கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அஞ்சலி மலர் (குமாரசுவாமிப்பிள்ளை குருசுவாமி)

Page 1
சிவஞான வா'
குமாரசுவாமிப்பி
-քIճ1II
சிவகாரூப்பிய
 
 

ரிதி சைவப்புலவர்
ள்ளை குருசுவாமி
ர்களின்
நினைவு குறித்த லி மலர்
W
激 N E.
R *
R

Page 2

. ۔۔۔ ۔۔۔ ۔۔۔۔۔ ال தோறறம : மறைவு :
22 - 4 - 1935 10 - 6 - 1994

Page 3

Appreciation
We make all kinds of acquaintances in life, but only a feu remain our associates, ushether in the uorkplace or private life, clinging to the Soul by hooks of affability and good nature by the excellence of behaviour and geniality. Mr. K. Kurusamy of the Official Languages Department, uho passed auay recently uvas one such personality very hard to be forgottenevenuith the passage of time. Mr. KuruSamy joined the Department as a Research Assistant as far back as 1970, and seruing the Department uith unsueruing diligence, he rose to the position of Assistant Research Officer and then to the prestigious post of Research Officer uhich position he held till the hour of his untimely demise that has created a Uaccum, uhich, indeed is hard to fill. As Secretary and member of several Tamil Glossary Advisory Committees of the Department he had commendably contributed to the production of many. Departmental publications. Endoued uith proficiency in a number of languages he uvas found to be admirably Suited to the notso-easy task of coining appropriate equivalents and compiling clusters of synonymous uvords. As a tireleSS uvorker and efficient organiser of activities he held a good name in the Department and uvas much respected by his colleagues for his euer-ready-to-help-anybody attitude and amiable disposition. As an ardent Saiuite and Scholar, he uvas held in highesteem in the Hinduuorld. He impressed me greatly not only upith the hall-mark of efficiency in his public career but also uith uvarn human qualities. Nou that he has made his inevitable journey to thatundiscouered land from ulhose bourn no traveller returns, Let us pray for his soul to rest in peace.
Nimal Samarasundera Commissioner Department of Official Languages.

Page 4
சிவமயம்
நெஞ்சம் நிறைந்த சைவப்பெரியார்
சைவப் பெரியாரும், தமிழ் அறிஞருமான குமாசுவாமிப்பிள்ளை குமாரசுவாமி அவர்கள் சிவபதம் அடைந்துவிட்டார். அமரத்துவமடைந்த கொக்குவில் குமாரசுவாமிப் புலவரதும், சிவபாக்கியம் அம்மையாரதும் ஏக புதல்வரான குருசுவாமி அவர்கள் நமது நாட்டிலே இந்த நூற்றாண்டிலே வாழ்ந்த முதன்மையாக வைத்துப் போற்றப்படும் சைவப் பெரியார்களில் ஒருவர் என்று கூறினால் அது மிகையல்ல.
அன்பும், பண்பும், ஒழுக்கமும், ஆற்றலும் கொண்டவராக விளங்கிய இப்பெரியார், இலங்கையில் மட்டுமன்றிக் கடல் கடந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் தனது சமயப்பிரசங்கங்கள் மூலம் சைவத்தொண் டாற்றியுள்ளார்.
இவரது சமயப் பிரசங்கங்கள், புராணபடனம், கதாப்பிரசங்கங்கள் மூலம் பயன் பெற்றோர் அநேகர். பன்மொழி அறிஞராக விளங்கிய குருசுவாமி அவர்கள் சமயதத்துவ அறிவிலும் மொழி ஆளுமையிலும் சிறந்து விளங்கியதால் சமயக் கருத்துக்களை யாவரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய முறையிலே விளக்கும் ஆற்றல் உடையவராக விளங்கினார்.
பலசமய நிறுவனங்களினூடாகப் பெரும்பணியாற்றிய இவர் கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபையின் துணைத்தலைவராக இருந்து ஆற்றிய பணிகள் சிறப்பாக நினைவு கூரத்தக்கவை. ஆண்டுதோறும் கதிர்காம உற்சவ காலங்களிலே கொழும்பு கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை மடாலயத்தில் தனது கணிரென்ற, கம்பீரமான குரலில் நிகழ்த்தும் புராணபடனம் ஒரு எடுத்துக்காட்டாகும். அவரது கம்பீரமான குரலை இனிக்கேட்க முடியாதென்ற ஏக்கம் யாவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
குருசுவாமி அவர்களின் மறைவு சைவ உலகுக்குப் பேரிழப்பாகும். இறைவன் விதித்த விதிப்படி அவனடி சேர்ந்த அன்னாரின் செயற்பாடுகள் என்றும் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம். அன்னாரின் ஆன்மா எல்லாம் வல்ல எம் பெருமான் திருவடிநிழலில் அமைதியுறப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பிரம்மழநீ பா. சண்முகரத்தின சர்மா பிரதம குருக்கள் ழரீ பால செல்வவிநாயகமூர்த்தி கோயில், கப்பித்தாவத்தை, கொழும்பு - 10
2

அன்பாகவும் இனிமையாகவும் பழகத் தக்கவர்
தமிழ் அறிஞராகவும் சைவசமயச் சான்றோராகவும் திகழ்ந்த கு. குருசுவாமி அவர்களின்" மறைவு சைவ உலகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
தந்தையார் குமாரசுவாமிப் புலவரைப் போலவே குருசுவாமி அவர்களும் ஆழ்ந்த தமிழ் புலமைமிக்கவராக விளங்கினார். வடமொழி அறிவு பெற்றிருந்ததனால் புராண இதிகாசங்களை சுலோகங்களோடு சேர்த்து மிக எளிமையாக விளக்கும் திறமை பெற்றிருந்தார். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக சமயத்தையும் தமிழையும் வளர்க்க அவர் ஆற்றிய பணிகள் வியந்து போற்றத்தக்கவை.
இவர் கல்விநூல் வெளியீட்டுத்திணைக்களத்திற்காக பாலர் வகுப்பு முதல் க.பொ.த சாதாரண வகுப்புவரை சமய பாடங்களுக்கு கட்டுரை எழுதியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் சைவ சித்தாந்தம், கந்தபுராணம், திருமந்திரம் ஆகியவற்றை தொடர் சொற்பொழிவுகளாக வழங்கியுள்ளார். வானொலி நேயர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இவரது சொற்பொழிவுகளை கேட்டு ரசித்துள்ளனர்.
இவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோதும், பின்னர் கொழும்பில் கடமை செய்தபோதும் சமயநிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொண்டு தனது பங்களிப்புகளை அளித்துள்ளார்.
கந்தஷட்டி, திருவெம்பாவை, கதிர்காம உற்சவம் போன்ற விழாக் காலங்களில் இவரது புராணபடனமும் கதாப் பிரசங்கங்களும் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன.
தமிழ் பணிகளாலும், அருட் பணிகளாலும் சிறந்து விளங்கிய அமரர் குருசுவாமி சிவஞானவாரிதி, சைவசித்தாந்த காவலர், செஞ்சொற்கடல் ஆகிய விருதுகளால் பாராட்டப்பட்டார். இவரது சமயத்தொண்டினைப் போற்றி இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சு அதன் முதலாவது பக்திவிழாவில் ஞானசிரோன்மணி என்றபட்டம் அளித்துகெளரவித்தது.
அன்பாகவும் இனிமையாகவும் பழகத் தக்கவரான குருசுவாமி அவர்களின் மறைவு குறித்து எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.அவரது ஆத்மசாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
பி. பி. தேவராஜ்
இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்.

Page 5
சிவமயம்
கலாநிதி − "திரு ஆலவாய்" க. கனகராசா ஜே. பி. த. பெ. இல, 77,
D.M.Sc., D. Litt காங்கேசன்துறை வீதி, உரிமையாளர் : யாழ்ப்பானம் மில்க்வைற் சோப் தொழிற்சாலை (இலங்கை)
தொலைபேசி :23233
am w es « a » a s e e e , 19...
மறைபுகழ் இறைமுன் மறைமுதல் புகன்ற குருசுவாமி
திரு. குமாரசாமிப்பிள்ளை குருசுவாமி அவர்கள் இறைபதம் எய்திய சேதி அறிந்து கவலையுற்றோம்.
சைவப் புலவர் மணி த. குமாரசாமிப்பிள்ளையின் பாண்டித்தியம், புலமை, அறிவாழம் ஆகியவற்றை விஞ்சியவராக வளர்ந்து மிளிர்ந்த திரு. குருசுவாமி அவர்கள் தமிழகத்து அறிஞர்கள் மத்தியிலேயே தலை நிமிர்ந்து சைவத்திற்கும் தமிழுக்கும் யாழ்ப்பாணம் எத்துணை உதவிற்று என்பதை ஆதார பூர்வமாக முன்வைத்து எமக்கெல்லாம் பெருமை சேர்த்தவர்.
மறைந்த ஞானி கிருபானந்த வாரியார் அவர்களின் அபிமானத்துக்குரியவர் குருசுவாமி அவர்கள். அன்னாரின் மனைவியார்பிள்ளைகள்,மற்றும் உற்றார்,உறவினர்களின் துயரில் நாம் பங்கு கொள்கிறோம்.
மறைபுகழ் இறைமுன் மறைமுதல் புகன்ற குருசுவாமியின் பெயரைத்தாங்கிய அன்பர் அப்பன் சாமியின் அரவணைப்பில் சாந்தி காண்கிறார் என நம்புவோம்.
ஓம் சாந்தி.
இப்படிக்கு உண்மையுள்ள
க. கனகராசா

குருசுவாமிப் பிரபாவம்
திதி வெண்பா
சீரார் பவ வாண்டு சேர்வைகா சித்திங்கள்
பேரார் வெண் பக்கப் பிரதமையே - ஏரூரும் விஞ்சை மிகுந்த குருசாமி வேள் விமலன்
செஞ்சரணம் சேர்ந்த தினம்
பொன்னுலகு பாருலகு புக்கதென்னப்
பொலிவுடைய கொக்குவில் நற் பதியில் வந்தோன் மின்னிலகு செஞ்சடிலத் தண்ணல்பூசை
வினைமுடியா துணவருந்தாச் சீலம் பூண்டோன் சொன்னலஞ்சேர் திருமுறைகள் புராணநூல்கள்
துகளறு சீர் சித்தாந்தம் என்னும் ஞான மன்னுகடற் பொருளாழங் கண்டவாசான்
மாகவிஞன் குமாரசுவாமிப் பேரோனே.
மடவார்தம் சிரோமணியென்றுலகம் போற்றும்
மாதுமைநேரெழிற்சிவபாக் கியப்பெண்மானிக்
அடலெரிசான் றாவதுவை புரிந்து பன்னாள் ஆற்றியநற் பெருந்தவமே உதயபானு
வடிவாகி அன்னை பிதா இருவர் தங்கள்
மனங்களிப்ப விழிகளிப்ப மறுவிலாத
சுடராரும் மகவாகக் கேட்டை நாளில்
தோற்றிய தால் சைவ உல குவகை கூர.
செவ்வேளின் மழவிளமைப் பொலிவு மேவித்
திகழ்தலுறும் எழிலினைக் கண்டுவகை கூர்ந்து மைமேவு கண்டத் தார்க்குபதேசம் செய்
மகனருளை நினைந்து குருசாமி நாமம் தெய்வீகம் மிளிர் வகையிலுவந்து சூட்டி
தினமொரு வண்ணம் வளரமிகு சீராட்டி நெய் பால் தேன் அளவிய பஞ்சமுத மூட்டி
நேரிழையார் பாராட்டி வளர்த்தலுற்றார்.
கொழுந்துமதி யெழுந்து வளர் பாங்கில் நாளும்
கோல வெழி லுருவுற்று பள்ளி சார்ந்து
செழுந் தமிழும் இலக்கணமும் தந்தையார் பால்
திருமுறையும் சித்தாந்தப் பிழிவும் தேர்ந்து

Page 6
தெளிந்தறிவு மேன்மேலும் பெறுதல்வேண்டி
சீர்திகழ் யாழ்ப்பாணக் கல்லூரி சார்ந்து
வளந்திகழும் ஆங்கிலஞ் சங்கதமே பாளி
மறுவில் மொழி திரிபைய மறக்கற்றோந்தார்
சங்கதத்தல் விசேட கலை மாணிப்பட்டம்
சாரப் பெற்றே விபுல ஞான முற்றுப் பொங்கு புகழ் ராமநாதன் கல்லூரி
பொருந்தி மொழி யாசானாய் கடமையாற்றி துங்கமிகு அரசமொழித் திணைக் களத்தே
துலங்கிடுமா ராய்ச்சி உத்தி யோகத்தராய் எங்குமிசை பரவவுயர் பணிகளாற்றி
எல்லெவரும் மதிப்பளிக்கும் ஏற்றமுற்றார்.
மன்னு புகழாறு முக ஆசானும் சீர்
மலர் மங்கை யர்க்கரசி மானுங்கூடி முன்னரியற் றிய தவமே வடிவாய் வந்து
முழுநிலவு முகச் சுகுண வதியாய் மின்னும் வண்ண மயில் தில்லை நாயகிப் பொன்மாதை
வன்னி கரியா வதுவை புரிந்தான் றோர்தம் சொன்னயஞ்சேர் ஆசி மொழியால் தளிர்த்து
துலங்குமெழில் இல்லறத்தேர் நடத்தியுற்றார்
அனமளித்தும் தனமளித்தும் அலந்தோர்க் கெல்லாம் ஆதரவு புரிந்து விருந்தோம்பி அன்பால் தின மறங்கள் செய்தவருந் திறத்தால் ஞானத்
தினகரனேர் அறிவொளியும் திருவுமொன்றாய் வனப்புற மேவும் சிறப்பு மகிமை சார்ந்து
வர்த்தக வங்கிக் கிளையில் துணைவராகி இனி துறையும் சுரேந்திரப் பூ மகிபன்தன்னை
ஏத்துமிசைச் சிரேட்ட மகனாகப் பெற்றார்
நைவளமே யனைய மொழி பயிலும் பூவை
நளின மலருறை மின்னாய் கொழும்பு மேவும் மெய்யறிவுச் சர்வகலா சாலை தன்னில்
விஞ்ஞான மாணவியாய்த் திகழ்.பவானி செவ்விமிகு மொரட்டுவைப் பல்கலைக் கூடத்தில்
சிறப்பாரும் பொறியியல் மாணவனாய் மேவும் திவ்யகுணச் செல்வேந்த்ரன் சென்ற் பிறிஜெற்
சேரு மெழில் மாணவியாம் ஜனனிப் பாவை

10.
1.
இன்னவர்கள் மகாராக இனிது மேவி
இன்மொழியால் நற்பணியாலு வகை சேர்க்க நன்னயஞ்சேர் நண்பர்மொழிச் சலாப வார்த்தை
நாடி நித மருகணைந்து மகிழ்வு கூட்ட பன்னுமறை ஆகமஞ் சித்தாந்த நூலின்
பகரரிய நுண்பொருள்கள் உரைத்துக்காட்டி வின்மலி செஞ் சடையண்ண லருளால் கல்வி
வினோத ரச மழைமுகிலாய் மேவினாரால்
பத்திமை சே ருஞ்சைவப் புராண நூற்கு
பயனுரைக்கும் போதினிலே பழுத்தஞான வித்தகராகிய தந்தை குமாரசாமி
மேதகைய புலவரெனக் காட்சி நல்கி சித்தாந்தப் பொருளுரைக்கும் வேளை தன்னில்
சிவஞான முனிவரெனத் தோற்றங் காட்டி வித்வ சபை விவாத வரங்கினிலே யெல்லாம்
விளங்குதய தாரகை போல் விகாசித்தரால்
சைவமணங் கமழுபந்நி யாசமாரி
சந்ததமும் தலங்களிலாற்றிய சிறப்பால் தெய்விகமார் சிவஞான வாரிதிப்பேர்
சீர்விருதும் மெய்கண்டசாத்திரத்தின் துய்யசுடரறிவு நல னோக்கில்சைவ
சித்தாந்தக் காவலரென் றொருநற்பேரும் மெய்யுணர்வார் இந்துகலா சாரமைச்சின்
ஞானசிரோமணி விருதும் வழங்கப் பெற்றார்
12. இன்னவகை மன்னிய சீர் உலக வாழ்வில்
இயம்பரிய கலைஞானம் உத்தியோகம் அன்பு மனை மக்கள் அதிகாரமேன்மை
ஆகிய ஈரெண் பேறு சிறக்க வாய்த்தும் செந் நெறியாம் சிவநெறியைப் போற்றி வாழ்ந்து
தேனிதழித் தாமர் பதம் சதமென்றோர்ந்து தன்னுடலம் குருசாமி மகிபன் நீத்து
சார்ந்துற்றார் இயற்கை யொடுசங்கமித்தே.
- சிவ சிவ -

Page 7
தேற்றம்
வீழ்பழம்போய் மரம்பொருந்தி மேவலுண்டோ
விண்ணிழியும் கேதுவான் சேரலுண்டோ ஆழ்கடல்சேர் ஆறுபிறிதாவதுண்டோ
அலர்குவிந்தால் அது திரும்ப மலர்வதுண்டோ தாழ்சடைவே ணிப்பரமன் கமலபாதம்
தனை விரும்பிப் போனகுரு சுவாமிவள்ளல் மீள்வதில்லை கவலைபெரிதாகி நொந்து
மிகபொடு வதைவிடுத்துமேவுனிரே.
- சிவ சிவ -
நன்றி
சகல வழிகளிலும் முன்னின்று உதவிய Esquire தாபனத்தார் மெய்கண்டான் நிறுவனத்தினர் அரசகருமமொழிகள் திணைக்கள ஆணையாள. ஆகியோர்க்கும் அனுதாபச் செய்திகள் வழங்கியோர்க்கும் மரணச்சடங்கிலும் அபரக்கிரியைகளிலும், கலந்து சிறப்பித்த உற்றார் உறவினர், அன்பர்கள், நண்பர்கள் அனைவர்க்கும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ங்ணம் மனைவி, மக்கள்

தேவாரம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருவலிவலம் பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
திருப்பிரமபுரம் தோடுடைய செவியன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன் ஏடுடைய மலரான்முனை நாட்பணிந்தேத்த வருள்செய்த பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே.
திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்
அங்கமும் வேதமும் ஒது நாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கய லார்புனற் செல்வ மல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரியேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
திருவண்ணாமலை உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
திருநெய்த்தானம் மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான் கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமே ணிரே.

Page 8
திருவலிவலம் ஒல்லையாறி உள்ளம்ஒன்றிக் கள்ளம்ஒழிந்துவெய்ய சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி நல்லவாறே யுன்றன்நாமம் நாவில்நவின் றேத்த வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.
திருத்தூங்கானைமாடம் சாநாளும் வாழ்நாளும் தோற்றமிவை
சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் ஆமா றறியா தலமந்துநீர்
அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப் பூமாண் அலங்கல் இலங்குகொன்றை
புனல்பொதிந்த புன்சடையி னான்உறையும் தூமாண் கடந்தைத் தடகோயில்சேர்
தூங்கானை மாடந் தொழமின்களே.
திருத்தோணிபுரம் சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனோடுபால் முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்கும்இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.
திருப்பழனம் வேதமோதி வெண்ணுரல் பூண்டு வெள்ளை யெருதேறிப் பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார் நாதாஎனவும் நக்காஎனவும் நம்பா எனநின்று பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.
திருச்சிராப்பள்ளி நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச் சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறன்ன்னுள்ளங் குளிரும்மே.
பொது அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு ம.தறிவீர் உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
10

திருவையாறு புலமைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
யறிவழிந்திட் டைம்மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலேன்
றருள்செய்வான் அமருங் கோயில் 6U6vlb6)|bg LDL-6)JITfG6T (bLLDTL
முழவதிர மழையென் றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவை யாறே.
திருவழுந்துார் வானே மலையே யெனமன் னுயிரே தானே தொழுவார் தொழவாள் மணியே ஆனே சிவனே யழுந்தை யவரெம் மானே யெனமா மடம்மன் னினையே.
திருமறைக்காடு சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன் கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.
திருச்சாய்க்காடு நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார் சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளும் தலைசுமப்பப் புகழுநாமஞ் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.
திருமயிலாப்பூர் வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச்சரத் தான்தொல் கார்த்திகைநாள் தளத்தேந்திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
திருவெண்காடு கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
11

Page 9
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
திருவாலவாய்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
திருநாவுக்கரசு நாயனார்
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகி எத்தினாற் பத்திசெய்கேன் என்னை நீ இகழ வேண்டா முத்தனே முதல்வா தில்லை'அம்பலத் தாடு கின்ற அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாயே.
ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக் கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச் சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம்பலத்துநட்டம் என்றுவந் தாய்என்னும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டு வதேஇந்த மாநிலத்தே.
திருப்புள்ளிருக்கு வேளூர் பேராயிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித்
12

தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திருபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.
திருவையாறு மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன் யாதும் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங்
கண்டறியாதன கண்டேன்.
இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார் கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார் பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார் அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயன்ஐ யாற னாரே.
எல்லா வுலகமு மானாய் நீயே
யேகம்பம் மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
திருவாளைக்கா எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாமம் ஏவர் நல்லார் செத்தால்வந்துதவுவார் ஒருவரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன் அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
13

Page 10
திருவாவடுதுறை திருவேயென் செல்வமே தேனே வானோர்
- செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதீ மிக்க
உருவேஎன்னுறவேஎன் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தினுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
திருப்புகலூர் எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலே மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்.
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
திருவாரூர் முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.
14

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம போற்றி போற்றி அங்கமலத் தயனோடு மாலுங் காணே
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
திருமறைக்காடு தூண்டு சுடரணைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.
திருப்பூவணம் வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில் திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனத னார்க்கே.
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருவெண்ணெய்நல்லூர்
பித்தாப்பிறை சூடிபெரு
மானே அருளாளா எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்ம்னத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுங் அத்தாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே.
15

Page 11
கோயில் உய்ததாடித் திரியாதே உள்ளமே
ஒழிகண்டாய் ஊன்கண் ஒட்டம் எத்தாலுங் குறைவில்லை என்பர்காண்
நெஞ்சமே நம்மை நாளும் பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி பாவந் தீர்க்கும் பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே.
திருக்கழிப்பாலை எங்கே னும்மிருந்துன் அடியேன் உனைநினைந்தால் அங்கே வந்தென்னொடும் உடனாகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட்டெனையாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானை.
திருக்குருகாவூர் வெள்ளடை பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய் மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
திருக்கோலக்கா நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சம்பந்த னுக்குல கவர்முன் தாளம் ஈந்துஅவன் பாடலுக் கிரங்கும்
தன்மை யாளனை என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும் கோளி லிப்பெருங் கோயிலுள்ளானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
திருப்புன்கூர் அந்த னாளன்உன் அடைக்கலம் புகுத அவன்னக்காப்பது காரணமாக வந்த காலன்தன் ஆருயிரதனை
வவ்வினாய்க் குன்தன் வண்மைகண் டடியேன் எந்தை நீஎனை நமன்தமர் நலியின்
இவன்மற் றென்னடி யான்என விலக்கும் சிந்தை யால்வந்துன் திருவடி அடைந்தேன்
செழும்பொழில்திருப் புன்கூர் உளானே.
16

நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக்கரையன் நாளைப்போ வானும் கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் குற்றஞ் செய்யினும் குணம்எனக் கருதும்
கொள்ளை கண்டுநின் குரைகழல் அடைந்தேன் பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.
திருமழபாடி பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
திருப்பாச்சிலாச்சிராமம் அன்னையே என்னேன் அத்தனே என்னேன்
அடிகளே அமையுமென் றிருந்தேன் என்னையும் ஒருவன் உளன்என்று கருதி
இறையிறை திருவருள் காட்டாய் அன்னமாம் பொள்கை சூழ்திரு பாச்சி
லாச்சிரா மத்துறை அடிகள் பின்னேயே அடியார்க் கருள்செய்வதாகில்
இவரலா தில்லையோ பிரானார்.
திருக்கடவூர் மயானம் மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத் திருமால் பிரமன் இந்திரற்கும்
தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
திருப்புகலூர் தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்
சார்வினுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மை யேதரும் சோறுங் கூறையும்
17

Page 12
ஏத்த லாம்இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயற வில்லையே.
திருநாகைக்காரோணம் மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர்
வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு ஆற்றவேற்றிரவுடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர்
அணியாரூர் புகப்பெய்த அருநிதியம் அதனில் தோற்றமிகு முக்கூறில் ஒருகூறு வேண்டும்
தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்கல் ஒட்டேன் காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
மாணிக்கவாச சுவாமிகள் அருளிய சிவபுராணம் திருவாசகச் சிறப்பு
தொல்லை இரும்பிறவிச் சூழுந்தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகம் என்னும் தேன்.
திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங் குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடிபோற்றி
18

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி 3 சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனல் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணம்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி 4. எண்ணுதற் கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்துஎல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 5 பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் 6 மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யன்ன் உள்ளத்துள் ஒங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணி யனே வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா 7
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் 8 ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்ருொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே மாற்ற மனம்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 9 சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணுேர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை 10 அறம்பாவம் என்னும் அருங்கயிற்ருல் கட்டிப் புறந்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
19

Page 13
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துஉள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனர் அமுதே சிவபுரனே பாசம் ஆம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஒராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்ருனே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்ருப் பெருமையனே ஆதியனே அந்தம் நடு ஆகி அல்லானே ஈர்த்துஎன்னை ஆட்கொண்டஎந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்குஅரிய நோக்கே நுணுக்குஅரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே காக்கும்எம் காவலனே காண்புஅரிய பேரொளியே ஆற்று இன்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்ருன உண்ணுர் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேயோ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானர் மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்ருடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லியபாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
2O
2
13
14
15
17
18
19

திருவெம்பாவை
திருச்சிற்றம்பலம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த் தொலிபோய் வீதிவாயக் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின் மேல் நின்றும் புரண்டிங்ங்ண் ஏதேனு மாகாள் கிடந்தாளென் னேயென்னே ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவாய்
பாசம்பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடமீதோ விண்ணோர்களேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தனா னந்தன் அமுதன்என் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன்பழ வடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய் மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களேபேசும்
21

Page 14
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்
றோலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்
மானேநீநென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறுமெமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்
அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாவென் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந்துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றவன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கேபாங்காவோம் அன்னவரே எங்கணவராவர் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்
22

பாதாளம் ஏழினுங் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஒத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள் ஏதவன் ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணிறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநி ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையெலோ ரெம்பாவாய்
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தனிவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகளும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
23

Page 15
சோதி திறம்பாடிச் ஆழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நம்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றாற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்
24

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்பரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்
திருச்சிற்றம்பலம்
திருப்பள்ளியெழுச்சி
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம் போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்குழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே
அருணன்இந்திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக் V
கடிமலர் மலரமற் றண்ணல் அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந்துறையுறை சிவபெரு மானே
റ5

Page 16
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லே பள்ளி எழுந்தருளாயே கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஒவின தாரகை ஒளியொளி உதயத்
தொருப்படுகின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிபபெரு மானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்து துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
26

இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறாது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
முந்திய முதல்நடு இறுதியுமானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தனை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி அந்தன னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமுதே'பள்ளி எழுந்தரு ளாயே
வி எணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மனனகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
புவனியிற் போய்ப்பிற வாமையினால் னால்நாம்
போக்குகின் றோம்.அவமே இந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே'பள்ளி எழுந்தரு ளாயே
திருச்சிற்றம்பலம்
27

Page 17
திருப்பொற்சுண்ணம்
தில்லை முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் சத்தியுஞ் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கெளரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன்ஐ யாறன்அம் மானைப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
பூவியல் வார்சடை எம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்னகண்ணிர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறம்நிலாமே
குனிமின் தொழுமின்னங் கோன்எங்கூத்தன் தேவியுந் தானும் வந் தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே 2
சுந்தர நீறணிந்தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன்அயன் தன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்கு
ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்துநாமே. 3
காசணி மின்கள் உலக்கையெல்லாம்
காம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் தேசமெல் லாம்புகழ்ந்தாடுங்கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்துநின்று
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 4 அறுகெடுப் பார்அயனும்மரியும்
28

அன்றிமற் றிந்திர மோடமரர் நறுமுறு தேவர்க ணங்களெல்லாம்
நம்மிற்பின் பல்லதெடுக்கவொட்டோம் செறிவுடை மும்மதில் எய்தவில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினிர் முக்கண்அப்பற்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
உலக்கை பலஓச்சு வார்பெரியர்
உலகமெலாம்உரல் போதாதென்றே கலக்க அடியவர் வந்துநின்றார்
காண உலகங்கள் போதாதென்றே நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி
மகிழ்ந்துபொற் சுண்ணம் இடித்துநாமே.
சூடகந் தோள்வளை ஆர்ப்பஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்பஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்பஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்பஆர்ப்ப பாடக மெல்லடி யார்க்கும்மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்கு ஆடக மாமலை அன்னகோவுக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
வாட்டடங் கண்மட மங்கைநல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத் தோட்டிரு முண்டந்துதைந்திலங்கச்
சோத்தெம்பி ரான்என்று சொல்லிச்சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி
நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கைநாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறையஅட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான்
29

Page 18
செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச் சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
செங்கயற் கண்பனி ஆடஆடப் பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
பிறவி பிறரொடும் ஆடஆட அத்தன் கருணையொ டாடஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநானே. 10
மாடு நகைவாள் நிலாவெறிப்ப
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெரு மானைத்தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி ஆடுமின் அம்பலத் தாடினரணுக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 11
மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் தன்னை ஐயனை ஐயர்பிரானை நம்மை
அகப்படுத் தாட்கொண்-டருமை-காட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோள் பையர வல்குல் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 12
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் என்னுடை ஆரமுது எங்கள் அப்பன்
எம்பெரு மான்இம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
தமையன்எம்ஐயன் தாள்கள்பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநானே. 3
30

சங்கம் அரற்ற்ச் சிலம்பொலிப்ப
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாய்இதழுந்துடிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம்பாடிக் கங்கை இரைப்ப அராஇரைக்கும்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே.
ஞானக் கரும்பின் தெளிவைப்பாகை
நாடற் கரிய நலத்தைநந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானைச்
சித்தம் புகுந்து தித்திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநானே.
ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோடு
ஆட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர்க னாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச் சேவகமக் ஏந்திய வெல்கொடியான்
சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே.
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளையாடி
மால்விடை பாடி வலக்கையேந்தும் ஊனக மாமழுச் சூலம்பாடி
உம்பரும் இம்பரும் உய்யஅன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே.
அயன்தலை கொண்டுசெண் டாடல்பாடி அருக்கன் எயிறு பறித்தல்பாடிக்
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடிக்
காலனைக் காலால் உதைத்தல்பாடி
31
14
15
17

Page 19
இயைந்தன முப்புரம் எய்தல்பாடி
ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
நயந்தனைப் பாடிநின் றாடி யாடி
நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே. 18
வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி மத்தமும் பாடி மதியும்பாடி சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
சிற்றம்பல லத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக்
கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் இட்டுநின் றாடும் அரவம்பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே. 19
. வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்மையும் ஆயினார்க்குச்
சோதியுமாய்இரு ளாயினார்க்குத்
− துன்பமு மாய்இன்பம் ஆயினார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப்
பந்தமு மாய்விடும் ஆயினாருக்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே 20
திரு 6í65)JFILIT
திருமாளிகைத்தேவர்
ஒளிவளர் விளக்கே! உலப்பிலா வொன்றே!
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே!
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
32

சேந்தனார்
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றனஞ் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு) உள்ளம் குளிரளன் கண்குளிர்ந்தனவே.
கருவூர்த் தேவர்
தத்தையங் கணையார் தங்கள்மேல் வைத்த
தயாவைநூறாயிரங் கூறிட்டு) அத்திலங்கு) ஒருகூறு) உன்கண்வைத் தவருக்(கு) அமருலகு) அளிக்கும்நின் பெருமை பித்தனென்று ஒருகால் பேசுவ ரேனும்
பிழைத்தவை பொறுத்தருள் செய்யும் கைத்தலம் அடியேன் சென்னிவைத்த கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே!
திருப்பல்லாண்டு சேந்தனார்
மன்னுலக தில்லை! வளர்கநம்
பத்தர்கள்! வஞ்சகர் போய்அகல பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து பின்னைப்பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. (1)
மிண்டு மனத்தவர் போமின்கள்;
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்;
கொண்டுங் கொடுத்துங் குடிகுடி
ஈசற்காட் செய்மின் குழாம்புகுந்து:
33

Page 20
அண்டங் கடந்த பொருள்அள
வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும்என்றும் உள்ளபொருள்
என்றே பல்லாண்டு கூறுதுமே.
நிட்டையிலாவுடல் நீத்தென்னை
ஆண்ட நிகரிலா வண்ணங்களும் சிட்டன் சிவனடி யாரைச்
சீராட்டுந் திறங்களுமே சிந்தித்து) அட்ட மூர்த்திக்கென் அகம்நெக
ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநிழற் பட்டனுக்கு) என்னைத்தன் பாற்படுத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சொல்லாண் டசுருதிப்பொருள்
சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்! சில்லாண் டிற்சிதை யுஞ்சில
தேவர் சிறுநெறி சேராமே வில்லாண் டகன கத்திரள்
மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் புதங்கடந்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே,
புரந்தரன் மாலயன் பூசலிட்டு)
ஒலமிட்டு) இன்னம் புகலரிதாய் இரந்திரந்(து) அழைப்பனன் னுயிராண்ட
கோவினுக் கென்செய வல்லமென்றும் கரந்துங் கரவாத கற்பக
னாகிக் கரையில் கருணைக்கடல் பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்
பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே.
திருமந்திரம்
மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும் விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான் ஒக்கும் பண்ணகத்தின்னிசை பாடலுற் றானுக்கே கண்ணகத் தேநின்று காதலித் தேனே,
34
(2)
(3)
(4)
(5)

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வறு மந்திரந் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை யாரறி வார்இந்த அகலமும் நீளமும் பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறியாமை விளம்புகின் றேனே.
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசநில் லாவே.
ஊரேலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே.
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்க மேஇறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரேடீ
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப்பட் டார்களும் அன்பில ரானார் கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.
கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர் கல்லா அரசனிற் காலன் மிகநல்லன் கல்லா அரசன் அறம்ஒரான் கொல்லென்பான் நல்லாரைக் காலன் நணுகநில் லானே.
யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. அன்பும் சிவமும்இரண் டென்பர் அறிவிலாழி அன்பே சிவமாவதாரும் அறிகிலார் حصیبر
35

Page 21
அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினுங்
கல்லாதார் நெஞ்சத்துக் காணகொண் ணாதே.
நடுவுநின் றார்சிலர் ஞானிகளாவர் நடுவுநின் றார்சிலர் தேவருமாவர் நடுவுநின்றார்சிலர் நம்பணு மாவர் நடுவுநின் றாரொடு யானும்நின் றேனே.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று உடம்பினை யானிருந்தோம்புகின் றேனே.
கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார் கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக் கண்காணி கண்டார் களவொழிந் தாரே.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நானாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
அறியாத வற்றை அறிவான் அறிவான் அறிவான் அறியாதான் தன்னறி வாகான் அறியா தவத்தை அறிவானைக் கூட்டி அறியா தறிவானை யாரறி வாரே.
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின் ஆசூச மானிடம் ஆசூச மாமே.
.36

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே.
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே.
எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம் எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந் தங்குஞ் சினவருட் டன்விளையாட்டதே.
நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க வொளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரம ணிருந்திடஞ்
சிற்றம் பலமென்று சேர்ந்து கொண் டேனே.
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின் தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.
நானென்றுந் தானேன்றும் நாடினேன் நாடலும் நானென்றுந் தானென் றிரண்டில்லை யென்பது நானென்ற ஞான முதல்வனே நல்கினான் நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.
பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள குட்டிப் பசுக்களோ ரேழுள ஐந்துள குட்டிப் பசுக்கள் குடல்பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற் பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.
உணர்வுடை யார்கட் குலகமுந் தோன்றும் உணர்வுடை யார்கட் குறுதுயரில்லை
37

Page 22
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம் உணர்வுடை யார்கள் உணர்ந்துகண் டாரே.
நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன் அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம் மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம் புறம்பல காணினும் போற்றகி லாரே.
தஞ்சாவூர்த் தட்டான் தலத்துக்கு நாயகன் மஞ்சாடி கொள்ளான் வழக்கன்றி மன்றேறான் துஞ்சான் உறங்கான் தொழில்செய்யான் சோம்பான் அஞ்சாறு நாளைக் கவதியிட் டானே. ۔۔
திருத்தொண்டர் புராணம்
சேக்கிழார்
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; நிலவு லாவிய நீர்மலி வேணியன்; அலகில் சோதியன்; அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத்துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
“தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு
வாலிதாம் இன்பம்,ஆம்” என்று
கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்
கைம்மலர் உச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்.
38

திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே அங்கணர் கருணை கூர்ந்த அருட்டிரு நோக்கம் எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சர்புவிட் டகல நீங்கிப் பொங்கிய ஒளியின் நீழல் பொருவில்அன் புருவன் ஆனார்.
அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமைஅறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம்என்றும் அவனுடைய நிலை இவ்வாறறிநீ என் றருள்செய்வார்.
நன்மைபெரு கருள்நெறியே வந்தணைந்த நல்லூரின் மன்னுதிருத் தொண்டனார் வணங்கிமகிழ்ந் தெழும்பொழுதில் "உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!” என்றவர்தஞ் சென்னிமிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார் “பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல்
உன்னை என்றும் மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டுநான்
மகிழ்ந்து பாடி அறவா! நீ ஆடும் போதுன் அடியின்கீழ்
இருக்க” என்றார்.
களவுபொய் காமம் கோபம் முதலிய
குற்றம் காய்ந்தார்; வளமிகு மனையின் வாழ்க்கை நிலையினார்;
மனைப்பால் உள்ள அளவைகள் நிறைகோல் மக்கள் ஆவொடு
மேதி மற்றும் உளவெலாம் அரசின் நாமஞ் சாற்றும்
அவ்வொழுக லாற்றார்.
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம். என்று இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித் துள்மும் ஓங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.
39

Page 23
விநாயக கவசம்
வளர்சிகையைப் பராபரமாய் வயங்குவிநாயகர்காக்க வாய்ந்த சென்னி யளவுபடா வதிகசவுந் தரதேக மதோற்கடர்தா மமர்ந்து காக்க
விளரறநெற் றியையென்றும் விளங்கியகா சிபர்காக்க புருவந் தம்மைத் தளர்வின்மகோதரர்காக்க தடவிழிகள் பாலசந்திரனார் காக்க. w
கவின்வளரு மதரங்கச முகர்காக்க தாலங்கணக் கிரீடர் காக்க நவில்சிபுகங் கிரிசைசுதர் காக்கநனி வாக்கைவிநாயகர்தாங் காக்க அவிர்நகைதுன் முகர்காக்க வள்ளெழிற் செஞ்செவி ப்ாசபாணி காக்க தவிர்தலுறாதிளங்கொடிபோல் வளர்மணிநாசியைச்சிந்திதார்த்தர் காக்க. (2)
காமருபூ முகந்தன்னைக் குணேசர்நண் காக்ககளங் கணேசர் காக்க வாமமுறு மிருதோளும் வயங்குகந்த பூர்வசர்தா மகிழ்ந்து காக்க ஏமமுறு மணிமுலைவிக்கினவினா சன்காக்க இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்கவகட்டினைத்துலங்கே ரம்பர் காக்க. (3)
பக்கமிரண் டையுந்தரா தரர்காக்க பிருட்டத்தைப் பாவநீக்கும் விக்கினக ரன்காக்க விளங்கிலிங்கம் வியாளபூடணர்தாங் காக்க தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர் காக்கசக னத்தை யல்லல் உக்ககன பன்காக்க வூருவைமங் களமூர்த்தி யுவந்து காக்க, (4)
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க விரு பதமேக தந்தர் காக்க வாழ்கரங்கப் பிரப்பரசா தனர்காக்க முன்கையை வணங்கு வார்நோய் ஆழ்தரச்செய் யாசாபூ ரகர்காக்க விரல்பதும வத்தர் காக்க கேழ்கிளரு நகங்கள்விநாயகர் காக்க கிழக்கினிற்புத் தீசர் காக்க. (5)
அக்கினியிற் சித்தீசர் காக்கவுமா புத்திரர் தென்னாசை காக்க மிக்கநிரு தியிற்கணேசுரர் காக்க விக்கினவர்த்தனர்மேற்கென்னும் திக்கதனிற் காக்கவா யுவிற்கசகன் னன்காக்க திகழு தீசி தக்கநிதி பன்காக்க வடகிழக்கி லீசநந்தனரே காக்க. (6)
ஏகதந்தர் பகன்முழுதுங் காக்கவிர வினுஞ்சந்தி யிரண்டன் மாட்டும் ஒகையின்விக் கினகிருது காக்கவிராக் கதர்பூத முறவே தாள மோகினிபே யிவையாதி யுயிர்திறத்தால் வருந்துயரு முடிவிலாத வேகமுறு பிணிபலவும் விலக்குபுபாசாங்குசர்தாம் விரைந்துகாக்க, (7)
மதிஞானந் தவந்தான மானமொளி புகழ்குலம்வண் சரீர முற்றும் பதிவான தனந்தானியங்கிரக மனைவிமைந்தர் பயினட் பாதிக்
40

கதியாவுங் கலந்துசர்வா யுதர்காக்க காமர்பவுத் திரர்முன் னான விதியாருஞ் சுற்றமெலா மயூரேச ரெஞ்ஞான்றும் விரும்பிக் காக்க. (8)
வென்றிசீ விதங்கபிலர் காக்கரி யாதியெலாம் விகடர் காக்க என்றிவ்வாறிதுதனைமுக் காலமுமோ திடினும்பா லிடையூறொன்றும் ஒன்றுறா முனிவர்கா ளறிமின்கள் யாரொருவ ரோதி னாலு மன்றவாங் கவர்தேகம் பிணியறவச் சிரதேக மாகி மன்னும். (9)
விநாயகர் கவசம் முற்றிற்று.
றுநீ குமரகுருபர சுவாமிகள் சகல கலாவல்லி மாலை
வெண்டா மரைக்கன்றி நின் பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாது கொ லோசக மேழு மளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே. (1)
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே
சகல கலாவல்லியே. (2)
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்த்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ
லோவுளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே
சகல கலாவல்லியே. (3)
41

Page 24
தூக்கும் பனுவற்றுறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவை தோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்லமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே
சகல கலாவல்லியே.
பஞ்சப் பிதந்தரு செய்பொற்
பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந்
நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலாவல்லியே.
பண்ணும் பரதமுங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே.
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல்
காயுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந் தெளிக்கும் வண்ணங் காட்டும்வெள்ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.
சொல்விற் பனமு மவதான
முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள்
வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால
முஞ்சிதை யாமைநல்குங்
42
(4)
(5)
(6)
(7)

கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலாவல்லியே. (8)
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ்சரததின் பிடியோ
டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத்தாளே
சகல கலாவல்லியே. (9)
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய்
வாய்படைப் போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்
டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வமுளதோ
சகல கலாவல்லியே. (10)
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
சிகர வடவரை குனிய நிமிர்தரு
செருவி லொருபொரு வில்லெனக் கோட்டினர் செடிகொள் பறிதலை யமன ரெதிரெதிர்
செலவொர் மதலைசொல் வையையிற் கூட்டினர் திருவு மிமையவர் தருவு மரவொலி
செயவ லவர்கொள நல்குகைத் தீட்டினர் சிறிய வெனதுடன் மொழியும் வடிதமிழ்
தெரியு மவர்முது சொல்லெனச் சூட்டினர் பகரு மிசைதிசை பரவ விருவர்கள்
பயிலு மியறெரி வெள்வளைத் தோட்டினர் பசிய வறுகொடு வெளிய நிலவிரி
பவள வனமடர் பல்சடைக் காட்டினர் பதும முதல்வனு மெழுத வரியதொர்
பனுவ லெழுதிய வைதிகப் பாட்டினர் பரசு மிரசத சபையி னடமிடு
பரத பதயுக முள்ளம்வைத் தேத்துதும்
43

Page 25
முகமதியூடெழு நகைநில வாட
முடிச்சூழியமாட முரிபுரு வக்கொடி நுதலிடு சுட்டி
முரிப்பொ டசைந்தாட இகல்விழி மகரமு மம்மக ரம்பொரும்
இருமகரமுமாட இடுநூ புரவடி பெயரக் கிண்கி
ணெனுங்கிண் கிணியாடத் துகிலொடு சோர்தரு கொடிநுண் மருங்குல்
துவண்டு துவண்டாடத் தொந்தி சரிந்திட வந்தி கரந்தொளிர்
சூலுடை யாலடைமற் றகில சராசர நிகிலமொ டாடிட
ஆடுக செங்கீரை அவனிதழைந்திட மவுலி புனைந்தவள்
ஆடுக செங்கீரை.
முதுசொற் புலவர்தெளித்தப சுந்தமிழ்
நூல்பாழ் போகாமே முளரிக் கடவுள்படைத்தவ சுந்தரை
கீழ்மே லாகாமே அதிரப் பொருதுக லிப்பகை ஞன்றமிழ்
நீர்நா டாளாமே அகிலத் துயிர்கள யர்த்தும றங்கடை
நீணிர் தோயாமே சிதைவுற் றரசிய னற்றரு மங்குடி
போய்மாய் வாகாமே செழியர்க் கபயரு மொப்பென நின்றுண
ராதா ரோதாமே மதுரைப் பதிதழை யத்தழையுங்கொடி
தாலோ தாலேலோ மலயத் துவசன்வளர்த்தப சுங்கிளி
தாலோ தாலேலோ.
செழுமறை தெளியவடித்ததமிழ்ப்பதி கத்தோடே
திருவரு ளமுதுகு ழைத்துவிடுத்தமு லைப்பாலாற் கழுமல மதலைவ யிற்றைநிரப்பிம யிற்சேயைக்
களிறொடும் வளரவ ளர்த்தவ ருட்செவி லித்தாயே குழலிசை பழகிமு முப்பிர சத்திர சத்தோடே
குதிகொளு நறியக னரிச்சுவை நெக்கபெ ருக்கேபோல் மழலையினமுதுகு சொற்கிளி கொட்டுக சப்பாணி
மதுரையில் வளரும டப்பிடி கொட்டுக சப்பாணி.
44

காலத் தொடுகற் பனைகடந்த
கருவூலத்துப் பழம்பாடற் கலைமாச் செல்வர் தேடிவைத்த
கடவுண் மணியே யுயிரால வாலத் துணர்வு நீர்பாய்ச்சி
வளர்ப்பார்க் கொளியூத் தளிபமுத்த மலர்க்கற் பகமே யெழுதாச்சொல் மழலை ததும்பு பசுங்குதலைச் சோலைக் கிளியே யுயிர்த்துணையாம்
தோன்றாத் துணைக்கோர் துணையாகித் துவாத சாந்தப் பெருவெளியிற் றுரியங் கடந்த பரநாத மூலத் தலத்து முளைத்தமுழு
முதலே முத்தந் தருகவே முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்தந் தருகவே.
தொடுக்கும் கடவுட் பழம்பாடற்
றொடையின் பயனே நறைபழுத்த துண்றத்தீந் தமிழி னொழுகுநறுஞ்
சுவையே யகந்தைக் கிழங்கையகழ்ந் தெடுக்குந் தொழும்ப ருளக்கோயிற்
கேற்றும் விளக்கே வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே யெறிதரங்கம் உடுக்கும் புவனங் கடந்துநின்ற
ஒருவன் றிருவுள் ளத்திலழ கொழுக வெழுதிப் பார்த்திருக்கும் உயிரோ வியமே மதுகரம்வாய் மடுக்குங் குழற்கா டேந்துமிள
வஞ்சிக் கொடியே வருகவே மலயத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே.
குலத்தோடு தெய்வக் குழாம்பிழிந் தூற்றிக் குடித்துச் சுவைத்துமிழ்ந்த கோதென்று மழல்விடங் கொப்புளிக் கின்றவிரு
கோளினுச் சிட்டமென்றும் கலைத்தோடு மூடிக் களங்கம் பொதிந்திட்ட
கயரோகி யென்றுமொருநாள் கண்கொண்டு பார்க்கவுங் கடவதன் றெனவும்
45

Page 26
கடற்புவி யெடுத்திகழவிட் புலத்தோடு முடுமீன் கணத்தோடு மோடுநின்
போல்வார்க்கு மாபாதகம் போக்குமித் தலமலது புகலில்லை காண்மிசைப்
பொங்குபுனல் கற்பகக்கா டலைத்தோடு வைகைத் துறைப்படி மடப்பிடியொ
டம்புலி யாடவாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
அம்புலி யாடவாவே.
குலைபட்ட காந்தட் டளிர்க்கையிற் செம்மணி
குயின்றவம் மனைநித்திலம் கோத்தவம் மனைமுன் செலப்பின் செலுந்தன்மை
கோகனக மனையாட்டிபாற் கலைபட்ட வெண்சுடர்க் கடவுடோய்ந் தேகவது
கண்டுகொண் டேபுழுங்கும் காய்கதிர்க் கடவுளும் பின்றொடர்வ தேய்ப்பக்
கறங்கருவி துரங்கவோங்கும் மலைபட்ட வாரமும் வயிரமும் பிறவுமா
மாமணித் திரளைவாரி மறிதிரைக் கையா லெடுத்தெறிய நாற்கோட்டு
மதகளிறு பிளிறியோடும் அலைபட்ட வைகைத் துற்ைச்சிறை யனப்பேடை
அம்மானை யாடியருளே ஆகங் கலந்தொருவர் பாகம் பகுத்தபெண்
அம்மானை யாடியருளே.
இழியும் புனற்றண் டுறைமுன்றில்
இதுவெம் பெருமான் மண்சுமந்த இடமென் றலர்வெண் கமலப்பெண்
இசைப்பக் கசிந்துள்ளுருகியிரு விழியுஞ் சிவப்ப வானந்த
வெள்ளம் பொழிந்து நின்றனையால் மீண்டும் பெருக விடுத்தவற்கோர்
வேலை யிடுதன் மிகையன்றே பிழியு நறைக்கற் பகமலர்ந்த
பிரச மலர்ப்பூந் துகண்மூழ்கும் பிறைக்கோட் டயிரா பதங்கூந்தற் பிடியோ டாடத் தேனருவி பொழியும் பொழிற்கூ டலிற்பொலிவாய் புதுநீராடி யருளுகவே
46

பொருநைத் துறைவன் பொற்பாவாய்
புதுநீராடி யருளுகவே.
இருபதமு மென்குரற் கிண்கிணியு முறையிட்
டிரைத்திடு மரிச்சிலப்பும் இறுமிறு மருங்கென் றிரங்குமே கலையும்பொன்
எழுதுசெம் பட்டுவீக்கும் திருவிடையு முடைதார மும்மொட் டியாணமும்
செங்கைப் பசுங்கிள்ளையும் திருமுலைத் தரளவுத் தரியமும் மங்கலத்
திருநாணு மழகொழுகநின் றருள் பொழியு மதிமுகமு முகமதியி னெடுநில
வரும்புகுறு நகையுஞான ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொ
டமராடு மோடரிக்கட் பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி பொன்னூச லாடியருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே
திருச்சிற்றம்பலம்
பூரீ குமரகுருபர சுவாமிகள் திருச்செந்தூழ்
கந்தர் கலிவெண்பா
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த போதமும் காணாத போதமாய் - ஆதிநடு அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும் செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு " அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின் பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத
47

Page 27
O.
11.
3.
14.
15.
16.
17.
8.
9.
20.
21,
22.
23.
24.
25.
26.
27.
பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும் காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியில் இந்திரசாலம் புரிவோன் யாரையும் தான்மயக்கும் தந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும் கருவின்றி நின்ற கருவாய் அருளே உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம் ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால்இலய போகஅதிகாரப் பொருளாகி - ஏகத்து உருவும் அருவும் உருஅருவும் ஆகிப் பருவ வடிவம் பலவாய் - இருள்மலத்துள் மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத் தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான் பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல் ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற் கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும் ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனிஎண்பான் ஆரவந்த நான்குநூறாயிரத்துள் - தீர்வரிய கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற் சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால் நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும் தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னூல் விரதமுதலாயபல மெய்த்தவத்தின் உண்மைச் சரியைகிரி யாயோகம் சார்வித்து - அருள்பெருகு சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் சத்திநி பாதம் தருதற்கு இருவினையும் ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த மலபரி பாகம் வருமளவில் பன்னாள் அலமருதல் கண்ணுற்று அருளி - உலவாது அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக் கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபரனென்று ஒர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால் ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம் ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் - பாழாக ஆணவமான படலம் கிழித்து அறிவில் காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
48

28.
29,
30,
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
4.
42.
43.
44.
45.
46.
47.
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும் நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் வரவும் நினைப்பும் மறப்பும் பகலும் இரவும் கடந்துஉலவா இன்பம் - மருவுவித்துக் கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும் வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடந்துப் பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில் வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்தி ஈன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும் யானெனதென்று அற்ற இடமே திருவடியா மோனபரா னந்தம் முடியாக - ஞானம் திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா அருளதுவே செங்கை அலரா - இருநிலமே சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே, எவ்வுயுர்க்கும் பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன் வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத் துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக் குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும் சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள் செவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூரனைத்தடிந்து தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர் வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும் முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப் பாச இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடும் வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன் போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன் வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
49

Page 28
48.
49.
SO.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம் தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர் வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஒவாது மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல் சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் வைத்த கர தலமும் வாமமருங் கிற்கரமும் உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த சிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும் கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர் அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும் கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன் புரிநூலும் கண்டிகையும் பூம்பட்டுடையும் அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும் நாதக் கழலும் நகுமணிப்பொற் கிண்கிணியும் பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி இளம்பருதி நூறாயிரங்கோடி போல வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தணில்கண்டு ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின் மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஒதியஐந்து ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத் தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால் ஒத்த புவனத் துருவே உரோமமாத் தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த கலையே அவயவமாக் காட்டும்அத்து வாவின் நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும் ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும் ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம் தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள் புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப் பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம் தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம் எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
50

69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில் ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்த ஐந்தெழுத்தைக் கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம் தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம் காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள் ஐந்தொழிலும் ஒவாது அளித்துயர்த்த வான்கொடியும் வந்தநவ நாத மணிமுரசும் - சந்ததமும் பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப் பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள் வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ் பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப் பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள் வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும் ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம் எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும் பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான் கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள் சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில் சென்னியில் கொண்டு உய்ப்பத் திரஉருவாய் - முன்னர் அறுமீன் முலையுண்டு அழுதுவிளையாடி நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல் கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும் அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய முகத்தில் அணைத்துஉச்சி மோந்து முலைப்பால் அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்த உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி மங்கை சிலம்பின் மணிஒன்பதில்தோன்றும் துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள் விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன் மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலுதித்து
51

Page 29
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
101.
102.
103.
104.
105.
106.
107.
108.
109.
அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும் செங்கண் கிடாஅதனைச் சென்றுகொணர்ந்து - எங்கோன் விடுக்குதி என்று உய்ப்பஅதன் மீதிவர்ந்து எண்திக்கும் நடத்தி விளையாடும் நாதா - படைப்போன் அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால் சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ங்ண் என்றுமுனம் குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும் பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப முன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல் தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த் தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக் கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ் மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனாம் சூரனைச் சோதித்துவரு கென்றுதடம் தோள்விசய வீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன் வானவரை விட்டு வணங்காமை யால்கொடிய தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு பகைவன் முதலாய பாவருடன் சிங்க முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும் சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவணன் அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த் துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள் சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன மேவத் தனித்துயர்த்த மேலோனே - மூவர் குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர் சிறைவிடுத்து ஆட்கொண்ட தேவே - மறைமுடிவாம் சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும் தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - ெ காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருள, வாமமட மானின் வயிற்றுதித்துப் - பூமருவு கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல் ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத் தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம்உவந்து ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
52

20.
121.
122.
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே - நாறுமலர்க்
. கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாயச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும்
. பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல் பூதமும்தீ நீரும் பொருபடையும் - தீது அகலா வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும் எவ்விடம்வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில் பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும் அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத் திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண்
எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம்
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவதானமும்கீர்ப்
பேசும் இயல் பல்காப்பியத் தொகையும் - ஒசை
எழுத்துமுதலாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன் இம்மைப் பிறப்பில் இருவாதனைஅகற்றி மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித் - தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு அடியேற்கு முன்னின்று அருள்.
திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று.
கந்தரனுபூதி
காப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.
53

Page 30
Ib]]ծմ ஆடும் பரிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியாயருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னைசகோதரனே.
உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீ யலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா சுரபூபதியே
வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளாவதுசண் முகனே.
வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே.
மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே.
திணியானமனோ சிலைமீதுனதாள் அணியா ரரவிந்த மரும்பு மதோ பணியா வென வள்ளி பதம் பணியுந் தணியா வதிமோக தயா பரனே.
கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே.
அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே.
54

மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப் பட்டுசல் படும் பரிசென் றொழிவேன் தட்டு டறவேல் சயிலத் தெறியும் நிட்டுர நிராகுல நிர்ப் பயனே. 9
கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே.
10
கந்தரலங்காரம்
காப்பு
அடலருணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வட வருகிற் சென்று கண்டுகொண் டேன்வரு வார் தலையில் தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.
நூல்
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்சமென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
அழித்துப் பிறக்கவொட் டாவயில் வேலன் கவியையன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற் கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. 2
தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற் கூரணி யிட்டணு வாகிக் கிரெளஞ்சங் குலைந்தரக்கர் நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்ததுசூர்ப் பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே. 3
ஒரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள் சேரவொட் டாரைவர் செய்வதென்யான் சென்று தேவருய்யச்
55

Page 31
சோரநிட் டூரனைக் காருடல் சோரிகக்கக் கூரகட் டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே.
திருந்தப் புவனங்க ளின்றபொற் பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே.
பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பி னான்மெல்ல மெல்லவுள்ள அரும்புந் தனிப்பர மாநந்தந்தித்தித்தறிந்தவன்றே கரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே.
சளத்திற் பிணிபட் டசட்டு க்ரியைக்குட் டவிக்கு மென்றன் உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுன ருரத்துதிரக் குளத்திற்குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்திற்-செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே.
ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத்துச்சியின்மேல் அளியில் விளைந்ததொராநந்தத் தேனை யநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பிய வா! முக மாறுடைத் தேசிகனே.
தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வவள்ளி கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று தானன்று நானன் றசரீரியன்று சரீரியன்றே.
சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்துசும் மாவிருக்கு மெல்லையுட் செல்ல எனைவிட்ட வாஇகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தேளண்ணல் வல்லபமே.
56


Page 32
பாரம்பரியம்
செட்டி நன்னித்தம்பி - சட்டம்பி முருகேசு
வள்ளியம்மை + தம்பையா
தங்கம்மா கந்தையா குழந்தைவேலு செல்லமுத்து பொன்னம்மா கருப்பை
+ + - * ート
முருகேசு பர்வதம் செல்லாச்சி, பொன்னம்மா ၈z†f சின்னத்துரை சிவபாக்கி
நாகரத்தினம் அருளம்பலம் பராசக்தி சுப்பிரமணியம், பொன்னம்பலம் சுப்பிரமணியம்
+ + -- ート பத்மாவதி பொன்னம்பலம் தர்மலசுஷ்மி பராசக்தி
சிவகுமார் பத்மரஞ்சினி பத்மினி சாந்தினி கெளரிசங்கர்
ート -- -- ஜெயகெளரி உமாசங்கர் ஆனந்த புவனேஸ்வரன்
குமார்

─ UT குமாரசுவாமிப்பிள்ளை
--
யம் சிவபாக்கியம்
ஆறுமுகம் ఏక- 4۔ கவுதம் இரத்தினசபாபதி குருசுவாமி + தில்லைநீள்யீA தையல்நாயகி செந்தில்நாதன், மாலினி
-4- ー+
சிவபாக்கியம் ராஜி
|துவாரகன், ஆரணி
கிருபாகரன்
சுரேந்திரன் பவானி செல்வேந்திரன் ஜனனி

Page 33


Page 34
(LDug,650TLT

* அச்சகம் லிமிட்டெட்