கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 1
இணுவில் சைவத்திரு இணுவில் சிவகாமிஅ
பத்தாவது ஆன்
: == *#= - ஒண்திஇை=
譬
GellGLI
இணுவில் சைவ
譬 இணு மார்கழி
မွိုး HoEEos
 

நெறிக் கழகம் நடாத்தும் றநெறிப்பாடசாலையின்
ண்டு நிறைவுவிழா
ாகுப்பு:
லிங்கம்
ոքսն է: த்திருநெறிக்கழகம், ! றுவில். 52OO7
இ=ஜ்வ?

Page 2

エ一ー・エ
இணுவில் சைவத்திருநெறிக் கழகம் நடாத்தும் இணுவில் சிவகாமிஅறநெறிப்பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவுவிழா
5убцовой
தொகுப்பு: மூ.சிவலிங்கம்
வெளியீடு: இணுவில் சைவத்திருநெறிόகழகம்,
இணுவில். to fog 2007 延公空 延公垩登

Page 3
ராகம்: பெலஹரி தாளம்: ஆதி பல்லவி
வையகத்தில் இணுைவையூர் சைவத்திருநெறிக் கழகம்
வழங்கும் சேவையில் சைவம் விளங்கிடுமே.
அனுபல்லவி தெய்வ நெறியான மேன்மைச் சைவரீதி விளங்க வைத்தே உய்யுநெறி காட்டிடுமே உயர் தெய்வப் பக்தி நல்கி,
சரணம் அறநெறிப் பாடசாலை சைவநெறி வளர்க்கும் திருமுறை பண்ணிசைகள் தெய்வீக மனம் கமழும் குருகுல முலம் கீதம் வாத்தியம் நிர்த்தியம் கொழிக்கும் பிரகாசம் தரும் பிஞ்சுக் குழந்தைக் கல்வியூட்டி,
ஆக்கம்; மஹாவித்துவான் நவிரமணிஐயர்
墅公驾一 坠公垩
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 02:- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்
 

குருபாதம் துணை
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் முநீலழுநீ.சோமசுந்தரதேசிகஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வழங்கிய
ஆசியுரை
AravYaleMA*eV/*NeYZ*meWA*uWAYVA*uW
அறநெறி வளர்க்கும் இணுவில் சைவத் 1 திருநெறிக்கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாக் குறித்து ஆசிவழங்குவதில் பேருவகை அடைகிறோம். சைவமும் தமிழும் ஓங்கி வளரும் புண்ணியபதி இணுவில், இத்திருவூரில் எக்காரியமும் நிறைவாகவும், சிறப்பாகவும் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் கடந்த பத்து ஆண்டுகளாக அறநெறிப்பாடசாலை, நூல் வெளியீடுகள், ஒலிநாடா வெளியீடுகள் எனச் சைவத்திருநெறிக்கழகம் ஆற்றிவரும் ஆத்மிகப் பணிகள் பாராட்டுக்குரியவை. இக்கழகத்தின் சிறப்புக்குத் தொண்டாற்றிவரும் அனைவரையும் நன்றியோடு பாராட்டுகிறோம். சீரும் திருவும் நிறைந்த இணுவில் கிராமத்தின் நற்பொலிவு காக்கும் கழகத்தார்க்கும், அன்பர் திரு.மூ.சிவலிங்கம் அவர்களுக்கும் எமது நல்லாசிகள்.
“என்றும் வேண்டும் இன்ப அன்பு”
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!!
ബിരിr
அன்னமிடும் வகைகள்
அன்னதானம் வழங்கும் நிலை கருதி மூன்றாக அழைக்கப்படுகின்றன. இறைவன் அடியர்களுக்கு வழங்குவது மகேஸ்வரபூசை ஆகும். ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கும், பணிபுரியும் பணியாளர்களுக்கும் வழங்குவது அன்னம் பாலிப்பு எனப்படும். ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவது அன்னதானம் என அழைக்கப்படும்.
م
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 03:- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 4
சிவகாமி அம்பாள் துணை
இணுவில் சிவகாமி அம்பாள் திருத்தலப் பிரதமகுரு சிவருநி.சாம்பசிவசோமசபேசக்குருக்களின்
ஆசியுரை
எல்லாம் வல்ல சிவகாமி அம்பாள் பெருங்கருணையுடன் அருள் சொரியும் இத்திருத் தலத்தின் முன்வாசலில் அமைந்துள்ள அன்னதான மண்டபத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் விஜய தசமி அன்று இணுவில் சிவகாமி அறநெறிப் பாடசாலை ஆரம்பமானது.
இப்பாடசாலை இணுவில் சைவத்திருநெறிக்
- கழகத்தினரின் ஏற்பாட்டில் அமைந்ததால் அதன் நிர்வாகிகள் என்னையும் ஆசியுரை வழங்குமாறு அழைத்தனர். எங்கள் அம்பிகையை நெஞ்சில் நிறுத்தி இப்பாடசாலை நன்கு வளரவேண்டுமென மனமுருகிவாயார வாழ்த்தியது இன்றும் நெஞ்சில் பதிந்துள்ளது. இவர்கள் தொடர்ந்து சிறப்பு விழாக்கள், வெளியீடுகள் யாவற்றுக்கும் என்னையும் அழைப்பார்கள். இப்பாடசாலை வளர உளமார ஆசிகூறினேன்.
இன்று தமது பத்தாவது ஆண்டு விழாவில் ஆறாவது வெளியீடான முப்பது சிவனடியார்களின் வரலாற்றினை சைவ மக்களுக்காக வெளியிடுகின்றனர். இவர்களின் எல்லா வெளியீடுகளும் மிகத் தரமானவை. யாவும் சைவசமயத்தவர்களுக்கு இன்றியமையாதவை. இன்று வெளியிடும் மிகச்சிறப்பான “இறையருட் செல்வர்கள்” என்னும் நூல் சைவ மக்களுக்கு மிகவும் உறுதுணையாகும் எனவும், இவ் அறநெறிப்பாடசாலை மேன்மேலும் வளர்ந்து மக்களுக்கு அரும்பணி ஆற்றவேண்மெனவும், இப்பணியைச் சிறப்புடன் இதயசுத்தியுடன் செயலாற்றும் எல்லா உறுப்பினர்களுக்கும் சிவகாமி அம்பாளின் அருள் கிடைக்கவேண்டுமெனவும் ஆசிகூறிப் பிரார்த்திக்கின்றேன். எல்லோரும் இன்புற்று வாழவேண்டும்.
“மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்”
சிவழுநீ.சாம்பசிவசோமச8பசக்குருக்கள்
ஆலய பிரதமகுரு, இணுவில் சிவகாமி அம்மன் கோவில்,
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 04 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்
 

செஞ்சொற் செல்வர்
ஆறு. திருமுருகன்
28, கையிலாச பிள்ளையார் வீதி,
ல்லூர், யாழ்ப்பாணம்.
Aru. Thirumurugan, BA, D, N. E. Vico Principal
kandavarodaya College Chunnakam, Sri Lanka
2 இணுவில் சைவத்திருநெறிக்கழகம் கடந்த
பத்து ஆண்டுகளாக ஆற்றிவரும் அரியபணிகளை வாழ்த்தாதவர்களில்லை. மழலைச் செல்வங்களை ஆற்றுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சிவகாமி அறநெறிப்பாடசாலை சீரிய முறையில் செயற் படுவது போற்றுதற்குரியது. மேலும் கழகத்தினால் வெளியிடப்பட்ட நூல்கள் தரமானவை; பயன் நிறைந்தவை. வரலாற்று ஆவணமாகப் பேணும் தகுதியுடையவை. இக்கழகத்தின் உயிர்நாடியாகச் செயற்பட்டு வருபவர் உயர்திரு.மூ.சிவலிங்கம் ஐயா அவர்கள். இப்பெரியாரது முயற்சியால் இணுவில் கிராமத்தின் பல நற்பணிகள் நிறைவேற்றப் பட்டு வருவதை யான் அறிவேன். ஆக்கபூர்வமான பணிகளில் இளைய தலைமுறையை வழிநடத்தும் சைவத்திருநெறிக்கழக நிர்வாகசபையினரை வாழ்த்துவதோடு, மேற்படி கழகத்தில் பத்தாவது ஆண்டு நிறைவு விழா குறித்து வெளியிடப்படும் மலர் சிறக்க நல்லாசி கூறி, சூரியர் சந்திரர் உள்ளவரை சைவத்திருநெறிக் கழகம் மிளிர வேண்டி அமைகிறேன்.
ஆறு.திருமுருகன்
நாம் செல்லும் பாதையில் குரு, பசு, தெய்வம், புனித நீர்நிலை) (தீர்த்தம்) தெய்வீகமரம் இவற்றைக் கண்டால் கோயிலில் சுற்றுவது போல வலப்பக்கமாகச் செல்ல வேண்டும். இதுவே மனுநீதியாகும்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 05 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்
لد

Page 5
ஆசியுரை இணுவில் சைவத்திருநெறிக்கழகம் நடாத்தும் சிவகாமி அறநெறிப்பாடசாலை பத்தாம் ஆண்டு நிறைவு விழா - 2007
囊 毅 கலி விருத்தம்
1. அந்தணரும் கோயில்களும் அருளாளர் பொருளாளர்
வந்தனைசெய் புலவர்குழாம் வைகிவா ழிணையிலியூர் சொந்தமுறு வயல்புலங்கள் தூயகனி மரங்களுடன் எந்தநாளும் தவழ்ந்து தென்றல் இனிதுவிளையாடுமூர்.
2. சிவகாமியம்மை திருக் கோயிலது முன்றலிலே
நவமான அறநெறிப் பாடசாலை ஆண்டு பத்தாய் உவமான மில்லாமல் உயர்ந்து நின்று கொடிநாட்டி தவமாக செயற்படுநல் தன்மைபெருஞ் சாதனையே.
3. சின்னஞ்சிறு பாலருக்குச் சீரிளமைக் காலத்திலே
மன்னும்படி சிவபக்தி மார்க்கஞ்சேர் திருமுறைகள் இன்னும்பல நீதிநெறி நூல்களையும் கற்பித்து பென்னம்பெரி தாகஅது பேணிப்பிறங் கியதின்றே.
4. ஆக்கமா யறநெறிக் கழகத்தின் சார்நூலாய்
ஊக்கமாய் அநெறிக் களஞ்சியமும் இணுவையூர் பூக்குமா திருவூரும் புகழ்வீர மணி பாட்டும் (ஒலிநாடா) வாக்காகத் திருமுறையின் வகைநூலும் வெளியிட்டார்.
5. ஆண்டாண்டு மாணவர்கள் ஆசிரியர் உதவியினால்
தூண்டுபே ரறிவாலே தொடராக விழா எடுத்தார் ஈண்டு பத்தாம் ஆண்டாக இனியமல ரொன்றெழுதி பூண்ட ழகாய் வெளியிட்டார் புதுமணமும் பொலிந்திடவே.
6. எள்ளலின்றி, எதிர்காலம் எங்கள்சிறா ரறியும்படி
வள்ளுவரே முதலாக வாழ்ந்த முப்பான் பெரும்புலவர் உள்ளவுயர் வரலாறும் ஒருங்கெழுதி அம்மலரை வள்ளலென வெளியிட்டார் மாமனிதர் சிவலிங்கம்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 06:- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்
 

வேறு
எண்சீர் ஆசிரிய விருத்தம் அன்னை சிவகாமி அரும் பெயரைக் கொண்ட அழகான அறநெறிப் பாடசாலை வாழ்க சின்னஞ்சிறு அடியெடுத்துச் சேர்ந்து விளை யாடி சிறப்பாகக் கற்றவரும் செல்வங்கள் வாழ்க பென்னம்பெரி தறிவோடு கற்பித்து நாளும் பெருஞ்சேவை புரிகின்ற பேராளர் வாழ்க பொன்னெனவே பத்தாண்டு பொருந்த மலர்விட்ட புண்ணியவராம் ஊரவரும் புகழுடனே வாழ்வாரே.
இணுைவில் / அளவெட்டி, முதுபெரும்புலவர்,
கலாபூசணம் - ஆசிரியர் வை.க.சிற்றம்பலம்
/キ
།ད་
எப்பழ வணங்குவது? * தலைமேல் ஒரு அடி தூக்கி இருகரங்களையும் கூப்பித் தெய்வங்களை
வணங்க வேண்டும். மகான்கள், குரு முதலியோரை நெற்றிக்கு நேரே கைகூப்பி வணங்க வேண்டும். மன்னன், தந்தை ஆகியோரை வாய்க்குநேரே கைகூப்பி வணங்க வேண்டும். பெரியோர்கள், அறநெறியாளர்களை மார்புக்குநேரே கைகூப்பி வணங்க வேண்டும். * பெற்றெடுத்த தாயைத் தன் வயிற்றுக்கு நேரே கைகூப்பி வணங்க வேண்டும். எமது வலக்கரம் முன்வந்து உணவு ஊட்ட, எழுத, நற்காரியங்கள் செய்ய உதவுகிறது. இடக்கரமோ ஈனமான காரியங்களுக்கும் அருவெருக்கக்கூடிய காரியங்களுக்கும் பயன்படுகிறது. ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமம் என்பதால் எதிர்மாறான இருகைகளும் ஒன்றுசேர்ந்து கூப்பி வணங்கு கின்றன. கர்வமிகுதியான தலைக்கணம் உள்ளவனும் இறைவன் முன் தலைகுனிந்து வணங்குகிறான். இதனால் இறைவன் ஒப்புயர்வற்ற உயர்ந் .தவரெனக் காணப்படுகிறார் ܢܬ
4ސ...................................................
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 07 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 6
af6Jupu ub
இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலையின் பிதாமகரும் சங்கம் வளர்த்த பேராசானும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்களின்
ஆசிகள்
அருள்மிகு அன்னை சிவகாமியின் திருவருளால் அவரது திருக்கோயில் முன்றலில் சிவகாமி அறநெறிப்பாடசாலை அமைந்திருப்பது ஒரு பெரும் பேறாகும். தமிழ், சமயம், இசை, நடனம் முதலியவை இங்கு கற்பிக்கப்படுகின்றன. தக்க ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். கல்வித் தருமம் ஏனைய தருமங் களிலும் மேலானது எனப் பல பெரியார்கள் தெரிவித்துள்ளனர்.
நூற்றாண்டுகளாக இங்கிருந்த பெரியார்கள் இத்தலத்தில் திருமுறை இசைபாடிப் பணிந்தனர். இப்பாடல்கள் இக்கோயிலுக்குச் சிறப்பாக அமைந்தன. அப்போது பணியாற்றிய பெரியார்கள் மறையவும், பசனை பாடும் பணி நிறுத்தப்படும் நிலை வந்ததும் இந்த அறநெறிப்பாடசாலை மாணவர்கள் அன்னை சிவகாமியின் திருத்தல வாசலில் பெருவிழாக் காலங்களிலும், வெள்ளிக்கிழமை களிலும் திருமுறைகளை ஒதுவது பாராட்டக்கூடியதாகும்.
இப்பாடசாலை பத்து ஆண்டுகள் நிறைவுகண்டுள்ளது. சைவ சமயம், திருமுறைப் பண்ணிசை, தமிழறிவு, நடனம் ஆகிய பாடங்களை வளரும் சிறுபிள்ளைகள் கற்பதற்கு இந்த அறநெறிப்பாடசாலை உதவுகிறது. இப்பாடசாலையை நிர்வகிக்கும் இணுவில் சைவத் திருநெறிக்கழகம் இன்று வெளிவரும் “இறையருட்செல்வர்கள்” என்னும் அரியநூலைத் தமது ஆறாவது வெளியீடாக மலரச் செய்துள்ளனர். சமயம் சார்ந்த இவர்களது எல்லா வெளியீடுகளும் சைவ உலகம் மெச்சக்கூடியவை. இவற்றை வெளியிடுவதுடன் அறநெறிப்பாடசாலையைக் கிரமமாக நடத்திவரும் அனைவரும் அன்னை சிவகாமியின் அருளுக்கு உரியவர்கள்.
“இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க’ “சிவகாமி அநநெறிப் பாடசாலைப் பணிகள் வளர்க”
தமிழவேள்.இ.க.கந்தசுவாமி இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 08 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்
 

சிவமயம்
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் நடாத்தும் சிவகாமி அம்மாள் அறநெறிப்பாடசாலைழித் பத்தாவது ஆண்டு நிறைவுவிழா - 2007 உருவில் பிரதேச செயலாளர் ழஞ்சுளாதேஷி தனபாலன் அவர்களின் வாழ்த்துச்செய்தி
“சிவகாமி அம்மன் தாளில்
சிறுவர்கள் சீர் மேவு சிவநெறியாம் அறநெறியை சிறப்பாகப் பெற்றிடிடவே
பத்த ஆண்டுப் பாதையிலே பக்குவமாய் பதம் பதித்த பாடசாலை பதியினிலே வளர்த்தெடுத்த இணுவில் சைவத்திருநெறிக் கழகத்தோடு நீ வாழி!”
கல்வி, செல்வம், வீரம், இயல், இசை, நாடகம், நடனம் எனும் அருங்கலைகள் அனைத்திற்கும் யாழ்நகரின் மகுடம் போன்றது இணுவையூர். இம் மகுடத்திற்கு பொட்டு வைத்தாற் போன்று அமைந்தது சிவகாமி அம்மன் ஆலயம். ஆலயத்திற்கு அழகு அணிகலன்களாக விளங்குவது சைவத்திருநெறிக்கழகமும் அங்கு அமைந்துள்ள அறநெறிப்பாடசாலையும் எனின் மிகையாகாது.
கலை வளர்த்த கலைஞர் பெருமக்கள், அறிஞர்கள், பெரியோர்களைத் தன்னகத்தே பெரும் செல்வமெனக் கொண்ட இணுவில் பெரும் பதியில் சிவகாமி அம்மன்தாளில் அமைந்த இவ் அறநெறிப்பாடசாலை இன்று பத்தாண்டுகளில் பார்போற்றும் பணியை நிறைவேற்றி தலைநிமிர்ந்து நிற்கின்றது. இதன் பணி ஆயிரமாயிரம் காலங்கள் தொடர அருள்தரும் நாயகி என்றும் துணையாவாள்.
மனிதனை மனிதனாக்கவல்லது அறநெறி. இன்று மனிதன் தனது உண்மைத் தன்மையைத் தான் உணராமல் வாழுகின்றான். வழிபாடு செய்யக் கற்றுக்கொள்கின்றானே அன்றி தன்னுள் உறையும்
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 09 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 7
தெய்வதத்துவத்தை உணர முயற்சி செய்வதில்லை. இன்றைய இவ்வாறான சமூகக் கலாசாரச் சூழலிலே மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்னும் நெறிமுறைகளை அளிக்கவல்ல அறநெறிப் பாடசாலைகளின் பணியானது இன்றைய எமது வளரும் சந்ததியினருக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
மனித வாழ்வு என்பது உடலால் நல்லவற்றைச் செய்து மனதால் நல்லவற்றை நினைத்து ஆத்மானந்தத்தை அடைவதாகும். இணுவில் சமூகத்திற்கு மனிதனுள் உறையும் தெய்வீகத்தை வெளிக் கொணர அறநெறியில் பத்தாண்டுகளாய் பணி செய்து வரும் இணுவில் சிவகாமி அம்பாள் அறநெறிப்பாடசாலை பாரினில் தழைத்தோங்கப் பாராட்டி வாழ்த்துகின்றேன். வாழி!
மஞ்சுளாதேவிதனபாலன் பிரதேச செயலாளர், வலி.தெற்கு, உடுவில்.
எழுவகைத் தீட்சை - * மீன் தனது முட்டைகளைத்தன் பார்வையினால் பெரிக்க வைக்கிறது. அவற்றின் பசியையும் போக்குவதுபோல குருநாதர் தமது சீடனை அருட்பார்வையால் ஞானமீந்து அருளல் நயனதிட்சையாகும். * பறவை தனது முட்டைகளைச் சிறகினால் அணைத்து வெப்பமூட்டி குஞ்சு வெளிப்படச்செய்வதுபோல குரு தனது சீடனைத் தனது கரத்தினால்பரிசிப்பது பரிசிதீட்சையாகும். * பட்டாடை போட்டு மறைத்துச் சீடனின் வலக்கரத்தில் திருவைந்தெழுத்தை
உபயோகிப்பது வாசகதீட்சையாகும். * ஆமை கரையிலிருந்தவாறே தன் முட்டையை தனது மனதில் நினைக்க ஆமைக்குஞ்சு வெளிப்படுவதுபோல குரு தன் சீடனை அருள் உருவாய்ப் பாவிப்பது மானசதீட்சை எனப்படும். * பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளின் உண்மையினையும் இயல்பினையும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலம் நீக்கி முத்திப்பேறடையச் சிவாகமங்களின் வழியை உபதேசிப்பது சாத்திரத் தீட்சையாகும். * சிவயோகம் பயில உபதேசிப்பது யோகதீட்சையாகும். * குண்ட மண்டலமிட்டு அக்கினிக் காரியஞ்செய்து பாசத்தைப் போதிப்பது
அவுத்திரி தீட்சையாகும். J
-ܠ
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 10 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

foLDuub
இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலையின் பத்தாவது ஆண்டு மலருக்கு
es es C. வாழ்த்துச்செய்தி
“இரக்கச் சுரபி இணுவைச் சிவகாமீ அரக்கத் தயர்கள் அழித்திடுவ தெக்காலம்”
இணுவில் சிவகாமி அம்மன் திருக்கோவிற் சூழலில் பலதரப்பட்ட வசதியீனங்கள் முட்டுக் கட்டைகளையும் கடந்து இணுவில் சைவத்திருநெறிக் கழகம் சிறுவர் சிறுமியர்களுக்குச் சைவசமய
வகுப்பு நடன, இசை வகுப்புக்கள், தமிழ் ஆங்கில வகுப்புக்கள், பண்ணிசை வகுப்பு என்பனவற்றை நடாத்தி வருவதன் மூலம் தொடர்ந்தும் அறநெறி ஒழுக்கமும், இறை நம்பிக்கையும், அன்பு அணுகுமுறையும் கொண்ட புதிய தலைமுறைகளை உருவாக்கி வருவது தெய்வீகப் பணியாகும்.
யாழ் மாவட்டத்திலேயே அதிகூடிய காலச் சேவையாகப் 10 ஆண்டுப் பணியை நிறைவேற்றும் இந்த அறநெறிப்பாடசாலை தொடர்ந்தும் உலகுள்ள மட்டும், தீவிரமாகப் பணிகள் மேற்கொண்டு வர எல்லாம் வல்ல சிவகாமி அம்மன் திருவடிகள் துணைநிற்க வேண்டி வழுத்தி வாழ்த்துகிறேன்.
ஸ்காபறோ, அன்புடன்
560 Ls. பண்டிதர்.ச.வே.பஞ்சாட்சரம்
அறநெறி, வாய்மை, பணிவு, ஆன்மிகப் பயற்சி, நூல் அறிவு, ஒழுக்கம், மனவலிமை, நல்வழியில் தேடிய செல்வம், வீரம், இனிமையாகப் பேசும் திறன் இவைகளே சொர்க்கத்திற்கு இட்டுச்செல்லும் வழிகளாகும்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 11 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 8
2fl5Loub
96ിഞ്ഞുങ്ങഖബ ബിഞ്ഞിബrശ
இளமையில் கல்வி சிலையில் எழுத்தென்பார்கள். இளம்பிஞ்சு உள்ளங்களில் ஏற்படும் பிரிவுகள் எல்லாம் வாழ்க்கையின் காலத்தால் அழியாதவையாக நிலைத்து எம் சிந்தையுட் புகுந்து எம்மை வாழ்நாட்கள் பூராகவும் சிந்திக்க வைக்கும் மைற்கற்களாகக் காணப்படுவதை உணர்கின்றோம்.
சிறுபராயத்தில் ஊட்டப்படும் கல்வியானது மேம்பாடுடையதாகவும், ஆத்மீகத்தன்மை மிக்கதாகவும் இருந்தால் மாத்திரமே ஒருவனது வாழ்க்கை வளமுள்ளதாக அமையும். சிறு பராயத்தில் அவன் ஏந்தும் கல்விப் பிச்சாபாத்திரத்திற்கு ஏற்பவே வாழ்நாட்களில் அவனை நாடிவரும் ஏனைய விடயங்கள் வாழ்வியல் விடயங்கள் இனங்காணப்பட்டு அவனை நல்ல உள்ளம் படைத் தவனாக நல்வாழ்வியல் சமூகத்தின் ஊன்று கோல் போன்றவனாக இனங்கான வழிசமைக்கின்றது.
இந்தவகையில் இளம்பராயத்திலேயே ஆத்மீகத்தன்மை மேம்பட வேண்டுமென்னும் அருள்நோக்கோடு 1997 ஆம் ஆண்டு அன்னை சிவகாமியின் அருளாட்சிக்குட்பட்ட விஜயதசமி நன்னாளில் இவ்வறநெறிப்பாடசாலை சான்றோர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று தனது பத்தாவது அகவை அடைந்துள்ளது. இந்நன்நாளை மனத்தில் இருத்தி “இறையருட்செல்வர்கள்’ என்னும் செம்மை சார்ந்த நூல் வெளிவருவது அன்னை சிவகாமியின் இறையருட்கடாட்சமே. இந்த நூலானது எதிர்காலத்தில் மாணவர்களது சமயக்கல்வி மேம்பாட்டிற்கு ஏற்றதோர் ஊன்றுகோலாகத் திகழும் என்பது திண்ணம்.
நாற்பதிற்கு மேற்பட்ட மாணவச் செல்வங்களைத் தன்னகத்தே கொண்டு அவர்களுக்கு சமய உணர்வினை ஊட்டுவதோடு மட்டும் நின்றுவிடாது பண்ணிசை, நடனம், நல்லொழுக்கம் போன்ற துறை களிலும் மேம்படச் செய்யும் நோக்கோடு அதற்கான கற்கைநெறி இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 12 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

களும் நடாத்தப்பட்டு வருவது தங்கப்பதக்கத்திற்கு முத்துக்கள் பதித்ததற்கு ஒப்பாகும்.
இணுவில் சைவத்திருநெறிக் கழகத்தின் ஆதரவில் நடாத்தப்
படும் இப்பாடசாலையானது ஆத்மீகச் சூழல் நிறைந்த அன்னை
சிவகாமியின் ஆலயச் சூழலை மேலும் புனிதமாக்குவதற்கு அன்னையவள் எண்ணியசெயலின் விளைவே எனலாம்.
“வாழ்க இணுவைச் சைவத் திருநெறிக்கழகமும் அறநெறிப்பாடசாலையும், வளர்க அதன் பணி இப்புவியில்’
க.இரத்தினபூபாலன்
s அட்டவீரட்டானங்கள் །
சிவபெருமான் உயிர்களின் தளைகளைப் போக்கும் வண்ணம் பல
திருவிளையாடல்களைப் புரிந்தவர். சங்காரமாகிய வீரச்செயல்களைப் புரிந்தவைகளே
அட்டவீரட்டானங்கள் என அமைந்துள்ளன. அதன் விபரங்களை அறிவோம்.
திருக்கடையூர் வீரட்டானம் - எமனைக் காலால் உதைத்தது திருப்பரியலூர் வீரட்டானம் - தக்கன் சிரம் கொய்தது திருவழுவூர் வீரட்டானம் - யானையை உரித்தது திருவிற்குடி வீரட்டானம் - சலந்தராசுரனை அழித்தது
திருக்குறுக்கை வீரட்டானம் - காமனை எரித்தது திருக்கண்டியூர் வீரட்டானம் - பிரம்மன் சிரம் கொய்தது திருவதிகை வீரட்டானம் - திரிபுரம் எரித்தது திருக்கோயிலூர் வீரட்டானம் - அந்தகாசுரனை அழித்தது.
மகாலட்சுமி வாசஞ்செய்யும் இடங்கள் 1. யானையின் முகம் 2. பசுவின் பின்புறம் 3. நறுமணமுள்ள மலர்
4. திருவிளக்கு 5. சந்தனம் 6. தாம்பூலம் 7. கன்னிப்பெண்கள் 8. கோமயம் 9. உள்ளங்கை 10.வேள்விப்புகை 11. பசுமாட்டின் கால்த் தூசி
لم ܢܬ
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 13 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 9
2foul Duub
அறநெறிப்பாடசாலை பத்து ஆண்டுகள் பூர்த்தி தொடர்பான வாழ்த்துச்செய்தி
எமது அறநெறிப்பாடசாலை பத்து ஆண்டுகள் நிறைவையொட்டி இம்மலர் வெளிவருவதையிட்டுப் பேருவகையடைகிறேன். குழந்தைகள் அற்புத மானவர். இக்குழந்தைகள் முதல் எட்டு ஆண்டு களில் பெறுகின்ற பராமரிப்பும், கவனிப்பும் மிகவும் முக்கியமானவை. இவ்வநுபவங்கள் அவர்தம் வாழ் நாள் முழுவதும் செல்வாக்குச் செலுத்தவல்லன. இக்குழந்தைகளின் உணர்வுகள் உண்மையானவை. சக்தி வாய்ந்தவை. எனவே பாலர் பருவத்தில் இருந்து எமது குழந்தைகளை நல்ல சூழலில் வளர்த்தல் அவசியமாகின்றது. குறிப்பாக ஆன்மிகச் சூழலில் வளர்த்தல் அவசியம். இதனுடாகச் சிறுபராயத்தில் இருந்து இக்குழந்தைகள் நல்ல பழக்கவழக்கங் களைக் கற்றுக்கொள்வர். ஏனையவர்களின் உணர்வுகளை மதித்தல், மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், மூத்தோரைக் கெளரவித்தல், அயலாரை நேசித்தல், அவர்களுடன் இணங்கி இருத்தல் முதலான அரிய பண்புகளை வளர்க்க முடியும்.
பல நெருக்கடியான காலகட்டத்திலும் இப்பாரிய பணியைத்
தொடரும் தொண்டர்கள் சேவை மகத்தானது. கொழும்புத் தமிழ்ச்
சங்கத்தின் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
கா.வைத்தீஸ்வரன்
துணைத் தலைவர், கொழும்பு தமிழ்ச்சங்கம்.
அறநெறி, வாய்மை, பணிவு, ஆன்மிகப் பயற்சி, நூல் அறிவு, ஒழுக்கம், மனவலிமை, நல்வழிழில் தேடிய செல்வம், வீரம், இனிமையாகப் பேசும் திறன் இவைகளே சொர்க்கத்திற்கு இட்டுச்செல்லும் வழிகளாகும்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 14 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்
 

foLDub வாழ்த்துச்செய்தி
தசர விழாக்காணும் இணுவில் சிவகாமி அம்மன் அறநெறிப்பாடசாலை இன்று பூரிப்படை கின்றது. இந்துமதத்தின் விழிப்புணர்வுக்கு காலத்திற்கு காலம் தோன்றிய மகான்களும் ஞானிகளும் வாழ்ந்து காட்டிப் போதித்த வழி முறைகள்தான் இன்றும் நமது சமய வாழ்வை மேம்படுத்தி நிற்கின்றன.
கலைக்கிராமத்தில் கலைகளை வளர்க்கும் களமாக அமைவது சிவகாமி அம்மன் அறநெறிப்பாடசாலை ஆகும். இன்று பத்து ஆண்டினைப் பூர்த்தி செய்து பதினொராவது ஆண்டில் காலடியினை எடுத்து வைத்து பற்பல சாதனைகளை நிலைநாட்டிக் கால்பதித்துக்கொள்ள வேண்டும்.
நாயன்மார்களது பாடல்களை இலட்சியமாகக் கொண்டு இயங்குவது மேலும் சிறப்பினை ஊட்டும் அப்பாலும் அடிசார்ந்தார், “அடியார்க்குமடியேன்” என்று பாடிய சுந்தரமூர்த்திநாயனாருடைய அருட்பாடலும், “வையகமும் துயர்தீர்க்கவே” என்று பாடிய ஞானசம்பந்தருடைய வாழ்த்தும், "நாம் ஆர்க்கும் குடியல்லோம்” என்று பாடிய அப்பர் சுவாமிகளுடைய வீரமுழக்கமும் எமது இந்து சமயத்துக்கு அரண்செய்வதாகும்.
அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டிலும் கற்கும் மாணவர்கள் தமது திறமைகளை தடம்பதித்துச் செல்லவேண்டும் என உளமாரப் பாராட்டுகின்றேன்.
த.பிரதீஸ்வரன் இந்துசமய அபிவிருத்தி உதவியாளர் (66535|TLDb) யாழ் மாவட்ட செயலகம்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 15 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 10
2 - fl5Duub
இணுவில் சைவத்திருநெறிக்கழகம், சிவகாமி அறநெறிப்பாடசாலையின் பத்து ஆண்டுகளில்.
“ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்
ஞானகுரு வாணிபதம் நாடு”
இணுவில் கிராமத்தின் பல சிறப்புக்களுக்கும் - 60)LDuILDTě 6ss6IT(BIG56)g) 60)56)]g-LDuIld. Sšfg-LDu
நெறியை இளஞ்சிறார்களுக்கு இளமையிலே ஊட்டுவது பசுமரத்தாணி போல பதியும். இதனால் அறக்கல்வி போதிக்கும் சிந்தனை எழுந்தது.
இணுவில் கிழக்கில் சிவகாமி அம்பாளின் பேரருளால் இப் பகுதியிலுள்ள யாமரும் ஆன்மிக சிந்தனையுடன் அம்பாளின் தூய பணியில் தம்மை அர்ப்பணித்துள்ளனர். அரசு நாடெல்லாம் அறநெறிப் பாடசாலைகளை அமைக்கும் பணியில் கிராமங்கள் தோறும் தோற்றுவிக்க இருந்த காலத்தில் உடுவில் பிரதேசச் செயலர் அமரர்.திரு.ஆமகாலிங்கம் அவர்களின் ஆலோசனையின் பேரில் இப் பகுதியில் ஓர் அறநெறிப்பாடசாலை நிறுவ ஏற்பாடானது.
1997 விஜயதசமியான புனித நன்நாளில் சிவகாமி அம்பாளின் திருத்தல முன்றலில் அமைந்துள்ள அன்னதான சபை மண்டபத்தில் “சிவகாமி அறநெறிப்பாடசாலை” அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதற்கு அமரர்.திரு.ஆமகாலிங்கம் அவர்களும் இவ்வூர் சமயப் பெரியார் களும் சமூகமளித்து எம் மக்களுக்கான அறக்கல்வி போதிக்கும் சுடரை ஏற்றினர்.
அன்னதான சபையினரின் வேண்டுதலின்பேரில் வார இறுதி நாட்களில் சமய வகுப்புக்கள் தொடங்கியது. அன்னை சிவகாமியின்
கடைக்கண் வீச்சில் அமைந்த இப்பாடசாலை தொடர்ந்து இயங்கித்
தனது பத்தாம் ஆண்டைப் பூர்த்திசெய்துள்ளது. இப்பத்தாண்டு இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 16 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்
 

காலத்தில் நடாத்தப்பட்ட விழாக்களில் நாடறிந்த சமயப் பெரியார் களான கல்விமான்கள், அருளாளர்கள் இங்கு வருகை தந்து எமது பாடசாலை மாணவர்களை மட்டுமன்றி, ஊர்மக்களையும் தமது சக்திவாய்ந்த இனிய பேச்சினால் நெறிப்படுத்தினர். நாமும் செயற் பட்டோம். அன்னையின் புகழோங்க அன்புள்ளம் கொண்ட அருளாளர்கள் எம்மை அரவணைத்து ஆசிகூறியதால் அறநெறிப் பாடசாலை வளர்ந்தது. இங்கு வந்த அருளாளர்களின் காலடிபட்ட இப்பகுதி மண் மேலும் புனிதமானது. இறையருளும் அன்புள்ளமும் கொண்ட பலர் இன்று சிறப்புடனும் மனிதநேயத்துடனும் அன்னை சிவகாமியின் பணியில் தம்மை இணைத்துள்ளனர். யாவரும் அறநெறிப்பாடசாலையை முன்னேற்றும் நோக்கில் ஆதரவு நல்கி வருகின்றனர்.
கற்றலும் கற்பித்தலும்
சிவகாமி அறநெறிப்பாடசாலையில் ஆரம்பத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் குறைவாகவே காணப்பட்டனர். எமது பெரு முயற்சியால் அண்மையில் உள்ள பிள்ளைகளை வீடுதோறும் சென்று அழைத்துவந்தே கற்பிக்க நேர்ந்தது. தமது பாடசாலைக்கல்வி, பிரத்தியேக கல்வி நிறுவனத்தின் மேலதிகக்கல்வி, வீடுகளிலுள்ள தொலைக்காட்சித் தொல்லை, விளையாட்டு ஆகியவற்றில் தமது பொழுதைக் கழிக்கும் இவர்களுக்கு அறநெறிப்பாடசாலைக் கல்வி பெரிய பழுவாக இருந்தது. இதேவேளையில் எமது அறநெறிப் பாடசாலையில் சமயநெறி, பண்ணிசை, நடனம் (காவடியாட்டம்) போன்ற சிறந்த பாடங்கள் அவர்களை எம்பால் ஈர்த்தது.
முதலில் எம் அயலிலுள்ள நல்லாசிரியர் திரு.த.செல்வரத்தினம் அவர்கள் எமது வேண்டுதலின் பேரில் இருவருட காலம் நற்கல்வி போதித்ததுடன் வருடாவருடம் நடைபெறும் பரீட்சைகளையும் நடாத்திப் பூரண ஒத்துழைப்பு வழங்கினர். இவரின் கற்பித்தலிலும் அரவணைப்பிலும் அதிக நாட்டங்கொண்டு கூடுதலான மாணவர்கள் சேரவும் அவருடன் இணைந்து தொடர்ந்து கற்பிக்க முன்வந்தவர் செல்வி சசிசுகேதிணி ஐயாத்துரை அவர்கள். இவர் ஏழு வருடகாலமாகத் தனது பணியை மேற் கொண்டார். மேலும் இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 17 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 11
செல்விகள் ஜெயகெளரி பாலநாதன், வினோபா விநாயகமூர்த்தி, கவிதா பாலசுப்பிரமணியம், கோகுலவதனி நவரத்தினராசா, கலைவாணி அருளானந்தம் ஆகியோரும் திருமதி பத்மினி மகேந்திரன், செல்விகள் சங்கீதா தவராசா, பிரசன்னா இராமநாதன், தனுஷா குணபாலசிங்கம் ஆகியோர் இப்பத்து வருட காலமும் ஒருவர் விட்டுச்செல்ல மற்றவராக அயராது அரும்பாடு பட்டு இப்பாடசாலையை வளர்த்து வந்தனர். தற்போது நாற்பது பிள்ளைகள் படிக்கின்றனர். வெவ்வேறு பாடங்களுக்கான ஆசிரியர் என்ற வகையில் ஐந்து ஆசிரியப் பெருந்தகையினர் பயன்கருதாது அரிய சேவை யாற்றுகின்றனர். இவர்களின் நல்ல சிந்தனையை நோக்கிய அன்னை சிவகாமி கருணை கூர்ந்ததால் பல முன்னேற்றங்களும் கண்டுள்ளனர். யாவும் அன்னையின் அருளாசி ஆகும்.
வகுப்புக்களும் பயன்களும்
எங்கள் அநநெறிப் பாடசாலையில் ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு ஒன்பது வரையிலான மாணவர்களே கற்கின்றனர். பின் தமது பாடசாலைப் பாடநெருக்கடியும், மேலதிக வேலைப்பளுவும் அவர்களைத் தாமாகவே விலகவைக்கின்றது. அறநெறிப்பாடசாலை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் இரண்டு மணி முதல் ஐந்தரை மணி வரை சமயபாடம், பண்ணிசை, நடனம் போன்ற பிரதான பாடங்கள் பயில உதவுகின்றது. பண்ணிசை மூலம் பன்னிரு திருமுறைகள் வரிசைக்கிரமப்படி பிழையின்றி ஒதப் பயில்கின்றனர். சமயவிழாக்கள், சமயகுரவர்களின் குருபூசைத்தின விழாக்கள், நவராத்திரி விழாக்கள் போன்றவற்றில் தாமே முன்வந்து பேச்சு, வழிபாடு, பாராயணம், பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளவும் பழகி யுள்ளனர். இவ்விசேட விழாக்களில் மதப்பெரியார்களை அழைத்து வந்து நல்லுபதேசம் செய்யவும் வகைசெய்தோம். மாணவர்களை பூசைகள், வழிபாடுகளில் எமது இணுவில் சைவத்திருநெறிக்கழகத் தலைவர் திரு.கெ.தவராசா அவர்கள் வழிப்படுத்துகிறார். வெள்ளிக் கிழமை தோறும் எமது அறநெறிப் பாடசாலை மாணவர்கள் அன்னை சிவகாமியின் முன் மண்டபத்தில் அமர்ந்து திருமுறைகள் ஒதி மகிழ்கின்றனர். இப்பிள்ளைகள் சிவகாமி அம்மபாளின் பெருவிழாக்
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 18 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

காலத்தில் அம்பாள் வெளி வீதியுலா வரும்போது திருமுறைகள் ஓதி யாவரையும் தம்பால் ஈர்க்கின்றனர்.
மேலும் இந்துசமய கலாசார யாழ் திணைக்களத்தால் கோண்டாவில் நெட்டிலிப்பாய் அறநெறிப்பாடசாலையில் நடாத்தப்பட்ட அப்பர் குருபூசைவிழாவிலும், இணுவில் இளந்தொண்டர் சபை அறநெறிப்பாடசாலையில் நடாத்தப்பட்ட திருஞானசம்பந்தள் குருபூசை விழாவிலும் சிறந்த நடன நிகழ்வுகளை வழங்கிப் பாராட்டினைப் பெற்றனர். இதே திணைக்களத்தினரால் யாழ் நல்லூர் நாவலர் மணி மண்டபத்தில் 18.08.2007 அன்று நடாத்தப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் மகா உற்சவகால ஆன்மிக விழாவில் பண்ணிசை ஒதிப் பெருமதிப்பைப் பெற்றனர்.
இந்துகலாசாரத் திணைக்களத்தினரால் நடாத்தப்பட்ட சேக்கிழார் விழாவுக்கான நாடகப்போட்டியில் எமது மாணவர்கள் இளையாண்குடிமாற நாயனாரின் நாடகத்தை நடித்துக் காட்டி வலிகாம வலயத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளனர். (இப் பிள்ளைகளில் இருவர் 15 வயதுடையவர்கள். ஏனையோர் 12 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள். இவர்கள் மேடையேறி நடிக்கப் போதிய பயிற்சியில்லையென நாம் கருதியபோது இவர்கள் தாமாகவே முன் வந்து ஆசிரியை செல்வி.த.சங்கீதா அவர்களின் ஊக்கத்தினால் குறுகியகாலப் பயிற்சியுடன் மேடையேறினர் என்பது குறிப்பிடத் தக்கது.) இவர்களின் நாடகத்தை நெறிப்படுத்தியவர் எம்மூர் செல்வன்.இ.தமிழ்வாணன் ஆவார். மேலும் வலயமட்டத்தில் பேச்சு, கட்டுரை எழுதுதல் போட்டிகளிலும் சிறப்புப் பரிசில்கள் பெற்றனர். இத்திணக்களத்தால் நடாத்தப்படும் அறநெறிப்பரீட்சை தர்மாசிரியர் போட்டிப் பரீட்சை யிலும் எமது மாணவரும் ஏனைய எம்மூர் மாணவரும் எம்பாடசாலை ஊடாக பங்குபற்றி பல சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
30.10.2007 அன்று உடுவில் பிரதேச செயலகத்தில் நடை பெற்ற சிறுவர், முதியோர் தின விழாவில் நடன ஆசிரியை திருமதி பத்மினி மகேந்திரன் அவர்களின் நாட்டியாலய மாணவியர் சிலருடன் எமது மாணவரும் இணைந்து நடாத்திய நாட்டிய நாடகத்தில் பங்குபற்றித் தமக்கென உரிய கவர்ச்சியையும் பெருமையையும்
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 19 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 12
தேடித்தந்தனர். இங்கு பயிலும் மழலைகளின் சமயக்கல்வி முன்னேற்றம் கருதி வருடாவருடம் பரீட்சைகள் நடாத்தி மாணவர்கள் யாவருக்கும் சிறந்த பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கின்றோம்.
எமது அறநெறிப்பாடசாலையில் கற்கும் மாணவர்கள் உண்மை பேசுதல், மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோரை மதித்துப் போற்றி வணங்குதல், முதியோரை, மெலியோரை அன்புடன் நேசித்தல், இன்னுரை பேசுதல் ஆகிய நற்பண்புகளையும் பேணி வருகின்றனர்.
இப்பாடசாலையில் நடாத்தப்படும் விழாக்களின் போது திருமுறை ஒதுதல், பேச்சு, நடனம், காவடியாட்டம், வில்லிசை போன்ற பல நிகழ்வுகளிலும் ஆர்வமாகப் பங்குபற்றி யாவரையும் வசீகரிக்கின்றனர். இவர்களின் தன்னார்வ முயற்சியாகக் கோயில்களில் சிரமதானப் பணிபுரிதல் மற்றும் சமூகத் தொண்டுகளிலும் தம்மை இணைத்துள்ளனர்.
நன்கொடைகளும் அன்பளிப்புகளும்
ஒரு சமய நிறுவனம் இலவச சமயக்கல்வியூட்டும் பணியில்
இயங்குவதில் பொருளாதார நெருக்கடிகள் ஏராளம். யாவும் அன்னை
சிவகாமியின் பேரருளால் அவ்வப்போது சமநிலையில் அமைகிறது.
இந்துகலாசார திணைக்களத்தினால் இப்பத்து ஆண்டுகளிலும் ஐந்து சோடி சிறிய வாங்குகள், மூன்று தொகுதி நூல்கள், ஒரு சுருதிப்பெட்டி, ஒரு சோடி தாளம், இரு திருமுறைப் பாடல்கள் கொண்ட ஒலிநாடாக்கள், எமது பாடசாலை மண்டப மின்னிணைப் புக்கான உதவியாக ரூபா 25000/-, மேலும் 2006, 2007 ஆகிய இருவருடங்களில் ஐந்து ஆசிரியைகளுக்கும் ஒருவருக்கு வருடத்திற்கு 2000 ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளன. எமது சைவத் திருநெறிக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள், உள்நாட்டு வெளிநாட்டு நலன்விரும்பிகள், எமது தேவைக் கேற்ப அவ்வப்போது அன்பளிப்புச் செய்தனர். இவர்களின் பேருதவியாக தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. மின்னிணைப்புடன் மின்விசிறிகள் இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 20 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

பொருத்தப்பட்டன. பாடசாலை வசதிக்கேற்ப மண்டபத் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. பாடசாலை உபகரணங்கள், பூசைகள், விழாக்கள் நடாத்துதல், வருடாந்தப் பரிசளிப்பு விழா நடாத்துதல், ஆசிரியைகளுக்கு சிறு உதவுதொகை வழங்கல், மற்றும் இதர செலவினங்களுக்கு வருடாந்தம் முப்பதினாயிரம் (ரூபா 30000/-) ரூபா செலவாகிறது.
இணுவில் மைந்தனும் கனடா வாழ் நண்பருமான திரு.சீவரத்தினம் விக்கினேஸ்வரன் அவர்கள் எமது வெளியீட்டு நூல்கள் சிலவற்றை எடுத்துச்சென்று எமக்கான நிதிசேகரித்து ரூபா 42000/- அனுப்பி எம்மைச் சிறப்பித்தார். ஏனைய அறநெறிப்பாடசாலை மாணவர்களைச் சீருடையில் கண்டுவியந்து எமது பிள்ளைகளையும் சீருடையில் காண விரும்பிய எம்மூர் வைத்தியகலாநிதி மூ.பஞ்சலிங்கம் அவர்கள் 26 பிள்ளைகளுக்கான சீருடைக்காக ரூபா பத்தாயிரம் (10000/-) தந்து மகிழ்வித்தார்.
சிவபூமி அறக்கட்டளையின் சார்பில் செஞ்செற்சொல்வர் ஆறு.திருமுருகன் அவர்கள் எமது ஐந்து ஆசிரியைகளுக்கு ஐந்து சேலைகளை அன்பளிப்புச் செய்துள்ளார். மேலும் அவரது பெருமுயற்சியால் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்காக கொப்பிகள் அகில இலங்கை இந்துமாமன்ற உதவியாகக் கிடைத்தன.
நூல் வெளியீடுகள்
எமது அறநெறிப்பாடசாலையின் வளர்ச்சி கருதி சமய பாடம் கற்போருக்கு உறுதுணையாக இருப்பதற்காக முன்னர் மூன்று நூல்களை வெளியிட்டோம். எமது கன்னி முயற்சியாக 21 பெரியார்களின் கட்டுரைகளும், மஹாவித்வான் பிரம்மழரீ ந.வீரமணி ஐயரினால் எழுதப்பட்ட அன்னை சிவகாமியின் பேரில் அமைந்த 51 கீர்த்தனைகளையும் கொண்ட "அறநெறிக்களஞ்சியம்” என்ற நூலை 2003 ஆம் ஆண்டு வெளியிட்டோம்.
இரண்டாவதாக 2004 இல் “சீர்இணுவைத்திருவூர்” என்னும் இணுவில் கிராம வரலாறு அமைந்த நூலை வெளியிட்டோம்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 21 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 13
2006 இல் “திருமுறைத்தோத்திரங்கள்’ என்னும் பாடல் நூலை வெளியிட்டோம். இந்த மூன்று நூல்களின் கனதியும் சிறப்பும் எம் தமிழர் வாழும் பிரதேசமெங்கும் சென்றடைந்ததால் எமது நிறுவனத்துக்கும் எமதுாருக்கும் நற்பெயரும் புகழும் கிடைத்தன.
பலரின் வேண்டுதலின் பேரில் வீரமணிஜயரின் பாடல்களில் பன்னிரண்டு பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு பாரெங்கும் பரவியது. இவ்வாக்கம் எம்மூரவரும் கனடா வாசியுமான திரு. துரையப்பா நடராசா அவர்களால் இணுவில் திருவூர் ஒன்றிய கனாடக் கிளையின் வெளியீடாக மகாநதி சோபனாவின் (இந்தியா) குரலில் வெளியிடப் பட்டது. எங்கள் மண்டபத்திலும் இவ் ஒலிநாடாவிற்கு அறிமுகவிழா ஏற்பாடு செய்து வெளியிட்டோம். இவ்வெளியீட்டினால் கிடைத்த பணம் இணுவில் சிவகாமி கல்யாண மண்டப கட்டட நிதிக்கு வழங்கப்பட்டது. இந்த ஒலிப்பதிவுநாடா பாரெல்லாம் பரந்துவாழும் எம்மினத்தவரின் இல்லங்கள் தோறும் அன்னை சிவகாமியின் புகழ் இனிமையுடன் ஒலிக்கிறது. எமது பெருமுயற்சியாக வெளிவந்த ஒலிப்பதிவு நாடா எமது நான்காவது வெளியீடாகும்.
எமது அறநெறிப்பாடசாலை பத்து ஆண்டுகள் தொடர்ந்து இயங்கிய பெரும்பேறாக இவ்வருடம் பத்தாவது ஆண்டுவிழாவை நடாத்த ஏற்பாடு செய்தோம். தவிர்க்கமுடியாத சூழலில் நவராத்திரி காலத்தில் விழா எடுக்கமுடியவில்லை. இன்று நடைபெறும் விழாவின் பேரில் பத்தாவது ஆண்டு நிறைவுவிழா மலர் வெளிவருகின்றது.
எமது ஆறாவது வெளியீடான “இறையருட்செல்வர்” என்னும் முப்பது இறையருள்பெற்ற மகான்களின் வரலாறு படைத்த நூலும் இன்று வெளிவருகிறது. இன்று வெளிவரும் இருமலர்களையும் அன்னை சிவகாமியின் பாதக்கமலங்களில் சமர்ப்பணம் செய்கிறோம்.
சமுகப்பணி
எம்மூர் புலவரும் அன்னை சிவகாமியின் அருள்பெற்று அவள்
மீது பாடல் பாடியவருமான இணுவையூர் சின்னத்தம்பிப் புலவரை
நினைவுகூரும் முகமாக ஆண்டாண்டு காலாமாக பாவனையிலுள்ள
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 22 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

சிவகாமி அம்மன் கோவிலருகில் ஆரம்பிக்கும் இணுவில் சின்னத்தம்பிப் புலவர் வீதியின் பெயர்ப்பலகை 2002 ஆம் ஆண்டில் எமது கழகப் போசகரும், நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவருமான பெ.கனகசபாபதி அவர்களால் திரைநீக்கஞ் செய்யப்
L-gl.
சுற்றுலா
எமது அறநெறிப்பாடசாலை மாணவர்களை 2005 ஆம் ஆண்டு சமயச்சுற்றுலா மூலம் மகிழ்விக்க திரு.செ.செல்வக்குமார் அவர்கள் முன்வந்தார். அவரின் உதவியால் எமது பாடசாலை மாணவர்களும், ஆசிரியைகளும் எமது சங்க உபதலைவியாக இருந்த திருமதி செல்வட்சுமியின் பாதுகாப்புடன் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோயில் சென்று யாவரும் வழிபட்டு பன்னிரு திருமுறைகள் ஓதி இன்புற்றனர். தொடர்ந்து வல்லிபுர ஆழ்வார் திருக்கோயிலையும் தரிசித்து மகிழ்ந்தனர். அடுத்தவருடம் நாட்டுச் சூழ்நிலைகாரணமாக சுற்றுலா தவிர்க்கப்பட்டது. இச் சுற்றுலாவிற்கு இலவச வாகனவசதி செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எம்மை ஊக்குவித்து சிறப்புடன் இயங்க வைத்த பெருமக்கள்
எமது அறநெறிப்பாடசாலையின் வளர்ச்சியின் ஒவ்வோர் அங்கங்களிலும் உயர்விக்கும் நோக்கில் ஆக்கமும் ஊக்கமும் இன்னுரையும் தந்தவர், எமது அனைத்து விழாக்களிலும் பங்குபற்றி ஆன்மிகக் கருத்துக்களை வெளியிட்டு எம்மக்களை நெறிப்படுத் தியவர், எமது வெளியீடுகள் சிறப்புற அமையவும், விற்பனையிலும் போதிய ஊக்கம் தந்து உதவியதுடன் இம்மலருக்கு ஆசியுரை தந்து எம்மை உயர்நிலையில் மதிக்கும் எம்மூர்ப் பெருமகன் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகள்.
இணுவில் பதியில் ஒரு அறநெறிப்பாடசாலை எப்படி இயங்கி மக்களுக்கு, பிஞ்சு உள்ளங்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்று அடிக்கடி கூறியும், எம்மால் வெளியிடப்படும் நூல்களுக்கு இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 23 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 14
ஆக்கங்கள், ஆசிகள் தந்துதவியும், எமது மாணவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரிய நூல்களைத் தந்துதவியும், எமது பாடசாலை இப்படிப் பிரபலமடைய வேண்டுமெனக் கனவுகண்டு நனவாக்கியும், கொழும்பில் சங்கம் வளர்த்து இணுவில் பாரம் பரியத்தை அங்கு நிலைநாட்டிய எமது பிதாமகள், மூதறிஞர் தமிழவேள். இ.க.கந்தசாமி அவர்களுக்கும் நன்றிகள். இந்தப் பத்து ஆண்டுகளிலும் எதுவித மனச்சோர்வுமின்றிப் பயன் கருதாது, நயம்படப் பணியாற்றிய, பணியாற்றும் நல்லோர்கள் தமது தூய உள்ளங்கொண்டு தம்மை நாடிவந்த வஞ்சமில்லா நெஞ்சுடைய பிஞ்சு உள்ளங்களுக்கு அறநெறி போதித்து ஆத்மதிருப்தியை ஊட்டிய ஆசிரியர்களின் நற்பணி என்றும் போற்றத்தக்கது. இவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
எமது கோரிக்கையை ஏற்று அன்னை சிவகாமியின் புகழை அகிலமெல்லாம் கேட்டு மகிழவைத்த கனடவாழ் துரையப்பா நடராசா அவர்களுக்கும் நன்றிகள்.
இம்மலருக்கு ஆசியுரைகள், வாழ்த்துரைகள், ஆக்கங்கள் தந்து மலருக்கு மெருகூட்டிய அன்பு உள்ளங்களுக்கும் எமது பாராட்டும் நன்றிகளும்.
தம் அடியார்களின் சிறப்பைக் காணத் திருவிளையாடல் காட்டினாள் அன்னை சிவகாமி. எம்மிற் பலரும் ஆடினோம். தமது புகழ், தம்மக்களின் நல்வாழ்வு, நல்லறம், அறச்சிந்தனை, யாவற்றையும் அறநெறிக்கல்வி மூலம் சிறக்க வைக்க இணுவில் சைவத்திருநெறிக்கழகத்தை ஒரு கருவியாக வைத்தே அன்னை நாடகமாடினாள். அன்னையின் நடனம் / நாடகம் ஆடிய பொற் பாதங்களில் எமது காணிக்கையாக இம்மலரினைச் சூடி இன்புறுவோமாக.
மூ.சிவலிங்கம் பொறுப்பாளர், சிவகாமி அறநெறிப்பாடசாலை, இணுவில்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 24 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

fldub
பத்து ஆண்டு சேவையில் இணுவில் சைவத்திருநெறிக்கழகமும் சிவகாமி அறநெறிப்பாடசாலையும்
இணுவில் என்றால் சைவமும் தமிழும் செழித்துப் பரந்து வளர்ந்த ஓர் ஊர் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆத்மஞானிகளும் இந்து ஆலயங்களும் இவ்வூருக்குப் பெருமைசேர்த்து நிற்கின்றன. அந்நிய தேசத்தவர்கள் யாழ்ப்பாணம் வந்து தமது மதங்களை வலுக்கட்டாயமாகத் திணிக்க முயன்றபோதும் இணுவில் மக்கள் சைவமரபினைப் பேணிக் காப்பாற்றினர்.
சைவமதத்தினைச் சார்ந்த மக்களாக இருந்தாலும் அதன் நெறிகளை உணராமலும் சைவதத்துவங்களைக் கடைப்பிடியாமலும் இன்றைய சைவ சமூகம் திசைமாறிப் போகப் பார்க்கிறது. இக்கால கட்டத்திலேதான் சைவ பாரம்பரியத்தை வளர்க்கவும் சைவநெறியில் இளம் சமுதாயத்தை வளர்த்து எடுக்கவும் அறநெறியில் மக்களை வழிநடாத்தவும் அறநெறிப்பாடசாலைகளை அமைத்து நடாத்தி வருகிறார்கள்.
இணுவில் கிராமத்திலும் ஓர் அறநெறிப்பாடசாலை அமைவது நல்லது என காலஞ்சென்ற உடுவில் பிரதேச செயலர் திரு.ஆமகாலிங்கம் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஒய்வு பெற்ற கிராம அலுவலர் திரு.மூ.சிவலிங்கம் அவர்களினது முயற்சி யினால் இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலை ஆரம்பமானது.
அறநெறிப்பாடசாலை ஒன்று ஆலய நிர்வாகத்தின் கீழ் அல்லது ஒரு சமய நிறுவனத்தின் கீழ் இயங்கவேண்டிய நிலை இருந்ததினால் அறநெறிப்பாடசாலையினை ஒரு நிறுவனத்தின் கீழ் நடாத்த பல அன்பர்கள் ஆலோசனை நல்கினர். இதன் அடிப்படையில் தான் "இணுவில் சைவத்திருநெறிக்கழகம்” என்ற பெயரில் இக்கழகம் உருவாக்கம் பெற்றது.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 25 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 15
இணுவில் சைவத்திருநெறிக்கழகத்தின் நிர்வாகம் இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலையினை அறநெறிப்பாடசாலை அமைப்பு விதிகளுக்கமைய நிர்வகிக்க வழியமைத்து ஆரம்ப நிர்வாகசபை உறுப்பினர்களாக திரு.க.முருகையா தலைவராகவும், திரு.ந.காசிவேந்தன் செயலாளராகவும், திரு.மூ.சிவலிங்கம் பொருளாளராகவும் இருந்து நல்ல நிலையில் தமது கடமைகளைப் புரிந்தனர். அவர்களைத் தொடர்ந்து பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் காலத்துக்குக் காலம் நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு செயற்பட்டனர்.
தற்போதைய நிர்வாகசபையின் தலைவர் திரு.கெ.தவராசா மிகமிகப் பொருத்தமான ஒருவர். சைவ ஆசாரசீலராக திருமுறையினை நன்கு கற்று பண் தவறாது பல ஆயலங்களில் பாடிவருபவர். தானும் பாடி அறநெறிப்பாடசாலை மாணவர்களையும் அதன் வழியில் வழிநடத்துபவர். 10வது ஆண்டிலே பல நூற்றுக்கணக்கான மாணவர்களை தன்னகத்தே கொண்டு இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலை முன்னேற்றம் அடைவதனை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது.
இணுவில் சைவத்திருநெறிக்கழகமும் சிவகாமி அறநெறிப் பாடசாலையும் சைவப்பெருமக்கள் சைவநெறிமுறைகளுக்கமைய ஒழுகுவதற்கேற்ப சேவையாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதுடன் அவர்கள் பணி நல்ல முறையில் செயற்பட எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.
பெ.கனகசபாபதி (சமதான நீதவான்) 85ITUT6TIfT, இணுவில் சைவத்திருநெறிக்கழகம்.
சுமங்கலிகள் கோயில்கள், தேவதைகள், அரசமரம், துளசிச்செடி, பசு, நெய் போன்றவற்றை வலமாகச் செல்லவேண்டும். இடமாகச் செல்வது கொடிய பாவமாகும்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 26 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

2. dfouLDub
இணுவில் சைவத்திருநெறிக்கழகத் தலைவர் திரு.கெ.தவராசா அவர்களின்
இணுவில் சைவத்திருநெறிக் கழகத்தினதும், இக்கழகம் நடாத்தும் சிவகாமி அறநெறிப்பாடசாலை யினதும் பத்தாண்டு நிறைவை நினைந்து மகிழ்வதற்கு மலர் ஒன்றை வெளியிட வேண்டுமென எமது அறநெறிப்பாடசாலை அதிபர்.திரு.மூ.சிவலிங்கம் அவர்கள் எடுத்துக்கொண்ட விடாமுயற்சி காரணமாக இம்மலர் வெளிவருவது இன்பம் தருகிறது.
அன்பும் அறனும் மனித வாழ்வின் இரு கண்கள் போன்றவை. இதனால்தான் "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்று வள்ளுவப் பெருந்தகை எழுத்தியம் பியுள்ளார். அன்பினால் தெய்வீக அருளும், அறத்தினால் இன்ப அமைதியும் கிடைக்கும். இரண்டும் சேரும்போது நல்லறிவு மேலோங்கி நிற்க வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.
இன்று உலகிலே அறநெறியானது அருகிக்கொண்டே வருகின்றது. அறநெறி வளரவேண்டும் என்ற நோக்கில் இலங்கையில் இந்துசமய விவகாரத் திணைக்களம் ஆலய நிர்வாகங்கள் மூலமாகவும், சமய நிறுவனங்கள் மூலமும் அறநெறிப்பாடசாலை களை அமைத்து வழிநடத்துதல் போற்றுதற்குரியது.
அறநெறிக்கல்வி சிறந்தோங்க வேண்டும். அதனால் நல்லதோர் சமுதாயம் உருவாகும் என்பதில் கருத்துவேறுபாடு எவருக்குமே ஏற்படமாட்டாது. இந்நிலையில் அறநெறிப்பாடசாலைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களதும், அரசபாடசாலைகளின் ஆசிரியர்களதும், அதிபர் களதும் ஒத்துழைப்பு மிகமிக இன்றியமையாததாகும்.
வாரத்தில் ஒரு நாள் மூன்று மணித்தியாலங்கள் நடை பெறும் அறநெறிவகுப்புக்களுக்குச் சமூகமளிக்குமாறு மாணவர்களை
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 27 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 16
பாடசாலை ஆசிரியர்களும், அதிபர்களும் ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்களும் தமது பிள்ளைகளை அறநெறி வகுப்புக்களுக்கு அனுப்பி வைப்பதில் பூரண அக்கறை காட்டவேண்டும். அறநெறிப் பாடசாலையில் பிள்ளைகள் கற்றுக்கொண்ட விடயங்களைப் பெற்றோர் விசாரிக்க வேண்டும். பிள்ளைகள் தாம் கற்றவற்றை மீளக்கூறும்போது கற்றவை மனதில் கூடுதலாகப் பதிந்துகொள்ளும்.
மாணவர்கள் வார இறுதியில் மூன்று மணித்தியாலங்கள் அறநெறிவகுப்புக்குச் செல்வதற்கேற்ப தனியார் கல்வி நிறுவனங் களும் தமது நேர அட்டவணைகளை அமைத்து ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும்.
சிவகாமி அறநெறிப்பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறை காட்டும் பெற்றோர்களுக்கும், பெரியோர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன் சிவகாமி அறநெறிப்பாடசாலை சிறந்தோங்க எல்லாம் வல்ல சிவகாமி அம்பாளை இறைஞ்சுகின்றேன்.
கெ.தவராசா தலைவர், இணுவில் சைவத்திருநெறிக்கழகம்.
பூசையினால் கிட்டும் புண்ணியம் திருக்கோயில்களில் அன்றாடம் நடக்கும் பூசைகளுக்கும் விசேட பூசைகளுக்கும் உரிய பொருட்களை வாங்கித் தருவது மிகச் சிறந்த பயன் களைத்தரும் ஆயினும் கீழ்க்குறிப்பிடும்பொருட்களைத்தருவதால்கிடைக்கும் பலன் அதிகம்.
அபிசேகப் பொருட்களை வாங்கித் தருவது எல்லாப் பாவங்களையும் போக்கும். வாசனைப் பொருட்களை வாங்கித் தருவது சகல சௌபாக்கியங் களையும் தரும். மலர்களைக் கொடுப்பது மனமும் உடலும் ஆரோக்கியம் பெறச் செய்யும். நறுமணம் (புகை) இடுவது வாழ்க்கை மணம் பெறச் செய்யும். தீபமிடல் தேகம் ஒளிபெறச் செய்யும். நைவேத்தியப் பொருட்களைத் தருவது நல்வாழ்க்கை அமைய உதவும். தாம்பூலமளிப்பது லட்சுமிகடாட்சம் அளிக்கும். ஆலயங்களில் நடாத்தப்படும் யாகங்களுக்குரிய பொருட்களை வாங்கித் தருவது விருப்பங்கள் அனைத்தையும் ஈடேறச் செய்யும்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 28 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

afé Loujib
அகவை பத்தில் வளர்ச்சிகண்ட இணுவில் சைவத்திருநெறிக்கழகம் நடாத்தும் சிவகாமி அறநெறிப்பாடசாலை
சைவநெறியும் முத்தமிழும் பல்கலைகளும் வாழ்ந்திடும் இணுவைத்திருவூர் தெய்வ அருளாசியால்
சித்தர்களாலும், சமயப் பெரியார்களாலும், கல்விமான்களாலும் இவ்வூர் நன்கு வழிநடாத்தப் பட்டது. இவ்வூரில் சைவசமயம் பிரபல்யமடைந்ததால் அரசு சமய அபிவிருத்திக்கு அடிகோலியது. இணுவில் கிழக்கில் சிவகாமி அம்மன் கோயில் சூழலில் ஓர் அறநெறிப்பாடசாலையை அமைக்குமாறு முன்னாள் உடுவில் பிரதேச செயலர் அமரர்.திரு.ஆமகாலிங்கம் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஒய்வுபெற்ற கிராமசேவையாளர் திரு.மூ.சிவலிங்கம் அவர்களின் அயராத பெருமுயற்சியால் 11.10.1997 அன்று சிவகாமி அறநெறிப் பாடசாலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அன்றைய நிகழ்வில் பங்குபற்றியதுடன் தொடர்ந்து இணுவில் சைவத்திருநெறிக்கழகத்தின் நிர்வாகச் செயற்குழுவில் செயலாற் றியதுடன் சிவகாமி அறநெறிப்பாடசாலையின் வளர்ச்சியிலும் கூடிய கவனம் செலுத்தியதாலும் இவ்வறநெறிப்பாடசாலை இன்று பத்தாவது ஆண்டு நிறைவுவிழா எடுப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகத்தின் பிரதான உறுப் பினர்கள் சிவகாமி அன்னதானசபை மண்டபத்தில் அறநெறிப் பாடசாலையை நடாத்த அங்கீகரித்தனர். இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலையை ஆதரிக்கும் சைவத்திருநெறிக்கழகத்தில் தலைவர்களாகத் திரு.க.முருகையா, திரு.இ.தயானந்தன், திரு.க.தருமநாயகம், திரு.கெ.தவராசா (இன்றைய தலைவர்) ஆகியோர் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராகப் பதவிவகித்தனர். திரு.மூ.சிவலிங்கம் அவர்கள் ஆரம்பகாலம் தொடக்கம் தொடர்ந்து பொறுப்பாளராக
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -:29 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 17
இருந்து இவ்வறநெறிப் பாடசாலையை வெகுசிறப்பாக இயக்கி வருவது பெருமைக்குரியது.
இவ்வறநெறிப்பாடசாலையில் இந்துசமயம், பண்ணிசை, நடனம் ஆகியவை போதிக்கப்படுகின்றன. இப்பாடசாலையில் வருடா வருடம் சமய குரவர்களின் குருபூசைகள், நவராத்திரி விழாக்கள், சமயபாடப் பரீட்சையும் பரிசளிப்பு விழாவும் வெகுசிறப்பாக நடாத்தப் படுகின்றன. பல சமயப் பெரியார்களும் வந்து சொற்பெருக்காற்றி எம்மை வாழ்த்திச் செல்கின்றனர். பிள்ளைகளின் கலை நிகழ்ச்சி கள் மேடையேறுகின்றன. இவர்கள் வெளியிடங்களிலும் சென்று கலைநிகழ்ச்சிகளில் பங்குபற்றியதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வறநெறிப்பாடசாலையின் விசேட அம்சமாக இதுவரை நான்கு வெளியீடுகள் வெளிவந்தன. அறநெறிக்களஞ்சியம், சீர் இணுவைத்திருவூர், திருமுறைத் தோத்திரப் பாடல்கள் ஆகியவை சமய நூல்களாக வெளிவந்தன. இந்த நூல்கள் திரு.மூ.சிவலிங்கம் அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்டவை. எமது பெருமுயற்சியால் வீரமணிஜயரினால் எழுதப்பட்ட சிவகாமி அம்பாள் கீர்த்தனைகள் பன்னிரண்டு தென்னிந்தியப் பாடகி மகாநதி சோபனா அவர்களால் பாடப்பட்டவை. இப்பாடல்களை ஒலிநாடாவாக்கிய கனடா வாழ் எம்மவரான நடராசா அவர்களின் பூரண பங்களிப்பாகக் கனடாவில் வெளிவந்தது. இங்கு அறிமுகவிழா எடுக்கப்பட்டது. இந்த ஒலிநாடா வெளியீட்டிற் கிடைத்த பணம் முழுவதும் சிவகாமி திருமண மண்டபக் கட்டட நிதிக்காக இணுவில் சைவத்திருநெறிக்கழகத்தினால் வழங்கப் பட்டது.
எமது கழகத்தின் இவ்வெளியீடுகள் உள்ளூரிலும் வெளி நாடுகளிலும் சிறப்புடன் யாவரையும் கவர்ந்துள்ளது. இதனால் இணுவில் மக்கள் யாவருமே பெருமையடைகின்றனர். இப்பெருமை யாவும் எம்மை இதுவரை வழிநடத்தியும் எதிர்காலத்தில் மேலும் சிறப்படைய வைக்கும் இணுவில் சிவகாமி அம்பாள் கருணையின் பெறுபேறாக எமக்குக் கிடைக்கின்றது என்பதை அறியத்தருகின்றேன்.
நடராசா காசிவேந்தன் உபதலைவர், இணுவில் சைவத்திருநெறிக்கழகம். இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 30 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

éfl6uLDuuLib
இணுவில் சிவகாமி அம்மன் அறநெறிப் பாடசாயிைன் வளர்ச்சிப்பாதையில்.
எங்கள் சிவகாமி அறநெறிப்பாடசாலையின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் நாம் அதன் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது பயனுறும் என்ற வகையில் எழுதமுற்படுகிறேன்.
வரலாற்று நோக்கில் கூடியவரை என்னால் சேகரிக்கப்பட்ட தரவுகள், தகவல்கள், நேர்காணலை எல்லாம் தந்து இப்பாடசாலை யைத் தொடக்கி மாணவர்கட்கு அறநெறியைப் போதித்த ஆசிரியர் என்ற தோரணையில் ஏற்பவனாகி எழுதவிளைகிறேன்.
நாம் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும் இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலை 1997ம் ஆண்டு நவராத்திரி விழாவின் நிறைவான விஜயதசமி நன்னாளில் ஆரம்பமாகியது. இப்பாடசாலை உருவா வதற்கு உறுதுணையாக நின்று எல்லா வழிகளிலும் உதவிய பெருமை முன்னாள் கிராமசேவையாளரும் அறநெறிப்பாடசாலையின் பொறுப்பாளருமாகிய திரு.மூ.சிவலிங்கம் அவர்களையே சாரும்.
சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் இம்மண்ணில் உலாவி எத்தனையோ அற்புதங்களைச் செய்த இயற்கைச் சூழலைக் கொண்டது இணுவையம்பதி. உற்றுநோக்கில் நாற்புறமும் கோயில் களும், வைத்திய நிலையங்களும், நெடுஞ்சாலைகளும், சமய சமூக நிலையங்களும் அழகுபடுத்திக் கொண்டிருக்கும் இக்கிராமம். இதன் நடுவே அமைந்து தன் அருளைப் பரப்பிக்கொண்டிருக்கும் அன்னை சிவகாமி அம்பாள் ஆலயம். இதனை இன்றைய வளர்ச்சிக்கு வழிகாட்டியவர் இவ்வாலய வழித்தோன்றலில் உதித்த சாத்திரம்மா.
இத்தனை வனப்பும் கொண்ட அன்னை சிவகாமியின் அருட் பார்வைக்கு நேராக இவ்வறநெறிப்பாடசாலை அமைந்துள்ளது. இப் பாடசாலையை ஆரம்பித்தபோது நான்கு பிள்ளைகள் மட்டும்
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 31 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 18
சமூகமளித்திருந்தனர். அப்பொழுது நான் இணுவில் மத்திய கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் வகுப்பு நடாத்திக் கொண்டிருந்தேன். பாடசாலை வேலையோ அதிக நேரம் எடுத்தது. இந்த நிலையில் அண்ணர் சிவலிங்கம் அவர்களின் வேண்டுகோளுக் கிணங்கி மாலைவேளையில் இப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினேன். நான்கு மாணவர்களுடன் நானும் நிலத்திலே அமர்ந்து அறநெறிப்பழக்கங்களையும், தேவாரப் பாடல்களையும், சமயக் கதைகளையும் மாணவர்களுக்குப் புகட்டினேன்.
நாளுக்குநாள் இந்த அறநெறிப்பாடசாலையில் வளர்ச்சிப் படிகள். சகல துறைகளிலும் படிப்படியாக உயர்ச்சி கண்டது. மாணவர்கள் தொகை, தளபாடங்கள், கற்றல் கற்பித்தல் செயற் பாடுகள், பரீட்சை மதிப்பீடுகள், சமய அறிவுப்போட்டிகள், திருக்குறள் போட்டிகள், மூதுரை மனனப்போட்டி என்பன இவற்றுள் அடங்கும்.
இந்த அறநெறிப்பாடசாலையின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாக் காணும் இன்று ஏனைய அறநெறிப்பாடசாலைகளுக்கு முன் மாதிரியாக விளங்குவது நாம் பெருமிதம் அடையும் விடயமாகும். இப்பொழுது இப்பாடசாலையில் சமய வகுப்புக்கள், பண்ணிசை வகுப்புக்கள், நடன வகுப்புக்கள் என்பன கிரமமாக வார இறுதி நாட்களில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வகுப்புக்களையும் அத்துறைசார்ந்த ஆசிரியைகள் கற்பித்து வருகின்றனர். இப் பாடசாலையை நெறிப்படுத்தும் இணுவில் சைவத்திருநெறிக் கழகத்தினதும் அறநெறிப்பாடசாலையின் பொறுப்பாளரினதும் பெரு முயற்சியால் நாற்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மிக ஆர்வத்துடன் அறநெறிக் கல்வியை கற்று வருகின்றனர்.
இதன் பெருமைக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், கழக உறுப் பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் யாவருமே காரணி களாவர். மேலும் சிவகாமி அறநெறிப்பாடசாலை பல துறைகளிலும்
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 32 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

வளர்ச்சி பெற்று வெள்ளிவிழாவையும் கொண்டாட அன்னை சிவகாமி இடையறாது அருள்புரிய வேண்டி விடைபெறுகின்றேன்.
“எல்லோரும் வாழ்க. வளர்க அறப்பணி”
த.விசல்வரத்தினம் ஓய்வுபெற்ற ஆசிரியர்.
(இவ்வாசிரியர் ஆரம்ப காலம் முதல் எமது அறநெறிப்பாடசாலையின் ஆசிரியராகவும், பரீட்சைகளுக்குப் பொறுப்பாளராகவும், எமது வளர்ச்சியில் பெருமிதமடையும் ஆதரவாளருமாவார்)
། எமக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியர்களைப் போற்றுதல் வேண்டும்.
பத்து ஆசிரியர்கள் சேர்ந்தால் ஒரு ஞானாசிரியராக அமையும். நூறு ஆசிரியர்கள் சேர்ந்தால் ஒரு நல்ல தந்தைக்கு ஈடாக முடியும். ஆயிரம் நல்ல தந்தை ஒன்று சேர்ந்தாலும் ஒரு சிறந்த தாய்க்கு ஈடாக முடியாது என்று மனுதர்மசாத்திரம் கூறுகிறது. ஒருவன் குடியிருந்த (கர்ப்பத்தில் பத்து மாதம்) கோயிலான அன்னையை வணங்க வேண்டும். தந்தையை வணங்க வேண்டும். முன் பின் தெரியாத அதிதியாக வந்த விருந்தினரையும் வணங்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தாய்க்குக் கடன் பட்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக எம்மைப் படைத்த இறைவனுக்குக் கடமைப்பட்டுள்ளோம். இவற்றைப் பின்வருமாறு கைமாறு செய்யலாம். இறைவனின் அடியார்களைப் பேணலாம். தாய் உயிருடன் இருக்கும்போது பணிந்து பணிவிடை செய்யலாம். தந்தையின் பேச்சை மந்திரமாகப் பாவித்து வணங்கலாம். குருகாட்டிய நல்வழி மூலம் பிறக்கும் பயன்பட வாழ்ந்து உயரலாம். இதனை நோக்கியே மாதா, பிதா, (ტ(სნ, தெய்வம் (தெய்வம் ஆதி அந்தமில்லாது எங்கும் பிரகாசிப்பவர்) எனக் கூறப் படுகிறது.
காஞ்சிப்பெரியார் - سنتے ہی سی ---------سیسی کےساتسو کـ
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 33 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 19
சிவமயம்
AMWW*WwW*WW*MNV
இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலை தனது பத்தாவது நிறைவைக் கொண்டாடுவது குறித்து யான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் பாடசாலையின் ஆரம்பவிழாவில் கலந்துகொண்ட ஒருசிலருள் யானும் ஒருவன். 1997ம் ஆண்டு விஜய N1 தசமி தினத்தன்று இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவ்வைபவத்தில் என்னையும் உரையாற்றும்படி சைவத்திருமூசிவலிங்கம் அவர்கள் கேட்டுக்கொண்டார். அப்பொழுது யான் ஒரு நல்ல செயலை ஆரம்பிப்பதற்கு நல்ல பெரியவர்கள் நாலுபேர் இருந்தாற் போதும். இங்கு கூடியிருப்பவர்கள் ஒரு சிலராக இருந்தாலும் இருப்பவர்கள் தக்கவர்களாக இருக்கிறார்கள். இது எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. இப்பாடசாலை காலப்போக்கில் வளரும். சிறந்தசேவையாற்றும், சாதனைகள் பலவற்றைப் படைக்கும். மேன்மை அடையும். அதற்காக எனது ஆயிரம் ஆசீர்வாதங்கள் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தேன். அன்றைய விழாவில் உடுவில் முன்னாள் உதவி அரசாங்க அதிபர் அமரர்.திரு.ஆமகாலிங்கம் அவர்கள், கிராமசேவையாளர் திரு.மு.சிவலிங்கம் அவர்கள், திரு.பெ.கனகசபாபதி அவர்கள், திரு.த.செல்வரத்தினம் ஆசிரியர் ஆகியோருடன் வேறுசிலரும் பங்குபற்றினர். இன்று பத்தாண்டு நிறைவுகள் பறந்தோடி விட்டன.
ஆல்போல் தழைத்து
இணுவில் சைவத்திருநெறிக்கழகமும் சிவகாமி அறநெறிப் பாடசாலையும் இப்பத்தாண்டு காலத்தில் ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றிக் கிளைபரப்பி விழுதுகள் பலவிட்டு நிழல் தந்து நிற்கிறது. இதையிட்டு நாம் அனைவரும் பெருமைகொள்வோம்.
நாற்பது பிள்ளைகளுக்கு வேதனமின்றிப் படிப்பிக்கும் ஐந்து ஆசிரியர்களுடன் பாடசாலை அயற்கிராமங்களுக்கும், முன்மாதிரியாகத் திகழ்ந்து நாலுபேர் அவாவுற்றது போல் மிளிர்வது இணுவில் செய்த இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 34 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்
 

தவப்பயனேயாகும். சிவகாமியின் குழந்தைகள் சிவகாமிக்குப் பஜனை பாடவும், திருமுறைகளைப் பண்ணுடன் ஒதவும், நாயன் மார்களின் குருபூசைத்தினங்களைக் கொண்டாடவும் கற்றுக் கொண்டிருப்பதை அடியேன் அவதானிக்கும்பொழுது "நன்றும் தீதும் பிறர்தரவாரா” என்ற பழந்தமிழ் வாக்கே எனது ஞாபகத்திற்கு வருகிறது.
சைவத்திருநெறிக்கழகம்
சிவகாமி அறநெறிப்பாடசாலையை நடாத்தும் இணுவில் சைவத்திருநெறிக்கழகம் போற்றுதல்கள் பலவற்றிற்கு உரியது. மிகக் குறுகிய காலத்தில் இக்கழகம் பல சாதனைகளைப் புரிந்துள்ளது. கழகம் வெளியிட்ட "சீர்இணுவைத் திருவூர்” என்னும் ஆக்கத்திற்கு இணையாக சீர்இணுவைத் திருவூரையன்றி வேறெதனையும் கொள்ள முடியாது. அத்தகைய சிறந்த வெளியீடு அது. இதன் வெளியீட்டு விழாவில் திருமதி கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் “சீர்இணுவைத் திருவூர் ஓர் சிறந்த ஆக்கம்” எனப் பாராட்டியது எனது செவிகளில் இன்னும் ஒலிக்கிறது தொடர்கிறது.
ஒன்றல்ல, இரண்டல்ல இதுவரை 6) வெளியீடுகளை இணுவில் சைவத்திருநெறிக்கழகம் அளித்துள்ளது. "அறநெறிக் களஞ்சியம்” என்னும் வெளியீடும் ஒரு முக்கியமானது என்பேன்.
கழகத்தின் உந்துசக்தியால்
என்னை மிகமிகக் கவர்ந்த மற்றொரு வெளியீடு சிவகாமி அம்பாள் பெயரில் கழகத்தினரின் உந்துசக்தியால் வெளிக்கொணரப் பட்ட ஒலி நாடாவாகும். இந்த ஒலிநாடா தினசரி எங்கள் வீட்டில் ஒலிக்கிறது. இது கேட்கக் கேட்கத் தெவிட்டாத கொள்ளை இன்பம் பயப்பது என்னிடமுள்ள ஒலிநாடாக்களில் மிகமிகச் சிறந்தது இதுவும் ஒன்றாகும். மகாவித்துவானின் பாடல்களுக்கு மகாநதி சோபனாவின் இசை தெவிட்டாத தேனாக இனிக்கிறது.
சிவகாமி அறநெறிப்பாடசாலை தனது பத்தாவாது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் இவ்வேளையில் இவ்வாறு பல சிந்தனைகள் எனது மனதில் தோற்றமளிக்கின்றன. உண்மையில் இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 35 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 20
இப்பாடசாலை தனது நோக்கத்தை நிறைவுசெய்துகொண்டிருக்கின்றது. இப்பாடசாலை வருங்காலத்தில் தனது வெள்ளிவிழா, பொன்விழா இன்னும் மேலும் பல விழாக்களைக் காணும் பாக்கியம் உள்ளது. அன்னை சிவகாமியின் சத்தியும் அருளும் அதற்கு என்றென்றும் துணைநிற்கும்.
“வாழ்க சிவகாமி அறநெறிப்பாடசாலை
வளர்க இணுவில் சைவத்திருநெறிக்கழகம் ஓங்குக மேன்மேலும் அதன் பணிகள்”
செல்லப்பா நடராசா ச.நீ மூத்த எழுத்தாளர்,
கோண்டாவில் - நெட்டிலிப்பாய்
அறங்காவல் குழுத் தலைவர்.
7 ༄་་་༽ இறைவனை நினைத்திரு எந்நேரமும் இறைவனை நினைக்க வேண்டும். அதுமுடியாவிட்டாலும் மூன்று வேளைகளில் தவறாது நினைக்கவும். காலையில் எழுந்தவுடன் இறைவனே இன்று நல்லவழியில் நிற்க அருள்புரிவாய் என்று தொழவேண்டும். உணவு உட்கொள்ளும் போது இறைவனே இந்த உணவினால் எனக்கு நல்ல அறிவும் அன்பும் உண்டாக அருள்புரிவாய் என்று சிந்திக்கவேண்டும். இரவில் உறங்கப்போகும்போது இறைவனே இந்த உறக்கத்தில் உன் எண்ணமே நிற்க அருள்புரிவாய் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
பாராயணம் தினசரி ஓரளவு பாராயணஞ் செய்யவேண்டும். அதற்கு மேல் செபம் செய்ததன் பின் தியானம் செய்வதால் மனம் ஒடுங்குகிறது. இறையின்ப எழுச்சி உண்டாகும். வழிபட ஏற்றநேரம் காலைதான். காலையில் மனம் தெளிந்திருக்கும். அப்போது இறைவனை வழிபடுவது நல்லது. வெள்ளைத்துணியில் சாயம் படுவதுபோல் தெளிந்த உள்ளத்தில் இறையுணர்வு எளிதில் படியும். சூரிய வணக்கத்தைச் செய்தபின் இறைவனை வழிபட வேண்டும். ހ( ܢܠ
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 36 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

fspub
சைவசமயம் வளர உதவிய பெண்கள்
உலகின் தொன்மையான செந்தமிழும் சைவ சமயமும் வளர்த்த பெண்கள் தம்மையே பல வகையாலும் அர்ப்பணித்து இறைவன் சேவையே மேலென எண்ணி தாம் தழுவிய சமயநெறியை உள்ளும் புறமும் தூயசிந்தனையால் இறை சிந்தனையுடன் வாழ்ந்து இன்னும் அழியாப் புகழ் பெற்றோர் பலர் உளர். இவர்களுள் ஒருசிலரைப் பற்றிச் சுருங்கிய விபரங்களை அறிந்து பயன்பெறுவோம்.
காரைக்கால் அம்மையார்
இவர் தென்னிந்தியாவிலுள்ள காரைக்கால் என்னும் திருவூரில் அவதரித்தவர். இவரது இயற்பெயர் புனிதவதி. இவர் தமது இல்லம் தேடிவரும் சிவனடியார்களை உள்ளன்போடு திருவமுது வழங்கி உபசரித்தவர். ஒருநாள் கணவன் கொடுத்தனுப்பிய இரு மாங்கனிகளுள் ஒன்றை ஒரு சிவனடியாருக்கு வழங்கிவிட்டார். மதிய உணவின் போது கணவனுக்கு ஒரு மாங்கனியை வழங்கினார். அக்கனியின் ருசி அடுத்த பழத்தையும் தருமாறு கேட்கவைத்தது. புனிதவதியார் வீட்டினுட் சென்று தனது நிலையை இறைவனிடம் விண்ணப்பித்தார். இறைவனருளால் ஒரு மாங்கனி கிடைத்ததும், அதைக் கணவரிடம் தந்தார். இக்கனி முன் உண்ட கனியிலும் வேறுபட்ட மதுரசுவையாக இருந்ததால் கணவனிடம் இறைவனால் வழங்கப்பட்டதெனக் கூறினார். இறைவனிடம் வேறொரு கனி பெற்றுத்தருமாறு கேட்டதால் மீண்டும் இறைவனிடம் பெற்ற கனியைக் கணவனிடம் கொடுத்தார். கணவனின் கையிலிருந்த கனி மறைந்தது. இதுகண்ட கணவன் இவர் ஓர் தெய்வமகளிர் என உணர்ந்து வேறுாள் சென்று மறுமணம் செய்து வாழ்ந்தார். புனிதவதியார் இறைவனை வேண்டித் தன் அழகிய உருவத்தை நீக்கிப் பேய் உருவம் தருமாறு கேட்டுப்பெற்றார். சைவசமயத்துக்காக எத்தனையோ பாடல்களைப் பாடினார். இறைவனை வேண்டிக் கயிலை சென்றார். கயிலையை அண்மித்ததும் தலையால் நடந்து சென்றார். இறைவன் இவரை “அம்மையே’ என அழைத்தார். இறைவன் இவரை வேண்டுவது யாதெனக் கேட்டார். “இறவாமை வேண்டும் இறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை” வேண்டும் என இரந்து பெற்றார். மேலும் இறைவன் நடனஞ் செய்யும் இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 37 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 21
போது அவரது திருவடி நிழலில் தங்கும் பேறுபெற்றார். அன்று காரைக்கால் அம்மையார் சைவத்தைப் பேணியதால் சமயநூல்கள் பலவும் தோன்றவும், சமயம் இன்றும் போற்றப்படுகிறது.
திலகவதியார்
இவரது ஒரே தம்பியான மருணிக்கியாரின் பரிவுக்காக வாழ்ந்தவர். பெற்றோர் இவருக்கு மணம் பேசிவைத்த பின் இருவரும் மறுமை எய்தினர். மணம்ப்ேசிவைத்தவரும் போரில் மாண்டார். தம்பியை அநாதையாக விடாது காப்பாற்ற துறவுபூண்டு சிவநெறியில் வாழ்ந்தார். தம்பி சமணமதத்தை தழுவிச் சென்றதும் தமது தவ வாழ்வை திருவதிகை வீரட்டானேஸ்வரரின் சிவப்பணிக்காக அர்ப்பணித்தார். மதம் மாறிய தம்பியை சைவசமயத்தில் சேர்க்குமாறு இறைவனிடம் பரிந்தார். இறைவன் அவரது தம்பிக்குச் சூலைநோய் கொடுத்ததும் திலகவதியாரிடம் வந்து தஞ்சமடைந்தார். இறைவனிடம் வேண்டி தம்பியின் நோய் அகலவும் சிவனருளால் பாடல் பாடவும் வேண்டினார் இறைவன் மருணிக்கியாரின் பாடலின் சிறப்பினால் அவருக்கு “திருநாவுக்கரசு” என்னும் பெயர் வழங்கினார். அவர் சிவபிரானையே தஞ்சமென அடைந்து தேவார மூவரில் சிறப்பாகவும், அறுபத்து மூன்று நாயன்மாரில் சிறந்தவராகவும், சைவமசயநெறியாளராகவும் வரக்காரணமாக இருந்தவர் திலகவதியார் ஆவார். பெண்களில் சைவசமயத்துக்காக தன்னை நெறிப்படுத்திய சிறப்புடையவராவார்.
மங்கையர்க்கரசியார்
இவரும் பல்லவர் காலத்து சைவத்தை வளர்த்த ஓர் உத்தமியாவார். இவரது கணவன் கூன்பாண்டிய மன்னன் சைவ சமயத்தை விட்டுச் சமணத்தைத் தழுவினான். மன்னன் வழியில் குடிமக்களும் சமணசமயத்தைத் தழுவினர். இதேசமயம் மங்கையர்க் கரசியார் மந்திரியார் குலச்சிறையாரின் உதவியுடன் மதுரைக்கு வருகைதந்த திருஞானசம்பந்தரை அணுகினார். சம்பந்தப் பெருமகன் மங்கையர்க்கரசியாரின் அழைப்பின் பேரில் அங்குள்ள மடமொன்றில் தங்கியபோது சமணர்களால் மடம் தீமூட்டப்பட்டது. சம்பந்தர் திருவருள் கைகூட'அவர்களிட்ட தீ பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோயாக்கியது. அரசியாரின் வேண்டுதலின் பேரில் சம்பந்தப் பெருமான் “மந்திரமாவது நீறு" என்ற பதிகம்பாடி திருநீறிட்டுப் இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 38 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

பாண்டியனின் வெப்புநோயைக் குணமாக்கினார். இறையருளால் பாண்டியனின் கூனும் சுகமடைந்தது. அரசன் தன் அறியாமையை உணர்ந்து சைவசமயத்துக்கு மாறினான். சமணர்களை அழித்து அகற்றினான். சைவசமயம் பரவியது. மங்கையர்க்கரசியாரின் பெருமையையும் சமயபக்தியையும் மெச்சிய சம்பந்தப்பெருமான் “மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை’ என்ற தொடரில் பாடியுள்ளார். இவரது சைவப்பணி போற்றுதற்குரியது.
செம்மனச்செல்வியார்
இவர் ஒரு விதவை மூதாட்டி, தனது தொழிலாகப் பிட்டு அவித்து விற்றுச் சீவித்து வந்தார். இடையறாத சிவபக்தியால் சோமசுந்தரக்கடவுளைக் கையேற்றாத நாளில்லை. இறைவன் திருவுளப்படி மணிவாசகள் தண்டிக்கப்பட்டபோது வைகை நதி பெருகியதால் அரசன் ஆணைப்படி யாவரும் தங்கள் பங்காக ஆற்றின் கரை அணைகட்ட வேண்டும். மூதாட்டியின் வேலை செய்ய ஆளில்லை. இறைவனை உள்ளன்போடு வேண்டினார். இறைவன் கூலியாளாக வந்து இவரிடம் கூலிக்காகப் பிட்டை வாங்கிப் பல பேர் பார்க்கும்படி உண்டு மகிழ்ந்து அணைகட்டுவதில் குறும்பு செய்தார். இதனால் இறைவனான கூலியாள் பாண்டியனிடம் பிரம்பால் அடிபட்டு யாவருக்கும் உணரவைத்தார். மேலும் அம்மையார் இறைவனருளால் சிவலோகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவரது இறைபக்தி இவரை யாவராலும் போற்றவைத்தது. இவருக்காக வந்து இறைவன் கூலியாளராக மண்சுமந்து பிரம்படி பட்டதை மணிவாசகப்பெருமான் “பண்சுமந்த பாடற்பரிசு” என்ற தொடரில் பாடியருளினார்.
ஒளவையார்
இப்பெயரில் வெவ்வேறு காலத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட ஒளவைகள் வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. எவ்வாறானாலும் ஒளவையார் மூதாட்டி எனவும், பல பாடல்களையும், அற்புதங்களையும் துணிவாக நிலைநாட்டியவர். தற்பெருமையற்றவர். எவரிடத்தும் அன்பும் பரிவும் கொண்டவர். சித்தத்தைச் சிவன்பால் வைத்தவள். செந்தமிழும் சைவமும் தலைநிமிர்ந்து உலாவ உழைத்தவர். யாவரும் சிறந்த புலவர்கள். இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 39 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 22
சைவப்புலவர் ஒளவையார்
இவர் சங்கப்புலவர்களோடிணைந்து தமிழ் வளர்த்தவர். மிகுந்த பக்தியுடன் சைவப்பணியையும் ஆற்றியவர். சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்த முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தியுடையவர். நடந்து நடந்து நானிலம் முற்றும் சுற்றித்திரிந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த பெரும்புலவர். இவ்வாறு காட்டுவழியே சென்றபோது அவருக்கு பசி, தாகம், அசதி யாவும் ஏற்படுகிறது. இவர்மீது திருவிளையாடல் புரியச் சமயம் பார்த்த முருகன் ஓர் எருமை மேய்க்கும் சிறுவனாக ஓர் நாவல் மரம் மீது இருந்தார். ஒளவையார் தமது ஆற்றாமையால் சிறுவனை நாவற்பழம் தருமாறு கேட்டார். சிறுவன் சுட்டபழமா? சுடாத பழமா? வேண்டுமேனக் கேட்டான். அவரும் சுட்டபழம் வேண்டுமென்றார். முருகன் மரக்கொப்பை அசைத்ததும் பல பழங்கள் விழுந்தன. ஒளவை ஒரு பழத்தை எடுத்து அதில் ஒட்டிய மணலை ஊதினார். அப்போ சிறுவன் பாட்டி பழம் சுடுகின்றதா? எனக் குறும்பாகக் கேட்டவுடன் ஒளவை தனது பேதமையை எண்ணி "கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி” என்ற பாடலில் காரெருமை மேய்க்கின்ற காளைக்குத் தான் சொல்லால் தோற்றதை எண்ணினார். அப்போது முருகன் காட்சி தந்தார்.
சங்கமருவியகால ஒளவையார்
(இவர் திருவள்ளுவரின் சகோதரியாவார்)
இவரைப் பெற்றவுடன் அவ்விடத்திலே விட்டுச்செல்ல
முடியாது தாயார் வேதனையுற்றபோது
“இட்டமுடன் என்தலையில் இன்னபடி யென்றெழுதி விட்ட சிவனும் செத்துவிட்டானோ - முட்டமுட்டப் பஞ்சமே யானாலும் பாரமவனுக்கே அன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ”
என்று பாடினாரென்றால் கருவில் இருக்கும்போதே இறையருள் பெற்ற தெய்வக்குழந்தை எனப் புரிகிறது. மேலும் இவர் வாழ்ந்த சங்கமருவிய காலம் அறநெறிக் காலம் எனப் போற்றப்படுகிறது. அதாவது திருக்குறளோடு கீழ்க் கணக்கு நூல்கள் பதினெட்டும், மூன்று அறங்களைக் கூறும்
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 40 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

சிலப்பதிகாரமும், சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றிய மணிமேகலையின் வரலாறு கூறும் மணிமேகலையும் தோற்றம்பெற்ற காலத்திலே வாழ்ந்த இவரும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, அசதிக்கோவை என்பவற்றை அருளிச் செந்தமிழ்ப் பெருமையை எமக்கு உணர்த்திய பெருமைக்குரியவர்.
ஒளவையார் (பல்லவர் காலம்)
பக்தி இலக்கியங்கள் தோற்றம்பெற்ற பல்லவர் காலத்திலேயும் ஒளவையார் என்ற பெயருடைய பெண்மணி சைவப்பணியாற்றியிருக் கிறார். இவர் விநாயகப்பெருமான் மீது மிக்க பக்தியுடையவர். இவர் சேரமான்பெருமான் நாயனார் என்ற மன்னவரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். இலக்கணசுந்தரி என்ற பெயரையுடைய பட்டத்தரசி ஒருவர் விநாயக விரதத்திற்கென்று கையில் அணிந்திருந்த விரதக்காப்பை அவிழ்த்து கொவ்வைக் கொடியிலே போட்டுவிட்டு விரதத்தை இடையில் நிறுத்திக்கொண்டாள். அதனால் அவளும், மன்னவனும் பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. அதுமட்டுமல்ல, அவள் அடைக்கலம் என்று அடைந்த இடத்தில் உள்ளவர்களும் பெருந்துன்பம் அனுபவித்தனர். இறுதியில் அவள் ஒளவையாரிடம் அடைக்கலமடைந்தனள். ஒளைவையாரும் பல துன்பங்களுக்காளாயினர். இந்தவேளையிலே இப்பெண்ணே இத்துன்பங்களுக்குக் காரணம் என்றும், அவள் விநாயகர் விரதத்தை இடையிலே நிறுத்தியமையால் விரதத்தை முறையே அனுட்டிக்கச் செய்தனர். இவரது பெரும்செயலால் இலக்கணசுந்தரியும் பழைய நிலையை எய்தினர் என்றொரு கதையும் உண்டு.
சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான்பெருமான் நாயானாரும் திருக்கையாலயம் போக எண்ணினர். அப்போது ஒளையார் தானும் உடன் வருவதாகக் கூறி விநாயகள் பூசையை மிக விரைவாகச் செய்தனர். அவர் கருத்தை உணர்ந்த பெருமான் ஒளவையே ஆறுதலாகப் பூசை செய்வாயாக என அருளிச் செய்தனர். அப்படியாக ஒளவையும் ஆறுதலாகப் பூசை செய்து விநாயகள் அகவலும் பாடி
முடித்திட அதை ஏற்று மகிழ்ந்த விநபுகழிதமான்
இருவரும் குதிரை மீது வந்து கைலாய்ம் சிேர்வதற்கு 慧 இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 41 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 23
ஒளவையாரைச் சேரவைத்தனர் என்றால் ஒளவையாருடைய பக்திச்சிறப்பையும் சைவப்பணியையும் அறியமுடிகிறது.
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
முன்னர் சைவம் வளர்த்தவர்களை விட இன்றைய சம காலத்தில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் அன்னை துர்க்கா தேவியின் தேவஸ்தானம் மிகச் சிறப்புடன் சமயநெறி பிறழாது ஆசாரம், நியதிகள், ஒழுக்கம் முதலியவற்றில் இப்படித்தான் வாழ வேண்டுமென யாவரையும் நெறிப்படுத்தும் மாதுசிரோன்மணி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களாவர். இவரது சேவையினால் இன்று உலகளாவிய ரீதியில் சைவம் மெச்சப்படுகிறது. தமிழ்ப் பண்டிதையான இவர் தமது தூயபணியால் சைவத்தையும் தமிழையும் நன்கு பேணிவருகிறார். இவர் ஆன்மிக சிந்தனையில் எத்தனையோ சமூகப் பணியினையும் ஆற்றிவருகிறார். தமது தள்ளாத வயதிலும் சமய வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்துள்ளார். இவரின் பணி எமக்கு மிகவும் இன்றியமையாதது.
சாத்திரம்மா
இவர் இணுவில் சிவகாமி அம்பாள் மீது அபாரபக்தி கொண்டதன் காரணமாக அரும்பாடுபட்டவர். 40 வருடங்களாக சிவகாமி அம்பாளின் திருப்பணிக்கென இல்லங்கள் தோறும் பிடியரிசி எடுத்து அன்னையின் திருக்கோயிலை மிகச்சிறப்பாகக் கட்டி முடித்தார். சமயநெறி தவறாது யாவரும் சென்று வசதியாக அம்பாளைத் தரிசிப்பதற்காக வேண்டியே இக்கட்டப்பணியை நிறைவேற்றினார். இவரது காலத்தில் வாழ்ந்த யாவரையும் சமயப் பணியில் தாமாகவே முன்வந்து பங்கேற்கவும் வைத்தவர்.
பண்டிதை திருமதி த.மகாலிங்கம் இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 42 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

犁一 aflsJuDujub
அறநெறிப்பாடசாலையின் நோக்கங்கள்
“இன்றைய இளைஞர்களே நாளை நாட்டைத்
தாங்கும் தூண்களாக மிளிர்பவர்கள்”
என்ற கூற்றுக்கிணங்க தூண்களாக மிளிரப்போகும் இளம்பிஞ்சுகளைச் சிறந்த முறையில் வளம்படுத்தி, சிறப்பான, திடகாத்திரமான அத்திவாரம் இடுதல் பெரியோர்களினதும், கற்றறிந்தவர்களினதும் தலையாய கடமையாகும். ஆகவேதான் இன்று நம் நாட்டில் நல்லறப்போதனைகளை வழங்குவதன் மூலம் இளஞ் சமுதாயத்தினரை நன்னெறிப்படுத்தவென ஆயிரத்துக்கு மேற்பட்ட அறநெறிப்பாடசாலைகள் நிறுவப்பட்டுள்ளன. யாழ் மண்ணிலே மட்டும் 150 அறநெறிப்பாடசாலைகள் அறநெறிக்கல்வியினை மாணவர்கள் மத்தியிலே போதித்து வருகின்றன. இதனடிப்படையிலே உலகோர் போற்றும் உத்தம புருஷர்கள் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் சீர்இணுவைத் திருவூரின் நடுவே எம்மை எல்லாம் அருள்பாலித்து நிற்கும் சிவகாமி அம்மன் உறைந்திருக்கும் ஆலயத்திற்கு அருகாமையில் சிவகாமி அறநெறிப்பாடசாலை அமைந்திருப்பது மிகவும் பக்திப்பரவசத்தை நமக்கு அளிக்கின்றது. அந்தவகையில் சிவகாமியின் அருட்பார்வையினால் பத்து ஆண்டுகளைக் கடந்து இன்று வளர்ச்சியடைந்து பல நற்பயன்களை மாணவர்களுக்கு நல்கி வருகின்றது எமது சிவகாமி அறநெறிப்பாடசாலை.
இன்று நாட்டிலே மனித மனம் வேகத்திற்கும், பரபரப்பிற்கும் உட்படுவதால் நல்லெண்ணங்கள் இல்லாமை, வாழ்வின் சுயநலம், போட்டி, பதவிமோகம், பொறாமை, களவு, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், சூறையாடல், நெருக்கடியான போர்ச்சூழல் போன்றன வளர்ச்சி பெறுவதனால் சமூகத்தின் சமநிலை, கட்டுக்கோப்பு குறைகின்றது. நாட்டின் ஒற்றுமையும் அமைதியும் நிலை தவறுகின்றன. பண்புகளை மதிக்காத, போற்றாத குறுகிய மனப்பான்மைகளே இத்தகைய நிலை ஏற்படுவதற்குப் பிரதானமான காரணமாகும். எனவேதான் இளம் பிராயத்திலேயே மனங்களைப் பயன்படுத்தச் இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 43 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 24
செய்கின்றன. ஒழுக்க வாழ்வோடிணைந்த சமயக் கல்வியைப் போதிப்பது அவசியமாகின்றது என்பதனை உணர்ந்து அறநெறிப் பாடசாலையும் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தினையும் நற் பண்புகளையும் நல்லறத்தினையும் போதித்து வருகின்றது.
அறநெறிக்கல்வியிலே சமயபோதனை என்பது அறிவாக இல்லாமல், வாழ்க்கையோடு பிணைந்த நெறியாக அமைய வேண்டும்; உயர்ந்த எண்ணங்களுக்கு வழிசமைக்க வேண்டும்; கிரியைகள், சடங்கு சம்பிரதாயங்களுக்கும் சிறப்பான மனத்துய்மை வளர்ப்பதாக அமைய வேண்டும்; அத்துடன் உயர் பண்புகளான அன்பு, நேர்மை, இன்சொல், பொறுமை, சேவை, தியாகம், கூட்டுறவு, ஒற்றுமை போன்றவற்றை மலரச்செய்ய வேண்டும்; நற்பண்புகளை வளர்ப்பதோடு தியனவற்றையும், அதனால் ஏற்படுகின்ற துன்பத்தினையும், துன்பம் தருகின்ற சிந்தனைகளையும் கட்டுப்படுத்தி வாழ்வை நெறிசெய்வதே சமயபோதனை என்பதை உணர்ந்து அதனை மாணவர்கள் மத்தியில் உணர்த்த வேண்டும் என்ற நோக்கில் எமது அறநெறிப்பாடசாலை
ஊடாக நாம் அதனை மாணவர்களுக்கு கற்பிக்கின்றோம்.
எமது அறநெறிப்பாடசாலையில் சமயம் மட்டும் போதிக்காது நாடகம், அறநெறிக்கதைகள் கூறுதல், பேச்சு, பட்டிமன்றம், கவிதை, கருத்துமோதல்கள், கருத்துப்பரிமாற்றங்கள், விவாதம், திருமுறைகளை ஒழுங்காகப் பண்ணுடன் ஒதுதல், நடனம் போன்றவற்றை மாணவர் களுக்கு கற்பிக்கின்றோம். மேலும் சமயகுரவர்கள், பெரியார்களின் குருபூசைத்தினங்களிலே குருபூசைவிழா நிகழ்த்தி பேச்சு, நாடகம் போன்ற பல நிகழ்வுகளையும், போட்டிகளையும் நிகழ்த்தி மாணவர் களை வளம்படுத்துவதில் அறநெறிப்பாடசாலைகள் முன்னிடம் வகிக்கின்றன. மேலும் மேற்கூறியபடி பல போட்டிகளை நடாத்தி மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர வைப்பதில் அறநெறிப் பாடசாலைகள் முன்னிற்கின்றன. மேலும் இவ் அறநெறிப்பாடசாலை களுக்கு இலவசமாக சமய அறநெறிநூல்கள், நீதிநூல்கள், இசைக் கருவிகள், கற்பதற்குரிய, கற்பிப்பதற்குரிய உபகரணங்களையும் வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கின்றனர்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 44 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

மேலும் அரசாங்க பாடசாலையிலே கற்பிக்கப்படுகின்ற சமய பாடமானது மேற்கூறிய நோக்கங்களினை முழுமையாக நிறைவேற்றவில்லை. 40 நிமிடங்களில் மேற்கூறிய நோக்கங்களினைப் போதிப்பது சுலபமான காரியமில்லை என்பதால்தான் இவ்வாறான அறநெறிப்பாடசாலைகள் நிறுவப்பட்டு அரச பாடசாலைகளால் முழுமைப்படுத்த முடியாத இப்பணிகளை அறநெறிப்பாடசாலைகள் பொறுப்பேற்று நிறை வேற்றுகின்றன. இதனைப் பெற்றோர்கள் நன்குணர வேண்டும். எமது பாடசாலை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குகின்றன. ஆனால் சைவசமயம் ஊற்றெடுக்கும் யாழ் மண்ணிலே அறநெறிப் பாடசாலைகள் இயங்குவது குறைவாகவும், மாணவர்களின் வரவு குறைவாக இருக்கின்றது என்பதும் மன வேதனைக்குரிய விடயமாகும்.
இவ்வாறு அறநெறிப்பாடசாலைகள் நேர்சீராக இயங்காமைக்கு பெற்றோர்களும், அறநெறிக்கல்வியை நன்குணர்ந்த, அறநெறிப் பாடசாலையின் நோக்கங்களினை என்னவென்று அறியாதவர்களும், தனியார் கல்விநிறுவனங்களும் அறநெறிப்பாடசாலைகளில் போதிய அக்கறை காட்டாமையும் காரணங்களாகும். இலவசமாக மாணவர் களுக்கு நன்னெறியைப் போதிக்கும் அறநெறிப்பாடசாலைகளுக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகாது நல்வழியில் செல்ல முன்வரவேண்டும். மேலும் ஊரில் உள்ள பெரியோர்கள், கற்றறிந்தவர்கள் அறநெறிக் கல்வியைப் பற்றியும், அறநெறிப்பாடசாலையின் நோக்கம் பற்றியும் தெரியாதவர்களுக்கு நன்குணர்த்தி மாணவர்களை அறநெறிக்கல்வி கற்க அனுப்புதல் வேண்டும். மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் தங்கள் கல்விநிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களை அறநெறிப்பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்து ஒத்துழைக்க வேண்டும்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 45 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 25
ஆகவே எதிர்காலத்தில் நாட்டின் சிகரங்களாக, சிற்பிகளாக மிளிரப்போகும் மாணவமணிகளை நன்கு அத்திவாரமிட்டு, வளப் படுத்தி நற்பிரஜைகளாக உருவாக்குவதில் ஆக்கமும், ஊக்கமும் அளிப்பது அறநெறிப்பாடசாலைகள் என்றால் அது மிகையாகாது. ஆகவே அறநெறிப்பாடசாலையின் நோக்கங்களை உணர்ந்து எதிர் காலத்தில் நாட்டின் தலைவர்களாக, நாட்டைத் தாங்கும் தூண்களாக உருவாகப்போகும் தங்கள் பாலகர்களை நல்லறத்தினைப் போதிக்கும் அறநெறிப்பாடசாலைகளுக்கு அனுப்பி அவர்களது எதிர்காலத்தினை நல்ல பயன்மிக்க எதிர்காலமாக அமைத்துக் கொடுக்கவேண்டும்.
“இன்றைய சிறார்களே நம் நாட்டின் நாளைய தலைவர்கள் ஆவார்கள்”
சங்க்தாதவராசா ஆசிரியர், இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலை
வணங்குதல் ஆலயத்தில் விளங்கும் இறைவனை வணங்குவதில் சில குறிப்பிட்ட முறைகளைக் கடைப்பிடிப்பது சிறப்புத்தரும். இறைவனைத் தலையால் வணங்குவது ஏகாந்த நமஸ்காரம் தலையின் மேல் வலக்கரத்தைக் கூப்பி வணங்குவது துவிதாங்க நமஸ்காரம். தலைமேல் இருகரங்களையும் குவித்து வணங்குவது திரிவிதாங்க நமஸ்காரம். தலை, முழங்கால், உள்ளங்கைகள் ஆகிய ஐந்து உறுப்புக்களும் பூமியில் பட வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரம். எமது சமய முறைப்படி பெண்கள் மட்டும் பஞ்சாங்க நமஸ்காரம் செய்யலாம். கால்கள், கைகள், காதுகள், நெற்றி, மார்பு ஆகிய எட்டு உறுப்புக்களும் தரையில் பட விழுந்து வணங்குவது அட்டாங்க நமஸ்காரம் ஆண்கள் மட்டும் அட்டாங்க நமஸ்காரம் செய்யலாம். கொடிமரத்தின் அருகே தவிர ஆலயத்தின் வேறு எங்கும் விழுந்து வணங்கக்கூடாது. கிழக்கு மேற்கு நோக்கிச் சந்நிதியின் வடக்கே தலை வைத்தும், வடக்கு தெற்கு நோக்கிய சந்நிதியின் கிழக்கே தலைவைத்தும் வணங்க வேண்டும்.
ܢܬ
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 46 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்
 

foLDuub
சிவகாமி அறநெறிப்பாடசாலையின் பண்ணிசை ஆசிரியையின் சிந்தனையிலிருந்து.
ESALESLSLMALALAMASAMSASLLALESeSASLESMSSSLASALSL LETAASAALSSSMSSSLSSSMSSSLTSLMALLSASALES LALLSSASSLLkSSAMAA ATSASMASLELSASLALESASSLALTLALAMA ALAALMSASALESA ALASSASALALEASAM LLAA LSLSALESASLSSALATASL A LLTLAMLALESASASAAALSLALASAMLS LLLLL LLAALMAA LSAASALALESMSAALSASLLASAAAAA ALAALALALS AAALSALASAAAA
இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலை தனது பத்தாவது ஆண்டு நிறைவினை சிறப்பாகக் கொண்டாடுவதையிட்டு மகிழ்வடைகின்றேன்.
D உலகத்தின் உயிரினங்கள் அனைத்துக்கும் ஆதாரமான இறைவன் தனது படைப்புக்களில் * மனித இனத்துக்கு வழங்கிய சிறந்த கொடைகளில் ஒன்று “கலை” எனும் மாபெரும் வளமாகும். இக் கலையை இயல், இசை, நாடகம் எனும் வடிவங்களாக்கி முத்தமிழாக்கிப் போற்றுகின்றனர். இம்முத்தமிழ் ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் தன்னகத்தே கொண்டு விளங்குவது.
கலைக்கல்வி ஏனைய கல்விகள் யாவற்றையும் விட மிக நுட்பமானதும், ஆன்மிக சம்பந்தமானதும் ஆகும். கலைக்கல்வியில் ஈடுபாடு கொள்வது இறைவனின் கொடையாகும். எனவே ஒரு மாணவனோ, மாணவியோ கலைக்கல்வியைத் தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர்களும், ஏனையோரும் அவர்களது உயர்வுக்கு மிகவும் ஒத்தாசை வழங்கவேண்டும். மாணவர்கள் கலைக்கல்வியில் உயர்ச்சி பெறத்தக்கவகையில் கிராமங்கள், நகரங்கள் தோறும் கலைக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். இக்கலைக்கூடங்களில் மாணவர்கள் தாம் விரும்பிய துறைகளைக் கற்கக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும். இதனால் ஒரே இடத்தில் பலதரப்பட்ட கலைஞர்கள் உருவாக்கப்படலாம்.
இந்தியாவில் கலைத்துறை வளர்ச்சியடையுமளவுக்கு இலங்கையில் வளர்ச்சியடையவில்லை என்பதை நாம் அறிவோம். இதற்குரிய காரணங்களில் ஒன்று பெற்றோர்கள் கலைக்கல்வியை விட ஏனைய கல்வியையே முன்னிலைப்படுத்தி பிள்ளைகளைப் புத்தகப் பூச்சிகளாக்குகின்றனர். ஏதாவதொரு கலைக்கல்வியிலும் பிள்ளைகளை ஈடுபடச்செய்தல் வேண்டும். “இளமையிற்கல்வி
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 47 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 26
சிலையில் எழுத்து” என்பதால் சிறுவயதிலேயே பிள்ளைகளை கலைக்கல்வியிலும் ஈடுபடுத்தி அதற்கான நேரத்தையும் ஒதுக்கி ஊக்கமளிக்க வேண்டும்.
இயல், இசை, நாடகக்கலையை வளர்ப்பதில் சமுதாயத்தின் பங்கு முக்கியமானதாகும். கலைஞர்களது திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கு ஏற்ப நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்து கொடுக்க வேண்டும். எமது பாரம்பரிய கர்நாடக இசையை இரசிக்கின்றோர் தொகை குறைந்து வருகின்றது. தரக்குறைவான சினிமாப் பாடல் இசையை விரும்பிக்கேட்கின்ற நிலைமை வேதனையானது. சினிமாவிலும் கள்நாடக இசையிலான பாடல்கள் இருக்கின்றபோதும் மனதுக்கு இதமளிக்காத பாடல்களையே அநேக இளமட்டங்கள் விரும்புகின்றனர். இந்நிலை மாறுவதற்கு பெற்றோர்கள் பிள்ளை களுக்கு இளவயதில் கள்நாடக இசையில், தேவாரப் பண்ணிசையில் ஆர்வம் உண்டாக்க வேண்டும்.
இந்தவகையில் அறநெறிப்பாடசாலைகளின் பணி ஒப்பற்றதாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளை களை அறநெறிப்பாடசாலைகளுக்கு அனுப்பி ஒத்துழைக்க வேண்டும். சைவத்திருநெறியாம் அறநெறி ஓங்கிவளர வேண்டும்.
திருமதி கோகிலா கஜேந்திரன் இராமநாதன் நுண்கலைப்பீடம், யாழ் பல்கலைக்கழகம்.
புண்ணியம் தரும் புனிதச் செயல்
இறைவழிபாட்டுடன் கீழ்க்குறிப்பிடப்படும் எளிய முறைகளைக் கடைப் பிடிப்பதனால் மேலான நன்மைகள் பெறலாம். * மரங்கள் வளர்ப்பது - ஆன்ம பலனளிக்கும்
துளசி வனம் அமைப்பது - பாவங்களைப் போக்கும் சுமங்கலி பூசை செய்வது - சௌபாக்கியம் தரும் குளம், கிணறு வெட்டுவது - தாய்க்கு மகன் பட்ட கடன் தீரும் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்துவது - சொர்க்க பதவி தரும்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 48 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

2一 afs Loub
பச்சிளம்பாலகர்களின் இறைபக்தியும்
சிறப்பும்
அறநெறியைப் பின்பற்றும் யாவரும் இறைசிந்தனையுடன், பூரண நம்பிக்கையுடனும், தூயபக்தியுடனும் ஒழுகவேண்டும்.
மாணவர்கள் தம் சித்தத்தை ஒருவழிப்படுத்திப் பூரண இறை பக்தியால் மிகுந்த பலனை அடையலாம். பால்மணம் மாறாப் பருவத்தில் தமது பிறவியில் ஏற்பட்ட தீயவிளைவுகளை அகற்ற எடுத்த இடையறாத வழிபாடு அவர்களுக்கு நற்பலன் கொடுத்தது. உதாரணமாக மார்க்கண்டேயர் தமது ஆயுட்காலத்தை சிவ வழிபாட்டில் இணைத்து இறைவனைச் சிக்கெனப் பிடித்ததால் மரண பயம் நீங்கி என்றென்றும் 16 வயதுடைய சிரஞ்சீவியானார்.
துருவன் தனது மழலைப் பருவத்தில் அன்புத்தந்தையின் மடிமீதமர முயன்றபோது சிற்றன்னை தடுத்தாள். அவன் இறைவனை வேண்டிப் பெற்றபேறாகத் துருவ நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
பிரகலாதனன் அசுரனான தந்தையின் தீயசெயலை நாடாது இறைவனிடம் தன்னை அர்ப்பணித்தான். நாராயணன் அசுரனை அழித்துப் பிரகலாதனனுக்கு இறையருள் நல்கியதால் நற்பெயருடன் நற்பதம் அடைந்தான்.
இவ்வுண்மையைப் பின்வரும் மூன்று கட்டுரைகளும் எமக்கு உணர்த்துகின்றன. நாமும் இவற்றைப் படித்து முன்னேறுவது அறச் செயலாகும்.
மார்க்கண்டேயர்
திருக்கடையூர் என்னும் திருவுரில் குடிகொண்டுள்ள இறைவன் அமிர்தகடேஸ்வரர். இறைவி அபிராமி அம்பாள். இத்திருக் கடையூர் இடைக்காலத்தில் திருக்கடவூர் என மருவியது. பின் மீண்டும் திருக்கடையூர் என்றே வழங்கப்படுகிறது.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 49 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 27
> . இத்திருவுரின் அண்மையில் அமைந்துள்ள மணல்மேடு வளம்மிக்க வனமாகக் காட்சியளிக்கிறது. இங்கு கொடிய மிருகங்களும் விஷப்பாம்புகளும் மிகுந்து காணப்படுகின்றன. இப்பகுதியில் மிருகண்டு என்னும் தவமுனிவரும் அவர்தம் தள்மபத்தினி மருத்துவவதி என்பவரும் தவவாழ்வில் மனமொன்றி இனிது வாழ்ந்தனர். இவர்களுக்குத் தம் குலம் சிறக்க ஓர் மகவு இல்லையேயென்ற துயரத்தால், முனிவர் இறைவனை வேண்டித் தவம்புரியலானார். தவமுயற்சியின் உச்சக்கட்டமாக ஒற்றைக்காலில் நின்று இறைவனை வேண்டிக் கடுந்தவம் மேற்கொண்டார். பதிவிரதையான மருத்துவவதி தான் கற்ற வேதசாஸ்திர விதிப்படி சிவசிந்தனையால் ஈர்க்கப்பட்டு மலர்களால் மாலைதொடுத்து இறைவனுக்கு அர்ப்பணிப்பாள். கணவனின் கடுந்தவ முயற்சியால் அவரின் உடல்வேதனையை உணர்ந்து கண் கலங்கினாலும் தமது பொழுதை வீட்டு வாசலிலிருந்து சிவப்பொழுதாகவே போக்கிவந்தாள்.
கொடிய மிருகங்களும், பாம்புகளும் மிருகண்டு முனிவரின் தவவலிமையால் தமது கொடுமையை விலக்கிச் சாதுவாகவே காணப்பட்டன. மேலும் அப்பகுதி முனிவரின் தவக்குடிலின் பரிசுத்தமும் நறுமணமும் அமைதியும் கொண்ட புனித இடமாகவே பரிமளித்தது. முனிவரின் தவத்தால் ஈர்க்கப்பட்ட சிவபிரான் திடீரென மிருகண்டு முனிவரின் முன் காட்சியளித்தார். இறைவனைக் கண்ட முனிவர் இறைவன் முன் வீழ்ந்து வணங்கி எழுந்தார்.
உடனே முனிவரை நோக்கிய இறைவன் உங்களுக்கு ஒரு மகவு கிடைக்கும். நீண்ட ஆயுளும் குறைந்த அறிவுமுடைய புத்திரன் வேண்டுமா? அல்லது குறுகிய ஆயுளும் நிறைந்த அறிவுமுடைய சற்புத்திரன் வேண்டுமா எனப் புன்முறுவலுடன் கேட்டார். இறைவனின் கோரிக்கையைத் தமது மனைவியுடன் ஆலோசித்த முனிவர் இறைவன் மீது வற்றாத அன்புடன் வணங்கும் அறிவுடைய சற்புத்திரனையே தந்தருளுமாறு வேண்டினார். அதுகேட்ட இறைவன் உங்கள் விருப்பப்படி ஒரு சற்புத்திரனைத் தந்தோம். அவனுக்கு வயது பதினாறு மட்டுமே ஆயுட்காலமாகும் என்று கூறி மறைந்தருளினார்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 50 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

சிவபிரானின் திருவருளால் ஒரு வருடம் சென்றதும் மருத்துவவதி தன் மணிவயிற்றிலிருந்து ஓர் அழகிய ஆண் மகவினைப் பெற்றெடுத்தாள். பெற்றோர் இப்பிள்ளைக்கு மார்க்கண்டேயன் எனப் பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர். மார்க்கண்டேயன் இளமையிலேயே சிறந்த இறைபக்தியும் கல்வியில் சிறந்த தேர்ச்சியும் பெற்றான். வேதசாஸ்திரங்களை இலகுவாகவும் விரைவாகவும் கற்றுத் தேறினான். இறைவன்மீது தணியாத பக்திபூண்டு இறைசிந்தனையில் ஆழ்ந்திருந்தான். தந்தையின் சந்தேகங்களுக்குத் தான் கற்ற கல்வியால் வேண்டிய விளக்கங்களையும் தந்துதவினான்.
தினமும் தவறாது தமது குடிசையிலிருந்து அமிர்தகடேஸ்வரர் ஆலயஞ்சென்று உள்ளன்போடு மனமொடுங்கிப் பூசித்து வந்தான். மார்க்கண்டேயன் பக்தி மிகுந்து இறைவனை வணங்கியபோதும் அவனது தாயார் மகனின் வயது பதினாறு மட்டுமென வரையறுக்கப் பட்டதென்று எண்ணி ஏங்கினாள். தன் மகனுடைய ஆயுட்காலம் இன்னும் ஒருவருடம் மட்டுமே எனப் பெற்ற வயிறு துடிதுடிக்க மனம் மிக வருந்தினாள்.
தனது ஆயுட்காலம் வயது பதினாறு மட்டுமென ஏற்கனவே அறிந்த மார்க்கண்டேயன் இதுவரை பதினைந்து வருடங்கள் சென்றதால் இன்னும் ஒரு வருட காலமே இருப்பதை உணர்ந்தான். இக்குறுகிய காலத்துக்குள் நூற்றெட்டுச் சிவத்தலங்களுக்குச் சென்று தரிசிப்பதென உறுதிபூண்டான். இதன்படி 107 சிவத்தலங் களைத் தரிசித்த பின் பெற்றோரைக் கண்டு வணங்கி விடைபெற முயன்றான். தமது இல்லம் வந்து பெற்றோரை வணங்கினான். அவர்களின் ஆசீர்வாதம் பெற்றபின் பெற்றோருக்கான பிரியாவிடை தந்தான். “தன்னைப் படைத்தவனே தன்னைக் காக்கட்டும்” என்று கூறிவிட்டு நேராக அமிர்தகடேஸ்வரர் ஆலயத்துக்குட் சென்றான். இறைவனை இடையறாது வணங்கித் துதிபாடினான். அப்போது பாடிய பாடலே ழரீசந்திரசேகராஷ்டகம் ஆகும்.
மார்க்கண்டேயனுக்கு அன்று தான் இறைவன் ஏற்கனவே அருளிய பதினாறு வயதின் இறுதிநாளாகும். மார்க்கண்டேயனின் உயிரைக் கவருவதற்காக எமதர்மன் தானே நேரில் வந்தான். இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 51 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 28
எமனைக் கண்டதும் மார்க்கண்டேயன் அமிர்தகடேஸ்வரரான லிங்கத்தைச் சிக்கென அணைத்துக் கொண்டான். இதுகண்ட எமன் உக்கிரமாகச் சிரித்தபடி மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசி எறிந்தான். அக்கயிறு மார்க்கண்டேயன் தழுவிய லிங்கத் திருமேனியையுைம் ஒருசேரச் சுற்றியது. இதனால் சீற்றங்கொண்டு லிங்கத்திலிருந்து தோன்றிய இறைவன் எமனைத் தமது காலால் உதைத்தார். கோபம் தாங்காது கையிலிருந்த திரிசூலத்தினால் அவனைக் குத்திக்கொன்றார். இச்செயலால் இறைவன் காலகண்டர்
S60 TT.
இறைவனின் சினம் தணிந்தது. மார்க்கண்டேயரை நோக்கி “கண்ணே நீ என்றும் பதினாறு வயதுடன் சிரஞ்சீவியாக இருப்பாய்” என்று அன்புடன் கூறி வாயார வாழ்த்தினார்.
எமன் கொலையுண்டதால் பூவுலகில் எவரும் இறக்கவில்லை. பூமிபாரம் தாங்கமாட்டாது பூமாதேவி நேராக இறைவனிடஞ் சென்று விண்ணப்பித்தாள். பூமாதேவியின் கோரிக்கையை ஏற்ற இறைவன் எமனுக்கு உயிர்ப்பிச்சை வழங்கினார். அத்துடன் சிவபக்தர்களை அதிகம் துன்புறுத்தக்கூடாதெனவும் அறிவுறுத்தினார். எமன் இறைவனை வணங்கி விடைபெற்றான். இறைவனும் மறைந்தருளினார்.
எமன் பாசக்கயிறு வீசியதால் அமிர்தகடேஸ்வரரான லிங்கத் திருமேனியின் மீது ஏற்பட்ட தளும்பு இன்றும் காணப்படுகிறது. மேலும் லிங்கத்தின் உச்சியில் இறைவன் தோன்றியபோது ஏற்பட்ட லேசான பிளவு இன்றும் தென்படுகிறது.
இத்திருத்தலமான திருக்கடையூர் இறைவன் வீரச்செயல் புரிந்த எட்டு வீரட்டானங்களில் ஒன்றாகும். இங்கு குடிகொண்ட அபிராமி அம்பாளும் அற்புதமான செயலினால் புதுமை மிக்கவர். அபிராமியின் மீளர் அடிமையான அபிராமிப்பட்டர் என்பவரின் பக்தியை நிலைநாட்டச் சித்தங்கொண்டு தை அமாவாசைத் திதி அன்று வானத்தில் பூரணநிலாவைப் பிரகாசிக்க வைத்தவர்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 52 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதி என்னும் பாடல்களைப் பாடி காணிக்கையாக்கிய பெருமையும் இத்திருத்தலத்துக்குப் புதுமை சேர்க்கிறது.
இறைவனின் திருவருளும் சிவபக்தினின் இறைசிந்தனையும் ஒருநாளும் தளர்வறியா பிஞ்சு உள்ளமும் காலத்தை வென்ற புனிதமான நிகழ்வும் என்றும் இறையன்பர்களுக்குக் கிடைக்கும் தெய்வீகப்பேறு இதுவாகும் என நாமும் போற்றிப்புகழ்ந்து இன்புறுவோமாக.
துருவன்
பால்மணம் மாறாத பருவம், கள்ளம் கபடமற்ற வஞ்சனை யில்லாத பிஞ்சு உள்ளங்கள் மிகத் தூய்மையானவை. இப்பருவத்தில் பெற்றோரை நன்கு கட்டித்தழுவி, மடிமீதிருந்து கொஞ்சிக் குலாவு வதில் அதிக நாட்டம் வரும். இது இயற்கையாகவே இறைவனால் வழங்கப்பட்ட நிகழ்வாகும். இந்த நியதிக்கமைவாகவே துருவன் ஒருநாள் தன் பிஞ்சுப்பருவத்தில் குறுநடை நடந்து தன் தந்தையின் மடிமீதமரச் சென்றான்.
துருவன், பட்டத்தரசியின் அல்லாத வேறோர் மனைவி வயிற்றில்ப் பிறந்தவன். துருவனின் அபிலாசையினிடையே தந்தையின் பட்டத்தரசியான சிற்றன்னை குறுக்கிட்டாள். அவனைத் தந்தையின் மடிமீதமரவிடாது தடுத்தாள். அவனது பிஞ்சு உள்ளம் ஏங்கியது. அவள் துருவனை எங்கே போகிறாய் எனக் கடிந்தாள். தனது சிற்றன்னை தன்னை அனுமதிப்பாளெனத் துருவன் எண்ணினான். ஆனால் அரசன் மடிமீது அமரும் பாக்கியம் பட்டத்தரசியாகிய என் வயிற்றிற் பிறந்தால் மட்டும் கிடைக்கும். நீயோ வேறொருத்தியின் பிள்ளையென ஆணவத்துடன் கூறினாள்.
இதுகேட்டதும் துருவன் அப்படியாயின் தான் என்ன செய்ய வேண்டுமெனப் பணிவுடன் கெஞ்சினான். அவளோ பாதகி “கடவுளிடம் போய்த் தவஞ்செய்து வா’ என ஏளனமாகப் பதிலளித்தாள். ஐந்து வயதில், ஏதும் அறியாப் பராயத்தில் சிற்றன்னை வேண்டா இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 53 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 29
வெறுப்பாகக் கேலியாகக் கூறியவற்றை நம்பிச் செயற்பட முற்பட்டான். இதேசமயம் துருவனின் தந்தை தனது அருமைமகன் தன் மடிமீது அமர ஆவலுடன் முற்பட்டபோது பட்டத்தரசி தடுத்ததை ஒருதலைப் பட்சமாக அவளின் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் ஏதும் பேச நாதியற்றவனாகத் தலைகுனிந்தான். ஆணவம் தலைவிரித்தாடியது.
“எல்லாம் நன்மைக்கே” என்ற முதுமொழிக்கிணங்கத் தன் அன்னையிடஞ் சென்று இறைவனை நோக்கித் தவஞ்செய்யப்போக அனுமதியும் ஆசீர்வாதமும் பெற்றான். நாராயணனை நெஞ்சிற் பதித்துத் தவஞ்செய்யப் புறப்பட்டான். ஓர் எழில்கொஞ்சும் சோலை நடுவேயுள்ள மரத்தினருகே ஒற்றைக்காலில் நின்றான். நாராயணனை உள்ளன்போடு பூசித்து நாராயண மந்திரத்தை இடையறாது ஒதிக் கொண்டிருந்தான். ஊண் உறக்கமின்றி சுற்றுச் சூழலையோ, பிற துன்பங்களையோ, உலக பந்தங்களையோ சிந்திக்காது பல காலம் கடுந்தவஞ் செய்தான்.
பிஞ்சுப் பாலகனின் கடுந்தவம் நாராயணனைப் பரவசமடையச் செய்தது. துருவன் முன் தோன்றிய நாராயணன் துருவனை நோக்கிக் குழந்தாய் உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன். உனது வேண்டுதலின் பேறாக உனக்கு நிரந்தரமாகவே மகிழ்ச்சிதரக்கூடிய புதியதுருவ உலகத்தைத் தருகிறேன். மேலும் உன் தந்தை ஒரு சமயம் வரும்போது அரசை உன்னிடம் ஒப்படைப்பான். உன் சகோதரனான உத்தமன் வேட்டையாடச் சென்று வேட்டையின்போது மாழ்வான். பட்டத்தரசி தன் மகனைத் தேடியலைந்து பின் தீயில் மாய்வாள் என்று எதிர்கால விளைவுகளையும் துருவனுக்கு எடுத்துக் கூறி அவனைச் சமாதானப்படுத்திவிட்டு மறைந்தருளினார்.
நாராயணன் மறைந்ததும் இறைசிந்தனையிலிருந்து விடுபட்ட துருவன் இவ்வுலக வாழ்வின் சிந்தனைகளை நோக்கினான். இறைவனிடம் மோட்சம் அடைய வேண்டியிருக்கலாமே எனவும் சிந்தித்தான். துருவனின் நெஞ்சில் நாராயணன் குடியிருந்ததால் பூவுலகிற்கு வேண்டிய தீய சிந்தனைகள் மறையவும் மன அமைதி யுடன் அரண்மனையை நோக்கிச் சென்றான். துருவன் அரண்மனைக்கு வருவதையறிந்த யாவரும் மகிழ்ந்து அவனை வரவேற்றனர். அரசன் தான் முன் செய்த தவறை எண்ணி வெட்கித் துயரடைந்தான்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 54 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

காலம் கனிந்து வந்ததும் அரசன் தனது அரசைத் துருவனிடம் ஒப்படைத்தான். அவனுக்குத் திருமணமும் செய்து வைத்தான். நாட்டு மக்களனைவரும் துருவனின் நீதியான ஆட்சியில் மகிழ்வுடன் வாழ்ந்தனர். மனுச்சக்கரவர்த்தியின் பரம்பரையில் உதித்த துருவன் மனுநீதிக்கமைவாக ஆட்சி செய்ததுடன் வேள்விகள் பல செய்து நாடு செழிக்க வகைசெய்தான். பலகாலம் அருஞ்சேவை செய்து அரசநீதியை நிலைநாட்டினான்.
குபேரனின் தூண்டுதலினாலும் மனுவின் சிபார்சினாலும் அரசைத் துறந்து பதரிகாச்சிரமத்தை அடைந்தான். நாராயணனை வேண்டித் தவமியற்றினான். தவத்தின் முதிர்வில் நாராயணனுடன் இரண்டறக் கலந்தான். இறைவன் திருவருளினால் ஏற்கனவே பெற்ற வரத்தின்பேறாகத் துருவ நட்சத்திரமாகி வானில் சிரஞ்சீவியாகப் பிரகாசிக்கிறான்.
ஐந்து வயதான அறியாப் பருவத்தில் துருவனின் மனத்திடம் நிலையான நன்மையை நாட வைத்தது. தனது குறிக்கோளை எட்டுவதற்காகத் தவமிருந்து வெற்றிகண்டான். நிகழ்கால இளஞ் சந்ததியினருக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். இன்றைய திருமணங் களில் மணப்பெண்கள் விண்ணில் பிரகாசிக்கும் துருவ நட்சத்திரத்தை மணமகனுக்குக் காட்டித் துருவனைப் போல பெருமுயற்சியுடன் செயற்படுமாறு அறிவுறுத்துவதை அவதானிக்கலாம்.
இறைவனை உள்ளன்போடு வழிபட்டு நல்வழிச் சென்றால் நமக்குக் கிடைப்பவை யாவும் நற்கதிதானே.
“ஊக்கமத கைவிடேல்”
பிரகலாதனன்
பிரகலாதனன் தன்முன் செய்வினைப் பயனாக, நாராயண
பக்தனாக, அசுரகுலத்து இரணியகசிபு என்பவனின் மகனாக
அவதரித்தவன். தேவர்களுக்கு அபயம் தரும் நோக்கில் இரணியனை
அழித்துத் தர்மம் நிலைநாட்ட உதவிய ஓர் கருவியாக இறைவனால்
படைக்கப்பட்டான்.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 55 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 30
முன்னொரு காலத்தில் இரணியகசிபு என்னும் அசுரன் ஆணவம், அகந்தை, தற்பெருமை குடிகொண்ட அரக்கமாளிகையாக வாழ்ந்தான். அவன் ஆணவம் என்னும் பேரவாவினால் இறைவனை நோக்கிப் பன்னெடுங்காலம் தவமிருந்து பலவரங்களைப் பெற்றான். இவ்வரத்தின்படி மூவுலகையும் ஆட்சிசெய்யவும், மூவுலகத்தாராலும் மிருகங்களினாலும் இறப்பு நேரிடாமலும், இரவிலோ பகலிலோ மரணம் ஏற்படாமலும், வீட்டின் உள்ளேயும் வெளியேயும் ஏதும் தீங்குகள் நேராமலும் தன்னுயிருக்கு அணிசேர்த்துக்கொண்டான்.
இவன் பெற்ற வரத்தினை ஆயுதமாகக் கொண்டு மூவுலகிலும் தன்னை மிஞ்சியவர்கள் எவரும் இல்லையென்ற அகந்தையால் தன் கெட்ட சிந்தனைப்படி மூவுலகத்தாரையும் வன்செயலால் கொடுரமாகத் தாக்கி வந்தான். நீதி அழிந்தது. நல்லோர் கண்ணிர் சிந்தினர். அபயங்கேட்டு அலறிய அமரர்களுக்கு அபயம் அளிக்க நாராயணர் முன்வந்தார். முள்ளை முள்ளால் எடுப்பது போல அசுரனை அலைக்க அவனுக்கொரு மகனாகத் தனது பக்தன் ஒருவனை அவதரிக்கச் செய்தார். இரணியகசிபுவின் ஆணவத்தை அழித்து அமரர்களுக்கு அபயமளிக்கும் பொருட்டுத் தாமே நரசிம்ம அவதாரம் எடுப்பதாகக் கூறி ஆறுதல் தந்தார். தேவர்கள் நாராயணரை வணங்கிச் சென்றனர்.
பிரகலாதனன் அசுர குலத்தில் அவதரித்தாலும் நாராயண னையே தனது இதயத்தில் இருத்திப் பூசித்தான். அவனும் வளர இறைபக்தியும் வளர்ந்தது. தன் மகன் நாராயணனை இடையறாது துதித்து நல்வழிச் செல்வதை இரணியகசிபு விரும்பவில்லை. நாராயணனை வழிபடாது தீயவழியில் திசைதிருப்ப அவன் தந்தை எடுத்த முயற்சி எவையும் கைகூடவில்லை. மூவுலகிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையென அகந்தையிலிருந்தவனுக்குத் தன் மகன் தனது எதிரியான நாராயணனை வழிபடுவது பெருஞ் சீற்றத்தைத் தந்தது. பிரகலாதனனுக்குப் பல அறிவுரைகள் சொல்லித் தன்வழிக்குக் கொண்டுவர முயன்றான், முடியவில்லை. சாமம், பேதம், தானம், தண்டம் ஆகிய நால்வகை மார்க்கங்களையும் பிரயோகித்தான். பலன் கிட்டவில்லை. பிரகலாதனன் தன் பிள்ளை இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 56 :- பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

என்ற பாசமும், தன் கட்டளையை:நிராகரிக்கும் போக்கும் இரணிய கசிபுவை இருமுனைக்கும் அலைத்தது. இதனால் மேலும் வெறுப் புற்றான். R * ww
பிரகலாதனன் தந்தை செய்யும் கொடுரங்களிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு நாராயணனிடம் அவ்வப்போது விண்ணப்பிப்பான். எது நடந்தாலும் மெளனமாகவும் இறைசிந்தனையிலும் ஆழ்ந்திருந்தான். தன்மகன் பலவாறாகவும் தன்னை அவமதிப்பதை உணர்ந்த இரணிய கசிபு ஒருநாள் மாலைவேளை மகனை நோக்கி “உன் நாராயணன் எங்கிருக்கிறான்” என வினவினான். நாராயணன் என்ற பேச்சு வந்ததால் நாராயணன் எங்கும் இருப்பான். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் அணுவிலும் இருப்பான் என்றான். வீட்டு வாசலருகே தன் எதிரிலிருந்த தூணைக்காட்டி இத்தூணிலுமிருப்பானா எனக் கனல்கக்கும் விழியுடன் கேட்டான். பிரகலாதனன் ஆமாம் என்றான்.
இதுகேட்டதும் கோபாவேசத்துடனிருந்த இரணியகசிபு தன் கையிலிருந்த கதாயுதத்தினால் தூணின் மீது ஓங்கியடித்தான். அப்போது அத்துணைப் பிளந்துகொண்டு நரசிங்கப்பெருமான் (நரசிம்ம அவதாரம்) தோன்றினார். நரசிம்மப்பெருமான் இரணிய கசிபுவைத் தன் கைகளால் கிழித்துக் கொன்றொழித்தார். ஆணவம் அழிந்தது. இறைபக்தியும் பொறுமையும் பேணிய பிரகலாதனன் காப்பாற்றப்பட்டான். தர்மம் நிலைபெற்றது.
ஆணவம், அகந்தை, பேராசை, தற்பெருமை யாவும். குடிகொண்ட இரணியகசிபு அழிந்தான். இறைபக்தியும் பணிவும் கொண்ட பிரகலாதனன் தன்னையும் தன் வினைப்பயனையும் இறைவனிடம் ஒப்படைத்தான். இறைவன் நேரில் வந்து பிரகலாதனனின் தீவினைகளையும், கொடுரத்தையும் நீக்கித் தன் பக்தனைக் காப்பாற்றினார்.
முன்னர் இரணியகசிபு இறைவனிடம் தவமிருந்து கேட்ட வரத்தின்படி மூவுலகத்தாராலும் மிருகங்களினாலும் இறக்கவில்லை.
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 57 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 31
கொன்றவர் மனித உடலும் சிங்க முகமும் கலந்த உருவமான நரசிம்மப்பெருமான். வீட்டின் உள்ளும் வெளியுமல்லாத வாசற் படியில் கொல்லப்பட்டான். கொலையுண்ட நேரம் பகலும் இரவும் சங்கமிக்கும் கருகுமாலைப்பொழுதாகும்.
பிரகலாதனன் பால்மணம் மாறாத பிஞ்சுப் பருவத்தே இறை பக்தியுடன் தன் செயல் யாவற்றையும் இறைவனிடம் அர்ப்பணித்தான். நீதி நிலைபெற்றது. மூவுலகோரும் கவலை நீங்கி அறவழியை நாடினர். தேவர்கள் தம் தூயபணியாற்ற முடியாத நிலை மாறி உள்ளன்போடு தத்தம் வேள்விக் கடமைகளைச் செய்து இன்புற்றனர்.
பிஞ்சுப்பருவத்தில் அறநெறியைப் பின்பற்றி இறை சிந்தனைக்குத் தன்னை அர்ப்பணித்த பிரகலாதனனை நாமும் பின்பற்றி நற்பயனை அடைவோமாக.
மூ.சிவலிங்கம் பொறுப்பாளர், சிவகாமி அறநெறிப்பாடசாலை, இணுவில்,
-
s நல்லொழுக்கம்
குழந்தைப் பருவத்திலேயே ஒருவரை ஒழுங்கில் கொண்டுவந்துவிட வேண்டும். ஒழுக்கத்துக்கு முதல் அங்கமாகப் பணிவு, அடக்கம், விநயம், கட்டுப்பாடு இருந்தால்தான் நல்லொழுக்கத்தோடு முன்னேறமுடியும், கட்டுப்பட்டு நடப்பதற்கு முதலில் அடக்கம் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும். சகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டியது விநயந்தான்.
மருந்தை விடப் பத்தியம் முக்கியம், கல்வி என்னும் மருந்தைவிட விநயம் என்ற பத்தியம் முக்கியமானது இந்த விநயத்தைத்தான் பழையகாலத்தில் மாணவர்களின் பிரதான லட்சணமாக வைத்தார்கள். விநயமுடையவன் என்ற பொருள் கொண்டதான 'விநேயன்’ என்றே மாணவனுக்குப் பெயர். இந்த விநய குணம் வருவதற்காகவேதான் முக்கியமாக அவனைக் குருகுலவாசம் என்று ஆசிரியனிடத்தே வாழும்படியாகக் கொண்டுபோய்விட்டனர்.
ہینا
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் - 58 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

எமது சைவத்திருநெறிக்கழகத்தின் நிர்வாகத்தை அலங்கரித்தவர்கள்
தலைவர்கள் : திரு. க. முருகையா
திரு. இ.தயானந்தன் திரு.க.தருமநாயகம் திரு. கெ.தவராசா
GJILIGUISTIT.hsi திரு.ந.தவசோதிநாதன்
திரு.ச. பூஞரீமகேஸ்வரன் திரு.ந. காசிவேந்தன் திரு. சி.சரவணபவன்
பொருளாளர்கள் : திரு.மு. சிவலிங்கம்
திரு.ந. காசிவேந்தன் திரு.க. பரமேஸ்வரன்
இணுவில் சைவத்திருநெறிக்கழக உறுப்பினர்கள்
இருப்பவர்கள் (இடமிருந்து வலம்) - நகாசிவேந்தன், க.தருமநாயகம், பெ.கனகசபாதி (போசகர்), கெதவராசா (தலைவர்), மூ.சிவலிங்கம் (அறநெறிப்பாடசாலைப் பொறுப்பாளர்) நிற்பவர்கள் (இடமிருந்து வலம்) -செ.உதயகுமாரன் (உபசெயலாளர்), க.பரமேஸ்வரன் (பொருளாளர்), சி.சரவணபவன் (செயலாளர்), க.கண்ணபிரான், இதயாகரன், இதுகானந்தன், வருகைதராதோர்-இ.நாகவேல்ராசா, க.பூர்கருணாகரன்
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் - 39 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமர்

Page 32
சிவகாமி அறநெறிப்பாடசாலை ஆசிரியைகள்
இருப்பவர்கள் (இடமிருந்து வலம்) - செல்வி,இபிரசன்னா, செவ்விதசங்கீதா, திருமதி கோகிலவதனி கஜேந்திரன். நிற்பவர்கள் (இடமிருந்து வலம்) -திருமதி பத்மினி மகேந்திரன், செல்விதர்ஷா
சிவகாமி அறநெறிப்பாடசாலை மாணவர்கள்
-
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: 60 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்
 
 

சிவகாமி அறநெறிப்பாடசாலை மாணவிகள்
இந்துசமய கலாசார விழா - திருஞானசம்பந்தர் திருவுருவ ஊர்வலம் (இணுவில் சிவகாமி அம்மன் கோவிலிருந்து இணுவில் இளந்தொண்டர் சபைக்கு)
நி
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் - 81 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்

Page 33
சிவகாமி அறநெறிப்பாடசாலை ஆண்டுவிழாவின போது செஞ்சொற்செல்வர் உரையாற்றுகிறார்
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் - 62 - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்
 

சிவகாமி அறநெறிப்பாடசாலை மாணவர்களின் நாட்டிய நிகழ்ச்சி
உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நாட்டிய நிகழ்வில் சிவகாமி அறநெறிப்பாடசாலை மாணவிகள்
S S S
ாே-- · =-1 = -1 -t í i-ril== -1; . . . இணுவில் சைவத்திருநெறிக்கழகம் - - :
凯
蚌
நன்
岛
E.
yg
L.
ນາໍ

Page 34
சைவத்திருநெறிக்கழக தலைவர் தலைமையில் பண்ணிசை இசைக்கும் சிவகாமி அறநெறிப்பாடசாலை மானவர்கள்
சிவகாமி அறநெறிப்பாடசாலை மாணவர்களின் வில்லிசை நிகழ்ச்சி
இணுவில் சைவத்திருநெறிக்கழகம் -: நி! - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்
 
 

அறநெறிப்பாடசாலையில் பண்ணிசை கற்கும் மாணவர்கள்
அறநெறிப்பாடசாலையின் விழாவொன்றுக்கு மங்கல விளக்கேற்றல்

Page 35
நவில்கின்றோம் நன்றிதனை.
எம்மையெல்லாம் நல்வழிப்படுத்தி, நற்செயலாம் நற்கல்வியான அறநெறிக்கல்வியை ஊட்டும் சிந்தனையைத் தந்து நெறிப்படுத்தி இயங்கவைத்துத் திருவிளையாடல் புரிந்த சிவகாமி அம்பாளின்
திருவடிகளை முதற்கண் நன்றியுடன் போற்றி வணங்குவோம்.
இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலை என்ற பெயரில் இப்பாடசாலையைத் தமது அனுசரனையுடன் நடாத்த முன்வந்த இணுவில் சைவத்திருநெறிக்கழகப் பெருமக்களுக்கும், இன்றுவரையான செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றிகள். இந்த நிறுவனம் இயங்கு தெற்கு உறுதுனை புரிந்த உள்நாடு, வெளிநாட்டிலுள்ள எல்லாப்
பெரிபார்களுக்கும் நன்றிகள்.
TLL L YTMLcLLL TmTSS TTLLL LLLL TL etmTTTz பங்கச்
[፻፵j 占5 墅》
தமது அன்னதான மண்டபத்தை மனப்பூர்வமாகத் தந்துதவிய
அன்னதான சபையினருக்கும் நன்றிகள்,
எமது அறநெறிப்பாடசாலையில் வேதனமோ, வேறு உதவி களோ எதிர்பாராது அறநெறி என்னும் மனித நேயத்துடன் அருஞ் சேவையாற்றிய, சேவையாற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றிகள், சமயக் கல்வி வளர்வதற்காக எமது தூண்டுதலின்பேரில் இதுவரை காலமும் இப்பாடசாலையில் பயின்ற, பயிலும் மாணவர்கள் தமது ஒழுக்கமும் பண்பும், திறமையும் அரவணைக்க இப்பாடசாலையின் முன்னேற்றத் துக்கு உதவிய மாணவச் செல்வங்களுக்கும் நன்றிகள். அன்னை சிவகாமியின் பேரருளால் அகவை பத்தை நிறைவு செய்தமையால் ஒள் மலர் வெளியிட எண்ணி நாம் அணுகிய போது இதயசுத்தியுடன் ஆக்கங்கள் தந்துதவிய அனைவருக்கும் நன்றிகள். எமது மலரினைக் குறுகிய காலத்தில் சிறந்த வடிவமைப்பில் உருவாக்கித் தந்த இணுவில் சண்சைன் கிராபிக்ஸ் நிறுவன நிள்வாகிக்கும் நன்றிகள். மேலும் மலன் ஆர்த்திலும், விழா ஏற்பாட்டிலும் வேண்டிய ஒத்துழைப்பை நல்கிய அனைவருக்கும் இணுவில் சைவத்திருநெறிக்கழகம் சார்பில் எனது உளம்கனிந்த நன்றிகள் கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சி.சரவணபவன் Gl-FLLUE;" | Histir,
இன்ஜில் ஒழஓருநெறிக்கழகம் இணுவில் ரசவத்திருநெறிக்கழகம் - r - பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமணன்


Page 36
=്=്
ER
 
 
 

இ=த்கஜ்==స్ట్
நறிக் கழக வெளியீடுகள்
-
மருந்த ப்ே பிற ஐ |
-
சன்னசின்திங்க்ஸ் - கே.கோள் வீதி இணுவிள்.
ע_{# :53 דדדים : b{HElium