கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முஸ்லிம் நேசர் சுவாமி விபுலாநந்தர்
Page 1
இந்து
சுவாமி விபுலாநந்தர் நீ
வி
முஸ்லிம் நேசர் வாமி விபுலாநந்தர்
எாப். ஏ. எம். நஹியா துணைப்பணிப்பாளர் கலாசாரத்திணைக்களம்
கொழும்பு
நினைவுப் பேருரை - 6
புலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை,
மட்டக்களப்பு.
Page 2
விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை மட்டக்களப்பு.
3f6 frt விபுலாநந்தர் நினைவுப் பேருரை - 6 1994 - 09. 2S
முஸ்லிம் நேசர் r 36 TLS விபுலாநந்தர்
é2T5ʼ5Tt. 5Jr. 6rb. நவுறியா துணைப்பணிப்பாளர்
இந்து, கலாசாரத்திணைக்களம் கொழும்பு
தொகுப்பு:
காசுபதி நடராசா, B. A (Cey.)
துணைச் செயலாளர். விபுலா நந்தர் நூற்றாண்டு விழாக் சபை, மட்டக்களப்பு.
Page 3
i Swami Vipulananthar Friend of the Muslims
Swami Vipulananthar Hemoria Lecture - 6 1994 - 09-2s
Compiled by:
Kasupathy Nadarajabh
Asst. Secretary
Published by:
Swami Vipulananthar Centinary Committee
Batticaloa.
ii
முன்னுரை
மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை மேற்கொண்ட திட்டங்களில் சுவாமிக ளது நினைவுப் பேருரைகள் குறிப்பிடத்தக்கதொன் றாகும். விழாக் கொண்டாட்டங்களுடனும் கோலா கலங்களுடனும் மாத்திரம் நின்று விடாது நிலைப் பாடான, பயன்மிக்க ஆக்கபூர்வமான செயற்பாடுக ளில் ஒன்றாக எமது நூற்றாண்டு "விழாச்சபை இந்த நினைவுச் சொற்பொழிவுத் தொடரை ஆரம்பித்திருக் கிறது. பல்வேறு துறைகளிலும் சிறப்பான பணியாற்றி வரலாறு படைத்து விட்டவர் விபுலாநந்த அடிகளார். அவரது சிறப்புக்களை ஆய்வு நோக்கின் அடிப்படை யில் பொருத்தப்பாடான தலைப்புக்களில் நினைவுப் பேருரைகளாக வெளியிட்டு வருகின்றோம். எம்மிடை யேயுள்ள தமிழறிஞர்களைக் கொண்டு பேருரைகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன; உடனுக்குடன் இவற்றை அச்சிட்டு வெளியிடுவதும் எமது நோக்கா கும். அடிகளாரைப் பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்கு இப்பேருரைகள் பெரிதும் உதவும் என்பது எமது நம்பிக் கையாகும். இந்த வரிசையில் இன்று இடம் பெறும் நினைவுப் பேருரை "முஸ்லிம் நேசர் - சுவாமி விபுலா நந்தர்' என்பதாகும். உரை நிகழ்த்துபவர் ஈழத்து இஸ்லாமிய தமிழார்வலருள் சிறப்பான இடத்தினை வகிக்கும் ஜனாப் ஏ. எம். நஹியா அவர்கள் சம காலத்து பிரபல்யமான ஒரு முஸ்லிம் அறிஞரின் பார் வையில் அடிகளாரது பணிகளை மதிப்பிடுவது சால வும் பொருத்தமுடையதே. அடிகளார் பிறந்த மண் னிலே பிரதேச சமுதாயப் பின்னணியையும் அடிக ளாரின் இலக்கிய சமூகப் பணியையும் அறிந்த ஒருவர் வாயிலாக இன்றைய நினைவுச் சொற்பொழிவு அமை யவுள்ளது அதன் சிறப்பாகும், ad
iii :
Page 4
அடிகளாரின் தனித்துவமான சிறப்பு அவரது மிகப் பரந்த சமூக நோக்காகும். இன, மத, பிரதேச பேதமற்ற சமூகத்தை நாடி நின்றது அடிகளாரது மனம் . தனது மதத்திலும், தனது சமூகத்திலும் பற் றுக் கொண்டிருந்த அடிகளார். பிற மதங்களையும் பிற சமூகங்களையும் மதித்தவர். அவற்றின் மீது மதிப்பும் , அன்பும் கொண்டிருந்தவர். அடிகளார் வாழ்ந்த காலம் கிழக்கிலங்கையில் தமிழரும் முஸ் லிம்களும் சகோதரர்களாக ஒட்டி உறவாடிய காலம். கந்தசாமியும் கலந்தர்லெவ்வையும் உள்ளன்போடு ஒன்றாக வாழ்ந்த காலம். இன்ப துன்பங்களில் ஒன் றாகப் பங்கு கொண்டிருந்த காலம். இத்தகைய பண்பாட்டுப் பாரம்பரியங்களில் வளர்ந்தவர், அவற் றைப் பெரிதும் மதித்தவர். சாதி, சமயம், மதம், ஆகிய குறுகிய சமுதாயச் சுவர்களுக்கு அப்பாற்பட்டு நின்றவர். கிறிஸ்தவ சமயப் பாடசாலைகளில் கல்வி கற்றதன் காரணமாகவும் அடிகளாரது பிற மதங்களை மதிக்கும் தன்மைநிலைபெற்றிருந்தது. இராமகிருஷ்ண சங்கத்துடனான தொடர்பும், அவரது துறவும் பணி யும் அன்னாரது சர்வசமய சன்மார்க்க போக்கிற்கு உரமூட்டினின்றன.
விபுலாநந்த அடிகளார் இஸ்லாம் மதத்திலும், மதக் கோட்பாடுகளிலும் பெரும் மதிப்புடையவராக விளங்கியவர். இஸ்லாமிய சமத்துவமும் சகோதரத்து வமும் கருத்துக்களும் அன்னாரது மனதில் பெரும் ஈர்ப்பினை ஏற்படுத்தியிருந்தன, திருக்குரான் கருத் துக்களுக்கு பெரும் மதிப்பளித்தவர். அடிகளாருக்கு இருந்த அரபு மொழிஞானம் இத்துறையில் அவருக்குப் பெரிதும் உதவியாகவிருந்துள்ளது.
அடிகளாரது சமரச சன்மார்க்க நோக்கிற்கு அவ ரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று தேசியப் பாடசாலை
iv
யாக உயர்ந்திருக்கும் சிவானந்த வித்தியாலயம் நல்ல தோர் எடுத்துக்காட்டாகும், தமிழ் மாணவர்களுடன் சமமாக முஸ்லிம் மாணவர்களும் இவ்வித்தியாலயத்தில் கல்வி கற்றார்கள். பராமரிக்கப்பட்டார்கள். தங்களுக் கென்று தனித்துவமான கலாசாலைகள் தோன்றும் வரையில் கிழக்கிலங்கையின் முஸ்லிம் மாணவர்களுக்கு உயர்தர ஆங்கிலம் கல்விஊட்டிய பாடசாலைகளில் சிவாநந்தா வித்தியாலயம் சிறப்பான இடத் ைத வகிக்கின்றது. தனித்துவமான கல்வி சி ந் த ைன களின் பரிசோதனைக் கூட மா க இவ்வித்தியா ல ய த் தி ைன அடிகளார் அமைத்தது போலவே அதை தமிழ் - முஸ்லிம் ஐக்கிய களமாகவும் கருதியி ருந்தார். காத்தான்குடிக்குச் சமீபமாக சிவாநந்தா வித்தியாலயத்தினை அமைத்ததற்கு இந்நோக்கமும் ஒரு காரணமாகவிருக்கலாம். இவ்வித்தியாலயத்தில் தமிழ்-ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளும் கற் பிக்கப்பட்டது போலவே மூவின மக்களின் கல்வி, கலாசார தேவைகளையும், அபிலாஷைகளையும் நிறை வேற்றும் பாணியில் இவ்வித்தியாலயத்தில் முகாமைத் துவ கற்றல்/கற்பித்தல் ஒழுங்குகளை அடிகளார் அமைத் திருந்தார். இஸ்லாம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட் டதோடு மெளலவி ஆசிரியர்களும் நியமனம் பெற்றி ருந்தனர். அண்மைக்கால வன்செயல் சம்பவங்களின் போது முஸ்லிம் மாணவர்களும், முஸ்லிம் ஆசிரியர்க ளும் அடிகளாரின் இதயக்கனியாகிய சிவாநந்தா வித் தியாலயத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டனர் என் பதை இங்கு குறிப்பிட வே ண்டும். மூதூர் முதல் பொத்துவில் வரை பல முஸ்லிம் கல்விமான்களையும். தலைவர்களையும் உருவாக்கிய பெருமை அதற்குண்டு.
முஸ்லிம்களின் நேசராக அடிகளார் விளங்கியவர். அவரது அரும் சொத்து அன்னாரது மனித நேயம். இந்த பொன்னான மனித நேயம் அக்கால மனிதருள் மிகச் சிறப்பான நிலைக்கு அடிகளாரை உயர்த்தி வைத் தது. மூஸ்லிம் அறிஞர் பெருமக்கள் பலர் அடிகளார்
у
Page 5
மீது பெரும் அபிமானம் கொண்டு விளங்கியுள்ளனர்" அதிபர் எ. அஸிஸ் அவர்கள் இதற்கு ஓர் சிறந்த உதாரணமாவார். அன்னாரது செயற்பாடுகளுக்கு அடி களாரது ஆலோசனைகள் ஆக்கபூர்வமான பாதிப் பினை ஏற்படுத்தியிருக்கும் என்று கொள்வதில் தவறி ல்லை. புலவர். ஆ. சர்புத்தின், கலாநிதி எம். உவைஸ் போன்றவர்கள் அடிகளாரது அறிவியல் அ ைண ப் பினைத் தளமாக்கிக் கொண்டவர்கள்.
இன்றைய சொற்பொழிவாளரைப் பற்றிச் சில வார்த்தைகள், எமது நூற்றாண்டு விழாச் சபையின் நினைவுச் சொற்பொழிவு வரிசையில் உரையாற்றும் முதல் முஸ்லிம் அறிஞர். விபுலாநந்த அடிகளார் தோன் றிய காரைதீவுக் கிராமத்திற்கு மிக அணித் தாயுள்ள நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தாயின் தந்தையார் அடிகளாரைப்பற்றிய செய்திகளை அறிந்திருக்கக் கூடிய வாய்ப்புக்களைப் பெற்றிருந்தவர் ஜனாப், நஹியா எமது மண்ணின் மைந்தன். மண் ணின் சொத்து. மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மூலம் பல்கலைக்கழகம் சென்ற இவர் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் மூலம் கலைமாணி, கல்வி டிப்ளோமா, கல்வி முதுமானிப் பட்டங்களைப் பெற்றவர். பல்கலைக்கழ கத்தில் இவரது சாதனை சிறப்புடையதாக அமைந்தி ருந்தது. கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத் தலைவராக (1970/71)விளங்கியுள்ள ஜனாப். நஹியா இப்பதவியை வகித்த முதல் முதலாவது முஸ்லிம் என்ற பெருமையைப் பெற்றவர். எனது தமிழ் ஆசான் ஆ. சதா சிவம் , எனது நண்பரான க. கைலாசபதி, கலாநிதி, பொ. பூலோகசிங்கம் போன்றவர்களிடம் தமிழ் பயி லும் வாய்ப்பு பெற்றவர்.
ஜனாப். நஹியா அவர்களது வாழ்வில் கொழும்பு சாகிராக் கல்லூரியில் அவர் கழித்துவிட்ட கா ல ம்
νi
பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எனது அபிப்பிராயமாகும். இ ல ங் ைக க் கல்வித்துறையில் கொழும்பு சாஹீராக் கல்லூரியின் நிலையும் பணியும் போற்றுதற்குரியன. இக்கல்லூரியில் பட்டதாரி ஆசிரி யராகவும், உதவி அதிபராகவும் நீண்டகாலம் சேவை செய்த பெருமை நஹியா அவர்களுக்குரியது. இவரது பங்களிப்பும், தனித்துவமான பாரம்பரிய நிலைப்பா டும் குறிப்பிடத்தக்கவையாகும். ஸாஹீராவின் தமிழ் பாரம் பரியம் என்ற கட்டுரையில் பேராசிரியரான சிவத்தம்பி அவர்களின் 'நல்லதம்பி முதல் நஹியா வரை ஸாஹீராவில் ஒரு தமிழ் பாரம்பரியம் உண்டு' என்ற கூற்றும் , ஜனாப் நஹியா அவர்களின்' " அளிஸ்"ம் தமிழும்" எ ன் ற நூலுக்கு நண்பர் க. சிவத்தம்பி எழுதிய நூலின் விமர்சனத்தில் ,
'ஜனாப், நஹியா சாஹீராவின் உப அதிபராக இருந்தவர். அதன் வரலாற்றில் மிக நெருக்கடியான காலகட்டத்தில் ( 1932-1987 ) இலங்கை முஸ்லிம்க ளின் தமிழ்மொழி கல்விப் பாரம்பரியத்தை நிலைநாட் டப் போராடியவர். அந்தப் பா ரம் பரி யம் இன்று பேணப்படுவதற்கான அடித்தளத்தைக் கோரி ய வ ர் நஹியா' என்ற கூற்றும் எமக்கு ஜனாப். நஹியாவின் தனித்துவமான பங்களிப்பினையும், தமிழ் நோக்கினை யும் பிரதிபலித்து நின்றது.
1988 இல் இருந்து இந்து கலாச்சார அலுவல்கள் திணைக் களத்தின் த மி பூழ் அலுவலகங்கள் உ த வி ப் பணிப்பாளர் என்ற நிலையில் அவர் வெற்றிகரமாக கையாண்ட ஏற்பாடுகள் பலப்பல நஹியாவினால் பதிக்கப்பட்ட நூலினைப் பற்றியும் கூறவேண்டியது எனது கடமை. ** அளிஷ"ம் தமிழும்' என்ற நூலின் ஆசிரியர் இவர். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் பாரா ட்டுதலையும் விருதையும் பெற்றது இந்நூல். இதுத விர கொழும்பு சாஹீராக் கல்லூரியின் 1985ம் ஆண்டு
vii
Page 6
நிறைவுவிழா மலர் " " வளர்பிறை' 1991, 1992, 1993 ஆண்டுகளில் தமிழ் சாகித்திய சிறப்பு மலர்கள், தமிழ் நாடகச் சிறப்பு மலர் (1994) ஆகியவற்றின் பதிப் பாசிரியராகத் திறம்படச் செயலாற்றிய பெருமையும் இவரைச் சார்ந்ததே. நூற்றுக்கும் அ தி க ம 1ா ன வானொலி, தொலைக்காட்சிக் கலந்துரையாடல்கள், சொற்பொழிவுகள்,சிறப்புரைகள் நிகழ்த்திய பெருமைக் குரியவர். எ. எம். ஏ. அஸிஸ் பவுண்டேசனின் (19901994) செயலாளராகவும், கொழும்பு விபுலாநந்த விழாச் சபையின் நிருவாகச்சபை உறுப்பினராகவும் (1992 இலிருந்து) அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகா நாட்டின் (1992 இலிருந்து) உதவிச் செயலாள ராகவும் செயலாற்றியுள்ளார். இது தவிர நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தினால் இவ்வாண்டிற்குரிய தமிழ் மாமணிவிருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட தமிழரல் லாது மூவரில் ஜனாப். ஏ. எம். நஹியா அவர்களும் ஒருவராம்.
மிகத் தகுதி வாய்ந்தவரும் , பொருத்தப்பாடுடை யவருமான ஒருவரை, கிழக்கிலங்கையின் சிறப்பார்ந்த முஸ்லிம் பெருமகனை எமது நினைவுச் சொற்பொழி வினை நிகழ்த்துவதற்கு நாம் இன்று பெற்றுள்ள வாய்ப்பு தனிப் பெரும் சிறப்புடையது என்பது எனது அபிப் பிராயமாகும். நஹியா அவர்களது பங்களிப்பு எமது நோக்கத்தில் பெரும் பேறாக அமை வேண்டும். அமை யும் என்று கூறி எனது முன்னுரையை முடித்துக்கொள் கின்றேன்.
க. தியாகராசா
viii
முஸ்லிம் நேசர் . சுவாமி விபுலாநந்தர்
முன்னுரை முஸ்லிம் மக்களை உள்ளத்தால் நேசித்த மனிதப் புனிதர் சுவாமி விபுலாநந்தர். அவரின் எண்ணங்கள் செயற்பாடுகள், தொடர்புகளெல்லாம் இந்த உண் மையை ஊர்ஜிதம் செய்கின்றன. இனங்களின் தனித் துவமான பண்பாட்டுப் பாரம்பரியங்களை மதித்த அதேவேளையில் பண்பாட்டுப் பொதுமையையும் நாடி நின்றவர் அவர். “வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது அவரின் தாரக மந்திரமாக இருந்தது. இன, மத, சாதி, பிரதேச பேதங்களற்ற ஒரு சமூகத்தை அவர் நாடி நின்றார். அவர் சார்ந்திருந்த வேதாந் தக் கொள்கை, பெற்றிருந்த பன்மொழி ஞானம், கற்றிருந்த விஞ்ஞானக் கல்வி, பிறந்து வளர்ந்த சூழல் என்பன இதற்குக் காரணங்களாகலாம். அடிகளாரின் பிறந்தகமான காரைதீவுக்குத் தெற்கே அமைந்திருப் பது நிந்தவூர்க் கிராமம். வடக்கே சாய்ந்த மருது; மேற்கே சம்மாந்துறை இவையெல்லாமே முஸ்லிம் கிராமங்கள். இச்சூழலில் பிறந்து வளர்ந்த ஒருவரிடம் ஒன்றில் இனத்துவேசம் தலைவிரித்தாடும், அன்றில் நல்ல புரிந்துணர்விருக்கும். அடிகளாரைப் பொறுத்த வரையில் அவரின் மனமெல்லாம் புரிந்துணர்வு கரை புரண்டோடியது. இன செளஜன்யம் இளமைக் காலத் திலிருந்தே அவரின் மனதில் வேரூன்றி பெரு விருட்ச மாக வளர்ந்திருந்தது.
சூழல் பாரம்பரிய சைவக் குடும்பத்தில் சுவாமி விபுலாநந்தர் பிறந்தாலும் அவர் பிறந்து வளர்ந்த பிரதேசம் இயல் பாகவே பல மதத்தினரும், இனத்தினரும் ஒட்டி உற
0
Page 7
வாடிய சூழலைக் கொண்டது. இந்துக்கள், முஸ்லிம் கள், பெளத்தர்கள், கிறிஸ்தவர்களெல்லாம் வாழ்ந்த பிரதேசமது. இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரு பிட் டில் மாவும் தேங்காய்ப் பூவும் போல அருகருகே கிராமங்களில் வாழ்ந்த மட்டக்களப்பின் தென்கரைப் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது சுவாமிகள் பிறந்த காரைதீவுக் கிராமம், மிக அன்னியோன்யமாக இரு சமூகத்தினரும் இப்பிரதேசத்தில் வாழ்ந்தனர். முஸ் லிம்களின் சமய விழாக்களில் இந்துக்களும், இந்துக் களின் சமய விழாக்களில் முஸ்லிம்களும் பங்கு கொண் டும் பொருளுதவி புரிந்தும் வாழ்ந்த காலமது. தொழில் ரீதியாகவும் இந்த உறவு நிலைத்தது. இந் துக்களிடம் முஸ்லிம்களும் முஸ்லீம்களிடம் இந்துக்க ளும் கல்வி கற்றனர். முஸ்லிம்கள் பலர் சைவசமய அறிவும், இந்துக்கள் இஸ்லாமிய அறிவும் பெற்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் வாழ்ந்த பொற் காலம் அது. அண்மையில் துயர் மிகுந்த சில சம்பவங் கள் நிகழும் வரை இந்த நிலை தொடர்ந்தது. இந்த ஆரோக்கியமான சூழலிற் கனிந்த அன்புப் பழம்தான் சுவாமி விபுலாநந்தர் .
ஒன்பது வயதுக்குப் பின்னர் அடிகளார் கல்விகற்ற பாட சாலைகள் கிறிஸ்தவப் பாடசாலைகளாகவிருந்தன. அவர் கல்வி கற்ற கல்முனை மெதடிஸ்த கல்லூரி, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி என்பன கிறிஸ்தவக் கல்லூரிகள். இவற்றில் கிறிஸ்வர்களுடன் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருங்கே அமர்ந்து கல்வி கற்றனர். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி, கல் முனை புனித மரியாள் கல்லூரி, யாழ்ப்பாணம் சம்பத் தரிசியார் கல்லூரி ஆகிய கிறிஸ்தவக் கல்லூரிகளில் அடி களார் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந் தச் சூழல் சுவாமிகளின் உள்ளத்தை சமயரீதியில்
O2
பக்குவப்படுத்திற்று - எம்மதமும் சம்மதம் என்ற போக் கில் அவரை இட்டுச் சென்றது. முஸ்லிம் நேசராக அவர் வாழ்ந்தமைக்கும் இச்சூழல் தனது பங்களிப் பைச் செய்திருக்கிறது.
துறவறம் பூண்டு இராமகிருஷ்ண இயக் க த் தி ல் இணைந்து கொண்டபோது அடிகளாரின் உள்ளம் இன் னும் விரிவடைந்தது. இராமகிருஷ்ணர், சுவாமி விவே கானந்தரின் கொள்கைகளெல்லாம் விபுலாநந்தரின் சர்வசமய சமரச நோக்குக்குச் சாதகமாக அமைந்தன. அக்கொள்கைகளால் துறவி விபுலாநந்தர் ஆட்கொள் ளப்பட்டார்.
*பூரீஇராமகிஷ்ண பரமஹம்சர் தமது புனித வாழ் விலே விளக்கிக் காண்பித்தது போன்று எல்லா மதங்களையும் சமரசப்படுத்துவதே இந்த மடத்தி னது சிறந்த நோக்கமாகும். புத்துயிர் அளித்து மணி தனை மேம்படுத்த வல்ல பரந்த எண்ணங்களே இங்கு புகட்டப்படும். சமரசக் கொடி நாட்டப்பட்டிருக்கும் இவ்விடத் தினின்று சாந்தம் , அன்பு, அமரிக்கை , அநுதாபம் , இத்தியாதி சீரிய செய்திகளே மங்களகரமாக உல கெங்கும் வியாபிக்கும்”* இராமகிருஷ்ண மிஷன் தலைமை மடத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய சுவாவிவேகானந்தர் குறிப் பிட்ட மேற்கண்ட கருத்து, சுவாமி விபுலாநந்தரின் உள்ளத்தில் ஆழப்பதிந்திருந்தது; அவரின் இயல்பான எண்ணத்துக்கு வலுவூட்டியது. ஏக தெய்வக் கொள்கை இஸ்லாம் பற்றி மிக ஆழமான அறிவுடையவராக விளங்கினார் சுவாமி விபுலாநந்தர். அவரது அரபு மொழி ஞானமும் இதற்குத் துணை போனது. இஸ்
03
Page 8
லாமிய சமத்துவம், சகோதரத்துவம் பற்றி ஏற்றிப் போற்றிய சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் விபுலாநந்த அடிகளாரின் உள்ளத்தைத் தொட்டன. பல்லவர் காலப் பக்தி இயக்கத்துக்கும் இஸ்லாமிய சூபித்துவத்துக்குமிடை மிக நெருங்கிய ஒற்றுமைக ளைக் கண்டு கொண்டிருந்த சுவாமி விபுலாநந்தருக்கு ** ஸுபிஸம் என்பது வேதாந்தத்தால் மென்மைப் படுத்தப்பட்ட அழகுபடுத்தப்பட்ட இஸ்லாம் சமயமாகும்" என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்து வெகுவாகப் பிடித்துக் கொண்டது. "பிரம்மவாதின்’ என்ற ஆங் கில மாசிகைக்கு, 1895 நவம்பர் 23ம் திகதி எழுதிய கடிதத்திலேயே சுவாமி விவேகாநந்தர் இக்கருத்தைத் தெரிவித்திருந்தார். இஸ்லாம் கூறும் ஏகதெய்வக் கொள்கை சுவாமி விபு லாநந்தருக்கும் உடன்பாடானதாகத் தெரிந்தது. ரிக் வேதம் இயம்புகின்ற,
'பரம்பொருள் ஒன்றே அதை அக்னி, யமன் மாதரிஸ்வான் எனப் பலவாறு கூறுவர்" .
என்ற கருத்தும், அதே எண்ணக்கரு இழையோடுகின்ற 'நீர், வாயு, யமன், அக்னி, வருணன், சந்திரன் முப்பாட்டனாகிய பிரமன் நீ, உன்னை ஆயிரம் முறை கும்பிடுகிறேன்" (ப. கீ. 11 - 39)
என்ற பகவத்கீதையின் உபதேசமும் ஏக தெய்வக் கொள்கைக்குச் சாதகமாகக் குரல் கொடுக்கின்றன. அவ்வழி நின்று ஏகதெய்வக் கொள்கையை ஆதரித்த அடிகளார்
**ஆண்டவன் ஒருவனேயாயினும் பற்பல நாட்டு மக்கள் அவனுக்குப் பற்பல திருநாமங்களைத் தந்து வழிபடுகின்றார்கள்' 2.
04
என்று இதன் தீாற்பரியத்தை மிகத் தெளிவாகக் கூறிப்போந்தார். இஸ்லாத்தின் ஆணிவேரே இந்த ஏகதெய்வக் கொள்கைதான் என்பதை சுவாமி விபு லாநந்தர் நன்குணர்ந்திருந்தார். இவற்றிற்கெல்லாம் மேலாக, சுவாமி விபுலாநந்தரின் ஆத்மீகக் குரு பூரீ இராமக்கிருஷ்ண பரமஹம்சர் தனது சீடர்களுக்கு உபதேசித்த ,
"இந்துசமயம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான பல சமயங்களைப் பயின்றேன். இந்துசமயத்தி லுள்ள பல பிரிவுகளின் வழிகளையும் பின்பற்றி னேன். பல வழிகளைப் பின்பற்றி பலரும் சென் றாலும் ஒரே கடவுளை நோக்கித்தான் செல்கி றார்கள் என்பதைக் கண்டேன். நீங்களும் எல்லா நம்பிக்கைகளையும் முயற்சிசெய்ய வேண்டும். மாறுபடும் வழிகளைக் கடந்துசெல்ல வேண்டும், 3
என்ற அறிவுரையும் விபுலாநந்தரின் உள்ளத்தில் நன் றாகத் தைத்துக்கொண்டது, இவையெல்லாம் சுவாமி விபுலாநந்தரை இஸ்லாத்தின் பால் நாட்டம்கொள்ளச் செய்தன; இஸ்லாமியத் தத்துவங்களை ஆழமாகக் கற்று தெளிவாகப் புரிந்து கொள்ளச் செய்தன. இஸ்லாமிய ஞானம் சுவாமி விபுலாநந்தரின் இஸ்லாம்.ய ஞானம் அவ ரின் கருத்துக்களிலும் எழுத்துக்களிலும் வெளிப்பட்டுத் தெரிந்தது.
'மனிதர்கள் இரண்டுவிதமாக வகுக்கப்படுவர். ஒரு விதம் பகவானிடத்தில் மனதைச் செலுத்தும் பக் தர்கள். மற்றொரு விதம், பொன்மீதும் பெண் மீதும் ஆசை வைத்திருக்கும் மானிடப்பதர்கள்'4 என்று சுவாமி விபுலாநந்தர் கூறியபோது அவருக்கிருந்த ஆழ்ந்த இஸ்லாமிய அறிவு தெரிந்தது.
'மனிதர்களே நிச்சயமாக உங்களை ஒர் ஆணிலி ருந்தும் ஒரு பெண்ணிலிருந்துமே படைத்தோம்.
05
Page 9
அப்பால் நீங்கள் பரஸ்பர்ம் அறிந்து கொள்வத்ற் காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்க
ளாகவும் ஆக்கினோம் . நிச்சயமாக உங்களிற் சிறந்த இறைபக்தனே உங்களில் மேலாவன்.”* (49:13)
என்ற திருக்குர் ஆன் வசனமும்,
‘மக்களே நிச்சயமாக உங்கள் இறைவன் ஒருவனே உங்கள் தந்தையும் ஒருவரே. நீங்கள் எல்லோரும் ஆதமின் மக்கள். ஆதம் மண்ணால் படைக்கப் பட்டவர். அல்லாஹ் மீது பக்தி உடையவரே உங்களில் மேலானவர். அறபியர் மற்றவர்களை விடமேலானவரும் அல்லர் வெள்ளையர் கறுப்பரைவிடவோ, கறுப்பர் வெள் ளையரைவிடவோ இறையச்சத்தாலன்றி மற்றெவ்
வழியிலும் மேலானவரல்லர்."
என்று இறுதி ஹஜ்ஜின் போது, திருக்குர் ஆனின் அரு ளுரைக்கு நபிகளார் கூறிய விளக்கவுரையும், இங்கு விபு லாநந்தரின் கருத்தில் புதைந்துகிடப்பதைக் காண்கின் றோம். சாதி, இன, குல பேதமற்ற சமுதாயத்தைக் கட்டி யெழுப்பிய குர் ஆனின் அந்தக் குரல் விபுலாநந்தரி லும் உட்புகுந்து அவரின் கருத்துக்களிலும் பிரதிபலித் தது நாடகம், சினிமா, புனை கதைகள் பற்றி அடிகளார் நாடகத் துறையை இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை.
"ஆண் உடை அணியும் பெண்களின் பக்கம் மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்”* (அறிவிப்பவர் உமர் (ரலி) ஆதாரம்: நஸாயீ 1150)
O 6
என்று நபிகளார் கூறியிருக்கிறார்கள்*
‘‘பெண்களைப் போன்று வேடம் பூணும் ஆண் களையும் ஆண்களைப் போல வேடம் பூணும் பெண்களையும் அல்லாஹ் சபித்துள்ளான்' (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் நூல்: புஹாரி) என்றும் அவர்கள் மொழிந்திருக்கிறார்கள். இந்த நபி மொழிகள் நாடகத்துறையில் முஸ்லிம்கள் ஈடுபடுவ தைத் தடை செய்கின்றன. ஆண்களும், பெண்களும் ஒருங்கே மேடைகளில் தோன்றுவதும், வேடம் பூண்டு நடிப்பதும், ஒழுக்கத்துக்கு முரணான வார்த்தைக ளைப் பயன்படுத்துவதும் இஸ்லாத்தில் வெறுக்கப் பட்ட விடயங்களாகும். அதனாற்றான் நாடகத் தமி ழின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் தமது பங்களிப்பைச் செய்ய முடியாமற் போயிற்று. இஸ்லாமிய நாடுகளி லும் நாடகம் முக்கியத்துவம் பெறவில்லை. பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களைப் பாராட்டி எழுதிய அடிகளார் , “பொருளோ பொருள்" என்ற நாடகத்தை ஈழகேசரியில் படித்துச் சுவைத்த அடிகளார், ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அறிமுகப் படுத்தும் பணியில் மதங்கசூளாமணி தந்த அடிகளார், ஒரு காலத்தில் நாடகம் பற்றி நல்லெண்ணம் கொண் டிருக்கவில்லை. இஸ்லாமியக் கருத்துடன் ஒத்த கருத்து அவரிடம் இருந்தது. தரங்கெட்ட நாடகங்களை அவர் புறத்தொதுக்கினார். தீயது எதுவோ அதை நிராக ரிப்பது அடிகளாரின் கொள்கை அதைத் தான் இஸ்லா மும் இயம்புகிறது.
"...சிற்றளவாக உண்ட பொழுது சுகத்தைத்தரு கிற மருந்தினைக் கவளங்கவளமாக உண்டால் அம்மருந்தே நஞ்சாவது போல, நாடக மேடை முதலியன பொதுவாக நஞ்சாய் முடிகின்றன. ஆத லால் புராணபடலம், ஹரிகதை, மு த லி ய
07
Page 10
சற்காலசுேஷபங்களுள்ள நமது நாட்டில் நாடகமே டையும் சினிமாக் காட்சியும் வேண்டவே வேண் டாம். ஆனால், நன்னெறி தவறா நாடகங்கள் இல்லையோ அவற்றைப் போய்ப் பார்த்தல் கூடா தோவெனில், ஒர் ஆண்டில் ஒரு முறையோ அல் லது இருமுறையோ பார்ப்பதனால் தீமை நேரி டாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இழிவுற்ற பாடல்களைப் பாடிக்கொண்டு பெண் களும் ஆண்களும் ஒருங்குதோற்றி மானங்கடந்த சல்லாப மொழிகளைப் பேசுகின்ற நாடக மேடை தூய நெறி நின்றோருடைய உள்ளத்தையுங் கலைத்து தீய நெறியிற் செலுத்துவது ஆதலி னால் அதை முற்றாகத் தவிர்ப்பதே முறை"
(அருநிதியம் விலை சரசம் )
என்று அடிகளார் ஒருபோது எழுதினார். நாடகம் பற்றியும் சினிமா பற்றியும் அடிகளார் கொண்டிருந்த ஆரம்ப காலச் சிந்தனை இதுதான். அவருடைய அறவழிப்பட்ட பொதுவான சிந்தனைப்போக்கும் இது தான். பொது ஒழுக்கத்தைப் புறக்கணித்து எழுந்த புனை கதைகளையும் அவர் வரவேற்கவில்லை. உரையாடற் பாணியில் அமைந்த அவரது கட்டுரையொன்றில் இருந்து இதனை நாம் புரிந்து கொள்கிறோம்.
*.நாடகத் திணிசு வேணுமானற் பந்தயங்கூறிய கந்தவேள் சரிதையிருக்குது, பார்சி அல்லி அர் ஜுனா இருக்குது, இன்னும் எத்தனையோ இருக் குது. s நாவல்ஸ் இருக்குது.’’ என்று முடித்தான். * நல்லது எனக்கு நாவல்ஸ், நாடகம் வேண்டாம். தோத்திரப் புத்தகத்தை எடுத்துக்காட்டு என் றேன்."
(அருநிதியம் விலை சரசம்)
08
என்று அடிகளார் எழுதிவைத்திருப்பது, அவர் எஸ்த விரும்பினார், எதற்குக் கூடிய முக்கியத்துவம் கொடுத் தார் என்பனவற்றையெல்லாம் எமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது.
'சொந்த மண் மணம் வீசும் சிறுகதைகளையும் நாவல்களையும் அதிகமாக எழுதுங்கள்". (ஈழ மணிமலர் 1948) என்ற பிற்காலை யாழ்ப்பாண மறுமலர்ச்சிச் சங்கத் தில் அடிகளார் குரல் எழுப்பினாலும் கூட, அவர் எத்தகைய, எப்பண்புகள் பொதிந்த, இலக்கியப் படைப்புக்களை வேண்டி நின்றார் என்பது எமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
'தீய விடயங்கள் வெளிப்படையானவையாயினும் மறைமுகமானவையாயினும் நீங்கள் நெருங்கக் கூடாது' (6 151)
என்ற திருமறை வசனம் மிகவும் அர்த்த புஷ்டியுள்ளது. உலகளாவிய பக்தி மார்க்கம்
'இஸ்லாமிய சமய குரவராகிய முகம்மது அராபி நாட்டிலே தோன்றிய காலத்திலே தமிழ்நாட்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் (கி. பி. 574 - 655), சீகாழிப் பகுதியிலே தோன்றிய இளைஞராகிய திருஞானசம்பந்தர் (639 - 655) கொல்லம் ஆண் டினைத் தொடங்கிய சேரமான் பெருமாளுக்கு ஆசிரியரும் நண்பருமாகிய சுந்தரமூர்த்திகள் (807 - 825) மந்திரித் தொழிலை நீத்துத் துறவு பூண்ட மாணிக்கவாசகர் (இவர் காலம் பத்தாம் நூற்றாண்டாக இருக்கலாம்) என்னும் நால்வரும் அன்பு கலந்த ஞானப் பாடல்களை உலகிற்கு நல்கினார்கள்’’. என்று "தென்னாட்டில் ஊற்றெடுத்த அன்புப் பெருக்கு வடநாட்டிற் பரவியவரன் முறை என்ற கட்டுரையில்
09
Page 11
சுவாமி விபுலாநந்தர் எழுதியிருக்கிறார். தமிழ் நாட் டின் பக்தி இலக்கியம் பற்றிக் கூறவந்த அவர் முகம் மது நபியையும் தொடர்புறுத்தி உலகளாவிய பக்தி மார்க்கம் பற்றிப் பேசுவது கருத்திற் கொள்ளப்பட வேண்டியது.
**சாதி பேதமின்றிச் சமய ஒற்றுமையினாலே மக்கள் உடன் பிறந்தார் போல் வாழ்தலையும் ஆண்டவனுக்குத் தாம் அடிமைகள் எனக் கொள் ளுதலையும் அறத்தாறாகக் கொண்ட சமய நெறி யொன்று அக்காலத்திலே அராபி நாட்டிலே தோன்றியது. அச்சமயமானது பாரத நாட்டி னுள்ளே புகுதற்குரிய காலம் அணுகி வந்தது. மேலே குறித்த அறநெறிகள் அராபி நாட்டிலே வளர்ச்சியெய்திய காலத்திலேயே தமிழ்நாட்டு ஞானவான்களும் அக்கொள்கையை அடிப்படை யாகக் கொண்ட ஒரு புதிய சமுதாயத்தைத் தமது நாட்டிலே நிறுவினார்கள். மக்களுடைய தனித்த வாழ்க்கையினையும் செயலினையும் கூட் டமாகக் கூடி வாழும் வாழ்க்கையினையும் நியதி செய்கின்ற தெய்வ சக்தியின் ஆற்றல் எத்துணை அற்புதமானது. ’’. என்று, அரேபியாவிலும், அதனை அடியொற்றி தமிழ கத்திலும் தோன்றிய பக்திப் பிரவாகத்தை, சமய எழுச்சியை, விபுலாநந்தர் இவ்வாறு குறித்து வைத்தி ருப்பது மனங்கொள்ளத் தக்கது.
இஸ்லாத்தின் பெருமை பற்றி
இஸ்லாமிய நாகரிகம் பற்றி எடுத்துச் சொன்ன விபு
லாநந்தர் .
'இஸ்லாம் மத ஸ்தாபகராகிய முகம்மது நபி அராபிய நாட்டிலே தர்மோபதேசஞ் செய்ததன் பயனாக, மேற்கே ஸ்பானியா முதல் கிழக்கே
1 0
இந்திய வீறாகவுள்ள தேசங்கள் அனைத்தும் இஸ்லாமிய மதத்தவரது ஆட்சிக்குட்பட்டன. எங்கணும் சர்வகலாசாலைகளும் சிறந்த கட்டிடங் களும் எழுந்தன. நாகரீகமற்றிருந்த அராபிய மக்கள் நாகரீகத்தின் உச்சியை அடைந்தார்கள். இவையெல்லாம் உலக சரித்திரத்தினால் உணரப் ப(, :ன்ற உண்மைகளாகும் .' என்று இஸ்லாம் தோன்றியதால் ஏற்பட்ட நாகரீகத் தின் தோற்றத்தையும் உலகளாவிய ரீதியிலான அதன் தாக்கத்தையும் எடுத்துக் கூறினார். இஸ்லாத்தின் வரவினால் ஏற்பட்ட அறிவு வளர்ச்சி யையும் உலகளாவிய ரீதியிலான அதன் தாக்கத்தை 'யும் அடிகளார் பின்வருமாறு எழுதி வைத்திருக்கிறார். "மேனாட்டார் அறிவு விசாலிப்பதற்குரிய மற் றொரு நிகழ்ச்சி அராபியா தேசத்திலே நிகழ்ந் தது. திருநாவுக்கரசு சுவாமிகள் நமது நாட்டில் இருந்த காலத்திலேயே அராபி நாட்டு மக்கமா நகரிலே முகம்மது நபி அவதரித்தார். நபியின் சீஷ பரம்பரையில் வந்தோர் மேற்கேயுள்ள பல நாடுகளிலே ஆணை செலுத்தி அரசு புரிந்ததோடு கூட அறிவொளி விளங்குமாறுஞ் செய்தார்கள். கிறிஸ்து நாதர் காலத்திற்குப் பல நூற்றாண்டு களின் முன்னே, யவன புரத்தில் வாழ்ந்த அறிஞர் கள் இயற்றி வைத்த அரிய கலை நூல்கள் அரா பியர் வழியாக மேனாட்டிலே பரவி அறிவொளி பரப்பின. யவன வாணியின் செல்வப் புதல்விய ருள் ஒருவராக ஆங்கில வாணி உதித்தாள்' . என்று "ஆங்கில வாணி என்ற கட்டுரையில் அடிகளார் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். F Lou & DJord இந்தியாவில், இந்து - முஸ்லிம் பிரச்சினைகள் விசுவ ரூபம் எடுத்த 1940களில் இவ்விரு மதங்களிடையும்
1 I
Page 12
சமரசத்தை ஏற்படுத்தும் கருத்துக்கள் பொதிந்த கட் டுரைகளை விபுலாநந்தர் அதிகமாக எழுதினார். இந்து - முஸ்லிம் உறவுக்கு வழிகோலிய அக்பர் சக்கர வர்த்தி, கபீர்தாஸர் போன்றவர்களை தனது கட்டு ரைகளில் வெகுவாகப் புகழ்ந்து எழுதினார்.
**ஆண்டவனிடத்து பக்தியும், மக்கள் பால் அன் பும், இசை, சிற்பம் கவிதை முதலிய அழகுக் கலைகளும், இந்துக்களுக்கும் முகலாயர்களுக்கும் பொதுவுடைமையாகவிருந்தன. முகலாயர்கள், மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள் . அவர்க ளது முன்னோர்கள் நித்தியமான நீலவானத்தை வழிபட்ட ஷாமா மதத்தைச் சேர்ந்தவர்கள். தாஒ மதம், புத்தமதம் ஆகியவற்றைப் போல் ஷாமா மதமும் அழகுக் கலைகளைப் பேணிய மதமாகும். முகலாயர் ஈரானிய அழகுக் கலை யில் நன்கு படித்தவர்கள். சில முகலாயச் சக்கரவர்த்திகள் இந்து சமயத் தாய்மார்களின் மக்களாய் இந்து சமயத்தையும் இஸ்லாமிய சமயத்தையும் சமரசப்படுத்த முயன் றார்கள் என்பதை இதிகாச நூல் வாயிலாக அறி கின்றோம். இஸ்லாமியராகிய அக்பர் சக்கரவர் த்தி, இந்துசமய மனையிலே வளர்ந்தவர். இவர், இரு சமயங்களையும் சமரசப்படுத்திய மதமொன் றினை ஆக்குவதற்கு முயன்றார்’’.g என்று, அக்பர் சக்கரவர்த்தியின் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கான அறைகூவலுக்குச் சாதகமாகக் குரல் கொடுத்தார்.
'ஆத்ம ஞானத்தை அடைந்த கபீர் நாடெங்கும் சென்று இஸ்லாமிய மதத்திற்கும் இந்து மதத் திற்குமிடையேயுள்ள சமரசத்தினைப் போதிப்பா ராயினார். அவருடைய பாடல்களும் உபதேசங்
2
*ளும் ஆண். வன்பர் ல் உள்ள படி வேட்:ை:ை யுடைய மக்களுக்குப் பொதுச்சொத்து ஆயின. இந்துக்களுடைய தெய்வம் காசியிலும், இஸ்லா மியருடைய தெய்வம் மக்கத்திலுமிருக்க அனைவ ருக்கும் பொதுவாகிய தெய்வம் எல்லா உயிர்க ளின் இதயத்திலும் இருக்கின்றதென கபீர் கூறி னார். இந்த அற்புத வாசகம் கபீர்தாஸருடைய போதனைகளின் மூலவாசகம் ஆயிற்று ’’.
என்று கபீர்தாஸரின் இந்து - முஸ்லிம் சமரசத்தையும், மனித நேயம் பொதிந்த கருத்துக்களையும் ஆதரித்து எழுதினார்.
'இடைக்கால இந்தியாவிலிருந்து பெரியோர்கள் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை அநுஷ்டானத்திற் குக் கொண்டு வந்தார்கள். இத்தொடர்பிலே அக்பர் சக்கரவர்த்தியின் குமாரராகப் பிறந்து பெரிய ஞானவானாகிய தாராஷ"க்கோ என்னும் இளவரசர் , இந்து - முஸ்லிம் சீடர்களையுடைய வராயிருந்த பிரணநாதர், இந்துக்களாலும் முஸ் லிம்களாலும் உரிமை பாராட்டப்படுகின்ற நாகூர் மீரான் என்னும் பெரியோர்கள் ஆகியோர் முக்கி மாகக் குறிப்பிடத்தக் கவர்கள். இவர்களெல்லாம் 8 ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியிலே வாழ்ந்த வர்கள்.'. என்று, தனது, தென்னாட்டில் ஊற்றெடுத்த அன் புப்பெருக்கு வடநாட்டிற் பரவிய வரன் முறை' என்ற கட்டுரையில் எழுதிவைத்திருக்கிறார். இந்து - முஸ்லிம் ஐக்கியம் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு வாழவேண்டி யதன் அவசியத்தை வெகுவாக வலியுறுத்திய சுவாமி கள், இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்குக் குறுக்கே போடப் பட்ட பெரும் தடைகளை உடைத்தெறியும் டாங்கில்
I 3
Page 13
வீராவேசத்துடன் எழுதினார். அறிவறிந்த, பண் பட்ட சமூகமொன்றைக் காண விழைந்த அடிகளாரின் எழுத்துக்களில் ஆக்ரோஷம் பீறிட்டுப் பாய்ந்தது; ஆவேசம் அலை புரண்டது. தனது கட்டுரையொன் றில் அடிகளார் எழுதி வைத்திருப்பதைக் கவனிக்கும் போது இதை நாம் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
“தேசத்திலே முக்கிய சமயங்களுள் ஸநாதனதரு மம் இல்லாமியக் கொள்கை ஆகிய இரண்டையும் சமரஸப்படுத்தி, இரண்டிலும் கூறப்பட்ட தெய் வங்கள் ஒன்றென நம்பின பெரியோர்களும் உண்டு ஹிந்துப் பெற்றோருக்குப் பிறந்து இஸ்லாமியக் கொள்கையைத் தழுவியவர்களும் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து ராமநாம ஸ்மரணை செய் தவர்களும் உண்டு. மஹான் நானக்கு, பக்தர் கபீர்தாலர், பகவான் கெளரங்கர், ஞானி மஸ் தான் சாகிபு அவர்கள், ஆகிய இவர்கள் எல்லோ ரும் எல்லாம் வல்ல இறைவனை வணங்கினாரே
யன்றித் தனியாகக் கடவுள் தமக்கெனக் குறித்துக் கொள்ள வில்லை. இப்பெரியோர்களை இருசமயத் தினரும் ஒரே விதமாகக் கொண்டாடுகின்றனர். தம்மைப்போலவே பிறரும் சத்திய சந்தர், தருமத் தைக் கடைப்பிடிப்பவர் என நம்புவதனாலேயே இப்படி இனிமையுடன் இரு வரும் ஒருமித்து, ஒரு வர் மற்றொருவருடைய சமயக் கொள்கைகளை மதித்து நடக்க நம் நாட்டில் இயலுகின்றது.
ஆயின், இச்சமரஸத்தையும் சமய நல்வாழ்க்கை யையும் உண்மையோவெனப் பரிசுழிப்பது போல இல சந்தர்ப்பங்கள் நிகழ்கின்றன. ஸநாதன தரும த்தை அவலம்பிக்கும் ஜனங்களுடைய திருவிழாக் களும் தெய்வவாசகமாகிய குர்ஆனைப் பின்பற்று
14 .
கின்றவர்களுடைய கொண்டாட்டங்களும் சில சம யங்களில் ஒரே காலங்களில் நிகழும். அப்போது சமய நூல்களின் உட்பொருளை முழுவதும் அறி யாது அரைகுறையாக உணர்ந்த அறிவிலிகள் , தம் மதமே உயர்ந்ததெனக் கருதி, பிற மதத்தினரைத் தூஷித்து வீண் சண்டைக்கிழுக்கின்றனர். உயிர்ச் சேதமும், சிற்சில சமயங்களில் நேருவதுண்டு. இவ் வாறு மோசமான காரியங்கள் நம்தேசத்தில் சிற்சில இடங்களிலேதான் நடைபெற்றன, சில காலங்க ளுக்கு முன். இரு சமயத்திலுமுள்ள அறிஞர்கள் இவ்வித முரட் டுத்தனமான கொள்கைகளைக் கண்டித்து, சகோ தரத்துவம் பாராட்டியும் ஒற்றுமையுண்டாகும் படி யும் உழைத்து வருகின்றனர். ஆனால் இரு சமயத் தினருக்கும் கலகமூட்ட எண்ணித்திரியும் கசடர் சிலர் இச்சம்பவங்களை 'வேம்பன்றோ காக்கை விரும்பும் கனி' என்பது போல திரித்துக் கூறி வரு கின்றனர். இம்மதியீனர்கள் நாடெங்கும் ஒற்றுமை யுடன் வாழ்ந்து வரும் ஒரு தாய் வயிற்றிற் பிறந்த எண்ணிறந்த அறிஞரை ஒருபொருளாக எண்ணுவ தில்லைப் போலும்.'. என்று கடிந்து கொண்டார்கள் சுவாமிகள். இங்கு தான் சுவாமிகளின் உள்ளத்தைப் புரிந்து கொள்கி றோம். அவரின் உள்ளக் கமலத்தில் மலர்ந்திருக்கும் அன்புப் பூக்களைக் கண்ணாரக் காண்கின்றோம். இன ஐக்கியத்தின் களமாக விளங்கிய சிவாநந்தா சுவாமிகள் கிழக்கிலங்கையிலே , கல்லடி உப்போடைக் கிராமத்திலே நிறுவிய கலா நிலையமான சிவாநந்த வித்தியாலயம் 1929ல் தாபிக்கப்பட்டது. இக்கல்லூரி அமைந்துள்ள காணி, கட்டிடங்களையெல்லாம் கதிர்
5
Page 14
காமத்தம்பி உடையார் , சபாபதிப்பிள்ளை உடை யார் ஆகியோரின் சந்ததியினர் சுவாமிகளிடம் கைய ளித்தனர். இராமகிருஷ்ண மிஷனின் சார்பில் இவற் றைப் பொறுப்பேற்ற அடிகளார் இந்த வித்தியால யத்தை அந்தத் தமிழ் மண்ணில் கட்டி எழுப்பினார். பிரித்தானியர் காலத்தில் ஏற்பட்ட மதமாற்ற அலை யிலிருந்து சுதேசிகளையும், அவர்தம் மதம், பண் பாடுகளையும் காப்பாற்றும் பெரும் பணியை இக் கல்லூரி ஓரளவுக்காவது நிறைவேற்றியிருப்பது மன நிறைவு தருகிறது. கல்லடி-உப்போடைப் பிரதேசமே சிவாநந்த வித்தியா லயத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமான இடம் என்ற முடிவுக்கு அடிகளார் வந்தமைக்கான கார ணத்தை அறிவது அவரின் உள்ளத்தைப் புரிந்து கொள்வதாகும். அடிகளாரின் காரைதீவு மண்ணில் பிறந்து, அவர் தாபித்த சிவாநந்த வித்தியாலயத்தில் நீண்ட காலம் அதிபராகப் பணிபுரிந்தவரான பெரி யார் க. கணபதிப்பிள்ளை அவர்கள்,தமது"Vipulananda A Biography. The Man and his achievement' 6T airp நூலில்,
"When Vipulananda founded Sivananda Vidyalaya at Kalladi Uppodai withina mile of Kattankudy, he meant it to fulfil the educational and cultural needs and aspirations of all the three Communities; the muslims, the tamils and the sinhalese of Batticaloa and of uva villages in the Bintannepattu ”” 3 - என எழுதி இந்த இரகசியத்தை வெளிப்படுத்தியிருக் கிறார். இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களும், ஏன்! சிங்களவரும் கூட, இக்கல்லூரியில் பயிலவேண்டும், பயன்பெறவேண்டும் என்பது அடிகளாரின் விருப்பமாக இருந்தது. இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளான
6
வத்தீஸ்வர வித்தியாலயத்திலும் கல்லடி-உப்போடை 11 மக்க வித்தியாலயத்திலும் மெளலவி ஆசிரியர்கள் நியமி.ப்பட்டு இஸ்லாம் சமயம் கூட ஒரு பாடமாகக் *fibi ?h Güllu" — 3. “The West Reappraised’ GT Görso 35 GOTg நூலில் அஸிஸ் அவர்கள் இதனை,
"Islam classes conducted by a Moulavi, that was organized for the spiritual growth of the muslim Pupils concerned, within the premises of vidyalaya at Vannarponnai and of Shivananda at Batticaloa' ான்று மிக்க மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் எடுத்துச் சொல்கிறார்.
கல்வி மூலம் பல்வேறு சமுகத்தினரிடையே ஐக்கியத் தையும் சகோதர வாஞ்சையையும் ஏற்படுத்தலாம் என் பதில் தளராத நம்பிக்கைவைத்திருந்த அடிகளார், அதை சிவாநந்தாவில் பரீட்சித்துப் பார்த்து வெற்றியும் கண் டவர். 1932இல் தமிழ் பேசும் மாணவர்களுக்கு சிங் களம் ஒரு பாடமாகப் போதிக்கப்பட்டது. பெளத்த கலாசாரத்தையும் இந்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் பெளத்தபிக்கு ஒருவரும் நியமிக்கப் பட்டார். சிவாநந்தாவில் நிலவிய இந்த ஆரோக்கிய மான சூழல் பற்றி, பல் கலாசாரம் பற்றி,
Vipulananda did employ a Sinhalese teacher and a Buddhist monk to teach sinhalese to all the children and introduced them all to the Buddhist culture and civilization. He was the first manager of schools to adopt the system of introducing cultural trends into a school in the 1930s. It was tetrarchical cultural mode that prevailed at Sivananda; and consisted of a happy blend of the buddhist, the Hindu, the Islamic and the christian traditions. These had formed
1.
Page 15
a congenial cultural clainate for the harmonious growth and development of the great cultures'...
என்று திரு. க. கணபதிப்பிள்ளை அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகிறார். விபுலாநந்தரின் பிறப்பிடமான காரைதீவில் பிறந்த கணபதிப்பிள்ளை அவர்களின் எழுத் தில் நிச்சியமாக விபுலாநந்தரின் உணர்விருக்கும்; அடிக ளார் எண்ணியதும் தெளிவாகத்தெரியும். அடிகளாரின் இந்த முயற்சியினால் உந்தப்பட்டமையி னாலோ என்னவோ இஸ்லாமிய பண்பாட்டினதும் சிந் தனையினதும் மத்திய நிலையமாக ஒரு போ து திகழ்ந்த கொழும்பு ஸாஹிறாக்கல்லூரியின் அதிபர் பதவியை அலங்கரித்து மிகு புகழ்பெற்ற அறிஞர் எ. எம். எ. அஸிஸ் அவர்களும் இத்திட்டத்தை ஸாஹிறாக்கல்லூரியில் அறிமுகப்படுத்திப் பெருமை பெற்றார். “ஸாஹிறாவிலே படிப்படியாக மூன்று மொழிகளைப் பயிற்றுவிக்கும் திட்டம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. முதலாவது பராயத்தில் சிங்களவரல்லாத பிள்ளைகளுக் குச் சிங்களமும் சிங்களப் பிள்ளைகளுக்குத் தமிழும் கட்டாய பாடமாக ஆக்கப்பட்டு வருகிறது, இவ்வேற் பாட்டினால் எல்லா மாணவர்களும் ஆங் கி ல ம் , தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொ ழி க ளி லு ம் பயிற்சியுடையவர்களாக முடியும்’ ’ 19 என்று தனது இத்திட்டம் பற்றி இக்கல்லூரியின் 1952 ஆம் ஆண் டைய பரிசளிப்பு விழ 1ா அறிக்கையில் அ தி ப ர் அஸிஸ் விளக்கிக் கூறியிருந்தார். அதன் மூலம் 1930 களில் அடிகளார் சிவாநந்த வித்தியாலயத்தில் பிரயோ கித்துப் பார்த்து வெற்றியீட்டிய திட்டத்தை அளிஸ் ஏறக்குறைய 20 வருடங்களுக்குப் பின்னர், ஸாஹிறாக் கல்லூரியில் அமுல் நடாத்தி பெருவெற்றியீட்டினார். அதன் மூலம் அடிகளாரின் எண்ணத்தை ஆமோதித்து நின்றார். அதனாற்றான் இந்து - முஸ்லிம் ஐக்கியம்
18
பேணி. சிவாநந்தாவுக்கு ஒருபடி மேலே சென்று இந்து, முஸ்லிம், பெளத்த ஒற்றுமையைக் கட்டிக்காத்த கலா நிலையமாக அஸிஸின் ஸாஹிறா விளங்கியது.
இன ஐக்கியத்தின் களமாக அடிகளாரின் காலத்தில் சிவாநந்தா விளங்கியது. மதங்கள் மரியாதைப்படுத்தப் பட்டன. சமய விழாக்கள், எந்த மதத்துக்குரியனவா யினும் சரி, பெரியளவிலோ, சிறியளவிலோ கொண் டாடப்பட்டன. சமய சம்பிரதாயங்கள் பேணப்பட்டன. ஒருமுறை இக்கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவை சகல இன மாணவரும் , வெவ் வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டாடியமை குறித்துச் சொல்லப்படவேண்டிய தொரு நிகழ்வாகும். ஹட்டனைச் சேர்ந்த முத்தை யாவும் , தம்பிலுவில் ஒணியன் தர்மாவும், தென்மேற் குப் பிரதேசத்தைச் சேர்ந்த கோமஸும், வட பிர தேசத்தைச் சேர்ந்த விநாயகரும், மூதூர் ஹனிபா வும் விழாக்குழுவில் இணைந்து செயற்பட்டு அவ்வருட பொங்கல் தினத்தை இன ஒற்றுமையைக் காட்டும் விழாவாக, பிரதேச ஐக்கியத்துக்கு கட்டியம் கூறும் விழாவாக, செய்து முடித்தனர்.
முஸ்லிம்கள், பெளத்தர்கள், கிறிஸ்தவர்களெல்லாம் இவ்விழாவில் பங்குபற்றிப் பெருமை சேர்த்தனர். பாட சாலை மட்டத்தில் செய்யப்பட்ட இம்முயற்சி நாடளா விய ரீதியில் வியாபிக்க வேண்டுமென அடிகளார் விரும் பினார். அடிகளாரின் காலத்தில் சிவாநந்தாவில் நில விய இந்த இனிய சூழலை நினைக்கும் போதெல்லாம்.
"பிறருடைய கொள்கையை வெறுத்து ஒதுக்காத பண் புடைமை, அக்கொள்கைகளை ஏற்றுக்கொள்ளு கின்ற பொது நோக்கு என்னும் இரண்டினையும் உலகுக்குக் கற்பித்த சமயத்துக்கு நான் உரியவ னெனப் பெருமை பாராட்டுகிறேன்"
19
Page 16
என்று 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம்/ திகதி அமெரிக்காவில், சிக்காக்கோ ந க ரி ல் நடைபெற்ற அனைத்துலக சமய ஆராய்ச்சிப் பெருங்கழகத்தில், இந்து சமயத்தின் பொதுப்பண்புகள் பற்றி சுவாமி விவேகா னந்தர் கூறிய வார்த்தைகள் எனது ஞாபகத்துக்கு அடிக்கடி வருவண்டு. சிவாநந்தாவில் கற்ற முஸ்லிம் மாணவர்கள் அடிகளாரின் காலத்தில் அநேகமான முஸ்லிம் மாண வர்கள் சிவாநந்த வித்தியாலயத்தில் பயின்று கொண் டிருந்தனர். பொத்துவில் தொகுதியை நீண்ட கால மாகப் பிரதிநிதித்துவம் செய்து வருகின்ற முந்நாள் கைத்தறி நெசவுக் கைத்தொழில் அமைச்சர் மாண்பு மிகு எம். ஏ. அப்துல் மஜீத் அவர்கள் இக்கல்லூரியில் கற்றவர்; கற்பித்தவரும் கூட. இவரின் சகோதரர் முன் னாள் சம்மாந்துறைப் பட்டினசபைத் தலைவர் அமீர் அலி, மூதூரைப் பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் தகவல்துறைப் பிரதி அமைச்சர் ஏ. எல். அப்துல் மஜீத் , அவரின் சகோதரரான கிண்ணியாவைச் சேர்ந்த அபூ தாலிப், முன்னாள் செனட்டர் இஸ்ட் எல். எம். மஷ"ர் மெளலானா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தின் முஸ்லிம் சேவைப் பணிப்பாளராகவிருந்த ஜனாப் வி. ஏ. கபூர், அட்டாளைச்சேனை முஸ்லிம் ஆசிரியர் பயிற் சிக்கல்லூரியின் அதிபராகவும் பிரதம கல்வி அதிகாரியா கவும் ஒருபோது திகழ்ந்த அட்டாளைச்சேனை எம். ஏ. எம். சம்சுதீன், முன்னாள் கல்விப் பணிப்பாளர் மருத முனையூர் ஏ.எம். மஜீத் , நிந்தவூரைச் சேர்ந்தவர்களான முன்னாள் மாவட்ட மீன்பிடிப் பரிசோதகர் காலஞ் சென்ற ஏ. கே. அப்துல் மஜீத், நிந்தவூர்க் கிராமச பைத் தலைவராகவிருந்த ஐ. எச். எஸ். எம். புகாரி. எச். எம். காசீம், பொறியியலாளர் ஏ. எம். இப் றாஹீம் , பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். எச். எல். அலியார் ஆகியோரும் அக்கரைப்பற்றுச் சட்டத்தரணி
2 O
காலஞ்சென்ற எச். எம். ஹவrம், நித்தவூரில் மேலதிக அரசாங்க அதிபராகவிருந்த அட்டாளைச்சேனை ஏ. எல். இப்றாலெவ்வை, பிரதிக்கல்விப் பணிப்பாள ராகவிருந்து ஓய்வுபெற்ற ஒணகமை ரி. இப்றாலெவ்வை ஆகியோரெல்லம் சுவாமியின் சிவாநந்தாவில் உருவான வர்களே. இவர் களைவிட வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ. ஆர். மன்சூர், கல்முனை சட்டத்தரணி யும்,பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எம். சம்சுதீன், உள்ளுராட்சி உதவி அமைச்சராகவிருந்த கேட் முதலி யார் எம். எம். இப்றாஹிமின் மருகர் பஸில் மஜீத் , இவரின் சகோதரர் எம். ஏ. அப்துல் மஜித், துறைமுகக் கப்பல்துறை இராஜாங்க அ ைம ச், ச ர் மாண்புமிகு எம். ஈ. எச். மஃறுாப் அவர்களின் மைத்துனரான முன் னாள் கல்வி அதிகாரி ஜனாப் கரீம் (கிண்ணியா), சட் டத்தரணிகளான எஸ். ஏ. ஹமீட் (கிண்ணியா), றஹீம் (திருகோணமலை), அஞ்சல் அலுவலக அதிப ராகவிருந்த கிண்ணியாவைச் சேர்ந்த எம். ஹனிபா, தோப்பூரைச் சேர்ந்தவர்களான மஜித், அபூஉபைதா , எஸ்.ஏ.றஸ்ஸாக் (அஞ்சல் அலுவலக அதிபர்), மூதூர் ஷெரிப் ஆகியோரெல்லாம் இக்கல்லூரியில் கல்விகற்ற வர்களே. முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் ஊடுருவி நல்லனசெய்து வருபவர்கள் இவர்கள்.
மூதூர் தொகுதிப் பிரதிநிதியாகவிருந்த ஏ. ஆர். ஏ. அபூபக்கர் கூட திருகோணமலை இந்துக்கல்லூரியில் அடிகளாரிடம் பயின்றவர்தான் என்பதையும் அறிகி றோம். அடிகளார் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவிருந்த காலங்களில் கொழும்பிலிருந்து கல்லடிஉப்போடை சிவாநந்த வித்தியாலத்துக்கு அடிக் கடி விஜயம் செய்தார். ஒரு முறை அவ்வாறு வந்திருந்த அடிகளார் மிகவும் தளர்ந்து காணப்பட்டார். ஒருநாள் மாலைவேளையில் கல்லடிக் கடலோரத்திற்குச் சென்று
2
Page 17
சிறிது தூரம் நடந்து அசதிபோக்குவதற்காக, அப்போது சிவாநந்தாவில் பயின்று கொண்டிருந்த சிறுவன் வி. ஏ. கபூரை அழைத்துக் கொண்டு, நீண்டுகிடந்த ஒற்றை யடி மணற் பாதையினூடாக கடற்கரையை அடைந்து, அங்கு நெடுநேரமாக உலாவிக் கொண்டிருந்தார். தன் னுடன் வந்திருப்பவன் ஒரு சிறுவன் என்பதைக் கூடப் பொருட்படுத்தாது, ஒரு பெரியவரிடம், ஒரு நண்பரி டம், தனது உள்ளக் கிடக்கையைத் திறந்து காட்டு மாற்போல் கபூரிடம் தம்மைப்பற்றிய பல முக்கிய விடயங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாராம் அடிகளார். விபுலாநந்தரின் வார்த்தைகளில் பொதிந்து கிடந்த பெறுமதிமிக்க கருத்துக்களை தேடிப் பொறுக் கியெடுத்து பட்டைதீட்டி அதன் பல முகங்களையும் பர்த்து மகிழும் அனுபவம் கபூருக்கு அப்போதில்லா திருந்தமையால், அந்த வார்த்தைகளின் அருமை பெரு மைகள் அவருக்கு அன்று புலப்படவில்லை. ஆயினும் இந்த நிகழ்வினை இன்று அடிக்கடி நினைவு கூர்ந்து வரு கிறார் இவர், அடிகளாரிடமிருந்து அன்பளிப்பாகக் கிடைத்த இருநூல்களையும் கூட இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றார் கபூர், சுவாமிகளின் காலத் தில் இந்து சமயத்துக்கான பரிசு கூட ஒருமுறை கபூருக் குக் கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அடிகளாரின் காலத்தில் சிவாநந்தாக் கல்லூரி விடுதிக் குத் தேவையான அரிசி முதலிய பொருட்களை விநி யோகம் செய்தவர் கலந்தர் லெப்பை என்பவர். சில வேளைகளில் மாணவர்கள் கணக்கில் தப்புச்செய்து விட்டால் கலந்தரை வகுப்பறைக்குள் அழைத்து, மாணவர்களிடம் கேட்ட அதேகேள்வியை அவரிடமும் கேட்டு, அவர் கூறும் பதிலில் மகிழ்ச்சியடைவாராம் அடிகளார். அவரைத் தன்னருகே அழைத்து அமரச் செய்து அவருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந் தர்ப்பங்களும் பல இருக்கின்றன. இவையெல்லாம்
22
விபுலாநந்தரின் முஸ்லிம் நேயத்தை மட்டுமன்றி மாணி டநேயத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. சிவாநந்தாக்கல்லூரி விடுதியில் கல்விகற்றுக் கொண் டிருந்த முஸ்லிம் மாணவர்கள் 'றம்ழான்’ மாதத்தில் நோற்பதற்கான வசதி க ளு ம் செய்யப்பட்டிருந்தன. இவ்விடயத்தில் அடிகளார் மிகக் கண்டிப்பான உத்த ரவுகளை வழங்கி இருந்ததாகத்தெரிகிறது. அடிகளாரிடம் பயின்ற மருதூர்ப்புலவர் ஷரிபுத்தீன் இலங்கைத் தீவில் இயங்கிக் கொண்டிருந்த இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைகளைப் புனருத்தாரணம் செய்யும் நோக்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் பதவியைத் துறந்துவிட்டு 1933இல் இலங்கைக்கு வந் தி ரு ந் த சுவாமிகள் , அக்காலத்தில் 1935களில், மதுரைத் தமிழ்ச்சங்க பண்டித வகுப்பொ ன்றை கல்முனையில் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந் தார்கள். இக்காலத்தில் அடிகளாரிடம் கற்கும் வாய்ப் புப் பெற்றோரில் ஒருவர் புலவர் ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள். மருதமுனையூரைச் சேர்ந்த இவரின் தமிழ் க்கற்கை மீது அடிகளார் செலுத்திய ஈடுபாடும் அக் கறையும் அதிகமானதாகும். புலவர் ஷரிபுத்தீன் அவர் கள் இதுபற்றிக் கூறுகின்ற போது,
"எனக்கு மதுரையில் முஸ்லிம் புலவர்கள் பல நண் பர்கள் இருக்கின்றார்கள். நீரும் பின்னொரு காலத் தில் சிறந்த புலவராய் அமர்ந்து தமிழுக்கு மிகுந்த தொண்டுசெய்ய வேண்டும் என மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டித வகுப்பொன்றை கல்முனையில் சுவாமியவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் போது மேற்படி வகுப்பில் படித்துக்கொண்டிருந்த எனக்கு அன்புக் கட்டளையிட்டார்கள். தமிழில் எனக்கி ருந்த ஆர்வத்தையும், தகுதியையும் கண்டு இங்கு
23
Page 18
தனக்கொரு தகுதியான முஸ்லிம் மாணவன் கிடை த்திருக்கின்றான் என்ற மகிழ்ச்சியினால் இவ்வாறு பணித்திருக்க வேண்டும்".,
என்று எழுதிவைத்திருக்கிறார். அடிகளாரின் கற்பித்தற்
சிறப்புப் பற்றியும் அதனால் தான்பெற்ற பயன்பற்றி
யும் எடுத்துச் சொல்லும் அவர்,
"சுவாமி அவர்களிடம் கேட்ட இலக்கணப் பகுதி
எமக்கு ஓர் இன்பமான படிப்பாய் இருந்தது. கவி தைகளைப் படிப்போம்; எமக்குத் தெரியாமலே இலக்கண விதிகளும் எமது மனதிற் பதிவு செய் யப்பட்டு விடும். முன்னரெல்லாம் இலக்கியம் பயின்றிருந்தோம்தான்- ஆனாலும் அவர்களிடம் பயின்ற இலக்கியம் அலாதியானது. இலக்கிய இன்பம் என்பதை அனுபவிக்கக் கிடைத்த ஒரு பொற்காலமது. புலவரின் கற்பனைத் திறனைத் திறந்து காட்டினார்கள். இலக்கியத்தைத் தானே சுவைத்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் மெய் மறந்து இலக்கியத்தோடு இலக்கியமாக ஐக்கிய மாகி விடுவோம். சீவகசிந்தாமணி கற்கும் போது திருத்தக்க தேவர் எமக்கு முன்னிருந்து தமது கற் பனையை அள்ளிச் சொரிவது போன்றிருக்கும். இலக்கியத்தை எப்படிப்படிப்பது, எப்படிச் சுவைப் பது, எப்படிச் சுவைபட உரைப்பது என்பனவற் றைச் சுவாமி அவர்களின் கற்பித்தலின் போது தான் புரிந்து கொண்டோம்.
யாப்பருங்கலக்காரிகை ஒரு சிறிய புத்தகம் அதைக் கற்க அதிகநாள் வேண்டாம். இருவாரங்களில் முடித்துவிடுவோம் என்றார்கள். மூன்றா வது வாரத்தில் கவிதை புனையத்தொடங்கிவிட்டோம். பாவும் பாவினமும் படித்து முடிந்தது. நான் ஒவ் வொரு பாவுக்கும், பாவினத்துக்கும் மாதிரிக்க
24
விதை ஒவ்வொன்றுசெய்து அடுத்த வாரம் ஒப்பு வித்தேன். பார்த்து மகிழ்ந்தார்கள். என்னை மெச்சிக்கொண்டார்கள். எமது எதிர்காலம் பற் றிய தமது எண்ணம் நிறைவேறும் என்று அவர் கள் கருதியிருக்க வேண்டும். என்மனதிலும் ஒரு பூரிப்பு. கவிசெய்யத் தொடங்கிவிட்டேன். மனதில் ஊறும் அழகிய கருத்துக்களைலெல்லாம் கவிதை யில் யாக்கத்தொடங்கிவிட்டேன். சுவாமியவர்க களின் ஆசிர்வாத மல்லவா? எனக்கு ஒரு தாகமாய் அமைந்துவிட்டது." . 8 என்றவாறு அடிகளாரின் கற்பித்தற் சிறப்பையும், அத னால் தமிழறிஞராக, புலவராக வெல்லாம் தாமும் வளர்ந்த வாற்றையும் ஷரிபுத்தீன் சிறப்பாக எடுத்தி யம்புகிறார். இவர்தான் பிற்காலை , "சீறா பதுறுப்படல உரை', 1969இல் சாகித்தியப் பரிசுபெற்ற, "நபிமொழி நாற்பது' வெண்பா நூல், ‘இலக்கிய உரை', புதுகுஷ் ஷாம் - காப்பிய உரை’, ‘இசைவருள் மாலையும் மக்க ளுக்கு இதோபதேசமும்’, ‘புதுகுஷ்ஷாம் - வசன நூல்", "கனிந்த காதல்’, ‘கிராமிய இலக்கிய நூல் ஆகியவற் றைப் படைத்துத் தமிழ் கூறு நல்லுலகுக்குத் தந்தவர். புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையினால் ‘புலவர் மணி' என்னும் பட்டமும் , கொழும்பில் நடைபெற்ற நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக் கிய ஆராய்சி மகாநாட்டில் "வெண்பாவில் புலி’ என்ற வாழ்த்தையும்.பெற்றவர். பிரதேச அபிவிருத்தி அமைச் சும் இவருக்கு ‘இலக்கிய மாமணி' விருது வழங்கிக் கெளரவித்தது. இந்துசமய கலாசார - அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, 'தமிழ்ச்சுடர்' விருது வழங்கி 1993ல் இவரைக் கெளரவித்தது. இப் பெருந்தகை சுவாமி விபுலாநந்தரினால் உருவாக்கப்பட்டவர் என் பதை அறியும்போது உள்ளம் பூரிக்கிறது. முஸ்லிம் கல்விக்கு சுவாமிகளின் பங்களிப்பை நினைத்து மனம் ஆனந்தமடைகிறது.
25
Page 19
அறபு மொழியிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றிருந் தார் சுவாமி விபுலாநந்தர் .
"சில தேவநாகரி லிபிகளின் ஒலிகளைப் புலப்படுத் தத் தமிழில் எழுத்துக்கள் இல்லாமையால் என் னைத் தனித்தழைத்து அவற்றுக்கிசைந்தஒலியுள்ள அறபெழுத்துக்களை எழுதிக் காட்டி அவற்றின் ஒலிகளை எனக்குப் புலப்படுத்தினார்கள். அப் பொழுதுதான் நான் அவர்கள் அறபுமொழியும் தெரிந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன்' . g
என்று புலவர் ஷரிபுத்தீன் எழுதியிருப்பது அடிகளா ரின் அறபுப் புலமையை நன்கு காட்டுகிறது.
"இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரிய ராக விபுலாநந்தர் இருந்த காலம், புதிதாக அமைக்கப்பட்ட அறபுப் பகுதித் தலைவரான டாக்டர் இமாம் நிகழ்த்திய சில விரிவுரைகளை வெகு ஆர்வத்தோடு கேட்டின்புற்றார். 20
என்று அஸிஸ் அவர்களும் தெரிவித்து புலவர் ஷரி புத்தீனின் கருத்தை ஒப்பினார். அறபு - தமிழ் அக ராதி ஒன்றின் தேவையை அடிகளார், அஸிஸிடம் வற்புறுத்திக் கூறியமைக்கும் இதுவே காரணமாகலாம் இவ்வாறான ஒரு அகராதியை ஆக்குவதற்கு தாமும் தம்மாலான உதவியைச் செய்ய முடியுமென அஸி ஸிடம் தெரிவித்திருந்தார் அடிகளார். இவையெல் லாம் தமது சகோதர இனத்தின் பால் அதன் கலா சார மேம்பாட்டின் மீது அடிகளார் கொண்டிருந்த அக்கறையை எடுத்தியம்புகின்றன. லத்தின், கிரேக்கம், வங்காளம், பாளி, சிங்களம், அரபு, ஆங்கிலம், தமிழ் ஆகிய பன்மொழிகளில் ஞானமுள்ளவர் விபுலாநந்தர். இந்தப் பன்மொழி அறிவு அவருக்கு பரந்துபட்ட மனப்பான்மையைச்
26
கொடுத்தது. அவர் பெற்றிருந்த விஞ்ஞானக் கல்வியும் இதற்குத் துணைபோனது. அதனாற்றான் போலும் , தனியே திண்ணைப் பள்ளிக்கூட மரபில் ஊறிக்கிடந்த அன்றைய தமிழறிஞர்களிடமிருந்து அடிகளார் வேறு பட்டு நின்றார். அடிகளாரும் அஸிஸ"tர்
இலங்கை நாட்டின் பல முக்கிய பிரதேசங்களில் சேவையாற்றிய முதல் முஸ்லிம் நிருவாக சேவை அதிகாரி அறிஞர் எ. எம். எ. அஸிஸ் அவர்கள். அவர் அடிகளாரை வெகுவாக நேசித்தார்.
அவரின் கல்வி, சமூக, சமய சிந்தனைகளின் ஆழத்தை நன் குணர்ந்திருந்தவர் அவர் . தனது சமூகத்தின் பல் துறை மேம்பாட்டுக்காக அரசசேவையில் தான் வகித்துவந்த பெரும் பதவியையே உதறி எறிந்துவிட்டு, 1948இல் கொழும்பு ஸாஹிறாக்கல்லூரி அதிபர் பதவியை ஏற்று அதனை அலங்கரித்தவர். சமூகத்தின் மீது படிந்திருந்த அறியாமை மேகங்களை கல்விச் சுடரை ஏற்றிவைத்து நீங்கச்செய்தவர். ஸாஹிறாக்கல்லூரி அதிபர் பதவியை ஏற்றுப் பணிசெய்தமையினால் கிடைத்த சமூகத் தலை மையைப் பயன்படுத்தி பல பயனுள்ள கருமங்களைச் சமூகத்திற்குச் செய்தவர். அவரின் சகல செயற்பாடு களிலும் அடிகளாரின் எண்ண ஓட்டங்களையும் சிந்த னைச் சிதறல்களையும் காணமுடிகிறது.
சுவாமி சர்வானந்தர் வண்ணை இராமகிருஷ்ணமிஷன் வைத்தீஸ்வர வித்தியாலயத்திற்கு 1922ல் விஜயம் செய்தபோது, ஆற்றிய சொற்பொழிவில் குறிப்பிட்ட மாணிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் பண்டிதர் மயில் வாகனம் பற்றி அக்காலை (1921 பெப்ரவரி - 1923 ஜ"ன்) இக்கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த அஸிஸ் அறிய விரும்பினார். அடிகளார் பற்றிய உயர்வான எண்ணம் அஸிஸின் மனதில் அன்று கருக்
27
Page 20
கொண்டது. இதனைத் தொடர்ந்து நமக்கு அளிக் கப்பட்ட பிரிவுபசாரமொன்றில் கலந்து கொள்வதற் காக வண்ணார் பண்ணைக்கு வந்திருந்த அடிகளாரை அஸிஸ் 1939இல் நேரில் சந்தித்துக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த ஒரு முக்கிய சம்பவம் இருவரையும் இணைத்து வைக்க ஏதுவாயிற்று. சின்ன முகத்துவார வாடிவீட்டில் வைத்து, அதிபர் வி. நல்லையா அவர்களினால் அஸிஸ் அடிகளாருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதான அந்த நிகழ்வு இந்த உறவின் வரலாற்றில் மிக முக்கிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து வைக்கிறது. இச்சந்திப்பு 1943இல் நிகழ்ந்தது. அஸிஸின் மனதில் அடிகளார் பற்றிப் படிந்து கிடந்த உணர்வுகள் இதன் பின்னர் தான் உயிர் பெற்றன. செயலாக்கம் பெற ஆரம்பித்தன.
இதன் முதற்படியாக, காரைதீவில் விபுலாநந்தரின் பிறந்த மண்ணில், இராமகிருஷ்ணமிஷன் தமிழ்ப் பாடசாலையில் ‘முத்தமிழ்’ என்ற மகுடத்தில் சுவாமி களின் சொற்பொழிவொன்று நிகழ்ந்தது, அஸிஸின் வேண்டுகோளுக்கு இணங்கி நடைபெற்ற இச்சொற் பொழிவுக்கு அஸிஸ் அவர்களே தலைமை தாங் கினார்கள். இக்கூட்டம் முடிவுற்ற பின்னர் அடிகளா ரும் அஸிஸும் ஆறஅமர இருந்து நீண்டநேரம் அள வளாவிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது கல்வியைப் பற்றிய பல விடயங் களை அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைப்பதாயிற்று'.2 என அஸிஸ் இச்சந்திப்பில் தான் பெற்ற பயன்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
'அளிஸ் அடிக்கடி மட்டக்களப்புக்குச் சென்று சுவாமி விபுலாநந்தரைச் சந்திப்பார். சில மாலை வேளைகளில் ஐந்து மணிவாக்கில் சுவாமிகளின் அறையின் முன்னால் உள்ள வேப்ப மரத்தின்
28
கீழ் இரு கதிரைகள் போடப்பட்டிருந்தால் அன்று மாலை சுவாமியைச் சந்திக்க உதவி அரசாங்க அதிபர் வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்".22 என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வித் துறைப் பேராசிரியராகவிருந்த , இச்சந்திப்புக்கள் நிகழ்ந்த போது சிவாநந்த வித்தியாலயத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த , அமரர் ப. சந்திரசேகரம் அவர்கள் கூறுமளவுக்கு இச்சந்திப்புகள் அடிக்கடி நிகழ்ந்தன. இந்த நல்லுறவு இருவரினதும் மரணபரியந்தம் நின்று நிலைத்தது. இச்சந்திப்புக்களின் போது பல முக்கிய விடயங்கள் பற்றி அஸிஸின் கவனத்தை அடிகளார் ஈர்த்திருக்கி றார்.
‘சுவாமியவர்கள் சமூக சேவையின் முக்கியத்து வத்தைப் பற்றி அடிக்கடி கூறுவார்கள். மட்டக் களப்பு சிவாநந்த வித்தியாலயத்தைப் பற்றியும் சுவாமியவர்கள் பல விஷயங்களைச் சொல்லு வார்கள். கிழக்கு மாகாணத்து இந்துக்களும், முஸ்லிம்களுக்கும் பொதுவாகிய கலாசாரத்தைப் பற்றியும் எடுத்து விளக்குவார்கள். நவயுகத்தின் போக்கிலும் முயற்சி மிகுதியிலும் நம்முடைய பழஞ் செல்வங்களை யாம் மறந்து விடுதலாகாது; நாட்டுப்பாடல்களையெல்லாம் மக்கள் மறந்து விடு முன் அவற்றைத் தொகுத்து வெளியிடுதல்வேண் டும் என்று கூறுவார்கள்.' என்றெல்லாம் அஸிஸ் கூறும்போது, அவர்கள் கலந்து பேசிய விடயங்கள் எமக்குத் தெரிகின்றன. இவை யெல்லாம் அஸிஸின் பிற்கால சமூக கல்விச் செயற் பாடுகளுக்குக் களமமைத்துக்கொடுத்தன. அஸிஸ் அவர்கள்இடமாற்றம்பெற்றுகண்டிக்குச்சென்று அங்கு பணிசெய்துகொண்டிருந்த காலை ஒருபோது, அடி
29
Page 21
களார் கண்டிக்கு வருகை தந்திருந்தார்கள். அப்போது அளிஸ் தங்கியிருந்த 'மெளண்ட் எயிரி அரச விடுதி யில், அடிகளாரும் பன்னிரு தினங்கள் அஸிஸுடன் தங்கியிருந்தார். இக்காலம் அளிஸின் சிந்தனையில் பல விடயங்களில் தெளிவேற்பட்ட காலம். பல தெளி வான சிந்தனைகள் அவர் மனதில் கருக்கொண்ட காலம்
" இப்பன்னிரு நாட்களும் சுவாமி விபுலாநந்தரை மிக அந்நியோன்னியமா அறிய முடிந்தது அநேக விடயங்களையிட்டு மனம் திறந்து உரையாடி னோம். பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாயநிதியை ஆரம்பித்துத் தளராது நடத்திச் செல்வதற்கும், கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி அதிபர் பதவியை ஏற்று நடாத்துவற்கும் இக்கலந் துரையாடலின்போது நான் உருவாக்கிய கருத்துக் கள் துணையாக இருந்தன".23
என்று அஸிஸ் எழுதும்போது, அஸிஸின் சிந்தனையி லும் போக்கிலும் அடிகளார் எம்மட்டு ஆதிக்கம் செலுத்தினார் என்பதை ஊகிக்க முடிகிறது,
அஸிஸினூடு அடிகளாரின் சீர்திருத்த எண்ணங்கள் முஸ்லிம் சமூகத்தையும் சென்று சேர்ந்தன.
அடிகளார் எடுத்தோதிய சர்வசமய சமரசம், இஸ் லாம் மதத்தின்மீது அவர் வைத்திருந்த பெருமதிப்பு, அவர் ஏற்படுத்த விழைந்த இந்து - முஸ்லிம் நல்லுறவு என்பன அளிஸை அவர்மீது மிக்க அன்பு கொள்ளச் செய்தன. உசாதி, மத வேறுபாடுகளின்றியும் அரசியல் கட்சிப் பிரிவின்றியும் செய்யக்கூடிய தொண்டு தமிழ்த்தொண்டு தான்' என்று அடிகளார் மதுரை முத்தமிழ் மகாநாட் டில் கூறிய வார்த்தைகள் அஸிஸின் ஞாபகத்துக்கு அடிக்கடி வந்துசென்றன. எனவேதான் போலும்,
30
"அவர்கள் இந்து மதத்தவராகவும் யான் முஸ்லிம் சா கி ய த் த வ னா கவு ம் இருந்த போதிலும் கூட எங்கள் அன்புரிமை விரைந்து வள ர் வ தாயிற்று. அவர்களை யான் எனது மூத்த சகோ தரன் போல மதித்து நடந்தேன். சிற்சில விடயங் களில் எனக்குச் சிக்கல் ஏற்படும் போது அவருடைய புத்திமதிகளை நாடிநின்றேன்." . என்று அலீஸ் தனது உள்ளத்தால் பேசினார். உண் மையில் இந்த உறவு மிக்க இறுக்கமானது, நெருக்க மானது, அதன் விளைவுகள் முஸ்லிம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
**தமிழில் கையாளப்பெறும் அரபுச் சொற்களை எழு தும் முறையைக் காட்டுகின்றதும், அச்சொற்களின் கருத்துக்களை கூறுகின்றதுமான ஒர் அ க ரா தி தேவை. தற்கால அகராதி முறைப்படி தயாரிக் கப்படும் அத்தொகுப்பில், சொல்லின் பொருள் மாத்திரமன்று, நிகண்டு போன்று ஒரு பொருட் கிளவிகள் யாவும் குறிப்பிடப்படல் வேண்டும். தமி ழில் அறபுக்கான ஒலிக்குறிப்புகளுடன் குறித்த சொல்லை எழுதி அடுத்து அறபில் அதனை எழு திப் பின்னர் அதன் கருத்தையும் ஒத்த பொருளு டைய பிறசொற்களையும் குறித்தல் வேண்டும்.இவ் வாறான முறையில் ஓர் அறபுத் தமிழ்ச் சொற் கோவை தக்கவாறு தாயாரிக்கப்படுமேல் அது இஸ் லாமிய வரலாறு கலாசாரம் ஆகியவற்றைக் காட் டும் கண்ணாடியாக விளங்குமென்பது திண்ணம். தமிழ் மூலம் இஸ்லாம் பரப்பும் அறிஞர்கள் இத் துறையில் பணியாற்ற வேண்டுமென்பது என்
9|alist''... 25 என்று அஸிஸ் கூறியபோது அங்கு விபுலாநந்தரின் வழி நடத்துகையைக் காண்கிறோம். அடிகளாரின் சிந்தனை களினால் தமது சமூகமும் பயன் பெறவேண்டுமென்ற
3.
Page 22
அஸிஸின் வாஞ்சையையும் உணர்கிறோம். தென்இந் தியாவிலும், இலங்கையிலும் பல அரபு-தமிழ் அகரா திகள் வெளிவந்திருப்பினும், அடிகளாரின் நன்மாணாக் கர்களில் ஒருவரும், அஸிஸ்கால ஸாஹிறாவில் ஆசிரி யராகப் பணியாற்றியவருமான பேராசிரியர் எம்.எம். உவைஸ் அவர்களின் ‘தமிழிலக்கிய அறபுச்சொல் அக ராதி 1983இல் வெளிவரும்வரை அஸிஸின் இந்நோக் கம் நிறைவேறவில்லை. அஸிஸ் எதிர்பார்த்த அகராதியாக, விபுலாநந்தர் கரு திய அகராதியாக ,இந்த அகராதி அமையாத போதும், இவர்களின் நோக்கை ஒரளவாவது திருப்தி செய்கின் றது என்ற வகையில் மனநிறைவுதருகிறது.
இதைவிட, அஸிஸ் அவர்கள் 1943 ஒக்டோபர் 14ம் திகதி ஆரம்பித்து வைத்த "கல்முனை வித்தியாவிருத் திச் சங்கம்' பிற்காலை 1945ல் 'இலங்கை முஸ்லிம் கல்விச் சகாயநிதியாக மறு நாமம் பெற்றதற்கும் , பல்லாயிரக்கணக்கான ஏழை முஸ்லிம் மாணாக்கர்கள் இந்நிதியின் உதவியினால் நன்னிலையிலிருப்பதற்கும் விபுலாநந்த அடிகள் - அஸிஸ் உறவுக்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. முஸ்லிம் நாட்டார் பாடல்கள் மீது அஸிஸ் காட்டிய ஈடுபாடு, அவற்றைத் தொகுப்பதற்கும், ஆய்வு செய் வதற்குமாக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள், மொழிபெயர்ப்புத் துறையில் அஸிஸ் காட்டிய அதிக அக்கறை என்பன அவர் மீது அடிகளாரின் ஆதிக்கத் தையும் செல்வாக்கையும் காட்டுகின்றன. இவையெல் லாமே விபுலாநந்தர் வழிநின்ற அளிஸ"டைய சிந்த னைகளின் விளைவுகள் தாம்.
உவைஸ் தமிழறிஞரானார்
முஸ்லிம் சமூகத்தில் பிரபல தமிழறிஞர்களாக விளங் கும் பேராசிரியர் ம. மு. உவைஸ், எஸ். எம். கமா
32
லுத்தீன் போன்றோரெல்லாம் அடிகளாரின் நன் மாணாக்கர்களே. அவரின் அறிவுரை கேட்டு தம் வாழ்வைச் சீர்செய்து கொண்டவர்கள் இவர்கள்.
பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான உவைஸ் அவர் கள் அப்போது ஒரு நேர்முகப் பரீட்சையை எதிர் நோக்க வேண்டியிருந்தது. அப்போதைய உபவேந்தர் சேர் ஐவர் ஜெனிங்ஸ் உட்பட பல பேராசிரியர்கள், துறைத் தலைவர்களெல்லாம் குழுமியிருந்த நேர்முகப் பரீட்சை செய்யும் அவையில் அப்போதைய தமிழ்ப் பேராசிரியர் விபுலாநந்த அடிகளாரும் அமர்ந்திருந் தார் உவைஸ் அவர்கள், அவர்களின் முன்னிலையில் வந்து அமர்ந்து கொண்ட போது, அடிகளார் உவை ஸைப் பார்த்து, இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த செந்தமிழ்க் காப்பியம் ஒன்றை உம்மால் கூறமுடியுமா? என்று கேட்டார். இதற்கு விடை கூற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த உவைஸைப் பார்த்து, சீறாப்புராணத்தை வாசித்திருக்கிறீர்களா? என்று இன்னொரு கேள்வியை எழுப்பினார் அடிகளார். அதற்கு உவைஸ் "ஆம்" என்று பதில் கூறினார். றோப்புராணம் ஒரு காப்பியம் என்பது பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகியிருந்த உவைஸ்"க்கு அப் போது தெரியாதிருந்தது. ஆயினும் விபுலாநந்தரின் வழிநடத்துகையில் வழிநடந்த உவைஸ் அவர்கள் தமிழ் கூறு நல்லுலகு ஏற்றிப்போற் றும் இஸ்லாமியத் தமிழறிஞராக விளங்குகின்றார் என் பதை அறியும்போது அடிகளாரின் நல்லாசிரியர் பண்பை நினைத்துப்பார்கிறோம். பல்கலைக்கழக முதலாவதாண்டு நேர அட்டவணைப் படி சிங்களத்தை அல்லது தமிழைத்தான் ஒரு மாண வன் கற்கமுடியும். இருபாடங்களையும் தேர்ந்தெடுத்து கற்க முடியாது. ஆனால், உவைஸ் அவர்களோ, தமிழ், சிங்களம்,பொருளியல் ஆகிய பாட்ங்களைப் பயில விரும்
33
Page 23
பியதால் ஒரு புதிய பிரச்சினையை எதிர்நோக்க வேண் டியிருந்த இதிலிருந்து இவ்வாறு விடுபடுவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த உவைஸ் , அடிகளாரை அண்டி ஆலோசனை கேட்டார். அடிகளாரோ அடுத்த வருடம் தமிழைச்சிறப்புப்பாடமாகக் கற்பதாயிருந்தால், அவ் வாறு கற்பதாக உறுதி கூறினால் மட்டும், இப்பிரச் சினைக்கு ஒரு தீர்வினைக் கூறமுடியும் என்று உவைஸுக் குத் தெரிவித்தார். உவைஸ"ம் இதற்கு ஒப்புதல் செய் யவே பிரச்சினைக்கு நல்லதோர் தீர்வும் கிடைத்தது அதன்படி பல்கலைக்கழகத்தில் அக்காலை நடைபெற் றுக்கொண்டிருந்த தமிழ் படிப்ளோமாக் கற்கை நெறி யின் முதலாவது ஆண்டுப் பாடநெறியைப் பின்பற்று மாறு அடிகளார் ஆலோசனை கூறினார். பல்கலைக் கழக முதலாவதாண்டு தமிழ்ப் பாடநெறியும், தமிழ் டிப்ளோமா முதலாவதாண்டுப் பாடநெறியும் ஒன்றா கவே இருந்ததால் உவைஸ"டைய இச்சிக்கலான பிரச் சினைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்தது. தாம் கொடுத்த வாக்குறுதிக் கிணங்க அடுத்த வருடம் தமிழைச் சிறப் புப்பாடமாகக் கற்க உவைஸ் முன்வந்தார். தமிழ் மாணவர்ளே தமிழைக் கற்க முன்வராத காலத்தில் உவைஸ் முன்வந்து கற்றார். அடிகளாருக்குப் பின் இந்தியப் பல்கலைக்கழகமொன்றில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராக அமரும் பாக்கியம் பெற்ற அறிஞராக, இஸ்லாமியத் தமிழி லக்கியத்தை அறிமுகம் செய்து முன்னெடுத்துச் சென்ற முன்னவராக ஐம்பத்தி ஆறுக்கு மேற்பட்ட நூல்களை தமிழ்கூறு நல்லுலகுக்கு உவந்தளித்த பெருமகனாக, பலவிருதுகள் கெளரவங்கள் பெற்ற பேரறிஞனாக, உவைஸ் இன்று திகழ்கின்றாரென்றால் அதற்கும் அடிக ளாரின் வழிநடத்துகைக்கும் நிறையப் பங்குண்டு.
புலவருக்கு அறிவுரை ஸாஹிறாக் கல்லூரியில் 1918 - 1945 வரை ஏறக் குறைய 28 வருடங்கள் தலைமைத் தமிழ்ப் பண்டித
34
ராக விளங்கியவர் புலவர் மு. நல்லதம்பி அவர். . . இலங்கை சுதந்திரம் பெற்றதை ஒட்டி நாடளாவிய ரீதியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் மணித் தாய் நாடும் மரதனோட்டமும்" என்ற தலைப்பிலான அவரது கவிதை முதற் பரிசைப் பெற்றது. நவாலியூர் சோமசுந்தரப் புலவர் கூட இப்போட்டியில் “மரதன் அஞ்சலோட்டம்' என்ற கவிதையை அனுப்பிப் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது. 'முதுதமிழ்ப் புலவர்" என்ற விருதை தென்னிந்தியாவில் 1941ல் பெற்றவர் புலவர்.
இவரிடம் கற்ற பலர் இன்று சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்திலிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்களான கலாநிதி பதியுத்தீன் மஹ்மூது, அல்ஹாஜ் எம் ஏ. பாக்கீர் மாக்கார், வி. நல்லையா , எம் எச். எம். நெய்னா மரிக்கார் போன்றோரும், அமைச்சர் எம். எல். எம். 'அபுசாலி, முன்னாள் அட்டோனி ஜெனரல் ஏ. சி. எம். அமீர், முன்னாள் ஸாஹிறாக் கல்லூரி அதிபர், கல்விமான் எஸ், எல். எம் ஷாபி மரைக்கார் , நூலக சேவைகள் உதவிப் பணிப்பாள ராகவிருந்த , தமிழறிஞர் எஸ், எம். கமாலுத்தீன் போன்றோரெல்லாம் புலவரிடம் தமிழ் கற்றவர்கள், இப்பெருந்தகை ஸாஹிறாவில் கற்பித்துக் கொண்டி ருந்த காலத்தில் அளுத்தக முஸ்லிம் ஆசிரியர் பயிற் சிக் கல்லூரித் தலைமை ஆசிரியர் பதவிக்கும் தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில் புதிய பதவியை ஏற்பதா? அல்லது இருக்கும் பதவியில் தொடர்வதா? என்பதைத் தீர்மானிப்பது அவருக்குச் சங்கடமான காரியமாகி விட்டது. இந்தியாவிலிருந்த விபுலாநந்த ருக்கு விடயத்தைத் தெளிவாக எழுதி ஆலோசனை கேட்டார் அவர். அடிகளாரோ,
'ஏதாவது வாழ்க்கைக்குச் சிறிது ஊதியந்தரும் தொழிலைப் பார்த்துக் கொண்டு உயர்ந்த தமிழ்த் தொண்டுக்குத் தகுதியெய்தும் வண்ணம் நூலா
35
Page 24
ராய்வதிலும் நூல் எழுதுவதிலும் பொழுது கழிக்கும்படி பண்ணிவாக கேட்டுக் கெர்ள்கிற்ேன் அரசினருத்தியோகத்திலும் ஸாஹிறாக் கல்லூரிக் கடமை சிறந்தது என்பது எனது கருத்து'. என்று புலவருக்கு அனுப்பி வைத்த பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அடிகளாரின் அக்கடிதம் புலவரை ஸாஹிறா.வில் தொடர்ந்தும் பணிசெய்யச் செய்தது. இஸ்லாமியப் பண்பாட்டினதும் சிந்தனையினதும் மத் திய நிலையமாகத் திகழ்ந்த ஸாஹிறாக் கல்லூரியிலும் ஒரு தமிழ்ப்பாரம்பரியம் நிலைபெற அடி எடுத்துக்கொ டுத்தது. புலவர் ஆரம்பித்துவைத்த இப்பாரம்பரியம்பிற் காலை திருவாளர்கள் சோ. நடராசன், நா. சண்முக ரெத்தினம், ஜனாப். எஸ்.எம். உவைஸ் , பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரினால் முன்னெடுத்துச் செல்ல ப்பட்டது அப்பெருமை மிக்க பாரம்பரியத்தைத்தொட ர் பறாது பேணியதில், இக்கல்லூரியில் நீண்டகாலம் கற் பித்தவன், பல பொறுப்பான பதவிகளை வகித்தவன், உதவி அதிபராகவும் பணி செய்தவன் என்ற வகையில், எனக்கும் பங்குண்டு. அதனாற்றான் போலும், யாழ்ப் பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள்,
**நல்ல தம்பி முதல் நஹியா வரை
ஸாஹிறா.வில் ஒரு தமிழ்ப்பாரம்பரியம் உண்டு. அது போற்றப்படுவதும் பேணப்படுவதும் அவசியம்’’.27 என்று எழுதி வைத்திருக்கிறார். இச் செழுமை மிக்க பாரம்பரியத்தில் உருவாகி,இப்பாரம்பரியத்தின் செழிப் புக்கும்பலவகையில் பங்களிப்புச் செய்த பேராசிரியரின் கருத்து இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. கற்றவர்களும் கற்பித்த தர்களும் இணைந்துள்ள இப் பாரம்பரியம் பல தமிழ் அறிஞர்களுக்குக்களம் அமைத் துக்கொடுத்தது. பல தமிழ் அறிஞர்களையும் உருவாக் கியிருக்கிறது. அந்த வகையில் பார்க்கின்றபோது புல
36
வர் நல்லதம்பிக்கு விபுலாநந்தர் கூறிய ஆலோசனை, புலவருக்கு மட்டுமல்ல, தமிழுக்கும், ஸாஹிறாஷக்கும், மிகு பயனுள்ளதாக அமைந்தது. முஸ்லிம் உலகும் விபு லாந்தருக்குக் கடமைப்பாடுடையதாயிற்று.
விபுலாநந்தர் பற்றி * யான் அறிந்த விபுலாநந்த அடிகள்" என்ற மகுடத் தில் அறிஞர் ஏ. எம். ஏ. அஸிஸ் எழுதிய கட்டுரை 1948இல் விபுலாநந்தர் நினைவுமலராக வெளிவந்த, "ஈழமணி" யில் இடம்பெற்றது. *Vidyalaya and Vipu 1ananda" என்ற தலைப்பிலான அஸிஸின் கட்டுரை SP6örgy b 1 9 5896) R. K M1, Souvenir g6iv GaduGiffau gö திது. புலவர் ஆ மு. ஷரிபுத்தீன், ‘சுவாமிகளின் கற்பித்தற் சிறப்பு' என்ற தலைப்பில் அடிகளார் படிவமலரில் கட் டுரை ஒன்று எழுதியிருக்கிறார் காரை தீவில் இருந்து 1969இல் வெளிவந்த இந்த மலரின் ஆசிரியர் திரு. எம். சற்குணம் என்பவர். இந்துசமய, கலாசார உலு வல்கள் திணைக்களம் 1992இல் வெளியிட்ட 'தமிழ றிஞர் விபுலாநந்தர் வாழ்வும் பணிகளும் என்ற நூலிற் கூட "விபுலாநந்தப் பதிகம் பாடியுள்ளார் ஷரிபுத்தீன் புலவர்,
* ஒதவரும் மாணவரை யுள்ளன்புடனே யணைத்தவரின் வேதம் குலம் யாவும் வேறுதெரியா தருகிருத்தி போதம் உரைப்பா யவரின் மேன்மை தெரிந்துமணம் நீதத் துடனே வியக்கும் நேசவிபு லாநந்தனே'
என்று புலவர் பாடும்போது அடிகளாரிடம் கற்ற முஸ் லிம் மாணவனொருவன் அவரை எவ்வாறு நேசிக்கிறான் என்பதைத் தெரிந்துக்கொள்கிறோம். மத வேறுபாடு களற்ற அடிகளாரின் அன்பு மனத்தைப் புரிந்துகொள் கிறோம்.
37
Page 25
கலாநிதி எம். ஏ. நுஃமானும் 'சுவாமி விபுலாந்தரின் மொழிநடை - பழைமையும் புதுமையும்" என்ற மகுடத் தில், அதே, "தமிழ் அறிஞர் விபுலாநந்தர் வாழ்வும் பணிகளும்' என்ற நூலில் ஆய்வுக்கட்டுரை எழுதியிருதி கிறார். இவையெல்லாமே முஸ்லிம் நேசர் சுவர்மி விவு லாநந்தர் மீது முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் சொரிந்த அன்பு மலர்கள் , அன்புக்காணிக்கைகள். பாராட்டு விழாவில் ரி. பி. ஜாயா தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்து அடிகளார் ஆற்றிய அளப்பெரும் தமிழ்ப் பணியை கெளரவிக்கும் முகமாக கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களும், மன்றங்க ளும் இணைந்து கொழும்பு மாநகரசபை மண்டபத் தில் ஏற்பாடு செய்திருந்த பெரும் பாராட்டு விழா வைபவத்தில் அன்றைய முக்கிய பிரமுகர்களெல்லாம் கலந்து கொண்டு சுவாமிகளின் பெருமை பேசினார். கல்வி அமைச்சராகவிருந்த சி. டபிள்யு. டபிள்யு. கன்னங்கரா , பல்கலைக்கழக உபவேந்தர் சேர் ஐவர் ஜெனிங்ஸ் , அரசாங்க சபை அங்கத்தராகவிருந்த சு. நடேசபிள்ளை, வண. பீற்றர் பிள்ளை ஆகியோ ரெல்லாம் அடிகளாருக்கு புகழாரம் சூட்டிய அம்மங். கள விழாவில், அன்றைய முஸ்லிம் பெருந்தலைவர் கல்விமான் ரி. பி. ஜாயா அவர்களும் கலந்து கொண்டு அடிகளாரின் புகழ்பேசி தனது சமுதாயத்தின் சார்பில் தம் கடமையை நிறைவேற்றிக் கொண்டார். மீலாத் விழாவில் சுவாமிகள் இன்னுமொரு நிகழ்ச்சியும் இங்கு குறித்துச் சொல் லப்பட வேண்டிய முக்கியத்துவம் பெறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழா 1947ல் மட்டக்களப்பிலும் மிகப் பெரிய அளவில் கொண்டா டப்பட்டது. மட்டக்களப்பு முற்றவெளியில் ஏற்பாடு செய்யப்ப்ட்டிருந்த இந்த இஸ்லாமியப் பெருவிழா வுக்கு அன்றைய மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர்
Ay Y.
ز تر
எஸ். வி. ஒ. சோமநாதர், மலேசியாவில் இலங்கைத் தூதுவராகவிருந்த அப்போதைய மாவட்ட நீதிபதி எம். மஃறுாப் மட்டக்களப்பு - திருமலைப் பிரதேச பிஷப் ஆகியோரெல்லாம் வருகை தந்திருந்தனர் அப்போதைய மட்டக்களப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் முதலியார் அகமட் சின்னலெவ்வை அவர்க ளின் தலைமையிலும், ஏற்பாட்டிலும் நடைபெற்ற அப்புனித விழாவிலே சுவாமி விபுலாநந்தர் சிறப்புரை நிகழ்த்தினார். நினைத்துப் பார்க்கிறேன் இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது, எனது தாயின் தந்தையார் ஒருபோது நிந்தவூர்ப் பெரிய பள்ளி வாசல்பிரதம தர்மகர்த்தாவாகவிருந்த பொலிஸ் தலை மைசுலைமாலெப்பைப் போடி அவர்கள் ,சுவாமிகள் பற் றியும் அவரின் கல்வி சமுதாயப் பணிகள் பற்றியும் கதை சொல்லுமாற்போல் என்னிடம் கூறியவற்றை யெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். தமிழறிவு மீதூ ரப் பெற்ற எனது "மூத்தப்பா" சுவாமிகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர்; அவருடன் தொடர்புடைய வராக வாழ்ந்தவர்.
மனிதகுலம் அழுது புலம்பிய இறுதிப்பயணம். சமய வரம்புகளைக் கடந்து நின்ற சுவாமி விபுலாநந்தர் இவ்வுலகை நீத்தபோது இன, மத, வேறுபாடுகளின்றி மக்கள் ஆறாத்துயரில் மூழ்கித் தவித்தனர். கொழும் பிலிருந்து மட்டக்களப்புப் புகையிரத நிலையத்தை வந்தடைந்த சுவாமிகளின் பூதவுடலை இறுதியாக ஒரு தடவை கண்ணாரப் பார்த்துவிட பெருந்திரளான மக் கள் திரண்டிருந்தனர். இந்துக்கள், பெளத்தர்கள், கிறி ஸ்தவர்கள், முஸ்லிம்களெல்லாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக சோகமே உருவாக அங்கு அமைதியாக நின்றுகொண்டிருந்தனர்.
39
Page 26
'அடிகளாரின்திருவுடல் சமாதிக்கருகில் அமைக்கப் பட்டிருந்த மேடைக்குக் கொண்டுவரப்பட்டதும் அமைதியான பிரார்த்தனைகள் ஆரம்பமாயின. பெளத்த ஆகமங்களிலிருந்து சிங்கள பாளி மொழி களிற் பிரார்த்தனை செய்யப்பட்டது. பகவத் கீதை யிலிருந்து சில சுலோகங்கள் வாசிக்கப்பட்டன. குர் ஆன் பிரார்த்தனைப் பாடல்கள் ஒதப்பட்டன. கிறிஸ்தவ வேதமான விவிலிய நூலிலிருந்தும் மிக வும் பொருத்தமான பகுதியொன்று வாசிக்கப்பட் டது. திருவாசகமும் திருப்பொற்சுண்ணமும் இசைக் கப்பட்டன. சுவாமி சித்தாத்மானந்தா அவர்கள் சமஸ்கிருதத்தில் பிரார்த்தனை நிகழ்த்தினார் கள். '23 இன, மத வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு இன மதத் தலைவர்களும் ஒன்றிணைந்ததாக சுவாமிகளின் இறுதி அஞ்சலி அமைந்தது. தனது வாழ் காலத்தில் எதை அடிகளார் விரும்பி நின்றாரோ அவரது இறுதி அஞ்சலி யில் அது நிரூபித்துக் காட்டப்பட்டது. அடிகளார் இவ்வுலகை விட்டு நீங்கிய போது அவரின் உள்ள உணர்வுகளைப் புரிந்து அவரின் அன்பைப் பெற்றிருந்த பல முஸ்லிம்கள் மிகவும் கலங்கிப் போய் விட்டார்கள். தங்களின் மிக நெருங்கிய நண்பரை , கெளரவத்துக்குரியவரை இழந்துவிட்ட கவலை அவர் களை ஆட்கொண்டிருந்தது.
**19 - 7 - 1947 சனிக்கிழமை இரவு 1-15 மணிக்கு இவ்வுலகை நீத்த அடிகளாரின் பூதவுடல் திங்கட் கிழமை காலை மட்டக்களப்புக்கு வந்து சேர்ந் தது. கல்லடி உப்போடையை அடைந்த போது, அடிகளார்பால் அன்பு கொண்டிருந்த டாக்டர் கே. கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், குருநேரு முதலியோருடன் எம். எஸ் காரியப்பரும் அந்த வைபவத்தில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
A 0
"பண்டிதர் ஏ. "பெரியதம்பிப்பிள்ளை, பண்டிதர் வி. எஸ். கந்தையா ஆகியோர் அடிகளார் பிரிவுத் துயரைப் பற்றிப் பாடிய பாடல்களைப் படித் தனர்’’ என்று வித்துவான் க. வெள்ளைவாரணர், அடிகளா ரின் பூதவுடல் மட்டக்களப்புக்கு வ்ந்தபோது நிகழ்த் தப்பட்ட சொற்பொழிவுகள், சூடப்பட்ட பாமாலை கள் பற்றி எழுதி வைத்திருக்கிறார். கல்முனைப் பிர தேசத்தில் மிக புகழுடன் அப்போது திகழ்ந்த கன வான் எம். எஸ். காரியப்பர் அவர்கள் விபுலாநந்த அடிகளாரின் இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டு சமூகத்தின் சார்பில் அஞ்சலி உரை நிகழ்த் தியதானது அடிகளாரின் மீது முஸ்லிம்கள் கொண்டி ருந்த அன்பையும் மரியாதையையும் எடுத்தியம்பிற்று
முடிவுரை சுவாமி விபுலாநந்தரின் முஸ்லிம் தொடர்புகளும் வழிநடத்துகையும் முஸ்லிம் சமூக, கல்வி பண்பாட் டுத்துறைகளிலும் இலக்கியத் துறையிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருப்பதை அறிகிறோம். அடி களார் போன்று இந்து - முஸ்லிம் உறவிலும் இவ்விரு இனங்களின் உயர்விலும் அக்கறை கொண்டு செயற் பட்ட பெருந்தகைகள் இன்றின்மைதான், இந்த நாட் டில் இன்று நிலவும் சீர்கேடுகளுக்கும், தவறான ஒருவழிப் பட்ட சிந்தனைகளுக்கும் காரணம் என்று கூறுவது முற்றிலும் நியாயமானது.
, 4
Page 27
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
I 0.
11.
12.
I 3.
சுவாமி சித்பவானந்தர், பூரீவிவேகானந்தர் ஜீவிதம் 1974 பக். 164 இலக்கியக்கட்டுரைகள், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் இலங்கை 1973 பக். 85 மணி. பெ. சு, நூற்றாண்டு விழாக்காணும் சுவாமி விவேகானந்தர் , சிகாகோ சொற்பொழிவுகள், இராமகிருஷ்ண மிஷன் கொழும்பு, 1993, பக் 32 செல்வநாயகம், அருள். (தொகுப்பாசிரியர்) விபுலாநந்தத்தேன், பாரிநிலையம், சென்னை Il 956 , Luji. 3 8 செல்வநாயகம், அருள். (தொகுப்பாசிரியர்) விபுலாநந்தர் இன்பம், பக். 165 - 166 செல்வநாயகம், அருள். (தொகுப்பாசிரியர்) விபுலாநந்த ஆராய்வு, 1965, பக். 128 - 129 அம்பிகைபாகன், ச., விபுலாநந்தர் உள்ளம் 1976 , பக், 42 இலக்கியக் கட்டுரைகள், கல்வி வெளியீட்டுத்திணைக்களம், இலங்கை, 1973 ւյë» 84 செல்வநாயகம், அருள் (தொகுப்பாசிரியர்) விபுலாநந்த ஆராய்வு, 1965 , பக். 129 - 130 செல்வநாயகம், அருள். (தொகுப்பாசிரியர்) விபுலாநந்த இன்பம், பக். 177 ஷெ, பக். 181
செல்வநாயகம், அருள். (தொகுப்பாசிரியர்) விபுலாநந்தத்தேன், 1956 , பக். 76 -78
Kanapathipillai K., Vipulananda - A Biography the Man and his achievements
42
14.
15.
6.
17.
I 8.
19.
20.
2.
22。
Office of the State Minister for Hindu Religious & Cultural Affairs, Colombo, 1991 P. 182
Azeez A. M. A. The West Reappraised Saman Publishers Ltd., Maharagama. 1964, P.66
Kanapathipilai K. Vipulananda - A Biography the Man of his achievements Office of the State Minister for Hindu Religious & Cultural Affairs Colombo 1991 P. I 82
அஸ் - ஸாஹிறா - 1953 பரிசளிப்பு விழா அறிக்கை 1952 ஸாஹிறாக் கல்லூரி கொழும்பு
அடிகளார் படிவமலர் சற்குணம், எம். காரைதீவு 1969 பக் . த
ஷெ பக். 51 - 52
ஷெ பக்: 51
அஸிஸ் எ. எம். எ. யான் ஆறிந்த விபுலாநந்த
அடிகள் ஈழமணி (விபுலாநந்த நினைவு Lid Guri ) 1948 Li. 72
ஷெ பக், 72
ஜெமீல் எஸ். எச். எம். ஏ. எம். எ அளவிஸ் அவர்களின் கல்விச் சிந்தனைகளும் பங்களிப்பும்
கல்முனை ஸாஹிறாக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் 1980 பக்- 23
43
Page 28
23.
24.
25.
26,
27.
28.
The Ceylon. Muslim scholarship Fund Year book 1953 Ninth Volume P. l 25
அளிஸ் எ. எம். எ. யான் அறிந்த விபுலாநந்த அடிகள் ஈழமணி Ն. (விபுலாநந்த நினைவு மலர்) 1948 பக். 72
அஸிஸ் எ. எம். எ. இலங்கையில் இஸ்லாம் கலைவாணி புத்தக நிலையம் , யாழ்ப்பாணம் 35 GðsT q. 1 963 Luši. viii
அம்பிகைபாகன் ச. விபுலாநந்தர் உள்ளம் 1 9 76 ዚ Iá . 63
வளர்பிறை (ஸாஹிறாக் கல்லூரி 85வது ஆண்டு நிறைவு மலர் 1977 - 78 ஆ. முகம்மது நகியா ஸ்ாஹிறாக் கல்லூரி, கொழும்பு 1978 பக் 06
திருநாவுக்கரசு மு (தொகுப்பாசிரியர்) விபுலாநந்த அடிகள் , 1951 பக். 66 - 67
44
Page 29