கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையக சிந்தனைகள்

Page 1

ஞாபகார்த்தக் குழு

Page 2


Page 3

மலையக சிந்தனைகள்
‘சொல்லின் செல்வர்” இர. சிவலிங்கம்
இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு வெளியீடு

Page 4
Title
Edited by
First Edition
Published by
Editorial Committee:
Printed by
Webside
Price
: Malayaha Chinthanaigal
: H. H. Wickramasinghe
T. Thanaraj
: July 2001
: R. Sivalingam Memorial Committee
BQ 2/2. Mangala Road, Manning Town Housing Scheme, Colombo - 00080.
T.P. 693098
M. Vamadevan T. Thanaraj C. Navaratne M. Nithiyanandan H. H. Wickramasinghe
: Kumaran Press (Pvt) Ltd.
201, Dam Street, Colombo - 00120. T.P. 421388
: WWW.tamil.net project.madurai
RS. 2OO/-

மலையக சிந்தனைகள்

Page 5

அறிமுகம்
அமரர் இர. சிவலிங்கம் சமகால மலையக வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்க முனைந்த ஒரு போராளி. அவர் வாழ்வின் இறுதிக் கணங்கள் வரை மலையகம் குறித்தே சிந்தித்து, எழுதி, செயற்பட்டு வந்தவர். ஆற்றலும் அறிவுத் திறனும் நேர்மையும் கொண்ட அவரைப் போன்ற இன்னொருவரை எமது காலத்தில் காண்பதற்கில்லை. அவரது மறைவு மலையகத்தின் வரலாற்றில் நீண்ட வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது.
சிவாவின் எழுத்துகள் ஒரு நாற்பதாண்டு கால எல்லையில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக, இலங்கையிலும் இந்தியாவிலும் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் மலர்களிலும் பரவிக் கிடக்கின்றன. "The Berayal of Indian Tamils in Sri Lanka" (36UIñ160)é5 s9Jöt 35g5/uug5 25.Lölg(bög5 360opg575 துரோகங்கள்) என்று ஆங்கிலத்தில் சிவா எழுதிய ஒன்றுதான் இதுவரை வெளியான அவரது நூலாகும்.
தமிழில் சிவாவின் எழுத்துகளைத் தொகுத்து நூலாக்கும் பணியில் திருவாளர்கள் எம். வாமதேவன், தை. தனராஜ், சி. நவரட்ன, மு. நித்தி. யானந்தன், எச். எச். விக்கிரமசிங்க ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் அறுவடைதான் இது. சிவாவின் எழுத்துகளின் முழுமையான தொகுப்பு அல்ல இது. எங்களின் தேடலில் கிடைத்த அவரது கட்டுரைகளைத் தொகுத்து இங்கு தந்திருக்கிறோம். சிவாவின் இக்கட்டுரைத் தொகுப்பிற்கு நாம் அணுகிய அனைவரும் மனம் திறந்து தம் வசமிருந்த கட்டுரைகளையும் பத்திரிகை நறுக்குகளையும் தந்துதவினார்கள்.
தமிழகத்திலிருந்து சிவா மீண்டும் இலங்கை வந்து தன் பரந்த அனுபவத்தின் பின்னணியில் மலையகத்தில் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவர் மறைவு மலையகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடல்கடந்து வாழும் மலையக அபிமானிகளையும் அந்நிகழ்வு துயரத்திலாழ்த்தியது. தமிழகத்தில் நீலகிரிவாழ் மலையக மக்கள் தம் அரும்பெரும் தலைவனை இழந்து தவித்தனர்.

Page 6
லண்டனில் நிகழ்ந்த சிவாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் மு.நித்தி. யானந்தன், எஸ். வி. ராஜதுரை, வெஸ்லி முத்தையா, பத்மநாப ஐயர், மு. நேமிநாதன், ந. சுசீந்திரன், எஸ். முத்துக்குமாரசாமி, சித்ரதாஸ் ஆகியோர் உரையாற்றி அஞ்சலி செய்தனர்.
தமிழக கோத்தகிரியில் அமரர் சிவலிங்கத்தின் புனித அஸ்தி எஸ். திருச்செந்துரனின் தலைமையில் மெளன ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இர. சிவலிங்கம் கலையரங்கில் 1999 ஜூலை 19ம் திகதி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இலங்கையில் அட்டன், இராகலை ஆகிய இடங்களிலும் அமரர் சிவலிங்கத்தின் நினைவைப் போற்றி இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
கொழும்பில் திரு.எம்.வாமதேவன் தலைமையில் விவேகானந்த சபை மண்டபத்தில் அவருக்கு எமது கண்ணிர் அஞ்சலியை சமர்ப்பணம் செய்து “சொல்லின் செல்வர் இர. சிவலிங்கம்” சிறப்பு மலரை வெளியிட்டோம். மாண்புமிகு பிரதமர் சிறிமாவோ ஆர்.டி. பண்டாரநாயக்கா அம்மையாரும் தமது அனுதாபச் செய்தியை அனுப்பி எமது துயரத்தில் பங்கு கொண்டார்கள்.
அவர் மறைந்த முதலாவது ஆண்டினை (2000) நினைவுகூரும்முகமாக வீரகேசரியுடன் இணைந்து ஆய்வு கட்டுரைப் போட்டியை நடாத்தினோம்.
"மலையக மக்களின் உரிமைப் போராட்டங்கள் : ஒரு வரலாற்றுப் பார்வை", "இன்றைய மலையக இளைஞர்களும் சமூகப் பொறுப்புணர்வும்", "மலையகப் பெண்களும் பெண்ணிலைவாதமும்", "ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் மலையக இலக்கியம்", "தேசிய பொருளாதார அபிவிருத்தியில் மலையக மக்களின் பங்களிப்பு", "மலையக மக்களின் குடிப்பரம்பலும் எதிர்காலமும்", "இலங்கையின் தேசிய கல்வி சீர்திருத்தங்கள் - மலையக கல்வியில் எற்படுத்திய தாக்கங்கள்", "குடியுரிமை பறிப்பும் மலையக சமுதாயத்தில் அதன் தாக்கமும்", "மலையக மக்களும் இடதுசாரி இயக்கங்களும்" என்ற தலைப்புகளில் மொத்தம் இருபத்தாறு போட்டியாளர். கள் அகில இலங்கை ரீதியில் கலந்து கொண்டனர். இந்த தொகை அத்துணை உற்சாகந் தருவதாக இல்லை என்பது வருத்தம் தரும் செய்திதான். ஆயினும் ஆயிரம் மைல் தொலைதூரப் பயணத்தின் முதல் காலடிகள் இப்படித்தான் எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதில் நாம் ஆறுதல் பெறுகிறோம்.
இக்கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்கும் ஏனைய ஆறு கட்டுரைகளுக்கும் பரிசுகள் வழங்கினோம். பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் முறை பேராசிரியர் மு. சின்னத்தம்பி "பெருந்தோட்டத்துறை தமிழ் இளைஞர் இன்றும் நாளையும்" என்ற தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றினார். நினைவுப் பேருரையையும் பரிசுபெற்ற ஆறு கட்டுரைகளையும் சேர்த்து, மலையக பரிசுக் கட்டுரைகள் என்ற தொகுப்பை 2000 ஜூலையில் வெளியிட்டோம்.
νi

இந்த இரண்டாவது ஆண்டில் பாடசாலை மாணவர் மத்தியில் சமூக உணர்வையும் சமூகப் பற்றையும் ஏற்படுத்தும் முகமாக வீரகேசரியுடன் இணைந்து ”2010ம் ஆண்டில் மலையகம்” என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியை நடாத்தினோம். ஊவா 07, தென், மேல், சப்பிரகமுவ 14, பிற மாகாணம் 08, மத்திய மாகாணம் 38 என மொத்தம் 67 கட்டுரைகள் வந்து சேர்ந்தன. போட்டிக்கு வந்த கட்டுரைகளில் 12 கட்டுரைகளைத் தெரிவு செய்து இன்று பரிசுகள் வழங்கி கெளரவிக்கிறோம்.
இச் சந்தர்ப்பத்தில், போட்டி பற்றிய விளம்பரத்தை தமது பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிட்டதோடு போட்டி முடிவுகளையும் பிரசுரித்து எமக்கு பேருதவி புரிந்த வீரகேசரி நிறுவனத்துக்கு குறிப்பாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. எம்.ஜி. வென்சஸ்லோஸ் அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
எமது பணிகள் வெற்றியடைய எமக்கு உதவும் பலருக்கும் நாம் நன்றி கூறுகிறோம். குறிப்பாக இந்நூல் வெளியீட்டில் எமக்கு உதவிய மலையகக் கலை இலக்கியப் பேரவை செயலாளர் நாயகம் திரு. அந்தனி ஜீவா, மலைநாட்டு எழுத்தாளர் மன்றத் தலைவர் திரு. தெளிவத்தை எஸ். ஜோசப், கோத்தகிரி மலையக மக்கள் மறுவாழ்வுமன்ற பொதுச் செயலாளர் திரு.மா. சந்திரசேகரன், பதுளை கே. வேலவன், கவிஞர் தமிழோவியன் ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
அமரர் இர. சிவலிங்கத்தின் நெருங்கிய நண்பரும் , சென்னை தென், தென்கிழக்காசிய ஆய்வு மையத்தின் முன்னாள் பணிப்பாளருமான பேராசிரியர் வி. சூரியநாராயன் "இளைய மலையகம் - புதிய வாய்ப்புகளும் சவால்களும்" என்ற தலைப்பில் இம்முறைநினைவுப் பேருரைநிகழ்த்துகிறார்.
மலையக சமுதாயத்துக்கு விடிவு சமைக்கும் வழிவகைகளை இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு ஆர்வத்தோடு வேண்டி நிற்கிறது. எமது பணிகள் பற்றிய விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் நாம் பணிவுடன் வரவேற்கிறோம்.
எச். எச். விக்கிரமசிங்க தை. தனராஜ் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக்குழு சார்பாக
28.07.2001
vii

Page 7
2 añTGGIT .......
அறிமுகம் - எச். எச். விக்கிரமசிங்க
தை. தனராஜ்
சிவாவின் வாழ்வும் எழுத்தும்
- ஒரு அரசியல் பேராசானின் சிந்தனைகள்
பற்றிய முன்னுரை - மு. நித்தியானந்தன்
மலையகம் : குமுறும் எரிமலை
ஈழ அரசியலும் மலையக மக்களும்
மலையகப் பெண் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும்
சி. வி. துயரச்சாயலின் எழுத்துக் கோலங்கள்
மலையகத் தலைமைத்துவம் - ஒரு மீளாய்வு
இன்றைய மலையகம் : கால ஓட்டத்தில் ஓர் எதிர்நீச்சல்
கோ. நடேசையர் - சில குறிப்புகள்
மலையகமும் சக்திவழிபாடும்
குறிஞ்சிப்பூ
தமிழோவியன் கவிதைகள்
உரைநடையுகம்
இலக்கியத்தில் மலர்கள்
சிறுபான்மைச் சமுகம்
தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்
- போராட்ட வாழ்வின் ஆரம்பப் பக்கங்கள்
சிறைக் குறிப்புகள்

முதலாவது ஆண்டு
நினைவஞ்சவிபயில்.
கொழும்பு ஜூலை 2000

Page 8

சிவாவின் வாழ்வும் எழுத்தும்
ஒரு அரசியல் பேராசானின் சிந்தனைகள் பற்றிய முன்னுரை
- மு. நித்தியானந்தன் -
அடிமை இருளில் சிக்கியிருந்த மலையக சமுதாயத்தின் விடுத
லைக்காக ஒயாது சிந்தித்துச் செயற்பட்ட பெருமகன் இர. சிவலிங்கம். இருண்ட வரலாற்றின் விளைபொருளாயும் அதேநேரத்தில் அச்சமுதாய மாற்றத்தின் நெம்புகோலாகவும் திகழ்ந்த அறிஞர் அவர்.
நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டிருந்த மலையகத்தின் சமூக வாழ்வில் அறுபதுகளில் ஒரு ஆசிரியனின் குரல் அட்டனிலிருந்து எழுந்தது. வெங்கொடுமைச் சாக்காட்டில் வீழ்ந்து பட்ட சமூகத்தின் துயரத்தையெல்லாம் சுமந்த ஒரு குரல். ஆண்டாண்டு காலமாகஅடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனச்சாட்சியின் குரல். பரிகசிக்கப்பட்டு - இழித்துரைக்கப்பட்ட தனது சமுதாயத்தின் மேன்மையைப் பாடுவேன் என்று உறுதி பூண்ட குரல், அடிப்படை உரிமைகள் அனைத்துமே மறுதலிக்கப்பட்ட ஒரு சமூகக் கூட்டத்தின் விலங்குகளை ஒடிக்க முனைந்த வீராவேசக் குரல். மக்கள் சுபீட்சத்தை மறந்து தமது சுயப் பிரதிமைகளில் முழுகிப்போன அரசியல் தலைமைத்துவத்தின் கோபுரவாசல்களில் ஆர்ப்பரித்த எதிர்ப்புக்குரல், சமூக உணர்வு கொண்ட -படித்த இளைஞர்களின் நெஞ்சங்களின் கொதிநெருப்பில் எண்ணெய் வார்த்த குரல். அட்டனில் முரசறைந்த இக்குரல் மலையகத்தின் முகடுகள் எங்கணும் அதிர்வுகளை எழுப்பியது. இந்தக் குரலின் சொந்தக்காரர் சிவா என்றழைக்கப்படும் இர. சிவலிங்கம் ஆவார்.
அறுபதுகளில் இவரால் ஈர்க்கப்படாத இளைஞர்கள் இல்லை என்று சொல்ல வேண்டும். அறுபதுகளில் மலையகத்தில் ஊற்றுக்கண்டு இன்று சீரிய நதிப் பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கும் எழுச்சியின் மையநாயகனாக இர. சிவலிங்கம் நிலைபெறுகிறார். மலையக இளைஞர் மத்தியில் இத்தகைய ஈடிணையற்ற ஆளுமையை நிலைநிறுத்திய தனிப் பெருந்தலைமகனாக சிவா திகழ்கிறார்.
xi

Page 9
மலையகம் தனது அடிமைச்சிறையை உடைத்தெறிய வேண்டும் என்று, மலையகம் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டுமென்று, தன்மான உணர்வு கொண்டு யாருக்கும் தலைவணங்காத இனமாகத் திகழ்ந்திட வேண்டுமென்று மலையகத்தின் பட்டிதொட்டி எல்லாம் அவர் முரசறைந்தார். வீறுகொண்ட - தியாகவுணர்வு மிக்க இளைஞர் அணியை அவர் உருவாக்கினார். புதிய சிந்தனைகளுக்கான ராஜபாட்டையைத் திறந்துவைத்தார்.நவீன சிந்தனைகளோடு கூடிய மாணவர் பரம்பரையை உருவாக்கினார். மலையகம் என்ற எண்ணக்கருவிற்கு வித்திட்டார். மலையக எழுத்திற்கான நாற்றங்கால்களை வடிவமைத்தார்.
ஓர் ஆசிரியனின் விளக்க ஞானம்;ஒரு சட்ட நிபுணனின் தர்க்கம்; ஒரு விடுதலை மோஹியின் ஆவேசம் , ஒரு போராளியின் துணிச்சல் : ஒரு அறிஞனின் தெளிவு; ஒரு தலைவனின் சாதுரியம் - இவை எல்லாம் இணைந்த ஒரு வண்ணக் கலவை சிவா.
"The Betrayal of Indian Tamils in Sri Lanka" 6T6isp g5606), itsi) gg. சிவலிங்கம் எழுதிய நூல் மலையகத் தமிழருக்கு இலங்கை அரசு இழைத்த துரோகத்திற்கு எதிரான குற்றப்பத்திரிகையாகும். உலக சமுதாயத்தின் முன் வைக்கப்பட்ட சிவாவின் "ஷிக்வா"அது. உரிமைகள் மறுக்கப்பட்ட மலையக மக்களின் அடிமைத்துவ வாழ்வை விபரித்து, அந்த அநீதிக்காக இந்நூலில் சிவா வெளிப்படுத்தும் தார்மீக ஆவேசத்தில் ஒருFranz Fanonஐ- ஒருAmicar Cabraiஐ நாம் தரிசிக்க முடிகிறது.
எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ - எங்கெல்லாம் போராட்டங்கள் தகித்தனவோ அங்கெல்லாம் சிவாவின் இதயம் தோய்ந்தி. ருந்தது. நீலகிரியில் தாயகம் திரும்பிய மலையக மக்கள் அங்கீகாரமற்ற அகதிகளாக - வந்தேறுகுடிகளாக வர்ணிக்கப்பட்ட நிலையில், ஒரு குடில் போட்டுக்கொள்ள கையகல காணிகூட இல்லாத சூழலில், குனிந்து கும்பிட்டு கொடுத்த கூலியை வாங்கிக் கொண்டு போன மிடிமையில், கடையர்களாகப் புறக்கணிக்கப்பட்ட அவலத்தில் அம்மக்களின் துயர்களைய வந்த ரட்சகனாகவே சிவா அம்மக்கள் மத்தியில் இன்றும் வாழ்த்தப்படுகிறார். சிதறிக்கிடந்த அந்த அபலைகளின் வேதனையை - விரக்தியைத் தீர்க்க அந்த மக்களிடையே இரவுபகல் பாராமல் உழைத்தார் சிவா. அவர் வாழ்வு எப்போதும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நிழல்தரும் விருட்சமாக அமைந்தது; கதியற்றோருக்கு கருணைக்கரம் கொடுத்தது ; நியாயம் கோரி அரச நிர்வாகத்தின் இரும்புக் கோட்டைகளைத் தட்டியது ; நீதி கோரி நீதி. மன்றங்களை நாடியது. ஒரு சமூகப் போராட்டத்தின் எல்லாத் தளங்களிலும் நின்று பிரகாசிக்கும் ஆளுமையும் துணிவும் வாய்மையும் அவரிடத்திருந்தது. பாரத ரத்னா அம்பேத்காரின் நூற்றாண்டு விழாப் பேரணியை கோத்தகிரியில் நிகழ்த்திய சாதனையில் சிவாவின் தலைமைத்துவம் பளிச்சிட்டது. கோத்தகிரி காந்தி மைதானத்தில் பதினையாயிரம் பேருக்கு மேற்பட்ட மக்கள் திரண்ட இப்பேரணியின் வெற்றிக்கு சிவா கடுமையாக
xii

உழைத்தார். மைல் கணக்கில் நீண்ட இந்தப் பேரணி ஊர்வலம் கோத்தகிரி இதற்குமுன் என்றுமே காணாத காட்சி என வர்ணிக்கப்பட்டது. அரசியல் செல்வாக்கு. பொலிசாரின் மக்கள் விரோத செயற்பாடுகள், அரச ஊழியர்களின் இன உணர்வு, அதிகாரத் திமிர், பணபலம் படைத்தோரின் போக்கிரித்தனம் எதுவுமே ஏழைகளின் நியாய உணர்வுகளைக் கொன்றுவிட முடியாது என்பதற்கு கோத்தகிரி வீதிகளில் ஆர்ப்பரித்து எழுந்த மக்கள் ஊர்வலம் சாட்சி சொல்லியது.
சாதிக் கொடுங்கோன்மைக்கு எதிராக இறுதிவரை போராடிய பெருமகனாகத் திகழ்ந்தார் சிவா. இந்தியாவில் தலித்துகளின் போராட்டத்தில் மிக முக்கிய ஆளுமையாக சிவா செயற்பட்டிருந்தார். "Concept of a National Human Rights Movement and Annihilation of Caste" 676tsD d6), T656ir பொருள் பொதிந்த ஆய்வுக் கட்டுரை சிவாவின் சாதி எதிர்ப்புணர்வை முரசறையும் கட்டுரையாகும். தலித் பெரியார் ரெட்டைமலை சீனிவாசனைப் பற்றித் தான் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதவிருப்பதாக சிவா என்னிடம் ஒருமுறை கூறியிருந்தார். அந்நூலை அவர் எழுதி முடித்திருந்தால் சிவாவின் சமூகப் பணிக்கு அது மிகப்பெரிய புகழாரத்தைத் தேடிக் கொடுத்திருக்கும்.
அவர் எப்போதும் மக்கள் வெள்ளத்திலேயே நின்றார். மக்கள் அணிதிரட்டலே அவரது சமூக - அரசியல் செயற்பாட்டின் அச்சாணியாக அமைந்தது. அவர் தனது வாழ்வின் பெரும்பகுதியை பொதுமேடைகளில் மக்களைச் சந்திப்பதில் செலவிட்டார். வஞ்சிக்கப்பட்ட - கல்வி வாசனை. யில்லாத பாமர ஜனங்களின் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதில் அரசியல் மேடைகள் சக்திமிக்க களமாக உள்ளன. சிவாவின் மேடைப் பிரசங்கங்களைக் கேட்டவர்கள் அவர்பால் பிணிக்கப்பட்டனர். மந்திரக் கவர்ச்சி மிகுந்த பேச்சு அவருடையது. ஒரு பொதுமக்கள் மேடையில் எவ்வாறு பேச வேண்டும் என்பதற்கு சிவாவின் பேச்சு ஒரு பாடப்புத்தக இலக்கணம். கருத்தரங்குகள், மண்டபங்கள், மைதானங்கள், திறந்தவெளிகள் என்று மக்கள் கூடும் வெளிகளின் வியாபகத்திற்கு ஏற்ப அவர் பேச்சு ஒழுங்குறும் நேர்த்தி வியக்கத்தக்கது. பஞ்சை பராரிகள் - ஒடுக்கப்பட்டோர் என்று சமூகத்தின் அடிநிலை மக்கள் மத்தியிலேயே அவரின் பேச்சுகள் அமைந்தன. சமூக விடுதலை, சமத்துவம், ஜனநாயக உரிமைகள், தன்மான உணர்வு, நீதியான செயற்பாடுகள் என்பனவே அவரது பேச்சின் அடிநாதமாக அமைந்திருந்தன.
ஒடுக்கப்பட்டோருக்கு அவரின் உரைகள் தன்னம்பிக்கையைத் தந்தன ; அநியாயங்களை எதிர்க்கும் உணர்வை எழுப்பின. நியாயங்கோரி எந்தப் போராட்டத்திலும் இறங்கும் தீவிரத்தை உருவாக்கின. தன்மான உணர்வைத் துரண்டின. ஐரோப்பியப்பல்கலைக்கழக மாணவர் குழுவிலிருந்து பல்லாயிரக் கணக்கான பாமரஜனங்கள் வரை அவரது பார்வையாளர் கூட்டம் வியாபித்திருந்தது.
xiii

Page 10
சிவாவின் எழுத்திலும் பேச்சிலும் எந்தப் பிரச்சினையையும் - எந்த விஷயத்தையும் தனித்துவமான தன் சொந்த அறிவியல் கண்ணோட்டத்தில் அனுபவக் களனில் சோதித்து அணுகும் பண்பு இருந்தது. எந்த விஷயம் என்றாலும் அவருக்கே உரித்தான perspective அதில் விகச்சிப்பதை நாம் உணர முடியும். தான் எழுத - பேச முனையும் எப்பொருள் பற்றியும் ஆழ்ந்து ஆராயும் உழைப்பு அவரிடம் இருந்தது. நீலகிரிவாழ் ஆதிக் குடிகள், படகர்கள் பற்றிய அனைத்து ஆவணங்களையும் ஆராய்ச்சி நூல்களையும் அவர் ஆழ்ந்து வாசித்திருக்கிறார். அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் போன்றோரின் எழுத்துகளை - செயற்பாடுகளை அவர் கருத்தூன்றி நோக்கினார். கறுப்பின எழுத்தாளர்களின் கறுப்பின விடுதலை எழுத்துகளை அவர் நேசித்தார். மலையகம் சார்ந்த அனைத்து எழுத்துகளையும் அவர் மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்க்கைகளுடனும் வாசித்தார். கோபால் காந்தியின் "Saranam" என்ற நாவலை சிவாவிடம் நான் கொடுத்தபோது, அவர் அந்நாவலை அன்றிரவே ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டு மறுநாளே அதற்கான மதிப்புரையையும் எழுதியிருந்தார்.
ஆங்கிலமே சிவாவின் போதனாமொழியாக இருந்தாலும், தமிழில் அவர் எழுத்து செழுமை மிக்கது. அவரது தமிழ் எழுத்துநடை செம்மரபு சார்ந்தது. அழகிய வர்ணனைகள், தெளிவு, எளிமை, தரிசனம் என்பன அவரது எழுத்தின் சீரிய பண்புகள். அவரது சிந்தனைக் கோலங்களுக்கு தமிழ் கைகட்டி சேவகம் செய்திருக்கிறது. ஆற்றொழுக்கு போல சொற்கள் அணிசேரும் லாவகம் பிரமிக்கத்தக்கது.
அவரது எழுத்திலும் பேச்சிலும் அறிவின் கம்பீரம் கரைகட்டி நின்றது. சாதாரண உரையாடலிலும் அவர் தனது மேதைமையினை வெளிப்படுத்த வல்லவர், "திமிர்ந்த ஞானச் செருக்கினை" உரிய இடங்களிலே அவர் வெளிப்படுத்திய தருணங்களும் உண்டு. ஜெர்மனியில் ஃபிராங்பேர்ட்டில் தன்னார்வ நிறுவனக் கூட்டமொன்றில் ஜெர்மனிய நிதி - நிர்வாகிகள் சிவாவிற்கு அறிவுரை கூற முயன்றபோது, "உங்களின் அறிவுரைகளை முதலில் நிறுத்திவிட்டு, அந்த மக்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி நான் சொல்லுவதை முதலில் கேட்கப் பழகுங்கள்" என்று அவர்களைச் செல்லாக்காசாக்கத் துணிந்தவர் சிவா. நிதிவளமோ, அதிகாரச் செருக்கோ அவரை ஒருபோதும் பணியவைத்ததில்லை.
அநீதிக்கு எதிரான போராளி ஓய்ந்திருக்க முடிவதில்லை. சிவா தனது இறுதிநாள்வரை மோதல் களங்களிலேயே நடைபயின்றார்; எதிர்ப்புணர்வும் தார்மீக ஆவேசமும் அவருடன் பிறந்தவை. தாயகம் திரும்பிய மலையகமக்கள் பொலிஸாரால் நீலகிரியில் மனித வேட்டை ஆடப்பட்டபோது சிவாவால் அந்த அநீதியை-அட்டூழியங்களைப் பொறுத்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அதிலும் அரசியல் ரீதியில் மிகவும் பயங்கர அச்சுறுத்தல்நிலவிய நேரத்தில் ஒரு இலங்கைக் கடவுச்சீட்டு வைத்திருக்கும் சிவா தமிழகத்தில் ஒரு கலெக்டர் அலுவலகத்தை "கேரோ" செய்யும்
Xiv

கிளர்ச்சிக்குத் தலைமை வகித்தார் என்றால் அந்த மனிதரின் நெஞ்சுரத்தை எப்படிப் போற்றுவது ?
சிவா சிறைக்குள் கடுமையான வதைகளுக்குட்பட்டார். இதய நோயாளியான அவர் கைது செய்யப்படும் பெரும் அபாயம் தெரிந்திருந்தும் போராட்டத்திலிருந்து பின்நிற்கவில்லை. சொல்லும் செயலும் இணைந்த பெரும்வீரனின் வரலாறு சிவாவினுடையது. தனது இறுதி வாழ்வில் சிறைக் கொடுமையையும் சந்திக்கத் துணிந்த போராளி அவர். மலையக சமுதா. யத்தில் இத்தகைய சமூக விடுதலையுணர்வு கொண்டவர்கள் வாராது வந்த மாமணிகள் போன்றோர். நம் காலத்தில் நாம் அவரைக் காணவும் பழகவும் கற்கவும் நட்புரிமை பேணவும் கிடைத்த வாய்ப்பு பெறற்கரிய வாய்ப்பாகும். ஒரு போர்க் குணமிகுந்த விடுதலை நேசனின் வாழ்க்கைச் சரித்திரத்தை ஒருபுறம் இந்தச் சிறைவாசம் பூரணப்படுத்திக் கொடுத்திருக்கிறது.
சிவா தனது அக்கறையை எல்லாம் எழுத்திலேயே குவித்திருந்தாரானால் அவரது எழுத்துகள் பல தொகுதிகளாக அமைந்திருக்கும். ஆனால் அரசியல் மாற்றங்கோரி மக்களை அணி திரட்டும் பெரும்பணியில் ஒரு செயற்பாட்டாளனாக முன்நின்ற சூழல் அவரது எழுத்துநேரத்தையெல்லாம் விழுங்கி விட்டது. உலகின் எந்தத் தலைசிறந்த விடுதலைத் தலைவரின் சிந்தனைக்கும் எழுத்துக்கும் நிகராக சிவாவை நாம் காணமுடியும்.
அம்மாமனிதரின் அனைத்து எழுத்துகளையும் தொகுத்து எதிர்காலத் தலைமுறைக்கு வழங்குவது இன்றைய மலையக அறிவுஜீவிகளின் கடமையாகும். சிவாவின் இந்த அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு ஒரு காத்திரமான முன்னோடி நடவடிக்கையாகும். சிவாவின் வாழ்க்கை வரலாற்றை அதன் சகல பரிமாணங்களுடன் எழுதவல்லோர் நம் தலைமுறையில் நிறைய உள்ளனர். அத்தகைய ஒரு தெள்ளிய வரலாறு எழுதும் பணியும் நம்முன் உள்ளது. மலையகம் அந்த மாமனிதனுக்கு செய்ய வேண்டிய அஞ்சலி அது.
லண்டன்
20.07.2001
XV

Page 11

மலையகம் :குமுறும் எரிமலை
இலங்கையில் மலைநாடு என அழைக்கப்படும் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1500 அடி முதல் 6000 அடி வரைக்கும் உட்பட்ட மலை சூழந்த பகுதியாகும். இலங்கையில் போர்த்துக்கீசியர் 1505ல் காலடி எடுத்து வைத்தபோது இந்நாட்டில் மூன்று தனியரசுகள் அமைந்திருந்தன. இவை கோட்டை அரசு, யாழ்ப்பாண அரசு, கண்டி அரசு என வழங்கப்பட்டு வந்தன. கண்டி அரசுக்குள் உட்பட்டிருந்த பெரும் பகுதி மலைநாடாகும். இயற்கை அரண் சூழந்து காடு அடர்ந்த கண்டி அரசை அன்னிய நாட்டினர்களாகிய போர்த்துக்கீசியரும் ஒல்லாந்தரும் பொருளாதாரக் காரணங்களால் கைப்பற்றவில்லை. ஆனால் கண்டி அரசு அன்னியர்களை, இலங்கையை விட்டு விரட்ட மாற்றார்களோடு தொடர்பு கொண்டதை அறிந்து, அச்சத்தால் கண்டி அரசைக் கைப்பற்ற முயன்று, ஈற்றில் 1815ல் ஆங்கிலேயர்களால் கைப்பற்ற முடிந்தது.
அந்நிய ஆட்சிக்குட்பட்ட கண்டி பின்னர் பெருமாற்றமடைந்தது. கண்டி அரசுக்கும் இந்தியாவுக்கும் பண்டைக்கால முதல் தொடர்பிருந்து வந்திருககிறது. சில அறிஞர்கள் இராவணனின்நகரம் மலைநாட்டில்தான் இருந்திருக்க வேண்டுமெனக் கருதுகின்றனர். இன்று அப்புத்தளை என அழைக்கப்படும் சிறு நகரத்திற்கருகேயே இராவணனது தலைநகர் அமைந்திருக்க வேண்டுமென்பது சிலரது துணிபு. தெய்வந்துறை என்றொரு நகரம் இன்றும் இலங்கையின் தென்கோடியில் உண்டு. இது ஒரு பண்டைத் துறைமுகம் எனவும் இதன் வழியாகவே இராமர் இலங்கைக்கு வந்தார் எனக் கூறுவாருமுளர். இன்றும் மலைநாட்டின் அழகு நகரான நுவர-எலியாவுக்கு அணித்தாய் சீதையம்மன் கோயிலொன்றுள்ளது. அங்குள்ள பூங்காவிலேயே சீதை சிறை வைக்கப்பட்டதாகப் பரம்பரை ஐதீகம், அதற்குச் சான்றாய் இப்பகுதிகளிலே
நா. பார்த்தசாரதி வெளியிட்ட தீபம் இலக்கிய சஞ்சிகையில் 1969ம் ஆண்டு வெளியான கட்டுரை.

Page 12
அசோக மலர்கள் பூத்துக் குலுங்கக் காணலாம். இப் பழங்கதைகளின் உண்மை எவ்வாறாயினும் வரலாற்றுக் காலத்தில், 18ம் நூற்றாண்டிலிருந்து இந்திய நாயக்க வம்ச மன்னர்கள் கண்டியில் அக்காலத்தில் தமிழிலக்கிய ஏடுகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் இப்போது மறைந்துபோன சின்னமுத்து காவியமும் ஒன்றாகும். கண்டியை ஆங்கிலேயர் 1815ல் கைப்பற்றியபோது கண்டியின் பிரதானிகள் அனைவரும் கண்டி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அதில் சிலர் தமிழில் ஒப்பமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதம மந்திரி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மூதாதையரான ரத்வத்ததிசாவதனித் தமிழிலேயே கையொப்பமிட்டுள்ளார். இச் சிறுசிறு ஆதாரங்களைக் கொண்டு இந்தியாவிற்கும் கண்டிக்கும் இடையில் அந்நிய காலத்திற்கு முன்பிருந்தே நெருங்கிய தொடர்பிருந்ததென்பதை நிறுவலாம்.
"1833க்குப் பின்னர் ஆங்கிலேயர் மலைநாட்டுப் பகுதியில் கோப்பிப் பயிர்ச் செய்கையை ஆரம்பித்தனர். இச்செய்கை 1887ல் நலியத் தொடங்கியது. அதன்பின்னர் தேயிலைப் பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரு பயிர்ச் செய்கைக்கும் ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அவர்களை ஆங்கிலேயர் குறைந்த செலவில் தென்னிந்தியாவிலிருந்து (புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், திருநெல்வேலி) அழைத்து வந்தனர். பல லட்சக் கணக்கான தமிழர்கள் 19ம் நூற்றாண்டில் இலங்கையின் கோப்பி, தேயிலை, றப்பர் தோட்டங்களில் குடியேறினார்கள். இதனால் இலங்கையின் பொருளாதாரம் அடிப்படையில் மாற்றமடைந்தது. மலைநாட்டுத் தோட்டங்களே இந்நாட்டின் பொருளாதார அடித்தளமாய் அமைந்து, நாட்டின் மொத்த வருவாயில் 66 சதவீதம் உழைத்துக் கொடுத்தன.
இவ்வாறு குடியேறி நாட்டின் முதுகெலும்பாக அமைந்த தொழிலாளர்களின் நல உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசாங்கம் ஓர் அரசாங்கப் பிரதிநிதியை நியமித்தது. இதைத் தவிர்த்து ஒவ்வொரு தோட்டத்திலும் பெரிய காங்காணிமார்களே தொழிலாளர்களுக்குச் சகல பொறுப்புக்களும் வாய்ந்தவர்களாய் இருந்தார்கள். காலப் போக்கில் இப் பெரிய கங்காணிமார்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைச் சுயநலத்துக்காக உபயோகித்துமக்களையே சுரண்டத் தொடங்கிவிட்டனர். இதைஉணர்ந்து அவர்களை எதிர்த்து, கெடுபிடிகளிலிருந்து மீள தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. காலஞ்சென்ற திரு.நடேச ஐயர் மலைநாட்டு மக்களை ஒரு இயக்கத்திற்குள் அமைத்து, அவர்களுக்காகப் போராடினார். அரசாங்க சபையின் அங்கத்தவராக இருந்தபோது இந்தியத் தொழிலாளர். களின் நன்மைக்காக அச்சபையில் உண்மையுடன் வாதாடினார். அவரது முயற்சியினால் பெரிய கங்காணிமார்களின் ஆதிக்கம் குன்றியது. மலையகத் தொழிலாளர்களும் தங்களின் சுயபலத்தை நம்பத் தொடங்கினார்கள். திரு. நடேச ஐயரின் தொழிற்சங்க முயற்சிக்குப் பிறகு 1938ம் ஆண்டளவில் நேருவின் ஆலோசனையை ஒட்டி இலங்கை இந்தியர் காங்கிரஸ் ஆரம்பிக்

கப்பட்டது. இது மலையக மக்களின் ஏகோபித்த இயக்கமாகவும், மிகப்பெரிய தொழிற்சங்கமாகவும் வலுப்பெற்றது. இலங்கை இந்தியக் காங்கிரசின் செல்வாக்கு உச்சநிலையில் இருந்த 1944 - 48ம் ஆண்டுகளே மலைநாட்டுத் தமிழர்களின் வரலாற்றில் பொற்காலமெனலாம். இலங்கையின் முதலாவது சுதந்திரப் பாராளுமன்றத்தில் மலையகத் தொழிலாளர்களின் பிரதிநிதி. களாக எழுவர் வீற்றிருந்தனர். இலங்கை இந்தியக் காங்கிரஸைத் தவிர, இடதுசாரிக் கட்சிகளும் மலைநாட்டுத் தொழிலாளர்களின் வளர்ச்சியில் வர்க்க ரீதியில் நாட்டம் கொண்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் இலங்கை இந்தியக் காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளோடு தொடர்பு பூண்டிருந்தது.
மலையகத் தொழிலாளர்களின் வீழ்ச்சி 1948, 49ம் ஆண்டில் ஆரம்பமாகி, அன்று முதல் இன்று வரை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தோடு மலையகத் தொழிலாளர் மிகத் தாழ்ந்த நிலையை எய்திவிட்டனர். மலையகத் தொழிலாளர்களின் இடதுசாரிப் போக்கைக் கண்டு மிரண்ட அரசாங்கம் வர்க்க பேதங்களை அடிப்படையாகக் கொண்டு இனத்துவேஷத்தை மூட்டி மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்தது. மலையகத் தொழிலாளர் அவர்களின் வாக்குரிமையைப் பறிக்கக் கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்துப் போராடும் திறனற்றவர்களாக இருந்துவிட்டார்கள். அவர்களின் தலைமை அவர்களைத் தவறான வழியில் நடாத்திச் சென்றதே இதற்குக் காரணமாகும். வாக்குரிமைப் பறிப்பு சட்டத்தை, ஆரம்பத்தில் தலைமை எதிர்த்து உண்ணாவிரதமிருந்தது. பின்னர் எக்காரணத்தினாலோ அதனை ஏற்று எட்டு லட்சம் மக்களின் குடியுரிமையை அன்று பறிகொடுத்தது. தங்களின் குடியுரிமைக்காக மலைநாட்டுத் தொழிலாளர்கள் இன்று வரை ஒரு போராட்டமும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
1949க்குப் பிறகு மலைநாட்டில் தொழிற்சங்கங்கள் பெருக ஆரம்பித்தன. இலட்சியங்களை இழந்து கொண்டிருந்த இலங்கை இந்தியக் காங்கிரஸ் தன்னம்பிக்கையற்ற இயக்கமாகத் தவிக்கத் தொடங்கியது. பல சிங்கள மக்கள் அதனை ஓர் அந்நிய நாட்டு நிறுவனம் என்று எதிர்ப்புக் கிளப்பினர். இந்த எதிர்ப்புக்கஞ்சிய இலங்கை இந்தியக் காங்கிரஸ் தனது பெயரை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என மாற்றிக் கொண்டது. நாட் செல்லச் செல்ல அதன் தலைவர்களுக்கிடையே பதவிப் போட்டிப் பூசல் காரணமாக இயக்கம் பிளவு கண்டு, இரண்டு, மூன்று பின்னர் நான்காகவே பிரிந்து தனித்தனி இயக்கமாக மாறத் தொடங்கியது.
புதுப்புது தொழிற் சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்தும், அது தோட்டத் தொழிலாளருக்குத் தகுந்த பாதுகாப்பாக அமையவில்லை. ஆரம்பகாலத்தில் பெரிய கண்காணிமார்களுக்கு இருந்த அதிகாரமும் இப்போது துரைமாருக்குத்தான். ஒரு கிராமத்தில் உள்ளதைப் போல சுயாட்சி அமைப்பு எதுவுமே தோட்டத்திலில்லை. தோட்டத்தில் போலீஸ் நிலையம் இல்லை. தோட்ட மக்களுக்கென ஒரு சமுதாய அமைப்பு கிடையாது.

Page 13
அடிமைகளைப் போன்ற உரிமையற்ற வாழ்வுதான் அவர்களுக்கு உண்டு. மலைநாட்டில் வசிக்கின்ற லட்சக்கணக்கான மக்களுக்கு ஓர் அங்குல நிலமேனும் உரிமையில்லை. வசிப்பதற்கு தோட்ட லயங்களைத் தவிர வேறு வீடுகளில்லை. தோட்டத்தை விட்டு நீக்கப்பட்டால் எங்கு செல்வது; என்ன கொடுக்கப்படுகிறது ; ஆகக்கூடியது 30 வருட காலம் ஒரு தோட்டத்தில் தொழில் புரிந்திருந்தால் ஆணுக்கு ரூ. 900. பெண்ணுக்கு ரூ. 750. இத்தொகையை இரண்டாண்டுக்குள் செலவு செய்துவிட்டுப் பெரும்பாலோர் தெருவில் பிச்சைக்காரர்களாய்த் திரிகிறார்கள். தோட்டங்களில் இன்று வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. அதற்கு தேயிலை விலை வீழ்ச்சியும் ஒரு காரணமாகும். 20 - 25 வயதடைந்த, தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கூட வேலை கிடைப்பதில்லை. மாற்றுவழி தேடி அலைகிறார்கள். குடியுரிமை அற்றதால் தேயிலைத் தோட்ட வேலையைத் தவிர வேறு வேலைகள் கிடைப்பதே இல்லை. எனவே மிகவும் சொற்பக் கூலி கொடுத்து இலங்கையர்கள் இவர்களின் தொழிலைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வேலை வாய்ப்பற்ற காரணத்தால் பல இளம் பெண்கள் நகரங்களில் உடலை விற்று ஜீவிக்கிறார்கள் என்ற நிலையை அறிய வேதனைக்குள்ளாக வேண்டியுள்ளது. இத்தகைய ஒரு தன்மானமற்ற, தற்பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்வதால் எத்தகைய அநீதிகளையும் சகித்துக் கொள்ளும் இனமாக மலைநாட்டுத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
ஒரே தோட்டத்தில் பல தொழிற் சங்கங்கள் தங்களுக்குள்ளே தொழிலாளர்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதால், தோட்டங்களில் தொழிற். சங்கப் போட்டியும் பகைமையும் வளர்ந்து, தொழிலாளர்களுக்குப் பெருந்துன்பங்களேற்பட்டுள்ளன. அவர்களின் ஐக்கிய சக்தி சிதைந்தது மட்டுமல்லாமல், அவர்களுக்குள்ளேயே போட்டியும் பகைமையும் வளர்ந்து விட்டதால் அடிப்படைப் பிரச்சினைகளை மறந்து விடுகிறார்கள். தொழிற் சங்கப் போட்டியினால் ஏற்பட்ட கலவரங்களில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். 1966ல் சம்பள உயர்வு கோரி ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு நியாயமான போராட்டம். இலங்கையில் இன்று அதிக நேர உழைப்புக்குக் குறைந்த சம்பளம் பெறுபவர்கள் தோட்டத் தொழிலாளர்கள்தான். சில தொழிற்சங்கங்கள் ஒத்துழைக்காததனால் 46 நாட்களாக நடைபெற்ற போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது. எனவே தொழிற் சங்கப் பிளவுகளினால், தமது ஒரே ஒரு ஆயுதமான வேலை நிறுத்தத்தையும் மழுங்க வைத்துவிட்டு, ஒரு விரக்தி நிலையில் மலையக மக்கள் வாழ்கின்றனர்.
மலைநாட்டுத் தொழிலாளர்கள் நாடற்ற மக்களாய் கருதப்பட்டு பல ஆண்டுகளாக உரிமையற்றவர்களாக இந்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். மலைநாட்டின் தொழிலாளர்களுக்கும், நாட்டின் பிற தொழிலாளர்களுக்கும் இடையே உறவோ நட்போ வளர்ச்சியடையவில்லை. சிங்கள மக்களுக்கும் மலைநாட்டுத் தமிழர்களுக்குமிடையேயும் உறவு வளரவில்லை. இதனால் மலையகத் தமிழ் மக்கள் அந்நியர்களாகவே கருதப்பட்டு வருகிறார்கள்.

இலங்கையின் வசதிகளும் கிட்டின. இவைகள் வாக்குரிமை அற்ற மலைநாட்டுத் தமிழருக்குக் கிட்டாது போயின. இந்தியாவின் பிரதமராக நேரு இருந்த வரையில் இம்மலைநாட்டுமக்களைக் கட்டாயமாக நாடுகடத்தப்படுவதை எதிர்த்து வந்தார். இதனால் மலையக மக்களின் அரசியல் அந்தஸ்து திராத பிரச்சனையாகவே இருந்து வந்தது. மலையகத் தொழிலாளர்கள் நம்பியிருந்த பெருந் தொழிற்சங்கங்கள் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இதை மலையகத் தொழிலாளர் அறியாமற் போனது பெருந்துரதிஷ்டமாகும். இறுதியாக 1964ல் மலையக மக்களின் வரலாற்றில் மாபெரும் இருள் சூழ்ந்தது. அவ்வாண்டின் சிறீமா - சாஸ்திரி உடன்படிக்கையின்படி 15 வருடகால எல்லைக்குள் 5 1/4 லட்சம் மலையக மக்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு (அகதிகளாக) நாடு கடத்தப்பட வேண்டும். நூற்றாண்டுக் காலமாய் குறைந்த ஊதியம் பெற்று உழைத்து வளம் பெருக்கிய மலைநாட்டுத் தொழிலாளியை எவ்வகை நீதியும் நேர்மையுமின்றி நாடு கடத்தப்படுவதற்காகச் செய்துகொண்ட ஒப்பந்தம் உலக வரலாற்றிலேயே தொழிலாளர் வர்க்கத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும். இதை அமுல் நடத்துவதற்கான சட்டமும் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இச்சட்டத்தின்படி 15 வருட கால எல்லைக்குள் 5 1/2 லட்ச்ம் மலையகத் தமிழர்கள் இந்தியக் குடியுரிமையை ஏற்றுக்கொண்டால் 3 லட்சம் மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்படுமாம். இன்னும் மீதியுள்ள 1 1/2 லட்சம் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கப்படாமல் விடவும் செய்துள்ளனர்.
அரசியல் சூதாட்டத்தினால், மலையகத் தொழிற் சங்கங்கள் இந்த அநியாயமுடிவைஏற்றுக்கொண்டுள்ளன. எதிர்த்துப்போராட எந்தத் தொழிற் சங்கமும் முன்வரவில்லை. மலையகத் தொழிலாளர் இத்தொழிற் சங்கங்களின் பிடியில் சிக்கி அரசியல் பகடைக்காயாகச் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது வேதனையும் விரக்தியும் குமுறும் எரிமலையாக மாறிக்கொண்டிருக்கின்றது. இந்த எரிமலை வெடிக்கும் பொழுது மலைநாட்டின் இருளை ஓர் ஒளிப்பிழம்பு அகற்றும் என நாம் எதிர்பார்க்கலாமல்லவா ?

Page 14
ஈழ அரசியலும் மலையக மக்களும்
இலங்கை வாழ் தமிழர்களின் வரலாறு தொன்மையுடையது. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் தான் சிங்களர்கள் இலங்கையில் குடியேறினார்கள் என்று மகாவம்சம் கூறுகிறது. அதற்கு முன்னரே இலங்கைத் தீவில் மக்கள் குடியேற்றமும், இந்து சமயமும் நிலவியிருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. பெளத்தத்துக்கு முந்தியது இந்து சமயம். சிங்களத்திலும் பண்டையது தமிழ், ஆகவே தமிழகத்துக்கு அருகாமையில் இருந்த இலங்கைத் தீவில் கடலோடிகளான தமிழர்கள் சிங்களர் வரும் வரையில் குடியேறாமல் இருந்திருப்பார்கள் எனக் கொள்வதற்கு இடமில்லை. இராமாயண மகாபாரத காவியங்களும் கூறும் வகையினைக் கொண்டும் இலங்கைத் தீவில் சிங்களருக்கு முன்னரே குடியேறியிருந்த இனம் தமிழினமே என வலியுறுத்திக் கூறுவோருமுண்டு.
பாளிமொழி ஏடான மகாவம்சத்தையே இலங்கை வரலாற்றின் மூல நூலாக கொள்வோர் மட்டுமே இலங்கை வரலாற்றுக்கு விஜயனின் வருகை என்ற கதையையே ஆரம்ப அத்தியாயம் என்று ஏற்றுக்கொள்கிறார்கள். வரலாற்றில் முந்தியோர் பிந்தியோர் என்ற கூற்றுக்கு இடம் கொடுக்காவிட்டாலுங்கூட, ஐரோப்பியர் வருகையின் பொழுது இலங்கையின் வடபகுதி. யில் தமிழர்கள் தனியாட்சி செலுத்தினார்கள் என்ற உண்மை தமிழ் மக்களின் இறைமையை உறுதி செய்கிறது. இலங்கையில் குடியேறிய மக்கள் அனைவரும் தம்மை மொழிவழி இருகூறுகளாகப் பிரித்துக் கொண்டார்கள். முஸ்லிம்கள் அனைவரும் தமிழ்மொழியே பேசுபவர்களாகவே இருந்தார்கள். கரையோரப் பகுதிகளில் குடியேறிய தமிழர்கள் சிங்கள மொழியை ஏற்றுக் கொண்டார்கள். சிங்களவர்களில் பலர் தமிழினத் தொடர்புடையோர். மொழியையும், மதத்தையும் மாற்றியதன் மூலம் பல தமிழர்கள் சிங்களர்
19ம்ே ஆண்டு ஏற்பட்ட இனகலவரத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து தாயகம் திரும்பிய மலையக மக்கள் மத்தியில் பணியாற்றிய 1987 காலகட்டத்தில் தொசிக்கன்ராஜ் சென்னையிலிருந்து வெளியிட்ட மக்கள் மறுவாழ்வு 5ம் ஆண்டு நிறைவுமலரில் வெளியான கட்டுரை.

ஆனார்கள். அவ்வாறே சிங்களர்கள் கூட மொழியையும், மதத்தையும் மாற்றிக் கொண்டு தமிழர்கள் ஆன சம்பவங்களும் உண்டு. அந்நிய ஆட்சியில் இரு கூறான மக்கள் இரு மாநிலப் பகுதிகளில் தங்கள் வாழ்வையும் சமூக பொருளாதார, கலாச்சார அடித்தளங்களையும் அமைத்துக் கொண்டதால் வட - கீழ் இலங்கை தமிழ் மாநிலமாகவும், தென்னிலங்கை சிங்கள மாநிலமாகவுமே இருந்தது.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட ஓரிணைந்த பொருளாதார வளர்ச்சியும் சர்வதேச வாணிபப் பெருக்கமும், நவீன போக்குவரத்து முறைகளும் இலங்கை முழுவதையும் ஒரு நாடாக, ஒரு இனமாக மாற்றி வந்தது. ஆங்கில மொழி அறிவு, ஒரே வகையான நீதிமன்றம், ஒரே சட்டமன்றம், ஒரே ஆட்சி, ஒரு பாதுகாப்பு, நிர்வாகம் போன்ற நடைமுறைகள் பல்வேறு மக்களை ஒன்றிணைத்தன. எனினும், இந்த ஒற்றுமைச் சக்திகள் ஆங்கிலக் கல்வி, கிறிஸ்தவ சமயம், பிரித்தானிய ஆட்சி ஆகிய மூன்றினால் மட்டுமே பாதுகாக்கப்பட்டன. 1948 ம் ஆண்டுக்குப் பிறகு பிரித்தானிய ஆட்சி போனது. 1956 ல் ஆங்கிலம் சக்தி இழந்தது. 1960களில் கிறிஸ்தவ சமயம் அரசியல் முக்கியத்துவமிழந்தது. பாராளுமன்ற ஆட்சி முறை சிங்கள பெளத்த சக்திகளை வீறிட்டெழச் செய்தன. சிங்கள - பெளத்த என்ற இன ஆதிக்க உணர்வு, தமிழ், இந்து, முஸ்லிம், சக்திகளை ஒறுத்தது, ஒதுக்கியது. கல்விக் கூட்டங்களில், ஆட்சி பீடங்களில், நீதி மன்றங்களில் நிர்வாக அமைப்புகளில் சிங்கள. பெளத்த ஆதிக்கமே மேலோங்கியது. நீதிமன்ற மொழி, ஆட்சி மொழி, கல்வி சிங்களமானது. தமிழ் மொழிக்கு ஒரு வரையறுக்கப்பட்ட இடமே வழங்கப்பட்டது. அதே போன்று பெளத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னர் ஆங்கிலேயர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டங்களில் சிறுபான்மையோருக்கு இருந்த பாதுகாப்புகள் புதிய அமைப்பில் இல்லை. செனட் சபை ஒழிக்கப்பட்டது. 1948ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் மலையகத் தமிழர்களாகிய பத்துலட்சம் மக்களின் குடியுரிமையைப் பறித்தது, இதனால் பாராளுமன்றத்தில் சிங்களவர் அபரிமிதமான பெரும்பான்மை பெற்றனர். தமிழர்களை உதாசீனப்படுத்தி ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்புகள் வளர்த்தன. இந்த சிங்கள பெளத்த ஆதிக்க வெறி இலங்கையின் ஒற்றுமையை சீர்குலையச் செய்தது. சிங்கள அரசியல் கட்சிகள் இரு கூறுகளாகப் பிரிந்திருப்பார்கள். ஆகவே சிறுபான்மையோராகிய நாமே அரசு அமைப்பது யார் என்று நிச்சயிக்கும் ஒரு சக்தியாக இருப்போம். ஆகவே சிங்கள ஆட்சி எது என்பதை நிர்ணயிக்கவும் நிரந்தர சக்தி தமிழருக்கு இருப்பதால், அதுவே நமது நிரந்தர பாதுகாப்பாகும் என்று பழைய தமிழ் அரசியல் தலைவர்கள் நம்பினார்கள். பாவம், ஏமாந்தார்கள்! தமிழர்களின் ஆதரவின்றியே அரசமைக்கும் பலத்தை சிங்களவர்கள் பெறுவார்கள் என்ற உண்மை தமிழ்த் தலைவர்களுக்கு உதிக்கவே இல்லை. இதனால்தான் பழைய தமிழ் அரசியல் தோற்றது. சிங்களவர்களின் இன ஆதிக்க அரசியல் வளர்ந்தது. வென்றது.

Page 15
இந்த நிலைமையை முறியடிக்க தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்ற உண்மையை முதலில் உணர்ந்த தமிழ்த்தலைவர், தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வநாயகம் ஆவார்கள். மலையகத் தமிழர். களின் குடியுரிமையும் வட கீழ் மாநிலத் தமிழர்களின் ஆட்சி உரிமையும் ஒருங்கிணைந்தது என்பதனை உணர்ந்து இரு சாராரையும் ஒன்றுபடுத்த முயன்றார். இலங்கைத் தொழிலாளர் கழகம் என்ற பெயரில் தொழிற்சங்கம் அமைத்து தமிழரசுக் கட்சியின் குடைக் கீழ், எல்லாத் தமிழ் பேசும் மக்களையும் முஸ்லிம்கள் உட்பட ஒன்றுபடுத்த பெரிதும் முயன்றார். ஆனால் அவரது தீர்க்க தரிசனத்தை மற்றைய தமிழ்ப் பேசும் மக்கள் அவரது கட்சித் தலைவர்கள் உட்பட, முழுமையாக உணரத் தவறியதால் இவ்வொற்றுமை உருவாகவில்லை. மலையகத்தில் மிகச் சிறந்த தொழிற்சங்க அமைப்பை உருவாக்கும் வாய்ப்பிருந்தும் அதனை செயற்படுத்த யாழ்ப்பாணத் தமிழர்கள் தவறிவிட்டார்கள். ஆகவே மலையக மக்களின் போராட்டமும் அரசியலும் இலங்கைத் தமிழர்களின் அரசியலும் போராட்டமும் வேறுவேறாகவே அமைத்துவிட்டன. இந்தச் சூழ்நிலை சிங்கள பெளத்த வளர்ச்சிக்கு அனுகூலமாகவே அமைந்தது. இந்தியாவோடு மலையகத் தமிழர்களை நாடுகடத்தும் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர், மலையகத் தமிழர்களை ஒரு அரசியல் சக்தியாகவே சிங்கள அரசியல் கட்சிகள் கருதவில்லை. அதே போல் தமிழர்களின் வாக்குப்பலம் வடகீழ் மாநிலத்தோடு ஒடுங்கிவிட்டதால், தனிச் சிங்கள பெளத்த அரசியலே தலையெடுக்க கூடிய அனுகூலங்கள் இலங்கையில் தோன்றின.
தமிழ்மக்களின் உரிமை இழப்பிற்கு அடிப்படையாக அமைந்தது சிங்கள பெளத்த அரசியல் ஆதிக்கம். அதற்கு அடிகோலியது தமிழர்களின் ஒற்றுமை இன்மை. ஒற்றுமை இன்மையால் அவர்களது அரசியல் சக்தி முழுமையாகப் பரிணமிக்க முடியவில்லை.
இதனை கசப்பான அரசியல் ஒதுக்கீட்டிற்குப் பிறகு, ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்களின் ஒற்றுமையை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1972ல் தோற்றம் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் முப்பெருந்தலைவர்களில் ஒருவராகத் தொண்டமான் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இலங்கையின் வரலாற்றிலேயே முதன் முறையாக மலையகத் தமிழர்களை சமமானவர்களாக ஏற்றுக்கொண்டதற்கு இது அறிகுறியாகும். ஆனாலும் மலையக மக்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்ததினால் இவ்வொற்றுமை அரசியலில் - பாராளுமன்றத்தில் பிரதிபலிக் கப்படவில்லை.
ஆனாலும் 1956க்குப் பிறகு, மலையகத் தமிழர் இலங்கைத் தமிழரும் இணையக்கூடிய வாய்ப்புகள் படிப்படியாக வளர்ந்தன. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவை தனிச் சிங்கள ஆட்சி மொழிச் சட்டமும், தமிழரசுக் கட்சியின் தொழிற்சங்க நடவடிக்கைகளுமாகும். 1958 இனக்கலவரத்தில் தமிழ்மொழிப் போராட்டத்தில் அழைப்பின்றி ஈடுபட்டு உயிரிழந்த இரண்டு

பொகவந்தலாவைத் தொழிலாளர்கள் பிரான்சிஸ், ஐயாவு ஆகிய இருவருமாவார். 1958ல் தமிழர்கள் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது சிங்களவர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கி நாடெங்கிலும் இனவெறியாடி இரத்தப்பலி கொண்டார்கள். அன்று பிளவுபட்டது தமிழ் - சிங்கள மேற்பூச்சு ஒருமைப்பாடு! மலையகத் தமிழர்களும், யாழ், மட்டக்களப்புத் தமிழர்களும் அன்று மொழியுணர்வால் ஒன்றுபட்டார்கள்.
ஆனால் இந்த ஒற்றுமை, உணர்வு வடிவில் நின்றதே தவிர அரசியல் ஆக்கம் பெறவில்லை.
மாறாக 1964 நாடு கடத்தும் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, வட- கீழ் மாநிலத் தமிழ்த் தலைவர்கள் எவ்வித சலசலப்பும் காட்டவில்லை. அன்றிலிருந்து மலையகத் தமிழர்கள் தாம் இலங்கையில் அரசியல் அனாதைகள் என்ற கசப்பான உண்மையை உணர்ந்து கொண்டார்கள். உண்மையிலேயே இலங்கை அரசியலில் அக்கறையற்றுப் போனார்கள். 1948ல் குடியுரிமை பறிப்பு, வட - கீழ் மாநில தமிழ்த் தலைவர்கள் ஆட்சி பீடத்திலிருந்து அங்கீகரித்தார்கள். 1966ல் நாடு கடத்தும் சட்டத்தை டட்லி கொண்டு வந்தார். தமிழரசுக் கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தது. போதாதா உதாரணங்கள்? மலையக மக்கள் தமிழ் அரசியலில் இருந்து கூட ஒதுங்கியே போனார்கள், இலங்கைத் தொழிலாளர் கழகப்பிரமுகர்களேநாடு கடத்தப்பட்டார்கள். மலையகத் தமிழர் அழுது அரற்றிக் கொண்டு இலட்சோபலட்சமாக இலங்கையைவிட்டு வெளியேறினார்கள். எவரேனும் ஆறுதலுக்காகக் கூடப் பெருமூச்சு விடவில்லை.
1974ல் பட்டினியால் மடிந்தார்கள். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் மலையகத் தமிழர்கள் இனக் கலவரங்களின் போது கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள்.1972ம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணி தலைமையில் தொண்டமான் பெயருக்காகவாவது பங்கு கொண்ட காரணத்தால் மலையகத் தமிழ் மக்கள் கொடுரமாகத் தாக்கப்பட்டார்கள். தமிழர்களிடம் இல்லாத ஒற்றுமையை சிங்களவர்கள் கண்டார்கள். ஈழ அரசியலின் இரத்த காயங்கள் மலையகத்தில் பதிந்தன. ஈழ அரசியலில் மலையகத்தின் தாக்கம் இல்லாவிட்டாலும், மலையகத்தில், ஈழ அரசியலின் தாக்கம் பங்குக்கு அதிகமாகவே இருந்தது.
சிங்கள இனவெறியால் ஒன்றுபடுத்தப்பட்ட தமிழினம் சில செயற்பாடுகளில் ஈடுபட்டது. வட,கீழ் மாநிலங்களில், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலைப்பகுதிகளில் மலையக மக்கள் ஏராளமாகக் குடியேறினார்கள். இவர்களை குடியமர்த்தும் பணிகளில் தமிழர் அமைப்புகள் தீவிரமாக ஆர்வம் காட்டின. சிங்களத் தாக்குதலாலும் வறுமையாலும், துண்டுதலாலும் மலையகத் தமிழர்கள் வட கீழ் மாநிலங்களில்நிரந்தரமாகக் குடியேறினார்கள். பலாத்கார சிங்களக் குடியேற்றத்தைத் தடுப்பதற்கு இதனை முக்கிய கொள்கைக் கருவியாக ஈழத்தமிழ் இயக்கங்கள் பயன்படுத்தின.

Page 16
ஈழ அரசியல் முதலில் மொழியால், பின் சிங்கள வெறியால், அதன் பின்னர் பணி பாதுகாப்பிற்காகவும், சுயபாதுகாப்பிற்காகவும் மலையக மக்களை பின்னிப் பிணைத்தது. ஈழமே எமது இலட்சியம், ஈழம் அமைப்போம் என்று தமிழ் இளைஞர்கள் எக்காளமிட்டு அணிசேர்ந்த பொழுது, அவர்களோடு பல மலையக இளைஞர்களும் இணைந்து கொண்டார்கள். அதே சமயம், முற்போக்கு சிந்தனைகளாலும், மார்க்சீய சிந்தனைகளாலும் கவரப்பட்ட தமிழ் இளைஞர்கள் மலையக மக்களையும் உள்ளடக்கியதாகவே ஈழக் கோரிக்கை அமைய வேண்டும் எனக் கருதினார்கள்.குறிப்பாக EPRLFEROSஆகிய பெயர்களில் இயங்கிய போராளிகளே மலையக மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பினார்கள். அவர்கள் வரைந்த ஈழ வரைபடத்தில் சில மலையகப் பகுதிகளையும் சேர்த்துக் கொண்டார்கள். வேறு பலர் மலையகம் முழுவதையும் உள்ளடக்கிய ஈழம் அமைய வேண்டும் என்று சிந்தித்தார்கள். ஒரு சிலர், மலையக மக்கள் மலையகத்திலேயே தமக்கு தனிச் சுதந்திர மலைநாடு அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சிந்தித்தார்கள். இவை எல்லாம், ஈழ அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் மலையக மக்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூறிய வழிகளால், பின்வருமாறு முறைப்படுத்தலாம்.
1. மலையக மக்கள் அனைவரும் வட - கிழக்கு மாகாணங்களுக்கு குடி
பெயரவேண்டும். மலையகம் உள்ளிட்ட ஈழம் அமைய வேண்டும். மலையகம் சுயாட்சி, கலாச்சார பிரதேசமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
4. மலையகத்தவர்கள் அவர்களின் அரசியல் நிலைமையை அவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அவர்களை ஈழவிடுதலைப் போராட்டத்தலீடுபடுத்த வேண்டியதில்லை.
ஆனால் சிங்கள மக்கள் மலையக மக்களைப் பற்றி பின்வரும் கருத்துக்களை கொண்டிருந்தார்கள்.
1. மலையக மக்கள் காலனித்துவ ஆட்சியில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக கொண்டுவரப்பட்ட அந்நியர்கள். அவர்களை நாடு கடத்த வேண்டும்.
2. குடியுரிமைச் சட்டதிட்டங்களுக்கமைய குடியுரிமை பெற்றவர்கள் போக, மிகுதி இருப்பவர்களை இந்தியாவிற்கு படிப்படியாக நாடு கடத்த வேண்டும். குடியுரிமை பெற்றவர்களை சிங்களவர்களாக மாற்ற வேண்டும். அவர்கள் சிங்கள மொழி கற்கவும் பெளத்த சமயத்தைப் பின்பற்றவும் செய்ய வேண்டும், மிக சிறு தொகையினர்க்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டால் தான் அவர்களை சுலபமாகவும் விரை. வாகவும் சிங்கள - பெளத்தர் ஆக்கலாம்.
10

3. மலையகத்தில் குடியுரிமைப் பெற்றவர்களின் வாக்குரிமை பலம் சிங்களப் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்காத வகையில் தேர்தல் தொகுதிகளும் தேர்தல் முறைகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
4. குடியுரிமை பெற்றாலும், மலையக மக்களை அரசியலில் ஒதுக்கியே வைக்க வேண்டும். அவர்களை தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்கச் செய்ய வேண்டும். வேறு துறைகளில் அவர்களை வளரவிடக்கூடாது. குறிப்பாக காணி அபிவிருத்தியில் அவர்களுக்கு இடந்தரக்கூடாது என்பதாகும்.
ஆனால் மலையக மக்களோ எந்த விதமான உறுதியான அரசியல் கோட்பாடில்லாமல் காற்று வீசும் திசை எல்லாம் வளைந்து கொடுக்கும்நாணற் புல் போல் இருந்தார்கள். இலங்கையில் சோசலிஸம் மலரும் போது தமது சமத்துவ உரிமைகளை வென்றெடுக்கலாம் என்று நம்பினார்கள். இந்தியாவின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்தார்கள். இலங்கையின் மிகப்பெரிய தொழிலாளர் வர்க்கமாக இருந்தும் இனவெறி அரசியலினால் அவர்களின் ஒற்றுமையும் பலமும் சிதறடிக்கப்பட்டது.
1948லிருந்து 1987வரை குடியுரிமைப்பறிப்பும் நாடு கடத்தலுமே அவர்களது அரசியலாயிற்று. 1985க்கும் பிறகு மலையக மக்களின் அரசியல் அந்தஸ்தில் ஒரு உறுதிப்பாடு உண்டாயிற்று. இந்தியாவிற்கு செல்லவிருக்கும் ஒன்றரை லட்சம் போக, மிகுதியானவர்கள் அனைவரும் இலங்கையரே. அவர்களுக்கு சமத்துவம் வேண்டும். தமது உரிமைகளுக்காகப் போராடத் துணிந்தார்கள். பல சிங்கள மக்கள் அகதிகளாக முகாம்களில் இருக்க வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்கினார்கள். ஈழப் போராளிகளின் வீரச் செயல்களினால் அவர்களின் தன்னம்பிக்கை வலுப்பெற்றது. அவர்களின் உரிமை வேட்கை உச்ச நிலை எய்தியது.
இந்தநிலையில்தான் இன்று இலங்கை - இந்திய உடன்படிக்கை (1987) உருவாகி உள்ளது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் இந்த உடன்படிக்கையை வரலாற்றுச் சிறப்பானதென்று சென்னையில் எடுத்துக் கூறும்பொழுது இந்த உடன்படிக்கையின் மூலம் இலங்கையில் ஏறக்குறைய மூன்றிலொரு பகுதியை தமிழ் (பெரும்பான்மை) மாநிலமாக வரையறுத்துள்ளோம் என்று கூறினார்கள். சிங்கள மக்களின் மனோநிலையையும், ஈழ அரசியலின் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும், இந்திய அரசின் ஈடுபாடுகளையும் கருத்திற்கொண்டு நோக்கும்பொழுது பிரதமரின் கூற்று மலையக மக்களைப் பொறுத்த வரையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
ஏற்கனவே பேசி, முடிவு கண்டுவிட்டதாகக் கருதப்பட்ட மலையகத்தமிழ் மக்களின் குடியுரிமைப் பிரச்சினை ஈழ அரசியலினால் மீண்டும் புத்துயிர் பெற்றது. கொழும்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டில் (1984) மலையக மக்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற
1.

Page 17
தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெளத்த குருக்களும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். உண்மையிலேயே அனைத்துக் கட்சி மாநாட்டில் ஏகமனதாக செய்யப்பட்ட முடிவு இது மட்டுமே! பின்னர் 1985ல் திம்புவில் ஈழப் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இலங்கையைத் தாயகமாக ஏற்றுக்கொள்ளும் அனைத்து மலையகத் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஈழ அணி முன்வைத்தது. இதனை இலங்கை அரசப் பிரதிநிதிகள் ஏற்க மறுத்தாலும், இது நான்கு அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாக ஈழ அணி வற்புறுத்தியது. ஈழ அரசியல் மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாக அங்கீகரித்து, அதனைத் தனது அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றாக எற்றுக்கொண்டமை,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து 1986ல் இலங்கை இந்திய அரசுகளிடையே ஏற்பட்ட உடன்படிக்கை இலங்கையில் 1981ம் ஆண்டுக்கு முன் இந்தியக் குடியுரிமைக்கு மனுச் செய்யாதிருந்த மலையகத் தமிழர்கள் அனைவருக்கும் (ஏறக்குறைய 1 1/2 லட்சத்திற்கு அதிகமானோர். இதனால் குடியுரிமை பெறுவர்) 18 மாதங்களுக்குள் இலங்கைக் குடியுரிமை வழங்கப்படுமென கூறியது. இவற்றிலிருந்து ஈழ அரசியல் மலையகத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தது என்பதில் ஐயமில்லை. ஈழ அரசியல் மலையக மக்களை சாதகமாகவும், பாதகமாகவும் பாதித்துள்ளது என்பது உண்மையே ஆனால் இனிவரும் எதிர்கால அரசியல் சூழ்நிலையில் நிச்சயமாக ஒரு முகப்படுத்தப்பட்ட தமிழ் அரசியல் கட்சியாகவோ அரசியல் கூட்டாகவோ உருவெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் தோன்றுகின்றன. அடுத்து வரும் ஆண்டுகளில் சிங்கள - தமிழ் அரசியல் போக்கு ஒரு உறுதிப்பாடான நிலையை அடைந்து, அதன் பின்னரே, ஒரு ஏகோபித்த தேசிய அரசியலாகவோ, வர்க்க அரசியலாகவோ மறுமலர்ச்சி அடையும் என எதிர்பார்க்கலாம்.
நாற்பதாண்டு காலமாக திராதிருந்த தமிழ்த் தேசியப் பிரச்சினை இப்பொழுது தீர்க்கப்பட்டுள்ளது. இத்தீர்வு நிலையான தீர்வு என்பது எனது நம்பிக்கை வட - கீழ் மாநிலம், தமிழ் மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தனித்துவமுள்ள தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாக்கும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1986ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் குடியுரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. இனி இலங்கையில், இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்ற பேச்சுக்கு இடமில்லை. தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள அனைவரும் ஒரு தனி தேசிய இனமாக உருப்பெறுகிறார்கள். அவர்களுக்கென ஆட்சி அதிகாரம் நிலம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இனிச்சிதறியும், பிரிந்தும் பிளவுபட்டும் இருந்த மக்கள் ஒன்றுபட வேண்டிய ஒரு அரசியல் வரலாற்றுக் கால கட்டம் உருவாகிறது.
12

தமிழ்நாட்டு மக்களின் மனோபாவத்தையும் பொதுவாக இந்தியக் கண்ணோட்டத்தையும் வைத்துப் பார்க்கின்ற பொழுது இலங்கையில் ஒரேயொரு தமிழினம் என்ற கோட்பாடே நிலைபெறப் போகிறது. கடந்தகால ஈழ அரசியலின் முழுமையான தாக்கம் இலங்கைத் தமிழ் மக்களைப் பிராந்திய உணர்வுகளில் இருந்து விடுபடச் செய்து ஓரின உணர்வு பூணவைத்ததேயாகும் என்பது எனது முடிவு.
இந்த மாற்றம் எவ்வாறு உருப்பெறப்போகிறது?படிப்படியாக மலையக மக்கள் வட - கீழ் மாநிலங்களில் குடியேற வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றும். இன்னும் பத்தாண்டுகளில் மலையக மக்களில் ஏறக்குறைய அரைப்பங்கினர் தமிழ்மாநிலத்தில் குடியேறிவிடுவார்கள். இத்தகைய குடியேற்றத்தினால் தான் மலையக மக்களுக்கு சிங்கள ஆதிக்க வெறியிலிருந்தும் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை சுமத்தும் அடிமைத் தளையிலிருந்தும் விடுதலை கிடைக்கும். அதே சமயம், கல்வி, கலாச்சாரம், விஞ்ஞானம், தொழில் ஆகிய துறைகளில் வளரும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிட்டும். அவர்கள் அரசியலில் சமத்துவம் பெறுவார்கள் படிப்படியாக சமுதாய-பொருளாதார உறவுகளிலும் சமத்துவமடைவார்கள். தேயிலைத் தொழிலின் முக்கியத்துவம் மங்கும். மாவலி அபிவிருத்தி திட்டம் முழுமை பெறும் பொழுது தேயிலை ஏற்றுமதியின் முக்கியத்துவம் குன்றிப் போகும். பொருளாதார ரீதியாகவும், வட - கீழ் மாநிலங்களில் குடியேறுவதே மலையகத் தமிழருக்கு நன்மை பயக்கும்.
சிங்கள அரசியல்வாதிகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்து வார்கள். தமிழ் மக்கள் தமிழ் மாநிலத்திற்குக் குடிபெயருவது தவிர்க்க முடியாததொன்றாகிவிடும். சிங்கள மக்களும் தமிழ் மக்களை ஒறுக்காமல் வெறுக்காமல் வாழப் பழகிக் கொள்வார்கள். இந்தக் குடிப்பெயர்ச்சிநாளாந்த தமிழ் - சிங்கள மோதல்களை தவிர்த்துக் கொள்ள உதவும். இது வரலாற்று ரீதியாகவும், வளர்ச்சி அடிப்படையிலும் நாம் முழு மனதோடு வரவேற்க வேண்டிய குடியேற்ற மாற்றமாகும். காலனித்துவ ஆட்சி வலிந்து ஏற்படுத்திய, சமுதாய, பொருளாதார மாற்றங்களைக் களைத்து இயற்கையாக வரலாற்று அடிப்படையில் உருவாகின்ற, அரசியல், பொருளாதார, சமுதாய அமைப்பை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
வட மாநிலத்திலும், மலையகத்திலும் பழைய தலைமுறை மறைந்து புதிய தலைமுறையினர் தலைமை ஏற்கின்ற பொழுது இந்த இன ஒற்றுமை மலர்வதற்கு இடமிருக்கிறது. ஆரம்பத்தில் சில இடர்ப்பாடுகள், எதிர்ப்புகள் தோன்றினும் இறுதியில் இந்த ஒருமைப்பாடு மலர்ந்தே தீரும். ஏற்கனவே, மலையகத் தமிழர் என்று பரிணாமம் பூண்ட ஒர் உணர்வு நாடு கடத்தலிலும், பிற மாநில குடியேற்றத்தினாலும் சிதைந்து கொண்டு வருகிறது. இந்த உணர்வை வார்த்தெடுத்து, வளர்த்து, கவிதையாக்கிகாவியமாக்கி மகிழ்ந்த ஒரு இளைய தலைமுறையிலே, இன்று இந்த உணர்வு இரத்தம் சிந்தி, வீரத்தாலும், விவேகத்தாலும் வென்றெடுத்த தமிழ் மாநில மென்னும் உணர்வுச் சமுத்திரத்தோடு சங்கமமாகின்ற சரித்திரத்திற்கு சான்று பகருகிறது.
13

Page 18
மலையகப் பெண் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும்
இலங்கையின் நிலமட்டத்தில் உயர்ந்தது மலைநாடு. அம்மலைநாடு முழுவதிலும், அதன் சாரலிலும் ஓங்கி வளர்ந்துள்ள ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையைத்தான் தோட்டத்துறைத் தொழில் எனக் குறிப்பிடுகிறோம். ஏறக்குறைய பத்து லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில், பெருந்தோட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டு ஆறு லட்சம் தொழிலாளர்களையும் பல கோடி ரூபாய்கள் மூலதனத்தையும் உள்ளடக்கியதே தோட்டத் தொழிற்துறை. இலங்கையின் மிகப் பெரிய தொழிற்சங்கங்களைக் கொண்டதும் தோட்டத் தொழிற். துறையே ஆகும். இத்தொழிற்துறையில் மாதர்கள் வகிக்கும் பங்கினையும், அவர்களின் முக்கியத்துவத்தையும் சுருக்கமாகக் காண்போம்.
பண்டுதொட்டே பொருளாதார வாழ்க்கையில் மங்கையர் சம பங்கு வகித்து வந்துள்ளனர். குறிப்பாக விவசாயத் துறையில் பெண்கள் மிக முக்கியமான பங்கேற்று வந்திருக்கின்றனர். ஆனால் காலப் போக்கில் உடலமைப்பாலும் சமுதாய உடன்பாட்டாலும் பணிகள் பகிர்ந்து கொள்ளப்பட்ட முறையாலும் சில பணிகள் மாதருக்கென்றே ஒதுக்கப்பட்டன. நெல் விவசாயத்தில் களை எடுத்தல், நாற்று நடுதல் போன்ற பணிகளைப் பெண்களுக்கெனவும், உழுதல், அறுவடை செய்தல் போன்ற பணிகள் ஆண்களுக்கெனவும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. பெண்களின் சுபாவத்திற்கும் இயல்புக்கும் ஏற்ப சில பணிகள் அவர்களைச் சார்ந்தன. உணவு சமைத்தல்,
1977 டிசெம்பர் 12 - 2 வரை பெருந்தோட்டத்துறையில் பெண்தொழிலாளர்களின் பங்கு என்ற தலைப்பில் இலங்கை மன்றக் கல்லூரி நடத்திய சர்வதேசக் கருத்தரங்கில் இர. சிவலிங்கம் நிகழ்த்திய உரை. 1978ல் 'பெருந்தோட்டக் கைத்தொழிலில் பெணி தொழிலாளர்களின் பங்கு' என்று இலங்கை மன்றக் கல்லூரி வெளியிட்ட கருத்தரங்கு அறிக்கையில் இந்த உரை இடம் பெற்றுள்ளது.
14

உடைகள் செய்தல், குழந்தைகள் பராமரிப்பு போன்ற பணிகள் பெண்களின் இயற்கைப் பணிகளாகக் கொள்ளப்பட்டன. எனினும் எல்லாப் பணிகளிலும் பெண்களின் உறுதுணையும் உதவியும் அவசியமாகப்பட்டதனால் விவசா. யத்தில் ஆண்களும், பெண்களும் சம பங்காளிகள் ஆயினர். இந்நிலை பெருந்தோட்டத் தொழிற் துறைக்கும் பொருந்துகிறது. காடழித்தல், செடி நாட்டல், உரமிடுதல், ஆலைத் தொழில் ஆகியன குறிப்பாக ஆண்களுக்கும்; கொழுந்து கொய்தல், இரப்பர் பால் எடுத்தல், தேங்காய் மட்டை உரித்தல் போன்ற பணிகள் குறிப்பாகப் பெண்களுக்கெனவும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஆதலின் தோட்டத் தொழில் துறையிலும் பெண்கள், ஆண்களைப் போலவே சம பங்காளிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.
இலங்கையின் இன்றைய சனத்தொகையில் 50 சத விகிதத்தினர் பெண்கள். 1970ம் ஆண்டின் கணிப்பின்படி, இலங்கையில் உழைப்பாளர்கள் மொத்த எண்ணிக்கை 36 லட்சம் அல்லது மொத்த சனத்தொகையில் 21.1 சத விகிதமாகும். இவர்களுள் ஆண்கள் 28 லட்சமும் பெண்கள் 8 லட்சத்து 23 ஆயிரமுமாகும். சம்பளத்திற்காக உழைக்கும் பெண்களின் தொகை மிகவும் குறைந்து காணப்படுகிறது. பெரும்பாலான பெண்களின் பணி சம்பளமற்ற வீட்டு வேலையாகவோ, தோட்ட வேலையாகவோ அமைந்து விடுகிறது.நகர்ப்புற தொழில்நிறுவனங்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். கிராமியத் துறையில், குறிப்பாக நெல் விவசாயம், கிராமியத் தொழில்கள், நெசவு ஆகிய தொழில்களில் 4 லட்சத்து 23 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் தோட்டத் துறையை எடுத்துக் கொண்டால் மொத்தம் 6 லட்சத்து 37 ஆயிரம் உழைப்பாளர்களில் 5 லட்சத்து 91 ஆயிரம் பேர் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களுள் 50 சதவிகிதத்தினர் - அல்லது 2 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் பெண் தொழிலாளர்கள் ஆவார்கள். தோட்டத்துறை தொழிற் சங்கங்களும், பெண்களும் என்ற தலைப்பில் நாம் குறிப்பிடுவோர் ஏறக்குறைய இம்மூன்று லட்சம் பெண் தொழிலாளர்கள் ஆவார்கள். கிராமிய பெண்கள் தொழிற்சங்க அமைப்புக்களில் இல்லாததால், தொழிற்சங்கங்க. ளைச் சேர்ந்த பெண் தொழிலார்களுள் தோட்டத்துறை மாதர்கள் 75 சத விகிதத்தினர் ஆகிறார்கள். இலங்கையின் மொத்த உழைக்கும் பெண்களில் 36.5 சதவிகிதத்தினர் தோட்டத்துறைப் பெண் தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்களுள் 98.3 சத விகிதத்தினர் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதாவது கொழுந்து கொய்தல், இரப்பர் பால் எடுத்தல், நார் உரித்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே பெருந்தோட்ட விவசாயத் துறையில் நேரடி விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெரும்பான்மையோர் பெண்களாகிறார்கள். ஆண் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயிரத்து 800 எனினும் அவர்களுள் 87.8 சதவிகிதத்தினரே நேரடி விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மற்றையோர் இலிகிதர்கள், நிர்வாகிகள், மேற்பார்வையாளர்கள், ஆலைத் தொழி
15

Page 19
லாளர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து சேவையாளர் ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றனர். --ܐ
எண்ணிக்கை அளவில் முதலிடம் வகிப்பினும் ஆற்றுகின்ற பணிகளுள் மிக அடிப்படையானதும், அத்தியாவசியமானதுமாக அமையினும் தொழிற்சங்க உலகில் மாதர்கள் மிக அற்பப் பங்கினையே வகித்து வருகின்றனர். தொழிற்சங்க ஊழியர்களாகப் பெண்கள் கடமையாற்றினும், தொழிற்சங்கப் பொறுப்பிலும், பிரதிநிதித்துவத்திலும் பெண்கள் தோன்றாத் துணைகளாகவே இருக்கின்றனர். இன்றைய தோட்டத் துறைத் தொழிற்சங்கங்களை அவதானிக்கும் பொழுது, இது தெற்றெனத் தோற்றும் குறைபாடாகவே அமைகிறது.
இதற்கான காரணங்களையும், அதற்கேற்ற பரிகாரங்களையும் இங்கு ஆய்வது அவசியமாகிறது. தோட்டங்களில் வாழும் மாதர்களுக்கு பல முக்கியமான தொழிற் பிரச்சினைகள் இருக்கின்றன. சில பொதுவான தொழிற் பிரச்சனைகள், சில பெண்களுக்கே உரிய பிரச்சினைகள். தோட்டத் தொழிற் துறையில் பெண்களுக்கே உரிய பிரச்சினைகள் தொழிற்சங்கப் போராட்டங்களில் முக்கிய இடம் வகித்துள்ளன. அவற்றை இங்கு முறைப்படி ஆராய்வோம்.
முதலாவது பிரச்சினை வருமானப் பிரச்சினை. கொழுந்தெடுத்தல், பால் வெட்டல் போன்ற அதிமுக்கியமான பணிகளைப் பெண்களே பெரும். பாலும் பொறுப்பேற்றுச் செய்கிறார்கள். கொழுந்து கிள்ளும் கோதையர்களின் கரங்கள் அசையாவிட்டால், இந்நாட்டுப் பொருளாதாரமே ஸ்தம்பித்துவிடும் என்ற உண்மையைப் பல பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். பல தொழிற்சங்கப் போராட்டங்களின் போது மாதர்களின் இந்த மகத்தான சக்தி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆண் தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று, நான்கு நாட்களுக்கு வேலை கொடுத்தவர்கள் கூட, பெண் தொழிலாளர்களுக்கு வாரம் முழுவதும் வேலை வழங்கத் தயங்கவில்லை. அவர்கள் பணியின் அடிப்படை முக்கியத்துவத்தை இந்நிலை உயர்த்துகிறது. எனினும் ஆண்களுக்குக் கொடுக்கப்படுகிற நாட் சம்பளம் பெண்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. வேறு வேலை காரணமாக இந்த சம்பள வித்தியாசம் அமையவில்லை. ஆண்கள் கொழுந்துகொய்யினும் பெண்களிலும் குறைவாக கொழுந்து கொணர்ந்தாலும், பெண்களைவிட அவர்களுக்கு அதிகச் சம்பளம் வழங்கப்படுகிறது. இது சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. கொழுந்து கொய்தல் போன்ற பணிகளில் பெண்களுக்கு அதிகமான லாவகமும் கைத்திறனும் அமைந்திருப்பதாலும், கொழுந்தின் உற்பத்தி கொழுந்தெடுக்கும் திறமையில் தங்கியிருப்பதாலும் ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தாலும் பொருந்துமே தவிர குறைத்துக் கொடுப்பது எவ்வகையிலேனும் பொருந்தாது. இது சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் 100வது ஒப்பந்தத்திற்கு முரண்பாடாக அமைகிறது. தோட்டத்துறையிலேயே கூட, இலிகிதர்கள், ஆசிரியைகள் போன்ற பணிகளில்
16

ஈடுபட்டிருப்பவர்களுக்கு பெண்கள் என்ற அடிப்படையில் குறைந்த சம்பளம் வழங்காமல், சம சம்பளமே வழங்கப்படுகிறது. ஆனால் ஆண்களை விடத் திறமையாகக் கொழுந்தெடுப்பினும், கூடிய நேரம் வேலை செய்யினும் குறைந்த சம்பளம் கொடுக்கப்படுவது சற்றேனும் பொருந்தாச் செயலாகவே தோன்றுகிறது. பொதுவாகத் தோட்டங்களில், ஆண்கள் பெண்களுக்கு முன்னரே தமது வேலைகளை முடித்து விடுகிறார்கள். பெண்களோ, காலை எழுந்து, குழந்தைகளைப் பராமரித்து, குடும்பத்திற்குக் காலை உணவும், பகல் உணவும் தயாரித்துவிட்டு, வேலைத்தளத்திற்குச் சென்று, மாலை, வேலை முடிந்ததும், அணிவகுத்துநின்று கொழுந்து நிறுத்து முடித்துவிட்டு வீடு சென்று மீண்டும், இரவு உணவு தயாரித்து இல்லறப் பணிகளில் ஈடுபடுவதைக் பார்க்கின்ற பொழுது கண் விழித்துக் கண்ணயரும் வரை ஓயாது உழைக்கும் இயந்திரங்களாய் தோட்டத்துறை மாதர் இயங்கும் நிலையைக் காணும் பொழுது, அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கும் நிலையை நெஞ்சு பொறுக்காது. இந்நேர்மையான சம்பளப் போராட்டம், தொழிற்சங்கங்களின் மூலமாகத் தொடர வேண்டும். பெண்கள் தொழிற்சங்க அங்கத்துவத்தில் முக்கிய அங்கமாய் இருப்பினும், தொழிற்சங்க இயக்கத்திலும், தலைமையிலும் பொறுப்பான பங்கு வகிக்காத கரணத்தினாலோ என்னவோ, இந்த சம்பள உரிமை இன்னும் வென்றெடுக்காத ஒன்றாகவே இருந்து வருகிறது.
அடுத்ததாக இன்னும் பெண்களின் எட்டு மணிநேர ஊழியம் முறையாக அமுல் நடத்தப்படவில்லை. பொதுவாகவே அவர்கள் பத்து மணிநேரத்திற்குக் குறையாமல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். குறைந்த சம்பளம் கொடுபடுகின்ற காரணத்தினாலும், அதிக கொழுந்துக் காலங்களில், பெயருக்கு மேலதிகமாக கைப்பணம் கொடுக்கின்ற பழக்கத்தினாலும், பெண்கள் பன்னிரண்டுமணி நேரம் கூட வேலை செய்ய வேண்டிய துர்ப்பாக்கி. யத்திற்கு தள்ளப்படுகிறார்கள். நாள் முழுவதும் பாரம் சுமப்பது போதா. தென்று, நிறுத்துசாக்குகளில் அடைத்த கொழுந்துச் சுமையையும் அவர்கள் சுமந்து செல்கிறார்கள். கொட்டும் மழையிலும், பனியிலும் கால் சறுக்கும் மலை உச்சிகளில், ஆடை கிழிக்கும் புதர்களில், பாம்புக்குப் பயந்து, கங்காணி. மார்களின் வசை மொழி அர்ச்சனைகளைக் கேட்டுக் கொண்டு, கொழுந்து கிள்ளும் கோதையர்களின் வாழ்வில் சீர்திருத்தப்பட வேண்டிய சூழ்நிலைகள் ஏராளம் உள்ளன. வெறும் பாதங்களோடு நாள் முழுவதும் வேலை செய்வ தனால், நல்ல உணவு அருந்த வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நூற்றுக்கு எண்பது சத விகித தோட்டப் பெண் தொழிலாளர்கள் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோரின் ஆயுள் அற்ப ஆயுளாகவே முடிந்து விடுகிறது. நாடு முழுவதற்கும் மரண விகிதாசாரம் 1000க்கு 8.5. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000க்கு 10.5 ஆக இருக்கின்றது. பிரசவ மரணம் நாடு முழுவதற்கும் சராசரி ஆயிரத்திற்கு மூன்று. ஆனால் தோட்டத்துறையில் ஆயிரத்திற்கு நான்கு.
17

Page 20
மரித்துப் பிரசவித்தல் இலங்கை முழுவதற்கும் ஆயிரத்தில் 48 ஆனால் தோட்டத்துறையில் ஆயிரத்தில் 114.3 ஆகிறது. சிசு மரணம் இலங்கை முழுவதற்கும் ஆயிரத்தில் 56, தோட்டத்துறையில் ஆயிரத்தில் 90. பிரசவத்திற்கு முன் மரணம் இலங்கை முழுவதற்கும் ஆயிரத்தில் 56. தோட்டத்துறை மாதர்களுக்கு 1000த்தில் 144. இப்புள்ளி விபரங்கள் - தோட்டத்துறை மாதர்களின் அவல நிலையை ஆணித்தரமாக பறைசாற்றுகின்றன. போதிய மருத்துவப் பாதுகாப்பின்றியும், போஷாக்கின்றியும், கடும் உழைப்பினாலும், ஒய்வின்மையினாலும் மிகக் கொடிய முறையில் பாதிக்கப்பட்டு தமது உயிர்களைத் தியாகம் செய்து இந்நாட்டு ஜீவநாடியான ஏற்றுமதியை விவசாயத்திற்கு உயிரூட்டி வருபவர்கள் நமது தோட்டத்துறை மாதர் தொழிலாளர்கள். அவர்களை உழைப்பெனும் இயந்திரச் சுழற்சியில் கசக்கிப் பிழிகிற காரணத்தால் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ, கலை வளர்ப்பதற்கோ, கல்வி பெறுவதற்கோ எவ்வித வாய்ப்புமின்றி அறியாமையில் மூழ்கி, அரை வாழ்வு வாழ்கிறார்கள், மலையகப் பெண் தொழிலாளர்கள். இன்றைய வேலைக் கொடுமைகளினால் கும்மி, கோலாட்டம் போன்ற கிராமியக் கலைகள் கூட அருகி வருகின்றன. சினிமா பார்த்தல், நாடகம் பார்த்தல் போன்ற பொழுதுபோக்கிற்காக அவர்கள் நள்ளிரவைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதிகப்படியான சிசு மரணத்திற்கும், பிரசவ மரணத்திற்கும், முன் பிரசவ மரணத்திற்கும், மரணப் பிரசவத்திற்கும் காரணம் கடும் உழைப்பும், போஷாக்கின்மையுமேயாகும். பெண் தொழிலாளர். களின் வேலைச் சூழ்நிலையையும், வேலைப் பளுவையும் குறைக்க வேண்டியது இன்றைய தொழிற்சங்கக் கோரிக்கைகளில் மிக முக்கியமானதொன்றாய் அமைதல் வேண்டும். வீட்டு வசதி, சுகாதார வசதி, குடிதண்ணிர் வசதி, மின்சார வசதி, பிரசவ விடுதி, குழந்தைகள் பராமரிப்புநிலையங்கள் ஆகியன உடனடியாகப் பரந்த அளவில் வழங்கப்பட வேண்டும். இன்று தோட்டப் பகுதிகளில் மிக முக்கியமாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடும்பத் திட்டக் கல்வி நல்ல பயனளித்து வருகின்றது. தேவையற்ற பிரசவத்தை குறைத்து வருகின்றது. அதே சமயத்தில் போஷாக்குக் கல்வியும் வழங்கப்பட வேண்டும். மாதர்களின் நாளாந்த வேலை நேரம் ஆறு மணி நேரமாகக் குறைக்கப்பட வேண்டும். மிகுந்த நேரத்தை மாதர்கள் குழந்தைகளின் பராமரிப்பிலும், கலாச்சார மறுமலர்ச்சியிலும் இல்லற முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும். இப்பொழுது வழங்கப்படுகிற ஆறு வார பிரசவ விடுமுறை மிக குறைந்ததாகும். சில முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒரு வருடப் பிரச விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த தோட்டங்களில் மாதர்கள் அனுபவித்து வருகின்ற சூழ்நிலைகளினால், குழந்தைகள் ஏனோ தானோவென்று எடுப்பார் கைப்பிள்ளைகளாக வளருகின்றன. ஒழுங்கான குழந்தைப் பராமரிப்பு இல்லாமையினால் குழந்தைகளின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகின்றது. தோட்டங்களில் உள்ள பிள்ளைக் காம்பிராக்களில் வயது முதிர்ந்த, இருந்த இடத்தை விட்டு
18

அசைய முடியாத கூன் குருடுகளைத் தான் குழந்தைத் தாதிகளாக நியமிக்கிறார்கள். தாய்மார்கள் ஓய்வின்றி உழைக்கின்ற காரணத்தினால், பயிற்சி பெற்ற குழந்தைத் தாதிகளை நியமித்து, எல்லா வசதிகளும் வாய்ந்த குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் அமைத்தல் மிக அவசியமாகிறது. இலங்கை முழுவதற்கும் சிசு மரணம் ஆயிரத்தில் 56. தோட்டத்துறையில் ஆயிரத்தில் 90. எத்தனையோ இன்னல்களுக்கிடையில் ஈன்றெடுக்கும் தமது குழந்தைகளைப் பாதுகாத்தலும், பேணலும் தாய்மார்களின் தலையாய கடனன்றோ? மாதர்களின் தொழிற்சங்கக் கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாதல் வேண்டும்.
தோட்டத்தொழில் துறையில் ஈடுபட்டிருக்கும் மாதர்களுக்கு தொழில் முன்னேற்றமில்லை. ஆண்டாண்டு காலம் அதே பணி செய்து மாண்டு போவது மட்டுந்தான் அவர்களின் வாழ்க்கைச் சக்கரம். அது முன்னோக்கி ஓடுவதில்லை. நின்ற நிலையிலேயே சுழன்று ஒய்ந்து விழுகிறது. பெண் தொழிலா. ளர்களை ஆண்கள் மட்டுந்தான் மேற்பார்வை செய்ய வேண்டுமா? அது அநாகரீகமில்லையா?கங்காணி, கணக்கப்பிள்ளை வேலைகளை ஆண்கள் மட்டுந்தான் செய்ய வேண்டுமா? ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்நிலை மாற ஆரம்பித்துள்ளது. தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், தோட்டங்களின் அலுவலகங்களிலும், மேற்பார்வையாளர்களாகவும் பெண்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் தோட்ட வாழ்வோடு தொடர்பில்லாதவர்களுக்குத்தான் இத்தொழில்கள் கிடைக்கின்றன. தோட்ட மாதர்களுக்கு மேற்பார்வையாளர்கள் போன்ற உயர் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுக்க வேண்டும்.
அதோடு தையல் தொழில், கை வேலைகள் ஆகிய தொழில் திறமைகள் தோட்டத்துறை மாதர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். மருத்துவம், குழந்தைப் பராமரிப்பு, போஷாக்கு, பை பின்னுதல், பூக்கள் செய்தல், உணவு சமைத்தல், பதமிடல் போன்ற துறைகளில் கல்வியும், பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். கலாச்சாரத்திலும், விளையாட்டுகளிலும் இளம் மாதர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். இப்பொழுது பெண்களுக்கு தொழில் வாய்ப்புகள் அதகரித்துவருகின்றன. அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பேற்ற பின்னர் தேயிலையைப் பாக்கெட்டுகளில் அடைப்பதற்காக சில தொழிற்காசலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோருள் பெரும்பாலானோர் பெண்களே. இத்தகைய தொழில்களிலும் தோட்டத்துறை மாதர்களுக்கு வாய்ப்புகள் பெருக வேண்டும். அதே போன்று, ஆசிரியைகள், தாதிகள், மருத்துவச்சிகள், இலிகிதர்கள் ஆகிய தொழில்களிலும் தோட்ட மாதர்களுக்குத் தொழில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
19

Page 21
தோட்டத்துறைப் பெண் தொழிலாளர்களின் பின்தங்கிய நிலைக்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் அவர்களின் ஓயாத உழைப்பும், அறியாமையுமேயாகும். தோட்டப் பாடசாலைகளில் மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு மாணவர்களுள் மூன்றில் ஒரு பங்கினரே மாணவிகள். வகுப்பு உயர, உயர, மாணவிகளின் தொகை குறைந்து கொண்டே போகிறது. ஏறக்குறைய பத்து வயதோடு ஒரு தோட்டப் பெண் குழந்தையின் கல்வி முடிந்துவிடுகிறது. அதன்பின், தம்பி, தங்கைகளைப்பார்த்துக் கொள்ளுதல், உணவு சமைத்தல், தாய்மார்களுக்கு தேநீர் கொண்டு செல்லுதல், கைப்பணத்திற்கு புல்லு வெட்டல், விறகு பொறுக்குதல் போன்ற வேலைகள் வந்து விடுகின்றன. அதிக பிள்ளைகள் இருக்கின்ற குடும்பங்களிலிருந்து பலர் நகரங்களுக்கும், செல்வந்தர் வீடுகளுக்கும் வேலைக்காரச் சிறுமிகளாகச் சென்று பல அலங்கோலங்களுக்கு ஆளாகிறார்கள். இன்று இலங்கை முழுவதிலும், அபலைகளாய், அநாதைகளாய் பல்வேறு வயது நிலைகளில், தெருக்களிலும், மூலைமுடுக்குகளிலும் சுற்றி உழல்வோரில் பலர் தோட்டத்துறை மாதர்களே. கல்வி என்னும் கை விளக்கின்றி, இவர்கள் அந்தகாரத்தில் உழல்கின்றார்கள், தோட்டத்துறை மாதர்களுள் 97 சத விகிதத்தினர் கல்வியறிவற்றவர்கள். 60 சதவிகிதத்தினர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். 37 சத விகிதத்தினருக்கு சற்றே எழுத்துக் கூட்ட முடியம். இலங்கை முழுவதற்கும் பெண்களில் கல்வியறிவற்றவர்களின் விகிதாசாரம் 39.5 (ஆண்கள் 9.5%) ஆகவே எல்லா வகையாலும் நோக்கின் சமுதாயப் பொருளாதார அடிப்படையில் இலங்கையில் மிக மிக கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் தோட்டத்துறை மாதர்கள்தான். இவர்களின் எழுச்சியும், வளர்ச்சியும், விழிப்பும் இந்நாட்டின் சமுதாய - பொருளாதார வளர்ச்சிப் பணிகளில் மிகுந்த முதன்மை வாய்ந்ததாக அமைகிறது. இவர்களுள் பெரும்பாலோர் தொழிலாளர்களாக இருப்பதனால், இந்தப் பெரும் பணி தோட்டத்துறைத் தொழிற் சங்கங்களையே சாருகிறது.
தோட்டத்துறை தொழிற் சங்கங்களில் மாதர் சங்கம் என்ற பிரிவு அநேகமாக எல்லாத் தோட்டங்களிலும் இருக்கின்றன. இருப்பினும் அவை தொழிற்சங்கங்களின் செயலற்ற அங்கங்களாகவே இருக்கின்றன. மாதர் சங்கத் தலைவிகளை பல தோட்டத் தலைவர்களே நியமிக்கிறார்கள். ஏறக்குறையநாற்பதாண்டுகளாக நிமிர்நடை போட்ட தொழிற்சங்கங்கள் கூட ஒரு பெண் துணைத் தலைவியைக்கூட உருவாக்கமுடியவில்லை. தொழிற்சங்கப் போராட்டங்களில் மாதர்கள் முன்னணி வகித்திருக்கிறார்கள். ஆர்வத்தோடு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் தொழிற்சங்கப் பொறுப்புகளில் மாலை போடுதல், பொட்டு வைத்தலோடு நின்று விடுகிறார்கள்! ஆரம்பகாலத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் திருமதி நடேச ஜயர், திருமதி. இராமானுஜம் போன்றோர் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்கள். சிவபாக்கியம் பழனிச்சாமி, முத்துலெட்சுமி கதிரேசன், சங்கரவடிவு, நல்லசெல்லம், கோகிலம் சுப்பையா
20

போன்ற மாதர்கள் தொழிற்சங்கப் பணியில் முன்னின்று முன்மாதிரி காட்டியுள்ளார்கள். எனினும் மலையக மாதர் சக்தி இன்னும் தன் சுயரூபத்தைக் காட்டவில்லை. அந்த பராசக்தி தன் முழுமைக் கோலம் பூணும் பொழுதுதான் தோட்டத் தொழிலாளர்களின் விடிவு காலம் உதயமாகும்.
இன்று நடைபெறுகிற இக்கருத்தரங்கு போல, பல கருத்தரங்குகள், தோட்டத்துறை மாதர்களிடையே முதியோர் கல்விப் பணியை மேற்கொள்ள வேண்டும். மாதர் எழுச்சி தினங்கள் கொண்டாட வேண்டும். மாதர்களின் தொழிற் பிரச்சினைகளை முன்வைத்துப் போராட்டங்கள் நடத்த வேண்டும். பாரதியும், பாரதிதாசனும், எங்கள் மலையகக் கவிஞர் வேலுப்பிள்ளையும், தோட்ட மாதர்களின் துன்பங்களையும், துயரங்களையும் கவிதையாக்கிக் கண்ணிர் வடித்துள்ளார்கள். இந்த நிலைமாற வேண்டுமென்ற எண்ணம் நீண்ட நாட்களாக நிலவி வருகின்றது. ஆனால் இந்நிலைக்குப்பரிகாரம் காணும் நாள்தான் இன்னும் வந்து சேரவில்லை. ஆகவே இன்றைய தொழிற் சங்கங்களுக்கும், தோட்டத்துறை மாதர்களுக்கும், மகாகவி பாரதியின் அறைகூவலையே நானும் விடுக்க விரும்புகிறேன் :
"நெஞ்சங் குமுறுகிறார் - கற்பு
நீக்கிடச் செய்யுங் கொடுமையிலே - அந்தப் பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப் பட்டு மடிந்து, மடிந்து மடிந்தொரு
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்சவிடலாமோ ? ஹே ! வீரகாளி ? சாமுண்டி, காளி ?
21

Page 22
சி. வி: துயரச் சாயலின் எழுத்துக் கோலங்கள்
அந்நிய அடிமைத்தளைகளை அறுத்து பூரண அரசியல் சுதந்திரம் பெற இந்திய மக்கள் செய்த போராட்டமும், தியாகமும் உலக வரலாற்றில் தனி இடம் பெற்றுவிட்டது. எனினும் பெற்ற சுதந்திரத்தை மக்களனைவரும் பூரணமாக அனுபவிக்கும் போராட்டமோ நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதிலும் குறிப்பாக கடல் கடந்த இந்திய மக்களின் நிலைதான் இன்னும் இழிவகற்றப்படாததாக, இருள் துழந்ததாக இருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் அரசியல் செல்வாக்குஉயர்ந்த அளவுக்கு, உலக நாடுகளில் வாழுகின்ற இந்தியர்களின் நிலை உயரவில்லை, 'காமன்வெல்த்' எனற அமைப்பிற்குள் கூட, வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களின் நிலை உயரவேயில்லை. கடல் கடந்த இந்தியர்களுக்கு அரசியல் சமத்துவம் வழங்குவதில் பல நாடுகள் தயங்கின. சில நாடுகள் முற்றாக மறுத்தன. சில நாடுகளில் அடிமையாட்சியிலும் கேவலமான ஒர் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.
இந்தியாவின் தன்மானமும்,உலக அந்தஸ்தும்,கடல் கடந்த இந்தியர். களின் அரசியலோடு இணைந்துள்ளது.இந்திய சுதந்திரப் போராட்டமே, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளினால் புத்துணர்ச்சி பெற்றது. சுதந்திர வேள்வியில் வார்த்த நெய்யாக கடல் கடந்த இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிதான் ஆத்திரப்பிழம்புகளை பொங்கி எழச்செய்தன" என்று என்இந்தியா சுதந்திரமடைகிறதோ அன்றே கடல் கடந்த இந்தியர்களின் சுதந்திரமும்,-
ஐலண்ட் அறக்கட்டளை வெளியீட்டின் சார்பில் மு. நித்தியானந்தண் சென்னையில் வெளியிட்ட சி வி வேலுப்பிள்ளையின் நாடற்றவர் கதை'(ஜூலை 1987) நூலுக்கு இரசிவலிங்கம் அச்சகத்தில் வைத்து எழுதிய முன்னுரை
22

கெளரவமும் பாதுகாக்கப்படும்"என்று எண்ணியே மகாத்மா காந்தி அவர்கள் தம்மை சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டா. ர்கள். அவ்வாறே ஆகஸ்ட் 15, 1947இல் இந்தியா சுதந்திரமட்ைந்தபொழுது கடல் கடந்த இந்தியர்கள் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தார்கள். ஆனால் விரைவில் அவர்களது மகிழ்ச்சி மங்கிவிட்டது. கடல் கடந்த இந்தியர்களின் நிலைமை பூதாகரமாக மாறியது. தென் ஆப்பிரிக்கா, தான்சானியா,உகண்டா போன்ற நாடுகளில் இந்தியர்களின் நிலைமை முன்னரிலும் மோசமடைந்தது. இலங்கை,பர்மா,வியட்நாம்,மலேசியா ஆகிய நாடுகளிலும் இந்தியர்களின் நிலைமை சீர்கேடடைந்தது. பியூஜித்தீவில் இன்று இந்தியர்களின் அரசியல் அவலத்தை நோக்கும் பொழுது இந்தியா சுதந்திரமடைந்த நாற்பதாண்டு. களுக்குப் பின்னரும் வெளிநாடுகளில் குடியேறிய இந்திய மக்களின் கெளரவமும்,அரசியல் சமத்துவமும் புறக்கணிக்கப்பட்டும், மறுதலிக்கப்பட்டும் இருப்பதையே காண்கிறோம்.
இலங்கைத் தீவில் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் எவ்வகையிலேனும் சகித்துக்கொள்ளமுடியாதது. 1832ஆம் ஆண்டு முதல் பெருந்தொகையாகக் குடியேறிய இந்தியர்கள் ஒப்பந்தக்கூலிகளாகக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்கள் பட்ட கொடுமைகள் சொல்லொணாது. அந்த ஆரம்பகால அவலங்களுக்குஆதாரங்கள்கூட அதிகமாக இல்லை. வாய்மொழிக் கதைகளையும் கவிதைகளையும் கொண்டே அவர்களது துன்பக் காவியத்தை வரையலாம் .இவ்வாறு அம்மக்களது துயரம் தோய்ந்த வாழ்வை எழுத்தில் வடித்த முதல் எழுத்தாளர் என்று கருதப்படக்கூடியவர் திரு. சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள். திரு. வேலுப்பிள்ளை அவர்கள் ஒரு புதிய இலக்கிய பாரம்பரியத்தின் முன்னோடி. இலங்கையில் குடியேறிய இந்திய மக்கள் கல்வியறிவற்ற தென்னிந்திய கிராமவாசிகள்.அவர்கள் ஆங்கில ஆட்சியில் சென்னை மாநிலம் (Madras Presidency) எனப்பட்ட பகுதியில் இருந்தே வந்தார்கள். 1915ல் இலங்கை முழுவதையும் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் வளமான மலையகப்பகுதிகளில் அடர்ந்த காடுகளை அழித்து அம்மண்ணில் ஏற்றுமதிப்பயிர்களை பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறையில் உற்பத்தி செய்து லாபம் பெற அசைப்பட்டனர். அந்த ஆசை. நிறைவேற வேண்டுமானால் மண்ணைப் பொன்னாக்கும் உழைப்பாளர்கள் தேவைப்பட்டனர்.இவர்கள் இலங்கையில் கிடைக்கவில்லை. தென்ன. கத்திலிருந்து இவர்களைத் திரட்டிச் சென்று குறைந்த கூலிகொடுத்து கொடிய சட்டங்களால் சிறைப்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் சுரண்டலைத்தான் ஏகாதிபத்திய பொருளாதாரம் மேற்கொண்டது.
இலண்டனில் வசிக்கும் பிரித்தானியப் பேரரசின் பெண் குலம் மாலை வேளைகளில், தேநீர் அருந்தி மகிழ எங்கள் தமிழ்ப் பெண்கள் இலங்கையின் தேயிலைக் காட்டில் ஏக்கப் பெருமூச்சுடன் கொழுந்து பறித்து நெஞ்சம் குமுற வேண்டும். அந்தத் தேநீருக்குச் சர்க்கரை சேர்க்க, பியூஜித் தீவின் கரும்புத் தோட்டங்களில் எங்கள் தமிழ் மாதர் விம்மி, விம்மி அழ வேண்டும். இதுதான்
23

Page 23
ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பு. சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்த ஏகாதிபத்திய பொருளாதார முறையை நாம் இன்னும் முறியடிக்க முடியவில்லை. அதனால்தான் கடல் கடந்த இந்தியரின் இழிவுநீங்கவில்லை.
இந்தக் கொடிய பொருளாதார அமைப்பின் கோரப்பிடியில் சிக்குண்ட மானுடத்தின் குமுறல்கள் வேதனைப்பாடல்களாக வெளிவந்தன. தொழிற். சங்க மாநாடுகளில் இவர்கள் படும்பாடு பாடல்களாகவும், பாட்டுப்புத்தகங்களாகவும் வெளிவந்தன. பின்னர் இவை கவிதை வடிவம் பெற்றன. இதுதான் மலையக இலக்கியத்தின் நுழைவாயில், ஆசியாவிலேயே வங்கக் கவிதாகூர் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்ற பின்னர்தான், தாய்மொழி இலக்கி. யங்கள் ஏகாதிபத்திய இலக்கியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து மீறி சுதந்திர கீதமிசைத்தன. இவ்வாறு வங்கக் கவி தாகூரின் இலக்கிய வெற்றி தந்த விடுதலை முழக்கம் ஆசியாவெங்கணும் பரவியது. 1934இல் கவியரசர் தாகூர் இலங்கை வந்தார். ஹொரணையில் ரீபாலி என்ற பண்பாட்டுப்பல்லியல் பள்ளி ஒன்றுக்கு அடிக்கல் நாட்டினார். சாந்திநிகேதனைப் போல ஒரு கலாசாரக் கல்லூரி இலங்கையில் நிறுவவேண்டுமென்று திரு.வில்மட் பெரேரா அவர்கள் பேராவல் கொண்டிருந்தார்கள். அவர்களின் பெருமுயற்சியால் பூரீபாலி உருவாக்கப்பட்டது. தாகூர் இலங்கையில் சுற்றுப் பிரயாணம் செய்து அருமையான சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவர்களால் புதிய இலக்கிய உத்வேகத்திற்குள் எண்ணற்ற இலங்கை எழுத்தாளர்களும் கவிஞர்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். சிங்கள இலக்கியம் புத்துணர்ச்சி பெற்று வங்கச் சாயலில் வளர்ந்தது. இந்திய தேசியகீதம் தாகூர் தந்தது. இலங்கைத் தேசிய கீதம் சாந்தி நிகேதனில் பயின்ற ஆனந்த சமரக்கோனால் இயற்றப்பட்டது. இசையும் கருத்தும் ஏறக்குறைய ஒன்றேயாம். தாகூரின் இலக்கிய உத்வேகம் சுதந்திரக் கனலையே முட்டியது.
தாகூர் இலங்கை வந்த பொழுது நமது வேலுப்பிள்ளை அவர்கள் மலைநாட்டிலும் கொழும்பிலும் கல்வி பயின்று ஆசிரியத் தொழிலில் அடி எடுத்து வைத்துக் கொண்டிருந்த சமயம். இருபது வயது நிரம்பிய இளைஞன் பத்மாஜனி என்ற ஆங்கில இசைநாடகத்தை எழுதி வைத்திருந்தார். அதுவும் தாகூரின் நடையில். தாகூரின் வழியில் விளைந்த எண்ணற்ற இலக்கிய ஆக்கங்களில் ஒன்றாகும். அந்த எழுத்தை தாகூரிடம் சமர்ப்பித்து ஆசி பெற்றார். பின்னர் தொடர்ந்து எழுதினார். தாகூரின் இலக்கியப்பரம்பரையைச் சார்ந்தவர்தான் என்றாலும் வேலுப்பிள்ளை ஆங்கிலத்திலேயே மிக நன்றாக எழுதினார். அக்காலக் கல்விமுறை ஆங்கிலத்திற்கே மிக முக்கியத்துவம் கொடுத்தபடியால் ஆங்கிலமே பல எழுத்தாளர்களுக்கு சிருஷ்டி மொழியாய் இருந்தது. 1930களில் மலையகத்தில் பிறந்த ஒருவர் ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிறார் என்றால் அது வியக்கத்தக்க சாதனை. இலங்கையில் புதிய இலக்கியம் அரும்பிக் கொண்டிருந்த ஆரம்பகால கட்டத்திலேயே மலையக இலக்கியமும் மணம் வீசியது என்றால் நமது கவிஞர் எத்தகைய சாதனை புரிந்துள்ளார் என்பதை நாம் உணர வேண்டும். அதற்குப்பின்னர் ஐம்பதாண்டு.
24

களாக எழுத்துத் துறையிலேயே மிளிர்ந்திருக்கிறார். "பத்மாஜனி" முதல் "இனிப்பட மாட்டேன்" வரை ஒரு ஐம்பதாண்டுகள் எழுத்தாளராய், கவிஞராய்ப் பொலிந்த மலையக மகன் வேலுப்பிள்ளையைத் தவிர வேறு எவருமில்லை. அவரது அரை நூற்றாண்டு இலக்கியப் பாரம்பரியத்தை மிஞ்ச வேண்டுவது இன்றைய இளம் எழுத்தாளர் பரம்பரைக்கு உள்ள மிகப் பெரிய சவால்.
சி. வி.யின் ஆரம்பகாலக் கவிதைகள் மலையக மக்களின் துயர வாழ்வைப் படம் பிடித்தன. மிக அமைதியான நடையில், துயரச் சாயல் படர பின்னப்பட்ட எழுத்துக் கோலங்கள் அவை. இலக்கிய இதயம் படைத்த சி. வேலுப்பிள்ளை அவர்கள் திரு. கே. ராஜலிங்கம் அவர்களின் துரண்டுதலால் தொழிற்சங்கத்திற்குள் நுழைந்தார். மலைநாட்டில் தொழிற்சங்கம் நடத்துவதென்பது சூறாவளியோடு மோதுவதற்கு ஒப்பாகும். சிங்கள இனவாதம், துரைமார்களின் ஆணவம், அரசாங்கத்தின் அலட்சியம், மக்களின் ஆத்திரம், போட்டித் தொழிற்சங்கங்களின் பொறாமை, சதி ஆகிய அனைத்து சக்திகளுக்கும் ஈடு கொடுத்து தொழிலாளர்களின் பிரச்சினை. களைத் தீர்த்து வைக்க வேண்டும். தீர்க்க முடியாவிட்டால் போராட்டம் தொடங்க வேண்டும். இந்த போராட்ட வாழ்வில் தம்மை வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டார். எனினும், அவர் எழுத்துக்களைப் போலவே அவரது தோற்றத்திலும் ஒரு சாந்தியே எப்பொழுதும் நிலவியது. புரட்சிக் குரலையோ, போர் முழக்கத்தையோ அவர் கவிதைகளில் காண முடியாது. 1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவரது எழுத்துக்களில் மாற்றம் காணப்பட்டது. 1930களில் ஆழ்ந்த இரக்கம் தழுவிய கவிதைகள். 1950களில் ஆத்திரம் கலந்த சோகக் கவிதைகள். எங்குமே பாரதியின் எரிமலைக் குமுறல்களைக் காண முடியாது. ஆகவே மக்களின் அவலங்களைக் கண்டு வெந்து, நொந்து பாடிய கவிஞனாக இருந்தாரே ஒழிய, பொங்கிக் குமுறிய வங்கக் கடலின் சூறாவளியை எழுத்தில் புகுத்திய புரட்சிக் கவிஞனாக அவரைக் காண முடியவில்லை.
ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது. அவரது வாழ்க்கையிலும், அவரது பண்புகளிலும் இதற்கான காரணங்களைத் தேடலாம்.
மலையக இளைஞன் தனது சமுதாயத்தை உயர்த்துவதற்கு முற்படுவானேயானால் அவனுக்கு இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று ஆசிரியப் பணி, மற்றது தொழிற்சங்க சேவை. ஆரம்பகால ஆசிரியர்கள் கிறிஸ்தவப் பாடசாலைகளிலேயே பணிபுரிய வேண்டியிருந்ததால், அங்கு புரட்சிக் கருத்துக்கு இடமிருக்கவில்லை. பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகுதான் ஆசிரியர்கள் அரசியலில் தீவிரப் பங்கேற்றார்கள் என்பதை இலங்கை வரலாறு காட்டுகிறது. சி. வி. அவர்கள் ஆரம்பத்திலேயே ஆசிரியப் பணியை விட்டுவிட்டு தொழிற்சங்க வாழ்வில் ஈடுபட்டவர்கள். 10,12 வருடத் தொழிற்சங்க அனுபவத்திற்குப் பிறகு 1947இல் பாராளுமன்ற உறுப்பின. ரானார்கள்.
25

Page 24
இக்கால கட்டத்தில் (1930 - 1947) இலங்கை சமசமாஜக் கட்சி மிகப் புரட்சிகரமான தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பாக இயங்கிய இலங்கை இந்திய காங்கிரஸ், காந்தியம், சாத்வீகம் என்ற கோட்பாட்டுக்குள் இயங்கி வந்தது. இந்த அமைப்பிற்குள் தன்னை இணைத்துக் கொண்ட சி. வி. காந்திய, சாத்வீக போக்கினையே எழுத்திலும், வாழ்விலும் கடைப்பிடித்தார். ராஜலிங்கமும், வெள்ளையனும் அவரது தொழிற்சங்கத் தோழர்கள் ஆவர். மூவரும் மிகமிக சாத்வீகப் போக்கைக் கடைப்பிடித்தவர்கள். இலங்கை இந்தியத் தொழிலாளர்கள் காங்கிரசில் சாதிவெறி அரசோச்சியது. காங்கிரசின் தலைமையை அதனைக் கைப்பற்றிய காலமுதல் விடாப்பிடியாகத் தன் கைக்குள்ளேயே வைத்துள்ள தொண்டமானின் சாகசம் சாதித் துவேஷம், பணத்திமிர் ஆகிய இரண்டின் அடிப்படையிலேயே வேரூன்றி ஓங்கியது. இன்னும் கூட சாதி ஆதிக்கத்திற்குள்ளேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சிக்கியுள்ளது. பாமரத்தனமாக மலையகத் தொழிலாளர்கள் உயர்ந்த சாதிக்காரர்களை குடியானவர்கள் என்பார்கள். காங்கிரஸ் ஸ்தாபனம் குடியானவர்களின் கோட்டமாகவே இருந்தது. இந்தக் குடியானவர்களின் கொட்டத்தை மற்றவர்களால் அடக்கவே முடியவில்லை. அவர்கள் அடங்கித்தான் போனார்கள். காங்கிரசின் தலைமையைக் கைப்பற்ற முடியாமல் ஒதுங்கிப் போனார்கள். சோமசுந்தரம் இந்தியாவிற்குப் போய்விட்டார். அஸிஸ் பிரிந்து போனார். அவரோடு சி. வி. யும் போனார் ; போராடினார்கள் ; தொண்டமானின் ஆதிக்கத்தை அவர்களால் வெல்ல முடியவில்லை. வெள்ளையனும் தனிவழியில் போனார். தொழிற்சங்க வாழ்க்கையில் மக்களைச் சுரண்டும் சக்திகளை இனங்கண்டும் அவற்றை வெல்ல முடியாமல் தாமாகவே ஒதுங்கிச் செல்ல வேண்டிய அனுபவத்தைப் பெற்ற கவிஞனின் கவிதைகளில் வேதனையையும் விம்மலையும் தான் காணமுடியுமே தவிர எக்காளத்தையும், அறைகூவலையும் காண முடியாமல் போனதில் வியப்பில்லைதான்.
இலங்கைப்பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, கவிஞனுக்கு உரிய கம்பீரத்துடனும், கற்றவனுக்குரிய அடக்கத்துடனும் இந்திய பாணியில் ஷெர்வாணி உடையணிந்து மிகக் கவர்ச்சிகரமாக பிரதிநிதிகள் சபையில் வீற்றிருந்தார் வேலுப்பிள்ளை. அவர் அழகை ஆராதித்தவர். அவரது ஆங்கில எழுத்துக்கள் அவருக்குப்புகழ் ஈட்டித் தந்திருந்தன. பாராளுமன்ற உறுப்பினர் முத்திரையுடன் அவரது எழுத்துக்கள் பல ஆங்கில ஏடுகளில் இந்தியாவிலும் இலங்கையிலும் வெளிவந்தன. இலங்கை - இந்திய எழுத்தாளர்களின் பாராட்டுதல்கள் கிடைத்தன. ஜோர்ஜ் கெய்ட்ஸ், பீட்டர் கெனமன், ஜக்மோகன் ஆகியோரின் நெருங்கிய உறவும் கிட்டியது. அதுமட்டுமல்லாமல் அவர் பராளுமன்றத்தில் அடியெடுத்து வைத்த உடனேயே மலையக மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை இலங்கைப் பாராளுமன்றம் நிறைவேற்றியது. 1948இல் குடியுரிமைச் சட்டம் மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்த பின்னரும் 1952ஆம் ஆண்டுவரை குடியுரிமை பறிக்கப்பட்ட மக்களின்
26

பிரதிநிதிகளாய் சி. வி. உட்பட மற்ற அறுவரும் வீற்றிருந்தார்கள். அவர்கள் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் சி. வி. பொறுப்பு வாய்ந்த பங்கேற்றிருந்தார். இந்த அரசியல் அநீதியை எதிர்த்து உலகையே ஈர்க்கும் அற்புதமான போராட்டத்தையே நடத்தியிருக்கலாம். மக்கள் கொதித்தார்கள் ; குமுறினார்கள். பாராளுமன்றத்திற்கு முன்னால் தீக்குளிக்கவும், சிரச்சேதம் செய்து கொள்ளவும் மக்கள் தயாராக இருந்தார்கள். இதுபற்றி திரு. வெள்ளையன் அவர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் அன்றைய தலைமையின் கோழைத்தனத்தினால் நமது உரிமைப் போருக்குக் கல்லறை கட்டப்பட்டது. இன்னும்தான் கல்லறை அருகில் காத்திருக்கிறோம். இக்கால கட்டத்தில் இந்த ஆத்திரத்திலும், இந்த அநீதி, இந்தக் கொடுமை, கவிதைகளில் தீப்பிழம்புகளாய், தகதகத்திருக்க வேண்டுமே! சி. வி.யின் கவிதைகளில் இந்த உணர்வுகள் பிரதிபலிக்கவில்லை. ஆனால் அவர் ஆத்திரம் ஆழ்ந்த சோகத்துடன் இணைந்து கனன்றது. அவர் முற்போக்கு அரசியல் கருத்துக்களை ஆர்வத்தோடு ஏற்றுக் கொண்டார். பழைமைத் தலைமைகளைத் துணிவுடன் சாடினார். காங்கிரசை விட்டு விலகினார்.
1960களில் புதியதோர் ஆத்திரப் பரம்பரை தலைதூக்கியது. எழுத்திலும், பேச்சிலும், கவிதையிலும், சீற்றம் மிகுந்த இளந்தலைமுறையின் துடிப்பும், விழிப்பும் மலையகத்தை இனங்காட்டியது. பழந்தலைவர்கள் அருவறுப்போடும், அலட்சியத்தோடும் இப்புதிய போக்கினை நோக்கினர். சி.வி. அவர்கள் இப்போக்கினை ஆதரித்தார்கள். இதன் வளர்ச்சியை விரும்பினார்கள். இக்கால இலக்கியக் கூட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டார்கள். இளந்தலைமுறையினரை உற்சாகப்படுத்தினார்கள் முற்போக்கு இலக்கிய வாதிகளோடு இணைந்து நின்றார்கள்.
எனினும் இலங்கையில் ஏற்பட்ட இனவாத அரசியல் பூகம்பங்கள் பலரையும் நிலைகுலையச் செய்தன. மலையக மக்களின் உரிமைகள் சிங்கள அரசு இட்ட பிச்சையாக மாறிவிட்டன. மலையக மக்கள் தோட்டங்களின் எல்லைக்குள்ளேயே சிறைவைக்கப்பட்டனர். மட்டக்களப்புக்கு சென்று குடியேறினாலும் அவர்கள் குடியேற்றங்கள் அழிக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் விரட்டப்பட்டனர். வவுனியா, முல்லைத்தீவு, திருக்கோணமலைப் பகுதிகளில் குடியேறிய மக்களில் சிலர் அங்கு நிலைபெற்றனர் பலர் விரட்டப்பட்டனர். மலையக மக்களை இந்தியாவுக்கு விரட்டுவதையே சிங்கள இனவாத அரசியல் இன்னும் தனது இலட்சியமாகக் கொண்டுள்ளது. வட - கீழ் மாநிலங்களில் தமிழர் உரிமை போராட்டம் ஆயுதந்தாங்கிய போராக விரிவடைந்த வேளையிலே, 1975 - 1985 ஆண்டு காலங்களில் மலையகத் தமிழர்கள் உட்பட அனைத்துத் தமிழர்களும் ஈனத்தனமாகவும், கோரத்தன. மாகவும் சின்னாபின்னப்படுத்தப்பட்டபொழுது சி. வி. யின் அழகிய, இளகிய கவிதை உள்ளம் சிதறி உடைந்தது. அவர் சிந்தனையாளர். அவர் சாந்தசிலர். அன்பும், அழகும், இரக்கமும் ஊற்றெடுத்தோடும் உள்ளம் படைத்தவர். அவரது முதுமையில் இந்தக் கொடுமைகளின் கோரத்தாண்டவம் அவரது
27

Page 25
இனிய சுபாவத்தில் இடிவிழுந்தாற் போன்றது. கடைசியாக அவரது உள்ளத்துக் கீறல்களை "இனிப்பட மாட்டேன்"நாவலில் திட்டியுள்ளார். அதே சோகம், அதே ஏக்கம்! இனவாத இலங்கையிடமிருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டார் நிரந்தரமாக,
அவரது நினைவுக்கு அஞ்சலியாக, "நமது கதை" என்று தலைப்பிட்டு அவர் எழுதி வைத்திருந்த ஆக்கத்தை "நாடற்றவர்கதை" என்ற தலைப்பில் வெளியிடுகிறோம். "ஈழநாடு" 25வது ஆண்டு நிறைவு மலரில் அவர் எழுதிய "மலையகத் தமிழரின் இன்றைய பிரச்சினைகள்" என்ற கட்டுரையினையும் இந்த நூலுடன் இணைத்திருக்கிறோம்.
முன்னோடிப் பரம்பரையின் முதுமை எழுத்தாளர் மறைந்துவிட்டார். அவரது வாரிசாக இன்னுமொரு பரம்பரை இலங்கையில் மலையகத்தில் வளர்ந்து வருகிறது. ஏக்கப் பெருமூச்சு விடுவதற்காக அல்ல, வீரகாவியம் படைப்பதற்காக, எங்கள் அஞ்சலி அவர்களுக்கு வாழ்த்தொலியாகவும் அமைய வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
28

மலையகத் தலைமைத்துவம் - ஒரு மீளாய்வு
இளைய மலையகத்துக்கு எழுபதுகளிலேயே எழுச்சி கீதம் பாடிய எனக்கு இலங்கையிலே இன்னும் பிரித்தானிய காலத்திலிருந்த வயோதிக தலைமையே மலையகத்தின் தலையெழுத்தை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது, என்று எண்ணும் பொழுது வரலாறு எங்களை மறந்து விட்டதோ என்ற ஏக்கம் ஏற்படுகிறது.
மலையகத்தில் தலைமைத்துவத்தை, அதன் உடும்புப் பிடியை ஆழ்ந்து விமர்சனம் செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அந்த முயற்சியில் ஒரு ஆரம்பநிலையாக சிறைக் கம்பிகளுக்குள் இருந்துகொண்டு தனது சிந்தனையை ஒட விட்டிருக்கிறார் முன்னணித் தோழர் வி. டி. தர்மலிங்கம் அவர்கள்.
நமது நாட்டின் அரசியல் தலைமைத்துவ வரலாற்றை உற்றுநோக்கில் இலங்கையில் வாழுகின்ற அத்தனை சமுதாயங்களும் எத்தனையோ தலைமைகளை பரீட்சித்துப் பார்த்திருக்கின்றன. மலையக சமுதாயம் பரீட்சை எழுதப் பயப்படும் மாணவனைப் போல மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு ஏமாற்றுத் தலைமையின் கீழ் சிக்கி எதிர்காலத்தை இருள்மயமாக்கி கொண்டிருக்கிறார்கள் என்றாலும் இளமை, என்பது இலட்சியம் மிக்க சக்தி, மாற்றம் ஏற்படுத்தத் துடிக்கின்ற பெரும் சக்தி என்ற உண்மை மலையகத்துக்கு நிச்சயமாகப் பொருந்தும்.
நண்பர் தர்மலிங்கம் அவர்கள் தனது மாணவப் பருவத்தில் இருந்தே, தான் பிறந்து வளர்ந்த சமுதாயத்தை நேசித்த ஒரு இளைஞன். "இளைஞன்
மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் வி டி. தர்மலிங்கம் சிறையில் சித்திரவதைப் பட்டகாலத்தில் எழுதி வெளிவரவிருந்த மலையகம் எழுகிறது’ என்ற நூலுக்கு இர. சிவலிங்கம் எழுதிய முன்னுரை இந்நூலிலேயே முதல் பிரசுரம் பெறுகிறது.
29

Page 26
குரல்" என்ற பத்திரிகை நடத்தியவர், நாடகங்களில் நடித்தவர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் கல்லெறிகளால் அர்ச்சனை செய்யப்பட்டவர், சதிகாரர்களின் சாணக்கியத்தால் சிறையில் சித்திரவதைப்படுத்தப்பட்டவர். ஆகவே, புடம் போட்ட தங்கம் இன்னமும் பட்டறையில் தான் இருக்கிறது. விரைவில் மலையக சமுதாய மக்களுக்கு அழகு தரும் ஆபரணமாக உருப்பெறும் என்ற நம்பிக்கை உண்டு.
அவரது எழுத்தின் வேகம், சிந்தனைப் போக்கு, விமர்சனப் பார்வை இந்தக் கட்டுரையிலேயே தென்படுகிறது. அன்றாடம் பூத்துப், பூத்து மடியும் மலர்களைப் போல மலையத்தில் தோன்றித் தோன்றி மறைந்த இளைஞர் முயற்சிகளின் வரலாற்றை விமர்சன ரீதியாக இக்கட்டுரையிலே விளக்கியிருக்கிறார்.
இளைய மலையகத்தின் வரலாறு, தொழிற் சங்க முழக்கங்களின் மத்தியிலே முனகல்களாக மாறிவிடாமல் எதிர்கால சந்ததிக்கு பயன்படும் வகையில் வரலாற்று ரீதியாக எழுதியுள்ளார்.
ஒரு முப்பது ஆண்டு கால முயற்சிகளை ஆதாரபூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஆரம்பகால போராட்ட தலைமைகளைப்பற்றி ஆழமான ஆய்வு இல்லாதது வருந்தத்தக்கது. அவர் எழுதியுள்ள சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் பொழுது இது ஒரு பெரும் குறையாக எனக்குத் தென்படவில்லை. எனினும் சிந்திக்கத் தெரிந்த இளைஞர்களை மேலும் சிந்திக்க வைக்கும் தூண்டுகோலாக இக்கட்டுரைகள் அமைந்திருப்பது மிகச் சீரிய சிறப்பாகும். அவருடைய எழுத்தோட்டம் அவரின் தமிழ்நடைக்கு சான்று பகர்கிறது. நம்மைச் சிந்தனைப் பூர்வமாக இழுத்துச் செல்லும் இனிய எளிய நடை, நண்பர் தர்மலிங்கம் ஒரு தமிழ் எழுத்தாளர் என்பதற்கு இது அச்சாரம். இந்தக் கட்டுரைகளிலே அவருடைய அனுபவங்களும், ஆர்வங்களும், விரக்திகளும், தளராத நம்பிக்கையும் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. இதற்கு முன்னுரை எழுதுகின்ற பொழுது என்னை அறியாமலே மலையக தலைமைத்துவத்தை மீளாய்வு செய்கின்ற ஒரு உந்துதல் ஏற்படுகின்றது.
1960 லிருந்து 1980 வரை ஒரு இருபது ஆண்டு காலம் மலையக இளைஞர்களைப் பள்ளிப் பருவத்திலிருந்து பதவிப்பருவம் வரை எடை போட்டுப் பார்த்த அனுபவம் எனக்குண்டு. பாலையில் விதைத்த பயிர்கள் போல் நல்ல பள்ளிகளற்ற ஒரு சமுதாய அமைப்பில் மலையக இளைஞர்கள் தொடக்கக் கல்வியிலேயே துவண்டு போனார்கள். ஐந்தாம் வகுப்புக்கு மேல் எங்கு செல்வது என்று தெரியாமல் தோட்டத் தொழிலார்களாகவே செக்கு மாடுகள் போல பல தலைமுறைகள் சீரழிந்து விட்டனர். தோட்ட வாழ்வே ஒரு சிறை வாழ்வாக அமைந்து விட்டது. கல்வியின் தாக்கமோ அரசியல் கருத்துக்களின் ஊக்கமோ ஒரு புத்துலகப் போக்கின் நோக்கமோஅற்ற ஒரு சூழ்நிலையில் எத்தனை மலையக மலர்கள் கனியாகாமல் உதிர்ந்தனவோ அதற்குக் கணக்கேயில்லை.
30

இந்தக் கட்டுரைகளிலே ஒரு முல்லோயா கோவிந்தனையும் டெவன் சிவனு- லட்சுமணனையுமே போராட்டத்தியாகிகளாகத் தர்மலிங்கத்திற்குக் காட்ட முடிந்திருக்கிறது. இந்தத் தியாக இளைஞர்கள் கூட தொழிலாளர் வர்க்கத்திலிருந்து வந்தவர்கள். நண்பர் தர்மலிங்கத்தின் கட்டுரைகளில் பட்டியலிட்டிருக்கும் இளைஞர் இயக்கங்கள் அத்தனையும் படித்த இளைஞர். களின் இயக்கங்கள். படித்த இளைஞர்கள் நல்ல கருத்துக்களைக் கூறினார்கள். புரட்சிகரமாகச் சிந்தித்தார்கள். ஆனால் அவர்கள் எந்த புரட்சி. கரமான போராட்ட களத்தையும் சந்திக்க முடியவில்லை.
நமது குடியுரிமை பறிக்கப்பட்ட பொழுது, இலங்கை - இந்திய காங்கிரஸ் தலைவர்கள் போலிப் போராட்டம் நடத்தினார்கள் என்று கேலி செய்திருக்கிறார் தர்மலிங்கம். ஆனால் இலங்கையின் அத்தனை சமுதாயங்களிலிருந்தும் வீராவேசமான இளைஞர் போராட்டங்கள் வெடித்திருப்பதைச் சுட்டிக் காட்டும் தர்மலிங்கம் மலையகத்தில் அப்படியானதொரு உதாரணம் காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. அவருக்கும் இருக்குமென நம்புகிறேன்.
ஒரு முறை நான் அட்டனில் இருந்து மட்டக்களப்புக்கு புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக என்னோடு சமசமாஜக் கட்சிப் பிரமுகர்களில் ஒருவரான தோழர் எட்மன்ட் சமரக்கொடியும் பயணம் செய்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தபொழுது "நீங்கள் மலையகத்துக்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டார்" நான் "படித்த இளைஞர்களை ஒன்று சேர்த்து இயக்கம் அமைத்துக் கொண்டிருக்கிறேன்" எனச் சொன்னேன். அதற்கு அவர் "நீங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். தொழிலாளவர்க்க இளைஞர்களை ஒன்றிணைத்து இயக்கம் அமையுங்கள்" எனக் கூறினார். இந்தப் பணியை இன்றுவரை எவரும் செய்யவில்லை என்ற எனது ஆழ்ந்த துயரம் இப்போதும் வெளிப்படுகிறது.
நண்பர் தர்மலிங்கத்தின் கட்டுரைகளில் ஆரம்ப கால இந்திய சமுதாயத்தின் தலைமை பட்டணங்களில் படித்த வர்க்கத்தின் மத்தியில் இருந்து உருவானது. அது நகரங்களிலேயே பவனி வந்தது. அதைத் தோட்டங்களுக்கு திருப்பிய பெருமை அன்று இளைஞனாக இருந்த ஜனாப் ஏ. அசீஸ் அவர்களுக்கே சேரும்.
திரு. வள்ளியப்ப செட்டியாரும், திரு. பெரி. சுந்தரம் அவர்களும் அதிகார வர்க்கத்தோடு கைகுலுக்கி அவர்களை வலம் வருவதையே அரசியலாகக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னர் திரு.நடேச ஜயரும், சமசமாஜக் கட்சியின் புரட்சிகர தலைவர்களும் வளர்த்துவிட்ட ஒரு புரட்சி. கரப் போக்கு வணிகப் பெருமக்களின் தலைமைப்பிடியில் சிக்கியபொழுது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான போக்கு பிசுபிசுத்து விட்டது.
திரு. நேரு, திரு. காந்தி போன்றவர்களின் மாயையை மலையகத்தில் அவிழ்த்து விட்டார்கள். நம்முடைய இந்தியத்துவத்தையே வலியுறுத்தி
31

Page 27
னார்களேயொழிய நம்முடைய வர்க்க சொரூபத்தைக் காட்ட மறந்தார்கள். கருத மறந்தார்கள். அதனால்தான் அவர்கள் அமைத்த இயக்கத்திற்கு இலங்கை - இந்திய காங்கிரஸ் எனப் பெயர் வைத்தார்கள்.
பிற்போக்கு சிங்களத் தலைவர்களான திரு. டி. எஸ். சேனநாயக்கா போன்றவர்கள் இந்த இந்தியத்துவத்தை வைத்து நம்மை இழிவுபடுத்தி
656.
சமசமாஜக் கட்சித் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டு,நாடுகடத்தப். பட்ட பின்னர் இலங்கையின் முதலாளித்துவ சக்திகள், இலங்கை - இந்திய காங்கிரஸை நன்றாக வளர்த்து விட்டார்கள். இலங்கை இந்திய காங்கிரசுக்குத் தோட்டத் துரைமார்களே சந்தா சேர்த்தார்கள். அவர்களின் சதி எவ்வளவுதூரம் வெற்றிபெற்றதுஎன்பதற்கு திரு. தொண்டமானின் தலைமை தோன்றியதே மிக முக்கியமான சான்றாகும்.
வெவண்டன் தோட்ட முதலாளி மலையகத் தொழிலாளர்களின் மிகப் பெரிய தொழிற்சங்கத்திற்குத் தலைவரானார். அன்று புரட்சி தோற்றது. போலித்தனம் கோலோச்சியது. அந்தப் போலித்தனம் இன்னும் கோலோச்சுகிறது என நண்பர் தர்மலிங்கம் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசிஎலிசபெத்தின் கணவர் எடின்பரோ கோமகன் தனது மனைவியுடன் இலங்கைக்கு வருகை தந்தார். அவர் கேட்ட கேள்வியை மலையகத் தொழிலாளர்கள் இன்னும் கேட்கவில்லை. அவர் திரு. தொண்டமானைப் பார்த்து "ஒரு தோட்ட முதலாளியான நீங்கள், துரைமார் சங்கத்தில் உறுப்பினரான நீங்கள் எப்படி ஒரு பெரிய தொழிற்சங்கத்தின் தலைவனாக இருக்க முடிகிறது" என வியப்போடு கேட்டார். மலையகத் தொழிலாளர். களுக்கு இதைக் கேட்க முடியவில்லையே?
திரு. தொண்டமானின் தலைமைத்துவத்தின் தோற்றத்தையும், தொடர்ச்சியையும் இப்பொழுதாவது சற்று கூர்ந்து, ஆழ்ந்து விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
முதற்காரணம் திரு. தொண்டமானின் தலைமை உருவாவதற்கு ஏற்ப ஒரு அரசியல் சூழ்நிலை இலங்கையில் அப்போது ஏற்பட்டது. மிக வீரா. வேசமாக கனல் பறக்கும் சொற்பொழிவுகள் ஆற்றி, பிரித்தானிய அரசைக் கலக்கிய இளம் தலைவர் ஜனாப் ஏ. அசீஸ் ஆவார். இரண்டாம் யுத்த காலத்தில் பிரித்தானிய அரசுக்கு எதிராகப் பேசிய காரணத்தினால் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார். அதிலிருந்து அவரது தலைமைத்துவம் சரியஆரம்பித்தது. மிதவாத அல்லது முதலாளித்துவப் போக்கு" டையவர்கள் இலங்கை - இந்திய காங்கிரஸ் தலைமையைக் கைப்பற்றி. னார்கள்.
சமசமாஜக் கட்சியின் தலைமை வெறுத்து ஒதுக்கப்பட்டதற்குக் காரணம் அவர்கள் புரட்சிவாதிகள் என்பதுதான்.
திரு. நடேசய்யர் தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணம் காங்கிரஸ் அலையும், கங்காணிகளின் பழிவாங்கல்களும். அதன் பிறகு ஒரு பெரிய
32

கங்காணியின் மகன் இன்னொரு பெரிய கங்காணியின் மகனுக்கு தலைமையைத் தாரை வார்த்துக் கொடுத்தார். பெரி. சுந்தரம் அவர்கள் திரு. தொண்டமானுக்குத் தலைமையை தாரை வார்த்துக் கொடுத்தார்.
காங்கிரஸ் கதராடை அணிந்த காரணத்தினாலும், அஸிஸ் பாகிஸ்தானை ஆதரித்த காரணத்தினாலும் திரு. தொண்டமானுடைய தலைமை தோன்றிவிட்டது.
ஒரு தோட்ட முதலாளி என்ற செல்வச் செருக்கும், காந்தி, நேரு புகழ்பாடும் ஒரு போலித்தனமும் அன்று இவரை எதிர்த்து நிற்க முடியாத நிலையும் இவரது தலைமையை உறுதிப்படுத்தியது. பல்வேறு வகையான சூழ்ச்சிகளினால், தந்திரங்களினால், தலைமையைத் தக்க வைத்துக் கொண்டவர் திரு. தொண்டமான் அவர்கள்.
ஒரு தலித் மகனான ராஜலிங்கம் அவர்கள் தலைவராக வந்த பொழுது, சதி செய்து அவருடைய தலைமைத்துவத்தை அகற்றி விட்டார். ஒரு தோட்ட இளைஞனின் தலைமை அன்று அடக்கம் செய்யப்பட்டு விட்டது. அடுத்ததாக திரு. தொண்டமானுக்கு எதிராக தலைமைத்துவத்திற்கு போட்டியிட்டவர் திரு. சோமசுந்தரம். இவர் தொடர்ந்து காங்கிரஸிலேயே அங்கம் வகிக்க முடியாத நிலைக்கு திரு. சோமசுந்தரம் அவர்கள் இலங்கையிலிருந்தே விரட்டப்பட்டார்.
அடுத்தபடியாக திரு. தொண்டமான் அவர்களின் தலைமைக்கு சவால் விட்டவர் வி. கே. வெள்ளையன் அவர்கள். அவரையும் சதி செய்து, காங்கிரசிலிருந்து வெளியேற்றினர். அவர் புதிய தொழிற்சங்கத்தை ஆரம்பித்தாலும், அவரின் அகால மரணத்தினால் திரு. தொண்டமான் அவர்களுக்குத் தலைமைத்துவப் போட்டி தளர்ந்துவிட்டது.
அதற்கு பின்னர் வந்த மலையகத்தின் சிறந்த கவிஞரான சி. வி. வேலுப்பிள்ளை அவர்களால் கூடத் தொண்டமானின் தலைமைத்துவத்தை தகர்க்க முடியவில்லை.
இன்னும் ஒரு முயற்சியை இடதுசாரிகள் மேற்கொண்டார்கள். தோழர்கள் எஸ். நடேசன், பி. பி. தேவராஜ், ரொசாரியோ பெர்னாண்டோ போன்றவர்கள் அஸிஸ் ஆரம்பித்த ஜனநாயக தொழிலாளர் காங்கிரசுக்குள் புகுந்து திரு. தொண்டமான் அவர்களின் தலைமையை எதிர்த்தார்கள்.
தோழர் என். சண்முகதாசன் அவர்கள் ஒரு மாபெரும் மார்ச்சிய சிந்தனாவாதி. தொழிலாளர் வர்க்கத்தைத் தட்டியெழுப்பி, திரு. தொண்டமான் அவர்களின் தலைமையை தகர்க்க முயற்சித்து அவரும் தோற்றார்.
என்னைப் பொறுத்தளவில் மலையக புத்தி ஜீவிகளை தொழிற் சங்கங்கள் மதிக்கவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை. அதே வேளை புத்தி ஜீவிகளும் தொழிற்சங்கங்களை விமர்சிப்பதிலேயே அடங்கி விட்டனர். அவர்களது சிறு, சிறு இயக்க முயற்சிகள் நண்பர் தர்மலிங்கத்தின் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனாலும், தோட்டங்களிலேயே
33

Page 28
புரட்சிகரமாகச் சிந்திக்கின்ற கதை, கட்டுரை, கவிதை, நாடகங்கள் எழுதுகின்ற இளைஞர்களை உருவாக்கினார்கள். அதன் எதிரொலிகள் இ.தொ.கா.வின் கோட்டையிலேயே கேட்டது. காங்கிரஸ் அமைப்புக்குள்ளேயே திரு. தொண்டமானின் தலைமையை விமர்சிக்கிற இளம் புரட்சி. வாதிகள் தோன்றினார்கள். காங்கிரஸ் தலைமைத்துவத்தை விமர்சனம் செய்தார்கள். அவர்களைப் பல்வேறு வகைகளில் காங்கிரஸ் அடக்கியது. சிலருக்கு பதவிகள் கொடுத்தார்கள். சொகுசான வாழ்வை அமைத்துக் கொடுத்தார்கள். வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவர்களின் புரட்சிகர சிந்தனையையே மழுங்கடித்து தாசாணு தாசனாக்கினார்கள். இதற்குப் பணியாதவர்களை வன்முறைகள் மூலமும், சூழ்ச்சிகள் மூலமும் துன்புறுத்தி அவர்களின் துடிப்புகளை அடக்கினார்கள்.
இ.தொ.கா.வில் ஊழல் செய்பவர்களை உத்தியோகத்தில் அமர்த்தினார்கள். தங்கள் தலைமைத்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தொழிற்சங்கத்தில் அடிமைகளையும், அடிவருடிகளையும் வளர்த்தெடுத்து ஊழல்கள் பெருகுவதை ஊக்குவித்தார்கள்.
அதே சமயத்தில் தங்களின் சுயநல பாதுகாப்பிற்காக எல்லா அரசியல் கட்சிகளுடனும் தொடர்பு வைத்துக்கொண்டு, பண பலத்தினால் தங்களுடைய பாதுகாப்புகளை வளர்த்துக் கொண்டார்கள். நான் சிறிது காலத்திற்கு முன் "புதுக் கரடி" என்ற கட்டுரையில் எல்லா அரசியல் கூடாரங்களிலும் புகுந்து சர்க்கஸ் விளையாட்டுக் காட்டிய தலைமைத்துவம் திரு. தொண்டமானுக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளேன். இந்த மாதிரியாக அரசியல் வித்தைகளில் நிகரற்ற திறமை வாய்ந்த வேறொரு தலைவனை இலங்கை வரலாறு கண்டதில்லை.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என பெயர் மாற்றிக் கொண்டதற்குக் காரணம் சமசமாஜக் கட்சி தலைவர்களில் ஒருவரான டாக்டர் கொல்வின் ஆர். டி. சில்வா அவர்கள்தான். "நீங்கள் ஒரு தொழிற்சங்கமாக இருந்து கொண்டு, ஏன் இந்திய காங்கிரஸ் சங்கமாக பெயர் வைத்துள்ளிர்கள்" என்று விமர்சித்தார். அதற்கு ஈடு கொடுக்கும் முகமாகத்தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனப் பெயர் மாற்றிக் கொண்டார்கள்.
இ. தொ. கா. வின் அரசியல் பிரவேசமும் தொண்டமானின் தலைமையை தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி (யூ என். பி) உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் திரு. தொண்டமான் அவர்களை மொத்த ஒட்டு தரகராகத்தான் உபயோகித்துக் கொண்டே வருகிறார்கள்.
திரு. ஜே. ஆர்.ஜயவர்த்தனா அறிமுகப்படுத்திய விகிதாசார தேர்தல் முறையும், திரு. தொண்டமானின் அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவே உதவியது.
34

இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரமும் மலையக மக்களின் புரட்சிகரமான சிந்தனையை மழுங்கடித்ததோடல்லாமல், மலையக மக்கள் மத்தியில் மொட்டவிழ்த்துக் கொண்டிருந்த புத்தி ஜீவி இயக்கங்களையும் சிதறடித்து சின்னாபின்னப்படுத்தினர் என்றாலும், புத்தி ஜீவிகள் பரப்பிய கருத்துகளும், அடிகோலிய நடவடிக்கைகளும் மலையக மக்களின் எதிர்கால மாற்றத்திற்கு வழி வகுத்துள்ளன.
தோட்டப் பாடசாலைகளை அரசுடமையாக்குவதற்கு வழிகோலி. யவர்கள் புத்திஜீவிகளே. இதன் தாக்கம் இன்று மலையக கல்வியில் எல்லா தொழிற் சங்கங்களையும் அக்கறை கொள்ள வைத்துள்ளது. மலையக சமுதாயத்தில் கல்வி வளர்ச்சி, வளர்ந்து வருகின்ற ஆரம்ப அறிகுறிகளைக் காணலாம்.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பரிணாம வளர்ச்சியும் இதன் வெளித் தோற்றமே. ஒரு புதிய தலைமுறை இப்போது தன்னுடைய சுய நம்பிக்கையின் அடிப்படையில் மலையகத்தின் எதிர்காலத்திற்கு கட்டியம் கூறுகிறது. இலங்கை மலையக அரசியல் வரலாற்றிலேயே திரு. வைத்தியலிங்கம், ஜனாய்அசீஸ் ஆகியோருக்குப்பிறகு திரு. தொண்டமானின் ஆதரவு இல்லாமல் பிரதி அமைச்சராக பதவி பெற்றவர் திரு. பெ. சந்திரசேகரன் அவர்கள்.
சிறையிலிருந்தே வெற்றி பெற்று சுயநல கோரிக்கைகளை முன் வைக்காது திருமதி. சந்திரிகா குமாரணதுங்கா அவர்கள் அரசு அமைவதற்கு கைகொடுத்த முதல் மலையக இளைஞன் திரு. பெ. சந்திரசேகரன் அவர்கள். இதன் மூலம் புதிய அரசியலுக்கு, புதிய தலைமைத்துவத்திற்கு கட்டியம் கூறப்பட்டுள்ளது. ஒரு தலைமை சரிந்து இன்னொரு தலைமை உருவாகி வருகிறது.
மலையகத்தின் திறந்த வெளிச் சிறைச்சாலைகள் போன்ற தோட்டங்களில் கல்வியறிவின்றி நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதால் அரசியல் விழிப்புணர்ச்சியும், பங்கேற்புமின்றி சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தினால் சிதறடிக்கப்பட்டு, தமிழின விடுதலைப் போராட்டத்தினால் தட்டுத் தடுமாறி செய்வதென்னவென்று தெரியாத ஒரு மயக்கத்தில் திரு. தொண்டமானின் இ.தொ.கா.விலே சரணாகதி அடைந்து இருந்த மலையக தொழிலாள வர்க்கம் தன்னார்வத்துடன் புதிய தலைமையை உருவாக்கும் கால கட்டத்தில் இருக்கின்றது.
அந்த சமுதாயத்திற்கே உரிய பல்வேறு பிரச்சனைகள், அவர்களை அரசியலில் பின் தங்கி விட்டாலும், புதிய உத்வேகத்துடன் வீறு கொண்டு எழுந்து இலங்கை வரலாற்றில் சரிநிகர் சமானம் எய்துவர் இந்நாட்டிலே என்ற நம்பிக்கைக்கு நண்பர் வி. டி. தர்மலிங்கத்தின் கட்டுரைகள் கட்டியம் கூறுபவனவாக அமைந்துள்ளன.
35

Page 29
இன்றைய மலையகம்
கால ஓட்டத்தில் ஓர் எதிர்நீச்சல்
கிTலங்கள் நிற்பதில்லை! காலங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன! இந்தக் கால ஓட்டத்தில்தான்மாற்றங்கள் நிகழ்கின்றன! நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. மாற்றங்களின் வேகங்களும் தோற்றங்களும் மாறுபடலாம்! ஆனால் காலமோ அதே வேகத்தில், அதே சுருதியில் ஒடிக்கொண்டே இருக்கின்றது.
மலையகத்து அருவிகள் அதே சந்தம் இசைக்கின்றன. மலைகளைத் தழுவிக் கொண்டு லாவண்யமாய் நெகிழ்கின்றன. சல சலத்து மண்ணைக் குளிர வைக்கின்றன. கற்களைக் கடைந்தெடுக்கின்றன. அழகு நளினங்களால் கண்களைக் குடைந்தெடுத்து விடுகின்றன.
அதே மலைச்சாரல் - தேயிலை மரகதப் பட்டாடைப் போர்த்து, அந்திவானத் தாம்பூலச் சாற்றில் அதரங்களைத் தோய்த்து, மேகக் கூந்தலை தென்றல்காற்றினில் கோதி, சற்றே சரிந்துநீலவானை நோக்கிநிலவில் முகம் திருத்துகிறாள் மலையகத்து மோகன மங்கை, உடலை அலங்கரிக்கும் கோடி வண்ண மலர்ச்சரங்கள். கால்களுக்கு கவினுாட்டும் இரத்தினப் பாதசரங்கள். இந்த எழில் கோலத்தில் ஆழ்ந்து, இந்த உலகையே மறந்து விடலாம்! அது மலையகம் தரும் அழகுப் போதை!
நாம் உலகை மறப்பதில்லை. உற்று நோக்க வேண்டும். மலர்களின் வண்ணங்களோடு போட்டியிடும் வண்ணச் சிறகுகள் படைத்த பறவைகள்.
தன் பரந்த அனுபவத்தின் பின்னணியில் இர. சிவலிங்கம் அவர்கள் மலையகத்தில் 15 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் மீண்டும் தீவிரமாக செயற்பட ஆரம்பித்த காலத்தில் காங்கிரஸ் ஏட்டில் பிறைகுடி' என்ற புனைபெயரில் இன்றைய மலையகம்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைத் தொடர்
36

பாப்பாத்திகள், ரீங்காரமிடும் வண்டுகள், முயல்கள், நரிகள், மான்கள், மரைகள், சிறுத்தைகள், குரங்குகள், யானைகள் என்று இயற்கையின் ஊர்வலம் இங்கு இனிதே நடைபெறுகின்றது. ஒரு காலத்தில் பல நூற்றாண்டுகள் வயது சொல்லும் கம்பீரமான நெடுமரங்கள், மலையக சாரலிலே செங்கோலோச்சின.
இன்றோ இவை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. மழை குன்றிவிட்டது. பயிர்கள் வாடுகின்றன. வெயிலின் வெங்கதிர்கள் வாட்டுமளவிற்கு வெட்ப, தட்பநிலை மாறிவிட்டது. சில சமயங்களில் நாம் மலையகத்திலா இருக்கின்றோம் என்று வியக்குமளவுக்கு வெயில் எரிக்கின்றது.
இன்றைய மலையகத்தில் இயற்கை கூட மாறித்தான் இருக்கின்றது. ஒரு காலத்தில் உலவிய சில மிருகங்கள் இப்பொழுதில்லை. சிறகடித்து திரிந்த சில பறவையினங்கள் இல்லை. மண்புழுக்கள் கூட மறைந்து விட்டன. உலகில் எவருமே காணாத பாம்பினங்கள், பறவையினங்கள் சிங்கராஜ அடவியில் இருக்கின்றன. இவைகள் இன்று அழிந்து வருகின்றன.
எங்கள் சிவனொளிபாதமலையைச் சுற்றிலும்தான் இயற்கையின் இரகசியப் பெட்டகம்! ஆனால் இன்று அங்கு கூட கள்வர்கள் கை வைத்திருக்கிறார்கள்! வெள்ளைக்காரனின் வெள்ளிப் பணத்திற்கு ஆசைப்பட்டு விலை போகும் எங்கள் இரத்தினச்சுடர்கள், கொலை போகும் எங்கள் உயிர்கள்! பாம்பின் தோல்களுக்காகவும் பறவைகளின் சிறகுகளுக்காகவும், வண்ணங்களின் வடிவுக்காகவும் வாழ்விழக்கும் வண்ணாத்திப் பூச்சிகள்!
யார், யாரின் சுகபோகங்களுக்கோ தங்கள் உயிரையே விலை பேசும் ஒருவகை வணிக வாடிக்கை வரலாறு எங்கள் மலையகத்திற்கு உண்டு. எங்கள் உற்பத்திகளும், எங்கள் இயற்கை செல்வங்களும் உலகச் சந்தையின் விலைப் பட்டியலிலே இடம்பெறுகின்றன. நமது மண்ணில் விளைந்த தேயிலை 1997ல் மட்டும் 4800 கோடி ரூபாய் வெளிநாட்டுச் செலாவணி ஈட்டித் தந்ததாக நமது நாட்டுப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அது மட்டுமல்ல நமது மலையகத்து மண்ணில் கோடான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள இரத்தினக் கற்கள் புதையுண்டு கிடக்கின்றன. அந்த செல்வம் அனைத்தும் மக்கள் செல்வமாக வேண்டும் என்று அண்மையில் ஓர் அமைச்சர் மொழிந்துள்ளார்.
மலையகத்தின் இயற்கை எழிலையே விலை பேசி விற்கிறார்கள். உல்லாசப் பிரயாணிகளை வரவேற்க எங்கள் மலைகளையும், அருவிகளையும், மலர்களையும் பறவைகளையும், இன்னும் எண்ணற்ற கவர்ச்சி. களையும் உலகச் சந்தையிலே விலை கூவி விற்கிறார்கள்.
நமது நாட்டின் சிங்காரச் சோலை, செல்வச் சுரங்கம், இயற்கையின் சிம்மாசனம் எங்கள் மலையகம், நாட்டுக்கே ஒளி தரும் மின் விளையும் நீர்த்தேக்கங்கள் எங்கள் மலையகத்தை சக்தியின் ஊற்றுக்கண்ணாகவும் மாற்றி வைத்துள்ளன.
37

Page 30
எங்கள் மலையின் சக்தி, எங்கள் விளைவின் சக்தி எங்கள் எழிலின் சக்தி, என்றெல்லாம் பேசினோம்.
எங்கள் மக்கள் சக்தி
முன்பிருந்த மிருகமில்லை, பறவையில்லை,மரமில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டோம்.
இந்த நிலை மனிதருக்கு வரமுடியுமா ? இல்லை என்று எளிதாகக் கூறிவிடமுடியாது. ஒரு காலததில் இந்த நாட்டின் இரண்டாவது பெரும்பான்மையாக இருந்த நாம், இன்று இலங்கையின் மிகச் சிறிய சிறுபான்மையாக மாறி விட்டோம்!
ஒப்பந்தம் போட்டு, ஐந்து லட்சத்துக்கு மேற்பட்டோரை இந்நாட்டின் செல்வச் சிருஷ்டியாளர்களை - தமிழகத்துக்கு நாடு கடத்தி நாசப்படுத்திய வரலாற்றை, அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா ?
ஏழுபேர் அலங்கரித்த நாடாளுமன்றத்தில் நம்மை நாதி அற்றவர்களாக்கி, நாடற்றோராய்நாடு கடத்தி நாசப்படுத்திய அரசியல் நாகரீகத்தை நாம் மறக்கத்தான் முடியுமா ?
இழைத்த அநீதிகளை மறக்காத இனம் - மறையாத இனம் ! வரலாற்றுப் பாடங்களை மறக்காத இனம் - தன்னை இழக்காத இனம் !
ஒரு காலத்தில், கால ஓட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இனமாகயிருந்த மலையக மக்கள், இன்றைய கால ஓட்டத்தில் எதிர் நீச்சலடிக்கும் இளம் மானுடமாக மாறி மலரும் போது - இன்றைய மலையகத்தில் புதுமணம் பொங்குகிறது!
2
இலங்கை சுதந்திரமடைந்து ஐம்பதாண்டுகள் நிறைவேறியுள்ள நிகழ்ச்சியை நாம் இன்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். ஒருநாட்டின் வரலாற்றில் அரை நூற்றாண்டு என்பது ஒரு முக்கியமான காலகட்டம். இந்த அரை நூற்றாண்டில் நாம் பெற்ற சுதந்திரத்தை அனைத்து மக்களுக்கும் சமமாக அனுபவிக்க முடியாமல் நம் நாட்டையே அடியோடு சீர் குலைத்த அரசியல் கோட்பாடுகள், அரசியல் புற்று நோயாய் நம் நாட்டை பலவீனப்படுத்தியுள்ளன.
1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம்நாள்பாராளுமன்றத்தில் இலங்கை தேசியக் கொடியை உயர்த்திவைத்துப் பேசிய முதல் பிரதமர் டி. எஸ். சேனாநாயக்கா அவர்கள் இவ்வாறு முழங்கினார்:
38

"சுதந்திரம் மிக முக்கியமான பொறுப்புகளை நம்மீது சுமத்துகிறது. இனிமேல்நமது செயல்களும், புறக்கணிப்புகளும் நம்முடையவைதான்.நமது நிர்வாகத்தின் குறைகளையும் தவறுகளையும் வேறொருவர் மீது சுமத்த முடியாது. ஆகவே ஒவ்வொரு இலங்கைக் குடிமக்களும், நமது நாட்டின் வளத்தையும், சுபீட்சத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்காக விருப்புடன் பாடுபட வேண்டும்.
நமதுநாடு பல இனங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு இனத்திற்கும் அதற்கென்றே தனிப்பட்ட பண்பாடும், வரலாறும் உண்டு. நமது கடமை என்ன வென்றால் நம்மவர்களின் சீரிய பண்புகளை ஒன்றிணைத்து, உயர்ந்த பக்குவத்தை உருவாக்கி, உலகின் பிற நாடுகளோடு நாமும் இணைந்து, அனைத்துமக்களுக்கும் சமாதானமும், பாதுகாப்பும்நீதியும் கிடைப்பதற்காக உறுதியுடன் செயற்படுவதாகும்."
இந்த மணிமொழியை உதிர்த்த எட்டு மாதங்களில், இந்தியத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையில் இலங்கைக் குடியுரிமைச் சட்டம்நிறைவேற்றப்பட்டமை, இந்த நாட்டை அன்று பீடித்த இனவாதம் இன்று வரை ஒயவில்லை.
சொல்லொன்று, செயலொன்று என்ற இரட்டைவேட அரசியல்தான் நமது சுதந்திரத்தோடு நாம் பெற்ற பாரம்பரியம். மலையகத்தில் குறிப்பாக இரட்டைவேட அரசியல்வாதிகளை இனங்கண்டுகொள்ளும் விவேகமும், அரசியல் கூர்மையும் வேண்டும். அன்று ஆகாத மக்கள் என்று நம்மை நாடு கடத்திய அரசியல் வாதிகள் இன்று அரவணைத்துக் கொள்ள ஆசைப்படுவது ஒரு அரசியல் சூதாட்டம்தானே.
இதுவும் ஒருவகை அரசியல் தந்திரம்தான். இது மகாபாரத காலத்தில் இருந்தே நடைபெற்று வந்திருக்கிறது. ஆலிங்கனம் செய்வதுபோல் பாசாங்கு செய்து, தனது இரும்புப்பிடியில் நசுக்கிக் கொல்வது. இதனைத் திருதராஷ்டிர ஆலிங்கம் என்று சொல்வார்கள்.
ஒரு காலத்தில் இனவாத அரசியல் வாதிகள் மலையகத்துமக்களை அடியோடு அழித்தொழித்து விடலாம் என்று கனவு கண்டார்கள். ஆனாலும் நமது மக்களின் உழைப்பில்தான் இந்த நாட்டின் சுபீட்சமே தங்கியிருந்த காரணத்தால் நம்மை அழிக்க முடியவில்லை. நம்மை அழித்திருந்தால் இந்த நாடே அழிந்திருக்கும்.
ஆனால் நம்மை அடிமைப்படுத்தினார்கள். வெள்ளைக்காரன் ஆட்சியிலேயே குடியுரிமை பெற்றிருந்த நமது மக்களை, சுதந்திர இலங்கை குடியுரிமை அற்றவர்களாக்கி அடிமைப்படுத்தியது விசித்திரமான உண்மை, 1948ல் இலங்கை சுதந்திரமடைந்தது. அதே ஆண்டில் நாம் அடிமைப்படுத்தப்பட்டோம். நாம் சுதந்திரம் பெற இன்னும் நாற்பதாண்டுகள் சென்றது. நாம் சுதந்திரமடைந்து ஐம்பது ஆண்டுகள் அல்ல. பத்து ஆண்டுகள்தான் நிறைவேறியுள்ளன. அதுகூட பூரண சுதந்திரமா, போலி சுதந்திரமா என்ற சர்ச்சை இன்னும் அடங்கவில்லை.
39

Page 31
1948க்குப் பிறகு நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எத்தனை கசப்பானவைகள்!
இந்த நாட்டின் செல்வத்தை ஈட்டித் தந்த நமக்கு இந்த நாட்டின் அபிவிருத்தியில் பங்கில்லை. கல்வி வாய்ப்புகளில்லை! எல்லோருக்கும் அரச படசாலைகள்! நமக்கு தோட்டப் பாடசாலைகள் - ஐந்தாம் வகுப்பு வரை தனியே ஓர் ஆசிரியர் பள்ளிகள்.
சமூகசேவை திட்டங்களில்லை. ஊராட்சியில் இடமில்லை! சுதந்திரமாக நடமாடும் உரிமையில்லை. இந்திய அரசாங்கத்தின் வற்புறுத்தலில் குடியுரிமைக்கு புதிதாக மனுச்செய்யும் சட்டம் ஒன்று கொண்டு வந்தார்கள்.
அந்தச் சட்டத்தை இலங்கை - இந்திய காங்கிரஸ் எதிர்த்து மனுச் செய்ய மாட்டோம் என்று எதிர்த்தார்கள்; புறக்கணித்தார்கள். பின்னர் ஒரே அவசர அவசரமாக மனுச் செய்தார்கள். எட்டு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் மனுச் செய்தார்கள்.
15 வருடங்களுக்குப்பிறகு ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு மட்டுமே பதிவுக் குடியுரிமை வழங்கப்பட்டது.
1964ல் யூரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது. 1974ல் பூரீமாவோ - இந்திரா காந்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. நமது மலையக மக்களின் ஆறுலட்சம் பேரையும் அவர்களின் வாரிசுகளையும் இந்தியாவிற்கு நாடுகடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1984 வரை ஐந்து லட்சம் பேர்நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் சொல்லொணாக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் இந்தக் கொடுமையால் உயிர் துறந்தார்கள்.
மலையகத்தின் குடும்பங்கள் சிதைந்தன. உறவுகள் முறிந்தன. கணவன், மனைவி கூடப் பிரிக்கப்பட்டனர். பெற்றோர் பிள்ளைகளை விட்டுப் பிரிந்தனர். இப்படி ஒரு கொடுமை வேறெந்த இனத்துக்கும் இந்த நாட்டில் நிகழ்ந்ததில்லை.
உரிமையைப் பறித்து அடிமையாக்கி, உழைப்பைச் சுரண்டி நிரந்தர ஏழையாக்கி, நாடுகடத்தி குடும்பங்களைச் சீரழித்து, கல்வி மறுத்து, தொழில் மறுத்து, மனித உரிமைகளை மறுத்து, ஒரு சமூகத்தையே அநீதித் தீயில் பொசுக்கிய வரலாறுதான் - மலையக இளைஞனே, உனது உண்மையான வரலாறு.
1988ல் ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். வேறெந்த நாட்டின் குடியுரிமையும் பெறாதவர்கள் இலங்கைக் குடியுரிமை பெறலாம். ஒரு சத்தியக் கடதாசி மூலம் இலங்கைக் குடியுரிமையைப் பிரகடனப்படுத்திக் கொள்ளலாம் என்பது சட்டம், விசித்திரமான சட்டம் !
யாரோ அவசரமாக ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டதால், நமது வாக்குரிமை அதற்கு அவசியம் என்று அவசரப்பட்டதால் அப்படியொரு சட்டம்.
40

நமது குடியுரிமைப் பிரச்சனை தீர்ந்துவிட்டதில் நமக்கு திருப்தி எனினும் இன்று கூட மலையகத்தில் வாக்குரிமையற்ற ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தான் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களும், அவர்களது வாரிசுகளும். அவர்களின் அரசியல் உரிமைக்கு யார் உத்தரவாதம் ? கடந்த 50 ஆண்டுகளில் ஒருவருக்கும் குடியுரிமை இல்லை என்ற நிலையிலிருந்து எல்லோருக்கும் குடியுரிமை என்ற ஒரு நிலைக்கு ஏறக்குறைய வந்து விட்டோம்.
இன்றைய மலையகத்தில் ஒரு அரசியல் புரட்சி நடந்தேறியிருக்கிறது. நமக்கு அநீதி செய்ததற்கு பழிவாங்குவது போல் நமது ஆதரவு இல்லாவிட்டால் அரசு அமைக்க முடியாது என்ற நிலை 1994ல் உருவானது. புரட்சிகரமான மாற்றம். ஏழு பேரை விரட்டிய அவையில் பத்துப்பேர் புகுந்தார்கள். மாகாண ஆட்சி சபையில், பிரதேசிய ஆட்சி நமது பிரதிநிதிகள்,~அமைச்சர்களாகவும், உறுப்பினர்களாகவும் அமர்ந்தார்கள். உண்மையில் ஒரு ஜனநாயகப் புரட்சி நடந்தேறியுள்ளது.
அதேபோல கல்வித்துறையிலும் மிகப் புரட்சிகரமானதொரு மாற்றம். மாட்டுத்தொழுவங்கள் போல் இருந்த ஒற்றை ஆசிரியர்கள் பள்ளிகளுக்குப் பதிலாக, மாடிக் கட்டிடங்கள் கொண்ட பாடசாலைகள் மலையகமெங்கும் மலர்ந்துள்ளன. ஏழாயிரம் ஆசிரியர்கள், இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், உயர்கல்வி கற்க விழையும் இளைஞர்கள், மலையகத்திற்கனெ ஆசிரியர் பள்ளிகள், மலையகத்திற்கென கல்விக் கல்லூரிகள். மலையக கல்வி அதிபர்கள், அதிகாரிகள், நெறியாளர்கள், மலையக கல்வி அமைச்சர்கள் என மலையகக் கல்வியில் ஓர் அமைதிப்புரட்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய மலையகம் தன்மான மிக்க சமுதாயமாய் மலருவதற்கான அறிகுறிகள் அரும்பி வருகின்றன.
அண்மையில் குயில்வத்தையில் ஒரு பாடசாலை மாடிக் கட்டடத்தைத் திறந்து வைத்த கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் விஸ்வா வர்ணபால அவர்கள் மலையக இளைஞர்கள் எப்பொழுதுமே கொழுந்து பறிப்பவர்களாகவும், பால் மரம் வெட்டுபவர்களாகவும் இருக்க முடியாது. அவர்கள் தொழில் வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இது மலையகத்தைப் பற்றிய புதிய சிந்தனை, புதிய பார்வை. கடந்த பத்தாண்டுகள் மலையகத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்கள், எதிர்காலத்திற்கு கட்டியங் கூறுகின்றன.
வளர்ந்து வரும் மலையகத்தில் மலர்ந்து வரும் மாற்றங்கள் பற்றி அடுத்த இதழில் அலசுவோம்!
3
மலையகத்தில் ஒரு புரட்சி அலைவீசுகிறது என்று சிலர் மட்டுந்தான் கருதுகிறார்களா அல்லது அது ஒரு பொதுவான கருத்தா என்று பார்ப்போம். முதன் முதலாக அரசே ஒரு ஆய்வுக் குழுவை நிறுவியது. பெருந்தோட்ட
4.

Page 32
இளைஞர்களின் அடிப்படைத் தேவைகள் எவையென்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒரு ஜனாதிபதி ஆய்வுக் குழுவை நிறுவினார். அந்த ஆய்வுக் குழுவினர் 1997இல் தமது ஆலோசனைகளை ஜனாதிபதியிடம் வழங்கினார்கள்.
அதேசமயம் பெருந்தோட்டங்களைக் தேசியமாக்குதலிலும், மீண்டும் தனியாரிடம் ஒப்படைப்பதிலும், மலையகப் பகுதிகளில் ருெந்தோட்ட நிலங்களை கையகப்படுத்துவதிலும் அக்கறை காட்டிய அரசுகள், அங்கே வாழ்ந்த மக்களைப் பற்றி எவ்வித அக்கறையும் காட்டவில்லை.
ஆனால், மலையக மக்களின் வாழ்வோடு இணைந்துவிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமே மக்களின் நலனில் அக்கறை காட்டின. குறிப்பாக மலையக மக்களின் மாபெரும் இயக்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தது. வேறு பல அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும், இடதுசாரி குழுக்களும் காலத்துக்குக் காலம் மலையக மக்களுக்காக குரலெழுப்பி வந்தாலும் ஆட்சியாளர்களை போதுமான அளவுக்கு நெருக்கக்கூடிய, வற்புறுத்தக்கூடிய வல்லமை இ.தொ.கா.வுக்கு மட்டுமே இருந்தது.
மலையக மக்கள் என்றாலே, அவர்களின் ஏகோபித்த இயக்கம் இ.தொ.கா. ஏகோபித்த தலைவர் தொண்டமான் என்பது ஐம்பத்தொன்பது வருடகால வரலாறு. தலைவர் தொண்டமான் அவர்களுடைய உடன்பாடு இல்லாமல், மலையகத்தில் எந்தவொரு தொழிற்சங்க உடன்படிக்கையும் ஏற்பட்டதில்லை.
ஆனால் அரசியலில் அத்தகைய செல்வாக்கு நமது மக்களுக்கோ நமது தலைவர்களுக்கோ இருந்ததில்லை. குடியுரிமைச் சட்டங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றிலெல்லாம், நமது தலைவர்களையும், மக்களையும் ஓரங்கட்டியே இலங்கை அரசுகள் முடிவெடுத்து வந்தன. அதனால் நமது சமுதாய வளர்ச்சியை ஐம்பது வருடங்களுக்கு மேலாகப் பாழ்படுத்தி விட்டார்கள். நமது சமுதாயம் துரைமார் கட்டுப்பாட்டுக்குள் சிறைப்பட்டுவிட்டது. ஒரு முறை காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் பீட்டர் கெனமன் சொன்னார் நாடெல்லாம் "சுயராஜ்" நடைபெறுகிறது. ஆனால் பெருந்தோட்டப் பகுதிகளில் "துரைராஜ்" தான் நடைபெறுகிறது என்று இன்றும் அதே நிலைதான்.
பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று இளைஞர்கள் துணிந்து விட்டார். கள். முனைந்து விட்டார்கள். துரை சாம்ராஜ்யத்தை நீக்கி மக்கள் ஆட்சி மலரச் செய்ய வேண்டும். இலங்கை சுதந்திரமடைந்து ஐம்பதாண்டுகள் கடந்த பின்னரும்நாம் இன்னும் "சலாம்" போடும் சந்ததியாக கைகட்டி, வாய் புதைத்து நிற்கும் கூட்டமாக இருக்க முடியுமா ?
சில தோட்டங்களில் வேலையில்லாத இளைஞர்கள், சில முகாமைகளோடு மோதியிருக்கிறார்கள். வன்முறையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் நமது வியப்புக்குரிய சமுதாய அமைப்பு தோட்டத்தில் நிலவியது.
42

தனியொரு வெள்ளைக்காரன், துரை என்ற பெயரோடு, ஆயிரம் மனிதர்களை அடக்கி ஆண்டு வந்தான். அவனுடைய நிறமே அவனுக்குப் பாதுகாப்பாக இருந்தது. அத்தோடு பொலீஸ், நீதிமன்றங்கள் எல்லாமே துரைமாருக்கு அனுசரணையாக இருந்ததால், ஒரு மனிதன் ஓராயிரம் மனிதர்களை அடக்கியாண்ட பழஞ் சமுதாய அமைப்பே நமது சமுதாய அமைப்பாக இருந்தது.
போப் துரை கொலை போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், பொதுவாகவே ஒரு அடக்கு முறை சமுதாயமாகவே மலையக சமுதாயம் இருந்து வந்தது. துரைமார், பொலீஸ்காரர்கள், அரசாங்க அதிகாரிகள், அனைவரும் ஒரு அடக்குமுறை துரைத்தனத்திற்கு ஆலவட்டம் காட்டி வந்தார்கள்.
ஆனால் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிறகு புரட்சிகரமான சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உயர்மட்ட அதிகாரவர்க்கத்தை வீழ்த்துவதற்கு தேர்தல் புரட்சியும் ஏற்பட்டிருக்கிறது ; அறுபதாயிரத்துக்கு மேற்பட்ட சிங்கள புரட்சிவாத இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ் இளைஞர்கள் மாபெரும் ஆயுதப் போராட்டமொன்றை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்சிகளெல்லாம் மலையக இளைஞர்கள் உணர்வில், சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்குமா?
குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள கல்வி, அரசியல் மாற்றங்கள் ஒரு சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. அடக்குமுறை சமுதாய அமைப்பை அடியோடு மாற்றி ஒரு சுதந்திர, ஜனநாயக சமுதாயமாக மாற்ற வேண்டுமென்பதே இந்த சிந்தனைப் புரட்சி.
இதன் பயனாக, துரைமாருக்குக் கட்டுப்பட விரும்பாத இளைஞர்கள், தோட்ட வேலைக்குச் செல்ல மறுக்கிறார்கள். இன்றைய மலையகத் தோட்டங்களில் வேலையற்ற இளைஞர்கள் ஏறக்குறைய 10 - 15 சதவிகிதத்தினர் இருக்கிறார்கள். சில பெருந் தோட்டங்களில் வேலைக்கு ஆள் இல்லாமல் திண்டாடுகிறார்கள். அதேபோல பல்லாயிரக் கணக்கான இளைஞர்களும் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். இது இன்றைய யதார்த்த சமுதாய சூழ்நிலையில் எத்தகைய, அரசியல் பொருளாதார, சமுதாய விளைவுகளை ஏற்படுத்தும் ?
இந்தக் கேள்விதான் ஜனாதிபதியின் மலையக இளைஞர் பற்றிய ஆய்வுக்குழு அமைக்க அடிப்படைக் காரணம்.
இத்தனை காலமாக ஒதுக்கி வைத்த வெளிப்படையான தோற்றமே தோட்ட உட்கட்டமைப்பு அல்லது அடித்தள வசதிகள் ஏற்டுத்துவதற்கென்ற ஒரு தனிப்பட்ட அமைச்சு.
இது மிகப்பொருத்தமான தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. முதன்முதலாக ஒரு புரட்சிகரமாக சிந்தனையின் பயனாக முகிழ்ந்த இந்த அமைச்சினை பொறுப்பேற்பதற்கு தொண்டமானைவிட பொருத்தமாணவர்கள் வேறு எவரும் இல்லை.
43

Page 33
இதுவரைக்கும், உரிமை மறுக்கப்பட்டு, மனித மரியாதை மறுக்கப்பட்டு, ஒரு அடிமைத் தளைக்குள் தள்ளப்பட்டிருந்த சமுதாயம் இப்பொழுது தலைநிமிருகிறது. ஒரு காலத்தில் போட்டி, போட்டுக்கொண்டு நம்மை நசுக்க நினைத்தவர்கள் இன்று போட்டி, போட்டுக்கொண்டு உதவ முன் வருகிறார்கள். மலையக இளைஞர்கள் இலங்கையில் எப்பகுதிகளிலும் வேலை வாய்ப்புப் பெற வழிவகுப்போம் என்று ஐ.தே.க. கூறுகிறது.
அண்மையில் நாவலப்பிட்டியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய தோட்டத் தொழிற்துறை அமைச்சர் ரத்னசிரி விக்கிரமநாயக அவர்கள் பின்வருமாறு கூறியிருக்கிறார் :
"பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கென்றே தனித்துவமான பண்பாடு, பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள் உண்டு என்பதை நன் கறிவேன். அவர்களுக்கே உரித்தான ஆற்றல்களும் கலைத்திறன்களும் உண்டு. அவர்களின் கலாச்சாரத்தையும் ஆற்றலையும் மேம்படுத்த வேண்டும். இன்று பெருந்தோட்டப் பகுதிகளிலே ஒரு புரட்சி ஏற்பட்டு வருகிறது.
தோட்ட மக்களின் மேம்பாட்டுக்கு அவசியமான அனைத்து சமுதாய நலன் சேவைகளையும் செய்ய நான் ஆயத்தமாய உள்ளேன். ஒவ்வொரு தோட்டத்திற்கும் கிராம அதிகாரி, திருமணப் பதிவாளர், சமூகநல அதிகாரி ஆகியோரை நியமிக்கவுள்ளோம். தோட்டங்களும் கிராமங்களும் ஒன்றி. ணைய வேண்டும். தோட்டங்களின் இலாபம் மக்களோடு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்."
மலையக மக்களைப் பற்றிய புரட்சிகரமான சிந்தனை இது. ஆனால் அதே அமைச்சர் மக்கள் மேம்பாட்டிற்காக தாம் செய்ய நினைக்கும் முற்போக்கு நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன என்றும் கூறியிருக்கிறார். தொழிற்சங்கங்கள் எதிர்த்தாலும் தனது அமைச்சு தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு பத்தாயிரம் வீடுகள் இவ்வாண்டின் இறுதிக்குள் கட்டித்தரும் என்றும் கூறியிருக்கிறார்.
இந்தச் செய்தி ஜூன் 17ம் திகதி டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. தொழிலாளர்களுக்கு நன்மை செய்வதை தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன என்ற கூற்றை மலையகத்தில் யாரும் நம்பத் தயாராக இல்லை. காலங்காலமாக தொழிலாளர்களுக்குத் துணை நின்ற தொழிற் சங்கங்களை சிலர் இப்போது தாக்க முனைந்துள்ளார்கள். தொழிற்சங்கங்களிலிருந்து தொழிலாளர்களைப் பிரிக்க முடியுமா ?
சில சமயங்களில் சில தொழிற் சங்கங்களின் செயற்பாடுகளை விமர்சிக்கலாம். ஆனால் தொழிற்சங்க இயக்கத்தையே கொச்சைப்படுத்த முனைவது அறியாமையாகும்.
முற்போக்கு அரசியல் சிந்தனையாளர்கள் அந்தத் தவறை செய்ய மாட்டார்கள். இன்று மலையகத் தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றி. ணைந்து ஒரு மலையக அரசியல் அமைப்பை உருவாக்குவது ஒரு மகத்தான புரட்சி.

4
பெரியதோர் பாறை. அதே இடத்தில் அசையாமல் கிடக்கிறது பல ஆண்டுகளாக, அதனை அப்புறப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளெல்லாம் பலனளிக்கவில்லை! அது அழகான பாறை, விரிந்து பரந்து கம்பீரமான கருங்கற்பாறையாகவே நின்றது.
வழிப்போக்கர்கள் அதனை ஒரு சுமை தாங்கியாக பயன்படுத்தினார்கள். வேறுசிலர் பயணக் களைப்பால் இளைப்பாறிக் கொள்வதற்கு அதன் மீது அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள்.
ஒரு நாள் வித்தியாசமான ஒருவர் அப்பாறாங்கல்லை நோக்கினார், கூர்ந்து நோக்கினார், தட்டிப் பார்த்தார். அதன் ஒசை கணிரென்று இருந்தது. அப்பாறையை பலமுறை வலம் வந்தார். திடீரென்று அவரது கண்கள் மின்னின. உடல் கனன்றது. முகம் மலர்ந்து இந்தக் கல்லில் ஒரு கலைவாணியின் சிலை செய்யலாம், என்ற கலை நுணுக்கம் கண்ட அவர் ஒரு சிற்பக் கலைஞர்.
கல்லிலே கலைவண்ணம் காணும் சிற்பி மறைந்திருந்த எழிலை அவரது கலைத்திறன் வெளிக் கொணர்ந்து வியக்க வைக்கும் !
மலையகச் சமுதாயமும் அப்படி ஒரு அமைப்புத்தான்! பார்த்தால் வறுமை தவிர வேறொன்றும் தெரியவில்லை. ஒன்றரை நூற்றாண்டுகளாக இந்த நாட்டின் சுமைதாங்கியாக இருந்து விட்ட சமுதாயம். யார் யாரோ உட்கார்ந்து இளைப்பாற உதவியதோர் சமுதாயம்.
இந்தச் சமுதாயத்தில் ஒர் புது வடிவம் காணவிழையும் கலைஞன், மலையகத்தின் இளைஞன்!
ஆம், இன்றைய மலையக இளைஞன்.
இன்றைய மலையக இளைஞன் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தி ருக்கிறான். அடலேறு போன்று வீறுநடை போட்டு விழித்தெழுந்து தன்னை புத்துலகச் சிற்பியாய் அறிமுகப்படுத்திக் கொண்டு அணிவகுக்கிறான் மலையக இளைஞன்.
ஆண்டாண்டு தோறும் அந்த அவலக் குடிசையில் வாழ்ந்த வாழ்க்கையை அருவருக்கிறான். அகற்றத் துடிக்கிறான். மண்ணுரிமை வேண்டும். மனையுரிமை வேண்டுமென்று கொக்கரிக்கிறான்!
தோட்டம் என்ற சொல்லையே வெறுக்கிறான். முன்னொரு காலத்தில் "தோட்டம்" ஒன்று சொல்லாட்சியில் மனிதனை மாடாக்கி செடி, கொடியாக்கி மானுடத்தையே பறித்த கோரக் கொடுமைகளை எண்ணும்போது நெஞ்சு எரிமலையாகிறது.
மனிதன் குடும்பமாகின்றான். குடும்பம் சமூகமாகிறது. சமூகத்தில் உறவுகள் நெருக்கமாகின்றன. திருமணம், பிள்ளைகள் பிறப்பு, முதியோர் மரணம், ஆலயங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், கோலாகலங்கள்.
45

Page 34
இது எப்படி ஒரு தோட்டமாகும் ? இது சமுதாய வாழ்க்கை. உலகில் மிகப் பண்டைய நாகரீகங்களில் ஒன்றான தமிழ் நாகரீகம் எங்களுடையது. அந்த நாகரீகத்தின் வாரிசுகளை வெறுமனே ஒரு தோட்டத்து அடிமையாக மாற்றிய வரலாற்று துரோகத்தை இன்றைய இளைஞன் களைந்து விடத் துடிக்கிறான்.
நான் தோட்டத்து இளைஞனல்ல, நான் புதிய சமுதாயத்தின் பொற்புடைய சிற்பி!
உலகுக்கே சங்கநாதம் செய்கிறான் - மலையக இளைஞன். தேயிலைச் செடியும், இறப்பர் மரமும் தோட்ட உரிமையாளரின் உடமையாய் இருக்கலாம்.
எங்கள் வாழ்க்கையில் குறுக்கிடவோ, எங்கள் உரிமையில் தலையிடவோ, தோட்ட நிர்வாகத்துக்கு எந்த அதிகாரமுமில்லை. எந்த அருகதையுமில்லை. எங்கள் மொழியறியா, பண்பறியா, வரலாறு அறியா ஒரு முகாமைத்துவம் எங்கள் சமுதாய வாழ்வில் என்ன பங்கு வகிக்க முடியும் ? இப்படி ஒரு சமுதாய வாழ்வையே நாம் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இழந்து விட்டோம்!
இழந்த வாழ்வை மீண்டும் பெறும் உத்வேகத்தில் இன்றைய இளைஞன் ஈடுபட்டுள்ளான். முன்பெல்லாம் இந்த உணர்வு இருக்கவில்லை !
திருமணத்திற்கு இந்தியா, பிள்ளைப் பேற்றுக்கு இந்தியா. மரணத்திற்கு இந்தியா, திருவிழாவிற்கு இந்தியா, வீடு கட்ட இந்தியா நமது ஊர் இந்தியாவில், நமது உறவு இந்தியாவில் 1
ஆகவே மலையகத்து "தோட்ட" வாழ்க்கையும் இந்தியாவே, சமூக வாழ்க்கையும் இரண்டாகப் பிரித்து வாழ்ந்தே நூறாண்டுகள் கழிந்துவிட்டன. சுதந்திர இலங்கையில், இந்தியா உடனான சமூக உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. போனால் இந்தியா இருந்தால் இலங்கை
இன்று மலையக மக்கள் இரு கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றார்கள்! மலையக மண்ணில் வேரூன்றிவிட்ட மக்கள் ஒரு சுதந்திர சமுதாய வாழ்வைத் தேடுகிறார்கள்.
முன்னோடிகளான சிலர், நகர்ப்பகுதிகளில் நிலம் வாங்கி, வீடுகட்டி, தங்கள் சுதந்திர சமுதாய வாழ்க்கையத் தொடங்கி விட்டார்கள்.
முன்னொரு பொழுதுமில்லாத வகையில் மலையகத்தில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.
இப்பொழுது கலாச்சார மையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழாராய்ச்சி மன்றங்களுக்காக அடிக்கற்கள் நாட்டப்படுகின்றன. புதிய வடிவங்கள் உருப்பெறுகின்றன. இன்றைய இளைஞன் புதிய சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது அவன் எதிர்நோக்கும் பிரச்ச. னைகள் ஏராளம்!
46

முதலாவது தமது குடியிருப்புகளில் வாழும் பழைய தலைமைகளே முட்டுக்கட்டைகளாய் விடுகின்றன.
சமுதாய வாழ்வில், சமுதாய பொறுப்பில் பங்கேற்பதற்கு வழிவிடாமல் தடையாய் நிற்கிறார்கள்.
பழைய தலைமுறையினருக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையே முரண்பாடுகள் முற்றிவருகின்றன.
மலையக சமுதாயத்தில் 40 சதவிகிதத்தினர் இளைஞர்கள்! அவர்களுள் ஏறக்குறைய 50 சதவிகிதத்தினர் வேலையற்றிருக்கிறார்கள். 14 வயது வந்தவுடனே பேர் பதியத் துடிக்கும் காலம் மலை ஏறிவிட்டது.
சுயமாகத் தொழில் செய்யவும், தோட்டத்தின் பிடியினின்றும் தூர விலகவும் பல இளைஞர்கள் கற்றுக் கொண்டார்கள்.
இன்று மலையக இளைஞன் விவசாயியாக மாறி வருகின்றான். சுயமாகப் பயிரிட்டு, தனது உற்பத்தியை. தானே சந்தைப்படுத்தி தன்மானத்தோடு வாழத்தொடங்கிவிட்டான்.
புதிய சமுதாய வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் நமது பழைய குடியிருப்புகளில் அவர்களுக்கு சீரான பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. அதற்காக அவர்கள் முழு மூச்சுடன் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்கள் தலைமைப் பொறுப்பு எற்கின்ற பொழுது சுதந்திர சமுதாயம் மலரும்!
மலையகத்து யுவதிகளும் புதிய வாழ்வை நோக்கித் தவமிருக்கின்றனர். பத்தாண்டுகள் பள்ளியில் பயின்றுவிட்டு இருள் சூழ்ந்த தோட்டக் குடிசைகளில் பல்லாண்டுகள் விரயமாகக் கழிப்பது எத்தனை கொடுமை ?
அவர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வெளிக்-ெ காணர்ந்து அவர்களது ஆற்றல்களுக்கு வாய்ப்புகள் வழங்கி புதியதோர் விடுதலையடைந்த மகளிர் பரம்பரையை உருவாக்குவது, வளர்ந்து வரும் மலையகத்தின் அதிமுக்கியமானதொரு பொறுப்பாகும்!
தொழிற்சங்கங்களுக்கும், வேலையில்லா இளைஞர்களுக்கும் என்ன தொடர்புகள் ?
பழைய தலைவர்கள் தோட்டத்தில் வேலை செய்யாத இளைஞர்களுக்கு சங்கப் பொறுப்பில்லை என்று ஒதுக்கிவிடுகிறார்கள்.
மலையகத்தில் இருந்து வெளியேறி கொழும்பில் வேலை செய்யும் பல இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை 65,000 என்று ஒரு கணிப்பு கூறுகிறது.
குடியுரிமை மறுத்து, இந்தியாவுக்கு நாடு கடத்தியது போல சமுதாய உரிமைகள் மறுக்கப்பட்டு, மலையகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளைஞர்களுக்கு தலைநகரத்தில் நல்வாழ்க்கை அமைகிறதா ? எத்தனை கெடுபிடிகள் ? எத்தனை கொடுமைகள் ? அவர்கள் உணர்வுகளோடு ஒன்றியிருப்பது மலையகம்தான்.
47

Page 35
மனைவியை, மக்களை, பெற்றாரை, உற்றாரை மலையகத்தில் விட்டுவிட்டுத் தானே அந்த இளைஞன் கொழும்புக்குச் செல்லுகிறான் ?
அவன் மனிதவுரிமைகளைத் தேடி, சமுதாய உணர்வுகளோடு மீண்டும் மலையகம் வரும் போது, எத்தகைய உணர்வுகளோடு, எத்தகைய பார்வையோடு மாற்றமடைந்த மனிதனாக வருகிறான் ?
அந்தப் பார்வையில், அந்த உணர்வுகளில் புதிய சமுதாயத்திற்கான வித்துகள் முளைவிடுகின்றன. தோட்டத் தலைமைகளை அராஜகங்களை ஆணவங்களை, மெளடிகங்களை வெறுக்கிறான்!
இன்று புதியமலையக சிற்பிகளில், கொழும்புதிரும்பிய இளைஞனுக்கு முக்கிய பங்குண்டு!
புதிய வார்ப்படங்கள் இளைஞர்களின் புரட்சிகர சிந்தனைகளில் உருவாகின்றன!
அதற்கு ஆதாரசக்தியாக இருப்பது அவர்களின் அரசியல் சக்திதான்! பதினெட்டு வயது எய்திய ஒவ்வொரு இளைஞனும், யுவதியும் வாக்காளர்கள்! W
நாட்டின் ஆட்சியை தெரிவு செய்யும் வல்லமை படைத்தவர்கள் வாலிபர்கள்!
அதனால்தான் அவர்களை நாடி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒடிவருகின்றன
இன்று வெளியிடப்பட்டுள்ள மாகாணத் தேர்தல் பட்டியலிலே எத்தனை மலையக இளைஞர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்?அனைத்துக் கட்சிகளின் பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறார்கள்?
மலையக இளைஞன் தேசிய அரசியலில் இடம் பிடித்து வருகிறான். இருநூறுக்கு மேற்பட்ட மலையக இளைஞர்கள் இன்று வேட்பாளர்களாக முன் வந்திருக்கிறார்கள்!
புதிய சமுதாயத்தின் சிற்பிகளை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது!
இன்று, நாளைய சமுதாயத்தை நாமே உருவாக்குவோம் என்ற வீறு கொண்ட சிந்தையின் வெளிப்பாடாக இந்திய வம்சாவழி மக்கள் பேரணி உருவாகி உள்ளது.
இது ஒரு புதிய வார்ப்பு இதனை செய்பனிட்டு, சீர்படுத்தி வலிமை சேர்ந்து, வளர்த்தெடுத்து நமது புத்துலக அடித்தளமாய் அமைந்திடுவது - மலையக இளைஞனின் மாபெரும் பொறுப்பு!
அந்தப் பொறுப்பினை நிறைவேற்ற வரிந்து கட்டிக்கொண்டு வருகிறது, மலையக வாலிபப் பேரணி!
48

5
'மங்கையராகப் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா"என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ஆனால் இன்றைய மலையக மகளிர் நிலை அறிந்திருப்பாராகில்,
மலையக மகளிர7ய்ப் பிறந்திடவே மாபாதகம் செய்திருக்க வேண்டு. மம்ம7 என்று தான் குமுறியிருப்பார். இன்றைய மலையக மகளிர் நிலை உலகத்திலேயே மிகக் கொடுமையாய் துன்புறுத்தப்படும் மகளிர்களின் நிலைமையையும் மீறியது என்றுதான் கூறத் தோன்றுகிறது.
மலையகத்திலே தேயிலை பயிர்ச் செய்கையும், இரப்பர் மரப்பால், சேகரிக்கும் பணியும் ஆரம்பித்த கால முதல் நாள் தோறும் வேலை செய்யும் உழைப்பாளர் அணியில் மலையகப் பெண்கள் தான் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். கொழுந்து கொய்யும் கோதைகளைக் கொடுமைப்படுத்தித் தான் இலங்கை பொருளாதாரம் தன்னை சிங்காரித்துக் கொள்ளுகிறது.
எங்கள் மாதர்களின் கொழுந்துக் கூடை நிறைந்தால் தான் நம் நாட்டின் துறைமுகத்தில் உணவுக் கப்பல்கள் வந்து நிற்கும். இருண்ட சமையலறையில் பழைய சட்டியில் சோறாக்கி குடும்பத்துக்கு அன்னமளிப்பவர்கள் மட்டுமல்ல எங்கள் அன்னையர்கள். இந்த நாட்டுக்கே உண. வளிக்கும் அன்னபூரணிகள் எங்கள் மலையக மாதர்கள்.
தேயிலை ஏற்றுமதி மட்டும் ஈட்டித் தந்த வருமானம் 5000 கோடி ரூபாய்கள் எங்கள் ஏழை மாதர்கள் இந்நாட்டுக்கு வழங்கிய வருமானம் நம்நாட்டின் உணவு இறக்குமதிக்கும் நாம் செலுத்திய வெளிநாட்டுச் செலவாணி ஏறக்குறைய 4500 கோடி ரூபாய்கள்.
இந்தப் புள்ளி விபரங்களை சமுதாய உண்மையாய்க் கூறுவதானால் மலையக மக்களின் உழைப்பால் தான் நம் நாட்டு மக்களின் உணவு இறக்குமதியை நிறைவேற்ற முடிகிறது. நம்நாட்டின் சுகாதார சூழ்நிலையை ஆய்வு செய்வோர் மலையக மாதர்களின் ஆரோக்கியக் குறைவு பற்றியும் குழந்தைகளின் போஷாக்கின்மை பற்றியும் கூறத் தவறுவதில்லை.
ஆகவே தன்னையும், தன் குழந்தைகளையும் அரைப் பட்டினிக்கு ஆளாக்கிவிட்டு, இந்நாட்டுக்கே அன்னதானம் செய்யும் எங்களை, அருமைச் சகோதரிகளை இந்த நாடு எப்படி நடத்துகிறது?
எங்கள் தியாகத் தெய்வங்கள் மலையக மகளிர். ஆனால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது ?
பொழுது புலரு முன்னரே துயிலெழுந்து கணவனுக்கும், பிள்ளை. களுக்கும் உணவு தயார் செய்து கொடுத்துவிட்டு கூடை சுமந்து கொண்டு; ஒட்டமாய் ஓடுகிறார்கள் மலையகச் சரிவுகள் நோக்கி.
தன் தோழிகளோடு சேர்ந்த பின்னர் சிரிப்பும், கலகலப்பும், நெற்றியில் பொட்டு, வாயில் வெற்றிலை, தலையில் கொங்காணி, முதுகில் புரள்வது மூங்கில் கூடை. இடுப்பில் படங்கு, காலில் காலணி இல்லை.
49

Page 36
தோட்டத்து மண் பாதைகளில் சரளைக் கற்கள் குத்துகின்றன! கொட்டும் மழையில் கூட அப்படியே ஊறிப்போன பாதங்கள் கூசாது மலைச் சரிவில் ஏறுகின்றன. அட்டை கடிக்குமோ, அரவம் தீண்டுமோ, கட்டை குத்துமோ, கவலையில்லை. உழைப்பில் குறியாய் உயர்ந்த மலைச்சரிவுகளில், ஊர்ந்து செல்லும் எங்கள் மங்கையரின் அழகிய பாதங்கள்.
இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க" என்று கவிஞன் பாடிய பாதங்களல்ல, கால் குழம்பு பூசி அலங்கரித்த ஒவியப் பாதங்களல்ல, மேடைகளில் ஆடி நாட்டியக் கலைக்கு நளினம் கற்பிக்கும் சலங்கைப் பாதங்களல்ல, பாதசரம் பூண்ட அலங்கார பாதங்களல்ல, அழகிய காலணி. கள் பூண்டு ஒய்யாரநடை நடக்கும் பாதங்களல்ல.
உழைக்கும் பெண்களின் நீரில் உறிய, வெற்றுப் பாதங்கள் நோய்கள் நுழையும் வாயில்கள். மலையக மங்கை தன் உடல் முழுவதுமே வருத்தி, வாட்டி, வாழ வைக்கிறாள் இந்த நாட்டை. எந்த எந்த பாதங்களையோ பாடிப் புகழ்ந்து, வணங்கி ஏத்தும் மாந்தர்கள் இந்தத் தியாகப் பாதங்களில் அல்லவா வீழ்ந்து வணங்க வேண்டும் ?
அதிகமாக கூடை பளு மட்டுமல்ல, வேலைப்பளுவை சுமப்பவர்களும் பெண்கள். ஏறக்குறைய பத்து மணி நேரம் வேலை செய்கிறார்கள். மலைச்சரிவுகளில் கொழுந்து நிறைந்த கயிற்றுச் சாக்குகளை தலையில் சுமந்து ஓடிவருபவர்களும் நமது மலையக மகளிர் தான்.
எத்தனை எத்தனை பாரங்களை மலையக பெண்மணிகள் சுமக்கிறார்கள். குடும்ப பாரம் மட்டுமல்ல, கொழுந்து பாரம் மட்டுமல்ல, குழந்தைப் பாரம் மட்டுமல்ல, ஆண்களின் அபாண்டங்களையும், அவர்கள் தாங்கித் தொலைக்க வேண்டியிருக்கிறது. மலைகளில் ஏச்சும், பேச்சும், கங்காணி, கணக்கப்பிள்ளை, துரைமார் போன்றோரின் காமக்கண் வீச்சுகளுக்கும் அவர்கள் பழியாக வேண்டியுள்ளது.
இத்தனையும் தப்பி வீடு வந்தால் தண்ணிர் பிடிப்பது, வாசல் பெருக்குவது, துணி வெளுப்பது, ஈரவிறகை எரியச் செய்வது, உணவு சமைப்பது, கணவனையும், குழந்தையையும் பேணுவது, நோயுற்ற மூத்தவர்களை கவனிப்பது அத்தனையும் பெண்களின் வேலை. இவற்றில் ஆண்களின் பங்களிப்பு மிகக் குறைவே.
இவ்வளவு பாடுபட்டும் மாத இறுதியில் கைநிறைய சம்பளம் வாங்குகிறார்களா?அந்த சம்பளத்தை வாங்குவதும், கணவனோ, தகப்பனோ தான். உழைக்கின்ற ஊதியத்தை தன் கையால் வாங்கும் உரிமையைக் கூட மலையகப் பெண் இழந்து விடுகிறாள்.
கல்வி நிலையில் நோக்கினும் ஆண்கள் 70 சதவீதத்தினரும், பெண்கள் 50 சதவீதத்தினருமே, எழுத்தறிவு பெற்றிருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள கல்வி அபிவிருத்தியினால் அதிகமான பெண்கள் பாடசாலைகளுக்குச் செல்கிறார்கள். பொதுத் தராதரப் பத்திர (சாதாரண) நிலை வரை கல்வி கற்கிறார்கள். ஆனால் முழுமையாக சித்தி பெற்றோர் தொகை மிகக் குறைவாகவே இருக்கிறது.
50

இருப்பினும் கல்வி கற்று விட்டு வேலை வாய்ப்புமின்றி வெளியுலகத் தொடர்புமின்றி வாடி வதங்கும் வனிதையரின் எண்ணிக்கை மலையகத்தில் ஏராளம். தோட்டப் பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களிலோ, அலுவலகங்களிலோ அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.
ஆசிரியப்பணியோ, அருகிருக்கும் ஆடைத் தொழிற்சாலைகளிலோ, அல்லது நகரங்களில் உள்ள வணிக மனைகளிலோதான் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுகிறது. இதுவும் அற்ப சொற்பம். பெண்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்புகள் மிக அருமை.
படித்தவர்களின் நிலை இதுவென்றால், படிக்காத இளம் பெண்களின் நிலைமையோ மிகப் பரிதாபமானது.
நகரத்து செல்வந்தர்களின் வீடுகளில் வேலைக்காரிகளாக இடம் பெயரும் மலையகச் சிறுமிகளையும், பெண்களையும் எவரேனும் கணக்கெடுத்திருக்கிறார்களா? பல்லாயிரக் கணக்கானோரை வீட்டுப் பணியாளர். களாக ஏற்றுமதி செய்யும் மலையகத்தின் இழிநிலை இன்னும் தொடர்கிறது. அவர்கள் தங்களின் மானுட சுயமரியாதைகளை இழந்து அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லுந்தரமன்று. வறுமையும், அறியாமையும் தான் இந்த அவல நிலைக்கு அடிப்படைக் காரணம்.
இந்தக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட பலர் மதம் மாறுவதுண்டு. மொழிமாறுவதுண்டு. ஐயகோ மலையகமே உன் குழந்தைகளைப் பலி. யிட்டுத்தான் நீ வாழவேண்டுமா? மலையகத்திலே ஓய்வு பெற்ற பெண் தொழிலாளிகளின் நிலைமை என்ன ?
உடல் நிலை நன்றாயிருந்தால் வீட்டுப் பணிப் பணிப்பெண்ணாக எங்கோ வேலை கிடைக்கிறது. இல்லையென்றால் நகரத்துத் தெருக்களிலே கையேந்தி பிச்சை எடுத்து வாழும் தலைவிதி தான் அவர்களுக்கு வாய்க்கிறது.
மலையகத்து மகளிர் இத்தனை கொடுமைகளையும் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டு தான் இருக்க வேண்டுமா ?
மாதர் எழுச்சிக்கென பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. மாதர்களுக்காக குரல் கொடுக்கும் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. நுவரெலியாவில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட ஒரு மாதர் அணி முன் வந்துள்ளது. ஒரு பெண் ஜனாதிபதியைப் பெற்றுள்ள இலங்கை நாட்டில், உழைப்பிற்கோர் உதாரணமாய் விளங்கும் மாதர்குலம் இப்படிக் கொடுரமாய் உதாசீனப்படுத்தப்படுவதை யாரால் சகிக்க முடியும் ?
51

Page 37
கோ. நடேசையர் - சில குறிப்புகள்
அண்மையில் நான் வாசித்த ஒரு ஆங்கில நூலில் பின்வரும் வாசகம் ஒன்று கண்டேன்.
'அமெரிக்காவில் வெளிவந்த நீக்ரோ இலக்கியங்களை ஆராய்ந்த ஒருவர் கறுப்பு மக்களை அடிமைகளாக வலுப்படுத்தி இழுத்துக்கொண்டு வந்த அடிமை வியாபாரிகள் கொடுத்த கசையடிகளிலிருந்து கசிந்த இரத்தத்திற்கு சமமான மையை எழுத்தாளர்கள் அவர்களது சோக வரலாற்றைத் தீட்டுவதில் செலவிட்டிருக்கிறார்கள் என்று வியந்திருக்கிறார்கள்."
ஆனால் மலையக வரலாற்றில் நூற்றைம்பது வருட காலமாக அவர்கள் பட்ட துன்பங்களை, துயரங்களை எழுத்தில் வடித்த இலக்கியங்கள் அற்ப சொற்பமே. இலங்கை வரலாற்றில், வளர்ச்சியில், இந்தியத் தமிழர்களின் உழைப்பு ஆற்றிய பங்கு இமாலயப் பங்காகும். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளும் மன உறுதியோ மனத்துய்மையோ பலருக்கு இல்லை. மண்ணைப் பொன்னாக்கும் மகா அற்புதம் தொழிலாளர்களிடம் மட்டுமே உண்டு. இலங்கையிலேயே ஒரு தொழிலாளர் பரம்பரையையே நிலைநாட்டி, ஒரு வர்க்க அரசியலுக்கு வழி சமைத்து இலங்கை மக்களிடமிருந்த வறுமைப் பிணியை ஒட்டி தாம் மட்டும் வறுமையை வரித்துக் கொண்ட ஒரு தியாகப் பரம்பரை மலையக மக்கள் பரம்பரை. இலங்கை அரசும், சமுதாயமும் அவர்களுக்கு வாரி வழங்கிய பரிசு குறைந்த கூலியும், மறுக்கப்பட்ட மனித உரிமைகளும், இழிச் சொற்களும், பழிச்சொற்களும், அடக்கு முறையும், நாடு கடத்தலுமேயாகும். உழைக்கும் மக்கள் இன்று ஆட்சி பீடம் ஏறி அமருகின்ற
அந்தணி ஜீவா 1990ல் மலையக வெளியீட்டகப் பிரசுரமாக வெளியிட்ட காந்தி நடேசய்யர்' என்ற நூலுக்கு நீலகிரி - கோத்தகிரி நலிந்தோர் நலமையத்தின் இயக்குனராக இர சிவலிங்கம் பணியாற்றியபோது எழுதிய முன்னுரை
52

இருபதாம் நூற்றாண்டிலே இன்றும் இருட்டறையில் தள்ளப்பட்டுள்ள மக்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களே. தென்னாபிரிக்க கறுப்பர்களும், அமெரிக்கக் கறுப்பர்களும் மலையகத் தமிழ்த் தொழிலாளர்களும் ஒரே வகையான வரலாற்றுக் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் விடுதலையடைந்து சமத்துவம் பெறும் பொழுதுதான் உலகத்தில் சமத்துவத்துக்கே வெற்றி கிடைத்து எனலாம்.
இந்த மக்களின் ஆரம்ப அடிமைத் தளைகளை அறுத்தவர்களை நினைவுகூருவது அவர்களின் எதிர்கால வெற்றிகளுக்கு அடிகோலுவதாகும். தனியொரு மனிதராக மலையக மக்கள் பட்ட அவதிகளிலிருந்து அவர்களை விடுவிக்க போர்க்குரல் எழுப்பிய முதல் வழிகாட்டி கோ. நடேசய்யர் ஆவார்கள். கோ. நடேசய்யர் இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றிலும், மலையக மக்களின் வரலாற்றிலும் மிக முக்கிய இடம் பெறத் தகுதியுள்ளவர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டத்தில் மலையக மக்களுக்கு உப்பு, புளி, மிளகாய், அரிசி மட்டுமல்ல அரசியல் ஆர்வமும், உரிமை உணர்வுகளுமே தமிழகத்தில் இருந்தே வந்தன. இந்த விடுதலை உணர்வுகளையும், சமத்துவ வேட்கையையும் மலையக மக்கள் மத்தியிலே பாட்டாலும், பேச்சாலும், போராட்டத்தாலும் கொணர்ந்து குவித்தவர் கோதண்டராம நடேசய்யர். தஞ்சைக் கரையிலிருந்து தமிழும், தாளமும் மட்டும் இலங்கைக் கரையைத் தழுவவில்லை. தலைநிமிர்ந்து உரிமைக்குக் குரலெழுப்பும் தன்மான உணர்வுகளும் வந்தன. இந்த இலட்சிய இறக்குமதிக்குக் கால்கோள் கோலியவர் கோ. நடேசய்யர். அன்னாரின் மறைந்த புகழை, மறைக்கப்பட்ட பணியை, தமிழகத்தில் நினைவூட்ட, வரலாற்று நன்றிக்கடனைச் செலுத்த நண்பர் அந்தனிஜீவா, ஆற்றியுள்ள இந்தப் பணிவாழ்த்தி வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். தன்னாட்டின் பெருமை குன்றாமல், மலையக மக்களுக்காக ஓய்வின்றிப் போராடியநடேசய்யரின் நாமம் தமிழகப் பெரியார்களின் வரிசையில் நிச்சயம் இடம் பெற வேண்டிய தொன்றாகும். கடல் கடந்த இந்தியர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்த பூரீநிவாச சாஸ்திரியை எவ்வாறு நாம் மறவாதுநினைவுகூருகிறோமோ அதற்கு சற்றுஞ் சளைக்காது இலங்கை மலையக மக்களின் உரிமைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நடேசய்யர் அவர்களை நெஞ்சில் இருத்துவது முற்றும் பொருத்தமாகும்.
53

Page 38
மலையகமும் சக்தி வழிபாடும்
சிக்தி வழிபாடு என்பது தொன்றுதொட்டு நிலவி வரும் வழிபாட்டு முறை. அதன் பல்வேறு வகைகளுள் ஒன்றுதான்மாரியம்மன் வழிபாடு. தமிழக கிராமிய தெய்வங்களுள் மாரியம்மா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவள். "மாரி" சாதாரண மக்களின் தெய்வம். மிகக் கடுமையான ஆசாரங்களையும் அனுஷ்டானங்களையும், மந்திரங்களையும் ஜெபதபங்களையும் கோராத தெய்வம். நமது தாயைப் போல் நம் குற்றங்களையெல்லாம் மன்னித்து குறைகளையெல்லாம் போக்கி, பொறுத்தருளி அளவற்ற அன்பைப் பொழியும் நமது தாய்த் தெய்வம்.
ஒரு காலத்தில் உலகெல்லாம் பரவி இருந்த இயற்கை வழிபாடு, தாய் வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகிய வழிபாடுகளின் ஒட்டு மொத்த பிரதிபிம்பமாய் விளங்குவதே மாரியம்மன் வழிபாடு. மிகப் பூர்வீகமான வழிபாட்டு முறையானதால் இந்த வழிபாட்டில் ஆரிய கலப்பில்லை. பிராமணிய சம்பிரதாயங்களில்லை. வேத மந்திர அர்ச்சனைகள் இல்லை. ஆகவே மாரியம்மனை திராவிட தெய்வமென்று சொல்லுவாரும் உண்டு.
தமிழ மக்கள் எங்கெங்கு புலம் பெர்ந்து சென்றார்களோ, அங்கெல்லாம் மாரியம்மனையும் உடன் கூட்டிக் கொண்டே சென்றிருக்கின்றார்கள். பிரித்தானியப் பேரரசின் போது உலகத்தின் பல நாடுகளுக்கும் குடிபெயர்ந்த தமிழகத் தொழிலாளர்கள் அங்கெல்லாம் மாரியம்மனைக் கொண்டு சென்று ஆலயம் அமைத்து வழிபட்டு வருகின்றார்கள். தென் ஆபிரிக்காவில், மலேசியாவில், தாய்லாந்தில், பிஜித் தீவில், மார்ட்டினிக் - கூடலோப் என்ற பிரெஞ்சு மொழி பேசுகின்ற தீவுகளில் கூட மாரியம்மனை
மலையகப் பத்திரிகையியல் முன்னோடி கலைஒளிமுத்தையாபிள்ளை நினைவுக்குழுவின் சார்பில் எச். எச். விக்கிரமசிங்க வெளியிட்ட மாத்தளை பெ. வடிவேலனின் மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலறும் (1997) என்ற நூலுக்கு கொழும்பிலிருந்து இர. சிவலிங்கம் எழுதிய முன்னுரை
54

துதித்து பெருவிழாவெடுத்து சிறப்பிக்கும் பாங்கினைக் காண்கின்றோம். அத்தோடு பிரஞ்சு மொழியினர் இவ்வன்னையை அம்மொழியிலேயே துதிப்பது; அம்மன் வழிபாடு உலகின் நவீன எல்லைகளையும் கடந்து நிற்கின்ற பேருண்மையை விளக்குகின்றது.
பல்லாயிரம் நன்மைகளை பொழிவாள் எங்கள் மாரி. நம் குறைகளை. யெல்லாம் பொறுமையாய் பரிவுடன் கேட்டு, மற்றவர்களைப் போல் அவசரப்படாமல் புறக்கணிக்காமல் ஆடாது அசையாதுநின்று பாசத்தைப் பொழிந்து குறைகளை நீக்குவாள். நல்வாழ்வினைத் தருவாள். நோய்களைப் போக்குவாள். மழையினைப் பொழிவாள். அருளினைத் தருவாள். "பிணிகளுக்கு மாற்றுண்டு எங்கள் முத்துமாரி பேதமைக்கு மாற்றில்லை எங்கள் முத்துமாரி . அடைக்கலமே புகுந்து விட்டோம் எங்கள் முத்துமாரி" என்று பாரதி பாடியதற் கொப்ப மாரியம்மனிடம் அடைக்கலம் புகுந்து மாலைநாட்டில் அடியெடுத்து வைத்தவர்கள் தான் இன்றைய மலையக மக்களின் மூதாதையர்கள்.
அதுவும் மாத்தளை தான் எங்கள் மலையகத்தின் தலைவாயில். தமிழகக் கரையிலிருந்து பயங்கரப்படகுகள் மூலம் கடலைக் கடந்து கொடிய கானகங்களுக்கிடையே கால்நடையாய் உயிர் தப்பி வந்ததற்காக, நன்றி கூறும் முதல் தெய்வம், எங்கள் மாத்தளை பூரீமுத்துமாரியம்மன். எங்களது வரலாறு மாத்தளை பூரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றுடன் இணைந்துள்ளது.
இந்நூலை வெளியிட்டுள்ள கலை ஒளி முத்தையாபிள்ளை ஞாபகார்த்த குழுவினரையும் அவர்களது சமகால பணியையும் எண்ணிப்பார்க்கும் போது ; மாத்தளை அருள்மிகு அம்பிகையின் அருளில் திளைத்து அம்பாள் புகழ் கூறும் நல்நூல்களைப் பதிப்பித்தவரும் மாத்தளை இளைஞனாக இருந்து இன்று கொழும்பில் மலையக பிரமுகராக உயர்ந்திருக்கும் அன்புத்தம்பி எச். எச். விக்கிரமசிங்க நம் இளைய தலைமுறையினருள் சமுதாய பிரக்ஞையும், ஆழ்ந்த சமூக உணர்வுமிக்கவர்களில் குறிப்பிடத்தக்க முன்னோடியாவார்.
அறுபதுகளின் நடுப்பகுதியில் மலையகத்தில் உத்வேகத்துடனும், திரத்துடனும் தமிழ் இலக்கிய உணர்வினையும், சமுதாயப்பற்றினையும் ஊட்டி வளர்த்த மலையக இளைஞர் முன்னணி உணர்உலைக் கூடத்தில் இலட்சிய வார்ப்பட்டத்தில் வார்த்தெடுக்கப்பட்ட இளைஞர்களில் இன்றும் இளமை குன்றாது இலட்சியம் மங்காது சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்.
அமரர் நவாலியூர் சொக்கநாதனின் மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சியை பலரும் மறந்து போயிருந்த நிலையில் இவ் அரும் பொக்கிஷம் பேணப்படுவதுடன், இளைய தலைமுறையினர் கற்றறிந்து பயன்பெறும் வகையில் முப்பதாண்டு காலஇடைவெளிக்குப்பின்னர் அச்சிட்டு தனதுஇறை பற்றையும், மலையகப் பற்றையும் நிலைநாட்டியவர். அவருக்கு இருக்கின்ற
55

Page 39
மலையக உணர்வு எல்லையற்றது. மலையகம் பற்றிய இவரது நேசத்தை எண்ணிநானே வியந்திருக்கின்றேன். பலர் தமது வாழ்க்கைச் சூழலுக்கேற்ப, தமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார்கள். எத்தனையோ மலை நாட்டவர்கள் தம் மலைநாட்டுத் தொடர்புகளை மறந்து விடுவதோடு மறுதலித்து விடுவதும் உண்டு. ஆனால், விக்கி அப்படியல்ல! தான் உயர உயரதனது மலைநாட்டுப் பணியை விரிவுபடுத்தியும், மேம்படுத்தியும் செயல் புரிந்திருக்கின்றாரேயொழிய தன்னை மலையகத்திலிருந்து விலக்கிக் கொள்ளவில்லை. இத்தகைய இளைஞர்களின் சமூக உணர்விற்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் வித்திட்டவன் என்றநிலையில் இவர்களதுநிலையின் உயர்வையும் பணிவின் பொலிவையும் கண்டு இறும்பூதெய்கின்றேன். இந்த மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துவதில் தவறில்லை எனக் கருதுகின்றேன்.
மலையக பத்திரிகை முன்னோடி கலை ஒளி முத்தையா பிள்ளை அவர்களின் நினைவாக மலையகத்தில் ஒரு பாரிய சிறுகதைப் போட்டியினை நடாத்தி மலையக புனைகதைத் துறைக்கு ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியமை ஒரு சாதனையாகும்.
மலையக பரிசுக்கதைகள்" என்ற சிறுகதை தொகுதி இன்றைய மலையக உணர்வுகளை பிரதிபலிக்கும் தலை சிறந்த வெளியீடாகும். இதனைப் போலவே மலையக சிறுகதை முன்னோடி அமரர் என்.எஸ்.எம். ராமையாவின் "ஒரு கூடைக் கொழுந்து" என்ற நூலை மீண்டும் பிரசுரம் செய்தமை விக்கியின் இலக்கிய ஆர்வத்தினை விடவும் சமூகப்பற்று மேலோங்கி நிற்பதை குன்றின் மேல் இட்ட தீபமாக மிளிரச் செய்கின்றது.
மற்றவர் மலையக சமூகத்தின் ஆத்மாவாய், உணர்ச்சி நரம்பாய், இரத்தக் குழாயாய், மூச்சாய், விழிகளாய், சமூகத்தின் காவலரணாய்நிற்கும் மு. நித்தியானந்தன், மலையகம் பற்றிய நித்தியின் பணி தனி ஓர் ஆய்வுக்குட்பட்டதாகும். அமரர் கலை ஒளிமுத்தையாபிள்ளையின் புதல்வரான இவர் தனது தந்தை தொடக்கி வைத்த மலையக இலக்கிய பணியில் அயராது உழைத்து வருவது கண்டு மனம் மகிழ்கின்றேன். 125 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆபிரகாம் ஜோசப் எழுதிய "கோப்பிக் கிருஷிக் கும்மி" என்ற மலையகத்தின் முதல் நூல் பற்றிய ஆய்வு மலையக இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவித்துள்ளது. அவரது அயராத ஆராய்ச்சி தேடலும் பல்வேறு சான்றாதாரங்களின் துணையுடன் அவற்றை அவர் பரிசீலனை செய்யும் கோணமும் மலையகத்தின் தலையான விமர்ச. கராக, அவரை நிலைப்படுத்தியுள்ளது. "கூலித் தமிழ்" பற்றிய கட்டுரை அவரது பலமான சமூகவியல் அறிவின் நுட்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மலையக இலக்கியம் பற்றி ஐரோப்பாவில் புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தின் மத்தியில் அவர் ஆற்றிவரும் கருத்துரைகள் ஐரோப்பாவில் மலையக மக்கள் பற்றிய புதிய சிந்தனைகளை தோற்றுவித்துள்ளது. ஒரு பதுளைக் காரனின் இலக்கியப் பதிவான "துன்கிந்த சாரலிலே" என்ற ஆய்வு
56

அவரது அறிவுத்திறனுக்கும் மலையகம் மீது கொண்டுள்ள தீராத பற்றுக்கும் சான்றாகும். இத்தகையோர் தொடர்ந்தும் மலையக மக்களின் எதிர்கால வரலாற்றைச் சிருஷ்டிக்க வேண்டுமென்பதே எனது அவா. இத்தகைய இலக்கிய மேதைகளை மீண்டும் மலையகம் அரவணைத்துக் கொள்வது எந்நாளோ ?
இந்த வற்றாத மலையகத் தொண்டு வரிசையில் மாத்தளை வடிவேலனின் "மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும்" என்ற நூல் வெளிவருகின்றது. வரலாறு மனிதனுக்கு மட்டுமல்ல மாரியம்மனுக்கும் உண்டென்பதை அசாத்திய துணிச்சலுடன் முன்வைக்கிறார் மாத்தளை வடிவேலன். இந்நூல் உருவில் சிறிதாயினும், ஆன்மீகத் தத்துவம், வழிபாட்டு நெறிமுறைகள், ஆலய அமைப்பு முறை புராதன ஐதீக வழிபாட்டு நடைமுறைகள் போன்ற பாரிய கருப்பொருள்களையும் தொட்டு பார்க்கின்றது.
மலையகச் சிறுகதைத் துறையில் தன் ஆளுமை மிக்க முத்திரை. யினைப் பதித்து, எழுத்தின் வளத்தால் கடல் கடந்த நாடுகளிலும் கெளரவம் பெற்றவர். மலையக நாட்டார் வழக்காற்றியல் பற்றிய தேடலை முன்னெ. டுத்ததுடன், மக்களின் பாரம்பரிய கலைச் செழுமையினை கலா நயமான கூத்துகள், இலக்கியங்கள் வழக்காறுகள், பண்பாட்டு விழுமியங்கள், பற்றியும் முதல் நூலை வெளியிட்டு பெருமை சேர்த்தவர்.
மலையக சமுதாயத்தை ஏதோ கல்விஅறிவு குன்றிய பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மட்டுமே என்று குருட்டுத்தனமாகக் கணித்துவிடாமல் மலையகம் முழுவதும், ஆரம்ப காலம் தொட்டே கவிஞர்களும், எழுத்தாளர்களும், வைத்தியர்களும், சோதிடர்களும், சிற்ப, ஒவிய வல்லுனர்களும், கைவினைக் கலைஞர்களும் இருந்தனர் என்ற உண்மையை நாம் மறந்து விடாமல் நினைவில் நிறுத்திக் கொள்ள இத்தகைய வெளியீடுகளும் பணிகளும் நமக்கு உதவுகின்றன.
தமிழர் வழிபாட்டு முறைகள் ஆரிய தெய்வீக கோட்பாடுகள், கிராமிய வழிபாட்டுப்பாரம்பரியங்கள் போன்றவற்றை விரிவாக நோக்காது ஒரு கலப்பட கண்ணோட்டத்திலேயே இங்கு எடுத்தியக்கப்பட்டிருக்கின்றது. இது மிகவும் சிக்கலான ஆய்வுத்துறை எனினும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஒரு அசாத்திய துணிச்சலுடன் தான் இந்த தீமிதிப்பை. முத்துமாரியம்மனை முன்நிறுத்தி நடத்தி இருக்கிறார்.
மலையக மக்களின் வழிபாட்டு பாரம்பரியங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். மலையகத் தெய்வங்கள் பற்றியும் மலையக மக்களின் சமய நெறிகள், சமய நம்பிக்கைகள், சடங்குகள் பற்றியும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளபல வாய்ப்புகள் உண்டென்பதை இந்த முன்னோடி நூல் எடுத்துக் காட்டுகின்றது. கவாத்து சாமி கும்பிடுதல், சில மரங்களை தெய்வீக மரங்களாக கருதிக் கும்பிடுதல், தீமிதித்தல், மிருகங்களைப் பலி இடுதல், மதுபானங்களை படைத்தல், சுருட்டுப் படைத்தல் போன்ற பல்வேறு பாரம்பரியங்கள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். மலையக நாட்டார்
57

Page 40
வழக்காற்றியல் ஒரு பெரும் கலைச் சுரங்கமாகும். இதிலிருக்கும் பாடல்கள் அனைத்தும் இலங்கையின் மத்திய பிரதேசத்தில் இருந்திருக்க வேண்டிய வெறும் வனாந்தரத்திற்குப் பதிலாக ஒரு யெளவனமிக்க நந்தவனத்தையும் அந்த நந்தவனத்தை உருவாக்கிய பிரமாண்டமான மனித உழைப்பின் மகோன்னதத்தையும் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சாட்சியங்களாக மிளிர்வன. மலையக மக்களின், மானுடவியல், சமூகவியல் சார்ந்த இந்த ஆய்வு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழகத்திலிருந்து இங்கு வந்து வேரூன்றிய பின் நமக்கு ஒரு தனித்துவம் ஏற்பட்டு விடுகின்றது. எப்படி இந்தியாவிலிருந்து இங்கு கொண்டு வந்து நடப்பட்ட தேயிலை இன்று "சிலோன் டீ" என்ற ஒரு சிறப்பு மகுடத்தைப் பெற்று விட்டதோ அதுபோல் மலையக சமுதாயம் தமது சிறப்பு முத்திரையினைப் பதிக்க வேண்டும். மலையகம் அனைத்திலும் வழங்கி வரும் நாட்டார் பாடல்கள் மலையக மக்களின் எழுச்சிகள், சந்தோஷங்கள், துயரங்கள், காதல், சோகத்தை மலைநாட்டார் பாடல்கள் மிகவும் அற்புதமாக வெளிக்காட்டுகின்றன. மலையகத்திற்கு கிடைத்த இந்த அரும்பெரும் பண்பாட்டைத் தொகுக்கும் பணியில் இளைய தலைமுறையினர் ஈடுபட வேண்டும்.
58

குறிஞ்சிப் பூ
எனக்கொரு கவிஞன் இல்லை என ஏங்கிய இலங்கை அன்னைக்கு, "என்குரல் உன் புகழ் பாடிட ஏற்றிடுதாயே உன்னரும் மைந்தர்கள் உணர்ந்துனைப் போற்றிடும் வரை" என்று டப்ளியூ. எஸ். சீனியர் பாடிச் சென்றார். இன்று அவர் வாய் மொழி பலித்துள்ளது. இலங்கையன்னையின் கூந்தலில் இன்று குறிஞ்சிப்பூ சூடுகிறோம். பல்லாண்டுகளுக்கு ஒரு முறை மலர்ந்து மறைவது குறிஞ்சிப்பூ மலைநாட்டில் நம்மவர் குடியேறி ஏறக்குறைய 130 வருடங்களாகின்றன. இப்பொழுதுதான் ஒரு குறிஞ்சிப்பூ மலர்ந்திருக்கின்றது. இனி இதன் மணம் நிறைந்து பல மலர்கள் மலையகத்தில் பரிமளிக்கும் என நாம் நம்புவதற்கு முன்னோடியாக முகிழ்த்திருப்பது குறிஞ்சிப்பூ அதன் அழகில் இனிமையில் நாம் மயங்கிவிடாமல் சிறிது சிந்தித்தோமானால், ஏன் மலர்ந்தது இந்தப்பூ என்ற வினாவிற்கு விடை காணலாம்.
பெருமூச்சில், கண்ணில் தங்கள் காவியத்தைப் படைத்து வந்த நம் மலைநாட்டு மக்களிடையே இன்று கண்ணிரை, கலக்கத்தை, கவியாக்கும் காளையர்கள் பலர் தோன்றியுள்ளார்கள். இன்சுவைத் தமிழில் எம்மவர் ஏக்கத்தை எடுத்துரைக்கும் ஏந்தல்கள் தமது உள்ளக் குமுறல்களை ஏட்டில் தவழவிட்டதால் இன்று மலர்ந்தது குறிஞ்சிப்பூ போருக்கு செல்வோருக்கு புத்துணர்வூட்டுவன போன்ற கவிதைகள், இளைஞர்கள் ஆனதால் அவர்களின் இன்ப அனுபவங்களில் தோய்ந்தெடுத்த கவிதைகள், நம்மவர் சோகவாழ்விலும் கவிஞர்கள் கண்ட எழிலினைக் காட்டும் கவிதைகள், தமிழினை, எமது இலட்சியத்தை உள்ளத்தில் ஏற்றிடும் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் அனைத்தையும் தன்னிதழ்களாகக் கொண்டு மலர்ந்திருக்கின்றது குறிஞ்சிப்பூ மலைநாட்டு மக்கள், "கத்திபட்ட ரப்பர் மரச்
1965ல் மலையகக் கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுதியாக கவிஞர் ஈழக்குமார் வெளியிட்ட குறிஞ்சியூ'நூலுக்கு ஹட்டன் ஹைலணிளப் கல்லூரி அதிபராக இர சிவலிங்கம் பணிபுரிந்த காலத்தில் எழுதிய முன்னுரை
59

Page 41
சுரப்பைப் போல கருத்தினிலே புத்துணர்வு கனல் பிறக்க, நித்திரைக்கு விடை கொடுத்து" நிமிர்ந்து விட்டார் என்ற இனிய செய்தியை எடுத்துரைக்க மலர்ந்ததுதான் குறிஞ்சிப்பூ கவிஞர்கள் வாழ்த்தொலி கூறிவிட்டார்கள். இனி மலைநாட்டின் எதிர்காலம் சிறப்பும், சீரும் மிக்கதாய்த் திகழும். இளைஞர் இயக்கத்திற்கு இக் கவிதைகள் இலட்சிய கீதங்கள். இன்று சமுதாயத் துறையிலே மட்டுமல்ல இலக்கிய உலகிலும் எம்மவர் மாற்றம் காணவிழைந்தனர் என்பதற்கோர் இலக்கணமாய் இந்நூல் வெளியீடு அமைந்துள்ளது. இந்நூலினைக் காணும் போதே நெஞ்செல்லாம் கொள்ளை இன்பம் குலவிடுகின்றது. மலைமகளே! உன் மக்கள் உன்மத்தர் அல்லர் ; கேள் அவர்கள் சங்கநாதத்தை.
மகிழ்ச்சிப் பெருக்கில் இன்னுமொன்றை மறந்திடக்கூடாது. உள்ளே காணும் கவிதைகள் அனைத்திலும் சொற்களை மீறி அழகும் இனிமையும் வழிந்தோடுகின்றனவென்று கூறமுடியாவிட்டாலும், எங்கள் நெஞ்சின் சூட்டினைப் பார்க்கலாம்! ஆசை அலைகளின் ஆர்ப்பாட்டத்தைக் கேட்கலாம்! இப்பொழுதெல்லாம் மலைநாட்டு எழுத்தாளர்கள் இலங்கைப் பத்திரிகைகளிலெல்லாவற்றிலும், இந்தியப் பத்திரிகைகள் சிலவற்றிலும் பல பக்கங்களை ஆக்கிரமித்துக் கொள்ளுகிறார்கள். இனிய, அழகிய தமிழ் ஏடுகளின் வரிசையிலே மலைநாட்டு எழுத்தாளர்களின் ஏடுகளும் இடம்பெற்று இறுமாந்திருக்கும் என்ற எக்களிப்பில் இச்சுவை சோலை சென்று,கவித்தேன் ஆர்ந்து, நாமுந்தான் பெருமிதப் படுவோமே!
எமது இளங்கவிஞர் ஈழக்குமார் அவர்களின் இந்த வெளியீட்டு முயற்சி நமது முதல் "குறிஞ்சிப்பூ" அவருக்கு மலையக எழுத்தாளர்களின் வாழ்த்து முத்திரை என்றுமிருக்கும். ஈழக்குமார் நமது பெருமைப்பூ
60

தமிழோவியன் கவிதைகள்
அறுபதுகளில் அரும்பிய மலையக மறுமலர்ச்சி ஒரு புதிய பரிமாணத்தை உள்ளடக்கி இருந்தது. அதுவரைக்கும் நடைபெற்ற மலையகப் போராட்டங்கள், கிளர்ச்சிகள், எழுச்சிகள் அத்தனையுமே மலையகத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், கோரிக்கைகள், புறக்கணிப்புகள் ஆகியவற்றை மையமாக வைத்தே நடைபெற்றன. மலையக மக்களின் மானுடம் மறக்கப்பட்டிருந்தது.
ஆனால் அறுபதுகளில் தன்மான உணர்வுகளால் செதுக்கப்பட்ட இளைஞர் இயக்கம் தரத்தாலும், தன்மையாலும் மாறுபட்டதாக இருந்தது. கற்ற இளைஞர்கள் தமது சமுதாயத்தின் தாழ்வுச் சிக்கல்களை அகற்றி தன்மான உணர்வுகளை சமுதாய சக்தியாக மாற்றத் துணிந்தனர். சமுதாய இழிவுகளைச் சாடிக் களைய போர்க்கோலம்பூண்டனர். அந்த புதிய சக்தியின் உத்வேகத்திற்கு எழுத்து ஓர் ஆயுதமாக அமைந்தது. மலையக மக்களின் இதயங்களில் நிரம்பி வழிந்த துயரங்களையும், சோகங்களையும், ஆத்திரங்களையும், எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும், விரக்திகளையும் வெளிக் கொணர்வதற்காக கலை - இலக்கிய பரிமாணங்களை கருவியாகக் கைக்கொண்ட மறுமலர்ச்சி அறுபதுகளில்தான் மலையகம் முழுவதிலும் பரவியது.
அவர்கள் மானுட உணர்வுகளுக்கு மதிப்பளித்தனர். இதயத்தின் ஏக்கங்களுக்கு குரல் கொடுத்தனர். வாழ்வின் அவலங்களை எழுத்தில் திட்டினார்கள். எழுத்தை ஒரு கருவியாக, ஒரு உந்து சக்தியாகப் பயன்படுத்தினார்கள்.
கலை ஒளிமுத்தையாபிள்ளை நினைவுக்குழுவின் சார்பில் எச். எச். விக்கிரமசிங்க வெளியிட்ட தமிழோவியன் கவிதைகள்' (2000) கவிதைத் தொகுப்பிற்கு கோவையிலிருந்து 1996ல் இர. சிவலிங்கம் எழுதிய முன்னுரை
61

Page 42
மலையகம் என்று தமக்கு ஒரு தன்மான மகுடம் சூட்டிக் கொண்டார்கள். மலையகக் கவிதைகள், மலையகச் சிறுகதைகள், மலையகக் கட்டுரைகள், மலையகக் கலைவிழா, மலையகக் கவிரயங்கம், மலையக நாடகங்கள், மலையக ஏடுகள், வெளியீடுகள் என்று இந்த சமுதாய விழிப்புணர்வு பொலிவுடன் பவனி வந்தது. இவை மலையக மக்களின் இதயங்களையும், எண்ணங்களையும் எளிதாக ஆக்கிரமித்துக் கொண்டன. ஒரு மக்களின் எழுச்சியில் கலாசார சக்திகளுக்கு எத்தனை பங்குண்டு என்பதை இந்தப் புதிய பரிமாணங்களும், தோற்றங்களும் நிலைநாட்டின.
மலையக வரலாற்றை எழுத முனைந்த, எழுதி வடித்தவர்கள் இந்த அடிப்படை சக்தியின் உத்வேகத்தையும், பங்களிப்பையும் இருட்டடிப்பு செய்திருப்பது வேதனைக்குரியது. எனினும் கவிஞர் தமிழோவியன் போன்ற அந்த அறுபதுகளில் முளைத்த முன்னோடிகள் இந்த உண்மைகளை உறுதிப்படுத்துகின்றனர். அந்த அறுபதின் அருணோதயத்தில் பூத்த மலர்க்கொத்தைத்தான் இந்த கவிதை வெளியீடு தாங்கி வருகிறது.
அக்காலகட்டத்தில் ஒரு மலையக எழுத்தாளனின் எழுத்து எதி. லாவது அச்சேறாதா என்று பலர் ஏங்கினார்கள். அந்த ஏக்கத்திற்கும், அவர்களின் எழுத்தார்வத்திற்கும் எழுத்தாற்றலுக்கும் வழிவகுத்தது போல் "வீரகேசரி", "தினகரன்", "தினபதி" போன்ற நாளிதழ்கள் மலையக எழுத்தாளர்களுக்கு தனியிடம் ஒதுக்கின. மலையக இலக்கியம் வீறுநடை போட்டது. மலையக எழுத்தாளர்களின், புதிய பரம்பரையினரின் ஆக்கங்களை வெளியிட்டு ஊக்குவிக்க பலர் முன்வந்தார்கள். இலங்கை ஏடுகளில் மட்டுமல்ல இந்திய ஏடுகளிலும் மலையக எழுத்துக்கள் இடம் பெற்றன : பாராட்டுப் பெற்றன. மலையக மக்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் இந்த இலக்கியக் குமுறல்கள் புதிய உத்வேகத்தையும், சக்தியையும் ஊட்டின.
எல்லா ஒடுக்கப்பட்ட இனங்களும், மக்கள் சமுதாயங்களும் எழுத்தை ஒரு கருவியாகவே பயன்படுத்தி இருக்கின்றன. அமெரிக்காவில் கறுப்பு மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், சமுதாய மறுமலர்ச்சிக்கும் எழுத்தைக் கருவியாக உபயோகித்துள்ளனர். தமிழகத்திலே கூட திராவிட இயக்கங்கள் பார்ப்பனிய சக்திகளை முறியடிக்க எழுத்தை ஓர் ஆயுதமாக பயன்படுத்தியுள்ளன. இன்று கூட தலித் இலக்கியம் ஓங்கி வரும் தலித் சக்திகளுக்கு வலுவூட்டும் ஒரு கருவியாக இருந்து வருகிறது. முக்கியமாக கவிதைகள் இந்த உணர்வுப்பிழம்புகளுக்கு உருவம் கொடுப்பதில் முதலிடத்தை வகிக்கின்றன.
கவிதை என்றால் என்ன? அது மரபுவழி நிற்க வேண்டுமா?உள்ளத்து உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தால் போதுமா என்றெல்லாம் முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இலக்கிய சர்ச்சைகள் ஏற்பட்டது உண்டு. இன்று அந்த நிலையில்லை. புதுக் கவிதைகளுக்கும், ஹைக்கூ கவிதைகளுக்கும் உயிரூட்டுபவன் கவிஞனே, இலக்கண மரபுகள் அல்ல என்ற நிலையை உருவாக்கி விட்டன.
62

கவிமணி தேசிகளிநாயகம் பிள்ளை அவர்கள் கவிதையைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார் :
"உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெளிந்துரைப்பது கவிதை "
இந்தக் கூற்றுப்படி தமிழோவியன் அவரது உள்ளத்து உணர்வுகளையும், இளமை அனுபவங்களையும் கவிதை நடையில் வடித்துத் தந்திருக்கின்றார். இக்கவிதைகள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட காலத்துக்குட்பட்டன. அறுபதுக்கும், எழுபதுக்கும் இடைப்பட்ட காலத்திற்குட்பட்ட கவிதைகளே இந்நூலில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. அக்கால கட்டத்திற்குரிய இளைஞர்களின் குறிப்பாக மலையக இளைஞர்களின் அனுபவங்களை கவிதையாக்கியுள்ளார் தமிழோவியன். தோட்டத்து மக்களின் வாழ்க்கை அவலங்களை ஒவியங்களாகப் படைத்துள்ளார். சாதி, வறுமை, குடிப்பழக்கம், விரக்தி போன்ற உணர்வுகள் நன்கு படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. பெரும்பாலும் இக்கவிதைகள் "கதைக் கவிதைகளாகவே" அமைந்துள்ளன.
தமிழோவியனின் மலையகப் பற்றினைப் பளிச்சிட்டுக் காட்டும் சில வரிகளை குறிப்பிடாமல் இருக்க முடியாது.
"கடலிடை முத்து//இன்பக்
காவியத்திyே/தனது உடலிலே மரகதப் பட்டை
உடுத்திய இலங்கை என்று கடனிலைக் கடந்தே வந்தே7ர்
களிப்புடன் கூறும் வண்ணம் திடமிகு தமிழர் வளர்த்த
தேயிலை மணக்கும் நாடே
என்ற வரிகள் உள்ளத்திலே பல்வேறு உணர்வுகளைத் தூண்டி விடுகின்றன. மலையகத் தமிழர்களை அந்நியர்களாகப் பார்க்காமல் மண்ணின் மைந்தர்களாய், சிற்பிகளாய் காணவேண்டிய கட்டாயத்தை இக்கவிதை வரிகள் பறைசாற்றுகின்றன.
நல்ல கவிதை பற்றிப் பேசுகையில் வில்லியம் வோர்ட்ஸ்வேத் என்ற ஆங்கிலக் கவிஞர் "பொருளின் ஆழமும் மொழியின் பொலிவும் உணர்வின் கனலும்தான் அத்தியாவசியமானவையே தவிர இலக்கண அமைப்பும் நடையுமல்ல" என்று குறிப்பிட்டார். "கவிதையின் கண்ணிர், தேவதைகளின் கண்ணிர் அல்ல. மானுடத்தின் கண்ணிரே" என்று வோர்ட்ஸ்வேத் கூறுகிறார்.
63

Page 43
அந்தக் கண்ணோட்டத்தில் காணும்பொழுது தமிழோவியனின் கவிதைகள் மலையக மக்களின் வாழ்வைப் பொருளாகக் கொண்டு அவரது உணர்வுகளை சொற்சரமாக்கி அனுபவக் கவிதைகளை நமக்கு அள்ளிக் கொடுத்திருப்பது மலையக இலக்கியத்திற்கு அவர் அர்ப்பணிக்கும் அலங்காரக் கோவையாகும்.
எப்போதோ வெளிவந்திருக்க வேண்டிய தமிழோவியன் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ள கலைஒளிமுத்தையா. பிள்ளை நினைவுக்குழுவிற்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
ஒரு சிற்றெறும்பின் சுறுசுறுப்புடன் என்றும் தணியாத மலையகத் துடிப்புடன் செயற்பட்டுவரும் அன்புத்தம்பி விக்கிரமசிங்க அவர்களின் பணிகள் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.
எத்தனை ஆயிரம் மைல் தொலைவில் வாழ்ந்தாலும் மலையக மக்கள் மீதும் மலையக எழுத்தின் மீதும் ஆர்வமும் அக்கறையும் ஆத்மார்த்தமான ஈடுபாடும் கொண்டு இந்தப் பணிகளுக்கெல்லாம் ஆதாரமான பலமாகத் திகழும் திரு. மு. நித்தியானந்தனின் சமூகப்பணி விதந்துரைக்கத்தக்கதாகும்.
தமிழோவியனின் கவிதைகள் வெளியீடு மலையகத்தின் இளங். கவிஞர்கள் ஒரு புதிய கவிப் பெருக்கையும் கலைப் பெருக்கையும் உருவாக்கத் துணை புரியும் என்று என் போன்றோர் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கின்றனர்.
64

உரைநடையுகம்
ஒரு மொழியின் மழலைதான் கவிதை என்பது ஆய்ந்தோர் கூற்று. உலக இலக்கியங்கள் அனைத்தினதும் முதற்தோற்றம் கவிதையாகவே இருந்தது. பூர்விக மனிதர்களின் உணர்வுகள் எல்லாம் இசையிலும், நாட்டியத்திலுமே கூறப்பட்டன. இயற்கை ஒலிகளானநீரோட்டம், காற்றசைவு ஆகியவற்றில்கூட ஒரு இசைத் தன்மை காணலாம். பழங்கால மனிதர்களின் பேச்சுக்கூட கவிதைப் பாங்கிலே அமைந்திருந்தது. குறவர் பாடல், வேட்டுவர் குரவை, நாடோடிப் பாடல்கள், தாலாட்டு, ஒப்பாரி ஆகியவை இசையோடமைந்து கவிதை அமைப்பாகவே இருக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகளைப் போல பண்டைய மனிதர்களும், ஆடியும் பாடியும்தான் தமது உணர்ச்சிகளை வெளியிட்டார்கள். இன்றுகூட நமது மகிழ்ச்சியையும் துக்கத்தையும் தெரிவிப்பதற்கு பறை முழக்குதல், நாதஸ்வரம் முழங்குதல் போன்ற இசை ஒலிமுறையைப் பின்பற்றி வருகிறோம்.
அதேபோன்று பண்டைய உலகில் எல்லாவகையான கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும் கவிதை நடையையே நாடியுள்ளார்கள். கவிதை நடை மொழியின் இயற்கை நடையாகவும் கருதப்பட்டு வந்துள்ளது. பண்டைய சமய நூல்கள் கவிதை நடையிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன. மிகப் பழைய ரிக்வேத சுலோகங்களும், எபிரேய மொழி நூல்களும், சீன நூல்களும் கவிதை நடையிலேயே யாக்கப்பட்டுள்ளன. இக்கூற்று நமது மொழிக்கும் சிறப்பாகப் பொருந்தும். நாம் இழந்துவிட்ட அகத்தியம் முதல் போற்றிப் புகழும் சங்க இலக்கியம், காவியங்கள், பிரபந்தங்கள், உலா, ஊஞ்சல் ஆகிய அத்தனை இலக்கிய, இலக்கண நூல்களும் கவிதையாகவே அமைந்துள்ளன. இலக்கியம் என்றாலே கவிதைதான் என்ற எண்ணம் அண்மைக்காலம் வரை மேலோங்கியிருந்தது. கவிதை இலக்கண இலக்கியத்திற்கு மட்டுமல்ல,
இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி197ல் வெளியிட்ட தமிழ்மன்ற ஆண்டுமலரில் இலங்கைக் கல்வி அமைச்சின் பிரதம கல்வி அதிகாரியாக இர. சிவலிங்கம் பணியாற்றியபோது எழுதிய கட்டுரை.
65

Page 44
வைத்திய சோதிட நூல்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மன்னர்கள் கவியரங்குகள் வைப்பதும், பொற்கிழிகள் வழங்குவதும் பண்டைக்கால நிகழ்ச்சிகளாக விளங்கியுள்ளன. மன்னர்களின் அறிவுறுத்தல்கள் ஆகியன. கூட கவிதையிலேயே அமைந்தன. உதாரணமாக ஒரு குடிநீர்க் குளத்தருகே. சோழர் காலத்தில் பின்வரும் எச்சரிக்கை ஒன்று கல்லில் செதுக்கப்பட்டிருந்தது.
நீரைப் பிழைக்கின் நெடுமுடி மன்னன் கடுங்கோபங்கொள்ளும்"
அறிவியல் நூல்களும், இலக்கண நூல்களும், நீதிநூல்களும் கவிதை நடையில் தோன்றியதற்குப் பல காரணங்கள் காணலாம். மொழியின் இயற்கை நடை கவிதை நடையாகக் கருதப்பட்டது. கவிதை நடை மனனம் செய்வதற்கு எற்றதாக அமைந்தது. நூல்கள் அதிகமில்லாத காலங்களில், நூல்களே இல்லாத காலங்களிலும் வாய்மொழியாக இலக்கியங்கள் உலவிவந்த காலங்களிலும், இலகுவில் மனனம் செய்வதற்கு ஏற்றதாய் கவிதை நடையிலேயே கருத்துக்களும், சமய கோவைகளும் அமைந்தன. நூல்கள் வந்த பிறகும் கூட, நன்கு பண்பட்ட கவிதை நடையே மொழியின் முக்கிய நடையாய் அமைந்துவிட்டது. பல மக்களுக்குப் பாடி, விளங்க வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் நூல்கள் இன்மையினாலும், கல்வியறிவின்மையினாலும் ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்கும் கவிதை நடையே, இசையோடு பாடுவதற்கு ஏற்றதாய் அமைந்தது. கல்வி, இலக்கிய அறிவு போன்ற பண்புகள் ஒரு சிலருக்கே, உயர் குடியினருக்கே ஏற்றதாகக் கருதப்பட்ட காலத்தில் கடின கவிதை நடையே புலவோர்க்கு ஏற்ற மொழிநடையாய் அமைந்தது. எனினும் ஒரே வகையான கவிதை நடை எல்லாவிதக் கருத்துக்களை கூறுவதற்கும் ஏற்றதாய் இருக்கவில்லை. ஆதலின் பலவகைப் பா முறைகள் வகுக்கப்பட்டன. வெண்பா, விருத்தம், அகவல் எனப் பல முறைகள் தோன்றின. ஆகவே, பண்டைய மரபின் படி, இலக்கியம் என்றால் அது கவிதையாகத்தான் இருக்க வேண்டும். கட்டுரை. களிலோ சொற்பொழிவுகளிலோ மேற்கோள்கள் காட்டுபவர்கள் எல்லோரும் கவிதை மேற்கோள்களையே எடுத்தாளுவார்கள். கவிதையின் தாக்கத்தினால் உரைநடையை வாசிக்கும் பொழுதுகூட, இராகத்தோடு வாசிப்பவர்கள் இன்றுமிருக்கின்றார்கள்.
கவிதை மொழியின் மழலைப் பருவந் தொட்டு, காவியங்களினூடாக, யமகம் அந்தாதி காலங்கள் வரை மட்டுமல்ல பாரதியின் பள்ளுவரை எழுத்துலகில் செலுத்தி வந்த தன்னாதிக்கம் இப்பொழுது குன்றி விட்டது. அருகி வருகிறது என்பதே எனது கூற்று. நாம் வாழ்ந்து வருகிற காலம் உரை நடைக்காலம். ஏதோ சில தேவைகளுக்கும், உணர்வுகளுக்கும் இன்னும் கவிதை நடை பயன்பட்டு வந்தாலும், இன்றைய காலநிலைக்கும் கருத்து வளர்ச்சிக்கும் ஏற்ற மொழிநடை உரைநடையேயாகிறது.
66

இன்று கல்வி பொதுச் சொத்தாகிவிட்டது. ஒவ்வொருவரதும் உரிமையாகி விட்டது. எந்தக் கருத்தை எவ்வளவு எளிதாக, எழிலாகக் கூற முடியுமோ, அவ்வாறு கூறுவதே மொழியின் நோக்கமாய் இருத்தல் வேண்டும் என்ற எண்ணமே இன்று நின்று நிலவி வருகிறது. மந்திரங்கள், யமகங்கள், புரியாத கடுந்தமிழ் நடை ஆகியன இன்று ஒதுக்கப்பட்டு வருகின்றன. இக்கருத்தின் தாக்கத்தை இன்றைய கவிதைகளில் கூடக் காணலாம். கவிதைகள் உரைநடையில் எழுதப்படுகின்றன என்ற பிரமை தோன்றுமாறு, புதுக் கவிதைகள் வந்து கொண்டிருக்கின்றன. கல்லாத மக்களின் மொழிநடையில் கூட கவிதைச் சுவையோடு பாடலாம் என தென்னிந்தியத் தமிழ் கவிஞர் கொத்தமங்கலம் சுப்புநிரூபித்திருக்கின்றார். இயந்திரங்களும், அளவிலா நூல்களும், எல்லோருக்கும் இலவசக் கல்வியும் ஏற்படுத்தியுள்ள புரட்சிமிக்க புதுயுகமாற்றங்களுக்கு ஏற்ற மொழிநடை உரைநடைதான்.
இன்று வெளிவருகின்ற நூல்கள் பெரும்பாலும் உரைநடையிலே வெளிவருகின்றன. உயர்ந்த கருத்துக்கள், உலகுவக்கும் கருத்துக்கள் அனைத்தும் உரைநடையிலேயே வெளிவருகின்றன. கவிதையே இலக்கியம் என்ற காலம் கரைந்து விட்டது. இன்று கவிதை சில துணுக்குகளாக பத்திரிகைகளில் மினுக்கிடுகின்றன. சினிமாப்பாடல் துறையே தஞ்சமென்று கவிதை சரணடைந்துள்ளது. கவிஞர்கள் கூட பெரும்பாலும் உரைநடை எழுதுபவர்களாகவே இருக்கின்றார்கள். இருந்திருந்து உரை நடைப்பாணியிலே கவிதை பாடுபவர்களாகத்தான் பெரும்பாலான கவிஞர்கள் இருக்கின்றார்கள். அனுபவ வாயிலாகக் கூறின் அதிகம் எழுத முடியாதவர்கள், கருத்துப் பஞ்சக்காரர்கள், நிறைய எழுத அவகாசம் இல்லாதவர்கள், கிண்டல்காரர்கள், சில கிளர்ச்சிக்காரர்கள் போன்றோரே இன்று பெரும்பாலும் கவிதை எழுதி வருகின்றார்கள். ஆதலின் கவிதை தனது முக்கியத்துவத்தை முற்றாக இழந்து விட்டது.
கவிதையிலே பத்திரிகைகள் நடத்த முடியாது சில ஏடுகள் நடத்திப் பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். கவிதை மூலம் இன்று அறிவுலகில் ஏற்பட்டிருக்கின்ற எல்லா மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் எடுத்துரைக்க முடியாது. சில அறிவியல் கவிதைகளை எழுதும் முயற்சி ஏற்பட்ட தெனினும் அதுமுயற்சிநிலையிலேயே தளர்ச்சி அடைந்துவிட்டது. கல்வித்துறைக்கோ புதுயுக நூல்வெளியீட்டுத் துறைக்கோ பெரிதும் உதவாத கவிதையின்நிலை என்னவாயிருக்கும் ?
கவிதை முற்றாக அழிந்துவிடும் என்று கூறுவதற்கில்லை. அதன் முக்கியத்துவம் உண்மையிலேயே குன்றி விட்டது. ஆனால் சில ஆழ்ந்த உணர்ச்சிகளைச் சுருக்கமாகவோ, சுடச்சுடவோ கூறுவதற்கு கவிதை தொடர்ந்து பயன்படும். காதல் மொழிதற்கும், கடவுளர்பால் பக்தி மொழி. தற்கும் கவிதை நடை தொடர்ந்து பயன்படும். இசையுலகில் கவிதை தொடர்ந்து நடமாடும். மொழியின் எல்லையற்றவாறாக உரைநடை வளர்ந்து வரும் இக்காலத்தில் இருந்திருந்து பளிச்சிடும் மின்னற்பூக்களாக கவிதைகள் சுடர்விடும் என்று கூறலாம்.
67

Page 45
இலக்கியத்தில் மலர்கள்
இயற்கையின் எழில்மிகு சிரிப்புத்தான் மலர்களாய் மலர்ந்து உலகினை உவகையில் ஆழ்த்துகின்றது என்று கவிதையுள்ளம் படைத்தோர் கூறுவர். மலர்களைக் கண்டு மகிழாத மனமிருக்க முடியாது. வாழ்க்கையின் சிக்கலில் வருந்தும் மாந்தர்க்கு ஆறுதல் அளிக்கவும், தூய்மையின் அழகினை என்றும் உணர்த்தவும் மலர்கள் மலர்கின்றன. அவைகள் இயற்கையின் வண்ணக் கோலங்கள். மலர்கள் இன்றேல் அழகுணர்வே மங்கிவிடும். மனிதனின் காட்சியில் கவின் மறைந்துவிடும். மலர்களைக் காணுந்தொறும் மனிதன் உள்ளத்தில் பூத்திடும் உணர்வுப் பிழம்புகளை இலக்கியத்தில் காணலாம். இயற்கைக்கு எத்தனை எழில், மலர்கள் ஊட்டுகின்றனவோ, அத்தனை எழிலையும் ஏட்டில் காட்டிட கவிஞர்கள் காலமெல்லாம் இயற்கையோடு போட்டியிட்டு வருகின்றனர். இது ஒர் அழகுப் போட்டி ; இதில் வெற்றி யாருக்கு, கவிஞனுக்கா, இயற்கைக்கா?
வண்ணங்களை வடிவமாக்கி வாரியிறைத்து கவிஞனுக்கு சவால் விடுகிறது இயற்கை. மெல்லிய இதழ்களில் மணமூட்டி, இதனையும் காட்டுமா உன் கவிதை என்று இறுமாந்து கேட்கிறது இயற்கை. கவிஞன் சளைத்தவனல்ல. உன் மலர்கள் வாடும் மலர்கள். என்மலர்கள் வாடாமலர்கள் ; வாழும் மலர்கள் என்கிறான். "சித்திரத்தினமலர்ந்த செந்தாமரைக்கு" மணமுண்டா என இயற்கை வினவுகிறது. மழை வந்தாலே மங்கிவிடும் மலர்மணம், ஆனால் என் மலர்களுக்கு நான் தருவது கருத்து மணம், அது காலமெல்லாம் மணக்கும். முகர, முகர அதன் மணம் வளருமே தவிர குன்றாது என்கிறான். இயற்கை சிரிக்கிறாள். தேசிக விநாயகம் பிள்ளை கூறுவது போல "பூமகளின் புன்னகை போல்" மலர்கள் பூத்திடுகின்றன. ஆனால் அழகும், மணமும் மட்டுமல்ல, அங்கு உயிரியக்கமல்லவா நடக்கிறது? மலர், மகரந்தம், கனி,
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் 1987ல் வெளியிட்ட குறிஞ்சிமலர்' என்ற மலரில் வெளியான கட்டுரை.
68

விதை, கா, கழனி, செல்வம், வாழ்வு, வளர்ச்சி அத்தனையுமல்லவா மலருக்குள் மறைந்திருக்கிறது. இயற்கை பெருமிதத்தோடு சிரிக்கிறாள். கவிஞன் தோற்றுவிடவில்லை. நீ படைக்கும் உலகைப் போன்று இன்னொரு உலகைப்படைக்கிறோம் யாம். அங்கும் ஓர் உணர்வியக்கம் நடைபெறுகிறது. உன்னுடைய பூவிற்கும் புல்லிதழ் உண்டல்லவா? எங்கள் உலகில் எடை. போட்டுப் பார்த்தெடுத்த, நிறைவான உயிரோவியங்களே கவிதையாய், காவியமாய், உன் கழுத்திலிட்ட அழகு ஆபரணங்களாய் எங்கள் மலர்கள் இயங்குகின்றன என அஞ்சாது உரைக்கிறான் கவிஞன். எத்தனை அழகான மலர்கள் சூடினும், கழுத்திலே ஆபரணம் வேண்டாத மங்கையிருக்க முடியுமா? இயற்கைக்கு ஆபரணம் என்ற உடனே ஆசை பிறந்துவிடுகிறது. கவிஞன் கட்டவிழ்க்கிறான். மலர்கள் மொட்டவிழ்ப்பது போல, முத்து மரகதம் போன்ற கவிதைக் கொத்துகள், இயற்கையின் கன்னங்கள் கனன்று விடுகின்றன. கவிஞன் களிவெறி கொண்டு விடுகிறான். அங்கு அழகு பிறக்கிறது. அவன் அள்ளிக் கொடுத்த மலர்கள் இன்னும் நமது இலக்கியத்தில் எழிலோடு விளங்குகின்றன. அவைதான் இயற்கையின் ஆபரணப் பெட்டகங்கள். அவற்றை நாமுந்திறப்போமே!
நம்மொழியே ஒரு மலர்மாலை என்கிறார் ஒரு புலவர். தமிழ் எம் உயிர் எனக் கூறும் மொழிப்பற்று மிக்க தமிழர்கள் தம் மொழியையே மலர்மாலை எனக் குறிப்பிட்டால் மலர்மீது அவர்கள் தம்மொழி மீது எத்தனை அளவுபற்று வைத்திருந்தார்கள் என்பது தெளிவாகிறது.
"செ7ல் எனும் பூம்போது தோற்றியப் பொருள் என்னும் நல் இருந்திந்தாதுநாறுதல7ல் - மல்லிகையின் வண்டு ஆர்கமழ்த7மம் அன்றே மலையாத தன்தார7ன் கூடல் தமிழ்"
சொல்லை இதழ்களாகவும், பொருளை மணமாகவும் கொண்டது தமிழ்ப்பூ என்று புலவர்,நம் மொழியையே மலராக்கிவிடுகிறார்.நால்வகைநிலத்தையும் (பாலையைத் தவிர்த்து) அங்கு மலரும் மலர்களைக் கொண்டு தான் பெயரிட்டிருக்கிறார்கள். பண்டைத் தமிழர் பெரும்பாலும் கழுத்தில் மாலை அணிந்திருப்பது வழக்கம். மன்னனை 'தண்தாரான்" என்று புலவர் கூறுகிறார். அகநானூற்றுப் பாடல் ஒன்றில் ஒரு மங்கை தனது காதலனை "செச்சைக் கண்ணியன்" என்று குறிக்கின்றான்: "கண்ணியன் என்றால் மாலை குடியவன் என்பது பொருளாகும். போருக்குச் செல்லும் வீரர்களும், வெட்சி, வஞ்சி, தும்பை. வாகை ஆகிய மலர் மாலைகளை அணிந்தே செல்வார்கள். வெட்சிமாலை ஆநிரை கவர்தலையும், மீட்டலையும், வஞ்சிமாலை பாசறை அமைத்தலையும், உழிஞை, முற்றுகையிடுதலையும், தும்பை போர் புரிதலையும், வாகை வெற்றி சூடுதலையும் குறிப்புணர்த்துவதாயும் அமைந்துள்ளன.
69

Page 46
காதல் வாழ்க்கையில் மலர்கள்
காதல் வாழ்க்கையில் மலர்களுக்குப் பெரும் பங்குண்டு. மங்கையர் மலரை விரும்பிச் சூடுவார்கள். ஆடவன் ஒருவன் மங்கைக்கு மலர் சூட்டுவது காதல் உணர்வால் உந்தப் பட்ட செயலாகும். மலர் சூடுவது ஒரு முக்கிய சடங்காகவேமுன்பெல்லாம் கருதப்பட்டது. "மலர்நாறம் நறுமென் கூந்தல்" "கூந்தலில் நறியவும் உளவோ நீ யறியும் பூவே" "நறிய நாறும் நின்கதுப்பு" போன்ற அடிகளால் கூந்தல் மலர்மணம் கமழதக்க அளவிற்கு மலர் சூடியிருந்தது என நாம் அறிகிறோம். கூந்தல் மணத்தையும், மலர் மணத்தையும், இணைத்தும், பிரித்தும் கவிதை மலர்கள் தமிழ் இலக்கியத்தில் பூத்துள்ளன. நம் நாட்டில் தமிழ்ப் பெண்களிடையே இப்பழக்கம் அருகி வருவது வருந்தற்குரியதாகும். தம் உடலினுக்கு அழகூட்ட, செயற்கைப் பொருள்களை நாடும் நம் நங்கையர், மலர்களை நாடுவாராயின் உண்மையிலேயே அழகு பூணப் பெறுவர்.
தமிழ் மணமுறை
காதலில், கூந்தலில் மலர் பெய்து, வதுவையில் கழுத்தில் மாலைசூடி ஏற்பது தமிழ் மணமுறையாகும். இருவரின் இணைப்பிற்கு மணம் என்ற பெயர் சூட்டியமையேநம் வாழ்வும் மலரும் எவ்வளவு நெருங்கியிருக்கின்றதென்பதை உணரச் செய்கிறது. இது பற்றிய பல சுவையான கவிதைகளை நம் சங்க இலக்கியத்தில் காணலாம். இரு காதலர்கள் சந்திக்கின்றார்கள். காதலன் முல்லைமலர்ச் சரமும், கொண்டை மாலையும் கொண்டு வந்து காதலியின் கூந்தலில் சூடி அழகு பார்க்கிறான். அவளுக்கு அவை இணையற்ற அணிகள். இருவரும் மறைவில் சந்தித்து மகிழ்ந்த பின்னர், மங்கை வீடு திரும்புகிறாள். கூந்தலில் மலர் இருக்கிறதே, யார் சூடியது என்று அன்னை கேட்பாளோ என்ற இயற்கையான அச்சம் அவளை வாட்டுகிறது. கேட்காவிட்டாலும், சந்தேகிப்பாளோ என்று சிறிது தயங்குகிறாள். கழட்டி, எறிந்து விடலாமா என்று சிந்திக்கிறாள். "கடவுளே! என் உயிரனைய காதலன் சூட்டிய இம் மலரையா எறிவது?" பெண்களுக்கு இத்தகைய சந்தர்ப்பங்களில் அறிவு சுடர்விட்டெரியும். மலரை கூந்தலுட்சூடி, கூந்தல் முடிக்கிறாள். மலர் கூந்தலில் இருக்கிறது. அவளுக்கு மகிழ்ச்சி. அன்னையின் கண்களுக்குத் தெரியாது. பெரிய ஆறுதல். வீட்டிற்கு வருகிறாள். இன்ப நினைவில் உள்ளமும் உடலும் இன்னும் துள்ளித் துடித்துக்கொண்டே இருக்கின்றன. கூந்தலுக்கு நெய் தடவி, சிங்காரிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடே, கூந்தலை அவிழ்த்து வீசிக் கொண்டு நடக்கிறாள். ஆனால் அவள் கூந்தலைக் கோதிக் கொண்டே செல்லும் பொழுது முடி மறைத்து வைக்கப்பட்டிருந்த "அந்தப் பூ" தாயின் முன்னே போய் விழுந்தது.நாணிஓடி விட்டாள். ஒடித் தோழியிடம், கூறுகிறாள். இந்தப்பூ எத்தனை சதி செய்துவிட்டது. கவிஞனின் இந்த முல்லை, இயற்கையின் முல்லையைவிட அழகு பொதிந்து மலர்ந்திருக்கிறது. இதோ அந்த முலலை.
70

"புல்லினத்த7யமகன், குடி வந்ததே7ர்
முல்லையெ7ரு காழும் கண்ணியும் மெல்லியல் சுந்தலுட் பெய்து முடித்தேன் உரைவிரித்த கதுப் போடே அன்னையும் அத்தனும் இல்லர7யாய்நான அன்னைமுன்
விழ்ந்தன்றப்பூ"
இந்தக் கலித்தொகைப் பாடலின் அழகுச் சிறப்பிற்கு இந்தக் களவு முல்லையே காரணம். அன்னையும் அத்தனும் கேள்வியே கேட்கவில்லை. கேட்பானேன்? முல்லைத்தான் சொல்லிவிட்டதே!
காதல் கனிந்த வதுவையிலும் மலரே முதலிடம் பெறுகின்றது.
"நன்மனை வதுவை அயரவிவள்
பின்னருங் கூந்தல் மலரணிந்தோயே"
என்பதனால் மலரணிந்தான் கணவனாகின்றான் என்றறிகிறோம். "குழந்தைகளுக்கு" தலைவாரிப்பூச்சூடு"கிறோம். இல்லத்தின் முன்றலிலே கோலமிட்டு பூ வைப்பார்கள். விருந்துக்கு வருபவர்களுக்கு மலர்ச்செண்டு தருவதும் வழக்கமாகும். இன்று, மேநாட்டுப் பாணியிலே பூங்கொத்தைச் சாடிகளில் வைக்கிறோம். ஆனால் கடிதம் எழுதுவதற்குக் கூட மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிலப்பதிகாரத்திலே ஒரு கடிதம், மாதவி கோவலனுக்கு எழுதுகிறாள். ஆத்திரம் கொண்ட காதலனுக்கு காதல் பொழிந்து ஆறுதல் கூற எழுதுகிறாள். எதில் எழுதுகிறாள்?
"எதிர்பூஞ்செல்வி இன்டநிலத்து யாத்த
முதிர்பூந்தாழை முடங்கல் வெண்தோட்டை "
முதிர்ந்த தாழம்பூவிலே எழுதுகிறாள். அத்துணை மணம் இருக்கிறது. அது ஒரு பூ இத்தகைய கடிதத்தை எத்தகைய உறையுள் போடவேண்டும்?
"சண்பக மாதவிதம7லங் கருமுகை வெண்பூ மல்லிகை வேரொடுமிலைந்த அஞ்செங்கழுநீர் ஆயிதழ் கத்திகை"
இம்மலர்களை யெல்லாம் பறித்து அவற்றையே ஓர் மலர்க்கூடாக்கி, அதனுள் தனது தாழம்பூ கடிதத்தை வைத்தனுப்புகிறாள் மாதவி. மலர்களை உபயோகிப்பதில் இயற்கையையே மிஞ்சி விடுகிறான் கவிஞன்.
மலர்களை, சிரிப்பிற்குத் தான் பல கவிஞர்கள் ஒப்பிட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பாரதியைப் பின்பற்றியே அவ்வாறு கூறுகிறார்கள்.
"சோலை மலரெ7ளி/ே7
உந்தன் சுந்தரப் புன்னகைத7ன்"
- பாரதியார்,
71

Page 47
"சேர்த்துக்கட்டிய முல்லை வேண்டுமென்றென்
சேயிழை அவள்சிரிப்பு/முல்லைதந்தாள்"
- பாரதிதாசன்
"பூமகளின் புன்னகைகோல்பூத்திடுவோமே"
- தே. வி. பிள்ளை
"ஓர் பூங்கொடி, முகிழ்த்தல் நல்லரும்ப7ல்நகைத்து"
- முடியரசன்.
ஆனால் இளங்கோ மலர்களை ஆடையாகக் காண்கிறார். மிக அழகான கற்பனை.
"மருங்கு வண்டு சிறந்த7ர்ப்/
மணிப்பு ஆடை - அது போர்த்து கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வழிகாவேரி"
என்ற அடிகள் அழகும், சுவையும் உடையன. மருதநிலத்தைப் பாடுகின்ற கம்பர், தாமரையை விளக்காகக் கண்டுள்ளார். புகழேந்திப் புலவர் "மல்லிகையே வெண்சங்காய்" வண்டுத என்ற அடியில் மல்லிகை மலர்களை வண்டுகள் ஊதும் சங்காகக் கண்டிக்கிறார். மங்கையின் கண்களுக்குக் குவளையை பல புலவர்கள் ஒப்பிட்டிருக்கிறார்கள். வள்ளுவர் கூறுகிறார்
"கானிற் குவளை கவிழ்ந்துநதிலன்நோக்கும்
ம7ணிழை கண்ணொவ்வோம் என்று"
இவ்வாறு புலவர்களின் நோக்கில் மலர்கள் பல வகை வண்ணத்தில், வடிவத்தில் மலர்ந்திருப்பதை நாம் இலக்கியத்தில் காணலாம்.
வாழ்வின் முதிர்ந்த கட்டத்தில் மலரில் நாம் கடவுளையே காண்கிறோம். மலர்கள் இறைவனுக்கே ஏற்றவை என்றெண்ணி, அழகு மலர்களை எல்லாம் ஆண்டவனுக்கே அர்ப்பணிக்கிறோம். இறைவனை "மலர்மிசை ஏகினான்" என்று நாம் கூறுகிறோம். மலரிலே தத்துவங்கள் காண்கிறோம். நீர்மலர்கள், நீர்மட்டத்திற்கேற்ப உயருவது போல, உள்ளத்தின் உயர்வுக்கேற்றவாறே நாம் வாழ்க்கையில் உயர்வோம் என்று வள்ளுவர் அழகாகக் கூறுகிறார்.
"வெள்ளைத்தனைய மலர்நிட்டம் மாந்தர்த்தம்
உள்ளத்தனையது உயர்வு
என்ற குறட்பா மலரிலே தத்துவம் காண்கிறது.
72

பின்வரும் பாட்டு மலரையே இறைவனாக்கிவிடுகிறது. ஆழ்ந்த தத்துவத்தை அழகாய் விளக்குகிறது. பூவினில் தோன்றிய மணம்தான் உலகின் உயிரோட்டத்திற்கே அடிப்படையாய் அமைகின்றது. மலரின்றேல் உயிரியக்கமே இராது. ஆகவே மலரின் மணம் முருகனுக்கு ஒப்பாகும் என்பர் புலவா.
"ம7யிரு ஞாலத்து மன்னுயிர் விழையும்
பூவினிற்றே7ன்றிப் பொலிந்திடுநாற்றத் தின்னியில் நாலடியிசைத்திடினதுவே மன்னுயிர்க்குயிர7ய் மலர்விழிமணிய7ய்த் துன்னியவொளியாய்த் துலங்கிய முருகன் தன்னையொப்பாமெனச் சற்றுவர் புலவர்"
மலரின் மணத்திற்கு முருகனை எவ்வாறு ஒப்பிடலாம்? புலவர் கூறுகின்ற விளக்கம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மெய்நூல்கள் கூறுமாறு, இல்லாதது தோன்ற முடியாது ; உள்ளது தான் தோன்றும். அதுபோல ஒர் விதையினுள்ளேயிருந்து, செடி பிறக்கிறது. செடியில் மலர் முகிழ்க்கிறது. ஆனால் மலரின் மணமோ மறைந்தே இருக்கின்றது. கதிரவனின் ஒளிபட்ட பிறகுதான்மலர்மணம் பரப்புகின்றது. அதுவரைக்கும் இந்த மணம் விதையில், செடியில், மலரில் மறைந்துதானே இருந்தது? இதனைப் பின்வருமாறு கூறுகிறார்:
"இல்லது வர7துள்ளது வருமெனச்
சொல்லிய மெய்ந்நூற்றுணிவினைக் காட்டி வித்திட்கருவாய் மேவிய ஞான்றினும் முளையாயிலைய7ய்க் கிளை7ய7யரும்பி மொட்டாய்க் கண்ணிய7ய் முளைத்திடு போழ்தினும் காணாதுள்ளே7 கரந்திருந்ததுவே கதிரவனொளிபடவிரிதரு போழ்திற் கதுமெனப்பூவினில் வெளிய7ய்வருமே"
அதைப் போன்றே நம் உயிர்தோன்றும் போதே நம் உள்ளுறையும் இறைவனும் தோன்றிவிடுகிறான். இறையுணர்வு புலன்வழி வளர்கின்றது. கல்வியில் அரும்புகின்றது. சிந்தையில் மொட்டாகிநிற்கின்றது. இறைவனின் அருள் ஒளிபடும் பொழுதுஅறிவினில் தோன்றி உலகெலாம் இன்புறச் செய்யும். ஆதலால் மலர் மணம் போன்றோன் முருகன் என்று தர்க்கரீதியாக விளக்கி, தத்துவச் சுவையூட்டி, கவிதை மணம் பரப்பும் இவ்விலக்கிய மலர் பன்முறை முகர்ப்பினும், மணம் குன்றாது.
73

Page 48
"உயிரினுட் கருவாய்ப்புலனினின் முளைத்துக்
கல்விகேள்வியிலரும்பிக் கண்ணியாய்ச் சிந்தையறிவினிற்றிகழு மொட்டாகி வந்துழியுள்ளே மறைந்தொருகால் அருளெனும் ஞாயிற்றவிரெ7எரிதினேன்டக் கதுமென அறிவினில் வெளிய7குவனே"
இலக்கியத்தில் பூத்திருக்கும் ஒரு சில மலர்களைக் கண்டவுடனேயே இயற்கைக்கும், கவிஞனுக்கும் நடைபெறும் அழகுப்போட்டியில் நாம் ஆழ்ந்து விடுகிறோம். போட்டி தொடர்ந்து நடைபெறுகிறது. புதுமலர்கள் பூத்துக் கொண்டே இருக்கின்றன. காட்சியின்பமும், கருத்தின்பமும் நமக்குத்தான்.
74

சிறுபான்மைச் சமூகம்
நூலாசிரியர் திரு. சமீம் அவர்கள் தன்னை ஒரு மகத்தான பணியில் அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். ஒரு சிறுபான்மை சமூகப் பிரச்சினைகள் என்ற சாதாரண தலைப்பில், ஒரு பரந்த வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பற்பல பிரச்சினைகளை ஆராயமுனைந்துள்ளார். முதலாவது, வரலாறு எழுதுவதில் உள்ள சிக்கல்களையும், பலவீனங்களையும் ஆபத்துக்களையும் மிகத் துல்லியமாக சுட்டிக் காட்டியுள்ளார். அவற்றிலிருந்து தானே தப்ப முடியுமா என்று பிரமித்திருக்கிறார். இருப்பினும் மிகுந்த துணிவுடனும், பரந்த ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் தனது சமுதாயத்தின் வரலாற்றையும், பிரச்சினைகளையும், உணர்வு பூர்வமாக வடிவமைத்துள்ளார்.
இரண்டாவதாக, ஒரு காலனித்துவ ஆட்சியில் சிறுபான்மையினருக்கு ஏற்படுகின்ற இன்னல்களையும், நெருக்கடிகளையும், இலங்கை முஸ்லிம் சமுதாயத்தை மையமாக வைத்து அரசியல் ஆய்வு நடத்தியிருக்கிறார். மூன்றாவதாக, பொருளாதாரப் போட்டிகளும், பொறாமைகளும் எவ்வாறு அரசியல் முகமூடி அணிந்து இனவெறியையும், மதவெறியையும் கட்டவிழ்த்து விடுகின்றன என்று கோடிட்டுக் காட்டியுள்ளார். மேலும் கலாச்சாரம், கல்வி, வழிபாட்டு முறைகள், திருமணச் சட்டங்கள் என்ற அடிப்படையில் ஒரு பல்லின சமுதாயத்தில் தனித்துவம் பேணுவதில் உள்ள இடையூறுகள், இடைஞ்சல்களை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளார்.
அரசியல் தலைவர்கள் எவ்வாறு இன உறவுகளைப் பாதித்துள்ளார்கள். ஒரு நாட்டின் வரலாற்றுப் போக்கையே நிர்ணயித்துள்ளார்கள் என்பதையும் உதாரணங்களோடு நிறுவியுள்ளார்.
ஓர் ஆழ்ந்த அகன்ற வரலாற்றுக் கண்ணோட்டத்தில் முகம்மது சமீம் எழுதிய ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்’ நூலுக்கு கோவையில் இருந்து (1998) இர. சிவலிங்கம் எழுதிய முன்னுரை
75

Page 49
அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், மதத்தலைவர்களும் எவ்வாறு மக்களின் உணர்வுகளைத் தாம் விரும்பிய வழியில் தட்டி எழுப்பி சமுதாய அலங்கோலங்களை ஏற்படுத்துகின்றனர் என்பதை இலங்கையின் தற்கால வரலாற்று நிகழ்வுகளை ஆதாரமாக வைத்து, நிலை நாட்டியுள்ளார்.
தலைமைகளை விமர்சிக்கத் துணிந்த நூலாசிரியர், குறிப்பாக முஸ்லிம் தலைவர்களையும், அவர்களது சாதனைகளையும், தோல்வி. களையும், குறைபாடுகளையும், பாரபட்சமின்றி பகுப்பாய்வு செய்துள்ளார். முஸ்லிம் தலைவர்களை மதிப்பீடு செய்யும் பொழுது, அவர்களுக்குள்ளே நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும், வேறுபாடுகளையும் அவர்களது சுயநல ஆர்வத்தையும் தயவுதாட்சண்யமின்றி கண்டித்திருக்கிறார். இன்று கூட நல்லதொரு தலைமையில்லையே என்ற ஆதங்கம் அவரிடம் காணப்படுகிறது. சிறுபான்மையினங்களுக்கிடையே குறிப்பாக தமிழர், முஸ்லிம்களுக்கிடையே - ஒருமை உணர்வு இல்லாமையினால் எவ்வாறு இரு சமுதாயத்தினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார். ஆதிக்க உணர்வு ஆணவப்போக்கு என்பனவெல்லாம் பெரும்பான்மையோருக்கு உரியது மட்டுமல்ல. சிறுான்மையினருக்கும் உரியது என்று தெளிவாகக் கூறியுள்ளார். இவ்வாறு சிறுபான்மை மக்களே பிளவுபட்டும், பகைமை பாராட்டியும், நிற்கின்ற பொழுது ஆட்சியாளர்களும், பெரும்பான்மையினரும் சிறுபான்மை மக்களை பகடைக்காய்களாக்கி அரசியல் சதுரங்கம் ஆடுவது எவ்வளவு எளிது என்பதை உணரவைக்கின்றார்.
இந்நூலை முஸ்லிம் மக்களின் வரலாற்றைக் கூறுவது என்றும், இலங்கையின் இனவாத அரசியலை விமர்சிப்பது என்றும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கை அரசியலை ஆட்டிப்படைத்த தலைவர்கள், சிந்தனையாளர்கள், இயக்கங்கள், கோரிக்கைகள், கலவரங்கள், போராட்டங்கள், அனைத்தையும் கூரிய நோக்கிற்கு உட்படுத்துவது என்றும் ஐயமின்றிக் கூறலாம்.
1915ம் ஆண்டு வெடித்த சிங்கள - முஸ்லிம் கலவரம் இவ்விரண்டாம் பகுதியின் அடி நாதமாக விளங்குகிறது. வரலாற்று முக்கியத்துவமிக்க இச்சம்பவம் மிக ஆழமாகவும், ஆணித்தரமாகவும் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு இந்த ஆய்வு மிகவும் பயன்தரக்கூடிய ஒன்றாகும்.
இலங்கைப் பொருளாதாரத்தில், தோட்டப் பயிர் செய்கையினால் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் எவ்வாறு அரசியல் - சமூக உறவுகளைப் பாதித்தன என்று சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
டொனமூர் அரசியல் சீர்திருத்தம்தான் அதன் பின்னர் ஏற்பட்ட அத்தனை அரசியல் சீரழிவுக்கும், இனவெறிக்கும், இன்றைய பேரினவாத அரசியலுக்கும் வழிவகுத்தது என்ற வரலாற்றுப் பழியை டொனமூர் அரசியல்
76

சீர்திருத்தக் குழுவின் தலைமையில் சுமத்தி இருப்பது மீளாய்வு செய்யப்பட வேண்டிய கருத்து என்று கூறலாம். இலங்கைக்கு சர்வசன வாக்குரிமை வழங்கி, செல்வச் சீமான்களின் குடும்ப விளையாட்டாக இருந்த அரசியலை, சாமானிய மக்களின் சக்தியாக மாற்றிய ஒரு சீர்திருத்தத்தை,நாம் எளிதாக அலட்சியப்படுத்திவிட முடியாது.
ஜனநாயக ஆட்சி முறையை ஐரோப்பிய சம்பிரதாயங்களோடு இணைத்து, அந்நிய ஆட்சியாளர்களின் சிபாரிசுகளோடு நாம் செயற்படுத்தும் பொழுது, பல அவலங்கள், அவலட்சணங்கள், அபசுரங்கள் தோன்றி அடிப்படை இலட்சியத்தையே முற்றிலும் திரிபுபடுத்தும் அரசியல் துவேஷங்கள் ஆவேசங்கள் தலையெடுத்துவிடுகின்றன. விதை ஒன்று போட சுரை ஒன்று முளைத்தது போல இந்தப் போக்கினை ஆசிய நாடுகள் அனைத்திலும் பார்க்கிறோம். ஆகவே தான் புதுப்புது அரசியல் அமைப்புகளும், அரசியல் பரிசோதனைகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. நமது பாரம்பரிய ராஜவிசுவாசப் பண்போடு இன்றைய பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையில் ஏராளமான முரண்பாடுகளை உட்புகுத்தியுள்ளன. இந்த நிலையிலிருந்து நாம் விடுபடுவதற்கு முன்னரே சர்வதேச நிகழ்ச்சிகளும், உலகச் சந்தை விவகாரங்களும், நாம் ஓர் தேசிய இனத்தை வடிவமைக்கும் முயற்சிகளுக்கு குந்தகமாக அமைந்து விடுகின்றன.
நூலாசிரியர் ஒர் தேசிய நாளிதழில் எழுதிய கட்டுரைகளே இங்கு நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டுரையின் பரிமாணமும், தாக்கமும், ஒரு நூலின் பரிமாணமும் தாக்கமும், வேறுபட்டவையாகும். கட்டுரைகளை நூலாக்குவதில் இந்தக் குறைபாடு இருக்கவே செய்யும். இந்தக் குறையை நீக்கினால் இந்த நூலின் தரம் மேலும் பொலிவுறும்.
இந்நூல் முற்றுப்பெறவில்லை. மேலும் தொடரவிருக்கிறது. அரசியல் அமைப்பைப் பற்றி ஆராயவிருக்கிறது. சமகால வரலாற்றை, பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மீளாய்வு செய்வது, சிந்தனை பூர்வமாக சிக்கலான பணி என்றாலும், அது ஒரு அவசியமான பணி. குறிப்பாக வளரும் சமுதாயத்திற்கு வழிகாட்டும் பணி. பத்திரிகைகளில் வரும் அன்றாடச் செய்திகளை வைத்தே அரசியல் கோட்பாடுகளை எடை போடாமல், ஓர் ஆழ்ந்த, அகன்ற வரலாற்றுக் கண்ணோட்டத்தில், எதிர்காலம் பற்றிய இலட்சிய நோக்குடன் அரசியலைக் கணிப்பதும், வகுப்பதும் தவிர்க்க முடியாத ஒரு சிந்தனைச் செயற்பாடாகும். அந்தப் பயனுள்ள பணியை நூலாசிரியர் செய்திருக்கிறார். அடுத்து வரும் பகுதிகளை நாம் ஆர்வமுடன் எதிர்நோக்குவோம்.
77

Page 50
தாயகம் திரும்பிய மலையகத் தமிழர் போராட்ட வாழ்வின் ஆரம்Uப் பக்கங்கள்
கிம்பீரமான தோற்றத்தோடு, எழில்மிகு பச்சைப்பட்டுடுத்தி, நீலமேகங்களை முத்தமிட்டு, நிமிர்ந்து நெடிதுயர்ந்த நீலமலைகள் இயற்கை அன்னையின் எழிற் கோயில்களுள் ஒன்றாகும். பல்லாயிரம் ஆண்டுகளாகக் கன்னிமை மாறாத எழிலுடன் நீலமலைத் தொடர்ச்சி மலைகளின் ஓர் அங்கமாய் அமைதியுடன் திகழ்ந்து வந்தது. வானுயர்ந்த மரங்களும், வண்ணம் பரப்பும் மலர்களும், சலசலக்கும் ஓடைகளும் தாவிப்பாயும் அருவிகளும், பச்சைக் கம்பளம் போன்ற புற்றரைகளும், பரந்து விரியும் ஏரியும் கண்களுக்கும் கருத்துக்களுக்கும் விருந்தாயின. பாயும் சிறுத்தையும், பிளிறும் யானைகளும், தாவும் குரங்குகளும், தளிர்நடை பயிலும் மான்களும் கம்பீரமான காட்டெருமைகளும், செந்நாயும், பன்றிகளும், அச்சுறுத்தும் புலிகளும், கருங்கரடிகளும் வாழுகின்ற இயற்கை பூமியாக நீலமலை மிளிர்ந்தது. மண்ணில் மலர்ந்திருந்த மலர்கள், சிறகு பெற்று பறந்தாற் போன்று, வானில் விளையாடும் வண்ணப் பறவைகள் கூட்டம்.
இந்த எழில் பூமியில் மனிதன் என்ன செய்தான்?வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தில் தொதவர்கள் என்ற அழகிய மக்கள் இங்கு வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள் என்ற விபரங்களுக்கு இன்று வரை ஆணித்தரமான வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கவில்லை. வழக்கமாக கானகங்களில் வாழுகின்ற மக்கள் வேட்டையாடி வாழ்ந்தார்கள் என்பது மனித வரலாறு. ஆனால் மிருகங்களை
நீலகிரியில் குடியேறிய தாயகம் திரும்பிய மலையக மக்கள் வறுமையால் கூனிக்குறுகி உரிமை உணர்வற்ற நிலையில் ஒடுக்கப்பட்டிருந்த சூழலில் இர. சிவலிங்கம். எஸ். திருச்செந்தூரண் ஆகியோர் உருவாக்கிய மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின்’ தீவிர இயக்கச் செயற்பாடு பற்றிய இர. சிவலிங்கத்தின் கட்டுரை.
78

வேட்டையாடாது மண்ணைத் தோண்டி விவசாயம் செய்யாது, எருமைகளை மேய்த்து அவைகள் தரும் பால், வெண்ணை இவற்றை உண்டே வாழ்ந்தார்கள். தாம் வளர்த்த எருமைகளை தமது உறவினர்களாய் தெய்வங்களாய் வழிபட்டு வந்தார்கள். இயற்கையோடு இயைந்த இந்த உன்னத கலாச்சாரம் வியக்கத்தக்கது. அவர்கள் வாழ்க்கை எவ்வித அழிவுமில்லாமல் அன்போடியைந்த வாழ்க்கையாய் அமைந்தது. அவர்கள் வாழ்க்கையில் போரில்லை, போட்டியில்லை, பொதுமை இருந்தது. அசுத்தம் இல்லை. அகுயை இல்லை. பால் கறப்பதே பரிசுத்த பணியாகக் கருதப்பட்டது. அவர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும், தூய்மையும் பெரிதும் போற்றப்பட்ட பண்புகளாக விளங்கின.
ஆனால் அந்தமான் தீவுகளில் வாழும் ஆதிவாசிகளைப் போல நிர்வாணமாய் அவர்கள் இருக்கவில்லை. அழகிய உடைகளை , கறுப்பு, சிகப்பு கலந்த அழகிய நுண்ணிய வேலைப்பாடுடன் சித்திரச் சேலைகளாக மாற்றி அணிந்தார்கள். இத்தகைய அவர்களது சீரிய பண்பாடுகளைப் பார்க்கும் போது எப்போதோ எங்கோ மறைந்த ஒரு உன்னத நாகரிகத்தின் வழித்தோன்றல்களாகவே அவர்களைக் கருத வேண்டும். நீலகிரிமலை வெறும் தொதவர் மலையாக இருந்த காலத்தில் மனிதனும், இயற்கையும் ஒரு அற்புதமான நாகரீகத்தை நிலைநாட்டி இருந்தார்கள்.
அவர்களோடு, ஆயுதங்கள் ஊழியும், இசைக்கருவிகள் மீட்டியும் இணைந்து வாழ்ந்த மக்கள் கோத்தர்கள். இவர்கள் கைவினைச் சிற்பிகள், இவர்கள் வனையும் பாண்டங்களும், கைத்தடிகளும், வண்ணமிகு கைவினைப் பொருட்கள். இவர்களின் இசைக்கருவிகள் இன்று முழங்கினும் மனதிற்கு மயக்கமுட்டுவன.
கோத்தர்களும், தொதுவர்களும் இணைந்து வாழ்ந்த இரு பூர்வீகக் குடிகள். தொதுவர் மலைப் பகுதிகளில் தொதுவர்களும் கோத்தர்மலைப் பகுதிகளில் கோத்தர்களும் அமைதியாகவும், ஒத்துழைப்புடனும் வாழ்ந்து வந்தார்கள்.
வயநாட்டு மக்கள்
ஆனால், தாழ் நிலப் பகுதிகளான வயநாட்டுப் பகுதிகளில், பணியர், இருளர், குறும்பர், சோழநாயக்கர், மொன்டாண செட்டி போன்ற பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தார்கள். வயநாடு என்பது வயல்நாடா என்று சிலர் ஐயுறுகிறார்கள். அங்கு பரந்திருக்கும் நெல் விவசாயத்தைப் பார்க்கும் பொழுது இது சரியெனவே சொல்லத் தோன்றுகிறது. வேறொரு வகையில் இதன் பெயர் வேய்நாடாக இருந்திருக்கலாம் எனவும் கருதக்கூடும். வேய் என்பது மூங்கில். இங்கு ஏராளமான முங்கிற் காடுகள் இருந்ததால் இதனை வேய்நாடு என்று அழைத்திருக்கவும் கூடும். எப்படி இருப்பினும் "வயநாடு" என்பது ஒரு திராவிடச் சொல்லின் ஆங்கிலத் திரிபு என்பது தெளிவு.
79

Page 51
வயநாடு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இங்கு வளம் தரும் நிலங்கள் இருந்தன. இன்று நீலகிரி மாவட்டம் 2543 ச. கிலோ மீட்டர் பரப்புள்ளது. இது நான்கு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி ஆகிய மூன்று வட்டங்களும் ஒரே தாக்கத்தை சுமந்து நிற்கும் வட்டங்கள்.
வயநாட்டின் ஒரு பகுதி நீலகிரி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியின் தாலுகா, தலைநகரமாக விளங்குவதுகூடலூர். இந்நகரம் மிகச்சுவையான வரலாறு உடையது. இக்கட்டுரையில் அதனை விரித்துக் கூறுவதற்கு வாய்ப்பில்லை. எனினும் மூன்று நாடுகளின் சந்திப்பு மையமாய் அமைந்திருப்பதால் "கூடலூர்" என்னும் பெயர் பெற்றுள்ளது. கேரளம், கன்னடம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு நடுவே கூடலூர் அமைந்துள்ளது. வரலாற்றில் வயநாட்டுப் பகுதியில் பணியர்களும், குறும்பர்களுமே வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியை மைசூர் பேரரசும், கேரள குறுநில மன்னர்களும் மாறி மாறி ஆண்டிருக்கிறார்கள். மைசூரை வென்ற திப்புசுல்தானின் ஆதிக்கம் 1799ல் முடிவடைந்தது. அந்த ஆண்டில் முழு நீலகிரியும் ஆங்கிலேயருக்குச் சொந்தமானது.
ஆனாலும், வயநாட்டு மக்கள் ஆங்கில ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக உரிமை கோரியவர் பந்தலூர் ராஜா. 1805ல் ஆங்கிலேயர் அவரை சிறைப்பிடித்து சிரச்சேதம் செய்து தமது ஆட்சி உரிமையை நிலை நாட்டினார்கள்.
அடுத்ததாக அப்பகுதியின் பொருளாதார வரலாற்றைக் காண்போம். தொன்று தொட்டுக் காடடர்ந்த பகுதியாக வயநாடு இருந்து வந்தி. ருக்கிறது. ஆனால் நீர்வளமும், நிலவளமும் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. இப்பகுதியில் தங்கம் கிடைக்கிறது என்ற நம்பிக்கை தொன்று தொட்டு நிலவி வந்திருக்கிறது. ரோம் சாம்ராஜ்ய காலந்தொட்டே தங்கச் சுரங்கங்கள் இருந்திருக்கின்றன. அக்காலத்திலிருந்தே ரோம் சாம்ராஜ்யத்தோடு இப்பகுதிக்கு வணிக உறவு இருந்திருக்கிறது என்பதை இப்பகுதி. யில் கண்டெடுக்கப்பட்ட ரோம நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன. நீண்ட காலத்திற்குப் பிறகு கோயம்புத்தூரிலிருந்து இங்கு குடியேறிய செட்டிகள் விவசாயத்தில் ஈடுபட்டனர்.
1845ம் ஆண்டிற்குப்பிறகுதான் இப்பகுதி பொருளாதார முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. ஆங்கிலேயர் காட்டு நிலங்களை விவசாயத்திற்காக விற்றனர். குறிப்பாக பழைய இராணுவவீரர்களுக்கு விற்றனர். அவுச்சர்லோனி என்ற இராணுவ அதிகாரிக்கு ஏராளமான கன்னிக்காடுகள் தாராளமாக வழங்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு தேயிலை, காப்பி, சிங்கோணா ஆகிய பணப்பயிர்களுக்கான பெருந்தோட்டங்கள் பெருகின. இப்பகுதிதான் இப்பொழுது ஒவேலி என்று அழைக்கப்படுகிறது. ஒவேலி என்றால் அவுச்சர். லோனிக்கு வழங்கப்பட்ட பள்ளத்தாக்கு என்று அர்த்தம்.
80

மிகப்பெரிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கு அப்பகுதி மக்கள் போதாமையால், கேரளத்திலிருந்தும், மைசூரிலிருந்தும் தொழிலாளர்கள் இங்கு வந்து குடியேறினார்கள்.
1879-82 ஆகிய காலகட்டத்தில் திடீரென்று தங்கம் திரட்டும் தொழில் மீண்டும் தேவாலாப் பகுதியில் ஒரு காய்ச்ச்ல் வெறியுடன் ஆரம்பித்தது. இங்கிலாந்திலிருந்தும், இத்தாலியிலிருந்தும் தங்கம் தோண்டும் கம்பெனிகள் இங்கு வந்து இறங்க ஆரம்பித்தன.
முதலில் வந்த கம்பெனிகள் ஏராளமாக லாபம் சம்பாதித்ததனால், பல்வேறு கம்பெனிகள் இத்தொழிலில் ஈடுபட ஆரம்பித்தன. இக்கால கட்டத்தில் பல ஐரோப்பியர்கள் இங்கு வந்து குடியேறினார்கள். பந்தலுரர்தான் அவர்களது தலைமை நகரமாக இருந்தது. ஐரோப்பிய செல்வந்தர்களும், தங்கச் சுரங்கத் தொழிலாளர்களும் வணிகர்களும் நிறைந்து நடமாடும் ஒரு பெரும் வணிக நகரமாக விளங்கியது.
பொருளாதார வளர்ச்சிக்கேற்ப மக்கள் தொகை பெருகவில்லை. காரணம் இக்காட்டுப் பகுதியில் மலேரியாக் காய்ச்சல் பலரைப் பலி கொண்டது. உதாரணமாக படுகர்களை இப்பகுதியில் வந்து குடியேறுமாறு ஆங்கிலேயர் உற்சாகப்படுத்தியபொழுது கொலை செய்தாலும் இங்கு குடியேற மாட்டோம் என அவர்கள் மறுத்துவிட்டதாக ஒரு நிர்வாக குறிப்பு கூறுகிறது. 1950ம் ஆண்டளவில் மலேரியாக் காய்ச்சல் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகுதான் மக்கள்தொகை வெகுதுரிதமாக வளர ஆரம்பித்தது. இந்த வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் மலையாளிகளே. அதன் பின்னர் ஒரு நிலையான மக்கள் சமுதாயம் ஒரு நிரந்தரமாக மக்கள் தொகையும் பெருக ஆரம்பித்தது. பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை பிறகு பார்ப்போம்.
நீலகிரிக்கு தமிழகத்திலிருந்து வடகிழக்கு வழியாக ஒரு வாகனப்பாதை ஏற்படும் வரையில் கூடலூர்தான் நீலகிரிக்கு நுழைவாயிலாக இருந்தது. அதனால்தான் மைசூர், கேரள ஆதிக்கம் நீலகிரியில் அதிகமாக இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரி, கோயம்புத்துரர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.
ஆங்கில ஆதிக்கம்
ஜோன் சல்லிவன் என்ற ஆங்கில அதிகாரி தான் நீலகிரியின் மீது அளவிலாக் காதல் கொண்டார். 1811 முதல் 1830 வரை அவர் நீலகிரி உட்பட கோயம்புத்துரர் மாவட்டத்தின் நிரந்தர கலெக்டராக இருந்தார். 1819ல் முதன்முதலாக அவர் நீலகிரிக்கு (கோத்தகிரிக்கு) வந்தார். இந்த மலையையும் அதன் கம்பீரத்தையும், அதன் இயற்கை அழகையும், அதன் வளத்தையும், அதன் இதமான சுவாசத்தையும் கண்டு தன்னை இழந்தார்.
81

Page 52
தனக்கென ஒரு சொந்தமான "கல்வீடு" கோத்தகிரியில் கட்டினார். 1822ல் தான் உதகமண்டலத்தில் கட்டிடங்களை கட்ட ஆரம்பித்தார். அக்காலக்கட்டத்தில் படுகர்களும் நீலகிரியில் குடியேறி இருந்தார்கள். படுகர்கள் சல்லிவனின் விவசாய முயற்சிகளுக்கும், வீடு கட்டுவதற்கும் உறுதுணையாக இருந்தார்கள். இருப்பினும் தொதுவர்களிடம்தான் சல்லிவன் நிலம் விலைக்கு வாங்கியிருக்கிறார் என்றால், ஊட்டிப்பகுதி நீலகிரியில் தொதுவர்களிடமே ஏராளமான நிலங்கள் இருந்தன என்பது உறுதியாகிறது.
1820ல் ஆங்கிலேயருக்கு ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. ஆங்கில இராணுவ அதிகாரிகள் பலர் அடிக்கடி சுகவீனமடைந்தார்கள். தாழ்நிலப் பகுதிகளின் வெப்பம் தாங்காமல் பலர் துன்புற்றார்கள். ஆகவே, இதமான சுவாத்தியமுள்ள இடங்களில் குடியேற அவர்கள் ஆசைப்பட்டார்கள். வடஇந்தியாவில் சிம்லா, டார்ஜிலிங் நகரங்களைப் போலவே தென்னகத்தில் ஊட்டி உருவானது. குறிப்பாக இராணுவத்திற்கு இத்தகைய சுவாத்திய சூழ்நிலை அவசியமானது.
இனப்பகை
இக்காலகட்டத்தில் இம்மலைப்பகுதிகளில் வாழ்ந்த படுகர்களுக்கும், குறும்பர்களுக்கும் நல்லுறவில்லை. நீலகிரிப் பகுதியில் ஏற்பட்ட முதல் இனக்கலவரம் படுகர்களுக்கும் குறும்பர்களுக்கும் இடையில் ஏற்பட்டதாகும். குறும்பர்கள் மாந்திரீகத்தில் சிறந்து விளங்கினார்கள். அதனால் அவர்களைக் கண்டு படுகர்கள் பயந்தார்கள். இந்தப் பயத்தில் குறும்பர் கிராமங்களுக்கு படுகர்கள் தீமூட்டி விடுவார்கள். 1835ம் ஆண்டில் இவ்வாறு தீமூட்டப்பட்டு58குறும்பர்கள் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவம் மிகப் பயங்கரமானது. ஆங்கிலேய அரசினால் இதனை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே, நீலகிரி மலைகளில் வாழும் அனைத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை உதகமண்டல இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்டது. இதற்குப் பிறகு உதக மண்டலத்தின் கட்டுப்பாட்டுப் பொறுப்பு இராணுவத்திற்கு வழங்கப்பட்டது.
நீலகிரியை ஆங்கிலேயரின் ஒய்வுப் பகுதியாகவும், இராணுவத்தினரின் ஒய்வுக்கும் உல்லாசத்திற்கும் உரிய பகுதியாகவும், மாற்றி வைத்த பெருமை சல்லிவனுக்கே உரியது. 1868 வரை நீலகிரி, கோயம்புத்துார் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தோடு இணைப்பு
1956ல் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. நீலகிரிமாவட்டம் தமிழ் மாநிலத்தோடு இணைக்கப்பட்டது. கூடலூர் பகுதியை தமிழ் மாநிலத்தோடு இணைப்பதா அல்லது கேரளத்தோடு இணைப்பதா என்ற
82

சர்ச்சை இருந்தது. இறுதியாக மொழிவாரி மாநிலங்களை உருவாக்கும் கமிசனின் முடிவின்படி நீலகிரி மாவட்டம் முழுவதும் தமிழகத்தின் மாவட்டங்களோடு இணைக்கப்பட்டது.
1860க்குப் பிறகு நீலகிரியின் மனிதச் சூழல் மட்டுமல்ல, இயற்கைச் சூழலும் மாற்றி அமைக்கப்பட்டது. காப்பி, தேயிலைப் பயிர்ச் செய்கை பல்லாயிரக்கணக்கான ஹெக்டர்களில் செய்யப்பட்டு வந்தது. இப்பயிர்ச் செய்கையைப் பரப்புவதற்கு இராணுவ வீரர்களுக்கும் ஆங்கிலேயர் கம்பெனிகளுக்கும் ஏராளமாக ஆதிவாசிகளுக்குரிய வன நிலங்களை அரசு ஏறக்குறைய மானியமாக வழங்கியது. நீலகிரியில் ஏகாதிபத்திய நிலப்பறிப்பு சட்டபூர்வமாக அமுலானது. பயிர் செய்யப்படாத நிலங்களை "பாழ்நிலங்கள்" என்று பிரகடனம் செய்து, குறைந்த விலைக்கோ, இலவசமாகவோ 900 ஆண்டு குத்தகையாகவோ கொடுத்து வந்தார்கள். தேயிலைப் பயிர்ச் செய்கையின் வளர்ச்சியோடு, பாதை அபிவிருத்தியும், இரயில் பாதை வளர்ச்சியும் ஏற்பட்டது. தாழ்நிலங்களிலிருந்து "பாழ்நிலங்களுக்கு" ஏராளமான மக்கள் குடியேறினார்கள். நீலகிரியின் இயற்கைச் சூழ்நிலையிழ்ர்நிaத்தகிரிதச் சூழ்நிலையும் மாறியது.
குடியுரிமை மறுப்பு
1948ம் ஆண்டு இந்தியாவிற்கு அருகே உள்ள இலங்கை நாடு சுதந்திரமடைந்தது. அதன் முதல் பணியாக அந்த நாடு அதன் குடியுரிமைச் சட்டத்தை வரையறுத்தது. இதன் மூலம் உலகத்தில் அன்று வரை நிகழ்ந்திராத ஒர் அற்புத அரசியல்நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்கள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தினால் 1830ம் ஆண்டளவில் (நீலகிரியில் ஆங்கில ஏகாதிபத்தியம் காலூன்றிப் பரவிக் கொண்டிருக்கிற அதே சமயத்தில்) பல்லாயிரக்கணக்கான ஏழை விவசாயத் தொழிலாளர்களை அடிமைக் கூலிகளாய் இலங்கைக்கு அழைத்துச் சென்று காப்பித் தோட்டங்களை அமைத்து, 120 ஆண்டுகளாக அவர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, சுதந்திரமடைந்த பின்னர் 10 லட்சம் இந்தியத் தொழிலாளர்களை அந்நியர்களாக்கி குடியுரிமை இழக்கச் செய்து, அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென்ற கொள்கையை பிரகடனப்படுத்தியது. மனித உரிமை சாசனம் ஐ. நா. சபையினால் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த மனித உரிமை மீறல்களில் முதலாவதும் தலையாயதுமானது இந்தக் குடியுரிமை பறிப்பு அநீதியே என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆனால் உலகம் அன்றிருந்த சூழ்நிலையில் இந்த மாபெரும் அநீதியை உலகப் பிரச்சனையாகப் பார்க்காமல், வெறும் இலங்கை - இந்தியப் பிரச்சனையாகவே நோக்கினார்கள். இந்தியாவின் ஆலோசனைகளை இலங்கை நிராகரித்தும் கூட இப்பிரச்சனையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் செல்லாமல் அலட்சியப் போக்கில் விட்டது, இந்தியா செய்த
83

Page 53
மாபெரும் தவறாகும். அந்த நேரத்தில் இந்தியாவுக்கு காஷ்மீர் பிரச்சனையும், பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்ட இந்திய அகதிகளின் பிரச்சனையும் மிகப்பெரிய பிரச்சனையாகக் கருதப்பட்ட காரணத்தால், இந்தியத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமைக்கு குரல் கொடுக்க யாருமே இல்லாது போய்விட்டார்கள்.
1964ல் நேரு மறைந்த பிறகு இந்திய-சீனப் போரில் இந்தியா தோல்வி அடைந்த பிறகு தனது அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இந்தியத் தமிழர்களை நாடுகடத்துவதைப் பற்றி இலங்கைப் பிரதமர் பூரீமாவோ பேச்சு வார்த்தை நடத்த முன்வந்தார்கள். உலகத்தின் முதல் பெண் பிரதமர் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் சமாதானத் துரது சென்றவர் என்ற பெருமையோடு பூரீமாவோ புதுடில்லி வருகிறார். இந்திய - இலங்கைப் பிரச்சனையைக் கரைத்துக் குடித்த திறமையான அதிகாரிகள் அவருடன் வருகிறார்கள். இந்தியாவிலோ, நேரு இல்லாத இந்தியா. சாஸ்திரி அவர்களின் தலைமையில் உள்ள இந்தியா, சீனாவுடன் நடந்த போரில் தோல்வியுற்ற இந்தியா.
பர்மா, அங்கு வாழ்ந்த இந்தியர்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு விரட்டி அடித்த போது செய்வதறியாது திகைத்து நின்ற இந்தியா இலங்கையோடு பேச்சுவார்த்தை நடத்தியது. இலங்கை - இந்திய பிரச்ச. னையை அரைகுறையாக தெரிந்து கொண்ட இந்திய அதிகாரிகள் இது ஒரு தென்னிந்தியப் பிரச்சனை என்ற அலட்சியமனோபாவத்துடன் இந்திய அரசுக்கு துணை நிற்கிறார்கள். 15 ஆண்டுகளில் 5 லட்சத்து 25 ஆயிரம் குடியுரிமை மக்களை இலங்கை நாடு கடத்துவதை ஏற்றுக் கொள்கிறோம் என்ற ஒரு கொள்கையற்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடுகிறது.
"இந்தியா சீனாவோடு போர் செய்து தோற்றது”
இலங்கையோடு போர் செய்யாமலேயே தோற்றது"
தாயகம் திரும்புதல்
இந்தத் தோல்விக்குப் பின்னர்தான் நாடற்ற, போர்க் கைதிகளைப் போல், இந்தியா வழங்கிய குடியரிமையை ஏற்றுக் கொண்டு 1968 முதல் 1984 வரை இலங்கை - இந்தியத் தமிழர்கள் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் குடியேற ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு பல்வேறு மறுவாழ்வுத் திட்டங்களைத் தீட்டியது. இவற்றுள் பல திட்டங்கள் பயனற்ற திட்டங்களாகப் போய்விட்டன. பயனுள்ள திட்டங்களில் சிறந்ததாக அரசு ஏற்படுத்திய பெருந்தோட்டங்களை குறிப்பிடலாம். தமிழகத்தில் தேயிலைத் தோட்டங்களையும், கேரளத்திலும் கர்நாடகத்திலும் ரப்பர் தோட்டங்களையும் ஏற்படுத்திதாயகம் திரும்பிய மக்களை குடியமர்த்தினார்கள். நீலகிரியில் 1976ம் ஆண்டளவில்
84

3000 ஹெக்டர் நிலப்பரப்பில் தேயிலைப் பயிர்ச் செய்கையை ஏற்படுத்தி 2000 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1971 முதல் 1984 வரை ஏறக்குறைய 40,000 குடும்பங்கள் நீலகிரியில் குடியேறி. னார்கள். அநேகமாக அனைவரும் தனியார் தேயிலைத் தோட்டங்களிலும் சிறுதேயிலை விவசாயக் காடுகளிலும், கூடலூர் பகுதிகளில் சிறு விவசா. யத்திலும், காய்கறி உற்பத்தியிலும், கட்டிடப் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
நீலகிரியில் கடைசியாக ஏற்பட்ட மானுடச் சூழல் மாற்றம் இது. ஏற்கனவே குடியிருந்த மக்களோடு, மக்கள் தொகையும் வகையும் வளர்ச்சியடைந்தது. விவசாயம் மாறவில்லை நிலவளம் மாறவில்லை. ஆனால் பரந்த அளவில் ஒரு புதுக் குடியேற்றம் ஏற்பட்டது. புதிதாகக் குடியேறிய மக்கள் மொழியால் தமிழர், சட்டப்படி இந்தியர்கள் ஆக இருப்பினும் நெடுங்காலம் இலங்கையில் வாழ்ந்த காரணத்தால் பழக்க வழக்கங்களில் உள்ளூர் மக்களிலும் மாறுபட்டிருந்தார்கள். குறிப்பாக சாதிவெறியால் இவர்களைத் தாழ்த்திநடாத்துவதும், குறைந்த கூலி கொடுப்பதும், சுதந்திரமாக வீடுகட்டி வாழ அனுமதி மறுப்பதும், காவல் துறையினரின் கெடுபிடிகளும் இம்மக்களுக்கு ஒரு வேதனையான அனுபவத்தைத் தந்தது.
மறுவாழ்வு தேடி வந்த நாட்டில் வாழ்வுரிமை மறுத்த அனுபவத்தைத் தான் கண்டார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக நாள்தோறும் ஏதோ ஒரு வகையில் போராட வேண்டியதன் சூழ்நிலை ஏற்பட்டது. இவர்கள் இங்கு நிலையாக குடியேற அனுமதிக்கக் கூடாது என்பது நில உடமையாளர்களின் கோட்பாடாக இருந்தது. அதனால் குடிசைகள் கட்டினால் எரித்தார்கள். முன்பு குறும்பர்களை எரித்தது போல, பின்னர் மலையாளிகளை எரித்தது போல, மக்கள் மறுவாழ்வு மன்றத்தில் இந்த குடிசை எரிப்புக் கொடுமையை
முன்னையிட்ட தி'தென்னிலங்கையிலே பின்னையிட்ட திநிலகிரியிலே
என்று சுவரொட்டிகள் மூலம் அம்பலப்படுத்தினார்கள். நாளுக்கு நாள் கொடுமைகள் பெருகி வந்த காலகட்டத்தில் நசுக்கப்பட்ட மக்களும் இந்த நீலகிரி மண்ணில் நமது உரிமையை நிலைநாட்டுவோம் என்று உறுதி பூண்டார்கள்.
மன்றம் தோன்றியத
அந்த உறுதியின் பயனாய் உருவெடுத்ததுதான் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம். 1984ம் ஆண்டு வெஸ்ட்புரூக் இயேசு சபையின் அமைதி இல்லத்தில் 15 இளைஞர்களும் யுவதிகளும் அசைக்க முடியாத மன
85

Page 54
உறுதியுடன் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் உதயம் நீலகிரி வாழ் ஏழை மக்களின் வாழ்வில் ஓர் பொன்னுதயம் என்றே சொல்ல வேண்டும். இது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை என்றும் கூறலாம்.
பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நீலகிரியில் குடியேறி எவரும் ஏறெடுத்துப் பார்க்காத வகையில் நம்பிக்கை இழந்து வறுமையால் கூனிக் குறுகி உரிமை உணர்வற்று ஒற்றுமையற்று ஒடுங்கிப் போய் சீர்குலைந்திருந்த ஒரு மனித சமுதாயத்தை மாற்றியமைக்க கங்கணம் கட்டிக் கொண்டு உருவானதுதான் மக்கள் மறுவாழ்வு மன்றம்.
மன்றத்தின் ஆரம்பப் பணியாளர்கள் ஊர், ஊராய்ச் சென்று மக்களைச் சந்தித்தார்கள். ஒவ்வொருவர் கண்களிலும் மருட்சியும், விரக்தியும் தான் காணப்பட்டது. அநீதியில் அழுந்திப் போய் மனிதர்களிலேயே நம்பிக்கை இழந்திருந்தார்கள். நமது பணியாளர்கள் ஊருக்குள்ளே நுழையும்போது அவர்களைக் கண்டே மிரண்டார்கள். புதிதாக ஒரு சுரண்டல் கூட்டம் வந்துவிட்டதோ என்று அஞ்சினார்கள். பிறந்த நாள் முதல் சுரண்டப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு வந்த மக்கள் இப்படி அஞ்சியதில் ஆச்சரியமில்லை.
படிப்படியாக நம்மைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் மன்றம் அக்கறை கொண்டுள்ளது என்பதை உணர்ந்து கொண்டார்கள். பட்டா நிலமோ, மறுவாழ்வு உதவியோ, போலீசு பிரச்சனைகளோ, ஊர்ச்சச்சரவுகளோ அனைத்துப்பிரச்சனைகளிலும் மன்றம் மக்களுக்குத் துணை நின்றது. மன்றம் மக்களின் தோழனானது.
வாக்குரிமைப் போராட்டம்
நாம் இந்தியர்கள் என்ற கோஷத்தோடு மக்களைத் திரட்டி முன் சென்றது மன்றம். இல்லை நீங்கள் இலங்கையர்கள், இலங்கை திரும்ப வேண்டியவர், அந்நியர்கள் என்று மற்றொரு கூட்டம் எங்களுக்கு எதிராக எதிர் கோஷம் எழுப்பியது. நீங்கள் ஒலையர்கள் என்று ஒரு திமிர் பிடித்த கூட்டம் எங்களை இழிவுபடுத்தியது. மக்கள் பொங்கி எழுந்தனர். மன்றத்தின் துணையோடு ஆர்ப்பரித்தனர். மன்றம் கோத்தகிரி காணாத மாபெரும் மக்கள் பேரணி நடத்தியது. பொதுக் கூட்டங்களில் மக்கள் மன்றம் புரட்சி கனல் கக்கியது. உரிமை உணர்வு பரிபூரணமாக பூத்துக் குலுங்கியது. மக்கள் உரிமை காவலனாக மன்றம் வளர்ந்தது.
தேர்தல் சமயத்தில் எங்கள் மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினார்கள். நீலகிரியில் நமது மக்களை அந்நியப்படுத்துவதற்கு மேற்கொண்ட மிகப் பெரிய முயற்சி இது.
86

எங்கள் ஒருமித்த உறுதியான போராட்டத்தினால் இத்தடையை தகர்த்தெறிந்தோம். மன்றம் மக்களின் அடிப்படை உரிமைகளை நிலை. நாட்டியது.
தன்மானப் போராட்டம்
மன்றம் மக்களின் தன்மானத்தைப் பாதுகாக்கவும் போராடியது. தாயகம் திரும்பிய மக்களை இலங்கை அகதிகள் என்றும் "சி. ஆர்." என்றும் சற்றே இழிவுபடுத்திக் கூறிவந்தார்கள். இயக்கப் பலமில்லாதவர்கள் இந்தத் தன்மானப் போராட்டத்தில் ஈடுபடமுடியாததால் அகதிப் பட்டத்தை ஏற்றுக் கொண்டனர். அல்லது தாங்கள் இலங்கை அகதிகளல்ல என்று பொய் சொல்லி ஒரு போலித் தன்மானத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இப்படிப் போலித்தனம் மத்தியதர வகுப்பைச் சார்ந்தவர்களிடமே அதிகமாகக் காணப்பட்டது. மன்றம் அமைப்பாக உருவாகி வளர்ச்சி பெற்ற பிறகு உரிமை உணர்வு மட்டுமல்ல தன்மான உணர்ச்சியும் வளர்ந்து வந்தது. ஆகவே "அகதி" என்ற இந்த இழி சொல்லுக்கு எதிராக பல்வேறு வகைகளில் தன்மானப் போராட்டம் நடத்தினோம். காந்தி பிறந்தநாள் தாயகம் திரும்பியோர் நாளாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
"காந்தி தென்னாட்டபிரிக்காவில் இருந்து வந்தார் -நாங்கள் தென்னிலங்கையிலிருந்து வந்தோம்"
என்று எங்கள் தாயகம் திரும்பியோர் பேரணிகளில் கோஷமிட்டோம். எங்கள் நிலையை கடல் கடந்த இந்தியர்களின் நிலை என்பதை வலியுறுத்தி இந்த வகையில் காந்திக்கும் எங்களுக்கும் வித்தியாசமில்லை என்று சுட்டிக் காட்டினோம். இதை உணர்ந்து கொள்ள முடியாதவர்களுக்கு சில தீவிர இளைஞர்கள்,
'அகதி என்று சொல்லாதே
அடிபட்டுச் ச7காதே"
என்று கோஷங்கள் மூலம் எச்சரிக்கை செய்தார்கள்.
பொதுமக்களின் மத்தியில் மட்டுமல்ல அரச அலுவலர்களுடனும், பத்திரிகையாளர்களுடனும், "அகதி" என்ற சொல்லாட்சிக்கு எதிராக எதிர்த்துப் போராடினோம். தீவிரமாகப் பிரசாரம் செய்து வந்தோம். ஓரளவு வெற்றி பெற்றோம். ஆனால் எத்தனை பேருக்குத்தான் வரலாற்று அறிவை ஏற்படுத்த முடியும் ?
1991ல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், இந்தக் கொலைக்கு பின்னணிக் காரணமாக இலங்கைத் தமிழர்கள் தான் இருக்கி. றார்கள் என்ற சந்தேகம் வலுவடைந்த காரணத்தால் தமிழகத்தில் உள்ள
87

Page 55
அனைத்து இலங்கைத் தமிழர்களும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. மன்றத்தின் சார்பாக, இந்த ஆணை இலங்கையிலிருந்து வந்த இந்தியத் தமிழர்களைக் கட்டுப்படுத்தாது என்று நாம் அறிக்கை வெளியிட்டோம்.
சிறைப் போராட்டம்
ஆனாலும் தமிழகப் போலீஸ் நிர்வாகமும் வருவாய்த் துறை அதிகாரமும் சரியான தெளிவும், விளக்கமின்றிதாயகம் திரும்பிய தமிழர்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தி படாதபாடு படுத்தினார்கள். பலரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். நீலகிரியில்தான் அநீதியின் உச்சக்கட்டம் கோலோச்சியது. லீனா நாயர் என்ற அகம்பாவமுள்ள ஒரு கலெக்டர், அவருடைய அறியாமையையும் நாம் சுட்டிக்காட்டியும் ஏற்க மறுத்து, ஊட்டி விளையாட்டரங்கில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட தாயகம் திரும்பிய மக்களை விடுவிக்க மறுத்தார்.
நாம் அவர்களை விடுவிக்கக் கோரி சனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்தோம். அதனால் மன்ற அலுவலர்கள், பொறுப்பாளர்களாகிய 13 பேர் சிறைபிடிக்கப்பட்டு கோவை மத்திய சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டோம். மன்றம் மக்கள் போராட்டத்தில் சிறைசென்று ஒரு தியாக வரலாறு படைத்தது.
கொடைக்கானலில் உள்ள ஒரு குழுவினர் தாயகம் திரும்பியோரை இலங்கைத் தமிழர்களோடு சம்பந்தப்படுத்தும் அநீதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அதில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தாயகம் திரும்பியோரும் பதிவு செய்து கொள்ளத்தான் வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பும், குமுறலும் சொல்லிலடங்காது. நல்ல வேலையாக இந்த அவசரத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்த பொழுது உயர்நீதி மன்றம் இவர்கள் இந்தியராகையினாலே பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று தீர்ப்பளித்தது.
ஆனால் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன் எத்தனையோ பேர் கொடுமைகளை அனுபவித்துத் தீர்த்துவிட்டார்கள். இந்த கோர அனுபவத்தை "மனித வேட்டை"என்ற நூலில் மன்றம் வெளியிட்டுள்ளது.
"நாம் இந்தியர்கள்" என்ற நமது கொள்கைக் கோஷத்தை நிலை நாட்ட நாம் இன்னும் போராட வேண்டியதை நினைக்கும் பொழுது நெஞ்சு கொதிக்கிறது. கால் நூற்றாண்டுகள் கழித்தும் நம்மை அந்நியப்படுத்தும் அறியாமைச் சதி தொடர்ந்து நிலவுவது வருந்துதற்குரியது. நமது உரி. மையை இந்தத் தாயக மண்ணில் நில்ைநாட்ட நமது மக்கள் எத்தனையோ
88

பேர் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய சரியான தொகுப்பு இன்னும் வெளி வரவில்லை எனினும் நாம் நீலகிரியில் நடத்திய போராட்டங்களையாவது மறந்துவிட முடியாது.
நிலப்போராட்டம்
நம்முடைய தொடர் போராட்டங்களில் நிலப்போராட்டம் மிக முக்கியமானது. நமது மறுவாழ்வுத் திட்டங்களில் தாயகம் திரும்பும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டுக் கடன்கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது தாயகம் திரும்பிய ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்தியாவில் வீடு கட்டி வாழும் உரிமை உண்டு என்பதை மத்திய அரசு நிலைநாட்டி உள்ளது.
ஆனால் அரசின் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கென்றே நியமிக்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரிகள், கொள்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக சிதறடித்து விடுவதை இந்திய அனுபவத்தில் காணலாம். வீடு கட்டக் கடன் கொடுப்பது மத்திய அரசு, ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் நிர்வாகம் அந்தப் பணம் மக்களுக்கு கிடைக்காத வகையில் பல்வேறு தடுப்பு விதிகளைப் போட்டிருக்கிறார்கள். ஒன்று, இங்கு வந்த ஓராண்டுக்குள் வீட்டுக்கடன் கேட்டு மனுச்செய்திருக்க வேண்டும். இரண்டு, வீட்டுமனைப்பட்டா இருக்கிறதா என்றுநிரூபிக்க வேண்டும். மூன்று, தவணை தவணையாகப் பணம் பெற வேண்டும். இந்த நிர்வாக விதிகளை ஒட்டு. மொத்தமாக கூட்டினால் வீட்டுக் கடன் கொடுக்க முடியாது என்பதே சாதாரண விடையாகும். இந்த விதிகளையெல்லாம் தளர்த்தி வீட்டுக் கடன் கொடுப்பது என்றால் அதற்கு ஏற்பாடு செய்ய ஒரு தரகர் வேண்டும். அந்தத் தரகருக்கும், அவருக்குப் பிடித்த அதிகாரிகளுக்கும் தாரளமாக லஞ்சம் கொடுக்க வேண்டும். கொடுத்த பிறகும் கூட கூரை வரை கட்டிடம் வராது. சுருங்கச சொல்லின் அரசு உதவியுடன் வீடு கட்டிக் கொண்ட குடும்பங்கள் 10,000த் துக்கு குறைவாகவே இருக்கும். ஒரு 90,000 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுதவி முறையாகக் கிடைக்கவில்லை. நாடற்ற மக்களாக இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய மக்கள் இங்கு வீடற்ற மக்களாக கைவிடப்பட்டுள்ளார்கள்.
இவர்களுள் நீலகிரி திரும்பியோர்களின் நிலை மிகப் பரிதாபமானது. இவர்களுக்கு குடிசை போடுவதற்குக் கூட நிலங்கொடுக்க மறுத்தார்கள், நீலகிரி நிலப்பிரபுக்கள். தங்கள் ஹட்டியில் ஆடு, மாடுகளோடு இருப்பதற்கு சம்மதித்தார்கள். குடும்பத்தையே அடிமைப்படுத்திக் கொண்டார்கள். குறைந்த கூலிக்கு வேலை செய்யச் சொன்னார்கள். மனிதர்களாக வாழச் சம்மதிக்கவில்லை. அடிமைகளாக வாழ சம்மதித்தார்கள். இதற்கு "மனிதாபிமானம்" என்று பெயர் சூட்டி மார்த்தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
89

Page 56
இந்த அடிமை வாழ்வை விரும்பாத மக்கள் புறம்போக்கு நிலங்களிலோ, அல்லது பொது இடங்களிலோ குடிசைகள் அமைத்துக் கொண்டார். கள். இந்த ஹட்டிக் கூட்டம் ஆர்ப்பரித்து எழுந்தது. குடிசைகளுக்குத் தீயிட்டார்கள். போலீசாரை வரவழைத்தார்கள். வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டார்கள். நடைபாதை மறுத்தார்கள். குடிநீர் மறுத்தார்கள். வேலை இல்லை என்று விரட்டினார்கள். "ஐயகோ! இவர்கள் செய்த அநியாயங்களுக்கு எல்லையே இல்லை. கீழ் ஒடயஹட்டி, கொணவக்கரை, கண்ணேரிமூக்கு, பாலகொலா, தேனாடு, செல்லத்தட்டு, அளக்கரை, குராக்கரை, குண்டுகம்பை கோவில்மேடு, உல்லத்தட்டி போன்ற இடங்களில் நம் மக்களின் குடிசைகளை எரித்தும், மக்களைத் தாக்கியும் கொடுமைப்படுத்தியதை நீலகிரி சரித்திரத்திலேயே இதற்கு முன் கண்டிருக்க முடியாது.
ஆகவேதான் நீலகிரி சரித்திரத்தை மாற்றுவோம் என்று மன்றம் முடிவெடுத்தது. வீடுகட்டும் திட்டத்தை உருவாக்கினோம். பாக்கியநகரில் நிலம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தோம். எரிக்க முடியாத வீடுகள், விரட்ட முடியாத குடியிருப்புகள்,நீலகிரி மண்ணில் எங்கணும் எழுந்தன. அதற்கு முன் அஞ்சி, கெஞ்சி இடம்பிடித்து வாழ்ந்த காலம் போய் சுயமாய் கெளரவமாய், உருவாக்கப்பட்ட ஊர்கள் பெருகின. கொடிய விலங்குகளுக்கும் அஞ்சாமல் மலை முகடுகளில் குடியிருப்புகள் அமைந்தன. இதைத் தாங்க முடியாத சிலர் வழிமறுத்தனர். இதனால் பல சச்சரவுகள், சண்டைகள் ஏற்பட்டன. குடிமனைப் போராட்டத்தில் அளக்கரைப் போராட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குதான் பட்டப்பகலில் துப்பாக்கிச் சகிதம் சென்று, குண்டர்கள் துணையோடு ஆயுதமற்ற மக்களைத் தாக்கி விரட்டியது. ஒரு சட்டவிரோதமான கூட்டம் ஒரு நிலப்பிரச்சனையை போர்க்களமாக்கினார்கள். போலிசோ,நிர்வாகமோ முறையான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்கள். பணபலம் அவர்கள் கண்களையும் கைகளையும் கட்டிவிட்டது. ஆனால் இந்தப் போராட்டம் ஒரு திருப்புமுனையானது. நமது மக்கள் இன உணர்வோடு ஆர்ப்பரித்து எழுந்தார்கள். எதிரடி கொடுத்தார்கள், விரட்ட வந்த கூட்டத்தை விரட்டி அடித்தார்கள். மன்றம் மட்டும் அந்த சம்பவத்தில் நிதானமாக மக்களைச் சாந்தப்படுத்தி இராவிட்டால் அன்று கோத்தகிரி சாம்பலாகி இருக்கும். அந்த அளவுக்கு மக்கள் ஆர்ப்பரித்து எழுந்தார்கள். ஆனால் உண்மை தெரியாத ஒரு முக்கியமான போலிஸ் அதிகாரி மன்றப் பொறுப்பா. ளர்களை அழைத்து "சுட்டு விடுவோம்" என்று சொன்னார். நாம் சொன்னோம் "சுட்டுப்பார் என்று" அவர் கோத்தகிரியை விட்டுப் போய்விட்டார்.
அளக்கரைக்குப் பின்னர் நீலகிரியில் எங்கள் நில உரிமையை நிலைநாட்டி விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும் அதற்கு பின்னர் குடிசை எரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பட்டாப் போராட்டம்
அதே ஆண்டில் எங்கள் உரிமையின் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பது போல் அம்பேத்கார் ராஜ்குமார் என்ற கலெக்டர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுமனைப்பட்டாக்களை ஒரே ஆண்டில் வழங்கினார். மன்ற மண்டபத்திற்கு வந்து அங்கேயே அதிகாரிகளுக்கு முன்னால் பலருக்கு பட்டாக்கள் வழங்கினார். எங்கள் புண்பட்ட இதயங்களுக்கு அந்த அன்புச் செயல் இதமளித்தது. நம்பிக்கை ஊட்டியது. ஆனால் ஹட்டிக் கூட்டம் இதனை சகித்துக் கொள்ளவில்லை.
இரவோடு இரவாக சதிசெய்து, பணத்தை வாரியிறைத்தது. மக்களின் அந்த இடத்திற்கு ஒரு இரக்கமற்ற அரக்கியைக் கொண்டு வந்தார்கள் பிரபுக்கள்.
அந்த அரக்கியின் முதல் வேலை அரையட்டி, பிக்கட்டி பகுதிகளில் குடியேறியிருந்த நமது மக்களை விரட்டி அடித்ததுதான்.
தற்காலிகமாக அநீதி வென்றது."மன்றமும் மக்களும் மாற்றுத் திட்டம் கண்டார்கள்”
புறம் போக்கு நிலங்களில் குடியேறுவது தடுக்கப்பட்டது. வன எல்லைக்குட்பட்ட நிலங்களில் குடியேறினால் வன அதிகாரிகள் அடித்து விரட்டினார்கள். பொது நிலங்களில் குடியேறினால் அது மேய்க்கால் நிலம் என்றார்கள். வரலாற்றுப் பாதையில் மந்தைகள் போல ஒட, ஒட விரட்டப்பட்ட ஓரினம், பாழ் நிலங்களில் குடியேறுவதற்குக் கூட சில பாழ்மனங்கள் இடந்தரவில்லை. அடிப்பதும், விரட்டுவதும், எரிப்பதும் மிகச் சாதாரண சம்பவங்களாயின.
மக்களின் அனாதரவான நிலையை அரசிடம் சொல்லி நிவாரணங்காண மன்றம் பகிரதப் பிரயத்தனம் செய்தது. மறுவாழ்வுத் துறைக்கு அமைச்சராக இருந்த திரு. பொன் முத்துராமலிங்கம் அவர்களை மக்கள் மன்றம் அழைத்து எங்கள் குறைகளை அவர் முன்னால் கொட்டினோம். விரைவில் விசாரணைக் கமிஷன் அமைத்துமுறையான மறுவாழ்வு உதவிகள் கிடைக்கச் செய்வதாக உறுதி கூறினார். ஆனால் அரசு மாறியது. அவரது உறுதிமொழிகள் உருப்பெறவில்லை.
அளக்கரைச் சம்பவத்தில் முதலமைச்சருக்கு மனு கொடுத்தோர் அமைச்சர் நாஞ்சில் மனோகரனைச் சந்தித்தோம். மேய்க்கால் நிலங்களை, நத்தம் புறம் போக்கு நிலங்களாக மாற்றி மக்கள் குடியேற்றத்துக்கு வழங்குவதாகச் சொன்னார். திடீரென மாறிய அரசியல் சூழ்நிலையால் அந்த முயற்சியும் அப்படியே அடங்கிப் போனது.
மாற்றுத்திட்டம்
இத்தனை விரக்திகளின் மத்தியில் தான் மன்றமும், மக்களும்
மாற்றுத்திட்டம் கண்டனர். தன்கையேதனக்குதவி"என்ற திட்டம் தான் அது.
9.

Page 57
இந்த சிந்தனைப் புரட்சி முதன் முதலாக குன்னூரில் தோன்றியது. இன்று அதிகரெட்டி "செலவிப் நகர்" என்ற பெயரில் 43 குடும்பங்கள் வீடு கட்டிக் குடியேறி இருக்கிறார்கள். இதைப் பின்பற்றி மேலும் பல இடங்களில் இத்திட்டம் செயற்படுத்தப்பட இருக்கிறது. அதிக ரெட்டியில் அந்த ஊரை உருவாக்க முப்பெரும் சக்திகள் உதவின. நிலம் வாங்க மக்களும், மன்றமும், பங்காளிகளானார்கள். வீடுகட்ட, அரசு வீடு கட்டு நிறுவனமும், மன்றத்தின் மூலமாக செலவிய் என்ற பெல்ஜிய நிறுவனமும் இணைந்தார்கள். ஓர் அற்புதமான மனிதாபிமானமும், கூட்டு முயற்சியும் செலவிப் நகரில் முரசு கொட்டி முழங்குகின்றன.
மன்றத்தின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆயிரத்துக்கு மேற்பட்ட நல்வீடுகளை மக்கள் கட்டிக் கொள்ள மன்றம் உதவியுள்ளது. நொவீப், செலவிப் போன்ற சர்வதேச வளர்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து உதவிக் கொண்டிருக்கின்றன. ஒப்பந்தம் செய்துநம்மை அழைத்துவந்த மத்திய அரசு கையறு நிலையில் ஒதுங்கி விட தமிழக அரசு தமிழகத்தில் சட்டப்படி குடியேறிய தமிழனை அந்நியனாய், அகதியாய் முத்திரை குத்தி உரிமைகள் மறுத்து, ஓட ஓட விரட்டி சிறைவைக்கும் இந்த புண்ணியபாரதத்தில் சர்வதேச மானுட உணர்வுகளால் இணைந்து அந்நிய நாடுகள் வாரி வழங்கும் இலவச உதவிகள்தான் இங்கே ஒரு மானுடத்தை வாழ வைக்க செய்கின்றது.
தமிழினம், பாரதம் என்ற சொற்களுக்கு எங்கள் ஏழை மக்களின் இதயத்தில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? எங்கள் இளைஞர்கள் எங்கள் கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நிலமில்லையா ?
இந்த நிலப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. எளிதில் ஒயாது. நீலகிரியின் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு முக்கிய பகுதியினருக்கு குடியேறி வாழ நிலமில்லை என்று சொல்லும் போலி வாதத்தை நாம் ஏற்கத் தயாராக இல்லை. 35 ஆயிரம் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்கள் தேயிலை விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தனிப்பட்ட முதலாளிகள், தமிழ் மாநிலத்தைச் சாராத கோத்தாரி, மஹாவீர் பிர்லா, மலையாள பெருந்தோட்டம் போன்ற கம்பெனிகளுக்கும் உல்லாசப் பிரயாணிகள் சல்லாபஞ் செய்ய அரண்மனை போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கட்ட நிலமும் வழங்கும் அரசு அன்றாடக் கூலிகளான இந்நாட்டு மக்களுக்கு குடிசை கட்ட இடம் மறுக்கும் அநீதியை, கொடுமையை, ஆபாசத்தை எவ்வளவு காலம் மக்கள் சகித்திருப்பார்கள்? வாழுவதற்கு ஆட்களே இல்லாமல் காவல்காரர்களின் பொறுப்பில் இருக்கும் நூற்றுக்கணக்கான பங்களாக்கள் வீடற்ற மக்கள் தொகை பெருகப் பெருக எவ்வளவு காலத்திற்கு பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். குன்னூரில் உள்ள விஜயநகர அரண்மனை ஒரு சிறிய முன்னோடி!
92

எங்கள் மறுக்கமுடியாத அடிப்படை உரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கும் அதேவேளையில் எங்கள் சமூகத்தின் தரத்தையும், திறத்தையும் உயர்த்திக் கொள்ளும் வகையில் மன்றம் பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
பணிகள் ~ சுகாதாரம்
முதலாவதாக சுகாதாரப் பணி, இந்தத் திட்டத்தின் கீழ் உடல்நலக் கல்வி ஒவ்வொரு ஊருக்கும் எடுத்துச் சொல்லப்படுகிறது. நோய்கள் பற்றிய அறியாமையை போக்கி மருத்துவ கல்வியும், உதவியும் கிடைக்கச் செய்து, குறிப்பாக கைக்குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி, கர்ப்பிணிகளுக்கு ஆலோச. னையும், உதவியும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், விபத்துக்குட்பட்டவர்களுக்கும் மருத்துவமனை செல்ல இலவச ஆம்புலன்ஸ் போன்ற பல்வேறு உதவிகள் நல்கி ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும், தடுக்க வேண்டிய மரணங்களைத் தடுக்கவும் மன்றம் துணை நிற்கிறது. சிறுவர் சீரணி என்ற அமைப்பை ஏற்படுத்தி சிறுவர்கள் மூலம் மற்ற சிறுவர்களுக்கு சுகாதாரக் கல்வி கற்றுக் கொடுக்கவும், முலுதவிப் பயிற்சி, யோகாசனம், போன்ற பயிற்சிகளை கொடுத்துதவும் திட்டங்களை திட்டி மன்றம் அவற்றை செயற்படுத்தி வருகிறது.
அநாவசிய மருந்துகள் பற்றியும் அவற்றின் தீமை பற்றியும் கல்விக் கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம். நமது பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து அதன் சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். மூலிகை மருத்துவத்தை பரப்பி வருகிறோம். ஊனமுற்ற குழந்தைகளுக்கு வைத்திய உதவியும் வழிவகைகளையும் காட்டி வரப்படுகிறது. மிகத் தீவிரமான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படின் அதற்காக நிதி உதவியும் செய்து வருகிறோம்.
சில ஆண்டுகளாக சத்துணவு சிறு குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது சத்துணவுக் கல்வி மட்டும் தருகிறோம். தாய்மாரே தமது குழந்தைகளுக்கு சத்துணவு செய்து வழங்குமாறு ஊக்குவிக்கிறோம்.
பயிற்சி
உடல் நலத்தைப் போலவே, மனவளத்தையும், செயற்திறனையும் வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமாதலின், மக்களின் வளர்ச்சிக்ாக கல்வித்திட்டங்களை மன்றம் செயற்படுத்திவருகிறது. இளம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் தொழிற்கல்வி தரப்பட்டு வருகிறது. தையல், தட்டச்சு, மோட்டார் வாகனம்பழுதுபார்த்தல், கம்ப்யூட்டர் கல்வி, மின்சாரத்துறை பழுது
93

Page 58
பார்த்தல், டி. வி. பழுதுபார்த்தல், தச்சுவேலை, தாதிப்பயிற்சி, அறுவைச் சிகிச்சை உதவியாளர், அச்சுக்கூடப் பணியாளர், கோழிவளர்ப்பு, தேனி வளர்த்தல் போன்ற பல்வேறு தொழிற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெறுபவர்கள் இலகுவாக தொழில்பயிற்சி பெற்று விடுகிறார்கள்.
கல்வி
அடிப்படைக் கல்வியையும், உயர்கல்வியையும் நமது மாணவர்கள் பெறுவதற்காக நாம் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறோம். நாம் மன்றம் அமைத்த பொழுது, பள்ளிக்கூடம் செல்லும் பருவத்தினர் 50 விழுக்காட்டினர் கூட பள்ளி செல்லவில்லை. நமது முயற்சியினாலும், தூண்டுதலாலும் இன்று 98 விழுக்காட்டினர் பள்ளி செல்லுகி. றார்கள். பலர் இடையிலேயே பாடசாலையை விட்டு விலகிவிடுவார்கள். மன்றப் பணியாளர்கள், இடையிலேயே விலகியவர்களையும் பள்ளி செல்லாத. வர்களையும் தொழிலில் ஈடுபட்ட குழந்தைகளைக் கூட பள்ளிக் கூடங்களில் சேர்த்திருக்கிறார்கள். இப்பொழுது கல்வி ஆர்வம் பரவலாக எல்லோரிடத்திலும் காணப்படுகிறது. ஆனாலும் 10 வகுப்புக்கு மேல் பலர் படிப்பதில்லை. ஆகவே, கோப் கல்வியுதவித் திட்டத்தின் கீழ் 11 - 12ம் வகுப்பில் படிக்கவும், கல்லூரிகள் தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர்கல்வி கற்பதற்காக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. பொறியியல், மருத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் கற்போருக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏறக்குறைய 300 மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இம்முறைகள் மூலம் கல்வி பெற முடியாதவர்களுக்கு அஞ்சல் வழிக் கல்வி, இரவுபாடசாலை,முதியோர் ஆகிய திட்டங்களினூடாக மன்றம் கல்வி அறிவையும் எழுத்தறிவையும் பரப்பி வருகின்றது.
இவ்வாறே பல்வகையான கருத்தரங்குகள் மூலமும் பொதுக் கல்வியையும், பொது அறிவையும் மன்றம் பரப்பி வருகிறது. சட்டப் பயிற்சி கருத்தரங்குகள் மூலம் அரசியலமைப்புத் திட்டம் நீதி நிர்வாகம், சாதாரண சிவில், கிரிமினல் சட்டங்கள், நடைமுறைகள் பற்றிய கல்வியை கொடுத்து வருகிறோம். நிலச் சட்டங்கள் பற்றி சிறப்புக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. மனித உரிமைக் கல்வி, கருத்துப்பட்டறைகள் மூலம் வழங்கப்படுகிறது. பெண்ணுரிமை, சுற்றுப்புறச் சூழல், நுகர்வோர் பாதுகாப்பு ஆகியன பற்றிய கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன.
இது தவிர, தொண்டர் பயிற்சிக் கல்வியின் மூலம், சமுதாயக் கல்வி, தலைமைத்துவக் கல்வி, அரசியல் பொருளாதாரக் கல்வி திட்டமிட்ட அடிப்படையில் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. நூலகங்கள் உருவாக்கப்படுகின்றன. சுருங்கக் கூறின், மன்றம் ஒரு மக்கள் பல்கலைக்கழகமாக இயங்கி வருகிறது.
94

சேமிப்பு
நமது மக்கள் அனைவருமேந்தின்மிக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள். அவர்களின் மிகப்பெரிய பிரச்சனை ஒழுங்கான வேலையின்மையும் நியாயமான சம்பளமில்லாமையுமே. இவ்விரு காரணங்களால் கடன் வாங்கி வாழ வேண்டிய சூழ்நிலையில் நம் மக்கள் பெரும்பாலோர் இருக்கிறார்கள். ஆகவே கடன் கொடுத்து மக்களை நிரந்தர கடனாளிகளாக மாற்றிவிடுகிறார்கள். வாழ்நாள் முழுவதும் கரை சேர முடியாமல் துன்பத்தில் தத்தளிக்கிறார்கள் மக்கள். அவர்களுக்குக் கைகொடுப்பதுபோல் மக்களின் சிறுசேமிப்பிற்கு இயக்கம் செயல்படுகிறது. மக்கள் சேமிப்பு குழுக்கள் அமைத்து சிறுசேமிப்பில் ஈடுபடுகிறார்கள். அவர்களது தேவைகளுக்கு அவர்கள் சேமிப்புநிதியிலிருந்து குறைந்த வட்டிக்கு கடன் பெறலாம். மக்கள் சேமிப்பு தொகைக்கு ஈடான தொகையை மன்றம் சேமிப்பு நிதியத்துக்கு வழங்குகிறது. இச்சேமிப்புப் பழக்கத்தின் மூலம் மக்களுக்கு கடன் மீட்சியும், தன்னம்பிக்கையும், நல்லுறவும், ஏற்படுகிறது.
இவ்வாறு மன்றம் மக்களின் சுமைதாங்கியாகவும் இருந்து வருகிறது.
மாதரணி
மக்கள் தொகையின் சரிபாதி பெண்கள். ஆனால் அவர்களுக்கு வாழ்க்கையில் செல்வத்தின் சரிபாதி கிடைப்பதில்லை. ஆனால் வறுமையிலோ சரிபாதிக்கு அதிகமான பங்கு கிடைக்கிறது. வறுமையின் கொடுரங்களை எல்லாம் மெளனமாய் சகித்துக் கொள்பவள் பெண். ஆகவே பெண் விடுதலைக்கும், பெண் முன்னேற்றத்திற்கும் மலையக மாதர் முன்னணி என்ற இயக்கம் மன்றத்தின் ஆதரவோடு இயங்கி வருகிறது.
பெண்களை ஒன்றாய் இணைத்ததன் மூலம் அவர்கள் பிரச்சனைக்கு அவர்களே முகங்கொடுத்து தீர்வுகாண வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்து செயற்பட வாய்ப்பளிக்கப்படுகிறது. சம சம்பளம், சம உரிமை, சம அந்தஸ்து என்று அனைத்துப் பெண் உரிமைக்கும் போராட பெண்கள் முன்வருகிறார்கள், பெண் குழந்தைகளை தாழ்த்தி நடத்தும் போக்கு நீக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மாதர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாதர் பேரணிகள் நீலகிரியில் சர்வசாதாரணமாகி விட்டன.
பெண்களுக்கென்றே தனிப்பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. தலைமைத்துவ பயிற்சி சுயதொழில் பயிற்சிக் கலைப் பயிற்சி ஆகிய பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. பெண்களுக்குள்ளேயே மிகவும் தாழ்ந்த அவல நிலையில் இருப்பவர்கள் தனித்து வாழும் பெண்கள். அவர்களின் முன்னேற்றத்துக்கு மன்றம் வழி அமைத்திருக்கிறது. உருளைக் கிழங்கு வற்றல், தேயிலைப் பயிர்ச் செய்கை ஆகிய சுயதொழில் ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
95

Page 59
கைம்பெண்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இப்பொழுது எதிர்வரும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு பயிற்சிகள் தரப்படுகின்றன. இவ்வாறு மகளிர் மேம்பாட்டில் மன்றம் மாபெரும் துணையாக விளங்குகிறது.
இளைஞரணி
மன்றத்தின் உயிர்த் துடிப்பாக விளங்குகிறது நமது இளைஞரணியாகும். மன்றத்தின் இலட்சியங்களை செயற்படுத்தும் முன்னணிப் படையி. னராக இவர்கள் விளங்குகிறார்கள். மக்களை ஒன்று திரட்டுவதிலும் பேரணிகளை நடத்துவதிலும் இளைஞர்களே பெரும் பங்கு வகிக்கிறார்கள். சினிமாவின் மாயைக்குள் சிக்கியிருந்த பலர் திசைமாறி சமுதாய விடுதலைக்கு தம்மை முற்றாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்கள். கலை நிகழ்ச்சிகள்,போராட்டங்கள், பிரச்சாரங்கள், கொள்கை விளக்கம், சிந்திக்கத் தூண்டுதல் போன்ற பணிகளில் நமது இளைஞர்கள் ஏறு நடைபோட்டு வருகிறார்கள்.
மன்ற எதிர்காலத்தின் எக்காளமாக இளைஞரணி இயங்கி வருகிறது.
இயற்கையின் இமைகள்
மன்றம் நீலகிரியின் சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பிலும், அபிவிருத்தியிலும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. மரம் நடுதல், மூலிகைப் பண்ணை அமைந்துள்ளது. நீலகிரியில் உள்ள மருத்துவ மூலிகைகளை இனங்கண்டுள்ளது. மரங்கடத்துவோரை கண்டுபிடித்து தடுத்து காவலர். களிடம் ஒப்படைத்துள்ளது. நீலகிரி உயிர் வலயத்திட்டம் பற்றி ஆய்வு நடத்தியுள்ளது. பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. நீலகிரியில் இயற்கைச் சூழல் சிதைக்கப்படுவது பற்றி பூரணமான ஒரு சுருள் படம் எடுத்துள்ளது. மக்கள் விரோத சுற்றுப் புறச் சூழல் கொள்கைகளை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஆதிவாசி மக்களோடு இணைந்து அளவில்லாமல் தேயிலைப் பயிர்ச் செய்கை விஸ்தரிக்கப்படுவதை கண்டித்துள்ளது. இளைஞர்களிடமும், பொது மக்களிடமும் இயற்கையை நேசிக்கும் பண்பை வளர்த்து வருகிறது. இரசாயன உரங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகிறது. அர்த்தமற்ற வனச் சட்டங்களையும் முதலாளிகள் காடுகளை கொள்ளையடிக்க தொழிலாளர்களை சிறைப்படுத்தும், போலிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது. வன விலங்குகளை கள்ளத்தனமாகவே வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்வதையும் சந்தனம், வெண்தேக்கு, ஈட்டி போன்ற விலை மதிப்பற்ற மரங்கள் அதிகாரிகளின் அனுசரணையோடு கடத்தப்படுவதையும், எதிர்த்து கண்டன ஊர்வ
96

லங்கள் நடத்திவரப்படுகிறது. ஆலைகள் நீரையும், காற்றையும் மாசுபடுத்துவதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.
நாற்றங்கால்களை விநியோகம் செய்து பயன்தரு மரங்களை மக்கள் பயிர் செய்யத் தூண்டி வருகிறோம். வணிக வசதிக்காக மரம் வெட்டுதலையும் கடத்துதலையும் தடுக்கக் கோரி வருகிறோம். சமூகக் காடுகள் என்ற பெயரால் ஏழை மக்கள் விவசாயம் செய்யும் நிலங்களை அபகரித்து வணிகக் காடுகள் வளர்க்கும் வஞ்சகத்தை எதிர்த்துப் போராடி வருகிறோம். வணிக நலனுக்காக தேயிலைப் பயிர்ச் செய்கையை அதிகரிக்கச் செய்து, ஆதிவாசிகளும் வனவிலங்குகளும் வாழமுடியாத வகையில் வனங்களை அழித்து வரும் போக்கை தடுத்து நிறுத்துமாறு எச்சரிக்கை செய்து வருகிறோம். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கெனவே "இயற்கையின் இமைகள்" உருவாகியுள்ளது.
குழந்தைத் தொழிலாளர்
தேயிலைத் தோட்டங்களிலும், பிற இடங்களிலும் குழந்தைகளை தொழில் செய்ய அனுமதித்து அவர்களின் வாழ்க்கையையே பாழாக்கும் நடைமுறையை வன்மையாக எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறோம். பல குழந்தைகளை வேலைத் தளத்திலிருந்து மீட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு மலையக மாதர் முன்னணி உறுதுணையாக நிற்கிறது. கோயமுத்துரில் தெருக் குழந்தைகளுக்கென ஒரு அடைக்கல இல்லம் கட்டியுள்ளோம். இன்று 40க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்குமிடமும் பயிற்சி நிலையமும் அமைந்துள்ளது. இது மன்றத்தின் புதிய முயற்சிகளில் ஒன்று.
தலித் ஒருங்கிணைப்பு
1981ஆம் ஆண்டுமன்றம் ஒர் முக்கியமான முடிவெடுத்தது. அதாவது தாயகம் திரும்பிய இருபது ஆண்டுகளுக்குப்பின்னரும் தாயகம் திரும்பியோர் என்ற தனி அடையாள முத்திரை குத்திக் கொண்டிருக்க முடியுமா? இம்மண்ணிலேயே உதித்த புதிய தலைமுறையினருக்கு அப்பெயர் பொருத்தமாகுமா? ஆகவே நமது உண்மையான அடையாளம் காணப்பட வேண்டும் என்ற முடிவு ஏற்பட்டது. இரண்டு விடைகள் கிடைத்தன. ஒன்று நாம் தொழிலாளர், மற்றது நாம் தலித்துகள். ஆகவே தலித் ஒருங்கிணைப்பை நமது முக்கிய குறிக்கோள்களுக்கு ஒன்றாக ஏற்றுக் கொண்டோம். இன்று படிப்படியாக தலித்துக்கள் எம்மோடு இணைந்து வருகின்றார்கள். தலித் தாயகம் திரும்பியோர் ஒன்றிணைப்பு வெகுவேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது.
97

Page 60
மன்றத்தின் உதகைக் கிளையில் ஏராளமான தலித் உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள். மன்றத்தின் அங்கங்களின் ஒன்றான நலிந்தோர் நலமையம் இந்தப் பணியினை செவ்வனே நிறைவேற்றி வருகிறது. பரந்துபட்ட தலித் இயக்கங்களோடு இணைப்பும் நெருக்கமும் வளர்ந்து வருகிறது.
நீலகிரியில் தலித் ஒருங்கிணைப்பு மாநாட்டை மன்றம் சிறப்புற நடத்தியது. நீலகிரிதான் தமிழகத்தின் முதன் முதல் தலித் இயக்கக் களம் என்ற உண்மையை நாடறிய பறைசாற்றினோம். 1983ஆம் ஆண்டிலேயே பண்டிதர் அயோத்திதாசர் போன்ற தலித் தலைமகனார் ஆதிதிராவிட மகாஜன சபையை நீலகிரியில் நடத்தினார் என்ற உண்மையை வெளிக் கொணர்ந்தது மன்றம். அது போன்ற தலித் தலைவர்களின் முன்னோடியான திவான் பகதூர், இரட்டைமலை சீனிவாசன் நீலகிரியில் வாழ்ந்தவர் என்ற உண்மையை உலகறியச் செய்தோம். 1890களில் "தமிழன்" என்ற தமிழ்ப்பத்திரிகையை பண்டித அயோத்திதாசர் வெளியிட்டார். திவான் பகதூர் இரட்டை மலைசீனிவாசன் "பறையன்" என்ற பத்திரிகையை வெளியிட்டார் என்பது போன்ற மறைக்கப்பட்ட உண்மைகளை மன்றம் பகிரங்கப்படுத்தியது. உதகையில் முதன் முதலாக தலித் கண்காட்சிநடத்தினோம்.வளர்ந்து வரும் தலித் இயக்கத்தில் மன்றம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
தொழிற்சங்கம்
தொழிலாளர்களாகிய நமது மக்களுக்கு தொழிற்சங்கங்கள் மிக அவசியமானது என்று மன்றம் நம்புகிறது. ஆகவே தொழிற்சங்கங்களில் சாராத தொழிலாளர்களை ஒர் அமைப்பின் கீழ் கொண்டுவர மன்றம் முயன்று வருகிறது. ஜனநாயக தொழிலாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களை தொழிற்சங்க ரீதியாக இணைப்பதே இதன் நோக்கம். தொழிற்சங்கங்களோடு நல்லுறவை மன்றம் வளர்த்துக் கொண்டு வருகிறது. கூடலூரில் ஈராண்டுகளாக தொழிலாளர் சட்டங்கள் பற்றி வகுப்புகளை மன்றம் நடத்தி வந்துள்ளது.
தாயகம் திரும்பிய மக்களை உள்ளூர் தலித் -தொழிலாளர்களோடும், விவசாயிகளோடும் ஒன்றிணைக்கும் பணியில் மன்றம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
ஆய்வுமையம்
மன்றத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக சென்னையிலே ஒர் ஆய்வுத் தகவல் மையம் 1985ல் ஏற்படுத்தினோம். அரசின் மறுவாழ்வுத் திட்டங்களை ஆய்வு செய்து அவற்றின் தோல்விகளை அம்பலப்படுத்தினோம். மாற்றுத் திட்டங்கள் கொண்டு வரவேண்டுமென்று வற்புறுத்தினோம். மறுவாழ்வு உதவிகள் கிட்டாத பலருக்கு மறுவாழ்வு
98

உதவிகள் வழங்குவதற்கென உருவாக்கப்பட்ட தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி செயலாற்றி இருப்பதை காரசாரமாக விமர்சனம் செய்தோம்.
EXODUS என்ற ஆங்கில வெளியீட்டை ஐந்து ஆண்டுகளாக நடத்தி தாயகம் திரும்பிய மக்களின் அவல நிலையை உலகறியச் செய்தோம். இப்பத்திரிகை தாயகம் திரும்பியோருக்காக கணிசமாக செயலாற்றியுள்ளது. தாயகம் திரும்பியோர் பற்றிய தகவல்கள் அரசு ஆணைகள் ஆகியவற்றைத் திரட்டி தாயகம் திரும்பிய சங்கங்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்பட்டது. அரசு அலுவலகங்களோடு தொடர்புகொண்டு தாயகம் திரும்பியவர்களுக்கு பலவகையான பரிகாரங்கள் செய்து கொடுத்தோம்.
ஆய்வுப் பணிகள்
தாயகம் திரும்பியோருக்கு உதவுவதற்காக தென்னிந்தியதிருச்சபைகள் ஒருங்கிணைந்து டெக்ராஸ் நிறுவனத்தை உருவாக்கிய பொழுதுநாமும் உடன் நின்றோம். அந்த நிறுவனத்தோடு பல்வேறு வகைகளில் இணைந்து செயல்பட்டோம். தாயகம் திரும்பியோர் பிரச்சனைகளை ஆய்வு செய்த ஆய்வாளர்களுக்கும், குறிப்பாக டாக்டர் வேதவள்ளி, திரு. வாமதேவன் அவர்களுக்கும் பல்விதமான ஒத்தாசைகள் நல்கினோம். சென்னை பல்கலைக் கழகத்தின் தென் கிழக்காசிய ஆய்வு மையத்தின் நெறியாளர் பேராசிரியர் டாக்டர். சூரியநாராயணன் அவர்களோடு ஒத்துழைத்தோம். அம்மையத்தின் சார்பில் மறுவாழ்வுத் திட்டங்கள் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டதோடல்லாமல் அக்கருத்தரங்கின் ஆய்வு நூல் ஒன்று வெளிவரத் துணை நின்றோம்.
முக்கியமான தேசிய தலைவர்களையும், அறிஞர்களையும் தாயகம் திரும்பியோரின் பிரச்சனைகளில் அக்கறை கொள்ளச் செய்தோம். சுவாமி அக்னிவேஷ், உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணஐயர், டாக்டர் சிட்டிபாபு, முன்னாள் ஆளுனர் சி. சுப்ரமணியம், திருமதி. சரோஜினி வரதப்பன் ஆகியோரின் ஆதரவைத் திரட்டினோம். இன்றும் பலராலும் பயன்படுத்தப்u(Bassip6OT DIRECTORY OF REHABILITATION (uppoingp6, g5, Lilab6fair தொகுப்பு) என்ற ஆய்வு நூலை வெளியிட்டோம்.
நலிந்தோர் நலமையம்
1989ல் இந்தத் தகவல் ஆய்வு மையம் கோயமுத்துருக்கு மாற்றப்பட்டது. புதிய சிந்தனைகளும், நடைமுறைகளும் இந்த ஆய்வு மையத்தின் பணிகளில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆகவே அதன் பெயரை நலிந்தோர் நல மையமாக மாற்றி இயங்க வைத்தோம். நலிந்தோர் நல மையத்தின் அலுவலகம் இப்போது கோத்தகிரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
99

Page 61
தலித் ஒருங்கிணைப்பு, மாதர் முன்னேற்றம், வளர்ச்சிப் போக்குகள், சுற்றுப்புறச் சூழல் பற்றிய ஆய்வு, வெளிநாட்டுத் தொடர்புகள், தகவல் சேகரிப்பு வெளியீடுகள், தொண்டு நிறுவனங்களோடு தொடர்பு, திட்டமிடுதல், மதிப்பீடு. குழந்தைத் தொழிலாளர், மனித உரிமைகள் ஆகிய துறைகளில் நலிந்தோர் நலமையம் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கிறது.
இந்த மையத்தின் வெளியீடான "மக்கள் மன்றம்" என்ற மாத வெளியிடு வெளி வந்து கொண்டிருக்கிறது. இது மக்கள் தொடர்பு சாதனமாக இயங்கி வருகிறது. இந்த வெளியீட்டை நமது அச்சகத்திலேயே வெளியிடும் வாய்ப்பு இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு மன்றம் ஆற்றி வரும் பணிகளை சுருக்கமாக மேலே கூறியுள்ளோம். இவற்றின் ஒட்டுமொத்தமான தாக்கங்கள் எவை? மிகவும் கொடுரமாக ஒடுக்கப்பட்டு வந்த மக்கள் ஓரணியாக திரட்டப்பட்டி ருக்கிறார்கள். கோத்தகிரியில் மட்டும் உதித்த மன்றம் இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் மக்கள் தோழனாக, துணையாக, தொண்டனாக கவசமாக வழி காட்டியாக, பாதுகாவலனாக கருதப்படுகிறது. ஒரு காலத்தில் மன்றத்தில் இணைய அஞ்சிய மக்கள் எண்ணற்ற இடையூறுகளுக்கிடையே மன்றத்தில் இணைவது பெருமையாக பெரும் பாதுகாப்பாகக் கருதுகிறார்கள். மன்றத்தின் பேரணி என்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. மன்றத்தின் அம்பேத்கார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட பொழுது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கோத்தகிரியில் குழுமியது கண்கொள்ளாக் காட்சி மட்டுமல்ல வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒர் நிகழ்ச்சியுமாகும். ஒரு காலத்தில் உதாசீனப்படுத்தப்பட்ட மக்கள், இப்பொழுது மதிக்கப்படுகிறார்கள். காவல் நிலையத்திலோ, அரசு அலுவலகங்களிலோ, முதலாளியின் மத்தியிலோ மன்றத்தைச் சார்ந்தவர்கள் மரியாதையோடு நடத்தப்படுகிறார்கள்.
அவர்களது கோரிக்கைகள் கவனமாக அணுகப்படுகிறது. மக்கள் மத்தியிலே ஒரு தன்னம்பிக்கை வளர்ந்துவிட்டது. சில அடிப்படை பிரச்சனைகளை நேரடியாகவே தீர்த்துக் கொள்ள மக்கள் துணிந்து விட்டார்கள். மன்றத்தோடு மக்கள் இணையும் நெருக்கத்தைக் கண்ட அரசியல்வாதிகள், அஞ்சி மன்றத்தை அவதூறுக்குள்ளாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள் பணங்கொடுத்தும் வராத கூட்டம், எவ்வித எதிர்பார்ப்புமின்றி சொந்தச் செலவில் உணர்ச்சிபூர்வமாக மக்கள் மன்றப் பொதுக் கூட்டங்களுக்கு வருவதை பலரால் ஜீரணிக்க முடியவில்லை. எத்தனையோ அவதூறுகளை பறைசாற்றியும், இடுக்கண்களை ஏற்படுத்தியும் மக்களையும் மன்றத்தையும், பிரிக்க முடியாமல் சில சூழ்ச்சி மதியினர் ஏமாந்து நிற். கின்றனர். மன்றத்தைப் பொருத்தளவில் கூட, ஒவெலித் திருவள்ளுவர் நகரிலிருந்து 125 கிலோமீட்டர் பிரயாணம் செய்து கோத்தகிரிக் கூட்டத்தில் கலந்து கொண்டு நள்ளிரவுக்குப் பின்னர் வீடு திரும்பும் மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது.
100

சனநாயகப் பண்பு
எந்தப் பிரச்சனையையும் மக்களோடு சேர்ந்து பேசி முடிவெடுக்கும் ஒரு சனநாயகப் பழக்கத்தை மக்கள் மத்தியிலே ஏற்படுத்தியுள்ளோம். கிராம மட்டத்திலிருந்து, மாவட்ட நிலைவரை சனநாயக ரீதியிலே மன்றப் பொறுப்பாளர்கள் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மக்களைக் கலந்தாலோசித்து செயல் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. திட்டங்களை அமுல்படுத்துவதிலும், மக்களின் ஆலோசனைகளுக்கும், அபிப்பிராயங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. மன்றத்தில் எதேச்சதிகாரத்திற்கு இடமே இல்லை. இதுவே மன்றத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.
உதவிகள்
மன்றப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் பாதிக்கப்படும் பொழுதுமன்றம் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்கிறது. மக்களை என்றும் மன்றம் கைவிடுவதில்லை. அவர்களை சிறைமீட்டல், பரிந்து பேசுதல், பிறரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்தல், வழக்குச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுதல் போன்ற பொறுப்புகளில் இருந்து மன்றம் என்றும் பின்வாங்கியதில்லை.
பொறுப்புகள்
மன்றப் பொறுப்புகள் பல்வேறு நிலைகளிலுள்ள அலுவலர்களோடு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. செயலாளர்களுக்கு பரிபூரண சுதந்திரம் வழங்கப்படுகிறது. பணியார்களிடையே தோழமை உணர்வு வளர்க்கப்படுகிறது. மன்றப் பொறுப்பு வகிக்கும் அனைவரிடத்திலும் நலிந்தோர் வாழ்வில் சுபிட்சம் ஏற்படுத்த வேண்டுமென்ற உறுதி கொழுந்து விட்டு எரிகிறது.
நேர்மை
மன்றத்தின் நிர்வாகம் மிக நேர்மையாக நடைபெறுகிறது. மன்றத்தில் கண்துடைப்பு பணிகள் எதுவுமே இல்லை. எல்லாமே வெட்ட வெளிச்சம். மக்களை மதிக்கும் பண்புஎல்லோரிடத்திலும் உண்டு. ஆழ்ந்த மனிதநேயமும் சகோதரத்துவமும், மக்களையும் மன்றத்தையும் பிணைக்கிறது. “சரிநிகர் சமானமாக வாழ்வோமிந்த நாட்டிலே’ என்ற எக்காளம் மன்றத்தில் எப்பொழுதுமே இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
101

Page 62
உரிமை வேட்கை
மக்கள் மனதிலே உரிமை உணர்வுகளை பதித்துவிட்டது மன்றம். அஞ்சியோடும் நிலை மாறிநிமிர்ந்துநின்று போராடும் நிலை ஏற்பட்டுவிட்டது. மனுக்கொடுத்து மனமுடைந்த காலம் போய் தட்டிக் கேட்கும் தைரியம் ஏற்பட்டுள்ளது. பிறர் தயவை எதிர்பார்க்கும் பண்பு போய் எழுந்துநின்றுதாமே தன்னிறைவை எய்தக்கூடிய மனவலிமை ஏற்பட்டுள்ளது. மக்களை சுரண்டியே வாழ்ந்தவர்கள் சுருங்கிப் போய்விட்டார்கள். மக்களிடையே ஏற்பட்டுள்ள உரிமை வேட்கையும் ஒற்றுமையுணர்வும், தன்மானப் போக்கும் ,மன்றத்தின் மாபெரும் சாதனைகள் எனலாம்.
மன்றம் நடத்திய போராட்டங்கள் பல. ஆற்றியுள்ள பணிகள் பல. ஆனாலும் ஆற்றவேண்டிய பணிகள் மிகப்பல. அடுத்துவரும்பத்தாண்டுகளில் அதற்கான வழிவகைகள் காணப்பட வேண்டும். அதோ தெரிகிறது புதிய குருஷேத்திரம்.
102

சிறைக்குறிப்புகள்
அண்மையில் எனது கைக்கெட்டிய நூல்களெல்லாமே சிறைவாசத்தைப் பற்றிய நூல்கள்தான். செங்கல்பட்டில் 120 நாட்கள் அரசாங்க விருந்தாளியாக இருந்து விட்டு வெளியே வந்த பின்னர் கூடலூர் தோழர்கள் வழங்கியநினைவுப்பரிசு, ஜூலியஸ் பியூசிக் என்பவருடைய "துரக்குமேடைக் குறிப்பு" ஜூலியஸ் பியூசிக் என்பவர் செக்கோஸ்லவாக்கிய நாட்டைச் சேர்ந்தவர். 1943ல் செக்கோஸ்லவாக்கிய நாட்டை ஜெர்மனிய நாசிகள் கைப்பற்றிய பொழுது தனது நாட்டுக்காக மறைமுகமாகப் போராடிய வீரர் பியூசிக். அவர் சிறையிலிருந்த பொழுது எழுதிய குறிப்புகளே "துரக்குமேடைக் குறிப்புகள்" இதில் அவர் கூறினார் : "மனிதர்களுக்குத் தங்களுடைய கண்களைத் திறந்து பார்க்க எத்தனை நூற்றாண்டுகள் வேண்டியிருக்கிறது? தன் சரித்திரக் காலத்தில் முன்னேற முயன்ற மனிதவர்க்கம் எத்தனை ஆயிரம் சிறைகளில் நுழைந்து அவதியுற்றிருக்கிறது? முன்னேற்றப் பாதையில் சொச்சமுள்ள தூரத்தைக் கடப்பதற்கும் இன்னும் எத்தனை சிறையறைகளை அது தாண்ட வேண்டியிருக்கும்?"
இதன் கருத்தே, மனித முன்னேற்றப் பாதையில் நாம் சந்திக்கும் மைல்கற்கள் சிறையறைகள் தான் என்பதாகும்.
நம் நாட்டில் சுதந்திரத்திற்காகப் போராடிய காந்தி, நேரு, முதல் பல்லாயிரக் கணக்கான தியாகிகள் இந்தியச் சிறைகளில் பல்லாண்டு காலங்கள் வாடி வதங்கிய பின்னர் தான் இந்தியா விடுதலை அடைந்தது.
1991ல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின் தமிழகக் காவல்துறை நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களை மனித வேட்டையாடிய போது, அதற்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி கைது செய்யப்பட்டு, கால்களிலும், கைகளிலும் விலங்கிடப்பட்ட நிலையில் சிறையிலிடப்பட்டு வதையுற்ற தன் கோர அனுபவத்தை இர. சிவலிங்கம் மக்கள் மன்றம் ஏட்டில் விபரித்து எழுதிய கட்டுரைத் தொடர்
103

Page 63
அநேகமாக இந்திய அரசியல் தலைவர்கள் அனைவருமே சிறைவாசம் அனுபவித்தவர்கள் தான் கோவை மத்திய சிறைச்சாலையிலே செக்கிழுத்த சிதம்பரனார் சிறைவைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம் புனிதக் கூடமாகக் கருதப்படுகிறது. எரவாடா சிறைச்சாலையில் காந்தி சிறைவைக்கப்பட்டிருந்த சிறைக்கூடமும் நினைவுச் சின்னமாக போற்றப்படுகிறது.
சுதந்திர இந்தியாவில் அரசியல்வாதிகளையும் விடுதலைப் போராட்ட வீரர்களையும் சிறைவைக்கும் பணி சற்றும் குன்றாமல் தொடர்ந்து வருகின்றது. 1950ல் கோவையில் சிறைவைக்கப்பட்ட தோழர் சி. ஏ. பாலன் அவர்கள் "தூக்குமர நிழலில்" என்ற நூலில் 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அனுபவித்த சித்திரவதைகளையும், கசப்பான அனுபவங்களையும் மிக விரிவாக எழுதியிருக்கிறார். அந்நூலின் இறுதியில் அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை மாற்றப்பட்டு பன்னிரண்டு வருடகால ஆயுள்தண்டனை முடிவடைந்த பின்னர் விடுதலை செய்யப்பட்ட பின் அவர் இவ்வாறு கூறினார் :
"தொழிலாளர்கள், உழவர்கள், ஏனைய மனிதாபிமானம் படைத்த கட்சிகள், குழுக்கள், தனிநபர்கள் ஆகியோர்களுடைய அன்புகனிந்த ஆற்றல் இருந்திராவிட்டால், நான் இன்று மண்ணோடு மண்ணாகச் சேர்ந்து, மண்ணில் வளரும் செடிகொடிகளுக்கு இரையாகி இருப்பேன். என் உயிரைக் காப்பாற்ற உழைத்தவர்கள் காலப் போக்கில் என்னை மறந்திருக்கலாம். ஆனால் உயிர் பெற்று, பெற்ற அந்த உயிரின் கதையைச் சொல்ல வாழ்ந்து வரும் நான் யாரையும் மறந்திட முடியாது. நன்றியறிதலுடன் நான் அவர்களை என்றென்றும் மறவாதிருப்பேன்."
இதே போலத்தான் எனது உள்ளத்தின் அடிநாதத்திலும் என்னைப் பலவந்த நாடு கடத்தலினின்றும் காப்பாற்றிய பல்லாயிரக் கணக்கான அன்பு நெஞ்சங்களுக்கு அளவற்ற நன்றி சுருதி மீட்டிக் கொண்டே இருக்கிறது.
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய முற்போக்கு வாதிகளை பிரித்தானிய அரசு அந்தமான் சிறைச்சாலையில் அடைத்து வைத்தது. அவர்களில் ஒருவர் பிஜோய்குமார் சின்ஹா என்பவர். அவர் அந்தமான் சிறைச்சாலை அனுபவங்களை "அந்தமான் ஒரு இந்திய பாஸ்டீல்" என்ற ஆங்கில நூலில் எழுதியிருக்கிறார். பாஸ்டீல் என்பது பிரான்சு நாட்டில் சர்வாதிகாரத்தின் சின்னமாக இருந்த சிறைச்சாலை, அதனோடு ஒப்பிடக்கூடியது அந்தமான் சிறைச்சாலையென்று எழுதியிருக்கிறார். அந்த நூலில் அரசியல் கைதிகள் எவ்விதக் காரணமுமின்றி ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு சிறையிலடைக்கப்பட்ட அந்த மாபெரும் தலைவர் தனது சிறைவாசச் சிந்தனைகளை "சிறைச்சாலை டைரி" என்ற நூலில் எழுதியிருக்கிறார். எப்படி ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டில் எல்லா உரிமைகளும் எவ்விதக் காரணமும் இன்றி பறிக்கப்படக் கூடும் என்று அவர் வியந்து நொந்து போயிருக்கிறார். நாம் சட்டப்படி ஒழுகுகிறோம் என்று நாம் இறுமாந்திருக்க முடியாது. சட்டம் நமக்கு பாதுகாப்பில்லை. சர்வாதிகாரம் தலையெடுத்து
104

விட்டால் ஒரு நாட்டின் தலையெழுத்தே மாறிவிடக் கூடுமென்று எழுதியிருக்கிறார்.
அவர் சிறையிலிருந்தே பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய ஒரு மனுவில் கூறுகிறார்:
"நான் ஒரு வயது முதிர்ந்த மனிதன் என்பது உங்களுக்குத் தெரியும். எனது வாழ்க்கைப் பணிகள் முடிவடைந்து விட்டன. எனது பிரபா (மனைவி) வின் மரணத்திற்குப்பின்னர் நான் யாருக்காகவும் வாழ வேண்டிய அவசியமே இல்லை. நான் கல்வியை முடித்துக் கொண்ட பின்னர் என் வாழ்நாள் முழுவதையும் என் நாட்டுக்காகவே அர்ப்பணித்துள்ளேன். இதற்குப் பிரதி பலனாக எதையும் கேட்கவில்லை. ஆகவே உங்கள் ஆட்சியில் ஒரு கைதியாகவே மரணமடைவதில் எனக்குத் திருப்திதான்.
"அப்படிப்பட்ட ஒரு மனிதன் வழங்கும் ஆலோசனைகளை நீங்கள் கேட்பீர்களா?நம்நாட்டில் சுதந்திரப்பிதா மகன்கள், உங்கள் தந்தை (நேரு) உட்பட நிர்மாணித்துள்ள தேசிய அடிப்படைகளை அழித்து விடாதீர்கள். மிகப் பெரிய ஒரு பாரம்பரியத்திற்கு நீங்கள் உரிமை உடையவர். உன்னத இலட்சியங்களும், செயற்படும் ஜனநாயகமும் அந்த பாரம்பரியத்திற்கு உரியவை. அவைகளை எல்லாம் சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டுச் செல்லாதீர்கள். அந்த உன்னதங்களை மீண்டும் நிலை நாட்டுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்."
இந்த உருக்கமான வேண்டுகோள் நம் உள்ளங்களை நெருடுகிறது. மனித உரிமைகளை, மனித சுதந்திரத்தைப் பறிப்பது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதற்குச் சமமாகும்.
2
நெல்சன் மண்டேலா இந்த நூற்றாண்டின் மகத்தான மனிதருள் ஒருவர். தென் ஆபிரிக்க நாட்டின் நிறவெறித் தீண்டாமையை முழு மூச்சுடன் எதிர்த்தவர். மகாத்மாகாந்தியினால் கூட நமது நாட்டில் தீண்டாமையை அழிக்க முடியவில்லை. ஆனால், நெல்சன் மண்டேலா இனவெறி, நிறவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். வருகிற ஏப்ரலில் நடைபெறப்போகிற தேர்தலில் வெற்றி பெற்று தென் ஆபிரிக்க நாட்டின் முதலாவது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கப் போகிறார். வெள்ளை ஆட்சிக்கு முடிவு கட்டி, உண்மையான ஜனநாயக ஆட்சிக்கு அடித்தளமிட்டிருக்கிறார். இத்தகைய அவர் 27ஆண்டுகள் சிறையிலிருந்திருக்கிறார். எவ்வளவு சிறந்த வரலாற்றுநாயகன் சிறையிலிருந்து புடம் போடப்பட்டிருக்கிறார். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலைக்காக உலகமே குரல் கொடுத்தது. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருக்கு விடுதலை கிடைத்தது. அண்மையில் அவரை விடுதலை செய்த டிகிளர்க் அரசு வெள்ளை ஆட்சியை ஒழிப்பதற்கு அவரோடு
105

Page 64
ஒரு இணக்கம் ஏற்படுத்திக் கொண்டது. இரத்தக் களறி, ஏற்படுவதைத் தடுத்து சமாதான உடன்படிக்கை மூலமாக சனநாயகத்தை நிறுவியமைக்காக, இருவருக்கும் இவ்வாண்டின் சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சிறைவாசம் இத்தகைய பெருமை வாய்ந்தது.
இத்தகைய பெருமையைத்தான் தமிழக அரசு எனக்கு நல்கியது. ஆகஸ்டு மாதம் 5ம் தேதி காலை நான் வீட்டிலிருக்கும் பொழுது தொண்டாமுத்தூர் பொலிசார் என்னைத் தேடி வந்தனர். அதற்கு முன் இரண்டு நாட்கள் என்னைத் தேடி வந்திருக்கிறார்கள் ஆனால் வந்த காரணம் சொல்லவுமில்லை, வரச் சொல்லவுமில்லை. அவர்கள் தேடிவந்த நாட்களில் நான் நீலகியிரில் நமது மக்களுடனிருந்தேன். ஆகஸ்டு5ம் நாள் நான் வீடு திரும்பிய உடனே பொலிஸ்காரர்கள் மோப்பம் பிடித்துக் கொண்டு வந்து விட்டனர்.
அன்றுதான் அந்த பொலிஸ் அதிகாரி முதன் முதலாக என்னைச் சந்திக்கிறார். தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நீங்கள் உடனடியாக எங்களோடு காவல் நிலையம் வரவேண்டும் என்றார்கள். "என்ன காரணம்"? என்று வினவினோம். "அரசாங்க உத்தரவு" என்று பதிலளித்தார். உத்தரவைக் காட்டுங்கள் என்று கேட்டேன். "கொண்டு வரவில்லை" என்றார். அப்படியானால் நான் மறுக்கலாம்தானே? என்று கேட்டேன். காவல் நிலையத்திற்கு வந்தால் உத்தரவைக் காட்டுவதாகச் சொன்னார். நான் உணவு அருந்தி உடை, உடுத்திக் கொண்டு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கத் தயார் என்றும் கையோடு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
எனக்கு இது புதுமையாக இருந்தது. அப்படி அவசரமாக என்னை அழைத்துச் செல்லக் காரணமில்லையே என்று நான் அதிசயித்தேன். பின்னர் எனக்கெதிராக எந்த ஒரு காரணமுமில்லையாதலாலும் நான் எவ்வகையிலேனும் சட்ட விரோதமாக நடக்கவில்லையாதலாலும், நான் அச்சமின்றி அலட்சியமாக அவர்களுடன் சென்றேன். பொலிஸ் வண்டியில் ஏறுமாறு கூறினார்கள். நான் மறுத்து எனது வண்டியில்தான் வருவேன் என்றேன். சிறிது விவாதத்திற்குப் பிறகு அதற்குச் சம்மதித்து அவர்களும் எனது வண்டிக்குள் ஏறிக்கொண்டார்கள்.
அப்பொழுது தான் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. என்னைக் கைது செய்கிறார்கள் என்று உணர்ந்தேன். ஆனால் காரணமில்லாமல், பிடியாணையில்லாமல், கள்ளத்தனமாகக் கடத்தல் போல் கபடமாக அழைத்துச் சென்றார்கள். காவல்நிலையம் வந்த உடனே அந்தப் பொலிஸ் அதிகாரி அரசாங்க உத்தரவைக் காட்டினார். நான் அதிர்ந்து போனேன்!
என்னைக் கைப்பற்றி உடனடியாக காஞ்சிபுரம் அகதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டிருந்தது என்றால் நம்பமுடியவில்லை. கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் சட்டபூர்வமாக வாழ்ந்து வந்த என்னைத் திடீர் என்று அகதியாக்கி, பொலிஸ் காவலில் அகதிகள் முகாமில் வைக்க அரசுக்கு என்ன கேடு வந்தது?
106

இன்று வரை இந்தக் கேள்விக்கு விடையில்லை. நான் அகதியாக இந்தியாவிற்கு வரவில்லை. அரசிடம் அடைக்கலம் கோரவில்லை. ஐந்து பைசா உதவி கோரவில்லை, எனது முந்தையர்நாட்டுக்கு என் சுயவிருப்பப்படி வந்து குடியேறி அரசாங்க அனுமதியுடன் பொதுத்தொண்டில் ஈடுபட்டிருக்கும் ஒருவனை எவ்வித எச்சரிக்கையும் ஏதுவுமின்றி சிறைப்பிடிக்கும் செயலை யார் செய்வார்? ஏன் செய்வார்? இந்தியா ஜனநாயக நாடுதானா? சட்டத்தையும், மனித உரிமைகளையும் மதிக்கும் நாடுதானா?இதில் ஏதோ மர்மமிருக்கிறது என்று எனது மனம் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தது.
எனினும் எனது துணிச்சல் குன்றவில்லை ஓரளவு நிலைமையை ஊகித்துக் கொண்டேன். எனது மனைவிக்கும் எனது அலுவலகத்திற்கும் செய்தி சொல்லி அனுப்பினேன். சென்னை செல்ல அவசியமான உடைகளையும் வாசிக்க சில நூல்களையும் அனுப்பிவைக்குமாறும், சென்னையில் உள்ள வழக்கறிஞர்களுக்கும் நீலகிரியில் நமது மன்றத்திற்கும் அறிவிக்குமாறு உடனே செய்தி அனுப்பினேன்.
தொண்டாமுத்துர் பொலிசார் என் கை ரேகைகளைப் பதிவு செய்து என்னைப் புகைப்படமெடுத்தார்கள். உணவுக்குப் பிறகு அயர்வதற்கு வசதி செய்து கொடுத்தார்கள்; சற்றே உறங்கினேன்.
மாலை எனது மனைவியும், மகளும் உறவினர் ஒருவரும் என்னைக் காண வந்தார்கள். எனக்குப் பிரயாணத்திற்குத் தேவையான பொருட்களையும், உடைகளையும், கைச் செலவுக்கு பணமும் கொண்டு வந்து கொடுத்தார்கள். சிறிது நேரம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்துவிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிவிட்டு பந்தயக் குதிரைகள் போல பாய்ந்து செல்லும் எனது சிந்தனைகளோடு ஒன்றிவிட்டேன். என் மூளை நெருப்பாய்க் கொதித்தது. என் மனம் அநீதி கண்டு பொங்கியது. காவல் நிலையமோ வழக்கமான கலகலப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
என்னைக் காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு வந்த உடனேயே தொலைபேசி கணகணத்தது. உயர் அதிகாரிகள் விசாரித்துக் கொள்கிறார்கள்! கொண்டு வரப்பட்டு விட்டாரா? அடம் பிடித்தாரா? ஒத்துழைத்தாரா? இப்படிப் பல கேள்விகள் எஸ் பி. கியூ பிராஞ்ச் உதவி எஸ். பி. ஆகியோர் விசாரித்துக் கொள்கிறார்கள். என்னைக் கைப்பற்றிய அதிகாரி கூறுகிறார். அப்படியெல்லாமொன்றுமில்லை ஒத்துழைக்கிறார்!
சென்னைக்கு எப்படி அழைத்துச் செல்லப் போகிறீர்கள்? உயர் அதிகாரியின் கேள்வி எல்லா ஏற்பாடுகளும் செய்கிறோம் என்று அதிகாரி பதில் அளிக்கிறார். சேரனில் சென்னை செல்ல ஏற்பாடு. காவல் நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் வரை ஆறு ஆயுதந்தாங்கிய பொலிசார் காவலுக்கு வர வேண்டும். இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள், இரண்டு சுழல் துப்பாக்கிகள் காவலர்கள் கொண்டு செல்ல வேண்டும். ஒரு சப். இன்ஸ்பெக்டர், ஒரு கியூ பிராஞ்ச் பொலிஸ் அதிகாரியும் உடன் செல்ல வேண்டும். சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
107

Page 65
தொண்டாமுத்தூர் இருண்டது. இரவு உணவுக்கு அருகிருந்த உணவகத்துக்கு அழைத்துச் சென்றனர். நன்கு சாப்பிடச் சொன்னார் உடன் வந்த பொலிஸ்காரர். அந்த நேரத்தில் இந்த கொதிக்கும் உடல் உணவைப் பற்றி எண்ணியது? ஏதோ பசியாறினேன். மீண்டும் காவல் நிலையத்தில் அமைதிச் சூறாவளியாய் அமர்ந்திருந்தேன். இரவு பத்து மணிக்கு பொலிஸ் வாகனம் வந்தது. ஆயுதந்தாங்கிய பொலிசார்புடைசூழ எனது பயணம் ஆரம்பித்தது.
3
பொலிஸ் மரியாதையோடு நான் கோவை ஸ்டேசனுக்கு வந்த பொழுது நமது தலைவர் திருச்செந்தூரன், தோழர்கள் வீரா, பாலச்சந்திரன், சந்திசேகரன், பூரீஸ்கந்தராஜா ஆகியோர் வழியனுப்பக் காத்திருந்தனர். என்னைக் கொண்டு வந்த முறை அவர்களை திகைப்படையச் செய்திருக்க வேண்டும். "எதற்காக இந்த மரியாதை?" என்று தலைவர் கேட்க, நான் "விசா இல்லாத காரணமாம்" என்று ஊகிக்க இருவருமே சிரித்துக் கொண்டோம். ஆம், சிரிக்காமல் வேறென்ன செய்வது ?
ஒரு அரசு இயந்திரமும், ஒரு சாதாரண குற்றமற்ற மனிதனை எந்தவித காரணமும், எந்தவித சட்ட நடைமுறையுமின்றி "கைது" செய்து, ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் அழைத்துச் செல்வதற்காக முடுக்கிவிடப்பட்டிருக்கின்றதென்றால் அது நகைப்பிற்கிடமான செயலல்லவா? காவலர்கள் பற்றாக்குறை என்று கதறுகின்ற தமிழ்மாநிலத்தில் ஒரு வயோதிகனை அழைத்துச் செல்ல ஒன்பது காவலர்களை விரயமாக்குவது சிரிப்பிற்கு இடம் தருகின்ற செயலல்லவா? எத்தனையோ குற்றவாளிகளை, கொலையாளிகளை, சமூகவிரோதிகளை கைதுசெய்யமுடியாமல் தலைகுனிந்துநிற்கின்ற தமிழகப் பொலிசார் ஒரு நிரபராதியிடம் தனது வீரதீர சாகசங்களை அவிழ்த்துக் கொட்டும் பொழுது நமது அரசியல் பண்பாட்டிலேயே நமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. காவல்துறையிடம், குறிப்பாகக் "கியூ" பிரிவினரிடம், கூரிய அறிவும், புலன் விசாரணைத் திறனும் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயமே. ஆனால், கூரிய அறிவுக்கு நேர்மாறாய், புலன் விசாரணைத் திறன் அறவே இல்லாதது போல் நடந்து கொள்ளும் பொழுது நாம் நகைக்காமல் இருக்க முடியுமா? அல்லது சட்டம், நீதி, குற்றத்தடுப்பு இவற்றிற்கெல்லாம் பொருந்தாத, வெளியிற் சொல்லமுடியாத, வேறு காரணங்கள் கூட இருக்கலாமோ இப்படி நடப்பதற்கு? நமது சிந்தனைக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
நாம் நமது இளைஞர்களுக்கு சட்டப் பயிற்சிகளைக் கொடுக்கின்றோம். காரணம் இல்லாமல் கைதுசெய்யமுடியாது. பிடியாணைஇல்லாமல் கைது செய்ய முடியாது. கைது செய்யும் பொழுது எந்த சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுகிறோம் என்று தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். எதேச்சதிகாரமாக ஒரு மனிதரைக் கைதுசெய்யமுடியாது என்பது
108

சர்வதேச மனித உரிமைச் சட்டம் : இப்படியெல்லாம் நாம் கற்றுக் கொடுக்கிறோம், கற்றுக்கொடுக்கிறநம்மையே மேற்கூறப்பட்ட எல்லா விதிகளுக்கும் முரணாக சிறை பிடிக்கும் பொழுது, "எழுதப்பட்ட சட்டங்கள் எல்லாம் எரியூட்டப்பட்டு விட்டனவா?" என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? இது கைது இல்லை, மேலிடத்து "அழைப்பு" என்று கூறிக் கொண்டே, கொடிய குற்றவாளியைப் போல் நமது சுதந்திரத்தைப் பறித்து, கைதியாய் நடத்துவதற்கு அங்கீகாரம் எங்கே இருக்கிறது? அதிகாரம் எங்கே இருக்கிறது? குடியரசு நாட்டில் சர்வாதிகார நாடுகளின் இரகசியப் பொலிசார் போல் நமது காவலர்கள் நடந்து கொள்ளும் பொழுது நாம் எந்த நாட்டில் இருக்கின்றோம், எந்தக் காலத்தில் இருக்கின்றோம் என்று நமக்கு ஐயம் ஏற்படுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன் நடந்திருக்க வேண்டிய நிகழ்ச்சியை இன்று அரங்கேற்றும் பொழுது இது நிஜமா, நாடகமா என்று ஐயப்படுகிறோம். ஆனால் இந்த நாடகத்தின் கதாபாத்திரமாக நானே இருக்கும் பொழுது, இது நிஜம் என்று கொள்ள வேறென்ன ஆதாரம் வேண்டும் ?
ஆம். ஜனநாய்கத்துக்குள் சர்வாதிகாரம் புகுந்துவிடுகிறது. நல்ல சட்டங்கள் நீண்டநாட்களாக அமுல் நடத்தப்படாவிட்டால் அவற்றின் மீது கறையான் புற்று வைத்து கருநாகம் குடிபுகுந்து மக்களை மிரட்டி அச்சுறுத்தி அலைக்கழிக்கும் நடைமுறைதானே நிலவும் ?
சேரன் வந்ததுமே சிந்தனை கலைந்து வண்டியில் ஏறிக்கொண்டோம்; என்னுடன் வந்த காக்கிச்சட்டை காவலர்கள் துப்பாக்கியைநீட்டிக்கொண்டு விழித்துக்கொண்டே காவல் புரிந்தனர். வண்டியில் இருந்த அனைத்துப் பிரயாணிகளுமே சற்றுக் கலக்கமடைந்து காணப்பட்டார்கள். நான் எனக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் ஏறி அயர்ந்து உறங்கிவிட்டேன்.
நான் கண் விழித்துப் பார்த்த பொழுது காலை நான்கு மணி. காவலர்கள் துப்பாக்கியுடன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். வண்டியில் ஒருவருமே விழித்திருக்கவில்லை. படுக்கையில் இருந்து இறங்கி கழிவறையை நோக்கி நடந்தேன். என்னை யாருமே கவனிக்கவில்லை. எதிர்பாராதவிதமாக, அந்த நேரத்தில் ஸ்டேசனில்லாத இடத்தில் வண்டி நின்றது.நான் நினைத்திருந்தால் கதவைத் திறந்து கொண்டு அந்த இருளில் அமைதியாய் வெளியேறி இருக்கலாம். என்னை தடுக்க வேண்டிய காவலர்கள் அத்தனைபேரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த அதிகாலை நேரத்தில் என் சிந்தனையில் சாக்கரடீசின் நினைவு பளிச்சென்று மின்னியது. அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு, ஆதென்ஸ் நகரத்தின் சிறைச்சாலையில் சாக்ரடீஸை அடைத்து வைத்திருக்கிறார்கள். மரண தண்டனையும் வழங்கி விட்டார்கள். அந்த நாட்டில் விஷங் கலந்த குடிபானத்தைக் கொடுத்து குடிக்கச் சொல்லுவார்கள். இப்படித்தான் அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் ஒரு மின்சார நாற்காலியில் உட்கார வைத்து மிக அதிக மின்சார அதிர்ச்சியைச் செலுத்தி, மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள். பெண்களுக்கு கூட, கர்ப்பிணி.
109

Page 66
கள் உட்பட இப்படித்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த அநாகரிகமான முறையை இன்னும் கடைப்பிடிக்கும் அமெரிக்கா, ஒரு அமெரிக்க இளைஞனுக்கு கசையடி கொடுக்கும் தண்டனையை சிங்கப்பூர் நிறைவேற்றக்கூடாது என்று ஆட்சேபிக்கிறது. இது மனித உரிமைக்கு முரணானது என்கிறார் கிளின்டன்.
சாக்ரடீசிற்கு நஞ்சு கலந்த குடிபானக் கோப்பையைக் கொடுப்பதற்காக, நியமிக்கப்பட்டிருந்த தினத்திற்கு முந்திய இரவில் சாக்ரடீசைச் சந்திப்பதற்கு அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் வந்திருந்தார். நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். காவலர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். நண்பர் சாக்ரடீசிடம் சொன்னார், "இதோ பார், நீ ஒரு குற்றமும் செய்யாதவன், ஆனால் இந்த அநியாய அரசு உனக்கு மரண தண்டனை விதித்து விட்டது. இந்த அரசைப் பழிவாங்க இதுதான் தருணம். ஒடிவிடு, உன்னைத் தடுக்க யாருமில்லை" என்று சாக்ரடீஸ் சொன்னார், "ஆம், நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை, ஆனால் அரசு எனக்கு அதிஉயர்ந்த தண்டனையை வழங்கிவிட்டது. ஆனாலும் அரசின் அதிகாரத்திற்கு நாம் அடிபணிய வேண்டும். நான் நாளை நஞ்சுண்டு இறப்பது நிச்சயம். இன்று ஓடிவிட்டால் பழிதான் என்னைச் சேரும். நாளை மடிந்தால் பழி அரசனையே சாரும்" என்று கூறினார். சிறையினின்று தப்பியோட மறுத்து விட்டார். நானும் அவ்வாறே எண்ணினேன். தப்பி ஓடினால் பழி எனக்கு, தண்டனை பெற்றால் பழி அரசுக்கு.
இந்த நினைவில் மீண்டும் படுக்கையில் ஏறி படுத்துக் கொண்டேன். சற்று முன்பே கண்விழித்த காவல்கார இளைஞன் என்னையே வியர்க்க, விறுவிறுக்க உற்று நோக்கிக் கொண்டே உட்காந்திருந்தான்.
4
சென்னை சென்ட்ரல் ஸ்டேசன் வந்தடைந்ததும் அங்கு பொலிஸ் கார் எங்களுக்காகக் காத்திருந்தது. எனது காவல்காரர்கள் புடைசூழ நான் காரில் ஏறிக்கொண்டேன். அங்கிருந்து சென்னை நகர்ப்புற கிளை பொலிஸ் அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு காலைக்கடன்களை முடித்துக்கொண்டு அருகிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் காலை உணவை உண்டோம். பின்னர் உயர்அதிகாரி வரும்வரை காத்திருந்தோம்.
பெரும்பாலும் இலங்கைத் தமிழர்களை விசாரணை செய்வதற்காகவும், கண்காணிப்பதற்காகவும், உருவாக்கப்பட்ட பொலிஸ் பிரிவு அது. ஆகவே இரு பொலிஸ்காரர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். இலங்கைத் தமிழர்கள் மிகவும் ஆணவமாக பதில் சொல்கிறார்கள். "நாங்களா வந்தோம் நீங்கள் அல்லவா கப்பலில் அழைத்துக் கொண்டு வந்தீர்கள்? பிறகு ஏன் எங்களை தொந்தரவுபடுத்துகிறீர்கள் என்று சீறுகிறார்கள்" என்கிறார் ஒரு பொலிஸ்காரர். மற்றவர் மெளனம் சாதிக்கிறார்.
10

என் சிந்தனை சிறகடிக்கிறது. இலங்கைத் தமிழர்களைப் பற்றிய மத்திய அரசின் சிந்தனைக்கும், கொள்கைக்கும், மாநில அரசின் சிந்தனைக். கும் கொள்கைக்கும் மிகுந்த முரண்பாடுகள் உள்ளன. சாதாரண இலங்கைத் தமிழ் அகதிகளை வற்புறுத்தி இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கொள்கை மத்திய அரசுக்கு கிடையாது. அதுவும் அல்லாமல் இலங்கைத் தமிழர்களுள் பல பிரிவுகள் உண்டு. இந்தியாவுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பிரிவுகள் உண்டு. EPRLFTELO, ENDP என்ற பிரிவுகள் இந்தியாவுக்கு வேண்டிய பிரிவுகள். இவர்களுக்கு விசேட சலுகைகள் உண்டு. இவர்களுக்கு என திறந்த வெளி முகாம்கள் உண்டு. தப்பித்தவறி இவர்களில் ஒருவர் சிறப்பு முகாமுக்கு கொண்டு வரப்பட்டால், அவர்களை அங்கிருந்து திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. இப்படி சில விசேட அல்லது அதிகாரம் படைத்த அகதிகளும் உண்டு. இவர்களுக்கும் "கியூ" கிளை அதிகாரிகளுக்கும் நெருக்கமான உறவுகள் உண்டு. அரசியல் சம்பந்திகள்!
அரசுக்கு வேண்டாத இலங்கைத் தமிழர்கள் யாரென்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?புலிகள்தான்! யார் புலி?அவர்களை இனங்காண்பது எப்படி? இதுதான் இன்றைய தமிழக பொலிசாருக்குள்ள பெரிய தலைவேதனை. மேற்கூறப்பட்ட சம்பந்திகள் கூட்டத்தைச் சாராதவர்கள் எல்லாம் சந்தேகப் புலிகள். இந்தக் கூட்டத்தில் இலட்சக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் அடங்குவார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த புலிகளை மையமாக வைத்துக் கொண்டு தான் இலங்கை இந்திய உறவுகளும், மத்திய, மாநில உறவுகளும் நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளன. புலிகளை ஆதரித்தார்கள் என சந்தேகிக்கப்படும் அரசு கலைக்கப்படுவதானால், புலிகளை ஒடுக்குகிறோம் என்று குரல் கொடுப்பதும், செயல்படுவதும் ஒருவகை தற்காப்பு அரசியல் கலையாகத் தமிழகத்திலே உருவெடுத்துவிட்டது.
இதனை மத்திய மாநில அரசுகளுக்கிடையே நடைபெறும் பனிப்போர் என்பதா, நிழற்போர் என்பதா? எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை.
இவ்வாறு அரசியல் தற்காப்புக் கலையாகப் புலிவேட்டை புதிய பரிமாணமெடுத்துள்ளதால் பல நூற்றுக் கணக்கான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு எவ்வித தற்காப்புமில்லாது போய்விடுகிறது. சில விஷமிகள் தங்களது சுய, கோபதாபங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல, உள்ளுர்வாசிகளுக்கு எதிராகவும் பெட்டிஷன் போடுகிறார்கள். இத்தகைய உதாரணங்களை ஒரு பொலிஸ் அதிகாரியே எனக்குக் கூறியிருக்கிறார். நீலகிரி பகுதியிலே இந்த கொடுமை சற்று அதிகம். தாயகம் திரும்பிய இந்தியத் தமிழர்களை தொடர்ந்து இலங்கைத் தமிழர்கள் என்று அழைப்பதும், அவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற விஷமப் பிரசாரம் செய்வதும் ஒரு முக்கிய அரசியல் பொழுதுபோக்காகிவிட்டது. இதனை நம்புகின்ற அரசாங்க அதிகாரிகளும், பொலிஸ் உளவுத்துறை அதிகாரிகளும் ஏராளம், லீனாநாயர் என்ற நீலகிரிக்
11

Page 67
கலெக்டர் இந்த விஷமப் பிரசாரத்தை ஆய்ந்தோய்ந்து பாராது, பயங்கர புலிவேட்டை ஆடினார். பல அப்பாவித் தமிழர்களை துன்புறுத்தினார். அந்த அம்மையாரின் கைங்கரியத்தால்தான் நமக்கும் சிறப்பு முகாம் செல்லும் வாயப்பேற்பட்டது. தாயகம் திரும்பியோருக்கு குரல் கொடுப்பதையே குற்றமாகக் கருதி நமக்கும் புலி வேஷம் போட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விரோதமாக நடவடிக்கை எடுக்கநமது சட்டம் எளிதில் இடந்தருவதில்லை. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி இப்படி ஒரு புளுகை அவிழ்த்துவிட்டால், அதனை வேதவாக்காக கொள்ளுவர் மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இதனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பகைக்காதே என்று எனக்கு ஆலோசனை வழங்கினார் எனது வழக்கறிஞர். அதிகாரம் பெரிதா? நீதி, உரிமை பெரிதா? இது ஆழ்ந்த சிந்தனைக்குரிய ஒரு அரசியல் கோட்பாடு. எனது அனுபவத்திலும், சிந்தனையிலும் அதிகாரம் என்னும் இரும்புக் கம்பங்கள், நீதி, உரிமை என அக்கினிப்பிழம்பில் எரிந்து சாம்பலாகிவிடுகின்றன.
பெரிய அதிகாரி வந்தார். என் சிந்தனை கலைந்தது. என்னைப் பார்க்காமலேயே என்னைச் செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். ஆனால் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட முதல் ஆணையில் என்னைக் காஞ்சிபுரத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கூறப்பட்டிருந்தது. ஆனாலும், புதிய ஏற்பாட்டின்படி என்னை செங்கல்பட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு அந்த அதிகாரி பணித்தார்.
கோவையில் இருந்து என்னுடன் வந்த ஆயுதம் தாங்கிய பொலிசார் புடை சூழ செங்கல்பட்டு பஸ் நிலையத்துக்கு வந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்தோம்.
5
செங்கல்பட்டு சய் - ஜெயிலுக்குள் நுழைந்த பிறகுதான் சிறப்பு முகாம் என்ற பெயருக்கே அர்த்தம் விளங்கியது. பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அமைக்கப்பட்ட ஜெயிலுக்குத் தான் சிறப்பு முகாம் என்று பெயர். நான் தொண்டாமுத்தூர் பொலிஸ் நிலையத்திலுள்ள ஒரு காவலரிடம் சிறப்பு முகாம் என்றால் என்ன என்று வினவினேன். அதற்கு அவர் அங்கே உங்களுக்கு நல்ல உணவும், மெத்தை, கட்டில் போன்ற சகல வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடந்தான் சிறப்பு முகாம் என்றார். அவர் எவ்வளவு கொடுரமான நகைச்சுவையுடன் இதனைக் கூறியுள்ளார் என்பதை அந்த செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்குள் நுழைந்த பிறகுதான் தெரிந்தது.
பாதை அருகிலே உள்ள நுழைவாயிலில் ஆயுதந்தாங்கிய பொலிஸ் காவலர் ஒருவர் நிற்கிறார். அவரைக் கடந்து உள்ளே சென்றதும், ஒரு காவல்காரர் பரிசோதனை நடத்துகிறார். நமது பெட்டி, உடைகள், உடம்
112

பையே ஒரு காக்கிச்சட்டை பரிசோதனை செய்கிறது. அவர் அனுமதித்த பொருட்களுடன் உள்ளே செல்லும் பொழுது இன்னும் இரண்டு ஆயுதந்தாங்கிகள் கண்காணிப்பிற்கு பிரம்மாண்டமான ஒரு இரும்புக் கதவுக்கு வெளியே நிறுத்தப்பட்டேன். கதவைத் தட்டி ஒரு சிறு துவாரத்தினூடாக ஒரு புதிய கைதிவந்திருப்பது அறிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் அந்த இரும்புக் கதவின் ஒரு பகுதி ஒரு ஆள் மட்டுமே நுழையக்கூடிய அளவுக்கு திறக்கப்படுகிறது. அதன் அருகிலே ஆயுதந்தாங்கிய காவலர் பலர் நிற்கிறார்கள். உள்ளே நுழைந்ததும் நெஞ்சைக் குலுக்கும் ஒரு காட்சி.
அரைநிலவுவட்டத்தில் அமைக்கப்பட்ட ஒரு சிறைச்சாலை. 42 சிறைக் கூண்டுகள் இருக்கின்றன. அதன் அருகே பெண்களுக்கென்று ஒரு தனிப்பகுதி.அதன் எதிரே ஒரு நிர்வாக அலுவலகம். அதற்கடுத்தே சமையலறை, தண்ணிர்த் தொட்டி. காவலர்கள் தங்கியிருக்க ஒரு மாடிக் கட்டிடம். அலுவலகத்திற்கு அருகே ஒரு பிள்ளையார் சிலை. ஏறக்குறைய 15 ஆயுதந் தாங்கிய காவலர்கள் சேர்ந்து பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த சிறைச்சாலையின் கூரையிலும்AK47 துப்பாக்கிதாங்கிய காவலர்கள் இரவும் பகலும் ரோந்து புரிகிறார்கள்.
அலுவலகத்தில் இரண்டு அதிகாரிகள், ஒருவர் காவல் துறையைச் சேர்ந்தவர். இன்னொருவர் வருவாய்த் துறையைச் சேர்ந்தவர். சிறப்பு முகாம் என்பதால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போரின் உணவு முதலிய தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்காக வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். முகாம் கைதிகளுக்கு அத்தியாவசிய சில பொருட்களை வாங்கித் தருவதற்கு தலையாரிகள் இருக்கிறார்கள். சிறைச்சாலையின் வெளிப்புறத்தைக் கூட்டிப் பெருக்குவதற்கு இரண்டு தொழிலாளர்கள். சிறைக் கூண்டுகளை எவரும் சுத்தம் செய்வதில்லை. வாரத்திற்கு இருமுறை வரும் ஒரு மனிதாபிமானமற்ற வைத்தியர். சமையலறையில் சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் சில தொழிலாளிகள். பெண்கள் பகுதிக்கு காவலாகப் பெண் பொலிஸ்காரர்கள். இவர்களுக்கு மத்தியில் சீருடையின்றி சாமானியர்களைப் போல் திரியும் ஓரிரு "Q" பிரிவின் பொலிஸ் விசாரணையாளர். இத்தியாதி யமகிங்கிரர்கள் அடங்கிய யமலோகம்தான் செங்கல்பட்டு சிறப்பு முகாம், சிறைப்பகுதியின் நிர்வாகத்தின் கீழ் இந்த இடம் இல்லாத ஒரே ஒரு காரணத்தால் மட்டும் இது சிறைச்சாலை அல்ல என்று கூறுகிறார்கள். ஆனால் அங்கு நடைபெறுகின்ற நடவடிக்கைகள் சிறைச்சாலையைவிட மிகக் கொடுமையானவை என்று சென்னைச் சிறைச்சாலையிலிருந்து சிறப்பு முகாமுக்கு வந்த ஒரு இளைஞர் கூறினார்.
6
ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்திற்குள் சிக்கியிருந்த இந்தியா விடுதலைக்குப் பின் ஆட்சியாளரின் ஏகாதிபத்தியத்திற்குள் சிக்கிவிட்டது.
113

Page 68
ஒரு அரசு ஊழியருக்கு மாலை மரியாதை மேளதாள வரவேற்பு ஆகியன ஜனநாயகத்திற்கு முரண்பாடான செயற்பாடுகள். இன்னும் கூட இந்தியாவில் மன்னராட்சி நடைமுறைகளும், பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி முறை. களும், அமுலில் இருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியாளர் இன்னும் ஏகாதிபத்திய அதிகாரியைப்போல் "கலெக்டர்" என்றே அழைக்கப்படுகிறார். ஒரு மாவட்ட ஆட்சியர் ஒரு மன்னனின் பிரதிநிதியாக நடத்தப்படுகிறாரே ஒழிய ஒரு மக்களின் சேவகனாக நடத்தப்படுவதில்லை. இதனால் தான் தலைமை அரசாங்க ஊழியரான ஒரு கலெக்டருக்கு மக்கள் தரும் மரியாதை, நடத்தும் விதம் அனைத்துமே ஒரு ஏகாதிபத்திய நாட்டில் ஒரு ஆட்சிப் பிரதிநிதிக்கு வழங்கப்படும் பூரணகும்ப மரியாதைக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்தக் கலெக்டர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள் அல்ல. சிலர் மக்கள் பற்றினாலும் சனநாயக பண்பாட்டினாலும் மக்களுக்கு தாம் ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து மனிதாபிமானத்தோடு நடந்து கொள்கிறார்கள். மிகப் பலரோ கர்வத்தோடும், ஆணவத்தோடும் நடந்து கொள்வதோடு மட்டுமல்ல, தமது சுயநல நோக்கோடேயே செயற்படுகிறவர்கள். அப்படிப்பட்ட கலெக்டர்களில் ஒருவராக லீனா நாயர் இருந்தார். அவர் நீலகிரி சிம்மாச. னத்தில் வீற்றிருந்து கொடுங்கோல் செய்த பொழுதுதான்நீலகிரியில் வாழ்ந்த தாயகம் திருப்பியோர் சொல்லொணாக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். கள். அர்த்தமில்லாமல்சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள். அந்த தாங்க முடியாத அநீதியை எடுத்துச் சொல்லப் போன சமூகத் தொண்டர்களை சிறைப்படுத்திக் கொக்கரித்தார் அந்த அம்மையார். உண்மையாகவே அவர்களை தடுப்புக் காவலில் வைத்ததற்கு அம்மக்கள் நஷ்டஈடு கோரிவழக்குத்தாக்கல் செய்திருக்கலாம். ஆனால் பண வசதியோ சட்ட உரிமைகளோ தெரியாத ஏழை மக்கள் தம்மை வெளியில் விட்டால் போதும் என்று திருப்தி அடைந்து விடுகிறார்கள். மக்களின் இந்த கையாலாகாத தன்மையினால் தான் ஆணவ அதிகாரிகள் ஆணவம் அடங்கா. மலேயே இருந்து விடுகிறார்கள். எனினும் சிறிது வசதி படைத்த சில வியாபாரிகளின் கடைகளை சட்ட விரோதமாக உடைத்ததால் அவர்களுக்கு லீனாநாயர்நஷ்டஈடு வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதுதான் இயற்கை நீதி. அநீதி செய்தவர்கள் எப்படியோ, ஒரு வகையில் தண்டிக்கப்படுகிறார்கள்.
அதுபோலவே அநீதியாக என்னைச் சிறையில் அடைத்து அந்நியர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்த அறிவுகெட்ட அதிகாரிகள் ஏதோ ஒரு வகையில் தண்டிக்கப்படுவார்கள் என்ற அசையாத நம்பிக்கை எனக்குண்டு. அண்மையில் செங்கற்பட்டு சிறையில் இருந்து வெளிவந்த ஓராண்டுக்குள் அந்த சிறப்பு முகாமில் பேயாட்டம் ஆடிய ஒரு அதிகாரியை உயர்நீதிமன்றம் ஐயாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிட்டது. திருமதி வெங்கடேஸ்வரி ஒரு இந்தியப் பெண். அவர் நித்தியானந்தனை மணந்தார். நித்தியானந்தன் ஓர் இலங்கைத் தமிழர். அவரையும் அந்நியர் சட்டத்தின்
14

கீழ் செங்கற்பட்டு முகாமில் சிறை வைத்தார்கள். இவர்கள் மேலதி. காரிகளுக்கு எத்தனையோ முறையீடு செய்தும் கவனிப்பாரற்றுக் கிடந்தது. ஓர் இந்தியப் பெண்மணியை எப்படி அந்நியர் சட்டத்தின் கீழ் சிறை வைக்க முடியும்? இது தவறு என்று உணர்த்துவதற்கு உச்ச நீதிமன்றம் தேவையா? எவ்வளவு மனிதாபிமானமற்ற முறையில் செங்கல்பட்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறதென்பதற்கு இது ஒரு உதாரணம்.
எனது விடுதலைக்காக சட்ட ரீதியில் முயற்சி செய்த வழக்கறி. ஞர்களுள் பி. வி. எஸ். கிரீதர் முக்கியமானவர். நான் விடுதலை அடைவதற்கு முன்னரே அவரைப் பற்றி செங்கல்பட்டில் சிறை வைக்கப்பட்டவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த அம்மையார் தனது நிலையை கிரீதருக்கு அறிவித்திருந்தார்கள். அவர் வெங்கடேஸ்வரி சார்பில் வழக்குப் போட முன்வந்தார். ஆனால் வழக்கறிஞருக்கு தரவேண்டிய வக்காலத்தில் தாசில்தார் ஒப்பம்போட மறுத்துவிட்டார். இது அதிகார ஆணவம், வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது, வெங்கடேஸ்வரியை சட்ட விரோதமாக சிறை வைத்ததற்காக தமிழக அரசு ரூ. 50,000/-ம் நஷ்டஈடும், தாசில்தார் தனது சொந்த பணத்திலிருந்து ஐயாயிரமும் அந்த அம்மாவுக்கு தர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இது செங்கல்பட்டு சிறப்பு முகாமின் கொடுமையை ஈவிரக்கமற்ற நிர்வா. கத்தை உலகுக்கு உணர்த்தியது. எப்படியோ அகம்பாவ அதிகாரிகள் தண்டனை அனுபவித்தே தீர்வார்கள்.
அநியாயமாக ஒருவரைக் கைது செய்ய வேண்டும் என்று ஒரு ஆணவக்கார அதிகாரி முடிவு செய்தாலும் அதனைக்கூட ஏதோ ஒரு சட்டத்தைக் காட்டிதான் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கிறதே அந்த அளவில் சட்டமும், சனநாயகமும் சற்றே பிழைத்திருக்கின்றன. சட்டத்தின் அடிப்படையில்தான் ஆட்சி நடத்த வேண்டும் என்ற நியதி (Rule of Law) இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கிறது. பல சமயங்களில் இந்த நியதிகள் புறக்கணிக்கப்படுவதுண்டு. ஆனால் இதனை முற்றிலும் நிராகரிக்க (Քlգայո35l.
ஆனால் கைது செய்வதற்கு முன்னரே காரணம் சொல்ல வேண்டும். இதில்லாமல் பொலிசாரை அனுப்பி காரணமின்றி இராணுவப் பாதுகாப்போடு செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு கொண்டு சென்ற பின்னர் அந்நியர் சட்டம் பிரிவு 3(2)யின் கீழ் இந்த முகாமில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளிர் என்று கூறுவதே ஒருவகையில் நியாயமான செயலல்ல. முன்னரே கூறியிருந்தால் அந்த ஆணைக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கலாம். சிறைக்குள் வைத்தபின்னர் காரணம் காட்டுவது நிவாரண நடவடிக்கைகள் எடுப்பதற்கு பல இடைஞ்சல்களை ஏற்படுத்தும்.
அந்நியர்கள் சட்டம் என்பது 1946ம் வருடம் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. பொதுவாகவே காமன் வெல்த் நாடுகளுக்கு உட்படாத பிற அந்நிய பிரஜைகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக
115

Page 69
இயற்றப்பட்டசட்டம். இச்சட்டம் இலங்கைப் பிரஜைகளையும் பாதிக்காது. ஆனால், 1958ம் ஆண்டு உள்நாட்டு அமைச்சு வெளியிட்ட அரசாணைப்படி இந்த சட்டத்தை அமுல் செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. எனினும் இந்த சட்டத்தை மாநிலங்களுக்கு வழங்கிய அரசாணையும் இதை இலங்கை அகதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதும் உள்நாட்டு வெளிநாட்டு சட்டங்களுக்கு எதிரானது என்பதும், சர்வதேச மனித உரிமைக்கும், சர்வதேச அகதிகள் பற்றிய ஒப்பந்தத்திற்கு முரணானது என்பதும் சட்ட நிபுணர்களின் முடிவு. குறிப்பாக இந்தியா இலங்கை அகதிகளுக்கும் எதிராக அமுல் நடத்த முடியாது என்பது எனது ஆணித்தரமான கருத்து. குறிப்பாக தமிழக அரசு இந்த சட்டத்தை அமுல் நடத்தும் முறை கேலிக்கூத்தானது என்பதும் எல்லா சட்டங்களுக்கும் முரண்பாடானது என்பதும் ஐயமில்லை. இது முக்கியமான சட்டப்பிரச்சினை என்பதால் இதன் நுணுக்கங்களை மேலும் விவரிக்காமல் இத்துடன் விடுகிறேன். இந்த சட்டத்தை இவ்வாறு தமிழ் நாடு துஷ்பிரயோகம் செய்வதை இன்னும் முறையாக எவரும் உச்சநீதிமன்றம் கொண்டு சென்று வாதாடவில்லை. அவ்வாறு செய்யின் இன்று சிறப்பு முகாம்களில் உழலும் பலருக்கு விடிவேற்படும் என்பதில் ஐயமில்லை.
ஒரு அந்நியன் நாட்டில் தொடர்ந்து இருக்கத் தகுதியற்றவன் என்று கருதினால், அவரது விசாவை மறுக்கலாம். அவருக்கு எதிராக வழக்குத் தொடரலாம் அல்லது சட்டப்படி நாடு கடத்தப்படலாம். இத்தனை அதிகாரங்கள் ஒரு அரசுக்கு இருக்கும்போது இவற்றில் எதனையும் பயன்படுத்தாது, காரணமின்றி கைது செய்து, காலவரையறை இன்றி சிறைக்கூண்டில் அடைத்து வைத்து வெளியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொழுது கூட கைவிலங்கிட்டு, கால் விலங்கிட்டு, அந்நியர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்குமாறு மட்டுமே கூறியுள்ளோம் என்ற உண்மையைச் சாகடித்து பொய்மையை பறைசாற்றும் அரசு அதிகாரிகளையும் எப்படிக் கணிக்கலாம் எப்படி மதிக்கலாம் ?
அண்மையில் தஞ்சையில் நடந்த உலகத்தமிழ் மாநாடுக்கு அழைப்பில் வந்த அறிஞர்களை அவமதித்து சட்டவிரோதமாக நாடுகடத்திய நடவடிக்கையை உலகமே கண்டித்தது. உலகத்தமிழ் படத்தில் இலங்கையை போடாத அளவுக்கு மூர்க்கத்தனமான செயலில் இறங்குபவர்களுக்கு 'அப்பாவி இலங்கைத் தமிழர்களை அநியாயமாக சிறைப்பிடித்து கொடுமைப்
படுத்துவது ஆச்சரியமில்லையல்லவா?
இத்தகைய சூழ்நிலை நிலவுகின்ற தமிழகத்தில் என்னை சிறைப்பிடித்து நாடுகடத்த வேண்டுமென்று கைலஞ்சம் வாங்கிக் கொண்டு செயற்பட்ட ஒரு ஆட்சியாளரும், காவல்துறையினரும் பயன்படுத்திக் கொண்டதுதான் அந்நியர் சட்டம்.
இவ்வாறு துன்புறுத்தும் கொடுங்கூடங்களுக்கு சிறை முகாம்கள் என்பது தமிழ்ப்பெயர் ஆனால் தமிழகக் காவல்துறையினர் வழங்கிய தந்திரப் பெயரோ சிறப்பு முகாம்.
116

7
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 41 சிறைக்கூண்டுகள் இருந்தன. நான் சென்ற பொழுது 37 கூண்டுகளுக்குள் மட்டும்தான் கைதிகள் இருந்தார்கள். ஆகவே நான் 38ல் அடைக்கப்பட்டேன். தன்னந்தனியாக இருந்ததில் சில வசதியும் இருந்தது. நான் தனியாக சிந்திப்பதற்கு வசதியாக இருந்தது.
இந்த அநீதியில் இருந்து விடுதலை பெறுவது எப்படி? இந்த ஒரே கேள்விதான் என் மனதை துளைத்தது. எனக்குத் தெரிந்த எல்லா நடைமுறைகளையும் பின்பற்றத் துணிந்தேன். சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறேன் என்பதை பிரதம நீதிபதி, முதன்மை நீதிபதி, சென்னை ஆளுனர், இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு எழுதினேன். எவரிடமிருந்தும் பதில் வரவில்லை. அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த "கியூ" பிரிவு பொலிஸ்காரர்கள் இவற்றையெல்லாம் வாங்கிப் படித்துவிட்டு மேலதிகாரிகளிடம் காண்பித்துவிட்டு கிழித்தெறிந்து விடுவார்கள் என்பது இப்பொழுதுதான் புரிகிறது. கொஞ்சமாவது மனச். சாட்சியோடு நடந்து கொள்வார்கள் என்று நான் எதிர்பார்த்தது எவ்வளவு தவறு என்பதை பின்னர் விளங்கிக் கொண்டேன். "கியூ" பிரிவு பொலிஸ்காரர்கள் ஒருவகையான உளவு பிரிவினர். அவர்களிடத்தில் சட்டமோ, நேர்மையோ, மனிதாபிமானமோ இருக்குமென்று எதிர்பார்க்கமுடியாது. தமிழகத்தில் இந்த "கியூ" பிரிவினருக்கு சர்வாதிகாரம் இருக்கிறது. இவர்கள்தான் இலங்கைத் தமிழர்பற்றி சகல விவகாரங்களுக்கும் பொறுப்பு. அரசியல் உளவு பார்ப்பதும் இவர்களின் பணிகளில் ஒன்று. ஒவ்வொரு நாட்டிலும் இரகசியப் பொலிசார் இருக்கிறார்கள். அவர்கள் தாம் யாரென்று அடையாளம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். சாதாரண பொலிஸ்காரர்கள் போல் சீரணி அணிய மாட்டார்கள். ஆனால், சந்தேகப் பேர்வழிகள் பேசுவதைக் கவனமாகக் கேட்பார்கள். மற்றவர்களுடைய கடிதங்களை வாசிப்பார்கள். தமக்கு வேண்டிய விஷயங்களை உளவறிய பல விதமான தந்திரங்களையும் கையாளுவார்கள்.
இவர்களில் பலர் என்னிடம் வந்து தேனொழுகப் பேசுவார்கள். ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என முயற்சிப்பார்கள். என்னை ஒவ்வொருவராக வந்து பார்ப்பார்கள். பேச்சுக் கொடுப்பார்னள். நான் என்ன சொல்கிறேன் என்பதைக் குறித்துக் கொள்வார்கள். எப்பொழுதும் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். உலகத்திலேயே மிகக் கேவலமான தொழில் உண்டென்றால் அது ஒரு "கியூ" பிரிவு பொலிசாக இருப்பது என்பதே எனது எண்ணம். சிலர் முரடர்களாகவும், சிலர் நண்பர்களாகவும் நடிப்பார்கள். ஆனால் அத்தனை பேரும் காரியமே கண்ணாயினர். அசெம்ளி, கவர்னர் மாளிகை, பாராளுமன்றம் என்று பல்வேறு இடங்களில் மோப்பம் பிடிப்பார்கள் இவர்கள். ஒரு சனநாயக நாட்டில் தமக்கு எதிரான அரசியல்வாதிகளையும், அவர்களது கட்சிகளையும், செயற்திட்டங்களையும் உளவு பார்ப்பதுதான்
117

Page 70
இந்த "கியூ" பிரிவினரின் வேலை. இவர்கள் தமது மேலதிகாரிகளிடம் வெகு விசுவாசமாக இருப்பார்கள்.
அதே சமயம் கைநிறைய லஞ்சம் வாங்கிக் கொண்டு சிலரைத் தப்ப வைப்பதையும் "கியூ" பிரிவினர் செய்கிறார்கள். நீங்கள் ஒரு தொகை லஞ்சம் கொடுத்தால் இங்கிருந்து தப்பலாம் என்று சொன்னவர்களுமுண்டு. இந்தியாவில் கை லஞ்சம் வாங்காதவர்கள் மிக, மிகக் குறைவு. நான் சொன்னேன். நான் என் நேர்மையில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். நேர்மை வெல்லும் என்பதை நம்புகிறேன். ஆகவே எவனுக்கும் எந்த லஞ்சமும் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாகவே இருந்தேன். என்னை கைது செய்வதற்குக் காரணமாக இருந்தது ஒரு "கியூ" அதிகாரியின் சிபாரிசே என்று எனக்குப் பின்னர் தெரியவந்தது. என்னைக் கேள்விகேட்டபோது உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று கேட்டார். நான் ஆம் என்றேன். எனக்கெதிராக அவர் கொடுத்த பொய்யறிக்கைக்கு கடவுள் என்ன தண்டனை கொடுப்பாரோ? பொறுத்திருந்து பார்ப்போம்.
நான் சிறையில் சேர்ந்த மறுநாட்காலை எனது வழக்கறிஞர்கள் என்னைக் காணவந்தார்கள். அவர்களோடு அளவளாவுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் முகாமுக்கு பொறுப்பாக இருந்த தாசில்தார் எனது வழக்கறிஞர்நண்பரைக் கண்டதும் எழுந்துநின்று மரியாதை செய்தார். எனது நண்பர் அந்தத் தாசில்தாரின் வழக்கறிஞராம். அந்த தாசில்தார் எழுந்துநின்று தனது நாற்காலியினை வழக்கறிஞருக்குக் கொடுத்தார். அந்த வழக்கறிஞர் நண்பர் அதில் உட்காராது, என்னை அதில் உட்காரச் சொன்னார், அவருக்கு தெரியாது முதல்நாள் என்னை "உட்காராதே எழுந்து நில்" என்று சொன்ன அதே தாசில்தார் எழுந்து நிற்க அவரது நாற்காலியில் என்னை அமரச் சொல்லுகிறார் எனது நண்பர் என்று.
நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். எவ்வாறு வழக்குத் தொடர்வது என்றெல்லாம் பேசி முடித்தபின் நான் மீண்டும் என் கூண்டுக்குள் விடப்பட்டேன்.
கூண்டு 24 மணிநேரமும் மூடப்பட்டிருக்கும். சாப்பாட்டு வேளையின் போது சற்று திறந்துவிடுவார்கள். விலங்குகள் போல்தான் எம்மை செங்கல்பட்டில் நடத்தினார்கள்.
எனக்கு அருகேயிருந்த கூண்டுக்குள் இருந்த இன்னொருவர் என்மீது இரக்கம் கொண்டு எனது உணவை அவரே வாங்கிக் கொண்டு வந்து தருவார். தண்ணிர் கொண்டு வந்துதருவார். எனக்கு பல்வேறு பணிவிடைகள் செய்வார். எனது ஆடைகளை துவைப்பார், எனது பாத்திரங்களை கழுவுவார். இப்படி ஒரு அன்புள்ளத்தை இறைவன் எவ்வாறு அங்கு அனுப்பி வைத்தானோ தெரியாது. அந்த அன்புள்ளத்தை நான் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
சிறைக்குள் நான் செய்த முதல் புரட்சி விசித்திரமானது. காலையில் எழுந்ததும் குளிக்கும் பழக்கத்தை நான் பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறேன். முதல் நாள் காலை நீர் அள்ளத் திறந்துவிட்டார்கள். நான்
118

நேரடியாகக் கிணற்றுக்குச் சென்று குளிக்க ஆரம்பித்தேன், அது பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. கிணற்றடியில் யாரும் குளிக்கக்கூடாதாம். இது பொலிஸ் சட்டம். ஒரு பொலிஸ்காரன் கத்தினான். குளிக்காதே என்றான். நான் அவனை அலட்சியம் செய்துவிட்டு நன்றாகக் குளித்தேன். அந்த முகாமில் பொலிஸ்காரனை அலட்சியம் செய்துவிட்டு முதன்முதலாக குளித்தவன் நான்தானாம். பிறகு தினசரி அவ்வாறே குளித்தேன். மெதுவாக வேறு சிலரும் என்னைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
8
ஒரு மனிதனின் தினசரிக் கடன்களைக் கூட ஒரு பெரிய பிரச்சினை. யாக்கக் கூடிய சூழ்நிலை நிலவியதென்றால் அந்தத் தடுப்பு முகாமில் எத்தகைய் மனித உணர்வுகள் வலைவிரித்திருக்கும் என்று நாம் ஊகித்துக் கொள்ளலாம். அந்த முகாமுக்கு பொறுப்பாக ஒரு சிறப்பு தாசில்தார். அவருக்குக் கீழ் சில தலையாரிகளும் எடுபிடி ஆட்களும் முகாமில் இருப்பவர்களுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பது இந்தத் தலையாரிகளின் வேலை. இதற்கு தாசில்தாரின் அனுமதி வேண்டும். தேவையான சவர்க்காரம், செய்தித்தாள், பழங்கள், சிற்றுணவு வகைகள் ஆகியவற்றை இவர்கள் முகாமில் இருப்பவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, கடைக்குச் சென்று வாங்கிவருவார்கள். தாசில்தார் அனுமதிக்குப் பின்னர் அப்பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
முகாமில் இருப்பவர்களின் உணவை சமைத்தலும், பங்கீடு செய்வதும் ஒருவரிடம் குத்தகையாக கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் பணம் போதாது என்று உப்புசய்பற்ற உணவைப் பரிமாறினார்கள். சாப்பாட்டு வேளையில் எந்த நாளும் சண்டையாகவே இருக்கும். சமைப்பவர்களுக்கும், சாப்பிடுபவர்களுக்கும் சண்டை. ஆனால் அதற்கு காரணமானவர்கள் தூர இருந்து வேடிக்கை பார்ப்பார்கள்.
இந்தக் கூட்டத்தினிடையே காவல், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ரிசர்வ் பொலிஸ் படையினர் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஒரு பொலிஸ் அதிகாரியின் கீழ் கடமையாற்றினார்கள். அவர்களில் சில ஆணவக்காரர்கள், "குளிக்காதே, சமையலறையில் வெந்நீர் எடுக்காதே" என்றெல்லாம் சுகாதாரத்துக்கு விரோதமானதும் அர்த்தமற்றதுமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினார்கள். இதனால் முகாமில் இருந்தவர்களுக்கும் பொலிஸ் சேவகர்களுக்கும் இடையிலும் அடிக்கடி தகராறுகள் ஏற்படும். முகாமில் இருந்தவர்களுக்கு தாம் குற்றமற்றவர்கள் என்ற உணர்வு, பொலிஸ்காரர்களுக்கோ தாம் பயங்கரவாதிகளைக் கண்காணிக்கின்றோம் என்ற உணர்வு. ஆகவே இவ்விரு உணர்வுகளுக்குமிடையே முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்தது.
19

Page 71
நான் குளிப்பதைப் பார்த்து பிறரும் குளிக்க முயற்சித்தார்கள். பொலிஸ்காரர்கள் அவர்களைத் தடுத்தார்கள். அவர்கள் எதிர்த்தார்கள். பொலிஸ்காரர்கள் என்னிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு எனக்கு மட்டும் சலுகை காட்டுகிறார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
உண்மையிலே காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ்காரர்கள் கோவையைச் சேர்ந்தவர்கள்.நானும் கோவையைச் சேர்ந்தவன் என்பதினால் என்னிடம் சற்று பரிவு காட்டினார்கள். மேலும் நான் ஒரு வழக்கறிஞர் என்ற காரணத்தினாலும் முதியவன் என்ற காரணத்தினாலும் என்னைச் சற்று வித்தியாசமாகவும் மரியாதையாகவும் நடத்தினார்கள். மேலும் முகாமிலிருந்த வேறு சிலர் பொலிஸ்காரர்களையும் மற்ற சேவகர்களையும் அவமரியாதையுடன் வசைச் சொற்களால் அகெளரவப்படுத்தினார்கள். இதிலெல்லாம் நான் கலந்து கொள்ளாததாலும் பொலிஸ்காரர்கள் என்னுடன் ஒழுங்காகவே நடந்து கொண்டார்கள். எனக்குப் பத்திரிகை வாங்கிக் கொடுத்தும், சாக்லெட், ஹார்லிக்ஸ் தமது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தும் அன்பு செய்தார்கள். கோவையில் எனது வீட்டுக்குப்போய் எனது உடல் நலம் பற்றிக் கூறியவர்களும் உண்டு. ஆகவே என்னோடு சில பொலிஸ்காரர்கள் நடந்து கொண்ட விதம் சிலருக்குப் பிடிக்கவில்லை. பொறாமை கொண்டார்கள்.
அதனால் சில பொலிஸ்காரர்கள் தங்கள் பெயரை காப்பாற்றிக் கொள்வதற்காக என்னை கிணற்றடியில் குளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்கள். அதோடு நான் இருந்த கூண்டில் தண்ணிர் வருவதற்கான வசதிகளை செய்து கொடுத்தார்கள். அதன்பின்னர் நான் எனது கூண்டிலேயே குளிக்கப் பழகிக் கொண்டேன்.
இந்தப் பிரச்சனை இவ்வாறு தீர்ந்தாலும் நம்மை சிறைப்படுத்திய அநீதியை எதிர்த்து போரிட வேண்டிய அவசியம் இருந்தது. கூண்டுக்குள்ளேயே இருக்கும் ஒருவன் எப்படி போரிட முடியும் ? அரசுக்குக் கடிதம் எழுதினேன். பிரதம நீதிபதிக்குக் கடிதம் எழுதினேன். பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதினேன். "ஆனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஏனென்றால் நாங்கள் எழுதுகிற கடிதத்தை ஒரு "கியூ" பிராஞ்ச் பொலிஸ்காரர்களிடம் கொடுக்க வேண்டும். அவர்கள்தான் இதை அஞ்சலில் சேர்க்க வேண்டும். அவர்களோ, அஞ்சல் செய்வது போல் பாவனை செய்து விட்டு கடிதங்களை அவர்கள் மேலதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவார்கள். ஆகையால்தான் என்னுடைய கடித போராட்டம் பயன் பெறவில்லை. அடுத்ததாக நேரடி போராட்டம் நடத்துவதாக முடிவு செய்தேன். அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கை கடிதம் எழுதினேன். என்னை விடுதலை செய்யாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் எடுப்பதாக அறிவித்தேன். உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்தேன். அந்த நேரம் என்னுடைய கூண்டில் என்னைப் பார்க்க வந்தவர்கள் அன்போடு கொண்டு வந்து தந்த பழவகைகள், இனிப்பு வகைகள் போன்ற சிற்றுண்டிகள் ஏராளம் இருந்தன. இவைகள் என்னுடைய
120

உண்ணாவிரதத்திற்கு இடையூறாக இருக்கும் என்று அவைகளையெல்லாம் மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டேன். என்னுடைய ஆத்ம சக்தியை பரீட்சிப்பதற்காக உண்ணாவிரதம் இருந்தேன். நான் உணவை மறுத்த விஷயம் அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டியது. என்னை உணவு உண்ணு. மாறு வற்புறுத்த ஆரம்பித்தார்கள். நான் அவர்களை அசட்டை செய்துவிட்டு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தேன். என்னைப் பார்க்க வந்த தாசில்தார் என்னிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். அன்றுமுதல் எனக்கு தேனீர் கூட கொடுக்கக்கூடாது என்று உத்தரவு போட்டார். அதை அவர் என்னுடைய உண்ணாவிரதத்திற்கு செய்த ஒத்தாசையாக கருதி ஏற்றுக்கொண்டேன். நான் உண்ணாவிரதம் இருந்த செய்தி முகாமில் இருந்த மற்றவர்களுக்கு பரவியது. அவர்களும் என்னோடு சேர்ந்து கொள்ள விரும்பினார்கள். ஆனால் எங்கள் அனைவரையுமே தனித்தனிக் கூண்டுகளில் முழுநேரம் அடைத்து வைத்து ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவோ கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவோ, முடியாமல் செய்து இருந்தது. அம்முகாமிலே ஒரு பழக்கம் இருந்தது. பீடி, சிகரெட், தீப்பெட்டி, உணவுப் பொருட்கள் இவற்றை ஒரு கூண்டினரும் இன்னொரு கூண்டினரும் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் இருந்தது. அனுப்ப வேண்டிய பொருளை ஒரு கயிற்றில் கட்டி அடுத்த கூண்டிற்கு எட்டும் வகையில் வீசுவார்கள். அதை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். இந்த நடைமுறையை நான் பயன்படுத்திக் கொண்டேன். முகாமில் அத்தனை பேருக்கும் முகமோ பெயரோ தெரியாதவர்களுக்கும் நான் ஒரு கடிதம் எழுதினேன். நமது மனித உரிமைகள் பறிக்கப்பட்டு நாம் அநியாயமாக சிறை வைக்கப்பட்டிருப்பதை நாம் ஒருமுகமாக எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அத்தோடு முகாம் நிர்வாகிகளுக்கு சில நிபந்தனைகளை முன் வைத்திருந்தேன். இந்த கடிதத்தை ஒரு கூண்டிலிருந்து இன்னொரு கூண்டிற்கு கயிறு வீசும் முறை மூலம் அனுப்பி வைத்தோம். பொலிஸ்காரர்கள் கண்களில் படாமல் 40 கூண்டுகளுக்கும் போய் சேர்ந்தது. மற்றவர்களுடைய ஒப்புதலுடன் கடிதம் திரும்பி வந்த பொழுது ஒரு பொலிஸ்காரர் கண்ணில் பட்டுவிட்டது.
9
ஆண் பொலிசாரும், பெண் பொலிசாரும் தடுப்பு முகாமில் பெண்கள் பகுதியை முற்றுகையிட்டனர். பெண்களை உண்ணாவிரதத்தைக் கைவிடு. மாறு வற்புறுத்தினர். குழந்தைகளுக்காக வெளியிலிருந்து உணவு வாங்கு. வதை தடுப்போம் என்று பயமுறுத்தினார்கள். வேறு என்னென்ன சாகசங்களைச் செய்தார்களோ தெரியவில்லை. பெண்களை உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி தூண்டி, வெற்றியும் பெற்றார்கள். பெண்கள் வழக்கம் போல் உணவுண்ணத் தொடங்கினர். குழந்தைகளும், பெண்களும் உண்ணாவிரதத்தைக் கைவிட்ட உடன் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த ஆண்களும்
121

Page 72
உணவுண்ணத் தொடங்கினர். படிப்படியாக அனைவருமே உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் தோற்றுப் போனது. உறுதியாக ஒரு வாரத்திற்கு உண்ணாவிரதமிருந்தால் சில வெற்றிகள் பெற்றிருக்கலாம்.
ஆனால் உறுதியான போராட்டத்திற்கு எத்தனை பேர் தயாராய் இருக்கிறார்கள் ?உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் உளத்தூய்மையும் உள உறுதியும் வேண்டும். காந்தி போன்ற ஒருவரால்தான், உண்ணாவிரதத்தின் மூலம் பல வெற்றிகள் பெறமுடிந்தது. பொட்டியூரீராமுலு போன்ற ஒரு சிலரே உண்ணாவிரதத்தின் மூலம் தமது இலட்சியம் நிறைவேறுவதற்காக தமது உயிரையே கொடுத்திருக்கிறார்கள். அண்மையில் சுந்தர்லால் பகுகுணா, மேதா பத்கர் போன்றவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் அரசையே பணிய வைத்திருக்கிறார்கள். அந்த மனத்திடம், உறுதி எல்லோருக்கும் எளிதில் வருவதில்லை.
நான் மட்டும் தொடர்ந்து ஒருவாரம் உண்ணாவிரதமிருந்தேன். எட்டாவதுநாள் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதுபோல் இருந்தது. எனது வீட்டாரும் நண்பர்களும் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக்கொண்டே இருந்தார்கள். எட்டாம்நாள் நானும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன். உண்ணாவிரதம் தந்த ஆதமிக பலம்தான் எனது இறுதி வெற்றிக்கு ஒரு காரணமாய் அமைந்தது என்று நம்புகிறேன். மனத்திடம் மிக்க உண்ணாவிரதத்தினால் நீதியை நிலைநாட்ட முடியும். அநீதியை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். ஆனால் இந்த ஆத்மீக போர்க்கருவியை எல்லோராலும் திறமையாகக் கையாள முடியாது என்பதும் உண்மைதான்.
உண்ணாவிரதப் போராட்டம் தோற்றபின், சிறப்பு முகாம் நிர்வாகி. களும், பொலிசாரும் மிக மூர்க்கத்தனமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். ஏளனமாக நடத்தினார்கள். வெளியிலிருந்து பத்திரிகைகளோ, உணவுப் பொருட்களோ உள்ளே வரக்கூடாது எனத் தடை செய்தார்கள். உண்ணாவிர. தத்திற்கு முன்பிருந்த ஓரிரு சலுகைகளும் மறுக்கப்பட்டன. ஒரு கூண்டுக்குள் உள்ளவர்கள், வேறொரு கூண்டுக்குள் உள்ள எவரோடும் தொடர்புகொள்ள முடியாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
வாசிப்பதற்கு நூல்களோ, பத்திரிகைகளோ இல்லாது நான் படாத பாடு பட்டேன். உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை. வாசிப்பதற்கு ஒன்றுமில்லாதபோது ஒரு சூன்ய உணர்வு மேலோங்கி நின்றது. ஆகவே சிந்திக்க மட்டுமே முடிந்தது. எந்தவித சட்டமோ, ஆதாரமோ இல்லாமல் நூற்றுக்கணக்கானவர்களை சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தும் ஒரு அராஜகம் நாகரீக நாடுகளிலே காணமுடியாது. ஆனால் இன்றைய தமிழகத்தில்தான் இலங்கைத் தமிழர்களை எவ்வித காரணமின்றி, சட்ட அடிப்படையின்றி ஒரு போலி வாதத்தின் அடிப்படையில் சிறைக்கூண்டுக்குள் அடைத்து வைக்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான போக்குநிலவுகிறது. பலர் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால்
122

உயர்நீதிமன்றம், மனித உரிமை மீறல் என்ற அடிப்படையில் நோக்காது அந்நியர்களை அடைத்து வைக்க அரசாங்கத்துக்கு அதிகாரமுண்டு என்ற ரீதியிலே வழக்குகளைத் தள்ளுபடி செய்தார்கள். அரசாங்கம் சட்டவிரோதமாக கொடுமை செய்கிறது. நீதிமன்றம் அதற்கு ஒத்துதுகிறது. நீதியுணர். வுள்ள மனிதர்கள் என்ன செய்தார்கள்? சகித்துக் கொள்ள வேண்டுமா? எதிர்க்க வேண்டுமா?
சர்வாதிகாரப் போக்குள்ள அரசுகள் மனிதர்களை அடைத்து வைத்துவிட்டு, அவர்களைப் பற்றி மறந்து விடுகிறார்கள். அரசாங்கத்தின் அநீதியை வெளிக்கொணர்வதற்கு பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. உண்ணாவிரதம், கிளர்ச்சி, தாக்குதல், பொருட்களை சேதப்படுத்தல், தற்கொலை, தன்னையே புண்படுத்திக் கொள்ளல், தப்பியோடும் முயற்சி ஆகிய பல்வேறு முயற்சிகளில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளவர்கள் ஈடுபடுதலில் என்ன தப்பிருக்க முடியும். கைதியென்றால், வழக்குண்டு, நீதிமன்றம் உண்டு. தண்டனை அனுபவிப்பர் என்றால் ஒரு காலவரை உண்டு.
ஆனால் கைதியுமில்லை வழக்குமில்லை. தண்டனையுமில்லை. கால எல்லையுமில்லை. ஆனால் காலவரையறையின்றி கூண்டுக்குள் அடைபட்டிருக்க வேண்டுமென்றால் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? இதனால் தான் வேலூர் தடுப்பு முகாமிலிருந்து சுரங்கப் பாதை வழியாக வெளியேறு: மளவுக்கு தீவிர முயற்சிகளில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. மனித உணர்வுகளையும், மனித உரிமைகளையும் மதிக்கத் தெரிந்தவர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள். மனிதனின் நீதி உணர்வு, விடுதலை உணர்வுக்கும் எத்தனை உரிமை உள்ளதைப் புரிந்து கொள்வார்கள்.
இப்பொழுதுதான் தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர்களை கைது செய்யவோ, நாடு கடத்தவோ, பலாத்காரமாக வெளியேற்றவோ அரசுக்கு சட்டபூர்வமான அதிகாரமில்லை. ஆகவே இப்படி ஒரு குறுக்கு வழியில், சட்ட விரோதமான "சிறப்புமுகாமில்" அடைத்து வைக்கிறார்கள். இது ஒரு வெட்கங்கெட்ட நிலை. ஒரு நாணயமுள்ள அரசு செய்யக்கூடிய செயலல்ல. இலங்கைத் தமிழன் இந்தியாவில் இருக்கக்கூடாதென்றால் அவர்களை நாடுகடத்துவதுதானே முறை? "எங்களை இலங்க்ைகு அனுப்பு" என்று அவர்கள் கோரியும், அவர்களை அனுப்பாது அடைத்து வைத்திருப்பதில் அர்த்தமென்ன? "நாங்கள் போகிறோம்" என்று முகாமில் உள்ளவர்கள் கோரியும் அவர்களை அனுப்பாது அடைத்து வைத்திருப்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்"
என்னைப் பொறுத்த மட்டில் எனது சொந்த செலவில் நான் இலங்கை செல்லத் தயார் என்று எழுதிக் கொடுத்தும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே உயர்நீதிமன்றம் மூலமாகவும் சர்வதேச எதிர்ப்பாலும் மனித உரிமை இயக்கங்களின் வற்புறுத்தல் மூலமாகவும், ஆன்மீக பலத்தாலும்
123

Page 73
எனது விடுதலை வேட்கையை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதிப்பாட்டுடன் நான் செயற்பட ஆரம்பித்தேன். அதற்கு உறுதுணையாக எனக்குப் பல்வேறு ஆதரவும், உதவிகளும், ஒத்தாசையும் கிட்டின. என்னை முன்பின் அறியாதவர்கள் கூட என் விடுதலைக்காக தம்மாலியன்ற முயற்சிகளில் இறங்கினர். எனது விடுதலை முயற்சி வெளியில் தீவிரப்படுத்தப்பட்ட அதே. சமயம் உள்ளே கட்டுப்பாடுகள் உச்ச கட்டமடைந்தன.
இந்த சிறப்பு முகாமில் எப்படிப்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டார்கள். எவ்வாறு விடுதலை செய்யப்பட்டார்கள், எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள் என்ற விவரங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.
1 O
பல்வேறு காரணங்களால் தொடர்விட்டுப்போன சிறைவாச அனுபவங்களைப் பற்றிய கட்டுரைத் தொடரை தொடர்வதற்கான வாய்ப்பு இப்பொழுதுதான் கிட்டியுள்ளது. வாசகர்கள் மன்னிப்பார்களாக,
இதுவும் ஒருவகையில் நல்லது போல் தான் தோன்றுகிறது. தற்பொழுது தமிழகத்தில் யார், யார் சிறை சென்றிருக்கிறார்கள், இன்னும் யார், யார் செல்லப்போகிறார்கள் என்பது பற்றி பரவலாகவும், பரபரப்பாகவும் பேசப்படுகிறது. பத்திரிகைகளிலெல்லாம் சிறை வாழ்க்கை பற்றிய செய்திகள் சாங்கோபாங்கமாக வெளியிடப்பட்டு வருகின்றன. கொசுக்கடியால் அவதிப்படுகிறார் சசிகலா, சோமசுந்தரத்திற்கு மின்விசிறி வசதிகள் செய்ய அரசாங்கம் ஆணை பிறப்பித்திருக்கின்றது. தியானேஸ்வரன் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார். நடராஜனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது என்ற செய்திகள் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியிடப்படுகின்றன.
எனக்கு வியப்பாக இருக்கிறது. பல்லாயிரக் கணக்கான சிறைக் கைதிகள் இதைவிடக் கொடிய முறையில் நடத்தப்படுகிறார்கள். சிலர் சிறையிலேயே மரணம் அடைந்து விடுகிறார்கள். கொசுக்கள் சிறையில் மட்டுமா கடிக்கின்றன ? நமது நாட்டில் கொசுக்கடியால் அவதிப்படுவோர் கோடிக்கணக்கானவர்கள் இருப்பார்கள்.
ஆனாலும், மக்கள் பணத்தில் சொகுசும், சுகமும் அனுபவித்து, தமது தகுதியற்ற ஆடம்பரத்தாலும், ஆணவத்தாலும் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொண்ட சிலரின் சிறைவாசத்தைப் பற்றி பத்திரிகைகளில், இத்தனைப் பத்திகள் எழுதவேண்டுமா ?
நமது நாட்டில் சிறைவாசம் பற்றி ஏராளமாக ஏற்கனவே எழுதப்பட்டிருக்கிறது. சில அப்பாவிகளை அநியாயமாக சிறையிலடைத்துக் கொடுமைபடுத்துவதும், சில கடுங்குற்றவாளிகளுக்கு சிறையில் ராஜபோகம் வழங்கப்படுவதும் நமக்குத் தெரியாததல்ல. புதுடில்லியில் உள்ள திஹார் சிறைச். சாலையில் (இந்தியாவிலேயே மிகப் பெரியது) சார்லஸ் சோபராஜ் என்ற (இந்தியத் தொடர்புடைய) தாய்லாந்து நாட்டு கைதிக்கு அளிக்கப்பட்ட
124

சலுகைகளும், செளகரியங்களும் பிரமிக்கத்தக்கன. அவருக்குப் பெண்களை சந்திக்கவும், திருமணம் செய்து கொள்ளவும், பிறந்த நாள் விழா கொண்டாடவும் அனுமதிக்கப்பட்ட சலுகைகளை நாடறியும். சிறைச்சாலை சீர்திருத்தத்துக்குப் புகழ்பெற்ற அதிகாரி கிரேன் பேடி கூட சார்லஸ் சோபராஜுக்கு விசேட சலுகைகள் காட்டியதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் செய்திகளெல்லாம், சிறைச்சாலைகளில் எவ்வளவு சீர்திருத்தம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை தான் வலியுறுத்துகின்றன. இம்மாதிரியான அக்கறையும் சிந்தனையும் பெரியபுள்ளிகள் மாட்டிக் கொள்ளும் பொழுது தான் பெரிதுபடுத்தப்படுகிறது. அல்லாவிட்டால் சிறையில் மாட்டிக்கொண்டவர்கள் எவ்வளவு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் மனிதாபிமானமின்றி, ஈவிரக்கமின்றி நடத்தப்படுகிறார்கள் என்ற கசப்பான உண்மைகளை யாருமே கண்டுகொள்வதில்லை. திஹார் சிறைச்சாலை பொறுப்பதிகாரியாக இருந்த கிரேன் பேடி அவர்கள் தான் சிறைச்சாலை சீர்திருத்தத்தை அமுல் நடத்தி உலகப் புகழ் பெற்றவர். அவரது சேவைக்காக அமெரிக்க அதிபர் கிளின்டன் கிரேன் பேடியை வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண அழைத்தார். இதைப் பொறுக்காத நமது நாட்டு அமைச்சர் ஒருவர், அவரை அந்தப் பதவியிலிருந்து மாற்றிவிட்டார்.
சிறையிலடைக்கப்படுபவர்கள் கடுங் குற்றச்சாட்டிற்காகவோ, பொருளாதாரக் குற்றங்களுக்காகவோ, அல்லது சந்தேகத்தினடிப்படையிலோ கைது செய்யப்பட்டவர்களாய் இருக்கலாம். சில சிந்தனயைாளர்கள் சாதாரணதண்டனைச் சட்ட குற்றங்களை விட, பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள்தான் மிகப் பெரிய சமூக விரோதிகளாய் கருதப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். சீனா போன்ற நாடுகளில் கைலஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், போதைப் போருள் கடத்துபவர்களுக்கும் மரண தண்டனையே விதிக்கப்படுகிறது. ஆகவே, இன்று தமிழகத்தில் அல்லது இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களுக்காக, அதிகார துஷ்பிரயோகத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது அவசியந்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் அப்பாவிக் கைதிகள் பலருக்கு எந்தவித மனிதாபிமானமும் காட்டாத சிறை அதிகாரிகள், நெறிமுறைகள், நடைமுறைகள் உடனடியாக மாற்றப்பட வேண்டியது மிக, மிக அவசியம். ஒரு சில முக்கிய கைதிகளுக்கு விசேட சலுகைகள் வழங்குவதைவிட அனைத்துக் கைதிகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில் வசதிகள் செய்து கொடுப்பதே ஒரு குடியரசின் கடமையாகும்.
செங்கற்பட்டு சிறப்பு முகாம், பெயர் மாற்றம் செய்யப்பட்ட சிறைச். சாலை. அதில் எவ்வித காரணமுமின்றி பலர் ஆண்டுக்கணக்காக சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் மீது எவ்வித குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. அவ்வாறு தாக்கல் செய்யவும்
25

Page 74
எவ்வித காரணமுமில்லை. அவ்வாறு நான் சந்தித்த சிலரைப்பற்றி இங்கு சில குறிப்புகள் கொடுத்தால் செங்கற்பட்டு சிறப்பு முகாம் எத்தகைய வெங்கொடுமைச் சாக்காடு என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அவர் பெயர் சோமு. நான் வாங்கிப்படிக்கும் ஆங்கிலப் பத்திரிகையை என்னோடு பகிர்ந்து கொள்ளவருவார். அல்லது அவர் வாங்கும் நாளேடுகளை என்னோடு பகிர்ந்து கொள்வார். உயர்ந்த தோற்றம், சுருட்டை முடி, பார்ப்பதற்கு வசீகரமான முகம். ஆனால் விலக்க முடியாத கவலை தோய்ந்த முகம். உடல் மிகவும் பலவீனமாக இருந்தது. ஏதோ ஒரு நம்பிக்கையில் நடமாடிக் கொண்டிருந்தார். அவர் விவேகானந்தரது "ஞான தீபம்" நூலை எனக்குத் தந்தார். நான் அதை ஆவலோடு வாங்கிப் படிப்பேன். அந்நூல் எனக்குத் தந்த ஆன்மீக பலத்தை எளிதில் வர்ணிக்க முடியாது. நூல்கள், பத்திரிகைகள் பரிமாறி வளர்ந்த பழக்கம் ஒரு நட்பாகவே மாறிவிட்டது. தியானம், ஆத்மீக சிந்தனை போன்ற பண்புகள் எங்களிருவரையும் பிணைத்தது.
அவர் ஒரு பொறியியற் பட்டதாரி. திருச்சிக்காரர். அவரது அன்னை சகோதரர்கள் அனைவரும் சொந்த ஊரில். சில சமயம் தமது திறமைக்கேற்ற தொழில் வாய்ப்புக் கிட்டாத பல இந்தியத் தமிழ் இளைஞர்கள் யாழ்ப்பாண இளைஞர்களோடு சேர்த்து, தம்மையும் இலங்கைத் தமிழ் அகதிகளாக பாவனை செய்து கொண்டு வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவர்களில் பலரை எனக்குத் தெரியும். அவ்வாறு கனடா சென்று இலங்கை அகதியாக வாழ்ந்தவர் சோமு. பல ஆண்டுகள் கழிந்த பின்னர் கனடா வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு மீண்டும் தாயகமான இந்தியா திரும்பி திருமணம் செய்து கொண்டு ஏதாவது வணிகத்தில் ஈடுபட வேண்டுமென்று இந்தியா வந்தவர் தான் சோமு. வந்த முழுமூச்சில் பெண்தேடும் படலத்தில் தாயாரையும், சகோதரர்களையும் ஈடுபட வைத்தார். அவரும் வணிகத்தில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கியிருந்தார்.
அவரது கெட்ட காலம். மொட்டைப் பெட்டிசன்களுக்கு பெயர் போன நமது சமூகத்தில் அவர் விடுதலைப் புலிகளைச் சாாந்தவர் என்றும், ஜெயலலிதாவைதீர்த்துக்கட்டுவதற்காக டொரொன்டோவிலிருந்து தமிழகம் வந்திருக்கிறாறென்றும் ஒரு பொய்த் தகவல் பொலிசை சென்றடைந்தது. பொலிசார் தன்னைத் தேடுகிறார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டு, தானாகவே பொலிஸ் சூப்பிரெண்டிடம் சரண் அடைந்தவர். அவ்வளவு தான். எவ்வித விசாரணையுமின்றி சிறைபிடிக்கப்பட்டு, செங்கற்பட்டு சிறப்பு முகாமென்ற பாதாள படுங்குழியில் தள்ளப்பட்டார். அவருடைய பேச்சு நடவடிக்கை எல்லாம் அவர்களுக்கு இந்தியர் என்பதை உறுதிப்படுத்தும். அவருடைய கல்வி சான்றுகள், உற்றார் உறவினர்கள் அனைத்துமே அவரை ஒரு அப்பட்டமான திருச்சித் தமிழர் என்பதை உலகத்திற்கே பறை சாற்றுவன. ஆனால், நமது அதிபுத்திசாலிகளான "கியூ" பிரிவு பொலிஸ் புலிகளுக்கு அவர் விடுதலைப்புலி. மிகமிக கொடுரமாக, அந்த அப்பாவி இளைஞனை
126

காலவரையறையின்றி செங்கற்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைத்தனர். ஒரு அசல் இந்தியன் அந்நியர் சட்டத்தின் கீழ் எவ்வித காரணமும், காலவரை. யறையுமின்றி தடுத்து வைக்கப்பட்டது. நமது "கியூ" பிரான்ச் பொலிஸ்காரர்களின் மேதாவிலாசத்திற்கு ஒரு அபார எடுத்துக்காட்டாகும்.
11
சோமுவை விடுதலை செய்ய என்னென்ன நுணுக்கங்களை கையாளலாம் என நானும், அவரும் சேர்ந்து தீவிரமாக சிந்திப்போம். எத்தனையோ கடிதங்கள் எத்தனையோ மனுக்கள் அதிகாரிகளுக்கு எழுதி, எழுதி சளைத்துப் போனார் சோமு. அவரது சகோதரர்களின் அனுசரணையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது விடுதலை கோரிமனு செய்தார். அந்த வழக்கும் இழுப்பறியாகவே இருந்ததன்றி வேறு எவ்வித பயனும் தரவில்லை. செங்கல்பட்டு தடுப்புமுகாம் அதிகாரிகள் விடுதலைக்கு ஒரே ஒரு வழி சொன்னார்கள். இலங்கைக்கு போகிறேன் அல்லது வேறெந்தநாட்டுக்கானது போகிறேன் என்று பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு இவைகளோடு கோரிக்கை விடுத்தால் செங்கல்பட்டிலிருந்து மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு சென்று விமான நிர்வாகிகளிடம் ஒப்படைப்போம் என்ற மிக மிக மனிதாபிமானம் மிக்க ஒரு ஆலோசனையை முன் வைத்தார்கள்.
இது எதைக் காட்டுகிறதென்றால் தடுப்பு முகாமில் இருப்பவர்களுக்கு எதிராக எந்த வழக்குமில்லை, குற்றமுமில்லை. ஆனால் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான கொடுர சக்திதான் செங்கற்பட்டு சிறப்புமுகாம். இந்த கொடுமையிலிருந்து விடுபடுவதற்கு பலர் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, புதிய பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு உற்றார் உறவினர் கொடுத்த பணத்தை வைத்து விமான டிக்கெட்டை வாங்கி இலங்கை திரும்பினார்கள். ஒரு இளந்தம்பதியினர் சுவிற்சர்லாந்து சென்றார்கள். இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு கனடா செல்வதிலும் சோமுவுக்குப் பிரச்சனை இருந்தது.
சோமு இலங்கை அகதியாகக் கனடாவில் வாழ்ந்தவர். ஆகவே கனடா நாட்டு (விசேட) பயண ஆவணத்தோடு தான் இந்தியா வந்தார். அதன்படி இந்தியா வந்த ஆறு மாதத்திற்குள் கனடா திரும்பாவிட்டால், அவரது பயண ஆவணம் ரத்தாகிறது. அவர் மீண்டும் கனடா செல்லும் உரிமையை இழக்கிறார். தமிழக காவல்துறையினர் அவரை அநியாயமாக பத்து மாதங்களுக்கு மேலாகத் தடுப்புக் காவலில் வைத்து விட்டு மெளனம் சாதித்ததால் சாதாரண சட்டப்படி அவரது பயண ஆவணம் செல்லாததாகி விடுகிறது. அவர் மீண்டும் கனடா செல்ல முடியாது.
இந்தியாவிலும் இருக்க முடியாது. கனடாவும் செல்ல முடியாது. இந்த தர்மசங்கடமான நிலையிலிருந்து விடுபடுவது எப்படி?
127

Page 75
கனடா நாட்டு அரசுக்கு தனது பரிதாபகரமான நிலையை விளக்கி சோமு கடிதம் எழுதுகிறார். இந்திய/தமிழக அதிகாரிகளுக்கு அனுப்பும் மனுக்களுக்கும், கோரிக்கைகளுக்கும் பதிலே வருவதில்லை. அனுப்பும் கடிதங்களைப் படித்துவிட்டு அஞ்சல் செய்வதும், வருகின்ற கடிதங்களை வாசித்து விட்டு வழங்குவதும் "கியூ" பிரிவினரின் வேலை. நான் எழுதிய பல கடிதங்களை "கியூ" பிரிவினர் அஞ்சல் செய்யவே இல்லை. எப்படியோ சோமுவின் மீது இரக்கப்பட்டு, அவர் கனடாவுக்கு எழுதிய கடிதம் அஞ்சல் செய்யப்பட்டு அதற்கு பதிலும் வந்தது.
இதுதான் ஆச்சரியம். நமது நாட்டுக்கும் கனடாவுக்குமுள்ள வித்தியாசத்தை இங்கு விளக்கலாமென நினைக்கிறேன். தமது பொறுப்பில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஒருவரைப் பற்றி ஏதேனும் கண்டு கொள்ளாமல், அவரது மனித உரிமை நியாயமான கோரிக்கை ஆகியவற்றை முற்றிலும் அலட்சியப்படுத்தி ஒரு சாக்காட்டில் தள்ளிவிட்டு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழக பொலிசுக்கும் தமது நாட்டோடு எவ்வித தொடர்புமற்ற, ஏதோ சிறிது காலம் அகதியாய் தஞ்சமடைந்திருந்த ஒருவரின் மீது மனிதாபிமானம் காட்டி அவரது கோரிக்கைக்கு, அவரது சிறைக் கூட்டு முகவரிக்கே கடிதம் எழுதிய கனடா நாட்டுக்கும் உள்ள வித்தியாசம் சற்றே விரிவாக ஆராயப்பட வேண்டியது.
சோமு ஒரு தமிழர். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று. பொறியியல் பட்டதாரியாகி, உற்றார் உறவினருடன் தொடர்பு கொண்ட தமிழ் மகன். அவரைக் கைதியாக்கி கூண்டிலடைத்து, நாட்டை விட்டு வெளியேறு என்று நிர்ப்பந்தப்படுத்துகிறது, தமிழக அரசும், அதன் காவல் துறையும். அவரது பின்னணியை ஆராய்ந்து, அவரது தொடர்புகளை நன்கு விசாரித்து ஒரு முடிவுக்கு வரக்கூடிய அறிவோ, ஆற்றலோ தமிழக அதிகாரிகளுக்கு இல்லாமலில்லை. ஆனா : ஒரு தனி மனிதனது உரிமை பற்றியோ, மனித உரிமைகள் பற்றிய அடிப்படை அறிவோ இல்லாதது மட்டுமின்றி பிறர் துன்பங்களை அலட்சியப்படுத்தும் ஒரு பொலிஸ் நிர்வாகம் செயல்படுவதால்தான் பலர் அநாவசிய துன்பங்களையும், துயரங்களையும் சுமக்க வேண்டியுள்ளது. இந்த நிலை என்று மாறுமோ, என்று மாற்றப்படுமோ தெரியவில்லை. வெள்ளைக்கார ஆட்சியில் மக்களை அரக்கத்தனமாகவும், அலட்சியமாகவும் நடத்திய ஏகாதிபத்திய கொடுங்கோன்மை நம் நாட்டைவிட்டு அகலவில்லை குறிப்பாகக் காவல்துறையை விட்டு அகலவில்லை.
நான் இந்த தடுப்பு முகாமிலிருந்து விடுதலை பெற்று வந்த பின்னர் என்னை சந்தித்த ஒரு உயர் பொலிஸ் அதிகாரி வெளிநாட்டுக்காரரான ஒருவருக்கு உயர்நீதிமன்றம் செல்லவும், அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யவும், உரிமை இருக்கிறதா என்று என்னிடமே வினவினாரென்றால், காவல் துறையில் நிலவி வரும் மனித உரிமையைப் பற்றிய அறியாமையை எடுத்துச் சொல்லவும் வேண்டுமா ?
128

ஆனால் கனடாவில் அந்த நிலையில்லை. நமது நாட்டில் வேண்டா விருந்தாளியாக வந்த அகதி என்றாலும், அவரது அடிப்படை மனித உரிமையில் கவனம் செலுத்துகிறார்கள். அவர் ஆறு மாதத்திற்குள் கனடா திரும்பாததற்கான விளக்கம் கேட்டார்கள். பொலிஸ் தடுப்புக் காவலில் போட்டதால் அவரால் திரும்ப முடியவில்லை என்ற விளக்கமே அவர்களை பிரமிக்கச் செய்தது. என்ன குற்றம் இழைத்தாரோ? ஏன் பொலிசார் அவரைத் தடுப்புக் காவலில் வைத்தார்கள்? எவ்வித காரணமுமின்றி வெறும் சந்தேகத்தின் மீது, வருடக் கணக்காக ஒரு மனிதனை சிறையில் அடைத்துவைக்க முடியுமா? இந்தியாவில் இப்படியும் நடக்குமா? என்றெல்லாம் வியப்படைந்த கனடா நாட்டு அரசு, சோமுக்கு ஒரு ஆறுதல் கடிதம் எழுதி புதிதாகப் பயண ஆவணம் பெறுவதற்காக படிவங்களையும் அனுப்பி அவரது கோரிக்கையை புதுடில்லியிலுள்ள கனடா நாட்டு அரசுப் பிரதிநிதிக்கு அனுப்பி வைக்குமாறு எழுதினார்கள்.
சோமு புதுடில்லிக்கு எழுதினார். அவர் சிறையிலடைக்கப்பட்ட விடயம் அவர்களையும் திகைப்படையச் செய்தது. ஏனெனில் சாதாரணமாக கிரிமினல் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களை பல நாடுகள் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த சூழ்நிலையில் சோமு மிகவும் மனமுடைந்து "கியூ" பிரிவினரின் விடுதலை ஆலோசனையை ஏற்றுக்கொள்ள முன்வந்தார். அதாவது கனடா செல்வதற்கான ஆவணங்கள், பயணச்சீட்டுகளை தயாரித்துக் கொண்டு செங்கற்பட்டிலிருந்து டொரொண்டோ செல்லத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
அப்படி வழிக்கு வருபவர்களை அவர்களது தூரத்திற்கு அழைத்துச் சென்று பயண ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு காவல் துறை ஒத்துழைக்கும்.
அவ்வாறு செல்ல விரும்புவோரை சங்கிலியால் பிணைத்து தூதரகம் வரை பொலிசார் கொண்டுசெல்வார்கள். அவர்களது பயண ஆவணங்களைப் பெற்ற பின்னர் மீண்டும் சங்கிலியால் அலங்கரித்து சிறைக்கூடம் வரை கொண்டு வருவார்கள். இந்த மனிதாபிமான சேவைக்கு சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு ராஜோபசாரம் செய்ய வேண்டும். இவ்வாறு உடன்பட்டு வெளியேறும் கைதிகள் அனைவரும் இலங்கையானதால், செங்கல்பட்டிலிருந்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று வருவதில் சிரமமிருக்கவில்லை. பலர் ஒரு உல்லாச அனுபவமாகவே கருதினார்கள். சங்கிலி பற்றி எல்லாம் கூட கவலைப்படவில்லை. ஏனென்றால் அடுத்த வெளியேற்றம் விமான நிலையத்துக்குத்தான்.
சோமு என்ன செய்வார்? செங்கல்பட்டிலிருந்து புதுடில்லி சென்றுவர வேண்டும். ஒருவாறு அவரே செலவுகளை ஏற்றுக்கொண்டதால் நான்கு பொலிஸ்காரர்களோடு அவரை புதுடில்லிக்கு அனுப்பி வரவழைக்க காவல். துறையும், முகாம் நிர்வாகிகளும், தமிழக அரசும் ஒத்துக் கொண்டனர் குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் முயற்சியால்
29

Page 76
உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது சாத்தியமாயிற்று. இது ஒரு மகத்தான சரித்திர சாதனை என்றே கொள்ள வேண்டும்.
சோமு புதுடில்லி பயணமானார். நான்கு காவலர்கள் புடைசூழ அவர்களது பிரயாணச் செலவு, ராஜோபசாரம் ஆகிய அனைத்திற்கும் அவரே பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் அவர் முழுப் பிரயாணத்தின் போதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். நான் சிறையை விட்டு வெளிவந்த பிறகுதான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த கொடிய அனுபவத்தைக் கண்ணிர்விட்டு எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
புதுடில்லியில் அவரை நன்கு விசாரித்த கனடா தூதரக அதிகாரிகள், ஓரளவு உண்மைநிலையை புரிந்து கொண்டார்கள். கனடா தூதரக அதிகாரி செங்கற்பட்டிற்கே வந்தார். இந்தியாவில் தாஜ்மகாலையும், தஞ்சை கோபுரத்தையும் காண வருவதைப் போல சிறப்புமிக்க செங்கற்பட்டு முகாமை நேரில் பார்ப்பதற்கு அந்த மனித உரிமை கல்லறையை காண்பதற்கு கனடா தூதரக உயர் அதிகாரி வந்தார்.
இந்த அற்புதக் கல்லறையை நேரில் கண்ட பிறகுதான் இந்தப் புண்ணிய பூமியில் நாள்தோறும் மனித உரிமைகள் சிலுவையிலறையப்படுகின்றன என்ற உண்மையை உணர்ந்து கொண்டார். சோமுவின் உடனடி விடுதலைக்கு வழிவகை செய்தார்.
திருச்சி மண்ணில் பிறந்த என் அருமைத் தோழன் சோமு தமிழக காவல் அதிகாரிகள் புடைசூழ, மீனம்பாக்க விமான நிலையம் சென்று அரக்கர்களின் பிடியிலிருந்து விலகி கனடா சென்றடைந்தார். அங்கிருந்து எனக்கு ஆத்திரக் கடிதம் எழுதியுள்ளார். இத்தகைய கொடுமை செய்த தமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நஷ்டஈடு கோர வேண்டும் என்று குமுறிக் கொண்டு எழுதுகிறார். கனடா நாட்டில் தனக்கு விரைவில் குடியுரிமை வழங்கப் போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்துதுரத்தப்பட்ட தமிழனுக்கு கனடாவில் குடியரிமை, இங்கு சிறைவாசம். தமிழகமே, இது தமிழன் வாழும் நாடு தானா ?
12
நடுநிசிக்குப் பின்னர் ஏறக்குறைய ஒன்றரை மணியிருக்கும். என் சிறைக் கூண்டு திறக்கப்படும் சத்தம் கேட்டு விழித்தேன். என் கூண்டுக்கு வெளியே மூன்று ஆயுதந்தாங்கிய காவலர்கள் கைகளில் ஏ. கே. 47 துப்பாக்கிகளை நீட்டிய வண்ணம்நின்றார்கள். இப்பொழுதுகூட அந்த இரவை நினைக்கும்பொழுது வேடிக்கையாக இருக்கிறது. அந்த ஆயுதந் தாங்கிய காவலர்களைக் கண்டு நான் கலங்கவில்லை. இந்த நேரத்தில் ஏன் இந்த விளையாட்டு என்று நான் வியந்தேன். விரைவில் விளக்கம் தெரிந்தது. ஒரு இளம் கைதியை என் அறைக்குள் தள்ளிவிட்டு காவலர்கள் மறைந்துவிட்டனர். மங்கலான ஒளியில் அந்த இளைஞனை சரியாகப் பார்க்க
130

முடியவில்லை. இது எனக்கு புதிய அனுபவம். முன்பின் தெரியாத ஒரு இளைஞன் என் அறைக்குள் தள்ளப்படுகிறான். யாரோ எப்படிப்பட்டவரோ என்று எனக்குள் பல கேள்விகள். மங்கலான ஒளியில் அவரைச் சரியாக அடையாளம் காணவும் முடியவில்லை. நவீன உடை அணிந்திருந்தார். ஜீன்ஸ் போட்டிருந்தார். உடையைத் தவிர அவரிடம் வேறொன்றுமில்லை. தாகமாய் இருக்கிறது என்று சொன்னார். குடிக்க தண்ணிர் கொடுத்தேன். உடை மாற்றிக் கொள்ள என்னுடைய கைலி ஒன்றைக் கொடுத்தேன். விரித்துக் கொள்ள ஒரு படுக்கை விரிப்பு கொடுத்தேன். உறங்கச் சொல்லி, காலையில் பேசிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு படுத்துக் கொண்டேன். அவர் உறங்கவே இல்லை. பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார். நான் நன்கு உறங்கிவிட்டேன். காலையில் கண் விழித்த பொழுது தான் எனது கூண்டுத் தோழனை அடையாளம் காண முடிந்தது.
சுருண்ட முடி கவர்ச்சியான முகம் ஆயினும் கவலை தோய்ந்த முகம். பெயர் ராஜன்.நல்ல உயரம், இலங்கை தமிழில் பேசினார். அவருடைய சோகக் கதை நெஞ்சை உருக்கும். பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தனது உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்க்கையை இருளடைய செய்யும் இலங்கை அரசின் வகுப்புவாத கொள்கைகளுக்கு எதிராக, ஆயதம் தாங்கிவிடுதலைப் போரில் இறங்குகிறார்கள். அவர்களுள் ராஜனும் ஒருவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்தான். மட்டக்களப்பிலே அவரது குடும்பம் குடியேறிவிட்டது. மட்டக்களப்பில் ஒரு பகுதிக்கு தலைமை தாங்கிய விடுதலை வீரர். அவருடைய அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார். இராணுவ பயிற்சிக்கு பின்னர் அரசுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார். பாலத்தை குண்டு வைத்து தாக்குவது, இராணுவ முகாமை தாக்குவது போன்ற மயிர்கூச்செரியும் அவருடைய அனுபவங்களை கேட்டபொழுது என்னை அறியாமலேயே அவரது வீரத்திலும், விவேகத்திலும் எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. இரவிரவாக நீர் சதுப்புகளில் புதைந்து கிடந்ததும், இராணுவத்திடமிருந்து தப்புவதற்காக அவர்கள் கையாண்ட முறையும் பட்ட கஷ்டங்களும் சொல்லொணாதது. அவருடைய சில தாக்குதல் முயற்சிகள் வெற்றியடையவில்லை. எனினும் அவருடைய தலைவர் இட்ட கட்டளையை மிக வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
மேலதிகப் பயிற்சிக்காக இந்தியா வந்திருக்கிறார். சிறிது காலத்திற்கு பிறகு தலைவரின் அனுமதியுடன் இயக்கத்தை விட்டு விலகிவிட்டதாகக் கூறினார். சிறிது காலம் மும்பாயில் வாழ்ந்திருக்கிறார். அங்கு ஒரு விடுதலை இயக்கத்தை விட்டு விலகிய ஒரு தோழனோடு சேர்ந்து பணிபுரிந்திருக்கிறார். அந்த தோழன் மும்பாய் நகரில் கள்ள கடத்தல் உலகில் மிக முக்கியமான புள்ளி. இந்தி, மராத்தி மொழிகளை நன்கு கற்றுக் கொண்டு தனக்கே சொந்தமான ஒரு கடத்தல் உலகில் ஒரு ரகசிய உலகில் முக்கிய தலைவனாக செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தாராம். ஒரு மராத்திய பெண்ணையும் திருமணம் செய்துகொண்டு எல்லா இயக்க உறவுகளையும்
131

Page 77
துண்டித்துக் கொண்டு ஒரு ஆபத்தான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தாராம். காலப்போக்கில் அவரது மராத்திய மனைவி வீடு வாகனங்கள் எல்லாம் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு கணவனை கைவிட்டு விட்டாராம். அவரிடமிருந்துதான் ராஜன் கடத்தல் தொழிலை கற்றிருக்கிறார். போதைப் பொருட்கள் கொண்டுவரப்படுமாம். பாகிஸ்தானிலிருந்தும் நேபாளத்திலிருந்தும் போதைப் பொருட்கள் கொண்டு வரப்படுமாம். அவற்றை வாங்கி வெளிநாடுகளுக்கு கடத்துவது ஏராளமான லாபம் தரக்கூடிய தொழில்.
இந்த தொழில் உலக அரசுகள் அனைத்தாலும் சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளன. இந்த கள்ளக்கடத்தலை முறியடிப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பல சர்வதேச ரீதியிலும் காவற் படைகள் அமர்த்தப்பட்டுள்ளன. பிடிபடுபவர்களுக்கு நீண்டகால சிறை தண்டனையும் சில சமயம் மரணதண்டனையும் வழங்கப்படுகிறது. இவ்வளவு கட்டுப்பாடு இருக்கிற காரணத்தால் தான் இந்த தொழில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளவர்கள் ஏராளமாக இலாபம் சம்பாதிக்கிறார்கள். உள்ளுர் போராட்டத்திலோ பயங்கர. வாதத்திலோ ஈடுபட்டிருப்பவர்கள் இந்த போத்ை பொருள் கடத்தல் மூலமாகவே பெரும் பணம் திரட்டுகிறார்கள்.
மும்பாயிலிருந்து சென்னை வந்த ராஜன் இந்தத் தொழிலில் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வந்திருக்கிறார். அவருடைய அறிவுக் கூர்மையில் மிக நவீனமாக கடத்தல் முறைகளைக் கையாண்டிருக்கிறார். சட்டங்களுக்கிடையில் "பிரெளன் சுகர்" என்றழைக்கப்படுகின்ற போதைப் பொருளை அனுப்பியிருக்கிறார். ஒரு மாதத்திற்கு ஒருமுறைகடத்துவதே போதுமாம். ஒரு கிலோ வெற்றிகரமாக அனுப்பப்பட்டால் ரூ.75,000/- லாபம் கிடைக்குமாம். சில சமயங்களில் வாரத்திற்கு ஒருமுறை கூட அனுப்பப்படுமாம். சுங்க அதிகாரிகளும் போதைப் பொருள் கடத்துபவரை தடை செய்யும் அதிகாகரிகளும் மிக மிக விழிப்புடன் தான் செயல்படுகிறார்கள். சர்வதேச பயிற்சி பெறுகிறார்கள். போதைப் பொருள்களை கண்டுபிடிக்கும் நுணுக்கங்களை அறிந்திருக்கிறார்கள் என்றாலும் இந்த சர்வதேசக் கடத்தல் வெற்றிகரமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. விமானநிலையங்களில் போதைப் பொருட்களை மோப்பமிட்டு கண்டு பிடிக்கும் பன்றிகள், நாய்கள் ஆகியவற்றை சுங்க அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால் மிளகாய்ப்பொடிபாக்கெட்டுக்கு உள்ளே வழக்கமாக போதை பொடிகள் புதைக்கப்பட்டு கடத்தப்படும் பொழுது இந்த மோப்பம் பிடிக்கும் மிருகங்களால் அவற்றைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனால் பயிற்சிப் பெற்ற அதிகாரிகள் அவ்வளவு ஏமாளிகள் அல்லவே.
ராஜன் அனுப்பிய ஒரு பாக்கெட் பிடிபட்டது. சுங்கக் காவலர்கள் தமது சாகசங்களையும், தந்திரங்களையும் பயமுறுத்தலையும் பயன்படுத்தி அனுப்பியவர் யார்? என்று அறிந்து கொண்டனர். வலைப் போட்டுத் தேடிப் பிடித்துவிட்டனர். பாடு படுத்தி உண்மையை கறந்து விட்டனர். கைது செய்து
132

சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். ராஜனுக்கு எதிராக வழக்கு நடந்தது. நிறையபொருள் செலவழித்து எதிர் வாதாடினார் ராஜன். வழக்கறிஞர்களுக்கு லட்சக் கணக்கில் வாரி வழங்க வேண்டும். பல மாதங்களுக்கு பிறகு ராஜனுக்கு ஜாமீன் கிடைத்தது. ஒரு லட்ச ரூபாய் கட்டிவிட்டு ஜாமீனில் செல்லலாமென்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வெளியே செல்லலாமென்ற ஆர்வத்தோடு ராஜன் இருந்தார். ஒரு லட்சம் ரூபாய் செலுத்தியபிறகு ஜாமீன் உத்தரவோடு அவரது நண்பர்கள் சென்னை மத்திய சிறைச்சாலைக்கு வந்த பொழுது அங்கிருந்து சிறைச்சாலை அதிகாரிகள் அவரை மத்திய சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்து நேரடியாக அங்கிருந்து செங்கல்பட்டு சிறப்பு தடுப்பு முகாமில் கொண்டு வந்து அடைத்து விட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவு பயனற்றதாகிவிட்டது. இப்படித்தான் பொலிஸ் சதித் திட்டங்கள் நீதியின் போக்கையே நிலைக்குலையச் செய்து விடுகின்றது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு கூட ராஜன் கொண்டு செல்லப்படுவதில்லை. செங்கற்பட்டு காராக்கிரஹம் எல்லா நீதி நியாயங்களையும் மீறிய பாதாளப் படுகுழி, மனித உரிமைகளின் கல்லறை. இந்திய தமிழக அரசுகளுக்கு நிரந்தர அவமானச் சின்னம்.
ராஜன் போன்ற எத்தனையோ இளைஞர்கள் விம்மி விம்மி ஏங்குகின்றனர். ஆண்டு கணக்கில் அவர்களுக்கு விமோசனமில்லை. குற்றவாளி எனக் கண்டு தண்டனை விதித்தாலும், தண்டனைக்கு கால வரையறை உண்டு. ஆனால் சிறப்பு முகாமிலே காலவரையறையின்றி மானிட ஜீவன்கள் உயிரோடு சமாதி வைக்கப்படுகிறார்கள்.
13
வைத்தியம் தெரியாத ஒருவரிடத்தில் சிகிச்சைக்கு சென்றால் என்ன நேருமோ அதேபோல் தான் விவரம் தெரியாத பொலிசாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டவுடன், சாமானியர்கள் பெருங்கொடுமைக்கு ஆளாகின்றனர். இப்படி விவரங்கெட்ட அதிகாரிகளால் எத்தனையோ தாயகம் திரும்பிய தமிழர்கள் அனலில் இட்ட புழுவாய் துடிதுடித்து துன்பம் அனுபவித்திருக்கிறார்கள். அதையெல்லாம் தொகுத்துச் சொன்னால் அது நீண்ட சோக காவியமாகிவிடும். இந்த வதைப்படலம் இன்றும் ஓயவில்லை என்பது தான் வியப்பான உண்மை.
செங்கற்பட்டு சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டோருள் தாயகம் திரும்பிய இந்தியர்களும் அடங்குவர். சிறப்புக் காவலில் வைப்பதற்காக இடப்பட்டோ ஆணையோ நீங்கள் அந்நியர்கள் சட்டத்தின் கீழ், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளிர்கள் என்று கூறுகிறது. அதை அமுல் நடத்தும் பொலிசாரோ கூசாமல் தாயகம் திரும்பிய இந்தியர்களையும் சிறைவைத்து விடுகிறார்கள். அதை ஏனென்று கேட்பதற்கு எவரும் இல்லை.
133

Page 78
முனியம்மா மதுரையைச் சேர்ந்தவர். அவரது கணவன் பெயர் பெருமாள்.அவர்கள் மகன் பெயர் செல்லத்துரை. இந்த மூவருமே தாயகம் திரும்பிய இந்தியர்கள். பெருமாள் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரது மனைவியும் பிள்ளையும் எந்தக் காரணமும் இன்றி செங்கற்பட்டில் சிறைவைக்கப்பட்டனர். அவர்க ளோடு சேர்ந்து மேலும் மூன்று தாயகம் திரும்பியோரும், பத்து மாதங்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பத்து மாதங்களுக்கு பிறகுதான் "கியூ" பிரிவு மேதாவிகள் இந்த ஐவரும் தாயகம் திரும்பியோர்கள் ஆதலால் அவர்களை இங்கு சிறை வைக்க முடியாது என்று கண்டுபிடித்தனர். அதன் பின்னர் அந்த ஐவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் பரம ஏழைகள். அவர்கள் ஊரான மதுரைக்குத் திரும்பிச் செல்ல அவர்களிடம் எந்த வசதியும் இல்லை. பஸ் கட்டணம் செலுத்தப் பணமில்லை. முறைப்படி எங்கிருந்து கொண்டு வந்தார்களோ அங்கு போய்விட வேண்டும். பத்துமாதம் தவறுதலாக அவர்களைச் சிறைப்படுத்தி கொடுமை செய்து விட்டோமே என்று எவ்வித மனச்சாட்சியுமற்ற "கியூ" பிரிவினர் அவர்கள் வீடு திரும்புவதற்கான எவ்வித உதவியும் செய்யவில்லை. அவர்கள் பலரிடம் கெஞ்சி மன்றாடி பணந்திரட்டி ஊர் போய்ச் சேர்ந்தனர்.
பலில் என்ற இலங்கையர் அவர் அடிக்கடி இந்தியாவிற்கு வர்த்தகத்திற்காக வந்து செல்லுபவர். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே இப்படி ஒரு வியாபாரம் நடக்கிறது. ஒரு நாளைக்கு ஏறக்குறைய 300க்கும் மேற்பட்டவர்களை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வெளிநாட்டுப் பொருட்களை கொண்டு வந்து விற்று விட்டு, இந்தியாவிலிருந்து பல்வகையான பொருட்களை கொள்முதல் செய்து கொண்டு போகிறார்கள். ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக இந்த வியாபாரம் செய்யும் ஒருவரை நான் சந்தித்தேன். அவர் ஒரு பிரயாணத்தில், பலருக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சம், சுங்கவரி பிரயாண, தங்குமிட, உணவு செலவுகளெல்லாம் போக 35 அல்லது 40 ஆயிரம் ரூபாய் லாபம் பெறலாம் என்று சொன்னார். இவ்வளவு லாபகரமான தொழிலாக இருப்பதால் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டும் போதெல்லாம் வந்து போவதற்கு விசா கிடைப்பதில்லை. அதனால் பலர் மூன்று நான்கு பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள். சில சமயங்களில் போலிப் பாஸ்போர்ட் போலி விசாக்களையும் அவர்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. அநேகமாக அவர்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பித்துக் கொள்வார்கள்.
ஆனால் சில சமயங்களில் நேர்மையான அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருக்கும் பொழுது, போலி பத்திரங்களில் பிரயாணம் செய்பவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களையும் செங்கல்பட்டு சிறப்புமுகாமுக்குத்தான் கொண்டு வருகிறார்கள்.
134

அவ்வாறு கொண்டு வரப்பட்டவர்தான் பலில் அவர்களை நீதிமன். றத்திற்கு கொண்டு சென்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் அநேகமாக குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள். அதற்கான தண்டனை ஆறுமாதம் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம். இந்த விபரத்தை பலிலுக்குச் சொல்லாமல் அவரை ஆறு மாதம் சென்னை மத்திய சிறைச்சாலையில் வைத்துவிட்டார்கள். ஆறு மாதத்திற்கும் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்ட உடன், அவரை சிறப்பு முகாமுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். அவரை ஒரு மாத காலம் வைத்திருந்து அவர் இலங்கை தூதரகத்திடமிருந்து புதிய பாஸ்போர்ட் பெற்ற உடன் இராணுவமரியாதையுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்படி எத்தனையோ பேர் சிங்களப் பெண்மணிகள் உட்பட இங்கு சில வாரங்கள் காவலில் வைக்கப்படுகின்றனர்.
ஒரு சுவையான சம்பவம். ஒரு மலைநாட்டு இளைஞன் பொலிசாரின் வலையில் சிக்கி இங்கு கொண்டு வரப்பட்டிருந்தான். அவனுக்கெதிராக எந்தக் குற்றமுமில்லை. சிறப்பு முகாமிலிருந்து அவன் இலங்கைக்குத் திரும்பலாம் என்று பொலிசார் கூறிவிட்டனர். ஆனால் மதுரைக்குச் செல்லவே காசில்லாமல் கஷ்டப்படும் சூழ்நிலையில் இலங்கை செல்ல யார் விமானக் கட்டணம் கொடுப்பார்கள்? ஒரு சிங்களப் பெண்மணி ஏராளமான பொருட்கள் வாங்கிக் கொண்டு விமானம் ஏற முயன்றபொழுது அவரது பாஸ்போர்ட் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே அவரும் செங்கற்பட்டு சிறப்பு பொலிஸ் விருந்தினர் மாளிகைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கிருந்த சமயம் இந்த மலையக இளைஞன் இலங்கை செல்ல வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு, அந்த இளைஞனை தனது சொந்த செலவில் கூட்டிச் செல்ல உடன்பட்டார். தமிழக பொலிசார் காரணமின்றி தடுப்புக்காவலில் வைத்திருந்த தமிழ் இளைஞனை, ஒரு சிங்கள பெண்மணி விடுதலை செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றது சுவையான சம்பவமில்லையா ?
இப்படி இலங்கைக்குச் செல்வதில் தடையொன்றும் இல்லையாதலால், நானும் இலங்கை திரும்பிவிடலாமா என்று சிந்திக்க தலைப்பட்டேன். மன்றத்தைவிட்டு, மக்களைவிட்டு மீண்டும் இலங்கை செல்வது சரிதானா என்றெல்லாம் எனக்கு மனக்குழப்பமேற்பட்டது. அப்பொழுது என்னைச் சந்திக்க கோவை வழக்கறிஞர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் நான் இலங்கை திரும்பலாமென்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். அவர் அதை மறுத்தார். உங்கள் விடுதலைக்காக வெளியே பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ஆர். கிருஷ்ண ஐயர், உள்துறை அமைச்சர் சவானுக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அமைச்சர் தொண்டமான் கூட சவானுக்கு கடிதம் எழுதி உள்ளார். வெளிநாடுகளில் இருந்து தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் எனது தடுப்புக் காவலை எதிர்த்தும், விடுதலை செய்யக் கோரியும் கடிதங்களும், தந்திகளும்
135

Page 79
அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு முயற்சிகள் வெளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நீங்கள் அமைதியாக இலங்கை திரும்பிவிட்டால், எவ்வளவு ஏமாற்றமும், வேதனையும் ஏற்படும் ? அந்த முயற்சிகளெல்லாம் பயனற்றுப் போய் விடுமே! நீங்கள் பொலிஸ் கெடுபிடிக்கும், லீனா நாயரின் அதிகார ஆணவத்துக்கும், படுகர்களின் சதிக்கும் சரணடைந்தது போலாகிவிடுமே! ஆகவே இந்த அதிகார துஷ்பிரயோகத்தை நாம் எதிர்த்து வெற்றி கொள்ள வேண்டும். ஆகவே பொறுமையோடும் உறுதியோடும் இந்த அநீதியை சகித்துக் கொள்ளுங்கள். நமது மனித உரிமைப் போராட்டம் வெல்ல வேண்டும் என்று எனக்கு ஆலோசனை கூறினார். அதுமட்டுமல்ல எனக்கு ஒரு இனிய செய்தியும் கூறினார். லீனா நாயர் நீலகிரி கலெக்டர் பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறினார். சிலகாலம் நான் நீலகிரிக்குள் நுழையக் கூடாதென்றும், என்னை நிரந்தரமாகவே இலங்கைக்கு அனுப்பிவிடலாம் என்றும் கனவு கண்ட லீனாவே நீலகிரியைவிட்டு விலக்கப்பட்டார் என்ற செய்தி எனக்கு தேனாய் இனித்தது.
14
இறுதியாக இந்த சிறைவாசத்தை முழுமூச்சுடன் எதிர்ப்பது என்ற முடிவுக்கு வந்தவுடன், உடனே ஒரு தெம்பும் ஏற்பட்டது. சிறைவாசத்தை முறைப்படுத்திக் கொண்டேன்.
அதிகாலை எழுவது, தியானம் செய்வது, குளிப்பது, தேகாப்பியாசம் செய்வது, வாசிப்பது, எழுதுவது, நடப்பது என்று கிரமமாக முறைப்படுத்திக் கொண்ட பின்னர், சிறைவாழ்க்கையே பழகிப் போகிறது. ஆனாலும் மனதில் மட்டும் பொழுது விடியும் பொழுதெல்லாம் ஒரு எதிர்பார்ப்பு. இன்று விடுதலை கிடைக்குமென்று. ஆனால் பொழுதுமுடியும் பொழுது ஏமாற்றம். இனி நாளை தானோ என்று. இப்படித்தான் சிறைநாட்கள் செலவழிந்தன எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றத்திற்கும் இடையில்,
சென்னை உயர்நீதிமன்றத்தில் எமது மனைவி தாக்கல் செய்திருந்த வழக்கில் ஒரு இடைக்கால உத்தரவு கிடைத்தது. எனது உடல்நிலை சரியில்லாததால் என்னை செங்கல்பட்டு சிறைக்கூடத்திலிருந்து சென்னைப் பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மருத்துவ உதவிகள் வழங்குமாறு அந்த ஆணை அமைந்திருந்தது.
செங்கல்பட்டு சிறைக்கூடத்திலிருந்து சென்னைக்குப்பயணமானேன். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் புடைசூழ, எனது கைகளை பாரிய இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து தெருவில் நடக்கவிட்டு கூட்டிச் சென்றார்கள். தெருவின் இரு மருங்கும் மக்கள் விசித்திரமாக வேடிக்கை பார்த்தனர். சாதாரண பஸ் வண்டியில் மற்றப் பிரயாணிகளோடு சங்கிலி பிணைக்கப்பட்ட கரங்களுடன் ஏற்றிச் சென்றார்கள். சென்னைக்குச் சென்ற பிறகு எங்கே
136

போவது என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினார்கள். நான் எனது சொந்த செலவில் ஆட்டோ பிடித்து, எனது காவலர்களையும் ஏற்றிச் செல்ல வேண்டியதாயிற்று. இறுதியாக பொது மருத்துவ மனையில் அனுமதிப்பதற்கான நீதிமன்றக் கட்டளையை கொண்டு வராமல் வந்து விட்டார்கள். அதனால் என்னை அனுமதிக்க முடியவில்லை. என்னை மருத்துவமனை. யிலேயே இன்னொரு பொலிஸ் காவலுடன் இருக்கச் செய்துவிட்டு சென்னையிலிருந்து செங்கல்பட்டுக்கு மீண்டும் போய் அந்தக் கட்டளையை கொண்டு வந்தார் பொலிஸ்காரர். ஏழு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. என்னை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொழுது இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. மருத்துவர்கள் இல்லை. ஒரே ஒரு இரவு நேர கடமை வைத்தியர் இருந்தார். ஆனால் அவர் இருந்த வார்டில் காலியாக கட்டிலே இல்லை. பல நோயாளிகள் தரையிலே படுத்து முனகிக் கொண்டிருந்தார்கள். ஐயோ, என்னுடைய கதி என்னவாகுமோ என்று நான் உளம் நடுங்கிக் கொண்டிருந்தபோது, அந்த மருத்துவர் தாதியை அழைத்து, மறு நாள் வெளியேற்றப்பட வேண்டிய ஒரு இளம் நோயாளியை இறக்கிவிட்டு, என்னை அக்கட்டிலில் படுக்க வசதி செய்து தருமாறு சொன்னார். பெருமூச்சுடன் அசுத்தக் கட்டிலில் போய் அயர்ந்து அந்த வார்டை நோட்டம் விட்டேன். அது ஒரு நீண்ட அறை.40க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருந்தார்கள். அவர்களுக்குத் துணையாக இருப்பவர்கள் பத்துப் பதினைந்து பேர். பிற தாதிமார்கள், சேவகர்கள், பணியாளர்கள், துப்பறவு தொழிலாளர்கள் என்று நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அந்த அறையில் ஆதிக்கம் செலுத்தினார்கள். எந்த நேரமும் முனகலும், அலறலும், அனத்தலும் கேட்டுக் கொண்டே இருந்தது. மருந்தின் நெடியும் அசுத்தத்தின் மணமும் மூக்கைத் துளைத்தது. அங்கு நான் கண்ட காட்சி, கோரக் காட்சியாக இருந்தது. நரக லோகத்தின், பூலோக வரவேற்பறையாக அந்த இடம் காட்சியளித்தது. செங்கல்பட்டிலிருந்து கட்டிக்கொண்டு வந்த சங்கிலியை செங்கல்பட்டு காவல்காரன் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். சென்னையிலிருந்து வந்த காவல்காரன் என்னை புதிய சங்கிலியால் கட்டிலோடு சேர்த்து கட்டி வைத்தான் கழிவறைக்குச் செல்வதாயிருந்தால் பூட்டை அவிழ்த்து என்னோடு கூடவருவான்.
கழிவறையோ முடை நாற்றம் அடித்தது. குடிப்பதற்கு நீரில்லை. உணவில்லை. எனது இரு மருங்கிலும் நோயாளிகள் செத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சாக்காட்டில் வீசிய பல்வேறுமணங்களுடன் பிணநாற்றமும் சேர்ந்து கொண்டது.
என் வாழ்வில் முதல் முறையாக நரகத்தை எட்டிப்பார்த்தேன். சென்னை மருத்துவமனை ஓர் விசித்திர உலகம். மிகச் சிறந்த வைத்தியர்களும் அறுவை சிகிச்சைக்காரர்களும், மருத்துவ இயந்திர சாதனங்களும், மருந்து வகைகளும் நிறைந்திருந்ததால் பல நோயாளிகளை மரணத்திலிருந்து மீட்கும் அரிய பணி அங்கே நடந்து கொண்டிருந்தது.
137

Page 80
செல்வந்தர்களுக்குவிசேட அறைகளும்,நவீன வசதிகளும் உண்டு. ஆனால் இலவச நோயாளிகளுக்கு அது ஒரு நரகம். அந்த நரகத்துக்கு சென்று மீண்டவர்களும் நிறையப்பேர் இருப்பார்கள் சென்று மீளாதவர்களும் சரிசமம் இருப்பார்கள். அங்கே நடமாடும் சோகம், களிப்பு, வேதனை, இன்பம், துயரம், மகிழ்ச்சி, பெருமை, சிறுமை, வெற்றி, தோல்வி, ஏமாற்றம், இறுமாப்பு, இரக்கம். ஆத்திரம், அன்பு,அமைதி, கசப்பு. கனிவு என்று எல்லா மானிட உணர்வுகளும் அதனை ஓர் அற்புத மானிட உலகமாக மாற்றிவிடுகின்றன. நாள்தோறும் 50,000 பேர் வந்து செல்லும் இடம், 10,000ம் பேருக்கு உணவும் சிகிச்சையும் வழங்கப்படுகிறது. அங்கு நடைபெறும் வணிகமும், சூதாட்டமும், குடியும், கும்மாளமும், வேறுபல அனர்த்தங்களும் சொல்லத்தரமன்று. அந்த அற்புத உலகத்தில் நான் ஒரு மாதம் இருந்தேன்.
இந்த ஒரு மாத காலத்தில் என்னைப் பார்க்கப் பலர் வந்தார்கள். எனக்கும் சென்னையிலுள்ள பலரோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. ஒழுங்காகப் பத்திரிகைகள் கிடைத்தன. புத்தம்புதிய மானுடத் தொடர்புகள் ஏற்பட்டன. நல்ல நண்பர்கள், சுவையான உணவு வகைகள் கொண்டு தந்தார்கள். பெரிய பொலிஸ் அதிகாரிகள் வந்து பார்த்துப் பேசி, ஆலோசனை கூறிச் சென்றார்கள். பொலிஸ் இலாகாவின் ஊழல்கள் பலவற்றைப் பற்றி என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. சங்கிலியைக் கழற்றுவதற்கு கைக்கூலி கேட்ட பொலிஸ்காரர்கள் இருந்தார்கள். என்னிடம் கடன் கேட்ட பொலிஸ்காரனும் இருந்தான். பீர் வாங்கித்தரட்டுமா என்று கேட்ட பொலிஸ்காரனும் உண்டு. இரவு நேரங்களில் பாட்டுப்பாடி மகிழ்வித்த பொலிஸ்காரனும் உண்டு. என்னிடம் ஆங்கிலம் கற்ற பொலிஸ்காரனும் உண்டு. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேவுபார்க்க வரும் உளவுப் பொலிஸ்காரர்கள் எல்லாம் உறவு பூண்டு, போயிருக்கிறார்கள்.
எனது வழக்கறிஞர்கள் வந்தார்கள், எனது பத்திரிகையாள நண்பர். கள் வந்தார்கள். செங்கல்பட்டில் பொழுது போகாமல் சென்னை வாசம் ஓயாமல் ஏதாவது நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தது. மருத்துவப் பரிசோதனைகள், உணவு பரிமாற்றங்கள், பொலிஸ் விசாரணைகள், மருத்துவ பங்கீடுகள், மற்ற நோயாளிகளை பற்றிய விபரங்கள் வார்ட் தொழிலாளர்கள் பிச்சப்பிடுங்கல்கள், ஈவிரக்கமற்ற போக்குகள் என்று இரவு பகலாக சந்தடி மிக்க வாழ்க்கையாகவே அமைந்திருந்தது.
இத்தனையிலும் ஒர் எதிர்பாராத தன்மை ஏற்பட்டது. என்னைச் சங்கிலியால் பிணைத்திருப்பது உச்சநீதிமன்ற விதிமுறைகளுக்கு முர. ணானது இது. ஒரு அபட்டமான மனித உரிமை மீறல் என்று எனது வழக்கறி. ஞர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுச்செய்தார்கள். எனது மனைவி நஷ்டஈடு கேட்டு மனுச்செய்தார். அதுவரைக்கும் எனது பக்கநீதியைக் கேட்க மறுத்து, அசமந்தப் போக்கில் நடந்துக்கொண்டு வந்த தமிழக பொலிஸ் துறை பதில் சொல்லமுடியாமல் தத்தளித்தது. அதேசமயத்தில் என்னைத் தடுப்புக்காவலில் வைப்பதற்கு எவ்வித நியாயமுமில்லை என்ற முடிவுக்கு அரசும் வந்தது.
138

இப்பொழுது நஷ்டஈடு மனுவிற்கு பதிலளிக்க முடியாத அரசு தனது கர்வக் குதிரையிலிருந்து இறங்கிவந்தது. நஷ்டஈட்டுமனுவை மீளப் பெற்றுக் கொண்டால் என்னை உடனடியாக விடுதலை செய்வதாக சமரசம் பேசினார்கள். எங்கள் வழக்கறிஞர்கள் சிறிது தயக்கம் காட்டினார்கள். பிறகு இறுதியாக அப்போதைய சூழ்நிலையில் சமரசம் செய்து கொள்வதே அறிவுடமை என்று பலரும் கருதினார்கள். எனது மனைவி தனது வழக்கை வாபஸ் செய்கிறேன் என்றுநீதிமன்றத்தில் கையெழுத்திட்ட உடனே, என்னை விடுதலை செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
என்னை எப்படி அர்த்தமில்லாமல் கொண்டு போய் செங்கல்பட்டில் அடைத்தார்களோ, அதே போன்று அர்த்தமில்லாமல், நீங்கள் இங்கிருந்து செல்வதற்கு எந்தத் தடையுமில்லை என்று கதவைத் திறந்துவிட்டார்கள்.
இந்த எனது அனுபவம் எப்படி சுலபமாக அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது, என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியது. மனித உரிமைகள் சர்வசாதாரணமாக மீறப்படுகிறது. மனிதாபிமானமே மரணிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட துர்ப்பாக்கிய, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம் என்பது கவலைக்குரியது.
எனினும் எத்தனையோ சங்கடங்களை சந்திக்க நேரிடினும் நீதியும், சட்டமும் வென்றே தீரும் என்ற உண்மையும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அதற்கு நாம், மிக, மிக விழிப்பாக இருக்க வேண்டும். அண்மையில் பத்மினியின் மானபங்க வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட கடுங்காவல் தண்டனை நீதியும், நேர்மையும் நிச்சயம் வெல்லும் என்ற உண்மையை நிலைநாட்டுகிறது. ஆனால் நாங்கள் எவ்வளவு விழிப்போடு இருக்கிறோமோ அந்த அளவுக்கு தான் வெற்றி நிச்சயம் என்ற உண்மையும் சேர்ந்தே நிறுவப்படுகிறது.
எனது விடுதலைக்காக உணர்வு பூர்வமாக உழைத்த அனைத்து தோழர்களுக்கும், எனது வழக்கறிஞர்கள், டாக்டர். சுரேஷ், அவரது மனைவி நாக்னசீலா, திரு. ரீதர் அவரது மனைவி கீதா. வழக்காடும் பொறுப்பேற்றுக் கொண்ட வழக்கறிஞர் வானமலை எனக்காகக் குரல்கொடுத்த அறிஞர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யா, அமைச்சர் தொண்டமான், பத்திரிகையாளர்கள் முகுந்த், பத்மநாதன், கோபால், கார்மேகம் போன்றவர். களையும், இன்னும் எண்ணற்ற மனித உரிமைக் காப்பாளர்கள் ரவிநாயர், ஹென்றிடிபேக் போன்றவர்களையும் என்னால் எளிதில் மறப்பதற்கில்லை. பல்வேறு நாடுகளிலிருந்து எனது விடுதலையை வற்புறுத்திய மனிதநேய மிக்க மானுடமணிகளை என் நினைவிற் கொள்கிறேன். அநீதிகள் அழியாதவரையில், நம்முடைய உரிமைப் போராட்டங்களும் ஒயப் போவதில்லை.
சிறைவாசம் இத்துடன் நிறைவு பெற்றது.
ஆனால்..? - ஆர்
139

Page 81
15
குறிப்பு : இதுவரை எழுதிவந்த தொடருக்கு சற்று மாறாக, நான் சிறையில் இருந்து எழுதிய ஒரு உள்ளார்ந்த அனுபவத்தை, வசன கவிதை வடிவில் வெளியிடுகிறேன்.
நான் தனிமையிலே இருக்கிறேனா ?
63.25/256afaldu/7 ?
சின்னஞ் சிறு அறை ஒழுக்கு, ஒன்பது அழ
காராக் கிருஹம்
இரும்புக் கதவுகள் எப்பொழுதும் பூட்டியே இருக்கும் ஆகவே தனிமையில் இருக்கிறேனே7 ?
எத்தனை எத்தனை குரல்கள், ஒலிகள் ബത്ര ഉിത്ര മഞ്ഞബ്ബ് அதிகாலைப் பறவைகளின் ஒலி ஒலிபெருக்கியில் பிரார்த்தன்ன அழைப்பு பக்திப் பாடல்கள், பரவசமுழக்கங்கள் ஆலயமணி ஓசை
அப்புறம் அடுத்தடுத்த அறைகளில் ஆலே7லங்கள், ஆவேசங்கள், ஆத்திரங்கள் அசிங்கங்கள், அவலங்கள், பிள்ளைகளின் அழுகுரல் பெரியவர்களின் பேச்சுக்குரல்
நிரள்ளும் ஓசை கிணற்றடியில் குளிக்கின்ற கோஷம் பொலிசின் பூட்சுகள் മഞ്ഞുബ് മിക്രിക எழுகின்ற மரண ஒலம் இங்கு நெஞ்சை நெரிக்கும் அதியின் அழுத்தங்கள் போல்
140

துரத்தே ஓடுகின்ற வாகன சத்தம் துரத்திவரும் புகைவண்டிக் சுக்குரல் பூட்டுகள் திறக்கப்படுவதும் பூட்டப்படுவதும் இரும்புக்கதவுகள் திறக்கப்படுவதும் முடப்படுவதும் போஜனவேளைகளில் டந்திபரிமாறும் பாத்திர சலசலப்புகள் ബ്ബ്ദബ് ക്രിറ്റ്രക്ര, ബബണുകണി ஓடிவந்து விசாரிக்கும் முன்டபின் தெரிய7 தோழமைகள்
பொலிச7ரின் அனுதாபங்கள் வியப்பான விசாரணைகள் ésørøvyub 62ýM/f%žø5ub "கியூ"பிரான்ச் அதிகாரிகள் "சாப்பிட்டீர்களா?"என வினவும் சமையலறைத் தோழர்கள் இது போதும7 ச7ர்"? என ஓங்கும் ஓர் சிறுவன் ஆகாகா எப்படி எல்ல7ம் மானுடம் என்னைத்தமுவிக் கொள்கிறது ? நான் தனிமையில் இருக்கின்றேனா அல்லது
என்னை இழந்த இனிமையில் முழ்கிவிட்டேனா ?
அதுமட்டும7 ?
எனது சின்னஞ்சிறு அறையில் கூட்டுக்குடும்பம் நடத்தவரும் கொசுக்கள், ஈக்கள், எறும்புகள் பேர்தெரியா பல்வகைப்பூச்சிகள் என்னையே உண்டு இன்பமடைகின்றன. வெளியேநின்று விளிக்கும் காக்கை விரமாய் சுவும் சேவல்கள் இப்படி இயற்கையுமல்லவா என்னோடு இணைந்துநதிற்கிறது !
எல்ல7வற்றுக்கும் மேல7ய் என்னுள் பொங்கிக் கொப்பளிக்கும் 67ങ്ങിങ്ങff0ffിങ്ങ്ബുബ് ക്രിബ്ബ് ഞ/്കബ്
141

Page 82
ஆதிடற்றி மனித உரிமை மற்றி நமது மக்கள் நிலையற்றி
தோழர்களின் துயரங்கள் பற்றி தமிழகத்தின் தாழ்ந்த நிலை பற்றி மன்றத்தின் எதிர்காலம் பற்றி இலங்கைத் தமிழனின் இழிநிலை பற்றி இடிந்த இலட்சியங்கள் பற்றி தமிழகத்தை வைத்துத்தப்புக்கணக்கு போட்டு விட்டோமோ என்ற புலம்பல்
ஆண்மை இழந்து பேடிமையில் சிக்கிய தமிழக அரசியலுக்காக கண்ணி ஜயகோ, சாகரம் போல் எண்ணங்கள் சாகுதே உள்ளத்தில்
அநீதி என்பது அதிதூரத்தில் இல்லை அபூர்வ நிகழ்வுமில்லை ந7ள்தோறும் வாட்டுகின்ற வாடிக்கைய7ய்விட்டது. ந7ம் வாழும் தமிழகத்தில் அநீதிநமது நிரந்தரத் துணைவன் ஆகவே எரிமலை என்னுள் எழுந்து குமுறாதா ?
142

அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு
பெயர்
திரு. எம். வாமதேவன்
திரு. எச்.எச். விக்கிரமசிங்க
கலாநிதி பி. இராமனுஜம்
திரு. பி. இராதாகிருஷ்ணன்
திரு. ராஜூ சிவராமன்
திரு. இ. ஈஸ்வரலிங்கம்
திரு. இரா. இராமலிங்கம்
திரு. பி. முத்தையா
திரு. தை. தனராஜ்
திரு. சி. நவரட்ன
திரு. ஏஸ். சுப்பையா
திரு. வி.ஏ. மதுரைவீரன்
திரு. ஆர். பரமசிவம்
விலாசம்
BQ2/2, மனிங் டவுன் வீடமைப்புத் திட்டம் மங்களா வீதி கொழும்பு - 8.
39/21, அல்விஸ் பிளேஸ் கொட்டாஞ்சேனை கொழும்பு - 13.
12/2, விகாரை மாவத்தை கொலன்னாவை.
185/1,தர்மபால மாவத்தை கொழும்பு - 7.
9A, அமரசேகர மாவத்தை கொழும்பு - 5.
45/15A, பிரெட்ரிக்கா வீதி கொழும்பு - 6.
69/92, காக்கை தீவு கொழும்பு - 15.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் கொழும்பு - 7. 7, அலெக்ஸாண்டரா டெரஸ் கொழும்பு - 6.
416/33Q/, திம்பிரிகஸ்யாய வீதி கொழும்பு - 5.
5A, சுலைமான் டெரஸ் கொழும்பு -5.
92, 2 குறுக்குத் தெரு கொழும்பு - 11.
307, யூரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை
கொழும்பு - 14.
143
தொலைபேசி
693098
435652
572436
332862
50287
58120
522760
075-332032
583151
5.99856
587287
556550
685.654

Page 83


Page 84


Page 85
ஓயாது சிந்தித்துச் செயற்பட்ட .ெ வரலாற்றின் விளைபொருளாயும் அ நெம்புகோலாகவும் திகழ்ந்த அறிஞ
நூற்றாண்டுகளாய் அடிை
அறுபதுகளில் ୫୯୬ வெங்கொடுமைச் சாக்க சுமந்த ஒரு குரல் ஆ மனச்சாட்சியின் குர