கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உடற்றகன உபந்நியாசம் (நா. ம. சோமசுந்தரம்)

Page 1
|-
உடற்றகன
ܦ
வைத்தியசி
ܗ
சுந்
DIT. L.D. (33FTTID
 

உபந்நியாசம்
ரோன்மணி
தரம் நினைவேடு

Page 2

சமர்ப்பனி,
எங்கள் வாழ்வின் இரலியாகி ஏற்ற கல்வி ஒழுக்கநெறி
சங்கமமாகச் செய்துலத்.ை தகும்வழி செல்ல நெறிபடுத்தி
இந்த உலகிற் சேவைநிதிைத்
திறைதா ளணைந்த எம்தலைவா
சுந்தர வுளத்தைப் போற்றித்தாள் இதழுதந நூலைச சமர்ப்பித்தோம்.
மனைவி - சிவயோகநாயகி பிள்ளைகள் - சிவசுந்தரி
யோகசுந்தரம் தேவசுந்தரம்
ஜெயசுந்தரி

Page 3
குருபாதம்
ாம் - பாழ - நலனல திருஞானசம்பந்தர் ஆகின இரண்டாவது குருமதறா சந்நிதானம்
* ■ பரவறு சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த
பரமாசார்ய சுவாமிகள்
அஞ்சலிச்செய்தி,
திரு மயில்வாகனம் சோமசுந்தரம் என்பவரை நாமும் நாடும் நன்கு அறிவோம். சைவமதத்தின் பெருமை ஆலயங்களும் சமய விழாக்களும் சிறப்புற
ஐடபெறுவதிலே தங்கியுள்ளன். அவ்வழி ஆலய வழிபாட்டையும் சமயச்
பூங்குகளையும் நடத்துவதற்கு வேண்டிய பொருள்கள் நன்கு அமைய 'မြီစီင်္ဂါး၊ ဝါးပြီ. அவற்றைத் தரமுள்ளவையாகச் சுந்தரம் மருந்து கடை என்பதொரு நிறுவனம் அமைத்து இதுவரை காலமும் வழங்கிக் கொண்டிருந்தவர் சோமசுந்தரம் அவர்கள் அவருடைய இழப்பு எல்லோருக்கும் மனவேதனையைத் தந்தது. அவருடைய பிரிவால் துயருறும் குடும்பத்தையும்
'அவரைச் சார்ந்தவரையும் இன்றவன் ஆசீர்வதிப்பாராக.
1 ܬܪܬ............................................... அமார் மயில் வாகனம் சோமசுந்தரம் அவர்களுடைய ஆத்மா
ܠܐ ܡ ܡ ܒ ܕ ܐ ܢ ܝ ܒ ܨ ܒ
சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். இவரால் ஆரம்பிக்கப்பட்ட கந்தரம் மருந்துக் கடையைத் தொடர்ந்து நடத்திச் சமயத்திற்கும் சமூகத்திற்கும் தொண்டாற்ற இறைவன் ஆசீர்வதிப்பாராக " "
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
பூஞரீலபூர் சுவாமிகள்

வைத்தியசிரோன்மணி
நா.ம. சோமசுந்தரம் அவர்கள்
தோற்றம் 04, 07, 1920
மறைவு : 26, 03. 1999 திதிநிர்ணயம் ஆண்டுவெகு தானியவின் ஆந்தஞ்சேரி பங்குனியில் ஈண்டுபூர்வத்தசமி எய்தியநாள் - ஆண்டகையாம் சோமசுந்த ரப்பெரியோன் துர்சிடப் நித்தரன்தாட் சேமாழி ஆற்ற தினம்.

Page 4

திருநெல்வேலி பூனி முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதமகுரு அவர்களின் பிரார்த்தனையுரை
தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று.”
என்ற வள்ளுவர் வாக்குக்கு உயிரூட்டி வாழ்ந்தார் அமரர் மயில்வாகனம் சோமசுந்தரம் அவர்கள்
இவர் தான் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த பெருமகன் என்றால் அதை யாரும் மறுக்க முடியாது. எமது கிராமத்தில் மட்டுமன்று. இலங்கை, இந்தியா ஏன் மேலை நாடுகளிலும்கூட சுந்தரம் பிறதர்ஸ் (எம். எஸ். மருந்தகம்) மருந்துக்கடை என்ற பெயர் நிலைபெற்றதாகிவிட்டது. ஆலய வழிபாட்டிற்கும் ஏனைய சைவ சமய விழாக்களுக்கும் தேவையான சகல திரவியங்களையும் தரமறிந்து தரவல்ல பெருமகனார். அதுமட்டுமல்ல ஆயுள்வேத வைத்தியத்தில் ஒர் வைத்திய கலாநிதி. இப்படிப்பட்ட சிறப்புக்களோடு வாழ்ந்த அமரர் சோமசுந்தரம் அவர்கள் தனது 80வது வயதில் இவ்வுலக வாழ்வைத் துறந்து விண்ணுலகப் பயணத்தை
மேற்கொண்டுள்ளார்.
அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய முத்துமாரி அம்பாளை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
முத்துமாரியம்மன் தேவஸ்தானம், திருநெல்வேலி
1999.04.f4
சிவபூரீ சி. கிருபாகரக் குருக்கள்

Page 5
கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி சமாதான நீதிபதி அவர்களின்
ஆத்ம சாந்திப் பிரார்த்தனை உரை
"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்”
என்பது வள்ளுவர் வாய்மொழி. இதனை எமக்கு உணர்த்தி நிற்பது உலகம் போற்றும் உத்தமர் சிலரின் சீரிய வாழ்வாகும். சொல்லாலும், செயலாலும், உள்ளத்தாலும் தமக்கும் பிறர்க்கும் நலம் பல ஆற்றிய பெருமக்களில் அமரர் சோமசுந்தரம் அவர்கள் எங்கள் போற்றுதலுக்குரியவர். ஆழமான கருத்துடன் அமைதியாகப் பேசி அனைவரதும் உள்ளத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்தவர் இவர். ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக எமது தேவஸ்தானத்துக்கும் பெரியாரின் மருந்துக்கடை நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அதனால் அடிக்கடி நல்லவற்றைப்பேசி மகிழும் வாய்ப்பும் எமக்கு ஏற்பட்டது. ஆனால் அன்னாரின் இறுதியஞ்சலியிற் கலந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன். எனது கடுஞ் சுகவீனங் காரணமாகப்படுக்கையிற் பல நாள் இருக்க வேண்டிய நிலை
ஏற்பட்டமையே காரணம்.
எனினும் பெரியாருக்கு அஞ்சலி உரை எழுதி என்னைத் திருப்திப் படுத்துகிறேன். பணம் தரும் துறையாக மாத்திரம் அமைக்காது ஆத்மீகத்துக்கு வழிகாட்டும் தூய நெறியாக நடத்தி, பல சமய, சமூக நிறுவனங்களிற் பங்குகொண்டு பணியாற்றிய பெருந்தகை இவர். இன்று இப்பெரியாரின் இடத்துக்கு இட்டு நிரப்ப முடியாத இடைவெளி ஒன்று தோன்றியுள்ளது. இதனால் அறிவுள்ளங்கள் பல அவலமுறுகின்றன. என் செய்வோம். இறைவனின் நியதியை யார்தான் மீறமுடியும். நடக்க வேண்டியது நடக்கிறது. எனவே நாம் துயரப்படுவதோடு அமரர் சோமசுந்தரம் அவர்களின் தூய வாழ்க்கைப் பாதையை நினைவிலிருத்தி அன்னாரின் பொன்னார் திருவடிக்கு வணக்கம் செலுத்தி அமைதியடைவோமாக.
தலைவர் தங்கம்மா அப்பாக்குட்டி பூரீதுர்க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை இலங்கை
፲99904 ፲3

N. NANTHAKUMAR 95/1, Stanley Road, Jaffna.
யாழ். வண். வட கிழக்கு கொண்டலடி விநாயகர் ஆலய தனாதிகாரியின் ஆசிகள்
'நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்திவ்வுலகு."
என்ற குறள் மணிவார்த்தைக்கு அமைய நேற்று இருந்தவர் இன்று இல்லை என்றாலும் அமரர் சோமசுந்தரம் எம் மனக் கண் முன் என்றுமே உளர். இறைவனாற் படைக்கப்பட்ட ஜீவ ஆத்மாக்களில் மானிட ஆத்மாவே மேலானது. ஏனெனில் இறைவனைப் போற்றிப் பாடித், தொண்டுகள் ஆற்றி, வழிபாடு செய்ய மானிடப் பிறவியினாலேதான் முடியும். அப்படிப்பட்ட மானிடப் பிறவி எடுத்தவருள் அமரரும்
ஒருவா.
அன்பு, பண்பு, அடக்கம், ஆற்றல், இறைபக்தி குருபக்தி மிக்கவர். எங்கு கோவில்களில் கும்பாபிஷேகம், சங்காபிஷேகம், மகோற்சவம் என்றால் அங்கு அவரைக் காணலாம். “காயமே இது பொய்யடா, காற்றடைந்ததொரு பையடா’ என்ற மொழிக்கமையக் காயமாகிய உடம்பு அழிந்ததே அன்றி காற்றாகிய ஆன்மா அழியவில்லை. ஆன்ம ஈடேற்றத்திற்காக இறைவனால் ஆட்சி கொள்ளப்பட்டு மீண்டும் சிவப்பிறவி எடுப்பார் என்பதில் ஐயமில்லை. அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கொண்டலடி விநாயகனின் திருப்பாதங்களைப் பிரார்த்திப்பதோடு . அவர் தம் பிரிய பத்தினிக்கும், பிள்ளைகளுக்கும், மருமக்களுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் எனது அனுதாபத்தினைத் தெரிவிக்கின்றேன்.
வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்”
ஓம் சாந்தி!சாந்தி!சாந்தி!
82/2, அரசடி வீதி, நடராஜா நந்தக்குமார் யாழ்ப்பாணம். 1999.04.11

Page 6
சோமசுந்தரப் பெரியோன் - பண்டிதர் சி. அப்புத்துரை
பயன்மரமுள்ளூர்ப் பழுத்ததென்னப் பண்பு நயனொளிர வாழ்வயர்ந்த நல்லோன் - துயர்திர்ந்தான் சோமசுந்த ரப்பெரியோன் தொல்பிறவிநித்தரன்தாட்
தேமதுரத்தாளின்பஞ் சேர்ந்து
ஊருணியொன் றுTர்நடுவே யுண்ணிர்நிறைந்ததெனக் காருனியத் தோருருவாய்க் கண்டுவந்த - சீரியனாம் கந்தர் மடச்சோமசுந்தரனார் கண்ணுதலோன்
கந்தமலர்த்தாள்சேர்ந்தான் காண்.
சொந்தபந்தம் என்னுந் தொடக்கறுத்து நோய்கண்டு சிந்தைவழித் தீர்வைச் செயற்படுத்துஞ் - சுந்தரனார் சித்த மருத்துவஞ்சேர் செம்மை தெளிவித்தின்
றத்தனடி யேய்ந்தின்புற்றான்.

உடற்றகன உபந்நியாசம்
சைவமாஞ் சமயத்தில் வளரும் பெரும்பேறு பெற்ற புண்ணியசீலர்களே! சமய சம்பந்தத்தாலும், உண்மை உணர்ச்சியினாலும் எமக்குப் பேதமில்லாத சகோதரர்களே! அன்பர்களே!
நம் கண்முன்னே நடந்திருக்கும் அதிசயத்தைப் பாருங்கள். நேற்றிருந்தார் இன்று மடிந்தார். பேசிய நாப் பேசவில்லை. பார்த்த கண்கள் பார்க்கவில்லை. அசைந்த உடல் அசையவில்லை. எல்லாம் ஒடுங்கித் தன் பெயரை விட்டுத் தன்பொருள் பண்டம் யாவும் விட்டு, மனைவி பந்துக்களைவிட்டு, அயலவர் சினேகரை விட்டுத்தான் எண்ணெய் வார்த்து வாசமூட்டி ஆடையாபரண அலங்கிர் தங் கூட்டிய தனது அழகிய உடம்பிற்குப் பிணமென்ற பெயரை நிறுத்தி நாம் விழித்திருக்க ஒழித்தோடி விட்டார் போல மறைந்தே போயினார்.
ஐயையோ! இதுவோ வாழ்க்கை1 இந்த உடம்பு முன் நாம் காணும்பொழுது விளங்கிய கோலமும், ஒளிசெய்த நகையும், குதூகலம் பண்ணிய திடமும், கெட்டு, இப்போ தன்வயமற்று அழியுந்தன்மையே மேற்பட்டு வெறும் பிணமாய்க் கிடக்கின்றதே. உயிரோ நீங்கிவிட்டது. தம் வாழ்விற்கு இவரை நம்பியிருந்த உறவினருக்கு நாம் செய்யத்தக்க தென்னவோ! மெய்யென்ற வாழ்வு பொய்யாய் விட்டது. நிற்குமென்ற உடம்பு நிலையற்றுப் போனது. ஒருங்கு கூடியிருப்போமென்ற நம்பிக்கை கைகூடாமற் போயது. போனதை வருவிக்கு மாற்றல் எம்மிறைவனுக் கல்லது உயிர்களாகிய எமக்கு முண்டோ. நாளைக்கு நாமும் அப்படியே; நம் சுற்றத்தோடு நல்வாழ்வில் மயங்கியிருக்கத் துணுக்கென உயிர் பிரிந்துவிடும். நம்முடல் இன்று அழிந்தாலும் அழியும். நாளை அழியினும் அழியும். காலம் நமதல்ல. எப்பொழுதும் யமதூதன் காவலாகப் பின் நிற்கின்றான். காலம் வந்தவுடன் எவருங் கலங்கும்படி உயிரைக் கவர்ந்தே செல்வான். வீதிகள் தோறும், வீடுகள் தோறும், நாளுக்கு நாள் உலாவியே வருகின்றான். எப்போ வருவான்! எப்போ இந்த நாறுமுடலை அடியற்ற மரம்போல் வீழ்த்தி விடுவான் என்று சொல்ல எவராலும் முடியாது. காலன் வருவான் என்பதை எல்லாரும் அறிந்திருந்தாலும், உலக மாயையின் கவர்ச்சியினால், மரணந்திண்ணமாய்ச் சம்பவிக்கும் என்று சிந்திப்போர் மிகச் சிலரே. இதோ பாருங்கள்! கண்முன்னே சுற்றத்தவர் கதற நாமெல்லா மொருங்குகூடி அனுதாபப்பட ஆன்மாவைக் காலன் கவர்ந்து சென்றானே!
நிலையில்லாத வாழ்க்கையிலே, நிலையில்லாத உடம்பைக் கொண்டு, நிலையில்லாத பொருளைத் தேடி, நிலையில்லாத இன்பத்துக்காக நாளும் நாளும் பாடுபட்டு வரும் மயக்கத்தில் நாமிருக்க, யமனென்னுங் காவலன் நமக்குத்

Page 7
தோற்றாமல் பின்னின்று கள்வனைப்போல எங்களை பிரித்து விடுகின்றான். ஆயத்த மாயிராத காரணத்தால், மரணம் வந்தவுடனே நாம் திடுக்கிட்டுப் பயந்து வாய்குழறிப்பதைக்கின்றோம். மரணஞ் சம்பவிக்கும் பொழுது, நாம் பாடுபட்டுத் தேடிய பொருளும், சுற்றமும், மனையும், போக போக்கியங்களும் நம்மோடு கூடவர இயலாமல் இருக்கின்றன. நாம் தேடிய பொருள்கள் முதலியன உடலோடு இங்கே கிடக்க, உயிரோடு நாம் செய்த புண்ணிய பாவ மிரண்டுமே பின் தொடர்கின்றன.
பண்டம் பொய்க்கூரை பழகி விழுதலால் உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமுமல்லது மண்டியவருடன்வழிநடவாதே."
ஆதலால், தேடவேண்டிய உயிருக்கு நற்றுணையாய்ச் செல்லக்கூடிய புண்ணியமும் ஞானமும்; தவிர்க்க வேண்டியது உயிரை நரகத்திலே விழுத்தித் துன்பத்தைச் செய்கின்ற பாவமுமேயாம்.
நன்மை தீமை யென்பன்வற்றைப் பகுத்தறிந்து, தமது மனம், புத்தி, சித்தம் ஆகிய கருவிகள் எல்லாம் சுகத்தைக் கொடுக்கின்ற நல்வினையையே அவாவி நிற்கச் செய்து, வினைகளுக்குத்தக்க சுக துக்க பலன்களைக் கொடுக்கும் பரமபிதாவாகிய நடராசப் பெருமானது குஞ்சிதபாதமே துணையென நாடி நிற்கவேண்டியதே அறிவுடையோர் கடனாகும்.
இது செய்யாத வழி, உயிரானது பாவ கருமங்களையெல்லாஞ் செய்து, அவற்றிற்கேற்ற துன்பங்களை அனுபவித்தற்கு, மரமென்றும், பறவையென்றும், விலங்கென்றும், ஊர்வன, நீர்வாழ்வனவென்றும், மனிதர்களென்றும், தேவர்கள் என்றும், இப்படிப் பலவகையான பிறவிகளிலே, சுவர்க்கம், மத்தியம், பாதாளம் என்னும் பலவாய உலகங்களிற் பிறந்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, பிறவியாகிய சக்கரத்திலே சுழன்று, சுழன்று திரியும். இந்தச் சக்கரத்தின் சுழற்சியிலே நின்று எங்களை விடுவித்துக் கொள்ள எமக்கோ சக்தியில்லை. வினையும் விடாது தொடரும். சக்தியுடையவனாகிய எம்பெருமானை வணங்கி, அவன் கற்பித்த சாஸ்திரவழிகளிலே பயின்று வருவதால், புண்ணியம் மேலிட நின்று, அவனுடைய ஞானமுத்திரையைத் தரித்த குரு மூலமாக ஞானத்தைப் பெற்றுப் பிறவியாகிய சக்கரத்தை அறுத்து, வினையாகிய கட்டையும் ஒழித்து, விலங்குகளினின்று விடுவிக்கப்பட்ட மனிதனும், கூட்டிலே நின்று விடுவிக்கப்பட்ட பறவையும், தம்மிஷ்டப்படி உலாவும் பேறடைந்து களித்தாற்போல, நாமும் அவனுடைய கருணை வெள்ளத்தில் சுயேச்சையாய்க் களிப்பதற்கு முயலுவதே நல்ல வழியாகும்.

இந்த உயிருக்கும் உடம்புக்கும் உள்ள சம்பந்தத்தை உள்ளபடி அறிந்தாலன்றோ, சுகத்தைத் தேடும் வழியையும் நாம் அறியலாம். எம் கண்களாற் காணப்படுவதாய் இருக்கின்ற இவ்வுடம்புமரணத்தின் பின் உயிர்ப்பின்றி அழிகின்ற தூலதேகமாகும். இத் தூலதேகத்தை இயக்குகின்றதாய் மரணத்தறுவாயில் விட்டு நீங்குவதாய், உயிருக்கு உட்சட்டை போலுள்ளதாய் வேறெரு தேகம் இத் தூலதேகத்தினும் நுண்மையாகிய அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. அதன் பெயர் சூக்கும தேகம். அதனிடத்திலேதான் நம்முடைய மனமும் புத்தியும் பொருந்தி, பாவச் சிந்தனைகளும் அகங்கார நினைவுகளும் பொலிந்து, மேலும் வரும் துன்பங்களுக்கு வித்துக்களாகிக் கிடக்கும். விஷப்பாம்பு தன் செட்டையைக் கழற்றிவிட்டுத் தன் விஷத்தைத் தன்னிடத்திலே வைத்துக் கொண்டதுபோல, நம்முடைய பாபமாகிய விஷமெல்லாம் மரணத்துக்கு அப்பால் நம்மோடு சூக்கும சரீரத்திலே பொருந்திவர, வெளிச் சட்டையாகிய இத் தூலதேகத்தை நாம் களற்றி விடுகின்றோம். எமது தர்கள் உயிரைப் பிடித்துச் செல்ல, நரகங்களிலே கிடந்து உழலும் கால எல்லைவரின், அதற்குத்தக்க தேகம் எடுத்து அங்கே அது துன்பப்பட வேண்டியும் வரும். அன்றி உடனேயே வேறோர் பிறவியெடுத்துப் பூமியிற் பிறக்கினும் பிறக்கும். புண்ணிய பலம் பொருந்தில், அதற்குத்தக்க உடம்போடு, புண்ணிய லோகங்களாகிய சுவர்க்கங்களிலே சென்று இன்பம் அநுபவிக்கப் பிறக்கினும் பிறக்கும். ஆயின் எப்பிறவி வாய்க்கினும் துக்கமே துக்கம். பிறவியுமோ மனம் பற்றிய வழியே பொருந்தும். மனதிலே அவர் அவர் அவாவுந் தீமையும் அநேகம் பொருந்தியிருக்கின்றன. மற்ற உயிர்களுக்கு நாம் செய்யுந் தீமைகள் நம்முடைய அவாவினாலும் அகங்காரத்தினாலும் வந்தேறும். ஆகையினால் மரணத்தின் பின் எங்கள் நிலை எப்படியாகுமோ என்று நினைக்க நெஞ்சம் பதைக்க வேண்டாமா. மரணத்தறுவாயில் நாம் இதை நினைத்துச் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை. அருமந்த காலத்தை வீணிலே போகவிட்டு, அழியும் பொருள் தேடி அலக்னுற்றதல்லாமல், உயிருக்கு உறுதிப் பொருளாகும் நல்வினையையும் ஞானத்தையும் நாடினோமில்லையே யென்று கடைசித்தறுவாயிற் பதைபதைப்பதில்
என்ன பலன்
உயிர் இருக்கும்பொழுதே, அறிவு இருக்கும் பொழுதே, பொருளிருக்கும் பொழுதே, சக்தியிருக்கும் பொழுதே, இளமையிருக்கும் பொழுதே, புண்ணியத்தைச் செய்து, ஞானத்தைத் தேடவேண்டும். அப்படித் தேடிய தேட்டமே மரணத்தின்பின் கைகூடும் பொருளாகும். இவ்வகையாகத் துன்பங்களை நீக்கவும் பிறவியை அறுக்கவும் வழியெதுவென்றால்,

Page 8
படைக்கலமாக வுன்னாமத் தெழுத்தைஞ் செனாவிற் கொண்டேன், இடைக்கலமெல்லேன் எழுபிறப்பும் உனக்காட் செய்கின்றேன், துடைக்கினும் போகேன் தொழுதுவனங்கித் தூநீறணிந்துன், அடைக்கலங் கண்டாயணிதில்லைச் சிற்றம்பலத்தானே.”
உடலைவிட்டுப் பிரிந்த ஆன்மா தன் உடலின் சம்பந்தத்தையும் பொருள் பண்டங்களின் சம்பந்தங்களையும் விட்டு நீங்குதல் அரிதானதால் அதற்கு உபகாரமாக அதன் மனோசுத்தியின் பொருட்டும், நல்லுணர்வின் பொருட்டும், நல்லகதியை அது நாடுதற் பொருட்டும், நாமெல்லாரும் தெய்வசிந்தனை செய்ய வேண்டியது அவசியமாகும். உயிர் நீங்குஞ் சமயத்தில் அருட்பாக்களைப் பாடுதலோடு பூரீபஞ்சாக்கரத்தையும் செவியிலுறுத்துதல் மிகுந்த கடனாகும். உயிர் நீங்கிய பின்னும் அதுவே கடனாக, அழுகுரல் விட்டு, அருட்பாக்களை ஒதி எமது சிந்தையினால் அச் சூக்கும சரீரத்திலுள்ள சிந்தையையும் இயக்குதலே இறந்து போனவருக்கு நாம் செய்யும் பேருதவியாகும். சூக்கும சரீரத்தினுள்ளே இருளும் அறியாமையும், மயக்கமுங் கொடுக்கும் பின்னொரு சரீமுண்டு. அதுவே காரண சரீரம். அது விட்டு நீங்குவதற்கு உண்மை ஞானம் வேண்டும். மேற் கூறப்பட்ட தூலசரீரமும், பந்தத்திற்கு இருப்பிடமாகிய சூக்கும சரீரமும் மயக்கத்திற்கு இருப்பிடமாகிய காரண சரீரமும் நீங்கினாலே முத்தி கைகூடும். முத்தி என்பது விடுதலை இச் சரீரக் கொத்துக்களில் நின்று விடுபடுதலே பெரிய பேறு. இவ் விடுதலை. உண்டாகச் சிவஞானமே காரணம். சிவஞானம் சிவானுபவமாகிய ஒரு காலத்திலும் அழிவுறாத பேரின்பத்தைக் கொடுக்கும். இது மற்றைய பெரும்பேறு. உலக பாசங்களில் நின்று நீங்குதலும் சிவாநுபவத்தைப் பெறுவதுமாகிய தேட்டமே உயிருக்கு உறுதிப் பொருள். இதைத் தேடிக் கொள்ள நாமெல்லாம் முயற்சி செய்ய வேண்டும். எல்லா உயிர்கள் மேலும் சகோதரபாவனை பண்ணிப்பழகிப், பொய் முதலிய பஞ்சமா பாதகங்களை விட்டு, பூரீ பஞ்சாட்சர செபம் இடையறாது செய்து, அன்பினோடும், விபூதி, உருத்திராட்சம் முதலிய சிவ சின்னங்களைப் பொலிவுற அணிந்து சிவ சின்னங் கண்டவிடமெல்லாம் சிவோபாவனை செய்து, உயிர்க்குயிராகிய இறைவனை, உயிர்களிடத்தே கண்டு வணங்கி, நம்முடைய மனமும் வாக்கும் செயலும் இறைவனுடைய பணிசெய்தற்கே சமர்ப்பித்து, எல்லாம் சிவமயம் எல்லாம் சிவன் செயல் என்று கண்டு இன்புற்றிருத்தலே மேலாகிய உபாயவழியாகும். இதை நாம் தேடிக் கொள்ளவும் இந்த ஆன்மா நாடிக் கொள்ளவும், பெருங் கருணையையுடைய எம்பெருமானே! பாவிகளை இரட்சிக்கும் பரம பதியே! தாய்போல எம்மைக் காத்து வரும் கருணைக் கடவுளே! எங்களுக்குத் திருவருள் சிறந்து அநுக்கிரகஞ் செய்யுமென்று பிரார்த்திப்போமாக.

"எவரேனுந் தாமாக விலாடத்திட்ட திருநீறுஞ்சாதனமுங்கண்டால் உள்கி உவராதே அவரவரைக் கண்டபோதங்கு வந்தடிமைத்திறம்நினைந்து உவந்து நோக்கி இவர் தேவர்அவர் தேவர் என்று சொல்லிஇரண்டாட்டாதொழிந்தீசன்திறமேபேணி கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.”
இவையெல்லாம் நம் அன்பினால் மனோதத்துவத்தை இயக்கி இந்த ஆன்மாவுக்கு உறுதி பயக்க, இன்னும் சிரார்த்த வேளைகளிலும் செய்யவேண்டிய பிரார்த்தனையாகும். இவைகளிலே வழுவியவைகளைத் தவறாது முடித்தற்கு உபாயமாக வேறு கிரியைகளுமுண்டு. தகனக்கிரியையில் நிறைகுடத்தை மும்முறை சுற்றி ஒவ்வொரு முறையும் ஒவ்வோர் பொத்தலாக்கி நீர் ஒழுகச் செய்து, இறுதியில் குடத்தையு முடைத்து விடல். இவ் ஆன்மா தான் கொண்ட மூன்று சரீரத்தையும் ஒவ்வொன்றாக விட்டு, சடசம்பந்தம் நீங்கி, நற்கதிபெறச் செய்தலாகிய பாவனையாகும். அந்தியேட்டிக் கிரியையும் உடலுக்குக் காரணமாயிருக்கின்ற தத்துவங்களை ஒவ்வொன்றாகச் சுத்தி செய்து, பிரிந்த உயிரை, உடற்சார்பு, உலகச்சார்பு ஆகிய கட்டுகளில் நின்றும் நீக்கி மேலாய கதியில் விடுதலாகிய பாவனையாகும். பாவனையினால் உயிர்க்கு உறுதி செய்து கொள்ளுதலே நன்னெறியாகும். சைவ சாஸ்திரங்களின் வழியாய் உயிர்கள் சிவோகம்பாவனை செய்து, நான் என்னுந் தன்மையாகிய தற்போதமிழந்து சிவாநூபவம் பெறுதலே கதி. அதுவே மோட்சம். அதுவே பரமசாயுச்சியம்.
ஒப்பில்லாத இவ்வநுபவம் எமக்கும் இவ் ஆன்மாவிற்கும் கிடைக்கும்படி பரமபிதாவாகிய சிவபெருமானை வேண்டித் துதிப்போம்.
தேவாரம்.
கொல்லத் தானமனார்தமர்வந்தக்கால் இல்லத்தார் செயலாவதெ னேழைகாள்
நல்லத்தானமையாளுடை யான்கழல்
சொல்லத்தான் வல்லிரேல்துயர்திருமே
சிவ சிவ சிவ சிவ சிவ

Page 9
மறைந்தும் மறையாத சித்த வைத்திய மேதை பொன். இராமநாதன் MD (S)
விரிவுரையாளர் சித்த மருத்துவத் துறை யாழ் பல்கலைக்கழகம்
அமரர் வைத்திய கலாநிதி ம. சோமசுந்தரம் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற செய்தி சித்தவைத்தியத்துறை சார்ந்தோர் அனைவரின் உள்ளத்தையும் அதிரவைத்தது. கடைசி மூச்சு வரை தனது வழமையான கடமைகளையும் சேவைகளையும் செய்து கொண்டிருந்தவர் திடீரென மறைந்து விட்டார் என்ற கூற்று தவறானதாய் இருக்குமோ என்றும் மனம் எண்ணியது.
இவர் அமரத்துவம் அடைந்து விட்டார் என்ற செய்தி பரவியதும் அவரின் பூத உடலை ஒரு முறை பார்க்க வேண்டுமென்று அவரது இல்லத்துக்கு ஐந்து நாள்கள் வரை மக்கள் கூட்டம் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. இதன் மூலம் அவரது இழப்புச் சித்த வைத்திய உலகுக்கு ஒரு பேரிழப்பாகும் என்பதை நாம் உணரக் கூடியதாக உள்ளது.
எனது தந்தையார் பொன்னம்பலம் (பரமு) வைத்தியரும் அமரர் ம. சோமசுந்தரம் அவர்களும் நெருங்கிய நண்பர்களாய் இருந்தனர். அதனால் அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கும் ஏற்பட்டது எமது தந்தையாரின் மறைவின் பின் அவருடைய வயதை ஒத்த வைத்தியர்களைக் காணும் போது அவர்களை எல்லாம் எமது தந்தையாக மதித்தே நான் பழகுவதுண்டு.
திரு. சேமசுந்தரம் என்ற இயற்பெயர் தாங்கிய சுந்தரம் மருந்துக் கடை உரிமையாளரை சுந்தரர் என்றே பலரும் அன்புடன் அழைப்பர். எளிமையும் சமயப்பற்றும் நிரம்பியவர். இவரின் பேச்சிலே அமைதி, நடையிலே அமைதி: உடையிலே எளிமை அமைதி எனப் பலவாறாகக் கூறலாம். எனினும், இவரின் அறிவின் ஆழம் அளத்தற்கரியது. எந்நேரமும் இன் முகத்துடன் வரவேற்கும் பண்பு இவரது இயல்பு. இந்நன்மைகள் இவரிடம் பொருந்தி இருப்பதால் என்னைப்பெரிதும் ஈர்த்துள்ளன.
இவர் லங்கா சித்தாயுள் வேத மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்று, DAM பட்டம் பெற்றவர். அதன் பின் வைத்திய சமுதாயத்துக்குத் தேவையான மருந்துச் சரக்குகளையும், மருந்துகளையும் வழங்குவதில் முன்னோடியாக இருந்தார். அவர்

ஆரம்பித்து வைத்த சுந்தரம் பிறதேஸ் என்ற நிறுவனத்தை யாழ் மாவட்டத்தில் அறியாதவர்கள் இல்லை என்றே கூறலாம். இன்றைய காலவட்டத்தில் சித்த வைத்தியம் செய்யும் வைத்தியர்களுக்குத் தேவையான மருந்துகள், மூலிகைகள் கிடைப்பது மிகவும் சிரமம். இவ்விடயத்தில் இவருடைய சேவை வைத்தியப் பெருமக்களுக்குப் பெரிதும் உதவியாய் இருந்தது.
இவர் மருந்து தயாரிப்பு முறைகளில் மிகுந்த அனுபவம் உள்ளவர். அதனால் மருந்து தயாரிக்கும் வேளைகளில் ஏற்படும் ஐயங்களை இவரிடம் கேட்டுத் தெளிகின்ற வைத்தியர்கள் பலர். அவர்களுள் நானும் ஒருவன். இத்தகைய பெருமகனின் இழப்பு வைத்திய சமுதாயத்திற்கு ஓர் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
இவரது பிற்கால வாழ்க்கை, சேவை நிறைந்ததாகும். அத்தடன் ஆத்மீக வாழ்விலும் ஈடுபட்டுப் பல நூல்களும், பிரசுரங்களும் இலவசமாக வைத்தியர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கியுள்ளமை அவரின் சேவைக்கு அடையாளமாகும்.
அது மட்டுமல்லாமல் தமது தயாரிப்பு மருந்துகளை நாட்டின் கஸ்டமான சூழ்நிலைவயில் உள்ள பிரதேச சபைகளுக்கு இலவசமாகவும் வழங்கியுள்ளார். இடர்ப்பாடுகள் நிறைந்த இக்காலத்தில் இவரது சேவை பாராட்டுக்குரியது. இவர் எங்களுடன் பேசும் போது “ஒரு பொல்லாப்பும் இல்லை”, “யாமறியோம்”, “எப்பவோ முடிந்த காரியம்” என்ற யோகர் சுவாமிகளின் பொன் மொழிகளை அடிக்கடி கூறுவார். இப்படியான ஆன்மீக வாழ்க்கையுடன் சேர்ந்த வைத்திய கலாநிதிகள் எமது நாட்டில்
அருகி வருதல் வேதனைக்குரியது.
இவரது பூத உடல் மறைந்தாலும் இவர் கூறிய அறிவுரைகள், இவர் செய்த சேவைகள் எமக்கு வழிகாட்டும் ஒளிச் சுடராய் விளங்கும் என்பதில் ஐயமில்லை. அன்னாரை இழந்து தவிக்கும் மனைவி பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தவர்கள் அனைவருக்கும் மன அமைதியையும் ஆறுதல்களையும் ஆண்டவன் கொடுக்க வேண்டுமென்று பிரார்த்திப்பபதுடன் அன்னவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி.

Page 10
கண் தானம் செய்ய விரும்பிய உத்தமர்
ைெ வெத்திய கலாநிதி ம. சோமசுந்தரம் அவர்கள் பரோபகார சிந்தனையுடையவர். இவர், மரணத்தின் பின், தனது கண்களைத் தானம் செய்து, விளிவெண்படலம் பாதிக்கப்பட்டதால் பார்வை இழந்து பரிதவிக்கும், இருவருக்கு ஒவ்வொரு கண்ணில் பார்வை ஏற்படுத்த விரும்பினார். இப்பொழுது, யாழ். போதன வைத்தியசாலையின் வாட்டில் இறக்கின்ற நோயாளிகளின் கண்கள் மாத்திரமே இவ் வைத்தியசாலையில் தானமாக ஏற்கப்படுகிறது. கண் தானம் செய்ய விரும்பிய பல பிரமுகர்களது மரணம், வீடுகளிலேயே நிகழ்ந்ததால், இவர்களது விருப்பு நிறைவேற்றப்படாது, அவர்களது கண்கள் சடலங்களுடன் எரிக்கப்பட்டும் புதைக்கப்பட்டும் வீணடிக்கப்பட்டு விட்டன. வைத்திய கலாநிதி ம. சோமசுந்தரம் அவர்களது மரணமும் அவரது வீட்டிலே நிகழ்ந்து, அவரது கண்களைத் தானம் செய்ய முடியாத அவல நிலையைத் தோற்றுவித்து விட்டது.
1900 ஆண்டு மீசாலையில் பிறந்து, பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டிருந்த தசாவதானி சரவணமுத்து ஆறுமுகம் அவர்கள், கல்வி அறிவு விருத்தியடையாத அக் காலத்தில், நாடகக் கலைஞர்களின் துணையைப் பெற்று, மக்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான நோய்த் தடுப்பு ஊசி ஏற்றுவித்தல், இரத்த தானம் செய்தல் போன்றவற்றை மக்கள் மத்தியில் பிரபல்யப் படுத்தினார்.
நாடகக் கலை செல்வாக்கு இழந்து, சினிமா மோகம் ஏற்பட்ட பிற்காலத்திலேயே, கண் தானம் உலகிற்கு அறிமுகமானதால், நாடகக் கலைமூலம் கண் தானத்தைப் பிரபல்யப்படுத்தத் தசாவதானி சரவணமுத்து ஆறுமுகம் அவர்களுக்கு இயலவில்லை. கண்தானம் பிரபல்யமடையாத நிலையில், 1993 ஆம் ஆண்டு இவர் இறைவனடி சேர்ந்ததும், மில்க் வைற் அதிபர், சிவதர்ம வள்ளல் க. கனகராசா அவர்கள் கூட்டுறவாளர் தசாவதானி சரவணமுத்து ஆறுமுகம் நினைவுக் குழுவை நிறுவி, அதற்குத் தலைமை தாங்கிக் கண் தானத்தைப் பிரபல்யப்படுத்துவதற்காகச் சில பிரசுரங்களை வெளியிட்டார். இம் முயற்சியும் பலனளிக்காத நிலையில் இவரும் இறைவனடி சேர்ந்தார்.
இவரது மறைவின் பின்னர் கூட்டுறவாளர் தசாவதானி சரவணமுத்து ஆறுமுகம் நினைவுக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற வைத்திய கலாநிதி

ம. சோமசுந்தரம் அவர்கள், கண் தானத்தைப் பிரபல்யப்படுத்த வேறு வகையான வழியைக் கையாண்டார். யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி, யாழ். மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையர், யாழ். மாவட்டக் கூட்டுறவு உதவி ஆணையாளர், கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரது உதவியைப் பெற்று யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், தாய் செய் நலனோம்பு நிலையங்கள் அனைத்திலும் மார்ச் 31 ஆம் திகதி கண் தான
தினத்தைக் கொண்டாடி மக்கள் மத்தியில் விளிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஆனால், அந்தோ பரிதாபம்! யாழ். மாவட்டம் முழுவதும் கண்தான தினத்தைக் கொண்டாட, கண் தானத்தால் பார்வை பெறப் பார்வையற்ற பலர் காத்திருக்க, கண் தானத்தால் பெறப்பட்ட விளி வெண்படலத்தைப் பொருத்திப் பார்வையற்றோருக்குப் பார்வை வழங்க டாக்டர்களும் காத்திதிருக்க, வைத்திய கலாநிதி ம.சோமசுந்தரம் அவர்களின் கண்கள், அவரது சடலத்துடன், சந்தனமரக் கட்டைகளாலும் கற்பூரத்தினாலும் அமைக்கப்பட்ட சிதையில் தீயுடன் சங்கமமாகியது.
நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் வேறொன்று நினைக்கிறது போலும்
ச. ஆ. கோபாலமூர்த்தி, செயலாளர், கூட்டுறவாளர், தசாவதானி சரவணமுத்து ஆறுமுகம் நினைவுக் குழு சிவன் கோவில் விதி திருநெல்வேலி

Page 11
பித்ரு காரியங்களின் முக்கியத்துவம்
பூரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வர பூரீசந்திர சேகரேந்திர ஸ்ர ஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகளின் அருள் வாக்கிலிருந்து
பித்ரு அதாவது இறந்தவர்களுக்குச் செய்யும் காரியங்களுக்கு ச்ரார்த்தம் என்று பேர். ச்ரார்த்தம் அதாவது திவஸம் தர்பணம் செய்வது, இதைச் சிரத்தையுடன் செய்வது முக்கியம். ரொம்பவும் சிரத்தை எடுத்துச் செய்தால் அது சுருக்கியும் குறுக்கியும் சிரார்த்த காலம் (திதி) தப்பியும் செய்வது போலில்லாது முறையாக, விஸ்தாரமாக புஸ்களமாக நடக்கும். அதன் பலனும் பிரத்தியஷ்டமாகத் தெரியும் . மடத்தனமான போக்கு என நினைத்து இப்போது பெரும்பாலோர் ஏதோ ஒப்புக்குத்தான் பித்ரு காரியங்கள் பண்ணுகிறார்கள். அதன் விபரீத பலன் எதுவெனில் அநேக வீடுகளில் சித்தப்பிரமம், அபஸ்மாரம் (காக்காய் வலிப்பு), ரத்த வியாதிகள், நரம்பு வியாதிகள், தோல் வியாதிகளுடன் அநேகர் அவஸ்தைப்பட்டுக் கொண்டு ஜோஸ்யர், மாந்திரிகர் முதலானோரிடம் அலைகின்றனர். இக் கஷ்டங்களின் முக்கியமான காரணம் பித்ரு காரியம் விட்டு விட்டதுதான்.
மாதா பிதாக்கள் உயிருடன் இருக்கும்போது செய்வது மக்களைக் காக்குமென்றால், இன்னொரு பக்கம் மாதா பிதாக்களது உயிர்போனபின் அவர்களுக்காக மக்கள் செய்யாதது மக்களைத் தாக்குமென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்பாவும் அம்மாவும் மற்ற வம்ச முதல்வர்களும் எங்கேயாவது கோபித்துக் கொண்டு சபிப்பார்களா என்று கேட்கக்கூடாது. பித்ருக்கள் சபிக்காமல் இருக்கலாம். ஆனால் பித்ரு தேவதைகள் இருக்கிறார்களே அவர்கள் இந்தப் பின் தலைமுறையினர் தங்கள் மூலமாக முன்னோர்களுக்கு எள்ளோ, தண்ணியோ அன்னமோ அளிக்கவில்லையே என்பதைப் பார்த்துச் சபித்து விடுவார்கள். ஆனபடியால் நாமும் நம் பின் சந்ததிகள் நன்றாயிருக்கவே முன் தலை முறையினருக்கு திவஸ தர்பணாதிகள் பண்ணத்தான் வேண்டும். அதாவது, இங்கே பரோபகாரத்தோடு ஸ்வய உபகாரமும் சேருகிறது.
திவஸமும் தர்ப்பணமும் செய்கிறபோது பூலோகத்திலோ வேறு எங்கோ எந்த ரூபத்திலோ பிறந்திருக்கிற நம் மூதாதைகளுக்கு அது ஷேமத்தைக்

கொடுக்கிறது. இங்கே நாம் கொடுக்கிற எள், தண்ணிர், பிண்டம் முதலானவைகளை பித்ரு தேவதைகள் நம்மூதாதைகள் எந்த ரூபத்தில் எங்கே பிறந்திருந்தாலும் அதற்கேற்ற ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்து விடுவார்கள். நம் நாட்டு ரூபாய் வெளிதேசக் கரன்ஸியாக்க எக்சேஞ்ச் பாங்க் இருக்கிற மாதிரி, பித்ரு தேவதைகள் இப்படி ஆகாரத்தை மாற்றிக் கொடுக்கிறார்கள்.
செத்துப்போன உடனேயே எல்லோரும் மறுபடியும் இந்தப் பூலோகத்திலேயே பிறந்து விடுவதில்லை.
நன்றாக வேலைசெய்தால் இன்கிரெமென்ட் மட்டுமல்லாமல் போனஸும் தருகிறார்கள் அல்லவா? ரொம்ப நன்றாகச் செய்தாலோ ப்ரமோஷனே கொடுத்து மேலே தூக்கி விடுகிறார்கள். வேலையில் தப்புப் பண்ணினால் இன்கிரெமென்டை நிறுத்தி விடுகிறார்கள், அபராதம் விதிக்கிறார்கள். ரொம்ப மோசமாகப் பண்ணினால் கீழ் வேலைக்கே தள்ளிவிடுகிறார்கள். இதேபோல் புண்ணியம் பண்ணியவர்களுக்கு இன்கிரெமென்ட் மாதிரி, இந்தப் பூலோகத்திலே செளக்கியமான இன்னொரு ஜன்மா கிடைப்பதற்கு முன்னாடி ஒரு போனஸ் கிடைக்கிறது. சுவர்க்கவாசம் தான் இந்த போனஸ். ரொம்பப் புண்ணியம் செய்திருந்தால் சுவர்க்கலோகத்துக்கே நிரந்தரமான ப்ரமோஷன். இப்படியே பாவம் பண்ணினவர்கள் முதலில் அபராதமாக நரகலோகத்தில் வசிக்க வேண்டும், அப்புறம் இன்கிரிமென்ட் இல்லாதமாதிரி பூலோகத்திலே கஷ்டத்திலே பிறக்க வேண்டும். ரொம்பப்பாவம் பண்ணினால் கீழ்வேலைக்கே போக வேண்டியது, அதாவது நிரந்தர
நரகவாசம்.
தர்ப்பணம், திவஸம் இவற்றின் பலன் நரகலோகம் தவிர மற்ற லோகங்களில் உள்ளவர்களையே சேரும். ஸ்வர்க்கத்திலே பல தினுசுகள், பல லோகங்கள், தேவலோகம், கந்தர்வலோகம், வித்தியாதரர் லோகம்,பிரம்மலோகம், விஸ்ணுலோகம், சிவலோகம், சத்தியலோகம் என்று இப்படி நரகத்திலும் தாமிஸ்ரம், அந்த தாமிஸ்ரம், புத், ரெளரவம் என்று பலவுண்டு. நாம் இறைக்கிற எள்ளும் தண்ணிரும் கொடுக்கிற பிண்டமும் இப்படிப்பட்ட லோகங்களிலுள்ள நரகவாசிகளுக்குப்போய்ச் சேராது.
ஒரு தேசத்திற்கும் இன்னொரு தேசத்திற்கும் சண்டை ஏற்பட்டுவிட்டால் அப்போது பணம் எக்ஸ்சேஞ்ச் பண்ணி எதிரி தேசத்திற்கு அனுப்பவே முடிவதில்லை அல்லவா? இப்படி நரக வாசிகளுக்கும் பித்ரு தேவதைகள் ஆகார எக்ஸ்சேஞ்ச் பண்ணுவதில்லை.

Page 12
இப்படிப்பட்ட நரகவாசிகளான மஹா பாவிகளிடமும் நம்முடைய ரிஷிகளுக்கு மாசுருகி அவர்களுக்கும் ஷேமம் உண்டாவதற்காக மந்திரபூர்வமாக சில வஸ்துக்களைக் கொடுக்கச்சொல்லி ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். சுத்தமான வஸ்துக்களை அவர்களுக்கு நாம் சேர்க்கமுடியாது. ஆனால் சில அசுத்த வஸ்துக்களே அவர்களுடைய மகா கஷ்ட நிலையில் ஆகாரமாக அவர்களுக்குக் கிடைக்கலாமென்று பகவான் வைத்திருக்கிறான்.
1. நாம் வேஷ்டியைப் பிழிகிற அழுக்கு ஜலம்
2. குளிக்கிறபோது நம் சிகை வழியாக வருகிற ஜலம்
சாப்பாடு முடிந்தபின் எச்சில் கைஜலத்தை இலைக்கு வலதுபக்கத்தில் மாத்திரம் சொல்லிவிட்டால் அது நரகங்களிலேயே ரொம்பக் கொடூரமான ரெளரவத்தில் எத்தனையோ கோடி வருஷங்களாக இருப்பவர்களின் தாகத்தைத் தீர்க்க உதவுகிறது.
ஆந்திரர்கள் உத்ரா போசனத்துக்குப்பின் இதைத் தவறாமல் பண்ணுகிறார்கள்.
இப்படி எச்சிலையும் அழுக்கு ஜலத்தையும் ஒருவருக்குத் தருவதா என்று நினைக்க வேண்டாம்.
நரகவாசத்தில் அவர்கள் இருக்கிற ஸ்திதியில் இதுவேதான் அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும்.
நம் லோகத்திலேயே வராஹத்தை (பன்றி) பார்க்கவில்லையா?
நாம் அன்பான பாவனையுடன் இந்த நரக வாசிகளை உத்தேசித்து நம் வேஷ்டியை பிழியும் போதும் சிகை ஜலத்தைப் பிழிந்து விடுபோதும் (அதற்கான மந்திரமும் சொல்லி இந்தக் காரியங்கள் செய்ய அதிகாரம் பெற்றவர்கள் அப்படியே செய்யவேணும்) அப்படி அன்போடு கருணையோடு செய்தால் அவை நரஹத்தினுள்ளவர்களுக்கு ஆஹாரமாக மாறிக் கொஞ்சம் கொஞ்சம் சுகம் தருகின்றபடிக்கு பகவான் வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட மகா பாபிகளுக்குக் கூட அனுக்கிரகம் பண்ணுகிறது நம் தர்ம சாஸ்திரம்,
(தெய்வத்தின் குரல் 3-ம் பகுதி)

சந்தனம் எனத் தேய்ந்த செம்மல்
கந்தர்மடம், மணல்தறை வீதியில் காந்தி பொன்னையா நேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனாய்ப் பிறந்து காந்தியர் குடும்பப் பெருமை காத்தீர். சந்தனம் அரைத்து அரைத்துச் சாந்த மனம் பெற்றாய். சந்தனம் அரைத்தால் மணக்கும் அச்செயல் உன் வருகையை என்றுஞ் சொல்லிக் கொண்டிருந்தது. தூய நேசக் கரம் நீட்டும் சொந்தபந்தம் யாவிற்கும் கொடுத்தே சிவந்த கரம் நொந்தவர் சிந்தும் கண்ணிர் நோகாது துடைக்கும். அந்தி பகலாய்ச் செந்திலாண்டவன் செம்மேனி நினைவில் வாழும். சந்தனத்தாற் குளிப்பாட்டும் காட்சி கண்டு, முகம் மகிழ்ச்சியுறும். நல்லூர்க் கந்தன் நாமம் கேட்டுக் கரம் குவித்து - சிந்தை குளிரும்.
தூயவன் நீ மாயோன் மருகன்! மாண்புத் தொண்டன் நீ! தாய்மனம் கொண்ட தயாபரன் நீ! தன்னம்பிக்கை மிக்கோன் நீ ஒயாது உழைத்தவன் நீ! ஒய்ந்திருப்பது இன்று ஏனோ! சேய்கள் முகம் வாடி வதங்கிய காயாக இருப்பது கண்டும் நீ நேயத்துடன் அழைத்து துயர் துடைக்கின்றாய் இல்லை நீ வாய்நிறைய வாங்கோ என அழைத்துப் பல நோய் தீர்த்த செம்மல். நோய் உன்னைத் தீண்டாது, கந்தன் நேயம் உன்னைத் தீண்டியதோ இந்தியாவிலிருந்து வந்தவர் சொந்தம் கொண்டாட - மிஞ்சியதை, நெஞ்சார அம்மன் கோவிலில் அகதிகளுக்குக் கொடுத்துப் பஞ்சம் தீர்த்த சுந்தரம் ஐயா நீ தஞ்சமுற இனி யார் எமக்குண்டு? தவப்பயனே இன்று எங்கே நீ!
மருந்துக் கடை மக்கள் விரும்பும் ஒரு விருந்துக் கடை (இருந்து ஆறிப்போ) என்று சொல்ல இனி எங்கே வேறு கடை? சரிந்தவர் வாழ்வு திருந்த அமைத்துக் கொடுப்பதே உன் கொடை வருந்தியவர் துயர் தீர்த்து நிற்கும் உன் நிமிர்ந்த நடை பொருந்தியவர் என்றும் வெறுக்காத பெரும் உள்ளம் பொருந்தாதவர் கருத்தின் உண்மையையும் ஏற்கும் அறிவு மனம் மருந்திற்கும் உன்னைப் போல் இனி இல்லை ஒருவர் என்று உலகம் கூறும். வருந்துவதால் இனி என்ன பயன்!உன்வழி, நடப்போம். நிறைந்த உன் மனம் போற்றி வரும் நாட்கள் கழிப்போம். உறைந்திருக்கும் உன் பொருளில் உன்னைக் கண்டு தொழுவோம்.
அன்புச் சகோதரி சுபத்திராதேவி. கட்டுடைமைச்சாள்
ஆ. சோமசுந்தமுடிமருமக்களும்.

Page 13
இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய
கோளறு திருப்பதிகம்
இராகம் நவரோஸ் பண் - பியந்தைக்காந்தாரம் திருச்சிற்றம்பலம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்தவதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே. l.
என்பொடுகொம்பொடாமை யிவைமார்பிலங்க
வெருதேறியேழையுடனே பொன்பொதிமத்தமாலை புனல்சூடிவந்தெ
னுளமே புகுந்தவதனால் ஒன்பதொடொன்றொடேழு பதினெட்டொடாறு
முடனாயநாள்களவைதாம் அன்பொடு நல்லநல்ல வவைநல்லநல்ல
வடியாரவர்க்குமிகவே 2.
உருவளர் பவளமேனி யொளிநீறணிந்து
வுமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர்கொன்றைதிங்கண் முடிமேலணிந்தெ
னுளமே புகுந்தவதனால்
திருமகள் கலையதுர்தி செயமாதுபூமி
திசை தெய்வமானபலவும்
அருநெதிநல்லநல்ல வவைநல்லநல்ல
வடியாரவர்க்குமிகவே 3.

மதிநுதன்மங்கையோடு வடபாலிருந்து
மறையோதுமெங்கள்பரமன் நதியொடுகொன்றைமாலை முடிமேலணிந்தெ
னுளமேபுகுந்தவதனால் கொதியுறுகாலனங்கி நமனோடுதுதர்
கொடுநோய்களானபலவும் அதிகுணநல்லநல்ல வவைநல்லநல்ல வடியாரவர்க்குமிகவே
நஞ்சணிகண்டனெந்தை மடவாடனோடும் விடையேறுநங்கள்பரமன் துஞ்சிருள்வன்னிகொன்றை முடிமேலணிந்தெ
னுளமே புகுந்தவதனால் வெஞ்சினவவுணரோடு உருமிடியுமின்னு
மிகையானபூதமவையும் அஞ்சிடுநல்லநல்ல வவைநல்லநல்ல
வடியாரவர்க்குமிகவே
வாள்வரியதளதாடை வரிகோவணத்தர்
மடவாடனோடுமுடனாய்
நாண்மலர்வன்னிகொன்றை நதிசூடிவந்தெ
னுளமே புகுந்தவதனால்
கோளரியுழுவையோடு கொலையானைகேழல்
கொடுநாகமோடுகரடி
ஆளரிநல்லநல்ல வவைநல்லநல்ல
வடியாரவர்க்குமிகவே
செப்பிளமுலைநன்மங்கை யொருபாகமாக
விடையேறுசெல்வனடைவார் ஒப்பிளமதியுமப்பு முடிமேலணிந்தெ
னுளமேபுகுந்தவதனால் வெப்பொடுகுளிரும்வாத மிகையானபித்தும்
வினையானவந்துநலியா அப்படிநல்லநல்ல வவைநல்லநல்ல
வடியாரவர்க்குமிகவே

Page 14
வேள்படவிழிசெய்தன்று விடைமேலிருந்து
மடவாடனோடுமுடனாய் வாண்மதிவன்னிகொன்றை மலர்சூடிவந்தெ
னுளமேபுகுந்தவதனால் ஏழ்கடல் சூழிலங்கை யரையன்றனோடு
மிடரானவந்து நலியா ஆழ்கடனல்லநல்ல வவைநல்லநல்ல
வடியாரவர்க்குமிகவே 8.
பலபலவேடமாகும் பரனாரிபாகன்
பசுவேறுமெங்கள்பரமன் சலமகளோடெருக்கு முடிமேலணிந்தெ னுளமேபுகுந்தவதனால் மலர்மிசையோனுமாலு மறையோடுதேவர்
வருகாலமானபலவும் அலைகடன்மேரு நல்ல வவைநல்லநல்ல
வடியாரவிர்க்குமிகவே. 9.
கொத்தலர்குழலியோடு விசையற்குநல்கு குணமாயவேடவிகிர்தன் மத்தமுமதியுநாக முடிமேலணிந்தெ
னுளமேபுகுந்தவதனால் புத்தரொடமணைவாதி லழிவிக்குமண்ண
றிருநீறுசெம்மைதிடமே அத்தகுநல்லநல்ல வவைநல்லநல்ல
வடியாரவர்க்குமிகவே IO.
தேனமர்பொழில்கொளாலை விளைசெந்நெறுன்னி
வளர்செம்பொனெங்குநிகழ நான்முகனாதியாய பிரமாபுரத்து
மறைஞானஞானமுனிவன் தானுறுகோளுநாளுமடியாரைவந்து நலியாதவண்ணமுரைசெய் ஆனசொன்மாலையோது மடியார்கள்வானி
லரசாள்வராணைநமதே 11.
திருச்சிற்றம்பலம்

தேவாரம்
திருச்சிற்றம்பலம்
அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கும் மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோகிப் பிறவியே
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே ஒட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே
எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார் செத்தால்வந்து உதவுவார் ஒருவர் இல்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா; நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா, என்றன் அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்ல கண்டங் கொண்டடியேன் என்செய் கேனே

Page 15
கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே.
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டனடி யேனையும் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.
திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில்
தீ வண்ணர் திறம் ஒருகால் பேசா ராகில்
ஒருகாலும் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன் முன் மலர்பறித்திட்டு உண்ணா ராகில்
அருநாய்கள் கெட வெண்ணிறனியாராகில்
அளியற்றார் பிறந்தவாறேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே!
திருச்சிற்றம்பலம்

எட்டாந்திருமுறை மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய
திருவாசகம் - சிவபுராணம் திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்கநாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில்நீங்காதான்தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் உண் மகிழும் கோன் கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன்அடி போற்றி எந்தை அடிபோற்றி தேசன்அடி போற்றி சிவன்சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன்அடி போற்றி சீரார் ருெந்துறைநம் தேவன்அடி போற்றி ஆராத இன்பம் அருளும்மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அரு ளளே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஒயஉரைப்பன்யான் கண்ணுதலான்தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார்கழல் இறைஞ்சி விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்றறியேன் புல்லாகிப்பூடாய்ப்புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகிமுனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறத்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்றுவிடுற்றேன்

Page 16
உய்யளன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா பொய்ஆயின எல்லாம் போய்அகல வந்தருளி மெஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவிறுதியில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய்நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனம் கழிய நின்றமறை யோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தால் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறிநின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல் போர்த்துஎங்கும் புழுஅழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பதுவாயிற் குடிலை மலங்கப் புலன்ஐந்தும்வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துஉள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசம்ஆம் பற்றறுத்துப் பாளிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப்

பேராதுநின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதேஅளவிலாப் பெம்மானே ஒராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனேயாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ்ஞானத்தால்கொண்டுணர்வார்தங்கருத்தின்
போக்கும் வரவும் புணர்வும்இலாப் புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றுஇன்ப வெள்ளமே அத்தா மிக்காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம் பின் உட்கிடப்ப ஆற்றேன் எம்ஐயா அரனேஒ என்றுஎன்று போற்றிப்புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார் மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவிசாராமே கள்ளப்புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம்பயின்றாடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டிநாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஒவென்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து
திருச்சிற்றம்பலம்

Page 17
திருவாசகம்
அடைக்கலப் பத்து
திருச்சிற்றம்பலம்
செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந்தமைந்த பழுத்தமனத் தடியர்உடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக் கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன்அடைக்கலமே. (l)
வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின் பெருமையினாற்
பொறுப்பவனேஅராப் பூண்பவனேபொங்கு கங்கைசடைச்
செறுப்பவ னேநின் திருவருளால்என் பிறவியைவேர்
அறுப்பவனேஉடை யாய்அடியேன்உன் அடைக்கலமே. (2)
பெரும்பெரு மான்என் பிறவியை வேரறுத்துப்பெரும்பிச்சுத்
தரும்பெரு மான்சது ரப்பெரு மான்என் மனத்தினுள்ளே
வரும்பெரு மான்மல ரோன்நெடு மாலறியாமல்நின்ற
அரும்பெரு மான்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே. (3)
பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத் தில்நின் கழற்புணைகொண் டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய
அழிகின்றனன்உடை யாய்அடியேன்உன் அடைக்கலமே. (4)

சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங் கிருள்புரி யாக்கையி லேகிடந் தெய்த்தனன் மைத்தடங்கண் வெருள்புரி மான்அன்ன நோக்கிதன் பங்கவிண்ணோர்பெருமான்
அருள்புரி யாய்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே. (5)
மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள் வாழியெப் போதுவந் தெந்நாள் வணங்குவன் வல்வினையேன் ஆழியப் பாஉடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே. (6)
மின்கணினார் நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப் புன்கண னாய்ப்புரள்வேனைப் புரளாமற் புகுந்தருளி என்க ணரிலே அமுதூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும் அங்கணனே உடையாய் அடியேன்உன் அடைக்கலமே. (7)
மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே கூவிடுவாய் கும்பிக் கேயிடு வாய்நின் குறிப்பறியேன் பாபிடை யாடு குழல்போற் சுரந்து பரந்ததுள்ளம் ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே. (8)
பிறிவறி யாஅன்பர் நின்அருட் பெய்கழல் தாளிணைக்கீழ் மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றார்உன்னை வந்திப்பதோர் நெறியறி யேன்நின்னை யேஅறியேன்நின்னை யேஅறியும் அறிவறியேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே. (9)
வழங்குகின்றாய்க்குன் அருளா ரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன் விக்கி னேன்வினை யேன்என் விதியின்மையால் தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக்கொள்ளாய் அழுங்குகின்றேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே. (10)
திருச்சிற்றம்பலம்

Page 18
திருவம்மானை
திருச்சிற்றம்பலம்
ஒயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத் தயான தத்துவனை தானே உலகேழும் ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
ஆசைப்பத்து
கருடக் கொடியோன் காண மாட்டாக்
கழற்சேவடி யென்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட
பொல்லா மணியேயோ இருளைத் துரந்திட்டிங்கேவா
வென்றங் கேகூவும் அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன்
கன்டாய் அம்மானே.
மொய்ப்பால் நரம்பு கயிறாக
மூளை என்பு தோல் போர்த்த குப்பாயம்புக் கிருக்ககில்லேன்
கூலிக் கொள்ளாய் கோவேயோ எப்பாலவர்க்கும் அப்பாலாம்
என்னா ரமுதேயோ அப்பா காண ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே.
சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறு குடிலிது சிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்தாட்
கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே
சிறிதென் முகநோக்கி
ஆவா என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.

வாழாப்பத்து
பஞ்சின்மெல் லடியாள் பங்கநீ யல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே ஆண்டாய் சிவ புரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.
யாத்திரைப்பத்து
பெருமான் பேரா னந்தத்துப் பிரியா திருக்கப் பெற்றீர்காள் அருமாலுற்றுப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே திருமா மணிசேர் திருக்கதவந் திறந்த போதே சிவபுரத்துத் திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே.
அருட்பத்து
முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ் சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியகீர் அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே.

Page 19
பிரார்த்தனைப்பத்து
"அறவே பெற்றார் நின்னன்பர்
அந்தமின்றி அகநெகவும் புறமே கிடந்து புலைநாயேன் புலம்புகின்றேன் உடையானே பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாப் பிரிவில்லா மறவா நினையா அளவிலா
மாளா இன்ப மாகடலே.
குழைத்தபத்து
நாயிற்கல்டையாம் நாயேனை நயந்துநீயே ஆட்கொண்டாய் மாயப்பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி ஆயக்கடவேன் நானோதான் என்னதோஇங் அதிகாரம் காயத்திடுவாய் உன்னுடைய
கழற்கீழ்வைப்பாய் கண்ணுதலே.
திருப்புலம்பல்
உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தா உன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.
திருச்சிற்றம்பலம்

ஒன்பதாந் திருமுறை திருவிசைப்பா திருமாளிகைத்தேவர் திருச்சிற்றம்பலம்
ஒளிவளர் விளக்கே !உலப்பிலா வொன்றே !
உணர்வுகுழ் கடந்ததோர் உணர்வே ! தெளிவளர்பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள்தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத்தானந்தக் கனியே!
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
திருப்பால்லாண்டு
ஆரார் வந்தார்? அமரர்
குழாத்தில் அணியுடை ஆதிரை நாள் நாரயணனொடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர்
குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும்
ஆடியும் பல்லாண்டு கூறுதுமே
திருச்சிற்றம்பலம்
பத்தாம் திருமுறை திருமூலநாயனார் அருளிச்செய்த திருமந்திரம்
திருச்சிற்றம்பலம்
யாவார்க்கு மாம் இறை வர்கொரு பச்சிலை யாவார்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம் பிறர்க் கின்னுரை தானே.

Page 20
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
சிவசிவ என்கிலர் தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ் சிவசிவ என்றிடத் தேவரும் மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப்பினமென்று பேரிட்டுச் குரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே.
திருச்சிற்றம்பலம்
பன்னிரண்டாம் திருமுறை பெரிய புராணம் திருச்சிற்றம்பலம்
உலகெல்லாமுணர்ந்தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்மபலத்தாடுவான்
மலர்சிலம்பழ வாழ்த்தி வணங்குவாம்.
வேதநெறி தளைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க பூதபரம்பரைபொலியப் புனிதவாய் மரலாந்தழுத சிதவள வயற்புகலித் திருஞான சம்பந்தன் பாதமலர்தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
திருச்சிற்றம்பலம்

கந்தரநுபூதி
காப்பு
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள்சண்முகனுக்கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே பஞ்சக்கரவானை பதம் பணிவாம்
ஆடும் பரிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியாயருள்வாய் தேடுங் கயமாமுகனைச் செருவில் சாடுந்தனி யானை சகோதரனே. 1
உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனுநீயலையோ எல்லாமற என்னையிழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே. 2
வானோ புனல்பார்கனல்மா ருதமோ ஞானோதயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளாவதுசண்முகனே 3.
வளைபட்டகைம்மாதொடு மக்க ளெனுந் தளைபட்டழியத் தகுமோ தகுமோ கிளையட் டெழுகு ருரமுங் கிரியுந் தொளைபட்டுருவத் தொடுவே லவனே. 4
மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந்திலனே அகமாடை மடந்தைய ரென்றயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே.

Page 21
திணியான மனோசிலை மிதுனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ பணியாஎன வள்ளி பதம்பணியும் தனியா அதிமோக தயாபரனே.
கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே விறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவேதனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே
அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரிமகன் சமரம்பொரு தானவ நாசகனே.
மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப் பட்டுசல் படும்பரிசென் றொழிவேன் தட்டுடற வேல்சயிலத் தெறியும் நிட்டூரநிராகுல நிர்ப்பயனே.
கார்மா மிசைகாலன்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப்படுவாய் தார்மார்ப வலாரிதலாரியெனும் குர்மா மடியத் தொடுவே லவனே.
கூகாஎன என்கிளை கூடிஅழப் போகாவகை மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவநாலுகவித் த்யாகாசுர லோக சிகாமணியே
செம்மாள் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மாஇரு சொல்லற என்றலுமே அம்மாபொருள் ஒன்றும் அறிந்திலேனே.
முருகன் தனிவேல் முநிநம் குருவென் றருள்கொண்டறியார் அறியுந் தரமோ உருவன் றருவன்றுளதன்றிலதன் நிருளன் றொளியன் றெனநின்றதுவே
፲0
た
፲2
3.

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற் றுய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய் விழிநாசி யொடும் செவியாம் ஐவாய் வழிசெல்லும் அவாவினையே
முருகன் குமரன் குகனென்று மொழிந் துருகுஞ் செயல்தந்துணர்வென்றருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவும் குருபுங்கவ எண்குண பஞ்சரனே.
பேராசைஎனும் பிணியில் பிணிபட் டோரா வினையேன் உழலத்தகுமோ வீராமுதுகுர் படவேல் எறியும் குரா சுரலோக துரந்தரனே,
யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமேபெற வேலவர் தந்ததனால் பூமேல்மயல் போயற மெய்ப்புணர்வீர் நாமேல்நடவீர்நடவீர்இனியே
உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா அதிகா அநகா அபயா அமரா பதிகாவல குர பயங்கரனே.
வடிவுந்தனமும் மனமும் குணமுங் குடியுங் குலமுங் குடிபோ கியவா அடியந்தமிலா அயில்வேல் அரசே மிடியென்றொரு பாவி வெளிப்படினே.
அரிதாகிய மெய்ப்பொருளுக்கடியேன் உரிதாஉப தேசம் உணர்த்தியவா விரிதாரண விக்ரம வேளிமையோர் புரிதாரக நாக புரந்தரனே,
கருதா மறவா நெறிகாண எனக் கிருதாள் வனசந்தரனன்றிசைவாய் வரதா முருகாமயில் வாகனனே விரதா சுரகுர விபாடனனே.
fa
5.
16
たク
፲8
20
21

Page 22
காளைக்கும ரேசன் எனக் கருதித் தாளைப் பணியத் தவம்எய்தியவா பாளைக்குழல் வள்ளி பதம்பணியும் வேளைச்சுர பூபதி மேருவையே
அடியைக் குறியாத தறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமவேல் மகிபா குறமின் கொடியைப் புணருங் குணபூ தரனே,
கூர்வேல் விழிமங்கையர் கொங்கையிலே சேர்வேனருள் சேரவும் எண்ணுமதோ
குர்வேரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல் புரந்தரபூபதியே.
மெய்யோன வெவ்வினை வாழ்வையுகந் தையோ அடியேன் அலையத் தகுமே கையோ அயிலோ கழலோ முழுவதும் செய்யோய்மயி லேறிய சேவகனே.
ஆதாரம் இலேன் அருளைப் பெறவே நிதான் ஒரு சற்றும் நினைந்திலையே வேதாகம ஞான நினோதமனோ திதாசுர லோக சிகாமணியே
மின்னேநிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயனிங் கிதுவோ பொன்னே மணியே பொருளே அருளே மன்னே மயிலேறிய வானவனே.
ஆனா அமுதே! அயில்வேல் அரசே! ஞானா கரனே!நவிலத் தகுமோ! யானாகிய என்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலை நின்றதுதற்பரமே.
இல்லே எனுமாலையில் இட்டனைநீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.
22
23
24
25
26
27
28
29

செவ்வானுருவில் திகழ்வேலவன்அன் றொவ்வாத தென உணர்வித்ததுதான் அவ்வாறறிவார் அறிகின்றதலால் எவ்வாறொருவர்க் கிசைப்பதுவே
பாழ்வாழ் வெனுமிப்படுமாயையிலே விழ்வா யென என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தன தாமுளவோ வாழ்வாய் இனிநீ மயில்வா கணனே
கலையே பதறிக் கதறிக் தலையூ டலையே படுமாறதுவாய் விடவோ கொலையே புரிவேடர்குலப்பிடி தோய் மலையே! மலை கூறிடு வாகையனே.
சிந்தாகுல இல்லொடு செல்வ மெனும் விந்தாடவி என்று விடப் பெறுவேன் மந்தாகினிதந்த வரோதயனே கந்தா முருகா கருணாகரனே
சிங்கார மடந்தையர்திநெறிபோய் மங்காமல் எனக்கு வரந்தருவாய் சங்க்ராம சிகாவல சண்முகனே கங்காநதிபால க்ருபாகரனே.
விதிகானும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழல் என்றருள்வாய் மதிவாணுதல் வள்ளியை அல்லதுயின் துதியா விரதா சுரபூ பதியே
நாதா குமராநமஎன்றரனார் ஒதாய் என ஒதிய தெப்பொருள்தான் வேதாமுதல் விண்ணவர் குடுமலர் பாதா குறமின் பதசேகரனே.
கிரிவாய்விடுவிக்ரம வேலிறையோன் பரிவாரம் எனும் பதமே வலையே புரிவாய் மனனே! பொறையாம் அறிவால் அரிவாய் அழயோடும் அகந்தையையே
30
3f
32
33
34
35
36
37

Page 23
ஆதாளியை ஒன்றறியேனை அறத் திதாளியை ஆண்டது செப்புமதோ கூதாள கிராத குலிக்கிறைவா வேதாள கணம்புகழ் வேலவனே.
மாவேழி சனனம் கெட மாயைவிடா மூவேடனை என்று முடிந்திடுமோ கோவே குறமின் கொடிதோள் புனரும் தேவே சிவ சங்கர தேசிகனே.
வினையோட விடுங் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங்கிடவோ சுனையோ டருவித் துறையோடு பசுந் தினையோ டிதனோடு திரிந்தவனே.
சாகா தெனையே சரணங்களிலே காகாநமனார் கலகஞ் செயுநாள் வாகா முருகர் மயில்வாகனனே யோகா சிவஞானொப தேசிகனே
குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் செறிவற்றுலகோடுரை சிந்தையுமற் நறிவற் றறியாமையும் அற்றதுவே
தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசாமுருகா! நினதன பருளால் ஆசா நிகளம் துகளாயினபின் பேசா அநுபூதி பிறந்ததுவே.
சாடுந்தனிவேல் முருகன் சரணம் குடும்படி தந்தது சொல்லுமதோ விடும் சுராமாமுடி வேதமும்வெங் காடும் புனமுங் கமழுங் கழலே
கரவாகிய கல்வியுளார் கடைசென் நிரவாகை மெய்ப்பொருள் ஈகுவையோ குரவாகுமரா குலிசாயுதகுஞ் சரவா சிவயோக தயாபரனே.
33
39
40
4f
42
43
44
49

சிந்தாயும் எனக்கருள் தந்தையுநீ சிந்தாகுலமானவை தீர்த்தெனையாள் கந்தா கதிர்வே லவனே உமையாள் மைந்தா குமரா மறைநாயகனே.
ஆறாறையுநீத்ததன்மேல்நிலையைப் பேறா அடியேன் பெறுமாறுளதோ சீறாவருகுர் சிதைவித் திமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே.
அறிவொன்றறநின்றறிவார் அறிவில் பிறிவொன்றறநின்ற பிரான் அலையோ செறிவொன்றறவந்திருளே சிதைய வெறிவென்றவரோ டுறும் வேலவனே.
தன்னந் தனிநின்றதுதான் அறிய இன்னம் ஒருவர்க் கிசைவிப்பதுவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா! நினைவார்
கின்னங்களையுங் க்ருபைசூழ் சுடரே!
மதிகெட்டறவாடி மயங்கியறக் கதிகெட் டவமே கெடவோ கடவேன் நதிபுத்திரஞான சுகாதிபவத் திதிபுத் திரர் விறடு சேவகனே.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
46
47
48
49
50
5f

Page 24
அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த
கந்தரலங்காரம்
காப்பு
அடலருணைத்திருக் கோபுரத்தே அந்த வாயிலுக்கு வடவரு கிற்சென்று கண்டு கொண்டேன்வரு வார்தலையிற் தடய டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே
நூல்
பேற்றைத் தவஞ்சற்றுமில்லாத என்னைப்ரபஞ்சமென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட வாசெஞ் சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை அம்புலியின்
கிற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
ஒரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள் சேரவொட் டாாஜவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச் சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட்டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே.
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர்தலையிலுமென் பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால் மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச் சேவடிநீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே

வேதா கமகித்ர வேலாயுதன்வெட்சிபூத்ததண்டைப் பாதார விந்தம் அரணாக வல்லும் பகலுமில்லாச் குதானதற்றவெளிக்கே யொளித்துச் சும்மாவிருக்கப் போதாயினிமன மேதெரியாதொரு பூதர்க்குமே
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை கிரணக் கலாபியும் வேலுமுண் டேகின் கினிமுகுள சரணப்ரதாப சசிதேவிமங்கல்யதந்துரக்ஷா பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே
நாளென் செயும்வினைதானென் செயுமெனை நாடிவந்த கோளென் செசயுங்கொடுங் கூற்றென் செயுங் குமரேசரிரு தாளும் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங்கடம்பு மெனக்குமுன்னேவந்து தோன்றிடினே.
சேல்பட்ட டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட்டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட்டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
தோலாற் சுவர்வைத்துநாலாறு காலிற் சுமத்தியிரு காலா லெழுப்பிவளைமுது கோட்டிக்கைந்நாற்றிநரம் பாலார்க்கை யிட்டுத்தசைகொண்டு மேய்ந்த வகம்பிரிந்தால் வேலாற் கிரிதுளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே
வெட்டுங்கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங்கயிற்றாற் கட்டும் பொழுது விடுவிக்க வேண்டுங் கராசலங்கள் எட்டுங்குலகிரியெட்டும்விட் டோடவெட்டாதவெளி மட்டும் புதைய விரிக்குங்கலாய மயூரத்தனே.
தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள் கந்தச் சுவாமியெனைத்தேற்றியபின்னர்க் காலன்வெம்பி வந்திப் பொழுதென்னை யென்செயலாஞ்சித்தி வாளொன்றினாற் சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரிகுலத்தையே,

Page 25
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவழ வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பினைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவாதவர்க்கொரு தாழ்வில்லையே.
பழக்கின்றிலை பழநித்திருநாமம்படிப்பவர்தாள் முடிக்கின்றிலை முருகாவென் கிலைமுசி யாமலிட்டு மிடிக்கின் நறிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின்றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே
மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்து மிந்தக் கைவருந் தொண்டன்றி மற்றறியேன்கற்ற கல்வியும்போய்ப் பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும் ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன்னடைக்கலமே.
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற் சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ நாலாயிரங்கண் படைத்திலனே பந்த நான்முகனே
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய் தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித் தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோற் பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப்பதைக்கின்றதே.
ft
f2.
13.
f4.
5.
 

திருநீறு அணியும் முறை
பக்தியோடு சிவசிவா என்று திருநீற்றைப்
பரிந்து கையால் எடுத்துப் பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
பருத்த புயமிது ஒழுக நித்தமும் விரல்களால் நெற்றியில் அழுந்தல்உற
நினைவாய்த் தரிப்பவர்க்கு நீடுவினை அணுகாது தேக பரிசுத்தமாம்
நீங்காமல் நிமலன் அங்கே சக்தியோடு நித்தம் விளையாடுவன் முகத்திலே
தாண்டவம் செய்யும் திரு சஞ்சலம் வராது பரகதி உதவும் இவரையே
சக்தியும் சிவன் என்னலாம் மத்தினிய மேரு என வைத்து அமுதினைக்கடையும்
மால் மருகனான முருகா மயிலேறி விளையாடும் குகனே புல்வயல் நீடு
மலைமேவு குமரேசனே.
-குருபாததாசர்.
பட்டினத்தார் ஞானம்
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வ மெலாம் அன்றென்றிரு பசித்தோர்முகம்பார் நல்லறமு நட்பும் நன்றென்றிரு நடுநீங்காமலே நமக் கிட்டபடி யென்றென்றிரு மனமே யுனக்கேயுய தேசமிதே!
நாட்டமெ றேயிரு சற்குரு பாதத்தை நம்பு பொம்மல் ஆட்டமென்றேயிரு பொல்லா வுடலை அடர்ந்த சந்தைக் கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர் ஒட்ட மென் றேயிரு நெஞ்சே யுனக்குப தேசமிதே!
ஆவியொடுகாய மழிந்தாலு மேதினியிற் பாவியென்று நாமங் படையாதே - மேவியசிர் வித்தாரமும் கடம்பும் வேண்டா, மடநெஞ்சே, செத்தாரைப் போலே திரி

Page 26
பிறக்கும் பொழுது தொடுவந்த தில்லை; பிறந்ததுமண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவதில்லை யிடைநடுவிற் குறிக்குமிச் செல்வஞ் சிவன்தந்த தென்று கொடுக்கறியா (து) இறக்குங்குலாமருக் கென்சொல்லு வேன்கச்சி யேகம்பனே!
ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல: -பிள்ளைகளுஞ் சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல தேசத்திலே யாருஞ் சதமல்ல; நின்றாள் சதங்கச்சியேகம்பனே!
என்பெற்றதாயாரும் என்னைப்பினமென்றிகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைந்தார் உன்பற் றொழிய வொருபற்றுமில்லையுடையவனே!
பட்டினத்துப் பிள்ளையார் பாடல்
திரு ஏகம்பம்
எத்தனைஊர் எத்தனைவிடு எத்தனைதாய் பெற்றவர்கள் எத்தனைபேர் இட்டுஅழைக்க ஏன்என்றேன்-நித்தம் எனக்குக் களை ஆற்றாய் ஏகம்பா கம்பா உனக்குத் திருவிளையாட்டோ
திருக்குற்றாலம்
காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே பாலஉண் கடைவாய் படும்முன்னே - மேல்விழுந்தே உற்றார் அழும்முன்னே ஊரார் சுடுமுன்னே குற்றாலந்தானையே கூறு
பொது
விட்டுவிடப் போகுதுஉயிர் விட்டஉடனேஉடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட்டு எந்நேரமும்கிவனை ஏத்துங்கள் போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம்

ஆவியோடுகாயம் அழிந்தாலும் மேதினியில் பாவிஎன்று நாமம் படையாதே - மேவியசிர் வித்தாரமும்கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே செத்தாரைப் போலே திரி
ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே - வன்கழுக்கள் தத்தித்தக்திச்செட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக் கத்திக்குத் தித்தின்னக் கண்டு.
எத்தனைநாள் கூடி எடுத்த சரீரம்இவை அத்தனையும் மண்தின்பது அல்லவோ - வித்தகனார் காலைப் பிடித்துமெள்ளக் கங்குல்பகல் அற்றஇடம் மேலைக் குடிஇருப்போமே. எத்தனைபேர்நட்டகுழி எத்தனைபேர் தொட்டமுலை எத்தனைபேர் பற்றி இழுத்தஇதழ்-நித்தநித்தம் பொய்அடா பேசும் புலைமாதரைநீக்கி உய்அடா உய்அடா உய் இருப்பதுபொய் போவதுமெய் என்றுஎண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினைஉன்னாதே - பருத்ததொந்தி நம்மதுஎன்று நாம்இருப்ப நாய்நரிகள் பேய்கழுகு தம்மது என்று தாம்இருக்கும் தான்.
விருத்தம்
முன்னை இட்டதிமுப்புரத்திலே பின்னை இட்டதி தென்இலங்கையில் அன்னை இட்டதிஅடிவயிற்றிலே யானும் இட்டதீமூள்கமூள்கவே
வெண்பா
வேகுதே திஅதனில் வெந்துபொடி சாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக் குருவி பறவால் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்து எடுத்த கை வெந்தாளோ சோனாகிசிவித்தகா நின்பதத்தில் வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும் உன்னையே நோக்கி உகந்து வரம்கிடந்தென் தன்னையே ஈன்றுஎடுத்த தாய்

Page 27
உடற் கூற்று வண்ணம் இசை வாய்ப்பாடு
தனதனதான தனதனதான
தந்ததனந்தன தந்ததனந்த தனனதனந்த தனனத67ந்த
தானனதானன த77ணதந்த தந்ததனதான தனதான67ா.
ஒருமடமாதும் ஒருவனும் ஆகி
இன்பசுகம்தரும் அன்புபொருந்தி
உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோனித மிது கலந்து
பனியில் ஒர்பாதி சிறுதுளிமாது
பண்டியில்வந்துபு குந்துதிரண்டு
பதுமம் அரும்பு கமடம்இதென்று
பார்வைமெய்வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும்ஆகி உயிர்வளர்மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்துமடந்தை
உதரம்அகன்று புவியில்விழுந்து
யோகமும்வாரமும் நாளும் அறிந்து
மகளிர்கள்சேனை தரஅணைஆடை
மண்படஉந்திஉ தைந்துகவிழ்ந்து
மடமயில் கொங்கை அமுதம் அருந்தி
ஓர் அறிவுஈர்அறிவு ஆகிவளர்ந்து
ஒளிநகைஊறல் இதழ்மடவாரும்
உவந்துமுகந்திட வந்துதவழந்து
மடியில் இருந்து மழலைமொழிந்து
வாஇருபோ என நாமம்விளம்ப

உடைமணி.ஆடை அரைவடம் ஆட
உண்பவர்தின்பவர் தங்களொடு உண்டு
தெருவில்இருந்து புழுதிஅளைந்து
தேடியபாலரொடு ஒழநடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே
உயர்தருஞான குரு உபதேச
முந்தமிழன்கலையும்கரைகண்டு
வளர்பிறைஎன்று பலரும்விளம்ப
வாழ்பதினாறுபிராயமும்வந்து
மயிர்முடிகோதி அறுபதநீல
வண்டு இமிர்தண்தொடை கொண்டையுனைந்து
மணிபொன் இலங்கு பணிகள் அணிந்து மாகதர்போகதர் கூடிவனங்க
மதனசொரூபன் இவன் எனமோக
மங்கையர் கண்டும ருண்டுதிரண்டு
வரிவிழிகொண்டு சுழியளறிந்து
மாமயில்போல் அவர் போவதுகண்டு
மனதுபொறாமல் அவர்பிறகுஒழ
மங்கலசெங்கல சந்திகழ்கொங்கை
மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி
ஒருமுதல்ஆகி முதுபொருளாய்இ
ருந்தனங்களும் வமயில் இழந்து
மதனசுகந்த விதனம் இதுஎன்று
வாலிபகோலமும் வேறுபிரிந்து
வளமையும்மாறி இளமையுமாறி
வன்பல்விழுந்துஇரு கண்கள்இருண்டு
வயதுமுதிர்ந்து நரைதிரைவந்து
வாதவிரோதகு ரோதம் அடைந்து
செங்கையினில் ஒாத டியும் ஆகியே

Page 28
வருவது போவது ஒருமுதுகூறு
மந்தினனும்பழ குந்திநடந்து
மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
வாய்அறியாமல்விடாமல்மொழிந்து
துயில்வரும்நேரம் இருமல்பொறாது
தொண்டையும்நெஞ்சும் உலர்ந்துவறண்டு துகிலும்இழந்து சுணையும்அழிந்து
தோகையர்பாலர்கள் கோரணிகொண்டு
கலியுகம்மீதில் இவர்மரியாதை
கண்டிடும்என்பவர் சஞ்சலம்மிஞ்ச
கலகல67ன்று மலசலம்வந்து
கால்வழிமேல்வழி சாரநடந்து
தெளிவும்இராமல் உரைதடுமாறி
சிந்தையும்நெஞ்சும்உ லைந்துமருண்டு
திடமும் அழிந்து மிகவும்அலைந்து
தேறியநல்ஆதரவு ஏதுஎனநொந்து
மறையவன்வேதன் எழுதியவாறு
வந்ததுகண்டமும் என்றுதெளிந்து
இனியென கண்டம் இனிஎனதொந்தம்
மேதினிவாழ்வுநிலாதினிநின்ற
கடன்முறைபேசும் எனஉரைநாவு
தங்கிவிழுந்துகைகொண்டுமொழிந்து
கடைவழிகஞ்சி ஒழுகிடவந்து
பூதமுநாலுசு வாசமும் நின்று
நெஞ்சுதடுமாறி வரும்நேரமே
வளர்பிறைபோல எயிரும்உரோம
மும்சடையும்கிறு குஞ்சியும்விஞ்ச
மனதும்இருண்ட வடிவும்இலங்க
மாமலைபோல்யமதூதர்கள் வந்து

வலைகொடுவீசி உயிர்கொடுபோக
மைந்தரும்வந்துகு விரிந்தழநொந்து
மடியில்விழுந்து மனைவிபுலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து
பழையவர்காணும் எனும்அயலார்கள்
பஞ்சுபறந்திட நின்றவர்பந்தர்
இடும்எனவந்து பறையிடமுந்த
வேயினம்வேக விசாரியும்என்று
பலரையும் ஏவி முதியவர்தாம்.இ
ருந்தசவம்கழுவுஞ்சிலர்என்று பணிதுகில் தொங்கல் களபம்அணிந்து
பாவகமேசெய்து நாறும்உடம்பை
வரிசைகெடாமல் எடும்எனஒழ
வந்துஇளமைந்தர்கு ரிைந்துசுமந்து
கடுகிநடந்து சுடலை அடைந்து
மானிடவாழ்வென வாழ்வெனநொந்து
விறகுஇடைமுழ அழல்கொடுபோட
வெந்துவிழுந்துமுறிந்துநினங்கள்
உருகிஎலும்பு கருகிஅடங்கி
ஒர்பிழநீறும்இலாத உடம்பை
நம்பும்அடியேனை இனிஆளுமே,
عالي
父

Page 29
தாயுமானார் உபநிஷத்து
கல்லேனும் ஐயவொரு காலத்தில் உருகுமென்
கல்நெஞ்சம் உருக விலையே கருணைக் கிணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க வொருகட வுளோ வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு வழக்குக் கிழுக்கு முண்டோ வானமாய் நின்றின்ப மழையாயிறங்கி எனை வாழ்விப்பதுன்பரங் காண் பொல்லாத சேயெனில், தாய்தள்ளல் நீதமோ
புகலிடம் பிறிதுமுண்டோ? பொய்வார்த்தை சொல்லிலோ திருவருட் கயலுமாய்ப் புன்மையே னாவனந்தோ! சொல்லால் முழக்கிலோ சுகமில்லை மெளனியாய்ச்
சும்மா இருக்க அருளாய் சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுக வாரியே!
திருப்புகழ் மாலை
கருவின் உருவாகி வந்து வயதளவிலேவளர்ந்து
கலைகள் பல வேதெரிந்து - மதனாலே கரியகுழல் மாதர்தங்கள் அடிசுவடு மார்புதைந்து கவலைபெரிதாகி நொந்து - மிகவாடிஅரகர சிவாய வென்று தினமுநினையாமல்நின்று அனுசமய நீதி ஒன்றும் அறியாமல், அசனமிடு வார்கள் தங்கள் மனைகள் தலைவாசல்நின்று அநுதினமும் நாணமின்றி - அழிவேனோ?
உரகபட மேல்வளர்ந்த பெரியபெருமாள் அரங்கர்
உலகளவு மால்மகிழ்ந்த - மருகோனே உபயகுல தீபவங்க விருதுகவிராஜசிங்க உறை புகலியூரிலன்று - வருவோனே பரவைமனை மிதிலன்று ஒருபொழுது தூதுசென்ற
பரமனரு ளால் வளர்ந்த குமரேசா பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மிதில் நின்ற - பெருமாளே.

TDT 6ð) (6)
ஒன்றே என்னின் ஒன்றேயாம் பலவென்றுரைக்கற பலவேயாம் அன்றே என்னின் அன்றேயாம் ஆமென்றுரைக்கின் ஆமேயாம் இன்றே என்னின் இன்றேயாம் உளதென்றுரைக்கின் உளதேயாம் நன்றே நம்பிக் குடிவாழ்க்கை நமக்கிங் கேனோ பிழைப்பம்மா!
தியானம்
பலபலவாம் சாத்திரங்கள் அலசிப் பார்த்தும்
பலசாதிமதங்களையும் பழுது பார்த்தும் புலவர் செயும் வாய்வாதப் போர்கள் பார்த்தும்
புவியாள்வார் சூழ்ச்சிகளைப் புகுந்து பார்த்தும், கலமிலாச் சாந்தமதைக் காண லாமோ?
கண்ணின்றிக் கண்ணாடி முகங்காட்டும்மோ? இலகுபரம் பொருளே நின் இச்சையின்றி
இரவகலும் பகலவனும் எழுவ துண்டோ,
உருவாகி உலகாகி உள்ள மாகி
உள்ளத்தே உணர்வாகி உணர்வி னோங்கும் அருவாகி அவனவளும் அதுவுமாகி
அம்மையப்பனாகிநல்லன்பா லெய்தும் குருவாகிப் பலகோடி குணங்க ளாகிக்
குனதொந்த மில்லாத கொள்ளக யாகிக் கருவாகிச் சின்மயமாம் காட்சியாகும்
கடவுளேநீயல்லாற் கதியும் உண்டோ?
போற்றிசுத்த சக்திமயம்
போற்றி சுத்த யோகநிலை போற்றி சுத்த சங்க நலம்
போற்றி சுத்த சன்மார்க்கம் காற்றிற் கலந்த பூமணம் போல்
கருத்திற் கலந்து கலந்தின்ப ஊற்றெ முந்து செழிக்க வுயிர்
உள்ளன் பென்றும் வாழியவே

Page 30
மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
ஒம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்த நம் / உர்வாருகமிவ பந்த நான்
ம்ருத்யோர் முகூறிய மாசும்ருதாத் //
ஓம் ஹ்ரீம் நமசிவாய
தெய்வ மணங்கமழும் திருமேனியையுடையவரும் தமது பக்தர்களை நோயின்றி ஆரோக்கியத்தோடு பருத்துவளரச் செய்கின்றவரும் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று சுடர்களையும் கண்களாக உடையவருமான எமது உபாசனா மூர்த்தியாகிய கடவுளிடம், எமது உடலையும் உயிரையும் அர்ப்பணம் செய்கின்றோம். வெள்ளரிப் பழமானது தன் கொடியினின்றும் விடுவிக்கப்படுவது போலக் காலனுடைய கட்டினின்றும் நான் விடுவிக்கப்படுவேனாக !
மஹா ம்ருத்யுஞ்ஜய காயத்ரீ
ஓம் அம்ருதஸ் வரூபாய வித்மஹே கெளரி சஹிதாய தீமஹே தந்நோ ம்ருத்யுஞ்ஜப் ப்ரஜோதயாது.
ஓம் சாந்தி.

உயர்விலும் தாழ்விலும் ஒத்த தன்மையன்
சந்தன மென்குறடுதான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைவுபடாது ஆதலால் - தம்தம் தனஞ் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம் சிறிய ஆவரே மற்று 28.
பொழிப்புரை சந்தனக் கட்டையானது தான் தேய்ந்து மெலிந்த காலத்திலும்
சுகந்த மணத்தாலே குறைவுபடாது; அரசரும் தமது செல்வத்தாலே குறைவுறும்
காலத்தும் தம் உள்ளங்களாற் சிறியராகார்; எக்காலத்திலும் அவர்களின் தாராள
சிந்தை மாறுபடாமலே விளங்கும்.
விளக்கவுரை சந்தனக் கட்டை தேய்ந்தாலும் வாசனை குறையாது. அதே போல்
நல்ல ஒழுக்கமும், சிறப்பும் பொருந்திய அரசர்கள் செல்வத்தை இழந்து போனாலும்
குணம் மாறுபடார், மன்னர்களுக்கு மட்டுமல்ல; நல்லவர்கள் எல்லோருக்கும் இது
பொருந்தும்
வாக்குண்டம்

Page 31
கீதா சாரம்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கும்
உன்னுடையது எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்திருந்தாய் அது வீணாகுவதற்கு
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ அது நாளை
மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்
இந்த மாற்றம் உலக நியதியாகும்.
பகவான் யூனி கிருஷ்ண பரமாத்மா.

இப்பவோபின்னையோ மத்தியானத்திலோ
இரவுபடுநேரமதிலோ, இரவிலோ பகலிலோ உதயகாலத்திலோ
வெந்தெந்த நேரமதிலோ, அப்பிலோதீயிலோ நாயிலோ பேயிலோ
அரவு பெருமிடிதன்னிலோ, ஆறாத புண்ணிலோ, நடைநோவுதன்னிலோ ஆயுதங்களினாலையோ, செப்பரியவீட்டிலோ காட்டிலோ மேட்டிலோ தெருவிலோ
திண்ணைதனிலோ ஜெகந் தன்னிலெங்கெங்கெ யோவறிகிலெ
னெனதுசீவன் விடுகின்ற நேரம், அப்பொழுதுவந்து
நின்கருணை தந்தெனையாளும் அம்பலத்தமர்ந்த வாழ்வே
அண்டபகிரண்டமுமடங்கவொரு நிறைவாகியெங்குநிறைகின்ற
LuryGLO.

Page 32
வருந்த வேண்டா
“இவன் பிறப்பதுமில்லை. இவன் ஒருமுறை இருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன், உடம்பு
கொல்லப்படுகையில் இவன் கொல்லப்பட்டான்.
“நைந்து துணிகளைக் கழற்றி எறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த
உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்!
“இவனை ஆயுதங்கள் வெட்டமாட்டா : தீ எரிக்காது;
நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது !
“உயிர்களின் ஆரம்பம் தெரியவில்லை; நடுநிலைமை
தெளிவுடையது; இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயர் படுவதென்ன?
“எல்லோருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன். ஆதலால், நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா !
- பகவத்கீதை

நல்லதோர் குடும்பம்
மயில்வாகனம் + நேசம்மா - சோமசுந்தரம்
முத்துக்குமாரசாமி + முத்துப்பிள்ளை - சிவயோகநாயகி
சோமசுந்தரம் + சிவயோகநாயகி
1.
சிவசுந்தரி + செ. சண்முசநாதன் - சுதர்சன்
யோகசுந்தரம் + சுகந்தகுமாரி
தேவசுந்தரம் + சுமங்கலி
ஜெயசுந்தரி + தேவகுமார்
፲9990425
சுரேஸ்வரன் பிரதீப்
கொழும்பு
- தினேஸ்
விநோதா
யாழ்ப்பாணம்
- கேசாந்தன்
- கஜிந்தன்
நிரோஷன்
கொழும்பு
காந்தியார் வளவு 23/2 மணல்தறை ஒழுங்கை கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
இலங்கை,

Page 33
缆 நன்றி
★ எம் தலைவர் இறப்பைத் தழுவிய வேளை ஆறுதல் அளித்த உற்றார் உறவினர், அயலவர், சித்தவைத்தியத்துறையினர், சிவாசாரியர் என்போர்க்கும்,
★ தொலைபேசி, தந்தி கடிதம் என்பவை மூலம் ஆனுதாபம்
தெரிவித்தோர்க்கும்,
大 மலர்வளையம், கண்ணீரஞ்சலி என்பவை மூலம் அஞ்சலி
தெரிவித்தோருக்கும்,
★ அஞ்சலி உரை நிகழ்த்தியோருக்கும்,
★ உடலுழைப்பு வழங்கியோருக்கும்,
★ அந்தியோட்டி வீட்டுக் கிரியைகளிற் பங்கு பற்றியோருக்கும்,
女 அமரர் ஆத்மசாந்திக்காக வேண்டுதல் செய்த அனைவர்க்கும்,
★ குறுகிய கால வேளையில் இந்த நினைவேட்டினை
அச்சிட்டுதவிய யூனி ஆட்ஸ் நிறுவனத்தாருக்கும்,
அமரர்சார்பாக எம் நன்றி
23/2, மணல்த்றை ஒழுங்கை, மனைவி, மக்கள்,
கந்தர்மடம், யாழ்ப்பாணம். மருமக்கள், பேரப்பிள்ளைகள். 1999.04.25


Page 34
Printed by: Urie Air

'L'. It Ltd. ( Iloilo l.