கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருளமுதம் (பிள்ளையான் சின்னத்தம்பி நினைவு மலர்)

Page 1

݂ ݂
பி (சின்னையா)

Page 2


Page 3

d6JLDulb
அருளமுதம்
தொகுப்பு v கலாபூஷணம் பண்டிதர் சி. அப்புத்துரை
மட்டுவில் பிள்ளையான் சின்னத்தம்பி (சின்னையா) நினைவிதழ்
2005.01.15

Page 4
சிவமயம்
சமர்ப்பணம்
அன்பாய் அணைக்கும் அருமை அப்பா துன்பந் தெரியா தோம்பி வளர்த்தாய் கல்வி தந்து கருத்தோ டெம்மை வல்லவ ராக்கி வாழ்நெறி காட்டினை வாழ்க்கைப் படகும் வழியினிற் சென்றது மூழ்கும் எனநாம் நினைந்தோ மில்லை சுனாமி அலைதான் சூழ்ந்துகொண் டதுவோ கனாவது வெனநாம் கருதிட லாமோ அப்பா உங்கள் நினைவை நிறுத்த இப்போ ஒருநூல் யாத்தே எங்கள் வீர பத்திரர் தாள்களில் தந்தோம் தீரர் அப்பா தெய்வ வாழ்வுட னாகி வயங்குவர் நிசமே.
சிவன்கோவில் வீதி பிள்ளைகள் மட்டுவில் தெற்கு LDB LDåbssir
5Gy. சாவகச்சேரி பேரப்பிள்ளைகள்.

6Duub
விநாயகர் துதி
திருவுங் கல்வியுஞ் சீருந் தழைக்கவும் கருணை பூக்கவுந் தீமையைக் காய்க்கவும் பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும் பெருகுமா ழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.
- வித்தாசல புராணம்.
வீரபத்திரர் துதி
அடைந்தவி யுண்டிடு மமரர் யாவரும் முடிந்திட வெருவியே முனிவர் வேதியர் உடைந்திட மாமக மொடியத் தக்கனைத் தடிந்திடு சேவகன் சரணம் போற்றுவாம்.
- கந்தபுராணம்.

Page 5
1
சிவமயம்
ஆ.பொருளடக்கம்
சமர்ப்பணம்
விநாயகர் துதி, வீரபத்திரர் துதி
பதிப்புரை
ஆசியுரை
அறிமுகவுரை தேவாரம் முதலிய திருமுறைப்பாடல்கள்
சிவபுராணம்
திருவெம்பாவை
திருப்பள்ளியெழுச்சி
. திருப்பொற்சுண்ணம் . வயிரவர் துதிப்பாடல்கள் . விநாயகர் அகவல்
. சகலாகலாவல்லி மாலை
. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் . வைரவர் வழிபாடு . வைரவ மூர்த்தமும் வழிபாடும்
. இறைவழிபாடு
. சைவவாழ்வு . புலமைப்பரிசில் நிதியம்
. நன்றியுரை
02
03
05
06
07
10
14
18
25
29
36
39
42
44
45
50
55
59
66
68

sdசிவமயம்
பதிப்புரை
மட்டுவில் பிள்ளையான் சின்னத்தம்பி (சின்னையா) வழிபாட்டுடனாகிய முயற்சிகளில் மிக ஈடுபாடுடையவர். அவர் தோற்றத்தைப் பார்ப்பவர்களும் சிவ வழிபாட்டுடன் ஒன்றிவிடுவார்கள். அவ்வளவிற்குச் சிவப்பொலிவுடனாகிய
தோற்றம் அவருடையது. தமது வாழ்விடத்திற்கு அண்மையாக
வீரபத்திரருக்கு ஒரு சிறிய ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தவர் அவர். அவர் அமரர் ஆகிய இந்த வேளையில் சைவப் பொலிவுடன் கூடியதொரு நினைவு நூலை வெளியிட்டால் அது அவர் ஆத்ம சாந்திக்கு உதவுவதாக அமையும் என்று அவர் உறவினர் விரும்பினர்.
அந்த விருப்பை நிறைவு செய்யும் நோக்குடன் திரு முறைப் பாடல்களுடன் விநாயகர் அகவல், சகலகலா வல்லிமாலை என்னும் அரிய பிரபந்தங்களையும் சேர்த்துக் கொண்டோம். சிவ வழிபாட்டுச் சிந்தனையை ஊக்குவிக்க வல்ல கட்டுரைகளையுஞ் சேர்த்துக் கொண்டோம்.
இந்த முயற்சியின் நிறைவான வழிகாட்டி கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியின் முன்னைநாள் விரிவுரையாளர, R.M. நாகலிங்கம் அவர்கள். தமது அச்சுப்பதிவாக்க வேலையின் தொழில்நுட்பத்திறனை புலப்படுத்தும் வகை இதனை அழகுற வெளிக்கொணர்ந்தவர் கொழும்பு கீதா பதிப்பகத்தினர். குறுகியகால இடைவேளையில் இதனை நிறைவு செய்ய உதவியவர்கள் அத்தொழிலகச் சக ஊழியர்கள் எல்லோ ருக்கும் இறைவன் திருவருள் கிடைப்பதாக. நன்றியும் உரியதாக.
8ilu Lib.
சி. அப்புத்துரை மயிலங்கூடல் GasTepublis): 18/1, 9th Lane, Wasala Road, இளவாலை,
Colombo-13. Sri Lanka. பூரீலங்கா.
5

Page 6
சிவமயம்
ஆசியுரை
மறைந்த சைவ அன்பு நெஞ்சங்கள் பற்றிய நினைவு வெளியீடுகள் பெரும்பாலும் இறைவழிபாட்டைக் கருப்பொருளாகக் கொண்டே வெளிவருகின்றன. அத்துடன் அமரத்துவமடைந்த அவர்களைப் பற்றிய துயர் தாங்கிய செய்திகளும் பரந்த அளவில் அவ்வெளியீடுகளில் உள்ளடக்கப்படுகின்றன. இம் மரபை மாற்றி இறைவழிபாட்டுக் குரிய தொகுப்புகளை இறை உணர்வோடு பேணிப் பயன் கொள்ள வேண்டுமென்ற சமய நோக்குடன் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒன்றாகும். சமய அறிவை ஊட்டக்கூடிய பல கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன. பல்வகைச் சமய நிகழ்வுகளையும் கருத்திற் கொண்டு அருட்பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இறை வழிபாட்டைத் தூண்டி வளர்ப்பதை நோக்குடன் பதிக்கப்பட்ட இந்நூல் அனைவராலும் பேணிப் பயன்கொள்ளப்படும் என்பதில் ஐயமில்லை. இந்நூலை வெளியிடுவதில், பதிப்பதில் முதன்மைப் பங்கை வகித்த R.M. நாகலிங்கம், கலாபூஷணம் பண்டிதமணி சி. அப்புத்துரை அவர்களின் சேவை மேலும் பல்லாண்டுகள் தொடரவேண்டியும் அமரர் சின்னத்தம்பி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் பிரார்த்திக் கின்றேன்.
கிரியாபூசணம் சிவபூரி. வை. பாலசுந்தரகுருக்கள் விஷேச குரு பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம் இராமநாதன் வீதி, கொழும்பு -13.
05. 01. 2005.

அறிமுகவுரை
அமரரான எங்கள் அன்புத் தெய்வம், சின்னையா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் சின்னத்தம்பி அவர்கள் சுயமுயற்சி, சுயபலம், சுயநம்பிக்கை, சுயசிந்தனை, விடாமுயற்சி ஆகியவற்றை மூலதனமாக்கிக் கீழ்மட்டத்தி லிருந்து வளர்ச்சி பெற்றவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாட் டுடன் வாழ்ந்து காட்டியவர்; சிறந்த மைந்தனாக, சிறந்த கணவனாக, சிறந்த தந்தையாக, சிறந்த மாமானாக, சிறந்த குடும்பத் தலைவனாக, சிறந்த தொழில் முதல்வனாக, சிறந்த விவசாயியாக வாழ்ந்து தனக்கும் தன் குடும்பத்திற்கும் தன்னைச் சார்ந்தவர்க்கும் பெருமை சேர்த்தவர்; எங்களை யெல்லாம் வையத்தில் ஒழுக்கசீலராகச் சிறந்த பண்பாளராக வாழ வழிகாட்டியவர். இவ்வாறு எம்மையெல்லாம் வையத்தில் வாழ்வாங்கு வாழத் தன்னையே அர்ப்பணித்த எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் அவரின் நாமம் என்றென்றும் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நிலைத்து நிற்க வேண்டியும் எமது சமயம் தொடர்பான நூலைச் சிறியளவில் வெளியிட விருப்பங்கொண்டு எங்கள் மதிப் பிற்குரிய, பொல்கொல்லைக் கூட்டுறவுக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளரும் அகில இலங்கைச் சமாதான நீதவானுமாகிய R.M. நாகலிங்கம் அவர்களுடன் ஆலோ சித்ததன் விளைவாக ‘அருளமுதம்’ என்ற தலைப்பில் இந்நூல் வெளி வருகிறது. எங்கள் குலதெய்வமாகிய வீரபத்திரக் கடவுளைத் தியானித்து இம்முயற்சியை ஆரம்பித்துள்ளோம். இவ்வால யத்தின் வரலாற்றை எழுதி இந்நூலில் பிரசுரிக்கப் பெரு விருப்பு எம்மிடம் இருந்த
7

Page 7
பொழுதிலும் கால அவகாசம் போதாமையால் அவ்வெண்ணம் கைகூடவில்லை. வருந்து. கிறோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் இவ்வெண்ணம் கைகூட வீரபத்திரப் பெருமானின் அருள் கிடைக்கவேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
இந்நூலை மிகக் குறுகிய காலத்தில் தொகுத்தும் சமர்ப்பணப்பாவை அழகுற அமைத்தும் சொற்பிழை, பொருட்பிழை, எழுத்துப்பிழை களைந்தும் தாய்மொழியின் தரம்பேணி எதுவித சன்மானத்தையும் பெற்றுக்கொள்ளாது சைவமும் தமிழும் தழைத்தோங்க எப்பொழுதும் அர்ப் பணிப்போடு சேவையாற்றியும் வரும் கலாபூஷணம் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்களை மிக்க நன்றியுணர்வோடு பாராட்டி அவருடைய பணி மேலும் மேலும் சிறக்க வீரபத்திரப் பெருமானை வேண்டுகிறோம்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சியும் எழுச்சியும் அச்சமூகத்தினாற் பேணி வளர்க்கப்படுகின்ற கலாசாரப் பண்பாட்டுக் கல்வி விழுமியங்களால் நிச்சயிக்கப்படுகின்றன. என்ற உண்மையை எமது சமூக எழுச்சித் தந்தை R.M. நாகலிங்கம் அவர்கள் எமக்கு அடிக்கடி உணர்த்தி வருகிறார். மறைந்த அன்பு நெஞ்சங்களுக்கான ஆத்மா சாந்திக் கிரியைகளிலும் நினைவஞ்சலி நிகழ்வுகளிலும் நினைவு மலர்களிலும் R.M.N. அவர்களின் இத்தகைய எழுச்சிச் சிந்தனைகளின் பிரதிபலிப்பை காண்கிறோம். இச்சிந்தனையை மதித்து இ.தொரு ‘அந்தியேட்டி நூல்' என்ற உணர்வு ஏற்படாமல் இறையுணர் வோடு மக்கள் பேணிப்பயன்படுத்த வேண்டுமென்ற நோக் கோடு இதனை அமைத்துள்ளோம்.
8

11.01.2005ம் திகதியன்று நடைபெறும் எங்கள் அன்புத் தெய்வத்தின் அஞ்சலி நிகழ்வில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை அருளமுதம் என்ற இந்நூல் வெளியீடு ஞாபகார்த்தப் புலமைப் பரிசில் நிதியத்தை தாபித்தல் என்பன முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளன.
பிரதேச செயலாளர் எஸ். தில்லைநாதன் அவர்கள் வழங்கிய வைரவ வழிபாடு' பற்றிய கட்டுரையும், செல்வி பத்மலோஜினி கனகசூரியம் அவர்கள் வழங்கிய வைரவ மூர்த்தமும் வழிபாடும் பற்றிய கட்டுரையும், திருமதி றொ. பத்மாவதி அவர்கள் வழங்கிய ‘இறைவழிபாடு பற்றிய கட்டுரையும், கலாபூஷணம் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் வழங்கிய சைவவாழ்வு பற்றிய கட்டுரையும் இந்நூலைச் சிறப்பித்துள்ளன. இப்பெரியார்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆசியுரை வழங்கி நூலுக்கு பெருமை சேர்த்த் கிரியாபூசணம் சிவறி. வை. பாலசுந்தரகுருக்கள் அவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக. கீதா பதிப்பகத்தாரின் தொழிற் திறனையும் முகாமைத்துவத் திறனையும் மதித்து நன்றி கூறுகிறோம்.
சிவன்கோவில் வீதி, மனைவி மட்டுவில் தெற்கு, பிள்ளைகள், சாவகச்சேரி. மருமக்கள்.
1.01.2005 பேரப்பிள்ளைகள்.

Page 8
Ω -- சிவமயம்
தேவாரம்
திருச்சிற்றம்பலம் சம்பந்தர் : வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த வதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே யாசறு நல்லநல்ல வவைநல்ல நல்ல வடியார வர்க்கு மிகவே. அப்பர் : சலம்பூ வொடுது பமறந் தறியேன்
றமிழோ டிசைபா டன்மறந் தறியே னலந்தீங் கிலுமுன் னைமறுந் தறியே
னுன்னா மமென்னா வின்மறந் தறியே னுலந்தார் தலையிற் பலிகொண் டுழல்வா
யுடலுள் ளுறுசூ லைதவிர்த் தருளாய் யலந்தே னடியே னதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே. சுந்தரர் : அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத
வவனைக் காப்பது காரண மாக வந்த காலன்ற னாருயி ரதனை
வவ்வினாய்க் குன்றன் வண்மைகண் டடியே னெந்தை நீயெனை நமன்றமர் நலியி
னிவன்மற் றென்னடி யானென விலக்குஞ் சிந்தை யால்வந்துன் றிருவடி யடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூரு ளானே.
10

திருவாசகம்
மாணிக்கவாசகர் :
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந் துறையுறை சிவனே இறைவனே நீஎன் உடலிடங் கொண்டாய் இனியுன்னை என்னிரக் கேனே
திருவிசைப்பா
பூந்துருத்திநம்பிகாடவநம்பி : எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டெமையாளுஞ் சம்பந்தன் காழியர்கோன் றன்னையுமாட் கொண்டருளி அம்புந்து கண்ணாளுந் தானு மணிதில்லைச் செம்பொன்செ யம்பலமே சேர்ந்திருக்கை யாயிற்றே.
திருப்பல்லாண்டு சேந்தனார் :
குழலொலி யாழொலி கூத்தொலி யேத்தொலி
எங்குங் குழாம்பெருகி விழவொலி விண்ணளவுஞ் சென்று விம்மி
மிகுதிரு வாரூரின் மழவிடை யார்க்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடி யாரொடுங் கூடியெம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
11

Page 9
திருமுகப்பாசுரம்
திருவாலவாயுடையார் :
மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பாணிற வரிச்சிற கன்னம் பயில் பொழி லாலவாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கிழ்ச் செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க பண்பா லியாழ் பயில் பாண பத்திரன் றன்போ லென்பா லன்பன் றன்பாற் காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே.
பெரிய புராணம்
சேக்கிழார் :
என்று மின்பம் பெருகு மியல்பினால் ஒன்று காதலித் துள்ளமு மோங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கு நிலவி யுலகெலாம்.
திருச்சிற்றம்பலம்
12

திருப்புகழ்
அருணகிரிநாதர் :
திருமகளு லாவும் இருபுயமுராரி
திருமருக நாமப் பெருமாள்காண் செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள்காண் மருவுமடி யார்கள் மனதில் விளையாடும்
மரகத மயூரப் பெருமாள்காண் அருவரைகள் நீறு படஅசுரர் மாழ
அமர்பொருத வீரப் பெருமாள்காண் அரவுபிறை வாரி விரவுசடைவேணி
அமலர்குரு நாதப் பெருமாள்காண் இருவினையிலாத திருவினைவிடாத
இமையவர்கு லேசப் பெருமாள்காண் இலகுசிவை வேடர் கொடியின திபார இருதனவி நோதப் பெருமாளே.
வாழதது
கச்சியப்பர் :
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன கோன்முறை யரசுசெய்கக் குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவநிதி விளங்குக வுலகமெல்லாம்
13

Page 10
திருவாசகம்
திருச்சிற்றம்பலம் சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! O 1 இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள்வாழ்க! ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க O 5
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க! புறந்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க! கரங்குவிவார் உண்மகிழும் கோன்கழல்கள் வெல்க! சிரங்குவிவார் ஒங்குவிக்குஞ் சீரோன்கழல் வெல்க! 10
ஈசனடி போற்றி எந்தை யடிபோற்றி! தேச னடிபோற்றி சிவன்சே வ்டிபோற்றி! நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி! மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி! சீரார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி! 15
ஆராத இன்பம் அருளு மலைபோற்றி! சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவன்றாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுது மோய உரைப்பனியான் 20
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லர் வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
14

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஆ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே! மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே!
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர் களேத்த
3 O
35
40
45
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை50
15

Page 11
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு முடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே! மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே! தேசனே தேனா ரமுதே சிவபுரனே! பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே! நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே! ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே! நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே! இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே!
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே!
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
55
6 (
65
70
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
16

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே! காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே! ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே! வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே! நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே!
அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
85
90
95

Page 12
- சிவமயம்
திருவெம்பாவை
திருச்சிற்றம்பலம்
ஆதியு மந்தமு மில்லா வரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள்வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார மளியின்மே ணின்றும் புரண் டிங்ங் னேதேனு மாகாள் கிடந்தாளென் னேயென்னே
யீதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய். (1
பாசம் பரஞ்சோதிக் கென்பா யிராப்பகனாம்
பேசும்போ தெப்போ திப்போதார மளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசீ யிவையுஞ் சிலவோ விளையாடி
யேசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக் கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் றில்லைச்சிற் றம்பலத்து
ளிசனார்க் கன்பார்யா மாரேலோ ரெம்பாவாய். (2
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதி ரெழுந்தென்
னத்தனா னந்த னமுதனென் றள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீ ரீசன் பழவடியிர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ வெத்தோநின் னன்புடமை யெல்லோ மறியோமோ சித்த மழகியார் பாடாரோ நஞ்சிவனை
யித்தனையும் வேண்டு மெமக்கேலோ ரெம்பாவாய்(3

ஒண்ணித் திலநகையா யின்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ வெண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோ மவ்வளவுங்
கண்ணைத் துயின் றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேதவிழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ள முண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்
தெண்ணிக் குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய். (4
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான் கோலமு நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென் றோல மிடினு முணரா யுணராய்கா
ணேலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய். (5
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவ னென்றலு நாணாமே
போன திசைபகரா யின்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே யறிவரியான்
றானேவந் தெம்மை தலையளித் தாட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவா
யூனே யுருகா யுனக்கே யுறுமெமக்கு
மேனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய் (6
19

Page 13
அன்னே யிவையுஞ் சிலவோ பலவமர
ருன்னற் கரியா னொருவ னிருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
εί தென்னாவென் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பா
யென்னானை யென்னரைய னின்னமுதென் றெல்லோமுஞ் சொன்னோங்கேள் வெவ்வேறா யின்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
லென்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய். (7
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
மேழி லியம்ப வியம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ வாழியீ தென்ன வுறக்கமோ, வாய்திறவா
யாழியா னன்புடைமை யாமாறு மிவ்வாறே வுழி முதல்வனாய் நின்ற வொருவனை
யேழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய் (8
முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே யுன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோ
முன்னடியார் தாள்பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோம் மன்னவரே யெங்கணவா ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய் பணிசெய்வோ மின்ன வகையே யெமக்கெங்கோ னல்குதியே
லென்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய். (9
20

தாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியு மெல்லாப் பொருண்முடிவே
பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன்
வேதமுதல் விண்ணோரு மண்ணுந் துதித்தாலு
மோத வுலாவ வொருதோழம் றொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகா
ளேதவனு ரேதவன்பே ராருற்றா ராரயலா
ரேதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். (10
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி யையா வழியடியோம் வாழ்ந்தோங்காணா ரழல்போற் செய்யா வெண்ணிறாடிச் செல்வா சிறுமருங்குன் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
வையாநி யாட்கொண்டருளும் விளையாட்டி னுய்வார்க ளுய்யும் வகையெல்லா முய்ந்தொழிந்தோ
மெய்யாமற் காப்பா யெமையேலோ ரெம்பாவாய் (11
ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடுந்
தீர்த்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தனிவ் வானுங் குவலயமு மெல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைக
ளார்ப்பரவஞ் செய்ய வணிகுழன்மேல் வண்டார்ப்பப்
பூத்திகளும் பொய்கை குடைந்துடையான் பொற்பாத
மேத்தி யிருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய். (12
21

Page 14
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதா
லங்கங் குருகினத்தாற் பின்னு மரவத்தாற் றங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினா
லெங்கள் பிராட்டியு மெங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந் தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் (13
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம்பலம்பாடி
வேதப் பொருள்பாடி யப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
யாதி திறம்பாடி யந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய். (14
ஒரொருகா லெம்பெருமா னென்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகா லோவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத்தான் பணியாள்
பேரரையற் கிங்ங்னே பித்தொருவ ராமாறு
மாரொருவ ரிவ்வண்ண மாட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
யேருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் (15
22

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையா
ளென்னத் திகழ்ந்தெம்மை யாளுடையா விட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவ மென்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையா
டன்னிற் பிரிவிலா வெங்கோமா னன்பர்க்கு முன்னி யவள்நமக்கு முன்சுரக்கு மின்னருளே
யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய் (16
செங்கணவன்பாற் றிசைமுகன்பாற் றேவர்கள்பா
லெங்கு மிலாதோ ரின்பநம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
யிங்குநம் மில்லங்க டோறு மெழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
யங்கண ரசை யடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் (17
அண்ணா மலையா னடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போற்
கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ரொளிமழுங்கித் தாரகைக டாமகலப்
பெண்ணாகி யானா யலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி யித்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்(18
23

Page 15
உங்கையிற் பிள்ளை யுனக்கே யடைக்கலமென்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் மச்சத்தா
லெங்கள் பெருமா னுனக்கொன் றுரைப்போம்கேள்
ளெங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
வெங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே யெமக்கெங்கோ னல்குதியே
லெங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய் (19
போற்றி யருளுகநின் னாதியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் னந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கு pr மிணையடிகள்
போற்றிமா னான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். (20
திருச்சிற்றம்பலம்
கூகா வெனெவன் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா நாகா சலவே லவநா லுகவித் தியாகா சுரலோ கசிகா மணியே
கந்தரநுபூதி
24

2. சிவமயம்
திருப்பள்ளியெழுச்சி
திருச்சிற்றம்பலம்
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் றிருமுகத் தெமக்கருண் மலரு
'மெழினகை கொண்டுநின் றிருவடி தொழுகோஞ் சேற்றிதழ்க் கமலங்கண் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யேற்றுயர்க் கொடியுடையா யெனை யுடையா
யெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (1
அருணனிந் திரன்றிசை யணுகின னிருள்போ
யகன்றது வுதயநின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரிய னெழவெழந யனக்
கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாந் திரணிரை யறுபத முரல்வன விவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யருணிதி தரவரு மானந்த மலையே
யலைகடலே பள்ளி யெழுந்தரு ளாயே. (2
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுக ளியம்பின வியம்பின சங்க மோவின தாரகை யொளியொளி யுதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழற் றாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரு மறிவரியா யெமக் கெளியா
யெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (3
25

Page 16
இன்னிசை வீணைய ரியாழின ரொருபா
விருக்கொடு தோத்திர மியம்பின ரொருபாற் றுன்னிய பிணைமலர்க் கையின ரொருபாற்
றொழுகைய ரழுகையர் துவள்கைய ரொருபாற் சென்னியி லஞ்சலி கூப்பின ரொருபாற்
றிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யென்னையு மாண்டுகொண் டின்னருள் புரியு
மெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (4
பூதங்க டோறும்நின் றாயெனி னல்லாற்
போக்கிலன் வரவில னெனநினைப் புலவோர் கீதங்கள் பாடுத லாடுத லல்லாற்
கேட்டறி யோமுனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயற்றிருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்மரி யாயெங்கண் முன்வந் தேதங்க ளறுத்தெம்மை யாண்டருள் புரியு
மெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (5
பப்பற வீட்டிருந் துணருநின் னடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரு மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றாரணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யிப்பிறப் பறுத்தெம்மை யாண்டருள் புரியு
மெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (6
26

அதுபழச் சுவையென வமுதென வறிதற்
கரிதென வெளிதென வமரரு மறியா ரிதுவவன் றிருவுரு விவனவ னெனவே
யெங்களை யாண்டுகொண் டிங்கெழுந் தருளு மதுவளர் பொழிற்றிரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா வெதுவெமைப் பணிகொளு மாறது கேட்போ
மெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (7
முந்திய முதனடு விறுதியு மானாய்
மூவரு மறிகில ரியாவர்மற் றறிவார் பந்தனை விரலியு நீயுநின் னடியார்
பழங்குடி றொறுமெழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி யந்தன னாவதுங் காட்டிவந் தாண்டா
யாரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே. (8
விண்ணகத் தேவரு நண்ணவு மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கண் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்டிருப் பெருந்துறை யாய்வழி யடியோங் கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியா ரெண்ணகத் தாயுல குக்குயி ரானா
யெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (9
27

Page 17
புவனியிற் போய்ப்பிற வாமையி னானாம்
போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலா மவன்விருப் பெய்தவு மலரவ னாசைப்
படவுநின் னலர்ந்தமெய்க் கருணையு நீயு மவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள வல்லா
யாரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே. (10
திருச்சிற்றம்பலம்
ஆடும் பரிவேல் அணிசே வலெனப் பாடும் பணியே பணியா வருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னைசகோ தரனே
உல்லா சநிரா குலயோ கவிதச் சல்லா பவிநோ தனுநீ யலையோ? எல்லா மறவென்னை யிழந் தநலஞ் சொல்லாய் முருகா சுரபூ பதியே
வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதுசண் முகனே
வளைபட் டகைமா தொடுமக் களெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே
கந்தரநுபூதி
28

d6JLDub
திருப்பொற்சுண்ணம்
திருச்சிற்றம்பலம்
முத்துநற் றாமம்பூ மாலைதூக்கி V−
முளைக்குடந் தூபநற் றீபம்வைம்மின் சத்தியுஞ் சோமியும் பார்மகளு
நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கெளரியும் பார்ப்பதியுங்
கங்கையும் வந்து கவரிகொண்மி னத்தனை யாறனம் மானைப்பாடி w யாடப்பொற் சுண்ண மிடித்துநாமே. (1
பூவியல் வார்சடை யெம்பிராற்கு
பொற்றிருச் சுண்ண மிடிக்கவேண்டு மாவின் வடுவகி ரன்னகண்ணிர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் றொண்டர் புறநிலாமே
குனிமின் றொழுமினெங் கோனெங்கூத்தன் றேவியுந் தானும்வந் தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ண மிடித்துநாமே. (2
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி யிந்திரன் கற்பக நாட்டியெங்கு
மெழிற்சுடர் வைத்துக் கொடியெடுமி னந்தரர் கோணயன் றன்பெருமா
னாழியா னாதனல் வேலன்றாதை யெந்தர மாளுமை யான்கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ண மிடித்துநாமே. (3
29

Page 18
காசணி மின்களு லக்கையெல்லாங்
காம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய வடியவர்க
னின்று நிலாவுக வென்றுவாழ்த்தித் தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்துநின்று
பாடிப்பொற் சுண்ண மிடித்துநாமே. (4
அறுகெடுப் பாரய லும்மரியு
மன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்க ணங்களெல்லா
நம்மிற்பின் பல்லதெ டுக்கவொட்டோஞ் செறிவுடை மும்மதி லெய்தவில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினிர் முக்கணப்பற்
காடப்பொற் சுண்ண மிடித்துநாமே. (5
உலக்கை பலவோச்சு வார்பெரிய
ருலகமெ லாமுரல் போதாதென்றே
கலக்க வடியவர் வந்துநின்றார்
காண வுலகங்கள் போதாதென்றே
நலக்க வடியோமை யாண்டுகொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி
மகிழ்ந்துபொற் சுண்ண மிடித்துநாமே. (6
30

சூடகந் தோள்வளை யார்ப்பவார்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்பவார்ப்ப நாடவர் நந்தம்மை யார்ப்பவார்ப்ப
நாமு மவர்தம்மை யார்ப்பவார்ப்பப் பாடக மெல்லடி யார்க்குமங்கை
பங்கின னெங்கள் பராபரனுக்காடக மாமலை யன்னகோவுக்
காடப்பொற் சுண்ண மிடித்துநாமே. (7
வாட்டடங் கண்மட மங்கைநல்லீர்
வரிவளை யார்ப்பவண் கொங்கை பொங்கத் தோட்டிரு முண்டந் துதைந்திலங்கச்
சோற்றெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி
நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை யாட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
யாடப்பொற் சுண்ண மிடித்துநாமே. (8
வையக மெல்லா முரலதாக
மாமேரு வென்னு முலக்கைநாட்டி மெய்யெணு மஞ்ச னிறையவாட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொ னுலக்கை வலக்கைபற்றி யையன னிதில்லை வாணனுக்கே
யாடப்பொற் சுண்ண மிடித்துநாமே. (9
31

Page 19
முத்தணி கொங்கைக ளாடவாட
மொய்குழல் வண்டின மாடவாடச் சித்தஞ் சிவனொடு மாடவாடச்
செங்கயற் கண்பனி யாடவாடப் பித்தெம் பிரானொடு மாடவாடப் பிறவி பிறரொடு மாடவாட வத்தன் கருணையொ டாடவாட
வாடப்பொற் சுண்ண மிடித்துநாமே. (10
மாடு நகைவா னிலாவெறிப்பப்
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமி னந்தம்மை யாண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித தேடுமி னெம்பெரு மானைத்தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி யாடுமி னம்பலத் தாடினானுக்
காடற்பொற் சுண்ண மிடித்துநாமே. (11
மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை
யையனை யையர்பிரானை நம்மை
யகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்
போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோட்
பையர வல்குன் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ண மிடித்துநாமே (12
32

மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீ ரென்னுடை யாரமு தெங்களப்ப
னெம்பெரு மானிம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்றகப்பன்
றமைய னெம்மையன் றாள்கள்பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொற்றிருச் சுண்ண மிடித்துநாமே. (13
சங்க மரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாயித ழுந்துடிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம்பாடிக் கங்கை யிரைப்ப வராவிரைக்குங்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப்
பொற்றிருச் சுண்ண மிடித்துநாமே. (14
ஞானக் கரும்பின் றெளிவைப்பாகை நாடற் கரிய நலத்தைநந்தாத்
தேனைப் பழச்சுவை யாயினானைச்
சித்தம் புகுந்து தித்திக்கவல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்
பானற் றடங்கண் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ண மிடித்துநாமே. (15
33

Page 20
ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோ
டாட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேற் றேவர்க னாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச் சேவக மேந்திய வெல்கொடியான்
சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச் சேவக னாமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய் சுண்ண மிடித்துநாமே. (16
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளைபாடி
மால்விடை பாடி வலக்கையேந்து மூனக மாமழுச் சூலம்பாடி
யும்பரு மிம்பரு முய்யவன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச் சுண்ண மிடித்துநாமே. (17
அயன்றலை கொண்டு செண்டாடல்பாடி
யருக்க னெயிறு பறித்தல்பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடிக் காலனைக் காலா லுதைத்தல்பாடி யியைந்தன முப்புர மெய்தல்பாடி
யேழை யடியோமை யாண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி
நாதற்குச் சுண்ண மிடித்துநாமே. (18
34

வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி
மத்தமும் பாடி மதியும்பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் றில்லைபாடிச்
சிற்றம்ப லத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக்
கங்கணம் பாடிக் கவித்தகைம்மே லிட்டுநின் றாடு மரவம்பாடி
யீசற்குச் சுண்ண மிடித்துநாமே. (19
வேதமும் வேள்வியு மாயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினார்க்குச் சோதியு மாயிரு ளாயினார்க்குத்
துன்பமு மாயின்பமு மாயினார்க்குப் பாதியு மாய்முற்று மாயினார்க்குப்
பந்தமு மாய் வீடு மாயினாருக் காதியு மந்தமு மாயினாருக்
காடப்பொற் சுண்ண மிடித்துநாமே. (20
திருச்சிற்றம்பலம்.
செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா இருசொல் லறவென் றலுமே அம்மா பொருளொன் றுமறிந் திலனே
கந்தரநுபூதி
35

Page 21
சிவமயம்
வயிரவர் துதிப் பாடல்கள் திருச்சிற்றம்பலம் தேவாரம்
முதலாந்திருமுறையிலிருந்து :
அறங்கிளரும் நால்வேத மாலின்
கீழிருந்தருளியமரர் வேண்ட நிறங்கிளர் செந்தாமரை யோன்
சிரமைந்தினொன் றறுத்த நிமலர் கோயில் திறங்கொள் மணித் தரளங்கள்
வரத்திரண்டங் கெழிற் குறவர் சிறுமிமார்கள் முறங்களிற் கொழித்து மணிசெல
விலக்கி முத்துலைப் பெய்முது குன்றமே.
நான்காந்திருமுறையிலிருந்து :
விரித்தபல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகங்கை தரித்ததோர் கோல கால பைரவனாகி வேழம் உரித்துமை அஞ்சக் கண்டு
ஒண்திரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே,
36

ஏழாந் திருமுறையிலிருந்து :
ஏற்ற அந்தணர் தலையினை அறுத்து
நிறைக்க மாலுதிரத்தினை யேற்றுத் தோன்று தோண்மி சைக்களே பரந்தனைச் சுமந்த மாவிரதத்த கங்காளன் சான்று காட்டுதற் கரியவன் எளியன்
தன்னைத் தன்னிலா மனத்தார்க்கு மான்று சென்றனை யாதவன் தன்னை
வலிவலந்தன்னில் வந்து கண்டேனே.
எட்டாந் திருமுறையிலிருந்து :
நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை ஒல்லை யரிந்த தென் றுந்தீபற உகிரா லரிந்த தென் றுந்தீபற.
பன்னிரண்டாந் திருமுறையிலிருந்து :
இத்தன்மை நிகழு நாள் இவர் தொண்டிருங் கயிலை அத்தர் திருவடியிணைக்கீழ்ச் சென்றணைய அவருடைய மெய்த்தன்மை அன்புநுகர்ந்தருளுவதற்கு விடையவர் தாம் சித்தமகிழ் வயிரவராய்த்திருமலை நின்றணைகின்றார்.
திருச்சிற்றம்பலம்
37

Page 22
கந்தபுராணத்திலிருந்து :
பரமனை மதித்திடாப் பங்க யாசனன் ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்.
வெஞ்சினப் பரியழன் மீது போர்த்திடும் அஞ்சனப் புகையென ஆல மாமெனச் செஞ்சுடர்ப் படிவமேற் செறித்த மாமணிக் கஞ்சுகக் கடவுள் பொற்கழல்கள் ஏத்துவாம்.
காஞ்சிப்புராணத்திலிருந்து :
காசி
எளியாரை வலியர் வாட்டின்
வலியரை யிரு நீர்வைப்பி னளியறத் தெய்வம் வாட்டும்
எனுமுரைக் கமையவன்றே தெளியுமா வலியைச் சென்றோற்
செகுத் துரிக் கவயம் போர்த்த வளியுளர் கச்சி காவல்
வயிரவர்க் கன்பு செய்வாம்.
காண்டத்திலிருந்து :
பாதகஞ் செய்தோர்க் கெல்லாம் பரிவினாற் றண்ட மாற்றித் தோதக பாவ நீக்கித்
துகளறும் புனிதராக்கி மேதகு முத்தி சேர்க்கு
மெய்யன் முத்தலைச் சூற்கையன் போதக முடைய கால
வயிரவன் பொற்றாள் போற்றி.
38

விநாயகர் அகவல்
ஒளவையார் அருளியது
சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசைபாடப் பொன்அரை ஞானும் பூந்துகில் ஆடையும் வண்ண மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்கு சிந்துாரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந்தருளி மாயப்பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதல்ஐந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
39

Page 23
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிகள் ஒடுங்கும் கருத்தறி வித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறா தாரத்து அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழிமுனைக் கபாலமுங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய துணின் நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி சண்முக தூலமும் சதுர்முகச் சூகஷமும்
40

எண்முக மாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை அறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டிற் கொன்றிடமென்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் எல்லை யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்து அருள்வழிகாட்டிச் சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச் சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே!
விநாயகர் அகவல் முற்றிற்று
41

Page 24
சகலகலாவல்லி மாலை
குமரகுருபரர் அருளியது
வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்கவென் - வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாது கொலோசக மேழுமளித் துண்டான் உறங்க ஒழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமுதுதார்ந்துன் அருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொடி லோவுளம் கொண்டு - தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3
துக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்து
அஞ்சத் துவச முயர்ந்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5
42

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தல்நல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பாலமுதந் தெளிக்கும் வண்ணம் காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7
சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதையாமை நல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8
சொற்கும் பொருட்கு முயிரா மெய்ஞ்ஞானத்தின் - தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாளே சகல கலாவல்லியே. 9
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் - விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வமுளதோ சகல கலாவல்லியே. O
43

Page 25
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்
கந்துந் தரங்கம் எடுத்து எறியக்
கடுஞ்சூ லுளைந்து வலம் புரிகள் கரையிற் தவழ்ந்து வாலு கத்திற்
கான்ற மணிக்கு விலை யுண்டு தத்துங் கரட விகட தடத்
தந்திப் பிளைக்கூன் மருப்பில் விளை தரளந் தனக்கு விலையுண்டு
தழைத்துக் கழுத்து வளைந்த மணிக் கொத்துஞ் சுமந்த பசுஞ் சாலிக்
குளிர்முத் தினுக்கு விலை யுண்டு கொண்டல் தருநித் திலந் தனக்குக்
கூறுந் தரமுண் டுன்கணி வாய் முத்தம் தனக்கு விலை யில்லை
முருகா முத்தந் தருகவே முத்தஞ் சொரியும் கடல் அலைவாய்
முதல்வா முத்தம் தருகவே.
பேரா தரிக்கு மடியவர் தம்
பிறப்பை யொழித்துப் பெருவாழ்வும் பேறுங் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமா னென்னும் பேராளா சேரா நிருதர் குல கலகா!
சேவற் கொடுயாய் திருச் செந்தூர்த் தேவா! தேவர் நிறை மீட்ட
செல்வா! என்றுன் றிருமுகத்தைப் பாரா மகிழ்ந்து முலைத் தாயர்
பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பாவா! வாவென்று உனைப் போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால் வாரா திருக்க வழக்கு உண்டோ
வடிவேல் முருகா! வருகவே வளருங் களபக் குரும்பை முலை வள்ளி கணவா! வருகவே.
44

வைரவர் வழிபாரு
வித்யா கலாபமணி, சைவப்புலவர், எஸ். தில்லைநாதன் பிரதேச பிரதிக்கல்விப் பணிப்பாளர், பட்டிப்பளை.
‘பரமனை மதித்திடாப் பங்கையாசனன் ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமும் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவோம். கிராமியத் தெய்வங்களின் வழிபாடுகளில் ஒன்றாகக் காணப்படும் வைரவக் கடவுள் வழிபாடானது சிவ வழிபாட்டின் முக்கிய இடத்தை வகிக்கின்றது. வைரவருக்கு வடுகன், சரபதுதன், சட்டைநாதர், கஞ்சுகன், காரி, சேத்திர பாலர் எனப்பல திருநாமங்கள் உள்ளன.
வைரவக் கடவுளைப் பற்றி இருக்கு வேதம், அதர்வ வேதம், புராண இதிகாசங்கள் பன்னிரு திருமுறைகள் முதலியவற்றில் கூறப்பட்டுள்ளன.
பன்னிரு திருமுறைகளில் ஒன்றாகிய திருமந்திரத்தின் நான்காம் தந்திரத்தில் பதின்மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் ஒரு பகுதியாக வைரவ சக்கரம் காணப் படுகிறது. இதில் சக்கரத்தை அமைக்க வேண்டிய குறிப்பு, உருவ வழிபாடு, வழிபாட்டில் பெறப்படும் பயன் முதலியன கூறப்பட்டுள்ளன. வைரவக் கடவுளுடைய திருமேனியைக் கூறப்போந்த திருமந்திர நூலாசிரியர்:
‘மெய்யது செம்மை விளங்கு வைரவன்' எனக் கூறியுள்ளார். திருநாவுக்கரசு சுவாமிகள்,
‘சிவனெனும் நாமம் தனக்கே உரிய செம் மேனி அம்மான்
45

Page 26
எனப் பகர்ந்துள்ளார். இதனால் சிவபெருமானும் வைரவரும் ஒருவரே எனத் தெளிவாகத் தெரிய வருகிறது. சிவபெருமானின் அறுபத்து நான்கு மூர்த்தங்களில் முப்பத் தெட்டாவது மூர்த்தமாக வைரவர் மூர்த்தம் கொள்ளப்படு கிறது.
சிவன் அம்மையாருடன் கூடிய இன்ப நிலையிலும், சிவன் அம்மையாரின்றி வீர நிலையிலும், யோக நிலை யிலும், ஆன்மாக்களுக்கு அருள் புரிகின்றார். இவற்றை முறையே போக, கோர, யோக மூர்த்தங்களாக நூல்கள் கூறுகின்றன. இம்மை, மறுமை இன்பங்களை அனுபவிக்க விரும்புகின்றவர்களும் உலகத்தில் புகழ்ச்சியைப் பெற விரும்புகின்றவர்களும் போக மூர்த்தியையும், உலகில் பகையை வெல்ல விரும்புகின்றவர்களும், கர்ம வினையை ஒழிக்க முயல்பவர்களும் கோர மூர்த்தியையும், பேரின்ப மாகிய வீடுபேற்றை அடைய விரும்புபவர்கள் யோக மூர்த்தியையும் வழிபடுதல் வேண்டும் என்பது ஆப்த வாக்கியம். கோர மூர்த்தியாக வைரவர் மூர்த்தம் கொள்ளப் படுகின்றது. வைரவ மூர்த்தியை வழிபடுவதால் தீராத நோய்கள், தோஷங்கள், சாபங்கள், கன்ம வினைகள் முதலியன நீங்குவதாக நூல்கள் கூறுகின்றன.
பெருந்தொந்தியும், கபால மாலையும், பயங்கரப் பற்களும், செஞ்சடையும், முக்கண்ணும், நீலத்திரு மேனியும், சூலம், மண்டையோடு, பாசம் ஆகியவைகளைக் கொண்ட திருக்கரங்களும் கோபச்சிரிப்பும் கொண்ட கோர வடிவமாக வைரவக் கடவுள் சித்தரிக்கப்படுகின்றார்.
வைரவக் கடவுள் காவற் தெய்வமாகவும் விளங்கு கின்றார். கிராம சாந்தியின் போது அட்டதிக்குப் பாலக ருடன் வைரவருக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இது
46

மட்டுமன்றி வாஸ்து சாந்தியின் போதும், கோயில் வீடு இவைகளுக்கு அத்திவாரம் இடப்படும் போதும், குடிபுகும் போதும், கோயில் பூசைகளின் போதும், காவற் தெய்வமாக வைரவக் கடவுள் வழிபடப்படுகின்றார்.
வைரவர் வழிபாடு ஆகம நெறி சார்ந்தும் ஆக நெறி சாராதும் நடைபெறுகின்றது. இலங்கையில் போர்த் துக்கீசரின் ஆட்சிக் காலத்தில் சைவக் கோயில்களும், வழிபாடுகளும் அழித்தொழிக்கப்பட்ட காலகட்டத்தில் இந்து சமய மக்களால் விநாயகரையும் வைரவரையும் வீடுகள் தோறும் இரகசியமாக வழிபாடு செய்யப் பெற்றதாக வரலாறுகள் சான்று கூறுகின்றன.
வைரவக் கோட்பாடானது கி.பி. 6ஆம் நூற்றாண்டு களில் காணப்பட்ட ‘காபாலிக பிரிவுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு உடையதாக காணப்படுகிறது. தாந்திர மதத் திலும் இது முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. சைவ சமயப் பிரிவுகளான “கபாலிகம்’, ‘பைரவம்’ என்பன வைரவக் கடவுளை முக்கியத்துவப்படுத்துகின்றன.
முன்னொரு யுகத்திலே, பிரமனுக்கு ஐந்து தலைகள் இருந்த காரணத்தினால் அனைத்துக்கும் முதற்பொருள் தானே என பிரமன் அகந்தையுற்று முழுமுதற் பெருமானா கிய சிவபெருமானையும் தன்கீழ்ப்பட்டவனாகக் கருதிய வேளையில் அவனது அகந்தையை நீக்குமுகமாக சிவ பெருமானிடம் இருந்து அகோர சக்தியொன்று தோன்றி, பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைத் தனது இடக்கை யினால் கிள்ளி எறிந்து அவனது அகந்தையை அழித்தது என்றும் அந்த அகோர சக்தியே வைரவக் கடவுள் எனவும் நூல்கள் தெரிவிக்கின்றன.
47

Page 27
திருமந்திரத்தின் இரண்டாம் தந்திரத்தில் பதிவலியில் அட்டவீரட்டத்தைப் பற்றிச் சொல்லும் போது பின்வரும் வரலாறு சொல்லப்படுகிறது. ‘இரணியாட்சன் என்பவனுக்கு ‘அந்தகாசூரன்’ எனப் பெயர் கொண்ட மகன் இருந்தான். இறைவனிடம் பெற்ற வரங்களின் தன்மையினாலே தேவர்க ளுக்குத் துன்பம் பல செய்தான். இவனது தீமையினால் வருந்திய தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறை யிட்டனர். இதன் காரணமாக சிவன் வைரவனாகத் தோன்றி சூலம் கைக்கொண்டு அவனைக் கொன்றார் எனக் கூறப் பட்டுள்ளது.
வைரவக் கடவுளின் மூர்த்தங்கள் எட்டாகக் கூறப் படுகின்றன. இதனை 'பராக்கியம்' என்னும் நூல் கால வைரவர், கபால வைரவர், கல்பாந்த வைரவர், சங்கார வைரவர், சண்ட வைரவர், உக்கிர வைரவர், உன்மத்த வைரவர், உக்குரோத வைரவர் எனக் கூறுகிறது. சிவ மூர்த்தம் என்னும் நூல் ஆதிவைரவர்(மகா வைரவர்) விறுவைரவர், நிர்மாண வைரவர், பாதாள வைரவர், சுடலை வைரவர், கல்யாண வைரவர், கங்காள வைரவர் எனக் கூறுகிறது.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் வீடுகள் தோறும் ஆதி வைரவர் வழிபாடு பெரும்பான்மையாகவும், கல்யாண வைரவர் வழிபாடு சிறுபான்மையாகவும் கைக்கொள்ளப் பட்டு வருகின்றன. வீட்டு முற்றத்தில் பந்தலிட்டோ, மேடை அமைத்தோ, வழிபாடு செய்யும் வழக்கு, ஆதிவைர வருக்கும், வீட்டு அறை ஒன்றினுள் வழிபாடு செய்யும் வழக்கு கல்யாண வைரவருக்கும் வழக்கமாக இருந்து வருகிறது.
48

வைரவக் கடவுளே எஞ்சிய யுகங்கள் தோறும் எஞ்சி நிற்பவராகப் புகழப்படுகின்றார். ஊழிக்காலத்தில் சங்காரத் தொழிலைச் செய்பவரும் இவரே என வருணிக்கப்படுகின் றார். இவரது வாகனமாக ‘நாய் கருதப்படுகிறது. நான்கு வேதங்களும் நாய் வடிவில் அமைந்து இம்மூர்த்த மாகிய வைரவரைத் தாங்குவதாகக் கொள்ளப்படுகிறது.
வைரவக் கடவுளுக்கு, இளநீர், கரும்பு, ரொட்டி, வடை, பொங்கல் படையல், முறுக்கு, அப்பம், வாழைப் பழம் (விஷேசமாக மொந்தன் பழம்), எலுமிச்சம்பழம், சாம்பிராணித் தூபம் முதலியவற்றால் வழிபாடு செய்யப் பெறுகின்றது.
சிவமூர்த்தமாகிய வைரவக் கடவுள் மட்டக்களப்பு தமிழகத்தில் குலதெய்வமாக, பரிவாரத் தெய்வமாக, பெருந் தெய்வமாக வைத்து வழிபடப்படுகின்றார்.
வேண்டுவோருக்கு வேண்டுவன ஈயும் கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் பெருமானின் கும்பாபிஷேகம் நடைபெறும். இப்புனித நாட்களில் அவரின் மூர்த்தமாகிய வைரவப் பெருமானை நினைந்து அவர் அடி வணங்கு வோமாக.
* கிஞ்சுகந்தரு வாய்க் கலக்கின்ராயான் அஞ்சுகம்மி லொன்றற்றிடக் கிள்ளியே மிஞ்சுகத் தொறும் மிக்க றுங்கார் நிறக் கஞ்சுகன் பொற்கழலடி போற்றுவோம்.
நன்றி : ‘தேரோட்டம்' கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றி ஈஸ்வரர் கும்பாபிஷேக மலர் 1998
49

Page 28
வைரவ மூர்த்தமும் வழிபாடும்
செல்வி பத்மாஜனி கனகசூரியம் (B.A.Dip.in.Ed.)
வைரவர் என்பது வட மொழியில் பைரவர் என்று உச்சரிக்கப்படுகிறது. சிவபெருமானின் மூர்த்தி பேதங்கள் அறுபத்தினான்கு. இவை தனித்தனியே இறைவன் நிகழ்த்திய பெருஞ் செயல்களைக் குறிக்கின்றன. உருவமற்ற பரமன் கொண்ட இக்கோலங்களை எல்லாம் விக்கிரக வடிவங் கொடுத்து கோவில்களில் நிறுவி வழிபடும் வழக்கம் எம்மவரிடையே காணப்படுகின்றது. இவ்வுருவங்களை வழிபடுந்தோறும் இவற்றுடன் தொடர்பு பூண்ட நிகழ்ச்சி களை நினைவு கூருகின்றோம். ஆன்மாக்கள் ஈடேறவேண்டி அவன் திருவிளையாட்டாக நிகழ்த்திய இச்சம்பவங்கள் இறைவன் பெருமையினை நினைவுறுத்துகின்றன. இவை இறைவன் பெருமையினையும், எங்கள் சிறுமையினையும்
ஒருங்கே ஒரு பொழுதில் உணர வைக்கின்றன.
இந்த வகையில் வைரவ மூர்த்தத்தை நோக்கினால் பெரும் பயங்கரமான தோற்றம் வாய்ந்த உருவம் இது என்பதைப் பெயரே குறிக்கின்றது. பிரமனை ஒறுக்கும் வேளை தோற்றிய தோற்றமே இது. பிரமன் ஐந்து முகங்களுடன் விளங்கிய காலத்தில் பரமன் போன்று நானும் ஒரே தோற்றத்தினன் எனத் தன்னை அவனுடன் சம நிலையில் வைத்து இறுமாந்தனன். இவனது இறு
50

மாப்பை அடக்க சிவன் உக்கிரத்தோற்றம் கொண்டு தன் நகத்தினால் உச்சியில் உள்ள தலையினைக் கொய்த பொழுது பிரமன் நான்முகனாயினான். பிரமனின் மண்டை யோட்டை ஏந்தி நிற்கும் இவனுக்கு இதனால் கபாலி என்னுஞ் சிறப்புப் பெயர் உண்டாயிற்று.
இறைவன் பிரமணிடம் கோபம் கொண்ட பொழுது அவன் தலையினைக் கொய்யும் வண்ணம் பைரவரைப்
பணித்ததான வரலாறும் உண்டு.
பைரவரையும், வீரபத்திரரையும் சிவனின் மூர்த்தி பேதங்களாக நூல்கள் கூறுவன. எனினும் இவ்விருவரையும் இறைவனது மைந்தர்களாகக் கொள்ளும் மரபும் நிலவு கின்றது.
பெருந்தொந்தி, உருண்ட கண்கள், இரு கடைவாய்க ளிலும் கோரப்பற்கள், அகன்ற மூக்குத் துவாரங்கள், கபாலமாலை, பாம்பினாலான அணிகலன்கள், யானைத் தோலாடை ஆகியன பைரவ மூர்த்தியில் நாம் காணும் சிறந்த அம்சங்கள். ஆடை எதுவுமற்ற நிலையிலேயே இவர் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவர்.
அறுபத்துநான்கு வேறுபட்ட நிலைகளில் பைரவரை உருவாக்குவார்கள். இவ்வறுபத்து நான்கு வேறுபாடுகளும் பைரவரின் எட்டு அடிப்படையான தோற்றங்களின் விரிவு.
இவ்வெட்டு வகை மூல பைரவர்கள் அசிதாங்கபைரவர்,
51

Page 29
குரு பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் என்பவர்களாம்.
இவரது தோற்றத்தில் வடுகபைரவர், ஸ்வர்ணாகர் ஷண பைரவர் என இரு நிலைகள் உண்டு. வடுக பைர வர் எட்டுக் கையினர் மாம்சம், அபயம், கட்வாங்கம், பாசம், சூலம், டமரு, கபாலம், பாம்பு ஆகியவற்றை இவரது எட்டுக்கரங்களிலும் காணலாம். இவரின் பக்கத்தில் நாய் இடம்பெறும். ஸ்வர்ணாகர்ஷண பைரவர், மஞ்சள் உடலினராயும், முக்கண்ணினராயும் நான்கு கரங்களுட னும் நிறுவி வழிபடுவர்.
‘ எளியரை வலியர் வாட்டின்
வலிய ரையிருநீர் வைப்பி னளியறத் தெய்வம் வாட்டு
மெனுமுரைக் கமைய வன்றே தெளியுமா வலியைச் சொற்றோற்
செகுத்துரிக் கவயம் வளியுளர் கச்சி காவல்
வயிரவர்க் கன்பு செய்வாம்’
என்று போற்றுகின்றது?
போர்த்துக்கேயர் ஆண்ட காலப்பகுதியில் வழி பாட்டுச் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்ட வேளையில் வைரவ சூலத்தை வைத்து இல்லங்கள் தோறும் இரக சியமாக வழிபாடு நடைபெற்றது. அன்று எங்கள் தெய்வ உணர்வினைக் காத்து நின்ற இவ்வழிபாடு இன்று பண்
52

பாட்டின் நிலைகளனாய் எங்கள் வாழ்வுக்கு உறுதுணை யாகின்றது. சைவ ஆலயங்கள் தோறும் பரிவார மூர்த்தி களுள் ஒருவராக வைரவர் காட்சி தருகின்றார்.
செளந்தர்ய லஹரியில் 41வது சுலோகத்தில் உலகத் தோற்றத்திற்காக அம்பிகை ஆனந்த பைரவியாகவும் பரமசிவன் ஆனந்த பைரவராகவும் தாண்டவமாடுவதாகக் கூறப்படுகிறது. லலிதா ஸஹஸ்ரநாமம் ‘பைரவி' என்று அம்பாளை அழைக்கின்றது. துக்கத்தை அல்லது துக்கத் திற்குக் காரணமான பாவத்தைப் போக்குவதால் ருத்ரன் என்றும் பைரவர் என்றும் சிவன் அழைக்கப்படுகின்றார்.
புராணங்களில் மஹா வயிரவர், காலவயிரவர், உக்கிர வயிரவர், வடுகநாதர், சட்டை நாதர் என குறிப் பிடப்படுகின்றது.
வைரவ வழிபாடு ஆலயங்களில் விசேட கிரியைகள் ஆரம்பமாகும் போது சிறப்பாகச் செய்யப்படுகின்றது. கிராம சாந்தியின் போது அட்ட திக்குப் பாலகர்களையும், வைரவரையும் சாந்திப்படுத்த மந்திர பூர்வமாக பூசை களுடன் நீற்றுப் பூசணி வெட்டுதல், வடை மாலை சாத்து தல், சாதம், வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம் பழம் போன்றவை படைத்து வழிபாடு செய்யப்படுகின்றது. இதே போன்று கோவிற் கட்டட அத்திவாரம் உற்சவ முடிவு, புதிய வீடு கட்ட அத்திவாரம் போடுதல், வீடு கட்டுதல் போன்ற பல்வேறு காலங்களிலும் வைரவரைப் பூசிக்கின் றோம்.
53

Page 30
வைரவக் கடவுளுக்கு காலை, மாலை, அர்த்த ஜாமம், அதிகாலை ஆகிய காலங்களில் பூசைகள் நிகழ் கின்றன. இவ்வாறே ஆலயங்கள் பூட்டப்படும் போதும்
திறக்கப்படும் போதும் நைவேத்யம் செய்யப்படுகின்றது.
வைரவருக்குரிய விரத நாட்கள் சித்திரைப் பரணி, ஐப்பசிப் பரணி, தை முதல் செவ்வாய் ஒவ்வொரு செவ்வாயும் வைரவ சுவாமிக்கான விரத நாட்களாகும். இக்காலங்களில் முறைப்படி விரதமிருந்து சிவப்புப்பட்டு, சிவப்புமாலை, வடைமாலை என்பவற்றைச் சாத்தி வழிபாடு செய்வர் என்றும் எல்லோருக்கும் காவல் செய்து அருள் பாலிக்கும். வைரவ சுவாமியை நாம் விரத அனுட்டானங் களுடன் வழிபட்டு இஷட சித்திகளைப் பெறுவோமாக.
தளம் பொரிமலரோனாதி வானவர்
தாழ்ந்து போற்ற உளம் பொலிகாசி மேவுமுயிர்கள்
செய்பாவமெல்லாம்
களம் பொலியாது தண்டங்கண்டற
-லொழிந்து முத்தி வளம் பொரிவகை செய்கால
வயிரவற்கன்பு செய்வோம்.
நன்றி ‘தேரோட்டம்" கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றி ஈஸ்வரர் கும்பாபிஷேக மலர் 1998
54

இறை வழிபாடு திருமதி றொ. பத்மாவதி B.A.
இவ்வுலகில் எண்ணில்லாத உயிரினங்கள் வாழ் கின்றன. அவை ஓர் அறிவுடைய புல் பூண்டு முதல் ஆறு அறிவுடைய மனிதன் ஈறாகவுள்ளன. விலங்குகள் ஐந்து அறிவுடையவை. ஆறாவது அறிவாய பகுத்தறிவு உடையவன் மனிதன் மட்டுமே. எதையும் ஆராய்ந்து, நல்லது கெட்டது தெரிந்து நல்லதைச் செய்து வாழ்தலே மனித வாழ்வாகும்.
பகுத்தறிவைப் பயன்படுத்தித் தனக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ வேண்டிய மனிதன் பசித்த போது உணவு தேடி உண்டு நித்திரை வந்த போது படுத்துறங்கி, இனப் பெருக்கம் செய்து இறத்தல் அளவில் தன் வாழ்வை வைத்துக் கொள்வானாயின் அவனுக்கும் விலங்கிற்கும் வேறுபாடில்லை. அவன் வாழ்வு விலங்கு வாழ்வாகிவிடும். நாம் ஏன் பிறந்தோம் ஏன் வாழ்கின்றோம், இந்த வாழ்வின் பயன் என்ன? ஏன் இறக்கிறோம், இறந்தபின் உயிர் எங்கு செல்கிறது. பின் எப்படிப் பிறக்கின்றோம் என்பதையெல்லாம் பகுத்தறிவினால் ஆராய்ந்து ‘இந்தச் சரீரம் எமக்குக் கிடைத்தது. நாம் இறைவனை வணங்கி முத்தியின்பம் பெறும்பொருட்டே' எனும் உண்மையை அறிந்துணர வேண்டும்.
உயிரின் இலட்சியம் வீடு பேறடைதல். அதற்கு எம்மை வழிப்படுத்துவதே வழிபாடு. வழிபாட்டுக்கு உபகார மாகக் கிடைத்தது இந்த உடம்பு. எங்கும் நிறைந்து எல்லாமாய் இருக்கும் பரிபூரணப் பொருளாய இறைவனை நாம் இடையறாது தூயமனதுடன் வழிபடுவோமானால்
55

Page 31
அவர் நல்வாழ்வுக்கு நம்மைவழிப்படுத்துவார். வாழ்வின் பயனாய பேரின்பப்பேற்றை அடைய முடியும்.
இறைவனுக்கு ஊரில்லை, பேரில்லை, உருவமும் இல்லை. அவன் குணங்குறிகளைக் கடந்து நிற்பவன். எங்கள் அறிவுக்கு எட்டாதவனாய் இருப்பதால் (கட+உள்) கடவுள் என்கிறோம்.
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே என்பர் அப்பர் பெருமான்.
உருவம் இல்லாப் பொருளெதையும் நினைக்கும் ஆற்றல் எமக்கில்லை. அதனால் உருவமில்லாத இறை வனை நினைந்து வணங்குவதற்கு வாய்ப்பாக நம் முன்னோர்கள் இறைவனுக்குக் குறியீட்டாகச் சில உருவங் களைப் படைத்துத் தந்தனர். மக்கள் தத்தம் அறிவு நிலைக்கேற்ற வண்ணம் தம், அனுபவ நிலையில் வைத்து இறைவனை வழிபடுவர்.
வழிபாட்டில் மனத்துாய்மை மிக இன்றியமையாதது. பிற உயிர்களுக்கு இம்மியளவும் இடர் ஏற்படா வண்ணம் பிற உயிர்களுக்கு உபகாரமாக வாழ்வதே மனித வாழ்வு. இதன் உண்மை என்னவெனில் ‘எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் எல்லா உயிர்களிடத்தும் இருக்கின்றான். ஆதலால் பிற உயிர்களுக்குச் செய்யும் இடர்கள் இறை வனுக்குச் செய்யும் அபகாரமாகவும், பிற உயிர்களுக்குச் செய்யும் நன்மைகள் இறைவனுக்குச் செய்யும் உபகார மாகவும் அமையும்.
ஆதலால் துாயப் மையான மனமும், உடலும் வழிபாட்டுக்கு இன்றியமையாதனவாகும். அவ்வித தூய வழிபாடு எம்மை உயர்ந்த நல்வாழ்வுக்கு இட்டு செல்லும்,
56

உலகில் எண்ணில்லாத சமயங்கள் இருக்கின்றன. மக்கள் தாம் தாம் வாழுகின்ற நாடுகளின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற பண்பாடுகளையும் சமயங்களையும் வழி பாட்டு முறைகளையும் உருவாக்கினர். காலத்துக்குக் காலம் ஆங்காங்கு தோன்றிய ஞானிகள், அருளாளர்கள் அவ்வப்பொழுது பலசமயக் கொள்கைகளைப் பரப்பினர். அவர்கள் பெயர்களாலும் சமயங்கள், கொள்கைகள் பரவின. அவர்களின் பெயராலும் சமயங்கள், வழிபாட்டு முறைகள் உருவாகின. உதாரணமாக புத்தர் பெருமானால் புத்த சமயமும், யேசுநாதரால் கிறீஸ்தவ சமயமும், முகம் மது நபிகளால் இஸ்லாம் சமயமும் குறிப்பிட்ட காலங்களில் உருவாகின.
தமிழ் மக்களின் சமயமாகிய சைவ சமயம் குறிப் பிட்ட ஒருவரால் உருவாக்கப்பட்டதல்ல. அது அநாதியா னது. பரம்பொருளாகிய சிவபெருமானின் பெயராலே சைவசமயம் எனும் பெயர் பெற்றது. சிவ சம்பந்தமுடையது சைவம்.
சிவமாகிய பரம்பொருள் ஆன்மாக்கள் தன்னை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டுச் சிவாலயங்களின் இடத்திலும், சிவலிங்கம் முதலான திருமேனிகளிடத்திலும், சிவனடியாரிடத்திலும் இருந்து அருள் புரிவார். இந்த உண்மையைச் சைவசித்தாந்த சாஸ்திரம்
‘மாலறநேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரனெனத் தொழுமே என்று குறிப்பிடுகின்றது.
ஆதலால் சைவசமய வழிபாட்டு முறையில் குரு, லிங்க, சங்கம வழிபாடுகள் பேணப்படுகின்றன. திருவருள் வடிவான ஞானகுருவை வணங்குதல் குருவழிபாடு என்றும்,
57

Page 32
சிவலிங்கம் முதலான சிவவடிவங்களை வணங்குதல் லிங்க வழிபாடு என்றும், சிவனையே நினைந்து சிவப்பணி செய்து சிவனுடன் சங்கமமாகி இருக்கும் சிவனடியார்களை வணங்குதல் சங்கம வழிபாடு என்றும் கொள்ளப்படும்.
பல்வேறு வடிவங்களில், பல கடவுளர்களைப் பலபல பெயர் கொண்டு பல வழிகளில் வழிபட்டாலும் அவ் வழிபாடுகள் அனைத்தும் ஒரே ஒருபரம் பொருளான சிவனையே சென்று சேரும். இதனை
"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகியாங்கே மாதொரு பாகனார் தாம் வருவர் எனும் சிவஞானசித்தியார் பாடல் உறுதி செய்கின்றது.
ஆதலால் மக்கள் அவரவர் அறிவு, அனுபவப்படி நிலைகளுக்கேற்ற வழிபாட்டு முறைகளைக் கொண்டாலும் அந்தந்த நிலையிலிருந்து படிப்படியாக அறிவு, அனுபவ முதிர்ச்சி பெற்று உயர்நில்ை அடைய வேண்டும்.
உலகியல் இன்பங்களை மட்டும் நோக்கமாகக் கொண்ட இறைவழிபாடு உண்மைப் பயனைத் தரமாட்டாது.
உலகில் பிறர்க்கு உபகாரிகளாக வாழ்ந்து, இறை வனுடைய பேரின்பத்தை அடையும் இலக்கினை நோக்கிக் குரு, லிங்க, சங்கம வழிபாடு செய்து வாழ வேண்டும். அதுவே பிறவியின் பலனாகிய முத்தியின்பத்தை அடை யும் வழியாகும்.
கும்பாபிஷேக மலர் 1999
58

சைவ வாழ்வு
கலாபூஷணம் பண்டிதர் சி. அப்புத்துரை
முன்னுரை:
சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுள் சிவன். சிவனை வழிபடுபவர்கள் சைவர்கள். விநாயகர், சுப்பிர மணியர், வயிரவர், வீரபத்திரர், உமையம்மை சிவமூர்த் தங்கள். சிவனுடனாகிய இந்த மூர்த்தங்களும் சைவ சமயத்தவர்களின் வழிபாட்டிற்குரியவையே! சிவனும் சிவமூர்த்தங்களுமே சைவர்களின் வழிபாட்டிற்குரியன வாதல் தெளிவு.
சைவனுக்கென்று தனிப்பண்பாடு உண்டு. அவர் வாழ்வியலே சைவந்தான். சைவ சமயத்தவனின் வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட எல்லாக் கருமங்களுமே சைவசமய வாழ்வுடன் தொடர்புடையவைதான். அதுவே அந்தப் பண்பாட்டு விளக்கமென்பது. காலைக்கடன்களை நிறைவாக்கல், சுகாதாரத்துடனாகிய செயல்களில் ஈடுபடல், வழிபாட்டுச் செயற்பாடுகள், உணவுப் பொருள்கள், பாகஞ் செய்தல், உண்ணல், வருவாய்க்காகிய நேரிய முயற்சி என்பவையெல்லாம் சைவசமய வாழ்வியலின் அடித் தளத்திருந்து எழுவது தெரிகிறது. இந்த வாழ்வியல் முறையைப் புரிய வைப்பதுதான் சேக்கிழார் தந்த பெரியபுராணம். பெரிய புராணத்துள்ள நாயன்மாரின் வாழ்க்கை வரலாறுகள் சைவ சமய வாழ்வுக் கோலங் களை மிகத் துல்லியமாக விளங்கவைக்கின்றன. துணியின் அழுக்கைப் போக்கும்போது போக்குபவரின் ஆன்மாவு டனாய ஆணவ அழுக்கும் கரைந்து கொண்டிருப்பதாக உணர்த்தப்படுகின்றது.
59

Page 33
சைவசமய ஆசாரம் :
சைவ ஆசாரம் என்று பேசப்படுவதை நாம் கேட்ப துண்டு. ஆசாரமென்பதென்ன? ஒழுக்கம், சுத்தம், புனிதம், தூய்மை முதலியவற்றைத் தொகுத்து நிற்பதொரு நிலைதானே அது. சைவ ஆசாரத்திற்கு எடுத்துக் காட்டாவதும் நாயன்மார்கள் வாழ்க்கை முறைமைதான். அவர்கள் வாழ்வு புனிதமானது; ஒழுங்கானது; தூய்மை யானது; சுத்தமானது; நேரியது. இவற்றைப் போற்றுவது மூலம் நாமும் ஆசாரசீலர்களாகலாம். பண்டை நாள்களில் எம்மூதாதையரும் ஆசாரசீலர்களாய்ச் சைவ நெறிக் கணின்று சைவர்களாயே வாழ்ந்தார்கள் என அறிகிறோம்.
வாழ்க்கைமுறை வேறுபாடு:
அன்றைய வாழ்வுமுறைக்கும் இன்றைய வாழ்வு முறைக்கும் இடையே பாரிய வேறுபாடு வந்துவிட்டது. அன்றைய மக்கள் சைவசமய்க் கொள்கை வழி நின்றுதான் எந்தவொரு கருமத்தையும் ஆரம்பித்துத் தொடர்ந்தனர். சாதாரணமாக ஒரு எழுத்துவேலை ஆரம்பிக்கும்போது கூடப் பிள்ளையார் சுழி சிவமயம் எழுதித்தான் தொடரு வோம். சிறப்பான முயற்சிகளுக்குக் கும்பம் வைத்துப் பிள்ளையாரை அருகே இருத்தித் தீபமேற்றி வழிபட்டு எடுத்துக்கொண்ட முயற்சி எந்தவித விக்கினமும் இன்றிச் சிறப்பாக நிறைவெய்தல் வேண்டுமென வேண்டுதல் செய்து ஆரம்பிப்போம். இது முன்னுளோர் நடைமுறை. அதாவது முயற்சிகள் ஒவ்வொன்றிலும் இறை சிந்தனை பின்னிப் பிணைந்திருந்தது. இந்த மனப்பக்குவநிலை அன்றிருந்தது போன்று இன்றில்லை. எந்த வேளையும் விபூதி அணிந்து இறைவனைத் தொழுது புறப்பட்ட காலம் மாய்ந்து மடிந்து விட்டது. (இன்றும் இல்லையென்றில்லை. விபூதியிற்
60

பொட்டிட்டு வழிபாட்டை நிறைவு செய்து போய்விடு கின்றனர்.) வலக் கையின் நடுவிரல் மூன்றினாலும் அண்ணாந்து சிவ சிவ என்று சொல்லிப் பூசிய காலம் மறைந்து கொண்டு செல்கிறது. வலக்கையின் ஒருவிரலால் பொட்டு வைப்பது போன்று நீட்டிப் பூசுவது தொடருகிறது. வழிபடுபவர் கோயிலில் வாய் புதைத்து நிற்க அர்ச்சகர் வலக்கையின் பெருவிரலாற் பொட்டு வைக்குமிடத்தில் நீள்வட்டமாகப் பூசிவிடுகின்றார். இங்கே கற்பூர தீபத்தை ஏற்றிவிட்டு அந்தோனியாருக்கு மெழுகுதிரித் தீபம் ஏற்றுவோரும் பலராகிக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தெய்வத்தின் அருள் கிடைக்காது போனாலும் அந்தத் தெய்வத்தின் மூலமாவது கிடைக்கலாம் என்ற நப்பாசை தான். பத்து ரூபாவிற்கான சீட்டுக்கள் இரண்டினைப் பெற்று அதிர்ஷ்டம் பரிசோதித்த முறை இது. எங்கள் சமய வாழ்வு எங்கே எப்படிப் போகின்றதென்று புரிந்துகொள்ளவே முடியவில்லை.
முன்னையோர் கல்வி அறிவு குறைந்தவர்கள்தான். ஆனால் இயற்கையாக அறிவு வளம் பெற்றவர்கள். தூய்மையானவர்களாக, எந்த நேரமும் விபூதி நிறைந்த நெற்றியை உடையவர்களாக, சிரிப்பது போன்ற மகிழ்ச்சி கரமான முகத்தினராக அவர்களைப்பார்க்க முடிந்தது. இன்றுள்ளவர்களைப் பார்க்கவே முடிவதில்லை. அவசர வாழ்வு முறை; பல நாட்டவர்களுட்னான தொடர்பு; அவர் கள் சூழலில் வாழவேண்டி வந்த நிலைமை; அதனாற் கலாச்சாரக் கோல மாற்றங்கள் என்றின்னோரன்ன காரணங் களால் வழிபாட்டு முறையிலும் மாற்றம் நிலவத் தொடங்கியது. முன்பு நெறி தவறும் பிள்ளைகளைத் தட்டிக்கேட்கப் பெரியவர்கள் பலர் இருந்தனர். கேட்டு நடக்கக்கூடிய பண்புள்ளவர்களாகப் பிள்ளைகளும் இருந்தனர். கல்வி 61

Page 34
வளம் அதற்கு வாய்ப்பானதாக அமைந்திருந்தது. சூழலும் ஒருவரை ஒருவர் கெளரவித்து வாழக்கூடிய பண்பமைதி கொண்டிருந்தது. இன்றைய வாழ்க்கைப் பண்பு உலகளா வியதாகிவிட்டது. பல்வேறு வகையினவான வாழ்க்கைச் சூழல் எம்மைப் பாதிப்பனவாகிவிட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகள் நான்கு நாடுகளுக்குச் சென்று மீண்டால் நான்கு வகைப் பண்பாடுகள் ஒன்றாகி ஒன்று மில்லாத ஒரு கலாசாரத் தோற்றத்துடன் பின்னவர்கள் வளர்வர். அது பிள்ளைகளின் குறைபாடு என்று சொல்ல முடியாது. பல வேறு நாடுகளின் கலாசாரப் போக்குகளை இறக்குமதி செய்யும் எமது அடிப்படை நேரிதாக இருந் திருப்பின் பிழை எதுவும் நிகழ வாய்ப்பிருக்காது. எமது ஆரம்பக் கல்வி சைவ சமய அடிப்படையுடனாகி வளர்ந் திருக்க வேண்டும்.
கல்வி முறைமாற்றம் :
பண்டை நாளைய எமது கல்வி முழுக்க முழுக்கச் சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. இன்றைய கல்வி ஆன்மிகத்தையும் உடனாக்கி வளர்வதாக இல்லை. கடவுள் நம்பிக்கையை ஊட்டுவதாக இல்லை. வருமானத்தை இலக்காகக் கொண்ட கல்வி, எனவே வர்த்தகக் கல்விதான் தொடருகிறதெனலாம். குறுக்கு வழியிற் பணம் சம்பாதிக்கக் கூடியதெனினும் பாதகமில்லை, எவ்வளவு கூடுதலாகச் சம்பாதிக்கலாம் என்பதே கேள்வி, கடவுள் வழிபாட்டைக் கூடவருமானத்திற்குச் சாதகமாக்கிக் கொள்வதெப்படி என்ற ஆய்வே தொடர்கின்றது. பணப் பெட்டியைத் திறப்புக் கொத்தை வழிபடும் நிலைக்கு யாம் இன்று வளர்ந்து நிற்கின்றோம். பொருத்தமற்ற திசையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.
62

சைவசமய வழிபாட்டுக் கோலங்கள் :
சைவ சமயத்தவர்கள் வாழ்வியற் கோலங்கள் அனைத்துமே வழிபாட்டுடனானவைதான். அவன்தன் எந்த வொரு செயற்பாட்டுக்கும் இறை சிந்தனையை முன் வைத்தான். அந்த நடைமுறையை ஒழுங்காகப் பின்பற்றி னாலே போதும். காலைக் கடன்களை நிறைவு செய்து சுற்றாடலைத் தூய்மைப்படுத்திச் சாணி நீர் மஞ்சள் நீர் தெளித்துக் குளித்துத் தோய்த்துலர்ந்த ஆடைதரித்துப் பெற்றோரை வணங்கி இயலாதவர்களுக்கு வேண்டியன செய்து அமைதிகாண முயல வேண்டும். இவற்றைத் தொடர்ந்து கடவுள் வழிபாடு அமைதியாக நடைபெறலாம். இந்த வழிபாட்டிற்கு முந்தி நடந்தவையும் வழிபாட்டு முயற்சிகள்தான் என்பது தெளிவாக வேண்டும்.
உணவு உண்ணும்போது அளவறிந்துண்ணுதல், மற்றையோரை அனுசரித்துண்ணுதல், உணவிற்குப் பொருத்தமானவற்றை உண்ணல் என்பனவெல்லாம் சைவ வாழ்வுடனானவைதான். இலைக்கறி வகையென்றும், கிழங் கினமென்றும், காய்வகையென்றும், பழவகையென்றும், பால் தயிர் நெய் என்றும் உணவினமாகி எம் உடம்புட னாகும் போது அவை சைவசமய உணர்வை ஊட்டுவன வாகவே அமைந்துவிடுகின்றன.
பாலுணவின் முக்கியத்துவம்:
எந்த ஒரு வயதினர்க்கும் பால் வேண்டப்படுவதொரு உணவு. கோமாதா என்ற பாராட்டைப் பெறும் தெய் வாம்சம் பொருந்திய பசுவின் பால் எமது உடம்பினுள்ளுஞ் சென்று தெய்வாம்ச உணர்வையே வலுவுடையதாக்கும். வெறியூட்டும் இயல்பு பாலுக்கில்லை. எனவே வேண்டாத உணர்வுகளைப் பால் தரப்போவதில்லை. தூய நல்ல
63

Page 35
உணர்வுகளுடனாவதற்குப் பாலுணவு வழிசெய்யும். பசு வின் கழிவுப் பொருள்களாய கோமயம் கோசலம் இரண் டுமே மிகப்பயன்பாடுடைய பொருள்கள்தான். மேலான பொருளாகிய விபூதியைப் பசுவின் சாணத்திலிருந்துதான் பெறுகின்றோம். கோசலம் கோமயம் (சாணம்) பால் தயிர் நெய் என்னும் ஐந்தும் பஞ்சகெளவியம் எனப்படும். இது துடக்கு நீக்கத்திற்கான ஒரு ஒளசதமாகும். கோயிற் கிரியைகளுக்கும் இது வேண்டப் படுவதொன்று.
தேவைக்கான வழிபாடு:
வாகனங்களை இயக்குபவர்கள் இறைவனை நினைத்துத் துதித்துத் தெளிவான ஒரு மனப்பதிவுடன்தான் நாளும் இயங்க வைப்பதை நாம் பார்க்கின்றோம். மோட்டார் வாகனங்களைச் செலுத்திச் செல்பவர்கள் வழி யிலே சிறப்பான வழிபாட்டுக்குரிய தலங்களைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தி இறை வேண்டுதல் செய்துதான் அப்பால் தொடருகின்றனர். இது எப்படி எம்முடனாகியது என்பது சிந்திக்கப்பட வேண்டியது. இந்த நிகழ்வுகளில் ஆபத்துக்கள் சம்பவிக்க நிறைய வாய்ப்புக்களுண்டு. துன்பங்கள் கஷடங்கள் தலைதுாக்கும் போதுதானே கடவுட்சிந்தனை எமக்கு நிறையச் சித்திக்கின்றது. எனவே சமய வழிபாடு நிறைய வேண்டுமானால் நாம் துன்பங் களை அடிக்கடி சந்திக்க வெண்டுமென்றாகிறது. ஆனால் அது பொருத்தமற்றது. தேவைக்காக வழிபடல் பண்ட மாற்று நிலைமைக்குள்ளாக்கிவிடும். ஆபத்தில் வேண்டுதல் தகாததன்று. அது வேண்டுவதுதான். அந்தவகை வழி பாடுதான் தொடரப்படக்கூடியது என்று சிந்தித்தால் அது தவறு. எல்லாமே அவன்தான் என்று பூரண சரணா கதிக்குள்ளாகி வழிபடும் முறைமை கைவரவேண்டும்.
64

நீதிநூற்செய்திகளின் தேவை :
எமது நீதி வெண்பாக்கள் நீதிநூல்கள் சொல்லுங் கருத்துக்கள் எமது சிந்தனையைத் தூய்மை செய்ய வல்லன. கொலை, களவு, பொய் பேசுதல், வியபிசாரம், இச்சித்தல், வஞ்சித்தல், மது அருந்துதல் பொறாமை கொள்ளல் முதலான குணவியல்புகளைச் சைவ்சமய வாழ்வியல் ஒதுக்குகின்றது. சைவசமய வாழ்வியலுக்குப் பாதகமானது மாமிச உணவு. மாமிசம் பிழையான உணர்வுகளைத் தூண்டவல்லது. கொலையுணர்விற்கு மூலமானது. எனவே ஒதுக்கப்பட வேண்டியது. ஒதுக்கப் பட்டேயாக வேண்டியது.
அன்புடையவராய் அறத்தைச் செய்பவராய், அரவ ணைத்து வாழ்பவராய், நீதி உடையவராய், இரக்க முடையவராய், பண்புடையவராய், ஒழுக்க முடையவராய்ச் சேவை மனவியல்புடையவராய் வாழும் ஒருவர்தான் உண்மையான சைவசமயி ஆக முடியும். கற்கும்போது கிடைக்காத நீதிநூல் அறநூற் கல்வியை நாம் இந்த வேளைதான் தேடிக்கொள்ள முடியும். இலக்கணம் தருக்கம் திருமுறைகள், சைவ சாஸ்திரங்கள் என்ப வற்றைக் குரு ஒருவர் உதவியுடன் கற்றுத் தெளிய (Մlգպմ).
சைவசமய வாழ்வு வெறுஞ் சடங்குகளுடன் நிறை வாவதில்லை. அன்பு, அறம், நீதி, ஒழுங்கு முதலாய பண்புகளுடன் கூடிய வாழ்வியலுடனாகி நிறைய வேண் டும். மேன்மைகொள் சைவநிதி இவற்றின் தொகுப்பாகி இயலும்.
65.

Page 36
மட்டுவில்பதிபிள்ளையான் சின்னத்தம்பி (சின்னையா) ஞாபகார்த்தப் புலமைப்பரிசில் நிதியம்.
16.12.2004ம் திகதியன்று அமரரான அமரர் பிள்ளையான் சின்னத்தம்பி ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் அவரை என்றென்றும் நினைவு கூரும் பொருட்டும்
மட்டுவிற்பதி பிள்ளையான் சின்னத்தம்பி
ஞாபகார்த்தப் புலமைப் பரிசில் நிதியம்’
ஒன்றை 1999ம் ஆண்டு 52ம் இலக்கப் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் இயங்கிவரும் ‘புனர்வாழ்வு - கல்வி அபிவிருத்தி நிதியத்தின் கீழ் 2005.01.11ம் திகதியன்று மட்டுவிலில் நடைபெற்ற அமரர் சின்னதம்பி அவர்களது அஞ்சலிக் கூட்டத்தில் தாபித்தமை பெருமைக்குரியது.
இவ்வாறு பல நிதிகள் பு.க.அ. நிதியத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளன. வழங்கப்படும் மூலதனம் முதலீடு ச்ெயப்படுகின்றது. கடந்த பத்து ஆண்டுகளில் முதலீட்டு வருமானத்திலிருந்து 25 இலட்சம் ரூபாவை அதரவற்ற பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்குப் பயன்படுத்தியுள் ளோம்.
ஒருபுறத்தில் வழங்கிய மூலதனம் பாதகாக்கப்படுகிறது.
மறுபுறததில் உழுைத்த வருமானம் கல்வித்தானமாகிறது.
அத்துடன் பரிசளிப்பு விழாவில் நினைவஞ்சலி உண்டு.
எம்மக்கள் மத்தியில் இத்தகைய சிறந்த கலாசாரம் தழைத்தோங்கப் பங்களித்த அமரர் சின்னத்தம்பி அவர் களின் மனைவி சின்னம்மா, பிள்ளைகளின் குடும்பத்
66

தினரான அன்புசிவம் கமலா குடும்பத்தினர், சந்திரசேகரம் வளர்மதி குடும்பத்தினர், அருட்செல்வம் லதாஜினி குடும்பத்தினர், ஆகிய அனைவருக்கும் எமது நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சிய டைகிறோம்.
அமரர் சின்னத்தம்பி ஐயா அவர்களும் அவர்தம் பிள்ளைகள் குடும்பத்தினர்கள்
அன்பு சிவம் கமலா குடும்பத்தினர் சநதிரசேகரம் வளர்மதி குடும்பத்தினர் அருட்செல்வம் லதாஜினி குடும்பத்தினர் ஆகியோரதும் சமூக, இன மொழிப்பற்றையும் எமது சமூக இயக்கத்திற்கு வழங்கிவரும் பங்களிப்பையும் இச்சந்தர்ப்பத்தில் மிக்க நன்றி உணர்வோடு நினைவு கூருகிறோம்.
அமரர் சின்னதம்பி ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
இங்ங்னம்
sis சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசமும் புனர்வாழ்வு கல்வி அபிவிருத்திநிதியமும்,
67

Page 37
Φ - சிவமயம்
நன்றியுடன் நினைக்கின்றோம்
இறுதிக்கிரியை சம்பந்தமான செயற்பாடுகளைச் சிந்தித்துச் செயற்பட்டவர்களுக்கும்,
தொலைதொடர்புச் சாதனங்கள் மூலம், அஞ்சல் மூலம், நேரில் அநுதாபந்தெரிவித்து ஆறுதலளித்த
வர்களுக்கும்,
மலர்வளையம், மலர்மாலை, மலர் என்பன கொண்டு அஞ்சலித்தவர்களுக்கும்,
அந்தியேட்டிக்கு முன்னும் பின்னுமான நிகழ்வுகளிற் பங்குகொண்டு உதவியவர்களுக்கும்,
அமரரின் ஆத்மசாந்தி நோக்குடன் நடைபெற்ற மதிய போசன விருந்திற் கலந்து சிறப்பித்தவர்களுக்கும்,
எங்கள் உளம்நிறைந்த நன்றி.
மனைவி பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
68


Page 38


Page 39
யாழ் மட்டுவிற்பதி
அமரர்
பிள்ளையான் சின்னத்த
(சின்னையா)
நினைவுக் குறிப்புக்கள்
GLILILIIi
பிறந்த திகதி பிறந்த இடம் தந்தை
தாய்
LIGJETITIGT
நிர்னோகர்
அன்பு:சிவம் வTர்தி
அருட்செல்வம்
சகோதரர் சமூகப்பணி
EFLİLİLİLEJİT
தொழிலிடம்
அமரத்துவம் திதி
இடம்
பிள்ளையான் சின்னத்
12.)."
யாழ் மட்டுவில் முருகர் பிள்ளையான் முத்தர் சின்னப்பொடி மடடுவில் மகா வித்தி மட்டுவிற்பதி நாகர் சின்
திருரத்கள் பேர
եկելIIT இT
சந்திரசேகரம் நிரே
லதாஜினி தலே
மயில்வாகனம், சின்ன மட்டுவில் நிலாவொளி
கழகக் கட்டிடம் அமை
மட்டுவில் வீரபத்திரர் :
கொழும்பு
고I-4.12,|
மார்கழிப் பூர்வபக்கப் LCLGalai.

தம்பி (சின்னையா)
பாலயத்தில் தொடர்ந்தது
TLF: TGDITTGEGift
பிதா, நிருST
ாஜன், நிருபT
ஆTஅப்சET
ந்துரை தங்கம்மா கழக வளர்ச்சிக்கு உதவியது.
ப்பதற்குக் காணி கொடுத்து உதவியது.
ஆலய வளர்ச்சிக்கு உதவியமை
பஞ்சமி