கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நூலகவியல் 2005.12

Page 1
பவர் இதழ் டிசம்பர்
III ,
நூலகவியல் காலா
ஒரு சமுதாய மறுமலர்
செய்திச் சிதறல்கள்
 

፳፫lù]U
Eb di I GLT si
I I ܕܠܐ ܨܒܐܠ
H H H M
HT ர்ச்சி

Page 2
வெளியீடு
இலங்கையில் O O இனமோதலும் சமதானமும் உயர்தர அரசியல் எஸ். ஐ. 2:4(၅::၅:၅: சிந்தனைகள்
அம்பலவாணர் சிவராஜா
தலைவர், அரசறிவியல்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
இம்மாத வெளியீடு
பக்கம்
Χi + 244
அளவு 145x215mm
விலை ரூ 400 ISBN
9559429728
இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் விவாதங்கள் மிக உயர்மட்டத்திலலேயே இடம் பெற்றுவருவது பக்கம் ஜனநாயகத்தின் ஒரு குறைபாடாகச் x+ 137 சுட்டிக்காட்டப்படுகின்றது. இது சாதாரண மக்கள் மத்தியில் அரசியல் தெளிவின்மைக்கு அளவு காரணமாய் அமைவதுடன் அவர்கள் தவறான 145x215mm
முடிவுகளை மேற்கொள்வதற்கும் விலை உதவியுள்ளது. இலங்கையில் சமாதானத்தை ரூ 250
கட்டியெழுப்புவதற்கு சமூகத்தின் தீவிர பங்குபற்றுதலும், ஆதரவும் முக்கியமாகும். ISBN
எனவே சமாதான செயன்முறையின் 955 9429 817 தார்ப்பரியங்களை மக்கள் மத்தியில் எடுத்துச்
செல்வதுடன் ஆது பற்றியதெளிவை அதற்கு இரு
ஏற்படுத்த வேண்டிய தேவையும் சிந்தனையாளர்களையும் இந்நூல் காணப்படுகிறது. இத்தேவையை பூர்த்தி விபரிக்கின்றது. கிரேக்க ரோம மற்றும் செய்யும் வகையிலான ஒரு முயற்சியாக பண்டைய இந்திய காலங்களிலிருந்து கலாநிதி எஸ். ஐ. கீதபொன்கலனினால் இன்றுவரை வளர்ச்சியடைந்து வந்த அரசியல்
ஞாயிறுதினக்குரல் பத்திரிகையில் சிந்தனையில் முக்கிய தாக்கத்தினை ஏற்படுத்திய தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இருபதிற்க்கு மேற்பட்ட சிந்தனைகளை இந்நூல் கட்டுரைகளின் தொகுப்பு வடிவமே அறிமுகப்படுத்துகின்றது. பிளாட்டோ,
இஇ அரிஸ்ரோட்டில், கெளடில்யர், அக்கியூனாஸ்,
ஒகஸ்ரின், சிசரோவ், கூக்கர், தாந்தே, ஹேகல், மார்க்ஸ், லெனின், ட்ரோஸ்கி, மா ஒ, மக்ஸ் வெபர், கிரம்ஸ்சி, மகாத்மா காந்தி போன்ற சிந்தனையாளர்களின் சிந்தனைகளையும் பயனுடைமை வாதம், தாரண்மைவாதம்,
அரசியல் சிந்தனையின் வளர்ச்சியினையும்
361 1/2, டாம் வீதி, கொழும்பு 12:190, புகையிரத நிலைய
தொ.பேசி:242 1388 வைரவப் புளியங்குளம் கற்பனா சோசலிசம், மார்க்சிசம், அராஜரீகம், கைபேசி 071410 3489 வவுனியா ஜனநாயகம் போன்ற வாதங்களின் தொலைநகல்: 242 1388 தொ. பேசி:02:492:0733
தர்க்கங்களையும் இந்நூலில் விரிவாகக்
Ékaši sigjargů: kumbh (astmetik காணலாம்.
gangorus patib: www.kumaranbook.com
அகண்ட ஆழ்ந்த அறிவிற்காய்
 
 
 
 
 
 
 

நூலகவியல்
2 sheltLib RUMARANBook HousE
361 1/2, Dam Street, w Colombo - 12. 03 aydfiuj g5606ULIL T. Phone : 2421388
05 ரொறன்ரோ நூலகங்களில் தமிழ் நூலக சேர்க்கைகள்
10 பொது நூலகம் ஒரு சமுதாய மறுமலர்ச்சி
15 செய்திச் சிதறல்கள்
16 ஈழத்து பதிப்புத் துறையில் தமிழியல் வெளியீடுகள் 21 கொழும்பில் நூல்தேட்டம் 3வது தொகுதி வெளியீடு 2 முஸ்லீம்களின் நூலக பாரம்பரியம்
24 சர்வதேச நூல்கள் தமிழ் பகுதிகளுக்கு விநியோகம்
25 சிறுவர்களின் நூலர்வமும் பாடசாலை நூலகங்களும்
29 நூலகருக்கு இலங்கையில் கெளரவிப்பு
30 நூலியல் நூலகவியல் துறைகளில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பு
35 நூல் வெளியீடும் வாசிப்பை நேசிப்போம் பேச்சுக்களும்
36 பதிப்புரிமை
38 லண்டனில் துப்பாக்கிகளின் காலம் நூல் வெளியீடு
39 சிறுசஞ்சிகைகள் பக்கம்

Page 3
பிரதம ஆசிரியர்: என். செல்வராஜா, 48 Hallwicks Road, Luton, Beds, LU29BH United Kingdom
நிர்வாக ஆசிரியர்: திருமதி கல்பனா சந்திரசேகர் 180/4 Sir Pon Ramanathan Road Thirunelveli
Jaffna
ിഖണിuീ8: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியம்.
வடிவமைப்பு:
ஜெ பூரீரஜனி, ஐக்கிய இராச்சியம்.
இணை வெளியீட்டாளரும் அச்சிட்டு விநியோகிப்போரும்: க. குமரன், குமரன் புத்தக இல்லம், 201. டாம் வீதி, கொழும்பு 12
சந்தா: தனிப்பிரதி இலங்கையில் ரூபா 100.
ஆண்டு சந்தா ரூபா 300
இச்சஞ்சிகையினை இணையத்திலும் பார்வையிடலாம். WWW.thesamnet.com
நூலகவியல் நூலகவியலில் பிரசுரிப்பதற்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. கட்டுரைகள், செய்திகள் தமிழ்மொழியில் எழுதப்படல் வேண்டும்.
மின்னஞ்சல் வசதியுள்ளவர்கள் தத்தமது கட்டுரைகளை Word Document 2,85 g26)ß60)P g5Él856íř பெயர், முகவரி, சுயஅறிமுகக்குறிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதொரு மின்னஞ்சல் கடிதத்துடன் இணைத்து அனுப்பி வைக்கலாம்.
கட்டுரைகள், தொடர்புகளுக்கு
noolahaviyalG)ntlvworld.com
என்ற மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும்.
கட்டுரைகளையும் செய்திகளையும் தபால்மூலம் அனுப்பவிரும்பும் படைப்பாளிகள் அவற்றை தெளிவான கையெழுத்தில் எழுதி, ஆதாரப் புகைப்படங்கள் அனுப்ப விரும்பினால் அவற்றையும் இணைத்து, பிரதம ஆசிரியரின் முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கவும்:
தொலைநகல் (Fax) மூலம் தமது கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைநகல் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும். தொலைநகல் இலக்கம்: 0044 1582 703 786
 

நூலகவியல்
அன்புடன் .
நீண்டகால இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் "நூலகவியல்" உங்கள் கரங்களை எட்டியுள்ளது. செப்டெம்பர் 1985இல் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பினால் ஆரம்பிக் கப்பட்டு தமிழ்ப் பிரதேசங்களில் இயங்கும் அனைத் து நூலகங்களுக்கிடையேயும், தமிழ் நூலகர்களுக்கிடையேயும் ஒரு உறவுப்பாலத்தை 1991 வரை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு நூலகவியலாளர்களின் அரவணைப்பில் ஆரோக்கியமாக வளர்ந்த உங்கள் நூலகவியல், தமிழ்மூலம் நூலகவியல் கல்வியைக் கற்கும் மாணவர்களுக்கும், சுயம்புவாக நூலகத்துறையில் ஈடுபட்டுவந்த தராதரப்பத்திரமற்ற பல நூலகர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது.
ஆசிரியர் குழுவில் இயங்கியிருந்த திரு சி.முருகவேள், அமரர் கலாநிதி வே.இ.பாக்கியநாதன், கலாநிதி இ.பாலசுந்தரம், திருமதி ரூபா நடராஜா, திருமதி ரோ.பரராஜசிங்கம், திரு. எஸ்.எம்.கமால்தீன், திரு.செ.கிருஷ்ணராஜா ஆகியோர் சிறப்பாகப் பணியாற்றினார்கள். அவர்களின் ஒத்துழைப்புடன் 1991வரை தடங்கலின்றி வெளிவந்த நூலகவியல் சஞ்சிகை, நான் புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றதோடு வெளிவராது நின்றுபோயிற்று. தபால் போக்குவரத்து, மற்றும் போர்ச்சூழல் காரணமாக நூலகவியல் மீண்டும் வெளிவருவது நீண்டகாலம் தடைப்பட்டிருந்தது.
14 ஆண்டுகள் கடந்து விட்டன. இலங்கையின் நூலகவியல்துறையில் குறிப்பாகத் தமிழ் நூலகவியல்துறையில் ஆரோக்கியமான பல மாற்றங்களைக் இக்கால இடைவெளியில் காணமுடிகின்றது. பல புதியவர்களின் வருகையை அவதானிக்க முடிகின்றது. நூலகவியல் கல்வி தமிழ்ப் பிரதேசங்களில் உத்வேகத்துடன் பல்வேறு கல்வி நிறுவனங்களாலும், முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
இந்நிலையில் "நூலகவியல்" சஞ்சிகையின் மீள்வரவினை பலரும் வேண்டிநிற்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. 20 வருடங்களுக்கு முன்னர் நூலகவியல் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் சேவைத்தளம், தற்போதைய தளத்திலிருந்து பெரிதும் வேறுபட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். அன்று தமிழ்ப் பிரதேசங்களில் விஞ்ஞானபூர்வமான நூலக சேவையினைக் கட்டியிழுப்புவதே பிரதான நோக்கமாகவிருந்தது. அதன் காரணமாகவே நூலகவியல்துறை மாணவர்களின் பரந்துபட்ட வாசிப்புக்கேற்ற கட்டுரைகளைத் தந்ததுடன் தமிழில் நூலகவியல்சார் நூல்களை வெளியிடுவதிலும், தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் நூலகவியல் கருத்தரங்குகளை ஏற்பாடுசெய்வதிலும், நூலகர் ஒன்றுகூடல்களை
ஒழுங்குசெய்வதிலும் ஈடுபட்டிருந்தோம்.
- "గ్య "

Page 4
நூலகவியல்
இன்று நூலகவியலை உங்கள் கரங்களில் எட்டவைக்கும் போது எமது நோக்கம் இன்னும் பரந்ததாகத் தோன்றுகின்றது. நூலகவியல் எதிர்காலத்தில் சர்வதேசரீதியில் தனது சேவைப்பரப்பை விஸ்தரித்துள்ளது. புகலிடத்தில் நிலைகொண்டு இயங்கும் எமது தமிழ் நூலகர்களையும் நூலகவியலின் பெரும் குடும்பத்தில் அரவணைத்துக் கொண்டுள்ளோம். அவர்களது புகலிட அனுபவங்கள் சுவையானவை. தாயகத்தில் வாழும் தமிழ்பேசும் நூலகர்கள் நூலகவியலைத் தமது தொடர்பூடகமாகப் பயன்படுத்திக்கொள்ள நூலகவியல் தன் கதவுகளை அகலத்திறந்து வைத்திருக்கும்.
எதிர்காலத்தில் நூலகவியலின் சேவைப்பரப்பு, நூலகவியல்துறையுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், காலத்தின் தேவை கருதி நூலியல்துறைக்கும், நூல் வெளியீட்டுத்துறைக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. தாயகத்திலிருந்து நூலகவியல்துறையில் குறிப்பாகத் தமிழில் - நூல்வெளியீட்டு முயற்சியில் ஈடுபடவிரும்பும் நூலகவியலாளர்களின் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நாம் அறிவோம். எதிர்காலத்தில் அவர்களின் நூல்வெளியீடுகளுக்கு நூலகவியல் கணிசமான பங்களிப்பினையும் வழங்கவிருக்கின்றது. அயோத்தி நூலக சேவையுடன் இணைந்து, இலங்கையின் பிரபல நூல் வெளியீட்டகமான குமரன் புத்தக இல்லத்தினர் நூலகவியலின் வருகைக்கு உதவுகின்றமையை இங்கு நன்றியுடன் குறிப்பிடவேண்டியுள்ளது. இச்சஞ்சிகையினை அச்சிடுவதுடன் இலங்கையின் தமிழ்பேசும் மக்களுக்குச் சேவையாற்றும் அனைத்து நூலகங்களுக்கும் இச்சஞ்சிகையை விநியோகிக்கும் மகத்தான பணியும் அவர்களுடையது.
நூலகவியல் சஞ்சிகையின் வளர்ச்சி, ஈழத்தின் தமிழ் நூலகவியல், நூலியல், வெளியீட்டுத்துறையின் வளர்ச்சியுடன் இரண்டறக் கலந்துள்ளதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. எமக்கென்றொரு துறைசார் சஞ்சிகை இல்லாத குறையை நூலகவியலின் மீள்வருகை நிவர்த்தி செய்யும் என்று நம்புகின்றோம். அந்த நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் சக்தி உங்கள் கைகளிலேயே உள்ளது.
இதற்கு பரஸ்பரம் தொடர்பாடல் முக்கியமானதாகும். அனுபவம் மிக்க நூலகர்கள், நூலகவியல் விரிவுரையாளர்கள் தங்கள் கட்டுரைகளை எமக்கு அனுப்புங்கள். வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள், ங்கள் சக நூலகர்களுக்குப் பயனுள்ள நூலகவியல், வெளியீட்டுத்துறைச் செய்திகளை பரிமாறிக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நாம் முன்னெடுக்கக்கூடிய அம்சங்களையிட்டு விவாதியுங்கள். இவை அனைத்துக்கும் நூலகவியல் களம் அமைத்துக் கொடுக்கக் காத்திருக்கின்றது.
அன்புடன் என்:செல்வராஜா

நூலகவியல்
வே. விவேகானந்தன்
ரொறன்ரோ நூலகங்களில் தமிழ் நூலக சேர்க்கைகள்
கனடா நோக்கிய தமிழ் மக்களின் குடியிடப் பெயர்வும், கனடா வந்த பின்னர் ரொறன்ரோ நோக்கிய குடியிடப் பெயர்வும், மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமூக இனமாக அடையாளம் காணப்படுவதற்கு மிக முக்கிய காரணமாயிற்று. தமிழ் மக்களின் இந்த வேகமான வளர்ச்சியைத் தொடர்ந்து 1980ம் ஆண்டுகளின் இறுதிப் பகுதிகளில் தமிழ் மொழி மூல நூல்களும் சஞ்சிகைகளும் ரொறன்ரோ பொதுசன நூலகங்களில் அறிமுகமாயின.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பாக 1994ம் ஆண்டு ரொறன்ரோ பெரும்பாகத்தில் உசாத்துணை ஆய்வு (Reference and Research) (BTG) 515856i, மாவட்ட (District) நூலகங்கள், அண்மை 9|uj606)ij (Neighbourhood) (BJT60515156ir 6T60T மொத்தம் 95 நூலகங்கள் சேவையாற்றி வந்தன. அவற்றுள் 19 நூலகங்களில் தமிழ் மொழி நூலக சேர்க்கைகளான நூல்கள் (BookS), F(gidé0556i (Journals), u(b6). இதழ்கள் (Periodicals), புதரினப் பத்திரிகைகள் (News Papers), ஒளியிழை நாடாக்கள் (Video) போன்ற கட்புல சாதனங்களும், ஒலியிழை நாடா (Audio), GLD6 35 (6 (Compact Disc) (3uT65, 3 செவிப்புல சாதனங்களும் வாசகர்களின் பார்வைக்காக இருந்தன.
கடந்த 10 ஆண்டுகளில் ரொறன்ரோ நோக்கிய தமிழ் மக்களின் குடிவரவு மேலும் மேலும் அதிகரிக்கவே (தற்போது மூன்று
லட்சம் தமிழ் மக்கள் வாழ்வதாக உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.) 2004ம்
ஆண்டு மொத்த நூலகங்களின் எண்ணிக்கை
99 ஆக அதிகரிக்க, தமிழ்மொழி மூல நூலகச் சேர்க்கைகளைக் கொண்ட நூலகங்களின் எண்ணிக்கயும் 20ஆக அதிகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பின்வரும் அட்டவணை, ரொறன்ரோ பெரும் பாகத் திலுள்ள நூலகங்களின் எண்ணிக்கையினையும் தமிழில் நூலக சேர்க்கைகளைக் கொண்டுள்ள நூலகங்களின் எண்ணிக்கையினையும் நகரப் பிரிவுகளின் அடிப்படையில் காட்டுகின்றது.
1994 2004
அ ஆ அ ஆ
நகரப்பிரிவு
கிழக்கு யோர்க் 05 03 05 02
எற்றோபிக்கோ 12 O1 13 01 வட யோர்க் 20 02 20 08 ஸ்காபரோ 19 08 20 11 ரொறன்ரோ 34 05 35 05 யோர்க் 05 00 06 01
மொத்தம் 95 19 99 28
அ. நூலகங்களின் எண்ணிக்கை ஆ. தமிழ் நூலக சேர்க்கைகளைக் கொண்ட நூலகங்களின் எண்ணிக்கை
1997ம் ஆண்டு கிழக்கு யோர்க், எற்றோ. பிக்கோ, வட யோர்க், ஸ்காபரோ, ரொறன்ரோ,
,'**مہم

Page 5
யோர்க் ஆகிய நகரப் பிரிவுகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு பாரிய ரொறன்ரோ (Greater Toronto) at LDs is Bib Guid தனைத் தொடர்ந்து நூலக சேவையும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பிராந்தியங்களாக வகுக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்தது. எனினும் இலகுவில் ஒப்பு நோக்கும் வகையில் மேற்படி அட்டவணை தயாரிக்கப்பட்டது.
அட்டவணையினை நோக்கும்போது வட யோர்க் நகரப் பகுதியில் தமிழில் நூலகசேவை
வேகமாக வளர்ச்சியடைந்துள்ளமையை
அவதானிக்கலாம். ஸ்காபரோ நகரப் பகுதியி லும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டு உள்ளது. இதற்கு இங்கு தமிழர்கள் குடியேறி வருவதும் நுTலகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதும் காரணமாக இருக்கலாம்.
எற்றொபிக்கொ நகரப் பிரிவில் எந்தவொரு
மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த பத்து
ஆண்டுகளாக ஒரு நூலகம் மட்டுமே தமிழில்
நூலக சேவையினை ஆற்றிவருகின்றது.
கிழக்கு யோர்க், ரொறன்ரோ நகரப் பிரிவுகளில் தமிழ் மக்களின் நூலகப் பாவனை (5603b6ft 61T60). Durg) S.Walter Stewart Library, Gerrard Ashdale Library eigSu நூலகங்கள் தமிழில் நூலக சேவையினை நிறுத்தியுள்ளன. இதற்கு நூலகசேவையினை போதியளவு பயன்படுத்தாமையும் ஒரு காரணமாகும்.
ரொறன்ரோ பொதுசன நூலகங்களின் பன்மொழி நூலகசேவை நூல்களின் சுழற்சியில் (Book Circulation) (pg565lub 6łaśüugi சீனமொழி நூல்களேயாகும். சீனமொழி பேசும் மக்கள் பெருமளவு நூல்களை இரவல் பெற்றுப் பயன்படுத்துவதே இதற்குக் காரணம். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிபேசும் மக்கள் இங்கே வாழ்ந்து வந்த போதிலும் 70க்கும் மேற்பட்ட மொழி நூல்களே நூலகங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் தமிழ்மொழி நூல்களின் சுழற்சி, போலந்து, ஸ்பானிய மொழி நூல்களின் சுழற்சியை அடுத்து நான்காம் இடத்தில் உள்ளது.
நூலகவியல்
கடந்த சில வருடங்களாகத் தமிழ் மக்கள் பொருளாதாரரீதியாக ஸ்திரமடைந்து வருவ தனாலும், சமூகரீதியாக வாழ்க்கைத் தரம் உயர்ந்து காணப்படுவதனாலும் ரொறன்ரோ பெருநகரத்தை அண்மிய ஏனைய பகுதிகளான மிசிசாகா, பிரம்டன், வோகன். றிச்மன்ஹில், மார்க்கம், ஏஜெக்ஸ், பிக்கறிங், போன்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வரும் போக்கினை அவதானிக்கலாம். இவ்வளவு தமிழ் மக்கள் மிக வேகமாகக் குடியேறிவரும் நகரப் பிரிவுகளுள் கனடாவின் உயர் தொழில்நுட்பத் தலைநகரம் என வர்ணிக்கப்படும் மார்க்கம் நகரமும், கனடாவிலேயே மிக வேகமாகப் பொருளாதார வளர்ச்சியடைந்துவரும் நகரங்க ளுள் ஒன்றாகிய மிசிசாகா நகரமும் குறிப்பிடத்தக்கனவாகும். தமிழ் மக்களின் வேகமான வளர்ச்சிக்கேற்ப மிசிசாகா நகரப் பிரிவுகளில் உள்ள 16 நூலகங்களுள் 4 நூலகங்களிலும் மார்க்கம் நகரிலுள்ள 5 நூலகங்களுள் 3 நூலகங்களிலும் தமிழ் நூலகச் சேர்க்கைகள் இடம்பெற்றுள்ளன. ஏனைய நகரப் பிரிவுகளில் வாழும் தமிழ்ப் பெரியோர்களும் தமிழ் அமைப்புகளும் நூலக நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு முயற்சி செய்தால் அங்குள்ள நூலகங்களிலும் தமிழ்மொழி மூல நூலக சாதனங்களை இடம்பெறச் செய்ய வாய்ப்புண்டு.
எனவே தற்போது ரொறன்ரோ பெருநகரப் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள நகரப் பகதிகளிலும் மொத்தம் 35 நூலகங்கள் தமிழில் நூலக சேவையினை வழங்கி வருவது மகிழ்ச்சிதரும் விடயம் மட்டுமின்றிப் பெருமை தரும் விடயமுமாகும்.
மறுபுறம் தமிழில் நூலக சேவையினை மேற்கொண்டுவரும் நூலகங்களில் அச்சேவை தொடரவும், மேலும் விஸ்தரிக்கப்படவும். தரம்மிக்க சேவையாக விளங்கவும் தமிழ் மக்கள் ஆற்றவேண்டிய பணிகளும் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாம் அடிக்கடி போகும் இடங்களான படமாளிகைகள், விளையாட்டு மைதானங்கள், கோயில்கள்,

நூலகவியல்
திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் என்பவற் றுள் ஒன்றாக நூலகங்களையும் உள்ளடக்க வேணி டும் . வாரத் தில் ஒரு மணி நேரத்தையாவது இதற்கென ஒதுக்க வேண்டும்.
தரமான நூலக சேவையினை உறுதி செய்வதில் வாசகர்களின் பங்கும் அளப்பரிய தாகும். நூலகங்களில், சிலவேளைகளில் சில நூல்கள் சஞ்சிகைகளில் தரமான ஆக்கங்கள் கத்தரித்து அகற்றப்பட்டிருக்கும். படங்கள் பென்சில், பேனை போன்ற எழுது கருவிகளி னால் சிதைக்கப்பட்டிருக்கும். குறிப்புரைகள் எழுதப்பட்டிருக்கும். இத்தகைய செயல்கள் நாகரீகமான சமூகத்திற்கு ஒவ்வாதனவாகும். மேலும் ஒலியிழை நாடா, ஒளியிழை நாடா போன்ற சாதனங்களைப் பொறுத்தவரையில் தவறுதலாகவோ அல்லது திட்டமிட்டோ உறையினுள் சாதனங்களை மாற்றி வைத்தல், அல்லது வெறும் உறையினை மட்டும் மீளக் கையளித்தல் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். சரியான உறையுள் சரியான சாதனம் உள்ளதா என்பதையும் அடுத்தவர்கள் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய நிலையில் அது உள்ளதா என்பதையும் உறுதி செய்வது வாசகர்களின் தார்மீகக் கடமையாகும். இரவல் பெறும் சாதனத்தில் குறைபாடுகள் இருப்பின் அதனை நுT லக உதவியாளர் களின் கவனத்திற்குக் கொண்டுவருவதும் அவசியமான தாகும். இவற்றின் மூலம் தரமான நூலக சேவைக்கு எமது பங்களிப்பினை ஆற்ற (Upigu Lib.
எமக்குத் தேவையான ஒரு நூல் குறிப்பிட்ட நூலகத்தில் இல்லையாயின் ஏனைய நூலகங்களில் இருந்து நூலகங்களுக் கிடையேயான கடன் முறையில் (Inter Library Loan) பெறமுடியும். அவ்வாறும் கிடைக்காத போது அந்த நூலைக் கொள்வனவு செய்து வாசகர் பாவனைக்கு வைக்கும்படியும் சிபார்சு செய்ய முடியும். ஒரு நூலகத்தில் இரவல் பெற்ற நூலக சாதனங்களை முடிவுத்திகதிக்கு முன்னர் எந்த ஒரு நூலகத்திலும் மீளக் கையளிக்க முடியும் அல்லது தொலைபேசி
மூலமோ, இணையத்தளத்தை (Website) பயன்படுத்துவதன் மூலமோ வீட்டிலிருந்தவாறே கால எல்லையை நீடித்துக்கொள்ள முடியும். இதன்மூலம் காலதாமதத்திற்குரிய கட்டணத் தைத் தவிர்க்கலாம்.
இறுதியாக ரொறன்ரோ பெரும்பாகத்தின் தமிழ் நூலக சேர்க்கைகளைக் கொண்டுள்ள 27 நூலகங்களுள் 15க்கும் மேற்பட்ட நூலகங்களின் சிறுவர் நூலகப் பிரிவில் (Children's Library Division) g5ướìự) சிறார்கள் வாசித்து மகிழ்ச்சியடையக் கூடிய பல நூல்கள் இடம்பெற்றிருப்பது ஓர் தனிச் சிறப்பாகும். எனவே சிறுவர் முதல் பெரியோர் வரை நூலக சேவையினை உச்ச அளவில் பயன்படுத்துவதன் மூலம் உச்ச பயனைப் பெறுவதோடு தமிழில் நூலக சேவை மேன்மேலும் வளரவும் விரிவடையவும் அது வழிவகுக்கும். மேலும் தமிழ்மொழியையும் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அறிவியல் ரீதியாக வளர்க்கும் அமைப்புக்களில் ஒன்றாக பொதுசன நூலகங்களையும் நாம் மிளிரச் GlöFuß6)IIILDssab.

Page 6
ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ் மொழியில் நூலக சாதனங்களைக் கொண்டு உள்ள நூலகங்களின் விபரம்: (14.10.2004 அன்றுள்ளபடி) :
Albion Library, 1515 Albion Road, Toronto, Ontario M9V 1 B2 Canada
Weston Library, 2, King Street, Toronto, Ontario M9N K9 Canada
Amesbury Park Library, 1565, Lawrence Avenue West, Toronto, Ontario M6L A8, Canada
Brookbanks Library, 210, Brookbanks Drive, Toronto, Ontario M3A 2T8, Canada
Downs view Library, 2793, Keele Street, Toronto, Ontario M3M 2G3, Canada
Fair view Library, 35, Fair view Mall Drive, Toronto, Ontario M2J 4S4,
Flemingdon Park Library, 29, St. Dennis Drive, Toronto, Ontario M3C 3J3, Canada
Jane/Sheppard (Mall) Library, 2721, Jane Street, Toronto, Ontario M3L S3, Canada
North York Central Library, 5120, Yonge Street, Toronto, Ontario M2N 5N9, Canada
Youk Woods Library, 1785, Finch Avenue West, Toronto, Ontario M3N 1 M8, Canada
Bloor/Gladstone Library, 1101, Bloor Street West, Toronto, Ontario M6H 1 M7, Canada
Parkdale Library, 1303, Queen Street West, Toronto, Ontario M6K 1L, Canada Parliament Library, 269, Green Street West, Toronto, Ontario M6K 2G8, Canada
Toronto Reference Library, 789, Young Street, Toronto, Ontario M4W 2G8, Canada
நூலகவியல்
Agincourt Library, 155, Bonis Avenue, Toronto, Ontario M1T 3W6, Canada
Albert Campbel Library, 496, Birchmount Road, Toronto, Ontario M1 K 1 N8, Canada
Bridelwood (Mall) Library, 2900, warden Avenue, Toronto, Ontario M1W 2S8, Canada
Burrows Hall Library, 1081, Progress Avenue, Toronto, Ontario M1B 5Z6, Canada
Cedarbrae Library, 545, Markham Road, Toronto, Ontario M1 H 2A1, Canada
Dawes Road Library, 416, dawes Road, Toronto, Ontario M4B 2E8, Canada
Kennedy/ Eglinton (Mall) Library, 2380, Eglinton Avenue East, Toronto, Ontario M1 K 2P3, Canada
Malvern Library, 30, Sewells Road, Toronto, Ontario M1B 3G5, Canada
Maryvale (Mall) Library, 85, Ellesmere Road, Toronto, Ontario M1R 4B9, Canada
McGregor Park Library, 2219, Lawrence Avenue East, Toronto, Ontario M1 P2P5, Canada
Morningside (Mall) Library, 255, Morningside Avenue, Toronto, Ontario M1E 3E6, Canada
Thorncliffe Library, 48, Thorncliff Park De, Toronto, Ontario M4H 1 J7, Canada Woodside Square (Mall) Library, 1571, Sandhurst Circle, Toronto, Ontario M1VV2, Canada
St. James Town Library, 495, Sherborne Street, Toronto, Ontario M4X 1K7, Canada
Burnham thorpe Library, 1350, Burnhamthorpe Road East, Mississauga, Toronto, Ontario L4Y 3V9, Canada.
 

நூலகவியல்
Erin Meadows L Centre Blvd, Mississauga, Toronto, Ontario L5M 6R5, Canada
Malton Library, 3540, Morningstar Drive, Mississauga, Toronto, Ontario L4T 1Y2, Canada
Frank Mckechnie Library, 310, Bristol Road East, Mississauga, Toronto, Ontario L4Z3V5, Canada
Markham Village Library, 6031, Highway 7, Markham, Toronto, Ontario L3P 3A7, Canada
Milkiken Mills Library, 7600, Kennady Road, Markham, Toronto, Ontario L3R 9S5, Canada
இடம்: கனடாவின் வரைபடம் கீழ்: அந்நாட்டின் தேசியக்கொடி
3.
Unionville Library, 15, Library Lane, Markham, Toronto, Ontario L3R 5C4, Canada
(இக்கட்டுரை கனடாவிலிருந்து வெளியாகும் தமிழர் தகவல் 14ஆவது ஆண்டு மலரில் இடம் பெற்றுள்ளது. தமிழர் தகவல் இதழ் களையும் , ஆண்டுமலர் களையும் தபால்செலவு மாத்திரம் செலுத்துவதன் மூலம் உங்கள் நூலகங்களுக்கும் தருவித்துக் கொள்ளலாம். தொடர்புகளுக்கு: Mr. S.Thirichelvam, Editor-in-Chief, Tamils Information, P.O. Box 3, Station F, Toronto, Ontario, M4Y 2L4, Canada. ) EZ

Page 7
ச.தனபாலசிங்கம் பிரதம நூலகர், யாழ் பொது நூலகம்
நூலகவியல்
பொது நூலகம்:
( ஒரு சமுதாய மறுமலர்ச்சி நிறுவனம்
சமூகமொன்றின் அடிப்படை அறிவை வளர்ப்பதற்கு உந்துசக்தியாக இருப்பவை பொது நூலகங்களே. இவை பாமர மக்களையும் பாவலராக மாற்றக்கூடிய சக்தி பெற்றவை. இவற்றின் சமூகப் பணி மகத்தானதாகும்.
ஒரு கிராமத்தில் பொருளாதாரத் துறை சார்ந்த உற்பத்தியிலீடுபட்ட பின்னர் தமது ஓய்வு நேரத்தில் உலகப் புதினங்களை அறிந்துகொள்ள ஒரு கிராமவாசி விரும்புவான். அக் கிராமவாசியின் விருப்பத்துக்குரிய, அவனால் புரிந்துகொள்ளக்கூடிய இலகு மொழியில் அமைந்த பிரசுரங்களை அவனுக்கு வழங்கும்போது, அவனால் நன்கு கிரகித்து, தனது ஆற்றலை மேம்படுத்தக் கூடிய கருத்துக் களை உள்வாங்கிக்கொள்ள முடிகின்றது.
வாழ்க்கைக் குத் தேவையான புதிய நடைமுறைகள், விவசாயம், சுகாதாரம், நோய்த் தடுப்பு, கல்வி போன்ற பல விடயங்களைப் பற்றிய தகவல்களை பொது நூலகத்தில் எளிதில் பெற்றுக்கொள்ள வசதிசெய்து கொடுக்கப்படுகின்றது. தனது கிராமத்துக் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட ஏனைய கலாசாரங்களை அறிந்துகொள்ள அவனால் முடிகின்றது. இவ்வாறான அறிவாற்றலை வளம்படுத்த கிராமத்திற்கு பொதுநூலகம் அவசியமாகின்றது. எனவே பொதுநூலகமானது அவ்வப் பிரதேசவாசிகளை ஈர்க்கக் கூடிய விதத்தில் தொழில்படவேண்டிய கட்டாயத் தேவை இங்கு உண்டு.
பிரதேசவாசிகளை எவ்வாறு நூலகத்தினுள் உள்வாங்கலாம் எனச் சிந்திக்க வேண்டியது
مم&
பொறுப்பு நிர்வாகியினுடைய கடமையாகும். உழைத்துக் களைத்துப் போய் வீடுசெல்லும் ஒருவர் நூலகத்தைப் பார்த்ததும் ஏதாவது வாசித்துவிட்டுச் செல்ல எண்ணி நூலகத்திற் குள் தனது அழுக்கு உடையுடன் நுழையலாம். அப்போது நூலக நிர்வாகி அவரை அன்புடன் அணுகி அவரது விருப்பை நிறைவேற்ற உதவ வேண்டுமே ஒழிய அவனது தோற்றத்தைக் கொண்டு உள்ளே நுழையவிடாது தடை செய்தல் கூடாது. நூலகத்திற்கு வரும்போது அழுக்குடன் வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அவரது பாணியில் எடுத்துச் சொல்வதன் மூலம் நூலக சட்ட திட்டத்தை அமுல்படுத்தலாம். பொதுமகனைப் பொறுத்தளவில் வேறு தேவைக்குச் செல்லும் போது நூலகத்தைப் பயன்படுத்த விரும்பலாம். அப்போது பத்திரிகையை எடுத்து வெளியில் வாசித்துவிட்டு வாசலில் எறிந்துவிட்டுச் செல்லலாம். இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அப் பொதுமகன் இறுக் கமான கட்டுப்பாட்டின் காரணமாக நூலகத்திற்குள் நுழையாமலிருப்பதற்குக் காரணியாக நூலக நிர்வாகிகள் இருக்கக்கூடாது. எனவே தான் சார்ந்த பிரதேச மக்களுடன் சேர்ந்து ஒத்துப் போவதன்மூலம் அவர்களை நூலகத்தைப் பயன்படுத்தத் தூண்டமுடியும்.
நூலகத்திற்குத் தேவையான சாதனங்களை சேகரிக்கும்போது பிரதேசவாசிகளின் தேவை அறிந்தே செயற்பட வேண்டும். தரமான நூல்கள், சாதனங்களை சேர்க்க வேண்டுமென்ற நோக்கோடு பிரதேசவாசிகள் பயன்படுத்த விரும்பாதவற்றை கொள்வனவு செய்து வைத்தால் அர்த்தமற்றதாகிவிடும். பலர் "ராணி கொமிக்ஸ்" தொடர் நூல்களை விரும்புவார்கள்.
 

நூலகவியல்
ஆனால் அவை தரமான சஞ்சிகை இல்லை என்பதற்காக அதனைத் தடைசெய்தால் பிரதேசவாசிகள் தமது ரசனைக்கு ஏற்ற நூல்கள் அந்த நூலகத்தில் இல்லையென ஒதுங் கிவிடுவர் . எனவே அவர் களது ரசனைக்கேற்ற நூல்களையும் சேர்ப்பதுடன் தரமான நூல்களையும் சேர்ப்பதால் காலப் போக்கில் தரமான நூல்களை வாசிப்பதற்குப் பழக்கப்பட்டுவிடுவார்கள். இதே போன்று சஞ்சிகைகள் பருவ வெளியீடுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இவற்றுக்காக நிர்வாகிக்குக் கிடைக்கும் நிதி போதாமலிருக்கும். கிடைக்கும் நிதியைக் கொண்டு பிரதேசவாசிக்குத் தேவையானவற்றை
முன்னுரிமை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளுதல் சாலச் சிறந்ததாகும்.
பொது நூலகத்தைப் பொறுத்தமட்டில் பலதரப்பட்ட வாசகர்கள் நூலகத்தைப் பயன்படுத்துவார்கள். நிர்வாகத்திற்கு இது பாரிய பிரச்சினையாக இருக்கலாம். நூலக வாசகர்களை பேருந்துப் பயணிகளாகவும், நிர்வாகியை நடத்துநராகவும் உருவகப்படுத்திப் பார்த்தால் பல்வேறுபட்ட தன்மையான பயணிகளைச் சந்திப்பதுபோல் நூலக நிர்வாகியும் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த
வாசகர்களைச் சந்திக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
பொது [blᎢ 6Ꭰ Ꮜ5 வாசகர் களைப் பொறுத்தவரை ஆறிலிருந்து அறுபதுவரை எனக் கொள்ளலாம். பிரதேசச் சிறார்களிலிருந்து வயது முதிர்ந்தோர் வரை அனைவரும் நூலகத்தைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் பல வகைப்பட்ட ரசனையுடையவர்களாக இருப்பதையும் அவதானிக்கலாம். நூலகத்திற்கு மாணவர்கள் மிக முக்கிய வாசகர்களாவர். அவர்களது ஆற்றலை வளம்படுத்துவதன் மூலம் நல் லதொரு சமூகத் தரினை அப்பிரதேசத்தில் வளர்த்தெடுக்க முடியும். பல்வேறு தளத்திலும் உள்ள வாசகர்களுடன்
இணைந்து செயற்படுவதன் மூலம் அவர்களின் தேவைகளின் மிக முக்கியமானவற்றை அறிய முடியும். அத்தேலுைகளை ஈடுசெய்யும் முக்கிய நூல்களை நூலகத்திற்கு வரவழைப்பதன் மூலம் அவர்களின் விருப்பினைப் பூர்த்தி செய்யலாம்.
நல்ல நூலக சேவை வழங்கவேண்டுமாயின் நூலகத்திற்கு ஒரு நல்ல நிர்வாகம் இருக்க வேண்டும். நூலகத்திற்கு ஒரு முகாமையாளர் இருத்தல் அவசியம் . ஆனால் அம் முகாமையாளர் தன்னிஷ்டமாகத் தொழிற்படா
గ *్ళ11 ,

Page 8
மலிருப்பதற்கு நல்லதொரு ஆலோசனைச் சபை இருத்தல் வேண்டும். இச்சபை அவருக்கு அபிவிருத்தி சார்பான ஆலோசனைகளை வழங்கலாம் . இச் சபையில் பிரதேச கல்விமான்களும், பாடசாலைகளினதும், கல்வி நிறுவனங்களினதும் தலைவர்களும் உள் ளடக் கப்படலாம் . முகாமையாளராகச் செயற்படுபவர் நூலக அபிவிருத்தியிலும், சமூக அபிவிருத்தியிலும் நல்ல ஈடுபாடுடையவராக இருப்பதுடன் நல்ல கல்வியறிவுடையவராகவும் இருப்பது அவசியம். அத்துடன் பிரதேச வாசிகளிடையே நன்மதிப்பைப் பெற்றவராக அல்லது பெற முயற்சிப்பவராக இருத்தல் வேண்டும். இவ்வாறு இருந்தால்தான் நல்ல நுTலக சேவைைைய வழங்க முடியும் . நிர்வாகிக்கு எதிராகப் பல தவறான குற்றச் சாட்டுக்களை பிரதேசவாசிகள் தெரிவிக்கலாம். ஆனால் அக்குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை என்பதை அவர்கள் உளமார உணரக்கூடிய தாக நாம் அவர்களுடன் பழக வேண்டும்.
கடந்த காலத்தில் புதியதொரு நூலகர் குறித்ததொரு நூலகத்துக்கு இடம்மாற்றப்பட்ட போது பொதுமக்களும் அதிகாரிகளும் அவரை வரவேற்காமல் திரும்பிப் போகும்படி முயற்சி கள் எடுத்தனர். இருப்பினும் பொறுமையுடன் அந்நூலகத்தின் பொறுப்புக்களை ஏற்ற அந்நூலகர், அந்நூலகத்தை மீள ஒழுங்குபடுத் திப் பல அபிவிருத்திப் பணிகளை முன் னெடுக்க முயற்சிசெய்து, ஆரம்பத்தில் நூலகத்தினை பொறுப்பேற்ற போது இருந்த நிலைமையிலிருந்து பலமடங்கு முன்னேற்றி ஒழுங்குமுறையான நூலகமாக அது மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் அவராக இடமாற்றம் பெற்றுச் செல்ல முற்பட்டபோது அவரை வெளியேறவிடாது வாசகர் முதல் அதிகாரிகள் வரை அவரது இடமாற்றத்தை ரத்துச் செய்ய பிரயத்தனம் செய்தார்கள். இதிலிருந்து அந்த நிர்வாகி மக்களுடன் சேர்ந்து அவர்கள் அபிவிருத்தியில் செய்த பங்களிப்பைப் புரிந்துகொள்ளலாம். இதுவே நூலக சேவைக்கு அவசியம். இதுவே நூலகப் பயன்பாட்டை அதிகரிக்க உதவும்.
గ*** ",
*سہ
& 12
நூலகவியல்
நிர்வாகி, நூலகத்திற்கு வரும் நூலையோ, சஞ்சிகையையோ மேலோட்டமாக வாசித்து வைத்தால் அவற்றுள் இருக்கும் விடயம் யாருக்கும் அவசியப்படும் என்பதை அறியலாம். நூலக வாசகர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒவ்வொரு வாசகரும் என்னென்ன வகையான ரசனையுடையவர் என்பதையும் அறிந்து அவர் விரும்பும் நூலை அவருக்கு வழங்க முடியும்.
பொது நூலகத்திற்கு நூலைத் தெரிவு செய்தே பெற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் தேவை என்ன என்ற தகவலை அவர்களிடம் இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். பெரும் பாலும் அவர்களிடம் இருந்து அவ்வாறு கோரிக்கை கிடைக்காது. எனவே நூலக நிர்வாகி தனது ஆற்றலைப் பயன்படுத்தி நூலகப் பாவனையாளரைப் பற்றிச் செய்த ஆய்வைக்கொண்டு தேவையான நூல்களைத் தெரிவுசெய்யலாம்.
பொதுவாக, நூலகத்தில் எல்லோரும் விரும்பி வாசிக்கக் கூடியதும் இலகு மொழி நடையுடையதும் நல்லறிவைத் தரக் கூடியதுமான தகவல்களை வழங்கக்கூடிய நூல்களைத் தேர்வுசெய்ய வேண்டும். பாடசாலை ஆசிரியர், மாணவர்களுடன் உரையாடி அவர்களது கல்வித் தேவைக்கான நூல்களைத் தெரிவுசெய்யலாம்.
பெறப்படும் நூல்களை சரியான முறையில் ஒழுங்குபடுத்தி வைப்பதன்மூலம் விரைவாக வாசகருக்கு வழங்க வாய்ப்புகள் உண்டு. அத்துடன் வாசகர்களாலும் நூலைத் தெரிவு செய்ய வழிவகுக்கிறது. எனவே நூல்களை ஒழுங்குமுறையில் பகுத்து ஒழுங்குபடுத்தலாம். பொதுவாகப் பாடரிதியாக ஒழுங்குபடுத்தினால் வாசகரால் இலகுவில் நூலைத் தெரிவுசெய்ய முடிகின்றது.
வாசகர் நூலகத்தில் தனக்குத் தேவையான
நுT ல இருக் கரின் றதா என அறிய உதவக்கூடியது பட்டியலாகும். இந்தப் பட்டியல்
 
 

நூலகவியல் தயாரிப்பதற்கு சிறிய நூலகங்களுக்கு வசதிகள் குறைவாகும். ஆனால் நிர்வாகி தனது ஆற்றலை பயன்படுத்தி தாள்களில் அல்லது பால்மாப் பெட்டிகளை பட்டியல் அட்டை அளவில் (5x3 அங்குலம்) வெட்டித் தனது நுTலக வாசகர்களைக் கவரும் தகவல்களுக்கு அமைவாகப் பட்டியலைத் தயாரித்துத் தனது மேசையில் அடுக்கி வைத்தால் அவர்களது தேவையை விரைவாகப் பூர்த்திசெய்ய முடியும்.
நூலகத்திற்கு வரும் பத்திரிகைகளை காலையில் பார்வையிட்டு அன்றைய முக்கிய செய்திகளின் தலையங்கங்கள், செய்திச் சுருக்கங்கள் போன்றவற்றை வாசகர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் விளம்பரப்பலகையில் தினமும் எழுதி வைத்தால் அவற்றை வாசிப்பதற்காக வாசகர்கள் நூலகத்திற்கு வருவார்கள். இதன்மூலம் உலக விடயங்களை அவர்களுக்குத் தெரிவிக்க வாய்ப்புக் கிட்டுகின்றது.
பிரதேச மக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைச் சேகரித்து வைக்கும் பழக்க வழக்கங்கள் குறைவானவர்கள். நூலகங்களில் தினமும் கிடைக்கும் முக்கிய விடயங்களைத் தெரிவுசெய்து கத்திரித்து ஒட்டுப் புத்தகங்களா கத் தயாரித்து வைக்கலாம். கட்டுரைகள் பொருள்வாரியாக வெட்டி ஒட்டிப் பொருள்வாரி புத்தகங்களை சேகரித்து வைக்கலாம். இவை மக்களின் ஆற்றலை வளம்படுத்த, நல்ல தகவல்களை வழங்க உதவும்.
நூல்கள் யாவும் வாசிப்பதற் கே. நூலகத்திற்கு வரும் நூல்கள், ஆவணங்கள், ஏனைய வாசிப்புச் சாதனங்களை வாசிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். நூலைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென அலுமாரிகளில் பூட்டி வைப்பது அல்லது ஒருவரே பொறுப்பாக இருக்கவேண்டும் எனக் கட்டுப்பாடு வைத்து, ஏனைய நூலகப் பணியாளர்கள் நூல் வழங்குவதைத் தடுத்து வைத்தல் போன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு நூலைத்
தேவைப்படுபவருக்கு தேவைப்படும் நேரத்தில் வழங்கி உதவிசெய்தல் அவசியம். தேவை ஏற்படின் இறுக்கமான சட்டதிட்டங்களுக்கு விதிவிலக்காகவும் நூல்களை வழங்கி வாசிப்பினை ஊக்குவித்தல் வேண்டும்.
சிறுவர்களை நூலகத்திற்குள் வரவழைக்க மற்றொரு வழி, கதை, அபிநயப்பாட்டு போன்ற நிகழ்ச்சிகளை நடாத்துதலாகும். இதற்காக நடிப்போடு கதையை விளங்கப்படுத்தக் கூடிய கதைசொல்லிகளை ஏற்பாடு செய்யலாம். அவர்களது நடிப்புடன் கூடிய செய்கை பிள்ளைகளை மிகவும் கவரக் கூடியது. இதன்மூலம் பல சிறுவர்களை நூலகத்திற்கு தொடர்ந்து வரவழைக்க முடியும், சனிக் கிழழைகளில் இதை ஏறபாடு செய்வது பொருத்தமாகும்.
நூலக வாசகர்களை ஒன்றுசேர்த்து வாசகர் வட்டம் ஒன்றை உருவாக்கலாம். அதன்மூலம் பிரதேச மக்கள் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் புதிய விடயங்களுக்கான கருத்தரங்குகள் விவாதங்கள் நடத்தலாம். குறிப்பாக விவாதமேடை நடாத்தும்போது அதிகளவு வாசகர்கள் பற்கேற்பார்கள். விவாதங்கள் அனைவரையும் கவரக்கூடியதாக இருத்தல் வேணி டும் . விவாதத் தில் ஈடுபடுபவர்கள் மக்களைக் கவரக் கூடியவர்க ளாக இருந்தால் நூலகத்திற்கு அதிகளவு வாசகர்கள் வருகைதர வாய்ப்புகள் உண்டு.
இதேபோன்று கலைக் கண்காட்சிகள், புத்தகக் கண்காட்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதனாலும் அதிகளவு வாசகர்களை நூலகத்திற்கு வரவழைக்கலாம். வாசகர் களுக்குத் தேவையான நூல்கள் நூலகத்தில் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்த இது உதவும்.
நூலகமானது தனது தாய் நிறுவனத்தின் ஒரு அங்கமாகவே தொழிற்படும். அத்தாய் நிறுவனத்துடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பல அபிவிருத்திப்
జగ"'",
* 13 ”سم
W

Page 9
பணிகளைச் செய்ய முடியும். குறிப்பாக நூலகத்திற்கு நிதி ஏற்பாடு செய்வதற்கு தாய் நிறவனத்தில் தயக் கமான நிலையே காணப்படும். நூலக நிர்வாகி தாய் நிறுவனத் துடன் நல்ல உறவை வைத்திருந்தால், நூலகத்திற்குத் தேவையானவற்றை அவற்றின் அவசியம் பற்றி எடுத்துச் சொல்வதன் மூலம் தேவையான நிதரியை தேவையரின் முக்கியத்துவம் கருதித் தாய் நிறுவனம் ஏற்பாடு செய்து வழங்கும் . புதரிய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள். இதன்மூலம் நல்லதொரு நூலக சேவையை மக்களுக்கு வழங்கமுடியும்.
நூலகத்தின் அபிவிருத்திக்குத் தன் தாய்நிறுவனத்தையே நம்பியிருக்காது நலன் விரும்பிகள் மூலம் நல்ல அபிவிருத்திப் பணிகளைச் செய்யலாம். இதற்கான செயற்திட்டங்களைத் தயாரித்து உதவி செய்பவர்களுக்கு வழங்கினால் அதற்கென அவர்கள் நிதி ஏற்பாடுகளைச் செய்து உதவிகள் செய்வர். நூல்களை அன்பளிப்பாக வழங்குமாறு கோரலாம். அன்பளிப்புச் செய்வோருக்குத் தேவையான தேர்ந்த நூல்பட்டியல்களை வழங்குவதன் மூலம் நல்ல
நூலகவியல்
நூல் சேகரிப்பை உருவாக்கலாம். ஆனால் நலன் விரும்பிகள் தமது பழைய நூல்களைத் தரும்போது மிக அவதானமாக அவற்றைக் கையாளவேண்டும. பூச்சி அரித்த காலம்கடந்த பழைய நூல்களையும் வழங்கும்போது அவற்றினை நூலகத்திற்கு உள்வாங்காது கழித்துவிடலாம். இதனால் பூச்சிகளிடமிருந்து நூல்சேர்க்கையை பாதுகாக்கலாம். பயனற்ற நூல்கள் இடத்தை நிறைத்து வைப்பதிலிருந்து தவிர்த்துக் கொள்ளவும் முடியும்.
ஆவணமாக கல் சேவை பொது நூலகத்திற்கு அவசியமானதொன்று. மிக முக்கிய வெளியீடுகள், கலை, கலாசார, பண்பாடு பற்றிய நூல்கள் சிறு பிரசுரங்கள், துண்டுப் பிரசுரங்கள், கையெழுத்தப் பிரதிகள் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக அவசியமாகும். இது எதிர் கால சந்ததியினருக்கு மிகவும் அத்தியாவசியமாகும்.
பொதுநூலகங்களில் முன்னெடுக்கப்படும் சேவைகள் மக்கள் நலனில் பெரும் அக்கறையு டையன. இச்சேவைகளால் சமுதாயத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் பொது நூலக சேவை சமூக அபிவிருத்திச் சேவையாகிறது. F1
ஈலிங் கனகதுர்க்கை
Glimpses of the Eelam Tamil Heritage ÞJIGo 6)6J6ffuĵL"Gb 6fpIT6Îaio இளவயதினர் நூலை விமர்சனம் செய்கின்றனர். 2004ல் லண்டன்,
அம்மன் ஆலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
 
 
 
 

நூலகவியல்
ஜேர்மன் மண் சஞ்சிகையின் வயது 15
ஜேர்மன் மண் சஞ்சிகையின் 15வது ஆண்டு நிகழ்வும் பரிசளிப்பும் டுயிஸ்பேர்க்கில் ஏப் 23ல் இடம்பெற்றது. இச்சிறார் நிகழ்வில் பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. எழுத்தாளர் சிறி ஜீவகன் , பாலச் சந்திரன், கவிஞர் அம்பலவன் புவனேந்திரன் ஆகியோர் நடுவர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்வில் மாயாஜாலம், கவிதைகள், நாடகம், நடனம் என பல்வேறம் சங்கள் இடம்பெற்றது. மண் ஆசிரியர் சிவராஜா தாயகத்து மக்களுக்கு
கடற்கரையில் அந்தக் கல்லறைகள்
கடற்கரையில் அந்தக் கல்லறைகள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா ஜேர்மனி காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்றது. தென்றல் வரும் தெரு, விடியலின் முகவரி ஆகிய கவிதை நூல்களை வெளியிட்ட பாரிஸ், சரீஸ் தனது மூன்றாவது படைப்பாக கடற்கரையில் அந்தக் கல்லறைகள் என்ற சுனாமி அனர்த்தத்தின் கவிதை தொகுப்பை வெளியட்டு உள்ளார். இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு வண்ணை தெய்வம் தலைமை தாங்கினார்.
லண்டன் தமிழ் மையத்தின் 'Speech Day'
லண்டன் தமிழ் மையத்தின் லண்டன் g51sp 60)LDug55661 'Speech Day' u606) 10ல் வெம்பிளி ஹை ரெக்னோலஜி கொலிஜில் இடம்பெற்றது. பாலர்கள் முதல் உயர்நிலை வரை 400 மாணவர்கள் கற்கும் லண்டன் தமிழ் மையம் லண்டனில் உள்ள தமிழ் பள்ளிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் சுந்தரம் ப்ாள்
உதவுவதையும் கடந்த 15 ஆண்டுகளாக செய்துவருகிறார். அதுபற்றிய கண்காட்சியும் புத்தகக் கண்காட்சியும் அங்கு இடம்பெற்றது. லண்டனில் இருந்து நூலகவியலாளர் என் செல்வராஜா, பெஸ்ற் ஒடியோ கலையகப் பணிப்பாளர் நடா மோகன் , ஜபிசி அறிவிப்பாளர் பரா பிரபா, கவிஞர் பா வை ஜெயபாலன் ஆகியோர் இந்நிகழ்ச்சிகளில் கெளரவ விருந்தினர்களாகக் கலந்து கொண் டனர் . இவர் கள் OT 606) அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். டுயிஸ்பேர்க் நகரபிதா பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழ்க் கல்விச் சேவையின் 16வது ஆண்டு விழா ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் 16வது ஆண்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் யூன் 18ல் டோர்ட்முண்ட் நகரில் நடை பெற்றது. ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தமிழ்க் கல்விச்சேவை முயற்சி இதுவாகும். 12 பாடசாலைகளுடன் தை மாதம் 1989இல் ஆரம்பித்த இக்கல்விச் சேவை, பொறுப்பாளர் பூரி ஜீவகனின் தளராத முயற்சியால் கடந்த 16 ஆண்டுக்கால வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த வளர்ச் சிப் படியில் 40 தமிழ்ப் பாடசாலைகள் உருவாகி வளர்ந்துள்ளன. தமிழாலயக் கல்விச் சேவையில் இணைந்து பணியாற்றும் முக்கியஸ்தர்களான இ.நாகலிங்கம், சு.பாக்கி யநாதன் போன்றோர் இக்கல்விச்சேவையின் ஆரம்பகால உறுப்பினராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவின் பிரதம அதிதியாக லண்டனிலிருந்து நூலகவியலாளர் என். செல்வராஜா கலந்து சிறப்பித்திருந்தார். அவர் தனது சிறப் புரையில் புலம் பெயர் ஆசிரியர்களின் பொறுப்பை விளக்கினார்.
9,

Page 10
மு.நித்தியானந்தன்
நூலகவியல்
ஈழத்துப் பதிப்புத் துறையில்
தமிழியல் வெளியீடுகள்
தமிழியல் வெளியீடான puമUസ്ത്ര് மீண்டும் வரும் நாட்கள் கவிதைத் தொகுப்பிற்காக எழுதப்பட்ட பதிப்புரை இதுவாகும். வீரகேசரிவார வெளியீட்டில் 03.10.2004இல் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருந்தது. ஈழத்துத் தமிழ் நூலியல் வளர்ச்சி பற்றிய தகவல்களை இக்கட்டுரை உள்ளடக்குகின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தின் தோற்றம் கலை, இலக்கிய, நாடக மையமாகக் கொழும்பு திகழ்ந்த நிலையில் இருந்து யாழ்ப்பாணம் அரங்கச் செயற்பாடுகளின் தளமாக மாறியது. தமிழியல் ஈழத்தின் பதிப்புத் துறையில் தன்காலடிகளைப் பதித்தபோது ஈழத்து வெளியீட்டுலகம் அவ்வளவு பிரகாசமாக இருக்கவில்லை. அத்திப்பூவாய் ஆங்காங்கே எழுதியவர்களின் அரும்பெரும் முயற்சியால் நூல்கள் வெளியாவதும் அவையும் சேற்றில் விழுந்த கல்லாய் எதிர்வினையற்று முடங்கிப் போவதுமே இயல்பாய் இருந்தது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஈழத்து நூல்களைப் பதிப்பிக்க ஸ்தாபனரீதியாக மேற் கொண்ட செயற்பாடுகள் கூடப் பலிதமாக வில்லை. அச்சிடும் செலவு, நிதி நெருக்கடி, நூல்களை வாங்கி ஆதரிக்க அமைப்புகள் இன்மை, வாசக ஆதரவின்மை என்ற காரணங் களுக்கப்பால் ஈழத்தின் பதிப்புத்துறை பற்றிய நீண்டகால நோக்கிலான தரிசனமின்மையும் நிலவியது.
தமிழியல் இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்த ஆக்கபூர்வமான உணர்வு கொண்டவர்க ளின் தார்மீக பலத்துடன் ஈழத்து நூல்வெளியீடு
ό. 6 *يX '.
பற்றிய இருப்புநிலை குறித்தும், வெளியீட்டை வேண்டி நிற்கும் படைப்புக்கள் குறித்தும் திட்டவட்டமான நோக்கினைக் கொண்டிருந்தது.
எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழியலின் தோற்றத்திற்கு முன்னரான பூர் வாங்க முயற்சிகள் போன்று தத்துவம், இலக்கிய வரலாறு, சிறுகதைகள், கவிதைகள், விமர்ச னங்கள் என்று பல்துறை சார்ந்தும் ஏறத்தாழ இருபது நூல்களைத் தமிழகத்தில் பிரசுரிக்க மேற்கொண்ட முயற்சிகள் பதிப்புத் துறையில் எமது நம்பிக்கை வேருக்கு நீர்பாய்ச்சின.
ஈழத்து ஆக்கங்களைத் தமிழகத்தில் பதிப்பிக்கும் பணியில் செ.கணேசலிங்கனின் பங்கு கவனத்திற் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும். கலாநிதி க.கைலாசபதியைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நூலான அவரின் தமிழ் நாவல் இலக்கியம் (1968) செ.கணேசலிங்கனின் முயற்சியினாலேயே பாரி நிலையம் வெளியீடாகத் தமிழகத்தில் பிரசுரம் பெற்றது. அ.ந.கந்தசாமி, யோ.பெனடிக்ற்பாலன் ஆகியோருடைய நூல்களுடன் செ.கணேச லிங்கனின் அனைத்து நாவல்களும் தமிழகத்தி லேயே வெளியாகின. செ.கணேசலிங்கனின்

நூலகவியல்
நீண்ட பயணம் (1965), செவ்வானம் ஆகிய நாவல்கள் தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட நாவல்களாகத் திகழ்ந்தன.
சோ.சிவபாதசுந்தரத்தின் மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் (1947) என்ற நூல் தமிழகத்தில் வெளியானபோது பயண இலக்கியத்தில் புதிய பாதையை அது திறந்துவைத்தது என்று கூறலாம். கெளதம புத்தர் அடிச்சுவட்டில் (1960), சேக்கிழார் அடிச்சுவட்டில் (1978), ஆகிய சோ.சிவபாதசுந்தரத்தின் நூல்கள் தமிழகத்தில் பெருங்கணிப்பினைப் பெற்ற நூல்களாகும். ராஜாஜியின் முன்னுரையுடன் தமிழகத்தில் வெளியான அவரின் ஒலிபரப்புக்கலை (1954), ஒலிபரப்புத் துறையில் வெளியான மிகச்சிறந்த நூலாக இன்றளவும் பேசப்பட்டு வருகின்றது. கி.லகஷ்மண ஐயரின் இந்திய தத்துவ ஞானம் பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடாகப் பல பதிப்புக்களைக் கண்ட நூலாகும்.
ஈழத்து நூல்களை வெளியிடுவது என்ற நோக்குடன் தமிழகத்தில் ஈழத்து சிருஷ்டிகளை அறிமுகப்படுத்தும், பரவலாக்கும் நோக்கும் தமிழியலின் பதிப்பு முயற்சிகளின் அடிநாதமாக இருந்தன.கே.கணேஷ், கந்தையா நவரேந்திரன், க.கைலாசநாதக் குருக்கள், எம்.ஏ.நு."மான், என்.கே.மகாலிங்கம், சேரன், குப்பிளான் ஐ.சண்முகன், சி.சிவசேகரம், மு.தளையசிங்கம், அ.யேசுராசா, சி.வி.வேலுப்பிள்ளை, ஆகிய ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் தமிழகத்தின் வாசிப்புப் பரப்பிற்குக் கொண்டு வரப்பட்டன.
தமிழகத்தின் க்ரியா, நர்மதா பதிப்பகம், பொதுமை வெளியீடு, காவ்யா, கோவிந்தனின் சமுதாயப் பிரசுராலயம், மீனாட்சி பிரசுராலயம் ஆகிய முன்னணிப் பதிப்பாளர்கள் எமது நூல்களை வெளியிட்டு எமது பதிப்பு முயற்சிக்கு மிகுந்த ஆதரவு தந்தனர். அமரர் கோவிந்தன் தனது சமுதாயப் பிரசுராலயத்திற் கூடாக மு.தளையசிங்கத்தின் 5 நூல்களைப் பதிப்பித்து எமக்குப் பேரூக்கம் தந்ததை நாம் நன்றியோடு நினைவுகூர்கின்றோம்.
கம்பனும் மில்டனும் போன்று நூல்களைத் தந்த அமரர் எஸ்.ராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்றோர் ஈழத்து நூல்களைத் தமிழகத்தில் பதிப்பிக்கும் முயற்சிக்குப் பெருந்துணையாக இருந்திருக் கிறார்கள். சி.சிவசேகரத்தின் நதிக்கரை மூங்கில் (1983), காவ்யா சண்முகசுந்தரத்தின் இனிய ஒத்துழைப்பின் நல் அறுவடையாகும். கே.கணேஷின் தமிழாக்கத்தில் உருவான போர்க்குரல் (1981) லூசுன் சிறுகதைகளின் தொகுதியையும், சேரனின் இரண்டாவது சூரிய உதயம் (1983) கவிதைத் தொகுப்பையும் தமிழகத்தில் பதிப்பிக்கும் முயற்சிக்கும் எஸ்.வி.ராஜதுரை நிறைந்த ஆதரவு நல்கினார்.
1970களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தின் கலாசார வெளியில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழியலின் செயற்பாடுகளுக்கு உரமூட்டின. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தோற்றமும் அதனையொட்டி மட்டக்களப்பு, மலையகம் சார்ந்த இலக்கியவாதிகளின் வருகையும் இலக்கியப் பரிவர்த்தனைகளும் காத்திரமான சூழலை உருவாக்கின. பல்கலைக்கழக சமூகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் இடையிலான உறவுகள் பல்வேறு தளங்களில் பலம் கொண்டன.
கலை இலக்கிய, நாடக மையமாகக் கொழும்பு திகழ்ந்த நிலையிலிருந்து யாழ்ப்பாணம் அரங்கச் செயற்பாடுகளின் தளமாக மாறியது. நாடக உலகின் சர்ச்சைகள் இலக்கிய உலகில் முதன்மை பெற்றுத் திகழ்ந்தது. மல்லிகை, அலை, சமர், ஆகிய சஞ்சிகைகள் இக்காலத்தின் முக்கிய இலக்கிய வெளியீட்டுக் களங்களாக அமைந்தன. வைகறை, அலை, முத்தமிழ் வெளியீட்டுக கழகம் ஆகியன புதிய இலக்கியப் பரப்புகளில் தமது வெளியீடுகளைத் துணிச்சலோடு கொணர்ந்தன. யாழ்ப்பாணத்தில் Saturday Review என்ற ஆங்கில வாரப் பத்திரிகையின் வரவும் கொழும்பில் இருந்து வெளியான Lanka Guardian இதழும் இந்தக் கலாச்சார வெளியில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தன.
,'' 7 1 •&****ميي مہیا N8""

Page 11
சிங்களத் திரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜா, ஆங்கில இலக்கிய விமர்சகர் ரெஜி சிறிவர்த்தனா, ஏ.ஜே.கனகரத்தினா ஆகியோரின் கலை இலக்கிய ஆளுமைகளும் இக்கால கட்டச் சூழலைப் பாதித்திருந்தன. இக் காலகட்டத்தில் அலை வெளியீடாக வெளியான ஏ.ஜே.கனகரட்னாவின் தமிழாக்கத்திலான இரு நூல்கள் மைக்கேல் லோவியின் மார்க்சிய வாதிகளும் தேசிய இனப்பிரச்சினையும் (1978) மற்றும் மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் (1981) என்பன தீவிர வாசிப்பிற்கு உள்ளாகின.
அரசியல் சமூகத் தளங்களில் சிங்கள பெருந்தேசியவாதத்தின் ஒடுக்குமுறை எழுபது களில் கூர்மையுற்றது. 1977இன் இனக்கலவரம், தமிழர்கள் மீதான அரசின் உதாசீனம், 1978 இல் பல்கலைக் கழகங்களில் தமிழ் மாணவர்களின் அனுமதி பற்றிய சிறில் மத்தியுவின் இனத்துவேஷக் கருத்துக்கள், 1978 இல் மட்டக்களப்பு புயலால் உருக்குலைந்த போது வெளிநாட்டு அரசு கொடுத்த நிவாரண உதவிகளைக் கூட அங்கு வழங்க மறுத்த அரசின் காழ்ப்புணர்ச்சி, மலையகத் தோட்டப் பகுதிகளில் சிங்களக் காடையர்கள், தமிழ்த் தொழிலாளர்கள் மீது நடத்திய வெறியாட்டங் கள் என்பன தமிழ் அரசியலில் அதிர்வலை களை எழுப்பின.
1979இல் பயங்கரவாதத் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழ்ப் பகுதிகளில் இராணுவம் நினைத்ததைச் செய்ய கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டது.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கென்று யாழ்ப் பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட பிரிகேடியர் வீரதுங் கவின் கொடுரமான இராணுவ அடக்குமுறைகள் தமிழ்மக்கள் நெஞ்சங்களில் ஆறாத ரணமாகப் பதிந்தன. பயங்கரச் சித்திரவதைக்குட்பட்ட நிலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இன்பம், செல்வம் என்ற இளைஞர்களின் சடலங்கள் பண்ணைக் கடற்கரையில் வீசப்பட்டுக் கிடந்தன.
Mడ
நூலகவியல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்திவிட்டு சிங்கள இராணுவம் யாழ்.பொதுசன நூல் நிலையத்தைத் தீக்கிரையாக்கிய கொடுர சம்பவம் உலகெங்கும் வாழும் நூல் அபிமானிகளின் நெஞ்சிலே கனல் பரப்பியது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்த ஒருநாள் நிதியில் தமிழகத்திலிருந்து புத்தகங் களைப் பெற்றுவரும் பொறுப்பை திரு பத்மநாப ஐயரிடம் \ ஒப்படைக்கலாம் என்று நான் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆலோசனை கூறியபோது மாணவருலகமும் அதை அங்கீக ரித்தது. தமிழகத்திலிருந்து தனியே புத்தகப் பொதிகளை யாழ்ப்பாணம் கொண்டு வந்து சேர்த்த பத்மநாபஐயரின் உழைப்பு அரியது.
1983இல் இலங்கையில் ஏற்பட்ட இனசங்கா ரத்தின் போது தமிழ்மக்களது இருப்பும் வாழ்வும் கேள்விக்குறியாகின. அரச பயங்கர வாதத்தின் கோரம் தமிழ் மக்களில் ஆழமாகப் பதிந்தது. ஈழத்து அரசியலின் பின்புலமாகத் தமிழகம் மாறிய காலகட்டத்தில் தமிழியல் தீர்க்கமான முன்னோக்குடன் தமிழகத்தில் பதிப்பு முயற்சிகளை மேற்கொண்டது.
யாழ். நூல்நிலையம் தீக்கிரையாக்கப்பட்ட கலாசாரப் பேரழிவின் பின் ஈழத்தமிழரின் அரசியல், இலக்கிய கலாசாரச் செயற்பாடுகள் பதிவாக வேண்டும் என்ற சிந்தனை வலுப்பெற்ற நிலையில் தமிழியல் வேகம் கொண்டது. ஈழத்தமிழரின் படைப்பு முயற்சிகளுக்கும் அவை நூல் வடிவம் பெறுவதற்கும் இடையி லான பாரிய இடைவெளியைத் தமிழியல் இனங்கண்டது. முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் எழுத்துலக முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பற்றி இளைய தலைமுறைக்கு எடுத்துக்கூற அவர்களின் படைப்புக்கள் நூல் வடிவம் பெறவேண்டிய தேவையைத் தமிழியல் உணர்ந்தது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நூல்கள் பல மறுபிரசுரம் நாடிநின்றன.
சிறுகதை, நாவல், கவிதைக்கு அப்பால் அரசியல் எழுத்துக்கள், வரலாறு, சமூகவியல், பண்பாடு, ஓவியம் போன்ற பன்முகப்பட்ட

நூலகவியல்
துறைகளிலும் நூல்வெளியீடுகள் விரிவாக்கம் பெற்றாக வேண்டிய தேவையை தமிழியல் பிரக்ஞைபூர்வமாக உணர்ந்தது. ஈழத்து
தமிழரின் தலையாய பிராந்தியப் பத்திரிகை
யாக வெளிவந்த ஈழநாடு இதழில் ந. சபாரத்தினம் அவர்கள் எழுதிவந்த ஆசிரியத் தலையங்கங்கள் தமிழ் மக்களது தார்மீகக் குரலின் வெளிப்பாடாகவே அமைந்தன. ஒரு நாளிதழின் தலையங்கங்கள் ஒருநாள் சாம்ராஜ்யத்தில் விகCத்து மங்கிவிடுபவை. ஆனால் தமிழர் தம் அரசியல் வாழ்வின் நெருக்கடியான காலப்பகுதியின் அசலான பதிவுகளாக அமைந்த சபாரத்தினத்தின் ஆசிரியத் தலையங்கங்கள் தொகுக்கப்பட்டு நூலாக வருவது முன்னோடி முயற்சியாகும். ஊரடங்கு வாழ்வு (1985) என்ற இந்த அரசியல் பத்தி எழுத்துக்களை நூலாக்கி உதவ அமரர் கோவிந்தன் இசைந்திருந்தார் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கின்றோம்.
GuT.J.g5ug5ulgit Early Settlements in Jaffna என்ற ஆய்வேடு பத்மநாப ஐயரின் துணிச்சலான செயற்பாடுகளால் தான் நூல் வடிவம் பெற்றது என்பதும் இங்கு பதிவுபெறுவதற்குரிய செய்தியாகும். அவ்வாய் வேடு நூல்வடிவம் பெறவேண்டும் என்ற பெருவிருப்புடன் அவ்வாய்வேட்டை இயக்கப் படகு வழியாகத் தமிழகம் கொண்டு சென்றதிலிருந்து சென்னையில் ஒரு வெள்ளி கூட இல்லாத நிலையிலும் அதனை ஒளிப் பதிவில் எழுத்துருவாக்கி அந்நூல் பூரண வடிவம் பெறும்வரை அவர் அந்நூலாக்கத்தில் காட்டிய சிரத்தை அசாதாரணமானது.
எண் பதுகளின் பின் யாழ்.குடாநாடு யுத்தபூமியாக மாறிய நிலையிலும் ஈழத்தின் தனித்துவத்தைக் குறிக்கும் கலைப் பரிமாணங் களிலும் தமிழியல் காட்டிய அபூர்வ அக்கறையின் வெளிப்பாடு தேடலும் படைப் புலகமும் (1987) என்ற ஒவிய, சிற்பத்துறை நூலாகும் . ஈழத் தின் நவீன ஓவிய முன்னோடியான மாற்குவின் ஒவியங்களை முன்வைத்து வெளியான தேடலும் படைப்
புலகமும் என்ற தொகுப்பிற்காக பத்மநாப ஐயர் தமிழகத்தில் ஓவியக் கலைஞர்களின் ஆக்கங்களைத் திரட்டிய சந்தர்ப்பத்தில் நானும் அவருடன் சென்றிருக்கிறேன். பத்மநாப ஐயரின் தொலைநோக்குடன் கூடிய அயராத தேடலின் அறுவடை அது. யாழ்ப்பாணத்தில் கை கூடிவரக்கூடிய ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அச்சக வசதிகளுடனும் பொருளாதாரக் கஷ்டங்களுட னும் தேடலும் படைப்புலகமும் வெளியான போது தமிழகத்திலும் அது ஓவியக் கலைஞர் களால் வெகுவாகச் சிலாகிக்கப்பட்டது.
சாந்தி சச்சிதானந்தனின் பெண்களின் சுவடுகளில் (1989) தாய்வழிச் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் முக்கிய நூலாகத் தமிழில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. புதிய புதிய துறைகள் சார்ந்தும் பரவலான கவன ஈர்ப்பைப் பெறாத சீரிய எழுத்துக்கள் குறித்தும் தமிழியல் விஷேட அக்கறை கொண்டிருக்கிறது. கைலாசநாதக் குருக்களின் வடமொழி இலக்கிய வரலாறு (1981) நூலிலிருந்து சண்முகம் சிவலிங்கத்தின் நீர்வளையங்கள் (1988) வரை இது பரந்து விரிந்திருக்கிறது.
தமிழகத்தில் தமிழியலின் பதிப்பு முயற்சிகளில் உறுதுணையாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் தமிழ்ப் பதிப்புத்துறையினைப் புதியதோர் திசையில் இட்டுச்சென்ற க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன், பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984), ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி (1984), முதலான ஐந்து ஈழத்து நூல்களை க்ரியா வெளியீடாகக் கொணர்ந்த வர். மற்றவர் வயல் சி.மோகன். விமர்சனம், புனைகதை, ஓவியம், சினிமா, உலக இலக்கி யம் எனப் பல்துறை ஆளுமை மிக்கவர்.
ஈழத்து இலக்கியத்தை ஆங்கிலத்திற்கும் ஏனைய மொழிகளுக்கும் எடுத்துச் செல்லும் பெரும் இலக்கையும் தமிழியல் கொண்டிருக் கிறது. மொழிபெயர்ப்பு ஆக்கங்களை இனங்கண்டும், தகுதி கண்டும் உரிய எழுத்துக்களை அடையாளப்படுத்தியும்,

Page 12
முன்னெடுக்கப்பட வேண்டிய பெரும் இலட்சியத் திலும் தமிழியல் ஆழ்ந்த சிரத்தையை வெளிப்படுத்துகிறது.
தமிழியல் பதிப்பு முயற்சிகள் பத்மநாப ஐயரின் பேருழைப்பின் அறுவடை, அவரின் இலக் கியக் கனவுகள் விசாலமானது. தொடுவான எல்லையில் விரிவானது.
வாசகர் வட்ட வெளியீடாகத் தமிழகத்தில் வெளியான அக்கரை இலக்கியம் (1968) தொகுப்பு முயற்சியிலிருந்து இன்றுவரை அயராது பதிப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் பத்மநாப ஐயரின் செயற்பாட்டால் ஈழத்து நூலாக்க முயற்சிகள் பலம்பெற்றுள்ளன.
மாறுபட்ட சிந்தனைப் போக்குகளையும் அங்கீகரிக்கும் மனவிசாலமும் நூல்தேட்டத்தின் மீதான தணியாத தாகமும் சர்வதேசத் தொடர்பாடல் ஒழுங்கும் அவரின் பதிப்பு முயற்சிகளுக்குக் கெளரவம் சேர்ப்பவை. எழுத்தாற்றல்களை மிகத் துல்லியமாக இனங்கண்டு அவற்றை ஊக்குவிப்பதில் ஐயர் களைத்துப் போவதேயில்லை. ஐயரின் உலகம் எழுத்தாளர்களின் உலகமும் புத்தகங்களின் உலகமும் தான். இதுதான் அவரின் மிகப் பெரும் பலம் என்ற படுகின்றது.
அனைத்துலகு தழுவிய நோக்கில் அவர் தொகுத்து வெளியிட்ட லண்டன் தமிழர் நலன்புரிச் சங்க ஆண்டுத் தொகுதிகளான பத்தாவது ஆண்டுச் சிறப்பு மலர் (1996), கிழக்கும் மேற்கும் (1997), இன்னுமொரு காலடி (1998), யுகம் மாறும் (1999), கண்ணில் தெரியுது வானம் (2001) ஆகிய தொகுதிகள் சமகாலத் தமிழ் இலக்கியச் செல்நெறியினை நாடிபிடித்துப் பார்க்க உதவுவன. ஒவிய வெளிப் பாடுகளையும் அவர் பிரக்ஞைபூர்வமாகவே தனது தொகுதிகளிலே இணைந்திருக்கின்றார்.
லண்டனில் பத்மநாப ஐயரின் இலக்கிய வெளியீட்டுக் கனவுகள் ஒவியர் கே.கிருஷ்ணரா ஜாவின் துாரிகையின் சாதுரியத்தில்
*్ళ*
','
நூலகவியல்
வண்ணங்களின் கலவையில் கோட்டோவியங்க ளின் அழுத்தங்களில் வடிவமைப்பின் ஒழுங்கில் பரீட்சார்த்த மனோலயத்தில் கணனியின் அசல்
பரிச்சயத்தில் இரவுக்கும் பகலுக்கும் பேதம்
தெரியாத உழைப்பின் வியர்வையில்தான் சாத்தியப்பட்டன என்றால் அது மிகையாகச் சொல்வது ஆகாது. நியுஹாம் தமிழர் நலன்புரிச் சங்க வெளியீடாக வெளிவந்த அனைத்துத் தொகுப்புக்களின் ஒவ்வொரு பக்கமும் கிருஷ்ணராஜாவின் பேருழைப்பில் ஊறித் தோய்ந்தது. இவை ராஜாவின் விளக்கப் படங்கள் என்றாலும் எழுத்துப் பிரதியின் கற்பனார்த்த கட்புலமொழியில் அவை சுயத்துவமான ராஜாவின் கம்பீரமான கலைப் படைப்புக்களாகவும் பிரசவம் கண்டிருக்கின்றன. ரெம்ப்ராண்ட்டும் மைக்கேல் அஞ்சலோவும் தீட்டிய உன்னத ஓவியங்கள் பைபிள் சித்திரங்கள்தான் என்றாலும் அவை அக்கலை ஞர்களின் சுயத்துவ வெளிப்பாட்ாகவே பாராட்டுப் பெறுகின்றன. பத்மநாப ஐயரின் மலர்களில் இடம் கிடைக்கப்பெற்ற படைப் பாளிகள் பாக்கியசாலிகள்தான். தன் நுணுகிய வாசிப்பில் எழுத்துருக்களின் ஆத்மாவைத் தரிசித்து அதனைக் கோடுகளில் வண்ணங் களில் தனது கற்பனையின் விகச்சிப்பில் தீட்டி வெளிப்படுத்திய ராஜாவின் விளக்கப்படங்கள் தனித்துவ கலை ஆய்வுக்குரியன. பிரார்த் தனைக்கு இனிய கீதங்கள்போல இந்நூல் தொகுதிகளின் பெருவெற்றிக்கு ராஜாவின் ஒவியங்கள் ஆதாரமாக அமைந்திருக்கின்றன.
இன்று தமிழில் பதிப்புத்துறை கணிசமான வளர்ச்சி கண்டிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. புதிய பதிப்பாளர்களின் வரவும் புதுமை முயற்சிகளில் நாட்டமும் இந்தப் புதிய வளர்ச்சியரின் முக் கரிய அம்சங்கள் . வன்னியிலிருந்து வெளியாகும் நூல்களின் வடிவ நேர்த்தி நம்மை பிரமிக்க வைக்கின்றது. கனடாவிலும், ஐரோப்பாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் காத்திரமான நூலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுவாமி விபுலானந்த அடிகள் இயற்றிய 1947 இல் முதற்பதிப்புக் கண்ட யாழ் நூல், >>>

நூலகவியல்
கொழும்பில் நூல்தேட்டம்
நூலகவியலாளர் என்.செல்வராஜாவினால் தொகுக்கப் பெற்றுவரும் நூல்தேட்டம் நூல்விபரப்பட்டியலின் 3வது தொகுதி கடந்த 27.08.05 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வெளியீடு செய்யப்பட்டது. தாயகத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் தமிழ்ப் படைப்புக்களை குறிப்புரையுடன் கூடியதாகப் பட்டியலிடும் இம்முயற்சியில் இதுவரை 3000 தமிழ் நூல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் தலைமை தாங்கினார். கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு நூலாசிரியர் அறிமுகத்தை மேற்கொள்ள, கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீடத் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம்
தமிழ்ச்சங்கத்தின் கேட்போர் கூடம் நிறைந்து
3வது தொகுதி வெளியீடு
அவர்கள் நூலாய்வை மேற்கொண்டார். நூல் வெளியீட்டின்போது சிறப்புப் பிரதி முன்னாள் யாழ் பல்கலைக்கழக நூலகர் சி.முருகவேள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேராதனைப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி.பத்மநாதன் உட்பட பல்வேறு பல்கலைக்கழக வட்டத்தை சேர்ந்தோரும், முதுபெரும் எழுத்தாளர்களும், நூலகத்துறையில் ஈடுபாடு கொண்டோரும் கலந்து கொண்டிருந்தார்கள். கொழும்புத்
வழிந்து இந்நிகழ்வின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்தியது. கொழும்புத் தேசியப் பத்திரிகைகளும், வானொலி தொலைக்காட்சி ஊடகங்களும் இந்நிகழ்வுக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வை கொழும்புத் தமிழ்ச்சங்கத் துடன் இணைந்து, குமரன் புத்தக இல்லம் ஒழுங்கு செய்திருந்தது. 21
>>> வி.சி.கந்தையா எழுதிய, 1964இல் முதன் முதலில் வெளிவந்த மட்டக்களப்புத் தமிழகம் போன்ற பழைய நூல்கள் வெகு சிரத்தையோடு மீளப்பதிப்பிக்கப்பட்டு வருவது சிலாகிக்கத் தக்கதாகும்.
ஈழத்து எழுத்துலகில் புத்தகச் சந்தை வியாபாரிகளின் பிரவேசமும் அதிகரித்துள்ள
சூழலில் தமிழியல் பதிப்புத்துறையில் தன் பணியை விசாலித்திருப்பது நம்பிக்கை தருவதாகும். இது பவுண்களாலும் டொலர்களா லும் உருவாவதில்லை. திரண்ட நோக்கு, அயராத தேடல், பாரிய உழைப்பு. கூட்டு ஒத்துழைப்பு ஆகிய ஆதார தளங்களில் எழுப்பப்படும் இலட்சிய வேள்வி இது. இப்
"ళ1%

Page 13
எம். அஜ்வத் ஹாசீம் விரிவுரையாளர், அவுஸ்திரேலியா
இஸ்லாம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கின்ற ஓர் உயரிய
வாழ்க்கைநெறியாகும். அதன் ஆரம்ப அமைப்பே (இக்ரட்) ஒதுவீராக! என்ற வார்த் தையுடன் விடுக்கப்பட்டது மட்டுமன்றி அல்குர் ஆனின் முதல் அத்தியாயமே (இல்மு) அறிவு. (கலம்) எழுதுகோல் போன்ற அறிவியற் பதங்களை உள்ளடக்கியுள்ளது. ஹிரா குகையில் ஆரம்பித்த அருள்மறை வசனங்கள் அரேபியாவில் மட்டுமன்றி முழு அகிலத்தை யுமே அறியாமைப் பேரிருளிலிருந்து விடுதலை செய்யும் புனிதப் பணியைத் தொடங்கி வைத்தன. அதன் விளைவாக மனித சிந்தனை களில் பதிந்திருந்த அடிமைத்தனங்கள் அகன்று போயின. அறிவுக்கும் சிந்தனைக்கும் சிறப்பிடம் அளித்து இஸ்லாம் தோற்றுவித்த இஸ்லாமிய நாகரீகத்தின் ஒரு முக்கிய அம்சமாக முஸ்லீம் களின் நூலக பாரம்பரியம் தோற்றம் பெற்றது. அறிவையும், அறிஞர்களையும், அறிவு நூல்களையும் மதித்துப் போற்றிய ஆரம்பகால முஸ்லிம்கள் அறிவைத் தேடுவதிலும் அறிவு நூல்களை உருவாக்குவதிலும், அனைத்திலும் மேலாக அவற்றைத் திரட்டிப் பாதுகாப்பதிலும் தீவிர கவனம் செலுத்தினர்.
இஸ்லாமிய உலகில் நூல்நிலையங்கள் பள்ளிவாசல்களுடனும் கல்விக்கூடங்களுடனும் இணைந்தே தோற்றம் பெற்றன. கல்விகற்கும் மாணவர்களின் தேவைகளுடன் தொடர்புபட் டதாக உருவாக்கப்பட்ட ஆரம்ப நூலகங்கள் பொதுமக்களின் அறிவுத்தாகத்தை தீர்க்கும் வகையில் பொது நூலகங்களாகவும் தனியார் நூலகங்களாகவும் பின்னர் வளர்ச்சியடைந்தன.
இஸ் லா மரிய உலகளில் பல வேறு கலைகளும் ஹிஜ்ரி 2ம்,3ம் நூற்றாண்டுகளில்
28 *.
ޗަكޗަކަޗަޗަޗަރަތަކަޗަޙަކަޗަޗަޗަޗަޗަޗަޗަޗަޗަ%
a ޙޙ في
*交愛 a *** a . eAeAeAAJAeAAhAhAeAASASJASeAeAShShJheAeAhAJ
நூலகவியல்
தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்தது போலவே
நூலகங்களும் புதுப்பொலிவுடனும், சிறப்பம் சங்களுடனும் இக்காலத்தில் வளர்ச்சிய
டைந்தன. ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்களும், தாபிஈன்களும் எழுத்துச் சுவடிகளையும் தொகுப்புக்களையும் தனித்தனியாக வீடுகளில் வைத்துப் பாதுகாத்து வந்தனர். அபூ அம்ரிட்னு அலா என்பவர் கூரையில் முட்டுமளவு இத்தகைய ஏடுகளைத் தனது வீட்டில் சேர்த்து வைத்திருந்தார். அஸ்மஈ, ஹம்மாது, அபூஉபை தா என்பவர்களும் கையெழுத்தேடுகளை இக் காலப் பகுதிகளில் சேகரித் து வைத்திருந்தனர்.
உமையாக் கலீபாவான காலித் பின் எதீத் என்பவர் ஏராளமான கையெழுத்துப் பிரதிகளை வைத்து முதன்முதலில் ஒரு நூலகத்தைத் தோற்றுவித்ததாக இப்னு நதிம் என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகின்றார். ஹிஷாப் பின் அப்துல் மலிக் பல அரிய கையெழுத்துப் பிரதிகளையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் சேகரித்து வைத்திருந்தார். உமர் பின் அப்துல் அஸிஸ் (ரஸ்) அவர்கள் அரச நூல்களை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இருந்தார். அப்பாஸியர் காலத்தில் அறிவியல் நூலகத்துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் அடித்தளமாகவும் ஆயத்த காலமாகவும் உமையாக் காலம் விளங்கியது. உமையாக் கலீபாக்கள் சாம்ராஜ்யத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரதிநிதிகளை அனுப்பி அறிவு நூல்களையும் கையெழுத்துப் பிரதிகள், சுவடிகள் என்பவற்றைத் திரட்டி பொதுநூலகங்களில் வைத்தனர்.
அப்பாஸியர் காலத்தில் பைதுல் ஹிக்மா நூலகங்களுக்கெல்லாம் மணிமுடி போன்று
 
 
 

நூலகவியல்
காணப்பட்டது. இது நூலகமாக மட்டுமன்றி மொழிபெயர்ப்பு நிலையமாகவும், வானிலை அவதான நிலையமாகவும் ஆராய்ச்சிக்கூட மாகவும் விளங்கியது. இதில் நூல்களைப் பிரதி பண்ணுவதற்கான தனியான அமைப்பும் காணப்பட்டது. இந்நூலகம் ஒவ்வொரு துறையிலும் திறமை பெற்றிருந்தோரின் தலைமையின்கீழ் இஸ்லாமிய உலகிற்கு மாபெரும் அறிவுப்பணி புரிந்தது. தலைசிறந்த முஸ்லீம் அறிஞர் பலர் இந்நூலகத்தைப் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஹிஜ்ரி 381ல் சாபூர் இப்னு அர்தசிர் என்பார் குர்க் என்னுமிடத்தில் உருவாக்கிய நூல்நிலையம் 10,000 இற்கும் அதிகமான நூல்களைக் கொண்டிருந்தது. புவைஹற் ஆட்சியாளரான அப்துத் தவ்லா கி.பி. 977982 இடைப்பட்ட காலத்தில் தோற்றுவித்த "கதானத்துல் குத்ப்" என்ற நூல் நிலையம் 360 அறைகளைக் கொண்டிருந்ததாக பிலிப் கே. ஹிட்டி என்பார் குறிப்பிடுகின்றார். தெஹற்ரானிற்கு அருகே றய் என்ற நகரில் இருந்த நூலகத்தில் 400 ஒட்டகச் சுமை
நூல்கள் இருந்ததாக கலாநிதி அமீர் ஹசன்
ஸித்தீக் கூறுகின்றார்.
எகிப்தில் கடந்த 1000 வருடங்களாக அறிவுச் சுடர் வீசிக்கொண்டிருக்கும் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உள்ள அல் அஸ்ஹர் நூலகத்தில் சுமார் இரண்டு லட்சம் நூல்கள் காணப்பட்டன. தத்துவ நூல்கள் மட்டும் 18,000 இருந்தன.
முஸ்லிம் ஸ்பெயினின் ஆட்சியாளர்களுள் ஒருவரான அல் அஹம் கோர்டோவில் தோற்றுவித்த நூலகத்தில் நான்கு லட்சம் நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. சிறந்த அறிஞரான இவர் அறிவியல் ஆராய்ச்சிக்கு ஊக்கமளித்ததுடன் ஆராய்ச்சி யாளர்களுக்கு ஊக்குவிப்புப் பணமும் வழங்கியிருந்தார்.
நூலகங்கள் மக்களின் மதிப்புக்குரிய
சொத்துகளாக மதிக்கப்பட்டன். அந்நாட்களில் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் கூட சொந்தமாக ஒரு நூல்நிலையத்தை வைத்தி ருக்கப் பெரிதும் ஆசைப்பட்டனர். எழுத வாசிக்கத் தெரியாத ஒரு பாமர மனிதன் தன் நூலகத்திலுள்ள இராக் கைகளிலுள்ள இடைவரிசையை நிரப்புவதற்குத் தகுந்த ஒரு நூலை அதிக விலை கொடுத்து ஏலத்தில் வாங்கிச் சென்ற ஒரு நிகழ்ச்சியை வரலாற்று ஆசிரியர் அல் மகாற்றி குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத்தக்கதாகும். அச்சக வசதிகள் குறைந்திருந்த அக்காலத்தில் இஸ்லாமிய நூலகங்களில் காணப்பட்ட நூல்களின் எண்ணிக்கை வியக்கத்தக்கதாகும். கோர் டோவா அல் ஹகம் நூலகத்தில் 4 இலட்சம் நூல்களும் கெய்ரோ அரச நூலகத்தில் 10 லட்சம் நூல்களும், திரிப் போலி நூல் நிலையத்தில் 30 லட்சம் நூல்களும் காணப்பட்டதாக "தாரீகுத் தமத் துனில் இஸ்லாம்" நூல் குறிப்பிடுகின்றது. இவை தவிர டமஸ்கஸ், பக்தாத், கிரணாடா, பல்க், இஸ்தான்புல், போன்ற நகரங்களிலும் தலை சிறந்த நூலகங்கள் காணப்பட்டன.
ஆனால் இத்தகைய பண்பாட்டுப் பெருமை மிக்க நூலகப் பாரம்பரியத்தையுடைய முஸ்லீம்கள் காலப்போக்கில் அறிவைத் தேடும் ஆர்வத்தை இழந்தனர். ஆராய்ச்சியுணர்வைப் புறக்கணித்தனர். அறிவு நூல்களைப் பேணிப் பாதுகாக்கும் பண்பையும் இழந்தனர். அதன் விளைவு ஆயிரமாயிரம் வரலாற்றுப் பெருமை மிக்க அறிவுநூல்கள் கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. மாபெரும் அறிவுப் புதையல்கள் இன்றும் தூசிபடிந்து நூர்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. மாபெரும் அறிவுப் பொக்கிஷங்கள் முஸ்லீம் உலகை ஆக்கிர மித்த எதிரிகளால் அழிக் கப்பட்டன. இஸ்லாமிய உலகம் புத்துணர்ச்சி பெற்று மறுமலர்ச்சி அடைந்துவரும் இன்றைய காலகட்டத்தில் இந்நூலகப் பாரம்பரியமும் புத்துயிரளிக்கப்படல் மிக அவசியம். எமது முஸ்லிம் சமூகத்தை அறிவுச் சூனியநிலையில் இருந்தும் தேக்க நிலையிலிருந்தும் >>>
"ళ",

Page 14
ஐக்கிய இராச்சியத்தில் ஸ்கொட்லாந்தில் அபர்டீன்ஷையரில் தனது மத்திய அலுவலகத்தைக் கொண்டுள்ள புக்ஸ் அப்ரோட் (Books Abroad) நிறுவனம் 1982இல் LINK என்ற பெயரில் தொண்டுள்ளம் கொண்ட Keith Brunskil என்ற ஒரு கல்லூரி ஆசிரியரின் முயற்சியில், ஆபிரிக்கா கண்டத்தில் பின்தங்கிய கிராமங்களின் பள்ளி மாணவர்களுக்கான நூல்களை அபிவிருத்தி அடைந்த நாடுகளிலிருந்து பெற்று அனுப்பி வைக்கும் பணியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வமைப்பின் வளர்ச்சிப்பணியின் ஒரு மைல்கல்லாக 1991இல் அபர்டீன்ஷெயர் கவுன்சில் Rhynie பகுதியில் வழங்கிய கட்டட வசதி அமைந்தது. இக்காலகட்டத்தில் LINK என்ற பெயர் Books Abroad என்று மாற்றப்பட்டது.
இவ்வமைப்பு தற்போது ஆபிரிக்காவில் மாத்திரமன்றி, ஆசியா, கிழக்கு ஐரோப்பா, கரீபியன், அட்லாண்டிக் தீவுகள் என்று தனது வழங்கலை விரிவுபடுத்தியுள்ளது. இலங்கையிலும் காலி, கொழும்பு, மிகிந்தலை ஆகிய மூன்று பிரதேசங்களிலுள்ள ஆறு இடைநிலைப் பாடசாலைகளுக்கு சிறுவர்களுக்கேற்ற ஆங்கில நூல்களை ஆண்டுதோறும் அனுப்பி வைத்து வருகின்றது.
தமிழ்ப் பிரதேசங்களைப் பொறுத்தவரையில் இதுவரை சாவகச்சேரி அறவழிப்போராட்டக் குழவின் நூலகத்துக்கு இடைக்கிடை தரைப் போக்குவரத்து நடைமுறையில் இருந்த காலகட்டங்களில் நூல்களை அனுப்பி வந்துள்ளது. அண்மையில் நூலகவியலாளர் என். செல்வராஜா Books Abroad அமைப்பினருடன் தொடர்பு கொண்டு தமிழ் பகுதிக்கான நூல் வழங்கலை விரிவுபடுத்தி உள்ளார். வன்னியின் யோகபுரம் மகாவித்தியாலயம், கிழக்கின், காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, சாய்ந்தமருது மல்ருஸ் ஷம்ஸ் மகாவித்தியாலயம், வடக்கில் புங்குடுதீவு சர்வோதய மத்திய நூலகம் ஆகியவற்றுக்கு தலா 6 பெட்டிகள் வீதம் பாடசாலைச் சிறார்களுக்கு ஏற்ற ஆங்கில நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விஷேட வழங்கல் திட்டத்தின் கீழ் Books Abroad அமைப்பினரால் யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் பாவனைக்கென 3 பலட்களில் 143 பெட்டி நூல்கள் அனுப்பிவைக்கப்பட்டு அவை அங்கு சென்றடைந்துள்ளன.
>>> விடுவித்து அறிவும் தெளிவும் நன்றி: கலை மலர்: ஸாஹிரா விஷேட உள்ளதாக எமது சமுதாயத்தை ஆக்குவதற்கு மலர் (மலர் 1, இதழ் 8, செப்டெம்பர் 2005. நூலகங்கள் இன்றியமையாதனவாகும். ஆசிரியர்: கலாபூஷணம் எம்.வை.எம்.மீஆத், இவ் வாக் கபூர்வமான பணியில் நாம் ISSN 1800-1009) இ அனைவரும் அவசரமாகவும் அவதானத்து
டனும் ஈடுபடுவதற்கு முன் வருவோமாக.
~~", 24 ܪܠ
*محت
', مw
 

நூலகவியல்
எம்.எம்.பீ.எம். பைரீஸ்
பிரதான நூலகர், தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை,
சிறுவர்களின் நூலார்வமும் பாடசாலை நூலகங்களும்
அறிமுகம்
பாடசாலைகளில் நூலகங்கள் அமைப்பதன் அவசியம் கல்வித்துறையில் முன்னேற்றங் கண்டுள்ள மேல்நாடுகளிலும் கூட சமீப காலத்தில்தான் உணரப்பட்டுள்ளது. மேலும் நூலகமானது கற்றலுக்கு மிகவும் சிறந்த சாதனமாகக் கொள்ளப்பட்டு, எல்லா நவீன பாடசாலைகளிலும் இன்றியமையாததோர் அங்கமாகத் திகழ்கின்றது. எனவேதான் பிரபல கல்விமானாகிய சேர் றிச்சர்ட் லிவிங்ஸ்டன் என்பவர் "ஒரு பாடசாலையின் இருதயம் அதன் நூல் நிலையம்தான், கவனமாகத் தெரிவு செய்யப்பட்டு நன்றாக உபயோகிக்கப்படும் நல்ல நூல்களை அந்த நூலகம் தன்னகத்தே கொண்டிருக்குமாயின், உண்மையில் அங்கே தான் கல்வி சிறப்பாக வளருமென்று உறுதியா கக் கூறமுடியும்” எனக் குறிப்பிடுகின்றார்.
கடந்த காலத்தில் வாழ்ந்துவிட்ட ஒருவன் எதிர்காலச் சமுதாயத்தில் வாழப்போகும் ஒருவனுக்கு தன் வாழ்நாளில் தேடிச் சேகரித்துவிட்டுச் சென்ற செல்வங்கள்தான் நூல்கள். தான் வீழ்ந்துவிட்ட பள்ளத்தில் தன் இனம் வீழ்ந்துவிடக்கூடாது என்று எண்ணும் ஒரு பரந்த சிந்தையிலிருந்து புறப்படுவன நூல்கள். சமுதாயத்தில் வாழ்ந்தவன் முறை பறிந்து உணருவன நூல்கள்.
ஒருவன் தான் படிக்க விரும்பும் நூல்களை எல்லாம் விலைகொடுத்து வாங்கிப் படிப்பது என்றால் முடியாது. அவன் நூலகங்கள் மூலம்
சிறிதும் பொருட் செலவின்றிப் படிக்கலாம். இக்காலத்தில் கல்வியை எங்கும் பரவச் செய்வதில் நூலகங்கள் பெரிதும் பயன்பட்டு வருகின்றன. அவற்றால் மக்கள் அடையும் நன்மைகளும் அளவற்றனவாகும்.
கற்றலுக்கான சாதனம்;
இந்தக் காலத்தில் உண்மையான பல்கலை கழகம் என்பது நூல்கள் நிறைந்த நூலகமே ஆகும். ஒரு மாணவன் தனது வாழ்க்கையின் ஆரம்பப் பருவத்தில் கல்வி கற்கும் பராயத்தில் பத்துப் பதினைந்து வருடங்களை பாடசாலையி லேயே கழிக்கிறான். இவன் சிறந்த முறையில் கல்வி எனும் ஏணியில் ஏறுவதற்கு பாடசாலை நூலகமே உதவ முடியும்.
முன்பெல்லாம் பாடசாலைகளில் கற்பித்தல் அனைத்தும் ஒருசில பாடப் புத்தகங்களிலேயே தங்கியிருந்தது. கற்பித்தலென்பது பிள்ளைகள் தமது பாடங்களை மனனஞ் செயப்ய வைப்பதென்றே கருதப்பட்டும் வந்தது. ஆனால் தற்பொழுது இந்நிலை பெரும்பாலும் மாற்ற மடைந்தே வந்துள்ளது. பிள்ளைகள் வேகமாக வும், விரிவான வகையிலும் கற்பதற்குப் பலதரப்பட்ட சாதனங்கள் இப்போது உதவி வருகின்றன. இந்தவகையில்தான் பாடசாலை நூலகங்கள் இன்றியமையாதனவாயுள்ளன. மாணவன் தனது கற்றலில் பாட சம்பந்தமான பிரச்சினைகளுக்கோ, அல்லது தனது சொந்தப் பிரச்சினைகளுக்கோ அலசி ஆராய்ந்தே

Page 15
தில் முன்னின்று உதவுவது நூல்களேயாகும். அவனது வாழ்வின் துணை ஆசிரியரும் நூல்களுமேயாகும். பாடசாலை நூலகம் ஒரு மாணவனின் கல்வி வளர்ச்சியில் மாத்திரமல்ல ஒழுக்கம், சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடத்தல், அவசியமான புத்தகத்தை தெரிதல், புத்தகத்தைப் பாவிக்கும் முறை, பக்கங்களைப் புரட்டி தனது கல்வித்தேவைகளை நிறை வேற்றிக் கொள்ளுதல் போன்ற நல்ல நடவடிக்கைகளை கற்றுக்கொடுக்கின்றது. இவை கற்றுக் கொடுப்பதன் காரணமாக எடுத்ததற் கெல் லாம் பெற்றோரையோ ஆசிரியரையோ நாடாமல் தாமாகவே பிரச்சினை களை எதிர்ப்பதற்குரிய மனத்திண்மையை அளிக்கின்றது.
ஒரு சிறந்த நூலகம் அறிவின் பல்வேறு துறைகளிலும் பிள்ளைகளைச் செலுத்தக் கூடியதாகவும், பிள்ளைகளுடைய தரத்திற்கும், ஆற்றலுக்கும் பொருத்தமான நூல்களையோ, ஏனைய சாதனங்களையோ உதவக்கூடியதாக வும் இருக்கும். ஒரு நூலகத்தில் காணப்படும் நூல்கள், படங்கள், துண்டுப்பிரசுரங்கள், சஞ்சிகைகள், சலனப்படங்கள், ஒலிப்பதிவுத் தட்டுக் கள் முதலியன உண்மையில் அவ்விடத்தை ஒரு அறிவுக் களஞ்சியமாக்கி விடுகின்றன.
நூலகங்கள் பிள்ளைகளை வகுப்பறையின் எல்லைக்கப்பால் பல்வேறு அற்புத உலகங்க ளுக்கு இட்டுச்செல்கின்றன. இவை தரும் அறிவுச்சாதனங்களில் ஈடுபடும் பிள்ளைகள் விரைவில் சுயமாகவே அறிவைத் தேடும் ஆற்றலைப்பெற்று விடுகிறார்கள். கண்கவர் சித்திரங்களையும், சஞ்சிகைகளையும் , நூல்களையும் கண்டு மகிழ்ந்து அவற்றோடு உறவாடும் பிள்ளைகள், விரைவில் தமது விருப்பத்திற்கும், ஆற்றலுக்கும் ஏற்றவழியை அமைத்துக்கொண்டு அவ்வழியே மென்மேலும் புதுமைகாண விழைகின்றனர்.
வகுப்பறை நூலகங்கள்:
۶۰۷ بهع
s
நூலகவியல்
வகுப்பு வாரியாக மாணவர்களால் சேகரித்து வைக்கப்படும் நூல்கள் அந்தந்த வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஒரு நூலகமாக அமையுமெனினும், பாடசாலைக ளில் இத்தகு வகுப்பறை நூலகங்களுக்குப் புறம்பாக பொதுவான மத்திய நூலகம் அமைதல் மிகுந்த நன்மை பயக்கும். ஒரு பாடசாலையின் மத்திய நூலகமானது, ஒரு பொது நூலகம் அவ்வூரிலுள்ள மக்களுக்கு எவ்வாறு உதவுகின்றதோ அதேபோன்று உதவிக்கூடியதாக இருக்கும்.
பொதுவாக மத்திய நூலகமொன்றிற்கு எமது பாடசாலைகளில் பிரத்தியேகமாக அறைகளை அமைத்து ஒதுக்கி வைப்பது கடினமாகும். எனினும் பாடசாலையில் பிரத்தியேகமாக ஒதுக்குப்புறமான ஒரு இடத்தை இதற்கென ஏற்படுத்திக் கொள்வது அசாத்தியமான காரியமன்று. புதிதாக அமைக்கப்படும் நூலகத்திற்கென புறம்பான புதியதோர் அறை ஏற்படுத்திக்கொள்ளுதல் அவசியமானதாகும்.
பிரதான நோக்கங்களும், பணிகளும்: அ)மாணவர்கள் தாம் வாழும் சமூகத்தில் அமைந்துள்ள நூலகங்களைத் தக்கவகையில் உபயோகிப்பதற்கு ஒரு பயிற்சிக்களமாக பாடசாலை நூலகம் உதவ வேண்டும். உ-ம் பொதுசன நூலகம், பல்களைக்கழக நூலகம்.
ஆ)ஆசிரியர்களுக்கு தாம் கற்பிக்கும் பாடங்களுக்கு அனுசரணையான நூல்களை யும் அவர்களுடைய ஆசிரியத் தொழிலின் அபிவிருத்திக்கு ஏதுவான நூல்களையும் உதவ வேண்டும்.
இ)நூலகத்தின் பணியைப் பாடசாலையில் உள்ள ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வழங்கக் கூடியதாகவும் அனைத்து மாணவர்களையும் நூலகத்தோடு தொடர்புள்ளவர்களாகவும் செய்தல் வேண்டும்.
 

நூலகவியல்
ஈ) நூலகமானது பாடசாலையின் வழி காட்டும் திட்டத்திற்கு உதவி அளிப்பதாய் இருத்தல் வேண்டும்.
உ)ஒவ்வொரு பிள்ளையும் தனது சுய விருப்பத்தையொட்டி வாசித்து மனநிறைவு பெறக்கூடிய வகையில் அமைந்த இலக்கியப் படைப்புகளை உதவி ஊக்கமளிக் வேண்டும்.
ஊ)எல்லா விடயங்களைப் பற்றிய நூல்களையும், ஏனைய அறிவுச் சாதனங்க ளையும் பாடசாலையிலுள்ள மாணவர்களது வகுப்புத்தரத்திற்கு ஏற்றதாகவும் நவீன பாடவிதானத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும் சேகரித்து உதவி செய்ய வேண்டும்.
எ)நூல்களில் பொதிந்துள்ள சிறப்புக்களை உணரக்கூடிய வகையில் மாணவர்களது வாசித்தலில் வழிகாட்ட வேண்டும்
ஏ)நூலகத்திலுள்ள நூல்களையும், ஏனைய அறிவுச் சாதனங்களையும் உபயோகிக்கும் முறைகளை ஒவ்வொரு மாணவருக்கும் அறிமுகப்படுத்தி, அவனிடம் நூலகத்தின் பயனை பூரணமாகப் பெறக்கூடிய ஆற்றலை வளர்க்க வேண்டும்.
ஐ)ஜனநாயகப் பண்புகள், பிறர் உரிமை களை மதிக்கும் தன்மை, பொறுப்புணர்ச்சி என்பவற்றை யாவருக்கும் பொதுவான பாடசாலை நூலகச் சாதனங்களை உபயோகிக் கச் செய்வதன் மூலம் மாணவர்களிடத்திலே வளர்க்க வேண்டும்.
ஒரு பாடசாலை நூலகத்தின் விரிவான தன்மை மேலே குறிப்பிட்டுள்ள பணிகளிலிருந்து மிகத் தெளிவாக விளங்குகின்றது. மேலும் எந்தவொரு கல்வித் திட்டமும் நூலகமொன்றின் பங்களிப்பின்றி பூர்த்தியானதாக மாட்டாதென் பதும் உறுதியாகின்றது.
பாடசாலை நூலகத்தின் பணி
சிறப்படைவதற்கு ஆசிரியரின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. மாணவர்களையும், நுT லகத் தையும் தொடர்புபடுத் துபவர் ஆசிரியரேயாவார்.
வாசிப்பின் அவசியம்: எம்மிடையே வழங்கிவரும் இளமையில் கல், பருவத்தே பயிர் செய், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா, தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பன போன்ற பழமொழிகள் இளமைப் பருவத் தின் அதியற்புதமான ஆற்றலை வெளிப்படுத்து கின்றன. இன்று நாம் உலகில் நாம் அறிந்த பெரியார்கள் இளமைப் பருவத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அநுபவங்களினாலேயே தங்கள் பிற்கால வாழ்க்கை நெறிப்படுத்தப்பட்டதை எமக்கு எடுத்தியம்புகின்றனர். சிறுவர்களின் உள்ளத்தே பதியும் எந்தவொரு விஷயமும் நிலைத்து நிற்கக் கூடியதாக இருக்கும் என்பதனாலேயே இப்பருவத்தில் நற்பழக்கங் களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் வற்புறுத்தப்படுகின்றது. இவ்வகையில் இன்று நமது சிந்தனைக்குரிய வாசிக்கும் பழக்கமும்
இப்பொது நியதிக்குப் புறம்பானதன்று.
ஏன் வாசிக்க வேண்டும்?
சிறுவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பதை நாம் ஆராயும் முன், சிறுவர்கள் ஏன் வாசிக்க வேண்டும்? என்பதற்கான பதிலைத் தெரிந் திருத்தல் அவசியமானதாகும். ஒரு காரியத்தை கிரமமாகவும் திறமையாகவும் செய்து முடிப்பதற்கு அக் காரியத்தின் இலக்கிலும் பயனிலும் நமக்குப் பூரண நம்பிக்கை இருத்தல் வேண்டும். அந்த நம்பிக்கையைச் சிறுவர்கள் ஏன் வாசிக்க வேண்டும் ? என்பதன் விளக்கத்தை சிறுவர்களுக்கு தெளிவுபடுத்தல் வேண்டும். சிறுவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமான தொரு பின்னணியாக தேடிக் கற்றல் அதாவது "கல்வித்தேட்டம்” என்ற எண்ணக்கருவைக் குறிப்பிட முடியும். மக்களின் அறிவு வளர்ச்சிக்
**/X27"سمي ختير\

Page 16
கான சாதனங்களின் அணியில் முன்னிற்பது
நூல்களோயகும். புதின ஏடு, வானொலி, தொலைக்காட்சி போன்ற வெகுசன சாதனங்கள் (Mass Media) பெருகியுள்ள இந் நூற் றாண்டில் கூட நூல்கள் தங்களுடைய அறிவூட்டும் ஆற்றலை இழந்து விடவில்லை. எல்லா அறிவுச் சாதனங்களிலும் நிலையான தாக நின்று நூலகள் உதவி வருகின்றன. ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் பேணுவதில் நூல்களுக்கு இணையான சாதனம் வேறொன்று இல்லை. வெகுசன சாதனங்களின் மூலம் மக்களின் தனித் தன்மையும் ஆளுமையும் பாதிக்கப்படுவதைச் சர்வாதிகார ஆட்சி முறை நிலவும் நாடுகளில் பெருமளவில் நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. ஏன், ஜனநாயகம் நிலவும் நாடுகளில் கூட வெகுசன சாதனங்களின் வலிமையை நாம் மறுப்பதற்கில்லை.
அடிப்படை வித்தியாசங்கள்:
இனிச் சிறுவர்கள் நூல்களை வாசிப்பது பற்றிய சில உண்மைகளைக் கவனிப்போம். வளர்ந்தவர்கள் நூல்களை வாசிப்பதற்கும் சிறுவர்கள் நூல்களை வாசிப்பதற்கும் பல பொது ஏதுக் களும் அடிப் படைகளும் இருந்தபோதிலும், இங்கு சிறுவர்களுக்குரிய சிறப்பு நிலைகள் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். இவ்வகையில் வளர்ந் தோர்க்கும் சிறுவர்களுக்குமிடையேயுள்ள சில அடிப்படையான வித்தியாசங்களை தெரிந்தி ருத்தல் அவசியமாகும்.
தாம் வாசிக்கும் விடயங்களை எளிதில் புரிந்து கொள்வதற்கான கிரகிக்கும் ஆற்றல் வளர்ந்தவர்களுக்கு உண்டு. மேலும் , அவர்களுடைய விருப்பு வெறுப்புகளும் வாசிக்கும் விடயங்களின் மீது படர்ந்து விடுகின்றன. பெரும்பாலானோருடைய தனித் தன்மை ஆளுமை ஆகியனவும் வாசிக்கப்படும் பொருள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அவர்கள் தாம் வாசிக் கும் விடங்களினால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை.
நூலகவியல்
ஆனால் சிறுவர்கள் விடயத்தில் நிலைமை பெருமளவு மாறுபட்டதாக இருக்கின்றது. அவர்களது உள்ளங்கள் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அனுபவத் தாக்கம் மிகக் குறைந்தவை. ஒரு நூலை வாசிக்கும் பொழுது அவர்கள் தங்கள் சூழலை மறந்து அந்த நூலோடு ஊன்றிவிடும் தன்மை உடையவர்கள். வளர்ந்தோர்களை விட நூலினை ஊன்றி வாசிக் கும் தன் மையும் நூலிலுள்ள பாத்திரங்களோடு ஒன்றிப்போகும் தன்மையும் சிறுவர்களிடத்திலேதான் காணப்படுகின்றன. சிறுவர்கள் இத்தகைய தன்மையுடயவர்களா கக் காணப்படுவதனால்தான், அவர்களுக்கு நாம் வழங்கும் நூல்கள் பற்றிய பிரச்சினையில் விசேட கவனம் செலுத்த வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
வாசிக்கும் ஆற்றல்
நாம் கவனம் செலுத்தவேண்டிய இன்னு மொரு முக்கிய விடயம், வாசிக்கும் ஆற்றல் பற்றியதாகும். வாசிக்கும் ஆற்றல் இயல்பாகவே ஒருவரிடத்தில் அமையப்பெற்றிருப்பதில்லை. நீந்துவதற்கோ, வாகனங்களைச் செலுத்து வதற்கோ எவ்வளவு பயிற்சி அவசியமோ, அதேபோல் பயிற்சி அவசியமாகும். நீடித்த கிரமமான பயிற்சியின் மூலமே வாசிக்கும் ஆற்றலை சிறுவர்கள் பெற முடியும். ஒரு பிள்ளை சுமார் ஐந்து வயதிலிருந்தே தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத் திக் கொள்ளாவிட்டால் அப்பிளையிடத்திலே நூலார்வம் தரித்து நிற்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு பிள்ளையிடத்தே வாசிக்கும் பழக்கத்தையும், ஆற்றலையும் ஏற்படுத்துவதில் முதற்கண் பெற்றோரும் அதற்கடுத்து ஆசிரியர் களும் முக்கிய பங்கினை வகிக்கின்றனர். இலங்கை போன்ற ஒரு நாட்டில் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுவரும் இத்தருணத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. குறிப்பிட்டளவு நூல்களை வாங்கி வீடுகளிலே வைப்பதற்கு பெரும்பாலான பெற்றோர்களிடத் திலே வசதிவாய்ப்புகள் இல்லை. >>>
Ծ
 

நூலகவியல்
நூலகவியலாளர் செல்வராஜாவுக்கு
இலங்கையில் கெளரவிப்பு
1.09.2005 அன்று, கண்டி, மத்திய இலங்கை :
முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியமும், உடத்தல வின்ன சிந்தனை வட்டம் வெளியீட்டகமும் இணைந்து நடத்திய சிந்தனை வட்டத்தின் 200வது நூல் வெளியீட்டு விழாவில் இலண் டனிலிருந்து நூலகவியலாளரும், நூல்தேட்டம் தொகுப்பாசிரியருமான திரு என். செல்வராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
உடத்தலவின்ன ஜாமியுல் அலஹர் மத்திய கல்லூரியின் அஷரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் திரு என்.செல்வராஜா அவர்களுக்கு "எழுத்தியல் வித்தகர்" என்ற பட்டமும் விருதும் வழங்கப் பட்டன. இலங்கையின் பிரபல சட்டத்தரணியான ஏ.எம்.ஜிப்ரி அவர்கள் பொன்னாடை போர்த்தி யும், சட்டத்தரணி ஏ.எம்.வைஸ் அவர்கள் பதக்கம் அணிவித்தும், சிந்தனை வட்ட இயக்குநர் கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் அவர்கள் விருது வழங்கியும், உடத்தலவின்ன ஜாமியுல் அலஹர் மத்திய கல்லூரியின் முதல்வரும், கவுன்சிலருமான ஜனாப் எம்.ஜி. எம்.நிலாப்தீன் அவர்கள் பாராட்டுப் பத்திரம் வழங்கியும் கெளரவித்தனர்.
திரு. செல்வராஜா அவர்கள் தனிமனித முயற்சியாகத் தொகுத்துவரும் நூல்தேட்டம் இது வரை 3 தொகுதிகளில் 3000 ஈழத்தமிழ ரின் தமிழ் நூல்களை முதன்முறையாக விஞ்ஞானபூர்வமாகப் பதிவுக்குள்ளாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பில் இன்றுவரை, ஈழத்தின் தமிழுக்குப் பெரும்பங் காற்றிவரும் முஸ்லிம் எழுத்தாளர்களின் 400 நூல்கள் வரையில் இடம்பெற்றிருப்பதும்,
குறிப்பிடத்தக்கதாகும். இன, மத, கருத்தியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இத்தொகுப்பு நூலியல் நேர்மையுடன் பதிவுசெய்யப்பட்டு வருவது இந்நிகழ்வில் விதந்து பேசப்பட்டது.
இந்த நிகழ்வில், இலங்கை முஸ்லிம்களுக் கான தேசிய வாரப் பத்திரிகையான "நவமணி" இதழின் ஆசிரியரும் சிரேஷ்ட பத்திரிகையாள ருமான அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்களுக்கு "இதழியல் வித்தகர்" என்ற பட்டமும், மூத்த கவிஞரும் பன்னூல் ஆசிரியரு மான கலாபூஷணம் எம்.எச்.எம். ஹலீம்தின் அவர்களுக்கு "இருமொழி வித்தகர்" என்ற பட்டமும், பிரபல முஸ்லிம் பெண் எழுத்தாளர் நயீமா சித்தீக் அவர்களுக்கு "சிறுகதைச் செம்மணி" என்ற பட்டமும், சமூக சேவகரும் இலக்கிய ஆர்வலருமான தோழர் என்.எல்.
றஷின் அவர்களுக்கு "பொதுச் சேவைச்
செம்மல்" என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
சிந்தனை வட்டம் வெளியீட்டகத்தின் 200 நூலாக ஈழத்து முஸ்லீம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் விபரத் திரட்டின் 3வது தொகுதி இடம்பெற்றுள்ளது.
இவ்வமைப்பு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் களின் விபரத்தொகுப்பு ஒன்றையும் விரைவில் வெளியிடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை யும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்னோடியாக "நவமணி" வார இதழில் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களின் விபரங் களை சிறு கட்டுரை உருவில் அவர்களது புகைப்படத்துடன் வாராந்தம் வெளியிடும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
>>> எனவே வாசிப்புப் பழக்கத்தினைத் தூண்டு வதில் பாடசாலைகளினதும் பொதுநூலகங்களி னதும் பொறுப்பு கூடுதலானதாகும். எனவே பெற்றோர், பாடசாலை, பொதுநூலகம் ஆகிய
மூன்று பிரிவினருமே தொடர்புடையவர்களாகின் றனர். குறிப்பாக பாடசாலைக்கும் பொது நூலகத்துக் கும் நெருங் கிய தொடர்பு காணப்படுதல் அவசியமானதாகும். zas
" "గ్ళgg',

Page 17
என்.செல்வராஜா நூலகவியலாளர்
நூலகவியல்
நூலியல் - நூலகவியல் துறைகளில்
அயோத்தி நூலக சேவைகள் அமைப்பு
இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகவியல் துறையின் வளர்ச்சிப்போக்கில்
முக்கியமானதொரு காலகட்டமாக எழுபதுக
ளின் நடுப்பகுதி கருதப்படுகின்றது.
அக்காலகட்டம் வரையில் தமிழ்ப் பிரதேசங் களில் உள்ளுராட்சி சேவையில் நூலகர் களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு கல்வித்தரம் அக்கறையுடன் எதிர்பார்க்கப்பட வில்லை. பெருமளவில் கிராமசபை, நகரசபை சிற்றுாழியர்களாக இருந்தவர்கள் பதவி உயர்வு கண்டு நூலகப்பொறுப்பாளர்களாக நியமனம் பெற்றார்கள். கிராமசபை நிர்வாக ஊழியர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் நூலகத்தையும் மேற்பார்வை செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். உயர்தர பாடசாலைகள் தவிர்ந்த பெரு வாரியான தமிழ்ப் பாடசாலைகளில் நூலகச் சிந்தனை அக்கால கட்டங்களில் முகிழ்த் திருக்கவில்லை. நூலகரின் கடமையை நூலகம் பற்றிய எவ்வித அறிவுமற்ற ஆசிரியர்களும், வசதிக் கட்டணத்தில் நியமிக்கப்படும் பழைய மாணவர்களுமே பூர்த்திசெய்து வந்திருந்தார்கள்.
இலங்கை உள்ளுராட்சி சேவைகள் நூலகர் தரம் 3 என்ற பதவியை உருவாக்கிய பின்னர் தான் 1976களுக்குப் பின்னர் படிப்படியாக உள்ளுராட்சி சேவைகளுக்குட்பட்ட நூலகர் பதவிகளுக்கு நூலகவியல் கல்வி கற்றவர்கள்
அனுமதிக்கப்பட்டார்கள். பாடசாலைகளிலும்,
பாடத்திட்டங்களின் மாற்றங்களால் பாட நூல்களுக்கு அப்பால் பரந்த வாசிப்பிற்கான அறிவுத்தேடலுக்கு மாணவர்கள் ஊக்கம் அளிக்கப்பட்டார்கள். இத்தகைய மாற்றங்கள் $30 '.
&డ
ஈழத்தின் நூலகவியல் துறைக்கு சாதக மானவையாக அமைந்தன.
எழுபதுகளின் நடுப்பகுதிகள் வரையில் இலங்கை நூலகச் சங்கத்தின் நூலகவியல் கல்விச்சேவை தமிழ்ப் பிரதேசங்களில் பாரிய விஸ் தரிப்பு எதனையும் மேற்கொள்ள முயற்சிக்கவில்லை. 70களின் நடுப்பகுதியில் உள்ளுராட்சி சேவையில் ஆட்சேர்ப்பிற்காக நூலகக்கல்வி பெற்றவர்களுக்குத் தான் முன்னுரிமை கிட்டியது. அதன்பின்னர் நூலகக் கல்வியில் இளைஞர்களிடையே படிப்படியாக ஆர்வம் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் பாரம்பரியக் கல்வியமைப்பில் ஊறியிருந்த இளைஞர்கள் இத்துறையில் படிப்படியாக ஈர்க்கப்பட்டதால் ஆண்டுதோறும் இலங்கை நூலகச் சங்கத்தின் முதலாம் இரண்டாம் வகுப்புகளிற் கான பயிற் சிநெறிகள் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் நூலகரான திரு. மாணிக்கவாசகர் ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்தப் பயிற்சிநெறியை இலங்கை நூலகச் சங்கத்தின் சார்பில் நடத்திவந்தார். கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் விரிவுரையாளர்கள் வந்து இந்த வகுப்புகளை நடத்தினார்கள், வடக்கில் மட்டுமல்லாது கிழக்கிலிருந்தும் நூலகர்கள் யாழ்ப்பாணம் வந்து நூலகக் கல்வியைக் கற்றார்கள். எழுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து 80களின் ஆரம்பம் வரை இந்த வளர்ச்சி மிக ஆரோக்கியமாக இருந்தது.
ஆரோக்கியமான வளர்ச்சிகண்ட நூலக வியல்துறையின் போக்கில் சடுதியான பாய்ச்சல்

நூலகவியல் 1981இல் யாழ் நூலகம் எரியுண்டதையடுத்து ஏற்பட்டது. பொதுப்படையாக அரசியல்ரீதியில் ஈழத்தமிழர்களில் இதுவொரு பாதிப்பை ஏற்படுத்திய போதிலும், புத்திஜீவிகளிடம் அறிவியல்ரீதியாக ஆழமானதொரு அபாய அறிவிப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது. யாழ்ப்பாண நூலகம் மாத்திரமல்லாது, ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பூபாலசிங்கம் புத்தக சாலை என்பனவும் அன்றையதினம் அரசின் திட்டமிடலின் பிரகாரம் கைக்கூலிகளால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. தமிழரின் அறிவூற்றுக்களின் மீது இனவாதம் கைவைத்த அந்தச் செயலானது அதுவரை ஈழப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிப் பார்வையாளர் களாகவிருந்த பல புத்திஜீவிகளை போராட்டப் பாதையை நோக்கித் தள்ளியது. இது வெறும் நூலக எரிப்பு என்ற கருத்தியலிலிருந்து விலகி மிக ஆழமாகத் தமிழரிடம் வேரூன்றியிருந்த கல்விப்பாரம்பரியத்தை அழிக்கும் திட்டமிட்ட முயற்சி என்ற கருத்து மேலோங்கியது.
யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் மானிப்பாய் மண்ணிலிருந்து தனது இளமைக் காலத்திலேயே வேரோடு பெயர்ந்து கொழும்புக் கறுவாக்காட்டுச் சமூகத்துடன் ஒன்றியிருந்த ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்ததுடன் தன்னுடையதும், நூலக எரிப்பில் அதிர்ந்திருந்த மற்றைய தென்னிலங்கை புத்திஜீவிகளினதும் நூல்களைக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் ஒரு நூலகத்தைக் கட்டி யெழுப்பி யாழ்ப்பாண சமூகத்துக்கு அதை மனமுவந்து வழங்க வைத்தது. மேலும், யாழ்ப்பாணப் பொது நூலகம் 1984இல் மீண்டும் இயங்கத் தொடங்கிய போது யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் மாத்திரம் அங்கத்த வரைத் தேடாது முழு மாவட்டத்திற்கும் தனது அங்கத்துவத்தை விரிவாக்கியது.
அயோத்தி நூலக சேவைகள்
தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளு
க்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு அக் கால
கட்டத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பு
எதுவும் தமிழர் தாயக மண்ணில் இருந்திருக்க வில்லை. இந்நிலை பற்றி ஈழத்தின் தமிழ் நூலகத்துறையின் முன்னோடிகளாக அந் நாட்களில் இருந்த கலாநிதி. வே.இ.பாக்கிய நாதன், எஸ்.எம்.கமால்தீன், இ.முருகவேள் போன்றோருடன் நான் நீண்ட காலமாக கலந்துரையாடித் திட்டமிட்டு வந்திருந்தேன் இதன் விளைவாக அறிஞர்களின் ஆசியுடன் 1985இல் அயோத்தி நூலக சேவைகள் என்ற நிறுவனம் யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டு நிறுவன நூலகராகவிருந்த என்னால் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நூலகவியல் கல்வியை தமிழில் பரவலாக்குவதற்கும், நூலகங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குரிய தீர்வுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை நிறுவனரீதியில் வழங்குவதுமாகும்.
இத் திட்டத் திற்கு அடிப் படையாக "நூலகவியல்" என்ற காலாண்டு சஞ்சிகை செப்டெம்பர் 1985இல் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்ப் பிரதேசங்களில் இயங்கும் அனைத்து நூலகங்களுக்கும், தமிழ் நூலகர்களுக்கும் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டன. யாழ்மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனம், யாழ் மாவட்ட உள்ளுராட்சி சேவைகள் அலுவலகம், யாழ் மாவட்ட கல்வி நிறுவனங்கள் என்பன ஆர்வத்துடன் இவற்றை விநியோகிக்க ஒழுங்கு செய்திருந்தன. தமிழ்மூலம் நூலகவியல் கல்வியைக் கற்கும் மர்ணவர்களுக்கும், சுயமாக நூலகத்துறையில் ஈடுபட்டுவந்த பல தராதரப் பத்திரமற்ற நூலகர்களுக்கும் நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
நூலகவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் திரு சி.முருகவேள், வே.இ.பாக்கிய நாதன், இ.பாலசுந்தரம், திருமதி ரூபா நடராஜா, திருமத ரோ பரராஜசிங்கம் , தரு.

Page 18
எஸ்.எம்.கமால்தீன், திரு.செ.கிருஷ்ணராஜா ஆகியோர் பணியாற்றினார்கள். 1991 வரை தடங்கலின்றி வெளிவந்த நூலகவியல் சஞ்சிகை, நான் புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றதோடு வெளிவராது நின்றுபோயிற்று. தபால் போக்குவரத்து, மற்றும் போர்ச்சூழல் காரணமாக நூலகவியல் மீண்டும் வெளிவருவது நீண்டகாலம் தடைப்பட்டிருந்தது.
நூலகவியல் சஞ்சிகை வெளியீட்டுப் பணியையும் இக்காலகட்டத்தில் மேற்கொண்டு வடக்கு, கிழக்கு, மலையகத்திலிருந்து நூலகவியல்துறையிலும், நூலியல் துறையிலும் அக்கறைகொண்ட பலரை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்தது. இதனால் அயோத்தி நூலகசேவை, போர்க் காலச் சூழலிலும் சக்திமிக்கதொரு நூலக அமைப்பாகத் தேசிய ரீதியில் வளர்ச்சிகண்டது.
அயோத்தி நூலகசேவை அக்காலகட்டப் போர்ச் சூழலில் மிக முக்கிய சமூகத், தேவையாகவிருந்த முதல் உதவிச் சிகிச்சைக் கைநூல் ஒன்றுடன் தன் வெளியீட்டுப் பணியை 1985இல் ஆரம்பித்தது. யாழ்ப்பாணப் பல கலைக் கழக சமூக மருத்துவபீட விரிவுரையாளராகவிருந்த வைத்திய கலாநிதி ந.சிவராஜா அவர்கள் எழுதிய "முதல் உதவி" என்ற நூலே முதல் வெளியீடாயிற்று. காலக்கிரமத்தில் நூலகத்துறை, மற்றும் நூலியல் துறைகளுக்கான வெளியீட்டுப் பணிகளில் அயோத்தி நூலக சேவைகள் நிறுவனம் ஈடுபடலாயிற்று. நூலகவியல் துறையின் முதலாவது நூலாக "நுாற் பகுப்பாக்கம்: நூலகர்களுக்கான கைநூல" அமைந்தது. நூலகவியல்துறை விரிவுரையா ளராகவிருந்த கலாநிதி வே.இ.பாக்கியநாதன் அவர்களால் எழுதப்பட்டு ஜூலை 1986இல் இந்நூல் வெளியாயிற்று. நூலகங்களில் நூல்களைப் பகுப்பாக்கம் செய்வதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் டுவி தசாம்சப் பகுப்பு முறையின் 19ம் பதிப்பின் சுருக்கப் பிரிவினை இந்நூல் தமிழில் கொண்டிருந்தது. டுவி தசாம்சப் பகுப்பு
хvv х
* »سمه
நூலகவியல் முறையில் பகுப்பாய்வு செய்வதற்குப் பயிற்சி பெற்றிராத தமிழ் நூலக ஊழியர்களுக்கு ஏற்ற வகையில் எளிய உதாரண விளக்கங்களும் இந்நூலில் காணப்பட்டிருந்தது. இந்நூலின் முக்கியத்துவம் கருதி இரண்டாவது பதிப்பு ஆகஸ்ட் 1989இல் வெளியிடப்பட்டது. இடையில் என்னால் இந்தியாவிலும் காந்தளகம் வெளியீட்டகத்தின் வாயிலாக இந்நூல் மீள்பிரசுரம் கண்டிருந்தது.
"கல்வி நிறுவன நூலகங்கள்" என்ற நூல் நூலகத்துறையின் மூன்றாவது வெளியீடாக 1987 இல் மலர் நீதது. யாழ்ப் பாணப் பல்கலைக்கழக நூலகத்தைச் சேர்ந்த திருமதி விமலாம்பிகை பாலசுந்தரம் அவர்கள் எழுதிய இந்நூலில் ஆரம்பப் பாடசாலைகள், கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்களான தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பல்வேறு ஆய்வகங்கள் ஆகிய வற்றில் இயங்கும் நூலகங்களின் நூற்சேகரிப்பு, நூலகங்களின் பயன்பாடு, நூலக சேவைப் பகுதிகள் முதலியன இந்நூலில் விபரிக்கப்பட்டு இருந்தன. இந்நிறுவனங்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள், அவற்றை நிவர்த்தி செய்ய நூலகர் கையாளக் கூடிய வழிமுறைகள் என்பனவும் அதில் ஆராயப்பட்டிருந்தன.
1989இல் விமலாம்பிகை பாலசுந்தரம் தொகுத்த மற்றொரு நூல் "கலைச்சொற் றொகுதி, நூலகமும் தகவல் விஞ்ஞானமும்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அயோத்தி வெளியீட்டின் 3வது நூலாக அமைந்த இது நூலக, தகவல் விஞ்ஞானத் துறையில் பயன்படுத்தப்படும் சுமார் 1500 ஆங்கில கலைச் சொற்களுக்குரிய தமிழ்ப் பதங்களைக் கொண்டிருந்தன. இலங்கையில் இத்துறையில் தமிழில் வெளிவந்துள்ள முதலாவது கலைச்சொற்றொகுதி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1989இலேயே "கிராமிய நூலகங்களும்

நூலகவியல்
அபிவிருத்தியும்" என்ற பெயரில் நான்காவது நுால் அயோத் தி நூலக சேவைகள் நிறுவனத்தின் இயக்குநரான என்.செல்வராஜா அவர்களினால் எழுதி வெளியிடப்பட்டது. தமிழ்ப் பிரதேசங்களை மையப்படுத்தி கிராம நூலக இயக்கம், சிறுவர் நூலகங்கள், பாடசாலை நூலகங்கள், பாலர்களுக்கான நூல்களைக் கிராமமட்டத்தில் தயாரித்தல், சனசமூக நிலையங்களின் நூலக நடவடிக்கை கள், நூல் கொள்வனவு போன்ற விடயங்களை விளக்கும் கட்டுரைகளைக் கொண்ட நூலாகும்.
எனது மற்றொரு நூலான ஆரம்ப நூலகர் கைநூல், செப்டெம்பர் 1991இல் கொழும்பில் இருந்து வெளியிடப்பட்டிருந்தது. சிறு நூலகமொன்றின் செயற்பாடுகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இந்நூலில் நூலகத்துறையைத் தேர்ந்தெடுக்கும் ஒருவருக்கு நூலகமொன்றின் அன்றாட நடவடிக்கைகள், மற்றும் நிர்வாக அறிவுரைகள் விரிவாக வழங்கப்பட்டிருந்தது.
இலங்கை தேதசிய நூலக சேவைகள் சபையின் உதவி இயக்கநராக விருந்த நூலகவியலாளர் எஸ்.எம்.கமால்தீன் அவர்க ளது நூலகவியல் கட்டுரைகளைத் தாங்கிய "நூலும் நூலகமும்" என்ற நூல் செப்டெம்பர் 1992இல் கொழும்பில் வெளியிடப்பட்டது.
"யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு" என்ற நூல் என்னால் ஐக்கிய இராச்சியத்திலிருந்து அயோத்தி நூலகசேவைகளின் வாயிலாக ஜூன் 2001 இல் வெளியிடப்பட்டிருந்தது. இலண்டன்: வாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட இந்நூல் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பு புலத்திலிருந்து வெளியிட்ட முதலாவது நூலகத்துறை சார்ந்த நூலாக அமைகின்றது. ஜூன் 1, 1981 இல் இலங்கை அரசபடையினரால் எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றைக் கூறக்கூடிய பத்திரிகைச் செய்தி கள், சஞ்சிகைகள், நூல்கள், இணையத் தளங்கள், போன்றவற்றில் வெளியான தகவல் களையும், துண்டுப்பிரசுரங்கள், சிறு நூல்கள்
போன்றவற்றையும் தொகுத்து ஆண்டுவாரியாக ஒழுங்கு செய்து, யாழ். நூலகத்துடன் தொடர்பு கொண்டவர்களின் கட்டுரைகளுடன் சேர்த்து படங்களுடன் நூலுருவாக்கப்பட்டது.
அயோத்தி நூலக சேவையின் மிக முக்கியமான நூாலியல் பங்களிப்பாக அமைவது "நூல்தேட்டம்" என்ற பாரிய தொகுப்பு முயற்சியாகும். தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான குறிப்புரையுடனானதொரு நூல் விபரப்பட்டியல் நூல் தேட்டமாகும். ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்களுக் கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு தூவி தசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, பாட வாரியாகப் பதியப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதிவும் தொடர் இலக்கமிடப்பட்டுள்ளது. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என் பன நுT லின் சிறப்பம் சமாகக் காணப்படுகின்றது. நூல்தேட்டம் முதலாவது தொகுதி ஜூன் 2002இலும், 2வது தொகுதி ஜூன் 2004இலும் 3வது தொகுதி ஆகஸ்ட் 2005இலும் வெளிவந்து ஈழத்தமிழர்களின் 3000 நுால் களைக் குறிப்புரையுடன் பதிவு செய்துள்ளது. தொடர்ந்தும் இத்தொகுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின் வெளியீட்டு முயற்சிகளை பரந்த அளவில் பதிவுசெய்து வைக்கும் முதல் முயற்சி இதுவாகும்.
அயோத்தி நூலக சேவைகள் ஆரம்பிக்கப் பட்ட 1985ம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வந்த நூலகவியல், நூலியல் முயற்சிகளில் முக்கிய மானதாகக் கருதப்படும் மற்றொரு அம்சம் இவ்வமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட கருத்தரங்குகளாகும். யாழ்ப்பாணம் இவ்லின் இரத் தினம் பல லினப் பணி டபாட்டியல் நிறுவனத்தில் நூலகர் ஒன்றுகூடல்களைத் தொடர்ந்து நடத்தி, தமிழ்ப் பிரதேச நூலகர்க ளையும், அப்பிரதேசங்களில் நூலகங்களைத் திட்டமிட்டு வழிநடத்தும் நிர்வாகிகளையும் ஒரே
." 33 «مཔོ་
یہ 8\

Page 19
கூரையின் கீழ் சந்திக்கவைத்து, எப்போதுமே கேட்கப்படாதிருந்த நூலகர்களின் குரலைக் உரத்துக் கேட்க வைத்த பெருமை இவ்வமைப் பையே சாரும். அன்றைய காலகட்டத்தில் ஈழநாடு நாளிதல் தனது ஆசிரியர் தலையங்கத் தின் வழியாகவும், செய்திகளின் வழியாகவும் இம்முயற்சிக்கு முக்கியத்துவம் வழங்கி இருந்தது. இவ்வமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி களின் பாதிப்பினால் பின்னாளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் ஓரிரு நூலக வியல் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்ய நேர்ந்தது.
யாழ்ப்பாண மாவட்ட சனசமூக நிலையங் களின் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்புடன் 300க்கும் அதிகமான சனசமூக நிலையங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கி கிராமிய மட்டத்தில் நூலக - வாசிகசாலை சேவை யினையாற்றி வந்தன. இச்சமூக அமைப்புகளை பாரிய அளவில் ஒருங்கிணைத்து சனசமூக நிலைய நூலகர்களுக்கான 6 நாள் பயிற்சியும் சான்றிதழ் வழங்கலும் ஐப்பசி 1989இல் அயோத்தி நூலகசேவை நிறுவனத்தால் சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தில் கொட்டடிப் பகுதியில் அமைந்திருந்த சம்மேளனத்தின் தலைமை அலுவலகத் தரில் நடத்தி முடிக்கப்பட்டது.
தோட்டப் பிரதேசங்களுக்கான கூட்டுச் செயலகத்தின் அழைப்பின்பேரில் (Coordinating Secretariat for Plantation Areas, Kandy) as 503rtg புஷபதான மாவத்தையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் 1990 ஏப்ரல் 6-8ம் திகதிகளில் மலையக நூலக அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கொன்று அயோத்தி நூலக சேவைகளினால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இலங்கையின் பிரபல நூலகர்களை இக் கருத்தரங்கில் ஒரே மேடையில் இடம்பெற செய்தமை இந்நிகழ்வின் முக்கிய வெற்றியாகும்.
மாநகரசபைகளின் வேண்டுகோளின் பேரில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பினர் ܠ ܠ ܐ :3»
\">ー
ளுக கான நூலகவியல் கருத்தரங்குகளையும் மேற்கொண்டிருந்தனர். சண்டிலிப்பாய், உடுவில் உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள கிராமிய நகர நூலகர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு
ஜூன் 1986 இல் மானிப்பாய் நூலகத்தில் இடம்பெற்றது. திருகோணமலை நகர சபையின் ஆதரவுடன் திருகோணமலை மாவட்ட நூலகர்களுக்கான கருத்தரங்கும் இருநாள் பயிற்சியும் நவம்பர் 1989இல் இடம்பெற்றது.
சமூக அமைப்புகளின் நிதிவளத்தை அதிகரிக்கவும், நூலக விழிப்புணர்வினை அப்பிரதேச மக்களிடையே ஏற்படுத்தவும் அயோத்தி நூலக சேவை அமைப்பு தோள் கொடுத்து வந்துள்ளது. நவாலி வை.எம்.சீ.ஏ யுடன் இணைந்து நூலக வாரம் ஏற்பாடு செய்யப்பட்டு கிராம விழிப்புணர்வை ஊட்டிய துடன் நவாலியில் வை.எம்.சீ.ஏ நூலகத்துக்கு நூல்களும் நிதியும் திரட்டியுதவினர். புங்குடுதீவு சர்வோதய அமைப்பினரின் கிராம நூலகத் திட்டங்களுக்கு ஆலோசனையும் பயிற்சிகளும் வழங்குவதில் அயோத்தி நூலக சேவை இன்றும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. ஸ்கொட்லாந்தின் BookSAbroad நிறுவனத்தின் வாயிலாக தாயகத்தின் நூலக அபிவிருத்திக்கான நூல் உதவித் திட்டங்களை தற்போது முன்னெடுத்து வரும் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் நூலகவியல் மற்றும் நூலியல் பணிகள், போர்க்காலச் சூழலில், நூலகத்துறையின் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிராதவொரு வேளையில் முன்னெடுக்கப்பட்டிருந்ததென்பது மனங்கொள்ளத்தக்கதாகும். இப்
 

நூலகவியல்
த ஜெயபாலன் (ஆசிரியர், தேசம்)
நூல்வெளியீடும் வாசிப்பை நேசிப்போம் பேச்சுக்களும்
கலாநிதி எஸ் தியாகராஜாவின் ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள் நூல் வெளியீட்டு விழா ஒகஸ்ட் 13, 2005ல் லண்டனில் உள்ள வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது. த தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இவ்வெளியீட்டு விழாவில் ச வேலு நூலை அறிமுகம் செய்து வைத்து ஆய்வு செய்தார். அவரைத் தொடர்ந்து தனா குணபாலசிங்கம், மு நித்தியானந்தன், வி சிவலிங்கம் ஆகியோர் நூலை ஆய்வு செய்தனர். கவுன்சிலர் போல் சத்தியநேசன் நூலை பதிப்பித்த தேசம் சஞ்சிகையை பாராட்டினார்.
நூல் வெளியீட்டுக்கு முன்னர் 'வாசிப்பு - நூல் - நூலகங்கள்’ என்ற விடயங்கள் பற்றிய சிறுவர்களின் பேச்சுக்கள் இடம் பெற்றது. செல்வி ந ஒவியா, செல்வி ந அநாமிகா, செல்வன் வி நெல்சன், செல்வன் ர பைரன் ஆகியோர் திறம்பட வேறுபட்ட கோணங்களில் தமது கருத்துக்களை முன் வைத்தனர். வாசிப்பு எவ்வளவு முக்கியமா னது என்பது அவர்களின் பேச்சில் மிகவும் வெளிப்பட்டது. அவர்களது உரையை யாழ் பல்கலைக்கழக நூலகர் அருளானந்தம் பூரீகாந்தலக்ஷ்மி தொகுத்து வழங்கியதுடன் தமிழ் சமூகத்தில் உள்ள அறிவியல் வறுமை யை தனது சொந்த அனுபவங்களினுடாக விளக்கினார். பரீட்சைகளுக்காக மட்டும் படிக்கும் ஒரு கூட்டம் தமது பெயர்களுக்குப் பின்னால் பட்டங்களைக் கட்டிக்கொண்டு திரிவதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். அவர் தனது உரையில் பொதுவாசிப்பின் முக்கியத்துவத்தை இடித்துரைத்தார்.
தனது ஆய்வில் நூலில் ஆதாரமாகக்
காட்டப்பட்ட வாரலாற்றாசிரியர்களின் குறிப்புக ளின் நம்பகத்தன்மையை கேள்விக்கு
ள்ளாக்கினார் ச வேலு. மு நித்தியானந்தன் தனக்கே உரித்தான எளிமையான விமர்சனப் பாணியில் தனது ஆய்வை மேற்கொண்டார். இந்த ஈழத் தமிழரின் ஆதிச்சுவடுகள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை வைத்தே எழுதப்பட்டுள்ளதால் அது யாழ்ப்பானத்தின் ஆதிச் சுவடுகள் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் எனத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தின் வரலாற்றை ஈழத் தமிழர் களது வரலாறாகக் கூறுவது நியாயமற்றது என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் சிங்கள வரலாற்று ஆய்வாளர்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதும் பொருத்த மற்றது என்றும் அவர் தெரிவித்தார். வரலாற்றியல் வறுமை என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் அதே நிலைதான் என அவர் எடுத்துக்காட்டினார். கலாநிதி தியாகராஜாவின் எழுத்தின் எளிமை யை சுட்டிக்காட்டிய மு நித்தியானந்தன் அது ஒரு ஆபத்தான எளிமை என்றார்.
இறுதியில் வி சிவலிங்கம் தனது ஆய்வை மேற்கொண்டார். நேரம் கருதி மிகக் குறுகிய நேரத்தில் ஆய்வை மேற்கொண்ட அவர் வரலாற்றை நிகழ்கால அரசியலை வைத்து பார்க்காமல் வரலாற்றின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். இன்றைய அரசியலுக்கு ஏற்ப வரலாறுகள் திரிபுபடுத்தப்படுவதையே அவர் சுட்டிக் காட்டினார். விமர்சனங்களுக்கு ஏற்புரையின் போது நூலாசிரியர் எஸ் தியாகராஜா விளக்கமளித்தார். யாழ்ப் பாணமும் ஈழத்தில் அடங்குவதாலும் ஏனைய மாவட்டங்கள் பற்றிய பதிவுகளும் இருப்பதாலும் நூலுக்கு ஈழத்தமிழரின் ஆதிச் சுவடுகள் என்ற பெயர் பொருத்தமானதே என அவர் தெரிவித்தார். இப்

Page 20
இ.செந்தில்நாதன்
புலமைச் சொத்து அல்லது புலமை சார்ந்த Gd(Igbglfso)LD (Intellectual Property Right) என்ற பதம் பற்றியோ அல்லது பதிப்புரிமை (Copyright) என்ற பதம் பற்றியோ நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டோம்.
ஆனால் பின்வரும் நிலைமையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உங்கள் திருமணத்தில்
நீங்கள் ஒரு புகைப்படப்பிடிப்பாளரை புகைப் படங்கள் எடுக்குமாறு பணத்திற்கு நியமிக்கிறீர் கள். அவர் புகைப்படங்களை எடுத்து அதன் பிரதிகளை உங்களுக்குத் தருகிறார். ஆனால் புகைப்படங்களின் negativeஐத் தர மறுப்பது
டன், இப்புகைப்படங்களுக்கான பதிப்புரிமை
(நீங்கள் பணத்தை வாரியிறைத்தாலும்) தம்மிடமே உள்ளதாகவும் வாதாடுகிறார். அதற்குச் சான்றாக புதிய கனடிய சட்டமொன்று பற்றியும் கூறுகின்றார். அதே வேளை நீங்கள் இணையத்திலிருந்து உங்கள் கணினியில் பதிவுசெய்து கேட்டு மகிழும் பாடலொன்றுக்குப் பணம் கட்டும்படி ஒரு நிறுவனம் கோருகின்றது. பக்கமாக புலமைச் சொத்து பற்றிய சட்டங் களையும் அது தனது பணம் கேட்கும் பத்திரத்தில் எழுதி வைக்கிறது.
இப்போது பலர் யோசிக்கக் கூடும் என்ன இந்தப் பதங்களென்று. இந்த Intelectual Property Right 676i Ligi Gu Tg56). Tab இருவகையாகப் பிரிக்கப்படும். தொழிற்துறை உரிமை முதலாவதாகும். புதிய கண்டுபிடிப்பு கள் காப்புரிமை (Patent), மைக்ரோசொப்ட் (Microsoft), GlasTababT(35Taon (Coca Cola) போல் , உற்பத்தி நிறுவனங்களுக்கு
அவர்களது தயாரிப்புகள் மீதான உரிமை (Copy Right) போன்றவை இதில் அடங்கும்.
ఒత్మ"",
நூலகவியல்
இரண்டாவது வகையான பதிப்புரிமையின் கீழ், கவிதைகள், கதைகள், திரைப்படங்கள், இசை உருவாக்கங்கள் போன்ற இலக்கிய உருவாக்கங்களுக்கான உரிமையும், நிழற் படங்கள், வரைவுகள், போன்ற கலைச் சொத்துக்களுக்கான உரிமையும் அடங்கும். உரிமை பொதுவாக உருவாக்கியவருக்கோ அல்லது உருவாக்கத்திற்குப் பொறுப்பான நிறுவனத்திற்கோ உரித்தாகும்.
உருவாக்கியவருக்கோ அல்லது நிறுவனத் துக்கோ உருவாக்கத்திற்குரிய பெருமை சேர வேண்டுமென்ற கொள்கையுடன், அவர்களுக்கு நிதிரீதியான இலாபமும் உரித்தாக வேண்டு மென்ற நோக்கத்திற்காகவே காப்புரிமையும், பதிப்புரிமையும் உருவாக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சட்டத்தின் பிரகாரம் ஒருவர் ஒரு நூலைஎழுதி முடித்தவுடன், அதன் பதிப்புரிமை அவருக்கு உரித்தாகிவிடுகின்றது. எனினும் அனேகமான நாடுகளில் இந்த பதிப்புரிமையை பதிவுசெய்வதற்கென தனியான சட்டங்களும் அலுவலகங்களும் உள்ளன.
இந்த நூலின் பிரசுரத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை நூலாசிரியருக்கே உண்டு. அதாவது, அவரின் உரிமையின்றி இந்நூல் எங்குமே பிரசுரிக்கப்படமுடியாது. அதுபோன்று ஒரு பாடலை இயற்றி இசையமைத்தவரின் உத்தரவின்றி அப்பாடலை பதிவுசெய்வதோ அல்லது பதிவுசெய்து விற்பனை செய்வதோ சர்வதேச புலமைச் சொத்துச் சட்டங்களுக்கு மாறானவை என்றே கொள்ளப்படுகின்றது. இதுபோன்று இப்பாடலின் பதிப்புரிமையைப் பெற்றவரின் உத்தரவின்றி ஒலி / ஒளி
 
 

நூலகவியல்
பரப்புவதும் பிழையான செயலாகும்.
ஒரு நூலைப் பொறுத்தவரையில், நூலாசிரி யரின் உத்தரவின்றி, அதனை இன்னொரு மொழியில் மொழிபெயர்த்துப் பிரசுரித்தல் அல்லது அவரது உத்தரவின்றி நாடகமாக உருவாக்குவதும் பதிப்புரிமை சட்டங்களுக்கு முரணானது. எனினும் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்திற்கு முற்பட்ட கலைஞர்களின் உருவாக்கங்கள் பதிப்புரிமை சட்டத்தினுள் வராதமையினால் அவை பலராலும் பிரசுரிக்கப் படுவதும், ஏனைய வடிவங்கள், மொழிகளில்
உயிர்கொடுக்கப்படுவது சகஜமாகவுள்ளது.
அதுபோன்று ஒரு ஊடகத்தில் செய்தியாக அல்லது கண்ணோட்டமாக எழுதுவதற்கும் இலாப நோக்கமற்ற நோக்குகளுக்காகவும் நூல்கள் அல்லது ஏனைய கலையாக்கங்களின் பகுதிகளைப் பாவிக்கலாம்.
இதேவேளை ஒருவர் மிகுந்த பணச் செலவுடன் நீண்ட ஆய்வுகளின் பின்னர் இலங்கையில் தமிழர் கலாச்சாரத்தைப் பற்றிய சில முடிவுகளை எய்தி அவற்றை நூல்வடிவில் வெளியிடுகிறார் என வைத்துக்கொள்வோம். அவரது முடிவுகளை இன்னொருவர் தமது நூலுக்கென உபயோகிக்கலாம். எனினும் தமது நூலின் வியாபாரத்தை இரண்டாம் நூலாசிரியரின் நூல் பாதிக்கின்றது என முதல் நூலாசிரியர் கருதும் பட்சத்தில் அவர் இரண்டாம் நூலாசிரியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு,
இது குழப்பமாகத் தோன்றினாலும் இன்றைய சூழலில் புலமைச் சொத்துச் சட்டங் கள் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன.
பதிப்புரிமை உலகளாவியரீதியில் Berne Convention for the protection of literary and Artistic work 616örg L66, LIL95605uisit பிரகாரம் அமுல் செய்யப்படுகின்றது. இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் நாடுகள் பொதுவாக இதன் சரத்துக்களை அமுல்
செய்ய ஏதுவாக உள்ளுர் சட்டங்களை இயற்ற வேண்டும். எனினும் இணையம் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், கலையாக் கங்களின் விநியோகப் பகிர்வில் ஏற்படுத்தி வரும் மாறுதல்களையடுத்து ஜெனீவாவிலுள்ள சர்வதேச புலமைச் சொத்து அமைப்பில் (World Intellectual Property Organisation - WIPO) siglaf y 60)6OOI u L6 WIPO Copyright Treaty (WCT) Disgub WFPO Performances and Phonograms Treaty (WPPT) என்ற இரு சர்வதேச உடன்படிக்கை கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை 2002ம் ஆண்டில் அமுலுக்கு வந்தன.
இதுவரை காலமும் இருந்துவந்த பதிப் புரிமைச் சரத்துகள் இணையம் போன்ற digital ஊடகங்களுக்கும் பொருந்தும் என்பதை இந்த உடன்படிக்கைகள் தெளிவுபடுத்தின. இணை யம், குறிப்பாக இணைய அல்லது உலகவலை 6T60TJUGLD World wide Web g66, 93 (upas மும், கனடா போன்ற நாடுகளில் அதிவேக 360600Tulj, GBTLjLB6ssi) (Cable/DSL High speed imternet connection) 93(pabib மற்றும் MP3 போன்ற தொழில்நுட்பங்களின் அறிமுகமும் பாடல்களின் பாவனையில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் பதிப்புரிமைச் சட்டங்களின் அளவையும் கேள்விக்குறியாக்கி யது, இந்த உடன்படிக்கைகளின் உருவாக்கத் திற்கு வித்திட்டன எனக் கூறலாம். எமக்குப் பிடித்த பாடலை நாம் முன்னர் கசெற்றில் பதிவுசெய்து எமது நண்பர்களுக்குக் கொடுத்தி ருப்போம். எனினும் இது இலாப நோக்குடன் நடைபெறாததினால் பதிப்புரிமைச் சட்டத்திற்கு விரோதமான செயல் எனக் கருதப்படவில்லை. எனினும் இணையத்தில் பாவனை அதிகரிக்க பாடல்களின் விநியோகம் பணமாற்றத்திற்கு அப்பாற்பட்ட நடைமுறை தொடங்கியது. உதார ணமாக, சில அமைப்புகள் இராட்சத கணினித் தளங்களில் ஆயிரக் கணக்கான பாடல்களை பதிவுசெய்து தமது அங்கத்தவர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வந்தன.
எனினும் அமெரிக்க நீதிமன்றங்கள் இந்நடை
முறை, சட்டத்துக்குப் புறம்பானது எனத்
سبب

Page 21
தீர்மானித்ததையடுத்து இந்நடைமுறை மிகவும் அருகி விட்டது. ஆனால் அதற்குப் பதிலாகப் புதிய தொழில்நுட்பமான்று அறிமுகமாகியது. eggs IT66, P2P 616OTyuGuib Peer to Peer தொழில்நுட்பம். மத்திய தளம் ஒன்றில் பாடல்கள் சேமிக்கப்படாமல் அங்கத்தவர்கள் தமது சொந்தக் கணினிகளில் பாடல்களைப் பதிவுசெய்து பின்னர் பிறர் அவற்றைப் பெற்றுக்கொள்ள வழிசெய்வதே P2P தொழில்நுட்பமாகும். P2Pயும் பதிப்புரிமைச் சட்ட உலகில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு தொழில்நுட்பமாகும்.
இதேவேளை பதிப்புரிமைச் சட்டத்தின் அடிப் படைக் கொள்கைகளிலொன்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் சட்டமொன்றில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரன் 1997ம் ஆண்டு கைச்சாத்திட்டார். No Electronic Theft Act (NET Act) 616pp இச்சட்டம் ஒரு பதிப்புரிமையாளரின் உத்தர வின்றி பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுக்கள் போன்றவற்றை இலாபநோக்கத்திற்காகத்
நூலகவியல்
தயாரித்து விற்பனை / விநியோகம் செய்வோர் மீதே நடவடிக்கை எடுக் கப்படும் என்ற கொள்கையை மாற்றி, இலாபநோக்கமின்றி நட்புக்காக பாடல்களைப் பரிமாறிக்கொள்வோர், குறிப்பாக மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க இச்சட்டம் வழிவகுத்தது.
பதிப்புரிமை இந்த நவீன யுகத்தில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பத னையே இந்தச் சம்பவங்கள் தெளிவுபடுத்து கின்றன.
(இக்கட்டுரை கனடாவிலிருந்து வெளியாகும் தமிழர் தகவல் 14ஆவது ஆண்டு மலரில் இடம்பெற்றுள்ளது. தமிழர் தகவல் இதழ்க ளையும், ஆண்டுமலர்களையும் தபால்செலவு மாத்திரம் செலுத்துவதன் மூலம் உங்கள் நூலகங்களுக்கும் தருவித்துக் கொள்ளலாம். GgTLÜ (6b (ö: Mr. S.Thirichelvam, Editor-in-Chief, Tam is Information, P.O. Box 3, Station F, Toronto, Ontario, M4Y 2L4, Canada. ) e
லண்டனில் துப்பாக்கிகளின் காலம் நூல் வெளியீடு
இளைய அப்துல்லாஹற்வின் துப்பாக்கிக ளின் காலம்’ நூல் வெளியீடு தேசம் சஞ்சிகை யின் ஏற்பாட்டில் ஒக்ரோபர் 16ல் இடம்பெற்றது.
நூல் வெளியீட்டுக்குத் தலைமை தாங்கிய எஸ் எம் எம் பசீர் இந்நூல் முஸ்லீம்களின் சோகத்தை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். அவர் தொடர்கையில் தமிழ் தேசியம் பற்றி எழுதும் எழுத்தாளர்கள் முஸ்லிம் சமூகத்தை கண்டுகொள்ளாமல் எழுது வது வரலாற்றுத் தவறு என்றார். சிவநாயகம் ‘பென் அன்ட் த கன்’ நூலில் முஸ்லீம்கள் பற்றிக் குறிப்பிடத் தவறியதை பசீர் சுட்டிக் காட்டினார். உமா உட்பட நூல்விமர்சனத்தை மேற் கொண்டவர்கள் முஸ்லீம்கள் 24 மணி நேரத்தில் பிடுங்கி எறியப்பட்ட சோகத்தை நூல் பதிவு செய்திருப்பதை பாராட்டினர். உமா பெண்ணிய பார்வையில் சிறுகதைகளை ஆய்வு செய்தார்.
r':് *
விமல் குழந்தைவேல் தனது விமர்சனத்தில் எழுத்தாளன் தான் வாழும் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றும் ஆனால் நூலாசிரியர் தனது முஸ்லீம் அடையாளத்தை தக்க வைக்காமல் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆகிவிட்டார் என்றும் குறிப்பிட்டார். விமல் மேலும் தொடர்கையில் சாகித்தியமண்டல விருது பெற்ற ஒரு எழுத்தாளனிடம் இருந்து வரும் படைப்புகள் இன்னமும் காத்திரமாக அமைந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். புலோகலிங்கம் தனது விமர்சனத்தில் வன்முறைச் சூழலை விபரித்தார். பாருக் தனது விமர்சனத்தில் நூலாசிரியரின் எழுத்தாற்றலைப் பாராட்டினார்.
நிகழ்வில் சுசீந்திரன் மறைந்த எழுத்தாளர் சுந்தரர ராமசாமிக்கு அஞ்சலி செலுத்தினார். கவுன்சிலர் போல் சத்தியநேசன், ரவீந்திரமோகன் ஆகியோரும் உரையாற்றினர்.

நூலகவியல்
சிறு சஞ்சிகைகள் பக்கம்
தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் எம்.வை.எம். மீஆத் தற்போது வெளிவரும் சிறுசஞ்சிகைகள் பற்றிய முகவரி: M.YM.Meeadhu, No.05/1, BITGSu6) 95.566) as6061T 9,55ug55ufo). Hemmathagama Road, Mawanella, வழங்கவிருக்கின்றோம். நூலகர்கள் தங்கள் Sri Lanka. நூலகங்களுக்கு இவற்றைப் பெற்றுக்கொள்ள சந்தா விபரம்: தனிப்பிரதி: ரூபா 30, வும், தமது சஞ்சிகை பற்றிய கவன ஈர்ப்பினை ஆண்டு சந்தா நூலகங்கள் பெற்றுக்கொள்ள சிறுசஞ்சிகை (தபால் செலவு உட்பட): ரூபா 420. வெளியீட்டாளர்களுக்கு தளம் அமைத்துக் தொலைபேசி இலக்கம்: O094-35-2246767
கொடுக்கவும் இப்பகுதி பயனுள்ளதாயிருக்கும். (பார்வையிட்ட இதழ்: மலர் 1, இதழ் 8,
செப்டெம்பர் 2005)
தேசம்
சர்வதேச தமிழ் சஞ்சிகை 卷 Ο அரசியல், சமூக, பொருளாதார, கலை, 9) J36 நூலகம இலக்கிய சஞ்சிகை. இரு மாதங்களுக்கு இரு திங்கள் இதழ்.
ஒரு தடவை கெளரவு ஆசிரியர்: ஆசிரியர் : த ஜெயபாலன் முனைவர் நிர்வாக ஆசிரியர் : ரி கொன்ஸ்ரன்ரைன் அ.அ.மணவாளன் முகவரி : ஆசிரியர்: P O BOX 35806 ஆர்.பார்த்தசாரதி E 11 3JX முகவரி:
London Ungal Noolaham,
New Century Reader's Sangam, 41-B, SIDCO Industrial Estate, Ambattur, Chennai- 600 098, India. சந்தா விபரம்: தனிப்பிரதி; இந்திய ரூபா
United Kingdom சந்தத விபரம்: ஆண்டு சந்த E10பவுண்கள் (தபாற் செலவு உட்பட)
தொ.இல: 0044 208 279 0354 10, ஆண்டு சந்தா இந்திய ரூபா 100, issil 9(6586) : editor Gthesamnet.com தொலைபேசி இலக்கம்: 2625 1968 960)600Tugb6FTib: www.thesamnet.com மின்னஞ்சல் முகவரி: (பார்வையிட்ட இதழ்: ஒகஸ்ட் - ஒக்ரோபர் ungalnoolagamgyahoo.co.in 2005, இதழ் 24) (பார்வையிட்ட இதழ்: மலர் 1, இதழ் 4,
ஜூலை-ஆகஸ்ட் 2005)
D60óT
கல்வி, கலை, இலக்கிய,
சமூக இருமாத இதழ். பிரதம ஆசிரியர்: வ.சிவராஜா
கலை மலர்
மாதாந்த கலை, இலக்கியக் கல்விச் சஞ்சிகை
ஆசிரியர்:

Page 22
நூலகவியல்
உங்கள் சஞ்சிகைகளையும் இப்பகுதியில் பதிவு செய்து கொள்ள விரும்பினால் நூலகவியல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். Noolakaviyal, 48, Hallwicks Road, Luton, Beds, LU29BH, United Kingdom.
துணை ஆசிரியர்: ப.செளந்தரராசா முகவரி: V.Siwarajah, Angertaler Str. 98, 47249 Duisburg, Germany. சந்தா விபரம்: அன்பளிப்பு தொ. இல: 0049 203 706 480 தொலைநகல் இல: 0049 203 6080 581 மின்னஞ்சல் முகவரி: mann erde sivarajah Ghotmail.com (பார்வையிட்ட இதழ் இல. 112, ஜூலைஆகஸ்ட் 2005)
தமிழ் உலகம் அனைத்துலகத் தமிழ் சஞ்சிகை (மாசிகை) நிர்வாக ஆசிரியர்: எஸ். கிருஷ்ணதாசன் பிரதம ஆசிரியர்: வி.தருமலிங்கம் இணை ஆசிரியர்: சந்திரபோஸ் சுதாகர் (upa56)ji: Tami! Ulakam, 899-901, Finchley Road, London NW 11 7PE. United Kingdom
இலங்கை முகவரி: Tamil Ulakam, 50, 1/8, Colombo Plaza Complex, Galle Road, Wellawathe, Colombo 6, Sri Lanka. சந்தா விபரம்: பன்னிரு பிரதிகளுக்கு தபாற்செலவு உட்பட இந்திய ரூபா 500, இலங்கை ரூபா 500.ஐரோப்பா 25 யூரோ. தொ.இல; (இலண்டன்) 0044 208 455 9001. (இலங்கை) 0094 112 59 1045 தொலைநகல்: (இலண்டன்) 0044 208 731 7870 (இலங்கை) 0094 112 59 1047 மின்னஞ்சல் முகவரி: tuG globallanka.co.uk (பார்வையிட்ட இதழ் இல. 22 ஆகஸ்ட் 05)
அகவிழி
ஆசிரியத்துவ நோக்கு. (மாத இதழ்) ஆசிரியர்: தெ.மதுசூதனன் ஆசிரியர் குழு: சாந்தி சச்சிதானந்தன், ச.பாஸ்கரன், காசுபதி நடராஜா. நிர்வாக ஆசிரியர்: மனோ இராஜசிங்கம் முகவரி: Ahavili, 3, Torrington Avenue, Colombo 7. 貂裂辍 சந்தா விபரம்: தனிப்பிரதி: ரூபா 25. தொலைபேசி இலக்கம்: ' (இலங்கை) 011-250 6272 மின்னஞ்சல் முகவரி: ahaviliOviluthu.org (பார்வையிட்ட இதழ்: விழி 1, பார்வை 12, ஆகஸ்ட் 2005) 21
நூலகங்கள், சனசமூக நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் பொது அமைப்புகள், ஆய்வு வட்டங்களுக்கு
தேசம் சர்வதேச தமிழ் சஞ்சிகை
இலவசமாக அனுப்பி வைக்கப்படும். POBOX 35806 E11 3JX London
United Kingdom Tel: 0044 208279 0354
 
 

இம்மாத வெளியீடு எமது அடுத்த வெளியீடு
இலங்கையில் முகாமைத்துவக் கல்வி மா. சின்னத்தம்பி
தலைவர், கல்வியற்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ISBN
குமரன் புத்தக இ 3צמה להצהמעדs 955 9429 68 Χ
பொருளடக்கம்: 1 எண்ணக்கரு, Il முகாமைத் துவ கல்வி வளர்ச்சி, III கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி, IV கலைத்திட்டம், V பிரச்சனைகளும் பலவீனங்களும், VI முகாமைத்துவ கல்வி அபிவிருத்தி, நூல் விபரப்பட்டியல், சுட்டி
வெளிவரவுள்ள கல்வியல்துறைசார் நூல்கள்
நவீன கல்விச் சிந்தனைகளின் போக்கு
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
கல்விப் பீடம்
தி ஒப்பீட்டுக் கல்வி கொழும்புப் பல்கலைக்கழகம்
CLIIIéfssus Qsir. Síbgcss']sór கல்விப் பீடம் கொழும்புப் பல்கலைக்கழகம்
வகுப்பறைகளில் கல்வி உளவியல்
திரு. உலகநாதர் நவரட்ணம் பணிப்பாளர்
தமிழ் மொழிப் பிரிவு
செயல்வழி ஆய்வு: ஓர் அறிமுகம்
திரு. தை. தனகராஜ் முன்னாள் பணிப்பாளர்
தமிழ் மொழிப் பிரிவு
குமரன் புத்தக இல்லம்
፩ ::'& ...o. . “ላ፡
361 1/2, டாம் வீதி, கொழும்பு 12:190, புகையிரத நிலைய வீதி
தொ.பேசி :242 1388 வைரவப் புளியங்குளம் கைபேசி: 07:410 3489 வவுனியா :தொலைநகல்:242 1388 தொ. பேசி:024492:0733
il:Shasir g|Göy-Gö:, kümbh@sltnet.ilk
go60)68ru sorb: WWWkumarambook.com,
stages associs Ismaisorib (International Academy of Education), sits. IGss assissis usefusib (International Bureau of Education), ugarGrogan (UNESCO) sagu நிறுவனங்களின் அனுசரணையுடன் வெளியிடப்பட்ட கல்விசார் செயற்பாடுகள் பற்றிய கைந்நாற் தொடரின் (Educational Practices Series) suspTessib இவ் வரிசையின் முதல் வெளியீடு
O O
பிள்ளைகள் எவ்வாறு கற்கிறார்கள்?
(How Children Learns) கலாநிதி ஸ்டேலா வொஸ்னியாடோ தமிழ் மொழிப் பதிப்பாசிரியர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
6δωσρ6υωδύυ திருமதி. புஷ்பா சிவகுமாரன்
Uėsčio 60
ISBN 9559.429 698
விலை ரூ 90
இவ்வரிசையில் வெளிவரவுள்ள ஏனைய நூல்கள்
1. spli:556i (Teaching) 2. GupGpITCD5th 5ibpg|lb (Parents and Learning) 3. பயனுறுதி வாய்ந்த கல்விசார் நடைமுறைகள்
(Effective educational practices) 4. கணிதத்தில் மாணவரின் அடைவினை
GlobLIG556) (Improving student achievement in Mathematics) 5. Gungsgai (Tutoring) 6. மேலதிக மொழிகளைக் கற்பித்தல் (Teaching Additional Languages) 7. பிள்ளைகள் எவ்வாறு கற்கிறார்கள்?
(How children learns?) 8. நடத்தைப் பிரச்சினைகளைத் தவிர்த்தல் -
பயனுடைய வழிமுறைகள் (Preventing Behaviors-What works) 9. பாடசாலை ஊடாக HIV/AIDS நோய்களைத்
தவிர்த்தல் (Preventing HIV/AIDS in Schools) 10. Sibpg|55IT607 parisai (Motivation to learn) 11. கல்வி மற்றும் சமூக மன வெழுச்சிசார் கற்றல்
(Academic and Social emotional learning) 12.6 Tafligol sibl 5556) (Teaching Reading) 13. பாடசாலைகளினுாடாக முன்பள்ளி
நிலையில் மொழியறிவை மேம்படுத்தல் (Promoting pre-school language)
அகண்ட ஆழ்ந்த அறிவிற்காய்

Page 23
| |
Printed by KUM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I HIll Hilly
·
川
川
川
I
I
III.
| |
| |
川
Hill
I THITHIMHINI MIT
חששם השחוששות | I
|
|
|
ANPress Prale Limited