கிடைக்க வழிசெய்துள்ளதோடு தொடர்ந்து தேடுதல் முயற்சிக்கான வழியினைத் திறந்து விட்டுள்ளார் எனவும் கூறக்கூடிய அளவிற்கு அவரின் ஆக்கங்கள் ஆய்வியல் அடிப்டையில் இடம்பெற்றுள்ளமை பாராட்டுதற்குரியதே. அவரின் முயற்சிக்கு தமிழ்கூறும் நல்லுலகம் நன்றிக் கடன்பாடுடையது.
"ஆக்கமும் ஊக்கமும் அளப்பிலா சேவைக்கு வழியென உணர்ந்தோர் உவப்புடன் தோன்றுவர் புகழொடு என்றும்’
21 வித்துவரத்தினம்

Page 13
அவர் பூவா? நாரா? பொ.கனகசபாபதி முன்னாள் அதிபர் மகாஜனக் கல்லூரி
“பூவுடன் சேர்ந்த நாரும் மணம்வீசும் எனும் பொருள் பொதிந்த முது மொழிக்கேற்ப, நறுமணம் வீசும் வாடா மலர்களாகிய சான்றோர்களின் சேர்க்கையினால் நானும் மணம் வீசக்கூடுமல்லாவா?” இது வித்துவான் திரு க. செபரத்தினம் அவர்கள் 'கவிஞர் கந்தவனத்தின் கவிதை வளம்' என எழுதிய ஆய்வு நூலின் நிறைவுரையில் எழுதிய கடைசி வசனம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த ஒரு வசனமே வித்துவான் அவர்கள் எப்படிப் பட்டவர், எத்தகைய பண்பாளர் என்பதைத் தெள்ளெனக் காட்டக் கூடியதாக அமைகிறது. எத்தனை அடக்கம். இதனை எத்தனை பேரில் காண முடிகிறது. அத்தனையும் அவரின் பேராற்றலுக்கு சான்று பகர்கின்றன. என்னை வியக்க வைக்கின்றன!
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனிலுTஉங் கில்லை உயிர்க்கு (குறள் 122) மிக்க உறுதியுடன் காக்கப் பட வேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தாக் கூடியது வேறொன்றும் இல்லை, என்பது இதன் பொருள். வள்ளுவன் சொன்னதை இன்றும் சிலராவது செயலில் காண்பிக்கிறார்கள் என்பதைக் காண மனம் பூரிக்கிறது. இரண்டொரு சந்தர்ப்பங்களில் அவரது உரையினைக் கேட்டுள்ளேன், சில சந்தர்பங்களில் அவரது வானொலி நிகழ்ச்சிகளைச் செவி மடுத்துள்ளேன். இன்னும் குறைவான சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடியள்ளேன், அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரது ஆக்கங்களை வாசித்துள்ளேன் ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரை விட்டு விலகும் பொழுது எனது உள்ளத்தில் எழும் வியப்பு இவர் எத்தகைய தமிழ் அறிவாளி என்பதே.
சில வருடங்களக்கு முன்னர் கலாநிதி பாலசுந்தரம் அவர்கள் சுவாமி விபுலானந்தர் பற்றிய மலர் ஒன்றினை வெளியிடும் நோக்கிலே சுவாமியின் கல்விப்பணி பற்றி என்னை ஒரு கட்டுரை எழுதித் தருமாறு கேட்டிருந்தார். "ஆம்" என்றேன். நான் அச்சமயம் இலங்கை சென்றமையால் அங்கு நிறைய விடையங்கள் சேகரிக்கலாம் என்று எண்ணி முதலில் இராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று அவர்கள்து
நூலகத்தில் தேடல் நடத்திய பொழுது எனக்கு திருப்தியாகத் 22 வித்துவரத்தினம்
 

தகவல்கள் கிடைக்கவில்லை. பின்னர் கொழும்புத் தமிழ்ச் சங்கம் சென்றேன். அவர்கள் மிகவும் அனுசரணையாக இருந்தார்கள். சில சிற்றேடுகளையம் நூல்களையும் தந்து உதவினார்கள். அவைகளைத் திறந்து பார்த்த பொழுது எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதில் அனேகமானவை திரு க. செபரத்தினம் அவர்களால் எழுதப் பட்டவையே. இதற்காக நான் இங்கே வந்திருக்க வேண்டியதில்லையே அவர் அங்கேயே இருக்கிறார். அவரிடம் இவைகளைப் பெற்றிருக்கலாமமே என்றேன் வேடிக்கையாக. நாம் என்ன செய்வது அவர் சுவாமிமேல் அத்தனை பக்தியுடையவர். அவர் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர், நீங்கள் அவருடன் பழகினால் புரிந்து கொள்வீர்கள் என்றனர். அவருடன் பழகும் வாயப்புத் தான் எனக்குப் பெரிதாகக் கிடைக்கவில்லை.
இவர் முதலில் எழுதிய 'ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்’ எனும் நூலை வாசித்த போது ஏற்பட்ட எனது வியப்பு அவரது அடுத்த நூலாகிய 'தமிழ் நாடும் ஈழத்துத் தமிழ்சான்றோரும் கண்டதும் எல்லை கடந்து விட்டது. இத்தனை தகவல்களையும் இவரால் எப்படிச் சேகரிக்க முடிந்து. இது சாமானியமான வேலை அல்லவே. நான் என் வியப்பு மேலீட்டால் அவரைக் கேட்டும் விட்டேன். அவர் பதில் சொன்னால்த் தானே. அவரது அடக்கம் ஒரு புன்முறுவலாகத் தான் பரிணமித்தது. எனது வியப்பு பேராசிரியர் அருட் தந்தை ஏ. ஜே.வி. சந்திரகாந்தன் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும் என எண்ணுகிறேன். அவர் வித்துவான் செபரத்தினம் அவர்களின் 'ஈழத்துத் தமிழ்ச் சான்றோர எனும் நூலுக்கு எழுதிய அணிந்துரையில் இதனை வேறொரு விதமாகக் காட்டியுள்ளார். 'பல்கலைக்கழகம் ஒன்று ஆற்ற வேண்டிய பணியினைத் தனித்து நின்று, தலையாய, தக்க தரவுகளைத் தேடிப் பெற்று தமிழ்ப் புலமையுலகிற்கு இந்நூலாசிசிரியர் பெருவளம் சேர்த்துள்ளார். ஈழத் தமிழ்ப் புலமைத் தளத்தில் தடம் பதித்துச் சென்ற பேரறிஞர்களின் வாழ்வையும், பணியையும் வகுத்தும், பகுத்தும் மதிப்பீடு செய்து பூலாக்குவதென்பது, பாரியதோர் ஆய்வுத் தேடலாகும் என்பதில் ருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை. இப்பாரிய பணியினை பூலாசிசிரியர் மிகச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளார்” என விதக்கிறார் அடிகளார்.
ஆராய்ச்சிக் கட்டுரைகள்
அர்த்தமுள்ள புத்தகங்கள் அருமைச் சிறுகதைகள்
ஆர்வுமுள்ள பேச்சுரைகள் நேராய்த் தமிழருக்காய்
23 வித்துவரத்தினம்

Page 14
நிறைவாய்க் கொடுத்தவராம் நெஞ்சமது கொஞ்சுங்கதை
நினைவினிலே நிற்கும் வண்ணம்”
இவரது நயனங்கள் பேசுகின்றன’ என்ற சிறுகதைத் தொகுதியின் அணிந்துரையிலே முத்தமிழ்ப் பாவலர் ஞானமணியம் அவர்கள் இவரது பல்திறப்பட்ட திறமைகளைப் பாராட்டி எழுதியுள்ள வரிகள். இவர் சிறு கதையும் கதையும் எழுதுவார் என்பது "உதயன்' பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட சில கதைகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இவர் 1962ம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள் எழுதி வருகிறார் சிலவற்றிற்குப் பரிசில்களும் பெற்றுள்ளார் என்பது இவரது நூல்களில் ஆசிரியர் பற்றி எழுதிய குறிப்புக்களிலிருந்தே தெரிய வந்ததேயன்றி அவர் மறந்தும் வாய் திறந்து கூறவில்லை. எளிமை. எளிமை. எளிமை.
சிறுகதை எழுத்தாளர்களை நான் மூன்று வகையாக வகுப்பது வழக்கம். முதலாவது வகையினர் வாசகர்களின் சுவாரஸ்யத்தை மாத்திரமே கருத்தில் கொண்டு உண்மைக்குப் புறம்பான ஆனால் வாசிப்பதில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக் கூடிய திருப்பங்களையும் எழுதும் வகையினர். இரண்டாவது எதார்த்த எழுத்தாளர்கள். வாழ்க்கையில் நடக்கக் கூடிய நடந்த சம்பவங்களைத் தருபவர்கள். இங்கே சுவாரஸ்யம் குறைவாக இருக்கலாம் ஆனால் நம்பகத் தன்மையும் வாழ்வியலோடு பிணைத்துப் பார்க்கக் கூடிய முறைமையும் காணப்படும். மூன்றாவது வகையினர் இலட்சிய எழுத்தாளர். அவர்கள் பேனா பிடிப்பது தமது இலட்சியத்தை, தாம் எதனை உயர்வாகப் பேணுகிறார்களோ அதனை மக்களுக்கு கொண்டு போவதற்காகத் தான் சிறு கதை எழுதுகிறார்கள். நான் வித்துவான் செபரத்தினத்தின் சிறு கதைகளையும் நயனங்கள் பேசுகின்றன சிறுகதைத் தொகுதியையும் வாசித்த பொழுது இவர் அந்த மூன்றாவது வகையினராகவே பட்டது. அவரது கதைகளில் எதார்த்தம் சற்று மங்கலாக இருக்கலாம் ஆனால் இலட்சியம் எழுச்சியுடன் பயணம் செய்கிறது.
கவிநாயகர் கந்தவனம், வித்துவான் செபரத்தினம் போன்றோரை நினைக்கும் தொறும் எனக்குச் சற்றுப் பொறாமை எழவே செய்கிறது. நான் அங்கு இருந்த வேளை ஒரு பாடசாலையையே திறம் பட நடத்துதற்குத் திண்டாடினேன். இவர்களோ பாடசாலையை நன்கு நிர்வகித்துச் சிறந்த அதிபர்கள் எனப் பெயரீட்டியதுடன் பல்வேறு துறைகளிலும் பங்காற்றி சமூகத்தின் நன் மதிப்பினைப் பெற்றுள்ளார்களே. இது எப்படிச் சாத்தியமாயிற்று
என்பதற்கு என்னால் இன்று வரை விடைகாண முடியவில்லை. Da வித்துவரத்தினம்

வித்துவன் செபரத்தினம் ஒரு பாடசாலையின் மிகச் சிறந்த அதிபராக விளங்கியுள்ளார். இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் நாடகங்கள் எழுதியுள்ளார், நூல்கள் படைத்துள்ளார் தமிழ்ச் சங்கம் ஒன்றினை மட்டக்களப்பில் நிறுவி தமிழியலின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளார். இவை எல்லாவற்றுக்கும்மேலாக இலங்கை சாகித்திய மண்டலத்தின் கவிதைக் குழு உறுப்பினராகக் கடமையாற்றியுள்ளார்.
ஆகவே இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு தமிழ்ஒளி' எனும் பட்டத்தை வழங்கி அவரைப் பாராட்டியதில் நான் வியப்படையவிலை. எனது வியப்பு இன்னும் நீங்கிய பாடில்லை.
சான்றாண்மை அடக்கத்தின் அருள் கொண்டவர் வித்துவான்
25 வித்துவரத்தினம்

Page 15
செந்தமிழ்ச் செம்மல் செபரத்தினம் கவிநாயகர் வி. கந்தவனம் வித்துவான் க. செபரத்தினம் அவர்கள் தமிழ் மொழியின் ஆழ நீளங்களை அறிந்தவர். இந்த அ.கி அகன்ற அறிஞரை எனக்கு அறிமுகஞ் செய்து வைத்த சிறப்பு அவரின் முதற் படைப்பாகிய 'வாழையடி வாழை என்ற நூலுக்குரியது. அது வெளிவந்த ஆண்டு 1962. அந்த அரிய நூலைப் படித்த நாள் முதலாக அவர்மீது எனக்கொரு காதல்.
காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இந்தக் கூற்றில் உண்மை இல்லை என்பது தெரியவரும். கண் என்பது இங்கு ஆய்வுக் கண்ணை அல்லது காரணத்தைக் குறிக்கும். எனது காதலுக்குக் காரணங்கள் இருந்தன. 'வாழையடி வாழை வித்துவான் அவர்களை ஆன்றவோர் ஆய்வாளராக, பெரியாரைப் பேணுபவராக, வரலாற்று ஆசிரியராக, தமிழ் மரபைத் தகவே பேணும் சான்றோராக, எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல தமிழ் எழுதும் வல்ல எழுத்தாளராக எனக்கு அறிமுகப்படுத்தியது.
தமிழிலக்கியத்தில் நன்கு தோய்ந்தவர்களுக்குச் சான்றாண்மை தானாகவே தேடிவந்து தங்கிவிடும். சான்றாண்மை அடக்கத்துக்கும், அடக்கம் புலன்களைக் கட்டுப்படுத்தற்கும், கட்டுப்பாடு பக்குவ நிலைக்கும் ஒருவரை உயர்த்த வல்லது. இந்த உயர்ச்சியைப் பெற்றவராகவே வித்துவான் அவர்களை நான் காண்கிறேன்.
இந்த உயர்ச்சிக்கு இவரது குடிப்பிறப்பும் பிறந்து வளர்ந்த மண்ணின் பாரம்பரியமும் செய்துள்ள பங்களிப்பும் வலுவானது.
இவரது தந்தையார் திரு. அ.ப. கனகரத்தினம் அவர்களும் பெரிய படிப்பாளர், ஆசிரியராகப் பணியாற்றியவர், பண்பாளர், பாடலாளர். "இரட்சணிய அம்மானை' இவர் பாடிய பிரபந்தம். அதனோடு ஏராளமான கிறிஸ்தவ பாடல்களையும் தமிழுக்குத் தந்த தகைசால் புலவர். தாயார் சின்னாச்சி அம்மையார் தன்னையுங் காத்துத் தனது குடும்பத்தையும் பேணி நின்ற கற்பரசி. இத்தகைய குற்றமற்ற இரத்தினக் குடும்பத்தின் நற்பெயரின் சிரோமணியானவர் செபரத்தினம் அவர்கள்.
இனி இவர் பிறந்த மண்ணின் பெருமை சொல்லிமுடியாது. தமிழை வளர்த்த சி. குமாரசுவாமி ஐயர், வித்துவான் அ. சரவணமுத்தன், சுவாமி விபுலாநந்த அடிகள், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை போன்ற பெருமக்களைப் பெற்றெடுத்த பெருமை 26 வித்துவரத்தினம்

வாய்ந்தது மட்டக்களப்பு. இவர்களுள்ளும் மீன் பாடி விளையாடும் தேன் நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமி விபுலாநந்த அடிகளாராவர்.
இவர்கள் கட்டிவளர்த்த கல்விச் செல்வத்தினதும் பண்பாட்டினதும் வாழையடி வாழையாக விளங்குபவர்தான் வித்துவான் செபரத்தினம் அவர்கள்.
இதுமட்டுமன்றி தமிழ் உலகம் போற்றும் நான்கு ஈழத்துப் பேராசியர்களிடம் கற்ற பெருமையும் இவருக்கு உண்டு. கலாநிதி க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், கலாநிதி ஆ. சதாசிவம், கலாநிதி சு. வித்தியானந்தன் ஆகிய நால்வரும் ஊட்டிய தமிழ் விருந்தின் சத்துகள் இவரது இரத்தத்தில் மிகவே ஊறியிருப்பதை இவரது ஒழுக்கம், குணம், நடை மட்டுமன்றி எழுதும் ஆக்கங்களும் பேசும் இனிய மொழிகளும் காட்டி நிற்கின்றன.
இவரது ஆக்கங்கள் பெரிதும் தமிழ்ப் பெரியார்களின் பெருமை பேசுவனவாக உள்ளன. 'வாழையடி வாழை இருபெரும் மணிகளின் மாண்புகளைப் பேசுகின்றன. ஒருவர் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை, மற்றையவர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை. விபுலாநந்த அடிகளார் வரலாற்றை 'விபுலாநந்த அடிகளார் வாழ்வும் வளமும்' என்ற நூல் வகுத்துக் கூறுகின்றது. 'ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்’ என்ற அரிய நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் பதினெண்மரைத் தற்காலச் சந்ததியினருக்கு அறிமுகப்படுத்துகின்றது. 'தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும்' என்பது வித்துவான் அவர்களின் மற்றுமொரு நூல். இது தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்றிய ஈழத்துச் சான்றோர் இருபத்து நால்வரின் வாழ்வையும் பணிகளையும் எடுத்துரைக்கின்றது. இவை யாவும் வித்துவான் அவர்களை ஒரு சிறந்த தமிழியல் சார்ந்த வரலாற்று ஆசிரியராக எமக்குக் காட்டுகின்றன.
எமது மரபில் வரலாற்றுப் பதிவு என்பது காலங்கடந்து வளர்ந்த கலையாகவே காணப் படகின்றது. அதுவும் குறிப்பாக, தமிழ் வளர்த்த பெரியார்களின் வரலாறு எழுத்திற் கொலுவேற நெடுங்காலம் எடுத்தது.
தமிழீழத்தைப் பொறுத்தவரை அ. சதாசிவம்பிள்ளை அவர்களின் 'பாவலர் சரிதமே தமிழில் வந்த முதல் தமிழறிஞர் வரலாற்று நூலாகும். பின்னாளில் சுன்னாகம் குமாரசாமிப் புலவரும் வித்துவசிரோமணி கணேசையர் அவர்கள் எழுதிய ‘புலவர் வரலாறுகளும் போற்றப்பட்டுவரும் முயற்சிகள். இவர்களைத் தொடர்ந்து புலவர் பெருமைகளை அடிக்கடி தமிழ் மக்களுக்கு
27 வித்துவரத்தினம்

Page 16
எடுத்துச் சொல்லிவந்தவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களும் அவரது மாணவர் இரசிகமணி கனக செந்திநாதனுமாவர். கலாநிதி ஆ. சதாசிவம் அவர்களும் 'ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்ற பெயரில் எமது புலவர்களின் கவிதைகள் பலவற்றைத் தொகுத்துள்ளார்.
இவர்கள் வரிசையில் தமிழ்ப் புலவர்களை வாழ வைத்துக்கொண்டிருப்பவர் வித்துவான் செபரத்தினம் அவர்கள்.
பழைய இலக்கியங்களன்றித் தற்கால எழுத்தாளர்களின் படைப்புகளை நாடிப் படித்து நயவுரைகள் ஆடிக் கொழிக்கும் ஆற்றல் படைத்தவராகவும் இவர் விளங்குகின்றார். 'கவிஞர் கந்தவனத்தின் கவிதை வளம்' என்ற நூல் இதற்கு நல்ல சான்று. இரசிகமணி கனக செந்திநாதன் 'கவிஞர் கந்தவனத்தின் கவின்மிகு கவிதைகள்’ என்ற தலைப்பில் 13 கட்டுரைகளை அக்காலத்தில் ஈழநாடு வார இதழில் எழுதினார்கள். போர்ச் சூழல் காரணமாக அவற்றை இழந்துவிட்டேன். அந்தக் கவலைக்கு நல்ல மருந்து ஒன்றை வித்துவான் எனக்குத் தந்திருக்கின்றார்.
வித்துவான் அவர்களும் சிறந்த ஆக்க இலக்கியகாரர்தாம். பல நாடகங்களையும் சிறுகதைகளையும் படைத்திருக்கிறார்கள். நயனங்கள் பேசுகின்றன’ என்பது இவரது சிறுகதைத் தொகுதி.
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தை இவர் பெரிதும் மதிப்பவர். இணையமும் இவரது 'ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்’ என்ற நூலுக்கு யூலாய் 2000த்திலும் நயனங்கள் பேசுகின்றன’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 2002டிலும் அறிமுக விழாக்கள் நடத்தியது.
இணையத்தின் பத்தாவது ஆண்டு விழா 20.12.2003ல் கொண்டாடப்பட்டபொழுது வித்துவான் செபரத்தினம் அவர்களின் தமிழ்ப் பணிகளைப் போற்றி இணையம் அவரைப் பாராட்டியது.
இப்பொழுது இணையம் அவருக்குப் பவளவிழா எடுத்திருப்பதும் தமிழ் மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி தருவதொன்றாகும். விபுலாநந்த அடிகளுக்குக் கனடாவிற் சிறப்பான முறையில் மற்றைய பெருமக்களுடன் சேர்ந்து பெரு விழா எடுத்த வித்துவான் அவர்களுக்கு நாம் சிறிய அளவிலாவது விழா எடுப்பது அவரது பணிகளின் பண்பையும் பயனையும் தமிழ் மக்கள் அனுபவிக்கவேயாம்.
அவர் நீடு வாழ எல்லோருமே வாழ்த்துவோமாக!
28 வித்துவரத்தினம்

வித்தாகி நின்ற வித்தகண் நாவற்குடா இளையதம்பி தங்கராசா (இலங்கை வங்கி முன்னாள் முதுநிலை
அதிகாரி)
வித்துவான் க.செபரத்தினம் ஐயா அவர்களுக்கு பாராட்டுவிழா வொன்று ஒழுங்கு செய்யப்படும் செய்தியும், அதனையொட்டி மலரொன் று வெளியிடப்பட இருக்கும் செய்தியும் என் மனதைக் குளிரவைத்தன. . எங்களது அன்புக்கும் மரியாதைக்கும் உரியவரான ஐயாவைப்பற்றி என்ன பொருளில் எனது கட்டுரையை எழுதலாமெனச் சிந்தித்த வேளையில், தற்சமயம் என்னால் எழுதப்பட்டு முடிவுறும் நிலையில் இருக்கின்ற நூலொன்றில் வித்துவான் அவர்களையிட்டு நான் எழுதியிருக்கும் கருத்துரை ஒன்று என் மனத்திரையில் தோன்றியது அதனை வாசகர்கள் முன் இங்கு வைத்திட விளைகின்றேன்.
சுவாமி விபுலாநந்தருடைய ஐம்பத்தேழாவது நினைவு நாள்விழா 18.07.2004இல் நடத்தப் படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படடன. அவ்விழாவில் கவியரங்கம் ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்தது. என்னை நன்கு அறிந்த ஒருவர். எனது பெயரை வித்துவானிடம் பிரேரித்துள்ளார். அக்கவியரங்கில் நான் பங்கு கொண்டிட வேண்டுமென்னும் அன்புக்கட்டளை அவரிடமிருந்து எனக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்டது. எனது ஒப்பதலுக்குக் காத்திருக்காமலே தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. வித்துவான் அவர்களின் அன்புக்கட்டளை, என் தலையில் ஒரு குண்டினைப் போட்டது போன்ற உணர்ச்சியை எனக்கு ஏற்படுத்தியது. கட்டளையை மீறமுடியா நிலை எனக்கு. வித்துவான் அவர்கள் எனக்குள் வித்தாகவே நிலைத்துவிட்டார். மட்டக்களப்புத் தமிழகமானது,
“புங்கைமரப் பூக்களிலே
பொன் வண்டு மதுவுண்டு வான் காற்றினிலே இசைபாடும் வாழுகின்ற மீனினங்கள் பதிலுக்குப் பாட்டிசைக்கும்’ தேனாடாகும். இரவு வேளைகளில் ஆற்றிலும், மேட்டிலும், நெல்லடிக்கும் களத்திலுமிருந்து அலையலையாய் காற்றினிலே மிதந்துவரும் இன்னிசைக் கவிதைகள் காதுக்கும் கருத்துக்கும் இன்பம் பயப்பவை. இந்தப் பின்னணியின் 29 வித்துவரத்தினம்

Page 17
துணிவினைத் துணைகொண்டு கவிதைகளைப் புனைந்து கவியரங்கிற் களமிறங்கினேன். கவியரங்கில் பங்கேற்ற கவிஞர்களாலும், வித்துவான் செபரத்தினம் அவர்களாலும் பாராட்டப்படபோது நான் அடைந்த மகிழ்ச்சியை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். எனக்குள் மறைந்துகிடந்த கவித்துவத்தை வெளிக் கொணர்ந்து எனக்குப் பெரும்புகழைத் தேடித்தந்தவர் செபரத்தினம் ஐயாவே ஆவார். என்னைக் கட்டாயப்படுத்தி கவியரங்கேற வைத்து, எனது திறமையை நானே புரிந்துகொண்டிடக் காரணராயிருந்த வாய்ப்பினையிட்டுப் பெருமை கொள்ளுகிறேன்.
கிழக்கிலங்கையின் இலக்கியச் சோலையானது பல சுவையான இலக்கியப் படைப்புகளைத்தந்து சான்றோர்கள் பலரைத் தோற்றுவித்த ஒரு புண்ணிய பூமியாகும். வித்துவான் சபூபாலபிள்ளை, வித்துவான் அ.சரவணமுத்தர், புலவர் குமாரசுவாமி ஐயர், முத்துமிழ் வித்தகர் விபுலாநந்தர், தேசிகமணி அருணாசல உபாத்தியாயர், புலவர்மணி ஏ.பெரிதம்பிப்பிள்ளை, பண்டிதர் குஞ்சுத்தம்பி, பண்டிதர் வி.சி.கந்தையா, பேரறிஞர் செ.பூபாலபிள்ளைப் பண்டிதர், சின்னவப் புலவர், கணபதிப்பிள்ளைப் புலவர், புலவர் சின்ன ஆலிம் அப்பா, சேரு மதாறுசாகிப் புலவர், சோமசுந்தர தேசிகர், கலாநிதி வி. கிருஸ்ணபிள்ளை, முதுகலைாமானி ம.சற்குணம் முதலிய இச் சான்றோர்கள் என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடிய தடயங்களை எமக்கு விட்டுச் சென்றுள்ளனர். அவையாவும் எம்மால் பாதுகாக் கப் படவேணி டிய கலைச் சொத்துக் களாம் . இச் சான்றோர்களுள் முத்தமிழ் வளர்ச்சிக்குப் பேருதவி வழங்கியவரும், நாற்றமிழ் எனக்கொள்ளப்படும் அறிவியிற் தமிழ் வளர்ச்சிக்கு வழி வகுத்துத்தந்தவருமான விபுலாநந்த அடிகளது பெயர், சிறப்புடன் போற்றப்படவேண்டியதாகும்.
இன்று தமிழ் உலகிற்கு அணிகலன்களாய் வாழ்பவர்களுள் ஈழத்துப் பூராடனார் கலாநிதி க.தா.செல்வராசகோபால், வித்துவான் கலாநிதி சா.இ.கமலநாதன், கலாநிதி வ.சிவசுப்பிரமணியம், வித்துவான் க.செபரத்தினம், வித்துவான் க.ஞானரத்தினம், கலாநிதி இ.பாலசுந்தரம், கவிமணி சி.கிருஷ்ணபிள்ளை முதலியோரின் தமிழ்ப்பணி போற்றுதற்குரியது. இவர்களுள் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்து தமிழன்னைக்குப் பெருமைசேர்க்கும் ஈழத்துப் பூராடனாரின் பணி வரலாற்றில் ஆவணப்படுத்தப் படவேண்டும்.
பேராசிரியர்கள் க.கணபதிப்பிள்ளை, வி.செல்வநாயகம், ஆ.சதாசிவம், சு.வித்தியானந்தன் ஆகியோரிடம் கற்றுத்தேறிய வித்துவான் செபரத்தினம் அவர்கள், விபுலாந்த அடிகளாரைத் தமது மானசீகக் குருவாக வரித்துக் கொண்டு அவரின் அடியொற்றித்
30 வித்துவரத்தினம்

தமிழ்ப் பணி செய்து வருவதைக் காண்கிறோம்.
வித்துவான் அவர்களின் இலக்கியப் படைப்புக்களுள் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஓர் அம்சம் என்னவெனில், அவர் வெளியிட்டுள்ள “வாழையடி வாழை” “விபுலாநந்த அடிகளாரின் வாழ்வும வளமும்” “ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்” “தமிழ் நாடும் ஈழத்துச் சான்றோரும்” ஆகிய நூல்களதும் தொகுத்துக் கொடுத்த “கிழக்கு மண்ணின் புகழ் பூத்த மைந்தர்கள் - 2ம் பாகம்” என்பதன் வாயிலாகவும், ஈழத்து இலக்கியத் தோன்றல்களையும், அவர்களின் அரிய இலக்கியப் படைப்புகளையும் ஆவணப்படுத்தி தமிழுலகுக்கு ஈந்தமையேயாகும். இ.து வித்துவான் செபரத்தினம் அவர்களால் இலக்கிய உலகுக்கு வழங்கப்பட்ட ஓர் அரும்பெரும் பணியாகும். இதனால் அவரைத் தமிழ் ஆவணங்களின் பதிப்புப் படைப்பாளி என அழைப்பது பொருந்தும்.
வித்துவான் அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி இலங்கை இந்துசமய கலாசார அமைச்சு, அவருக்கு தமிழ் ஒளி' என்னும் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்துள்ளது. தமது சிறுகதைகளுக்காக தங்கப் பதக்கங்களையும், பணப்பரிசில்களையும் பெற்றுள்ள வித்துவான் அவர்களின் ‘ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்”என்னும் நூல், ஈழத்துத் தமிழ்ப் புலவர் மகாநாட்டின் பணப்பரிசினையும், சான்றிதழையும் பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில், நிறைகுடக் கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டோருள், வித்துவான் செபரத்தினம் அவர்களும் ஒருவர். அண்மையில் இடம்பெற்ற இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலே வித்துவான் அவர்களுக்கு கெளரவ முதுமானிப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் வாயிலாக கலநிதிப்பட்டம் வழங்கப்பட இருக்கிறது என அறிவிக்கப்பட்ட போதிலும், அப்பட்டத்திற்குரிய தகைமை பெற்றிருக்கும் வித்துவான் அவர்களுக்கு முதுமானிப்பட்டமே வழங்கப்பட்டமை பலரை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அண்மையில், வித்துவான் செபரத்தினம் அவர்கள், தமிழர் தகவல் நிறுவனத்தினால் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மண்ணிற் தோன்றிய பெருமகன் ஒருவருக்கு பாராட்டுவிழா வைப்பதும், பாராட்டுமலர் வெளியிடுவதும் பொருத்தமானவையே. மலருக்கு எனது கட்டுரையினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். வித்துவான் செபரத்தினம் அவர்களின் நற்பணி மென்மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துகிறேன்.
31 வித்துவரத்தினம்

Page 18
நல்லிசை வலித்த நாணுடை
LD60Tg5gbj
முனைவர் பார்வதி கந்தசாமி
ஈழத்து இலக்கிய மரபில் தடம் பதித்தவர்களில் கிழக்கிலங்கையின் வளம் கொழிக்கும் பழுகாமத்துப் புலவர் வரிசையில் முன்நின்று இலக்கியம் படைக்கும் வித்துவான் செபரத்தினம் முக் கரியமானவர் தனி னடக் கத்துடன் தான் செயப் இலக்கியங்களைக்கூடப் பிறர் செய்ய உதவிநின்ற வித்துவான் எப்பொழுதும் தன்னை முன்வைக்காது தன்னைச் சூழ்ந்து இக்கியப் படைப்பாளிகளை முன்நின்று உதவியது பல. அவரது தன்னடக்கமானது நாண்நிறைந்த சுபாவம் பலரையும் கவரக் கூடியது. அவர் பலருடனம் கொண்ட வாஞ்சையும் ஈடுபாடும் பழுத்த இலக்கியவாதி ஆக்கியுள.
பெரியவர்களின் கடைக்கண் பார்வைக்காக நல்லிசை வலித்த பூதந்தேவனாரின் பாரம்பரியம் கொண்டவர். பல்கலைக் கழகத்தில் வித் துவான் கல்வி பயின்ற அறுவரில முதன்மையானவராக விளங்குகின்றார். விபுலாநந்த வெள்ளத்தில் மூழ்கிக் குளித்து எழுந்த வித்துவான் விபுலானந்தரை மானசீகக் குருவாகக் கொண்டவர். அவரின் வாழையடி வாழைகளான புலவர் மணி பெரியதம்பி, பேராசிரியர் செல்வநாயகம், பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோரை ஆசிரியராகக் கொண்ட மகிழ்வு கொண்டவர். பேராசிரியர் செல்வநாயகத்தின் மனைவி கனடாவில் இறந்தபோது பேராசிரியரிடம் தான் கல்வி கற்றுப் பெற்ற சிந்தனைபற்றிப் பெரிதாகப் பேசிப் புகழ்ந்தார் செபரெத்தினம். விபுலாநந்தரின் மாணாக்கரின் மாணக்கன் என்ற காரணத்தால் விபுலாநந்தத் தேன் தன்னில் ஊறிய உணர்வுடன் 'வாழையடி வாழையை விபுலாநந்த அர்ப்பணமாகச் செய்தார். கல்விமானிக்கு எடுத்துக் கொண்ட 'விபுலாநந்த கல்விச் சிந்தனைக் கருவை அடிப்படையாகக் கொண்டு அதை விரிவுபடுத்தி 'வாழ்வும் வளமும் என்ற நூலை வெளியிட்டார். யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலரும் அவர் சீடபாரம்பரியமாக பண்டிதமணி படைப்புக்கள் இருப்பது போல விபுலாநந்த சீட பாரம்பரியத்தின் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் சீடரான வித்துவான் செபரத்தினம் வளமான
32 வித்துவரத்தினம்
 

தமிழ் நூல்களை ஆக்கித் தந்து கொண்டிருக்கின்றார். ஈழத்துச் சான்றோரை இரு பாகங்களில் எழுத முனைந்த பொழுது தமிழக்கதில் புகழ்பூத்த ஈழத்துப் பூதந்தேவனார் முதல் உவைஸ் ஈறாக உள்ள படைப்பாளிகள் வரையும் எழுதவேண்டிய கட்டாயத்தை உணர்ந்தார். இதனால்தான் இன்றைய வெளியீடான 'தமிழ் நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும்' என்ற அரிய பெரிய சிறப்புக்கள் கொண்டதும் ஈழத்தவரின் சிறப்பியல்புகளை தமிழகமும் தமிழ் கூறும் நல்லுலகமும் அறிந்து கொள்ளும் வாய்ப்புக்களைத் தந்துள்ளதுமான நூலை இயற்றியுள்ளமை எமக்கும் கிடைத்த பெரும் பேறாகும்.
ஈழத்துப் பதிப்பாக வந்த 'கிழக்கிலங்கை மண்ணின் மைந்தர்கள்' என்ற நூலை செல்வராசகோபால் என்ற மட்டு நகர் தந்த பேரிலக்கிய வல்லாளனுக்கு அநுசரணையாக இருந்து ஈழத்ததுப் பதிப்புக்கு உதவினார் வித்துவான். வித்துவானுக்கு அவரின் தந்தையாரின் கிராமசபைத் தலைமையும், காருணிய எண்ணமும் தன்னிடமும் 'கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பது போல' ஊடுருவியுள்ளது போலும் என்பார். தந்தையாரும் 'இரட்சண்ய அம்மானை' நூலை பலதடவைகள் பதிப்பத்தவர். தன்னை எழுதத் தூண்டிய பல்கலைக் கழகப்பேராசான்களை விட எஸ். பொ. எனப்படும் சிறுகதை எழுத்தாளர், கைதடியைச் சேர்ந்த சித்தனையாளர் பாலகிருஷ்ணன் தன்னை எழுதத் தூண்டியவர்கள் என்று கூறிக் கொள்ளுவார் செபரெத்தினம்.
எங்கள் வித்துவான் நாணம் நிறைந்த பேரன்பு கொண்டவர். அமைதிப் படையின் அடாவடித் தனத்திலிருந்து எங்கள் இளைஞர்களைப் பாதுகாக்க அமைதிக் குழுவில் ஒருவராகிக் கொண்டார். பொதுமக்கள் பிரசைகள் குழு அங்கத்தவராகவும் செயற்பட்டார். மனிதநேயம் மிக்க மகத்தான மனிதப் பண்புகள் கொண்டவராக மக்கள் பணி செய்தார்.
கவிஞர் கந்தவனத்தின் ‘கவிவளம் பற்றியும் இலக்கிய விமர்சனம் தந்த வித்துவான் மறைவாக நமக்குத் திெயாதிருந்த பெரும் கதைகளை வெளிக் கொணர்ந்திருக்கின்றார். கவிஞர் அமுதுவும் வித்துவானும் நண்பர்கள், ஒன்றாகப் படித்தவர்கள். அமுதுவின் இக்கியப் பணிகளுக்கு யாழ் பல்கலைக் கழகம் 'கலாநிதிப் பட்டம் வழங்கிப் போற்றியதைப் பலரும் அறிவர். அவரைப் போலவே படைப்பாளியாக விளங்கி ஈழத்தவரின் புகழை ஏணியில் ஏற்றுவித்த இலக்கியக் களஞ்சியத்திற்கு மட்டக்களப்புப் பல்ககைகழகமும் 'கலாநிதிப் பட்டமும் வழங்குவதற்கு முன்வரும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு. வாழ்க வித்துவர்ன்! தொடர்க அவரது இலக்கியப் பணிகள்!
33 வித்துவரத்தினம்

Page 19
கலாநிதி. நா. சுப்பிரமணியன்
Dr.N.Subramnian Retired Profesor-Dept. Of Tamil, University of Jaffan 1884 Berrywood Crescent, Kingston, Ottario. K7F 3G4
Fax/Tel 613-634-486
A a 1 1. za Tvrtunit rrory vir Veszy
வித் துவான், ‘தமிழ் ஒளி' க.செபரத்தினம் ஐயா அவர்களுடன் நான் நீண்ட நேரத்தொடர்பு கொண்டவனல்லன். ஓரிரு சந்தர்ப்பங்களில் மட்டும் தான் அவரைச் சநீதித் திருப் பேணி . அவ்வேளைகளிலும் உரையாடியவை சில வார்த்தைகள் மட்டுமேயாம். ஆயினும் அவருடனான எனது சிந்தனைத் தளம் சார் தொடர்பும் ஆழமானவை மிக நெருக்கமானவை என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் படித்து வித்துவான் ஆனவர் அவர். நானும் அத் தமிழ்த் துறையிலே தமிழ்ச் சிறப்புக்கலை மற்றும் தமிழ் முதுகலைப் பட்டங்கள் பெற்றவன். எம் சிந்தனைத் தளத்தை இணைத்து நிற்கும் மையப்புள்ளி இது. வித்துவானும் சக மாணவராக மேற்படி பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிற் பயின்ற வித்துவான் த. செல்லத்துரை (அளவெட்டி) அவர்கள் என்னைப் பயிற்றுவித்து பல்கலைக் கழகத்திற்கு ஆற்றுப் படுத்தியவர் என்பதையும் நான் இங்கு பதிவு செய்வது அவசியம். அவ்வகையில் வித்துவான் செபரத்தினம் அவர்களை ஆசிரியத் தளத்தில் அமர்த்திப் போற்றவும் வாழ்த்தி வணங்கவும் உரிமை பெற்றவன் யான். வித்துவான் அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றுப் பதிவு முயற்சியில் -குறிப்பாக ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றைப் பதிவு செய்வதில் தனிக் கவனம் செலுத்திவருபவர். நானும் அத்துறையில் ஈடுபட்டிருப்பவன். இவை எம்மிருவரையும் இணைத்து நிற்கும் கண்ணிகள். இவ்வாறான தொடர்புத் தளங்கள் இருப்பினும் இவற்றின் சார்பால் பாதிப்புறாத புறநிலைத் (Objective) தளத்தில் நின்று வித்துவானின் ஆய்வு நிலை தளத்தில் வித்துவானின் அவர்களின் ஆய்வு நிலை ஆளுமை பற்றி எனது மனப் பதிவுகளில் முக்கியமான சிலவற்றைப் பார்க்க விழைகின்றேன். ஆய்வு முயற்சியில் ஈடுபட விழைவோர்க்கு அமைந்து
34 வித்துவரத்தினம்
 

இருக்க வேண்டிய குணாம்சங்களில் முக்கியமானவை மூன்று. அவை புறநிலை நோக்கு, ஒப்பியல் நோக்கு, தொடர்ந்து இயங்கும் செயலூக்கம் என்பன வாகும். புறிநிலை நோக்கானது ‘விருப்பு - வெறுப்பு அற்ற நிலையில் உண்மையைத் தரிசிக்க உதவுவது. ஒப்பியல் நோக்கானது ஆய்வாளரின் பார்வை விரிவையும் பன்முகப்பட்ட சான்றுகளுடே பொதுநிலைத் தொடர்புகாணும் ஆற்றலையும் நல்குவதாகும். தொடர்முயற்சி எனப்படும் நல்லூக்கம் ஆய்வுச் செயற்பாட்டை ஒரு 'அஞ்சலோட்டம் எனக்கருதி, முன்னால் தானும் பிறரும் விட்ட இடத்திலிருந்து தொடங்கும் மனப்பாங்கு சார்ந்ததாகும். இந்த மூன்று குணாம்சங்களும் வித்துவான் க. செபரத்தினம் ஐயா அவர்களுடைய ஆய்வுச் செயற்பாடுகளில் தெளிவாகவே தெரிகின்றன என்பது எனது கணிப்பாகும்.
கிழக்கிலங்கையைத் தாய் மண்ணாகக் கொண்ட அவர் அனைத்திலங்கையின் தமிழ் மரபிற்கும் வாரிசுரிமை பூண்டவராகவே நம்முன் வருகிறார் கிறிஸ்தவம் என்ற சமயச் சார்பு கொண்ட அவரால் அச்சார்புக்கு அப்பாலாக நின்று சைவம் காத்த பூரீலழரீ ஆறுமுக நாவலர் சபாபதி நாவலர் முதலியவர்களையும், இஸ்லாமிய இலக்கியப் பேரறிஞர் அல்லாமா ம. முகம்மது உவைஸ் முதலியவர்களையும் கூட அணுகமுடிகின்றது, தமிழ் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்புப் பற்றிய நடுநிலையான பார்வைகளை முன்வைக்க முடிகின்றது. இத்தகு புறநிலை சார் பார்வை அணுகுமுறை என்பன ஈழத்துத் தமிழியலாளர் பலரிடத்திலும் காணக்கூடிய ஒனறே எனினும் வித்துவான் க. செபரத்தினம் அவர்களின் முக்கிய குணாம்சமாக அது பொலிவதைக் கண்டு மன நிறைவடைகின்றேன்.
வித்துவான் அவர்கள் ஒப்பியல் நோக்குடைய ஒரு ஆய்வாளர் என்பதை நாற்பத்து நான்காண்டுகளின் முன்னர் அவர் எழுதிய 'வாழையடி வாழை (1962) என்ற நூலாக்கமே சுட்டி உணர்த்திவிட்டது. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஆகிய இரு மரபுவழித் தமிழர்களை அருகருகே நிறுத்திக் காட்டியுள்ள அந் நூலாக்கத்தின் மூலம் ஈழத்தின் வடக்கு, கிழக்கு ஆகிய இரு பிரதேசங்களையும் பண்பாட்டு நிலையில் அருகருகே
35 வித்துவரத்தினம்

Page 20
இட்டுவந்துள்ளார், வித்துவான் அவர்கள். தமிழீழத் தேசியம் என்ற எண்ணக்கருவை வளம்படுத்தும் ஒரு ஒப்பு நோக்காக இது திகழ்கின்றமை சிந்தித்து மகிழத்தக்கது.
1960களில் மேற்படி நூல்மூலம் ஈழத்து இலக்கிய வரலாற்றாய்வுக் களத்தில் அடிபதித்துள்ள வித்துவான் அவர்கள் நாற்பதாண்டுகள் கடந்தபின்னரும் அத்தளத்தில் உயிர்த்துடிப்புடன் இயங்குகின்றார், புதிய புதிய தகவல் தேட்டங்களில் ஈடுபடுகின்றார், முன்னைய ஆக்கங்களில் நிகழ்ந்திருக்கக் கூடிய தகவற் பிழைகளைத் திருத்துவதில் கவனம் செலுத்துகின்றார். புதிய நூலாக்கங்களை முன்வைக்கின்றார். ஆய்வுலகில் அவர் தொடர்ந்து செயற்பட்டு நிற்கும் முறைமை இது.
ஒரு ஆய்வாளர் என்ற வகையில் வித்துவான் அவர்கள் தந்து நிற்கும் காட்சி இது. இது ஆய்வுலகம் உவக்கும் காட்சியுமாகும். தமிழ்த் துறையின் முதற் பேராசிரியராகத் திகழ்ந்த விபுலாநந்த அடிகளாரையும் 'இலக்கிய கலாநிதி' என்ற சிறப்பு விருதுபெற்ற புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை யவர்களையும் தந்த கிழக்கிலங்கை மண் நமக்களித்துள்ள மற்றொரு ஒளிவிளக்கு என்ற கணிப்புக்கு உரியவர் வித்துவான் தமிழ்ஒளி க.செபரத்தினம் ஐயா அவர்கள். அவரை வாழ்த்தவும் வணங்கவும்கிடைத்த வாய்ப்பையிட்டு மனநிறைவடைகிறேன்.
26.03.06 கலாநிதி நா. சுப்பிரமணியன்
தமிழர் தகவல் விருது வழங்கிக் கெளரவிக்கப் രണ് உறுபயினர்
36 வித்துவரத்தினம்
 
 

ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்
வரிசையில். . . .
முனைவர் இளையதம்பி பாலசுந்தரம்
தமிழ் இலக்கிய வரலாற்றிலே ஈழத்துச் சான்றோர்கள் பற்றிய மதிப்பீடும் பதிவுகளும் செம்மையான முறையில் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு முன்பதாக இடம்பெற்றிருக்க வில்லை என்பது கசப்பான உண்மையாகும். பேராசிரியர் செல்வநாயகம் ஆழ்ந்த ஆய்வும் நடுநிலையோடும் எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூலிலேதான் முதன் முதலாக ஈழத்தத் தமிழ்ச் சான்றோர்களின் இலக்கிய முயற்சிகள் பற்றிய மதிப்பீடுகள் இடம்பெறத்தொடங்கின. அதனைத் தொடாந்து பேராசிரியர் ஆ. சதாசிவம் தொகுத்து வெளியிட்ட ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் அவர்கள் இரு தொகுதிகளாகப் பதிப்பித்து வெளியிட்ட ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை அவர்களின் 'பாவலர் சரித்திர தீபகம்' என்ற நூல்கள், பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் எழுதிய "இலக்கிய வரலாற்று ஆய்வு நூல்கள் ஆகியன ஈழத்தவரின் இலக்கியப் பங்களிப்புகளை ஆவணப்டுத்தின.
இவற்றைவிட இலங்கைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ், இ. பாலசுந்தரம், எஸ் சிவலிங்கராஜா முதலியோர் காலத்திற்குக் காலம் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்களின் ஆக்கங்களையும் அவைபற்றிய மதிப்பீடுகளையும் பதிவுசெய்துள்ளன. இவற்றுக்கும் மேலாக குமாரசுவாமிப்புலவர் எழுதிய 'தமிழ்ப் புலவர் சரித்திரம்', சி. கணேசையர் எழுதிய ‘ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்' என்பனவும் ஈழத்த்துத் தமிழ்ச் சான்றோர்களின் ஆரம்பகால ஆவணங்களாக விளங்குகின்றன. இப் பின்னணியில் வித்துவான் க. செபரத்தினம் அவர்களின் பங்களிப்பு மதிப்பிடப்பட வேண்டியதாகும்.
மட்டக்களப்புக்குத் தனித்துவமானதோர் இலக்கியப் பாரம்பரியமும் புலவர் பாரம்பரியமும் உள்ளன. சுவாமி விபுலாநந்தர் இப்பாரம்பரியத்தின் தலைமகனாகத் திகழ்ந்ததோடு, அப் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து வளர்க்கும் ஒரு பரம்பரையையும் உருவாக்கியதோடு. அதற்குரியதொரு களத்தையம் அமைத்துச் சென்றார். சுவாமிகளின் மாணவருள் ஒருவராகிய பண்டிதர் வி. சீ.
37 வித்துவரத்தினம்

Page 21
கந்தையா அவர்களின் 'மட்டக்களப்புத் தமிழகம்' (1964) என்ற நூலை வாசிப்போர் மட்டக்களப்புத் தமிழகத்தின் இலக்கியப் பாரம்பரித்தை நன்கு புரிந்துகொள்வர். மட்டக்களப்பிலே பண்டிதர்கள், வித்துவான்கள் பாரம்பரியம் ஒன்று இருந்துவந்துள்ளது. அந்தப் பாரம்பரியத்தில் தோன்றியவரே வித்துவான் க. செபரத்தினம் அவர்கள்.
கிழக்கிலங்கையின் தென் பாலி பழமைவாய்ந்த முருகன்கோவில் திருக்கோவில் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு அயலிலுள்ள சைவத்தமிழ்ப்பதியாம் தம்பிலுவில் என்னும் ஊரில் 1930 ஆம் ஆண்டிலே பிறந்து, மரபுவழிக் கல்வி பயின்று ஆசிரியராகி, பல்கலைக்கழகத்திலே தமிழ் வித்துவான், கல்வி டிப்ளோமா ஆகிய பட்டங்களும் பெற்று ஆசிரியப்பணியின் சிறப்பால் அதிபராகி கல்வி, சமூகப்பணிகளில் உழைத்து ஓய்ந்தவள் வித்துவான் க. செபரத்தினம் அவர்கள். சுவாமி விபுலாநந்தரின் கல்விப் பாரம்பரியத்துடன் மிக்க தொடர்புடைய செபரத்தினம் அவர்கள் மிகுந்த தமிழ்ப் பற்றுடையவர். தமிழ்மீது அவர் கொண்ட ஆராக்காதலால் தமிழிலக்கியங்களில் ஈடுபாடுகொண்டு இலக்கியக் கட்டுரைகள், இலக்கிச் சொற்பொழிவுகள் என்பவற்றின் மூலம் தனது இலக்கிய ஆளுமைகளை தொடக்கத்திலே வெளிப்படுத்தி வந்தார். அவரது முதல் நூல் வாழையடி வாழை (1962) என்பதாகும். தமிழிலக்கிய பாரம்பரியத்தில் ஈடுபாடுகொண்ட வித்துவான் அவர்கள் தமிழிலக்கியக் களத்தில் மேம்பட்டு விளங்கிய புலவர்களின் சிறப்பினை இந்நால் வெளிப்படுத்துகின்றது. அடுத்ததாக அவர் எழுதிய விபுலாநந்த அடிகளாரின் வாழ்வும் வளமும் (1994) என்ற நூல் சுவாமி விபுலாந்தரின் பணிகளை ஆராய்து எழுதப்பட்டதாகும். சுவாமி அவர்களின் நூற்றாண்டு விழா இலங்கையின் பலபாகங்களிலும் குறிப்பாக மட்டக்களப்பிலே மிக விமரிசையாவும் கொண்டாடப்பட்டது. அதன் எழுச்சியும் தேவையும் வித்துவான் அவர்களை சுவாமிகள் பற்றித் தனியானதொரு நூலை எழுதத் தூண்டியிருக்க வேண்டும் காலத்தின் தேவையை அந்நூல் நிறைவு செய்தது. - அடுத்தது நயனங்கள் பேசுகின்றன (2000) என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். மரபுவழி இலக்கியத்தில் மட்டுமன்றி. நவீன இலக்கியத் திலும் அவருக்குள்ள ஆளுமையை வெளிப்படுத்துவதாக அவரது சிறுகதைத் தொகுதி அமைந்துள்ளது. செபரத்தினம் அவர்களின் பரந்துபட்ட இலக்கிய அறிவையும், இலக்கிய வரலாற்று நோக்கினையும் வெளிப்டுத்துவனவாக அவர் "
எழுதியுள்ள 'ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் (2002), ತಿಳಿಸಿ நாடும் 38 த்துவரத்தின்ம்

'ஈழத்துச் தமிழ்ச் சான்றோர்களும் (2005) என்ற இருநூல்களும் அமைகின்றன. இவ்விரு நூல்களும் ஆசிரியன் சமூகம், கல்வி, பொண்மியம், சமயம், வரலாறு, தேசியம் சார்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்துவனவாகவும், ஈழத்து இலக்கிய வரலாற்றுப் பதிவாகவும் மதிப்பீடாகவும் அமைகின்றன. ஈழத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களின் பணிகளை காலக்கண்ணாடியாக வைத்து ஆராய்ந்தது மட்டுமன்றி, ஈழத்தமிழ் அறிஞர்கள் தமிழகத்தில் எத்தகைய பணி புரிந்தார்கள்? தமிழக்து அறிஞ்கள் எவ்வாறு ஈழத்து அறிஞர்களைப் போற்றிக் கெளரவித்தார்கள்? முதலான செய்திகளும் இவரது கட்டுரைகளில் நன்கு விளக்கம் பெற்றுள்ளன. பேராசிரியர் சந்திரகாந்தன் அவர்கள், ஈழத்துத் தமிழ்ச் சான்றோா என்ற நூல் பற்றிக் குறிப்பிடும்போது, இந் நூல், எமது சமகாலத்தின் தேசிய வரலாற்றுத் தேவையையும் அதனுடன் கூடிய தமிழ் இன எழுச்சி சார்ந்த அறிவுத் தேடலையும் ஆவணப்படுத்தலையும் ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் பூர்த்தி செய்யும் பங்களிப்பாக அமைகின்றது என்றார். மேலே கூறப்பட்ட ஈழத்து இலக்கிய வரலாற்று ஆய்வாளர் வரிசையில் வித்துவான் அவர்களையும் வைத்து மதிப்பிடத் தக்கதொரு தகுதியை இவ்விரு நூல்களும் அவருக்கு அளித்துள்ளன.
தமிழ் அறிஞர்கள் பெரிதும் அறிந்திருக்க முடியாத இரு நூல்கள் இங்கே குறிப்பிட்ப்பட வேண்டியனவாகின்றன. கிழக்கிலங்கைத் தமிழ் அறிஞர்கள், கிழக்கிலங்கைத் தமிழ்ப் புலவர்கள், அன்னோரின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர்கது ஆக்கங்கள், மற்றும் சமூகம், கல்வி சார்ந்த பணிகள் முதலான பல்வேறுபட்ட தரவுகளை அரிரிதின் முயன்று திரட்டித் தொகுக்கப்பட்ட நூல்களே இவையாகும். இப்முயற்சியில் ஈழத்துப் பூராடனார் முன்னோடியாகத் திகழ்கிறார் அவருடன் இணைந்து இவ்விருதொகுப்பு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஈழத்துப் பூராடனாருக்கும் அவரது மகன் நிழல் வெளியீட்டுப் பொறுப்பாளர் இதயச்சந்திரா அவர்களுக்கும் தமிழ் உலகம் என்றும் கடப்பாடுடையது,
பவளவிழாக் கொண்டாடும் வித்துவான் க. செபரத்தினம் அவர்களும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் வரிசையில் வைத்து மதிப்பிடத்தக்கவராவார். அவர்கள் நலமுடன் பல்பாண்டுகாலம் வாழ்ந்து, தொடர்ந்து இலக்கியப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
39 வித்துவரத்தினம்

Page 22
வித்துவான் க. செபரத்தினம் அவர்களின் தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச்சான்றோரும் நூல் வெளியீட்டு விழாவின்போது பாடிச்சூடிய “முல்லை மாலை” எண்சீர் விருத்தம் விண்முட்டும் புகழ் சுமந்த ஈழநாட்டின்
வேரினிலே பால் வார்த்த சான்றோர் தங்கள் பண் முட்டும் வரலாற்றைப் பதிய வில்லை.
பாவியவள் காலமகள் கழித்தேவிட்டாள் மண் பட்ட வரலாறு தேடித் தேடி
மணிபொறுக்கி ஈழத்துச் சான்றோர் என்ற பொன் பெற்ற நூலொன்றை ஆக்கித்தந்தான்.
புகழ்பூத்த வித்துவான் செபரத்தினமே!
செந்தமிழின் சுனையினிலே நாள்தோறும் முழுகி
தீஞ் சுவையின் காவியங்கள் உரைநடையும் பழகி விந்தைபெறும் தமிழ்நாடு சென்றிட்ட சான்றோர்
வெளியிட்ட பதிப்போடு விளக்கவுரை ஆய்ந்து அந்தமிலா அவர்பணிகள் திருவுரைகள் கவிதை
அந்தாதி உரைவளமும் அச்சினிலே தொண்டு பந்தலிலே பாவக்காய் என்றிருக்கக் கண்டு
பால்தேனாய்ச் சுவைத்திடவே நூலெழுதினாரே!
வேறு பூவிரிந்த சோலைகளில் பொங்கிவரும் தேனீக்கள் நாவினிக்கும் தேன்சேர்க்கும் நலம்சிறந்த மட்டு நகள்
மீன்பாடும் மெல்லிசையை விரும்பி வரும் சந்திரனார் வான்தடவும் மரக்கிளையில் மறைந்திருக்கும் மட்டுநகள்
சைமன் காசிச் செட்டியென்பார் போற்றும் புலவர்களைப் புளுராக் எனப்புனைந்தார் தோற்றும் புலவர்களின்
40 வித்துவரத்தினம்
 

தொடர்ந்து வரலாற்றை ஏற்றவிதம் ஆராய்ந்து எழுதிவைத்தார் சதாசிவத்தார்
சொல்லரித்த ஏடுகளைத் தேடித் திரிந்தெடுத்து அல்லும் பகலுமதை ஆராய்ந்த சுன்னாகம் நல்ல தமிழ்ப்புலவர் நவில் குமாரசுவாமி என்பர் சொல்லும் புலவர்களின் தொடர் கதையைச் சொல்லிவிட்டார்.
என்றாலும் சான்றோர்கள் எழுதா வரலாறுகளோ குன்றி மயங்கிக் குறைவாய் இருந்தமையால் அங்கு மிங்கும் நூலாய்ந்து அவற்றிலே தேனெடுத்து தங்கத் தமிழினிலே சான்றோர் வரலாற்றை இங்கிதமாய்த் தரிக்கவைத்தார் இனிய செபரத்தினமே எங்கும் இதைப்படிப்போர் ஈழத்தை வாழ்த்துவரே!
மனிதரின் மறைந்த நெஞ்சை மனத்திலே படங்களாக்கி கணியுடன் கருப்பஞ் சாறாய்க் கவிதைகள் புனையவல்லோன்.
நற்றவக் கவிஞர் போற்றும் நாயகம் பட்டம் பெற்றோன் புற்றினில் ஈசல் போலப் புதுக்கவி பெருகும் நாட்டில் செந்தமிழ் வளத்தின் செம்மல் சீர் கந்த வனத்தார் செய்த விந்தைசேர் கவிதை யெல்லாம் வியந்திட வரியாய்க் கற்றுப் புவியினர் தலையிற்போற்ற கவிதையின் வளம் சொன்னாரே!
ஆக்கம்: "இளவாலை அமுது"
41 வித்துவரத்தினம்

Page 23
அன்பினிற் கினிய ஆசிரியப் "பெருந்தகையே! நீடு வாழ்க!
பேராசிரியர் அமுது யோசவ் சந்திரகாந்தன் ரொரன்ரோ பல்கலைக்கழகம் -ரொரன்ரோ கனடா
ஆசிரியப் பெருந்தகை, தமிழிஒளி கனகரத்தினம் - செபரத்தினம் அவர்களை பெருமதிப்புமிக்க அன்பான ஆசிரியராகவும் ஆண்றவிந்தடங்கிய ஆய்வாளராகவும், ஆணித்தரமான சொற் பொழிவாளராகவும் ஆக்கத்திறமைமிக்க படைப்பாளராகவும் தமிழ்ப் புலமை உலகு நன்கறிந்துளளது.
எமது தந்தையாரின் இனிய நண்பராகவும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் சமகால மாணவராகவும் விளங்கிய இவ்வாசிரியர் 1962ல் இளவாலையிலுள்ள எமது இல்லத்திற்கு வருகை தந்தபோது எனக்கு வயது எட்டு. அவரது முதல் நூலாகிய 'வாழையடி வாழை என்ற நூலின் பிரதிகளை அப்போது பார்த்த நினைவு இன்றும் என் அடிமனதில் பசுமையாக உள்ளது. அக்காலத்திலிருந்தே அவருடைய தமிழ் உணர்வையும், இலக்கிய மேன்மையையும், கல்வியின்மீதும், மாணாக்கள்மீதும் அவர் கொண்டிருந்த அக்கறை ஈடுபாடு என்பனவற்றையும் பார்க்கவும் அதற்குப் பல ஆண்டுகளின்பின் அவருடைய மாணவனைப்போல் அவருடன் பழகித் தமிழியல்பற்றி அறியவும், உரையாடவும் வாய்ப்புக்கள் கிடைத்தன.
வித்துவான் செபரத்தினம் அவர்களை அறிந்த நாள்முதல் இன்றுவரை இவ்வாசிரியப் பெருந்தகையிடம் நான் கற்றுக் கொண்டவை ஏராளம். பசி நோக்காது, கண்துஞ்சாது, களைப்புறாது தனது ஆய்வுப் பணிகளை இம்முதுமைக் காலத்திலும் இளமைத் துடிப்போடு செய்து முடிக்கின்ற உன்னதமான செயல்வீரன். ஆசிரியரும் அவரது குடும்பத்தவரும் தெய்வ பக்தியும், தேசபக்தியும், மொழிப்பற்றும், பண்பாட்டு நெறியுணர்வும் நிறைவே கொண்டவர்கள். ஆசிரியர் அவர்கள் பழகுவதற்கும் பேசுவதற்கும் மிகவும் இனிமையானவர் என்பது அவருடைய மாணவரும் அவரை அறிந்தவர்களும் வியந்து போற்றும் உண்மை.
ஒரு பல்கலைக்கழகம் ஆற்ற வேண்டிய பேராய்வுப் பணிகளைத் தானே தனித்துநின்று ஆற்றி நவீன தமிழியல் வரலாற்று ஆய்வுப் புலத்தில் வழிகாட்டியாக விளங்கும் சாதனையாளன். தமிழியல் சார்ந்த ஆய்வில் தனது முன்னோர் மூத்தசகபாடிகள் '
42 வித்துவரத்தினம்
 
 

ஆகியோரின் வழிநின்று ஏனேையார்க்குத் திசைகாட்டும் கருமவீரன். தமிழ் இலக்கிய, இலக்கண வரலாற்று ஆய்வில் முன்னோடிகளாகவும், வழிகாட்டிகளாகவும் விளங்கியவர்களை இனம் கண்டு அவர்களது பங்களிப்புகளையும், பேராய்வுகளையும் அடுத்தடுத்து அறாத்தொடர்ச்சியுடன் வரும் தலைமுறையினருக்காக 'ஈழத்துக் தமிழ்ச்சான்றோர் தமிழ் நாடும் ஈழத்து தமிழ்ச் சான்றோரும் ஆகிய அரிய நூல்களை ஆக்கித் தந்தஇவர் ஓர் அறிவுக்களஞ்சியம், தனிமனித ஆய்வுநிறுவனம். இந்நூல்களில் துமிழ்ப் பேரறிஞர்களின் வாழ்வு, குடும்பம், சமூகப் பின்னணி முதலியவற்றை வரலாற்று நேர் மையுடனும் , சமூகக் கட்டமைப்புகளுடனும் , புறநிலைப்படுத்தப்பட்ட புலமையாய்வு நோக்குடனும், விரித்தும், வியந்தும், விமர்சித்தும், விளக்கியும் கூறியுள்ளார். இது இலகுவானதொன்றலல்ல. இது பல பாரிய சவால்களையும் ஆய்வுக் கூர்மையையும் உள்ளடக்கிய வொருபெருமுயற்சியாகும்.
தமிழின் செழுமைக்கும், வளர்ச்சிக்கும் வளம்சேர்த்த ஆன்றோர்களையும், சான்றோர்களையும் காலவரைப்படுத்தி செயல்வழி நிரைப்படுத்தி அவர்களின் தனித்துவமான தாக்கமான தன்னிகரற்ற பங்களிப்புகளை இனம்கண்டு, மனம்கண்டு, பணிகளின் பதம் கண்டு, படித்து, படிஎடுதுது அதைப் பவித்திரமாக எம்மவர்க்கு அளித்துள்ளார். இலகுவான தமிழ்நடையில் எளிமையான மொழியில் கற்றவரும், மற்றவரும், ஆய்வுமானாக்கரும் தமிழியலின் வரலாற்று வளர்ச்சிபற்றி அறிய முனைபவரும் பயன்படுத்தும் பொருட்டு எம்முன்னோரின் தமிழ் சார்ந்த ஆய்வு முயற்சிகளை முறைப்பட வடித்துத்தந்துள்ளார்.
எமது ஆசிரியர் அவர்கள் தமிழ்ப் பேரறிஞர் சுவாமி விபுலானந்தரின் உறவினருாவார் என்பது இவரது தமிழ் அறிவினதும், ஆர்வத்தினதுமு ஊற்றுக்களை ஓரளவு அடையாளம் காட்ட உதவுகின்றன. தமிழ்ஈழத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாழுகின்ற வளருகின்ற தமிழ் ஆர்வலர்கள் ஆசிரியர் அவர்களின் ஆக்கங்களை ஆழந்து கற்பதன் விளைவாக எமது இனத்தின் அறிவுத்தூலங்களை ஏனையோரும் அறிந்து உணர வழிசமைப்பார்களாக.
காலத்தின் தேவைகளை அறிந்தும், உணர்ந்தும் தமிழ் மொழிசார்ந்த ஆக்கப்படைப்புகளில் ஈடுபட்டுவரும் ஆசிரியர் அவர்கள் இன்னும் பல ஆண்டு வாழ்ந்து பல ஆக்கங்களை எமக்கு அளித்து மேலும் பல சிறப்புக்கள் எய்தவேண்டுவது எமதுகடன்.
43 வித்துவரத்தினம்

Page 24
நல்லாரைக் காண்பதும் நன்றே தம்பிராசா வசந்தகுமார் (பாபு) பாடும் மீன்கள் - கனடா கிழக்குச் சூரியனென ஒளிமிளிர எப்போதும் எழுதிக் ’கொண்டிருக்கும் வித்துவான் செபரத்தினம் ஐயா அவர்களுக்கு ‘தமிழ் நாடும் ஈழத்தமிழ்ச் சான்றோரும்’ என்ற நூலை எழுதியதற்கும், கிழக்குப் பல்கலைக் கழகத்தால் 2004ம் ஆண்டு முதுமானிப்பட்டம் வழங்கப்பட்டதற்கும், அவரது 75வது பிறந்த நாளுக்குமாக பாராட்டுவிழா எடுப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கின்றேன். W ஐயா அவர்கள் கடந்த இருபது வருடங்களாக நன்கு தெரிந்தவர் என்ற வகையில் அவரிடம் நான் கண்ட அறிவின் முதிர்ச்சியை எண்ணி வியக்கிறேன்.
மீன்பாடும் தேனகத்தின் தென்கரையிலுள்ள தம்பிலுவில் என்னும் அழகிய கிராமத்தில் பிறந்த இவர், கல்வி கற்கும் காலத்திலேயே சுவாமி விபுலாநந்தரது கலை, இலக்கிய, சமூகப் பணிகளில் கவரப்பட்டு தன்னை முழுமையாக அதில் அர்ப்பணம் செய்து கொண்டவர்.
ஆசிரிய கலாசாலையின் பயிற்றப்பட்ட ஆசிரியராகவிருந்து பல்கலைக்கழகம் சென்று வித்துவான் பட்டத்தையும் பெற்றுக்கொண்டு பின்னர் அதிபராகக் கடமையாற்றி பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினையும், கொழுப்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமாப் பட்டத்தினையும் பெற்றுச் சிறந்த பேரறிஞரானவர்.
மட்டக்களப்பில் ஐயா அவர்கள் வசித்தகாலத்தில் எங்களது வீட்டிற்கு முன்பாகவே குடியிருந்ததினால் அவருடன் நான் மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மனம் மகிழ்ந்தேன். கல்வியறிவு மிக்க, பண்பான ஒரு படைப்பாளியுடன் பழகக் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதுகின்றேன்.
அக்கால கட்டத்தில் ஐயா அவர்கள் இலக்கிய, சமூகப் பணிகளில் அதிகளவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இலக்கிய மன்றங்களை உருவாக்கித் தமிழை வளர்க்க உறுதுணையாகச் செயற்பட்டதோடு கல்வியில் மற்றவர்களை ஊக்கப்படுத்தி வழி நடத்திச் சென்றவர்.
எனது வாழ்க்கைப் பயணத்தில் திரும்பத்திரும்பச் சந்திக்க வேண்டும், பேசவேண்டும் என்ற ஆவலை மனதில் ஏற்படுத்திய மாயமான கவர்ச்சியை அவருள் நான் கண்டு வியக்கின்றேன். சமூகத்திற்கு நல்லவற்றைக் கொடுக்கவேண்டும் என்ற ஒரே 44 வித்துவரத்தினம்

நோக்ககோடு செயற்பட்டதினாற்றான் இத்தனை கவர்ச்சியை அவரிடம் நான் காணக்கூடியதாக இருந்தது என்பது எனது திடமான எண்ணமாகும்.
வித்துவான் செபரத்தினம் ஐயா அவர்களால் எழுதப்பட்ட 'ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்’ என்னும் நூலுக்கு கடந்த 2003ம் ஆண்டு ஈழத்துப் புலவர் மாநாட்டில் பாராட்டும், பணப் பரிசும்வழங்கப்பட்டமை அவரது இலக்கிய ஈடுபாட்டிற்கு மிகப்பெரிய சான்றாகும்.
கனடாவில் காலடிபதித்தபின்பும் ஐயா அவர்களது அரும் பணிகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் கனடாவில் இயங்கிவரும் சுவாமி விபுலாநந்தர் கலை மன்றம் உருவாக வித்திட்டது மட்டுமன்றி தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டும் வருகின்றார்.
இத்தனை திறனும் இதமான மனமும் பெற்ற வித்துவான் செபரத்தினம் ஐயா அவர்கள் தொடர்ந்தும் எமது சமூகத்திற்கு அவரது படைப்புக்களைத் தாராளமாகத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளமை எம்மை மனங்குளிர வைக்கின்றது. அவரது பணி தொடர நல்லதேக ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் இறைவன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த விழா சிறக்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இளமையின் துடிப்பு முதுமையின் ஆற்றல் தந்ததோ. .
45 வித்துவரத்தினம்

Page 25
பவளவிழாக் காணும் செபரத்தினமே
வாழ்க!
பண்டிதர் ம.செ.அலெக்ஸ்சாந்தர்
(முன்னாள் தமிழ் விரிவுரையாளர் பலாலி ஆசிரியர் கலாசாலை)
குறள் வெண்பா தம்பிலுவில் தாய்தந்த வித்வான் செபரத்னம் உம்பர் உவக்கும் மலர்
பவளவிழாக் காணுகின்ற பண்பார் செபரத்னம் நவமணியே நந்தமிழ்க்கு நிதம்
தன்னைப்போல் மற்றவரைத் தான்காணும் வித்துவானே! உன்னதரின் ஆசியுமக் உண்டு
இன்னிசைச் சிந்தியல் வெண்பா மட்டக் களப்பின் மரபுத் தமிழ்வித்வான் இட்ட தமிழ்ச்சால்பு என்றும் எழுதுவது தட்டநிறை பூந்தார் தமிழ்க்கு
நேரிசை வெண்பா ஈழத் தமிழறிஞர் இந்தியா சென்றுதமிழ் ஆளவே ஆற்றிய அர்ப்பணங்கள் - வாழவே ஆய்ந்து செபரத்னம் வித்துவான் ஆக்கியநூல் செய்ந்நன்றி ஆகும் தமிழ்க்கு.
கந்த வனக்கவிஞன் கூறுகவி ஆய்ந்துமே, செந்தமிழில் வித்வான் செபரத்னம் - நந்தவனக் காட்சியாய் நாமெல்லாம் காணவே நூல்தருதல் தேட்டம் கவிஞனுக்கே தேர்ந்து.
பஃறொடை இன்னிசை வெண்பா வித்வான் செபரத்தினம் வேண்டும் குணமுடைமை உத்தமனே! ஒர்ப்புடனே உண்மைநிலை, நன்றியிலே 46 வித்துவரத்தினம்
 

நேச இயேசு நியாயம் கடைப்பிடியில் வாசம் தருகின்ற வார்த்தை வழிஒளியில் பேசும் நெறியையே போற்றியே நிற்கும் தமிழ்ஒளியே! தார்மீகச் சால்பு நிறைந்த துமித்தண்மை வார்த்தையிலே துளிர்போலப் பேசும் செபரத்னம் வித்வான் பவள விழாவில் செபஞ்செய்து வேண்டல் சிறப்பு.
இன்னிசைக் கலிவெண்பா பவளவிழாக் காணுகின்ற பண்புசார் வித்வான் செபரத்னம் பெற்றோர் பவுல்கனக ரத்னம் உபதேசி ஆசிரியர் உண்மையைத் தேடிச் செடவாழ்வு செய்யும்நற் செய்தியாளர் ஆகி தவப்பேற்றால் எஸ்தர்சின் னாச்சியை இல்லாளாய் ஆக்கிய வாழ்விலே அன்பு மகனாக தக்கவித் வான்செப ரத்னம் பிறந்தனரே மட்டக் களப்பின் மருதஞ்சார் தம்பிலுவில் இட்ட கிராமத்தை என்றும் மறவார் நேசமாய் வாழ்விலே நேசம்மா ஆசிரியை தேசமே போற்றத் தெரிந்து மணந்து அமுதநாதன் நற்செய்தி ஆற்ற மகனை சமுகம் மதிக்கும் குருத்தொண்டு செய்யவும் ஆவலி ஓங்கவே ஆநந்த நாதன் தவச்செல்வி கூடத் தவநளினி என்னும் எவரும் மதிக்கும் எழில்மிகு பிள்ளைகள் ஈன்று அவர்களை ஏற்ற நிலையிலே நன்மையாய் வாழவும் நாநிலம் போற்றவும் வழிஒளி ஆகி வளநெறி யூட்டினார். வித்வான் தமிழில் விளங்கும் கலைமாணி வித்தகக் கல்வி விவேகமே ஓங்கவே அத்துடன் கல்விக் கலையிலே பட்டப்பின் சான்றிதழ் பல்கலைச் சாலையில் பெற்றனர் ஆன்ற அவரின் தகமையைக் கண்டு கிழக்கிலே பல்கலைச் சாலைமுது மாணி இலக்கியத் திற்காக ஈந்துகெளர விக்கப் பலரும் விவிதா கவிதை விருப்புடன் கட்டி எழுதியே கல்விப் பெரியாரை இட்டமாய்ச் சேவை இனாமாய்க் கனடாத் தமிழர் தமிழ்க்கலைக் கல்லூரி தன்னில்
47 வித்துவரத்தின்

Page 26
தமிழ்மொழி கற்பித்த வித்வான் செபரத்னம் தன்னார்வத் தொண்டைத் தரணிக் கெழுதுதும். அன்னார் இறையின் அமுதவாக்கைப் போற்றிவாழ்வார் அன்றுமென்றும் எங்குமே அன்பாய்த் திகழ்இறை என்றும் அருளை எண்ணம்போல் ஈவரே! வித்வான் செபரத்னம் வேண்டுகின்ற சால்பையே உத்தம மாயெழுதி உத்தமர் வாழ்வியலை தத்துவமாய்த் தன்னுாலில் தன்உள்ளம் கண்டதையே பக்குவமாய்த் தானெழுதிப் பாருக் களித்தனரே! அக்கருத்து அன்னைமொழிக் அர்ப்பணம் செய்தோரை எக்காலம் எல்லாமே ஏற்கும் கருத்தாக்கி தக்கநற் சான்றோர் தரவாழ்வு தந்தாரே! வித்வானே ஐயாநிர், வேண்டும் குருவேதான் அத்துடன் கூடவே ஆன்ற அதிபர்நீர், மெத்தவுமே மாணவரே மேன்மையின்றும் கொள்வர் பழுகாமம் மெச்சவிபு லாநந் தசிலை எழுச்சி பெறநாட்டி வெள்ளிவிழாச் செய்து முதன்முதலில் பாடசாலை தன்னிலே வைத்த முதலதபர் வித்வானை மும்முறையும் போற்றுதும்மே! பேராசான் வித்தியானந் தன்செல்வ நாயகம் ஆராய்ச்சி யூட்டும் அறிவுக் கணபதியும் பேரான ஆசார் பெரிதுவந்து கூறிடுவார். நெஞ்சில் நிலைக்கும் விபுலாநந் தர்அடிகள் விஞ்சும் அவருடைய வேண்டுபணி மெச்சி மனமார் குருவாய் மகிழ்வாய் மதித்து இனம்வாழ என்றும் இறையை வேண்டுகிறார். வித்வான் செபரத்னம் வேண்டும் அமைதியை உத்தமமாய் என்றும் உளத்தாலே வாழ்த்துதும்மே! தத்துவம் சார்ந்த சலனமிலாச் சிந்தனையை மெத்த உடையவரே வித்வான் செபரத்னம் சத்தே தமிழுக்கும் சான்றோர் வழிநிலைக்கும் இத்தகை உள்ளம் இயல்புடை வித்வானே! என்றுமே நீர்வாழ்க! எந்தமிழ் நின்பணியால் நின்று சிறப்புறுக! என்றுமே யேசுவின்தாள் அன்புடன் வேண்டும் அலெக்ஸ்.
48 வித்துவரத்தினம்

பன்னுாறு அகவைகள் வாழ்க வித்துவான் சு. ஞானரத்தினம்
வித் துவான் தமிழ் ஒளி க.செபரத்தினம் அவர்களைப் பற்றி இந்தக் கட்டுரையை எழுதக் கிடைத்த வாய்ப்பை இட்டு மிக்க மகழ்ச்சி அடைகின்றேன் . வித்துவான் அவர்கள் எனது நெருங்கிய உரித்தினர். அவரின் இல்லத்தரசி நேசம்மா எனது ஒன்று விட்டசகோதரி இவரின் கல்வித்திறமை பற்றி நான் சொல்லி அறிய வேண்டியதில்லை. நிறைந்த அறிவு பூர்வமான கல்விமான். இவர்தனது ஆசிரிய பயிற்சியை முடித்த பின்னர், பேராதனை பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்று பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பையும் நிறைவு செய்தார்.
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த வேளை அந்தப் பட்டத்தை நானும் பெற எனக்கிருந்த ஆவலைத் தனது வழிகாட்டல்கள் மூலம் நிறைவு செய்தவர். இன்று நான் வித்துவான் பட்டத்தோடு இருக்கின்றேன் என்றால் அது என் முயற்சியை விட அவரின் உதவியும் வழிகாட்டலும் என்று கூறின், அது மிகையாகாது.
தம்பிலுவில் என்னும் செழிப்பு நிறைந்த தனித்தமிழ்க் கிராமததில் பிறந்த அவரை, இல்லற வாழ்வில் இறைவன் இன்னொரு வளம் நிறைந்த கிராமமாகிய பழுகாமத்திலிருந்த அவரது இல்லத்தரசியைத் தேர்ந்தெடுக்கச் சித்தம் கொண்டு செயற்படுத்தினார். அந்தவகையில் சிறந்த மதப்பற்று நிறைந்த மத ஊழியர்களையே மீட்பர் இயேசுவாக எண்ணி ஏற்றுக் கொள்கின்ற, அன்புக்கு அடிமையாகி, அன்பால் பிணிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து அவரின் இல்லத்தரசி அவரோடு இல்வாழ்வில் இணைந்தார். இவரின் திருமணம் நிகழ்ந்த போது, அப்பொழுது வித்துவான் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த நான் மாப்பிள்ளைத் தோழனாக அத்திருமண விழாவில் பங்கேற்றமை இன்னும் என் நினைவில் பசுயைாக இழையோடுகின்றது.
இவரது இல்லற வாழ்க்கையில் இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களுமாக நான்கு மக்கட் செல்வங்களை அளித்திருக்கிறார் இறைவன். இவரின் மனைவியும் ஒரு பயிற்றப்படட ஆசிரியை.
49 வித்துவரத்தினம்

Page 27
வித்துவான் அவர்கள் ஆசிரியராகக் கடமை ஆற்றிப் பதவி உயர்வு பெற்று அதிபர் பதவியை அடைந்தார். இவர் அதிபராகக் கடமையாற்றிய பட்டிருப்பு மகாவித்தியாலயம் மட்டக்களப்புக் கல்வித்திணக்களப் பகுதியில் ஒரு பெரிய பாடசாலையாகும். இவர் கடமையாற்றும் போது, கல்வித்திணைக்கள மேலதிகாரிகளின் பாராட்டிற்கு இலக்காகத் திகழ்ந்தார். சிறந்த அதிபர்-நிர்வாகி என்று எல்லோராலும் மதிக்கப்பட்டார். இதே மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்ற என் மகன் சுரேந்திரன் இவரின் நிர்வாகத்திறைையயிட்டுப் பலமுறை என்னிடம் வாய்விட்டுக் கூறியிருக்கிறார்.
இவர் ஒரு சிறந்த கிறிஸ்தவ மதப்பற்றாளன் ஆலயங்களில் இவரது பல பிரசங்களை நான் செவிமடுத் திருக்கிறேன். அவையாவும் அறிவியல் உற்சாகமூட்டுவனவாய் இருந்ததை மறுக்க முடியாது. கனடா ஆலயங்களில் கூட இவரது பிரசங்கங்களை நான் கேட்டிருக்கிறேன். இவர் தனது பிள்ளைகள் உயர்கல்வி கற்க வேண்டுமென்று கண்ணும் கருத்துமாய் இருந்தார். ஆனால் இறைவன் இவரது மூத்த மகன் அமுதநாதனைத் தன்வயமாக்கிக் கொண்டு தனது ஊழியக் காரனாய் ஆக்கி எற்றுக் கொண்டார். இவரது பெற்றோரும் குடும்பச் சூழலுமாக ஆண்டவருக்கு அடியார்களாக வாழ்ந்த பலாபலன்தான் இதுவெனலாம். இவரின் அடுத்த மகன் ஆனந்தநாதன் பொறியியல் பயின்று அவுஸ்த்திரேலியாவில் குடும்பத்தோடு வாழ்கின்றார். மூத்தமகள் செல்வி தவச்செல்வி ஈழத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றித் தற்பொழுது ஸ்க்கொட் லாந்தில் குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றார். இளைய மகள் தவநளினி குடும்பத்தோடு கனடாவில் வாழ்கிறார்.
கலைத்துறை இவரின் பரம்பரைச் சொத்து இவரின்தகப்பன் கனகரத்தினம் அவர்கள் "இரட்சணிய அம்மானை' என்னும் நூலை ஆக்கி வெளியிட்டவர். இவரும் தனது முப்பத்து இரண்டாவது வயதில் முதன் முதலாக 'வாழையடி வாழை என்னும் நூலை ஆக்கி வெளியிட்டார். இந்நூலில் வடக்கும் கிழக்கும் (தமிழீழம்) இணைகட்கப்பட்டுள்ளன. பண்டிதமணி சி.கணபதிப்பிளளை (வடக்கு), புலவர்மணி ஏபெரியதம்பிப்பிள்ளை (கிழக்கு) ஆகிய இரண்டு தமிழ்ச் சான்றோர் பற்றி இந்நூல் கூறுகின்றது. பின்னர் விபுலாநந்த அடிகளின் வாழ்வும் வளமும் என்னும் நூலை ஆக்கி வெளியிட்டார். இந்தநூல் வெளியீட்டு விழா கொழும்பிலும் இவரின் மாணவன் ஒருவரின் உதவியால் நடைபெற்ற போது நான் அந்த வெளியீட்டு விழாவில் முக்கிய பங்கேற்றேன் என்பது மகிழ்ச்சி தரும் சம்பவமாகும்.
கனடாவில் வெளியான நயனங்கள் பேசுகின்றன’ என்னும் "
சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவின் போது என்னையும் 50 வித்துவரத்தினம்

அவ்விழாவில் உரையாற்றத் தந்த வாய்ப்பையிட்டு பரமதிருப்தி அடைகிறேன். அவ்விழாவில் சிறப்பாக ‘கண்‘ என்னும் சிறுகதைபற்றி அதிகம் விமர்சனம் செய்தேன். ஏனெனில் அது எனக்கு மிகவும் பிடித்த கதை. அண்மையில் கனடாவில் அடுத்து வெளியான 'தமிழ் நாடும் ஈழத்துச் சான்றோரும்' என்னும் நூல் பலரின் பாராட்டைப் பெற்ற ஒன்றாகும்.
கனடாவில் பிரசுரமாகும் 'உதயண் வார இதழ் வித்துவானுக்கு இரண்டு தடவைகள் தங்கப்பதக்கம் அளித்துக் கெளரவித்தது. அண்மையில் தமிழர் தகவல் தனது பதினைந்தாவது நிறைவு விழாவின் போது விருதும் தங்கப் பதக்கமும் அளித்துக் கெளரவித்தது.
புலம் பெயர்ந்த நாட்டில், இத்தகைய அதி உயர் கெளரவம் வித்துவானின் படைப்புகளுக்குத் தரப்படுகிறது என்றால் அது தமிழன்னைக்கும் கிழக்கிலங்கைக்கும் கிடைத்த நற்றவப் பேறாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.
வித்துவான் அவர்கள் தனது எழுபத்தைந்தாவது அகவையைப் பூத்திசெய்துள்ளார். அவரைப் பொறுத்தவரை மனித வயதல்ல, ஒரு இளமையுள்ள ஒரு கலைஞனாகவே இன்று விளங்குகின்றார் என்பதற்கு மேலே நான் கூறிய கலை வெளிப்பாடுதான் சான்று பகரும்.
எனவே, வித்துவான் அவர்கள் எழுபத்தைந்து அகவையைக் கடந்தவர் என்றாலும் இன்னும் பன்னுாறு அகவைகளைக் கடந்து வாழ்ந்து தமிழன்னைக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று மீட்பர் இயேசுவின் அருள் வேண்டி நிறைவு செய்கின்றேன்.
51 வித்துவரத்தினம்

Page 28
சேவை தொடரட்டும் வி. குலேந்திரன் பிரதம ஆசிரியர், தமிழினி மஞ்சரி
முதுமாணி வித்துவான் க.செபரத்தினம் அய்யா அவர்களின் 75வது அகவையை ஒட்டியும் அவரின் தமிழ் பணியைப் பாராட்டியும அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டு விழாவிற்கு தமிழினி மஞ்சரி சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவருடைய தமிழ் ச் சேவையைப் பாராட் டி 2004ல் "இலக்கியமுதுமானி’ பட்டம் வழங்கிக் கெளரவித்த கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகம் தன்னைத் தானே கெளரவித்துக் கொண்டது.
இதற்கு மேல் நான் பாராட்டவோ கெளரவிக்கவோ என்ன இருக்கிறது.
வித்துவான் செபரத்தினத்தின் சேவை தொடர ஆண்டவன் அவருக்கு தேக சுகத்தை வழங்க அவனடி வேண்டி நிற்கிறேன்.
கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள் பொன்னாடை போத்திக் கெளரவிக்கின்றார்
சுவாமி ஜீவானந்தஜியின் நினைவஞ்சலிக் கூடம் (2006) ஸ்காபுரோ நகரமண்டபத்தில் இடம்பெற்றபோது கலந்துகொண்டோரில் வித்துவான் உரையாற்றிய பின்னர் அங்கு கலந்துகொண்டோருடன் நிற்கின்றார்.
52 வித்துவரத்தினம்
 
 

நான் கண்ட வித்துவான்
திரு.க.செபரத்தினம்
ஆழ்கடலான் முருகவே பரமநாதன்
நான் கனடாவுக்கு வந்து சேர்ந்த
காலகட்டம் வின்சன்ற் சேர்ச்சில் கல்லூரியில் நடந்த வாணிவிழாவிற் சொற்பொழிவாற்றும் வண்ணம் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் மூலம் அழைப்புக் கிடைத்தது. விஜயதசமியன்று போனேன். பெற்றோர் சமயப் பிடிப்புள்ளவர்கள், மாணவர்கள், முதியோர் இளைஞர், கல்வி வல்லார்கள் எனப் பலர் சமூகமளித்திருந்தனர். வழமைபோற் கல்வியா? செல்வமா? வீரமா? என்ற பாணியில் சிலர் பேசினர். எனது முறைவந்தது, வன்முறைக் கலாசாரம், துப்பாக்கி நாகரிகம் அரிவாள் பண்பாடு மிகுந்துள்ள காலத்திலேயே தடி யெடுத்தவர் எல்லாம் தண்டல்காரர்தான். தகுதிவாய்ந்த ஒருவரோடு எதிர்ந்து வெற்றி பெறுவது வீரம். புறமுதுகிடுவோருக்கு அம்பெய்துவது தமிழர் வீரமன்று. செல்லிடத்துச் சினம் காப்பது வீரம். உடலை உறுதி செய் என்றார் பாரதியார். உடம்மைப் பேணுவது ஆத்மீகம்காணும் உயிருக்காகவே. ஒவ்வொருவரும் உடல் நலத்தையும், உள நலத்தையும் பேணவேண்டும், நம் நிலையில் புலனை வெல்வதே வீரமென ஒளவையார் நமக்கு வழிகாட்டியுள்ளார் என்ற பாடலை எடுத்துக்காட்டி வீரத்தின் புனிதத்தை எடுதுதுப் பேசினேன்.
ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்
வென்றான்தன் வீரமே வீரமாம் - என்றும்தான்
சாகாமற் கற்பதே கல்வி பிறர்தம்மை ஏவாமல் உண்பதே ஊண். குதிரையை அடக்குவதுபோல மனம்வழிப் புலனைந்தையும் அடக்கி வெற்றிகாண்பதே வீரம். அவனே வீரன் என்ற ஒளவைவாக்கை முன்வைத்து என்பேச்சு அமைந்தது. திருநீல கண்ட நாயனாரின் புலனடக்கத்தைச் சேக்கிழார், "வென்ற ஐம்புலனால் மிக்கீர்’ எனப் பாடுகின்றார். சிவனடியார் பெருமை பற்றிப் பேசும் பெரியபுராணம் சிறந்ததோர் கருத்தை முன்வைத்துள்ளது.
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
53 வித்துவரத்தினம்

Page 29
பாரம் ஈசன் பணியலது ஒன்றிலார் ஈர அன்பினர் யாதும் குறைவிலர் வீரம் என்னால் விளம்பும் தகையதோ எனவே என்பேச்சை நிறைவு செய்து அமர்ந்தேன். வாணிவிழா நிறைந்ததும் ஒருவர் என்னை நாடி வந்தார். இடுப்பிலே பட்டுவேட்டி அதே நிறத்தில் ஆபாரம் (நாஷனல்) குறிமடித்த சால்வை, ஆஜானுபாகுவான சற்றுயர்ந்த தோற்றம், வந்தவர் விநயத்துடன் ஒளவையாரின் பாடலை எழுதித்தரும்படி கேட்டார். யானும் அவரின் வேண்டுகோளை நிறைவேற்றினேன். நன்றியோடு பெற்ற அவரை நீங்கள் யார்என வினவினேன். நான்தான் வித்துவான் செபரத்தினம் என்றார். அன்று தொட்ட அறிமுகம் இன்று வரை தொடர்கின்றது. அவரின் கணிரென்ற குரலும் உத்வேகமும், அன்பும், பணிவும் என்னால் மறக்கவே முடியவில்லை. பட்டப் படிப்படிப்புகளையும், ’பிறபடிப்புகளையும் பெற்றுமிளிரும் தகைமைசான்ற அறிஞர் தமிழார்வத்தாற் தன்னையுயர்தியவர் இவர் முன்னே நான்யார் என்னறிவு எங்கே யென்ற வினாவோடு எம்தொடர்பு அன்று தொட்டு இன்று வரை தொடர்கிறது. பவ்வியமான ஆத்மா அவர் திவ்வியமான மனோபாவம் நிறைந்தவர். ஒளவியமில்லாதவர். தேவையேற்படும் போதெல்லாம் தொலை பண்ணிமூலம் தொடர்பு கொண்டு தேவையானவற்றைக் கேட்பார் தற்பெருமையின்றி, என் அறிவுக்கமையத் தெரிந்தாற் கூறுவேன். அண்மையிலும் சதுர்யுகங்கள் பற்றிவினவினார். உடன் பதில் இறுக்கமுடியவில்லை. பின்னர் நாவலர் எழுதிய காலமானம் என்ற தலைப்பில் வந்த (நான்காம் பால பாடம்) கட்டுரையில் இருந்து விபரம் கூறினேன். அவர் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். இவ்வண்ணம் எம் தொடர்பு வளருகிறது. தைப்பொங்கல், புத்தாண்டு(தமிழ்) வாழ்த்துச் சொல்லத்தவற மாட்டார். அவர் எழுதிய ஈழத்துச் சான்றோர் என்னும் நூல்வெளியீட்டில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஆசியுரை வழங்கும்படி கெளரவித்தமை அன்னாரின் பெருந்தன்மையைக் கோடி காட்கிறது. இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திற் படிக்கும் போது தமிழ் ஆர்வத்தைத் தூண்டியவர் பேராசிரியர் செல்வநாயகம் அவர்கள்தான் எனப் பெருந்தன்மையோடு சொல்கிறார். செந்தமிழிலும் ஆங்கிலத்திலும் சமபுலமை கொண்டவர் இவர். இவரின் கல்வி வளத்துக்கு அது நல்ல உதவியாய் இருந்தது. பேசும் திறன், எழுதும் திறன். சிந்தனைத் திறன், மிக்க செபரத்தினம் அவர்கள் நாடகத்துறையிலும், கல்வித்துறையிலும் வல்லவராய் இருக்கின்றார். வல்லவர் மட்டுமன்றி நல்லவரும் கூட, பல்கலைக்கழகத்திற் பயிலும் "
வித்துவரத்தினம்

போது பேராசிரியர் (செல்வநாயகம்) இவரின் புலமைகண்டு நாவலரின் போக்கை இவர் கொண்டிருந்ததால் நாவலர் பற்றி இன்னும் அறியவைத்து அத்துறைக்கு வழிப்படுத்தினார். அதனால் இவர் தன்னை நாவலர் பாதையில் வழிப்படுத்திக் கொண்டது மட்டுமன்றி பல ஆக்கங்களை பத்திரிைகை, மலர், சஞ்சிகைகளில் நாவலர் பற்றி வெளியிட்டுள்ளார். கிறித்தவர் ஒருவரின் இந்த ஈடுபாடு ஒரு புதுமையானது. நாவலர் பற்றி குறை சொன்னவர்க்கு குணம் நாடி, குற்றமும் நாடி, மற்றதன் மிகைநாடி மிக்க கொளல் வேண்டுமெனப் பதில் இறுத்தவர்.
கனடாவிலே நாவலர் சிலை நிறுவ இந்து சமயப் பேரவை முயன்ற போது உபகாரியாய் இருந்து -நாவலர் பெருமானென்ற மலரிலே - நாவலர் பெருமானின் பன்முகப் பட்ட ஆளுமைகளை எடுத்து ஆய்வு செய்து எழுதிய வியாசம் மிகவும் உயர்ந்த ஆக்கமாகும். கிறித்த மதத்தவர்களின் தொடர்பு பைபிளை மொழி பெயர்த்தமை போன்ற திறமை, நாவலர் அச்சமயத்தை எதிர்க்க நல்ல உதவியாய் இருந்தது. இப்படியான பல அம்சங்களை அக்கட்டுரை ஆய்வு செய்கிறது. கட்டுரையாளர் ஒரு அசல் கிறித்தவராய் இருந்தும் கூட நாவலரின் தொண்டு, கல்விவல்லமை, நூல் வெளியீட்டு முன்மாதிரி கண்டனம், மொழிக்கு அவர் செய்த தொண்டு போன்ற பன்முகப் பட்ட முன்மாதிரிகளை (வித்துவான்) நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார். அவரின் அணுகுமுறை பெரிதும் வித் தரியாசமானது. அவரும் ஒரு வித் தியாசமான போக்குடையவர்தான். நாவலரின் ஆரம்பவிழாவிலே தன்னை முற்று முழுக்க ஈடுபடுத்தி, றிச்மன்ட் சைவ ஆலயத்தில் நடந்த அபிடேக ஆராதனை, வீதிவலம் வருதல் என்பவற்றிலும் கலந்து சிறந்ததோர் சொற்பெருக்கும் ஆற்றினமை அவரின் பரந்த நோக்கை வெளிப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு விபுலாநந்தர் விழாவில் குறுகிய வட்டத்துள் நின்று விழாக்களை மேற்கொள்ளாமல் தேசிய நோக்கில் பெரியார்கள் மதிக்கப்படல் முக்கியமாகும் அரங்குகள் எல்லார் பெயரிலும் அமைவது - பரந்த நோக்கை வெளிப்படுத்தும் எனவும் சொன்னார். கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் இவரை மதித்து விருது வழங்கியது போல், இவ்வாண்டு தமிழர் தகவல் விருதும் பெற்ற பெருமைக்குரியவர்.
முழுநேரப் படிப்பாளியாயும், சிறந்த எழுத்தாளராயும் விளங்குமிவர் பண்டிதமணியுடைய இருக்கை சென்று தங்கி அவரோடு
55 வித்துவரத்தினம்

Page 30
கலந்துரையாடி அவரையும், புலவர்மணியையும் இணைத்து 'வாழையடி வாழையென்ற சிறந்த நூலை 1962ல் வெளியிட்டார். இது பல்கலைக் கழகத்தின் பாவனைக்குரியது. 'செவாலியர் விருது பெற்ற அமுது அவர்களுடனும் நல்ல தொடர்புடையவர். அவர் இல்லம் சென்று சம்வாதம் செய்யும் கல்விமான் இவர் நல்ல சேவைக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் இவருக்கு M.Lit, பட்டம் வழங்கிக் கெளரதவித்தது. அறிவறிந்த மக்கட் செல்வமும் நிறைந்த வித்துவரத்தினம் அவர்களின் தொண்டு வளர்க வளம்பெறுக. இவரின் பாரியாரும் ஒரு ஆசிரியை என அறிகிறேன். அவரின் உற்ற துணையும் இவருக்கு வலகரமாக அமைந்திருக்கின்றது.
பெரியோர் இனத்திரு.
அரியவெற்று றெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமாராக் கொளல்
சுவாமி விபுலாநந்த கலை மன்றித்தில் நிநைவுப் பேருரை ஆற்றுகின்றார்.
S6 வித்துவரத்தினம்
 

எனது ஆசிரியர் பெனடிக்ற் தேவகுமார் மீன்பாடும் திருநாட்டிலே, சுவாமிவிபுலாந்த அடிகளார் பிறந்த கிராமமான காரைதீவு 4A அமைந்துள்ள பிரதேசத்திலேயுள்ள தம்பிலுவில் என்னும் கிராமத்தைப் பிறந்த இடமாகவும், திருப் பழுகாமம் என்னும் கிராமத்தைப் புகுந்த இடமாகவும் கொண்ட எனது ஆசிரியர் வித்துவான் செபரத்தினம் அவர்கள், "இரட்சணிய அம்மானை' என்னும் கிறிஸ்தவசமய பிரபந்தநூலையும், கிறிஸ்தவசமயத் தனிப்பாடல்கள் பலவற்றையும் ஆக்கித்தந்த திரு அ.ப.கனகரத்தினம் உபாத்தியாயர் அவர்களின் இளைய மகனாகப் பிறந்தார்.
எனது ஆசிரியர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியற் கற்றவர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக விளங்குவதோடு, வித்துவான், கலைமாணி, கல்வி டிப்ளோமா பட்டங்களையும் பெற்றுள்ளார். தமிழ், புவியியல் ஆகிய பாடங்களை விசேடமாகக் கற்பித்தவர். கற்பிக்கின்றபோது மாணாக்கர் அனைவருக்கும் ஏற்ற இலகுவான முறையில் சிறந்த உதாரணங்களை எடுத்தாண்டு, மாணாக்கருக்குள் தாமும் மாணாக்கனாக, நண்பனாக ஒன்றி நிற்கும் திறமை கொண்டவராகத்திகழ்ந்தார். அத்தோடு ஆளுமை பொருந்திய சிறந்த அதிபராகவும் விளங்கினார். கிழக்கிலங்கையின் பட்டிருப்புத் தொகுதியிலே இவரிடம் கற்காத மாணாக்கர் இலரென்றே கூறலாம். மட்/மெதடிஸ்த கல்லூரியில் ஆசிரியராகவும், பழுகாமம் மகாவித்தியாலத்தில் அதிபராகவும், களுதாவளை மகா வித்தியாலயத்தில் அதிபராகவும், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் பணியாற்றி சிறந்த மாணாக்கரை உருவாக்கித் தந்த பெருமை எனது ஆசிரியருக்கு உண்டு.
எனது ஆசிரியரிடம் கல்விகற்றவர்களிற் பலர் இன்று வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், கணக் காளர்களாகவும், விரிவுரையாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், எழுத்தாளர்களாகவும் தாய் நாட்டிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.
இன்று பளுகாமம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் பட்டதாரியான எனது நண்பரோடு நான் தொலைபேசியில் உரையாடும்போதெல்லாம் தான் ஆசிரியரானதற்கு வித்திட்டவர் வித்துவான் அவர்களே என்ற உணர்ச்சியோடும் நன்றிப்பெருக்கோடும்
57 வித்துவரத்தினம்

Page 31
குறிப்பிடும் போது அவரின் குரல் தழுதழுக்கின்றதனை அவதானிக்க முடிகின்றது.
நீண்ட காலமாக தமிழ், சமயம் தொடர்பான கட்டுரைகளை எழுதிவந்த எனது ஆசிரியர் பின்னர் சிறுகதை, நாடகம், இலக்கியத்திறனாய்வு, தமிழ் வரலாற்று ஆய்வு போன்ற பரப்புக்களில் ஈடுபாடு கொண்டு பல ஆக்கங்களை உருவாக்கியுள்ளார். 'வாழையடி வாழை', 'விபுலாநந்தர் வாழ்வும் வளமும்' என்னும் நூல்களை ஆக்கியுள்ள வித்துவான் இலங்கை கலைக்கழகத் தமிழ் நாடகக் குழு நடத்திய ஓரங்க நாடக எழுத்துப் போட்டியில் பரிசிலும் பெற்றுள்ளாரென்பதனை குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் இக்காலக் கவிதைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு தமிழியலின் வளர்ச்சிக்காய்ப் பணியாற்றி வந்த எனது ஆசிரியர் கிழக்கிலங்கைத் தமிழறிஞர்களுடன் இணைந்து “மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தை” நிறுவி அயராது உழைத்து வந்தமை அவரது பெருமையை உணர்த்தி நிற்கிறது.
தமிழியலின் வளர்ச்கிக்காய் ஆசிரியர் செபரத்தினம் அவர்கள் ஆற்றிவந்த பணிகளை அறிந்த கொண்ட, இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு “தமிழ் ஒளி’ என்னும் பட்டததை வழங்கிச் சிறப்புச் செய்தமையை நாம் அறிவோம். புலம்பெயர்ந்து கனடா நாட்டுக்கு வருகை தந்த அவர், இங்கு வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதிவருகிறார். கனடாவிலே “நயனங்கள் பேசுகின்றன’ என்னும் சிறுகதைத் தொகுதியையும் “ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்’ என்னும் புலவர்சரித நூலையும் வெளியிட்டுள்ள பெருமையும் எனது ஆசிரியருக்கு உரியது. அவரால் எழுதப்பட்டுள்ள தமிழ் நாடும் ஈழத்துச் சான்றோரும்' என்னும் நூலும் 'கவிஞர் கந்தவனத்தின் கவிவளம் என்னம் நூலும் அண்மையில் வெளியிடப்பட இருக்கின்றன என்பது பெருமகிழ்ச்சி அளிக்கின்றது.
சிறந்த எழுத்தாளரும், பலநூல்களை எழுதி வெளியிட்டவரும், ஏறக்குறைய முப்பந்தைந்து ஆண்டுகளாக ஆசிரியப் பணிபுரிந்தவரும், எனது ஆசிரியருமான வித்துவான் செபரத்தினம் அவர்களின் உயர் தமிழ்ப்பணியைப் பாராட்டி கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் அதன் பத்தாவது ஆண்டு விழாவில் நிறைகுட விருது’ வழங்கிக் கெளரவித்துச் சிறப்பித்தமையும், கனடா தமிழர் தகவல் நிறுவனத்தினர்
58 வித்துவரத்தினம்

அவர்களது பதினைந்தாவது அண்டு நிறைவுவிழாவிலே, “தங்கப் பதக்கம்” வழங்கிக் கெளரவித்தமையும் கனடா வாழ் மட்டுநகர் மக்களுக்கு பெருமகிழ்ச்சியையும், மனநிறைவையும் கொடுத்திருக்கின்றன என்றால் அது மிகயைாகாது.
எனது ஆசிரியருக்கு எல்லா நலங்களையும் நல்கிடுமாறு, எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சு கின்றேன்.
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தினரால் வித்துவானின் நூல் வெளியீடு செய்யப்பட்டு போது
59 வித்துவரத்தினம்

Page 32
வாழ்க நீடுழி bbbbb
அன்பு பொழியும் மனமுடையோன், இனிமையாகப் பேசும் புண்புடையோன் தன்னைப் போல் பிறரை நேசிக்கும் தன்மையுடையோனே! தன்னுயிர் போல் மன்னுயிர் மதித்து தரணியிலே தமிழ் சிறக்க தளரா உளத்துடன் உழைக்கும் உத்தமனே! இவ்வையகத்திலி பைந்தமிழ் உய்ய அரும்பணியாற்றிய சான்றோரை இளஞ் சந்ததிக்கு அடையாளம் காட்டிட அயராதுழைக்கும் தமிழன்பனே! இனிய உளவாக இன்னா போசாத இனியோனே வாழ்க நீடு செந்தமிழ்த் தேன் பொழிந்து செவிகளை நிரப்பும் சீரோனே வாழ்க நீடு! தமிழன்னையின் மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ வழிகாட்டும் குருவே வாழ்க நீடுழி! அன்னைத் தமிழுக்கு அழகூட்டும் உங்கள் பணி தொடரட்டும் பிறர் நலமாக வாழ வாழ்த்தும் உங்களை இறைவன் தன்னருள் வழங்கி என்றும் தளரா மனத்துடன் செயற்பட நல்வழி காட்டுவார். இறையருளால் வளம் பல பெற்று, நலத்தோடு பணி பல புரிந்து பலத்தோடு வாழ்க நீடுழி வித்துவான் செபரத்தினம் ஐயாவே!
எமது பண்பாட்டு விழுமியங்களை அன்னிய மண்ணிலும் கைவிட்டுவிடாத பற்றாளர்.
60 வித்துவரத்தினம்
 

கிழக்கே உதித்து
மேற்கில் ஒளிரும்
சூரியன் (குரு அரவிந்தன்) எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக ஒரு நாள், ஈழத்தின் கிழக்குத் திசையில் ஒரு அதிசயம் நடந்தது. புரட்டாதி மாதம் இருபத்தி நான்காம் திகதியன்று ஒரே சமயத்தில் இரண்டு சூரியன்கள் எப்படித் தோன்றின என்று எல்லா மக்களும் அதிசயித்தனர். வானத்திலே ஒன்றும், தம்பிலுவில் என்ற புகழ் பெற்ற கிராமத்தில் ஒன்றுமாய்த் தோன்றியபோது ஒரு சிலருக்கு மட்டும் அந்த உண்மை புரிந்தது. தம்பிலுவிலில் உதித்த ஆதவன் எங்கள் தமிழிற்கு ஒளிதர உதித்தால், 'தமிழ்ஒளி' என்று தமிழ் ஆர்வலர்கள் பிறிதொருநாள் அவருக்கு மறுபெயர் சூட்டி மகிழ்ந்தனர். அந்தத் தமிழ்ஒளி வேறுயாருமல்ல, அது எங்கள் வித்துவான், க. செபரத்தினம் அவர்கள்தான்.
எழுபத்தைந்து வயதிலும் இளமை துள்ளும் இவரது குரல் வளம் எல்லோராலும் போற்றக்கூடியது. முதன்முதலாக கனடிய மண்ணில்தான் இவர் எனக்கு அறிமுகமானார். ‘நயனங்கள் பேசுகின்றன. என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு என்னையும் இவர் அழைத்திருந்தார். தமிழ் உலகிற்கு நல்லதை, எந்த வடிவத்தில் யார் கொடுத்தாலும் அவர்களை முடிந்தவரை பாராட்டுவதை ஒரு வழக்கமாக நான் கொண்டிருந்ததால், அந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசித்துவிட்டு அவரைப் பாராட்ட தொலைபேசியில் அழைத்தபோது மிகவும் அமைதியாகவும், அன்பாகவும் என்னோடு உரையாடினார். சிறுகதையில் மட்டுமல்ல, கட்டுரைகள், நாடகங்கள் போன்ற துறைகளிலும் அவருக்கு அதிக ஈடுபாடு இருப்பதை அறிந்து கொண்டேன். நாடக, சிறுகதைப் போட்டிகளில் இவர் பல பரிசுகளைப் பெற்றவர். 'வாழையடி வாழை என்ற இவரது நூலின் மூலம் பல தமிழ் அறிஞர்களைத் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்தவர். விபுலானந்த அடிகள், சோமசுந்தரப் புலவர், சின்னத்தம்பிப்புலவர் போன்றவர்களைப் பற்றி நான் குறிப்பிட்டபோது, இப்படியான, தமிழிற்குத் தொண்டு செய்தவர்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெகுவிரைவில் வெளியிட இருப்பதாகச் சொன்னார். அவர் சொன்னபடியே 'ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்’ என்ற நுாலில் இக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டார். இவர் வெளியிட்ட இந்த
61 வித்துவரத்தினம்

Page 33
நூலில் இருந்து பல விடையங்களை என்னால் அறிந்து கொள்ளமுடிந்தது.
இந்த நூலைப்பற்றி அவருடன் கலந்துரையாடியபோது, இப்படியான அருமையான நூல்கள் தமிழில் மட்டும் வெளிவந்தால் போதாது, ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்படவேண்டும், அப்படி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவரும்போதுதான் எங்கள் இனத்தைப்பற்றியும், எங்கள் மொழியைப் பற்றியும் மற்ற இனத்தவர்களால் அறிந்து கொள்ள முடியும் என்பதையும், முடிந்தால் இந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் படியும், நான் அன்போடு அவரிடம் வேண்டிக்கொண்டேன். நிச்சயமாக தான் அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாக அவர் பணிவோடு குறிப்பிட்டார். பாரதி கண்ட கனவுகளை அவர் எப்படியும் நிறைவேற்றி வைப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
தமிழ் ஆர்வலர்களால் 'ஈழத்துத் தமிழ்ச் சான்றோரின் தொகுப் பிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பைத் தொடர்ந்து, 'தமிழ் நாடும் ஈழத்தமிழ்ச் சான்றோரும் என்ற இன்னும் ஒரு தொகுதியை கனடாவில் இவர் வெளியிட இருக்கின்றார். இதில் இருபத்தி நான்கு தமிழ்ச் சான்றோரின் வரலாற்றையும், அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய தொண்டையும் குறிப்பிட்டிருக்கின்றார். கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் எங்கள் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் ‘கவிதை வளம்' என்ற நூலையும் விரைவில் வெளியிட இருக்கின்றார். இதுபோன்ற இன்னும் பல நூல்களை இந்தமண்ணில் இவர் வெளிக் கொண்டுவரவேண்டும் என்றும், இத்தகைய நூல்கள் ஈழத்தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆவணங்களாக புலம் பெயர்ந்த நாடுகளில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எனது ஆதங்கத்தையும் நம்பிக்கையோடு இங்கே வெளிப்படுத்துகின்றேன்.
எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான் இருந்தபோது இவருடைய திறமையையும், பெருமையையும் அறிந்து, எழுத்தாளர் இணையத்தின் சார்பில் முதுபெரும் எழுத்தாளர் சிலரைக் கெளரவித்தபோது இவரையம், கலாநிதி ஈழத்துப் பூராடனாரையும், திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களையும் (குறமகள்) விழாவிற்கு அழைத்து முறைப்படி கெளரவித்திருந்தோம். எனது நுால் வெளியீட்டு விழாவிற்கு இவரை அழைத்தபோது சுகவீனம் காரணமாக இவரால் விழாவிற்கு வரமுடியாமல் போய்விட்டது.
62 வித்துவரத்தினம்

புலம் பெயர்ந்தாலும் தமிழின் புகழ் பரப்பும் வித்துவான் டாக்டர் கலைஓர் மா.கந்தசாமி தலைவர். மட்டக்கள்பபு கலைநுர் ஒன்றியம் (மட்/மெதடிஸ்த கல்லூரியில் வித்துவானின் மாணவரான இவர் தென்றல் பத்திரிகையில் 2001ல் எழுதிய கட்டுரை)
மட்டக்களப்பின் கிழக்குப் பகுதியாம் திருக்கோவில் என்னும்
வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கியதும் நாகர் முனை’ எனப் பழம் பெரும் பெயர் பெற்று வந்த ஒரு பாரம்பரிய கிராமமாக சிற்பங்கள் சிறப்பாக அமைக்கப்பட்ட சுப்பிரமணியர் ஆலயத்தின் சிறப்பால்
திருக் கோயில்' எனப் பின்னர் பெயர் பெற்ற இக்கிராமததின் அயற் கிராமமாகிய தம்பிலுவில் என்னும் எழில் மிகு கிராமத்தில் ஒரு தமிழ் வித்துவான் அவதரித்தார்.
இக்கிராமத்தில் முடிசூடா மன்னனாகத் தொடர்ந்து ஒன்பது வருடங்கள் கிராம சபைத் தலைவராக இருந்துவந்த கனகரத்தினம் உபாத்தியாயரின் இளைய புத்திரனாக 24.09.1930இல் அவதரித்தவர் வித்துவான் செபரத்தினம்.
தமது ஆரம்பக் கல்வியைத் தம்பிலுவில் கிராமத்திலும், உயர் கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியிலும் பயின்றவர்.
ஆங்கிலம் தமிழ் அறிவு நிறையப்பெற்ற வித்துவான் செபரத்தினம் 1950-51ம் ஆண்டுகளில் யாழ் நல்லூர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்றப்பட்ட ஆசியரியனாகி 1952ம் ஆண்டு மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயிற்றப்பட்ட தமிழாசிரியராகப் பதவி பெற்றார். இவர் இல்கண, இலக்கிய அறிவு நிறையப் பெற்றிருந்தமையினால் தம் மாணாக்கர்களுக்குச் சிறப்பாகத் தமிழ்க் கல்வி ஊட்டினார்.
மாணவர்களின் தமிழ் இலக்கிய வளத்துக்கு வித்துவான் செபரத்தினம் நல்ல தளம் அமைத்தார். இவரால் உயர்த்தப்பட்ட மாணவர்கள் பலர் இன்று உயர் பதவிகளிலும் சிறந்த எழுத்தாளர்களாகவும், பேச்சாளர்களாகவும் விளங்குவதற்கு வித்துவானின் அடிப்படைக் கல்வியே காரணம் எனலாம். ஆசிரிய பதவியிலிருக்கும் போதே நாடகங்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தல், கட்டுரைகள் எழுதுதல் ஆகிய பணிகளையும் செய்து வந்தார்.
63 வித்துவரத்தினம்

Page 34
இவர் 1957ல் வித்துவான் பரீட்சைக்குத் தோற்றி தமிழ் வித்துவானாகப் பட்டம் பெற்றதுடன் “கரடி”என்ற ஆங்கில ஓரங்க நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்து நடிக்க வைத்துப் பெரும் பாராட்டைப் பெற்றார்.
இக்கால கட்டத்தில் இவர் தமிழ்ப் பண்டிதர்களின்மேல் கொண்டுள்ள பற்றை வெளிக் கொணரும் வகையில் தமது எழுத்தின் வண்மையினால் 1962ம் ஆண்டு வடக்கில் பண்டிதமணி கணபதிப்பிள்ளையையும், கிழக்கில் புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளையையும் இணைத்து 'வாழையடி வாழை' என்னும் புலவர் சரிதம் எழுதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் புகழையும், மதிப்பையும் பெற்றவர்.
இவர்கள் மீது வித்துவான் கொண்டுள்ள பற்றுத்தான் இந்நூலை எழுதியதற்குக் காரணம் என்றாலும், இதனால் இவரது வாழ்விலும் பின் பெரும் உயரச்சி பெறுவதற்கு ‘குரு பக்தியே காரணம் எனலாம்.
1966ல் இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டதாரியாகப் பட்டம் பெற்று வெளியேறினார். இலங்கை சாகித்திய மண்டலத்தில் 1969-70ம் ஆண்டுகளில் தமிழ் கவிதைக் குழுவின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு சிறப்பாகச் சேவை யாற்றினார்.
1975ல் 'கல்வி டிப்ளோமா' பட்டம் பெற்று பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், களுதாவளை மகாவித்தியாலம் ஆகியவற்றில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றார். தமது ஓய்வுக்குப்பின் தமிழ் மொழியின் பால் தாம் கொண்ட பற்றால் பல ஆய்வுகளையும், சிந்தனைக் கட்டுரைகளையும் வீரகேசரி, தினகரன் போன்ற நாளேடுகளில் எழுதினார்.
1993ம் ஆண்டு இவர் தமிழ் இலக்கண, இலக்கிய பண்பாட்டுக்குப் பெரும் பங்காற்றியமைக்காக இவரை இந்து கலாசார அமைச்சு பாராட்டி தமிழ் ஒளி' என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. தொடர்ந்தும் தமது ஆய்வினை மேற்கொண்டு சைவத்தின் ஒளி விளக்கு, முத்தமிழ் பேராசான், என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற கிழக்கின் ஒளி விளக்கு முத்தமிழ் வித்தகன் விபுலாநந்த அடிகளாரின் வாழ்வும் வளமும்' என்னும் சிறப்பு நூலை வெளியிட்டுப் பலரதும் பாராட்டைப் பெற்றார்.
தமது ஆசிரியப் பணிக்காலங்களில் மாணாக்கரின் கல்விவளர்ச்சியிலும், உயர்விலும் பெரும் பங்குகொண்டு உழைத்த பெருமகன் ஆவார். பிரத்தியேக உயர் வகுப்புக்களை நடத்தி
மாணாக்கரின் தமிழ் அறிவைச் சிறப்பாக ஊட்டியவர்.
64 வித்துவரத்தினம்

1998ல் கனடா சென்று அங்கு இலவசமாகத் தமிழ்க் கல்வியூட்டியும், உதயன், தமிழர் செந்தாமரை, முழக்கம் போன்ற பத்திரிகைகளில் தமிழின் பெருமைகயைப் பேணிச் சிற்பபுக் கட்டுரைகளையும், சிறுகதைகளையும், எழுதி வருகின்றார்.
1998ல் வட அமெரிக்க முத்தமிழ் மன்றமும், கனடா உதயன் பத்திரிகையும், சேர்ந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் 'ஒரு தாயின் வறிற்றில் பிறந்தோர்’ என்ற இவர் எழுதிய சிறுகதைக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
1999ல் கனடா உதயன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் “தமிழன் என்னும் ஓர் இனமுண்டு’ என்னும் சிறுகதைக்கு தங்கப்பதக்கத்தைப் பரிசாகத் தட்டிக்கொண்டார். தமிழர் செந்தாமரை அகில உலக ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் "காலத்தினால் செய்த நன்றி” என்னும் சிறுகதைக்கு பணப்பொதியினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் இலங்கையில் தினகரன் பத்திரிகையில் எழுதிய கண்ணுறு என்னும் சிறுகதை மக்கள் மத்தியில் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது எனலாம்.
தனது சிறகதைச் சிறப்புக்கு உரமூட்டியவர் தமது உயிர் நண்பராகிய எஸ்.பொன்னுத்துரை என்பதை அன்புடன் அடிக்கடி நினைவு கூருகின்றார்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று
எனும் வள்ளுவன் வழி கடைப்பிடிப்பவர் வித்துவான். அவர் நிறைந்த உள்ளம் படைத்தவர். நிறைகுடம் தளம்பாது என்பார்கள். இதுபோல என்றும் புன்னகை பூத்தமுகத்தோடு மக்களோடு பழகுபவர். இவர் பொதுப்பணி, சமூகசேவை போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இதற்கு மகுடம் வத்தது போல தான் அதிபராக இருந்த பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் மட்டக்களப்பின் மணிமுடி சூடா மன்னன், யாழ் இந்துக் கல்விச் சீர்திருத்தத்தில் முன்னின்று உழைத்த முத்தமிழ் வித்தகன் விபுலாநந்த அடிகளாருக்குச் சிலை அமைத்து வெற்றி கண்ட பெருமை மிகு சிறப்பு எனலாம். p
இலங்கை மணித் திருநாட்டின் இன்பத் தமிழை இலக்கண மரபு மாறாது தன் தாய் மொழி மீது கொண்ட பற்றால், பாசத்தால் அடிமட்டத்திலிருக்கும் மாணாக்கர்களைக் கூட மேல் மட்டத்திற்குக் கொண்டுவந்து உயர்வு கண்ட ஆசிரியர்கள் கூட்டத்தின் முன் வரிசையில் வித்துவான் செபரத்தினமும் ஓர் உயர்ந்த கோபுரமாக
65 வித்துவரத்தினம்

Page 35
உயர்ந்து நிற்கிறார்.
இலங்கை மணித்திருநாட்டை விட்டுக் கடல் கடந்து சென்றாலும் அங்கும் கன்னித் தமிழின் பெருமைகளை எடுத்தெழுதி தமிழ்காக்கும் இவரின் அசுரப் பணி தொடர வேண்டும். இவருக்குத் தமிழ் மக்கள் சார்பில் நல்லாசிகயுைம், தீர்க்காயுளையும் இறைவன் வழங்க வேண்டும். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் சிறப்பாகப் பரவட்டும் . . . .
“குருத்துவமும் வைத்தியமும் குறைவின்றிச் செய்வோருக்கு கருத்தினிலே நல்வாழ்வு மனைவி மக்கள் நலமடைவர். பொருத்தமற்று மாணவர்க்கும் பிணியார்க்கும் குறுக்குவழி
செய்வோர்க்கும் திருத்தமற்ற வாழ்வுண்டு, சிறப்படையா அவர்குடும்பம் செருக்குடனே வாழ்ந்தவர் தம் அந்தி வாழ்வில் செயலிழந்து சீரான நோய் வந்து சிதறிவிடும் அவர் பெருமை’ இது என் கருத்து.
66 " . வித்துவரத்தினம்
 

என் மனதில் நிறைந்த சான்றோன் நல்லரட்ணம் மாசிலாமணி சட்டத்தரணி, நிறுவனர் அப்டாக் கல்வி நிறுவனம்
நான் காண்கின்ற வித்துவான் செபரட்ணம் அவர்கள், பரந்துபட்ட தமிழ் சமூகத்தினரால் பிரதேச, சமய பேதமின்றி முன்னிலைப்படுத்தப்படவேண்டிய ஒரு சான்றோன் என்பது பெருமைக்குரியது. தமிழன்னையைச் சிறப்பித்து அவர்தம் பெருமையினைத் துலங்கவைக்க, தம் சக்தியனைத்தையும் செலவிட் சான்றோர்களுக்கு புகழாரம் சூட்டி, அவர்கள் காட்டிய வழியில் வாழமுயன்று கொண்டிருக்கின்ற தமிழ் ஒளியாகத்தான் வித்துவான் செபரத்தினம் அவர்களைப் பார்க்கின்றேன்.
“வாழையடி வாழை” என்ற அரிய நூலினை ஆக்கிய காலத்தினை, இன்றைய காலகட்டத்துடன் இணைத்துப் பார்க்கின்ற பொழுது, வித்துவான் அவர்களின் தமிழ்ச் சேவை முறிபடாமல், குவியம் தவறாமல் கனத்து, புடைத்து வியாபித்து வளர்ச்சி பெற்றிருப்தைப் காணமுடிகிறது. ஒட்டப் பந்தயத்திற்காகப் போடப்படும் சுண்ணாம் புக்கோடுகளைப் போன்று விட்டு, விட்டு பட்டும் படாமலும் சொல்லாமல் அழுத்தம் திருத்தமாக, வித்துவான் செபரட்ணம் அவர்களின் தமிழ்ச்சேவை செழுமை பெற்றிருப்பதன் விளைவுதான் தமிழ் நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும், கவிஞர் கந்தவனத்தின் கவிவளம் ஆகிய இரண்டு சிறந்த நூல்களும் ஏக காலத்தில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் வெளியிடக்கூடிய சூழ்நிலையைப் பிரசவித்துள்ளது.
தமிழ் வித்துவான் செபரத்தினம் அவர்கள் ஐந்து தசாப்தங்கள் தொடர்ச்சியாக ஆற்றிவரும் தமிழ்ச் சேவைக்காக விதந்து பாராட்டப்பட வேண்டியவராகின்றார். நீண்ட கால ஓட்டம், சேவை மூப்படைவதற்கு ஒரு காரணியாக இருந்தாலும், கால மாற்றம் யதார்த்தத்தைக் கடந்து செல்லும்போது ஓர் இலக்கிய கர்த்தாவின் ஆக்கத்தின் செழுமையைக் குறைக்க வாய்ப்புண்டு. ஆனால் வித்துவான் செபரத்தினம் அவர்களைப் பொறுத்தளவில், காலமாற்றம் அவர் எடுத்துக்கொண்ட கருவில் மெருகேற்றுவதற்கு கருவியாகவே பயன்பட்டிருக்கிறது. காலத்தின் தேவையைக் கிரகித்து, காலத்தால் சிதையாத கருவினைச் சுற்றியதாக தன் ஆக்கங்களைக் கொண்டுவருவதில் அவர் வெற்றி கண்டுள்ளார். தனது ஆக்கங்களுக்கு காலத்தால் சிதைக்கப்படாத மாறிலியான யதார்த்தக் கருவினைத் தேடியெடுத்து, அதனை நூலாக வடிப்பதில்
67 வித்துவரத்தினம்

Page 36
அவர் காட்டியிருக்கின்ற பேரார்வம் முதிர்ச்சியானது. ‘ஈழத்துச் சான்றோர்’ என்ற படைப்பின் மூலம் ஈழத்தமிழ் அறிஞர் என்ற மலர்களின் வாசத்தை அனுபவிக்க வைத்த வித்துவான் தன் பார்வையை விரித்து ஈழத்துச்சான்றோராகிய தமிழ் மலர்கள், தமிழ் bTttQ6ö 67sfauI நறுமணத்தை வாஞ்சையுடன் நினைவு கூர்ந்து வடித்த அP$ச்சித்திரம்தான் ‘தமிழ் நாடும் ஈழத்துச் சான்றோரும்’ என்ற (bsorgub.
அத்துடன் ஒரு சிறந்த பண்பட்ட இலக்கிய கர்த்தாவுக்கு, உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்கின்ற துணிவும், பணிவும் அவிசியம் என்பதை வித்துவான் செபரத்தினம் கோடிட்டுக் காட்டிய்ளளார். இத்தகைய உயரிய இலக்கியப் பண்புகள் உறுதியாக உள்வாங்கப் பட்டிருப்பதினால் தான் அவரால் சமகால இலக்கிய கர்த்ஃாக்களைப் பற்றி விநயமுடன் விதந்துரைக்க முடிகிறது. கவிஞர் கந்தவனத்தின் கவி வளம் என்ற நூலின் அறுவடை இதற்குச் செம்மையான சான்றல்லவா?
ஈழம் பெற்றெடுத்த தவப்புதல்வர்களில் ஒருவராக தமிழர்களின் உள்ளத்தில் ஒளிர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற சுவாமி விபுலானந்தரின் தமிழ் உணர்வாலும், மனித நேயத்தாலும் ஆட்கொள்ளப்பட்டவராக வாழ்ந்து வருபவர் வித்துவான் அவர்கள். தமிழ் மொழிமீதும், தமிழ் மக்கள் மீதும் கொண்ட அளவுகடந்த அன்பு பாசம், பரிவு, சுவாமி விபுலாநந்தர் அவர்களின் சிந்தனையை, பெளதீக எல்லைகளைத் தாண்டி அகல வைத்ததைப் போன்று அத்தகைய சான்றோனை, தவப்புதல்வனை மானசீகக் குருவாக மதித்து வாழுகின்ற அவரின் பார்வையும் விரிந்துசெல்வதனை அவிசிானிக்கும் போது உள்ளம் உவகை கொள்கிறது.
இன்று, தமிழ் ஆர்வலர்களால் , அறிஞர்களால் HTட்டுக்குரியவாக விளங்குகின்ற தமிழ் ஒளி, வித்துவான் செபத் தினம் அவர்களை இச் சிறப்பிற்கு இட்டுச் சென்ற கு?"தியங்களை நினைத்துப் பார்த்தல் அவசியமானதே. ஆழ்ந்த சிாளியான அவர், ஒரு நேர்கொண்ட நெஞ்சம் படைத்த கடின 2-லிழப்பாளி. எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திறன் கொண்டவர். எடுத்தகருமம் கைகூடும் வரை ஒயாது உழைப்பவர். கொள்கைப் பிடிப்புடன் உறுதியாகச் செயற்படும் இயல்பினர். தன்னடக்கமும் பண்பும் அவருடன் எப்பொழுதும் தொடரும் உயரிய பண்புகள். ஒரு சிறிய உதவியை யாரிடம் பெறினும் அதனை நன்றிப் பிரவாகத்துடன் பாரTடும் பெரிய மனது கொண்டவர். தமிழின் பால் காதல் கொண்ட அறிவு முதிர்ந்த, மூத்த ஒரு தமிழ்ச் சான்றோனாகத்தான் நான். அவஸ்ரக் காண்கின்றேன். 68 வித்துவரத்தினம்

கீழைக்கைரையில் எழுந்த தமிழ் ஒளி
கடந்த ஆண்டு தமது பவள விழாவை மிக எளிமையாகக் கொண்டாடிய தமிழ் ஒளி, வித்துவான் க. செபரெத்தினம் அவர்கள் கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ் சமூகத்துக்கும் ஆற்றிய பணிகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
1982ம் ஆண்டு கோடைவேளை சுட்டெரிக்கும் வெப்பத்தை பூமியெங்கும் பரப்பிய செங்கதிரோன் அந்தி வானத்தை தொடும் வேளை, திருப் பழுகாமம் திருக்குறள் முன்னணிக் கழகம் ‘வள்ளுவர் மேட்டில் நடத்திய திருவள்ளுவர் விழாவில் நான் பேசுவதற்காக மேடையில் அமர்ந்திருந்த வேளை “தம்பி உங்கள் பெயர் என்ன” என்ற சத்தம் கேட்டுத் திரும்பியபோது என்னைக் கவர்ந்து கொண்டவர் வித்துவான் செபரத்தினம் ஆவார்.
1952ம் ஆண்டு ஆசிரிய நியமனம் பெற்று 1985 ஆம் ஆண்டுவரை பதவி உயர்வுகளைப் பெற்று ஓய்வு பெற்றார். மட்/ மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும், பழுகாமம் மகாவித்தியாலயத்தில் அதிபராகவும், வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய உதவி அதிபராகவும் பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராகவும், பின் கொத்தணி அதிபராகவும் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறும் வரை பணியாற்றியவர். தனது பதவிக்காலத்திலேயே பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் ஆலோசகராக நியமனம் பெற்று ஆசிரியர்களுக்கு தமிழ் மொழியை கற்பித்தவர்.
1960ம் ஆண்டு முதல் இலங்கையிைன் முன்னணி நாளேடுகளான தினகரன், வீரகேசரி, சிந்தாமணி பத்திரிகைகளில் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்களளை எழுதியதன் மூலம் இலக்கிய உலகில் அறிமுகமானவர். 1962ம் ஆண்டு பண்டிதமணி கணபதிப்பிள்ளை, புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகிய இருவரையும் ஒப்பிட்டு எதிய 'வாழையடி வாழை நூல் மூலம் இலக்கிய உலகில் தனக் கென்றோர் இடத்தைப் பெற்றுக் கொண்டார். அதுமட்டுமல்லாது இரு பெரும் அறிஞர்களாலும் பாராட்டப் பெற்றவர். 1962ம் ஆண்டு கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை நிறுவி அதன் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர். இக்காலகட்டத்தில் கிழக்கிலங்கையின் கிராமங்களில் 69 வித்துவரத்தினம்

Page 37
இலைமறைகாயாக இருந்த பல இலக்கிய கர்த்தர்களை வெளியுலகிற்கு அறிமுகப் படுத்தியவர். மேலும் 1967ம் ஆண்டு மட்டக்களப்பு தமிழ் சங்கத்தை நிறுவி மதுரைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பாலபண்டிர், பண்டிதர்களுக்கான பரீட்சைகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தி இலக்கியம், இலக்கண வகுப்புக்களை நடத்தி பல பண்டிதர்களை உருவாக்கியவர். இக் காலகட்டத்தல் இலங்கையின் சாகித்திய மண்டலத்தின் தற்கால கவிதைக்குழு உறுப்பினராகப் பணியாற்றி பல கவிதையரங்கு களையும் நடத்தி மக்கள் மத்தியில் இலக்கிய ரசனையை ஏற்படத்தியவர் அவர். மேலும் தமிழ்ச் சங்கத்திற்கான நிரந்தர கட்டிடம் அமைப்பதற்காக களுவாஞ்சிக்குடியில் காணி வாங்கிய போதும் போர்மேகங்களின் தாக்கத்தினால் கட்டிடம் அமைக்கும் பணி பின்போடப்பட்ட நிலையில் கிடப்பிற்குப் பின்தள்ளப் பட்டுவிட்டதே என்னும் மனக்குறையுடன் வாழ்ந்து வருகின்றார்.
வித்துவான் அவர்கள் 1962 தொடக்கம் பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
வித்துவான் அவர்களால் தொகுக்கப்பட்ட முக்கிய நூல் 'கிழக்கிலங்கை மண்ணின் புகழ்பூத்த மைந்தர்கள் பாகம் 2 ஆகும். இதில் கிழக்கிலங்கையின் பல்வேறு பாகங்களில் வழ்ந்து தமிழ் மொழிக்குத் தொண்டாற்றிய 145க்கும் மேற்பட்டவர்களின் தகவல்கள் திரட்டித்தரப்பட்டுள்ளன. கிழக்கிலங்கையின் எழுத்தாளர்பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு இது பயனுள்ள நூலாகும்.
இது 2004ம் ஆண்டு அகில இலங்கைப் புலவர் மன்றம் கொழும்பில் நடத்திய தொல்காப்பிய மகாநாட்டில் வெளியிட்ட 'ஒல்காப் பெரும்புகழ் தொல் காப்பிய கட்டுரைகள்’ எனும் நூலில் முதற்கட்டுரையாக பிரசுரிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஏடான 'ஒலையில் 'தமிழும் தமிழ்ச் சங்கங்களும்' என்னும் கட்டுரையை எழுதி அனைவரதும் பாராட்டைப் பெற்றார். 1982ம் ஆண்டு யாழ்ப்பாணம் முறி சுப்பிரமணிய புத்தக சாலையால் வெளியிடப்பட்ட 'தமிழ் இலக்கியக் கட்டுரை’ என்னும் நூலில் வித்துவான் எழுதிய ‘முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகள்’ என்னும் கட்டுரை இடம்பெற்றுள்ளது.
வித்துவான் அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணிக்காக காலத்திற்குக் காலம் பல்வேறு அமைப்புக்கள் பட்டங்கள் அளித்து கெளரவித்துள்ளன. 1994ம் ஆண்டு இலங்கை இந்து கலாசார அமைச்சு தமிழ் ஒளி பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. மேலும் 2004இல் கொழும்பில் நடைபெற்ற கொல்காப்பிய மகாநாட்டியல் •
வித்துவான் எழுதிய 'ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் நூலுக்குப் பாராட்டுப் 70 வித்துவரத்தினம்

பத்திரமும் பணப்பரிசும் வழங்கப்பட்டன. மேலும் 'இலங்கைத் தமிழ்ப் கலைக் கழகம் அகில இலங்கை ரீதியாக நடத்திய ஓரங்க நாடகப் போட்டியில் வித்துவான் எழுதிய நாடகப் பிரதி இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளது. மேலும் 1998இல் கனடா உதயன் பத்திரிகை நடத்திய வட அமெரிக்கச் சிறுகதைப் போட்டியில் வித்துவானின் சிறுகதை முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் பாராட்டுப் பத்திரத்தையும் பெற்றுக் கொண்டது. 1999இல் உதயன் பத்திரிகை அனைத்துலக மட்டத்தில் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை நான்காவது இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிக் கொண்டது.
மேலும் 2004 ஆண்டு கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகம் வித்துவான் அவர்களுக்கு கெளரவ முதுகலைமாணிப் பட்டம் வழங்கிக் கெளரவித்தது. கனடா தமிழர் தகவல் சஞ்சிகை தனது 15வது ஆண்டு விழாவில் வித்துவான் அவர்களின் சேவையைப் பாராட்டி சான்றிதழும் தங்கப்பதக்கமும் அளித்துக் கெளரவித்தது. வித்துவான் அவர்கள் தனது ஆசிரியத் தொழில் எழுத்துப் பணிகளுக்கிடையே சமூகப்பணிகள் ஆற்றவும் தவறவிலலை. 1980களின் நடுப்பகுதியிலிருந்து தீவிரமடைந்த ஈழவிடுதலைப் போராட்டத்தின் விளைவாக இலங்கை இராணுவத்தினரால் அப்பாவிப் பொதுமக்கள் கைது செய்யப்பட்டு, காணாமல் போனவேளை அமைக்கப்பட்ட மட்டக்களப்பு பிரஜைகள் குழு உறுப்பினராக பணியாற்றினார். மேலும் போரதீவுப் பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைக்கப்பட்ட பிரஜைகள் குழுத் தலைவராகவும், பளுகாமம் சுவாமி விபுலாநந்தர் சிறுவர் இல்லத்தின் தலைவராகவும் கனடா சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்தின் உப தலைவராகவும் பணியாற்றினார். மேலும் இச்சங்கத்தின் தற்போதைய காப்பாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாமி விபுலாநந்த அடிகளுடன் எவ்வித நெருங்கிய தொடர்புகளில்லாத போதும் சுவாமிஜி அவர்களைத் தனது மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு, அவரது பன்முக ஆற்றல்களை வெளிக் கொணர்வதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். சுவாமியியின் முழு உருவச் சிலையை பழுகாமம் மகா வித்தியாலயத்தில் நிறுவி, (மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவப்பட்ட இரண்டாவது சிலை) அதனைப் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களைக் கொண்டு திறந்து வைத்த பெருமைக்குரியவர். அதிபராகக் கடமையாற்றிய போது வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம், பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், ஆகிய வற்றில் அமைக்கப்பட்டிருந்த சுவாமியின் மார்பளவுச் சிலைகளுக்கு
71 வித்துவரத்தினம்

Page 38
பீடங்கள் அமைத்து அலங்கரித்தவர்.
கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக எம்மத்தியில் வழ்ந்து வரும் வித்துவான் அவர்கள் தமிழ் மொழிக்கும் - இலக்கியத்துக்கும் ஆற்றிய பணிகள் அளவிடமுடியாதவையாகும். மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி கற்பித்து அனைவரதும் நெஞ்சங்களிலும் இடம்பிடித்துக் கொண்ட ஐயா அவர்களுக்குக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் விழா எடுத்துப் பாராட்டுவது பொருத்தமானதே. இவ்வேளை கனடா சுவாமி விபுலாநந்தர் கலை மன்றமும் தனது இதய பூர்வமான வாழ்த்தினைத் தெரிவித்து பூவுடன் சேர்ந்த நாரைப் போன்று பெருமையடைகிறது.
விவேகனாநந்தர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டவேளை
*72 ... .. வித்துவரத்தினம்
 

ஈழத்துத் தமிழ்ச் சான்றோரை முன்நிறுத்திய சான்றோன்
அ.சிவானந்தநாதன் - கனடா
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்கத் தக - என்று குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர். இதற்கமைய கல்வியால் உயர்ந்தவர்கள் வையகத்தில் அழியாப் புகழைப் பெற்றுள்ளனர். இவ்வரிசையில் ஒருவராகத் திகழ்கின்றார் கனடாவில் வாழும் வித்துவான், தமிழ்ஒளி க. செபரெத்தினம் அவர்கள். இவர் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர். தொடர்ந்து கல்வி பெற்று ‘வித்துவான்’ ‘கலைமாணி’ ‘கல்வி டிப்ளோமா' ஆகிய பட்டங்களைத் தனதாக்கிக் கொண்டார். வித்துவான் செபரெத்தினம் அவர்கள் மட்டக்களப்பில் ஆசிரியராகவும், பொறுப்பு வாய்ந்த பெருமைக்குரிய அதிபராகவும் பணியாற்றியுள்ளார். 1957-59 காலப்பகுதியில் பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை, செல்வநாயகம், சு.வித்தியானந்தன், ஆ. சதாசிவம் ஆகியோரிடம் தமிழ் கற்கும் வாய்ப்பினையும் பெற்று வித்துவான் பட்டத்தைப் பெற்றார். வித்துவான் செபரத்தினத்தின் தமிழ்ப் பணிக்காக கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் அவருக்கு 5.06.2004இல் முதுகலைமாணிப் பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தது. இலக்கியக் கலாநிதிப் பட்டம் வழங்கப் படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது கிடைக்காதமை ஏமாற்றதிை தைக் கொடுத்துள்ளது. கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என எழுதிக்குவித்ததோடு மட்டுமன்றி தமிழ் இலக்கியத் தோட்டத்தில் தேடலில் ஈடுபாடு கொண்டுள்ள இவருக்கு முதுகலைமாணிப் பட்டம் வெறும் கண்துடைப்பாகவே கருதப்பட இடமுண்டு.
“அறிவுடையர் எல்லாம் உடையர்’ என்ற வள்ளுவர் வாய்மொழிக்கும், “கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்ற ஒளவையின் பொன்மொழிக்கும் இலக்கணமாக வித்துவான் செபரத்தினம் அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் மதிக்கப்படும் பெருமைக்குரியவராகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், பெரியார்களின் அறிந்திராத வரலாற்றைத் திரட்டித் தந்து மக்கள் மனங்களின் மங்காப்புகழ் பெற்றுள்ளார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் பூங்குன்றனாரின் வாக்குக் கேற்ப
73 வித்துவரத்தினம்

Page 39
பரந்த மனம்படைத்த பெரியாராக மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது கருமமே கண்ணாகக் கொண்டு மேற்கொள்ளும் சமயப் பணியும் தமிழ்த் தொண்டும் பாராட்டத் தக்கது. இவர் எழுதிய நாடகங்கள் 'ஜங்குறு நாடகங்கள்’ என்ற பெயரில் கையெழுத்துப் பிரதியாக அச்சேறாமல் கிடப்பில் கிடப்பது கவலை தருகின்றது.
1969-1970ஆம் ஆண்டில் இப்பெரியார் சிறிலங்கா சாகித்திய மண்டலத்தின் கவிதை ஆக்க குழுவில் அங்கம் வகித்து கவிஞர்களின் ஆக்கங்களுக்கு நல்லாதரவு நல்கினார். இதனைவிட புதிய கவிஞர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
புலவர் மாமணி திரு.க.செபரத்தினம் அவர்கள் 1808-2002ஆம் திகதி கனடாவில் 'ஈழத்துத்தமிழ்ச் சான்றோர்’ என்ற அரிய நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் தமிழகத்திலும் ஈழத்திலும் வாழ்ந்த அறிஞர்களின் நன்மதிப்பினை சிறப்பாகப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து “தமிழ் நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும்” என்ற அருமையான புலவர் சரிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 21.07.2005 இல் இடம்பெற்றுள்ளது. இந்நூலில் ஈழத்துப் பூதந்தேவனார் தொடக்கம் முகம்மது உவைஸ் வரை இருபத்தி நான்கு தமிழ்ச் சான்றோர்கள் இந்தியாவிற்குச் சென்று தமிழ்ப் பணியாற்றியுள்ளமை சிறப்பாகத் தரப்பட்டுள்ளமை இந் நூலின் சிறப்பாகும். ஈழத்தவரின் தமிழ்ப்புலமை, ஆழ்ந்த அறிவாற்றலை புடம்போட்டு வெளியுலகிற்குக் காட்டும் ஒரு கண்ணாடியாகத் தந்துள்ளமை பாராட்டத்தக்கது.
தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் தமிழுலகினால் மறக்கப்படாது போற்றி மதிக்கப்படவேண்டும், எதிர்காலச் சந்ததியினருந்கு நம்முன்னோர் ஆற்றிய இலக்கியப் பணிகள் பற்றிய விபரங்களை எடுத்துச் சொல்வதோடு அதனை வலியுறுத்துவதாகவும் உள்ளது. “வாழையடி வாழை” எழுதப்பட்ட பின்னர் பதினாறு அணி டுகள் வாழ்ந்து இறைவனடிசேர்ந்தார் புலவர் மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்கள். அவர்களின் பிற்கால தமிழ்ச்சேவை பற்றிய விபரங்களை இணைத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பும் வித்துவான் செபரத்தினம் அவர்களிடம் உண்டு. பண்டிதமணியும் புலவர் மணியும் நாவலர் காவியப் பாடசாலையில் ஒரே காலத்தில் கல்விகற்றவர்கள். இப்பெரியார்கள் தாம் செய்த சமூக, சமய, தமிழ்ப் பணிகளினால் வரலாற்றில் உயர்ந்து நிற்கிறார்கள்.
வித்துவான் செபரத்தினம் அவர்களும் தம்மை தமிழ், சமூக, சமயப் பணிகளோடு இணைத்து செயற்பட்டு வந்துள்ளார். கனடாவிலும் அவரது பணிகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. இப்பெரியாரின் பணிகள் தமிழர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. வித்துவரத்தினம் 74

நயனுடை வல்லுநர் திருமதி சுகுமாரி சிவம் B.A
வித்துவான் திரு. கனகரத்தினம் செபரத்தினம் ஐயா அவர்கள் கிழக்கு மகாணத்தில் இருந்து சேவையாற்றிய காலம் கிழக்கின் பொற்காலம் என்பேன். விபுலாநந்தர் பிறந்த மண்ணிலே தம்பிலுவிலில் பிறந்து திருப்பழுகாத்தில் வாழ்க்கைத் துணையைத்தேடி எடுத்து பலகாலம் சேவை செய்தார். 'வாழையடி வாழை ‘சுவாமி விபுலாநந்த அடிகளாரின் வாழ்வும் வளமும்", நயனங்கள் பேசுகின்றன, 'ஈழத்துத் தமிழ்ச் சான்றோர'என்று பல நூல்களை எழுதியவர்.
செபரத்தினம் ஐயா எனது நெருங்கிய உறவினர். ‘சித்தப்பா' முறையானவர். திருப்பழுகாமம் மத்திய மகாவித்தியாலயம் உயர்தரத்துக்கு வர இராப்பகலாக உழைத்தவர். திருப்பழுகாமம் கிராமத்தில் ஒரு காலத்தில் சாதி சமயபேதங்கள் தலைவிரித்தாடிய காலத்தில் எல்லா மதமும் சம்மதம், சாதிகள் இல்லையடி பாப்பா என்று எங்களுக்கு அறிவுரை செய்து தாழ்த்தப்பட்ட சாதியினரைக் கல்விகற்க வைத்து அங்கு சமத்துவத்தை ஏற்படுத்தினார்.
திருப்பழுகாமத்தில் முதன் முதல் சுவாமி விபுலாநந்தர் சிலையை நிறுவி ஒரு சாதனையை நிலைநாட்டினார். அங்கு பல ஏழை மாணவர்களை கல்வி, கலை, கலாசாரத்தில் ஈடுபடவைத்து பல்கலைக் கழகத்திற்கு அனுப்பிய பெருமையும் இவரைச் சேரும். இவர் ஒரு மெதடிஸ்த சமயத்தவராக இருந்தாலும் சகல இந்து சமய கோயில்கள், விழாக்களில் பங்கு கொண்டு சகல சமயத்தையும் ஒற்றுமையாக ஒரு கூரையின் கீழ் கொண்டுவந்தவர்.
ஐயா அவர்கள் பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பதவி ஏற்ற பின்னர்தான் பட்டிருப்புத் தொகுதிக்கு மீண்டும் ஒரு பொற்காலம் ஏற்பட்டது.
பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் பல புதிய கட்டிடங்களை அமைத்து. பல அரசியல் வாதிகளை அன்பால் கட்டி சாதுரியத்தால் அரவணைத்து சகல வேலைகளையும் செய்தார். இவரது காலத்தில் தான் பட்டிருப்பு மகாவித்தியாலய மாணவர்கள் பெருந்தொகை யாகப் பல்கலைக்கழகத்திற்கு குறிப்பாக மருத்துவ, பல் மருத்துவ, GUITsululo), 66565|T601, B606) (Medical, Dental, Engineering, Science, & Arts) g|60035615d5(3, 916) JUIU'L601j.
பண்டிதர் கந்தையா அவர்களிடமிருந்து செபரத்தினம் 75 வித்துவரத்தினம்

Page 40
பட்டிருப்பு மகாவித்தியாலயத்தை கைஏற்றபோது, பட்டிருப்பு மகாவித்தியாலயம் பூச்சிய தரத்தில் இருந்தது. செபரத்தினம் ஐயா இராப்பகலாக உழைத்து அதனை ஒரு உன்னத நிலைக்குக் கொண்டுவந்தார்.
பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறையாக இருந்தபோதிலும் யாழ். பல்கலைக் கழகத்தில் படித்த, படித்துக் கொண்டிருக்கும் எங்கள் மகாவித்தியாலய பழைய மாணவர்களை அழைத்து அங்குள்ள மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை வைத்து பல்கலைக் கழகபுகுமுக பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெறவைத்து பல்கலைக்கழகம் புகுவதற்கு ஏணிப்படியாக இருந்தார். இவ்விதம் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற மாணவர்களில் நானும் ஒருவர். என்னுடன் பட்டிருப்பில் படித்த ஏழை மாணவர்கள் பலருக்குக் கரையைக் காட்டிய மாலுமியாக இருந்ததோடு மகாபொல போன்ற புலமைப் பரிசில்களை நாங்கள் பெற்றுக்கொள்ள வழிகாட்டியாக இருந்தார்.
அது மட்டுமன்றி இன்னும் தனது பழைய மாணவர்களுக்கும் ஏழை மாணவர்கள் பலருக்கும் உதவி செய்துகொண்டே இருக்கின்றார். இவரது காலத்தில்தான் களுவாஞ்சிக்குடியில் விபுலாநந்தர் சிலை நிறுவப்பட்டது.
கனடாவில் எத்தனையோ படித்த பழைய மாணவர்கள் இருந்தும் அந்த பட்டிருப்பு, பழுகாமம் மாவித்தியாலயங்களை வளர்த்தெடுக்க முன் வருவார் யாரும் இல்லாத நிலை காணப்படுகின்றது. யாராவது பூனைக்கு மணிகட்டி இப்படியான பழைய பாடசாலைகளுக்கு உதவ முன்வரவேண்டும். ஐயா செபரத்தினம் கனடாவில் தொடர்ந்து சேவை செய்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவேண்டும். என வேண்டி வாழ்த்தி நிற்கின்றேன்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நூல் வெளியீடுடு விாவில் பதிலுரை தருகின்றார்
76 வித்துவரத்தினம்
 

வித்துவான்=அறிஞன்
L|സെഖങ്ങ
S.P. 3560TbGFLITTLug), B.A. (Hons) -a56daśg5TFGö
வித்துவான் திரு. க. செபரத்தினம் அவர்கள் வித்துவக் காய்ச்சல் சிறிதளவு மில்லாத மாபெரும் இலக்கியத் தூண். பொதுவாக ‘வித்துவான்’ என்றாலே ஒரு தலைக்கணம் உள்ளது போல எண்ணும் மற்றைய வித்துவான் மாதிரி இல்லை இந்த வித்துவான். மிகவும் எளிமையான சுபாவம் கொண்டவர். என் ஊரவர். என் சொந்தக்காரர். இலக்கிய ஞானம் மிக்கவர். சுவாமி விபுலாநந்தர் மீதும், ஈழத்துப் பூராடனார் மீதும் தீராத மதிப்பும், மரியாதையும் மிக்கவர். அவரது அறிவு கூர்மையானது. வித்துவான் என்றாலே தமிழில் அறிஞன் அல்லது புலவன் என்று பொருள். வித்துவான் வடசொல். இத்தகைய புலவர்கள் நாம் வாழும் காலத்திலேயே வாழ்கின்றார்கள். எவ்வளவு பெருமை தமிழர்க்கு
திருக்கோவில், தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், பழுகாமத்தை வாழிடமாகவும் கொண்ட அறிஞர் செபரத்தினம் அவர்கள் ஆசிரியராக இருந்த காலந்தொடக்கம் இலக்கிய வானில் சிறகு விரித்தவர். பத்திரிகைகளிலும், தனித்தும் இலக்கியப் படைப்புக்களைச் செய்தவர். இலங்கைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர் வாழையடி வாழை, விபுலாநந்த அடிகளாரின் வாழ்வும் வளமும், நயனங்கள் பேசுகின்றன, ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் முதலியவற்றுடன் இப்போது வந்துள்ள “தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும்” என்ற படைப்புகளின் ஆசிரியர். இவற்றையெல்லாம் நோக்குமிடத்துப் புலவரின் “தேடல்’ என்னவெனத் தெளியலாம்.
அண்மைக் காலமாக நமது தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் சமகாலக் கலைஞனை, எழுத்தாளன் அல்லது படைப்பாளியைப் பாராட்டும் பணி பு கொண்டவர்களாக மாறியுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. இத்தகைய பண்பும் பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான். அமைதியாக இருந்து தமிழ்ப் பணியாற்றும் தமிழ்க் கல்விமான்களைக் கண்டு பாராட்டும் தமிழ் அறிஞர்கள் நூறாண்டு வாழட்டும்! தமிழ் மணம் பரப்பட்டும்!
வித்துவான் திரு.செபரத்தினம் தொடர்ந்து எழுதி அவர் பாதையிலே ஒரு தமிழ் இலக்கிய ஆய்வு நூலைப் படைத்து அதற்காகவும் அவருக்கு இலங்கைப் பல்கலைக் கழகம் அவருக்கு கலாநிதிப் பட்டத்தை வழங்கி கெளரவிக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரை வாழ்த்திப் பாராடடுகின்றேன்.
77 வித்துவரத்தினம்

Page 41
தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும்
(தீபம்’ தொலைக்காட்சியில் மு. நித்தியானந்தன் அவர்களின் நூலாய்விலிருந்து)
வித்துவான், தமிழ்ஒளி க.செபரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட, ‘தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச்சான்றோரும்' என்னும் நூல் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. வித்துவான் அவர்கள் கிழக்குமண்ணின் புதல்வர். ஒரு வகையிற் கூறுவதாயின் அருகிவரும் அறிஞர்குழாத்தில் எஞ்சி நிற்போரில் அவரும் ஒருவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகத் தமது தொழிலைத் தொடங்கிய வித்துவன் செபரத்தினம் அவர்கள் ஓர் உயர்ந்த ஆசிரியராகவும், தலைமைஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். ஒரு காலகட்டத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக, வித்துவான்களாக தமிழ் இலக்கியப் பரப்பில் ஆட்சியும் புலமையும் பெற்றிருந்தோரின் தொகை தற்போது அருகிவரக்காண்கிறோம்.
பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டுள்ள வித்துவான் செபரத்தினம் அவர்கள், 'வாழையடி வாழை' என்னும் புலவர் சரித நூலை 1962இல் எழுதி வெளியிட்டுள்ளார். 1994இல் 'விபுலாநந்த அடிகளாரின் வாழ்வும் வளமும் என்னும் நூல் அவரால் எழுதப்பட்டுள்ளது. 'ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்’ என்னும் அறிஞர் வரலாறு கூறும் நூலினையும் வித்துவான் அவர்கள் எழுதியுள்ளார். பண்டைய இலக்கிய உலகிலே ஈடுபாடு காட்டிவரும் வித்துவான் அவர்கள், நவீன இலக்கிய வடிவத்திலும் ஈடுபாட்டுடன் இணைந்து புலமை பெற்றிருப்பதனை அவரின் நயனங்கள் பேசுகின்றன என்னும் சிறுகதைத் தொகுதி நூல் வெளிப்படுத்தி நிற்கிறது.
இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் அமைப்பில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ள வித்துவான் அவர்கள், எழுத்தாளர் சங்கம், தமிழ்ச் சங்கம் முதலியவற்றிலும் பங்கேற்றுப் பணியாற்றியுள்ளார்.
தற்போது வித்துவான் செபரத்தினம் அவர்கள் தமிழ் நாடும் ஈழத்துத் தமிழ்ச்சான்றோரும்' என்னும் அரிய தொரு நூலை ஆக்கித்தந்துள்ளார். எங்கள் அறிஞர்கள் இந்தியாவின் அங்கீகாரத்தை அந்நாட்களிலே கோரிநின்றார்கள். தமிழகம் அவர்களின் ஆற்றலை அங்கீகரித்திருந்தது. தமிழகத்திலே தங்கள் பணியினை முதன்மையாக்கி உழைத்த சான்றோர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவர்களின் வரலாறு இந்நூலிலே சுட்டப்படுகின்றது. இருபத்து நான்கு அறிஞர்களின் வரலாறு இந்நூலிலே கூறப்படுகிறது.
78 வித்துவரத்தினம்

ஈழத்து இலக்கிய வரலாறு சாதாரணமாக ஈழத்துப் பூதந்தேவனாரின் வரலாற்றுடன் ஆரம்பிப்பதே வழமையாகும். வித்துவான் அவர்களும் மேற்படி வழமையை அடியொற்றி, ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய முறையான அறிமுகத்தோடு தமது நூலை ஆரம்பித்து வைத்து உள்ளார். வித்துவான் அவர்களால் அறிமுகப்படத்தப்படும் அறிஞர்கள் அனைவரும், அசாத்தியமான தமிழ்ப் பாணி டித்தியம் நிறைந்தவர்களாகவும், தமிழின் பெருமையை நிலைநாட்டியவர் களாகவும் திகழ்கிறார்கள்.
தமிழ்நாடு சென்ற ஈழத்துச் சான்றோர்கள், பண்டைய இலக்கிய இலக்கணச் செல்வங்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈர்க்கப்படுவதைக் காண்கிறோம். தமிழ் மொழியில் ஆளுமையும் பI 600 டித் தியமும் கொணி ட எமது அறிஞர்கள், ஓலைச் சுவடிகளை ஆராயும் பணியில் ஈடுபட்டு அவற்றை அச்சு வாகனம் ஏற்றும் மிகப்பெரிய பணியில் சாதனை படைத்துள்ளார்கள். அத்துடன் தமிழ் நாட்டுப் பதிப்பாசிரியர்களின் பதிப்புகளைச் சீர்தூக்கிப் பார்த்துக் கருத்துக் கூறும் தகைமை யினையும் பெற்றிருந்தனர். அவர்களுடைய ஆளுமையையும் பாண்டித்தியத்தையும் தமிழ் நாடு அங்கீகரித்திருந்தமை சிறப்புடன் குறிப்பிடவேண்டிய தொன்றாகும்.
தமிழ்நாட்டில் வாழ்ந்த எமது சான்றோர் உரை எழுதும் பாரம்பரியம் ஒன்றினையும் அங்கு ஆரம்பித்து வைத்துள்ளனர். இப்பணிக்கு தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்திலும் ஆழ்ந்தகன்ற கம்பீரமான பாண்டித்தியம் தேவை. அக்காலம் வரை உரை எழுதப்படாதிருந்த நூல்களுக்குச் சிறந்தமுறையில் உரை எழுதியுள்ள சீரிய பணியைப் பார்க்கும்போது மிகப் பெரிய மலைப்புத் தோன்றுகிறது.
உரையாசிரியரெனவும், பதிப்பாசிரியரெனவும் தமிழ்நாட்டிற் போற்றப்படும் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள், தமது பணியிற் காணப்பட்ட பல்வேறு தவறுகளை அறிஞர்கள் சுட்டிக் காட்டியபோது, அத்தவறுகளைத் திருத்திக் கொண்டாரே தவிர அத்துவறுகள் யாராற் சுட்டப்பட்டன? சுட்டப்பட்ட தவறுகள் எவை? என்னும் விபரங்களை எந்தநூலிலும் குறிப்பிடாதிருந்து விட்டார். ஆனால் வித்துவான் செபரத்தினம் அவர்களோ, தாம் முன்னர் எழுதிய நூல்களிற் காணப்பட்ட தவறுகள் சுட்டிக்காட்டப் பட்டபோது, அவற்றைக் கவனமாகச் சீர்தூக்கிப் பார்த்துத் தவறுகளைத்திருத்திச் செப்பமிட்டுக் கொண்டதோடு, சுட்டிக்காட்டியவர்களின் பெயர் விபரங்களை நன்றியோடு குறிப்பிட்டுமிருக்கிறார். இவருடைய ஆய்வறிவும், நேர்மையும், 79 வித்துவரத்தினம்

Page 42
தாராளமனப் பக்குவமும் பாராட்டப்பட வேண்ய பண்புகளாம்.
அடுத்ததாக, எமது சான்றோர்கள் தமிழ் நாட்டிலே மேற்கொண்டிருந்த தமிழப் பேரகராதிகளைத் தொகுத்த பணியினைப் பார்க்கலாம். ஈழச் சான்றோர்கள் அனைவரும் அல்லது பெரும்பாலானோர் ஏதோ ஒரு வகையில் அகராதி நூல்களைத் தொகுக்கும் பணியிற் பங்கேற்றிருந்தனர். தமிழ் நாட்டில் வாழ்ந்த நமது அறிஞர்களிற் பலர், தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பாண்டித்தியமும் ஆளுமையும் கொண்டிருந்தமை அகராதிகளைத் தொகுத்த பணிக்குப் பேருதவியாக இருந்தது. கீழைத்தேய மொழியியலாளர்களுக்கு சமஸ்கிருத மொழி இன்றிய மையாத தென்பதை எமது சான்றோர்கள் நன்கு அறிந்திருந்தனர். நமது அறிஞர்கள் அகராதிகளைத் தொகுத்த பணியில் ஆற்றிய பங்களிப்புப் பற்றி வித்துவான் செபரத்தினம் விபரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அறிவியல் நூல்களை ஆக்கும் பணியிலும் தமிழ் நாட்டில் வாழ்ந்த ஈழத்துச் சான்றோர்கள் உழைத்துள்ளனர் என்பதையும் வித்துவானின் நூலில் வாசிக்கிறோம். எமது சான்றோர்களின் பன்மொழி அறிவு, அதிலும் சிறப்பாக ஆங்கில மொழிப்புலமை இப்பணிக்குப் பேருதவியாக இருந்திருக்கிறது. அறிஞர் விசுவநாதபிள்ளை அவர்கள் மொழிபெயர்த்து ஆக்கிய 'வீச கணிதம் என்னும் நூல், காலத்தின் தேவை அறிந்து ஆற்றப்பட்ட சீரிய பணியின் விளைவாகும். விபுலாநந்த அடிகளாரின் வழிகாட்டலுடன் ஆக்கபப்ட்ட 'கலைச் சொல்' என்னும் அகராதி நூல் அறிவியற் துறையில் நூல்கள் ஆக்கப்பட வழிகாட்டியுள்ளது. இவ்வகையில் எமது அறிஞர்கள் புதிய தடங்ளில் தங்கள் அறிவுப் புலமையினால் புதியது புனைந்த சான்றோர்களாகத் தென்படுகின்றார்கள்.
மொழிபெயர்த்து நூல்களை ஆக்கித் தமிழ் மொழியை வளப்படுத்தியவர்களாகவும் எமது சான்றோர்கள் விளங்கியிருப்பதை வித்துவானின் நூலிலிருந்து அறிய முடிகிறது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் சிலவற்றை அழகுதமிழில் மொழி பெயர்த்துத் தந்த விபுலாநந்த அடிகளின் பணிபோற்றுதற்குரியது. ஹெலக் விசுவநாத பிள்ளை அவர்கள் 'றொபின்சன் குறுசோ நாடகத்தை மிகச் சிறப்பாக தமிழாக்கம் செய்துள்ளார். இச்சான்றோரின் முன்னோடி முயற்சி எம்மை வியக்க வைக் கிறது. தெலுங்கு மொழிக்கு அம்மொழியிலேயே இலக்கணநூல் எழுதிய எமது சான்றோர் பற்றிய செய்தியையும் வித்துவானின் நூலிற் கண்டு இறும்பூதடைகிறோம்.
பண்டைய இலக்கியங்களிற் புலமைமிக்கவராகத் திகழ்ந்த 80 வித்துவரத்தினம்

திருமலை சரவணமுத்துப்பிள்ளை அவர்கள், முதற் தமிழ் யதார்த்த நாவலான “மோகனாங்கியையும் ஆக்கித் தந்துள்ளார். இப்பணிமகத்தானது, பாராட்டுக்குரியதாய் முன்னோடியாக அமைகிறது.
தமிழ் நாட்டுச் சான்றோர்கள், எமது சான்றோர்களைப் போற்றிப் பரவிடத் தவறவில்லை. கல்லூரிகள், மடாலயங்கள், சமய அமைப்புகள் எமது அறிஞர்களாற் பெரும் பயனடைந்தமையை நன்றிப்பெருக்குடன் நினைவிற் கொண்டுள்ளன. இதே வேளையில், காழ்ப்புணர்வு கொண்ட ஒரு சிலர் வலிந்து பிழைகாண, குற்றம் கூற விழைந்தமையையிட்டும் வித் துவானின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறுமுகநாவலர் அவர்கள் நல்லறிவுச் சுடர் கொழுத்தல் முதலிய கண்டனங்களை வெளியிட்டு, ஈழத்துத் தமிழின் தனித்துவத்தை வெளிப்படுத்திக் காட்ட வேண்டிய நிலைாயும் ஏற்பட்டதாக அறிகிறோம்.
வித்துவானின் நூலிலே கிறிஸ்தவ தமிழ்ப் பேரறிஞர் தனிநாயக அடிகளார் பற்றியும் இஸ்லாமிய தமிழ்ப் பேரறிஞர் உவைஸ் அவர்களைப் பற்றியும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் பண்பினைக் கண்டு மனநிறைவடைகிறோம். இப்பெரியார்களின் அரிய சாதனைகள் எம்மை வியக்க வைக்கின்றன.
வித்துவான் அவர்களின் நூல் மிகச் சிறந்ததொரு தகவற் களஞ்சியமாகவே திகழ்கிறது. ஈழத்தறிஞர்களின் தமிழ்ப்பணியையிட்டு. சிறப்பாக தமிழ்நாட்டிலே அவர்கள் ஆற்றிய பணியையிட்டு மிகவும் விபரமாக விளக்கியுள்ள அவரின் நூல் பெரும் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. ஈழத்தறிஞர்களின் தமிழ்ப் பணிபற்றிய நூல்கள் ஒரு சிலவே உள. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பன்மொழிப்புலவர் க.சி. குலரத்தினம், கலாநிதி கைலாசபதி, கலாநிதி பூலோகசிங்கம் முதலிய அறிஞர்கள் இப்ணியில் உழைத்துள்ள போதிலும், இப்பணியில் வித்துவான் செபரத்தினம் அவர்களின் நூல் பலதரப்பட்ட தகவல்களை ஒழுங்காகக் கூறும் தகவற்களஞ்சியமாகத் திகழ்வதைப் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும். உண்மையிலேயே ஈழத்தமிழ்ச் சான்றோர்களின் தகவல்களை அறிய விழையும் அனைவரதும் கைகளில் தவழ வேண்டிய சிறப்புக்கொண்டதாய் இந்நூல் அமைந்திருக்கிறது. இச் சிறந்த நூலிலே ஆங்காங்கே காணப்படும் ஒருசில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து இருக்கலாமல்லவா?
வித்துவான் தமிழ் ஒளி செபரத்தினம் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து தமிழ்ப்பணி ஆற்றிட வாழ்த்துகிறேன். (நன்றி தீபம் தொலைக்காட்சிச் சேவை, இலண்டன்)
8 வித்துவரத்தினம்

Page 43
கீழ்க்கரையின் வித்துவஒளி தந்த தமிழ் அறிஞர்கள்
&fb56060T'Iba56T 6T6ð.LugÖLDb1T56ð B.A(Hons), Dip.in Ed.
வித்துவான், தமிழ்ஒளி க. செபரத்தினம் அவர்கள் ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் என்னும் அரிய நூலை எழுதி வெளியிட்டதன் மூலம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தனது நுண்மாண் நுழை புலத்தின் முழுமையை வெளிக்காட்டியுள்ளார். ஐந்தாவது தமிழ் மண்டலமான ஈழமண்டலத்தில் தமிழ் பேசும் மக்களது பண்பாட்டு வாழ்வினை நாகரிக செழுமையைப் புலப்படுத்திய சான்றோர்களுள் தமிழின் பெருமையையும் இலக்கணச் சிறப்பினையும், இலக்கியத் திறனையும் வளர்த்துச் சென்றவர்கள் சிலர். இவர்களது பெருமையை ஆய்தறிந்து தருவது இந்நூலாசிரியரின் ஆர்வ மிகுதியின் வெளிப்பாடாகும். ஈழத்துச் சான்றோர் பதினெண்மரைத் தெரிவுசெய்து 304 பக்கங்களில் எழுதப்பட்டது ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் என்ற நூல். ஒரு நூலை எழுதுவதற்கு ஆசிரியரின் பகைப் புலம் மிகவும் இன்றியமையாதது. விபுலாநந்த அடிகள் பிறந்த மண்ணில் க.செ அவர்கள் ஒரு பயிற்றப் பட்ட ஆசிரியர். வித்துவான் பட்டம் பெற்றவர். அத்துடன் பேராதனை பல்கலைக் கழகத்தின் பீ.ஏ. பட்டமும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் டிப்.இன்.எட்.பட்டமும் பெற்றவர். நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சன துறைகளில் நீணட்காலம் ஈடுபட்டவர். பல நூல்களை எழுதி வெளியிட்டவர். கனடாவில் பல பத்திரிகைகளில் பரிசு பெற்ற எழுத்தாளன். எனவே பாரம்பரியம், கல்விச் சூழ்நிலை, அநுபவங்கள் என்பவற்றால் புடம் போடப்பட்டவர். இந்த நூலில் அவரது ஆய்வுத்திறன் நன்கு புரிகின்றது.
இந் நூலின் முதல் சிற்ப்பு காலத்தின் தேவை கருதி எழுதப்பட்டதாகும். புலம் பெயர்ந்த மண்ணிலிருந்து கொண்டு தாயகத்தின் அறிஞர்களைப் பற்றி தகவல்களைறத் திரட்டி அயராத முயற்சி செய்து தமிழகத்திற்கு அனுப்பி நூலாக்கியுள்ளார். இது ஒரு வரலாற்று பெருமை சேர்க்கிறது.
இரண்டாவது சிறப்பு ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களினதும் அறிஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்த நோக்குள்ள இவர், புத்தளம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை முழுமைப் படுத்தி எழுதியுள்ளார். சான்றோர் வரலாறு தமிழ்ச் சேவை, சமூக சிறப்பு என்பவற்றினையும் தொகுத்துள்ளார்.
82 வித்துவரத்தினம்
 

மூன்றாவது சிறப்பு காலவரையில் இவர்களை தொகுத்துள்ள விதமாகும். 1807ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டுவரை சைமன் காசிச் செட்டி முதல் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை வரை இரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்த அறிஞர்களை இனம் கண்டு எழுதியுள்ளார். மேல் நாட்டினர் வருகை, சிறந்த கல்விசார்ந்த சூழ்நிலை, தமிழகத் தொடர்பு, தமிழ் எழுச்சி நிறைந்த பொற்காலம் இதுவாகும். எனவே மறக்க முடியாத இவ் அறிஞர்களின் வாழ்வியல் ஒரு சிறந்த ஆவணமாகிறது.
அடுத்துள்ள சிறப்பு அவர் இட்ட தலைப்புக்கள் ஆகும். மனம் கொளத்தக்க வகையில் ஒவ்வொருவரது இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தி நிற்கும் தலைப்புக்கள் அவையாகும். உதாரணமாக சைமன் காசிச் செட்டி பற்றி அவர் குறிப்பிட பதினேழு வயதின் பன்மொழிப் பண்டிதர் என எழுதியுள்ளார். ஒசை நயத்துடன் கூடிய பல தலைப்புக்கள் இதில் உள. இறுதியில் ஒரு பொருத்தமான திருக்குறளையும் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
இந்நூலின் இன்னோர் சிறப்பு உசாத்துணை நூல்களும் இலக்கிய நேர்மையும் பற்றியதாகும். முன்னுரையில் எவ்வாறு இந்த தகவல்களைப் பெற்றுக்கொண்டார் என்பதினை மிகவும் நெறிப்பட எழுதியுள்ளார். பலருடன் தொடர்பு கொண்டு, நண்பர்களை உருவாக்கி, ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, நூல்களை வாசித்து இவ்வரிய நூலை உருவாக்கியுள்ளார்.
எழுத்துப் பிழைகள் மிகவும் குறைவாக, சரியான குறியீடுகள் கொண்டு இந்நூல் விளங்குவதால் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பணியினை நினைவுகூர வைக்கின்றது. அவர் எல்லா விடயங்களிலுமே சிந்தித்துச் செயற்படுபவர் என்பதற்கு அட்டைப் படம் சாட்சிபகர்கின்றது. இந்த நூலுக்கு ஆய்வுரை எழுதிய அருட்திரு. ஏ.ஜே.பி. சந்திரகாந்தன் அடிகளார் "நல்ல அழகிய நூல், தெளிவான சிந்தனை, நெடுங்காலம் கொண்ட ஓர் ஆய்வு நூல்" எனப் பெருமிதம் கொள்கிறார். மனோபலம் மிக்க ஆசிரியரின் இந்நூல் தமிழ் மொழிக்கு ஒரு முத்தாரமாகிறது.
ஆய்வுக் கூர்மையும் அறிவுத் தேடலும் கொண்ட வித்துவான் எழுதிய எழுத்துக்கள் அத்தனையும் தெளிவான தமிழ் நடையிலும், எளிமையான பண்பும், உருவத்தால் கம்பீரமும், உள்ளத்தால் ஆளுமை நிறைந்த நிலையும், தமிழ் மொழியில் மிகுந்த காதல் கொண்ட இவர் பல்துறை வித்தகர், பவளவிழாகண்ட அறிஞர். தமிழிலக்கிய ஆய்வுத்துறையின் இடைவெளியை நிரப்பி நிற்கும் இவர் தமிழுக்குச் செழுமை சேர்த்து நிற்கும் 'கிழக்கின் ஒளி' என்பதில் ஐயமில்லை.
83 வித்துவரத்தினம்

Page 44
பவளவிழாக் காணும் தமிழ்ச்சான்றோன் கலாநிதி. சு.சிவநாயகமூர்த்தி முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்
தமிழீழத்தின் வடக்கிலும், கிழக்கிலும் காலத்திற்குக் காலம் பல பேரறிஞர்களும், கல்விமான்களும், வித்துவான்களும், பண்டிதர்களும், புலவர்களும் தோன்றி தமிழ் மொழியையும், தமிழ்க் கலாசாரத்தையும் பேணிவளர்த்து வந்துள்ளார்கள், வளர்த்தும் வருகிறார்கள். அவர்களின் வரிசையில் கிழக்கிலங்கையில் மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலுள்ள தம்பிலுவில் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வித்துவான் க. செபரத்தினம் ஐயா அவர்களும் ஒருவராவர். இவர் ஒரு முத்தமிழ் வித்தகராவார். இவர் பேச்சு வன்மையிலும், சிறுகதை, கவிதை, கட்டுரைத் திறமையிலும், நாடகத்துறையிலும் சிறந்து விளங்குகின்றார்.
நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் தனது ஆசிரிய தராதரப் பத்திரத்தைப் பெற்று ஆசிரியரானார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தையும், அதே பல்கலைக் கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். பேராசிரியர்களான க.கணபதிப்பிள்ளை, வி.செல்வநாயகம், சு.வித்தியானந்தன், ஆசதாசிவம் ஆகியோருடன் நெருங்கிப் பழகி அவர்களின் நீங்காத நட்பையும் தொடர்புகளையும் பேணி வைத்திருந்தார். இவர் தாயகத் தில் பல சமுதாயப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டுழைத்ததோடு, பல சங்கங்களில் உறுப்பினராகவும், செயலாளராகவும் சிறந்த பணியாற்றியுள்ளார். கனடாவிலும் சுவாமி விபுலானந்தர் கலை மன்றத்தின் துணைத் தலைவராகவும், காப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளதோடு அம்மன்றத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகின்றார்.
இவர் மதிப்புமிக்க ஒரு நல்லாசானாகவும், அதிபராகவும் பதவிகளை வகித்துச் சிறந்த சேவையாற்றியுள்ளார். சிறந்த எழுத்தாளனாக, இலங்கையின் பல தமிழ்ப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாகப் கட்டுரைகளை எழுதிப் பலரின் பாராட்டுக்களையும், பரிசில்களையும் பெற்றிருந்தார். இவர் பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் "வாழையடி வாழை," ஒரு அற்புதமான இலக்கியப் படைப்பாகும். “விபுலானந்த அடிகளார் வாழ்வும் வளமும்”
84 வித்துவரத்தினம்
 

சுவாமியின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்து வியக்கத்தக்கதாக உள்ளது. “நயனங்கள் பேசுகின்றன” சிறுகதைத் தொகுதி, "ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்”, “தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும்” ஆகிய இவரது ஏனைய நூல்களும் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளன. 'வாழையடி வாழை பல்கலைக் கழக உசாத்துணை நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நயனங்கள் பேசுகின்றன என்னும் சிறுகதைத் தொகுதியில் சமுதாய இலக்குகளின் பிரதிபலிப்பு, மனிதநேயத்தின் வெளிப்பாடும் விஞ்சிநிற்கின்றன. இவரின் "ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்" என்னும் நூல் ஈழத்துப் பெரியார்கள் பற்றிப் போதிய அளவு பதிவுகளில்லாத குறையைப் போக்குவதோடு தற்போதைய சந்ததியினர் மட்டுமன்றி, எதிர்காலச் சந்ததியினரும் எமது சான்றோர்களின் வரலாறுகளை அறியத்தக்க வகையில் ஒரு வரலாற்று ஆவணமாகத் திகழுகிறது.
இவரின் நாடகம், கவிதை, சிறுகதைத் தொகுதிகளை மதிப்பீடு செய்த இலங்கை அரசு இவருக்குத் தமிழ் ஒளி' என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்துள்ளது. மட்டு, பல்கலைக் கழகமும் இவருக்கு கெளரவ முதுமானிப் பட்டம் வழங்கியுள்ளது. இவற்றுடன் அண்மையில் கனடாவில் தமிழர் தகவல் நிறுவனம், விருதுடன் தங்கப் பதக்கமும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவருடன் முதன் முதலாக யான் விபுலானந்த அடிகளாரின் விழாவில் பேராசிரியர் கலாநிதி. இ.பாலசுந்தரம் அவர்கள்மூலம் அறிமுகமானேன். அதன் பிற்பாடு பல விழாக்களிலும், நூல் வெளியீட்டு நிகழ்வுகளிலும் சந்தித்துக் கலந்துரையாடவும் அவரைப்பற்றி அறியவும் வாய்ப்புக்கள் ஏற்பட்டன. பின்னர் அவருடன் பழகவும்,அவரின் பேச்சுக்களைக் கேட்கவும்,அவரின் நூல்களை வாசிக்கவும் சந்தர்பங்கள் கிடைத்தன. அவற்றின்மூலம் அவரின் பண்பையும், அறிவையும், திறமைகளையும் நன்கு அறிந்து கொண்டேன். மற்றவர்களோடு அன்பாகப் பழகும் சுபாவமும், இனிமையான வார்த்தைகளும் அவரின் ஆழ்ந்த கருத்துக்களும், உயரிய சிந்தனைகளும் என்னை மிகவும் கவர்ந்தன. பவளவிழாக் கொண்டாடும் இச்சுபதினத்தில் அவர் நீடூழி வாழ்ந்து தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் மேலும் பல சேவைகளைச் செய்ய அருள் புரிய வேண்டுமென, இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
85 வித்துவரத்தினம்

Page 45
என்மனச் மனச்சிறையில் வித்துவான்
என். முருகேசபிள்ளை
மக்களின் மேன்மைக்காக பலர் தங்களை அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றனர். முக்கியமாகக் கல்வி, மொழி, கலாசார மேம்பாட்டிற்கு மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். எல்லோரும் நல் வாழ்வு வாழவேண்டுமென்று அயராது பாடுபடுகின்றனர். தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்த், தங்கள் சொந்த நலன்களை விடுத்து மக்கள் சேவையே மகேசன் சேவையெனனும் உயரிய இலட்சியத்துடன் உழைக்கின்றனர். இவர்களின் வரிசையில் ஒரு முக்கிய இடத்தை வகிப்பவர் திரு. கனகரத்தினம் செபரத்தினம் அவர்கள், அன்பு, இன்சொல், பணிவுடைமை, சினங் கொள்ளாமை, ஆகியவற்றை அணிகலன்களாகக் கொண்டுள்ள சிறந்த கல்விமான். “பெருமை பெருமிதம் இன்மை, சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்” என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு அடையாளமாகத் திகழ்கின்றார். அவருடன் சேவையாற்றி, அவரின் வழிநடத்தலால் பயனடைந்தவன் என்ற வகையில் வித் துவான் க.செ.யைப் பற்றிக் கூறுவதில் மகிழ்சியடைகின்றேன்.
செபரத்தினம் அவர்கள், வித்துவான் என்றே எல்லோராலும் அன்புடன் அழைக்கப்டுகிறார். செபரத்தினம் என்பதைவிட வித்துவான் என்ற பெயரே பெரிதும் வழக்கிலுள்ளதாகிவிட்டது. இவரது சிறந்த குண இயல்புகளால் மக்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும், மிகுந்த செல்வாக்கும் கொண்டவராக திகழ்கின்றார். இவரை ஈன்றெடுத்த அன்னை எஸ்தர் சின்னாச்சி அவர்கள் என்ன தவம் செய்தார் என்று வியக்குமளவிற்கு ஒரு சிறந்த குடிமகனாகத் திகழ்வதைக் காண்கின்றோம். என்றும் ஒரு நடு நிலைவாதியாகவே வாழ்ந்து வருகின்றார். விடாமுயற்சியும், உறுதியான உள்ளமும், தன்னம்பிக்கையும் இவரது ஆயுதங்கள். ஊக்கமும் உற்சாகமும் நிறையப் பெற்ற க.செ அவர்கள் வித்துவான், பி.ஏ. கல்வி டிப்ளோமா போன்ற தகைமமைகளைப் பெற்றதோடு, இலங்கை இந்துகாலசார அமைச்சு இவரின் தமிழ் ஆளுமையை மதித்து தமிழ் ஒளி' என்னும், சிறப்புப் பட்டத்தையும் வழங்கிக் கெளரவித்தது. 86 வித்துவரத்தினம்
 

திரு. க.செ.அவர்கள் ஒரு பல்துறைக் கலைஞர். ஆசிரியர், அதிபர், எழுத்தாளர், இலக்கிய ஆசான், சொற்பொழிவாளர், நாடகாசிரியர் என்றெல்லாம் பல சிறப்பு அம்சங்கள் கொண்டிலங்குகின்றார். தான் பெற்ற கல்விச் செல்வம் பலருக்கும் பயன்படவேண்டும் மென்ற உயரிய நோக்கில் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து அதிபராகப் பணியாற்றிப் பல மகத்தான சேவைகளைச் செய்தார். பழுகாமம் கண்டுமணி மத்திய மகாவித்தியாலம், பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆகிய இரண்டிலும் இவரது சேவைக்காலம் வரலாற்று முக்கியம் வாய்ந்ததாகும். இவ்விரு பாடசாலைகளும் இவரது நிருவாகத்தின் கீழ் துரித வளர்சசி கண்டதை யாவரும் அறிவர். மாணவர்களின் உடல் உள வளர்ச்சியை மையமாகக் கொணடு பயனுற்ற பல கலாசார நிகழ்ச்சிகள், கல்விப் பொருட்காட்சிகள், மெய்வல்லுனர் போட்டிகள் பலவற்றையும் நடத்தி மாணவர்களின் திறமைகளை விருத்தி செய்ய உழைத்தார். ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோருடன் தகுந்த அணுகுமுறையைத் கையாண்டு சிறப்பான பெறுபேறுகளைப் பெற வழிகோலினார். இவரிடம் பயின்று பட்டங்கள் பெற்று, உயர் அதிகாரிகளாகப் பதவிவகிக்கும் பலர் என்றும் நன்றிக் கடப்பாட்டுடன் இருக்கின்றார்கள். கல்வியில் கட்டொழுங்கு இல்லாவிடின் நல்ல சமுாயத்தை உருவாக்க முடியாது என்பது இவரது இறுக்கமான கொள்கை, ஒழுக்கம், ஒழுங்கு கட்டுப்பாடு என்கின்ற நெறிமுறைப் பதங்களை மாணவரிடையே அடிக்கடி வலியுறுத்திக் கூறுவார். அதன் விளைவால் நல்ல பல மாணவர்கள் உருவாகிப் பயனுற்ற மக்களாய் வாழ்வதைக் காண்கின்றோம்.
வித்துவான் செபரத்தினம் அவர்களுக்குச் சுவாமி விபுலாநந்தர் மீதுள்ள அளப்பரிய பற்றுதலும் பக்தியும் பற்றி யாவரும் அறிவர். தான் கடமையாற்றிய பாடசாலைகளில் எல்லாம் விபுலானந்த விழாக்களை நடத்தத் தவறியதில்லை. பழுகாமம் மத்திய மகாவித்தியாலயத்தில் நிமிர்ந்து நிற்கும் விபுலாநந்தரின் முழு உருவச்சிலை திரு.க.செ.யின் முயற்சியால் நிறுவப்பட்டதாகும். அது மட்டுமல்லாது பட்டிருப்புத் தேசிய பாடசாலையயில் அப்பகுதி மக்கள் என்றும் கண்டிராத வகையில் மாபெரும் விபுலாநந்த விழாவை நடத்தி, மலரை வெளியிட்டு, எல்லோரதும் பாராட்டுதலையும் பெற்றவர். அண்மையில் மட்டக்களப்பில் மறைந்த சுவாமி ஜீவானந்தாவின் ஞாபகார்த்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரு. க.செ. உரையாற்றும்போது "நான் சுவாமி விபுலாநந்தரை நேரில் காணாவிடினும் அவரை நேரில் கண்ட சுவாமி ஜுவானந்தாவைக் கண்டு கதைத்திருக்கிறேன், இதை நான் பெற்ற பாக்கியமாகக்
87 வித்துவரத்தினம்

Page 46
கருதுகின்றேன்” என உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார். இதிலிருந்து சுவாமிவிபுலாநந்தர் மீது அவருக்கிருக்கின்ற ஈடுபாட்டை உணரலாம். கல்விப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலே பல நூல்களை எழுதிவெளியிட்டார். நாளேடுகளுக்கும், வெளியீடுகளுக்கும் நல்ல பல கட்டுரைகள் கதைகளை எழுதி தனது அனுபவங்களும் அறிவும் மக்களைச் சென்றடைய வழிசெய்தார். “உலகு இன்புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார” என்னும் வள்ளுளவர் வாக்கிற்கமைய என்றும் எப்பொழுதும் மற்றவர்க்குப் பயன் உள்ள வகையில் வாழ்வதையே தன் குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதை அவரது சொல்லிலும் செயலிலும் காண்கின்றோம். மற்றவர்களின் ஆற்றல்கள் நம்பிக்கைகளைக் குறைகூறுவதைக் காணமுடியது. “குணம் நாடிக் குற்றம் நாடவேண்டும்” என்று அவர் மற்றவர்க்குக் கூறுவதை பல வேளைகளில் கேட்டிருக்கின்றேன். அவரது சொற்பொழிவுகளைக் கேட்கும்போது இனிய தமிழ் ஓசை ஓங்கி ஒலிதரும். தொடர்ந்தும் பேசமாட்டாரா என்கிற அளவிற்கு அவரது தமிழ்ச் சொல்லோவியம் எங்களைக் கவர்கின்றது. இப்படி எழுத்தாற்றல், பேச்சாற்றல் மூலம் திரு.செபரத்தினம் அவர்கள் தமிழியலுக்கு ஆற்றுகின்ற பங்களிப்பைத் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் நன்றியுடன் மனங்கொள்ளும்.
ஓய்வு ஒழிச்சலின்றி உழைப்பையே மூச்சாகக் கொண்டு தமிழ் அறிஞர்களினதும் துணைகொண்டும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். அவரே அச்சங்கத்தின் செயலாளராகக் கடமையாற்றி வருங்காலை நாட்டில் ஏற்பட்ட பாதகமான அரசியல் காரணங்களால் சங்கவேலைகளைத் தொடமுடியவில்லை. மனமொடிந்த நிலையில் நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து வந்தாலும் தமிழ்ப் பணி குறையவில்லை. நூல்கள், கட்டுரைகள், கதைகள் என்று தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கின்றார். "என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்னும் மனத்திட்பம் கொண்ட வித்துவான் க.செபரத்தினம் அவர்களின் தமிழ்ப்பணி வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துவோமாக.
"கற்றாங்கு ஒழுகின் மேலோர் உலகு உய்வர்”
88 வித்துவரத்தினம்

வணக்கத்துக்குரிய ரத்தினம்
அஜந்தா ஞானமுத்து
கிழக்கிலங்கையின் செழிப்பான மண்வளத்துடன் அதனுள் இருந்து ஊற்றெடுக்கும் தண்ணிரும் ஒருசுவையே. மதுரமரத்தடியோ அல்லது மருங்கை மரத்தடி ஊற்ரோ என்று பலமரத்தடி ஊற்றுக்களில் அந்தச்சுவையான நீரை அருந்தலாம். அங்குள்ள மண்ணும் தண்ணிரும் தானோ என்னவோ அங்கு பிறந்து உலகப்புகழ் பூத்த முத்தமிழ் வித்தகர், புலவர் மணிகள், கவிஞர்கள், வித்துவான்கள், பண்டிதர்கள், எழுத்தாளர்கள் எனப்பலரும் அழகுதமிழை அருமையாகவும் இனிமையாகவும் எழுதவும், பேசவும் செய்கின்றனர் போலும்.
இப்படியான கிழக்கிலங்கையைச் சேர்ந்தசான்றோர்கள் புலம்பெயர்ந்து வாழும் காலத்திலே அவர்களுடன் நானும் வாழுகின்றேன் என்னும் பெருமை எனக்கும் உண்டு. தமிழுலகின் தலைசிறந்த எழுத்தாளர்களான கலாநிதி ஈழத்துப்பூராடனார், வித்துவான் செபரத்தினம், வித்துவான் ஞானரத் தினம், தமிழ்ப்பேராசிரியர் கலாநிதி பாலசுந்தரம், மண்வாசனைக் கவிஞர்கள் சக்கரவர்த்தி, காசிஆனந்தன் நண்பர் கனக்ஸ் ஆகியோருடன் நேரடியாகப்பழகும் பாக்கியம் எனக்கு கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்வடைகின்றேன்.
மேற்குறிப்பிட்டவர்களுள் தமிழுக்கு தலையாக கனடாவில் வாழும் ஈழத்துப் பூராடனாரை கடந்த பதினைந்து வருடங்களாக என்னுள் வரிந்து கொண்டுவிட்டேன். வித்துவான் செபரத்தினம் அவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக எனது வணக்கத்துக்குரிய இரத்தினமாகிவிட்டார்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே! நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே! நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே! அவரோடு இணைங்கியிருப்பதுவும் நன்றே
- ஒளவையார் செபம் = வணக்கம் அதனாலும் செபரத்தினம் வணக்கத்துக்கு உரியவரே. எனது தந்தையார் 1997ல் கனடாவில்
89 :.، வித்துவரத்தினம்

Page 47
காலமாகியபின்னர் ஈழத்துப்பூராடனார் அவர்களால் தயாரிக்கப்பட்ட மலரில் செபரத்தினம் ஐயா அவர்கள் எனது தந்தையார் பற்றி எழுதிய குறிப்புக்கள் என்னை அவர்பால் பெரிதும் கவர்ந்தன.
கனடாவில் புலம்பெயர்ந்த கிழக்கிலங்கை மக்களை ஒன்றுசேர்த்து பல நிகழ்ச்சிகளை செய்ய வேண்டும் என்ற தாகத்தில் இருந்த மிகச்சிலருள் நானும் ஒருவன். அன்று பாடுமீன்களின் ஒன்றுகூடல் பலநூறுபேர் வந்திருந்தனர். மழையின் தாக்கத்தால் ஒன்றுகூடல் தாமதாகிவிட்டது. அன்று நடந்த ஒன்றுகூடலை ஆரம்பித்து வைக்க வித்துவான் செபரத்தினம் அவர்களை நாடினேன். பட்டிருப்பு மகாவித்தியாலயத்தின் கல்விவளர்ச்சிக்கு ஏணியாக இருந்த பொறுப்பான அதிபர். வயதில் மூத்தவர். பலராலும் மதிக்கப்படுபவர். ஒன்றுகூடல் நடைபெற்ற இடத்தில் வைத்தே முன்னறிவித்தல் எதுவுமின்றி கேட்டேன் ஒத்துக்கொண்டார்.
கல்லூரியின் அதிபராயிருந்தவர் இறுக்கமானவர், கண்டிப்பானவர் எனப்பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். பொது இடங்களில் சந்தித்திருந்தாலும் பேசுவதற்கு என்னுள் ஒரு தயக்கம். ஆரம்ப உரை அவரின் மனம் நிறைந்த வாழ்த்தாகவும் அமைந்தது. ஒன்றுகூடல் சிறப்பாகவும் நடந்தேறியது. முடியாதென்றார்கள், முடித்துக்காட்டினோம்.
தொடர்ந்து விபுலாநந்தருக்கு பெருவிழா. தலைசிறந்த தலைவர்களின் வழிகாட்டலில் செயலாளராக நான். வித்துவான் ஐயா அவர்களின் விழாவிற்கான சிந்தனைகள் செயற்பாடுகள் யாவும் விபுலாநந்தர் விழாவைப் பற்றியதாகவே இருக்கும். அவரது கருத்துக்கள் என்னை புடம்போட்டன. வேலைப்பழு குடும்பத் தொல்லையுடன் விபுலாநந்தர்விழாவை என்னால் தொடரமுடியாத ஒருசூழ்நிலை. வேலையை உதறிவிட்டு விழாவில் முழுமூச்சாக தொடர்ந்தேன். காரணம் தொடங்கிய காரியம் நன்றாக முடிய வேண்டுமென்ற நோக்கு. அத்தோடு எமது நிர்வாககுழுவினர்களுடன் இயங்குவது. அவர்கள் ஒவ்வொருவரும் ஒன்றாக இணைந்த பல்கலைக் கழகங்களுடன் செயற்படுவது போன்ற ஒருவேட்கை எனக்கு.
வித்துவான் அவர்களும் ஒருதனிப்பல்கலைக்கழகம். சிரிப்பாகவும் சுருக்கமாகவும் கருத்தை தெரிவித்துவிடுவார். சூடாகவும் குளிராகவும் இரண்டும் கலந்தது போன்ற அவரது கருத்துக்களில் ஆறுமாதங்கள, 180 நாட்களில் 300 தடவைகளுக்கு மேல் தொடர்ச்சியாக தொலைபேசியில் கதைத்திருப்போம். உரையாடலில் விபுலாநந்தருடன் ஒளவையார், வள்ளுவன், இயேசுபிரான் எல்லாரும்
90 வித்துவரத்தினம்

வந்து போவார்கள்.
பல கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தினோம் முரண்பாடுகள் கருத்து வேறுபாடுகள் தலைக்கணம் போன்ற பல தகராறுகள். தளராது தளம்பாது சிரித்த முகத்துடன் கருத்துக்களை செவிமடுத்து அழகு தமிழில் பதிலிறுப்பார். கட்டியணைக்கும் சுபாவம், ஏற்றுக்கொண்ட பொறுப்பில் நிதானம் தவறாமை. கூட்டத்திற்கான போக்குவரத்து வசதியின்மை, காலநிலை, சுகயினம் எல்லாமே விபுலாநந்த விழாவின்முன்னே தூசாகிவிட்டிருந்தன வித்துவான் ஐயா அவர்கட்கு. விபுலாநந்தரை விற்பனையாக்க முனைந்த பலருக்கு சாட்  ையடி கொடுத்தார். விபுலம் விளைந்தது அது அறுவடையாவதற்கு முக்கிய கர்த்தா. சகலரும் வாயில் கைவைக்கும்படி ஒன்றிணைத்த பல்கலை வித்துவான்களால் விபுலாநந்தர் விழா சிறப்புற நடைபெற்றது. நல்லதிருப்தி. ஐயா தன்வெற்றிப் பெருமிதத்தில் நெஞ்சை நிமிர்த்தி விழாவில் வரவேற்று உரையாற்றியதில் வெளிப்பட்டது அது.
பிறந்த ஊரில் கல்வியில்சிறந்து பல்கலைக்கழகம் சென்று புகுந்த இடத்தில் உயர்குடும்பமாகப் பரிணமித்து அடைந்துகொண்ட இடத்தில் மணம் வீசுகின்றார் ஐயா. நல்ல குடும்பத்தலைவனாக, ஆசிரியனாக, அதிபராக, சமூகசேவையாளனாக, எழுத்தாளனாக, தெய்வ பக்தியாளனாக, இவை எல்லாவற்றையும் விட ஒரு சிறந்தமனிதனாக வாழுகின்றார் வித்துவான் செபரத்தினம். நிமிர்ந்த நடை நேரான பார்வை சிரித்தமுகம் அன்பான வரவேற்புடன் எழுபத்தி ஐந்து வயதிலும் தளராமல் தொடர்கின்றது தமிழில் அவர்பணி.
அன்பான அடக்கமான மனையாள். தன் கணவனின் தமிழ்ப்பசிக்கு விருந்து படைத்த பெண். தமிழ்மாலை சூட பக்கத்துணை நின்று அரங்கமேற்றிய பாரியார். விருந்தோம்பலில் சிறந்த இல்லத்தாள். பண்பான பிள்ளைகள் யாவும் ஒட்டுமொத்தமாக சிறப்பாக அமையப்பெற்ற வித்துவான் அவர்களின் சிறந்தகுடும்பம். வாழையடிவாழையாக தமிழ்வளர்த்து ஈழத்துச் சான்றோனாகி விட்ட வணக்கத்துக்குரிய இரத்தினம் பற்றி மனம் விட்டு எழுதி விட்டேன். என் மண்ணின் பெருமை சிறக்கச் செய்த வித்துவான் செபரத்தினம் கலாநிதி செபரத்தினமாக வேண்டும் என்ற ஆதங்கம்.
கடவுள் ஆசீர்வதிப்பாராக!
91 வித்துவரத்தினம்

Page 48
எங்கள் தமிழ் ஒளி பிலோமினா கிருஷ்ணபிள்ளை
மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு தந்த, தந்து கொணி டிருக்கும் பல வித்தகள்கள், அறிஞர்கள் வரிசையில் எங்கள் தமிழ் ஒளி வித்துவான் திரு. களகரத்தினம் செபரத்தினம் ஐயாவும் ஒருவர். நான் ஏன் பிறந்தேன், எனது மொழியாம் உயரிய தமிழ் மொழிக்கு நான் என்ன செய்தேன் என ஒவ்வொரு தமிழனும் நினைத் திருந்தால் இன்று எம் நிலை எங்கோ உயர்ந்திருக்கும். இருப்பினும் சில பல நல்ல தமிழறிஞர்கள் இன்னும் இக்கைங்கரியத்தில் நெய்யூற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நற்காரியத்தைச் செய்ய வேண்டியே 1930ம் வருடம் மட்டக்களப்பிற்கு தெற்கே 45 மைல் தொலைவிலுள்ள அழகிய கிராமமான தம்பிலுவிலில் தோன்றி 1959ல் நேசம்மா எனும் நேசமான மங்கையை பழுகாமத்தில் கைப்பிடித்தார். இல்லறப்பூங்காவில் இனிய நான்கு மலர்கள் பூத்தன. அவர்களின் இனிய வாழ்விலும் ஒன்பது
D6)frtb6ft.
எழுத்துத்துறை எனும் இனிய பூங்காவிலே பூத்த மலர்கள்:
* வாழையடி வாழை * விபுலாநந்த அடிகளாரின் வாழ்வும் வளமும் *நயனங்கள் பேசுகின்றள *ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் * தமிழ் நாடும் ஈழத்துத் தமிழ் சான்றோரும் * கவிஞர் கந்தவனத்தின் கவி வளம் என்பனவற்றோடு தொகுப்பு:
“கிழக்கு மண்ணின் புகழ் பூத்த மைந்தர்கள்’ 2ம்
பாகம்
கவிஞர்களும் எழுத்தாளர்களும் தம் படைப்புக்களை உலகிற்களிக்கும் போது அவர்களது மனநிறைவும், மனமகிழ்வும் எழுத்தினால் விபரிக்க முடியாது. மனப்பூரிப்புடன் மலர்ந்த முகத்துடன் வாழும் ஐயாவின் திறமையே இதற்குச்
92 வித்துவரத்தினம்
 

கொண்டவர் இவர்.
1994ல் இலங்கை அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட தமிழ் ஒளி எனும் பட்டத்தைச் சவீகரித்துக் கொண்டவர். இன்னும் பல பட்டியலிட முடியாத அளவு பட்டங்களை வென்றவர். ஆனாலும் தற்பெருமையற்ற எளிய மனிதர்.
தமிழ் வரலாறிறிலும் தமிழ் மக்கள் மனதிலும் இவர் பெயர் பொறிக்கப்படும் என்பதில் ஐயமேயில்லை.
வாழ்க -வளர்க அவர் சேவை
93 வித்துவரத்தினம்

Page 49
எனது நண்பர் செபரத்தினம்
நல்லதம்பி பாலசிங்கம் B.A. London, Dip.in.Ed. (ஒய்வுநிலை ஆசிரியர்) திருவாளர் செபரத்தினம் அவர்களுடனான எனது நட்பு ஏறக்குறைய 38ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. எங்கள் நட்புக்கு, கண்டி மாவட்டத்திலுள்ள ஹன்தெஸ்ஸ அல்-மனார் மகாவித்தியாலயமே நிலைக்களமாக அமைந்தது. நாங்கள் இருவரும் இலங்கையில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து - நான் யாழ்ப்பாணத்திலும், அவர் மட்டக் களப்பிலுமிருந்தும் சென்று அந்தப்பாடசாலையில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தோம்.
நாங்கள இருவரும் அந்தியோந்நியமாகப் பழகியதால் எங்களுக்கிடையேயான நட்பு நாளொருவண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து, தெய்வப்புலவர் திருவள்ளுவனார் நட்புப்பற்றிக் கூறியுள்ள கருத்துக்களுக் கமைய புதிய பரிமாணம் பெறலாயிற்று. செபரத்தினம் என்னோடு கற்பித்த காலம் குறுகியதாக இருந்த போதிலும், அவருடைய குணாதிசயங்கள் எனது மனத்தை விட்டு அகலவேயில்லை. அவரது சொந்த ஊர்மக்கள் கேட்டுக்கொண்டதற்கமைய அவர் இடமாற்றம் பெற்றுச் சென்று விட்டார்.
அவர் எப்பொழுதும் சிரித்த முகத்தோடு காணப்படுவார். அதனால் அவருடனான நட்பானது, சிரித்து விளையாடும் தன்மையதன்று, நாங்கள் எப்போதாவது பிழைவிடும்போது அந்தப் பிழைகளைச் சுட்டிக்காட்டி, ஒருவர் மற்றவரை நல்வழிப்படுத்தும் தன்மையைதாக அமைந்திருந்தது.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு' என்பது, வள்ளுவனாரின் திருவாக்காகும். ஏறக்குறைய 37 ஆண்டுகளுக்குப்பின் அவரைநேரில் சந்திக்கும் பாக்கியம் எனக்குக்கனடாவிற் கிடைத்தது. அவர் தமிழ் மொழிபற்றியும், தமிழுக்குத் தொண்டுசெய்த பெரியோர்கள் பற்றியும் அடிக்கடி பத்திரிகைகளில் எழுதுவதுண்டு. ஒரு நாள் அவருடைய கட்டுரை ஒன்றினை வாசித்தபோது. கட்டுரையின் இறுதியில் அவருடைய தொலைபேசி இலக்கம் இருந்தது. உடனடியாக அந்தத் தொலைபேசி இலக்கத்தில் அவருடன் தொடர்பு கொண்டேன். 94 வித்துவரத்தினம்
 

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?
"பொன்னின் குடமுடைந்தால், பின்னும் பொருந்து மன்றோ? என்று குசேலர் கண்ணபிரானைச்சந்தித்தமையை வருணித்து, கிங்ஸ்பெரி (Kingsbery) அடிகளார் கூறியுள்ள வார்த்தைகளே, அன்று என் நினைவுக்கு வந்தன. அவரை நேரிற் சந்திக்க வேண்டும் என்னும் எண்ணம் மீதுாரப் பெற்றமையால், ஒருநாள் அவருடைய வீட்டுக்குச் சென்று நெடுநேரமாக அளவளாவிக் கொண்டிருந்தோம். தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் செபரத்தினம் செய்துவரும் சேவை பாராட்டுக்குரியது. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு, அருந்தொண்டாற்றியவர்களின் வரலாற்றை வெளியிட்டுவரும் அவரது பணி, என்றென்றும் பாராட்டப்படவேண்டிய தொன்றாம். இவ்வாறு அவர் வெளியிட்டுவரும் நூல்கள் மூலம் எங்கள் இளைஞர்கள் மத்தியில் தலைமுறை தலைமுறையாக அவர் நினைவு கூரப்படுவார் என்பது திண்ணம்.
பிரான்ஸ் நாட்டுச் சரித்திரத்தில், நெப்போலியனைப்பற்றி அறியாதார் இலர். பிரான்ஸ் நாட்டுச் சட்டங்களையெல்லாம் தொகுத்து “CODENAPOLEON’ என்னும் பெயரில் ஒரு நூலாக வெளியிட்ட ou(b60)LD 96.60).J(3u FT(5b. Q(5 FLDub "I shall go down in history with the code in my hando 61601 QbČ(3UT65uj6ó dosló0TJTib. அதே போல செபரத்தினம் அவர்களின் சேவையும் மக்கள் மனதில் அழியா இடத்தைப் பெற்றுவிடும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை.
நாம் இப்பூவுலகின் வாழ்வைச் சிறந்த முறையில் பயன் கொண்டிட வேண்டுமெனில், எமது மறைவுக்குப் பின்னும் மற்றவர்கள் எம்மை நினைவு கூரத்தக்கதாய், ஏதேனும் நல்ல தொரு செயலைச் செய்திடவேண்டும்.
"The greatest use of a life is to use it for something that will Outlast it’ என்னும் கூற்றுக்கு செபரத்தினம் அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
நண்பர் செபரத்தினம் அவர்களின் தமிழ்ப்பணி மென்மேலும் சிறப்புடைய எனது மனமார்ந்த வாழ்த்து உரித்தாகட்டும்.
வளர்க தமிழ் மொழி! வாழ்க தமிழினம்!
95 வித்துவரத்தினம்

Page 50
The Revd. McGlashan
102 Westway, London SW 20 SLS
Viduvan Sebaratnam
I count it a privilege to be invited me to contribute my appreciation on Vidhwan K. Sebaratnam's latest publication, "Tamilnatum Elaththu Tamile Chanrorum' on its launch. I have enjoyed reading this book, which is attractively produced and written in clear and simple Tamil, Based on the author's extensive research, it gives an account of the lives of twenty four mainly nineteenth and twentieth century Tamil scholars who were born in SriLanka made to the development of Tamil literature during this period, and also the close cultural ties, that bound together the Tamil communities in those two geographical locations.
In my own more recent personal contacts with members of the Tamil community both in India and in Britain, I have been struck by the concern that I have frequently heard expressed concerning the attitude of the younger generation towards their cultural heritage. In the West, it is easy for Tamil Children to attend their local school and to excel in their studies, but to grow up without the ability to read and write their mother tongue. They appear able to adapt very readily to their new cultural environment. In India, on the other hand, college students would often say their immediate aim in life was to gain a qualification in computer studies and then leave to United States to find a job or pursue higher studies.
I see this phenomenon as an aspect of the current trend towards "globalization, because of its technical advances and the life style; which that has engendered, western culture, and in particular American popular culture,enjoys massive prestige across the world and exercises a powerful, almost irresistible, attraction for young people everywhere. One result of this trend is a creeping threat to cultural bio-diversity. Just as economic exploitation of the earth's environment that threatens the extinction of innumerable life forms, so the cultural homogenization and minority languages. Just as in the case of the threat to biological diversity,
such a diminution of cultural diversity also would represent an
· 96 வித்துவரத்தினம்
 

irreparable loss to humankind.
The leaders of the Tamil community whom I meetin Lon(loin through my contacts with some of the many thriving Tamil Saiva temples here are fully aware of these dangers, and they are making strenuous efforts to nurture an acquaintance with, and an appropriate pride in, their cultural heritage among the younger generation. In many of the temples, classes in Tamil, in Carmatic music and Bharatha natyam, are conducted at weekends outside regular school hours. Competitions for young people in music and public speaking are held in conjunction with community festivals and conferences. I whole-heartedly applaud the dedication of the many volunteers who give their time and talents to promoting such initiatives. They are striking a timely blow for cultural biodiversity
This brings us back to the present occasion and to Vidhwan Sebaratnam's book. The author has illuminated for the worldwide Tamil community a significant feature of its history, and highlighted and examples of many who have laboured for the enrichment of Tamilliterary culture, often in the midst of adverse circumstances. I trust than the series of vivid snap-shots presented in this book will kindle in readers young and old a deeper appreciation of their heritage, and encourage them to make a wider exploration of the treasures, which that heritage contains.
97 வித்துவரத்தினம்

Page 51
ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் என்ற அரிய நூலை எழுதிய வித்துவான் க.செபரத்தினம் அவர்களைப் பாராட்டிப் புலவர்மணி வித்துவான்
அடைக்கலமுத்து (அமுது) வைத்த பொட்டு பிறப்பறியாத் தமிழரசி துயில் கொண்ட திண்ணை
பேரறிவூர் புலாம் உழுது பயிர் ரெய்த பன்ைனை சிறப்பறிந்த சான்றோர்கள் வரப்புயரக் கட்டி
செம்மைசேர் வாய்க்கால்கள் முத்தமிழனப் பாய்ச்சி மறப்ரிய உரமிட்டுக் களைகளையும் நீக்கி
வளர்த்த தமிழ் செழிப்படைந்து தென்றலிலே ஆட உறக்கமற்றுப் பணிபுரிந்த பதினெட்டுச் சான்றோர்
உண்மைவர லாறுகளைச்சாறாகப் பிழிந்தார்.
நாட்டினிலே மூதறிஞர் வரலாறு கண்டோம்
நாடுவிட்ட படலத்தில் பிறநாடு வந்தோம் கேட்டடம் செய்திகளின் வேர்விழுதும் அறிந்தோர்
கேளாத வரலாறறின் கிளைநதிகள் எந்த போட்டினிலே உற்பத்தி யானதெனத் தெரிந்தோம்
விரிந்தபல வரலாறு காலத்தால் சிதையாத் தேட்டமிது என்றுவரும் சந்ததிகள் சொல்லும்
சிந்தையிலே சந்தத்தைப் பூசிவிடும் தென்றல்,
பாக்காட்டில் கண்டெடுத்த பாவலர்கள்சரிதம்
பார்த்தவிழி பசிமறந்து காத்துவந்த பெருமை சாக்காட்டை அறியாத இல்கAயங்கள் தோற்றம்
தமிழர்புகழ் பிறமொழியல் தளித்த வரலாறு தீக்காட்டில் அரசபடை தமழ்நூல்கள் எரித்துச்
சிந்தையோடு சிலைகளுமே வெந்துருகச் செய்தும் புக்கடை போலிந்தச் சான்றோர்கள் வாழ்வு
பொங்குதமிழ் ஈழத்தின் சங்கொவியாய்க் கேட்கும்.
தண்ணென்ற குளிர்ந்தநடை எழுதுதற்கு வல்லான்
தமிழீழப் பற்றினிைலே முற்றியவோர் நெற்று
கண்னென்று இலக்கணங்கள் இஸ்ககியங்கள் கற்றோன்
கவிதைகளின் மழை உரைநடையில் நனைந்தோன் எண்னற்ற பலநாட்கள் உணர்உறங்கும் போதும இனமமூடான் ஈழத்துச் சுடர்மனிகள் தேடி
வண்ணத்தின் நூல்அமைத்து மனம்தளிர நெஞ்சில்
மணியான செடரத்தினம் வித்துவான் வாழி!
፴፫ና விக்குவரத்தினம்

வித்துரைத்தினம்
H

Page 52
விக்குவரத்தினம்
II][}"
 


Page 53

Print A.S.E