கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குசேலர் சரிதம் இலக்கியக் கதை 1

Page 1
வித்துவான் சி
 

கம்
1. குமாரசாமி

Page 2

இலக்கியக் கதை (1)
குசேலர் சரிதம்
0 Ean se raj“
ም, iኅ/'!D('' - ፻፴፫ vidyalaye"
க்கம் வித்துவான் சி. குமாரசாமி
வெளியீடு
பூபாலசிங்கம் புத்தகசாலை 340, செட்டியார் தெரு கொழும்பு-11 தொலை பேசி: 422321

Page 3
11gli1160) J
நான் சிறுவனாக கல்வி பயின்ற பராயத்தில் என் இதயத்தைத் தொட்ட கதைகளில் ஒன்று குசேலர் கதை. வறுமையிலும் செம்மையாக வாழ வேண்டும் என்ற சீரிய பண்பை “குலேசர் சரிதம்’ எடுத்துக் காட்டும் தன்மையது.
“இலக்கியக் கதைகள்’ என்ற தொடரில் பல சிறுவர் கதைகளை வெளியிடும் நோக்குடன், இக் கதை அமரர் நயினை வித்துவான் சி.குமாரசாமி அவர்களால் எழுதப்பட்டது. இதனை அவர் வாழ்ந்த காலத்தில் வெளியிட முடியாமற் போனமை துரதிர்ஷ்ட வசமானது.
இந்த நூல் வளர்ந்து வரும் சிறார்களுக்கு பயன்மிக்கதாக அமையும் என்பது திண்ணம்.
பூபூரீதரசிங்
கொழும்பு 9.10. 1998ኝ
 

குசேலர் சரிதம்
1. பிறப்பும் கல்வி பயில்தலும்
வட இந்தியாவிலே வடமதுரையின் பக்கத்தில் அவந்தி என்றோர் நகரம் அமைந்துள்ளது. அந்நகரத்தில் மிக உயர்ந்த ஒருமலை பலவளங்களோடும் பசுமையாகப் பொலிந்தது. அம்மலையில் முனிவர்கள் பலர் ஆச்சிரமங்கள் அமைத்து வாழ்ந்து வந்தனர். அவர்களுள் சாந்தீப முனிவர் தம்மை நாடிவந்த மாணவர்களைச் சீடர்களாக ஏற்றுக் கல்விபோதித்து வந்தார். அக்காலத்தில் பாடசாலைகள் கிடையா. குருகுலக் கல்விமுறையே நடைமுறையிலிருந்து வந்தது. ஒரு குருவையடைந்து அவருடைய வீட்டிலேயே தங்கி உணவுண்டு அக்குருவுக்கு வேண்டிய பணிவிடைகளைப் புரிந்து பணிவோடு அவரிடம் கல்வியும் கற்பது குருகுலக் கல்விமுறையாகும்.
அம்மலையின் ஒருபுறத்திலே அந்தணர்களும் வாழ்ந்து வந்தனர். அங்கு வாழ்ந்த ஒரு அந்தணர் குலத்திலே சுதாமா என்பவர் தோன்றினார். அவர் இளம் வயதிலேயே திருமாலைத் தவறாது வணங்கி வந்தார். நல்லொழுக்கங்களில் சிறந்து விளங்கினார். சத்தியம், பொறுமை, அன்பு, அடக்கம், முதலிய நற்குணங்கள் பூண்டவர். அவரது குடும்பம் வறுைைமயில் வாடியதால் அவர் கிழிந்த துணிகளையே தைத்து உடுத்து வந்தார். அதனால் அவரை எல்லோரும் குசேலர் (கிழிந்த ஆடைகளை உடுப்பவர்) என அழைத்தனர். அப்பெயரே அவரது பெயராக நிலைத்து விட்டது.
குசேலர் சாந்தீப முனிவருடைய மாணாக்கனாகச் சேர்ந்து அவரிடம் கல்வி கற்றுவந்தார். யாதவ சாந்தீப முனிவர் வாழ்ந்த அவந்தி நகர் யாதவ அரசர்களுடைய ஆட்சிக்குட்பட்டிருந்தது. யாதவர்கள் துவாரகையைத் தலை நகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். யாதவ அரசகுமாரனான கண்ணபிரானும் சாந்தீப முனிவரிடத்திலேயே கல்வி பயின்று குருகுலவாசம் செய்தான். அதனால் கண்ணபிரானும் குசேலரும் உயிர் நண்பர்களாயினர்.
கல்வி கற்றுவரும் நாளில் ஒருநாள் இருவரும் குருபத்தினிக்காக விறகு சேகரித்து வரக் காட்டிற்கு ஏகினர். விறகு கட்டிக் கொண்டு புறப்படுகையில் கடுமழை பொழிந்தது. மழைக்காகச் சிறுவர்கள் இருவரும் ஒரு மரத்தடியில் ஒதுங்கினர். மாலையாகி விட்டது. மழை வெள்ளம் பெருகி ஓடியது. அதனால் வழியும் தெரியாது மறைந்து விட்டது. இருவரும் மழையில் நனைந்து, குளிர் காற்றில் வருந்தி, மரத்தடியில் ஒதுங்கி நின்று அவ்விரவைக் கழித்தனர்.
காட்டுக்கு விறகு கொண்டு வரச் சென்ற கண்ணனும் குசேலரும் மாலையாகியும் வீடு திரும்பிவராதது கண்டு சாந்தீப முனிவரும் அவரது பத்தினியும் மிக்க கவலை

Page 4
கொண்டனர். காரிருள், மழை, வெள்ளம், என்பன அவர்கள் கவலையைப் பன்மடங்காகப் பெருக்கின. இரவு முழுவதும் கண்ணுறங்காது அக்குழந்தைகளைப் பாதுகாக்குமாறு இறைவனைத் துதித்தனர்.
அதிகாலையில் மழையும் நின்றது. இருளும் ஒரளவு அகலத் தொடங்கியது. வெள்ளமும் வடிந்து விட்டது. சாந்தீப முனிவர் தனது அன்பு மாணவர்களைத் தேடிச்சென்றார். மழையிலும், குளிரிலும் விறைத்து ஒடுங்கி ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்த அவர்களைக் கண்டு அவ்விடத்திற்கு ஒடோடிச் சென்றார். அவர்கள் அவரது பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். முனிவர் அவர்கள் இருவரையும் தம்மார்போடு அனைத்துக் கொண்டார். அவரது கண்களில் இருந்து பெருகிய கண்ணிர் அவ்விரு சிறுவர்கள் மீதும் சொட்டிக் கொண்டிருந்தது. "ஐயோ,என் செல்வங்களே, எனக்காக இரவு முழுவதும் மழையில் நனைந்தீர்களே, குளிர்காற்றில் விறைத்தீர்களே, நித்திரையும் இன்றித் துன்புற்றீர்களே, எனது ஏவல் செய்த மாணவருள் உம்மைப் போற் சிறந்தவருண்டோ. குருவுக்குரிய தட்சணையை இன்றே தீர்த்துவிட்டீர்கள். உங்களுக்கு கல்வியும் செல்வமும் பெருகுக. நன்மனைவியரும், நற்புத்திரர்களும் வாய்க்குக. உங்கள் ஆயுள் பெருகுக. புகழ் நிறைக” என வாழ்த்தி ஆசிர்வதித்தார். சாந்தீப முனிவரிடம் கற்கவேண்டிய நூல்களைக் கண்ணனும் குசேலரும் சந்தேகங்கள் நீங்கக் கற்றுத் தேறினர். குருகுலக் கல்வி நிறைவுற்றதும் அரிய நண்பர்கள் இருவரும் குருவையும் அவர் பத்தினியையும் வணங்கி ஆசிபெற்றுத் தத்தமது உறைவிடம் சென்று சேர்ந்தனர்.
2. இல்வாழ்க்கையும் வறுமையும்
தவநெறியில் ஒழுகிய குசேலர் வேள்விக் கடன் புரியும் தமது அந்தணர்குல ஒழுக்கத்துக்கு உறுதுணையாகவும், புத்திரப்பேறும், குலவிருத்தியும் கருதியும் விவாகம் செய்ய எண்ணினார். அறிவும், அழகும், நற்குணங்களும் ஒருங்கமைந்த சுசீலை என்னும் கன்னிகையைத் திருமணம் செய்து கொண்டார்.
சுசீலை நாயகனது குறிப்பறிந்து ஒழுகினாள். குசேலருக்கு வேண்டிய பணிவிடைகளைக் குறைவின்றி ஆற்றினாள். வந்த விருந்தினரை அன்புடன் உபசரித்தாள். அவரது மிகக்குறைந்த வருவாயைக் கொண்டு மனம் கோணாமல் இல்லறக் கடன்களை ஒழுங்காகச் செய்து வந்தாள். இல்லறம் நல்லறமாக விளங்கியது.
சுசீலை இருபத்தேழு பிள்ளைகளுக்குத் தாயானாள். குடும்ப உறுப்பினர் தொகை பெருகியதனால் அக்குடும்பத்தில் வறுமை புகுந்தது. முற்றும் துறந்த முனிவராகிய குசேலர் உள்ளத்தில் வறுமை எந்த மாற்றத்தையும் ஆக்க முடியவில்லை.
குசேலர் வறுமையின் இழிந்த தன்மையை நன்கு உணர்ந்தவர். செல்வர் பால் அடைந்து பல்லைக் காட்டிக் கை நீட்டி நிற்கும் இழிநிலையை அவர் வெறுத்தார். அதனால்

ஒவ்வொரு நாளும் காட்டிற்குச் செல்வார். அங்கே உதிர்ந்து கிடக்கும் புல்தானியங்களைத் தமது நீண்ட நகங்களினாலே பொறுக்கி எடுப்பார். அவ்வாறு திரட்டிய தானியங்களைக் கொண்டு வந்து சுசீலையிடம் கொடுப்பார். சுசீலை அவற்றை உரலிலிட்டுக் குற்றி அரிசியாக்கிச் சமைப்பாள். இலைக்கறியும் பாகஞ் செய்வாள் அவற்றை முதலில் விருத்தினர்க்கும், கணவனுக்கும் கொடுத்து உபசரிப்பாள். பின்னர் குழந்தைகளுக்கும் பங்கிட்டு ஊட்டுவாள். எஞ்சியிருப்பதைத் தான் உண்பாள். உணவுபற்றாக்குறையால் அவள் உடல் மெலிந்து பலங்குன்றினாலும் அவள் உள்ளத்தில் சலிப்பு ஏற்பட வில்லை. வறுமைநிலைபற்றி மறந்தும் கணவனிடம் ஒரு வார்த்தை கூறமாட்டாள். ஆயினும் குழந்தைகள் உணவுப்பற்றாக் குறையால் வருந்துவதைக் காணும்போது அவளது தாயுள்ளம்
கலங்கும.
ஒரு மகவுக் களித்திடும் போது
ஒருமகவு கை நீட்டும் உந்திமேல் வீழ்ந்து இரு மகவும் கை நீட்டும் மும்மகவும் கைநீட்டும் என்செய்வாளால் பொருமி ஒரு மகவழும் கண்
பிசைந்தழும் மற்றொரு மகவு புரண்டு விழாப் பெருநிலத்திற் கிடந்தழும் மற்றொரு மகவு
எங்ஙனம் சகிப்பாள் பெரிதும் பாவம்
இப்பாடல் குழந்தைகள் பட்டபாட்டையும், அவர்களது நிலைகண்டு தாய் வருந்திய வருத்தத்தையும் எமக்கு எடுத்துரைக்கின்றது.
குசேலருடைய பிள்ளைகள் அயலிலுள்ள பிள்ளைகளுடன் விளையாடும் போது அவர்கள் அன்று தங்கள் வீட்டிற் சமைத்த கறிவகை பற்றிக் கூறினால் குசேலருடையபிள்ளைகள் சுசீலையிடம் ஓடி வந்து அம்மா கறி என்றால் என்ன என்று கேட்பார்கள் அவ்வாறே அவர்கள் உண்ணும் சிற்றுண்டிகளையும் பார்த்து வந்து, அவற்றின் பெயரையும் கூறத் தெரியாது அது போற் செய்து தரும்படி தாயை இரந்து நிற்பார்கள். பிறபிள்ளைகள் அணிந்திருக்கும் காப்பு, மோதிரம், தோடு குண்டலம், முத்துமாலை போன்று தமக்கும் செய்து அணிவிக்குமாறு கேட்பார்கள். அவற்றைக் கேட்டு வருத்தம் மேலிட்டாலும் பிள்ளைகள் அறியாவண்ணம் மறைத்து விடுவதோடு செய்து தருவதாகவும் ஆறுதல் கூறி அவர்களைத் தேற்றுவாள். அல்லது அவர்களை வேறு வேலைகள் செய்யும்படி ஏவி அவர்கள் கேட்க வந்தவற்றை மறக்கச் செய்வாள். ஆயினும் இத்துன்பங்கள் பற்றித்தன் நாயகனிடம் எதுவும் வாய் திறந்து கூறமாட்டாள் அவ்வுத்தமி.
3. வறுமை தீர்க்க வழி காணுதல்
மக்கள் படும் துன்பம் சுசீலையின் உள்ளத்தை நாள் தோறும் வாட்டி வரலாயிற்று. இத்துயரக்கடலை நாம் எவ்வாறு கடப்பது என்னும் சிந்தனையில் முழ்கினாள். ஒருநாள் ஏற்ற

Page 5
சமயம் பார்த்துக் காத்திருந்து மனந் துணிந்து தன்நாயகனை அடைந்து வணங்கிப் பணிவோடு பின்வருமாறு கூறலானாள்.
“எனது ஆருயிர்த் துணைவரே, எமது புதல்வர்கள் பசியால் வருந்துகின்றனர். நாம் கொடுக்கும் கஞ்சி அவர்களது பசியின் ஒரு சிறுபங்கைக் கூடத் தீர்க்கப்போதுமானதன்று. உடல் வற்றி எலும்புந்தோலுமாகக் காட்சியளிக்கின்றனர். பிறரது வீட்டுக் குழந்தைகளோடு விளையாடும் போது அவர்கள் கூறும் உணவுவகைகளைக் கேட்டும், அவர்கள் அணிந்துள்ள ஆடை அணிகளைப் பார்த்தும் நமது மக்களது ஏக்கம் நாள் தோறும் வளர்ந்து வருகின்றது. இந்நிலையை நீடிக்க விடுவது அவர்களது உள ஆரோக்கியத்திற்கும் நன்றன்று.
இவையாவும் தாங்கள் அறியாதவை அல்ல. இதுவரை காலமும் ஒருவாறு சமாளித்தும் சகித்தும் வந்த என்னுள்ளம் ஆற்றாமையால் கலங்குகின்றது. துன்பம் எல்லை மீறுவதாலேயே இதைத் தங்களிடம் வாய்விட்டுக் கூறநேர்ந்தது. வறுமையின் கொடுமை சொல்லும் தரத்ததோ, வறுமை ஒருவரைப் பற்றி விட்டால் அது அவரது உடலைவாட்டும்; அழகை அழிக்கும்; ஊக்கத்தைக் கெடுக்கும்; ஆசைகளை வளர்க்கும்; ஆசை நிறைவேறாமையால் மனத்துயர் அதிகரிக்கும்; மனமகிழ்ச்சியும், முகமலர்ச்சியும் அவரைவிட்டு அகன்று விடும். கல்வி வளர்ச்சியையும் தடுக்கும் தீய எண்ணங்களை தூண்டும்; பொய், களவு முதலிய தீச் செயல்களையும் புரிய வைக்கும்; என்றும் துக்கத்திலேயே மூழ்க வைக்கும். ஆதலால் வறுமையிற் கொடிய தொன்றில்லை.
கொதது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை
என்றன்றோ அறிஞர் கூறுவர். எமது வறுமைத் துன்பத்தை நீக்குதற்காய ஒருவழியை ஆலோசித்தே இதனைக் கூறுகின்றேன்.துவாரகையில் இருந்து அரசுபுரியும் கண்ணபிரான் தங்களோடு ஒன்றாக இருந்து சாந்தீப முனிவரிடம் கல்வி கற்றவர் என்று கூறுவர். தாங்கள் அவரிடம் சென்றால் அவர் தங்களைக் கண்டவுடனேயே முகமலர்ந்து வரவேற்பார்; வேண்டிய பொருளும் உதவுவார். அன்புள்ளம் கொண்ட சிறந்த நண்பன் கிட்டுவதும் ஒருவர் செய்த முன் தவப்பயனே. தாங்கள் அவரிடம் சென்றால் எமது வறுமைத் துன்பம் நீங்கும். அவர் ஒன்றும் தராது விட்டாலும் கண்ணனைத் தரிசிக்கும் பேறு கிட்டும். அப்பேறு முத்திக்கும் வித்தாகும் என்று கூறினாள்.
சுசீலையின் வார்த்தையைக் கேட்ட குசேலர் அவளை நோக்கிக் கூறுகின்றார். “சுசீலா, நான் சொல்வதைக் கேள். உயிர்களைப் படைத்த இறைவனே அவ்வுயிர்களுக்கு வேண்டிய உணவையும் உதவுகின்றான். கருப்பையில் உள்ள உயிருக்கும் கல்லின் உள்ளே உள்ள தேரைக்கும் உணவளிப்பவன் அவனே, ஆதலின் அவன் உனது மக்களுக்கும் உணவளிப்பான். ஆனால் சிறந்த உணவு கிடைப்பதும், குறைந்த உணவு கிடைப்பதும் அவரவர் முன்வினைப்பயனுக்கு ஏற்றபடி நிகழ்வதாகும்.

"ஆதலின்நமது மைந்தர்க்கு ஆயுள் உள்ளவைகாறும் ஒதிடும் வினைக்கு ஏற்ப உணவுண்டு புந்திமாழ்கேல்”
எதுவந்தாலும் ஊழ்வினைப் பயன் என நினைத்தல் வேண்டும். கற்றுணராதவர்களே இளமை, அழகு, செல்வம், வீடு, மனை, மக்கள், ஏவல், புகழ் பெற்றுள்ளோம் என்று இறுமாந்திருப்பர்.
அன்றியும் பொருள் தேட விரும்பும் மாந்தர் எத்தகைய தீய செயலையும் அதற்காகத் துணிந்து செய்வர். பொய்யும் பேசுவர்; களவும் எடுப்பர்; பிறரையும், வஞ்சிப்பர். தந்தை தாய், மனைவி மக்களைக் கூட வஞ்சிக்கப் பின் நில்லார், ஆலயத்தின் சொத்துக்களைக் கூட அபகரிக்கத் துணிவர். பெண்களின் கற்பையும் சூறையாடுவர். தாமும் அநுபவியார்; பிறருக்கும் உதவார்; புதைத்து வைப்பர் பணப்பேய் என்றும் பெயர் பெறுவர்.
அதுமட்டுமா அரசனுக்கும் அஞ்சுவர், கள்வர் கவர்ந்து விடுவார்களோ என்று அஞ்சி நித்திரையுமின்றித் தவிப்பர்; நீரால், நெருப்பால் ஏற்படக்கூடிய அழிவுகளை எண்ணித் துடிப்பர்; ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் தேடியது செல்வத்தை அன்று. அச்சத்தையே என்பது புலனாகும்.
மேலும் உடலை வளர்க்கவே பொருளை நாடுகின்றோம். இவ்வுடல் அழியக் கூடியது. நிலையில்லாதது. நோய், மூப்பு, சாக்காடு போன்றவற்றிற்கு இடனாயது. நெருப்பும், மண்ணும், நாயும், நரியும், புழுவும், பருந்தும் பிறவும் இவ்வுடலைத் தாம் உண்ணக் காத்திருக்கின்றன. இவ்வளவு கேவலமான உடலைக் காப்பாற்றுவதற்காகப் பிறரிடம் கை ஏந்தி நிற்பது எவ்வளவு அறிவீனம், இரத்தல் போன்ற இழிவு பிறிதொன்றில்லை. பசுவுக்கு நீர் வேண்டும் என்று கேட்டாலும் அது நாவுக்கு வசை என்கின்றது திருக்குறள்.
ஆவுக்கு நீரென்று இரக்கினும் நாவுக்கு இரவின் இழிவந்தது இல்’ என்றன்றோ கூறுகிறது.
ஆதலின் யான் எவரிடமும் சென்று இரக்கப் போவதில்லை. இதுவே எனது முடிவு என்று கூறினார்.
அது கேட்ட சுசீலை “எனது அன்புத் தலைவரே தெய்வமே உணவளிக்கும் என்று கூறினீர்கள். கற்புடைய பெண்களுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம் என்று அறநூல்கள் கூறுகின்றன. ஆதலின் எனது தெய்வமாகிய தாங்களே எனக்கும், எனது மக்களுக்கும் உணவளிக்கக் கடமைப்பட்டுள்ளீர்கள். இவ்வுலகில் பிறந்த மானிடர்க்கு அக்கண்ணனின் பாதமே அன்றி வேறு கதியில்லை என்று அறிந்த தாங்கள் அவனிடம் செல்வதற்குத் தயங்கலாமா? தாங்கள் இரந்து பொருள் கேட்க வேண்டாம். ஒருமுறை சென்று அவனைக் கண்டு வாருங்கள் என்றே வேண்டுகின்றேன்.” என்று கூறினாள்.

Page 6
சுசீலையின் சாதுரியமான அன்பு நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட குசேலர் புன்னகை புரிந்தார். கண்ணனைக் காணவேண்டும் என்ற அவா அவர் உள்ளத்திலும் பெருகியது. கண்ணனிடம் சென்று வர இசைந்தார். சுசீலையின் உள்ளத்தில் ஆனந்தம் குடிகொண்டது. அன்றே தமது வறுமை தொலைந்ததாக எண்ணி மகிழ்ந்தாள்.
4. குசேலர் துவாரகைக்குச் செல்லல்
தெய்வம், குரு அரசன், பெரியோர் ஆகியோரிடம் செல்லும் போது தம்மால் இயன்ற ஏதாவது ஒரு பொருளைக் கொண்டு செல்வது வழக்கம். இதனைக் காணிக்கை என்றும் கையுறை என்றும் அழைப்பர்.
குசேலர் கண்ணனைக் காணச் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லுதலாகாது. ஏதாவதொரு பொருளைக் கொண்டு செல்லவேண்டும் எனச் சுசீலை எண்ணினாள். அதனால் தனது உணவை ஓரளவு குறைத்துக் குசேலர் பொறுக்கிவரும் தானியத்தில் ஒரு சிறுபகுதியை நாள் தோறும் மீதப்படுத்தி வந்தாள். ஓரளவு தானியம் சேர்ந்தபின் அவற்றை நனைத்து, வறுத்து, இடித்து அவலாக்கினாள். பின்னர் அதனை நாயகன் உடுத்திருந்த கந்தையில் துவாரமில்லாத ஒரு பகுதியைத் தேடி அதில் முடிந்து கொடுத்தனுப்பினாள். முனிவரும் மகிழ்ச்சியோடு துவாரகை நோக்கிச் செல்வாராயினார்.
முன்னர் நெடுவழி நடந்தறியாத முனிவர் வழி நடையால் மிகக்களைப்படைந்தார். வழியுணவு கொண்டு செல்லாமையால் பசியும் அவரை வாட்டியது. வழிச் செல்வோரிடம் வினாவித் துவாரகைக்குச் செல்லும் வழியை அறிந்து அவ்வழி பிடித்துச் செல்லலானார். அடிக்கடி மரநிழல்களில் தங்கி இளைப்பாறிப்பிரயாணத்தை மேற்கொண்டார். வெப்பமடைந்த பூமி அவரது பாதத்தை வெதுப்பியது. கற்கள் உறுத்தின. முட்கள் தைத்தன. எனினும் அவற்றால் ஏற்பட்ட துன்பங்களைச் சகித்துக் கொண்டு வழி நடந்து மேற்குக் கடலின் எல்லையை அடைந்தார்.
துவாரகை கடலாற் சூழப்பட்டிருந்த நகரமாகும். அக்கடலை எவ்வாறு கடந்து துவாரகையை அடைவது என்று குசேலர் திகைப்படைந்தார். தோணியில் ஏறியல்லது அக்கரையை அடையமுடியாது என்பதை உணர்ந்தார். படகோட்டிக்குப் பணம் கொடுக்கவேண்டுமே. கையில் எதுவும் இல்லையே. பணம் இல்லாவிடினும் அவன் மதித்து ஏற்றிச் செல்வதற்கேற்ற தோற்றமாவது எனக்கில்லையே. என் செய்வது எனக்கலங்கினார். படகில் சிலர் ஏறினர். படகோட்டி புறப்படுவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்வதில் முனைந்திருந்தான். நல்வார்த்தை கூறியேனும் அவனை இனங்கவைப்போம் என்று எண்ணிய குசேலர் எழுந்து அவனைநோக்கிச் சென்றார். அவனுடைய மனம் இரங்கத் தக்க வார்த்தைகளைக் கூறி அவனை ஒருவாறு இணங்க வைத்தார். படகோட்டியும் இசைந்து அவரைத் தனது தோணியில் ஏற்றிக் கொண்டான். தோணி துவாரகை நோக்கிப்புறப்பட்டது. கண்ணனது திருப்பாதங்களைத் துதித்தபடி குசேலர் ஒடத்தில் அமர்ந்திருந்தார். கரையை அடைந்ததும் யாவரும் இறங்கினர். படகோட்டிக்கு நன்றி கூறிய குசேலரும் கரையில்

இறங்கினார். கண்ணன் வாழும் துவாரகை கண்ணிலே தெரிந்ததும் கண்ணனையே கண்டது போன்ற மகிழ்ச்சி அவர் உள்ளத்தை நிறைத்தது. அம்மகிழ்ச்சி அவருடைய பாதத்துக்கும் வலிமையூட்டியது. மிகவிரைவாக நடந்து புறநகர் எல்லையை அடைந்தார். யானைப்பந்திகளும், குதிரை இலாயங்களும், தேர்மண்டபங்களும், வீரர்கள் வாட்போர், விற்போர், மற்போர் பயிலிடங்களும் நிறைந்திருந்த அப்புற நகரைக்கடந்து உள்ளே சென்றார்.
இடைநகரும் பல வளங்களும் நிறைந்து காணப்பட்டது. சோலைகளும் தடாகங்களும் அதற்கு மேலும் அழகூட்டின. தடாகங்களில் ஆடவரும் பெண்டிரும் நீர்விளையாடிக் களித்தனர். பந்தாடுமிடங்கள், கழங்காடுமிடங்கள் போன்றவற்றையும் கண்டுகளித்து அகநகரத்துட் புகுந்தார்.
அகநகரம் மிக்க ஆரவாரத்துடன் காணப்பட்டது. கண்ணனைக் காணவந்த அரசர்களுடன் உடன் வந்த நால்வகைப்படைகளும் அங்கே நெருங்கி நின்றன. அப்படைகளுக்கு வழிவிலகி வேளாளர் வீதி, வணிகர்வீதி அந்தணர் வீதி என்பனவற்றையும் கடந்து அரசவீதியை அடைந்தார். அரசவீதியின் சிறப்பைக் கண்குளிரக் கண்டு சென்ற குசேலர் ஈற்றில் கண்ணனது அரண்மனையின் கோபுரவாயிலை அடைந்தார்.
ஐந்து துந்துபியின் முழக்கமும் மன்னர்
அவிர் கழல் ஒலியும் வாம் பரியின் நந்தலில் ஆர்ப்பும் கந்து அடுகளிற்றின்
நரல்லும் தேர் அரவமும் சேர்ந்(து) அந்தில் நின்றெழுந்து விண்முகடு உடைக்க
அளவில் பல் வளத்தவாய்ப் பொலியும் சந்தமார் கண்ன பிரான்திருக் கோயில்
தனித்தலை வாயிலைச் சார்ந்தான்
(துந்துயி- தேவவாத்தியம்; அவிர்கழல் - ஒளிவீசும் வீரக்கழல்வாம்பரிதாவிப்பாயும் குதிரைகள்; கந்து- யானைகட்டும் தறிநரலல் -ஒலித்தல்)
எள்விழ இடமின்றி மக்கள் வெள்ளம் அவ்வாயிலை மொய்த்திருந்தது. அரசர்கள் பலர் கண்ணனைக் காணும் ஆசையோடு வாயிலில் காத்து நின்றனர். அரசர்களோடு வந்த பரிசனங்களும் அவர்களைச் சூழ்ந்து நின்றனர். காத்திருப்பதாயின் மாதக்கணக்காகும் என மனத்துள் எண்ணிய குசேலர் துணிந்து சிறிது முன்னே செல்ல முனைந்தார். வரிசையை மீறி முன்னே செல்ல முனைந்த வேந்தனொருவனை வாளேந்திய கஞ்சுகிமார் ( சட்டையணிந்த காவலர்) உள்ளே செல்லவிடாது துரத்தியது கண்டு முனிவர் பின்னடைந்தார். வேறொரு பக்கத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருப்பது கண்டு அங்கு செல்ல முனைந்தார். அவ்விடம் வேற்று நாட்டு மன்னர்கள் தாம் கொண்டு வந்த திறைகளை ஒப்படைக்கும் இடமாதலின் படைக்கலம் தாங்கிய வீரர்கள் முனிவரை அங்கு செல்ல விடாது அகற்றினர்.

Page 7
5. குசேலரும் துவாரபாலகர்களும்
எவ்வாறு உட்புகலாம் என எண்ணமிட்டவாறு குசேலர் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது ஓர் அரசன் சேனைகளோடு உள்ளே செல்ல வந்து கொண்டிருந்தான். குசேலரும் மகிழ்ந்து அச்சேனையுட் புகுந்து சிறிது தூரம் முன்னேறினார். அக்கூட்டத்துள் இடிபட்டும், நெருக்குப்பட்டும், தள்ளுப்பட்டும், வியர்வையில் நனைந்தும் அவர்பட்டபாடு சொல்லுந் தரத்ததன்று. திருமாலின் அடியார்களுக்குரிய சின்னங்களை அணிந்தவர்களாய் நின்ற துவாரபாலகர்களது (வாயிற் காவலர்களது) தோற்றம் கண்டு மகிழ்ந்தவராய் அவர்களை நெருங்கிச் சென்று நற்குண நற்செய்கைகளையுடையீர், நான் சொல்வதைக் கேட்பீராக என்று சில சொல்லத் தொடங்கினார்.
’ நீல வண்ணனாகிய கண்ணனுக்கு அடியவர்ளே, பிரமனும் இந்திரனும், தவமுனிவர்களும் பெறமுடியாத பேற்றைப் பெற்றவர்களே, உங்களை நான் ஆசீர்வதிக்கின்றேன். நான் அந்தண குலத்திற் பிறந்தவன். எனது பெயர் குசேலன். இளமையிலே கண்ணபிரானோடு ஒருசாலை மாணவனாகக் கல்வி பயின்றவன். கண்ணனோடு நட்புப் பூண்டவன். கண்ணபிரானிடம் சென்று எனது வரவை அறிவித்து என்னை அவர் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு உங்களை வேண்டுகின்றேன்" என்றார். 彰
முகத்தில் வளர்ந்து தொங்கும் உரோமம் அரையிலே கந்தலாடை எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் உடல் வறுமைக்கோலம்; இவற்றுடன் தம்முன் நின்ற முனிவரைக் காவலர் எள்ளி நோக்கினர். அவர்களுள் அறிவிற்குறைந்தோன் ஒருவன் அவரை நோக்கி “ஓ ஏழைப் பிராமணனே, வயது முதிர்ந்தும் உனக்கு அறிவு முதிர வில்லையே கண்ணன் எங்கே! நீ எங்கே இந்த ஏற்றத் தாழ்வைப் பகுத்தறியும் அறிவுகூட உனக்கு இல்லையே.
அரசசபைக்கு இந்தக் கோலத்திற் செல்லமுடியுமா? உயர்ந்த பட்டாடை உடுத்தியிருத்தல் வேண்டும். கழுத்து, மார்பு, கை, கால், காது யாவற்றிலும் பொன் அணிகள் பூண்டிருத்தல் வேண்டும் அதுமட்டுமா,
சிவிகை முன்னூர்தி வேண்டும்
செழும் பொருட் செலவு வேண்டும் குவிகை ஏவலரும் வேண்டும்
கோலம் ஆர்ந்து இருத்தல் வேண்டும் கவிகை தாங்குனரும் வேண்டும்
கையுறை சிறப்ப வேண்டும் அவிகையில் விளக்கம் வேண்டும்
அரசவை குறுகுவோர்க்கே
(சிவிகை-பல்லக்கு கவிகை-குடைகையுறை-உபகாரப் பொருள்; அவிகை பணிவு)

அதுமாத்திரமா? பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணபிரான் பூண்ட நட்பு இன்று நினைவில் இருக்குமா? நினைவில் இருந்தால் உனக்கு ஒலை எழுதியிருக்கமாட்டாரா? அல்லது தூதுவரை அனுப்பி ஒருமுறையேனும் அரண்மனைக்கு அழைத்திருக்க மாட்டாரா? பழைய நட்பை நினைந்து அரசர் பெருமானைக் காணச் சென்றால் வீண் அவமானமே அடைவாய். கண்ணனைக் காணவந்து பலநாட்களாகியும் காணமுடியாது இவ்வாயிலிற்
காத்து நிற்கும் அரசர்கள் கூட்டத்தை நீ பார்க்கவில்லையா?
மகதம், கொங்கணம், காம்போசம், அங்கம், துளுவம், கலிங்கம் காந்தாரம், பல்லவம் போன்ற பலநாட்டு மன்னர்கள் சேனைபுடைசூழ இங்கே காத்திருப்பதைப் பார்த்தும், சிறிதும் சிந்தியாது இங்கு வந்து விட்டாய். பேராசை உன்னை இங்கே கொண்டு வந்து விட்டது. இங்கு நின்று வீணே காலம் கடத்தாதே. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? மீண்டு செல்வதே தக்கது” என்றான்.
அதுகேட்ட குசேலர் உள்ளம் மிக்க துன்பமடைந்தது. இவ்வளவு துன்பமெல்லாம் பட்டது வீணாகிவிடுமோ? கண்ணனைத் தரிசிக்க வேண்டுமென்ற எனது அவா நிறைவேறாமலே போய் விடுமோ எனக் கலங்கினார். அவர் எவ்வித எதிர்மாற்றமும் கூறாது சிறிது பின்னால் நகர்ந்து வாடிய முகத்துடன் நின்று கொண்டிருந்தார்.
அது கண்டு அறிவிற் சிறந்த வாயிற்காப்போன் ஒருவன் முன்வந்து காவலர் நோக்கி,
"அறிவிலிகளே, இத்தபோதனர் மனம் வெதும்புமாறு எத்தகைய வார்த்தைகளைக் கொட்டிவிட்டீர்கள்? இத்தபோதனர் பொய்ம்மை இல்லாதவர், பொறுமை மிக்கவர்; மறை நான்கும் உணர்ந்த அந்தணர்; பொன்னையும் பொருளையும் எண்ணி இங்கு வந்தவரல்லர். இவர்களுக்கு ஒடும் செம்பொன்னும் ஒன்றே, வீண் ஆடம்பரங்களை அவர்களுடைய உள்ளம் விரும்பாது, கந்தையுடையே போதும் என்ற அவாவற்ற உள்ளத்தினர். மெய்ஞ்ஞானிகளின் பெருமையை நீர் அறிந்திலிர். இத்தவசிரேட்டர் இங்கு வந்தமையால் நாம் பாக்கியம் பெற்றுள்ளோம்’ என்று கூறிக் கொண்டு கண்ணீர் மல்க ஓடிச் சென்று குசேலருடைய பாதத்தில் வீழ்ந்து வணங்கினான். பின்னர் அவரைநோக்கி "பெருமானே, தங்கள் உயர்வையறியாது நாங்கள் கூறிய வார்த்தைகளை மனத்திற்கொள்ளாது பொறுத்தருள வேண்டுகின்றேன். தாங்கள் ஒரு சிறிது நேரம் இங்கே தாமதியுங்கள். யான் விரைந்தோடிச் சென்று தங்கள் வரவைக் கண்ணபிரானுக்கு அறிவித்து மீண்டும் வந்து தங்களை உள்ளே அழைத்துச் செல்லுகின்றேன்” என்ற கூறி மீண்டும் அவரை வணங்கி விடைபெற்று மேலும் சிலகாவலர்கள் உடன்வரக் கண்ணன் அரசுவீற்றிருக்கும் மண்டபம் நோக்கிச் செல்லலானான்:
6. முனிவர் வரவைத் துவாரபாலகர் கண்ணனுக்கு உரைத்தல்
சென்ற காவலர் நேரே அரசமண்டபம் புகுந்தனர். அங்கு கண்ணனைக் காணாது திகைத்தனர். கண்ணபிரான் அந்தப்புரம் சென்றுள்ளார் என அறிந்து அந்தப்புர வாயிலை

Page 8
நோக்கிச் சென்றனர். வாயிற் காவலரிடம் தமது வருகையை உரைத்தனர். அவர்கள் கண்ணனது அனுமதி பெற்றுவந்து துவாரபாலகரை உள்ளே செல்லவிட்டனர். அவர்கள் கண்ணன்முன் சென்று “மன்னர் மன்னவ போற்றி சந்திரகுல விளக்கே போற்றி, தாமரைக் கண்ணா போற்றி,துவாரகை நாதனே போற்றி எனக் கண்ணனைத் துதித்தனர். கண்ணன் அவர்கள் கூறவந்த செய்தியாது என வினவினான். அதற்கு உத்தரமாக
“ஆதிநாள் ஐவ நின்னோடு
அருங்கலை கற்றுள்ளானாம் போதவும் சிறந்த நட்பும்
பூண்டு கொண்டவனாம் கந்தை மேதகக் கொண்ட நீரான்
மெய்ம்மறை யவர் குலத்தான் கோதறு குணத்தின் மிக்கான்
குசேலன் என்று இயம்பினான் பேர்
அத்தவ சிரேட்டர் தங்களைக் காணவேண்டும் என்ற விருப்போடு வந்து வாயிலிற் காத்திருக்கின்றார்” எனக் காவலர் கூறி வணங்கி நின்றனர்.
அவ்வார்த்தைகளைக் கேட்டபோதே கண்ணனது உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது. விரைந்து தனது நண்பனைக் காண உள்ளம் அவாவியது. அதனால்
தாயது வருகை கேட்ட
தனி இளங் குழவியே போல் நேயம் மிக்குடையனாகி
நெஞ்சினில் உவகை பூப்பப் போய் அழைத்திடுமின் இன்னே
போய் அழைத்திடுமின் இன்னே போய் அழைத்திடுமின் இன்னே
என விரை பொருளில் சொற்றான்.
விரைவில் அழைத்து வாருங்கள்: விரைவில் அழைத்து வாருங்கள்: விரைவில் அழைத்து வாருங்கள் என ஆர்வத்தோடு மும்முறை கண்ணன் கட்டளை இட்டதும், துவாரபாலகர் வணங்கி விடைபெற்றுவாயிலை நோக்கி விரைந்தோடிச் செல்வாராயினர்.
7. பிரிந்தவர் கூடினால்.
சென்ற காவலர் குசேலமுனிவரை வணங்கி “மாதவப் பெரியீர், தாங்கள்
வந்துள்ளீர்கள் என்ற நற்செய்தியைக் கேட்டதும் மன்னர் பெருமான் கொண்ட மகிழ்ச்சிப் பெருக்கை நாம் எவ்வாறு கூறவல்லோம். அவர்கள் தங்கள்மீது கொண்டுள்ள நட்பின்

பெருமையை நாங்கள் நன்கு உணர்ந்து கொண்டோம். உடனேயே அழைத்து வாருங்கள்; விரைவில் அழைத்து வாருங்கள்; ஒடிச்சென்று அழைத்து வாருங்கள் என்று ஆர்வத்தோடு கட்டளையிட்டார்கள். நாங்களும் ஓடோடி வந்துள்ளோம். தயவு செய்து இங்கு முன் நடந்தவைகளை மனத்திற் கொள்ளாது எம்முடன் வந்தருள்க’ எனக்கூறி வேண்டி நின்றனர்.
குசேலரும் கண்ணனைக் காணும் ஆர்வமிகுதியால் விரைந்தெழுந்து, வாயில்கள் பலவற்றையும் கடந்து காவலர்கள் வழிகாட்ட அந்தப்புர வாயிலைச் சென்றடைந்தார். குசேலரின் வருகையை எதிர்நோக்கியபடி காத்திருந்த கண்ணனும் தனது ஆசனத்தைவிட்டு எழுந்தோடி வந்து குசேலரின் பாதங்களை வணங்கினான். இருவரும் ஒருவரை ஒருவர் அன்புப் பெருக்கோடு இறுகத் தழுவிக் கொண்டனர். பின்னர் கண்ணன் குசேலரைப் பார்த்துப் “பெருந்தவச் செல்வ, உமது வருகையால் யான் செய்த அறங்கள் பலித்தன. இந்தமாளிகையும் பாக்கியம் செய்தது. இந்தநாளும் பாக்கியஞ் செய்த நாளாயிற்று” என உபசாரவார்த்தைகள் கூறி உள்ளே அழைத்துச் சென்று ஓர் இரத்தின பீடத்தில் அமர்த்தினான். ஏவல் மகளிர் பொற்குடத்தில் ஏந்திவந்த நறுமணநீரால் முனிவரை நீராட்டினான். ஈரம் புலர்த்திப்பட்டாடை சாத்தி நறுமணம் மிக்க சந்தனம் பூசிப் பூமாலையும் அணிந்தான். பின்னர் இன்சுவை உணவுவகைகளை உண்பித்து, நறுஞ்சாந்தளித்து உபசரித்தான்.
படுக்கையில் குசேலரை இருத்தி அவரது முதுகை அன்போடு தடவிக்கொடுத்தான். இம்மலரடிகள் வழிநடந்து வருந்தினவே எனக்கூறி வருத்தத்தோடு அம்மலரடிகளைத் தனது கரங்களால் வருடினான். மகளிர் அயலில் நின்று கவரி வீசவைத்தான். இவ்வாறான இராசோபசாரங்களை எல்லாம் கண்ணன் செய்யவும் அவற்றில் தன்னுடைய உள்ளத்தை ஓடவிடாது கண்ணன் கழலடிகளிலேயே பதித்த சிந்தையராய்க் குசேலர் வீற்றிருந்தார்.
8. கண்ணன் பழைமை பாராட்டல்
பின்னரும் கண்ணன் குசேலரை நோக்கி, தவசிரேட்டரே, உமது நட்பையான் என்றும் மறந்ததில்லை. உமது ஊரிலிருந்து இங்கு வருபவர்களிடமெல்லாம் உமது சுகசேமம் பற்றி நான் அடிக்கடி விசாரித்தறிவதுண்டு. ஆனால் இன்றுதான் இருவரும் கூடிமகிழ வாய்ப்பு ஏற்பட்டது.
உமது மனையாள் இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் உடையவளா? உமது வருவாய்க்குத்தக வாழும் பண்பு படைத்தவளா? சொன்ன சொற்படி நடக்கும் தூயவளா? நாயகனைத் தெய்வமாகப் போற்றும் நற்குணவதியா? உமக்குப்பிள்ளைகள் எத்தனைபேர் இருக்கின்றார்கள்? அவர்கள் எவ்வித குறையுமின்றி வாழ்கின்றார்களா? அவர்களுக்கு உபநயனம் முதலியன செய்துவிட்டீர்களா? வேதம் ஒதுகின்றார்களா? நீராடல், சந்தி, செபம் முதலிய நியதிகளில் வழுவாது ஒழுகுகின்றார்களா? உமது உடல் நலம் எப்படி இருக்கின்றது? என்பன போன்ற வினாக்கள் பலவற்றை வினாவி அவரது இல்வாழ்க்கை

Page 9
பற்றிக் கண்ணன் முதலில் அறிந்து கொண்டான்.
பின்னர் பழைய சம்பவங்கள் நினைவூட்டத் தொடங்கினான். சாந்தீப முனிவருடைய ஆச்சிரமத்தில் கல்வி பயின்ற காலையில் நாம் பேசிக் கொண்டவை இன்னும் நினைவில் இருக்கின்றதா? குருபத்தினிக்காக விறகு வெட்டப்போய் நாம் பெருமழையில் சிக்கித்தவித்தோமே இரவு முழுவதும் ஈரஉடையுடன் குளிர்காற்றில் விறைத்து நின்றோமே. எவ்வளவு துன்பப்பட்டோம். நாம்பட்ட துன்பத்தைவிடப் பல்மடங்கு துன்பத்தை நம்மைக் காணாமையால் முனிவரும் மனைவியும் பட்டார்களே நினைவு வருகின்றதா? அதிகாலையில் எம்மைத் தேடிவந்த முனிவர்பதைத்த பதைப்பும் சொரிந்த கண்ணிரும் இன்றும் மெய்சிலிர்க்க வைக்கின்றதே. அவர் எம்மிடம் வைத்திருந்த அன்பும் பாசமும் அப்பப்பா எப்படி சொல்வது! என்று பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லிச் சொல்லி ஆனந்தமடைந்தான் கண்ணன்.
9. ஒருபிடி அவல்
அன்பு நண்பா, பலநாட் கழித்து என்னைக் காணவந்துள்ளாய். அன்பு நண்பனுக்கு ஏதாவது கொண்டுவராமல் இருக்கமாட்டாய். அன்றியும் உனது இல்லாள் வெறுங் கையனாய்ச் சென்றுவா என உன்னை அனுப்பி வைத்திருக்கமாட்டாள்.
"பந்தனை அகன்ற மேலோய் பற்பல நாட்குப் பின்பு வந்தனை எனக்கென் கொண்டு
வந்தனை அதனை இன்னே தந்தனை ஆயின் நன்று
தருசுவைப் பக்கனத்தென் சிந்தனை நின்ற தென்றான்
தெரிவரும் வஞ்சக்கள்வன்’ (பக்கனம் - பலகாரம்)
கண்ணன் அனுபவிக்கின்ற அரசபோகத்தையும் அங்கு நிறைந்துள்ள உணவு வகைகளையும் பார்த்த பின்பு தான் கொண்டுவந்த அவலைக் கொடுப்பதற்கு முனிவர் நாணினார். அதனால் ஒன்றும் பேசாது வாளாவிருந்தார். முனிவர் நாணுவதை உணர்ந்த கண்ணன் அவர் போர்த்தியிருந்த போர்வையைத் தானே எடுத்துத் தனது பக்கத்தில் வைத்துத் தேடிப்பார்த்து அவல் முடிச்சைக் கண்டு கொண்டான். மகிழ்ச்சியோடு அம்முடிச்சை அவிழ்த்து ஒருபிடி அவலை அள்ளி வாயிற்போட்டு மெல்லத் தொடங்கினான். "அப்பா இது அமுதம் போன்று இருக்கிறது. உமது மனைவி எவ்வளவு சிறப்பாக இதனைப் பக்குவம் செய்திருக்கின்றாள்! எனக்கு அவலிற் பிரியம் அதிகம் என்பதை எப்படி அறிந்தீர்கள்? என்று பாராட்டியவாறே பின்னரும் ஒருபிடி அவலைக் கையாலெடுத்தான். அதுகண்டு கண்ணனது மனைவியாகிய உருக்குமணிதேவி ஓடிவந்து'எங்களுக்கு வேண்டாமா என்று கூறியவாறே

கண்ணன் உண்ணாது தடுத்துவிட்டாள்.
முதற்பிடி அவலை உண்ணும் போதே முனிவருக்குப் பெருஞ்செல்வம் உண்டாகுக என்று எண்ணிய படி கண்ணன் தின்றான். அது உருக்குமணியின் உள்ளத்திற்குத் தெரியும். மேலும் ஒருபிடி அவல் தின்றால் கண்ணன் முனிவருக்கு அடிமையாகிவிடுவான் என உணர்ந்தே சாதுரியமாக எங்களுக்கு வேண்டாமா என்று கூறித் தடுத்துவிட்டாள்.
மீண்டும் சிறிது நேரம் கண்ணன் குசேலருடன் அளவளாவிக் கொண்டிருந்தான். பின்னர் அவர் படுத்துறங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வித்தான். முனிவரைத் துயில விடுத்துத் தானும் துயில்கொள்ளச் சென்றான்.
10. குசேலர் துவாரகையை விட்டுப் புறப்படல்
குசேலர் வைகறைப் பொழுதிலே எழுந்து தாம் செய்ய வேண்டிய நித்திய கடன்களை முடித்துக் கொண்டார். பற்றைத் துறந்த மெய்ஞ்ஞானி ஆதலின் கண்ணனிடம் எதையும் வேண்டிப் பெற்றிலர். கண்ணனும் வாயில்வரை சென்று வணங்கி விடைகொடுத்து மீண்டான்.
ஒன்றுங் கொடுக்காது கண்ணன், வெறுங்கையராய்க் குசேலரைச் செல்லவிட்டது கண்டு அந்தப்புரமாதர் தம்முட் பற்பலவாறு பேசுவாராயினர். சிலர் முகத்தைத் தொங்கவிட்டனர். சிலர் வாயிதழைச் சுழித்தனர். சிலர் ஏவற் பெண்கள் மீது தமது வெறுப்பைக்காட்டிச் சினந்துரைத்தனர். சிலர் ஆத்திரத்துடன் ஒன்றும் பேசாமலே திரும்பிச் சென்றனர்.
நண்பன் துயரந்தீர அள்ளித் தருவான் என்றல்லவா அந்த முனிவர் வந்திருப்பார். பாவம் எவ்வளவு ஏமாற்றத்துடன் மீண்டிருப்பார் என்றனர் சிலர்.
அவரது நண்பனான கண்ணனிடமிருந்து தனது நாயகர் வேண்டுவன பெற்றுவருவார்; தங்கள் குடும்பத்து வறுமை தொலையும்; மக்களது ஏக்கங்கள் தீரும் என்றல்லவா அம்முனிவரது மனையாள் வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பாள். முழுக்குடும்பத்தையும் நம்பிக்கை இழக்கச் செய்து விட்டானே எம்மரசன் என்றனர் சிலர்.
எல்லாமே வெறும் வேஷம்தானா? ஒடிச்சென்றான் காலில் வீழ்ந்தான். கட்டித்தழுவினான். நீராட்டினான். இராச உபசாரங்கள் செய்தான். உணவளித்தான். முதுகு தடவினான். காலை வருடினான். மணிக்கணக்காக ஏதேதோ பேசினான்: ஈற்றில் ஒன்றும் கொடாது போய்வா என்றனுப்பி விட்டானே என்று சொல்லிச் சொல்லி வருந்தினர் சிலர்.
இவ்வாறு இவர்கள் தம் வாய்க்கு வந்தன எல்லாம் சொல்லிக் கண்ணனைப்

Page 10
பழித்துரைப் பார்த்த சில பெண்கள் அவர்களைக் கடிந்து பின்வருமாறு கூறினர்.
என்நினைந்து வந்தானோ அவன் இவனும்
யாது நினைந் திருக்கின்றானோ பன்னரிய இவன்செய்யும் மாயை எவ ரால் அறியப் படும் வாய் வந்த இன்னனவெலாம் பேசல் அறிவன்று
நமக்கு என வண்டு இரங்கும் கூந்தல் மின்னனைய நுண்ணிடைப் பேர் அமர்க்கண்மட
மாதர் சிலர் விளம்பினாரே.
(பன்னரிய - சொல்லுதற்கரிய அமர்க்கண் - போராடுங்கண்)
வாயிலைக் கடந்து சென்ற முனிவர் உள்ளம், ஒன்றும் பெறாமையினால் வருந்தவில்லை. அதற்கு மாறாகக் கண்ணனைத் தரிசித்த ஆனந்தத்தால் நிறைவு பெற்றிருந்தது. துவாரகைத் தெருக்களைக் கடந்து கடல் எல்லையை அடைந்த குசேலர் படகோட்டியின் துணையால் கருங்கடலையுங்கடந்து தன் ஊருக்குச் செல்லும் வழியிற் செல்லத் தொடங்கினார். s:
11. இல்லச்சிறப்பும் வரவேற்பும்
வழிநடந்து செல்லும்போதே தவத்தால் இளைத்து எலும்புக் கூடாக விளங்கிய தேகம் பூரிப்படையத்தொடங்கியது. அரையில் அணிந்திருந்த கந்தை பட்டாடையாயிற்று. கழுத்திற் கிடந்த துளசிமாலை முத்துமாலையாக மாறிற்று. விரலில் அணிந்திருந்த தருப்பைப் பவித்திரம் கணையாழியாய் ஒளி வீசியது. பாலை நிலமும் குளிர்ந்தது. சூரியகிரணமும் நிலாக்கதிர்போன்று வெம்மை குறைந்தது. இவையெல்லாம் கண்ணனது திருவிளையாடல்கள் என்றுணர்ந்த முனிவர் அக்கண்ணனது நினைவு உள்ளத்தை நிறைக்கத் தமது இல்லமிருந்த எல்லையை அணுகினார்.
அந்தக் கிராமமே நகரமாக மாறியிருந்தது. ஊர்மக்கள் மங்கலப்பொருள்கள் ஏந்திக் குசேலரை வரவேற்கத்திரண்டுவந்தார்கள். வந்தவர்கள் ஞானஒளிவீசப் பூரிப்படைந்திருந்த முனிவரது அழகிய திருவடிவு கண்டு அதிசயித்தனர். கண்ணனது திருவருள் பெற்றார் அடையமுடியாதது யாது என வியந்தனர். அவரது திருவடிபணிந்து அவரை அழைத்துச் சென்றனர்.
தமது இல்லத்தையடைந்த முனிவரை இல்லத்தின் தோற்றம்மேலும் அதிசயிக்க வைத்தது அவர் வசித்த சிறு கொட்டில் பசும்பொன் மாளிகையாக மாறியிருந்தது. அதன் உள்ளிருந்து இளமையும் அழகும் பொலியப் பட்டாடையும் அணிகலன்களும் மேலும் அழகூட்டச் சுசீலை

வெளிவந்து தன் நாயகனை எதிர் கொண்டு வணங்கினாள். வணங்கிய சுசீலை ஓர்
ஆசனமிட்டு முனிவரை அதில் இருத்தி ஏவல் மகளிர் நீர்வார்ப்ப அவரது பாதங்களைத் துலக்கி, மலர்தூவிப் போற்றி, ஆலத்தி எடுத்தாள். முனிவர் மனையாள் பின் தொடரத் தம் மாளிகையின் உள்ளே புகுந்தார்.
உள்ளே புகுந்த முனிவர் மாளிகை அறைகளில் பொன்னும், வெள்ளியும், முத்தும், இரத்தினங்களும், ஆடைகளும், அணிகலன்களும், உணவுப்பொருட்களும், பிறவும் நிறைந்திருக்கக் கண்டார்.
அவரது மக்களும் பட்டாடைகளும் வகைவகையான ஆபரணங்களும் பூண்டு காட்சியளித்தனர். கஞ்சிக்குச் சண்டையிட்ட மக்கள் வகைவகையான உணவுகளை உண்டு வேண்டாம் வேண்டாம் என்று செருக்குவதையும் கண்டார். ஆயினும் முற்றத்துறந்த முனிவர் உள்ளத்தில் அக்காட்சிகள் எந்தப்பற்றையும் பாதிப்பையும் ஏற்படுத்தவேயில்லை.
சுசீலை முனிவரை எண்ணெய் தேய்த்து நீராடுக என வேண்டினாள். நீராடி நித்திய கருமங்களை முடித்த முனிவர் அந்தணர் கூட்டத்தோடு அன்னமும் அறுசுவைகறிகளும், நெய்கலந்துண்டபின் அவ்வந்தணர்களுக்கு விடைகொடுத்தனுப்பினார்.
மனைவியும் மக்களும் எல்லாச் சுகபோகங்களையும் அநுபவிக்க மகிழ்வுடன் குசேலர் சிறிது காலம் இல்லறம் நடத்தினார். இன்பமாகக் காலங் கழிந்தது.
12. குசேலர் மீண்டும் வறுமை வேண்டுதல்
ஆசைகளைத் துறந்தவனே துறவி. அல்லாதவன் துறவியாக மாட்டான். அவனால் பிறவியையும் துறக்க முடியாது. ஆதலின் அவனுக்கு வீட்டின்பமும் கிட்டாது.
ஆசைகளைப் பெருக்குவது பொருட்செல்வமே அன்றிப் பிறிதொன்றில்லை. செல்வ மயக்கத்தால் தெய்வ சிந்தனை ஒழியும். தரும சிந்தனையும் ஏற்படமாட்டாது. பாவங்களே வளரும். பாவங்கள் மீட்டும் மீட்டும் பிறவித் துன்பத்தில் அமிழ்ந்த வைக்கும். இவ்வளவு தீமைகளுக்கும் காரணமான செல்வத்தை நான் துறக்கவே வேண்டும் என்று குசேலர் ஒருநாள் திடமாகச் சிந்தித்தார்.
ஒரு அறையினுட் புகுந்தார். யாரும் உள்ளேவர முடியாதவாறு அவ்வறையின் கதவைத் தாழிட்டார். இச் செல்வத்தை நீக்கி என்னைக் கரையேற்றுமாறு கண்ணனை வேண்டுவேன் எனத் தம்மனத்துள் எண்ணிய அவர், கூப்பிய கையராய்க் கண்ணிர் சொரிய, மனங்கசிந்துருகக் கண்ணனது திருப்பாதங்களைத் தியானித்தவண்ணம் பின்வருமாறு வேண்டத் தொடங்கினார்.
வேதங்களை எல்லாம் கவர்ந்து கொண்டு போய்க்கடல் மத்தியிலே ஒளித்த

Page 11
சோமகாசுரனை மீன்வடிவு எடுத்துச் சென்று பொருது கொன்று, அவ்வேதங்களை உலகம் உய்யக் காப்பாற்றி மீட்டவனே உனது அடிகளைப் பிரார்த்திக்கின்றேன்.
தேவரும் அசுரரும் மந்தரமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது அம்மலை கீழே புதைந்து விடாது ஆமை வடிவாகச் சென்று அம்மலையைத் தாங்கியவனே வணக்கம்.
இரணியாட்சன் என்னும் அசுரன் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துப் பாதாலத்திற்குக் கொண்டு சென்று ஒளித்தபோது பன்றிவடிவாகச் சென்று அவனுயிர் குடித்துக் கொம்பிலே குத்திப் பூமியை மேலே கொண்டு வந்தவனே வணக்கம்.
தனது தமையனாகிய இரணியாட்சனைக் கொன்றதற்காக உன்னோடு பகைத்ததும் அன்றித் தேவர்களுக்கும் கொடுமை பல செய்து. உன்னைத் துதித்த அவனது மகனாகிய பிரகலாதனனையும் கொல்லத்துணிந்த இரணியனைத் தூணிலிருந்து நரசிங்கமாக வெளிவந்து பிளந்தவனே வணக்கம்.
மமதை கொண்ட மகாபலிச் சக்கரவர்த்தியிடம் குறள் உருவிற் சென்று மூன்றடி மண்கேட்டு மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்து மூன்றாம் அடியை அவன் தலையில் வைத்து அழுத்தி உலகத்தைக் காத்தவனே வணக்கம்.
சமதக்கினி முனிவருக்கு மகனாகப் பிறந்து பரசுராமன் எனப் பெயர்பூண்டு கார்த்த வீரியார்ச்சுனனைக் கொன்று இருபத்தொரு அரச தலைமுறைகளை அழித்து நின்றவனே வணக்கம்.
இராமாவதாரமெடுத்து இராவணன் முதலிய அரக்கர்களை அழித்து நல்லோரைக் காத்தவனே வணக்கம், வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்து நந்தகோபன் மனையில் வளர்ந்து கம்சன், சிசுபாலன் போன்ற கொடியோரை அழித்ததுமின்றிப் பாரதப் போரில் அருச்சுனனுக்குத் தேர்ப்பாகனாகித் துரியோதனன் ஆகியோரை அழிவடையச் செய்து தருமத்தைக் காத்த கிருஷ்ணா நின்னடி போற்றி என்று கண்ணனுடைய அவதாரப் பெருமைகளையெல்லாம் எடுத்துரைத்து இவ்வாறெல்லாம் அருள்புரிந்த உனக்கு என்னைக் காப்பாற்றுவது ஒர் அரிய செயலா என்று வேண்டி நின்றார்.
நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கம் நிற்கும் பெருமான் தன்னுடைய அன்பனின் வேண்டுகோளைப் புறக்கணிப்பானா? உடனேயே குசேலர் முன்னே அறையுள் தோன்றினான். கண்முன்னே கண்ணனைக் கண்ட குசேலர் விரைந்தோடி அவனது பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். ஆனந்தக் கூத்தாடினார். பலவாறு துதித்து நின்றார். பின்னர் "பெருமானே! தேவரீர் இந்த ஏழையின் வேண்டுகோள் கேட்டு இங்கெழுந்தருளிய உமது எளிமையை எவ்வாறு புகழ்வேன். உம்மையன்றி வேறேதையும் வேண்டாது பற்றற்று வாழ்ந்த எனக்கு இச்செல்வத்தைத் தந்து சோதிக்கலாமா? மயக்கம் தரும் இந்தச் செல்வச்

செருக்கு இதுகாறும் யான் போற்றி வந்த பற்றறுத்த வாழ்க்கையை அழித்துவிடுமோ என்று அஞ்சுகின்றேன். ஆதலின் நிலையற்ற, இச்செல்வம் எனக்கு வேண்டாம். முன்னிருந்த வறுமை நிலையையே மீட்டும் எனக்குத் தந்தருள்க’ என்று குறையிரந்து நின்றார்.
13 பேரின்ப வீடடைதல்
கண்ணன் புன்முறுவல் பூத்தான். “ அன்பரே! ஒடும் புளியம் பழமும் போலவும், தாமரையிலைத் தண்ணிர் போலவும் பந்த பாசங்களில் ஒட்டாது வாழ்ந்த உம்மை இச்செல்வம் ஒட்டவைத்துவிடுமா?. இரும்பைக் கறையான் அரிக்குமா? சபலமனங் கொண்டவர்கள் தடுமாறுவரேயன்றித் திடசித்தம் கொண்ட ஞானியர் கலங்குவார்களா? அன்றியும் செல்வத்தை யான் அளித்தது உன்னைச் சார்ந்துள்ள மனைவி மக்களின் நல்வாழ்வு கருதியே உன்னுடைய துறவு உள்ளம்போன்று அனுபவிக்க வேண்டிய வயதிலுள்ள பிள்ளைகள் வாழமுடியுமா? ஆதலால், தவச்செல்ல வருந்தவேண்டாம். உன்னை அச்செல்வம் ஒன்றும் செய்துவிடமாட்டாது. ஞாயிற்றை இருள் யாது செய்துவிடும்?.
நீவிர் இவ்வுலகில் எம்மைத் தியானித்துப் பலநாள் வாழ்ந்திருந்து முடிவில் வைகுந்த உலகம் எய்தி இன்புற வரம் தருகின்றேன். கலங்க வேண்டாம். ‘என்று கூறி
மறைந்தருளினான்.
எம்பெருமான் திருவுள்ளக் குறிப்பு அதுவானால் அவ்வாறு வாழுவதே தனது கடனாகும் என எண்ணிய குசேலர் கண்ணன் அடியை மறவாத உள்ளத் தராய்ப் பலநாள் வாழ்ந்திருந்து ஈற்றில் வைகுந்த உலகம் சேர்ந்து கண்ணனுக்குச் சேவை செய்து இன்புற்றார்.
"ஒப்பிலா முனிவன் பின்னர்
ஒருதினம் வானநாடர் வெப்பிலாக் கற்பகப்பூ
விரைகெழு மாரி பெய்ய வைப்பின் மெய் யடியார்க் காய
வைகுந்த உலகஞ் சார்ந்து திப்பிய உருவ மாயன்
சேவைசெய்து இன்புற்றானே'

Page 12


Page 13
LLLLLL LLLGLS LG LLGLLL LLLLL S LLLLS KLL LLSS

LLLLLLL LLL LLLLLL L0LLLLLLL LLLS LLL L S Y0LSLLL