கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பல்கலை வேந்தர் (இராமுப்பிள்ளை சுந்தரலிங்கம் நினைவு மலர்)

Page 1
(அமரர் இராமுப்பிள்
4 அவர்களின் சிவப را کار
- ) 1 நினை6
.05.05 | عرفاته
 
 

தப்பேறு குறித்த வ மலர்
2007

Page 2


Page 3

9. சிவமயம்
பல்கலைவேந்தா
உதவி அத்தியட்சகர், பரீட்சைத் திணைக்களம் பிரதம பதிப்பாசிரியர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வடமாநில கல்விப்பணிப்பாளர் தமிழ்மொழி இணைப்பாளர். தேசியகல்விநிறுவகம் மாகாணப் பரீட்சை ஆணையாளர். வடகிழக்கு, திருகோணமலை,
யாழ்ப்பாணம் இணுைவையம்பதியைச் சேர்ந்த அமரர் இராமுப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்களின் சிவப்பேறு குறித்த நினைவுமலர்
05.05.2007

Page 4

சிவமயம்
இணுவையம்பதியைச் சேர்ந்த அமரர் இறாமூப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள்
தோற்றம் மறைவூ 15 05 «Х• (X- 05 04 (X- «Х•
ஆண்டுவிய பங்குனியில் ஆகும் அபரபக்கம்
பூண்ட திருதியை சேர்திதியே - நீண்டபுகழ் நல்லினுவைச் சுந்தர லிங்கமாம் நன்மகியன் நல்லசிவப் பேறடைந்த நாள்
திதி - பங்குனி அபரபக்கத் திருதியை

Page 5

திருச்சிற்றம்பலம்
விநாயக வணக்கம்
هو
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.
தோத்திரமாலைத் தொகுப்பு
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை
தேவாரம்
திருஞானசம்பந்த முர்த்தி நாயனார்
அங்கமும் வேதமும் ஒதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே

Page 6
திருநாவுக்கரசு நாயனார்
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து நைந்து போவதோர் வழியுங் காணேன் அண்டனே அண்ட வாணா அறிவனே அஞ்சலென்னாய் தெண்டிரைப் பழனஞ் ஆழ்ந்த திருக்கொண்டிச் சரத்து ளானே.
சுந்தரமுர்த்தி நாயனார் مپ
மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
வள்ளலே கன்னமே பேசிக் குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையால் மிகை பல செய்தேன் செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன் பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே
திருவாசகம்
முத்தனே முதல்வா முக்கணா முனிவா
மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத்தருள் செய்யும் சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசிர் அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே!
உணர்வு சூழ் கடந்ததோ ருணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே!
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
6

திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் ஞானத்தின் திருவுருவை நான் மறையின் தனித்துணையை வானத்தின் மிசையன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்
திருப்புகழ் இறவாமற் பிறவாமல் எனையாள் சற்குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமானே
கந்தபுராணம் வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை-கொள் சைவநிதி விளங்குக உலகம் எல்லாம்
திருச்சிற்றம்பலம்

Page 7
ஒளவையார் அருளிய
விநாயகர் அகவல்
ஆசிரியப்பா
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன் அரை ஞானும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திரமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி யென்செவியில்

தெவிடடாத ஞானத தெளிவையுங் காடடி ஐம்புலன் றன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிகள் ஒடுங்கும் கரத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந் திரத்தால் ஐம்புலக் கதன்வ அடைப்பதுங் காட்டி ஆறா தாரத் தங்கிசை நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடை பிங்கலையின் எழுந்த றிவித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத் தறிவித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச் சண்முக தூலமும் சதுர்முக சூக்மமும் எண்முகம் ஆக இனிதெனக் கருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை அறிவித்து எனக்கருள் செய்து

Page 8
முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி யிரண்டுக் கொன்றிட மென்ன அருள் தரும் ஆநந்தத் தழுத்தி என் செவியில்
எல்லை யில்லா ஆநந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச் சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி அணுவுக் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடு மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே!
விநாயகர் அகவல் முற்றிற்று.
10
 

இணுைவில் இராமுப்பிள்ளை சுந்தரலிங்கம்
அவர்களின் வாழ்க்கை வளம்
ஈழயாழ்ப்பாண இதயமென்றுலகோர் ஆழவுரைக்கும் அழகமர்பேரூர் மெய்ப்பொருள் காணும் வித்தைகள்பயிலும் சைவாலயங்களும் வித்தியாலயங்களும் தமிழறிபுலவர் சைவநல்லறிஞர் அமுதினுமினிய அருங்கலைவாணர் பெருநிலக்கிழார்கள் பேரறிவாளர் பேரறம் வளர்க்கும் பெருமைமிக்குடைய இணுவில் திருவூர்க் கேற்றம் விளைத்த இராமுப்பிளளை பத்தினிப்பிள்ளை தம்பதியர்தம் சந்ததி விளங்க வந்தவதரித்த வல்லாளர்கள் பார்புகழ்பூத்த பண்புமிக்குடைய பண்டிதர்அதிபர் இராசலிங்கமும் பண்டிதர்அதிபர் பல்கலை வல்லார் திசையறிபுலவர் திருநாவுக்கரசரும் தபாலதிபராகத் தம்புகழ் நிறுவிய இசையறி கலைஞர் இராசரத்தினமும் ஏந்தல்தம்பி ஐயாமனையாள் எந்திழை செல்வம் மாவும் தங்கள் அழகிய இனிய அன்புத்தம்பியாய் பழகுதற்குவந்த பண்புச்செல்வமாய் வந்தவதரித்த வாண்மையாளன் சுந்தரலிங்கம் தோன்றல் தானும் இணுவில்சைவப் பிரகாசாவில் தமிழறி கல்வியில் தகைமை பெற்று வளமிகுஆங்கிலக் கல்வி கற்க சாவகச்சேரி இந்துவில்சேர்ந்து திறமைகள்மிக்க சித்திகள்பெற்று சென்னைப் பல்கலைக் கழகந்தன்னில் பி.எஸ்.சி பட்டம் பெற்றேமேலும் அடையாறினிலே நடனம்பயின்றும் லண்டன் பல்கலைக் கழகத்துற்ற பீ.ஏ ப் பட்டமும் பெற்றுச் சிறந்து
11

Page 9
தமிழ்ப் பண்டிதராய்ப் பட்டமும் பெற்று கொழும்புப் பல்கலைக் கழகத்தினிலே டிப்புளோமாக் கல்விப்பட்டமும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் எம்.ஏப் பட்டமும் இனிதேபெற்று பல்துறைஆற்றலும் பாங்குறப் பெற்றுக் கல்விமான் எனவே கற்றோர்மதிக்கும் பெருமைக்குரிய பேரறிவாளனாய்க் கல்விப்புலத்தில் காலடிவைத்து அராலிஇந்துக் கல்லூரியிலே ஆசானாய்உப அதிபருமாகி ஆறாண்டினிலே அதிலுமுயர்ந்து கொழும்புப் பரீட்சைத் திணைக்களத்தினிலே பரீட்சை அத்தியட்சகராய் பினனர் பிரதிப்பரீட்சை ஆணைாயாளராய் பதின் மூன்றாண்டு பதவி வகித்த பின் கல்வி வெளியீட் டுத்திணைக்களத்தில் பிரதமபதிப்பா சிரியாராயுயர்ந்து பின் நான்காண்டு காலம் நற்பணி செய்தபின் வன்னிப் பெருநிலக் கல்வி மேம்படக் கல்விப் பணிப்பாளர் பதவியிலுயர்ந்துபின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பணிப்பாளராகி இடர்மிகத் தொடர்ந்த காலகட்டத்தில் ஏ எல், ஒ எல் தேர்வுகள் தடைப்பட இனிமேல் தேர்வுகள் இல்லையென்றேங்கி கல்விச் சமூகம் கலங்கிய வேளை எவரும் செய்ய முடியாப் பணியை அதிசயம் மிக்க ஆளும்ைதிறனால் இவர் செய்திட்டார் தேர்வுகள் நடந்தன போற்றாதாரிப் புவியில் இல்லையே இணுவில் கல்வியில் ஏற்றம் கண்டிட சைவ மகாஜன வித்தியாலத்தையும் அமெரிக்க மிசன் தமிழ் வித்தியாலத்தையும் ஒன்றாயிணைத்துத் தரத்திலுயர்த்தி இணுவில் மத்திய கல்லூரியாக்கி சைவபிரகாச வித்தியாலத்தை இணுவில் இந்துக் கல்லூரியாக்கி பிறந்தவூர் பெருமை கொண்டே போற்றிட
12

சிறந்து நின்ற செம்மையாளன் அகவை அறுபதில் இணுவையூரில் கல்விப்புலமே கடலாய்த்திரண்ட வரலாறு காணா மணிவிழாக் கண்டும் வயதை மீறிய இளமைத் துடிப்புடன் தேசியக்கல்வி நிறுவகமதனில் தமிழ் மொழிக் கல்வி இணைப்பாளராகி நாலாண்டு செய்த நற்பணிச் சிறப்பால் வடக்குக் கிழக்கு மாகாணத்தின் பரீட்சை ஆணை யாளர் பதவியில் அகவை எழுபத் தொன்றுவரையும் ஆற்றிய பணியது அதிசயந்தானே படிப்பும் பட்டமும் பதவியும் பெற்றுத் துடிப்புடன் துலங்கிய சுந்தரருக்குத் திருமணப் பருவம் வந்த வேளையிலே ஒரு மனமாகப் பெற்றோர் பேசிய பெண்ணை மணக்கச் சம்மதமானதும் மலேசிய நாட்டின் மாண்புறு பென்சனர் இணுவிலூரில் இசையுடன் வாழ்ந்த தம்பி ஐயா துணை சின்னம்மா தம்பதியர்தம் இல்லறப்பயனாய் தலை மகளாய் வரு தேவராாணி தன் உடன் பிறந்தோராய் உவந்திட வந்த கொக்குவில் இந்துவின் பிரதி அதிபர் தேவராசா தன்னுடன் கட்டுடை வித்தியாலய அதிபராய்த் திகழ்ந்த கடவுள் சுப்பிர மணியம் தன்னுடன் செல்வானந்த ராசா சோதரி பொறியியலாளர் உலகேஸ்வரனின் அன்புத் துணைவி கமலராணியும் ஆசான் சண்முக லிங்கம்துணைவி தர்ம குணராணி தன்னுடன் ஆசான் கதிர்காமநாதன் மனையாளான அருந்தவராணியும் பெருந்துணையாக உண்டும் களித்தும் உறவில் திழைத்தும் குதுரகலமாகக் கல்விபயின்றும் மலேசியாக் கல்வி அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக் கன்னியர் மடத்தின்
13

Page 10
மாவித்தியாலயக் கல்வியும் பெற்ற மங்கை நல்லாள் தேவராணி மணமகளாக மனம் மிக மகிழ்ந்து மங்கல மணவிழாக் கண்டேயுவந்து ஊரும் உறவும் நண்பரும் வாழ்த்த பேரும் புகழும் பெருமையும் சேர இல்லறமாகும் நல்லறமோம்பி சந்ததி தழைக்க வந்தவதரித்த மைந்தன் சுதர்சனை மகிழ்வுடன் அணைத்து கல்வியும் கலையும் கவின் பெறப் புகட்டி வைத்திய கலாநிதி ஆக்கியுவந்து மங்கை நல்லாள் இரட்ணேஸ்வரியை மணமகளாக்கி மகிழ்ச்சியில் திழைத்து ஏகபுத்திரி சுபாஷினி நங்கையைக் கல்வி பண்பாடு கவின்கலைபயிற்றி வித்தகர் மலிந்த ஏழாலைப்பதி சித்தம் இனிக்கம் சைவப்பெருமகன் முருகவேள் மைந்தன் செல்வவிநாயகன் மணாளனாக வதுவை செய்வித்து மங்கல மாயவர் வாழ்வில் மகிழ்ந்தும் அருமைப் பேரன் அஜித்தை அணைத்து ஆனந்தம் மிக அகமகிழ்வெய்தி இல்லறவாழ்வில் நயந்த வேளையில் தன்வாழ்வின்துணை தேவராணி நோய்வாய்ப்பட்டு நொந்து வருந்தி செய்தவைத்தியங்கள் சித்திபெறாமல் விதிவலிதென்றே எவரும் ஏங்க இறைவன் திருவடி எய்திட நொந்து பிறந்தோர் இறப்பது இயற்கையென்றாறி துணைவியின் ஆத்ம சாந்திகள் செய்து தனது ஆத்மசாந்திக்காவது ஒய்வில்லாத சேவையேகதியென , ஓயா நுண்மாண் நுழைபுலத்திறனால் யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகப் பேரவையுறுப்பினர் பதவியில் சிறந்து சீரிய சிந்தனைச் சிற்பியாய்த் திகழ்ந்தும் தலைநகர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்து தலைவராயிருந்த உயர்தனிச் சிறப்பும்
14

இந்துமாமன்ற நிர்வாகக்குழு உறுப்பினராகி உழைத்த மேன்மையும் தன்குலதெய்வம் இணுவில்பதியமர் செகராச சேகரப் பிள்ளையார் கோயில் தேர்த்திருப்பணிக்கு முன்னின்றுழைத்து தேர்க் கொட்டகையும் சிறப்பாயமைத்து தேர்விழா உபயமும் செய்த புண்ணியத்துடன் பங்குனி அபர பக்கத் திருதியை கூடிய புனித வேளையில் சிவனார் திருவடி சேர்ந்தார் சுந்தரர்தானே.
15

Page 11
குருபாதம் துணை பூரீலழறீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமி வழங்கிய ஆத்ம சாந்தியுரை
இறைபக்தியும், இனிய பண்பும் நிறைந்த பெருங்கல்விமான் உயர்திரு. இரா. சுந்தரலிங்கம் அவர்களின் பிரிவுச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைகிறோம். இறையாளர் மலிந்த இணுவில் கிராமம் எம்மண்ணுக்குத் தந்த மகத்தான் மனிதன் அமரர் சுந்தரலிங்கம் என்றால் மிகையாகாது. அவரது குலதெய்வமாகிய இணுவில் செகராச சேகரப் பிள்ளையாருக்கு தேர்த்திருப்பணி நிறைவேற்றியது முதல் அவரிடம் மிகுந்திருந்த ஆன்மீக உணர்வை யாம் நன்கு அறிவோம். யாழ் குடாநாட்டில் மிக நெருக்கடியான காலகட்டத்தில் கல்வித்துறைக்கு தலைவராக விளங்கி அன்னார் ஆற்றிய பணிகள் என்றும் மறக்கமுடியாது.
கல்விச் சமூகம் அன்னாருக்கு எடுத்த மணிவிழாப் பொலிவு கண்டு யாமும் மகிழ்ந்தோம் நிறைந்த ஆளுமையும் சைவத் தமிழ்ப் பண்பாடும் மிக்க பெருந்தகையின் பிரிவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்பதை யாவரும் ஒப்புக் கொள்வர். அன்னாருடன் பல அரங்குகளில் - பழகும் வாய்ப்பும் அவரது நகைச்சுவை நிறைந்த பேச்சைக் கேட்கும்
வாய்ப்பையும் யாம் பெற்றிருந்தோம்.
என்றும் நிறைந்த சிறப்போடு வாழ்ந்த புனிதமான ஆத்மா இறைவன் திருவடியில் ஆறுதல் பெறும் என்பது எம் நம்பிக்கை. வாழ்நாள் முழுவதும் வழிபாட்டுக்கும் சேவைக்கும் முதன்மை கொடுத்த இப்பெருந்தகையின் ஆத்மா சாந்தி பெற பரம்பொருளை இறைஞ்சி அமைகிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி “என்றும் வேண்டும் இன்ப அன்பு"
நல்லூர், யூரீலயூரீ சுவாமிகள் யாழ்ப்பாணம் (இரண்டாவது குருமகா சன்னிதானம்)
16

தெல்லிப்பழை யூனிதுர்க்காதேவி தேவஸ்தான நிர்வாக சபைத்தலைவரும், ஆன்மீக அன்னையுமாகிய சிவத்தமிழ்ச் செல்வி தாங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் அஞ்சலியுரை
எங்கள் திருநாட்டின் ஏற்றமிகு கல்விமான், செயல்வீரர் திரு. இரா சுந்தரலிங்கம் ஐயா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து திடுக்குற்றேன். பணிவும், பக்குவமும், அஞ்சாநெஞ்சும், ஆளுமையும் மிக்க அறிஞனை நாம் இழந்து விட்டோம் வடமாநிலக் கல்வி அதிபதியாக விளங்கி அன்னார் ஆற்றிய அரிய பணிகளை இன்னும் கல்விச்சமூகம் பெருமையோடு சொல்லிப் பாராட்டுவதை உணர்கிறோம். கொழும்பில் தற்போது வசித்த போதிலும் ஒவ்வொரு தடவையும் யாழ்ப்பாணம் வரும்போது, துர்க்கை அம்பாளைத் தரிசிப்பதையும் எம்மைச் சந்தித்து அளவளாவுவதையும் தவிர்க்க மாட்டார். அவரது குடும்பம் எம்மோடு நீண்டகாலத் தொடர்புடையது. பண்டிதப் பாரம்பரியத்தில் உதித்த அமரரின் சகோதரர்கள் பண்டிதர் இ. இராசலிங்கம், பண்டிதர் இ. திருநாவுக்கரசு இருவரும் மிக நீண்டகாலமாக எம்மோடு ஆன்மீக இலக்கிய மேடைகளை அலங்கரித்தவர்கள்.
சைவத்தமிழ் மரபு காத்து தன் வாழ்நாள் முழுவதும் அரிய சேவை செய்த அமரர் சுந்தரலிங்கம் அவர்களின் ஆத்மா சாந்திபெற
எல்லாம் வல்ல துர்க்கை அம்பாளைப் பிரார்த்தித்து அமைகிறேன்
தங்கம்மா அப்பாக்குட்டி

Page 12
தூரநோக்கும் செயற்திறனும்மிக்க கல்வி நிர்வாகி
இணுவையூர் புகழ் பூத்த பண்டிதரும் பட்டதாரியும் நடன வித்தகருமாகிய காலம் சென்ற கல்விப் பணிப்பாளர் இராமுப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்களின் மறைவு தமிழ் மக்களுக்கு, குறிப்பாகக் கல்வி உலகிற்கும் பெரும் இழப்பாகும். அமரர் அவர்கள் பல்துறை விற்பன்னராக விளங்கினார். சென்னைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியான அவர் தாவரவியல் தமிழ், சங்கீதம் நடனத்துறையில் புலமை மிக்கவர். ஆசிரியப் பணியில் இணைந்த அவர் பின் பரீட்சைத் திணைக்களத்தில் பிரதிப் பரீட்சை ஆணையாளராகவும், அதன் பின் வடமாநிலக் கல்விப் பணிப்பாளராகவும் சிறப்புறப் பணியாற்றி ஓய்வு பெற்றார். வட மாநிலக் கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்த போது, இப்பிரதேசத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையையும் பொருட் படுத் தாது எல்லாப் பாடசாலைகளுக்கும் சென்று, கல்வி சிறப்புறக் கடமையாற்றினார். ஆசிரிய வாண்மை விருத்திக்கும் கல்வி நிர்வாக முகாமைத்துவ மேம்பாட்டிற்கும், மாணவர் கல்வி முன்னேற்றத்திற்கும் பெரும் பணியாற்றினார். இப்பிரதேசத்து ஆசிரியக் கலாசாலைகள் தேசிய கல்விக் கல்லூரி ஆகியவற்றின் வளர்ச்சியிலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக விளங்கி, அதன் கல்வி முன்னேற்றத்திலும் செயற்பாடுகளிலும் பெரும் பங்கு வகித்தார். தேசிய கல்வி நிறுவகத்திலும் சிறப்புற சில காலம் பணியாற்றினார்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் மிக்க புலமை பெற்றிருந்த அமரர் சுந்தரலிங்கம் அவர்கள் நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர். அவருடன் உரையாடுவது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். தனது நகைச்சுவையுடன் கூடிய பேச்சுத் திறனால் எவரையும் இலகுவில் கவர்ந்து விடுவார். இதனால் அவருக்குப் பல நண்பர்களும் அபிமானிகளும் உளர். பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டங்களில் காரசாரமான விவாதங்கள் இடம்பெறும் சமயங்களில் அன்னாரின் நகைச்சுவைப் பேச்சும், சமயோசித கருத்துகளும், ஆலோசனைகளும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவின.
மிக்க இறைபக்தியும், துணிவும், தொழில் பற்றும் கொண்ட அமரர் அவர்கள் தனது உற்றார், உறவினர், கிராமத்தவர் நல்வாழ்விலும், தமிழர் பண்பாடு, கலாசார மேம்பாட்டிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கொழும்பு தமிழ்ச் சங்கத்தலைவராக விளங்கி, தலைநகரில் தமிழ் வளர்த்த பெரியார். அமரர் அவர்கள் நல்லதொரு குடும்பத் தலைவனாக விளங்கி, தன் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கும் வழிசமைத்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திப்போமாக,
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
பல்கலைக்கழகம். (முன்னாள் துணைவேந்தர்) யாழ்ப்பாணம், 18

Mr. R. SUNDARALINGAM
In the passing of Mr. R. Sundaralingam, Sri Lanka has lost an eminent Sanskrit Scholar, efficient administrator and an effective manager. He was a creative interpreter of Tamil tradition and culture. The academia was deprived of a dynamic organiser and generations of Students lost a teacher, guide and Counsellor. Like a collasus, he dominated the education field for nearly 40 years. During this period he lectured, organised Conferences and seminars, presided over research and academic bodies.
His remarkable contribution to the Examination system of Sri Lanka provided his indomitable courage and tenacious coupled with Strong principle of character. His splendid performance at the Department of Education Publications earned him his promotion as the provincial Director of Education, Jaffna. He successfully performed his duties in that Capacity. He understood the education process, the Schools, the children and the teachers and proved himself a highly organised and disciplined manager. Although he was a highly accomplished scholar, he was also capable of addressing an audience with simplicity and direction. He was a great work-oriented person. He dedicated his entire life for the development of education. He was able to carryOut the education at the province soundly, uninterupted by the existing disturbences that was chaotic.
He had the power to evoke personal affection as well as deVotion to a Cause, taking the Subordinates into his confidence, asking for their Co-Operation. In his quiet way he had always been very friendly towards his officers. His tribute to my work as the head was always kind and appreciative. He always helped deserving people from his own purse, without expecting anything in return.
He was deeply religious. He practised what be preached with earnestness and lived an extremely simple and austere life. A living legend of self-control he fasted for long periods while performing his official duties with efficientcy.
He was a devoted husband, a carring and affectionate father, and a loving and appreciative father-in-law. His pride was his two children, the son who became a doctor and the daughter and accomplished lady. He doted his only delightful grandson.
Such an inspiring religious person, educationist, scholar, who was intensely humane will be always remembered with love and adoration by one and all.
Dr. Tilokasundarai Karyawasam
19

Page 13
ஆளுமைமிக்க ஆசான்
வடமாநிலக் கல்விப் பணிப்பாளராகக், கல்விச் சமூகத்தவரின் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய பேராசான் இரா சுந்தரலிங்கம் இன்று எம்முடன் இல்லை என்பது ஒரு பெருவெற்றிடத்தைத் தோற்றுவித்துள்ளது. பல சவால்கள் நிறைந்த காலத்தில் எமது பகுதியில் சகல பொதுப் பரீட்சைகளையும் நடாத்தி சாதனை படைத்தவர். எமது அமராகிவிட்ட வடமாநிலக் கல்வியதிபதியாகும். சினம் என்பது அவரிடம் இருக்கவில்லை. மாறாக அனைவரையும் தனது நகைச்சுவைப் பேச்சினால் கவர்ந்தவர். அவருக்குத் தெரியாத கலைகள் இல்லை. விஞ்ஞானம் முதல் மெய்ஞானம் வரையும் ஆடல் பாடல் கலை சகலவற்றையும் கற்றுணர்ந்தவர். அழகியல் உணர்வுடைய ஒரு பேராசான் இன்று மறைந்துவிட்டமை எமது சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அவருடன் கடமையாற்றிய காலங்கள் யாவும் எம்மில் பசுமையான நினைவில் இருக்கின்றன. அவரை நாடிச் சென்றவர்கள் அனைவருக்கும் உதவிசெய்து உவகை பெற்றவர் திரு. இரா சுந்தரலிங்கம். அனைவரும் பார்த்துப் பழகிக் கற்க வேண்டிய ஒரு பல்கலைக்கழகம என்றால் மிகையாகாது. மும்மொழிகளிலும் வல்லவரான எமது வடமாநிலக் கல்வியதிபதி தனது மொழித்திறனைப் பயன்படுத்தி இச் சமூகத்திற்கு ஆற்றிய கடமைகள் அளப்பரியவை. அவர் இருந்த இடத்தில் கடமையாற்றும் எமக்கு அவரது நினைவுகள். அவர் கூறும் நல் உபதேசங்களுமே நினைவிலுண்டு நிமிர்ந்த நடை நேர்கொண்ட நோக்கு என்று மகாகவியாால் கூறப்பட்ட பண்புகளை நான. எமது அமரர் வடமாநிலக் கல்வியதிபதியிடமே கண்டிருக்கின்றேன். அக்காலத்தில் பரீட்சை வினாத்தாள்களை கப்பலில் கொண்டு வந்து. கப்பலிலிருந்து பாரமேற்றும் படகிற்கு அமரர் தாவியது எமது கண்முன்னே நிழலாடுகிறது. கொஞ்சம் தவறினால் கூட கடலில் விழநேரிடும். தனது உயிரை துச்சமென மதித்து எமது மாணவர்களுக்கு அவர் ஆற்றிய கல்வித் தொண்டு பொன்னெழுத்துக்களில் என்றும் இருக்கும்
அதிகாரப்பகிர்வு, வேலைப்பங்கீடு போன்ற முகாமைத்துவ பண்புகளைக் கொண்டு. பொறுமை. சகிப்புத்தன்மை என்னும் அணிகலன்களுடன் இந்த வடமாநிலக் கல்வியை கண்ணாகப் போற்றிய பேரறிஞன் இன்று எம்முடனில்லை என்பதை எண்ணும் போது கண்கள் பனிக்கின்றன.
அவரது குடும்பத்தினருக்கு எமது இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
திரு. வே. தி. செல்வரத்தினம் வலயக் கல்விப்பணிப்பாளர், யாழ்ப்பாணம். மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்
LuITp LDIT6)LLLD.
20

வாழ்விற்கு இலக்கணமாய்த் திகழ்ந்த இறைபணிச்செம்மல் சைவசமய சிரேஷ்டன், முதுபெரும் கல்விமான்,சமூகப்பணி ஞானி அன்பர், நண்பர், இணுவில் இரா. சுந்தரலிங்கம் அவர்கள்
எப்பொழுதும் சிரித்தமுகம், எப்பொழுதும் சிலேடையாகப் பகிடிவிடும் சுபாவம், திடகாத்திரமான உடம்பு எல்லோரையும் தன்பால் ஈர்க்கும் வல்லமை பூண்ட இணுவில் இரா. சுந்தரலிங்கம் இறைபதம் எய்திவிட்டார் என்ற செய்தியை என்னால் நம்பமுடியவில்லை. அவர் இறைபணிக்கு ஆட்கொள்ளப்பட்டு விட்டார். திரு. சுந்தரலிங்கம் இறைபக்தி கொண்டவர் குலதெய்வத்தில் அதிக பக்தி மிக்கவர். இலங்கை முழுவதற்கும் ஓர் இறைபணிச் செம்மல்.
திரு. இரா சுந்தரலிங்கம் ஓர் முதுமாணிப்பட்டதாரி, பண்டிதர், கலாகேந்திர நடனமணி, வடஇலங்கைச் சங்கீத சபையின் இசைமணி என்று கூறிக்கொண்டே போகலாம். ஆனால் அவரிடம் பெருமை இல்லை. யாருடனும் இலகுவாகப் பழகும் சுபாவம் கொண்டவர்.
அவர் மனித வாழ்விற்கு ஒர் இலக்கணமாகத் திகழ்ந்தார். இறைபணி மிக்கவராய் இறைதொண்டுகள் செய்தார். கல்விசார் கடமைகள் தொண்டுகளைச் செவ்வனே செய்தார். சமூகப் பணிகளை தங்களுக்கு அப்பாற் சென்று கருமமே கண்ணாகவிருந்தார். அதனால் அவர் ஒரு தலைசிறந்த குடும்பத்தலைவன். இறைபணியாளர், கல்விச் சமூகத் தொண்டன் என எல்லோராலும் மதிக்கப்பட்ட ஒரு மாமனிதராக திகழ்ந்தார்.
அவர் வகித்த பதவிகள் - ஓர் ஆசிரியர், பரீட்சை திணைக்கள பிரதி ஆணையாளர், கல்வி வெளியீட்டுத் திணைக்களப் பிரதி ஆணையாளர், வவுனியா, கிளநொச்சி, யாழ்ப்பாண மாவட்டக் கல்விப் பணிப்பாளர், யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர், அகில உலக இந்து மாநாட்டு மதுயுரைஞர், கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்று கூறிக் கொண்டே போகலாம்.
குலதெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு இவருக்கு இருந்தது. இதனால் ஓர் தேர் செய்து குலதெய்வத்துக்கு கொடுத்து மகிழ்ந்தார்.
மனைவியின் மரணம் அவருக்கு ஓர் பேரிடி என்றாலும் மனைவியின் கடமைகளை எனது மாமனார் சிவபூரீ குஞ்சிபாதக் குருக்களைக் கொண்டும் அவருக்குப் பின் என்னைக் கொண்டும் செய்து வந்தார். இவ்வாண்டு சுகவீனமுற்றிருந்தும் தரையில் இருந்து மனைவியின் கடமைகளை செவ்வனே செய்த சைவ மகன். இக்கிரியைகளில் மகன், மருமகள். மகள், மருமகன், பேரப்பிள்ளையின் பங்களிப்புச் சிறப்பையும் இங்கு கூறுவது சாலப் பொருந்தும்.
சைவத்துக்கும், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் இலங்கை வாழ் சகலருக்கும் பெரும்பணி புரிந்து வந்த அன்பர், நண்பர் திரு. இரா சுந்தரலிங்கத்தின் ஆன்மா சாந்தியடைவதாக!
இந்து வித்தியாநிதி பிரம்மயூரீ சோ. குகானந்தசர்மா
21

Page 14
சுடர்மிகு வைரம் சுந்தரலிங்கம்
இணுவில் கிராமத்தில் தோன்றிய சுந்தரலிங்கம் எனும் வைரம் சிறிது சிறிதாகப் பட்டை தீட்டப்பட்டு, பூரண பொலிவுடன் உயர்ரக வைரமாய், யாழ்ப்பாணம் முதல் கொழும்பு மாநகரம் வரை எல்லாப் பகுதிகளிலும் தன் ஒளியை வீசி, எல்லா மக்களது உள்ளங்களிலும் சுடரொளியாய் பிரகாசித்து மறைந்தார்.
பெற்றதாயின் பெரிதுவக்கும் பெருமகனாய் கல்வித்தாயின் கரம்பிடித்து கடமை வீரனாய் உலா வந்தார். தனது கடைசி காலத்தில் தமிழ்த்தாயும் பாசமுடன் அரவணைத்து, தனது இடமாகிய கொழும்பு தமிழ்சங்கத் தலைவராக்கி அகமகிழ்ந்து தமிழ்மைந்தனை ஆசீர்வதித்தார்.
கல்விச் சேவை, தமிழ்ச் சேவை, இறை சேவை எனப் பல கடமைகளை விரும்பி ஏற்றுப் பணிசெய்தார். கல்வித்தாய், தமிழ்த்தாய், பெற்றதாய் விரும்பிப் போற்றும் பெருமகனை யார் தான் விரும்பமாட்டார்கள். எல்லோரும் விரும்பும் மனிதனாக வாழ்வது கடினம். ஆனால் அவருக்கு அது சாத்தியமாயிற்று.
நகைச்சுவை என்பது அவரது பெரிய ஆயுதம், அதுவே அவர் பலர் மனதை கொள்ளை கொள்ள உதவியது ஆளுமை, நிர்வாகத் திறமை, அன்பு, பாசம், விசுவாசம் இறைபக்தி அவரிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை. பட்டம், பதவி உயர்வு, பெருமை, நிறைவு திருவருள் கடாச்சம் எல்லாம் அவரிடம் ஒருங்கே அமைந்தது. அ வ ர து ஒவ்வொரு செயலையும் வழிகாட்டியாகக் கொள்ளலாம். ஒவ்வொரு பேச்சும், வார்த்தையும் எமக்கு புத்துணர்ச்சி தரவல்லவை.
பிறர் போற்ற, நிறைவான, உயர்வான, பண்பான குணநலனும், அதற்கேற்ப நிறைவான வாழ்வும் வாழ்ந்து ஆலமரம் போல் பலருக்கு நிழலாகினார். அந்த ஆலமரம் எங்கள் குடும்பத்தில் வேர்கொண்டது, இறைவன் எம்மீது கொண்ட கருணையே.
எமது குடும்பம் வாழ, மகிழ்ச்சியுற இறைவன் அவர் உறவில் எம்மிடையே வாழ்ந்து வழிகாட்டினார்.
"சுந்தரம்” என்றாலே அழகு, அப்பெயருக்கேற்ப பெயரழகு, செயலழகு, சொல்லழகு, கடமையழகு எல்லாம் நிரம்பப் பெற்றவர். அவர் குழந்தையிலும் அழகு இளமையிலும் அழகு முதுமையிலும் கூட அழகு. அவர் மனம் பூப்போல் மென்மையான அழகு. அது தன்
22

எல்லா அழகும் போட்டி போட்டு அவரிடம் குடிகொண்டு "சுந்தரலிங்கம்" பெயருக்குரிய சிறப்பினைப் பெற்றார்.
பண்பட்ட விளைநிலத்தில் விழுந்த விதைபோல இவர் எங்கள் குடும்பத்தின் பெரிய சொத்து எமது குடும்பத்தில் இறைவன் ஆசைப்பட்டு போட்டவித்து. எனவே தான் இறைவன் போட்ட வித்து வளர்ந்து, மரமாகி, மக்கள் பயன்பட இறைவன் அவர் கூட உறுதுணையாகி வழிகாட்டினார்.
எங்கள் விலைமதிக்க முடியாத அரும்பெரும் சொத்து. தேடமுடியாத, இழக்கமுடியாத சொத்து கடவுள் நமக்கு விரும்பியளித்த பெரும்கொடை அப்பெருமகனை இழந்தைமையால் தான் எமக்கு இந்த பெரிய தடுமாற்றம்.
அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி எல்லாம் வல்ல பருத்தியடைப்பு பிள்ளையார், நொச்சியம்பதி இணுவில் முருகனை உளமார பிரார்த்திக்கின்றேன். s
அவரது ஆத்மா, நினைவுகள் நிழலாக எமைத் தொடர்ந்து வழிகாட்டும் என நம்புவோம்.
ஓம் சாந்தி!
திருப்பதி, அன்புடன் இணுவில். LITLD5 LDuppirpai (BSc)
23

Page 15
எமது குடும்ப விளக்கொன்று அனைந்தது
எனது பசுமையான நினைவுகளில் நிலவுவது எனது மைத்துனர். எமது குடும்ப அங்கத்தவராக சுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு சேர்ந்து கொண்டார். இளைஞனாக, நற்பண்பு மிக்கவராக, அழகான வாலிபராக எனது தங்கையின் கரம் பற்றினார். மிக்க அன்னியோன்யமான குடும்பத்தலைவராக, மருமகனாக, மைத்துனராக எல்லோரிடம் அன்பும் மரியாதையும் செலுத்தினர்ர். எங்களில் ஒருவரானார்.
காலச் சக்கரம் உருண்டது. உயர் பதவிகள் அவரை நாடி வந்தன. பரீட்சை அத்தியட்சகராக, வடமாநிலக் கல்விப்பணிப்பாளராக பதவி உயர்ந்தார். சுற்றத்தார், அயலர்கள் மற்றும் நண்பர்கள் எவரையும் அவர் மறந்தாரில்லை. அவருடைய ஈர்ப்பு அல்லற்படுபவர் மேலேயே இருந்தது. அவர்களுக்கு கூடிய மட்டும் உதவினார்.
சிறந்த பத்திமானாக இருந்தார். இணுவில் செகராசசேகரப் பிள்ளையார் கோவிலுக்கு புதிய தேர் நிர்மாணிப்பதற்கு பெரும் பங்கு வகித்தார்.
அவரது பிள்ளைகள் இருவர் மகன் வைத்திய கலாநிதியாக கடமை புரிகிறார். மகள் கொழும்பில் வசிக்கிறாள். தங்கள் பிள்ளைகள் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். பெற்றோர்கள் இருவரும். எனது தங்கை தனது உலகத்தை கணவர், பிள்ளைகளைச் சுற்றியே ஆக்கிக் கொண்டார். ஓயாது ஒழியாது கடமையே கண்ணாயிருந்தவர். அண்மைக் காலத்தில் நோய் வாய்ப்பட்டு தனது சுகத்தில் கவனம் செலுத்தவில்லை. மகளுடன் வசித்து வந்தவர் அவர் மகளிடம் அளவற்ற அன்பு செலுத்தினார். மகளும் அவரை கண்போல பாதுகாத்தார்.
ஈற்றில் அவர் பக்தி கொண்டிருந்த பருத்தி அடைப்பு விநாயகனின் பாதாரவிந்தங்களை அடைந்து அமைதியானார்.
ஓம் சாந்தி: சாந்தி சாந்தி!
“யூரீ சாலினி” அன்பு மைத்துனன் கே.கே.எஸ் வீதி, தேவராஜா இணுவில்.
24

தமிழ் மண்ணின் சொத்து
கல்விக்கு அதிபதியாம் கடமையில் வீரர் நித்தம் அல்லல்கள் வந்துற்ற போதும் அணுவிலும் சிறிதாய்த் தாங்கி
நல்லன செய்தார் கல்விக்கு நயந்தகு சுந்தர் இம்மண் இல்லையாம் என்னும் போதே இதயமே வெடிக்குதாமே
அழகிற்கு அழகு ஆடை அணிசெயும் தேர்வுச் சுத்தம் பழகுதற்கினியர் பாசை பரிபாசை மிக்கோன் தமிழில்
கலகலப்பாகப் பேசி நாளும் காரியம் வெல்லும் தீரர் இல இங்கு என்னும் போதே இதயமே வெடிக்குதாமே
ஆங்கிலம் தமிழும் வேற்று அயல் மொழி பேசும் அழகு தாங்கிய நாவிற்கின்றோ தந்தனை ஓய்வு நித்தம்
வீங்குதோள் வீரன் செயலும் விறன்றமிழ் மண்ணின் மாண்பும் தாங்கிய தூணோ இன்று தகர்ந்ததோ தாங்க வொண்ணா
நோயுற்ற போதும் உடற்கு நோய் தெரியாமல் வாழ்ந்த தமிழே நீவிர் காப்பாற்றும் தக்கோன் தாமே சுந்தர்!
தவறிய தேனோ மண்ணில் எக்கணம் நோக்கினாலும்
25

Page 16
இலக்குவன் போன்ற இளைஞர் இலக்கினைத் தவறா மன்னன் உடலுக்கு வயது போயினும் உள்ளத்தால் இளைஞனாக கடல் மடை வெள்ளம் போலக் கனித்தமிழ் ஊற்றாய் பாயும்
திடநெஞ்சன் திருவருளான் திரு மிகு சுந்தர் இலாமை வடமிழந்த தேராய் இம்மண் வலுவிழந்துற்ற தாமோ
இருபைகள் காவும் போதும் இருப்பதே தெரியாது வாழ்ந்த அருமையாம் தமிழால் எம்மை
ஆட்கொளும் அரசே கல்விப்
பெருமைக்குத் துணையாய் நின்று பெற்றிட்ட வெற்றிக்கெல்லாம் திருவருட் கடாட்சம் பெற்றோ திருவடி சேர்ந்தீர்தாமோ
கடவுளை நேசிப்போர்க்கே கஸ்டங்கள் மேவி வந்து திட நெஞ்சை வளர்த்துத் தேற்றி திருவருள் பாலிப்பாகும்
அனலிட்ட பொன்னாய் உள்ளம் அகம் புறம் தூய்மையாக்கி கனவிதோ என்றே ஏங்கக் கழலடி சேர்ந்தார் தாமோ
சுந்தருக் கேற்ற சுந்தரத் தோற்றம் சுகம் தரும் பேச்சு சுவையின் ஊற்றாம் எந்த வேளையாயினும் எவர்க்கும் கல்வி இடரின்றி வழக்குதல் அவரின் ஏற்றம்
அந்த அந்த இடங்களெல்லாம் அணிசெய அரும்பணியாற்றிய சுந்தர் போற்றும்
26

சிந்தனையாளர் தமிழ் மண்ணின் சீரிய சொத்தவர் நாமம் வாழும்
அன்னயாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல் என்னும் வார்த்தையின் இலக்கணம் இன்னும் வாழ்வர் இப்புவி மீதும்
பொன்னெழுத்தாகப் பொறித்தனர் புகழுடன் வாழ்ந்தனர் கல்வியின் சின்னமாய் சேவையாற்றிய சீரியன் சிவனடி சேர்ந்தனர் ஓம் சாந்தி: சாந்தி!!
ஊன் உண்ணும் முறைமை அழகு! நின் தமிழ்ப் பேச்சின் நளினம் அழகு! உடை நடை ஊரும் நிலமும் அழகு! நின் இன்னிசைப் பதிக முறைமை அழகு!
வரண்ட மண்ணுக்கும் கல்வியே அழகு!” வாழ்வித்த நின்னரும் சேவை அழகு! நோயினும் நின் நிறைமொழி அழகு! நீரிலா மண்ணும் இழந்தனம் அழகு!
வை. க. தவமணிதாசன் கொழும்பு இந்துக்கல்லூரி

Page 17
பல்துறை வித்தகள்
மானிட வாழ்வு என்பது பொருளினும் போகத்தினும் மாத்திரம் தங்கியதன்று. அது பக்தியிலும் பண்பாட்டிலும் மலரவேண்டியது. காலத்தைப் பயன்படுத்தி இதை வளர்த்துக் கொள்பவரே உண்மை மனிதர். இவர்களே மாமனிதர் வரிசையில் வைக்கப்படுவர். இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் திரு. இரா சுந்தரலிங்கம் அவர்கள்.
மனிதனுக்கு மனச்சாட்சி இருக்க வேண்டும். அந்த மனச் சாட்சிக்கு பயந்து வாழ வேண்டும் என வாழ்ந்த உத்தமர் இவர் தன்னைப் பற்றி மட்டுமே எண்ணி வாழும் வாழ்வு மனித வாழ்வன்று பலருக்கு பயன்பட்டு வாழவேண்டும் என்றொரு இலக்கு இருக்க வேண்டும். ஏனெனில் நிலையில்லாத இந்த சரீரம் என்றோ ஒரு நாள் மறைவது நிச்சயம். இந்த உண்மையை அறிந்து மனிதனாக வாழ்ந்த உத்தமர் இவர்.
கலைத்துறை, விஞ்ஞானத்துறை இரண்டிலும் பட்டம் பெற்ற பரந்த அறிவு உடையவராக நிரம்பிய அனுபவம் பெற்றவராக விளங்கிய இவர் அறம் வளர வேண்டும், அறிவு வளர வேண்டும். தமிழ் வளர வேண்டும் என நேர்மையாக உழைத்த ஒரு சிறந்த கல்விமானாகவும் தொண்டனாகவும் நிர்வாகியாகவும் விளங்கினார்.
மாணவநல மேம்பாடு, ஆசிரிய வாண்மை மேம்பாடு, கல்விக்குரிய கட்டுமான ஆக்கம் என்பவற்றுக்காகப் பாடுபட்டவர். பிரயாண வசதியற்ற காலத்தில் கூட, உயிரையும் துச்சமென மதித்து பிரயாணம் செய்து யாழ் மாவட்ட மாணவர்களின் அனைத்து பகிரங்க பரீட்சைகளையும் ஒழுங்காக நடைபெற உதவிய உத்தமர். அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம்,வாய்மை என்னும் ஐந்தின் வழியில் வாழ்ந்த உத்தமார். கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுக்கு முக்கியம் கொடுத்து நேசித்தவர்.
அதிகாலை வேளையில் விசேட தினங்களில் தொலைபேசி மணி அடித்தால் அது அமரர் அவர்களாகத்தானிருக்கும். வாழ்த்துக் கூறுவதற்காக அது இருக்கும். சுகதுக்கங்களில் கலந்துரையாடி மகிழ்ந்து, ஆறுதல் கூறி குடும்ப உறவினர் போல் மனம் விட்டு பேசிவாழ்ந்து வந்தோம். இன்று அவரை இறைவன் நீ மண்ணுலகில் செய்த சேவை போதும் விண்ணுலகம் வா சேவை செய்ய என அழைத்து விட்டான் போலும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது மகன், மகள், மருமக்கள், பேரப்பிள்ளை, உற்றார் உறவினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை கூறி அமைகின்றேன்.
தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமி அதிபர் இந்துக்கல்லூரி கொழும்பு.
28

A Multi Dimensional Personality
My good friend Sunthar is no more and his demise is an irreparable loss for all of us.
have been closely associated with him more than 40 years. Having worked together in the Education Ministry during a period of 25 years or more from OU younger ages and thereafter in different walks of life had the rare privilege of associating with him closely both in our official capacity and in our private life. This association became very intimate extending to our families and children as well.
Suntharis a multidimensional personality with charming qualities. He was a very popular Senior Officer who was sought after for guidance and advice, everyone looked up to him for leadership.
He was extra-ordinary, for he was loved by his subordinates, due to his simplicity and humane qualities, admired by his peers for his expertise and
leadership, recognized and respected by his superiors for his integrity and Commitment.
His high Proficiency at degree level in the various languages, Tamil, English, Sanskrit, Pali and to a limitted extent Sinhala and hid presentation skills were complementary and supplementary and made him a good fit in the education sector and indispensable in whatever organization he worked.
He had the ability to create value over the long term and was willing to stand alone and blow the whistle when necessary.
was impressed by his sharp intellect, his quick grasp of complex issues, his sense of homour, his gentle and enthusiastic manner of presenting his case, in any forum. He had an incisive and perceptive mind which Cutthrough the superfluous and death with the core issues.
He was unique-his hands were clean, conscience clear, with an abundant heart, a broad smile all the time and quick witted and above all a harmonious blend of all these qualities. He had an amazing sense of humour with full of meaning and good timing which he learned to use to delight and disarm others.
A multidimensional personality in all aspects.
it is a pity that we lost him.
May his soul rest in peace.
Raj Subramaniam PRINCIPAL EXECUTIVE DIRECTOR Sri Lanka Business Development Centre, Colombo - 03.
29

Page 18
கல்வி உலகின் கற்பகமாகத் திகழ்ந்தவர்
“நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும், பெருமை உடைத்திவ் வுலகு."
என்னும் வள்ளுவரின் குறளை மெய்ப்பித்து விட்டார் யாழ்ப்பாணம், இணுவில் பதியில் பிறந்த அமரர் இரா. சுந்தரலிங்கம் அவர்கள்.
இவர் தமிழ்நாடு சென்று, உயர்கல்வி கற்று, கல்வித் திணைக்களத்திலும், பரீட்சைத் திணைக்களத்திலும் உயர் பதவிகளை வகித்துத் தனது மேலதிகாரிகளின் பாராட்டையும், மதிப்பையும், அன்பையும் பெற்றவர்.
எனக்கு இப்பெரியாரின் அறிமுகம், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது. இவரோடு கொழும்புத் தமிழ்ச் சங்கப்பணிகளிலும், உலக சைவப் பேரவையின் பணிகளிலும், இணைந்து செயலாற்றச் சந்தர்ப்பம் கிடைத்தமையை இட்டு, நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட இவர் அமரர் ஆகும் வரையும், தலைவராக இருந்து, சங்க வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை வகித்து, அவற்றைச் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு அயராது உழைத்தவர். தமிழ்ச் சங்கக் கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் ஐந்து அறைகளை விரைவாகக் கட்டி முடிக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு செயல்பட்டவர்.
கல்வி உலகிற்கும், ஆசிரிய உலகிற்கும் கிடைத்த வாய்ப்புப் போல, கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கும், யாழ் மாநில மக்களுக்கும், அவருடைய வழிகாட்டலும், தலைமைத்துவமும் கிடைத்தது.
கல்வி, கேள்வி, அறிவு என்னும் மூன்று சொற்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையன. கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்ற பதங்களும், அவற்றைச் சார்ந்தனவேயாம். இந்தச் சாதனைகளில், சபைக் கூச்சம் இன்றி, சபையின் தராதரத்தை அறிந்து பேசி, தாம் பெற்ற அறிவை, பிறருக்கு எடுத்துக் கூறிச் சபையை மகிழ்விப்பதில் இவர் வல்லவராகத் திகழ்ந்தார்.
இவர், விஞ்ஞானம், பண்டைத் தமிழ் இலக்கியம், நடனம், சங்கீதம், வடமொழி, பாளி முதலிய துறைகளில் ஆழ்ந்த அறிவு பெற்றவர்.
அவர் பெற்ற அறிவும், ஆற்றலும், நிருவாகத் திறமையும்,
30

கல்வித் தொண்டுக்கே அதிகம் பயன்பட்டன.
வட மாநிலக் கல்விப் பணிப்பாளராகப் பத்து ஆண்டுகளாகப் அவர் புரிந்த கல்விப் பணியும், சமயப் பணியும், சமூகப் பணியும் என்றென்றும் போற்றத்தக்கவை.
இணுவில் கிராம மக்களின் கல்வி வளர்ச்சிக்காக, இணுவில் மத்தியகல்லூரியையும், இணுவில் இந்துக் கல்லூரியையும், வரித்த பெருமைக்குரியவர்.
“பண்பெனப்படுவது, பாடறிந்தொழுகல்" எனக் கலித் தொகையில் கூறப்பட்டுள்ளது. அமரர் சுந்தரலிங்கம் ஐயா அவர்கள், பண்பின் நிறைகுடமாகவும், கல்வி உலகின் கற்பகமாகவும், முத்தமிழின் வடிவமுமாகவும், திகழ்ந்து, ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்து, தனது 72து வயதில் இறைவனடி சேர்ந்தார். w
அன்னாரின் பிரிவால் துயர்வுற்றிருக்கும் அவரது பிள்ளைகள், மருமக்கள். பேரப்பிள்ளைகள், உற்றார். உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.
“மானிடராய்ப் பிறத்தல் அரிது, பிறந்தும் பல்லோர் புகழ் பெற்று வாழ்தல் அரிģi. 99
அமரர் இரா. சுந்தரலிங்கம் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இறைவனை வேண்டுகின்றேன்.
பெரியதம்பிப்பிள்ளை விஜயரெத்தினம்
துணைத்தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்

Page 19
e 99
“என்றும் புகழோடு வாழும் அன்பர்
அளவற்ற நினைவாற்றல், அதிநுட்ப அறிவின் துணையால் எந்த நேரத்திலும் எந்த வாதத்தையும் எதிர் கொண்டு வெற்றி பெறும்திறன், வாழ்வில் எழுச்சி வீழ்ச்சி - எந்தக்கட்டத்திலும் சோர்வில்லாத செயல் ஊர்க்கம், எந்தச் சூழ்நிலையிலும் அச்சமில்லாத மனஉறுதி ஆகிய சிறப்புக்களை உடையவரை யாராலும் வீழ்த்தி வெற்றி கொள்ளமுடியிாது என்பதனைத் தான் உலகமறை தந்த வள்ளுவப் பெருந்தகை ஈரடிகளில்,
"சொல்லவல்லான் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது”
என இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார். அத்தகைய சொல்ல வல்லவனாக சோர்விலனாக செயல்வீரனாக அஞ்சானாக வாழ்ந்த பெருமைக்குரியவர் அமரர் சுந்தரலிங்கம்.
என்றும் எளியவராக - ஆனால் சுவைமிகு இனியவராக, மேடைகளிலும் நேர் சந்திப்புக்களிலும் மற்றவர்களைக் கவர்ந்திழுத்து நகைச்சுவையுடன் உரையாடும் கலை அவருக்குரிய தனிப்பாணி மிக்க திறன் ஆகக் கொண்டு எங்கள் உள்ளங்களில் அன்புடன் நிறைந்து நின்ற நல்லதொரு மனிதர். இன்றும் எங்கள் நினைவுகளில் இருந்து அகலாத ஓர் உத்தமர்.
அமரருக்கு இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு அஞ்சலி உரைகள் நிகழ்த்திய பலரும் சுட்டிக்காட்டிய வண்ணம். வேதனைகளும் சோதனைகளும் நிறைந்த காலகட்டத்தில் யாழ் மண்ணில் பரீட்சைகள் நடத்த அவர் எடுத்த செயற்பாடுகள், கல்வி அதிகாரியாக அங்கிருந்த பாடசாலைகளில் எமது இளம் சந்ததியினரின் அறிவுப்பசி தீர்க்க அவர் எடுத்த திறன்மிகு நடவடிக்கைகள், ஏங்கித்தவித்த - தவித்துக் கொண்டிருக்கும் - எமது சமுதாயத்திற்கு தாகம் தீர அமரர் வார்த்த கஞ்சித்துளிகள் எனலாம்.
கல்விமான் சுந்தரலிங்கம் - கொழும்பு தமிழ்ச்சங்கத்தலைவர் சுந்தரலிங்கம் ஐயா, பூதவுடலை விட்டு மறைந்து விட்டாலும் அவர் புகழ் இன்றும் வாழ்கின்றது - என்றும் நின்று நிலைக்கும் எந்தத் துறையாயினும் நம்மைச் சமுதாயம் பாராட்டும் - மெச்சும் வகையில் நற்பெயர் அத்துறையில் நீடித்து நிற்கும் முறையில் பணியாற்றி எமது
32

வாழ்விற்குப் புகழ் என்ற ஒளியைக் கொடுக்க வேண்டும் என்பது திருவள்ளுவர் நல்கிய இன்னுமொரு நற்கருத்து.
"தோற்றிற் புகழொடு தோன்றுக, அ.திலார் தோன்றலிற் தோன்றாமை நன்று” * கல்வித் துறையின் மகுடமாக - பல்கலை விற்பன்னராக - தமிழும்
சைவமும் கற்றறிந்து, அவற்றைப் போற்றி நின்று வாழ்ந்த பெருமகனாக,
* எடுத்த காரியத்தைக் கடமையுணர்வுடனும் திடசங்கற்பத்துடனும்
நிறைவேற்றும் நிர்வாகத்திறன் மிக்க காரியசித்தராக,
* தான் செய்யும் பணிகளால் தான் அல்ல, தன் ஓர் அங்கமாக வாழும் தன் சமுதாய நலன் மட்டும் கருத்திற் கொண்டு தொண்டாற்றிய ஒரு கருமவீரராக,
* உற்றார் உறவினர். நண்பர் சக அதிகாரிகள், இளையவர்கள் முதியவர்கள் எல்லோரையும் இன் வார்த்தைகளால் கவர்ந்து மகிழ்வில் ஆழ்த்திய நல்லதொரு புனித உள்ளமாக வாழ்ந்து வள்ளுவன் வாக்குக்கமைய புகழோடு என்றும் தோன்றிய அன்பர் சுந்தரலிங்கம் தன் புகழுடலுடன் என்றும் இந்நாட்டுத் தமிழ் மக்களின் உள்ளங்களில் வாழ்கிறார் - வாழ்வார்.
அமரர் சுந்தரலிங்கம் எம்முடன் இணைந்து இப்பூமிதனில் அளவளாவி எம்மை மகிழவைக்க இல்லையே என்பது எங்கள் எல்லோரினதும் ஏக்கம், அந்த ஏக்கத்தின் தாக்கம் அவர்தம் குடும்பத்தினரை பாதித்து நிற்கும் வேளையில் அவர்களுக்கு எங்கள் அனுதாபத்தினை மனதார நல்கி, அவர் தம் நிலையில் நாமும் இருக்கிறோம். அத்துயரில் நாங்கள் யாவரும் பங்கு கொள்கிறோம் என்ற ஆறுதலையும் கூறி அகில இலங்கை இந்துமாமன்ற முகாமைப்பேரவை உறுப்பினராகவும் இருந்து எமது கல்விப்பணிகளிலும் உதவிக்கரம் நீட்டிய அந்தக் கல்விமானின் ஆத்மா சாந்தியடைய மன்றத் தலைமையகத்தில் எழுந்தருளியிருக்கும் யூரீசிவகாமி சமேத யூரீ நடராசப் பெருமானின் பாதார விந்தங்களில் வணங்கி நிற்கின்றோம்.
கந்தையா நீலகண்டன் பொதுச் செயலாளர், அகில இலங்கை இந்துமாமன்றம்.
33

Page 20
உழைப்பால் உயர்ந்த பெரியார்
பல்துறை ஆற்றல் கொண்ட கல்வியாளர் ஒருவரை, தமிழ் கூறும் நல் உலகு இழந்து நிற்கின்றது. தமிழ் மொழியையும், தமிழ் கலை, கலாசாரத்தையும் தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வந்த பெரியார். திரு. இரா சுந்தரலிங்கம் அவர்களின் மறைவு எமக்கு பேரிழப்பு என்பதுடன், அவர் போன்ற ஆளுமையுடையோர் அருகியுள்ள இக்காலத்தில், இவரது இழப்பு மேன்மேலும் அதிர்ச்சியடையவும் வைத்துள்ளது. •
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த திரு. சுந்தரலிங்கம் அவர்கள் தமது அயராத முயற்சியினால், தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், பாளி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் கலை, விஞ்ஞானப் பட்டங்கள் இரண்டினையும் பெற்று அத்துடன் தமிழ் பண்டிதர் பரீட்சையிலும் சித்தி பெற்று மேலும் நடனத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளமையானது கலைத்துறையில் இவருக்குள்ள ஆர்வத்தினையும் புலப்படுத்துகின்றது.
கல்வித்துறையில் திரு. சுந்தரலிங்கம் ஆற்றிய சேவைகளை நாம் அறிவோம். இக்காலத்தில் இணுவில் பகுதியில் இரண்டு கல்லூரிகள் உருவாயின. மேலும் கொழும்பு பரீட்சைத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும் வடமாநில கல்விப்பணிப்பாளராகவும் இருந்து செய்த சேவைகள் அளப்பரியன.
பிராந்திய அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சின் கீழும் சில காலம் பணியாற்றியுள்ளார். மேலும் இந்துசமய வளர்ச்சிப் பணிக்காகத்தம்மை அர்ப்பணித்து உழைத்தவராகவும் காணப்பட்டார். உலக இந்து கவுன்சில் கொழும்புக் கிளை, அகில இலங்கை இந்து காங்கிரஸ் நிர்வாக சபை உறுப்பினராகவும், கடமை புரிந்துள்ளார்.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய பெரியார் இரா. சுந்தரலிங்கம் அவர்கள் அடக்கமான சுபாவமும், நகைச்சுவை உணர்வும் கொண்டவர் என்பதை அனைவரும் அறிவர்.
இன்றைய தலைமுறையினர் இவரது உழைப்பினைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உழைப்பால் முன்னேறிய பெரியார்கள் வரிசையில் இவரது பணி நிலைத்தே நிற்கும் அன்னாரது ஆன்மா சாந்தியடைவதாக!
இந்துசமயகலாசாரத் திணைக்களம், சாந்தி நாவுக்கரசன் கொழும்பு. பணிப்பாளர்
34

சான்றோருட் சான்றோனாய் வாழ்ந்த செம்மல்
செவிசுட்டுப் போனதந்தச் சேதி கேட்டுச்
சுந்தர லிங்கமெங்கள் தலைவர் ஐயா புவிவிட்டுப் போனாரென் றறிந்து உள்ளம்
புண்ணாகிப் போகவுடல் சோர்ந்து போனோம் கவிந்ததுகார் எனும்பாங்காம் கல்வி மீது
கற்றவர்கள் துயருற்றார் கவல்மி குந்தே தவிக்கின்றார் குடும்பத்தார் சோகத் தாலே
தாயிழந்த கன்றனையார் காப்பா ரற்றே.
தலைநகரில் நீண்டகாலத் தமிழ்த்தொண் டாற்றும்
தமிழ்ச்சங்கத் தலைவரெனத் தலைமை ஏற்றுப் பலவுயர்ந்த பணிகளினைத் தலைமேற் கொண்டு
பொறுப்புடனே செயலாற்றி வெற்றி கண்டார்
நிலைபெறாது போனதுமேன் தொடர்ந்தும் அது
நித்தியன்பால் செலவேனோ வேகங் கொண்டார்
தலைமையினை இழந்து நாங்கள் தவிப்ப தற்கோ
சான்றோருட் சான்றோனாய் வாழ்ந்த பேறே.
கல்வித்துறை சார்ந்து பல காலம் தம்மின்
கடமைகளைக் கருத்தாகச் செய்து சேவை வெல்லும்படி ஆற்றியுயர் பதவி கொண்டு
வரலாற்றில் தன்நாமம் பதியச் செய்தார் நில்லாது சமூகப்பணி தொடரத் தன்னை
நிலைநிறுத்திக் கொண்டவர்தம் இறுதி மூச்சு வல்லவன்பால் செல்லும்வரை தொண்டு செய்து வதிபுலத்தை வாழவைத்த வள்ள லாரே.
இறைபக்தி மிக்கவராய் இருந்தார் ஐயா
இயன்றவரை இறுதிமட்டும் இறைதொண் டாற்றி மறைவழியில் வாழ்வியற்றி மற்றோர்க் கெல்லாம்
முன்னுவமை காட்டியவர் மதிசீர்ச் சான்றோன். நிறைவுறாத தொண்டு தொடர்ந்த தியற்றுங் காலை
- நினையாத போழ்திலெமை விட்டுச் சென்றார் குறைநிரப்ப யாருண்டாம் அவர்தம் போன்று
கடமையிற்கண் கொண்டவர்கள் அரிதாம் இன்றே.
35

Page 21
இடைநடுவில் எமைவிட்டுப் போனா லும்நின்
இழப்பைளண்ணி நெஞ்சுறைந்த மறக்க வொண்ணா கடலளவு சோகத்தைத் தாங்கி நீங்கள்
கொண்டதிருப் பணிகளினைத் தொடர்வோம் எம்மில் விடைபெறினும் விடைகொள்ளா வாறு நீங்கள்
வாழ்வுகொண்டீர் நெஞ்சத்தே பாசம் என்னும் குடைநிழலைத் தந்தவரே பிரிவு யார்க்கும்
காத்தருள்வோன் விதித்தவிதி அமைதி கொள்வோம்.
கொழும்புத் தமிழ்ச்சங்கச் சார்பில்
கவியாக்கம் - ஜின்னாஹ் ஷரிபுத்தீன் (துணைத் தலைவர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்)

என்றும் நிலைக்கும் உயிர்த்தொடர்பு
சின்னஞ்சிறு வயது முதல் நாமிருவரும் இணைபிரியாது இணைந்து வாழ்ந்தோம் . உறவினராகவும் நண்பராகவுப இணைதுணையாகப் பிரியாதிருந்தோம். இறுதிவரை இருவரின பிண்ைப்பும் அறாது இருந்தது.
பாடசாலைக்குச் செல்லும் போது கூட இருவரும் ஒரே சயிக்கிள் வண்டியில் தான் செல்வோம். ஒரே பாடசாலையில் படித்து ஒன்றாக
Q អំណាយ உறவாடி எந்நேரமும் நகைச்சுவை ததும்ப உரையாடி மகிழ்ந்த அந்தக் காலத்தைப் நினைத்துப் பார்க்கின்றேன். அதே விதமான தொடர்பு இறுதிக் காலத்திலும் நிலைத்தது. இருவரும் வெவ்வேறு துறைகளில் தொழில் புரிந்து ஓய்வு பெற்றுக் கொழும்பில் வாழ்ந்த போதும் இணைபிரியாதிருந்தோம். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அவர்தலைவராகவும் நான் உபதலைவராகவும் இருந்து சேவைகள் செய்தோம். சில மாதங்களுக்கு முன்னரே அவரைப் பிரிந்து லண்டன் வந்தேன். எனினும் எமது தொடர்பு தொலைபேசி மூலம் தொடர்ந்தது. இன்றோ அவர் என்னை முற்றாகவே பிரிந்து விட்டார். மனத்தொடர்பு மட்டுமே அவருடன் கடந்த 72 வருடம் உறவாடியதை நினைந்து நினைந்து இரை மீட்கிறது.
சுந்தரரால் எங்கள் இணுவில் பெற்ற பெருமை கொஞ்சமல்ல. அவரால் நான் பெற்ற பெருமையும் மகிழ்வும் கொஞ்சமல்ல. உடல்களின் தொடர்புகள் பிரிந்தாலும் உயிர்களின் தொடர்புகள் என்றும் அறாது. அவர் ஆத்மா சாந்தியடைக.
தி. சி. அமிர்தலிங்கம் (இணுவில்)
உபதலைவர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
を遵急

Page 22
சகலகலா வல்லவர் என் தம்பி
எங்கள் தந்தையார் தமிழில் பற்றும் சைவசமயத்தில் ஆழமான ஈடுபாடும் அனுஷ்டானந்தனில் மிகுந்த அக்கறையும், இசைஞானமும் கொண்டு வாழ்ந்து முறைமையாய் தனது புதல்வர்ளுக்கும் அவற்றில் பாண்டித்தியம் பெற வைக்கப் பாடுபட்டதால் நால்வரும் சைவதீட்சை பெற்றதோடு தமிழ் அறிவும் இசைஞானமும் கலை ஆர்வமும்
கொண்டவர்களாகவே வளர்ந்தோம்.
எனது தம்பியார் ஒரு படிமேலே போய் தமிழோடு ஆங்கிலம, சமஸ்கிருதம், பாளி போன்ற பிறமொழிகளும் நடனக்கலையும் பயில வழிவகுத்தது. அரசாங்க சேவையிலிருந்தாலும் எமது குலதெய்வமான இணுவில் செகராசசேகரப் பிள்ளையாரின் மேலுள்ள அன்பு மேலீட்டால் தேர் உற்சவம் உட்பட பல உபயங்களில் இடையறாத பங்கேற்புகளோடு இணைந்து சித்திரத்தேர் அமைக்கும் பணியிலும் பின்னர் அண்மையில் அத்தேர் பாதுகாப்புக்கான இருப்பிடம் மற்றும் விநாயகப் பெருமான் தேரில் ஆரோகணிக்க உதவும், தேர்முட்டி என அழைக்கப்படும் பிடிகளோடு கூடிய கட்டிடத் தொகுதியும் வயிரவசுவாமி சந்நிதியும் பூர்த்திசெய்வித்துக் கும்பாபிஷேகமும் விதிமுறைகளுக்கமைய நடாத்தக் காரணமாகவும் உதவினார்.
மொத்தத்தில் அவர் ஒரு சகல கலா வல்லவன் என்ற ஆற்றலையும் செயற்றினையும் நிலைநாட்டிய பின்பே இறைபதம் எய்தினார். அவர் முன்னெடுத்த இறைபணிகளை அவர் மகன. மகள் ஆகியோருடன் உறவினர் சுற்றத்தாரும் தொடர்ந்து முன்நின்று நிறைவேற்ற எல்லாம் வல்லகுல தெய்வமான பிள்ளையார் அருள்புரிவாராக. அவர் ஆத்ம சாந்திக்கு நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி!
சிட்னி, சகோதரன் அவுஸ்திரேலியா. இ. இராசரத்தினம்
38

ஆளுமை தந்த வழிகாட்டி
அறிவு தெரிந்த நாள் முதல் அகம் நிறைந்த உறவாக ஆளுமை தந்த வழிகாட்டியாக என்னை வழிநடத்திய பெருந்தகையை இழந்து தவிக்கிறேன். என் தாய் தந்தையின் மீது மிகப் பிரியமுள்ள உறவாக வாழ்ந்து இறக்கின்ற நிமிடம் வரை அன்பினால் என்னை ஆற்றுப்படுத்திய ஆத்மாவை இனிக் காண்பதெங்கே? அதிகாலை எழுந்து நீராடி திருநீற்றுக் கோலத்தோடு கோவில்களை நாடிப் பாடிப் பரவி பணிந்து வணங்கும் பண்பு கண்டு பயின்றோம். சிரித்து மகிழ்ந்து சிந்திக்கக் கதைகூறி எவரையும் ஆறுதல் செய்யும் அவரது ஆளுமைக்கு நிகர் அவரே. உவப்பதலைக் கூடி உள்ளப்பிரிதல் அனைத்தே புலவர் தொழில் என்ற வள்ளுவர் வாக்குக்கு அமைய இவரோடு என்னும் எவ்வளவு நேரம் பேச முடியும் என்ற ஆதங்கத்தோடே அவரோடு பழகியவர்கள் ஆவல் கொள்வர். எத்தகைய மனப்பாரத்தோடும் நாடித் தேடி வருபவர்கள் உள்ளத்தை இனிமையாக்கி உவகை கொள்ள வைக்கும் இவ் உத்தமரை இனி எங்கு சந்திப்பது. சுந்தரலிங்கம் மாமா என்ற வார்த்தை என்னை மட்டுமல்ல எம்மைச் சார்ந்த அத்தனை பேரும் நீள நினைந்து சொல்லி' மகிழும் அவர், சுவை மிக்க கதைகள் எல்லாமே ஒய்ந்து போய்விட்டது. சத்திரசிகிச்சை முடிக்க வேண்டும். பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் பங்குபற்ற வேண்டும். என்று எத்தனை எத்தனை கதைகள் சொன்ன வண்ணம் தொலைபேசியில் பேசி முடிந்து விடைபெற்றீர்கள். சிகிச்சை முடிந்து வருவீர்கள். சிரித்து மகிழ்ந்து பேசுவீர்கள் ஏற்கமுடியவில்லை. அருமை மகன் சுதர்சன், அருமை மருமகன், மகள், மருமகள். பேரக்குழந்தை எல்லோர் பெயரிலும் ஒவ்வொரு கோவிலாக நீண்ட அர்ச்சனை செய்விக்கும் உங்களை கோவில் குருக்கள்மார் முதல் தேடுகிறார்கள். கல்விச் சமூகம் மட்டுமல்ல வாணிப நிலையச் சிப்பந்தி முதல் சிரிக்க வைக்கும் ஐயாவின் படம் பேப்பரில் இருக்கிறது என்று உருக்கமாக அழுவதைக் காண்கிறோம். எல்லோர் இதயத்திலும் வாழும் நீங்கள் இறைவனோடு இருந்து எம்மை என்றும் வழிநடத்துவீர்கள் என்பது எம் நம்பிக்கை. உங்களை வணங்குகிறோம். எங்களுக்கு என்றும் வழிகாட்டுங்கள். கல்விச் சமூகம் முதல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வரை தங்கள் முதல்வரை இழந்ததாய் அஞ்சலி செய்து பெருமை தந்தனர். வாழ்விலும் பெருமை இறப்பின் பின்பும் பெருமை எவ்வுலகிலும் ஏற்றமிகு பெருமையுடன் வாழ்வீர்கள். நன்றி
ஆ. பூரீஸ்கந்தமூர்த்தி அதிபர் ចិត្តប់uru ஆசிரிய கலாசாலை

Page 23
நன்றி நவிலல்
சுந்தரத் தீபமாகச் சுடர் விட்டொளிர்ந்த எங்கள் குடும்பத் தலைவரின் மறைவுச் செய்தியைக் கேள்வியுற்ற உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் உடுக்கை இழந்த கை போல ஓடி வந்து எம் ஆறாத் துயரில் நேரில் பங்கேற்றும், தந்தி, தொலைபேசி மூலமாகவும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலிருந்தும் துயர் பகிர்ந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
கொழும்புத் தமிழ்சங்கத்தினர் எம் உடன்பிறப்புகளாக நின்று அன்னாரின் இறுதிக் கிரியைகளில் முன்னின்றுழைத்து, துக்கச்சுமையிலும்
பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கும் நன்றி கூறக்கடப்பாடுடையோம்.
யாழ்ப்பாணக் கல்விச் சமூகம், அன்னாரின் பல்வேறு சேவைகளுக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும் அவரை நினைந்து நன்றியறிதலுடன் கூடிய இரங்கற் செய்திகளையும். ஆறாத் துயரினையும் எம்மோடு பகிர்ந்து கொண்டமை, பெரும் ஆறுதலளித்தது. அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.
இன்றைய தினமும் அமரரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் பங்கேற்று, வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றிகள். மேலும் இம்மலரை அழகுற அச்சுவாகனமேற்றி உரிய வேளையில் உதவிய SPRINT உரிமையாளருக்கும் நன்றிகள்.
சுபம்!
89/14, பசல்ஸ் ஒழுங்கை குடும்பத்தினர்
வெள்ளவத்தை, கொழும்பு 06.
 


Page 24