கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிதம்பர மாலை (கார்த்திகேசு சின்னத்தங்கம் நினைவு மலர்)

Page 1
திருமதி கார்த்திகே
அவர்க afri. இம்மலர் வெளியி 9-2-2.
- -
 
 


Page 2

FGrbély தியானம்
ஓம் நம: ஸவாய பரமேச்வராய சசி சேகராய நம ஓம் பவாய குண ஸம்பவாய சிவ தாண்டவாய நம் ஓம்.

Page 3


Page 4

Filli El III
1933 2003
(Ŝ)
○
அமரர் சின்னத்தங்கம் 5III ਹੁੰਹ அவர்களின்
ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்
நினைவு கூறும் மலர்
திதி வெனர் பா சீர்கொண்ட சுபானு வருடத் திகழ்திங்கள் கார்த்திகையில் கார்கொண்ட நாளாம் கலைமதி ஏகாதசியில் - சிவசிந்தை
சின்னத்தங்கம் இன சிதம்பரம் தான் பார்கொண்ட வாழ்வெய்தி பாரளந்தான் நாமத்தை பூரீ ராம ஜெயம்
சொல்வி சேர்கின்ற சிவனடிக்கு கனபதியை துணைகொண்ட கார்த்திகேசு
தன் பனையாள்.

Page 5

வாழ்க்கை வரலாறு
ஈழத் திருநாட்டின் திருநுதலாம் யாழ்ப்பாணத்தில் வடபாலமைந்த ஏழு ஆலயங்கள் சேர்புகழ் ஏழாலை வடக்கின் சோலை, பொழில் சூழ்ந்த ஊரங்குனை என்னும் பதியில் உயர் இந்து வேளாளர் மரபில் திரு. செல்லப்பா கண்ணகி தம்பதிகளின் நான்காவது புதல்வியாக அமரர் சின்னத்தங்கம் இம் மண்ணில் அவதரித்தார். இவருடன் அமரர்களான சின்னம்மா, ஆறுப்பிள்ளை,
கந்தையா, செல்லம்மா உடன்பிறப்புகளாக இணைந்தார்கள்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை ஏழாலை அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும், உயர் கல்வியை சுண்ணாகம்
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியிலும் பயின்றார்.
இல்லற வாழ்வில் இணைவதற்குத் தனது மாமன் மகன் விநாசித்தம்பி கார்த்திகேசு (பிரபல வர்த்தகர் - கொழும்பு) அவர்களைத் துணையாக ஏற்றுக்கொண்டார். இவ்விருவரும் இல்லறத்தை நல்லறமாக கைக்கொண்டு, பொதுவாழ்விலும், சமய வாழ்விலும் ஈடுபாடு உடையவர்களாகத் திகழ்ந்து, தானதர்மங்களையும், தேவையெனக் கொண்டவர்களுக்குக் கல்வித் தானத்தையும் வழங்கினார்கள். அத்துடன் இருவரும் இலங்கையில் மாத்திரமன்றி இந்தியாவிலும் பல தலயாத்திரை கள் மேற்கொண்டு சிறப்புப் பெற்றவர்கள்.
இவர்களின் இல்லறப் பேற்றினால் சிவஞானமலர், விக்கினேஸ்வரன், மங்கையற்கரசி ஆகிய மூவரை மக்களாகப் பெற்றனர். ஆனால் இயற்கையின் விதி இவரின் இல்லறத் தலைவனைப் பிள்ளைகள் பராயம் பெறும் முன் இறைவனுடன்
இணைத்துக் கொண்டது. இருந்தும் தனித்துச் செயற்பட்டுத்
O1

Page 6
தாயாக மாத்திரமின்றித், தந்தையாகவும், அவர்களின் கடமை களை முறையாக ஆற்றி, யாவரையும் நல்ல நிலையில் உயர்த்தி, செல்வரட்னம் (கணக்காளர்), மகேஸ்வரி (கட்டட திணைக்கள உத்தியோகத்தர்), சிவராஜா (பொறியியலாளர் - இலண்டன்) ஆகியோரை அவர்களின் வாழ்க்கைத் துணையாக இல்லறத்தில் இணைப்பித்து, அதன் பேறாய் வாகீசன், ராகவன், விஜிபிரசாத், ஜனனி, அகிலன், ரமேஷ், மனோஜ் ஆகியோரைப்
பேரப்பிள்ளைகளாகக் கண்ட பாக்கியம் பெற்றார்.
அவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இறைவழிபாட்டிற் காகத் தியானத்துடனும் சகல விரதங்களையும் கைக்கொண்டும் பல தீர்த்த யாத்திரைகள் மேற்கொண்டும், தான தர்மங்களையும் செய்தும் சிறந்த சைவ வாழ்க்கையைப் பின்பற்றினவராய்த்
திகழ்ந்தார்.
இப்பேறாகத் தன் வாழ்நாளில் நோய் துன்பங்கள் ஒன்றுக்கும் ஆழாகாமல் தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து அவர் அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றாகிய ஏகாதசி நன்நாளிலே சிவசிந்தையுடன் இறைநாமத்தைத் தியானித்த வண்ணம் இறையடி எய்தினார். இவரின் வாழ்வு மற்றவர்கள் யாபேருக்கும் எடுத்துக் காட்டாகக் "குற்றமில்லானாய் குடி செய்து வாழ்வானை சுற்றமாய் சுற்றும் உலகு" என்று சான்று பகர்கிறது.
"கற்றதனாலாய பயன் என்கொல்
வாலறிவன் நற்றாள் தொழலார் எனின்" என்ற வள்ளுவன் சொல் நூல் முறை வாழ்வையும் எடுத்து இயம்புகின்றது.

ஓம் மோஷம் அளிப்பவரே சரணம் ஜயப்பா
திருமதி. கார்த்திகேசு சின்னத்தங்கம் அவர்கள் கடந்த 19.11.2003 புதன்கிழமை இறைவன் பாதகமலங்களை அடைந்தார் என்ற செய்தியை அடுத்த நாள் பத்திரிகையில் பார்ததுமே அவர்களின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எமது அஞ்சலிகளைத் தெரிவித்தோம்.
கார்த்திகை மாதம் சபரிமலை யாத்திரைக்கு விரதமணிந்து இருப்பதனால் அவர்களது இறுதிக்கிரியைகளில் பங்குகொள்ள முடியாத நிலையிலும் அவர்களின் நினைவு மாத்திரம் எம்மை விட்டு அகலாமலே இருக்கின்றது.
கடந்த எட்டு அல்லது ஒன்பது வருடங்களுக்கு முன்னர் கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தை ஸ்தாபித்த காலப்பகுதியில் (1983 இனக்கலவரத்தின் பின்) முதல் முதல் மாத்தளை பூரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பஞ்சரத பவனிக்குக் கொழும்பிலிருந்து 200க்கும் மேற்பட்ட பக்தர்களை அழைத்துச் செல்லும் பாக்கியம் எமக்குக் கிடைத்தது. பம்பலப் பிட்டி புதிய கதிரேசன் கோவிலில் இருந்து நாம் சென்றபோது எங்களுடன் அந்த யாத்திரையில் இணைந்த அம்மையாரை அன்றிரவு நாம் திரும்பிய பின்னர் அவரது இல்லத்தில் கொண்டு போய் விட்டதிலிருந்து அம்மையாருடன் நெருங்கிப் பழகியிருந் தேன்.
அம்மையாரின் பெயர் சின்னத் தங்கம் என்றிருந்தாலும்
கடவுச் சீட்டில் சிதம்பரம் என்றிருப்பதால் அவரது பெயரை
03

Page 7
சிதம்பரம் அம்மாஸ்வாமி என்றே நானும் இன்றுவரை சொல்லி வந்திருக்கின்றேன். கடந்த 1998ம் ஆண்டும் 2000ம் ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து எங்களுடன் கொள்ளுப் பிட்டி பூரீ தேவி கருமாரியம்மன் ரீ ஐயப்பஸ்வாமி திருக்கோவில் சபரிமலைத் தீர்த்த யாத்திரைக் குழுவினருடன் இணைந்து ஸ்வாமி தரிசனம் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளே. மூன்று தடவைகள் அம்மையார் பூரீ தர்மசாஸ்தாவைத் தரிசனம் செய்திருந்தபோதும் கடைசியாகத் தான் யாத்திரை செய்த சமயத்தில் தனது மகனையும் அழைத்து வந்து தான் பெற்ற இன்பத்தைத் தன் குடும்பத்தினருக்கும் வாழையடி வாழையாக மேற்கொள்ள வழிகாட்டிய பெருமையையும் பெறுகின்றார். குரு வாரத்தில் ஐயனின் நட்சத்திரமான உத்திரத்தில் ஆத்மார்த்த மாக அவரது உயிர் சென்றடைந்தது தெய்வத்தின் கருணையே.
அவரது பிரிவு எமக்குத் துயரை அளித்தாலும், அவரது ஆத்மா ஐயனின் பாதங்களில் சரணாகதி பெற்றுவிட்டதைத் தெளிந்து மன அமைதி பெறுவதுடன் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தவர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம்வல்ல அந்த ஜோதிஸ்வரூபன் மனவைராக்கியத்தையும், சாந்தியையும் அளிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி: சாந்தி!! சாந்தி!!!
கொள்ளுப்பிட்டி பூரீ தேவி கருமாரியம்மன்
பூரீ ஐயப்பசுவாமி திருக்கோவில் சபரிமலை கொழும்பு - 03 தீர்த்த யாத்திரைக் குழுவினர் சார்பாக, 14.12.2003. தங்க . முகுந்தன் (குருஸ்வாமி)

பன்னிரு திருமுறைகள் திருஞான சம்பந்தர் தேவாரம்
முதலாம் திருமுறை திருவண்ணாமலை
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம் உண்ணாமுலை யுமையாளொடு முடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித் தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்டுளி சிதற ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல் பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம் சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல் ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல் காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.
உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம் எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால் முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல் அதிருங்கழ லடிகட்கிட மண்ணாமலை யதுவே.
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி அரவஞ்செய முரவம்படு மண்ணாமலை யண்ணல் உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார் குரவங்கமழ் நறுமென்குழ லுமைபுல்குதல் குணமே.
பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப் பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக் கருகும்மிட நுடையார்கமழ் சடையார்கழல் பரவி உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே.
05

Page 8
கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில் நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள எரியாடிய இறைவர்க்கிட மினவண்டிசை முரல அரியாடிய கண்ணாளொடு மண்ணாமலை யதுவே. 7
ஒளிறுபுலி யதளாடைய லுமையஞ்சுதல் பொருட்டால் பிளிறுகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து வெளிறுபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை அளறுபட அடர்த்தானிட மண்ணாமலை யதுவே. 8
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக் கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும் அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல் தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே 9
வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும் மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும் ஆரம்பர்த முரைகொள்ளண்மின் அண்ணாமலை யண்ணல் கூர்வெண்மழுப் படையான்நல்ல கழல்சேர்வது குணமே. 10
வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவ னண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவ ரடிபேணுதல் தவமே. 11
திருச்சிற்றம்பலம்
இரண்டாம் திருமுறை திருக்காறாயில்
பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் நீரானே நீள்சடை மேலொரு நிரைகொன்றைத் தாரானே தாமரை மேலயன் தான்தொழும் சீரானே சீர்திக முந்திருக் காறாயில் ஊரானே யென்பவ ரூனமி லாதாரே. 1

மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர் விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும் நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற் பதியானே யென்பவர் பாவமி லாதாரே.
விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர் மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாம் கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில் எண்ணானே யென்பவ ரேதமி லாதாரே.
தாயானே தந்தையு மாகிய தன்மைகள் ஆயானே யாயநல் லன்பர்க்க ணரியானே சேயானே சீர்திக முந்திருக் காறாயில் மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.
கலையானே கலைமலி செம்பொற் கயிலாய மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த சிலையானே சீர்திக முந்திருக் காறாயில் நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே.
ஆற்றானே யாறணி செஞ்சடை யாடர வேற்றானே யேழுல கும்மிமை யோர்களும் போற்றானே பொழில்திக முந்திருக் காறாயில் நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே.
சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள் ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர் காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில் ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யடராவே.
கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம் எடுத்தானே யேதமா கம்முனி வர்க்கிடர் கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில் அடுத்தானே யென்பவர் மேல்வினை யடராவே.
பிறையானே பேணிய பாடலொ டின்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே யெழில்திக முந்திருக் காறாயில்
உறைவானே யென்பவர் மேல்வினை யோடுமே.
O7

Page 9
செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும் படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில் குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே. 10
ஏய்ந்தச் ரெழில்திக முந்திருக் காறாயில்
ஆய்ந்தசி ரானடி யேத்தி யருள்பெற்ற
பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே. 11
திருச்சிற்றம்பலம்
மூன்றாம் திருமுறை திருக்கோணமலை
பண் - புறநீர்மை திருச்சிற்றம்பலம் நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பு நிமலர்நீ றணிதிரு மேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு
மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங்
கோணமா மலையமர்ந் தாரே. 1
கடிதென வந்த கரிதனை யுரித்து
அவ்வுரி மேனிமேற் போர்ப்பர் பிடியன நடையாள் பெய்வளை மடந்தை
பிறைநுத லவளொடு முடனாய்க் கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங்
கோணமா மலையமர்ந் தாரே. 2

பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம்
படர்சடை முடியிடை வைத்தார் கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக
மாகமுன் கலந்தவர் மதில்மேல் தனித்தபே ருருவ விழித்தழல் நாகந்
தாங்கிய மேருவெஞ் சிலையாக் குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே. 3
பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப்
பாங்குடை மதனனைப் பொடியா விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த
விமலனார் கமலமார் பாதர் தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ்
செம்பொனு மிப்பியுஞ் சுமந்து கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங்
கோணமா மலையமர்ந் தாரே. 4.
தாயினு நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினு மனத்து மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பால்
நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே. 5
பரிந்துநன் மனத்தால் வழிபடு மாணி
தன்னுயிர் மேல்வருங் கூற்றைத்
திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளுஞ்
Gol,3FLib60)LDUUTît y blb60)LDuu IT (6560)LuLITîir
விரிந்தயர் மெளவல் மாதவி புன்னை
வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ்
கோணமா மலையமர்ந் தாரே. w 6, 7
4.

Page 10
எடுத்தவன் தருக்கை யிழித்தவர் விரலா
லேத்திட வாத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு
மிறப்பறி யாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும்புக ழாளர்
கோணமா மலையமர்ந் தாரே. 8
அருவரா தொருகை வெண்டலை யேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப்
பெருங்கடல் வண்ணனும் பிரமன் இருவரு மறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும் குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக்
கோணமா மலையமர்ந் தாரே. 9
நின்றுணுஞ் சமணு மிருந்துணுந்தேரு நெறியலா தனபுறங் கூற வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபால் மெல்லிய லொடுமுட னாகித் துன்றுமொண் பெளவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங்
கோணமா மலையமர்ந் தாரே. 10
குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான்
கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து
முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார்
தோன்றுவர் வானிடைப் பொலிந்தே. 11
திருச்சிற்றம்பலம்
10

திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை கோயில் : திருநேரிசை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம் பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகி எத்தினாற் பத்தி செய்கே னென்னைநீ யிகழ வேண்டாம் முத்தனே முதல்வா தில்லை யம்பலத் தாடு கின்ற அத்தாவுன் னாடல் காண்பா னடியனேன் வந்த வாறே. 1
கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா ஒருத்தரா லறிய வொண்ணாத் திருவுரு வுடைய சோதி திருத்தமாந் தில்லை தன்னுட் திகழ்ந்தசிற் றம்ப லத்தே நிருத்தம்நான் காண வேண்டி நேர்பட வந்த வாறே. 2
கேட்டிலேன் கிளைபிரியேன் கேட்குமா கேட்டி யாகில் நாட்டினேன் நின்றன் பாதம் நடுப்பட நெஞ்சி னுள்ளே மாட்டினிர் வாளை பாயும் மல்குசிற் றம்ப லத்தே கூட்டமாங் குவிமு லையாள் கூடநி யாடு மாறே. 3.
சிந்தையைத் திகைப்பி யாதே செறிவுடை யடிமை செய்ய எந்தைநீ யருளிச் செய்யாய் யாதுநான் செய்வ தென்னே செந்தியார் வேள்வி யோவாத் தில்லைச்சிற் றம்ப லத்தே அந்தியும் பகலு மாட அடியிணை யலசுங் கொல்லோ. 4.
கண்டவா திரிந்து நாளுங் கருத்தினால் நின்றன் பாதங் கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பி னாலே வண்டுபண் பாடுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தே எண்டிசை யோரு மேத்த இறைவநீ யாடு மாறே. 5
பாத்திருந் தடிய னேனான் பரவுவன் பாடி யாடி மூர்த்தியே யென்ப லுன்னை மூவரில் முதல்வ னென்பன் ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பாய் தில்லைச்சிற் றம்ப லத்துக் கூத்தாவுன் கூத்துக் காண்பான் கூடநான் வந்த வாறே. 6
11

Page 11
பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய ஐயநீ யருளிச் செய்யாய் ஆதியே யாதி மூர்த்தி வையகந் தன்னில் மிக்க மல்குசிற் றம்ப லத்தே பையநின் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே. 7
மனத்தினார் திகைத்து நாளு மாண்பலா நெறிகண் மேலே கனைப்பரா லென்செய் கேனோ கறையணி கண்டத் தானே தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச்சிற் றம்ப லத்தே அனைத்துநின் நிலயங் காண்பா னடியனேன் வந்த வாறே.8
நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பி யாதே வஞ்சமே செய்தி யாலோ வானவர் தலைவ னேநீ மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே அஞ்சொலாள் காண நின்று அழகநீ யாடு மாறே. 9
மண்ணுண்ட மாலவனும் மலர்மிசை மன்னி னானும் விண்ணுண்ட திருவுருவம் விரும்பினார் காண மாட்டார் திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச்சிற் றம்பலத்தே பண்ணுண்ட பாட லோடும் பரமநீ யாடு மாறே. O
திருச்சிற்றம்பலம்
ஐந்தாம் திருமுறை திருவிழிமிழலை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல் நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன் செம்பொ னேதிரு வீழி மிழலையுள் அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே. 1
கண்ணி னாற்களி கூரத்தை யால்தொழு தெண்ணு மாறறி யாதிளைப் பேன்றனை விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள் அண்ண லேயடி யேனைக் குறிக்கொளே. 2
12

ஞால மேவிசும் பேநலந் தீமையே கால மேகருத் தேகருத் தாற்றொழும் சீல மேதிரு வீழி மிழலையுள் கோல மேயடி யேனைக் குறிக்கொளே.
முத்த னேமுதல் வாமுகி ழும்முளை ஒத்த னேயொரு வாவுரு வாகிய சித்த னேதிரு வீழி மிழலையுள் அத்த னேயடி யேனைக் குறிக்கொளே.
கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம் ஒருவ னேயுயிர்ப் பாயுணர் வாய்நின்ற திருவ னேதிரு வீழி மிழலையுள் குருவ னேயடி யேனைக் குறிக்கொளே.
காத்த னேபொழி லேழையுங் காதலால் ஆத்த னேயம ரர்க்கயன் றன்தலை சேர்த்த னேதிரு வீழி மிழலையுள் கூத்த னேயடி யேனைக் குறிக்கொளே.
நீதி வானவர் நித்தல் நியமஞ்செய் தோதி வானவ ரும்முண ராததோர் வேதி யாவிகிர் தாதிரு வீழியுள் ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே.
பழகி நின்னடி சூடிய பாலனைக் கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய அழக னேயணி வீழி மிழலையுள் குழக னேயடி யேனைக் குறிக்கொளே.
அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ் சுண்ட வானவ னேயுணர் வொன்றிலேன் விண்ட வான்பொழில் வீழி மிழலையுள் கொண்ட னேயடி யேனைக் குறிக்கொளே.
13

Page 12
ஒருத்தன் ஓங்கலைத் தாங்க லுற்றானுரம்
வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய
திருத்த னேதிரு வீழி மிழலையுள்
ஒருத்த னேயடி யேனைக் குறிக்கொளே. 1 O திருச்சிற்றம்பலம்
ஆறாம் திருமுறை திருப்புன்கூரும் திருநீடூரும் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம் பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப்
பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத் துறவாதே கட்டறுத்த சோதி யானைத்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் தன்னைத் திறமாய வெத்திசையுந் தானே யாகித்
திருப்புன்கூர் மேவிய சிவ்லோ கனை நிறமா மொளியானை நீடு ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 1
பின்றானும் முன்றானு மானான் தன்னைப்
பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி
நல்வினையுந் தீவினையு மானான் தன்னைச் சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நின்றாய நீடுர் நிலாவி னானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 2
14

இல்லாணை யெவ்விடத்தும் உள்ளான் தன்னை
யினிய நினையாதார்க் கின்னா தானை வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்
மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச் செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நெல்லால் விளைகழனி நீடு ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.
கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்
கடுநரகஞ் சாராமே காப்பான் தன்னைப் பலவாய வேடங்கள் தானே யாகிப்
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச் சிலையாற் புரமெரித்த தீயா டியைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நிலையார் மணிமாட நீடு ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.
நோக்காதே யெவ்வளவும் நோக்கி னானை
நுணுகாதே யாதொன்றும் நுணகி னானை ஆக்காதே யாதொன்று மாக்கி னானை
யணுகாதா ரவர்தம்மை யணுகா தானைத் தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீங்காத பேரொளிசேர் நீடு ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.
பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த
முடையானை முடைநாறும் புன்க லத்தில் ஊணலா வூணாணை யொருவர் காணா
வுத்தமனை யொளிதிகழும் மேனி யானைச் சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப்பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீணுலா மலர்க்கழனி நீடு ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.
15

Page 13
உரையார் பொருளுக் குலப்பி லானை
யொழியாமே யெவ்வுயிரு மானான் தன்னைப் புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப்
புதியனவு மாய்மிகவும் பழையான் தன்னைத் திரையார் புனல்சேர் மகுடத் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நிரையார் மணிமாட நீடு ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 7
கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை
மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார் ஆரொருவ ரவர்தன்னை யறிவார் தேவ
றறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச் சீரரவக் கழலானை நிழலார் சோலைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீரரவத் தண்கழனி நீடு ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 8
கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
கால்நிமிர்ந்து நின்றுண்ணுங் கையர் சொன்ன பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்
புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன் செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடு ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 9
இகழுமா றெங்ங்னே யேழை நெஞ்சே
யிகழாது பரந்தொன்றாய் நின்றான் தன்னை
நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை
நலனழித்து நன்கருளிச் செய்தான் தன்னைத்
திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிகழுமா வல்லானை நீடு ரானை
நீதனே னென்னேநான் நினயா வாறே. 10
திருச்சிற்றம்பலம்
16

O O சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை திருநீடுர்
பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை
ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக் கார தார்கறை மாமிடற் றானைக்
கருத லார்புரம் மூன்றெரித் தானை நீரில் வாளை வரால்குதி கொள்ளும்
நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப் பாரு ளார்பர வித்தொழ நின்ற
பரம னைப்பணி யாவிட லாமே. 1
துன்னு வார்சடைத் தூமதி யானைத்
துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப் பன்னும் நான்மறை பாடவல் லானைப்
பார்த்த லுக்கருள் செய்த பிரானை என்னை இன்னரு ளெய்துவிப் பானை
ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப் புன்னை மாதவி போதலர் நீடூர்ப்
புனித னைப்பணி யாவிட லாமே. 2
கொல்லும் மூவிலை வேலுடை யானைக்
கொடிய காலனை யுங்குமைத் தானை நல்ல வாநெறி காட்டுவிப் பானை
நாளும் நாம்உகக் கின்ற பிரானை அல்ல லில்லரு ளேபுரி வானை
ஆடும் நீர்வயல் சூழ்புனல் நீடூர்க் கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக்
கூறி நாம்பணி யாவிட லாமே. 3
17

Page 14
தோடு காதிடு தூநெறி யானைத்
தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப் பாடும் மாமறை பாடவல் லானைப்
பைம்பொழிற் குயில் கூவிட மாடே ஆடும் மாமயில் அன்னமோ டாட
அலைபு னற்கழ னித்திரு நீடுர் வேட னாய பிரானவன் றன்னை
விரும்பி நாம்பணி யாவிட லாமே.
குற்ற மொன்றடி யார்இல ரானாற்
கூடு மாறத னைக்கொடுப் பானைக் கற்ற கல்வியி லும்மினி யானைக்
காணப் பேணும வர்க்கெளி யானை முற்ற ஐஞ்சுந் துறந்திருப் பானை
மூவ ரின்முத லாயவன் றன்னைச் சுற்று நீள்வயல் சூழ்ந்திரு நீடூர்த்
தோன்ற லைப்பணி யாவிட லாமே.
காடி லாடிய கண்ணுத லாண்ைக்
கால னைக்கடிந் திட்ட பிரானை பாடி யாடும் பரிசே புரிந்தானைப்
பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத் தேடி மாலயன் காண்பரி யானைச்
சித்த முந்தெளி வார்க்கெளி யானைக் கோடி தேவர்கள் கும்பிடு நீடுர்க்
கூத்த னைப்பணி யாவிட லாமே.
விட்(டி) லங்கெரி யார்கையி னானை
வீடி லாத வியன்புக ழானைக் கட்டு வாங்கந் தரித்த பிரானைக்
காதி லார்கன கக்குழை யானை விட்டி லங்குபுரி நூலுடை யானை
வீந்த வர்தலை யோடுகை யானைக் கட்டி யின்கரும் போங்கிய நீடுர்க்
கண்டு நாம்பணி யாவிட லாமே.
18

it ful LDITu LD60TsiO3506 utó060T
மனத்து ளேமதி யாயிருப் பானைக் காய மாயமும் ஆக்குவிப் பானைக்
காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை ஒயு மாறுறு நோய்புணர்ப் பானை
ஒல்லை வல்வினைகள்கெடுப் பானை வேய்கொள் தோளுமை பாகனை நீடுர்
வேந்த னைப்பணி யாவிட லாமே 8
கண்ட முங்கறுத் திட்டபி ரானைக்
காணப் பேணு மவர்ககெளி யானைத் தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத்
துன்ப முந்துறந் தின்பினி யானைப் பண்டை வல்வினை கள்கெடுப் பானைப்
பாக மாம்மதி யானவன் றன்னைக் கெண்டை வாளை கிளர்புனல் நீடுர்க்
கேண்மை யாற்பணி யாவிட லாமே. 9
அல்ல லுள்ளன தீர்த்திடு வானை
அடைந்த வர்க்கமு தாயிடு வானைக் கொல்லை வல்லர வம்மசைத் தானைக்
கோல மார்கரி யின்னுரி யானை நல்ல வர்க்கணி யானவன் றன்னை
நானுங் காதல்செய் கின்ற பிரானை எல்லி மல்லிகை யேகமழ் நீடு
ரேத்தி நாம்பணி யாவிட லாமே. − 10
பேரோ ராயிர மும்முடை யானைப்
பேசினாற் பெரி தும்மினி யானை
நீரூர் வார்சடை நின்மலன் றன்னை
நீடுர் நின்றுகந் திட்ட பிரானை
ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய்
ஆதரித் தழைத் திட்டவிம் மாலை
பாரூ ரும்பர வித்தொழ வல்லார்
பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே. 11
திருச்சிற்றம்பலம்
19

Page 15
மாணிக்கவாசகர் திருவாசகம்
எட்டாம் திருமுறை காருணியத் திரங்கல்
திருச்சிற்றம்பலம் தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி வான விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில் ஒருத்தனே போற்றி உம்பர்
தம்பிரான் போற்றி தில்லை நிருத்தனே போற்றி எங்கள்
நின்மலா போற்றி போற்றி.
போற்றிஓம் நமச்சி வாய
புயங்கனே மயங்கு கின்றேன் போற்றிஓம் நமச்சி வாய
புகலிடம் பிறிதொன் றில்லை போற்றிஓம் நமச்சி வாய
புறமெனைப் போக்கல் கண்டாய் போற்றிஓம் நமச்சி வாய
சயசய போற்றி போற்றி.
போற்றிஎன் போலும் பொய்யர்
தம்மையாட் கொள்ளும் வள்ளல் போற்றிநின் பாதம் போற்றி
நாதனே போற்றி போற்றி போற்றிநின் கருணை வெள்ளப்
புதுமதுப் புவனம் நீர்தீக் காற்றிய மானன் வானம்
இருசுடர்க் கடவு ளானே.

கடவுளே போற்றி என்னைக்
கண்டுகொண் டருளு போற்றி விடவுளே உருக்கி என்னை
ஆண்டிட வேண்டும் போற்றி உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தந் தருளு போற்றி சடையுளே கங்கை வைத்த
சங்கரா போற்றி போற்றி.
சங்கரா போற்றி மற்றோர்
சரணிலேன் போற்றி கோலப் பொங்கரா அல்குற் செவ்வாய்
வெண்ணகைக் கரிய வாட்கண் மங்கையோர் பங்க போற்றி
மால்விடை யூர்தி போற்றி இங்கில்வாழ் வாற்ற கில்லேன்
எம்பிரான் இழித்திட் டேனே.
இழித்தனன் என்னை யானே
எம்பிரான் போற்றி போற்றி பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி பிழைத்தவை பொறுக்கை எல்லாம்
பெரியவர் கடமை போற்றி ஒழித்திடிவ் வாழ்வு போற்றி
உம்பர்நாட் டெம்பி ரானே.
எம்பிரான் போற்றி வானத்
தவரவர் ஏறு போற்றி கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணிற போற்றி செம்பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம் பலவ போற்றி உம்பரா போற்றி என்னை
ஆளுடை ஒருவ போற்றி.
21

Page 16
ஒருவனே போற்றி ஒப்பில்
அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி எங்கள்
கோமளக் கொழுந்து போற்றி வருகனன் றென்னை நின்பால்
வாங்கிட வேண்டும் போற்றி தருகநின் பாதம் போற்றி
தமியனேன் தனிமை தீர்த்தே. 8
தீர்ந்தஅன் பாய அன்பர்க்
கவரினும் அன்ப போற்றி பேர்ந்தும்என் பொய்மை யாட்கொண்
டருளிடும் பெருமை போற்றி வார்ந்தநஞ் சயின்று வானோர்க்
கமுதமி வள்ளல் போற்றி ஆர்ந்தநின் பாதம் நாயேற் -
கருளிட வேண்டும் போற்றி. 9
போற்றியிப் புவனம் நீர்திக்
காலொடு வான மானாய் போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம்
ஆகிநீ தோற்ற மில்லாய் போற்றியெல் லாவு யிர்க்கும்
ஈறாயீ றின்மை யானாய் போற்றியைம் புலன்கள் நின்னைப்
புணர்கிலாப் புணர்க்கை யானே. 10
திருச்சிற்றம்பலம்

丝一 36LDulb
திருப்பள்ளி எழுச்சி
திருச்சிற்றம்பலம் போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியிடை யாய்எனை உடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
அருணன்இந் திரன்திசை அணுகினன்; இருள்போய் அகன்றது உதயம் நின் மலர்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலகைட லேபள்ளி எழுந்தரு ளாயே.
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்: ஒவின தாரகை ஒளிஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவ நற் செறிகழற் றாளிணை காட்டாய்!
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாய் எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

Page 17
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே. என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந் தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
பப்பற வீட்டிருந் துணரும்நின்' அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
24

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. ' 8
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டார்
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 9
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 10
திருச்சிற்றம்பலம்
அச்சோப் பதிகம்
திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 1
25

Page 18
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக் கறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 2
பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 3
மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன் சுண்ணவெண்ணி றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம் அண்ணல்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 4.
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்பட்டு நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன் உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகனன் றஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. 5
வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைப்பெருக்கிக் கொந்துகுழற் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப் பந்தமறுத் தெனையாண்டு பரிசறளன் துரிசுமறுத் தந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 6
தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப் பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி உய்யுநெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 7
சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக் காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 8
26

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலக் கோவையார்
திருச்சிற்றம்பலம் திருவளர் தாமரை சீர்வளர்
காவிகள் ஈசர் தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்கு பைங்காந்தள
கொண்டு ஓங்கு தெய்வ மருவளர் மாலையோர் வல்லியின்
ஒல்கி யன நடை வாய்ந்து உருவளர் காமன்றன் வென்றிக்
கொடி போன்று ஒளிர்கின்றதே
காரணி கற்பகங் கற்றவர் நற்றுணை
பாணரொக்கல் சீரணி சிந்தாமணி யணிதில்லை
சிவனடிக்குத் தாரணிகொன்றையன் தக்கோர்
தஞ்சங்க நிதிவிதி சேர் ஊருணி உற்றவர்க்கு ஊரன் மற்றி யாவர்க்கும் ஊதியமே
திருச்சிற்றம்பலம்

Page 19
f
சிவமயம்
திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறை
திருச்சிற்றம்பலம் ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வுசூள் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே! சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றளஞ் சிவனைத் திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு) உள்ளம்
குளிரளன் கண்குளிர்ந் தனவே.
வைத்த பாதங்கள் மாலவன்
காண்கிலன்; மலரவன் முடிதேடி எய்த்து வந்திழிந்(து) இன்னமும்
துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலே செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய தில்லை யம்பலத் தானைப் பத்தியாற் சென்று கண்டிட
என்மனம் பதைபதைப் பொழியாதே.

அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே?
அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின் சொற்பதத் துள்வைத்(து) உள்ளம்அள் ஞறும்
தொண்டருக்(கு) எண்டிசைக் கனகம் பற்பதக் குவையும் பைம்பொன்மா விகையும் பவளவா யவர்பனை முலையும் கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 4
பாடலங் காரப் பாசில்கா(சு) அருளிப்
பழுத்தசெந் தமிழ்மலர் சூடி நீடலங் காரத்(து) எம்பெரு மக்கள்
நெஞ்சினுள் நிறைந்துநின் றானை வேடலங் காரக் கோலத்தின் அமுதைத் திருவீழி மிழலையூ ராளும் கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்
கொழுமுதற்(கு) எவ்விடத் தேனே. 5
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயாநி உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ? அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 6
இடர்கெடுத் தென்னை யாண்டுகொண் டென்னு
ளிருட்பிழம் பறவெறிந் தெழுந்த
சுடர்மணி விளக்கி னுள்ளொளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதீ
அடல்விடைப் பாகா வம்பலக் கூத்தா
அயனொடு மாலறி யாமைப்
படரொளி பரப்பிப் பரந்து நின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே. 7
திருச்சிற்றம்பலம்

Page 20
சேந்தனார் திருப்பல்லாண்டு
திருச்சிற்றம்பலம் மன்னுக தில்லை! வளர்கநம்
பத்தர்கள்! வஞ்சகள் போய்அகல பொன்னின்செய்! மண்டபத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து பின்னைப்பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே
ஆரார் வந்தார் அமரர்
குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர்
குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும்
ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
பாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்(று) அருள்
செய்தவன் மன்னியதில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்
லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

குழலொலி யாழொலி கூத்தொலி
ஏத்தொலி எங்குங் குழாம்பெருகி விழவொலி விண்ணளவுஞ் சென்று
விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி
யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழஅடி யாரொடுங் கூடி
எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சொல்லாண் டசுரு திப்பொருள்
சோதித்த துய்மனத் தொண்டருள்ளி! சில்லாண் டிற்சிதை யுஞ்சில
தேவர் சிறுநெறி சேராமே வில்லாண்டகன கத்திரள்
மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண்டென்னும் பதங்கடந்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
திருச்சிற்றம்பலம்
திருமூலநாயனார் திருமந்திரம் பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம் ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
சிவசிவ என்கிலர் தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினைமாளுஞ் சிவசிவ என்றிடத் தேவருமாவர் சிவசிவ என்னச் சிவகதிதானே.
31

Page 21
அரகர என்ன அரியதொன்றில்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும் பிறப்பன்றே.
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும்போ தொருகைப்பிடி யாவர்க்கு மாம் பிறர்க்கின் னுரைதானே.
கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி சிங்காரமான திருவடி சேர்வரே.
வாயு மனமுங் கடந்த மனோன்மணி பேயுங்கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவுங் கடந்த அரனுக்குத் தாயும் மகளுநல் தாரமுமாமே.
தேனுக்குள் இன்பஞ் சிவப்போ கறுப்போ வானுக்குள் ஈசனைத் தேடு மதியிலிர் தேனுக்குள் இன்பஞ் செறிந்திருந்தாற்போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும் வெண்டாமரை பாடுந் திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடுமின் சென்னிவாய்த் தோத்திரஞ் சொல்லுமே,
மரத்தை மறைத்தது மாமதயானை மரத்தின் மறைந்தது மாமதயானை பரத்தை மறைத்தது பார்முதற்பூதம் பரத்தில் மறைந்தது பார்முதற்பூதமே.

மூலனுரை செய்த மூவாயிரந்தமிழ் (புலனுரை செய்த முந்நூறு மந்திரன் (புலனுரை செய்த முப்பதுதேசம் (புலனுரை செய்த மூன்றும் ஒன்றாமே. 10
ஓன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்த தான் ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே. 11
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே. 12
அன்பும்சிவம் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே. 13
தேனுக்குள் இன்பஞ் சிவப்போ கறுப்போ வானுக்குள் ஈசனைத் தேடு மதியிலீர் தேனுக்குள் இன்பஞ் செறிந்திருந் தாற்போல் ஊனுக்குள் ஈசன் ஒளித்திருந் தானே. 14
பதினொராம் திருமுறை
திருச்சிற்றம்பலம் மதிமலி புரிசை மாடக் கூடல் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்.

Page 22
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்(கு) உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்குஞ் சேரலன் காண்க பண்பா லியாழ்பயில் காண பத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பால் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே. 2
கொங்கை திரங்கி நரம்பெழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப் பங்கி சிவந்திரு பற்கள்நிணடு
பரடுயர் நீள்கணைக் காலோர்வெண்பேய் தங்கி அலறி உலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும்வீசி அங்கங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே 3
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர். 4.
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே. 5
திருவாக்கும் செய்கருமம் கைக்கூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதால் கூப்புவர் தம் கை 6
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதனி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து. 7

என்றும் அடியவர் உள்ளத்
திருப்பன இவ்வுலகோர் நன்று மலர்கொடு தூவித்
துதிப்பன நல்லசங்கத் தொன்றும் புலவர்கள் யாப்புக்
குரியன ஒண்கலியைப் பொன்றும் கவுணியன் சைவ
சிகாமணி பொன்னடியே. 8
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே. 9
அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன். 1 O
காக்கக் கடவிய நீ காவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்காய் இனி. 11
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதனி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து. 12
முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே - ஒரு கைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான். 13
35

Page 23
வாழை அடி வாழைஎன வந்த திருக் கூட்ட
மரபினில்யான் ஒருவன் அன்றோ வகையறியேன் இந்த ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இது தருமந் தானோ மாமழைமணிப் பொதுநடனஞ்செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ கோழை உல குயிர்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்
பொழுதே. 14
ஊருஞ்சதமல்ல; உற்றார் சதமலல, உற்றுப்பெற்ற பேருஞ் சதமல்ல; பெண்டீர் சதமல்ல; பிள்ளைகளும் சீருஞ்சதமல்ல; செல்வம் சதமல்ல; தேசத்திலே யாருஞ்சதமல்ல;நி ன்தாள்சதம் கச்சிஏகம்பனே. 15
பொல்லாதவன்; நெறிநில்லாதவன் ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன்; கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
சொல்லாதவன்; உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணில் ஏன் பிறந்தேன், கச்சி ஏகம்பனே.16 திருச்சிற்றம்பலம்
பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம் உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்ச்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
ஊனடைந்த உடம்பின் பிறவியே தானடைந்த உறுதியைச் சாருமால் தேனடைந்த மலர்ப்பொழில் தில்லையுள் மாநடஞ்செய் வரதர் பொற்றாள் தொழ. 2

எடுக்குமாக் கதையின் தமிழ்ச்செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திட தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக் கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்.
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவளவயற்பு கலித்திரு ஞானசம்பந்தர் பாதமலர்தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
திருநாவுக்கரசு வளர்திருத் தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருநாமச் சீர்பரவலுறுகின்றேன் பேருலகில் ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்
சென்றகாலத்தின் பழுதிலாத் திறமும்
இனி எதிர்காலத்தின் சிறப்பும் இன்று எழுந்தளப் பெற்ற பேறிதனால்
எற்றைக்கும் திருவருளுடையேம் நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து வென்றிகொள் திருநீற்றொளியினில்
விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார்.
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக்குணம் ஒருமூன்றும்
திருந்து சாத்துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடுமானந்த
எல்லையில் தனிப்பெருங்கூத்தின் வந்தபேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
சோதிமுத்தின் சிவிகை சூழ்வந்துபார் மீதுதாழ்ந்து வெண்ணிற்றொளி போற்றிநின் றாதியாரருளா தலில் அஞ்செழுத் தோதி ஏறினார் உய்ய உலகெலாம்.
37

Page 24
நன்மை பொருள் நெறியே
வந்தணைந்து நல்லூரில் மன்னுதிருத் தொண்டனார் வணங்கி
மகிழ்ந்து எழும் பொழுதில் உன்னுடைய நினைப்பதனை
முடிகின்றோம் என்றவர் தஞ் சென்னிமிசைப் பாதமலர்
சூட்டினான் சிவபெருமான். 9
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின்
வேண்டுகின்றார் "பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்பு
உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டு
நான் மகிழ்ந்துபாடி அறவா! நீ ஆடும்போதுன் அடியின்
கீழ் இருக்க" என்றார். 10
என்றுமின்பம் பெருகுமியல் பினால் ஒன்று காதலித்துள்ளமு மோங்கிட மன்னுளாரடியார் அவர் வான்புகழ் நின்றதெங்கும் நிலவி உலகெலாம் 11
வைய நீடுக மாமழை மன்னுக மெய் விரும்பிய அன்பர் விளங்குக சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக தெய்வவெண்டிரு நீறு சிறக்கவே 12
ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகிச் சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும் ஆகிப் பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப் போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி! போற்றி!13
கற்பனை கடந்த சோதி கருணையே உருவ மாகி அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடம்செய் கின்ற பூங்கழல் போற்றி! போற்றி! 14

பூழியர்கோன் வெப்பபொழித்த புகலியர்கோன் கழல் போற்றி ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி மளழிமலி திருவாத வுரர்திருத் தாள் போற்றி 15
பரமனை மதித்திடாப் பங்க யாசனன்
ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர்
குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம் 16
திருச்சிற்றம்பலம்
அருணகிரிநாதர் திருப்புகழ்
திருச்சிற்றம்பலம் உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதற் துணர்வூறி இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே. 1
39

Page 25
கைத்தலை நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை அக்குற மகளுடனச்சிறு முருகனை
அக்கண மணமருள்
சந்ததம் பந்தத் A.
சஞ்சலந் துஞ்சித் கந்தனென் றென்றுற்
கண்டு கொண்டன்புற் தந்தியின் கொம்பைப்
சங்கரன் பங்கிற் செந்திலங் கண்டிக்
தென்பரங் குன்றிற்
திருச்செந்தூர் இயலிசையிலுசிதவஞ்சிக் இரவு பகல் மனது சிந்தித் உயர்கருணை புரியுமின்பக் உனையென துள் அறியுமன்பைத் மயில் தகர்கலிடை யரந்தத் வசைகுற மகளை வந்தித் கயிலைமலையனைய செந்திற் கரிமுகன் இளைய கந்தப்
னடிபேணிக்
கடிதேகும்
மதயானை
பணிவேனே
முதல்வோனே
அதிதீரா
யிபமாகி
பெருமாளே.
தொடராலே திரியாதே றுனைநாளும் றிடுவேனோ புணர்வோனே doo)6] iuT6)T கதிர்வேலா பெருமாளே.
கயர்வாகி துழலாதே கடல்மூழ்கி தருவாயே தினைகாலல் தணைவோனே பதிவாழ்வே பெருமானே.
3

பழனி விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
போக அந்தரி பாலா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும்
ஓத லுங்குண ஆசார நீதியும் ஈர முங்குரு சீர்பாத சேவையு மறவாத
ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதே மனோகர ராஜ கெம்பிர நாடாளு நாயக 6նu lջoշր Մfr
ஆதரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லையிலேகி
ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
41

Page 26
சுவாமி மலை
நிறைமதி முகமெனு மொளியாலே நெறிவிழி கணையெனு நிகராலே உறவுகொள் மடலர்கள் SD 06 ITGB DIT உனதிருவடியிணை யருள்வாயே மறைபயிலரிதிரு மருகோனே மருவலரசுரர்கள் குலகாளா குறமகள் தனைமணம் அருள்வோனே குருமலைமருவிய பெருமாளே. 6
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக முரைக்குஞ் செயல்தாராய் 7
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபேரி தடுட்டுடு டுடுட்டுண் டெனதுடி முழக்குந்
தளத்துட னடக்குங் கொடுசூரர் சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே 8
42

பழமுதிர்ச்சோலை அகரமு மாகி யதிபனு மாகி
ugs(up LDTÉ அகமாகி 9)|யனெனவாகி அரியென வாகி
அரனென வாகி அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி
u5660)LDu LDIT de வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ
எனதுமு னோடி வரவேணும் மசுபதி யாகி மருவும்வ லாரி
மகிழ்களி கூரும் வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை
மகிழ்கதிர் காம முடையோனே செககண சேகு தகுதிமி தோதி
திமியென ஆடு மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை
மலமிசை மேவு பெருமாளே. 9
சரணகம லாலயத்தை அரைநிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம்வைக்க அறியாத சடகசட மூடமட்டி பலவினையி லேசனித்த
தமியன்மிடி யால்மயக்க முறுவேனோ கருணைபுரி யாதிருப்ப தெனகுறையி வேளைசெப்பு
கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே கடகபுய மீதிரத்ன மணியணிபொன் மாலைசெச்சை
கமழுமண மார்கடப்ப மணிவோனே தருணமிதை யாமிகுந்த கனமதுறு நீள்சவுக்ய
சகலசெல்வ யோகமிக்க பெருவாழ்வு தகைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீகொடுத்து
தவிபுரிய வேணுநெய்த்த 6L9666)T அருணதள பாதபத்ம மனுநிதமு மேதுதிக்க
அரியதமிழ் தானளித்த மயில்வீரா அதிசயம நேகமுற்ற பழநிமலை மீதுதித்த
அழக திரு வேரகத்தின் முருகோனே. 10

Page 27
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள LID60)6 ULL , மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட மதியாட வனச மாமி யாராட நெடிய மாமனாராட
மயிலு மாடி நீயாடி வரவேணும் கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு கருத லார்கள் மாசேனை பொடியாகக் கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடுதி அலைமோதும் உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் மருகோனே உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் பெருமாளே. 11
திருச்சிற்றம்பலம்
வாழதது
திருச்சிற்றம்பலம் ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியா ரெல்லாம்
திருச்சிற்றம்பலம்
亭 *S*

சிவமயம்
றி அருணகிரிநாதர் கந்தள் அனுபூதி
காப்பு நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் வடிண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்.
ஆடும் பரிவேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய்; தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனியானைச் சகோதரனே. 1
உல்லாச நிராகுல யோகவிதச் சல்லாப வினோதனும் நீயலையோ? எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்; முருகா! சுர பூபதியே. 2
வானோ புனல்பார் கனல் மாருதமோ ஞானோதயமே நவில் நான்மறையோ யானோ மனமோ எனை ஆண்டஇடம்தானோ பொருளாவது ஷண்முகனே. 3
வளைபட்ட கைம்மா தொடுமக்கள் எனும் தளைப்பட்டு அழியத் தகுமோ? தகுமோ? கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத்தொடு வேலவனே.

Page 28
மகமாயை களைந்திட வல்லபிரான் முகமாறும் ஒழிந்தும் ஒழிந்திலனே; அகமாடை மடந்தையர் என்று அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே.
திணியான மனோசிலை மீது உனதாள் அணியார் அரவிந்தம் அரும்பும் அதோ? பணியா என வள்ளி பதம்பணியும் தனியா அதிமோக தயாபரனே.
கெடுவாய் மனமே! கதிகேள் கரவாது இடுவாய்; வடிவேல் இறைதாள் நினைவாய சுடுவாய் நெடுவேதனை தூள்பட வே; விடுவாய் விடுவாய் வினையாவையுமே.
அமரும் பதிகேள் அகமாம் எனும் இப் பிமரம்கெட மெய்ப்பொருள் பேசியவா! குமரன்! கிரிராசகுமாரி மகன் சமரம் பொரு தானவ நாசிகனே.
மட்டுர் குழல் மங்கையர் மையல் வலைப் பட்டுசல் படும் படர் என்று ஒழிவேன் தட்டுறு அற வேல்சயிலத் தெறியும் நிட்டுர! நிராகுல! நிர்ப்பயனே.
கார்மா மிசை காலன் வரின் கலபத் தேர்மாமிசை வந்து எதிரப் படுவாய்; தார்மார்ப! வலார் இதலாரி எனும் சூர்மா மடியத் தொடு வேலவனே.
கூகா என என்கிளை கூடி அழப் போகாவகை மெய்ப்பொருள் பேசியவா! நாகாசல! வேலவ! நாலுகவித் தியாகா! சுரலோக சிகாமணியே.
10
11

செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இருசொல்அற என்றலுமே அம்மாபொருள் ஒன்றும் அறிந்திலனே.
முருகன் தனிவேல் முனி நம் குரு என்று அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ? உருவன்று அருவன்று உளதன்று இலதன்று இருளன்று ஒளியன்று என நின்றதுவே.
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய் மனனே! ஒழிவாய்; ஒழிவாய்; மெய் வாய்விழி நாசியொடும் செவியாம் ஐவாய் வழிசெல்லும் அவாவினையே.
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல்தந்து உணர்வென்று அருள்வாய்; பொருபும் கவரும் புவியும் பரவும் குரு புங்கவ! எண்குண பஞ்சரனே.
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ? வீரா! முதுசூர் படவேல் எறியும் சூரா! சுரலோக துரந்தரனே.
யாம் ஒதிய கல்வியும் எம்அறிவும் தாமேபெற வேலவர் தந்ததனால் பூமேல் மயல்போய் அறம் மெய்ப்புணர்வீர்! நாமேல் நடவீர் நடவீர் இனியே.
உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா! அதிகா! அனகா! அபயா! அமரா வதிகாவல! சூர பயங்கரனே.
வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடி போகியவா; அடியந்தமிலா அயில்வேல் அரசே! மிடியென்று ஒருபாவி வெளிப்படினே.
47
12
13
14
15
16
17
18
19

Page 29
அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா; விரிதரன! விக்ரம வேள்! இமையோர் புரிதாரக! நாக புரந்தரனே.
கருதா மறவா நெறிகாண எனக்கு இருதாள் வனசந்தர என்று இசைவாய்; வரதா! முருகா! மயில்வாகனனே! விரதா! சுரகுர! விபாடணனே.
காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா; பாளைக் குழல் வள்ளி பதம்பணியும் வேளைச் சுரபூபதி மேருவையே.
அடியைக் குறியாது அறியாமையினால் முடியக் கெடவோ? முறையோ முறையோ? வடிவிக்ரம வேல்மகிபா குறமின் கொடியைப் புணரும் குண பூதரனே.
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ? சூர்வேரொடு குன்று தொளைத்த நெடும் போர்வேல! புரந்தர பூபதியே.
மெய்யே என வெவ்வினை வர்ழவை உகந்து ஐயோ! அடியேன் அலையத் தகுமோ? கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்! மயிலேறிய சேவகனே.
ஆதாரம் இலேன் அருளைப் பெறவே நீதான் ஒருசற்றும் நினைந்திலையே; வேதாகம! ஞான வினோத மனோ தீதா! சுரலோக சிகாமணியே.
மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கு இதுவோ? பொன்னே! மணியே! பொருளே! அருளே! மன்னே! மயிலேறிய வானவனே.
48
20
21
22
23
24
25
26
27

ஆனா அமுதே அயில்வேல் அரசே! ஞானாகரனே! நவிலத் தகுமோ? யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலைநின்றது தற்பரமே. 28
இல்லேயெனும் மாயையில் இட்டனை, நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையோ, மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே.
செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்ததுதான் அவ்வாறு அறிவார் அறிகின்றதலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. 30
பாழ்வாழ்வு எனும் இப்படு மாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே; தாழ்வானவை செய்தன தாம் உளவோ? வாழ்வாய் இனி நீ; மயில் வாகனனே. 31
கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர்குலப் பிடி தோய் மலையே! மலை கூறிடு வாகையனே. 32
சித்தாகுல இல்லொடு செல்வம் எனும் விந்தாடவி என்று விடப் பெறுவேன்; மத்தாகினி தந்த வரோதயனே! கந்தா! முருகா! கருணாகரனே! 33
சிங்கார மடந்தையர் தீநெறிபோய் மங்காமல் எனக்கு வரம் தருவாய்; சங்க்ராம சிகாவல! ஷண்முகனே! கங்காநதி பால! க்ருபாகரனே. 34
விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்;
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா! சுரபூபதியே. 35
49

Page 30
நாதா! குமரா! நம என்று அரனார் ஒதாய் என ஒதியது எப்பொருள்தான்? வேதா முதல் விண்ணவர் சூடு மலர்ப் பாதா! குறமின் பதசேகரனே.
கிரிவாய் விடுவிக்ரம வேல் இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய்; மனனே! பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே.
ஆதாளியை ஒன்று அறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ? கூதாள! கிராதகுலிக்கு இறைவா! வேதாளகணம் புகழ் வேலவனே.
மாவேழி சனனம் கெட மாயை விடா மூவேடணை என்று முடிந்திடுமோ? கோவே குற மின்கொடி தோள் புணரும் தேவே! சிவசங்கர தேசிகனே.
வினையோட விடும் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங்கிடவோ? கனையோடு அருவித் துறையோடு பசுந் தினையோடு இதனோடு திரிந்தவனே.
சாகாது எனையே சரணங்களிலே
காகா; நமனார் கலகம் செயுநாள் வாகா! முருகா! மயில்வாகனனே! யோகா சிவஞானோப தேசிகனே.
குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் செறிவற்று உலகோடு உரைசிந்தையும் அற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே.
தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகள் ஆயினபின்
பேசா அனுபூதி பிறந்ததுவே.
50
36
37
38
39
40
41
42
43

சாடும் தனிவேல் முருகன் சரணம் ('கடும்படி தந்தது சொல்லுமதோ?
விடும் சுரர்மாமுடி வேதமும் வெங் காடும் புனமும் கமழும் கழலே.
கரவாகிய கல்வி உளார் கடைசென்று இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ? குரவா! குமரா குலிசாயுத குஞ் சரவா! சிவயோக தயாபரனே.
எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ; சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள் கந்தா! கதிர்வேலவனே! உமையாள் மைந்தா! குமரா! மறை நாயகனே.
ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப் பேறா அடியேன் பெறுமாறு உளதோ? சீறா வருசூர் சிதைவித்து இமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே.
அறிவொன்று அற நின்று அறிவார் அறிவில் பிறிவொன்று அறநின்ற பிரானலையோ? செறிவொன்று அறவந்து இருளே சிதைய
வெறிவென்று அவரோடு உறும் வேலவனே.
தன்னம் தனிநின்று அதுதான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ? மின்னும் கதிர்வேல் விகிர்தா! நினைவார் கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே.
மதிகெட்டு அறவாடி மயங்கி அறக் கதிகெட்டு அவமே கெடவோ கடவேன்? நதிபுத்திர ஞானசுகாதிப அத் திதிபுத்திரர் வீறடு சேவகனே.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
51
44
45
46
47
48
49
50

Page 31
ஷண்முக காயத்ரீ
தத் புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி தன்ன: ஷண்முக: ப்ரசோதயாத்!!
ஆறுமுக வணக்கம் ஏறமயி லேறி விளையாடு முகம் ஒன்று
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்று கூறுமடி யார்கள் வினைதீர்க்கு முகம்ஒன்று
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்று மாறுபட சூரரை வதைத்தமுகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று ஆறுமுக மான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே!
ஷண்முகக் கடவுள் போற்றி
சரவணத் துதித்தோய் போற்றி கண்மணி முருகா போற்றி
கார்த்திகை பாலா போற்றி தண்மலர்க் கடப்ப மாலை
தாங்கிய தோளா போற்றி விண்மதி வதன வள்ளி
வேலவா போற்றி போற்றி!
Älo
YKT
52

சிவமயம்
வள்ளலார் திருஅருட்பா
திருச்சிற்றம்பலம் முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம் சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - என்னவனே சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே தற்பரனே நின்தாள் சரண்
அப்பா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆரூயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்காணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும் செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்து நிறைத் தூற்றெழுங்கண் ணிரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வணைந்துவனைந் தேத்தும்நாம் வம்மின்உல கியலிர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

Page 32
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் பொருட்சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம் இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம் தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
வாழைஅடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
மரபினில்யான் ஒருவன் அன்றோ வகைஅறியேன் இந்த ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இது தருமந் தானோ மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
மகன் அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ கோழைஉல குயிர்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள் நின் அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே.
படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென் உடல் உயிரா தியளல்லாம் நீஎடுத்துக் கொண்டுன்
உடல் உயிரா தியளல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய் வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
மணியேளன் குருமணியே மாணிக்க மணியே நடனசிகா மணியேளன் நவமணியே ஞான
நன்மணியே பொன்மணியே நடராச மணியே.
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பாள்
தாய் அடித்தால்
பிடித்ததொரு தந்தை அணைப்பான்இங் கெனக்குப் பேசிய
w தந்தையும் தாயும் பொடித்திருமேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்ததுபோதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனி
ஆற்றேன்.
54

நான் கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
நாடாமை ஆகும் இந்த நல்விரத மாம்கனியை இம்மைஎனும் ஒருதுட்ட
நாய் வந்து கவ்வி அந்தோ தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்
தளராமை என்னும் ஒருகைத் தடிகொண்ட டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
தன்முகம் பார்த்தருள்வாய் வான்கொண்ட தெள் அமுத வாரியே மிகுகருணை
மழையே மழைக்கொண்டலே வள்ளலே என் இருகண் மணியே என் இன்பமே
மயில் ஏறு மாணிக்கமே தான்கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவுவேண்டும் உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும் பெருமைபெறு நின துபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானைபேய்
பிடியா திருக்கவேண்டும் மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்கவேண்டும் மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழவேண்டும் தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
55

Page 33
திருஓங்கு புண்ணியச் செயல் ஓங்கி அன்பருள்
திறலோங்கு செல்வம் ஓங்கச் செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
திகழ்ந்தோங்க அருள் கொடுத்து மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
வளர்கருணை மயம்ஓங்கி ஓர் வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
வடிவாகி ஓங்கிஞான உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும் உறவோங்கும் நின்பதம்என உளம்ஓங்கி வளம்ஓங்க
உய்கின்ற நாள் எந்தநாள் தருஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
நீர்உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற
நிலன்உண்டு பலனும் உண்டு நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட
நெறிஉண்டு நிலையும்உண்டு ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு
உடைஉண்டு வளமும் உண்டு தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவும் உண்டு தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியானமுண் டாயில் அரசே தார்உண்ட சென்னையில் கந்கோட்டத்துள்வளர்க
தலம் ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
திருச்சிற்றம்பலம்
56

சிவமயம்
கோளறு திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம் வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தெ
னுளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட் டொடாறு
முடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
வுமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் திருமகள் கலையதுர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும் அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

Page 34
மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டனெந்தை மடவாள்த னோடும்
விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள்த னோடு முடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தெ
னுளமே புகுந்த வதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
செப்பிள முலைநன் மங்கையொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியுமப்பு முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த வதனால் வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள்த னோடு முடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தெ
னுளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடு
மிடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 8
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறு மெங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 9
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாக முடிமே லணிந்தெ னுளமே புகுந்த அதனால் புத்தரோ டமணைவாதி லழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 10
தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொ னெங்கும் நிகழ
நான்முக னாதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளு மடியாரை வந்து
நலியாத வண்ண முரைசெய்
ஆனசொல் மாலையோது மடியார்கள் வானில்
அரசாள்வ ராணை நமதே. 11
திருச்சிற்றம்பலம்
59

Page 35
சனிபகவான் கவசம்
(நவக்கிரக மண்டலத்தின் தலைவன் சூரியபகவானே. சூரியனின் புத்திரன் சனிபகவான். எல்லாக் கிரகங்களும் சக்தியும் வலுவும் உள்ளனவே. அதிலும் பாவ கிரகமான சனி பார்த்தாலும், கொடுத்தாலும் அதிகப் பலனைச் செய்பவன். சனி மகா திசை நடப்பவர்கள், ஏழரை நாட்டுச் சனியால் இன்னலுறுவோர், அஷடமத்துச் சனி, கண்டச் சனியால் அவதியுறுவோர், இன்னும் கோசார ரீதியாகச் சனிக் கிரகத்தால் பாதிக்கப்படுவோர் சனிக்கவசத்தைப் பாராயணம் செய்து வழிபடுதல் நல்லது. சனிப் பெயர்ச்சிக் காலங்களிலும், சனி வக்கிர காலங்களிலும் நிவர்த்திக்காகவும் இக் கவச தோத்திரங்களைப் படித்துக் கோவிலில் சென்று எள் பொட்டலம் போட்டு எண்ணை ஊற்றிச் சனிபகவானை வழிபடலாம்)
காப்பு தேவரெண் டிசைக்கதிபர் சித்தரொடு கிம்புருடர் மூவர் முனிவர் முதலோரை - மேவியுறுந் தாரணிந்த மார்பன் சனிபகவான் கதை புகலக் காரணிந்த யானைமுகன் காப்பு.
ஆதிவேதாந்தமுதல் அரியஞானம் ஐந்தெழுத்தினுட்பொருளை அயன்மாலோடும்
சோதி சிற்றம் பலத்திலாடி நின்ற சுடரொளியை நீ பிடித்த தோஷத்தாலே
பாதிமதி சடைக்கணிய அரவம் பூணப் பதியிழக்கச் சுடலைதனிற் பாடியாடச்
சாதியிலா வேடனெச்சிற் திண்ணவைத்தாய் சனியனே காகமேறுந் தம்பிரானே
வேலவனை வேங்கைமர மாக்கிவைத்தாய் விறகுகட்டுச் சொக்கள்தமை விற்கவைத்தாய்

மாலினியை யுரலோடு கட்டுவித்தாய் வள்ளிதனைக் குறவரது வனத்தில் வைத்தாய்
காலனைமார்க் கண்டனுக்கா அரனுதைத்த காரணமும் நீ பிடித்த கருமத்தாலே
சாலவுனை யான்றொழுதே னெனைத்தொடாதே சனியனே காகமேறுந் தம்பிரானே
மஞ்சுதவ ழயோத்தியில்வாழ் தசரதன்றன் மக்களையும் வனவாசமாக்கிவைத்தாய்
பஞ்சவர்கள் சூதினால் பதியிழந்து பஞ்சுபடும் பாடைவர் படச்செய்வித்தாய்
எஞ்சலிலா வரிச்சந்திரன் பெண்டை விற்றே இழிகுலத்தி லடிமேயுற இசையவைத்தாய்
தஞ்சமென வுனைப் பணிந்தே னெனைத்தொடாதே சனியனே காகமேறுந் தம்பிரானே
அண்டமாயி ரத்தெட்டு மரசுசெய்த அடல்சூர பத்மனையு மடக்கிவைத்தாய்
மண்டலத்தை யாண்டநளச் சக்கரவர்த்தி மனைவியொடு வனமதனி லலையச்செய்தாய்
விண்டலத்தை பானுகோ பன்றன்னாலே வெந்தணலாய்ச் சூரரை வெருவச் செய்தாய்
தெண்டனிட்டே னெந்நாளு மெனைத்தொடாதே சனியனே காகமேறுந் தம்பிரானே
அண்டர்கோன் மேனியிற்கண் ணாக்கிவித்தாய் அயன்சிரத்தை வயிரவனா லறுக்கவைத்தாய்
திண்டிறகொள் கெளதமனா லகலிகைதான் சிலையாகவேசாய முறவேசெய்தாய்
61

Page 36
தண்டரள நகையிரதி மாரன்றன்னைச் சங்கரனார் நுதல்தவிழியிற் றணல்செய்வித்தாய்
சண்டமிலாதுனைத் தொழுதே னெனைத்தொடாதே சனியனே காகமேறுந் தம்பிரானே
பாருலவு ப்ரிதியைப்பல் லுதிரவைத்தாய் பஞ்சவர்க்குத் தூது பீதாம் பரணைவைத்தாய்
தாருலவும் வாலிசுக் ரீவன்றம்மைத் தாரையினாற் றீராத சமர்செய்வித்தாய்
சூரனெனு மிலங்கைரா வணன்றன்தங்கை சூர்ப்பனகி மூக்குமுலை துணிசெய்வித்தாய்
தாரணியு மணிமார்பாவெனைத் தொடாதே சனியனே காகமேறுந் தம்பிரானே
சுக்ரன்றன் கண்ணிழந்தானி லங்கையாண்டு துலங்கும்ரா வணன் சிரங்கண் டிக்கவீழ்ந்தான்
மிக்கபுக பூழிரணியென்றான் வீறழிந்தான் விளங்குதிரி புராதிகளும் வெந்துமாண்டார்
சக்கரத்தா லுடலறுந்தான் சலந்தரன்றான் தாருகாசூரனுமே சமரில் மாண்டான்
தக்கன்மிகச் சிரமிழந்தா னின்தோஷத்தால் சனியனே காகமேறுந் தம்பிரானே
அந்தன ஜங்கரன்கொம் பறவேசெய்தாய் அறுமுனிவர் மனைவிகள்கற் பழியச்செய்தாய்
சந்திரன்றன் கலையழிந்து தழைக்கச் செய்தாய் சங்கரனைப் பிச்சைதா னெடுக்கச் செய்தாய்
தந்திமுகச் சூரனுயிர் தளரச் செய்தாய் சாரங்க தரன்கரத்தை தறிக்கச்செய்தாய்
62

சந்ததமு முனைப்பணிவே னெனைத்தொடாதே சனியனே காகமேறுந் தம்பிரானே
சீதைதனை இராவணனாற் சிறைசெய்வித்தாய் தேவர்களைச் சூரனாற் சிறைசெய்வித்தாய்
மாதுதுரோ பதைதுயிலை வாங்குவித்தாய் மகேச்சுரனை யுமைபிரியும் வகைசெய்வித்தாய்
போதிலயன் றாளிற்றனைப் பூட்டிவித்தாய் பொதிகையினிலகத்தியனை பொருந்தச் செய்தாய்
தாதுசேர் மலர்மார்பா வெனைத்தொடாதே சனியனே காகமேறுந் தம்பிரானே
அப்பர்தமை கருங்கல்லோ டலையிற்சேர்த்தாய் அரனடியில் முயலகனை யடங்கச்செய்தாய்
செப்புமா னிக்கர் தமைச் சிறையிலிட்டாய் ஒலிகடலி னஞ்சையரன் உண்ணவைத்தாய்
தப்பிலா துனைதொழுதே னெனைத்தொடாதே சனியனே காகமேறுந் தம்பிரானே
நீரிணையுண் டெழுமேக வண்ணா போற்றி நெடுத்தபத்தி லறுகமலக் கண்ணா போற்றி
சூரியன்றன் றவத்தில்வந்த பாலா போற்றி துலங்குநவ கிரகத்துண் மேலா போற்றி
காரியென் பெயர்களுப காரா போற்றி காசினியிற் கீர்த்திபெற்ற தீரா போற்றி
மூரிகொளு நோய்முகமா முடவா போற்றி முதுமகளின் முண்டகநாள் போற்றி போற்றி
சூரியன்சோ மன்செவ்வாய் சொற்புதன் வியாழன் வெள்ளி காரியனி இராகு கேது கடவுள ரொன்பா னாமத்
தாரியல் சக்கரத்தை தரித்திரர் பூசித்தாலும் பாரினிற் புத்திர ருண்டாம் பாக்கியம் நல்குந்தானே.
63

Page 37
காயத்ரி மந்திரத்தின் மகிமை
வேதத்தினுடைய சாரமாகவும், மானிட வாழ்க்கையின் லகூதியத்தை விளக்குவதும் காயத்திரி மந்திரம் ஆகும். இது பிரார்த்தனையாகவும் தியான சுலோகமாகவும் அமைந்துள்ளது. பரப்பிரமத்தின் அம்சங்களாகிய பல தெய்வங்களுக்குப் பல காயத்திரி மந்திரங்கள் அமைந்துள்ளது. அவைகளைத் தேவி காயத்திரி, ருத்ர காயத்திரி, விஷ்ணு காயத்திரி, சுப்ரமண்ய காயத்திரி, கணேச காயத்திரி என்று பாகுபடுத்தலாம். இத்தனை வித காயத்திரிகளுள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பொதுவாக இருந்துவரும் காயத்ரி ஒன்றேயாகும். அது பிரம்ம காயத்ரி அல்லது சூரிய காயத்திரி என்று அழைக்கப்படுகிறது.
பிரம்ம காயத்திரியை எந்தத் தெய்வத்துக்கு வேண்டு மானாலும் அல்லது தெய்வத்தைக் கருத்திற்கொள்ளாது தத்துவ உபாசனை செய்பவர்களும் மந்திரமாகப் பயன்படுத்தலாம். இது மனிதனைப் பரமார்த்திகத்தின் உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவல்லதாகும். இம் மந்திரத்தின் பொருளுணர்ந்து உப யோகிப்பவர் எல்லோரும் துவிஜர்கள் ஆகின்றார்கள். துவிஜர்கள் என்றால் இரு பிறப்பாளர் என்று பொருள். தாயின் வயிற்றிலிருந்து பிறந்து வருவது ஒரு பிறவி. தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத் திருத்தியமைக்க ஆரம்பிக்கின்றபொழுது மனிதன் ஆத்மீகத்துறையில் இன்னொரு பிறவி எடுத்தவன் ஆகின்றான். ஆகையினால் அவன் துவிஜன் - இரு பிறப்பாளன் என்று சொல்லப்படுகின்றான். அதற்குத் தூண்டுதலாக வந்தமைந்
திருப்பது தான் காயத்ரி மந்திரம்.
ஒரு மந்திரத்தினுடைய பொருள் அறிந்தோ அல்லது அறியாமல் இருந்தோ அதை உச்சரிக்கின்ற அளவு மிகவும்
சரியாக உச்சரித்தால் உச்சரிப்பவர்களை அது பக்குவப்படுத்தும்.
64

அந்த வல்லமையே மந்திர சக்தி எனப்படுகின்றது. அவ்வாறே, காயத்திரி மந்திரத்தைப் பொருளுணர்ந்து சரியான முறையில் உச்சரிப்பவர்களே ஆத்மீகத்தின் உயர் நிலையை எட்டவல்லவர் ஆவார்.
ஓம் பூர் புவ ஸ்வா தத் ஸவித்துர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி திய் யோ யோந ப்ரசோதயாத்
பொருள் : ஓம் அல்லது ஓங்காரம் ஓசைகள் அனைத்துக்கும் முதல்காரணம். இது நாதப்பிரமம் என்று இயம்பப் பெறுகின்றது. பரவஸ்து ஓசை வடிவத்தில் இலங்குகிறது. அகிலாண்டத்தின் இயக்கம் உண்டாக்கும் ஓசையே ஓங்காரம். ஆகவே ஓங்கார ஓசை இயற்கை முழுவதும் ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கின்றது. ஓம் எனும் மூல மந்திரத்தின் திரிபுகளாகவே ஏனைய மந்திரங்கள் வந்துள்ளன. ஓங்காரத்தை உச்சரிப்பதற்கேற்பவே மனிதன் மேன்மையுறுகின்றான். அதுமட்டுமல்லாது ஓங்காரத்தை உச்சரித்த பிறகே ஏனைய மந்திரங்களை உச்சரிப்பது ஜதிகம். ஏனெனில் மந்திரம் அனைத்திற்கும் மூலமந்திரமாக இருப்பது ஓங்காரம். இதற்கு ஸ்தூல விளக்கம் : விநாயகர் பூஜைக்குப் பிறகே ஏனைய தெய்வங்கள் போற்றப்படுகின்றன. கணபதி ஓங்கார மூர்த்தி. கணபதி வழிபாடு எல்லோர்க்கும் சொந்தம் என்பது காயத்திரி மந்திரத்தில் வரும் ஓம் எனும் ஓசை அல்லது மந்திரம் மூலம் வெளியாகிறது.
பூ - பூலோகம், புவ - புவர்லோகம், ஸ"வ - ஸ்வர்க்கம் எனப் பொருள்படும்.) இம்மூவுலகமும் அகத்திலும், புறத்திலும் இருக்கின்றன. நம்மிடத்து இம் மூன்று உலகங்களும் ஜாக்ரதாவஸ்தை, சொப்பனுவஸ்தை, சுஷப்தி அவஸ்தை ஆக மாறிமாறி அமைகின்றன. இக்கொள்கை சிறிது பரிபாகம் அடைந்தவர்களுக்கே விளங்கும்.
65

Page 38
நனவு அல்லது விழித்திருந்த நிலையில் உடல் உள்ளம் ஆகிய இரண்டும் புறவுலகோடு இணக்கம் வைப்பது ஜாக்கிரதாவஸ்தை எனப்படும். கனவு என்பது சொப்பனாவஸ்தை. கனவு நிலையில் ஸ்தூல சரீரம் புறவுலகோடு தொடர்பு கொள்வதில்லை. அகக்காரணமாகிய மனதே கற்பனையில் ஸ்துல சரீரத்தையும், புறவுலகத்தையும் அதிலுள்ள உயிர்களையும் கற்பனை பண்ணிக்கொண்டு விவகாரம் பணி னும் . அந் நிலையில் இருக்கும் போது யாண்டும் ஜாக்ரதாவஸ்தைக்கு நிகராக தோன்றும். கனவற்ற உறக்கம் சுஷப்தி அவஸ்தை எனப்படும். அந்த அவஸ்தையில் அகவுலகம் இல்லை. புறவுலகம் இல்லை. மனது செயலற்று இருக்கும். அதாவது சுஷப்தி அவஸ்தையில் மனம் ஒடுங்குகின்றது. அதனால் கருத்து ஒன்றும் உருவெடுப்பதில்லை. இந்நிலை அறிதுயில் அல்லது யோக நித்திரை எனப்படுகிறது. இந் நிலையை அடைந்தவர்கள் காயத்ரி. தத்துவத்தைக் கையாண்ட
வர்கள் ஆகின்றனர். அந்நிலையை எட்டுவது நம் குறிக்கோள்.
இனி, ஜாக்ரதாவஸ்தையிலேயே பூலோகம், புவர்லோகம், ஸ்வர்க்கலோகம் ஆகிய மூன்று உலகங்களையும் நமக்கு நாம் அமைத்துக்கொள்ள முடியும். உடல் வாழ்க்கையை ஒழுங்காக நடாத்துவது பூலோக வாழ்க்கையாகிறது. உள்ளத்தை மேலான எண்ணங்களில் செலுத்துவது புவர்லோகமாகிறது. எண்ணத்தைக் கடவுள் பால் செலுத்துவது ஸ் வர் க் கலோகமாகிறது. அதிகாலையில் எழுந்திருந்து இரவு படுக்கப்போகும் வரையில் வாழ்வாங்கு வாழ்கிற மனிதன் மூவுலகிலும் முறையாக வாழ்ந்தவன் ஆகின்றான்.
இந்த மூன்று லோகங்களிலும் அல்லது மூன்று அவஸ்தைகளிலும் பராமார்த்திகப் பெருநிலையிலேயே இருந்து பழகுபவன் இரண்டாவது பிறப்பெடுத்தவன் ஆகின்றான். அதற்கு
66

மாறாகப் புலால் உடல் உணர்விலேயே இருந்து புலால் உடலைப் பராமரிப்பதற்காகப் பாடுபடுகிறவன் புலையன் ஆகிறான். ஆக, ஒரு மனிதன், இரு பிறப்பாளன் ஆவதும் அல்லது ஒரே உடல் பிறவி எடுத்து அதில் கீழ்மையில் உழல்வதும் அந்தந்த ஜீவனுடைய மனபரிபாகத்தை ஒட்டியதாம். இரு பிறப்பாளன் அல்லது துவிஜன் யாண்டும் போற்றுதலுக் குரியவன் ஆகின்றான்.
செய்யுள் மயமாக அமைந்துள்ள காயத்ரீயில் உள்ள பதங்களை இப்பொழுது உரைநடைக்குரிய பதங்களாகப் பிரித்து
அமைப்போம்.
ஓம் தத் ஸவிது : வரேண்யம் பர்க : தேவஸ்ய தீமஹி திய ய ந : ப்ரசோதயாத்
யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்தச் சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.
சரியாக அமைந்துள்ள காயத்ரீ மந்த்ரத்தில் பரவஸ்து வின் சொரூபத்தை விளக்குவதற்கான பதங்கள் மூன்று அமைந் திருக்கும். ஜீவப் பிரயத்தனத்தையும் தெய்வத்தின் அருளையும் விளக்குதற்கென்று அமைந்துள்ள வினைச்சொற்கள் மூன்று இருக்கும். இப்பேரியல்புகள் காயத்ரீ மந்த்ரங்கள் அனைத்துக் குமே பொதுவானவைகள். இந்தச் சூரிய காயத்ரீயில் பரவஸ்து வுக்கு விளக்கமாக அமைந்துள்ள மூன்று சொற்களை எடுத்துக் கொள்வோம். ஸவிது என்னும் சொல் ஸவித்ரு என்னும் சொல் லின் ஆறாம் வேற்றுமையாகும். ஸவித்ரு என்பது முதல் வேற்றுமை. ஸவிது என்பது ஆறாம் வேற்றுமை. ஸவித்ரு என்னும் சொல் உயிர்தருகிற, உற்சாகம் ஊட்டுகிற, வாழ்வைச்
செப்பனிடுகிற பொருள் என்று சொல்லப்படுகிறது. உலக
67

Page 39
நடைமுறையில் சூரியன் இச்சொல்லுக்கு இலக்காகிறது. பரதத்துவத்தில் பரமாத்மனுக்குப் பொருந்தியதாக இப்பதம் அமைகிறது. ஸ்வித்ரு என்னும் சொல்லைப் பெண்பால் ஆக்குகின்றபொழுது அது ஸாவித்ரீ என்று சொல்லப்படுகிறது. காயத்ரீ, ஸாவித்ரீ ஆகிய இரண்டு பெயர்களும் சக்தி தெய்வத்துக்கு உரியவைகள் ஆகின்றன. இந்த இரண்டு பெயர்களுள் ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றை மொழியுமிடத்து அது இழுக்கு ஆகாது. வழிபடுகின்றவர்களுடைய வசதிக்காக ஒரு தெய்வம் ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ கருதப் படுகிறது. சிவ என்பது ஆண்பால்; சிவா என்பது பெண்பால், ஸவித்ரு என்பது ஆண்பால்; ஸாவித்ரீ என்பது பெண்பால். ஆணாகவோ பெண்ணாகவோ, அலியாகவோ எப்படி வைத்துக் கொண்டாலும் அது உயிர்க்கு உயிராய் இருக்கின்ற பரவஸ்து ஆகிறது. பிரபஞ்சத்துக்கும், ஜீவகோடிகளுக்கும் ஆதாரமாகவும், மூலப்பொருளாகவும், முதல்'காரணமாகவும் இருப்பது பரவஸ்து. பரவஸ்துவுக்குப் புறம்பாக ஜீவர்களுடைய ஜீவவியக்தியில்லை. ஜகத்துக்குத் தோற்றம் என்பது இல்லை. கடலில் தோன்றி கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்து ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலை பெற்றிருக்கின்றன. ஆக, ஜகத்துக்கும் ஜீவனுக்கும் தூண்டுதல் அளிக்கும் பாங்கில் இருக்கிற பரவஸ்து ஸவித்ரு என்று சொல்லப்படுகிறது. கட்புலனாகின்ற சூரியன் இச்செயலைப் பிரபஞ்ச நிலையில் செய்து வருவதால் சூரிய நாராயணனும் ஸ்வித்ரு என்று சொல்லப்படுகிறார். ஆனால் இதன் லகூழியார்த்தம் பரமாத்மனையே குறிக்கின்றது.
பரம்பொருளை விளக்குதற்கென்று அமைந்துள்ள இரண்டாவது சொல் தேவ என்பதாகும். தேவஸ்ய என்பது இதன் ஆறாம் வேற்றுமை. தேவ என்னும் சொல் திவ்யமானவன்,
பிரகாசமானவன், மேலாம் நிலையில் இருப்பவன் என்றெல்லாம்
68

பொருள்படுகிறது. பிரகாசத்தோடு கூடியிருப்பது மூலநிலை. யதார்த்தநிலை. பிரகாசத்தை இழந்தநிலை கீழ்மைக்கு வந்துள்ள நிலையாகும். ஜகத்தில் ஜடமாய் இருப்பதெல்லாம் மூல நிலையை விட்டு வழுவிக் கீழ்நிலைக்கு வந்தவைகளாம். சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். சூரியன் சுயப்பிரகாசம் வாய்ந்தவன். சூரியனிடமிருந்து சிதறி வந்துள்ள பூமியும் சந்திரனும் சுயப்பிர காசத்தை இழந்தவைகள். இந்த இரண்டு கோளங்களையும் எடுத்து மீண்டும் சூரியனுள் போட்டால் முன்னிருந்தபடி இவைகளுக்குச் சுயப்பிரகாசம் வந்துவிடும். ஜகத் ஒரே ஐடமயமாக இருக்கிறது. ஜீவர்களோ ஜடம், சேதனம் ஆகிய இரண்டும் கலந்தவைகளாக இருக்கின்றன. பின்பு பரமனோ தனது சுயப்பிரகாசத்தை இழந்துவிடாது யாண்டும் பூரணமாகவே இருப்பவன். தேவ என்னும் சொல்லுக்குப் பேருண்மையை விளக்குகின்றது. யாப்புக்காக அமைந்துள்ள பதத்தை லகூரியார்த்தத்தில் வைத்துச் சொல்லுமிடத்து மகாதேவ என்பதாகும். பரவஸ்து யாண்டும் சுயஞ்ஜோதி என்பது இதன் பொருள்.
இனி, பரவஸ்துவைக் குறிக்கின்ற மூன்றாவது பதம் பர்க என்பதாகிறது. பர்க என்பது ருத்ரனுக்கு அமைந்த மற்றொரு பெயர். அது சிவனுக்கு அமைந்துள்ள மற்றொரு பெயர். ருத்ரனாகக் கருதுமிடத்து அழுகையின் வாயிலாக அழுக்கைப் போக்கக்கூடியவன் என்று பொருள்படுகிறது. சிவனாகக் கருதுமிடத்து ஞானப்பிரகாசத்தின் வாயிலாக அக்ஞான இருளைப் போக்குபவன் என்று பொருள்படுகிறது. பரவஸ்துவின் சொரூபத்தை ஜீவர்கள் கிரகித்துக் கொள்ளுதற்கே இந்த அடைமொழி வந்துள்ளது. ஸ்தூல உலகில் உள்ள சூரியன் தான் இருக்குமிடத்தைத் தானே விளக்குகின்றான். தன் வெளிச் சத்தைக் கொண்டு ஏனைய பொருள்களையும் விளக்குகின்றான். அங்ங்னம் ஞான சொரூபியாகிய பரமன் தன்னைத்தானே
69

Page 40
விளக்குகின்றான். அவனுடைய சன்னிதானத்தின் விசேஷத்தால் ஐகத்தும் ஜீவர்களும் ஞானக்காட்சிக்கு இலக்காகின்றன.
இங்ங்னம் ஸவித்ரு, தேவ, பர்க ஆகிய மூன்று சொற்களை யும் நாம் உச்சரிக்கின்றபொழுது அச்சொற்களுக்கு இலக்காக இருக்கின்ற பரமனையே பாவனைபண்ண வேண்டும். "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவர் செல்வர் சிவபுரத்து" என்பது ஆப்த வாக்கியம். பரமனைப்பற்றிய பதங்களைப் பேசுகின்றபொழுது அப்பதங்களின் அடிப்படைக் கருத்து உள்ளத்தில் உதயமாக வேண்டும். அப்பொழுது தான் உச்சரிக்கின்ற மந்த்ரத்துக்கு வலிவு வருகிறது.
காயத்ரீக்கு இன்றியமையாத மூன்று வினைச்சொற்களை இனி ஆராய்வோம். வரேண்யம் என்பது வர்ணித்தல் என்னும் வினையின் விகாரமாம். வரேண்யம் என்னும் சொல் போற்றுதற்குரியது என்றும், வர்ணிப்பதற்குரியது என்றும், விளக்குதற்குரியது என்றும் பொருள்படுகிறது. தங்கம், வெள்ளி முதலிய தாதுக்களை விளக்க விளக்க அவைகள் சுடர்விடு கின்றன. பரமனை விளக்குதலே ஆராதனையாகிறது. பரமனைப் பற்றிய விளக்கத்தைப் பொருள்சேர் புகழ் என்று பொய்யாமொழிப் புலவர் போற்றுகிறார். நரஸ்துதி பொருள்சேராத புகழ். பரமனைப் பற்றிய ஸ்ருதி பொருள் சேர்ந்த புகழ். ஆயிரம் ஆயிரமாகச் சொற்களை வாரிக்கொட்டிப் புகழ்ந்து கொண்டு போனாலும் அவனுடைய புகழுக்கு முடிவில்லை. பரமனை இடையறாது புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்னும் கோட்பாட்டை
வரேண்யம் என்னும் பதம் விளக்குகிறது.
செயல் அல்லது சாதனம் வகையாக வடிவெடுக்கின்ற அடுத்த வினைச்சொல் தீமஹி தியானிப்போமாக என்பது இதன் பொருள். ஆத்ம சாதனங்களுள் இது தலை சிறந்தது. அஷடாங்க
70

யோகத்தில் ஏழாவது அங்கமாக இருப்பது தியானம். இது முதிர்ந்தால் சமாதியாகப் பூர்த்தியாகிறது. காயத்ரீ மந்த்ரத்தைப் பயன்படுத்துகிறபொழுது சிறிது நேரம் தியானம் பண்ணுவது அவசியமாகிறது. தியானத்துக்காக நிமிர்ந்து உட்கார வேண்டும். சிரசு, கழுத்து, நெஞ்சு ஆகியவை நேராக இருக்க வேண்டும். உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்துகொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயஞ் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது. இங்ங்னம் ஐந்து நிமிஷத்துக்குக் குறையாமல் அரைமணி நேரம் வரையில் தியானத்தில்அமர்ந்திருக்க வேண்டும். தியானம் நமது தேசியப் பண்பு. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பரதகண்டத்துப் பெருமக்கள் காலையிலும் மாலையிலும் சந்தியா நேரங்களில் ஆழ்ந்து தியானத்திலிருந்து பழகி வந்திருக்கிறார்கள். இந்தப் பண்பில் ஊறி இருப்பதற்கு ஏற்ப ஆத்மீகம் மக்களிடத்து ஓங்குகிறது.
ஈண்டு இயம்பியுள்ள இரண்டு நல்வினைகளுள் ஒன்று நாவால் போற்றுவது; மற்றது மனத்தால் எண்ணுவது. ஜீவாத்மன் செய்கின்ற செயல்களுள் இவையிரண்டும் பாரமார்த்திகப் பண்பாட்டுக்கு உரியவைகள். ஆத்ம சாதகன் இவ்விரண்டையும்
ஊக்கத்தோடு அனுஷ்டிக்கக் கடமைப்பட்டிருக்கிறான்.
ப்ரசோதயாத் என்னும் வினைச்சொல் மூன்றாவதாக வந்தமைகிறது. தூண்டுகிற என்பது இதன் பொருள். இச்செயல் ஜீவாத்மனுடையதன்று. உள்ளத்தினுள்ளே வீற்றிருக்கின்ற பரமாத்மனுடைய செயல் ஆகின்றது இது. ஜீவாத்மனுடைய செயலுக்குத் துவக்கமும் முடிவும் உண்டு. ஆனால் பரமாத் மனுடைய செயலுக்கோ ஆதி அந்தமில்லை. இச்செயலைத்தான் ஆன்றோர்கள் அருள் என்று அழைக்கின்றனர். அருளின் பாங்கு சர்வகாலமும் உள்ளத்தினுள்ளே நிலைபெற்றிருக்கிறது. ஆத்ம
71

Page 41
போதத்தில் விழிப்படைந்து வருகிறவர்களுக்கு அது விளங்கு கிறது. அருளின் பாங்கை உள்ளத்தினுள்ளே உணர்பவனைத் தான் இருபிறப்பாளன் என்று சொல்ல வேண்டும். வெறும் உபநயனச் சடங்கால் இந்த உணர்வு உருவெடுக்காது. பரிபாகத்
தின் விளைவாகவே இது உருவெடுக்கிறது.
இந்தக் காயத்ரீ மந்திரத்தில் இறைவனுடைய அருளும் ஜீவப்பிரயத்தனமும் இடம்பெற்றிருக்கின்றன. இவ்விரண்டையும் ஒன்றுபடுத்துவதுதான் யோகம் ஆக, பரமார்த்திகப் பெருவாழ்வுக் குத் தகுதியுடையவர்களே காயத்ரீ மந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வல்லவர்கள் ஆகின்றார்கள்.
காயத்ரீ மந்திரத்தில் மெய்யெழுத்தை நீக்கிவிட்டு உயிரெழுத்தும் உயிர்மெய் எழுத்தும் சேர்ந்து இருபத்தினான்கு அக்ஷரங்கள் இருக்கும். இவை மூன்று வரிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வரியிலும் எட்டு எழுத்துக்கள் அமையப் பெற்றிருக் கும். இதுவே காயத்ரீ அமைப்பின் முறைமையாகும். இம்முறைமை வேதங்களில் முக்கிய இடம் பெறுகிறது.
வேதங்களின் உட்கருத்துக்களெல்லாம் காயத்ரீயில் அடங்கியிருக்கின்றன என்பது ஐதிகம். காயத்ரீயில் அடங்கி யிருக்கிற கருத்து யாது என்று ஆராய்ந்து பார்க்குமிடத்துப் பரம்பொருளுக்கும் ஜீவாத்மனுக்கும் இடையில் உள்ள இணக் கத்தை அது ஞாபகமூட்டுகிறது. ஜீவாத்மனைப் பரமாத்மன் மயமாகப் பயன்படுத்துவதற்கு அது வழிகாட்டித் தருகிறது. ஆக ஜீவாத்மன் பரிணமித்து மேலோங்கி வந்து பரமாத்மனைச் சேர்வது குறிக்கோள். இது வேதங்களின் திட்டம். மானுட வாழ்க்கையின் முடிந்த நோக்கம் இதுவேயாம். இந்த நோக்கத்தைச் சுருக்கமாகக் காயத்ரீ மந்த்ரம் தெளிவுபடுத்துகிறது.

சபரிமலை நீ ஐயப்பன் ஞான தீபம்
இப்பூவுலகில் நாம் தற்காலிகமாக தங்கிச் செல்லும் பிரயாணிகள். இங்குள்ள பொருட்கள் யாவும் தற்காலிகமானதே. ஓர் நாள் எல்லாம் மறைந்துவிடும். வாழும் காலம் குறுகியது. வாழும் முறையே பெரிது.
அழியா ஒளியாக சபரியில் கோவில் கொண்டு எழுந்தருளி தன்னை நாடிவருவோர் ஞான நிலை எய்திட மகரசாங்கரந்தி யன்று ஞானதீபமாக காட்சி கொடுத்து மனித மனதை புனிதமாக்கி யாவற்றையும் உணரும் ஆற்றலுடனும், ஞானத்துடனும் வாழ அருள்புரியும் பூரீ ஐயப்ப சுவாமியின் தரிசனமே நம்மை மேலான பேரின்ப பெருவாழ்வுக்கு அழைத்துச் செல்கிறது.
ஞானிகளுக்கு இறைவன் தூரத்திலுள்ள ஒரு பொருளல்ல. அவர்கள் அகக் கண்ணினால் காணுகிறார்கள். நாம் ஒருவரையொருவர் புறக்கண்ணில் காண்பதுபோல் அவர்களின் பக்குவம், அவர்களுக்கு உதவி ஆறுதல், துணை, ஒளி எனும் ஞானம் தேவைப்படும்பொழுது சிறுகுழந்தைகள் பெற்றோரை நாடுவதுபோல் இறைவனை நாடுவார்கள். ஞானிகள் அனைவருக்கும் சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் கள். அது மட்டுமன்றி அடக்கம், வஞ்சகமற்ற அன்பையும் கண்கூடாகக் காணலாம்.
சபரிமலை நாயகனின் ஞானதீபத்தைக் காணப் புனித சபரிமலைக்கு வாருங்கள். லெளகீக வாழ்க்கையிலிருந்து கொண்டே ஞானமார்க்கத்தை அடைய ஞானதீபத்தைக் கண்குளிரக் காணுங்கள். அவன் தீபம் உங்களின் உடல், மனம் இரண்டையும் தூய்மையாக்கிவிடும். இம்மையிலேயே ஓர் மறுபிறவி எடுத்துவிட்டோமோ என்று ஆனந்தப்படுவீர்கள்.
73

Page 42
சபரிக்கு ஒரு முறையாவது வந்து பாருங்கள் புரிந்து கொள் வீர்கள். நீங்களும் ஏன் இல்லற ஞானிகள் ஆகக்கூடாது?
இதோ ஞானமார்க்கத்துக்குக் காஞ்சி பெரியவர்கள் தரும் விளக்கம்.
நாம் எல்லோரும் பரம்பொருளைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். இந்த ஞானம் என்பது என்ன? பரம்பொருளைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான். அந்த ஒன்று தான் இத்தனையர்கவும் தோன்று கிறது. இத்தனையான தோற்றங்களிலே மனதைச் செலுத்திக் கொண்டிருந்தால் சஞ்சலம், ஏற்றத்தாழ்வு இவற்றால் உண்டாகும் கஷடங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். இத்தனை தோற்றத்திலிருந்தும் மனதைத் திருப்பி இவற்றுக்குக் காரணமான ஒன்றையே அறியத் தொடங்கினால் எண்ணமும் பல்வேறாக ஓடி அவதிப்படாமல் சஞ்சலங்கள் ஒயும். ஒடுற வஸ்து என்று பின் சலிக்கவோ, ஏற்றத் தாழ்வுக்கோ இடம் ஏது? அந்த நிலையிலேயே நித்திய சுகத்தைப் பெறலாம். அந்த நிலையைத் தான் ஞான என்கிறோம்.
உலக வாழ்வில் கூட சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால் அது நிச்சயமாக நிலைத்து இருப்பதில்லை. வெளியி லிருந்து வருகிற சுகத்தை, நாம் எப்படிச் சாசுவதமாக்கிக் கொள்ள (Մtջեւյւb.
வெளியிலிருந்து வருவது நமக்கு ஸ்வாதீனப்படாமல் நம் கைவிட்டு ஓடியும் விடும். அப்போது, அதனால் கிடைக்கிற சுகமும் போகத்தான் செய்யும். இப்படித்தான் அந்த நிமிஷம் சுகமாக இருப்பது அடுத்த நிமிஷமே மறைகிறது. அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாக கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போல தான் உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்துவிட்டு ஓடி விடுகிறது. நிரந்தர சுகம் என்பது, உலகத்துக்குக் காரணமான ஒன்றை அறிவதுதான்.
74

உலக வாழ்வில் மனிதர்களுக்கும், அளவில்லாத கஷ்டங் கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன் பெரிய பதவியில் இருப்பவன் கஷடமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போல பணமும் பதவியும் பெறப்பாடுபடலாம். ஆனால் பணக்காரனை, பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும், அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று. தாம் திண்ணையில் இருக்கிறோம். விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய்விடும். பணக்காரனும், பதவிக்காரனும் மாடி மேல் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து போகும். பிராணாபத்து ஆகும்.
ஒருவனுக்குப் பணமும் பதவியும் உள்ளபோதே அதனை உண்டாகிற சிறிது சுகத்தோடு, தன் பணம், பதவி போகக்கூடாது என்ற கவலை சுகத்தைவிட அதிகமாக இருக்கிறது. இதனால் தான் உலகத்தில் எவனுமே தான் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லக் காணோம். ஒவ்வொருவனும் தானே மகா புத்தசாலி, தானே ரொம்ப அழகு என்று நினைத்துக் கொண்டிருப்பது போல, அதிகம் துக்கமுள்ளவனும் தானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.
துக்கம் நம் உடன்பிறப்பு, நம் பூர்வ கர்மவினையின் பயனாக இந்தத் துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழியில்லை.
ஆனால், கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு, சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாகக் கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம் அந்த வழி.
சித்தப்பிரமை பிடித்த ஜடமாகி விட்டால் கஷ்டம் தெரிவ
தில்லை. பைத்தியத்தின் கஷடம் வேரூன்றி நிற்பதில்லை.
ஆனால், சித்தப்பிரமையில் நித்திய ஆனந்தமும் இல்லை.
தூக்கத்தில் துக்கமுமில்லை. ஆனால், தூக்கத்தில் சுகமாக
இருக்கிறோமென்ற அறிவும் இல்லை. ஞானிதான் எப்போதும்
75

Page 43
விழிப்பிலேயே இருக்கிறான். அவனது தேகத்தில் சிரமங்களே இராது என்பதில்லை. ஆனால் அவனுடைய மனத்தில் கிலேசமே இராது. வெளியே இருக்கிற சிரமம் அவன் உள்ளே பாதிப்ப தில்லை.
துக்கம் என்பதே தன்னைத் தொடாமல் எவன் ஒருவன் இருக்கிறானோ, அவன் யோகி. பாவம் - அதாவது மனத்தின் அசுத்தந்தான் துக்கத்திற்குக் காரணம். மனதில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீக்கினால் அது தானாகவே பரமாத் மாவின் பக்கம் திரும்பி விடும். ஒழுங்கினாலும், கட்டுப்பாட்டினா லும்தான் மனதின் அசுத்தங்களை அகற்ற முடியும். இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா தங்களை அகற்ற முடியும். இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு, சரியான கல்வியின் மூலமும், அப்பியாசத்தின் மூலமும், கட்டுப்பட்டு, ஒழுங்காக வாழ்ந்து அசுத்தங்களைப் போக்கிக் கொண்டு விட வேண்டும். அப்படிச் செய்து ஜெயித்தால், கடைசியில் தேக விநியோகம் பரமாத்மாவுடன் சேர்ந்து விடுகிற யோகமாகிவிடும்.
யோகிக்கு அடையாளம் என்ன? பரமாத்மாவைச் சேர்ந்துவிட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக் கொள்ள நினைக்காது.
மனசு அதற்கப்புறம் ஓடவே கூடாது. அப்படி ஆகிவிட்டால் தான் அதற்கப்புறம், இப்போது இந்த மனசினால் நமக்கு உண்டாகி இருக்கிற அத்தனை தொந்தரவுகளும் தொலைந்து போகும். அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும்? மனது எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேர வேண்டும். மனது, அதன் மூலத்தில் சேர்ந்து விட்டால் அங்கே அப்படியே கரைந்து போய்விடும். அப்புறம் ஓடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்தும் விடுபட்ட நிலை. நதி இருக்கிறது. அதன் மூலம் உண்டாகும் இடம் என்ன? சமுத்திரம். சமுத்திர ஜலம் தான் ஆவியாகப் போய், வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஓடாத ஓட்டமில்லை. இப்படி ஓடி ஒடிக் கடைசியில் தன் மூலமான சமுத்திரத்தில்
76

வந்து விழுகிறது. அப்புறம், அதற்குத் தனி ரூபம் உண்டா? ஓட்டம் உண்டா? ஒன்றும் இல்லை.
இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் அவற்றைத் தன்னிலே சேர்த்துக் கொள்கிற சமுத்திரம் மாதிரி, தம் மக்களை எல்லாம் முடிவான சேர்க்கையில் யோகத்தில் தன்னோடு கரைத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது சமாதி நிலையில் ஞானிகள் யோகிகள் தங்கள் தனிமனதைக் கரைத்துவிட்டு வெளிப் பிரக்ஞை இல்லாமல் இருக்கும்போது அந்த வஸ்துவை விட்டு விட்ட மாதிரி நமக்குத் தோன்றினால் கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கைதான். உள்ளுர அந்தச் சேர்க்கையில் அனுபவமேதான்அவர் வெளிப் பிரக்ஞையோடு இருப்பது மாதிரி நமக்குத் தோன்றுகிறபோது கூட அதை அடைய வேண்டும் என்று எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று, கொஞ்சம் கொஞ்சம் ஒருவனுக்குத் தோன்றிவிட்டால் கூட, அவன் யோகியில்லை. அவன் ஸ்வாமியைச் சேரவில்லை என்று அர்த்தம்.
யோகியின் அடையாளத்தை வேறு விதமாகவும் சொல்ல லாம் அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்து விட்டது என்றால் அதற்கப்புறம் எந்தப் பெரிய துக்கம் வந்தாலும் அது துளிகூட ஆடக்கூடாது. அசையக்கூடாது அழக்கூடாது. இப்படியில்லாமல் கொஞ்சம் சலித்துவிட்டால் கூட, அவன் பரமாத்மாவை அடையவில்லை என்றே அர்த்தம்.
யோகிக்கு அநேக துக்கம் வரும். அதாவது, ஊர் உலகத்துக்கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால் அவனுக்குத் துக்கம் லவலேசமும் தெரியாது பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பது கூடச் சரியல்ல. அது உணர்ச்சியே இல்லாத நிலையல்லவா? யோகி ஒருத்தன்தான், பூரண பிரக்ஞையோடுஇருக்கிறவன். அவன் ஸ்தானந்தனாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதே
77

Page 44
இல்லாமல் சதா ஆனந்தமாக ஒருவன் உட்கார்ந்து கொண்டி ருந்துவிட்டால் அதுதான் யோகம்.
அவனுக்கு ஸ்பாவமாகவே கருணை மாத்திரம் சுரந்து கொண்டிருக்கும். யாரிடத்திலும் கோபம் வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்குத் தன்னால் இம்மியும் ஹிம்சை வரக்கூடாது என்கிற எண்ணம் மட்டுமே இருக்கும். வெளி உலகத்தின் பார்வைக்கு அவன் என்னென்ன காரியம் செய்தாலும் அதிலெல்லாம் அவனுக்குத் தான் செய்கிறோம் என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப் பற்றே இல்லாமல் பரம் காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும். வெளியே பார்க்கிற காரியம் கடுமையாக இருந்தாலும் கூட உள்ளுக்குள்ளே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது. மகா யோகியான பரமேஸ்வரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம். ஒவ்வொரு ஜீவனும் எத்தனை பாவ ஜீவனாயிருந்தாலும் சிறிது காலமாவது கர்மவிதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்கு அவர் சம்ஹாரம் செய்கிறார். தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து, அந்த நேரத்தில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி இந்தச் சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார். தினமும் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக் கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி இச்சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின் இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள் கிறோம். இந்த அலைச்சல் புனரபி மரணம் கூடாது. இவற்றை தவிர்ப்பதற்காகவே கட்டுப்பாடு, ஒழுங்கு, பரமகருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டி யுள்ளோம். இதன் மூலமே ஒரு யோகி அல்லது ஞானி பூரணமாக உண்டாவார்.
சபரிமலை ஞான தீபம் கண்டு ஞானியாக மாறுங்கள் (இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் தான்)
يف
78

மனிதனை தெய்வமாக்கும் சபரிமலை நீ ஐயப்பன் விரத மஹத்தவம்
எங்கும் நிறைந்தவன் இறைவன். அவனை அகக் கண்ணால் இதய சுத்தியுடன் மட்டுமே காண முடியும். இப்பூமியில் மனித உயிர்களாகிய நாம், எண்ணில் காலமாகப் பிறப்பதும் இறப்பதுமாக இருக்கின்றோம். எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்துவிட்டோம். நாம் பெறாத உயிர்களுமில்லை. எம்மைப் பெறாத உயிர்களுமில்லை.
உயிர்கள் எங்கிருந்து பிறக்கின்றன? ஏன் பிறக்கின்றன? ஏன் இறக்கின்றன? பின் எங்கு செல்கின்றன? விஞ்ஞானிகள் கூடக் கண்டிலர்.
மெய்ஞானி கூறுகிறார் உயிர் புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகிப், பல்விருவமாகிப், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல்லசுரராகி, முனிவராய், தேவராய் இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்துவிட்டோம் என்று விஞ்ஞான யுகத்தில் அஞ்ஞானம் போக்க மெய்ஞ்ஞானத்தைச் சீர்தூக்கிப் பார்க்குமிடத்து அகண்டா கரமாய் எங்கும் நிறைந்து விளங்கும் ஐயப்பன் பூரீ பூதநாதன் எல்லா உயிர் உடம்பிலும் கோயில் கொண்டெழுந்தருளியுள்ளார்.
நாம் பசி, தாகம், சோர்வு இவைகளை இலட்சியம் செய்யாது வானளாவிய மரங்கள், முட்கள், கொடிகள், கற் பாறைகள், மேடு பள்ளங்கள் மட்டுமன்றி விஷ ஜந்துக்கள், மிருகங்கள் நிறைந்து வனந்தாண்டி இறைவன் திருச் சன்னதியை சென்று பிம்பத்தில் சன்னித்யமாகியிருக்கும் பகவானைத் தரிசித்து மகிழ்கிறோம்.
79

Page 45
நம் அகத்துள் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சபரிநாதனைக் காண வேண்டுமாயின் ஆசைத் தளைகள், அகங்காரம் என்ற மரங்கள், தீய எண்ணங்கள் என்ற மிருகத்தையும், ஆணவம், மாயை, காமம் என்ற மாயவனத்தைக் கடந்தால்தான் ஐயன் ஐயப்பனை காணலாம்.
இப்பூவுலகில் பகவான் ஐயன் அவதரித்து நீ என்னைக் காண வேண்டுமாயின் பற்றற்ற கருமம் செய். மனம் மாசு பெறாது தூய மனதில் ஞானம் ஒளிரும் என்று கூறினார்.
ஞானமே வாழ்க்கையின் இலட்சியம் நற்கருமத்திற்கு இடையூறு விளைவிப்பது காமம், வெகுளி, பேராசை, குரோதம், ஆணவம் முதலியன. இவற்றை வெல்ல "சுவாமியே சரணம் ஐயப்பா" என்ற தாரக மந்திரத்தைத் தூய மனதுடன் ஒதி அவனுடைய அருட்கடாட்ஷத்தைப் பெற வேண்டும்.
ஐயனைக் காண ஒரு மண்டலம் நோன்பு இருக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு வரும் மரபு. நோன்பு மனிதனை பக்குவப்படுத்துகிறது. மாலை அணிந்து கொள்வது நமக்கு நாமே விரும்பி விதிக்கும் கட்டுப்பாடே. - விஞ்ஞான யுகத்திற்குத் தேவையானவற்றை மெய்ஞ்ஞானிகள் அன்றே கூறியிருக்கிறார்கள்.
வனங்களைக் கடந்து சன்னிதானத்தை அடையும் பொழுது பதினெட்டுப் படிகளைத் தாண்டியே செல்ல வேண்டும். இந்த 18 படிகளுக்குத் தத்துவம் புலன் ஐந்து, பொறி ஐந்து, பிராணன் ஐந்தும் மனம், புத்தி, அகங்காரம் மூன்று. இவற்றைக் கடந்தாலே ஜயனைக் காணலாம்.
ஏன் ஒரு மண்டலம் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்?

மனிதனை ஆட்டிப்படைக்கும் பஞ்சேந்திரியங்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மண்டல நோன்பு. கடும் சுகவீனமுற்றவருக்கு வைத்தியர் தொடர்ந்து மருந்து கொடுத்துச் சுகப்படுத்துவார். அது போலவே இந்த நீண்ட விரதமும் அமைகிறது.
இந்த பஞ்சேந்திரியங்கள் நல்லனவற்றையே செய்ய இறைவன் படைத்திருக்கிறான். ஆனால் அவை தன்னிச்சைப்படி உண்ண வேண்டாத உணவுகளை உண்டு, மனம் கொண்டு பார்க்கத் தகாத காட்சிகளைப் பார்த்து, முகரத்தகாத மண்களை முகர்ந்து, அளவில்லா சப்தங்களைக் கிரகித்துக், கடும் சொற் களை பேசி மனதைச் சஞ்சலப்படுத்துகிறது. அது மட்டுமன்றி ஆணவத்தால் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் சொற்களைப் பிரயோகிக்கிறான். எல்லாவற்றையும் வயப்படுத்தி இந்த நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது.
ஐயனை காண வேண்டுமாயின் தேகபலம், பாதபலம், மட்டுமன்றி மனோபலத்தைப் பெற வேண்டும். தேக ஆரோக் கியத்திற்குப் பிரமச்சரியம் இன்றியமையாதது. மேற்கூறியவற்றைச் செவ்வனே கடைப்பிடித்தால் ஐயன் பரிபூரண பலத்தையும் தந்திடுவான் என்பதில் ஐயமில்லை.
துளசிமணி மாலை எதற்காக அணிய வேண்டும்?
வீட்டில் துளசிச் செடியைப் பக்குவப்படுத்தி வளர்க்கிறோம்.
வசதி உள்ளவர்கள் வீட்டில் துளசி மாடத்தை அமைத்து
பூஜிப்பார்கள். இதற்கு ஒரு தத்துவம் உண்டு.
எம்மை ஈன்றெடுத்தவள் தாய். துளசி என்பது மஹா லட்சுமியின் மறு வடிவமே. துளசித்தாய் இருக்குமிடத்து நாராயணன் முதல் தேவர் வரை குடிகொண்டிருப்பார்கள். தீட்டு, துடக்குகள் விலக்கப்பட்டுள்ளது. எனவே ஐயப்பன்மார் இத்துளசி மாலையை அணிவதே சாலச் சிறந்தது, அது மட்டுமன்றி துளசி
81

Page 46
நீரைத் தினமும் அருந்தி வந்தால் உடல் பிணி நீங்கிச் சுகமடைவோம். துளசி மாலையை அணிந்தவுடன் எம்மையறியா மலே ஓர் புத்துணர்ச்சி பெறுவோம். அதுமட்டுமன்றி காட்டு மிருகங்களிலிருந்தும், கொடிய விஷ ஜந்துக்களிலிருந்தும் காப்பாற்றப்படுகிறோம் என்பதையும் மறக்கலாகாது. துளசித் தாயானவள் துணையிருக்கும்போது மனக்கலக்கம் எதற்கு?
ஏன் புலால் உண்ணக்கூடாது?
புனிதத்தாயின் மாலை கழுத்தில் இருக்கிறது. வருடத்தில் 300 நாட்கள் நாம் விரும்பியதைச் செய்கிறோம். மிகுதி 65 நாட்களே அடுத்துவரும் 300 நாட்களில் எப்படி வாழப்போகிறோம் என்பதின் பரீட்சையே விரதம்.
தாவர போசனம் சாத்வீக உணவு. புலால் காம உணர்ச்சிகளைத் துண்டக்கூடியது. இத்துடன் வெங்காயம், பூடு, காரம் முதலியவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்திரியங்களின் சேஷ்டைகளினால் விரத பங்கம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே புலால் உண்ணுவது ஐயப்ப விரதத்திலே முக்கியமாகக் கருதப்படும் பிரமச்சரியத்திற்கு ஊறு விளைவிக்கும். ஆதலால் தவிர்க்க வேண்டியது ஐயப்பன்மார்க ளின் கடமைகளில் ஒன்றாகும்.
இருவேளை எதற்காக நீராட வேண்டும்?
காலையில் சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்த மனத்திற்குப் பின்பும் நீராடுவது சாலச் சிறந்தது. உடலில் உள்ள உஷ்ணம் கட்டுப்படுத்தப்படுகிறது. தேகம் பக்குவப்படுகிறது. மார்கழி மாத பனியும், குளிரும் காட்டில் சற்று அதிகமாகவே இருக்கும். எனவே இருவேளை நீராடப் பழகிக் கொண்டால் எக்குளிரையும் எம்மால் தாங்கிக்கொள்ள முடியும்.
ஏன் கறுப்பு ஆடை அணிய வேண்டும்?
கறுப்பு நிற ஆடை மங்களகரமற்றது என்றும், துக்க
82

காரியங்களுக்கும் சிலர் அணிகின்றனர் என சிலர் அவலட் சணமாகக் கருதுகின்றனர். ஐயப்பனுக்கு உகந்தது கறுப்பு நிறமே. கொடிய மிருகங்கள் வாழும் காட்டில், கறுப்பு அணிந்த ஐயப்பன்மார்கள் பளிச்சென்று தெரிவதில்லை. இருள் சூழ்ந்த வேளையில் நாமும் இருளாகவே இருப்போம். அடுத்ததாக கருநிற ஆடை அணிந்தவர்கள் ஐயப்பன்மார்கள் என்று தெரிந்து கொண்டு வீட்டுக்கு விலக்கான பெண்கள் தாமாகவே ஒதுங்கிக்
கொள்வார்கள்.
ஏன் படுக்கை தலையணையை நீக்கி சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து துயில வேண்டும்?
மலைக்கு இவற்றை கொண்டு செல்ல முடியாது. அத்து டன் தலையணையும், படுக்கையில் சிந்தனையைத் திசைதிருப்பி மனக்கிலேசம் ஏற்பட்டு விரத பங்கம் ஏற்பட வாய்ப்புண்டு. நம் முன்னோர்கள் படுக்கையிலா உறங்கினார்கள்.
பாதணி ஏன் அணியக்கூடாது?
காடுமலைகளைக் கடக்கும்போது பாதணி நல்ல பலனைக் கொடுக்காது. சில வேளைகளில் சறுக்கவும் வாய்ப்புண்டு. அது மட்டுமன்றி ஐயப்ப பக்தர்களுக்கு ஒரே நியதி ஏழை பணக்காரர், சிறியோர், பெரியோர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்பவை ஐயன் சன்னதியில் கிடையாது.
ஆம் கலியுகவரதன் அவதரித்து, நமது கவலை கஷ்டங்களை நீக்கி, கருணை வடிவமாகச் சபரிமலையில் எழுந்தருளியிருக்கும் பூரீ ஐயப்ப சுவாமியைத் தரிசிக்கக் கடுமையான விரதமிருந்து, இருமுடி தாங்கி காடுமலைகள் எல்லாவற்றையும் கடந்து தரிசன வேட்கையைத் தவிர வேறு எதுவுமின்றி, நாவிற் கினிய சரணங்களை முழங்கி அவன் திருவடியை சரணடைவோரைத் தெய்வமாக்கவல்ல சபரிமலை பூரீ ஐயப்பன் விரத மஹத்துவம் இன்றியமையாததாகும்.
மனிதனை தெய்வமாக்கும் சுவாமியே சரணம் ஐயப்பா
83

Page 47
றி சாஸ்தா பஞ்ச ரத்ன ஸ்துதி
லோகவீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரகூடிாகரம் விபும்
பார்வதி ஹற்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
- பூரீ ஸ்வாமியே ஸரணம் ஐயப்பா
விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ ப்ரியம் ஸதம் கூழிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
- ழரீ ஸ்வாமியே ஸரணம் ஐயப்பா
மத்த மாதங்க கமனம் காருண்யாம்ருத பூரிதம் ஸர்வ விக்நஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
- ழரீ ஸ்வாமியே ஸரணம் ஐயப்பா
அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம் அஸ்ம திஷ்டி ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
- ழரீ ஸ்வாமியே ஸரணம் ஐயப்பா
பாண்ட்யேச வம்ஸ் திலகம் கேரளே கேஸி விக்ரஹம் ஆர்த்தத்ரான பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
- பூரீ ஸ்வாமியே ஸரணம் ஐயப்பா
பஞ்சம ரத்னாக்ய மேத் தத்தியோ நித்யம் சுத்தபடேநர தஸ்ய ப்ரசன்னோ பகவான் சாஸ்தா வஸ்தி மானஸே
- பூரீ ஸ்வாமியே ஸரணம் ஐயப்பா
யஸ்ய தன் வந்தரிர் மாதா பிதா ருத்ரோ பிக்ஷக்தம தம் சாஸ்தார மஹம்வந்தே மஹா வைத்யம் தயாநிதிம்
- ழரீ ஸ்வாமியே ஸரணம் ஐயப்பா
பூதநாத சாதானந்தா ஸர்வ பூத தயாபார ரகூடி மஹா பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம.
84

றி சாஸ்தா அவர்டகம்
ஹரி வராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரித தீஸ்வரம் ராத்யபாதுகம் அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரி ஹராத்மஜம் தேவமாச்ரயே
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
சரண கீர்த்தனம் சக்தமாநஸம்
பரணலோலுபம் நர்த்தனாலயம் அருண பாஸ"ரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
ப்ரணய ஸத்யகா ப்ராண நாயபம்
ப்ரணத கல்பகம் ஸப்ரபாஞ்சிதம் ப்ரணவ மந்த்ரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
துரக வாஹநம் ஸந்தரானனம்
வரகதாயுதம் தேவ வர்ணிதம் குருக்ரு பாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
85
ஸரணம்
ஸரணம்
ஸரணம்
ஸரணம்
ஸரணம்
ஸரணம்
ஸரணம்
ஸரணம்
ஐயப்பா
ஐயப்பா
ஐயப்பா
ஐயப்பா
ஐயப்பா
ஐயப்பா
ஐயப்பா
ஐயப்பா

Page 48
த்ரி புவனார்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரிநயன ப்ரபும் திவ்ய தேசிகம் த்ரரிதச பூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி ஸரணம் ஐயப்பா ஸ்வாமி பவபயா பஹம் பாவுகாவுகம்
புவனமோஹனம் பூதிபூஷணம் தவன வாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
கன்மருது ஸ்மிதம் ஸந்தராரனம்
களப கோமளம் காத்ர மோஹனம் கணபசேகர் வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
ச்ரித ஜனப்ரியம் சிந்திதப்ரம
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம் ச்ருதி மனோஹரம் கீ தலாலஸம்
ஹாரிஹராத்மஜம் தேவமாச்ரயே
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
ஸரணம் ஐயப்பா ஸ்வாமி
ஸரணம்
ஸரணம்
ஸரணம்
ஸரணம்
ஸரணம்
ஸரணம்
ஸரணம்
ஸரணம்
ஐயப்பா
ஐயப்பா
ஐயப்பா
ஐயப்பா
ஐயப்பா
ஐயப்பா
ஐயப்பா
ஐயப்பா

ஜயப்பன் கவசம்
விநாயகர் துதி அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே உமையவளின் செந்தேனே ஊழ்வினை அழிப்பவனே எவ்வுயிரும் காப்பவனே ஏழை எமை ஆட்கொண்ட ஜங்கரனே அருள்புரிவாய்! ஐங்கரனே அருள்புரிவாய்
காப்பு ஹரிஹரபுத்திரனை ஆனந்த ரூபனை இருமூர்த்தி மைந்தனை, அறுமுகன் தம்பியை சபரிகிரீசனை, சாஸ்த ஸ்வரூபனை தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோமே ஐயப்ப தேவன் கவசமிதனை அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும் தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம் நாடிய பொருளும் நலமும் வருமே
நூல் மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய மணிகண்ட தேவா வருக வருக மாயோன் மைந்தா வருக வருக ஐங்கரன் சகோதரா ஜயப்பா வருக
புலி வாஹனனே வருக வருக புவியெல்லாம் காத்திட வருக வருக பூரணை நாதனே வருக வருக புண்ணிய மூர்த்தியே வருக வருக
பூதநாயகா வருக வருக
புஷ்களை பதியே வருக வருக
பொன்னம்பலத்துறை ஈசா வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக
87

Page 49
வருக வருக வாசவன் மைந்தா வருக வருக வீர மணிகண்டா வஞ்சனை நீக்கிட வருக வருக வல்வினை போக்கிட வருக வருக
ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக அச்சம் அகற்றிட அன்பனே வருக இருவினை களைந்தே எனையாட்கொள்ள இருமூர்த்தி மைந்தா வருக வருக
பதினெண்படியை மனத்தில் நினைக்கப் பண்ணிய பாவம் பொடிப் பொடியாகும் ஐயப்பா சரணம் என்றே கூறிட ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே
சபரிகிரீசனை நினைத்தே நீறிடத் துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும் சரணம் சரணம் என்றே சொல்லிட சித்திகள் யாவும் வந்தமைந்திடுமே
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும் பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர் ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க அவனியிலுள்ளோர் அடிபணிந்தேத்துவர்
சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் சபரி கிரீசா சரணம் சரணம் சத்குரு நாதா சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்

வேண்டுதல் சிவனார் மகன் என் சிரசினைக் காக்க நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க கஜமுகன் தம்பி என் கண்ணினைக் காக்க நாரணன் பாலன் நாசியைக் காக்க
இருமூர்த்தி மைந்தன் என் இருசெவி காக்க வாபரின் தோழன் வாயினைக் காக்க பம்பையின் பாலன் பற்களைக் காக்க நான்முகப் பூஜ்யன் நாவினை காக்க
கலியுக வரதன் என் கழுத்தினைக் காக்க குமரன் தம்பி என் குரல்வளை காக்க புஷ்களை நாதன் புஜங்களைக் காக்க முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க
வீரமணிகண்டன் விரல்களைக் காக்க கயிலை மைந்தன் கைகளைக் காக்க மணிகண்ட தேவன் மார்பினைக் காக்க வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க
முழுமுதற் கடவுள் என் முதுகினைக் காக்க இருமுடிப்பிரியன் என் இடுப்பினைக் காக்க பிரம்பாயுதன் என் பிட்டங்கள் காக்க தர்மசாஸ்தா என் துடைதனைக் காக்க
முருகன் சோதரன் முழங்கால் காக்க கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க பந்தள பாலன் பாதத்தினைக் காக்க விஜயகுமாரன் விரல்களைக் காக்க

Page 50
அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக்க ஆரியங்காவு ஜோதி அன்புடன் காக்க காட்டாளரூபி காலையில் காக்க நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க
மாலின் மகனார் மாலையில் காக்க ஹரிஹர சுதனார் அந்தியில் காக்க இன்பமய ஜோதி இரவினில் காக்க எரிமேலி சாஸ்தா என்றுமே காக்க
அரியியன் மகனார் அநுதினம் காக்க நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க வாசவன் செல்வன் வலப்புறம் காக்க இருமுடி ஈசன் இடப்புறம் காக்க காக்க காக்கக் கருணையால் காக்க பார்க்க பார்க்க என் பாபம் பொடிபட இம்மையும் மறுமையும் இல்லா தொழிந்திட ஈசன் மகன் எனை என்றுமே காக்க
கொடிய விஷங்களும் கொள்ளை நோய்களும் குருதியைக் குடிக்கும் துஷ்டப் பேய்களும் காந்தமலை தனைக் கருத்தில் கொண்டிட கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய்
பில்லி சூனியம் பலவித வஞ்சனை பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும் பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய் பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய்
வாதம், பித்தம், சிலேட்டுமத்துடனே வாந்தியும், பேதியும் வலிப்பும் சுளுக்கும் எவ்வித நோயும் எனையணு காமல் என்றுமே காப்பாய் எரிமேலி தேவா
90
10
11
12
13

கல்வியும், செல்வமும், கள்ளமில்லா மனமும் நல்லோர் உறவும் நாளும் அருள்வாய் நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா
காமம், குரோதம், லோபம், மோஹம் மதமாச்சர்ய மெனும் அறுபெரும் பேய்கள் என்றுமே என்னை அணுகவிடாமல் ஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய்
சூது, பொறாமை, பொய், கோபமில்லாமல் சோரம், லோபம், துன்மார்க்கம் கல்லாமல் சேத நெறிதனை விலகி நில்லாமல் வீரமணிகண்டா வரமெனக் கருள்வாய்
மூப்பும், பிணியும் வறுமையும் பசியும் வந்தெனை வாட்டி வதைசெய்யாமல் உள்ளன் புடனே உன் திரு நாமம் அனுதினம் சொல்லி அருள் தருவாயே
நமஸ்காரம் ஹரிஹர புத்ரா அன்பா நமோ நமோ சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ பதனெண் படிவாழ் பரமா நமோ நமோ ஐங்கரன் சகோதரா ஐயப்பா நமோ நமோ
பொன்னம்பலத்துறை புண்ணியா நமோ நமோ புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ சுரிகாயுதமுடைச் சுந்தரா நமோ நமோ மஹிஷிமர்த்தனா மணிகண்டா நமோ நமோ
சரணம் சரணம் சபரி கிரீசா சரணம் சரணம் சத்ய ஸ்வருபா சரணம் சரணம் சர்வ தயாளா சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்
91
14
15
16
17
18
19
20

Page 51
01.
O2.
O3.
O4.
O5.
06.
07.
O8.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
ஒம் ஒம் ஓம் ஓம் ஓம் ஓம் ஒம் ஒம் ஒம் ஓம் ஓம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஓம் ஒம் ஒம் ஒம் ஓம் ஓம் ஒம் ஒம் ஒம்
பகவான் பூனி சத்ய சாயி பாபா
அஷ்டோத்ர சத நாமாவளி
பகவான் சத்ய சாயி பாபாய நம
FTui
फ्राuी
gनाu9
gFITul
ag Tulî
ऊTul
फ्रHTu']
3FITui
g|Tul
গুণাuী
sTu
gTuS
फ्राuी
gFाul
3FTuী
g-Tu
3FTul
gTui
ऊाuी
छाuी
9FTuণী
#Tuी
சாயி
3Fাu']
gाu]
ऊTuी
ஸத்ய ஸ்ரூபாய நம ஸத்ய தர்ம பாராயணாய நம
வரதாய நம
ஸத் புருஷாய நம ஸத்ய குணாத்தமனே நம ஸாது வர்த்தனாய நம ஸாது ஜன போஷணாய நம ஸர்வக்ஞாய நம ஸர்வ ஜனப்பிரியாய நம சர்வ ஸக்தி மூர்த்தயே நம ஸர்வேஸாய நம ஸர்வ ஸங்க பரித் யாகினே நம ஸாயி ஸர்வாந்தர் யாமினே நம மஹிமாத் மனே நம மஹஸ்வர ஸ்வரூபாய நம பர்த்தி கிராமோத்பவாய நம பர்த்தி சேக்ஷத்திர நிவாசினே நம யசகாய வrர்டி வாசினே நம ஜோடி ஆதிபள்ளி ஸோமப்பாய நம பரத்வாஜரிஷி கோத்ராய நம பக்தவத்ஸலாய நம அபாந்தராத்மனே நம அவதார மூர்த்தயே நம ஸர்வ பய நிவாரினே நம ஆபஸ்தம்ப சூத்ராய நம அபய ப்ரதாய நம
92

28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
பூரீ சாயி ரத்னாகர வம்ஜோத்பவாய நம
ம் பூரீ சாயி
&#ाu']
#ाu}
giTu
ऊाu')
3Tui
gTu
FITul
FTuS
g-Tu
ऊाuी
சாயி
3FTu?
gu
ऊाu']
ऊITu]
சாயி
Fाu']
ful
फाuी
விர்டி ஸாயி அபேத சக்தி அவதாராய நம
சங்கராய நம ஷர்டி ஸாயி மூர்த்தயே நம துவாரகா மாயி வாஸினே நம சித்ராவதீ தடயுட்டபர்த்தி வித்ஹாரினே நம
ஸக்தி ப்ரதாய நம சரணாகத த்ராணாய நம ஆனந்தாய நம ஆனந்ததாய நம ஆர்த்த த்ராண பாராயணாய நம
அநாத நாதாய நம
S96mlDęsDTU u 6MDĢIMDTu Tu J bLD லோக பாந்தவாய நம லோக ரஷா பராயணாய நம லோக நாதாய நம தீனஜன போஷணாய நம மூர்த்தி த்ரய ஸ்வரூபாய நம முக்தி ப்ரதாய நம கலுஷ விதுராய நம
கருணா கராய நம ஸர்வாதாராய நம ஸர்வ ஹிருத் வாஸினே நம சர்வ புண்ய பல ப்ரதாய நம ஸர்வ பாப கூழியகராய நம ஸர்வ ரோக நிவாரினே நம ஸர்வ பாத ஹராய நம அனந்தநுத கள்த்ருணே நம ஆதி புருஷாய நம ஆதிஸக்தயே நம அபரூப ஸக்தினே நம
93

Page 52
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
u
gTul
#Tu
gनाu]
gाuी
फाuी
g|Tu']
g|Tu']
g|Tul
gाu]
g-Tun
छाu']
g|Tul
சாயி
3FTui
&FTuণী
&FTuin
#Tuी)
gFIT u
g|Tu]
छाuी
g|Tul
छाu']
&FTuী
gTu?
FTui
grful
छाuी
9ণাuণী
gsruf
gFাuী
அவ்யக்த ரூபிணே நம காமக்ரோத த்வம்ஸினே நம கனகாம்பர தாரினே நம அற்புத சர்யாய நம ஆபத்பாந்தவாய நம ப்ரேமாத்மனே நம ப்ரமே மூர்த்தயே நம ப்ரமே ப்ரதாய நம Ůuĵu Tu u bLD பக்தப்ரியாய நம பக்த மந்தாராய நம பக்தஜன ஹற்ருதய விஹாராய நம பக்தஜன ஹற்ருதயாலயாய நம பக்த பராதீனாய நம பக்தி ஞான ப்ரதீபாய நம பக்தி ஞான ப்ரதாய நம ஸ"க்ஞான மார்க்க தர்ஷகாய நம ஞான ஸ்வரூபாய நம கீதா போதகாய நம ஞான ஸித்தி தாய நம ஸந்தர ரூபாய நம புண்ய புருஷாய நம பல ப்ரதாய நம புருஷோத்தமாய நம
புராண புருஷாய நம அதீதாய நம காலாதீதாய நம ஸித்திரூபாய நம ஸித்தி ஸங்கல்பாய நம ஆரோக்கிய ப்ரதாய நம அன்ன வஸ்தாதாய நம
94

90. ஓம் பூரீ சாயி ஸம்ஸார துக்க கூடியகராய நம 91. ஓம் பூரீ சாயி ஸர்வாபீஷ்ட ப்ரதாய நம 92. ஓம் பூரீ சாயி கல்யாண குணாய நம 93. ஓம் பூரீ சாயி கர்ம த்வம்ஸினே நம 94. ஓம் பூரீ சாயி ஸாது மானஸ் சோபிதாய நம 95. ஓம் பூரீ சாயி சர்வ மத சம்மதாய நம 96. ஓம் பூரீ சாயி ஸாது மானஸபரிஸோதகாய நம
97. ஓம் பூரீ சாயி ஸாதகானுக்ரஹ வட விருஷ ப்ரதிஷ்டாப காய நம 98. ஓம் பூரீ சாயி சகல சம்சய ஹராய நம 99. ஓம் பூரீ சாயி ஸகல தத்வ போதகாய நம 100. ஓம் ஹீ சாயி யோகிந்த்ர வந்திதாய நம
101. ஓம் பூரீ சாயி யோகீஸ் வராய நம 102. ஓம் பூரீ சாயி ஸர்வ மங்கள கராய நம 103. ஒம் பூரீ சாயி ஸர்வ ஸித்தி ப்ரதாய நம 104. ஓம் பூரீ சாயி ஆபந் நிவாரினே நம 105. ஓம் பூரீ சாயி ஆர்த்தி ஹராய நம 106. ஓம் பூரீ சாயி ஸாந்த மூர்த்தயே நம 107. ஓம் பூரீ சாயி ஸ"லப ப்ரஸன்னாய நம 108. ஓம் பூரீ சாயி பகவான் பூரீஸத்ய ஸாயி பாபாய நம
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
(ஒவ்வொருவரும் தன் தாயை மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும். சில நேரத்தில் கொஞ்சம் கோபமும், தாபமும் அவர்கள்மேல் வரலாம். அவை எல்லாம் நகரும் மேகங்களே தவிர, நிரந்தரமானவை யல்ல. சலனப்படும் மனதை வைத்துக் கொண்டு நாம் மாயையில் ஆழ்ந்து அதனால் பெற்றவர்களை மறந்து விடுகிறோம்
"LITL
“எவனொருவன் தன் தந்தைக்குப் பிற்காலத்தில் உதவு
yy
கிறானோ அவனுக்கு தந்தையாக வந்து நான் உதவுவேன்'
-L

Page 53
வெண்பா
அச்சம் ஒழியும் அவமிருத்துத் தானொழியும் இச்சை பொழியும் இடுக்கணொடு - பச்சைமலை உச்சியினின் றாறொழுகு மோங்கிலங்கை நன்னாட்டீர் நித்தியரா மென்றுணர்வீர் நீர்.
திங்கட் சடையாய் எங்களை உடையாய் சிவனே ஓம்
திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஓம்
சீரிய அடியார் சிந்தையி லுறையுஞ் செல்வா ஓம் மங்கையை யுடையாய் மழவிடையானே மாதவனே ஓம்
மண்ணும் விண்ணும் ஒன்றாய் விளங்கும் மணியே ஒம் அங்கையி லங்கி தங்கிய பரனே யரனே ஓம்
ஆருயிரெல்லாம் நீயே யாகி அமர்ந்தாய் ஒம் கங்குலும் பகலும் இல்லாக் காட்சி தருவாய் ஒம்
கருதும் நல்ல அடியரை என்றுங் காப்பாய் ஓம்.
சிறையார் வண்டறை கொன்றைப்போதனே சிவனே ஒம் சீவன் சிவனாய்ப் பாவனை செய்வார் திருவே ஓம் குறையா வன்பு தரவே வருவாய் குருவே ஓம் கூடிக்கூடி யுன்னடி பாடல் கொடுப்பாய் ஒம் பிறையார் சடையாய் பேரா யிரமே யுடையாய் ஒம்
பேசப்பேச இன்பம் பெருகும் பிரானே ஒம் அறையார் கழலே அல்லாற் சிறியே னறியேன் ஓம்
அன்புசெய் அடியரை என்றும் ஆளக் கடவாய் ஓம்.
கல்லாப் பிழையுங் கருதாப் பிழையும் பொறுப்பாய் ஒம் காலனைக் காலாற் றாக்கிய பரனே யரனே ஓம் எல்லாம்செய்ய வல்லபம் உடையாய் எந்தாய் ஓம்
எழில்சேர் நல்லை வாழும் குருவே இறைவா ஒம் பொல்லா வினைகள் போகும் வண்ணம் புரிவாய் ஒம்
பூவார் மலர் கொண்டடியார் போற்றும் பொருளே ஓம் எல்லாம் உன்செயல் ஆமெனும் வண்ணம் தருவாய் ஒம்
ஏத்தும் நல்ல அடியரை யென்றுங் காப்பாய் ஓம்.
96

மாறிப் பொறிவழி போகா மனத்தார் இனத்தாய் ஒம் மாலோ டயனுங் காணா ஒளியே மணியே ஒம் ஆறும் பிறையுஞ் சூடி ஐயா மெய்யா ஓம்
ஆதயு மந்தமு மில்லாய் உள்ளாய் அறிவே ஒம் தேறித் தெளிவார் சிந்தையி லூறும் அமுதே ஓம்
செயசெய வென்று பணியும் தேவர்கள் தேவா ஓம் கூரிய சூலப் படையினை யுடையாய் கோவா ஓம்
கும்பிடும் நல்ல அடியரை யென்றுங் காப்பாய் ஓம்.
போற்றியென் வாழ்முத லாய பொருளே அருளே ஓம் புண்ணியர் நண்ணும் பூரணவடிவே புகலே ஓம் தோற்ற மறைக்குங் காரணமாகிய தொல்லோய் ஒம் சோதிச் சுடரே தோகைக் கிடமி துணையே ஓம் நீற்றொடு பொழியும் நெற்றிக்கண்ணா நிமலா ஓம்
நீதிவழுவா மாதவர் தங்கள் நெறியே ஒம் ஆற்றொடு தும்பை யம்புலிசூடிய அரனே ஓம்
அன்புசெய் அடியரை என்றும் ஆளக்கடவாய் ஓம்.
பதைப்பற்றிரு நெஞ்சமே
ராகம: தனணயா ாளம: ஆ
ர்னியாசி தாளம்
பல்லவி பார்ப்பதெல் லாஞ்சிவ மாகவே கண்டு பதைப்பற்றிரு நெஞ்சமே.
அநுபல்லவி பதைப்பற்ற பேர்க்கேசிவ பாக்கிய முண்டு பஞ்சேந் திரியம் அஞ்சையும் வென்று. (LuTÜ)
சரணம் மார்க்கம் சொல்லும் வழிதனிற் செல்லு மாறாத மெளனத் தியானத்தில் நில்லு தீர்க்க மானகுரு செல்லப்பன் பாதம் சிந்திக்குமு யோகசுவாமி வந்திக்கும் கீதம். (LuTÜ)
97

Page 54
ஓம் சிவ வணக்கம்
போற்றி போற்றி சிவசிவ போற்றி
நிலைமண்டில ஆசிரியப்பா
அந்தமும் ஆதியும் அகன்றோன் வருக
செந்தண்மை பூண்ட செல்வன் வருக
பந்தமும் வீடும் படைப்போன் வருக
எந்தமை யாளும் இறைவன் வருக
கற்பனை கடந்த கடவுள் வருக
சொற்பதம் கடந்த தொல்லோன் வருக
பாரொடு விண்ணாய்ப் பரந்தோன் வருக
சீரொடு பொலியுஞ் சிவனவன் வருக
சிந்தாமணி யென் தேவன் வருக
நந்தா விளக்கே நலஞ்சுடர் வருக
நீற்றொடு பொலியும் நிமலன் வருக
ஆற்றொடு தோற்றும் அமலன் வருக
அற்புதன் வருக அநேகன் வருக
பொற்புட நடஞ்செய் புனிதன் வருக விற்பொலி நுதலாள் விமலன் வருக
சொற்றுணை வேதியன்
பொற்றா வினைகள் பொலிந்து வாழ்க
கற்றோ ரேத்துங் கழலடி வாழ்க
98

மற்றோ ரறியா மலர்ப்பதம் வாழ்க
அற்றோர்க் குதவும் அருட்பதம் வாழ்க
தன்னே ரில்லாத் தாளிணை வாழ்க
என்போல் வந்த இணையடி வாழ்க
கண்போற் காக்குங் கழலடி வாழ்க
விண்போல் விளங்கும் மெய்யடி வாழ்க
பெண்பா லுகந்த பித்தன் வாழ்க
மண்மேல் மலரடி வைத்தோன் வாழ்க
தற்பரன் வாழ்க சதாசிவன் வாழ்க
சிற்பரன் வாழ்க சின்மயன் வாழ்க
முழுதுமாய் நின்ற முதல்வன் போற்றி
தொழுமடி யார்கள் துணைவா போற்றி
என்றுமெ லுளத்தில் இருப்பாய் போற்றி
மன்று ளாடும் மணியே போற்றி
பொன்று முடலைப் பொறுக்கேன் போற்றி
சென்றடை யாத செல்வா போற்றி
ஆதி போற்றி அரனே போற்றி
சோதி போற்றி சுடரே போற்றி
நீதி போற்றி நிறைவே போற்றி
மாதொரு பாக மலர்ப்பதம் போற்றி
ஏதொரு பற்றிங் கில்லைப் போற்றி போற்றி போற்றி பொன்னடி யென்றும்
போற்றி போற்றி சிவசிவ போற்றி.
99

Page 55
ஏத்தக பொன்னடி
நிலைமண்டில ஆசிரியப்பா
எழுக புலருமுன் ஏத்துக பொன்னடி
தொழுது வணங்குக தூநீ றணிக
பழுதிலைந் தெழுத்தும் பன்னுக பன்முறை
அழுது புலம்புக வாய்விட் டரற்றுக
அன்னை பிதாவின் அடியினை வணங்குக
தன்னைப் போலச் சகலமும் ஒம்புக
விண்ணைப் போல வியாபகம் ஆகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை
செய்வன எல்லாஞ் செவ்வனே செய்க
கையும் மெய்யும் கருத்திற் கிசைக
அழுக்காறு கோபம் அவாஅ ஒழிக்க
விழுப்பம் மிக்க மேன்மக்கடம்பை
ஒருபோதும் மறவா துறவு கொள்ளுக
கருவினில் வாராக் காரணங் காண்க
தன்னை அறிக தானே ஆகுக
மின்னை ஒத்த வாழ்வை வெறுக்க
வறுமை வந்துழி மனந்தள ரற்க
மறுமை இன்பம் மறவாது நாடுக
அடியார் தங்கள் அடியிணை மலர்க்கீழ்
குடியாய் வாழுக குறைவெலாந் தீர்க
100

ஈசன் அடியிணை ஏத்தி ஏத்தி
வாச மலர்கொடு வாழ்த்தி வாழ்த்தி
மத்தன் இவனென மண்ணவர் பேசவும்
சித்தன் இவனெனத் தேவர்கொண் டாடவும்,
இவ்வண்ணம்
ஒத்தன ஒத்தன ஊரவர் பேசிடச்
சித்தந் தெளிந்து சிவாய நமவென
நின்று மிருந்துங் கிடந்தும் நினைத்து
பொன்றும் உடலைப் போற்றுதல் ஒழித்து
நன்மை தீமை நாடா தொருவி
அன்னை போல அன்பிற் சிறந்து
பின்னை ஒன்றும் பேசா தடங்கி
என்றும் வாழ்த்தினி திருத்தல் இன்பமே.
முத்திக்கு வழி ஆசிரியப்பா
முத்திக்கு வழியை மொழியக் கேண்மோ!
சத்தியம் பொறுமை சாந்த மடக்கம்
நித்தியா நித்திய வத்து விவேகம்
பத்திசெ யடியரைப் பணிதல் பகலவன்
எழுமுன் எழுதல் இரும்புன லாடல்
வழுவிலைந் தெழுத்தும் வரன்முறை பயிலல்
குருபதம் பணிதல் கோலநீ றணிதல்
101

Page 56
வரும்பசிக் குண்ணல் வாயுற வாழ்த்தல்
சாத்திரம் பயிறல், தன்போற் பிறரையும்
பார்த்தல் பணப்பற் றொழித்தல் பண்புடன்
வார்த்தை யாடல் வாதனை தீர்த்தல்
கோத்திரங் குலமெனுங் கோட்பா டொழித்தல்
எட்டுணை யேனும்
வேண்டுதல் வேண்டாதமை யின்றி யென்றும்
ஆண்டவ னடிக்கி ழமர்ந்து வாழ்தலே.
ஒன்றே தெய்வம் ஒன்றே உலகம்
உலக முவக்கவும் உன்மனங் களிக்கவும்
கழறும் வாசகங் கருத்தி ல்ருத்துக
ஒன்றே தெய்வ மொன்றே உலகம்
நன்றே என்றும் நாடிப் புரிவாய்
நீசடப் பொருளல நிறைதரு சித்து
பேச வரிதுன் பெருமையெவ ராலும்
ஆதலா லுன்னை யங்கி சுடாது
காதல் சேர் காற்றும் உலர்த்தா கவலல்
மாதிரந் தானும் வருத்த முடியாது
ஓதிடு மப்புவுங் குளிரச்செய் யாதுனை
ஈறிலாப் பொருணி யெள்ளள வேனும்
மாறிலா மகிழ்ச்சி மனத் திடைக் கொள்வாய்
சாதி சமயம் யாவுமுனக் கில்லை
102

நீதி யொன்றை நெஞ்சிடை வைத்திடு
உபாதி செய்யும் புலன்வழி யுறாதே
அபாய மொன்று மென்று முனக்கிலை
செய்ய வேண்டிய செவ்வனே செய்வாய்
உய்ந்தாய் முன்னர் உலகமுன் கைவசம்
சந்தேக மில்லைச் சாற்றினன் கேணி
சற்குரு உன்துணை சாட்சிநீ யாவாய்
அற்புத னடியிணை யென்றும் வாழ்கவே.
அன்பே வடிவாய் அமைந்த துறவி ஆசிரியப்பா
அன்பே வடிவாய் அமைந்த துறவீ!
அன்பே யன்றி யாற்றுலு முண்டோ?
இன்பமே யுலகி லெங்கணுஞ் செறிக
துன்பமாம் மாயை தொடரா தொழிக
எல்லியு மல்லு மீசனைப் போற்றுக
கல்லுங் கரையக் கவிமழை சொரிக
கல்குல்பக லற்ற காட்சி பெறுக
எங்குஞ் சிவத்தைக் கண்டின் புறுக
மங்குவார் செல்வம் மதியா தொழுகுக
இங்கு நீ,
இருந்த படியே யிருந்து வாழுதி
அருந்துய ருன்னை யடையா வன்றே,
03

Page 57
வஞ்சகம் நீக்கி வாழுந் துறவி
அஞ்செழுத் துட்பொரு ளாகிய வமலனை
நெஞ்சத் துள்நீ வைத்து வணங்குதி
கஞ்சத் தேவனுங் கண்ணனுங் காணார்
தன்போற் பிறரைத் தானி னைந்திடு
உன்போற் பிறரிவ் வுலகிலுண்டோ
முன்பு நீ
செய்த வல்வினை தீர்த்திடுந் தியானஞ்
செய்தினஞ் சீவன் சிவனே யன்றோ.
ஒருமை மனம் படைத்த வுத்தமத் துறவி
இருமையு மளிக்கு மிறைவுன் திருவடி அத்தியுஞ் சந்தியு மகலாது போற்றிப்
பந்தித்து நின்ற பாவம் போக்குதி
சிந்தித்துச் சிந்தித்துச் சீவபோத நீக்குதி
நிந்திப் பார்களை நேசத்தால் வெல்லுதி
சந்தேகமில்லை
நீயோ நித்தியன் நினைக்கயல் கற்பனை
நீயோ நிராமயன் நினைவொழிந்து வாழுதி.
104

காயமே கோயில்
காயமே கோயில் கடிமன மடிமை
நேயமே பூசை நீயிதை அறிந்தே
உபாயமாய் நடந்தா லுனக்கொரு குறைவிலை
ஆயநான் மறையும் இப்படி அறையும்.
எள்ளள வேனும் பிரியா இறைவனைக்
கள்ள மனத்தவர் காண மாட்டார்
உள்ளமே கோயில் உயிரே விளக்கு
உள்ள உள்ள உண்மை உதிக்கும்.
பகைவர் உறவொர் என்று பகரும்
வகையை நீக்கிச் சிவசிவா வென்ன
உவகை யுன்னை விழுங்கிக் கொள்ளும்
தகைமை இதுவே சாதனை செய்யே.
சாதனை செய்வோர் தன்னை யறிவார்
பேதபுத் தியைத்தவிர் பெம்மா னருளால்
நீர்மேற் குமிழியில் வாக்கை வாழ்வே
ஆதலா லன்பர் பணியே அறமாம்.
105

Page 58
பணியப் பணியப் பாவ மகலும்
அணிமா வாதியாம் சித்திக ளெய்தும்
பிணியும் அகலும் பேரின்பம் வாய்க்கும்
துணிவுண் டாகும் சொல்லொணாச் சுகமே.
எல்லா உயிரையும் சிவனென எண்ணி
நல்லறம் புரிவோர் நாடுவார் பரகதி
அல்ல லறுப்பார் ஆனந்தம் பெறுவார்
தில்லை நடே சனைச்சேருவார் திண்ணமே.
உடல் பொருள் ஆவியுன் னடைக்கல மென்றே
திடமுட னொப்புக் கொடுப்பார் தமக்கு
நடராஜ வள்ளல் நளினபொற் பதத்தை
உடனே கொடுக்கு முண்மை யிதுவே.
ஒடவும் வேண்டாம் உலரவும் வேண்டாம்
பாடவும் வேண்டாம் பணியவும் வேண்டாம்
தேடவும் வேண்டாஞ் சிந்திக்க வேண்டாம்
ஆடகப் பொன்னடி சூடிய காலை.
ஒழுக்க முயிரினு மோம்பப் படுமென
வழுத்திய பெரியவன் மறைமொழி தன்னை அழுத்த அழுத்த ஆனந்த வீச்சுரன்
வழுத்தொணா மலரடி நாடிவாழ் வோமே.
106

உறுதி மொழியிதனை அறிவீரே
சிவதொண்டன் நிலையத்திற் சேரீர்
தியானஞ் செய்து கடைத் தேறீர்
மவுனமா யிருத்திளைப் பாரீர்
மந்திரமிதுவெனக் குறியீர்.
அவனிவ னாரென அறியீரோ
ஆன்மா நித்தியம் தெரியீரோ
உவமை கடந்தவின்பம் உள்ளிரோ
உண்மை முழுதுமெனக் கொள்ளிரோ.
ஐம்பொறி வழியினிற் செல்லாதீர்
ஐம்புலன் தன்னை வெல்வீரே
வெம்பகை தன்னை விடுவீரே
வேதாந்த சித்தாந்தந் தொடுவீரே.
ஒரு பொல்லாப்பு மில்லை யுணர்வீரே
ஓம்சிவாய நமவெனத் தொழுவீரே
உருகியுருகி இன்பம் பெறுவீரே
உறுதி மொழியிதனை அறிவீரே.
107

Page 59
அப்பனும் அம்மையுஞ் சிவமே
அரிய சகோதரருஞ் சிவமே
ஒப்பில் மனைவியுஞ் சிவமே
ஒதரும் மைந்தரும் சிவமே
செப்பில் அரசருஞ் சிவமே
தேவாதி தேவருஞ் சிவமே
இப்புவி எல்லாஞ் சிவமே
என்னை யாண்டதுஞ் சிவமே,
இனிய பொருள்
அங்கிங் கெனாம லெங்கு மானபொருள்
அறிவுடை யோர்தேடி யறியும் பொருள் கங்குல் பகலில் லாமற் காணும்பொருள்
கைகுவிப்பார்க் குய்யவழி காட்டும் பொருள்
பங்கிலே பாதிபெண்ணாய்த் தோன்றும் பொருள்
படர்சடைமேற் கங்கைதிங்கள் வைத்த பொருள்
எங்கும்நாம் சென்றின்னுந் தேடும் பொருள்
இலங்கையிலே பொலிந்திருக்கு மினிய பொருளே.
()
S. 亭 اګ ته
108

பட்டினத்தார் பாடல்கள்
திருவேகம்ப விருத்தம்
அன்னை யெத்தனை யெத்தனை யன்னையோ
அப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ பின்னை யெத்தனை யெத்தனை பெண்டிரோ
பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ முன்னை யெத்தனை யெத்தனை சென்மமோ
மூட னாயடி யேனு மறிந்திலேன் இன்ன மெத்தனை யெத்தனை சென்மமோ என்செய் வேன்கச்சி யேகம்ப நாதனே.
திருத்தில்லை காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும்
பொன்னுக்குங் காசினுக்கும் தாம்பிணங் கும்பல வாசையும் விட்டுத்
தனித்துச் செத்துப் போம்பிணந் தன்னைத் திரளாகக் கூடிப்
புரண் டினிமேற் சாம்பிணங் கத்துவதை யோவென் செய்வேன்
தில்லைச் சங்கரனே.
முடிசார்ந்த மன்னரு மற்றுமுள் ளோரு முடிவிலொரு பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னுமிந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னி னம்பலவர் அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென் றேயறி வாரில்லையே.
சினந்தனை யற்றுப் பிரியமுந் தானற்றுச் செய்கையற்று நினைந்தது மற்று நினையா மையுமற்று நிர்ச்சிந்தனாய்த் தனந்தனி யேயிருந் தானந்த நித்திரை தங்குகின்ற வனந்தனி லென்றிருப் பேனத்த னேகயி லாயத்தனே.
109

Page 60
வாதுற்ற திண்புய ரண்ணாமலையர் பதத்தைப் போதுற்றெப் போதும் புகலுநெஞ் சேயிந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வமென் தேடிப்புதைத்த திரவியமென் காதற்ற வுசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
வேதத்தி னுட்பொருண் மண்ணாசை மங்கையை விட்டுவிடப் போதித் தவன்மொழி கேட்டிலையோ செய்தபுண்ணி யத்தால் ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம் தாம்பொழுது காதற்ற வுசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
என்செய லாவ தியாதொன்றுமில்லை யினித்தெய்வமே உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த வூனெடுத்த பின்செய்த தீவினை யாதொன்று மில்லைப் பிறப்பதற்கு முன்செய்த தீவினை யோவிங்ங் னேவநது மூண்டதுவே.
என்பெற்ற தாயரு மென்னைப் பிணமென் றிகழ்ந்து விட்டார் பொன்பெற்றமாதரும் போவென்றுசொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின் வலம்வந்து குடமுடைத்தார் உன்பற் றொழிய வொருபற்று மில்லை யுடையவனே.
பட்டினத்தார் புலம்பல் ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்துபெற்றுப் பையலென்றபோதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி?
முந்தித் தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே அந்தி பகலாய்ச் சிவனை ஆதரித்துத் - தொந்தி சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல்மூட்டு வேன்.
110

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டு வேன்?
நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ மெய்யிலே தீமூட்டு வேன்?
அரிசியோ நான் இடுவேன்? ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே எனஅழைத்த வாய்க்கு?
அள்ளி இடுவது அரிசியோ! தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்-மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே! என அழைத்த வாய்க்கு.
முத்தி தருஞான மொழியாம் புலம்பல்சொல்ல அத்தி முகவன்றன் அருள்பெறுவ தெக்காலம்
ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமற் றுங்கிச் சுகம்பெறுவ தெக்கலாம்.
நீங்காச் சிவயோக நித்திரைகொண்ட டேயிருந்து தேங்காக் கருணைவெள்ளந் தேக்குவது மெக்காலம்.
கலிவிருத்தம் முன்னை இட்டதீ முப்புரத்திலே பின்னை இட்டதீ தென் இலங்கையிலே அன்னை இட்டதீ அடிவயிற்றிலே யானும் இட்டதீ மூள்க மூள்கவே!!
111

Page 61
குருநாதன் அருள் வாசகம்
ஒரு குறைவுமில்லை நம் உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே ஆகையால் நாம் அவருடைய உடைமை
96 (560)Lu SL960)LD நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே நாம் ஒருபோதும் அவரை மறந்திருக்கமுடியாது நமக்கு ஒரு குறைவும் மில்லை நாம் என்று முள்ளோம் எங்கு மிருக்கிறோம் எல்லாமறிவோம்
இப்படியே நாம் இடையறாது சிந்தித்துச் சிந்தித்துக் கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வ தத்துவத்தை அடைவோமாக,
"சந்ததமு மெனது செயல் நினது செயல் யானெனுந் தன்மை நினையன்றி யில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவ மிதுவே"
என்னுந் தாயுமானவர் அருமைத்திருவாக்கே இதற்குப் போதிய சான்று.
சிவதொண்டு நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற்காகவே நாங்கள் பூமியில் வாழ்கிறோம்.
சந்திரன் சிவத்தொண்டு ஆற்றுகின்றது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர்களும் அசுரர்களும் கின்னரர். கிம்புருடர், வித்தியாதரர்களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.
112

அனைத்துஞ் சிவன் செயல்: அவனன்றி அணுவும் அசையாது. நாம் இழந்துபோவது மொன்றுமில்லை. ஆதாய மாக்கிக் கொள்வதுவும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக்கின் றோம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அதிகம் இல்லை. மரணம்பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லை. மண்ணாதி ஆசையில்லை. மனமான பேயில்லை. காலதேசவர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத் துக்குஞ் சாட்சியாக விளங்குகின்றோம்.
ஓம் தத் சத் ஒம்
நாங்கள் சிவனடியார்கள் எங்களுக்கு ஒரு குறைவுமில்லை. சிவதொண்டு ஆற்றுவதே எங்கள் தொழில். அதற்காகவே நாங்கள் உயிரோடு இருக்கின்றோம். உண்பதுவும் உறங்குவதும் அதற்காகவே, எத்தொழிலைச் செய்தாலும் ஏதவஸ்தைப் பட்டாலும் எல்லாம் அதற்காகவே செய்கின்றோம். எமக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. பிறப்புமில்லை இறப்பு மில்லை. நாம் விளையாட்டுக்காகினும் பிறர்பொருளைக் கவ ரோம். பிறர்வசை உரையோம். எல்லாம் சிவன் செயலென்பதை மறவோம். பசித்தால் புசிப்போம். பிறர் செய்யும் நிட்டுரத்தை யாவது கிருபையையாவது பொருளாகக் கருதமாட்டோம். எப்பொழுதும் தூய்மையுடையோம். துன்பத்திலும் இன்பத்திலும் கவலையடையோம். முழுவதும் உண்மை.
ஓம் தத் சத் ஒம்.
நாங்கள் சிவனடியார்: நாங்கள் சிவனடியார்: நாங்கள் சிவனடியார்: நாங்கள் சிவனடியார் இது சரியை, இது கிரியை: இது யோகம், இது ஞானம்: இதுமந்திரம், இது தந்திரம் இது மருந்து.
இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிட்டை: இந்த நிட்டை யுடையோர்க்குச் சீலமில்லை, தவமில்லை, விரதமில்லை, ஆச்சிர
மச்செயலில்லை.
இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந் தார்கள்: வாழுகிறார்கள்: வாழ்வார்கள். இவர்கள் பெருமை
113

Page 62
யாவருமறியார்: கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிபவர்க்கே தெரியும்.
ஒரு பொல்லாப்பு மில்லை
எப்பவோ முடிந்த காரியம்
நாமறியோம்
முழுவதும் உண்மை.
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது. ஒழுக்கமுடையார் எல்லாமுடையவர். ஒழுக்கங்களாவன கொல்லாமை, கள்ளாமை, பிறர்வசை உரையாமை, பிறர்பொருள் கவராமை, தாழ்மை, பொய்யுரையாமை முதலியனவாம்.
எக்கருமத்தைச் செய்யும்பொழுதும் ஊக்கத்தோடும் சிரத்தையோடுஞ் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்து பழகி வந்தால் மன உறுதி உண்டாகும். அ.தாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்மசக்தி அதிகரிக்கும். நினைத்த காரியம் நினைத்த மாத்திரத்திலே உண்டாகும். இவர் பகைவர், இவர் உறவினர் என்ற பாகுபாடு சித்தத்திற் புகுந்து கவலையை உண்டாக்காது.
எல்லாம் என்னிடத்தே உண்டாகின்றன: எல்லாம் என்னிடத்திலே நிலைத்திருக்கின்றன: எல்லாம் என்னிடத்தே ஒடுங்குகின்றன: என தூய்மையான எண்ணம் உடையவராய் இருத்தல் வேண்டும். மேலும் எனக்கொரு குறைவுமில்லை: என்னிடத்தில் எல்லோரும் அன்பாய் இருக்கிறார்கள்: நானும் எல்லோரிடத்திலும் அன்பாய் இருக்கிறேன். என்று அடிக்கடி நினைந்து நினைந்து சாதிக்க வேண்டும். இப்படியே இடை விடாமல் பழகி வந்தால் எல்லாமறியும் ஆற்றலும், எல்லாஞ் செய்யும் வல்லமையும் எளிதிற் கைவரும்.
ஓம் தத் சத் ஒம்.
114

சன்மார்க்கம்
குரங்குபோல் மனம் கூத்தாடுகின்றது. இதன் கூத்தை எப்படி அடக்குவதென்று தெரிய வில்லையே. நன்று சொன்னாய். இதற்கு நல்ல மருந்துன்னிட முண்டு. நீ அதை மறந்து போனாய். சொல்லுகிறேன் கேள்.
சிவத்தியானம் என்னும் மருந்தை தினம் சாப்பிட்டு வா. மரணகுரங்கின் பிணி மாறும்.
அதைச் சாப்பிடும்போது அனுமானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு.
அது என்னவென்றால் நாவடக்கம், இச்சையடக்கமென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.
இதுவும் போதாது பத்திய பாகத்திலே தான் முற்றுந் தங்கியிருக்கிறது. அதுவுமுன்னிட முண்டு.
அது என்ன வென்றால், மிதமான ஊண், மிதமான நித்திரை, மிதமான தேக அப்பியாசம், என்பவையே வெற்றி நிச்சயம் ஆன்மலாபத்தின் பொருட்டிதைச் செய். மனத்தை ஒருவன் அடக்கி வெற்றிகொள்ள முழுமனதோடு விரும்புவானானால் சிவத்தியானத்தைத் தினந்தோறும் செய்து வரக் கடவன்.
படிப்படியாக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண்கூடாகக் காணுவான்.
சாந்தம், பொறுமை, அடக்கம் முதலிய நற்குணங்களை அவனிடத் துதிக்கும்.
அவன் மனமெந்த நேரமும் மகிழ்ச்சியுடைய தாகவே இருக்கும். இகழ், புகழ் இரண்டினாலும் இழிவடையான். அந்தராத் மாவிலே சுகிப்பான். பிறர் சுகந் தன் சுகமென்ற எண்ணம் பெருகும்.
115

Page 63
கைவிளக்கை யொருவன் கொண்டு செல்வானானால் இராக்காலத்தில் அவன் மனங்கலங்குவானா? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானானால் மாயவிருள் அவனை அடையுமா அடையா.
போதனையிலும் சாதனை சிறந்தது. ஒருபொல்லாப்பு மில்லை.
ஆன்ம இலாபமே பொருளெனக் கண்ட அறிஞர் அநித்தியமான இந்த உலக இன்ப துன்பத்தில் மயங்காது தாமரையிலையில் நீர்போற் சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம இலாபத்தைப் பெற நினையாதவர் இவ் உலக இன்ப துன்பத்தினால் கலங்கி தியங்கித்திரிவார்கள். ஆன்ம இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டு நன்மை தீமையை வென்று நான் எனதெனும் அகங்கார மமகாரங்களைக்க ளைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப்பிறப்பற்றுப் பேரின்பத்துடன் வாழ்வார்.
அ.தறியா அறிவிலிகளே துன்பக்க டலில் வீழ்ந்து எரிவாய் நிரயத்துக்காளாவர்.
வண்டுகள் பூவைக் கிண்டித் தேனை உண்டு ஒன்றுமறியாது கிடப்பதுபோல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத் தினால் கிண்டி ஆங்கு வரமானந்தத் தேனையுண்டு, ஒன்று இரண்டு நன்று தீதென்றறியாமற் தேக்கிக் கிடக்கின்றான்.
ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்லவித்தை யிட்டு அதிலுண்டாகும் களையைக் களைதநது விளையும் தானியத்தை யொன்று சேர்க்கிறான்.
அதுபோல் பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தியென்னும் வித்தை வித்திக் காமக்குரோத மோக மதமாச் சரியமென்னுங் களையைக் களைந்து சிவபோகமென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் பூஜிக்கிறான்.
பூலோகமாகிய நந்தவன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக் கண்டு மகிழ் கின்றான்.
116

பொற்கொல்லன் பொன்னையெடுத்துப் பல பூன்ைகளைப் படைக்கின்றான்.
சிவனாகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய பொன்னை எடுத்து சீவர்களாகிய பல பணிகளையு மாக்குகின்றான்.
வைத்தியன் பல மூலிகைகளையுமெடுத்து ஒன்றாக்கி நோய்க்கு மருந்து கொடுத்து, நோயை மாற்றுகின்றான்.
பெரிய ஞான வைத்தியனும் தன கரண புவன போகங்களை ஆன்மாவுக்குக் கொடுத்து,தன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிறான்.
தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான்க ளைக் கொடுத்து மகிழ்விக்கிறாள்.
சிவபெருமானுந் தன்குழந்தைகளாகிய எங்களுக்குப் பலவிதமான இன்பங்களையும் தந்து மகிழ்விக்கிறான்.
பொறிவழியே போந்து, மனம் அலைய அறிஞர் இடங்கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள்: ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.
அவர் தம் பெருமையை வேதசிவாகமங்களிலும்
புகழ்கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங்கரையும். அனைத்திலும் வெற்றி யுண்டு.
117

Page 64
சிதம்பரம்
உலகம் புருஷ வடிவாகவே உள்ளது. அதற்கு மூலாதாரத்தானம் - திருவாரூர், மணிபூரகமாக விளங்குவது - திருவண்ணாமலை. இதயம் - சிதம்பரம். கண்டம் காளஹஸ்தி. புருவ நடு - காசி என்பார்கள். ஒரு மனிதனுடைய இயக்கம் அவனது இதயத் துடிப்பை அடிப்படையாகக் கொண்டது. அதுபோல் உலகபுருஷனுடைய இயக்கம் சிதம்பரத்தில் விளங்கும் அருள்மிகு நடராஜப் பெருமானுடைய ஆனந்த தாண்டவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆதியில் இத்தலம் தில்லை என்ற ஒருவகை மரம் நிறைந்த வனமாக இருந்ததால் தில்லை என அழைக்கப் பெற்றது. பஞ்சபூதத் தலங்களில் (பஞ்சபூதத் தலங்கள்; காஞ்சிபுரம் - பிருதிவி; திருவானைக்கா - அப்பு: திருவண்ணாமலை - தேயு, காளத்தி - வாயு; சிதம்பரம் - ஆகாசம்) இது ஆகாசத்தின் வடிவாக அமைந்திருத்தலின் ஞான ஆகாசம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ் ஆகாசம் பூத ஆகாசம் போல் ஜட்மாகாது சித்தாக விளங்குவதால் சித்+அம்பரம் = சிதம்பரம் என்னும் பெயர் பெற்றது. இறைவன் ஆடுகின்ற இந்த அம்பலம் பொன்தகடு கொண்டுள்ளதால் பொன்னம்பலம் எனவும் பெயர் பெற்றது. நம்பியாண்டார் நம்பிகள் தேவாரங்களைக் கண்டரு வியதும், சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றி அரங்கேற்றியதும் இத்தலத்தின் சிறப்புகளாகும்.
சிதம் பரம் தமிழ் நாட்டில் தென்னாற் காடு மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு ரயில்வே ஸ்டேஷன். தமிழகத்தின் எல்லாத் திசைகளிலிருந்தும் பேரூந்து மூலம் இத்தலத்தை அடையலாம். சென்னையிலிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நித்திய பூஜாவிதியும் டிரஸ்டி பாத்தியமும்
தீகூரிதர்களுக்கு அந்தர் வேதியாகத்திலிருந்து கிடைத்து, கொண்டு வரப்பட்ட நடராஜ மூர்த்தியே இப்பொழு திருக்கும் மாணிக்க மூர்த்தி - இரத்தினசபாபதி என்னும் 118

ஜோதி நடராஜர் . தர்ம சாஸ்திரத்தில் சிவனுக்கு வேதவிதிப்படிதான் பூஜை செய்ய வேண்டும். சிவபூஜைக்கு சம்பளம் வாங்கக் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் படி நடக்கும் கோயில் சிதம்பரம் கோயில் ஒன்றே. இங்கே வேதவிதிப்படிதான் பூஜை. தீகூரிதர்களுக்கே இந்தக்கோயில் சொந்தமானபடியால், அந்தத் தீகூழிதர்கள் அந்தப் பூஜைக்காக யாரிடமும் சம்பளம் வாங்குவது இல் லை. அந்த தரீகூரிதர்கள் முன் காலத்தில் அவரவர்களுடைய முறையிலன்று, இரவு கதவுபூட்டும் பொழுது, நடராஜர் சன்னதியில் இருக்கும் ஸ்வர்ண கால பைரவருடைய பாதத்தில் செப்புத்தகட்டை வைத்துவிட்டுக் கதவை மூடிவிட்டுப் போவார்கள். பிறகு காலையில் கதவு திறக்கும்பொழுது, பைரவருடைய அனுக்ரஹத்தால் அந்த செப்புத்தகடு தங்கத்தகடாக இருக்கும். அதை எடுத்து அவரவர்கள் தமக்கு மறுமுறை வரும் வரை தம் குடும்பச் செலவுக்கு வைத்துக் கொள் வார்கள். ஆதலால் அந்த தீகூழிதர்கள் வேறு வருவாய்களில் ஆசைப்படாமல் நடராஜரின் பூஜையையே செய்து வந்தார்கள்.
ஆலய அமைப்பு
தில்லை திருநகரத்தின் மையமாகத் திகழும் சிற்றம்பல நாதரின் திருக்கோயில் சற்று ஏறக்குறைய நாற்பத்து மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் நான்கு திக்கிலும் கம்பீரமான ஆனால் பிரமாண்டமான நான்கு இராஜகோபுரங்கள் அமைந்து. கோயிலுக்கு அழகு செய்யும் அணிகலன்களாக உள்ளன. குறிப்பாக இவ் இராஜகோபுரங்கள் பல மன்னர்களால் குறிப்பாக சோழ மன்னர்களாலும், விஜயநகர அரசர்களாலும் கட்டப்பட்டவை.
கிழக்கு இராஜகோபுரம்
இது ஏழு நிலை மாடமாக உள்ளது. இரண்டாம் குலோத்துங்கனால் ஆரம்பிக்கப்பட்டுப் பின் காடவர்கோன் இரண்டாம் கோப்பெரும் சிங்கனால் திருத்தி அமைக்கப்பெற்று பின் பச்சையப்ப முதலியாரின் தமக்கையான சுப்பம்மாள்
119

Page 65
என்பவளால் பழுதுபார்க்கப்பட்டுச் சீராக்கப்பட்டது. இக் கோபுரத்தின் சிறப்பு அடுக்கடுக்காகப் பரதநாட்டிய பேத சிற்பங்கள் 108 செதுக்கப்பட்டிருப்பதே. இதன் மற்றொருபகுதி மேற்கு கோபுரத்தில் தொடர்ந்துள்ளது. இவையல்லாமல் அற்புதச் சிற்ப உருவங்கள் இதில் உள்ளன.
மேற்கு இராஜகோபுரம்
ஜடாவர்மன் சுந்தர பாண்டியனால் இக்கோபுரம் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பரதநாட்டிய சிற்பங்கள் மற்றும் ஏனைய சிவமூர்த்தங்களும் கற்பக விநாயகரின் நர்த்தன தோற்றமும் அழகுடன் மிளிர்கிறது.
வடக்கு இராஜகோபுரம்
இக்கோபுரம், விஜயநகரப் பேரரசின் தலைசிறந்த மன்னனான கிருஷ்ண தேவராயரால், தன் கலிங்க வெற்றியின் சின்னமாகக் கட்டப்பட்டது. இதன் உயரம் 140 அடி. இதில் கிருஷ்ண தேவராயரின் சிலையும், பரதநாட்டிய சிற்பங்களும் உள்ளன.
தெற்கு இராஜகோபுரம்
இதுவும் ஏழு நிலை உடையது. இக்கோபுரத்தைக் கட்டியவன் சிறந்த சிவபக்தனான இரண்டாம் கோப்பெருஞ் சிங்கன். இவன் “கொக்க சீயன்” எனவும் அழைக்கப்பட்டான். இக்கோபுரத்தில் மீன் உருவங்கள் இருப்பதால், இக்கோபுரம் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது எனக் கூறுவர். இக் கோபுரத்தில் பல அழகான சிற்பங்கள் உள்ளன.
பாண்டிய நாயகம் கோயில்
வடக்கு கோபுரத்திற்குப் பக்கத்தில், வடமேற்கு மூலையில் உள்ளது பாண்டிய நாயகம் கோயில் . மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்ட அழகான மண்டபம். தேர் போன்ற உருளைகள் மாட்டி யானைகள்
120

இழுக்கும் நிலையில் உள்ளது. சிறந்த சிற்பங்கள் இங்கேயுள்ளன. உயர்ந்த மேடைமீது முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்துள்ளார். வேலைப்பாடமைந்த திருமேனிகள், புராண வரலாறுகளும், ஆறுபடை வீடுகளின் காட்சிகளும், கந்தபுராண வரலாறும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. அருணகிரிநாதரால் போற்றப்படும் பெருமான் இவர் . இவ் வாலயத்தில் நுளையும்போது நம் கண்ணில் படுவது மயில்மண்டபமும், துவ ஜஸ்தம்பமும் கோயிலுக்கு ஏறும் படிக்கட்டுகளில் யானை மற்றும் யானைகளின் சிற்பங்கள் கண்களைக் கவருவதாக உள்ளது. இம்மண்டபம் ஓர் தேர் போல் தோற்றமளிக்கிறது. சக்கரம் பூட்டிய தேரை யானைகள் இழுப்பது போல் அமைந்திருக்கிறது. யானையின் மேலுள்ள அணிகலன்கள், மணிகள், சிற்பியின் வேலைப் பாட்டுத் திறனை அற்புதமாக எடுத்துக் காட்டி இருக்கின்றன.
முக்குறுணி விநாயகர்
தெற்கு கோபுரத்தின் உட்புறத்தில் கிழக்குப் பார்த்து இருப்பவர் முக்குறுணி விநாயகர். இவரைப்போன்று பெரிய உருவமும், மூர்த்திகரமாயுமுள்ள விநாயகர் வேறு எந்த இடத்திலுமில்லை. இவர் 8 அடி உயரம் உள்ளவர். இவம் மிகவும் சக்தி வாய்ந்தவர். மேற்கு கோபுரத்தின் வெளிப் பக்கத்தில் மேற்கு முகமாக கற்பக விநாயகர் சன்னதி இருக்கிறது. இவர் தாம் இரவு ஜாமவேளையில் துர்வாஸ் மகரிஷிக்கு நடனம் செய்து காட்டினார்.
பூனி சுப்ரமண்யர் கோயில்
மேற்கு கோபுரத்தின் உற்புறத்தில் வடக்குப்பக்கத்தில் கிழக்கு நோக்கியிருக்கிறார் சுப்ரமண்யர். இங்கு தான் ஸ்கந்த ஷஷ்டி ஆறாம் நாள் திருவிழாவில் சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடைபெறும். இச்சன்னதியில் நவ வீரர்களின் சிலையும், சிங்க வாஹன ஐந்து முக விநாயகர் உள்ளனர்.
121

Page 66
நூற்றுக்கால் மண்டபம்
இங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலும் அதனையொட்டி நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இதனையுமொட்டி வீரபாண்டியன் திருமண்டபமும் உள்ளது. இது மணவிற்கூத்தன் காலிங்கராயனால் கட்டப்பட்டது. இது விக்கிரமசோழன் திருமண்டபம் என்று பெயர் பொறிக்கப்பட்டு இருப்பதைக் காணலாம். பொதுவாக பாண்டிய மன்னர்கள் தங்கள் குலதெய்வமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்பு தான்முடி சூட்டிக் கொள்வது மரபு. இம்மரபினையொட்டியே சடையவர்மன் வீரபாண்டியன் என்பான் தாம் முடிசூடிக் கொள்வதற்கு ஏதுவாக இம்மண்டபத்தையொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை அமைத்தான் எனத் தெரிகிறது.
சிவகாமி அம்மை கோயில்
நூற்றுக்கால் மண்டபத்தின் வடபக்கத்தே அமைந்தது சிவகாமி அம்மையாரின் ஆலயமாகும். இது விக்கிரம சோழனால் கற்றளியாக அமைக்கப்பட்டு பின் இவனது மகன் இரண்டாம் குலோத்துங்கசோழன் காலத்தில் நிறைவு பெற்றது. இவ்வாலயத்தில் சித்ரா குப்தர் ஆலயம் ஒன்று உள்ளது. பிரகாரத்தில் இசைக்கலை, ஆடற்கலை பற்றிய அழகிய சிற்பங்களைக் காணலாம். அம்பாளின் கோபுரவாயிலை யொட்டி உள்ளே அமைந்த முன் மண்டபம் மரத்தினால் அமைக்கப்பட்டதுபோன்ற வேலைப்பாடுடைய கருங்கல் தூண்களையும், மேற்கூரையையும் உடையதாய் மிகுந்த சிற்பவேலைப்பாடுகளைப் பெற்று விளங்குகிறது. இவ் வாலயத்தைச் சுற்றி தேவீ மஹாமித்யம் வரலாறு சித்திர மாகத் தீட்டப்பெற்று, ஆனால் பொலிவிழந்து காணப்படுகிறது.
ஐந்து சபைகள்
இவ்வாலயத்தில் ஐந்து சபைகள் உள்ளன. அவை யாவன சித்சபை, கனகசபை, தேவசபை, நிருத்தசபை மற்றும் TTg560L.
122

சித்சபை:- இதில் நடராஜரும். சிவகாமியும், எழுந்தருளி யிருக்கிறார்கள். இங்கு உள்ள படிகள் ஐந்தும் பஞ்சாட் சரங்களாகவும், தங்க ஸ்தம்பங்கள் பத்தில் நான்கு வேதங்களாகவும், ஆறு சாஸ்திரங்களாகவும், ஐந்து வெள்ளி ஸ்தம்பங்கள் பஞ்ச பூதங்களாகவும், வெள்ளிப்பலகனிகள் தொன்னுற்றாறு தத்துவங்களாகவும், ஸ்தம்பங்கள் பதினெட்டு புராணங்களாகவும். கைமரங்கள் 64 கலைகளாகவும், காட்சி தருகின்றன. இச்சபையின் தங்கவிமானத்தில் மேல் உள்ள 21,600 ஓடுகள் மனிதன் தினசரிவிடும் சுவாச எண்ணிக்கை யையும், 7200 ஆணிகள் நாடி நரம்புகளையும் குறிக்கின்றன. 9 தங்கக் கலசங்கள் நவசக்திகளாகவும், பொன் ஒட்டில் 'சிவாய நம' எனப் பஞ்சாட்சரம் எழுதப்பட்டுள்ளது.
சித்சபையில் நடராஜப்பெருமானது வலப்புறத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. இச்சிற்பசபைக்குள் இறைவன் சகளம் (உருவம்) நிஷ்களம் (அருவம்) சகள நிஷ்களம் (அருவுருவம்) என்னும் மூன்றுவகைத் திருமேனிகளுடன் எழுந்தருளியுள்ளார். சகளத் திருமேனி நடராஜர், நிஷ்களத் திருமேனி சிதம்பர ரகசியம், சகள நிஷகளத்திருமேனி ஸ்படிகலிங்கம் அழகிய சிற்றம்பலமுடையார். இம்மூர்த்தி களைத் தவிர இரத்தின சிற்றம்பலமுடையார். இரத்தின சபாபதியும். சுவர்ணகால பைரவரும் இங்கு காட்சியளிக் கின்றனர்.
கனகசபை:- இது சிற்றம்பலத்திற்குத் தெற்கேயுள்ளது. இங்கு பெருமான் ஆண்டில் 6 காலபூஜையும் 4 முறை திருமஞ்சனமும் கொண்டருளுகிறார். தினமும் காலையில் அழகிய திருச்சிற்றம்பலமுடையாரும் இரத்தினசபாபதியும், அபிஷேக ஆராதரனை பெறுகின்றனர். இதனைத் திருச்சிற்றம் பலம் என அழைப்பர். நடராஜப்பெருமான் எழுந்தருளிய பீடம் சிவசக்திப் பிரணவ பீடம் ஆகும்.
தேவசபை:- இதுபேரம்பலம். இங்கு உற்சவமூர்த்திகளின் திரு உருவங்கள் எழுந்தருளிவிக்கப் பெற்றுள்ளன.
123

Page 67
நிருத்தசபை:- இது பெருமானும், காளியும் தாண்டவம் புரிந்த இடம் . தேர் போல் அமைந்துள்ளது. சித்திரவேலைப்பாடுகள் கொண்ட 56 தூண்களால் தாங்கப் பெற்றது. குதிரைபூட்டிய தேர்போல் உள்ளது. இங்கு சரப மூர்த்தியின் சிலை உள்ளது.
ராஜசபை:- நடராஜப்பெருமான் மார்கழியிலும், ஆனியிலும் இங்கு எழுந்தருளுவார். தரிசன உற்சவம் மிகவும் சிறப்பா னது. அவையாவன: ஆருத்ரா தரிசனம், ஆனித் திருமஞ்சனம் என அழைக்கப்பெறுகிறது. இச்சபையின் நீளம் 340 அடி; அகலம் 190 அடி; ஒரு வரிசைக்கு 24 தூண்கள் வீதம் ஆக 41 வரிசைகள் உள்ளன. நடுவில் உள்ள நந்தி மண்டபத்தின் தூண்கள் கிடையாது. இங்குதான் சேக்கிழார் பெருமானார் பெரியபுராணத்தை அரங்கேற்றினார். இது தேவாசிரிய மண்டபம் ஆகும். அழகிய யானை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் கீழ் வரிசையில் நடன உருவங்கள் உள்ளன. இம்மண்டபம் கோயிலின் வடகிழக்குத் திசையில் உள்ளது.
சிதம்பர இரகசியம்
இது கோயிலுக்கு மிகச் சிறப்பாக விளங்குகிறது. இது நடராஜமூர்த்தியின் வலது பக்கத்தில் ஆகாயலிங்கம் மந்திர ரூபமாகச் சிதம்பர எந்திர சக்கரத்தில் அமைக்கப்பட் டுள்ளது. இதன் முன்னே தங்க வில்வமாலைகள் தொங்க விடப்பட்டுத் திருவாசியுடன் காணப்படுகின்றன. இங்கு நடராஜர், சிவகாமி அரூபமாகக் காட்சியளித்து பக்தர்களின் மனோபீடங்களை நிறைவேற்றுகின்றார். இதைத்தான் சிதம்பர இரகசியம் என அழைக்கிறோம்.
24

ஸ்தலத்தின் நித்திய பூஜைகள், உற்சவங்கள்
ரீ நடராஜ மூர்த்திக்கு தினமும் ஆறுகால பூஜை நடக்கும். காலையில் மூன்று, மாலையில் மூன்று. அ.. தல்லாமல் காலை 6 மணிக்குக் கதவு திறக்கப்பட்டு பள்ளிய றையில் பால். பொரி. பழம் முதலியவைகள் நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து, சுவாமியின் பாதுகையை வெள்ளி, தங்கம், பல்லக்கில் எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வந்து, பூரீ நடராஜரின் பக்கத்தில் வைத்து நடராஜருக்கும் சிவகாமசுந்தரிக்கும் பால், பழம், பொரி முதலியவைகள் நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்வது இதற்கு திருவனந்தல் என்று பெயர்.
ஒரு காலம் என்பது நடராஜருக்காக ஸ்படிகலிங்க ஸ்சுவாமிக்கு அபிஷேகம் செய்து நைவேத்தியம் செய்து நடராஜர், சிவகாமசுந்தரிக்குத் தீபாராதனை செய்வது வரை காலம் என்பது.
கால சந்தி:- காலை ஏழரை மணிக்கு கும்பம் வைத்து, பூஜை செய்து ஹோமம் செய்து பஞ்ச கவ்வியம் முதலியவை கள் அபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்து 9 மணிக்கு தீபாராதனை.
இரண்டாம் காலம்- 10 மணிக்கு ஸ்படிக லிங்கத்திற்கு அபி'ேகம் செய்து, இரத்தினசபாபதிக்கும் பால். தேன். சந்தனம் மட்டும் அபிஷேகம் செய்து கற்பூரதீபாராதனை செய்வர். மாணிக்க நடராஜர் முன்புறம் கற்பூரம் காண்பிக்கும் சமயத்தில் கறுப்பாயும், பின்புறம் கற்பூர தீபாராதனை செய்யும் போது ஜோதியாயும் தெரியும். இது முக்கியமான தரிசனம். வேறு எந்த பூஜை நேரத்திலும் காண முடியாதது. நைவேத்தியம் செய்து 11 மணிக்கு தீபாராதனை.
125

Page 68
உச்சிக்காலம்: இரண்டாங்கால தீபாராதனை முடிந்தவுடன் அபிஷேகம் செய்து நைவேத்தியம் செய்து 12 மணிக்கு தீபாராதனை; உடனே கதவு மூடப்பட்டு விடும்.
சாயரசுைஷ்: மாலை 5 மணிக்கு கதவு திறக்கப்பட்டு அபிஷேகம் செய்து, 6 மணிக்கு ஷோடசோபசார தீபாராதனை.
இரண்டாம் (மறு) காலம்:- இரவு 7 மணிக்கு அபிஷேகம் செய்து பின் அருவமான இரகசியத்திற்குப் பூஜை; கதவுகள் சாத்தப்பட்டு பூஜை செய்கிறவரும், செய்து வைக்கிறவரும் ஆக இருவர் மட்டுமிருந்து பூஜை செய்து நைவேத்தியம் செய்து பின் 8 மணிக்குத் தீபாராதனை.
அர்த்த ஜாமம்:- இரவு 9 மணிக்கு அபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்து 10 முணிக்கு தீபாராதனை செய்து, நடராஜரின் பாதுகையை வெள்ளி. தங்கம், பல்லக்கில் எழுந்தருளப்பண்ணி பள்ளியறையில் கொண்டுபோய் வைத்து அங்கும் நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்து பிறகு பிரமசண்டேசுவரருக்கும், பூரீ பைரவசுவாமிக்கும் அர்த்தஜாம அழகருக்கும் நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்வது வரை அர்த்த ஜாமப் பூஜை.
மூலஸ்தானம் என்கிற மூலநாதர், உமயபார்வதி சன்னதியிலும் பூரீ சிவகாமசுந்தரி அம்பாள் சன்னதியிலும் தினமும் காலையில் இரண்டு காலங்களும், மாலையில் இரண்டு காலங்களும் பாண்டிய நாயகம் என்கிற பூரீ சுப்பிரமணிய கோயிலில் காலை ஒரு காலமும் மாலை ஒரு காலமும் மற்றும் முக்குறுணி விநாயகர் முதல் மற்ற சகல சுவாமிகளும் காலையில் ஒருகாலமும் மாலையில்
ஒருகாலமும் பூஜை நடக்கிறது.
126

தில்லைவாழந்தணர்கள் என்னும் தீசுஇதர்கள்
இந்தக் கோயிலை தீகூழிதர்களே பூஜை செய்து கொண்டும், கோயில் சம்பந்தப்பட்ட சகல நிர்வாகத்தையும் அவர்களே நடத்திவருகிறார்கள் இவர்களுக்குப் பொது தீகூழிதர்கள் என்று பெயர். இந்தக்கோயிலில் நடக்கும் பூஜை முதலிய சகல காரியங்களையும் மிகவும் கவனமாகக் குறித்த காலத்தில் நடத்திவருகிறார்.
நடராஜரின் அபிஷேகங்கள்
நமக்கு ஒருவருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஒரு வருடத்திற்கு நடராஜருக்கு ஆறுநாள் அபிஷேகம்.
அதாவது:
1. சித்திரைமாதம் திருவோண நஷத்திரத்தில் கனக
சபையில் மாலையில் அபிஷேகம்.
2. ஆனிமாதத்தில் உத்தர நஷத்திரத்தில் ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்.
3. ஆவணி மாதத்தில் பூர்வபக்ஷ சதுர்த்தசியில் கனக
சபையில் மாலையில் அபிஷேகம்.
4. புரட்டாதி மாதம் பூர்வபக்ஷ சதுர்த்தசியில் கனகசபையில்
மாலையில் அபிஷேகம்.
5. மார்கழி மாதம் திருவாதிரை நஷத்திரத்தில் ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்.
6. மாசி மாதத்தில் பூர்வபக்ஷ சதுர்த்தசியில் கனகசபையில்
மாலையில் அபிஷேகம்.
127

Page 69
மகோற்சவங்கள்
பூரீ நடராஜ மூர்த்திக்கு வருஷத்திற்கு இரண்டு
பிரம்மோற்சவம்.
1.
முதலாவது ஆனி மாதம் உத்திர நஷத்திரத்திற்கு பத்து நாள் முன் கொடியேறி, முதல் நாள்முதல் எட்டாந்திருவிழா வரையில் உத்ஸவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர் சிவானந்த நாயகி, விநாயகர், சுப்பிரமணியர் சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் ஒவ்வொருநாளும் வெள்ளி தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்.
ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவிற்கு மூலவரான
நடராஜர், சிவகாமி. விநாயகர், சுப்பிரமணியர், சண்டேசு வரர் முதலிய பஞ்ச மூர்த்திகளும் ஐந்து தேர்களில் வலம் வந்து இரவு கடாபிஷேகம் செய்து கொடி இறக்கும் வரையுள்ளது பிரம்மோற்சவம், மறுநாள் விடயாத்தி உற்சவமும் நடைபெறும்.
இரண்டாவது மார்கழி' மாதம் திருவாதிரை நஷத்திரத் திற்குப் பத்து நாள் முன் கொடியேறி, ஆனி மாதத்தில் பிரம்மோற்சவம் போல் சகலமும் நடைபெறும். இதில் விஷேசம் சாயரகூைடி தீபாராதனையின் சமயம் மாணிக்க வாசகரைச் சுவாமியின் சன்னிதானத்திற்கு எழுந்தருளப் பண்ணி. திருவெம்பாவைப் பாடல் பாடி சுவாமிக்குத் தீபாராதனை செய்வது. தினமும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளப்பண்ணுவதுடன் 10ம் நாள் தரிசனம் முடிந்தவுடன் சுவாமிக்கு விடயாத்தி முடிந்த மறு நாள் மாணிக்கவாசகருக்கும் விடயாத்தி உத்ஸவம் நடைபெறும்.
தசதீர்த்தங்கள்
1.
இந்த கூேடித்திரத்தில் பத்து தீர்த்தங்கள் இருக்கின்றன. கோயிலுள் இருக்கும் சிவகங்கைத் தீர்த்தம். (திருக்குளம்)
128

10.
சமுத்திரம் - இந்த கூேடித்திரத்தின் கிழக்கில் சுமார் 8 கல் தூரத்திலுள்ளது. வருணபாச மறுத்த இடம். புலிமடு - இந்த கூேடித்திரத்தின் தெற்கில் 1 கல் தூரத்திலுள்ளது. பூரீ வியாக்கிரபாதர் தங்கியிருந்த இடம்.
வியாக்கிரபாத தீர்த்தம் - கோயிலுக்கு மேற்குப் பக்கத்தில் இளைமையாக்கினார் கோயில் முன் உள்ளது. இந்தக் கோயில் வியாக்கிரபாதர் பூஜை செய்து வந்தார். இங்குதான் திருநீலகண்டநாயனார் முதுமை நீங்கி இளமைப்பருவம் அடைந்தது. அனந்ததீர்த்தம் - இது வியாக்கிரபாத தீர்த்தத் திற்கு மேற்கே 1/2 கல் தூரத்தில், பூரீ பதஞ்சலிபகவான் பூமியிலிருந்து பிலத்துவாரம் வழியாகச் சிதம்பரம் வந்த இடம். பூரீ அனந்தீஸ்வரன் கோயில் முன் உள்ளது. நாகசேரி - இதுவும் அனந்த தீர்த்தத்திற்கு மேற்குப் பாகத்தில் உள்ளது. பிரம்மதீர்த்தம் - இது அனந்த தீர்த்தத்திற்கு வடக்கே 1/2 கல் தூரத்திலுள்ள திருக்களாஞ்சேரி. சிவப்பிரியை - இது கோயிலுக்கு வடக்குப்பக்கத்தில், ழரீ சாமுண்டீஸ்வரி என்னும் ழரீ தில்லையம்பலம் கோயில் முன் இருப்பது. திருப்பாற்கடல் - இது சிவப்பிரியை என்கின்ற தீர்த்தத்திற்கும் பூரீ நடராஜக் கோவிலுக்கும் நடுவி லுள்ளது. இது தான் பூரீ வியாக்கிரபாத மஹரிஷி குமாரரான உபமன்யு மஹரிஷி குழந்தையாக இருக் கும் பொழுது பாலுக்காக அழ கருணைக்கடலான பூரீ மூலநாதர் பால் கடலை உண்டாக்கினார். இதைச் சாப்பிட்டு வளர்ந்த குழந்தையான பூரீ உபமன்யு மஹ ரிஷி சகல வேதசாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த வராவார்.
பரமானந்த கூபம் - இது பூரீ நடராஜருக்கும் பூரீ சித்ஸபைக்கும் கிழக்குப் பக்கத்தில் உள்ள கிணறு.
129

Page 70
இந்த தீர்த்தம் மிகவும் விஷேசமானது இந்த தீர்த்தத்திற்கு ஐப்பசி மாத பூர்வபக்ஷநவமி திதியில் கங்கையே வருகிறாள். அதனால் ழரீ நடராஜர் பூரீ சிவகாமி மற்றும் கோயிலில் உள்ள எல்லா சுவாமிகளுக்கும் எந்தச் சமயத்திலும் அபிஷேகத்திற்கு இந்தத் தீர்த்தம் தான் உபயோகப்படுகிறது.
தை மாதம் அமாவாசையில் மேலே சொன்ன பத்துத் தீர்த்தங்களிலும் சுவாமி தீர்த்தம் கொடுப்பார்.
கோவிந்தராஜப்பெருமாள் கோயில்
தீவிர வைஷ்ணவனாக மாறிய இரண்டாம் நரசிம்ம பல்லவனால் இவ்வாலயம் கட்டப்பட்டது. பின் 12ம் நூற்றாண்டில் அநபாய சோழன் என்னும் 2ம் குலோத்துங்கன் சிற்றம்பலத்தைப் பெருக்கி அமைக்கும் பொருட்டு தில்லை கோவிந்தராஜப்பெருமானை அப்புறப்படுத்தியதாகக் கூறுவர். பின்பு கிருஷ்ண தேவராயரால் கி.பி.1539 பிரதிஷ்டை செய்யப்பெற்றது. அவருடைய் தம்பி அச்சுதராயரும் இதில் பெரிதும் ஈடுபட்டார். பின்பு இக்கோயில்முகமண்டபத்தை விஜயநகர அரசர் ரங்கராயர் கட்டினார். பின் செட்டிநாட்டரசர் கோயிலில் பல பாகங்களைப் புதுப்பித்தார். திருமங்கை ஆழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் தில்லைக் கோவிந்த ராஜப்பெருமானைப் பற்றிப் பாடியுள்ளனர். ஆதியில் தில்லை தீகூழிதர்களே இக்கோயிலை கவனித்து வந்தார்கள் என்றும் பிற்காலத்தில் தனி வழிபாடு ஏற்பட்டது என்றும் அறிகிறோம். இவர் சயன கோலத்தில் உள்ளார்.
தில்லைக் காளிகோயில்
முன்னொரு காலத்தில் சிவனுக்கும் சக்திக்கும் சக்தி பெரிதா சிவன் பெரிதா என வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் யார் பெரியவர்கள் என நிரூபிக்கத் தாண்டவம் ஆடினார்கள். இத்தாண்டவத்தில் சிவன் ஒரு காலைத்தூக்கி ஆட பெணி னான சக்தி தன் காலைத் தூக்கக் கூடாத காரணத்தால் காலைத் தூக்கி ஆடவில்லை அதனால் சக்தி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு சிவனிடம்
130

பணிந்தாள்.
இறைவன் சக்தியை நோக்கி “நீ இவ்வுபூரின் எல்லையில் இருக்க வேண்டும்.” எனக் கூறி அவளை அத்தலத்தின் எல்லைக் காளியாக்கினார். அ.து இப்போது வடக்கு பக்கத்தில் உள்ள “தில்லை காளியம்மன் கோயில்: என அழைக்கப்படுகிறது.
அவ்வாறு காளியுடன் ஒரு காலைத்தூக்கி ஆடிய மூர்த்தியே தில்லைத் திருக்கோயிலில் நடராஜரின் கொடிமரத்திற்குத் தெற்குப் பாகத்தில் உள்ள நிருத்த சபையில் எழுந்தருளியிருக்கும் ஊர்த்துவ தாண்டவர். இச்சிற்பத்தின் காளியாயிருக்கிறாள். பாணாசுரன் தன் எட்டுக்கரங்களில் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கிறார்.
தில்லைக்கூத்தப் பெருமானை வழிபட்டுப் பேறு பெற்றார்
அர்ஜுனன், திருமூலநாயனார். ஆதிசங்கரர், நால்வர், திருவிசைப்பா ஆசிரியர்கள், ஐயடிகள், காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், திருவெண்காட்டடிகள், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், தில்லைவாழ் அந்தணர். திருநீலகண்டநாயனார், நந்தனார், கோச் செங்கட் சோழன், முதலாம் வரகுணபாண்டியன், உமாபதி சிவன், தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள்.
முடிவுரை
சிதம்பரத்தில் இறைவன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை அருணகிரிநாதர் அழகுபட விளக்குகிறார். இப்பிரபஞ்சத்தின் இயக்கமே சிதம்பரம் ஆடவல்லானின் ஆனந்தத் தாண்டவத்தில் அமைந்துள்ளது. உலகில் உயிர்கள் உய்ய வேண்டி, இன்புற வேண்டி ஞானக்கடலாக திகழும் சிவபெருமான் தில்லை சிற்றம்பலத்தில் ஆனந்தமாகக் கூத்தாடுகின்றார். அண்ட சராச ரங்கள் அனைத்தும் இன்பமுற அத்தாண்டவம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தத்துவப் பெட்டகமாகத் திகழும் இத்தில்லையில் பொன்னம்பலக்கூத்தன் பொலிவுடன் ஆடுகி றான். இதைத்தான் திருநாவுக்கரசர் அழகுடன் கூறுகிறார். 131

Page 71
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்
வாயில் குமிண்ை சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல்
மேனியில் பால்வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்த பொற்
பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ
தே இந்த மாநிலத்தே.
திருநாவுக்கரசர் கூறியவாறு, ஆடவல்லானின் உரு வத்தை மனதில் இருத்தி, அவன் பாதங்களைச் சரணடைந்து, அவனை வழிபட்டு நற்பேறடைவோமாக அதற்கு அவன் திருவருள் உறுதுணை செய்யும்.
132

மங்களம்
ஜெய மங்களம் - 1
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம்
அத்துவித வஸ்துவுக்கு மங்களம்
ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம்
உத்தம பத்தருக்கு மங்களம்
முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம்
மூவாசை வென்றவர்க்கு மங்களம்
முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம்
முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம்
தன்னைத்தன்னா லறிந்தவர்க்கு மங்களம்
ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம்
ஐயமில்லாச் சாதுகட்கு மங்களம்
ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம்
சீகாழித் தேவருக்கு மங்களம்
திருநாவுக்கரசருக்கு மங்களம்
சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம்
திவ்விய மாணிக்கத்துக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம்
மங்களம் ஜெய மங்களம்
133

Page 72
O Did S6 TD
ஜெய மங்களம் - 2
ஆதியந்த மில்லா அப்பனுக்கு மங்களம் சோதி வடிவாயுள்ள சுவாமிக்கு மங்களம் ஆன்மா நித்தியமென்ற ஆன்றோர்க்கு மங்களம் தேன்போ லுருசிக்குஞ் சிவனார்க்கு மங்களம் காண்பதெல்லாம் கடவுளாய்க் காண்பார்க்கு மங்களம் நாண்மல ரெடுத்துப்பூசை பண்ணுவோர்க்கு மங்களம் பொறிவழிபோ யலையாத புண்ணியர்க்கு மங்களம் நெறிவழியே செல்லுகின்ற நிருபருக்கு மங்களம் நாமறியோ மென்றுசொல்லும் நாதனுக்கு மங்களம் உண்மை முழுதுமென்ற வுத்தமர்க்கு மங்களம் தன்னைத் தன்னாலறிந்த தாபதர்க்கு மங்களம் அன்னைபிதாக் குருவான அப்பனுக்கு மங்களம் மண்ணைப்பெண்ணை மதியாத மாதவர்க்கு மங்களம் வண்ணைநகள் வாழும்வைத் தீசனுக்கு மங்களம் திண்ணனென்ற பேர்கொண்ட அப்பனுக்கு மங்களம் சண்முக நாதனுக்குஞ் சங்கரற்கும் மங்களம் விண்ணில் விளங்குஞ் சூரிய சந்திரர்க்கும் மங்களம் எண்ணிலடங் காவுயிர்கள் அத்தனைக்கும் மங்களம் நித்தியகள்மந் தவறாத நின்மலர்க்கு மங்களம் பத்துப்பாட்டும் படிப்போர்க்கும் கேட்போர்க்கும் மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்!
நாம் கடவுளை உள்ளத்தில் வளர்க்கிறோம் நாம் அவருடைய தாய். நமக்கு மவருக்குமொரு குறைவுமில்லை நம்மை அவர் பிரிய முடியாது. முழுவதும் உண்மை.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!
134

2. 36JLDu Lib
நன்றி நவில்கின்றோம்
எமது தாயாரின் இறுதிக் கிரியை நிகழ்வுகளில்
கலந்து சகல வழிகளிலும் உதவிகள், ஒத்தாசைகள்
புரிந்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள்,
அயலவர்களுக்கும், உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்து
தொலைபேசி மூலமாகவும், கடித மூலமாகவும் தமது
அனுதாபங்களை எங்களுக்குத் தெரிவித்தவர்களுக்கும்
மற்றும் கிரியைகள் நடாத்திய அந்தணர்களுக்கும்,
அவரின் முத்திப் பேறாக பஜனை நடாத்தியவர்களுக்கும்,
இம் மலரினை அழகுற அச்சிட்டுத் தந்த லகூழ்மி அச்சகத்
தாருக்கும், அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டிப் பிரார்த்தித்
தவர்களுக்கும் எமது உளம் நெகிழ்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
19-3/8, மிலாகரிய அவெனியு, இங்ங்னம் பம்பலப்பிட்டி குடும்பத்தினர் கொழும்பு - 04.
தொேைபசி : 2595196
135

Page 73
q@@@@ și seossado osnĝosĝ .
്യ909 ĢIJA? (í sığ8Ų9 ĶU91|1999)JI 1ĝ919&olls@ Qų90īg)ß 1ņ909 os@1ņ9€goIII(9 |||||| 1831][19]{}|(109Q1999)JIq1100971/1919Ọ9€(9) 十十十 (1,9-ligioos) spíoqsmoĐ091ĝIJI(II-II093;) 1ņ9ÍTU9Q191099)?Ļ9(fiqiốùIÐ0) (109G-10911@19Ę 之^^? ||· quopioī£qẾ199ņ94}x + osoɛ)$$suox qiesuļoduse@x + 1/nq.090960x - -qigoņIGĖqề1991ços x + Goog)$$ßllox 99@@@49x + g999姆巨999%- |(19ņ19ơng)(n +9999X己长 1In@g9ĝo»Inquboņos x + ĶĒĢfī)(1909». s@@f)ą909ņ9$ + 1909ų9ĻIĻIỮNox10909Litorn@g) + qsoņ1990]]|[$x 函数dTMR909x +IJIQI1091ĝ9|fox199gầligjoqg-Ġ » +q13ērīgjox ||-hq取x + 的曲与99西长
Ģ1,9ņ09@x + 1HIIIQ9Q980×* -qıfriqi@gx + Țiq1$$boloisox.
ĴIGIĒqīē


Page 74
வாழ்க்கையில் துன்பங்களால்
நாமத்தை ஒதுகின்றனர். ஆனால் மனத்தை இறைவனுடைய திரு அர்ப்பணம் செய்வானோ, அவனே
 

அடிபட்ட பிறகே, பலர் இறைவனது b எவன் தன் இளமை முதற்கொண்டே வடிகளில் அன்றலர்ந்த மலரைப்போல்
உண்மையில் பாக்கியசாலி.
-சாரதாதேவி