கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மு. க. வேலுப்பிள்ளை (நினைவு மலர்)

Page 1
雞 குரும்பசிட்டியூர் மாயெழுை அமரர்திரமு. அவர்களின் சிவ اللھج il-IP நினைந்து ெ
| %- (2670
 

வப் பிறப்பிடமாகக் கொண்ட ? கவேனும்னனை பதப்பேறு குறித்த நகிழ்ந்துடுகல்
し今のク。ア

Page 2

t
குரும்பசிட்டியூர் மண்ணில்ப் பிறந்து
மனைசிறக்க
உறவுமகிழ
ஊர் புகழ - இன்று
கண்மூடி
விண்சென்ற
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்த
வானவருள்
ஒன்றிவிட்ட அப்பா
அமரரே
உங்களிற்கு
இம் நினைவு மலரினை
காணிக்கை
ஆக்குகின்றோம்.
22 சரத்திA சரத்தி A சரத்தி A

Page 3
[ଟ୍ରୁ
 


Page 4

JA00K00SAASAA0S0SAAAAAS0S0STS0SS STSTSKJKeTASeKSJeTASeSJSAASSSSSL STASeeSSLSSS
ELL
நெருல் உளநொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு fந்தார்)
葵
s
泰酸
குரும்பசிட்டியூர் மாயெழுவைப் பிறப்பிடமாகக் கொண்ட * முத்துச்சாமி கந்தையா வேலுப்பிள்ளை 劉 அவர்களது திருவடிப்ே JOU குறித்த ଫଣ୍ଟ୍ ܕܗ$ நாள் நினைவுக் கலசம் இ ఫ్లో "31 مروn&

Page 5

திதிவெண்பா
பார்த்தீப ஆண்டு ஆவணி மாதம் இருபத்திநான்காம் நாள்
அமாவாசைக்குப்பின் பூர்மயக்க சவுத்டித் திதியில் விசாக
நட்சத்திரத்தில் தவம் இருந்த வந்த வேலுப்பிள்ளை
வையத்த வாழ்ந்தத போல் வானகமும் போய் புகுந்தாரே

Page 6
窓 குரும்பசிட்டியூர் மாயெழு அமரர் முத்துச்சாமி கந்தையா
வேலுப்ரிவர்ளை அவர்களிர் 09.09. 2005 அன்று இறைபதம் எய்தியமை குறித்து அவர் தம் வாழ்க்கைக் குறிப்பு *தோன்றில் புகழோரு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று”
இயற்கை எழிலும் சோலைகள் செறிந்ததுமான ஈழவளத் திருநாட்டின் வலிகாமம் வடக்குப்பகுதியில் காங்கேசந்துறை தேர்தல்
தொகுதியில் அமைந்துள்ள சிறியதோர் கிராமம் குரும்பசிட்டியாகும்.
வளங்கள் பல கொண்ட அன்பும் பண்பும் அறிவும் ஆற்றலும் மிகுந்த மக்கள் வாழும் குரும்பசிட்டி கிராமத்துக்கு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டி அருள்பாலிக்கும் ஹீ முத்துமாரி அம்பாள் ஆலயமும் வானலாவிநிற்கும் அரச மரமும் மாயெழு காவல் தெய்வம்
வைரவர் கோவில் புளியமரமும் மேலும் பொழிவைத்தருகின்றன.
பூநகரி தம்பிராயைச் சேர்ந்த முத்துச்சாமி கந்தையாவுக்கும்
குரும்பசிட்டியை சேர்ந்த ஆறுமுகம் மாப்பாணர் மகள் பாக்கியத்துக்கும்
மூன்றாவது பிள்ளையாக வேலுப்பிள்ளை 1914ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் 02ம் திகதி குரும்பசிட்டியில் (மயிலிட்டி தெற்கு) பிறந்தார்.
இவருக்கு மூத்த சகோதரனாக இராமலிங்கமும், இரண்டாவது
சகோதரனாக சுப்பிரமணியமும், இழைய சகோதரர்களாக
முத்துத்தம்பி, அருளானந்தமும் பிறந்தார்கள். இவருடன்
கூடிவிளையாட ஒரு பெண் சகோதரிகள் கூட இல்லாமை இவர்களுக்கு
ஒரு குறையாகவே இருந்தது.
 
 

இவர் தனக்கேயுரிய இளமையான தோற்றத்தோடும் தாய் தந்தை வழிகாட்டலிலும் சகோரர்களுடைய அன்புபாசத்தோடும் வளர்ந்து வந்தார். பாடசாலையில் கல்விகற்கும் காலத்திலேயே
தாய் தந்தை சகோதரருக்கும் உதவிகள் புரிந்து வாழ்ந்து வந்தார். சிறுவயதிலேயே நற்பண்பும் தெய்வ நம்பிக்கையும் கொண்டு விளங்கிய இவர் அயலவர்களுடனும் நேசத்துடன் பழகிவந்தார்.
இவ்வாறு சிறந்தமுறையில் வளர்ந்து வரும் காலத்தில் ஆரம்ப கல்வியை முடித்துவிட்டு தொடர்ந்து கல்வி பயில்வதில் நாட்டம் கொள்ளாது சுருட்டு கைத்தொழிலைக் கற்றுக்கொள்வதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார். அதன் பயனாக சிறந்த சுருட்டு தொழிலாளியாகவும் பின்னர் முதலாளியாகவும் திகழ்ந்தார். வயலும் வயல்சார்ந்த இடமான பூநகரிதனில் தனது தந்தையின் பாரம்பரிய தொழிலான வேளாண்மை தொழிலில் நாட்டம் காட்டியதோடு
தொடர்ந்தும் வேளாண்மையில் ஈடுபட்டு வந்தார்.
1933ம் ஆண்டு முருகேசு கந்தவனத்துக்கும் வல்லிபுரம் மகள் செல்லமுத்துவிற்கும் பிறந்த அன்பும், பண்பும், சாந்தமும் கொண்ட சுந்தரம் என்பவரைக் திருமணம் செய்துகொண்டார். இவர்களது இல்லறத்தின் பயனாக மகேந்திரன், மனோன்மணி, தவமணி,
பராசக்தி, மகாதேவன், சிவசக்தி, செல்லம்மா, பரமேஸ்வரி,
மனோகரன், மகேஸ்வரன் ஆகிய பிள்ளைச்செல்வங்களின்
தந்தையானார். 净、

Page 7
அது மட்டுமல்லாமல் தனது விடாமுயற்சியாலும், நேர்மையாலும் படிப்படியாக வளர்ந்து 1950களில் தனது மாயெழு இல்லத்தில் சுருட்டு தொழிற்ச்சாலையொன்றினை ஆரம்பித்து சுருட்டு வர்த்தகத்திலும் சிறந்து விளங்கினார். தவிக்கமுடியாத சில நிதி நெருக்கடிகள் காரணமாக சுருட்டு தொழிற்சாலையை தொடர்ந்து நடாத்துவது சாத்தியமற்றுப்போகவே குரும்பசிட்டியின் பிரபல சுருட்டு தொழில் அதிபர் காலஞ்சென்ற திரு.பொ.இளையப்பா அவர்களின் சுருட்டு தொழிற்சாலையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று இறுதி வரை பணிபுரிந்தார். அன்னார் தொழிலாளியாகவும் முதலாளியாகவும் சுருட்டு தொழிலாளர்களின் பிரச்சனைகளில் பல அனுபவங்களை பெற்றவராகவும் இருந்தமையால் இளையப்பாவின், தொழிற்சாலையின் வளர்ச்சிக்கு பெரிதும்
உதவியாக இருந்தார்.
அன்னாரின் மூத்த மகனான மகேந்திரன் அச்சுக்கலையில் சிறந்து விளங்கி ஈற்றில் சாவகச்சேரி செந்தில் அச்சக உரிமையாளரானார் இவர் சாவகச்சேரியைச் சேர்ந்த கனகாம்பிகை என்பவரை மணந்து கலாநிதி, கேமலதா, யமுனா, பிரபாஜினி ஆகிய பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். மூத்த மகளான மனோன்மணி குண்டசாலை விவசாய பாடசாலையில் பயிற்சியை முடித்து விவசாய பண்ணை நடத்துனராக அரசாங்க நியமனம்
பெற்று விவசாயப் போதனாசிரியராக பதவியுயர்வு பெற்று
முல்லைத்தீவில் கடமைபுரிந்து தற்பொழுது இளைப்பாறியுள்ளார். திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சி
 

(Gరామానాగా N
கலாசாலையில் பய்யிற்சி பெற்ற தவமணி றம்புக்கனையில் பணிபுரிந்து தற்பொழுது இளைப்பாறியுள்ளார். இவர் பொல்காவெல பிரதேச சபை ஊழியர் H.G.கருணாரட்னவை கைப்பிடித்தார், யாழ்ப்பாணம் தாதிமார் பயிற்சி கல்லுாரியில் பயிற்ச்சி பெற்ற பராசக்தி கொழும்பு தேசிய வைத்திய சாலையில் தாதியாக பணிபுரிந்து Ward Sister ராக பதவி உயர்வி பெற்று இளைப்பாறியுள்ளார். வத்தளையை சேர்ந்த LTபெரேராவை திருமணம் செய்து அஜித் (அமரர்), பமிலா, சந்தினி, சுசந்தா என்பவர்களை பெற்றெடுத்தார், சட்டத்தரணியான மகாதேவன் குரும்பசிட்டியைச் சேர்ந்த பவானி (பிரதி அதிபர், நுகேகொடை தழிழ் மகா வித்தியாலயம்) என்பவரை மணந்து ஜனார்த்தனன், ஜனகன், ஜனக்குமாரன், ஜனந்தனன் ஆகிய நால்வரின் தந்தையானார் 1965ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது குரும்பசிட்டியில் நடைபெற்ற தழிழரசுக்கட்சிப் பிரசார கூட்டத்தில் மகாதேவனை ஒரு பேச்சாளனாக பங்குகொள்ள காலஞ்சென்றவர்களான திரு.வே.வன்னியசிங்கம் அவர்களும் திரு.அ.மாணிக்கவாசகர் அவர்களும் அன்னாரிடம் அனுமதிகேட்ட போது எதுவித தயக்கமுமின்றி சம்மதம் தெரிவித்திருந்தார். அதன் விளைவாக மகாதேவன் அவர்கள் பலரது பாராட்டுக்குரிய பேச்சாளராக திகழ்ந்ததையிட்டு பெறுமையோடு திருப்தியும் மகிழ்வும் கொண்டிருந்தார், சிவசக்தி கட்டுவனைச் சேர்ந்த மா.பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து பிரதீபன், சஞ்சீவன், பிரியா, சங்கீதா என்போரைப் பெற்றெடுத்தார், செல்லம்மா ஊரெழுவைச் சேர்ந்த
சு.வசந்தகுமார் என்பவரைத் திருமணம் செய்து வினோத் என்பவரின்
ク

Page 8
(ഉള്ളത
தாயானார். தற்பொழுது சுவிற்சலாந்தில் வசித்து வருகின்றார், கால்நடை அபிவிருத்தி போதனாசிரியைாக வவுனியாவில்
S8
53
கடமைபுரியும் பரமேஸ்வரி கட்டுவனைச் சேர்ந்த இ.செகராஜா (இளைப்பாறிய எழுது வினைஞர் (RVDB) என்பவரை திருமணம் செய்து சுஜிதா, சுஜீவன், ஜெயதேவன் என்பவர்களைப் பெற்றெடுத்தார், தற்பொழுது சுவிற்சலாந்தில் வசிக்கும் மனோகரன் தெல்லிப்பளையைச் சேர்ந்த அன்னவதனி என்பவரை திருமணம் செய்து மெர்லினா, ஜஸ்மினா என இரு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார், K.V.M றெக்கோடிங் ஸ்ரூடியோ உரிமையாளர் மகேஸ்வரன் மீசாலையைச் சேர்ந்த தவராணி என்பவரைத் திருமணம் செய்து ஆதவன், மாதவன் என இரு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்.
தான் பெறாத கல்வியை பிள்ளைகள் பெற்றே ஆக வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டு வாழ்ந்த இவர் பிள்ளைகளின்
கல்விமுன்னேற்றத்தில் வெற்றி கண்டு மன நிறைவு கொண்டார் ; தனது பேரப்பிள்ளைகளையும் 13 பூட்டப்பிள்ளைகளையும் கண்ட 2 பெருமையைக் கூறிக்கூறி அகம் மகிழ்வார். தனது வாழ்வின் 3. ஒழுக்கங்களையும் உணவு பழக்கத்தையும் சொல்லி தனது தேக ே
ஆரோக்கியத்தின் இரகசியத்தைப் புரிய வைப்பார்.
இவ்வாறு வாழ்ந்து வரும் காலத்தில் இவர் தனது சகோரர்களையும் இழந்தார். இது இவ்வாறு இருக்க பெருமை } மிக்க குரும்பசிட்டியில் அமைதியாக வாழ்ந்த மக்கள் அனைவரும் ? 1986b ஆண்டு இடம் பெயர வேண்டிய துக்ககரமான சம்பவம் நிகழ்ந்தது. பிறந்த மண்ணைவிட்டு பிரிய விருப்பமின்றி அன்னாரும் 6 சாவகச்சேரிக்கு இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்.
சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த காலத்தில் 1990ம் ஆண்டு வைகாசி மாதம் 8ம் திகதி தனது அன்புத் துணைவியை இழந்தார்.
 

அதே காலகட்டத்தில் ஆரம்பமான போர்ச்சூழல் காரணமாக சாவகச்சேரியில் இருந்து இடம்பெயர்ந்து பூநகரியில் சிலகாலம் தனது தந்தைவழி உறவினர்களோடு வாழ்ந்து வந்தார். குறிப்பாக அன்னாரின் பெறாமகள் முறையான பூமணியினதும் பிள்ளை களினதும் ஆதரவு அவருக்கு பெரும் வலுவைக்கொடுத்தது. 1995ம் ஆண்டு பிற்பகுதியில் பிள்ளைாளுடன் வாழ்வதற்காக கொழும்புக்கு சென்றார். தனது கடைசி மகளான பரமேஸ்வரி செகராஜாவுடன் வாழ்ந்து வந்த அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுயவிருப்பொடு மகாதேவன் இல்லத்திற்கு சென்று அங்கேயே தங்கலானார் அவர் அவரது இறுதி மூச்சுவரை சுகதேகியாக இருந்த அவர் பல இடங்களுக்கு செல்லவும் பலரச்ை சந்திக்கவும் விரும்புவதாக அடிக்கடி கூறிவந்தார். அவரது அன்னாரின் மறைவுக்கு சரியாக ஒருமாதம் முன்பதாக அதாவது 09.08.2005 அன்று அன்னாரை பூநகரிக்கும் சாவகச்சேரிக்கும் அழைத்துச்சென்றதன் மூலம் அவரது நீண்ட கால விருப்பம் மகாதேவன் பவானி ஆகியோரின் முயற்சியால் நிறைவேற்றப்பட்டது. தனது துணைவியார் மறைந்த பின்னர் மேலும் 15 ஆண்டுகள் நிறைவான வாழ்வு வாழ்ந்து 2005ம் ஆண்டு புரட்டாதி
மாதம் 09ம் திகதி அதிகாலை வேளை இறைவனை நோக்கிய
பயணத்தை ஆரம்பித்தார்.

Page 9
இரங்கற்Uாக்கள்
{ଝୁଛି 8
எம் அன்புத்தீபம் அணைந்து விட்டது
நாம் ஆறாத்துயரில் மூழ்கிவிட்டோம்
இம் மாநிலத்தை விட்டு நீ பிரிந்துவிட்டாய்
எம் கதி என்னவாகும் நீ அறியாயே
வியர்வையை உழைப்பாகத் தந்த தந்தையே - எம்
இதயமது தாங்குவதில்லையெ உன்பிரிவை
விதிசெய்த சதியென்று சகித்திருப்போமே இல்லை - அம்
மதி சூடியவன் மலரடி இணைந்தாய் என்று மகிழ்வோமோ
பாசத்தின் பிறப்பிடமே எங்கள் அப்பா ஏன் எமை
மோசம் செய்து விட்டாய் சொல்லப்பா
எம்மினத்தார் வாழாத எட்டத்து நாட்டினிலே
உன் செய்தி கேட்டு விம்மி அழுகின்றோம்
உன் சொல்லெல்லாம் எம்வாயிற் கற்கண்டு
என் செய்வோம் நாமிங்கு அழுதுபுரண்டு
கோயிலும் குளமும் என வாழ்ந்தாயே - நீ
விண் செல்ல விடைதந்தது யாரப்பா சொல்லு
விழியெல்லாம் குளமாய் நிறைகின்றதே நாமென்ன
பழி செய்தோம் எமக்கு நீ புகன்றிடுவாய்
வழியொன்றும் தெரியவில்லையே சொல்வதற்கு ஈசன்
கடலடி சேர்ந்துவிட்டாய் நாமென்ன செய்வோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒப்பில்லா உனை பிரிய
மனம் தாளவில்லை
நீங்கள் சாய்திருக்கும் நாற்காலியின்
தென்றல் வினாவ
என்ன சொல்வேனோ
பிரிவென்ற கொடுமை எனை சூழ்ந்திருக்க மகளான எந்தன் மனம் மீள்வது எப்போ? - கொழும்பில் ஈரைந்து வருட காலம் எம்முடன் வாழ்ந்த காலங்களை எண்ணி நிற்கின்றேன் இறையடி சேர்ந்த உங்களை இனி காண்பது எப்போ?
உங்கள் பிரிவால் துயரும் அன்பு மகள் பரமேஸ்வரி (ராணி)
il,クالحج
s
多
z%2/*Zaz%Z/Z7
பெற்றெடுத்து, பேணிவளர்த்து பகுத்தறிவூட்டி, வாடாமல் பாதுகாத்து பாசத்தின் திருவுருவாய் வாழ்ந்த என் தந்தையே - நீ ஒருபோதும் எனை அழவைத்ததில்லை.
வெற்றிடத்தை கண்டு வந்தாடும்
찾.

Page 10
மருமகள்மார் புலம்பல்
மருமகளாகிய எங்களை மகளாய் உரிமை கொண்டீர் பரிவுடனே கதைகள் சொல்லி பண்புடனே புத்தி சொல்வீர் உரிய பேருதவிகளை உவப்புடனே ஆற்றி வந்தீர் அரிய உங்கள் திருமுகத்தை என்றுதான் காண்பதினி?
மருமகன்மார் புலம்பல்
நெடுந்துTரம் சென்றவரே! S உம்நினைவு எம் நெஞ்சினிலே .
இடி போன்ற மரணச் செய்தி கேட்டு நின்றோம் ஒருகணம் எம் இதயம் நம்பமுடியவில்லை எம்மை விட்டு நெடுந் தூரம் சென்றிரே
மருமகன்மார் எம்முடன் பண்புடனும் பாசத்துடனும் பழகுவீரே உங்கள் இழப்பை எம்மால் தாங்க முடியவில்லை ஒருபொழுதில் காணமல் போய் விட்டீரே
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
 

感
Zேனைன்,
விம்பி டெதும்பும் விழிகளிலிருந்து.
ஆசைப் பேரன் என அதிகமாய் பாசம் வைத்து முத்தங்கள் பல தந்து சின்ன வயது முதல் எம்மை சீராக வளர்த்தவரே! என்ன தான் குற்றம் செய்யினும் ஏசாது பொறுத்தவரே! பல்துலக்கி பாடசாலைக்கு படிக்க அனுப்பியவர் - இன்னும் "Jana Computer Tech' எனும் எமது நிறுவனத்தை குத்துவிளக்கேற்றி நாடா வெட்டி ஆரம்பித்து வைத்து உங்கள் ஆசிகளைப் பொழிந்தீர்கள். Computer blood6bulb
சென்று வரும் வரை பார்த்திருந்து சாப்பிட்டவரே - நான் இருக்குமிடம் தேடி இனிய வார்த்தை சொன்னவரே ஈடில்லாத தெய்வம் எங்குற்றாய்
ஏன் மறந்தாய்
பெருக்குடனே எத்தனை பேர் வாழ்ந்தாலும் இருந்தாலும் உனக்கு நிகர் சொல்ல வார்த்தை எதுவும் இல்லை
ம.ஜனார்த்தனன், ம. ஜனகன் ஜனா கொம்பியூட்டர் ரெக் D-floLDurren stab6ft.

Page 11
அப்பப்பாவினுடனான நீங்காத நினைவுகள்
எத்தனை பேர் சூழ இருந்தாலும்கூட சூட்டியை வரச் சொல்லு
என்று என்னையழைத்து என்னிடம் ஒரு சிறுபிள்ளை கேட்பது
போல உங்கள் தேவைகளைக் கேட்பீர்களே அந்த சந்தர்பத்தை
நான் இழந்துவிட்டேன்.
எத்தனை பரீட்சைகளை நாங்கள் எழுதி வந்தாலும் ஆவலுடன்
வீடு திரும்பும் வரை காத்திருந்து விசாரிப்பதை நான் இழந்துவிட்டேன்.
உங்கள் கணக்கு வழக்குகளையும் சாவிகளையும் என்னிடம் தந்து
உங்கள் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் ஆளாகியுள்ளேன்
என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் அந்த பாக்கியத்தையும்
இழந்துவிட்டேன்.
நீங்கள் இறைவனடி சேர்வதற்கு நான்கு நாட்களுக்கு. முன் நீங்கள்
இறப்பதாகக் கனவு கண்டேன் அது வெறும் கனவு என நினைத்தேன்
ஆனால் அதை நீங்கள் நிஜமாக்கிவிட்டீர்களே.
接 உங்கள் பிரிவால் வாடும் பேரன்
வே.ம.ஜனக்குமாரன் (சூட்டி)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

候
என் அன்புக்குரிய அய்யய்யாவுக்கு.
மூன்று தலைமுறையாக வாழ்ந்த பெருமையைக் கொண்டவர் அப்பப்பா. இதுவரை காலமும் அப்பப்பா என்று உங்களை அழைத்ததில்லை. என்றும் செல்லமாக “ஐயையா” என்று அழைத்தேன். பேரப்பிள்ளைகளின் சுட்டித் தனத்தை இரசித்த நீங்கள் எங்களின் அன்புத் தொல்லை தாங்காமலா சென்று விட்டீர்கள்? சாவகச்சேரியில் இடம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் எனது தோள் எலும்பு முறிந்த வேளையில் என்னை சைக்கிளில் ஏற்றி வைத்தியரிடம் கொண்டு போனதைத்தான் மறப்பேனோ?
நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரும் போது எம்முடன் நள்ளிரவு வரை உங்களது அனுபவங்களை மகிழ்ந்து பகிர்வீர்கள் அவ்வாறு மகிழ்ந்தது போதும் என்று தோன்றிவிட்டதோ?
நான் பள்ளியில் கற்றது கையளவு ஆனால் உங்களிடம் கற்றது மலையளவு எனக்கு நீங்கள் போதித்த எத்தனையோ நல் ஒழுக்கங்கள், விழுமியங்கள் என்பவற்றை மறப்பதற்கில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் உங்களைப் போல ஒவ்வொரு முதியவரேனும் இருந்துவிட்டால் ஈடு இணையற்ற எதிர்கால சமுதாயம் உருவாகும் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமேயில்லை என உணர்ந்து ஏங்கி நிற்கிறேன்.
உங்களின் நற் குணங்களோ பல அதில் என் மனதை சிலிர்க்க வைத்தவையோ பல அதில் பலதில் ஒன்று “அவன் மகாதேவன் கண் தெரியாதவன் அவனை நான் கவனிக்க வேண்டும் ஆனால் அவன் என்னை கவனிக்கிறான் விடியக்காலை 4 மணிக்கு நான்
குளிக்க தண்ணி நிரப்பி வைக்கிறான்” என்றீர்கள் 92 வயதிலும்

Page 12
தள்ளாடிய நேரத்திலும் என தந்தைக்கு உதவ நினைத்த உங்கள் X
ஈர உள்ளத்து அருகே நாம் நிற்கவே தகுதியற்றவர்கள். உங்களுக்கு தெரியாததை கேட்டுத் தெரிந்து கொள்ள தயங்கவே மாட்டீர்கள் என்னிடம் ATM card Credit Card என்பவற்றை விளங்கப்படத்தச் சொன்னீர்களே அதை எவ்வாறு மறப்பேன்.
எனக்கு Commercial Bankல் வேலை கிடைத்த போது உங்களிடம் நான் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பாக்கியமே பாக்கியம். என்னை ஆசீர்வதிக்கத்தானோ கடந்த 10 மாதங்களாக எங்களுடன் தங்கினீர்கள்?
வேலைக்குப் போகும் போது சாப்பாட்டை கொண்டு போ, சாப்பிடாமல் இருக்காதே, நேரத்துக்கு சாப்பிடு அடையாள அட்டையை கொண்டு போ என்று ஆதரவாக உத்தரவு செய்தீர்கள். உங்களின் இறுதி நாட்களில் உங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த கடவுளுக்கு என் நன்றிகள்.
நீங்கள் நிலை தடுமாறி விழுந்தபோது உயிருக்கு எதாவது நடக்கும் என பயந்தேன். ஆனால் நீங்கள் இன்னும் வாழ்வீர்கள் என நினைத்த போது ஏமாற்றிவிட்டீர்கள். நீங்கள் இறப்பதற்கு முன்னர் சரியாக நள்ளிரவு 1 மணிக்கு என்னை கண்டீங்கள், அதுதான் நான் செய்த புண்ணியம். உங்கள் இறுதிப் பயணத்தை தொடங்கும்முன் என்னை கண்ணுக்குள் சிறைப்பிடித்து கொண்டு செல்லவோ அந்த நள்ளிரவில் என்னனைக் கண்டீர்கள். உங்களது இறுதிப் பயணத்தை தொடங்குவதற்கு முன் என்னை காண விரும்பிருந்தால் நான் அவ்விடமே வந்திருக்கமாட்டேனே.
என்றும் அன்புக்குரிய பேரன்
ம.ஜனந்தனன் Commercial Bank.
 
 
 
 

ஆண்டுகள் 91 ஆன போதிலும் உங்கள் பிறந்தநாளைப் பேரப்பிள்ளைகள் மத்தியில் நீங்களும் சிறுபிள்ளை போல் எம்முடன் சேர்ந்து கொண்டாடிய நினைவுகள் இன்னும் எம் நினைவுகளில் நீங்காதுள்ளன.
எமக்கு நல்லது கெட்டது எது என்றும் - சிறு துயரம்வந்தாலும் அதற்கு ஆறுதல் கூறி எம் துன்பத்திலும் பங்கு கொண்டு எம்மை இன்பமாக்கிய நாட்களை நினைக்கையில் இனியும் இந்நாட்கள் வருமோ? என எம் விழிகள் விம்முகின்றன.
உங்கள் பிரிவினால் அழுவது விழிகள் மட்டுமல்ல. உடலின் அணு ஒவ்வொன்றுமே இது அவரவர் உள்ளுணர்வுக்கு மட்டுமே கிடைக்கும் அனுபவம்.
உங்கள் சாவைக் கூடச் சாதாரண சயனமாக ஏற்றுக் கொண்டு உபாதைகள் எதுவுமின்றிப் புன்னகையுடனேயே உறங்கிவிட்டீரோ?
உறங்கியது உங்கள் இருவிழிகளுமே தவிர, உங்கள் நினைவுகள் என்றும் எம்முடன் நிஜமாகவே நிழலாடுகின்றன!
உங்களை வழியனுப்ப வந்த உறவுகளைக் காண உங்கள் விழிகள் கூசியது போலும் - அதனால்தான் நிரந்தரமாக உறங்கிவிட்டீரோ?.
“உங்களை அம்மப்பா என்றழைக்கும்’ காலம் இனியும் வருமா எமக்கு?”
உங்கள் பிரிவால் துயருறும் ப. பிரதீபன், ப. சஞ்சீவன் ப. பிரியர், ப. சங்கீதா

Page 13
என் இனிய அம்மப்பா
நான் “அம்மப்பா’ என ஆயிரம் தரம் அழைத்திடினும் இனி நம்மிடத்தில் நீங்கள் வருவீர்களா? ஆறாத் துயர் தந்து அரை நொடியில் மரித்து விட்டீர்கள் ஆற்ற முடியவில்லை இக்கொடும் துயரினை.
என் ஏழு வயதுப் பருவத்தில் நான் முதன் முறையாகத் தாயகம் வந்த போது, உங்கள் எழில் உருவமும் அன்பு உள்ளமும் கண்டேன் எனது அம்மப்பாவின் உறவே தாய் நாட்டின் நினைவுகளை ஞாபகத்தில் வைத்திருக்க உதவியது
எனது 16ம் வயதில் சுவிஸ் நாட்டிற்கு நீங்கள் வருகை தந்திருந்தீர்கள் என்மேல் அன்பும் பாசமும் கர்ட்டிப் புத்திமதியும் கூறினீர்கள் காதோரம் நீங்கள் கூறிய அறிவுரைகளும் சில சுவாரசியமான விஷயங்களும் இன்றும் என்நினைவில் உங்களை நினைக்கச் செய்கின்றன நீங்கள் வழிகாட்டிச் சென்ற உயர்ந்த தன்மைகளை என்றும் என் சிந்தனையில் நிறுத்திச் செயற்படுத்திக் கொண்டிருப்பேன்.
நொடிப்பொழுதில் நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து சென்றாலும் என்றும் அழியா நினைவாக எம்முன் நிழலாக நிஜமாகிக் கொண்டுடே இருப்பீர்கள்.
“நினைவில் என்றும் நல்லது கொண்டீர்! ஆற்றல் மிகு ஆர்வம் கண்டீர்! - வாழ்வு இதுவென நற்பலன் கண்ட உங்கள் ஆத்மா இறைவனின் பொற்பாதக் கமலங்களில் சாந்தியடைய வேண்டுகின்றேன்.”
அன்புப்பேரன், வினோத், வசந்தகுமார் சுவிற்சலாந்து
 
 
 
 
 

அன்புத் தாத்தாவிற்கு.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி வேலுப்பிள்ளை தாத்தாவே எங்கள் மனதிற்கு உறுதி வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் வரை
வாசலில் காத்திருப்பீர் - நாங்கள் வீடு வந்ததும் எங்கள் தோள்களை தான். தட்டி சாப்பிடு என்றுரைப்பீர் எங்கள் மீது நீங்கள் கொண்ட பாசம் தனை நினைத்து பார்க்கின்றோம் - இன்று நீங்கள் தான் எங்கள் அருகில் இல்லையே என்று நெஞ்சம் வாடுகின்றோம் தாத்தா என்கின்ற வார்த்தையின் அர்த்தத்தினை புரட்டிப் பார்க்கின்றோம் - அலை நீண்டு கொண்டே செல்கின்ற பாசப்பிணைப்பு என்பதை உங்களால் உணர்ந்து கொண்டோம் பிறப்பவர் யாவரும் உலகில் இறப்பது உறுதி - அதுபோல் பிரிந்தும் நீங்கள் எங்கள் மனதில் வாழ்வது உறுதி
உங்கள் பிரிவால் வாடும் பேரப்பிள்ளைகள்
சுஜிதா( சுசி) சுஜிவன்(சுசீவன்) ஜெயதேவன்(செயா)

Page 14
எம்மை தனிமையிலே தவிர்க்க விட்டு விண்ணுலகம் சென்று விட்டீர்கள். எத்தனை நாட்கள், எத்தனை
கிழமைகள்,
நீங்கள் எம்மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்
சென்ற ஆண்டுதான் நாம் உங்களுடன் பிறந்தநாளை கொண்டாட கடல் கடந்து வந்தேர்ம். பாசத்துடன் அரவணைத்து அறிவுரைகள் கூறி எம்மை வழி
நடத்தினிர்கள். இவ் நினைவுகள் எங்களை வாட்டுகின்றன.
அப்பப்பா அப்பப்பா என்றழைப்போம் இனி
நாம் யாரை அழைப்போம்.
பேரப்பிள்ளைகள் மெர்லினா, ஜஸ்மினா (சுவிஸ்)
53
sø sø
ഗീ ഗ്ര ഫ്രZ.
அப்பா அம்மா சொல்வதில் உங்கள் சிறப்பை அறிந்திருந்தோம் அருமைத் தாத்தா என்று அழைப்பதால் தானோ எம்முடன் பாசப்பிணைப்பை உண்டாக்கிவிட்டு .
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
 
 

ൈട്രജതു
ஆதவன்Zதவன் தினைவிதைத்து,
QS3O293939R2932, U
எங்கள் உள்ளத்தில் என்றும் உதிராக்
கனியே எங்கள் ஆருயிர் அப்பப்பா - எங்களுடன் நீங்கள் சங்கமித்த நாட்கள் எங்கள்
மனதில் நீங்காது என்றும் நிலைத்து உள்ளது
எங்கள் உள்ளத்தில் உணர்வாகவும் நெஞ்சத்தில்
நெகிழாகவும் உள்ள அன்பு - அப்பப்பா நாங்கள் உங்கள் அன்புக்கு அடிமை - ஆனாலும்
உங்கள் பாசத்துக்கு நாம் பணிவோம் - இவ்
உலகில் பிறப்பவர் யாவரும் இறப்பது நியதி - போல
எங்கள் நெஞ்சங்களில் நினைவுகளால் நிறைந்து பாசத்தின் பிணைப்பை எங்களுக்கு
உணர்த்தி விட்டுச் சென்று விட்டீர்களே - அப்பப்பா
எங்கள் அருகில் நீங்கள் இல்லை என்பதை
நினைக்க எங்கள் நெஞ்சம் வாடுகிறது - இது எங்கள் அன்புப் பரிசாக நாங்கள் உங்களுக்கு
அனுப்பும் இறுதி மடல்.

Page 15
L മശ്രീ മണ
வேலுப்பிள்ளை மாமாவே!
சுருட்டுத்தொழிலை விரும்பிப் புரிந்து உருட்டும் உலகை மதியால் வெல்ல
குரும்பசிட்டிக்கு ஒரு சட்டத்தரணியை முதற் தந்த பிள்ளை வேலுப்பிள்ளை.
தனித்து நின்று உழைத்து நிலைத்து பிள்ளைகளைத் தோப்பாக்கிய
நற் தந்தை
முதுமை வந்து போனாலும் முந்தைய நினைவு நம்மை நீங்மோ வேலுப்பிள்ளை மாமா
அன்புடன்
கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் ஆசிரியர் வெற்றிமணி,சிவத்தமிழ், ஒவியா-யேர்மனி
 
 

மாயெழுவின் மகத்தான மைந்தன். மு க வே
குரும்பசிட்டியூர் மாயெழு உயர் திரு முத்துச்சாமி கந்தையா 5 வேலுப்பிள்ளை(முகவே) அவர்களின் மறைவு எம் மனத்தில் அரைநூற்றாண்டுக்கு முற்பட்ட குரும்பசிட்டியின் செளந்தரிய வாழ்வை 5 நினைவுக்குக் கொண்டுவந்தது. என்னவோ தெரியாது! முக்கியமாக
மானம்பு திருவிழா நினைவுக்கு வந்தது.
குரும்பசிட்டி கிழக்கில் குடிகொண்டு நிறைவாக அருளாட்சி செலுத்தும் முத்துமாரி அம்பாள் அரசடியிலிருந்து புளியடி வயிரவ கோவிலுக்கு ஊரை ஊடறுத்து உலாவரும் கோலாகலம்!. அப்பாடி நினைக்க இனிக்குது நினைவு. அம்பாள் வெள்ளை நிற குதிரை வாகனம் மீதேறி, பக்தர்கள் புடைசூழ அலங்காரமாக பவனிவரும் கோலாகலக் காட்சி கண்டு களிக்க எந்தக் குரும்பசிட்டியானும் தவறுவதில்லை!. அம்பாள் ஊர்வலம் வரும்வேளை வீட்டுவாசல்களில் குலைதள்ளிய வாழை, தென்னம் குருத்து மகர தோரணம், பூம்சரம், வில்பம்குழை முதலியவற்றால் அலங்கரித்து, நிறைகுடம் வைத்து, அடியார்களின் தாகசாந்திக்குக் குளிர்பானமும், தெம்புக்குப் பணிகாரமும் பரிவுடன் மக்கள் பரிமாறி மகிழ்வர். இப்படி, ஆண்டாண்டு தவறாது அம்பாளை வரவேற்று, வீதி உலாவில் பங்குபற்றி மகிழும் ஓர் நல்ல ஆத்மா திரு மு.க.வேலுப்பிள்ளை அவர்கள்.
怒
அமரர் மு.க.வேலுப்பிள்ளை அவர்களை நான் “வேலுப்பிள்ளை அண்ணை’ என்று உறவாடி அன்றும் இன்றும் மகிழ்வதுண்டு. அப்படியே அவரைக் குறிப்பிட இனி ஆசைப்படுகின்றேன். வேலுப்பிள்ளை அண்ணை பிறந்தது மாயெழு குரும்பசிட்டியில். பிறந்தாண்டு 1914. மணந்தது குரும்பசிட்டியின் பிரபல “சிறாப்பர்” குடும்பத்தைச் சேர்ந்த “சுந்தரம்” அவர்களை. ஆறு மகள்மார், நான்கு மகன்மார் ஆக பத்துப் பிள்ளைகள். தொன்நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கொள்ளுப்பேரர்களைக் கண்டு மகிழ்ந்து, இதமாக இறந்தமையின் இரகசியம் எனது கருத்துப்படி வேலுப்பிள்ளை அண்ணையின் “மாசற்ற மனமே!’.

Page 16
மகன் அதாவது, இன்றைய சாவகச்சேரி செந்தில் அச்சக உரிமையாளர் மகேந்திரனுடனும், அண்ணையின் இரண்டாம் மகனான குரும்பசிட்டி மாயெழுவின் முதல் சட்டத்தரணி மகாதேவனுடனும், இருவரும் நல்ல நடிகர், அச்சுக்கோப்பு வல்லுநர். மகாதேவன் பீரங்கிப் பேச்சாளன். பொதுவாக வேலுப்பிள்ளை அண்ணையின் மக்கள் அனைத்தும் அருமை!.
வேலுப்பிள்ளை அண்ணை அந்நாளில் மாயெழுவில் சுருட்டுத்தொழில் முதலாளி, அதேவேளை அவரின் தந்தையின் சொந்த ஊரான பூநகரியில் வேளாண்மையிலும் ஈடுபட்டவர். குரும்பசிட்டி பூநகரி நல்லுறவுக்குப் வலுவான பாலமாக அமைந்தவர் வேலுப்பிள்ளை அண்ணை. ஐம்பதுகளில் குரும்பசிட்டியின் ஆதிக்கம் சுருட்டு முதலாளிமார்கள் வசமே இருந்தது. குரும்கிட்டி கிழக்கில் ஆதிக்கம் செலுத்திய பெரிய சுருட்டு முதலாளி அமரர் பொன்னர் இளையப்பா, ஒரு விந்தை! நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு இயங்கிய இளையப்பா தொழிலகத்தில் இயல்பாக இருக்கும் தொழிலாளர் பிரச்சினைகள் அன்று இருந்ததில்லை!. சீராக இளையப்பா தொழிலகம் இயங்கியமையின் மூலமுக்கிய காரணம் அத்தொழிலகத்தின் 'இயக்குநராக வேலுப்பிள்ளை அண்ணை இயங்கியமையே!
அன்றைய யாழ்ப்பாண கிராமிய வாழ்க்கைமுறை வித்தியாசமானது. பத்துப்பதினைந்து தொகை வீடுகளுக்கு ஒரு பொதுக்கிணறுதான் காணப்பட்டது. அக்கிணறும் குறிப்பிட்ட அனைத்து வீடுகளுக்கும் உரிமையாகவும் இருந்தது. இதனால் சிலசமயம் பொதுக் கிணற்றடியில் பிரச்சினைகள் உருவாகுவதுண்டு. அவ்வேளைகளில் நானறிய “நியமனம் பெற சமாதான நீதிவானகச் செயற்பட்டு பிரச்சனைகளைத் தீர்த்துவுைப்பவர் வேலுப்பிள்ளை அண்ணையே.
 

அந்நாளில் மாயெழு தம்பிநாதர் கடையடியிலிருந்து கட்டுவன் சேனாதிராஜா கடையளமட்டும் - அதாவது அச்சுவேலி பண்டத்தரிப்பு வீதியை மாயெழு வீதியோடு இணைத்து ஒரு பாதை இருந்தது. இப்பாதையை தன்னம் தனியாக இரவு பகல் பாராது அயராது உழைத்து அமைத்த பெருமகன் வேலுப்பிள்ளை அண்ணையே!
நாங்கள் 1987ம் ஆண்டு குரும்பசிட்டியை இழந்தோம், எம் பண்பான வாழ்வுக்கு தொட்டிலாக அமைந்த குரும்பசிட்டி சன்மார்க்க சபை' போன்ற பல சமூக நிலையங்களை இழந்தோம், பெறுமதி மிக்க நூலகங்களை இழந்தோம், அரும்பெரும் தொழிலகங்களை இழந்தோம்.
ஆனால்.
மனத்தால் நாம் எம் ஊரை இழக்கவில்லை, இழக்கவும் மாட்டோம்!, அருள்மிகு குரும்பசிட்டி அம்பாள் அருள் பெருக்கால் மீள ஊருக்குப்போவோம்!.
நாளைய நவீன குரும்பசிட்டியின் ‘மாயெழு அச்சுவேலி - பண்டத்தரிப்புப் பாதை அகன்ற அழகிய வீதியாகி 'வேலுப்பிள்ளை வீதியாக விளங்கும்.
வேல் அமுதன் பிரபல ஆக்க இலக்கிய எழுத்தாளர், திருமண ஆற்றுப்படுத்துநர்.

Page 17
ஏழு பிறப்பும் தீயவை தீண்டாமாண்பினர்
ஆடம்பரம் ஆரவாரம் எதுவும் இன்றி இன்பம் துன்பம் எதுவரினும் அமைதியான முறையில் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து தனது 91 ஆண்டு கால இவ்வுலக வாழ்வைப் பூரணமாகி கரிக் கொணி டு இறைபதமெயப் திய அமரர் மு.க.வேலுப்பிள்ளை அவர்கள் இவ்வுலக வாழ்வு ஓர் முழு நிறைவுபெற்ற வாழ்வு என்பதுடன் எல்லோர்க்கும் ஓர் முன் உதாரனமான கண்ணியமான வாழ்வு என்றும் குறிப்பிடலாம்.
சைவப் பண்பாகும் பத்தி நெறியும் கல்வி வளமும் சகல செல்வங்களும் நிறைந்த கிராமம் இலங்கையின் வடபால் யாழ்ப்பாணத்தின் வடக்கே அமைந்த குரும்பசிட்டி எனும் கிராமமாகும். குரும்பசிட்டி என்றதுமே எம்மனக்கண்டுன் நிற்பவை சமூகசேவை ஸ்தாபனங்களும், ஆலயங்களும், அமைதியான மக்கட் தொகையினருமே. குரும்பசிட்டி மக்கள் அனைவரிடமும் காணப்பட்ட ஓர் பண்பு எந்த விடயத்தையும் சமூக நோக்குடன் அணுகும் இயல்பாகும். இந்த வகையில் தான் அமரர் திரு வேலுப்பிள்ளை அவர்கள் பிரச்சனைகளை அணுகும் பாங்கும் அமைந்திருந்தது. இதனால் ஊர் மக்களும் அவர்பால் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தனர்.
குடிசைக் கைத்தொழிலாகிய சுருட்டுத் தொழிலை சிலகாலம் தாமே நடாத்தி வந்த போதும் தொழிற்சாலை நலிவடைந்தபோது இவரது தொழில் நுட்பங்களையும் அர்ப்பணிப்பியையும் அவதானித்த சுருட்டுத் தொழிலதிபர் திரு. பொ. இளையப்பா அவர்கள் திரு வேலுப்பிள்ளை அவர்களைத் தன்னுடைய ஸ்தாபனத்துடன் இணைத்துக் கொன்டார்.
 

இவருடைய தன்னலமற்ற சேவையால் திரு. இளையப்பா அவர்கள் நல்ல பயன் பெற்றார். ஓய்வு நேரங்களில் ஆலய வழிபாட்டிலும் சமூக சேவையிலும் அக்கறை காட்டிய அமரர் அவர்கள் தம் இல்லத்திற்கருகில் புளியடி வைரவர் ஆலயத்தை தினமும் தரிசிப்பதுடன் தமது காவல் தெய்வமாகவும் கொண்டார்.
“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்’
என்ற வாக்கிற்கிணங்க பண்புடைய நற்புத்திரரை பெற்ற அமரர் வேலுப்பிள்ளை அவர்களை எழுபிறப்பிலும் துன்பங்கள் அணுகமாட்டா.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
மனோ பூரீதரன் தொழில் நீதிமன்ற நீதிபதி
மேலதிக நீதவான்
கொழும்பு.

Page 18
பூலோகத்திலேயேசிவலோகத்தைக்கண்டவர்யூ
திருவாளர் வேலுப்பிள்ளை - தவமாது சுந்தரத்தின் வரமான தாலிப்பிள்ளை. சுருட்டுத்தொழில் அதிபர் இளையப்பாவின் கணக்குப்பிள்ளை.
களங்கமில்லாத மனம்
அது -
பூநகரி மண்ணின் தனம்!
அதில் - குரும்பைநகர்ச் செம்மண்ணின் குணம் சான்ற ஆழமான கிணறு - அள்ள அள்ள வற்றாது ஊர்த் தோட்டங்களுக்கும் பாய்ந்து அயலூர்களையும் வளப்படுத்திய அன்புக் கிணறு
இருமண் கலவையிலும் விளைந்தவை தருமக் குழந்தைச் செல்வங்கள்!
இடையில் வெள்ளை வேட்டி தோளில் தொங்கும் சால்வை அசல் தமிழனின் அடையாளங்கள்! அறவே விரும்பாதது ஆடம்பரக் கூடாரங்கள்!
நடையில்
காலடிப் புல்லைத்தானும் காயப்படுத்தாத வேகம்!
முடியில் எந்தப் பிரச்சனைகளின் முடிச்சுகளையும் நொடிப்பொழுதில் அவிழ்த்துவிடத் தக்க விவேகம்!
 

புன்முறுவல் - பொழுதுபடாத முதுசொம்! பொறுமை - பழுதுபடாத கவசம்!
உடல் உள்ள வாசம் குடும்ப நலப் பாசம்!
இவரது உறவு இளையப்பருக்குப் பெரும் நிறைவு. இணைபிரியாத இவர்களது நட்பு தொழிலைத் தாங்கிநின்ற கப்பு ஊரின் வளர்ச்சிக்கும் நல்ல வைப்பு!
எதையும் தாங்கும் இதயம் ஏறுமலை உறுதியிலும் மேல்! மதிநல மைந்தன் மகாதேவனுக்கு மாறுபடு புல்லர் இழைத்த தீங்கைக் கூறுபடச் செய்த வேல்!
மணியான உள்ளத்துக்கும் மகத்தான ஒழுக்கத்துக்கும் துணிவான ஆளுமைக்கும் தூங்காத ஊக்கத்துக்கும் அணியாகக் கிடைத்தது தொண்ணுாறையுந் தாண்டிய வாழ்வு நோயொன்றும் இல்லாத சாவு
வேலுப்பிள்ளை அண்ணே! உன்தவத்தின் மகிமைதான் என்னே! நீ பூலோகத்திலேயே சிவலோகத்தைக் கண்டவன் - அதனால் அணுக்கத் தொண்டனாகவே வைத்துக்கொள்வான் நஞ்சை உண்டவன்!
வாழ்க உன் பண்புகள்! சூழ்க உன் நினைவுகள்!

Page 19
பெறாமக்கள் அஞ்சலி
எழுதி நின்ற விதி வழியில் எமை யெல்லாம்
இதமாக அணைத்த எங்கள் ஐயாவே
அமரத்துவம் எய்திவிட்ட உங்கள் பாதக்
கமலத்தை என்றென்றும் தொழுவோமே.
அயலவர் புலம்பல்.
அன்பாக எமையெல்லாம் அணைத்தே அகமகிழ அன்பாய் பேசி இங்கிதமாய் வரவேற்று
பண்பாக பாசமுடன் “முதலாளி” என்று நாமழைக்க மண்மீது யாருண்டு மனமே கலங்குகின்றதே.
のやっ
ઉલ્ટેો\
ツ介
ସ୍ମୃତୀ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனுதாயச் செய்தி .
சிவத்தொண்டன் திரு மு.க. வேலுப்பிள்ளை அவர்களது மறைவு குரும்பசிட்டியூர் மண்ணிற்கு பெரும் இழப்பாகும். பண்பாளர் ஆகவும் சிறந்த பக்திமானாகவும்
விளங்கிய இவரின் இழப்பு உலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.
மங்கலமாகிய மனைமாட்சியை செல்வனே சிறப்புற ஆற்றி அதன் நன்கலமாகிய நன்மக்கட்பேற்றினைப் பூரணமாகப் பெற்றவராகிய அமரர் திரு மு.க. வேலுய்பிள்ளை அவர்கள் தமது மகள்மார், மகன்மார், மருமகன்மார், மருமகள்மார், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர் அனைவருக்கும் செய்ய வேண்டிய நற்பணிகள் யாவற்றையும் பரஸ்பரம் புரிந்து அனைவருக்கும் ஓர் கலங்கரை விளக்கம்
போல் திகழ்ந்து மறைந்துள்ளார்.
அன்னாரின் மறைவினாற் துயருற்றுக் கலங்கி நிற்கும் அன்னாரது குடும் பத்தவர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திக்காகவும், குடும்பத்தவர்கள் மன அமைதி பெறவும் வேண்டி குரும்பசிட்டியூர் வயிரவ பெருமானை பிரார்த்தித்து நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி சாந்தி!
குரும்பசிட்டியூர் மக்கள்

Page 20
இறுதியாத்திரை :
இவர் வாழ்ந்த வீட்டின் முற்றத்திலே స్తో * ** போட்டிருந்த பந்தலிலே 4 தென்னோலைத் தோரணமும் * மாவிலைத் தோரணமும் நிறையத் தூக்கி குலையோடு கறிவாழை கட்டி ఫ్కి அன்னர் கிடந்த அழகான பேழையினை ** கொண்டு வந்து வைத்து. స్ళీ
- بين في " மதகுருவும் வந்திருந்து மறைகள் ஒத
வேலுப்பிள்ளை மகன்
மகேந்திரன். வலக்கையால் பூனிட்ட உலக்கை பற்றி பெற்றவரின் காரியத்தை செய்ய செய்ய பார்த்திருந்த மக்கள் எல்லாம் பதைத்து விம்மியழ. பெறாமக்கள் மருமகள் பேரப்பிள்ளைகள் மற்றுள்ளோர்கள் கோவென்று கதறியழ. ஊரில் உள்ள பெரியோர்கள் இரங்கல் செய்ய தந்தை கிடந்த அழகான பேழையினை அன்பர்கள் சேர்த்தெடுத்து சுமந்துவர வீதிகள் தெருக்கள் ஊடே அலைகடல் போல் மக்கள் வெள்ளம் பெருக. ஊர்வலமாய் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அங்கிருந்த சிதையினிலே ஏற்றிவைத்து
மகேந்திரன் வலம் வந்து
கொள்ளியிட்டுத் தளர்ந்து சோர்ந்தான்.
53
 

வெற்றியின் இரகசியம்
அன்பு காட்டு ஆனால் அடிமையாகிவிடாதே!
இரக்கம் காட்டு ஆனால் ஏமாந்து போகாதே!
பணிவாய் இரு ஆனால் கோழையாய் இராதே!
கண்டிப்பாய் இரு ஆனால் கோபப்படாதே!
சிக்கனமாய் இரு ஆனால் கஞ்சனாய் இராதே! வீரனாய் இரு ஆனால் துஷடனாய் இராதே!
சுறுசுறுப்பாய் இரு ஆனால் பதட்டப்படாதே!
தர்மம் செய் ஆனால் ஆண்டியாகி விடாதே!
பொருளைத் தேடு ஆனால் பேராசைப்படாதே!
பொறுமையாய் இரு ஆனால் சோம்பலாய் இராதே!
உழைப்பை நம்பு ஆனால் கடவுளை மறந்து விடாதே!
SA illo,%
N

Page 21
விநாயகர் துதி
பிடியத னுருவுமை கொளறிகு கரியத
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்பலி வலமுறை யிறையே.
 

伺
TOJYL00LTLMTeMLLLLMLeLLLLMLeLeTsLsLLMeLLLLLMMLLLLLeLLLYJLLS
எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுள்ளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
ஆடு கின்றிலை கூத்துடை
யான்கழற் கன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதும்
செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்
றதுமிலை துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
செய்வதொன் றறியேனே.

Page 22
)ܡܼܿܬܝ
திருவிசைப்ப
செங்கணா போற்றி திசைமுகா போற்றி
சிவபுர நகருள் வீற் றிருந்த அங்கணா போற்றி அமரனே போற்றி
அமரர்கள் தலைவனே போற்றி தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர்
சாட்டியக் குடியிருத் தருளும் எங்கணாயகனே போற்றிஏ பூழிருக்கை யிறைவனே போற்றியே போற்றி.
சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
தார்பெறு வார் உலகில் ஊரும் உலகும் கழற உளறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.
தெண்ணிலா மலர்ந்த வேணியா யுன்றன்
றிருநடங் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு
வாலிதா மின்பமா மென்று கண்ணிலா னந்த வருவிநீர் சொரியக்
கைமல ருச்சிமேற் குவித்துப் பண்ணினா னிடி யறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்.
 

дори цар
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக் கிறை சத்திச் சரவண முத்திக் கொரு வித்துக் குரு பர முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்படது கற்பித் திருவரு முப்பத்து மூவர்க்குத் தமரரு பத்துக் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரி மத்தைப் பொரு தொரு பட்டப்பகல் வட்டத் திகிரியி பத்தற் கிரதத்தை கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தருபொருள் பகூடித் தொடு ரகூதித் தருள்வது தித்தித் தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்க நடிக்கக் கழுகொடு திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப்பவு ரிக்குத் தரி கடக கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகு குகு குத்திப் புதை புக்குப் பிடியென கொட்புற்றெழ நட்பற்றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குல கிரி குத்துப்பட வொத்துப் பொரவல
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கேன்முறை யரசு செய் குயைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்ளிமல்க
ஆமன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
என வோதும்
மடிபேணக்
லிரவாகப்
மொருநாளே
கழதாடத்
எனவோ தக்
முதுகூகை
பெருமாளே

Page 23
திருப்பெருந்துறையில் அருளிய சிவபுராணம்
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின்று அண்ணிப்பான்தான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கொடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தையடி போற்றி தேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பருக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
 
 

ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பனியான்
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா அநின்றஇத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யளன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாக வேதங்கள் ஐயா எனஓங்கி, ஆழ்ந்த கன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொற்றா யினனல்லாம் போயகல வந்தருளி மெஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

Page 24
ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தையுட் தேனூறி நின்று பிறந்த பிறப்பருக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஒரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்கனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தானி லாத சிறியேற்கு நல்கி நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையும் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த் தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய் நின்ற தோற்றச் சுடர்ஒளியாய் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறி வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேளம் ஐயா அரனேஓ என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

Page 25
伺
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற்க ரியானைச் சொல்லித் திருவடிக்கிழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
 
 
 
 
 
 
 
 

2939,293,293,293,293,293,293,293,2939&Oso
53 கந்தர் சஷ்டி கவசம்
留°本 NšA: காப்பு
நேரிசை வெண்பா w
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும் நிஷடையும் கைகூடும் நிமலன்அருள் கந்தர் சஷ்டி கவசந்
தனை.
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை &óg5b JITLä5 &ól60őTaól6Oos uuIT மையல் நடஞ்செயும் மயில்வா கணனார் கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில்_வருக s 派
se
LLLLLLLLL LL LLL LLL LLLLL LLL 0LL LL 0LLLLLLL LGLLLLLLL LLLL LSLS SLLLLLLLL LLLL LLLL LLLL LLLL L LL LLLGL LLL 0L LLL LLG LLLLLL LLLLGL LLLLLLLLLLLLL LLLLLLLL

Page 26
ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா! நமோ நம நிபவ சரவண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளு மிளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் ப்ட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
 
 
 
 

இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககன செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொமொக
நகநக நகநக நகநக நகனெ
டிகுகுன டிகுகுண டிகுகுண டிகுண
JJJJJJJ JJJJJJJ JJJJJ JJJJ ffffff fffffff ffffff sffs
(6G6(6(6 (6(6(606 (6(6(606 (6(6(6
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் எரகச் செல்வ! மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் 6NDT6IOT 6D1T6IOT 6DT6IOT (86), GFLDb லீலா லீலா லீலா விநோதனென்று உன்திரு வடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டும் கண்ணினைக் காக்க விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

Page 27
TJJeTLLLLLTLLeLMLLLLeeeLLLLLLLLeLeLcLLLLLLLLLLsLLLLMLLeLJ
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவ விருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா னாடியை முனைவேல் காக்க
எப்போழுது தும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
 

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரு மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நகமும் மயிரும் நீண்டமுடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்ததுடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

Page 28
மாற்றான் வஞ்சகள் வந்து வணங்கிட
காலதூதாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுட னங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்க செக்கு செக்கு செதில்செதி லாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் எறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
 
 
 
 

நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரே ழுலகமும் எனக் குறவாக ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்றிரு நாமம் சரஹண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்னா விருக்க யானுனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் னாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருள் ஆக
அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்

Page 29
佩
TJLeTsLTLsLLTLLLMsLLLMeTLLLMcLTLLLLLMLLTLMeLLLMLMLYJ
mNN 53 மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் S வாழ்க வாழ்க வாரணத் துவசம்
族。
SK வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து மைந்தன்என் மீதுன் மனமகிழ்ந்து அருளித் தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேச முடன்ஒரு நினைவது ஆகிக் கந்தர் சஷ்டி கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறுஅணிய அஷடதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்னர் எண்மர் அருளுவர் மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
 

நவமதன் எனவும் நல்எழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத்து அடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாய்க் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடி பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்துஎனது உள்ளம் அஷட லட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துஉண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்துஅழுது அளித்த குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத்து ஆட்கொள்ள எந்தன் உள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோர் அரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவனும் சரணம் சரணம் சண்முகா சரணம்.
இ2\இ2Nஇ?

Page 30
ASAJJJL0TLLLeLLsMLLLLLLLL S S S S SSAAASLSLJLLELLLLLLLLLLLLLLMLLLYJS
ن)
எங்கள் குடும்பத் தெய்வம் அமரர்
முத்துச்சாமி கந்தையா வேலுப்பிள்ளை அவர்களின் திடீர் இழப்பினை அறிந்து ஒபோடிவந்து உதவியவர்களிற்கும், ஆறுதல் கறியோருக்கும், மரணச் சடங்கில் உதவிசெய்த அந்தணர்களிற்கும், மரணச் சடங்கில் கலந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டோருக்கும், மலர் வளையம் சாத்தியோருக்கும், வெளிநாடுகளில் இருந்தும் உள்நாடுகளில் இருந்தும் தொலைபேசி, தொலைநகல், தபால் அட்டைடுலம் அனுதாபச் செய்தி அனுப்பியோருக்கும், மோட்சதீபநன்னாளாகிய இன்று கிரியைகள் செய்த அந்தணர்களிற்கும் மதியபோசனத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இம்மலரினை எழுதித் தொகுத்தவருக்கும் அச்சிட்டுஉதவியஅச்சகத்தாருக்கும் மற்றும் உதவிகள் செய்தும் எம்மால் கறத்தவறிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை இருகரம் கய்யித் தெரிவிக்கின்றோம்.
S.
இங்ங்னம்,
குடும்பத்தினர்.
 


Page 31
கந்தையா !
இராமலிங்கம்
!.
கய்ரமணியம் வேலுப்பிள்ளை
மகேந்திரன் மனோன்மணி தவமணி
கனகாம்பிகை
1) கலாநிதி
--
சத்தியானந்தன் 1) அபிராமி 11) அபிராம் III) SOL6OT6n
2) ஹேமலதா
ஜெயசவுந்தன் 1) அஞ்சலி I) ஆதீஸ்சன்
3) ա(Ա960III
H தவஈசன் 1) அஜீவன் I) அஜிசன்
4) பிரபாஜினி s
முகுந்தன்
கருணாரட்ண V ரெறன்ஸ்
ne"bgb மகாதேவன்עII
al U6). TGof
J Y Y 1) அஜித் 1) ஜனார்த்தனன்
2) பமிலா 2) ஜனகன்
-- ஆனந்தப்பா 3) ஜனக்குமாரன்
I) ரிசான் III) FITLDJAT 4) ஜனந்தனன்
3) சந்தினி
H எரிங்ரன் 1) சனில் I) செனல்
4) சுசந்தா
十 டினேசி

பாக்கியம்
+ சுந்தரம் முத்துத்தம்பி அருளானந்தம்
சிவசத்தி GarboodDIT Aரமேஸ்வரி DOGTrasprejr DGabarbarar
ar -- + 十 + பத்மநாதன் வசந்தகுமார் செகராஜா அன்னவதனி தவராணி V 21 ܢܠ J ܠ J V J V J Y ץר y - Y - Y 1) பிரதீபன் வினோத் 1) சுஜீதா மெர்லினா ஆதவன் -H ஜஸ்மினா மாதவன் 2) சஞ்ஜீவன் குகநேசன்
1) வடிாய் 3) பிரியா 11) ஷாய்ரா
4) சங்கீதா 2) சுஜீவன்
-- தீபாகல்யாணி
4) ஜெயதேவன்

Page 32


Page 33
| எது நடந்ததோ, அது நன்ற எது நடக்கிறதோ, அது நன் எது நடக்க இருக்கிறதோ, 8 உன்னுடையது எதை இழந்த எதை நீ கொண்டு வந்தாய், எதை நீ படைத்திருந்தாய், ! எதை நீ எடுத்துக் கொண்ட
எதை கொடுத்தாயோ, அது எது இன்று உன்னுடையதே மற்றொரு நாள். அது வேறெ
S இதுவே உலக நியதியும் என
 
 

கவே நடந்தது. ராகவே நடக்கிறது. துவும் நன்றாகவே நடக்கும்: ாய்? எதற்காக நீ அழுகிறாய்? அதை நீ இழப்பதற்கு?
து வீணாவதற்கு? யோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. இங்கிருந்தே கொடுக்கப்பட்டது.
அது நாளை மற்றொருவருடையதாகிறது. ாருவருடையதாகும்.
து படைப்பின் சாரம்சமாகும்
பகவான் ரீ கிருசஷ்ணர்