கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அர்ச்சனை மாலை (மாணிக்கத்தியாகராஜா செல்வராஜா)

Page 1
மாணிக்கத்த செல்வராஜா
ஞாபகார்த்
 

O DIT GOOGDAD
]ரர்
நியாகராஜா
(சித்தியார்) ്.', ( )
ந்த மலர்

Page 2

அர்ச்சிப்போம் தந்தைக்காய்
தோளிலும் மார்பிலும் இட்டுச் சீராட்டி வளர்த்து இன்றெமைப் பிரிந்து வான்புகுந்து மகேசன் மலரடி சேர்ந்த:
அமரர் மாணிக்கத்தியாகராஜா செல்வராஜா (சித்தியார்)
அவர்கட்காய் இந்நினைவஞ்சலி மலரை சிவநாமம் சொல்லியுங்கள் கரங்களிலே சமர்ப்பித்தோம்!
ஓம் நமசிவாய

Page 3
தந்தையே.
ளநினைர் யேன்
நித்தமும் நினைக்கின்றேன்.
1) எம்மனத் திரையிலென்றும் அழியாத ஒவியம்நீ
செம்மனச் செம்மலேநீ சென்றவழி வணங்குகிறேன் தத்தித்தவண்ட நாள்முதலாய் புத்திவந்து தெளியும்வரை மெத்தெனவே தாங்கியென் மேனியைநீ காத்திருந்தாய்,
2) என்கல்வியெனும் வேள்விக் காகுதியாய் நின்றவனே
மேன்மேலும் அறிவுபூட்ட அயராது உழைத்துநின்றாய் என்மேனி புண்பட்டுத் தவிக்கின்ற வேளையிலே உன்குருதி ஈந்தென்னைக் கரைசேர்த்தாய் என்சொல்வேன்.
3) திடமானவுடல் தளராமனவுறுதி எதிர்ப்புக்கள் சூழ்ந்து கடல்போல வந்தாலும் வழிசொல்லும் அறிவாற்றல் இளவயதின் இறுமாப்பில்யான் இடர்ப்பட்டுத் தவிக்கையிலே தோள்கொடுத்துத் தாங்கிநன்றாய் தாரணியில் வாழவைத்தாய்
4) காலம் நிற்பதில்லை காலனுமோ ஒய்வதில்லை
பால்வார்க்கும் பாக்கியமும் எனக்குக் கிட்டவில்லை நீள்விசும்பு கடந்து நித்தியத்துட் சென்றுவிட்டாய் பாழும்மணம் இங்கே பரிதவித்து ஏங்குதையோ,
5) நான்வாழும் காலமெல்லாம் உன்நினைவும் வாழும் பின்குலம்வாழ உந்தன் நினைவு துணையாகும் மாலிசந்திக் கடவுள் தாள்சேர்ந்து நீயும் நலமாக வேண்டுகிறேன் சிவயோகன் பாதம்

/ N
உருவமும் அருவமாகி.
ಸ್ಖಾ ಶಿಸ್ದಿವೆ!
O8 Օ5 o6 1929 2006
அமரர் மாணிக்கத்தியாகராஜா செல்வராஜா (சித்தியார்)
ஆண்டுவிய மைப்பசியில் ஆதிவா ரம்பரணி பூண்டு மதிபொலிந்த பூரணையில் - வேண்டுபவர் சித்தியார் என்றழைக்கும் செல்வரா ஜா அவர்கள் நித்தியன்தாள் சேர்ந்தார் நினைத்து.

Page 4

தேடிய பூடு காலுக்குள்ளே
இருக்கின்ற
விசுவநாதனை
என்னுள் வாடித்திரிந்த வருந்த வேண்டாம்.
நாதனமான காரணமொன்றும்
த்தில்லவே இல் இருந்த
இருக்கும்
யாழ்ப்பாணத்தாரெல்லோருக்குமாகக்
கருமாதிகளெல்லாஞ் செய்து முடிந்தது
இனிமேல் உங்களுக்கியைந்தபடி
அன்பாக உலகில் நடந்த
ஆண்டவன் அடிக்கீழ் அமர்ந்து வாழ்க!
3O.I.94O
དག་གི་གོག་ན། ལག་ཆ། Ru་ཀ་
தேடிக்கிரிந்த फासीuगीतsiी. காசிக்கு வந்து ! ޝޯޗޫޑީ ’’.g: ":": "" கண்டேன் t \ స్టేషన్స్ట్ర

Page 5
ساسان مسمی سطدیS
/്-് ബ4ഃക്ഷേ
V YA 22999 مرصواته リ* 769ہ 92ی97G) 42 مجموعے ۔ ۶ہ 4 مئی چچے 4-y;ഈഴ കൃ: ഭക. g-ee60- 944లో g/് ഉണ് മം സ്ഫു /Co/? pri 6 Y2 /7ބ ޗަ G{\قއ υ سے کہ اس (قلات که تکه اGرحهای 剧 لاصلاحe)ڑھچسے. جیو2 مرچی دھیمرہ:حرحریرمینیچے 8قع ہویدیا۔(کے بoدھتخs علاله دیم هجو عدم حتی. وی عم9یت
 
 
 

தாலாட்டு -1 (உயிர் வருக்கக் கோவை)
அரியும் பிரமாவும் அடிமுடியுந் தேடித் தெரிவரி தாய்நின்ற தெய்வமே கண்வளராய்
ஆராயும் வேதமுதல் ஆகமங்கள் தாமறியாப் பேரா யிரமுடைய பெம்மானே கண்வளராய்
இரவும் பகலுமுன்னை ஏத்தித்துதிப் போர்க்குவரந் தரவல்ல தெய்வமே சங்கரனே கண்வள்ராய்
ஈசனே எவ்வுயிர்க்கு முயிராய் விளங்குகின்ற தேசனே செல்வக் கொழுந்தேநீ கண்வளராய் உன்னையல்லால் வேறுதெய்வ முள்ளத்திற் கொள் பொன்னப் பனைக்காக்கும் பூரணனே கண்வளராய் ஊரும் பேருமில்லா வுத்தமனே சிவனடியார் சாருந் தவக்கொழுந்தே சம்புவே கண்வளராய் எல்லைசொல்ல வல்லார் எவருமில்லா மெய்ப்uெr
அல்லலெல்லாம் நீக்கும் அரனேநீ கண்வளராய்
ஏழைக்காய் வந்திரங்கி எழில்வைகை யாறடைத்த தாளைமற வாமலருள் தந்தவனே கண்வளராய்
ஐயனே யாரூரில் ஆரூரன் தனையாண்ட தெய்வமே சிந்தா மணியேநீ கண்வளராய் ஒன்பதுவாய்த் தோற்பைக்கு ஞயிரடங்கி நிற்கும்வ அன்புசெய்த வண்ணலே ஆருயிரே கண்வளராய் ஒம்சிவாய நமவென்று ஒதுகின்ற அன்பருக்கு ஆம்என் றுறுதிதந்த அத்தனே கண்வளராய்
ஒளவியம் பேசா அறிவுதந்த ஆண்டவனே நவ்வி மழுவேந்தும் நாயகமே கண்வளராய்

Page 6
அத்துவிதப் பொருள் காப்பாம்
அத்துவி தப்பொருள் காப்பாம் - எனக் கடியார்க ளென்றென்றுங் காப்பாம் சித்தருந் தேவருங் காப்பாம் - என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம்
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம் - எனக் கருளை யளிக்குங் குருபரன் கர்ப்பாம்
பஞ்சப் புலன்களுங் காப்பாம் - என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பாம் - நல்ல
(அத்து) 1
(அத்து) 2
(அத்து) 3
குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம் (அத்து) 4
சந்திர சூரியர் காப்பாம் - எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம்
(அத்து) 5

ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
அந்தியுஞ் சந்தியும் ஆசான் திருவடி சிந்தை செய்பவர் சீவன் முத்தரே ஆன்மா நித்தியம் என்று அறிந்தவர் அங்கு மிங்கு மாய லைந்திடார் இல்லை யுண்டென எடுத்துச் சொல்லொணா இறைவ னிதயத்தில் என்று முள்ளவன் ஈசன் திருவடி யென்றும் ஏத்துவார் இறந்து பிறந்திடார் இவர்கள் முத்தரே உலகமே கோயிலாய் உணர்ந்து கொண்டவர் உண்மை முழுவதும் என்று காண்பரே ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார் உதய பானுபோல் உலகில் வாழ்வரே எல்லாஞ் சிவமயம் என்று கண்டவர் எங்கு இருப்பிலென் என்ன செய்யிலென் ஏக மாகிய இறைவன் பாதத்தை எண்ணு வார்தினம் நண்ணு வாரவர் ஐயப் பாடின்றி யகத்தது உணர்பவர் ஆப்தர் வாக்கியம் என்று கூறுவார் ஒருபொல் லாப்பு மில்லை யென்றவர் உயர்ந்த நல்லூர் இருந்த மாதவர்
வே g) அடியா ருள்ளக் கமலத்தே யணையா தெரியும் .
unsafeSanka
முடியா முதலே முக்கண்ணா மூவர் போற்றும் முழுமுதல்ே முடியாப் பிறவிக் கடலிடத்தே மூழ்கா தென்னை .
uursioTGolesfrsinisti
அடியே னுன்றன் குடியன்றோ அரசே யுனக்கே − யடைக்கலர்ே

Page 7
வேல் வேல்
அன்புடனே ஐந்தெழுத்தைச் சொல்லு - வேல் வேல் ஆசானடிக்கிழ் அமர் நில்லு கொஞ்சங்கொஞ்ச மாய்மனத்தை வெல்லு - வேல் வேல் கூடாத கூட்டத்தை விட்டுநீ செல்லு
வஞ்சியர் ஆசையைத் தள்ளு - வேல் வேல் வாழ்நாள் ஆசையைப் பேணமற் கொள்ளு சஞ்சலம் வந்தால் வரட்டும் - வேல் வேல் சற்றும் அசையாமல் சாந்தத்தில் கட்டு
ஐம்பூதம் நியல்ல நம்பு - வேல் வேல்
ஐம்பெறி ஐம்புலனும் நியல்ல நம்பு
வராமற் காப்பாய் - வேல் வேல்
வேறுபொரு வில்லா நிட்டையிற் சேர்ப்பாய்
டைவந்த போது - வேல் வேல்
t திருப்பெயர் தப்பாமல் ஒது நஞ்சைப்போற் பிறன்பொருள் எண்ணு - வேல் வேல் நாங்கள் சிவமென நாளும்நீ நண்ணு
கஞ்ச மலர்ப்பதம் வாழ்க வேல் வேல் கருணை நிறைந்த பெரியோர்கள் வாழ்க இந்திரன் முதலியோர் வாழ்க - வேல் வேல் இவ்வுலகி லுள்ளேர் யாவரும் வாழ்க.
சிவமேநா மாமென்று சிந்திக்கச் சீரார் சிவமேநா மென்று தெளிவோம் - அவமே மனமே யுடன்போகும் மற்றுமோர் தெய்வம் கனவிலும் எண்ணாது காண்
எல்லாஞ்சிவமே
அப்பனும் அம்மையுஞ் சிவமே அரிய சகோதரருஞ் சிவமே ஒப்பில் மனைவியுஞ் சிவமே ஒதரும் மைந்தரும் சிவமே
செப்பில் அரசருஞ் சிவமே தேவாதி தேவருஞ் சிவமே இப்புவி யெல்லாஞ் சிவமே என்னை யாண்டதுஞ் சிவமே

INTRODUCTORY.
The souls flight to eternity from it's repository in the heart/conscience of the late Maniccathiagarajah Selvarajah took place between the hours of 3.00 p.m and 4.00 p.m on Sunday 05.11.2006- a full moon day, after 77 years and 04 months, after the soul's advent into the mother's womb and the birth on 08.06.1929.
The events that marked the passing away are also noteworthy as the process ofa solemn and calm event leading to- a visit to the temple to get god's grace and blessings initiated followed by on return from shrine and resting on a sofa, the lights deprived by the blackout was restored in the Jaffna peninsula-aboon. He promptly addressed his beloved wife Pushpam, to set in motion the motor and to fill up the receptacles with water.
The mundane events commencing with the temple visit, restoration of lights, filling up the water receptacles led to calm background leading to the lighting of the inner lamp for the spiritual journey of the soul's flight to eternity whilst the mind remained calm during the passing away. The calm mind during the passing away is likened by Sri Krishna's preceptofthe inner lamp kept in the inner recess of the mind, a spot sheltered from the wind. Indeed the most essential condition for drawing benefit from the inner lightthe mind should remain calm had been byprovidence remained calm.
Swami Vivekananda says, “To those who have not controlled their minds, the world is either full of evil or at best a mixture of good evil. This very world will become to an optimistic world, when the world will become a masterofour minds.'
An Upanishad seer's fervent prayer to god: "From darkness lead me to light Tamaso majyothigamaya.'
Whatever language and expression, lighting the inner lamp is what we wanted in life in order to walk on the path that leads to inner light and
joy.
It is customary to refer to objects that we cannot see with our eyes as being hidden away from our sight. This does not mean the subjects do not exist. Thus if a person dies there is no destruction as such the person has merely shoved his physical body and is continuing to exist, hidden away from our sight as he continues to live. There is no destruction of the soul.
MAY THE SOULATTAIN PEACE.
OM SHANTHI SHANTHI SHANTHI!!

Page 8
“LIGHTING THE INNER LAMP (Excerpts from the Vedanta Kesari)
1) Like a shrine without a lamp human life without the light of devotional faith is incomplete. Sometimes the inner light is compared to "Self Knowledge” which reveals the real nature of our being and the true purpose of our life.
Lord Krishna in the Gita says:- "Those devotees who are unwavering in there devotion out of sheer compassion for them, I abide in their hearts, destroy the darkness in them bornofignorance, by the luminous lamp of knowledge.
Acharya Shankara elucidates what Krishna meant:
"Characterized by discrimination, fed by the oil of contentment due to bhakthj, fanned by the wind of absorbing meditation on me, furnished the wick of pure consciousness and the constant cultivation of Brahmacharya and the pious virtues held in the reservoir of the heart devoid of worldliness, placed in the wind sheltered recess of the mind withdrawn from the sense objects and untainted by attachment and aversion shining with the right knowledge engendered by incessant practice of concentration.
In other words when a person leads a life of devotion purity and is free from all sense cravings, he develops a kind of inner faculty that guides and illuminates his intellect and all his life.
2) Inner Lamp is the lamp of Viveka (discrimination) and Shraddha (faith and devotion) when a person begins to rise above his lower nature which consists of considering sensory pleasures-gross and subtle, on the highest and having self centered life he soon realizes the need for a more reliable source of guidance than what he had been following till then. His search for a higher source begins only when higher nature becomes active.
3) Sri Krishna speaks of two persons residing in every human being. These two persons refer to two natures that every human being naturally inherits as a human being.
The lower nature is ego driven and holds enjoyment of senses as the only way to become happy. It is the cause of all misery of all crimes of all tragedies and all pain. Lower nature manifests itselfnaturally.

The higher nature though inherent in every human being, awakens only when a person is disillusioned with the false promise of happiness that lower nature lures him into. It is the source of all strength and happiness, wisdom and kindness. It is the higher nature, which really makes a man great worthy of human admiration and emulation.
4). It is a truism to say one needs guidance in life. As in mundane matters, so also inspiritual matters one needs guidance and help. The real guru never tries to make his student dependent on him. Being a true master of inner freedom and joy, one of the ways he does is light up the inner lamp in the student's head.
5). a) A well known phrase given by Buddhaan his parting message to his beloved student Ananda, says: “Be a lamp unto yourself, ATMADEEPO BHAVA". One can become a lamp unto oneself, only if he is awakened to a higher mode of living and willing to directhis steps in its radiance.
b) Saint Ramakrishna compared every human being with an eternal divine light, burning in the inner recess of one's personality. But in most cases it is like a lamp with a glass cover which has a thick layer of black soot that it lets out very little light. But if one can clean the glass case, the light begins to shine forth. The cleaning of the glass case means purifying the mind from its present clinging to matter and making it fit medium for inner light to emanate. The light is always there- we have to only make the glass clean.
6). The inner lightshines forth through VIVEKA and SHRADDHA.
а) VIVEKA, means the power to segregate through, the power of intellect to make positive discrimination and choosing the right course of thought and action. Viveka determines what to let in what to avoid. It is like a sentry at the entrance of a building. Viveka is the power that questions checks and prevents whatever is unwanted and harmful. It also welcomes and preserves all helpful and nourishing ideas. Viveka as sinequanon for higher life. Viveka cannot function without vairagya or detachment, to be detached is to be fair and unprejudiced. Detachment essentially means detachment to sensory pleasures and becoming free from the hold of ego.
b) SHRADDHA, is combination of faith respectfulness and courage. The marvelous courage: Nachiketa- the young hero kathopanishad had (believing in the efficacy of the vedic yagna) objected to his father's hypocrisy of his charity by giving away the scrawny cows,
contradictory to what the scriptures had laid down. When he met yama

Page 9
and wanted to know a particular ritual to go to heaven, saying that he is entitled to this, as he is equipped with Shraddha.
7). Letus therefore not conclude that Viveka and Shraddha are required only inspiritual matters, we need them in all departments of life and in all situations that we encounter in our day to day life. The so-called distinction between "spiritual” and "worldly" is fictitious. We have only one life and one mind. There is an interesting story to illustrate pretended distinctions:
"A certain Elector of Cologne, Germany was also an Archbishop, one day he used profanity in the presence of a farmer who did not conceal his astonishment. Trying to justify himself he said, "my good man, I am swearing not as an Archbishop but as Prince.” The farmer replied, "But your Highness when the Prince goes to hell, what will become of the Archbishop?” If a part of the mind tells an untruth or indulges in anger, will the other part of the mind remain unaffected and spiritual?
8). Lighting up the Lamp.
O Lighting up the inner lamp of Viveka and Shraddha begins with the awakening to a new reality of life. This means learning to lookatlife from a different perspective, a better perspective of"discovering the ultimate goal of life", which according to Vedantais to experience “the all pervading reality ofone being the atman'.
O Sri Ramakrishna's home spun phrase "God realization is the
purpose of human life', drives home the same truth in a much more intimate manner.
O Besides doing meditation and prayers, one of the very vital constituents of this seeking lies in keeping a watch over oneself.
O Keeping the inner lamp of constant discrimination and
Shraddha burning is an essential need for healthy living.
O Let not the goal of life slip from our inner eyes.

We need to replace or trim the wig from where the light of wisdom emanates and lights our steps,(The wick means attitude and outlook towards life) The calm mind is likened by Sri Krishna to a lamp kept in a spot sheltered from the wind. The most essential condition for drawing benefit from its inner light, the wind should remain calm. Maintaining the inner calm may be challenging but it is worth all the effort. Swami Vivekananda says:
"To those who have not controlled their minds, the world is either full of evil or at the best a mixture of good and evil. This very world will become to us an optimistic world when we become masters of our minds.”
When we are equipped with our inner lamp the darkness of the eternal world can't threaten us anymore for, "light has no fear of darkness.'
Says the Bible: For wilt light my candle; the Lord my God will enlighten my darkness.”
An Upanishad seer Seer's fervent prayer to God: "From darkness lead me to light Tamaso majyothi gamaya.'
Whatever be our language and expression, lighting the inner lamp as what we want in life, in order to walk in the path that leads to light and joy!
M.T. Toronto, Canada.

Page 10
2 -
dojLDuulb
absTL
சித்தியா ரெனப்படும் செல்வ ராஜரின் உத்தம வாழ்வினை உன்னியஞ் சலிக்க
மத்தக மாமுகன் மாலி சந்தியான் வித்தக விநாயகன் விரைகழல் காப்பே.
திதி வெண்பா
ஆண்டுவிய மைப்பசியில் ஆதிவா ரம்பரணி பூண்டு மதிபொலிந்த பூரணையில் - வேண்டுபவர் சித்தியார் என்றழைக்கும் செல்வரா ஜா-அவர்கள் நித்தியன்தாள் சேர்ந்தார் நினைந்து.
சித்தியார் - காரணப் பெயருமாயிற்று
தன்னியல்பால் சகலருக்கும் உதவு மன்பன்
சதிஎதிர்ப்பென் றெதுவரினும் தளரா நெஞ்சன் பன்னரிய ஆங்கிலமும் தமிழும் என்றும்
பளிச்சிட்ட நாவன்மைக் கேக வேந்தன் மன்னியசிந் தனையாளன்மதிநுட் பத்தால்
மற்றவர்தம் தயர்துடைத்தமேதை, மண்ணோர் எண்ணியன சித்தியெய்த வைத்தல் கண்டார் இவர் சித்தி யாரெனவே இயம்பி னாரே.

வேறு
கடல்சூழ்ந் தெழில்-செய் ஈழத்தில்
கலைகள் பல்கும் வடபாலில் வடம ராட்சி மண்ணகத்தே
மாண்பார் புலோலித் தம்பியெனும் கொடையா ளன்பேர் கொள்மரபிற்
குறிக்கும் சீலக் குலக்கொழுந்தாம் திடஞ்சேர் தியாக ராஜாபிள்ளைச் சீமான் பெற்ற திருமகனாம்.
செகத்தோர் போற்றும் மாணிக்கத்
தியாக ராஜா என்பார்தம் அகத்தாள் பெற்ற ஐவருள்ளே
அமையும் செல்வ ராஜாவின் மகத்தாயத் திகழ்ந்து மறைவான
வாழ்வை உன்னிச் சகத்தோர்கள் திகைத்தார் கண்ணிர் உகுத்தார்கள்
திரும்பத் திரும்ப நினைவாரால்:-

Page 11
இருபதாம் நூற்றாண்டின் இருபத்தி ஒன்பதிலே மிருகசி ரிடத்தினிலே மேதையெனத் தோன்றியவா யூனெட்டில் நீபிறந்தாய் வானெட்டும் புகழ்படைத்தாய் தேன்சொட்டும் வார்த்தைகளற் சிந்தைகளைக் கொள்ளைகொண்டாய் காலன்வந் தக்கால்உன் கதைகேட்டுப் போயிருப்பான் சீலமல்ல என்றோ நீ செப்பா திருந்துவிட்டாய்
வேதனையே தந்தாய் விலகியதால் என்றுன்றன் சோதரர்கள் சோர்ந்துபடும் துயர்நிலைமை காணாயோ நடராஜா அண்னருன்றன் நலமென்றும் வேட்டாரே துரைராஜா அண்ணருன்றன் சுகங்காணத் துடிக்கையிலே தேவராஜா அண்ணர் தேகநலம் நாடிநிற்க மங்கையர்க் கரசியுந்தான் வாழ்வாய்நீ என்றிருக்க எங்குற்றாய் என்றென்றே ஏங்குதையா இவ்வுலகம்.
மயில்வா கனமென்ற மாண்புடையோன் பெற்றமகள் பரமேஸ் வரிஉன்றன் பாரியாள் பரிதவிக்க புஷ்யம்' எனும் அன்னவளின் புஷ்யமுகம் வாடவிட்டு நிஷடைகொண்ட தால்ஊரே நிலைகள்தடு மாறுதையா.
யுவீந்திரா என்ற வுன்றன் ஏகமகன் மீதேநீ உயிர்முழுதும் வைத்திருந்த துலக மறியுமையா சதிகார வெவ்வினையால் தாய்நாடு விட்டகன்ற மதிபடைத்த நின்மகனின் மலர்முகமுங் கண்டிலையே அன்னவனுங் காணவர ஆகா நிலைமைகண்டு கண்ணி ருகுத்தூரே கதிகலங்கி நிற்குதையா!
அழகேந் திரர்பெற்ற அரும்புதல்வி நின்மருகி எழில்வதனங் காணாமல் இதயந் துடித்திருப்பாய் மாமா எனஅழைக்கும் வார்த்தையொன்று கேட்டுவிட்டால் கோமா நிலையுறினும் கொல்' என் றெழுந்திருப்பாய்! 'ரமணி" என நீயழைக்கும் ரகமான வார்த்தைதனை இரவுபக லாகஅவள் எண்ணித் துடிப்பாளே!
பேரன் ஒருவன்ஹரி பிரணவனென் றெப்போதும் வாரிசா யுள்ளவன்மேல் வாரப்பா டோடிருந்தாய் பூத்த முகப்பொலிவும் புரையறியா வெண்மனமும் தாத்தா எனும்பதமும் சந்ததமும் வேட்டிருப்பாய் காலன் பிரிக்குமுன்னே காதகர்கள் தம்பிரிப்பும் பாசத் துறவிடையே பாதகர்கள் குறுக்கிடும் என்ற நிலையில் இருந்து படுவதிலும் பொன்றுதலே மேல் என்று போந்தாயோ புண்ணியனே.

வேறு
மாண்புமிகு மாணிக்கத் தியாக ராஜர்
மணங்களிக்க வளர்ந்தமகன் செல்வ ராஜர் மேன்மையுறக் கந்தவரோ தயாக்கல் லூரி
விளங்குபர மேஸ்வராக் கலைக்கூ டத்தும் தான்பயின்று மிகத்தேறி அரச தேவை
தருமெழுது வினைஞர்திணைக் களத்துட் சேர்ந்தும் மேனிலைசேர் நிதியமைச்சுள் வேலை பெற்றும்
மிகுநிதிய சோதகராய் விளங்கி னாரே
விளங்கியவர் யாழ்நகர்மேல் நீதி மன்றுள்
வினையில்தொலுக் காரிப்பு முதலி யாராய்த் துலங்கியதால் சமாதான நீத வானாய் 'ஜே.பீ.யூ. எம்' என்ற பட்டம் பெற்று தலங்காக்கும் பிரதேச சபைக்கு வாய்த்த
தலைவரென விளங்கிப்பின் ஒய்வுற் றக்கால் அலங்கல்மலி விண்ணவர்தம் அழைப்பை ஏற்று
அரன்பதமாம் பெரும்பதவி அடைந்துள் ளாரே
தேற்றம்
பிறந்திட்டபோதும் பெருங்குடி மைந்தன், பிறந்துகண்கள் திறந்திட்ட போதும் கருணையின் வேந்தன், செயற்படுங்கால் சிறந்திட்ட பண்பினன் சேவையன நம்செல்வ ராஜானவன் இறந்திட்ட தென்கொல்! இதயங்கள் தோறு மிருப்பவனே!

Page 12
1)
2)
3)
4)
5)
6)
D - சிவமயம்
சிவயோத சுவாமிகள் பேரிலான வாரவணக்கம்
தாயிற் சிறந்த தயாபர னேநின்றன் தாள்பணிந்த நேயற்கு வாய்த்த நிலைக்களன் ஆகிய நித்தியனே நோயற்ற திவ்ய பெருவாழ்வு நல்கும்நன் நோக்குடனே ஞாயிற்று வாரம் வருவாய் சிவயோக நாயகமே.
பூமியில் வந்து பிறந்துவிட் டோமினிப் போமளவும் நாமுனை நாடும் ஒருமனப் பாட்டுடன் நானிலத்தே தாமரை இலைமிசைத் தண்ணி ரெனவாழும் தன்மைதரச் சோமவா ரந்தொறும் வருவாய் சிவயோக சுந்தரனே.
பொங்கர வக்குலம் புறப்படக் கட்டளை போட்டநின்றன் பங்கய பாதம் பணிபவர்க் கிங்கோர் பயமுமுண்டோ இங்கிள ஞாயி றெனவேஎம் மாயை இருளகல மங்கள வாரம் வருவாய் சிவயோக மாதவனே.
சதமெனக் கண்டது நின்பத மல்லால் தரணிமுற்றும் இதந்தருஞ் சாதன மேதறியேன் அற்பன் என்செய்குவேன் பதமலர் போற்றும் அடியரைக் காக்கும் பரிவுடனே rபுதனெனும் வாரம் வருவாய் சிவயோக புண்ணியனே.
அரிதான பட்டினத் தார்தம் துறவும் அகழ்ந்துகண்ணைத் தருவிர னன்பும் திருமூலர் சித்தியும் சம்பந்தனின் திரு ஞான வீறும் ஒருதேவ னான சிவமயனே குருவாரந் தோறும் வருவாய்எம் யோக குருபரனே.
வக்கிர நெஞ்சரும் வன்கண் ணருஞ்செயும் மாயமெல்லாம் உக்கிர கோர உருத்தாங்கி ஒங்கும் உலகத்திலே அக்கிர மங்கள் அழியஆன் மீகம் அலர்ந்தெழவே சுக்கிர வாரம் வருவாய் சிவயோக சொற்குருவே.

7) நினைவார் நினைவில் நிழலாடும் அன்பின் நிருமலனே
மனமே தொடர்ந்து நினைநாட நின்று மகிதலத்தே தினமேயு முன்னைத் தியானத்திற் கண்டு தெளிவதற்குச் சனிவாரந் தோறும் வருவாய் சிவயோக தற்பரனே.
8) பணிசேரு மிந்தக் கனடாவில் வந்துமெய்ப் பாடுபட்டும்
அநியாய மாயான் மீகங் கெடுதற் ககமுடைந்தும் தனியே கிடந்து தவிக்கும் மனங்கள் தழைத்தெழவே சனிவாரந் தோறும் வருவாய் சிவயோக சற்குருவே.
9) மாட்டிவிட் டாணயன் பூலோக வாழ்வில், மதிமயங்கச் சேட்டைவிட் டார்துட்ட மூவரோ டைவர், சிறிதிரங்கிக் கூட்டிவிட் டான்சிவன் நின்னடிக் கென்னைக், குருபரனே மீட்டுவைப் பாய்சிவ யோகாஎந் நாளும் விலகலற்றே.
10) மாமறை போற்றும் சிவயோகர் வார வணக்கமிதைத் தாமறிந் தோதுவர் சற்குண ராவர் தளர்வறியார் பூமியில் நீடு பெருவாழ்வு வாழ்ந்துவிண் போயடைவர் நாமிது சொன்னோம் சிவன்செய லாக நடக்கட்டுமே.
"இரா. ச. பஞ்சாட்சரம்”

Page 13
சிவமயம் அர்ச்சனை மாலை காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்பொழுது இறைவன் திருநாமத்தை “சிவசிவ” என்று உச்சரித்துக் கொண்டு கீழ்க்காணும் திருப்பாடலை ஒதுக.
மேலைவிதியே! வினையின் பயனே! விரவார்புரம்
மூன்று எரிசெய்தாய்! காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை
களைவாய் கறைக்கண்டா! மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேன்
அடியேன் வயல்சூழ்ந்த ஆலைக்கழனிப் பழனக்கச்சூர் ஆலக்கோயில்
அம்மானே! (கந்தரர்)
காலைப் பிரார்த்தனை
பெருங்கருணைக் கடவுளே! சென்ற இராத்திரியிலே தேவரீர் அடியேனைக் காத்து அருளினதின் நிமித்தம் தேவரீரை அடியேன் துதிக்கின்றேன். இந்தப் பகலிலும் அடியேனைக் காத்து அருளும். அடியேன் பாவங்கள் செய்யாவண்ணம் அடியேனைத்தடுத்து ஆட்கொண்டு அருளும், அடியேன் முன்படித்த பாடங்களும் இனிப் படிக்கும் பாடங்களும் அடியேன் மனசிலே எந்நாளும் தங்கும்படி அருள்செய்யும்.
(நாவலர்)
நீராடும் பொழுது
கழித்துக் கலந்ததோர் காதற் கசிவொடு காவிரிவாய்க் குளித்துத் தொழுதுமுன் நின்றஇப் பத்தரைக் கோதில் செந்தேன் தெளித்துச் சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப அளித்துப் பெருஞ்செல்வ மாக்கு மையாற னடித்தலமே.
(நாவுக்கரசர்)

Xn ;ሃዖ ́} /} , -- ጳ• நத 90012g)........
வக்ர துண்ட மஹாகாய ஸிரியகோடி ஸ்மப்ரபாயா நிர்ஷக்னம் குருமேதேவ ஸர்வ கார்யேஷ ஸர்வதா
வளைந்த துதிக்கையை உடையவரே! பெரிய உடலை உடையவரே! கோடி சூரியர்களுக்கு இணையான ஒளியை உடையவரே! தேவனே! எனக்கு, எப்போதும் எல்லாக் காரியங்களிலும் இடையூறுகளில்லாமல் செய்வீராக.
2. ஒம்காரம் பிந்து ஷம்யுக்தம்
நித்யம் தயாந்தி யோகின காமதம் மோக்ஷதம் சைவ ஓம்காராய நமோ நம
பிந்துவுடன் (புள்ளி) கூடிய ஓம்காரத்தை யோகிகள் எப்போதும் தியானிக்கிறார்கள் அசைகள், விருப்பங்கள் இவற்றை நல்குவதும் விடுபேற்றை உறுதியாக அளிப்பதும் ஆகிய (அந்த) ஓங்காரத்திற்கு வணக்கம்.
3. குருர்ப்பிரம்மா குருர் விஷ்ணு குருர்தேவா - மஹேஸ்வர
குருஸாஷாத் பரம் ப்ரம்ம தஸ்மை பூரீகுரவே நம
குருவே காத்தல் கடவுளாகிய பிரம்மா ஆவார். குருவே காத்தல் கடவுளாகிய விஷ்ணு ஆவார் குருவே அழிப்புக் கடவுளாகிய தேவன் மஹேஸ்வரன் ஆவார் குருவே சாக்ஷாத் பரப்பிரம்மமுமாவார். போற்றற்குரிய அந்த குருதேவருக்கு வணக்கம்.
காயத்ரிமந்திரம் ஒம்
பூர் புவஸ் வஹா
தத் ஸவிதர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நடிப்ரசோதயாத்
ஒ மாதா முக்காலம், மூவுலகம், முக்குணம் ஆகியவற்றில் உறைபவளே. எனது புத்தியைக் கூர்மையடையச் செய்து சூர்ய ப்ரகாசம் எல்லா இருளையும் அகற்றுவது போல் எனது சகல அறியாமையையும் அகற்றி எனது புத்தியைச் சாந்த, சித்த நிர்மலமானதாக பிரகாசிக்கச் செய்யும்படி
Ud உன்னைத் துதிக்கிறேன்.

Page 14
நீராடிய மின்னர் நீறு அணியும் பொழுது
கருவாய்க் கிடந்துஉன் கழலே நினையும் கருத்து உடையேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதிநீ பாதிரிப் புலியூர் அரனே! (நாவுக்கரசர்)
காலை உணவு உண்ணத்தொடங்கு முன்னர் ஒதுக
அண்டம்ஒர் அணுவாம் பெருமைகொண் டனுஓர் அண்டமாம் சிறுமைகொண் டடியேன் உண்டவுண் உனக்காம் வகையென துள்ளம்
உள்கலந் தெழுபரஞ் சோதி கொண்டநாண் பாம்பாப் பெருவரை வில்லிற்
குறுகலர் புரங்கள் மூன் றெரித்த கண்டனே நீலகண்டனே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே (திருவிசைப்பா)
தொழிலுக்குச் செல்லும்பொழுது தொழிலைத்தொடங்கு முன்னரும் மனத்துள் சொல்லவேண்டிய
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே (திருமூலர்)
பகல் உணவு கொள்ளு முன்னர் ஒதுக
அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னன் பாலிக்கும் ஆறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே (நாவுக்கரசர்)

மாலையில் விளக்கு ஏற்றும் பொழுது
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. (நாவுக்கரசர்)
மாலைப் பிரார்த்தனை
மகாதேவரே! அடியேன் செய்த பாவங்களை எல்லாம் பொறுத்து அருளும். இந்த இராத்திரியிலே அடியேனைக் காத்து அருளும். அடியேன் தேவரீரை அறிந்து தேவரீருக்குப் பயந்து தேவரீர்மேல் அன்பு வைத்து தேவரீரைத் துதித்து வணங்கும்படி செய்தருளும். அடியேன் இறக்கும்பொழுது தேவரீரை மறவாததியானத்துடனே தேவரீருடைய பாதத்திலே சேரும்படி அருள் செய்யும்.
(நாவலர்)
இரவில் உறக்கத்திற்கு முன்னர் பிரார்த்தனைப் பாடல்கள்
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி யென்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே (56Tefastb) இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி அறவாநி ஆடும் போதுன் அடியின்கீ பூழிருக்க வென்றார்.
(séissupT) பூமியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.

Page 15
மந்திர ஜெபம்
தங்கள் தங்கள் உபாசன மூர்த்தியின் மந்திரத்தைக் குறைந்தது படுக்கைக்குப் போகுமுன் 108 முறையும் படுக்கையால் எழுந்தவுடன் 108 முறையும் ஜெபம் செய்யும் பழக்கத்தை ஒவ்வொருவரும் பழகிக் கொள்ளுதல் நல்லது. இதனால் மனஅமைதியும் சித்தகத்தியும் மந்திரசித்தியும் இறைவன் திருவருளும் கிடைக்கும். ஓம்சோஹம், ஓம் நமசிவாய, ஓம்சக்தி, ஒம் ரீ கணேசாய, ஓம்சரவணபவ, ஓம்ராம், ரீராம், ஓம் நமோ நாராயணாய, ஹரி ஓம், ஓம் முருகா, ஒம் ரீ மகா கணபதையே நம. இம்மந்திரங்களில் உங்களுக்கு விருப்பமான எந்த ஒருமந்திரத்தையும் தெரிவுசெய்து கொள்ளலாம். மந்திரங்களுள் உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாடு எதுவும் இல்லை.
தியானம் முடிந்ததும் கீழ்க்காணும் திருப்பாட்டினைச் சொல்லி உறக்கம் கொள்ளல் நலம்.
அண்டர் பிரானுந் தொண்டர் தமக் கதிபனாக்கி அனைத்தும் நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீ சனுமாம் பதந்தந்தோம் என்றங் கவர்பொற் றடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக் கொன்றைமாலை வாங்கிச் சூட்டினார்.
வேண்டுதல
அருட்பெருஞ்ஜோதி! தனிப் பரம்பொருளே! w
அடியருக்கருளும் ஆனந்தத் தேவே! உன் அடிமலர் இணைகட்கு அடைக்கலம் அடைக்கலம்! உனதண்டப் படைப்பில் அடிமையின் நிலைமை அணுவிலும் அணுவென அறைதலும் அதிகமே ஆயினும் எமை நீ அன்னையைப்போல அன்புடன்பேணி அருள்புரிகின்றனை இன்னமும் எங்கள் தம் இருவினை நீக்கி இன்னருள் புரிந்து நன்னயம் பெருகும் நலம் பல தருவாய்! முத்தி அளித்திடும் முதல்வா! எம்தம் சித்தம் திருத்திச் சீர்பெறச் செய்வாய் தீயசெயல்கள் சிறிதளவும் யாம் செய்யாதிருக்கத் திருவருள் புரிவாய்! பிறப்பெனும் பெருநோய் பிடித்திடாதெமக்குச் சிறப்புடன் முத்தி சீருடன் அருளே!

தீபாராதனையின்போது பாடவேண்டியவை
உலகெலாம் அன்பு மேவி ஒருகுல மாக வாழ்க! கலமுந் துயரும் வீழ்க கருணையும் களிப்பும் பொங்க நலமெலாம் விளைய ஞான ஞாயிறு பொலிய நாளும் இலகுவாய் சுத்த ஜோதி இறைவனே போற்றி போற்றி!
ஒள்ளிய துரிய வானில் ஓங்கிடும் ஜோதி வாழ்க தெள்ளியர் உள்ளே அன்பாய் திகழ்பரஞ் ஜோதி வாழ்க! உள்ளமே தில்லை யாக ஓமொலி இசைய தாக துள்ளிநன் னடன மாடும் தூயசிற் ஜோதி வாழ்க
விநாயகர் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தி னிளம்பிறை போலு மெயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
பிள்ளையார் அர்ச்சனை பிரணவ வடிவே வந்தனம் வந்தனம்! கொம்பெழுத் தாணி கொண்டுயர் மலைமேல் பாரதம் எழுதிய பண்டிதா போற்றி! வியாசரும் சுகரும் வால்மீகி முனியும் பாசமொ டிசைத்த பரமனே போற்றி! அயில்வேல் பிடித்த மயில்வேல் முருகன் புவிசுற்றி வருமுன் சிவசக்தி சுற்றி ஞானக் கணிபெறு நம்பியே போற்றி! பாசத்தை விலக்கப் பாசாங் குசமும் பக்தியைத் துலக்கப் படிகமா லையுடன் மொழிவளங் காட்டும் எழுதுகொம் புடனே பூரண முள்ளே பொதிமோ தகமும் கொண்டொளிர் கரங்களின் கொடைவளம் போற்றி மதிரவி யக்னி மருவுமுக் கண்ணால் துதியடி யார்க்கருள் சுடரே போற்றி! காமனை எரித்தோன் கண்மணிப் பிள்ளாய்

Page 16
தூமன யோகத் தோற்றமே போற்றி பிரம சரியத்தைப் பிழையறக் காத்தாய் அரியநற் சித்திகள் அளிப்பாய் போற்றி! சூரனை வேலன் சுட்டிடத் துணைசெய் வீரருள் வீர விசயனே போற்றி! சுபகா ரியத்தைத் தொடங்கி எதற்கும் முன்னே நிற்கும் முதல்வா போற்றி! பஞ்சபூ தங்களைப் பலபல உருவாய் அமைத்துயி ரீந்தறி வானாய் போற்றி! கதிர்விடு மூலக் கனலே போற்றி! கதிரவன் உள்வளர் காந்தமே போற்றி! வினைக்கட் டறுக்கும் விமலா போற்றி! உயிர்களை யூட்டும் பயிர்வளம் போற்றி! பயிர்களை பூட்டும் பசுமையே போற்றி! காண்புவிக் குயிராய் காண்பாய் போற்றி! ஆண்பெண் வடிவாய் ஆடுயிர் போற்றி! திருவுல குயிர்கள் ஒருகுல மாக மருவிடும் அன்பு மருந்தே போற்றி! ஆண்மையைப் பெருக்கிக் கேண்மையை நெருக்கி ஒற்றுமை துலக்கும் ஒருவா போற்றி! அறமுடன் வளமும் அறிவுடன் பலமும் அன்புடன் அழகும் அளிப்பாய் போற்றி! அழகுடன் கற்பும் அமுதுடன் சுவைபோற் பழகிடச் செய்யும் பண்பே போற்றி! யோகமும் உலகின் போகமும் வாழ்வும் இசையுடன் கவிபோல் இணைப்பாய் போற்றி! பாட்டுடன் கூத்தும் படமுடன் சிற்பமும் ஏட்டுடன் எழுத்தென இசைப்பாய் போற்றி! தங்கமெய்ப் புதல்வரைத் தந்தொளி வளர மங்கல மனையறம் வளர்ப்பாய் போற்றி! சோதனை வரினும் வேதனை வரினும், ஆயிரம் படைகள் அடுத்தடுத் துறினும் அபய மளிக்கும் அண்ணல் போற்றி! எதிர்ப்புகள் வசவுகள் எத்தனை வரினும் எடுத்தநற் பணிகளை முடித்திடுந் துணையே!

வெற்றிக் குயிரே விநாயக போற்றி! அமைதியில் ஊன்றி ஆற்றலைப் பெருக்கி ஆற்றலை யெல்லாம் அருட்பணி யாக்கி, எல்லாரும் வாழும் இன்பமே காண, நல்லார் தம்மை நடத்திடுந் தலைவா! ஆவணிச் சதுர்த்தியில் அருணோ தயத்திற் பூம்புன லாடிப் புதுவன புனைந்து, மந்திரம் ஓதி மறைகளைப் பாடி, சிந்தனை செய்து சிவமுறத் துதித்து, வந்தனை செய்து மாமலர் தூவி அமுத முடனே ஆத்ம நிவேதனம் படைப்போம் இன்பப் பரமா போற்றி! உள்ளன் பெல்லாம் உனக்கே யர்ப்பணம் சிந்தையும் செய்கையும் தெய்வமே யர்ப்பணம் பூவெலாம் அர்ப்பணம் பாவெலாம் அர்ப்பணம் அருவியும் குருவியும் ஆழியும் தொண்டரும் பாடும் பாட்டெலாம் பதியே அர்ப்பணம் பேச்செலாம் உனது பேச்சே யாகுக மூச்செலாம் உனது முயற்சியாய் வளர்க நினைப்பெலா முனது நினைப்பென நீள்க எழுத்தெலா முன்னை வழுத்திட வெழுக வழுத்திடும் வாக்குன் வரமென மிளிர்க சிரத்தினில் உன்னொளி திகழுக நன்றே கருத்திலுன் கருத்தும் கையிலுன் செயலும் காலிலுன் வேகமும் கண்ணிலுன் கருணையும் நாவிலுன் அருளிசை நற்கவி வளமும் மெய்யிலுன் பலமும் வீறுடன் ஊறுக இதயத்தில் உன்னருள் உதயமா குகவே உயிரினில் உயிர்ப்பென உன்னுணர் வோங்குக உன்பசிக் கனலினை ஊட்டுக உணவே நாடிகள் உனது நாதயா ழாகுக! நரம்பினில் உனது நல்லுரன் பொலிக உதரமுன் சக்தி ஓட்டமா குகவே! மெய்யெல்லாம் உனது தெய்வ மின்சாரம் ஏறுக சிவசக்தி ஊறுக யாங்கும்

Page 17
அங்கமெல் லாமுன் தங்கமாளி கையாய் உயிர்வாழ் வெல்லாம் யோகமே யாக ஏகமாய்ப் பூரண போகமாய்ப் பொலிக! போகத்தில் ஆன்ம தாகமும் தணிக! ஐயகன நாதா ஐயகன நாதா! ஆறா தாரமும் ஆயிர விதழும் மகாகுண் டலியின் மன்றம தாகி சுத்த ஓம்சக்தி சுதந்தர மாக சச்சிதா னந்தத் தாண்டவ மாடி அதுவே இன்பப் புதுவாழ் வென்னப் பொலிந்திட வரந்தரு புலவா போற்றி! ஓம்சுப மங்கள ஒளியே போற்றி! ஒளிக்கணம் உலவும் வெளியே போற்றி! சிவபுரங் காக்கும் தேவர் தலைவா! மார்கழி மாச மாண்புறு சஷ்டியில் ஆர்வமோ டிந்த அர்ச்சனை மாலையைப் பாடியே உன்னைப் பணிந்தோம் காவாய்! சித்தி அருளாய் சீர்மை அருளாய் வித்தை அருளாய் வெற்றி அருளாய் சக்தி அருளாய் சமத்துவம் அருளாய் பக்தி அருளாய் முத்தி அருளாய் சரணம் சரணம்! சதுர்மறை முதல்வா! சரணம் சரணம் சத்சங்கத் தலைவா! சரணம் சரணம் சற்குரு மணியே! சேனா பதியின் ஞான பதியே நானா விதமாம் நன்மைகள் ஓங்குக பொதுமறை பொலிக புண்ணியந் திகழ்க விஞ்ஞா னத்தின் விளக்கமே போற்றி! மெய்ஞ்ஞா னத்தின் வேதமே போற்றி! மரண பயத்தை மாய்ப்பாய் போற்றி! விதியை வெல்லும் மதியே போற்றி! கருத்தினி லினிக்கும் கரும்பே போற்றி! அடியார் துயரங் கடிவாய் போற்றி! " அன்பருக் கபயம் அளிப்பாய் போற்றி! இன்ப மளிக்கும் இறைவா போற்றி!

ஓங்கா ரத்தின் உட்பொருள் போற்றி! ஒளவைக் கருள்செய் ஜங்கர போற்றி! ஞானா னந்த வானே போற்றி! அறிவே போற்றி! ஆற்றலே போற்றி! இளமையே போற்றி! இன்பமே போற்றி! கண்ணே போற்றி கருத்தே போற்றி! விண்ணே போற்றி! மணியே போற்றி! விமலா போற்றி! வித்தகா போற்றி! பொறையே போற்றி! போதமே போற்றி! கணபதி போற்றி! கரிமுக போற்றி! குணபதி போற்றி! குருவே போற்றி! விக்ன விநாயக சேவடி போற்றி! சித்தி விநாயகநின் பொன்னடி போற்றி!
முருகன்
திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவப் பொருவடிவேலும் கடம்பும் தடம்புய மாறிரண்டும் மருவடிவான வதனங்க ளாறும் மலர்க்கண்களும் குருவடிவாய் வந்தென் உள்ளங்குளிரக் குதிகொண்டவே.
முருகன் அர்ச்சனை
ஓம் சிவக் கனலே, ஓம் சுத்த ஜோதி, ஓம்ஷண் முகனே சரவண பவனே சுரர்படைத் தலைவா சுப்ர மண்யா மந்திர வடிவே வந்தனம் வந்தனம் அருளே யான பொருளே போற்றி அன்பே யான நண்பா போற்றி இருளிடர் போக்கும் இரவியே போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி! சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி! வேலா தானவர் காலா போற்றி! 10
சூரனை கொன்ற வீரனே போற்றி! குன்றைப் பிளந்த குமரா போற்றி! குகனே! உமையாள் மகனே போற்றி!

Page 18
இதயக் குகையின் கதிர்மணி போற்றி! ஓங்கா ரத்துள் ஒலியே போற்றி! நீங்கா துள்ளே நிறைவாய் போற்றி! புலவா! ஞானப் பொலிவே போற்றி! சங்க மிருந்த தமிழா போற்றி! முருகா திருமால் மருகா போற்றி! ஐயா பன்னிரு கையா போற்றி! 20
அடியார் துயரங் கடிவாய் போற்றி! கருத்தினி லினிக்கும் கரும்பே போற்றி! அழகா போற்றி குழகா போற்றி! வள்ளி யுடனே வடிவேல் பிடித்து, மயில்மே லேறி வருவாய் போற்றி! செஞ்சுடர் மேனி செவ்வேள் போற்றி! அருட்பெருஞ் சக்தி ஆண்டவா போற்றி! நானெனும் அறிவே யானாய் போற்றி! அன்பருக் கபயம் அளிப்பாய் போற்றி! துன்பந் துடைக்குந் துரையே போற்றி! 30
இன்ப மளிக்கும் இறைவா போற்றி! சிந்தைக் கினிய தேவா போற்றி! கருத்தைக் கடந்த கடவுளே போற்றி! கனியினும் கரும்பினும் இனியாய் போற்றி! மலரில் மணமாய் மணப்பாய் போற்றி! சோதியில் விளைந்த சுடரே போற்றி! வெய்ய பகைவரை நொய்யப் புடைத்துக் களத்தில் வெற்றி காட்டுவாய் போற்றி! ஆணவச் செருக்கை நாணப் புடைத்து நிருதர் குருதியில் நீந்துவாய் போற்றி! 40
மரண பயத்தை மாய்ப்பாய் போற்றி! விதியை வெல்லும் மதியே போற்றி! வீரருக் காண்மை விளைப்பாய் போற்றி! அடிமைத் தளைகளை அறுப்பாய் போற்றி! மடைமை யிருளை மாற்றுவாய் போற்றி! வறுமைத் துயர்க்கு மருந்தே போற்றி!

வண்மையும் வளமையும் வளர்ப்பாய் போற்றி! ஆறுத லளிக்கும் அப்பனே போற்றி! தீனர்க் குதவும் தெய்வமே போற்றி! தேனே ஞானத் தெளிவே போற்றி! 50
இரவிபோல் என்னுள் எழுவாய் போற்றி! ஆறா தாரமும் அமைய மலர்ந்தே எழில் ஏறி இரகுவாய் போற்றி! சகசிரா ரத்தில் விகCத் தொளிரும் அறுமுகச் சுடரே அறிவிற் கறிவே! சக்திவேல் பிடித்த பக்தர் காவலா! கவலை போக்கும் கனிந்த முகமும், கருணை நிரம்பிய கமலக் கண்ணும் அறிவொளி வீசும் அமைதிப் பார்வையும் பவளச் செவ்வாய் பளிச்சிடத் தோன்றியென் 60
இன்னலைத் துடைக்கும் எழிலார் நகையும் மலைபோ லுயர்ந்த மாண்புறு தோளும் குன்றைத் தகர்க்குங் கொழும்புய வலிவும், வரங்களை வாரி வழங்கும் கையும் அச்ச மொழிக்கும் அபயக் கரமும் மனோகர மான மழவிளந் திருவும் காதலைத் தூண்டுங் கண்மணி யழகும் இராப்பக லில்லா இடத்தினி லென்னைக் கூடிக் குழைந்து குலாவிடும் அன்பும் இச்சையுங் கிரியையும் இருமருங் கிருக்கப் 70
பச்சை மயில்மேல் பவனி வந்து துட்டரை வீழ்த்தித் தொண்டரை வாழ்த்தும் மறமயக் கருணையும் அறமறக் கருணையும் கொண்டெப் போதும் கண்டுநான் களிக்க நினைத்ததும் எதிரே நிற்பாய் போற்றி! அன்னே என்றன் அப்பா போற்றி! குமரா பரம குருவே போற்றி! மனமணி யான தினமணி போற்றி! துன்பக் கடலில் துடிக்கு மென்னைத் தூக்கிவிட் டுனக்காள் ஆக்குவாய் போற்றி! 80

Page 19
காமச் சேற்றிற் கலங்குமென்னைக் கைதந் துண்மை காட்டுவாய் போற்றி! இருமன விகாரத் திடர்ப்படு மெனக்குன் ஒருமன நேயந் தருவாய் போற்றி! கடுஞ்சின வேங்கை கவ்விய என்னை விடுவித் தமைதி விளைப்பாய் போற்றி! பொறுமையைச் சீறும் பொறாமைப் படையை வராது துரத்த வருவாய் போற்றி! அருட்பணிக் காற்றல் அளிப்பாய் போற்றி! பொய்ம்மயக் கொழித்து மெய்ப்பொரு ஞணர்த்த 90
மோனசஞ் சீவி யானவா போற்றி! மருட்டும் பிறவி மயற்பிணி மாற மலைமருந் தாக வருவாய் போற்றி! சாகா வாழ்வும் வேகா வுடலும் மும்மல மில்லா நின்மல மனமும் அண்டினார்க் குதவும் பண்டிதா போற்றி! சொல்லா தறிய வல்லாய் போற்றி! பிள்ளைபோ லென்னைப் பேணுவாய் போற்றி! புல்லரை விலகிச் செல்வாய் போற்றி! பொய்யா நெஞ்சிற் புகுவாய் போற்றி! 100
எல்லாம் வல்ல செல்வா போற்றி! மங்கல மான மனைமக் களுடன் சீருஞ் சிறப்பும் பேரும் விளங்க வாழ்வாங்கு வாழும் வகையளி போற்றி! நாட்டைக் கவரும் பாட்டெனக் களிப்பாய் உலகை யாளும் பலமெனக் கீவாய்! கண்வலை வீசும் பெண்வலைப் படாது, பொன்வலைப் படாதுன் போத நிறைவாய், புலனை யடக்கிப் புத்தியை யுனது நல்லருள் வழியே செல்ல விடுத்து. 110
சாதுக்க ளுடனே சாதனஞ் செய்து சித்தம் நிலைத்துச் சிவசண் முகாய நவமென மந்திரம் நவின்றுள் ளடங்கிச் சமாதி யோகம் சகசமாய்க் கூடி

சுத்த சமத்துவ முத்திபெற் றென்றும் உன்னுடன் நானாய் என்னுடன் நியாய் இரண்டறக் கலந்தே இன்புற வருளாய் சதாசிவக் கதிரோய் சரணம் சரணம் சத்திய சோதியே சரணம் சரணம்! குகனே அகநா டகனே சரணம்! முருகா ஓம்! அறு முகலும் சரணம் 121
நடராஜர்
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய வெடுத்த பொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே
Lygř eŽářafana
ஓம்சிவ குருவே ஓம்நட ராஜா ஒம்பரம் பொருளே உனைச்சரண் புகுந்தோம் வணக்கம், வணக்கம், வாய்மையே வணக்கம் வாய்மணங் கடந்த தூயா வணக்கம் துரியா காச விரிவே வணக்கம் ஞானம் பரந்த வானே வணக்கம் சச்சிதா னந்த சற்குரு வணக்கம் ஒமில் அகரமாய் ஒலிப்பாய் போற்றி சூரிய னுள்வளர் சுடரே போற்றி தீயில் வளருந் தேசே போற்றி 10
கார்மழையாய் வருங் கருணையே போற்றி உலகெலாங் கோயில் உடையாய் போற்றி உயிரெலாம் உடலாய் உடுத்தாய் போற்றி ஒப்புயர் வில்லா ஒருவனே போற்றி பன்மையாய் விளங்கும் ஒருமையே போற்றி எப்பொரு ஞக்கும் இறைவா போற்றி எம்மதத் திற்கும் இசைவாய் போற்றி! சைவம், வைணவம், சாக்தம், கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய எம்மதத் திற்கும் சம்மத மான சாட்சியே போற்றி 20

Page 20
அரன்மால் அயன்குகன் அல்லா பிதாவெனப் பலமதம் போற்றும் பரமா வணக்கம்! எனதென தென்றே யிறுமாந் திடர்செய் வெறியர் காணா வித்தகா போற்றி அன்பு காட்டும் அற்புதா போற்றி இன்பமே யியல்பாம் ஏகனே போற்றி துன்பந் துடைக்குந் துரையே, போற்றி அடியார்க் குதவும் அருளே போற்றி அருவாய், உருவாய், குருவாய், பிறவாய், எப்படி யன்பர் எங்கே நினைக்கினும் 30
அப்படி யாங்கே யக்கணம் அருளும் தோன்றாத் துணையே, துரியப் பொருளே புலன்களுக் கெட்டாப் போதமே போற்றி உயிரும் உடலும், உள்ளும் புறமும் உலகும் வானும் இலகும் ஒருவா விண்சுட ரான கண்மணி போற்றி மொழியெலாம் பிறந்த ஒலியுரு போற்றி! அகமெலாம் பொலியும் முகமலர் போற்றி தீதை யெரிக்குந் தீஞ்சுடர் போற்றி வசீகர மான மலர்நகை போற்றி 40
கங்கை பொங்குங் கதிர்முடி போற்றி மதிவளர் சாந்த மலையே போற்றி அபய மளிக்கும் அருட்கை போற்றி திருவடி காட்டுஞ் செங்கை போற்றி ஆணவம் போகவே யழுந்தடி போற்றி உய்யத் தூக்கிய மெய்யடி போற்றி இதயந் தோறும் பொதுநடம் போற்றி ஐந்தொழில் புரியும் ஐயா போற்றி சிற்சபை தன்னிற் செய்திரு நடத்தால் செகவினை யாடல் செய்வாய் போற்றி! 50
நெறியிலா நெறியிற் பொறிவழி செல்லும் அடியரதை தடுத்தாள் அப்பனே போற்றி காணா விடினுங் கண்டுகொண் டிருக்கும் உயிர்க்குயி ரான உட்பொருள் போற்றி

அப்பனே, உன்மல ரடியே துணையாய் உன்னரு ளாட்சி யுலகில் விளங்கவே உன்பெயர் சொல்லி, உண்மை யான பொதுநலப் பணிகள் புரிந்து வருகிறோம் நாடு வாழ நல்வினை தொடர்ந்தோம் s பணியும் பயனும் பரமா உனக்கே 60
வெற்றிமேல் வெற்றி விளைப்பாய் போற்றி பாதகப் பகைவரும் சாதக மாகத் திருந்தி வரவே செய்வாய் போற்றி அலைமனம் அடங்கும் அமைதி யருளாய் சித்தம் நிலைக்கச் சிவக்கன லருளாய் பக்தி யோங்கும் பரிசெமக் கருளாய் சஞ்சலப் பேய்களைச் சாடி யழித்தே கவலைக் கல்லைக் கரைத்தருள் புரிவாய்! பொறாமைப் புல்லர் வராது விரட்டுவாய் அச்சமும் கலக்கமும் துச்ச நினைவும் 70 அரக்கர் வஞ்சமும் அதர்மப் பதர்களின் சூதும் வாதும் சூழ்ச்சியும் பொய்யும் அன்புச் சோலையுள் அணுகா தருள்வாய்! உன்னருட் பணிக்கே உயிர்க்கும் எங்கள் உடலும் மனமும் உறுதி பெற்றே ஆற்றலும் ஆயுளும் ஆத்தும சக்தியும் சுத்தசன் மார்க்கச் சுதந்திர வாழ்வும் அருளும் அருட்பணிக் காகிய பொருளும் அன்பும் பெருகும் இன்ப மருளாய்! தியாக வீரராய், யோக தீரராய் 80 பூரணம் பெற்றுப் பூரணம் பரப்பும் அமரராய், உன்னருள் ஆலய மான உலகிற் கின்ப நலஞ்செய வருளாய் தூயனே! உன்னைத் துதித்துப் பணியும் அடியார் குழுவில் அமர்ந்திட வருளாய் அப்பரைப் போலவே அன்புப் பணியும் பாலறா வாயர் போலவுள் ளறிவும்,

Page 21
சுந்தரர் போலே செந்தமிழ்ச் சொல்லும் "இதுபொருள்” என்றுனை இரண்டறக் கலந்த மணிவா சகள்போல் மாசறு காதலும் 90
அம்மையார் போலே அருளடி நேயமும் ஒளவையார் போலே செவ்விய மதியும் திருமூ லர்போற் செழுந்தவ யோகமும் மெய்கண் டார்போல் உய்நெறி விளக்கமும் பட்டினத் தார்போற் பழுதறு துறவும் வள்ளுவர் போலே இல்லறப் பண்பும் தாயுமா னார்போல் ஆய்ந்தவுள் ளமைதியும் வள்ளலார் போலே தெள்ளருட் சோதியும் ஆழ்வார் போலே அடைக்கல வுறுதியும் சங்கரர் போலே சகசாத்ம சித்தியும் 100
வியாசர் போலே வியன்பெறு புலமையும் கம்பன் போலே கவிதைக் கலையும் காளி தாசனின் கனிசொல் வளமும் வேத முனிவரின் வித்தகச் செல்வமும் கண்ணன் யோகமும் ராமன் வீரமும் எங்களுக் கருளியுன் னிச்சையை நடத்தாய்! அறிவதெல் லாமுன் அருளின் அறிவே
புரிவதெல் லாமுன் பூரண சக்தியே; நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்! ஆண்டவா சிற்சபைத் தாண்டவா போற்றி! ஹரஹர சங்கர! அம்பல வாணா! போற்றி போற்றியுன் பூங்கழல் போற்றி!
- அம்பிகை
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே.

di அம்பிகை அர்ச்சனை அன்பு மலரால் அன்னையைத் தொழுவோம் இன்ப மெல்லாம் எளிதாய் வருமே! அறிவாய் எங்கும் நிறைவாய் போற்றி அருளால் உலகை அளித்தாய் போற்றி அன்பே வடிவாய் அமர்ந்தாய் போற்றி அன்னையே போற்றி அமுதே போற்றி ஆருயிர்க் கோருயி ரானாய் போற்றி ஆதி சக்தியே ஆணையே போற்றி இகபர சுகங்களை ஈவாய் போற்றி இதயக் கனலாய் எழுந்தாய் போற்றி 10
ஈறிலாக் கருணை வாரியே போற்றி ஈசனோ டொன்றாம் இறைவியே போற்றி உலகெலாம் கோயில்கொண் டிலகுவாய் போற்றி உயிர்களை நாளும் ஊட்டுவாய் போற்றி உண்மை விளக்குங் கண்மணி போற்றி உள்ளத் தின்ப வெள்ளமே போற்றி ஊமையும் பேச உன்னுவாய் போற்றி ஊழையும் வெல்ல உதவுவாய் போற்றி எண்ணு மெண்ணத் திணிப்பாய் போற்றி எண்ணிலாப் புவிவளர் விண்ணே போற்றி 20
எங்குந் திருவரு விறைப்பாய் போற்றி என்னை யாளும் இறைவியே போற்றி ஏகம் அனேகமாய் எழுந்தாய் போற்றி ஏழைமை தவிர்க்கும் இலக்குமி போற்றி ஐந்தொழில் புரியும் அருளே போற்றி ஐக்யானு பூதி அருளுவாய் போற்றி ஒன்றிய மனந்தொறு நின்றாய் போற்றி ஒவ்வொ ருயிர்க்கும் உள்ளமே போற்றி ஒருகுல முலகென் றுணர்த்துவாய் போற்றி ஒலியே அகண்ட வெளியே போற்றி 30
ஓங்கா ரத்தின் உட்பொருள் போற்றி ஒதா துள்வளர் வேதமே போற்றி ஓங்கு மானந்தத் திங்கனி போற்றி

Page 22
ஒம்பரா சக்தி ஒம்மஹா சக்தி ஒளவியப் பேய்களை அடக்குவாய் போற்றி ஒளடத மாகும் அன்பே போற்றி அ.கா வளந்தரும் ஆற்றலே போற்றி கல்வி யருளுங் கலைமகள் போற்றி காளியே சக்திக் கனலே போற்றி கிழக்கே பகலாய்க் கிளரொலி போற்றி 40
கீழ்மை யகற்றுங் கீர்த்தியே போற்றி குருவே யனந்த குணமே போற்றி கூன்பிறை சூடியின் குலசக்தி போற்றி கேண்மைக் கேற்ற பான்மையே போற்றி கைத்தொழில் வளர்க்குங் கையே போற்றி கொழுந்து விட்டோங்குங் குண்டலி போற்றி கெளரியே போற்றி கன்னியே போற்றி சரணம் சரணம் சக்தியே போற்றி சாந்தப் பொலிவருள் சங்கரி போற்றி சிந்தனைக் கினிய சிற்பரை போற்றி 50
சிலந் தந்தருள் சிவையே போற்றி சுத்த சக்திஓம் நித்திய சக்தியே சூரிய லுள்ளொளிர் சுடரே போற்றி செந்தணல் போன்ற சுந்தரி போற்றி சேயா யெனைவளர் தாயே போற்றி சைதன்ய சோதி தருவாய் போற்றி சொல்லற் கரிய சுகமே போற்றி சோதி யளிக்கும் சொல்லே போற்றி செளபாக் கியமருள் சாம்பவி போற்றி அஞ்சா நெஞ்சுரம் அளிப்பாய் போற்றி 60
ஆண்மையும் வீறும் அருளுவாய் போற்றி ஞான மகேஸ்வரி நாரணி போற்றி ஆதார கமலத் தமர்வாய் போற்றி இடாகினி ராகினி லாகினி போற்றி காகினி சாகினி ஹாகினி போற்றி திங்களிற் புன்னகை செய்வாய் போற்றி மங்கள சக்தி மாதவி போற்றி

துணிவுளார்க் குதவும் தெய்வமே போற்றி பணிசெய்வார்க்குதவும் பயனே போற்றி தகரா காச சக்தியே போற்றி 70
தாரக மான சாந்தமே போற்றி திறமைக ளியும் தியே போற்றி தீனரைக் காக்கும் தெய்வமே போற்றி துஷ்டரை யழிக்கும் துர்க்கையே போற்றி தூயரைப் போற்றும் நாயகி போற்றி தெவிட்டா துள்வளர் தேனே போற்றி தேவியே வாழ்விற் காவியே போற்றி தையலாய் உலகந் தருவாய் போற்றி தயவே வடிவாம் தாயே போற்றி நல்லார் விரும்பும் நட்பே போற்றி 80
நாடி வீணையிற் பாடுவாய் போற்றி நித்திய மான நிமலையே போற்றி நீலியே போற்றி பாலையே போற்றி பரமனோ டொன்றிய பார்வதி போற்றி பார்வையுள் ளாக்கினோர் பார்ப்பே போற்றி பிரம சக்தியாம் பிராமியே போற்றி பீடுறு மன்பரை நாடுவாய் போற்றி புண்ணியர் போற்றும் விண்ணே போற்றி பூரணர் வணங்கும் நாரணி போற்றி பைரவி போற்றி பவானி போற்றி 90
மங்களம் பொழியும் மனோன்மணி போற்றி மாசிலார் வணங்கும் மலரடி போற்றி o மின்னிப் பறக்கும் புன்னகை போற்றி மீனைப் போன்ற விழியே போற்றி முத்தர் விரும்பும் முதல்வி போற்றி மூலா தாரச் சுவாலையே போற்றி விஞ்ஞா னத்தின் விளக்கமே போற்றி வீறு மிகத்தரும் வீரியே போற்றி வெற்றி யருளும் வித்தகி போற்றி வையகங் கோயிலாய் வளர்வாய் போற்றி 100

Page 23
அளவிலா விளையாட் டாற்றுவாய் போற்றி அறநெறி வாழ்வை யளிப்பாய் போற்றி உன்னரு ளேங்கி உயிர்க்குலம் வாழ்க ஆன்ம நேயம் அவனியிற் பரவுக நன்மை யோங்குக நாடெல்லாம் வாழ்க இன்ப வளங்கள் எங்கும் நிறைக புதுயுகம் வருக பூரணம் பொலிக! அமரவாழ் வருளாய் அன்னையே போற்றி 108
சுத்தம் அருளாய் சக்திஓம் சக்தி முத்தி யருளாய் சக்திஓம் சக்தி சமத்துவ மருளாய் சக்திஓம் சக்தி சித்தி யருளாய் சக்திஓம் சக்தி சக்திஓம் சக்தி சுத்த சக்திஓம்.
திருமால்
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
திருமால் அர்ச்சனை
அறிவினுக் கறிவாம் அரியே போற்றி செறிதுழாய்க் கண்ணித் திருமால் போற்றி மாதிரு மகள்சார் மார்பா போற்றி ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி உயிரை உடலாய் உற்றாய் போற்றி உயிர்க்குள் உயிராய் உறைவாய் போற்றி மஞ்சின் வண்ண மாலே போற்றி அஞ்சலென் றடியார்க் கருள்வாய் போற்றி உலகினை உட்செறி வயிற்றோய் போற்றி நலமுடன் உலகினை நல்கினாய் போற்றி 10
ஊனமில் சக்கரம் உடையாய் போற்றி பானிறச் சங்கார் பண்ணவ போற்றி எழுவில் தண்டினை ஏந்தினாய் போற்றி

வழுவிலா வாள்கொள் மாதவ போற்றி ஏழுல குந்தொழும் எந்தாய் போற்றி ஆழ்கடல் அறிதுயில் அமர்ந்தாய் போற்றி ஐயரா அணையுடை அமலா போற்றி மையலை எமக்கு மாற்றுக போற்றி அகமொழித் தவரை ஆள்வாய் போற்றி இகபரம் இரண்டும் ஈவோய் போற்றி 20
பொய்யருக் கரிய பொருளே போற்றி மெய்யருக் கெளிய மேலோய் போற்றி ஒப்பில் தாமரை உந்தியோய் போற்றி இப்புவி தோன்ற எண்ணினாய் போற்றி கரியின் துயரைக் கழித்தாய் போற்றி பெரிய முதலையைப் பிளந்தோய் போற்றி ஆயர் மகளிர்க் கன்பா போற்றி மாயம் புரியும் மாயவ போற்றி அன்பரின் வெண்ணெய்க் காவலாய் போற்றி பன்கவு ரவர்க்குப் பகைவா போற்றி 30
சரணம் அடைந்தோர் சார்வே போற்றி அரணம் அவர்க்கிங் காவாய் போற்றி திருமகள் உரைசெவி சேர்ப்பாய் போற்றி அருளவள் அன்பர்க் களிப்பாய் போற்றி நீரினில் மீனாய் நீந்தினாய் போற்றி பாரினில் ஆமையாய் படிந்தாய் போற்றி குறளாய் நிலத்தைக் கொண்டாய் போற்றி திறமுடன் வளர்ந்த செம்மால் போற்றி ஈரடி ஈகுல கிட்டனை போற்றி ஒரடி மாபலிக் குதவினை போற்றி 40
பன்றியாய்ப் பூமி பறித்தாய் போற்றி கன்னர சிங்கக் காளாய் போற்றி வில்லுடை இராம வீரா போற்றி வல்லன் பரசு ராமா போற்றி மழுப்பல ராமன் மாண்பது போற்றி தொழுமெங் கண்ணன் தூயவன் போற்றி அவனியிற் கற்கி ஆவாய் போற்றி

Page 24
இவண்நி பல்பிறப் பெடுத்தாய் போற்றி அரிவைக் காடை அளித்தாய் போற்றி கரியை வேள்வியில் காய்ந்தாய் போற்றி 50
கஞ்சனைக் காலால் கடிந்தோய் போற்றி வஞ்சகப் பூதகி வதைத்தாய் போற்றி ஐவர் அன்பில் ஆழ்ந்தாய் போற்றி அவரென் உயிரென் றறைந்தோய் போற்றி ஆண்டாள் மாலையை அணிந்தாய் போற்றி பாண்டவர் நட்பைப் பற்றினாய் போற்றி அழகுறு பார்த்தன் அடுத்தோய் போற்றி கழறிக் கீதையைக் காத்தாய் போற்றி மலையால் மழையை மறித்தோய் போற்றி கலைகள் பலவும் கற்றோய் போற்றி 60
சிலையைப் பெண்ணாய்ச் செய்தோய் போற்றி கொலைசெய் தாடகை கொன்றோய் போற்றி அரக்கள் பலரை அழித்தோய் போற்றி குரங்குப் படையினைக் கொண்டோய் போற்றி கடலை அடைத்த கடவுள் போற்றி உடலைச் சபரிக் கொழித்தாய் போற்றி துதிப்போர் வினைத்தொடர் தொலைப்போய் போற்றி கதியென் றடைவோர் களைகண் போற்றி நினைவை அறியும் நின்மல போற்றி அனைத்தும் காணும் அறிவா போற்றி 70
கற்றோர் பரவும் காரண போற்றி நற்றவர் நோக்கும் நாரண போற்றி அடியவர்க் கடியன் ஆனாய் போற்றி செடியன தீவினை தீர்ப்பாய் போற்றி கேடொன் றிலாக் கேசவ போற்றி மாடுறு நாரண மாதவ போற்றி மதுசூதனனே மாயா போற்றி பதும நாயனே பாவன போற்றி வாசு தேவனே வாமன போற்றி திரிவிக் கிரம தேவா போற்றி 80

அரிகோ விந்தா அச்சுதா போற்றி தாமோ தரனே சதுரா போற்றி ஆமா றடியரை ஆள்வோய் போற்றி இருடி கேசா இறைவா போற்றி இருள்திர் ஞான ஈசா போற்றி தண்ணருட் சீரி தரனே போற்றி எண்ணம் புகுந்தே இனிப்போய் போற்றி எங்கும் இலங்கும் விண்டுவே போற்றி பொங்கும் கீர்த்தி பூரண போற்றி சிந்தனை செய்பவர் செல்வா போற்றி 90
பந்தம தறுக்கும் பரமா போற்றி முந்தை வினையை முடிப்போய் போற்றி அந்தமில் இன்பம் அருள்வாய் போற்றி செந்தமிழ் மூன்றாய்த் திகழ்வாய் போற்றி நந்தமிழ் பரப்பின் நடப்பாய் போற்றி செம்மை சேர்திரு வரங்கா போற்றி மைபடி வேங்கட மலையோய் போற்றி கச்சியம் பதிவாழ் கன்னலே போற்றி அர்ச்சையா எங்கும் அமைந்தாய் போற்றி திருவலிக் கேணியில் திகழ்வோய் போற்றி 100
துருவனுக் கருளைச் சொரிந்தாய் போற்றி தூயுடல் கொண்டு தோன்றினோய் போற்றி தோயும் கன்மம் துன்னாய் போற்றி தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி பெண்ஆண் உருவாய்ப் பிறங்குவோய் போற்றி நல்லன உலகிடை நல்குக போற்றி தாமரைத் திருவடி தந்தருள் போற்றி மாமகள் கொழுந்நின் மலர்ந்தாள் போற்றியே 108

Page 25
ஐயப்ப சுவாமிகள்
மேகச்யாமள வர்ணனாயும் இரத்தின குண்டலங்கள் தரித்த வதன சோபையோடு கூடியும் வலது கையில் செங்கழுநீர்ப் பூ தரித்தும் இடது கையைக் கால்மூட்டின் மீது வைத்துக் கொண்டும் பூரீ பூரணை புஷ்கலை என்னும் இரு தேவியரோடு கூடி, பத்மாசனத்திலே யோகபட்டம் அணிந்து இருந்தருளுகின்ற ஹரிஹர புத்திரனான சாஸ்த என்னை இரட்சிப்பாராக.
அர்ச்சனை
ஓம்ஓம் ஐயப்ப சுவாமியே போற்றி ஓம்குரு நாத ஐயப்பா போற்றி அரனார் பாலா ஐயப்பா போற்றி அம்பிகை பாலா ஐயப்பா போற்றி ஆபத் பாந்தவ ஐயப்பா போற்றி ஆதி பராபரா ஐயப்பா போற்றி இருமுடிப் பிரியா ஐயப்பா போற்றி இரக்கம் மிகுந்தவா ஐயப்பா போற்றி ஈசன் மகனே ஐயப்பா போற்றி ஈஸ்வரி மைந்தா ஐயப்பா போற்றி 10
உமையாள் பாலா ஐயப்பா போற்றி உறுதுணை நீயே ஐயப்பா போற்றி ஊக்கம் தருபவா ஐயப்பா போற்றி ஊழ்வினை அறுப்பவா ஐயப்பா போற்றி எங்கும் நிறைந்தவா ஐயப்பா போற்றி எங்கள் நாயகா ஐயப்பா போற்றி ஏற்றம் தருபவா ஐயப்பா போற்றி ஏழை பங்காளா ஐயப்பா போற்றி ஐந்து மலைக்கரசே ஐயப்பா போற்றி ஐங்கரன் தம்பியே ஐயப்பா போற்றி 20
ஒண்டிப் பிறந்தவா ஐயப்பா போற்றி ஒப்பிலா மணியே ஐயப்பா போற்றி ஒதிய மறையே ஐயப்பா போற்றி ஓங்கார ரூபனே ஐயப்பா போற்றி ஒளவிய மில்லா ஐயப்பா போற்றி

ஒளட்தப் பொருளே ஐயப்பா போற்றி சபரி கிரீசா ஐயப்பா போற்றி சாந்த சொரூபா ஐயப்பா போற்றி சத்ரு சங்காரா ஐயப்பா போற்றி சாஸ்வத ரூபா ஐயப்பா போற்றி 30
ஹரிஹர சுதனே ஐயப்பா போற்றி மோகினி பாலனே ஐயப்பா போற்றி வன்புலி வாகனனே ஐயப்பா போற்றி சபரிமலை வாசனே ஐயப்பா போற்றி எங்கள் குல தெய்வமே ஐயப்பா போற்றி எங்கும் நிறைந்தவனே ஐயப்பா போற்றி நெய் அபிஷேகப் பிரியனே ஐயப்பா போற்றி தெய்வமணி விளக்கே ஐயப்பா போற்றி சேவிப்பவர்க்கு ஆனந்தனே ஐயப்பா போற்றி பாவிப்பவர்க்கு பாலனே ஐயப்பா போற்றி 40
கண்கண்ட தெய்வமே ஐயப்பா போற்றி பண்கண்ட பண்பனே ஐயப்பா போற்றி இஷடவரம் தருபவனே ஐயப்பா போற்றி கஷடமெலாம் நீக்குபவனே ஐயப்பா போற்றி சத்குரு நாதனே ஐயப்பா போற்றி தத்துவப் பொருளோனே ஐயப்பா போற்றி கன்னிமலைக் காரர்களைக் காப்பவனே போற்றி கள்ப்பூரப் பிரியனே ஐயப்பா போற்றி தகூழிணாமூர்த்தி ஸ்வரூபனே ஐயப்பா போற்றி தருமத்தைக் காப்பவனே ஐயப்பா போற்றி 50
காந்தமலை ஜோதியே ஐயப்பா போற்றி சாந்தியைத் தருபவனே ஐயப்பா போற்றி பம்பா வாசனே ஐயப்பா போற்றி நம்பினோர்க் கன்பனே ஐயப்பா போற்றி அன்னதானப் பிரபுவே ஐயப்பா போற்றி அண்டினோரைக் காத்திடுவாய் ஐயப்பா போற்றி பராசக்தி பாலனே ஐயப்பா போற்றி பாவங் களைந்திடுவாய் ஐயப்பா போற்றி

Page 26
குற்றங் களைபவனே ஐயப்பா போற்றி குருவாகி வந்தவனே ஐயப்பா போற்றி 60
மணிகண்ட மாமணியே ஐயப்பா போற்றி மானிட ரூபனே ஐயப்பா போற்றி ஆனந்த ரூபனே ஐயப்பா போற்றி அன்பர்க்கு அன்பனே ஐயப்பா போற்றி பக்த வத்சலனே ஐயப்பா போற்றி பரம்பொருளாய் நின்றவனே ஐயப்பா போற்றி ஐந்துமலைக் கரசே ஐயப்பா போற்றி ஆறுமுகனுக் கிளையவனே ஐயப்பா போற்றி ஓங்காரத் தத்துவனே ஐயப்பா போற்றி ஒளதார்ய சீலனே ஐயப்பா போற்றி 70
சரணம் ஐயப்பா போற்றி போற்றி சபரிமலை வாழ்பவனே போற்றி போற்றி சரணம் தருவாய் போற்றி போற்றி சரணா கதனே போற்றி போற்றி ஏகாந்த வாசனே போற்றி போற்றி எம்மை யாள்வாய் போற்றி போற்றி துன்பத்தை நீக்கிடுவாய் போற்றி போற்றி இன்பத்தைத் தந்திடுவாய் போற்றி போற்றி நித்திய நிர்மலா போற்றி போற்றி நிஷாத வீரியா போற்றி போற்றி 80
நான்முக பூஜ்யா போற்றி போற்றி நாதஸ் வரூபா போற்றி போற்றி மதகஜ வாகா போற்றி போற்றி மன்மத ரூபா போற்றி போற்றி கலிமல நாசனா போற்றி போற்றி கீர்த்தனப் பிரியா போற்றி போற்றி சத்திய ஸ்வரூபா போற்றி போற்றி தாண்டவப் பிரியா போற்றி போற்றி யோகா னந்தா போற்றி போற்றி யோகிகுல வீர்யா போற்றி போற்றி 90

மோகினி சுதா போற்றி போற்றி மோகன ரூபா போற்றி போற்றி பூமிப்ர பஞ்சா போற்றி போற்றி பூசுர ரக்ஷகா போற்றி போற்றி வில்லாளி வீரா போற்றி போற்றி விஜய குமாரா போற்றி போற்றி பக்த வத்சலா போற்றி போற்றி பரம தயாளா போற்றி போற்றி சபரி கிரீசா போற்றி போற்றி சுகுணப் ரதாபா போற்றி போற்றி 100
கோமள ரூபா போற்றி போற்றி சியாமள வர்ணா போற்றி போற்றி அனாதி ரக்ஷகா போற்றி போற்றி ஆபத் பாந்தவா போற்றி போற்றி காந்த கிரிசா போற்றி போற்றி கானனப் பிரியா போற்றி போற்றி சம்பு குமரா போற்றி போற்றி ஷண்முக சோதரா போற்றி போற்றி 108
நவக்கிரக அர்ச்சனை சூரியன்
சூரிய லுள்வளர் சுடரே வணக்கம் வீரிய பலமும் வினைத்திட்ப முடன் மனத்திட்ப மீந்தெனை மாண்புறச் செய்வாய் மனவிருள் போக்கி இனப்பகை தீர்த்து நினைவை உயர்த்தி நீசப் பகையைச் சுட்டெரித் தான்ம சுதந்தர ஒருமையிற் கூட்டிநின் சக்தியை ஊட்டி வளர்ப்பாய் நின்னொளி கண்டு தன்னொளி கண்டு உன்னொளி யாலே உலகொளி யாக விளங்கும் யோக வெற்றியைத் தாராய் நோயில் லாது நூறு நூறாண்டு

Page 27
வாழும் வகையை வகுத்தெனைப் பழக்கி வாழ்வெலாம் அறிவு வேள்வி யாகிடவே அருட்கவி வளமை அளிப்பாய் போற்றி !
சந்திரன்
பொங்கும் இன்பப் புன்னகை யமுதே திங்களே சாந்த மங்கலம் பொழிவாய் தேய்ந்து தேய்ந்துநீ தினம்வளர்ந் தாலும் தேயா தென்னுட் சிரித்தொளி வீசாய்
சினவா ளரக்கள் துயர்செய வரும்போ தவர்மனம் மாறித் திரும்பத் தண்பனி மொழிகளைத் தருவாய் மதியே மொட்டுகள் மலரும் முத்து நிலவே கட்டுகள் நீங்கிக் கவலை ஒழிந்தே அழகும் மணமும் அருளும் அன்பும் பொலிந்திடும் வாழ்வைப் பொழிந்தருள் சசியே
செவ்வாய்
செவ்வாய் செவ்வாய் மணக்கச் செவ்வாய் போட்டி பொறாமைகள் போர்புரி யுலகை ஆட்டி வைக்கும் அங்கா ரகனே மனப்போர் வெல்லக் கனலொன் றளிப்பாய் அமைதி யாகநான் அமர்ந்து நல்யோகம் புரியத் துணைசெய் அரிய துணைவா செவ்வாய் என்றால் வெறும்வாய் என்பார் செவ்வாய் தோஷம் தேய்க்குமென் பார்கள் வறுமைப் பிணியை வெறுமை யாக்குவாய் மடைமை தேய மாசறு ஞான ஒளியைத் தருவாய் உலகத் துயர்கள் பற்றா தென்னைப் பரிந்தருள் புரிவாய் அங்கா ரகனே ஆங்கார மின்றிப் பகைசின மின்றிப் பாரினில் வாழச் செய்வா யிப்போ செவ்வா யப்பனே!

புதன்
புதனே போற்றி இதமுடன் என்னை நன்மைக்கு நன்மை நடத்துவாய் போற்றி அன்பு வடிவே இன்பம் பெருகும் ஆண்மைக் காதலால் மாண்புறச் செய்வாய் காதலைக் கெடுக்கும் மூதேவி யான பேரா சைப்பேய் பிடியா தொழிப்பாய் இதயக் குகையில் உதயக் கதிர்போல் எழுந்து பொலிவாய் இன்பம் பெருகவே துன்ப வினைகளைத் தூருடன் போக்கித் தொல்லையில் லாத தொண்டினில் ஊக்கி நாளெல்லாம் அன்பு வேள்வி செய்திடவே அறிவுந் திருவும் ஆற்றலும் அளிப்பாய் பொன்கிடைத் தாலும் புதன்கிடைக் காதே என்பர் உலகோர் இதனை நம்பி இடைவிடா துன்னை ஏத்திப் பணிந்தேன் திருவும் அறிவுந் தருவாய் அரசே!
வியாழன் ஆழநல் லறிஞனாம் வியாழ பகவானே உலகக் குருவே உயர்தவச் சுடரே! கல்வியுங் கலையும் கைத்தொழிற் செல்வமும் வேத ஞானமும் வித்தக சித்தியும் யோகக் கலையின் உன்னதப் புலமையும் பன்மொழித் திறனும் நன்மோழிச் சுவையும் உயர்ந்த சிந்தையும் உள்ளத் தெளிவும் சாதி மதமிலாச் சத்திய சுத்த சக்தி யோக சாதன வெற்றியும் ஈவாய் குருவே இன்பத் தெய்வமே!
வெள்ளி உள்ளங் கவரும் வெள்ளியே போற்றி மிக்க நலந்தரு சுக்கிரா போற்றி எக்குறை யுமிலா மிக்குயர் வாழ்வை சுக்கிர தசையென சொல்லுவர் மேலோர்

Page 28
சீருஞ் சிறப்பும் பேரும் புகழும் செல்வமுங் கல்வியும் சேர்ந்துல கெல்லாம் போற்றும் பேற்றை ஆற்றுவாய் போற்றி வெள்ளிக்கு வெள்ளி வீறு மிகுந்த விழுமிய னாகி விளங்கச் செய்வாய் அதிட்ட மென்பதுன் இட்டமே யாகும் கண்பார்த் தெனது கவலை தீரப் புண்களைப் போக்கி பூரண மாக்கி மங்கலம் பொங்க மகாலட் சுமியின் புன்னகை யமுதம் பொலியப் பொலிய வளப்பெறு வாழ்வை வழங்கி யருளாய் வெள்ளியே உனக்கென் உள்ளன் பாமே!
Fgf
சனிபக வானே சனிபக வானே ! சரணம் சரணம் சனிபக வானே! உன்னை உலகோர் என்னவோ சொல்லி அஞ்சுவர் சனியென அருவருத் தோதுவர் தீயன நினைத்துத் தீயன சொல்லி தீயன செய்யும் தீயரை ஒறுப்பாய் நல்லன நினைத்து நல்லன சொல்லி நல்லன செய்யும் நண்பரைக் காப்பாய் மண்பெண் பொன்னில் மயங்கித் திரியும் ஆசைப் பேய்கள் அணுகா தொழிப்பாய் ஏமாற்று கின்ற மாமாய வலையில் இழுத்துத் துயர்செய் இகலைக் கெடுப்பாய் புல்லிய தினவுகள் புகாதெனைக் காத்து நல்லியல் யோக நாட்டமே தருவாய் சனியே என்னை இனிக்கலக் காமல் அங்கும் இங்கும் அலைத்தழிக் காமல் பகைவரைத் தூண்டிப் பழிசுமத் தாமல் அமைதி தருவாய் அன்புசெய் கின்றேன் மேலும் மேலும் மேலும் யோக சித்தி யளித்துச் சக்தியை வளர்த்துச் சிந்தை யெல்லாம் சிவத்தேன் ஊறிக்

கவிமலர் மாலை கவின்பெறச் சூட்டிப் பேரும் புகழும் ஊரின் மதிப்பும் பொதுஜன நட்பும் பொங்கும் செல்வமும் நாவசைந் ததுமே நாடசைந் துதவும் செல்வாக் கருளாய் நல்வாக் கருளாய் சனிபக வானே சனிபக வானே சரணம் சரணம் சனிபக வானே சரணம் சரணம் சனிபக வானே
இராகு கேது
இராகுவே கேதுவே இப்புவி வாழ்வில் இன்னலும் இடரும் எண்ணறப் பட்டேன் இருளில் வருந்தினேன் இழிநிலை இன்றி அருளைத் தூண்டி ஆக்க மளிப்பீர் படமெடுத் தாடும் பாம்பென நவில்வார் மதியை விழுங்கும் மருளென மருள்வார் அவ்வகை நினையேன் செவ்விய நல்லீர் தீய பகையைத் தீண்டி விழுங்குவீர் நல்லதை யிங்கே நாடிடப் புரிவீர் மதிரவி மறைய விதிநிழல் பரப்பும் கோள்காள் உம்மைக் கும்பிடு கின்றேன் யோகமும் பாட்டும் ஆகுமெய் வாழ்வில் பகைசெய் கவலைப் பாம்பு புகாமல் ஆசை யகந்தை மாசு புகாமல் ஒளியும் உரமும் தெளிவந் தேசும் அருளும் ஆண்மையும் அஞ்சா நெஞ்சும் தந்து நடத்துவீர் தாயன் புடனே வந்து நடத்துவீர் வளம்பெறு வாழ்க்கை உமக்கே நிவேதனம் உயர்வான் சுடர்காள்! நண்பராய் வருவீர் நவக்கிர கங்காள் உம்மை வணங்கி உலகில் வாழ்கிறேன் வாழ்வெலாம் யோக வேள்வியா குகவே நலமெலாம் பொலிய நிலமெலாம் வாழ்கவே!

Page 29
வைரவக் கடவுள் தியானம் பரமனை மதித்திடாப் பங்க யாசனன் ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்.
வெஞ்சினப் பரியழன் மீது போர்த்திடும் அஞ்சனப் புகையென வால மாமெனச் செய்சுடர்ப் படிவமேற் செறித்த மாமணிக் கஞ்சுகக் கடவுள்பொற் கழல்க ளேத்துவாம்.
அர்ச்சனை
பிரமன்றன் சிரமரிந்த பெருமானே போற்றி இரப்பதற் கொருதலையை உடையானே போற்றி கணங்கனொரு வாகனமா யுடையானே போற்றி அணங்காகக் காளியை உடையானே போற்றி அமலனுக்கொரு மைந்தனாய் வந்தவரே போற்றி இமவான்றன் புத்திரியின் புத்திரனே போற்றி கையொன்றில் திரிசூலம் உடையவரே போற்றி மையொழுகு கண்ணிக்கு மகனாரே போற்றி அம்மை சிவகாமி பாலனே போற்றி இம்மையிலே எல்லாந் தந்தவனே போற்றி (10)
அடியவருக் கெளிமையாய் வந்தவனே போற்றி முடியுடைய வேந்தருக்கும் முதல்வனே போற்றி படியினிலே பாபங்கள் அறுப்பாய் போற்றி மிடியுடையார் மிடியினை மடிப்பவனே போற்றி கந்தனுக்கு முன்வந்த கருணாமூர்த்தியே போற்றி எந்தனுக்கு அருள்புரிய வந்தவரே போற்றி கணபதிக்குப் பின்வந்த கபாலியே போற்றி கணப்போதில் வினைகளைச் சாடிடுவாய் போற்றி காசினியோர் தொழுதிருந்த கடவுளே போற்றி பேசினிய பெருமானே பெரியானே போற்றி (20)

தாரணியி லுயிர்வாழ வந்தவரே போற்றி நாரணர்க்கும் நான்முகள்க்கும் நாயகனே போற்றி ஆரணங்க ளறியாத ஐயனே போற்றி மாரனை வென்றெடுத்த மதியனே போற்றி அகண்டபரி பூரணனாம் ஐயனாரே போற்றி மகரிஷிகள் போன்றுகின்ற மாமணியே போற்றி அம்மை சிவகாமி பாலகனே போற்றி மும்மைக்கும் முதலாக உள்ளோனே போற்றி ஆதிஅந்தம் இல்லா தவரே போற்றி பாதிமதி வேணியன் மகனே போற்றி (30)
அண்டமெல்லாங் கடந்த அருட்சுடரே போற்றி மண்டினி ஞாலத்தை மகிழ்விப்பவரே போற்றி சிவமூர்த்த மாக நின்றவரே போற்றி பலவினைகள் எல்லாம் ஒழிப்பவரே போற்றி பைரவர்கள் வணங்கும் பகவானே போற்றி வைரவர் என்னும் பெயருடையோய் போற்றி வடுகாய நமளன்று வணங்கிடுவோம் போற்றி சுடுகாட்டில் நடமாடும் சூலபாணியே போற்றி பைரவ புவனத்தில் இருப்பவரே போற்றி பாதாள ஞான வைரவரே போற்றி (40)
தோற்றத்தில் நீலநிறம் உடையவரே போற்றி ஆற்றலிலும் அம்மானை வென்றவரே போற்றி திருவடியில் சிலம்பினை அணிந்தவரே போற்றி அருள்மறைகள் ஆறங்கம் உணர்ந்தவரே போற்றி மார்பிலே தலைமாலை உடையவரே போற்றி கார்போன்ற நிறத்தை உடையவரே போற்றி மழுவென்னும் ஆயுதம் உடையவரே போற்றி அழுதார்க்கு அருள்புரியும் ஆண்டவரே போற்றி பாசமெனுங் கயிற்றை உடையவரே போற்றி பாச வேரறுக்கும் பகவானே போற்றி (50)
உடுக்கையை ஏந்தி ஒலிப்பவரே போற்றி முக்கண்கள் உடைய முதல்வனே போற்றி கடுக்கை மாலை பூண்டவரே போற்றி எக்காலமு மெம்மைக் காப்பவரே போற்றி

Page 30
பயங்கரத் தோற்றம் உடையவரே போற்றி வியத்தக்க அற்புதங்கள் செய்தவரே போற்றி கோரப் பற்களினை உடையவரே போற்றி வீரவேல் முருகனுக்குத் தமையனாரே போற்றி செஞ்சடையை உடைய சேவகனே போற்றி நஞ்சணி கண்டனின் நன்மகனே போற்றி (60)
சீற்றநகை கொண்ட முகமுடையோய் போற்றி ஏற்றமெல்லாம் எமக்களிக்கும் நாயகனே போற்றி ஆணவத்தை அடக்கிய ஆண்டவனே போற்றி நாணத்தை நமக்களித்த நாயகனே போற்றி முனிவர்களின் செருக்கை முனிந்தவனே போற்றி நனிபெரிதும் ஞானத்தை அளித்தவனே போற்றி தேவர்களின் அகங்காரம் அழித்தவனே போற்றி பாவவினை பற்றறுக்கும் பகவானே போற்றி ஊழிக்காலத்தில் உலகினை அழிப்பவரே போற்றி ஆழியிலும் எம்மை அணைப்பவரே போற்றி (70)
நான்மறையே தாய்வடிவாய் ஆனவரே போற்றி கான்முளையாம் எம்மைக் காத்தருள்வாய் போற்றி அறுவகைச் சமயத்தில் பைரவரே போற்றி நறுமலர் மாலையை அணிபவரே போற்றி வடைமாலை தன்னை விரும்புபவரே போற்றி நடைபாதை தன்னையும் நயந்தவரே போற்றி புளியடியும் புங்கடியும் இருப்பவரே போற்றி தெளிவுடையார் உள்ளத்து இருப்பவரே போற்றி அரசடியும் ஆலடியும் அமர்பவரே போற்றி பரஞானம் தந்தருளும் பரமனே போற்றி (80)
காவலுக்கு ஒருதெய்வம் ஆனவரே போற்றி ஏவலுக்கு மியைந்துஎமைக் காத்தவரே போற்றி ஷேத்திர பாலகர் ஆனவரே போற்றி ஏத்தினழு வார்க்கன்ப ரானவரே போற்றி பெருந்தொந்தி உடைய பெம்மானே போற்றி அருமறைகள் ஒலமிடும் ஆண்டகையே போற்றி உருண்ட கண்கள் உடையவரே போற்றி

மருண்ட மனத்தை மலர்விப்பவரே போற்றி , ஆடை யெதுவுமற்ற பெருமானே போற்றி
ஒடையிலே ஊறிவரும் அருஞ்சுனையே போற்றி (90)
அரவ அணிகலன்கள் அணிந்தவரே போற்றி பரவ இனியவரே பகவானே போற்றி எண்ணெட்டு மூர்த்தங்கள் இசைந்தவரே போற்றி மண்ணவரும் விண்ணவரும் மகிழ்ந்தவரே போற்றி அசிதாங்க பைரவர் ஆனவரே போற்றி பசிதீர்க்க வந்தருளும் பகவானே போற்றி குருபைரவ ராகிநின்ற கோமானே போற்றி அருமறைக ளுக்குமெட்டா ஆண்டவனே போற்றி கண்ட பைரவர் ஆனவரே போற்றி கண்ட இடமெல்லாம் கருணைசெய்வாய் போற்றி (100)
குரோத பைரவர் ஆனவரே போற்றி விரோத மொன்றில்லா விழுத்துணையே போற்றி உன்மத்த பைரவர் ஆனவரே போற்றி ஜென்மத்திலும் உமைமறவேன் தெய்வமே போற்றி கபால பைரவர் ஆனவரே போற்றி சபாபதியின் மைந்தர் ஆனவரே போற்றி சபரிமலை ஐயப்பா சரணம் சரணம் வடுகாய நமஓம் வடுகாய போற்றி (108)

Page 31
சிவபெருமான் திருவாகுர்ப் போற்றித் திருத்தாண்டகம்
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி அற்றவர்கட் காரமுதம் ஆனாய் போற்றி அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா Gurgigs வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி
 

வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி (10)
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி கொல்புலித்தோல் ஆடைக் குழகா போற்றி அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி ஆலமர நிழலறஞ் சொன்னாய் போற்றி செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி மலையான் மடந்தை மணாளா போற்றி மழவிடையாய் நின்பதாம் போற்றி போற்றி நிலையாக என்நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி (20)
இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தி போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி பூதப் படையுடையாய் போற்றி போற்றி மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி மறியேந்து கையானே போற்றி போற்றி உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி உலகுக் கொருவனே போற்றி போற்றி (30)
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி வெஞ்சுடரோன் பல்இறுத்த வேந்தே போற்றி வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி செய்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி (40)

Page 32
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி அங்கமலத் தயனோடு மாலும் காணா அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி (50)
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி குரைகழலால் கூற்றுதைத்த கோவே போற்றி நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி செம்பொன்னே மரகதமே மணியே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி (60)
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி மேலோர்க்கு மேலோர்க்கும் மேலாய் போற்றி தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்ததேளிர் போற்றும் பொருளே போற்றி தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கும் ஆழி அளித்தாய் போற்றி சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி சங்கொத்த நீற்றெம் சதுரா போற்றி (70)
சேவார்ந்த வேல்கொடியாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி பிரமன்தன் சிரம்அரிந்த பெரியோய் போற்றி பெண்உருவோ டானுருவாய் நின்றாய் போற்றி

கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி அருமந்த தேவர்க் கரசே போற்றி அன்றரக்கன் ஐஞ்ஞான்று தோளும் தாளும் சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. (80)
மாத வாரப் பதிப்பகம் காப்பு வேதராகத்தில் விளங்கும் விமலை விழைந்து தூக்கும் பாதர் ஆகத்தில் கலந்தாள் பவானி பராபரைக்கும் மாத வாரத்துப் பதிகம் விளம்ப வரந்தருவாய் நாத யோகத்தின் அனுபவமாம் கண நாயகனே.
சித்திரை முத்தமிழ்போல் முக்கடல் சூழ் குமரிமுனைவளரும் உத்தமியேறி சக்கரந்தன்னில் உதித்தவளே எத்தருணத்திலும் எனைப்பிரியாமல் எனக்கிரங்கிச் சித்திரைத்திங்களில் வந்தருள்செய்வாய் சிவக்கொழுந்தே
வைகாசி கைகால் நுடங்கியும் கண்பஞ் சடைந்தும் ஈகாகம் கொத்தி மெய்தான் அழுகியும் மாள்வோரைக் கண்டு மிகவும் நொந்தேன் உய்கேனோ ஓவென்று உழலுகின் றேன்நீ உள மிரங்கி வைகாசி எல்லாம் வருவாய் மதுரை மனோன் மணியே.
ஆணி ஊனில் உளத்தில் உணர்வில் உயிரில் உயிர்க்குடியிராம் வானில் மொழியில் கலந்து நின்றாலும் மலர்க்கொடியே ஞானிகள் தேடும் பரஞ்சுடரே உன்னைநான் பணிந்தேன் ஆனி மாதத்தில் அருள்புரிவாய் ஜகதாம் பிகையே.
& வாடி வருந்தும் மனம் தண்மையாக மழைபொழிவாய் கோடி மார்த்தாண்ட சமசோதி வீசும் குளிர்நிலவே " பாடிவந்தேன் இன்னும் பாடுகின்றேன் எங்கள் பாக்கியத்தால் ஆடியில் ஆடிவருவாய் சிவன் கொஞ்சும் அஞ்சுகமே.

Page 33
ஆவணி காவணி யாவதுகனிமல ரால்கலை காட்டுகின்ற பாவணி யாவதுஅநுபூதி யால்அன்பு பற்றுகின்றோம் நாவணி யாவதுநாமத்தி னால்அன்றோ நாடும்என்முன் ஆவணித் திங்களில் வந்தருள்வாய் என்னை ஆண்டவனே.
புரட்டாதி இருட்டாசை யாம்குழி விழாமல் காமூவிரண்டு பேய்கள் வெருட்டாமல் காஎன்று வேண்டுகின் றேன்இந்த வீணனையும் பொருட்டாக எண்ணி அருட்கோல் அளித்தநீ புன்னகைத்து புரட்டாசித் திங்களில் வந்தருள் வாய்அன்ன பூரணியே.
RüIIf மைப்படியுங் கயற்கண்ணி மதுரை மரகதத்தால் கைப்படியா எழில்மான்என்று அரன்உன்னைக் கைபிடித்தான் அப்படியே மணக்கோலங் கண்டுரைழை அகம்மகிழ ஐப்பசி மாதம் வருவாய் அடியேன் அடைக்கலமே.
கார்த்திகை வார்த்தை குழறிட மெய்புள கிக்க மனம்உருகி தீர்த்தமாம் கண்ணில் நின்தாள் அலம்பித் தினம்தொழுதேன் பார்த்தவை யாவும்நீ என்றுண ரும்பரி பக்குவத்தால் கார்த்திகைத் திங்கள் வருவாய் கருணைக் களஞ்சியமே.
Drago சேர்சிறு காலை துயில்நித் தெழுந்தருட் செல்வருடன் நீர்துழைந் தாடி மலர்கொய்து சன்னதி நின்றுநின்றன் பேர்பல பாடி வணங்குகின் றோம்எம் பிழைதவிர்க்க மார்கழிமாதம் வருவாய் அம்மாஞான மாணிக்கமே.
தை கைத்தும் கறுத்தும் ஒறுத்தும் கசடரைக் கால்பணிந்து பொய்த்துன்ப மேனியைப் போற்றுகின் றிர்இருள் போகஉள்ளே வைத்தால் வரம்தரு வாள்ளங்கள் தாய்என்று வாக்குரைத்தேன் தைத்திங்கள் வந்தெண்ணம் ஈடேற்ற வேண்டும் தயாநிதியே

yr Haf காசியைக் கயிலையைக் கண்டும் கருத்திற் களங்கம் என்னும் பாசியை நீக்கார் பயன்பெறு வாரோ பரிந்துநன்மை பேசி அன்புப் பணிசெய்வார் பெரியோர் மெய்ப்பே றளிக்க மாசியில் ஆசி தருவாய் மாசில்லாத மாணிக்கமே.
I sigs எங்கும் நின்கண்ணுண் டெதையும்நீ கேட்பாய் எலாமுனக்குள் தங்கும் நீயே தேவதேவாதிகட்கும் தலைவி அன்பால் பொங்கும் மனத்தே முளைத்துத் தழைக்கின்ற பொற்கொடிநீ பங்குனித் திங்களில் வந்தருள் செய்வாய் பராசக்தியே.
ஞாயிறு ஆயிரம் நாமத்தில் அர்ச்சனை செய்தேன் அடிபணிந்தேன் தாயினும் அன்பு பொழிந்தென்னைத் தாங்கும் தமிழரசி பேயும் பிணியும் வறுமையும் போக்கி விளக்கிடுவாய் ஞாயிறு தோறும் வருவாய் அருள்வாய் சிவலோக நாயகியே.
திங்கள் சங்கப் புலவர் கவிக்கு ஒளியூட்டும் தனிப்பொருளே இங்கிப் பணிக்கே என்அங்கத்தை இட்டேன் எனக்கிரங்கி சிங்கக் குருளை வடிவேல் முருகனும் சேர்ந்திருக்க திங்கட் கிழமை வருவாய் அருள்வாய் சிவசக்தியே.
GF6iari பங்கஜ பாதம் பணிந்தறி யேன்பக்தர் பாடுகையில் அங்கம் சிலிர்க்க அழுதநி யேன்ஏழை ஆயினும்என் சங்கடம் தீர்த்தருள் வாய்என் றுனையே சரண்புகுந்தேன் மங்கள வாரம் வருவாய் அம்மா ஜீவமாணிக்கமே.
மதமாயைச் சேற்றில் உழன்றேன் சிவாமுத வாரிதியே இதமாகக் காட்டி நீராட்டி உள்ளத்தின் இழுக்ககற்றிப் பதமான யோக சம்பத்தெல்லாந் தந்தென்னைப் பாடவைத்தாய் புதவாரந் தோன்றி அருள்புரிவாய் தெய்வப் பூங்குயிலே.

Page 34
வியாழன் ஒருவாய் அமுதை முருகனுக்கு ஊட்டி மற்றொன்றை முன்னோன பெருவாயில் ஊட்டி மகிழ்கின்றபோது பிதிரும் அன்னம் தருவாய் எனக்காத்து நிற்கும் இவ்வேழை தவப்பயன்போல் கருவாரம் தன்னில் வருவாய் சிவயோக கோகிலமே.
Godiof துள்ளித் திரியும் மனம்உள் ளடங்கநின் தோத்திரங்கள் அள்ளிக் குடித்தேன் உடலம் கூத்தாட அகக்கதவை மெள்ளத் திறந்து தெளிந்து குளிர்ந்து விளக்கேற்றினேன் வெள்ளிக் கிழமையில் வந்தருள் வாய்ஞான வித்தகியே
Faf மனக்கவலைக்கு இங்கிடமில்லை தாழ்வில்லை வாட்டமில்லை இனிக்கிரகங்கள் கொடும்பார்வை இல்லை இடருமில்லை எனக்கும் இரங்கி என்பாடலை ஏற்றாய் பேரின்பம் ஈந்தாய் சனிக்கிழமை கண்வருவாய் வசங்கரி சங்கரியே.
G திங்கள் ஈராறும் தினங்கள் ஒரேழும் திருப்பெயரை எனக்கும் இரங்கி என்பாடலை ஏற்றாய் பேரின்பம் ஈந்தாய் மங்களம் பொங்கி மரபோங்கிவாழ வரம் தருவாய் நங்கை சிவகாமி அம்மா அகிலாண்ட நாயகியே.
—്.--—


Page 35

(sýsTīšļışsitosos sıĻŪTĀể
ĻĒJIÚ 十 {ļołm) LIÉŘqiņsĦTI
(qırsıshı)''reolengtoཀ (sırȚIỆsis) IŵuÚstosoɛɛ,
_^`Jш8ЗшіігgФg)Fú的自m明区函n
(qm그종목n)|soufflosoɛɛLĒĢIIIIẾNossL國Ru「T럽 垣4)長ショ!ýnosylstīs) (TI||
||||
— | —
q|Issolstoyo||TTIKTIȚIÐLÆİ Llosae!!!|TT||slae•••••••+ **十~) Lots&lįšgirįIỆ+g)역m國rmulau民國 | ||qī£TTILAȚIsomołI ususųssissae•|******** 十 IIẾlıÍÐLITIẾ*运旧领nq取 |Il-FLÚITIĞIĘ(Lコシ) osno sirishfaenETT118&olĮsȚIIỄIIĆELITĘ
şosfī£|xiosos hollons@țđiş; qī£1,\sqoqisąÍRosjinshún siqsoțşsıkisgyn

Page 36
அமரரான எம்தந்தை செல்வராஜா எனும் ஜோதி அணைவதற்கு முன்பும் பின்னும்: வார்த்தையால், நினைவால், செயலால்,உறுதுணையாய் இருந்து ஆறுதலாய், அமுதமாய், ஆள்வலுவாய் நின்றுதவிய அனைவருக்கும், என்பிறவிக்கடனை தம்கடனாய் நினைந்து பாசத்துடன் கடன்முடித்த சோதரர்க்கும், மச்சினர்க்கும், மாமருக்கும்,மாமியர்க்கும், அன்னையருக்கும், நண்பருக்கும், உறவினர்க்கும், எம் அன்னைக்குத் துணையாக நின்றவர்க்கும், நிற்பவர்க்கும், நன்றிகள், நன்றிகள், நன்றிகள் கோடி.
குடும்பத்தினர்
"துவாரகை" 1 Massey Square, 6 ஆம்பலவாணர் வீதி Suite 105, உடுவில் கிழக்கு Toronto, ON.
சுன்னாகம். இலங்கை. Canada
 


Page 37
d55TöröTLTlib
எது நடந்ததோ அது நன்ற
எது நடக்கிறதோ அது நன
எது நடக்க இருக்கிறதோ
உன்னுடையதை எதை இ
எதற்காக நீ அழுகின்றாய்? ள்தை நீ கொண்டு வந்தாய் எதை நீ படைத்திருந்தாய் எதை நீ எடுத்துக் கொணர் அது இங்கிருந்தே எடுக்கப்
எதை கொடுத்தாயோ
அது இங்கேயே கொடுக்கப்
எது இன்றய உன்னுடையே
அது நாளை மற்றவருடை
மற்றொரு நாளைக்கு வேெ இதுவே உலகநியதியும் எ
 

நாகவே நடந்தத
ன்றாகவே நடக்கிறது
அது நன்றாகவே நடக்கும்.
ழந்தாய்?
அதை நீ இழப்பதற்கு? அதை வீணாக்குவதற்கு
டாயோ
பட்டது.
ப்பட்டது.
தோ
யதாகிறத
றாருவருடையதாகும்.
தை படைப்பின் சாரம்சமாகும்.
ン
WWW.printriä Ti. C3