கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நடராஜா மலர் (கணபதிப்பிள்ளை நடராஜா நினைவு மலர்)

Page 1


Page 2

அமரர் அவர்களின் பாதகமலங்களுக்குச் சமர்ப்பணம்.

Page 3

புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவருமான
அமரர் வைத்திய கலாநிதி கணபதிப்பிள்ளை நடராஜா அவர்களின் அமரத்துவ நிலை குறித்து வெளியிடப்பட்ட
நினைவுமலர்
19 - 3 - 1996

Page 4

வெயத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
தூல முகிழ்ப்பு துல அவிழ்ப்பு 27 - O - 1939 LS - 02 - 199ES பிவத்திய கலாநிதி
கணபதிப்பிள்ளை நடராஜா
அவர்கள்

Page 5

س؟ திருச்சிற்றம்பலம்
வவுனியா மாவட்ட வைத்திய அதிகாரி திரு. க நடராசா அவர்கள் அமரராகியமை குறித்த
நினைவுமலர்
தோற்றம் மறைவு 27 - O - 1939 18 - O2 - 1996
திதிப்பாடல்
66605 LIT
ஆண்டு யுவவருடம் ஆங்குவரு மாசியினில் மாண்ட அபரச் சதுர்த்தசியே - நீண்டபுகழ் சேர்ந்த நடராசன் தில்லைச் சிவனடியை நேர்ந்தே அணைந்த தினம் .
அகவல்
சீர்பெறுந் தென்றல் தென்கடல் இருந்தே ஏர்பெற இரைந்தே எங்கணும் பரந்து நல்லுடலை மக்கட்கு நாளும் ஈயும் இடமா யுள்ள புங்குடு தீவில் மடத்து வெளியெனும் மாண்புறு பதியில் தோன்றிய கணபதிப் பிள்ளை என்பவர் வணிகத் தொழிலில் வளம்பல பெற்று வேலணை கிழக்கில் சின்னையா தரும் விசாலாட்சி அம்மையை விரும்பி மணந்து நடராசா என்னும் நலந்தரு மகனைப் பெற்று வளர்த்துப் பேணிக் காத்தார் யாழ்நகர் அதன்கண் வீடொன்று வாங்கி மனைவி மகனுடன் வசித்து வந்தார் வைத்திய கலாநிதிப் பட்டம் பெற்ற நடராசா வெனும் நலந்தரு மகனார் பால சுப்பிர மணியம் பெற்ற மகளாம் மதனி காவினை மணந்து
3.

Page 6
பொரல்லையில் உள்ள கேட்வே இன்றர் நேஷனல் ஸ்கூலில் பயிற்றும் சுகந்தியுடன் பிரபாகரன் பிரகலாதனன் பிரதீபன் என்னும் மக்களை இன்புடன் பெற்று பிரான்சு லண்டன் ஆகிய இடங்களில் பெருங்கல்வி கற்க ஒழுங்குகள் செய்தார்.
பற்பல இடங்களில் வைத்தியப் பணியினைச் செய்த பின்னர் வவுனியாவில் மாவட்ட வைத்திய அதிகாரி யாகப் பல்லாண்டு காலம் பணியது புரிந்தார் உடனலக் குறைவுதான் எய்திய போதும் உள்ளம் உறுதியில் உயர்பணி புரிந்தார் திடீரென வந்த உடனலக் குறைவால் மனைவி மக்கள் தாயொடு சுற்றம் மறுகிப் புலம்பிக் கண்ணிர் வடிக்கத் தில்லையம் பலவன் சேவடி சேர்ந்தனன் தனது செங்கரங் குவித்தே.
அன்னை புலம்பல்
அன்பான மகனே அப்பா
யார் எனக்குத் துணையாய் உள்ளார் இன்பான பிள்ளை இல்லை
என்றஇக் கவலை யாலே என்போ டுடலம் நைய
எண்ணற்ற நாள் தவமிருந்து நின்னைநான் பெற்று மகிழ்ந்தேன்
நீயும் நல்லவ னாகி நின்றாய்
அன்பான மகனே நடராசா
அருமருந் தென்ன வந்தாய் என்தனி மகனாய் வந்தே
எழில்வைத் தியனாகி நின்றாய் உன்னுடல் வருத்தம் அறிந்தே
உதவிடத் தாண்டிக்குள மூடாய் அன்றுநான் வந்து சேர்ந்தே
அருகிருந்துதவி னேனே.

மனைவி புலம்பல்
அன்பா நாதா ஐயா
அருளொடும் என்னைப் பேணி உன்அரும் மக்கள் தமையும்
உடனலம் கல்வி தன்னில் நன்னிலை அடையச் செய்து
நாளுமே மகிழ்ந்திருந்தாய் உன்னுடல் தளர்ந்த போதும்
உறுதியாய் பணிகள் செய்தாய்.
அன்பான தலைவா ஜயா
அழுகின்றேன் புலம்பு கின்றேன் இன்பான மொழியி னாலே
எமையெல்லாம் அழைத்தாய் ஜயா துன்பான வருத்தம் வந்தும்
துயருறாது கடமை செய்தாய் உன்போலத் திடமனத் தவர்கள்
உலகத்தில் இல்லை ஐயா .
மக்கள் புலம்பல்
அன்புசேர் அப்பா அப்பா
ஆவிதான் போகு மட்டும் எங்களது நலனில் கண்ணும்
கருத்துமாய் இருந்து வந்தாய் மங்காத புகழோடு வவுனியா
மாவட்ட வைத்திய அதிகாரி என்றுமே யாருங் கூற
ஏற்றமாம் பணிகள் செய்தாய்.
உங்களை மறவோம் அப்பா
உயிர்க்குயிர் ஆகி நின்றாய் உங்களின் ஆன்மா ஈடேற
உறுகடன் பலவும் செய்வோம் எங்களது தந்தையே உங்கட்கு
இவன்தந்தை என்னோற்றான் என்னும் மங்காத சொற்கள் நீட
மதிப்புடன் வாழ்வோம் அப்பா.
ஆக்கியோன் வேலணையூர் பண்டிதர் மா. மாணிக்கம்.

Page 7
தோத்திரப்பாடல்கள் திருச்சிற்றம்பலம்
விநாயகர் வணக்கம்
திருவாக்கும் செய்கருமங் கைக்கூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலார் கூப்புவர்தங் கை
தேவாரம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசியென்னுள்ளங் கவர்கள்வன் ஏடுடைய மலாரான் முனைநாட்பணிந் தேர்த்தவருள் செய்த பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே.
சிவம்
பதி: திருநள்ளாறு பண்; ப ழந்தக்கராகம்
போகமார்த்த பூண்முலையாள்
தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த பைங்கண்வெள்ளேற்று
அண்ணல் பரமேட்டி ஆகமார்த்த தோலுடையன்
கோவண ஆடையின்மேல் நாகமார்த்த நம்பெருமான்
மேயது நள்ளாறே.
பதி. திருவையாறு பண்: மேகராகக் குறி
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட்டு ஐம் மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலென்று
அருள்செய்வான் அமருங் கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென் றஞ்சி சிலமந்தி அலமந்து மரமேறி
முகில் பார்க்கும் திருவையாறே.
6

பதி. திருச்சாய்க்காடு பண்: சீகாமரம்
நீ நாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார் சா நாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே பூ நாளும் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.
பதி; திருகோணமலை பண்: புறநீர்மை
தாயினும் நல்ல தலைவரென்று அடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின்று அகலா
மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியும் தொழிலர்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோண மாமலை அமர்ந்தாரே.
பதி. திருவதிகைவிரட்டானம் பண்: கொல்லி
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
நினையாது ஒருபோதும் இருந்தறியேன் வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை நலிவ தனை நணுகாமல் துரந்துகரந்து மிடீர் அஞ்சேலும் என்னிர் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.
Gastufei) திருக்குறுந்தொகை
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கும் ஆறு கண்டின்புற இன்னம் பாலிக்கு மோ இப்பிறவியே.

Page 8
திருவாரூர் திருத்தாண்டகம்
திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்
தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்ததேறல் குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை
கொக்கரையின் கச்சரியின் பாணியானைப் பருமனியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்
பருப்பதத்தில் அருங்கலத்தைப் பாவந்தீர்க்கும் அருமனியை ஆரூரில் அம்மான் தன்னை
அறியாது அடிநாயேன் அயர்ந்தவாறே.
பதி திருக்கச்சியேகம்பம் பண்: தக்கேசி
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும் சீலந் தான்பெரி தும்உடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையுள் ளானை ஏல வார்குழ லாள்உமை நங்கை
" என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.
பதி, திருக்கேதீச்சரம் பண்: நட்டபாடை
மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி மாவின்கனி தூங்கும்பொழில மாதோட்ட நன்னகளில் பாவம்வினை யறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல் தேவன்எனை ஆள்வான் திருக் கேதீச்சரத்தானே.
திருவாசகம்
பாரொடு விண்ணய்ப்பரந்த வெம்பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரோடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே ஆரொடுநோகேனார்க் கெடுத்துரைக்கே
னாண்டநீயருளிலையானால் வார்கடலுலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகவென்றருள் புரிவாய்.
8

திருவிசைப்பா
ஏகநாயகனையிமையவர்க் கரசை
என்னுயிர் கார முதினையெதிரில் போகநாயகனைப் புயல் வண்ணற்கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையாவூர்ந்த மேகநாயகனை மிகுதிரு வீழி
மிழலை விண்ணிழி செழுங்கோயில் யோகநாயகனையன்றிமற்றொன்றும்
உண்டெனவுணர்க்கிலேன்யானே.
திருப்பல்லாண்டு
சொல்வாண்டசுருதிப் பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர் சுல்லாண்டிற் சிதையுஞ்சிலதேவர்
சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத் திரண்மேரு
விடங்கன் விடைப்பாகன் பல்லாண்டென்னும் பதங்கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பெரிய புராணம்
மண்ணுலகத்தினிற் பிறவிமாசற எண்ணிய பொருளல்லா மெளிதின்முற்றுறக் கண்ணுதலுடையதோர் களிற்றுமாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.

Page 9
திருப்புகழ்
கைத்தல நிறைகனி அப்பமோடவல் பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக் கற்றிடுமடியவர் புத்தியிலுறைபவர்
கற்பக மெனவினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர் கொடு பணிவோனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதெனில்
முற்பட எழுதிய முதல்வோனே முற்புரமெரி செய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா அத்துயரது கொடு சுப்பிரமணிபடும்
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணமணமருள் பெருமாளே.
 

மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகச் சிறப்பு (திருவாசகம்)
தொல்லை யிரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன் திருவா சகமென்னுந் தேன்
சிவபுராணம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க இமைப்பொழுது மென்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடி வாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசனடி போற்றி எந்தை அடிபோற்றி தேசனடி போற்றி சிவன்சே வடி போற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி ஆராத இன்பம் அருளு மலைபோற்றி சிவனவன் என் சிந்தையுள் நின்ற வதனால் அவனருளாலே அவன்றாள் வணங்கி சிந்தை மகிழச் சிவபுரா னந் தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பனியான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்விளங் கொளியாாய் எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
11
O
20
25
30
35

Page 10
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம் விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின் நாற்றத்தி னேரியாய்ச் சேயாய் நனியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுாறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்களேத்த மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய விருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தானிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா வமுதே அளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி யல்லானே ஈத்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
40
45
50
55
60
65
70
75

கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தைனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம் மையா அரனேயோ வென்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையிற் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து.
13
80
85
90
95

Page 11
திருப்பொற்கண்ணம்
திருச்சிற்றம்பலம்
முத்துநல் தாமம் பூ மாலைத்தூக்கி
முளைக்குடந்த தூபம்நல் தீபம்வைம்மின் சக்தியுஞ் சோமியும் பார்மகளும்
நாமகளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கெளரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன்ஐ யாறன் அம் மானைப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே
பூவியல் வார்சடை எம்பிரார்க்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்னகண்ணிர் "
வம்மின்கள் வந்துடன் பாடுமின்க்ள் கூவுமின் தொண்டர் புறம்நிலாமே
குனிமின் தொழுமின்னங் கோன்எங்கூத்தன் தேவியும் தானும்வந் தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே
சுந்தர நீறணிந்தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன் அயன் தன்பெருமான்
ஆழியான்,நாதன்நல் வேலன்தாதை எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்(கு)
ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்துநாமே
காசணி மின்கள் உலக்கையெல்லாம் காம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் தேசமெல் லாம்புகழ் தாடுங்கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாசவினையைப் பறித்துநின்று
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே
14

அறுகெடுப் பார்அயனும்அரியும்
அன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்க ணங்களெல்லாம்
நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோம் செறிவுடை மும்மதில் எய்தவில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினிர் முக்கண் அப்பற்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே
உலக்கை பலஓச்சு வார்பெரியர்
உலகமெ லாம்உரல் போதாதென்றே கலக்க அடியவர் வந்து நின்றார்
காண உலகங்கள் போதாதென்றே நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி
மகிழந்துபொற் சுண்ணம் இடித்துநாமே
சூடகந் தோள்வளை ஆர்ப்பஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்பஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்பஆர்ப்ப
நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப பாடக மெல்லடி யார்க்கும்மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்கு ஆடக மாமாலை அன்னகோவுக்(கு)
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே
வாட்டடங் கண்மட மங்கைநல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் தோட்டிரு முண்டந் துதைந்திலங்கச்
சோத்தெம்பி ரான்என்று சொல்லிச்சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே
வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கைநாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறையஅட்டி
மேதரு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடற்பொற் சுண்ணம் இடித்துந மே
15

Page 12
முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
செங்கையற் கண்பனி ஆடஆடப்
பித்தெம் பிரானொடும் ஆடஆடப் பிறவி பிறரொடும் ஆடஆட
அத்தன் கருணையொ டாடஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே 10
மாடு நாகைவாள் நிலாவெறிப்ப
வாய்திறந்த தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெரு மானைத் தேடிச் சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக்(கு)
ஆடப்பொற் சுண்ணம்இடித்துநாமே 1
மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை ஐயனை ஐயர்பி ரானைநம்மை
அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்
போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள் பையர வல்குல் மடதைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே 12
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் என்னுடை ஆரமு(து) எங்கள் அப்பன் எம்பெரு மான்இம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன் தமையன்எம் ஜயன் தாள்கள்பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே 13
16

சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழதரு மாலையாடச் செங்கனி வாய்இதழுந்துடிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம்பாடிக் கங்கை இரைப்ப அராஇரைக்கும்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே 14
ஞானக் கரும்பின் தெளிவைப்பாகை நாடற்கரிய நலத்தை நநந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானைச் சித்தம் புகுந்து தித்திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பானல் தடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே 15
ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோ(டு)
ஆட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர்க னாவினுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொடியான்
சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே 16
தேனக மாமலர்க் கொன்றைபாடிச் சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளைபாடி
மால்விடை பாடி வலக்கையேந்தும் ஊனக மாமழுச் சூலம்பாடி
உம்பரும் இம்பரும் உய்யஅன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே
17

Page 13
அயன்தலை கொண்டுசெண் டாடல்பாடி
அருக்கன் எயிறு பறித்தல்பாடி கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடி
காலனைக்காலால் உதைத்தல்பாடி இயைந்தன முப்புரம் எய்தல்பாடி
ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி
நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே 18
வட்டமலர்க் கொன்றை மாலைபாடி மத்தமும் பாடி மதியும்பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
சிற்றம்ப லத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக்
கங்கணம்பாடிக் கவித்தகைம்மேல் இட்டுநின் றாடும் அரவம்பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே 19
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் சோதியுமாய் இருளா யினார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயினார்க்குப் பாதியுமாய் முற்றும் ஆயினார்க்குப்
பந்தமு மாய்வீடும் ஆயினார்க்(கு) ஆதியும் அந்தமும் ஆயினார்க்(கு)
ஆடற்பொற் சுண்ணம் இடித்துநாமே 20
திருச்சிற்றம்பலம்
18

ஓம் கந்தர் சஷடி கவசம்
காப்பு அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறு
துதிப்போர்க்கு வல்வினை போம். துன்பம் போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்- கதித்(து) ஓங்கும் நிட்டையும் கைகூடும். நிமலர் அருள் கந்தர் சஷ்டிக் கவசந் தனை.
சஷ்டியை நோக்கச் சரவண //வனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்; பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கணி யாட மைய நடஞ்செயும் மயில்வா கனார் கையில்வே லால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக! ஆறுமுகம் படைத்த ஐய7 வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக 4Ff762/6007 L/62/607/777 4FC6)ouflai) 62/0545/ (JS)/D6007 / /6)/ør (J/J/J(J (J/r/r /f6/p6ørø7 Lv6) var ffilfinfirf? /firflf? விணப சரஹ வீரா நமோநம நிபவ சரஹன நிறநிற நிறென வசர ஹணபவ வருக வருக! அசுரர் குடி கெடுத்த ஐய7 வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும், உயிரையும் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
19

Page 14
குண்டவி யாம்சிவ குகன் தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈரறு செவியில் இலகு குண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்டயில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி ம7ர்ட்/ம் செப்பழ குடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சிராவும் இருதொடை அழகும் இணைமுழந்தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககன செககன செககன செககன GLO/74GLD/vas GLO/7aGLO/74 GLO/7456LO/7as GLO/764607 நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டி குகுண புர்குண ググクZア 7/7/7ケ 7/7/7/7 777 Միրիրի տիրիրիրի տիրիրիրի լիրիրի டுடு(டுெ டுடுீதிடு டுடுருடு டுடு(G டகுடகு டிகுடிகு டங்கு டிடங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேல் முந்து என்தனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் eu/76/7, 6/7ev/7 eu/76/7 (367/3Cypub லீலா லீலா லீலா விநோதனென்று உன்திருவடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்டரிய நாவைச் செல்வேவல் காக்க
2O

கன்னடமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே விருதோள் வளம் பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நானாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க பிட்டமிரண்டும் பெருவேல் காக்க வட்ட குதத்தை வல்வேல் காக்க பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள் வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணையாக நாடசிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி குனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராக் கதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
21

Page 15
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என் பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியப் பாவையும் ஒட்டிய செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதுா தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட 6//7tail last Logoa GL/7L படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி ஊருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்க செக்கு செக்கு செதில்செதி லாக சொக்கு சொக்கு குர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேல7ல் பற்று பற்று பகலவன் தணவெரி தனலெரி தணலெரி தணலதுவாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
22

பற்குத்து அரணை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீ எனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்காய் மண்ணாளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொழி பவனே பரிபுர பவனே பவமொழி பவனே அரிதிரு மருகா அமர7 பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தாகுகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்ப7 கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின் மா மலையுறும் செங்கல் வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என் நாஇருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் இரஷி அன்னமுஞ் சொர்ணமும் மெத்தமெத் தாக வேல7 யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவஜம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனைப் பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு பொறுப்ப துன்கடன்
23

Page 16
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே டபிள்ளையென் றன்பாய்ப் டபிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கந் துலக்கி நேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செட்ரித்து உகந்து நீறணிய அட்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேவாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்/ விழியால் காண வெறிண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடி பொடியாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்காரத்து அடி அறிந்து, எனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்து உணவு ஆகக் குரபத்தமாவைத் துணித்தகையதனால் இருபத்தெழுவர்க்கு உவந்து அமுது அளித்த குருபரன், பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி! என்னைத் தடுத்து ஆட்கொள்ள என்றனது உள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனாதிபதியே போற்றி/ குறமகள் மனமகிழ் கோவே போற்றி! திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே, இடும்பா போற்றி! கடம்பா போற்றி கந்தா போற்றி! வெட்சி புனையும் வேளே போற்றி! உயர்கிரி கனகசபைக்கு ஓர் அரசே! மயில் நடனம் இடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரஹண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்/
24

“செய்யும் தொழிலே தெய்வம்
9.
அதில் திறமை தான் நமது செல்வம்
இறைபதம் எய்திய வைத்திய கலாநிதி கணபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் தனது தொழிலைத் தெய்வமாக மதித்தவர்களில் ஒருவர். அன்னார் 1991ல் இருந்து வவுனியா ஆதார வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றினார். இவர் தனது நிருவாகத்தைக் கடமை உணர்வுடனும், கட்டுப்பாட்டுடனும் எவருக்கும் எவ்வித பாகுபாடும் காட்டாமலும் செய்து முடித்த பெருமையை தனதாக்கியவர். இவருடைய காலத்தில் இந்த வைத்தியசாலை பலவழிகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதை இங்கு வருகை தந்த பிறநாட்டின் வல்லுனர்கள் புகழ்ந்துள்ளனர். இவருடைய நிருவாக காலத்தில் வைத்தியசாலை மேலதிக வைத்தியர்களின் சேவையையும் பெற்றுள்ளது. இதனால் வவுனியா வாழ் மக்கள் பெரிதும் நன்மையடைந்துள்ளார்கள்.
தான் ஒரு நோயாளியாக இருந்தும், அதையிட்டு எவ்வித கவலையும் இன்றி தனது கடமையே கண்ணாக இருந்து கடைசிவரை சேவை யாற்றினார். இவருடைய சிறந்த நிருவாகத்திற்குச் சான்றாக வைத்திய சாலையின் புறத்தோற்றமும், கண்ணுக்கினிய மரம் செடிகளும் சான்று பகருகின்றன. அன்னாருடைய நல் மனதுக்குச் சான்று அவருடைய மரணச்சடங்கின்போது வைத்தியசாலை ஊழியர்கள் அவருக்களித்த இறுதி மரியாதையாகும்.
மக்களை மட்டுமன்றி, தெய்வத்தையும் பெரிதும் மதித்த டாக்டர் நடராஜா அவர்கள் தனது பதவிக்காலத்தில் ஊர் மக்களின் உதவிகொண்டு வைத்தியசாலையின் விநாயகர் ஆலயத்தை சிறப்பாக கும்பாபிஷேகம் செய்வித்தார். அதுமட்டுமன்றி, கோயிலின் நித்திய கருமங்களுக்காக ஒரு தொகைப் பணத்தையும் வங்கியில் வைப்பில் விடுத்தார்.
அன்னாருடைய மறைவு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமன்றி
முழு வவுனியாவுக்குமே பேரிழப்பாகும். அன்னாருடைய ஆன்மா சாந்தியடையப் பிராத்திக்கின்றேன்.
அரசாங்க அதிபர் வவுனியா.
25

Page 17
செயல் வீரன்
மாவட்ட வைத்தியராகக் கடமை செய்து எமை விட்டுப் பிரிந்துவிட்ட திருவாளர் அமரர் கணபதிப்பிள்ளை நடராசா அவர்கள் வைத்திய, சுகாதார சேவைத்துறைகளில் செய்த சேவைகள் அளப்பரியன.
எமக்கெல்லாம் சிறந்ததோர் வழிகாட்டியாக இருந்ததோடல்லாமல், தனது சேவைக்காலத்தில் மிகுந்த கண்டிப்பானவராகவும், பாரபட்சமில்லாத நேர்மையிற் சிறந்த செயல்வல்லுனராகவும் கடமையாற்றியவர்.
எத்தனையோ பல எதிர்ப்புகளின் மத்தியிலும் தனது சேவையைச் சரிவரச் செய்யத் தயங்காத துணிவான இந்த செயல்வீரன், தான் நோய் வாய்ப்பட்டிருந்த வேளையிலும், இறுதி மூச்சுவரை பணிசெய்வதே பிறப்பின் இலட்சியம் என்ற கொள்கைக்கிணங்க வாழ்ந்தவர்.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என எல்லோருடனும் கண்டிப்பின் மத்தியிலும் கனிவான அன்பு கொண்டு வாழ்ந்தவர் என்பதை அவரோடு பழகியவர்கள் அறிவர். தமிழர் தம் குடிப்பண்பாம் விருந்தோம்பலிலும் இந்தப் பண்பாளன் சிறந்து விளங்கியவர்.
இத்தகைய ஒரு உயர்ந்த மனிதரது இழப்பு எமது துறைக்கு ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பும், துன்ப நிகழ்வுமாகும்.
அன்னாரது பிரிவால் துயரடைந்திருக்கும், துணைவியார், பிள்ளைகள் அனைவருக்கும் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“மானுடசேவை செய்வோர் மகத்துவம் பெறுவோர் ”
வைத்திய கலாநிதி திருமதி யோகநாதன் பிரதி சுகாதார மாகாணப் பணிப்பாளர் (R.D.H.S)
26

தனக்கெனவாழாப் பிறர்க்குரியாளன்
ஈழத்திருநாட்டின் சிரசாய் விளங்கும் யாழ்நகராம் ஆழ உள்ள சப்த தீவுகளில் புங்குடுதீவும் ஒன்று. அங்கே சீரும் சிறப்புமாக புகழ்பூத்தவர்கள் கணபதிப்பிள்ளை விசாலாட்சி குடும்பம். இவர்களின் தவப்பயனால், ஏக புத்திரனாய் வந்துதித்தான் நடராஜச் செம்மல்
கல்வி ஞானங்களில் திறம்பட விளங்கி வைத்திய கலாநிதி பட்டமும் பெற்று அரச சேவையில் அரும்பணி ஆற்றினார்
திருநெல்வேலியின் திருநிறை செல்வி மதனிகாவை திருமணம் செய்து புத்திரபாக்கியங்களாக நால்வரை ஈன்று, புவியில் நல்லபடி வாழ புத்திரர்களின் பாதையை அமைத்த கடமை வீரன்.
தொற்றுநோய் நிபுணராக வவுனியாவில் கடமை ஏற்றார். சிறிது கால சேவையின் பின் இளவயதினிலே இளைப்பாறினார். அன்னாரின் நிர்வாகத் திறமை கண்டு அரசாங்கம் அவரை வவுனியா வைத்திய சாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும்படி வேண்டிக் கொண்டது.
அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கிணங்க கடமை, கண்ணியம், கட்டுப் பாடுகளைக் கடைப்பிடித்து கரும மாற்றினார். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் துயருறும் நோயாளிகளின் துயர் துடைப்பதே இலட்சியமாகக் கொண்டு கடமை ஆற்றுங்கால் கொடிய நோய்க்கு ஆளானார்.
மெழுகுவர்த்தி போல் தன்னை உருக்கிக்கொண்டு ஏனையோருக்கு உதவினார்.
"மத்தம் போல் கேடும் மனதாளும் சாக்காடும்
வித்தகரல்லார்க்கு இல” என்னும் குறள் அன்னாருக்கு மிகவும் பொருத்தமானது.
மாசித்திங்கள் 18 ம் திகதி சிவராத்திரியிலன்று நடனபர்தனுடன் நடராஜன் சங்கமமானார்.
அன்னாரின் ஆத்மசாந்திக்குப் பிராத்திப்பதுடன் குடும்பத்தாரின் சோகத்திலும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி
வைத்திய கலாநிதி க. இளங்கோ
சுகாதார வைத்திய அதிகாரி, வவுனியா, 27

Page 18
நேசத்தால் நிறைந்த நெஞ்சம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியார். 18.02.96 ல் வானுறையும் தெய்வத்துள் ஒருவரானார். வவுனியா மாவட்ட வைத்திய அதிகாரியாக பல்லாண்டு கடமையாற்றிய எனது கெழுதகை நண்பரின் பிரிவு வார்த்தையால் சொல்லி முடியும் துயரமன்று.
" நவில் தொறும் நூல் நயம் போலும் பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பு”
என்னும் குறளின் இலக்கணமாக விளங்கியவர் எமது நண்பர், டாக்டர் அவர்கள், மனித நேயம் குறைந்து வரும் இக்காலத்தில் நட்புக்கு இலக்கணமாகப் பழகிய பெரியவர் அவர். தனிப்பட்ட முறையில் ஐந்து வருடங்களாக அமரரும் நானும் நெருங்கிப் பழகியிருந்தோம்.
வவுனியா ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றம் கருதி இயங்கி வந்த மதியுரைக் குழுவின் செயலாளராக நான் கடமையாற்றிய காலத்தில் டாக்டர் அவர்களின் நல்லெண்ணங்கள் பலவற்றை எல்லோரும் அறிந்து கொண்டோம். மதியுரைக் குழுவினரின் எல்லாக் கூட்டங்களுக்கும் வருகை தந்து, தன் ஆலோசனைகளைப் பரிபூரண விருப்பத்துடன் வழங்கி ஒத்துழைத்த நல்ல அதிகாரி, மக்கள் சேவகன், நேசத்தால் நிறைந்த நெஞ்சம் அவர். அந்தநல்ல உள்ளம் படைத்த பெரியார் இன்று நம்மிடையே இல்லையே என நினைக்க உள்ளம் துடிக்கிறது. தேவர்களும் தங்களுலகிற்கு அந்த நல்லவரின் தூய பணி வேண்டுமென்று தானோ என்னவோ அவரை அழைத்துச் சென்று விட்டார்கள்.
வவுனியா ஆதார வைத்தியசாலையை நன்னிலைக்குக் கொணர்ந்த ஒரு பண்பான, கண்டிப்பான, நேர்மையான வைத்திய அதிகாரி இவர். சுருக்கமாகச் சொன்னால் ஆரோக்கியம் குறைந்து முதுகு கூனி நின்ற ஆதார வைத்திய சாலையையே ஊட்டம் பெற வைத்து அதன் முதுகு நிமிர்த்திய நிர்வாகியும் இவரே. மக்களுக்கு மட்டுமல்ல ஒரு வைத்திய சாலைக்கே வைத்தியம் பார்த்த வைத்தியர் அமரர் டாக்டர் அவர்கள்.
ஆதார வைத்தியசாலை வளவுள் அமைந்து கவனிப்பார் குன்றியிருந்த பிள்ளையார் கோவிலைக் கும்பாவிஷேகம் செய்து பொலிவுறச் செய்ய வேண்டும் என மிகவும் விரும்பிய அமரர் அவர்களின் தளராத முயற்சி, வேணவா காரணமாக வவுனியா வர்த்தகப் பெருமக்கள் ஒர் குழு அமைத்து அக் கோவிலைக் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அக்குழுவின் ஒருவனாக இருந்த காலத்தில் நான், அமரர் டாக்டர் அவர்களது இறை
28

நம்பிக்கை, செயலாற்றுகைத் திறனைக் கண்டு மிக வியந்தேன். ஆனால், இத்தகைய உயர்ந்தவர் இன்று நம்மிடையே இல்லை என நினைக்கையில் அவரது நண்பனாகிய என் உள்ளம் விம்முகிறது என் செய்வோம் ?
“நெருநல் உளனொருவன் இன்றில்லையென்னும் பெருமை உடைத்திவ் வுலகு ”
என்பதை நினைத்து ஆறுதல் கொள்வோம், "நேசத்தால் நிறைந்த அந்த நெஞ்சம்” ஆற்றிய பணிகளை நன்றியுடன் நினைத்துத் தொடர்வோம் அவரது ஆன்மா சாந்திக்காக எல்லாம் வல்ல விநாயகரை இறைஞ்ச கின்றேன்.
சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
T. K. இராஜலிங்கம் .P ஆவை. மதியுரைக்குழுவின் முன்னாள் செயலாளர் பிள்ளையார் கோவில் புனருத்தாரண செயற்குழு உறுப்பினரும்
ஆதார வைத்தியசாலை வவுனியா.
27.02.96
29

Page 19
A PPR E CIATION
DR. K. NADARAJAHI
The late Dr. Nadarajah, D.M.O., Base Hospital, Vavuniya, uvas an inspiration to both his patients, well as the employees at the hospital.
They all had the firm conviction that they received the best treatment from him, medically, physically and humanely.
He died young, considering the length of comparative human lifespan at present and he is mourned all the more for the fact that he has been plucked aujay from us, uvhen he could have continued to render more valuable service, had he remained much longer
What is poignant to the memory of this endearing doctor, is that he died in harness, bearing and suffering, for many years, from a cankerous, killer disease which had been plaguing him all the time. He carried on defiantly, in spite of it, with the good work, treating, and ministering everything that was under his care and controll His leadership and exposure to the public uere indeed exemplary and appreciable.
Vavuniya has lost a good doctor. Let us all pray for the repose of his gentle soull
C. Marcandayer, .
Chairman,
Sri Lanka Red Cross, Vavuniya
204, Station Road, Vavuniya, . 3rd. March 1996
3O

இனிய நண்பர் இன்றில்லை !
"குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு ”
எனும் குறளுக்குச் சான்றாக விளங்கிய அமரர் வைத்திய காலாநிதி க. நடராஜா அவர்கள் எம்மிடையே நிரப்ப முடியாத ஒரு பெரும் இடைவெளியை விட்டுச் சென்றுள்ளார். இவருடைய சேவைக்காலம் வவுனியா ஆதார வைத்தியசாலையின் பொற்காலம் எனலாம். விடுதியில் இருக்கும் நோயாளர்கள் கண்விழித்து பச்சை மரம், செடிகளைக் கான முடிந்ததும் இவரது பெருமுயற்சியால் தான். அதுமட்டுமன்றி வைத்தியசாலையின் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதும் இவரது முயற்சியின் சான்று.
இன்று இவர் எம்மிடையே இல்லாவிட்டாலும் அவருடைய பணிகள் அவரை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இவருடைய கண்டிப்பும் உயர்பண்பும் இவரை, இவருடைய நண்பர்கள் இடையே ஒர் உயர்வான வராகவே காட்டுகின்றன. இவருடைய மறைவினால் குடும்பத்தினர் மட்டுமன்றி இவருடைய நண்பர்களும் துயருறுகின்றனர்.
இவருடைய மறைவினால் ஓர் சிறந்த நண்பனை இழந்த துயரத்தை என்னாலும், என் குடும்பத்தினராலும் உணர முடிகிறது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அருணாசலம் சிவநாதன்
(சமாதான நீதிவான்)
"ழரீ ஸ்கந்த பவனம்” சின்னப்புதுக்குளம்,
வவுனியா.
31

Page 20
அநுதாபச் செய்தி
வாழும் பொழுதுபோற்றி, இறக்கும்பொழுது தூற்றுவோரும் உண்டு வாழும்பொழுது தூற்றி, இறக்கும்போதுவாழ்த்துவோரும் உண்டு. வாழ்ந்த பொழுதும் இறந்த பொழுதும் பிறர் புகழ்வது கடமை வீரன் பெறும் பரிசு இது அமரர் வைத்திய கலாநிதி கணபதிப்பிள்ளை நடராஜா அவர்களைச் சாரும.
கை நிறையச் சேர்க்க கடமைபுரிவோர் உண்டு. புகழோங்க புண்ணியம் புரிவோர் உண்டு. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கடந்த ஐந்து வருடமாக பணியாற்றியவர் அமரர்.
உயிர்களை உண்டாக்குவதும், காப்பதும் உத்தமன் கைவன்மை அதனை இம்மண்ணில் செயற்படுத்த இறைவன் தேர்ந்தெடுத்த கருவி அமரர் நடராஜா.
பலனை எதிர்பாராது உயிரையும் தனக்கென கொள்ளாது கடமை புரிந்த அமரர் அழிந்து விடவில்லை. வ்ாழ்கிறார், பிறர் உயிரை அவர் காக்க, இறைவன் அவர் உயிரைக் காத்துள்ளார் என உறுதியாக நம்புகிறேன். ஆகவே அடியார் அமரர் வாழ்கிறார், வாழ்கிறார், வாழ்கிறார்.
அருட்திரு. திரு. நவரெட்னம் பங்குத்தந்தை, இறம்பைக்குளம், வவுனியா.
32

ஐயா! நீ எங்குற்றனையோ?
வவுனியா மாவட்ட வைத்திய அதிகாரியாக இருந்து அமரரான டாக்டர். கணபதிப்பிள்ளை நடராஜா அவர்களை நாம் அறிந்தது மிகவும் குறுகிய காலமே.
கடமையுணர்வு கண்ணியம் கட்டுப்பாடு போன்ற பல உயர்ந்த குணங்களில் உதாரண புருசராக அவர் விளங்கினார். வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டி
காலமகன் கணக்கிற்கும் கணிப்பிற்கும் யாருமே விலக்காகி விடமுடியாது. மருத்துவர்கள் உட்பட அன்னார் இம்மண்ணில் ஆற்றவேண்டி வகுக்கப்பட்ட பணிகள் முடிந்துவிட்டதென அழைப்பு வந்து சென்றுவிட்டார். ஐந்தே ஆண்டுகளாயினும் அவர் இம்மாவட்டத்திற்கு ஆற்றிய சேவைகள் கச்சிதமானவை, காத்திரமானவை, அவை என்றென்றும் அன்னாரின் புகழ் பாடி நிற்கும் என்பதில் ஐயமில்லை.
அமரரின் ஆத்மா சாந்தியடையப்பிராத்திக்கின்றேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது சார்பிலும், வைத்தியசாலை அலுவலகர்கள் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலைக் காணிக்கை ஆக்கு கின்றேன்.
”நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும் பெருமை உடைத்து இவ் உலகு ”
நான் கண்ட நடராசா புவியிற் பிறந்தார் பிறள் கொண்டு புன்மை நோயகற்றல் தாங்கி நிற்றல் யாவிற்கும் ஆமராய் வாழ்ந்த நடராசா வந்தன் நேய நினைவுகளால் நயனந்தான் நனைகிறதே.
ஐந்தாண்டு ஆற்றிய நின் பணியின் மேன்மை இந்த அவனியுந்தான் என்தாங்கும் மென்றெண்ணி விறலிதானும் விரைந்தோடிப் பிந்தாமல் வந்துன்னைப் புரக்கவேண்டிப் பரமன் பதம் தந்தானோ தன்னுடனோ
தாங்குமோ துயரே நீ சொல் மாவட்ட வைத்திய அதிகாரியும்,
அலுவலகர்களும். 33

Page 21
தெங்கற்செய்தி
தோன்றின் புகழோடு தோன்றுக அதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
வள்ளுவன் வாக்கிற்கிணங்க யாழ் கொட்டடியைச் சேர்ந்த அமரர் கணபதிப்பிள்ளை நடராஜா அவர்கள். இவர் வவுனியா ஆதார வைத்திய சாலையில் (D.M.O) பிரதம வைத்திய அதிகாரியாக 1991ம் ஆண்டு பதவியேற்றார்.
தொடர்ந்து இனமத பேதமற்று அனைவருக்கும் சேவையாற்றி வந்தார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற நிலையில் தமது கடமையை செய்து வந்தார். மேற்படி வைத்தியசாலையில் இருந்து வந்த விநாயகர் ஆலயத்தை தன்முயற்சி கொண்டும் ஏனைய வெளியிடப்பெரியவர்களைக் கொண்டும் இவ்வாலயத்தை புனரமைப்புச் செய்து கும்பாபிஷேகம் சிறப்பாக செய்வித்தார்.
இது அவருடைய வாழ்க்கையில் சிறப்பான முயற்சியாகும், அன்னாரின் பிரிவால் துயர்பட்ட அவர் குடும்பத்தினருக்கும், உறவினர் களுக்கும் அவருடைய ஆத்மா சாந்தி அடையச் சித்தி விநாயகனை வேண்டுகிறோம்.
சாந்தி சாந்தி!! சாந்தி !!!
பிரதம குரு சிவழி மு. க. கந்தசாமி குருக்கள்
34

அமரருடன் பழகிய சிறிது காலங்களில்
“காலன் கவர்ந்திட்டாலும் கணப்பொழுதும் நான் மறவேன் ”
இறைபதம் எய்தய வைத்திய கலாநிதி கணபதிப்பிள்ளை நடராஜா (அங்கிள்) தனது தொழிலைத் திறம்படக் கட்டுக்கோப்புடன் நடத்திய வர்களுள் ஒருவர். அன்னாருடன் ஒரு சிறிது காலங்கள் தான் பழகினாலும் அவருடைய சொல், செயல் ஒவ்வொன்றையும் ஒரு கணமும் மறக்க முடியாத ஒன்றாக ஆக்கிவிட்டு மறைந்து விட்டார். V
நான் அவருடன் அலுவலக ரீதியில் வைத்தியசாலை மதியுரைக் குழுவிலும், வவுனியா நகர திடீர் மரணவிசாரணை அதிகாரி என்ற முறையிலும் பழகினேன் அதைவிட சிறந்த "அங்கிள்” என்ற முறையில் கூடுதலாகப் பழகினேன். எப்பொழுது சென்றாலும் எந்நேரம் சென்றாலும் "கிஷோரா” வாரும் என்று இன்முகத்துடன் வரவேற்பார்.
அன்னார் நோயுடன், போராடிக் கொண்டிருந்த போதும் எத்தனையோ நோயுற்றவர்களை கருணையுடன் கவனித்து அவர்களின் நோய்களைப் போக்கினார். வவுனியா ஆதார வைத்தியசாலை அவர் வந்ததில் இருந்து புதுப்பொலிவுடன் விளங்குவது யாவரும் அறிந்ததே. எல்லாரும் கூறுவார்கள் D.M.O வைச் சந்திப்பது என்றால் கிஷோரைச் சந்தித்தால் தான் முடியும். அவ்வளவுக்கு என்னில் ஒரு தனிப்பட்ட அன்பு, பாசம் வைத்திருந்தார். கடைசியாக அவர் நோயுடன் போராடிக் கொண்டு இருந்த வேளையிலும் மனைவியிடம் "கிஷோரைக் கூப்பிடு” என்று கூறி என்னுடன் அளவளாவுவார்.
இறுதியாக அன்னார் கண்ணைமூடிக் காலனுடன் போகசெல்லும் வேளையிலும் நானும் எனது குடும்பமும் சென்று அவரை தரிசித்து உரையாடிய பாக்கியம் எமக்கே கிட்டியது. அன்னாருடைய ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கிறோம்.
"பழகிய உறவு பாதியிலே மறைந்தாலும் எழுதிவைத்த ஒவியம் போல் இருக்கின்றார் அங்கிள் என் மனதில் ”
சி. கிஷோர் J.P நகர திடீர் மரண விசாரணை அதிகாரி, செயலாளர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை தேசிய செஞ்சிலுவைச் சங்க ஆளுநர் சபை உறுப்பினர்
35

Page 22
மறக்க முடியாத மனிதர்
மறக்கமுடியாத ஒர் மனிதர் மறைந்துவிட்டார். வவுனியா ஆதார வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமைபுரிந்து சிவபதம் அடைந்த திரு. கணபதிப்பிள்ளை நடராசா அவர்கள் வன்செயல் காலத்தில் தமது கடமையை ஏற்று மிகச் சிறந்த பணியாற்றியவர் - மனித நேயம் மிக்க இவரது மென்மையான பேச்சும், கண்டிப்பும் கலந்த வார்த்தை அவருக்குச் சிறப்பான அம்சமாகும்.
வைத்தியப்பணியில் அன்றி வைத்தியசாலைப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகத்தையும் சிறப்பாக நடத்தி வைத்ததை சைவப் பெருமகன் என்பதையிட்டு இந்து மாமன்றத்தினராகிய நாம் பெருமகிழ்ச்சியடைந் திருந்தோம். இத்தகைய சிறப்புக்கள் கொண்ட அன்னாரது இழப்பு வவுனியாவில் இன்னும் பல நற்கருமங்களை ஆற்ற முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டது. என்பது பெரிய உண்மையாகும்.
அன்னாரது ஆத்மா சாத்தியடைய நாம் பிராத்திப்போமாக !
ராமஸ்வாமி தலைவர் இந்து மாமன்றம் பூங்கா வீதி, வவுனியா.
36

கவிஞர் கண்ணதாசன் இதயங்களிலிருந்து .
துயரங்களின் தொடக்கம் கண்ணிரில்தான் ஆனால் அதுவே தொடர்கதையாகி விட்டால் சிந்தனை செயலற்றுப் போய்விடுகிறது.
இன்னது தான் நடக்கும் என்று ஏற்கனவே ஒருவிதி இருக்கும்போது கண்ணிருக்கு அர்த்த மென்ன? எப்படி அமைதியடைவது? அழுவதற்கும் சேர்த்துத் தானே கண்களை அவன் கொடுத்தான்! அவை தன் கடமையைச் செய்யட்டும்
என்று விட்டுவிடு.
பதக்கங்கள் அறுந்து போகலாம்; பந்தங்கள் அறுந்து போகலாம்; பாசம் என்ன அறுந்து போகக் கூடிய ஒன்றா? ஆம்! அதுவும் உண்டுதான்! காலம் என்னும் மருத்துவன் அதையும் கூடத்தான் கத்திவைத்து வெட்டி விடுகிறான்.
மரணம் அழுகையை உற்பத்தி செய்கிறது நாமும் ஒருநாள் இப்படித்தானே என்ற எண்ணம் ஆறுதலைக்கொண்டு வருகிறது.
கண்ணிர் ஓடிய கன்னங்களை கடவுளும் காலமும் தான் துடைத்தாக வேண்டும்.
மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் மனிதன் ஆசையாலும் ஆணவத்தாலும் அலைமோதுகின்றான்
எவ்வளவு பெரிய ஆணவக்காரனும் இறுதியில் இறைவன் என்னும் நெருப்புக்கே சொந்தமாகி விடுகிறான்.
37

Page 23
நன்றி நவிலல்
எங்கள் குடும்ப முதல்வரின் மரணச் செய்தி கேட்டு வந்து ஆறுதல் கூறிய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும்; தந்தி கடிதங்கள் அனுப்பியோருக்கும்
அந்தியேட்டி வீட்டுக்கிருத்தியக் கிரியைகளில் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிராத்தித்தோருக்கும்
எங்களுக்கு பல வழிகளிலும் உதவி ஒத்தாசை செய்தும், ஆலோசனைகள் வழங்கியும் துணையாய் நின்றவர்கள் அனைவருக்கும் எங்கள் மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடும்பத்தினர்.
38
 


Page 24
Printed by United