கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முருகன் திருப்பாடல் திரட்டு

Page 1
சிவயோக சுவாமிகள் நற்
嗣
:
:
 
 
 
 
 
 

5", -a, -ssa Sa. A *「分ームの***ーム
|гшII,
சிந்தனையில் பாடியருளிய
HF :i5ܐܷܩܣܛ -్వవ్లో
பாடல் திரட்டு
யாழ்ப்பாணம் - இலங்கை

Page 2

சிவதொண்டன் வெளியீடு
6. சிவமயம்
சிவயோக சுவாமிகள் நற்சிந்தனையில் பாடியருளிய
முருகன் திருப்பாடல் திரட்டு
சிவதொண்டன் நிலையம், யாழ்ப்பாணம் - இலங்கை
1 .. 2 . 1997
உரிமைப்பதிப்பு

Page 3
பதிப்புரை
சுவாமிகள் பாடியருளிய நற்சிந்தனை நூலிலுள்ள முருகப்பெருமானைப் பற்றிய திருப்பாடல்களைத் திரட்டி ஓர் சிறுநூலாக வெளியிட்டால் முருகனை உபாசனை செய்யும் அடியவர்களுக்கு அஃதோர் வரப்பிர சாதமாயமையும் என்பது பல அன்பர்களின் கருத்தாகும்.
அவர்கள் கருத்திற்கியைய இந் நூலினை வெளியிட்டுள்ளோம். அன்பர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்வார்களாக,
இங்ங்ணம் சிவதொண்டன் சபையார்

முருகன் திருப்பாடல் திரட்டு
நல்லூர் வீதியிலே
இராகம் - பிலஹரி தாளம் - ரூபகம் பல்லவி எந்நாளும் நல்லூரை வலம்வந்து வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே.
அநுபல்லவி அந்நாளில் ஆசான் அருந்தவம் செய்தஇடம் அதுவாத லாலே அதிசயம் மெத்த உண்டு
(எந்நாளும்) சரணங்கள்
1 வேதாந்தம் சித்தாந்தம் கற்றதனா லென்ன வேடிக்கைக் கதைகள் பேசினா லென்ன வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமற் போமே. (எந்நாளும்)
2 சத்தியம் பொறுமை சாந்தம் அடக்கம்
நித்தியா நித்தியந் தெரியும் நிபுணர் பத்திசெய் உத்தமர் பரவும் நல்லூரில் நித்தியம் வந்துபார்த்தால் முத்தி நிச்சயமே. (எந்நாளும்)

Page 4
நடந்து போவோம்
இராகம் - பைரவி, தாளம் - ரூபகம் பல்லவி நல்லைப் பதிக்கு நேராய் நடந்து போவோம் நாமெல்லாம் வாரீர் சீராய்.
அநுபல்லவி அல்லற்றுயர் தருமூழ் மெல்ல் அகன்று போம் நீ வா. (நல்ல்ை) கல்லொத்திடு மனங்கணத்தில் கரைந்து போம் விரைந்து வா (நல்ல்ை) நில்லன் பொடுநினைந்து நினைந்து நீநான் அற நின்று மகிழ்ந்து. (நல்ல்ை)
சரணங்கள் செல்லப் பனைத்தினம் சேவிக்கும் நற்றவன் செல்வச் சிவயோக நாதனுக் குற்றவன் தில்லையம் பலம்சே விக்கும்பொற் பாதன் தித்தித் தகுதகு கிடதோம் தளங்கு தரிகிட கிடதோம் தித்தித்தா திமிதிமி யென நிர்த்தஞ் செய் மயி லேறிய சத்திதான் தரு மைந்தன் வாழ் (நல்ல்ை)

வீரமாமயில் ஏறும் வேலவா
இராகம் - கரஹரப்பிரியா தாளம் - ரூபகம் பல்லவி வீர மாமயில் ஏறும் வேலவா - விளங்கு கெளரி பாலகா - வா
அநுபல்லவி கானக்குறத்தி மகிழும் பாதா - காக்கும் கடவுள் துதிக்கும் நாதா (வீர்)
சரணங்கள் எனக்கும் உனக்கும் பேத மேனோ எடுத்துச் சொன்னால் போதம் போமோ மணக்குஞ் சோலை நல்லூர் வாசா வணங்கும் யோக சுவாமி நேசா. (விர)
米 本 米 率 水 米 米 米 来
எனக்கின்பமே வா
இராகம் - தோடி தாளம் - திஸ்ரம் பல்லவி எனக்கின்பமே - வா
அநுபல்லவி ஏரகம் பழனிப்பதி இலங்குங் கந்தசுவாமி நாதா (எனக்கின்பமே) சரணங்கள்
இரவும் பகலும் ஏத்தித் தொழும் ஏழை யடியார்க் கிரங்கு வாய்நீ எழிலார் நல்லூர் வாழும் வாசனே ஏத்தும் யோக சுவாமி நேசனே (எனக்கின்பமே)

Page 5
நல்லூரான் திருவடி
நல்லுரான் திருவடியை நான்நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனெடி - கிளியே! இரவுபகல் காணேனெடி.
ஆன்மா அழியாதென்று அன்றெனக்குச் சொன்னமொழி நான்மறந்து போவேனோடி - கிளியே! நல்லூரான் தஞ்சமெடி,
தேவர் சிறைமீட்ட செல்வன் திருவடிகள் காவல் எனக்காமெடி . கிளியே! கவலையெல்லாம் போகுமெடி,
எத்தொழிலைச் செய்தாலென் ஏதவத்தைப் பட்டாலென் கர்த்தன் திருவடிகள் - கிளியே! காவல் அறிந்திடெடி. பஞ்சம்படை, வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே! "ஆறுமுகன் தஞ்சமெடி,
சுவாமி யோகநாதன் சொன்னதிருப் பாட்டைந்தும் பூமியிற் சொன்னானெடி . கிளியே! பொல்லாங்கு தீருமெடி

11 வருக முருக இராகம் . கீர்வாணி தாளம் - திஸ்ரம் பல்லவி வருக முருக பரம குருவே வரதா குகனே
அநுபல்லவி' அரி மருகா தருணமிதே' தாரும் உமது சரணபாதம், (வருக)
சரணங்கள் பரவுவார்க் கருளுவாய் நீ பரமசுகந் தரு பானு சசியோகவதி தரு புதல்விதனை மணந்த குமாரசுவாமி மனமுவந்து மயிலேறிவா சிவ யோகசுவாமி நீடு வாழ்க வாழ்க வையம் வாழ்க (வருக) 米 米 米 米 米 米 米 米 水
நல்லுர் வாசனே இராகம் - பியாகடை தாளம் - ஆதி பல்லவி நல்லூர் வாசனே நம, வேலவா நாராயணன் மருகா வரழரீமுருகா
அநுபல்லவி வேதேர்ப தேசநீ விபுவேதிய் வித்தியாதர விமலா கந்தாகுமர (நல்லூர்)
சரணங்கள் சித்திர மயிலேறு சந்த்ரா சத்தி தரும்ன் தந்த்ரா முலே நோகல காரெனு அந்தமில்லா ஸ்வர ஞானமு நீதரு யோகசுவாமி வ்ந்தனாசுலோக முவந்தருள் (நல்லூர்)

Page 6
வறுமைப் பிணிக்கு மருந்து இராகம் - சங்கராபரணம் தாளம் . ரூபகம்
வறுமைப் பிணிக்கு மருந்தொன் றிருக்குது வந்து பாருங்கள் நல்லூரில் வந்து மருந்தை அருந்திய மாதவர்
வாழ்ந்தார் வாழ்ந்தார் வாழ்ந்தாரே. வாசம் பொருந்திய மாமலர்ச் சோலையில்
வந்து குயில் கூவும் மற்ற மாதரும் நாடக மாதரும்
வந்து மகிழ்ந்து வணங்கிடுவார் 2 வீதிக்கு வீதி வெளிச்சமும் அங்கே வீற்றிருந் தாடவர்கள் சோதிப் பிரகாச வேலனைக் கொண்டாடித்
துதிப்பதைப் பார்த்திடுவோம். 3.
米 米 米 来 米 米 米 米 米 நல்லூர் முருகன்
இராகம் - தோடி தாளம் - ஆதி பல்லவி நல்லையில் வாசா ஞானப்பிரகாசா
அநுபல்லவி
நல்லதெய்வானை வள்ளியம்மை சமேதா நரர்சுரர் பணி ஞானபண்டி தாபரா (நல்லை)
சரணம் நான் உன்னை நம்பினேன் நல்குரவு பிணி நலியாமல் மெலியாமல் அருள்தந்து ஆளுவாய் தேனுந்து வேங்கையாய்த் திணைப்புனம் நின்றனை ரீராமன் மருகனே முருகனே கிருபாகரா (நல்லை)

வேலைத் தூக்கி விளையாடும் தெய்வம்
இராகம் - எதுகுலகாம்போதி தாளம் . மிசிரம் பல்லவி வேலைத் தூக்கிவிளை யாடுந் தெய்வமே - யென் வினைப் பகை தீர் தெய்வமே. அநுபல்லவி காலைத்தூக்கி யாடும் கண்ணுதல் தந்த கதிர்காமத் தையனே கழலடி நம்பிவந்தேன். (வேலை)
சரணம் எங்கெங்குந் திருமுகம் எங்கெங்குந் திருவிழி எங்கெங்குந் திருச்செவி எங்கெங்குந் திருக்கரம் எங்கெங்குந் திருவடி எங்கே நீ அங்கே நான் ஈசனே கதிர்காம வாசனே முருகேசா. (வேலை)
வேலனைக் கொண்டாடுவோம்
இராகம் - கானடா தாளம் - ஏகம் பல்லவி வேலனைக் கொண்டாடுவோம் வேறு தெய்வம் நாடிடோம்
அநுபல்லவி காலனைக் காலா லுதைத்தோன் பாலனுக்கே நாமடியோம். (வேலனை)
சரணங்கள் கோலா கலமயிலின் ஏறும் குழந்தை வேலன் பாலர் நாங்களே (வேலனை) ஞாலமுள்ள நாளும் யோகநாதன் சொன்ன சொல்லைக் கொண்டு காலையிலும் மாலையிலும் கழலடியே போற்றிடுவோம் (வேலனை)

Page 7
10
நல்லூரான் கிருபை வேண்டும்
நல்லூரான் கிருபை வேண்டும் - வேறென்ன வேண்டும் நமைப்பிரி யானென நம்பிட வேண்டும்
(நல்லூரான் கிருபை வேண்டும் . வேறென்ன வேண்டும்)
எல்லா ரிடத்தும்அவன் இருப்பதைக் காணவேண்டும் கொல்லாமை கள்ளாமை கோபத்தை நீக்கவேண்டும்
(நல்லூரான் கிருபை வேண்டும் . வேறென்ன வேண்டும்) சொல்லும் பொருளுமற்றுச் சும்மா விருக்கவேண்டும் அல்லும் பகலுமவன் அடியினையே தொழவேண்டும்
(நல்லூரான் கிருபை வேண்டும் . வேறென்ன வேண்டும்)
உல்லாசமாக உலகிற் றிரிய வேண்டும் ஒம்சிவாய நமவென ஒதிக்கொள்ள வேண்டும்
(நல்லூரான் கிருபை வேண்டும் . வேறென்ன வேண்டும்) பல்லோர்புகழ் நல்லூர் செல்லப்பன் பாதத்தை பக்தியாய்க் கும்பிட்டுப் பாடிட வேண்டும்
(நல்லூரான் கிருபை வேண்டும் . வேறென்ன வேண்டும்) சொல்லும் யோகசுவாமி தோத்திரப் பாடலை எல்லோரும் கேட்டு மகிழ்ந்திட வேண்டும்.
(நல்லூரான் கிருபை வேண்டும் . வேறென்ன வேண்டும்)
米 来 米 来 米 米 米 米 米 பரவ வரமருள் மரகத மயின்மேல் வருமுருகா அரகர சிவசிவ அறுமுகவா சரவண பவனே சண்முகனே வரந்தர வாவா என்முன்னே அரவணி சிவனா ரருள்பாலா பரவ வரமருள் பரமதயாளா

11 சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருத்தடா
நல்லூர் ஆட்டக்காரா நீசெய்யடா ஓர்மாயம் அல்லும் பகலுமற்று அதுவும் இதுவுமற்றுச் சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருத்தடா எல்லையில்லா இன்பம் என்னை விழுங்கவேண்டும் சொல்லை அமுதமாக்கி உல்லாச மாய்த்திரிய வில்லை முறியடித்து வெற்றிமுரசு கொட்டடா கல்லை ஒத்தமனம் கரைய அருள்தாடா இல்லையென்ற சொல்லை இல்லாமல் ஆக்கடா முழுதும் உண்மையென்று முனிவன் சொன்னவாக்கு எழுத முடியுமோ என்னைக்காப் பாயடா பத்துவரியும் படிப்போர் கேட்போ ரெல்லாம் முத்தர் ஆகுவார் முழுவதும் உண்மையே.
米 米 来 米 米 米 米 米 米
வேல் முருகா மால் மருகா
இராகம் - கமாஸ் தாளம் - ஆதி பல்லவி மாமயில் ஏறிவா - வா
அநுபல்லவி வேல் முருகா மால் மருகா (LDITLDu5)
சரணம்
கோமானே குழந்தை வேலா
சீமானே திருவடி தஞ்சம்
காமாந்த காரம் அகலவும்
நாமெந்த நேரமும் புகழவும் (DTLDui)
ஏகாந்த சித்தம் பெறவும்
யோகாந்த மார்க்கம் உறவும்
தேகாந்த காலந் தன்னில்
நீபோந்து காத்திடல் வேண்டும் (LDITLDu5)

Page 8
12
சேவற் கொடியோன் திருவடியைச் சிந்திப்பீர்
G66orium பாவம்போம் பொல்லாப் பழிபோகும் பாருலகிற் சேவற் கொடியோன் றிருவடியைச் - சாமளவுஞ் சிந்திப்பீர் செல்வஞ் செறியிலங்கை நன்னாட்டிர் வந்திப்பீ ரென்றும் மகிழ்ந்து. காமமுத லாறுங் கடிந்து கடிகமழுஞ் சேமந் தருந்திவ்ய பாதத்தை - ஆமளவும் போற்றிப் புகழுவீர் பொன்னிலங்கை நன்னாட்டிர் மாற்றிப் பிறக்க மருந்து. புன்னுனிமேல் நீர்போல் நிலையாத பொய்யுடலை என்னினிநீர் எண்ணி வருந்துவீர் - மண்ணுலகில் ஆறுமுகன் பாதத்தை யன்பா யிலங்கையிர் கூறு மதுவே குணம், இளமை நிலையா தெனவறிந்து வேலன் பழமை தருமடியைப் பற்றும்-எழுமையும் இன்பந் தருமே யிலங்கைமா நன்னாட்டீர் அன்பிற் பணிவீ ரறிந்து. அறிவுக் கறிவாகி யப்பாற்கப் பாலாய்ச் செறியும் முருகன் திருத்தாள்-நெறியுடனே பற்றிப் பணிந்திடுவீர் பல்கா லிலங்கையீர் வெற்றிதரு மென்றும் விளைவு. விளையுமிச்சை யெல்லாம் வெறுத்தேயெஞ் ஞான்றும் இளையோன் றிருப்பாத மேத்த-மழைபோற் கருணை வருமே கருதிலங்கை நாட்டீர் தருண மிதுகண்டீர் தான்.

நல்லூாரைக் கும்பிடு
13
இராகம் - ஜோகினி தாளம் - ஆதி
பல்லவி நல்லூரைக் கும்பிட்டுநீ பாடு-அதனாலே நாட்டிலுள்ள பிணிகள் ஒடும்.
அநுபல்லவி
செல்லாதே வெறுங்கையாய் செல்லப்பன் வாழ்ந்த நாடு
தேங்கா யுடன்பழம் கொண்டுநீ செல்லு,
சரணம் வாடி உன்மனம் ஓடினாலும் வருத்தங்கள் கோடி கோடியாகக் கூடினாலும் - குறைகள் வந்து தேடி உன்னை மூடினாலும் , - செல்லப்பன் பாதம் சிந்தித்தால் ஓடி ஒடிப்போமே. பெண்டு பிள்ளைகளென்று பேதைமை கொண்டுநீ கண்ட கண்டஇடம் கலங்கிநீ திரியாதே.
水 米 来 米 米 来 米 米 米
முருகா நீ வா முருகா நீவா - முத்திக்கும் பத்திக்கும் சித்திக்கும்
முழு வல்லவனே உருகா மனமேன் தந்தாய்-திருமால்மருகா உவந்துவந்து சிவந்ததாளிணை உச்சியில் வைச்சிடு மெச்சிய வீரனே
அறுமா முகனே யரனார் மகனே குறுமாமுனிக்குப தேசஞ்சொன்ன குருவே வருவாய் விரைவா யருள்வாய்
(நல்லூ)
(நல்லூ)
(முருகா)
(முருகா)

Page 9
14
அறிமின் தெளிமின் உவமா னங்கடந்த கடவுள்-கேண்மின்
உள்ளத் திருக்க ஊரெல்லாம் ஓடி 1. அவமானப் படுவதில் கண்ட-லாபம் அகிலத்தி லுண்டோ அறமின் தெளிமின். 2 தவஞ்செய்து தன்னைத்தன் னாலே-கேளும் தானா யறியும் சலாக்கியம் உண்டே, 3 அவனிவ னென்றதை நீக்கியாவும் அவனா யிருப்பதைத் தேக்கி. 4 சிவனடி யாருடன் கூடி-உங்கள்
சித்தந் தெளிந்திட நாடி. 5 சிவசிவ என்றுதினம் பாடி-உங்கள் சித்தந் தெளிந்திடத் தேடி. ... 6 கவனமாய்க் கருமத்தை ஆற்றி-கேளும் காலையும் மாலையும் போற்றி. 7 நவநவ மாய்வருஞ் சேதிநாங்காண நல்லூர்க்குப் போவோம்போம் வியாதி. 8
米 米 米 米 水 米 米 米 来 ஈசனே நல்லூர் வாசனே இராகம் - காமஸ் தாளம் - ஆதி பல்லவி ஈசனே நல்லூர் வாசனே இனிய வேல்முருகா உனைநம்பினேன் வாவா.
& Jan må assi பண்ணினேர் மொழியாள் பாசுப்பிர மணியா எண்ணும் எண்ணமெல்லாம் நண்ணும்வண்ணம் வாவா. (ஈசனே) தாசனான யோகசுவாமி சாற்றும் பாவைக் கேட்டுக்கி ருபைகூர்ந்து வாட்டந்தீர்க்க வாவா. (86)

15 குழந்தை வேலன்
பல்லவி குழந்தைவேலா குமரகுருபர அரகர சிவசிவ
சரணங்கள் குன்றுங் குன்றுஞ்சென் றெங்கும் அடிபட நடமிடு
(குழந்தைவேலா)
தொழுந் தெய்வமும் நீ சுற்றம்நீ துணைநீ துன்பஇன்பமும்நீ
(குழந்தைவேலா)
கொன்றுங் கொன்றுங் கொன்றும் விதிமுறை நின்றும் நின்றும் நின்றும் வெருவுறச் சென்றுஞ் சென்றுந் திசைதிசை வலம்வரு (குழந்தைவேலா) எழுந்து என்னிடம் விரைந்துவந்து இடர்களைந்து
காத்திடவருவாய் (குழந்தைவேலா)
கண்டுங் கண்டுங் கண்டுங் கனமுறை வென்றும் வென்றும் வென்றும் விபுதர்கள் பொன்றும் பொன்றும் படிவலமிடம் நடமிடு (குழந்தைவேலா)
அளந்து யாவரும் அறிந்யிட அரியநின் செழுந் திருப்பத மலரடி தந்திடு (குழந்தைவேலா)
அஞ்சும் அஞ்சும் அஞ்சும்படி நெஞ்சும் நெஞ்சும் கெஞ்சக் கிரிபடத் துஞ்சும் துஞ்சும் அசுரர்கள் துகள்படத் தஞ்சம் தஞ்சம் எனநடமிடு (குழந்தைவேலா) பழந்தமிழர்கள் பரிந்து செந்தமிழ் அறைந்துசிந்தை நொந்து உருகவந்திடு (குழந்தைவேலா)

Page 10
16 வளைந்த சூரர்கள் தளங்கெடக்கிரி உடைந்து போகவே
சிவந்தவேல்விடு (குழந்தைவேலா)
ங்குஞ் சங்குமுழங்கச் சிந்துகலங்கப் பூதர்நடுங்கத் தவர்கள் பரிவோடு அரகரசிவசிவ எனும்கடல் ஒலிபோல் நீலக்கோல மாமியில் மீது நிறுநிறு எனநெஞ்சம் அஞ்ச வஞ்சகர்கெஞ்ச
அஞ்சல் அஞ்சல் அஞ்சல் எனவரு (குழந்தைவேலா)
se se : x : x k se 3:
முத்தனென வாழ முயல் நேரிசை வெண்பா
உருக்கு மொழியால் உளங்கொள்ளை கொண்டு கருக்குழியிற் சேராமற் காத்தான் - திருக்குழாம் காலையும் மாலையுங் கைதொழுது போற்றுநல்ல வேலோன் பதியில் விரைவிந்து. W 1.
விரைமலரைத் தூவியே மெய்விதிர்த்துத் தொண்டர் நிரையாய் நினைப்பறவே நின்று - கரையில்லா ஆனந்தங் கொண்டே அவனேநான் என்றுநிதம் ஞானத்தாற் சொன்னார் நயந்து. 2 நயப்பார் மிகவியப்பார் நாமறியோம் என்றே பயப்பா டுடன்பாதம் வீழ்ந்து - சுயபுத்தி அற்றவராய்ச் சோர்வுமிக அப்பனே யென்றழுவார் மற்றொன் றறியார் மனத்து. 3
மனத்துயரம் மாற்ற மருந்துண்டோ விங்கு முனைத்துவருஞ் சூரர் முடியத் - தனித்தவேல் உண்டே துணையென்றோர்ந் தும்பர்சிறை மீட்டவனைக் கண்டே களிக்கக் கருது. 4

கருத்தி லிருக்குங் கதிர்காமத் தோனை வருத்தமுற் றேன்தேடு கின்றாய் - திருத்தியுன் சித்தமிசை நித்தம் திகழொளியைக் கண்டுருகி முத்தனென வாழ முயல்.
米 米 来 米 米 米 米 米 米
கூவு குயிலே!
கூவுகுயி லேபறந்து கூவுகுயிலே கும்பிடுவார் மனத்தானைக் கூவுகுயிலே நம்பிக்கை யாய்ப்பறந்து கூவுகுயிலே நாங்கள்சிவ மென்றுசொல்லிக் கூவுகுயிலே.
ஆதியந்தம் இல்லையென்று கூவுகுயிலே அளந்தறிய ஒண்ணாதென்று கூவுகுயிலே. நீதிநெறி யைச்சென்று கூவுகுயிலே நித்தியம்நாம் என்றுசொல்லிக் கூவுகுயிலே. ஊரும்பேரும் இல்லையென்று கூவுகுயிலே ஒருபொல்லாப்பு மில்லையென்று கூவுகுயிலே.
ஆருமறி யாரென்று கூவுகுயிலே அகம்புறமும் இல்லையென்று கூவுகுயிலே.
ஐம்பூதம்நா மல்லவென்று கூவுகுயிலே. ஐம்பொறிநா மல்லவென்று கூவுகுயிலே.
ஆன்மாவே நாமென்று கூவுகுயிலே அங்குமிங் கும்பறந்து கூவுகுயிலே.
மாண்புட னேபறந்து கூவுகுயிலே மரணம்பிறப் பில்லையென்று கூவுகுயிலே.
17

Page 11
18
நாமேநா மென்றுசொல்லிக் கூவுகுயிலே நமக்குக்குறை வில்லையென்று கூவுகுயிலே.
போமேபோம் வினையென்று கூவுகுயிலே புண்ணியம்போல் பாவமென்று கூவுகுயிலே,
நல்லூரான் வீதியிற்போய்க் கூவுகுயிலே நல்லதொண்டர் நாமென்று கூவுகுயிலே,
米 米 本 本 米 率 米 本 米
கிளிக் கண்ணி
ஆன்மா ஒருபோதும்-கிளியே! அழியாதது நாங்கள் வீண்பாவம் விட்டிடடி-கிளியே! விளங்குநல்லூர் தெரியுதடி. காண்பானும் காட்சியும்போய்க்-கிளியே! கண்டபல பொருளும் விட்டு மாண்பாகச் சிந்தையிலே-கிளியே! வடிவேலைப் போற்றிடடி.
ஊண்பொருளும் ஒழியுமடி-கிளியே! உலகமெலாம் அழியுமடி சேண்பொலியுந் திருவடியைக்-கிளியே! சிந்தையிலே போற்றிடடி.
சங்கோசை கேட்குதடி-கிளியே!
தாளமேள முழங்குதடி எங்கெங்கும் வெளிச்சமடி-கிளியே
ஏந்திழாய் நடந்துவாடி,
10
11
12

சண்பக மரத்தடியிற்-கிளியே! சாதுக்களின் கூட்டமடி மண்போட்டால் மண்விழாதேகிளியே! மனிதரெல்லாங் கூடிக்கொண்டார்.
மாறிப் பொறிவழிபோய்க்-கிளியே! மாறாட்டம் கொள்ளாதே ஆறி நடந்துவாடி-கிளியே! அதிசயங்கள் மெத்தவடி,
தேர்முட்டிப் படிமேலே-கிளியே! செல்லப்ப னென்றசீமான் ஆர்வமுடன் இருக்கிறான்டி-கிளியே! அங்குபோவோம் வந்திடடி. கிட்ட நெருங்கையிலே கிளியே! கிடுகிடென்று நடுங்குதடி ? முட்டாளைப் போலேயவன்-கிளியே! முகமும் விளங்குதடி.
பித்தனெனப் பலபேரும்-கிளியே! பேசிப்பேசி இகழ்வார்கள் எத்தினாலும் அவன்மனமோ-கிளியே! எள்ளளவுங் கலங்காதே.
பத்தியுடன் வந்தடடி-கிளியே! பார்த்தவுடன் அஞ்சாதே வித்தகஞ்சேர் திருவடிவில்-கிளியே! விழுந்துநீ கும்பிடடி.
நாமறியோ மென்றுசொல்லிக்-கிளியே! நகைசெய்வான் நாணாதே
9
10

Page 12
20
தாமதம் பண்ணாதேகிளியே! சடுதியாய்க் கும்பிடடி.
கோணாத சிந்தையுடன்-கிளியே! கும்பிட்டு நின்றிடடி விணான ஆசையெல்லாம்-கிளியே! விட்டோடும் வெற்றியடி.
ஆரறிவா ரென்றுசொல்லிக்-கிளியே! அதட்டுவான் அஞ்சாதே பாரறிந்த பித்தனடி-கிளியே! பட்சமுடன் பணிந்துநட.
கண்டார் நகைப்பரெனக்-கிளியே! கண்மணிநீ அஞ்சாதே பண்டார வேடமடி-கிளியே! பாடிப் பணிந்திடடி.
ஒண்டொடியே வந்திடடி-கிளியே! உள்வீதிக்கும் போவமடி வண்டிவண்டி யாயிளநீர்-கிளியே! வந்து குவியுதடி.
வகைவகையாய்ப் பச்சரிச்-கிளியே! வாழைக்குலை தேங்காய்கள் உவகையுடன் கொண்டுவந்து-கிளியே! உதவுகிறார் பார்த்திடடி. கர்ப்பூரப் பெட்டிகளும்-கிளியே! கட்டுக்கட்டாய்க் கரும்புகளும் பொற்பூவும் சந்தனமும்-கிளியே! பொலியுதடி வீதிP '^ாம்.
11
12
13
14
15
16
17

கண்டாயோ கார்மயிலே-கிளியே! கந்தன்விளை யாட்டுக்களை மண்டலங்கள் நடுங்குமடி-கிளியே! மணியோசை கேட்குதடி
பந்திபந்தி யாயிருந்து-கிளியே! பார்ப்பார்க ளெல்லாரும் விந்தைசேர் மந்திரத்தைக்-கிளியே! விளம்புகின்றார் கேட்டிடடி.
பச்சைப் பசுங்கிளியே-கிளியே! பார்த்தாயோ கதவுகளை அச்சமின்றி முடிவிட்டார்-கிளியே! அபிடேகம் ஆகுதடி.
ஏக மனதாகிக்-கிளியே! எல்லாரும் நிற்கையிலே வேகமுடன் கதவுகளைக்-கிளியே! வேதியர்கள் திறந்துவிட்டார்.
அஞ்சடுக்குத் தீபமுதல்-கிளியே! அடுக்கடுக்காய்த் தீபமெல்லாம் அந்தணர்கள் காட்டுகிறார்-கிளியே! அன்புடனே கும்பிடடி.
அங்கையிலே பூவெடுத்துக்-கிளியே! அந்தணர்கள் ஆசீர்வாதம் சங்கையின்றிச் சொல்லுகிறார்-கிளியே! சண்முகனை வேண்டிடடி.
திருநீறுஞ் சந்தனமும்-கிளியே! தீர்த்தம்பரி மாறுகிறார்
21
18
19
20
21
22
23

Page 13
22
செங்கமல மடமாதேகிளியே! சேவித்துநீ வேண்டியணி.
அத்தசாமப் பூசைக்குநாம்-கிளியே! ஆரணங்கே நிற்பமென்றால் மெத்தநேர மாகுமடி-கிளியே! வீட்டிலேயா வில்லையடி. விரைவாய் நடந்துவாடி-கிளியே! வீணர்தங் கூட்டமடி மாரிக்கால மானதனால்-கிளியே! மாகவன மாய்நடடி. ஓடாதே வழுக்குமடி-கிளியே!
உரைத்திடடி ஐந்தெழுத்தை வாடாதே வீட்டுவாசல்-கிளியே!
வந்தோமே திறந்திடடி.
朱 米 米 冰 米 米 来 米 米 நல்லூரான் திருமுன்நின் றுதூது நாமேநா மென்றுசொல்லி ஊதூது எல்லாஞ்சிவன் செயலென் றுதூது
ஏகமன தாய்நின் றுதூது.
k + k + k + k + k, கிழமை வணக்கம்
தாயினு மன்பு தழைத்த குருவே தயாபரனே
தீயினு மிக்க திருமேனி யும்நின் திருவடியும் நாயினு மிக்க கடையேனை ஆள நலமுடனே
ஞாயிறு தோறும் வருவாய்நல் லூரில்வாழ் நாயகமே.
25
26
27

23 அங்கையிற் போதுகொண் டெய்போதும் போற்றும் அடியவர்கள் தங்குறை தீர்க்கும் தயாநிதி யேசத்தி வேல்முருகா பங்கய னைக்குட்டி முன்சிறை வைத்திட்ட பாலகனே திங்கட் கிழமை வருவாய்நல் லூரில்வாழ் தேசிகனே. 2
ஒவ்வா தனசொல்லி ஊரூர்கள் தோறும் உலைந்தலையும் இவ்விணற் காக்க இனிவரு வாயிள வேல்முருகா தெய்வானை வள்ளி தினமும் அணிசெய்யுஞ் சேவகனே. செவ்வாய்க் கிழமை வருவாய்நல் லூரினிற் றேசிகனே. 3
பதமலர் போற்று மடியவர் தம்மைப் பரிவுடனே இதமுடன் காக்குங் குருமணி யேயெழில் சேர்முருகா சதமுனை யன்றி ஒருவரு மில்லையித் தாரணியிற் புதனெனும் வாரம் வருவாய்நல் லூரில்வாழ் புண்ணியனே. 4
தயாநிதி யேயென்று தாள்போற்றும் அன்பர் தமக்குவரும் வியாதி வறுமை விலக்கு மருந்தே விழுப்பொருளே தியான நிலையி லுனைக்கண்டு தேறித் தெளிவதற்கு வியாழக் கிழமை வருவாய்நல் லூரில்வாழ் வேலவனே. 5
புள்ளிக் கலாப மயிலேறும் வேலவ புண்ணியனே
தெள்ளித் தெளிந்தவர் சித்தத்தி லூறும் தெளியமுதே வள்ளிக் குகந்தவ னேமுரு காமற வாமலெனை வெள்ளிக் கிழமை வருவாய்நல் லூரில்வாழ் வேலவனே. 6 இனியே தெனக்குன் னருள்வரு மோவென வேங்கிமனம் தனியே யிருந்து வருந்து தையோசத்தி வேல்முருகா கனியே கனியி ரசமே அடியனேன் கண்களிக்கச் சனிவாரம் தன்னில் வருவாய்நல் லூரில்வாழ் சண்முகனே, 7
米 米 米 米 米 米 米 米 冰

Page 14
நல்ல மலர்
நேரிசை வெண்பா - (அந்தாதித் தொடை)
நல்ல மலரெடுத்து நல்லூரை நாடிப்போய் நல்ல மனத்தோடு நாம் பணிந்தால் - நல்லமயில் ஏறிவந்து காட்சி கொடுப்பான் எழில்முருகன் தேறிவிடும் சிந்தை தெளி.
தெளியுமே நின்சிந்தை செல்வனருள் பொங்கி வழியுமே தானவர்கள் சவர்னோர் . ஒழிவின்றி வந்து வணங்கும் வளஞ்சேரும் நல்லூரிற் கந்த னெனச் சொல்லிக் கருது. கருத்திற் கருத்தா யிருக்குங் கழற்றாள் விருத்தர்களும் பாலர்களும் வேண்டிப் - பெருத்த மயிலிவரும் வேலவா! விமலா வெனச்சொற் பயிலவறு மெங்கள் பவம்.
பவம்நீங்கும் பன்னிருகை வேலா வெனவே தவமோங்குஞ் சாந்தம் பொறுமை - சிவமாம் மனமு மடங்குமே மாசனைத்துந் தீருமே சினமு மடங்குமே தேர்.
தேரடியிற் சென்று தரிசித்தாற் போதுமெனப் பாரறியச் சொன்ன பழங்கதையை - நீரறிய மாட்டிரோ நின்று மனங்கசிந்து பாடீரோ நாட்டீரே கேளிர் நலம். நலமறிய மாட்டாமல் நானென்று சொல்லிப் பலபேசும் பாவி பணிவோர் . நிலவுலகில்
நல்லூ ரெனும்பதியை நாடித் தரிசித்தாற் பல்லூழி வாழலாம் பார்.

பாராயோ வென்னைநீ பார்த்துக் கவலையெலாந் தீராயோ செய்ய திருவேலா - வாராயோ மாமயி லேறி மகிழ்ந்து வரம் தந்து சேமமுடன் காப்பாய் சிறப்பு. 7
சிறப்புக் குறைவிடமே தேவர் பெரும! மறக்குறத்தி வள்ளி மணாள! - நிறக்கொடிகள் ஆடும் அழகுடைய நல்லூர்வாழ் ஆண்டவனே நீடும் அருள்தருவாய் நீ. 8 நீயேநா னென்று நினைக்கு மடியார்க்குத் தாயே எனப்பெரியோர் தாம்வணங்கும் - நீயே துணையல்லால் வேறு துணையொன்றுங் காணேன் இணையில்லா நல்லுாரா வின்று. 9
இன்றிருளை நீக்கி யெழுந்த கதிரவன்போல் அன்றென் னகவிருளைத் தீர்ப்பதற்குக் - குன்றுபோல் வந்தா னொருவன் வளஞ்சேரும் நல்லூரில் தந்தா னருளெனக்குத் தான். 10
米 米 米 米 米 米 米 米 米
நல்ல மருந்து இராகம்-மோகனம் தாளம்-ரூபகம்
நல்ல மருந்தொரு குருமருந்தை நான் நல்லூரிற் கண்டேனே. (நல்ல) எல்லையில் லாப்பிணி தீர்க்கு மருந்து இம்மை மறுமைக்கு மேற்ற மருந்து இல்லை யெனாது கொடுக்கும் மருந்து. ஏழை யடியார்க் கிரங்கு மருந்து (நல்ல)

Page 15
26
வல்லவன் செல்லப்பன் தந்த மருந்து வாழ்த்தும் கணபதிக்கு வந்த மருந்து புல்லர்கள் கண்டும் புசியா மருந்து புண்ணியர் யோகர் புசிக்கு மருந்து.
米 米 米 米 米 米 米 米 米
இந்த ஆன்மா நித்தியம் இராகம் - நடனபைரவி.
அந்த வாக்கும் பொய்த்துப் போமோ ஆசான் நல்லூர் வீதியி லருளிய,
அநுபல்லவி இந்த ஆன்மா நித்திய மென்ற
சரணங்கள் மங்கைய ராடவர் மைந்தர்கள் கூடி
மகிழ்ந்தும் புகழ்ந்தும் வரதனைத் தேடி வந்தனை புரிய வருவார் கோடி
செந்தமிழ் நாவலன் செல்லப்பன் சொன்ன.
தேங்கா யிளநீர் தீங்கனி கொண்டு
திருவடித் தொண்டு செய்வதைக் கண்டு ஐம்புல னடங்கி நின்றவ ருண்டு
ஆரறி வாரென ஆசான் சொன்ன. கெளரிம னோகரி ஆனந்தாச்சி
கமல ஆச்சிசெல் லாச்சி ஐவரும் உவந்து சேவடி கும்பிடு முத்தமன்
தவத்தைச் செய்திடத் தந்திடு மருளே.
(நல்ல)
தாளம் - ஆதி
(அந்த)
(அந்த)
(அந்த)
(அந்த)

குரு மருந்து
அரும ருந்தொரு குரும ருந்து
அடியார் கண்டு களிக்கும் மருந்து. இருவி னையைப் போக்கும் மருந்து
இன்ப நிலையில் நிறுத்தும் மருந்து. ஒருபொல் லாப்புமில்லை என்ற மருந்து
இம்மைம றுமைக்கும் ஏற்ற மருந்து. திருவார் நல்லூரில் வாழும் மருந்து
தேவாதி தேவருங் காணா மருந்து.
米 来 来 米 米 来 来 米 米
நல்லைப் பதிக் கரசே
நல்லைப் பதிக்கரசே! நல்லைப் பதிக்கரசே!
நல்ல வழிகாட்டி நாயேனை யாண்டிடடா G
கல்லை நிகர்த்தமனங் கரையவருள் தந்திட்டா
எல்லையில்லா வின்பத்தே யெனையிருத்தி வைத்திடடா,
ஆன்மாவை நித்தியமென் றறியவரந் தந்திடடா வீண்பா வனையெல்லாம் விலக்க வருள்தாடா.
மாயப் பிணியகல மருந்தெனக்குத் தந்திடடா காயங் குலையுமுன்னர் காண வருள்தாடா. சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டிடடா. சத்தத்தி னுள்ளுே சதாசிவங் காட்டடிடடா. எல்லா ரையுமீச னிடத்திலே காட்டிடடா எல்லா ரிடத்திலும் ஈசனைக் காட்டிடடா.
(அரு)
(அரு)
(அரு)
(அரு)
2

Page 16
28
கொல்லா வரமெனக்குக் குவலயத்தில் வேணுமடா எல்லா ரிடத்துமன்பாய் இருப்பதெனக் கிச்சையடா. 7 என்றும் மறவா வரமெனக்கு வேணுமடா குன்றுபோ னிற்கக் குருவே வரந்தாடா. 8
米 米 本 米 米 米 米 来 米
சரவணபவ குக
பல்லவி யோககுருநாதன் திருமலர்ப் பாதன் தெரிசனம் நினைமனமே தினமே. அநுபல்லவி தவநிலை யோர்கள் பணியும் பொற்பாதன் சரவண பவகுக சண்முக நாதன். (GuusTé5)
சரணம் அன்பர் களிடர்தம்மை அகற்றுஞ் சுசீலன் அம்மை வள்ளிதெய் வானைமகிழ் லோலன் என்பிழை யாவும் பொறுத்தருள் சீலன் இன்பமெந் நாளுந்தரு சுந்தரப் பாலன். (Gurras)
米 米 米 米 水 米 米 米 米
நல்லூரான் கிருபை வேண்டும்
I
இராகம் - சுருட்டி. தாளம் - ஆதி
பல்லவி நல்லூரான் கிருபை வேண்டும்-நாம் எந்நாளும் பாடவேண்டும்-வேறென்ன வேண்டும்.

அநுபல்லவி சொல்லும் பொருளுமற்றுச் சும்மா விருக்கவேண்டும் தூய குருவின்பாதம் துணையாகக் கொள்ளவேண்டும். (நல்லு)
சரணங்கள் அல்லும் பகலுஞ்சிவ நாமத்தைச் சொல்லவேண்டும் ஆசை மூன்றையும் அடியோடு கொல்லவேண்டும் கண்டு கண்டுமனங் குளிர்ந்திட வேண்டும் காமக் குரோத மோகத்தைத் தீர்க்கவேண்டும். (நல்லுர்) பொறிவழி போய்மனம் அலையாமை வேண்டும் பூரண மான நிட்டையும் வேண்டும் எல்லா ரிடத்துமன்பு செலுத்தவேண்டும் எழில்பெறுஞ் சுழுமுனை வழிச்செல்ல வேண்டும். (நல்லூ)
本冰 米 米 米 米冰 米 来 Luria 6a6 uub
தையலார் மையலிற் றான்மயங்கும் மாந்தர்காள் வையமெல்லா மாள மருந்துண்டே ஐயன்றாள் காலையொடு மாலை கடல்சூ பூழிலங்கையிர் சாலவே போற்றுவீர் தான்.
செல்வச் செருக்கினாற் றீவினையை யாற்றுவீர் அல்லற் கடற்குள்ளே ஆழ்ந்திடுவீர்-வல்லபரன் தந்தமுரு கன்றாளைப் பற்றி ரிலங்கையீர் அந்தமிலா வானந்த மாம். 2 நில்லாத செல்வத்தை நேராகப் பெற்றக்கால் இல்லாத வர்க்கீந்தே யீசன்றாள். நல்லாய்த் தொழுவார்க்குண் டோகுறைதான் தொல்லிலங்கை நாட்டிர் எழுபிறப்பு மேமாப்போ யாம். 3

Page 17
பொல்லாப் புழுமலியும் புன்குரம்பை யாமுடலை நல்லோர் நயப்பரோ நாடோறும்-கொல்லாமற் கூர்வேலன் பாதங் குறிப்பீ ரிலங்கையீர் பார்மீதி லென்ன பயம்.
米 米 米 米 米 米 米 米 米 உய்ய வழி காட்டுவாய்
தெய்வமே யானெனதெ னுஞ்செருக் கால்மனது
தீயவழி செல்லு தையோ செய்வதொன் றறிகிலேன் தேவாதி தேவனே
திருவருட் பார்வை சாத்தி உய்யவழி காட்டுவாய் உன்னையல் லாதுதுணை
யுலகத்தில் எவருமுண்டோ வையகம் புகழ்நல்லை வாழும்வடி வேலனே
மயிலேறு தம்பிரானே.
米 米 米 米 米 米 米 冰 米
நல்லூர்த் தேரடியில் நான் கண்டேன் நேரிசை வெண்பா
பழம்பாக்கு வெற்றிலை பச்சரிசி தேங்காய் இளநீர்தே னேந்தி யெழிலார்-அளவிலா மங்கையரு மாடவரு மல்குநல்லூர்த் தேரடியில் எங்குருவைக் கண்டே னினிது.
காரார் குயில்பாடக் கார்வண்டு பண்பாட ஆராத காத லடியரெலாஞ் - சீராகச் சென்னியிலே கைகுவித்தார் தேரடியிற் றேசிகனை என்னையவன் பார்த்தா னினிது.

31 இன்றைக்கோ நாளைக்கோ இன்னுநாட் சென்றிடுமோ என்றடியா ரேத்து மினியவொலி - நன்றுடைய நல்லூரிற் றேரடியில் நான்கண்டு போற்றினேன் சொல்லுந் தரமோ சுகம். 3
காலன் வலிதொலையக் காலெடுத்தான் றந்தருளும் பாலன்வாழ் நல்லைப் பழம்பதியிற் - கோலமுடன் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் ஆரென் றறிவா யடா. 4 உவமை கடந்தவின்ப மெல்லார்க்கு முண்டு தவஞ்செய்வார் தாமறிவர் தப்பார் - சிவனருளை நோக்கென்றான் நோக்க நொடியளவி லேயின்பம் தேக்கிற்றென் சிந்தை தெளிந்து. 5
米 米 米 米 米 米 米 冰 米 ஓலாட்டு
அன்பே யுருவா யமர்ந்த வடியவருக் கின்பந் தருமுதல்வ இறைவநீ கண்வளராய். ஆருயிர்கள் தோறும் அதுவதுவாய்த் தோன்றிநிற்கும் பேருருவே! இன்பப் பெருக்கேநீ கண்வளராய். 2 இல்லையென்று சொல்லுவார் இல்லத்திற் செல்லாமல் நல்ல வருள்தந்த நல்லூரா! கண்வளராய். 3 இனிய வருள்சொரிந் திடர்நீக்கி யாண்டருளுந் தனிமுதலே! எங்கள் தயாபரனே! கண்வளராய். 4.
ஈன்றாளு மாயெமக் கெந்தையுமாய்க் குருபரனாய்ச் சான்றார் நெறிகாட்டுந் தற்பரனே! கண்வளராய். 5

Page 18
32
உன்னை மறப்பேனோ உயிர்நான் தரிப்பேனோ என்னை மறப்பாயோ ஈசனே கண்வளராய்
ஊனாய் உயிராய் உளத்திற் சுவையளிக்குந்
தேனாய்த் தெவிட்டாத தெள்ளமுதே கண்வளராய்.
எல்லாமா யல்லவுமா யிருக்கும் பராபரனே நல்லூரில் வாழ்வே நாயகமே கண்வளராய்.
ஏக னநேக விறைவனடி வாழ்கவெனும் ஆகமத்தி னுட்பொருளே யையனே கண்வளராய்.
ஐயமே னென்றுரைத்த வாசான் திருவாக்கை
வையமுய்யத் தந்தருளும் வாழ்வேநீ கண்வளராய்.
ஒருமொழியா லென்ற னுள்ள முவக்கவைத்த திருவேயென் செல்வமே தெய்வமே கண்வளராய்.
ஓம்நமசி வாயவென வுருவேற வேசெபிப்பார்
விம்பிடம்பம் மேவுவரோ மெய்ப்பொருளே கண்வளராய்.
ஒளவியம் பேசி யழியாமல் வ்ையகத்திற் றெப்வம்போல் வாழச் செய்வாய்நீ கண்வளராய்.
***#米米来来米
வேல் வேல்
அன்புடனே ஐந்தெழுத்தைச் சொல்லு - வேல் வேல்
ஆசா னடிக்கீழ் அமர்ந்துநீ நில்லு
10
1.
கொஞ்சங்கொஞ்ச மாய்மனதை வெல்லு - வேல் வேல்
கூடாத கூட்டத்தை விட்டுநீ செல்லு,

33 வஞ்சியர் ஆசையைத் தள்ளு - வேல் வேல் வாணாள் ஆசையைப் பேணாமல் கொள்ளு சஞ்சலம் வந்தால் வரட்டும் - வேல் வேல் சற்றும் அலையாமல் சாந்தத்தில் கட்டு. 2
அஞ்சுபூதமும் நீயல்ல நம்பு - வேல் வேல் ஐம்பொறி ஐம்புலனும் நீயல்ல நம்பு வெஞ்சினம்நெஞ்சில் வராமல் காப்பாய் - வேல் வேல் வேறு பொருளில்லா நிட்டையில் சேர்ப்பாய். 3 பஞ்சம் படைவந்த போது - வேல் வேல் பரமன் திருப்பெயர் தப்பாமல் ஒது நஞ்சைப்போல் பிறன்பொருள் எண்ணு + வேல் வேல் நாங்கள் சிவமென நாளும்நீ நண்ணு. 4 கஞ்ச மலர்ப்பதம் வாழ்க - வேல் வேல் கருணைநிறைந்த பெரியோர்கள் வாழ்க இந்திரன் முதலியோர் வாழ்க - வேல் வேல் இவ்வுலகி லுள்ளோர் யாவரும் வாழ்க. 5
事 米 来 米 米 米 米 米 米
எங்குந் திருக்கூத்து
அங்குமிங்கும் எங்குந்திருக் கூத்து - அடடா
அதையறிதல் பத்தரைப்பொன் மாற்று. 1 பொங்கிவருங் காமமே கூற்று - அடடா புலன்வழியில் போகாமல் தேற்று. 2
இடைபிங்க லையிரண்டும் சேர்த்து - அடடா எழிலான சுழுமுனைக்குள் ஏற்று. 3

Page 19
34
மடைதிறந்தாற் போலவரும் ஊற்று - அடடா" மாமாயை சாராதெனச் சாற்று.
பொங்கிவரும் அமிர்தத்தை யுண்டு - அடடா,
பூரண நிட்டையிற்சேர் நன்று.
மங்கள கரமாக வாழ்த்து: அடிடா ழெளன நிலையிலே ஆழ்த்து.
"சங்கரன் திருப்பர்தம் போற்று - அட்டா
சாயுச்சியப் பதவியில் ஏற்று. நல்லூரான் திருப்பாதம் காப்பு - அடடா
நமக்குக்குறை வில்லைநல்ல வாக்கு.
சொல்ல முடியாத தீர்ப்பு - அடடா சுவாமி கிருபையுனக் காப்பு.
米 米 米 米 米 米 米 来 来
() பரமனை எங்கும பாா
பார்பார் பரமனை எங்கும் பதையாதேசுகம் இதயத்தில் தங்கும்
ஆர்தான் உனக்குநிகர் ஆவார்
ஐயப்படாதேகெய்வம் உன்னிடம் உண்டு.
ஒருபொல்லாப்பு மில்லையென்ற வாக்கு உணர்ந்துணர்ந் தின்பத்தில் தேக்கு கருமத்தில் கையைநீ வைத்துக் " கடமையைப் பயமின்றி ஆக்கு.

35 உண்மை முழுதுமென்று சாற்று உனக்கொரு குறைவில்லை ஏற்று கண்ணை இமைகாக்கு மதுபோல் காப்பதுவேயுன் கடமை இனிமேல், 3.
வீம்பிடும்பை ஆங்காரம் விட்டு வேதாந்த நெறியினைக் கட்டு ஓம்சிவாயநம என்று செபிப்பாய் உள்ளத்திற் கள்ளத்தை அவிப்பாய். 4. நல்லூரான் திருவடியைப் பாடு நாமேநாம் என்றுசொல்லி நாடு கல்லுங் கரையக்கவி சொல்லு காமக் குரோதத்தை வெல்லு. s
米 米 米 米 米 来 米 水 冰
முருகா நீ வா
முருகா நீவா முத்திக்கும் பக்திக்கும் சித்திக்கும முழு வல்லவனே உருகா மனமேன் தந்தாய்-திருமால்மருகா உவந்துவந்து சிவந்ததாளினை உச்சியில் வைச்சிடு மெச்சிய வீரனே. (முருகா)
அறுமா முகனே யரனார் மகனே
குறுமாமுனிக்குபதேசஞ்சொன்ன 3. , குருவே வருவாய் விரைவாயருள்வாய் முருகா)

Page 20
36
செழுமலர்த் திருவடி இராகம் - காம்போதி. தாளம் - ஆதி பல்லவி செழுமலர்த் திருவடி தரிசிக்கலாம் வாராய் தீய மனமே.
அநுபல்லவி தொழுமடியார் பழவினைகள் கழுவித்தள்ளி துரியநிலை அருளவல்ல நல்லை நாதன் (செழுமலர்)
சரணங்கள் முழுது முண்மையென முனிமுன் சொன்னமொழி மோகந் தீர்க்குமதை முற்றிலும் நம்பி அடுத்து வந்தவெனை ஆதரித் தாண்டுகொள் அம்புவி மீது நம்பினேனே. (செழுமலர்)
அடியவர் குடியா ஆளும் அரனே அரகர சிவசிவ சங்கர சம்போ அழுதுந் தொழுதுமடி பாடி யரற்றி அதிவேக மாயோடி வாராய். (செழுமலர்)
********料
அன்பே சிவமென வறிவா ரவல மவனியி லடையார் தன்போ லெவரையும் நினைவார் சாந்தம் பொறுமை யுடையார் துன்பே கவலை பிணிகள் தொடரா திவர்களை நாளும்
米 米 来 本 米 米 米 米 米

37
ஈசனே நல்லை வாசனே
பல்லவி ஈசனே நல்லை வாசனே கதிரேசனே முருகேசனே.
அநுபல்லவி
நேசமாய் உன்திரு வாச மலரடி நித்தம் மனச் சுத்தத்தொடு பத்திசெய்து பாடிப் பணிந்தோம். (ஈசனே)
h சரணம் குமரேசனே சர்வேசனே கோடி சூர்யப் பிரகாசனே குஞ்சரி தெய்வானை வந்தடிதொழு குகனே நற்றவர் அகனே சற்குருவே நீதஞ்சம் ஒடியெம் மனம் உழலுதே உமைபாலனே தண்டைக் காலனே ஒருநொடியில் வந்திடர் களைந்திடாய் உத்தமர்தஞ் சித்தத்தில் தித்திக்குந் தெள்ளமுதே.(ஈசனே)
冰 米 米 米 米 米 米 米 米
நினைக்கு மடியாரை நீயேநா னென்றே அணைக்குந் திருக்கரந்தா னென்னே - கனைக்கும் கடல்சூழ் கவினிலங்கைக் கார்சூழ்நல் லூரான் தொடுக்கும்வல் வேலைத் துதி.

Page 21
38
சும்மாவிருக்கும் சுகமறிய வேண்டும்
திருநீறும் ஐந்தெழுத்தும் வேண்டும் - வேல்வேல் சீவனே சிவனென்று தெரிந்து கொள்ள வேண்டும் - வேல்வேல் உருவேற வேசெபிக்க வேண்டும் . வேல்வேல ஒருவருக்கும் பொல்லாங்கு செய்யாமை வேண்டும் - வேல்வேல் கருவூரில் வராமை வேண்டும் - வேல்வேல் கண்கவரும் மின்னாரை எண்ணாமை வேண்டும் - வேல்வேல் குருபாதம் மறவாமை வேண்டும் - வேல்வேல் குறைவொன்று மின்றி நாம்வாழ வேண்டும் - வேல்வேல்
கொல்லாமை கள்ளாமை வேண்டும் - வேல்வேல் கோபம் பொறாமை கொள்ளாமை வேண்டும் . வேல்வேல் எல்லார்க்கு மன்புசெய்ய வேண்டும் . வேல்வேல் எனதுயா னென்பதை விட்டுவிட வேண்டும் . . வேல்வேல் நல்லோ ரிணக்கமே வேண்டும் . வேல்வேல் நடுநிலைமை மாறா திருக்கவேண்டும் . வேல்வேல் சொல்போலே சொல்லுறுதி வேண்டும் . வேல்வேல் சும்மா விருக்குஞ் சுகமறிய வேண்டும் . வேல்வேல்
冰 蛛 朱 米 来 * 米 来 米
தூவிமயி லேறும்வேலைத் துதித்துக் கொள்ளடா நாவினில் நமச்சிவாயம் நவின்று நில்லடா.
ஓம் முருகா ஓம்.


Page 22


Page 23
TYPE SETING & PRIN S. /21, DAwངས་མ་) STHEL
■
 

I ING – CELLIR DDTS (PWT) LTD T, CU TOMBI) – 2 IF : 331 139