கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுவருக்கு விபுலாநந்தர்

Page 1


Page 2
தலைப்பு:
5
ஆசிரியர்: மொழி: பதிப்பு:
பக்கம்:
பிரதிகள்:
alia) LD: ஓவியம்:
பதிப்பு:
விலை:
சிறுவருக்கு விபுலாநந்தர்
சிறுவர் இலக்கியம்
திமிலை மகாலிங்கம்
தமிழ்
மார்கழி 1992
56
1000
ஆசிரியருக்கு
L. Tä Lsĩ. 6rsiu). வேலாயுதம்பிள்ளை புனித செபத்தியார் அச்சகம்
65, லேடி மனிங் டிறைவ்
மட்டக்களப்பு.
25/-
வெளியீடு: தேனமுத இலக்கிய மன்றம் ܀
மட்டக்களப்பு.
விநியோகம்:
மாலி என்ரபிறைசஸ்
பார் வீதி மட்டக்களப்பு.
i
i

ASASASASASASASASASeSeSAS SSASASASAAiqiAAA AAAA A SA ASAAASMSMeSAeA
தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டுவிழாக்கொண்டாடி மகிழ்ந்து நன்றிப் பெருக்கில் நனைந்து இன் புறும் இவ்வாண்டில் அவரது தாழ்பணிந்து சிறுவர் சமுதாயத்துக்காக சிறுவருக்கு விபுலா நந்தர் எனும் இந்நூலை சமர்ப்பிப்பதில் மகிழ் ச்சியடைகிறோம்.
தேனமுத இலக்கிய மன்றம் 25 - 12 - 92 மட்டக்களப்பு.
SAAA AAAAAqAAAAASAAALS AAALSAAAASL ASqqSLLS AL ALLLLSAAAAAALLLLLAALLLLLALA qLSLALALMLMLMqMMLALqLSAqSAMAMLALASMAMMMSALLq SAAAASA SAAAAAALAA AAAAAAAAqS ASASALqLqALALAqASLALALALALAqSLLALqLALqLqLSLSLALALAMLMLALALMSASAAqAqALALALA
iT

Page 3
பொருளடக்கம்
சுவாமி விபுலாநந்தர் கல்வியும் வழிபாடும் விளையாட்டுப் பிள்ளை செய்யும் தொழிலே தெய்வம் முதல் தமிழ்ப் பேராசிரியர் பூமித்தாயின் இனிய மகன் உயரும் வழி மகனின் கடமை அன்னையின் வார்த்தைகள் பெற்றதாயும் பிறந்த பொன் நாடு தந்தையின் கடமை
சல்வியே கருந்தனம்
மதபேதமற்ற மனிதர் உயர்ந்தவை எண்ணுதல் பசி தீர்த்த பண்பாளன் குருபக்தி அன்பின் உறைவிடம் பலன் கருதாத சேவை பேச்சு வன்மை புகழ் பூத்த புனிதன் மற்றவரை மதித்தல் இருவகை உயர்வுகள் அறிஞர் தலைவன் அழகு மொழியினர் இறைவன் விரும்பும் இன்மலர் உருண்டையான பூ என்ன பூ கொள்கை வீரர் யாழ் நூல் என்பது என்ன விபுலாநந்தர் விட்டுச் சென்றவை
06
07
08
0
2
13
4 15 6
18
9 31
22
24
25。
27 28
30
32 33 34 36
38
41 42
44
45
47
49

முன்னுரை
சுவாமி விபுலாநந்த அடிகள் ஒரு முத்தமிழ் வித்தகர். இலக்கிய ஆய்வுகள் செய்து வியத் தகு முடிவுகளை நிறுவியவர். ஆராய்ச்சியாளர். அறிஞர் பெருமகன். என்றெல்லாம் அடைரொழி கொடுத்து அறிஞர் மத்தியிலே அவரை அறி முகம் செய்யும் வகையிலே பல நூல்கள் உரு வாகி இருக்கின்றன. ஆனால் அறிவைத் தேடும் நிலையிலுள்ள சிறுவர் சமுதாயம் அவரது குணாதிசயங்களை உணரும் வகையிலே நூல்கள் இன்னும் உருவாகவில்லை. என்றே கூறலாம். சுவாமி விபுலாநந்தரா? அவர் பெரிய
அவரைப் பற்றிச் சாதாரண மக்கள் அறிந்து கொள்ள என்ன இருக்கின்றது. நாமெல்லாம் சிறியவர்கள் என்று ஒரு பக்கமாக விலகியிருக்க விளைகிறார்கள் இது அவர்களின் மன இயல் பாகி விட்டது.
பெரியவர்கள் மாத்திரமல்ல சிறியவர்களும் விபுலாநந்த அடிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன என் பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இன்றைய சிறுவர்களே நாளைய அறிஞர்கள் என்ற உண்மை உணரப்பட வேண்டும். இந்த வகையிலான சிந்தனைகளின் பிரதிபலிப்பே சிறு வருக்கு விபுலாநந்தர்' என்றும் இச் சிறிய நூலாகும்.

Page 4
விபுலாநந்த அடிகளின் வரலாற்றுச் சிறு குறிப்பொன்றும் அதனைத் தொடர்ந்து மனதில் பதிய வைக்கக் கூடிய விபுலாநந்தரின் குண இ ய ல் புக ளு ம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவைக்குப் பொருத்தமான திருக்குறள்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றைப் படித்து ரசித்துப் பயனடைய முன்வருவது இளைய சமு தாயத்தின் கடமையும் உரிமையுமாகும்.
இதனை நூலாக்கும் வகையிலே ஆலோச னைகளும் அணிந்துரையும் வழங்கிய விபுலா நந்தர் நூற்றாண்டு விழாத் தலைவரும் வட கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமாகிய திரு. க. தியாகராஜா அவர்களுக்கும் அட்டைப் படம் அழகுற வரைந்த ஒவியர் வேலு அவர்க ளுக்கும் சிறப்புற அச்சிட்டு உதவிய புனித செபத்தியார் அச்சகத்தாருக்கும்எமது நன்றிகள்.
மட்டக்களப்பு. திமிலை மகாலிங்கம்.
5 - 12 - 1992 w
O2

சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாத் தலைவரும் வடகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமாகிய
திரு. க. தியாகராஜா
அவர்களின்
அணிந்துரை
சுவாமி விபுலாநந்தரது நூற்றாண்டு நிறை வினை விமரிசையான முறையில் தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடும் காலகட்டமிது. அடி களார் பற்றிய சிறப்பு வெளியீடுகள், நினைவு மலர்கள், ஆய்வு நூல்கள், நினைவுச் சொற் பொழிவுகள் இலங்கையில் மாத்திரமன்றி இந்தியா, கனடா போன்ற நாடுகளிலும் சிறப் பான முறையில் வெளிவந்துள்ளன. எங்கும் விபுலாநந்த வெள்ளம் கரைபுரண்டு ஒடத் தலைப்பட்டுள்ளது. இவற்றின் பெரும்பான்மை யானவை வளர்ந்தோரின், இலக்கிய ஆய்வா ளரின், கல்வியாளரின் கண்ணோட்டத்தில் அவர் தம் மனவோட்டத்தில் அமையப் பெற் றுள்ளன. வளரும் சிறார்களது சிந்தனை, கண்ணோட்டம், ரசனை ஆகியவற்றை பற்றிய நூ ல் கள் வெளியிடப்படவில்லையென்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அடிகளார் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன். வளரும் இளம் சமுதாயத்துக்காகவே தனது உலகியல்
03

Page 5
வாழ்வினைத் தியாகம் செய்தவர். வாழ வழி தெரியாது ஈழத்தெருநீளம் அவர் கண்ட சிறு வர், சிறுமியற்காக இரங்கிய மனம் அவரது மனம். அவர் அமைத்த கல்விக் கூடங்களும், மாணவர் இல்லங்களும் இதை மிகத்தெளிவாக பறைசாற்றி நிற்கின்றன. சிறுவருக்காக சிந்தித் தவர், செயல்பட்டவர், வரலாறு படைத்தவர். எமது விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை யின் முக்கிய நோக்கங்களில் ஒன்று விபுலா நந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றினை யும், அவரது புகழ் பூத்த பல்வகையான பணி களையும் எமது வளரும் சமுதாயத்தினருக்கு தெளிவாக, சிறப்பாக, ஐயப்பாடற்ற முறை யில் சிறுவர் உலகத்திற்கு சிறப்புற அறிமுகப் படுத்துவதேயாகும். திமிலை மகாலிங்கம் அவர் களால் எழுதப்பட்டுள்ள “சிறுவருக்கு விபுலா நந்தர்’ என்ற இச்சிறுநூல் இந்நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதொரு முயற்சியாகும். அடிகளாரது வரலாற்றுக் குறிப் புகள் இருபதுக்கு மேற்பட்ட தலைப்புக்களில் விபுலாநந்த அடிகளாரது பல்வகையான குண நலன்களை, சிறப்புக்களை, கோட்பாடுகளை, சாதனைகளை நமது இளைய தலைமுறையின ருக்குப் புகட்ட முற்படுகிறார் இந்நூலாசிரியர். இவரது இம்முயற்சியை நாம் பாராட்டாமலி ருக்க முடியாது. அடிகளாரைத் தமது கலங் கரை விளக்கமாக, ஒப்புயர்வற்ற வழிகாட்டி யாக, நிலையான சொத்தாக எமது சிறுவர்
04

உலகம் கொள்ள வேண்டும். எமது பாடசா லைகளிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சிறப்பு மலர்கள் இந்த மனவோட்டத்தினை எமக்கு ஓரளவுக்கு கோடிட்டுக் காட்டுகின்றன.
திமிலை மகாலிங்கம் நமது எழுத்தாளர்க ளுள் ஒர் காத்திரமான இடத்தினைப் பெற்றுள் ளவர். நல்லதோர் நோக்குடன், இன்றியமை யாத துறைநோக்கி இச்சிறு நூலினைப் படைத் துள்ளார். இதிலுள்ள ஒவ்வோர் அத்தியாய மும் அடிகளார் பற்றிய ஒரு சேகியினை அல் லது சிறப்பினைப் பற்றியதாக அமைந்துள்ள மையும், சிறப்பினை நிலைப்படுத்தும் வகையில் பொருத்தமான திருக்குறள் பாக்கள் ஈற்றில் தரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சங் கள். கட்டுரைகளுடன் அடிகளார் பற்றிய சிறு வர் பாடல்களும் நூலுக்கும், நூலின் நோக் கத்திற்கும் சிறப்பாக அமைந்துள்ளது. இவ்வா சிரியரது சிறப்பு மிக்க பணி செம்மையாக அமைய எமது வாழ்த்துக்கள்!
க. தியாகராஜா
தியாகவாசம்’ மாகாண கல்விப்பணிப்பாளர். கல்லடி, 7 - 12 - 1992. மட்டக்களப்பு:
05

Page 6
1. சுவாமி விபுலாநந்தர்
குழந்தைப் பருவம் J இலங்கையின் கிழக்குத் திசையில் அமைந் துள்ளது மட்டக்களப்பு மட்டக்களப்பிற்குத் தென் திசையிலே சுமார் இருபத்திரெண்டு மைல் தொலையில் காரைதீவுக் கிராமம் உள் ளது. இக்கிராமத்தில் 1892ம் ஆண்டு மே மாதம் மூன்றாம் திகதி சுவாமி விபுலாநந்தர் பிறந் தார். இவரது தாயார் பெயர் கண்ணம்மை. தந்தையாரின் பெயர் சாமித்தம்பி என்பதா கும். W
சுவாமி விபுலாநந்தருக்கு அவரது தாய் தந்தையர் இட்ட பெயர் மயில்வாகனம் என்ப தாகும். மயில்வாகனனாருக்கு எழுத்தறிவித்த ஆசிரியர் திரு. க. குஞ்சித்தம்பி என்பவராவார். இவர் தமது ஒன்பதாவது வயதில் கல்முனை
களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் மட்டக்களப்பிலுள்ள சென். மைக்கேல் கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.
இவரது அடக்கமும் ஆர்வமும் தாய் தந் தையரை மகிழ்ச்சியடையச் செய்தது: பள்ளிக் கூடத்திலும் வீட்டிலும் பாடங்களை ஒழுங்கா
O6

கப் படித்தார். ஆசிரியரிடம் நல்ல பெயரையும்
பெற்றார்.
"பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவந்த
மக்கட் பேறல்ல பிற**
2. கல்வியும் வழிபாடும்
கல்வியிலே விருப்பமுடையவராக இருந்த மயில்வாகனனார் கடவுள் பக்தியிலும் சிறந்த வராக இருந்தார். இவரது இருப்பிடத்திற்கு அண்மையிலே கண்ணகி அம்மன் ஆலயம் இருந் தது. கண்ணகி அம்மனுக்கு விசுவாசமாக அவ ரது குடும்பம் இருந்தது. அவரது அன்னையின் பெயர் கூடக் கண்ணம்மை என்று இருப்பதை நாம் கவனிக்கலாம்.
கண்ணகி அம்மன் ஆலயத்தில் பூசை வழி பாடுகள் நடக்கும் காலத்தில் அகவல், காவியம், குளிர்த்திப் பாடல்கள் ஆகியன பாடப்படுவது வழக்கம். இந்தப் பாடல்களை மயில்வாகன னார் விருப்பமாகக் கேட்பார். அவைகளை மனனம் செய்வார். இதனால் கண்ணகி அம்ம னின் அருள் இவருக்கு நிறைய இருந்தது.
சிலப்பதிகாரம் என்பது ஐந்து பெரிய காப் பியங்களுள் ஒன்றாகும். இந்நூல் இளங்கோ அடிகளாரால் பாடப்பட்டது. கண்ணகியின் கதையே இந்தக் காப்பியத்தில் கூறப்பட்டுள் ளது. கண்ணகி அம்மன் இவரது விருப்பமான
07

Page 7
தெய்வமாக இருந்ததால் சிலப்பதிகாரத்தை இவர் விரும்பிப் படித்தார். அதில் கூறப்பட் டுள்ள தகவல்களைப் பற்றி ஆராய்ந்தார். அதனால் அவர் பிற்காலத்தில் பெரும் புகழ் பெறக் கூடியதாக இருந்தது. தெய்வ வழிபாடு உடையவர்கள் உலகிலே புகழுடன் வாழ்வார் கள் என்பதற்கு அவரது வாழ்வு ஒரு உதார ணமாகும.
'மலர்மிசை ஏகினான் மாணடிசேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்"
3. விளையாட்டுப் பிள்ளை
மயில்வாகனனார் பாடசாலை செல்லும் காலத்தில் படிப்பிலே கவனம் செலுத்தினார், அதேபோல விளையாட்டிலும் அவர் ஆர்வம் உள்ளவராக இருந்தார். சிறுபிள்ளைகளிட முள்ள துடுக்குத் தனமும் இவரிடத்தில் நிறைய இருந்தது. தீக்குச்சியில் இருக்கும். மருந்தைச் சுரண்டியெடுத்து மரத்திலே ஆணியால் துவார மிட்டு அத்துவாரத்தை தீக்குச்சி மருந்தால் நிரப்பி ஆணியை அதில் வைத்து கட்டையால் அடித்தால் 'டமார் என்ற வெடிச்சத்தம் உண் டாகும். இந்தச் சத்தத்தைக் கேட்பது ஆனந்த மாக இருக்கும். மயில்வாகனனார் ஒருநாள் இந்த விளையாட்டைச் செய்து விளையாடும் பொழுது மரக்கட்டையில் துவாரம் இடுவதற்
08

குப் பதிலாக அவரது தந்தையாரான சாமித் தம்பியார் சந்தனம் உரைக்கும் சந்தனக்கல் லிலே துவாரமிட்டார். தீக்குச்சி மருந்தை அத் துவாரத்தில் வைத்து வெடிக்க வைத்தார். வெடி வழக்கம் போல ‘படார்’ என்று சத்தம் கேட்டது. மயில்வாகனனார் மகிழ்ச்சியடைந் தார். ஆனால் அடுத்தகணம் அவரது நெஞ்சு "திகிர்" என்றது. காரணம் வெடி வெடித்த தோடு சந்தனக் கல்லும் இரண்டாக வெடித் துப் பிழந்து விட்டது. தந்தையாரிடம் பயபக் தியாக இருந்தவரான படியால் மயில்வாகன னார் மிகவும் பயந்து போனார். அட்டைப் பள்ளம் என்னும் இடத்திலுள்ள தென்னந் தோட்டத்தைப் பார்த்துவரப் போயிருந்த அவ ரது தந்தையார் வந்தால் முதுகும் வெடித்து விடுமோ என்று பயந்தார். அழ ஆரம்பித்தார் உணவு கூட உண்ணாமல் ஒடிப் போய்ப் படுத் துக் கொண்டார். குழ ந்  ைத யி ன் மனதை உணர்ந்தவள் தானே தாய். தனது மகனின் மனநிலையை உணர்ந்த அவரது தாயார், அன் போடு அவரை அரவணைத்தார். ‘அப்பா வரு வதற்கிடையில் உடைந்த கல்லுக்குப் பதிலாக வேறொரு கல் வாங்கலாம் பயப்படாமல் சாப் பிடு' என்று தென்பூட்டி உணவு உண்ணக் கொடுத்தார். அதன் பின்புதான் அவரது பயம் தெளிய ஆரம்பித்தது.
'ஒழுக்கம் விழுப்பம்தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப்படும்'
09

Page 8
4. செய்யும் தொழிலே தெய்வம்
பாடங்களை ஒழுங்காகப் படித்ததால் மயில்வாகனனார் பரீட்சைகளில் நல்ல புள்ளி களைப் பெற்றார். வகுப்புக்களில் திறமைத் தேர்ச்சிகளைப் பெற்றார். தனது பதினேழா வது வயதிலேயே சென். மைக்கேல் கல்லூரி யிலே படித்துக் கொண்டிருந்த காலத்தில்: (1909ல்) கேம்பிரிஜ் சீனியர் என்னும் பரீட் சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்தார். இவ ரது திறமையைக் கண்ட பாடசாலை அதிகா ரிகள் இவருக்கு ஆசிரியர் பதவி வழங்கினர். அங்கு இரண்டு வருடங்கள் வரை கடமை செய்தபின் கல்முனை புனித மரியாள் ஆங்கில பாடசாலையில் ஆசிரியராக இருந்தார். பின்னர் பயிற்றப்பட்ட ஆசிரியரானார், மீண்டும் சென் மைக்கேல் கல்லூரியில் ஆசிரி ய ர |ா கி ப் பணி புரிந்தார். -
பட்டதாரி
1915ம் ஆண்டு தொழில் நுட்பக் கல்லூர ரியிலே சேர்ந்து 1916ம் ஆண்டு தொழில் நுட் பத் துறையிலே “டிப்ளோமா' பட்டம் பெற் றார். இதைத் தொடர்ந்து வேதிநூல் ஆசிரிய ராகக் கொழும்பு அரசினர் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியிலும் பணிபுரிந்தார். அப்பொழுது லண்டன் பல்
O

கலைக் கழகப் பரீட்சையில் தேர்ச்சியடைந்து பி. எஸ். ஸி. (B. Sc) பட்டம் பெற்றார்.
துறவி
1922ம் ஆண்டு மயிலாப்பூர் பூரீ ராமக் கிருஷ்ண மடத்தில் சேர்ந்து தமிழ்ப்பணியும் சமயப் பணியும் புரி ந் தார். இ வ. ருக்கு "பிாபோதசைதன்யர்” என்ற சிறப்புப் பெயர் கிடைத்தது. 1924ம் ஆண்டு சித்திரா பெளர் ணமி தினத்தில் சுவாமி சிவாநந்தரிடமிருந்து சந்நியாசம் பெற்றுக் கொண்டார். அன்றுதான் அவருக்கு சுவாமி விபுலாநந்தர் என்னும் பெயர் குட்டப்பட்டது.
பற்பல பணிகள்
துறவறம் பூண்டாலும் சுவாமி விபுலாநந் தர் தமிழ்த் தொண்டு, சமயத் தொண்டு, சமூகத் தொண்டு ஆகிய தொண்டுகளிலிருந்து விலகவில்லை. இலக்கியம், கலை ஆகிய துறை களில் முழுநேரம் ஈடுபட்டு இருந்தார், தாம் கற்ற நல்ல விஷயங்களைப் பிறரும் அறியும் வண்ணம் கட்டுரைகளாக வெளியிட்டார். மேடைப் பேச்சு மூலமும் அறிவை மற்றவரு டன் பகிர்ந்து கொண்டார்.
தாங்குக தூங்கிச்செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.
11

Page 9
5. முதல் தமிழ்ப்பேராசிரியர்
சுவாமி விபுலாநந்தரின் தி ற  ைம  ைய உணர்ந்த காரணத்தால் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தினர் இவரை முதல் தமிழ்ப் பேராசிரியராக நியமித்தனர். (1931)
இதன் பின்னர் 1943ம் ஆண்டு இலங் கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அத்துடன் இலக்கிய ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.
"யாழ்நூல்' அரங்கேற்றம்
தமிழரின் இசைஞானம் பற்றிய சிறப்புக் களை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு “யாழ்' பற்றி ஆராய்ச்சிகள் செய்தார். பதினான்கு ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட ஆராய்ச் சிகளின் பயனாக “யாழ்நூல்" என்னும் இசை பற்றிய நூலை எழுதி முடித்தார். இந்நூல் 1947ம் ஆண்டு ஜூன் 5ம் 6ம் திகதிகளில் திருக்கொள்ளம் புத்தூர் திருக்கோயிலிலே ஆளு டைய பிள்ளையார் திருமுன்னிலையில் அரங் கேற்றம் செய்யப்பட்டது,
அமரத்துவம்
தனது வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக அமைந்த "யாழ்நூல்' அரங்கேற்றம் சுவாமி
12

விபுலாநந்தரின் இறுதி முயற்சியாக அமைந்தது என்று சொல்லும் அளவுக்கு அவரது வாழ்க்கை அமைந்து விட்டது. அதே 1947ம் ஆண்டு ஜ"சலை மாதம் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் இறைவனடி சேர்ந்தார். அவரின் உடல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் அவரது செயல்கள் இ ன் றும் நிலைத்து நிற்கின்றன. அவரது குண இயல்பு கள், கொள்கைகள், குறிக்கோள்கள் பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசிய மாகும்.
'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றயவை'
6. பூமித்தாயின் இனிய மகன்
காரை தீவில் பிறந்தவராம் கல்விச் சேவை புரிந்தவராம் பாரில் புகழாய் வாழ்ந்தவராம் பண்பில் மிகவும் உயர்ந்தவராம். சாமித்தம்பி தந்தை பெயர் தாயார் கண்ணம்மை ஆவார் பூமித்தாயின் இனிய மகன் புலவன் விபுலா நந்தரவர். பழைய நூல்கள் ஆராய்ந்து பாடல் பலவும் பாடியவர் நிலையாம் நூல்கள் பலசெய்து நித்திய நிலையை அடைந்தவராம்.
13

Page 10
தமிழர் பெருமை உலகறியச் காற்றும் விதத்தில் ஆராய்ந்து புவியோர் வியக்கும் யாழ்நூலைப் புனைந்த பெரியோர் இவராவார்.
7. உயரும் வழி
சூரியன் கிழக்கில் உதிப்பது போல் சுடரொளி இருளைத் தொலைப்பது போல் கூரிய அறிவின் சுடரொளியால் குவலயம் எல்லாம் ஒளி தந்தார். அறிவுச் சுடரின் ஒளியினிலே அறியாப் பழைய பெருமையினை தெரியத் தமிழின் இலக்கியங்கள் தேடிச் சுவைகள் பலதந்தார்.
அறிவுக் கண்கள் திறந்துவிடில் அன்றே தெரியும் குறைநிறைகள் பிரிவும் பகையும் பேதமையும் பிறவும் ஒடி ஒளிந்து விடும். கல்வி மனிதன் கண்என்றார் கற்போம் அதனை முன் என்றார் செல்வம் அதுவே மனிதனுக்குத் தேவை அறிவே எனச்சொன்னார். இதுவே எங்கள் முதல்தேவை எழுவீர் புரிவீர் இதுசேவை உதயம் விபுலா நந்தரவர் உரையை நினைந்து உயர்வோமே!
14

8. மகனின் கடமை
அன்னையும் தந்தையும் அன்பைப் பொழி கின்றனர். அரவணைத்து ஆறு த ல ளித் து அனைத்தையும் அன்புடன் வழங்குகின்றனர். இதற்கெல்லாம் ஈடாக மகனாகப் பிறந்த நான் வழங்கப் போகும் வெகுமதிதான் என்ன? அவர்கள் எதிர்பார்ப்பது போல அவையிலே பெரியவனாக, அறிஞர் பெருமகனாக ஆகிக் காட்டுவதே அவர்களுக்கு நான் செய்யக்கூடிய கைமாறாகும் என்பதை அடிகளார் நன்கு உணர்ந்திருந்தார்.
அரிய பல நூல்களைக் கற்பது பரீட்சை யில் சித்தியடைவதற்காக மாத்திரம் இருக்கக் கூடாது. வாழ்க்கையிலே கடைப்பிடிக்கக் கூடிய அரிய பண்புகளைக் கைக்கொள்வதற் காகத்தான் என்பது அவரது கருத்தாகும். 'கற்றாங்கு ஒழுகு “கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற அரிய கருத்துக்களுக்கு மதிப்பளிக்கக் கூடியதாக எமது வாழ்க்கை அமைய வேண்டும். என்பதை வாழ்க்கையிலே
வாழ்ந்து காட்டி நிரூபித்தவர் விபுலாநந்த அடிகளாா.
ஐயம், திரிபு இல்லாத வகையிலே அரிய நூல்களைத் தெளிவாகக் கற்ற அடிகளார் அவற்றால் உணர்ந்த உண்மைகளை அனை வரும் அறியும் வண்ணம் அழகு தமிழிலே
15

Page 11
  

Page 12
10. பெற்ற தாயும் பிறந்த
பொன் நாடும்
f
=ങ്ക
பிறந்த பொன்னாட்டின் பெருமைக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாக உள்ளம் படைத்த பலரைச் சரித்திரம் சந்தித்திருக்கின் AD ghl.
நாட்டுப்பற்று மனிதனுக்கு மிகவும் அவசி யம். தாயை நேசிக்கும் அளவுக்குத் தாய்த் திருநாட்டையும் நேசிப்பது மனிதர் கடமை. 'தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற - எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா' என்று பாரதி பாடியது இந்த உணர்வை வெளிப்படுத்தவே. விபுலாநந்த அடிகள் தமது பிறந்த பொன்னாட் டின் மகிமைக்காகப் பெரிதும் உழைத்தார். கல்வி கேள்விகளில் நமது நாடு சிறக்க வேண் டும் கற்றவரின் தொகை உயர வேண்டும் என்பதற்காகவே கல்விச் சாலைகளையும் அறி வியல் வகுப்புக்களையும் நடத்தத் துணிந்தார். இவைகள் மாத்திரம் போதாது நாட்டுப்பற் றும் வளர வேண்டும் என்று பாடுபட்டார்.
தாய்த் திருநாட்டின் பெருமைக்கும் அதன் இறைமைக்கும் இழுக்கு ஏற்படுமாயின் போருக் குச் செல்லவும் சித்தமாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்தார். உலகப் பெரும்போர் நிகழ்ந்த 1914ம் ஆண்டு நாட
18

ளாவிய அளவில் இளைஞர்கள் போருக்கு அழைக்கப்பட்ட பொழுது அவரும் கூடச் சென்றார். ஏனைய இளைஞர்களோடு போர்ப் பயிற்சி பெற்றார். இராணுவ உடையணிந்து துப்பாக்கிப் பயிற்சியும் பெற்றார். போரில் அவர் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட வில்லை. அதற்கிடையில் போர் ஒரு முடிவுக்கு வந்து விட்டது.
** பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும்
நற்றவ வானிலும் நனிசிறந்தனவே "
11. தந்தையின் கடமை
பருவத்தே செய்யும் பயிர்தான் வளர்ந்து நல்ல பலனைத் தரவல்லது. பயிர் போன்றது தான் சிறுபிள்ளையின் பராமரிப்பும் என்பார் கள். வசதிகள் குறைந்த கிராமப் புறமாகிய காரைதீவில் பிறந்தாலும் விபுலாநந்தர் உரிய காலத்தில் கல்வி கற்க ஆரம்பித்து விட்டார். அதற்குரிய வசதிகளைச் செய்து கொடுத்த பெருமை அவரது தந்தையாராகிய சாமித்தம்பி விதானையாருக்கு உரியதாகும். மகன் மயில் வாகனனாருக்கு குஞ்சித்தம்பி ஆசிரியர் மூலம் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுத்தார் அவரது தந்தை. இலக்கிய இலக்கண நூல்கள் மாத்திரமன்றி புராண இதிகாச நூல்களையும் வசதியையும் செய்து கொடுத்தார் அவர்.
19

Page 13
சாமித்தம்பி விதானையார் ஒரு நல்ல பக்தர். திருத்தலங்களுக்குச் சென்று வழிபடு வார். இடையிடையே சிதம்பரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வரும் பொழுது இலங்கை யிலே பெற முடியாத அரியபல நூல்களை இந்தியாவிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து மயில்வாகனனாருக்குக் கொடுப்பார். அப்பா ஆசையோடு வாங்கி வந்த நூல்களைப் படிக்க வேண்டுமென்று அவரது அன்னை கண்ணம்மை உற்சாகம் ஊட்டுவார். பிறந்த காலத்திலே இத்தகைய உற்சாகம் கிடைத்ததும் அடிகளா ரின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவி புரிந்தது. GT60TG)f7 LD, .
●”
"தாயோடு அறுசுவைபோம் தநதை யோடு கல்விபோம்.’’ என்பது சான்றோர் வாக்கு. தந்தை போனால் கல்வியும் போய் விடும். ஏனெனில் அவரது கவனிப்பு இல்லாமல் போய் விடும் என்பது கருத்து - மயில்வாகன னாரின் தந்தை அருகிருந்த காரணத்தால் (கல் விக்கு வேண்டியவை செய்தார். தந்தை தனது கடமையைச் செய்ய அடிகளாரும் அறிவுடைய ராகையால் அதற்கு அமைய நடந்து மேன்மை பெற்றார். ےى.
"தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்"
20

12. கல்வியே கருந்தனம்
கல்வி என்பது கரைகாண முடியாத பெருங் கடல், கொள்ளவும் கொடுக்கவும் குறையாதது. கொள்ளை அடிப்பவர்களாலும் கொள்ளையிட முடியாதது. தனக்கும் பிறருக்கும் நன்மை கொடுப்பது அறியாமையை அகற்றி அறிவாற் றலை வளரச் செய்வது. எனவேதான் பிச்சை யெடுக்கும் நிலை ஏற்பட்டாலும் கல்வியைக் கற்றுக் கொள்ளுதல் நலமானது என்று ஆன் றோர் கூறினர்.
சுவாமி விபுலாநந்தர் மு ன் னே ற ற ம் குறைந்த காரைதீவுக் கிராமத்தில் பிறந்தவர், எல்லா வசதியும் இல்லாத கிராமம் அது. எனினும் கல்வி கற்று நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் அவர் இரண்டரை மைல்களுக்கு அப்பால் கல்முனை யில் அமைந்திருந்த மெதடிஸ்த மிசன் பாட சாலைக்குக் கால் நடையாகச் சென்று கல்வி கற்றார். பாடப் புத்தகங்கள் அடங்கிய பையைச் சுமந்து கொண்டு கொதிக்கும் வெய்யிலிலும் நடந்து செல்வார். கற்கும் பொழுது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காகக் கற்றவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுவார்.
அந்த அளவுக்குக் கண்ணும் கருத்துமாகக் கல்வி கற்ற காரணத்தால்தான் அவர் ஆசிரி யர் பயிற்சி, டிப்ளோமாப் பட்டம், பாலபண்
2

Page 14
டிதம், பண்டிதம், விஞ்ஞானத்தில் பட்டம், பேராசிரியர், பத்திரிகாசிரியர், ஆராய்ச்சியா ளர், கவிஞர், நாடகாசிரியர், பேச்சாளர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர், ஆகிய உயரிய ஸ்தானங்களைப் பெற முடிந்தது.
வேறு யாருமே சாதித்திராத சாதனையா கிய "யாழ்நூல்’ எனும் அரியநூலை அவரால் வெளியிட முடிந்தது. அந்தச் செயற்கரிய சாத னைகளால் உலகம் என்றும் அவரை மறக்க முடியாத உயரிய இடத்துக்கு அவர் உயர்ந்து விட்டார்.
'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றயவை'
13. பெண்மைக்கு மதிப்பு
பெற்று வளர்ப்பதும் பெருமைகளுக்கு உரி மையாக்குவதும் பெண்ணினமே. விபுலாநந்த அடிகளாரின் வீட்டுக்கு அண்மையில் அமைந்த கண்ணகி அம்மன் ஆலயம் அவர் அடிக்கடி செல்லும் ஆலயமாகும். கண்ணகி வழக்குரைக் காதை படிக்கும் பொழு து அவதானமாகக் கேட்பார். பெண்ணினத்தின் மேல் அனுதாப மும் மதிப்பும் அவருக்கு எப்பொழுதும் இருந்
gl |
மகாபாரதக் கதையில் வரும் திரெளபதை யின் பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்தது.
22

துரியோதனன் ஆதியோர் பாண்டவருக்குச் செய்த அ நீதி க ள்; அந்த அநீதிகளை எதிர்த்து மன உறுதியுடன் பா ஞ் சா லி சபதம் எடுத்துக் கொண்ட சம்பவம் ஆகியவை அடிகளாரின் மன தில் ஆழமாகப் பதிந்திருந்தன.
தமிழ் நாட்டிலே கம்பீரமாக அரச கட்டி லேறி ஆட்சிபுரிந்த தமிழ் அரசியை அவர் வெகு வாகப் போற்றிக் கருத்து வெளியிட்டுள்ளார்:
தனது குருநாதராகிய இராமகிருஷ்ண பரம ஹம்சரையும் அவரது துணைவியாராகிய சார தாதேவி அம்மையாரையும் வெகுவாக மதித்த வர் சுவாமி விபுலாநந்த அடிகளார்.
வயதில் குறைந்த பெண்களை சகோதரி யாகவும், வயதில் முதிர்ந்தவர்களைத் தாயாக வும் மதிக்கும் கொள்கையுடைய இராமகிருஷ் ணரின் பாதையையே அவரது பாதையாக ஏற்றுக்கொண்டு துறவறம் மேற்கொண்டதும் பெண் ணி ன த் தி ன் மேல் அவர் கொண்ட மதிப்பை எடுத்துக் காட்டுகின்றது. ஒழுக்கமாக வாழும் பெண்கள் உலகத்தின் கண்கள் எனப் போற்றப்பட வேண்டியவர்கள். அத்தகைய பெண்கள் எதையும் சாதிக்க வல்லவர்கள் என் பது அடிகளாரின் கருத்தாக இருந்தது.
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மை உண்டாகப் பெறின்'
23

Page 15
14. மதபேதமற்ற மனிதர்
மயில்வாகனனாராக இருந்து பி ர போத சைதன்யர் என்னும் பெயரைப் பெற்று இராம கிருஷ்ணமிஷனில் துறவியானார். பின்னர் விபு லாநந்தா என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. தனக்கும் தான்சார்ந்த சமூகத்துக்கும் தொண்டு செய்யவே பலர் விரும்புவர். சுவாமி விபுலா நந்தரைப் பொறுத்த மட்டில் அவர் எல்லோ ருக்கும் நன்மை செய்யவே விரும்பினார்.
இராமகிருஷ்ண மிசன் மூலமாகக் கல்விக் கூடம் அமைக்கும் ஒரு திட்டம் வந்தபொழுது மட்டக்களப்பு நகருக்குள் அதனை நிர்மாணிக்க வேண்டுமேன்று பலர் அபிப்பிராயம் கூறினர். அந்த அபிப்பிராயத்தை அவர் ஏற்றுக்கொள்ள வில்லை. அமைதியான சூழலே கல்வி கற்பதற்கு உகந்த இடம் என்பது அவர்து அபிப்பிராயமாக இருந்தது. நெடுநாளைய சிந்தனைக்குப் பின் அவர் தீர்மானித்துக் கல்லடியில் கட்டி முடித்த சிவானந்த வித்தியாலயம் அவரது முடிவின் படியே செய்யப்பட்டது. கல்லடி அமைதியான இடம் என்ற ஒரு காரணமே எல்லோருக்கும் தெரிந்த காரணமாக இருந்தாலும் அ த ற் கு வேறொரு காரணத்தையும் அவர் சிலரிடம் குறிப்பிட்டிருந்தார்.
மட்டக்களப்பிலே தமிழரும் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள், கல்லடியிலே இக் கல்விச்சா
24

லையை அமைத்தால்தான் முஸ்லீம்களும் கல்வி கற்பதற்கு வசதியாக இருக்கும் என்பதுதான் அவர்கருதிய இரண்டாவது காரணமாகும்.
இரண்டு முக்கிய சமூகங்களுக்கிடையே அன் பையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதில் அவர் எவ்வளவு தூரம் அக்கறை கொண்டிருந் தார் என்பது இதிலிருந்து விளங்குகின்றதல் லவா?
*அன்புற்றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு'
15. உயர்ந்தவை எண்ணுதல்
பலவகையான இலக்கிய நூல்களையெல்
லாம் தேடிப் பிடித்து ஆராய்ந்தார் சுவாமி விபுலாநந்தர். யாழ் பற்றிய செய்திகள் எங் கெங்கு இருக்கின்றனவோ அவையெல்லாவற் றையும் குறிப்பெடுத்துக் கொண்டார். எடுத்துக் கொண்ட குறிப்புக்களை வைத்துக் கொண்டு வெவ்வேறு பெயர் கொண்ட யாழ்கள் எப்படி அமைந்திருந்தன என்பது பற்றி ஆராய்ந்தார். பலவிதமான யாழ்களின் அமைப்புகளை ஊகித் துக் கண்டறிந்து உருவமும் அமைப்பதில் வெற்றி கண்டார். ஆனால் ஆயிரம் நரம்பு யாழ் என்று குறிப்பிடப்பட்ட யாழ் எப்படி அமைந்திருந்தது என்பது கண்டு பிடிக்க முடி யாமலிருந்தது.
25

Page 16
பதினான்கு வருட ஆராய்ச்சியில் பலவித யாழ்களின் அமைப்பு முறைகளைக் கண்டு பிடித்தவருக்கு இந்த ஆயிரம் நரம்பு யாழ் பெரிதும் சிக்கலாக இருந்தது. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. எப்படியாவது இதனைக் கண்டு பிடித்தே தீருவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டார். -
அன்று இரவு நடுநிசியாகியும் அவர் கண் துயிலவில்லை. ஆயிரம் நரம்பு யாழ் பற்றிச் சிந்தித்தபடி வெளியில் உலவிக் கொண்டிருந் தார். நெடுநேரம் கழித்த பின்,
“இதோ கண்டு பிடித்து விட்டேன் நமது தங்குமிடம் போக வேண்டும்" என்று அவருடன் இருந்த சுவாமி நடராஜானந்த ஜீயிடம் கூறி னார். அவசர அவசரமாக இருப்பிடம் போன தும் மனதிலே தோன்றியதை அப்படியே பதிவு செய்து வைத்தார். ஆற அமர அமர்ந்து சிந் தித்தார். ஆயிரம் நரம்பு யாழின் அமைப்புக் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது என்ற நிம்மதிப் பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது.
உயர்வான எண்ணங்கள் உயர்வான நிலை களை உருவாக்க உதவும் என்ற உண்மை அன் றைய நிகழ்விலே அவதாணிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
**வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு'
26.

16. பசிதீர்த்த பண்பாளன்
பின்தங்கிய கிராமங்களிலுள்ள மக்கள் வரு மானம் போதாததால் வயிற்றுச் சோற்றுக்கும் வழியில்லாமல் சில வேளைகளில் இருப்பதுண்டு. கல்வி என்பது அவசியம் தான். ஆனால் வயிற் றுப் பசிக்கு உணவு தேவையாக இருக்கும் பொழுது கல்வியைத் தேடுவது எப்படி? இப்படி ஒரு நிலை. சில குடும்பங்களில் பாடசாலை செல்ல மனமிருந்தும் உடை வசதி இல்லாததால் செல்ல முடியாமலிருக்கும் அந்த நி  ைல யி ல், யாரைக் குறை கூறுவது. வாழ்க்கைத்தரம் உயர வழியே இல்லை. அதை உயர்த்தும் அளவுக்கு யாரும் துணியவுமில்லை. ஆகவே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொறுப்பை உயர்த்துவ தில் நேரடியாக இறங்காமல் கல்வித்தரத்தை உயர்த்த எண்ணினார் சுவாமி விபுலாநந்தர் . 'வயிற்றிற்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்' என்றார் பாரதி. எல்லோருக்கும் சோறிடுவதென்பது இயலாத காரியம்தான். ஆகவே கல்வி இல்லாத ஏழைச் சிறுவர்களின் பசிப்பிணியையும் உடை இல்லாத நிலமையையும் போக்குவதில் நாட்டம் செலுத் தினார். ஒரே மூச்சில் எல்லாமும் எ ங் கும் சாதித்துவிட முடியாது படிப்படியாக இதைச் செய்து பட்டினியை ஒழித்து அதன் இடத்தில் படிப்பினைத் திணிக்க நினைத்தார் தாய் தந் தையை இழந்த சிறுவர் சிறுமியர் பலரைப்
27

Page 17
பொறுக்கியெடுத்து அனாதை ஆச்சிரமத்தில் வசிக்கும் வழிவகைகளை வகுத்துச் செயற் பட் I — тіпті,
அத்தகைய விடுதிகளில் வசிக்கும் சிறுவர் ஒழுக்க சீலர்களாகவும் கடவுள் பக்தி நிரம்பிய வர்களாகவும் இருப்பதற்கு சகல ஒழுங்குகளும் செய்தார். சாரதா இல்லம் போன்ற இல்லங் களில் அவரால் வளர்க்கப்பட்ட பலர் இன்று நல்ல நிலையிலிருந்து அடிகளாருக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
*இனைத்துணைத் தென்பதொன்றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப்பயன்'
17. குருபக்தி
மடியில் வைத்து அரவணைக்கும் மாதாவுக் கும் பிதாவுக்கும் அடுத்த தெய்வமாகத் திகழ் பவர் குரு ஆவார். குழந்தை காணும் அடுத்த இடம் குருவின் இருப்பிடம். அதாவது பாட சாலை. உலக அறிவுக்கு வித்திடும் இடம் இந் தப் பாடசாலையே. எனவே பாடசாலையில் கல்வி கற்கும் ஆசானுக்கு அமைவாக நடப்பது மா ன வ ரின் கடமையாகின்றது என்பதைச் சுவாமி விபுலாநந்தர் நன்கு உணர்ந்திருந்தார்.
விபுலாநந்தர் சிறுபிள்ளையாக இருந்த பொழுது மயில்வாகனன் என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டார். அவரது தந்தை ஒரு முருக
28

பக்தர். அதனாலேயேமுருகனின்பெயரை அவருக்கு வைத்திருந்தார். மயில்வாகனனாருக்கு ஆரம்பத் தில் கல்வி கற்பித்தவர் குஞ்சித்தம்பி ஆசிரியர் ஆவார். ‘எழுத்து அறிவித்தவன் இறைவன்’ என்ற முதுமொழிக்கு விபுலாநந்தர் என்றும் மதிப்புக் கொடுத்தார். சுவாமி விபுலாநந்தர் கல்வி கற்றுப் பண்டிதரானார். பட்டங்கள் பெற்றார். பல பல ஆசிரியர்களை, பேராசிரி யர்களையெல்லாம் சந்தித்திருக்கிறார். ஆயினும் அவர் ஆரம்பத்தில் கல்வி புகட்டிய ஆசானுக் கும் மதிப்பு வைத்தே நடந்தார். 'அம்புவியின் செந்தமிழோ
டாங்கிலமும் எனக்குணர்த்தி அறிவுதீட்டி வம்புசெறி வெண்கமல
வல்லியருள் எனக்கூட்டி வைத்த குஞ்சுத் தம்பியெனும் பெயருடையோன்
தண்டமிழின் கரைகண்ட தகமையோன்றன் செம்பதும மலர்ப்பதத்தைச்
சிரத்திருத்தி எஞ்ஞான்றும் சிந்திப்பேனே" ஆரம்பத்திலே ஆங்கிலமும் அருந்தமிழும் கற்பித்த குஞ்சித்தம்பி ஆசிரியரின் மலர்ப் பதங் களைச் சிரல் இருத்தி எப்பொழுதும் அவரை மதித்து நடக்கிறேன் என்று குறிப்பிடுகின்றார் அடிகள்.
அது மாத்திரமல்ல அவர் து ற வி யான நாளில் "சுவாமிகள்" என்ற பதவிக்கு ஏற்றுக்
29

Page 18
கொள்ளும் "தீட்சை" வழங்கிய சுவாமி சிவா னந்தரை அவர் என்றும் மறக்கவில்லை. மட்டக் களப்பில் கல்லடியில் ஆரம்பித்த பாடசாலைக் குச் சிவானந்தா வித்தியாலயம் எனப் பெயரிட் டமை அவரது குருபக்திக்கு ஒரு எடுத்துக்காட் டாகும்.
பெரியாரைப் பேணாதொழுகின் பெரியாராறி
பேரா இடும்பை தரும்'
18. அன்பின் உறைவிடம்
சுயநலம் உள்ளவனால் அன்பு செலுத்த இயலாது தன்மீது மட்டும் உள்ள அன்பு சுய நலமானது. பிறரும் வாழ வேண்டும் பிறரும் மகிழ வேண்டும் பிறரும் உயர வேண்டும் என்ற சிந்தனை இருந்தால் சகலர்மீதும் அன்பு செலுத் தும் மனநிலை ஏற்படும். சுவாமி விபுலாநந்தர் தனக்கு மாத்திரம் பயனுள்ளதாக எதையும் செய்யவில்லை. அவர் பிறருக்கும் சேர்த்தே காரியங்களை ஆற்றினார். அதற்குக் காரணம் அவரிடம் அன்பு செய்யும் மனப்பான்மை இருந் ததேயாகும்.
வசதியிழந்த பல வறிய குடும்பங்களுக்காக அனாதை இல்லம் ஆக்குவித்தார். அடிப்படைக் கல்விகூட இல்லாத சிறுகிராமங்களிலே கல்விக் கூடங்களை நிறுவினார். கல்வியின் சிறப்பைப்
30

பிறரும் உணரும் வண்ணம் அரும்பெரும் உரை களை ஆங்காங்கே ஆற்றினார்.
நம்பிக்கையிழந்து நலிவடைந்த சிறுவர்களு க்கு நல்லாதரவு காட்டினார். சிறுவர்கள் மத்தி யிலே கலந்து உரையாடி மகிழ்ச்சியூட்டும் கதை கள் கூறி நம்பிக்கையூட்டினார் இவ் வ ரிய செயல்களால் பலரையும் கவர்ந்தார். அன்பின் மிகுதியால் பலர் அவரைத் தம்மவராக ஆக்கிக் கொள்ள ஆசைப்பட்டனர். அவருடன் பேசுவது பழகுவது, உரையாடல்களில் கலந்து கொள் வது; இவையாவுமே மகிழ்ச்சிதரும் பேறுகளாகப் பலர் கருதினர். அவர் தனக்குரியவராகாது பிற ருக்கு உரியவராக மாறிவிட்டார்.
அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த பின்னர் அவரது பூதவுடல் கூட அவரது கிரா மத்தில் நல்லடக்கம் செய்யப்படாது எல்லோ ருக்கும் பொதுவானதாக அவரால் ஆக்கப்பட்ட சிவானந்த வித்தியாலய வளவிலேயே நல்லடக் கம் செய்யப்பட்டது. விபுலாநந்த அடிகள் பிற ருக்கு உரியவராக மாறிவிட்ட தன்மையை எடுத்துரைக்க இச்செயலொன்றே போதுமான தாகும்.
n ரெல்லாம் தமக்குரியவர் அன்புடையார்له هذه به * *
என்பும் உரியர் பிறர்க்கு’’
3.

Page 19
19. பலன் கருதாத சேவை
‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" என்று பகவத் கீதையில் கூறினார் கிருஷ்ண பரமாத்மா, விபுலாநந்த அடிகள் ஆசாபாசங் களைத் துறந்து துறவியாக மாறினாலும் பிற ருக்காகத் தொண்டு செய்யும் பணியை மறக் கவில்லை. வழியற்ற வறியவரும் வளமான கல்வியைப் பெற வாய்ப்பளிக்க வேண்டும் என்று மனமார விரும்பினார். இதற்குப் பொருத்த மான ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.
துறவறம் பூண்ட ஒருவருக்குப் தொழில் என்பது எதற்கு? அதில் வரும் தொகையான வேதனம்தான் எதற்கு? என்று குறைபட்டார் விபுலாநந்த அடிகளாரை வேண்டிய ஒருவர். நேரடியாகவே அந்த நண்பர் கேட்டும் விட் டார். விபுலாநந்தர் சற்றும் சலனமடையாமல் அமைதியாகப் பதிலிறுத்தார், 'மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய விடுதியில் அனாதைச் சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் தேவை களைப் பூர்த்தி செய்யவே எனது ஆசிரியச் சம்பளம் பயன்படுகிறது' என்று குறைகண்ட மனிதர் கூனிக் குறுகி விட்டார். விடயம் விளங் காமல் தவறாக நினைத்து விட்டேன் என்னை மன்னியுங்கள் என்று கேட்டுக் கொண்டார் அந்த மனிதர்.
32

"மக்கள் சேவையே மகேசன் சேவை" என்ற கண்ணோட்டத்தில் சேவை பல புரிந்தவர் சுவாமி விபுலாநந்தர். இந் தியா வில் அவர் இருந்த காலத்தில் வசதி குறைந்தவருக்கு உத வியும் வறியவர்களுக்குச் சரீர உதவியும் செய்து சேரி வாழ் மக்களுக்கும் சேவை பல செய்தார். அதற்காக அவர் பிறரிடமிருந்து எந்த உதவி யையும் எதிர் பார்க்கவில்லை. இதுவே அவரது தூய்மையான பண்புக்கு எடுத்துக் காட்டாகும்.
"பொருளானா மெல்லாமென் றியா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு'
20. பேச்சு வன்மை
கண்கண்ட இடங்களில் வாய்க்கு வந்ததைப் பேசுவது உண்மையான பேச்சு அல்ல. அதனைப் பிதற்றுதல் என்பார்கள். 'கூடிப் பிதற்றுபவர் /bாட்டத்தில் கொள்ளாரடி சகியே நாளில் 1றப்பாரடி" பாரதியார் இங்கே குறிப்பிடுவது இத்தகைய பிதற் ற லே யா கும். அது அந்த நாளிலே மறந்து விடும் பேச்சு. ஆனால் அறிஞர் பெருமக்களின் அதரங்களிலிருந்து மலர்வது அர்த்தமுள்ள பேச்சு. அர்த்தமுள்ள பேச்சு ஆழ மானது அகன்ற அறிவின் செறிவு க  ைள க் கொண்டது. அப்பேச்சுக்களைக் கேட்பது பய னுள்ளது. அறிவை வளர்க்கவல்லது சிரமம் எதுவுமின்றி மக்கள் மத்தியிலே கல்வியையும்
33

Page 20
அறிவையும் கருத்துக்களையும் பரப்புவதற்கு இத்தகைய பேச்சு உறுதுணையாகஅமைகின்றது. இலக்கியம், கலை, நாடகம் மற்றும் எந் தக் கலையையும் மக்கள் முன் வைக்கவும் சந் தேகம் தீர்க்கவும் பேச்சு போன்ற நல்ல சாத னம் கிடைக்காது. விபுலாநந்த அடிகள் சிறந்த மேடைப் பேச்சாளர். அளவாகத் தெளிவாக ஆழ்ந்த அறிவின் பொருளாக அமைவது அவ ரது பேச்சு. சொல்ல வேண்டியவற்றைச் சொல் லும் முறையாகச் சொல்ல வேண்டிய இடத் திலே சொல்லும் திறமையை வள்ளு வர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய இலக்கணங்க ளுக்கு அமைவாகப் பேசுவதில் விபுலாநந்த அடிகள் மிகமிக வல்லவர். தமிழ் அறிஞர் மிகுந் திருந்த தமிழ் நாட்டிலே நிகழ்ந்த விழாக்கள் பல விபுலாநந்த அடிகளைத் தலைவராக ஆக் குவதில் பெருமை கொண்டன. யாழ் நகரிலும் அப்படியே சுவாமிகளின் பேச்சுத் திறமை நன்கு மதிக்கப்பட்டது.
*எனைத்தாலும் நல்லது கேட்க அனைத்தாலும்
ஆன்ற பெருமை தரும்’ ’
21. புகழ் பூத்த புனிதன்
1892ம் ஆண்டு மே மாதம் 3ம் திகதி பூமி
யில் அவதரித்த மயில்வாகனனார் அரியபல
பட்டம் பதவிகளைப் பெற்று 1947ம் ஆண்டு
34

புகழுடம்பு எய்தினார். அவர் பூவுலகில் வாழ்ந்த காலம் ஐம்பத்தைந்து ஆண்டுகள் மாத்திரமே. இந்த ஐம்பத்தைந்து ஆண்டுகால வாழ்க்கை யில் அவர் கற்ற கல்வியும் ஈட்டிய புகழும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது எனலாம். பல பல பரீட்சைகள் பலபல பதவிகள் அனைத்தி லும் சிறப்பாக மிளிர்ந்தார். அவரது வாழ் நாளையும் அவர் அடைந்த உயர்ச்சிகளையும் வரிசைப்படுத்தினால் எண்ணி வியக்கக் கூடிய தாக இருக்கும். உதாரணத்துக்குச் சிலவற் றைப் பார்ப்போம். 1901 - கல்முனை மெதடிஸ்த பாடசாலையில் மாணவர். 1909 - கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் தேர்ச்சி 1909 - மைக்கேல் கல்லூரியில் ஆசிரியர் பதவி. 1912 - 13 - ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி. 1916 - கொழும்பு தொழில் நுட்பக் கல்லூரியில்
டிப்ளோமா பட்டம் பெறல். 1917 - கொழும்பு அரசினர் கல்லூரியில் வேதி யல் ஆசிரியர், யாழ்ப்பாணம் சம்பத்தி ரிசியர் கல்லுரரி வேதியல் ஆசிரியர். லண்டன் பல்கலைக்கழகப் பரீட்சையில் B. Sc தேர்ச்சி. 1922 - பிரபோதசைதன்யர் என்ற பெயருடன் இராமகிருஷ்ண மிசன் துறவியாதல். 1925 - இராமகிருஷ்ண மிசன் பாடசாலைக
ளின் முகாமையாளராதல்.
35

Page 21
19 3l - அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதற் தமிழ்ப் பேராசிரியராதல். 1943 - இலங்கைப் பல்கலைக் கழகத்தில் முதற்
தமிழ்ப் பேராசிரியராதல்.
இவைகள் தவிர விபுலாநந்தர் என்னும் பட்டம் பெற்றார். பத்திரிகை ஆசிரியராக, கவிஞனாக, எழுத்தாளனாக, முகாமையாள ராக, ஆராய்ச்சியாளராக, பேராசிரியராக, நாடக ஆசிரியராக, மொழி பெயர்ப்பாளராக, ஆலோசகராக, வழிகாட்டியாக, துறவியாக இத்தனை பதவிகளையும் பெறும் தகுதி பெற்ற சுவாமி விபுலாநந்தர் புகழ்பூத்த புனிதன் என்று வர்ணிக்கப்படுவது மிகவும் பொருத்த மேயாகும்.
ί
*தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று”*
22. மற்றவரை மதித்தல்
வெள்ளையர் ஆட்சியில் உள்ளதை இழந்து விரக்தியுற்றிருந்த காலம் அது. அடிமைத்தளை யின் பிடியில் அடங்கி அறிவு மழுங்கிக் கிடந் தனர் மக்கள். எண்ணம் இருந்தாலும் எடுத்தி யம்பும் திறன் இல்லாது இயலாமையால் செய லிழந்திருந்தனர். அன்றைய இருள்சூழ்ந்த சமு தாயத்தில் ஒளிக்கீற்றாக வெளிப்பட்டவர் தான்
36

அமரகவி சுப்பிரமணிய பாரதி. காலத்துக்குத் தேவையான எளிமையும் இனிமையும் நிறைந்த இவரது பாடல்களைப் பாமரரும் பள்ளி மாண வரும் நன்கு விளங்கிக் கொண்டனர். ஆயினும் தரம் குறைந்தது என்று தள்ளி வைக்க முயன் றனர் அக்காலத் தமிழ்ப் பண்டிதர் சிலர். எளி மைத் தமிழுக்கு அவையில் இடம் கொடுக்க இயலாது என்று மறுகினர் சிலர். அந்த நேரத் திலே இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்குச் சென்று விபுலாநந்த அடிகளார் மயிலாப்பூர் மடத்திலே தங்கியிருந்தார்.
சுப்பிரமணிய பாரதியின் எழு ச் சி மிகு பாடல்களை விரும்பிப் பாராட்டினார் விபுலா நந்த அடிகள். சுப்பிரமணிய பாரதியின் பாடல் கள் ஆழ்ந்து பரந்து அறிவு புகட்டுபவை என் பது அடிகளாரது அபிப்பிராயம். அந்த அபிப் பிராயத்தை ஆணித்தரமாக மக்கள் மத்தியிலே எடுத்தியம்பிய பெருமை விபுலாநந்த அடிகளா ருக்கு உண்டு. அவரது ஆழமான பேச்சின்பின் னரே சுப்பிரமணிய பா ர தி யி ன் கவிதைகள் பண்டிதர் மத்தியிலும் பரிமாறத் தொடங்கின.
அத்துடன் நிற்காது அடிகளார் மட்டக்க ளப்புப் பகுதியிலே கல்விச்சாலைகளின் முகா மையாளராகப் பதவி வகித்த காலத்தில் சுப்பிர மணிய பாரதியின் பாடல்கள் பாடசாலையில் வகுப்புகளில் புகட்டப்பட வேண்டும் என்று சிபார்சு செய்தார்.
37

Page 22
இன்ன இன்ன வகுப்புகளிலே இந்த இந் தப் பா ட ல்கள் மாணவருக்குப் புகட்டப்பட வேண்டுமென்று கட்டளையிட்டு நடைமுறைப் படுத்தினார். செம்மை, அழகு, நன்மை என்ற அடிப்படையில் அவர் தெரிவு செய்த பாடல் களுள் சில வருமாறு:- 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ "பகைவனுக்கு அருள்வாய் நந்நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய்' - 'வீரசுதந்திரம் வேண்டிநின்றார் - பின்னர்
வேறொன்று கொள்வாரோ' *சொந்த நாட்டிற் பிறந்தக்கடிமை செய்து
துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்" ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே'
"குணம் நாடிக் குற்றமும் நாடி பவற்றுணர்
மிக்நாடி மிக்க கொளல்"
r. $
23. இருவகை உயர்வுகள்
・ 。 - ,་ ༥, : Y } ኳ{: .. '' . - :,
முயற்சி திருவினையாக்கும் என்பது அறிஞ ரின் முதுமொழி. செல்வத்தை உண்டர்க்குவது முயற்சிதான் என்பது இத்னால் பெறப்படுகின் றது. இது பொருள் பெர்திந்த முதுமொழி முயற்சியுடன் உழைத்தவர் பலர் சிறந்த செல் வந்தர்களாகப் பெயர் ப்ெற்றிருக்கிறார்கள்.
38

தவிரவும் உலகிலுள்ள செல்வந்தர்கள் பலர் இன்னும் முயன்று கொண்டே இருப்பதுவும் கண் கூடு. விபுலாநந்த அடிகளும் முயற்சி மேற் கொண்டு அயராது உழைத்தவர் தானே ஏன் அவர் "செல்வந்தராகவில்லை? துற வியா ன கோலம் ஏற்றவருக்குச் செல்வம் சேர்ப்பது எப்படி முடியும். அது அவருக்கு முரணான செயல், அவரது முயற்சி. முயற்சிதான் ஆயி னும் பொருட் செல்வம் சேர்க்கும் முயற்சியல்ல. அறிவுச் செல்வத்தைச் சேர்க்கும் முயற்சி. அறி வினைச் சேர்த்தார் அறிவுச் செல்வத்தை வழங் கினார். அது குறையவில்லை இன்னும் சுரந் தது மணற்கேணி போல.
உயர்வென்பது இரண்டுவகைப் படுகின்றது. பொருட் செல்வத்தால் உயர்நிலையடைவது ஒருவகை. அறிவுச் செல்வத்தைச் சேர்த்து அறி வால் உயர்வது இரண்டாவது வகை உயர்வு. முதலாவது வகை உயர்வு நிச் சயம ம் ற து. கொடுத்தால் குறையக் கூடியது. இரண்டா வது உயர்வு. கொடுக்கக் கொடுக்கக் குறைவ டையாத உயர்வு இரண்டாவது வகை உயர்வை அடைந்தவர் தான் சுவாமி விபுலாநந்தர்.
அவரது உயர்வு வீழ்ச்சியற்றது. வையம் 'ள்ள மட்டும் நிலைத்திருப்பது. அதனால் தானே வருடந்தோறும் விபுலாநந்த அடிக ளுக்கு ஆண்டு விழா கொண்டாடப்படுகின்றது.
"இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு' '
39,

Page 23
24. அறிஞர் தலைவன்
உலகத்தவர் அனைவருக்கும் தலைவன் இறைவன். உலகிலுள்ள உயிர்கள் உடமைகள் சகலதுக்கும் பாதுகாப்பு அளிப்பவனும் அவனே. பாதுகாப்புப் பணியைச் செய்பவன் அரசன் அவனே இறைவனது பிரதி நிதியாக இருந்து இவைகளை நெறிப்படுத்த வே ண் டி ய வ ன், தலைமைப் பொறுப்பை ஏற்பவன் நெறிப் படுத்த வேண்டியவனாகின்றான். எனவே இறைவனும் தலைவனும் அதே பணியைத் தான் செய்கின்றனர். இன்னொரு வகையாகச் சொன்னால் இறைவன், அரசன். தலைவன் ஆகிய இம்மூவரும் இடைவெளி எதுவுமின்றித் தொடர்ந்து செயல்பட வேண்டியவர்களே. இந்த மூவரும் துயில் கொள்ள முடியாது. அறிவு குறைந்தவர்களாக இருக்க முடியாது. பயந்தவர்களாக இருக்க முடியாது. தூங்காமை, துணிவுடமை, கல்வி இவை மூன்றும் அவர்க ளுக்கு அமைய வேண்டிய லட்சணங்கள்.
சுவாமி விபுலாநந்தர் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றியடைவதற்காகக் கண்துயி லாது செயல்பட்டார். நேரமுள்ளபோதெல்லாம் நல்லவற்றை நாடிக் கற்றார். மனதில் பட்ட கருத்துக்களைத் துணிச்சலுடன் மேடைகளில் வெளியிட்டார். தூங்காமை, துணிவுடமை,
40

கல்வி ஆகிய மூன்று இயல்புகளும் இவரிடம் இருந்தன. எனவே இவர் ஒரு அறிஞர் தலைவன் என்று துணிந்து கூறலாம்.
தூங்காமை, கல்வி, துணிவுடமை இம்மூன்றும் நீங்கா நிலன் ஆள்பவருக்கு"
25. அழகு மொழியினர்
எல்லோராலும் பேசமுடியும். ஆனால் நல்ல தாகவும் வல்லதாகவும் பொருள் உள்ளதாக வும் பேசுவதென்பது எல்லோராலும் இயலாது. அதற்கென்று தனித்திறமையும் அ  ைம ப் பும் வேண்டும். விபுலாநந்த அடிகளாரின் பேச்சில் செம்மை, அழகு, நன்மை ஆகிய மூன்றுவித நயங்களும் நிறைந்திருந்தன.
விபுலாநந்த அடிகளாருடன் மிகவும் நெருங் கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தவர் பேராசிரி யர் அ. மு. பரமசிவானந்தம் என்னும் பேராசி ரியர். விபுலாநந்தரின் பேச்சு வன்மை பற்றிக் குறிப்பிடுகையில் அவர் கூறுகிறார்.
"அடிகளார் வாய் திறந்து பேசினால் மது ரம் கனியும், இனிமை தவழும், இன்பம் பொங் கும், எழில் நடமாடும், ஏற்றம் மிகுக்கும், அடி கள் இலக்கியப்பணி ம ட் டு ம ன் றி நாட்டுத் தொண்டிலும் நாட்டம் மிக்கவராக நன்கு விளங் கினார். அதையும் அறமாகவே கொண் டு அமைந்தார்.""
41

Page 24
சுவாமி விபுதாநந்த அடிகளாரின் பேச்சு வன்மையையும் கவர்ச்சியையும் உணர்ந்த பின்பே சென்னை சைவசித்தாந்த சமாசத்தி னர் தமது விழாவிற்குத் த  ைல  ைம தாங்க அவரை அழைத்தனர். அங்கே அவரது தலை மையைப் புகழ்ந்து வரவேற்றுப் பாடிய பாட லில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர்.
'கண்ணா மதுரம் கனிவாயா
கருதுமொழி முன்றினில் சிறந்த
மண்ணார் இராமகிருஷ்ண மட
வளாகத் தொருவா ஈழை அமர்
அண்ணா தேசத் தொண்டியற்றும்
அறவா விபுலாநந்தா எம்
அண்ணா மலையில் சைவர்முதல் ஆசி அருள்க இன்னுரையே’’
'நாநல மென்று நலனுடமை யந்நலம்
யாநலத்துள்ளதுஉ மன்று'
26. இறைவன் விரும்பும்
இன்மலர்
இயற்கையன்னையின் கருணைபல அழகான மலர்களை நமக்குத் தந்துள்ளது. பெறுதற்கரிய மானிடப் பிறவியைத் தந்ததற்காக நன்றி செலுத்த விரும்பும் மனிதர்கள் வண்ண மலர் களை இறைவனுக்குக் காணிக்கையாக அர்ப்ப
42

ணிக்கின்றனர். இதிலே ஒரு நிறைவும் மன மகிழ் வும் கிடைக்கின்றது. மலர்களிலே தான் எத் தனை மணம் எத்தனை நிறம் எத்தனை தோற் றம்! எத்தனை நாமங்கள்! மல்லிகை, முல்லை, இருவாட்சி, சண்பகம், மாதிரி, செவ்வந்தி, நீலோற்பனம், அல்லி, தாமரை, கனகாம்பரம், சூரியகாந்தி,மந்தாமரை, அனிச்சம் இப்படி அநே கம்! மலர்கள். இத்தனை மலர்களில் இறைவ னுக்கு உகந்தது எந்த மலர்?
இதற்கு விடைகாண்பதற்குத் தேடிப் பூம் பொழில்களுக்குப் போகாதீர்கள். மேற்கூறிய எந்த மலரையும் விட எமது இதயத் தாமரை என்னும் மலரையே இறைவன் விரும்புகிறார் என்கிறார். சுவாமி விபுலாநந்தர். அக்கருத்தை விளக்கும் அவரது பாடல் இதுதான்.
வெள்ளைநிற மல்லிகையோ
வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு
வாய்த்த மலர் எதுவோ? வெள்ளை நிறப் பூவுமல்ல
வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது.
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
43

Page 25
27. உருண்டையான பூ என்ன பூ
நெருப்புக் காய்ச்சலால் தாக்கப்பட்ட சுவா மிவிபுலாநந்தர் சுகமடைந்து காரை தீவில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார். பின்னேரங் களில் கடற்கரையோரமாக உலவிவருவது அவ ரது வழக்கமாக இருந்தது. ஒருநாள் பின்னேரம் சில சிறுவர்களுடன் பேசிக்கொண்டு கடற்கரைப் பக்கம் போய்க் கொண்டிருந்தனர். அவர்களு டன் திரு. க. ஆறுமுகம் ஆசிரியரும் இன்னு மொரு ஆசிரியரும் உடன் சென்றனர்.
பூத்துக் குலுங்கி அழகாகக் காட்சியளித்த வம்மி மரமொன்றைக் காட்டி அக்குழந்தை களை ரசிக்க வைத்தார் விபுலாநந்த அடிகள் ரசித்துக் கொண்டிருந்த அவர்களைப் பார்த்து "இந்த மரத்தின் பெயரென்ன? என்று கேட் டார். உடன் சென்ற ஆசிரியர் மெதுவாகச் சொல்வதைக் கேட்ட குழந்தைகளிலொன்று *வம்மி என்றது. அது தப்பு என்றார் அடிகள். பின்னர் 'வன்னி" என்று சத்தம் வந்தது. இரண்டையும் கேட்ட அடிகளார் 'வம்மியு மில்லை வன்னியுமில்லை இதுதான் வெண் கடம்பு’’ என்றார். “செங்கடம்பு என்று இன் னொன்று இருக்கிறது. அது செந்நிறம் உடை யது. இதைக் காட் டி லும் சிறியது. ஒரு கொட்டைப் பாக்கு அளவு இருக்கும்’ என்று மேலும் விளக்கம் சொன்னார். -
44

பின்னர், “கையில் வேல் வைத்திருக்கும் ஒருவன் அந்த மலரை விரும்பி அணிவான் அவன் யார்?' என்று குழந்தைகளைக் கேட் டார். அதற்கு 'முருகன்' என்று பதிலிறுத்தது ஒரு குழந்தை. குழந்தையின் பதிலைக் கேட்டு அடிகளார் மகிழ்ச்சியடைந்தார். அவர்களின் உரையாடலைச் செவிமடுத்த ஆறுமுகம் ஆசிரி யர் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தார்.
முருகன் புகழ்பாடும் நற்கீரரின் திருமுரு காற்றுப் படையிலே 'உருள் பூந்தண்டார் புர ளும் மார்பினன்' என்ற அடியில் வரும் 'உருள் பூ' எனும் சொல்லுக்கு வ ண் டி ச் சக் க ர ம் போலும் வட்ட வடிவினதாகிய என்று உரை கூறப்பட்டிருந்ததே தவிர அது என்ன பூ என்று கூறப்படவில்லை. பூவின் பெயர் செங்கடம்பு தான் என்பதை முதன் முதலாக அறிய முடிந் ததுதான் அவரது இரட்டிப்பு மகிழ் ச் சிக் கு க் காரணம.
"எனைத்தாலும் நல்லவை கேட்க அனைத்தாலும்
ஆன்ற பெருமை தரும்'
28. கொள்கை வீரர்
விபுலாநந்த அடிகளார் துறவறம் மேற் கொண்டு இருந்த பொழுது முது தமிழ்ப் புல வர் நல்லதம்பி அவர்களுக்கு ஒரு கடிதம் எழு தினார். அக்கடிதம் பின்னர் ஈழகேசரி பத்திரி கையில் பிரசுரமாகி இருந்தது. அதில் ஒரு பகுதியைப் பாருங்கள். R
45

Page 26
.கூழுணவுதான் கிடைத்தாலும் தமிழ்த் தாயின் அருளெனக் கருதி ஏற்றுக் கொண்டு விரிந்த முறையிலே தொண்டாற்ற வேண்டும். எனது வாழ்க்கையிலே பொருள் வருவாய் பெரிதாகவிருந்த உயர்ந்த உத்தியோகங்கள் பல வற்றை ஏற்று நடத்தினேன். ஒன்றுக்காவது கேள்விக் கடிதமோ பிறருடைய நற்சான்றோ நான் விடுத்தது கிடையாது,
"இருக்கு மிடந்தேடி என்பசிக்கே அன்னம் உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன்"
என்றபடி என்பின் நின்று பன்முறை விரும் பியழைத்த இடங்களையே நான் நாடினேன். செட்டி நாட்டரசர் தாமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு வரவேண்டும் என்பதாக என்னிடம் வந்து என்னைக் கேட்ட பின்புதான் அவரது கேள்விக்கு நான் ஒருவாறாக இயைந் தேன்'
அடிகளார் இப்படி எழுதுவதிலிருந்து அவர் தனக்கென ஒரு கொள்கையை வகுத் துக் கொண்டு யாருக்கும் அடிபணியாமல் சுதந்திர மாக வாழ்ந்தார் என்று தெரிகிறதல்லவா?
"சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொரு
பேராண்மை வேண்டுபவர்??
46

29. யாழ்நூல் என்பது என்ன?
சுவாமி விபுலாநந்தரைப் பற்றிக் குறிப்பி டப்படும் இடங்களிலெல்லாம் யாழ்நூல் பற்றி யும் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் யாழ்நூல் என்றால் என்ன என்பது பலருக்குந் தெரியாது.
தமிழர் பரம்பரை இசை ஞானத்திலும் இசைக் கருவிகளைக் கையாளும் ஞானத்திலும் சிறந்து விளங்கியவர்கள் என்பது பழைய இலக் கியங்களிலிருந்து தெரிய வருகின்றது. குறிப்பாக இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தில் வரும் அரங்கேற்றுக் காதையில் பலவித யாழ்களைப் பற்றிய குறிப் புக்கள் காணப்படுகின்றன. தமிழர் சமுதாயம் பண்டைய கலை இலக்கிய பாரம்பரியங்களைக் கொண்டிருந்தது. என்பதை நிலைநிறுத்தும் நோக்கோடு யாழ்பற்றிய குறிப்புகள் தென்படும் பல இலக்கிய நூல்களை ஆராயத் தொடங்கி னார் சுவாமி விபுலாநந்த அடிகள். 1933ம் ஆண்டிலிருந்து அடிகளார் தாம் கற்ற நூல்க ளில் இசையைப் பற்றியும் யாழைப் பற்றியும் குறிப்பிடப்படும் விடயங்களைத் தொகுத் தெடுத்து ஆராயத் தொடங்கினார். யாழ்களின் அமைப்பு அதன் ஒசை வேறுபாடுகள், அதன் வடிவம் ஆகியவற்றைக் கடும் சிந்தனையின் பின்பு கண்டு பிடித்தார். இந்த அரிய கண்டு பிடிப்புக்களின் உண்மையைப் பிறரும் அறிய
47

Page 27
வேண்டுமென்று ஆசைப்பட்டார். தாய்த்தமிழ் நாட்டிலே எத்தனையோ அறிஞர் பெருமக்கள் தோன்றியிருக்கின்றார்கள். அவர்களில் யாருமே சாதிக்காத ஒரு பெரிய சாதனையை அடிகளார் சாதித்து வெற்றி கண்டார். ‘பாழ்நூல்" என் னும் பெயரில் அவர் எழுதி முடித்த ஆராய்ச்சி நூல் 1947ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ் நாட்டிலேயுள்ள திருக்கோளம் புத்தூரில் அதி விமரிசையாக அரங்கேற்றப்பட்டது. அறிஞர் பெருமக்களின் பாராட்டை இந்நூல் பெற்றது. இந்நூல் இலக்கியத்தரம் கூடியது, ஆகையால் சாதாரண பாமரமக்களால் இதனை வாசித்து விளங்கிக் கொள்வது இயலாது- இலக்கிய ஆர் வலர்களின் நன்மைக்காக இந்நூல் நூல் நிலை யங்களில் வைக்கப்பட்டுள்ளது.
"வினைத்திட்ப மென்பதொருவன் மனத்திட்பம்
மற்றைய வெல்லாம் பிற**
48
 

விபுலாநந்தர் விட்டுச் சென்றவை
கணிதரும் மரங்களை நடுதல்; தாகம் தீர்க் கும் தண்ணிர்ப் பந்தல், கிணறுகள் கட்டுதல் பசிக்கு உணவளிக்கும் அன்ன சத் தி ர ங் கள், தெய்வ வழிபாட்டிற்கான கோயில்கள் கட்டுதல் ஆகிய தொண்டுகள் புண்ணியத்துக்காகச் செய் யப்படும் நற்செயல்கள். இத்தகைய புண்ணியங் களைக் காட்டிலும் மேலான புண்ணியம் ஒரு வசதியற்ற ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்கி றார் சுப்பிரமணியபாரதி. சுவாமி விபுலாநந்த ரும் இந்தப் புண்ணியம் செய்வதையே பெரிதும் விரும்பினார். மட்டக்களப்புப் பகுதியில்
இருபதுக்கும் அதிகமான பாடசாலைகள்.
திருகோணமலையில்
இந்துக் கல்லூரி. கோணேஸ்வர வித்தியாலயம், தம்பலகாமம் சாரதா வித்தியாலயம்: யாழ்ப்பாணத்தில்
வைத்தீஸ்வர வித்தியாலயம் - வண்ணார்பண்ணை விவேகானந்த வித்தி
யாலயம், V கொக்குவில் இராமகிருஷ்ண மிசன் சைவ வித்தியாலயம். கோண்டாவில் இராமகிருஷ்ண மிசன் சைவ வித்தியாலயம்.
49

Page 28
வவுனியாவில்
இராமகிருஷ்ண மிசன் பிறமண்டு வித்தியா ᏧᎦ-[Ꭲ ᎧᏈ0ᎶᏁᏇ . பதுளையில் (லுணுகலை) ܝ” -
இராமகிருஷ்ண மிசன் நாகலிங்கம் வித்தியா 60ԱlԼԸ ծ மேற்படி பாடசாலைகளை ஸ்தாபிப்பதற்குக் காரணமாக இருந்தவர் சுவாமி விபுலாநந்தரே ஆவார்.
மாணவர் இல்லம் வறுமை காரணமாகப் பாடசாலை செல்ல இயலாத மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக விபுலாநந்த அ டி க ள் வண் ணார் பண்ணையிலே ஒரு மாணவர் இல்லத்தை ஆரம்பித்தார் (1926) இச்செயலுக்கு உறுது ணையாக சுவாமி அவினாசானந்தா, சுவாமி அனந்தானந்தா ஆகியோ ரு ம் சேவையாற் றினார்கள். - - - - -
1929ம் ஆண்டு 29ந் திகதி மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் திறக்கப்பட்டதும்வண் ணார் பண்ணையிலிருந்த மா ண வர் இல்லம் மட்டக்களப்பிற்குக் கொண்டுவரப்பட்டது. ஆறு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மாணவர் இல்லம் பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல் வி வழங்கியிருக்கின்றது.
' வசதி குறைந்த மாணவர்களுக்கும் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கும் உணவு,
50

உடை, உறைவிடம்,உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கி இந்த ஸ்தாபனம் பணியாற்றி வருகின் றது - மாணவிகளுக்கான தனியான இ ல் ல ம் சாரதா இல்லம் என்ற பெயருடன் அடிகளா ரின் பிறப்பிடமாகிய காரைதீவில் இயங்கி வரு கின்றது.
மட்டக்களப்பு மாணவர் இல்லத்தில் நூற் றுக்கும் அதிகமான மாணவர்களும் காரைதீவு சாரதா இல்லத்தில் 23 மாணவிகளும் உள்ள னர். ஒரு குழந்தைக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அத்தனையும் வழங்கப்படுகின்றது. இவர்களுக்குப் பாடசாலைப் ப்டிப்புடன் யோகா சனம், விவசாயம், நுண்கலைகள் ஆகிய துறை களிலும் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது. மதிப் பிற்குரிய சுவாமி ஜீவனானந்தா மட்டக்களப்பு இராமகிருஷ்ண சங்கத்தின் பொறுப்பாளராக உள்ளார். அவருடன் மட்டக்களப்பு மாணவர் இல்லத்தில் குருகுல முறைப்படி கல்விகற்றுத் தகு தியடைந்த சுவாமி அஜராத்மானந்தா அவர்க ளும் சேவையாற்றி வருகிறார்கள். இவர்களது சேவை இக்கால கட்டத்தில் மிகவும் அவசிய மான சேவையாக உள்ளது.
நல்ல காரியங்களைச் செய்பவர்கள் உலகத் திலிருந்து மறைந்தாலும் மக்களின் உள்ளங்களி லிருந்து மறைய மாட்டார்கள் என்பதை சுவாமி விபுலாநந்தர் செயல் மூலமாகக் காட்டியுள்ளார்.
'தக்கார் தகவில ரென்ப தவர ரெச்சத்தாற் காணப்படும்?"
51

Page 29
உசாத்துணை நூல்கள்
'சிறுவருக்கு விபுலாநந்தர்" என்னும் இந் நூலை உருவாக்குவதற்குத் துணை செய்த நூல்கள்:
1. சுவாமி விபுலானந்தர் படிவமலர்.
2. சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு
விழா சிறப்புமலர்.
3. விபுலானந்த உள்ளம்.
4. விபுலானந்த ஆராய்வு.
52


Page 30
பிறப்பிடம் மட்டக்
()
தேனமுதம்ஆன் 2) கனியமுதுறுே
。
F川 ..., T
o
5) சிறுவருக்கு விபு
Off
 

set by : TRISTAR, DEHIWALA.