கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (பாக்கியலெட்சுமி தியாகராஜா)

Page 1
மதுரமொழுகிய
மதுரை மரகதவல்
 

·P-TT = }=; |×|- , s.
so.

Page 2

சிலியம்
புங்குடுதீவு ம்திவிட்டாரத்
பிறப்பிடமாகக் கொண்ட்,
கொழும்பு கொம்பனித்தெரு பிரபல வர்த்தகரும் கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தர்மகர்த்தா சபைக் கெளரவ காரியதரிசி (1962 - 1980)
திரு. க. தியாகராஜாவின் (தம்பிஐயா) பாரியார்
அமரர் திருமதி பாக்கியலெட்சுமி தியாகராஜா
அவர்களின் இறுதிப் பயணத்தைத் தொடர்ந்து
வெளியிடப்பட்ட
நினைவு மலர்
12. O5. 1994

Page 3


Page 4

அமரர் திருமதி. பாக்கியலெட்சுமி தியாகராஜா
பற்றுப்பெற்று நாள் பற்றுறுத்தநாள்
O.O. 938 12.04.1994
திதி நிர்ணய வெண்பா
வல்லாண்டு பூரீமுகத்துப் பங்குனி முப்பதன்று நல்வள பூர்வ பக்க நற்துதியை - பல்வளமும் பெற்றிட்ட பாக்கியலெட்சுமியாம் பாவையவள் பற்றறுத்து சென்றிட் நாள்

Page 5

விநாயகர் துதி
வானுலகு மண்ணுலகு வாழமறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத வைந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்.
திருவுங் கல்வியுஞ் சீருந் தழைக்கவும் கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும் பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும் பெருகு மாழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக் கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்

Page 6
நாயனார் கோவை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப் பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனைநாட்பணிந் தேத்த அருள் செய்த பீடுடைய பிரமா புரமேவிய பெம்மானிவனன்றே.
தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும்போவார் கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியால் ஏழை நெஞ்சே அந்தணர் ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்சல் நெஞ்சே,
மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில்நல் லகதிக்கு யாதுமோர் குறைவில்லை கண்ணின் நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பண்ணில்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
வாழ்ந்த நாளும் இனிவாழு நாளும் இவை அறிதிரேல் வீழ்ந்த நாளெம் பெருமானை ஏத்தா விதி யில்லீர்காள் போழ்ந்த திங்கட் புரிசடையினான்றன் புகலுரையே சூழ்ந்த உள்ளம் உடையீர்கள் உங்கள் துயர்தீருமே.
சோதிமிகு நீறது மெய் பூசியொரு தோலுடை புனைந்து தெருவே மாதர் மனைதோறும் இசைபாடி வசிபேசும் அரனார் மகிழ்விடம் தாது மலி தாமரை மணங்கமழ வண்டுமுரல் தண் பழனமிக் கோதமலி வேலைபுடை சூழுலகில் நீடுதவி மாணி குழியே.
திருநாவுக்கரகநாயனார் தேவாரம்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம்பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே
2

திருநாமம் ஐஞ்செழுத்துஞ் செப்பாராகில் தீவண்ணர் திறமொருகால் பேசாராகில் ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணாராகில் அருநோய்கள் கெடவெண்ணி றணியாராகில் அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.
எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர்நல்லார் செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லைச் சிறுவிறகாற் தீமூட்டிச் செல்லாநிற்பர் சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன் அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால் அல்லல்கண்டங் கொண்டடியேன் என்செய்கேனே.
நினைந்துருகு மடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்கவைத்தார் சினந்துருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர் வைத்தார் சிறந்துவானோர் இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப்பில்கி நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்லவாறே.
சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்
மணம் என மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம் பிணம் எனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் பணையிடைச் சோலைதோறும் பைம்பொழில் விளாகத் தெங்கள் அணைவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.

Page 7
தம்மையே புகழ்ந் திச்சை பேசினும் சார்பினும் தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம் அம்மையே சிவ லோகமாள்வதற்(கு) யாது மையுற வில்லையே.
பொன்னும் மெய்ப்பொருளுந்தருவானைப் போகமுந்திரு வும்புணர்ப் பானை பின்னை யென்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெலாந் தவிரப் பணிப்பானை இன்ன தன்மைய னென்றறி யொண்ணா எம்மா னையெளி வந்தபிரானை அன்னம் வைகும் வயற்பழ னத்தணி யாரூரானை மறக்கலு மாம்ே.
திருவாசகம்
ஆணவம், காமியம், மாயை என்னும் மும்மலங்களைப் போக்கி இறைவன் திருவருட் பேற்றையடையச் செய்ய வல்லது மாணிக்கவாசகப்பெருமான் அருளிய திருவாசகம். இது சைவத்
திருமுறை நூல்கள் பன்னிரண்டினுள்
திருமுறையாகும். இந்நூல் படிப்பார் உள்ளத்தையும், கேட்பார் மனத்தையும் கரைந்துருகச் செய்யவல்லது; பக்தி நெறிக்கண் செலுத்திப் பெறற்கரிய ஆண்ம லாபத்தை அடையச் செய்யும் தன்மையுடையது; பரனடிக் கன்புடையாரெல்லாம் போற்றுந் தகையது; செந்தமிழ்ப் பற்றுடையார்க்குத் தேனினுமினியது.
4

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த
திருவாசகம் தொல்லை இரும் பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.
திருப்பெருந்துறை (8 ஆம் திருமுறை)
சிவபுராணம்
திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க ஈசன்அடி போற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடி போற்றி சிவன்சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன்அடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவன்அடி போற்றி ஆராத இன்பம் அருளும்மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன்அரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஒயஉரைப் பன்யான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார்கழல் இறைஞ்சி விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
5

Page 8
பல்மிருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யளன் உள்ளத்துள் ஓங்கார மாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழந்துஅகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான ஆம் விமலா பொய்ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனம் கழிய நின்றமறை யோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தால் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல் போர்த்துஎங்கும் புழுஅழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விலமா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துஉள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
6

மாசற்ற சோதி மலர்ந்த மலர்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசம்ஆம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கு அரிய நோக்கே நுணுக்குஅரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும்இல்ாப்புண்ணியனே காக்கும் எம்"காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றுஇன்ப வெள்ளமே அத்தா மிக்காய்நின்ற தோற்றச் சுடெராளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம்ஐயா அரனேஓ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார் மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏந்தப் பணிந்து
திருச்சிற்றம்பலம்.
7

Page 9
தில்லையில் அருளிய
போற்றித் திருவகவல் சகத்தின் உற்பத்தி (நிலைமண்டில ஆசிரியப்பா) திருச்சிற்றம்பலம்
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுல களந்து நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று
அடிமுடி யறியு மாதர வதனிற் கடுமுரண் ஏன மாகிமுன் கலந்து ஏழ்தல முருவ இடந்து பின்னெய்த்து ஊழி முதல்வ சயசய வென்று வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்
வழுத்துதற் கெளிதாய் வார்கட லுலகினில் யானை முதலா எறும்பீறாய ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுண் மாதா வுதரத் தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியி னிருமையிற் பிழைத்தும் இருமதி விளைவி னொருமையிற் பிழைத்தும் மும்மதி தன்னு ளம்மதம் பிழைத்தும் ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும் அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களினூறலர் பிழைத்தும் ஏழு திங்களிற் றழ்புவி பிழைத்தும் எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்துந் தக்க தசமதி தாயொடு தான்படுந்
8

துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் ஆண்டுகள் தோறும் அடைந்தவக் காலை ஈண்டியு மிருத்தியு மெனைப்பல பிழைத்துங் காலை மலமொடு கடும்பகற் பசிநிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்துங்
கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் ஒருங்கிய சாயல் நெருங்கியுண் மதர்த்துக் கச்சற நிமிர்ந்து கதிர்த்துமுன் பணைத்து எய்த்திடை வருந்த எழுந்த புடைபரந்து ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தங்
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்துங் கல்வி யென்னும் பல்கடற் பிழைத்துஞ் செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும்
நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் புல்வரம் பாய் பலதுறை பிழைத்துந் தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாதோர் பொருளது கருதலும் ஆறு கோடி மாயாசத்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின ஆத்த மானா ரயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்
விரத மேபர மாகவே தியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர் சமய வாதிகள் தத்த மதங்களே அமைல தாக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாத மென்னுஞ்
9

Page 10
சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின் கலாபே தத்த கடுவிட மெய்தி
அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவுந் தப்பா மேதாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகது போலத் தொழுதுள முருகி யுழுதுடல் கம்பித்து ஆடியு மலறியும் பாடியும் பரவியுங் கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும் படியே யாகிநல் லிடையறா அன்பிற்
பசுமர்த் தாணி யறைந்தாற் போலக் கசிவது பெருகிக் கடலென மறுகி அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச் சகம்பேயென்று தம்மைச் சிரிப்ப
நாணது வொழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத லின்றிச் சதுரிழந் தறிமால் கொண்டு சாருங் , கதியது பரமா அதிசய மாகக் கற்றா மனமெனக் கதறியும் பதறியும் மற்றோர் தெய்வங் கனவிலு நினையாது
அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபானாகி யருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப் பிறிவினை யறியா நிழலது போல முன்பின் னாகி முனியா தத்திசை
என்பு நைந் துருகி நெக்குநெக் கேங்கி அன்பெனு மாறு கரையது புரள நன்புல னென்றி நாதவென் றரற்றி உரைதடு மாறி யுரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித் திருதய மலரக்
10

கண்களி கூர நுண்துளி யரும்பச் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதிய னாகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை யரசே போற்றி கூட லிலங்கு குருமணி போற்றி தென்றில்லை மன்றினுளாடி போற்றி இன்றெனக் காரமு தானாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின்னா ருருவ விகிர்தா போற்றி கன்னா ருரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா வென்றனக் கருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி யிறைவ போற்றி தேசப் பளிங்கின் றிரளே போற்றி அரைசே போற்றி யமுதே போற்றி
விரைசேர் சரண விகிதர் போற்றி வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி யறிவே போற்றி கதியே போற்றி கனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி யுணர்வே போற்றி கடையே னடிமை கண்டாய் போற்றி ஐயா போற்றி யணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி
ll

Page 11
நெறியெ போற்றி நினைவே போற்றி வானோர்க் கரிய மருந்தே போற்றி ஏனோர்க் கெளிய இறைவா போற்றி மூவேழ் சுற்ற முரணுறு நரகிடை ஆழா மேயருளரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி யரனே போற்றி உரையுணர் விறந்த வொருவ போற்றி
விரிகட லுலகின் விளைவே போற்றி அருமையி லெளிய அழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருண் மலையே போற்றி என்னையு மொருவ னாக்கி யிருங்கழற்
சென்னியில் வைத்த சேவக போற்றி தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி அழிவிலா ஆனந்த வாரி போற்றி அழிவது மாவதுங் கடந்தாய் போற்றி முழுவது மிறந்த முதல்வா போற்றி
மானோர் நோக்கி மணாளா போற்றி வானகத் தமரர் தாயே போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை முன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி அளிபவ ருள்ளத் தமுதே போற்றி கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி நனவிலு நாயேற் கருளினை போற்றி
12

அடைமரு துறையு மெந்தாய் போற்றி கடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி ஆரூ ரமர்ந்த அரசே போற்றி சீரார் திருவை யாறா போற்றி அண்ணா மலையெம் அண்ணா போற்றி
கண்ணா ரமுதக் கடலே போற்றி ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு வானாய் போற்றி பாராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி குற்றா லத்தெங் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி பாங்கார் பழனத் தழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி இத்தி தன்னின் கீழிரு மூவர்க்கு அத்திக் கருளிய அரசே போற்றி தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி எனக் குருளைக் கருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி இருள்கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தே னடியேன் தமியேன் போற்றி களங்கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி நஞ்சே யமுதா நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி
* 3

Page 12
நித்தா போற்றி நிமலா போற்றி பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சே ரடியாள் பங்கா போற்றி
அலந்தே னாயே னடியேன் போற்றி இலங்கு சுடரெம் மீசா போற்றி கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலைநா டுடைய மன்னே போற்றி
தலையா ரரிகே சரியாய் போற்றி திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி பொருப்பமர் பூவணத் தரனே போற்றி அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி
துரியமு மிறந்த சுடரே போற்றி தெரிவரிதாகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆளானவர்கட் கன்பா போற்றி ஆரா அமுதே அருளே போற்றி
பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி தாளி அறுகின் தாராய் போற்றி நீளொளி யாகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைக் கரிய சிவமே போற்றி
; 14

மந்திர மாமலை மேயாய் போற்றி எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி அலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி கருங்குரு விக்கன் றருளினை போற்றி
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி படியுறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடுவீறானாய் போற்றி நரகொடு சுவர்க்க நானிலம் புகாமற் பரகதி பாண்டியற் கருளினை போற்றி
ஒழிவற நிறைந்த வொருவ போற்றி செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி கழுநீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்
குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி புரம்பல எரித்த புராண போற்றி பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண போற்றி போற்றி சயசய போற்றி
திருச்சிற்றம்பலம்
15

Page 13
தேவி வழிபாடு
அபிராமிப்பட்டர்
அபிராமி அந்தாதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரார்தம் பாகத்(து) உமைமைந்தனே உல கேழும் பெற்ற சீரபி ராமி அந்தாதிஎப் போதும்என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதி யேநிற்கக் கட்டுரையே
நூல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமதோ யமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துனையே 1
துணையுந் தொழுந்தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும்கையில் அணையும் திரிபுர சுந்தரி யாவ(து) அறிந்தனமே 2
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக் கேதிரு வேவெருவிப் பிறிந்தேன் நின்அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழும்நர குக்குற வாய மனிதரையே 3
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதி யும்படைத்த புனிதரும் நீயும்என் புநதிஎந் நாளும் பொருந்துகவே 4.
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்(சு) அமு தாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே 5
16

சென்னிய(து) உன்பொன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே மன்னிய(து) உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே முன்னிய நின்அடி யாருடன் கூடி முறைமுறையே
பன்னிய(து) என்றும்உன் றன்பர மாகம பத்ததியே 6
ததியுறு மத்திற் சுழலும்என் ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண் டாய்கம லாலயனும் மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கிஎன்றும் துதியுறு சேவடியாய் சிந்து ரானன சுந்தரியே 7
சுந்தரி எந்தை துணைவிஎன் பாசத் தொடரைஎல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தி னாள்மகி டன்தலைமேல் அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் கந்தரி கைத்தலத் தாள்மலர் தாள்என் கருத்தனவே 8
கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கணகவெற்பிற் பெருத்தன பால்அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும்,அம்பும் முருத்தன மூரலும் நீயும்.அம் மேவந்தென் முன்நிற்கவே 9
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்ப(து) உன்னை என்றும் வணங்குவ(து) உன்மலர்த் தாள்எழு தாமறையின் ஒன்றும் அரும்பொரு ளேஅரு ளேஉமை யேஇமயத்(து) அன்றும் பிறந்தவளேஅழியாமுத்தி ஆனந்தமே 10
ஆனந்த மாய்என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் வானந்த மான வடி(வு) உடை யாள்மறை நான்கினுக்கும் தானந்த மான சரணாரவிந்தம் தவளநிறக் கானந்தம் ஆடரங் காம்எம்பி ரான்முடிக் கண்ணியதே 11
கண்ணிய(து) உன்புகழ் கற்ப(து) உன் நாமம் கசிந்துபத்தி பண்ணிய(து) உன்இரு பாதாம் புயத்தில் பகல்இரவா நண்ணிய(து) உன்னை நயந்தோர் அவையத்து நான்முன் செய்த புண்ணியம் ஏ(து) என்அம் மேபுவி ஏழையும் பூத்தவளே 12
: 17

Page 14
பூத்த வளேபுவனம்பதி னான்கையும் பூத்தவண்ணம் காத்தவ ளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்(கு) இளையவளே மாத்தவ ளேஉன்னை அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே 13
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் சிந்திப் பவர்நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே பந்திப் பவர் அழி யாப்பர மானந்தர் பாரில் உன்னைச் சந்திப் பவர்க்(கு) எளிதாம் எம்பிராட்டி நின்தண்ணளியே 14
தண்ணளிக் கென்றுமுன்னேபல கோடி தவங்கள்செய்வார் மண்ணளிக் கும்செல்வ மோபெறுவார்மதி வானவர்தம் விண்ணளிக் கும்செல்வமும்அழியாமுத்தி வீடுமன்றோ பண்ணளிக் கும்சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே 15
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கிட மேஎண்ணில் ஒன்றுமில்லா வெளியே வெளிமுதல் பூதங்க ளாகி விரிந்தஅம்மே அளியேன் அறிவள விற்(கு) அளவான(து) அதிசயமே 16
அதிசய மாணவடி(வு) உடை யாள்அர விந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தர வல்லி துணைஇரதி பதிசய மான(து) அபசய மாகமுன் பார்த்தவர்தம் மதிசய மாகவன் றோவாம பாகத்தை வவ்வியதே 17
வவ்விய பாகத்(து) இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திரமணக் கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து வெவ்வியம் காலன்என் மேல்வரும் போது வெளிநிற்கவே 18
வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சம் களிறின்ற வெள்ளம் கரைகண்ட தில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்ற தென்ன திருவுளமோ ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே 19
18

உறைகின்ற நின்திருக் கோயில்நின் கேள்வர் ஒருபக்கமோ அறைகின்ற நான்மறை யின்அடி யோமுடி யோஅமுதம் நிறைகின்ற வெண்திங்களோகஞ்ச மோ என்றன் நெஞ்சகமோ மறைகின்ற வாரிதியோபூர ணாசல மங்கலையே 20
மங்கலை செங்கல சம்முலை யாள்மலை யாள் வருணச் சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடை யோன்புடை யாளஉடையாள் பிங்கலை நீலிசெய் யாள்வெளி யாள்பசும் பெண்கொடியே 21
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம் பேபழுத்த படியே மறையின் பரிமள மேபனி மால்இமயப் பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்றஅம்மே அடியேன் இறந்(து) இங்(கு) இனிப்பிற வாமல்வந்(து)
ஆண்டுகொள்ளே 22
கொள்ளேன் மனத்தில்நின் கோலம்அல் லா(து) அன்பர்
கூட்டந்தன்னை விள்ளேன் பரசம யம்பிரும் பேன்வியன் மூவுலகுக்(கு) உள்ளே அனைத்தினுக் கும்புறம் பேஉள்ளத் தேவிளைந்த கள்ளே களிக்கும் களியே அளியளன் கண்மணியே 23
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த அணியே அணியும் அணிக்கழ கேஅணு காதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே 24
பின்னே திரிந்துஉன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன்முதல் மூவருக்கும் அன்னே உலகுக்(கு) அபிராமி என்னும் அருமருந்தே என்னே இனிஉன்னை யான்மறவாமல்நின்(று) ஏத்துவனே 25
ஏத்தும் அடியவார் ஈரேழுலகினை யும்படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவ ராம்கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல்அணங் கேமணம் நாறும்நின்தாள் இணைக்(கு) என் நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு நகையுடைத்தே 26
19

Page 15
உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும்.அன்பு படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணிஎனக்கே அடைத்தனை நெஞ்சத்(து) அழுக்கைஎல் லாம்நின் அருட்புனலால் துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே 27
சொல்லும் பொருளும் எனநட மாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி யேநின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும்அவர்க் கேகழி யா அரசும் செல்லும் தவநெறி யும்சிவ லோகமும் சித்திக்குமே 28
சித்தியும் சித்திதரு ந்தெய்வ மாகித் திகழும்பரா சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவம்முயல்வார் முத்தியும் முத்திக்கு வித்தும்வித் தாகி முளைத் தெழுந்த புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே 29
அன்றே தடுத்(து) என்னைஆண்டு கொண் டாய்கொண்ட(து)
அல்லவென்கை நன்றே உனக்(கு) இனி நான் என் செயினும் நடுக்கடலுள் சென்றே விழினும் கரையேற்றுகைநின் திருவுளமே ஒன்றே பலவுரு வேயரு வேஎன் உமையவளே 30
'உமையும் உமையொரு பாகனும் ஏகஉருவில் வந்திங்(கு)
எமையும் தமக்கன்பு செய்யவைத் தார்.இனி எண்ணுதற்குச் சமையங்களுமில்லை ஈன்றெடுப் பாள்ஒரு தாயும் இல்லை அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே 31
ஆசைக் கடலில் அகப்பட்(டு) அருளற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லல் படஇருந் தெனை நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலைமேல் வலியவைத்(து) ஆண்டுகொண்ட நேசத்தை என்சொல்லு வேன்ஈசர் பாகத்து நேரிழையே 32
இழைக்கும் வினைவழி யேஅடும் காலன் எனைநடுங்க அழைக்கும் பொழுது வந்(து) அஞ்சல்என் பாய்அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே உழைக்கும் பொழு(து) உ(ன்)னையே அன்னை யேளன்பன் ஓடிவந்தே - - - 33
(20

வந்தே சரணம் புகும்.அடி யாருக்கு வான்உலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும் பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும்பொன் செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே 34
திங்கட் பசுவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க எங்கட்(கு) ஒருதவம் எய்திய வாஎண் ணிறந்தவிண்ணோர் தங்கட் கும்இந்தத் தவெமய்து மோதரங்கக்கடலுள் வெங்கட் பணியணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே 35
பொருளே பொருள்முடிக் கும்போக மேஅரும் போகம்செய்யும் மருளே மருளில் வருந்தெரு ளேனன் மனத்துவஞ்சத்(து) இருளே தும்இன்றி ஒளிவெளி யாகி இருக்கும்உன்றன் அருளே (கு) அறிகின் றிலேன் அம்பு யாதனத்(து) அம்பிகையே 36
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன மெய்கே அணிவது வெண்முத்து மாலை, விடஅரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும், எட்டுத் திக்கே அணியும் திருவுடை யான் இடம்சேர்பவளே 37
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பணிமுறுவல் தவளத் திருநகை யும்துணை யாஎங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையாள் அவளைப் பணிமின் கண்டீர்அமராவதி ஆளுகைக்கே 38
ஆளகைக்(கு) உன்றன் அடித்தா மரைகள்உண்டு), அந்தகன்பால் மீளுகைக்(கு) உன்றன் விழியின் கடையுண்டு. மேல்இவற்றின் முளுகைக்(கு) என்குறை நின்குறை யேஅன்று, முப்புரங்கள் மாளுகைக்(கு) அம்பு தொடுத்தவில் லான்பங்கில் வான்நுதலே 39
வாணுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதற்(கு) எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில் காணுதற்(கு) அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு பூணுதற்(கு) எண்ணிய எண்ணம் அன்றோ முன்செய்
புண்ணியமே 40
21

Page 16
புண்ணியம் செய்தன மேமன மேபுதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால் நண்ணிஇங்கேவந்து, தம்மடி யார்கள் நடுவிருக்கப் பண்ணிநம் சென்னியின் மேல்பத்ம பாதம் பதிந்திடவே 41
இடங்கொண்டு விம்மி இணைகொண்டு) இறுகி இளகிமுத்து
வடங் கொண்ட கொங்கை மலைகொண்டு) இறைவர்
வலியநெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே 42
பரிபுரச் சீறடி பாசாங் குசைபஞ்ச பாணிஇன்சொல் திரிபுர சுந்தரி சிந்துர மேனியன் தீமைநெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப் புச்சிலைக்கை எரிபுரை மேனி இறைவர்செம் பாகத்(து) இருந்தவளே 43
典 தவளே இவள்ளங்கள் சங்கர னார்மனை மங்கலமாம்
அவளே அவர்தமக்(கு) அன்னையும் ஆயினள் ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும்ஆம் துவளேன் இனியொரு தெய்வமுண் டாகமெய்த் தொண்டு செய்தே 44
தொண்டுசெய் யாதுநின் பாதம் தொழாது துணிந்திச்சையே பண்டுசெய்தார்உள ரோஇல ரோஅப் பரிசடியேன் கண்டுசெய்தால்அது கைதவ மோஅன்றிச் செய்தவமோ மீண்டுசெய்தாலும் பொறுக்கைநன் றேயின் வெறுக்கையன்றே 45
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடி யாரைமிக்கோர் பொறுக்கும் தகைமை புதியதன் றேயுது நஞ்சைஉண்டு கறுக்கும் திருமிடற் றான்இடப் பாகம் கலந்தபொன்னே மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே 46
வாழும் படியொன்று கண்டுகொண் டேன்மனத் தேயொருவர் வீழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநிலம் ஏழும் பருவரை எட்டும்எட் டாமல் இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே 47
22

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்துநெஞ்சில் இடரும் தவிர்த்திமைப் போதிருப் பார்ப்பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவிவெங் கூற்றுக்கிட்ட வரம்பை அடுத்து மறுகும்அப் போதுவளைக்கை அமைத்(து) அரம்பை அடுத்து அரிவையர் சூழவந்(து) அஞ்சல்என்பாய் நரம்பை அடுத்த இசைவடி வாய்நின்ற நாயகியே
நாயகி நான்முகி நாரா யணிகை நளினபஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கிஎன் றாயகி யாதி உடையாள் சரணம் அரண்நமக்கே
அரணம் பொருள்என்று அருள்ஒன றிலாத அசுரர்தங்கள் முரண்அன்(று) அழிய முனிந்தபெம் மானும் முகுந்தனுமே சரணம் சரணம் எனநின்ற நாயகி தன்னடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே
வையம் துரகம் மதகரி மாமகு டம்சிவிகை பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயம் திருமனை யாள்அடித் தாமரைக்(கு) அன்புமுன்பு செய்யும் தவம்உடை யார்க்குள வாகிய சின்னங்களே
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் பென்னம் பெரிய முலையும்முத் தாரமும் பிச்சிமொய்த்த கன்னங் கரிய சூழலும்கண் மூன்றும் கருத்தில்வைத்துத் தன்னந் தனியிருப் பார்க்கிது போலும் தவமில்லையே
இல்லாமை சொல்லி ஒருவர்தம் பால்சென்(று) இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல்நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர்தம் பால்ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
23
48
49
50
51
52
53
54

Page 17
மின்னா யிரம்ஒரு மெய்வடி வாகி விளங்குகின்ற தன்னாள் அகமகிழ் ஆனந்த வல்லி அருமறைக்கு முன்னாய் நடுவெங்கு மாய்முடி வாய முதல்விதன்னை உன்னா(து) ஒழியினும் உன்னினும் வேண்டுவ(து) ஒன்றிலையே55
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்(து) இவ் வுலகெங்குமாய் நின்றாள் அனைத்தையும் நீங்கிநிற் பாள்என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்ற வாஇப் பொருள் அறிவார் அன்றா லிலையில் துயின்றபெம் மானும்என் ஐயனுமே 56
ஐயன் அளந்த படியிரு நாழிகொண்டு) அண்டம் எல்லாம் உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலை யுங்கொண்டு சென்றுபொய்யும் மெய்யும் இயம்பவைத் தாய்இது வோஉன்றன் மெய்யருளே 57
அருணாம் புயத்தம் எண்சித்தர்ம் புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம் புயமுலைத் தையல்நல் லாள்தகை நேர்நயனக் கருணாம் புயமும் வதனாம் புயமும் காரம்புயமும் சரணாம் புயமும்அல் லாற்கண்டி லேன்ஒரு தஞ்சமுமே 58
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒன்றை நீள்சிலையும் அஞ்சம்பும் இக்(கு) அலர் ஆகநின்றாய்அறி யார் எனினும் பஞ்சஞ்சும் மெல்லடி யார்அடி யார்பெற்ற பாலரையே 59
பாலினும் சொல்இனி யாய்பணி மாமலர்ப் பாதம்வைக்க மாலினும் தேவர் வணங்கநின் றோன்கொன்றை வார்சடையின் மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம்ஒரு நாலினும் சாலநன் றோஅடியேன்முடை நாய்த்தலையே 60
நாயே னையும்இங்(கு) ஒருபொருளாக நயந்துவந்து நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந் தாய்என்ன பேறுபெற்றேன் தாயே மலைமகளேசெங்கண் மால்திருத் தங்கச்சியே 61
24

தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்துமத வெங்கண் கரியுரி போர்த்தசெஞ் சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச் செங்கைக் கரும்பும் அலரும்எப் போதும்என் சிந்தையதே 62
தேறும் படிசில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக் கூறும் பொருள்குன் றில்கொட்டும் தறிக்குறிக் கும்சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்ப(து) அறிந்திருந்தும் வேறும் சமயம்உண் டென்றுகொண் டாடிய வீணருக்கே 63
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்கஅன்பு பூணேன் உனக்(கு) அன்பு பூண்டுகொண்டேன்நின்
புகழ்ச்சியன்றிப் பேணேன் ஒரு பொழு தும்திரு மேனிப்ர காசமின்றிக் காணேன் இருநில மும்திசை நான்கும் ககனமுமே 64
ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம் தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம் முகனுமந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின் மகனுமுண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே 65
வல்லபம் ஒன்றறியேன்சிறியேன்நின் மலரடிசெம் பல்லவம் அல்லது பற்றொன்றி லேன்பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப் பாய்வினை யேன்தொடுத்த சொல்அவ மாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே 66
தோத்திரம் செய்து தொழுதுமின் போலும்நின் தோற்றம்ஒரு மாத்திரைப் போதும் மனத்தில்வை யாதவர் வண்மைகுலம் கோத்திரம் கல்வி குணம்குன்றி நாளும் குடில்கள் தொறும் பாத்திரம் கொண்டு பலிக்குழ லாநிற்பர் பாரெங்குமே 67
பாரும் புனலும் கனலும்வெங் காலும் படர்விசும்பும் வாரும் முருகு சுவையொளி யூறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீரடிக்கே சாரும் தவமுடை யார்படை யாத தனமில்லையே 68
25

Page 18
தனந்தரும் கல்வி தரும்ஒரு நாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வ வடிவந் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழ லாள்அபி ராமி கடைக்கண்களே
கண்களிக் கும்படி கண்டுகொண் டேன்கடம் பாடவியல் பண்களிக் குங்குரல் வீணையும் கையும் பயோதரமும் மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப் பெண்களிற் றோன்றிய எம்பெரு மாட்டிதன் பேரழகே
அழகுக்(கு) ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத் தாள்பணி மாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க இழவுற்று நின்றநெஞ் சேயிரங் கேலுனக்(கு) என்குறையே
என்குறை தீரநின்(று) ஏத்துகின் றேன்இனி யான் பிறக்கின் நின்குறை யேஅன்றி யார்குறை காண்இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய் தன்குறை தீரனங் கோன்சடை மேல்வைத்த தாமரையே
தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும் பொழு(து) எமக் கென்றுவைத்த சேமம் திருவடி செங்கைகள் நான்(கு)ஒளி செம்மையம்மை நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே
நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும் அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப் பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன் சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே
தங்குவர் கற்பகத் தருவின் நீழலில் தாயரின்றி மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும் பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தஉந்திக் கொங்கிவர் பூங்குழ லாள்திருமேனி குறித்தவரே
26
69
70
71
72
73
74
75

குறித்தேன் மனத்தில்நின் கோலம்எல் லாம்நின் குறிப்பறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டுகிண்டி வெறித்தேன் அவிழ்கொன்றை வேண்ப் பிரா(ன்)ஒரு
கூற்றைமெயபில் பறித்தே குடிபுகு தும்பஞ்ச பாண பயிரவியே 76
பயிரவி பஞ்சமி பாசாங் குசைபஞ்ச பாணிவஞ்சர் உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே 77
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராம வல்லி அணிதரளக் கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதிவைத் தே(ன்)என் தணைவிழிக்கே 78
விழிக்கே அருளுண்டு) அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு) எமக்(கு) அவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே 79
கூட்டிய வா எண்ணைத் தன்னடி யாரில் கொடியவினை ஒட்டிய வாஎன்கண் ஒடிய வாதன்னை உள்ளவண்ணம் காட்டிய வாகண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா ஆட்டிய வாநடம் ஆடகத் தாமரை ஆரணங்கே 80
அணங்கே அணங்குகள் நின்பரி வாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகி லேன்நெஞ்சில் வஞ்சகரோடு) இணங்கேன் என(து) உன(து) என்றிருப் பார்சிலர் யாவரொடும் பிணங்கேன் அறிவொன் றிலேன்என்கண் நீவைத்த பேரளியே 81
அளியார் கமலத்தில் ஆரணங் கேஅகி லாண்டமும்நின் ஒளியாகநின்ற ஒளிர்திருமேனியை உள்ளுந்தொறும் களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு வெளியாய் விடின்எங்ங் னேமறப் பேன்நின் விரகினையே 82
27

Page 19
விரவும் புதுமலர் இட்டுநின் பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்சவல் லார் இமை யோர்எவரும் பரவும் பதமும் அயிரா வதமும் பகீரதியும் உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே 83
உடையாளை ஒல்கு செம்பட்டு) உடையாளை ஒளிர்மதிசெஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சடை யாளைத் தயங்குநுண்ணுால் இடையாளை எங்கள்பெம் மானிடை யாளைஇங்(கு)என்னைஇனிட் படையாளை உங்களையும்படை யாவண்ணம் பார்த்திருமே 84
பார்க்கும் திசைதொறும் பாசாங் குசமும் பணிச்சிறை வண்டு) ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்என் அல்லல்எல்லாம் தீர்க்கும் திரிபுரை யாள்திரு மேனியும் சிற்றிடையும் வார்க்குங் குமமுலை யும்முலை மேல்முத்து மாலையுமே 85
மாலயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்தகப்பு வேலை வெங் காலன் என் மேல்விடும் போது வெளிநில்கண்டாய் பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே 86
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்திஎன்றன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்விழி மால்மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம் பழிக்கும் படியொரு பாகம்கொண டாளும் பராபரையே 87
பரமென்றுஉனைத்யடைந் தேன்தமியேனும்உன் பத்தருக்குள் தரமன்று இவன்என்று தள்ளத் தகாது தரியலர்தம் புரம்அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில்அயன் சிரம்ஒன்று செற்றகை யான்இடப் பாகம் சிறந்தவளே 88
சிறக்கும் கமலத் திருவேநின் சேவடி சென்னிவைக்கத் துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும் துரியம்அற்ற உறக்கம் தரவந்(து) உடம்போ(டு) உயிர்உறவற்றறிவு மறக்கும் பொழுதென்முன்னேவரல் வேண்டும் வருந்தியுமே 89
28

வருந்தா வகைஎன் மனத்தா மரையினில் வந்துபுகுந்(து) இருந்தாள் பழைய இருப்பிட மாக இனிஎனக்குப் பொருந்தா தொருபொருள் இல்லைவிண் மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மருந்தா னதைநல்கும் மெல்லியலே
மெல்லிய நுண்ணிடை மின்அனை யாளை விரிசடையோன் புல்லிய மென்முலை பொன்அனை யாளைப் புகழந்துமறை சொல்லிய வண்ணம் தொழும்அடி யாரைத் தொழுமவர்க்குப் பல்லியம் ஆர்த்தெழ வெண்பக(டு) ஊரும் பதம்தருமே
பதத்தே உருகிநின் பாதத்தி லேமனம் பற்றிஉன்றன் இதத்தே ஒழுக அடிமைகொணர் டாய்இனி யான்ஒருவர் மதத்தே மதிமயங் கேன்அவர் போன வழியும் செல்லேன் முதத்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ் நகையே
நகையே இஃதிந்த ஞாலமெல் லாம்பெற்ற நாயகிக்கு முகையே முகிழ்முலை மானே முதுகண் முடிவில்அந்த வகையே பிறவியும் வம்பே மலைகள் என்பதுநாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே
விரும்பித் தொழும்.அடி யார்விழி நீர்மல்கி மெய்புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்த மாகி அறிவிழந்து கரும்பிற் களித்து மொழிதடு மாறிமுன் சொன்னதெல்லாம் தரும்பித்தர் ஆவரென் றால்அபி ராமி சமயம்நன்றே
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவ(து) ஒன்றேயு மில்லை உனக்கே பரம்எனக்(கு) உள்ளம் எல்லாம் அன்றே உனதென்(று) அளித்துவிட் டேன்அழியாதகுணக்
குன்றே அருட்கட லேஇம வான்பெற்ற கேமளமே
கோமளவல்லியை அல்லியந் தாமரைக் கோயில்வைகும் யாமள வல்லியை ஏதம் இலாளை எழுதரிய சாமள மேனிச் சகலகலாமயில் தன்னைத்தம்மால்
ஆமள வும்தொழு வார்எழு பாருக்கும் ஆதிபரே
29
90
91
92
93
94
95
96

Page 20
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்தங்கோன் போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே 97
தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரர்க்குக் கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்ததெங்கே மெய்வந்த நெஞ்சின்அல் லால்ஒரு காலும் விரகர்தங்கள் பொய்வந்த நெஞ்சில் புகஅறி யாமடப் பூங்குயிலே 98
குயிலாய் இருக்கும் கடம்பா டவியிடைக் கோலஇயன் மயிலாய் இருக்கும் இமயா சலத்திடை வந்துதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீதன்னமாம் கயிலா யாருக்(கு) அன்(று) இமவான் அளித்த கணங்குழையே 99
குழையைத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்புவில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ணகையும் உழையைப் பொருகண்ணும் நெஞ்சில்எப் போதும் உதிக்கின்றவே 100
நூல் பயன்
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவிஅடங்கக் காத்தாளை அங்குச பாசங் குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்(கு) ஒரு தீங்கில்லையே
30

அங்கயற்கண்ணம்மை பதிகம்
பங்கயற் கண்ணரிய பரம்பரனுருவே
தனக்குரிய வடிவமாகி இங்கயற்கண் அகனுலகம் எண்ணிறந்த சராசரங்கள் என்றும் தாழாக் கொங்கையற் கண் மலர்க்கூந்தற்குமரி பாண்டியன்
மகள் போற் கோலங்கொண்ட அங்கயற்கண் அம்மை இருபாதம் போது
எப்போதும் அகத்துள்வைப்பாம்
அம்பாள் துதி
பாரெல்லாம் துதிபெற்ற பாதவிரல் மோதிரம் பாடகம் தண்டை கொலுசும் பதிந்த இடைதனில் அணிந்தபட்டாடையும் பசும் பொன் ஒட்டியாணமும் வாரனரியும் மார்பினில் சரப்பளிபதக்கமும் வைச்சிரமணி தாலி அழகும் வையகம் துதிபெற்ற கையினில் கடகமும் வர்ண நிறமான கிளியும் சீர் ஒழுகு காதினில் கம்மலும் தோடும் கோப்பும் திசையெலாம் நிறைந்த உருவும் சித்திர ஒளி பார்வையில் ரத்ன மூக்குத்தியும் சென்பகம் முடிந்த குழலும் தாரணியில் உனது புகழ் சாற்ற எளிதாகுமோ - தரணி புகழ்ஒற்றி யூர் வாழ் தங்கமணி நாதர்சடை திங்கள்முடி கங்கை உருவான கொடியே!
31

Page 21
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ் விநாயகர் துதி
உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தனனவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.
திருவாவினன் குடி (பழனி) சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி னும்பகர் - செய் குருநாத சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின செயலேவி ரும்பியுளம் நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதாவ வைந்துழுலு மடியேனை அஞ்சலலென வரவேணும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய அருள்ஞான இன்பமது புரிவாயே நவநீத முந்திருடி உரலோடே யொன்றுமரி சகுராமர் சிந்தைமகிழ் மருகோனே நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத நவமான விஞ்சைகரு விளைகோவே தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு திறல்வீர மிஞ்சுகதிர் வடிவேலா திருவாவினன்குடியில் வருவேள்ச வுந்தரிக செகமேல்மேய் கண்டவிறல் பெருமானே.
திருவேரகம் (சுவாமிமலை) பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா காது மொருவிழி காக முறஅருள் மாய னரிதிரு மருகோனே
32

கால எனையணு காம லுனதிரு காலில் வழிபட அருள்வாயே ஆதி யயனொடு தேவர் சுரருல காளும் வகையுறு சிறைமீளா ஆடு மயிலினி லேறி யமரர்கள் சூழ வரவரு மிளையோனே சூத மிகவளர் சோலை மருவுசு வாமி மலைதனி லுறைலோனே சூர னுடலற வாரி சுவறிட வேலை விடவல பெருமாளே
விராலிமலை நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிகப் ப்ரபையாகி நிராசசிவராஜத வராஜர்கள் பராவிய நிராயுத புராரியச் சுதன்வேதா சுராலய தராதவ சராசர பிராணிகள் சொரூபமி வராதியைக் குறியாமே துரால்புகழ் பராதின கராவுள பராமுக துரோகரை தராசையுற் றடைவேனோ இராகவ இராமன் முன் இராவண இராவண இராவண இாஐனுட் குடன்மாய்வென் றிராகன்ம லராணி புராணர்கு மராகலை யிராஜசொலவாரணர்க் கிளையோனே விராகவ சுராதிப பொராதுத விராதடு விராயண பராயணச் செரூவூரா விராவிய குராவகிப் பராரைமு திராவளர் விராலிம வைராஜதப் பெருமாளே
பழமுதிர்சோலை அகரமுமாகி யதிபனுமாகி யதிகமு மாகி அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய் இகரமுமாகியெவைகளு மாகி யினிமையுமாகி வருவோனே இருநில மீதிலெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும் மகபதி யாகி மருவும் வலரி மகிழ்களிகூரும் வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே திருமலிவான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.
33

Page 22
கந்தரநுபூதி
அருணகிரிநாதர்
காப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.
நூல்
ஆடும் பரிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா வருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியானை சகோதரனே
உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீ யலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா சுரபூ பதியே
வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதுசண் முகனே.
வளைபட்டகைம்மா தொடுமக் களெனுந் தனைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே.
மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மந்தை யரென் றயருஞ் சகமா யையுள்நின் றுதயங் குவதே.
34

திணியா னமனோ சிலைமீதுனதாள் அணியா ரரவிந் தமரும் புமதோ பணியா வெனவள்ளி பதம் பணியுந் தணியா வதிமோ கதயா பரனே.
கெடுவாய் மனனே கதிகேள் கரவா திருவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே.
அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொருதா னவநா சகனே.
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப் பட்டுசல் படும் பரிசென் றொழிவேன் தட்டு டறவேல் சயிலத் தெறியும் நிட்டூர நிராகுல நிர்ப் பயனே.
கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே.
கூகா வெனவென் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா நாகா சல வேலவ நாலுகவித் தியாகா சுரலோக சிகா மணியே
செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா இருசொல் லறவென் றலுமே அம்மா பொருளொன் றுமறிந் திலனே'.
35
10
11
12

Page 23
முருகன் தனிவேல் முனிநங் குருவென் றருள்கொண் டறியா ரறியுந் srGB DAT உருவன் றருவன் றுளதன் றிலதன் றிருளன் றொளியன் றெனநின்றதுவே.
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற் றுய்வாய் மனனே கொழிவா யொழிவாய் மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம் ஐவாய் வழிசெல்லுமவா வினையே
முருகன் குமரன் குகனென்று மொழிந் துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவுங் குருபுங் கவளண் குணபஞ் சரனே.
பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோரா வினையே னுழலத் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோ கதுரந் தரனே.
யாமோ தியகல் வியுமெம் மறிவுந் தாமே பெறவே லவர்தந்ததனாற் பூமேல் மயல்போ யறமெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர் நடவீரினியே.
உதியா மரியா வுணரா மறவா விதிமா லறியா விமலன் புதல்வா அதிகா வநகா வபயா வமரா பதிகா வலகுர பயங் கரனே.
வடிவுந் தனமும் மனமுங் குணமுங் குடியுங் குலமுங் குடிபோ கியவா அடியந் தமிலா அயில்வே லரசே மிடியென்றொரு பாவி வெளிப் படினே
36
13
14
15
6
17
18
19

அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன் உரிதா வுபதேச முணர்த் தியவா விரிதா ரணவிக் ரமவே ளிமையோர் புரிதா ரகநா கபுரந் தரனே,
கருதா மறவா நெறிகாண எனக் கிருதாள் வனசந் தரளன் றிசைவாய் வரதா முருகா மயில்வா கணனே விரதா சுரகுர விபாட ணனே.
காளைக் குமரே சனெனக் கருதித் தாளைப் பணியத் தவமெய் தியவா பாளைக் குழல் வள்ளி பதம்பணியும் வேளைச் சுரபூபதி மேருவையே.
அடிளையக் குறியா தறியா மையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமவேல் மகிபா குறமின் கொடியைப் புணருங் குணபூ தரனே,
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும் போர்வே லபுரந் தரபூ பதியே.
மெய்யே யெனவெல் வினைவாழ் வையுகந் தையோ அடியே னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலே நியசே வகனே
ஆதார மிலெனருளைப் பெறவே நீதா னொருசற்று நினைந் திலையே வேதாகம ஞான விநோத மனோ நீதா சுரலோக சிகா - மணியே
37
20
21
22
23
24
25
26

Page 24
மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான் என்னே விதியின் பயனிங் கிதுவோ பொன்னே மணியே பொருளே யருளே மன்னே மயிலே றியவா னவனே.
ஆனா அமுதே அயில்வே லரசே ஞானா கரனே நவிலத் தகுமோ யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரமே.
இல்லே யெனுமா யையி லிட்டனைநீ பொல்லே னறியாமை பொறுத் திலையே மல்லே புரி பன்னிரு வாகுவிலேன் சொல்லெ புனையுஞ் சுடர்வே லவனே.
செவ்வா னுருவிற் றிக்ழ்வே லவனன் றொஷ்வா ததென வுணர்வித் ததுதான் அவ்வா றறிவா ரறிகின் றதலால் எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே.
பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யென என்னை விதித்தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ வாழ்வா யினிநீ மயில்வா கனனே.
கலையே பதறிக் கதறித் தலையூ டலையே படுமா றதுவாய் விடவோ" கொலையே புரிவேடர் குலப் பிடிநோய் மலையே மலை கூறிடு வாகையனே.
சிந்தா குலவில் லொடுசெல் வமெனும் விந்தா டவியென்று விடப் பெறுவேன் மந்தா கினிதந்த வரோ தயனே கந்தா முருகா கருணா கரனே.
38
27
28
29
30
31
32
33

சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காம லெனக்கு வரந் தருவாய் சங்க்ராம சிகா வலசண் முகனே தங்கா நதி பால க்ருபாகரனே.
விதிகாணு முடம்பை விடா வினையேன் கதிகாண் மலர்க்கழ லென் றருள்வாய் பதிவா ணுதல்வள் ஸ்ரியையல் லதுபின் துதியா விரதா சுரபூ பதியே.
நாதா குமரா நமவென் றரனார் முதா யெனவோ தியதெப் பொருள்தான் வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப் பாதா குறமின் பதசே கரனே.
கிரிவாய் விடுவிக் ரம வேளிமையோர் பரிவா ரமெனும் பதமே வலையே புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியோடு மகந் தையையே
ஆதாளியை யொன் றறியே னையறத் தீதாளியை யாண் டதுசெப் புமதோ கூதாள கிராத குலிக் கிறைவா வேதாள கணம் புகழ்வே லவனே.
பாவேழ சனனங் கெடமா யைவிடா மூவே ணை யென்று முடிந் திடுமோ கோவே குறமின் கொடிதோள் புணருந் தேவே சிவ சங்கர தேசிகனே.
வினையோட விடுங் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங் கிடவோ சுனையோ டருவித் துறையோடு பசுந் தினையோ டிதணோடு திரிந் தவனே.
3)
34
35
36
37
38
39
40

Page 25
சாகா தெனையே சரணங் களிலே காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கணனே
யோகா சிவஞா னொபதே சிகனே.
குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த் திடலுஞ் செறிவற்றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற்றறியா மையுமற் றதுவே.
தூசா மணியுந் துகிலும் புனைவாள் நேசா முருகா நினதன் பருளால் ஆசா நிகளந் துகளா யினபின் பேசா அநுபூதி பிறந்ததுவே.
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ் சூடும் படிதந் ததுசொல லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங் காடும் புனமுங் கமழுங் கழலே.
கரவா கியகல்வி யுளார் கடைசென் றிரவா வகைமெய்ப் பொருளி குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ் சரவா சிவயோக தயா பரனே.
எந்தா யுமெனக் கருள்தந்தையுநீ சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே யுமையாள் மைந்தா குமரா மறைநா யகனே.
ஆறா றைநீத்ததன்மேல் நிலையைப் பேறா வடியேன் பெறுமா றுளதோ சீறா வருசூர் சிதைவித் திமையோர் கூறா வுலகங் குளிர்வித் தவனே.
40
41
42
43
44
45
46
47

அறிவோன் றறநின் றறிவா ரறிவிற் பிறிவொன் றறநின் றபிரா னலையோ செறிவொன் றறவந் திருளே சிதைய வெறிவென் றவரோ டுறும்வே லவனே.
தன்னந் தனிநின் றதுதா னறிய இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே.
மதிகெட் டறவா டிமயங் கியறக் கதிகெட் டவமே கெடவோ கடவேன் நதிபுத் திர ஞான சுகா திபவத் திதிபுத் திரர்வீறடுசே வகனே.
உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய்க் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவா யருள்வாய் குகனே.
41
48
49
50
51

Page 26
திருமுருகாற்றுப்படை
நக்கீரர்
1. திருப்பரங்குன்றம்
உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற விமைக்குஞ் சேண் விளங் கவிரொளி யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன் தாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூன் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத் திருள்படப் பொதுளிய பராரை மராஅத் துருளயூந் தண்டார் புரளு மார்பினன் மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய வொண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோள் கோபத் தன்ன தோயாப் பூந்துகிற் . . . . பல்காசு நிரைத்த சில்கா ழல்குற் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச் சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித் துணையோ ராய்ந்த விணையிரோதிச் செங்கால் வெட்சிச் சீறித Nடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியோடு வலம்புரி வயின் வைத்துத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன் மகரப் பகுவாய் தாழமண் ணுறத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட் டுளைப்பூ மருதி னொள்ளிண ரட்டிக் கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும் பிணைப்புற பிணையல் வளைஇத் துணைத்தக வண் காது நிறைந்த பிண்டி யொண்டளிர் நுண் பூ ணாகந் திளைப்பத் திண் காழ்
42
10
15
20
25
30

நடுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேம்கமழ் மருதினர்கடுப்பக் கோங்கின் குவிமுகி Nளமுலைக் கொட்டி விரி மலர் வேங்கை நுண்டா தப்பிக் காண்வர வெளிளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென் றேத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச் சூரர மகளி ராடுஞ் சோலை மந்தியு மறியா மரணபயி லடக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் சூர்முத றடிந்த சுடரிலை நெடுவே லுலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற் கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட் டுருகெழு செலவி னஞ்சுவரு பேய் மகள் குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற் கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை யொண்டோடித் தடக்கையினேந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா நிணந்தின் வாய டுணங்கை துரங்க விருபே ருருவி னொருபே ரியாக்கை யறுவேறு வகையி னஞ்சுவர மண்டி ப்யவுணர் நல்வல மடங்கக் கவிழிணர் மாமுதற் றடிந்த மறுவில் கொற்றத் தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ் செலவுநீ நயந்தனை யாயிற் பலவுட னன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப வின்னே பெறுதிநீ முன்னிய வினையே செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புணை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயிற்
44 R
35
40
45
50
55
60
65

Page 27
றிரு வீற்றிருந்த தீதுதீர் நியமத்து 70 மாடமலி மறுகிற் கூட்ற் குடவயி னிருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக் கட்கமழ் நெய்த லூதி யெற்படக் கண்போன் மலர்ந்த காமரு சுனைமல 75 ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்குங் குன்றமர்ந் துறைதலு முரிய னதாஅன்று.
2. திருச்சீரலைவாய் வைந்துதி பொருத வடுவாழ் வரிநுதல் வாடா மாலை யோடையொடு துயலவரப் படுமணி யிரட்டு மருங்கிற் கடுநடைக் 80 கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற் கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண் டைவே றுருவிற் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி மின்னுற பூழிமைப்பிற் சென்னிப் பொற்ப 85 நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்வியங் கியற்கை வாண்மதி கவைஇ யகலா மீனி னவிர்வன விமைப்பத் தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார் * மனனேர் பெழுதரு வாணிற முகனே 90 மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன் றொருமுக மொருமுக மார்வல ரேத்த வமர்ந்தினி தொழுகிக் காதலினுவந்து வரங்கொடுத் தன்றே யொருமுக மந்திர விதியின் மரபுளி வழாஅ 95 வந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுக மெஞ்சிய பொருள்களை யேமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக்கும்மே யொருமுகஞ் செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக் கறுவுகொ ணெஞ்சமொடு களம்வேட் டன்றே யொருமுகம் 100 குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே யாங்க மூவிரு முகனு முறைநவின் றொழுகலி னாரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்
44

செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு 105 வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலன் மரபி னையர்க் கேந்திய தொருகை யுக்கஞ் சேர்த்திய தொருகை நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை யசைஇயதொருகை110 யங்குசங் கடாவ யொருகை இருகை யையிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப வொருகை மார்பொடு விளங்க வொருகை தாரொடு பொலிய வொருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப வொருகை பாடின் படுமணி யிரட்ட வொருகை 115 நீனிற விசும்பின் மலிதுளி பொழிய வொருகை வானர மகளிர்க்கு வதுவைசூட்ட வாங்கப் பன்னிரு கையும் பாற்பட வியற்றி யந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ் வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞரல 120 வுரந்தலை கொண்ட வுருமிடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி வகவ விசும்பா றாக விரைசெலன் முன்னி யுலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீ ரலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே யதா அன்று 125
3. திருவாவினன்குடி சீரை தைஇய வுடுகையர் சீரொடு வலம்புரி புரையும் வானரை முடியினர் மாசற விமைக்கு முருவினர் மானி னுரிவை தைஇய வூன்கெடு மார்பி னென்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் 30 பலவுடன் கழிந்த வுண்டிய ரிகலொடு செற்ற நீக்கிய மனத்தின ரியாவதுங் கற்றோ ரறியா வறிவனர் கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு கடுஞ்சினங் கடிந்த காட்சிய ரிடும்பை 135 யாவது மறியா வியல்பினர் மேவரத் - துனியில் காட்சி முனிவர் முற்புகப் புகைமுகந் தன்ன மாசி நூவுடை முகைவா யவிழ்ந்த தகைசூ ழாகத்துச்
45

Page 28
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவி னல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலரின்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவி னவிர்தளிர் புரையு மேனிய ரவிர்தொறும் பொன்னுரை கடுக்குந் திதலைய ரின்னகைப் பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குன் மாசின் மகளிரொடு மறுவின்றி விளங்கக் கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற் றழலென வுயிர்க்கு மஞ்சுவரு கடுந்திறற் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்ளனி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோ ளுமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண் மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனு நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத் தீரிரண் டேந்திய மருப்பி னெழினடைத் தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை யெருத்த மேறிய திருக்கிளர் செல்வனு நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய வுலகங் காக்கு வொன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவ ராக வேமுறு ஞாலந் தன்னிற் றோன்றித் தாமரை பயந்த தாவி லூழி நான்முக வொருவற் சுட்டிக் காண்வரப் பகலிற் றோன்று மிகலில் காட்சி நால்வே றியற்கைப் பதினொரு மூவரொ டொன்பதிற் றிரட்டி யுயர்நிலை பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட வுருமிடித் தன்ன குரலினர் விழுமிய வுருகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மா ரந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் தாவில் கொள்கை மடந்தையொடு சின்னா ளாவினன் குடி யசைதலும் உரிய னதாஅன்று
46
140
145
150
155
160
165
170
75

4. திருவேரகம் இருமுன் றெய்திய வியல்பினின் வழாஅ திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி யறுநான் கிரட்டி யிளமை நல்லியாண் டாறினிற் கழிப்பிய வறணவில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத் திருபிறப்பாளர் பொழுதநிந்து நுவல வொன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர வுடீஇ யுச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி நாவியன் மருங்கி னவிலப் பாடி விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந் தேரகத் துறைதலு முரிய னதாஅன்று 5. குன்றுதோறாடல் பைங்கொடி நறைக்கா யிடையிடுபு வேல னப்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூ தாளந் தொடுத்த கண்ணிய ாைறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற் கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர் நீடமை விளைந்த தேக்கட் டேறற் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை யயர விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்காற் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி யிணைத்த கோதை யணைத்த கூந்தன் முடித்த குல்லை யிலையிடை நறும்பூச் செங்கான் மராஅத்த வாலிண ரிடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகா ழல்குறிளைப்ப வுடீஇ மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச் செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன் றகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் கொடிய னெ டியன் றொடியணி தோள
.47
180
185
190
195
200
205
210

Page 29
னரம்பார்த் தன்ன வின்குரற் றொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயன் மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன் முழவுறழ் தடக்கையி னியல வேந்தி 215 மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து குன்றதோ றாடலு நின்றதன் பண்பே யதாஅன்று
6. பழமுதிர்ச்சோலை
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடுவயிற்பட நிறீஇ யூரூர் கொண்ட சீர்கெழு விழவினு 220 மார்வல ரேத்த மேவரு நிலையினும் வேலன் றைஇய வெறியயர் களனுங் காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் யாறங் குளனும் வேறுபல வைப்புஞ் சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பு 225 மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினு மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர நெய்யோ டையவி யப்பியை துரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொளுருவி னிரண்டுட னுடீஇச் 230 செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச் சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் 235 பெருந்தண் கணவிர நறுந்தண் மாலை துணையற வறுத்துத் துரங்க நாற்றி நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி யிமிழிசை யருவியொ டிண்ணியங் கறங்க 240 வுருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண் முருகிய நிறுத்து முரணின ருட்க முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனக ராடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன் 245 கோடுவாய் வைத்துக் கொடுமணி யியக்கி
48

யோடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட வாண்டாண் டுறைதலு மறிந்த வாறே யாண்டாண் டாயினு மாகக் காண்டக முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக் கைதொழுஉப் பரவிக் காலுற வணங்கி நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவரு ளொருவ னங்கை யேற்ப அறுவர் பயந்த வாறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ விழையணி சிறப்பிற் பழையோள் குழவி வானோர் வணங்குவிற் றானைத் தலைவ பாலை மார்ப நூலறி புலவ செருவி லொருவ பொருவிறன் மள்ள அந்தணர் வெறுக்கை யறிந்தோர் சொன்மலை மங்கையர் கணவ மைந்த ரேறே வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே யரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக 1சையுநர்க கார்த்து மிசைபே ராள அலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய் பனடமர் கடந்தநின் வென்றா டகலத்துப் பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேஎள் பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள் சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசி லெனப்பல யானறி யளவையி னேத்தி யானாது நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமைய னின்னடி யுள்ளி வந்தனெ னின்னொடு புரையுநரில்லாப் புலமை யோயெனக் குறித்தது மொழியா வளவையிற் குறித்துடன் வேறுபல் லுருவிற் குரும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
49
250
255
260
265
270
275
280

Page 30
யளியன் றானே முதுவா யிரவலன் வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென வினியவு நல்லவு நனிபல வேத்தித் தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின் வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி யணங்குசா லுயர் நிலை தழீஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி யஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென வன்புடை நன்மொழி யளைஇ விளிவின் றிருணிற முந்நீர் வளைஇய வுலகத் தொருநீ யாகித் தோன்ற விழுமிய பெறலரும் பரிசி னல்குமதி பலவுடன் வேறுபஃறுகிலி னுடங்கி யகில்சுமந் தார முழுமுத லுருட்டி வேரற் பூவுடை யலங்குசினை புலம்புவேர் கீண்டு விண்பொரு நெடுவரைப்பரிதியிற் றொடுத்த தண்கமழலரிறால் சிதைய நன்பல வாசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமல ருதிர யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுத லிரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று நன்பொன் மணிநிறங் கிளரப்பொன் கொழியா வாழை முழுமுத னுமியத் தாழை யிளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை யிரியக் கேழலொ டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன குரூஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம் பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட் டாமா நல்வேறு சிலைப்பச்சேணின் றிழுமென விழிதரு மருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே!
285
290
295
300
305
310

பட்டினத்தார் LITL6b5,6ir உடற்கூறு வண்ணம்
ஒருமடமாதும் ஒருவனுமாகி இன்பசுகம் தரும் அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து ஊறுசுரோணித மீதுகலந்து
பனியில் ஒர்பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்துபு குந்துதிரண்டு பதுமஅரும்பு கமடம் இதென்று பார்வைமெய்வய்செவி கால்கைகள் என்ற
உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும்ஒன்றும் நிறைந்துமடந்தை உதரமகன்று புவியில்விழுந்து யோகமும்வாரமும் நாளும்அறிந்து
மகளிர்கள்சேனை தரஅணைஆடை மண்படஉந்தியு தைந்துகவிழ்ந்து மடமயில்கொங்கை அமுதம் அருந்தி ஓர்அறிவுஈர்அறிவு ஆகிவளர்ந்து
ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட வந்துதவழ்ந்து மடியிலிருந்து மழலைமொழிந்து
வாஇருபோஎன நாமம்விளம்ப
உடைமணியாடை அரைவடம்ஆட உண்பவர்தின்பவர் தங்களொடு உண்டு தெருவில்இருந்து புழுதியலைந்து தேடியபாலரொடு ஒடிநடந்து அஞ்சுவயதாகி விளையாடியே
, مجھا
51

Page 31
உயர்தருஞான குருவுபதேச முந்தமிழின் கலை யும்கரைகண்டு வளர்பிறை என்று பலரும்விளம்ப வாழ்பதினாறுபிராயமும்வந்து
மயிர்முடிகோதி அறுபதுநீல வண்டுஇமிர் தண்தொடை கொண்டை புனைந்து மணிபொன்இலங்கு பணிகள் அணிந்து
மாகதர்போகதர் கூடிவணங்க
மதனசொரூபன் இவன் என மோக மங்கையர்கண்டு மருண்டுதிரண்டு வரிவிழிகொண்டு சுழி வெறித்து மாமயில்போர்அவர் போவதுகண்டு
மனதுபொறாமல் அவர்பிறகோடி மங்கலசெங்கல சந்திகழ்கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு தேடிய மாமுதல் சேரவழங்கி
ஒருமுதலாகிய முதுபொருளாய்இ ருந்ததனகளும் வம்பில்இழந்து மதனசுகந்த விதனம் இதுஎன்று வாலிபகோலமும் வேறுபிரிந்து
வளமையும்மாறி இளமையுமாறி வன்பல்விழுந்துஇரு கண்கள் இருண்டு வயதுமுதிர்ந்து நரைதிரைவந்து வாதவிரோதகு ரோதம் அடைந்து செங்கையினில் ஒர்தடியும் ஆகியே
வருவதுபோது ஒருமுதுகூனு மந்திஎனும்படி குந்திநடந்து மதியும்அழிந்து செவிதிமிர்வந்து வாய்அறியாமல்வி டாமல்மொழிந்து
52

துயில்வரும் நேரம் இருமல்பொறாது தொண்டையும் நெஞ்சம் உலர்ந்துவறண்டு துகிலும்இழந்து சுணையும்அழிந்து தோகையர்பாலர்கள் கோரணிகொண்டு
கலியுகம்மீதில் இவர்மரியாதை கண்டிடும்என்பவர் சஞ்சலம்மிஞ்ச கலகலஎன்று மலசலம்வந்து கால்வழிமேல்வழி சாரநடந்து
தெளிவும்இராமல் உரைதடுமாறி சிந்தையும்நெஞ்சமு லைந்துமருண்டு திடமும்,அலைந்து மிகவும்அலைந்து தேறிநலாதரவு ஏதுஎனநொந்து
மறையவன்வவேதன் எழுதியவாறு வந்ததுகண்டமும் என்றுதெளிந்து இனியென கண்டம் இனியென தொந்தம் மேதினிவாழ்வுநி லாதினிநின்ற
கடன்முறை பேசும் எனவுரை நா றங்கிவிழுந்துகை கொண்டுமொழிந்து கடைவழிகஞ்சி ஒழுகிடவந்து பூதமுநாலுசு வாசமும் நின்று
வளர்பிறைபோல எயிறும் உரோம மும் சடையும்கிறு குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும்இலங்க மாமலைபோல்யம தூதர்கள் வந்து
வலைகொடுவீசி யுயிர்கொடுபோக
மைந்தரும் வந்துகு னிந்தழநொந்து மடியில்விழுந்து மனைவி புலம்ப மாழ்கினரேயிவர்காலம் அறிந்து
53

Page 32
பழையவர்காணும் எனும்அயலார்கள் பஞ்சுபறந்திட நின்றவர்பந்தர் இடுமெனவந்து பறையிமுந்த வேபிணம்வேக விசாரியும்என்று
பலரையும்ஏவி முதியவர்தாம் இருந்தசவம்கழு வுஞ்சிலர்என்று பணிதுகில்தொங்கல் களபம்அணிந்து பாவகமே செய்து நாறும்உடம்பை
வரிசை கெடாமல் எடும்எனவோடி வந்துஇளமைந்தர் குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலையடைந்து மானிடவாழ்வென வாழ்வெண்நொந்து
விறகிடைமூடி அழல்கொடுபோட
வெந்து விழுந்து முறிந்துநிணங்கள் உருகியெலும்பு கருகிய டங்கி ஒர்பிடிநீறும்இ லாத உடம்பை நம்பும் அடியேனை யினியாளுமே.
உடற்கூற்று வண்ணம் முற்றுப்பெற்றது. .
54

திருமுறைகளில் முருகப் பெருமான் திருஞான சம்பந்தர் - முதல் மூன்று திருமுறைகள்
தழைமயி லேறவன் தாதையோதான் மழைபொழி சடையவன் மன்னுகாதில் குழையது விலங்கிய கோலமார்பின் இழையவன் இராமன தீச்சரமே.
அருகரொடு புத்த ரவரறியாவரன் LD66)u T63 மருகன் வருமிடபக் கொடியுடையானிட மலரார்
கருகுகுழன் மடவார் கடிகுறிஞ்சியதுபாடி முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே
இடமயிலன்ன சாயன் மடமங்கை தன்கை யெதிர் நாணி பூணவரையில்
கடுமயிலம்பு கோத்து எயில்செற் றுகந்து
வமரர்க் களித்த தலைவன்
மடமறிலுார்தி தாதை யெனநின்று தொண்டர்
மனநின்ற மைந்தன் மருவும்
நடம்மயிலால நீடு குயில்கூவு சோலை நறையூரி னம்ப னவனே.
வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும் வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர் தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும்
• புள்ளு மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.
திருநாவுக்கரசர் (4, 5, 6 ஆம் திருமுறைகள்)
ஆறுகொ லாமவ ரங்கம் படைத்தன ஆறுகொ லாமவர் தம்மகனார்முகம் ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால் ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையுந் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே
55

Page 33
குறவிதோள் மணந்த செல்வக்
குமரவேள் தாதை யென்றும் நறவிள நறுமென் கூந்தல்
நங்கையோர் பாகத் தானைப் பிறவியை மாற்று வானைப்
பெருவேளூர் பேணி னானை உறவினால் வல்ல னாகி
உணருமா றுணர்த்து வேனே.
முக்கணா போற்றி முதல்வா போற்றி
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி தக்கணா போற்றி தருமா போற்றி
தத்துவனே போற்றிஎன் தாதாய் போற்றி தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்டத் தீசா போற்றி.
முந்தைகாண் மூவரினும் முதலா னான்காண்
மூவிலைவேள் மூர்த்திகாண் முருக வேட்குத் தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச் சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
சிவனவன் காண் செங்கண்மால் விடையொன் றேறும் எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
சுந்தரர் ஏழாந்திருமுறை
குறவனார் தம்மகள் தம்மகனார் மணவாட்டி கொல்லை
மறவனாராய் அங்கோர் பன்றிப்பின் போவது மாயங்கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதிய ராயங்கோர் சோர்வுபடா
அறவனார் ஆவதறிந் தோமேல்
நாம்இவர்க் காட்டோமே.
56

திங்கள்தங்கு சடைக்கண் மேலோர்
திரைகள் வந்து புரளவீசும் கங்கை யாளேல் வாய்திறவாள்
கணபதியேல் வயிறு தாரி
அங்கைவேலோன் குமரன் பிள்ளை
தேவியார் கொற்றட்டி யாளார்
உங்களுக்காட் செய்ய மாட்டோம்
ஒணகாந்தன் தளியுளிரே.
மாணிக்கவாசகர் (எட்டாந்திருமுறை)
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பக நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோணயன் தன்பெருமான்
ஆழியான் நாதனல் வேலன்றாதை எந்தர மாளுமை யாள்கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ண மிடிந்துநாமே.
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே யுந்தீபற குமரன்றன் தாதைக்கே யுந்திபற
கருவூர்த் தேவர் திருவிசைப்பா (ஒன்பதாந் திருமுறை)
திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
திருமகள் மருமகன் தாயாம் மருமகன் மதனன் மாமனேல் இமவான்
மலையுடை யரையர் தம்பாவை தருமலி வளனாஞ் சிவபுரன் தோழன்
தனபதி சாட்டியக் குடியார் இருமுகங் கழல்மூன் றேழுகைத் தலமேழ்
இருக்கையி லிருந்த ஈசனுக்கே.
57

Page 34
தனதன் நற் றோழா சங்கரா சூல
பாணியே தாணுவே சிவனே கனகநற் நூணே கற்பகக் கொழுந்தே
கண்கள் மூன்றுடையதோர் கரும்பே அனகனே குமர விநாயக சனக
அம்பலத் தமரர் சேகரனே உனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே.
சேந்தனார் திருவிடைக்கழிப் பதிகம் (ஒன்பதாந் திருமுறை)
மாலுமா மனம்தந்(து) என்கையிற் சங்கம்
வவ்வினான்; மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழு தாளுங்
குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
என்னும்என மெல்லியல் இவளே.
கோவினைப் பவளக் குழமணக் கோலக்
குழாங்கள் சூழ்கோழிவெல் கொடியோன்
காவல்நற் சேனையென் னக்காப் பவன்என்
. பொன்னை மேகலை கவர்வானே?
தேவின் நற் றலைவன் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயி லூரும்
சுப்பிர மண்ணியன் தானே.
தானமர் பொருது வானவர் சேனை
மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன் மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை
மறைநிறை சட்டறம் வளரத் தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற கோனமர் கூத்தன் குலவிளங் களிறென் கொடிக்கிடர் பயப்பதுங் குணமே?
58

திருமூலர் திருமந்திரம் (பத்தாந் திருமுறை)
எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாயத் தந்தைதன் முன்னே சண்முகந் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால் மைந்த னிவனென்று மாட்டிக் கொள்ளீரே.
எம்பெருமான் இறைவா முறையோ என்று வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல அம்பவள மேனி அறுமுகன் போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
சேக்கிழார் பெரியபுராணம் (பன்னிரெண்டாம் திருமுறை)
செய்ய மேனிக் கருங்குஞ்சிச் செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம் உய்ய வமுது செய்யாதே யொளித்த தெங்கே யெனத்தேடி மையல் கொண்டு புறத்தணைய மறைந்த வவர்தாம் மலைபயந்த தைய லோடுஞ் சரவணத்துத் தனய ரோடுந் தாமணைவார்.
59

Page 35
திருவாசகம்
சோதியே சுடரெ சூழொளி விளக்கே
சுரிசூழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள் வெண்ணிற்றாய்
பங்கயத் தயனு மாலறியா நீதியே செல்வத் திருப்பெருந்துறையின்
நிறைமலர்க் குருந்த மேவியகீர் ஆதியேயடி யேனாதரித் தழைத்தால் அதெந்து வேயென்ற ருளாயே,
திருப்பல்லாண்டு சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண்டிற் சிதையுஞ் சில தேவர்
சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத் திரண்மேரு
விடங்கன் விடைப்பாகன் பல்லாண்டென்னும் பதங் கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் சுரும்பு முரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றி
உத்தரியத் தொடித்தோள் போற்றி கரும்புருவச்சிலை போற்றி கவுணியர்க்குப்
பால்சுரந்த கலசம் போற்றி இரும்பு மனங் குழைத்தென்னை யெடுத்தாண்ட
அங்கயற் கணெம்பிராட்டி அரும்பு மிளநகை போற்றியாரணதுர
புரஞ்சிலம்பு மடிகள் போற்றி
ஆதியாய் நடுவுமாகி வளவிலா அளவுமாகிச் சோதியா யுணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா வேகமாகிப் பெண்ணுமா யாணுமாகிப் போதியா நிற்குந் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி
60

ஆத்மாவின் பயணம்
மனிதன் படைப்பில் வேதங்களே இறைவன் மொழியுடன் வழியுமாகும். இவை மனிதனை ஒரு தெய்வீக, மானசீக, பெளதீக வழிகளில் மேல் நிலைக்கு இட்டுச்சென்று மோட்சமடைய வழிவகுக்கின்றன.
மோட்சம் என்றால் எந்தப் பாரமும் இல்லாமல் விடுபட்ட ஷதானந்தம் என்றே அர்த்தம். மனிதன் மரணம் அடைந்த பின் வேறு ஏதோ கைலாச வைகுண்டாதி லோகங்களுக்குப் போய் ஆத்மா மோட்சம் அடைகின்றது என்பது சரியான கூற்றல்ல.
இந்த லோகத்தில் நாம் சரீரத்தில் இருப்பதாக தோன்றும் இப்போதே இந்த சரீரத்தை "நான்" என்னுடையதல்ல" என்று அமைத்துக் கொள்ள வேண்டும். மரணத்தின் பின்பு ஒரு ஆன்மாவின் பயணத்தை யசூர் வேதத்தில் அழகாக சித்தரித்துள்ளார்கள்.
உயிருள்ள உடலை விட்டுப் பிரிந்த ஒரு ஆத்மா, இறந்த முதலாம் நாள் சூரியனை அடைகின்றது. இரண்டாம் நாள் அக்கினியை சந்திக்கின்றது. வாயுவை மூன்றாம் நாளும், சூரியனது கதிர்களை நான்காம் நாளும் சென்றடைகிறது. சந்திரனை ஐந்தாம் நாள் அடையும் ஆத்மா ஆறாம் நாள்'ரிது" வை பார்க்கின்றது. மனிதர்களை ஏழாம் நாளும், பிரகஸ்பதியை எட்டாம் நாளும் “மித்ரா' வை ஒன்பதாம் நாளும், வருணனை பத்தாம் நாளும், இந்திரனை பதினோராம் நாளும், மற்றும் ஏனைய சக்தி தெய்வங்களை பன்னிரண்டாம் நாளும், ஆத்மா
அறியும்.
இறப்புக்குப்பின் ஆத்மா அதனது நடவடிக்கைகளுக்கேற்ப மூர்க்கத்தனமாகவும் அமைதியாகவும், அச்சந்தருவதாகவும், பயமற்றதாகவும், அறிவுள்ளதாகவும், அறிவில்லாததாகவும், மேலும் பல விதமாகவும் உரு மாறுகிறது.
இந்து வேதங்கள் படிப்பாலோ , மேதாவித்தனத்தாலோ ஆத்மா முடிபை அடையமுடியாது என்கின்றன. பிரஜைகள் உற்பத்தியானது எப்படி? அவர்களை ரட்ஷிக்கிற தேவர்கள் யார்? பிராணன் எப்படி சரீரத்தில் வந்து இயங்குகிறது? விழிப்பு, தூக்கம், ஸ்வப்னம், என்கிற நிலைகளைப் பற்றிய உண்மை
61

Page 36
என்ன? பரம புருஷனுக்கும், ஜீவனுக்கும் என்ன சம்பந்தம்? என்கின்ற பிரச்சினைகளுக்கெல்லாம் வேதங்கள் மறுமொழி பகர்கிறது.
மேலும் வேதங்கள் ஓர் இறந்த உடலை புதைப்பதையோ, ஆற்றிலோ, காடுகளிலோ எறிவதையோ கண்டிக்கின்றன. தீக் கிரையாக்கி பிடிசாம் பல ஆகுவதையே அவை வரவேற்கின்றன. "ஸ்வாக” எனப்படுவது பலிகொடுக்கும் போது அதை அறிவிக்க உச்சரிக்கப்படும் வார்த்தையாகும்.
ஈமச்சடங்குகள் செய்யும் போது "ஸ்வாக” மந்திரத்தை பல இடங்களில் பாவிப்பதை அறியலாம் . அவை யாவும் இறைவனுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் செய்யும் அர்ப்பணிப்புகளையே குறிப்பிடுகின்றன. ஈமச்சடங்குகள் இறந்த உடலை தீமின்னொளி , பசு-பதி போன்றவற்றுக்கு அர்ப்பணிக்கின்றன.
ஓர் ஆத்மா சுத்தமான இரத்தத்தால் வீரம் பெறுகின்றது. அதே போன்று அழகு, அறிவு, சக்தி பராக்கிரமம் போன்றவற்றையும் பல்வேறு சாதனங்களால் பெற்று மறுபிறப்பு அடைகிறதாக வேதம் பகர்கிறது. -
பெளதீக பிரிவும், கவலையும், கண்ணீரும் எல்லாமே உண்மையான ஆத்மாவை அறியாததால் ஏற்படும் அறிகுறிகளேயாம் . நித்தியமான ஆத்மாவுக்காகப் பரிவு கொள்வதே சுய உணர்வாகும். பரிதாபப்பட வேண்டியது எங்கு என்பது ஒருவருக்கும் தெரிவதில்லை. அதனாலேயே கிருஷ்ணன், “பகவத்கீதையை" அர்ஜூனனுக்கும், உலகுக்கும் அளித்தான். நீரில் மூழ்கும் மனிதருடைய ஆடைக்காக பரிதாபப்படுவது பொருளற்றது. அறியாமைக் கடலில் வீழ்ந்த மனிதனை துரலஉடல் எனும் அவனது வெளியாடையை காப்பதால் மட்டுமே பாதுகாக்க முடியாது. இதை அறியாது வெளிஆடைக்காக கவலைப்படுபவன் தேவையின்றி வருந்துபவன் ஆவான்.
பெளதீக நிலையின் அறியாமையில் இருந்து மனித குலத்தை விடுவிப்பதே பகவத்கீதையின் நோக்கமாகும். குருட்சேத்திர யுத்தத்தில் போர் புரிவதில் அர்ஜூனனுக்கு சிரமமிருந்தது போலவே ஒவ்வொரு மனிதனும் பலவிதங்களில் சிரமத்தில் இருக்கின்றான். அர்ஜ" னண் பூனி கிருஷ்ணனிடம்
62

சரணடைந்தான். அதன் பயனாக கீதை உபதேசிக்கப்பட்டது. அர்ஜூனன் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவருமே பெளதீக இருப்பால் துன்பம் மிகுந்திருக்கின்றோம். நமது நிலையே நிலையற்ற சூழ்நிலையில் அமைந்துள்ளது. உண்மையில் நிலையற்ற தன்மையால் நாம் அச்சுறுத்தப்படக் கூடியவர்களல்ல. நம் உண்மை நிலையோ நித்தியமானது. ஆனால் எவ்வாறோ அஸத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். "அஸத்’ என்பது இல்லாததைக் குறிக்கின்றது.
பரமாத்மாவின் அணுப்போன்ற சிறு அங்க உறுப்பாகிய ஆத்மா குணத்தால் பரமனைப் போன்றதே. உடலைப் போல ஜீவாத்மா மற்றங்களை அடைவதில்லை. சில சமயம் ஆத்மா "நிலையானது” என்று அழைக்கப்படுகின்றது. உடல் ஆறு விதமான மாற்றங்களுக்குட்பட்டது. தாயின் உடலில் உள்ள கருப்பையில் அது பிறவி எடுத்து சில காலம் தங்கி வளர்ந்து சில பலன்களை உற்பத்தி செய்து, படிப்படியாகத் தேய்ந்து கடைசியில் மறைந்து போகின்றது. இருப்பினும் ஆத்மா இந்த மாற்றங்களுக்குட்படுவதில்லை. ஆத்மா பிறப்பற்றதே. இருப்பினும் அவன் உடலை ஏற்பதால் அவ்வுடல் பிறக்கின்றது. அங்கே ஆத்மா பிறப்பதுமில்லை- இறப்பதுமில்லை. பிறப்புள்ள எதற்கும் மரணம் உண்டு. ஆத்மா பிறப்பில்லாதலால், அதற்கு இறந்த நிகழ், எதிர்காலங்களும் கிடையாது. அவன் நித்தியமான என்றும் நிலைபெற்ற மிகப் பழையவனுமாவான். அதாவது, அவன் உருப்பெற்ற காலத்திற்கு சரித்திரத்தில் எந்த அடையாளமுமில்லை. உடலின் எண்ணத்தைக் கொண்டே நாம் ஆத்மாவின் சரித்திரம் முதலியவற்றை ஆராய நினைக்கிறோம். உடலைப் போல் ஆத்மா எப்போதும் முதுமை அடைவதேயில்லை. எனவேதான் முதியோன் என்றழைக்கப்படுபவன் கூட இளமை அல்லது குழந்தைப் பருவத்திலிருந்தது போன்ற அதே குதுாகல உணர்வை அனுபவிக்கிறான். உடலின் மாற்றங்கள் ஆத்மாவைப் பாதிப்பதேயில்லை. ஒரு கட்டையைப் போன்றோ, அல்லது மற்றெந்த ஜடப் பொருளைப் போன்றோ ஆத்மா சீரழிவதில்லை. ஆத்மாவிற்கு உபஉற்பத்திப்பொருளும் கிடையாது. உடலின் உடன் விளைவுகளான குழந்தைகளும் கூட வெவ்வேறு ஆத்மாக்களை உடையவரே. உடலின் காரணத்தாலேயே அவர்கள் ஒரு குறிப்பிட்டமனிதனின் குந்தைகளாகத் தோன்றுகின்றனர். உடல் ஆத்மா இருப்பதால் வளர்கிறது. ஆனால் ஆத்மாவிற்கு சந்ததியோ, மாற்றமோ இல்லவேயில்லை. எனவே ஆத்மா உடலின் ஆறுவித மாற்றங்களிலிருந்து விடுபட்டதாகும்.
யசூர் வேதம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றைத் தழுவியது.
63

Page 37
வையத்திலும் வானுறையும் தெய்வத்திலும்
வாழும் வம்சம்.
பெற்றோர்
(அமரர்) திரு. முத்துக்குமார் பொன்னையா (அமரர்) திருமதி. தங்கம்மா பொன்னையா
கணவர் - திரு. கதிரவேலு தியாகராஜா (தம்பிஐயா)
மக்கள் - சிவகுமாரன்,
வரதராசன்,
கவுந்தி, நக்கீரன்
மருமகள் - சியாமளாரதி
பேரப்பிள்ளை- அருணன்
சகோதரர்- நாகரத்தினம்,
தியாகராஜா(அமரர்), சண்முகநாதன், குமாரசாமி, மகேஸ்வரி.

நன்றி
பரமனின் புகழ் பண் அமைத்துப் பாடியவர்கள்
திரு.செல்லக்கண்டு , அவர்கள் திரு. சிவநாதன், അഖrട് - திரு. யோகானந்தசிவம், அவர்கள் திரு. ஆறுமுகம், அவர்கள் திரு. ஈழத்துச் சிவானந்தன், அவர்கள் திரு. சண்முகம், அவர்கள் திரு.தேவன், அவர்கள் திரு. வரதன், அவர்கள் திரு. பாலசிங்கம், அவர்கள் திரு. கனகவிங்கம், அவர்கள் திரு. கணேசன், அவர்கள்
மற்றும் சைவ முன்னேற்றச் சங்கஅங்கத்தவர்கள்
ஈமச் சடங்குகளால் அர்ப்பணம் புரிந்து ஆத்ம அமைதி அமைத்தவர்
சிவபூணி க. சுப்பிரமணியக் குருக்கள் அவர்கள்
திதி நிர்ணய வெண்பா யாத்தவர்
புலவர் திரு. ஈழத்துச் சிவானந்தன் அவர்க.
骤 *。 SLTSLSLS LSLSLMSLLL

Page 38
நன்றி
எங்கள் இதயத்தில் குழுவிருக்கும் அணிதிகழ் செல்வி அமரர். திருமதி பாக்கியலெட்சுமி தியாகராஜா அவர்கள் 12.04.1994 செவ்வாய்க்கிழமை, பற்றறுத்து பாலிக்கும் ஆரியனை அடைந்தபோது, எமது ஆறாத் துயரில் பங்கு கொண்டு ஆறுதல் கூறியவர் க்கும் , ஆறுதல் செய்தி அனுப்பியோருக்கும் , 1604. 1994 சனிக்கிழமை இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் , 12.05. 1994 வியாழக்கிழமை வீட்டுக்கிருத்திய ஆத்ம சாந்திப் பிரார்த்தைனையில் பங்கு பற்றிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் பல வகையிலும் எமக்கு உதவி புரிந்தோருக்கும், எமது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
க. தியாகராஜா குடும்பத்தினர். 125 ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, கொழும்பு -2
Tp. 447127
 

வெட் பிரின்ட் 96 , ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, கொழும்பு - 2

Page 39