கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கீர்த்தனாஞ்சலி (முருகேசர் அம்பலவாணர் தம்பி ஐயா)

Page 1
()
- காததஞ
IIITI கேத பொ 5135bT ITILII Fall - கதுரு
கைதடி நாவற்குழி
ஆகியவற்றின் உ
சிறந்த முருக பிரபல வர்த்த
திருவ முருகேசர் அம்பல6
- நினைவு
|
 

அஞ்ச
டி வாசியம்
வெல நிகழ்மி ஸ்டோர் சிவா அரிசி ஆலே ரிமையாளரும்
나
is i Storff
TGITT lJTGGDI f 505 AUT r:Thii
வெளியீடு

Page 2
அருள்வாக்குகள்
கேதாரம் அமர்ந்தானே கேதீச்சரம் அமர்ந்தான்
-திருநாவுக்கரசர்
D வேண்டத் தக்கது அறிவோய் நீ;
வேண்டமுழுவதும் தருவோய்நீ -சந்தர
0 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்
-திருஞானசம்பந்தர்
L அவனருளாலே அவன்தாள் வணங்குவோம்
-மாணிக்கவாசகர்
() ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்,
-ராமலிங்க வள்ளலாரி

அமரர் அம்பலவாணர் - தம்பி ஐயா
அவர்கள்
திதி நிர்ணய வெண்பர
ஆண்டு பிரஜாபதி சேரு மாவணியில் ך காண்குஜனாள் பத்தொன்றில் காட்சிதரு-மாண்மதிதே பக்கத் திருதீயை பார்விட்டெம் தம்பிஐயா
அக்கைஃப் சென்றதின மாாம்.
தோற்றம்
, மறைவு 1927-12-22
1991-08-27

Page 3
(FLOT LIGOOTib
எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரியவரும் எம் எல்லோர் மீதும் அளவிடற்கரிய அன்பைப் பொழிந்து சடுதியில் எம்மைப் பிரிந்து 'தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்த" எனதருமைப் பாட்டனுர் (ஐயா) அமரர் உயர்திரு. முருகேசர் அம்பலவாணர் தம்பி ஐயா அவர்களுக்கு இச்சிறு "கீர்த்தனுஞ்சலி'யை சமர்ப்பித்து அஞ்சலி செய்கின்ருேம்.
சரண்யா சிவஞானப் பிரகாசம்
(ii)

அமரர் உயர்திரு மு. அ. தம்பி ஐயா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
“அரிது அரிது மானிடராதல் அரிது” என்றர் ஒளவைப்பிராட்டியார். அப்படியே பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்றேர் அனைவரும் *தானமும் தவமும் தான் செய்தலரிது” என்றும் சொன்னுர், அமரர் மு. அ. தம்பி ஐயா அவர்கள் தனது பிறப்பின் அருமை யையும், நோக்கையுமுணர்ந்து அதற்கேற்ப வாழ்ந்து அதன் பயணுக ‘வானவர் நாடு வழி திறக்கப்பட்டு” அங்கும் தன் நற்பணிகளைத் தொடரச் சென்றுவிட்டார்.
இவர் வட இலங்கை யாழ்நகர் கைதடியைச் சேர்ந்த காலஞ்சென்ற திருவாளர் முருகேசர் அம்பலவாணர் தம்பதிகளின் அருமை மகளுவார்.
ஒரு பிரபல வர்த்தகர். பொலன்னறுவை-கதுருவெல: லசுஷ்மி ஸ்டோர்ஸ், கைதடி நாவற்குழி-சிவா அரிசி ஆலை ஆகிய வர்த்தக ஸ்தாபனங்களின் உரிமையாளர். அமரர் அவர்கள்,
*அன்பு நாண் ஒப்புரவு கண்ணுேட்டம்
வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண்” என்ற வள்ளுவர் வாக்கிற்கு உதாரணமாக விளங்கிய ஒரு சான்ருேராவார்.
ஒரு மனிதன் எல்லோர்க்கும் நல்லவராக அனைவ ராலும் விரும்பப்படுபவராக வாழ்வது அரிதினும் அரிது.
(iii)

Page 4
அமரர் அவர்கள் தனது அன்பாலும், பண்பான நடத் தையாலும் அத்தகைய ஒரு வாழ்வு வாழ்த்தவர் எனின் மிகையாகாது. 8
ஒர் ஏழைப் பங்காள்ர், நலிந்தோர்க்கு எப்போதும் தன் குனுலான உதவிகளைச் செய்து அவர்கள் உயர்வு கண்டு மகிழ்பவர். உற்ருர், உறவினர் நண்பர்கள் அனை வருக்கும் பாரதியார் கண்ட 'கண்ணன் என சேவகன்” போல் சகல வழிகளிலும் என்றும் உறுதுணை புரிந்தவர்,
ஒரு சிறந்த குடும்பத் தலைவர், பாசமுள்ள தந்தை. பண்பு மிக்க மாமனுர், அருமை மைத்துனர், அன்புப் பாட்டனுர். தன் கண்ணின் மணி போலத் தன் குடும்பத்தைக் காத்தவர்.
கைதடி கயிற்றசிட்டி ஹி (சிறி) வள்ளி தெய்வானை சமேதரான முருகப் பெருமானைத் தினமும் தரிசித்த பின்னரே தன் நாளாந்த நிகழ்ச்சிகளைத் தொடங்குவார். திருக்கோவில் திருப்பணிகளுக்கும், திருக்கோவில்களின் நாளாந்த, விசேஷ வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தன்னுலான தொண்டுகள் புரிந்து இறையருளை வேண்டி நிற்பவர்.
சிவனடியார்களேத் தரிசிப்பதிலும் அவர்களுக்குத் தொண்டு செய்து மனநிறைவு காண்பதிலும் அப் பூதியடிகள் நாயனுருக்கு ஒப்பானவர். மொத்தத்தில் இவர் ஓர் அடியார்க்கு அடியார்.
எல்லோரும் நன்ருக வாழ வேண்டுமென்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர். இந்த ஒப்பற்ற நல்லெண்ணத்
(iv)

தால் தனது ஊழியர்கள் பலரும் தன்னைப் போலவே சீரும் சிறப்பும் பெற்று வாழ்வதற்கு ஆவன செய்து அவர்கள் உயர்ச்சி கண்டு உளம் பூரித்தவர்.
தற்புகழ்ச்சியைச் சிறிதும் விரும்பாதவர். தாம் செய்யும் உதவிகளை ஒசையின்றிச் செய்வார். தனது நற் பணிகள் யாவும் ஆன்ம திருப்திக்கேயன்றி பெயர், புகழ் ஈட்டுவதற்காக அல்ல என்ற எண்ணத்தில் மிகவும் உறுதியாக இருந்து அங்ங்னமே வாழ்ந்த ஓர் உத்தமர். தம்பி ஐயா அவர்கள் பாசமுள்ள “தம்பி’ ஆகவும், மதிப்பிற்குரிய ‘ஐயா’ ஆகவும் இன, மத பேதமின்றிப் பல்லர்யிரக் கணக்கானுேர் உள்ளங்களில் நிறைந்திருக் கின்ருர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அன்பிலும், பண்பிலும், இறைத்தொண்டிலும், சமூக சேவையிலும் தனக்கென ஒப்பாரும், மிக்காருமற்ற அவ்வள்ளலார் சென்ற ஆண்டு (பிரசோத்பத்தி) ஆவணித்திங்கள் 11-ம் நாள் அபரபசஷ திருதியைத் திதியில் (27-8-1991) தனது 64-ம் வயதில் பொய் யான இவ்வுலக வாழ்வை நீத்து இறைவன் திருவடி நிழலைச் சார்ந்து என்றும் அழியாத பேரின்பப் பெரு வாழ்வை எய்தினுர்.
அவரது ஆன்மா எல்லாம் வல்ல எம்பெருமான் திருவடித் தாமரைகளின் கீழ் என்றென்றும் இருந்து பேரின்பப் பெருவாழ்வில் திளைக்க வேண்டுமென்று இறையருளை வேண்டு வோமாக.
அன்னுரது நினைவு எல்லோர் இதயங்களிலும் என் றென்றும் நிலைக்க வேண்டுமென்பதற்காகவும்,
(v)

Page 5
“நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ்க் கன்றுமுதவுங் கனி'
என்பது போல அவரது இறைத் தொண்டிலும், சமூக சேவையிலும் ஒரு சிறு அளவையாவது நாமும் தொடரலாம் என்ற விடுதலை அறியா விருப்புடனும் இச் சிறு நூலே உங்கள் கைகளில் காணிக்கையாக்குகின்றேம்.
இன்பத் தமிழால் இறைவனைப்பாடி அன்பைப் பெருக்கும் வகையில் இந்நூலில் இடம் பெற்றுள்ள திரு முறைப் பாடல்களையும் வழிபாட்டுப் பாடல்களையும் நாமும் நாள்தோறும் பாடியும் எப் பெருமான் புகழைப் பரவியும், இம்மை, மறுமை இன்பங்களே எய்தும் வகை யில் எய்திப் பேரின்பப் பெரு வாழ்வைப் பெறுவோமாக.
அமரர் தம்பி ஐயா குடும்பத்தினர்
பின்குறிப்பு:
"கீர்த்தணுஞ்சலி" க்கு ஒரு முகவுரை கொடுக்க வேண்டுமேயென நினைத்தபோது என்ன எழுதப் போகின்றேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆணுல் எழுத ஆரம்பித்த போது மடை திறந்தாற்போல் என் பேணு முனையை நிரப்பிய கருத்துக்கள் யாவும் ஐயாவின் முருகன் தந்தவைகளே என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. "நான் தந்த தமிழால் எனப்பாடு" என ஒளவையைப் பணித்த அப்பெருமான் அதையே எனக்கும் முதலடியாக எடுத்துத் தந்து "இதுவரை இலை மறை காய் போல் இருந்த என் தொண்டனே உலகுக்குக் காட்டு" எனப்பணித்ததன் மகிமையை என்னவென்பது?
56 இராஜி
(vi)

நன்றியுரை
*நெருநல் உளனுெருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ் வுலகு??
மனித வாழ்வின் நிலையாமையை எத்துணை தெளிவாக இரண்டே வரிகளில் எடுத்தியம்பி விட்டார் வள்ளுவப் பெருந் தகை! என்னே அவர் ஞானம்!
ஆமர்ம். நேற்று இருந்த எம் ஐயா இன்று இல்லையென்ற இடியான செய்தியறிந்து நாம் செய்வதறியாது துடித்து, துவண்டு நின்ற வேளையில் **உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது, எவராலும் இட்டு நிரப்ப முடியாதது. இருப்பினும் உங்களுக்கு ஆவன செய்வதற்கு நாமிருக்கின்ருேம். 22 என அபயக்கரம் நீட்டியவர்களுக்கும் ஆறுதல் மொழி கூறி எம்மை அணைத்தவர்களுக்கும் எம் இதயத்தின் அடித்தளத்திலிருந்து சுரக்கும் நன்றியறிதலை வெறும் ஆவார்த்தைகளால் வடிக்க முடியாது. இருப்பினும் இருகரம் கூப்பி நன்றி கூறுகின் ருேம்.
எமது குடும்பத்தலைவரின் மறைவின் ஓராண்டு நினைவு நாளன்று அவர் நினைவாக ஒரு சிறுநூல் வெளியிடுவதற்கு உங்கள் உதவி வேண்டும் என்று சென்னையில் உள்ள எம் அருமை நண்பர் திரு. சு. ஆனந்த் அவர்களைக் கேட்டபோது நம் தலைவருடன் ஏற்பட்ட வெறும் நான்கு நாட்கள் பழக்கத்திலேயே அவர் அன். பிலும், பண்பிலும் ஈர்க்கப்பட்டு அப் பெரியாரைக் கானும் வாய்ப்புக் கிடைத்தமை என் பாக்கியமே எனக்கூறி இந்நூல் பணியை முழுமனத்துடன் ஏற்று இந்நூலை நாம் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக ஆக்கித் தந்தார். அவருக்கும் அவ்வப்போது அவர் ஏவிய பணிகளை விருப்புடன் செய்து இந்நூல் சிறப்புடன் வெளி. யாவதற்கு உதவிய அவரது குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவருக்கும் என்றும் எம் உளம் நிறைந்த நன்றிகள் உரித்தாகுக.
'குக நிதி 29 கைதடி வட்க்கு, கைதடி அமரர் தம்பி ஐயா அவர்களின் இலங்கை மனைவி, மக்கள், மருமகன்
16-8-92 Guy sir2st.
. (νii)

Page 6
அமரர் உயர்திரு தம்பி ஐயா குடும்பம்
மஜனவி-திருமதி: இராஜலட்சுமி தம்பி ஐயா
மக்கள் திருமதி. இராஜி சிவஞானப்பிரகாசம் (அவுஸ்திரேலிவா) திரு. த. தர்மகுலசிங்கம் (சுவிற்சலாந்து) . . . . . . திரு. த. குமாரகுலசிங்கம் (இலங்கை)
திரு. த. அகிலகுலசிங்கம் (இங்கிலாந்து) செல்வி, த. குகந்தி (இலங்கை) செல்வி. த. சிவதர்ஷினி (இலங்கை)
மருமகன்
திரு. வி. சிவஞானப்பிரகாசம் (பொறியியலாளர், அவுஸ்திரேலியா)
பேரப்பிள்ளே:
GF66. . a y Goft (அவுஸ்திரேலியா)
(viii)

பூ விநாயகர் துதி
பாலும்தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துணக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கறிமுகத்துத் தூமணியே நீயெனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
- ஒளவையார்

Page 7
குறள் காப்பு
வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுத்து வரும் C1 ) வெற்றி முகத்து வேலவனைத் தொழப் புத்தி மிகுத்து வரும் (2)
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழத் துள்ளி யோடுந் தொடர்ந்த வினைகளே (3)
அப்ப முப்பழ மமுதுசெய் தருளிய தொப்பை யப்பனை தொழவினை யறுமே. (4)
o O p
வெள்ளை நிறமல்லிகையோ !
வேறெந்த மா மலரோ! வள்ளல் அடியினைக்கு வாய்த்த மலரெதுவோ! வெள்ளே நிறப்பூவுமல்ல
வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி
உத்தமனுர் வேண்டுவது
- விபுலானந்த அடிகள்

பிள்ளையார் பஜனை
சிந்தித் தவர்க்கருள் கணபதி சீரிய ஆனைக் கன்றே அன்புடை அமரரைக் காப்பாய் ஆவித் துணையே கணபதி
இண்டைச் சடைமுடி இறைவா ஈசன் தந்தருள் மகனே உன்னிய கருமம் முடிப்பாய் ஊர்நவ சந்தி உகந்தாய்
எம் பெருமானே இறைவா ஏழுல குந்தொழ நின் ருய் ஐயா கணபதி நம்பியே ஒற்றை மருப்புடை வித்தகா ஓங்கிய ஆனைக் கன்றே ஒளவிய மில்லா அருளே அஃகர வஸ்து வானவா கணபதி என்வினை களை வாய்
ங்ப்போர் மழுவொன் றேந்தியே சங்கரன் மகனே சதுரா ஞய நம் பிலர்பா லாடியே இடம்படு விக்கின விநாயகா
இணங்கிய பிள்ளைகள் தலைவா தத்துவ மறைதெரி வித்தகா நன்னெறி விக்கின விநாயகர பள்ளியிலுறைதரும் பிள்ளாய்
மன்றுள் ஆடும் மணியே இயங்கிய ஞானக் குன்றே அரவக் கிண்கிணி ஆர்ப்பாய் இலவக் கொம்பொன் றேந்தியே வஞ்சனை பலவுந் தீர்ப்பாய் அழகிய ஆனைக் கன்றே இஒரமத யானை முகத்தாய் இரகுபதி விக்கின விநாயக
3.
ஜெயஜெய
s
s
s
s
s
s
义爱
s
%拿
2岁
9 5 3 s
s
s
芝》咒
9
s
y
s
s s
っ。
s
s sy
s
s
3ர

Page 8
விநாயகர் அகவல் (ஒளவையார்)
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பல இசை பாடப் பொன்னரை ஞானும் பூந்துகி லாடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழைவயிறும் பெரும்பாரக் கோடும் ಕ್ಲಿಕ್ಗಿಸಿ நஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிரே முப்பழம் நுகரு மூஷிக வாகன இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதல் ஐந் தெழுத்துந் தெளிவாய் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திரமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
4.

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்குங் கருத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆரு தாரத் தங்குச நிலையும் பேரு நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழிமுனைக் கபாலங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நா வி லுணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்ப்ட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்த னியக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி சண்முக தூலமுஞ் சதுர்முக குட்சுமமும் எண்முக மாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரிஸ்ட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்திமுத்தி இனிதெனக் கருளி என்னை யறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களேந்து வாக்குமனமு மில்லா மனேலயந்
5

Page 9
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள் வெளி யிரண்டுங் கொன்றிடு மென்ன அருள்தரும் ஆனந்தத் தழுத்தியென் செவியில் எல்ஜல யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள் வழி காட்டிச் சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கங் காட்டி அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய் கனுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமு நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக்கரத்தினரும்பொருள் தன்னை நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தென்னை யாண்ட வித்தக விநாயக விரைகழல் F g (3600r.
விநாயகர் அகவல் முற்றிற்று.
3

6
கணபதி துணை திருச்சிற்றம்பலம்
Gish TULES ES6JFish
ஆதியில் இக்கவசத்தைக் காசிபமுனிவர் முற்கல முனிவருக்கு அருளிச்செய்ய, அவர் மாண்டவிய முனிவருக்கு அநுக்கிரகிக்க, அவர் மரீசி முனிவருக்கு உபதேசித்தருள, அவர் பல முனிவர் 5ளுக்குத் திருவாய் மலர்ந்தருளிச் செய்தாரென்றறிக.
நித்திய கருமங்களை முடித்துப் பரிசுத்தமாகிய ஓரிடத்தில் இருந்துகொண்டு ஒன்றுபட்ட மனசுடனே விநாயகரைத் தியானித்து இதைச் செபிக்கவேண்டும்.
வளர்சிகையைப் பராபரமாய் வயங்குவிநா யகர் காக்க
வாய்ந்த சென்னி யளவுபடா வதிகசவுந் தரதேக மதோற்கடர்தா
மமர்ந்து காக்க விளரறநெற் றியையென்றும் விளங்கிய கா சிபர்காக்க
புருவந் தம்மைத் தளர்வின்மகோ தரர் காக்க தடவிழிகள் பாலசந்திரனர்
காக்க
கவின் வளரு மதரங்கச முகர் காக்க தாலங்கணக்
கிரீடர் காக்க தவில் சிகங் கிரிசைசுதர் காக்கநனி வாக்கைவிநா
யகர்தாங் காக்க அவிர் நகைதுன் முகர்காக்க வள்ளெழிற்செஞ் செவிபாச
பாணி காக்க தவிர்தலுரு திளங்கொடிபோல் வளர்மணிநா சியைச்சிந்தி
தார்த்தர் காக்க. 2

Page 10
காமருபூ முகந்தன்னைக் குணேசர் நனி காக்ககளங்
கணேசர் கர்க்க வாமமுறு மிருதோளும் வயங்குகந்த பூர்வர்தா
மகிழ்ந்து காக்க ஏமமுறு மணிமுலைவிக் கினவினு சன் காக்க
விதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்கவகட் டினைத்துலங்கே
Jln T éssr 35 35 பக்கமிரண் டையுந்தரா தரர்காக்க பிருட்டத்தைப்
பாவ நீக்கும் விக்கினக ரன்காக்க விளங்கிலிங்கம் வியாளபூ
டனாதாங் காகக தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர் காக்கசக
னத்தை யல்லல் உக்க கண புன்காக்க வூருவைமங் களமூர்த்தி
யுவந்து காக்க தாழ்முழந்தாண் மகாபுத்தி காக்கவிரு பதமேத
தந்தர் காக்க வாழ்கரங்கப் பிரம்பிரசா தனர்காக்க முன்கையை
வணங்கு வார்நோய் ஆழ்தரச்செய் யாசாபூ ரகர்காக்க விரல்பதும
வத்தர் காக்க கேழ்கிளரு நகங்கள்விநாயகர் காக்க கிழக்கினிற்புத்
தீசர் காக்க அக்கினியிற் சித்தீசர் காக்கவுமா புத்திரர் தென்
ஞசை காகக மிக்கநிரு தியிற்கனே சுரர்காக்க விக்கினவர்த்
தனர்மேற் கென்னுந் திக்கதனிற் காக்கவா யுவிற்கசகன் னன்காக்க
திகழு தீசி தக்கநிதி பன்காக்க வடகிழக்கி லீசநந்
தனரே காக்க

ஏக தந்தர் பகன் முழுதுங் காக்கவிர வினுஞ்சந்தி
விரண்டன் மாட்டும் Y.
ஒகையின் விக் கினகிருது காக்கவிராக் கதர்பூத
முறுவே தாள
மோகினிபே யிவையாதி யுயிர்த்திறத்தால் வருந்துயரு
முடிவி லாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபுபா சாங்குசர்தாம்
விரைந்து காக்க
மதிஞானந் தவந்தான மானமொளி புகழ்குலம்வண்
சரீர முற்றும்
பதிவான தனந்தானி யங்கிரக மனைவிமைந்தர்
பயினட் பாதிக்
கதியாவுங் கலந்து சர்வா யுதர்காக்க காமர்பவுத்
திரர் முன் குன
விதியாருஞ் சுற்றமெலா மயூரேச ரெஞ்ஞான்றும்
விரும்பிக் காக்க
வென்றிசீ விதங்கபிலர் காக்ககரி யாதியெலாம்
விகடர் காக்க
என்றிவ்வா றிதுதனை முக் காலமுமோ திடினும்பா
லிடையூ ருென்றும்
ஒன்றுரு முனிவரர் கா ளறிமின்கள் யாரொருவ
ரோதி குலு
மன்றவாங் கவர்தேகம் பிணியறவச் சிரதேக
மாகி மன்னும்
திருச்சிற்றம்பலம்

Page 11
கந்தர் ஷஷ்டி கவசம்
(தேவராய சுவாமிகள்)
காப்பு
நேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோந் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்தர் ஷஷ்டி கவசந் தனே.
குறள் வெண்பா
அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி
நூல்
ஷஷ்டியை நோற்கச் சரவண பவனுர் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டிற் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மைய நடஞ்செயும் மயில்வா கனணுர் கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனுர் வருக வருக வருக மயிலோன் வருக
1O

இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திரவடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனுர் சடுதியில் வருக
Jau ひor La」さr TJ TJ T即「J faj600 luajaf j ffff! fff விணபவ சரவ வீரா நமோ நமோ நிபவ சரவண நிறநிற நிறென
வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளும் இளையோன்கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயுங் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும் சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்றினம் வருக ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
11

Page 12
முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறுந்தியுந் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனிற் சிலம் பொலி முழங்க
மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டி குகுண டிகுண JT『T T『TT 「TTJ 『TT #]ሐገሐክ#] #ክሰክሐገf] #ክዘክifiዘክ #ክሐፃሐ] டுடு(டுடு டுடுருடு டுடு டுடு டுடு(நி டகுடகு டிகுடிகு டங்குடிங் குகுகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேண் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினுேதனென் றுன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் என்றலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியாற் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனித வேல் காக்க கதிர்வே லிரண்டுங் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனை வேல் காக்க
12

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டுங் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை யிரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள் வேல் காக்க பழுபதி ஞறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணுங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக்குதத்தை வடிவேல் காக்க ப2ணத்துடை யிரண்டும் பகர் வேல் காக்க கணைக்கான் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிர லடியிணை அருள் வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண் வேல் காக்க பின் கை யிரண்டும் பின்னவளிருக்க A. நாவிற்சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா னடியை முனைவேல் காக்க எப்பொழுதும்மென எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பக றன்னில் வயிரவேல் காக்க அரையிரு டன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்கத் தாமத நீக்கிச் சதுர்வேல் காக்க
13

Page 13
காக்கக் காக்கக் கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியி னுேக்கத் தாக்கத் தாக்கத் தடையறத் தாக்கப் பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபடப் பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளை க டின்னும் பிறக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப்பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமரா கூ*தரும் அடியஜனக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேறி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்ப்படு மண்ணையும் கனபூசை கொள்ளும் காளியோ டனை வரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளங்களும் என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நகமு மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றர் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தர்களெனக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட் டோடப் படியினின் முட்டப் பாசக் கயிற்றற்
14

கட்டுட னங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிடச் செக்கு செக்கு செதிற்செ தி லாகச் சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் றணலெரி தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெருண் வோட
గారో ; எலியும் கரடியும் எனைத்தொடா தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடுகடு விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினி லிறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருகலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலை சயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரனை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள் வாய் ஈரே ழுலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா மண்ணு ளரசரும் மகிழந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்றிரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொழி பவனே
15

Page 14
அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே இடும்பனை யழித்த இனியவேள் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேன் முருகா பழனிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடி வாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறுஞ் செங்கல் வராயா சமரா புரிவாழ் சண்முகத்தரசே காரார் குழலாள் கலைமக ணன்ருய் என்ன விருக்க யானுனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனே பாடினே குடினேன் பரவச மாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியி லணியப் பாச வினைகள் பற்றது நீக்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புட னிரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதணுர் தித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்கலு வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொதிபாடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனுல் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
16

--།tts ། வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவ னிகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து மைந்கனென் மீதுன்மனமகிழ்ந் தருளித்
தஞ்சுமென் றடியார் தழைத்திட வருள்செய் கந்தர் சஜி.sடி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடனாளும்
ஆசாரத்துடன் அங்கத் துலக்கி நேச முடனொரு நினைவது வாசிக் கந்தர் சஜி.$டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்து நீ றணிய
அத். கடதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர்
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவ்கோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர் கந்தர் கை வேலாங் கவசத் தடிய

Page 15

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேன பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்ய தேவா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உர்ர் கிரி கனக சபைக்கோ ரரசே மயினட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சரணம் சரவண பவலும் சரணஞ் சரணஞ் சுண்முகா சரணம்
திருச்சிற்றம்பலம்
7

Page 16
கந்தர் அநுபூதி
அருணகிரிநாதர்)
[குகப்பெருமானின் ஆசி அருளைப் பெறுவதற்கு இந்த அநுபூதி பாராயணம் மிகமிகச் சிறந்தது. இதனை ஓதி உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள் மிகமிகப் பலர்.
காப்பு நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொல் புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்
நூல் w ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனி யானை சகோதர னே
உல்லாச, நிராகுல யோக விதச் சல்லாப, விநோதனும் நீ அலையோ! எல்லாம் அற, என்னை இழந்த நலம் சொல்லாய், முருகா! சுரபூ பதியே!
வானே? புனல் பார் கனல் மாருதமோ? ஞானே தயமோ? நவில் நான் மறையோ? யானே? மனமோ? என ஆண்ட இடம் தானுே? பொரு ளாவது சண்முகனே!
18

வளைபட்ட கை மாதொடு, மக்கள் எனும் தளேபட்டு, அழியத் தகுமோ? தகுமோ? கிளைபட்டு, எழுசூர் உரமும், கிரியும், தொளைபட்டு உருவத் தொடு வேலவனே!
மக மாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறும் மொழிந்திலனே; அகம், மாயை, மடந்தையர் என்று, அயரும் சக மாயையுள் நின்று தயங்குவதே!
திணியான மனேசிலை மீது, உனதாள் அணியார் அரவிந்தம் அரும்பு மதோ? பணியா? என வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயா பரனே!
கெடுவாய் மனனே! கதிகேள், கரவாது இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய், சுடுவாய் நெடு வேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினை யாவையுமே
அமரும் பதிகேள், அகம் ஆம் எனும் இப் பிமரம் கெட, மெய்ப் பொருள் பேசியவா! குமரன்! கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே!
மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப் பட்டு ஊசல் படும் பரிசு என்று ஒழிவேன்! தட்டு, ஊடு அற, வேல் சயிலத்து எறியும் நிட்டூர, நிராகுல, நிர்ப் பயனே! கார் மா மிசை காலன் வரில், கலபத்து ஏர்மா மிசை வந்து எதிர்ப் படுவாய்! தார் மார்ப; வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடு வேலவனே!
19
(

Page 17
*கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா! நாகா சல வேலவ! நாலுகவித் தியாகா சுரலோக சிகாமணியே!
செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
*சும்மா இரு சொல் அற* என்றலுமே
அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலனே'.
“முருகன், தனிவேல் முனி, நம் குரு? என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ? உருஅன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று இருள் அன்று, ஒளி அன்று, என நின்றதுவே
கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று உய்வாய், மனமே! ஒழிவாய் ஒழிவாய், மெய் வாய் வரு நாசியொடும் செவி ஆம் ஐவாய் வழி செல்லும் அவா வினையே
*முருகன், குமரன் குகன் ? என்று மொழிந்து உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள் வாய்! பொரு புங்கவரும், புலியும் பரவும் குருபுங்கவ! எண் குண பஞ்சரனே!
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஒரா வினையேன் உழலத் தகுமோ? வீரா முதுகுர்பட, வேல் எறியும் குரா சுர லோக துரந்தரனே!
யாம் ஒதிய கல்வியும், எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினுல் பூமேல் மயல்போய், அறம் மெய்ப் புணர்வீர்! நாமேல், நடவீர் நடவீர் இனியே!
2O
12
13
14
15
6
17

உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா! அதிகா! அநகா! அபயா! அமரா பதி காவல! சூர பயங்கரனே!
வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோ கியவா! அடி அந்தம் இலா அயில்வேல் அரசே! மிடி என்று ஒரு பாவி வெளிப் படினே
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்! உரிதா உபதேசம் உணர்த்தியவா; விரிதாரண விக்ரம வேள் இமையோர் புரி தாரக! நாக புரந்தரனே!
கருதா மறவா நெறிகாண எனக்கு இருதாள் வன சம் தர என்று இசைவாய்? வரதா! முருகா! மயில்வா கனனே! விரதா! சுரகுர, விபாடனனே!
காளைக் குமரேச னெனக் கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா!
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.
அடியைச் குறியாது, அறியா மையினுல் முடியக் தெடவோ முறையோ முறையோ! வடி விக்ரம வேல் மகிபா குறமின் கொடியைப் புணரும் குண பூதரனே!
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ! சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் போர் வேல புரந்தர பூபதியே
21
8
9
2O
21
22
23
24

Page 18
மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ, அடியேன் அலையத் தகுமோ? கையோ, அயிலோ, கழலோ, முழுதும் செய்யோய்! மயில் ஏறிய சேவகனே!
ஆதாரம் இலேன், அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலேயே! வேதாகம ஞான வினுேத மனுே தீதா! சுரலோக சிகா மணியே!
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன்! இங்கு இதுவோ! பொன்னே மணியே! பொருளே! அருளே! மன்னே! மயில் ஏறிய வானவனே!
ஆன அமுதே! அயில்வேல் அரசே!
ஞான கரனே நவிலத் தகுமோ!
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானுய் நிலை நின்றது! தற்பரமே!
இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத் திலேயே மல்லேபுரி பன்னிரு வாகுவில், என் சொல்லே புனையும் சுடர் வேலவனே!
செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று ஒவ்வாதது என உணர்வித் ததுதான், அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப் பதுவே?
பாழ்வாழ்வு எனும் இப் படுமா யையிலே வீழ்வாய்? என , என்னை விதித்தனையே! தாழ்வானவை செய்தன தாம் உளவே! வாழ்வாய் இனிநீ, மயில் வாகனனே!
22
26
27
28
29
30
8

கலேயே பதறிக் கதறித் தலையூடு அலேயே படுமாறு, அதுவாய் விடவோ? கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே! மலே கூறிடு வாவகயனே!
சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும் விந்தாடவி, என்று விடப் பெறுவேன்? மந்தா கினி தந்த வரோதயனே! கந்தய முருகா! கருணு கரனே!
சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல், எனக்கு வரம் தருவாய்; சங்க்ராம சிகாவல! சண்முகனே கங்காநதி பால! க்ருபா கரனே!
விதிகாணும் உடம்பை விடா வினையேன், கதிகாண, மலர்க்கழல் என்று அருள்வாய்? மதிவாள் நுதல் வள்ளியை அல்லது, பின் துதியா விரதா! சுரபூ பதியே!
*நாதா குமரா நம! என்று, அரனுர் ஒதாய்? என, ஒதியது எப்பொருள் தான்? வேதா முதல் விண்ணவர் குடும் மலர்ப் பாதா! குறமின் பதசே கரனே!
*கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய் மனனே! பொறையாம் அறிவால் அறவாய், அடியோடும் அகந்தை யையே!
ஆதாளியை, ஒன்று அறியேன, அறத் தீது ஆளியை, ஆண்டது செப்புமதோ! கூதாள கிராத குலிக்கு இறைவா! வேதாள கணம் புகழ் வேலவனே!
23
32
33
34
35
36
37
38

Page 19
மா ஏழ் சனனம் கெட, மாயை விடா மூஏடணை என்று முடிந்தி டுமோ! கோவே குற மின் கொடி தோள் புணரும் தேவே! சிவ சங்கர தேசிகனே!
வினை ஒட விடும் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி, மயங்கிட வோ? சுனேயோடு, அருவித் துறையோடு, பசுந் தினேயோடு, இதனேடு திரிந்தவனே!
சாகாது, எனையே சரணங்களிலே கா கா, நமனர் காலம் செயும் நாள்; வாகா முருகா! மயில் வாகனனே! யோகா சிவஞான உபதேசிகனே!
குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனிவேல் நிகழ்த் திடலும் செறிவுஅற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.
தூசா மணியும், துகிலும் புனைவாள் நேசா! முருகா! நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகளா யினபின் பேசா அநுபூதி பிறந்த துவே.
சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லு மதோ! வீடும் சுரர் மாமுடி வேதமும், வெம் காடும், புனமும் கமழும் கழலே
கரவாகிய கல்வி உளார் கடைசென்று இரவா வகை, மெய்ப்பொருள் ஈகுவையோ! குரவா! குமரா குலிசாயுத குஞ் சரவா! சிவயோக தயாபரனே!
24
39
40
41
42
43
44
45

எந்தாயும், எனக்கு அருள் தந்தையும் நீ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள் கந்தா கதிர்வே லவனே உமையாள் மைந்தா குமரா மறை நாயகனே!
ஆறுஆறையும் நீத்து, அதன்மேல் நிலையைப் பேரு அடியேன், பெறுமாறு உளதோ! சீரு வருசூர் சிதை வித்து, இமையோர் கூரு உலகம் குளிர்வித் தவனே!
அறிவு ஒன்று அறநின்று, அறிவார் அறிவில் பிரிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ! செறிவு ஒன்று அற வந்து இருளே சிதைய வெறிவென் றவரோடு உறும் வேலவனே!
தன்னந் தனி நின்றது, தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ? மின்னும் கதிர்வேல் விகிர்தா! நினைவார் கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே!
மதி கெட்டு, அற வாடி, மயங்கி, அறக் கதி கெட்டு, அவமே கெடவோ கடவேன்? நதி புத்திர ஞான சுகாதிப அத் திதி புத்திரர் வீறு அடு சேவகனே!
உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே!
25
46
47
48
49
50
5

Page 20
சண்முக கவசம்
பாம்பன் சுவாமிகள்
(வாழ்விலே வரும் எல்லா வகையான நோய் நொடிகள் துயரங்களையும் போக்கிக் காக்கும் சக்தி மிகுந்த கவசம் இது, இதனை ஓதுவார்க்கு என்றும் இன்பமே. இது சான்றேர் ஆணை; முருக பக்தர் அநுபவம்.)
அண்டமாய் அவனி யாகி
அறியொணுப் பொருள தாகித் தொண்டர்கள் குருவு மாகித் துகள் அறு தெய்வ மாகி எண் திசை போற்ற நின்ற
என்னருள் ஈச ஞன திண்திறல் சரவ ணத்தான்
தினமுமென் சிரசைக் காக்க 1
ஆதியாங் கயிலைச் செல்வன்
அணி நெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான்
தானிரு நுதலைக் காக்க சோதியாந் தணிகை யீசன்
துரிசிலா விழியைக் காக்க நாதனுங் கார்த்தி கேயன்
நாசியை நயந்து காக்க 2, இருசெவி களையுஞ் செவ்வேள்
இயல்புடன் காக்க வாயை முருகவேள் காக்க நாப்பல்
முழுதுநற் குமரன் காக்க துரிசறு கதுப்பை யானைத்
26

துண்டனுர் துணைவன் காக்க திருவுடன் பிடரி தன்னைச்
சிவசுப்ரமணியன் காக்க
ஈசனும் வாகு லேயன்
என துகந் தரத்தைக் காக்க தேசுறு தோள்வி லாவுந்
திருமகள் மருமகன் காக்க ஆசிலா மார்பை யீரா
ருயுதன் காக்க என்றன் ஏசிலா முழங்கை தன்னை
யெழிற்குறிஞ் சிக்கோன் காக்க
உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க தறுகணே றிடவே யென்கைத்
தலத்ன்தமா முருகன் காக்க புறங்கையை அயிலோன் காக்க
பொறிக்கர விரல்கள் பத்தும் பிறங்குமால் மருகன் காக்க
பின்முது கைச்சேய் காக்க
ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை யூர்தியோன் காக்க வம்புத் தோள்நிமிர் சுரேசன் உந்திச்
சுழியினைக் காக்க குய்ய நாணினை அங்கி கெளரி
நத்தனன் காக்க குய்ய ஆணியைக் கந்தன் காக்க
அறுமுகன் குதத்தைக் காக்க
எஞ்சிடா திடுப்பை வேலுக்
கிறைவனுர் காக்க காக்க
27

Page 21
அஞ்சக னம்ஒர் இரண்டும்
அரன்மகன் காக்க காக்க விஞ்சிடு பொருட்காங் கேயன்
விளரடித் தொடையைக் காக்க செஞ்சர ணேச ஆசான்
திமிருமுன் தொடையைக் காக்க 7
ஏராகத் தேவன் என்தாள்
இருமுழங் காலுங் காக்க சீருடைக் கணைக்கால் தன்னைச்
சீரலை வாய்த்தே காக்க நேருடைப் பரடி ரண்டும்
நிகழ்பரங் கிரியன் காக்க சீரிய குதிக்கால் தன்னைத்
திருச்சோலை மலையன் காக்க 8
ஐயுறு மலேயன் பாதத்
தமர்பத்து விரலுங் காக்க பையுறு பழநிநாத
பரன் அகங் காலைக் காக்க மெய்யுடன் முழுதும் ஆதி
விமலசண் முகவன் காக்க தெய்வநாயகவி சாகன்
தினமுமென் னெஞ்சைக் காக்க 9
ஒலியெழு வுரத்த சத்தத்
தொடுவரு பூதப் ரேதம் பலிகொள் இராக்க தப்பேய்
பல்கணத் தெவையானலும் கிலிகொள எனவேல் காக்க
கெடுபரர் செய்யும் சூன்யம் வலியுள மந்ந்ர தந்த்ரம்
வருத்திடா தயில்வேல் காக்க O
28

ஓங்கிய சீற்ற மேற்கொண்
டுவணிவில் வேல்சூ லங்கள் தாங்கிய தண்டம் எஃகந்
தடிபர சீட்டி யாதி பாங்குடை ஆயுதங்கள்
பகைவர்என் மேலே யோச்சின் தீங்குசெய்யாமல் என்னைத்
திருக்கைவேல் காக்க காக்க
ஒளவிய முளர் ஊனுண்போர்
அசடர் பேய் அரக்கர் புல்லர் தெவ்வர்கள் எவரா லுைந்
திடமுடன் எனமற் கட்டத் தவ்வியே வருவா ராயிற்
சராசர மெலாம்பு ரக்கும் கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க காக்க 2
கடுவிடப் பாந்தள் சிங்கம்
கரடி நாய் புலிமா யானை கொடியகோள் நாய் குரங்கு
கோலமார்ச் சாலஞ் சம்பு நடையுடை யெதன லேனும்
நான் இடர்ப் பட்டி டாமல் சடுதியில் வடிவேல் காக்க
சானவி முனைவேல் காக்க 3
நுகரமே போல் தழீஇ
ஞான வேல் காக்க வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி
செய்யனே ருலப் பல்லி
நகமுடை யோந்தி பூரான்
நளிவண்டு புலியின் பூச்சி
29

Page 22
உகமிசை யிவையால் எற்கோர்
ஊறிலா தைவேல் காக்க 4.
சலத்திலுள் வன்மீ னேறு
தண்டுடைத் திருக்கை மற்றும் நிலத்திலுஞ் சலத்தி லுந்தான்
நெடுந்துயர் தரற்கே யுள்ள குலத்தினுல் நான்வ ருத்தங்
கொண்டிடா தவ்வவ் வேளை பலத்துடன் இருந்து காக்க
பாவகி கூர்வேல் காக்க 5
ஞமலியம் பரியன் கைவேல்
நவக்கிர கக்கோள் காக்க சுமவிழி நோய்கள் தந்த
சூலையாக் கிராண ரோகம் திமிர் கழல் வாதஞ் சோகை
சிரமடி கர்ண ரோகம்! எமையணு காம லே பன்
னிருபுயன் சயவேல் காக்க 6
டமருகத் தடிபோல் நைக்கும்
தலையிடி கண்ட மாலை குமுறு விப்புருதி குன்மங்
குடல்வலி யீழை காசம் நிமிரொன திருத்தும் வெட்டை
நீர்ப்பிர மேகம் எல்லாம் எமையடையாமலே குன்
றெறிந்தவன் கைவேல் காக்க 17
இணக்கமில் லாத பித்த
எரிப்புமா சுரங்கள் கைகால்
30

முணக்கவே குறைக்குங் குஷ்டம்
மூலவெண் முளைதீ மந்தம்
சணத்திலே கொல்லுஞ் சன்னி சாலமென் றறையு மிந்தப்
பிணிக்குலம் எனையா ளாமல்
பெருஞ்சத்தி வடிவேல் காக்க 8
தவனமா ரோகம் வாதஞ்
சயித்தியம் அரோச கம்மெய் சுவறவே செய்யும் மூலச்
சூடினைப் புடற்று விக்கல் அவதிசெய் பேசி சீழ்நோய்
அண்டவா தங்கள் குலே எவையுமென் னிடத்தெய் தாமல்
எம்பிரான் திணிவேல் காக்க 9
நமைப்புறு கிரந்தி வீக்கம்
நணுகிடு பாண்டு சோபம் அமர்த்திடு கருமை வெண்மை
ஆகுபல் தொழுநோய் கக்கல் இமைக்குமுன் உறுவலிப்போ
டெழுபுடைப் பகந்த ராதி இமைப்பொழு தேனு மென்னை
எய்தாம லருள் வேல் காக்க 20
பல்லது கடித்து food F
படபடென் றேது டிக்கக் கல்லினும் வலிய நெஞ்சம்
காட்டியே உருட்டி நோக்கி எல்லினுங் கரிய மேனி
யெமபடர் வரினும் என்னை ஒல்லையில் தார காரி
ஓம் ஐம் ரீம் வேல் காக்க 2】
31

Page 23
மண்ணிலும் மரத்தின் மீதும்
மலையிலும் நெருப்பின் மீதும் தண்நிறை சலத்தின் மீதும்
சாரிசெய் ஊர்தி மீதும் விண்ணிலும் பிலத்தி னுள்ளும்
வேறேந்த இடத்தும் என்னை நண்ணிவந் தருளார் சஷ்டி
நாதன் வேல் காக்க காக்க
2
2
யகரமே போர்கு லேந்தும்
நறும்புயன் வேல்முன் காக்க அகரமே முதலாம் ஈராறு
அம்பகன் வேல்பின் காக்க சகரமோ டாறு மானுேன்
தன் கைவேல் நடுவில் காக்க சிகரமின் தேவ மோலி
திகழைவேல் கீழ்மேல் காக்க 23
ரஞ்சித மொழிதே வானை
நாயகன் வள்ளி பங்கன் செஞ்சய வேல் கிழக்கில்
திறமுடன் காக்க அங்கி விஞ்சிடு திசையில் ஞான
வீரன்வேல் காக்க தெற்கில் எஞ்சிடாக் கதிர்கா மத்தோன்
இகலுடைக் கரவேல் காக்க 24
ல கரமே போல்கா ஸரிங்கன்
நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த
சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கில்
நிலைபெறக் காக்க மேற்கில்
32

இகலயில் காக்க வாயு வினில்
குகன் கதிர் வேல் காக்க
வடதிசை தன்னில் ஈசன்
மகன் அருள் திருவேல் காக்க விடையுடை யீசன் திக்கில்
வேதபோ தகன் வேல் காக்க நடக்கையில் இருக்கும் ஞான்று
நவில்கையில் நிமிர் கையில் கீழ்க் கிடக்கையில் தூங்கும் ஞான்று
கிரி துளைத் துளவேல் காக்க
இழந்து போ காத வாழ்வை
ஈயமுத் தையனுர் கைவேல் வழங்குதல் ஊண் உண் போதும்
மால் விளே யாட்டின் போதும் பழஞ்சுரர் போற்றும் பாதம்
பணிந்து நெஞ்சடக்கும் போதும் செழுங்குணத் தோடே காக்க
திடமுடன் மயிலும் காக்க
இளமையில் வாலி பத்தில்
ஏறிடு வயோதி கத்தில் வளர் அறு முகச்சி வன்தான்
வந்தெனை க் காக்க காக்க ஒளியெழு காலை முன்எல் ஓம் சிவ சாமி காக்க தெளிநடு பிற்ப கற்கால்
சிவகுரு நாதன் காக்க
இறகுடைக் கோழித் தோகைக் கிறைமுன் இராவில் காக்க
33
26
27

Page 24
திறல் உடைச் சூர்ப்ப கைத்தே திகழ்பின் இராவில் காக்க நறவுசேர் தாள் சிலம்பன்
நடுநிசி தன்னில் காக்க மறைதொழு குழகன் எங்கோன்
மாருது காக்க காக்க 29
இனமெனத் தொண்ட ரோடும் இணக்கிடும் செட்டி காக்க தனிமையில் கூட்டம் தன் னில்
சரவண பவனுர் காக்க நனிஅநுபூதி சொன்ன
நாதர்கோன் காக்க இத்தைக் கனிவொடு சொன்ன தாசன்
கடவுள் தான் காக்க வந்தே 3O
34

முருகன் துதி
நக்கீரர் முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே-ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்
குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய் புன்றலேய பூதப் பொருபடையாய்-என்றும் இளேயாய் அழகியாய் ஏறுTர்ந்தான் ஏறே உளையாய் என்னுள்ளத்து உறை
வீரவேல் தாரைவேல் விண்ணுேர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர் மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை
உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின் செல்லேன்-பன்னிருகைக் கோலப்பா வானுேர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்தி வாழ்வே
அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என் ருேதுவார் முன் ,
கச்சியப்பர்
மூவிரு முகங்கள் போற்றி
முகம்பொழி கருணை போற்றி ஏவரும் துதிக்க நின்ற
இராறுதோள் போற்றி காஞ்சி
35

Page 25
மாவடி வைகும் செவ்வேள்
ழலரடி போற்றி அன்னுன்
சேவீமயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி
அருணகிரிநாதர்
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்
வெய்ய வாரணம் போல் கைதான் இருபது உடையான்
தலைபத்தும் கத்தரிக்க எய்தான் மருகன், உமையாள்
பயந்த இலஞ்சிய மே!
சேல்பட்டழிந்தது செந்தூர்
வயல்பொழில் தேங்கடம்பின் மால்பட்டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வே&லயும்
சூரனும் வெற்பும் அவன் கால்பட் டழிந்தது இங்குஎன்
தலைமேல் அயன் கையெழுத்தே!
பகழிக் கூத்தர்
பேராதரிக்கும் அடியவர்தம் பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும் பேறும் கொடுக்க வரும்
பிள்ளைப் பெருமான் என்னும் பேராளா சேரா நிருதர் குலகாலா சேவற்கொடியாய்
திருச்செந்தூர்த் தேவா தேவர் சிறைமீட்ட
செல்வா என்றுன் திருமுகத்தைப்
36

பாரா மகிழ்ந்து முலைத்தாயர் பரவிப் புகழ்ந்து
விருப்புடன் அப்பாவா என் றுனைப்போற்றிப்
பரிந்து மகிழ்ந்து வர அழைத்தால் வாரா திருக்க வழக்குண்டோ வடிவேல் முருகா வருகவே வளரும் கனபைக் குரும்பை முஃல
வள்ளி கனவா வருகவே
பெருந்ததேவஞர்
தாமரை புரையும் காமர் சேவடி பவழத் தன்ன மேனி திகழ்ஒளிக் குன்றி யேய்க்கும் உடுக்கை குன்றின் நெஞ்சுபக எறிந்த நெஞ்சுடர் நெடுவேல் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்ருல் உலகே
37

Page 26
திருப்புகழ்
அருணகிரிகாதர்
ராகம்-செஞ்சுருட்டி தாளம்-ஆதி
நாத விந்துக லாதீ நமோ நம
வேத மந்த்ரசொ ரூபா நமோ நம ஞான பண்டித ஸாமீ நமோ நம வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம நாக பந்தம யூரா நமோ நம பரகுரர்
சேத தண்டவிநோத நமோ நம
கீத கிண் கிணி பாதா நமோ நம தீர சம்ப்ரம வீரா நமோ நம கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்
ஈதலும்பல கோலால பூஜையும்
ஓத லுங்குண ஆசார நீதியும் ஈர முங்குரு சீர்பாத சேவையு மறவாத
ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதே மனேகர ராஜ கெம்பிர நாடாளு நாயக 6. juu 62NT tar
ஆத ரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனளினில் ஆடல் வெம்பரி மீதேறி மாகயி ஆலயிலே கி
ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர்ந னடதில் ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
38

ராகம்-சக்ரவாகம் M தாளம்-சங்கீர்ணஜம்பை
ஒருபொழுது மிருசரன நேசத் தேவைத் துனரேனே உனது பழ நிமலையெனு மூரைச் சேவித் தறியேனே
பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே
பிறவியற நினைகுவனெ ஞசைப் பாடைத் தவிரேனுே
துரிதமிடு நிருதர்புர குறைக் காரப் பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் பெருமாளே விருதுகவி விதரணவி நோதக் காரப் பெருமாளே
விறன்மறவர் சிறுமி திரு வேளைக் காரப் பெருமாளே
ராகம்--ஹரிகாம்போஜி தாளம்-ஆதி
திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள் காண் ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள் காண் மருவுமடி யார்கள் மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண் மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் பெருமாள் காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள் காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள் காண்
இருவினையி லாத தருவினை விடாத
இமையவர்கு லேசப் பெருமாள் காண் இலகுசிலை வேடர் கொடியின தி பார -
இருதனவி நோதப் பெருமாளே
39

Page 27
முருகன் ஜீவ காட்சி மாலை
ராமலிங்கவள்ளார்
ஒருமையுடன் நின துதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுக்ல வாமைவேண்டும் பெருமைபெறு நினதுடிகழ் பேச வேண்டும் பொய்மை
பேசா திருக்கவேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும் மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும் மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழவேண்டும் தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள் வளர்
தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
40

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
பண்-வியாழக்குறிஞ்சி திருவலிவலம்
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
f
பண்-கட்டபாடை திருப்பிரமபுரம்
தோடுடைய செவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடையசுட லைப்பொடிபூசியென் உள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள் செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே பண்-குறிஞ்சி கோயில்
செல்வநெடு மாடஞ் சென்றுசே னேங்கிச் செல்வமதி தோயச் செல்வமுயர் கின்ற செல்வர்வாழ் தில்லைச் சிற்றம்பல மேய செல்வன் கழ லேத் துஞ் செல்வஞ் செல்வமே
பண்-குறிஞ்சி திருச்சிராப்பள்ளி நன்றுடை யானைத் தீயதி லானை நரைவெள்ளே ருென்றுடை யானை யுமையொரு பாக முடையானைச் சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக் குன்றுடை யானைக் கூறவென் னுள்ளங் குளிரும்மே.
O O O
41

Page 28
இரண்டாம் திருமுறை
திருநீற்றுப்பதிகம்
பண்-காந்தாரம்
மந்திர மாவது நீறு, வானவர் மேலது நீறு, சுந்தர மாவது நீறு, துதிக்கப்படுவது நீறு தந்திர மாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாய்உமை பங்கன் திரு வாலவாயான் திருநீறே
ust-5"LJ Tsb ராகம்-பன்துவராளி தாளம்-ஆதி பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் லுலகினில்
உயிர்வாழ்க்கை கண்ட நாதனுர் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில் வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை நடமிடு மாதோட்டம் தொண்டர் நாள் தொறுந் துதிசெயஅருள் செய்கே தீச்சர
மதுதானே, தென்னி லங்கையர் குலபதி மலை நலிந் தெடுத்தவன்
முடிதிண்தோள் தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனுர்
கடல்வாயப் பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத் துன்னியன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே.
爆》 மூன்றாம் திருமுறை பண்-புறதீர்மை திருக்கோணேசுவரம்
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும்
நிமலர்நீ றணிதிரு மேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர்:கொடியணி விடையர் கரைகெழு சத் காரகிற் பிளவு
மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோதம் நித்திலங் கொழிக்குங்
கோண மா மலையமர்ந் தாரே
42

go , பனித்திளந் திங்கட் பைந்தலே நாகம்
படர்சடை முடியிடை வைத்தார் கனித்தில் ந் துவர் வாய்க் காரிகை பாக
மாகமுன் கலந்தவர் மதின்மேல் தனித்த பேருருவ விழித்தழனுகழ்ந்
தாங்கிய மேரு வீெ சிசில்யாக் குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த
கோண மா மலையமர்ந்தர்ரே
யாழ்மூரி
மாதர் மடப் பிடியும் மட அன்னமும் அன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர், பூத இனப் படைநின்று இசை பாடவும் ஆடுவர்,
அவிர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர், வேத மொடு ஏழிசைபா டுவர், ஆழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொருது விம்மிநின்று அயலே தாது அவிழ் புன்னை தயங் குமலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே
பண்-கொல்லி மூன்றாம் திருமுறை மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
usior- és n toly úb
நீநாளும் நல்நெஞ்சே, நினைகண்டாய் யாரறிவார் சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளும் தலைசுமப்பப், புகழ்நாமஞ் செவிகேட்ப நாநாளும் நவின்றுஏத்தப் பெறலாமே நல்வினையே.
43

Page 29
திருநாவுக்கரசர் தேவாரம் நாலாம் திருமுறை
பண்-கொல்லி திருவதிகை வீரட்டானம்
கூற்ருயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்ற யடிக்கே யிரவும்பகலும்
பிரியாது வணங்குவ னெப்பொழுதும்
தோற்றதென் வயிற்றி னகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றே னடியே ன திகைக்கெடில
வீரட் டானத் துறையம்மானே
சலம்பூ வொடுது பமறந்தறியேன்
தமிழோ டிசைபா டல்மறந்தறியேன் நலந்தீங் கிலுமுன் னை மறந்தறியேன்
உன்னும மென்னுவின் மறந்தறியேன் உலந்தார் தலையிற் பலிகொண்டுழல்வாய்
உடலுள் ளுறுசூ லைதவிர்த்தருளாய் அலந்தே னடியே ன திகைக்கெடில வீரட் டானத் துறையம்மானே
திருவிருத்தம் கோயில்
குனிந்த புருவமுங் கொவ்வைச் செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்பால் வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றல் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே,
44

திருவிருத்தம் flotin lll ei lui புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்.இவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்ததீவண்ணனே.
பண்-காந்தாரபஞ்சமம் Clungi சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.
திருவிருத்தம் சுத்தாங்கர
கருவுற்ற நாண்முத லாகவுன் பாதமே
காண்பதற்கு உருகிற்றெ னுள்ளமு நானுங் கிடந்தலந்
தெய்த்தொழிந்தேன் திருவொற்றியூரா திருவால வாயா
திருவாரூரா ஒருபற்றிலாமையுங் கண்டிரங் காய்கச்சி
யேகம்பனே.
ஐந்தாம் திருமுறை பண்-தனித்திருக்குறுந்தொகை பொது
மாசில் வீணையு மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தையிணையடி நீழலே. நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
45

Page 30
ஆரும் திருமுறை திருத்தாண்டகம்
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானுள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள் தன்னுமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே. திருத்தாண்டகம் திருவையாறு
எல்லா வுலகமு மானய் நீயே
யேகம்ப மேவி யிருந்தாய் நீயே நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ
திரு விாரு
usot -5 Lust 60)- அருச்சனை
வேற்றகி விண்ணுகி நின்ருய் போற்றி
மீளாமே யாளென்ஃனக் கொண்டாய் போற்றி ஊற்ருகி யுள்ளே யொளித்தாய் போற்றி
யோவாத சத்தத் தொலியே போற்றி ஆற்ருகி யங்கே யமர்ந்தாய் போற்றி
யாறங்க நால்வேத மானுய் போற்றி காற்ருகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலே மலையானே போற்றி போற்றி,
திருச்சிற்றம்பலம்
O O O
46

சுந்தரமூர்த்தி தேவாரம் ஏழாம் திருமுறை
பண்-இந்தளம் ĝŝlcus Glenu6ior CRWY tiun eloyi) ili பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா எத்தான்மற வாதே நினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட்
டுறையுள் அத்தவுனக் காளாயினி யல்லேனென லாமே
பண்-பழம்பஞ்சுரம் திருபாண்டிக்கொடுமுடி
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாதமே மனம் பாவித்தே பெற்றலும் புறந் தேனினிப் பிற
வாத தன்மைவந் தெய்தினேன் கற்றவர் தொழு தேத் துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடிமுடி நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லுநா நமச்சி வாயவே.
பண்-கொல்லி திருப்புகலூர்
தம்மையே புகழ்ந் திச்சை பேசினுஞ்
சார்வினுந் தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே யெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மையே தருஞ் சோறுங் கூறையு
மேத்தலா மிடர் கெடலுமாம் அம்மையே சிவ லோக மாள்வதற்
கியாது மையுற வில்லையே
47

Page 31
6T-Islur 60L. திருக்கோளிலி
நீள நினைந்தடியே னுமை
நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே கோளிலி யெம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை யெம்பெருமா னவை
யட்டித் தரப்பணியே
பண்-காந்தாரபஞ்சமம் திருவையாறு
பரவும் பரிசொன் றறியேனுன்
பண்டே யும்மைப் பயிலாதேன்
இரவும் பகலு நினைந்தாலு
மெய்த நினைய மாட்டேனுன்
கரவி லருவி கமுகுண்ணத்
தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ
பண்-கொல்லிக்கெளவாணம் திருத்தொண்டத்தொகை
தில்லைவாழ் அந்தணர்தம் மடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனுர்க் கடியேன் இல்லையே என்னுத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆருரில் அம்மானுக் காளே
48

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
u 6ësT : IsllLUT 60) l- திருக்கேதீச்சரம்
நத்தார்புடை ஞானன்பசு ஏறிந்நனை கவிழ்வாய் மத்தம்மத யானைஉரி போர்த்த மழு வாளன் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தார்எலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே
அங்கம்மொழி அன்னுரவர் அமரதொழு தேத்த வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில் பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல் செங்கண்ணர வசைத்தான் திருக் கேதீச்சரத் தானே.
49

Page 32
திருவாசகம்
மாணிக்கவாசகர்
எட்டாம் திருமுறை சிவபுராணம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்ருள் வாழ்க இமைப்பொழுது மென்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவனடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன் கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈசனடி போற்றி எந்தை அடிபோற்றி தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி ஆராத இன்பம் அருளு மலை போற்றி சிவனவன் என் சிந்தையுள் நின்ற வதனல் அவனரு ளாலே அவன்றள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பனியான் கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்துமிக்காய்விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லே இலாதானே நின் பெருஞ்சீர்
50

பொல்லா வினையேன் புகழுமா றென்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பலவிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்ல சுர ராகி முனிவராய்த் தேவராய்ச் சொல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான ஞம் விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவா யென்னைப் புளூவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தி னேரியாய் சேயாய் நணியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணுேர்க ளேத்த மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் றன்னை மறைந்திட மூடிய மாய விருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
51

Page 33
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருகு நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனு ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பேராது நின்ற பெருங்கருனைப் பேராறே ஆரா வமுதே அளவிலாப் பெம்மானே ஒராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே நீரா யுருக்கியென் ஆருயிராய் நின்றனே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி யல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார்தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற سمسمبر தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வரி0 மாற்றமாம் வையகத்தின் வெவ்வெறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றன. உண்ணு ரமுதே யுபடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம் மையா அரனேயோ வென்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானுர் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
52

கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்ருடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து
தொல்லை யிரும்பிறவிச் சூழுந் தளை நீக்கி அல்லலறுத் தானந்த மாக்கியதே-எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன் திருவா சகமென்னுந் தேன்.
அன்றே எந்தன் ஆவியும் உடலும்
உடைமை எல்லாமும் குன்றே அணையாய் என்னை ஆட்கொண்ட
போதே கொண்டிலையோ? இன்றே ரிடையூ றெனக் குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானுே இதற்கு நாயகமே!
தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றதொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்டனம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் இகாண்டாய்
யான் இதற் கிலனுெர்கைம் மாறே.
53

Page 34
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த் துன்
விரையார் கழற் கென் கைதான் தலை வைத்து கணணிர்
ததும்பி, வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி
சயசய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே!
54

ஒன்பதாம் திருமுறை சேந்தனுர்
மண் -பஞ்சமம்
ஏக நாயகனை இமயவர்க் கரசை
என் உயிர்க் கமுதினை, எதிரில் போக நாயகனை, புயல்வணற்கு அருளிப் பொன் நெடும் சிவிகையா யூர்ந்த மேக நாயகனை மிகு திருவீழி
மிழலை விண் ணிழிசெழுங் கோயில் யோக நாயகனை யன்றிமற் றென்றும்
உண்டென உணர்கிலேன் யானே!
திருவாலியமுதஞர் பண்-இந்தளம்
அன்ன நடையார் அமுத மொழியார்
அவர்கள் பயில் தில்லைத் தென்னன் தமிழும் இசையும் கலந்த
சிற்றம் பலம் தன்னுள் பொன்னும் மணியும் நிரந்த தலத்துப்
புலித்தோல் பியற்கு இட்டு மின்னின் இடையாள் உமையள் காண
விகிர்தன் ஆடுமே.
கருவூர்த்தேவர் பண்-காந்தாரம்
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயா நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணுரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே!
55

Page 35
சேந்தரூர்
பண்-பஞ்சமம் கோயில்
பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கட லீந்த பிரான் மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
மிண்டு மனத்தவர் போமின்கண் மெய்யடியார்கள்
விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி யீசற்
காட்செய்மின் குழாம்புகுந் தண்டங் கடந்த பொருளள வில்லதோ ?
ரானந்த வெள்ளப்பொருள் பண்டு மின்று மென்றுமுள்ள பொருளென்றே
பல்லாண்டு கூறுதுமே.
திருச்சிற்றம்பலம்
தாதையைத் தான் அற வீசிய
சண்டிக்குஅவ் வண்டத்தொடும் உடனே பூதலத் தோரும் வணங்கப் பொன்
கோயிலும் போனகமும் அருளிச் சோதி மணி முடித் தாமமும்
நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாத கத்துக்குப் பரிசு வைத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
56

பத்தாம் திருமுறை
திருமந்திரம்
சிவனே டொக்கும் தெய்வம் தேடினும் இல்லெ அவனுே டொப்பார் இங்கு யாவரும் இல்ல புவனங் கடந்தன்று பொன்னெளி மின்னும் தவளச் சடைமுடித் தாரையானே!
அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளனை ஊழிமுதல்வனை எப்பரிசாயினும் ஏத்துமின் ஏத்தினுல் அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வாரே யாமாலில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்காரமான திருவடிசேர்வாரே
பதினொன்றாம் திருமுறை
பட்டினத்தார்
கையொன்று செய்ய விழியொன்று நாடக்
கருத்தொன் றெண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப்
புலால் கமழு
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க
விரும்புமியான்
செய்கின்ற பூசையெவ் வாறுகொள் வாய்வினை
தீர்த்தவனே
57

Page 36
கல்லாப் பிழையுங் கருதாப் பிழையுங்
கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையுநின்
னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந் துதியாப் பிழையுந்
தொழாப்பிழையு
மெல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி
யே கம்பனே
திருச்சிற்றம்பலம்
திருநந்திதேவர் சிவபெருமானிடத்திற் கேட்டுக்கொண்ட சில வரங்கள்
ஆமளவும் சிவமறவா திருத்தல் வேண்டும்
அடியேன் தன் விண்ணப்பம் ஆக்கம் முத்தி சாமளவுஞ் சஞ்சலமற் றிருத்தல் வேண்டும்
சாம்பொழுது நோயின்றிச் சாதல் வேண்டும் போமளவில் நாயடியேற் கெதிரே வந்து
புகுந்தாயோ வென வெண்ணிப் புகுந்த போது கோமளவல் லியுநீயும் இருக்குங் கோலம்
குடநம்பிான் வரவேண்டுங் கூத்த குரே.
பன்னிரண்டாம் திருமுறை Busslu LyI6Mú) சேக்கிழார்
ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குண மொரு மூன்றும்
திருந்து சாத் துவிகமே யாக
58

இந்துவாழ் சடையான் ஆகுமானந்த எல்லையிற் தனிப்பெரும் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றர் றவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் றவாமை வேண்டும்; இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபடி அறவா! நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்கனன் றர்
ஒறிதரு முயிர் தொறுந் திகழ்ந்து மன்னிய மறுவறு மரளிட மரபின் மேவிய
அறுவகை நெறிகளும் பிறவு மாக்கிய
இறைவிதன் மலரடியிறைஞ்சி யேத்துவிம்
பரந்தெழுந்த சமண் முதலாம் பரசமய இருள் நீங்கச்
சிரந்தழுவு சைவ நெறித்
திருநீற்றி னெளிவிளங்க
C
Ο அர*தைகெடப் புகலியர் கோகி"
அமுது செயத் திருமுலைப்பால் சுரந்தளித்த சிவகாம
சுந்தரிபூங் கழல்போற்றி
59

Page 37
கந்தபுராணம் கச்சியப்ப சுவாமிகள்
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக் கண்ணுதலுடையதோர். களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவம்
பன்னிரு கரத்தாய் போற்றி பசும் பொன்மா மயிலாய் போற்றி முன்னிய கருணை யாறு முகப் பரம் பொருளே போற்றி கன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே போற்றி என்னிரு கண்ணே கண்ணுள் இருக்குமா மணியே போற்றி
60

திருப்பள்ளியெழுச்சி
திருப்பெருந்துறையில் அருளியது எணசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர் கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழினகை கொண்டுநின் திருவடி தொழுகோஞ் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாயெனை யுடையாய்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே
அருணனிந் திரன்றிசை யணுகின னிருள் போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரிய னெழவெழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணுந் திரணிரை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே அருணிதி தர வரு மானந்த மலேயே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுக ளியம்பின வியம் பின சங்கம் ஒவின தாரகை யொளியொளி யுதயத்
தொருப்படுகின்றது விருப்பொ டு நமக்குத் தேவநற் செறிகழற் ருளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரு மறிவரி யாயெமக் கெளியாய்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே.
ری ،61

Page 38
இன்னிசை வீணைய ரியாழின ரொருபால்
இருக்கொடு தோத்திர மியம்பின ரொருபால் துன்னிய பிண்ைமலர்க் கையின ரொருபால்
தொழுகைய ரழுகையர் துவள்கைய ரொருபால் சென்னியி லஞ்சலி கூப்பின ரொருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையு மாண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே
பூதங்கள் தோறுநின் றயெனி னல்லாற்
போக்கிலன் வரவில னெனநினைப் புலவோர் கீதங்கள் பாடு த லாடுத லல்லாற்
கேட்டறி யோமுனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயற்றிருப் பெருந்துறை மன்னு
சிந்தனைக் கும்மரி யாயெங்கள் முன்வந் தேதங்க ளறுத்தெம்மை யாண்டருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே
பப்பற வீட்டிருந் துணருநின் னடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானிடத் தியல்பின்
வணங்குகின் றரணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை யாண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
அதுபழச் சுவையென அமுதென அறிதற் கரிதென எளிதென அமரரு மறியார்
இதுவவன் றிருவுரு இவனவ னெனவே
எங்களை யாண்டுகொண் டிங்கெழுந் தருளும்
62

மதுவளர் பொழிற்றிரு வுத்தர கோச
மங்கையுள் ளாய் திருப் பெருந்துறை மன்னு
எதுவெமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே.
முந்திய முதல் நடு இறுதியு மானுய்
மூவரு மறிகில ரியா வர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயுநின் னடியார்
பழங்குடில் தொறுமெழுந் தருளிய பரணே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தண ஞவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே 8
விண்ணகத் தேவரும் நண்ணவு மாட்டா
விழுப்பொரு ளே யுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண் திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாயுல குக்குயி ராணுய்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே S)
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள் நாம் போக்குகின் ருேமவ மேயிந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன் விருப் பெய்தவு மலரவ ஞசைப்
படவுநின் னலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே 0
திருச்சிற்றம்பலம்
63

Page 39
கோளறு பதிகம்
திருஞானசம்பந்தர்
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளஇே புகுந்த வதணுல் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
என்பொடு கொம்பொ டாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்குடி வந்தென்
உளமே புகுந்த வதணுல் ஒன்பதொ டொன்றே டேழு பதினெட்டொ டாறும்
உடனுய நாள்கள் அவைதாம் அன் போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார வர்க்கு மிகவே
உருவளர் பவள மேனி யொளிநீ றணிந்
துமையோடும் வெள்ளே விடைமேல் முரு கலர் கொன்றை திங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதணுல் திருமகள் கலைய தூர்தி சயமாது பூமி திசைதெய்வ மான பலவும் அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
64

மதுநூதல் மங்கை யோடு வடபா லிருந்து
மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதணுல் கொதியுறு காலன் அங்கி நமனுெடு தூதர்
கொடுநோய்க ளான பலவும் அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டன் எந்தை மடவா டனேடு
விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதனல் வெஞ்சின அவுண ரோடு உருமிடி யும்மின்னும்
மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வாள் வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவா டனுேடு முடனுய் நாண்மலர் வன்னி கொன்றை நதிகுழ வந்தென்
உளமே புகுந்த வதனல் கோளரி யுழுவை யோடு கொலையான கேழல்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
செப்பிள முலைநன் மங்கை யொருபாக மாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியு மப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதணுல்
'65

Page 40
வெப்பொடு குளிரும் வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே 7
வேள்பட விழிசெய் தன்று விடைமே லிருந்து
மடவாடனேடு முடனுய் வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வதணுல் ஏழ்கடல் சூழி லங்கை யரையன்ற குேடும்
இடரான வந்த நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பலபல வேட மாகும் பரஞரி பாகன் பசுவேறு மெங்கள் பரமன் சலமக ளோ டெ ருக்கு முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதணுல் மலர்மிசை யோனு மாலு மறையோடு தேவர்
வருகால மான பலவும் அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே 9
கொத்தலர் குழலி யோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியு நாக முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதணுல் புத்தரோ டமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. O
66

இதன் பயன்
தேனமர் பொழில்கொ ளாலே விளைசெந்நெறுன்
வளர்செம் பொ னெங்கு நிகழ நான்முக ன தி யாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய் ஆன சொன் மாலே யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே
இப் பதிகத்தை நாள்தோறும் ஓதி ஓதி விபூதி தரித்து வர, எல்லா வகையான பீடைகளும், நோய் நொடிகளும், பயங்களும் நீங்கும். சகல இடர்ப்பாடுகளும் விலகும். பயன்கள் எல்லாம் சித்திக்கும். பல்லாண்டு இனிய சுக வாழ்வும் வந்து சேரும்.
நவக்கிரக பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்குக் கட்டாயம் இந்தப் பதிகத்தை ஒதுக.
ஞாயிறு - சூரியன்
திங்கள் - சந்திரன்
செவ்வாய் - செவ்வாய், கேது
புதன் - புதன்
வியாழன் - குரு
வெள்ளி - சுக்கிரன்
ଏF ଓof - சனிசுவரன், ராகு
மேற்கண்ட கிழமைகளில், அந்தந்தக் கிரக பாதகம் உடை
யோர், விரதமிருந்து ஓதித் தியானிக்கத் தீமை விலகி, நன்மைகள் பெருகும்.
67

Page 41
பரசிவ வணக்கம்
மாணிக்கவாசகர்
போற்றித் திரு அகவல்
பரம்பரஞ் சோதி, பரனே போற்றி, சிந்தனைக் கரிய சிவமே போற்றி நித்தா போற்றி, நிமலா போற்றி, அருவமும் உருவமும் ஆணுய் போற்றி அடியொடு நடுஷ ருஞய் போற்றி,
வெளியிடை ஒன்ருய் விளைந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி மூவா நான் மறை முதல்வா போற்றி உறைஉணர் விறந்த ஒருவ போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி.
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி, இடரைக் களையும் எந்தாய் போற்றி, தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி, அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி, தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி, மருவிய கருணை மலையே போற்றி, அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி, போற்றி போற்றி, ஜயஜய போற்றி,
68

பரசிவநிலை
இராமலிங்க வள்ளலார்
அருட்சோதித் தெய்வம்எனை
ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம் பொருட்சாரும் மறைகள் எலாம்
போற்றுகின்ற தெய்வம் போதாந்தத் தெய்வம் உயர்
நாதாந்தத் தெய்வம் இருட்பாடு நீக்கிஒளி
ஈந்தருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவா
றெனக்கருளும் தெய்வம் தெருட் பாடல் உவந்தெனையும்
சிவமாக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற
தெய்வமதே தெய்வம்
எல்லாஞ்செய் வல்ல தெய்வம்
எங்கும் நிறை தெய்வம் என்னுயிரில் கலந்தெனக்கே
இன்பநல்கும் தெய்வம் நல்லார்க்கு நல்லதெய்வம்
நடுவான தெய்வம் நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம் கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
69

Page 42
காரணமாந்தெய்வம் அருட்
பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
ஞானசரியை
மாற்றறி யாதசெ மும்பசும் பொன்னே
மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே கூற்றறி யாத பெ ருந்தவர் உள்ளக்
கோயில் இருந்த குணப்பெருங் குன்றே வேற்றறி யாத சிற் றம்பலக் கனியே
விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே சாற்றறி யாதனன் சாற்றுங் களித்தாய்
தனிநட ராஜஎன் சற்குரு மணியே
70

திருவெம்பாவை திருவண்ணுமலையில் அருளியது
ஆதியு மந்தமு மில்லா வரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து போதா ரமளியின் மே ணின்றும் புரண்டிங்ங் னேதேனு மாகாள் கிடந்தாளென் னே யென்னே ஈதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.
பாசம் பரஞ்சோதிக் கென்பா யிராப்பகல்நாம்
பேசும்போ தெப்போ திப்போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசீ யிவையுஞ் சிலவோ விளையாடி யேசுமிட மீதோ விண்ணுேர் களேத்துதற்குக்
கூசுமலர்ப் பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் றில்லைச்சிற் றம்பலத்து
ரிசனர்க் கன்பார்யா மாரேலோ ரெம்பாவாய்.
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
னத்த ஞனந்த னமுதனென் றள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீ ரீசன் பழவடியிர் பாங்குடையீர் புத்தடியோம்புன் மைதீர்த் தாட்கொண்டாற்பொல்லாதோ
எத்தோநின் னன்புடைமை எல்லோ மறியோமோ சித்த மழகியார் பாடாரோ நஞ்சிவனை
யித்தனையும் தீேண்டு மெமக்கேலோ ரெம்பாவாய்.
71

Page 43
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றே
வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ வெண்ணிக்கொ டுள்ள வா சொல்லுகோ மவ்வளவுங்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ள முண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய்.
மாலறியா நான்முகனுங் காணு மலையினை நாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளே பேசும் பாலூறு தேன் வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான் கோலமு நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனே யென் ருேல மிடினு முனரா யுணராய்கா
ணேலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.
மானே நீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவ னென்றலு நாணுமே போன திசைபகரா யின்னம் புலர்ந்தின்றே
வானே நிலனே பிறவே யறிவரியான் தானே வந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி, வந்தோர்க்குன் வாய் திறவா பூனே யுருகாய் யுனக்கே யுறுமெமக்கு
மேனுேர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.
அன்னே யிவையுஞ் சிலவோ பலவமர
ருன்னற் கரியா னுெருவ னிருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னுவென் ஞமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
72
5

யென்னனை யென்னரைய னின்னமுதென் றெல்லோமுஞ் சொன்னுேங்கேள் வெவ்வேரு யின்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியா
லென்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்- 7
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கு
மேழி லியம்ப வியம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினுேங் கேட்டிலையோ வாழியீ தென்ன வுறக்கமோ வாய் திறவா
யாழியா னன்புடைமை யாமாறு மிவ்வாறே வூழி முதல்வனுய் நின்ற வொருவனை
யேழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய். 8
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே யுன்னைப் பிரானுகப் பெற்றவுன் சீரடியோம்
நின்னடியார் தாள் பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோ மன்னவரே எங்கணவ ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோ மின்ன வகையே யெமக்கெங்கோ னல்குதியே
லென்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய். 9
பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியு மெல்லாப் பொருண்முடிவே பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன்
வேதமுதல் விண்ணுேரு மண்ணுந் துதித்தாலு மோத வுலவா வொருதோழன் ருெண்டருளன்
கோதில் குலத்தரன் றன் கோயிற்பி னபிள்ளை கா ளேதவனூ ரேதவன்பே ராருற்ற ராரயலா
ரேதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். 10
73

Page 44
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்கா ணுரழல்போற் செய்யாவெண் ணிருடிச் செல்வா சிறுமருங்குன் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
வையா நீ யாட்கொண் டருளும் விளையாட்டி னுய்வார்க ளுய்யும் வகையெல்லா முய்ந்தொழிந்தோ
மெய்யாமற் காப்பா யெமையேலோ ரெம்பாவாய். 1
ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடுந்
தீர்த்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயா டுங் கூத்தனில் வானுங் குவலயமு மெல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைக
ளார்ப்பரவஞ் செய்ய வணிகுழன் மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாத
மேத்தியிருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய். f
2
பைங்குAவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதா
லங்கங் குருகினத்தாற் பின்னு மரவத்தாற் றங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினு
லெங்கள் பிராட்டியு மெங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 13
காதார் குழையாடப் பைம்பூண் கலனுடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள் பாடி யப்பொருளா மாபாடிச்
74

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
யாதி திறம்பாடி யந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். 14
ஒரொருகா லெம்பெருமா னென்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகா லோவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணுேரைத்தான் பணியாள் பேரரையற் கிங்ங்னே பித்தொருவ ராமாறு
மாரொருவ ரிவ்வண்ண மாட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
யேருருவப் பூம்புனல் பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 15
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுநதுடையா
ளென்னத் திகழ்ந்தெம்மை யாளுடையா எரிட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவ மென்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையா
டன்னிற் பிரிவிலா வெங்கோமா னன்பர்க்கு முன்னி யவணமக்கு முன்சுரக்கு மின்னருளே
யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். 16
செங்க ணவன்பாற் றிசைமுகன்பாற் றேவர்கள்பா
லெங்கு மிலாததோ ரின்பநம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நம்தம்மைக் கோதாட்டி
யிங்கு நம் மில்லங்க டோறு மெழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகன யங்கண் ணரசை யடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய், 17
75

Page 45
அண்ணு மலையா னடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணுேர் முடியின் மணித்தொகைவி றற்றற்போற் கண்ணு ரிரவி கதிர் வந்து கார்கரப்பத்
தண்ணு ரொளிமழுங்கித் தாரகைக டாமகலப் பெண்ணுகி யாணு யலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணுகி மண்ணுகி யித்தனையும் வேருகிக் கண்ணு ரமுதமாய் நின்றன் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 18
உங்கையிற் பிள்ளை யுனக்கே யடைக்கலமென் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் மச்சத்தா லெங்கள் பெருமா னுனக்கொன் றுரைப்போங்கே
ளெங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க வெங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றென்றுங் காணற்க விங்கிப் பரிசே யெமக்கெங்கோ னல்குதியே
லெங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய். 19
போற்றி யருளுகநின் ஞதியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் னந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லா வுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கு மீற மிணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணுத புண்டரிகம் போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். 20
திருச்சிற்றம்பலம்
76

திருவங்கமால
திருநாவுக்கரசர்
சிவபெருமான் எமக்கருளிய மனம் வாக்குக் காயங்கள் பிழைப்புக்காக செயல்படுமாயினும் அந்த அங்கங்களுக்கு ஆன்மீக பணிகளே முக்கியம் என்றும் அங்க நியாஸ் (திருவங்க)பூஜையால் சிவபக்தி எளிதில் விளையும்
என்றும் பெரியோர் கூறுவர்.
தலையே நீவனங்காய், தலை மாலே தலைக்கணிந்து தலையா லேபலி தேரும் தலைவனைத் தலையே நீரின்ங்காய்.
கண்காள் காண்மின்களோ, கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்தோள் வீசிநின் ருடும் பிரான்ற&னக் கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ, சிவன் எம்மிறை செம்பவள எரிபோன் மேனிப் பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ,
வாயே வாழ்த்துகண்டாய், மத யானை யுரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்தன்னை வாயே வாழ்த்துகண்டாய்.
77

Page 46
நெஞ்சே நீநினையாய், நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சா டும்மலை மங்கைம ஞணனனை நெஞ்சே நீநினையாய்.
கைகாள் கூப்பித்தொழிர் கடி மாமலர் தூவிநின்று பைவாய்ப் பாம்புஅரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழிர்,
ஆக்கை யாற்பயனென், அரன் கோயில் வலம்வந்து பூக்கை யால் அட்டிப் போற்றிஎன் ஞதஇவ் ஆக்கை யாற்பயனென்.
உற்றர் ஆருளரோ, உயிர் கொண்டு போம்பொழுது குற்ற லத்துறை கூத்தனல் லால்நமக்கு உற்ருர் ஆருளரோ,
தேடிக் கண்டுகொண்டேன், திரு மாலொடு நான்முகனும் தேடித் தேடொனுத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்
78

அபிராமி அந்தாதி அபிராமி பட்டர்
கள்ளவாரணப் பிள்ளையார் காப்பு
தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்(து) உமைமைந்த னே உல(கு) ஏழும்பெற்ற சீரபி ராமி அந் தாதிஎப் போதும்என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதி யேநிற்கக் கட்டுரையே.
நூல் உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின் கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.
துணையும் தொழுந்தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங் குசமும்கையில் அணையும் திரிபுர சுந்தரி யாவ(து) அறிந்தனமே.
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக் கேதிரு வேவெருவிப் பிறிந்தேன்நின் அன்பர் பெருமைஎண் ணுத கருமநெஞ்சால் மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதி யும் படைத்த புனிதரும் நீயும்என் புந்திஎந்நாளும் பொருந்துகவே,
79

Page 47
1 O.
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனேன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்(சு) அமு தாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.
சென்னிய(து) உன் பொன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே மன்னிய(து) உன் திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே முன்னிய நின் அடி யாருடன் கூடி முறைமுறையே பன்னிய(து) என்றும்உன் றன்பர மாகம பத்ததியே
ததியுறு மத்திற் சுழலும்என் ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண் டாய்கம லா லயனும் மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கிஎன்றும் துதியுறு சேவடி யாய்சிந்து ரானன சுந்தரியே.
சுந்தரி எந்தை துணைவிஎன் பாசத் தொடரை எல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினுள் மகி டன் தலைமேல் அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் கந்தரி கைத்தலத் தாள்மலர்த் தாள் என் கருத்தனவே.
கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பிற் பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும் முருத்தன மூரலும் நீயும் அம் மேவந்தென் முன் நிற்கவே.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்ப(து) உன்னை என்றும் வணங்குவ(து) உன்மலர்த் தாள் எழு தாமரையின் ஒன்றும் அரும்பொரு ளே அரு ளேஉமை யேஇமயத்(து) அன்றும் பிறந்தவ ளே அழியாமுத்தி ஆனந்தமே.
8O

| 1.
12
13.
14.
15.
16.
ஆனந்த மாய்என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் வானந்த மான வடி(வு) உடை யாள்மறை நான்கினுக்கும் தானந்தமான சரணுவிந்தம் தவளநிறக் கானந்தம் ஆடரங் காம்எம்பி ரான்முடிக் கண்ணியதே.
கண்ணிய(து) உன் புகழ் கற்ப(து) உன் நாமம் கசிந்துபத்தி பண்ணிய(து) உன்னிரு பாதாம் புயத்தில் பகல்இரவா நண்ணிய(து) உன்னை நயந்தோர் அவையத்து நான்முன்
செய்த புண்ணியம் ஏ(து) என் அம் மேபுவி ஏழையும் பூத்தவளே.
பூத்தவ ளேபுவனம்பதி ஞன்கையும் பூத்தவண்ணம் காத்தவ ளே பின் கரந்தவ ளேகறைக் கண்டனுக்கு மூத்தவ ளே என்றும் மூவா முகுந்தற் (கு) இளையவளே மாத்தவ ளேஉன்னை அன்றிமற் றேர்தெய்வம் வந்திப்பதே,
لمسا வந்திப்வேர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே பந்திப்பவர் அழி யாப்பர மானந்தர் பாரில் உன்னைச் சந்திப் பவர்க்(கு) எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.
தண்ணளிக் கென்றுமுன் னேபல கோடி தவங்கள் செய்வார் மண்ணளிக் கும்செல்வ மோபெறு வார்மதி வானவர்தம் விண்ணளிக் கும்செல் வமும் அழியாமுத்தி வீடுமென்ருே பண்ணளிக் கும் சொல் பரிமள யாமளேப் பைங்கிளியே,
கிளியே கிளைமுழ மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கிட மேஎண்ணில் ஒன்றுமில்லா வெளியே வெளிமுதல் பூதங்க ளாகி விரிந்த அம்மே அளியேன் அறிவள விற்(கு) அளவான (து) அதிசயமே
81

Page 48
17.
18.
19,
20.
2
2
1.
அதிசய மான வடி (வு) உடை யாள் அர விந்த மெல்லாம் துதிசய ஆன ன சுந்தர வல்லி துணைஇரதி பதிசய மான (து) அபசய மாகமுன் பார்த்தவர்தம் மதிசய மாகவன் ருேவாம பாகத்தை வவ்வியதே.
வவ்விய பாகத்(து) இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே
வெளிநின்ற நின்திரு மேனியைப்பார்த்தென் விழியும் நெஞ்சும் களிநின்ற வெள்ளம் கரைகண்ட தில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்ற தென்ன திருவுளமோ ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
உறைகின்ற நின்திருக் கோயில் நின் கேள்வர் ஒருபக்க மோ அறைகின்ற நான்மறை யின் அடி யோமுடி யோ அமுதம் நிறைகின்ற வெண்திங்க ளோ கஞ்ச மோஎன்றன்
V நெஞ்சகமோ மறைகின்ற வாரிதி யோபூர னசல மங்கலையே.
மங்கலே செங்கல சம்முலை யாள்மஐல யாள்வருணச் சங்கலே செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை பொங்கலே தங்கும் புரிசடை யோன்புடை யாள் உடையாள் பிங்கலே நீலிசெய் யாள் வெளி யாள்பசும் பெண்கொடியே.
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம் பேபழுத்த
படியே மறையின் பரிமள மேபனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்றஅம்மே
அடியேன் இறந்(து) இங்(கு) இனிப்பிற வாமல் வந்(து)
ஆண்டு கொள்ளே
82

23.
26.
27.
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல் லா (து) அன்பர்
கூட்டந்தன் இன விள்ளேன் பரசமயம்விரும் பேன் வியன் மூவுலக்குக்(கு) உள்ளே அனைத்தினுக் கும்புறம் பேஉள்ளத் தேவிளைத்த கள் ளே களிக்கும் களியே அளியளன் கண்மணியே
. மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழ கே அணு காதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.
. பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்றுகொண் டேன் முதல் மூவருக்கும் அன்னே உலகுக்(கு) அபிராமி என்னும் அருமருந்தே என்னே இனிஉன்னை யான்மற வாமல் நின்(று) ஏத்துவனே.
ஏத்தும் அடியவர் ஈரே ழுலகினை யும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவ ராம் கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல்அணங் கேமணம் நாறும் நின் தாள் இணைக்(கு)
66t நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே.
உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும்.அன்பு படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பஐரிஎன ඊශීඝ அடைத்தனை நெஞ்சத்(து) அழுக்Mைஎல் லாம்நின்
அருட்புனலாக துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே.
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி யேநின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க் கே அழியா அரசும் செல்லும் தவநெறி யும்சிவ லோகமும் சித்திக்குமே.
83

Page 49
29.
30,
31.
32。
33.
34,
சித்தியும் சித்தி தருந்தெய்வமாகித் திகழும்பரா
சத்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும்வித் தாகி முளைத்தெழுந்த தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.
அன்றே தடுத்(து) என்னை ஆண்டுகொண் டாய்கொண்ட (து) அல்லவென் கை நன்றே உனக்(கு) இனி நான் என் செயினும் நடுக்கடலுள் சென்றே விழினும் கரையேற்றுகைநின் திருவுளமே ஒன்றே பலவுரு வேயரு வேஎன் உமையவளே.
உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில்வந்திங்(கு) எமையும் தமக்கன்பு செய்வவைத் தார்இனி எண்ணுதற்குச் சமையங் களுமில்லை ஈன்றெடுப் பாள் ஒரு தாயும் இல்லை அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.
ஆசைக் கடலில் அகப்பட் (டு) அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லல்பட இருந் தேனை நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலைமேல் வலியவைத்(து) ஆண்டுகொண்ட நேசத்தை என் சொல்லு வேன் ஈசர் பாகத்து நேரிழையே.
இழைக்கும் வினைவழி யேஆடும் காலன் என நடுங்க அழைக்கும் பொழுதுவந்(து) அஞ்சல் என் பாய்அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே உழைக்கும் பொழு(து) உன்னை யேஅன்னை யேஎன்பன்
ஓடிவந்தே.
வந்தே சரணம் புகும் அடி யாருக்கு வான் உலகம் தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும் பைந்தேன் அலங்பல் பருமணி ஆகமும் பாகமும்பொன் செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே.
84

37.
38.
39.
. திங்கட் பசுவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்(கு) ஒருதவம் எய்திய வாஎண் ணிறந்த விண்னேர் தங்கட்கும் இந்தத் தவமெய்து மோதரங்கக் கடலுள் வெங்கட் பணியனை மேல்துயில் கூரும் விழுப்பொருளே,
. பொருளே பொருள்முடிக் கும்போக மே அரும் போகம்செய்யும்
மருளே மருளில் வருந்தெரு ளேனன் மனத்துவஞ்சத்(து) இருளேதும் இன்றி ஒளிவெளி யாகி இருக்கும் உன்றன் அருளே (து) அறிகின்றி லேன் அம்புயா தனத் (து)
அம்பிகையே
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை; விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும்; எட்டுத் திக்கே அணியும் திருவுடை யான் இடம் சேர்பவளே.
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பணிமுறுவல் தவளத் திருநகை யும்துணை யாஎங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையாள் அவளைப் பணிமின்கண் டீர் அமராவதி ஆளுகைக்கே.
ஆளுகைக் (கு) உன்றன் அடித்தாமரைகள் உண்(டு);
அந்த கன்பால்
மீளுகைக் (கு) உன்றன் விழியின் கடையுண்டு; மேல்இவற்றின்
மூளுகைக் (கு) என் குறை நின்குறை யேஅன்று; முப்புரங்கள்
மர்ளுகைக்கு(கு) அம்பு தொடுத்தவில் லான் பங்கில்
வாள் நுதலே
வாணுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்(கு) எண்ணிய எம்பெரு மாட்டியைப் பேதை
நெஞ்சில் காணுதற்(கு) அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும்
அன்பு பூணுதற்(கு) எண்ணிய எண்ணம் அன்றே? முன் செய்
புண்ணியமே
85

Page 50
41.
42.
43.
44.
45.
46.
புண்ணியம் செய்தன மேமன மேபுதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால் நண்ணி இங்கேவ்ந்து தம்மடி யார்கள் நடுவிருக்கப் பண்ணிநம் சென்னியின் மேல்பத்ம பாதம் பதித்திடவே,
இடங்கொண்டு விம்மி இ&ணகொண் (டு) இறுகி இளகிமுத்து வடங்கொண்ட கொங்கை மலைகொண் (டு) இறைவர் வலிய
நெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே
பரிபுரச் சீறடி பாசாங் குசைபஞ்ச பாணி இன் சொல் திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச்சிலைக்கை எரிபுரை மேனி இறைவர் செம் பாகத் (து) இருந்தவளே.
தவளே இவள் எங்கள் சங்கர னுர்மனை மங்கலமாம் அவளே அவர் தமக்(கு) அன்னையும் ஆயினள் ஆகையினல் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவுயும் ஆம் துவளேன் இனியொரு தெய்வமுண் டாகமெய்த் தொண்டு
செய்தே
தொண்டுசெய் யாதுநின் பாதம்’தொழாது துணிந்திச்சையே பண்டுசெய் தார் உள ரோஇல ரோ அப் பரிசடியேன் கண்டுசெய் தால் அது கைதவ மோ அன்றிச் செய்தவமோ மிண்டுசெய் தாலும் பொறுக்கை நன் றேபின்
. வெறுக்கையன்றே வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடி யாரைமிக்கோர் பொறுக்கும் தகைமை புதியதன் றேடது நஞ்சை உண்டு கறுக்கும் கிருமிடற் றன் இடம் பாகம் கலந்தபொன்னே மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன் ஜன
வாழ்த்துவனே.
86

47.
48.
49.
50.
5
52.
வாழும் படியொன்று கண்டுகொண் டேன்மனத் தேயொருவர் வீழும் படி யன்றுவிள்ளும் படியன்று வேலைநிலம் ஏழும் பருவரை எட்டும்எட் டாமல் இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில் இடரும் தவிர்த்திமைப் போதிருப் பார்பின்னும் எய்துவரோ? குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம் பையிலே.
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவிவெங் கூற்றுக்கிட்ட வரம்பை அடுத்து மறுகும் அப் போது வளைக்கை அமைத்(து) அரம்பை அடுத்த அரிவையர் சூழவந் (து) அஞ்சல்என்பாய் நரம்பை அடுத்த இசைவடி வாய்நின்ற நாயகியே.
நாயகி நான்முகி நாரா யணிகை நளினபஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கிஎன் ருயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.
அரணம் பொருள் என்று அருள் ஒன் றிலாத அசுரர் தங்கள் முரண் அன்(று) அழிய முனிந்தபெம் மானும் முகுந்தனுமே சரணம் சரணம் என நின்ற நாயகி தன்னடியார் மரணம் பிறவி இரண்டும் எய் தார் இந்த வையகத்தே.
வையம் துரகம் மத கரி மாமகுடம் சிவிகை பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த ஜயன் திருமனை யாள் அடித் தாமரைக்(கு) அன்புமுன்பு செய்யும் தவம் உடை யார்க்குள வாகிய சின்னங்களே
87

Page 51
53. சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம் பெரிய முலையும்முத் தாரமும் பிச்சிமொய்த்த கன்னிங் கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத் தன்னந் தனியிருப் பார்க்கிது போலும் தவமில்லையே.
54. இல்லாமை சொல்லி ஒருவர்தம் பால்சென் (று) இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினேகுவி ரேல் நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர்தம் பால்ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
55. மின்னு யிரம்ஒரு மெய்வடி வாகி விளங்குகின்ற
தன்னுள் அகமகிழ் ஆனந்த வல்லி அருமறைக்கு முன்னுய் நடுவெங்கு மாய்மடி வாய முதல்விதன்னை உன்ன (து) ஒழியினும் உன்னினும் வேண்டுவ(து)
ஒன்றிலையே.
56. ஒன்ருய் அரும்பிப் பலவாய் விரிந்(து) இவ் வுலகெங்குமாய்
நின்ருள் அனைத்தையும் நீங்கிநிற் பாள் என்றன்
நெஞ்சினுள்ளே பொன்றது நின்று புரிகின்ற வாஇப் பொருள் அறிவார் அன்ரு லிலையில் துயின்றபெம் மானும்என் ஐயனுமே
57. ஐயன் அளந்த படியிரு நாழிகொண்(டு) அண்டம் எல்லாம் உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலை யுங்கொண்டு சென்றுபொய்யும் மெய்யும் இயம்பவைத் தாய்இது வோஉன்றன் மெய்யருளே.
58. அருணும் புயத்தும்என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும் தருணும் புயமுலைத் தையல்நல் லாள் தசை சேர்நயனக் கருணும் புயமும் வதனும் புயமும் கராம்புயமும் சரணும் புயமும் அல் லாற்கண்டி லேன் ஒரு தஞ்சமுமே.
88

6.
63.
64.
. தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன் ஒற்றை நீள்சிலையும் அஞ்சம்பும் இக்(கு) அலர் ஆகநின் ருய்அறி யார்எனினும் பஞ்சஞ்சும் மெல்லடி யார் அடி யார்பெற்ற பாலரையே.
. பாலினும் சொல் இனி யாப்பனி மாமலர்ப் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்கநின் ருேன்கொன்றைவார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம் ஒரு நாலினும் சாலநன் ருே அடி யேன்முடை நாய்த்தலையே.
நாயே னையும் இங்(கு) ஒருபொருளாக நயந்துவந்து நீயே நினைவின்றி ஆண்டுகொண் டாய்நின்னை உள்ள
66or 6Coruh பேயேன் அறியும் அறிவுதந் தாய்என்ன பேறுபெற்றேன் தாயே மலைமக ளே செங்கண் மால் திருத் தங்கைச்சியே.
தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்துமத வெங்கண் கரியுரி போர்த்தசெஞ் சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகன கச் செங்கைக் கரும்பும் அலரும்எப் போதும்என் சிந்தையதே.
தேறும் படிசில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக் கூறும் பொருள்குன்றில் கொட்டும் தறிகுறிக் கும்சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்ப (து) அறிந்திருந்தும் வேறும் சமயம் உண் டென்றுகொண் டாடிய வீணருக்கே.
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு பூணேன் உனக்(கு) அன்பு பூண்டுகொண் டேன்நின்
புகழ்ச்சியன் றிப் பேணேன் ஒருபொழுதும் திரு மேனிப்ர காசமன்றிக் காணேன் இருநில மும்திசை நான்கும் ககனமுமே.
89

Page 52
65.
66.
67.
68.
69.
70.
ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம் தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம் முகனுமுந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின் மகனுமுண் டாயதன் ருேவல்லி நீசெய்த வல்லபமே.
வல்லபம் ஒன்றறி யேன்சிறி யேன்நின் மலரடிசெம் பல்லவம் அல்லது பற்றென்றி லேன் பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப் பாய்வினை யேன் தொடுத்த சொல்லவ மாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே.
தோத்திரம் செய்து தொழுதுமின் போலும் நின் தோற்றம் ஒரு மாத்திரைப் போதும் மனத்தில்வை யாதவர் வண்மைகுலம் கோத்திரம் கல்வி குணம்குன்றி நாளும் குடிகல்கள்தொறும் பாத்திரம் கொண்டு பலிக்குழ லா நிற்பர் பாரெங்குமே.
பாரும் புனலும் கனலும் வெங் காலும் படர்விசும்பும் ஊரும் முருகு சுவையொளி யூருெலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீரடிக்கே சாரும் தவமுடை யார்படை யாத தனமில்லையே.
தனந்தரும் கல்வி தரும்ஒரு நாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வ வடிவுந் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
கண்களிக் கும்படி கண்டுகொண் டேன்கடம் பாடவியில் பண்களிக் கும் குரல் வீணையும் கையும் பயோ தரமும் மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப் பெண்களிற் ருேன்றிய எம்பெரு மாட்டிதன் பேரழகே.
90

75.
76.
அழகுக் (கு) ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத் தாள்பனி மாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க இழிவுற்று நின்றநெஞ் சேயிரங் கேலுனக்(கு) என்குறையே.
என் குறை தீரநின்(று) ஏத்துகின் றேன் இனி யான்பிறக்கின் நின்குறையே அன்றி யார்குறை காண்இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய் தன்குறை தீரளங் கோன்சடை மேல்வைத்த தாமரையே.
தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும் பொழு (து) எமக் கென்றுவைத்த சேமம் திருவடி செங்கைகள் நான் (கு) ஒளி செம்மையம்மை நாமம் திரிபுரை ஒன்ருே டிரண்டு நயனங்களே
நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப் பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன் சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
தங்குவர் கற்பகத் தருவின் நீழலில் தாயரின்றி மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும் பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தஉந்திக் கொங்கிவர் பூங்குழ லாள் திரு மேனி குறித்தவரே.
نما
குறித்தேன் மனத்திதிேன் கோலம்எல் லாம்நின் குறிப்பறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டுகிண்டி வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான்ஒரு கூற்றை
s ம்ெய்யில் பறித்தே குடிபுகு தும்பஞ்ச புர்ண பயிரவியே.
91

Page 53
77.
79.
80,
81.
82.
பயிரவி பஞ்சமி பாசாங் குசைப்ஞ்ச பாணிவஞ்சர் உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும்கலா வயிரவி மண்டலி மாலினி குலி வரா கியென்றே செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.
. செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி அணிதரளக் கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத் தேன் என் துணைவிழிக்கே.
விழிக்கே அருளுண் (டு) அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன வழிக்கேவழிபட நெஞ்சுண் (டு) எமக்(கு) அவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே
கூட்டிய வாஎன்னைத் தன்னடி யாரில் கொடியவினை ஒட்டிய வாஎன் கண் ஓடிய வாதன்னை உள்ள வண்ணம் காட்டிய வாகண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா ஆட்டிய வாநடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.
அணங்கே அணங்குகள் நின் பரி வாரங்கள் ஆகையினுல் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகி லேன் நெஞ்சில்
வஞ்சகரோ (டு) இணங்கேன் என (து) என்றிருப்பார் சிலர் யாவரொடும் பிணங்கேன் அறிவொன்றி லேன் என் கண் நீவைத்த
பேரளியே,
அளியார் கமலத்தில் ஆரணங் கே அகி லாண்டமும்நின் ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுதொறும் களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு வெளியாய் விடின் எங்ங் னே மறப் பேன்நின் விரகினையே.
92

83. விரவும் புதுமலர் இட்டுநின் பாத விரைக்கமலம்
84.
86.
87.
88.
இரவும் பகலும் இறைஞ்சவல் லார்இமை யோர்எவரும் பரவும் பதமும் அயிரா வதமும் பகீரதியும் உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே.
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிசெஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சடை யாளேத் தயங்குநுண்ணுல் இடையாளை எங்கள் மெம் மானிடை யாளை இங்(கு) என்னை
இனிப்
படையாளை உங்களை யும்படை யாவண்ணம் பார்த்திருமே.
பார்க்கும் திசைதொறும் பாசாங் குசமும் பணிச்சிறைவண் (டு)
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்என் அல்லல்எல்லாம் தீர்க்கும் திரிபுரை யாள் திரு மேனியும் சிற்றிடையும் வார்க்குங் குமமுலை யும்முலை மேல்முத்து மாலையுமே,
மாலயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற
காலையும் குடகக் கையையும் கொண்டு கதித்தகப்பு
வேலை வெங் காலன் என் மேல் விடும் போது வெளிநில்
கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்தினன்றன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற தால்விழி யால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம் பழிக்கும் படியொரு பாகம்கொண் டாளும் பராபரையே
பரமென்று உனையடைந் தேன்தமி யேனும் உன் பத்தருக்குள் தரமன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன் சிரம்ஒன்று செற்றகை யான் இடப் பாகம் சிறந்தவளே.
93

Page 54
89.
90.
91.
92.
93.
94.
95.
சிறக்கும் கமலத் திருவேநின் சேவடி சென்னிவைக்கத் துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும் துரியம்அற்ற உறக்கம் தரவந்(து) உடம்போ (டு) உயிர்உறவற்றறிவு மறக்கும் பொழுதென்முன் னே வரல் வேண்டும் வருந்தியுமே.
வருந்தா வகைஎன் மனத்தா மரையினில் வந்துபுகுந்(து) இருந்தாள் பழைய இருப்பிட மாக இனிஎனக்குப் பொருந்தா தொருபொருள் இல்ஃலவிண் மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மருந்தா னதை நல்கும் மெல்லியளே.
மெல்லிய நுண்ணிடை மின் அனை யாளை விரிசடையோன் புல்லிய மென்முலை பொன் அனை யாளைப் புகழ்ந்துமறை சொல்லிய வண்ணம் தொழும் அடி யாரைத் தொழுமவர்க்குப் பல்லியம் ஆர்த்தெழ வெண்பக (டு) ஊரும் பதம்தருமே.
பதத்தே உருகிநின் பாதத்தி லேமனம் பற்றிஉன்றன் இதத்தே ஒழுக அடிமைகொண் டாய்இனி யான் ஒருவர் மதத்தே மதிமயங் கேன் அவர் போனவழியும் செல்லேன் முதத்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.
நகையே இஃதிந்த ஞாலமெல் லாம்பெற்ற நாயகிக்கு முகையே முகிழ்முலை மானே முதுகண் முடிவில் அந்த வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம் மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே.
விரும்பித் தொழும் அடி யார்விழி நீர்மல்கி மெய்புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்த மாகி அறிவிழந்து சுரும்பிற் களித்து மொழிதடு மாறிமுன் சொன்ன எல்லாம் தரும்பித்தர் ஆவரென் ருல் அபி ராமி சமயம் நன்றே
நன்றே வருகினும் தீதே விழைகினும் நான் அறிவ(து) ஒன்றேயு மில்லை உனக்கே பரம்எனக்(கு) உள்ள எல்லாம்
அன்றே உனதென் (று) அளித்து விட் டேன் அழி
யாதகுணக்
குன்றே அருட்கட லேஇம வான் பெற்ற கோமளமே.
94

96. கோமள வல்லியை அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை ஏதம் இலாளை எழுதரிய சாமள மேனிச் சகலக லாமயில் தன்னைத்தம்மால்
ஆமள வும் தொழு வார்எழு பாருக்கும் ஆதிபரே.
97. ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தங்கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலேயே,
98. தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்க ஏற்குக் கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்த தெங்கே மெய்வந்த நெஞ்சின் அல் லால் ஒரு காலும் விரகர்தங்கள் பொய்வந்த நெஞ்சில் புக அறியாமடப் பூங்குயிலே.
99. குயிலாய் இருக்கும் கடம்பா டவியிடைக் கோலஇயல்
மயிலாய் இருக்கும் இமயா சலத்திடை வந்துதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீதன்னமாம் கயிலா யருக்(கு) அன்(று) இமவான் அளித்த கணங்குழையே
100. குழையைத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கை
வல்லி கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்புவில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ண கையும் உழையைப் பொருகண்ணும் நெஞ்சில்எப் போதும் உதிக்
கின்றவே.
நூல் பயன் ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவிஅடங்கக் காத்தாளை ஜங்கணை பாசாங் குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணி யைத்தொழு வார்க்(கு) ஒரு தீங்கில்லையே
-95

Page 55
அம்பிகை துதி பரஞ்சோதி முனிவர்
சுரும்புமுரல் கடிமலர்ப்பூங் குழல் போற்றி
உத்தரியத் தொடித்தோள் போற்றி கரும்புருவச் சிஐபோற்றி கவுணியர்க்குப்
பால்சுரந்த கலசம் போற்றி இரும்புமணங் குழைத்தென்னை எடுத்தாண்ட
அங்கயற்கண் எம்பி ராட்டி அரும்புமிள நகை போற்றி ஆரண நூ புரஞ் சிலம்பும் அடிகள் போற்றி
96

திருக்கடவூர் அபிராமியம்மை பதிகம்
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும் கன்ருத வழமையுங் குன்ருத இளமையும்
கழுபிணியி லாத உடலும் சலியாத மனமும் அன் பகலாத மனைவியும்
தவருன சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாருத வார்த்தையும் தடைகள் வா ராத கொடையும் தொலையாத நிதியமும் கோணத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உத விப்பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்; அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகழ் அகலாத சு கபாணி!
அருள் வாழி"பிேராமி யே!
அபிராமியம்மை
கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட
கனதண்ட வெம்பா சமுங் கைக்கொண்டு சண்டமா காலன் முன் எதிர்க்கமார்க்
கண்டன் வெகுண்டு நோக்க இருநீல கண்டனெனும் நின் பதியை உள்ளத்தில்
இன்புகொண் டருச்சனை செய ஈசனவ் விலிங்கம் பிளப்பநின் னுேடுதோன்றி
யமனச்சூ லத்தி லூன்றிப்
97

Page 56
பெருநீல மலையென நிலத்தில்அன் ன வன்விழப்
பிறங்குதா ளால் உதைத்துப் பேசுமுனி மைந்தனுக் கருள் செய்த துனதரிய
பேரருளின் வண்ண மனமோ? வருநீல மடமாதர் விழியென்ன மலர் வாவி
வளர்திருக் கடவூ ரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி சிவ சாமி மகிழ்
வாமி அபி ராமி உமையே!
சகலசெல் வங்களும் தரும் இமய கிரிரா ச.
தனயை மா தேவி நின்னைச் சத்யமாய் நித்தியமுள்ள ளத்தில்து திக்குமுத்
தமருக் (கு) இரங்கி மிகவும் அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம் வலி துணிவுவாழ் நாள் வெற்றி
ஆகுநல் லூழ்நு கர்ச்சி தொகை தரும் பதினறு பேறும் தந் தருளிநீ
சுகானந்த வாழ் வளிப் பாய், சு கிர்தகுண சாலி பரி பாலி அநுகூலி திரி
சூலி மங் களவி சாலி மகவு நான்! நீதாய் அளிக்கொணுதோ? மகிமை
வளர்திருக் கடவூ ரில்வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி சிவசாமி மகிழ்
வாமி அபி ராமி உமையே!
98

பூ துர்காதேவி அஷ்டகம்
(பண்: நாதநாமக்கிரியை)
பகவதி தேவி பர்வத தேவி
பலமிகு தேவி துர்க்கையளே ஜெகமது யாவும் ஜெயஜெய வெனவே
சங்கரி யுன்னைப் பாடிடுமே நஹநஹ தக த* பசபச வெனவே
தளிர்த் திடு (3ෂුff හී யான வளே ரோக நி வாரணி சோக நி வாரணி தாபநி வாரணி ஜெயதுர்க்கா
தண்டினி தேவி தகூFணி தேவி
கட்கினி தேவி துர்க்கையனே தந்தன தான தனதன தான
ஈச்வரியே آنت ساظ له6-rsioTLی முண்டினி தேவி முனையொளி சூலி முனிவர்கள் தேவி மணித்தீவி ரோ கநி வாரணி சோக நி வாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
காளிளி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க்கையளே நீலினி நீயே நீதினி நீயே
岛i向函岛@山 நீர் ஒளியே மாலினி நீயே மாதினி
மாதவி நீயே மான் விழியே ரோகநிவாரணி சோகநி வாரணி தாபநிவாரணி ஜெயதுர்க்கா
99

Page 57
நாரணி மாயே நான்முகன் தாயே நாகினி யாயே துர்க்கையளே ஊரணி மாயே ஊற்ற தாயே
ஊர்த்துவ யாயே ஊர்ஒளியே காரணி மாயே காருணி தாயே காணக யாயே காசினியே ரோகநி வாரணி சோ கநி வாரணி தாபநி வாரணி ஜெயதுர்க்கா!
திருமகளானுய் கலைமக ளானுய்
மலைமக ளானுய் துர்க்கையளே பெருநிதி யானுய் பேரறி வானுய்
பெருவலி வானுய் பெண்மையளே நறுமல ராணுய் நல்லவ ளானப்
நந்தினி யானுய் நங்கையளே ரோகநி வாரணி சோகநி வாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா!
வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க்கையளே நாதமும் நீயே நாற்றிசை நீயே நாணமும் நீயே நாயகியே மாதமும் நீயே மாதவம் நீயே
மானமும் நீயே மாயவனே ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநிவாரணி ஜெயதுர்க்கா!
கோவுரை ஜோ தி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க்கையளே
நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி நாச்சியளே
1 OO

பூவுறை ஜோதி பூரண ஜோதி பூதநற் ஜோதி பூரணையே
ரோ கநிவாரணி சோக நிவாரணி
தாபநிவாரணி ஜெயதுர்க்கா! 7
ஜெயஜெய சைல புத்திரி ப்ரஹ்ம சாரணி சந்த்ர கண்டினியே ஜெயஜெய கூடிஷ்மாண் டினி ஸ்கந்த
மாதினி காத்யா யன்யவளே ஜெயஜெய கால ராத்திரி கெளரி
ஸித்திதா பூரீநவ துர்க்கையளே ரோகநி வாரணி சோகநி வாரணி
தா பநி வாரணி ஜெயதுர்க்கா! 8
பலன் வழி
செவ்வாய்-வியாழன், அஷ்டமி ஆகிய தினங்களில் காலையில் படிக்க நற்பலன் விளையும். நோய்கள் தீர அன்ருடம் ஐந்து தடவையும் குடும்பத் துன்பங்கள் தீர காலேயிலும், மாலையிலுமாக எண்பத்தொரு நாட்களும் தொடர்ந்து படித்துவர அன்னை அருள் கூடும். கோவில்களில் விளங்கும் பூரீ துர்க்கா சந்நிதியில் ராகு காலத்தில் பாடிவரின் கிரக பீடையும் துன்பமும் தீரும் செவ்வாய்க் கிழமை தீபத்தின் முன்பு ஆசாரமாக படிக்கும் கன்னிகைகளுக்கு திருமணம் கைகூடும்.
101

Page 58
திருமகள் துதி
மூவுலகு மிடரியற்று மடலவுணனுயி
ரொழிய முனிவு கூர்ந்த பூவையுறழ் திருமேனியருட் கடவுள கன்
மார்பிற் பொலிந்து தோன்றித் தேவருலகினும் விளங்கும் புகழ்க்கொல்லா
புரத்தினிது சேர்ந்துவைகும் பாவையிருதாடொழு துபழமறை தேர்
குறுமுனிவன் பழிச்சுகின்ருன்
கொழுதியிசை யளிமுரலுந் தாமரை மென்
பொகுட்டிலுறை கொள் கைபோல மழையுறழுந் திருமேனி மணிவண்ண
னிதயமலர் வைகுமானே முழுதுலகு மினிதீன்ற வருட்கொம்பே கரகமலமுகிழ்த் தெந்நாளுங் கழிபெருங்கா தலிற்றெழுவோர் வினைதீர வருள் கொழிக்குங் கமலக்கண்ணுய்
கமலை திரு மறுமார்பன் மனைக்கிழத்தி
செழுங்கமலக் கையாய் செய்ய விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான்
றனையீன்ற விந்தைது ய அமுதகும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலு ளவதரித்தோ யன்பர் நெஞ்சத் திமிரமகன் றிடவொளிருஞ் செழுஞ்சுடரே யென வணக்கஞ் செய்வான் மன்னே
1 O2

மடற் கமலநறும் பொகுட்டி லரசிறுக்குஞ்
செந்துவர் வாய் மயிலே மற்றுன் கடைக்கணருள்படைத்தன்ருேமணிவண்ணன்
உலகமெலாங் காவல் பூண்டான் படைத்தனனுன் முகக்கிழவன் பசுங்குழவி
மதிபுனைந்த பரமன்ருனுந் துடைத்தனனின் பெருஞ்சீர்த்தி யெம்மனுே ராலெடுத்துச் சொல்லற் பாற்றே.
மல்லநெடும் புவியனைத்தும் பொதுநீக்கித்
தனிபுரக்கு மன்னர் யாருங் கல்வியினிற் பேரறிவிற் கட்டழகில்
நிகரில்லாக் காட்சியோரும் வெல்படையிற் பகை துரந்து வெஞ்சமரில்
வாகைபுனை வீரர்தாமும் அல்லிமலர்ப் பொகுட்டுறையு மணியிழை நின்
னருணுேக்க மடைந்துளாரே
செங்கமலப் பொலந்தாதிற்றிகழ்ந்தொளிரு
மெழின் மேனித் திருவேவேலை அங்கணுலகிருள் துரக்கு மலர்க்கதிராய்
வெண் மதியாய் யமரர்க் கூட்டும் பொங்கழலா யுலகளிக்கும் பூங்கொடியே
நெடுங்கானிற் பொருப்பின் மண்ணில் எங்குழை நீ யவணன்றே மல்லல்வளஞ்
சிறந்தோங்கி யிருப்பதம்மா.
103

Page 59
திருமகளைச் சரண்புகுதல்
unyu Ti
பாற்கடலிடைப் பிறந்தாள்-அது
பயந்தநல் முைதத்தின் பான்மைகொண்டாள் ஏற்குமோர் தாமரைப்பூ-அதில்
இஜணமலர்த் திருவடி இசைந்திருப்பாள் 5 நாற்கரந் தானுடையாள்-அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள் 3 வேற்கரு விழியுடையாள்-செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.
நாரணன் மார்பினிலே-அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்; தோரணப் பந்தரிலும்-பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும், வீரர் தந் தோளினிலும்-உடல்
வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும் பாரதி சிரத்தினிலும்-ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்.
பொன்னிலும் மணிகளிலும்-நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும், கன்னியர் நகைப்பினிலும்-செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும், முன்னிய துணிவினிலும்-மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப் பன்னிநற் புகழ்பாடி-அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்
104

மண்ணினுட் கனிகளிலும்-மலே
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும் புண்ணிய வேள்வியிலும் உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும், பண்ணுநற் பாவையிலும்-நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும் நண்ணிய தேவிதனை எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.
வெற்றிகொள் படையினிலும்-பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும், நற்றவ நடையினிலும்- நல்ல
நாவலர் தேமொழித் தொடரினிலும் உற்றசெந் திருத்தாயை-நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்; கற்றபல் கஜலகளெல்லாம்-அவள்
கருணை நல் லொளிபெறக் கலிதவிர்ப்போம்.
105

Page 60
  

Page 61
4. தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள் உயிரினுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்ருெரு செய்கை யெடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்;
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத் )
5. செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளிச்
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்
வந்த னம்இவட் கேசெய்வ தென்ருல்
வாழி யஃதிங் கெளிதென்று கண்டீர்!
மந்திரத்தை முணுமுணுறுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம்இவள் பூசனை யன்ரும், (வெள்ளை)
6. வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி, நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி; தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுத மென்ன் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர் (வெள்ளைத்)
7. ஊனர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றெளிபெறு நாடு; சேன கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழத் தேசம்
1 O8

10.
தோன லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர், ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர், மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ? போன தற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!
இன்ன நுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம்பதி குயிரம் நாட்டல், பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்
நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்; அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளிர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்! மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்! எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருத் தொழில் நாட்டுவம் வாரீர்
109
(வெள்ளைத்)
(வெள்ளைத்)
(வெள்ளைத்)
(வெள்ளைத்)

Page 62
நவராத்திரிப் பாட்டு
(மாதா பராசக்தி) பராசக்தி (மூன்றும் ஒன்ருகிய மூர்த்தி)
மாதா பராசக்தி வைய மெலாம் நீ நிறைந்தாய்! ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே ஏதாயினும் வழிநீ சொல்வாய் எம துயிரே! வேதா வின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.
வாணி
வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள் ஆணிமுத்தைப் போல அறிவுமூத்து மாலையினுள் காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங்காட்டுவதாய் மானுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.
பூரீதேவி
பொன்ன ரசி நாரணனுர் தேவி புகழரசி மின்னு நவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள் அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள், பூரீதேவி தன்னிரு பொற்ருளே சரண் புகுந்து வாழ்வோமே
பார்வதி
மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள் உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள் நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம் தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே
11 O

சரஸ்வதி சிந்தன
புத்தகத்துள்ளுறை மாதே பூவிலமர்ந்துறை மாதே வித்தகப் பெண் பிள்ளை நங்காய் வேதப்பொருளுக் கிறைவி முத்தின் குடையுடையாளே மூவுலகம் தொழுதேவி செப்புகவித்தன முலையாய் செவ்வரிய ஒடிய கண்ணுய் முத்துநிறைந்த வெண்பல்லாய் முருக்கம்பூ மேனி நிறத்தாளே தக்கோலந்தின்ற துவர் வாயாய் சரஸ்வதி யென்னும் திருவே எக்காலும் உன்னைத் தொழுவோம் எழுத்தறிபுத்தி பண்ணுவிப்பாய் ஆக்கா எம்பெருமாட்டி அழகியபூ அணைtதாய் நோக்கா யென்மிடி தீர நொடிக்கும் பிராமணத்தி நோக்காயே சாலுநெல்லரிசி கொண்டு சரஸ்வதி பூசை பண்ணிப் பாலொடு பழத்தை நிரப்பிப் பராவித்தொழுவோம் நங்காய் தங்காய் நங்காய் நமோஸ்து ஞானக்கொழுந்தே நமோஸ்து கல்விக்கரசே நமோஸ்து கணக்கறிதேவி நமோஸ்து சொல்லும் பொருளே நமோஸ்து சூட்சுமரூபி நமோஸ்து
O O O
111

Page 63
SEG)66) T66)6OT2) குமரகுருபரர்
ராக்ம்-ராகமாலிகை
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண்டாக்கும் வண்ணங் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் ப்ணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கன தனக் குன்றுமைம்பாற்
2
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன்னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு கணிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே 3
தூக்கும் பனுவற் றுறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலுந்
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4 பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னே நெடுந்தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன் செந் நாவு மகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே 5 பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்த நல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே 6
112

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும் வண்ணங் காட்டும்வெள்ளோதிமப் பேடே சகல கலாவல்லியே 7
சொல் விற் பனமு மவதான முங் கல்வி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளினசனஞ்சேர் செல்விக் கரிதன் ருெருகால முஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே 8
சொற்கும் பொருட்கு முயிரா மெய்ஞ்
huge
أهلجمفكك
ஞானத்தின் ருேற்றமென்ன
- as O 6: Vr ஞரநின் 3. அடிக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாளே சகல கலாவல்லியே 9
ت
மண் கண்ட வெண்குடைக் கீழாக மேம்பட்ட மன்னருமென் பண் கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10
*நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
-என்றும் பாடம் உண்டு
113

Page 64
கண்ணன் பாட்டு ஊத்துக்காடு பூரீ வேங்கட சுப்பையர்
ராகம்-கானடா பல்லவி தாளம்-ஆதி அலைபாயுதே கண்ணு என்மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகான மதில் (அலை)
அனுபல்லவி
நிலை பெயராது சிலைபோலவே நின்று நேரமாவ தறியாமலே மிக வினேதமான முரளிதரா
-என் மனம் (அலை) ‹ታ፱r6OUruh
பட்டப் பகல்போல் எரியுதே உன் திக்கைநோக்கி என்னிரு புருவம் நெரியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கதித்த மனத்தில் உறுத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து திகிழ்த்த 6 UT கனை கடல் அலேயினில் கதிரவன்ஓளியென
இணையிரு கழலெனக் களித்தவா கதறி மனமுருக நானழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானே குழல் ஊதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே
மனது வேதனை மிகவொடு (அலை)
114

பூதி வைரவர் சுவாமி பாடல்கள்
se பரமனை மதித்திடாப் பங்கையாகன்
ኣ னுெருதலை கிள்ளியே ஒழிந்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்.
O O O
வெஞ்சிலப் பரியழன் மீது போர்த்திடும் அஞ்சனப் புகையென வால மாமெனச் செஞ்சுடர் படிவமேற் செறிந்த மாமணிக்
கஞ்சுகக் கடவுள் பொற்கழல்க ளேத்துவோம்.
மங்களம்
பண்-கெளசிகம் ராகம்-பைரவி தாளம்-ஆதி
வாழ்க அந்தணர் வானவர் ஆணினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம் அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே
O O O நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்நன் நல்ல எல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல் பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும் வல்லார்கள் வானுே ருலகாளவும் வல்ல ரன்றே.
o O O
115

Page 65
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்ழ்ைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீ ரடியா ரெல்லாம்
کسر வான்முகில் வழா அது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க
குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்
சங்கராய சங்கராய சங்கராய மங்களம்
சங்கரீ மனுேஹராய சாஸ்வதாய மங்களம் குருவராய மங்களம் தத்தாத்ரேய மங்களம்
கஜான ஞய மங்களம் ஷடானஞய மங்களம் சாந்தசக்தி மங்களம் ஸர்வசக்தி மங்களம்
சீதா ராமா மங்களம் ராதா க்ருஷ்ண மங்களம் மங்களம் மங்களம் மங்களம் மங்களம்
மங்களம் மங்களம் மங்களம் மங்களம்.
→濠崇<
116

பொதுவான சில பிரார்த்தனைகள்
சர்வேபி சுகினஸ் ஸந்து - ஸர்வே ஸந்து நிராமயாஹ சர்வே பத்ராணி பஷ்யந்து மா கஷ்சித் துக்க பாக் பவேத்
-ஆயுர்வேத சாஸ்திரம்
பொருள்: எல்லோரும் சுகமாக வாழட்டும்; அனைவரும் நோய் நொடியின்றி இருக்கட்டும்; எல்லோரும் பாதுகாப்பாக வாழட்டும்; துன்பமற்றவர்களாக இருக்கட்டும்.
அஸ்தோ மா ஸத் கமய தமஸோ மா ஜ்யோதிர் கமய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
பொருள்:
பொய்மையிலிருந்து உண்மைக்கும் இருளிலிருந்து ஒளிக்கும்
எம்மை அழைத்துச் செல்க எங்கும் அமைதி நிலவட்டும்.
ஓம்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே!
–5Tuuomsoraust

Page 66