கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்திரைச் சதயச் சிறப்பு மலர்

Page 1
莎*
ሇፍ
மட்டக்களப்பு திருநாவுக்கரசு நாயன்
சித்திரைச் சதய 9
வையம் நீடுக மாம மெய் விரும்பிய அ3 சைவ நன்னெறி த, தெய்ன் வெண்டிரு
ካቔ::omomomomሄዶ››omoዶጅ;
ஆதவன் அச்சகம், அ
 

路亮、
தம்பிலுவில் எார் குருகுல ஆதீனம் பச் சிறப்பு மலர் } 9 5
ழை மன்னுக
Trif விளங்கு 壬
gi தழைத்தோங்குக நீறு சிறக்கவே.
*来、
'சடி, மட்டக் களப்பு.
H

Page 2

★大大大大大大:大大大大大大大大大大大大大大:大★大大大本大
மட்டக்களப்பு தம்பிலுவில்
திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம்
சித்திரைச் சதயச் சிறப்பு மலர்
9 95
g
s
si
-
|5f:
B1
d
-
է Ր
L
ᎧᏈᎠ
657
L f
Gଗ
u
f)
ற
@I
GT
li
{51
இ
601
6õ፻‛
* தென்கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன்கடன் அடி யேனையுந் தாங்குதல் என் கடன் பணி செய்துகிடப்பதே.
- வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்* கோன்முறை அரசு செய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை அறங்களோங்க நற்றவம் வேள்விமல்க
*மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம். .
부부, \,\,\ \,\,\ \:\,\,\ \,\,\,\,K\,\,\ \,\ \:\,\ \\,\ \\

Page 3
மட்டக்களப்பு இராமக்கிருஷ்ண சங்க வணக்கத்திற்குரிய பூணீமத் சுவாமி அஜராத்மானந்தஜி மகராஜ் அவர்கள் வ ழ ங் கி ய
ஆசிச் செய்தி
‘'சிரத்தையுடனும் தைரியத்துடனும் இரு. ஆத்ம ஞானத்தை அடை. பிறர் நலனுக்காக உன் வாழ்க்கையைத் தியாகம் செய். இதுவே நான் விரும்புவது; இதுவே என் ஆசீர்வாதம்’ என்று தொண்டின் மூலம் ஆத்மஞானத்தை அடைய முயலும் அனைவருக்கும் தியாகத்தின் உருவமாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் ஆசீர்வாதம் நிரந்தர மாக உண்டு. s
இதுவரை உலகுக்கு உண்மையான நன்மை செய்த இயக்கங்களுக்கெல்லாம் உந்து சக்தியாக விளங்கியது சமய மாகும். பணி செய்ய விரும்புபவர்களுக்கு சமயம் ஒரு சிறந்த கருவியாக பயன்படுகிறது: மகான்களின் வாழ்வும் வாக்கும் நம்மை இப்பணியில் நெறிப்படுத்துகிறது.
மட்டக்களப்பு-தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம் 'சித்திரை சதய சிறப்பு மலர்' ஒன்றினை வெளியிடுகிறார்கள் என்பதை அறிய மகிழ்ச்சி. சிறப்பு மலர் செம்மையாக அமைய வாழ்த்துகிறேன். ஆதீனத்தின் பணிகள் அனைவரினதும் பாராட்டுதலுக்குரியது. அவர் களின் திருத்தொண்டுகளின் பலனை மேலும் பலர் அனு பவிக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல பரம்பொருளைப் பிரார்த்திக்கிறேன்.
இறைபணியில், 20-04-95。 சுவாமி அஜராத்மானந்தா

தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார்
குருகுல ஆதீன திருநாவுக்கரசு நாயனார் குருபூசை சித்திரைச் சதயச் சிறப்பு மலருக்கு மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத் தலைவர் திரு. எம். சிவநேசராசா அவர்கள் வ ழ ங் கி ய சிறப்புரை
மட்டக்களப்பின் தென்பாலமைந்துள்ள தம்பிலுவில் லும் திருக்கோவிலும், சைவமும், தமிழும் வளர்ந்த கிரா மங்கள். இவ்விரு கிராமங்களின் வளர்ச்சிக்கு பூரீ சித்திர வேலாயுத சுவாமி கோயிலும், கண்ணகையம்மன் கோயி லும், அவற்றிற்கு வழங்கப்பட்ட மானியங்களும் துணை நிற்கின்றன. அந்நியர் வரவால், இலங்கையின் கரையோரப் பகுதியிலுள்ள சைவக்கோயில்களுக்கும் கலாசாரத்திற்கும் ஏற்பட்ட பாதிப்பு, இக்கிராமங்களுக்கும் ஏற்பட்டன. எ னும் அச்சோதனைகளையும் தாங்கிக் கொண்டு சைவக் கலாசாரத்தைப் பேணிய பெருமை இவற்றிற்கு உண்டு.
சைவம் வளர்த்த இப்பிரதேசத்தில் 1ஆம் விஜய பாகு மன்னன் ஒரு சிவன் கோயிலைக் கட்டிக்கொடுத்ததும் இலங்கை வரலாறு காட்டும் உண்மை.
எனினும் சைவ அனுட்டானங்கள் தளர்ச்சியுற்ற வேளையில் தோன்றி, சைவத்தையும் தமிழையும் வளர்த்த பெருமை 荔*器警器一 குறிப்பாகத் தமது அருந்தொண்டால் " "மேன்மைகொள் சைவ நீதி’’ தமிழ்நாட்டில் நின்று நிலவச்செய்த சமயகுர வர்களின் குருபூசைகளைச் சிறப்பாகக் கொண்டாடிய பெருமையும் குருகுலத்தைச் சாரும்.
குருபூசைகளைச் சிறப்பாக நடத்திய செய்திகளே மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தைக் குருகுலத் துடன் தொடர்புகொள்ளச் செய்தது. அவர்கள் அத்தி வார மிட்ட குருகுலக் கட்டிடப்பணிக்கு பாராளுமன்ற உறுப் பினர் போன்றவர்கள் உதவப் போவதாகப் பேசிக்கொண் டார்கள். ஆனால் நாங்கள் எங்களாலியன்ற உதவிகளை வழங்கினோம்.
பின்னர் இப்பிரதேசத்தில் தந்தை தாயரை இழந்த சிறுவர்களுக்குப் புகலிடமளிக்கக் குருகுலம் பொருத்தமான இடமென உணர்ந்து அக்கருத்தை அவர்களுக்குச் சமர்ப் பித்தபோது குருகுலத்தினரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

Page 4
இதன் விளைவே இன்று நிமிர்ந்துநிற்கும் மாணவ ரில்லம் இவ்வில்லத்தைக் கட்டிமுடிக்கும் பணியில் எங்கள் மன்றம் இயன்றதனைத்தையும் செய்ததுடன் சைவசித் தாந்த திருச்சபைத் தலைவர் சற்குரு சிவாய பூரீ சுப்பிர முனிய சுவாமிகளின் உதவியை நாடியது இதன் பயனாக அமெரிக்க இந்து வர்த்தகர் சங்கம் தாராளமாக உதவிற்று. இவையெல்லாம் குருகுலத்தை முழுமைபெறச் செய்தன.
இதனால் குருபூசைகளும், சற்குருபூசையும், சிவ ராத்திரி, நவராத்திரி பூசைகளும் இவை தொடர்பான சிறப்பு விழா மலர்களும் வெளிவந்து சமய வளர்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணைபுரிந்தன.
பூரீ இராமக்கிருஷ்ண மடத்துத் துறவியர் பலர் வர வேற்கப்பட்டனர். சுவாமி தந்திரதேவா போன்றோரும் வந்து தங்கிக் குருகுலத்தைப் புனிதப்படுத்தினர்.
இவை மட்டுமல்லாது, இந்து இளைஞர் மன்றம் இப்பிரதேசத்தில் ஆற்றிய, பல இலட்ச ரூபாய் பெறுமதி யான சமூகப்பணிகளுக்கு, குருகுலம் நிலைக்களனாக விளங் கிற்று. குருகுல வாலிபர்களின் தொண்டு, பெரும் பயன் தந்துதவியது. இதனால் பொத்துவில்லிலிருந்து இடம் பெயர்ந்து கோமாரியில் தங்கிய அகதிக் குடும்பங்களுக்கும் வீரமுனையிலிருந்து வந்த அகதிக் குடும்பங்கள் அனைத் திற்கும் இப்பிரதேசத்தையடுத்த காட்டுப் பிரதேசத்தி லிருந்து வந்த கதியற்ற மக்களுக்கும் உடைகளை வழங்க முடிந்தது.
இங்ங்ணம் சைவப்பணிகளை வளர்க்க உதவிவரும் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் சேவை பல்கிப் பெருகப் பிரார்த்திக்கின்றோம்.
குருகுலத் தலைவர், செயலாளர், பொருளாளர், அங் கத்தவர்கள், அபிமானிகள் அனைவருக்கும் தில்லைத் திரு நடராஜப் பெருமானின் அருள் கிடைப்பதாக.
'நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோவிலான் தன்கட்ன் அடியேனையுந் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே.'
மட்டக்களப்பு. அன்புள்ள ,
19-04-95. w ம. சிவநேசராசா

நல்லுபதேசம்
பக்தகோடிகளே !
' கீர்த்தியுட னேயிந்தப் புவியில் யானும்
கிருபையுட னுன்பதியைத் தேடி வாறேன் பூத்தமலர் போலவுனைக் காண்ப தெப்போ
புண்ணியனே எனக்குவரம் தருவ தெப்போ வார்த்தை யொன்றுங் கூறாயோ வள்ளிபங்கா
வந்துனது சந்நிதியில் மனதன்பாக தீர்த்தங்களாடி யுனைத் துதிப்பேனையா - சுவாமி
தென்கதிர முருகோனே தரிசிப்பாயே "
என்று ஆண்டவனைத்தேடி எங்கே போகிறீர்கள்? கஷ்டப்பட்டவர்கள், ஏழைகள், பலவீனர்கள், தந்தையை, தாயை இருவரையுமே இழந்து தவிக்கும் குழந்தைகள் இவர்களைப் பார்த்தீர்களா? - - - -
இவர்களெல்லாம் உங்கள் மனஇரக்கத்தைச் சோதிக்க இறைவன் எடுத்த வடிவங்களல்லவா? உங்கள் கையில் செல் வத்தைத் தத்து இவர்களை ஏழைகளாக்கி இறைவன் காட் டும் திருவிளையாடலல்லவா இது. மறுபிறவியில் நீங்களும் கஷ்டப்பட்டவர்களாக, ஏழைகளாக, அனாதைகளாக வர நேரிட்டால் எப்படியிருக்கும் நிலைமை என்று எண்ணிப் ப்ாருங்கள்.
ஏன் தயக்கம்? இப்பொழுதே தானதருமங்களைச் செய்யுங்கள். நீங்கள் பணத்தைப் - * பிறக்கும்போது கொடுவந்ததில்லைப் பிறந்து மண்மேல் இறக்கும்போது கொடு போவதில்லை இடைநடுவில் குறிக்குமிச் செல்வம் சிவன்தந்ததென்று கொடுக்கறியாது இறக்கும் குலாமருக்கென் சொல்வேன் கச்சிஏகம்பனே ' * ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
உயர் செல்வமெல்லாம் அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கிட்டபடி என்றென்றிரு மன மேயுணக்கே யுபதேசமிதே ’’
- (பட்டினத்தார்) -
- 1 -ه

Page 5
மட்டக்களப்பு, தம்பிலுவில்
திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீன கீதம்
(தரு) தம், தம், தன, தன, தம், தம், தன, தன தம், தம், தன, தன, தன, தனனா.
தேன்பால் பழவகை தெங்கிள நீரொடு
செந்நெல் தயிர்மலி தம்பிலுவில் பாங்காயமை திரு நாவுக்கரசர் தம்
பண்புள குருகுலம் வாழியவே. தில்லையில் நடம்புரி தெய்வத்தின் பாதம்
தினந்தினம் போற்றி வணங்குவோமே பல்கலை பயின்று பாபங்க ளகற்றி
பாலர்களறிவுடன் வாழியவே.
(தேன்பால். )
தன்னலமின்றித் தளர் விலா தெம்மைத் தாங்கிக் காத்து ஓம்பிவரும் தந்தையெம் தாபகர் தம்பையாக் குரவர்
தாள்கள் பணிந்து வாழியவே.
(தேன்பால். ) அருமறை போற்றும் ஆகம அறிவுரை
அலைகட லொலிபோல் ஒங்குகவே. குருகுலம் வாழக்குறை வின்றிச் சேவைசெய்
குழுவினர் நீடு வாழியவே.
(தேன்பால். ) சற்குரு வார்த்தை தலைமேற் றாங்கிடும் சீஷர்கள் வாழ்வு சீர்பெறவே நற்பணி மன்றம் நானிலத் தென்றும்
நலமுடன் சிறந்து வாழியவே. உழவாரப் படையால் உலகத்தை வென்ற
உத்தம நாயனார் மொழி வழியே உழைத்துத் திருப்பணி உஞற்றிடுங் குருகுலம்
உயர்ந்து மகிழ்வுடன் வாழியவே
வாழியவே வாழியவே (தேன்பால்)
(தமிழ்மணி)
-2-

திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்
காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி லிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையநீரமைய வாட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே"
அல்லலாகவைம் பூதங்களாட்னும் வல்லவாறு சிவாய நம வென்று நல்லம் மேவிய நாதனடி தொழ வெல்லவந்த வினைப்பகை வீடுமே.
கங்கை யாடிலென் காவிரி யாடிலென் கொங்கு தண்கும ரித்துறை யாடிலென் ஓங்குமாகடல் ஒதநீ ராடிலென் எங்குமீசன் எனாதவர்க் கில்லையே.
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி திருமூலத் தானனே போற்றி போற்றி.
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே.

Page 6
பொதுவான பாடல்கள் சமயகுரவர் நால்வர் துதி பூழியர் கோன் வெப்பொழித் ,
புகலியர் கோன் கழல் அறி ஆழிமிசைக் கன்மிதப்பில்
அணைந்த பிரானடி போன்றி வாழிதிரு நாவலூர்
வன்றொண்டர் பதம் போற்றி ஊழிமலி திருவாத
வூரர்திருத் தாள் போற்றி.
சமயகுரவர் நால்வரினதும்
குருபூசைத் தினம் சித்திரைச் சதயமப்பர், சிறந்தவை காசிமூலம் அத்தரைப் பணிசம்பந்தர் ஆனிமா மகத்திலந்த முத்தமிழ் வாதவூரர் முதியநல்லாடி தன்னில் சுத்தமாஞ் சோதிநாளிற் சுந்தரர்கயிலை சேர்ந்தார்.
சமயகுரவர் நால்வரினதும் வயது Gosustrum அப்பருக் கெண்பத் தொன்று அருள்வாத ஆரருக்கு செப்பிய நாலெட்டில் தெய்வீகம் - இப்புவியில் சுந்தரருக்கு மூவாறு தொல்ஞான சம்பந்தர்க்கு அந்தம் பதினா றறி.
அபிராமியம்மை பதிகம் கலையாத கல்வியுங் குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத விளமையுங்
கழுபிணியிலாத வுடலும் சலியாத மனமுமன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும் m தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பு முதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே. (அபிராமிப்பட்டர்)
-4 ܝ

6.
சிவமயம் திருநாவுக்கரசு நாயனார் குருருல ஆதினம் மூலமூர்த்தி தில்லை நடராஜர்
* சீராருந் திருமறையும் தில்லை வாளந்தணரும்
பாராரும் புலிமுனியும் பதஞ்சலியுந் தொழுதேத்த
வாராருங் கடல் புடைசூழ வையமெலா மீடேற
ஏராரும் மணிமன்றில் எடுத்த திருவடிபோற்றி’’
வேதங்களாடமிகு ஆகமம் ஆட கீதங்களாடக்கிளர் அண்டமேடிாட பூதங்களாடப் புவனம் முழுதிாட நாதங்கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே.
(திருமூலர்)

Page 7

அன்பு விண்ணப்பம்
அன்புடையீர்,
இப்பிரதேசத்தில் தன்னலங் கருதாப் பணியில் திக்கற்ற, கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகளுக் கான, ஜீவனோபாயத்தையும் கல்வியையும் ஊட்டி வரும் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்திற்கு, ஈகை குணமும், தாராள சிந்தையும், பெருந்தன்மையும் படைத்த தங்களது கருணையுள்ளம் கசிந்து உதவி புரியுமாறு இருகரங்கூப்பி அன்பாய் வேண்டுகிறோம். * பிற பிள்ளை தலைதடவத் தன்பிள்ளை தானே
வளரும்' “எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கவு முன்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே**
(தாயுமானவர்) வணககம
NA
V.
இச்சிறப்பு மலரைத் தொகுத்து அச்சிட்டு அன்பளிப்புச் செய்தவர் தமிழ்மணி. சிவ. விவேகானந்த முதலியார்
ஓய்வுபெற்ற அதிபர் い ஆரையம்பதி - 02, மட்டக்களப்பு.

Page 8
தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீன தில்லை நடராஜர் துதி
மானாட மழுவாட மதியாடப் புனலாட
மங்கை சிவ காமியாட மாலாட நூலாட மறையாட திரையாட
மறைதந்த பிரமனாட கோனாட வானுலகு கூட்டமெல் லாமாட
குஞ்சர முகத்தனாட குண்டல மிரண்டாட தண்டைபுலி யுடையாட
குழந்தை முரு கேசனாட ஞானசம் பந்தரொடு இந்திரர் பதினெட்டு
முனியட்ட பாலகருமாட நரைதும்பை யறுகாட நந்திவா கனமாட
நாட்டியப் பெண்களாட வினையோட வுனைப்பாட எனைநாடி யிதுவேளை
விருதோடு மாடிவருவாய் ஈசனே சிவகாமி நேசனே தில்லைவாழ்
எனையீன்ற நடராஜனே.
(இராமலிங்க சுவாமிகள்)
大
ஆதியாய் நடுவுமாகி அளவிலா வளவுமாகி சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகி பேதியாய் ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப் போதியாய் நிற்குந்தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி
பரந்தெழுந்த ச்மண் முதலாம் பரசமய விருள் நீங்க
சிரந்தழுவு சைவநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க அரந்தை கெடப் புகலியர்கோன் அமுதுசெயத்
திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல் போற்றி.
- 6

மட்டக்களப்பு - தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம் தில்லை நடராஜர் திருப்பொன்னூஞ்சல்
PA 10 to
காப்பு (வெண்பா)
அல்லும் பகலும் அரன்புரியுந் தாண்டவத்தைச் சொல்லியே நாமூஞ்சற்றுணர் புனைய - வல்ல சொல்லாட்சி தந்து துணைபுரியும் விநாயகன் றாள் நல்லாட்சியாக நாடு.
நூற்பயன்
பொன்னம் பலத்துள் பொது நடனம் செய்துவக்கும் தென்னன் திருத்தில்லைச் சிவபெருமான் - தன்னை நல்லூஞ்சலாட்டி நாம் கனக மண்டபத்தில் வெல்வோம் வினைப்பகையை வீழ்த்தி
TL6)
தண் கமல மலர் பொலியுந் தடாகஞ் சூழ்ந்த
தம்பிலுவில் திருநாவுக் கரசர் பேரைக் கொண்டு வளர் குருகுலத்துத் தில்லைநாதர்
கொம்பனைய உமையம்மை தம்மோடொன்றி மன்றுமனைக் கனகசபை மண்டபத்தே
மாசில்பெண் பாலர்குழாம் வடந்தொட்டாட்ட பண்ணோடு பாவலர்பல் லாண்டுபாட
பல்லியங்களிசை யொலிக்க ஆடீரூசல்.
வச்சிரமணி யாற்கடைந்த கால்கள் நாட்டி
வைடூரியத்திலுயர் விட்டம் போட்டு உச்சிதஞ்சேர் முத்துவடக் கயிறு பூட்டி
உரகவொளி மணிகளினால் பலகை சேர்த்து கச்சிதமாய்ச் அலங்கரித்த ஊஞ்சல் மீதே கயிலாய நடராஜர் கன்னியம்மை மெச்சுபுக ழோடிருந்து மண்டபத்தில்
மேன்மையுறலே மகிழ்ந்து ஆடீரூசல்.
-7

Page 9
ஆச்சிரமச் சுவாமியொடு அன்புப்பாலர்
அருஞ்சேவை செய்யுநிரு வாகஅன்பர் பூச்சியராய்ப் பூசைபுரி புனிதவான்கள்
புகழ்பாடும் பக்தர்குழாம் பணிந்துபோற்ற பேச்சொலிபோற் கடலலைகள் பழம்பண்பாட
பெருமான்நா வுக்கரசர் ஆதீனத்தில் ஆச்சரியம் பொங்கவருள் பாலித்தாளும் அம்மையொடு நடராஜர் ஆடீரூசல்
மங்கையர்கள் பொங்குமகிழ் வோடுபாட
மறைமொழியில் புரோகிதர்கள்' சுலோகங்கூற எங்குமெழில் வாலிபர்கள் தாளம் போட
ஏற்றபல வாத்தியங்கள் முழங்கியார்ப்ப தங்கமுக ஒளிவீசத் தக்கோர் வாழ்த்த
தகதகென மிழிர் கணக மண்டபத்தே மங்களமோ டருள்புரியும் தில்லை நாதர்
மாதுமையோடருள் புரிந்தே ஆடீரூசல்.
தம்பிலுவில் ஊ செழிக்க ஆடீரூசல்
தக்கோர்கள் வாழவென்றே ஆடீரூசல் எம்மருங்கும் பயிர்செழிக்க ஆடீரூசல்
ஏழைகளும் வாழவென்றே ஆடீரூசல் நம்முருகன் அருள்பொழிய ஆடீரூசல்
நவையில் பசுப் பால்சொரிய ஆடீரூசல் கம்மெனவே கமல மலர் கமழ்ந்து வீசும் கனகசபை மண்டபத்தே ஆடீரூசல்
தில்லை நடராஜரொடு தேவி வாழி
திசைமுகனுந் திருபாலுந் தேவர் வாழி நல்ல கல்வி மாதவளும் திருவும் வாழி
நாட்டிஅயர் திருக்கோவில் முருகன் வாழி சொல்விலகாச் சைவமதக் குரவோர் வாழி
சுகமருளும், கண்ணகித் தாயர் வாழி பல்சுமையும் தாங்கியே குருகுலத்தைப்
பாலிக்கும் நிருவாக சபையார் வாழி
திருச்சிற்றம்பலம்
(தமிழ்மணி)

மட்டக்களப்பு - தம்பிலுவில்
திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம் ஸ்தாபக முதல்வர்
* இறைபணிச் செல்வர் ' வணக்கத்துக்குரிய சுவாமிநாத தம்பையா சுவாமிகள் மிமையுந்துரத்தவெம் பிணியுந்துரத்த நணி
வெகுளியா னதுந்துரத்த R மிடியுந் துரத்தநரை திரையுந்துரத்த மிகு
வேதனை களுந்துரத்த பகையுந்துரத்த வஞ் சனையுந் துரத்த வரு
பசியென்பதுந் துரத்தப் பாவந்துரத்த வெகு மோகந்துரத்த வுறு
பலகார்ய முந்துரத்த நகையுந் துரத்தவூழ் வினையுந் துரத்த வாழ்
நாளுந்துரத்த வெகுவாய் நாவரண்டோடியே கால் தளர்ந்திடு மென்னை
நமனுந் துரத்து வானோ அகிலவுல கங்கட்கும் ஆதார தெய்வமே
ஆதிகட வூரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே.
- (அபிராமிப்பட்டர்)

Page 10

தன்ன, தான; தன்ன தான; தன்ன, தான தனதனா,
தான தன்ன , தானதன்ன; தானதன்ன; தனதனா
முத்தமிழின் வித்தகராம் மத்தகர்க்கு மங்களம்
மூலதெய்வ பிரணவராம் மூஷிகர்க்கு மங்களம்
எத்திசையும் பத்தியோடு முத்திநல்கும் எம்பிரான்
re ஏதமின்றி யாவருக்கும் சித்திநல்க மங்களம்
சத்தியத்தின் நித்தியத்தைத் தந்தருளும் தாயராம்
சத்தி பரா சத்தியென்று சாற்றுவோமே மங்களம்
புத்தியோடு பாற்கடலில் பொய்யுறக்கங் கொண்டிடும்
புண்ணியராம் கண்ணனுக்கு புகழ்படைத்த மங்களம்
தில்லை நடராஜனுக்கும், திருக்கோவிற் கந்தனுக்கும்
தெய்வயானை வள்ளியம்மை தேவியர்க்கும் மங்களம் எல்லையற்ற புதுமைசெய்யும் எங்களன்னை கண்ணகி
எத்தினமும் எம்மைக்காத்து எழுந்தருள மங்களம் கல்லைத்தோணியாகக் கொண்ட கருணை வள்ளல் வாகீசர் காருண்யமூர்த்தியர்க்குக் காலமெல்லாம் மங்களம் தொல்லைதீர்த்துத் துணைகள் செய்யும் தெய்வ
பலமோங்கவே
தோகையம்மை சகலகலா வல்லியர்க்கு மங்களம்
மங்களங்கள் கூறி நாமும் மனமகிழ்ந்து பாடியே
மண்டலத்தில் வாழ வாழி, வாழி ஜெய மங்களம்.
திருச்சிற்றம்பலம்
(தமிழ்மணி)

Page 11
மட்டக்களப்பு - தம்பிலுவில்
திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீன சாற்றுகவி
(அகவற்பா)
சீராரும் இந்து மகா சமுத்திரமாம் சங்கீன்ற பேராரும் முத்தெனவே புகழ்படைத்த நம்மிலங்கை வாரிதிசார் மட்டு வளநாட்டுத் தமிழகத்தில் வாழை பலா மாங்கனிகள் வளர்கரும்பு செந்நெலொடு பாளை செறி தெங்கிளநீர் பால்தயிர்நெய் மோரும்மலி தம்பிலுவில்லென்று தக்கோர் புகழுகின்ற நம்பதியில் கண்ணகியார் நயந்தே உறைந்தருள்வார் திருக்கோவிலென்று தேசமெலாம் செப்புதலம் திருமுருகன் புகழ்பாடும் திரைகடல்சேர் செந்திலென்றும் தேசத்துக் கோவிலென்றும் திருப்படைக் கந்தனென்றும் நேசமுடன் மக்களெலாம் நினைந்து வழிபடுவார் செந்நெல் வயல் வளமும் சேர்வாரிதி வளமும் சொந்தமெனப் பெற்ற கந்தன் திருப்பதியாம் வெண்கமல வாவியொடு செங்கமல வாவியுஞ்சூழ் தண்பொழிலில் மேதியினம் தாமுறங்கி ஒய்வெடுக்கும் கற்றோரும் மற்றோரும் கலந்துறையும் நன்னாடு பெற்றோரும் பிள்ளைகளும் பிரியமுடன் வாழுரில் தெய்வ அருள்பொலிந்து சைவம் மிக வளரும் வைகாசிப் பூரணையில் வளமாகப் பூசைசெய்து கைகூப்பி யெல்லோரும் கருதி வணங்கிடுவார் கல்விகற்றோர் பலரிருந்தும் கடவுட்டிருப்பணியில் சொல்லி வழிநடத்தத் துணிந்து முன்வராமையினால் பொன்விளக்கே யானாலும் போதியதோர் தூண்டலின்றேல் நன்னய மாகவொளி நாம் பெறவே தாராது தம்பையாவென்னும் தரமான அதிபரவர் நம்மையாவாக வந்தாரே இப்பதிக்கு
- 10

கற்றபல மக்களையே கருத்தோடு தேர்ந்தெடுத்து நற்பணி மன்றமொன்றை நயந்தே நிறுவினர்காண் கணபதிப்பிள்ளையெனும் சங்கீத ஆசிரியர் குணக்குன்றாய் நின்று கூடிய பணி புரிந்தார் திருநாவுக் கரசரவர் திருத்தொண்டு செய்த தொப்ப அப்பூதி யடிகளைப்போல் அருந்தாகந் தீர்த்திடவே: தப்பாது தாம்விரும்பித் தண்ணீர்ப்பந் தலமைத்தார் உகந்தமலை திருக்கோவில் உற்சவ காலமதில் உவந்தே திருப்பணிகள் உஞற்றினார் மக்களெலாம் கள்ளங் கபடுஇன்றிக் கூடினார் தொண்டர்களும் உள்ளங் குளிர்ந்து ஊக்கமுடன் உழைத்தார் சங்கமன் கண்டி, மண்டூர் சாற்றும் பலபதிகள் அங்கங்கே சென்று ஆற்றினார் தொண்டுகளை தங்கத் தமிழ்த்தலைவர் தம்பையா சொற்படியே 5ங்கள் குருகுலத்தை நடைமுறை செய்தனர் காண் சங்கமன் கண்டமுனை சார் காட்டுப் பிள்ளையார்க்கு பொங்குபுகழ் சிலையமைத்துப் பெருஞ்சாந்தி செய்தனரே இந்தவிதமாக இயைந்த திருச்சபையார் பந்தபா சங்களொடு பரப்பினார் சேவைகளை ஆலயப்பணிகளொடு அனாதைச் சிறுவர்கட்கும் சிலப்பணியாற்றத் துணிந்தார்கள் தீரமுடன் தன்னலங் கருதாத தம்பையாக் குரவருமே இன்முகத்தோ டிப்பணியை இயைந்தேதாம் ஏற்றனர்காண் குருகுலத்திற் கேற்றதொரு குடிசையொன்று இன்மையினால் பெருவிருப்போடு முனைந்தார்கள் அன்பரெலாம் கதிரமலை யென்னும் கருணை மனமுடையோர் அதிதயவா யோர்நிலத்தை அன்பளிப்புச் செய்தனரே அந்த நிலப்பரப்பு அளவுபோ தாமையினால் சொந்தமா யொருநிலத்தைத் தொண்டர்கள் வாங்கினரே தேவாரம் பாடும் திரைகடலின் பக்கமதில் நாவாரப் பண்ணிசைத்து நிரையாய் அலை பரவும் சூரியனும் ஒளிபரப்பித் துலங்கவே எழுந்துவரும் சூரியநா ராயணனின் சுடர்முகத்தை தாம்வணங்கி
- 1 1 -

Page 12
பாலகரும் தம்படிப்புைப் பணிவாய்த் தொடங்குதற்கு ஆலயத்தைக்கட்டி அமைத்தார் குணதிசையில் திருநாவுக்கரசு நாயனார் திருப்பெயரை அருமையாய்ச்சூட்டி ஆதரித்தார் குருகுலத்தை தில்லை நடராஜருக்குத் தினந்தோறும் பூசைசெய்து அல்லற்பிறவி அறுக்கவகை செய்தனர் காண் அப்பரொடு சுந்தரர்க்கும் அருள்ஞான சம்பந்தர்க்கும் இப்புவியில் மண்சுமக்க ஈசனை வைத்தவர்க்கும் உருவச்சிலைகள் தந்த உயர்தந்திர தேவரெனும் அருமை மனச்சுவாமி அமெரிக்க நண்பருக்கு குறையாத அன்பு வைத்துக் குணமாக நாம்போற்றி நன்றி நவின்று நாம் வணங்கி வாழுவமே குருபூசை சிவபூசை குறைவின்றிப் பலபூசை அருகாதியற்றி ஆச்சிரமம் தான் சிறக்க நவராத்திரி காலம் நமதுகந்தப் புராணமதை தவறாதுபாடித் தக்கபயன் சொல்வதற்கு சங்கரப்பிள்ளையெனும் சாந்தகுணப் பெரியார் பங்கமின்றி யேற்றுப் பணிபுரியும் குருகுலங்காண் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் செய்வதுபோல் அருமையாய் அபிஷேகம் ஆருத்ரா தரிசனமும் திருவெம்பா(வை)ப் பாடலுடன் திருப்பள்ளியெழுச்சியுமே பொற்சுண்ணம் ஊஞ்சல் பொதுமறைப் புராணமெல்லாம் மணிவாசகப் பெருமான் மக்களுக், குரைத்தபடி துணிவாகத் தம்பையாச் சுவாமிகள் நடத்துகிறார் புனிதமாய்ப் பூசைகளைப் புரிவதற்குக் ஹரிகரனாம் ரினிசிறந்த அர்ச்சகரை நியமித்தார் நண்பர்களும் இறையன்புதான் பெருக இயற்றுகின்ற பூசைகளை நிறைவாக ஏற்று நின்மலனும் தான் மகிழ்வார் அமெரிக்கச்சுவாமி சிவாய சுப்ரமணியரதும் அமரர் திருமுக கிருபானந்த வாரியரதும் அக்கரைப்பற்று அன்பு, முருகப்பச்சுவாமியதும் பக்தியருள்படைத்த பரமகம்சர் சீடர்களாம் ஜீவனானந்தரொடு, இராஜேஸ்வரா னந்தரதும்
-1 2- .

மட்டுநகர் கொழும்பு மற்றும் இடங்களெல்லாம் திட்டமாயருள் பரப்பும் துறவிகள் தங்களதும், நல்லாசி பெற்று நன்கு வளர்வ தொடு செல்வர் கனகரெத்னம் சேர்ந்த தமிழ் கட்சியுள்ளோர் பல்வேறு கல்விப் பணிப்பாளர் தங்களதும் நன்மதிப்பைப் பெற்றதல்லோ நங்கள் குருகுலங்காண்
"மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்" என்று முழங்கி ஏற்றதொரு தாரகமாய் ' என்கடன் பணிசெய்து கிடப்பதுவே" தன்னிலக்காய் கொண்டு செயலாற்றும் குருகுலமே நீ வாழி பத்தாண்டு மலராக பிரசுரித்த பத்திரிகை *உழவாரம்' கூறும் உயர் சிறப்பைக் கேட்டறிமின் சைவமத ஆசாரம் சகமெங்கும் தான்பரவ கைவந்த பணிகளிலே கற்கிறார் மாணவர்கள் அரச உதவியொடு அன்பர்களின் நன்கொடையும் விரவிக் குருகுலமும் விரைந்தே உயர்வு பெற பொறுமையுடன் பணிகள் புனிதமாய்ச் செய்துவரும் திறமுடைய நிருவாகம் சீரோங்கி வாழியவே.
(தமிழ்மணி)
a 13

Page 13
திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீன ஸ்தாபகர் * இறைபணிச் செம்மல் ”
திரு.சுவாமிநாதர் தம்பையா அடிகளாரது 63 வது ஜெனன தின விழாவன்று குருகுல சேவையின் தொண்டர்கள் வாசித்து வழங்கிய வாழ்த்து மட ல திருக்கோவிற் கந்தனொடு கண்ணகியார் அருள் பரப்பும் பெருவழஞ் சேர் தம்பிலுவில் பேரானகுருகுலத்தில் ஆதீன கர்த்தாவாய் அமைந்த குரவரவர் ஆங்கிலம் போதிக்க ஆசானாய் வந்தார்காண் சுன்னாகப் பதியிருந்து தூர மென்றும் பாராமல் தன்மானத் தோடு தன்சேவை செய்ததொடு சமயப் பணிகளிலும் சாதித்தார் கருமமெல்லாம் அப்பர்பெருமானின் அடிவருடித் தொண்டுகளை தப்பாமற் செய்தார் காண் தக்கபல தொண்டருடன் உகந்தை மலை மண்டூர் உள்ளூர்த் திருக்கோயில் உற்சவகால மதில் உண்ணிராற் சாந்தி செய்தார். அடியார் மகிழ்ந்து ஆன உதிவி செய்தார் சங்கமான் கண்டியிலே சீரழிந்த ஆலயத்தில் சிலைநிறுவிச் சாந்திகளைச் சிறப்பாகச் செய்தனர் காண் ஆதரவற்றபல அனாதைச் சிறுவர்கட்கு போதரவாகப் புனைந்தார் குருகுலத்தை திருநாவுக்கரசு நாயனார் குருகுலமும் சிறந்து புகழ் பெருக்கிச் சேவையில் ஓங்கியதால்
இறைபணிச் செம்ம" "லென ஏற்றினார் அரசினரும் இவ்வாறு சேவைகளை இறற்றிய பெரியாரது அறுபத்துமூன்று அகவை நிறை வேறுகின்ற இருபத்து நான்கு இயல் பங் குனிமாதம் வாழ்த்தி வணங்குவமே வரிசையுள்ள அன்பரெல்லாம் வாழ்க இறைபணியில் வளமாகப் பல்லாண்டு வாழ்க குருகுலமும் வானாடர் போற்றிசெய்ய வாழ்க தம்பையா வண்மையுள்ள ஆசிரியர் வாழ்க பலநூறு வருடங்கள் வாழியவே.
தம்பிலுவில் இவ்வண்ணம், 24-03-1995. குருகுல சேவையின் தொண்டர்கள்
என்கடன் பணிசெய்து கிடப்பதே.
ஆக்கம்: சைவத் தமிழ்மணி சிவ. விவேகானந்த முதலியார்
-1 4

நன்றியுரை
மட்டக்களப்பு - தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனச் சிறப்பு மலரை அச்சிட்டு வெளியீடு செய்வதற்கு மனமுவந்து அனுமதி தந்த டிெ குருகுல ஆதீன ஆணையாளர் வணக்கத்திற்குரிய தம்பையா அடி களாருக்கும், ஆலோசனைகள் கூறி வழி நடத்திய நிரு வாக அன்பர்களுக்கும் ஆசியுரை வழங்கிய வணக்கத்திற்குரிய ஞானகுரு பூரீமத் சுவாமி அஜராத்மானந்தா அவர்களுக்கும் தன்னலங்கருதாது சமயத்தொண்டுகளும், சமூகத்தொண்டு களும் ஆற்றிவரும் மட்டுநகர் இந்து இளைஞர் மன்றத் தலைவரும், முன்னாள் கல்வியதிகாரியும் நமது நண்பருமான கிரு. ம. சிவனேசராசா அவர்கள் மனமுவந்து சிறப்புரை வழங்கியமைக்கும் மற்றும் இந்நூலை நல்லமுறையில் பிழை களின்றி அச்சிட்டுத்தந்த மட்டுநகர், ஆதவன் அச்சக முகா மையாளர், உதவியாளர்கள் சகலருக்கும் மனமார்ந்த நன்
வியைக் கூறுகிறேன்.
வ ண க் க ம் .
சைவத் தமிழ்மணி சிவ. விவேகானந்த முதலியார் ஒய்வுபெற்ற அதிபர் ஆரையம்பதி. I 9 - 04 - 95.

Page 14


Page 15