கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சலனமும் சரணமும்

Page 1
(FGDOT pub
புலவர் சிவங் கருண ஜனன தின நூற்றாண்டுப்
உச்ச நீதிமன
உயர்திரு. க.வி.வி
கொழும்புத் தமிழ்
 

GFJ GOOTLpLİ)
ாலய பாணர்டியனாரின்
பூர்த்தி நினைவுப் பேருரை
ர்ற நீதியரசர் ിBIബി
ச்சங்க வெளியீடு

Page 2

சலனமும் சரணமும்
புலவர் சிவங் கருணாலய பாணர்டியனாரின்
ஜனன தின நூற்றாண்டுப் பூர்த்தி நினைவுப் பேருரை
உச்ச நீதிமன்ற நீதியரசர் உயர்திரு. க.வி.விக்னேளப்வரன்
ஜி
கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடு 05.09.2004

Page 3

Ts6
மறைவு 1976-06-30
i
OOTILIGUTTT -96)
பெரும் புலவ
தே
ாற்றம் 1903-08-09
I OTTDLI LIIT

Page 4
  

Page 5
ஆதலில் இப்பேருரையை நூலாக வெளியிடுவதிற் கொழும்புத் தமிழ்ச் சங்கம் மகிழ்ச்சியடைகிறது. இப்பேருரையை நிகழ்த்திய உயர்திரு க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும், பல்வேறு உதவிகளை வழங்கிய புலவர் பாண்டியனார் மகன் திருவருள் வள்ளல் அவர்களுக்கும், புலவர் பாண்டியனார் பற்றிய செய்திகளை வழங்கிய கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் பெரியதம்பிப்பிள்ளை விஜயரெத்தினம் அவர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக.
வாழ்க தமிழ் வளர்க தமிழ்ப்பணி
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி பொதுச் செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்

புலவர் சிவங்கருனாயை பாண்டியனாரின் வாழ்வும் பணிகளும்
சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர்களின் உள்ளத்தில் நின்றும் பெருகி எழுந்த பேரன்பினால் அவர்கள் சங்கம் நிறுவியும், புலவர்களை ஆதரித்தும், தமிழை வளர்த்தார்கள். வடமொழியோடு ஒத்த மேன்மையுடையதாய் தமிழ் மொழி மிகவும் சிறப்புப் பெற்று விளங்கியது.
இம்முச்சங்கங்களை அடியொற்றி, நிறுவப்பட்ட கொழும்புத் தமிழ்ச்சங்கம், கடந்த 62 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பணி ஆற்றி வருகின்றது. தமிழ் மொழிக்குத் தொண்டுபுரிந்த சான்றோர்களைப் பாராட்டியும், நினைவுப் பேருரைகளை நிகழ்த்தியும் வந்திருக்கின்றது. இந்த மரபைப் பின்பற்றி, கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில், புலவர் சிவங்கருணாலய பாண்டியனார் அவர்களின் திருவுருவப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு சங்க மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது.
5.09.2004ம் நாள் ஆகிய இன்று, அவருடைய நினைவுப் பேருரை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில், நிகழ்த்தப்பட உள்ளது. இந்த நினைவுப் பேருரையை, உச்ச நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு திரு.C.V.விக்னேஸ்வரன் அவர்கள் நிகழ்த்த உள்ளார்.
இந்த நிகழ்விற்குத் தலைமை தாங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஈழநாட்டைச் சேர்ந்த திரு.சி.வை.தாமோதரம்பிள்ளை, திரு.கனகசபைப்பிள்ளை, நல்லூர் பூரீலழறீ ஆறுமுக நாவலர், முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள், தனிநாயகம் அடிகள், திருமலை கணக சுந்தரம்பிள்ளை முதலியோர் தமிழ்நாடு சென்று தமிழ் வளர்த்தது போல், தமிழ்நாட்டைச் சேர்ந்த புலவர் சிவங்கருணாலய பாண்டியனார், நவநீத கிருஷ்ண பாரதியார் கலாநிதி.சு.நடேசபிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கள், ஈழநாட்டுக்கு வந்துதமிழ்ப்பணியும் கல்விப்பணியும் ஆற்றியதை நாம் அறிவோம்.

Page 6
புலவர் சிவங்கருணாலய பாண்டியனார் அவர்கள், கொழும்புத் தமிழ்ச் 1ங்கத்தோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்பதையும் இச் சங்பத்தில் தமிழ் வகுப்புகளை நடத்தினார் என்பதையும் சங்கப் பதிவேடுகள் முலம் அறிய முடிகின்றது.
தமிழ் நாட்டில் பிறந்த இவர், "யாதும் ஊரே, யாவருங் கேளிர்", என்பதற்கிணங்க அரை நூற்றாண்டு காலமாகக் கொழும்பில் வாழ்ந்து எண்ணற்ற மாணவர்களுக்குத் தமிழ் அறிவைச் சுவைபட ஊட்டினார். இவர் சிறந்த இலக்கண இலக்கிய அறிவுடையவர். வடமொழி, தமிழ்மொழி, ஆகியவற்றில் நிறைந்த புலமை உடையவர். சைவ சித்தாந்தப் புலமையும் சிறந்த மதிநுட்பமும் உடையவர். பாண்டியனாரின் சிறந்த நூலாக "நம்பி அகவல்" கருதப்படுகிறது. இது பகவத்கீதையின் மொழிபெயர்ப்பாகும்.இதைவிட பதஞ்சலி யோகசூத்திரம், உபநிடதங்கள் முதலிய நூல்களையும் தமிழில் ஆக்கியுள்ளார். இவர் திருக்குறளின் அறத்துப்பால் முழுவதற்கும் விளக்கமானதோர் உரையும் செய்துள்ளார். இதன் மூலம் இவரின் தமிழ் அறிவையும், நுண்மதியையும், மெய்யியற் சிந்தனையையும் அறிய முடிகின்றது. புலவரிடம் தமிழ் கற்ற பலர், கொழும்பில் இருக்கின்றார்கள். அவர் ஒரு மாணவ பரம்பரையை விட்டுச் சென்றுள்ளார். தமிழ் கற்பித்தலைத் தொழிலாகக் கொண்டு காலத்தைக் கழித்த தமிழ் அறிஞரான இவர் ஒரு தத்துவ ஞானி. பகுத்தறிவாளர், சுத்த அத்துவைத சமரச யோகி.
அவரிடம் தமிழ் கற்றவர்கள் அவரை நினைவுகூரத் தம்மால் இயன்ற பணிகளைச் செய்ய முன்வர வேண்டும். இந்த விழாவினை ஏற்பாடு செய்வதில் முன்னோடியாக விளங்கியவர் பாண்டியனாரின் மகன் திருவருள் வள்ளல் அவர்கள். அவரது இந்த முயற்சியைப் பாராட்ட வேண்டியதுநம் அனைவரின் கடமையாகும். "செயற்கரிய செய்வார் பெரியர்", "மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்", என்னும் வள்ளுவர் குறளுக்கு இலக்கணமாக விளங்கும் பாண்டியனாரின் மகன் திருவருள் வள்ளல் அவர்களைப் பாராட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
வாழ்க தமிழ், வளர்க பாண்டியனாரின் தமிழ்த்தொண்டு.
பெரியதம்பிப்பிள்ளை விஜயரெத்தினம் தலைவர் கொழும்புத் தமிழ்ச்சங்கம்.

சலனமும் சரணமும்
குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேஷ்வரஹா - குரு சாக்ஷாத் பரப் ப்ரம்ம தஸ்மை பூரீ குரவே நமஹ.
தலைவர் அவர்களே, முது பெருந்தமிழறிஞர் கா.பொ.இரத்தினம் ஐயா அவர்களே, அன்புச் சகோதர சகோதரிகளே,
பண்பின் விழுமியபாண்டியனார் நினைவாகப் பைந்தமிழில் பேச வேண்டும் என்று அவர்தம் அன்பில் விளைந்த அருமை மகனார் திருவருள் வள்ளலார் தொலைநாடாம் அவுஸ்திரேலியாவில் இருந்து தொலைபேசியில் கேட்டுக் கொண்ட போது நான் மலைத்தேன். தமிழ்க் கடலின் தகைமை பற்றித் தரையினிலே தவழ்ந்திடும் தமியன் பேச வல்லேனோ என்று கேட்டேன். “இல்லை! உங்கள் உள்ளத்திற்கு உவந்த ஒரு பொருள் பற்றிப் பேசுங்கள்அவர் நினைவாக!” என்றார். V
புலவரை நான் முதலில் சந்தித்தது என் தொழிலின் முதல் ஆசான் காலஞ்சென்ற காசிப்பிள்ளை கனகரத்தினம் ஐயா அவர்களின் இல்லத்தில். வேட்டியும் வெறும் மேலும், வெள்ளைத் துண்டொன்று அவர்தம் தோள்களிலே துவண்டு படர்ந்திருக்கும். வாய் திறந்தால் செந்தமிழாள் அரசோச்சுவாள். அவர்தம் எளிமையான தோற்றம் உயர்ந்த உளப்பாங்கையும், சிறந்த சிந்தனைகளையும் அமைதியாய் உள்ளடக்கி வைத்திருந்தது என்பதை முதன் முதலில் அவருடன் பேசியபோதே உணர்ந்து கொண்டேன். தமிழில் ஆர்வங் கொண்டதை அறிந்து என் தமிழாசான் பெயர் கேட்டார். “கி.இலக்ஷ்மண ஐயர்’ என்று பதிலுரைத்தேன். “றோயல் கல்லூரியில் பயின்றீரோ?” என்று கேட்டார். “ஆம்” என்றேன். அவர் தொடர்ந்து எம்முடன் பேசியதில் இருந்து அறநிலை நாடும், பரநிலையில் பற்றுக்கொண்ட பாவலர் அவர் என்பதை அறிந்து கொண்டேன். செல்வம், புகழ்ச்சி, போற்றல் இவை பற்றிப் பெரிதாக நினையாத பெருந்தகை அவர் என்று கனகரத்தினம் ஐயா பின்னர் எனக்குக் கூறி வைத்தார்.
9

Page 7
அது மட்டுமல்ல. அந்தக் காலகட்டத்தில் கொழும்பில் வாழ்ந்த தமிழ் வித்தகர்களில் பாண்டியனார் தலைசிறந்தவர் என்றால் மிகையாகாது என்றும் கூறி வைத்தார். அதன் பின் ஆங்காங்கே புலவரைக் கொழும்பில் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத்தனை நெருங்கிய தொடர்பு என்று கூறமுடியாது. அவரின் தமிழ் மாணவர்கள் பலர் என் நண்பர்கள். அவர்களுள் ஒருவர் கூறினார், "கீதா வாசகங்களை நடைமுறைப்படுத்தும் விதம் அறியத் திருக்குறளைப் படிக்க வேண்டும். அந்தக் கீதையையும், குறளையும் நடைமுறைப்படுத்தியவர், அவற்றின் வழியே வாழ்ந்து காட்டியவர் எங்கள் பாண்டியனார்" என்று.
1903ம் ஆண்டு எட்டாம் மாதம் ஒன்பதாந் திகதி பிறந்த அவர் 1976ம் ஆண்டு ஆறாம் மாதம் 30ம் திகதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அன்னாரின் மகனை, திருவருள் வள்ளலாரை, அவுஸ்திரேலியாவில் சந்தித்தேன். அவரின் மொழிப்பற்றும், மதப்பற்றும் அவை பற்றிய அறிவும் என்னைக் கவர்ந்தன. ஆகவே தந்தையாரின் ஞாபகார்த்தமாக ஏதாவது ஒரு பொருள் பற்றிப் பேசுங்கள் என்ற போது அதை ஏற்று எதைப்பற்றிப் பேசுவது என்று பல நாட்கள் சிந்தித்தேன். காலஞ் சென்ற புலவர் இருந்திருந்தால் அவர் மனதிற்கு இதங் கொடுக்கும் வண்ணமாக இக் கருப்பொருள் அமைய வேண்டுமே என்று அவர் யாத்த நூல்கள் சிலவற்றினுள் நுழைந்து பார்த்தேன். "நம்பியகவல்", "அழகியது", "கதிர்காமப் பிள்ளைத்தமிழ்", "எழினி" ஆகியவை அவர் யாத்த நூல்களில் சில. இவற்றுள் நம்பியகவல்தான் அவரின் மிக முக்கிய படைப்பு எனலாம். பகவத்கீதையைத் தமிழில் வடித்து, தமது தனிப்பட்ட வியாக்கியானங்களை அதில் வரைந்து தந்துள்ளார். வால்மீகி இராமாயணத்துக்கு எவ்வாறு கம்பன் தமிழ் வடிவம் கொடுத்துத் தமிழிலான மூலநூல் என்ற அந்தஸ்தைநல்கினானோ அதே போன்று வியாசர் வழிவந்த பகவத்கீதையைப் பாண்டியனார் சங்கத் தமிழ் சார்பிலான நம்பியகவலாக நமக்களித்துள்ளார்.
உண்மையில் அந்நூலில் காணும் புலவரின் செந்தமிழ்க் கையாள்கை என் சிற்றறிவுக்கப்பாற்பட்டது. பண்டிதர் கா.பொ.இரத்தினம் போன்றவர்களே அப்பேர்ப்பட்ட நூல் பற்றி நுகர்ந்து நயம் சொல்ல வல்லவர்கள். நான் அப்பேர்ப்பட்ட காரியத்தை என் கனவிற் கூடச் செய்ய முடியாது. ஆனால் புலவர் அவர்களின் மனங் கவர்ந்த பகவத் கீதையின் உள்ளடக்கத்தில் இருந்து என்னைக் கவர்ந்த ஒரு சில கருத்துக்களை எடுத்துரைக்கலாம் என்று எண்ணிச் “சலனமும் சரணமும்” என்ற தலையங்கத்தைக் கொழும்புத் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் திரு.ஆ.கந்தசாமி அவர்களிடம் தெரியப்படுத்தினேன். மந்திரம் என்றால் காயத்ரீ மலர் என்றால் தாமரை, தயை என்றால் தாய், நூல் என்றால் பகவத்கீதை தான் என்பார்கள். அப்பேர்ப்பட்ட தெய்வீக நூலில் இருந்து வடமொழி தெரியாத நான் ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள
10

வந்துள்ளேன். விநாயகப் பெருமானும், விஷ்ணு தெய்வமும், என் வித்தைக் கதிபதியான குருநாதனும் என்னைக் காப்பார்களாக!
“சலனமும் சரணமும்” என்ற தலையங்கத்தின் அடிப்படை அர்த்தம் சஞ்சலங்களைத் தீர்க்கும் வழி இறைவனிடம் சரண் புகுதலே என்பதாகும். பகவத் கீதையின் சாரத்தை ஓரிரு வார்த்தைகளில் பிழிந்து தாருங்கள் என்று கேட்டால் எதைக் கூறுவீர்களோ தெரியாது. “கடமைகளைச் செய் பயனை எதிர்பாராதே’ என்று ஒருவர் கூறக்கூடும்."நடப்பவற்றிற்குநாயகன்நான். நலியாது நடந்து செல் என்றார் கிருஷ்ண பரமாத்மா” என்று இன்னொருவர் கூறக்கூடும். “சலனமற்ற மனத்தோடு பற்றுடன் பணிசெய்’ என்று மேலும் ஒருவர் கூறக்கூடும். “சலனங்கள் தீர என்னைச் சரணடை என்று பரந்தாமன் கீதையில் கூறியுள்ளான்” என்று என்போன்றவர்கள் கூறுவார்கள். இவையாவும் ஒரே உள்ளர்த்ததைக் கொண்டவையே என்று கூறுவதுதான் இந்தப் பேச்சின் நோக்கம்.
குருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு யானையின் வெவ்வேறு பகுதிகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு ஒருவன் முறம் போலத்தான் யானை இருக்கும் என்றும், இன்னொருவன் கற்றுண் போலத்தான் இருக்கும் என்றும், மேலும் ஒருவன் அகன்ற அண்டாபோல இருக்கும் என்றும் கருத்துத் தெரிவித்தார்களாம். அதே போலத்தான் ஒவ்வொருவரும் பகவத் கீதையைப் பற்றிக் கூறுவதிலும் அர்த்தம் இருக்கிறது. அதற்கு அப்பாலும் அந்தத் தெய்வ நூலின் அர்த்தங்கள் விரிந்து செல்கின்றன என்பதை மனதில் வைத்துக் கொள்வோமாக.“சலனமும் சரணமும்’ என்ற தலைப்பில் பக்தி மார்க்க வியாக்கியானத்திற்கு இந்தப் பேருரையைக் கருவியாக்கிக் கொள்கிறேன். எல்லா மார்க்கங்களுக்கும் பக்தி அடிப்படையாக அமைகின்றது என்பது என் தாழ்மையான கருத்து.
கடமைகளைச் செய் பலனை எதிர்பாராதே
சலனம் என்றால் மனச் சஞ்சலம். வாழ்க்கையில் எது சரி, எது பிழை, எது கடமை, எது செய்தலாகாது என்பவற்றை அறிந்து கொள்வது சில சமயங்களில் மிகக் கடினமாக அமைகின்றது. அப்பொழுதுதான்மனம் சஞ்சலம் அடைகின்றது. இதைச் செய்யலாமா செய்யக்கூடாதா என்று மனம் குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறது. அந்நேரங்களிலே தான் ஞானிகளுடைய அருளுபதேசத்தை மனம் அவாவி நிற்கின்றது. எங்களுக்கு ஏற்படுவது போலத்தான் அருச்சுனனுக்கும் ஏற்பட்டது. அவன் பரந்தாமனிடம் கூறுகிறான் “எனது கடமை எது என்பது எனக்குத் தெளிவாகப் புரியவில்லை. நான் உன் மாணாக்கன் உன்னைச்ஆஜ்ம அடைந்தேன். எனக்கு உபதேசம் செய்தருழ்ஷாழ்க்ன்றிச் ண்டைந்த அருச்சுனனுக்கு பகவான் கூறுகிறார் “யுத்தஞ் செய்வது உன் தருமம், அதுவே
11

Page 8
உன் கர்மமுங்கூட. உன் கருமத்தை நீ செய்ய வேண்டும். ஆனால் உன் கர்மத்தைச் செய்வதில்-ஏற்படக்கூடிய பலாபலனிலே ஆசை வைத்திருக்கிறாய் பார் - அதை நீ கைவிட்டு விட வேண்டும்” என்று கூறுகிறார். கருமத்தை, கடமையை விட்டு விடு என்று கூறவில்லை. கர்ம பலாபலனையே தியாகம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் கிருஷ்ண பரமாத்மா.
எதைச் செய்யும் போதும் எங்கள் மனம் ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தான் ஒரு கருமத்தைச் செய்யத் தூண்டுகிறது. பொதுவாக அந்தக் காரணம் குறிப்பிட்ட கருமத்தை ஆற்றினால் எமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற அடிப்படையில்த் தான் அமைந்திருக்கும். எம் உடல், எம் உள்ளம், எம் அறிவு, எம் கீர்த்தி, எம் சொந்த பந்தங்கள் என்று ஏதாவது ஒரு தொடர்போடு தான் இந்தக் காரணம் பொதுவாக இணைந்திருக்கும். குறிப்பிட்ட கருமத்தால் ஏற்படும் பலாபலன் எமக்கோ, எம்முடைய இந்தத் தொடர்புகளுக்கோ நன்மை பயக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நாங்கள் கடமை ஆற்றுகிறோம். அப்பேர்ப்பட்ட நன்மை கிடைத்தால் நாங்கள் குதுாகலப்படுகிறோம். இல்லையேல் சங்கடப்படுகிறோம். இவையாவும் "நான்”, “நாங்கள்”, “எனது', “எமது” என்ற அகங்காரத்தின் மமகாரத்தின் அடிப்படையில் இருந்து தான் உற்பத்தியாகின்றன. எங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் ஏதோ மனவடிவங்கள் எம்மால் உருவாக்கப்பட்டு எம் மனதில் இருப்பதால்த்தான் அவற்றிற்குப் பாதகம் ஏற்படாமல் அவற்றைப் பாதுகாக்கும் வண்ணம் எங்கள் கருமங்களை ஆற்றி வருகிறோம். கருமங்கள் எப்படி அமைந்தாலும் எங்களைப் பற்றிய எங்கள் கற்பனைகள் ஆட்டங்காணக்கூடா என்ற நினைப்பில்த் தான் நாங்கள் எங்கள் கருமங்களை ஆற்றுகிறோம். அதை விடுத்து “கருமத்தைச் சரியாக ஆற்று, உன்னைப் பற்றிய உன் கற்பனையைக் கைவிடு” என்று கூறுமாப் போலத்தான் “கடமைகளைச் செய் பலனை எதிர்பாராதே’ (Dothy duty, expect not its fruits) என்ற வாசகமும் “சலனமற்ற மனத்தோடு பற்றுடன் பணி செய்” (Disinterested devotion to dutybethy credo) 6T6ösp 6)/Tófób(pD 96o)Dbg5c5dbó56öIp60.
கருமமே கண்ணாய் இருப்பவன் பலனை எதிர்பாராது வேலை செய்யுங்கால் ஒருவித சோர்வுக்குள் சிறைப்படக் கூடும். அகங்காரமானது உடலுக்கும் உள்ளத்திற்கும் உரம் ஊட்ட வல்லது. பலத்தைக் கொடுக்கக் கூடியது. தான் என்ற அகங்காரம் அகன்று விட்டால் மனத்தில் உற்சாகம் குறைந்துவிடும். ஆனால் எங்கள் காரியங்கள் யாவும் எங்கள் உடல், உள்ளம், அறிவுமூலமாக இறைவனால்த் தான் இயற்றப்படுகின்றன என்பதை உணர்த்தும் வண்ணம் மனதை இறைவனிடம் சரணடையச் செய்துவிட்டுக் காரியங்களைப் பலனை எதிர்பாராமல் இயற்றிவிடுவாய் என்று கண்ணபரமாத்மா கூறுகிறார். “நான் வெல்வேனா, போரில் எம்மவர்கள் வெல்வார்களா என்று எண்ணாமல் என்னிடம்
12

சரணடைந்து விட்டுப் போரை நடத்து’ என்கிறார் பகவான் கிருஷ்ணர், “வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவன் நான். கடமையைக் கண்ணியமாக முழுமனதுடன் செய்து முடிக்க வேண்டியது உன் பொறுப்பு’ என்று கூறும் பகவான், மனதில் சலனம், சஞ்சலம் ஏற்படா வண்ணம் சரணாகதி அடைவாயாக என்று கூறுகிறார். அப்பேர்ப்பட்ட சரணடைந்த உள்ளத்துடன் கருமம் ஆற்றிய பரதன் இராம இராஜ்யம் ஒன்றையே நடத்தினான். சரணடைந்த ஆஞ்சநேயர் சஞ்சீவி மலை சென்று வந்து இராம இலக்குமணர்களையே மயக்கந் தீர்த்துக் காத்தான். கர்ம யோகத்தில் ஈடுபட்டிருப்பவன் மனங்கூட பணிவில், பக்தியில், சரணாகதியில் திளைத்திருக்க வேண்டும் என்பதே பகவானின் போதனை.
கர்ம வினை
கள்மம் ஆற்றும் போது சில சமயங்களில் கர்மவினை ஒட்டிக் கொள்கிறது. கர்மவினை ஒட்டாது கர்மம் ஆற்றுவதே கர்ம யோகமாகும். கர்ம வினை என்பது எப்பொழுது ஒட்டிக் கொள்ளுகின்றது என்று பார்த்தால் அகங்காரம், மமகாரம் என்பவற்றின் அடிப்படையில் நாங்கள் கருமம் ஆற்றுகின்ற போது, அதாவது “நான்” என்றொரு தனி அலகு உள்ளது என்ற அறியாமையின் அடிப்படையில் கருமம் ஆற்றும் போதே பாப தோஷம் சேர்ந்து கொள்ளுகிறது. உதாரணமாக ஒரு கொலைகாரன் கொலையில் ஈடுபடுகிறான். இன்னொருவன் தனக்குத் தடையாக இருப்பதால் அல்லது தன்னைச் சேர்ந்த இன்னொருவருக்குத் தடையாக இருப்பதால் திட்டமிட்டு அந்தக் கொலைகாரன் ஒரு கொலையைச் செய்கிறான். அவன் மனோ நிலை “நான்’ என்ற அகங்காரத்தில்த் தான் ஊற்றெடுக்கிறது. கொலையின் பின்னர் “நான்’ கொலை செய்தேன் என்ற எண்ணம் அவனைத் தாக்குகிறது. கர்ம தோஷம் அப்பொழுதே பற்றி விடுகிறது. ஒரு டாக்டர் ஒரு நோயாளியைக் குணமாக்குவதற்காகச் சத்திரசிகிச்சையில் ஈடுபடுகிறார். தன்னால் முடிந்த மட்டில் பிரயத்தனப்பட்டும் நோயாளி இறக்கிறான். “நான் நோயாளியைக் கொன்று விட்டேன்’ என்று டாக்டர் எண்ணுவதில்லை. “பாவம் நோயாளி! அவன் காலம் முடிந்துவிட்டது. என்னால் ஆன மட்டும் சிரமப்பட் டும் அவனைக் காப்பாற்ற முடியவில்லையே! இது எனக்கு அப்பாற்பட்டது” என்று தான் டாக்டர் யோசிக்கின்றார். கொலைகாரனின் நெஞ்சின் அடியில் குற்ற எண்ணம் குமுறிக்கொண்டே இருக்கும். “நான் கொலை செய்துவிட்டேன். ஒருவனின் உயிரைப் பறித்து விட்டேன்,” என்று கதறிக் கொண்டே இருக்கும். அந்த எண்ணந்தான் பாபவினையை உருவாக்குகிறது. டாக்டர் தன் முழு சிரத்தையுடன் சத்திரசிகிச்சையில் நுழைந்திருந்தாரானால் நோயாளி இறந்த போது அவர் மனத்தில் எந்தவித சலனமும் ஏற்பட்டிருக்காது. ஆனாலும்"என்னால்” சத்திர சிகிச்சையைச் சரியாகச் செய்யமுடியவில்லையே
13

Page 9
என்று அவர் எண்ணத் தொடங்கினால் டாக்டரையும் பாப வினை பற்றத் (தொடங்கும். ஆனால் அவரின் எண்ணத்திற்கும் கொலைகாரனின் எண்ணத்திற்'ப் பிரதிபலன் வித்தியாசமாக அமைவன. ஆகவே “நான் தான் செய்கிறேன்’ நன்ற எண்ணந்தான் அறியாமைக்குக் காரணம். அதுதான் பாபவினைக்கு வித்திடுகின்றது. இன்னொருவரின் மரணத்தில்த் தான்“என்’ நன்மை இருக்கிறது என்ற எண்ணத்தில், கொலைகாரன், மற்றையவனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவனுக்கு வலியையும் மரண பயத்தையும் மரணத்தையும் ஏற்படுத்துகிறான். அங்கு பாப வினை வெகுவாகப் பற்றுகிறது. முடியுமான வரையில் நோயாளியின் வலியைக் குறைத்து அவன் சுகப்பட வேண்டுமே என்ற எண்ணத்தில்த் தான் சத்திர சிகிச்சை நடக்கிறது. அந்தக் காரியத்தால் பாபவினை டாக்டரைப் பற்றுவதில்லை. ஆனாலும் “நான்’ சரியாகச் செய்யவில்லையே அல்லது “என்” போன்ற சிறந்த ஒரு சத்திர சிகிச்சைநிபுணர் இப்படிக் கோட்டை விட்டுவிட்டோமே என்று எண்ணும் போது அவரையும் பாபவினை சிறிதாகப் பற்றி விடுகிறது. டாக்டரின் பாபவினை “நான்’ என்ற அறியாமையின் காரணமாக எழுந்தது. கொலைகாரனின் பாபவினை அவனின் கொடூரமான
99 & 4
கொலைக் கருமத்தாலும் "நான்”, “எனது” என்ற எண்ணத்தாலும் எழுந்தது.
கொலைகாரன் அவன் பாபத்தைச் சுமந்தேயாக வேண்டும். ஆனால் டாக்டர் அப்படியல்ல. அவர் நல்ல காரியம் ஒன்றைச் செய்து அதில் தோற்றுவிட்டார். அந்தத் தோல்வியை ஏற்க ஒரு வழிவகுக்கின்றான் இறைவன். “நான்’ செய்தேன் என்ற எண்ணத்தைக் களைந்து எல்லோரிலும் இருக்கும் அந்த இறைவனே அதைச் செய்தான். அவனே என்னைத் தோல்வியுறச் செய்தான். என் கடமையைக் கண்ணியமாகக் கட்டுப்பாட்டுடன் நான் ஆற்றியும் நோயாளியை இறக்கச் செய்தது பரம் பொருளின் லீலை என்று கண்டு கொண்டால், உணர்ந்தால், அங்கு பாபவினை டாக்டரைப் பற்றாது என்று கூறாமல் கூறுகிறான் கூர்மவதாரம் எடுத்த குணாளன். வேண்டுமென்றே ஏதாவது ஒரு பிழை செய்து அதற்காக வருந்தினாரானால் டாக்டரைப் பாபவினை பற்றியே தீரும். ஏன்! அலட்சியமாக இருந்தால்கூட பாபவினை பற்றும். புத்தபெருமான் நடந்து செல்லும் போது அவரை எதிர்த்த ஒருவன் குன்றில் இருந்து ஒரு பாறையைப் புரட்டி விட்டான். தெறித்த கல்லொன்று புத்தரின் குதிக்காலில் பட்டு அவர் வலிக்குள்ளானார். ஏன் இது என்று புத்தரைக் கேட்டதற்கு “முன்னொரு பிறவியில் ஒருவன் மீன்களைப் பிடித்து கூடையில் போட்ட போது அவை துடிதுடித்துச் சாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் கர்ம வினையை இன்றுதான் அனுபவிக்கிறேன்” என்றாராம், சலனமின்றி, அவா இன்றி அன்று அந்தச் சம்பவத்தைப் பார்த்திருந்தால் பாபவினை பற்றியிருக்காது என்பது புத்த சமயக் கருத்து.
14

இக் கருத்தை எங்கள் புராணங்களிலுங் காணலாம். தர்மராஜனைக் கூட்டோடு கைலாசம் கொண்டு போக விரும்பினான் அவன் தந்தை யமன். அவனின் இரு நண்பர்களையும் உடன் கொண்டு போக வேண்டும் என்று தர்மராஜன் வற்புறுத்தினான். வேறு வழியின்றி யமன் அதற்கு உடன்பட்டான். ஆனால் இருவரும் கெட்டியாக ஒருவர் பின் ஒருவர் மற்றவரின் காலைப் பற்றி யிருக்காவிட்டால் அவர்கள் விழுந்து விட நேரும் என்று எச்சரித்தான். அவர்கள் மேலுலகப் பயணம் ஆரம்பமானது. உடனே யமன் ஒரு வேடுவன் உருவெடுத்து ஒரு நெடிய மரத்தின் கொம்பில் இருந்த அழகிய குருவியொன்றினைக் குறிபார்த்துச் சுட்டு விழுத்தினான். மூன்றாவதாகத் தொங்கி வந்தவன் இதைப் பார்த்து விட்டு “அடே பாதகா ஒரு அப்பிராணியை அநியாயமாகக் கொன்று விட்டாயே” என்று அலறினான். அதே நேரத்தில் இரண்டாவதாகத் தொங்கி வந்தவன் “ஐயோ பாவம்! இந்தக் குருவிக்கு இப்படி ஒரு கதியா?’ என்று பச்சா. தாபப்பட்டான். கோபத்தில் கத்தியவனும், அனுதாபத்தில் இரங்கியவனும் தங்கள் பிடிகளைத் தளர விட்டதால் உடனே விழுந்து விட்டார்களாம். தர்மராஜனின் மனதில் சலனமே இல்லை. இறைவனின் லீலை இது என்பதை அறிந்து, உணர்ந்து, அமைதியாக மேலுலகம் சென்றானாம். அகந்தை நிலையை, தன்னால் எதையாவது சாதிக்க முடியும் என்ற அஞ்ஞான நிலையைத் தாண்டியிருந்தான்தருமராஜன். அவன் மனம் இறைவனில் சரணாகதி அடைந்திருந்தது.
ஆகவே செய்வதைத் திருந்தவே செய்து, “நான்’ செய்யவில்லை, அவனருளாலே அவன் என்னுள் இருந்து செய்கின்றான் என்ற உணர்வின் வழி காரியங்களைச் செயற்படுத்தும் போது இறைபக்தியானது தானாகவே எங்களுள் ஆழப்படிந்துவிடுகிறது. எங்கும் அவன் செயல்தான்நடைமுறைப்படுத்தப் படுகிறது என்பது தானாகவே விளங்கி விடுகிறது. “நான்” என்ற அஞ்ஞானம் மறைந்துவிடுகிறது. பிறப்பையும், இறப்பையும் கொடுக்கும் பாபவினை அதனால்த் தான்பற்றாது விட்டுவிடுகிறது என்பது பகவத்கீதையின் அறிவுரை.
துக்காராம் என்ற மகான் இந்த இறை எண்ணம் ஆழமாகப் படிந்தவுடன் கூறுகிறார் -“என்னுள் இருக்கும் அகங்காரம் இப்பொழுது இறந்துவிட்டது. அந்த இடத்தில் நீயே இறைவா குடிகொண்டுவிட்டாய். ஆமாம்! இந்தத் துக்காராம்
கூறுகிறான் - இனி எப்போதும் இவன் “நான்”, “எனது” ஆகமாட்டான்!” என்று.
''
துக்காராம் பெற்ற அந்த அனுபூதியைப் பகவான் ஏழாம் அத்தியாயத்தின் 28வது ஸ்லோகத்தில் விபரிக்கிறார். மகாகவி பாரதி அதைத் தமிழில் பின்வருமாறு கூறுகிறார்
“எந்த ஜனங்கள் பாவந் தீர்ந்து புண்ணியச் செயல்கள் செய்கின்றனரோ, அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து திடவிரத முடையோராய் என்னை வழிபடுகின்றனர்” என்று.
15

Page 10
அருச்சுனனின் மயக்கந் தீர்க்கவே பகவான் அவ்வாறு கூறினார். ஆன்ம அனுபவம் பெற முயல்வோர் சில சமயம் ஒன்றும் அறியாது ஏங்குவதுண்டு. அம் மயக்கம் இருமையின் பால் மனம் சென்றதால் ஏற்பட்டதே. நன்மை-தீமை, சரிபிழை, போர்-சமாதானம், உற்றார்-மற்றார் - இப்படியாக இருமையின் பால் உறைந்த மனம் மயக்கத்தில் தடுமாறுகின்றது. அந்தத் தடுமாற்றந் தீர்ந்தால் அங்கு அமைதி பேணப்படுகிறது. ஆனாலும் அந்தத் தடுமாற்றந்தான் ஆன்ம விசாரத்தின் முதற்படி. பொதுவாக மூலாதாரமான பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்ளாமலே நாம் வாழ் வென்னும் ஆற்றில் நீந்துகிறோம். ஆனால் ஆபத்து வேளை வரும் போது, நாம் எதிர் பார்த்த நன்மைகள் எல்லாம் எங்கள் வாழ்க்கையில் தீமைகளாக மாறி விடும் போது, மனமுடைந்து நாம் இறைவனைக் கூவி அழைக்கின்றோம். அப்பொழுதுதான்நாங்கள் உலோகாய வாழ்வில் இருந்து ஆன்ம விசாரத்தின் முதற் படியில் காலெடுத்து வைக்கின்றோம். தெய்வம் பால் சித்தம் திரும்புகிறது.
இருமை மயக்கம்
இருமை பற்றிக் கீழைத்தேச நாடுகள் பல ஆதியில் இருந்து ஆராய்ந்து வந்துள்ளன. இலாஒ சூ என்ற சீன அறிஞர் கூறுகிறார் “உலகத்தவர்கள் அழகு என்று கூறுவதை அழகுதான் என்று ஏற்றுக் கொண்டால் அவலட்சணம் உலகில் இருக்கத்தான் செய்யும். உலகத்தவர்கள் நன்மை என்று கூறுவதை நன்மை தான் என்று ஏற்றுக் கொண்டால் தீமை என்பதும் இருக்கத்தான் செய்யும்” என்று. அதன் அர்த்தம் என்னவென்றால் அழகும் அவலட்சணமும்,நன்மையுந் தீமையும் அறிவின் பாற்பட்ட கருத்தியலான எண்ணங்கள். இவை தொடர்புடை எண்ணங்கள். எந்த ஒரு எண்ணத்துடன் எங்கள் மனமானது தொடர்பு கொண்டு அதில் உறைந்து நிற்கின்றதோ உடனே அதற்கு எதிர் மாறான எண்ணத்திற்கும் மனம் இடம் அளிக்கிறது. ஞானிகள் அப்படியல்ல. மனமானது ஏற்படுத்தும் இருமை நிலையை அவர்கள் கடந்து நிற்கின்றார்கள். அவர்களின் முழுமையான பார்வையில் இருமை மறைந்து போகிறது. ஒரு தாயிடம் வந்து உன் ஒரு மகன் நல்லவன் மற்றையவன் தீயவன் என்று யாராவது கூறினால் தாய் அப்படிப் பார்க்க மாட்டாள். இருவரும் என் மக்கள் என்று தான் பார்ப்பாள். அவர்களின் குணங்கள் வித்தியாசப்பட்டாலும் ஒரே குலத்தில் உதித்த என் உன்னத மக்கள் என்று தான் அவள் அவர்களை நோக்குவாள். என் குழந்தைகள் என்ற அகன்ற ஒருமைத்துவத்தினுள் சில பேதங்களைப் பெரிதாக்காது இருவரையும் அணைத்துத் தன் பார்வையினுள் ஒரு விதமாகவே உற்று நோக்குவாள். உலகத்துப் பாகுபாடு அவளின் உள்ளத்து அன்பென்னும் விரிந்த உயர் நோக்கில் உரு அற்று மங்கிவிடுகிறது. அப்பேர்ப்பட்ட உலகத்து இருமையின்
16

பால் மனதை ஒட விடாமல் என்னை வழிபடு என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. இறை வியாபக நோக்கில் இந்த இருமையானது இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்ற எண்ணத்தில் பரந்தாம்ன் அவ்வாறு கூறுகிறான்.
அப்பொழுது, அருச்சுனன் யுத்த களத்தில் ஒரு கேள்வியைத் தன்னுள்ளேயே கேட்கத் தலைப்படுகிறான். இராச்சியத்தைப் பெறத்தானே இந்தப் போர். சரி இராச்சியத்தைப் பெற்று விட்டால், அதனால் என்ன இலாபம் வரப்போகிறது?“என்ன இலாபம் வரப்போகிறது” என்று எண்ணும் போது தான் அருச்சுனனின் ஆன்ம விசாரம் சூடு பிடிக்கிறது. யாருக்கு இலாபம்? எனக்கு என்றால் நான் யார்? என்ற கேள்விகள் ஊசலாடுகின்றன அருச்சுனன் மனத்தில். அருச்சுனனின் மனோநிலையை அறிந்த பகவான் கூறுகிறார் -
“ஒரு காரியத்தை நிறைவேற்றுவதானால் அதனால் என்ன பயன் விளையுமென்பதை நீ கணக்குப் போடாதே. நல்லனவற்றைச் செய்பவன் கெடுதி அடையமாட்டான். கருமம் செய்வது பலன் கருதியன்று. அதைச் செவ்வனே செய்துவிட்டேன் என்ற ஆன்ம திருப்தியை அடைவதற்கே. கணக்குப் போட்டுப் பலனை எண்ணுவோர் கயவர்கள். பலன் பெறப்போகிறேன் என்ற எண்ணத்தை மனதிலிருந்து பூரணமாகத் துறந்துவிடு” என்கிறார்.
அதுமட்டுமல்ல. தொடர்ந்து கூறுகிறார். “கருமத்தைச் செய்யவே உனக்கு அதிகாரமுண்டு. பலனை எதிர்பார்க்க உனக்கு அதிகாரமில்லை. ஆகவே பலனை நோக்கமாக வைத்துக்கொண்டு கருமத்தைச் செய்யாதே. பலன் வேண்டா மென்பதற்காகக் கருமத்தைச் செய்யாமலும் விட்டு விடாதே.” (அத்தியாயம் 2, ஸ்லோகம் 47) இங்கு அதிகாரம் என்ற சொல் தகுதி உடைமை என்று பொருள் படுகிறது. “கருமத்தைச் செய்வதற்குத் தான் நீ தகுதி உடையவன். பலனைப் பெறுவதற்கன்று’ என்று பொருள் படுகிறது. அத்தியாயம் 2 ஸ்லோகம் 47 புலவர் பாண்டியனாரால் பின்வருமாறு 94வது பாடலாக நம்பியகவலில் இடம் பெறுகிறது.
“இணையது கேண்மோ! யாதாயினுமொரு வினை செயற்கன்றி வினையின் ஊதியம் எனையதும் முதன்மை என்றும் இல்லை, நிற் கவ்வினை ஊதியம் அவா அற்க வவ்வினை ஒழிதலும் அவா வற் கவ்வே” அதாவது, நான் சொல்லும் இச் செய்தியைக் கேட்பாய் (இணையது கேண்மோ!) எந்த ஒரு கருமத்தையுஞ் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. ஆனால் வரும் ஊதியத்தில் கொஞ்சத்தையேனும் பெறுவதற்கு உனக்கு எப்போதுமே உரிமை இல்லை. (யாதாயினு மொரு வினைசெயற் கன்றி
17

Page 11
வினையின் ஊதியம் எனையதும் முதன்மை என்றும் இல்லை) “எனையதும்” என்றால் எவ்வளவு சிறிதளவேனும் என்று பொருள்படும். “முதன்மை” என்றால் தனக்குத் தான் உரிமை கொள்ளலைக் குறிக்கும். ஆகவே கருமங்களின் பயனைக் கருதாதே. (அவ்வினை ஊதியம் அவா அற்க). அதுமட்டுமல்ல செய்ய வேண்டிய கருமங்களைச் செய்யாமல் இருப்பதையுங் கருதி விடாதே. (வவ்வினை யொழிதலு மவாவற் கவ்வே). வினையூதியமும் வினை செய்யா தொழிதலும் அவா அற்க என்று கூறுகிறான் பரந்தாமன். இந்தப் பாடலானது சலனமற்ற மனோ நிலையை வலியுறுத்தி நிற்கிறது. புலவர் பாண்டியனாரின் தமிழ்மொழி விசாலத்துக்கும் கீதா அறிவு விலாசத்துக்கும் எடுத்துக் காட்டாக இந்தப்பாடல் அமைகின்றது. எந்த ஒரு காரியம் ஆற்றும் போதும், அது உழுதற் தொழிலோ, உலைக்களத் தொழிலோ, ஊழியத் தொழிலோ, உபாத்தியாயத் தொழிலோ, தொழிலால் வரும் ஊதியம் பற்றியே சிந்தித்து நின்றோமானால் சலனமற்ற நிலையை மனம் இழந்துவிடும். இறைவன் இட்ட வழிநாங்கள் செல்கிறோம் என்ற இன் கருத்து எங்கள் மனங்களில் இறுகப்பற்றி விட்டால் வெற்றிதோல்வி என்பன, நன்மை தீமை என்பன கருமத்தைச் செய்யும் மனதில் சுவன்று விடாது.
அதாவது “பலனிலே கண்ணுங் கருத்து மின்றி கருமத்திலே மாத்திரம் கண்ணுங் கருத்தும் உடையவனாயிருக்க வேண்டும்” என்று பகவான் கூறுகிறார். அப்படியிருந்தால், விருப்பு வெறுப்பின்றி, பயமோ குரோதமோ இல்லாமல் சாந்த நிலையோடு அமைதியாகக் கடமையைச் செய்யலாம் என்பதை வலியுறுத்துகின்றார். விருப்பும் வெறுப்பும் நமது மனங்களைச் சலனப்படுத்தினால் சரி எது? பிழை எது?என்ற இருமையில் மனம் மயங்க நேரிடும். சரி என்று உணர்ந்து அதைச் செய்யமுற்பட்டாலும் விரைவிலே பயன் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் நேர்மை தவறவேண்டிய சூழ்நிலைகள்கூட ஏற்படலாம். இலக்கு சரியான படியால் அதற்கான வழிவகை எப்படியும் அமையலாம் என்ற மனோபாவங் கூட தலை துரக்கக்கூடும். ஆனால் பலன் கருதாத தொண்டிலே சமத்துவ மனோநிலையும், நடுவு நிலைமையும் இருப்பதை அவதானிக்கலாம். இதன் காரணமாக வழி வகைகளும் முறையாகவே அமைவன. கருமத்தைச் சமத்துவத்துடன் செய்வதே கர்ம யோகம் ஆகின்றது. சமத்துவ அறிவு கொண்டவனை ஸ்திதப் பிரக்ஞன் என்கிறது பகவத்கீதை. அவர்கள் பற்றிய குணாதிசயங்களை பகவான் 2வது அத்தியாயத்தின் 54வது ஸ்லோகத்தில் இருந்து விபரிக்கிறான். அக் குணாதி. சயங்களுக்கு ஒர் எடுத்துக்காட்டாகவே புலவர் பாண்டியனார் வாழ்ந்தார் என்றால் மிகையாகாது. 16வது அத்தியாயத்தின் முதல் மூன்று ஸ்லோகங்களில் குறிப்பிடப்பட்ட பயமற்ற தூய்மையான பலன்கருதா பண்பான வாழ்க்கை வாழ்ந்தார் எனலாம். இனக் கலவர காலங்களில் இட்ட திருநீற்றுடன் இடர் இன்றிப் பவனி வந்திருந்தாரானால் அதற்கு அவரின் பயமற்ற தூய்மை வாழ்க்கையே காரணம் எனலாம். அப்படிப்பட்டவருக்குத்தான் நாமார்க்கும் குடியல்லோம்
18

நமனையஞ்சோம் என்று கூறுந் தெம்பு எழும். சமூகத்திலே ஒரு அலகாக இருந்து அச் சமூக மேம்பாட்டிற்காகத் தனது கடமைகளைப் பயன் கருதாது செய்வதையே கர்மயோகமாக கீதை எடுத்துக் காட்டுகிறது. அதைத்தான் புலவர் பாண்டியனார் செய்தார். ஆனால் பயமின்றி பண்போடும் பணிவோடும் செய்தார். அதற்கு மனதில் பணிவு குடிகொள்ள வேண்டும். பலன் கருதாத சேவையில் பணிவுதானாகவே மலர்ந்துவிடும். பணிவில் ஆற்றுவதே பணி. பணிவு வேறு பயம் வேறு. பணிவு என்ற அந்தக் குணநலம் பற்றி அடுத்து ஆராய்வோம்.
உன் கடன் பணி செய்து கிடப்பதே.
“உன்கடன் பணி செய்து கிடப்பதே” என்ற கூற்றும் கர்ம யோகத்தையே மையமாக வைத்துக் கூறப் பட்டுள்ளது. அதைச் சற்று வித்தியாசமாக சமூக ரீதியில் ஆராய்ந்து பார்ப்போமானால், அந்தக் கூற்றில் "கடன்” என்ற சொல்லும் “பணி” என்ற சொல்லும் காணப்படுகின்றன. கடமை என்ற சொல் கடன் என்ற சொல்லில் இருந்துதான் வந்தது. எடுத்ததைத் திருப்பிக் கொடுப்பதுதான் கடன். கடமையும் அவ்வாறே. எமக்குக் கிடைக்கும் ஊதியத்தையும், உரிமைகளையும் பொறுத்ததே எங்கள் கடமைகள். சிலவேளைகளில் எமக்குச் சமுதாயம் சில உரிமைகளையும், சலுகைகளையும், சிலவேளைகளில் ஊதியத்தையுந் தந்து அவற்றை ஏற்றுக் கொள்ளச் செய்து அதற்கு ஈடாகச் சில கடமைகளைக் கோருகின்றது. எவ்வளவுக் கெவ்வளவு உரிமைகள் சலுகைகள் ஊதியங்கள் கூடத் தரப்படுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு எங்கள் கடமைகளும் கூடுகின்றன. ஆகவே கடமை என்பது சமுதாயத்தின் கடனை அடைப்பதற்கு நாம் ஆற்றும் செயலாகும். ஆனால் கடமை என்பது சமூகத்திற்கு, சமுதாயத்திற்கு மட்டும் நாம் பட்டிருக்குங் கடனாகக் கொள்ளக்கூடாது. நாமே நமக்குக் கடன்பட்டிருக்கிறோம். எங்கள் குடும்பத்திற்குக் கடன்பட்டிருக்கின்றோம். அத்துடன் நாட்டிற்கும், உலகத்திற்கும் கூடக் கடன்பட்டிருக்கின்றோம். ஆகவே கடமைகள் என்ன என்று நாம் ஆராயப் புகுந்தோமானால் அது வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறாக இருப்பதை அவதானிக்கலாம்.
ஒவ்வொருவருக்குந் தன் கடமைகள் சில உண்டு. அதாவது நான் எனது உடலையும், உள்ளத்தையும், அறிவையும், ஆன்மீகத்தையும் பேணக் கடமைப்பட்டவன். இது ஒவ்வொருவரினதும் சொந்தக் கடமைகள். என் ஆசைக்கும், நாட்டத்திற்கும், அபிலாஷைகளுக்குங் கட்டுப்பட்டு உடல் இயங்கவேண்டும் என்றால் அதற்குப் போதுமான போஷாக்குச் சக்தியைக் கொடுக்கும் உணவைக் கொடுக்கவேண்டும். இதேபோன்று எமது உள்ளத்திற்கு அன்பையும் பாசத்தையும் கொடுக்கவேண்டும். அறிவிற்குப் போதிய அறிவியற் பொருட்களை ஊட்டவேண்டும். ஆன்மீகத்தை வளரச் செய்யும் விதத்தில் அமைதியையும்,
19

Page 12
தியானத்தையும் அளிக்கவேண்டும். இது இவ்வளவும் நாம் நமக்குச் செய்யும் கடமைகள். அதாவது எமது உடல், உள்ளம், அறிவு, ஆன்மீகம் ஆகியவை எல்லாம் எங்கள் நாட்டங்களினால்த் தான் உந்தப்படுகின்றன. இவையெல்லாம் யாருடைய ஆசைகள், நாட்டங்கள் என்று கேட்குமிடத்து அங்கு ‘நான்' 'எனது' என்றதொன்று உதயமாகிறது. ‘நான்' 'எனது' என்பவை உண்மையா பிரமையா என்பதைப்பற்றிச் சமூக ரீதியில் பார்க்கும் போது இப்பொழுது ஆராயவேண்டியதில்லை. ‘நான்' 'எனது என்றதொரு அலகு இருக்கிறது. அது தான் எங்கள் உடலையும், உள்ளத்தையும், அறிவையும், ஆன்மீகத்தையுங் கூட ஆட்டிப்படைக்கிறது என்றுதற்போதைக்கு வைத்துக் கொண்டோமேயானால் "நான்"புகுந்துள்ள அந்த உடலுக்கும், உள்ளத்திற்கும், அறிவுக்கும் 'நாங்கள்’ (அதாவது நான்’ என்பதும் ‘நீங்களும்') கடமைப்பட்டவர்கள் ஆகிறோம். ஆகவே இவற்றைப் பாதுகாக்க "நாங்கள்’ ஆற்றவேண்டியவையே தனிமனிதன் கடமைகள் ஆகின்றன.
அடுத்து குடும்பத்தை அவதானிப்போம். மனைவி, பிள்ளைகள் என்று குடும்பமாக இருக்க ஆசைப்பட்டால் அவர்களை வைத்திருக்கும் கடனை அடைப்பதற்கும் எங்கள் கடமைகளை நாம் செய்ய வேண்டும், வீட்டில் மனைவி, மக்கள் பட்டினி கிடக்க, நான் மது அருந்த - என் பணம் முழுவதையும் விரயம் செய்தேனானால் நான் என் கடமையில் இருந்து தவறுகிறேன். கடமையில் தவறிவிட்டு என்மனைவி என்னைப் பேணவில்லை, மதிக்கவில்லை என்றோ, பிள்ளைகள் என்னை மதிக்கவில்லை என்றோ கூறமுடியாது. ஆரம்பத்தில் குடும்ப வாழ்க்கையில் நாம் மனைவி, மக்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்கின்றோம். ஆனந்தப்படுகிறோம். பின்னர் கொடுக்க முடியாத நிலை ஏற்படும் போது கடமை தவறுகின்றோம். இதனால் கஷ்டப்படுகிறோம். ஆகவே குழந்தைகள் பெறுவது என்பதுகூட கடமையுணர்ச்சியுடன் செய்ய வேண்டியதொன்றாகிவிடுகிறது. என் வருமானம் எவ்வளவு?எத்தனை குழந்தைகளை என். னால் பராமரிக்க முடியும்? அவர்கள் எல்லோருக்கும் உணவு,உடை, வீடு ஆகியவை கொடுக்க முடியுமா என்று சிந்தித்தே குடும்ப விருத்தியில் ஈடுபடவேண்டும். இல்லையேல் நாம் குடும்பத்தாருக்கு ஆற்றவேண்டிய கடமைகளில் இருந்து தவறிவிடுவோம். அந்தநாட்களில் தாபரிப்பு வழக்குகளுக்குப் பலர் வருவார்கள். உன் மாத வரும்படி என்ன என்று கேட்டால் 250 - 300 ரூபா என்பார்கள். பிள்ளைகள் எத்தனை பேர் என்றால் 10 பிள்ளைகள் என்பார்கள். எப்படித்தான் இவர்கள் குடும்பம் நடத்துகிறார்களோ எனக்குத் தெரியாது!
அடுத்து எமது ஊர் அல்லது கிராமம். அங்கும் நாம் கடன்பட்டே வாழ்கிறோம். உதாரணமாக ஒரு கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கிணற்றில் அளவுக்கு மீறி நாம் தண்ணீர் எடுத்தோமானால் அந்த ஊர்வாசிகள் அனைவரையும் அது பாதிக்கும். ULIMIT?
20

குடாநாட்டில் பம்புகளின் மூலமாக பல வருடங்களாக மக்கள் அளவுக்கு மிஞ்சிய நீரைக் கிணறுகளில் இருந்து எடுத்ததால் நிலத்தின் கீழிருந்த நீர் மட்டம் குறைந்து கொண்டு போகின்றது என்றும், அது வருங்காலத்தில் எல்லோரையும் பாதிக்கக்கூடும் என்றும் அப்போது கருத்து தெரிவிக்கப்பட்டது. அதனால்த் தான் போலும் போர்ச் சூழலை ஏற்படுத்தி யாழ்ப்பாணத்தை இறைவன் காப்பாற்றினானோ என்று சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆகவே எமது பாவனைக்கும் மீறிய அளவு செலவு செய்தோமானால் அது ஊர்மக்களைப் பாதிக்கின்றது. எங்கள் தேவைகள் அதிகமானால் அந்த அளவுக்கு அது ஊரைப் பாதிக்கின்றது. அதாவது நாம் ஊரில் இருந்து கூடிய கடன் வாங்குகிறோம். கடன் அடைக்கும்போது குறையக் கொடுக்கிறோம். ஆகவே ஊரைப் பொறுத்த வரையில் நாம் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். பாவனையைக் குறைக்க வேண்டும். சமூகத்திற்குக் கொடுப்பதைக் கூட்ட வேண்டும். எடுப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். புலவர் பாண்டியனாரின் வாழ்க்கையில் இந்தக் குணாதிசயத்தையும் காண்கிறோம். அவர் கூடக் கொடுத்துக் குறைய எடுத்த காரணத்தினால்த் தான் இன்று நாமெல்லோரும் கூடியிருந்து அவர் குணநலம் பற்றிக் கூறுகிறோம்.
இவற்றையெல்லாம் இன்றைய உலகம் சிந்தியாதபடியால் தான் நாடுகளெங்கும் மனவீக்கமும் பணவீக்கமும் ஏற்பட்டுள்ளன. பொருளாதார இக்கட்டு நம்மைப் பீடித்துள்ளது. நான் தனி மனிதன்தானே என்னால் என்ன செய்ய முடியும் என்று கூறுவதில் பலனில்லை. ‘உன்னை நீதிருத்திக் கொள், உலகம் தானாகவே திருந்தும்’ என்கிறார்கள் ஞானிகள். தனி மனிதர்கள் சேர்ந்ததே உலகம். உலகம் மாறுவதானால் தனிமனித மாற்றந்தான் முதல்படி. நாங்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் எங்கள் கடமையென்ன, அதைச் சரிவரச் செய்கின்றோமா என்று எண்ணத் தலைப்பட்டோமானால் எங்கள் வாழ்க்கை திருந்தத் தொடங்கிவிடும். இல்லாவிடில் சமூகம் எங்களைத் தட்டிக்கேட்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும். இதைத்தான் இன்றைய உலகின் நிகழ்ச்சிகளும், புரட்சிகளும் எங்களுக்கு எடுத்துக்காட்டுகின்றன. ஆகவேதான் ‘உன் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று பகவான் கூறுகிறார். ‘பணி செய்தல் என்பது வேறு. ‘கடமை செய்தல்’ என்பது வேறு. பணி என்பது நல்லதையே செய்தல் மட்டுமன்றி நல்மனதுடன் பணிவுடன் செய்வதையுங் குறிக்கிறது. கடமை செய்யும் போது “நாம்” கடனை அடைக்கிறோம் என்ற அகங்கார எண்ணத்துடனும் கருமம் ஆற்ற முடியும். ஆனால் பணி செய்யும்போது அதில் உள்ளமும் கருமமும் ஒருங்கிணைந்து பணிவுடன் செயற்படுகின்றன. ‘பணி’ என்ற சொல்லுக்கு பல கருத்துக்கள் இருந்தாலும் ‘உன் கடன் பணி செய்து கிடப்பதே' எனும்போது ‘ஈதல்' என்பதையே அது குறிக்கிறது. அதாவது கடன் கிடைத்ததோ இல்லையோ முழுமனதுடன் கொடுக்க முன்வரும்
21

Page 13
மனோநிலையைத் தான் "பணி செய்து கிடக்கும் மனோநிலை' என்று கூறலாம். “கிடப்பதே' என்ற சொல் பணி என்ற சொல்லுக்குக் கூடிய அடக்கத்தையும் பவித்திரமான தன்மையையும் கொடுக்கிறது. “நல்லது வந்தால் என்ன தீமையே வந்தால் என்ன என் கடன் பணிசெய்து கிடப்பதே” என்று பொருள் படுகிறது. உண்மையான பணிவன்புடன் சேவைசெய்யும் ஒருவர் மனதில் கூட, பலனை எதிர்பார்க்கக்கூடிய மனோநிலை ஏற்படலாம். ஆனால் எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் பணிபுரிய வேண்டும் என்பதே பகவானின் ஆக்ஞை உரிமைகளை விடுத்துக் கடமைக்கே முன்னுரித்துக் கொடுக்கிறான் பரந்தாமன். உரிமைவழியன மேலை நாடுகள் என்றால் காலாதிகாலமாகக் கடமை வழியையே வலியுறுத்தி வருகின்றன கீழைநாடுகள்.
சரணாகதி
இன்றைய உலகில் பலன் எதுவும் எதிர்பாராமல் கருமம் ஆற்றுவது என்பது சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு காரியம். அவ்வாறு சாதாரண மனிதன் ஒருவன் காரியங்களை இயற்ற வேண்டுமானால் பணிவும், பவித்திரமும் மனதில் ஊற வேண்டும். அது தான் சரணம் அல்லது சரணாகதி என்பதாகும். சலனமடைந்த மனதைச் சீர்படுத்துவது சரணந்தான். சலனமடையக் óntgш மனதை சரியான வழியில் கூட்டிச் செல்வது சரணந்தான். ஞான வழியில் செல்ல விரும்புபவனும், கர்ம வழியில் செல்ல விரும்புபவனும், தியான வழியில் செல்ல விரும்புபவனும் கடைப் பிடிக்க வேண்டிய கட்டாயமான மனோநிலை சரணந்தான். சரணமடைந்த மனதால்த் தான் ஞானத்தைப் பெற முடியும். கருமத்தை பயன் எதிர்பாராமல் இயற்ற முடியும். அமைதியாகத்தியானமுஞ் செய்யமுடியும். சரணாகதி என்பது ‘நான்’, ‘எனது' என்பதை இறைவனிடம் சமர்ப்பித்து அவன் கருவியாக வாழ்வது. “Letthy will be done” என்றார் யேசு கிறீஸ்துநாதர். அவன் அருளாலே தான் அவன் தாள் கூட வணங்க முடியும் என்ற எண்ணம் எப்பொழுது எமக்கு ஏற்படுகிறதோ அப்பொழுதே சரணாகதி எங்கள் உள்ளங்களுள் உள் நுழைந்து விடுகிறது.
இராமகிருஷ்ண பரமஹம்சர் வெறும் பக்திக்கும் சரணாகதிக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டுவது போல் ஒரு நீதிக்கதை சொல்வார். ஆற்றின் ஒரு கரையில் பக்தியுடன் உபந்யாசம் செய்யும் இறைபக்தரான சாஸ்திரி ஒருவரின் ஆசிரமம் இருந்தது. ஆற்றின் மறுபுறத்தில் இருந்து ஒரு பெண் பிள்ளை ஒவ்வொரு நாளும் பால் கறந்து எடுத்துவந்து ஆசிரமத்திற்குக் கொடுத்து வந்தார். ஒரு நாள் ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் அப் பெண் நேரமாகி ஆசிரமம் வந்தார். குருவுக்குக் கோபம் வந்து விட்டது. ஏசினார். “உனக்கு குருவின் மீது பக்தி இருந்திருந்தால் குருவை நினைத்துக் கொண்டு
22

ஆற்றைக் கடந்திருப்பாய். ஆ றும் உன் பக்தியைக் கண்டு மெச்சி வழி விட்டுக் கொடுத்திருக்கும். நீயோ குருவின் மீது பக்தி இல்லாததால் ஆற்றைக் கடந்துவர முடியவில்லை” என்று கூறிக் கடிந்து கொண்டார். அடுத்த நாள் நல்ல மழை, ஆறு வரம்பு கடந்து ஓடியது. அந்தப் பெண் உரிய நேரத்தில் வந்து நின்றாள். எப்படி என்று கேட்டார் குருவானவர். “உங்களை நினைத்துவந்தேன். ஆறு வழி விட்டது” என்றாள். பெருமையுடன் குரு தன் தெய்வீக சக்தியை மெச்சிக் கொண்டே ஆற்றைத் தாமும் கடந்து பார்க்க வேண்டும் என்று சென்று ஆற்றில் காலை வைத்தார். குருவை அடித்துச் சென்றது ஆற்று வெள்ளம். சிஷ்யைக்கு வழி விட்ட ஆறு குருவை அடித்துச் சென்றது எப்படி என்று, பார்த்தால், குருவுக்கு இருந்தது வெறும் பக்தி. சிஷ்யைக்கு இருந்தது சரணாகதி நிலை.
இன்றைய காலகட்டத்தில் பெண்மைக் குணங்கள் அருகி வருகின்றன. பெண்கள் கூட ஆண்கள் போல் அவதாரம் எடுக்கவே ஆசைப்படுகின்றனர். உண்மையில் பக்தி மார்க்கத் தகைமை, சரணாகதியில் ஈடுபடும் தகைமை பெண்மைக்கே உரிய தகமைகள். பக்தி, அன்பு, கருணை, மென்மை என்பன பெண்களில் இயற்கையாகவே உருவாகுங் குணங்கள். இவற்றைத் தட்டிவிட்டு ஆண்பாற் செயற்கைக் குணங்களைச் சாரவே இன்றைய பெண்கள் விருப்பந் தெரிவிக்கிறார்கள். இப் பெண்மைக் குணங்களை வருங்காலத்தில் ஆண்கள் தான் தழுவுவார்களோ தெரியாது. இந்தக் குணங்கள் அடக்கம், சேவை மனப்பான்மை, பரிவு போன்ற முக்கியமான சரணாகதிக் குண இயல்புகளுக்கே வித்திடுகின்றன. தங்களை முழுமையாக அர்ப்பணிக்குஞ் சக்தியும், மனோநிலையும் பெண்களுக்கே உரித்தானது. இறைவனின் அன்பில் திளைக்கும் எவரும் பெண்களைப் போன்றவர்களே. இறைவன் தான் ஒரே யொரு ஆண்மகன். பிரம்மனில் இருந்து வரும் மற்றையவர்கள் யாவருமே இறைவனை அடைய விரும்பும் பெண் மக்களே என்று எங்கோ கூறியிருந்ததை வாசித்திருக்கிறேன். பொதுவாகப் பற்றுடன் அர்ப்பணஞ் செய்வதே பெண்மைக் குணம். பற்றறுத்து பக்தி செய்வதையே பகவான் கூறுகிறார்.
உலகப் பற்று அறுதல் ஒன்று. இறைபக்தி எழுதல் இன்னொன்று. எல்லாமே தோல்வி அடைதலைக் கண்டால் மனம் உலகப் பற்றில் இருந்து விலகிவிடும். ஆனால் அதே மனம் இறை பக்தியில் திளைக்க வேண்டிய அவசியமில்லை. பற்று அறுதலுடன் பக்தி மேலிட்டால்த் தான் சரணாகதி நிலையை அடையலாம். அத்துடன் பக்தி வேறு சரணாகதிநிலை வேறு. சரணாகதியை வடமொழி. யில் ப்ரபத்தி என்பர். பக்தி என்றால் அன்பு, நம்பிக்கை (belief) இ ஒன்டுக்மி இருக்க வேண்டும். ப்ரபத்தி என்றால் முழுஇைரக சூக்தி னிடத்தில் அர்ப்பணித்து விடுதலாகும். அங்கு இருப்பது திட நம்பிக்கை (Faith) ஆகும்.
23

Page 14
அவன் எவ்வாறு எங்களைக் கொண்டு நடத்துகிறானோ அதை முழுமையாக ஏற்பதே ப்ரபத்தி எனப்படும். பக்தியில் இறைவனும் பக்தனும் வெவ்வேறாகக் காணப்படுவர். ப்ரபத்தியில் இறைவன் மட்டுமே இருப்பான். பக்தன் அவனுள் அமிழ்ந்து விடுவான். நான் அற்ற நிலையில் நாதன் எம்முள் புகுந்து விடுவான். புகுந்து அவனாக எம்மை ஆக்கி விடுவான். அங்கு நாதன் மட்டுமே நிலைக்கிறான். பக்தன் ப்ரபத்தனாக மாற இறைவனிடம் கையேந்த வேண்டும். அவன் இல்லை என்று சொல்ல மாட்டான். குருவிடம் குரல் ஏற்ற வேண்டும். அவன் குற்றங்களைக் கடிந்து விடுவான். பக்திக்கு அப்பாற்பட்டது சரணாகதி.
மக்கள் இன்று சலனப்படுகிறார்கள், சஞ்சலப்படுகிறார்கள். ஏன் என்று கேட்டால் அதற்குக் காரணம் எங்கள் நடவடிக்கைகள் ‘நான்', 'எனது' என்ற குறுகிய எல்லைக்குள் இருந்து இயற்றப்படுவதனாலேயே என்பது புரியும். ‘நான்', “எனது' என்ற வரம்பை மீறிக் கடமை ஆற்றுவதானால் சரணாகதி அவசியம். சரணம் வந்துவிட்டால் சலனந் திரும் என்றே பகவான் எங்களுக்கு உணர்த்தி. யுள்ளான். ‘நான்', 'எனது' என்பவை எங்கள் உள்ளத்தை விட்டு வெளியகன்றால் உள்ளும் புறமும், எங்கும் நிறைந்த “அவன்” அங்கு வந்து குடிகொண்டு விடுவான். அப்பொழுது இறைவன் வெளியில் இல்லை உள்ளே தான் இருக்கிறான் என்பதற்கு அடையாளம் எந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவனும் “நான்” அற்ற நிலைக்கு வந்தவுடன் அம் மனிதன் மனிதருள் மாணிக்கம் ஆகிவிடுகின்றான். இறை நிலை ஒன்றே. நாம் அதனைப் புரிந்து கொள்வதில் வித்தியாசப்படுகிறோம், விவாதப்படுகிறோம். ஆனால் நான் அற்ற நிலையானது எந்த மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவனும் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு வரப்பிரசாதம். உள்ளே இருக்கும் இறைநிலையும் வெளியே இருக்கும் இறைநிலையுஞ் சங்கமமாக “நான்”, “எனது” என்பன தடையாக நிற்கின்றன. அகங்காரத்தையும் மமகாரத்தையும் அப்புறப்படுத்த பணிவு வேண்டும். சரணாகதி வேண்டும். அன்னை தெரேசாவும் குருபாபாவும் பிறமதங்களில் இருந்து சரணாகதி நிலையடைந்த அண்மைய கால அருந் தவத்தினர். சஞ்சலம் அடைந்த மனம் எந்த ஒரு மார்க்கத்தை நாடினாலும் அம் மனம் இறைவனில் சங்கம மாகினால்த் தான் அந்த மார்க்கம் நன்மையைத் தரும் என்று கூறி பற்றற்றான் பாதத்தில் உங்கள் மனங்களைப் பதிப்பதன் மூலமே இந்த உலக பந்தங்களினால் ஏற்படும் சலனங்களை நீக்கலாம் என்று கூறி, புலவர் பாண்டியனாரின் நம்பியகவலை நினைவுபடுத்தி, சாத்வீக குணங்களுக்கு எடுத்துக் காட்டாக அவர் வாழ்ந்தார் என்பதை எடுத்துக் கூறி, என்னை இன்று அழைத்த அனைவருக்கும், தொடர்ந்து அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்த உங்கள் ஒவ்வொருவருக்கும்.நன்றி கூறி அமர்கின்றேன்.
வணக்கம்.
கவிவிக்னேஸ்வரன்.
24


Page 15