கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர்

Page 1
- 고l 고
 
 

நூற்றாண்டு வி
ழாச் புனியா - "

Page 2

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை
வவுனியா
காப்பாளர் : திரு. எஸ். தில்லைநடராசா
(அரச அதிபர்) தலைவர் திரு. எஸ். நவரத்தினராசா
(கல்விப் பணிப்டிாளர்) துணைத் தலைவர்: திரு. வே. க. நர்கராசா
' (உதவிக் கல்விப் பணிப்பாளர்)
செயலாளர் திருNகு. அருளானந்தம்
துண்ைச் செயலாளர்கள் :
திரு. ஆ பொன்னையா ,یہ
திருமதி வி. ஆர். ஏ. ஒஸ்வால்ட்
பொருளாளர் t அருட்சகோதரி எம். எம். மடுத்தீன்
(கொத்தணி அதிபர்)
செயற்குழு திரு. க. சீனிவாசகம்
'*' 1 (கொத்தணி அதிபர்)
திரு. எஸ். வீ. பேரம்பலம் (கொத்தணி அதிபர்) திரு. ஜீ. அலக்சாந்தர்
(கொத்தணி அதிபர்) திரு. எம். எஸ். பத்மநாதன்
(கொத்தணி அதிபர்) திரு. ஐ. இராசரத்தினம்
(கொத்தணி அதிபர்) திரு. மு. ஜெயதரன்
(கொத்தணி அதிபர்) திரு. எஸ். மர்மலானந்தகும்ார் (கொத்தணி அதிபர்) திருமதி தெ. முத்துக்குமாரசாமி
(கொத்தணி அதிபர்)
அட்டைப் பட அமைப்பு:
திரு. ச. அ. அருள்பாஸ்கரன்.

Page 3

எங்கள் விருப்ப D
ஈழத் திருநாட்டில் பிறந்த தமிழ்ப் பெரியார்களில் ஒருவர் யாழ் நூல் தந்த சுவாமி விபுலானந்தராகும். கல்விக்கும், மொழிக்கும், சமயத்திற்கும், இசைக்கும் அன்னார் ஆற்றிய தொண்டினால் அவர் பிறந்த நூற்றாண்டிலே அவரின் வாழ் வினை நினைவுகூருகிறோம்.
நூற்றாண்டுக் குழுவின் சார்பில் ஆசிரியர் அகளங்கன் அவர்கள் விபுலா னந்தர் வரலாற்றினை எம் மாணவர் களுக்கு ஏற்ற வகையில் சிறப்பாகத் தந் துள்ளார்கள். அவருக்கு எங்கள் நன்றி.
மாணவர் உலகம் இச்சிறு நூலி னைப் படித்துப் பயனுறவேண்டும் என் பது எங்கள் பெருவிருப்பாகும்.
சி. நவரத்தினராசா, தலைவர், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை, வவுனியா. 1992-09-19.

Page 4
உங்களோடு மனந்திறந்து
காரைதீவு அழகான கிராமம். வெண்மணலாய் விரிந்து கிடக்கும் பூமியில் தென்னையும் கமுகும் செழிக்க ஒரு புறம் கடல் அலை வீசும். மறுபுறம் நெல்வயல் படுத் திருக்கும். மயில்வாகனம் அங்குதான் பிறந்தான்.
தந்தை சாமித்தம்பியும் தாய் கண்ணம்மையாரும் மகிழ்ச்சி அடையும்வண்ணம் மிக நல்ல பிள்ளையாக மயில்வாகனம் திகழ்த்தான். சிறு வயதில் கல்வியில் நாட் டம்கொண்டு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளைக் கற்றான்.
பெரியவர்களைக் கன ம் பண்ணுவதிலும், தாய் தந்தை சொற் கேட்பதிலும் பற்றுடையவனாக விளங்கி னான். கத்தோலிக்க திருச்சபை, மெதடிஸ்த சபைகள் நடாத்திய பாடசாலைகளில் கல்வி கற்றதனால் பாதிரி மார்களது சேவை மனப்பாங்கினைப் புரியமுடிந்தது.
ஆசிரியர்களை மதித்தல், கட்டொழுங்குகளுக்குக் கீழ்ப்படிதல், கடமையை உணர்ந்து செயற்படல் ஆகிய வற்றில் மயில்வாகனம் உயர்ந்து நின்றான். பெருமதிப்புப் பெற்றான். ஆசிரியர்களும் பெரியவர்களும் வயதில் மூத் தோரும் மயில்வாகனனை வாழ்த்தினர்.
பல நூல்களைக் கற்றான். விஞ்ஞானக் கல்வியில் நாட்டம் கொண்டான். பரீட்சைகளில் தேர்ச்சி அடைந் தான். பாடசாலை ஓய்வு நேரங்களில் ஆசிரியர்களை நாடி தெரியாத விடயங்களை அறிந்துகொண்டான். தனது கல்விக்கு வழிகாட்டிய ஆசிரியர் குஞ்சித்தம்பி அவர்களை நினைந்து போற்றுகையில்,
*அம்புவியில் செந்தமிழோடு
ஆங்கிலமும் எனக்கு உணர்த்தி அறிவு தீட்டி வம்பு செறி வெண்கமல வைத்த குஞ்சுத் தம்பி எனும் பெயர் உடையோன் தண்டமிழின் கரை கண்ட
2

தகைமையோன் தன்
செம்பதும மலர்ப்பதத்தைச்
சிரத்திருத்தி எஞ்ஞான்றும் சிந்திப்பேனே'. எனத் துதிக்கின்றான்.
ஆசிரியராகப் பணியாற்றினான். பயிற்சி பெற்றான்.
பொறியியல் கல்லூரியில் விஞ்ஞானம் கற்றும், கற்பித்தும் தன்னை வளர்த்துக்கொண்டான். சிறந்த ஆசிரியராகத் திகழ்ந்தான். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடாத்திய பண்டிதத் தேர்வில் சித்தியடைந்து பண்டிதர் மயில்வாகனம் ஆனான்.
* முயற்சி திருவினையாக்கும் என்பது முதுமொழி. முயன்று படித்து இலண்டன் பல்கலைக்கழகம் நடாத்திய பி. எஸ்சி பட்டத் தேர்வில் தேறி பட்டதாரியானான். முயற்சியால் உயர்ந்த மயில்வாகனம் உன்னத மனிதனாக மதிக்கப்பெற்றான். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் அதி பராகச் செயலாற்றி உயர்ந்தான்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் அமைத்து பல பண்டிதமணிகளை நாட்டிற்கு அளிக்க வழி சமைத்தான். ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் மேற்கத்திய நாகரிகத்தில் மூழ்கி ஏனையோரையும் ஆங்கிலேயராக்கும் கால கட்டத் தில், மயில்வாகனம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உந்து சக்தியாகச் செயற்பட்டது, அவர் செய்த ஒரு புரட்சி யாகும்.
தமிழ்த் தொண்டு, சமயத் தொண்டு, சமுதாயத் தொண்டு, என தன்னை அர்ப்பணிக்க வழிதேடினான். ‘பூரீ ராமகிருஷ்ண சங்கம் அதற்கு வழிகாட்டியது. துற வற வாழ்வு இத்தொண்டிற்குப் பொருத்தமானது என தீர்மானித்தான். துறவியானான். பிரபோத சைத்தன்னி யர் எனும் பிரமச்சரியப் பெயரைப் பெற்று பின்னர் சுவாமி சிவானந்தாவின் ஞான உபதேசம் பெற்று சுவாமி விபுலானந்தர் ஆனார்.
ஆங்கில இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த் தார். சமயக் கட்டுரைகளை எழுதினார். கவிதைகள்ை இயற்றினார். மதங்க சூளாமணி எனும் நாடக நூலை எழுதினார். பல பாடசாலைகளை அமைத்து, கல்வித் தொண்டு செய்தார். அப்பாடசாலைகளால் இன்று பல் லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்று வருகின் றனா.
3

Page 5
ஏழை மாணவர்களது இன் னலை ப் போ க் க, அனாதை ஆச்சிரமங்களை அமைத்து, கல்வியூட்டி சமுதா யத் தொண்டு செய்தார். மட்டக்களப்பு சிவானந்த வித்தி யாலயத்தோடு இணைந்து அமைந்த அந்த இல்லங்கள் இன்றும் அத்தொண்டினைத் தொடர்ந்து ஆற்றுகின்றன. சுவாமி விபுலானந்தர் விட்ட குறையை சுவாமி நடராஜா னந்தா தொட்டார். அவர் தொட்ட குறையை இன்று சுவாமி ஜீவானந்தா அவர்கள் செய்து வருகின்றார்கள்.
தான் கற்ற விஞ்ஞானவியலை, தனது இசை ஆராய்ச் சிக்குப் பயன்படுத்தி பழந்தமிழர்களது இசைச் செல்வங் களாயிருந்து மறைந்து வழக்கொழிந்த யாழ் வகைகளை மீள உருவமைத்து இசை உலகிற்குப் புது மெருகேற்ற, யாழ் நூலை ஆக்கித்தந்தார்.
துறவி இளங்கோ சிலப்பதிகாரத்தைத் தந்து சாகா வரம் பெற்றார். துறவி விபுலானந்தர் யாழ் நூலை நமக் குத் தந்து நம்மிடையே சாகா வரம் பெற்றார். தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்த்துறை பேராசிரியராகவும், இலங்கைப் பல்கலைக் கழகத்தின் 燃 தமிழ்த்துறை பேராசிரியராகவும் திகழ்ந்து தமிழ்த்
தாண்டு செய்தார்.
ஈழ மண்ணில் பிறந்து தமிழகமெங்கும் புகழோடு சேவை செய்து, தமிழுக்கும், சமயத்திற்கும், சமுதாயத் திற்கும் ஈழ மண்ணில் தொண்டாற்றிய பேராசான் - வித்த கன் விபுலானந்த்ர், முயற்சியால் முன்னேறிய மாபெரும் மனிதன். எல்லோரையும் நேசித்த உத்தமன். அவரது வாழ்க்கை வரலாறு நாமெல்லோரும் அறிந்திருக்க வேண் டிய அற்புதக் களஞ்சியம். நமது முன்னேற்றத்திற்கு உத வும் உந்து சக்தி அது.
மாணவர்களாகிய நீங்கள் முயற்சி உடையவர்களா கத் திகழ வேண்டும். உங்களால் இந்த நாடு உயரவேண் டும். எனவேதான் அவரது வாழ்க்கையை சிறிய நூல் வடி வில் உங்கள் முன் தந்திருக்கிறோம். அத்துடன் உங்களது உயர் கல்விக்கான புலமைப் பரிசில் நிதியத்தையும் அவரது பெயரினால் ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் நல்வாழ்வை வளமாக்கிக்கொள்ளுங்கள். W
ச. அருளானந்தம்,
செயலாளர், கவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை.
4


Page 6

சுவாமி விபுலானந்தர்
- அகளங்கன் -
இந்து மகா சமுத்திரத்தின் எழில் முத் தெனத் திகழ்வது ஈழமணித் திருநாடு. ஈழநாட்டின் கிழக்கு மாகா ணத்தில், மட்டக்களப்புப் பட்டினத்தின் தென் திசையிலே, இருபத்தியெட்டு மைல் தொலைவிலே, அமைந்திருப்பது காரைதீவு என்னும் கிராமம்.
அக்கிராமத்தில் வாழ்ந்த, சாமித்தம்பி, கண்ணம்மை தம்பதிகளின், இல்லற வாழ்வின் நல்லறப் பேறாய், கர ஆண்டு, பங்குனித் திங்கள், பதினாறாம் நாள் (29-3-1892) ஞாயிற்றுக்கிழமை ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
அழகொளி திகழப் பிறந்த அக்குழந்தைக்கு, முரு கப் பெருமானின் பெயரான மயில்வாகனன் என்ற பெய
ரைச் சூட்டி மகிழ்ந்தனர்.
கண்ணெனத் தகும் எண்ணெழுத்தைக் கற்பிக்க விரும்பிய பெற்றோர் மயில்வாகனனைக் காரைதீவிலிருந்த நல்லரத்தின ஆசிரியரிடம் அனுப்பிவைத்தனர்.
ஐந்தாம் வயதில் கல்வியை ஆரம்பித்த மயில்வாக னன், தனது பத்தாம் வயதில் கல்முனை மெதடிஸ்த்த பாடசாலையில் சேர்க்கப்ப்ட்டான்.
"சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’’ என்ற சங்கத் தமிழ் வாக்குப்படி, தன் மகன் மயில்வாகனனைச் சான்றோனாக்க விரும்பிய சாமித்தம்பி, மட்டக்களப்பு நகரின் மத்தியிலிருக்கும் சென். மைக்கல் உயர்தர ஆங்கி லப் பள்ளியில் சேர்த்தார்.

Page 7
அப்பள்ளியில், தனது ஒழுக்கத்தினாலும், நுண் ணறிவினாலும் ஆசிரியர்களைப் பெரிதும் கவர்ந்து, நல் மாணாக்கனாக மயில்வாகனன் விளங்கினான். த ன து கணித நுட்ப அறிவினால், ஆசிரியர்களையே வியப்படை யச் செய்த மயில்வாகனன் 1908ம் ஆண்டில், தனது 16ம் வயதில், கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதலாவது வரிசையில் தேர்ச்சி பெற்றான்.
கலாசாலை விடுமுறைக் காலங்களில், காரைதீவு வித்துவான் பொ. வயித்தியலிங்க தேசிகரிடஞ் சென்று, கன்னல் தமிழின், இலக்கண, இலக்கியங்களையும், வட மொழி நூல்கள் சிலவற்றையும், ஜயந்திரிபறக், கசடறக் கற்பதில் மயில்வாகனன் மகிழ்ச்சியடைந்தான்.
1911ம் ஆண்டு கொழும்பு சென்று, ஆங்கில ஆசிரி
ர் பயிற்சிக் கழகத்தில் சேர்ந்து பயின்று, தேறி, 1912ல்
ஆசிரியச் சான்றிதழ் பெற்ற மயில்வாகனன், அதே காலத் தில் தமிழாராய்ச்சியிலும் கருத்துச் செலுத்தினான்.
இக்காலத்திலேதான் மயில்வாகனன், தமிழறிஞர் களாகப் போற்றப்பட்ட தென்கோவைக் கந்தையாபிள்ளை, முதலியார் சிற். கைலாசபிள்ளை, சி. வை. தாமோதரம் பிள்ளை ஆகியோரிடம் தமிழிலக்கண, இலக்கியங்களைத் துறைபோகக் கற்றான்.
மட்டக்களப்பில் இரண்டாண்டுகள் ஆசிரியப் பணி புரிந்த பின், 1915ல் மீண்டும் கொழும்பு சென்று, அர சினர் பொறியியற் கல்லூரியில் சேர்ந்து, 1916ல் விஞ் ஞானக் கலையில் டிப்ளோமா (Diploma) பட்டம் பெற் றான .
அதே ஆண்டில் மயில்வாகனன், மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டித பரீட்சையில் தேர்ச்சி பெற்றுப் “பண்டி தர் மயில்வாகனர்" என அழைக்கப்பட்டான்.
பண்டித மயில்வாகனனார், 1917ல் யாழ்ப்பாணஞ் சென்று, அங்குள்ள சம். பத்திரிசியார் (St. Patrick’s) உயர்
8

தரக் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகப் பணி புரிந்தார். இக்காலத்தில், இலண்டன் பல்கலைக்கழக விஞ்ஞான் மாணிப் பரீட்சையில் சித்தியெய்தி, (B. Sc.) விஞ்ஞானப் பட்டதாரியாகினார்.
1917ம் ஆண்டு தொடக்கம், யாழ்ப்பாணத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் இவருக்குச் செல்லப்பா சுவாமிகளின் முதன்மைச் சீடரான யோகர் சுவாமிகளின் தொடர்பு கிடைத்தது.
யோகர் சுவாமிகளுடன் பழகிய பண்டிதர் மயில் வாகனனாரின் உள்ளம், தூய்மை பெறலாயிற்று. இயல் பாகவே துறவுள்ளங் கொண்ட இவர், படிப்படியாகப் பக்குவ நிலையை அடையலானார்.
1920ம் ஆண்டில் யாழ்ப்பாணம் மானிப்பாய் இந் துக் கல்லூரியின் முதல்வர் (Principal) பதவி பெற்று, அப்பதவிக்குச் சிறப்புச் செய்தார்.
வாலறிவன் தற்றாள் தொழுவதே கற்றதனால் ஆய பயன் என்பதனையும்; பிறப்பாம் பேதைமையைப் போக் கும் சிறப்பான செம்பொருளைக் காண்பதே அறிவின் பயன் என்பதனையும், ஆத்ம விசாரங்கொண்டு சிந்தித் துத் தெளிந்த பண்டிதர் மயில்வாகனனாருக்கு, 1922ல் உயர்திரு. சர்வானந்த சுவாமிகளின் தரிசனங் கிடைத்தது.
மாயப் பொய் உலகின் மாண்டறிந்து, துறவு பூண் டொழுக நினைத்த பண்டிதர், சென்னை பூரீ ராமகிருஷ்ண சங்கத் திருமடத்தைச் சேர்ந்து 'பிரயோத சைதன்னியர்' என்னும் பிரமச்சரியத் திருநாமம் பெற்றார்.
பின்பு, 1924ல் சித்திரை மாதத்துச் சித்திரை நட் சத்திரப் பூரணைத் திருநாளில், சிவானந்த சுவாமிகளிடம் ஞானோபதேசமும், காவியுடையும், சுவாமி விபுலானந்தர் என்னும் தீட்சா நாமமும் பெற்று, இராமகிருஷ்ண சங்கத் துறவிகளுள் ஒருவரானார்.
9

Page 8
சுவாமி விபுலானந்த அடிகளார் ஈழநாடு திரும்பிய தும், பூgராமகிருஷ்ண சங்கத்தின் கிளை நிறுவனமொன்றை நிறுவினார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். மாணவரில்லங்களை அமைத்தார். •
கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை முதலிய இடங்களில் ஆச்சிரமங்களைத் தோற்றுவித்தார். மட்டக் களப்புக் கல்லடி உப்போடையில் இருக்கும் சிவானந்த வித்தி யாலயமும், ஏழை மாணவரில்லமும், சுவாமிகளுக்கு உயிர் போன்று உவப்பானவை.
யாழ். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வர வித்தி யாலயம், திருகோணமைை இராமகிருஷ்ண மிசன் இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக் கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம் என்பவையும் அடிகளாரால் உருவாக்கப்பட்ட, குறிப்பிடத்தக்க கலா நிலையங்களாகும்.
1931ல் சுவாமி விபுலானந்தர் மீண்டும் தமிழ்நாடு சென்று, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக இருந்து, மூன்று ஆண்டுகள் தொண்டு புரிந்தார்.
1933 முதல் 1943 வரை சுவாமிகள், பல துறை களிலும் ஈடுபட்டு உழைத்துப், பல்வேறு ஆய்வுக் கட்டுரை களையும், கவிதைகளையும், மொழி பெயர்ப்புக்களையும் வெளியிட்டார்.
1937ல் திருக்கைலாய யாத்திரை செய்து திரும்பி னார். கங்கைக் கரையில், காசியில், மாயாவதி ஆச்சிர மத்தில் வசித்த காலமும் இந்தக் காலப் பகுதியே.
1943ல் ஈழநாடு திரும்பி, இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக இருந்து பணி யாற்றினார்.
1947ல் யூன் மாதம் 5ம் 6ம் திகதிகளில் தமிழகத்தி லுள்ள திருக்கொள்ளம் பூதூர் ஆளுடைய பிள்ளையார்
10

சன்னிதியில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினால், இவரது ஒப்புயர்வற்ற உன்னத ஆய்வு நூலாம் யாழ் நூல் அரங் கேற்றஞ் செய்யப்பட்டது.
இந்நூல், பழந் தமிழரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விரித்துரைக்கும் ஒரு முதல் நூல். இப்பெருநூல் பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய, வில்யாழ், பேரியாழ், மகரயாழ், செங்கோட்டியாழ், சகோட யாழ் என்பவற்றுள், முதல் நான்கினைப்பற்றிப் பொது வாகவும், சகேர்டயாழ் பற்றிச் சிறப்பாகவும் கூறுவதால் யாழ்நூல் என்னும் பெயர் பெற்றது.
சகோட யாழ் என்பது; ச+கோஷ+யாழ். நல்ல ஓசையையுடைய யாழ். “செம்முறைக் கேள்வி" எனும் பழந்தமிழ்ச் சொல்லின் மொழிபெயர்ப்பாக, வடமொழி யில் வழங்கப் பெறுவது. ஆயிரம் ஆண்டுகளாக மறைந்து போன இதன் வடிவத்தினையும், இயக்கத்தினையும், பிற யாழின் வடிவங்களையும், கணித நுட்பத்தினை அடிப் படையாகக்கொண்டு, வடமொழி, தமிழ்மொழி, இசை நூல் முடிபுகளையும் ஒப்பவைத்து, ஆராய்ந்து வெளிப் படுத்தும் இறவாத புகழுடைய புதுநூல். அடிகளாரின் பத்து ஆண்டு கால ஆராய்ச்சியின் பயனாய்க் கிடைத்த அரும்பெருஞ் சொத்தாகும்.
யாழ்நூல் அரங்கேற்றத்தின் பின், ஈழநாடு திரும் பிய சுவாமி விபுலானந்தர் இன்னும் எதை எதையெல் லாம் ஆராய விரும்பியோ, 1947ம் ஆண்டு யூலை மாதம் 19ம் நாள் இவ்வுலகைத் துறந்து வானுறையும் தெய்வத் துள் ஒருவரானார்.
அடிகளாரின் பூத உடல் மட்டக்களப்புச் சிவானந்த வித்தியாலயத்தில் உள்ள தபோவனத்தில் அடக்கஞ் செய் யப்பட்டுள்ளது. அடிகளாரின் புகழுடல் தமிழர் இதயத் தில் தீபமாய் ஏற்றப்பட்டுள்ளது.
அடிகளாரின் நூல்களில் குறிப்பிடத்தக்க இன்னொரு நூல் மதங்க சூளாமணி ஆகும். இது நாடக இலக்கண
1

Page 9
அமைதி கூறும் ஒரு நூல். (மதங்கா - நாடக ஆசிரியர், சூளாமணி - சிரோரத்தினம்.) நாடக ஆசிரியர்களின் சிரோ ரத்தினம் (நாகரத்தினம்.) போன்ற ஷேக்ஸ்பியரின் நாட கங்களைத் தமிழ்மொழி, வடமொழி நாடகங்களோடு தொடர்புபடுத்திக் கூறும் இந்நூல், அடிகளாரின் உரை நடைக்கும், செய்யுள் நடைக்கும், மொழிபெயர்ப்பு வன் மைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குவது.
மற்றும்; கர்மயோகம், ஞானயோகம், விவேகானந்த ஞானதீபம், நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை, விவே கானந்த சம்பாஷணை முதலான பல மொழிபெயர்ப்பு நூல்களையும்,
இலக்கிய ஆய்வு, ஒப்பியல், இசையாராய்ச்சி, சம யம், மொழியியல், கல்விச் சிந்தனைகள், அறிவியல், மறு மலர்ச்சிச் சிந்தனைகள், தலயாத்திரை, உமாமகேசுவரம், நடராஜ வடிவம், கலைச் சொல்லகராதியின் ஒரு பகுதி போன்ற உரைநடைகளையும்,
கணேச தோத்திரப் பஞ்சகம், கதிரையம்பதி மாணிக் கப் பிள்ளையார் இரட்டை மணி மாலை, குமாரவேணவ மணி மாலை, கங்கையில் விடுத்த ஒலை, முதலான பல கவிதை நூல்களையும் உருவாக்கினார்.
வேதாந்த கேசரி என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கும், பிரபுத்த பாரத் என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கும், இராம கிருஷ்ண விஜயம், செந்தமிழ் ஆகிய தமிழ்ச் சஞ்சிகைகளுக் கும் ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதினார்.
இந்த நூற்றாண்டில் வாழ்ந்து இறையடி சேர்ந்த
எம் அடிகளின் புகழ், என்றும் நிலைத்து நிற்கும். வாழ்க அவர் நாமம். வளர்க அவர் வளர்த்த தமிழ்.
முற்றும்.
(ஆதாரம்: கலைக் கழஞ்சியம் - 1963. தமிழ் வளர்ச்சிக்கழகம், சென்னை
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை.)
12

சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்களிற் சில.
உ
6
J:
யாழ்நூல்.
மதங்க சூளாமணி.
நடராச வடிவம்.
உமாமகேஸ்வரம். கலைச் சொல்லாக்கம். (ஒரு பகுதி) பண்டைத் தமிழர் இசைக்கருவிகள்.
விண்ணுலகம். - தமிழ்மொழியின் தற்கால நிலைமையும் தமிழர்தய 5L—60)LDtI|LD.
9. ஆங்கிலவாணி. 10. மேற்றிசைச் செல்வம். 11. நாகரிக வரலாறு. 12. எகிப்திய நாகரிகம். 13. யவனபுரத்துக் கலைச் செல்வம், 14. பூஞ்சோலைக் காவலன்.
கவிதை:
1. கணேச தோத்திர பஞ்சகம். 2. குமாரவேணவ மணிமாலை. 3. கதிரையம்பதி மாணிக்கப் பிள்ளையார் இரட்டை
மணிமாலை. 4. சுப்பிரமணிய சுவாமிகள் இரட்டை மணிமாலை. 5. கங்கையில் விடுத்த ஒலை, ஈசன் உவக்கும் மலர்கள்,
முதலான தனிப்பாடல்கள்.
மொழிபெயர்ப்பு:
1. விஞ்ஞான தீபம். 2. நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை. 3. விவேகானந்தர் பிரசங்கங்கள். 4. விவேகானந்த ஞானதீபம், சம்பாஷணைகள். 5. கருமயோகம். 6. ஞானயோகம் 7. இராசயோகம், 8.
பதஞ்சலி சூத்திரம்.
13

Page 10
மொழிபெயர்ப்புக் கவிதை
அஞ்சினர்க்குச் சதமரணம், அஞ்சாத நெஞ்சத்(து)
ஆடவனுக்(கு) ஒருமரணம், அவனிமிசைப் பிறந்தோர்
துஞ்சுவர்என், றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்கும்
துன்மதிமூ டரைக்கண்டாற் புன்னகைசெய் பவன்யான்.
இன்னலும் யானும்பிறந்த தொருதினத்தில் அறிவாய்;
இளஞ்சிங்கக் குருளைகள் யாம்; யான் மூத்தோன் எனது பின்வருவது இன்னல் எனப் பகைமன்னர் அறிவார்.
பேதுறல் பெண்ணணங்கே யான் போய் வருதல் வேண்டும்.
(சுவாமி விபுலானந்தர்)
ஈசன் உவக்கும் இன் மலர்கள் மூன்று
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ மாப்பிளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ வாட்ட முறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலித் பூவுமல்ல நாட்ட விழி நெய்தலடி நாயகனார் வண்டுவது
14


Page 11
உங்கள் உழை உருவான நிதி உங்களது செ உள்ள மதில் ஏ உழைப்பால் உயர் விபுலா படித்து முன்ெ பயன்பெறும்
நாடும் நம் ம நலம் பெற்று உறுதி கொண் இன்றே எழுக
என்றே இருக்
சென், ஜோசப் கத்தோலிக்க
 

臀
ப்பால்
யத்தை ாத்தாய்
ாற்று
உயாநத
னந்தரைப்போல் னேறிப் வண்ணமும் க்களும்
வாழவும் ாடு உழைக்க
கிறோம்.
- விழாச் சபை,
அச்சகம், மட்டக்களப்பு.