கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோமாஸ்கந்தம் (பெரி. சோமாஸ் கந்தர் நினைவு மலர்)

Page 1


Page 2
நுழைவாயிலில்
அன்பின் வாசக நெஞ்சங்களுக்கு
இந்துக் கடலருகே எழில் விளங்கும் இந்தமிழ் உடப்பூரின் நாமந்தன்னை சந்தத் தமிழில் கவிபாடியும், சொற்பொழிவாற்றியும் கலையுலகம் அறியச் செய்தவர். எங்கள் நூலின் நாயகன், தாய் மண்ணான ஈழத்தில் மட்டுமன்றி பாருக்குள்ளே நல்ல நாடாம் பாரதத்திலும், சிங்காரச்சீமை சிங்கப்பூரிலும், மலாயரின் மலேசியாவிலும் உடப்பூரின் நாமந்தன்னை எங்கள் உடப்பூரான் பெரிசோமாஸ்கந்தர் தன் வில்லிசையில் சொல்லிசைத்து சிம்மக் குரலால் உலகறியச் செய்தார்.
சமயத் தொண்டனாக, கவிஞனாக, வில்லிசைக் கலைஞனாக, பேச்சாளனாக, ஆசானாக. அதிபனாக, பாடகனாக, நாடக நடிகனாக, கதாசிரியனாக கலைகளின் வடிவமாக ஊரினது நாமத்தைப் பெருமையுடன் பறைசாற்றிய எம்பெரு மகனுக்கு பெருமை சேர்க்கும் நோக்கோடு அவரினால் உருவாக்கப்பட்ட உடப்பு நவ இளங்கதிர் நாடக மன்றம் இந்த நினைவு மலரை அவரது நினைவாக வெளியிடுவதில் பெருமை அடைகிறது.
இதில் வரும் ஆக கருள் களர் அவரினி பாஸ் மெயப் பணி பு கொ எண் டவர்களிடத் தும் , அவரது புவிப் மைதனை மனதாரப் புகழ்ந்துரைப்பவர்களிடமும் பெறப்பட்டன. அவைகள் இரங்கல் உரைகளாகவும், அனுதாபச் செய்திகளாகவும், நீத்தார் பெருமைகளாகவும், கண்ணி அஞ்சலிக் கவிப்பாக்களாகவும் எங்கள் சொல்வேந்தனின் சிறப்புக்களை சொல்லுகின்றன. இவற்றோடு காங்கள் கலைத்தெய்வத்தின் வாழ்க்கைவரலாறும், விருதுகளும் அவரது படைப்புக்களும், அவர் விரும்பி ஒதும் திருப்பதிகங்களும் இதனை அலங்கரிக்கின்றன.
கலையுலக மக்களின் மனதில் என்றும் நீங்காத இடந் தன்னை உருவாக்கி அமரத்துவம் எய்திய எங்கள் தெய்வத்தின் திருப்பாத காலங்களில் சோமாஸ்கந்தம் மலரினை இருகரம் கூப்பி சமர்ப்பணம் செய்கின்றோம்.
இளங்கதிர் நாடக மன்றம் வந்தோம் என்றும் உன்னையே துணை கொள்வோம்.
வெளியீட்டாளர்கள் நவ இளங்கதிர் நாடக மன்றம் உடப்பு.
இலங்.ை
 
 

hன்ப்ரில் மாப்பிIாகும் எங்கள் குடும்பத்தின் அ)Iத நீர் சொல்லின் சொல்வனெனும் உற்ற திருநாமம் : டப்பூரான்
பெரி. சோமாஸ் கந்தர்.
| || || :3றுவன்
மடியி :படி பில்
| 4 | s
7 ר
"ஆர்டது சுபTஆறு (11:11 புரட்டாதி
பக்ராய்நாள் பிராணத்திகியில் அத்தம் ஒனரயின் உதயப் பாழுது பேரின் ப் பெரு புரவு + 113 ந்தா
பேதை, ப 11

Page 3
இரங்கற் செய்தி
உடப்பு பெரி சோபாஸ்கந்தர் அவர்களுடைய திடீர் மறைவைக் குறித்து அறிந்து பனம் வருந்துகிறோம்,
இந்நாட்டின் அனைத்து தமிழ் மக்களும் நன்கறிந்த ஒரு சிறந்த வில்லிரை விற்பன்னர் இவர். இவரது நிகழ்ச்சிகள் கணக்கற்ற எண்ணிக்கையில் இந்நாட்டின் பல்வேறு இடங்களிலும் இடம் பெற்றுள்ளன. இவர் ஒரு சிறந்த கவிஞரும் கூட இவரது மறைவு இந்நாட்டின் கலைத்துறைக்கு ஒரு பெரிய இழப்பு என்பதில் ஐயமில்லை,
திரு சோமாஸ்கந்தர் அவர்கள் இறைவன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். நல்ல பண்பாளராகிய இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார். இவரது மறைவு அன்னாரது குடும்பத்தினருக்கு எத்தகைய ஒரு பெரிய இழப்பு என்பதைக் கூறத்தேவையில்லை. இவரது பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தினர்க்கு எங்கள் ஆழ்ந்த அறுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமரர் திரு. சோமாளப்கந்தர் அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய மனமாறப் பிரார்த்திக்கிறோம்.
சுவாமி ஆத்மகனானந்தா தலைவர் (இராம கிருஷ்ண மிஷன்) இலங்கைகின்ன 40, இராமகிருஷ்னவீதி கொழும்பு
 

அமரரான கலைஞர்
மக்களைக் கவரக்கூடிய கவின்கலைகளில் வில்லுப்பாட்டும் ஒன்றாகும் இவ்வில்லுப்பாட்டில் சிறந்து விளங்கியவர் உடப்பூர் சோமாஸ்கந்தர் ஆவார். இலங்கை முழுவதும் இவர் பெயர் பரவியிருந்தது. இத்தனைக்கும் காரணம் இவரின் சிறந்த குணமும் கதைகளைச்சொல்லும் போது உண்டாகும் கவர்ச்சியும், கவர்ச்சியால் மக்களிடையே உண்டாகும் சிரிப்பும், இன்பமுமாகும்.
கேள்வி மறுமொழிகளில் விகடமானகதைகளையும் சொல்லி உண்ண்மப் பொருள்களையும் தெய்வீகக்கதைகளில் அடக்கி யாவரும் எளிதில் விளங்கக் கூடிய வகையில் தமது தொழிலாற்றலால் வளர்க்கும் தன்மையுடையவர். படித்தவர்கட்கு மட்டுமல்ல யாவரும் எளிதில் விளங்கக் கூடிய வகையில் தமது தொழிலாற்றலை வளர்க்கும் தன்மை உடப்பூர் சோமாஸ்கந்தருக்கு மட்டும் தான் உண்டு. இது சமய, சமயதத்துவங்கள் அடங்கிய வில்லுப்பாட்டில் தான் காணக் கூடியதாய் இருக்கும்
கொழும்பு பறி பொன்னம்பலவாணேஸ்வரர் தேவனல்தானத்தில் மகா சிவராத்திரி புண்ணிய தினத்தில் பல தடவைகள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இப்படியான கலைஞரின் இழப்பு சைவ உலகத்திற்குப் பேரிழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய ரீ போன்னம்பல வானேஸ்வரனையும் சிவகாமி அம்பாளையும் வேண்டுகிறேன்.
இப்படிக்கு சிவாகம சிரோனி கிரிபாபூடினம் சி. குஞ்சிதபாதக் குருக்கள். (பிரதமகுரு பூரீ பொன்னம்பல வானேஸ்வரம் கொழும்பு
தலைவர். அகில இலங்கை சிவபிராமன ரங்கம் ஆலோசகர் சர்வமத சம்மேளனம் இந்துசமய ஆலோானைச்சபை உபதலைப்வர் கொழும்பு லிவேகானந்த சபை ஆலோசகர் கல்வி உயர் கல்வி அமைச்சு
O3

Page 4
சிறந்ததோர் வில்லிசைக் கலைஞராகத் திகழ்ந்தவர் உடப்பூர் சோமாஸ்கந்தர். அமரரான உடப் பூர் சோமாஸி கந்தர் சிறந்தவொரு சமயப்பணியாளராகவும், வில்லிசைக் கலைஞராகவும் திகழ்ந்தவர். புத்தளம் பிரதேசத்தில் மட்டுமன்றி நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் சிறந்த வில்லிசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ள அவரது மறைவு சமய உலகிற்குப் பேரிழப்பாகும்.
அமரர் சோமாஸ்கந்தர், மிகவும் அரிய கலைகளுள் ஒன்றான வில்லிசையை மிகவும் விருப்பத்தோடு பயின்று வளர்ந்தவர், மற்றும் புத்தளம் பிரதேச நாட்டுப் பாடல்கள், கூத்துக்கள் என்பவற்றிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினார். ᏱᎩ
அவர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய விழாக்கள், கருத்தரங்குகள் என்பவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்று தமது திறமையை வெளிப்படுத்தினார். சிறப்பாக வில்லிசை நிகழ்ச்சிகளை மட்டுமன்றி, சமயச் சொற்பொழிவுகள், விரிவுரைகள் என்பவற்றையும் வழங்கி வந்துள்ளார். அறநெறிப் பாடசாலை ஆசிரியர் கருத்தரங்குகளில் பங்குபற்றி சிறந்த விரிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
அவரது ஆன்மீகப்பணிகளைப் பாராட்டி முன்னாள் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சு, ‘அருட்கலைத்திலகம்' எனும் விருது வழங்கி கெளரவித்தது.
அவ்வாறே கலாசார சமய அலுவல்கள் அமைச்சு, ‘கலாபூஷணம்' எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது. இவை தவிர பல்வேறு சமய நிறுவனங்களாலும் அவர் பாராட்டப்பட்டுள்ளார்.
இத்தகைய சிறந்தவொரு கலைஞரின் இழப்பு, சமய உலகிற்கு ஈடுசெய்ய முடியாததாகும். அதிலும் குறிப்பாக வில்லுப்பாட்டு போன்ற அரிய கலையை வளர்த்த அவரது இழப்பு மிகவும் வேதனைக்குரியது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர், உத்தியோகத்தர் அனைவர் சார்பிலும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்பதோடு, அவரது பிரிவால் துயருறும் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சாந்தி நாவுக்கரசன் பணிப்பாளர்
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் صف O4 عطف

ஈடிலாப் பேரிழப்பு
ஒய்வுபெற்ற அதிபர்
அமரர் பெரி. சோமாஸ் கந்தர் அவர்களின் மறைவினால் பாதிப்புக்குள்ளாயது இந்து ஆலயங்களே எனின் அது மிகையாகாது. நல்லாசிரியனாகவும், ஆன்மீகவாதியாகவும், இலக்கிய வாதியாகவும், அதி உயர் சிறப்புக்களைப்பெற்ற கலா பூஷணம் அமரர் பெரி. சோமாஸ்கந்தர் அவர்கள் இந்து ஆலயங்களிலும் தனது ஆன்மீகப்பணியை இதய சுத்தியுடன் மேற்கொண்ட பெருந்தகையாளர், ஒதுவாராக பண்ணிசை பாடுவார் பக்திப்பாடல்களை மெல்லிசையுடன் பாடி மகிழ்விப்பார். சுவாமிக்கு அலங்காரம் செய்வதில் வண்ண வண்ணக்கோலத்தில் சுவாமியை அலங்கரிப்பதில் தன்னை முழுமையாகவே அர்ப்பணிப்பார். சமயப் பேருரை ஆற்றுவதில் தனக்கு நிகர் தானே ஆனவர். சொல்லின் செல்வர் எனும் பட்டம் இவரது சொல்லாற்றலுக்கும் பொருள் பொதிந்த சொற்கோவைக்கும் எடுத்துக்காட்டாக தரப்பட்டது எனின் அது பொருத்தமானது. எமது ஆலயங்களில் நாம் தரமான வில்லிசைகளை இனி எப்போது செவிமடுப்போம். எமது மக்களுக்கும் தரமான நாடகங்களை தர வல்லவர் யார்? நாராயணப் பெருமானுக்கு புகழ் பாடும் இனிய பண்ணிசையை இனி எப்போது செவி நுகர்வோம். அரங்கத்தின் சிறப்புச் சொற்பொழிவின் பொருள் பொதிந்த கனிமொழிச்சுவையை நாம் எப்போது 'வைப்போம். திருக்குறளும், பழந்தமிழ் இலக்கியமும், இந்துசமய இலக்கி:ri, கலந்த சுவைமிகு பேருரையை வில்லிசையை மெல்லிசையாக சொற்பெருக்கை எமது மேடைகளில் நாம் இந்தத் தலைமுறையில் செவி மடுப்போமா என்பது மிக மிகச் சந்தேகமே. அமரரின் பிரிவு ஈடிலாப் பேரிழப்பே. இவர் விட்டுச்சென்ற பணியை ஈடு செய்வதென்பது? ரீமந் நாராயணப் பெருமானுக்கே தனது இசையால் பணி செய்த அமரரின் ஆத்மா அவன் திருவடியில் இசைபாடும் பேறுபெற்று நிலைக்கும் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கையாகும். வாழ்க அமரர் புகழ். அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி!
இந்து ஆலய பரிபாலன சபை Զ-ւմւ|-
O5

Page 5
இரங்கல் செய்தி
கொழும்பு, மயூரபதி யூரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தோடு பதினைந்து ஆண்டுகளாக ஒன்றிணைந்து உள்ளன்போடு பழகி, ஆத்ம ஞானமும் இந்துசமய பற்றும் , தமிழ் மொழி ஆர்வமும் கொண்டு அனைவராலும் அன்போடு உடப்பூர் என்ற ஊரின் பெயரையே தன்னகத்தே கொண்ட அமரர் திரு. சோமாஸ்கந்தர் அவர்கள் சிவபதம் அடைந்து விட்டார்கள். அன்புக்கும், பண்புக்கும், அடக்கத்துக்கும், குடும்ப பற்றுக்கும் இலக்கணமாக திகழ்ந்த பெருந்தகை மறைந்த செய்தி கேட்டு மயூரபதியே ஆழ்ந்த துயரத்தை வெளிக்காட்டியது. அன்னார் இயற்றித்தந்த பாடல்களும் ஒலிநாடாவிலே பாடிய பாட்டுக்களும் என்றும் ஆலயத்திலே ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
ஆறாத் துயரில் ஆழி நீ திருக்கும் அண்னாரின் மனைவி, பிள்ளைகளுக்கும், சுற்றத்தாருக்கும் உடப்பூர் மக்களுக்கும் மயூரபதியின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வருடா வருஷம் நடைபெறும் ஆடிப்பூர வைபவத்திலே வில்லிசைக்கு யாரை தேடப்போகிறோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய மயூரபதி தாயை வேண்டி அமர்கின்றேன்.
பொன். வல்லிபுரம் ஜே.பி. தர்மகர்த்தா மயூரபதி யூரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம். கொழும்பு.
 

உடப்பூர் பெரி. சோமாஸ்கந்தர் 27-09-2003 பிரிந்தார் பெருமை நினைவு அஞ்சலி
இந்து மகள் முத்தமிடும் உடப்பூர் பெரி. சோமாஸ்கந்தனே அலைமகள் ஆரத் தழுவிச் செல்லமுன் ஆவி பிரிந்தனையே! சிம்மக் கர்ச்சனைகள் சிங்கக் குகைக்குள் அடங்கியதோ!
தெய்வ நாமங்கள் நினைவூட்டும். குடும்பக் குமரக் கோட்டம் அழுத கண்ணிர் ஆறாய்ப் பெருக, வழுவாய்த் துயரம் மாறாது நிலைக்க ஒட்டிய பத்தினி பரமேஸ்வரி பொட்டும் அழிந்ததுவோ புன்னகையும் மறைந்ததுவோ.
நீயோ சைவப் பழம் நானோ முஸல்மான் நமது இரத்தம் சிவப்புதான் நமது இறைவனும் ஒன்றுதான் ஆரம்ப பள்ளித் தோழர்கள் ஒரேவகுப்புச் சோடிகள் ஆசிரியர் பயிற்சியில் ஒன்றானோம் ஆசிரியர் பள்ளியிலும் ஒன்றானோம். உன் பள்ளி வாழ்க்கை உன் பாடலுடன் தொடங்கியது சாகும்வரை பாடிக் கொண்டிருந்தாயே. சாகும் வேளை ஏன் மெளனமானாய். நான் உன் இரசிகன் நண்பன் உன்பாடலை எப்போது கேட்பேன் என் பாடலுக்கு மெட்டமைப்பாயே இனி யாரிடம் செல்வேன்.
நமது தோழமை வாழ்க்கை பசுமை நினைவுகள் மீட்டுப் பார்க்கையிலே கூற்றன் வந்துன்னை கூப்பிட்டுச் சென்றானோ.
ஒரே தரம் ஒரே சேவை ஒய்வு பெற்றோம் குறைந்த வேதனம் வீட்டுக்குள்ளேயே ஓய்வூதிய முரண்பாடு, முரண்பாடு ஒழிய ஒடினோம் கம் வைத்துக் குரல் எழுப்பினோம் உன் உள்ளத்து வேட்கை கூடிவரும்
வேளையிலே கூற்றன் வந்துன்னைக் கூப்பிட்டுச் சென்றானோ.
கலையின் வடிவமே கலாபூஷணமே சொல்லின் செல்வனே சொற்சிலம்பே வில்லிசை வேந்தனே வித்தகனே பிரியமானவனே சோமாஸ்கந்தனே நீ பெற்றுவிட்ட பட்டங்கள் நாட்டிய புகழ் நிலைத்திருக்கவெற்றுடம்பாய்ச் சென்றனையா?
எனதுபெயர் உலகறியச் செய்தாய் எனது சாவிலுன்னை 356ï UITLë சொல்லியிருந்தேன் உன் சாவில் கவி பாட ஆக்கினதும் ஏனோ!
O7

Page 6
நாம் ஒத்த வயதினர் தான் நாம் நோயிலும் ஒன்றானோம் நீ எனக்கு வைத்தியன் நான் உனக்கு வைத்தியன் எனது இதயம் இடக்குப் பண்ணியது மரணம் என்பது நிச்சயமானது வரும் வேளை வந்தே தீரும் அதுவே விதி எழுதப்பட்டது. நியோ இதயத்தைப் பிளந்து பை ரோட்டுப் போட்டாய் நான் வேண்டா மென்றேன் நீ என்னை ஏமாற்றி விட்டாயே!
நான் நினைத்தால் நீ ஓடி வருவாய் நீ நினைத்தால் நானும் ஒடி வருவேன் இருவரும் ஒன்றாகி இருப்பது எப்போது. ஐயோ என்றலற இதயம்
வலிக்கிறதே! ..
மரண ஒட்டப் பந்தயத்தில் நான் தாவும் முயலானேன் நீயோ நகரும் ஆமையாகி என்னை வென்று விட்டாயே! மண்ணிற் பிறந்தவர் மண்ணிலே மறைவர் என்ற இறைவிதி விண்ணுக் கழைத்ததா! மீண்டும் நீ வருவாயா? நீ முந்திச் சென்றாய் நாமும் பிந்தி வருவோம் நான் மறுபிறவி எடுக்காதவன் அது எனது மத விதி எது வரினும் சந்திக்கலாமோ?
முற்றத்து மல்லிகை மணக்காதென்பர் ஆலய வாசமும் சூடமும் சாம்பிராணி சந்தனமும் உனது மல்லிகை மணம் அடக்கி விட்டதே ஆலய மணியின் ஓசையை உன் சிங்க நாதம் அடக்கி நின்றதே. தேவாரம் திருப்புகழ் திருவாசகமும் உன் நாவில் தேனாய்ச் சுரந்ததே நீ சைவப்பழமாய் குருவாகி புரோகிதனாகி தெய்வச் சந்நிதியில் அடங்கி நிற்பாயே மஞ்சள் குங்குமம் விபூதியும் சந்தனமும் நெற்றி நெஞ்செல்லாம் பூத்திருக்கும் காட்சியை காண்பதெப்போது?
பாடகனாய், கூத்தாடியாய், நாடக இயக்குனராய், நடிகனாய், கலைஞனாய், கவிஞனாய், கதாப் பிரசங்கியாய், சிங்காரப் பேச்சாளனாய், எழுத்தாளனாய், சொல்லோவியனாய், மெல்லிசை மேதாவியாய், வில்லிசை வேந்தனாய், முத்தமிழ் வித்தகனாய், தெம்மாங்கு பாடும் தேனமுதத் தமிழனாய், சாமிகள் துதிபாடும் சாம பக்தனாய், ஆசிரியனாய், அதிபனாய், சகல கலாவல்லவனாய் சாகசங்கள் செய்யத் துணிந்தாய். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தாரன்று சிங்களதேசத்தில் நீதமிழ் வளர்த்தாய் முத்தமிழையும் சொத்தாக மதித்து முடி சூடி நின்றாய்
கலை அரங்குகளில் கலாச்சார சாலைகளில் சமய சன்மார்க்க விழாக்களில் நாயகனாய் திகழ்ந்தாய் அரசியல் மேடைகளில் பாட்டுடன் பண்கலந்து நாட்டும் சொற்சுவையில் அலங்காரப் பேச்சில் கட்டுண்டு தேனுண்டு மயங்காதோர் யார்? தேசத் தலைவர்களின் பாசமிகு பாட்டு வாத்தியரானாயே
O8

உனது வில்லு பண்ணிசைக்கும் சலங்கை நடனமாடும் கண்கள் அபிநயக்கும் நாவோ கதையளக்கும் விரல்கள் காந்தமாகும் ஈழத்தின் தமிழுலகில் பாரதத்தின் தமிழகத்தில் மலாயா சிங்கப்பூரில் வில்லிசை முழக்கி விட்டாய் ஐரோப்பிய நாடுகளும் அழைத்ததாய் சொன்னாயே அங்கே போவதாய்ச் சொன்னாயே ஆனால் அதையும் பொய்யாக்கி அமரர் உலகில் வில்லிசைபாட விண்ணிற்சென்று விட்டாயே ஐயோ இந்த உலகு என்ன பாவஞ் செய்தது.
தெய்வத்தின் தொண்டுக்காய் செருப்பாகத் தேய்ந்தாய் அந்த தெய்வமும் உன்னைக் காப்பாற்றத் தோற்றதுவோ
வண்ணத்துப் பூச்சியைப் போல் வட்டமிட்டுத் திரிந்தாய் நீ வண்ணத்திப் பூச்சியைப் போல் விரைவில் மறைவதற்கா
எழுபது வருடங்கள் தொடங்குமுன்னர் முடித்துக் கொண்டாயே தந்தை தமையன் வழியில் உன்பாடல் இனி ஓய்ந்து போனதையோ
உன் நினைவு நீங்காத நெஞ்சுடையோன் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. முத்தலிப் ஜே.பி. புளிச்சாக்குளம்
யுக புருஷன் சோமாஸ்கந்தர் உடப்பு சோமாஸ்கந்தர் என்றால் மேடையில் கம்பீரமாக இருக்கும் வில்லுப்பாட்டு தோற்றம்தான் மனக்கண்முன் வரும். அந்த அளவுக்கு அவரும் வில்லிசையும் ஒன்றிணைந்து இருந்தனர்.
புராண இதிகாசக் கதைகளையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் நவீன சினிமா பாடல் கருத்துக்களையும் தனது கம்பீரமான குரல் வளத்தின் நாதத்தில் கதாப்பிரசங்கம் வில்லுப்பாட்டுக்கள் மூலம் இலங்கையிலும் பிற நாடுகளிலும் பரப்பினார்.
‘கருவில் திரு” என்று கூறுவார்களே ! தாயின் கருவிலே கலைமகள் பூரணமாக குடிகொண்டிருந்தாள். அவரது வாக்குகள் கலைமகளின் ஆசீர்வாதம்.
நல்லதொரு நூலகத்தை தனது வீட்டிலே கொண்டிருந்த அவர் நாடக இயக்குனராக கிராமிய கலைப் பெட்டகமாக சகலகலா வல்லவனாக விளங்கிய அவர் எமது ஊரின் யுக புருஷனாவார்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்திப்டோம்:
O9

Page 7
வில்லிசைக்கு பெரும் இழப்பு
கலாபூஷண விருதுபெற்ற பிரபல வில்லிசை கலைஞர் உடப்பூர் பெரி. சோமாஸ்கந்தரின் மறைவு வில்லிசைக்கு பெரும் இழப்பாகும். சோமாஸ்கந்தர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வில்லிசைகளை நடத்தி மக்கள் மத்தியில் சமய கலை கலாச்சார உணர்ச்சிகளை தூண்டி எழுச்சி ஊட்டியவர்.
அன்னாரது இழப்பு அவரது குடும்பத்தாருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் ஐயமில்லை. இவர் வில்லிசைக்கு செய்த சேவையைப்போல் தெய்வீக கலைப்பணிகளிலும் சமூக சேவைப்பணிகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் ஆவார். இவரது குடும்பத்தில் இவரைப்போலவே இவரது சகோதரர்களும் இப்பணிகளில் ஈடுபாடு கொணர் டவர்களே இது இவர்கள் குடும் பதி தின் சிறப் பினை எடுத்துக்காட்டுகின்றது.
இவரது மரணசெய்தி கேட்டு ஆழ்ந்த வேதனைக்கு உள்ளானேன். அன்னாரது இழப்பால் தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். 楼”
ஆர். ராதாகிருஷ்ணன் பாராளுமன்ற உறுப்பினர் O O கொழும்பு உடப்பின் கலைவடிவம் நாடறிந்த கலைஞர் சோமாஸ்கந்தர், நல்ல திறமைசாலி, சகல துறைகளிலும் ஆற்றல் படைத்தவர் எமது திணைக்களத்தில் நடைபெறும் சகல நிகழ்வுகளிலும் அவர் பங்கு கொண்டது உண்டு.
இவரின் திறமையை கெளரவிக்கும் முகமாக எமது திணைக்களம் “அருட்கலைதிலகம்” பட்டம் சூட்டி இவரை கெளரவித்தது. அன்னாருக்கு ‘கலாபூஷணம்’ விருதையும் வழங்கி எமது திணைக்களம் உந்து சக்தியாக இருந்தது.
உடப்பு கிராமத்தின் பெருமைகளை கலை வடிவங்களை வெளிப்படுத்திய ஒரு மேதை இவராவார். சைவப்பணிகள் மட்டுமன்றி நாடகம் நாட்டியம், பாட்டு, கூத்து என்று தான் பிறந்த மண்ணின் கலைவடிவங்களை தன்னகத்தே கொண்டு விளங்கியவர்.
இவரது பிரிவால் தவிப்பது உடப்பூர் மக்கள் மட்டுமல்ல. இலங்கைவாழ் அனைத்து கலையுலக மக்களுமே ஆகும். அன்னாரது மறைவால் தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு துயர் கலந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இவரது ஆன்மா இறைவனடிசேர பிரார்த்திக்கின்றோம். V−
எஸ். விக்கிரமராஜா பிரதிப்பணிப்பாளர் இந்து கலாச்குரார அலுவல்கள் திணைக்களம்

காலத்தை வென்றவர் காலம் கலைஞனைக் கொன்றுவிடும் ஆனால் அவனது புலமை என்றும் எல்லோராலும் பேசப்படும். இதன் மூலம் ஓர் சிறந்த கலைஞன் அவன் ஊடாடிய மக்கள் மனங்களில் நீண்ட காலம் வாழ்ந்து கொண்டே இருப்பான். இந்தவகையில் எங்கள் பெரும் மதிப்புக்குரிய பெரி. சோமாஸ்கந்தர் ஐயா அவர்கள் இன்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே உணர்கின்றோம்.
'அன்பெனும் அருங்குணத்தான் உலகத்தார் உள்ளத்தில் உளன்’ என்றபடி மக்கள் மனதில் நிறைந்தவர். தன் நாவன்மையால், சொல்வளத்தால் மேடைகளில் வெற்றித்திருமகனாக உலா வந்த வேளையில் காலன் அவரை எம்மிடமிருந்து களவர்டிவிட்டான். ஆனாலும் அன்னார் காலத்தை வென்று தன் கலைத்திறத்தால் மக்கள் மனதில் காவியமாகப் பதிந்துவிட்டார். அவரது நினைவுகள் மக்கள் மனத்திரையில் என்றும் நிழலாடும். அவரது புலமை, புகழ், கீர்த்தி ஞாலத்தில் என்றும் நின்று நிலவும் அவரது ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம்.
எல்லாம் வல்ல சித்தி விநாயகப் பெருமான் அன்னாரின் மனைவி மக்களுக்கும், உற்றார் உறவினருக்கும் என்றும் துணைபுரிவாராக.
“ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல
யாரும் சதமல்ல நின்தாள் சதம்
இறைவா கச்சி ஏகம்பனே’ புத்தளம் ரீ சித்திவிநாயகர்
ஆலய பரிபாலன சபை
* மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்??
வடமேல் மாகாணத்தில் புத்தள மாவட்டத்தில் உடப்பூர் கிராமத்தில் தோன்றி இறுதி வரை புகழோடு வாழ்ந்தவர் அமரர் திரு. பெரியாண்டி சோமாஸ்கந்தர் அவர்கள்.
எமது சபையிலே வில்லுப்பாட்டு, சொற்பொழிவுகள், கருத்துரைகள் ஆகியவை அன்னாரினால் பலதடவைகள் செய்யப்பட்டள்ளன. எமது அழைப்பினை ஐயா உதாசீனம் செய்ததில்லை, சமய வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் ஆற்றிய சேவைகள் மறக்க
முடியாதவை.
எல்லாக் கலைஞர்களுமே தங்களுக்கென ஒருவாரிசை உருவாக்கிவிட்டு செல்கிறார்கள். “உடப்பூர் வில்லிசை” என்ற சிறப்பினைத் தொடர இதுவரை ஐயாவின் வாரிசுகள் யாருமே முயலாதது, மிகவும் கவலைதான் அவரது நாமம் வாழ அவர் பணிகளை தொடர அவரது வாரிசுகள் இனியாவது முயல வேண்டும் என விரும்புகின்றோம்.
வாழ்க ஐயாவின் புகழ் வளர்க அவரது நாமம்.
அன்னாரது இழப்பினால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள
அனைவருக்கும் எமது மனப்பூர்வமான அனுதாபங்களை தெரிவித்துக்
கொள்கின்றோம் தா. முருகேசம்பிள்ளை
தலைவர் புத்தளம் இந்து மகா சபை.
11

Page 8
மாமேதை உடப்பூர் ஆசிரியர் சோமாஸ்கந்தர் அமரராகிவிட்ட செய்தி கேட்டு எனக்குள் திடீர் அதிர்ச்சி என்ன செய்வது மனிதனாக பிறந்த அனைவருமே
" .. ஒருநாள் மரணத்தை தழுவ வேண்டுமென்பது உலக நியதிதானே.
1962ம் ஆண்டு என நினைக்கின்றேன் நீர்கொழும்பு விவேகாநந்தா வித்தியாலயத்தில் (நீர் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) கல்வி கற்கும்போது புன்சிரிப்புடன் தேசிய ஆடையுடன் ஒரு ஆசிரியரைக் கண்டேன் அவர்தான் ‘சோமாஸ்கந்தமாஸ்டர்” என எனது சக மாணவர்களால் தெரிந்து கொண்டேன். மிக மென்மையான உள்ளம் கொண்டவர் பிரம்பைக் கையில் பிடித்துக்கொண்டு செல்லும் சக ஆசிரியர் வரிசையிலே விதிவிலக்கானவர் என்று கூறினால் அது மிகை ஆகாது.
பாடசாலை அன்றைய நாட்களிலே கலைவிழா நிகழ்வில் நாடகமாகட்டும். நாட்டியமாகட்டும், நாட்டுக் கூத்து ஆகட்டும் எல்லாவற்றையும் தான் பொறுப்பேற்று விழாவினை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர். ዯ
அமரர் சோமாஸ்கந்தர் ஆசிரியர் என்று தெரியும் ஆனால் வில்லிசை கலைஞர் என்று முதன்முதலாக நீர்கொழும்பு மண்ணிலே பூரீ முத்துமாரி அம்மன் ஆலய உற்சவத்தின் போதுதான் தெரிந்து கொண்டேன் அவர் தம் வில்லிசையின் போது தான் கற்பித்த பாடசாலையையும், தம் மாணவர்களையும் ஞாபகப்படுத்தி பேசாமல் ஒரு போதும் தம் வில்லிசை நிகழ்ச்சிகளை முடிப்பதில்லை.
ஒரு நல்ல் மனிதனாக, ஆசிரியனாக, அதிபராக, வில்லிசை கலைஞனாக மக்கள் தொண்டனாக என்றும் மக்கள் மனதில் இடம் பிடித்து அமரராகி விட்டதை நினைக்கும் பொழுது அவருடைய மாணவராகிய நாங்கள் பெருமை கொள்ளாமல் இருக்க முடியுமா?
‘தோன்றிற் புகழோடு தோன்றுக அ.திலார் தோன்றலில் தோன்றாமை நன்று’ என்ற குறள் வழி வாழ்ந்து அருட்கலைதிலகம், கலாபூஷணம், ஆகிய பட்டங்களை தன்னகத்தே சுமந்து மக்கள் மனதில் இடம் பிடித்த மாமேதையாகி அமரராகி விட்ட ‘சோமாஸ்கந்த மாஸ்டரை' என்றென்றும் நினைவு கூர்ந்து நிற்கும் பழைய மாணவர்கள். Vr
8 தலைவர். எளில் நடராஜன்
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 93s? பழையமானவர் மன்றம் நீர்கொழும்பு
12 سيي

நீத்தார் பெருமை
- உடப்பு கிராமத்தின் பெயரை நாடறியச்செய்த பெரி.சோமாஸ்கந்தர் எனது 40 வருடகால நண்பர். 1966ம் ஆண்டு மாத்தளை விஜய கல்லூரியில் நடைபெற்ற விபுலாநந்தர் விழாவில் இருவரும் கலந்து கொண்டோம். இசையோடு கூடிய அவரது உரை என்னை வெகுவாக கவர்ந்தது. அன்று முதல். எமது நட்பும் வளர்ந்தது. அவ்வருடத்திலேயே ‘பாரதி வருகிறார்” என்னும் வில்லிசையை அசோகாவில் ஏற்பாடு செய்தேன். அதில், பாரதி மலையகத்திற்கு வந்து மலையகத்தில் நிலவும் அறியாமை, அறிவின்மை, சாதிச்சண்டைகள், மூடநம்பிக்கைகள், அடக்குமுறை போன்றவற்றைச் சாடுவதாக அமைந்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது. சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.
தொடர்ந்து கண்டி யூரீ செல்வ விநாயகர் ஆலயத்தில், மத்திய மாகாண இந்து மாமன்றத்தின் ஆதரவில் நடைபெற்ற சிவராத்திரி விழாக்களில் அவரது வில்லிசையை இடம்பெறச்செய்தேன். 1983ம் ஆண்டு இந்து கலாசார நிலையம் திறந்து வைக்கப்பட்ட தினத்தன்றுஅம்மன்ற வரலாற்றை வில்லிசையாக பாடிய பெருமையும் அவரையே சாரும்.
22.10.1984 அன்று எமது ஸ்தாபக அதிபர் உயர்திரு.பிடி. ராஜன் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் பூரீமதி புஸ்பம் ராஜன் அவர்கள் இறைவனடி சேர்ந்தபொழுது அன்னாரது நினைவாக அவரே இயற்றி இசையமைத்து தமது வெண்கல குரலில் திரு. சோமாஸ்கந்தர் பாடிய பாடல்கள் இன்றும் எனது காதுகளில் ரீங்காரமிடுகின்றன. அப்பாடல்களால் நெகிழ்ந்த திரு. இராஜன் அவருக்கு 'கருத்தோ வியன்’ எனும் விருதினைவழங்கினார். அமரர் சோமாஸ்கந்தர் ஒரு சகலகலா வல்லுநர், கவிஞர், பாடகர், இசையமைப்பாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், ஒதுவார், புலமைமிக்க தமிழ் ஆசிரியர். நிர்வர்கத்திறமை மிக்க அதிபர் என இன்னோரன்ன துறைகளில் தனது முத்திரையினைப் பதித்துச் சென்றுள்ளார். அன்னாரது மறைவு நமது நாட்டின் கலைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதைவிட வேறு என்ன செய்ய முடியும்? வாழ்கஅவரது நாமம்.
)ślub. BLU. Tgrt (B.SC Dip in Ed // ܠܢ S つ அதிபர்
அசோகா விச் 6Ùեւ ILi
プ ご த்தியாலயம் கண்டி
13

Page 9
பூனூல் 6lIILI), பிராமணர்
இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு புரட்டாதி மாதம் இருபத்து ஏழாம் நாளுக்கு என்ன நடந்தது? வில் ஒடிந்தது. நாண் அறுந்தது, தேமாங்கு திசையின்றி தவித்தது.
விண்ணையும் வியக்க வைத்த வில்லிசை வீழ்ந்தது. மண்ணையும் மலைக்க வைத்த மழை ஒய்ந்தது பூபாளம் நின்றது. பார்த்தசாரதி கோயில் மணி நாதத்தை இழந்தது. பண்ணிசை ஒதுவாரைத் தேடி அலைந்து கடல் அலை சிதைந்தது. கலைக்கூடம் களையிழந்தது. உடப்பூர் உறைந்தது. நிகும்பலை நீரைச்சிந்தியது. அகிலம் அழுதது. ஆம். உடப்பூரின் மணிமகுடம் சரிந்ததாம்.
மக்கள் மனங்களை வில்லிசையால் ஈர்த்து, அம்மனங்களை வென்று நிலைத்து விட்ட உடப்பூரான் கலாபூஷணம் பெரி. சோமாஸ்கந்தர் கலையுலகுக்கு கையசைத்து கண்ணை மூடிவிட்டார். ஐம்பது நாள் அடக்கம் அரை நொடியில் அவர் உயிரைப்பறித்தது. துயரம் தான் என்னே, துன்பச் செய்தியும் கூட.
1934இல் உடப்பில் தோன்றி சிங்களக் கிராமங்களுக்கு மத்தியில் தமிழ் மணம் கமழுகின்ற உடப்பூரில் வளர்ந்து சைவத்தையும், தமிழையும் இருகண்களாகக் காத்த, தொன்மைப் புராணங்களை தெளிவாகத் தெரிந்து சங்ககால இலக்கியங்களை சரித்திரத்துடன் சந்தித்து - இந்து தத்துவத்தைப் பேணி ஒழுகி பூணுால் போடாமல் - வேதம் ஒதா பிராமணனாக அக்கலைகளை ஐயம் திரியுறக் கற்று ஆசாரம் காத்த நல்லடியார் தான் இவர்.
சாத்துப்படி என்ன? சங்காபிஷேகம் என்ன? இலட்சார்ச்சனை என்ன? திருவிழாக்காலம் என்ன? தீ மிதிப்பு என்றால் என்ன? பிராமணர்களுடன் ஒன்றாக அரும் பணியாற்றுவார். இவரின் செயற்கரிய செயலினை உணர்ந்த விஸ்வநாதக்குருக்கள் அவர்கள் ‘பூணுால் போடாத பிராமணன் நீ" என்று அன்புடன் விழித்தார்கள். அவ்வாறான சைவமகன் தான் இவர்.
கம்பீரமான சிம்மக்குரலில் பாடசாலைகளிலும், கோயில்களிலும், சமூக நிறுவனங்களிலும், தமிழர் தம் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை, தாம் கற்றவற்றை, கேட்டவற்றை, ரசித்தவற்றை, அனுபவங்களைத் தருகின்ற பண்பு, பிரசங்க மூலம் சொல்லுகின்ற பாங்கு சான்றோரையும், அவையோரையும் சுண்டியிழுக்கும் வசீகர காந்தப் பேச்சு ஆம் “சொல்லின் செல்வர்” எனப் பட்டத்தையும் உள்வாங்கிக் கொண்ட உயர் உள்ளம் படைத்தவர் தான் இவர்.
14

வில் எடுத்து சொல்லிசைத்து, பண்ணிசைத்து, கதை சொல்லி பாட கேட்க பெருங்கூட்டம் கூடும். மக்கள் மனங்கள் இன்பத்தில் திளைக்கும். தாளலயம் கதை பூராச் செறிய கைதட்டல்கள் வானைப் பிளக்கும்.
மண்ணை நேசித்த காரணத்தால் உடப்பூர் வில்லிசைக்குழு' எனப் பெயரிட்டு றாகலையில் படிக்கும் போது தான் தொடங்கினார்.
எமது விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரியின் ஆரம்ப கால ஆரம்ப வகுப்பு ஆசிரியர். கற்பித்தலுடன் நாடகம், நாட்டுக்கூத்து, வில்லிசை, பேச்சு என்பவற்றை மாணவர்களுக்கு பழக்கி பெற்றாரின் நன்மதிப்பையும், கல்வி அதிகாரிகளின் புகழையும், பாடசாலையின் கீர்த்தியையும் பெற்றவர்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர். கேட்டவற்றைச் செய்து தருபவர். எங்கள் மாணவர்களின் வில்லிசையை நாடறியச் செய்தவர்.
மகாபாரதமென்ன? திருப்பாவை என்ன? ஐம்பெரும் காப்பியங்கள் என்ன? எந்த நேரம் எதைக் கேட்டாலும் சொல்லுகின்ற திறன், சந்தேகத்தை போக்கும் தன்மை கொண்ட அவர் ஒரு நடமாடும் ‘கலைக்கூடமாக (என்சயிக்கிலேப் மீடியா) திகழ்ந்தார்.
கலைகளின் பால் ஆற்றிய பணிக்காக ஜனாதிபதியால் 1997ல் ‘கலாபூஷணம்’ விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக தன்னைக் கோயில் பணிகளுக்காக அர்ப்பணித்திருந்தார். இவர் இழப்பு கலை உலகிற்குப் பெரும் இழப்பு. எமக்கெல்லாம் ஈடு செய்ய முடியாத இழப்பு.
இவ்வாறான கலைஞனை - பல்வித்தகரை எப்போது மீண்டும் நாம் காண்போம்.
என். கணேசலிங்கம் (அதிபர்) நீர்கொழும்பு விஜயரத்னம் இந்து மத்திய கல்லூரி நீர்கொழும்பு
15

Page 10
அஞ்சலி (அந்தாதிக் கவிதை வடிவம்)
உத்தம புத்திரன் உடப்பூரின் தவச்செல்வம் நித்தமும் இறைபுகழ் பிாடிப் புகழ்ந்தவன் குத்திட மனங்களில் பிரிவுத் துயரம்பு முத்தியை அடைந்தனன் முழுமை வாழ்வு கண்டு
வாழ்வு கண்டு பெரி சோமாஸ்கந்தரின் சீரான தாழ்ச்சி கண்டு அன்னாரின் தகைமைப் பண்பில் மாட்சி பெற்றோர் பலருண்டு மனமகிமையால் காட்சி தந்தஉடலை விட்டு பெற்றார் புகழுடம்பு
புகழுடம்பு வையகத்தில் மட்டுமல்ல'வானிலும் தான் புத்தளத்தின் உடப்பூர் பெற்ற மகன் சென்றிட்டார் புதுவாழ்வை இறைபதத்தில் பெற்றிட்டார். புத்திரனாய் சுவர்க்கத்தில் பிறந்திட்டார்.
பிறந்திட்ட யாபேரும் நலன் செய்து வாழ்வதுவே சிறந்திட்ட வாழ்வென்று மறைகள் கூறும் திறந்திட்ட மனதினனாம் சோமாஸ்கந்தர் நினைவினிலே. இறந்திட்ட மனிதர்போல இல்லை ஐயா உம் நினைவு.
எம் நினைவு நாம் கொள்ள எட்டுப் பிள்ளைச் செல்வம் பெற்றீர் அயலார் அன்பை இனிதாய் என்றும் பெற்றிருந்தீர். தயவாய் ஐயா ஏரும் எந்தன் விண்ணப்பத்தை இறையின் பதத்தில் எமக்காய் நீரும் வேண்டிக்கேளும்.
ஆர்.எஸ் .இம்மானுவேல் புஸ்பராஜன்.
உதவிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) கல்விப் பணிமனை புத்தளம்.
16
 

வரலாற்று நாயகன்
‘வரலாறு என்பது தனி ஒரு மனிதனால் உருவாக்கப்படுவதில்லை. ஆனால் வரலாற்றின் இயக்கப்போக்கினைத் தெரிந்து மாற்றங்களை முன்னெடுக்கும் மனிதர்கள் வரலாற்று நாயகர்களாக வரலாற்றில் இடம் பெறுகின்றார்கள்’
- பிளக்னொவ் -
உடப்பு என்ற ஊரின் பெயரை அகில இலங்கை எங்கும் பரப்பிய பெரி.சோமாஸ்கந்தர் என்னும் அற்புதத் தமிழ்க் கவிஞனை அறியாதவர் எவரும் இல்லை.
உடப்பூரின் நாடகத்தை, கலைகளை, கிராமியக் கலைகளை, கிராமிய வழிபாடுகளை, மரபுகளை, பண்பாடுகளை, வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்திய, அற்புத மண்ணின் உயிர்ப்பை ஜீவனுடையதாக்கிய பெருமை பெரி. சோமாஸ்கந்தரையே சாரும்.
தனியொரு மனிதனாக நின்று ஒரு ஊரின் மறுமலர்ச்சியில் இயக்கமாகவே இயங்கியவர். இந்தப் பிரதேசத்தில் சைவத்தையும் தமிழையும் ஒன்றிணைத்து வளர்த்தெடுத்த அதே நேரத்தில் அனைத்து சகோதர இனங்களையும் சமயங்களையும் உயர்வாக மதித்துப் போற்றியவர்.
வில்லிசை, சொற்பொழிவு மூலம் தமிழ் மொழியின் இலக்கிய நயங்களை, புராணங்களை, சைவசமய ஆன்மிக கருத்துகளை எல்லாம் எளிமையாக, இனிமையாக யாவர்க்கும் புரிந்துகொள்ளும் வண்ணம் கலைத்தொண்டு ஆற்றினார்.
அன்னாரின் இழப்பினை இப்பொழுது அல்ல. இனிவரும் க்ாலங்களிலேயே பெரிதும் உணரப்படும். தனியொரு உறவை இழந்து போன சோகம். அவர்தம் குடும்பத்தினர்களுக்கு மட்டுமே. ஆனால் ஒரு ஊரின் பண்பாடுகளை கட்டிக்காத்த வரலாற்று புருஷனை இழந்த தவிப்பில் உடப்பூர் மூழ்கியுள்ளது.
கலா பூஷணம் பெரி. சோமாஸ்கந்தர் அவர்களே என்றென்றும் இப்பிரதேசத்தினரால் நினைவு கூறத்தக்க தமிழ் மகனாக விளங்குவார் என்பது திண்ணம்.
மா. நாகராஜா அதிபர்
እኳ " ዖ பு. இந்து.தமிழ்.மகா வித்தியாலயம்.
(புத்தளம்.)
w V to y VA
V
2
S كة
S كة
S
” ܢ
S.
司
S.
17

Page 11
கலைத்துறைக்கு மாபெரும் இழப்பு
‘வடமேல் மாகாணம் தமிழர்களின் கலைத்திறன்ைஇலங்கை முழுவதும் ஓங்கி ஒலிக்கச் செய்த வில்லிசைக் கலைஞ்ர் உடப்பூர் பெ.சோமாஸ்கந்தரின் மறைவு கலைத்துறைக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கும் மாபெரும் இழப்பாகும்”
வடக்கு, கிழக்கு வில்லிசைக் கலைஞர்களுக்கு ஈடாக தனித்திறமை பெற்றிருந்தவர் அமரர் பெ. சோமாஸ்கந்தர். அத்துடன் இசையார்வலர், சிறந்த பேச்சாளர், நல்ல மாணாக்கர்களை உருவாக்கிய ஆசிரியர், வடமேல் மாகாணத்தில் சைவம் சிறந்து விளங்கும் உடப்பு கிராமத்துக்கு பெருமை சேர்த்தவர்.
மிக எளிமையான வாழ்க்கை நடத்திய அன்னார் பலபட்டங்களைப் பெற்றவர்.
இவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு குருநாகல் மாவட்டம் வாழ் தமிழ் மக்கள் சார்பாக இந்து நலன்புரிச் சங்கம் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
இந்து நலன்புரிச்சங்கம் குருநாகல்
வில்லுப்பாட்டு வித்தகர் சோமாஸ்கந்தர் மறைவுக்கு அமைச்சர் அஸ்வர் அனுதாபம்
தேசிய ரீதியிலும் சர்வதேசரீதியிலும் வில்லிசையில் புகழ்பெற்று விளங்கிய சோமாஸ்கந்தரின் மறைவு தமிழுலகுக்கு ஏற்பட்ட நிரப்ப முடியாத இடைவெளியாகும் . உடப்பு திரெளபதை அம்மனி ஆலய திருவிழாக்களிலெல்லாம் இவரது வில்லிசை சிறப்பிடம் பெறும். ஒரு கவிஞராகவும், ஆசிரியராகவும் திகழ்ந்த சோமாஸ்கந்தர் தமது மாணவர்களை ஒழுக்கத்துடன் பயிற்றுவிப்பதில் அதீத பிரயத்தனம் எடுத்து, ஏனையோருக்கும் முன்மாதிரியாக விளங்கினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
அல்ஹாஜ் ஏ.எச். எம். அளல்வர்
பாராளுமன்ற விவகார
அலுவல்கள் அமைச்சர்
(NR1O
aC, oSC
18

இரங்கலுரை
இன்று எம்மை விட்டு அமரத்துவம் அடைந்து விட்ட உடப்பூர் பெரி. சோமாஸ்கந்தரின் ஆற்றல்களும், திறன்களும் தனித்துவம் பொருந்தியவையாக அமைந்துள்ளன. அதனை ஈடுசெய்வதென்பது முடியாத காரியம் தான்.
கடந்த 38 வருடங்களுக்கும் மேலாக வில்லிசைக் கலையை
இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் சிறப்புடன் மேடையேற்றிவந்த அமரர் சோமாஸ்கந்தர், இங்கு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இதன் புகழைப் பரப்பியதன் மூலம் நமது நாட்டுக்கும் பெருமையைத் தேடித்தந்தார்.
இவரது சொற்பொழிவுகள், பாடல்கள், கதாப்பிரசங்கங்கள் என்பன மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன. சோமாஸ் கூட்டத்தில் பேசுகிறார் என்றால் மக்கள் அப்படியே மெய்மறந்து கேட்பார்கள். இனிமேல் அவரது ஒலியை எங்கே கேட்கப்போகிறோம். மத மார்க்க விடயங்களில் இவர் பெரிதும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அன்னாரின் சேவை இன்னுமொரு பத்து வருடங்களுக்காவது எமக்குக் கிடைத்திருந்தால் நாம் பெரிதும் சந்தோஷப்பட்டிருப்போம். ஆனால் அதற்கிடையில் கடவுள் அவரை அழைத்துக்கொண்டு விட்டார்.
இவரைப்போன்ற திறமை படைத்தவர்கள் இனிமேலும் தோன்றுவது அரிதுதான். அன்னார் வளர்த்த வில்லிசைக் கலையை இப்பகுதியில் அழியவிடாமல் பாதுகாப்பதே அன்னாருக்கு நாம் செய்யும் கைமாறாகும்.
அல்ஹாஜ் நவாவி வடமேல்மாகாண காதார, முஸ்லிம் விவகார அமைச்சர் புத்தளம்
இயக்குனர் இமயத்திற்கு காணிக்கை
இறைவன் திருவடி சென்றடைந்து நவ இளங்கதிர் நாடக நெஞ்சங்களை மாளாதுயரில் ஆழ்த்தி தவிக்கவிட்ட எங்கள் இயக்குனர் தெய்வத்தின் ஆத்மா அவர் நிதம் துதிபாடி துதிக்கும் பாற்கடல் பரந்தாமன் பாதங்களில் நிலைபேறு பெற வேண்டி பிரார்த்திப்பதுடன் எங்கள் இமயத்தின் இயக்கத்தில் வெற்றி பெற்ற நாடகங்களை காணிக்கை செலுத்துகின்றோம்
அளந்தளவு (1989) தர்மபத்தினி (1997) 0L S LESSL SLLL S ATSLSSSLSS பகவத்கீதை (1998) மகாபாரதத்தில் இருந்து நூதன சீதனம் (1999 வரலாறனு நாடகம பாசுபதம் (2000) கலிங்கத்தின் கைதி (1987) - சரித்திரநாடகம்
ஒரே சங்கமம் (1989) a
as a W FepE 5-D சதுரங்கம் (1995) L7 நவ இளங்கதிர் தொடுவான மனிதர்கள் (1998)
sbs!! 8, uD6öII)li)
19 it

Page 12
வடமேல் மாகாணத்தின் ஒளிக்கீற்று
வடமேல் மாகாணத்தில் தமிழ் மக்கள் நிறைவாகவும் செறிவாகவும் வாழ்ந்து வரும் இடம் உடப்பு. இக்கிராமம் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் தளமாக இருக்கின்றது.
தமிழரின் பாரம்பரியத்தையும் கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும் கலைப்பாலம் அமைக்கும் இடமாக கவிஞர்களும் அறிவு ஜீவிகளும் காணப்பட்டாலும் இவைகளுக்கு எல்லாம் முன்னுதாரணமாக திகழும் கலைஞர்தான் அமரர் பெரி. சோமாஸ்கந்தர்.
கலைஞராக, நடிகனாக, பாடகனாக இலக்கியப் பேச்சாளனாக, கவ்ஞனாக பலமுகப் பார்வையில் தன்னை இனம்காட்டி வந்த இவர் உடப்புக் கிராமத்தின் தனிப் பெரும் சொத்தாகும். கலைத் துறையில் ஆளுமையைப்பதித்து, புதுப்பித்து வந்த அமரர் பெரி. சோமாஸ்கந்தரின் ஆற்றல்களை கலை உலகம் இன்று இழந்து தவிக்கின்றது. அன்னாரின் இழப்பு கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக.
வீ. வீரசொக்கன் எழுது வினைஞர் பிரதேச செயலகம் முந்தல், வீரகேசரி நிருபர் உடப்பு.
கலைக்கூடம்
சொல்லின் செல்வனாக, கலைமாமணியாக, வில்லிசை வேந்தனாக, மேல் இடத்தின் புகழாக, கலைக் கூடங்களின் அதிபனாக கடமையாற்றிய என் கண்ணான பெரி. சோமாஸ்கந்தர் ஜயா மலர் கசங்கிப்போனதை இட்டு உங்கள் அருமை மைத்துணனாகிய நான் கண்ணிர் வடிக்கின்றேன்.
என் கலையை வளர்ப்பதற்கு அடிவேராக இருந்தமரம் சாய்ந்து விட்டதையிட்டு கவலைப்படுகின்றேன். என்னை எங்கு சென்றாலும் அழைத்துச் செல்வீர்கள். உங்களுடன் சென்றதால் ‘கலைச்சுடர்' என்ற பட்டமும் பெற்றேன் இப்போது நான் எந்தப் பட்டம் பெறப்போகின்றேன்.
உங்கள் புகழ் மறையாமல் ஓங்கி நிற்க நீங்கள் சென்ற இடமெல்லாம் சென்று உங்கள் புகழை காப்பாற்றுவேன்
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து அந்த இறைவனிடம் சேர பிரார்த்திக்கின்றேன்
மாறாத்துயரில் வாடும் கலைச்சுடர் பெ. ஐயம் பெருமாள்(அம்முனா) உடப்பூரான் பெரி. சோமாஸ்கந்தர் வில்லிசைக் குழுவின் சிரேஷ்ட கலைஞர் உடப்பு 05
2O

முத்தமிழ் வேந்தர் அமரர் கலாபூஷணம் பெரி. சோமஸ்கந்தர் ஐயா அவர்கள் நாடகத்துறைக்காக சிறு பராயத்திலிருந்து முதியோர் பருவம் வரையும் செய்த பணிகளைப் பற்றி சொல்வதென்றால் நாள் போதாது. எழுதுவது என்றால் தாள் போதாது. ஐயா அவர்கள் எங்கள் யூரி கந்தசாமி நாடகமன்றத்திற்கு ஆற்றிய பனிகளைப்பற்றி சில வார்த்தைகள் கூற விரும்பி இதை எழுதுகின்றேன்.
எமது ஊர் ரீபார்த்தசாரதி திரெளபதாதேவி ஆலய 1974ம் ஆண்டு நடைபெற்ற மகாகும்பாபிஷேகத்தன்று இந்து ஆலய பரிபாலன சபையால் புராண நாடகமொன்றை நடத்தும்படி எங்களைக் கேட்டுக் கொண்டனர் அதன் பின் ஐயா அவர்களைச் சந்தித்து விடயத்தைச் சொன்னோம். உடனே ‘பாஞ்சாலிசபதம்’என்ற புராண கதையை நாடக வடிவமாக எழுதி பாடல்களையும் இயற்றி அதற்கேற்ப இசையமைத்து நட்டுவாங்கமும் செய்தார். நாடகம் மேடையேறியபோது ஒப்பனையும் காட்சிகளையும் சிறப்பாக செய்து மக்கள் மனதில் நல்லதொரு பேரும் புகழையும் பெற்றுத் தந்தார்.
எமது ஊர் ஆடித்திருவிழாவாகிய தீமிதிப்புக் காலங்களில் ஐயாவின் கதைவசனம் பாடல்கள் இயற்றி நட்டுவாங்கம் செய்த மலர்ந்த வாழ்வு *ஒரேமுத்தம்' ஆகிய நாடகங்களையும் எங்கள் நாடக மன்றத்தின் அனுசரணையுடன் எம்.வி.எம். தயாரித்த வத்சலா கல்யாணம்' என்ற நாடகத்தையும் மேடையேற்றி புகழ் வாங்கித் தந்தார். எங்கள் நாடகங்களுக்கு கிடைத்த பேரும் புகழும் ஐயாவையே சாரும். ஐயா அவர்கள் நாடகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்ற கருத்துகளுக்கு செவி சாய்த்து நடந்ததை எனது அனுபவத்தில் கண்டிருக்கின்றேன். நான் அறிந்த வரையில் ஐயா அவர்கள் இயல், இசை, நாடகம் போன்ற முத்துறைகளிலும் சகல கலாவல்லவன் என்பது வெள்ளிடைமலை.
கொழும்பு தமிழ்ச் சங்கம் என். பத்மநாதன்
பூர் கந்தசாமி நாடக மன்றம் நுസെകb 2d LLIL
لسے جلسے جعل سے تعا لسے جلسے تع)
ܡܠܒܐ ܡܠܒܐܒܐ vías váGs سکے۔
21

Page 13
மலையக மக்கள் மனதில் வில்லிசைக் கலையை பதிய வைத்தவர் அமரர் பெரிசோமாஸ்கந்தர்
மலையகம் கலைகள் வளர்வதற்கு களமமைத்துக் கொடுத்து வரும் ஓர் உன்னத இடம்.
காமன் கூத்து, நாட்டுக்கூத்து, அர்ச்சுனன் தபசு, கரகாட்டம், காவடியாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், மேடை நாடகங்கள் போன்ற கலைகள் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் உயிரோட்டமடைந்துவரும் வேளையில், இக்கலைகளுக்கு மத்தியில் ஒர் உத்வேகத்துடன் 1965 ஆண்டு வில்லிசைக்கலை ஊடுருவியது மக்களின் கலையுணர்ச்சி ஊக்கமடைந்தது. இதற்கு வித்திட்டவர் வில்லிசை சக்கரவர்த்தி சொல்லின் செல்வன் அமரர். பெரி. சோமாஸ்கந்தர்.
இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 1965 ஆண்டு கல்விப்பணியை மேற்கொண்ட அமரர். சோமாஸ்கந்தர் அவர்கள் கல்விப்பணியோடு கருத்தாழமிக்க இலக்கிய பேச்சாற்றலை மலையகத்தில் கல்விச்சாலைகளிலும், பொது மேடைகளிலும், ஆலயங்களிலும், பரவலாக பரப்பினார் பலரும் பரவச மானார்கள்.
தோட்டங்கள் நகர்புறங்கள் ஆலயங்கள் போன்ற பலவற்றிலும் ‘வில்லிசை முழங்கியது 06-02-1968ல் நுவரெலியா மாநகரில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாநாட்டில்கவியரசு கண்ணதாசனின் பாராட்டுதலைப் பெற்றார்.
பதுளை பண்டாரவளை, பசறை, கண்டி, மாத்தளை, ஹற்றன், நாவலப்பிட்டி போன்ற மலையகத்து பிரதான நகர்களிலும் தோட்டப்பகுதிகளிலும் இவரது பேச்சாற்றல், கலையாற்றல் காத்திரமாக இடம் பெற்றது. மலையகத்தில் எந்தவொரு பெருவிழாவும் இவர் இங்கிருந்த பொழுது இவரில்லாது நடந்ததில்லை என்றளவுக்கு ஏற்றம் பெற்றார்.
மலையக மக்கள் மனதில் அழுத்தமாக பதிந்து விட்ட அமரர்.சோமாஸ்கந்தர் அவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக.
() 亭 டி.ஆர்.செல்வராஜா ஆசிரியர் ޙ2-S>>
இராகலை.த.ம.வி.
幸 ܧܸܒ̄ త్రe >ܧܧܵܣܡܶ
22

நல்லாசிரியன்
அமரத்துவம் எய்திய பெரியாண்டி சோமாஸ்கந்தர் சிறந்த ஒர் ஆசிரியராவார். சமூக சேவகராவார். தான் வாழ்ந்த பிரதேசத்தில் தலைசிறந்த தலைவராவார். சிறந்த கவிஞராவார். அவரின் சேவையை போற்றும் இவ் அரிய கருமத்தில் அவரைப்பற்றி நினைவு கூர்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன்.
இவரை நான் சந்தித்தது 1980ம் ஆணி டில் சிலா பம் கல்விக்காரியாலயத்தில் கடமையாற்றும் காலத்திலாகும். அக்காலத்தில் இவர் பணிவுடைய ஆசிரியராகவும், திறமை மிகு நிர்வாகியாகவும் செயல்பட்ட விதம் என்னுள் ஆழப்பதிந்தது. இவர் கல்விச்சேவையில் அறிவையும் சிறந்த பிரசைகளை உருவாக்க முயன்றதையும் நாங்கள் நன்றாக அறிவோம். விசேடமாக கலைத்துறைக்கு அவர் செய்த சேவை அளப்பரியது. திருக்குறளை நன்கு கற்று அதன் ஆழக்கருத்துக்களை சுவைபட தமிழ் அன்பர்களுக்கு மட்டுமல்ல சிங்கள சகோதரர்களும் ரசிக்கும் வண்ணம் வழங்கியமை அவரின் கலைத்துறை திறமைக்கு ஒர் சான்றாகும். விஷேடமாக தமிழ் இலக்கிய பாடல்களை நடைமுறைக்கு ஏற்ப வழங்கிய முறையை இச் சந்தர்ப்பத்தில் மிகவும் நன்றியுடையவனாக நினைவு கூறுகின்றேன்.
அவரின் மறைவு உடப்பு மக்களுக்கு மட்டுமல்ல முழு புத்தள மாவட்ட மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
எம்.சி.பனாந்து பிரதேச செயலாளர் ஆராட்சிக்கட்டு
නැසිගිය පෙරියාන්ඩි සෝමාස්කන්දර දක්ෂ ගුරුවරයෙකු විය" සමාජ සේවකයෙකු විය’ තමා ජීවත් වූ ප්‍රදේශයට අසමාන නායකයෙකු විය' කලාමිකයෙකු විය.” එතුමාගේ සේවය අගයන මේ මහගු කාරයයේදී එතුමා පිළිබඳ සිහිකිරීමට ලැබීම මා ලද භාගන්‍යක් කොට සලකමි
මෙතුමා මා හඳුනාගත්තේ 198O වරගයේදී හලාවත අධ්‍යාපන කාරයාලයේ සෙවය කරන අවධියේදිය." එම කාලය තුළ එතුමා යහපත් ගුරුවරයෙකු මනා පරිපාලනයකු ලෙස ක්‍රියා කළ ආකාරය මාහට හොඳින් පසක් විය.” එතුමා අධ්‍යාපන ක්ෂේත්‍රයේදී දැනුම් මෙන්ම යහපත් පුරවැසියන් බිහිකිරීම සඳහා ගත් ප්‍රයත්නය අපි හොඳාකාර දනිමු විශේෂයෙන් ඔහුගෙන් කලාවට සිදුවූ සේවය අතිමහත්ය.’ තිරුක්කුරල් මහා කාවන්‍යය මැනවින් ප්‍රගුරා කළ එතුමා එය රසවිඳීමේ හා එහි ගැඹි වූ දරශනයත් ද්‍රවිඩ රසවතුන්ට මෙන්ම සිංහල රසකාමීන්ට ලබා දුන් ආකාරය එතුමාගේ කලාකාමි පීවිතයේ සුවිශේෂත්වය පිළිබිඹු කරන්නේය" විශේෂයෙන් ද්‍රවිඩ සංගීතය සම්බන්ධයෙන් එතුමා දැක්වූ ප්‍රායෝගික චර්යවද මා මේ අවස්ථාවේදී ඉතාම කෘතවේදී සිහිපත් කරමි”
එතුමාගේ වියෝව උඩප්පුව ජනතාවට පමණක් නොව සමස්ත පුත්තලම දිස්ත්‍රික්කයටම සිදුවූ පිරීම(සිය නොහැකි පාඩුවකි එමී"සී" ප්‍රනාන්ඳු
දිනය - 2OO3 \O 15 දිනදීය . ප්‍රාදේශිය ලේකම්
· ආරච්චිකටිටුව” 23 O

Page 14
adecó. c3e3õC5)asöãð GojÐbajandasöçö cóêSC5b
පුත්තලම් දිස්ත්‍රීක්කයේ දුෂ්කරම පුදේශවලින් එකක් උඩප්පුව ගුදාමයේ උපත ලැබූ co30doãeó a Depo)ó queó තුමා 2003-09-27 දින අප අතරින් හදිස්සියේ වියෝ විය” මේ විශේ.ඩී දුක මට අප්‍රමාණ ඝ0වේගයක් වූ අතර එය මිනිසත් බව හඳුනන මිනිසුන්ට ස0Gවිදි කලාකරුවන්ට ගුරුවරුන්ට ශිෂ්‍යයින්ට බලවත් වේදනාවක් වේ”
උඩප්පුව වැනි දුෂ්කර ගමිමානයක උපත ලබා මුළු ලoකාවේම කලා කටයුතුවලට උරදුන් මෙතුමා ගුරුවරයෙකු හා විදුහල්පතිවරයෙකු ලෙසද සේවය කරමින් කලක් හලාවත සුදාන්ත මරියා පිරිමි මහා විදනාලයේ දෙමළ අංශයේ දෙමළ භාෂා ගුරුවරයාද
305"
“කලාභෂණ අරුවිකලෙයි නිලකමි සොල්ලින් සොල්වර් විල්ලියොසයී වේන්දන් වැනි කලාගුෂ සමිමානවලින් පිඳුම් ලැබූ මෙතුමා මිනිස් ලොවටත් දෙවි ලෙනාවටත් අතර සිටි කලා ගුරු දෙවියෙකි” ඔහු සමිමාන බලා ගස්වය කළේ නැත” සමිමාන ඔහු සොයා ආවේය” ගමතුමා සමිමාන බලා වැඩ කළේ නම් එය සමිමාන තැබීමට උඩප්පුවේ වෙනම කලාගාරයක් ඉදිකිරීමට සිදුවනු ඇත” w
魏
ඔහුගේ සේවය නිහඬ විය” පීවත් වූ කාලයට වඩා හතර ගුණයක වර්ෂ කාලයක් ඔහු ගස්වය කළා වැනිය” උඩප්පුවේ කෝවිල්වල ඝාණ්ඨාර ශබිදයට වඩා මුළු ලගාකාවේ වැඩිපුරම කොවිල්වල ඇසුරෙණ ගසාමාස්කන්දර්ගේ රිදීවන් කටහඬය” ගත්වාරමී හඬය” ඔහුගේ ගායනා නර්තනයන් නොදකින අප පමණක් නොව ගහකොළ පවා දුක් වේ” අද කලාව දෙපයින් නැගී සිටුමට වෙර දරණ කලාගුරුන් අතර කලාගුරු සෝමාස්කන්දර් Gශුෂඨයෙක් මෙන්ම ආදීන කලාකරුවෙක්ද විය.”
" ඔහුගේ නිල වර්ණ දේහය විශේණ මූර්තියන් මෙන් විය” ඔහුගේ හඬ අනන්තනාග රාජයාගේ බඳු විය” ඔහුගේ හදවත දිව්‍යමය වෙඬරු විය” මිනිසත්කම ඔහුගේ ආගම විය’ මානව දයාව ඔහුගේ ආගම විය” කවිය ඔහුගේ ආත්මය විය” නර්තනය ඔහුගේ හද ගැස්ම විය” දකින හැම දෙනාටම ශාන්තිය ප්‍රාර්ථනා කරමින් ඔහු ගෙවූ දිවිය අරුම පුදුමය” ඔහුගේ හඬ මහා භාරතයම විය” ඔහුගේ ආදරය භගවත් ගීතයම 5)(5”
ඔහුගේ හෙමිමාශ ස0ගීතය හැඩ වූ වීනාව භාග්මානියම් අද නිහඬව බලා සිටී.” මෘද0ගය අද වැගයන්ගෙන් නැත” ඔහුගේ දෑතින් වැයුණු තාලම් පොට අද කඳුළු වගුරුවයි” වේද වේදාගාග නිපුන් කළ මෙතුමා වෙරක බ්‍රහ්මනයෙකු මෙන් විය" වෙරක මුව පොවිවකු මෙන් අහිංසක විය” ඔහු උඩප්පුවේ පහළ වූ යුග පුරුෂයකු බඳු විය.”
· මා හට මෙතුමා හමුවුනේ මීට අවුරුඳු හයකට පෙර උඩප්පුවේ දෙමළ ඉතිහාසය
24

ගසායාගිය විටය” මට මෙතුමා පිළිබඳව තේරුම් ගියේ උඩප්පුවේ බිහිවූ ඝනිරුවල්ලූවර" ශකෙනකු ලෙසය” මේ නිරුවල්ලූවර් නැති වූයේ උඩප්පුවට පමණක් නොව මුළු කලා ලෝකයටමය” ඔහුගේ හිඩැස පිරවීම කිසිසේත් කළ නොහැකිය" අප දුක්වෙමු” එහෙත් අග්නීට පුද දුන් ඔහුගේ නිහඬ දේහය තුල වූ ආත්මය දැන් දෙවියලාව බලා ගමන් කර ඇතැයි විශේවාස කරමු"
Gදමළ සාහිත්‍යය හෝ වේද සාහිත්‍යය තුළ ගැටළුවක් ඇති වූ විට මා හමුවුයේ කලාගුරු සොමාස්කන්දර්ය” ඔහු පොත පත නොබලා අකුරු නොතබා දිගටම විස්තර කරයි” ගායනය ඇති තැන ගායනා කරයි" නර්තනය ඇති හැන නටා පෙන්වයි" කර්ණනාටක ස0ඟීතයේ රාග තුනක් එකට ඈදා ගරායනා කළ හැකි ස0ඟිනඥයෙක් ලෙස ඔහු දැක්වූ දක්ෂතාව අසමසම විය” ලoකාව වැනි රටක නොඉපදී ඉන්දියාවේ උපත ලැබුවේ නම් මෙතුමා අද විශේව පූජනීය කලා ගුරුවරයෙකි" .
උඩප්පුවේ ජනතාව පමණක් නොව දෙමළ සිංහල විදිවතුන් පමණක් නොව මුළු ශ්‍රී ලාඹාකික ජනතාවම සොමාස්කන්දර් ගුරු පියාගෙන් නිසි සේවය ලබා නොගන්නා සේම නිසි ගගහරවය ලබා දුන්ෙන් යැයි අපට සතුටු විය නොහැක”
වවුනියාවේ සිට කතරගම දක්වා දිවෙන පුදේශය තුළ වඩෙමා'ඩිකුත්තු තොරුක්කුන්තු නාවිධුකූක්තු නාඩගම් නූර්ති විල්ලූපාවිචු තොන්මාරාංශු ස0ගීතය පිළිබඳව හසල දැනුමක් තිබූ එකම කලාකරුවා විය” විල්ලූපාවිචු මෙතුමාගේ ආත්මය විය” හින්දු විල්ලුපාටිටු වරෙක කෙනාලික විල්ලුපාටිටු වලට පරිවර්තනය කළ එකම කලාගුරුද සොමාස්කන්දර් විය" ඔහු තුළ වූ අසමසම කලා හැකියාව අපට නොමැත” මෙම කලා ගුරුතුමා නොමැති අඩුපාඩුව අදට වඩා හෙටටත් මතුවට උපදින පරපුරටත් තදින්ම බලපානු ඇත” සෝමාස්කන්දර් ගුරුතුමා නොමැති පාඩුව මැකීමට නම් නැවත එතුමා අප අතරට පැමිණිය යුතුයි” එහෙත් මිනිස් ලොව සිටි දෙවියකු බඳු කලාගුරු සෝමාස්කන්දර් නැවත මනු ලොවට නොව දෙවිෙලාවට වඩිනු ඇත”
6" q66es)G :MA.MSCනියෝජ්‍ය විදුහල්පති හලා/ සාන්ත මරීයා මහ විදුහල හලාවත"

Page 15
கலைக்குரு பெரியாண்டி சோமாஸ்கந்தர் கலைத்தந்தை புத்தளம் மாவட்டத்தில் கஷ்ட பிரதேசங்களில் ஒன்றான உடப்பு
கிராமத்தில் அவதரித்த கலைக்குரு பெருந்தகை 2003-09-27ம் திகதி அன்று சடுதியாக பூவுலகில் இருந்து எம்மிடம் விடைபெற்றார். நான் இதை அறிந்ததும் தாங்கொணாத துயரம் அடைந்தேன். மனிதநேயம் அறிந்த மானுடர்களுக்கும், ஆன்மீக கலைஞர்களுக்கும் ஆசிரியர் சமூகத்திற்கும் இவரின் இழப்பு ஆழ்ந்த வேதனையை தருகிறது.
உடப்பை போன்ற கஷ்டப் பிரதேசத்தில் பிறந்து முழு இலங்கையின் கலைத்துறைக்கும் புத்துயிர் அளித்த இப்பெருந்தகை ஆசிரியராகவும், பாடசாலை அதிபரர்கவும் சேவையாற்றி உள்ளார். இவர் சிலவருடங்கள் சிலாபம் புனித மரியாள் ஆண்கள் கல்லூரியில் தமிழ் பிரிவில் தமிழ் மொழி ஆசானுமாவார்.
‘கலாபூஷணம்’, ‘அருட்கலைதிலகம்’, ‘சொல்லின் செல்வர்”, ‘வில்லிசைவேந்தன்” போன்ற கலைத்திருப்பட்டங்களை தன்னகத்தே அமையப்பெற்ற இப்பெருந்தகை மானிட உலகிற்கும் தேவலோகத்திற்கும் இடையிலான கலைக்குரு தெய்வமாகும். இவர் பட்டங்களை எதிர்பார்த்து பணிபுரியவில்லை. பட்டங்கள் இவரை தேடிவந்தன. இப்பெருந்தகை பட்டங்களை எதிர்பார்த்து சேவை செய்திருந்தால் அவற்றை பேணுவதற்கு உடப்பில் வேறாக கலைக்கூடம் ஒன்று நிறுவவேண்டி இருக்கும்.
அவருடைய கலைச்சேவை விடைபெற்றது. வாழ்ந்த காலத்தையும் விட அவரது நான்கு மடங்குகாலச்சேவை கலைத்துறையையே சார்ந்து இருந்தது. உடப்புக் கோவில்களின் பெரு மணியோ சையைவிட முழுஇலங்கையிலும்உள்ள அதிக கோயில்களில் அதிகம் கேட்பவை சோமாஸ்கந்த கலைஞனின் வெண்கல குரலொலியே. தேவார ஒலி அவரது பாடல், நடனங்கள் நாடகங்கள் எம்மால் மாத்திரமல்ல இவைகளை காணாத பச்சை மரங்களும் இலைகளும் கூட துயரமடையும்.
தற்கால கலையுலகிலே கலையை உண்மையான கலைத்துவத்துடன் நேசித்த கலைஞர்களுள் கலைக் குரு சோமாஸ்கந்தர் முன்னோடிக் கலைஞராகவும் சிரேஷ்ட கலைஞராகவும் திகழ்கிறார். அவரது நீலவண்ண தேகம் விஷ்ணுமூர்த்தியினுடையது. அவரது குரல் பாடும் வானம்பாடியின் குரலாகும். அவரது இதயம் தேவர்களுடையது. மனிதத்துவம் அவரது மதமாகும் மனித தயவு அவரது மதமே கதவிதை அவரது ஆத்மாவாகும். நட னம் அவரது இதயதுடிப்பாகும். காணும் அனைவரையும் அன்புடன் பிரார்த்தித்து அவர் காட்டிய நெறி அருமையிலும் புதுமை அவருடைய வெணி கலக் குரல் மகாபாரதம் போன்றது. அவருடைய அணி பே பகவத்கீதையாகும்.
26

இக்கலைக்குருவின் தெம்மாங்கு சங்கீத உபகரணங்களான ஆர்மோனியம், வீணை, இன்று ஓய்வாக இருக்குமே. மிருதங்க ஒலி கேட்காதே அவரது இருகரங்கள் தட்டியதாளங்கள் கண்ணிர் மல்கும். வேதவேதாந்தியான இப்பெருந்தகை ஒரு ஜென்மத்தில் பிராமணரே பசுமையான மான் குட்டிகளைப்போல் அப்பாவித்தனமான முகவதனம் இவருடையது. இவர் உடப்பில் ஓர் உன்னதமான யுக புருஷனாவார். உடப்பில் தமிழ் இதிகாசங்களை தேடிஅலைந்தபோது ஆறு வருடங்களுக்கு முன் இவரை முதன்முறையாக உடப்பில் சந்தித்தேன். எனது அறிவுக்கு எட்டியவரை இக்கலைப்பெருந்தகை உடப்பில் தோன்றிய திருவள்ளுவர் ஆவார். இத் திருவள்ளுவரின் இழப்பு உடப்பிற்கு மாத்திரம் அல்ல. முழு கலை உலகிற்குமே பேரிழப்பாகும். இவருடைய இடத்தை நிரப்புவது என்பது யாராலும் எப்போதும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். நாம் துயரடைவோம். அக்கினி தானம் செய்யப்பட்ட இவரது புகழ் உடல் அழிந்தாலும் நிச்சயமாக இந்த ஆத்மா தேவலோகத்தில் இறையடியில் ஒன்றித்து இருக்குமென்று நிச்சயம் நாம் நம்புவோமாக.
தமிழ் இதிகாசங்களுக்கும் வேத இதிகாசங்களுக்கும் இடையில் பிணக்குகள் ஏற்படும் போது நான் இக்கலைக்குரு சோமாஸ்கந்தர் ஐயா அவர்களையே சந்திப்பேன் அவர் புத்தகம் கித்தகம் பார்க்காமல் தொடர்ச்சியாக விளக்கமளிப்பார். பாடல்கள் நிறைந்த இடத்தில் பாடிக்காட்டுவார். நடனமுள்ள இடத்தில் ஆடிக்காட்டுவர். கர்நாடக சங்கீதத்தில் ஒரேராகத்தை மூன்று விதமாக உயர் சுருதியுடன் பாடக்கூடிய சங்கீதத் தன்மையின் திறமையை இவர் காட்டியவிதம் போற்றுதலுக்கு உரியது. இப்பெருந்தகை இலங்கையில் பிறக்காமல் இந்தியாவில் பிறந்திருந்தாராகில் இன்று சர்வ அகிலமே போற்றும் கலைக்குருவாகியிருப்பார்.
உடப்பு மக்களால் மாத்திரமல்ல, இலங்கையில் சிங்கள தமிழ் வித்துவான்கள் மாத்திரமல்ல முழு இலங்கை மக்களும் கலைத்தந்தை சோமாஸ் கந்தரிடம் இருந்து பெறவேண்டியவை அதிகமிருந்தன. இக்கெளரவமானகலை சேவையை நாம் இழந்தமை வேதனைக்குரியது.
வவுனியாவில் இருந்து கதிர்காமம் வரை அமைந்திருக்கின்ற பிரதேசங்களில் வடமோடிகூத்து. தெருக்கூத்து, நாட்டுக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு, கும்மி, தெம்மாங்கு, சங்கீதம் போன்ற பல திறமைகளைக் கொண்ட ஒரே ஒரு கலைஞராவார். வில்லுப்பாட்டு இவரது ஆன்மாவாகும். இந்து வில்லுப்பாட்டு கதைகளையும், கத்தோலிக்க கதைகளையும் இஸ்லாமிய கதைகளையும் பாடுகின்ற ஒரேஒரு உன்னத கலைஞர் இக்கலைக்குரு தெய்வம் சோமாஸ்கந்தராவார். இந்தக் கலை மகாத்மாவிடமிருந்த கலைத்துறைகள் எம்மிடமில்லை. இக்கலைக்குருதந்தை இல்லாத குறை இன்றும், நாளையும், இனிப்பிறக்கப்போகும் பரம்பரைக்கும் மிகவும் பாதிப்பாக அமையப்போகின்றது. இதை நிவர்த்தி செய்வதாகில் அவரே மீள வரவேண்டும். இருந்தும் மானுட உலகிலிருந்து தேவலோகம் சென்ற கலைக்குரு தெய்வம் தெய்வத்தின் தெய்வமாக இறையடியில் நிலைபெறும்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
le. GLD5lusT6ù (M.A., M.S.C), உபஅதிபர் சிலாபம் புனித மரியாள் கல்லூரி
W ' /
نۓ 3
亏
27

Page 16
வில்லிசை வீர வேங்கை
இலங்கையில் வடமேல் மாகாணத்தில் புத் தளம் என்று சொல்லப்படுகின்ற ஒரு பிரதேசம் உண்டு. தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகக் கருதப்படுகின்றது. இந்த மாவட்டத்தில் தான் ஐந்து ஈளப்பரங்களில் பிரசித்தி பெற்ற முன்னேஸ்வரம் உள்ளது.
இதற்கு அருகே உடப்பு என்று சொல்லப்படுகின்ற தமிழ் கிராமம் உண்டு. இங்கு தீமிதிப்பு விழாவிற்கு பெயர் போன திரெளபதி அம்மன்கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் வசித்து வந்த திரு.பெரி. சோமாஸ்கந்தர் பழகுவதற்கு இனியவர், பண்பானவர், தனிச்சுவை, குரல் இனிமை, தமிழ் உச்சரிப்பு இவரிடம் காணப்படும் சிறப்புக்கள் இவரது அபாரமான ஞாபகசக்தி பேச்சுவன்மை, பரந்து பாடும் பாட்டுத்திறன் என்பன இவரை புகழின் உச்சிக்கு இட்டுச்சென்றன.
ஆசிரியராக, அதிபராக சிறப்பாகக் கடமையாற்றியதைவிடக் கலைஞன் என்ற பெயரே இவரை அழியா இடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. நாம் அறிந்தவரையில் இவர் ஒரு இந்து மகனாக இருந்தும் ஒரு இஸ்லாமியன் போல் முகமது நபி சம்பந்தமான பாடல்களை வில்லிசைத்தும் ஒரு கிறிஸ்தவன் போல் இயேசுவின் வரலாற்றை வில்லிசைத்தும் பாராட்டும் பெற்றுள்ளார்.
கொழும்புத் தமிழ் சங்கத்தின் நிகழ்வுகளில் பங்குபற்றி உடப்பின் பாரம்பரிய கலைகள் தெம்மாங்கு பாடல்கள் பழைய நாடகப் பாடல்கள், கிராமியச்சந்தம் கொண்ட இசைப்பாடல்கள் பாடிப் பாராட்டும் பெற்றுள்ளார். தமிழ் சங்கத்தில் தாம் செய்த நிகழ்வுகளின் போதுதான் பெற்ற பாராட்டுக்களைத் தமது இறுதிக்காலத்தில் வைத்திய சாலையில் கடுமையான சுகவினத்தின்போதும் நினைவு கூர்ந்து சந்தோஷம் அடைந்தவர் 'கலாபூஷணம்' வில் விசைவித்தகன், வில்லிசை மாமணி', வில்லிரைத் தென்றல்", வில்லிசைவாரி, ' கருத்தோவியன்', வில்லிசைக்கலாபவன்', தெய்வீக இசைச்சித்தன், போன்ற பல பட்டங்களைப் பெற்றவர், பெரியார் சோமாஸ்கந்தர் அவர்கள் கலைஞராக, நடிகராக, சிறந்த நெறியாளராக, நாடக ஆசிரியராக, ஒப்பனைக் கலைஞராக, இசைக் கலைஞராக, சைவ அடியாராக, பன்முகப்பார்வையில் தன்னை இனங் காட்டி வந்த இவர் உடப்புக் கிராமத்தின் அரும்பெரும் சொத்து ஆவார்.
இந்த தமிழ் தாயின் அருந்தவப் புதல்வனாகிய திரு. பெரி. சோமா எப்கந்தரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. அவரின் ஆத்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திக்கின்றோம்.
ம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி I r Yy ஆ “FITT IFF. și ןF55 וני= bj14 חי Ys/
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி (துனைபொதுச் செயலாளர் கொழும்புத் தமிழ்ச்சங்கம்} 28

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் உடப்பு பாரம்பரியத்தின் மகிமை பற்றி உரையாடும்போது
மயூரபதி தேவஸ்தான தர்ம கர்த்தாவின்
ÄRGEN கெளரவிக்கப்படுகிறார்

Page 17
தன் இறுதி வில்லிசை நிகழ்ச்சியில் இளந் தலைமுறையுடன்
 

காலாபூஷணம் விருதினை அமைச்சர் லக்ஷ்மன் ஜெயகொடியிடமிருந்து பெறுகிறார்
நல்லை ஆதீனத்தால் வில்லிசை சக்கரவர்த்தியாக பட்டம் பெறும்பொழுது,

Page 18
கண்டி அசோகா வித்தியாலயத்தில் கருத்தோவியனாக கெளரவிக்கப்படும்போது
தனது மனைவி மக்களுடன் காணப்படுகிறார்
 
 
 
 
 

வாழ்வியல் நோக்கு
இலங்கையின் புத்தளம் மாவட்டத்தின் வடமேற்கரையில் இந்தபா கடலின் வாழ்வுட்டலிலும் அழகிய சிறுகடலாகிய முந்தல் கடல் நீர் ஏரியின் தாலாட்டிலும் எழில் விளங்கும் பல புண்ணிய தலங்கள் கொண்ட கலை கலாச்சார பண்பாட்டுப்பாரம்பரிய விழுமியங்களைத் தன்னகத்தே கொன தமிழும், சைவமும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் தழைத்தோங்கும் உன்னத தமிழ் கிராமம் உடப்பூராகும். இவ்வூரின் பிரதான ஜீவனோபாயம் மீன்பிடியா தும்.
சிட்டன் குலச்செம்மல் பாரதக்கடல் பெரியாண்டி அண்ணாவியாரும், அவர்தம் பாரியார் காமர் குலக் காரிகையாள் ஆண்டிச்சியாளும் வதுவை நலம் புரிந்து இட்டமாய் இனிது பெற்ற மக்கள் எழுவரில் திரித மகவாக தரணியில் தோன்றிப் புகழோடு காலத்தால் அழியாத கலை மாமேதையாக வாழ்ந்த உன்னதமகான் உடப்பூரான் பெரி. சோமாஸ்கந்தர்.
இவரின் முத்த சகோதரர்களாக அமரர் பெரி. தங்கவேல் (KTC) அமரர் பெரி. கந்தையா பிறந்தார்கள். இவர்களை அடுத்து 1934ம் ஆண்டு புரட்டாதி திங்கள் 1ம் திகதியன்று ஒரே சூலில் இரட்டைப் புத்திரர்கள் அவதரித்தனர். இரட்டையரில் முத்தவர் அமரர் பெரி. சோமாஸ்கந்தர், இளையவர் பெரி. சொக்கலிங்கம். தனது மூன்றாம் வயதில் இரட்டையரில் இளையவர் இயற்கை எய்தினார். இதன்பின்பு அன்னாரின் இளைய சகோதரர்களாக திரு. பெரி. சண்முகநாதன்(ஒய்வுபெற்ற அதிபர்), திருமதி: நாகபூஷணி ஆறுமுகசாமி, திருமதி கிருஷ்ணாவதி வைரவ சுந்தரம் ஆகிய எழுவர் நன்மக்களாக பிறந்தார்கள்.
இவர் தன் ஆரம்ப கல்வியை 5வது வயதில் உடப்பு ஆரம்ப பாடசாலையில் ஆரம்பித்தார். மாணவ பருவத்தில் மூன்றுமுறை இரட்டைதரம் உயர்வு பெற்றமை இவரது கல்வி திறமையையும், அறிவுத்திறமையையும் எடுத்துக்காட்டுகின்றன. மாணவ இலக்கிய மன்றங்களிலும் தனது கலை ஆற்றல்ை வெளிக்காட்ட தவறியதில்லை.
1952ம் வருடம் இலங்கை கல்வி அமைச்சின் சிரோப்ட பாடசாலை தேர்வில்(3.3C) அதி திறமையில் சித்திஅடைந்தார். இதன் நிமித்தம் இவர் 1953ம் வருடம் புத்தளம் மாவட்டத்தின் மதவாக்குளம் அரசினர் முஸ்லிம் பாடசாலையில் பயிற்றப்படாத ஆசிரியராக நியமனம்பெற்றதுடன் இவருடைய ஆசிரியர்பணி ஆரம்பமானது. 1956இல் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு தேர்வானார். அங்கு சிறந்த நல் ஒழுக்கமுள்ள பண்பான அறிவார்ந்த ஆசிரிய மாணவனாக இருந்து இயல், இசை, நாடகம், நடனம், கவிதை, பேச்சு, கிராமியப்பாடல்கள், வடமோடி, தென்மோடி தெருக்கூத்துக்கள் போன்ற பல துறைகளிலும் விபத்தகு ஆற்றல்களை வெளிக்காட்டி கலாசாலையில் சீரும் சிறப்பும் பெற்ற ஆசிரிய மாணவனாக திகழ்ந்து பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பெருமையை நாடறியச்செய்தார். இதனால் 1960இல் இர்விாாாால இவருக்கு 'ஆப கலை ஞானி' இலும் சிறப்பு பட்ட வாரி
ா ,

Page 19
உடப்பின் நாடக வரலாற்றில் 1956ம் வருடம் மறுமலர்ச்சி நாடக மன்றம் உருவாக காரணகர்த்தாவாக இருந்ததுடன் ‘ஆசை அண்ணா”, ‘அருமைத்தங்கை’ என்ற சமூக நாடகத்தை இயக்கி முதன்முறையாக மேடையேற்றி புதிய திருப்புமுனையை ஏற்படுத்திய நாடக நாயகன் ஆவார். இவரது இயக்கத்தில் உருவான வீரபாண்டிய கட்டப்பொம்மன், தேரோட்டி மகன், பாஞ்சாலி சபதம், வத்சலா கல்யாணம் போன்ற நாடகங்களை உடப்பு நாடக ரசிக நெஞ்சங்கள் கண்ணீர் மல்கி உள்ளம் உருகி ரசித்தமை இவரது நாடக புலமையை பறைசாற்றி நிற்கின்றன.
ஆசிரியர் பயிற்சியை செவ்வனே முடித்து 1958ம் ஆண்டில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகி அவ்வாண்டிலேயே மேல் மாகாணத்தில் நீர்கொழும்பு மாநகரில் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு (விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) நியமனம் பெற்றார். இங்குதான் அன்னாருடைய கலைப்பணி பெரும்பணியாக உருவெடுத்தது. மேல் மாகாண தமிழ் மொழிப் போட்டிகளின்போது இப்பாடசாலையே கலைத் துறையில் அனைத்து அம்சங்களிலும் வரலாறு காணாத வெற்றிகளைப் பெற்று வீறுநடைபோடச் செய்தார். இதன் நிமித்தம் நீர்கொழும்பு தமிழ்ச்சமூகமும், இந்து இளைஞர் மன்றமும், பாடசாலை நலன் விரும்பிகளும், பாடசாலையின் பணிவான அன்பு மாண்வர்களின் நன்னடத்தையும் ஆசிரிய குழாத்தின் ஈடிணையற்ற நேசமும் இவரின் பெருமைகளை தரணியில் இன்றும் புகழ்பாடுகின்றன.
நீர்கொழும்பில் ஆசிரியர் பணியினைப் புரிந்தவேளையில் இல்லறம் எனும் நல்லறமும் கைகூடியது. வில்விதிப்படியே தனது தாய்மாமன் அமரரான கந்தையா பார்வதி தம்பதியரின் திரித புதல்வியாகிய பரமேஸ்வரி அம்மாளை 1962ம் வருடம் கார்த்திகை 12ம் நாள் திருமணம் புரிந்தார். இவர்களது அன்பு திருமணத்தில் விழைந்த பாக்கியசாலிகளான மலர்ச்செல்வி, வரகுணசொக்கலிங்கம், அருட்குமரன், சுந்தரலக்குமி, பெரியானந்தநாயகி, ரீரங்கநாயகி, திபாஹரி, மோகனக்கண்ணன் என நன்மக்கள் எண்மர் அவதரித்தனர்.
இவரது கலைவாழ்வில் 1965ம் ஆண்டு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஓர் ஆண்டாகும். இவ்வாண்டிலேதான் பாலபண்டிதர்தேர்வில் சித்தியடைந்தார். அத்தோடு மதுரைத் தமிழ்ச்சங்க புலவர் தேர்வில் சித்திபெற்று தாய்மொழியில் பாண்டித்தியமும் பெற்றார். மேலும் அரசியல் மேடைகளிலும் அழகு தமிழால் தனது பேச்சு வல்லமையினால் பலரது பாராட்டுக்களையும் பெற்று பல லட்சக்கணக்கான ரசிகர்களையும் தன்வயப்படுத்திய அரசியல் சொற்போர்ப் பீரங்கிதான் இந்தச் சொல்லின் செல்வன். இவரின் வேண்டுதலை செவிமடுத்த அக்கால கல்வி அமைச்சர் மொஹமட் பதியுதீன் அவர்கள் உடப்பு தமிழ் மகாவித்தியாலயத்திற்கு இரு கட்டடங்களைவழங்கினார். அதே வேளை உடப்பைச்சேர்ந்த ஐவருக்கு உடனடியாக ஆசிரிய நியமனங்களையும் பெற்றுக் கொடுத்தார். உடப்பு மகாவித்தியாலயத்தின் சிரேஷ்ட பிரிவில் முதன் முதலாக அமைக்கப்பட்ட இரு கட்டடங்களை பெற்றுத்தந்த பெருமையும் இவரையே சாரும். இவ்வாறு பல சமய, சமூக சேவைகளில் தன்னை அர்ப்பணித்தவர்
9uჩ!}, t I No1, 1 6ჩl. 34

இக்காலப் பகுதியிலே இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் ராகலை தமிழ் மகாவித்தியாலயத்திற்கு அரசியல் சதிகாரர்களால் திட்டமிட்டு இடமாற்றப்பட்டார். இந்த இடமாற்றமே இவரை இன்று அகிலம்புகழும் வில்லிசைச் சக்கரவர்த்தி ஆக்கியது. அங்கேயே இவரது கலைத்துறையில் மாபெரும் சக்தியான வில்லிசை எனும் நல்லிசையை ஆரம்பித்தார். தான் பிறந்த உடப்பு மண்ணை தீவிரமாக நேசித்தமையால் ராகலையில் இவரால் உருவாக்கப்பட்ட வில்லிசைக்குழுவிற்கு ‘உடப்பூரான் பெரி சோமாஸ்கந்தர் வில்லிசைக்குழு’ என்று நாமம் வைத்தார். இக்குழுவில் இவர் ஒருவரே உடப்பார். ஏனைய கலைஞர்கள் மலையகத்தவர்கள் இவரது கன்னி வில்லிசை நிகழ்ச்சியில் ராகலை புறுாக்சைட் தோட்டத்தில் அரங்கேற்றப்பட்டது. இவ்வில்லிசை நிகழ்ச்சிக்கு அன்றைய மலையக தமிழ் நல்லுலகம் வழங்கிய ஆதரவும், ஊக்குவிப்பும், உத்வேகமும்தான் இவர் இன்று உலகின் தலைசிறந்த வில்லிசைமேதையாக பரிமளிக்க இசைக்களம் அமைத்துக் கொடுத்தது. அன்று தொட்டு இன்றுவரை ஏறத்தாழ 2500 வில்லிசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடாத்தி உலகத் தமிழ்மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். இந்துக்கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய மசூதிகள், பாடசாலைகள் சைவமகாசபை, அரசியல் மேடைகள், கலைப்பணி மன்றங்கள் போன்ற பல ஸ்தாபனங்களில் இவரது வில்லிசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
1966ல் புரட்சிநடிகர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மலையகத்திற்கு வந்தவேளையில் நுலரெலியாவில் இடம்பெற்ற அண்ணா திராவிடக் கழக இலக்கிய விழாவில் இவரது இசையுடன் கூடிய வரவேற்புரையை செவிமடுத்து அவரது தமிழ் புலமையை வாயாரப்பாராட்டி புகழ்மாலை சூடினார். 1967ல் மலையகத்தில் சுதந்திர தமிழ் தாகம் என்ற தொனிப்பொருளில் இவராற்றிய சொல்லிசை பாரதியாரின் பேத்தியை மனதாரக்கவர்ந்தது. சொல்லிசைச் செல்வனின் செந்நாவிலே தெள்ளுதமிழ் கொஞ்சி விளையாடுகிறது. என வெகுவாக பாராட்டி பேசியமை இவரது பேச்சாற்றலை பறைசாற்றுகிறது.
1994ம் ஆண்டு கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் சுவாமி விவேகானந்தரைப்பற்றி இவர் இசைத்த ‘வீரத்துறவி விவேகானந்தர்” எனும் வில்லிசை மூலமாக உலகம் பூராகவும் இருந்து வந்த பல சுவாமிஜிகளாலும் வெகுவாகப் போற்றப்பட்டார். இதன்காரணமாக அவ்வருடம் இந்தியாவில் கலகத்தா மாநகரின் பேமுர் மாத் உலக ராமகிருஷ்ண மிஷன் தலைமையகத்தில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் சிக்காகோ மாநாட்டின் நூற்றாண்டு சொற்பொழிவு விழாவில் கலந்துகொள்ளும் பாக்கியத்தைப் பெற்றார். அவ் வேளை கண்னியா குமரிமுதல் ரிஷிகேஷம் வரை இந்தியதலயாத்திரை சென்றவேளை மதுராவில் கண்ணன் பிறந்தகுகைக் கோயிலில் இவர் இயற்றிப்பாடிய ‘‘ எங்கெங்கும் நீயிருப் பாயப் கோபாலக்கிருஷ்ணா” என்ற பாடலால் வட இந்தியபக்தர்கள் பரவசமடைந்து இவரைப்பாராட்டி மகிழ்ந்தனர்.
35

Page 20
ஈழத்தில் மட்டுமன்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இவரது வில்லிசை ஓங்கி ஒலித்திருக்கின்றது. மகாபாரதம், சக்திலீலை, இராமாயணம் போன்ற இதிகாசங்களை தொடர் வில்லிசையாகவும் செய்துள்ள இவரின் வில்லிசைதுறை வானளாவ உயர்ந்து விண்ணையும் அதிர வைக்கின்றது.
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி வலயத்தில் அமைந்துள்ள குறிஞ்சிப்பிட்டி பாடசாலை 1997, 1998, 1999 வருடங்களில் அகில இலங்கையில் வில்லிசைப்போட்டியில் முதலாமிடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தை சூடிக்கொண்டதும், உடப்பு தமிழ் மகாவித்தியாலயம், நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்துக்கல்லூரி, தேத்தாபளை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் அகில இலங்கை ரீதியில் வில்லிசையில் இவரின் முயற்சியால் புகழ்பெற்றன. இலங்கையின் கல்வி அமைச்சில் தற்போது நடைமுறையில் உள்ள வில்லிசை சம்பந்தமான சுற்றறிக்கையை தயாரித்தவரும் இவரே.
தனது தந்தையின் வேண்டுதலுக்கு இசைய ஆலய பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி சாமிசாத்துப்படி, ஒதுவார்பணி, ஆலயகிரியைகளில் இவர் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மேலும் ஆலயங்களில் புதியபல விழாக்களைத் தோற்றுவித்தார். தாழையடி கரு முத்துமாரிஅம்மன் ஆலயத்தில் திருவிளக்குப் பூஜை, பார்த்தசாரதிகோயிலில் திருப்பாவை உற்சவம், கிருஷ்ணஜெயந்தி. கந்தசஷ்டி, வீரபத்திரர்காளி கோயிலில் அம்பாள் உள்வீதி உற்சவம், முன்னேஸ்வரதேவஸ்தானத்தில் பால்குட பவனி, வம்பிவட்டவான் ஐய்யப்பசாமி கோயிலில் படிப்பூசை என இன்னோரன்ன உற்சவங்களை ஆரம்பித்து வைத்த சிவநெறிச்செல்வரே இவர் ஆவார்.
இவ்வாறு தனது தெய்வீக பணிகளையும் கலைப்பணிகளையும் தன் வாழ்நாளில் திறம்பட எடுத்துச் செய்த இம்மேதைக்கு 2002ம் ஆண்டில் இருதய சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின்னரும் தனது இறை பணியைதொடர்ந்த அவரால் தொடர்ந்து இப்பணியை செய்ய இயலாமையால் எண்ணி மனம் வருந்தியமையால் சடுதியாக மீண்டும் நோய்வாய்ப்பட்டார். பலவகைத் திறமைகளை இவருக்கு அருட்கொடையாக அளித்த இறைவன் பலவகையான நோய்களையும் அளித்து பொருள்வளத்தில் பாராமுகம் காட்டிவிட்டான். இம்மாபெரும் கலைஞனுடைய சிந்தனை உறங்கியது. நோய்வாய்ப்பட்டு இலங்கையின் முதல்தரமான அப்பலோ, நவலோக மருத்துவ மனைகளில் இரண்டு மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பூலோகத்தில் பண்ணிசை வேந்தரான இவரை வைகுந்தத்திற்கு வந்து தன்னிடம் திருவாய்மொழி ஒதவென்று அத்திருமால் அழைத்தான்போலும். இறுதியாக 2003ம் ஆண்டு புரட்டாதிமாதம் 27ம் திகதி காலை 6.10 மணியளவில் சிலாபம் தனியார் மருத்துவமனையில் இவரது ஆன்மா இவரது புகழ் உடம்பை
விட்டு பிரிந்து இறைவன் திருவடி நிழலை எய்தினார். () () ஒம்சாந்தி ஒம்சாந்தி ஒம்சாந்தி! ངའི་
( ട്ട്ല ŠV - سا
ഭ§ ‘நெருநல் உளனொருவன் - இன்றில்லை ܡܚܦܡܚܩܦܝ
எனும் பெருமை உடைத்திவ்வுலகு” (திருக்குறள்)

ĻĢĒĶī£ą,9||Giuse@ọ9@ıs 1999íoso"o"oso laeopsisų „aeroogs umiçonslås
AM平之^之" ላሉ (mɑ9Ųgosto)Ų9@@@g|1991,09% 十199ĝugÍrlog 恒929恒99somugiĢImugi(ĻInų???) (\@10909ļ9 IỆđī)|9)十 109? JJig)பூாயோதி*"的強良mung g@母84恩強e &m麟白6 *e臣6m。geeoguen 之之AሉAሉ .ላሉ 之Aሉ-之 -| JTU9ọ19ơng)ßn 十 (七n顷可)(yn通可)-(O'L'X') ĢIS l'1,09$9@?Ļ9€fio ugi199$1/glofi)1909 e qiorą sooșiloe) ļoğąjąoạsollgileg)III ngắ09qsoQ9f9@oņJOE “)Aሉለሉ*<Ųoለሉ4ሉ |###igහ්ම- - 十 óīņ091IrnŲTIG)gnu9唱与时崛dTGiocoqıúĝo o西迪与99R9Țnuo@fi)Irn189c09199 #1ஐெயமிதிேரி ላሉ ^Aሉ之飞AN4了 |##óığ99f@ 十 ọ9ītsg)Gắąją, Q97.9%)ßllosglés? ut sığı,91||colgog
î—\ ——↓� Çmijo@đī) 4. §)?|[[GĞĢđĩ)
|(109fiqi (Tı eqıñ9

Page 21
தமிழ் கூறும் நல்லுலகால் வழங்கப்பட்ட பட்டங்கள்
திருப்பட்டம் வழங்கிய தாபனம் வருடம் 1. முத்தமிழ்ச் செல்வர் தமிழ் இலக்கிய மன்றம் சிலாபம் 1955 2. முத்தமிழ் வித்தகர் விஜயரத்தினம் ம.வி. நீர்கொழும்பு 1957 3. வடமேல் கரைமுத்து புனிதவேதாகமச்சபை சிலாபம் 1958 4. இலக்கியச் செல்வன் தமிழரசுக்கட்சிப் பணிமனை யாழ்ப்பாணம் 1959 5. நாடக நாயகன் மறைமாவட்ட ஆயரகம் யாழ்ப்பாணம் 1960 6. ஆயகலைஞானி ஆசிரியர் பயிற்சி கலாசாலை பலாலி 1960 7. இலக்கியச் செம்மல் தமிழ் ம.வி. தலவாக்கலை 1965 8. சொல்லிசைச் செல்வன் இலங்கை மலையக தொ.கா. ராகலை 1966 9. இலக்கிய வாருதி த.ம.வி.ராகலை 1966 10. சொல்லின் செல்வர் மலையக தமிழ் இ.பே. நுவரெலியா 1967 11. வில்லிசைவேந்தன் கதிர் வேலாயுத சுவாமிகோயில் ராகலை 1967 12. வில்லிசை மன்னன் நிர்வாகசபை,ஊரவர்கள் உடப்பு 1968 13. ஈழத்து கவியரசு கிழக்குமாகாண த.இ.பே. மட்டக்களப்பு 1970 14. வில்லிசைச் சக்கரவர்த்தி நல்லை ஆதீனம் நல்லூர் 1980 15. வில்லிசைத் தென்றல் வண்ணை வைத்தீஸ்வரன்கோயில் 1981 16. வில்லிசை வித்துவான் புலோலி வல்லிபுர ஆழ்வார் 1981 17. வில்லிசை வாருதி புளியங்கூடல் மஹாமாரி அம்மன் ஆலயம். 1982 18. வில்லிசைக் கலாநிதி செரங்கூன் ருத்ரகாளி ஆலயம் சிங்கபூர் 1984 19. ஓதுவார் திலகம் இலந்தைவனம் பிள்ளையார் வேலணை 1984 20. கருத்தோவியன் அசோகா வித்தியாலயம் கண்டி 1986 21. சிவநெறிச்செல்வர் முரீமத் அருணாசலேஸ்வரம் கொழும்பு 1986 22. வில்லிசைச் செல்வன் மயுரபதி தேவஸ்தானம் கொழும்பு 1986 23. வில்லிசை அரசு இரத்தோட்டை சித்தி விநாயகர் 987 24. வில்லிசைத் திலகம் இந்துமாமன்றம் கண்டி 1987 25. சிவநெறிப்புரவலர் பொன்னம்பலவாணேஸ்வரர் கொழும்பு 1987 26. கலைச்சுடர் தமிழ் கலை நற்பணி மன்றம் மாத்தளை 1988 27. பண்ணிசை வேந்தன் புளியங்கூடல் மஹாமாரி அம்மன் ஆலயம் 1990 28. வில்லிசைக் கலாபமணி அ.இலங்கை சபரிமலை சாஸ்தா பீடம் 1992 29. கலாசூரி ஜனாதிபதி விருது 1992 30. அருட்கலைத்திலகம் இந்துகலாசார இராஜாங்க அமைச்சு 1993 31. பல்கலைவேந்தன் வடமேல் மாகாண இ.க.ஒ. முந்தல் 1994 32 தேசக்கலைத்திலகம் கோட்டகல்விபணிமனை புத்தளம் 1995 33 யுகக்கலைஒளி வலய கல்வி அலுவசகம் புத்தளம் 1996 34. கலாபூஷணம் இலங்கை கலாச்சார அலுவல்கள் அமைச்சு 1997
38

35. ஆன்மீகப்பேரொளி இராமகிருஷ்ண மிஷன் கொழும்பு. 1997
36. தெய்வீக இசைசித்தர் வடகொழும்பு இந்துமாமன்றம் 1997
37. வில்லிசை மாமணி முத்துக் கிருஷ்ணமிஷன் கொழும்பு 1997 38. செளந்தர்ய பிரதிபாணி வடமேல் மாகாணம் கல்வி திணைக்களம் 1997 39. வில்லிசை வித்தகர் சிந்தியா கலைஇலக்கிய வட்டம் புத்தளம் 2000
40. மும்மணிச் செம்மல் தமிழ் கலை இலக்கிய பேரவை புத்தளம் 2001
41 கலைமாமணி மலையக கலை இலக்கிய வட்டம் ரத்தோட்டை 2001
42. இசைஞானமணி சர்வதேச இந்துமத குருபீடம் கொழும்பு 2002 43. வில்லிசை வீரவேங்கை தமிழ்ச்சங்கம் கொழும்பு 2003
இளைப்பாறிய அதிபர் அமரர் தெய்வம் பெரி. சோமாஸ்கந்தர் தடம்பதித்த கலைக்கூடங்கள்
மதவாக்குளம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயம் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை நீர்கொழும்பு விவேகானந்தா மகாவித்தியாலயம் (விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) ராகலை தமிழ் மகாவித்தியாலயம் சிலாபம் புனித மரியாள் கல்லூரி உடப்பு தமிழ் மகாவித்தியாலயம். டச்பே றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் கல்பிட்டி வாகரை தமிழ் மகாவித்தியாலயம் மட்டக்களப்பு புத்தளம் இந்து மகாவித்தியாலயம் கருங்காலிச்சோலை தமிழ் சிங்கள வித்தியாலயம் முந்தல் யூரீ வடிவாம்பிகா தமிழ் மகாவித்தியாலயம் முன்னேஸ்வரம் ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம். உயன்வத்தை ஆசிரிய கலாசாலை கண்டி.
தெய்வத்துள் தெய்வம் பத்துத்திங்கள் எம் தாயின் கருவறையில் நாம் பற்றிப் படர்ந்திருக்க வித்திட்ட வில்லரசே எம் தந்தை. தங்கத்தமிழாலே அன்னை நம் தாய் மொழிக்கு ஒப்பற்ற தரமுயர் சேவை செய்த நற்றமிழ் ஆசானே எம்தந்தை தெய்வத்துள் தெய்வமான உங்கள் திருவுருவை நாம் பூசைசெய்து துதிபாட நின்தனது திருப்பட்டங்களே எமக்கெல்லாம் வேதமந்திரமாய் ஓங்கிப் புகழ் ஒலிக்கும்! எம் குலத்தெய்வமான தங்கள் திருப்பாதங்களில் காணிக்கையே இக்கவிதை. )மக்கள்,பெறாமக்கள்( كلما
39

Page 22
வில்லுப்பாட்டு
ஐயனே உன்னை அல்லால் குரல் ஏது. ஏது எனை ஆண்டருள் புரிந்திடும் ஆனை முகத்தவனே (ஐயனே)
கங்கை சடையிலங்கும் கதிர்மதியும் துலங்கும் பொங்கும் மரபிலங்கும் புனித சிவன் மகனே (ஐயனே)
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்துங்கக் கரிமுகத்து தூமணியே சீலமுறும் சங்கத் தமிழ் மூன்றும் இயல் இசை நாடகம் - சீலமுறும் சங்கத் தமிழ் மூன்றும் தாருமையா (ஐயனே)
ஒம் எனும் பிரணவ ஓங்கார ரூ. பா ஓம் சக்தி தந்த சித்தி விநாயகா. சோதிப் பொருளே உன் மகிமை உணர்வோம் சோமாஸ்கந்தன் குழு உடப்பூர் வில்லிசை சோமாஸ்கந்தன் குழு என்றும் தொழுவோம் (ஐயனே)
சந்தத் தமிழ் பாட வந்தோம் காளியம்மா. உனக்கு எந்தத்தமிழ் இனித்திடுமோ கா.ளியம்மா! (சந்தத்தமிழ்)
சுந்தரத்தமிழ் அறியேன் சுயம் பாடும் திறமறியேன் எந்த நேரம் சிந்தை உன்மேல் மறந்தறியேன் அந்த நேரம் எல்லாம் அடியேன் நாவில் வந்து அன்னை தமிழாலே உன்னைப் பாட அருள் (சந்தத்தமிழ்)
வானுயர்ந்த மயூரபதி அரசாளும் மகராணி மாநிலத்தில் புகழ் பெற்ற மாபெரிய ஆதி சக்தி அடியார்கள் தேடி வரும் அம்பிகையே உன்னை நம்பி அடியேனும் வந்தேன் அம்மா ஆதரித்து காருமம்மா (சந்தத்தமிழ்)
ஆக்கம் வில்லிசை சக்கரவர்த்தி பெரி. சோமாஸ்கந்தர் 40
 
 
 
 

திரெளபதை அம்மன் ஊஞ்சல் -1
தனைதனை தத்தோம் தானை தனைதனை தத்தோம் தானை தானைதனாதனம் தானைதனாதனம் தானாதத்தோம் தனைதானா
திருவளர் கயிலை - மேவும் சிவனருள் குமரன் - நல்ல சித்திவிநாயகன் உத்தம பூரணன் செல்வனை நான் தெண்டலிட்டேன் (தனைதனை)
கருமுகில் வண்ணன் - எங்கள் கமலக்கண்ணன் - என்றே கருத்தினில் நிறைந்திடும் கருணை பொழிந்திடும் கடவுளை நாம் தெண்டலிட்டேன் (தனைதனை)
சீர்வளர் உடப்பூர் - பதியில் சிறப்புடன் எழுந்தாய் - அண்ணாய் திருப்பொண்ணுாஞ்சலை விருப்புடன் பாடிட திருவடியை வணங்கிடுவோம் (தனைதனை)
செம்பொண்ணாடை - உடுத்தாய் செம்மணியாரம் புனைந்தாய் - அம்மா திருமணக் கோலத்தில் தரிசனம் தந்திடும் திரெளபதியே ஆடீரூஞ்சல் (தனைதனை)
மஞ்சள் வண்ண - கோல பட்டுடுத்தி அம்மா - அன்பின் மன்னவரை மணம் புரிந்தே மாநிலத்தைக் காக்க வந்தாய் (தனைதனை)
ஆக்கம்
தெய்வீக இசைச்சித்தர் பெரி. சோமாஸ்கந்தர்
t
41
پہلے
"T"--

Page 23
திரெளபதை அம்மன் ஊஞ்சல் 2
கண்ணே வண்ணப் பசுங் கொடியே கற்பின் தெய்வமே ஆடுக ஊஞ்சல் பொன்னே உன்மலர்ப் பாதம் பணிந்தோம் பொற்பின் செல்வியே ஆடுக ஊஞ்சல்
பாஞ்சால மன்னன் தவத்தில் உதித்தாய் பாண்டவர் ஐவர்க்குப் பத்தினியானாய் பாவிதுரியனின் நெஞ்சும் பிளந்தாய் படுகளத்தே வென்று வாது முடித்தாய் அன்லில் நடமாடி அற்புதம் தந்தாய் அடியார் உளமெலாம் கோவிலும் கொண்டாய் அல்லல் வினைதீர்த்து ஆறுதல் தந்தாய் அம்மையே திரெளபதா ஆடுக ஊஞ்சல் (கண்ணே)
வங்கம் மலிகின்ற வாவியின் ஒரமாய் தெங்கம் பொழில் சூழும் தேனவர்வாசம் உடப்பூர் நகர்பதி உவந்தே அமர்ந்தாய் உம்பர் தொழுதிட ஆட்சிபுரிந்தாய் அன்பெனும் பொற்பீடம் மீதே அமர்ந்தாய் ஆர்வமெனும் பக்திக்கடலில் எழுந்தாய் அந்தரத்தே வந்து காட்சி கொடுத்தாய் அம்மையே திரெளபதா ஆடுக ஊஞ்சல். (கண்ணே)
காலில் சிலம்போசை கலீர் கலீர் என கைகளிலே வளை பளிர் பளிரென நெஞ்சினில் மலர்மாலை கொஞ்சியசைந்திட மஞ்சள் முகத்திலே புன்னகை சிந்திட தெள்ளு தமிழாலே உன்னைத் துதித்திட உள்ளத்திலே புது புதுவெள்ளம் பிறந்திட கள்ளங்கபடுகள் உன்னைக் கண்டோட கண்ணே திரெளபதா ஆடுக ஊஞ்சல் (கண்னே)
ஆக்கம் இசைஞானமணி பெரி. சோமாஸ்கந்தர்
42
 

பஜனைப்பாடல்
எங்கெங்கும் நீயிருப்பாய் கோபால கிருஷ்ணா உனை இங்கே நான் பார்த்துவிட்டேன் மோகனக்கண்ணா
(எங்) குழந்தை போல சிரிக்கிறாயே குருவாயூரிலே நல்ல குழலெடுத்து ஊதுகிறாய் பிருந்தாவனத்திலே ருக்குமணி பாமையோடு உடப்பூரிலே பார்த்தசாரதியாய் நீயிருப்பாய் எங்கள் ஊரிலே. (எங்)
காக்கை சிறகினிலே நந்தலாலா C. உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா உந்தன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா (எங்)
துவாரகைக்கு மன்னனாக ஆட்சி புரிந்தாய் துதிப்போர்க்கு கண்ணனாக காட்சி கொடுத்தாய் பாண்டவர்க்கு தூது சென்ற பரந்தாமனாம் பார்த்த சாரதியாய் வந்தமர்ந்தாய் பார்த்தன் தேரிலே (எங்)
வண்ண கடல் எழுந்து வந்து சங்கம் முழங்குது வளமான சீருடப்பில் கோயில் இலங்குது ருக்குமணி பாமையோடு பார்த்தசாரதி என்ற பண்பான திருநாமம் எங்கும் ஒலிக்குது. (எங்)
ஆக்கம் கருத்தோவியன் பெரி. சோமாஸ்கந்தர்
43

Page 24
பஜண்பாடல்
பல்லவி
சந்தனக் காப்பணிந்து செந்தூரப் பொட்டுமிட்டு வந்தருள் தந்தான் எங்கள் கண்ணனவன் - மோகன கண்ணனவன்
அனுபல்லவி
முந்தும் இராவணனைச்
சங்காரம் செய்த ராமன் செந்தளிர்ப் பூம்பாதம்
சேவிக்க உடப்பூரில் (சந்தனக்)
சரணம்
ஆயிரந் தலையுடைய ஆதி சேடனில்
அறிதுயில் கொள்ளுகின்ற வண்ண மாலவா தாயினும் மேலான எங்கள் மாதவா - உன்னை தஞ்சமென்றே நானும் வந்தேன் என்னைக் காக்க வா (சந்தன)
ஏழைக் குசேலனுக்கு வாழ்வு தந்தவன் - அந்த ஏதுகாட்டி நானும் உன்னை நம்பி வந்தவன் மீளா அடிமை எனை ஏற்றிடுவாயே - இந்த மேதினியில் வாழ வழிகாட்டிடு வாயே (சந்தன)
நெஞ்சம் எந்தநாளும் உன்னை நாடுது நினைக்கும் எண்ணமெலாம் உன்னைத் தேடுது
தலைவன் நீ என்றே நாவும் பாடுது - இந்த
தரணியை காப்பதற்கு நல்ல நாளிது (சந்தன)
ஆக்கம் ஈழத்து கவியரசு பெரி. சோமாஸ்கந்தர்

செவ்வாய் கும்மிப்பாட்டு
எங்கே மணக்குது குங்குமம்
எங்கே மணக்குது ஆண்டிமனை மாரி கும்பம்
மீதில் மணக்குது என்ன மணக்குது - அங்கே
என்ன மணக்குது மஞ்சளோடு மங்களமும்
என்றும் மணக்குது
காசியிலே வீற்றிருக்கும்
காமாட்சியும் நீ மாமதுரை வீற்றிருக்கும்
மீனாட்சியும் நீ முன்னேஸ்வரம் காத்தருளும்
வடிவழகி நீ முத்துமாரி என்று உடப்பில்
வந்தவளும் நீ (எங்கே)
தங்கக்குடம் மீதினிலே
கங்கையும் வந்தாள் தழைகின்ற வேப்பிலையில் கும்பமாய் வந்தாள் கும்பமதில் மாரியம்மா
கொலுவினிலே வந்தாள் முளை கொட்டுகின்ற யாவரையும்
காத்திட வந்தாள் (எங்கே)
ஆக்கம் ஆயகலைஞானி பெரி.சோமாஸ் கந்தர்
45

Page 25
செவ்வாய் கும்மி பாட்டு
மாரியம்மா மாரியம்மா மனங்குளிர வாம்மா இந்த ஏழை வீட்டு முற்றத்திலே கும்பத்திலே வாம்மா கொத்து கொத்து வேப்பிலை வச்ச கும்பம் தன்னிலே (மாரியம்மா)
நீலக்கடல் எழுந்து தாலாட்டுப்பாடும் அங்கே நீண்ட வெள்ளைமணல் பாய்விரித்துப் போடும் தென்னை மரங்களெல்லாம் பூங்கவரி வீசும் அங்கே தாழை மரங்களெல்லாம் தாலாட்டுப் பாடும் உன்னையன்றி ஒரு தெய்வமும் இல்லை உற்ற துணை வேறு யாருமே இல்லை عر ஆண்டி மனை பதியினிலே அமர்ந்தவளும் நீயே ஆத்தாளே நம்பி வந்தேன் 棘 காத்தருள்வாய் தாயே (உன்னையன்றி)
(மாரியம்மா)
சித்திரை மாதத்திலே சிவந்த செவ்வாய்க் கிழமை அதில் மாரியம்மா உந்தனுக்கு கும்பம் வைத்தல் வழமை பாலிகைப் பெண்கள் நாங்கள் மொளக் கொட்டி வருவோம் அம்மா பாரினில் உன் சிறப்பை பாடி வந்தோம் நாங்கள் ஆயிரங் கண்ணுடை மாரியம்மா வந்து ஆனந்த ஊஞ்சலில் ஆடுமம்மா. தாயினும் மேலான சங்கரியே தாயே சத்தியத்தின் வடிவான நித்தியமும் நீயே (LDrTrfhuutíbLDIT)
ஆக்கம் சொல்லின் செல்வர் பெரி. சோமாஸ்கந்தர்
 

கண்ணிர் அஞ்சலித் துளிகள்
தங்கத்தமிழனல்லோ தரையிலடங்கிவிட்டாண்
சங்கத் தமிழினிலே சிங்கமென முழக்கமிட்டு, சக்கரைத் தமிழில் கவிபாடி மகிழ வைப்பாய்! காற்றுத் தேர் ஏறி, உன் கானம் பவனி வந்தால், மனங்களெல்லாம் பெண்ணாகி மாலையிடும் உனக்கு
உன் பேச்சே இசையாக இருந்தது, உன் நாவென்ன வீணையோ? உன் வசனமே கவிதையாக இருந்தது, உன் வாயென்ன யாப்போ? உன் உரையாடல், போர்க்களத்து வாள் வீச்சோ? பொன் மழையின் தூறலோ? பூவொன்று வாய்திறந்து போருக்கு அழைக்கின்றதோ?
உமிழ் நீர் ஊறி உண்ட கடல் போல் தமிழ் மேல் உனக்கும் தணியாத பசிதான்! - அதனால்
அந்த அலைகடல் போலவே கலை நூல்யாவும் கரைத்துக் குடித்தாய்!
ஏடு பல படித்து நீ கலைஞன் ஆனாய்! உன்னைப்படித்து நாங்கள் கலைஞர்களாகிவிட்டோம் உன் ஒரு கையில் புல்லாங்குழல் ஒரு கையில் போர்ச் சங்கு! நீ குழலூதிய போது கோபியர்களானோம் நீ சங்கொலித்தபோது அர்ச்சுனர்களானோம்.
படமெடுத்தாடும் பாம்புகளிடையே நடமெடுத்தாடும் மயிலாக நீ வந்தாய் சிலர் வாயோ திருவோடு உன் வாயோ அமுதசுரபி
வற்றாத சொற்பெரும் நதி - நீ தெம்மாங்கில் தென்றலும் நின்றாட, \l I /. வில்லெடுத்துப் பாட்டிசைத்தால் SN ரசிகரெல்லாம் தலையசைத்து தனைமறப்பர் کسے ..
w ـــــــــےA ܓ இன்று துரோக மரணத் துரோணன், حصے S உன்னைத்தன் காணிக்கையென்று, 2یک
கை யிசைந்து நிற்கின்றோம்!
47
களவாடிக்கொண்டுவிட்டான். காலப் போர்க்களத்தில் நாம்
ጥ‛ . wマ”

Page 26
பன்னீர் மரக்கிளையில் பாச இலையுதிர்காலம் பணி நீர் உதிர்ந்து விழும் மார்கழிப்பூவே! நீ திருவாய் மலர்ந்து திருப்பாவை ஒதினால் ஊர்ப் பாவையரெல்லாம் ஒடியல்லோ வருவார்கள்!
தேன் கவிதை பாடும் நிலாவே! நீ போகும் பாதைகள் பூங்காவனம் நீளத்தில் அகலத்தில் நீ ஓர் நிலாமுற்றம் கண்ணிர் உருகவைத்த பன்னீர் புஷ்பமே! நீ என்றும் எம்மனதில் மறையாத மகுடநிலா!
கலைஞானம் சொரிந்து வந்த கனி மரமே! - உனக்கு விஞ்ஞானம் மறுபிறவி தந்த போதும்? மெஞ்ஞானத்தில் நீ மேலான பற்று வைத்தாய்! அதனால், உன்திருவாய் ஒதும் மொழி கேட்கவென்று, திருமால்தான் உனை அங்கு அழைத்தானோ?
சுதி சேர்த்துப் புதுப்பாட்டுத் தொடங்குகின்ற வேளையிலே விதி சேர்த்தவேதனையோ வீணை உடைந்ததம்மா!.
மரணப் புயலில் சாய்ந்த மரமே! உன்னைச்சுற்றிக் கூடிழந்த பறவைகள் புலம்புகின்றன!
தமிழே அழு, உனக்குத் தவிசளித்துப் போற்றியவன் குமிழியைப் போல் உடைந்துவிட்டான்
மேடைகளே புலம்புங்கள், மேலான சொற்களுக்கு ஆடைகட்டி சதங்கையிட்டு ஆடவைத்தோன் அடங்கிவிட்டான்.
புத்தளம் பூரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலனசபை இலா.சிவநாதன் பிள்ளை (செயலாளர்) பூ. கதிர்காமநாதன (உறுப்பினர்)
V /V ~ンガつ。 ܓ صص
48

கண்ணிர் அஞ்சலி
சொல்லின் செல்வனே சோமாஸ்கந்தப் பெருமகனே! நல்லிசைப் புகழ் உடையாய்! நாவன்மைத் தமிழ் உடையாய்! தொல்லிசைநின்று வாழும் வில்லிசைச் சுவையின் மிக்காய்!
தோன்றிய புகழொடு தோன்றிய தூண்டா மணி விளக்கே! எம்மையெல்லாம் தூண்டி எரியச் செய்த தூய வழி காட்டி!
செந்தமிழ்ப் பெருமானே செம்மாந்த கலைஞானி எம்மையெல்லாம் மறந்தனையோ ஏன் எம்மைப் பிரிந்தனையோ?
துயரால் வாடித் தொலைகின்ற சோமாஸ்கந்தர் வில்லிசைக்குழு ரீ ஐயப்பசுவாமி பரிபாலனசபை (வம்பிவட்டவான்)
கண்ணிர் அஞ்சலி
gu IIT! உங்களைக் காலன் கவர்வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! கருணைத்தெய்வம் கருமாரி அம்மன் பாத கமலங்களில் உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். ஒம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
துயருறும் ஆலய பரிபாலன சபை மணல்குன்று முறி கருமாரி பொம்மக்கா அம்மன் ஆலயம் புத்தளம்
49

Page 27
கண்ணீர் அஞ்சலி
பெரியாண்டி அண்ணாவியார் பெற்றெடுத்த தவப்புதல்வா! பெரி. சோமாஸ்கந்தர் என்று பெயரின் முன் வைத்த ஊரின் பெயராக உடப்பூரான் என்று எம் ஊரிற்கே புகழ் பரப்பி பாரில் பல பட்டங்களை பாங்காய்ப் பெற்று வாழ்ந்து
இறை தொண்டை இயன்றமட்டும் செய்து வந்து மறைந்து விட்டீரே மாமேதை ஐயா நீர் குறைந்து விட்டதையா எம் ஊரிற்கு கலைக்கூடம் உறைந்து விட்டது எம் உள்ளங்கள் சோகத்தில்
உம்பிரிவால் வாடும் இந்து ஆலய பரிபாலன சபை உடப்பு ஊரவர்கள்
கண்ணீர் அஞ்சலி
வரலாறு காணாத கலை உலகமே வானில் பறந்த தேன்? வில்லிசை வேந்தன், சொல்லிசைச் செல்வன் என்றெல்லாம் புகழ் பெற்ற ஐயா விண்ணில் மறைந்ததேன்?
உடப்பின் கலைப் பொக்கிஷமே உத்தம புத்திரனே - உந்தன் நடனம் நாட்டியம் நாடகங்கள் இவ்வுலகுக்கு எடுத்துக்காட்டியவரே உடப்பின் பெயரை கலை உலகிற்கு வெளிக்காட்டியவரே ஊரவர் எங்கு சென்றாலும் உமது பெயரை பாடி கேட்பார்களே இனி எங்கே?
கலாசூரியே கலாபூஷணமே, கலைமாமணியே உடப்பூர் கலையுலக இமயமே உமது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்
பிரிவால்வாடும் ஹரிராம்ஸ் இசைக்குழு உடப்பு 50
 

கண்ணீர் அஞ்சலி
எழுத முடியாத அளவுக்கு புகழேற்றிய புகழேந்தியே - இன்று புழுவாய் துடிக்கும் புதல்வர்களை பாருமைய்யா..!
புகழ்பாட வருவீர் என்றால் பூந்தோட்டமும் மலரும் - எங்கள் ஊரில் - இன்று நீங்கள் செல் கிறீர் என்றால் புதுப்பூக்களும் வாடுகிறதே எங்கள் வீட்டில்...!
பெயர் சொல்லி வாழ்ந்த காலங்கள் கடந்து - இன்று பெரியோர் நீர் மறைந்த காலமாகியதே.!
உடப்பூர் போற்றும் உத்தமனாய் வாழ்ந்து - இன்று உலகு போற்றும் உத்தமனாய் செல்கிறீரே..!
கரம் கூப்பி கதி கலங்கி கண்ணிர் வடித்து - நிற்கும் இளைஞர்கள். ரீ பார்த்தசாரதி பஜனைக்குழு Զ-ւ-ւնւ
காலத்தால் அழியாத கண்ணிர் அஞ்சலி
நாடகங்கள் என்றால் ஓடிவருவீர் கலைநிகழ்ச்சி என்றால் முன்நிற்பீர் இழந்துவிட்டோம் ஐயா உங்களை இனி எங்கே தேடுவது தாங்களை
உங்கள் பிரிவால் வாடும் வடஉடப்பு பூர் கந்தசாமி நாடக மன்றம்
யூரீ கந்தசாமி இசைக்குழு Փ-ւմւ
51

Page 28
'கண்ணிர்க் காணிக்கை”
ஈழத்தின்
வடமேல் மாநிலத்தில் உடப்பூர் ஈன்றளித்த தவப் புதல்வா, இன்று எங்கள் தமிழ் அன்னை கண்ணிர் வடிக்கிறாள்
தமிழின் இனிமை சைவத்தின் பெருமை கிராமத்து கலைகளின் சிறப்பு இவை மூன்றும் கலந்து நீங்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆர்ப்பரிக்கும் கடல்களுக்கும் அப்பால் அகில மெங்கும் பரவியதே
வெண்கலக் குரலோனே தங்க நாக்கு தமிழ் மகனே மங்களம் பொங்குக என்றும் மாட்சிமை துலங்குக என்றும் நீங்கள் ஆற்றிய சமயப் பணிகளால் சைவமும் தழைத் தோங்கியது.
ஐயா!
நீங்கள் மீளாத துயிலில் மூழ்கிவிட்டீர்கள் நாங்கள் மாளாத துயரில் மாய்ந்து போனோம் கனத்த இதயத்துடன் கண்ணிரை உங்களுக்கு
அஞ்சலி ஆக்குகிறோம்.
தமிழ் மகனே, அற்புதக் கலைஞனே.
கைகூப்பி விடை தருகின்றோம்!
52
துயருறும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்
புத்தளம் இந்து தமிழ் மகாவித்தியாலயம்
புத்தளம் இந்து மகாசபை
 

கண்ணிர் அஞ்சலி
தன்னறிவைத் தான் கருதி தன்னறிவால் பாட்டெழுதி தம்மறிவால்க் கவிபாடும் 6Tub LDT 6008 2guUIT! வில்லிசை வேந்தனாய் சொல்லிசைச் செல்வனாய் வாழ்ந்துமே! மறைந்ததும் மாறாத கவலை ஐயா!
பேர்புகழும் பெருமகனாய் பூமியிலே பூத்தமகன் பூத்தமரம் சாய்ந்ததம்மா பூமலர்கள் வாடுதம்மா காய்த்தமரம் வீழ்ந்ததம்மா கனிகள் இங்கு கலங்குதம்மா தாய்ப்பறவை ஏங்குதம்மா தாளாத துயரமய்யா
உள்ள மெனும் கோவிலிலே உறைந்திருந்த திருமாலும் கள்ளமில்லா அடியேனைக் கரை சேர்க்க முடியலையா தெள்ளு தமிழால் பாடி திருப்பணியும் பல செய்தும் எள்ளளவும் இரங்காமல் ஏனழைத்தாய் மாயவனே!
மாயவனே கோவிந்தா மாயச் சகடுடைத்தோனே ஆதவனே என் ஆசை ஆசானை அழைத்தவனே அறவாளி அந்தணனே அம்புயற் கண்மாலே மறவாமல் சங்கேந்தி வைகுந்தம் சேருமய்யா
இவ்வண்ணம் கலைமகள் குடிகொண்ட பெருமகனாம் ஆசானின் பேரிழப்பால் காலமெல்லாம் கண்ணிரால் வாடும் மாணவன்
கே. சம்மாட்டி, மனைவி, பிள்ளைகள
ஆண்டிமுனை, உடப்பு.
53

Page 29
கண்ணீர் கவிப்பா அஞ்சலி
அகரப்பொருளை அறிவித்த ஆசான் ஐயா நிகரில்லா உமக்கு நின்று விட்டதே உம் மூச்சு சிகரம் போல் இருந்து, சிவன்பணி செய்தீர் நகர் எங்கும் ஊர் எங்கும், நாயகா உன்பேச்சு
முத்துப்பேச்சும் மூச்சுவிடா இறை தொண்டும் பத்து அவதாரணுக்கு நீர் ஐயா பணி செய்ததொண்டும் வித்தாக எம்மனதில் விழுந்து விருட்சமாக நிற்குதயப்யா தத்துப்பிள்ளைகளாய் தங்கள் பாதம் போற்றுகின்றோம்
தவ புதல்வா எம்மை எல்லாம் தவிக்க விட்டு விட்டீரே புவனியில் உள்ளனரோ உம்போல் புத்திஜிவி யாருமுண்டோ எவர்வந்து எது எழுதிக் கேட்டாலும் எழுதிக்கொடுக்கும் எழுத்தாளனே சுவர்மேல் சித்திரமாய் உங்கள் சுயரூபம் மனதில் மறையாது
கார்மேக மழைபோல் காணமழை பொழிவீரே பாரோர் வாயடைக்கி பாங்காய் பா பாடுவீரே ஊர் எம் உடப்பிற்கு உம்மால் பெருமை வந்ததுவே பேர் உம் முன்னால் பெரும்பட்டம் ' உடப்பூரான்
விண்ணில் சென்று வித்தகர் நீர் மறைந்து விட்டீர் கண்ணில் சொரிகின்ற கண்ணிரை அறிவீரோ எண்ணின் எழுத்தும் எழுத்தறிவித்த எங்கள் ஐயா மண்ணில் நீர் மறைந்தாலும் மறையாது உம்மகிமை
சொந்தங்கள் பிறவிகள் சோகம் கொண்ட அனைவரும் விந்தை மிகு இறைவனிடம் விபரித்து மன்றாடி சந்தங்கள் பலபாடி ச்ாந்தம் உம்மை அடைய எண்ணி உந்தன் ஆத்மா சாந்திக்காக உள்ளன்போடு வேண்டுகின்றோம்
V\ / பிரிவால் துயருறும் பெ. வீரசுந்தரேஸ்வரன் کسک ܓܠ O amus (பெறாமகன்) n/ \ །། ஆண்டிமுனை' உடப்பு.

Ss აy *专ܙܙ ፆ
ܫ لیۓ
R
V
نۓ ケ&
E
È كة
3
索
ミ尝 2s
*
索
نجاۓ 3
学尝皇皇을皇专
திருவாய் மொழி தோத்திரங்கள் திருப்பல் லாண்டு எந்தை தந்தை தந்தை தந்தைதம் மூத்தப்ப னேழ்படி கால்தொடங்கி வந்து வழிவழி யாட் செய்கின்றோம் திரு வோணத் திருவிழவி லந்தியம் போதி லரியுருவாகி யரியை யழித்தவனை பத்தனை தீரப் பல்லாண்டு பல் லாயிரத் தாண்டென்று பாடுதுமே
திருமொழி
மாணிக்கங் கட்டி வயிரமிடை கட்டி ஆணிப் பொன்னாற் செய்த வண்ணச் சிறு தொட்டில் பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே! தாலேலோ வைய மளந்தரனே! தாலேலோ
பெரிய திருமொழி குலந்தரும் செல்வந் தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம் நிலந்தரஞ் செய்யும் நீள் விசும் பருளு மருளொடு பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினு மாயின செய்யும் நலந் தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம். p
திருவாய் மொழி மாயா! வாமனனே மதுசூதா நீயருளாய் தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க்கா அஅலாய் தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்ற வாறிவை யென்ன நியாயங்களே
55
ಛಿಪಜ್ಜಿ

Page 30
திருப்புராணம் நாராயணா போற்றி நரசிம்ம ரூபா போற்றி காரணமாகி வந்தென் கவலையை தீர்ப்பாய் போற்றி வாரனம் தன்னைக் காத்த மாதவா போற்றி சீரணிந் தெம்மை யாழும் ழறி ரங்க நாதா போற்றி போற்றி.
திருமால் திருப்புகழ் சீதராம ராமராம ராமரா வெனா வன்மீகி G85O J TLDJ TLD JIT D J(5JT DIT தேவமானுடாதி பேத சேதனோட சேதனாக
சீவதார காமிமான - நெறி தேறி மாதுபாக னானகாசி வாழுநாத னோதும் வேத
மானசீதை ராமராம - அபிராமா
வாழி வாழி நீ யெனாவுன் னானசயாகி மோகமாகி
ஆசிசுவறு மேக நீதி யருள்வாயே
ஆதியாய னாதியாதி வேதமாகி வேள்வியாகி ஆமையாகி ஆயனான நெடுமாலே யானையாதி மூலமே யெ னாமுனோடி யேகராவி ஆவிமாறு வேகவாழ் - விடுவோனே கோதிலாவ னேகநீத சீத பாத நாத கீத கோபிநாத போத பூத மயமானோய் கோல நீல மேனியாயு UTu LDTu I (85ug|Tuu கோவனுரில் வாழ்வ மேவு பெருமானே
। ॐ0
 

i领
初
திருப்பல்லாண்டு நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமு மத்தாணிச் சேவகமும் கையடைக் காயும் கழுத்துக்குப் பூனொடு காதுக்குக் குண்டலமும் மெய்யிட நல்லதோர் சாந்தமுந் தந்தென்னை வெள்ளுயிராக்க வல்ல பையுடை நாகப் பகைக் கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே.
திருமொழி
39JJJ6nJ60b600 Tu HT uufTu I (3J(3D அம்ம முண்ணத் துயிலெ ழாயே இரவு முண்ணா துறங்கி நீ போ யின்று முச்சி கொண்டதாலோ வரவுங் காணென் வயிற சைந்தாய் வனமுலைகள் சோர்ந்து பாய திருவுடைய வாய்மடுத்துத் திளைத்து தைத்துப் பருகிடாயே
பெரிய திருமொழி நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு ஏரால மிளந் தளிர் மேல் துயி லெழுந்தாய் சீரார் திருவேங் கடமா மலைமேய ஆரா வழுதே! யடியேற் கருளாயே.
திருவாய் மொழி முடியானே! மூவுலகுந் தொழு தேத்துஞ் சீரடியானே! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளுர் கொடியானே! கொண்டல் வண்ணா! அண்டத்தும்பரில் நெடியானே! என்று கிடக்குமென் நெஞ்சமே.
திருப்புராணம் மாதவா கோவிந்தா மாயச் சகடுதைத்தோய் ஆதவா எங்களை யாழ் கோபாலா நீதான் - அறவாளி அந்தணனே அம்புயற் கண்மாளே மறவாளி வென் சங்கேந்தி வா!
57
●

Page 31
திருமால் திருப்புகழ் அறிவழியவே பிறந்து தவழ் குலவியாயிரங்கி யழுதழுது காலுதைந்து விளையாடி யறிவினுடனே வளர்ந்து மகளிர் மய லாலொடுங்கி யறவயது பேர்ய் மருண்டு குருடாய் நீள் w பொறி வழியெ லாமயங்கி யுரை கடடு மாறி நெஞ்சு பெருமலெழ வேக சண்ட லுயிரோடு பொருதடரும் வேளை கண்டு கருடன் மிசை யேறியன்பு புரிய விரைவாய் எழுந்து வருவாயே கறிய முகை தாதளைந்து கொழுது மறு கால் குடைந்து நுறை யொழுகு பூ மடந்தை - பணியார் நகை விரிய டீர கொங்கை சுவடு படவே யெதிர்ந்து நடனமிடு ராஜ துங்க - மணி மார்பில் மறிபுனலினுடலம்பி யிளை யகருமேதி சென்று வளமருத வேலியெங்கு - மளறாம் மணமொழுகு வீதியின் கண் விலைமகளிர் போல வந்து மருவு முறை யூரினின்ற பெருமாளே.
58

பஞ்சபுராணம்
தேவாரம் 2. திருச்சிற்றம்பலம்
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்ல."துறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
திருவாசகம் உடையா ஞன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியே னருவுள் இருவீரும் இருப்பதானால் அடியேனுன் அடியார் நடுவு எளிருக்குமரு ளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே.
திருவிசைப்பா நையாத மனத்தின்னை நைவிப்பான் இத்தெருவே ஐயாநீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே!
திருப்பல்லாண்டு குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம் பெருகி விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகு திரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப் பிறந்த பழவடி யாரொடும் கூடியெம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
بل
فيف فلا
LÁRU
Yللفلا
LAU
بل
A
لطفلا
t. Á
AtKr
rللطفلا
Yلسلالا

Page 32
திருப்புராணம் பரந்தெழுந்த பன்முதலாம் பரசமயவிரு ணீங்கள் சிந்தழுவு சைவநெறித் திருநீற்றி னொளிவிளங்க சிந்தடெப் புகலியர் கோனமுதுசெயத் திருமுலைப்பால் சுந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல் போற்றி
அபிராமி அந்தாதி (A) அழகுக்கு ஒருவரும் ஒன்வாத 裂上
வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்
தாள்பனி பாமதியின் | Wሶጎ) , குழவித் திருமுடிக் கோமள سيسيكفي" جيد
யாபளைக் கொம்பிருக்க இபுபுற்று நின்றநெஞ் சேயிரங் A. கேல் உனக்கு) என்குறையே
திருப்புகழ் '. அகரமும் ஆகி அதிபனும் ஆகி ()
அதிகமும் ஆகி அகமாகி ليدلته يې அயன் என ஆகி அரி என ஆகி خيامي
அரன் எண் ஆகி அவர்மேலாப் இகரமும் ஆகி எவைகளும் ஆகி (A)
இனிமையு மாகி வருவோனே -3- இருநில மீதில் எளியனும் வாழ كيتيد من எனதுமுன் ஓடி வர வேணும் 品 黑 () மகபதி ஆகி மருவும் வலாரி (A | மகிழ்களி கூரும் வடிவோனே یچناrنہای
வனம் உறை வேடன் அருளிய பூஜை .ܡ மகிழ்கதிர் காமம் உடையோனே (A) செகக ைசேகு தகுதிமி தோதி O انجام திமி கான் ஆடு மயிலோனே ལ།་་་་་་་་་་ ۔۔84%یا
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே
வாழ்த்து سيجيله
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை பரசு செய்க குறைவிலாது யிர்கள் வாழ்க நான்மறை பறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மஸ்க போன்மைகொள் சைவந்தி விளங்குக உலகIல்லாம் pfl:Thét flirt||11163||
 
 

நெஞ்சம் மறக்காத நிலையான நன்றிகள்
எங்கள் இனிய தந்தை பேரின்பப் பெரு வாழ்வு எய்திய வேளையின் போது நேரில் வந்து மலர் அஞ்சலி செலுத்தியும் ஆறுதலும் தேறுதலும்கூறி இறுதிக்கிரியைகளிலும் கலந்து கொண்டு அனுதாபச் செய்திகளை வெளியிட்டும், மற்றும் நேரிலும், தந்திமடல், தொலைபேசி, தொலைநகள் ஊடாக அனுதாபச்செய்தி தெரிவித்தவர்களுக்கும், அடுத்து வந்த உத்தர பூர்வாங்கக் கிரியையிலும் கலந்து கொண்டவர்களுக்கும். அன்னாரின் நினைவாக இம்மலரை வெளியிட்டவர்களுக்கும் நோயுற்றிருந்தவேளை உதவிக்கரம்நீட்டிய எம் அன்பு நெஞ்சங்களுக்கும். ஆத்மா சாந்தி வேண்டிப் பிரார்த்தித்தவர்களுக்கும், எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி நவிலலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஒம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
FHL || i.
குமர கோட்டம் இங்ானம்
பி, பிரதான வீதி IEEனவி.மக்கள் п IIIlli உற்றார், உறவினர்கள். நண்பர்கள்
Ka)),\ } |Tilt;375,
[1 ነT - I'?5ነ8ና (ነኻሶ

Page 33
Mதிரண்டிருவி பாயுந் தி #?
 
 
 

ருமலைமேல் எந்தை ன்றாய் இசைந்து"
ーミ。