கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நகுலேசர் திருவந்தாதி

Page 1
நகுலேசர் தி
இலக்கண வித்தகர் பண்டிதர் இ.நமசிவா

நிருவந்தாதி
யதேசிகர்

Page 2

நகுலேசர் திருவந்தாதி
இலக்கண வித்தகர் பண்டிதர் இ. நமசிவாய தேசிகர்
இலக்கண வித்தகர் மாணவர் வெளியீடு
199 O

Page 3
இலக்கண வித்தகர் மாணவர் வெளியீடு-1
முதற் பதிப்பு: 1990 ஜூன்
Giaou : eblum 2O - OO
அச்சுப் பதிவு :
திருமகள் அழுத்தகம், சுன்னுகம்

கிட
நகுலேஸ்வர தேவஸ்தான ஆதீனகர்த்தர் பிரம்மழநீ கு. நகுலேஸ்வரக் குருக்கள் அவர்கள்
அருளிய ஆசியுரை
இலக்கண வித்தகர், பண்டிதர் இ. நமசிவாய தேசிகர் வித்துவ சிரோமணி பிரம்மபூரீ சி. கணேசையர் அவர்களின் முதல் மாணவர்; குரு பக்தி மிக்கவர் நகுலேஸ்வரர் திருப்பதிகம் பாடி எமது தேவஸ்தான மூர்த்தியின் திருவருளுக்குப் பாத்திர மானவர்,
தேசிகரவர்கள் இப்போது நகுலேசர் திருவந்தாதி பாடியிருக் கிருர்கள். நகுலேஸ்வரப் பெருமான்மீது தேசிகருக்கு உள்ள ஆராமையின் ஆற்ருமை அது.
குருபக்தி மிக்க தேசிகருக்குக் குருபக்தி மிக்க மாணவர் வாய்த்ததில் வியப்பேது.
* இலக்கண வித்தகர் மாணவர் வெளியீடுகளாகத் தேசிகர் நூல்கள் சிறக்கத் துணைநின்றருள்க !’ என நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரப் பெருமான் உபய சரணுர விந்தங்களைத் தியா னிக்கிருேம் : “ வெளியீட்டு முயற்சி வெல்க ! “ என ஆசீர்வதிக் கிருேம் !
நகுலேஸ்வரம், 1990-06-09.

Page 4
dàபதிப்புரை
நகுலேஸ்வரர் திருப்பதிகத்தைத் தொடர்ந்து நகுலேசர் திருவந்தாதி எழுந்துள்ளது.
பத்தியிற் பழுத்த உள்ளமொன்றின் பரவசம் எப்படியெல் லாம் மடையுடைத்த வெள்ளமாய்ப் பிரவாகிக்கும் என்ப தற்கு இந்தப் பத்திப்பனுவல் மற்ருெரு சிறந்த உதாரணம்.
மிக நெருக்கடியானதொரு காலகட்டத்தில் இலக்கண வித்தகரின் உள்ளம் இறையன்பிலே தோய்ந்து தன்வய மிழந்து நின்றது. அப்போது தன்னிச்சையாய்ப் பூத்த தோத்திர மலர்களே நகுலேசர் திருவந்தாதி யெனும் அருட் பாமாலையாக இப்போது உருப்பெற்றுள்ளன.
இலக்கணவித்தகர், ‘என்னைத் தைரியப்படுத்தப் பாடிய பாட்டுக்கள் இவை என்று கூறினும் இவை எம்மெல் லோரையுமே தைரியப்படுத்துகின்றன என்பது தான் உண்மை.
இவ்வருட் பனுவலை வெளியிட இசைவுதந்த எம் ஆசிரியப் பிரானுக்கு எம் பணிவான வணக்கம்.
இலக்கணவித்தகர் அவர்களின் என்சிந்தனைகள்; அநுப வங்கள் என்ற நூலும் மாணவர் வெளியீடாக மலர வுள்ளது என்பதைத் தெரிவிப்பதிற் பெரிதும் உவகை யுறுகிருேம்.
மாணவர் சார்பில்,
விழிதீட்டி
as. se LDT LOGSsGio6nu Tör
1990-05-30

6. சிவமயம்
நகுலேசர் திருவந்தாதி
காப்பு சங்கார் கரனயன் காணு நகுலா சலமுதன்மேற் பொங்கா தரத்தொடோர் அந்தாதி பாடியான் போற்றுதற்கு மங்கா வளமார் வருத்தலைக் கண்மா மருதடியைத் தங்கா லயமெனக் கொள்ளைங் கரத்தன் தருந்துணையே.
நூல் பூவா ரடிநகு லானனன் போற்றிப் புகழ்ந்துநித மோவா தொழுகு மருவிநீ ராடி யுழைந்திடலு மாவா வெனவரு ளான்முக மாற்று மவனிருக்கப் போவா ரெவர்பிற தெய்வத்தை நாடிப் புறம்புறமே.
புறந்தருந் தன் கழல் போற்றுகின் முரைப் பொருவரிய அறந்தரு மர்த்தத் தொடுகல்வி யின்ப மளித்தருளும் இறந்தருந் தீநர கெய்தாமை நல்கு மிமையவட்கோர் புறந்தருஞ் சீர்நஞ லாசலம் மேவிய புண்ணியனே.
புண்ணிய முன்னென்ன செய்தன மோவிப் புவிபுரக்க நண்ணிய தூயநற் றீர்த்தம தாடி நகுலமலை யண்ணிய வண்ணலைத் தன்னிடம் மேவிய அம்மையொடும் பண்ணிய னற்றமி ழாற்றுதி பாடிப் பணிவதற்கே.
பணியா தெனவரி பங்கய ஞதிப் பகவர்தனைப் பணியா யெனநிதம் வேண்டினர் நிற்கப் பதைத்துருகிப் பணியா பரணகண் பாரென வேண்டுமிப் பாரினரை யணியா தரத்தி னருளுவ ஞனகு லாசலனே.
சலமில ஞயினுந் தன்னினை வார்க்கித் தரணியின்கண் இலமில மென்றுநை யாவகை யாவு மினிதளித்துச் சலமில ராக்கிமெய்ஞ் ஞானம் பெறத்தடை தந்துநின்ற மலமில ராக்கும் நகுல மலையுறை வானவனே.
வானம் வளிதீ புனல்மண் கதிரிய மானனிந்தைத் தானங் கமாக்கி யகிலாண்ட மெங்குந் தரித்தவற்றை யானந் தமாக வசைத்தவற் றுக்குவே ருகியுமெய்ஞ் ஞானந் தவாநகு லேசனின் முடுவன் நம்பொருட்டே.

Page 5
ー2ー
பொருளைப் புகழினைப் பூவைய ரின்பினைப் போற்றிசெயு மிருளைப் புறங்கண் டியாமுனை நெஞ்சி விருத்துதற்குன் னருளைப் பெறுவதெந் நாளென்ன வேங்கி யலமந்தனந் தெருளைப் புரிதவர் சேர்நஞ லாசலச் செவ்வண்ணனே. 7
வண்ணப் பிறைநதி யாடர வஞ்சேர் மணிச்சடையு மெண்ணத் தகுநீ றணிமெய்யு மாரரு ளேய்கண்களும் மண்ணப் படுமணி யன்னபொற் கண்டமும் வாய்ந்தெமுளம் நண்ணப் புகும்நகு லாசலம் மேவிய நாயகனே. 8
நாயகன் தன்னிட மேவிய நங்கைக்கு நாம்புரிந்த தீயகன் மம்மெலாந் தீய்ந்திடச் செய்யுந் திறலுடையான் போயகன் மேருவில் லாற்புர மூன்றும் பொடிசெய்தவன் பாயகன் மாநகு லாசலன் சூலப் படைக்கரனே. 9
துடைப்பவன் தீவினை யாளரைத் துன்பங்கள் சூழ்நரகி லடைப்பவன் தான்சொலும் நூனெறி நின்ரு ரருவினைக ளுடைப்பவன் தொன்னகு லாசலம் மேவி யுறையரனே. IO
உறைதரப் பால்தயி ராகி யுறைதரு முன்பதங்க ளுறைதர வெம்மணம் யாமுநீ யாத லுறுவமன்ருே கறைதரக் கண்டத்தி னஞ்சுண் டடக்கிய கண்ணுதலெங் கறைதரு நெஞ்சினிற் கால்வைக்க வேண்டும் கனிந்தருளே. 11
அருடர வெங்களுக் காநீ யரங்கினின் முடிடுவாய் பொருடர யாமுமிப் பூமிசை யாடல் புரிகின்றனம் இருடர வாழுதற் காவோ பிறவியா மெய்தியது தெருடர வன்புனிற் செய்யுமா செய்தி திருவருளே. 12
திருவுறு மார்பினன் செங்கணன் நின்னுருத் தீண்டவெண்ணித் திருவுறு மால்விடை யாகிச் சுமந்து திரிந்தனன்வான் மருவுறு மம்புலி செஞ்சடை வைகி மகிழ்ந்தனனின் னுருவுறு நெஞ்சின ருண்ணி யிருந்ததென் னேதெமக்கே, 13
ஓதி யுணர்ந்திடு மேலவர்க் கேனு முணர்வரிய சோதி யுடுக்குட னக்கினி யேந்தித் துணைக்கரத்தில் நீதி யினுலப யம்வர தங்கை நிகழ்த்தியவை மீதி னடம்புரி வானகு லாசலம் மேயவனே, 4

- 3 -
மேயவன் பார்முத லண்டங்க ளெங்கும் விரிந்துபரந் தாயவன் புற்றவர்க் காலயத் தும்மடி யாரிடத்தும் தேயவன் கன்மமுன் ணுயின செய்தே சிகரிடத்தும் சேயவ ஞயினும் தோன்றித் திருவருள் செய்குவனே.
வெய்ய வியமனைக் காலா லுதைத்து விளிவுசெய்தே யுய்ய வருளிய வன்னகு லாசல முற்றிருந்தா னய்ய வருதுய ருண்டோ நமக்கவ னன்மருந்தே,
நல்ல திதுதீ தெனவறி கின்றிலம் நானிலத்தி லல்ல புரிந்திருட் கண்ணே குருடர்க ளாகினம்நாம் மெல்ல வருளொளி காட்டினை மெய்ம்மை விளக்குவையோ வல்ல லறுக்க நகுலா சலத்தி லமர்ந்தவனே.
தவரு மரியய னிந்திர ஞதித் தலைவருமற் றெவரு மலைய வருத்திய முப்புரத் தீனருயிர் கவரு நகுலா சலத்த னெமது கவலையுமே லிவரும் படிசெயா தோட்டுவ னின்ப மிசைதரவே.
இசையா ரருந்தமிழ்ப் பாசுரங் கேட்க வெழும்பெரிய நசையா னகுலா சலமிசை மேவிய நம்பெருமான் அசையா தவன்பி லகநெக் கருட்பா வநுதினமும் இசையா லிசைப்பவ ரெண்ணிய யாவுமிங் கெய்துவரே.
எய்தற் கரியைநீ யெவ்வெவர்க் கேனு மெனினுமண்ணிற் செய்தற் கரியன செய்துபெற் ருர்பலர் சேரன்பினுற் செய்தற் குரியவும் செய்திற னற்ற சிறுமையினேம் உய்தற் கொருவழி சொன்னகு லாசல முற்றவனே.
உற்ரு ரயலா ருறவினர் செல்வத் துயர்ந்தவர்மற் றற்ரு ரதிகா ரிகளஃ திலார்பதத் தாரதற்ருர் கற்ரு ரறியா ரெனும்வேறு பாடுகள் கண்டலைவோம் சற்ரு தரித்தருள் வாய்நகு லாசலச் சங்கரனே.
அரணுய் மலமூன் றரிப்பவ னுடர வந்தரித்த சிரணுய் அடைந்தவர்க் காப்பவ னக்கினி சேர்ந்திலகுங் கரணுய் உலக மழிப்பவ னேனைக் கடவுளர்க்கும் பரணுய் நிலைப்பவன் மாநகு லாசலப் பண்ணவனே.
15
16
17
8
19
20
2.
22

Page 6
- 4 -
பண்ணி லினிய மொழிபயில் பார்வதி பாங்கிலுற நண்ணி நகுலா சலத்திடை மேவிய நாயகனைக் கண்ணி லினிதுறக் கண்டெம துள்ளங் களிப்பதற்குப் பண்ணி யுளதென்ன நற்றவ மோமுனைப் பாரகத்தே
w பாரிற் சிறந்த தலநகு லேஸ்வரம் பண்ணமைந்த சீரிற் சிறந்த வுருநகு லேசர் திருவுருவே தேரிற் சிறந்தநற் றீர்த்தம் நகுலை திகழருவி நேரிற் சிறந்தவை கண்டா ரடைவர் நினைந்தவையே.
நினைய வரியவன் பொற்கயி லாய நெடுவரையான் புனைய வருமெழி லாளுமை மாதொடும் புன்மையினுேம் இனைய வருதுயர் யாவையும் போக்கி யினிதருள மனைய தெனநகு லாசலம் வந்து மருவினனே.
மருவி மலரம் பினலெய் மதனனை மாளுவித்துப் பொருவி லறுமுகற் றந்தா னுதற்கட் பொறிகளினல் உருவி னெடுவரு வானகு லேசன்தீங் குற்றவரை வெருவி அழித்தருள் வானலோர்க் கென்கை விளக்குமிதே.
தேரத் தமிழை யத்திய ருக்குத் தெளிவித்தவன் வாரத் தொடுகவி யாகித் தமிழை வளர்வித்தவன் சேரத் தகுநகு லேசன் தமிழ்க்குச் செவிதருவன் ஆரத் தமிழ்மறை யோதித் தொழுவம் அருள்கவென்றே.
என்றே யுனதரு வீவாய் நகுலையை யெய்துபிரான் என்றே யுனதிரு பாதாம் புயங்களை யேத்திவரு கின்றே மெமக்கருள் கில்லா யெனினெல் கிளருமணிக் குன்றே யனையாய் துணையெமக் கார்கொல் குறித்துரையே.
குறியுங் கடந்து குணமுங் கடந்தவன் கூறுதற்கா நெறியுங் கடந்தவன் ஊர்பேர் கடந்தவன் நேர்கடந்தான் பொறியுங் கடந்தவன் மாநகு லாசலம் புக்கிருந்தான் அறியுங் கடந்த தருளிது வென்ன வடியவரே.
அடியர்க் கெளியன் நகுலா சலத்தன் அடிபடியிற் படியப் புகுந்துது தானுன் பரிந்து பசியறுக்கும் படியற் பொடுசோ றளித்தான் எமக்குப் படுதுயரும் முடியக் கெடுப்பன். அவனடி நெஞ்சினில் முன்னிடினே.
23
24
25
26
27
23
29
30

- 5 -
முன்னவ ருக்குமுன் னனவன் யாவும் முடிந்தபினர்ப் பின்னவ ருக்குப்பின் ஞவான் நகுலே பெரிதுவந்தான் அன்னவன் தன்னையந் நான்மறை தானும் அறிந்திலதாற் பின்னவன் நல்லியல் பேசவல் லோமோ பிழையறவே. 3.
வேண்டும் உனதிரு தாட்புணை மேற்பிற விக்கடலைத் தாண்டு வதற்கும் வினையேம் விழுந்து தலையதணுற் நீண்டு வதற்கும் அடியே மகந்தைவேர் தீர்வதற்கும் தூண்டு விளக்கனை யாய்நகு லேசுரச் சுந்தரனே, 32
சுந்தரன் நஞ்சமு தாகி மணியிற் சுடர்தருநற் கந்தரன் ஆக்கி யழித்துல காடிக் களித்திடுஞ்சு தந்தரன் அன்புடன் சார்ந்தவர் கண்முனே தந்தவினை உந்தரன் சீர்சேர் நகுல மலைவாழ் வுகந்தவனே. ○g
கந்தவான் சோலைசூழ் நின்றவூர்ப் பூசலன் காசினிக்கு வந்தமா பஞ்ச மகற்ற வுளத்தில் மருவுவித்த அந்தமா வாலயத் துற்ருன் நகுலை யடைந்திருந்தான் எந்தவா றுந்துய ரெய்தா விணையடி யேத்துவமே. 34
ஏக்கற் றெமைக்கா வெனவேண்டு வாருக் கினிதருளும் போக்கற் றனமெனப் போற்றுகின் ருர்துயர் போக்குவிக்கும் நீக்கற் கரும்பிணி நீக்கென் றழவது நீக்குவிக்கும் தேக்கற் றருவி யிழிநகு லேசன் திருவடியே. 35
திருக்கோ ணமலை வலிவலம் காசிகே தீசுவரம் திருக்கழுக் குன்றம் சிதம்பரம் காஞ்சி திருவருணை திருக்கெடி லம்புக லூர்நகு லைம் முற் றிருத்தலத்தில் இருக்கின் றவனெரு வன்கா ணலையா திருமணமே. 36
மனமே யலையல்கா மங்குரோ தம்மத மாற்சரியம் தினமே விடாது சிவமே நினையும் திருவுடையார் இனமே புகுந்துநாம் வாழத் துணையாய் இருப்பையெனிற் கனமே வுநகுலை யான்றுணே யாய்க்கடைக் கண்தருமே. 37
கண்ணி மணிநீ யுயிர்நீ யுளம்நீ கருத்திலுறும் எண்ணி யெழினி பொருணி யருணியெங் கெங்குமுள விண்ணி கதிர்முதல் யாவுநீ யாதல் விளக்கியெமக் கண்ணி யெமைநகு லாசல மேவு மருமணியே. 38

Page 7
- 6 -
அரியதாய் மாள வழுகு கரக்குட்டிக் காயிரங்கிக் கரியதாய் போல்வந்து பாலிந் தணத்த கருணையினன் பிரியமாய் நந்நகு லாசலம் மேவிப் பிறங்குகின்றன் பெரியதா யன்னன் அழிலணைத் தின்பம் பெருக்கிடுமே.
பெருகுமன் போடு மடியவர் தங்களைப் பேணிநிதம் வருகுவர் தங்களை யீசன் மகிழ்ந்து வரமளிப்பான் மருகுல வும்மிளை யான்குடி மாறனின் வாழ்வறிவோம் திருகுல வுந்நகு லாசலத் தன்பினம் தேர்வமிதே.
தேரின் மிசைநகு லேச னிவர்ந்துலாச் செய்பொழுதில் சீரின் மிகுந்தொளி வீசித் திகழும் திருவுருவும் தேரின் னிசையொடு பாடி யடியர்செய் செய்திகளும் நேரின் விழியினல் நாட வருமகிழ் நேரிலதே.
நேரு மறிவில நாரை வலியான் நெடியகரம் சேரு மியான எலிகுரங் காதிய செய்வினையால் ஆரு மடைவரி தாய பெரும்பே றடைந்திருக்கத் தேரு மறிவுடை யாம்வீ ணலைந்து திரிவதுவே.
திரிசூல மேந்தியான் தேவர்மூ வர்க்குமேல் தேவனெனும் பரிசா ரினுக்கு முணர்த்தும் நகுலைப் பராபரனை அரியா யெமைக்கா வெனவிழ்ந்து பற்றி யடிதொழுதாற் பரிவா யருள்வ னகந்தையி னிங்கிய பான்மைகண்டே.
கண்டாய் அமுதாய்க் கணியாய் மதுவாய்க் கரும்பதுவாய்த் தொண்டா தரித்து நிதம்புரி வாருளத் தூயவர்க்குத் தண்டேன் துளிமலர்த் தாளான் நகுலைத் தலத்தனெய்தி அண்டா வினிப்பன் அவர்க்கினித் துன்ப மடைகிலதே.
அடையார் இருள்திணிந் தாவென வாய்திற வாநரகில் அடைவார் ஒளிசெறிந் தானந்த மாக்கி யமையுலகில் அடையார் விடுத்த பணியை யடக்கி யணிந்திருக்கும் சடையார் நகுலைத் தலத்தா னடிமலர் சார்ந்தவரே.
சாரா ருலகினிற் பாவம் புரிந்து சரிப்பவரை ஆராத வன்பிற் சிவப்பணி செய்வா ரடியடைவர் பாரா ரதிபுகழ் பாடும் நகுலைப் பதியிலுறை நீரா ரணிசடை யானடி சூடிய நெஞ்சினரே.
39
40
4l
42
,43
44
45
46

-سسه 7 سسس
நெஞ்சில் அவனெழில் நீங்கா உருவை நிலையிருத்தித் தஞ்ச மவனென வேருென் றிலாது தனித்திருக்கில்
நஞ்ச மமுதென வாக்கிமுன் னுண்ட நகுலையிறை அஞ்ச லெனவொளி யாகு முருவாய் அலர்தருமே.
அலமரு நெஞ்சே யலையலை தூய்மை யணைகயத்துச் சலமலை வின்றெனில் தண்ணென் மதியச் சலத்துமிசை இலகுத னின்னுரு முற்றும் விளக்கி யிருப்பதுபோற் குலவுதன் மெய்யினிற் கூட்டும் நகுலைவாழ் கொன்றையனே.
கொன்றை மிளிர்சடை யான்களி ருகிக் குலப்பிடியாய் நின்ற விறைவியைச் சேர்ந்து கரமைந்து நேருமொரு கன்றை யளித்தனன் அன்பர் துயரங் களைகவென மன்றை யுடையான் தருமிக் கொடைக்குக்கைம் மாறிலையே.
இல்லா தவற்றையாம் எய்திட நாளும் இனைந்தினைந்து நில்லா வுலகினில் நின்றிளைத் தோங்கான் நிலை வெயிலிற் கல்லாத மானினம் கானல்நீர் தேடிக் களைத்ததெனக் கல்லா னிழலாய் அலையா தெமைவந்து காக்குதியே.
கால னெமதுயிர் வெளவிடக் காரான் கடவிவடி சூல மொடுகயி றேந்தி வெகுண்டு தொடர்பொழுதிற் கால விவரெம தன்பின ரென்றுகால் காட்டுவையோ ஞால மகிழ நகுலையின் மேவிய நம்பரனே.
நம்ப துணையிலி யேற்கரு ளென்று நலிந்துவந்தி வெம்ப வடிமையாய் மண்சுமந் தெய்த்து விழைந்துபிட்டை உம்ப ரமுதினும் நன்றென வுண்டடி யுண்டபிரான் இம்ப ரடிதொழ வந்து நகுலையை எய்தினனே.
எய்து பிருங்கி தனவணங் காம லிறையவனைக் கய்யிற் ருெழவது கண்டு வெகுண்ட கவுரிதவம் செய்ய இறையிடப் பாலவட் கீந்தருள் செய்தனணும் உய்ய வழிதவம் செய்தலென் ருேர்ந்த துஞற்றுதுமே.
உற்றேம் பெரும்புகழ் கல்விசெல் வத்தால் உயர்பதவி பெற்றேம் அதிகா ரிகள்நா மெனும்பெரும் பித்தமுற்றேம் சற்றே வருகல கத்திவை பொய்யெனும் தன்மைகண்டேம் எற்றே யுலகவாழ் வென்றுசொல் வோம்நகு லேஸ்வரனே,
47
5.
52
53

Page 8
- 8 -
சீசனி லிங்க முமையா வுடையாள் எனவிருந்து நேசமோ டாண்பெண் ணுலகிடை வாழும் நெறியுணர்த்திப் பாசமா யுள்ளன நீக்கி யெமக்குப் பதந்தருவை தாசர்நா மென்றுணர் வோமெனி லஃது தகுமெமக்கே. 55
திக்க குடிலைப் பொருளறி யாது தயங்கயனை நக்க குமரன் சிரசினிற் குட்டி நலிவுசெய மிக்க வதன்பொருள் சொல்லெனக் கேட்டு விளம்பவவன் தக்க குருவெனக் கொண்டீச கேட்டது சாற்றெமக்கே. 56
எம்மை யெவரறி வார்யாமு மெம்மை யினிதறியோம் எம்மை யினுமெமை நன்ரு யறிபவன் ஈசனவன் பொய்ம்மை யிலாதவன் தன்னடிச் சேவை புரிந்துவரின் மும்மை யினுமெமைக் காப்பான் துயரம் முழுதறவே. 57
வேத மொழிபவன் வெண்ணுர லணியினன் வெள்விடையான் காத லொடுதன நாமங்க ளோதுவார் கண்ணுறைவான் கீத மொழியுமை பாகன் நகுல் கிரியிருந்தான் நாத வெனவவன் பாத மடைய நலம்வருமே. 58
தன்றே யறிபவர் நின்னரு Oன்பின் நடக்குவர்மற் றன்றே யறிபவர் நின்னரு வின்முன் நடந்திடுவர் அன்றே யிதனை யறிந்தில மின்றே யறிந்துகொண்டோம் என்றே நகுலா சலத்தா யருள்வ திசையெமக்கே. 59
இசையான் பிறப்பிறப் பெய்தா னுலகத்தி லின்பதுன்பம் இசையான் தனக்கென ஒன்றுமில் லாதா னெமக்கருளும் நசையா னுருக்கொடு நண்ணுவா னெம்மை நகுலையினில் அசையா திருப்பா னவனெங் களுக்கிறை யாயவனே. 60
ஆனன் உமைக்குக் கணவன் கணபதி யாறுமுகன் மேஞள் அயன்றலை வாங்கிய வைரவன் வீரனிவர்க் கானன் அருளப்பன் ஆயின் இவர்பல ரல்லரொன்றே ஆன நலஞ்செய இங்ங்ன மாதல் அருணடிப்பே. 6
பேயுட னடுவன் பிச்சை புகுவன் பெருவிருப்ப மாயுடன் மீதுகொம் பாமையி னுேடென் பணிந்திருப்பன் தாயுடை யானலன் தாயென் ருெருத்தியைத் தானழைப்பன் தீயுட ஞடும் நகுலா சலத்துச் சிவனவனே. 63

- 9 -
அவனைத் துலாமதி சாரமா வாசியீ ருவமையப் புவனத் திருபத் தொருநாள் விரதம் புரிந்துதினம் கவனத்தொடர்ச்சனை செய்து வணங்கிற் கவினகுலைச் சிவனற் கருணை புரிவான் நினைந்த தெரிந்தளித்தே. 63
தெரிந்து மறையா கமம்புரா ணங்கள் தெரிந்தநெறி புரிந்து வழுவா தொழுகிவாழ் கின்ற புனிதரெமிற் பரிந்து புகலும் வழிநா மொழுகிற் பரங்கருணை சொரிந்து நகுலா சலத்தான் மகிழ்ந்து சுகந்தருமே. 64
சு கந்த மலரினம் தூயன கொய்தனம் தோத்திரித்துச் சுகந்தரு கென்றரன் துய்ய மலரடி தூவுவமேல் அகந்தரு மெம்முடை யன்பினைத் தூக்கி அகமகிழ்வாய் இகந்தரும் மேற்பரந் துய்க்கும் நெறியில் இருத்திடுமே. 65
இட்ட நிவேதன முண்கில னிச னிடவெம்மிடம் பட்டநம் மன்பு பருகுவன் நாமிடப் பட்டவெலாம் இட்ட முடனே பிரசாத மாக எமக்கருள்வன் கட்ட மறுமதை உண்டிடில் இன்பக் களிமிகுமே. 66
மிக்க சுயநலம் விட்டுயிர் கண்மேல் மிகவிரங்கித் தக்க தருமதா னங்கள் புரிந்து தவநெறியிற் புக்க துறவியர் கட்குத் துணையாம் புனிதரிடம் நக்கன் நகுலா சலத்தன் புகுந்து நலந்தருமே. 67
நன்றே யெமக்குப் புரிவது தாயேயிந் நானிலத்தில் கன்ரு வடிப்பினும் அச்செயல் நந்நலங் கண்ணியதே என்ரு லெமக்கெப் பிறப்பினும் தாயாய் இருக்குமருட் குன்றே யெமக்குநீ என்செய் கினுமது கூட்டுநன்றே. 68
கூடும் பலபல வாசை மனத்தினிற் கூடுதலும் நாடும் அறிவால் அறுத்தவை ஈசன் நளிர்மலர்த்தாள் குடும் மனத்தவர் தொல்லை வினையின் தொகுதியற ஈடும் எடுப்புமி லாதபே ரின்பம தெய்துவரே. 69
துவர்வா யுமைக்கிட மீந்த நகுலைச் சுடர்க்கொழுந்தே தவர்நால் வருக்காகத் தட்சிணு மூர்த்தியாய்த் தன்கரத்தால் நவமாய் உரையா துரைத்தவன் ஞானமா நன்னிலையை அவமாய் அலையாது மோன நிலைநாம் அடைகுவமே. 70

Page 9
- 10 -
அடையார் புரங்கள் வெகுண்டு சிரித்தன் றழித்தவனே இடையாத வாறுமார்க் கண்டனுக் கந்நா வினிதளித்தான் நடையா விழிந்தவர்க் காய்தல் நலாரை நயந்தருளல் உடையான் அவனும் இதனை உணரின் உறுநலனே.
உற்றிடு மெம்மின்பம் முற்றுய ரின்பின் உறுவதுவாய்ப் பற்றி வருதுய ருக்குமுன் ஆவதாய்ப் பாரினிலே சுற்றி வருவது பேரின் பதன்று தொலைவிலது பற்றி விறையடி பற்றிலவ் வின்பம் பலிக்குவதே.
தேனர் பொழிலுறும் சீர்காழி தந்த சிறுவனழ ஆனத இன்புறும் ஞான அமுதம் அளித்தவன்செய் ஞான முதந்தரு தேவா ரமதை நயந்தயின்ற கோளு முமன்பிற் குழைந்தழின் அஃது கொடுத்திடுமே.
இட்ட முடன்திருத் தாண்டக வேந்தற் கிமையவர்க்கும் எட்ட வரும்பதம் உள்ளத் திருத்தி எதிர்சமணத் துட்டர் தருந்துயர் எல்லாம் துடைத்துத் துணைநின்றவன் கட்ட மறுத்தெமைக் காப்பான் அவனடி கண்ணிடினே.
கண்ணி அடிமை யெனச்சுந் தரனைக் கவர்ந்தவற்கு நண்ணிய தோழனுய் ஏவலன் போல நவின்றசெய்த புண்ணியன் தன்னடி உள்ளத் திருத்திநாம் போற்றிசெயின் மண்ணில் நலஞ்செயும் மேலைவீட் டிற்கும் வழிதருமே.
தேவா மிருதத் திருவா சகமாம் செழுந்தமிழால் நாவார வேத்திய வாதவூ ரண்ணற்கு நன்றருளி வாவா எனத்தன் மயமாக்கி ஆண்ட மதிச்சடிலன் பூவா ரடிகள் தலைமிசைச் சூடுவம் போற்றுகென்றே.
என்றும் நலனல செய்துநின் ருரும் இறைதெளிந்து நன்று புரிந்துதன் தாண்மல ரேத்தி நடக்கினருட் குன்று நகுலைக் குலத்தரன் அன்னர் குணமறிந்து துன்று கருணை புரிந்தவர் துன்பம் தொலைக்குவனே.
தொலையூ டுருவி வளைபணி நாக சுரமுழவம் அலையாய் இசைதரத் தூபகர்ப் பூர மவைசிறக்கக் குலையாமல் ஐந்தும் அமைய நகுலையிற் கோயிலின்கண் நிலையாய் நிகழ்பூ சனைகாண்பவரின் நிலைபெரிதே.
7.
72
73
74
75
76
77
78

- 11 -
நிலையா தனகொடு நீணில மீதில் நிலைப்பவற்றை அலையா துசெயும் அவரே பெரியவர் ஆதலினல் இலையாம் உடல்கொண் டறநாம் புரியின் எழில்நகுல மலையான் அருள்வன் துயரற வாழ்வு மலர்தரவே.
மலரிறை தாள்கள் எமது மனமும் மலரவனின் மலரில் எமது மலரைவைப் போமேல் மணநிறையும் சலமும் இலையொரு சங்கட மும்மிலைத் தாரணியில் நிலவுபே ரின்பமும் வாய்த்திடும் இங்ஙனம் நின்றிடினே.
நிற்குவம் எம்மடி யாலென எண்ணுவம் நின்றுணரின் தற்பரன் தண்ணரு ளாலென் றுணர்வமிச் சத்தியத்தால் அற்புதன் முன்னடி யற்ற மரம்போல் அவனியின்மேல் அற்புடன் வீழ்ந்து வணங்குவம் நாமென் னகந்தைகெட்டே.
அகந்தரும் அன்பின் விபூதிமெய் எங்கும் அணிந்துமிகு சுகந்தர ருத்திராக் கம்மோ திடங்களிற் சூடியிறைக் குகந்த பணிசெயின் மேனகு லாசலத் துற்றுறைவான் சகந்தனி லின்பமும் ஞான நெறியும் தருந்தகவே.
தகுசிவ சின்னம் தரித்தவ ரைச்சிவன் தானெனவே நெகுமணத் தெண்ணிவே ருயாது வேண்டிய நேர்ந்துசெயின் நகுல மலையான் அதுதனக் குச்செய்த நற்பணியா
மிகுநயப் போடுகொண் டன்னர்க் கருள்செயும் வேண்டியவே.
வேண்டிய எல்லாம் அடியவர் கட்கு விழைந்துசெயும் ஆண்டவன் ருனே எமதுபா சங்கள் அறுக்கவெணி மாண்டகு சற்குரு வாகி மனித வடிவுடனே ஈண்டு வருவன் அவனடிச் சேவை இனிதெமக்கே.
இனிய கணிபெற வென்று கணேசன் இளமுருகன் இனியதொர் நாடக மாடி யுலகம் எலாமிறையென் றினிது விளக்கினர் யாமது தேறி இறையவனக் கனிவினில் எப்பொருள் தன்னிலும் காண்பம் களிப்புறவே.
உற்றில் லறத்தார் வனச இலையில் உறுசலம்போல் பற்றில ராகி உலகினில் ஈசனைப் பற்றினரேல் முற்றிலும் நீங்கும் முனிவர்கள் போல முதல்வனருள் பெற்றிருள் நீங்கிநற் பேரின்ப வாழ்வு பெறுகுவரே.
79
80
8.
82
83
84
85
86

Page 10
- 12 -
பெறுதற் கரிய மனிதப் பிறப்பினைப் பெற்றதனல் பெறுதற்குரிய சிவனடிப் பேறு பெறவுடலம் இறுதற் குறும்நாள் அறிய வராமையின் இப்பொழுதே மறுகற் றவனடிச் சேவை தொடர்வம் வழியதுவே. 87
வேண்டி அடியார்க் கெளியன்யான் என்று விளம்பியவன் தூண்டி அடியார் பெருமைபா டென்றுமுன் சுந்தரற்கொண் டீண்டிய தொண்டத் தொகைபாடு வித்தான் எழில்நகுலை ஆண்டவன் ஆதரிப் பான்துயர் இல்லை அடியவரே. 88
அடியவர் விக்கிர கத்தினைக் கல்லென் றறியகிலர் படியினி லேசிலர் கல்லெனக் கண்டு பரிகசிப்பர் முடிவி லிறையவன் அவ்வவர் செய்தி முறையறிந்து படியளப் பான்யாம் சிவநெறி நிற்பம் பயமிலையே. 89
இலையூ கனிநீர் எனுமிவை கொண்டிங் கிறையவனை அலையா மனத்துடன் பூசனை செய்துநல் லாவினங்கள் உலையாது காத்தவற் றைந்தும் இறைவற் குதவிவரின் இலையா மிடர்மேலை வீடுறு தற்கும் இதுநெறியே. 90
இல்ல விளக்குநில் லாப்பொருள் தம்மை யிருள்கடிந்து மெல்ல விளக்கும்மெய்ஞ் ஞான விளக்கு மிகுமகந்தை அல்லல் அறுத்துமெய் யாம்பொருள் தன்னை அறிவுறுத்தி - நல்லபே ரின்பவி டும் நல்கு கின்ற நலத்ததுவே. 91
நல்லொலி உள்ளம் உடல்களுக் கென்றும் நலங்கள்தரும் அல்லொலி யாயின தீமை அவற்றுக் களிப்பதனல் மெல்லொலி மந்திரம் சங்கம் மணிமுதன் மேவினிய நல்லொலி நல்குகோ யிற்கு நிதம்புகல் நன்மையதே. 92
தேயு உறப்பொன் துகளற்று முன்னையில் தேசுமிகும் ஈயு மிறைதுய ரால்மா சகன்றறி வெம்மிலெழும் மாயும் உடல்வா டிடநாம் தவநெறி மன்னுவமேல் தீயுறுங் கையன் மலமகற் றிச்சுகம் சேர்விக்குமே. f 93
சேர்ந்தா லயங்களில் வேறுபா டின்றிச் சிவனடியார் சார்ந்த சிவப்பொலி வோடும் உளத்துத் தளர்ச்சியற ஆர்ந்தவன் போடும் அமைதியி னுேடும் அரும்பணிகள் நேர்ந்து புரிவது காணவெம் நெஞ்சு நெகிழுவதே. 94

- 13 -
நெகுவாள் மனையிறை மீதாணை செய்திட நீலகண்டன் தகுமா ரிளமை தனில்மாத ராசை தவிர்த்ததனல் மிகுமா தரவி லரனடி பெற்ருன் விழைவொடுநாம் புகுமா சையிலொன்று போக்கினும் இன்பம் பொருந்திடுமே. 95
பொருந்த அமாவாசி ஆடியில் வந்தப் பொழுதினிலே திருந்து மடியர் நகுலைத் தலத்திற் றிரள்திரளாய் மருந்து நிகர்தீர்த்தம் ஆசாரம் மேவ மகிழ்வொடாடி அருந்து பெருமகிழ் வன்பர் களுக்கிங் கருவிருந்தே. 96
அருவி பளிங்கெனக் கேணியி லூறி அலைகடலிற் பெருகி இருநீர் மயமா மிடத்தைப் பெரிதுவந்து மருவிநீ ராடி நகுலையான் பாத மலர்பணியில் ஒருவிடும் உள்ளம் உடலுயிர் மேவி உறுதுயரே. 97.
உற்றுணர்ந் தத்துவி தத்தின் பொருளை உரைத்தருள்செய் முற்றுணர் வெய்திய மெய்கண்ட தேவன் முதற்குரவர் கற்றுணர் கென்னத் தருசாத் திரங்கள் கழறுநெறி பற்றுணர் வோடுபற் றுற்றர் பரனடி பற்றுவரே. 98
பற்றற ஈசனைப் பற்றிய ஞானசம்பந்தன்முதல் நற்றவர் நால்வரும் நானெறி நின்று நமக்கருள்செய் சொற்றவ ருமல் ஒழுகின் நகுலையாம் தொல்பதிசேர் புற்றர வஞ்சடை சூடிதன் பாதப் புணைதருமே. 99
தற்பரா ஈசா பசுபதீ சம்பூ சதாசிவனே
கற்றவர் வாங்கிய வீரா பகவா கபாலியெனப் பொற்பத மேத்த நகுல யான் " " " " + "nலே. 100

Page 11
உ
பொருளுபகரித்தோர்
துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி - திரு. சி. சிவமகாராசா, தல்வர்,
தெல்லிப்பழை ப. நோ கூ சங்கம் திரு. க உமாமகேஸ்வரன் swas திரு. இ. சுப்பிரமணியம் w· திரு. வ. பேரின்பநாயகம் - திரு. பி. நடராசன் same திரு. வ. நாகராசா திரு. க. தங்கராசா ww.op திரு. சிவ தணிகாசலம் maswa திரு. வே. சண்முகலிங்கம் திரு. த. இராசரத்தினம் . - திருமதி பொன்மணி அருளானந்தம் - திருமதி கு. கனகமணி ഞ്ഞ
ரூபா 1000-00
9
99
99
وو
* 9
*》
99
9
1000-00 1000-00
501-00 500-00 250-00
250-00
250-00 250 00
200-00
100-00
50-00
S0-00 540 00


Page 12
திரு மகள் அழுத்தகம், சுன்னு: