கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கருணாலய பாண்டியனார் வாழ்வும் பணிகளும்

Page 1
O நினைவுப் பே
புலவர் சிவங்.
கருணுலய பான வாழ்வும் பணி
பேராசிரியர் கலாநிதி
Jr. வித்தியான
யாழ். பல்கலேக்கழகம், முன்னுள் து
கொழும்புத் தமிழ்ச் சங்க ெ
 
 

ருரை 9
ண்டியனுர்
களும்
ந்தன் அவர்கள்
ணேவேந்தர்.
வளியீடு

Page 2

O நினைவுப் பேருரை 9
புலவர் சிவங். கருணுலய பாண்டியஞர் வாழ்வும் பணிகளும்
பேராசிரியர் கலாநிதி
சு. வித்தியானந்தன் அவர்கள் urp. பல்கலைக்கழகம், முன்னுள் துணைவேந்தர்.
கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடு

Page 3
கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடு - 13 பதிப்புரிமை பெற்றது. குமரன் அச்சகம், கொழும்பு 12. திசெம்பர் 1989
Memorial Speech 25-09-1988
“Pulavar Sivam Karunalaya Pandiyanar
Vazhvum Panikalum’
By
Professor Dr. S. Vithiananthan
Former Vice Chancellor, University of Jaffna. - Published - Oecember 1989
Publisher - Colombo Tamil Sangam Society (Ltd.)
7, 57th Lane, Colombo 6.
Press - Kumaran Press, 201, Dam Street, Colombo 12 ܗ Copies: 1000
Price: Rs. 18]-

பெரும்புலவர் சிவங் கருணுலய பாண்டியனுர் அவர்கள்
தோற்றம்: மறைவு: 1903-08-09 1976-06-30

Page 4

பதிப்புரை
புலவர் சிவங் கருணுலய பாண்டியனர் சங்ககாலப் புலவர்களுக்கு ஒப்பான பெரும்புலவர். தமிழ்மொழி வடமொழி நூல்கனே நன்கு கற்றவர். நூல்களில் உள்ளவை அனைத்தும் அவரது உள்ளத்தில் தன்கு நிலைத்திருக்கும். புலவர் பாண்டியனர் புலமையிற் பெருங்கடல்: கொள்கை உறுதியிற் பெருமலை சிறந்த பாக்களை யாத்தலில் வல்லுநர்
புலவர் பாண்டியனர் எளிமையான தோற்றமும் வாழ்வு நெறி யும் உள்ளவர். பற்றற்ற ஞானி. தமிழ் முனிவர். தமிழே அவருக்கு உயிர். தூய தமிழில் மிக்க பற்றுள்ளவர். சிறந்த பல நூல்களை எழுதியுள்ளார். இவர் சிறந்த சமய அறிஞரும் ஆவர்.
தமிழகத்திற் பிறந்து கல்வி பெற்ற பாண்டியனுர் இலங்கைத் தலைநகரிற் தம் ஆசிரியத் தொழிலையும் தம் தமிழ்ப்பணிகளையும் மேற் கொண்டு இலங்கையைத் தம் நாடாகக் கொண்டார். தமிழுக்காகவே வாழ்ந்தார். இலங்கையிற் சிறந்த தமிழ் மாணவ பரம்பரையை உரு வாக்கினுர். இலங்கை, புலவர் பாண்டியனருக்குப் பெரிதும் கடமைப் பட்டுள்ளது.
புலவர் பாண்டியனர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தோடு நீண்ட காலத் தொடர்புள்ளவர். கொழும்புத் தமிழ்ச்சங்கத்திற் பல ஆண்டு களாகத் தமிழ் வகுப்புகளை நடத்தி வந்தார். இவர் தமிழுலகிற்கு ஆற்றிய தமிழ்ப் பெரும் பணிகளுக்காக இவரது உருவப்படம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றுள்ளது. இவரது புதல்வர் இருவரதும் துணையொடு கொழும்புத் தமிழ்ச்சங்கம் இலங்கையில் வெளி வரும் சிறந்த செய்யுள் இலக்கிய நூலுக்குப் பரிசில் வழங்கி வரு கிறது.
பெரும் புலவர் பாண்டியஞரது தமிழ்ப் பணிகள் பற்றிய சிறந்த நூல் ஒன்றை வெளியிடக் கொழும்புத் தமிழ்ச்சங்கம் தீர்மானித்தது. புலவர் பாண்டியனரது தமிழ்ப் பணிகள் பற்றிய பேருரை ஒன்றை நிகழ்த்தும் பொறுப்பைத் தமிழுலகின் பெரும்பேரறிஞரும் யாழ். பல்கலைக்கழக முன்னட் துணைவேந்தரும் கொழும்புத் தமிழ்ச்சங்கக் காப்பாளருள் ஒருவரும் ஆகிய பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் உவந்து ஏற்றுக்கொண்டார். இப்பேருரை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 25-9-1988 ஆம் நாள் நிகழ்ந்தது. பின்பு இப் பேருரை தினகரனிலும் இலங்கை வானெலியிலும் தொடர்ந்து வெளிவந்தது.

Page 5
பெரு ந் தமிழ் ப் பேரறிஞர் ஒருவரின் தமிழ்ப் பணி களைப் பெரும் பேரறிஞர் ஒரு வ ர் எடுத்துக் கூறுதல் மிகப் பொருந்துவதே ஆகும், வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் உள்ள மிக நெருங்கிய இலக்கிய - பண்பாட்டுத் தொடர்புகளையும் பேரறிஞர்களைப் போற்றும் பெரும் பண்பையும் இஃது எடுத்துக் காட்டுகின்றது.
இப்பேருரை பெரும்புலவர் பாண்டியஞரது தமிழ்ப்பணிகளை எடுத்துக் காட்டும் சிறப்பொடு பெரும்பேரறிஞர் பேராசிரியர் சு. வித்தியான்ந்தன் அவர்களின் பெரும் வாழ்வினதும் பணிகளதும் நிறைவுப் பணியும் பேருரையும் ஆக உள்ள சிறப்புக்கும் உரியது.
ஆதலின் இப்பேருரையை நூலாக வெளியிடுவதிற் கொழும்புத் தமிழ்ச் சங்கம் பேருவகை அடைகின்றது. பெரும்புலவர் பாண்டிய ஞரின் தமிழ்ப் பணிகளைத் தமிழுலகு அறிதற்கும் தமிழ்ப் பெரும் பணிகளைத் தமிழுலகு தொடர்வதற்கும் இந்நூல் பெருந்துணையாக 2-56յւD.
இந்நூலாக்கத்திற்கான பேருரையை நிகழ்த்தி உதவிய பேரா
சிரியர் சு. வித்தியானந்தன் அவர்களுக்குக் கொழும்புத் தமிழ்ச்சங்கம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. பேராசிரியர் எதிர்பாராத வகையில் மறைவுற்றர். அவர் மறைவின் பின் இப்பேருரையை தேடி எடுத்து உதவிய அவரது சகோதரருக்குப் பெரும் நன்றியைத் தெரிவித் துக் கொள்கிறேன். இந்நூலை நன்கு அச்சிட்டு உதவிய கொழும்பு குமரன் அச்சகத்தினர்க்கும் எமது நன்றி தமிழ்ப் பணிகள் வளர்க,
சங்க அகம் க. இ. க, கந்தசுவாமி 7, 57 ஆம் ஒழுங்கை பொதுச் செயலாளர் கொழும்பு 6 கொழும்புத் தமிழ்ச் சங்கம்
1.12.1989 தொலைபேசி 588759

'pre's groogreso queg§ dessę)o oc) · @@ qa@o4/iteko uo u udang)∈ • No· @@ 1934 reago șosgi og figig:1994 ferīņs · ựs)gsựđięgi muso, útss@ng) ahsisoggi ự@mtıışsın sırtsash, qe ujqiqofằog 3-6-886 I qøg@orgiae#điņio șHqif) Joe) 1ųool, rele 1çsogiosumgqolgs op 4Josire@locogs 19@gođì) șđỉopagoqeri oqsum

Page 6

10.
11.
2.
13.
14.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே யுலகு" مر O - வளஞவா
பொருளடக்கம்
இளமைப் பருவமும் ஈழத்தொடர்பும்
வாழ்க்கை நெறி -
தனித்தமிழ்ப்பற்று
ஆக்கங்கள் - கொள்கையும் வகையும்
நம்பியகவல்
ஏனைய தமிழாக்க முயற்சிகள்
உரைமுயற்சி
கட்டுரைகள்
பண்பாட்டாய்வு
வானெலிப் பேச்சு
ஆக்கத்துணை
இலக்கணச் சிந்தனைகளும் சொல்லாக்க முயற்சிகளும்.
நோன்மதி
பன்முக ஆளுமை
‘சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கச்
சுடர்க வையக மே”*
- மகாகவி பாரதி
பக்கம்
15 16
17
7 19
20
20
22
24.
25

Page 7

நினைவுப் பேருரை:
தமிழ்ப் பேரறிஞர் புலவர் சிவங், கருணுலய பாண்டியளுர் அவர்களின்
வாழ்வும் பணிகளும்
முன்னுள் துணைவேந்தர் * . () பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன்
w
இருபதாம் நூற்றண்டின் ஈழத்துத் தமிழ்க் கல்விச் சிந்தனை பிர தேச முறையாக மூன்று முக்கிய களங்களில் ஊற்றெடுத்துப் பெருகி யது. ஒன்று யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பூரீலபூரீ ஆறுமுகநாவலர் ஞானப்பரம்பரையிற் சுன்னகம் அ. குமாரசுவாமிப் புலவரை முதல் வராகக் கொண்டு ஊற்றெடுத்தது. இன்னென்று, கிழக்கிலங்கையிற் சுவாமி விபுலாநந்தரை முதல்வராகக் கொண்டு உருவானது. மூன்ரு வது மரபு கொழும்புப் பிரதேசத்திலே புலவர் சிவங். கருஞலய பாண்டியனர் தோற்றுவித்தது. இம்மூன்றில் முதலிரண்டும் ஆய்வா ளர் கவனத்தைப் பெற்ற அளவுக்கு, மூன்ருவது மரபு பெறவில்லை. இங்கு இச் சந்தர்ப்பத்திற் புலவர் பாண்டியனர் தொடர்பாக நிகழ்த் தப் பெறும் இந் நினைவுப் பேருரை, இம் மூன்ருவது மரபுபற்றிய விரிவான ஆய்வுக்கு அடியெடுத்துக் கொடுக்கும் முயற்சியாக அமை யும் என நம்புகிறேன். 19 ஆம் நூற்ருண்டு நடுவிலிருந்து 20 ஆம் நூற் ருண்டுத் தொடக்கம் வரை ஈழத்திலிருந்து தமிழறிஞர் பலர் , தமிழ கம் சென்று பலருக்குத் தமிழறிவூட்டித் தமிழ் நூல் வெளியிட்டுத் தமிழ் வளர்த்தனர். 20ஆம் நூற்ருண்டு முற்பகுதியில் பாண்டியனர் தமிழகத்திலிருந்து ஈழத்துக்கு வந்து தமிழ்க் கல்வியறிவூட்டித் தமிழ் நூல் வெளியிட்டுத் தமிழ் வளர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டியனரைப் பொறுத்தவரை, தமிழறிவித்தலே உயிராய்ப் பிழைப் பாய் அமைந்தது. இறுதிவரை தமிழ்க்கல்வியால் மட்டுமே உழைத் துக் குடும்பம் நடத்தியவர் புலவர். மேற்குறிப்பிட்டவற்றில் முதல் இரு மரபுகள் பெற்ற அளவுக்குப் பாண்டியனர் மரபு ஆய்வாளர் கவனத்தைப் பெறவில்லை. . . .
புலவர் பாண்டியனர் அவர்கள் தமிழகத்திலே தோன்றி, ஈழத் தில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். தமிழறிஞர்கள் பலருக்கு

Page 8
நல்லாசானகத் திகழ்ந்த கல்வியாளர், பல நூல்களை இயற்றியும் மொழிபெயர்த்தாக்கியும் தந்தவர், தனித் தமிழ் இயக்கம், தமிழ்க் கலைச் சொல்லாக்கம் என்பவற்றிலே தமக்கெனத் தனியான தெளிந்த சிந்தனைகளைக் கொண்டிருந்தவர். கொழும்புச் சூழலை வாழிடமாகக் கொண்டு நமது சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த இப் பேரறிஞருடன் எனக்கு அதிகளவு நேரடியான தொடர்பு இருக்கவில்லை. அவரைப் பற்றி அவரது நன்மாளுக்கர் பலர் பலமுறை கூறக்கேட்டிருக்கிறேன். அவரது பல்வேறு ஆக்கங்களையும் அவ்வப்போது வாசித்துள்ளேன். அவரைப் பற்றி அவரது மாணவர்களும் வேறு நிலை களி ல் உறவு கொண்டோரும் எழுதியுள்ளவற்றையும் வாசிக்கும் வாய்ப்புக்கிட்டி யது. இவற்றின் அடிப்படையில் அப்பேரறிஞரது பண்பும் பணியும் தொடர்பாகவும், அவர் தோற்றுவித்த தமிழ்க் கல்விச் சிந்தனைக்கு நமது வரலாற்றில் உரிய இடம் தொடர்பாகவும் எனது கணிப்புகளை முன் வைப்பதாக இந் நினைவுப்பேருரையை நிகழ்த்த முனைகின்றேன்.
இளமைப் பருவமும் ஈழத் தொடர்பும்
புலவர் சிவங். கருஞலய பாண்டியஞர் அவர்கள் தமிழகத்திலே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிக் குறிச்சி என்ற சிற் றுாரில் சிவன்பிள்ளை என்பார்க்கு மகளுக 1903 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் திகதி பிறந்தவர். இளம் பராயத்திலே மரபறிந்த தமிழறிஞர் சிலரிடம் பழந் தமிழ் நூல் 5ளப் பாடங்கேட்கும் வாய்ப்பைப் பெற்ற இவர், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பாலபண்டிதர் பரீட் சையில் முதல்வராகத் தேறிஞர். வறுமை காரணமாக ஆசிரிய த் தொழிலை நாடி நின்ற இவருக்கு, அதன் பொருட்டு ஈழத்திற்கு வர வாய்ப்பேற்பட்டது. கொழும்பில் வணிகத் தொழில் புரிந்த தமிழகத் தவரான திரு. கருப்பஞ்செட்டியார் என்பார் தமது மகன் இராம நாதன் என்பவர்க்குத் தமிழ் கற்பிக்க இவரை அழைத்து வந்தார். இவ்வாறு கொழும்புக்கு வந்து ஆறு ஆண்டுகள் இராமநாதனுக்குத் தமிழ் கற்பித்த இவர், அக்காலப் பகுதியில் யாழ்ப்பாணம் வண்ணுர் பண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலையில் மதுரைத் தமிழ்ச் சங்கத் தின் பண்டித பரீட்சைக்குத் தோற்றி அதிலே தேறினர். இவரிடம் அப்பொழுது கற்ற இராமநாதனே பிற்காலத்தில் அண்ணுமலைப் பல் கலைக்கழகத்திலே தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்த லெ.ப. கரு.இராம நாதன் செட்டியார் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
ஆறு ஆண்டுகளின் பின்னர் தமிழகத்திற்கு மீண்டு, அங்கு தொழில் தேடமுயன்ற புலவர் பாண்டியனர் அவர்கள் அம் முயற்சி பலனளிக் காத நிலையிலே திரும்பவும் கொழும்புக்கே வரவேண்டியவராஞர். கொழும்புவாழ் தமிழர்கள் அக்காலப்பகுதியில் அத்தமிழறிஞர்க்குப் பல
... 2 ...

வகையிலும் உதவி செய்து தமக்குச் சமயமும் தமிழும் போதிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன்படி தொகுதி தொகுதி யாகவும், தனித்தனியாகவும் பலநிலையினர்க்கு அவர் கற்பித்தார். ஏறத்தாழ அரைநூற்ருண்டுக்காலம் - 1976 இல் இயற்கை எய்தும் வரை - இதுவே அவரது வாழ்வுப் பணிஆயிற்று. பாரிநிலையத்த ரால் 1954 இல் வெளியிடப் பெற்ற "செட்டிநாடும் தமிழும்" என்ற நூலில் ‘சோமலெ" கடல் கடந்த நாடுகளில் தமிழ்ப்பணி என்னும் கட்டுரையில் இலங்கை பற்றிக் குறிப்பிடும்போது பின்வருமாறு கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது.
*திருநெல்வேலிப் பகுதி மலையடிக் குறிச்சியைச் சேர்ந்த கருணுலய பாண்டியர் என்னும் பெரும் புலவர் இப்போது இலங்கையில் சிறப் புடன் இருந்து வருகிருர், யாழ்ப்பாணத்துப் பெருமக்களும் இலங்கை அரசியலாரின் உயர் அலுவலருமான பலர் இவர்களிடம் தமிழ்க் கல்வி பயின்று வருகின்றனர். இப்புலவரை ஈழ நாட்டுக்கு அழைத் துச் சென்று, மிகவும் ஆதரித்த பெருமை அண்ணுமலைப் பல்கலைக் கழகத்துப் பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களின் தந்தையார் ஆகிய கரு ப் பன் , செட் டி யார் அவர்களைச் சேரும். இவருடைய நூல்கள் வெளிவர பெ. ராம. ராம. சிதம்பரம் செட்டியார் அவர்களும், நெற்குப்பை மு. பனையப்பன் பி. காம். ஹானர்ஸ்) அவர்களும் உதவியுள்ளனர்.”
அக்காலத்தில் ஆயுர்வேத வைத்திய கலாநிதி ஆ. கனகரத்தினம் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவர் புலவருக்குப் போதிய ஆதரவு வழங்கிப் புலவரது திருமண வைபவத்தையும் நடத்தி வைத்தார். திரு. கனகரத்தினம் அவர்களது தகப்பன் சங்கர ஆறு முகம் உயிர்நீத்த போது சிவன் கருணுலய பாண்டியனர் பாடிய இரங் கற் பாடல்களில் வைத்திய கலாநிதி கனகரத்தினம் பற்றிப் பின் வருமாறு குறிப்பிடுகிருர்,
** மன்னர் போற்றிப் பன்னுகன கரத்தினமென் பான்பெரியர் பான்மதிப்பும் பணிவும் வாய்ந்தோன் கனகரத் தினம்கொழும்பி லரசியலா யுர்வேதக்
う கழகத் தின் கண் மனமுவந்து மருத்தியல்நூல் நன்குபயிற் ருசிரிய மாட்சிச் செல்வன் தினமும்வரு வார்ப்பிணியைத் தீர்க்கவல்ல திருவருளான்”
அண்மைக் காலம் வரை வாழ்ந்தவர்களும், இன்று வாழ்ந்து கொண்டிருப்போருமான தமிழறிஞர் பலர் புலவர் பாண்டியனரின்
a 3. -

Page 9
நன்மாணக்கர்களாவர். தம்மைப் புலவர் பாண்டியஞரின் நன்மாணக் கர் எனக் குறிப்பிட்டுக் கொள்வதில் அவர்கள் பெருமை கொள் வதையும் நான் அவதானித்துள்ளேன். காலஞ்சென்ற இ. இரத்தி னம் அவர்களும், காலஞ்சென்ற அமைச்சர் சு. நடேசபிள்ளை, முதலியார் குல. சபாநாதன், கலாநிதி க. செ. நடராசா, கலாநிதி ஆ. கந்தையா. செ. வேலாயுதபிள்ளை, வே. வல்லிபுரம், சி. குமார குலசிங்கம், ச. சரவணமுத்து, பெ. கணநாதபிள்ளை, திருமதி ம. பாலகிருஷ்ணன், திரு. ஆ. குணநாயகம் முதலிய பலரும் புலவர் பாண்டியனரிடம் பல்வேறு சந்தர்பபங்களிற் பாடங்கேட்டவர்களாவர் என்பது ஈண்டு சுட்டத்தக்கது. கலாநிதி ஆ. கந்தையா "கலாநிதி" பட்டம் பெற இலண்டன் செல்லுமுன் பாண்டியனரிடம் சைவசித் தாந்த நூல்கள் கற்ருர். அமைச்சர் சு. நடேசபிள்ளை , சோ. இள முருகனர், சோ. நடராசா ஆகிய பல தமிழறிஞர்கள் தமது நூற் பிரதிகளைப் பாண்டியனரிடமே திருத்துவித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்வாறு அரைநூற்ருண்டுக் காலம் கொழும்புச் சூழலில் நல்லா சிரியப் பணிபுரிந்த பாண்டியனர் அவர்கள் சமயம், தத்துவம், மொழி, இலக்கியம் என்பன தொடர்பாகத் தாம் கொண்டிருந்த உணர்வு கள், கொள்கைகள் ஆகியவற்றைப் பல்வேறு ஆக்கங்களாக எழுத்தில் வடித்துள்ளார். இவ்வாக்கங்களிற் குறிப்பிடத்தக்க தொகையின, நூல்வடிவம் பெற்றுள்ளன. பல நூல்வடிவம் பெருது பத்திரிகைக் கட்டுரைகளாகவும் கையெழுத்துப் படிகளாகவும் உள்ளன. பாண்டிய ஞரின் மொழி-இலக்கியக் கொள்கைகள் பல எழுத்துவடிவில் மட்டு மன்றி அவரது மாணவர்களின் இதயத்தில் எண்ணக்கருக்களாகவும் நிலை கொண்டுள்ளன. இவற்றையெல்லாம் முழுமையாகத் தொகுத்து நோக்கி ஆராயும்பொழுதே நாம் பாண்டியனரின் ஆளுமையையும் தமிழ்க் கல்விச் சிந்தனையில் அவர் காட்டிய் தனி வழியையும் இனங் கண்டுகொள்ள முடியும். இவற்றை நோக்குவதற்கு முதற்கண் இவற் றுக்கு அடிப்படையாக அவர் பேணி நின்ற வாழ்க்கை நெறியை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
வாழ்க்கை நெறி
பாண்டியனர் அவர்கள் தொடர்பாக அவருடன் நெருங்கிப் பழகி யவர்களும் உறவினர்களும் தரும் தகவல்களையும், பாண்டியனரின் எழுத்தாக்கங்கள் புலப்படுத்திநிற்கும் பண்புகளையும் தொகுத்து நோக் கும்போது தமிழ் மரபிற் 'புலனழுக்கற்ற சான்றேன்" எனச் சுட்டப் படத்தக்கார் ஒருவருக்குரிய பண்புநலன்களை அவர் நிறைவாகப் பெற் றிருந்தார் என்பது தெரியவருகின்றது. தமிழிலும் வட மொழியிலும்
. 4 ...

உள்ள தொல்விலக்கியங்களை ஆழ்ந்து கற்ற அவர் அவற்றின்டிப் படையிலான சமயநெறி, அற ஒழுக்கநியதிகள் என்பனவற்றைப் பேணி நின்றனர். இந்தியப் பெரும் சமயப் பிரிவுகளான சைவம், வைணவம் முதலியனவற்றையும், தத்துவ சிந்தனைகளான வேதாந் தம், சித்தாந்தம் முதலியனவற்றையும் கற்றுத் தெளிந்த அவர் அவற்றுக்கிடையில் வேறுபாடு காண முடியாமல் ஒருமைப்பாட்டையே காண விழைந்தார். இவற்றுடன் திருக்குறள், நாலடியார் முதலிய அறநூல்களின் சிந்தனைகளையும் இணைத்துக் கொண்டார். இவையாவும் பண்பட்ட ஒழுங்கமைப்புடைய நல்வாழ்வுக்கான அடிப்படைகளே , எனக் கருதினர். இவற்றின் தளத்தில் தனது வாழ்க்கையை அமைத் துக் கொண்ட அவர், பூணிலபுரீ ஆறுமுக நாவலர் தமது பாலபாடங்கள், சைவவினுவிடை என்பனவற்றிற் சுட்டிய ஆசாரங்களையும் அநுட்டா னங்களையும் முறையாகக் கடைப்பிடிக்கமுற்பட்டவர். தூய்மை, ஒழுங்கு, ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றை உறுதியாகக் கடைப்பிடித்த அவர் தமது குடும்பத்தினரையும் அவ்வண்ணமே கடைப்பிடிக்கத் தூண்டிய e
காலை எழுந்தவுடன் தேவாரம், திருவாசகம் முதலியவற்றைப் படித்தல், தியானங்களை மேற்கொள்ளல், காலைக்கடன்கள் முடித்து நீராடியபின் ஞாயிற்றை வணங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளின் பின்னரே காலை உணவைக் கொள்ளவேண்டுமென்பது அவரது நியதி. உணவின் முன்னும் பின்னும் கைகால் முதலியவற்றைக் கழுவுதல், விடுமுறை நாட்களில் மதிய - இரவு உணவுகளைப் பிள்ளைகளுடன் இருந்து அருந்துதல், அவ்வேளைகளில் கடவுள் நினைவுடன் தொடங்கி அறிவுரை கள் கூறல், உலக விடயங்கள் குறித்து உரையாடல் முதலிய செயன் முறைகளை அவர் முறையாகப் பேணிவந்தார் என அவரது புதல்வர் கள் நினைவு கூருகின்றனர்.
அடக்கம், தன்னம்பிக்கை, கொண்ட கொள்கையிற் பற்றுறுதி என்பன பாண்டியனரின் சிறப்புப் பண்புகள். கற்கும் எதனையும் தமக்கு இயற்கையாகவே உரிய நுண்மதியுடன் விளங்கிக்கொண்டு விளங்குபவராகவும் கடைப்பிடிப்பவராகவும் அவர் திகழ்ந்தார். இத் தகு மாண்புகள் அவர் ஆற்றிவந்த ஆசிரியப் பணிக்குச் சிறப்புச் சேர்க்கும் அணிகலன்களாகத் திகழ்ந்தன. r
இவ்வாறு பண்பட்ட வாழ்க்கை நெறியைப்பேணி நின்ற பாண் டியனர் அவர்கள் தமிழினம் , தமிழ் மொழி, அதன் இலக்கணமரபு என்பன தொடர்பாகத் தெளிவான சில சிந்தனைகளைக் கொண்டிருந் தார். தமிழினம் இந்தியாவிலும், ஈழத்திலும் தனக்குரிய தனியாட்சி யுரிமையுடன் தலைநிமிர்ந்து நிற்கவேண்டுமென்ற கருத்தை இவர் தன்
... . . . .

Page 10
னேடு பழகியவர்களிடம் உணர்த்தியுள்ளார். இக்கருத்து நிலையை ஒரு
அரசியல்வாதியின் நோக்கிலன்றி இனநலம், மொழிநலம் என்பவற்
றைப் பேணும் ஒரு பண்பாட்டாளனின் நோக்கிலேயே இவர் கொண்
டிருந்தார். புலவர் தனித்தமிழ்ப்பற்றுடன் தமிழருக்குத் தன்னுரிமை யுள்ள தனிநாடு இருக்க வேண்டும் என்ற வேட்கை உடையவர்
அவரிடம் பாடம்கேட்ட பலரும் இதைக் கூறுவர். தமிழருக்குத் தனி நாடு இருந்தால்தான் தமிழினம் தலைநிமிர்ந்து, தமிழ்ச் சமுதாயத் திலுள்ள அடிமைத்தன எச்சங்கள் விலகும் என்பது அவர் கருத்து. டந்த 4, 5 நூற்ருண்டுகளாகத் தமிழர் ஆட்சியற்றபடியிஞலேயே தம் மதிப்பிழந்து அடிமைத்தனத்துக்கான யாருடனும் சார்ந்து பிழைக்கும் இயல்பு கொண்டிருந்தனர் என்பர். அவரது புலப்பாட் டின்படி பல சிங்கள ஊர்கள், தமிழ்ப் பெயர்ச் சிதைவின் சிங்களம் தெரியாத போதும் தனது நுண்ணறிவினுல் இவற்றை ஒர்ந்தறிவார். "அழகியது" என்னும் நூலில் தான் வசிக்கும் 'இரத்மலான வின் பெயர்ப் பொருள் அறிந்து தமிழிற் "செம்மலர்த் தோட்டம்" என்று குறித்தார். "துறை" என்பது தமிழிற் கப்பல், ஒடம் வந்து நிற்கும் இடம். மாத்தறை , களுத்துறை, பாணந்துறை என்பன ஆறுகடலு டன் கலக்குமிடங்களிலுள்ள "துறை" என்ற தமிழ்ப் பெயரின என சுட்டுவார். சேரநாடு கேரளமாகவும் மலையாள மொழியினதாகவும் பிரிந்தது தமிழ்த் தன்னட்சி இல்லாததாலேயே என மனங்கவல் வார். தமிழர் படைக்கலம் கொண்டு போராட வேண்டும் என 1950 களி லிருந்தே சொல்லி வந்தவர்.
சிங்களச் சூழலில் இரத்மலானையில் இருக்கும் நிலைவந்தும், அஞ் சாது துணிவுடன் வெள்ளை வேட்டியுடனும் துண்டுடனும் தீற்றுப் பூச்சுட்னும் இருந்த இவருக்கு, 1958 கலவரங்களிற்கூட சிங்கள மக் கள் மதிப்புக் கொடுத்தனர். இத்தனைக்கும் அவருக்குச் சிங்களம் தெரியாது. ஒருவர்கூட இவரைக் கேலி செய்ததோ துன்புறுத்தியதோ இல்லை. எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்தவரல்லர். எனினும் அரசியல் அறிவு பெரிதும் வாய்க்கப்பெற்றவர். தமிழ் மொழி தொடர்பாக இவர் கொண்டிருந்த கருத்து நிலை, சமகாலப் பகுதியிலே தமிழகத்திலும் ஈழத்திலும் முனைப்புப் பெற்று வந்த தனித்தமிழ் இயக்கச் சிந்தனைக்குப் பு தி ய வ ள ம் சேர்ப்பதாக அமைந்தது. தனித்தமிழ் தொடர்பான அவரின் நிலைப்பாடு தனியாக நோக்குதற்குரியது.
தமிழினம் சார்ந்தவர்கள் வேறினங்களாகக் கலந்து மறைந்தமை குறித்து வருந்துவார். இதற்கும் தனியாட்சியின்மையே காரணம் என்பர். நீர்கொழும்பு சிலாபம் சார்ந்தோர் சிங்களவரான மையைக் குறிப்பிட்டுக் கூறுவார். தமிழராட்சி இருப்பின் இவை நிகழா என்பர்.
سمسم. 6 . .

தனித்தமிழ்ப் பற்று
தனித்தமிழ்" என்ற சிந்தனை தமிழ்மொழி பிற மொழிகள் எவற்றினதும் துணையின்றித் தனித்தியங்க வல்லது எ ன் ற உயர்வு நிலையின் அடியாக உருவானதாகும். வடமொழியும் வேறுபல மொழி களும் காலத்துக்குக் காலம் தமிழில் நிகழ்த்தியுள்ள ஊடுருவல் களி லிருந்து அதனை மீட்டெடுத்துப் பேணிக் கொள்ளமுயலும் தற்காப்பு முயற்சியாக இச் சிந்தனை உருவெடுத்தது. கடந்த நூற்றண்டின் பிற்பகுதியில் கால்டூவெல் முன்வைத்த திராவிடமொழி ஆய்வுப் பேறுகளிற் கருக்கொண்ட இச் சிந்தனை, இந்த நூற்றண்டின் முற் பகுதியில் மறைமலையடிகளின் பெருமுயற்சியால் இயக்கவடிவம் பெற்றது. மறைமலையடிகள் ஈழத்திற்கும் பன்முறை (1914ஆம், 17ஆம் 21ஆம் ஆண்டுகளில்) வருகை தந்ததை ஒட்டி, ஈழத்திலும் தமிழறி ஞர் மத்தியில் இச்சிந்தனை பரவியது. தா. அழகசுந்தரதேசிகன், சுவாமி ஞானப்பிரகாசர், க. நவநீதகிருஷ்ண பாரதியார். சுவாமி விபுலாநந்தர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, இளமுருகனர், வேந்தனர் முதலிய பலர் வெவ்வேறு நிலைகளில் இத்தனித்தமிழ்ச் சிந் தனையால் ஈர்க்கப்பட்டனர். இவர்களுக்குச் சமகாலத்தில் வாழ்ந்தவ ராகிய புலவர் பாண்டியனுர் அவர்கள், வடமொழியிலே ஆழ் ந் த அறிவு பெற்றிருந்தபோதும், பிடிவாதமான தனித்தமிழ்ப் பற்றுக் கொண்டிருந்தார். அதனற்போலும் மறை9 ளையும் மந்திரங்களையும் கூடத் தனித்தமிழிற் பெயர்ந்துகூறும் விருப்பும் வல்லமையும் பெற் றிருந்தார். அந்த வல்லமையை நடைமுறைப்படுத்தியும் காட்டினர். மந்திரவடிவினதான வடமொழியிலெழுந்த நூல்களைத் தமிழ்ப்படுத் தல் தகாது என்று எண்ணுவோருக்கு மாருகத் தமிழில் எதனையும் பெயர்த்தமைக்கலாம் என்னும் உறுதி பாண்டியனரிடம் இருந்தது. இன்னும் ஒருபடி மேலேபோய் வடமொழிச் செய்யுளிற் சொல்வதை விடச் சுருக்கமாகவும் திட்பமாகவும் தமிழ்ச் செய்யுளில் அமைத்து விடலாம் என்னும் எண்ணமும் அவருக்கு உண்டு.
வடமொழியிலிருந்து தமிழுக்குப் புெயர்ப்புச் செய்யும்போது, அவருடைய ஆக்கத்திறன் விதந்து கூறத்தக்க முறையில் வெளிப் படுகிறது. சொல்லோடு பொருள் என்னும் வகையிலே சில பிரயோ கதிகள் மூலத்தினின்றும் ஒரளவு விலகியனவாயிருந்தாலும், செயல் வழி நடைமுறைப்பயன் நோக்கிலே பார்க்கும்போது, வியக்கத்தக்க அளவு புதுமைவாய்ந்தவையாயும் பொருத்தமானவையாயும் அவரு டைய மொழிபெயர்ப்புக்கள் உள்ளன. எடுத்துக்காட்டுகள் சில:-
l. . 1956) stair - நம்பி 2. ருத்திரன் - சினவன்

Page 11
3. erir Liub - திட்டு
சபித்தான் - திட்டிஞன் 4. ஞானி - புலவன்
ஞானம் - புலம் 5. ஓம்தத்சத் - ஒஓஅதுமெய் 6. சாந்தி சாந்தி சாந்தி - அமைதி அமைதி அமைதி 7. கீதா - அகவல்
புலவர் த மது ஆக்கங்களிலே தனித்தமிழைத் தீவிரமாகக் கடைப்பிடித்தார். தமது ஆக்கங்களிலே ஈழகேசரி 6. 12. 1936 இத ழில் (ப. 14) 'தமிழ்க்கலையாக்கம்" என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள கட்டுரை மொழிபெயர்ப்பு நோக்கிலே தனித் தமிழ் நி லே  ையப் பேணிக் கொள்வது தொடர்பாக இவர் கொண்டிருந்த கொள்கை களைத் தெளிவுபடுத்தி நிற்கிறது:-
“மொழிபெயர்ப்புக் கலையாக்கம் தனித் தமிழிலேயே அமை தல் வேணடும். தமிழ்ச் சொற்கள் காணப்படாது போயினும் உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அதற்காகப் பிறமொழிச் சொற்களைக் கலப்பிற் படிப்பவர்க்குக் கலைகளை மூலமொழியா கிய பிறமொழியிலேயே கற்ருல் இன்னும் நன்ருயிருக்குமென் னும் அவா உண்டாகித் தமிழ்ப் பயிற்சியிலுள்ள ஊக்கத்தைக் குறைத்துவிடும். அப்படி ஒவ்வொருவருக்கும் ஊக்கம் குறையு மானுல் நாள் செல்லச்செல்லத் தமிழ் மொழி பயிற்சியற்றுத் தமிழ் மொழியே இறந்துவிடும். அ த ஞ ந் பிறமொழிச் சொற்களைக் கலப்பவர்கள் தமிழ் மொழியைக் கொலை செய்த கொடியோராவர்"
இவ்வாறு பிறமொழிக் கலப்பைத் தீவிரமாகத் தாக்கும் அவர் தமிழ்ச் சொற்களைப் புதிதாக வழங்கும் போது அவை மக்களுக்கு விளங்காமற் போனுல் என்ன செய்வது என்பார்க்குப் பின்வருமாறு விளக்கம் தருகிறர்.
"நாம் ஒரு சோல்லப் பலமுறையும் கையாளுதலால் அச் சொற்கள் எளிய சொற்களாகிவிடுகின்றன. கையாளாது விடுத லால் எளிய சொற்களுழ் அரிய சொற்களாகிவிடுகின்றன. அதனல் தமிழில் பொருளுரைப்படாத சொற்களாயினும் பலமுறையும் கையாண்டு வருதலால் எளிதிற் பொருளுணரப்படும் வழக்கச் சொற்களாக்கிக் கொள்ளலாம். அங்ங்ணம் தமிழ்ச் சொற்களுக்

குத் தமிழுணர்த்தச் சோம்பி அவற்றைக் கைவிட முயலுகிற வன் உண்மைத் தமிழஞகான்"
(ஈழகேசரி மேற்படி)
மேலும் மொழியைப் பெண்ணுக்கு உவமித்து,
ஒரு கற்புடையவள் தன் கணவன் அழகில்லாதவனயினும் இழிந்தவனயினும் உயர்ந்த கடவுளையும் விரும்பிச் சேரமாட் டாள். அதுபோல இலக்கணக் கற்புடைய தமிழ் மகளும் ஆரியம் ஆங்கிலம் முதலியன கடவுள் மொழியென்று சொல் லப்படினும் அவற்றை விரும்பிச் சேரமாட்டாள். அச் சொற் களைச் சேர்க்கக் கருதுகிறவர்களும் அவருடைய க ற்  ைபக் கெடுக்கக் கருதுகின்ற துர்த்தர்களாகக் கருதப்படுவார்கள்.""
(ஈழகேசரி மேற்படி)
இவ்வாறு தமிழ் மொழியின் தூய்மையைப் பாதுகாக்கும் நோக்கில் ஐம்பதாண்டுகட்கு முன் பாண்டியஞர் முன்வைத்துள்ள கருத்துக்களின் தீவிரத்தை இன்று நாம் நோக்கும்போது அவரின் தமிழ்மொழிப்பற்றின் உறுதிப்பாட்டை எண்ணி வியக்கிருேம். அவ ரது கருத்துக்கள் எ ந் த அளவுக்குச் சாத்தியமானவை என்பதும் கடந்த அரை நூற்ருண்டு வரலாற்றில் அவை எந்த அளவுக்குத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்பட்டுள்ளன என்பதும் மொழியியல் நோக் கிலும் கலைச்சொல்லாக்க நோக்கிலும் தனித்தனி ஆ ரா யப் பட வேண்டியனவாகும். ஆயினும், அவர் தாம் கொண்டிருந்த கருத்துக் களைத் தனது ஆக்கங்களிலும் அறிவுறுத்தல்களிலும் நிறைவாகச் செயற்படுத்த முனைந்துள்ளமையை அவரது நூல்களும் அவர்தம் மாணவர்களது நினைவுக்குறிப்புக்களும் உணர்த்தி நிற்கின்றன.
ஆக்கங்கள் - கொள்கையும் வகையும்
பாண்டியனர் தாம் ஈழத்தில் வாழ்ந்த ஏறத்தாழ அரைநூற் ருண்டு வாழ்க்கையிற் பதினெட்டு நூல்கள் எழுதியுள்ளார்கள் எனத் தெரிகிறது. இவற்றுள் ஐந்து மட்டுமே நூலுருப் பெற்றுள்ளன. மீதமுள்ளமை கையெழுத்துப்படி நிலையின. இவைதவிர அவ்வப்போது பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். சஞ்சிகைகளில் இவரது கவிதைகளும் பிரசுரமாகியுள்ளன. இவை தவிர, நூல்கட்கு முன்னுரை, சிறப்புப் பாயிரம் என்பனவும் வழங்கி யுள்ளார்.
நால்வகைப் பாக்களே இயற்றமிழ் இலக்கியத்திற்கு உரியன என்பார் பாண்டியஞர். அகவல், வெண்பா, கலிப்பா யாப்புக்களிலே செய்யுளியற்றியுள்ளார். துற்ை, தாழிசை, விருத்தம் ஆகிய பாவினங்

Page 12
கள் இசைத் தமிழுக்கு வாய்ப்ப்ானவை என்பது அவர் கருத்து. அவ ருடைய பாநடை பெரும்பாலும் பத்துப்பாட்டையும் எட்டுத் தொகை யையும் நினைவூட்டுவன.' .
"இமையவரு மவுணர்களு மிடையூற்ருற் குறையிரப்ப
அமைவருநஞ் சயின்றுமிட றடக்கியதுன் வருளாமோ, ' தளைமூன்று முதைத்தருளித் தழுவியுயிரளித்தருள்வோய்க் குளையவ்ரு கூற்றுவனை யுதைத்ததுமோ ரருமைகொலோ"
என வருவன பாண்டியனரின் கலிப்பா அடிகள்.
"கூற்றுவற் கொல்லும் கூற்றுவ இம்பர்த்
தோற்றுறு மன்னுயிர்த் தொகைதுய ருறுப்ப
ஆயிரம் பதின யிரமெனக் கொண்ட கருவி யெல்லா வற்றையும் மருவு வேள்விதன் வலியினிக் குதுமே"
என வருவன பாண்டியனரின் அகவல் அடிகள்.
இவர் இயற்றிய வெண்பாக்களுக்கு ‘அழகியது" என்னும் நூலே முழுமையான எடுத்துக்காட்டு. வெண்பாவுக்கு ஒருசான்முக பின் வரும் செய்யுளைக் காட்டலாம்.
"ஓவிய மின்னிசை கூத்துப் புனைப்பொடு
பாவியற் பாட்டுமணி பல்கியெழுங் - கோவிய லாட்சி வளணு மமைதியு மெய்துபு
காட்சிக் கியைந்த களத்து."
பாட்டுக்களின் சொல்லாட்சி பற்றிப் பாண்டியனர் கோட்பாடு பழம் புலமைச் சார்புடையதாகும். இக்காலத்துச் சொல் வழக்கு கண்யோ, அதன் பொருளுணர்ச்சி விகற்பங்களையோ பாண்டியனர் பொருட்படுத்தினரல்லர். இக்கால்த்து மக்களுக்குப் பாட்டு விளங்க வில்லையானல், அவர் பொருட்டு உரைகள் எழுதி உதவலாம் என் பது அவர் (ாண்ண்ம். களவியலுரைகாரர் போன்ற பழமையாள ரின் உலகிலே தான், பாண்டியனர் தமது புலமை வாழ்வை நடத் திக் கொண்டிருந்தார் என்றும் கூறலாம்:
நவீன விமரிசகர் சிலரின் பார்வையில், "செய்யுள்" என்பது மதிப்புக் குன்றிய ஒரு சொல்லாகும். 'கவிதை' என்பதே மேம்பட்ட த்ாகக் கொள்ளப்படும். கலைநயம் குன்றிய சொற்கட்டுக்களே செய் யுள் என்க் கொள்வது இவர்களது போக்காகும். பாண்டியனர் அப், போக்கோடு உடன்பாடு உடையவரல்லர். செய்யுள் என்பது பொருள்ப
...“Iዕ •evo

பொதிந்த சீரிய செந்தமிழ்ச் சொல் என்பது அவர் எண்ணம். செய்கை என்பது ஆக்கம் அல்லது படைப்பு என்பதாகும். படைப் புத் திறனின் உச்சப்பயனைத் தரும் சொற்கலை அமைப்பே செய்யுள் எனக் கொள்வர். பாண்டியனுர்.
செய்யுள் என்பது போலவே 'உள்', ஈறுபடைத்த கடவுள், இய வுள், விழையுள் என்பவற்றின் பாலும் பாண்டியனர் மிகுந்த விருப் புடையவர். பின்னுளிலே (இப்பொழுதும்) என்னும் கணிதக் கருத்தை ஈழத்தமிழ் மாணவர் “விளையுள் என வழங்குவர். இது இ. இரத்தினம் அவர்கள் வழியே கலைச் சொல்லாக்க குழுவினுள்ளே நுழைந்து "ஆட்சி பெற்றுவிட்ட பாண்டியஞரின் எண்ணப் படிவமேயாகும்.
பாண்டியஞரின் நூல்களைச் சுயமான இலக்கிய ஆக்கங்கள்,உரை முயற்சி, பண்பாட்டு ஆய்வு என்பனவாக வகைப்படுத்தலாம். சுய இலக்கிய ஆக்கங்கள் என்ற வகையில். திருக்கதிர்காமப்பிள்ளைத் தமிழ் 1937, 1983) அழகியது (1965) என்பன நூல்வடிவில் வெளிவந்துள் ளன. 'பிள்ளைத் தமிழ் என்ற பிரபந்த மரபில் அமைந்த கதிர்காமப் பிள்ளைத்தமிழ் 1937 இற் புலவர் பாண்டியனரின் முதற் பிரசுரமாக வெளிவந்தது. கடவுளருளாயினும் மாந்தருளாயினும், பிள்ளைப் பெரு மாளாயுற்ற பேரருளாளரைப் பாட்டுடைத் தக்லவராகக் கொண்டு, அன்னரை அவரது பிள்ளைமைப் பருவத்தின்கட்செவிலித் தாயார் முதலிய மகளிர் பேரன்பு சுரந்து, ஆர்வமீதூர்ந்து, பெருமுவகை கூரப், பலபடப் பாராட்டிச் செப்பியும் அகவியும் கூறும் கிளவி யாகச் செந்தமிழ்ப் புலவராற் புனைந்து நாட்டிப்பஃருெடை வெண் பாவினலோ, அகவல் விருத்ததினலோ, கலிவிருத்ததினலோ பாடப் படுதல் பிள்ளைத்தமிழ்ப் பாட்டியன் மரபு ஆயினும், இன்று வழங்கும் பிள்ளைத்தமிழ்ச் செய்யுட்கள் பலவும் அகவல் விருத்தம் ஒன்றலேயே செய்யப்பட்டுள்ளன. ஏனைப் பஃருெடை வெண்பாவாலாயினும் கேலிவிருத்தத்தாலாயினும் .இயற்றும் வழக்கு இறந்ததுபோலும், புலவர் . பரண்டியனரும் இப்பிள்ளைத் தமிழை ஆசிரியவிருத்தப் பாவிஞலேயே யாத்துள்ளார். -
பன்னிரு பாட்டியல் முதலிய நூலுடையாரெல்லாம் முதற்கண் எடுத்தோதி, இயல் கூறுப்பெறும் வெற்றி வாய்த்தலிற் பிள்ளைத் தமிழின் சிறப்புடைமை நன்கு விளங்கும். பிள்ளைத் தமிழ்ப் பாட்டு வடமொழி முதலிய பிறமொழிக் கண்ணும் உளவாய்ப் பொதுவாகாது. தமிழ் மொழியொன்றிற்கே சிறந்தமையிஞலே தமிழ் என்னும் பொதுப் பெயரே. அடையெடுத்துச் கிறப்புப் பெயராய் நின்றது, பிள்களத் தமிழுக்கு இத்தகைய சிறப்புகள் அமைந்தமையாலோ என்னவோ
... 1 a

Page 13
புலவர் பாண்டியனர் அவர்கள் தாமியற்றியமுதனூலைப் பிள்ளைத் தமிழ் நூலாக யாத்தனர். இலங்கை வளநாட்டிற் கதிர்காமம் என் இணும் மூதூரிடத்துத் திருக்கோவில் கொண்டெழுந்தருளியுறையும் முருகக் கடவுளைப் பாட்டுடைத் தலைவளுகக் கொண்டு, அப்பெரு மானைப் பிள்ளையாகப் புல்ாந்து படைத்து, பிள்ளைத் தமிழுக்குரிய சிறப்பியலும். நன்மைப் (மங்கலம்) பொருத்த முதலிய பொதுவிய லும் அமைய, முன்னர்ப் பிள்ளைத் தமிழ்ச் செய்யுள் பல்வகையாகப் பாடிச் சென்ற ஆசிரியர் பலரின் நெறிச்சுவட்டினையொற்றி, அவ. ருடைய சொல்லும் பொருளும் போற்றி, இந்நூல் யாக்கப்பட்டுள் துெ. இச்செய்யுளகத்துச் செய்யுட் காப்புப் பாவொடு, காப்புப் பருவமுதல் உடைவாள் செறிந்தற் பருவமீருகவுள்ள பதினுன்கு பருவங்கட்கும், பருவந்தோறும் மும்மூன்று பாக்களாக, நாற்பத்திற்று மூன்று ஆசிரிய விருத்தப் பாக்கள் இயற்றப்பட்டுள்ளன.
புலவர் இம்முதனூலில் இயன்றவரை தனித்தமிழ்ச் சொற்களையே கையாண்டுள்ளார். குறிப்பாகச் சூக்குமை, பைசாந்தி, மத்திமை, வைகரி, நாகத்தத்துவம்-முதலிய வட சொற்களுக்கு முறையே நுணுக்கம், பான்மை, இடைமை, கேள்வி, இயப் பொருண்மை முதலிய தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு இவர் கையாண்டுள்ள தனித் தமிழ்ச் சொற்களையெல்லாம் த்ொகுத்து அகராதி முறையில் வெளியிட்டால் அவை வழக்கத்திற்கு வந்துவிடு மென வ. கந்தையா அவர்கள் 1941, 10, 19 ஈழகேசரியில் (பக்கம் 5) எழுதிய கட்டுரையொன்றிற் குறிப்பிட்டுள்ளார். - . .
இந்நூல். பிரதேச அபிவிருத்தி இந்துசமய, இந்து கலாசார அமைச்சினல் 1983 இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது. இந்த இரண்டாம் பதிப்பைப் படிக்கும்போது, பல அதிசயத்தக்க, ஆராய்ச்சிக் குரிய, தகவல்கள் இந்நூலில் அடங்கியிருப்பதை அவதானிக்கலாம். 128 பக்கங்களைக் கொண்ட இரண்டாம் பதிப்பில், முதற் பதிப்பின் முகவுரை 15 பக்கங்களிற் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாண்டியனர் பிள்ளைத் தமிழ் நூல்கள் பலவற்றைப் படித்து பிள்ளைத் தமிழ் இலக் கணம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இம் முகவுரையிற் கூறியிருப்பன இலக்கிய வரலாற்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம் பற்றி அறிந்து கொள்வதற்குரிய பல அரிய தகவல்களாக உள்ளன. கதிர்காமம் பற்றிய தமது கருத்துக்களை யும் 6 பக்கங்களிற் சுருக்கமாகத் தந்திருக்கின்ருர்,
அடுத்துத் திரு: குல சபாநாதன் திருக்கதிர்காம வரலாறு பற்றி 1937 இல் எழுதியவை 17 பக்கங்களில் அமைந்து, இத்தலவரலாறு பற்றியு செய்திகள் பலவற்றைத் தருகின்றது.
. . . . . . .

*கதிர்காமப் பிள்ளைத் தமிழ்" என்ற பாடல்கள் 26 பக்கங்களில் அமைந்துள்ளன. இப்பாடல்களுக்குரிய குறிப்புரை "விரிவுரையாக 58 பக்கங்களில் அமைகின்றது. இத்தகைய வியத்தகு உறுப்புக்களைக் கொண்ட பாண்டியனரின் முதனுரல் அவரது பக்திப் பரவசத்தை வெளிப்படுத்துவதோடு ஆராய்ச்சியாளர் கணிப்பிற்குரிய சிறந்த நூலாகும். S.
அழகியது என்ற தலைப்பிலமைந்த நூல் பாண்டியனுரின் அறவியல் உணர்வின் வெளிப்பாடாகும். பதினெண்கீழ்க்கணக்கில் அமைந்துள்ள அற நூல்களின் சாயலில் அமைந்துள்ள இந்நூல், அவற்றைப்போலவே வெண்பா யாப்பில் அமைந்தது 327 நேரிசை வெண்பாக்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இவ்வெண்பாக்களுட் பெரும்பாலானவற்றில் இயற்சீர் வெண் டளையே பயின்றுள்ளது. புகழேந்திப் புலவர் போன் ருேரின் வெண்பாக்களில் வெண்சீர் வெண்டளைப் பயிற்சியே மிகுதி என்பது சுட்டிக் காட்டத்தக்கது. அழகு எது? என்பது தொடர் பாகப் பாண்டியனரின் உள்ளத்தில் அவ்வப்போது விளைந்த சிந்தண்ை* கள், பழந்தமிழ் மரபு சார்ந்த இறுக்கமான சொன்னடையிலே இவ் வெண்பாக்களாக இயன்றுள்ளன. சான்றுகளாகப் பின்வருவனவற்றைச் ér1-t-6)fTLD • ',
"நாட்டுக்கழகு மலையருவி யாதுமலைக்
கர்ட்டுக் கழகு கலைக்கோட்டம் - ஏட்டுக் கழகுற்ற கல்விக்க ஞர்வலர் தொக்க கழகத்தாற் பேணப் படல்" , (106)
"எழுத்துக் கெழில்யா த்னித்தமிழாட்சி
வழுத்தும் வடித்தமிழ்க்கு முப்பால் - பழுத்துச் சுவைமுதிரு முற்பாற்குச் சொற்பொருளா ராய்ந்து நவைதவிரு நல்லா ருரை' (107)
* 'இயற்கை யழகு தலைப்பட்டார்க் கேனைச்
செயற்கை யழகு செறுப - இயற்கை யழகுடையார்க் கல்லதுஉம் வேண்டாவாம் வேண்டின் அழகுதூஉ மற்றப் படும்" (119)
இவற்றில் முதல் வெண்பா நூலுக்கு அழகாவது கல்வி கற்ற ஆர்வலர்களின் கழகத்தாற் பேணப்படுதல் என்ற கருத்தை முன் வைக்கிறது. இரண்டாவது வெண்பாவிலே அவரது "தனித்தமிழ்" ஆர்வமும், திருக்குறள் மீதில் அவர் கொண்ட ஈடு பா டும் புலப் படுகின்றது. மூன்றுவது வெண்பா செயற்கையழகை வெறுக்கும்படி
... 13 ...

Page 14
கூறுகின்றன. இது நாலடியாரிலே ‘குஞ்சி அழ்கும் கொடுந்தானக் கோட்டழகும்’ என வரும் பாடலை நினைவுக்கு இட்டுவருகின்றது. இந்நூல் "தமிழன் அறநூல் வரலாற்றிலே தனிக்கவனம் செலுத்தி ஆராயப்பட வேண்டிய தொன்ருகும்.
பாண்டியனர் அவர்கள் தாம் இயற்றிய மேற்படி இருபா நூல் களுக்கும் தாமே குறிப்புரைகளை எழுதிச் சேர்த்துள்ளார். பழந் தமிழ்ச் சொற்களையும் வழக்கிழந்த சொற்களையும் கையாள்வதனல் அவற்றுக்குத் தாமே பொருள்விளக்கம் தரவேண்டுமென்ற கடப் பாட்டுணர்வின் வெளிப்பாடு. இது. :
、
பாண்டியனரின் எழுத்தர்க்கங்களிலே மிகப் பெரும்தொகையின அவரது மொழி பெயர்ப்புக்களாகும். வட மொழியின் சமயத்துவ மூலங்களான வேத - உப்நிடதங்கள், பகவத்கீதை என்பவற்றை ஆழ்ந்து கற்ற இவர், அவற்றின் பொருட்சிறப்பிற் கொண்ட ஈடு பாட்டாலே தமிழுக்கு அவற்றை மொழிபெயர்க்க ஆர்வம் கொண் டிருந்தமை புலனகின்றது. மொழி பெயர்ப்பு விபரம் வருமாறு:
வடமொழி மூலங்கள் தமிழாக்கங்கள்
கடோப நிடதம் பிரசினேப நிடதம் கேனேப நிடதம் முண்டகோப நிடதம் ஐதரேய உபநிடதம் சுவேதாஸ்வதார உபநிடதம் மாண்டுக்ய உபநிடதம் தைத்ரீய உபநிடதம் ஈசோப நிடதம் குரீருத்ரம் விஷ்ணுசஹஸ்ர நாமம் , ஞானசூத்திரம் பூரீமத்பகவத்கீதை சரஸ்வதி துதி
கூற்றவன் மறை கேள்வி மறை
* யார் மறை
அங்கிரன் மறை
ஐதரேயம்
விழுமிய வெண் குதிரை தேரை வாய் மொழி சிச்சிலி மறை
'கட்வுள் மறை
திருவருட் செற்றம்
நெடுமால் பெயராயிரம் புனர்ப்பியல்
நம்பியகவல்
கல்விகிழாள் வண்க்கம்.
மேற்சுட்டிய்வற்றுள் திருவருட் செற்றம் நெடும்ால் பெயராயிரம், நம்பியகவல் என்னும் பெயர்களில் அமைந்தனவே நூல் வடிவம் பெற்றுள்ளன. ஏனைய கையெழுத்துப்படிகளாக உள்ளன. மேற்படி
"... 14 ...

நூல்களிலே தனிக்கவனத்தைப் பெறத் தக்க விமமி ر ஆக்கம் நம்பிய கவல் ஆகும்.
நம்பியகவல்,
இந்தியத்தத்துவ நூற்பரபிலே தனிப்பெருமைத் தொன்முகத் திகழ்வது பூரீமத் பகவத்கீதை, இதனைப் ‘பிரஸ்தான திரயம் என்னும் முக்கிய முதனூல்கள் மூன்றனுள் ஒன்று என இந்துமத அறிஞர்கள் குறிப்பிடுவர். போர்க்களத்திலே பிறந்ததாகக் கூறப்படும் இத்தத்துவ நூல் ‘சுயபலன் கருதாத கர்மம்" எனப்படும் சமூக சேவை மனப்பான் மையை வலியுறுத்தி நிற்பது வடமொழியில் அமைந்த இந்நூலைத் துறை போகக் கற்ற பாண்டியனர் தமக்கு இயல்பாகவே அமைந்த தணித் தமிழார்வம் என்ற தளத்தில் நின்று இதனைத் தமிழாக்கியுள்ளார். இது 1948 இல் நூல் வடிவு பெற்றது. புகவத்கீதைக்குத் தமிழில் முன்பே பல தமிழாக்கங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த நூற்ருஜண்டின் தொடக்கத்திலே மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இந்நூலை வசனவடிவில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார். நமது காலத்தில் அண்மையில் வாழ்ந்து மறைந்த புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளையவர்கள், வெண்பா வடிவில் பகவத்கீதை வெண்பா என்ற நூலை யாத்துத்தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இத்தகு தமிழாக் கங்களிலிருந்து பாண்டியனர் தந்த தமிழாக்கம் தனிச்சிறப்புடையது. அவர் நூலின் தலைப்பு, அதன். இயல்கள் என்பன உட்பட நூல் முழுவதையுமே தனித்தமிழிலே தரமுயன்றுள்ளார். பகவன் என்ப தை நம்பி எனவும், கீதை என்பதை அகவல் எனவும் தமிழாக்கி "நம்பிய கவல்’ எனத் தலைப்பு இட்டுள்ளார். தமிழிலே ஆடவருட் சிறந்தாரைச் சுட்டும் 'தம்பி’ என்ற பண்டைய சொல்லைப் "பகவான்" என்ற வட, சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லாகப் பாண்டியனூர் கருதியுள் எார் எனத் தெரிகிறது. கீதம் அல்லது கீதா என்ற வடசொல் பொது வாகப் பாடல் எனப் பொருள்தருவது. பாண்டியனர் அவர்கள் தாம், இந்நூலிற் கையாண்டுள்ள யாப்பின் பெயரால் ‘அகவல்" எனப் பெயர் சுட்டி, "நம்பியகவல்' என்ற தொடரால் இந்நூற்குத் தலைப்பிட்டுள்
6r Tff.
வட மொழியிலே பகவத்கீதையின் இயல்கள் ஒவ்வொன்றும் யோகம் எனப்பெயர் பெறும். யோகம் என்ப்தற்கு இணைதல் இணைப்பு புனர்ப்பு என்பனவாகத் தமிழர் பொருள் கொள்ளலாம். பாண்டிய ஞர் புனர்ப்பு என்பதையே தேர்ந்தார். பெரும்பாலான இயல் களுக்குப் புணர்ப்பு என்ற பெயரைச் சுட்டியுள்ளார். குறிப்பாக "கர்மயோகம்" என்பதற்கு "வினை வயிற்புணர்ப்பு" எனவும் ‘ஞான யோகம்" என்பதற்குப் ‘புலவயிற் புணர்ப்பு’ எனவும் பெயரிட்டுள்ளார்,
... . .

Page 15
சில இயல்கட்குப் புண்ர்ப்பு என்ற சொல் இணைக்காமலே தலைப் புத் தந்துள்ளார்-குறிப்பாக முதலாவது இயலான "அர்ஜுன விஷாத யோகம்" என்பதை "வில்லி துணித்தயர்த்தல்" எனக் குறித்துள்ளார். இவ்வாறு இந்நூலில் மொழி பெயர்க்கும் முயற்சியிலே இவர் மேற் கொண்ட செயற்பாடுகள் இவரது தனித்தமிழ் ஆர்வநோக்கின் அடிப் படையில் விரிவாக நோக்கப்படவேண்டியன.
இந் நூலுக்குத் தானே விளக்கக் குறிப்புரைகள் எழுதியுள்ள தோடு, ஆய்வு பூர்வமான ஒரு முகவுரையும் எழுதியுள்ளார். இந்திய மெய்யியல், இந்துநாகரீகம், தனித் தமிழியக்கம் என்பன தொடர் பாகக் கற்போர்க்கும் ஆய்வு நிகழ்த்துவோர்க்கும் அறிவுக்கு விருந் தாக அமையும் சிறப்பு இதற்குண்டு.
ஏனைய தமிழாக்க முயற்சிகள்
பாண்டியனரின் ஏனைய தமிழாக்க முயற்சிகளில் நூல் வடிவம் பெற்றுள்ள திருவருட் செற்றம் - நெடுமால் பெயராயிரம் என்பன இந்து மதத்தின் இரு பெரும் கடவுளாகிய சிவன், விஷ்ணு என் போரது புகழ்பாடும் தோத்திர நூல்களாகும். வடமொழியிலே யஜுர்வேதத்தில் இடம்பெற்றுள்ள பூரீருத்ரம் உருத்திர சிவன் என்ற பரம் பொருளின் இயல்பை விளக்கியும், பல பெயர்களைச் சுட்டி வணக்கம் செலுத்தியும் அமைவதாகும். "ருத்திரம், ரெளத்திரம்" ஆகிய வடசொற்கள் கோபம் என்னும் பொருள் தருவன. தூய தமிழில் இதற்குச் செற்றம்" என்ற சொல்வழக்கு உளது. ருத்திரன் ஆகிய கடவுளுக்கு அ ப் பெயர் அவனது கோபநிலையைக் கட்டி அமைந்ததேயாம். இதனைத் தனித்தமிழில் "திருவருட் செற்றம்" என மொழி பெயர்த்துள்ள பொருத்தப்பாடு வியந்து பாராட்டத்தக்கது விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பதே நெடுமால் பெயராயிரம் ஆயிற்று விஷ்ணு என்ற தெய்வம் தமிழ்மரபிலே மாயோன், திருமால், நெடு மால் என்னும் பெயர்களாற் சுட்டப்படுவது பாண்டியனர் நெடு மால் என்ற பெயரையே தேர்ந்துள்ளார். சஹஸ்ரநாமம் என்பது பெயராயிரம் என ஆயிற்று. y
பாண்டியஞரின் தமிழாக்க முயற்சிகள் யாவற்றையும் நோக்கும் போது அவை இந்து சமயம் - தத்துவம் என்பவற்றுக்கான மூலகங் களாக உள்ளமையை அவதானிக்க முடிகிறது. இன்று வளர்ந்து வரும் இந்து நாகரிகம், இந்துப்பண்பாடு ஆகிய கற்கை நெறிகளைப் பயில்வோர் மேற்படி நூல்களை வடமொழியிலோ, அல்லது அவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்பிலோ, அன்றேல் மணிப்பிரவாள நிலையிலான தமிழ் ஆக்கங்களிலோதான் கற்க வேண்டியுள்ளது. அதனல் அவற் றின் பொருளை விளங்கிக் கொள்வதற்கு அவர்கள் படும் சிரமத்தை
. 5 ...

நான் அறிவேன். எனவே பாண்டியனரின் தமிழாக்கங்களாக உள்ள வற்றில் மேற்சுட்டியவாறு நூல் வடிவு பெருத ஏனையவை நூல் வடிவம் பெறவேண்டியது மிக அவசியம் என்பதனை ஈண்டு சுட்டிக் காட்ட விழைகின்றேன்.
உரைமுயற்சி
ஆசிரியப் பணிபுரிந்த பாண்டியனர் அவர்கள் இலக்கிய இலக் கனங்களைப் பொருள் விரித்துரைக்கும் வாய்ப்புப் பெற்றவர். தாம் ஆக்கிய நூல்களும்கூட உரைவிளக்கம், குறிப்புரை என்பன எழுதிய வர் என்பது மேலே சுட்டப்பட்டது. நூல்க ளு க் கு உரைகூறும் பொழுது பண்டை உரையாசிரியர்களது கருத்துக்களை அவை உள்ள வாறே ஏற்றுக்கொள்ளும் பண்பினரல்லர் பாண்டியனுர். அவற்றுக் குத் தான் விளங்கிக் கொண்ட வகையில் விளக்கம் தரும் பண்பினர் அவர். இது அவர்க்கு இயல்பாயமைந்த நுண்மதியின் பேறு என்பது முன்னர் சுட்டப்பட்டது. இப் பண்பினல் அவர் திருக்குறள் அறத் துப்பாலுக்கு முப்பால் விளக்கம் என்னும் தலைப்பில் ஒரு விளக்கவுரை எழுதியுள்ளார். இவ்வுரையைத் தமிழ் நாட்டில் அச்சேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி இன்னும் நிறைவு பெறவில்லை என அறிகிறேன். திருக்குறளுக்குப் பல உரைகள் உளவாயினும், அவற் றுட் பரிமேலழகர் உரையே சிறந்த தென்ற கருத்துப் பொதுவாக நிலவுகின்றது. எனினும், பரிமேலழகர் உரையும் வள்ளுவரை முழு மையாக அறிந்து கோள்ள உதவவில்லை என்றும் அது வள்ளுவர் கருத்தோடு முரண்படும் இடங்களும் உள என்ற கருத்தும் ஆய்வாள ரில் ஒருசாரார் மத்தியில் நிலவுகின்றது. பாண்டியனரும் இக்கருத் தினரே. அவர் அறத்துப்பாலுக்கு எழுதிய விளக்கவுரை அவரது ஆன்மீக சிந்தனைகளுக்கு இயைய மேற்கொள்ளப்பட்ட முயற்சி எனத் தெரிகிறது. இவ்வுரை நூல்வடிவம் பெறுமாயின் திருக்குறள் ஆய் விலே புதிய அணுகு முறைகளுக்கு வாய்ப்பு ஏற்படலாம் என்பது எனது கருத்து. புலவர் பாண்டியனர் 1958 ஆம் ஆண்டு முதல் 1976 வரை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவிலே தமிழ் வகுப் புகள் நடத்தி வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. இவற்றிற் கற்றுப் பயன் பெற்றவர் பலர். எனவே பாண்டியளுரின் பணியைப் பயன் படுத்திய கொழும்புத் தமிழ்ச் சங்கம் பாண்டியஞரால் அச்சிடமுடி யாத அறத்துப்பாலுக்கு அவர் எழுதிய "முப்பால் விளக்க உரையை அச்சிட்டு வெளியிடுதல் பெரும்பயன் உடையதாகும்.
கட்டுரைகள்
புலவர் பாண்டியனர் எழுதிய கட்டுரைகள் பல. அவற்றுள் இரு கட்டுரைகள் மட்டும் எமக்குக் கிடைத்தன. இவற்றுளொன்று,
... 17 . . . .

Page 16
நாவலர் நூற்ருண்டு விழா மலரில் வெளிவந்த 'திருநின்ற செம் மையே செம்மை" என்ற கட்டுரையாகும். நம்பியாரூரர் தமது திருத்தொண்டத் தொகைச் செய்யுளிலே "திருநின்ற செம் மையாகக் கொண்ட திருநாவுக்கரையன்' என அப்பரடிகளைச் சிறப் பித்துப் பாடுகின்ருர், இந்த அடிக்கு விளக்கம் கூறும் பாண்டியனர வர்கள் தொல்காப்பியத்தில் வரும்,
**கொடிநிலை சுந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
என்ற சூத்திரத்தில் வரும் "வள்ளி" “கொடிநிலை" என்பவற்றுக்கு நச்சினர்க்கினியர் கூறும் விளக்கம் பொருத்தமுடையதன்று என்ப தனையும், தனது விளக்கத்தினையும் கூறித் தமிழரால் இழக்காது பாது காக்கப்பட்ட தொல்காப்பியமும் திருக்குறளும், கிடைத்தது அவர் பெருந்தவத்தின்பேறு எனக் குறிப்பிடுகிருர்.
அந் நூல்களின் பொருள் முடிபாகிய வள்ளியுங் கந்தழியுமாய் ஒன்றியிணைந்த திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட கொள்கைக்கும், அக்கொள்கையை உணர்ந்துணர்த்துதற்கு இன்றி யமையாத தீந்தமிழ்ச் செம்மைக்கும், அவ்வப்பொழுது ஊறுகள் உண்டாகுந்தோறும் அத்தகு தொல்வைப்புக்களைப் போற்றித் தந் தமர்க்கு நல்கிய தண்ணளி சான்ற திருவருட் செல்வச் செம்மல்கள், அவ்வப் பொழுது தோன்றி வாழ்ந்து திருநின்ற செம்மைநெறிக் காவ லராய்த் திகழ்ந்தனர் எனக் கூறுவர்.
அத்தகைய திருநின்ற செம்மை நெறிக் காவலருட் பிற்காலத்தில் ஈழத்திலே தலைசிறந்து விளங்கிய நாவலரைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிருர்:
'அறத் திறம்பா தொழுகி அதனைப் பிறர்க்கு விளக்கிக் கூறுதலிலே திருவள்ளுவர்க்குப் பின்பும், உண்மையெனக் கண்ட தங்கொள்கையை நிலை நிறுத்திப் பிறருடைய மறுதலைக் கொள்கைகளை மறுத்துரைத்தலிலே நக்கீரனுர்க்குப் பின்பும், சைவசமய நூற்பொருள் விளக்கத்திலே சிவஞான யோகி களுக்குப் பின்பும், சைவ சமய நூல் வெளியீட்டிலே நம்பி பாண்டார் நம்பிக்குப் பின்பும், நம்பனடியினை நயக்கு மன்பிலே நாயன்மார்கட்குப் பின்பும், மன்னரையும் வணங்கா மான்முடைமையிலே மருணிக்கியார்க்குப் பின்பும், தமிழர் வரலாற்றிற் குறிப்பிடத் தக்கார் நல்லை நாவலராவர்.”*
. 18

"திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்” போல வாழ்ந்து தொண்டாற்றிய நல்லை நாவலரடிகளைத் தமிழ்ச் சைவ வுலகம், பிறப்பிறப்பில்லாப் பெருமானடிகளாகவே கொண்டு வையமுள்ளவுரையும் அவர்க்கு வழிபாடாற்றும் கடப் பாடுடையதென்று கட்டுரையை முடிக்கின்றர்;
மற்றைய கட்டுரையாஇய *ஒருவாசக மென்றுணர்" என்பது காரைநகர்ச் சைவமகா ஷ்பைப் பொன் விழா மலரில் 1967ஆம் ஆண்டு வெளிவந்தது.
'தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் ட்டுை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.”
மக்களின் வீடுபேற்றைக் கு றிக்கும் மெய்யுணர்வு நூல்களைத் தொகுத்து, இவை தம்முள் வேறுவேறு வாகமாயினுங் கருத்தொரு மைப் பாடுடையனவென்று *றுவதல்ை இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் பொருள் கொள்ளுமிடத்து ஏனையவை துணைநிற்பன என்பது வெளிப் பட. வடமொழி Pேதனுாலாகிய திரு நான்மறை முடிவோடு நேரொக்கும் முதனூல்கள் இவை என்பதும், அதனுல் வடமொழியுந் தமிழ்மொழியும் தம்முளொத்த சிறப்புடையன என்பதும், இப்பாடற் கருத்தாகும்.
இங்கு தொகுத்தவற்றுள்ளே தேவர்குறள் என்பது திருக்குறள். திருநான்மறை முடிவு: விடமொழியுப நிடதம் மூவர் தமிழ். தேவா ரம் முனிமொழி திருவாய் மொழி: திருமூலர் சொல் திருமந்திர மாலை; கோவை, திருச்சிற்றம்பலக் கோவை; கோவை திருவாசக மென்பது உம்மைத் தொ.ை அவை இரண்டும் ஒருவருடைய வெளி யீடாதலின் அவ்வாறு உடன் எனப்பட்டன.
பாண்டியனுர் இக்கட்டுரையிற் சிறப்பாகக் குறிப்பிட்டது முனி மொழி என்பதை திருவா மொழி என்பதாகும். பண்பாட்டாய்வு
இலக்கிய இலக்கண கால்கட்கூடாக அவை காட்டும் சமூக-பண் பாட்டு அம்சங்களை ஆராயும் முயற்சியிலும் பாண்டியனர் ஈடுபட் டிருந்தார். எழினி என்ற பெயரில் ஒரு சிறிய ஆராய்ச்சி நூலை அவர் முன்னர் வெளியிட்டுள்ளார் என் அறிகிறேன். (நூல் கிட்ைக்க ລສົງທີ່ລ) தொல்காப்பியர் காலத் தமிழகம் என்னும் தலைப்பில் இவர் எழுதிய ஒரு ஆய்வு நூல் கையெழுத்துப் படிநிலையில் உள்ளது.
... 19

Page 17
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் என்பவற்றை ஆதாரங்களா கக் கொண்டு, தமிழர் தம் பண்பாட்டு வரலாற்றை ஆராயும் முயற்சி தமிழகத்தில் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்துள் ளது. தமிழர் பண்பாட்டின உரிய வகையில் வெளிக்கொணர வேண்டுமென்ற ஆர்வமே இதன் அடிப்படை. பாண்டியனர் அவர் களும், இந்த ஆர்வத்தாலே தூண்டப்பெற்று, இந்த நூலை முயன்று எழுதியுள்ளார். இந்நூல் தமிழகம், தொல்காப்பியனர் காலம், தமிழ ரினம், ஆட்சி முறை, வாழ்க்கை முறை, பண்பாடு என ஆறு இயல் களில் அமைந்துள்ளது. தொல்காப்பியம் சங்க நூல்கள் ஆகிய சான்று களை நுணுகியாராய்ந்து எழுதியுள்ள இந்நூல், ஆசிரியருக்கு இயல் பாக அமைந்த ஆய்வுத் திறனைப் புலப்படுத்தி நிற்பது எனினும், தொல்காப்பிய நூலின் காலம் தொடர்பாகக் கூறுகையில், அவர் கி.மு. பதினரும் நூற்ருண்டில் வாழ்ந்தவர் என இவர் கொண்ட முடிபு இன்றைய ஆய்வு நிலையிற் பொருந்துவதன்று.
வானெலிப் பேச்சு
வானெலியில் நடைபெற்ற குறள் விளக்க நிகழ்ச்சிகள் உரை யாடல் வடிவில் அமைந்தன. மாணக்கன் ஒருவனுக்குப் பாடஞ் சொல்லும் பாங்கில் அவை இருந்தன. மாணவர் வணக்கம் என்று சொல்ல, ஆசிரியராகிய பாண்டியஞர் "வாழ்க" என்று வாழ்த்துவார். இந்த நடைமுறையில் ஆசிரியர் மாணுக்கர் உறவுபற்றி அவர் கைக் கொண்டிருந்த நோக்கு நீ லே புலணுகும். மாணுக்கன் கொள்வோளுக வும், ஆசிரியர் கொடையாளியாகவும் இங்கு இரு தரப்படுகின்றனர். அவன் ஓர் அதிகாரி (Authority) ஆக எண்ணப்படல் வேண்டும். புலவர் பாண்டியனர் தமக்கிருந்த தன் நம்பிக்கை காரணமாக அவ் வாருன ஒரு மதிப்பீட்டை - நல்லம் யாம் என்னும் நடுவு நிலை மையை - தமது கல்வி அழகினலே பெற்றுக் கொண்டார். ஆகை பால் “மொழி முட்டறுத்தலும், விழுமியது மொழிதலும்' அவர்தம் பணிகள் ஆயின.
ஆக்கத்துணை .
தாமே எழுத்தாக்கங்களை மேற்கொண்டது மட்டன்றிப் பிறரது ஆக்கமுயற்சிகட்கும் துணைநின்ற பாண்டியனரின் பண்பை அவர் பங்கு கொண்ட நிறுவன அமைப்பு, அவர் வழங்கிய முன்னுரை, சிறப்புப் பாயிரம் என்பன காட்டுவன, அறுபதாம் ஆண்டுகளில் வெளிவந்த நோக்கு என்னும் முத்திங்களிதழின் செய்யுட்களத்திற்குத் தலைவராக அமைந்து இவர் வழிநடத்தியுள்ளார். அதிற் கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். நோக்கு" என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை இலக்கண சிந்தனைகள் என்னும் தலைப்பிற் பின்னர் நோக்கப்படும்.
... 20 ...

நோக்கு இதழிலே அழகிய நூறு, அழகிய நூற்றைம்பது என்னும் தலைப்புக்களில் பிரசுரமான கவிதைகளே பின்னர் அழகியது என்னும் நூலாக உருப்பெற்றன என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. 1966 ஆம் ஆண்டிற் கலாநிதி ஆ. சதாசிவம் அவர்கள் தொகுத்த ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்ற நூலுக்கு இவர் வழங்கியுள்ள சிறப்புப்பாயிரம் அத்தொகுப்பின் இன்றியமையாமையை எடுத்து விளக்கியுள்ளதோடு, தமிழ் காக்கப்படவேண்டுமென்ற ஆர்வத்தை யும் புலப்படுத்துவது. அதன் இறுதிப் பகுதி பின்வருமாறு அமை கின்றது:
வேந்தர் போயினர் வேளிரும் போயினர் ஈந்த வள்ளல்கள் யாவரும் போயினர் போந்த தீங்கினைப் போற்றிநம் ஆண்டவன் தீந் தமிழ்த் திறம் செவ்விதிற்காக்கவே
இக்கவிதைக் களஞ்சியத்தை ஆக்குவதிற் பாண்டியனருக்குப் பெரும்பங்கு இருந்தது. பேராசிரியர் சதாசிவம் பதிப்பித்த ஞானப் பள்ளு என்னும் பிரபந்தமும் புலவர் பாண்டியனரின் முயற்சியி ஞலேயே வெளிவந்தது எனக் கூறுவர்.
தமிழவேள் என்பார் உரையெழுதி வெளியிட்ட திருக்குறிப்புக் கொண்ட நாயனுர் புராணத்திற்கு இவர் முன்னுரை வழங்கி ஊக்கு வித்துள்ளார். கனகி புராணம் என்ற நூலை 1949 இல் வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் அவர்கள் பதிப்பித்தபோது அந்நூற் பாடல்களின் வழுக்களைந்து பொழிப்புரை, குறிப்புரை என்பன கூறி உதவியுள் ளார். யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைப் பாட்டுக்களைப் பார்வை யிட்டுச் செப்பம் செய்த பதிப்பாசிரியராகவும் அவர் பணியாற்றினர். யோகர் சுவாமிகளின் சீடர் சிலர் பாண்டியனருக்கு மாணுக்கர் களாய் இருந்தமையால் இந்தத் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். யோகர் சுவாமிகளின் பாட்டுக்கள் சித்தர் வாக்கு மரபைச் சார்ந் தவை. நிகழ்கால யாழ்ப்பாண மொழி வழக்குகளையும், சைவத் திருமுறை வழக்குகளையும் உள்வாங்கி எழுந்தவை. பாண்டியனுர் மரபோ பண்டை உரையாசிரியர் மரபு, பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க் கணக்குச் செய்யுள்களிலே தோய்ந்து திக்ளக்கும் மரபு. எனினும் யோகர் சுவாமிகளின் பாட்டுக்களைப் பதிப்பாக்கத்தின் பொருட்டுப் பார்வையிட்டுள்ளார் பாண்டியனர். நற்சிந்தனைப் பாட்டுக்களின் இறுதி வடிவத்துக்கு (இன்று அச்சிலே காணப்படும் இறுதி வடிவத்துக்கு) பாண்டியனர் பங்களிப்பு பெரு மளவினது என்று கூறலாம். யோகர் - பாண்டியனுர் சங்கமம் சுவையான ஆய்வுப் பொருளாய் அமையத்தக்கது.
... 2 ...

Page 18
செல்லப்பா சுவாமிகள் நினைவு மலரிற் பாண்டியனர் எழுதிய கட்டுரையில் யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடல்க்ளைச் சுர வரிசை அமைத்து மேடைகளிற் பாடினல், அவை சங்கீத மும்மூர்த்தி களின் கீர்த்தனைகளின் மகத்துவத்தைப் பெறும் என்ற கருத்தைத் தெரிவித்திருக்கின்ருர். அவர் கருத்தைச் செயற்படுத்துவது இசை வாணர் கடமையாகும்.
இலக்கணச் சிந்தனைகளும், சொல்லாக்க முயற்சிகளும்
பாண்டியனர் அவர்களது ஆளுமையிற் குறிப்பிடத்தக்க பகுதி அவர்தம் இலக்கண சிந்தனை, சொல்லாக்க முயற்சி என்பனவாகும், இலக்கண நூல்கள் பலவற்றையும் கற்றுத் தெளிந்திருந்த அவர், உரையாடல்களிற் பேச்சு வழக்கில் அமையும் சொற்களை வழங்கிய தில்லை என அவரோடு பயின்றேர் கூறுவர். வந்திட்டுது, போயிட் டுது என்றெல்லாம் கூறமாட்டார். வந்துவிட்டது, போய்விட்டது என்றே கூறுவார் என்பர். இது மொழியமைப்பைப் பேணும் சிந் தனையின் தொழிற்பாடு ஆகும். தொல்காப்பியம், யாப்பருங்கலக் காரிகை, இறையனர் களவியலுரை முதலியவற்றைப் பாடஞ் சொல்லி வந்தமையால் இந்தச் செம்மொழி உரையாடல் திறன் அவருக்கு இயல்பாகவே வாய்த்துவிட்டது எனக் கருத முடிகிறது.
எழுத்துக்களின் ஒலி தொடர்பாக அவர் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளார். ர, ற என்பவற்றை ஒலிக்கும் முறை இலங்கை யில் தலைகீழ் ஆகிவிட்டது என்பார். ஒற்றுதல், வருடுதல் என்னும் எழுத்தொலிப்பு முயற்சி பற்றிய பழைய சூத்திரங்களின்படி 'ற' என்பதற்கு ta, என்னும் ஒலியே ஏற்புடையது என்பர். 'றகர மெய் இரட்டித்து வரும் தருணங்களில் மட்டும் கற்ற, பெற்ருர், வெற்றி என்றவாறு இன்றைய இங்குள்ள தமிழர்களால் சரியாக ஒலிக்கப் படுகிறது என்பார். ஆனல் இரட்டிப்பில்லாத சமயங்களிலும் அவற்றை வல்லோசையுடன் ஒலித்தலே முறை என்பார். அவ்வாறே மாற்றியுரைத்துப் பேசுவர்.
‘ரப்பர்’ என்னும் சொல்லை ‘நப்பர்" என்று தமிழ் பெயர்ப்புச் செய்யலாம் என்பார். பாரதிதாசன் பாட்டிலே 'ரத்த வெறி கொண்டலையும் நால் வருணம்’ என்றும் "ராமாயணம் என்னும் நலிவுதரும் கதை" என்றும் வருகின்றன. பழந் தமிழ்ச் சொற்களில் ரகரம் முதனிலை ஆவதில்லை. ஆனற் பிற்காலப் பிரயோகங்களில் அவ்விதம் மொழி முதலாய் வரும்போது ரகரத்துக்கு நகரம் மோனை போல் வருவதனைப் பாரதிதாசன் பாட்டு வரிகள் காட்டுகின்றன. இது பாட்டியல் ஓசை உணர்வு முறையிலே பாரதிதாசன் கைக்
... 22 ...

கொண்ட நடைமுறை. இதனைப் பாண்டியனர் அறிந்திருந்தாரோ தெரியவில்லை. ஆனல், ரப்பர் என்பதில் வரும் ரகரம் பழைய ஒலி மரபுப்படி, மொழி முதலாய் வராதாகையால், அதனை 'நகர"மாக மாற்றி, நப்பர் என வழங்கலாம் " என்பது பாண்டியனர் கருத்து. அவ்வாறே ஷேக்ஸ்பியர் என்னும் பெயரை சேப்பியர் என்று தமி ழில் வழங்கலாம் என்பார். இவ்வாறு செய்தல் பெயரடையாளத்தை உருத்தெரியாது சிதைத்துவிடும் என்பது பொதுவாக நிலவும் கருத் தாகும். ஆஞல், பாண்டியனர் அதுபற்றிக் கவலைப்பட மாட்டார். ஒலிப்பெளிமையும் ஒலி மரபுமே இங்கு பாண்டியனரின் அக்கறைக்கு உரியன.
தமிழ் எழுத்துக்களின் தொகை தொல்காப்பியர் கூறியபடி உயிர் 12, மெய் 18, சார்ந்து வரும் 3 ஆக 33 என்பதே இவர் கருத்தாகும். பிற்கால இலக்கணகாரர் போல 249 என்பது இவர்க்கு
de L-6ów Lunr L-6ão Gav.
நோக்கு (1965 - எண் 5) இதழில் வெளிவந்த இவரது நோக்கு என்ற கட்டுரை இவரது செய்யுளிலக்கணச் சிந்தனையைப் புலப் படுத்துவது. தொல்காப்பியச் செய்யுளியலிலே செய்யுளின் 34 உறுப் புக் களில் ஒன்ருகச் சுட்டப்படுவது நோக்கு. இதற்கு உரையாசிரியர் கள் கூறிய பொருண்மைகளை ஆராய்ந்த இவர், அவற்றின் விளக்கம் போதா எனக் கருதித் தம் நோக்கில் அதற்கு விளக்கம் தந்தார். மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி ஆகிய ஒவ்வொரு உறுப்பும் தனித்தனி நிகழ்வனவாகாது தொடர்ச்சியாக ஒன்றிலொன்று தங்கி நிற்பனவாகவும், ஒன்றை மற்றென்று நோக்கி நிற்பதாகவும் அமை தலே நோக்கு என்பது இவரது விளக்கமாகும். இந்த விளக்கத்தை அவர் தரும்பொழுது பழைய உரையாசிரியர் தம் உரைசளையும் பரி சீலித்து உரைத்து நிறுத்தி, தடைவிடை முறையிலே தமது தீர்ப் பினைச் சென்றடைவது கவனித்தற்குரியது.
கலைச் சொல்லாக்கம் என்ற துறையிற் பாண்டியஞர் உத்தியோக பூர்வமாகப் பணியாற்றியவரல்லர். ஆயினும் அத்துறையில் ஈடுபட் டோர் பல சந்தர்ப்பங்களில் இவரிடம் ஆலோசனை பெற்றிருக்கின் றனர் எனத் தெரிகறது. குறிப்பாகச் சொல்லாக்கப் பணியில் ஊன்றி ஈடுபட்டவரான காலஞ் சென்ற திரு. இ. இரத்தினம் அவர்கள் புலவர் பாண்டியஞரிடம் பாடம் கேட்ட தலை மாணுக்கருள் ஒருவர்.
புலவர் பாண்டியஞர் சொல்லாக்கக் குழு எதிலும் உத்தியோக பூர்வமாக அமர்ந்ததாகத் தெரியவில்லை. சொல்லாக்கக் குழுக்கள் ஈழத்தில் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் காணும் வகையிலே பணி யாற்றியமையால், ஆங்கிலப் பயிற்சி இல்லாத பாண்டியனர் அப்
ܘܗ• 23

Page 19
பணிக்கு அமர்த்தப்படவில்லைப்போலும். ஆயினும் கொழும்பில் வாழ்ந்த உயர் கல்வித் தமிழ்ப் புலமையாளர் என்ற வகையிலே அவருடைய மாணுக்கர் மூலம் சொல்லாக்கப் பணியும் சிறப்பெய் திற்று எனக் கூறலாம். சொல்லாக்கும் பணியில் ஊன்றி ஈடுபட்ட திரு. இ. இரத்தினம் அவர்கள் பாண்டியனருடன் அடிக்கடி கலந்தா லோசிப்பதை நாம் குழுக் கூட்டங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஆங்கில அறிவில்லாது விட்டாலும் ஆங்கிலச் சொற் களின் உள்ளுறை கருத்தை விளக்கிக் கூறியவுடனேயே, விளங்கித் தூயத்தமிழ்ச் சொல் தரும் தகைமை புலவரிடம் இருந்தது. சொல் லாக்கும்போது பிறமொழிச் சொல்லின் கருத்தை எடுத்துச் சொல்லி பிளந்து, சொல்லடியெடுத்துப் புலவர் செயற்படுவது வியத்தக்கதாய் இருக்கும். இவ்வகையில் இவரால் ஆக்கப்பட்ட சில சொற்கள் நோக்கத்தக்கன:-
நோன்மதி
சிங்களத்தில் Poya என்பதற்கான தமிழ்ச் சொல்லாக்கம் இது. போயா என்பது பூஜா என்பதன் அடியாக உருவானது. இதன்படி வழிபாட்டுக்குரிய திருநாள் என்னும் பொருள் உடையது. சந்திரன் பூரணை, அமாவாசை, அட்டமி என்னும் திதிநிலைகளைச் சார்வதை அடுத்து இது நிகழ்வது. எனவே பூஜை (வழிபாடு) என்பதற்குரிய நோன்பும், சந்திரன் என்பதற்குரிய மதியும் இணைந்த நிலையில் "நோன்மதி உருவாற்று எனத் தெரிகிறது.
இவ்வாறே செவ்வி’ ‘செவில் "உறுப்பினர் முதலிய சொற் களும் ஆக்கப்பட்டுள்ளன. பேட்டி எனப் பொதுவாக வழங்கிய சொல்லே பாண்டியனர் கருத்தின்படி செவ்வியாயிற்றெனத் தெரி கிறது. செவ்வி என்ற தமிழ்ச் சொல்லுக்குத் தருணம் என்பதே பொருள். நல்ல தருணம் நோக்கிச் சென்று தேரில் உரையாடுவதைக் குறிக்க இச்சொல்லை வழங்கலாம் எனப் பாண்டியஞர் ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று இச்சொல் உலகளாவிய நிலையில் வழக்குப் பெற்றுவிட்டது. செவில் என்பது Nursery என்பதைச் சுட்டுவது. செவிலி என்ற பண்டைத்தமிழ்ப்பதம் சுட்டும் வளர்ப்புத் தாய் என்ற பொருண்மையினடியாக Nursery *செவில் ஆயிற்றெனத் தெரிகிறது. அவைகளின் அங்கத்தவர்களை உறுப்பினர் என்பது பொதுவழக்கு, இச்சொல் வழுவுடைத்தென்பர். பாண்டியனுர் உறுப்பினர் என்பது உறுப்பை உடையோரைக் குறிப்பதன்றி, உறுப் பாக உள்ளோரைக் குறிப்பதன்று என்பது அவர் கருத்து, எனவே உறுப்பர், உறுப்பாளர் என்பனவே பொருத்தமான சொற்கள் என் பது செய்யுட்களக் கூட்டமொன்றிற் பாண்டியனரால் எடுத்துரைக்

கப்பட்டது என இ. முருகையன் நினைவுகூருகிருர். (நேரடி உை யாடல்), பாண்டியனரின் இத்தகு சிந்தனைகள் மொழி - பண்பாட்டு நோக்கில் விரிவான ஆய்வுக்குரியன.
வீட்டிலும் குடும்பத்தாருடனும், பேச்சு வழக்கிலும் தூயதமிழ்ச் சொற்களையே வழங்கி வந்தார். நிலைப்பேழை (Almerah) நாற்காலி (Chair) g)(5á604, (Seat) 56őr (Table) login Li (Bench) u6us 6öof (Window) GunT GE96ó (Radio) Guo ši G35ft6io (Pen) GTypg|Gastrốão (Pencil) GALDuiùÚ60) u (Shirt) 5íTibFL GOL - (Trouser) slunTq- (Shoe) போன்ற தனித் தமிழ்ச் சொற்களே புலவரது குடும்பத்தில் அன் ருட வழக்கில் இருந்தன. முந்திரிப் பருப்புக்கு "அண்டிமாம் பருப்பு" என்றே கூறுவர். பழந்தமிழ் வேர் கொண்ட மலையாளத்தில் முந் திரி மரத்துக்கு சுண்டிமா என்று பெயர். புலவர் கூற்றின் படி இன் றைய கேரளம் பழைய சேரநாடு ஆகும். அதனல் பல தூயதமிழ்ச் சொற்கள் இன்று தமிழர் வழக்காற்றிடை இல்லாவிடினும், அவை மலையாள மொழியில் உள்ளன என்றும், அவை தமிழ்ச் சொல்லாக் கத்துக்குத் துணை செய்யும் என்றும் கொள்வர்.
பன்முக ஆளுமை
ஒரு தமிழ் பேரறிஞர் என்ற நிலையில் புலவர் சிவங் கருணுலய பாண்டியனுர் அவர்கள் நல்லாசிரியராகவும், சமயதத்துவ அறிஞரா கவும் , அவற்றிற் சமரச நோக்கினராகவும், பண்பட்ட வாழ்க்கை நெறியைப் ப்ேணியவராகவும், தனித்தமிழ்ப் பற்ருளராகவும், நூலா சிரியராகவும், ஆக்கத்துணைவராகவும், இலக்கணம், சொல்லாக்கம் என்பவற்றிற் புதிப் சிந்தனைகளை முன்வைத்தவராகவும் பன்முக ஆளுமையுடன் நிகழ்ந்தமையை அவதானித்தோம். இப்பெரியாருக்கு அவரது வாழ்நாளிலே 1971 ஆம் ஆண்டில் மாணக்கரும் ஆர்வல ரும் கொழும்பிலே பாராட்டுவிழா எடுத்துள்ளனர். 31-5-1971) அவ்விழாவில் வழங்கப்பட்ட பாராட்டி தமிழில் அவரைக் குறு முனியான அகத்தியரோடு ஒப்பிட்டும், தனித் தமிழ் ஆர்வத்தை விதந்துரைத்தும் அமைந்த பாடல்கள் இரண்டை இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமுடைத்தெனக் கருதுகிறேன்.
கண்ணுதற் கடவுளோடு கழகத்தின்மர்ந்து முன்னுள் எண்ணுதற் கரியமும்மைத் தமிழுக்கு நூலினது செய்த அண்ணன்மா முனியாமந்த அகத்தியன் ருனேயிந்நாள் மண்ணிடைவந் தாலன்ன மாண்புறு காட்சியோயே! (1) ஏயநந் தமிழின் தொன் மை யியல்வள மினிதி ஞேர்ந்து சேயநாட்புலவர் சென்ற செந்நெறி வழாது போற்றி ஆயநூற் பொருள்களெல்லா மயன்மொழி கலத்தலில்லாத் தூயதாந் தமிழிற் சொல்லுந் தொண்டு நீடினிது வாழி (9)
ممدعو 25 .

Page 20
இவ்வாறு பாராட்டப்பட்ட அப்பெரியார் ஐந்து ஆண்டுகளின் பின்னர் 1976-06-30 அன்று இயற்கை எய்திஞர். இத்துயரச் செய் தியைத் தமிழோசை 1976 ஆணி இதழ் "பகுத்தறிவுச் சிங்கம் மறைந் தது" என்ற தலேப்பில் வெளியிட்டது. வேறுபல பத்திரிகைகளும் அனுதாபச் செய்திகள் வெளியிட்டன.
மேலும் புலவரிடம் எல்லாம் ஒப்படைத்த அறிவுமண இரத்தி னம் அவர்கள் தமது தமிழ் நோக்கு - அறிவு யாவும் பாண்டியகு ரதே எனச் சிறிதும் செருக்கின்றி ஒப்புக் கொண்டவர். தனது நூல் களையும் புலவருக்கு அர்ப்பணித்தவர். கலைச்சொற்றிணைக் களத்திலே தாம் புகுத்திய தூயதமிழ்ச் சொற்கள் யாவும் புலவரதே எனத் திறந்த மனத்துடன் கூறுவர். அவர் புலவரது நூல்கள் அவ்வப் போது வெளிவரத் துணை செய்ததுடன், புலவரின் மறைவுக்குப் பின் அவரைப் பற்றிப் புலவர் போற்றிசை" என்ற நூலில் புலவரது குணநலன்களையும் பன்முக ஆளுமையையும் நினைவு கூருகின்றர். புலவரது ‘நெடுமால் பெயராயிரம்', 'திருவருட் செற்றம்" என்ற நூல்களையும் தனது செலவில் வெளியிட்டார். புலவருக்கு அர்ப் பணித்த நூலொன்றிற் புலவர் பற்றிப் பின்வருமாறு கூறுவது "உள்ளத்தைத் தொடுகின்றது".
"பூதங்கள் சற்றுறை பொடிமேனி செந்தமிழ் காதலின் மகிழ்ந்துறை கற்பகம் n is சிந்தனை பழுத்த சென்னி இன்சொலில் அறம் ஏற்று நாவலம் அன்புதோய் முறுவல் பகுத்தாய் கட்டுரை திறமிவை யாய இவனே.
புலவர்ப் புலவன் மெய்யியற் பாவலன் பழந்தமிழ்ச் சிவநெறி படியும் சிந்தையன் எண்ணும் எழுத்தும் ஒத்தியல் கண்ணியன் சொல் பிளந் தரும்பொருள் தெளிக்கும் தென்னவன் தமிழ்ப்புல மீமிசைத் தோன்றிய தேனடை அளாவிச் செழுங்கலை நவிலும் வள்ளியன் அகரமொ டாதி என்னகம் அமர்த்திய அகவல்நம்பி அவன் புகழ் போற்றி"
இரத்தினம் அவர்கள் புலவர் நினைவாக வெளியிட்ட புலவர் போற்றிசை" என்ற நூலிலே புலவரது குணநலன்களையும் பன்முக ஆளுமையையும் நினைவு கூர்ந்துள்ளார். நம்பியகவல் என்ற நூலின் தமிழ் வளமும் மெய்யியல் வளமும் தனித்தனி ஒரு 'கலாநிதி"ப் பட்ட ஆராய்ச்சிக்கு உகந்த விடயமாகும் தரத்தன என அவர் அதிற்
بست. 20 --

குறிப்பிட்டுள்ளார். நம்பியகவல் மட்டுமல்ல,அவரது ஏனைய ஆக்கங் களும் செயற்பாடுகளும் உயர்நிலை ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண் டிய அளவு காத்திரமானவை என்பதைச் சுட்டிக் காட்ட விழை கின்றேன். இந்நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்கு என்னைப் பல முறையும் தூண்டிய கொழும்புத் தமிழ்ச் சங்கச் செயலளர் திரு. க. இ. க. கந்தசாமி அவர்களுக்கும், தகப்பனரின் வாழ்க்கை நெறி யைப் பின்பற்றி அதன்படி ஒழுகித் தகப்பனரின் இந்நினைவுப் பேருரை நிகழவேண்டுமென்பதிற் பல தகவல்களைத் தந்து, பல வகையிலும் ஊக்கமளித்த அவரது மூத்த மகன் திருவருள்வள்ளல் அவர்களுக் கும் நான் பெரிதும் நன்றியுடையேன்.
பாண்டியனரின் பன்முகத் தொண்டு பற்றி விரிவான ஆய்வு நடத்தப்படல் வேண்டும். நூல்களாக எழுதப்பட்ட கையெழுத்துப் படிகளும், சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளும் ஈழகேசரி, வீரகேசரி, தினகரன் முதலிய பத்திரிகைகளில் வெளியான கட்டுரை களும் (தொகுக்கப் பெற்று) அச்சிடப்பட வேண்டியது அவசியமாகும். கொழும்புத் தமிழ்ச் சங்கம் அவரது பணியைப் பயன்படுத்தித் தமது சங்கத்திற் பல தமிழ் வகுப்புகளை நடத்தியிருக்கின்றது. எனவே அவருக்குச் செய்யும் நன்றிக் கடனகத் திருக்குறள் அறத்துப் பாலுரை யினையும் (முப்பால் விளக்கம்) மாணவருக்குப் பயன்தரக்கூடிய வேறு சில நூல்களையும் வெளியிடுவது மிகப் பொருத்தமாகும்.
சிவங் கருணுலய பாண்டியஞருக்கு 30. 5. 1971 இல் அளிக்கப் பட்ட பாராட்டு விழா பற்றி மல்லிகை ஜூன் 1971 மலரில் நெல்லை க. பேரன் எழுதிய 'கொழும்புக் கடிதம்' என்னும் தலைப்பில் வெளி யான செய்திகள் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். eol606h1 l'AIT61607: པ་ དང་
"தமிழறிஞரும் சித்தாந்த வித்தகருமான புலவர் சிவங் கருணுலய பாண்டியனருக்கு அவருடைய மாணவர்கள் பொன்னடை போர்த்தி அவருக்குச் பொற் கிழியும் (ரூபா 9500) வழங்கி, இலங்கையில் புது வரலாறு படைத்த குதூகல விழா அன்று 30, 5, 71) நடை. பெற்றது."
"திரு. சி. இரங்கநாதன் பேசுகையில் தமிழ் இலக்கிய, இலக் கணத்துறையில் அருந்தொண்டாற்றி வரும் பாண்டியனரின் கை யெழுத்துப் பிரதிகளை அச்சு வாகனம் ஏற்ற வேண்டும் பாண்டிய ஞர் இதுவரையில் எவரும் எழுதாத வகையில் மிகச் சிறப்பாகச் சைவசித்தாந்தக் கருத்துக்களை உள்ளடக்கியதாகத் திருக்குறளுக்குத் தெளிவுரை எழுதியுள்ளார். தமிழர்கள் ஒன்று சேர்ந்து அவரது தமிழ் ஆக்கப் பணிகளுக்கு உதவ முன்வரவேண்டுமென்ருர், "
27 .

Page 21
திருமதி பாலகிருஷ்ணன் பேசுகையில், "பாண்டியனரின் தமிழ் ஆராய்ச்சிகள் நூல் வடிவம் பெற்ருல் பயன் அதிகம் விளையும். இதற் காகப் "பாண்டியனர் வெளியீட்டு நிலையம்" ஒன்றை மாணவர்களாகிய நாம் அமைக்கவேண்டும்." ۔ ۔
இப்பாராட்டுவிழா நடைபெற்று அவர் உயிரோடு இருந்த காலம் ஐந்து ஆண்டுகள். அவர் இயற்கை எய்திப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆய்விட்டன. பாராட்டு விழா நடைபெற்று இன்றுவரையுள்ள இப் பதினேழு ஆண்டு காலத்தில் “பாண்டியஞர் வெளியீட்டு நிலையமோ', நூல்கள் வெளியீடோ, கட்டுரைகளின் தொகுப்போ , அன்றி அவரது பல்வகைத் தொண்டுகள் பற்றிய ஆராய்ச்சியோ அவரது மாணவரால் நடைபெறவில்லை. - s
புலவர் பாண்டியனரின் மாணவர் சிலர் இயற்கையெய்திவிட்டனர். சிலர் வெளி நாடுகளிற் பண வசதியுடன் வாழ்க்கை நடத்துகின்றனர். பல மாணவர் இன்னும் இலங்கையில் இருக்கின்ருர்கள். பாராட்டு விழாக்களும் நினைவுப் பேருரை, அஞ்சலி உரைகளும், அவை நிறைவு பெற்றபின், ஆக்கபூர்வமான செயல்கள் நடைபெறுவதில்லை. இதற்குப் புறநடையாகப் பிற நாடுகளிலும் இலக் கையிலும் வாழும் அவரது மாணவர்கள் (திருமதி மகேஸ்வரி பாலகிருஷ்ணன் அவர்கள் குறிப் பிட்டது போன்று) பாண்டியனர் வெளியீட்டு நிலையம், ஒன்றிணைநிறுவி (அவரே இதனை முன்நின்று செயற்படுத்தலாம்) அவரது நூல்களில் இக்காலத்துக்குப் பயன்தரக்கூடிய நூல்களையேயாயினும், சஞ்சிகைகளி லும், பத்திரிகைகளிலும் வெளியான கட்டுரைகளின் தொகுதிகளையே யாயினும் வெளியிடுதல் அவருக்குச் செய்யும் நன்றிக் கடனகும். “பாண் டியனுரின் மாணவர்" எனப் பெருமைப்படுவதோடு நின்றுவிடுவதில் எவ்வகைப் பயனும் இல்லை; "அவரின் மாணவராகிய நாம் இவற்றை யெல்லாம் செய்து முடித்தோம்’ என்று செயலிற் காட்டுவதுதான் Gou (60) LDLurra Lib.
பல மாதங்களுக்கு முன் திகழவிருந்த இந்நினைவுப் பேருரை பல காரணங்களாற் பிற்போடப்பட்டு இன்று நிறைவேறுவது குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன். புலவர் பாண்டியனரின் கையெழுத்துப் படிகள் நூலுருப்பெறுவதற்கான ஊக்கத்தையும் பொருள் வளத்தை யும் பெறுவதற்கு ஒரு தூண்டு கோலாகவும், அவரின் பன்முகத் தொண்டு பற்றி விரிவான ஆராய்ச்சி அவரது மாணவரோ ஆராய்ச் சியாளர்களோ மேற்கொள்வதற்கும் அடிக்கல்லாகவும் எனது இந்த உரை அமையுமென எதிர்பார்க்கிறேன்.
"என்னை நன்ரு ய் இறைவன் படைத்தனன் தன்னை நன்ருகத் தமிழ்செய்யு மாறே”*
28

கப்பட்டது என இ. முருகையன் நினைவுகூருகிறர். (நேரடி உை யாடல்), பாண்டியனரின் இத்தகு சிந்தனைகள் மொழி - பண்பாட்டு நோக்கில் விரிவான ஆய்வுக்குரியன.
வீட்டிலும் குடும்பத்தாருடனும், பேச்சு வழக்கிலும் தூயதமிழ்ச் சொற்களையே வழங்கி வநதார். நிலைப்பேழை (Almerah) நாற்காலி (Chair) இருக்கை (Seat) தவிசு (Table) மராடர் (Bench) பல கணி (Window) வானெலி (Radio) மை கோல் (Pen) எழுதுகோல் (Pencil) Gud Üù6DLu (Shirt) Ji ir pibFL - GDL— (Trouser) SunTiq. (Shoe) போன்ற தனித் தமிழ்ச் சொற்களே புலவரது குடும்பத்தில் அன் முட வழக்கில் இருந்தன. முந்திரிப் பருப்புக்கு "அண்டிமாம் பருப்பு" என்றே கூறுவர். பழந்தமிழ் வேர் கொண்ட மலையாளத்தில் முந் திரி மரத்துக்கு சுண்டிமா என்று பெயர். புலவர் கூற்றின் படி இன் றைய கேரளம் பழைய சேரநாடு ஆகும். அதனல் பல தூயதமிழ்ச் சொற்கள் இன்று தமிழர் வழக்காற்றிடை இல்லாவிடினும், அவை மலையாள மொழியில் உள்ளன என்றும், அவை தமிழ்ச் சொல்லாக் சுத்துககுத் துணை செய்யும் என்றும் கொள்வர்.
பன்முக ஆளுமை
ஒரு தமிழ் பேரறிஞர் என்ற நிலையில் புல்வர் சிவங் கருணுலய பாண்டியனுர் அவர்கள் நல்லாசிரியராகவும், சமயதத்துவ அறிஞரா சவுப் , அவற்றிற் சமரச நோக்கினராகவும், பண்பட்ட வாழ்க்கை நெறியைப் பேணியவராகவும், தனித் தமிழ்ப் பற்முளராகவும், நூலா சிரியராகவும், ஆக்கத்துணைவராகவும், இலக்கணம், சொல்லாக்கம் என்பவற்றிற் புதிய சிந்தனைகளை முன்வைத்தவராகவும் பன்முக ஆளுமையுடன் நிகழ்ந்தமையை அவதானித்தோம். இப்பெரியாருக்கு அவரது வாழ்நாளிலே 1971 ஆம் ஆண்டில் மானுக்கரும் ஆர்வல ரும் கொழும்பிலே பாராட்டுவிழா எடுத்துள்ளனர். 31-5-1971) அவ்விழாவில் வழங்கப்பட்ட பாராட்டி தமிழில் அவரைக் குறு முனியான அகத்தியரோடு ஒப்பிட்டும், தனித் தமிழ் ஆர்வத்தை விதந்துரைத்தும் அமைந்த பாடல்கள் இரண்டை இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமுடைத்தெனக் கருதுகிறேன்.
கண்ணுதற் கடவுளோடு கழகத்தினமர்ந்து முன்னுள் எண்ணுதற் சரியமும்ம்ைத் தமிழுக்கு நூலினது செய்த அண்ணன்மா முனியாமந்த அகத்தியன் ருனேயிந்நாள் மண்ணிடைவந் தாலன்ன மாண்புறு காட்சியோயே! (1) ஏயநந் தமிழின் தொன மை யியல்வள மினிதி னேர்ந்து சேயநாட்புலவர் சென்ற செந்நெறி வழாது போற்றி ஆயநூற் பொருள்களெல்லா மயன்பொழி கலத்தலில்லாத் தூயதாந் தமிழிற் சொல்லுந் தொண்டு நீடினிது வாழி (9)
بیا 25 .

Page 22