கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவா மலர் (சேனாதிராஜா சிவராஜா)

Page 1
\RNN స్టే
W *』
N
-
-- 町
■
Dा
धा
T
NNNNNNNNNNNNNNNNNN
W W W Μ
NNNNNNNNNNNNNNN NNNNNNNNN ܠܠܠܠܠ
NNNNNNNNNNNNNNNN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N
N
W N W
s ဇ္ရိ) Wא N W
WW
W N

Page 2

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை நீராவியடியில் பிறந்தவரும், முன்னாள் யாழ் இந்துக்கல்லூரி பிரதி அதிபரும், ஆக்க இலக்கிய கர்த்தாவும், சமூக, சமய பொதுப் பணியாளரும், மனிதநேயம் மிக்கவருமான
அமரர். திரு. சேனாதிராஜா சிவராஜா (வண்ணை. சே. சிவராஜா) அவர்களின்
சிவபதப்பேறு குறித்த
Jfba)D8Or6). D6OÎ 15 - O5 - 2002

Page 3
اسے تع
ܡܠܗܐܗ
சமர்ப்பணம்
மின்றாடுங் கூத்தனின் மேலாம் கழலினை
மனம் மொழி மெய்யால் மறவாது வாழ்ந்து குன்றின் தீபமெனக் குவலயத் திலெம்மைக் கண்ணுங் கருத்துமாய்க் காத்து நின்று என்றும் நீங்கா என்ன வானில் அழியா ஒவியமென எழினி காட்டவும் உன்னருள் நினைவுகள் உயர்வா யெழுதவும்
அன்பால் நினைந்து இம் மலரினைச் குடினோமே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 4

s= 府 福 露酒 别驾 例如雨 km 町@ 剖切见 耀骨呼 }),|- 喻王= 川归正 ? _. E 进江“弘 侧翼 # ? ) 州 朴 兵學的 5, s: s= E s|- st !=) *=+ 3H དྷ
முண்ாைள
W
|- ----
-------
|
----
:
h
|-
E:? 圈门 研牛 祖 大3 哪IA ?|- @
=
நாா மடியல்
է8-05- 19
3.
(3
பெ

Page 5

D சிவமயம் ஒம்பூரீசாயிராம் ஒளவையார் அருளிச் செய்த
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழமுகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் மங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்கு பொன் முடியுந் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழு தென்னை யாட்கொள்ள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயப் பிறவி மயக்க மறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெழிவாய்ப் பொருந்தவே வந்தென் னுளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன்னை யடக்கு முபாயம் இன்புறு கருணையின் இனி தெனக் கருளிக் கருவிகள் ஒடுங்கும் கருத்தினை யறிவித்து

Page 6
இருவினை தன்னை யறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி ஆறா தாரத் தங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையி னெழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணில் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசைபை விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் மாதித்த னியக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் காட்டி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டி சண்முக துாலமுஞ் சதுர்முக சூக்கமும் எண்முக மாக வினிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட வெனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை யறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கு மனமும் மில்லா மனோலயந் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி யிரண்டுக் கொன்றிட மென்ன அருள்தரு மானந்தத் தழுத்தியென் செவியில் எல்லை யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே யருள்வழி காட்டிச் சத்தத் தினுள்ளே சதாசிவங் காட்டிச் சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி

அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடும்மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தி னம்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தி னிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே!
கணபதி துணை
Ф—
சிவமயம் தோத்திர்த் திரட்டு விநாயகர் துதி
திருச்சிற்றம்பலம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
தேவாரம் குனிந்த புருவமும் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால் வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற்
பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே
யிந்த மா நிலத்தே.

Page 7
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே யாய சிவபத மளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே!
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே! சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத்து அனந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

திருப்புராணம்
கற்பனை கடந்தசோதி கருணையே யுருவமாகி அற்புதக் கோலநீடி யருமறைச் சிரத்தின்மேலாஞ் சிற்பர வியோகமாகுந் திருச்சிற்றம் பலத்துணின்று பொற்புட னடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
திருப்புகழ்
ஏறுமயில் ஏறிவிளையாடுமுகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே கூறுமடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல்தாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே ஆறுமுகம் மானபொருள் நீ அருளல் வேண்டும் ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்கமன்னன் கோன்முறை அரசுசெய்யக் குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.

Page 8
Fanqumraprió
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுது மென்னிஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க ஏக அனேக விறை வண்டிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன பூங்கழல்கள் வெல்க கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க ஈச னடிபோற்றி யெந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே யவன் றாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய வுரைப்பனியான் கண்ணுதலான் றன்கருணைக் கண் காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றென்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் சொல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வெனவோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியா யியமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகலவந்தருளி மெஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதே னின்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை யகல்விக்கு நல்லறிவே ஆக்க மளவிறுதி யில்லா யனைத்துலகும் ஆக்குவாய் காப்பா யழிப்பா யருள்தருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றெழும்பி நாற்றத்தி னேரியாய் சேயாய் நனியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுாறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடைணயாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் றன்னை Ld6opiögSL (Up19uu LDTuu 8(566T அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தா னில்லாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்

Page 9
பேராதுநின்ற பெருங்கருணைப்பேராறே ஆரா வமுதே யளவில்லாப் பெம்மானே ஓராத ருள்ளத் தொளிக்கும் ஒளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே
அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே யந்த நடுவாகி யல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே யத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான வுண்ணாரமுதே யுடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம் மையா அரனேயோ வென்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லவானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி யறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கிழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சினடிக் கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்

முருகன் துணை ஓம் சரவணபவ நம: (யூரீ தேவராய சுவாமிகள் அருளிய) கந்தர் சஷ்டிக் கவசம் காப்பு நேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்(து) ஓங்கும் நிவர்டையுங் கைகூரும், நிமலர் அருள் கந்தர் சவர்டி கவசந் தனை.
குறள் வெண்பா அமரர் இடர்திர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி
நூல் நிலைமண்டில ஆசிரியப்பா
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷடருக்(கு) உதவும் செங்கதிர் வேலோன், பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம்பாடக் கிண்கிணியாட, மையல் நடஞ்செயும் மயில் வாகனனார் கையில் வேலால் எனைக் காக்க என்(று) உவந்து வரவர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீ(று)இடும் வேலவன் நித்தம் வருக கிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரஹண பவனார் சடுதியில் வருக ரவண பவச ரரரர ரரர

Page 10
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹ, வீரா நமோ நம நிபவ சரஹண நிறநிற நிறனெ வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண்டு) ஆயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டு) இலங்க விரைந்(து)எனைக் காக்க வோலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும், உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும், கிளரொளி யையும் நிலைபெற்(று)என்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக, ஆறு முகமும், அணி முடி ஆறும் நீறிடு நெற்றியும், நீண்ட புருவமும், பன்னிரு கண்ணும், பவளச் செவ் வாயும், நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும், ஈரறு செவியில் இலகு குண்டலமும், ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூஷணமும் பதக்கமும் தரித்து, நன்மணி பூண்ட நவரத்ன மாலையும், முப்புரி நூலும், முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி(று) உந்தியும், துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும், நவரத்னம் பதித்த நற்சீ ராவும் இருதொடை அழகும், இணைமுழந் தாளும், திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுண டிகுடிகு, டிகுகுன டிகுண ரரரர ரரரர, ரரரர ரரர

fff fífiff, ffrff fiff
(6GSGSG (606(6G6, GSGGGS (6(6G6 டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து, மயிலோன் விந்து முந்து முந்து, முருகவேள் முந்து என்தனை யாளும் ஏரகச் செல்வ! மைந்தன் வேண்டும், வர மகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென்று உன்திரு வடியை, உறுதியென் றெண்ணும் என் தலை வைத்துன் இணையடி காக்க! என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால், பாலனைக் காக்க அடியேன் வதனம், அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனித வேல் காக்க கதிர்வேல் இரண்டு, கண்ணினைக் காக்க விதிசெவி இரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத்(து) இருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிளமுலைமார், திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழு பதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாண்ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க பிட்டமிரண்டும் பெருவேல் காக்க

Page 11
வட்டக் குதத்தை வடிவேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்துணையாக நாபிக் கமலம், நல்வேல் காக்க முப்பால் நாடியை, முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து, கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில், சாமத்தில், எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல, வல்ல பூதம், வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும், பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட, இரிசி கட்டேரி இத்துன்ப சேனையும், எல்லினும், இருட்டினும், எதிர்படும் அண்ணரும், கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும், விட்டாங் காரரும் மிகுபல பேய்களும், தண்டியக் காரரும், சண்டா ளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்(து) ஒடிட,

ஆனை அடியினில் அரும்பா வைகளும், பூனை மயிரும், பிள்ளைகள் என்பும், நகமும் மயிரும், நீண்முடி மண்டையும், பாவைகளுடனே பல கலசத்துடன் ஒட்டியச் செருக்கும்ஈ ஒட்டிய பாவையும், காசும் பணமும், காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும், ஒருவழிப் போக்கும், அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட, மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட, கால தூதார் எனைக் கண்டால் கலங்கிட, அஞ்சி நடுங்கிட, அரண்டு புரண்டிட வாய்விட்டலறி, மதிகெட் டோட, படியினில் முட்டப் பாசக் கயிற்றால் ‘கட்டுடன் அங்கம், கதறிடக் கட்டு, கட்டி உருட்டு, கால்கை முறிய, கட்டு கட்டு, கதறிடக் கட்டு, முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட, செக்கு செக்கு செதில்செதி லாக சொக்கு சொக்கு சூர்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால், பற்று பற்று பகலவன் தணலெரி, தணலெரி தணலெரி தணலதுவாக, விடுவிடு வேலை வெருண்டது ஒட, புலியும் நரியும் புன்நரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந்(து) ஒடத், தேளும் பாம்பும் செய்யான் பூரான், கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க, ஒளிப்பும் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் புரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன், கைத்தாள் சிலந்தி,

Page 12
பற்குத்து அரணை, பருவரை யாப்பும், எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட, நீ எனக் கருள்வாய், ஈரேழு உலகமும், எனக்குற வாக, ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா, மண்ணாள் அரசரும், மகிழ்துறவாகவும், உன்னை துதிக்க, உன்திரு நாமம் சரஹண பவனே சைலொளி பவனே! திரிபுர பவனே! திகழொளி பவனே! பரிபுர பவனே! பவம்ஒளி பவனே! அரிதிரு மருகா! அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்! கந்தா! குகனே! கதிர் வேலவனே! கார்த்திகை மைந்தா! கடம்பா! கடம்பணை இடும்பனை ஏன்ற, இனியவேல் முருகா! தணிகா சலனே! சங்கரன் புதல்வா! கதிர்கா மத்துறை, கதிர்வேல் முருகா! தணிகா சலனே! சங்கரன் புதல்வா! கதிர்காமத்துறை, கதிர்வேல் முருகா! பழநிப் பதிவாழ் பால குமாரா! ஆவினன் குடிவாழ், அழகிய வேலா! செந்தின்மா மலையுறும், செங்கல்வ ராயா! சமராபுரி வாழ், சண்முகத் தரசே! காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என் நா இருக்க, யானுனைப் பாட, எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசம் ஆக, ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியைநேசமுடன் யான் நெற்றியில் அணியப், பாச வினைகள் பற்றது நீங்கி, உன்பதம் பெறவே, உன்அருள் ஆக அன்புடன் இரட்சி, அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக, வேலாயுதனார் சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக் குற மகளுடன், வாழ்க வாழ்க வாரணத்து வசம், வாழ்க, வாழ்க, என் வறுமைகள் நீங்க, எத்தனை குறைகள், எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் செய்தே யிருப்பினும், பெற்றவன் நீ குரு, பொறுப்ப துன்கடன்; பெற்றவள் குறமகள், பெற்றவளாமே, பிள்ளை யென்(று) அன்பாய்ப் பிரியமளித்து, மைந்தனென் மீது உன் மனமகிழ்ந்தருளித், தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்; கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததைக், காலையில், மாலையில், கருத்துடன் நாளும், ஆசாரத்துடன் அங்கம் துலக்கி, நேசமுடன் ஒரு நினைவது ஆகிக், கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள், ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறணிய, அட்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த், திசைமன்ன ரெண்மர், செயல தருளுவர், மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர், நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும், நவமதனெனவும் நல்லெழில் பெறுவர், எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர், கந்தர் கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் வியங்கும், விழியால் காண வெறிண்ைடிடும் பேய்கள், பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும், நல்லதோர் நினைவில் நடனம் புரியும், சர்வ சத்துரு சங்காரத்தடி அறிந்(து) என(து) உள்ளம், அஷட லட்சுமிகளில்

Page 13
வீர லட்சுமிக்கு விருந்து உணவு ஆகச், சூர பத்மாவைத் துணித்தகை யதனால், இருபத் தெழுவர்க்(கு) உவந்(து) அமுது அளித்த
குருபரன், பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி,
என்னைத் தடுத்து ஆட்கொள, எந்தன(து) உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி,
தேவர்கள் சேனா பதியே போற்றி, குறமகள் மனமகிழ் கோவே போற்றி,
திறமிகு திவ்விய தேகா போற்றி,
இடும்பா யுதனே இடும்பா போற்றி, கட்ம்பா போற்றி கந்தா போற்றி,
வெட்சி புனையும் வேளே போற்றி, உயர்கிரி கனகசபைக்(கு) ஒர் அரசே! மயில்நடம் இடுவோய் மலரடி சரணம்,
சரணம் சரணம் சரஹன பவஓம், சரணம் சரணம் சண்முகா சரணம்!
கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று. திருச்சிற்றம்பலம்

சாயி பஜனை
விநாயகர்
விக்னேஸ்வரா விநாயகா விஸ்வாதாரா நமோஸ் துதே நமோஸ் துதே நமோஸ் துதே விஸ்வாதாரா நமோஸ் துதே சுரமுனி வந்தித விநாயகா பவ பய நாசா விநாயகா சரணம் ஸரணம் விநாயகா (3)
დენტlნ குரு தேவா ப்ரிய தேவா ஸாயி தேவா தயா மயா வீயூதி சுந்தர ஸசாங்க சேகர ஸாயி சங்கர தயா கரோ (2) (குரு) கோகுல நந்தன ஸாயி கோபாலா ரகு குல பூஷண ஸாயி ராமா ஹே மதனாந்தக தயா கரோ (2)
&6uot ஜய கங்க ஜடாதர கெளரி சங்கர கிரிஜா மனரமனா சிவ ம்ருத்யுஞ் ஜய மஹா தேவ மஹேஸ்வர மங்கள சுப சரணா ஐய நந்தி வாஹனா நாக பூஷணா நிருபம குண ஸதனா ஜய நடன மனோஹர நீல கண்ட ஸாயி நீரஜ தள நயனா
சக்தி
வருவாய் வருவாய் வருவாய் அம்மா திருவே உருவாய் வருவாய் அம்மா இருளை நீக்கிட வருவாய் அம்மா உந்தன் அருளைப் பொழிந்திடு தாயேஅம்மா கல்யாணி கருமாரி காமாகவி நீயே மஹா லக்ஷ்மி மாதங்கி மீனாகஷி நீயே வரலகஷமி வாராஹி விசாலாகவி நீயே உலகாளும் மாயே ப்ரசாந்தி தாயே அம்மா அம்மா அம்மா அம்மா

Page 14
முருகன்
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வடிவேல் அழகா கந்தா கடம்பா வேல் முருகா கதிர்காம வேலா வேல் முருகா சூர ஸம்ஹாரா வேல் முருகா சுப்ரமண்யனே வேல் முருகா ஸாயி முருகா ஸாயி முருகா ஸாயி முருகா ஸத்ய ஸாயி முருகா
350prbi
தசரத நந்தன ராமா தயா சாகரா JITLDT ரகு குல திலகா ராமா ஸ்த்ய ஸாயி ரீ பரந்தாமா (தசரத) அஹல்யோத்தாரக ராமா சபா விமோசன ராமா வழிர்டி புரீசா ராமா புட்டபர்த்தி புரி பரந்தாமா
நாரயண்
நாரயண் நாரயண் பஜமன நாராயண் ரீ ஹரி மாதவ நாராயணன் பஜமன நாராயண் முரளி வடியாம் மோஹன ஷயாம் முரளி மோகன விஷ்யாம் மேரே நாம் ஹே கண வடியாம் ஸாயி ஸத் குரு நாம்
கிருஷ்ணர்
கோவிந்த கோபால நீல மேக ஷயாம் நீல மேக வஷ்யாம் பஜோ ஸாயி கண ஷயாம் ஸாயி கண ஷயாம் மேரா ப்யாரே கண வடியாம் முரளி மனோஹர ஸாயி கண ஷயாம்
கோவிந்த ஹரி கோபால ஹரி கோவர்த்தன கிரிதாரி ஷயாம் சுந்தர மதன மோகன ப்ருந்தாவன சஞ்சாரி
LITLIII
வருவாய் நீயே சாயி நாதா பாடிடும் போது நீயே வருவாய் அன்னையும் நீயே தந்தையும் நீயே குருவாய் நீயே வருவாயே அன்பும் நீயே அருளும் நீயே எல்லாம அளித்திடும் பரம்பொருள் நீயே
8

ஸர்வமதம் ஸத்ய தர்ம சாந்தி ப்ரேம ஸ்வரூபா ப்ரசாந்தி நிலையா தேவா ராமா ஹோ க்குஷணா ஹோ ஸாயி ராம தேவா சிவ சக்தி ஸ்வரூபா பாபா ஹே தீன பாலான பாபா ஹே ப்ராசாந்தி நிலையா பாபா ஹே பூர்ணவதாரா பாபா அல்லா ஹோ மெளலா ஹோ ஸாயி ராம தேவா
零 令
28)IJIJIJI
ஸபரிகிரி வாசா பரம தயாளா ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (சபரிகிரி) ஹரிஹர சுதனே ரீ மணி கண்டா ஸ்வாமியே சரணம் சரணம் சரணம் பொன் ஐயப்பா (சபரிகிரி)
ஆஞ்சனேயர் ஆஞ்சனேய வீரா ஹனுமந்த சூரா வாயு குமாரா வானர வீரா (ஆஞ்சனேயா) பூரீ ராம் ஜய ராம் ஜய் ஜய் ராம் சீதா ராம் ஜெய ராதே ஷயாம் (4)
ஸ்வர் தர்ம பிரார்த்தனை
ஓம் தத்ஸத் ரீ நாராயண துா -
- புருஷோத்தம குரு துா ஸித்த புத்த துா ஸ்கந்த விநாயக
ஸவிதா பாவக துா (2) ப்ரஹற்ம மஸ்ட துா ய.வ சக்தி துா ருத்ர விஷ்ணு துா ராம க்ருஷ்ண துா
- ரஹீம் தாவோ துா வாஸ"தேவ கோ விஸ்வரூப துா
- சிதானந்த ஹரி துா அத்விதிய துா அகால நிர்பய
- ஆத்மலிங்க சிவ துா.(3)

Page 15
()
(1)
(2)
(3)
(4)
(5)
மங்கள ஆராத்த
ஓம் ஜெய் ஜகதீச ஹரே ஸ்வாமி ஸத்ய ஸாயி ஹரே பக்த ஜனா ஸம்ரகஷக (2) பர்த்தி மஹேஸ்வரா - ஓம் ஜெய் ஜகதீச ஹரே சசி வதனா பூரீ கரா ஸர்வ ப்ராண பதே ஸ்வாமி ஸர்வ ப்ராண பதே ஆஸ்ரித கல்பலதீகா (2) ஆபத் பாந்தவா - ஓம் ஜெய் ஜகதீச ஹரே மாதா பிதா குரு தய்வமு மரி அந்தயு நீவே ஸ்வாமி மரி அந்தயு நீவே நாத ப்ரஹற்ம ஜகன்னாதா (2) நாகேந்த்ரா ஸயனா ஓம் ஜெய் ஜகதீச ஹரே ஓம்கரா ரூபா ஒ ஜஸ்வி ஓம் ஸாயி மஹா தேவா ஸ்த்ய ஸாயி மஹா தேவா மங்கள ஆரத்தி அந்துகோ (2) மந்தர கிரிதாரி -
ஓம் ஜெய் ஜகதீச ஹரே (நாராயண நாராயண ஒம் ஸத்ய நாராயண நாராயண நாராயண ஓம் நாராயண நாராயண ஒம் ஸத்ய நாராயண நாராயண ஓம் (2) ஓம் ஜெய் ஸத்குரு தேவா) (3) ஓம் சாந்தி சாந்தி சாந்தி லோகா ஸமஸ்தா ஸ"கினோ பவந்து (3) பரமம் பவித்ரம் பாபா வீயூதிம் பரமம் விசித்ரம் லீலா வீயூதிம் பரமார்த்த இஷடார்த்த மோகஷ ப்ரதாதம் பாபா விபூதிம் இதமாஸ்ர யாமி
ஓம் ருரீ ஸாயி ராம்

விண்ணுலகு ஏகிய வித்தகர் சிவாவுக்கு மண்ணுலகு அளித்த மகத்துவம்
அண்மையில் எம்மை விட்டுப் பிரிந்த திரு. சேனாதிராஜா சிவராஜா அவர்கள் 1935ம் ஆண்டு வைகாசி மாதம் 28 ந் திகதி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நீராவியடியைச் சேர்ந்த பதிவாளர் நாயகம் திணைக்களத்தில், பதிவாளராக கடமையாற்றிய திரு. வெ. சேனாதிராஜா தம்பதிகளின் ஏக புத்திரனாகப் பிறந்தார். 1939ம் ஆண்டு விஜயதசமியில் நீராவியடித் தோப்பு மாணிக்க விநாயகர் ஆலயத்தில் அவருக்கு வித்தியாரம்பம் செய்து வைக்க ப்பட்டது. 1940ம் ஆண்டு தற்போது யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை என அழைக்கப்படும், யாழ் இந்துக் கல்லூரி “தமிழ்க் கலவன் பாடசாலையில்” தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். அங்கு பாலர் கீழ்ப் பிரிவில் இருந்து வகுப்பு மூன்று வரை பயின்றார்.
1944ம் ஆண்டு புகழ் பூத்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சேர்ந்து ஆங்கில மொழி மூலம் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பு வரை உயர் கல்வியைப் பெற்றார். அங்கு பெற்ற கல்விதான் அவரை உன்னத நிலைக்கு உயர்த்தியது எனலாம்.
யாழ் இந்துக் கல்லூரியில் பயிலும் போது பல பொறுப்பான பதவிகளை வகித்தார். மாணவர் தலைவனாக, இல்லத்தலைவராக, விஞ்ஞான மன்றத் தலைவராக, துடிப்பான சாரணராக செயற்பட்ட பொழுது தனது ஆளுமையை மேலும் விருத்தி செய்து கொண்டார். 1953 ம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்லூரி சஞ்சிகையான “இந்து இளைஞனின்” ஆசிரியராக விளங்கினார். அப்பணிதான் ஆக்க இலக்கியத் துறையில் அவரை ஈடுபட அடியெடுத்துக் கொடுத்தது. மேலும் ஆங்கில மன்றம், தமிழ் மன்றம் நடத்திய போட்டிகளில் பரிசுகள் பெற்றார். அதைத் தவிர களப் போட்டிகளில் திறமையாகச் செயற்பட்டு பல பரிசுகளைத் தட்டிக் கொண்டார்.

Page 16
1956ம் ஆண்டு பட்டதாரிக் கல்வி பெறுவதற்காக அவரது தந்தையார், சிவா அவர்களை சென்னைப் பல்கலைக்கழகத்தின் சென் யோசெப் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். அங்கும் பல பணிகள் அவருக்காகக் காத்துக் கிடந்தன. அங்கு மாணவனாக இருக்கும் பொழுது இலங்கை மாணவர் சங்கத் தலைவராகவும், பெளதிகவியல் மன்றச் செயலாளராகவும் திறன்படச் செயலாற் றினார். இதைத் தவிர விடுதிச் சஞ்சிகையான “New Hostel writes”இன் ஆசிரியராகக் கடமையாற்றினார். அத்துடன் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டிகளில் பங்கு பற்றி பரிசுகள் பெற்றார். இது தவிர ரென்னிஸ், கால்ப்பந்து, கிரிக்கற் ஆகியவற்றில் விடுதி அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி திறமையாக போட்டிகளில் பங்கு கொண்டார். 1960ம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியாக இலங்கை திரும்பினார்.
பல்கழைக்கழக படிப்பை முடித்து இலங்கை திரும்பிய அவர் அதே ஆண்டில், கோப்பாய்க் கிறிஸ்தவக் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராக நியமனம் பெற்றார். அங்கிருக்கும் போது அரச சேவையில் நியமனம் பெற்று, 1961ம் ஆண்டு கிழக்கிலங் கையில் உள்ள சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக பதவி ஏற்றார். அங்கு உப அதிபராகவும், விஞ்ஞானத்துறை தலைவராகவும், விளையாட்டுப் பொறுப்பாசிரி யராகவும், ஒழுக்காற்றுச் சபை தலைவராகவும் பல்வேறு பதவிகளை வகித்தார். அங்கு கடமையாற்றும் வேளையில் தான் மண வாழ்க்கையில் இணைந்தார். 29-08-1965 இல் செல்வி. விமலநாயகி வைத்தியலிங்கம் அவர்களைக் கரம் பிடித்தார். 1966ம் ஆண்டு வரை சம்மாந்துறை மத்திய மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி, 1967ம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரிக்கு இடம் மாற்றம் பெற்று சென்று இரு வருடங்கள் அங்கு கடமை புரிந்தார். இங்கு கடமை ஆற்றும் பொழுது பகுதித் தலைவராகவும், விஞ்ஞான மன்றம், இந்து மன்றம் ஆகியவற்றின் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். மேலும் கால்ப் பந்து, கிரிக்கட் ஆகியவற்றிற்கு பொறுப்பாசிரியராகவும், பயிற்றுனர் ஆகவும் விளங்கினார்.
22

1969ம் ஆண்டு தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம் சென்று யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியில் ஆசிரியப் பணி புரிந்தார். அங்கு கல்லூரி விஞ்ஞான மன்றப் பெறுப்பாசிரியராகவும், பெளதிகவியல்துறை தலைவர் ஆகவும், க.பொ.த (உயர்தர) மன்றப் பொறுப்பாசிரியர் ஆகவும் விளங்கினார். அத்துடன் கால்ப் பந்து, கிரிக்கட் அணிகளுக்கு பொறுப்பாசிரியராகவும் செயற்ப ட்டார். அவ்வேளை இரு வருட கடமை விடுமுறையில் பேராத னைப்பல்கலைக்கழகம் சென்று கல்வி டிப்ளோமா பட்டத்தை 1971ம் ஆண்டு பெற்றுக் கொண்டார். 1974ம் ஆண்டு வரை வைத்தீஸ்வராக் கல்லூரியில் கடமையாற்றிய பின்னர், 1975ம் ஆண்டிலிருந்து இரு வருடங்கள் யாழ் செங்குந்தா இந்துக் கல்லூரியில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அங்கு மாணவர் மன்றப் பொறுப்பாசிரியர், ஒழுங்காற்று ஆசிரியர், விளையாட்டுப் பொறுப்பாசிரியர், மாணவத் தலைவர், சபைப் பொறு ப்பாசிரியர் ஆகிய பதவிகளை வகித்தார்.
1977ம் ஆண்டு செங்குந்தா இந்துக் கல்லூரியில் இருந்து தான் கற்ற பாடசாலையான யாழ் இந்துக் கல்லூரிக்கு இடம் மாற்றம் பெற்றுச் சென்று, 18 வருடங்கள் தொடர்ந்து கடமையா ற்றினார். அங்கு கடமையாற்றும் பொழுது பாட இணைப்பாளர், பகுதித் தலைவர், உயர்தர மாணவ மன்றப் பொறுப்பாசிரியர், கட்புல செவிப்புல சாதனங்கள் பொறுப்பாசிரியர், க.பொ.த உயர்தர தொலைக்காட்சி பாடநெறி இணைப்பாளர் ஆகிய பதவிகள் அவரைத் தேடி வந்தன. அதே வேளை உப அதிபராக பதவியுயர்வு பெற்று, அதன் பின் பிரதி அதிபர் பதவியையும் அலங்கரித்தார்.
இது மட்டுமல்லாமல் கல்லூரிச் சஞ்சிகையின் ஆசிரிய ஆலோசகராக, அபிவிருத்திச் சங்க உப செயலாளராக, பாடசாலை யின் அபிவிருத்திச் சபைப் பொருளாளராக, ஆசிரியர் கழகத் தலைவராக, முகாமைத்துவக் குழு செயலாளராக, நூற்றாண்டு விழாச் சபைச் செயலாளராக, நூற்றாண்டு மலர் குழு அங்கத்த வராக பல்வேறுபட்ட பதவிகளை வகித்து சேவையாற்றினார். 1995 ஆண்டு வைகாசி மாதம் 28 ந் திகதி இளைப்பாறினார். இவரது சேவையை பாராட்டி யாழ் இந்து சமூகம் 10-06-1995

Page 17
அன்று பெருவிழா எடுத்து அவரைப் பாராட்டி கெளரவித்தது. நாட்டு நிலைமை காரணமாக இடம் பெயர்ந்து கொழும்பு சென்ற Gurroups sirtig, 1997 - 1998 lb g605(6356ss) Harrow College International இல் ஆசிரியராகவும், 1999 - 2002 ஆண்டுகளில் Kingston College International g6) affluJITE6 b, Lj60fusTsi) றினார்.
அமரர் சே. சிவராஜாவுக்கு இரு புதல்வர்களும், ஒரு புதல்வியும் உள்ளனர். அவரின் மூத்த புதல்வர் மகிந்தன் அவுஸ் ரேலியாவில் வசிக்கின்றார். இரண்டாவது புதல்வர் சேனாதிபதியும் மகள் சாந்தினி சச்சிதானந்தனும், மருமகன் பொன்னம்பலம் சச்சிதானந்தனும் இங்கிலாந்தில் வசிக்கின்றார்கள்.
வண்ணை சே. சிவராஜா பங்கு கொண்ட பணிகளை மூன்று பிரிவிற்குள் கொண்டு வரலாம். பங்கு கொண்ட கல்வி சார் பணிகள், ஆற்றிய சமூகப் பணிகள், ஆக்க இலக்கியப் பணிகள் ஆகியனவே அவையாகும்.
கல்விசார் பணிகளில் மேலே குறிப்பிடப்பட்டவையுடன், பின்வருவனவற்றையும் அவர் செய்திருந்தார். யாழ் தொழில்நுட்ப கல்லூரி அதிதி விரிவுரையாளர், G.E.LT and TA.C.E.P ஆங்கில பயிற்சிகளில் விரிவுரையாளர், வட மாகாண விஞ்ஞான - ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், பரீட்சை செயலாளர், மட்டக்களப்பு அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள் சங்கத்தின் செயலாளர், வட மாகாண ஆசிரியர் சகாயநிதிச் சங்கத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக உப தலைவர், செயலாளர், தனாதிகாரியாக பங்களிப்பு, வட மாகாண ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகக் குழு, பரீட்சைக்குழு என்பவற்றில் பங்களிப்பு, பட்டதாரி ஆசிரியர் நலன்புரிச் சங்கத் தலைவர், க.பொ.த (சாத), (உ.த) பெளதீகப்பாடப் பரீட்சகர், க.பொ.த(சாத) கணிதப் பாட பிரதம பரீட்சகர், பயிலுநர் ஆசிரியருக்கான பயிற்சியில் தொழல்சார் கல்வியில் விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழக கல்வித் துறை யின் “கலைஞானம்' சஞ்சிகையின் ஆசிரியர். ஆகிய பொறுப் புகளை ஏற்று திறம்பட செயலாற்றியிருந்தார்.

பல்வேறு கட்டங்களில் ஆற்றிய சமூகப் பணிகளில் குறிப்பிட த்தக்கவை-யாழ் சைவ பரிபாலன சபையின் உபதலைவர், வடமாநில இந்து இளைஞர் பேரவையின் உப தலைவர், நல்லூர் இந்து இளைஞர் பேரவையின் உப தலைவர், வண்ணை கோம்பயன் மணல் மாயான சபையின் செயலாளர், கடையிற் சுவாமிகள் நூற்றாண்டு விழாச் சபையின் உப தலைவர், வண்-வட கிழக்கு சனசமூக நிலையச் செயலாளர், யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவனாக பின்னர் போசகர், பழைய மாணவர் சங்க உப தலைவர், யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவ சங்க நிர்வாக சபையில், பல்லாண்டு பணிகள் பின் உப தலைவர் போன்றவை யாகும்.
ஆக்க இலக்கியத்துறையே வண்ணை சிவாவை வெளியுல கிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. மாணவனாக இருந்த காலம்தொட்டே, வண்ணை சே. சிவராஜா என்ற பெயரில் சிறு கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதினார். இவரின் பிற புனைபெயர்கள் சிவகவி, முக்கண்ணன், ஊடாடி, வண்ணை வராஜன் என்பனவாகும். ஆக்க இலக்கியத்தில் சிறுகதைத்துறை யில், ஈழத்து இலக்கிய நெஞ்சங்களில் இடம் பிடித்தார். பல சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றி பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றார்.
1999ம் ஆண்டு, அவர் வெளியிட்ட “சிவாவின் சிறுகதைகள்” நூலுக்கு சிறுகதை இலக்கியத்திற்கான, அரச சாகித்திய விருதும், அதே நூலுக்கு வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டல விருதை யும் பெற்றார். இவர் வெளியிட்ட முதல் நூலுக்கு இவ்விரு பரிசுகளும் கிடைத்தமை, இவரது ஆக்க இலக்கிய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இப் பணிக்கு அவரது துணைவியார் விமலநாயகியின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.
தனது ஆளுமையினால், அறிவினால், செயற்றிறனினால், பார்புகழும் பெயரீட்டிய வண்ணை சே. சிவராஜா 15-04-2002 இல் எம்மை விட்டுப் பிரிந்தார். அவரது இழப்பு அவரது துணைவியாரு க்கும், பிள்ளைகளுக்கும், மருமகனுக்கும் மட்டுமான பேரிழப்பல்ல, எமது தமிழ்ச் சமூகத்திற்குமான பேரிழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
க. சிவகுருநாதன் (கசின்) (எழுத்தாளர்)

Page 18

அமரர் திரு. சேனாதிராஜா சிவராஜா அவர்களின் வாழ்க்கைப் பாதையில் சில நிகழ்வுகள்
21.09.2000 அன்று அரச சாகித்தியூ விழாவில், அமரர். வணனை , 'ನ್ತಗ್ದಣ್ಣ! அமைச்சர்களிடமிருந்து, விருதும், சான்றிதழும் பெறும் காட்சி.
E. J., '95 (3.F.,
நலன் பாராட்டு விழாவில் நல்லை ஆதீன முதல்வருடனும், மற்றும் பலருடனு மேடையில் விற்றிருக்கும் JIII F

Page 19

జె அமரர் சேனாதிராஜா சிவராஜா, தமது சேவை நலன் பாராட்டு விழாவில் தான் பெற்ற விருதுடன் காட்சியளிக்கின்றார்.
06.02.2002 அன்று 'சிவாவின் சிறுகதைகள்' நூல் வெளியிட்', விழாவில் அமரர் வண்ணை சே. சிவராஜா முதற் பிரதியை தா' துணைவியாருக்கு வழங்கும் காட்சி,

Page 20

"சிவாவின் சிறுகதைகள்' நூல் வெளியீட்டு விழாவில் ஆமரர். வண்ணை சே.சிவராஜா தமது நற்புரையை வழங்கும் காட்சி.
-------------
H
அமரர் சேனாதிராஜா இளைப்பாறும் பொழுது அவரின் மாணவப்
செல்வங்களின்ால்’ நிகழ்த்தப்பட்ட பிரியாவிடை வைபவத்தின்
போது ஒரு காட்சி.

Page 21
“வானுறைந்தனையோ!”
இவ்வுலகுக்குள்ள பெருமையை வள்ளுவர் சொல்லிய வாறு கண்டு தேறுதல் இயல்பாகி விட்டது. இருந்தும் எழுமையும் தொடரும் உழுவல் அன்பால் கட்டியவர்களை மறத்தல் எப்படி முடியும்?
மாணவனாய், நிலைதெரிந்து உதவும் நண்பனாய், உடன் ஆசிரியனாய், ஆலோசனை கேட்டும் தந்தும் நின்ற பண்பாளனாய் ஏறத்தாள 45 வருடங்கள் உறவாடிய “சிவா” வானுறையும் தெய்வமாகி விட்டார்.
மிக மென்மையான உள்ளம் படைத்த இவர் வன்மையே வழக்காகி விட்ட இவ்வுலகம் வேண்டாம் என நினைத் தாரோ?
நெறியல்லன கண்டு துவண்டு விடும் ‘சிவா’ தன் கொள்கைப்பிடிப்பில் என்றும் தளர்ந்ததில்லை.
இவர் ஆயிரத்தில் ஒருவர்.
அன்ப! நீ அரண் பாதம் அயரா இன்பம் பெறுவாய். இது உறுதி.
நின் பிரிவால் வாடும் நின் துணைக்கும் புத்திரச் செல்வங்கட்கும், மருகனுக்கும் ஆறுதல் தர அவன்தாள் போற்றி அமையும்.
அன்பன், க.சிவராமலிங்கம், கந்தர்மடம்.

யாழ் இந்துவின் ஆளுமைமிக்க மைந்தன்
யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும், அக்கல்லூரியில் நீண்ட காலமாக ஆசிரியராகவும், உப அதிபராகவும், பிரதி அதிபராகவும் பணி புரிந்த திரு. சேனாதிராஜா சிவராஜா அவர்கள் காலமானது எங்களுக்கு மிகவும் கவலை தரும் செய்தியாகவுள்ளது. திரு சே. சிவராஜா அவர்கள் வண்ணை சே. சிவராஜா என்ற பெயரில் பல சிறுகதைகள் எழுதி பிரசித்தம் பெற்றவராக விளங்கினார்.
திரு சே. சிவராஜா யாழ் இந்துக்கல்லூரியில் எனக்கு சிரேஷ்ட மாணவனாக 1950 களின் நடுப்பகுதியில் கல்வி பயின்ற காலம் தொட்டு, அவர் மரணமாகும் வரை அவருடன் தொடர்பு கொண்டவனாக இருந்ததால் அவரது செயற்பாடுகள் யாவையும் நன்கறிவேன். அவர் ஒரு சிறந்த மாணவனாகவும், பின்னர் நல்லாசிரியனாகவும், மாணவர்களை சிறப்பாக வழிகாட்டும் பிரதி அதிபராகவும் திகழ்ந்தார். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் செயற்பாட்டில் தன்னை முழுமையாக இணைத்து வாழ்ந்தார். யாழ் இந்துக் கல்லூரியின், பழைய மாணவ சங்க செயற்பாட்டில் பலமுறை பங்கு கொண்டு, நிர்வாகசபை உறுப்பினராக, உபதலைவர்களில் ஒருவராக இருந்து கல்லூரி யின் வளர்ச்சிப் பணிகளில் சிறப்பாகப் பணிபுரிந்தவர். பழைய மாணவரின் நலம் பேணுவதிலும், அவர்களிடையே நட்பு சகோ தரத்துவம் வளர்ப்பதில் பெரும் பங்கு கொண்டவர்.
யாழ் இந்துக் கல்லூரி சேவைகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொழும்புக்குச் சென்று, அங்கு இரு சர்வதேச பாடசாலைகளில் ஆசிரியராக பணியாற்றி நன்மதிப்பை பெற்றிருந்தார். கொழும் பில் வாழ்ந்தாலும், அவரது எண்ணமும், உணர்வும் யாழ்ப்பாணரு த்தை பற்றியதாகவே இருந்தது.
.

Page 22
திரு சே. சிவராஜா ஒரு சிறந்த குடும்பத் தலைவனாகத் திகழ்ந்தார். மனைவி, பிள்ளைகளை நல்முறையில் வளர்த்து வழிகாட்டி சிறப்பான வாழ்வை கொடுத்துள்ளார். உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களின் நன்மை, தீமைகளில் முழுமையாக
பங்கு கொள்ளும் பண்பாளர். அத்துடன் அவர்களின் மேம்
பாட்டுக்கு நல்ல உதவிகள் செய்பவர். பலரது நன்மதிப்பையும் பெற்றவர். பல்வேறு சமூக சேவை நிறுவனங்களில் பதவிகள் வகித்து சிறந்த பல சேவைகளை பல காலமாக செய்து வந்தவர். அவரிடமிருந்து, இன்னும் பல சேவைகளை, செயற் பாடுகளை எமது சமூகம் எதிர்பார்த்திருந்த வேளையில், இறை வன், தன்னிடம் அவரை அழைத்துக் கொண்டான். அவரது இழப்பால் ஏற்பட்டுள்ள வெற்றிடம், நிரப்பப்பட முடியாத தொன்றாகும்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக.
ஒப்பரவாளர்,பேராசிரியர், பொ. பாலசுந்தரம்பிள்ளை, துணை வேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

வண்ணைக்குச் சிறப்பு அளித்த வண்ணைச் சிவா
வண்ணை சிவராஜா மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டதும் என்னால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் நான்கு தினங்களுக்கு முன்புதான் அவரை நல்ல ஆரோக்கிய நிலையில் கண்டேன். வெள்ளவத்தை உறுத்திரா மாவத்தையில் உள்ள 10ம் இலக்க வீட்டு வாயிலில் இவரும் இவரது துணைவியாரும் கால் வைத்த போது நான் அவர்களை அழைத் தேன். மெல்ல முறுவல் செய்து விட்டு உள்ளே சென்றார். உயிருடன் சந்தித்த கடைசி நிகழ்வு இதுவாகவே இருக்கு மென்று அப்போது நான் நினைக்கவில்லை. “எல்லாம் எப்பவோ முடிந்த காரியம், நாம் அறியோம்” இவ்வாறு தான் கொழும்புத் துறை யோகசுவாமிகள் கூறுவதுண்டு. இதற்கமையவே சிவாவின் வாழ்க்கையும் என்றோ தீர்மானிக்கப்பட்டுவிட்டது. நாம் இதனை அறிவோமா? நாளை நடைபெறுவதனை நாம் முன்னதாகவே அறிவோமானால் எத்தனை பிரச்சினைகள் தோன்றாமல் போய்விடும்.
சிறு பராயத்தில் இருந்தே இவரை நான் அறிவேன். என்னிலும் மூன்றரை வயது இளையவர் இவர். சின்ன வயதில் இவர் குழு குழு என்று சர்க்கரை பூசணிக்காய் போல் இருப்பார். இவரது நண்பர்கள் தம்பு மாஸ்டரின் மகன் இந்திரன், பாலி என்று அழைக்கப்படும் துரைராஜா நீராவியடி ஒழுங்கையைச் சேர்ந்த விஸ்வலிங்கம் வைத்தியரின் மகன் றி சக்திவேல் “போன்ற சில பெடியன்கள்”அவரது தோற்றம் காரணமாக இவரை தொம்ஸன் சிவராஜா என்று செல்லமாக அழைப்பர். வேறு சில பெடியளும் அவ்விடத்தில் வாழ்ந்தனர். இவர்களு டைய குண நடை இந்த சிவராஜா கூட்டத்துக்கு பிடிப்பதில்லை. விலகியே இருந்தார்கள்.
அக்காலத்திலேயே சிவராஜாவுக்கு எழுத்தில் ஈடுபாடு இருந்தது. எக்சசைஸ் கொப்பியில் பேனையால் எழுதி சிறு பத்திரிகை வெளியிட்டதோடு அயல் வீடுகளுக்கு அ7

Page 23
எடுத்துக் கொண்டு போய் வாசித்து காட்டுவார். அல்லது வாசிக்கக் கொடுப்பார். அவர்களுடைய கருத்தை அறிய முயல் வார். இந்த ஆர்வமே பின்னர் யாழ்ப்பாண எழுத்தாளர் அமைப்பு டன் இவர் இணைந்து செயற்பட வழிவகுத்தது.
இப்பருவத்தில் அடுத்த கட்டமாக பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினார். வண்ணை சே. சிவராஜா என்று முத்திரை பதிப்பிக்கும் அளவுக்கு இவர் வளர்ச்சி கண்டதற்கு, சிறுவயதிலிருந்தே இவர் பெற்றிருந்த இலக்கியதாகமும் ஆர்வமுமே அடித்தளமாக இருந்தது. ஆசிரியராகி பின் பாட சாலை அதிபராகியபின்னரும் இந்த இலக்கிய வெறி இவரை விட்டு நீங்கவில்லை.
சிவா நல்ல குடும்பத்தில் உதித்தவர். தந்தையார் சேனாதி ராஜாவும் தாயார் கமலாம்பிகையும் நல்ல முருகன் அடியார்கள். வெள்ளிக்கிழமைகளில் இருவரும் எங்கள் வீட்டு வழியாகவே ஆலயம் செல்வதுண்டு. திருமதி கமலாம்பிகை எனது அம்மா வின் சினேகிதி. அம்மாவோடு நான் சிறுவனாக இவர்களின் வீட்டிற்கு சென்றிருக்கின்றேன். சிவாவுக்கு அண்ணன் ஒருவர் இருந்தவர். வெள்ளை வேஷ்டி கட்டி தலையில் ஒரு துணிக் குல்லாய்யுடன் இவர் இருக்கும் காட்சி என் மனதில் நிழல் படம் போல் தோன்றுகிறது. இளவயதினிலேயே இவர் இறை வனடி சேர்ந்துவிட்டார். கமலாம்பிகை விருந்தோம்பும் பண்பு மிக்கவர். நன்றாக உபசரிப்பார். சிறுவனாக செல்லும் எனக்கு ஏதாவது தருவார். எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். 16ம் வயதில் நான் கொழும்புக்கு வந்து விட்டேன். அதன் பின் சிவாவோடு நெருங்கி பழகும் வாய்ப்பு அதிகம் கிடைக்க வில்லை. சிவா பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். கல்வித் துறையில் இவர் கண்ட முன்னேற்றம், எம்மவர் என்ற வகையில் மகிழ்ச்சிப் பிரவாகத்தை ஏற்படுத்திற்று. அதுவும் எங்கள் இந்துக் கல்லூரியிலேயே பிரதி அதிபராகிய செய்தி கேட்டு இவரை நேரில் பாராட்டினேன்.

சிவா சிறந்த குணங்களைக் கொண்டவர். அருகில் ஒரு பெண்கள் கல்லூரி இருந்தது. சில பெடியள் கேலி செய்து அந்த பெண்களை அசெகரியப்படுத்துவதுண்டு. சிவா இந்தக் கூட்டத்தை வெறுத்தார். அவர்களோடு பேசுவதையே தவிர்த்தார். இதனால் சிலருக்கு இவர் மீது ஆத்திரம். சிவா இவர்களை பொருட்படுத்தாது, இந்துக்கல்லூரி மாணவர் என்ற பிரக்னையோடு வாழ்ந்து வந்தார். முதியோர்கள் இவரை போற்றினர், பாராட்டினர்.
தான் ஆசிரியராகப் பணியாற்றிய கல்லூரிகளிலும் மாணவர் ஒழுக்கத்தில் கவனம் செலுத்தினார். இதனால் பெற்றோர்களின் நன்மதிப்பை பெற்றார். மாணவர்கள் வருங் கால பிரஜைகள் எனவே தலைமைத்துவப் பயிற்சி அளிப்பது ஆசிரியரின் கடமை, என உணர்ந்து மாணவரை நல்வழியே ஆற்றுப்படுத்தினார். மாணவர்கள் இவரது சேவையை இன்று தான் உணர்ந்து பாராட்டுகின்றார்கள்.
யாழ்ப்பாண மண்ணின் சிறப்பை எடுத்துக் கூறுவதே எழுத்தாளர்களின் குறிக்கோளாக இருக்கவேண்டும் என்ற கருத்து இவருக்குண்டு. வட மாநில மக்களின் வாழ்க்கையை சித்திரிக்கும் சிருஷ்டி இலக்கியங்களையே இவர் படைத்தார். இதன் விளைவாக யாழ்ப்பாண எழுத்தாளர் வரிசையில் இவர் முன்னிடத்தில் வைக்கப்பட்டார்.
இவரது வெற்றிக்கெல்லாம் அச்சாணி போல இருந்தவர் திருமதி. விமலநாயகி. இவர் வளம்மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். மர வர்த்தகம் செய்த “மரக்காலை” வைத்திலிங்கம் என்றால் அறியாதவர் இல்லை எனலாம். துணைவியாரின் தமையனார் பிரபல சட்டத்தரணி கே.வி மகேந்திரன், அறிவும் ஆற்றலும் மிக்கவர் இவர். எடுத்த விஷயத்தை விட்டுக் கொடுக்காது சாதிக்கும் திறமை இவரிடம் இருந்தது. தன் சகோதரி நல்ல வாழ்வு காணவேண்டும் என்பதே இவரது கனவாக இருந்தது.

Page 24
இசசூழல்தான் சிவா இலக்கிய பணிகளில் மூழ்கி இருக்க வசதியளித்தது. சிவாவின் வாழ்க்கைக் குறிப்பை அவதானித்தால் தன் வாழ்க்கையில் எவ்வளவு பகுதியை சமூகத்திற்காக அர்ப் பணித்தார் என்பது புலனாகும். சிவாவின் புத்திரர் மகிந்தனும், சேனாதிபதியும், மகள் சாந்தினியும், மருமகன் சச்சிதானந்தனும் சிவா என்ன இலட்சியத்திற்காக வாழ்ந்தாரோ அவ்வழியை பின்பற்றுவார்கள் என்பது எனது நம்பிக்கை. இவரது ஏனைய ஆக்கங்களை தேடி பிடித்து இவற்றை நூலாக உருவாக்குவதே இவர்கள் மேல் இருக்கும் பெரும் பொறுப்பு பத்திரிகை உலகம் உதவியளிக்க என்றும் தயாராகவே இருக்கும்.
சிவாவுடைய நாமம் என்றும் நிலைத்திருக்கும்.
கலாசூரி இ. சிவகுருநாதன்
முன்னாள் ஆசிரியர் தினகரன், சட்டத்தரணி.

சிவா என்ற படைப்பாளி
வண்ணை சே. சிவராஜா என்ற படைப்பாளியின் இழப்பு ஈழத்து இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். 1960 களில் சிறுகதைத் துறைக்குள் காலடி எடுத்து வைத்த வண்ணை சே.சிவராஜா ஐம்பது சிறுகதைகள் வரையில் எழுதியிருக்கின்ற போதிலும், சிறுகதை வரலாற்றில் எல்லாக் கால கட்டத்திலும் பின் தள்ளப்படாது எழுதிய ஒருவர். 1960 களிலிருந்து 2001 வரையிலான காலகட்டத்தில் அவரின் படைப்புக்கள் ஈழத்தமிழ்ச் சிறுகதைப் பூங்காவை அலங்க ரித்து வந்துள்ளன.
யாழ் இலக்கிய வட்டத்தில் ஆரம்பகால உறுப்பினரான சிவராஜாவின் நீண்ட அனுபவம் தந்த முதிர்ச்சியும்,சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டக்கல்வியும், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயம், மட்டக்களப்பு மெதடிஸ்ற் மத்திய கல்லூரி, வைத்தீஸ்வராக் கல்லூரி, செங்குத்தா இந்துக்கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி முதலான களங்களில் கற்பித்தல் மூலம் பெற்ற அனுபவங் களும் அவரது சிறுகதைப்படைப்பாற்றலிற்குப் பின்னணியில் இருந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தன் ஆரம்பக் கல்வியையும் ஆங்கிலக் கல்வியையும் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம் அவரைப் படைப்பிலக்கியத்தில் ஈடுபடத் தூண்டியிருக் கின்றதென்ற உண்மை மறுப்பதற்கில்லை.
பேராசிரியர் கைலாசபதி, ஈழத்துறைவன், கவிஞர் முருகையன், கவிஞர் சோ. பத்மநாதன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், அங்கையன் கைலாசநாதன், சுடர் மகேந்திரன், து.வைத்திலிங்கம், முனியப்பதாசன், சுதாராஜ், சாந்தன், கணபதி கணேசன் முதலான படைப்பாளிகள் யாழ் இந்துவின் மக்களே. இவ் வரிசையில் முருகையனுக்கு அடுத்தவிடம் கால ஒழுங்கில் வண்ணை சே. சிவராஜா விற்குரியது.

Page 25
யாழ்ப்பாணச் சமூகத்தின் பல்வேறு பக்கங்களையும் தன் சிறுகதைகளில் சித்திரிக்க அவர் இயல்பாகவே முயன்றி ருக்கிறார். சிவாவின் சிறு கதைகளின் கருத்தியல் நிலை மிகத் தெளிவானது. சமூகஞ் சார்ந்த சிந்தனைகளில் சமூக வாழ்க்கையின் இயல்பான ஓட்டத்தில் ஏற்படும் சிக்கல்கள், மானிட அகப்புற முரண்பாடுகள், மெல்லிய உணர்வுகள் என்பன சார்ந்து எழும் மன உளைச்சல்கள் இவரது சிறுகதை களில் மேலோங்கி நிற்கின்றன. என்றும் எங்கும் பொதுமை யான மனித உணர்வுகளுக்கு வண்ணை சே. சிவராஜா இலக்கிய வடிவந்தந்துள்ளார்.
வண்ணை சே. சிவராஜாவின் படைப்பிலக்கியத் துணிச்சல் தனித்துவமானது. கல்வியுலகின் பல்வேறு அவலங் களையும் அவர் மிக்க துணிச்சலுடன் தன் படைப்புக்களில் எடுத்துக் காட்டினார். முப்பத்தைந்து வருட ஆசிரிய அனுபவ மும், உப அதிபராகவும் பிரதி அதிபராகவும் கடமையாற்றிப் பெற்ற நிர்வாக அனுபவமும் கல்வி உலகின் சீர் கேடுகளை எடுத்துக் கூற அவருக்குதவியுள்ளன. அவருடைய பல சிறுகதைகளில் முஸ்லீம் மக்களது உறவுகள் அதிகம் சித்தி ரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளி யேற்றப்பட்ட போது மிக்க துணிச்சலாகத் தன் சிறுகதைகளில் அந்தப் பரிதாப நிகழ்வை அவர் கண்டித்துள்ளார். இவ்வாறு தன் சிறுகதைகளில் இன மத ஐக்கியத்தினை வலியுறுத்தும் பண்பும், மானிட நேயத்தினை மேம்படுத்தும் அவாவும், இந்தப்பிரதேசம் தனியொருவனுக்குச் சொந்தமல்ல அனை வருக்கும் சொந்தமானதென்ற கருத்தும் தொக்கி நிற்கின்ற சிறப்பினைக் கூறாது விட முடியாது. யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற நேர்ந்த துர்ப்பாக்கிய அவலத்தினை மிக மனதில் தைக்கும் விதமாக “இன்ஷா அல்லாஷ’ என்ற சிறு கதையில் படம் பிடித்துள்ளார். அக்கதை வெளி வந்த கால கட்டத்தினை மனதிற் கொள்ளும் போது இந்தப் படைப்பாளியின் துணிச்சல் வியப்பினைத் தருகின்றது.

வண்ணை சே. சிவராஜா பழகுவதற்கு மிக இனிய நண்பர். என் அயலவராகவும் ஒரே இலக்கிய வட்டத்தில் அங்கத்தவராகவும் இருந்தமையால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிறர் மனம் நோகாமல் பேசும் பண்பினர். அதிகம் பேசாமலிருந்து விட்டு கருத் துக்களை வெளியிடும் போது அவை பொருள் பதிந்த னவாயும் அர்த்தம் செறிந்தனவாயும் இருக்கும். அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ஈழத்து இலக்கிய உலகிற்கும் பெருமிழப்பாகும்.
கலாநிதி. க. குணராசா (செங்கை ஆழியான்)

Page 26
ஒப்பற்ற பண்பாளன்
வண்ணை சிவா எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியை யாழ்ப்பாணத்தில் பத்திரிகையில் பார்த்த போது நம்ப முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெள்ளவத்தையில் சந்தித்துப் பேசியதை எண்ணிப்பார்த்தேன். யாழ்ப்பாண மண்ணில் யாழ் இந்துக்கல்லூரி சமூகத்தில் தனக்கேயுரிய கம்பீரத்துடன் நடமாடியதை ஒரு கணம் யோசித்தேன். ஆனால் இவ்வுலகம் எமக்கு சொந்தமில்லை என்பதை மனங் கொண்டு என்னுள் சம்ாதான்ம் கொண்டேன். எனினும் அவர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து எம் சமூகத்திற்கு உழைத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் பிரிந்தது வேதனையே.
教
பிரதி அதிபர் சிவராஜா அவர்களுடனான நட்பு மூன்று தசாப்தத்தை எட்டி விட்டது. சிறந்த இலக்கியவாதியாக நல்லாசிரியனாக - ஒழுக்க சீலம் கொண்ட நிர்வாகியாக - நல்ல குடும்பத் தலைவனாக வாழ்ந்துள்ளார். அவரது சிறந்த எழுத்தாற்றலுக்கு பிராந்திய, மாவட்ட, தேசிய ரீதியில் பெற்ற விருதுகள் சான்று பகரும். பல சாகித்திய விருதுகள் அவரது ஆக்கங்களுக்கு பரிசில்களாக கிடைத்தன. இவை ஈழத்தில் முதன்மை எழுத்தாளன் என்ற நிலைக்கு உயர்த்தியது. அதே போலவே ஆசிரியத் துவத்துக்கு மகுடம் வைத்தவர். மாணவர்களை தன்பால் கவர்ந்து அவர்களுக்கான கல்வி
யைப் புகட்டியவர் என்பதை நாம் அறிவோம். யாழ் இந்துவில்,
முன்னணி ஆசிரியராக தன்னை உயர்த்தியவர். அத்துடன் யாழ் இந்துவின் பிரதி அதிபராக பதவியேற்றதிலிருந்து அவரது நிர்வாகத் திறமையைக் காணமுடிந்தது. அவரது வயது அவரை அதிபர் நிலைக்கு கொண்டுவரத் தடையானது என்பது தான் உண்மை நிலை. பிரதி அதிபராக கடமையா ற்றிய காலத்தில் பல்வேறு நிர்வாக இடர்பாடுகள் நெருங்கிய போதிலும் மனந்தளராது யாழ் இந்துவுக்கு பெருமை

வாழ்வில் பல சாதனைகளை ஏற்படுத்தியுள்ளன என்ப தை நாம் காணமுடிந்தது.
அமரர் சிவாவின் நற்குணம், சமூக சமய சேவை களை மனங் கொண்டு யாழ் இந்து சமூகம் அவருக்கு மணிவிழா ஒன்றினை நடாத்தி பெருமை கொண்டது. சிவாவின் நற்பண்புகளை உள்வாங்கிய சனசமுத்திரம் யாழ் இந்து குமாரசுவாமி மண்டபத்தை நிறைத்திருந்த காட்சி இன்றும் என் மனதுள் வந்து செல்கின்றன.
பல்வேறு பரிமாணங்களுக்கு உரித்தான அமரர் அவர்களின் இறுதிக்காலத்தில், அமைதியாக வாழ்ந்து இலக்கியம் படைத்துக் கொண்டு வந்த வேளை,எம்மை எல்லாம் விட்டுப் பிரிந்தமையிட்டு வருந்துவதைத் தவிர வேறெதுவும் செய்யமுடியாது. அவர் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவரது குடும்பக் கடமைகளை செவ்வனே நிறைவு செய்துள்ளார் என்பதையிட்டு ஆறுதல் கொள் ளலாம். அவரது குடும்பத்தினர் குறிப்பாக பிள்ளைகள் சீரும் சிறப்புமாக வாழ்கின்றனர்.
குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் குடும்ப த்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல யாழ் இந்து ஞான வைரவரை இறைஞ் சுகின்றேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
பேராசிரியர் கா. குகபாலன் புவியியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.

Page 27
இலக்கிய, கல்வி உலகுக்கு பேரிழப்பு
இலக்கியத்துறையிலும் சமூகப்பணியிலும் கல்வித் துறை யிலும் நீண்ட காலம் பணியாற்றி அண்மையில் காலஞ் சென்ற திரு. சேனாதிராஜா சிவராஜா அவர்களின் மறைவு இலக்கிய ஆர்வலர்கள், அவர்தம் மாணவர்கள் மற்றும் அவரை நன்கறிந்த அன்பர்கள் மத்தியில் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உளமாரப்பிரார்த்திக்கின்றோம்.
*தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவர் வாக்குக்கமைய அமைதியாகத் தான் பிறந்த மண்ணின் இலக் கிய, கல்வி மற்றும் சமூக வாழ்வின் மேம்பாட்டுக்காக உயர்ந்த பங்களிப்பைச் செய்து இறைவனடி சேர்ந்தவர் வண்ணை சே. சிவராஜா என யாவரும் அறிந்த சே. சிவராஜா அவர்கள்.
சிறுகதை இலக்கியத்துறையில் கூடிய ஈடுபாடு கொண்ட வண்ணை சே.சிவராஜா அவர்கள் பல சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்ற வர். 1999 ஆம் ஆண்டுக்கான சிறுகதை இலக்கியத்திற்கான மத்திய அரசாங்க சாகித்திய விருதையும் வடக்கு கிழக்கு மாகாண சபையின் சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றுப் பாராட்டப்பட்டவர் வண்ணை சே.சிவராஜா அவர்கள்.
அன்னாரின் சிறுகதை நூலொன்றின் வெளியீட்டு
விழாவில் யான் கலந்து கொண்ட போது அன்னாரின் இலக்கியப் பங்களிப்பைப் பாராட்ட ஏராளமான அன்பர்கள்

திரண்டு வந்திருந்த காட்சி எம் கண் முன் நிற்கிறது. அன்றைய நிகழ்ச்சி, அவரைப் பாராட்டி கெளரவிக்க விரும்பும் அன்பர்கள் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்பதை மட்டுமன்றி அவருடைய பண்பான நடத்தை, அன்பான மனித நேயத் தொடர்பு என்பவற்றுக்குச் சாட்சியம் கூறுவதாயும் அமைந்தது. மிகச் சில விழாக்களிலேயே அவ்வாறான பெருந்திரளான கூட்டத்தை நான் கண்டிருக்கிறேன்.
மாணவராக இருந்த காலம் தொட்டு இறுதி வரை ஒதுங்கி வாழாது ஏராளமான மன்றங்களிலும் சமூக சங்கங் களிலும் தலைவராகவும் இன்னோரன்ன பதவிகளிலும் தம்மை இணைத்துக் கொண்டு பல்வகைப்பட்ட சமூக மேம்பாட்டு க்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட வண்ணை சே.சிவராஜா அவர்கள் தமது குடும்பத்தாருக்கு வற்றாத பெருமை யையும் கெளரவத்தையும் தேடித் தந்துள்ளார். அவரது மறைவால் துயரமுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது கவலை தோய்ந்த அனுதாபங்களை மீண்டும் சமர்ப்பிக்கின்றோம்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கொழும்பு பல்கலைக்கழகம், கொழும்பு.

Page 28
கல்வித் தொண்டாற்றிய கர்மவீரன்
“தோன்றிற் புகழொடு தோன்றுக அ.திலார் தோன்றலிற் தோன்றாமை நன்று”
என்ற வள்ளுவப் பெருந்தகையின் புகழ் பூத்த வாக் கியத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்த சிலருள் வண்ணை சே. சிவராஜாவும் ஒருவர். தமது வாழ்நாள் முழுவதும், ஓய்வு பெற்ற பின்னரும், கல்வியை வளர்ப்பதிலும் வழங்கு வதிலும் திருப்தியும் வெற்றியும் கண்டவர் அவர்.
ஈழநாட்டில் வடக்கிலும் கிழக்கிலும் தமது ஆசிரியப் பணியில் ஈடுபட்ட அமரர் சிவராஜா விஞ்ஞானத்தைப் போதிப் பதில் குறிப்பாக உயர் வகுப்புக்களில் பெளதீக விஞ்ஞானத் தைப் போதிப்பதில் வல்லவராய் விளங்கியவர். பயிற்றும் பணியோடு தொடர்புடைய பரீட்சைச் சபைகளிலும் அலகுகளி லும் அவரது சேவையும் பங்களிப்பும் பலராலும் பாராட்டப் பட்டவை.
ஓர் ஆசிரியனுடைய வேலை வகுப்பறைக்குள் மட்டும் அடங்குவதல்ல. வகுப்பறைக்குள் மாணவருடைய அறிவை வளர்க்க முனையும் அவன் வகுப்புக்கு உள்ளேயும் வெளியே யும் அவர்களுடைய ஆளுமையை வளர்ப்பதில் பங்காற்ற வேண்டும். அப்போது தான் கல்விப்பணி முழுமை பெறு கின்றது. திரு சே. சிவராஜாவின் ஆசிரிய சேவையில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை உயர்த்துவதிலும், சாரணியத்துக்கூடாக மக்கள் சேவையில் அர்ப்பணிக்கச் செய்வதிலும் செலவிட்ட காலம் கணிசமானது.
பாடசாலை மட்டத்தில் அவருடைய பங்களிப்பு நிர்வா கத் துறையிலும் மிளிர்ந்தமையைக் காணலாம். தான் பணி புரிந்த பாடசாலைகளில் பகுதித்தலைவர், உப அதிபர்,பிரதி அதிபர் என்ற பதவிகளை வகித்ததன் மூலம் அந்தந்தப்

பாடசாலை அதிபர்களுக்கு உறுதுணையாக விளங்கியவர். தன்னலமறுப்பினை எடுத்துக் காட்டாகக் கொண்டு நிறுவனத் தின் வளர்ச்சிக்கு வித்திட்டு அதன் மேன்மையைப் பலப் படுத்தியவர் சிவராஜா.
மாணவ பருவத்திலிருந்தே படைப்பு முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பெருமைக்குரியவர் அவர். சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் அவருடைய கைவண்ணத்தைக் காணலாம். ‘சிவகவி’, ‘முக்கண்ணன்', ‘ஊடாடி’ என்ற புனைபெயர்களிலும் அவருடைய படைப் புக்கள் வெளியாகின. சிறுகதை இலக்கியத்துக்கான அரச சாகித்திய விருதினையும், வடக்கு கிழக்கு மாகாண சபை யின் சாகித்திய மண்டலப் பரிசையும் 1999 ஆம் ஆண்டில் பெற்றமை அத்துறையில் அவராற்றிய பணிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியில் இணைந்திருந்த காலத்தில் கல்வியியற் கழகத்தின் இதழாசி ரியராய் “கலை ஞானம்’ இதழைப் பதிப்பித்த பங்கு அவரு 6ծ»ւս 15l.
இவை தவிர்ந்த சமூக சேவை, தொழிற்சங்கப்பணி என்பனவும் திரு.சே. சிவராஜாவின் பன்முகத் தோற்றத்தைப் பறைசாற்றின. இத்தகைய ஆளுமை படைத்த ஒருவர் சேவை யிலிருந்து ஓய்வு பெற்றபின், அவருடைய உழைப்பின் பயனை அனுபவிக்க நாம் கொடுத்து வைக்கவில்லை. அன்னாரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
பேராசிரியர் வ. ஆறுமுகம் வாழ்நாட் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.

Page 29
நீத்தார் நயப்பு
வண்ணை சே. சிவராஜா எப்பொழுதுமே இனிய முகத் துடன் காட்சி தருபவர். சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரி யான திரு. சே. சிவராஜா பல கல்லூரிச் சேவைகளாற்றி நிறைவாகத் தான் தொடக்கக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை பயின்ற இந்துக்கல்லூரிக்குப் பணியாற்ற வந்து சேர்ந்தார். பதினெட்டு ஆண்டுகள் யாழ் இந்துக்கல்லூரியில் பணி செய்து ஓய்வு பெற்றார். 1977 - 1995 கால கட்டத்திலே தான் திரு சிவராஜாவை நான் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. யாழ் இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும் அவர் பணி யாற்றினார். அதனுடன் ஆக்க இலக்கியப் படைப்பாளியாகவும் இருந்தார். இதனால் எம்முடைய சந்திப்புகள் பெரும்பாலும் இலக்கியச் சந்திப்புக்களாகவே அமைந்தன.
திரு. சிவராஜாவின் ஆளுமை பல பரிமாணங்களைக் கொண்டமைந்தது. சமய, சமூகச் செயற்பாடுகளிலே மிகுந்த ஈடுபாடுடையவராக அவர் திகழ்ந்துள்ளார். யாழ் சைவபரி பாலன சபை ஒரு வரலாற்றுப் பெருமையுடைய ஒரு நிறுவனம். அதனுடைய துணைத் தலைவராகச் செயற்பட்ட திரு.சே சிவராஜா இந்து இளைஞர் பேரவைகளிலும் துணைத் தலை வராகப் பணியாற்றியுள்ளார். மாணவனாக இருக்கும் காலத் திலே இவர் வண்ணை வடகிழக்குச் சனசமூக நிலையச் செயலராக இருந்து பிற்காலத்திலே அதன் காப்பாளராக இருந்துள்ளார்.
ஆக்க இலக்கியப் படைப்பாளியாகிய திரு. சே. சிவராஜா 1999 சிறுகதை இலக்கியத்துக்கான அரச சாகித்திய விருதினையும் வடகிழக்கு மாகாண சபையின் சாகித்திய விருதினையும் பெற்றார்.
இவ்வாறு பல சிறப்புக்களையுடைய இனியவரான திரு. சிவராஜாவின் இழப்பு பேரிழப்பாகும். இன்னும் பல நல்ல பணிகளை அவர் ஆற்றியிருப்பார். ஆனால் காலன் காலம் பார்ப்பதில்லையே. அவனுடைய காலம் மட்டுமே

அவனுக்குத் தெரியும். திரு. சிவராஜாவின் இனிய ஆன்மா பார்வதி உடனுறை பரமேஸ்வரன் அடித்தாமரையிலே அமைதி பெற வேண்டுமென இறையருளை வேண்டுகிறேன்.
பேராசிரியர். அ. சண்முகதாஸ் பீடாதி, பட்டப்பின் படிப்புகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Page 30
s
சிறந்த சிந்தனையாளர் வண்ணை. சிவா
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆசிரியர்கள் பலர் கற்பித்தலுடன் மட்டும் நின்று விடாமல் சமுதாய நோக்குக் கருதி நல்மாணாக்கரை உருவாக்கவும் ஆன்மீக, சமூக, கலை இலக்கியப் பணிகள் புரிவதிலும் முன்னின்று திகழ்ந்து ள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆசிரியரான திரு. சே. சிவராஜா பிரதி அதிபராக உயர்ந்த போதும் வாசிப்பை யும் எழுத்தையும் கை விடாமல் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தன்னாலான பணிகளை வழங்கியுள்ளார். ஒரு சில எழுத்தா ளர்கள் போல் அதிக எண்ணிக்கையான படைப்புகளை வழங்காவிட்டாலும் எழுதிய கதைகள் யாவும் மிக மிகத் தரமாக அமைந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவர் இனங்களிடையே ஒற்றுமை வளர வேண்டும் என்னும் தொனிப் பொருளில் எழுதிய கதைகள் பலரது வரவேற்பையும் பாராட்டையும் பெற்றன. “வடிகால்’ என்னும் ஒரு சிறுகதையை வைத்தே இவரது ஆற்றலையும் ஆளுமையையும் எவரும் எளிதாக எடை போடக்கூடியதாக இருக்கும்.
யாழ்ப்பாண மக்களில் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்த போது மனித அவலங் களை சித்தரிக்கும் கதைகளை எழுத ஆரம்பித்ததை எண்ணிக் கொள்கின்றேன்.
பின்னர் கொழும்புக்கு வந்தபோது “சிவாவின் சிறுகதை கள்’ நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டேன். சிறுகதைத் தொகுதியின் முதல் பிரதியைத் தனது மனை விக்கு வழங்கி சபையை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதும் அத்தொகுதிக்கு அரச விருது கிடைத்ததும் நினைவுக்கு வருகிறது.

இன்னும் ஏராளம் படைப்புகளை இவர் தருவார் என எதிர்பார்த்த வேளை பிரிந்துவிட்டார் என்ற துயரம் நெஞ்சை வருத்துகிறது. சிறந்த சிந்தனையாளரான நல்லாசிரியனையும் தரமான எழுத்தாளரையும் இழந்துள்ளோம். இவரது ஆத்மா சாந்தியடையவும் குடும்பத்தினரது நல்வாழ்வுக்காகவும் இறை வனைப் பிரார்த்திக்கின்றேன்.
எஸ். தில்லைநடராஜா மேலதிகச் செயலாளர் மனித வள அபிவிருத்தி, கல்வி, கலாச்சார அலுவல்கள் அமைச்சு, "இசுருபாய', பத்தரமுல்ல.

Page 31
dFолDилѓ
அச்சிவமும் அன்பும் வேறல்ல என்று வேதம் விளம்பும் இச்சிவமும் இனிமையும் வேறல்ல என்று வையம் முழங்கும்
வெண்ணெய் நல்லூரில் விளங்கியது அச்சிவம் வண்ணை நல்லூரில் வாழ்ந்தது இச்சிவம் தென்முகக் கடவுளாயிருந்து மெய்ஞ்ஞானம் போதித்தது அச்சிவம் கிழக்கும் வடக்கும் போய் விஞ்ஞானம் போதித்தது இச்சிவம்
ஆவணம் காட்டி ஆண்டது அச்சிவம் இலக்கிய ஆவணம் காட்டி ஆண்டது இச்சிவம்
இவ்வரும் பெளவப் பிறவியை நீந்தி, ஏகாந்தப் பெருவெளியில்,
இச்சிவம்
அச்சிவத்துள் கலந்து அத்துவிதமாயிற்று.
இருவரும் ஒன்றாயினர் என்றே யறையும் சுருதி!
சோ. பத்மநாதன்.

JAFFNA HINDU COLLEGE யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
- Tel. No.: 02-243. Fax No:(21-2553. E-mail: admin(ajhc.lk, Web Page: www.jhc.ik
Principal Deputy Principul A. Srikumaran P. Maheswaran F. A. Dip.in Ed. SLPSI B.Sc. (Hons). Dip in El
கல்விப் பெருந்தகையாளன்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தனது ஆரம்ப, இடை நிலை, உயர்நிலைக் கல்வியை முடித்து, சென்னைப் பல் கலைக்கழகத்தின் விஞ்ஞானமாணிப்பட்டத்தினைப் பெற்றார். பின்னர் தனது பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். புகழ் பூத்த கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றதனால் பல தலை சிறந்த பண்புகளை நாம் அவரிடம் காணமுடிந்தது.
வண்ணார் பண்ணையில் பிறந்து, வாழ்ந்து, ஊருக்கு உழைத்து, ஊர் மக்களை நேசித்து தான் கல்வி பயின்ற கல்லூரி அன்னையை ஆராதித்து அளப்பரிய கல்விப் பணியா ற்றியவர். ஆசிரியராக, பாட இணைப்பாளராக, பகுதித் தலைவராக, பல மன்றங்களின் பொறுப்பாசிரியராக, உப அதிபராக, பிரதி அதிபராக பல பொறுப்புக்களை ஏற்று ஆளுமையுடன் செயற்பட்டு கல்லூரியில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.
“சமூகத்தைப் புரிந்து பொருந்தி வாழ்வதே கல்வி" சிவாவின் சிறுகதைகள் சமூதாயப் பின்னணியில் எழுதப் பட்டன. 1999ல் அரசின் சாகித்திய மண்டல சிறுகதை இலக்கியத்திற்கான விருதினையும் பாராட்டுதல்களையும் பெற்றார். படைப்பாற்றல் மிக்கவராக மாணவப்பருவம் தொட்டு இறுதி மூச்சு உள்ள வரை எழுதி வெளியிட்டுள்ளார்.

Page 32
நல்லதை நினைத்து, நல்லபடி வாழ்ந்து, நல்லதைச் சொல்லி செயலில் காட்டி எல்லோரது மனங்களிலும் நிலை த்து நிற்கின்றவர் சிவா. மாணவர்களின் உள்ளங்களை, சகபாடிகளின் உள்ளங்களை வென்றவர் சிவா. அவரின் கல்விச் சேவையும் புகழும் நிலைத்து நிற்பன. சிவா ஒரு கல்விப் பெருந்தகை.
கல்லூரியில் எழுந்தருளி அருளாட்சி புரிகின்ற
சிவஞான வைரவப் பெருமானின் பாதாரவிந்தங்களை அவரது ஆன்மா சென்றடைய பிரார்த்திக்கிறேன்.
அ. சிறிக்குமாரன்.

நீண்டகால கல்லூரித் தொடர்புகள்
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நீராவியடி கடையிற் சுவாமி ஒழுங்கையைச் சேர்ந்த சேனாதிராஜா சிவராஜா என்னுடைய நீண்டகால கல்லூரித் தோழனாவார். சிறுவயதில் நான் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் எனது கல்வியைத் தொடங்கிய போது புதிய சூழ்நிலை எனக்கு ஒருவித பயத்தையும் திகிலையும் கொடுத்தது. என்னுடன் சேர்ந்து கல்வி கற்ற சிவராஜா என்னை அடிக்கடி தேற்றிச் சிறு சிறு கதைகள் சொல்லி என்னை மகிழ்வித்தார். என்னுடைய வீட்டிற்கு மிக அண்மையில் வசித்த அவருடைய வீட்டிற்குச் செல்வதற்குக் குறுக்கே ஒரு பெரிய அரச மரம் உண்டு. இந்த அரச மரத்தைப் பற்றிப் பல கதைகள் அவர் சொல்லுவார். சில கதைகள் அரச மரத்தில் இரவு நேரங்களில் ஒரு பேய் உலாவுகிறது என்பதைப் பற்றியவை என்றபடியால் எப்பொழுதும் பொழுது சாய்வதற்குள் அவரு டைய வீட்டிற்குப் போய்த் திரும்பிவிட வேண்டும் என்ற தீர்மானம் எனது மனதில் வளர்ந்தது. “நீ என்ன ஒரு பயந் தாங்கொள்ளியாக இருக்கிறாய்” என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு.
ஆரம்பப் பாடசாலையில் தொடங்கிய எமது நட்பு பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் மாணவர்களாக பெரும்பாலும் ஒரே வகுப்பில் கல்வி கற்றமையால் தொடர்ச் சியாக வளர்ந்து வந்தது. நானோ பெரும்பாலும் கல்லூரியும் வீடும் என்று இருந்த காலம் அதுவாகும். ஆனால் கிரிக்கட், உதைப் பந்தாட்டம் என்றால் நாங்கள் சேர்ந்து போய் எமது அணிக்கு உற்சாகம் ஊட்டத் தவறுவதில்லை. சிவராஜாவின் எழுத்தாற்றல் அந்த நாட்களில் எமது கல்லூரி சஞ்சிகையான இந்து இளைஞன் மூலம் வெளிக்கொணர ப்பட்டது. இச் சஞ்சிகைக்கு ஆசிரியராகவும் சிவராஜா கடமையாற்றினார். நான் அவ்வளவு எழுதுவதில்லை. ஒருமுறை நான் ஆங்கிலத்தில் படித்த “John Gilpin” என்ற கவிதையை ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டு

Page 33
தமிழில் ஒரு கவிதை வடிவமாகவே எழுதிவிட்டேன். அதை வாசித்துப் பார்த்த சிவராஜா அது இந்து இளைஞனில் பிரசுரமாக வேண்டும் என்னு வலியுறுத்தி அதற்கான உதவிகளைச் செய்தார். சிறு வயதிலிருந்தே எழுதுவதும் அருகிலுள்ளோரையும் ஊக்குவித்து எழுத வைப்பதும் அவருடைய ஒரு பண்பாகும்.
கல்லூரி வாழ்க்கை 1954 ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது. பின்னர் பல காலம் நாம் தொடர்புகள் அற்ற ஒரு நிலையிலேயே இருந்தோம். ஆனால் வண்ணை சே. சிவராஜா சிவகவி, முக்கண்ணன், ஊடாடி என்ற பெயர்களில் வெளியிட்ட படைப்புக்களை இடையிடையே வாசிக்கும் போது பழைய பசுமையான நினைவுகள் என் மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தன. 1977 தொடக்கம் 1995 வரை அவர் யாழ் இந்துக்கல்லூரியில் பல பொறுப்பான பதவிகளை வகித்து எமது கல்லூரித் தாய்க்கு அருந் தொண்டாற்றி வந்தார். அக்காலப் பகுதியில் பரிசளிப்பு விழாக்கள், கல்லூரி சதுரங்க அணியின் சதுரங்கப்பயிற்சி ஆகியவை தொடர்பாக நான் கல்லூரியில் இடையிடையே அவரைச் சந்தித்ததுண்டு. பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையில் இருவரும் நிறைவேற்றுக் குழுவில் கடமையாற்றித் தொடர்பு களைப் புதுப்பித்துக் கொண்டோம். அவருடைய சேவை மனப்பான்மை அணு அளவும் குறையாமல் அன்றும் இன்றும்
என்றும் இருந்ததை நான் காணக்கூடியதாக இருந்தது.
அண்மைக்காலங்களில் சுகவீனமுற்றிருந்த வண்ணை சே.சிவராஜா மறைந்தாலும் அவருடைய படைப்புக்கள் எம்மி டையே இருந்து மறையாது. அவரைப் பிரிந்து வாடும் குடும்ப த்தினருக்கு இந்தப் பேரிழப்பைத் தாங்கிக் கொள்ள மனத் தைரியத்தைக் கொடுக்கும்படி இறைவனைப் பிரார்த்தகிறேன்.
கலாநிதி வி. அம்பலவாணர், தலைவர், யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்,
கொழும்புக் கிளை

நானறிந்த சிவராஜா
நாம் இந்தப் பூமியில் வாழும் காலப்பகுதி மிகவும் சிறியது. இக்காலத்தில் நாம் எதைச் சாதித்தோம் என்ற கேள்வி எமது மனதில் அடிக்கடி வருவதுண்டு. வண்ணை சே. சிவராஜாவைப் பொறுத்தமட்டில் அவருடைய சாதனைக ளைத் தொடருவதற்கும் அதன் பயனை நாம் எல்லாம் பெறுவதற்கும் கொடுத்து வைக்கவில்லையே என்று தான் கூற வேண்டும்.
என்னைவிட இரண்டு மூன்று வயது இளையவரான சிவராஜாவும் நானும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பல ஆண்டுகள் ஒன்றாகக் கல்வி பயின்றோம். அப்பொழுது அவர் இந்து இளைஞனுக்கு எழுதி வந்தார். மாணவத் தலைவர், இல்லத் தலைவர், சாரணர், இந்து இளைஞன் சஞ்சிகை ஆசிரியர், விஞ்ஞான மன்ற தலைவர் இவையெல் லாம் அவரது அன்றைய பொறுப்புக்கள். கல்வி பயிலும் போதே இவை தொடர்பான பணிகளைத் திறம்படச் செய்தது அவருடைய சாதனைகளாகும். சென்னையில் பட்டதாரிக் கல்விக்காக சென்னைப் பல்கலைக்கழக சென்ஜோசப் கல்லூரி யில் சேர்ந்தார். அங்கு அவர் உதைபந்தாட்டம், கிரிக்கட், ரென்னிஸ் போன்ற விளையாட்டுகளிலும் பிரகாசித்தார்.
1960 ம் ஆண்டு தொடக்கம் ஆசிரியர் சேவையில் படிப்படியாக உயர்ந்து கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயம், மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி, வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி, செங்குந்தா இந்துக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கடமையாற்றிய பின் 1977ம் ஆண்டு யாழ் இந்துக் கல்லூரிக்கு மீண்டும் வந்தார். யாழ் இந்துவின் சகல அலுவல்களிலும் முன்னின்று உழைத்த சிவராஜா பிரதி அதிபர் பதவியிலிருந்து 1995 ம் ஆண்டு ஒய்வு பெற்றார். இவ்வளவு பொறுப்புகளையும் வகித்த வேளையிலும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை.

Page 34
வட மாகாண ஆசிரியர் சகாய நிதிச் சங்கத்தின் செயலாளர், தனாதிகாரி, உபதலைவர் (20 ஆண்டுகளுக்கு மேல்) வட மாகாண விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் - பரீட்சைச் செயலர், மட்டக்களப்பு அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள் சங்கத்தின் செயலர், வட மாகாண ஆசிரியர் சங்கத்தின் பல்வேறு பதவிகள் ஆகியவை அவரைத் தேடி வந்தன. இவற்றைவிட அவர் ஆற்றிய சமூகத்தொண்டு யாழ் சைவ பரிபாலன சபை உப தலைவர், வடமாநில இந்து இளைஞர் பேரவை உபதலைவர், நல்லூர் இந்து இளைஞர் பேரவை உப தலைவர், வண்ணை கோம்பயன் மணல் மயான சபைச் செயலர், கடையிற் சுவாமிகள் நூற்றாண்டு விழாச் சபை உப தலைவர்,. என நீண்டுகொண்டே போகிறது.
பதவிகள் சாதனைகளுக்கு மத்தியிலும் சிவராஜா ஒரு எளிமையான மனிதராகவே வாழ்ந்தார். எழுத்தாளனின் கை ஓய்ந்து விட்டது. ஆனால் அவர் விட்டுச்சென்ற படைப் புகள் காலத்தால் அழிக்க முடியாதவை. அவருடைய ஆத்மா சாந்தியடையவும் அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு வழிகாட்டும்படியும் எமது முழுமுதற் கடவுளாகிய சிவபெரு மானை வணங்கித் துதிக்கின்றேன்.
திரு. வி. கைலாசபிள்ளை
தலைவர். யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் நம்பிக்கை நிதியம்.

'ஜன்னவர்க்கே சரண் நாங்களே”
கொழும்புக் கம்பன் கழகம்
48, புதுட்ெடித் தெரு, கொபூ-13, இலங்கை, தொலைபேசி-32349
உலகதனை நேசித்த வண்ண மலர்
உன்னதமாய் இந்த உலகதனை நேசித்த வண்ண மலரொன்று வாடிச் சரிந்ததுவாம் வண்ணை சிவராஜ வள்ளல் மறைந்திட்டார் உள்ளமது நைந்து ஓங்கி அழுகிறது. இந்துக் கல்லூரியினை ஏற்றமுறச் செய்வதற்காய் சிந்தை, செயல்,வாக்கு சேர் உழைத்தமகன் மாணவரை எல்லாம் தம்மக்கள் என எண்ணியதால் ஊனம் அறுக்க உழைத்தோடாய்ப் போன மகன் கல்லூரித்தாயைக் கண்ணாகக் காப்பதற்கு ஒல்லும் வகையால் பிரதி அதிபர் பொறுப்பேற்று செல்லும் வாயெல்லாம் சிறப்படையச் செய்த மகன் ஒய்வடைந்த பின்னாலும் உலகதனை நெறி செய்ய தாய் போல நேசித்துத் தமிழ் தந்தநல்ல மகன் எழுத்தால் உலகாண்டு ஏற்றம் அடைந்த மகன் வழுத்தாத வாயில்லை வண்ணை சிவராஜ, எழுத்தாளனை என்றால் எல்லாரும் ஒப்பிடுவர். காலம் அனைத்திடவே காயம் கழற்றியவர் மேலான உலகின் மீதடைந்தார் எனக் கொள்வோம். மாயை தருகின்ற மாறாத பற்றதனால் எனதென்னும்மமகாரம் ஏங்கி அழச்செய்யும் உணர்வுச் சிதைவால் ஓங்கி அழுதிருக்கும் உறவோர்க்கெல்லாம் ஓர் வார்த்தை உரைக்கின்றேன். உண்மை உணர்வோம், ஒருநிமிடம் கண்மூடி பற்றறுத்துநின்று பரமன் பதம்பணிவோம்
ஒன்றாகக் கூடி ஒங்காரத் துட்பொருளை
நன்றாகத் தொழுவோம்,நல்லாத்மா சாந்தியுறும்.
அன்பன்,
இ. ஜெயராஜ்,
(கம்பன் கழகம்)

Page 35
சிவாவின் இலக்கியப் பணி
அண்மையில் காலமான வண்ணை சே. சிவராஜா ஈழத்து ஆக்க இலக்கியத் துறையில் தடம் பதித்தவர். அவர் சிறுகதைத் துறைக்கு ஆற்றிய பணி மிகப்பெரியது. இறக்கும் வரை 50 சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது இலக்கிய பணிக்கு களம் அமைத்துக் கொடுத்தது அவர் கற்ற புகழ் பூத்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியாகும். 1953ம் ஆண்டு அங்கு மாணவனாக இருந்த போது கல்லூரி சஞ்சிகையான “இந்து இளைஞன்” ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்திலி ருந்தே அவருக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது. அந்நாட்களில் வெளி வந்த “சுடர்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் கடமை யாற்றிய போது மேலும் அவ் ஆர்வம் தீவிரமடைந்தது.
1960 இருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதிய வண்ணை சே. சிவராஜா அவர்களை சிறுகதைத் துறையே தன்பால் ஈர்த்துக் கொண்டது. ஈழத்தில் வெளி வந்த பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளில் அவரது ஆக்க ங்கள் வெளிவந்தன. பல்வேறு பத்திரிகைகள், ஸ்தாபனங்கள் நாடளாவிய ரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்களும் பெற்றுள்ளார். அவர் 1960 இருந்து சிறு கதைகள் எழுதிய போதும் 1999ம் ஆண்டு வரை அவை நூலுருப் பெறவில்லை. நாவலாசிரியரும் அவரது நெருங்கிய நண்பருமான செங்கை ஆழியான் கலாநிதி க. குணராசா, மல்லிகை டொமினிக் ஜீவா ஆகியோரினதும் எனது வற்புறுத் தலின் பேரிலும் “சிவாவின் சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை 1999 ம் ஆண்டு வெளியிட்டார்.
1995 ம் ஆண்டு இடம் பெற்ற வரலாறு காணாத இடப் பெயர்வின் போது இவரது ஆக்கங்கள், பத்திரிகை நறுக்குகள் அழிந்தன. கொழும்பு ஆவணக் காப்பகம், யாழ் பல்கலைக்

கழகம், நண்பர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற சிறு கதைகளையே “சிவாவின் சிறுகதைகள்’ தொகுப்பில் வெளியிட்டார். இது பற்றிய விபரங்களை மேற்படி தொகுப்பில் என்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இத்தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதைகள் யாழ்ப்பான சமூகத்தை எம் கண்முன் நிறுத்துகின்றன. “இவரது சிறுகதைகளில் இன, மத ஐக்கியத்தினை வலியுறுத்தும் பண்பும், மானிட நேயத்தை மேம்படுத்தும் அவாவும் மேலோ ங்கி நிற்பதையும் சுட்டிக் காட்டாமல் விட முடியாது’ என்று இத் தொகுப்பின் முன்னுரையில் செங்கை ஆழியான் கலாநிதி க. குணராசா குறிப்பிடுவது இவரது சிறுகதைகளின் யதார்த் தத்தை உணர்த்துகின்றது.
இத் தொகுப்பில் இடம்பெற்ற சிறந்த சிறுகதைகளில் ஒன்று “இன்ஷா அல்லாஷ” என்பதாகும். இக்கதை யாழ்ப் பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட பின் கொழு ம்பைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறு கதையாகும். இக் கதையின் கரு இன்றைய சமாதான சூழலில் யதார்த் தமாக நிகழ்வதை நாம் கண் கூடாகக்காணக் கூடிய தாக இருக்கின்றது.
“சிவாவின் சிறுகதைகள்’ தொகுப்பு அவர் வெளியிட்ட முதல் நூல். அது 1999 ம் ஆண்டிற்கான அரச சாகித்திய விருதையும், வடகிழக்கு மாகாண சபையின் சாகித்திய மண்டல விருதையும் தட்டிக் கொண்டது. இது இவரது சிறு கதைகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகும். இத்தொகுப்பு வெளிக்கொணரப்படாமல் இருந்திருந்தால் ஒரு ஆக்க இலக் கிய கர்த்தாவின் பெயர் ஈழத்து இலக்கிய உலகில் மறைக்க ப்பட்டிருக்கும். வண்ணை சே. சிவராஜா அவர்கள் ஆக்க இலக்கியத்துறைக்கு ஆற்றிய பணியோடு யாழ் இலக்கிய வட்டத்தினதும், இலங்கை இலக்கியப் பேரவையினதும் செயலா ளராக கடமையாற்றி அவற்றின் வளர்ச்சிக்காகவும் உழைத்த பெருமகன்.

Page 36
“சிவாவின் சிறுகதைகள்” தொகுப்பில் 16 சிறுகதை களே இடம் பெற்றுள்ளன. இன்னும் கிடைக்கப் பெறாத 35 க்கு மேற்பட்ட சிறுகதைகள் நூலுருப் பெற வேண்டும். அது பற்றி வண்ணை சே. சிவராஜா அவர்கள் மேற்படி தொகுப்பின் என்னுரையில் “எதிர்காலத்தில் எனது பிற கதைகள் கிடைக்கப் பெறுமாயின் அவற்றை யாராவது இலக்கிய அன்பர்கள் வெளியிடுவார்கள் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இலக்கிய அன்பர்கள் வெளியிட வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவரது பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கி ன்றார்கள். எனவே அவர்கள் மிகுதிக் கதைகளையும் தேடி எடுத்து நூலுருப்பெறச் செய்ய வேணடும். அது தான் அவரது ஆத்ம திருப்திக்காக அவர்கள் செய்யும் பணியாகும் எனக் கருதுகின்றேன். வண்ணை சே. சிவராஜாவின் ஆக்க இலக் கிய பங்களிப்பை ஈழத்து இலக்கிய உலகம் என்றும் மறக்க (Մ9ւգԱյT5l.
பொ. ஆனந்தலிங்கம்

யாழ். இலக்கிய வட்டம்
J&FFNA LITERARY CIRCLE
1.முதலாம் ஒழுங்கை 1,1* Lane பிறவுன் வீதி Brown Road ம்ே ဇုyady அன்பன் வண்ணை சே. சிவராஜா 03/052002
வண்ணை சே. சிவராஜாவின் திடீர் மறைவு தாங் கொணாத துயரத்தைத் தருகின்றது. ஈழத்து இலக்கியவு லகிற்கு அன்னார் ஆற்றிய பணிகள் நினைவு கூரத்தக்கவை. யாழ் இலக்கிய வட்டத்தின் ஆரம்ப காலத்து அங்கத்தவராக இறுதி வரை விளங்கி, இலக்கிய வட்டத்தின் செயலாளரா கவும், அதன் ஒரு அங்கமான இலங்கை இலக்கியப் பேரவை யின் செயலாளராகவும் விளங்கி அளப்பரிய சேவைகள் ஆற்றியுள்ளார். சிறுகதைத் துறையில் சிறப்பாகவும் கவிதை, கட்டுரைத் துறைகளில் கணிசமாகவும் அவர் தன் பங்களிப் பினைச் செய்துள்ளார். அவரின் “சிவாவின் சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு இலங்கைச் சாகித்திய மண்ட லப் பரிசிலும், வடக்கு கிழக்கு மாகாண இலக்கியப் பரிசிலும் கிடைத்தமை வண்ணை சே. சிவராஜாவின் எழுத்துத் திறனுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். அவரின் இலக்கிய வெற்றிகளுக்கு அன்னாரது துணைவி விமலநாயகி பெரும் ஒத்துழைப்பாக இருந்துள்ளார் என்பதைச் செங்கை ஆழியான் கூற நான் தெரிந்துள்ளேன்.
அமரரின் துணைவியாருக்கும், அவரது மூன்று பிள்ளை களுக்கும், மருமகனுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். வண்ணை சே. சிவராஜா நிறை வாழ்வு வாழ்ந்த பெருமகன். நல்ல மானிடனாக எல்லாருக்கும் நல்லவராகவும் வல்லவராகவும் வாழ்ந்து முடித்த மனிதர். அன்னாரின் ஆத்மா சாந்தி பெற ஆண்டவனைப் பிரார்த்திக் கின்றோம்.
கலைப்பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை இணைச்செயலாளர், யாழ் இலக்கிய வட்டம்.

Page 37
gum, 6alaioor Gaf. Fanny Irgir
பண்பும் தகமையும் தனித்துவ ஆற்றலும் சேர்ந்த எழுத் தாளரான உங்கள் திடீர் மறைவு பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டதும் மனம் அதிர்ந்தது. கண்ணிர் துளிர்த்தது.
நடந்தால் மண் வருந்தாது, மிதித்தால் புல் நசுங்காது, பேசினால் காற்று அதிராது, என்னுமாப்போல் சாந்தமான முகமும், மென்மையான மனமும், மிருதுவான குணங்களும் கொண்ட உங்களையும் அழைத்துச் செல்ல மரண தேவதை க்கு எவ்வாறு மனம் வந்தது.
உங்கள் மென்மையான மனத்தின் பின்னேதான் எவ்வ ளவு உறுதியும், நேர்மையும், உள்ளதைச் சொல்ல வேண்டும் என்ற துணிவும் இருந்தன. இதனால்தான் “இன்ஷா அல்லாஹற்” போன்ற கதைகளைப் படைக்க உங்களால் முடிந்தது.
நான் உங்களோடு உறவாடிய காலம் குறுகியது தான். நான் உங்களது மாணவன் அல்ல. இணைந்து பணியாற்றி யவனும் அல்ல. கொழும்பு வந்து சேர்ந்த பின்னர் இலக்கியக் கூட்டங்களுடுதான் எனக்கு அறிமுகமானிர்கள். அங்கு ஏனைய வர்களிடமிருந்து உன்னத நடத்தைகளால் நீங்கள் வித்தியா சப்பட்டு நிற்பதைப் பார்த்தேன். ஆரவாரமான பேச்சுக்கள் இல்லை. ஆவேசமாக விவாதிக்க மாட்டீர்கள், உன்னிப்பாகக் கேட்பீர்கள், சுயதம்பட்டங்கள் உங்களுக்கு அன்னியமானவை. மாற்றுக் கருத்துக்களையும் இன்முகத்தோடு காதுகொடுத்துக் கேட்பீர்கள்.

இதனால் தான் பதவிகளும் பெருமைகளும் உங்க ளைத் தேடி வந்தன. ஆசிரியர், அதிபர் போன்ற தொழில் சார் பதவிகளுக்கு மேலாக சமய, சமூக, இலக்கிய நிறுவன ங்களில் பொறுப்பான பதவிகளை ஏற்று சிறப்பான பணிகளால் உயர்ந்து உதாரண புருஷனாக நின்றீர்கள்.
எதையும் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்வது உங்கள் வழக்கம். சிவாவின் சிறுகதைகள் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவின் போது இதனைக் கண்டோம். கூட்டத் தில் பேச இருப்பவர்களுக்கு நேர காலத்துடன் அறிவித்து, நூலின் பிரதிகளையும் ஒரு மாதகாலத்திற்கு முன்னரே கொடுத்து, படிக்க வைத்துப், பின் அவர்களைப் பேச வைத்தவர் நீங்கள். கூட்டத்திற்கு முதல்நாள் அட்டை போடாத மெய்ப்பு பார்த்த பிரதியை வாசிக்க அல்ல, பார்க்கக் கொடுத்துவிட்டு அடுத்தநாள் பேச அழைக்கும் இன்றைய இலக்கிய உலகில் நீங்கள் முன் உதாரணம். அக் கூட்டத் தில் என்னையும் பங்கு பற்ற வைத்து பாக்கியவான் ஆக்கி னிர்கள்.
ஐயா, நல்லவர்கள் என்றும் மறைவதில்லை. அவர்கள் உள்ளவர்கள் இதயங்களில் என்றும் உயிர் வாழ்வர். உங் களைப்போல்.
எம். கே. முருகானந்தன். M. B. B. S. (Cey). D. Ac. (SLA)

Page 38
MEMORS TO SIVARAJA UNCLE
Sivaraja uncle, whom we knew for five years was a man of exemplary character. He was a soft spoken, warm and generous human being.
His sudden demise came as a shock to us, we still find it difficult to come to terms with his passing away. He was of a sincere and genuine character, a man of patience and humbleness. Also possesing the valued quality of forgiveness, a man who in his heart no prejudice prevailed.
Siva uncle was fond of my three children, as they were of him. I often wished I had got to know him even better. I was touched on numerous occassions by his generosity of heart and deed. I shall never forget, those kind gestures. In many ways he resembled my father.
In lives path we meet many people of different qualities and backgrounds. But its rare to come across people of such gentleness and kindness as Siva uncle. His loss will be felt deeply by his loving wife Vimala aunty. She was a tower of strength for him as he was to her, a loving couple indeed, but alas he had to depart from this world so suddenly keeping a void that can never be filled.
I shall miss the familiar sight of siva uncle coming home after school, wearing his favourite cap, walking slowly but with courage due to a discomfort in his foot. It was his way of showing others that we can overcome any of life obstacles if we tried hard enough.
May the Lord God Bless his soul, he may have passed
away but he has left his good qualities in his three well brought up children.
Rifkha, Safwani & Family members

சிறந்த இலக்கியவாதி வண்ணை சிவா
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்குப் புகழ் சேர்த்த அதனுடைய பழைய மாணவர்களில் ஒருவர் தான் அண்மை யில் காலம் சென்ற ஆசிரியரும் பிரதி அதிபரும் இலக்கிய வாதியுமான திரு சேனாதிராஜா சிவராஜா அவர்கள் ஆகும். நல்ல கல்விமானாகவும், நல்லாசிரியராகவும் ஆளுமை மிக்க நிர்வாகியாகவும் ஒரு தலை சிறந்த இலக்கியவாதி யாகவும் திகழ்ந்தவர் திரு சே. சிவராஜா அவர்கள். வண்ணை சே. சிவராஜா என்ற பெயரில் எத்தனையோ கட்டுரைகள், சிறுகதைகள் எழுதிய ஓர் இலக்கியவாதி யாவார். யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க உப தலைவரா கவும், சைவபரிபாலன சபை உபதலை வராகவும், வடமாநில இந்து இளைஞர் பேரவையின் உப தலைவராகவும், நீண்ட காலம் கடமையாற்றிய பெருமை இவருக்கு உண்டு. அத்துடன் பல்வேறுபட்ட சமூக கழகங் களில் இவர் பிரதிநிதித்துவப்பட்டு மக்களுக்கு சேவையாற் றியமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை இலக்கிய பேரவையின் செயலாளராகவும் யாழ்ப்பாண இலக்கிய வட்டச் செயலாளராகவும் பணியாற்றி இலக்கிய உலகில் மிகப் பிரபல்யம் அடைந்த திரு சே. சிவராஜா அவர்கள் மரணமடைந்த செய்தி மிகவும் துயரத் திற்குரிய செய்தியாகும். அவர் அரச சாகித்திய விருதையும், வடக்கு கிழக்கு மாகாண சபையின் சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றுத் திகழ்ந்தவராவார். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பித்து இடைநிலை, உயர் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் தொடர்ந்து பின்னர் சென்னைப் பல்கலைக்கழ கத்தின் சென் ஜோசப் கல்லூரியில் தனது பட்டதாரிப் படிப்பையும் முடித்துக் கொண்ட இவர் சென்னை பல்கலை க்கழகத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட சமயம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பரிசினையும் பெற்றுக் கொண்டார். சம்மாந்துறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் எனப் பல்வேறு

Page 39
இடங்களிலும் இவர் ஆற்றிய சேவை அனைவராலும் பெரிதும்
பாராட்டப்பெற்றது. இவர் 35 ஆண்டுகள் கல்விச் சமூகத் திற்கும் மாணவர் உலகிற்கும் ஆற்றிய பெரும் சேவையும், இவர் ஆற்றிய இலக்கியப் பணிகளும் எல்லோராலும் போற்று தற்குரியவையாகும். நல்லதொரு ஆசிரியராகவும், நல்ல தொரு நண்பராகவும், இந்துவின் மைந்தனாகவும், சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்த திரு சே. சிவராஜா அவர் களின் மரணச் செய்தி கேட்டு நான் மிகவும் துயரடை வதோடு, நல்லதொரு நண்பனையும், இலக்கியவாதியையும, கல்விமானையும், பழைய மாணவர் சங்க உறுப்பினரையும் இவ்வுலகம் இழந்தமையையும் உணர்கின்றேன்.
அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
அரச அதிபர், க. சண்முகநாதன்
யாழ்ப்பாண மாவட்டம். தலைவர்,
பழைய மாணவர் சங்கம் யாழ் இந்துக் கல்லூரி

6laFrsůsorD6ů GLUnů 6jLIrů
&forrigir gPJEr !
சொல்லாமல் போய்விட்டார் சிவராஜா ஐயா
- சின்னப்பிள்ளை போல் தன் பிள்ளைகளோடு துள்ளித்திரிந்தவர் - பார்க்கும் சபையெல்லாம் சோபை நிறைந்தவர்
- எதையும் சொல்லாமல் செய்யும் இதயம் படைத்தவர் - இன்று எம்மை விட்டு சொல்லாமல் போய் விட்டார் சிவராஜா ஐயா!
துள்ளிக் குதிப்பார் விளையாட்டில் வெற்றி என்றால் தொடர்ந்து சொக்கிப் போய் நிற்பார் சமரசஞ் செய்வார் சமதர்மம் பேசிடுவார் சகலரும்
- ஒன்றென்பார் தமிழுக்கே வாழ்வென்பார் தரணியெல்லாம் போய் வருவார் மனதுக்கு வயதில்லை உடலுக்கே வயதென்பார் - இன்று சொல்லாமல் போய்விட்டார் சிவராஜா ஐயா!
மீசையழகும் வீரநடையழகும் போலித்தனமற்ற பாசச் சிரிப்புடனே ஐயா சில காலம் வாழ்ந்திட்டார் ஆனால் போலி உலகத்தில் நிஜத்தைத் தேடிவிட்டு சொல்லாமல் போய் விட்டார் சிவராஜா ஐயா!
“உமது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்"
டாக்டர் குமாரசாமி நந்தகுமார் அகில இலங்கை சமாதான நீதவான், விஞ்ஞான ஆசிரியர், றோயல் கல்லூரி, கொழும்பு - 07.

Page 40
நீங்காத நினைவில்
திரு. சேனாதிராஜா சிவராஜா அவர்கள் 15.04.2002ம் திகதி இறைபதம் அடைந்ததாக பத்திரிகையில் பார்த்து மிக்க கவலையடைந்தேன். அன்னார் எமது யாழ் இந்துத் கல்லூரிக்கு ஆற்றிய சேவைகள் நினைவில் வருகின்றது. அவர் யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று பின்பு பட்டதாரியாகி அதே பாடசாலையில் ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும் கடமையாற்றும் வாய்ப்பு பெற்றிருந்தார். அவர் பிரதி அதிபராக கடமையாற்றும் போது நான் பழைய மாணவர் சங்க செயற்குழுவில் உபதலைவராகவும், பின்பு தலைவராகவும் கடமையாற்றினேன். திரு சிவராஜா அவர் கள் பிரதி அதிபராக இருந்த அதே வேளை பழைய மாணவர் சங்க செயற்குழுவின் உபதலைவராகவும் கடமை யாற்றினார்.
நாங்கள் இருவரும் மற்றைய அங்கத்தவர்களுடன் சேர்ந்து பழைய மாணவர் சங்கம் மூலம் 1994, 1995, 1996ம் ஆண்டுகளில் யாழ் இந்துக்கல்லூரிக்கு ஆற்றிய சேவைகள் நினைவில் என்றும் நிற்கின்றன. நீண்டகாலம் மாணவனாக, ஆசிரியராக, பிரதி அதிபராக யாழ் இந்துக் கல்லூரியோடு அன்னார் தொடர்பு வைத்திருந்தமையால் அவ் அன்னையின் மேல் அதிக பற்று கொண்டவராக இருந்தார். அங்கத்தவர்கள் விடுவீடாக, சென்று பழைய மாணவர் சங்கத்திற்கு பணம் சேகரித்த பொழுது அயராது உழைத்தவர்களில் இவரும் ஒருவர். தனது வாழ்நாளில் கல்லூரி' அன்னைக்கு, கடனை செலுத்தியுள்ளார் என்றே நான் நினைக்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்
க. பரமேஸ்வரன் செயலாளர். இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு.

சிவா என்ற மனிதன்
தமிழகத்திலிருந்து நான் திரும்பி வந்து, சில காலத்து க்குப் பின்னரே நீண்டகால இடைவெளியின் பின் சிவாவை நான் சந்தித்தேன். ஒருதலைமுறை கால இடைவெளி சிவா வின் தோற்றத்தில் தளர்வைக் கொடுத்திருந்த போதிலும் அந்தப் புன்னகை, அன்பான விசாரிப்பு என்பன மாறாத இளமையோடிருந்தன. வார்த்தைகளில் பாசாங்கேதுமற்ற கனி வும் கண்ணியமும் இருந்தன.
நீண்ட கால எழுத்துப்பயணத்தின் பின்னர் தனது “சிவா வின் சிறு கதைகள்” வெளியாக உள்ளதை பூரிப்போடு சொன்னார். அந்த வெளியீட்டு விழா உவகை பொங்கும் திருமண விழாவாகவே நடைபெற்றது. நான் சிவாவை அதில் வாழ்த்திப் பேசினேன்.
அவர் கேட்காமலே “சிவாவின் சிறு கதைகள்’ தொகு திக்கு நான் மதிப்புரை எழுதினேன். அது வெளியாகி சில தினங்களில் நான் அவரைச் சந்தித்தேன்.கைகளைப் பற்றினார். கண்கள் பனித்தன. வார்த்தைகளற்ற மெளனத்தில் அவர் இதய ஒலியினை துல்லியமாக என்னால் கேட்க முடிந்தது.
சிவா ஒரு நல்லாசிரியன். சமூகப் பணியாளன். எழுத் தில் உயரங்களை எட்டிய படைப்பாளி. இவை எல்லாவற் றையும் விட மேன்மையான குணங்கள் நிறையப் பெற்ற மனிதன்.
சிவா தனது சிறுகதைத் தொகுதியில் யாழ்ப்பாண மணிக்கூட்டுக்கோபுரம் இடம்பெற விரும்பி, வரச் செய்தார். யாழ்ப்பாண அடையாளத்திற்காக அதை விரும்பியிருக்கலாம். ஆனால் அதற்கு உள்ளார்ந்ததொரு உளவியல் காரணமும் இருக்கலாமென எண்ணுகிறேன். அது என்னவாயிருக்கும்?

Page 41
மணிக்கூடு பிறருக்கு நேரங் காட்டி உதவும் ஊடகம். அது பயன் கருதாத சேவை, சிவாவின் கல்வி, சமூக வாழ்வு என்பனவும் இத்தகையதாகவே இருந்தது. இந்த வாழ்வுக்குரிய சிவா, இந்த நிமிஷமும் கண்ணெதிரே புன்னகை தொற்றியுள்ள இதழோடு நிற்பது வினோதமான ஒன்று அல்ல, ஏனெனில் நல்ல மனிதரின் நினைவுகள் சீரஞ்சீவியானவையாக அமையும், எப்போதுமே.
செ. யோகநாதன்
எழுத்தாளர்.

IN REMEMBERANCE OF LATE
MR. S. SIVARAJA
It is with deep grief and sorrow that we remember late Mr. S.Sivaraja who was one of our dedicated teachers.
kingston College International Wellawatte was fortunate no doubt, to have had his service as a maths and physics teacher for 3 years.
He was a devoted and conscientious teacher, a trustworthy counsellor and an understanding colleague. He always stood for all that is fair and just.
We have no words to say how moved we were, when we learnt of his unfailing concern and effort to fulfil his role as a teacher, even amidst his grave sickness.
The service rendered by Mr. S. Sivaraja to the school will never be forgotten.
Now we join the family members to share their grief over the bereavement of their “Dear Departed
May His Soul Rest In Peace
The Chairman, Principal, Staff and Students of
Kingston College International.

Page 42
நட்பிற்குரிய நல்லவர்
அமரர் சேனாதிராஜா சிவராஜா அவர்களோடு உடனாசிரியனாகக் கற்பிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்ட வில்லை. ஆனால் அவர் யாழ் இந்துக் கல்லூரியிலே ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும் நற்பணியாற்றியமை பற்றியும் அவர் ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் அந்நியோன்னிய உறவு கொண்டு பழகி அவர்களிடம் மிகுந்த
செல்வாக்குப் பெற்றிருந்தமை பற்றியும் பலரதும் வாயிலாகக் கேள்விப்பட்டுள்ளேன்.
அமரர், வட மாகாண ஆசிரியர் சகாயநிதிச் சங்கத்தின் பொருளாளராய் விளங்கிய காலத்திலே, அது தொடர்பாய் அவரின் இல்லம் சென்று விசாரிக்கவும் ஆலோசனை பெறவும் நேர்ந்த சந்தர்ப்பங்கள் பல அக்காலங்களிலே அவரின் அன்பு கலந்த உபசரணைகளும், நட்பு கலந்த உரையாடல்களும் அவரை நட்புக்குரிய நல்லவராய் எனக்குக் காட்டின. அக்கால
த்திலிருந்து படிப்படியாக எமது நட்பு இறுகியது.
அமரர் சிவராஜா விஞ்ஞானப் பட்டதாரியாய் இருந்த போதிலும், ஆங்கிலத்தில் திறமையாளராயும், தமிழிலே ஆக்கத்திறனோடு கூடிய அறிவாளராயும் விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக எங்களின் உரையாட ல்கள், நவீன தமிழிலக்கியம் பற்றியனவாகவே பெரிதும் இருந்து வந்தன. அவை இதனை எழுதும் வேளை யில் நினைவுத் திரையிலே உயிர்ப்படங்களாய்ப் பவனி வந்து அவரின் இழப்பினைப் பெரிதும் உணர்ந்து கலங்க வைக் கின்றன.
சிவராஜா ஈழத்தின் கணிப்பிற்குரிய சிறுகதை எழுத்தாளர் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அவருடைய சிறுகதைத் தொகுதி வெளியாகி, அது சாகித்தியப் பரிசு

பெற்றமையும் நடறிந்ததே. ஆசிரியர் என்ற முறையில் ஆபாசத்திட்டுப்படாத புனிதமும், சமூக உணர்வும் பெற்று எழிலார்ந்தவையாய் சுவை பயப்பனவாய் அவரின் சிறுகதை கள் விளங்கின.
கொழும்பு வாசராய் மாறிவிட்ட அமரரை, ஒர் தடவை வெள்ளவத்தை நடைபாதையில் அதிகாலைப் பொழுதில் சந்தித்து உரையாட வாய்ப்புக் கிடைத்தது. அந்தச்சந்திப்பு ஏறக்குறைய ஐந்தாண்டுப் பிரிவு இடைவெளியைப் போக்கி, மீண்டும் எம்மை நெருக்கமாக்கியது. ஆனால் கடிதத் தொடர்புகள் இருக்கவில்லை.
நெஞ்சக்கடலிலே அடிக்கடி வந்து போகும் நினை வலைகளிலே மிதக்கும் ஒரு சில நண்பர்களில் ஒருவராய் அமரர் என்வரையில் இருந்தார் என்று நான் சொன்னால் அது முக்காலும் உண்மை.
இரு மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் எனக்குக் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கியதைப் பாராட்டி அவர் எழுதிய கடிதமே எங்கள் இருவரதும் இறுதித் தொடர்பாகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. கடிதம் கிடைத்த இரண்டு வாரங்களுக்கிடையில், இந்த அதிர்ச்சி தரும் செய்தி! தாங்கிக் கொள்வது கடினமாக இருக்கிறது.
நெஞ்சுக்கினியவர்களை நினைவுகளாய் மட்டுமே இருத்திக் கொள்வது கடினமாகவே இருக்கிறது. என் செய்ய லாம்? நிலையாமைதானே உலகின் நிலையான உண்மை.
அமரரின் ஆன்ம சாந்திக்கு ஆடல்வல்லானை வணங்கி அமைகின்றேன்.
ஓம் சாந்தி!
கலாநிதி க. சொக்கலிங்கம் (சொக்கன்)

Page 43
என்றும் நீங்கா நினைவலைகள்
வண்ணை சே. சிவராஜா என் இனிய இலக்கிய நண்பர். அவரது நட்பு, என் இகவாழ்வில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு முளைவிட்டதாயினும், அது நெகிழாவுறவில் முற்பிறப்பு வாசனை கொண்டதாக - ஆழமாக வேரோடி, ஆல் போல் தழைத்து என்னைத் தொடர்கிறது. அதனாற் போலும் அவரது நினைவலைகள் என்றும் ஓயாத கடலலையென என் நெஞ்ஞை வருடிக் கொண்டிருக்கின்றன. 90 களில், யான் யாழ் இலக்கிய வட்டச் செயலாளாராக இருந்த வேளையில், இவர் இணைச் செயலாளராக பணியாற்றினார். அவ் வேளையில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் எனக்கு நிறையக் கிடைத்தன. எந்த விடயத்திலும் நிதானமாகவும், பொறுப்பு டனும், அவதானத்துடனும் அடியெடுத்து வைக்கும் சுபாவங் கொண்ட நண்பர் சிவா எழுத்துத் துறையிலும் ஆழமாகவும் கரிசனையாகவும் நின்று நிலைத்தார். இதற்குக் காரணிகள் பல இருந்த போதும் அவருடைய குடிப்பிறப்பு, - இளமைக் காலக் கல்விச் சூழலின் அரவணைப்பு - தந்தையின் கண்டி ப்புங் கனிவும் கொண்ட வழிநடத்தல் - தக்க நல்லாசான்களின் அறிவூட்டல் என்பனவே முக்கிய ஊக்கிகளென அவர் வாயால் யான் கேட்டதுண்டு.
இவர் யாழ் இந்துவின் கல்விச் சூழலில் வேரூன்றியவர். ஆங்கில மூலக்கல்வியில் அறிவியற் பட்டதாரியாக திகழ்ந்த போதிலும், வித்துவான் கார்த்திகேசு, பண்டிதர் செல்லத்துரை, பேராசான்களான சிவராமலிங்கம், ஏரம்பமூர்த்தி என்போரின் இலக்கியப் பண்ணையில் தமிழ்மொழிப் பற்றும், உணர்வும் மிக்க கல்வியாளராக - படைப்பிலக்கியவாதியாக விளங்கினார். இவரது இலக்கிய ஆர்வத்துக்கும் முனைப்புக்கும் இன்னு மொரு சூழற்காரணியும் அடிநாதமாக இருந்ததை யான் கணிக்கிறேன். அதன் பேரில், யாழ் இந்துவின் இலக்கிய வாரிசுகளையே இங்கு நினைவுறுகிறேன். நவீன இலக்கியத்

திறனாய்வாளர், பேராசிரியர் கைலாசபதி, கவிஞர் முருகையன், படைப்பிலக்கியவாதிகளான அங்கையன் கைலாசநாதன், செங்கை யாழியான், கவிஞர் சோ. ப. போன்ற இலக்கிய ஜாம்ப வான்கள் யாழ் இந்துவின் வாரிசுகளாக வாழ்ந்த, வாழ்கின்ற நாளின் சூழலை நிறையப் பெற்றவர் சிவா. இதன் காரணமாக இவரும் என் நெஞ்சில் நிலைத்து நிற்கும் நவீன இலக்கியவாதி யாக நின்றார்.
சிவாவின் இலக்கிய கருத்தோட்டத்தைக் காண்பதற்கு நூலுருவில் சான்றாதாரம் அதிகம் இல்லை. ஆயினும் என் போன்ற இலக்கிய நண்பர்களின் அருட்டலால் கடந்த 2000 ம் ஆண்டில் “சிவாவின் சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுதி ஒன்று மட்டுமே கொழும்பில் வெளியாயிற்று. “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு அவல் பதம்’ என்றாற் போல் இவருடைய இலக்கிய நோக்கின் ஆழ - அகலத்தை அளக்கக் கூடியதாக உள்ளது. எந்த “ஸ்ம்ஸ” களுக்கும் ஆட்படாது தெளிந்த கருத்து நிலை கொண்டு சிவா எழுதினார். அத்துடன் சமூகம் சார்ந்த சிந்தனையில் “பக்கஞ் சாராத’ எழுத்தாளராகவும், மென்மையான மனவோட்டம் கொண்டவராகவும் விளங்கினார். இவர் தனது 35 வருட ஆசிரிய சேவையின் போது பாடசாலை நிருவாகத்தை நன்கு படம் பிடித்து கண்டவர். குறிப்பாக - நிர்வாக முரண்பாடுகள் சீர்கேடுகள், போலித்தனங்கள் “சிவப்பு நாடா’ப் பம்மாத்துகள் என்பவற்றைக் கண்டு கொதித்தவர். அதனைத் தனது எழுத்துக்க
வில் இறுக்கமாகவும் தெளிவாகவும் காட்டி, தனது இலக்கிய
நோக்கையும் போக்கையும் துல்லியமாக காட்டினார்.
எடுத்துக்காட்டுக்கு, மேற்கூறிய சிறுகதைத் தொகுதியில் வரும் “சீருடை’,“சேவையொன்று மூடப்படுகிறது” “ஆண்டு 10” “பி” ஆகிய கதைகளின் கதைக் கருக்களை கூறலாம். மேலும் இவரது சமூக நோக்கை குறிப்பாக இந் நாட்டின் இரு சிறுபான்மை இனத்தாரின் செளசன்யத்தின் தாற்பரியத்திற்கு ஊறு வந்துற்ற போது பேண வேண்டிய மானுட நேயத்தை “இன்ஷா அல்லாஹற்’ என்ற கதையில் மிகவும் துல்லியமாக எடுத்துக் காட்டியமையைக் காணலாம்.

Page 44
இத்தகைய சிறந்த படைப்பிலக்கியவாதி, சமூக விஞ்ஞானி எம்மிடையேயிருந்து விடை பெற்றமை ஈடுசெயவொண்ணா பேரிழ ப்பாக கருதுகிறேன்.
இஃது, இயற்கையின் நியதி, இதிலிருந்து நாம் மீள முடியாது. இருப்பினும் நட்பின் கேண்மையும், செயலின் நினைவலைகளும் என் நெஞ்சில் என்றும் நீங்காது நின்று நிலைக்கும். சிவாவின் அமைதியான பேச்சு - சாந்தமும் கனிவும் நிறைந்த இன்முகம் - அன்பான சுபாவம் - ஆழமான கருத்தாடல் போன்ற குணாதிசயங்கள் என்றும் எம் நினைவில் பசுமையாக விளங்கும் என்பதில் எதுவித ஐயுறவுமில்லை.
எம்முடன் வாழ்ந்த சிவாவின் நினைவில் திழைத்து, அவர் ஆத்ம சாந்திக்கு இறையருள் வேண்டுவோமாக.
ஓம் சாந்தி! நன்றி
- அநு. வை. நாகராஜன் எழுத்தாளர்.

பல பரிமாணங்களில் நான் கண்டு பழகிய பெரியவர் - சங்கத்தின் முன்னோடி சகாய திலகம் அமரர் சே. சிவராஜா
வடமாகாண ஆசிரியர் சகாயநிதிச் சங்கத்தின் பழைய தலைமுறை விழுதாக இருந்து, தம் உயிர் பிரியும் வரை சங்கத்தின் நடவடிக்கைகளில் கருத்துடையவராக இருந்த எங்கள் மதிப்புக்குரிய “சகாய திலகம்” சிவராஜாவுக்கு சங்கத்து வைர விழாவில் எடுக்கப்பட்ட கெளரவிப்பு நிகழ்ச் சிகள் எம் கண்முன் நிழலாடுகின்றன. 1973 களிலேயே எமது சங்கத்தின் “செயலாளர்’ பதவியை அலங்கரிக்கத் தொடங்கிய சிவா பத்து ஆண்டுகள் செயலாளராகவும் 1984 இலிருந்து தனாதிகாரியாகவும் 1991 முதல் உபதலைவரா கவும் சேவையாற்றி வைரவிழாக் கண்டவர். சங்கத்தின் பிதாமகரில் ஒருவராக விளங்கிய சே. சிவராஜா அவர்களின் பதவிகளுக்கு மெருகிட்ட சேவையை விட, கட்டுக்கோப்புடன் சங்கத்தைக் கட்டிக் காத்த தன்மை எம்மிடமிருந்து அவரை என்றுமே மறக்கவிடாது. இளம் ஆசிரியர்களைச் சங்கத்தில் இணைய ஊக்குவித்ததுடன் சங்கத்தின் முன்னோடிகளை அடிக்கடி நினைவு கூர்ந்து தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகளை முன்னெடுத்தவர் அவர். சரியானதை உடனடியாக செய்து முடிக்கும் ஆற்றலும், பிழையெனப்படும் விடயங்களை அஞ்சாது சுட்டிக் காட்டும் அவரின் திறமையும் அவர்பால் எமக்கு மதிப்பை வளர்த்தன.
வல்ல ஒரு கல்வியாளனாக, விஞ்ஞான ஆசிரியனாக மட்டுமன்றி சிறந்த நிர்வாகியாகவும் விளங்கிய சிவா, நாடறிந்த ஒரு எழுத்தாளர், சமூக சிந்தனையாளர், தொண்டர்,
தவர். திரு. சே. சிவராஜா பிரதி அதிபராக விளங்கி 1960 களில் ஆரம்பித்த தம் அரசாங்க ஆசிரிய சேவையை அங்கு நிறைவு செய்த போது நிகழ்ந்த பிரியாவிடை நிகழ்வுகளும் என் கண் முன் நிழலாடுகின்றன. அன்று மாணவர் தலைவர்க ளிலொருவனாக இருந்து, அவரின் பிரிய மாணவனாயிருந்த

Page 45
என் மகன் விஜி மனம் கசிந்து கண்ணிர் விட்ட காட்சியை நேரில் கண்டு கலங்கினேன். அத்தனை தூரம் மாணவர்களை அன்புப் பிணைப்பால், ஆட்கொண்டவர் சிவா ஐயா.
“வாழ்வெல்லாம் இந்து அன்னை மயமாக
வாழ்ந்தின்று மேவி ஓய்வு
நாளின்று கண்கள் பல நனைந் தழவே
செல்கின்றான் என்றும்!”
என்று பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் பாடியதையும் ஓர்கிறேன்.
இத்தகைய எங்கள் அமரரோடு என் தந்தையார் M.S காலந்தொட்டே அன்பும் மதிப்பும் கொண்டிருந்த நான் இச் சங்கத்தில் இணைய வந்ததும், எழுத்துலகில் வழிகாட்டப் பெற்றதும், தொண்டுகளில் இணைந்ததும், சென்பற்றிக்ஸ் கல்லூரியில் பயிலுனர் ஆசிரியருக்கான 26 நாள் பயிற்சிகளில் அவரோடு, விரிவுரையாளர்களில் ஒருவராக பணியாற்றிய காலத்தில் கொண்ட நெருக்கமும் பின்னர் கொழும்பில் அடிக் கடி சந்திப்பும். நினைக்க நெஞ்சம் வெதும்புகிறது. உள்ளம் மெனமாக அழுகிறது. அமராகிவிட்ட வண்ணை சே. சிவராஜா உண்மையில் ஒரு நல்ல மனிதர். தொண்டர். அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.
M.S Ujg5uumr6m6ör உதவிக் கல்விப் பணிப்பாளர் கல்வித் திணைக்களம்,
பொருளாளர், வட மாகாண ஆசிரியர் சகாயநிதி சங்கம்.

நட்பு நெஞ்சத்தால் எல்லோரையும்
அரவணைத்துச் சென்றவர்
யாழ் இந்துக் கல்லூரியின் உயர் பெருமை பற்றி என் இளம் பராயம் தொடக்கம் நான் நிறையவே அறிந்து வைத்திருக் கின்றேன். வட பிரதேசத்தில் சிறந்த கல்விமான்களாகக் கணிக்க ப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த திருவாளர்கள் அ. வயித்திலிங்கம், மு.கார்த்திகேசன், அற்புதரத்தினம் போன்ற ஆசிரியர்கள் இங்கு கல்வி கற்பித்து வந்ததனாலும், இவர்கள் வெறும் சம்பளம் வாங்கும் ஆசிரியர்களாக மாத்திரமல்லாமல் பொறுப்பு வாய்ந்த இடதுசாரி அரசியல் தலைவர்களாகவும் மிளிர்ந்த காரணத்தால் வட புலத்தில் மாத்திரமல்ல நாடு தெரிந்த நல்ல தலைவர்களாகவும் திகழ்ந்து வந்தனர்.
இந்த ஆசிரிய அரசியல் தலைவர்களின் மக்கள் நேசிப்பை சரிவர புரிந்து கொண்ட காரணத்தினாலும் மிகச் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்த அதிபர்கள் இந்துக்கல்லூரியை சரியான திசைவழியில் நடத்திச் சென்றதாலும் எனக்கு இக் கல்லூரி மீது தனிப்பட்ட பாசமும் அபிமானமும் ஏற்பட்டு இருந்தது.
அதன் காரணமாகவே ஐந்தாம் வகுப்பு வரை கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த எனது மகன் திலீபனை மேற் படிப்புக்காக இந்துக்கல்லூரியில் சேர்த்து விட்டேன். இந்தக் காலகட்டத்தில் தான் ஆசிரியர் வண்ணை சே. சிவராஜா அவர்கள் எனக்கு அறிமுகமானார்கள். எழுத்தாளன் என அறிமுகமானது அதன் பின்னர் தான். இந்த நாட்டில் இன்று பல்துறைகளிலும் புகழ் பூத்துத் துலங்கும் சான்றோர்களை, உத்தியோகத்தர்களை நிர்வாகிகளை உருவாக்கித் தந்த பெருமை யாழ் இந்துக் கல்லூரி க்கே உரியதொன்றாகும்.
தேசத்தின் பல்வேறு பிரதேசங்களில் ஆசிரியத் தொழில் பார்த்து விட்டு, பின்னர் யாழ் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகக் கடைமையாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே நான் சேனாதி ராஜா சிவராஜா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

Page 46
பண்பட்ட ஒரு நல்லாசிரியனுக்குள்ளே ஒரு படைப்பாளி மறைந்து கொண்டிருப்பதை அந்தக் காலத்திலேயே நான் உணர்ந்து கொண்டேன். என்னுடைய மகனுடன் கல்லூரி பற்றி உரையாடும் சமயங்களிளெல்லாம் இவரது கற்பிக்கும் திறமை, கல்லூரியின் வளர்ச்சிக்காக இவர் கவனமெடுத்து உழைத்து வரும் உழைப்பு பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. இந்த ஆத்மார்த்த அர்ப்பணிப்பு இவர் இக் கல்லூரியின் உப அதிபராகப் பின்னர் பிரதி அதிபராகவும் கடமையாற்றும் சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தந்தது. படைப்பாளியாக வும் எழுத்தாளனாகவும் தமிழ் மக்கள் மனதில் இவர் வண்ணை சே. சிவராஜாவாக பெயர் பதிந்தது குறிப்பிடத்தக்க ஒரு வளர்ச்சியாகும்.
யாழ் இலக்கிய வட்டச் செயலாளராகவும், இலங்கை இலக்கியப் பேரவையின் செயலாளராகவும் இவர் கணிசமான காலம் பணியாற்றி வந்துள்ளார். அந்த கால கட்டத்தில் இவர் எழுத்தாளர்களுடன் இணைந்து பிணைந்து தமிழ் இலக்கிய துறைக்கு பெரும் பங்காற்றி வந்துள்ளார். யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் நடைபெறும் பல்வேறு இலக்கிய கூட்டங்களுக்கும் இவர் வரத் தவறுவதில்லை. பிற்காலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் கூட இலக்கிய ஆர்வம் காரண மாக, உடல் சிரமத்தையும் பாராமல் மாடிப்படியேறி வந்து இவ்விலக்கிய கலந்துரையாடல்களில் கலந்து சிறப்பித்தது என் நெஞ்சை விட்டு இன்றும் அகலாத காட்சியாகும். மேலும் மல்லிகை இதழுக்கு பல சிறுகதைகளை தொடர்ந்து எழுதியும் வந்தார். வண்ணை சே. சிவராஜா “சிவாவின் சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு கடந்த நூற்றாண்டின் கடைசி ஆண்டில் இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசை இவர் பெற்றுக் கொண்டது நமக்கெல்லாம் மனமகிழ்ச்சி தரும் சம்பவமாகும். வாழும் போதே சகலரிடமும் அன்பு பாராட்டி நெருங்கிய நட்பு ரிமை பூண்டு வாழ்ந்து மறைந்த வண்ணை சே. சிவராஜா
அவரது படைப்புகளின் மூலம் என்றும் வாழ்ந்து வருவார்.
የ டொமினிக் ஜீவா
(ஆசிரியர் மல்லிகை)

மறக்கமுடியாத நண்பன
நீராவியடி - வண்ணார்பண்ணை அழகான அமைதியான நகரப்பகுதி. புகழ்பூத்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி இப்பகு தியின் உயிர் நாடியாகும். எம்மில் பலர் யாழ் இந்துவின் மடியில் படுத்து தவழ்ந்து விளையாடி வளர்ந்தவர்கள். இவர்க
ளில் பலர் புகழ் பெற்ற அறிஞர்களாகவும், தலைவர்களாகவும்
விளங்கினர். இத்தகைய நட்சத்திரங்களின் நடுவே வான்மதி யாக விளங்கியவர் வண்ணை சே. சிவராஜா.
மறக்கவே முடியாத இனிமையான இளமையான நாட் கள். அந்த நினைவலைகளில். பிரவுண்ரோட் - இன்றும் பிரபலமான வீதி. இந்த வீதியில் வசித்த மாணவர்கள் “முருகன் ஸ்டோர்ஸ் கிளப்” என்ற சங்கத்தை உருவாக்கி னார்கள். சிவகுருநாதர் அவர்களின் வளவில் தினமும் மாலை நேரங்களில் விளையாடுவது வழக்கமாகும். சிவகுரு நாதர் விதியில் தான் நண்பன் சிவராஜாவின் குடும்பம் வசித்தது என்பது ஞாபகம். பிரவுண் வீதியில் வசிக்கா விட்டாலும் எம்மில் சிலர் முருகன் கழகத்தில் அங்கத்தவர் களாக இருந்தோம். மாலை முழுவதும் நல்ல விளையாட்டு என்ற பாரதி பாடலுக்கு நாம் நல் எடுத்துக் காட்டாக இருந்தோம். அக்காலத்தில் ஒவ்வொருவருக்கும் பட்டப்பெயர் சூட்டுவது வழக்கம். “தொம்சன்’ என்ற பட்டப்பெயர் சிவராஜாவிற்கு! பழகுவதற்கு இனிமையானவர். எதையும்
மனம் திறந்து கதைப்பது அவரது இயற்கை. ஆனால்
ஒருபோதும் கோபப்பட்டு வீண் வம்பு செய்தது கிடையாது. இந்திரன், பாஸ்கரன், ஆனந்தராசா, ராஜேந்திரன், ராஜதேவன், சகாதேவன் என்று பல மாணவர்கள் இக்கழகத்தின் உறுப் பினர்கள்.
மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு ஆனந்தராசாவின் வீட்டில் கழகக் கூட்டம் நடை பெறும். விளையாட்டுத் தொடர்பான விஷயங்கள் பேசப்பட்ட பின் சிவராஜா நேரம் ஆரம்பமாகும். சிவராஜா புன்னகை

Page 47
யுடன் எழுந்து நின்று எமது கையெழுத்து சஞ்சிகையில் அங்கத்தவர்களின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்குவார். அவர் வாசிக்கும் அழகே அழகு! நவரசம் ததும்ப நாடக நடிகனைப் போல் எமது ஆக்கங்களை அவர் வாசித்து காட்டுவார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைத் துணுக்கு கள், செய்திகள் என்று பலவகை ஆக்கங்கள் அவரால் திரட்டப்பட்டு சஞ்சிகையாக மாற்றப்பட்டது. அவரது ஆக்கங்களும் அற்புதமானவை. அக் காலப்பகுதியில் கையெழுத்து சஞ்சிகை முதலில் வெளியிட்ட கழகம் எம்முடைய கழகம் தான். அந்த சஞ்சிகையின் ஆசிரியர் நண்பன் சிவராஜா என்பதில் என்ன சந்தேகம்.
நாம் உயர்தர வகுப்பு முதலாம் ஆண்டு - “சுடர்” என்ற பத்திரிகையினை மிகுந்த கண்டங்களுக்கு மத்தியில் வெளியிட் டோம். மாணவர்களால் வெளியிடப்பட்ட முதலாவது பத்திரிகை “சுடர்” தான். நண்பர்கள் சிவராஜா, இரத்தினகோபால், சக்திவேல், கலாதரன் ஆகியோர் பத்திரிகை வெளியிட உயிர்த்துடிப்புடன் உதவியாக இருந்ததை மறக்கமுடியாது. கலைப்புலவர் நவரத்தினம் அவர்களுடன் சிவராஜா அவர்கள் நடத்திய “நேர்காணல்’ அற்புதமாக அமைந்தது. இந்த நேர்காணலைப் படித்து பாராட் டியவர்கள் பலர். அப்பொழுது முதல் தன்னை வண்ணை சே. சிவராஜா என்று அழைக்க - எழுதத் தொடங்கினார் சிவராஜா. அன்று தொடங்கிய எழுத்துப்பணி இறுதிவரை தொடர்ந்தது.
அவரது சிறுகதைத்தொகுதி சாகித்திய விருது பெற்றது. அதனை
விழாவாக கொண்டாட முன் அவர் விண்ணுலகம் சென்று விட்டார் என்பது தான் வேதனை.
சமூக சேவையிலும் சிவராஜா மிகுந்த ஆர்வம் காட்டினார். நீராவியடி சனசமூக நிலையம் அமைத்த முன்னோடிகளில் இளைஞனான சிவராஜாவின் பங்கு முக்கியமானதாகும். சைவ சித்தாந்த கலாநிதி செல்லப்பா அவர்கள் தலைவராகவும், செயலாளராக சிவாரஜாவும் பணியாற்றினார்கள் செயலாளரான இளைஞன் சிவராஜா பங்கு முக்கியமானதாகும். அவர்களது கனவு பிரவுண் வீதியில் சனசமூக நிலையத்தை அமைப்பது.

ஆனால் அது சாத்தியமாகவில்லை. மிகுந்த பிரயாசை எடுத்து நீராவியடி குளத்திற்கு அருகில் சனசமூக நிலையம் அமைக்க ப்பட்டது. இன்றும் அந்த நிலையம் செயற்படுகின்றது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
இந்துக் கல்லூரியில் ‘மயில்வாகனம் மாஸ்டர் சைவத்தின் ஆளாக இருந்தவர். சிறந்தவர்களையே இவர் செயற்பட அனும திப்பார். அத்தகைய ஒரு சிலரில் சிவராஜா அவர்களும் குறிப்பிடத் தக்கவர். குருபூசைகள், நவராத்திரி என பல நிகழ்ச்சிகள். இவற்றை நாம் முன்னின்று நடாத்தியது இன்றும் பசுமையாக மனதில் நிற்கின்றது. சைவத்தின் தொன்மை போல் யாழ்ப்பான த்தில் சைவபரிபாலனசபை மிகவும் தொன்மையானது. அதன் நிர்வாக சபையில் மிகவும் சிறந்தவர்கள் இடம்பெறுவார்கள். நண்பன் சிவராஜா நிர்வாக சபை உறுப்பினராகப் பல காலம் சேவை செய்தவர். பிரதித் தலைவராக அவர் மிகவும் திறமை யாகச் செயற்பட்டார். அக் காலத்தில் செயலாளராக இருந்த சண்முகலிங்கம் அவர்களே சிவராஜாவைப் பல தடவைகள் பாராட்டியுள்ளார். சைவபரிபாலன சபையின் பல்வேறு செயற்பாடு களில் சிவராஜாவின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ் இந்துவின் புதல்வர்களில் சிவராஜாவின் சமகாலத்தவர் பலர். தினகரன் ஆசிரியர்களுமான, சிறந்த தழிழறிஞர்களுமான கைலாசபதி, சிவகுருநாதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இலக்கிய பரம்பரையில் குறிப்பிடத்தக்க செங்கையாழியான் குணராசா, செம்பியன் செல்வன் ராஜகோபால், கதிர்காமநாதன் போன்றோர் சிவராஜாவிற்குத் தம்பிமார்கள். துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை, பதிவாளராக இருந்த பரமேஸ்வரன், அரச அதிபர் சண்முகநாதன், இலக்கியவானில் புகழ்பெற்ற மேலதிக அரசாங்க அதிபர் வைத்திலிங்கம் ஆகியோர் சிவராஜா காலத் தவரே.
சிவராஜா அவர்கள் யாழ் இந்துவில் காலஞ்சென்ற அ.குமாரசுவாமி, ஆசைப்பிள்ளை, சு.சபாரத்தினம் ஆகியோரிகள் காலங்களில் புகழ்பூத்த மாணவனாகக் கல்வி கற்றவர். கால சென்ற அதிபர் பி. எஸ் குமாரசாமியால் பாராட்டப்பட்ட ஆசிரியh

Page 48
காலஞ்சென்ற அதிபர் இ. சபாலிங்கம் இவரைப் பாராட்டியிருக் கின்றார். முன்னாள் அதிபர் பஞ்சலிங்கம், குகதாசன் ஆகியோரின் நிர்வாகத்திற்கு உதவியாக இருந்தவர். இவரது இனிய சுபாவமும் முடிப்பான செயற்பாடும் யாழ் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் பதவியை இவருக்குப் பெற்றுக் கொடுத்தது. இன்றைய அதிபர் சிறிக்குமாரன் அவர்களும் சிவராஜா காலத்தவரே. இந்த நோக்கில் இவரது நண்பனாகிய நான் சாவகச்சேரியில் யாழ் இந்துக் கல்லூரியினைப் பொறுப்பே ற்றேன். யாழ் இந்து சாவகச்சேரியில் செயற்பட்டது. இந்துக் கல்லூரியின் வரலாற்றில் வெளியிடத்தில் அது செயற்பட்டதும், அதன் பொறுப்பை ஒருவர் ஏற்க, அதிபராக இருந்த அதிபர் பஞ்சலிங்கம் இளைப்பாறியதும் வரலாற்றில் முன்பும் பின்பும் இடம் பெறாதவை தான்.
சிவராஜா அவர்களைப் பற்றி அசைபோடுகின்ற போது உண்மையொன்று பிரகாசமாகத் தெளிவாகத் தோன்றியது. நாற்பது ஐம்பது அறுபதுகளில் கல்வி கற்றவர்கள் பலர் இலக்கியவாதிக ளாகப் புகழ் பெற்றார்கள். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இத்தகைய இலக்கியவாதிகளை இந்துக்கல்லூரி உருவாக்கி தமிழ் அன்னைக்கு சமர்ப்பணம் செய்யவில்லை என்ற ஆதங்கம் மனதில் தோன்றியது. கைலாசபதி, சிவகுருநாதன் என்ற பத்திரிகை ஆசிரியர்களுக்குப் பின் குறிப்பிடத்தக்கவர் உதயன் வித்தியாதரன். எனவே சிவராஜா காலம் யாழ் - இந்து க்கல்லூரியின் இலக்கிய பொற்காலம் என புகழப்பட வேண்டிய காலமாகும்.
மறக்க முடியாத மனிதன் - சிவராஜா.
சுடர் இ. மகேந்திரன், முன்னாள் அதிபர். தலைவர், சைவ பரிபாலன சபை.

எங்குற்றீர்! நின் பணிதான் மறக்கலாமோ!
வண்னை நீராவியடி வளர்சேனாதி ராஜன்
வாழ்வொளியா யிணைத்திட்ட கமலாம் பிகைக்கு எண்ணமுற வந்துதித்த ஏந்தல் சிவ ராஜா
எழுந்த முப்பத்தைந்து வைகாசி யிருபத்தெட்டே கண்மகிழக் காதலித்துக் காசினிக்கோர் நிழலாய்க் கற்பனையில் யாழிந்து வாரம்பப் பள்ளிதன்னில் மண்மகிழப் பயின்றுபடி யேறி நின்றீர்
மகிழ்ந்து நின்றா ளாரம்ப மங்கையன்று.
நன்நடையும் சிவமரபும் நளினம் சேர்த்து
நட்புரிமை பண்புவளர் கல்வி பெற்று இன்பமுற யாழிந்தில் மேன்மை காட்டி
இறுதிவரை ஆசிரியர் நிர்வாகத்தில் தன்தகமையால் பிரதியதிபர் பணியும்
தகவுடனே காட்டிச் சமூக நோக்கில் பண்புறவே சைவநெறிச் சபைக ளனைத்தும்
பரந்து உறுப்பினரா யொன்றி நின்றீர்.
சொல்வளமும் துரிதவெழுத் தாக்க மெல்லாம் சென்று சென் றேராளம் உள்ளம் தொட்டு, பல்புகழும் பரிசுகளும் தந்த தையா
பகலிரவா யாழிந்து ஆரம்ப பள்ளியிற்கு தொல்புகழும் பழைய மாணவர் சங்கமதை
தொன்றுதொட்டு வழிநடத்தி யுழைத்த ராசா இல்லைஎன்று ஏங்கிடவே விழிகள் மூடி
எங்குற்றீர்நின்பணிதான் மறக்க லாமோ.
திரு. வே. ஞானகாந்தன், அதிபர், யாழ் இந்து ஆரம்ப ""

Page 49
A Tribute to Mr. Sivaraja Sir
We the Grateful students of Grade 8 lay a tribute in honour of our most dedicated, tutor, mentor, and Father. Late Mr. Sivaraja. Sir who passed away a couple of weeks ago. Sir, you were a ray of light and Sir you illuminated our path of life at kingston. It was so sudden that we are shocked in grief. You were a teacher, a father and a beacon of light.
Shakespeare stated we meet and part. Every actor plays his part in life and exists. Dead men are forgotten but their deeds are not. Sir, your foot steps will remain in our hearts always and forever, may you sir have a peaceful sleep.
t
Sir good night, Sivaraja Sir good bye, our loving dear sir rest in peace. Showers of blessing, showers of blessings from Grade - 8 Kingston college International.
From:- Azgar, Sivadanushan and larshad.
Grade :- 08 Kingston college International

நேசத்தால் நிறைந்த நெஞ்சம்
வண்ணை சே. சிவராஜா சேர் என்றால் நண்பர்களுக்கு எப்பொழுதும் இனிப்பானவர். நல்ல உள்ளம் படைத்தவர். சிந்தையால் செயலால் மற்றவர்களுக்கு தீங்கு செய்ய நினைக்காதவர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரதி அதிபர் பதவியை சிறப்புற வகித்தவர். எழுத்துலகில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்தவர். அமைதியான போக்கு, மெதுவான நடை, ஆனால் உறுதியான சரியான சிந்தனை இவை அனைத் தினதும் மொத்த வடிவம் தான் சிவராஜா சேர். தனக்கு கல்வியூட்டிய அன்னையாம் யாழ் இந்துக்கல்லூரியை ஆழமா கத் தூய்மையாக நேசித்தவர். தன்னுடன் கற்பித்த ஆசிரியர் களுக்கும் சரி மாணவர்களுக்கும் சரி ஒரு உற்ற நண்பனாக ஆலோசனைகள் வழங்கி அவர்களை நெறிப்படுத்திய ஒரு நல்ல ஆசான்.
அவருடைய உள்ளத்திலே நேசமும், பாசமும் நிறைந்து வழியும். அவருடைய குடும்பம் மற்றவர்களுக்கோர் முன்னுதார ணம். தாய் தந்தையரில் அன்பு கொண்ட பிள்ளைகள். தந்தை சொல் தட்டாத புதல்வர்கள். பிள்ளைகளை அவையத்து முந்தி யிருக்கச் செய்த தந்தை. இப்படி பல்வேறு பண்பு நலன்களை உதாரணமாகக் காட்டி வாழ்ந்த சிவராஜா சேர் இன்று அமரத்து வம் அடைந்து விட்டார். தன் தவப்புதல்வர்களுள் ஒருவரை இழந்து கண்ணிர் வடிக்கிறாள் யாழ் இந்து அன்னை. நேசத்தால் நிறைந்த நெஞ்சமுடைய அவரது பிரிவால் துயருறும் குடும்பத் தவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் சொல்லி மாளாது.
அமரரது நித்திய சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன்.
தமிழருவி. த. சிவகுமாரன்.

Page 50
பழக இனிய பண்பாளன்
ஈழத்து எழுத்தாளர்களில் சிறந்த சிறுகதைகள் எழுதி - சிறுகதைத் தொகுதி ஒன்றையும் வெளியிட்டு தமிழ் இலக் கியத்துக்குப் பெருமை சேர்த்தவர் அமரர் வண்ணை சே. சிவராஜா அவர்கள்.
ஆசிரியராக பதிலதிபராக விளங்கியதோடு ஆசிரிய தொழிற்சங்கவாதியாகவும் விளங்கினார், யாழ் இந்துக் கல் லூரியை எண்ணும் போது அமரர் சிவராஜா என்றும் என் நினைவுக்கு வருவார்.
1965ம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து அமரராகும் வரை அதன் அங்கத்தவராக விளங்கினார். எழுத்தாள நண்பர்களை அவர் என்றும் மதித்து நடந்தவர். யாழ் இலக்கிய வட்டம் நடத்தும் கூட்டங்களுக்குத் தவறாது வருபவர். அவர் ஏராளமான சிறுகதைகளெழுதாத போதிலும், எழுதிய கதைகள் நல்ல சிறுகதைகளாக எவரும் விரும்பிப் படிக்கக்கூடியதாக இருக்கின்றன.
சில காலமாக அவர் கொழும்பில் வாழ்ந்ததால் எம் முடன் தொடர்பு வைக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தாம் வெளியிட்ட சிறுகதை நூலை யாழ் இலக்கிய வட்டத் தலைவர் செங்கை ஆழியான் மூலம் எனக்கு அனுப்பி வைத்தார். அவரது இன்னொரு சிறுகதைத் தொகுயை வெளியிட வேண்டுமென விரும்பியிருந்த போது அவர் அமர ரானார்.
மனிதனை மனிதன் மதிக்க வேண்டுமென்பதே அவரது விருப்பமாக இருந்தது. எல்லாருடனும் பழகினார். பண்புடனும் அன்புடனும் பழகி நண்பர்களிடையே நற் பெயரையீட்டினார். அவரது மறைவு நண்பர்களாகிய எமக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். யாழ் இலக்கிய வட்டம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. புத்தொளி ந. சிவபாதம்.(சமாதான நீதவான்) பொருளாளர். யாழ் இலக்கிய வட்டம்.

வண் வடகிழக்கு சனசமூக நிலையம் 88, கல்லூரி வீதி. நீர்வாவியடி, யாழ்ப்பாணம்.
மக்கள் பனியில் வண்ணை சிவா
அமரர் வண்ணை சேனாதிராஜா சிவராஜா அவர்கள் ஐம்பதாண்டுகளுக்கு மேல் சேவையாற்றி எமது சனசமூக நிலையத்தின் வளர்ச்சியிலும் உயற்சியிலும் தனது பங்களி ப்பை வழங்கியது மட்டுமன்றி தனக்குப் பின்னர் தனது புத்திரர் களையும் எமது சனசமூக நிலையத்தின் வரலாற்றில் இணைப் பித்து சிறப்பித்த பெரியாராவார். யாழ் இந்துக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் திரு. சிவராஜாவும் அவரின் நண்பர்களும் சேர்ந்து எமது சனசமூக நிலையத்தை உருவாக்கினார்கள். மேற்படி சனசமூக நிலையத்தை ஆரம்பத்தில் ஸ்தாபித்த பிதாமகர்களில் ஒருவராக இருந்ததோடல்லாமல், அதன் செய லாளராகவும் இருந்து அதனை திறம்பட செயற்படச் செய்த பெருமை திரு சிவராஜா அவர்களைச் சாரும். தற்போதைய சனசமூக நிலைய கட்டிடமானது திரு சிவராஜா வினதும் அவரின் நண்பர்களினதும் முயற்சியால் கட்டப்பட்டதாகும்.
சனசமூக நிலையத்தில் அமரர் அவர்கள் எண்பதுகளில்
போசகர்களில் ஒருவராக அமர்ந்திருந்து நிலையத்தின் வளர்ச் சிக்கும் ஆக்கத்திற்கும் தனது அரிய ஆலோசனைகளை வழங்கியதுடன் உயிர்த் துடிப்பான இயக்கத்திற்கும் தனது பங்களிப்பினை நல்கியிருந்தார். அது போன்றே தனது புத்திரர் களையும் மேற்படி சனசமூக நிலையத்தின் பணிகளில் குறிப்பாக நிர்வாக சபை உறுப்பினர்களாக அமரச்செய்து கிராமத்தின் நலனுக்காக எமது நிலையம் ஊடாக உழைக்க வைத்த பெருமையும் கொண்டவர். இத்தகைய பெருமை பெற்ற அமரர் அவர்களின் ஆத்மா சாந்தி பெற நிலையம் சார்பாக பிரார்த்திப்போம்.
எல். ஓங்காரமூர்த்தி
தலைவா,
வண். வடகிழக்கு சனசமூக நிலையம்,
annuluth

Page 51
காலத்தால் அழியாத நட்பு
“மாஸ்டரை” இனிமேல் காணமுடியாது. நான் மாஸ்டரை முதல் முதலாகக் கண்டது கல்முனையில் அதுவும் முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1963ம் ஆண்டு. ரெயில் சிநேகிதம் போலாகி விட்ட தற்போதைய வாழ்க்கைப்பாணியில் முப்பத்தொன்பது ஆண்டுகள் அதுவும் இறக்கும் வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது கசக்காத ஒரு நண்பனைப் பெற்றுக் கொள்வதும் வாழ்வில் ஒரு பேறே! அத்தகைய ஒரு நண்பன் தான் எனது சிவராஜா.
பலர் அவரை வண்ணை சே.சிவராஜாவாகத்தான் அறிந்து ள்ளனர். என்னையும் எனது குடும்பத்தவரையும் பொறுத்தவரையில் அவர் வெறுமனே மாஸ்டர் தான். எனக்கும் அவருக்கும் இடையி லான நட்பு தொழில் ரீதியிலானதல்ல. நாங்கள் பார்த்த தொழில் எங்களை இணைக்கவில்லை. நாங்கள் பிறந்த மண் எங்களை இணைத்தது. ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றிக் கொண்டி ருந்ததால் மாலை வேளைகளில் எமது பொழுதைப் போக்கச் சென்ற கல்முனைக் கடற்கரை எங்களை இணைத்து வைத்தது. கடற்கரை யில் உருவான எமது நட்பு கடல் மண் போல் கரைந்து விடவில்லை. மாஸ்டரின் ஒன்றுவிட்ட அக்காவின் கலியாணம், எனது ஒன்றுவிட்ட அக்காவின் கலியாணம், மாஸ்டரின் கலியாணம் இப்படியான பற்பல இன்ப துன்ப நிகழ்வுகளில் எமது குடும்பங்கள் இரண்டும் மேன் மேலும் நெருக்கமடைந்தன.
எமது மண்ணின் மகிமை எமக்கு எமது குழந்தைகளைத் தாய் மண்ணிலேயே வளர்க்க வேண்டுமெனும் உறுதியைத் தந்தது. தமிழ் மேல் இருந்த பற்று, ஆங்கிலத்தில் கல்வி கற்று விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவரைத் தமிழில், அதுவும் நல்ல தூய தமிழில் எழுத வைத்தது. நல்ல படைப்புக்களைத் தந்தார். நோய் அவரைப் பிழியத் தொடங்கி கிட்டத்தட்ட இருபது வருடங்கள் இருக்கு மென நினைக்கிறேன். ஆனாலும் அவரது உடல்நிலை அவரது மன நிலையை சிந்தனையைப் பாதிக்கவில்லை. அவரை எழுத விடாது 'தடுக்கவில்லை. அவரது சிந்தனையில் இடப்பெயர்வும் அதனைத் தொடர்ந்த அவலங்களும் பரிணமித்தன. அவரது ஆக்கங்களை ஒரு விசிறியாக அல்ல ஒரு ஆத்ம நண்பனாகப் பல தடவைகள் நான் பத்திரிகைகள் வாயிலாகப் படித்ததுண்டு. ஆனாலும் ஒரு நாளாவது எனது கதை வந்திருக்குது படியும் என்று கூறியது கிடையாது. தான் சொல்லி நாங்கள் படிக்க வேண்டுமென்பதில் அவருக்கு நாட்டமிருக்க வில்லை. ஆனாலும் எனது அபிப்பிராயத்தைக் கேட்கத் தவறுவதில்லை.
is

நாங்கள் இருவரும் ஒரு நாளும் அரசியல் விவகாரங்கள் பேசியதில்லை. அவர் ஏன் அப்படிச் செய்தார் என்பது இன்றுந்தான் எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. தனிப்பட்ட எண்ணங்கள் கருத்துக்கள் மூலம் மற்றவரின் மனதைப் புண்படுத்தக் கூடாதென்பதில் அவருக்கு இருந்த அக்கறையோ தெரியவில்லை. தவறுகளைச் சுட்டிக் காட்ட அவர் என்றுமே தவறியதில்லை. தனது கருத்தைத் திணிக்க முயற்சித்தது மில்லை.
மூன்று பிள்ளைகளும் வெளிநாடுகளுக்கு சென்றதைத் தொடர் ந்து எப்படியாவது அவர்களிடம் சென்று விட வேண்டு மென்பதில் அவர் குறியாக இருந்தார். அவருக்கு அந்தப் பாக்கியம் கிட்டவில்லை யென்றாலும், அவரது இறுதிக் கிரியைகளை மூத்த மகன் நின்று நடாத்தியதில் அவரது ஆத்மா பரம திருப்தியடைந்திருக்கும். மகள் திருமணமாகி வெளிநாடு சென்றதன் பின்னர் அவரிடையே பெரியதொரு தாக்கம் இருந்ததைக் காண முடிந்த தென்றாலும் சளையாது வீட்டின் அன்றாடப் பணிகளைத் தொடர்ந்தும் தானே பார்த்து வந்தார்.
நண்பா, நீ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாளாகத் தானிருக்க வேண்டும். உனது வீடு நோக்கி நான் வந்திருந்தேன். நான் புதிதாக வாங்கிய பழைய காரை உமக்குக் காட்டவென்ற ஆர்வம் என்னைக் காரிலேயே வரவைத்திருந்தது. வீட்டில் கதவைப் பல தடவைகள் தட்டியிருந்தும், உள்ளேயிருந்து பதில் வராததால் பிறகு வருவோமென நான் திரும்பி விட்டேன். பிறகு உங்களுடன் பேசக் கூடச் சந்தர்ப்பம் கிட்டவில்லையே? எப்பொழுதும் புது வருடத்திற்கு வாழ்த்துவீர்களே! இந்த முறை வாழ்த்தவில்லையே! நானாவது வாழ்த்த வேண்டுமென நினத்தேன். நிறைவேற்றமுடிய வில்லை. தடுத்தது யார் என்று தான் தெரியவில்லை. இரண்டு கிழமைகளுக்கு முன்னர் உங்கள் வீட்டு வாயிற்படி வரை வந்தும் நீங்கள் வைத்தியசாலையில் இருந்ததை எனக்குத் தெரிய விடாது தடுத்ததும் யாரென்று தெரியவில்லை. அடுத்த நாளாவது தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். கொழும்பு வாழ்க்கை எங்களையெல்லாம் படிப்படியாக மாற்றிக் கொண்டிருப்பதன் பலனா? அன்றொரு நண்பனை இழந்தோம் அவரது உடலைக்கூடக் காண முடியவில்லை. அருகில் இருந்தும் கடைசி வேளைகளில் உங்களை உயிருடன் பார்க்கமுடியவில்லை. சிதறுன்ை சமுதாயத்தில் வேறு என்னென்னவற்றை நாம் இன்னும் சந்திக வேண்டுமோ?
T. துரைசிங்கம், இளைப்பாறிய தபாலதிபர்.

Page 52
எமது சகாயதிலகம் அமரர். சிவா
எமது சங்கத்தில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக உறுப்பினராகவும், காலத்தின் தேவைகருதி செயலா ளராகவும், பொருளாளராகவும் தன்னலங்கருதாப் பணிபுரிந்த வண்ணை சேனாதிராஜா சிவராஜா அமரத்துவம் அடைந்த செய்தி எம்மையெல்லாம் ஒரு கணம் திக்க வைத்து விட்டது. அன்பும், அடக்கமும், பண்பும் மிக்க அமரர் அவர்கள் புன் சிரிப்பையே தனது ஆளுமையின் சின்னமாகக் கொண்டு எல்லோரது உள்ளங்களிலும் நீங்காத இடம் பிடித்துக் கொண் டவர். இவரது அயராத முயற்சியால் எமது சங்கம் ஆண்டுகள் தோறும் பல புதிய புதிய அங்கத்தவர்களைக் கண்டது. இவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு குறுகிய காலமாக இருந்தாலும் அவரிடம் யான் பெற்ற அனுபவம் ஏராளம்.
அன்னார் இளைப்பாறி சகாயம் பெற்றபோது சங்கப் பொதுக் கூட்டத்தில் அவரை வாழ்த்தி, மலர்மாலை அணிவி த்து “சகாயதிலகம்” என்ற பட்டத்தையும் வழங்கிக் கெளரவித் ததால் சங்கம் பெருமையடைகிறது. எமது சங்கத்தில் இருந்து அவர் ஓய்வு பெற்றுச் சென்ற பின் அவரிடத்தை எம்மால் நிரப்ப முடியாமலுள்ளது. அவருக்கு நிகர் அவர்தான். அத்த கைய பண்புள்ள உத்தமரை சங்கம் இழந்துள்ளது. பிறப்பு நிகழும் போதே இறப்பும் நிச்சயமாகி விடுவதால் இதற்கு எவரும் எதையும் செய்ய முடியாது. இவரது பிரிவால் துயருற் றிருக்கும் குடும்பத்தினரது துன்பத்தில் நாமும் பங்கு கொள்வ தோடு அவரது ஆத்மா வாலாம்பிகா சமேதவைத்தீஸ்வரப் பெருமானின் பாதக்கமலங்களை அடையப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி!
நா. வன்னியசிங்கம், செயலாளர், வடமாகாண ஆசிரியர் சகாய நிதிச்சங்கம்.

Tribute to Mr. Sivaraja sir
A dear teacher of ours Mr. Sivaraja sir passed away, leaving fond memories of his teaching career. His demise was a great loss to the school. Mr. Sivaraja sir will always be in our minds as he was a dedicated teacher and good disciplinarian. He was an asseet to the school and always wanted the students to do well in their studies and become good citizen of the country.
Our deepest, sincere tribute and gratitude. We extend to you sir.
Thank you
Ashmila
Grade 6, K.C.I.

Page 53
கடையிற் சுவாமிகள் சமாதிச் சிவாலயம் பரிபாலனசபை.
சிவாலயப் பணிகளில் அமரர். சிவா
சித்தர்கள் வாழ்ந்தபூமி சிவபூமி. சிவபூமியில் வதிவிடத் தைப் பெற்றது மட்டுமன்றிச் சித்தர் குடியிருக்கும் சிவாலயப் பணிகளிலும் பங்குகொள்வது கிடைத்தற்கரிய பேறாகும். ஈழத்தின் முதற்சித்தர் கடையிற்சுவாமிகளது சமாதி அமையப் பெற்ற வண்ணை நீராவியடியில், கடையிற் சுவாமி வீதியிலே அவரது ஆலயச் சூழலிலே வதிவிடத்தைப் பெற்று அவ்வாலயத்தின் தொண்டனாக, அனுசரணையாளராக நிர்வாக ஆலோசகராக வாழ்ந்து மறைந்தவர் அமரர் சே. சிவராஜா அவர்கள். ஆலயத்தின் விழாக்களிலும் சிறப்புப்பூசைகளிலும் தானும் தன் குடும்பசமேதராக சமூகமளித்து கடையிற்சுவாமிகளது அருளாசி கைவரப் பெற்றவர். மேலும் கடையிற்சுவாமிகள் நூற்றாண்டு விழாச் சபையில் உபதலைவராக இருந்து செயற்பட்டவர். அமரர் அவர்கள் கடையிற்சுவாமிகளது திருவருளில் அசையாத நம்பிக்கை கொண்டவர்.
இவர் எமது சூழலில் இருந்து நாட்டுநிலமை காரணமாக விலகி இருந்த போதிலும், நேரில் வருகை தரக்கூடிய உடல்நிலை இடம் கொடாத நிலையிலும், அண்மையில் இடம் பெற்ற ஆலயத்தின் கும்பாபிஷேக விழாக்கான தனது பங்களிப்பை நல்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.அது போன்றே தனது மகளின் மூலம் ஆலயத்தின் உபயபணிகளை மேற் கொண்டு உள்ளார். அன்னாரின் மைந்தர்கள் ஆலயத்தின் அனைத்து விழாக்களிலும் ஏனைய இளைஞர்களுடன் இணை ந்து சரியைத் தொண்டினை மேற்கொண்டு வந்ததுடன், ஆலயத்தின் பல தேவைகளையும் தமது நண்பர்கள் உறவினர்கள் அயலவர்களது உதவியுடன் நிறைவு செய்வதில் மகிழ்வு கொள்பவர்கள். இந்தவகையில் அமரர் தனது குடும்பத்தையே ஆலயத்துடன் இணைத்து மகிழ்வு கண்டவர். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கடையிற் சுவாமிகள் அருள்பாலிப்பாராக.
க. செல்வமகேசன்,செயலாளர்,
பரிபாலனசசபை.

Mr. 5ivaraja – sír We miss gou.....
Eighteen sad and lonely days have passed. Since you were called away from us. Life at kingston is not the same for us. We miss you in our maths and physics. It broke our hearts to lose you. But sir, you did not go alone.
For, part of us went with you.
The day God called you home. We think of you in silence When we turn the pages of maths and physics.
Now, all we have are memories. And your signature's in our books
Your memories are our keepsakes. With which well never part.
God has you in his keeping.
We have you in our hearts.
With our Undying love and gratitude.
By: Premchand. K
Grade: 07 Kingston College International, Colombo - 6

Page 54
)3
மனித நேயம் மிக்கவர்
“செயற்கு அரிய செய்வார் பெரியார்”
இறைவனின் திருவடியை அடைந்த அமரர் சே. சிவராஜா அவர்கள் மேற்கூறிய கூற்றுக்கு அமைய வாழ்ந்த பெருந்த கையாவார். அமரர் யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் மிகுந்த பற்றுக் கொண்டவராக விளங்கினார். ஆரம்பம் முதல் சிரேஷ்ட பாடசாலைத் தராதரம் வரை இக்கல்லூரியிலேயே தன் அறிவை பருகினார். கல்லூரித் தாயின் அருகிலிருந்து அவரின் அரவ ணைப்பில் இருந்ததனால் கல்லூரி மீது மிகுந்த அன்பும்,
கல்லூரி பற்றிய பல்அறிவும் பெற்றவராய்த் திகழ்ந்தார்.
கல்லூரியில் கல்வி பயின்ற பருவத்தில் பேச்சு வன்மை மிக்கவராகவும். விளையாட்டுத் துறையில் சிறந்த வீரனாகவும் விளங்கினார். கல்லூரிச் சஞ்சிகையான “இந்து இளைஞன்” இன் ஆசானாகவும் கடமையாற்றினார். தமிழ்மொழி ஆங்கில மொழி என்பவற்றில் புலமையுடன் விளங்கினார். இவரது திறமையால் 1977ம் ஆண்டு இந்துக் கல்லூரியில் ஆசிரியராய் கடமையாற்றத் தொடங்கினார்.
பெளதிக விஞ்ஞானப் பட்டதாரியான இவர் க.பொ.த உயர்தர வகுப்புகளில் பெளதிகவியல் பாடத்தைக் கற்பித்தார். அத்துடன் இடைநிலை வகுப்புகளில் கணித பாடத்தையும் கற்பித்து வந்தார். பின்னர் பகுதித்தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு அதன் பின் உப அதிபராகவும், பிரதி அதிபராக வும் பதவி உயர்வு பெற்று கடமையாற்றி 1995 மே மாதம் ஒய்வு பெற்றார். ஆசிரியராகக் கடமையாற்றி வந்த பொழுது அவரிடம் உள்ள சிறந்த குணங்களை அறியக் கூடியதாக இருந்தது. எல்லா விடயங்களைப் பற்றி அறிந்தவராகவும், தர்க்கிக்கும் ஆற்றல் உடையவராகவும் விளங்கினார்.

கல்லூரிச் சமூகத்தினரின் சுகதுக்கங்களில் பங்கு கொள்ளும் மனித நேயம் மிக்கவராக விளங்கினார்.
ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் இந்துக்கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தலைவராகவும் நூற்றாண்டு விழாச் சபையின் செயலாளராகவும் செயற்பட்டார். இன்னும் பல பொறுப்புக்களை ஏற்று செயற்பட்டு கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவினார்.
இவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பொ. மகேஸ்வரன்
பிரதி அதிபர், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி.

Page 55
To Our Dedicated master Mr. Sivaraja
An appreciation of late Mr. Sivaraja our dear teacher who passed away.
Lives of great men all remind us We can make our lives sublime And, departing leave behind us Footprints on the sands of time.
Footprints of great people who have been an earth are never washed away. Men may die but their deeds are not forgotten.
In appreciation' of our dear teacher Mr. Sivaraja may we humbly express our heartfelt grief over his departure and our unaccountable gratitude for the most valuable service he rendered.
Mr. Sivaraja was a stable figure who strongly stood like a pillar of Kingston. He was devoted, dedicated. Non - assuming who wanted to be of service even at the time of his grave sickness, He was punctual and very caring for the students.
We know him as a versatile writer who contributed much to tamil literature. He recieved Sahitya mandala award for his remarkable display of outstanding talents.
He was liberated from the materialistic world and now he is a soul in great joy as a wave of bliss in the ocean of universe.

We grieve with his loved ones for the irreparable lose and pray that his life beyond be peaceful.
He is no more, But his rememberance dwells in our heart always.
Thank you
Students of Grade - 9 Kingston College International (Wellawatha Branch)

Page 56
→ ış9úgắqiņ9ú + Ļ9ĝ311098)GIẾT ->ழ9மிழிழ்ம + முதிர்ப் →ų,91|sq|No + 1&usgïgjoqogū
→ lự09||609013) + qī£IĘIQ9ođĩ)1909€.1ņ9@gÎ10911@g4?? 十 → ựcollífsg) + 1,9€/11/191?-திாதியம983)Ļ9ĝąÍueழ9திர்ஒன しgunQusg +aBggngsg之之之 ཀ་
→ loomugí09ƠIŲ9183ılíTŲogo «—
→ ış9úĝąjąog)(n + g|19ọ19??)ơi
→ somligiosgi@@ + q ossilsoņ? Įsigiloqī£đĩ)ņ09 e + ĝis 9ș09@flo||rı <- — !
qigorgiọornĝğrı909 + qsols||99műsortodoIlgiquo qosiqillaggio + uồuís II1988) தினதிெメĮúgif@ĮsigiloĮúgilo
quae Is@go soqueo

நன்றி நவிலல்
அன்பாலும் பண்பாலும் நல்வழி காட்டி வாழ்வின் இலக்கண இலக்கியமாக வாழ்ந்து இறைவன் நீள்கமல பாதத்தில் இணைந்த எம் தலைவரின் மறைவுச் செய்தி கேட்டு -
நேரில் வருகை தந்தவர்களுக்கும், தொலைபேசி - கடிதங்கள் மூலம் அநுதாபம் தெரிவித்த உற்றார் - உறவினர் - பந்து மித்திரர் அனைவருக்கும் மற்றும், எமது துயர நிகழ்வில் பங்கு கொண்டு உதவியவர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தினர் சார்பில், எமது உளமார்ந்த நன்றிகளை நவில்கின்றோம்.
மேலும்,
அந்தியேட்டி, வீட்டுக் கிரியைகளிலும் பங்கு கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிற் பங்களித்தோருக்கும் எமது இதயங்கனிந்த நன்றியினை நவில்கின்றோம்.
நன்றி
இங்ங்ணம், திருமதி சி. விமலநாயகி சி.மகிந்தன் சாந்தினி - பொ. சச்சிதானந்தம் சி.சேனாதிபதி மற்றும் குடும்பத்தினர்.
79/8, டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை, 12, கடை பிற் கவf Mதி, வெள்ளவத்தை, கொழும்பு - 06. நீராவியடி, யாழ்பாணம்,

Page 57


Page 58


Page 59